பாடல்கள் பலவிதம்

4,187 views
Skip to first unread message

Ganesh kumar

unread,
Jul 27, 2011, 6:18:59 AM7/27/11
to பண்புடன்
ரஜினி ஆறுபுஷ்பங்கள் படத்தில் நடித்த பொழுது அந்தப் படத்திற்கு கதை வசனம் எழுதிய  கலைஞானம் அவர்களின் நட்பு கிடைத்தது. கலைஞானம் ரஜினியிடம் , தான் ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் அந்தப் படத்தில் ரஜினிதான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.பெருமகிழ்ச்சியடைந்த ரஜினி கலைஞானத்திடம் 5 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டார்.

இளையராஜா இசையில் டி.எம்.எஸ்  நண்டூறுது, நரியூது  பாடலை பாடினார்.

www.youtube.com/watch?v=smHDFnff6Y8

ஏதோ ஒரு படப்பிடிப்பிலிருந்த ரஜினி, இந்தப் பாடலைக் கேட்பதற்காகவே ஏவி.எம்.ஸ்டூடியோவிற்கு வந்திருக்கிறார்.  டி.எம்.எஸ்  பாடுவதை கேட்டுவிட்டு கலைஞானம் கையை பிடித்துக்கொண்டு, “கலைஞானம் சார் ..   டி.எம்.எஸ். பாடி  அதில் நான் பாடி நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை ” என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

0

பைரவி (1978) , ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த  முதல் படம்.  இந்தப்படத்தை இயக்கியவர் எம்.பாஸ்கர். இந்தப் படம் தான் ரஜினியை உச்சத்தில் ஏற்றியது. இந்தப் படத்தின் வினியோகஸ்தரான தாணு , ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் அளித்தார். எம்.பாஸ்கர் ஸ்ரீதரின் மாணவர், வெண்ணிற ஆடை படத்தில் உதவியாளராகச் சேர்ந்த இவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் ஸ்ரீதரிடம் வேலை பார்த்தார்.

0

எம்.பாஸ்கர் இயக்கிய பெளர்ணமி அலைகள் (1984) படத்திலுள்ள அத்தனை பாடல்களும் தேன் சொட்டும் பாடல்கள் , இசை சங்கர் கணேஷ் , குறிப்பாக ஜெயச்சந்திரனும் வாணிஜெயராமும் பாடிய

தேன் பாயும் வேலை செவ்வான மாலை
பூந்தென்றல் தாலாட்டு பாடும்
தெய்வங்கள் நல்வாழ்த்துக் கூறும்

என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

http://www.inbaminge.com/t/p/Pournami%20Alaigal/Then%20Payum%20Velai.vid.html


0

எம்.பாஸ்கர் இயக்கிய பன்னீர் நதிகள்(1986) படத்தில் காந்தர்வக் குரலான் பாடிய

பனி விழும் பருவ நிலா
பரதமும் ஆடுதே
சிலையோ சிற்ப கலையோ


என்ற வர்ணனைப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

மரவண்டு

unread,
Jul 27, 2011, 6:23:55 AM7/27/11
to பண்புடன்
இந்த இழையில் எனக்குப் பிடித்த பாடல்களைப் பற்றி எழுதப் போகிறேன்.இந்த
இழையில் யார் வேண்டுமானாலும் தனக்குப் பிடித்த பாடல்களைப் பற்றி எழுதலாம்.

Gokul Kumaran

unread,
Jul 27, 2011, 6:33:27 AM7/27/11
to panb...@googlegroups.com
அய்யோ, இப்படிச் சொல்லாதீங்க, மக்கள்ஸ் காப்பி பேஸ்ட் பண்ணி நிரப்பிடுவாங்க.

தயவு செய்து நீங்க மட்டும் எழுதுங்க, நாங்க படிக்கிறோம்.

2011/7/27 மரவண்டு <mara...@gmail.com>

இந்த இழையில் எனக்குப் பிடித்த பாடல்களைப் பற்றி எழுதப் போகிறேன்.இந்த
இழையில் யார் வேண்டுமானாலும் தனக்குப் பிடித்த பாடல்களைப் பற்றி எழுதலாம்.



--
Gokul Kumaran

Gokul Kumaran

unread,
Jul 27, 2011, 6:35:49 AM7/27/11
to panb...@googlegroups.com
சென்னைக்கு முதன்முதலாக வந்த போது, நந்தம்பாக்கம் கணபதி காலனி பஞ்சாயத்து அலுவலகம் மாதிரி இருந்த கட்டிடத்தில் பிளாக் அண்ட் வொயிட் டி.வி.யில் எல்லோரோடும் சேர்ந்து உட்கார்ந்து சென்னைத் தொலைக்காட்சி ஒளிபரப்பில் இந்தப் படத்தைப் பார்த்த ஞாபகம்.

2011/7/27 Ganesh kumar <mara...@gmail.com>

0
பைரவி (1978) , ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த  முதல் படம்.  இந்தப்படத்தை இயக்கியவர் எம்.பாஸ்கர். இந்தப் படம் தான் ரஜினியை உச்சத்தில் ஏற்றியது. இந்தப் படத்தின் வினியோகஸ்தரான தாணு , ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் அளித்தார். எம்.பாஸ்கர் ஸ்ரீதரின் மாணவர், வெண்ணிற ஆடை படத்தில் உதவியாளராகச் சேர்ந்த இவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் ஸ்ரீதரிடம் வேலை பார்த்தார்.

--
Gokul Kumaran

Ganesh kumar

unread,
Jul 27, 2011, 6:38:19 AM7/27/11
to panb...@googlegroups.com

2011/7/27 Gokul Kumaran <gokul...@gmail.com>

அய்யோ, இப்படிச் சொல்லாதீங்க, மக்கள்ஸ் காப்பி பேஸ்ட் பண்ணி நிரப்பிடுவாங்க.

தயவு செய்து நீங்க மட்டும் எழுதுங்க, நாங்க படிக்கிறோம்.


கட்டற்ற சுதந்திரத்திற்கு கடிவாளம் போட விரும்பவில்லை. லக்கியண்ணைவையும் கூட்டு சேர்த்துக் கொள்ள ஆசை :)

Gokul Kumaran

unread,
Jul 27, 2011, 6:40:37 AM7/27/11
to panb...@googlegroups.com
நோ அப்ஜெக்‌ஷன் ஃபார் லக்கி.

அப்ஜெக்‌ஷன் ஃபார் வில்லன் :)

2011/7/27 Ganesh kumar <mara...@gmail.com>

--
Gokul Kumaran

வில்லன்

unread,
Jul 27, 2011, 8:23:21 AM7/27/11
to panb...@googlegroups.com
so sad.

இந்த செகன்ட் வரை எனக்கு எதும் பாடல் பிடிச்சா அந்த வரிகளை மட்டும் போடலாம்னு இருந்தேன். நீங்க அப்ஜெக்சன் பண்ணிட்டிங்க இல்லே. முழுசா கட் பேஸ்ட்டறேன்

2011/7/27 Gokul Kumaran <gokul...@gmail.com>

நோ அப்ஜெக்‌ஷன் ஃபார் லக்கி.

அப்ஜெக்‌ஷன் ஃபார் வில்லன் :)


--
இப்படிக்கு

     "ஸ்ரீ" 

ஜனனம் மரணம் அறியா வண்ணம்
நானும் மழைத்துளி ஆவேனோ...
!

lucky shajahan

unread,
Jul 27, 2011, 9:23:43 AM7/27/11
to panb...@googlegroups.com
நன்றி கணேஷ்ணா, பல காலமாய் பாடல்வரிகளை உளமாற ரசித்து அசைபோட்டு வந்தாலும் உங்களைப் போல் விரல்நுனி விவரங்கள் தர இயலாது..
 
 
நீங்கள் பிச்சைப்பாத்திரம்.. நான் காயசண்டிகை..
 
பார்ப்போம் பசியடங்குமா என்று

2011/7/27 Ganesh kumar <mara...@gmail.com>

2011/7/27 Gokul Kumaran <gokul...@gmail.com>

--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
ஷாஜஹான்.

மரவண்டு

unread,
Jul 27, 2011, 10:35:25 AM7/27/11
to பண்புடன்

On Jul 27, 5:23 pm, வில்லன் <vom...@gmail.com> wrote:
> so sad.
>
> இந்த செகன்ட் வரை எனக்கு எதும் பாடல் பிடிச்சா அந்த வரிகளை மட்டும் போடலாம்னு
> இருந்தேன். நீங்க அப்ஜெக்சன் பண்ணிட்டிங்க இல்லே. முழுசா கட் பேஸ்ட்டறேன்

கோகுல்ஜி

வில்லன விலைக்கு வாங்கிட்டிங்களே :))

Gokul Kumaran

unread,
Jul 27, 2011, 10:41:53 AM7/27/11
to panb...@googlegroups.com
வில்லன் தனக்குன்னு ஒரு கொள்கை வச்சிருக்கான்.

உங்க இழையை மொக்கை ஆக்க மாட்டான் :)

2011/7/27 மரவண்டு <mara...@gmail.com>
--
Gokul Kumaran

வில்லன்

unread,
Jul 27, 2011, 12:31:31 PM7/27/11
to panb...@googlegroups.com
எனக்கு காதல் பாடல்கள், எழுச்சிப்பாடல்கள், தத்துவபாடல்கள், கானா பாடல்கள், குத்துபாடல்கள், கர்நாடக சங்கீத பாணி பாடல்கள், சோக பாடல்கள் என எல்லாமே பிடிக்கும்.

அப்படி பிடித்த பாடல்களை நானும் இங்கே அப்பப்போ பகீர்ந்துக்கிறேன்...

முதலில் தலைவர் ரஜினிகாந்தின் தலைவர் ரவிசந்திரனின் நினைவாக முதல் பாடல்,

// தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
ஆஹா.. சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்
அது கூடாதென்றாள்.. மனம் தாளாதென்றாள்
ஒன்று நானே தந்தேன்.. அது போதாதென்றாள்...
போதாதென்றாள்...
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கைபட்டு புண்ணான கன்னங்களே //

பொதுவாக பழைய பாடல்களென்றாவே எம் எஸ் நு சொல்ற எம் எஸ் இசை.
மெலோடி பாடல்கள் என்றாலே அது பிபிஎஸ்தான்னு சொல்ற பிபிஎஸ் பாடியது.
பாடல்வரிகளென்றாலே கண்ணதாசன்னு சொல்ற கண்ணதாசன் எழுதியது.

வில்லன்

unread,
Jul 27, 2011, 12:53:26 PM7/27/11
to panb...@googlegroups.com
http://www.inbaminge.com/t/p/Poovizhi%20Vasalile/Anney%20Anney.eng.html

இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்னு தெரியலை. எனக்கு ரொம்ப பிடிச்சப்பாட்டு.

// கோவிலை கட்டிவச்சி சாமியை கும்பிட்டோம்
குளங்களை வெட்டிவச்சி தண்ணியை ரெப்பிட்டோம்
பாவத்தை பண்ணும் நீ கோவிலை கட்டினா கோவிச்சி சாமி அங்கே இல்லாம போயிடும்//

இந்த பாடல் வரியை சத்தியராஜ் பாடினதும் கையிலே இருந்த சாராய பாட்டிலை சார்லி போட்டு உடைச்சிட்டு
சாமி போயிடாதனு அலறுவார்.

அப்புறம் சத்யராஜ் படு கூலா

கோவில்கள் கட்டுவதே பாவங்கள் போகத்தான்
பாவங்கள் போகாவிட்டால் கோவில்கள் ஏனப்பா

என்று கையிலே இருக்க சரக்கை அடிப்பார்.

படம் பூவிழி வாசலிலே, இசை இளையராஸ், பாடியவர் யாரோ.... எழுதியவர் யாரோ

மரவண்டு

unread,
Jul 27, 2011, 12:58:53 PM7/27/11
to பண்புடன்
அம்பிகாபதி காலத்துல இருந்து எழுது

எருமைக் கன்னுக்குட்டி என்னருமைக் கன்னுக்குட்டி :)

வில்லன்

unread,
Jul 27, 2011, 1:16:39 PM7/27/11
to panb...@googlegroups.com
http://music.cooltoad.com/music/song.php?id=434369&PHPSESSID=bc4a5ae053329206a700b909124b755f

டீ ஆர் மஹாலிங்கம் சுசிலா பாடிய சொட்டு சொட்டுனு சொட்டுது பாரு அங்கே என்ற பாடல்.

இதை அடிக்கடி ஜெயா மேக்ஸ்ல கேட்டிருகேன். அந்த காலத்து குத்துபாடல்.

படம் ஆட வந்த தெய்வம், இசை மஹா தேவன், எழுதியவர் மருதகாசி.

நான் இந்த பாட்டு டீ ஆர் மஹாலிங்கம்னு சொன்னா ஒத்துக்கமாட்டேன்றாரு வண்டு.

So Sad you know.


// முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே //


2011/7/27 மரவண்டு <mara...@gmail.com>
அம்பிகாபதி காலத்துல இருந்து எழுது

எருமைக் கன்னுக்குட்டி என்னருமைக் கன்னுக்குட்டி :)

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

வில்லன்

unread,
Jul 27, 2011, 1:37:20 PM7/27/11
to panb...@googlegroups.com
// ஏச்சு பொழைக்கிறவன் ஏழடுக்கு மாடியில் எகத்தாளம் போடுறானே
நல்லதுக்கு காலமில்லை சொல்லப்போனா வெட்கக்கேடு//

நாட்டுக்கு தலைவன் என்று நம்பும்படி பேசிவிட்டு
செல்வம் வாரியே போவாரிடி, 

// நாடு செழிக்க எண்ணி நாளெல்லாம் வேலை செய்யும்
ஏழைக்கு காலமில்லை எவனெவனோ வாழுகின்றான் //


இந்த பாடல்வரி போன பாடல் வரியையும் பார்த்தா மருதகாசியாக இருக்கலாம்.




இந்த தளத்துல காமு ஷெரிப்பாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.

படம் மந்திரிக்குமாரி. இசை இராமநாதன், பாடியவர் பிஎஸ் சுப்பையா

2011/7/27 வில்லன் <vom...@gmail.com>

மோர்சுப்ரா

unread,
Jul 27, 2011, 1:39:01 PM7/27/11
to panb...@googlegroups.com
இப்போ சரியா தளபதி படத்துல வர.....

"புத்தம் புது பூ பூத்ததோ கேட்டுகிட்டு இருக்கேன்" 

 இத படத்துல கட பண்ணிவிட்டார்கள் :(( இடையில் வரும் இசை முடிந்து சரணம் ஆரம்பிக்கும் போது....உள்ளுக்குள்ளே ஒரு சிலிர்ப்போடு ஒரு தூக்கு தூக்குது...... இசைஞானி இன்னும் நிறைய நாள் வாழனும்....


அன்போடு

மோர்சுப்ரா


Ganesh kumar

unread,
Jul 27, 2011, 11:31:16 PM7/27/11
to panb...@googlegroups.com
>> படம் மந்திரிக்குமாரி. இசை இராமநாதன், பாடியவர் பிஎஸ் சுப்பையா

மார்டன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் எல்லீஸ் ஆர்.டங்கனை வைத்து ஒரு படம் இயக்கவேண்டுமென இருந்தார். ஆனால் கதை கிடைக்கவில்லை.அந்நேரம் கா.மு.ஷெரீப் டி.ஆர்.சுந்தரத்திடம் , " திருவாரூர் பிள்ளையாண்டான் மு.கருணாநிதி ஒரு நாடக்ம் எழுதியிருக்கிறார், தேவி நாடக சபா அந்த நாடகத்தை மாயவரத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் , அந்தக் கதையை வேண்டுமானால் நீங்கள் உங்கள் படத்துக்குப் பார்க்கலாமே .. " என்று கூறியிருக்கிறார். உடனே டி.ஆர் சுந்தரம் நாடகம் பார்ப்பதற்காக முக்தா சீனிவாசனையும் டங்கனையும் ஒரு காரில் மாயவரத்திற்கு அனுப்பியிருக்கிறார்.

டங்கனுக்கோ தமிழ் தெரியாது , யாராவது ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூற வேண்டும் .நாடகம் ஓடிக்கொண்டிருக்கும் பொதே  முக்தா சீனிவாசன் கதையை விளக்கினால் தனக்கு நாடகத்தை சரியாக கவனிக்க முடியாது என்று எண்ணி நாடகத்தில் என்னென்ன சீன்கள் எப்பொழுது வரும் என முன்கூட்டியே அறிந்து கொண்டார் டங்கன்.

டங்கனுக்கு நாடகம் பிடித்துப் போனது . கருணாநிதியை அழைத்து கதை உரிமையை வாங்கிக் கொண்டு அதைப் படமாக்கினார்கள் , அந்தப் படம் தான் மந்திரகுமாரி !

