சசிகலா

292 views
Skip to first unread message

ஸ் பெ

unread,
Dec 10, 2016, 2:00:59 PM12/10/16
to panbudan


--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------
OU7jBe0m.jpg

ஸ் பெ

unread,
Dec 10, 2016, 2:01:49 PM12/10/16
to panbudan


ஸ் பெ

unread,
Dec 10, 2016, 2:04:15 PM12/10/16
to panbudan
Posted Date : 15:25 (10/12/2016)
Last updated : 15:25 (10/12/2016)

தலைமை ஏற்க வாருங்கள்..! சசிகலாவிடம் வலியுறுத்திய மூத்த நிர்வாகிகள்

''அதிமுக தலைமையை ஏற்க வாருங்கள்'' என்று அதிமுக மூத்த நிர்வாகிகள், சசிகலாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள கிரீம்ஸ் சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, கடந்த 5ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவை ஜீரணிக்க முடியாமல் அதிமுக தொண்டர்கள் சமாதியிலும், அவரது போயஸ் கார்டன் இல்லத்திலும் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

இதனிடையே, முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் சசிகலா, முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டு தலைமைச் செயலகம் சென்றனர்.

இந்த நிலையில், போயஸ் கார்டன் செல்லும் வழி எங்கும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்களை கார்டனுக்குள் திடீரென சசிகலா அனுமதி அளித்தார். அனைவரும் வரிசையில் நின்று கொண்டு கார்டனுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு சசிகலா ஆறுதல் கூறினார்.

இதனிடையே, அதிமுக மூத்த நிர்வாகிகள், மதுசூதன், செங்கோட்டையன், வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி, சைதை துரைசாமி, ராஜன் செல்லப்பா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் இன்று திடீரென போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தனர். அவர்கள், சசிகலாவை சந்தித்தனர். அப்போது, "அம்மாவின் வழியில் கட்சியை வழி நடத்த வேண்டும். கட்சியின் அரணாக இருந்து வழி நடத்த வேண்டும். கட்சியின் மையப்புள்ளியாக செயல்பட வேண்டும். தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

ஸ் பெ

unread,
Dec 10, 2016, 2:04:21 PM12/10/16
to panbudan

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா..!?' என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்?

 

என்ன நடக்கிறது அதிமுகவில்?


அதிமுகவில் அடுத்த பொது செயலாளர் யார் என்ற சஸ்பென்ஸ் நீங்கி, பொதுச் செயலாளராக சசிகலாவை முன்னிறுத்தும் பணி அதி விரைவாக நடந்து வருகிறது.சீனியர் அதிமுக நிர்வாகிகள் சசிகலா தான் பொது செயலாளராக வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்


இன்று காலை போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலிக்கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் ஓபிஎஸ்,சசிகலா, அமைச்சர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அங்கிருந்து கிளம்பி தலைமை செயலகம் சென்றனர். இன்று கூடிய அமைச்சரவையிலும், ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா, ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் என்பதை பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா செல்வி ஜெ ஜெயலலிதா நினைவிடம் என்று பெயர் மாற்ற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள்.


தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா, கடந்த 5-ம் தேதி உடல்நலக் குறைவால், அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அப்போதே, கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் பொது செயலாளர் பதவி, கட்சியில் அங்கீகாரம் போன்றவற்றை மையப்படுத்தி சில பேப்பரில் கையெழுத்து வாங்கியதாக  தகவல்கள் வெளியாகின. கடந்த 28 ஆண்டுகளாக, அஇஅதிமுகவின் பொது செயலாளராக இருந்தவர் செல்வி ஜெ ஜெயலலிதா. எந்தவித போட்டியோ, சிக்கலோ இல்லாமல், ஒரு மனதாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை  , பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் ஜெயலலிதா. அதே போல், சசிகலாவும் போட்டியின்றி தேர்வாவதையே விரும்புகிறார் என்கின்றனர் அதிமுக வட்டாரங்கள். அதற்கேற்றாற் போல், காய்களை நகர்த்தி வருகிறார்கள் மன்னார்குடி குடும்பத்தினர்.


 ஆட்சி... கட்சி... அதிகாரம்?


தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் எவ்வித குறுக்கீடும் இல்லாமல், மத்திய அரசின் விருப்படியும் இருக்க வேண்டும் என நினைக்கிறாராம் சசிகலா.முதல்வரின் பதவிகள் பங்கீடு செய்யப்பட வேண்டும் என பேச்சு வந்த போது, ஆளுநர் வித்யாசாகர் ராவின் சாய்ஸாக இருந்தவர் பன்னீர் செல்வம் தான்.முதல்வர் இருந்து இருந்தாலும், அவரின் சாய்ஸும் ஓபிஎஸ்ஸாகத்தான் இருக்கும் என்பதால், அந்த முடிவில் தீர்மானமாக இருந்தாராம் சசிகலா. அதனையொட்டித்தான் மத்திய அரசின் விருப்பப் பட்டியலில் இருந்த  ஓ பன்னீர் செல்வத்துக்கு மீண்டும் தமிழக முதல்வர் பதவி வழங்கப்பட்டதாம். ஆனால், இதை மற்ற மன்னார்குடி குடும்பத்தினர் ரசிக்கவில்லை என்கிறார்கள். கட்சி அதிகாரத்திலும், தம்பிதுரையை முன்னிறுத்தும் வேலைகளில் ஈடுபட்டதாம் மத்திய அரசு. அதே போல், மன்னார்குடி குடும்ப ஆதிக்கத்தால், தனது செல்வாக்கை பெருமளவு இழந்த செங்கோட்டையனும், சசிகலாவுக்கு எதிராக இருந்ததாக செய்திகள் வெளியாகின. இவர்கள் அனைவரையும் சமாதானப்படுத்தி இருக்கிறாராம் சசிகலா. 


இதனை உறுதிப்படுத்தும் விதமாக, செங்கோட்டையன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.இதன்மூலம் சுற்றிவந்த வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் செங்கோட்டையன்


அதே போல் மத்திய அரசிடம் இணக்க போக்கை கடைப்பிடிக்கவே பறக்கும் சாலை திட்டம், சரக்கு மற்றும் சேவை வரி போன்றவற்றிற்கு பரஸ்பர ஒத்துழைப்பை நல்கி இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் பறக்கும் சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. சொத்துக்குவிப்பு வழக்கும், அதன் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதால், மத்திய அரசிடம் சுமூகமான அணுகுமுறையே தொடர வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் சசிகலா.
அடுத்தகட்ட நடவடிக்கையாக, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள், சசிகலாவை முன்மொழிய தொடங்கி இருக்கிறார்கள். மக்களிடம் இருக்கும் சில அதிருப்தியை போக்க, நேற்று அமைச்சர்களுடன், ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று வந்தார் சசிகலா. ஜெயலலிதா மறைவை ஜீரணிக்க முடியாமல் அதிமுக தொண்டர்கள் சமாதியிலும், அவரது போயஸ் கார்டன் இல்லத்திலும் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இன்று காலை, போயஸ் கார்டன் வந்தவர்களை சந்தித்து நேரில் ஆறுதல் கூறினார் சசிகலா. 


அதற்குப்பின்னர் அதிமுக மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், செங்கோட்டையன், வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி, சைதை துரைசாமி, ராஜன் செல்லப்பா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் இன்று திடீரென போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தனர். அவர்கள் அனைவரும் ஒரு சேர, கட்சியை தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்ற ஜெயலலிதாவின் நிழலாக இத்தனை ஆண்டுகள் இருந்த சசிகலா கட்சியின் பொது செயலாளராகி, கட்சியையும் தங்களையும் வழிநடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டர. கட்சியின் அரணாக இருந்து வழி நடத்த வேண்டும். கட்சியின் மையப்புள்ளியாக செயல்பட வேண்டும். தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

 

வரும் டிசம்பர் 20-ம் தேதிக்குள், அதிமுக பொது செயலாளராக சசிகலா போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்கிறார் அதிமுகவின் சீனியர் நிர்வாகி ஒருவர். 


ஜெயலலிதா மறைவு சோகம் ஒரு புறம் இருந்தாலும், கட்சி தன் அடுத்த கட்ட பணிகளில் வேகமாக சுழன்று கொண்டு இருப்பதையே இது காட்டுகிறது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

-நமது நிருபர்

-படம்: தே.அசோக் குமார்,மி.நிவேதன்

 

இந்நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவளித்துள்ளார். 

அதிமுக-வில் உருவாகியுள்ள வெற்றிடத்தை நிறைவு செய்யும் பொருட்டு ஆதரவு தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். 

அம்மா அவர்கள் வைத்திருந்த அதே கட்டுக்கோப்புடன் ஒரு ராணுவ அமைப்பு போல் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னால், அதற்கு ஒரே வழி சின்னம்மா அவர்கள் இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆகி வழிநடத்துவது ஒன்றே ஆகும்.

http://www.vikatan.com/news/tamilnadu/74643-sasikala-to-be-the-new-general-secretary-of-admk.art

ஸ் பெ

unread,
Dec 10, 2016, 2:04:58 PM12/10/16
to panbudan

சின்னம்மா'வை இதற்காகத்தான் அழைக்கிறோம்..! வளர்மதி, சைதை துரைசாமி கலகல பேட்டி

இந்த இயக்கம் உடைந்து விடக்கூடாது, பாழ்பட்டுவிடக் கூடாது, இந்த இயக்கம் கருணாநிதிக்கு முன்பாக தோல்வி அடைந்தது என்ற ஒரு பெரிய நிகழ்வு நடந்து விடக்கூடாது என்ற அக்கறையில்தான் சின்னம்மாவை தலைமை ஏற்க அழைக்கிறோம் என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.



சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள கிரீம்ஸ் சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, கடந்த 5ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவை ஜீரணிக்க முடியாமல் அதிமுக தொண்டர்கள் சமாதியிலும், அவரது போயஸ் கார்டன் இல்லத்திலும் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

இதனிடையே, முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் சசிகலா, முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டு தலைமைச் செயலகம் சென்றனர்.

இந்த நிலையில், போயஸ் கார்டன் செல்லும் வழி எங்கும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்களை கார்டனுக்குள் திடீரென சசிகலா அனுமதித்தார். அனைவரும் வரிசையில் நின்று கொண்டு கார்டனுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு சசிகலா ஆறுதல் கூறினார்.