Naresh Kumar

unread,
Jul 28, 2011, 12:49:57 AM7/28/11
to panb...@googlegroups.com
//இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்னு தெரியலை. எனக்கு ரொம்ப பிடிச்சப்பாட்டு.//

Me to like this very much :)))))

மரவண்டு

unread,
Jul 28, 2011, 1:45:41 AM7/28/11
to பண்புடன்
> இந்த பாடல்வரி போன பாடல் வரியையும் பார்த்தா மருதகாசியாக இருக்கலாம்.
>
> http://moganaraagam.blogspot.com/2010/04/blog-post_12.html
>
> இந்த தளத்துல காமு ஷெரிப்பாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.
>
> படம் மந்திரிக்குமாரி. இசை இராமநாதன், பாடியவர் பிஎஸ் சுப்பையா
>


இந்தப் பாடலை எழுதியவர் மருதகாசிதான் , இந்தப் பாடலில் எருமையில்
போகிறவர் தான் சுப்பையா, அவரே பாடி நடித்தார்
மருதகாசி எழுதிய முதல் பாடல்

பெண் எனும் மாயப் பேயாம்…
பொய் மாதரை என் மனம் நாடுமோ

மார்டன் தியேட்டர்ஸ் உரிமையாளர் இயக்கிய மாயாவதி என்ற படத்தில் இடம்
பெற்றது.

மரவண்டு

unread,
Jul 28, 2011, 1:51:50 AM7/28/11
to பண்புடன்

On Jul 27, 10:39 pm, மோர்சுப்ரா <morsu...@gmail.com> wrote:
> இப்போ சரியா தளபதி படத்துல வர.....
>
> "புத்தம் புது பூ பூத்ததோ கேட்டுகிட்டு இருக்கேன்"
>

வாய் பேசும் வார்த்தை எல்லாம்
கண் பேசும் அல்லவோ ....

இந்த வரிகளை ஜேசுதாஸ் பாடும் போது .. ஆஹா ..

மோர்சுப்ரா

unread,
Jul 28, 2011, 1:58:18 AM7/28/11
to panb...@googlegroups.com


2011/7/28 மரவண்டு <mara...@gmail.com>



வாய் பேசும் வார்த்தை எல்லாம்
கண் பேசும் அல்லவோ ....

இந்த வரிகளை ஜேசுதாஸ் பாடும் போது .. ஆஹா ..

  ஆமாம் உங்களை அறியாமலே ஊடுருவும்..... :) 
 
 ஓவரா சொல்லுறேனான்னு எனக்கு தெரியல.....ஆனா எனக்கு கேக்குறப்போ   முடி சிலிர்த்ததுண்டு 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--


அன்போடு

மரவண்டு

unread,
Jul 28, 2011, 1:59:44 AM7/28/11
to பண்புடன்
திரைப்பட வரலாறு 738

“வாராய்… நீ வாராய்” – மந்திரிகுமாரி
“முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல” – உத்தமபுத்திரன்
“காவியமா? நெஞ்சின் ஓவியமா?” – பாவை விளக்கு
4,000 பாடல்களுக்கு மேல் எழுதிய மருதகாசி

எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதியவர்,
மருதகாசி. “திரைக்கவி திலகம்” என்று பட்டம் பெற்ற அவர், சினிமாவுக்காக 4
ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.திருச்சி மாட்டம் மேலக்குடிகாடு
கிராமத்தில் 13-2-1920-ல் பிறந்தவர் மருதகாசி. தந்தை அய்யம்பெருமாள்
உடையார். தாயார் மிளகாயி அம்மாள்.விவசாயம் உள்ளூரில் தொடக்கக் கல்வி
பயின்றபின், கும்பகோணம் அரசு கல்லூரியில் சேர்ந்து, “இன்டர்மீடியேட்” வரை
படித்தார்.1940-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. மனைவி பெயர்
தனக்கோடி அம்மாள்.

நாடகப் பாடல்கள்

மருதகாசி, சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலை பெற்றிருந்தார். கல்லூரி
படிப்புக்குப்பிறகு, குடந்தையில் முகாமிட்டிருந்த “தேவி நாடக சபை”யின்
நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார். அப்போது, இன்றைய முதல்-அமைச்சர்
கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். அதைத்தொடர்ந்து, கருணாநிதி
எழுதிய “மந்திரிகுமாரி” போன்ற நாடகங்களுக்கு பாடல் எழுதினார்.

மாடர்ன் தியேட்டர்ஸ்

இந்தக் காலக்கட்டத்தில், பின்னணி பாடகராக திருச்சி லோகநாதன் கொடிகட்டிப்
பறந்தார். “வானவில்” என்ற நாடகத்தின் பாடலுக்கு அவர் இசை அமைத்தபோது,
மருதகாசியின் கவியாற்றலை நேரில் கண்டார். இதுபற்றி, மாடர்ன் தியேட்டர்ஸ்
அதிபர் டி.ஆர்.சுந்தரத்திடம் தெரிவித்தார்.
உடனே டி.ஆர்.சுந்தரம் மருதகாசியை சேலத்திற்கு வருமாறு அழைத்தார். இந்த
சமயத்தில், மருதகாசியுடன் கவி. கா.மு.ஷெரீப் இணைந்து பணியாற்றிக்
கொண்டிருந்தார். அவரையும் அழைத்துக்கொண்டு சேலம் சென்றார், மருதகாசி.

அப்போது (1949) சேலம் மாடர்ன் தியேட்டர்சார் “மாயாவதி” என்ற படத்தைத்
தயாரித்து வந்தனர். டி.ஆர்.மகாலிங்கமும், அஞ்சலிதேவியும் இணைந்து நடித்த
இந்தப்படத்தை டி.ஆர்.சுந்தரம் டைரக்ட் செய்து வந்தார்.இந்தப் படத்திற்கு
தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார். “பெண் எனும் மாயப் பேயாம்… பொய்
மாதரை என் மனம் நாடுமோ…” என்று தொடங்கும் அந்த பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை
அமைத்தார்.
இவ்வாறாக மருதகாசியின் திரை உலகப் பயணம், மாடர்ன் தியேட்டர்ஸ் “மாயாவதி”
மூலமாகத் தொடங்கியது.

பொன்முடி

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய “எதிர்பாராத முத்தம்” என்ற
குறுங்காவியத்தை, “பொன்முடி” என்ற பெயரில் மாடர்ன் தியேட்டர்சார்
திரைப்படமாகத் தயாரித்தனர். வசனத்தை பாரதிதாசன் எழுதினார்.இந்தப்
பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்தார். எல்லாப் பாடல்களையும் மருதகாசி
எழுதினார். கதாநாயகனாக நரசிம்மபாரதியும், கதாநாயகியாக மாதுரிதேவியும்
நடித்தனர்.1950 பொங்கலுக்கு வெளிவந்த “பொன்முடி” படத்தின் பாடல்கள் ஹிட்
ஆயின.

மந்திரிகுமாரி

இதன் பிறகு கருணாநிதியின் கதை-வசனத்தில் மாடர்ன் தியேட்டர்சார் தயாரித்த
படம் மந்திரிகுமாரி. இந்தப்படம் மாபெரும் வெற்றி
பெற்றது.இந்தப் படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ்
பெற்றன. குறிப்பாக “வாராய்… நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!”
என்ற கிளைமாக்ஸ் பாடலும், “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும்
மிகப்பிரமாதமாக அமைந்தன. இந்த டூயட் பாடல்களைப் பாடியவர்கள் திருச்சி
லோகநாதன் – ஜிக்கி.இந்தக் காலக்கட்டத்தில், மாடர்ன் தியேட்டர்ஸ் கதை
இலாகாவில் கண்ணதாசனும், இசை இலாகாவில் மருதகாசியும் பணிபுரிந்தது
குறிப்பிடத்தக்கது.

பாகவதர் அழைப்பு

மந்திரிகுமாரியில் மருதகாசி எழுதிய பாடல்கள் எம்.கே.தியாகராஜ பாகவதரை
வெகுவாகக் கவர்ந்தன. சுரதாவின் கதை-வசனத்திலும், எப்.நாகூர் டைரக்ஷனிலும்
உருவாகி வந்த தனது “அமரகவி” படத்துக்கு பாடல் எழுத மருதகாசியை
அழைத்தார்.அதன்படியே, சில பாடல்களை மருதகாசி எழுதினார்.

தூக்குத்தூக்கி

அருணா பிலிம்ஸ் பட நிறுவனம் “ராஜாம்பாள்” என்ற துப்பறியும் கதையை
படமாக்கியது. இந்தப் படத்தில்தான் ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாக
அறிமுகமானார்.இந்தப் படத்துக்கு மருதகாசி எழுதிய பாடல்கள் பெரும்
வரவேற்பைப் பெற்றன.அதைத்தொடர்ந்து அருணா பிலிம்ஸ் அடுத்து தயாரித்த
“தூக்குத்தூக்கி” படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பை மருதகாசி பெற்றார்.

இந்தப் படத்தில் சிவாஜிகணேசன், லலிதா, பத்மினி, ராகினி, டி.எஸ்.பாலையா
என்று பெரிய நட்சத்திர கூட்டமே இருந்தது. ஆர்.எம்.கிருஷ்ணசாமி டைரக்ட்
செய்த இந்த படத்துக்கு, ஜி.ராமநாதன் இசை அமைத்தார்.இந்தப் படத்தில்,
சிவாஜிகணேசனுக்கு யாரைப் பின்னணியில் பாட வைப்பது என்ற கேள்வி எழுந்தது.
“மந்திரிகுமாரி”யில், “அன்னமிட்ட வீட்டிலே, கன்னக்கோல் சாத்தவே…” என்று
தொடங்கும் பாடலை, வெகு சிறப்பாக டி.எம்.சவுந்தரராஜன் பாடியிருந்தார்.
அவரைப் பாடச் சொல்லலாம் என்று மருதகாசியும், டைரக்டர்
ஆர்.எம்.கிருஷ்ணசாமியும் கூறினார்கள். ஆனால், சிதம்பரம் ஜெயராமனைப்
போடும்படி, சிவாஜி கூறினார்.

முடிவில் “3 பாடல்களை சவுந்தரராஜனை வைத்து பதிவு செய்வோம். சிவாஜிக்கு
பிடிக்கிறதா என்று பார்த்து இறுதி முடிவு எடுப்போம்” என்று மருதகாசியும்,
கிருஷ்ணசாமியும் தீர்மானித்தார்கள்.அதன்படியே, மூன்று பாடல்களை பதிவு
செய்து சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்கள். டி.எம்.சவுந்தரராஜனின்
குரல் சிவாஜிக்குப் பிடித்து விட்டது. அன்று முதல், சிவாஜிக்கு தொடர்ந்து
டி.எம்.சவுந்தரராஜன் பாடலானார்.
26-8-1954-ல் வெளியான “தூக்குத்தூக்கி”, மகத்தான வெற்றிப்படமாக அமைந்து,
வசூல் மழை கொட்டியது. எங்கு திரும்பினாலும், அந்தப் படத்தின் பாடல்கள்
எதிரொலித்தன. மருதகாசிக்கு பல்வேறு படக்கம்பெனிகளில் இருந்து அழைப்பு
வந்தது.மெட்டுக்குப் பாட்டு எழுதுவதில் மருதகாசி வல்லவர். எனவே, இசை
அமைப்பாளர்களுக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது.அந்தக் காலக்கட்டத்தில்
ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன் –
ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசை அமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி
பாடல் எழுதினார்.

மரவண்டு

unread,
Jul 28, 2011, 2:03:21 AM7/28/11
to பண்புடன்
திரைப்பட வரலாறு 739
மாடர்ன் தியேட்டர்ஸ் – மருதகாசி மோதல்
உண்மையை கண்டுபிடித்தார் டி.ஆர்.சுந்தரம்
“அலிபாபா” படத்துக்கு எல்லா பாடல்களையும் எழுதச் சொன்னார்

மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தார்,
மருதகாசி. சிலருடைய சூழ்ச்சியினால், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன்
மருதகாசிக்கு மோதல் ஏற்பட்டது. பிறகு உண்மையை அறிந்த மாடர்ன் தியேட்டர்ஸ்
அதிபர் டி.ஆர்.சுந்தரம், எம்.ஜி.ஆர். நடித்த “அலிபாபாவும் 40
திருடர்களும்” படத்துக்கு எல்லாப் பாடல்களையும் எழுத வாய்ப்பளித்தார்.

எம்.ஜி.ஆருக்கு எழுதிய பாடல் கவிஞர் மருதகாசியும், சாண்டோ
சின்னப்பதேவரும் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் பணியாற்றியபோதே நெருங்கிய
நண்பர்கள் ஆனார்கள். பிறகு தேவர் சென்னைக்கு வந்து, `தேவர் பிலிம்ஸ்’
படக்கம்பெனியைத் தொடங்கினார். எம்.ஜி.ஆரை வைத்து “தாய்க்குப்பின் தாரம்”
என்ற படத்தைத் தயாரிக்கத் தீர்மானித்தார்.

மருதகாசியை அழைத்து, “எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி, புரட்சிகரமான
கருத்துக்களுடன் ஒரு பாடலை எழுதுங்கள்” என்று கேட்டுக்கொண்டார் . அதன்படி
மருதகாசி எழுதிய பாடல்தான், “மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே”


என்ற பாடல்.

“நீல வண்ண கண்ணா வாடா”

1955-ல் சிவாஜிகணேசனும், பத்மினியும் நடித்த “மங்கையர் திலகம்” படம்
வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. இதில், சிவாஜிக்கு அண்ணியாக,
குணச்சித்திர வேடத்தில் பத்மினி நடித்தார்.இப்படத்தில் மருதகாசி எழுதிய
“நீலவண்ண கண்ணா வாடா! நீ ஒரு முத்தம் தாடா!” என்ற பாடலை, பத்மினிக்காக
பாலசரஸ்வதி பாடினார். கருத்தாழம் மிக்க இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர்
தட்சிணாமூர்த்தி.

இதே படத்தில், சிவாஜி பாடுவது போல் அமைந்த “நீ வரவில்லை எனில் ஆதரவேது?”
என்ற பாடலையும் மருதகாசி எழுதினார். உருக்கமான இந்தப்பாடலை
தெலுங்குப்பாடகர் சத்யம் பாடினார்.எஸ்.எஸ்.ராஜேந்திரன் – விஜயகுமாரி
நடிக்க, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த “பெற்ற மகனை விற்ற அன்னை” படம்
சரியாக ஓடவில்லை. ஆனால், இப்படத்தில், மருதகாசி எழுதிய “தென்றல்
உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும், கண்கள் உறங்கிடுமா?” என்ற பாடல்
சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

உத்தமபுத்திரன்

ஸ்ரீதரின் திரைக்கதை – வசனத்தில் வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த
“உத்தமபுத்திரன்” படத்தில், சிவாஜியும், பத்மினியும் படகில் செல்லும்போது
பாடுவதுபோல அமைந்த “முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே” என்ற பாடலை,
ஜி.ராமநாதன் இசை அமைப்பில் மருதகாசி எழுதினார். ரசிகர்களின் உள்ளத்தை
அள்ளியது இப்பாடல்.

இதே காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆர். நடித்த “மன்னாதி மன்னன்” படத்தில்
எம்.ஜி.ஆர். பாட அதற்கேற்ப பத்மினி நடனம் ஆடும் ஒரு காட்சி இடம்
பெற்றிருந்தது. இந்த பாடலுக்கான மெட்டை விஸ்வநாதன் – ராமமூர்த்தி அமைத்து
விட்டனர். ஆனால் அந்த மெட்டுக்கு பல்வேறு கவிஞர்கள் எழுதிய பாடல்கள்,
எம்.ஜி.ஆருக்கு திருப்தி அளிக்கவில்லை.

பிறகு, விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் அழைப்பின் பேரில், “ஆடாத மனமும்
உண்டோ?” என்ற பாடலை, மருதகாசி எழுதினார். அது எம்.ஜி.ஆருக்கு
பிடித்துவிட, பாடல் பதிவு செய்யப்பட்டு, காட்சியும் படமாக்கப்பட்டது.

மணப்பாறை மாடுகட்டி…

ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் சேர்ந்து “லட்சுமி பிக்சர்ஸ்” என்ற
படக்கம்பெனியை தொடங்கி, “மக்களைப் பெற்ற மகராசி” படத்தைத் தயாரித்தனர்.
இதில் சிவாஜிகணேசனும், பானுமதியும் இணைந்து நடித்தனர்.இந்தப்படத்தில்
இடம் பெற்ற பெரும்பாலான பாடல்களை மருதகாசி எழுதினார். குறிப்பாக,
“மணப்பாறை மாடுகட்டி, மாயவரம் ஏரு பூட்டி” என்ற பாட்டு, மூலை
முடுக்கெல்லாம் எதிரொலித்தது. கே.வி.மகாதேவன் இசை அமைப்பில்,
டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடல் இது.

சம்பூர்ண ராமாயணம்

சிவாஜிகணேசன் பரதனாகவும், என்.டி.ராமராவ் ராமராகவும், பத்மினி
சீதையாகவும், டி.கே.பகவதி ராவணனாகவும் நடித்த படம் “சம்பூர்ண ராமாயணம்.”
கே.சோமு டைரக்ஷனில் எம்.ஏ.வேணு தயாரித்தார்.இந்தப் படத்துக்கான எல்லாப்
பாடல்களையும், கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் எழுதியவர் மருதகாசி.
அனைத்துப் பாடல்களும் நன்றாய் அமைந்தன.குறிப்பாக சிதம்பரம் ஜெயராமன்,
டி.கே.பகவதிக்காக பாடிய “இன்று போய் நாளை வாராய்…” என்ற பாடலும், ஒவ்வொரு
ராகத்தையும் எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்த “சங்கீத சவுபாக்கியமே”
என்ற பாடலும் பெரும் புகழ் பெற்றவை.

இதேபோல், என்.டி.ராமராவ் – அஞ்சலிதேவி நடித்த “லவகுசா” படத்திற்கும்
எல்லாப் பாடல்களையும் மருதகாசி எழுதினார். அதில், லவனும், குசனும்
பாடுவதுபோல் அமைந்த “ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே – உங்கள்
செவி குளிர பாடிடுவோம் கேளுங்கள் இதையே” என்ற பாடலை, இப்போதும்கூட
தொலைக்காட்சிகளில் காணமுடிகிறது.

மாடர்ன் தியேட்டர்சில் உரசல்

மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், மருதகாசி மீது அதிக அன்பு
கொண்டிருந்தார். அதனால் அவர் தயாரிக்கும் படங்களுக்கெல்லாம் மருதகாசி
பாடல் எழுதுவது வழக்கம்.ஒருமுறை டி.ஆர்.சுந்தரம் வெளிநாடு
சென்றிருந்தபோது, மருதகாசியிடம் பொறாமை கொண்டிருந்த ஸ்டூடியோ நிர்வாகி
ஒருவர், வேறொரு கவிஞருக்கு அதிக தொகையும், மருதகாசிக்கு குறைந்த தொகையும்
கொடுத்தார். இதனால் மனம் நொந்த மருதகாசி, “இனி மாடர்ன் தியேட்டர்ஸ்
படங்களுக்கு பாடல் எழுதுவதில்லை” என்ற முடிவுடன் சென்னைக்குத்
திரும்பினார்.

வெளிநாடு சென்றிருந்த டி.ஆர்.சுந்தரம் திரும்பி வந்ததும்,
எம்.ஜி.ஆரையும், பானுமதியையும் வைத்து “அலிபாபாவும் 40 திருடர்களும்”
படத்தை வண்ணத்தில் தயாரிக்க முடிவு செய்தார். “அலிபாபா” படம் ஏற்கனவே
இந்தியில் வெளிவந்திருந்தது. புதிதாக ஒரு பாடலை இசை அமைப்பது என்றும், 9
பாடல்களுக்கு இந்தி அலிபாபா படத்தின் மெட்டுகளையே பயன்படுத்திக் கொள்வது
என்றும் சுந்தரம் தீர்மானித்தார்.
பாடல்களை எழுத மருதகாசியை ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார். ஆனால்
நிர்வாகியோ, “மருதகாசி முன்போல் இங்கு வருவதில்லை. சென்னை கம்பெனிகளுக்கு
பாட்டு எழுதுவதில் பிசியாக இருக்கிறார்!” என்று கூறிவிட்டார்.

உடனே சுந்தரம், “அப்படியானால் உடுமலை நாராயணகவிக்கு போன் செய்து,
பாடல்களை எழுத உடனே இங்கே வரச்சொல்லுங்கள்” என்று உத்தரவிட்டார்.சுந்தரம்
வரச்சொன்னார் என்று அறிந்ததுமே, அவருடன் உடுமலை நாராயணகவி டெலிபோனில்
தொடர்பு கொண்டார். மருதகாசியிடம் சகோதர அன்பு கொண்டவர் உடுமலை நாராயணகவி.
மருதகாசிக்கும், நிர்வாகிக்கும் ஏற்பட்ட தகராறை சுந்தரத்திடம் அவர்
கூறினார். “சரி. அவரையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்றார்,
சுந்தரம்.

பாடல் எழுதினார்

டி.ஆர்.சுந்தரத்தை உடுமலை நாராயணகவியும், மருதகாசியும்
சந்தித்தனர்.“அலிபாபாவில் வரும் பாடல்களுக்கு, இந்தி அலிபாபா மெட்டுகளையே
பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்” என்று கூறிய சுந்தரம், சில
இந்தி இசைத்தட்டுகளை கவிராயரிடம் கொடுத்தார்.
உடனே கவிராயர், “மெட்டுக்கு பாட்டு அமைப்பது எனக்கு சரிப்படாது. புதிதாக
பாட்டு எழுதுவதானால் எழுதுகிறேன். மெட்டுக்கு பாட்டு என்றால், அது
மருதகாசிக்கு கைவந்த கலை” என்றார்.இதனால், “மாசில்லா உண்மைக் காதலே”,
“அழகான பொண்ணுதான்… அதற்கேற்ற கண்ணுதான்…” உள்பட 9 பாடல்களையும்
மருதகாசியே எழுதினார்.மாடர்ன் தியேட்டர்சுடன் மருதகாசிக்கு ஏற்பட்ட
பிரச்சினை தீர்ந்தது.

பாசவலை

மாடர்ன் தியேட்டர் “பாசவலை” படத்தை தயாரித்தபோது, பாடல் எழுத
மருதகாசிக்கு அவசர அழைப்பு அனுப்பினார்கள். அப்போது சென்னையில் இரவு –
பகலாக பாடல்களை எழுதிக்கொண்டிருந்தார்.உடனே அவர் டி.ஆர்.சுந்தரத்துக்கு
போன் செய்து, “உடனடியாக தம்பி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை அனுப்பி
வைக்கிறேன். அவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனால் அறிமுகப்படுத்தப்பட்டவர்.
மிக நன்றாக பாட்டு எழுதக்கூடியவர். நான் நாலைந்து நாட்களுக்குப்பின்
வந்து கலந்து கொள்கிறேன்” என்று சொன்னார்.

அதன்படி, பல பாட்டுகளை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். “குட்டி
ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம். குள்ளநரி மாட்டிக்கிட்டா
குறவனுக்கு சொந்தம்” என்ற பாடல் மூலம், கல்யாணசுந்தரம் பெரும் புகழ்
பெற்றார்.“அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை – அதை அணைந்திடாத தீபமாக்கும்
பாசவலை” என்ற மருதகாசியின் பாடலும் `ஹிட்’ ஆயிற்று.

உடுமலை நாராயணகவியை தன் அண்ணன் போலவும், கல்யாணசுந்தரத்தை தம்பி போலவும்
கருதி பாசம் செலுத்தியவர் மருதகாசி.
டைரக்டர் பீம்சிங் இயக்கத்தில் தயாரான “பதிபக்தி” படத்துக்கு “ரெண்டும்
கெட்டான் உலகம் – இதில் நித்தமும் எத்தனை கலகம்” என்ற பாட்டை எழுதினார்.
இந்த பாடல் பீம்சிங்குக்கு பிடிக்கவில்லை. “இன்னும் சிறந்த பல்லவி
வேண்டும்” என்றார். மருதகாசி சிறிது யோசித்துவிட்டு, “அண்ணே! நீங்கள்
எதிர்பார்ப்பது போல எழுதக்கூடியவர் தம்பி கல்யாணசுந்தரம். அவரை வைத்து
எழுதிக்கொள்ளுங்கள்” என்று கூறி, ஒதுங்கிக்கொண்டார்.

மரவண்டு

unread,
Jul 28, 2011, 2:06:53 AM7/28/11
to பண்புடன்
திரைப்பட வரலாறு 741
எம்.ஜி.ஆர்., சின்னப்ப தேவர் மூலம்
திரை உலகில் மருதகாசி மறுபிரவேசம்

சொந்தப்படம் தோல்வி அடைந்ததால் நிலை குலைந்து போன மருதகாசி, சிறிது
இடைவெளிக்குப்பின், எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்ப தேவர் ஆகியோர் மூலமாக
திரை உலகில் மறுபிரவேசம் செய்தார்.

இதுகுறித்து மருதகாசியின் தம்பி பேராசிரியர் அ.முத்தையன் கூறியதாவது:-

“1950-ம் ஆண்டில் என் அண்ணன் “மந்திரிகுமாரி”க்கு பாட்டு எழுதியதில்
இருந்தே, எம்.ஜி.ஆருடன் நட்பு கொண்டிருந்தார்.
அந்தக் காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கு,
பெரும்பான்மையான பாடல்களை என் சகோதரர் மருதகாசிதான் எழுதி வந்தார்.
சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன்,
தாய்க்குப்பின் தாரம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மாடப்புறா,
நினைத்ததை முடிப்பவன், மன்னாதி மன்னன், மகாதேவி, விவசாயி போன்ற படங்கள்
குறிப்பிடத்தக்கவை.

எம்.ஜி.ஆர். உதவி

கவிஞர் சொந்தப்படம் எடுத்து அது தோல்வியில் முடிந்ததால், சம்பாதித்ததை
எல்லாம் இழந்தார். கடன் தொல்லையால், வெளியார் படங்களுக்கு பாடல் எழுத
முடியாத நிலை ஏற்பட்டது.கவிஞர் கடன் தொல்லையால் அவதிப்படுவதையும், தொழிலை
படிப்படியாக இழப்பதையும் அவினாசி மணி மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., என்
சகோதரரை அழைத்துப்பேசி, தொல்லைகளில் இருந்து அவரை மீட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் பட அதிபர் ஜி.என்.வேலுமணி, சின்னப்ப தேவரின் தம்பி
திருமுகம் ஆகியோர் செய்த உதவிகளும் மறக்க முடியாதவை.
1963-ல் இருந்து 1967 வரை என் அண்ணன் சென்னை வீட்டை காலி செய்து விட்டு
எங்கள் ஊருக்கே வந்துவிட்டார்கள்.
1967-ல் எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு, குணம் அடைந்தவுடன், பலரும் அவரை
நடிக்க அழைத்தனர். ஆனால், தேவர் படத்தில் நடிப்பதற்குத்தான் எம்.ஜி.ஆர்.
ஒப்புக்கொண்டார். “பாடல்களை மருதகாசியை வைத்தே எழுதுங்கள்” என்று
தேவரிடம் சொல்லிவிட்டார்.

மறுபிறவி

அதைத்தொடர்ந்து, மருதகாசிக்கு தேவர் கடிதம் எழுதினார். “நான் அடுத்து
எடுக்கப்போகும் படத்தின் பெயர் “மறுபிறவி.” எம்.ஜி.ஆர். எடுத்திருப்பதும்
மறுபிறவி. பட உலகைத் துறந்துவிட்ட உங்களுக்கும் மறுபிறவி. அதாவது 4
ஆண்டுகளுக்குப்பின் மறுபிரவேசம் செய்கிறீர்கள். உடனே புறப்பட்டு
சென்னைக்கு வாருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி கவிஞர் உடனே புறப்பட்டுச் சென்று, சென்னையில் எம்.ஜி.ஆரையும்,
தேவரையும் சந்தித்தார். எம்.ஜி.ஆரின் ஆதரவோடு, என் அண்ணன் மருதகாசியின்
திரையுலக மறுபிரவேசம் நிகழ்ந்தது.

“மறுபிறவி” படம், ஒரு பாடலோடு நிறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக,
“தேர்த்திருவிழா” படத்தை தேவர் தயாரித்தார். அந்தப் படத்தின் எல்லாப்
பாடல்களையும் அண்ணன் மருதகாசியே எழுதினார்.

தேவருக்கு பெரும் பொருளை அள்ளித் தந்தது, அந்தப்படம். பாதிப்படத்தின்
படப்பிடிப்பு எங்கள் கிராமப் பகுதியில் அமைந்த கொள்ளிடம் கரையில்தான்
நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார்.எம்.ஜி.ஆர். என்
அண்ணனுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் உதவியிருக்கிறார். ஒவ்வொரு மகன்
திருமணத்திற்கும் உதவியிருக்கிறார்.” இவ்வாறு பேராசிரியர் முத்தையன்


கூறினார்.

நண்பர்கள்

மருதகாசிக்கு கவிஞர் கா.மு.ஷெரீப் நெருங்கிய நண்பர். ஆரம்பத்தில்
மருதகாசியும், கா.மு.ஷெரீப்பும் இணைந்து, பல பாடல்களை எழுதினார்கள்.
பிறகு தனித்தனியாக எழுதினார்கள். தமிழரசு கழகத்தின் முக்கிய
பிரமுகராகவும், பேச்சாளராகவும் கா.மு.ஷெரீப் விளங்கினார். கட்சிப்பணி
காரணமாக, அவர் அதிக பாடல்களை எழுதவில்லை. பாடல்கள் எண்ணிக்கை குறைவு
என்றாலும், கருத்தாழம் மிக்க பாடல்கள்.
புலவர் ஏ.கே.வேலனும், மருதகாசியும் சம காலத்தவர்கள். இருவரும் தேவி நாடக
சபையில் ஒன்றாக பணியாற்றினார்கள்.
ஏ.கே.வேலன் வசன கர்த்தாவாக உயர்ந்து, அருணாசலம் ஸ்டூடியோவை உருவாக்கி “தை
பிறந்தால் வழி பிறக்கும்” என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். அதற்கு,
“தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்” என்ற பாடலை மருதகாசி


எழுதினார்.

அதன் பிறகு, ஏ.கே.வேலன் தயாரித்த பல்வேறு படங்களுக்கும் ஏராளமான பாடல்களை
மருதகாசி எழுதினார். “பொன்னித்திருநாள்” என்ற படத்துக்கு எல்லாப்
பாடல்களையும் எழுதினார்.

உடுமலை நாராயணகவி

உடுமலை நாராயணகவியை தன் குருவாக நினைத்தவர், மருதகாசி. “என்னுடைய 2
ஆயிரம் பாடல்கள், கவிராயரின் 2 பாடல்களுக்கு ஈடாகாது” என்று மனந்திறந்து
பாராட்டுவார்.அத்தகைய உடுமலை நாராயணகவி, மருதகாசி மீது அளவற்ற பாசமும்,
அன்பும் வைத்திருந்தார். அவருக்கு வந்த வாய்ப்புகள் பலவற்றை அவர் ஏற்க
மறுத்த சந்தர்ப்பங்களில், “இதற்கு பொருத்தமானவர் மருதகாசிதான். அவரை
எழுதச் சொல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார்.குறிப்பாக,
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பிரமாண்டமாகத் தயாரித்த “தசாவதாரம்” படத்துக்கு
பாடல் எழுத முதலில் அழைக்கப்பட்டவர் உடுமலை நாராயணகவிதான். அவர்,
“மருதகாசிதான் இதற்கு நன்றாக எழுதக்கூடியவர். அவரைக் கூப்பிடுங்கள்”
என்று கூறிவிட்டார்.இதன் காரணமாக “தசாவதாரம்” படத்துக்கு எல்லாப்
பாடல்களையும் மருதகாசி எழுதினார்.

மறக்க முடியாத பாடல்கள்

4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி, முத்திரை பதித்தவர், மருதகாசி.
ரசிகர்களின் நினைவில் நீங்காத இடம் பெற்ற பாடல்கள் ஏராளம். அவற்றில் சில
பாடல்கள்:-

“சத்தியமே லட்சியமாய் கொள்ளடா…
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா…”
(“நீலமலை திருடன்”)

“ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்”
(“ரத்தக்கண்ணீர்”)

“சமரசம் உலாவும் இடமே – நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே!”
(“ரம்பையின் காதல்”)

“சிரிப்பு… இதன் சிறப்பை
சீர்தூக்கிப் பார்ப்பதே
நம் பொறுப்பு”
(“ராஜா ராணி”யில் என்.எஸ்.கிருஷ்ணன் பாடியது)

“கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த
மின்னொளியே ஏன் மவுனம்?”
(“தூக்குத்தூக்கி”)

`ஆனாக்க அந்த மடம்…
ஆகாட்டி சந்தமடம்…”
(“ஆயிரம் ரூபாய்”)

“கோடி கோடி இன்பம் பெறவே
தேடி வந்த செல்வம் – கொஞ்சும்
சலங்கை கலீர் கலீர் என ஆடவந்த
தெய்வம்!”