இதனிடையே, அதிமுக மூத்த நிர்வாகிகள், மதுசூதனன், செங்கோட்டையன், வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி, சைதை துரைசாமி, ராஜன் செல்லப்பா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் இன்று திடீரென போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தனர். அவர்கள், சசிகலாவை சந்தித்தனர். அப்போது, "அம்மாவின் வழியில் கட்சியை வழி நடத்த வேண்டும். கட்சியின் அரணாக இருந்து வழி நடத்த வேண்டும். கட்சியின் மையப்புள்ளியாக செயல்பட வேண்டும். தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

இந்த சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் வளர்மதி அளித்த பேட்டியில், "அம்மாவை தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருந்தவர் சின்னம்மா. சின்னம்மா தலைமை ஏற்க வேண்டும். புரட்சித் தலைவி அம்மா இருந்த காலத்திலேயே சின்னம்மாவை இயக்கத்திலே அறிமுகப்படுத்தி, தலைமை செயற்குழு உறுப்பினராக்கி, பொதுக்குழு உறுப்பினராக்கி இறுகப்படுத்தி வைத்தவர் புரட்சித் தலைவி அம்மா. அப்போதே இந்த இயக்கத்திற்கு வழி நடத்தக்கூடியவர்கள் யார் என்பதை அம்மா அடையாளம் காட்டி இருக்கிறார். இந்த இயக்கம் அம்மாவின் மறைவுக்கு பின்னர் தவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட சின்னம்மா தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்பதுதான் இன்றைய அதிமுக தொண்டர்களின் விருப்பம்" என்றார்.

முன்னாள் மேயர் சைதை துரைசாமி கூறுகையில், "அதிமுகவுக்கு யார் தலைமை ஏற்க வேண்டும் என்பதை தொண்டர்களும், பொதுமக்களும் புரிந்து வைத்து இருக்கிறார்கள். 32 காலமாக அம்மாவுடன், சசிகலா அம்மையார் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அம்மாவின் எண்ணம், சிந்தனை, எல்லாவிதமான கருத்துக்களும், இந்த இயக்கத்திலேயே இன்றைக்கு இருக்கக்கூடியவர்கள் மத்தியில் இவரை (சசிகலா) தவிர வேறு யாருக்கும் இல்லை. நெருக்கடியான இந்த நேரத்தில் இந்த இயக்கத்தை வழிநடத்துகின்ற பெரும் பொறுப்பை அவர் ஏற்றால், இந்த கட்சி உடையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இன்றைக்கு அத்தனை பேர்களும் இந்த இயக்கம் உடைந்து விடக்கூடாது, பாழ்பட்டுவிடக் கூடாது, இந்த இயக்கம் கருணாநிதிக்கு முன்பாக தோல்வி அடைந்தது என்ற ஒரு பெரிய நிகழ்வு நடந்து விடக்கூடாது என்ற அக்கறைதான்.

யாருக்கு என்ன பதவி என்பது முக்கியமல்ல. இப்போது யாரை நாம் களத்தில் வீழ்த்த நினைக்கிறோமோ, அவர்களுக்கு இந்த வாய்ப்பு ஆதாரமாக வாய்ந்திட கூடாது என்பதற்காகத்தான், எங்களைப்போன்ற தொண்டர்களின் எண்ணம். 1972ஆம் ஆண்டில் இந்த இயக்கம் தொடங்கியபோது எங்களை போன்றவர்கள் உயிரை பணையம் வைத்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்காக நாங்கள் ரத்தம் சிந்தியபோது எந்த உணர்வோடு இருந்தோமோ அதேபோன்றுதான் அந்த உணர்வை கொண்டிருக்கிறோம். ஆகவே, இந்த இயக்கம் சிறப்பாக இருக்க வேண்டுமென்று சொன்னால் அம்மாவின் எண்ணங்களை, சிந்தனைகளை, அவர் என்ன நினைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை இந்த இயக்கத்தில் இருக்கின்ற வேறு யாருக்கும் தெரியாது. அப்படி தெரிந்த ஒருவர் இந்த இயக்கத்தின் மையப்புள்ளியாக இருந்த, இருக்கிற சசிகலா அம்மையார் தான்.அவரால் தான் இந்த இயக்கம் தொடர்ந்து பாதுகாக்கப்படும். அவர்களை வேண்டாமென்று சொல்கிறவர்கள் யார், இந்த இயக்கத்தை விட்டு வெளியே சென்றவர்கள். இந்த இயக்கத்தில் அதிகாரம் செலுத்த முடியவில்லை என்கிற அதிருப்தியாளர்கள். அதுவும் கட்சியை விட்டு அம்மாவால் நீக்கப்பட்ட ஒருவர். அவர் இன்று ஊடகங்களில் சொல்லுகின்ற செய்தியை பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஒரு எஃக்கு கோட்டை. இந்த இயக்கத்தை தொடர்ந்து வழிநடத்திச் செல்ல வேண்டும்,  மையப்புள்ளியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம் என்று சொன்னால் இந்த இயக்கம் மக்கள் இயக்கம். இந்த மக்கள் பாழ்பட்டுவிடக்கூடாது. எதிரிகளுக்கு ஆதாயமாக அமைந்துவிடக்கூடாது. அதனால்தான் ஒவ்வொரு வாய்ப்பும், இழப்பும் புதிய சரித்திரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த காலத்தை ஒப்பிட்டு பார்த்தாேமானால் தலைவர்களோடு யார் நெருக்கமாக இருந்தார்களோ, தலைவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டவர்களே வரக்கூடிய வாய்ப்பினை உருவாக்கி இருக்கிறார்கள். அதேபோல்தான் அம்மாவின் வழியில் வந்த சசிகலா அம்மையாரின் ஒருங்கிணைப்புடன் இந்த இயக்கம் இயங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்" என்று கூறினார்.

அதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன் கூறுகையில், "அம்மாவின் அரவணைப்பில் அதிமுக எஃக்கு கோட்டையாக மாறியிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி கட்டிக்காத்த அம்மா அவர்கள், நம்மை விட்டுச்சென்று ஐந்து நாட்கள் கடந்தாலும் கூட கோடானுகோடி மக்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இயக்கம் காப்பாற்றப்பட வேண்டும், ஒற்றுமையோடு இருக்க வேண்டும். இந்த இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டுமென்றால் அம்மாவின் உயிர்த்தோழியான சின்னம்மாவால்தான் முடியும் என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அம்மாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும், கோட்பாடுகளையும் அறிந்து தெரிந்து அம்மாவுக்கு உறுதுணையாக நின்றவர்கள் சின்னம்மாதான். தமிழ்நாட்டில் இருக்கிற கோடானுகோடி மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். இந்த இயக்கம் அழிய வேண்டும் என்று கருணாநிதி, மார்க்சிஸ்ட் தோழர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களையொல்லாம் சுக்குநூறாக உடைத்து எறிய நாங்கள் எல்லாரும் இருக்கிறோம். அம்மா விட்டுச் சென்ற பணிகளை நான் தலைமையேற்று நடத்திக் காட்டுவேன், ஒற்றுமையுடன் வழி நடத்துவேன் என்று இருக்கின்ற தலைவிதான் இந்த இயக்கத்தை வழி நடத்த முடியும். அந்த பொறுப்புள்ள தலைவியாக நாங்கள் சின்னம்மாவை பார்க்கிறோம். இந்த இயக்கத்தை தலைமைத் தாங்க வாருங்கள் என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறோம். சின்னம்மாவின் முடிவை பொறுத்துத்தான் இந்த இயக்கம் கட்டுப்பாடாக, கண்ணியமாக இருக்குமா என்பது தெரிய வரும். இந்த எஃக்கு கோட்டையை காப்பாற்ற சின்னம்மாவை தர வேறு யாரும் இல்லை" என்றார். 

ஸ் பெ

unread,
Dec 10, 2016, 2:05:40 PM12/10/16
to panbudan

மன்னார்குடி மணமகள்-விளார் மணமகன் - கருணாநிதி நடத்திவைத்த திருமணம்!

 

மன்னார்குடி மணமகள்-விளார் மணமகன் - கருணாநிதி நடத்திவைத்த திருமணம்!

ஜெயலலிதா

ராமநாதபுரம் டூ மன்னார்குடி  

ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் சந்திரசேகரன் பிள்ளை. அவருக்கு சரியான பிழைப்பு இல்லை. அதனால், வறட்சி மிகுந்த ராமநாதபுரத்தைவிட்டு, சந்திரசேகரன் பிள்ளை வளமான தஞ்சை நோக்கி இடம்பெயர்ந்தார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ‘ஜாகை’ ஏற்படுத்திக் கொண்டு, அங்கும் தனக்குத் தெரிந்த நாட்டு வைத்தியத்தையே தொழிலாகச் செய்தார்.  சந்திரசேகரன் பிள்ளையின் மகன் விவேகானந்தன், ஒரு படி மேலே போய், ‘இங்கிலீஷ் மருந்துக் கடை’ வைத்தார். அப்போது எல்லாம், இங்கிலீஷ் மருந்துகள் விற்கும் ‘மெடிக்கல் ஷாப்’கள் அரிதிலும் அரிது. அதனால், விவேகானந்தன் வைத்து நடத்திய, ‘இங்கிலீஷ் மருந்துக் கடை’ திருந்துறைப்பூண்டியில் பிரபலமானது. அந்தப் பிரபலம்,  விவேகானந்தனின் வீட்டோடும் ஒட்டிக்கொண்டது.  ‘இங்கிலீஷ் மருந்துக் கடைக்காரர் வீடு’ என்று அவருடைய வீடும் அந்த ஊரில் பிரபலமானது.  மிராசுதாரர் விவேகானந்தன், கிருஷ்ணவேணி என்பவரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு, சுந்தரவதனம், வனிதாமணி, விநோதகன், ஜெயராமன், சசிகலா, திவாகரன் என்று ஆறு பிள்ளைகள் பிறந்தனர். 5-வது பிள்ளை சசிகலாதான், பின்னாளில் ஜெயலலிதாவின் உடன்பிறவாத் தோழியானவர்; தமிழக ஆட்சியதிகாரத்திலும், அ.தி.மு.க என்ற அரசியல் இயக்கத்திலும், நம்பர் 2-ஆக  வலம்வந்தவர்.   

திருத்துறைப்பூண்டியில் இருந்த விவேகானந்தன், பிள்ளைகளின் படிப்புக்காக மன்னார்குடிக்கு இடம்பெயர்ந்தார். காரணம், மன்னார்குடியில்தான் அப்போது, ஆங்கிலேயேர்களால் நிறுவப்பட்ட ‘பின்லே’ போர்டு ஹை ஸ்கூல் இருந்தது. சசிகலா அந்தப் பள்ளியில்தான் படித்தார். பள்ளி நாட்களில் ஓட்டப்பந்தயங்களில் ஆர்வமுடன் கலந்து கொண்டு இருக்கிறார். சில பரிசுகளையும் வாங்கி உள்ளார். மாணவர் மன்றத்தில் பங்களித்துள்ளார். ஆனாலும் பத்தாம் வகுப்போடு சசிகலாவின் படிப்பை வீட்டில் நிறுத்திவிட்டனர். 

‘விளார்’ ஏற்படுத்திய திருப்புமுனை

மூன்று பாசக்கார அண்ணன்களின் செல்லத் தங்கையாக, சாதரண கனவுகளுடன் இளம் பெண்ணாக திருத்துறைப்பூண்டி வடக்குச் செட்டித் தெருவில் வலம் வந்து கொண்டிருந்தார் சசிகலா. அவரது வாழ்வை அதிகாரமையங்களுக்கு அருகில் கொண்டுவரக் காரணமாக அமைந்தது ‘விளார்’ என்ற ஊர். தஞ்சையில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள விளார் என்ற ஊரில் இருந்த சிறு விவசாயி மருதப்பன். அவருடைய மகன் நடராஜன். 60-களின் காலகட்டத்தில், தமிழகம் முழுவதும் கொழுந்து விட்டெரிந்து, தீயாப் பரவிக் கொண்டிருந்த திராவிட இயக்கங்கள், நடராஜனிடம் தமிழ் ஆர்வத்தையும்,  அரசியல் ஈடுபாட்டையும் உருவாக்கி இருந்தது. தி.மு.க மாணவர் இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்டு நடராஜன் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவராக இருந்த நடராஜன், 1965-ம் ஆண்டு நடைபெற்ற, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். மொழிப்போராட்டத்தில் நடராஜனின் சமகாலத்தவர்கள்தான், தி.மு.க முதன்மைச் செயலர் துரைமுருகன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டவர்கள். அப்போது, இந்தப் போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்துச் சென்ற எல்.கணேசனின் ஆஸ்தான சீடராக நடராஜன் வலம்வந்தார்.  இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு, தி.மு.க ஆட்சியில் ஏ.பி.ஆர்.ஓ வேலைகளில் கருணாநிதி முன்னுரிமை கொடுத்தார். அந்தவகையில், ‘விளார்’ நடராஜனுக்கும், மக்கள் தொடர்புத் துறையில் உதவியாளர் வேலை கிடைத்தது. வேலை கிடைத்ததும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. விளார் விவசாயி மருதப்பனின் மகன் நடராஜன், திருத்துறைப்பூண்டி, இங்கிலீஷ் மருந்துக் கடைக்காரர் விவேகானந்தனின் மகள் சசிகலாவைத் திருமணம் செய்துகொண்டார். 1970-ம் ஆண்டு நடராஜன்-சசிகலா திருமணம் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட தி.மு.க.வின் அன்றைய தளகர்த்தராக விளங்கிய, மன்னை நாராயணசாமி தலைமையில், தி.மு.க தலைவர் கருணாநிதி நடராஜன்-சசிகலா திருமணத்தை நடத்திவைத்தார். வரலாற்று விநோதம் இது!

இந்தக் காலகட்டம்வரை சசிகலாவுக்கு, ஜெயலலிதா என்றால் அவர் எம்.ஜி.ஆர் என்ற மிகப்பெரிய ஹீரோவோடு சேர்ந்து நடிக்கும் கதாநாயகி. திரைப்படங்களிலும் போஸ்டர்களில் மட்டும்தான் ஜெயலலிதாவைப் பார்க்க முடியும் என்ற மனநிலைதான் இருந்திருக்க முடியும். ஆனால், காலம் அந்த மனநிலையை வேறுவகையில் மாற்ற, எம்.ஜி.ஆர் மூலம் ஒரு கணக்கைப் போட்டு வைத்திருந்தது.

அது என்ன.... 

ஸ் பெ

unread,
Dec 10, 2016, 2:06:12 PM12/10/16
to panbudan

பொதுச் செயலாளர் பதவிக்கு எம்.ஜி.ஆர் வைத்த ‘செக்’! - சீனியர்களை வளைக்கும் சசிகலா

 

போயஸ் கார்டனில் கட்சியின் சீனியர்களிடம் தீவிர ஆலோசனை நடத்தியிருக்கிறார் சசிகலா. 'அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அவருக்கு எதிரான மனநிலை உள்ளவர்களை சமாதானப்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன" என்கின்றனர் அ.தி.மு.க. நிர்வாகிகள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, அ.தி.மு.கவில் அதிகாரம் பொருந்திய பொதுச் செயலாளர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார் சசிகலா. இரண்டாவது நாளாக நேற்றும் போயஸ் கார்டனில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். 'தனக்கு எதிராக வரிந்து கட்டுவார்கள்' என அவர் நினைக்கும் சீனியர்களிடம், மன்னார்குடி தரப்பினர் சமாதானப் படலத்தைத் தொடங்கியுள்ளனர். 'முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருக்கும் செங்கோட்டையன் வேறு பக்கம் சாயலாம்' என்ற தகவல்களும் பரவின. இதை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டார் செங்கோட்டையன். 'கட்சித் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்' என உறுதியாகத் தெரிவித்துவிட்டார். "கார்டனில் அம்மாவுடன் முரண்பட்டு வெளியேறும்போதெல்லாம், சசிகலா தரப்பினரை அ.தி.மு.க.வின் சீனியர்கள் பலரும் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தனர். தற்போது சசிகலாவை பொதுச் செயலாளராகக் கொண்டு வரும் வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. 'இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யலாம்' எனச் சிலர் பேசி வந்தனர். ஆனால், கட்சியின் விதிப்படி இப்படியொரு பதவியை உருவாக்க முடியாது. பொதுக்குழுவில் சசிகலாவை போட்டியின்றி தேர்வு செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்கு மிக முக்கியக் காரணமே, எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியின் விதிமுறைகள்தான்" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

"1973-ம் ஆண்டு அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர் தொடங்கியபோது, கட்சியின் சட்டவிதிகளில் சில மாற்றங்களைச் செய்தார். மற்ற கட்சிகளில் பொதுக் குழு உறுப்பினர்கள் சேர்ந்து, பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வார்கள். ஆனால், ' தனக்கு எதிராகபொதுக்குழு உறுப்பினர்களை கருணாநிதி விலைக்கு வாங்கிவிடக் கூடாது' என்பதற்காக, 'அ.தி.மு.க உறுப்பினர்களே கட்சியின் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வார்கள்' என சட்ட விதியைக் கொண்டு வந்தார். அன்றிலிருந்து இன்றுவரையில் இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. 1988-ம் ஆண்டு பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு வந்தார் ஜெயலலிதா. 'கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் அவர்தான்' என கட்சிக்காரர்கள் பேசி வந்தனர். தற்போது டிசம்பர் இறுதிக்குள் பொதுக்குழு கூட்டுவதற்கான முடிவில் இருக்கிறார் சசிகலா. அப்போது பொதுச் செயலாளர் தேர்தலில் வேறு யாராவது போட்டியிட முன்வந்தால், நிலைமை சிக்கலாகிவிடும். அ.தி.மு.க உறுப்பினர்கள் ஒன்று திரண்டு சசிகலாவை தேர்வு செய்வார்களா? என்பதையும் உறுதியாக நம்ப முடியாது. எனவேதான், எதிர்ப்பாளர்களுக்கு என்ன வேண்டும் என்பதைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான உறுதிமொழிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டியே, சசிகலா குறித்த நேர்மறையான பிம்பத்தை உருவாக்கும் வேலைகளும்  தீவிரமாக நடந்து வருகின்றன" என்றார் விரிவாக.

"அ.தி.மு.கவின் முழுக் கட்டுப்பாடும் சசிகலா கைகளில் சென்றுவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு முனைப்போடு இருக்கிறது. எனவே, 'ஆட்சியிலும் கட்சியிலும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பது மக்கள் மத்தியில் எதிர்மறையான விளைவை  உருவாக்கும். தம்பிதுரையை முன்னிறுத்துங்கள்' என அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. சசிகலாவுக்கு ஆதரவாக, எதிர்க்கட்சிகளில் இருந்து மத்திய அரசுக்கு எதிராக கருத்துக்கள் பரப்பப்படுவது குறித்து, பிரதமரின் கவனத்திற்கு சிலர் கொண்டு சென்றுள்ளனர். அவர்கள், 'சசிகலாவின் பின்னணியில் காங்கிரஸ் உள்பட தமிழ்த் தீவிரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. நாம் கவனமாகச் செயல்பட வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர். 'நாம் சொல்வதைக் கேட்டுச் செயல்படுகிறார் ஓ.பி.எஸ். ஐந்து ஆண்டுகளாக ஜெயலலிதாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்திற்கு அவர் ஒப்புதல் கொடுத்துவிட்டார். அவருடைய தலைமையின்கீழ் கட்சி வந்தாலும் நல்லதுதான்' என பா.ஜ.க தலைமையிடம் பேசியுள்ளனர். இதையடுத்து, ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களையெல்லாம், வருமான வரித்துறை ரெய்டின் மூலம் வழிக்குக் கொண்டு வரும் வேலைகளும் தொடங்கிவிட்டன. 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, ஓ.பி.எஸ் வசமிருந்த பொதுப் பணித்துறை எடப்பாடியின் கைகளுக்குச் சென்றுவிட்டது. அரசு ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டியின் வீடுகளில் ரெய்டு நடத்தப்படுவது எடப்பாடியை மையமிட்டுத்தான். எடப்பாடியின் உறவினர்கள் வீடுகளில் ரெய்டு, சேகர் ரெட்டியிடம் 130 கோடி பறிமுதல் என சசிகலா விசுவாசிகளை நோக்கியே மத்திய அரசின் கரங்கள் நீள்கின்றன" என்கிறார் போயஸ் கார்டன் நிலவரத்தைக் கவனித்து வரும் கட்சி நிர்வாகி ஒருவர்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அதே சூழ்நிலை, 28 ஆண்டுகளுக்குப் பிறகு அ.தி.மு.க வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. ‘ஜெயலலிதாவைப் போல் தடைகளைத் தகர்த்தெறியும் ஆற்றல் பெற்றவர்கள் இருக்கிறார்களா?' என்ற கேள்வியும் தொண்டர்கள் மத்தியில் எழாமல் இல்லை.