(படம்: “ஆட வந்த தெய்வம்”)
“ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே
இல்லே!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே
இல்லே!”
(“பிள்ளைக்கனியமுது”)

“விவசாயி… விவசாயி!
கடவுள் என்னும் முதலாளி”
(விவசாயி)

“வருவேன் நான் உனது
மாளிகையின் வாசலுக்கே!
ஏனோ அவசரமே எனை
அழைக்கும் வானுலகே!”
(மல்லிகா)

“மாமா… மாமா… மாமா…
ஏம்மா… ஏம்மா… ஏம்மா…
சிட்டுப் போல பெண்ணிருந்தா
வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்ட கிட்ட ஓடி வந்து தொடலாமா?”
(“குமுதம்”)

ஆசாத்

unread,
Jul 28, 2011, 2:31:30 AM7/28/11
to பண்புடன்
> உடுமலை நாராயணகவி

ஒருகாலத்துல பாட்டு எவ்ளோ நேரம் ஸ்கிரீன்ல ஓடுமோ அதுக்கேத்தாப்ல காசு
குடுன்னு டிமாண்ட் பண்ற அளவுக்கு உடுமலையாருக்கு வாய்ஸ் சினிஃபீல்டுல
இருந்திருக்கு.

ஆசாத்

unread,
Jul 28, 2011, 2:32:36 AM7/28/11
to பண்புடன்
> மருதகாசி

தத்துவத்துல தலைவர் கலக்குவாருன்னா காதல்லயும் கலக்குவாரு.

காதல் எந்தன் மீதில் என்றால் (விவசாயி) - இவருதான

ராஜசுப்ரமணியன் S

unread,
Jul 28, 2011, 4:31:39 AM7/28/11
to பண்புடன்
இந்தப் பாடல் எனக்கும் பிடிக்கு.காதல் அனுபவத்தையும்.ஏக்கத்தையும்
இப்பாடல் அருமையாகச் சொல்கிறது.

மரவண்டு

unread,
Jul 28, 2011, 6:57:22 AM7/28/11
to பண்புடன்
சக்கரவத்தித் திருமகள் படத்தில் பாட்டுக் கோட்டையார் எழுதிய பொறக்கும்
போது பொறந்த குணம் போகப் போக மாறுது என்ற பாடலில் இடம்பெற்ற வரிகளை
எம்.ஜி.ஆர் அடிக்கடி சிலாகித்துக் கொள்வாராம்.

வாழ்வின் கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத் தேடிப் பூட்டுது - ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது

http://www.youtube.com/watch?v=v-tn4VycSPM


lucky shajahan

unread,
Jul 28, 2011, 7:32:08 AM7/28/11
to panb...@googlegroups.com
அதில் இன்னொரு பாடலும் என் ஃபேவரைட்..
 
அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீ தானே..
 
நகைச்சுவையான பாடலாய் இருந்தாலும் நல்ல ராக லயத்துடன் இருக்கும்..
 
http://www.youtube.com/watch?v=2BgjHr84DaI கிளிக்கி நீங்களே பாருங்களேன்..


 
2011/7/28 மரவண்டு <mara...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

வில்லன்

unread,
Jul 28, 2011, 7:32:44 AM7/28/11
to panb...@googlegroups.com
http://www.youtube.com/watch?v=4rF4kxUzl5g

//கீதம் அவளது வலையோசை
கீதம் அவளது வலையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழ் ஓஓஓஓஓஓசை//

அந்த இழுவை தான் செம்ம இழுவை...

முத்தான முத்தல்லவோ
எம் எஸ்வி / வாலி


lucky shajahan

unread,
Jul 28, 2011, 7:34:32 AM7/28/11
to panb...@googlegroups.com

என்.எஸ்.கே - எம்.ஜி.ஆர் போட்டி பாலை விட்டு விட முடியுமா..?
 
2011/7/28 lucky shajahan <luckys...@gmail.com>

வில்லன்

unread,
Jul 28, 2011, 7:41:36 AM7/28/11
to panb...@googlegroups.com
உலகத்திலே மிக பயங்கரமான ஆயுதம் எது!?

இது ரூமுக்கு போனதும் போடலாம்னு இருந்தேன்.

2011/7/28 lucky shajahan <luckys...@gmail.com>



--

Gokul Kumaran

unread,
Jul 28, 2011, 8:07:32 AM7/28/11
to panb...@googlegroups.com
இந்தப் பாடலின் விடியோவைக் கேட்ட பிறகுதான் வயலினும் பியானோவும் பாட்டோடு எப்படி பின்னிப் பிணைந்திருக்கிறது என்பது தெரிகிறது. இதுவரை இந்தப் பாடலின் வரிகளை மட்டும் ரசித்தேன். இனி இசையையும் ரசிப்பேன்.

2011/7/28 வில்லன் <vom...@gmail.com>

http://www.youtube.com/watch?v=4rF4kxUzl5g

//கீதம் அவளது வலையோசை
கீதம் அவளது வலையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழ் ஓஓஓஓஓஓசை//

அந்த இழுவை தான் செம்ம இழுவை...

--
Gokul Kumaran

வில்லன்

unread,
Jul 28, 2011, 11:01:18 AM7/28/11
to panb...@googlegroups.com
வெள்ளிவிழா கேபி இயக்கத்தில் எழுபதில் வெளியான ஜெமினி கணேசன் படம். வாணி ஸ்ரீ மற்றும் ஜெயந்தி நடிப்பில் வெளியான திரைப்படம்.

இந்த படத்தில் மெலோடி பாடல்களாக பாடும் சுசிலா நான் சத்தம் போட்டுதான் பாடுவேன் என்ற பாடலையும்

எயந்த பயம் புகழ் எல் ஆர் ஈசுவரி காதோடுதான் நான் பாடுவேன் என்ற பாடலையும் இசையமைப்பாளர் குமார் பாடவைத்தார்.

// பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது //


கேபி படம் என்பதால் வாலியாக இருக்கலாம். பெரியவங்க யாராவது சொல்லுவாங்க

வில்லன்

unread,
Jul 28, 2011, 11:11:48 AM7/28/11
to panb...@googlegroups.com
http://www.inbaminge.com/t/t/Then%20Sinduthey%20Vaanam/

தேன் சிந்துதே வானம் படம். இசை குமார்( யாரு இந்த குமாரு...) எழுதியவர் வாலி...

பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாகக் காண்போம்
குரலோசை குயிலோசை என்று
அழகே மொழி பேசு இன்று//

நல்ல மெலடி மெட்டு. 

தனியா உட்கார்ந்து சரக்கடிக்கிறப்போ இப்படிப்பட்ட மெலடியா கேட்டா சூப்பரா இருக்கும்.

Gokul Kumaran

unread,
Jul 28, 2011, 11:30:44 AM7/28/11
to panb...@googlegroups.com
பல பாலசந்தர் பாடத்துக்கு குமார் தான்.

முன்னாடி போட்ட வெள்ளி விழா படத்துக்கும் குமார் தான்.

அந்தப் படத்தில் அமைதியாகப் பாடக்கூடிய சுசீலாவை அழைத்து “நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்”-னு பாட வச்சார். க்ளப் டான்ஸ் பாடலை பாடக்கூடிய எல் ஆர் ஈஸ்வரியை “காதோடு தான் நான் பாடுவேன்”-னு மென்மையாக பாட வச்சார்.

2011/7/28 வில்லன் <vom...@gmail.com>

தேன் சிந்துதே வானம் படம். இசை குமார்( யாரு இந்த குமாரு...) எழுதியவர் வாலி...

--
Gokul Kumaran

வில்லன்

unread,
Jul 28, 2011, 12:28:03 PM7/28/11
to panb...@googlegroups.com
அததான் நான் சொல்லிட்டேனே.

அப்புறம் ஏன் நீங்க தனியா மொக்கை போடுறிங்க.

வேற எதாவது தகவல் சொல்லுங்க.

2011/7/28 Gokul Kumaran <gokul...@gmail.com>

வில்லன்

unread,
Jul 28, 2011, 12:43:30 PM7/28/11
to panb...@googlegroups.com
http://www.inbaminge.com/t/a/Aval%20Appadi%20Thaan/

அவள் அப்படித்தான் படத்தில் வரும் பன்னீர் புஷ்பங்களே பாடல் கமலஹாசன் பாடிய முதல் பாடல்
என்பதற்காகவே எனக்கு பிடித்த ஒன்று.

// ஆண் செய்த சட்டம்
அவர் போட்ட வட்டம்
அதர்கென்று பெண்ணினமோ...
இது யார் சாபம்..//

// பலபேரைச் சேரும்
பரந்தாமன் தன்னை
புகழ் பாட கேட்டதுண்டு
இந்த பூமியிலே..// 

நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனது....


தலைவர் செல்வனுக்கு அநேகமாக பிடிக்கலாம்.........

வில்லன்

unread,
Jul 28, 2011, 12:50:46 PM7/28/11
to panb...@googlegroups.com
இதிலே நான் சொல்ற பாட்டெல்லாம் எனக்கு ரெக்கார்ட் பண்ணி எனக்கு கொடுத்தா அடுத்த டூர் ட்ரிப்பில் எனக்கு பக்கத்து சீட்ல இடம் பிடித்து கொடுப்பேன் மரவண்டார்க்கு.

வில்லன்

unread,
Jul 28, 2011, 12:59:29 PM7/28/11
to panb...@googlegroups.com
http://www.inbaminge.com/t/m/Mahanathi/

என் நெஞ்சம் என்றும் தோல்வியென்பதை ஏற்றதில்லையடி.....

பிட் சாங் என்றாலே யுவன் ராஜாதான், பல படங்களில் இரண்டு மூன்று வரி பாடல்களை போட்டிருப்பார்.

அவருக்கு முன்னோடி இசைஞானி,

மஹா நதி படத்திக்லே தன்மானம் உள்ள நெஞ்சம் என்னாலும் தாளாது

எங்கேயோ தெக்கு திசை காணாத தூரம் தான்

மற்றும் தேடியது கிடைச்சாலே சந்தோசப்படும் மனசு
வந்து கூடியது விட்டுப்போனா வருத்தப்படுவதென்ன

என பிட் சாங்ஸ் போட்டிருப்பார்,

(தயவு செய்து பிட் என்றதும் கோகுல் ஜி உள்ளே வர வேண்டாம் இது வேற பிட்)

வில்லன்

unread,
Jul 28, 2011, 1:01:11 PM7/28/11
to panb...@googlegroups.com
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=-KRJHp-380g

2011/7/28 வில்லன் <vom...@gmail.com>


மற்றும் தேடியது கிடைச்சாலே சந்தோசப்படும் மனசு
வந்து கூடியது விட்டுப்போனா வருத்தப்படுவதென்ன

என பிட் சாங்ஸ் போட்டிருப்பார்,

(தயவு செய்து பிட் என்றதும் கோகுல் ஜி உள்ளே வர வேண்டாம் இது வேற பிட்)

வில்லன்

unread,
Jul 28, 2011, 1:03:54 PM7/28/11
to panb...@googlegroups.com
http://gopinath-walker.blogspot.com/2011_06_01_archive.html

இளையராசா பாடிய பாடல் கேட்ட நரேஷ்க்காக இந்த லிங்கு.................

வில்லன்

unread,
Jul 28, 2011, 1:28:51 PM7/28/11
to panb...@googlegroups.com


தேவதை ஒரு மிகப்பெரிய மொக்கை படமாக இருந்தாலும் வித்தியாசமான தமிழ் படமும் கூட,.

இந்த படத்து பாட்டு எல்லாமே சுமார் ரகம் என்றாலும் இந்த ஒரு நாள் அந்த ஒரு நாள் உனை முதலில் கண்ட திருநாள் அது மறந்து போகுமா

பாடம் செம்ம கல்லக்கல் ரகம்.

படத்தில் முதல் இரண்டு வரிகள் இளையராசா பாடியிருப்பார்,

ஆனால் என்னிடம் இருக்கும் பாடல் முழுவதும் ஜானகி பாடியதாக இருக்கிறது,

வில்லன்

unread,
Jul 28, 2011, 1:56:56 PM7/28/11
to panb...@googlegroups.com
http://songlyrics.blogsplug.in/2010/02/10/407/

எங்கிருந்தோ வந்தான் என்ற பாடாவதி படத்தில் வரும் எங்கிருந்தோ வந்தான்
என்ற பாடல். 

நீண்ட இடைவேளைக்கு பிறகு எம் எஸ் வி ராமமூர்த்தி இசையமைத்த படம்.

சத்யராஜ் ரோஜா நடித்தது.

கிருஷ்ணாஷ்டமிக்கு ஏத்த பாடல்.

பாட்டு வரி அப்படியொன்னும் இம்ரஸ் செய்யவில்லை.

பாடல் கடைசியில் வரும் ஆலாபனை (இந்த சரிகமபதநி போட்டு பாட்டு படிப்பதுதானே ஆலாபனை)
எனக்கு பிடித்த ஒன்று....

வில்லன்

unread,
Jul 28, 2011, 2:42:24 PM7/28/11
to panb...@googlegroups.com
போனப்பாட்டு கிருஷ்ணாஷ்டமிக்கு என்றால் இந்த பாடல் தைபூசத்திற்கு

கண்ட நாள் முதலாய் படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் 

கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி

கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல்பிடித்த கருணை சிவபாலனை (கண்டநாள்) 

வண்டிசைப் பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வந்து சுகம் தந்த கந்தனை  என் காந்தனை (கண்டநாள்) 

இளமையில்த்தானே நெஞ்சமும் மறக்கவில்லை 
நேசமுடன் கலைந்த பாசமும் மறையவில்லை

கோலக்குமரன் மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்
குறுநகை களிப்பாக்சி நறுமலர் சூட்டிவிட்டான் (கண்டநாள்) 


பாட்டு வரி என்ன மோ 8 வரிதான். ஆனால் அதையே வ்ளைச்சி வளைச்சி நாலு நிமிசம் பாடியிருப்பார்கள்
பாடியவர் பேர் மகாலட்சுமி என்று நினைக்கிறேன்.

வில்லன்

unread,
Jul 28, 2011, 2:45:36 PM7/28/11
to panb...@googlegroups.com
http://muzhuvarisai.blogspot.com/2008/03/blog-post_05.html


பாடியவர்:
சுபிக்ஷா, பூஜா

எழுதியவர்:
சிதம்பரம் என் எஸ்


2011/7/29 வில்லன் <vom...@gmail.com>

வில்லன்

unread,
Jul 28, 2011, 3:00:41 PM7/28/11
to panb...@googlegroups.com
அடுத்த கர்நாடிக் பாடல் 

http://www.inbaminge.com/t/b/Bharathi/

பாரதி படத்தில் மது பாலகிருஷ்ணா பாடிய எதிலும் இங்கே இருப்பான் அவன் யாரொ.

இசை இளையராசா பாடலை எழுதியவர் புலமைபித்தன்.


// தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை.. 
நடப்பதும் அதைத் தடுப்பதும் அவன் லீலை.. 
உடுக்கலில் சரம் தொடுப்பவன் தலை முடிக்கணியவும் கூடும் 
பெருக்கலும் அதை வகுக்கலும் அதை கழித்தலும் அவன் பாடம் 
மாறும் யுகம் தோறும் அவன் கணக்கின் படி ஆகும் 
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கை பிடியாகும் // 

lucky shajahan

unread,
Jul 28, 2011, 3:27:39 PM7/28/11
to panb...@googlegroups.com
இரண்டு பாடல்கள் இந்த படத்தில் செம ஹிட்டாகப் பேசப்பட்டது. ஒன்று இந்த பாடல். மற்றொன்று
தீபங்கள் பேசும் இது கார்த்துகை மாதம்..
 
பொதுவாய் ஜானகி நெஞ்சுருகி காதல் பாடல் பாடினாலும் ஒருநாள் அந்த ஒருநாள் பாடலில்
கொஞ்சியுருகி பாடியிருப்பார் அதிலும்
 
மயக்கங்கள் வேண்டாம் மது கொஞ்சம் போதும்
மறுக்க வேண்டாம் என் அன்பே 
 
என்ற வரிகளில் ஜானகி தேனகியாய் பாடுவார்..
 
இது என் தோழி ஒருவரின் பிறந்த நாள் விழாவிற்கு கும்பலாய் போய் பார்த்த படம். இன்றும் ஊர்களில் சந்திப்பு நிகழ்கையில் அது மறந்து போகுமா
என்று நான் ஆரம்பித்தால் ஒரே கலாட்டாதான்.. 
 
வில்லன்.. இது ஜானகி பாடியது மட்டும் தான்.. இளையராஜா பாடியது படத்தில் கிடையாது.
2011/7/28 வில்லன் <vom...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

lucky shajahan

unread,
Jul 28, 2011, 3:39:40 PM7/28/11
to panb...@googlegroups.com
கிருஷ்ணன் பாடல் என்றால் நான் ரசிப்பது இணைந்த கைகள் படத்தில் வரும் கங்கை கரையில்
அடியவர் கூட்டம் பாடல்தான்.. இதில் சரணத்தில் சொல்லப்பட்ட ஒரு தத்துவத்துக்காகவும் தான்..
 