ஸ் பெ

unread,
Dec 10, 2016, 2:06:36 PM12/10/16
to panbudan
Posted Date : 11:11 (10/12/2016)
Last updated : 11:59 (10/12/2016)

'சின்னம்மா' இல்ல... சின்ன 'அம்மா'

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி இரவு காலமானார். அவரது மறைவை தொண்டர்களால் ஜீரணிக்க முடியவில்லை. மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் மறைவால் துயரத்தில் இருக்கும் சில தொண்டர்கள், கட்சியின் அடுத்த பொதுச்செயலாளராக சசிகலாவை ஏற்க மறுத்து வருகின்றனர். சில தொண்டர்கள், அம்மாவிடம் நீண்டகாலம் இருந்ததால் சசிகலாவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறிவருகின்றனர். 

இதனிடையே, 'சின்னம்மா' அவர்களே 2 கோடி கழக தொண்டர்களை வழி நடத்த வாருங்கள் என்றும், புரட்சித் தலைவியின் புகழ் மற்றும் தனது குடும்ப வாழ்க்கையை தியாகம் செய்து புரட்சித் தலைவிக்காகவே வாழ்த்த 'சின்ன அம்மா'வின் தியாகம் என்றென்றும் சரித்திரத்தில் நிலைத்திருக்கும் என்று அதிமுகவினரால் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்றைய தமிழ் நாளிதழ் ஒன்றில் 'புரட்சி தலைவி அம்மா அவர்களின் விசுவாச தொண்டனின் மனசாட்சி' என்ற தலைப்பில் வெளியான விளம்பரம் இது. அடிமட்ட தொண்டர்களிடையே சசிகலாவின் ஆதரவை உருவாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையாக இதை மக்கள் பார்க்கிறார்கள். சமூக வலைதளங்களிலும் சசிகலா தரப்பினரின் 'பிராண்டிங்' பலமாக இருக்கிறது.

ஸ் பெ

unread,
Dec 10, 2016, 2:07:04 PM12/10/16
to panbudan

அதிமுக பொதுச் செயலாளர் யார்? பொன்னையன் விளக்கம்

அதிமுகவின் புதிய பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி இரவு காலமானார். அவரது மறைவை தொண்டர்களால் ஜீரணிக்க முடியவில்லை. மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே, அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் சசிகலா என்று பரபரப்பாக கட்சிக்குக்குள் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அதிமுகவின் புதிய பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார். ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
அதிமுக பொதுச் செயலாளர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டி நிலவுகிறது என்பது வதந்தியே என்று கூறினார்.

அரசியல் காரணங்களுக்காக புரளிகள் பரப்பப்படுகின்றன என்றும், தொண்டர்களை காக்கும் ஒருவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும்  அனைவரும் அதிமுகவை இணைந்து காக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

அதிமுகவில் வெற்றிடம் எதுவும் உருவாகவில்லை என்று கூறிய பொன்னையன், அதிமுக ஒரு ஆலமரம் என்றும், பாஜக நெருக்கடி தறுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்றும் கூறினார்.

மேலும், அம்மாவுடன் சசிகலா இறுதி வரை வாழ்ந்து வந்தவர் என்று கூறிய பொன்னையன், ஒவ்வொன்றும் கற்பனையான காரணத்தை கூறுவது சரியல்ல என்றும், அதிமுகவின் முக்கிய உறுப்பினர் என்பதால் அமைச்சர்களை சசிகலா சந்திக்கிறார் என்றும் கூறினார்.

படம்: ஆ.முத்துக்குமார்

ஸ் பெ

unread,
Dec 10, 2016, 2:07:36 PM12/10/16
to panbudan
Posted Date : 22:10 (10/12/2016)
Last updated : 22:18 (10/12/2016)

கொடநாட்டில் பொதுக்குழு!?

 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தையொட்டி , தமிழக அரசு 7 நாள் துக்கத்தை அனுசரித்துக்கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் கட்சியின் பொது செயலாளராக சசிகலாவை அதிமுகவின் சீனியர் நிர்வாகிகள் பரிந்துரை செய்து இருக்கிறார்கள்


7 நாள் துக்க அனுசரிப்புக்குப் பின்னர் பொதுக்குழு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம். ஜெயலலிதா இருந்த வரை பொதுக்குழு பெரும்பாலும் வானகரம், ராயப்பேட்டை YMCA மைதானம், திருவான்மியூர் போன்ற இடங்களில் தான் நடைபெற்று வந்தது.ஆனால், இந்த முறை சென்னைக்கு பதிலாக கொடநாட்டில் பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கலாம் எனவும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்களாம்

ஸ் பெ

unread,
Dec 10, 2016, 2:08:08 PM12/10/16
to panbudan
Posted Date : 06:00 (06/12/2016)

ஒன்றுகூடிய மன்னார்குடி... விரட்டப்பட்ட தீபா!

சண்டே லைவ் கவரேஜ்...

முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆகி 75 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், மிக அதிகமான பதட்டத்தை உண்டாக்கியது டிசம்பர் 4-ம் தேதிதான். 75 நாட்களில், முதல் 30 நாட்கள் மட்டும்தான் அப்போலோ பரபரப்பாக இருந்தது. அதன்பிறகு, காவிரி, ரூபாய் நோட்டுப் பிரச்னைகளால் மக்களின் மனதில் இருந்து அப்போலோ மெள்ள மறையத் தொடங்கியது. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அப்போலோ மீண்டும் பரபரப்புச் செய்தியானது. ‘நீர்ச்சத்துக்குறைவு’ என ஜெயலலிதா அட்மிட் ஆனபோது என்ன பரபரப்பு நிலவியதோ, அதைக்காட்டிலும் பல மடங்கு பரபரப்பும் பதற்றமும் அப்போலோவைச் சூழ்ந்தன.

மாலை 5.30 மணியில் இருந்து அப்போலோ ஏரியாவில் சந்தேகத்துக்குரிய சில அறிகுறிகள் தென்படத் தொடங்கின. தமிழகத்தின் அரசுத் துறை செயலாளர்கள் அனைவரும் அப்போலோவை நோக்கி வர ஆரம்பித்தனர். சென்னையிலும் வெளியூரிலும் இருந்த அமைச்சர்கள் பதறியடித்துக்கொண்டு அப்போலோ வந்தனர். போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவரும் அப்போலோவை முற்றுகையிட்டனர். ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், ஒட்டுமொத்த அரசாங்கமும் அப்போலோவில் மையம் கொண்டது. இவ்வளவு பரபரப்புகள் அரங்கேறியபோதும், அங்கு என்னதான் நடக்கிறது என்பதே தெரியாமல், அப்பாவியாக இருந்தனர் அ.தி.மு.க தொண்டர்கள். அவர்களில் சிலர், கடந்த 75 நாட்களாக அங்கு காத்துக் கிடப்பவர்கள். அரசுத் தரப்பில் இருந்து எந்தத் தகவலும் இல்லை. எனவே, வழக்கம்போல் அதிகாரிகள் வருகின்றனர், அமைச்சர்கள் வருகின்றனர் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். 

மாலை 6.30 மணி அளவில், மெதுவாக ஒரு தகவல் வெளியானது. `முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்’ என்பதுதான் அந்தத் தகவல். ஆனால், மாரடைப்பில் இருந்து முதலமைச்சர் மீண்டுவிட்டாரா? அல்லது விபரீதமாக ஏதாவது நடந்துவிட்டதா? என்பது பற்றி உறுதியான தகவல் எதுவும் இல்லை. அந்த நேரத்தில், அரசு இயந்திரம் அசுரத்தனமாக இயங்கிக் கொண்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது என்ற தகவல் போனது. அதனால், தமிழகம் பரபரப்பு அடை வதற்கு முன்பே டெல்லி பரபரத்தது. டெல்லி பத்திரிகையாளர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பத்திரிகையாளர்களிடம் விசாரிக்கத் தொடங்கினார்கள். உள்துறை அமைச்சகம் அவசர அவசரமாக சில உத்தரவு களைப் பிறப்பித்தது. அவர்கள் மூலம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும்,  ராகுல் காந்திக்கும் தகவல் போனது. அதையடுத்து, “முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும்” என்று டெல்லியில் இருந்து தலைவர்களின் அறிக்கைகள் 9 மணியில் இருந்து அடுத்தடுத்து வெளியாகின. அதன் பிறகுதான், அப்போலோ மருத்துவ மனையின் அறிக்கை வெளியானது. 

அப்போலோ மருத்துவமனை சார்பில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வெளியான அந்த மருத்துவ அறிக்கை ‘இறுக்கமாக’ இருந்தது. முன்பு வெளியான அறிக்கைகளில், “முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார்; உடல்நிலை தேறிவருகிறார்” என்பது போன்ற வாசகங்கள் இருக்கும். ஆனால், 4-ம் தேதி வெளியான அறிக்கையில், அப்படி எந்த வாசகமும் இல்லை. மாறாக, ‘முதலமைச்சருக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்” என்று மட்டும் சொல்லப்பட்டு இருந்தது.  இது அ.தி.மு.க தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அந்த நேரத்தில், அங்கு வந்த டி.டி.வி.தினகரன் அப்போலோவுக்குள் சென்றார். இவர், இதற்குமுன் ஒரே ஒருமுறை அப்போலோவுக்கு வந்து, உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் திரும்பிச் சென்றவர். இந்த முறை அவரைத் தடுக்க எந்த அதிகாரியும் முன்வரவில்லை.

ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் என்ற செய்தி ஊடகங்களில் வெளியான உடனே, அப்போலோ மருத்துவமனை முன்பு கொந்தளிப்பு மிகுந்த சூழல் உருவானது. அ.தி.மு.க தொண்டர்கள், மருத்துவமனையை நோக்கி சாரை சாரையாகப் படையெடுத்து வரத் தொடங்கினார்கள். பாதுகாப்புக்காக அங்கு நின்றிருந்த போலீஸ்காரர்களை ஏக வசனத்தில் திட்டிவிட்டு, இரும்புத் தடுப்புகளைத் தள்ளிவிட்டு அப்போலோ முன்பு குவிந்தனர். அங்கு, கவரேஜ் செய்து கொண்டிருந்த தொலைக்காட்சிகளின் கேமரா மேன்களையும் அவர்கள் திட்டித் தீர்த்தனர். இந்த பரபரப்பான சூழலில், ஓரமாக நடந்துவந்த டாக்டர் வெங்கடேஷ், சத்தமில்லாமல் அப்போலோவுக்குள் போனார். முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் அப்போலோவுக்குள் இருந்தனர். அப்போலோவுக்கு வெளியே அ.தி.மு.க வி.ஐ.பி-க்கள் யாரும் இல்லை. அதனால், தொண்டர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

‘ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட்’ என்ற செய்தியை அறிந்ததும், ஒட்டுமொத்த தமிழக காவல்துறையும் அலர்ட் ஆனது. உளவுத் துறை உயர் அதிகாரிகளோடு, காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் இந்தக் கூட்டம் நடந்தது. பின்னர், மத்திய உள்துறையின் உதவியும் கோரப்பட்டது. மத்திய அரசு, தன் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 30 கம்பெனி போலீஸை உடனடியாக அனுப்பி வைத்தது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள போலீஸ் பிரிவுகள் அலர்ட் செய்யப்பட்டன. சென்னையில் விடுமுறையில் இருந்த காவலர்கள் அனைவரும் மறுநாள் (5-ம் தேதி) காலையில் வந்துவிட வேண்டும் என உத்தரவுகள் பறந்தன. இந்த உத்தரவுகள் எல்லாம் கன்ட்ரோல் ரூம் மூலமாகவே சென்றன. 

மகாராஷ்டிராவில் இருந்த தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவ், அவசர அவசரமாக சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து அப்போலோவுக்கு கவர்னர் வந்தபோது, அவருடைய காரை அ.தி.மு.க தொண்டர்கள் சூழ்ந்துகொண்டனர். அதனால், அப்போலோ முன்பு கவர்னரின் கார் சிறிதுநேரம் நின்றது. அதன்பிறகு, கூட்டத்தைக் கட்டுப்படுத்திய போலீஸ்காரர்கள், கவர்னர் காருக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தனர். அப்போலோவுக்குள் கவர்னர் நுழைந்தபோது, நள்ளிரவு 12 மணி. உள்ளே சென்ற கவர்னர், 12.15 மணிக்கு வெளியே வந்தார். கவர்னரின் கார் வெளியே வந்தபோது, அதற்குப் பின்னால், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டியின் காரும் வந்தது. இருவருடைய கார்களையும் சூழ்ந்துகொண்ட ஊடகவியலாளர்கள், அவர்களிடம் கேள்வி கேட்க முயன்றனர். ஆனால் அவர்கள், கார்களை விட்டு வெளியே தலைகாட்டவில்லை. 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அப்போலோவில் இருந்து துரத்தப்பட்ட அதே நேரத்தில், மன்னார்குடி உறவுகள் அனைத்தும் அப்போலோவில் ஒன்றுகூடின. திவாகரன், டி.டி.வி.தினகரன், பாஸ்கரன், இளவரசி, டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவக்குமார் உள்ளிட்ட மன்னார்குடி சொந்தங்கள் எல்லாம் அப்போ லோவில் இருந்தனர். ஆனால், சசிகலாவின் கணவர் நடராஜன் அப்போலோ பக்கம் வரவில்லை. அவர் பெசன்ட் நகர் வீட்டிலும் இல்லை. மாறாக, ரகசியமான இடத்தில் இருந்து சில முக்கியமான வேலைகளுக்கு காய் நகர்த்திக்கொண்டிருந்தார்.

அப்போலோ மருத்துவமனை ஏரியாவில் நிலவிய கொந்தளிப்பான சூழல், நள்ளிரவு 2 மணிக்கு மேல் சீரடைந்தது. மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனுக்கு கிளம்பிப் போனார், சசிகலா. அவரையடுத்து டி.டி.வி.தினகரனும் வெளியே சென்றார். அதன் பிறகு, என்ன மாயமோ தெரியவில்லை, அப்போலோவில் ஏரியாவில் அமைதி திரும்பத் தொடங்கியது. அத்துடன் மழையும் சேர்ந்துகொண்டதால், அங்கிருந்து தொண்டர்கள் கலையத் தொடங்கினார்கள். 

- ஜோ.ஸ்டாலின், பிரம்மா

படங்கள்: சு.குமரேசன், பா.காளிமுத்து, ஆ.முத்துக்குமார், மீ.நிவேதன், தே.அசோக்குமார்


``என்னிடம் நேரில் சொல்லட்டும்!’’

அப்போலோவைச் சுற்றி சோகமும் கொந்தளிப்பும் இருந்த நேரத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தன் அத்தையைப் பார்க்க வந்தார். ஆனால், யார் உத்தரவிட்டார்களோ தெரியவில்லை, தீபாவை அப்போலோவின் கேட் அருகில்கூட நெருங்கவிடவில்லை. “தயவுசெய்து போய்விடுங்கள். இங்கே பிரச்னை செய்யாதீர்கள். உங்களை உள்ளேவிடக்கூடாது என்று எங்களுக்கு உத்தரவு” என்று தீபாவை போலீஸ்காரர்கள் மிரட்டினர். அதனால், பத்திரிகையாளர்களிடம் தீபா பேச முயன்றார். ஆனால், அதற்கும் போலீஸ்காரர்கள் அனுமதிக்கவில்லை. ஆனாலும், பத்திரிகையாளர்கள் விடாமல் தீபாவை துரத்திச் சென்று பேசினர். அப்போது, “என்னை உள்ளே விடக்கூடாது என்று சொல்ல அவர்கள் யார்? அவர்களை வெளியே வரச்சொல்லுங்கள். அவர்கள் என்னிடம் நேரில் சொல்லட்டும்” என்று கொந்தளித்தார். அவரிடம் பத்திரிகையாளர்கள், “மேடம், உங்களை உள்ளே விடக்கூடாது என்று சொன்னவர்கள் யார் என்று உங்களால் கணிக்க முடிகிறதா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, “என் அத்தை கூடவே இருப்பவர்கள்தான் சொல்லி இருப்பார்கள்” என்று தீபா சொன்னார். போலீஸார் கடும் கெடுபிடி காட்டவே, தீபா தன் கணவருடன் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு மீடியாவினர் படம் எடுக்கவிடாமல் போலீஸ் தடுத்தது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

RELATED ARTICLES

திடீர் தீபக்! - காட்சி 6 -  எம்.ஜி.ஆர் சமாதி
திடீர் தீபக்! - காட்சி 6 - எம்.ஜி.ஆர் சமாதி
சிம்ம வாகனத்தில் உடல்... கார்டனில் டை... சமாதியில் அப்போலோ!
சிம்ம வாகனத்தில் உடல்... கார்டனில் டை... சமாதியில் அப்போலோ!
“அந்தக் கும்பல் சிரித்துக் கொண்டிருந்தது!” - தடாலடி  சசிகலா புஷ்பா
“அந்தக் கும்பல் சிரித்துக் கொண்டிருந்தது!” - தடாலடி சசிகலா புஷ்பா
நள்ளிரவு... அவசரமாய்... ரகசியமாய் - காட்சி 4 - ராஜ் பவன்
நள்ளிரவு... அவசரமாய்... ரகசியமாய் - காட்சி 4 - ராஜ் பவன்
வீட்டை சுற்றிய உடல்! - காட்சி 2 - போயஸ் கார்டன்
வீட்டை சுற்றிய உடல்! - காட்சி 2 - போயஸ் கார்டன்
முகத்தில் நான்கு புள்ளிகள்...  சொல்லும் உண்மைகள்!
முகத்தில் நான்கு புள்ளிகள்... சொல்லும் உண்மைகள்!
திடீர் தீபக்! - காட்சி 6 -  எம்.ஜி.ஆர் சமாதி
திடீர் தீபக்! - காட்சி 6 - எம்.ஜி.ஆர் சமாதி
சிம்ம வாகனத்தில் உடல்... கார்டனில் டை... சமாதியில் அப்போலோ!
சிம்ம வாகனத்தில் உடல்... கார்டனில் டை... சமாதியில் அப்போலோ!
“அந்தக் கும்பல் சிரித்துக் கொண்டிருந்தது!” - தடாலடி  சசிகலா புஷ்பா
“அந்தக் கும்பல் சிரித்துக் கொண்டிருந்தது!” - தடாலடி சசிகலா புஷ்பா
நள்ளிரவு... அவசரமாய்... ரகசியமாய் - காட்சி 4 - ராஜ் பவன்
நள்ளிரவு... அவசரமாய்... ரகசியமாய் - காட்சி 4 - ராஜ் பவன்
வீட்டை சுற்றிய உடல்! - காட்சி 2 - போயஸ் கார்டன்
வீட்டை சுற்றிய உடல்! - காட்சி 2 - போயஸ் கார்டன்
முகத்தில் நான்கு புள்ளிகள்...  சொல்லும் உண்மைகள்!
முகத்தில் நான்கு புள்ளிகள்... சொல்லும் உண்மைகள்!
திடீர் தீபக்! - காட்சி 6 -  எம்.ஜி.ஆர் சமாதி
திடீர் தீபக்! - காட்சி 6 - எம்.ஜி.ஆர் சமாதி
சிம்ம வாகனத்தில் உடல்... கார்டனில் டை... சமாதியில் அப்போலோ!
சிம்ம வாகனத்தில் உடல்... கார்டனில் டை... சமாதியில் அப்போலோ!