கங்கை கரையில் அடியவர் கூட்டம்
கண்ணனைத் தேடும் கண்களில் வாட்டம்
கோகுல கண்ணன் இனி வருவானா
கோபியர் சூழ வரும் தருவானா..
*
ஆசையின் முடிவில் ஆயிரம் பந்தம்
ஆட்டத்தின் முடிவில் ஆறடி சொந்தம்
தனிவழிப் போகையிலே ஏஏஏஏஏஏ
துணை வழி யார் வருவார்..?
 
ராம்கி இந்த பாடலுக்கு வாயசைத்து நடித்திருப்பபார்.வழக்கமாய் பெண் பின்னால் சுற்றும் ஈரோ ராம்கியை
இந்தப்படத்தில் வித்தியாசமாக பயன்படுத்தியிருப்பார் ஆபாவாணன். ஒரு கிருஷ்ணன் சிலையைத் திருடப்
போகையில் தான் இந்தப்பாடல்..
 
*
இதே படத்தில் அருண்பாண்டியன் - ராம்கிக்கு ஒரு பாடல் இருக்கிறது.. தாயின் தாலாட்டுப் பாட்டு கேட்டிருப்போம்
தந்தையின் தாலாட்டு கேட்டிருப்போமா..
 
அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்த பூங்காறு
தங்க மகன் வரவைக் கண்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
*
உயிர் கொடுத்த தந்தை இங்கே
உருக்கொடுத்த அன்னை அங்கே
இன்பம் துன்பம் எது வந்தாலும்
பங்கு கொல்லும் சொந்தம் இங்கே..
*
 
இந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் ஹிட்டாகவே கருதப்பட்டது..
 
> இது என்ன முதலிரவா ..
> மலையோரம் குயில் கூவ கேட்டேன்.
> ஆடிமாசம் பொறந்திருச்சி
> மெல்ல மெல்ல நிலவு வந்தது
 
நல்ல பொழுது போக்கு மற்றும் ஒரு சேஸிங் திரில்லர் கலந்த இரண்டரை மணி நேர உத்தரவாத பொழுது
போக்கு படத்திற்கு என் அடுத்த தலைமுறைக்கு இணைந்த கைகள் திரைப்படத்தை பரிந்துரைக்கிறேன்.
 


 
2011/7/28 வில்லன் vom...@gmail.com
--

வில்லன்

unread,
Jul 28, 2011, 3:42:42 PM7/28/11
to panb...@googlegroups.com
இளையராஜா பாடியது முதல் இரண்டு வரிகள் மட்டும்.

அதுவும் அது படத்தில் மட்டுமே வரும். கேசட்டில் ஜானகி பாடியது மட்டுமே வரும்.

2011/7/29 lucky shajahan <luckys...@gmail.com>


 
வில்லன்.. இது ஜானகி பாடியது மட்டும் தான்.. இளையராஜா பாடியது படத்தில் கிடையாது.
2011/7/28 வில்லன் <vom...@gmail.com>


--
இப்படிக்கு

     "ஸ்ரீ" 

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று 
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!

lucky shajahan

unread,
Jul 28, 2011, 3:53:14 PM7/28/11
to panb...@googlegroups.com
கொஞ்சம் யேசுதாஸ் கொஞ்சம் இளைய ராஜா குரல்கலவையாய் மதுபாலகிருஷ்ணாவை
அனுபவித்திருக்கிறேன்..
 
பார்த்திபன் கனவு (புதியது) படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பார்.. கேட்டிருக்கிறீர்களா என்ன சுகம்.. என்ன ஸ்வரம்..?
 
கனா கண்டேனடி தோழி கனா கண்டேனடி
 
 
இதில் கனா கண்டேனடி என்ற முதல் வார்த்தைக்கு பிறகு வரும் நாதஸ்வர இசையும் சுகம் பின்னால்
வரும் வரிகளும் சுகம்..
 
கனா கண்டேனடி தோழி....
கனா கண்டேனடி...! கனா கண்டேனடி..
கனா கண்டேனடி...

(கனா....)

உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்
அகமெது புறமெது புரிந்தது போலே கனா கண்டேனடி...
உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள்
சுவையெது சுகமெது அறிந்தது போலே
கனா கண்டேனடி தோழி... கனா கண்டேனடி

(கனா.......)

எதையோ என் வாய் சொல்லத் தொடங்க
அதையே உன் வாய் சொல்லி அடங்க
உதடுகள் நான்கும் ஒட்டிக்கொள்ள நான் கண்டேன்
நிலம் போல் உன் மனம் விரிந்து கிடக்க
நிழல் போல் என் மனம் சரிந்து படுக்க
இதயம் இரண்டும் கட்டிக் கொள்ள நான் கண்டேன்
ஒரு கண்ணில் அமுதம் கண்டேன்
மறு கண்ணில் அமிலம் கண்டேன்!
எங்கெங்கோ தேடித் தேடி
உன்னில் என்னை நான் கண்டேன்

(கனா.........)

இடை மேல் என் விரல் கவிதை கிறுக்க
படை போல் உன் விரல் பதறித் தடுக்க
கூச்சம் உன்னை நெட்டித் தள்ள நான் கண்டேன்!
கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து
மூச்சில் உன்னைச் சொட்டச் சொட்ட நான் கண்டேன்
நிறம் இல்லா உலகம் கண்டேன்
நிறமெல்லாம் உன்னில் கண்டேன்
எங்கெங்கோ தேடித் தேடி
என்னில் உன்னை நான் கண்டேன்

(கனா.........)

பாடல் எழுதியவர் யுகபாரதி.. இவருக்கு ஒரு இழைத் துவங்க வேண்டும்..

2011/7/28 வில்லன் vom...@gmail.com
பாரதி படத்தில் மது பாலகிருஷ்ணா பாடிய எதிலும் இங்கே இருப்பான் அவன் யாரொ.

இசை இளையராசா பாடலை எழுதியவர் புலமைபித்தன்.


// தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை.. 
நடப்பதும் அதைத் தடுப்பதும் அவன் லீலை.. 
உடுக்கலில் சரம் தொடுப்பவன் தலை முடிக்கணியவும் கூடும் 
பெருக்கலும் அதை வகுக்கலும் அதை கழித்தலும் அவன் பாடம் 
மாறும் யுகம் தோறும் அவன் கணக்கின் படி ஆகும் 
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கை பிடியாகும் // 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Ganesh kumar

unread,
Jul 28, 2011, 11:21:23 PM7/28/11
to panb...@googlegroups.com
செளந்தர்யன் என்றொரு இசையமைப்பாளர் சேரன் பாண்டியன் படத்தில் இசையமைத்தார்.இந்தப் படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் இனிமையாக இருக்கும். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் S.A ராஜ்குமார் என்று இணையத்தில் சில இடங்களில் தவறாகப் போட்டிருக்கிறார்கள்

இந்தப் படத்தில்

காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா


என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

http://www.youtube.com/watch?v=v6iiE88yVFM

இதே படத்தில் இடம் பெற்ற

வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே

http://www.youtube.com/watch?v=UByjGdsC6qs

பாடலும் எனக்குப் பிடிக்கும்

0


செளந்தர்யன் மேலும் சில படங்களுக்கு இசையமைத்தார் , சிந்துநதிப்பூ கொஞ்சம் பரவாயில்லை. மற்ற படங்கள் சொல்லிக் கொள்ளும் படி இல்லை . அன்பு தொல்லை , நெருப்பு , நானும் ஒரு பெண் , முதல் ஆசை, வீரண்ணா , அந்த நாள் , காதலே ஜெயம்

0


இணைத்திருக்கும் படத்தில் இருப்பவர் தான் செளந்தர்யன் என நினைக்கிறேன் , இவர் தஞ்சாவூர்க்காரர் .

cheran-pandiyan.jpg

Ganesh kumar

unread,
Jul 28, 2011, 11:37:05 PM7/28/11
to panb...@googlegroups.com
2011/7/28 வில்லன் <vom...@gmail.com>

தேன் சிந்துதே வானம் படம். இசை குமார்( யாரு இந்த குமாரு...)


வி.குமார் நல்ல இசையமைப்பாளர், இவர் மனைவி ஸ்வர்ணா. ஸ்வர்ணா என்றால் சிலர் ஸ்வர்ணலதாவைத் தான் சுருக்கிச் சொல்கிறோம் என நினைக்கிறார்கள் , அவர் வேறு இவர் வேறு.  வி.குமார் இசைய்மைத்த சில படங்களில் ஸ்வர்ணா பாடியிருக்கிறார். வி.குமார் இசையமைத்த பாடல்கள் மட்டும் தனி சிடியாக வெளிவந்துள்ளது.

0

தூண்டில் மீன் படத்தில் வி.குமார் இசையில் தலைவர் ஜெயச்சந்திரனுடன் ஸ்வர்ணா பாடிய ஒரு கிளர்ச்சிப் பாடல் :)

என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத் தான் ஆசை துடிக்கின்றதோ ?
அச்சம் தடுக்கின்றதோ ?


http://www.youtube.com/watch?v=mMv0BkkCBDU

லட்சுமியுடன் ஜோடி போட்டு கூத்தடிப்பது சுமன்.


நள்ளிரவில் மெல்ல மெல்லிடையைக் கிள்ளு
அர்த்தம் என்ன அறிவேன் கண்ணா
அந்தரங்கம் சொல்ல தந்திரங்கள் உண்டு
நான் அறியாப் பெண்ணா

AbulKalam Azad

unread,
Jul 28, 2011, 11:45:34 PM7/28/11
to panb...@googlegroups.com
> Ganesh kumar mara...@gmail.com
> வி.குமார் நல்ல இசையமைப்பாளர்,
 
கன்ஸ்,
 
பழைய பாடல்களை ரசிப்பதற்கும் விவரங்கள் சேர்ப்பதற்கும் வயதானவர்களுக்குத்தான் ஆர்வம் இருக்கும் என்பதை உடைக்கின்றீர்கள். வாழ்த்துகள்.
 
வி.குமார் என்றாலே உடனே நினைவுக்கு வருவது ’நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்’. ரஜினிக்கு அவர் கொடுத்த ’மதனோற்சவம் ரதியோடுதான்’ (சதுரங்கம்) அவ்வப்போது நினைவுக்கு வரும்.

Ganesh kumar

unread,
Jul 28, 2011, 11:48:16 PM7/28/11
to panb...@googlegroups.com


2011/7/28 ஆசாத் <banu...@gmail.com>
> உடுமலை நாராயணகவி

ஒருகாலத்துல பாட்டு எவ்ளோ நேரம் ஸ்கிரீன்ல ஓடுமோ அதுக்கேத்தாப்ல காசு  குடுன்னு டிமாண்ட் பண்ற அளவுக்கு உடுமலையாருக்கு வாய்ஸ் சினிஃபீல்டுல இருந்திருக்கு.


http://www.dinamani.com/edition/story.aspx?artid=379077&SectionID=179&MainSectionID=179&SectionName=Tamil%20Mani&SEO=

திரைப்படப் பாடலின் தந்தை உடுமலை நாராயணகவி

First Published : 20 Feb 2011 12:00:00 AM IST

Last Updated :

தமிழ்நாட்டில் பேசும்படம் பிறந்து சற்று வளர்ந்த காலம் 1931. அதையொட்டி 1934-ஆம் ஆண்டு முதல் சினிமா பாடல் எழுதத்தொடங்கி விட்டவர் நாராயணகவி. திரைப்படப் பாடலாசிரியராகவும், நாடக எழுத்தாளராவும் விளங்கியவர். அற்புதமான சீர்திருத்தப் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்றவர்.

நாடக உலகின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் என்றால், "திரைப்படப் பாடலின் தந்தை' உடுமலை நாராயணகவி எனத் துணிந்து சொல்லலாம். கவிஞர் கம்பதாசனுக்கு முன்னாலேயே சமதர்மக் கொள்கைகளைத் தம் பாடல்வழி பரப்பியவர். நீண்ட காலம் திரைத்துறையைத் தம் கைக்குள் அடக்கி வைத்திருந்தவரும் இவரே.  ÷கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம்-பூளாவாடி கிராமத்தில் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி பிறந்தார்.

 இவருடைய தாய்-தந்தையர் இளமையிலேயே இறந்துவிட்டதால், இவர்தம் சகோதரரால் வளர்த்து ஆளாக்கப்பட்டார். இளமையில் மிகுந்த வறுமையில் வாடிய இவர், தீப்பெட்டி விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றினார்.

 திரையுலகுக்கு வரும் முன்னர், இவர் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக கவிதைகளை எழுதி வெளியிட்டார். இளம் வயதிலேயே கவிதைகள் எழுதியதோடு நாடகங்களிலும் நடித்து வந்தார். 

உள்ளூர் கோயில் திருவிழாவின்போது மேடை நாடகங்கள் நடத்தி நடித்தும் இருக்கிறார். நாடகக்குழு ஒன்றில் சேர்ந்து நடித்ததோடு பாடவும் செய்தார்.

"கவிராயர்' எனத் திரையுலகத்தினரால் அழைக்கப்பட்ட இவரிடம் பாடல்களைப்பெற அந்நாளில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நடையாய் நடந்தார்கள் என்பது ஒன்றே இவரது புகழுக்குச் சிறந்த சான்றாகும். அந்நாளில் புகழ்பெற்ற கவிஞர் பாபநாசம் சிவனைவிட அதிகமாகப் பாடல்களை எழுதியவர் இவர். 

வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி, பராசக்தி, மனோகரா ஆகிய திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதிய இவர், பிரபாவதி, காவேரி, சொர்க்கவாசல், தூக்குத் தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்ய பாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர், ஆதி பராசக்தி, தேவதாஸ் ஆகிய திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். 

தொடக்க காலத்தில் ஆன்மிகப் பாடல்களை எழுதிய இவர், பின்னர் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி, அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பினார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு, "கிந்தனார்' கதாகாலட்சேபம் எழுதியவர். ஏறத்தாழ 10,000 பாடல்கள் எழுதியுள்ளார். இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். எதையும் தாங்கும் இதயம் படைத்தவர், பிறருக்கு உதவுகின்ற நல்ல மனம் படைத்தவர். திரையுலகில் தனக்கென ஒரு தனி மதிப்பையும் புகழையும் உண்டாக்கிக் கொண்டவர். 

அன்றைய காலகட்டத்தில் திரைப்படம் பிறந்து வளர்ந்து வரும் நிலையில் அதை வளரச் செய்த பெருந்தகையாளர். இவரைப் பண்பின் சிகரம் என்றே சொல்லலாம்.

அந்நாளில், மாடர்ன் தியேட்டர்ஸýக்கும் நிறையப் பாடல்களை எழுதித்தந்தார்.

இப்போதெல்லாம் பாடல்களே இல்லை; இசைதான் இருக்கிறது. அதுவும் மேலைநாட்டுக் கணினியில். ஆனால், அன்று பாடல்கள் இருந்தன; இசை இருந்தது; இனிமையாக இருந்தது. அதனால்தான் அன்றைக்கு எழுதப்பட்ட பாடல்கள் கருத்துக் கருவூலங்களாக இருந்தன. 

1954-ஆம் ஆண்டில் "இரத்தக்கண்ணீர்' படத்தில் இவர் எழுதிய "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது?' என்ற பாடலை முணுமுணுக்காதவர்களே கிடையாது. 1956-ஆம் ஆண்டு வெளியான "மதுரை வீரன்' படத்தில் உழைப்பவர்களுக்கெனப் பாடிய "சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம்; சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்' என்ற பாடல் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு மாபெரும் புரட்சி செய்த பாடலாசிரியர்களுள் இவரே முதன்மையானவர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் இவருக்குப் பின்னர் வந்தவர்களே! 

கவிஞர் உடுமலை நாராயணகவி 1952-ஆம் ஆண்டில் "விவசாயி' படத்தில்,    ""நல்ல நல்ல நிலம் பார்த்து நாளும் விதை விதைக்கணும்  நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்''  என்னும் பாடலில்,  
 ""பார்முழுதும் மனிதகுலப் பண்புதனை விதைத்து
  பாமரர்கள் நெஞ்சத்திலே பகுத்தறிவை வளர்த்து 
  போர் முறையைக் கொண்டவர்க்கு  நேர் முறையை விதைத்து
''  
 என்றெல்லாம் கருத்து விளைச்சலை விதைத்து மானுடப்பயிரை வளர்ப்பதற்கு நற்பணி செய்துள்ளார். புதிய உத்திகளைக் கையாண்ட கவிஞர் உடுமலை நாராயணகவி, உழைப்பாளர்களைப் பற்றியும் ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார்.