ஸ் பெ

unread,
Dec 10, 2016, 2:09:30 PM12/10/16
to panbudan

சசிகலாவிற்கு எதிராக அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

ஜெயலலிதாவின் மறைவையடுத்து, கட்சியை வழிநடத்த வேண்டும் என்று சசிகலாவை அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் பலர் போயஸ் கார்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சசிகலாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், பின்னி சாலையில், சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஸ் பெ

unread,
Dec 10, 2016, 2:15:44 PM12/10/16
to panbudan


ஸ் பெ

unread,
Dec 11, 2016, 1:45:38 AM12/11/16
to panbudan

ஸ் பெ

unread,
Dec 11, 2016, 1:51:32 AM12/11/16
to panbudan

Thevan

unread,
Dec 12, 2016, 10:19:46 AM12/12/16
to panbudan
சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகலாமா? வேண்டாமா என்று சொல்லுங்கள், ஸ்டாலின் ஃபெலிக்ஸ்

2016-12-11 12:21 GMT+05:30 ஸ் பெ <stalinf...@gmail.com>:

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

Ahamed Zubair A

unread,
Dec 13, 2016, 12:24:38 AM12/13/16
to பண்புடன்
அட்ரா அட்ரா.....

ஸ்டாலின்.... சொல்லுடே....

ஆகணும்னு சொன்னா உன்னை அடிமைன்னு சொல்லிடலாம்.. இல்லைன்னு சொன்னா நீ தமிழ்த் தேசிய விரோதின்னுடலாம்... செம கொக்கி :)

செல்வன்

unread,
Dec 14, 2016, 12:55:06 AM12/14/16
to பண்புடன்
எனக்கென்னவோ சசிகலா நல்ல சிறப்பான தலைவர் ஆக இருப்பார் என தான் தோன்றுகிறது.

நடராசன், திவாகரன், விவேக் என அவர் குடும்பத்தில் எல்லாரும் அரசியலில் திறமையானவர்கள். 

கட்சியை இத்தனை நாள் திரைமறைவில் ஆண்டது சசிகலா தான். ஜெயலலிதா உடல்நலம் பல ஆண்டுகளாக குன்றியே இருந்தது.  அதிகாரிகள் துணையுடன் ஆட்சி நடத்துவது ஒன்றும் கடினம் அல்ல.

ஜெயலலிதாவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கு சசிகலாவுக்கு இருக்குமா என்றால்

1. ஜெயலலிதா எழுதி வைத்துதான் பேசினார். சசிகலாவும் அதேபோல் செய்வது கடினம் அல்ல.

2. பெண் என்பதால் கூட்டம் கூடிவிடும். அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்து நாடறிந்த முகம் சசிகலாயினுடையதுதான். சின்னமா என சொல்லி கூட்டம் சேர்ந்துவிடும். இரட்டை இலைக்கு ஓட்டும் விழும். ஆட்சியில் இருப்பதால் சசிகலா பெயரில்ந் நலதிட்டங்களையும் அறிவிக்கலாம். அவர் படம் போட்டு தையல் மெசின், மிக்சி எல்லாம் கொடுக்கலாம்.

அதனால் ஏன் சசிகலா அரசியலில் ஜொலிக்க முடியாது என நினைக்கிரார்கள் என புரியவில்லை.அடுத்த நாலாண்டுகள் பிரச்சனையில்லாத ஆட்சி நடந்தால் சசிகலா மக்கள் மத்தியில் நிச்சயமாக புகழ் பெறுவார். நடராஜன் நல்ல நிர்வாகதிறமையுள்ளவர். அவர்களை குறைத்து எடைபோட்டால் ஏமாறபோவது நிச்சயம்

செல்வன்

unread,
Dec 14, 2016, 1:07:40 AM12/14/16
to பண்புடன்
காலில் விழும் கலாசாரத்தை நிறுத்தி (ஜெயலலிதாவின் கெட்ட வழக்கம் இது)

ஜெயலலிதா துவக்க காலத்தில் செய்ததுபோல மக்களுடன் மக்களாக பொதுகூட்டங்களில் பேசி, நடந்து சென்று அவர்களை அணுகி பேசி,

ஆட்சியை திறமையாக நடத்தினால்

சசிகலா வெல்வது நிச்சயம்.

கட்சியில் கொங்கு பெல்ட்டின் முக்கியத்துவம் குறைந்துவிடாமல் ஜெயலலிதா பார்த்துகொன்டார். சசிகலா அதையும் செய்யவேண்டும். இப்போதே தென் தமிழ்நாட்டில் சசிகலாவால் கட்சிக்கு செல்வாக்கு மிக பெருத்த அளவில் அதிகரிக்கும். வன்னியர், கவுண்டர் பெல்ட்டை ஜெயலலிதா போல சரியான முரையில் பேலன்ஸ் செய்தால் வெற்றி உறுதி

omsri jai nath jai nath

unread,
Dec 14, 2016, 2:06:55 AM12/14/16
to panb...@googlegroups.com
என்ன செல்வன் சின்னம்மாவுக்கு ஓவர் ஜால்ரா மாதிரி இருக்கு.... ஜெ. எழுதி வைத்து தான் பேசினாலும் அதிகாரிகள் கொடுப்பதை மட்டும் பேச மாட்டார்.  எங்கு என்ன பேசவேண்டும் என்பதை குறிப்புகளை தந்து அதைதான் பேசுவார்.  

இப்பொழுது பெண்களே சின்னம்மாவுக்கு எதிரிகள் தான்... பெண்கள் அவருக்கு எதிரான மன நிலையில்தான் உள்ளனர்... மேலும் இவள் மூலம் தான் ஜெ.க்கு கெட்ட பெயர் வந்தது என நினைக்கின்றனர்.


Thevan

unread,
Dec 14, 2016, 3:10:31 AM12/14/16
to panbudan
பெண்களின் மனநிலை கருத்துக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?

omsri jai nath jai nath

unread,
Dec 14, 2016, 8:15:41 AM12/14/16
to panb...@googlegroups.com
அது தேர்தல் நேரத்தில் கட்டாயம் வெளிப்படும்...

Jaisankar Jaganathan

unread,
Dec 14, 2016, 9:24:33 AM12/14/16
to பண்புடன்
தேவன் சார்,

எனக்கு என்னவோ இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை ஏடிஎம்கே வை அசைக்க முடியாது என்றே தோன்றுகிறது. பன்னீர்செல்வம் ஆரம்பமே அமர்களம்
regards,
jaisankar jaganathan

omsri jai nath jai nath

unread,
Dec 14, 2016, 9:42:20 AM12/14/16
to panb...@googlegroups.com
நிச்சயமா இரட்டை இலைக்கு ஒரு வேல்யூ இருக்கு. அது கிராமப்புறங்களில் அசைக்க முடியாது. .. அதே சமயம் தலைவருக்குன்னு ஒரு வேல்யூ இருக்கு... முதலில் எம்ஜியார், அப்பறம் ஜெயலலிதா இந்த இமேஜ்க்கு இப்போதைக்கு வேற சாய்ஸ் இல்ல... ஓபிஎஸ், சசிகலா மற்றும் மோடி இவங்களை மீறி செயல்பட வாய்ப்பில்லைன்னு எனக்கு தோணுது...

செல்வன்

unread,
Dec 14, 2016, 10:02:45 AM12/14/16
to பண்புடன்
2016-12-14 1:06 GMT-06:00 omsri jai nath jai nath <omsri...@gmail.com>:
என்ன செல்வன் சின்னம்மாவுக்கு ஓவர் ஜால்ரா மாதிரி இருக்கு.... ஜெ. எழுதி வைத்து தான் பேசினாலும் அதிகாரிகள் கொடுப்பதை மட்டும் பேச மாட்டார்.  எங்கு என்ன பேசவேண்டும் என்பதை குறிப்புகளை தந்து அதைதான் பேசுவார்.  

இப்பொழுது பெண்களே சின்னம்மாவுக்கு எதிரிகள் தான்... பெண்கள் அவருக்கு எதிரான மன நிலையில்தான் உள்ளனர்... மேலும் இவள் மூலம் தான் ஜெ.க்கு கெட்ட பெயர் வந்தது என நினைக்கின்றனர்.


 

அரசியல் யதார்த்தத்தை தான் சொல்கிறேன் ஓம்பிரகாஷ் ஜி.

ஜெயலலிதாவிடம் நிறைய கெட்ட குணங்கள் இருந்தன. பிடிவாதம், யார் சொல்வதையும் கேட்காதது, ஈகோ என.

கடைசி 10 ஆண்டுகளில் அவர் அதிகமாக வெளியே வராமலே அரசியல் செய்தார். மக்களிடையே மிக விலகி புதிராக இருந்தார்.

சசிகலா குடும்பம் மேல் ஊழல் குடும்பம் என்ற இமேஜ் உள்ளது. ஜெ சாவில் மர்மம் என்ற சந்தேகமும் உள்ளது. ஆனால் எதிர்த்து நிற்பது  கருணாநிதி குடும்பம். அதனால் ஊழல் புகாரை அவர்களால் சொல்லமுடியாது. ஜே சாவு மர்மம் அமுக்கபட்டு விடும். இன்னும் ஆட்சிக்கு நாலு ஆண்டுகளுக்கும் மேல் இருப்பதால் அடுத்த தேர்தல் சமயம் இது எதுவுமே மக்கள் மனதில் நிற்காது.

சோனியா செய்ததுபோல் பன்னீரை ஆளவிட்டு, பொதுசெயலாளராக திரைமறைவு அரசியல் செய்து சசிகலா போயஸ் தோட்டத்தில் தாராளமாக கட்சியை கட்டுபாட்டில் வைத்திருக்கலாம். ஆட்சி நல்லபடி இருந்தால் மக்கள் ஓட்டுபோட தயங்கமாட்டார்கள். அடுத்த தேர்தலில் தோற்றால் கூட 2026 தேர்தலில் மறுபடி ஆட்சிக்கு ஏன் வரமுடியாது என தெரியவில்லை. மக்கள் இலைக்குக் சூரியனுக்கும் குத்தியே பழக்கபட்டுவிட்டவர்கள்.

ஸ் பெ

unread,
Dec 14, 2016, 1:35:33 PM12/14/16
to panbudan
அது அந்த கட்சியின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை பொறுத்தது தேவன் ஐயா..

அதே, OPS முதலமைச்சராக தொடரலாமா என கேட்டால், கண்டிப்பாக ஆம் என்பேன்..

ஸ் பெ

unread,
Dec 14, 2016, 1:43:01 PM12/14/16
to panbudan
செல்வன் ஜி,

கொஞ்சம் முரண்படுகிறேன்..

அம்மையாரின் உருவாக்கத்தில் இந்தியாவின் பங்கு இருந்தது என்பதை மறுக்க முடியாது. முக்கியமாக பிராமண தலைமை என்பதற்காகவே, அதிமுகவை பெருவாரியாக ஆதரித்த பிராமணர்கள் உண்டு.. அது சசிகலாவுக்கு மிஸ்ஸிங்..
ஜெயா அம்மையார் அதிகாரத்தில் வந்த பிறகு தான் ஊழல் குற்றச்சாட்டில் மாட்டினார்.. சசிகலா நிலைமையோ வேறு..
என்ன தான் அம்மையார் ஊழல் வழக்குகளில் சிக்கி இருந்தாலும், யாருமற்றவர் என்ற விஷயம் பொது புத்தியில் விதைக்கப்பட்டது... ஆனால் சசிகலா குடும்பத்தில் அவரை சார்ந்தவர்கள் கண்டிப்பாக ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பது திண்ணம் (மன்னார்குடி மாபியா என பத்து வருடத்திற்கு முன்பே எழுத துவங்கி விட்டார்கள்).
திமுக ஆண்ட போது, ஒரு சட்டமன்ற தொடரில், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றபட்டனர். அம்மையார் தனியாக சட்டமன்றத்திற்கு சென்றார். சசிகலாவால் அது முடியுமா என்பது சந்தேகமே..
என்ன தான் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி தவித்தாலும், அம்மையார் இந்தியாவுக்கு கொஞ்சமாவது சிம்ம சொப்பனமாக இருந்தார். தமிழ் தவிர்த்து சரளமாக உரையாட தெரிந்த ஆளுமை திறன் வேறு.. சசிகலா ??






















செல்வன்

unread,
Dec 14, 2016, 3:20:13 PM12/14/16
to பண்புடன்
ஸ்டாலின் ஜி,

ஜெயலலிதாவுக்கு இருந்த பிடிவாதம் நல்ல விசயங்களில் செல்கையில் (காவிரி, ஈழம்) அது பயனுள்ளதாக அமைந்தது.

சசியால் அம்மாதிரி பிடிவாதமாக நடக்காமல் வளைந்து கொடுப்பார் எனவே நானும் கருதுகிறேன். சட்டசபையில் எதிர்கட்சிகளை தூக்கி போட மாட்டார். ஆனால் எதிரே இருப்பது ஸ்டாலின் என்பதால் அவர்கள் பண்புடன் நடந்து கொள்வார்கள் என்றே கருதுகிறேன். அதனால் சட்டசபையில் எம்ஜிஆர், கருணாநிதி ஆட்சியில் நடந்தது போன்ற அமைதியான விவாதமும், நெறிமுறைகளும் மீன்டும் தோன்றகூட செய்யலாம். :-)

காவிரி பிரச்சனை எல்லாம் மீண்டும் எழுந்தால் சசிகலா என்ன செய்வார் என பொறுத்திருந்துதான் பார்க்கவேன்டும். பிராமணர் ஓட்டு எல்லாம் 1% தான். அது பெரிய பிரச்சனை அல்ல. அவர்கள் என்ன திமுகவுக்கா ஓட்டுபோட போகிரார்கள்? :-) அவர்கள் ஒன்று பாஜக அல்லது அதிமுக என தான் ஓட்டுபோடுவார்கள். அரசியல் வியூகம் அமைப்பது, கூட்டணி ஆகியவற்றை ஜெயலலிதாவின் தில்லுடன் சசிகலாவால் செய்ய முடியாது. ஆனால் நடராஜனை இவ்விசயத்தில் சாதாரணமாக எடைபோட முடியாது. இன்னும் நாலரை ஆண்டுகள் உள்ளன. தெரியாததை கற்றுக்கொள்ள காலம் இருக்கிறது. மத்தியில் நட்பான அரசு. மாநிலத்தில் அவர்கள் அரசு

ஆனால் எனக்கு இதில் வியப்பளிக்கும் விசயமே எல்லாரும் ஜெயலலிதா ஆட்சி உலகம் கானாத விந்தை போலவும், அதை சசிகலாவால் செய்யமுடியாது என நினைப்பதும் தான் :-) அரசியல் உலகம் எப்போதுமே சூதுக்கு ஒப்பானது. யார் மேலே வருவார்கள் என கணிக்கவே முடியாது. சசிகலாவுக்கும், நடராஜனுக்கும் 30 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ளது..(திரைமறைவு அரசியல்). அதில் அவர்கள் சாம்ர்த்தியமாக்வே செயல்பட்டுள்லார்கள். நேரடி அரசியல் திறமை அவர்களுக்கு இல்லை. ஆனால் சின்னம்மா என்ற பிம்பத்தை எளிதில் உருவாக்கி மக்கள் மனதில் பதித்துவிட முடியும். பெண் என்பது இவ்விசயத்தில் மிகப்பெரும் அட்வான்டேஜ். அவரது சாதி இன்னொரு அட்வான்டேஜ். எம்ஜிஆ, ஜெயலலிதாவுக்கு இல்லாத அட்வான்டேஜ் இதெல்லாம். அவர்கள் நெருப்பாற்றில் நீந்தி ஆட்சியை பிடித்தவர்கள். சசிகலாவுக்கு இது சவால் தான். ஆனால் பல சாதகங்கள் அவருக்கு இருக்கவே செய்கின்ரன

ஸ் பெ

unread,
Dec 15, 2016, 2:06:04 AM12/15/16
to panbudan
தியாகச் செம்மல் சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி: பொன்னையன் திட்டவட்டம் 'பெரியம்மா' ஜெயலலிதாவின் உடல்நிலையை 'தியாகச் செம்மலாக' கண்காணித்து வந்தார் சின்னம்மா என சசிகலாவுக்கு பொன்னையன் புகழாரம் சூட்டியுள்ளார். சசிகலாவே அதிமுக பொதுச்செயலர் எனவும் பொன்னையன் கூறியுள்ளார். By: Mathi Published: Thursday, December 15, 2016, 12:17 [IST] Subscribe to Oneindia Tamil சென்னை: அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்தார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று செய்தியாளர்களிடம் பொன்னையன் கூறியதாவது: VIDEO : Karunaas wants Sasikala to take over Jaya's post Karunaas wants Sasikala to take over Jaya's postNews Powered by 'பெரியம்மா'வின் ஜெயலலிதாவின் மனசாட்சியாக திகழ்ந்தவர் 'சின்னம்மா' சசிகலா. ஜெயலலிதாவின் புகழுக்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா. சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் அதிமுக பொதுச்செயலராக தேர்வு செய்யப்படுவது உறுதி. அதிமுக பொதுக்குழு, செயற்குழு விரைவில் கூட இருக்கிறது. பெரியம்மா ஜெயலலிதாவின் உடல்நிலை காப்பதில் 'தியாகச் செம்மலா'க திகழ்ந்தவர் 'சின்னம்மா' சசிகலா. இவ்வாறு பொன்னையன் கூறினார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-become-general-secretary-admk-says-ponnaiyan-269781.html

ஸ் பெ

unread,
Dec 15, 2016, 2:06:36 AM12/15/16
to panbudan
திருச்சியில் சசிகலாவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம்! தேனி, கரூரில் போஸ்டர்கள் கிழிப்பு!! அதிமுகவில் சசிகலா ஆதரவு, எதிர்ப்பு அணிகள் உருவாகி உள்ளன. திருச்சியில் சசிகலாவுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. By: Essaki Published: Thursday, December 15, 2016, 12:14 [IST] Subscribe to Oneindia Tamil சென்னை: அதிமுக பொதுச்செயலராக சசிகலா உடனே பதவியேற்க வலியுறுத்தி திருச்சியில் 50 அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதே நேரத்தில் திருவண்ணாமலை, கரூர், தேனி உள்ளிட்ட இடங்களில் சசிகலா போஸ்டர்களை அதிமுகவினர் கிழித்தும் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சசிகலாவை தலைமை ஏற்க நிர்வாகிகள் வலியுறுத்தினாலும் அதிமுக தொண்டர்கள் எதிர்க்கின்றனர். VIDEO : மோடி ஊழல் செய்தாரா? ராகுல் காந்தி பேட்டி- Oneindia Tamil மோடி ஊழல் செய்தாரா? ராகுல் காந்தி பேட்டி- Oneindia TamilEntertainment Powered by சென்னை உட்பட பல இடங்களில் சசிகலாவுக்கு ஆதரவான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்த போஸ்டர்களில் சசிகலா முகத்தை மட்டும் அதிமுகவினர் கிழித்து எறிந்தும் வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் எம்ஜிஆர் சிலையின் கீழ் சசிகலா உடனே அதிமுக பொதுச்செயலர் பொறுப்பை ஏற்க வலியுறுத்தி 50 அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே கரூரில் சசிகலாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒட்டியிருந்த போஸ்டர்களை அதிமுகவினர் கிழித்து உள்ளனர். இதேபோல் திருவண்ணாமலை, தேனியிலும் சசிகலா போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-cadres-on-hunger-strike-support-sasikala-269780.html

omsri jai nath jai nath

unread,
Dec 15, 2016, 4:36:55 AM12/15/16
to panb...@googlegroups.com
என்னைக் கேட்டால், சசி, தீபா இவர்கள் யாரும் வர வேண்டாம்.  இவர்களோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் அல்லாத மூன்றாவதாக யாராவது வந்தால் நலம்.  இல்லையெனில் அதிமுக வும் குடும்ப கட்சி ஆகிவிடும்