தமிழ்த் திரைப்படத்தில் அறிவைப் புகுத்தி மக்களைப் பண்பட வைத்த உடுமலை நாராயணகவி, நல்ல செய்திகளை மட்டுமே நாட்டுக்குச் சொல்லி உலகை உயர்த்தப் பாடுபட்டடார். 

"பில்லி, சூன்ய' விவகாரங்களைக் கூடக் கண்டித்துப் பாடல் எழுதியவர் உடுமலை நாராயணகவி. இவர் பெரியார் ஈ.வெ.ரா.வின் கொள்கைகளில் ஈடுபாடு உள்ளவராக இருந்தபோதும், இவர்தம் பாடல்களில் மொழிப்பற்று, இனப்பற்று, மனிதப்பற்று நிறைந்த பாடல்களைப் புனைந்துள்ள கவிஞரை கொங்கு மண்டலத்தின் கிடைத்தற்கரிய மாமணி என்றே சொல்லலாம். 

உடுமலை நாராயணகவியின் குரு, உடுமலை முத்துசாமிக் கவிராயர். நாராயண கவிக்கு தமிழ் இலக்கணப் பயிற்சி அளித்தவர்களுள் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் குறிப்பிடத்தக்கவர். 

உடுமலை நாராயணகவிக்கு இரண்டு பெருமைகள் உண்டு. முதலாவது, சீர்திருத்தக் கருத்துகளை நகைச்சுவையோடு சொன்ன பாடலாசிரியர் இவர் ஒருவரே. அடுத்து, திருக்குறள் சிந்தனைகளை தமிழ்த் திரைப்படப் பாடல்களில் அதிகம் கலந்து பிரசாரம் செய்த பெருமையும் இவருக்கு உண்டு. 

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த கோயமுத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், இவர் பெயரால் "உடுமலை நாராயண கவி மணிமண்டபம்' ஒன்றை அமைத்தது. இங்கு உடுமலை நாராயண கவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக இடம்பெற்றுள்ளன.  ÷இவர்தம் 82-வது வயதில், 1981-ஆம் ஆண்டில் காலமானார். 

31.12.2008-ஆம் ஆண்டில் இந்திய அஞ்சல்துறை இவருக்கு "நினைவு அஞ்சல்தலை' வெளியிட்டது. அந்நாளில் பெரிய திரைப்படத் தயாரிப்பாளராக விளங்கிய சி.எஸ்.ஆர்.சுப்புராமன், திரையுலகில் இவருக்குப் பேராதரவு தந்து, இவரின் திரையுலக வளர்ச்சிக்கு மிகவும் துணைபுரிந்ததை இவர் கடைசிவரைக்கும் மறவாமல் அவர்பால் நன்றி பாராட்டி வந்தார்.
 

மரவண்டு

unread,
Jul 29, 2011, 12:37:48 AM7/29/11
to பண்புடன்

On Jul 29, 8:45 am, AbulKalam Azad <banua...@gmail.com> wrote:
> > Ganesh kumar marava...@gmail.com


> > வி.குமார் நல்ல இசையமைப்பாளர்,
>
> கன்ஸ்,
>
> பழைய பாடல்களை ரசிப்பதற்கும் விவரங்கள் சேர்ப்பதற்கும் வயதானவர்களுக்குத்தான்
> ஆர்வம் இருக்கும் என்பதை உடைக்கின்றீர்கள். வாழ்த்துகள்.
>


ஹா ஹா

ஒரு தடவை சுக்ரவதனி தள ரசிகர்கள் கூட்டம் போட்டாங்க....

அங்கே போனா எல்லாம் ரிட்டையர்ட் ஆன பெருசுங்க

ஒருத்தர் என்னையப் பார்த்ததும் உங்களுக்கு குறைஞ்சது அம்பது வயசாவது
இருக்கும்னு நின்னைச்சேன்னாரு :)

வி.குமார் பத்தி த்னிய ஒரு பதிவு போடணும் அண்ணாத்த ..

குமார் என்றதும் எனக்கு டக்குன்னு 3 பாட்டு ஞாபகத்துக்கு வரும்..

என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே - ஒருவனுக்கு ஒருத்தி

அசைந்தாடும் ஓவியம் அழகான காவியம் - புதுயுகம் பிறக்குது

ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு - நங்கூரம்

Ganesh kumar

unread,
Jul 29, 2011, 12:40:24 AM7/29/11
to பண்புடன்
V kumar.jpg

மோர்சுப்ரா

unread,
Jul 29, 2011, 3:20:18 AM7/29/11
to panb...@googlegroups.com
மரவண்டு ஜி....எனக்கு பிடித்த பாடல்களையும் இதில் சொல்லலாம் இல்லையா ? இழை தடம் மாற்றுவதை ஆகாதே ?

பலமுறை கேட்டது என்றாலும் நேற்றைய இரவு பயணத்தில் சுவை கூட்டிய பாடல்களில் ஒன்று 

"சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி" 

அத்தனை இனிமை !!! 

2011/7/29 Ganesh kumar <mara...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--


அன்போடு

மோர்சுப்ரா


மரவண்டு

unread,
Jul 29, 2011, 3:24:53 AM7/29/11
to பண்புடன்

On Jul 29, 12:20 pm, மோர்சுப்ரா <morsu...@gmail.com> wrote:
> மரவண்டு ஜி....எனக்கு பிடித்த பாடல்களையும் இதில் சொல்லலாம் இல்லையா ? இழை தடம்
> மாற்றுவதை ஆகாதே ?
>

தாராளமாக ஜி

நீங்கள் வில்லனைச் சீண்டுவதற்காக அனுப்பும் மடல்களைத் தவிர மற்ற மடலகளை
மிகவும் விரும்பிப் படிக்கிறேன்.

மோர்சுப்ரா

unread,
Jul 29, 2011, 3:34:43 AM7/29/11
to panb...@googlegroups.com
வில்லன் ஆரம்பத்தில் பேசியபோது கோபமாகதான் பதிலளித்தேன்...அதில் அப்பொழுது என பக்கம் நியாயம் இருந்ததாகவும் நம்புகிறேன்....

ஆனால் இப்பொழுது பேசுவதெல்லாம் நட்பான சிலேடை தவிர வேறேதும் இல்லை...ஆனாலும் வில்லன் பண்ணுற அராத்து வேலையெல்லாம் உங்களுக்கு சரி பட்ட சொல்லுங்க விட்டுடுறேன்... :)))

இங்க கண்டிப்பா சிநேகிக்க தான் வந்திருக்கிறேனே தவிர சண்டை போட அல்ல :)


2011/7/29 மரவண்டு <mara...@gmail.com>


தாராளமாக ஜி

நீங்கள் வில்லனைச் சீண்டுவதற்காக அனுப்பும் மடல்களைத் தவிர மற்ற மடலகளை
மிகவும் விரும்பிப் படிக்கிறேன்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--


அன்போடு

மரவண்டு

unread,
Jul 29, 2011, 3:42:01 AM7/29/11
to பண்புடன்
>
> இங்க கண்டிப்பா சிநேகிக்க தான் வந்திருக்கிறேனே தவிர சண்டை போட அல்ல :)
>

நான் பல குழுக்களில் இருந்தாலும் பண்புடனில் மட்டும் தான் எழுதுகிறேன்.
நான் இருக்கும் இடம் சண்டை சச்சரவாக இருக்கக் கூடாது என நினைப்பேன் :)

Ganesh kumar

unread,
Jul 29, 2011, 5:08:29 AM7/29/11
to பண்புடன்
அகத்தின் அழகை முகத்தில் கொண்ட எம்.ஜி.ஆர் 

0

நான் எவ்வளவு கவலையில் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் சிரித்த முகத்தைக் காணும் போது மனதில் சற்று அமைதி ஏற்படும். சிறுவயதிலிருந்து இன்று வரை எனது வாழ்க்கை பெரிய போராட்டமாகத் தான் இருக்கிறது என்று அடிக்கடி கூறிவந்த எம்.ஜி.ஆர்,  நான் காணும் போதெல்லாம் எப்படி புன்முறுவல் பூத்தபடி நிற்கிறார் என்று அடிக்கடி என்னுள் கேள்வி எழும்.

எம்.ஜி.ஆர்  முகத்தைப் பார்த்துவிட்டு என் முகத்தை கண்ணாடியில் பார்த்தால் எனக்குள் நானே வெட்கப்படுவேன் என்று நடிகர் மோகன் சொன்னாராம்.

எத்துனை பேருக்குத்தான் எம்.ஜி.ஆர் அழகாய்த் தெரிகிறார்.

எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் கூட எடுக்காத பாலாஜிக்குக் கூட வருடம் பிறந்தால் 100 ரூபாயும் பொங்கலுக்கு கதர் வேட்டியும் சட்டையும் அளிப்பாராம் எம்.ஜி.ஆர்.

பொங்கலன்று எம்.ஜி.ஆர் வீட்டிற்குச் சென்ற முத்துலிங்கத்திற்கு ஊருக்கு உழைப்பவன் படத்திற்காக நீங்கள் எழுதப் போகும் பாடலுக்காக வீனஸ் பிக்ஸர்ஸ் உங்களுக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி தனது 1000 ரூபாயை எடுத்துக் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்

வசதியும் புகழும் உள்ள பொழுது  வராதவர்களெல்லாம் வருவார்கள்
நம்மிடம் வரவு இல்லையென்றால் அவர்கள் வரவும் இல்லை என்றாகி விடும் . ஒருவன் கஷ்டப் படும் பொழுது தேடிப் போய் உதவி செய்கின்ற பெருங்குணம்  ராமச்சந்திரனிடம் இருக்கிறது
- என்.எஸ்.கிருஷ்ணன்


0

தாயை காத்த தனையன் படத்திலிருந்து கண்ணதாசன் எழுதிய ....

கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா


http://www.youtube.com/watch?v=1VbkvbbJ4p4

AbulKalam Azad

unread,
Jul 29, 2011, 5:25:37 AM7/29/11
to panb...@googlegroups.com
கன்ஸ்,
 
அந்த ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ கவிஞர் - எம்.ஜி.ஆர். எபிசோடையும் போடுங்களேன்.
 
பட்டுக்கோட்டையார்
மருதகாசி
தஞ்சை ராமையாதாஸ்
கண்ணதாசன்
ஆலங்குடி சோமு
வாலி
முத்துலிங்கம்
நா.காமராசன்
கலைஞர்
பூவை செங்குட்டுவன்
புலமைப்பித்தன்
 
யாரு எழுதியிருந்தாலும் தலைவர் பாட்டு ஹிட்.
 
வைரமுத்து தலைவருக்கு எழுதியிருந்தா எப்படி இருந்திருக்கும்?
 
தாமரை மலர்க்கும் நிறத்தைத் தந்தவன்
. தங்கம் வெட்கிட ஒளியைத் தந்தவன்
பாமலர் எங்கும் பொருளாய் நிற்பவன்
. பகலவன் மறைந்தால் பகலாய் நிற்பவன் 
 
வுடு ஜூஊஊட்...
 

வில்லன்

unread,
Jul 29, 2011, 5:27:54 AM7/29/11
to panb...@googlegroups.com
புதுமை பித்தன்??

2011/7/29 AbulKalam Azad <banu...@gmail.com>
 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

AbulKalam Azad

unread,
Jul 29, 2011, 5:32:16 AM7/29/11
to panb...@googlegroups.com
> புதுமை பித்தன்??

இல்லை வில்லன். இவர் புலமைப்பித்தன்.
 
இது நாடா இல்லை வெறுங் காடா - இதைக்
கேட்க யாரும் இல்லை தோழா
 
இவர் எழுதியதுதான்.

வில்லன்

unread,
Jul 29, 2011, 5:34:04 AM7/29/11
to panb...@googlegroups.com
சார்ரி ந்நான் தான் கன்ப்யூஸ் ஆகிட்டேன்.

நேத்தே புலமைபித்தன் பாட்டு போட்டேன் பாரதி படத்துல இருந்து,

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ!


2011/7/29 AbulKalam Azad <banu...@gmail.com>

> புதுமை பித்தன்??

இல்லை வில்லன். இவர் புலமைப்பித்தன்.
 

AbulKalam Azad

unread,
Jul 29, 2011, 5:37:40 AM7/29/11
to panb...@googlegroups.com
புலமைப்பித்தன் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர்.
 
திரைக்கு அவர் வந்தபோது, ’புமைப்பித்தனைப்போல தமிழ் இலக்கணம் பயின்றவர்களின் வரவு தமிழ்த் திரைக்கு வேண்டும்’ என கண்ணதாசன் பாராட்டியதாக செவிவழிச் செய்தி.

Ganesh kumar

unread,
Jul 29, 2011, 5:46:49 AM7/29/11
to panb...@googlegroups.com
சின்னப்பத்தேவேர் சிறுவயதிலிருந்தே முருக பக்தராக இருந்திருக்கிறார் .
ஒரு முறை மருத மலை படிக்கட்டில் அமர்ந்து கொண்டு முருகா பிழைப்புக்கு எதாவது ஒரு வழிகாட்டு என்று வேண்டியிருக்கிறார் , அந்நேரம் அருகில் கிடந்த தீப்பெட்டியை எடுத்துப் பார்த்த பொழுது அதற்கு்ள் 10 ரூபாய் நோட்டு இருந்திருக்கிறது. அன்றிலிருந்து தீவிர முருக பக்தரானார் தேவர்.

0

பைரவி படத் தயாரிப்பில் கலைஞானத்திற்கு ஆரம்பத்தில் உதவிய தேவர் பிறகு படம் ஓடாது என நினைத்து பின்வாங்கிக் கொண்டார்.பைரவி பட வெற்றியைக் கண்ட தேவர் ரஜினியிடம் ஓடோடிப் போய் 2 படத்திற்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார்

0


தேவர் எடுத்த  மாணவன் திரைப்படத்திற்கு வாலி ஒரு பாடல் எழுதியிருக்கிறார் , அந்தப் பாடலை தேவர் வாங்கிப் பார்த்துவிட்டு , " என்னப்பா நான் என்ன எம்.ஜி.ஆர் பாட்டா கேட்டேன் ஒம்பாட்டுக்கு ராமன் ஜானகின்னு எழுதியிருக்க..  நம்ம முருகனை பத்தி எழுதக் கூடாதா ? "  எனக் கேட்டிருகிறார்.

உடனே வாலி

மின்னுகி்ன்ற கண்ணிரெண்டும் வேலாயுதம்
மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்


என்று எழுதி கொடுத்தாராம்....

மாணவன் படத்தில் சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பி & சுசிலா பாடிய

கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
காதல் வந்த நேரம் என்னவோ


http://www.youtube.com/watch?v=qpcxuvhG9o8

0

ஒருமுறை இன்கம்டாக்ஸ் ரெய்டு வந்த பொழுது பீரோவில் பழனி முருகனின் கோவணத்துணிகளை வைத்திருந்தாரம் தேவர்

Ganesh kumar

unread,
Jul 29, 2011, 5:58:48 AM7/29/11
to panb...@googlegroups.com
தாமரை மலர்க்கும் நிறத்தைத் தந்தவன்
. தங்கம் வெட்கிட ஒளியைத் தந்தவன்
பாமலர் எங்கும் பொருளாய் நிற்பவன்
. பகலவன் மறைந்தால் பகலாய் நிற்பவன் 
 
வுடு ஜூஊஊட்...
 

எம்.ஜி.ஆர் கோட்டா உங்களோடது , நான் உங்களுக்கு தூண்டில் போடுறதுக்குத்தான் எம்.ஜி.ஆர் பத்தி எழுதினேன் :)

lucky shajahan

unread,
Jul 29, 2011, 6:18:43 AM7/29/11
to panb...@googlegroups.com
ஆசாத் அண்ணன் இழைக்குள் நுழைந்ததில் மகிழ்ச்சி :-)
 
பாலாசிரியர் கா.மு ஷெரீஃப் பற்றியும் இவ்விழை தாங்கினால் மகிழ்வேன்
 
வாழ்க்கை என்னும் ஓடம்..
 
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்

2011/7/29 Ganesh kumar <mara...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

AbulKalam Azad

unread,
Jul 29, 2011, 6:22:59 AM7/29/11
to panb...@googlegroups.com
> Ganesh kumar mara...@gmail.com
> எம்.ஜி.ஆர் கோட்டா உங்களோடது
 
’அன்பே வா’வுக்கு எழுதனப்ப லொக்கேஷன்லேர்ந்து ரிடர்ன் ஆகும்போது வழில வண்டில வாலி தூங்கிட்டிருக்காரு. தலை கண்ணாடில இடிச்சுக்கிட்டே வந்திருக்கு. அப்ப எம்.ஜி.ஆரு ஒரு தலகாணிய எடுத்து வாலி தலைக்கும் கண்ணாடிக்கும் எடைல வச்சிருக்காரு. அப்புறமா முழிச்சு யாருப்பா தலகாணி வெச்சான்னு கேட்டா, மக்கள் எம்.ஜி.ஆர். வெச்சதுன்றாங்க.  வாலி ஃப்ளாட்.
 
அதான் எம்.ஜி.ஆர்.
 
பீக்ல இருந்தாலும் கூட இருக்றவங்களுக்கு தானே தன் கையால எதுனாச்சும் நல்லது செஞ்சுக்கினே இருப்பாரு.

AbulKalam Azad

unread,
Jul 29, 2011, 6:28:16 AM7/29/11
to panb...@googlegroups.com
புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே
என்னை வரவேற்க
இந்தப் பூமழை பொழிகிறது (அன்பே வா)
 
இந்தப் பாட்டுலயும் சென்சார் வெளையாடியிருக்கு.
 
*உதய* சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே
 
இதனுடைய சென்சார்டு வர்ஷன்
 
*புதிய* சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே
 
இதுதான்.
 
சென்சார் போர்டு டோண்ட் நோ அபௌட் எ பொயட்டிக்கல் டச் கால்டு *மோனை*. வாட் அ பிட்டி :-))) வுடு ஜூஊஊட்ட்ட்ட்ட்....

Ganesh kumar

unread,
Jul 29, 2011, 6:40:22 AM7/29/11
to panb...@googlegroups.com
கேசட்டுகளில் மட்டும் பாடல்களைக் கேட்டுக் கொண்டி்ருந்த சம்யங்களில் ஒரு பாடலுக்காக ஊர் ஊராய் திருக்கிறேன் என அடிக்கடி எழுதினாலும் அது எந்தெந்தப் பாடல்கள் என்று நான் விபரமாக இதுவரை எழுதியதில்லை.
ரெக்கார்டில் நீடிலை தூக்கி வைத்ததும் ஓலைப்பாயில் நாய் மூத்திரமழை பெய்வது போல் சட சட வென்று சத்தம் கேட்கும். அந்த சத்தத்தை மீறித் தான் பாடலை ரசிக்க வேண்டும்.சரி இந்தக் கடைலதான் ரெக்கர்டு சரியில்லை போலன்னு வேற கடைக்கு போயி ரெக்கார்டு பண்ணாலும் அதே சடச்சட தான்... சட சட  பாடல்கள் மூன்று ஞாபத்திற்கு வருகிறன .

1) விழிகள் மேடையாம் - கிளிஞ்சல்கள்
http://www.youtube.com/watch?v=LUpfGLdupBE

0

2) நீ வருவாய் என நான் இருந்தேன் - சுஜாதா

http://www.youtube.com/watch?v=xJ8mPelHCBo
http://www.wildscreen.tv/videos/6006358/Sujatha-Nee-Varuvai-ena-naan-irunthen-Female-

இந்தப் பாடலில் தோன்றும் சரிதாவும் ராஜலக்ஷ்மியும் நன்றாக குண்டடித்து விட்டார்கள். ராஜலக்ஷ்மியை நேற்றுக் கூட ஒரு தொலைகாட்சி நாடகத்தில் கண்டேன், ஆள் அடையாளமே தெரியவில்லை

0

3) மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட
http://www.youtube.com/watch?v=q1gC6zS_ajA


AbulKalam Azad

unread,
Jul 29, 2011, 6:50:36 AM7/29/11
to panb...@googlegroups.com
> 2011/7/29 Ganesh kumar mara...@gmail.com
> 1) விழிகள் மேடையாம் - கிளிஞ்சல்கள்
 
இந்தாளு டி.ஆர். ஒழுங்கா பாட்ட மட்டும் எழுதிக்கிட்டிருந்தாருன்னா ஒரு நல்ல திரைக்கவிஞர் கெடைச்சிருப்பாரு, ஆனா, டி.ஆர் இவ்ளோ ஃபேமஸ் ஆகியிருப்பாரா.
 
அபார தன்னம்பிக்கைன்னா இவருதாங்க, யாரு என்ன சொன்னாலும் அதப்பத்திக் கவலைப்படாம தன்னோட பாட்டுங்கதான் சூப்பர் அடிச்சு வுடுவாரு.
 
ஆ...பொன்னான மனசே பூவான மனசே
வெக்காத பொண்ணு மேல ஆச
 

வில்லன்

unread,
Jul 29, 2011, 6:54:45 AM7/29/11
to panb...@googlegroups.com
http://asokarajanandaraj.blogspot.com/2011/06/blog-post_02.html

// திருகோவில் வாசலது.. திறக்கவில்லை..
தெருக்கோடி பூஜை அது.. நடக்கவில்லை..
தேவதையை காண்பதற்க்கு.. வழியுமில்லை..
தேன்மொழியை கேட்பதற்க்கு.. வகையுமில்லை..//

2011/7/29 AbulKalam Azad <banu...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

B.SHANMUGAM

unread,
Jul 29, 2011, 6:54:50 AM7/29/11
to panb...@googlegroups.com
http://www.youtube.com/watch?v=Zyc3x8aem94&feature=share

நண்பர்கள் நேரம் இருந்தால் இதையும் பாருங்கள்
2011/7/29 AbulKalam Azad <banu...@gmail.com>

AbulKalam Azad

unread,
Jul 29, 2011, 7:07:11 AM7/29/11
to panb...@googlegroups.com
ஒருதலை ராகம் ஹிட்டாகி டி.ஆர். புகழைந்திருக்கும்போது ஒருமுறை அவரை சந்தித்திருக்கிறேன்.
 
’நான் ஒரு ராசியில்லா ராஜா - என்
வாசத்துக்கில்லை இதுவரை ரோஜா
ஆயிரம் பாடட்டும் மனது - என்
ஆசைக்கு இல்லை உறவு’வை
 
’ஏன் இன்னும் நெஞ்சினிலே ராகம் - அது
ஒருதலையாக மாறிய சோகம்
பாவையின் காதலைத் தேடி - நான்
பாட்டிசைத்தேன் ஒரு கோடி’ என எழுதியிருந்ததை டி.ஆரிடம் பாடிக்காட்டினேன்.
 
’நல்லா இருக்கு, யாராவது ப்ரொட்யூசர்ட்ட பாடிக்காட்டுங்க, நிச்சயமா பாட்டு எழுத சான்ஸ் கெடைக்கும்’ன்னாரு.
 
அது ஆச்சு முப்பது வருசம்.

ஆசாத்

unread,
Jul 29, 2011, 7:10:00 AM7/29/11
to பண்புடன்
> <shanmugamb...@gmail.com> wrote:
> http://www.youtube.com/watch?v=Zyc3x8aem94&feature=share

நல்ல மிக்சிங் :-)))

மரவண்டு

unread,
Jul 29, 2011, 7:29:25 AM7/29/11
to பண்புடன்
> ’ஏன் இன்னும் நெஞ்சினிலே ராகம் - அது
> ஒருதலையாக மாறிய சோகம்
> பாவையின் காதலைத் தேடி - நான்
> பாட்டிசைத்தேன் ஒரு கோடி’ என எழுதியிருந்ததை டி.ஆரிடம் பாடிக்காட்டினேன்.
>
> ’நல்லா இருக்கு, யாராவது ப்ரொட்யூசர்ட்ட பாடிக்காட்டுங்க, நிச்சயமா பாட்டு எழுத
> சான்ஸ் கெடைக்கும்’ன்னாரு.
>
> அது ஆச்சு முப்பது வருசம்.

நீங்க நல்லா சந்த நயத்தோட பாட்டு எழுதி என்ட்ட குடுங்க , டைரக்டர்ஸ்
யாரவது சிக்குனா குடுத்துப் பாப்போம்.

AbulKalam Azad

unread,
Jul 29, 2011, 7:46:59 AM7/29/11
to panb...@googlegroups.com
> மரவண்டு mara...@gmail.com
> நீங்க நல்லா சந்த நயத்தோட பாட்டு எழுதி என்ட்ட குடுங்க ,
> டைரக்டர்ஸ் யாரவது சிக்குனா குடுத்துப் பாப்போம்.
 
இப்ப ஆர்வமில்ல கன்ஸ். நாளைக்கு ஆர்வம் வரலாம்.

lucky shajahan

unread,
Jul 29, 2011, 7:51:04 AM7/29/11
to panb...@googlegroups.com
இத்தயதேன் ரொம்ப நாளியா சொல்லிக்கினு கீராரு அண்ணாத்தே ;-)

2011/7/29 AbulKalam Azad <banu...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Ahamed Zubair A

unread,
Jul 29, 2011, 7:58:33 AM7/29/11
to panb...@googlegroups.com
சீக்கிரம் எழுதினீங்கன்னா, நாங்களும் ஆசாத் அண்ணாவுக்குத் தெரிஞ்சவங்கன்னு சொல்லி கொஞ்சம் சீன் போடுவோம்ல??? :)))

2011/7/29 AbulKalam Azad <banu...@gmail.com>

AbulKalam Azad

unread,
Jul 29, 2011, 8:25:35 AM7/29/11
to panb...@googlegroups.com
> சீக்கிரம் எழுதினீங்கன்னா, நாங்களும் ஆசாத் அண்ணாவுக்குத்
> தெரிஞ்சவங்கன்னு சொல்லி கொஞ்சம் சீன் போடுவோம்ல??? :)))
தம்பி வாயக் கெளறாதீங்க. அப்புறம் நான் பேசிடுவேன் :-)))
 
ஐம்பது வயச முடிச்சப்ப
கண்ணதாசன் பீக்
வாலி பீக்
வைரமுத்து பீக் 
 
எனக்கு அம்பது ஆகிடுச்சு. நோ வே. இப்ப நமக்கு சான்ஸ் கெடைச்சாலும் லேட் எண்ட்ரிதான்.
 
ஆல்ரெடி
நா.மு.
யு.பா.
பி.சூ.
கபிலன்
விவேகா
சிநேகன்
அப்படி இப்படின்னு ஒரு கூட்டமே ரொம்பிக்கெடக்குது.
 
லேட் எண்ட்ரி, வேற ப்ரொஃபஷன், ம்யூசிக் டைரக்டர்ஸுங்க பின்னால் சுத்த முடியாத நிலை....முடியாது சுபைர்.
 
ப்ராக்டிகலா திங் பண்ணனும். ஃப்ளூக்ல எங்கியாவது அடிச்சா நடக்கலாம். மத்தபடி நோ வே.

Ahamed Zubair A

unread,
Jul 29, 2011, 9:07:03 AM7/29/11
to panb...@googlegroups.com
இந்த பாட்டு பாடுறாரே ஒரு ஆளு.... வாயெல்லாம் வெத்தலையோட.... அவருக்கு வயசு என்னா??

இந்த பரவை முனியம்மா?? அவங்களுக்கு வாய்ப்பு கிடைச்சப்போ வயசு என்ன??

இன்னும் நிறைய பேருக்கு 50க்கு அப்புறம் தான் வாழ்க்கையே ஆரம்பிக்குது :))))

2011/7/29 AbulKalam Azad <banu...@gmail.com>
--

மரவண்டு

unread,
Jul 29, 2011, 9:10:13 AM7/29/11
to பண்புடன்
On Jul 29, 3:54 pm, வில்லன் <vom...@gmail.com> wrote:
> http://asokarajanandaraj.blogspot.com/2011/06/blog-post_02.html
>
> // திருகோவில் வாசலது.. திறக்கவில்லை..
> தெருக்கோடி பூஜை அது.. நடக்கவில்லை..
> தேவதையை காண்பதற்க்கு.. வழியுமில்லை..
> தேன்மொழியை கேட்பதற்க்கு.. வகையுமில்லை..//
>
> Read more:http://asokarajanandaraj.blogspot.com/2011/06/blog-post_02.html#ixzz1...
>

இந்தப் பாட்டோட Prelude எப்படி இருக்கு ? இளையராஜாவே தோத்துப் போவாரு

கூர்மதியும் கூறும் கொண்ட வில்லன் அவர்களே

ஒரு வேண்டுகோள் .. துண்டு அறிக்கை மாதிரி பாடல் போட வேண்டாம்.. கொஞ்சம்
அனுபவிச்சு எழுதுனிங்கன்னா நல்லா இருக்கும்.

Ganesh kumar

unread,
Jul 29, 2011, 9:15:31 AM7/29/11
to panb...@googlegroups.com


2011/7/29 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

இந்த பாட்டு பாடுறாரே ஒரு ஆளு.... வாயெல்லாம் வெத்தலையோட.... அவருக்கு வயசு என்னா??


மாணிக்க விநாயகமா  ?

அவரு முன்னாடி இருந்து இசைத்துறையில் தான் இருக்காரு , சினிமாவுக்கு கொஞ்சம் லேட்டா தான் பாட வந்தாரு

Ahamed Zubair A

unread,
Jul 29, 2011, 9:27:21 AM7/29/11
to panb...@googlegroups.com
பரவை முனியம்மாவும் முன்னாடிலேர்ந்து இசைத் துறைல தான் இருக்காங்க...

நான் இவங்க ஒப்புமை கொடுத்தது, ஆசாத் அண்ணனும் முன்னாடிலேர்ந்து சந்தத்துக்கு பாட்டெழுதுவாருன்னு சொல்லத்தான் :))

வாய்ப்பு எப்ப வேணும்னாலும் வரும்... ஆனா அப்ப அதை உதறி விட்டுர வேண்டாம்னு தான் சொன்னேன் :)

2011/7/29 Ganesh kumar <mara...@gmail.com>

2011/7/29 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
இந்த பாட்டு பாடுறாரே ஒரு ஆளு.... வாயெல்லாம் வெத்தலையோட.... அவருக்கு வயசு என்னா??


மாணிக்க விநாயகமா  ?

அவரே தான்.

Ganesh kumar

unread,
Jul 29, 2011, 9:52:00 AM7/29/11
to panb...@googlegroups.com
எஸ்.பி.பியும் ஷைலஜாவும் அண்ணன் தங்கை எனினும் இருவரும் இணைந்து சில ஜோடிப்பாடல்களும் பாடியிருக்கின்றனர்

1) கொலுசே கொலுசே இசை பாடு கொலுசே - பெண் புத்தி பின்புத்தி
2) மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி
3) வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபலனே - சலங்கை ஒலி
4) மன்மத ரோஜாவே உனை ஆடையில் மூடாதே - வெளிச்சம்
5) கீதம் சங்கீதம் - கொக்கரக்கோ
6) ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல - நான் சூட்டிய மலர்
7) மனதில் என்ன நினைவுகளோ - பூந்தளிர்
8) தங்க குடமே -ஒரு இரவு ஒரு பார்வை

9) விடியும் வரை காத்திரு படத்திலிருந்து இளையராஜா இசையில் எஸ்.பி.பியும் ஷைலஜாவும் பாடிய பேசு என் அன்பே பாடல்

http://www.youtube.com/watch?v=HXxS3vatCbQ



மரவண்டு

unread,
Jul 29, 2011, 12:39:46 PM7/29/11
to பண்புடன்

On Jul 29, 6:52 pm, Ganesh kumar <marava...@gmail.com> wrote:
> எஸ்.பி.பியும் ஷைலஜாவும் அண்ணன் தங்கை எனினும் இருவரும் இணைந்து சில
> ஜோடிப்பாடல்களும் பாடியிருக்கின்றனர்
>

2) மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி - தீராத விளையாட்டுப் பிள்ளை
.....
10) வாலிபமே வா வா தேனிசையே வா- ராம் லக்ஷ்மண்
11) மாமன் ஒரு நாள் மல்லிகைப்பூ கொடுத்தான் - ரோஜாப்பூ ரவிக்கைக்காரி
12) நாத விநோதங்கள் நடன சந்தோசங்கள் - சலங்கை ஒலி

வில்லன்

unread,
Jul 29, 2011, 1:30:35 PM7/29/11
to panb...@googlegroups.com
அண்ணே அண்ணே நீ என்னா சொன்னே!

என்க்கு ம்யூசிக் பத்தி எதும் தெரியாது. நான் விரும்பும் பாடல்களைதான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.
prelude னா என்னானு கூகிளில் தான் தேடி தெரிஞ்சிக்கிட்டேன்,

Music .
a.
a relatively short, independent instrumental composition,free in form and resembling an improvisation.

2011/7/29 மரவண்டு <mara...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

வில்லன்

unread,
Jul 29, 2011, 1:56:04 PM7/29/11
to panb...@googlegroups.com
எனக்கு நாலு வயசிருக்கும் போதே தலைவரு செத்து போயிட்டாரு.
தலைவரு செத்தா என்ன அவரு பாடல்கள் அவரை உயிரோட உலாத்த வச்சிக்கிட்டு இருக்கு.

சமகாலத்தில் அவருக்கு பின் எழுச்சிப்பாடல்களோ புரட்சிப்பாடல்களோ
இல்லாமல் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை முடிந்தளவு நிரப்பிக்கொண்டிருப்பவர் அல்லது இருந்தவர்
எங்க கருப்பு எம்ஜியார் திருவாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்,

கள்ளழகர் படத்தில் சின்ன வயசிலே ரொம்ப சின்ன வயசிலே பாடல் எம் ஜி ஆர் பாட்டு கேட்கிற மாதிரி
ஒரு எனர்ஜெடிக் பாடல். ஆனாலும் அது ஒரு சோகப்பாடல்தான்.

// ஏனிங்கு அழுதாய் இரவினில் விழித்து
இளம்பிஞ்சு நிலவே அழுவதை நிறுத்து
நடைமுறை மாற்று புது வழி காட்டு
பிறக்கட்டும் வரலாறு...

ஒன்றே தெய்வம் அன்பே தெய்வம்
ஊருக்கெல்லாம் காட்டடா

தேசம் காக்கும் போருக்கிங்கே வாளும் 
வேலும் தீட்ட்டா

நாளை வானிலே உன் கண்கள் சூரியன்
அது உறவுக்கு விளக்கு பகைவர்க்கு நெருப்பு
என்பதை நீயும் காட்டு

அப்போ நீயும் தூங்கலாம் இந்த நாடும் தூங்கலாம் //

இந்த படம் ரிலீசன்னிக்கு பாலிடெக்னிக் கட்டடிச்சிட்டு போனோம். டிக்கெட் கிடைக்கலை.
வேற படம்போயிட்டோம்.

அடுத்த நாளும் கட்டு. அன்னிக்கும் கிடைக்கலை, தொடந்து மூன்றூ நாள் போராடி டிக்கெட் பெற்றோம்.
அப்புறமும் ஒரு மூன்று முறை பார்த்தேன் நண்பர்களுடன்.

எல்லாரும் லைலா படத்தில் வர்ர முதல் சீனுக்காக படத்தை 3 தடவை நான் பார்த்தாக கிண்டல் செய்வார்கள்.
எனக்கு என்னவோ இந்த படம் ரொம்பபிடிச்சிருந்தது.



பிகு:

இந்த படத்தை எடுத்த பாரதியின் முதல் படம் மறுமலர்ச்சி. மம்மூட்டி ராசு படையாச்சியாக அதாவது வன்னியானியத்தை தூக்கி பிடிக்கும் தலைவராக நடிச்சிருப்பார். இதற்கு பிறகு வந்த படம் தான் கள்ளழகர், ஆனா போன தேர்தலில் விஜகாந்த்துக்கு எதிராக வன்னியானியத்துக்கு ஆதரவா பிரசாரம் செய்கையில் விசயகாந்து வன்னியர்களை அவமதிப்பதற்காகவே மறுமலர்ச்சியில் நடிக்கவில்லை போன்ற ஒரு பிரசாரத்தில் ஈடுபட்டார். என்ன எழவு வன்னியானியமோ. அந்த வன்னியானிய கன்றாவியெல்லாம் நமக்கு எதுக்கு. பாட்டை மட்டும் கேளுங்க.



2011/7/29 வில்லன் <vom...@gmail.com>

வில்லன்

unread,
Jul 29, 2011, 1:56:55 PM7/29/11
to panb...@googlegroups.com
So Sad லிங்கு லிங்கு லிங்கு மறந்துட்டேன்

Ahamed Zubair A

unread,
Jul 29, 2011, 2:44:30 PM7/29/11
to panb...@googlegroups.com
விஜயகாந்த் நடித்த படங்களில் எனக்குப் பிடித்த பாடல்கள்

1. வைதேகி காத்திருந்தாள்

பாடல் - ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு
இசை - இளையராஜா
வரிகள் - வைரமுத்து(!?)
பாடியவர் - ஜெயச்சந்திரன்

ரொம்ப காலம் நான் தூங்கணும்னா இந்தப் பாட்டு கேக்கணும்னு அடிக்ட் ஆகி இருந்தேன். :))


2. வைதேகி காத்திருந்தாள்

பாடல் - இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இசை - இளையராஜா
வரிகள் - வைரமுத்து
பாடியவர் - ஜெயச்சந்திரன், சுசீலா

முதல்ல வர்ற அந்த ஆலாப் கேக்கும்போது அப்படியே உருகிடுவோம்...


அப்படியே இழையோடும் இந்தப் பெண் குரலுக்கு ஆண்டவன் ஏன் இப்படி ஒரு அற்புதமான ஈர்க்கும் தன்மையைக் கொடுத்தான்???

lucky shajahan

unread,
Jul 29, 2011, 5:02:52 PM7/29/11
to panb...@googlegroups.com
நிச்சயித்த பெண்ணுடன் திருமணத்துக்கான இரண்டு வருட காத்திருப்பிற்காக பிழைப்பு தேடி
சவூதி அரேபியாவிற்கு வந்த தருணங்களில் அந்த பெண்ணுடன் பேசியதற்கான தருணத்திற்கப்பால்
ஒரு அவஸ்தை நிலவும்... கைக்குழந்தையை தொலைத்த அவஸ்தைக்கு ஈடானது அது.. அது போன்ற
தருணங்களில் இந்த பாடல் மனதை லேசாக்கிப் போகும்..
 
கோபுர வாசலிலே படத்தில் தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
 
 
எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள் ?
 
காலையில் நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
 
பாடலில் நடுவில் நீர்த்தொட்டியில் ஒயிலாய் எல்லோரா சிற்பம் போல் பானுபிரியா காதில் இறகுடன்
ஜானகி குரலுக்கு என்னமாய் வாயசைத்திருப்பார்..
 
இதே படத்தில் தேவதை போலோரு பெண்ணிங்கு வந்தது தம்பி, பிரியசகி என் பிரியசகி, காதல் கவிதைகள்
எழுதிடும் நேரம் பாடல்களும் நன்றாக இருக்கும்.. ஏன் இப்போது இந்த மாதிரி படங்கள் பிரியதர்ஷன் எடுப்பதில்லை?
 
*
சின்னத்தம்பியின் போவோமா ஊர்கோலம் பாடலும் கேப்டன் பிரபாகரனின் ஆட்டமா தேரோட்டமா பாடலும் ஸ்வர்ணலதாவின் அடையாளமாய் அதிகமாய் அறியப்பட்டாலும் என் விருப்பம் சத்ரியன் படத்திற்காக பானுபிரியாவிற்கு பாடிய மாலையில் யாரோ பாடல் தான்..
 
 
கரை மேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல்மீன் கூட்டம் ஒடி வந்து கண்ணைப் பார்க்க
 
அந்த இடத்தில் ஒளிப்பதிவும் பானுப்ரியாவின் நளினமும்..
 
பங்காளி படத்தில் பானுப்ரியாவின் கண்களை செவன்ட்டி எம் எம் ஸ்கிரீன் என்பார் சத்யராஜ்..அது சாலப்
பொருந்தும்.. 

 
2011/7/29 Ahamed Zubair A ahamed...@gmail.com
ரொம்ப காலம் நான் தூங்கணும்னா இந்தப் பாட்டு கேக்கணும்னு அடிக்ட் ஆகி இருந்தேன். :))


2. வைதேகி காத்திருந்தாள்

பாடல் - இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இசை - இளையராஜா
வரிகள் - வைரமுத்து
பாடியவர் - ஜெயச்சந்திரன், சுசீலா

முதல்ல வர்ற அந்த ஆலாப் கேக்கும்போது அப்படியே உருகிடுவோம்...


அப்படியே இழையோடும் இந்தப் பெண் குரலுக்கு ஆண்டவன் ஏன் இப்படி ஒரு அற்புதமான ஈர்க்கும் தன்மையைக் கொடுத்தான்???

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

வில்லன்

unread,
Jul 29, 2011, 5:15:09 PM7/29/11
to panb...@googlegroups.com
ஐயா உங்க பதிலே ஒரு கவிதைப்போலே இருக்கிறதய்யா...


2011/7/30 lucky shajahan <luckys...@gmail.com>

கைக்குழந்தையை தொலைத்த அவஸ்தைக்கு ஈடானது அது.. 
--

lucky shajahan

unread,
Jul 29, 2011, 5:59:43 PM7/29/11
to panb...@googlegroups.com
வில்லன், பாடல்களுக்கும் எனக்கும் உள்ள உறவு என்பது இது போன்ற சூழல்களாலேயே பின்னப்பட்டிருக்கிறது.
அதனாலேயே பாடல்களை ரசிப்பதும் உள்வாங்குவதும் எனக்கு சாத்தியமாகிப் போனது. எல்லோரும் ஏதேனும் ஒரு பாடலை ஏதேனும் ஒரு சூழல் நிகழ்வாகவே நினைவில் நிறுத்தி வைத்துக் கொள்கிறோம். 

பாட்டு என்பது மனம் போடும் பெரிய கூச்சல்..ஒரு மாதிரியான கதறல்..நாகரீகமான அழுகை, தனக்குதானே உரக்க பேசிக் கொள்வதின் இன்னொரு வடிவம்..தெருவில் உரக்கப்பேசிக் கொண்டு போக முடியாதவர்கள் பாட்டு பாடுகிறார்கள்.. ( நன்றி : பாலகுமாரன் )

முதல் குழந்தை எனக்கு ஆண்.. பிறந்த நான்கு நாட்களில் இறந்து போனான். நான் அப்போது சவூதியில் இருந்தேன்.

யாரிடமும் மனம் விட்டு அழ முடியாத சூழலில் இளையராஜாவின் பாட்டொன்றை முணுமுணுத்தபடி நிறைய  நேரம் தனிமையிலேயே இருந்தேன்.. அந்த பாடல் எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. இன்றும் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படம் பார்க்கையில் என்னால் அழாமலிருக்க முடியவில்லை. குறிப்பாய் கண்ணே நவமணியே பாடலில் கேவி கேவி அழுகிறேன். சுற்றிலும் யார் இருப்பினும் வெட்கம் பார்ப்பதில்லை. எனக்கான வேதனையை யார் அறிந்து கொள்ள முடியும்..?

http://www.youtube.com/watch?v=EJcDJ0t1Vvc

கண்ணே நவமணியே

உன்னை காணமல் கண்ணுறங்குமோ

ஆயிரம் பிச்சிப்பூவு அரும்பரும்பா பூத்தாலும்

வாசமுள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எந்நாளும்...


 

2011/7/30 வில்லன் <vom...@gmail.com>
ஐயா உங்க பதிலே ஒரு கவிதைப்போலே இருக்கிறதய்யா...

--

செல்வன்

unread,
Jul 29, 2011, 6:01:37 PM7/29/11
to panb...@googlegroups.com


2011/7/28 lucky shajahan <luckys...@gmail.com>
நல்ல பொழுது போக்கு மற்றும் ஒரு சேஸிங் திரில்லர் கலந்த இரண்டரை மணி நேர உத்தரவாத பொழுது
போக்கு படத்திற்கு என் அடுத்த தலைமுறைக்கு இணைந்த கைகள் திரைப்படத்தை பரிந்துரைக்கிறேன்.


ஐ அக்ரி...ஒரு வெற்றிபடத்துக்கான அனைத்து அம்சமும் இருந்தும் ஸ்டார் வேல்யு இல்லாததால் படம் முழு வெற்றி அடையவில்லை. ஆனால் படம் இன்றைக்கு பார்த்தாலும் ரசிக்கும் வண்ணம் இருக்கும்.
--
செல்வன்

"அடிப்படையில் பெண்மை என்பது விட்டு கொடுத்தலும், காம்ப்ரமைஸ் செய்து கொள்ளுதலும், தனக்கு விதிக்கபட்ட எல்லைகளை தாண்டாமல் இருத்தலுமே ஆகும்" - செல்வன்.



www.holyox.blogspot.com

http://twitter.com/#holyox

https://profiles.google.com/holyape/buzz

https://www.facebook.com/holyape

AbulKalam Azad

unread,
Jul 29, 2011, 9:54:38 PM7/29/11
to panb...@googlegroups.com
எம்.எஸ்..வி. ம்யூசிக்குக்குப் பாட்டு எழுதுனா வரிகளை மொதல்ல எம்.எஸ்.விட்டதான் காட்டணும்றது அப்ப எழுதாத சட்டம். ஆனா, ஒளிவிளக்குக்கு ஒரு கிரிட்டிக்கலான பாட்டு எழுதுனப்ப...க்ரிட்டிக்கல்னா எம்.ஜி.ஆர். தண்ணி அடிக்றாப்ல சீனுக்கு வரிகள் வரணும், எம்.ஜி.ஆர டேமேஜ் பண்ணாத வகைல வரிகள் இருக்கணும்.

அந்தவரிகள வாலியே டைரக்டா எம்.ஜி.ஆர்ட்ட காட்டி அப்ரூவல் வாங்கிட்டாரு.

தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா?
இல்லை
நீதான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும் நேரம்

எம்.எஸ்.வி செம கடுப்பாகிட்டாரு. ஏன்யா எங்கிட்டக்க காட்டாம அவர்ட்ட அப்ரூவல் வாங்கினன்னு காச்சு மூச்சுன்னு சத்தம். வாலியும் ஆர்க்யூ பண்ணியிருக்கார். வரிங்கதான் ட்யூனுக்கு சரியா செட் ஆகிருச்சே, எம்.ஜி.ஆரும் ஓகேன்னுட்டாரே அப்புறம் ஏன் கத்துறீங்க.

இப்படி ஆர்க்யூமெண்ட் போகுது.

மெயின் ரீசன் என்னாண்ணா, அப்பத்தான் எம்.எஸ்.வி. சிவாஜிக்கு இன்னொரு பாட்டு கண்ணதாசன் எழுதி ரிகார்டிங் முடிச்சுட்டு வந்திருக்காரு.

அதுல வரிகள் என்னா?

யாரடா மனிதன் அங்கே
கூட்டி வா அவனை இங்கே

ரெண்டுமே மனிதன் மேட்டரு. எம்.எஸ்.வி. பயந்துட்டாரு. ரெண்டுக்கும் டூன் அவருதான். அங்க வரிகள மாத்தச் சொன்னதுக்கு அவங்க ஒத்துக்கல. இங்கயும் மாத்த முடியாது.

தனியா எம்.ஜி.ஆரப் பாத்து மேட்டர சொல்லியிருக்காரு.

எம்.ஜி.ஆரு நிச்சயதாம்பூலம் பாட்ட நான் கேக்கணும்னு சொல்லியிருக்காரு.

யாரடா மனிதன் இங்கேய ஃபுல்லா கேட்டுட்டு. பரவாயில்ல. அது வேற இது வேற.

நீ ’தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா’வை மாத்தாதேன்னு சொல்லியிருக்காரு.

மனிதன் - அப்படீன்ற ஒரு வரிக்கு நாலு ஹெவி வெயிட்ஸ் எவ்ளோ மென்க்கெட்டிருக்காங்க, ஆர்க்யூமெண்ட்ஸ், கம்பேரிசன், அப்ரூவல்...அந்தக் காலத்துல திரைக் கவிஞர்களுக்கு அவ்ளோ வாய்ஸ் இருந்திருக்கு + பாட்டோட சம்மந்தப்பட்ட டாப் ஹீரோஸ்க்கும் அவ்ளோ டெடிகேஷன் இருந்திருக்கு.

ஆசாத்

unread,
Jul 29, 2011, 10:00:18 PM7/29/11
to பண்புடன்
வாலிய சந்திக்காமலே இருந்த கண்ணதாசன், தான் வாலிய சந்திக்க விரும்புறேன்
அப்படீன்னு சொன்னது வாலி எழுதுன ஒரு பாட்டக் கேட்டுட்டு.

அந்தப் பாட்டு

மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்டக் கண் மலர்ந்து தூது விடுத்தாள்

மரவண்டு

unread,
Jul 29, 2011, 10:07:31 PM7/29/11
to பண்புடன்
> சின்னத்தம்பியின் போவோமா ஊர்கோலம் பாடலும் கேப்டன் பிரபாகரனின் ஆட்டமா
> தேரோட்டமா பாடலும் ஸ்வர்ணலதாவின் அடையாளமாய் அதிகமாய் அறியப்பட்டாலும் என்
> விருப்பம் சத்ரியன் படத்திற்காக பானுபிரியாவிற்கு பாடிய மாலையில் யாரோ பாடல்
> தான்..
>


லக்கியண்ணா

அருமை .. நல்லா எழுதி இருக்கிங்க .

>> மாலையில் யாரோ பாடல்

இந்தப் பாட்ட ஜானகி தான் பாடுனாங்கன்னு ஆரம்ப காலத்தில் நினைத்துக்
கொண்டிருந்தேன்.
ஆட்டமா தேரோட்டமா பாட்டு பாட்டுக் கச்சேரில போட்டு தாக்குவாய்ங்க...
கேப்டன் பிரபாகரன் படத்தோட தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தரும் கேப்டனும்
க்ளாஸ் மேட்.

என்றும் அன்பகலா
கணேஷ்

It is loading more messages.
0 new messages