2016-12-15 12:36 GMT+05:30 ஸ் பெ <stalinf...@gmail.com>:
திருச்சியில் சசிகலாவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம்! தேனி, கரூரில் போஸ்டர்கள் கிழிப்பு!! அதிமுகவில் சசிகலா ஆதரவு, எதிர்ப்பு அணிகள் உருவாகி உள்ளன. திருச்சியில் சசிகலாவுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. By: Essaki Published: Thursday, December 15, 2016, 12:14 [IST] Subscribe to Oneindia Tamil சென்னை: அதிமுக பொதுச்செயலராக சசிகலா உடனே பதவியேற்க வலியுறுத்தி திருச்சியில் 50 அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதே நேரத்தில் திருவண்ணாமலை, கரூர், தேனி உள்ளிட்ட இடங்களில் சசிகலா போஸ்டர்களை அதிமுகவினர் கிழித்தும் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சசிகலாவை தலைமை ஏற்க நிர்வாகிகள் வலியுறுத்தினாலும் அதிமுக தொண்டர்கள் எதிர்க்கின்றனர். VIDEO : மோடி ஊழல் செய்தாரா? ராகுல் காந்தி பேட்டி- Oneindia Tamil மோடி ஊழல் செய்தாரா? ராகுல் காந்தி பேட்டி- Oneindia TamilEntertainment Powered by சென்னை உட்பட பல இடங்களில் சசிகலாவுக்கு ஆதரவான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்த போஸ்டர்களில் சசிகலா முகத்தை மட்டும் அதிமுகவினர் கிழித்து எறிந்தும் வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் எம்ஜிஆர் சிலையின் கீழ் சசிகலா உடனே அதிமுக பொதுச்செயலர் பொறுப்பை ஏற்க வலியுறுத்தி 50 அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே கரூரில் சசிகலாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒட்டியிருந்த போஸ்டர்களை அதிமுகவினர் கிழித்து உள்ளனர். இதேபோல் திருவண்ணாமலை, தேனியிலும் சசிகலா போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-cadres-on-hunger-strike-support-sasikala-269780.html

--

செல்வன்

unread,
Dec 15, 2016, 10:36:24 AM12/15/16
to பண்புடன்

2016-12-15 3:36 GMT-06:00 omsri jai nath jai nath <omsri...@gmail.com>:
என்னைக் கேட்டால், சசி, தீபா இவர்கள் யாரும் வர வேண்டாம்.  இவர்களோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் அல்லாத மூன்றாவதாக யாராவது வந்தால் நலம்.  இல்லையெனில் அதிமுக வும் குடும்ப கட்சி ஆகிவிடும்

என் சாய்ஸ் பன்னீர் அல்லது செங்கோட்டையன் தான்.

ஆனால் நடப்பது துர்லபம் :-(



--

செல்வன்

unread,
Dec 15, 2016, 11:09:07 AM12/15/16
to பண்புடன்




omsri jai nath jai nath

unread,
Dec 15, 2016, 11:21:42 PM12/15/16
to panb...@googlegroups.com
என் சாய்ஸ்... ஓபிஎஸ் என்றாலும், கடைசி சில காலம் அவரை அம்மா சற்றே ஒதுக்கி வைத்திருந்தார் காரணம் தெரியவில்லை.. (அவர் ஒதுக்கி வைத்தால் காரணம் ஏதும் இல்லாமல் இருக்காது).  ஸோ, பண்ருட்டியார் கூட ஓகே... பட், பொன்னையன், மதுசூதனன் கூடவே கூடாது. 

2016-12-15 21:38 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:




ஸ் பெ

unread,
Dec 17, 2016, 3:04:42 AM12/17/16
to panbudan

சட்டப்படியும் சசிகலா வாரிசாக முடியாது!'  -கார்டனில் நடந்த அதிரடி ஆலோசனை 

'சிகலா பெயரில் ஏழு லட்ச ரூபாய் டெபாசிட் செய்திருக்கிறார் ஜெயலலிதா. எனவே, அவரது சட்டப்படியான வாரிசு சசிகலா மட்டும்தான்' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்தார். ' ஜெயலலிதாவின் வாரிசு என்ற உரிமையை சட்டப்படியாகவே சசிகலாவால் உரிமை கொண்டாட முடியாது' என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். 

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. இதற்கு அக்கட்சியின் சீனியர்கள் அனைவரும் ஆதரவு அளித்துள்ளனர். இதையடுத்து, கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவது தொடர்பான ஆலோசனையில் இறங்கியிருக்கிறார் சசிகலா. நேற்று ஜெயலலிதாவின் மறைவின் 11-ம் நாள் காரியத்தை கார்டனில் நடத்தியுள்ளனர். அமைச்சர்கள் உள்பட கட்சியின் சீனியர்களுக்கு கார்டனில் சாப்பாடு வழங்கப்பட்டது. அதேநேரம், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பேசும்போது, ' ஜெயலலிதாவின் மனசாட்சியாக சசிகலா செயல்பட்டார். நிர்வாகிகள் இடையே பிரச்னை வரும் போது, இரு தரப்பினரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கும் பணியை சசிகலாவிடம் ஒப்படைத்திருந்தார். தனக்கு அடுத்தபடியான வாரிசாக சசிகலாவைத்தான் முன்னிறுத்தினார். ஸ்ரீராம் இன்வெஸ்டார் நிறுவனத்தில், 1991-ம் ஆண்டு ஏழு லட்சம் ரூபாயை சசிகலா பெயரில் டெபாசிட் செய்தார். அந்தப் பணத்திற்கு வாரிசாக சசிகலாவைத்தான் நியமித்துள்ளார். அவரே வாரிசு என கையெழுத்திட்டுள்ளார் ஜெயலலிதா' எனத் தெரிவித்தார். 

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குமாரதேவனிடம் பேசினோம். " ஒருவர் பெயரில் பணத்தை டெபாசிட் செய்தால், அவர் அந்தப் பணத்திற்கு உரிமை கொண்டாடலாம். ஆனால், பணத்தை முதலீடு செய்தவரின் நேரடி வாரிசு என உரிமை கொண்டாட முடியாது. மரணம் அடைந்தவரின் சொத்துக்களுக்கு அவரது ரத்த சம்பந்தமுள்ளவர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியும். வங்கிகளில் டெபாசிட் செய்தவர் இறந்துவிட்டாலே, அந்தப் பணம் அவரது குடும்ப சொத்தாகிவிடுகிறது. அந்தப் பணத்தை அவரது சட்டப்படியான வாரிசுதாரர் மட்டுமே அனுபவிக்க முடியும்.  வாரிசு உரிமை சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் பணத்தை கையாள முடியும். அப்படி யாரும் இல்லாதபட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களின் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி ஆகியோர் உரிமை கொண்டாடலாம். அப்படி இல்லாத நேரத்தில், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள், இரண்டாம் வாரிசுதாரர்களாக உரிமை கொண்டாட முடியும். இறந்தவர் ஏதேனும் உயில் எழுதி வைத்திருந்தால், அந்த அடிப்படையில் அவருடைய சொத்துக்களை வேறொரு நபர் அனுபவிக்கலாம். சொத்துக்கள் சென்னை நீதிமன்ற எல்லைக்குள் இருந்தால், உயிலை நிறைவேற்ற மனு அளிக்க வேண்டும். அதில் எதிர்ப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உயில் எழுதப்பட்ட நேரத்தைக் கணக்கிட்டு ஏற்படும் சந்தேகத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். எப்படிப் பார்த்தாலும், ரத்த சம்பந்தமில்லாதவர்கள் சட்டப்பூர்வ வாரிசாக முடியாது" என்கிறார். 

'சட்டப்படியான வாரிசு சசிகலா மட்டும்தான்' என ஊடகங்களில் ஆணித்தரமாக வாதிட்டு வருகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். மறுபுறம், ' பொதுச் செயலாளர் பதவிக்கு கட்சி விதிப்படி ஐந்து ஆண்டுகளை சசிகலா நிறைவு செய்யவில்லை' எனக் கூறி வழக்குத் தொடர்ந்தார் சசிகலா புஷ்பா எம்.பி. ' கட்சி உறுப்பினராக இல்லாத சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது. உள்கட்சி விதிப்படி, கட்சி உறுப்பினர்கள் வழக்குத் தொடர்ந்தாலே உறுப்பினர் தகுதியை இழந்துவிடுகிறார்கள்' என அதிர வைத்தார் அ.தி.மு.க தரப்பு வழக்கறிஞர். இதையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கும் சசிகலாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார் நீதியரசர் கல்யாண சுந்தரம். வழக்கின் இறுதிக்கட்டத்துக்காக காத்திருக்கிறார்கள் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள்.

" டிசம்பர் 31-ம் தேதிக்குள் பொதுக்குழுவை நடத்தி முடிக்காவிட்டால், தேர்தல் ஆணையத்துக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதால், அடுத்துச் செய்ய வேண்டிய உடனடி காரியங்கள் பற்றித்தான் ஆலோசித்து வருகிறார் சசிகலா. கட்சியின் சட்ட விதிகளைப் பற்றியும் அவரிடம் விரிவாகவே எடுத்துக் கூறியுள்ளனர். சட்ட சிக்கல்களை எதிர் கொள்வது ஒருபுறம் இருந்தாலும், பொதுமக்கள் மத்தியில் சசிகலாவுக்கான ஆதரவைப் பெருக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமான அசைண்மென்ட். மாவட்டம்தோறும் சுவரொட்டிகள் ஒட்டுவது, நலத்திட்டப் பணிகளை வேகப்படுத்துவது என மாவட்ட நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டிசம்பர் 24 அன்று எம்.ஜி.ஆர் நினைவு நாளையொட்டி, எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை போடும் நிகழ்வில் சசிகலா பங்கேற்பார். அதன்பின்னர், கட்சி அதிகாரம் தொடர்பான விஷயங்கள் படிப்படியாக அரங்கேறும்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

- ஆ.விஜயானந்த்

ஸ் பெ

unread,
Dec 17, 2016, 3:05:33 AM12/17/16
to panbudan

'கமலஹாசனின் உணர்வுகூட ஓ.பி.எஸ்ஸிடம் இல்லை!' -ஜெயலலிதாவுக்காக கொதிக்கும் சீமான்

 

 

மிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்து 11 நாட்கள் ஆகிவிட்டன. அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா.  "முதல்வரின் மரணம் குறித்த அறிவிப்பு முதல் அடக்கம் செய்யப்பட்டது வரையில் அனைத்தும் துல்லியமான திட்டப்படியே நடந்தன. ஒரு சாதாரண மனிதனாக இவற்றைக் கடந்து போக முடியவில்லை" என குமுறுகிறார் சீமான். 

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆளும்கட்சியின் ஏழு நாள் துக்க அனுசரிப்பு நிகழ்வுகள் முடிந்து போய்விட்டன. புதிய முதல்வராக களத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவார் என அ.தி.மு.கவின் சீனியர்கள் பேசி வருகின்றனர். " 2020-ம் ஆண்டில் ஜெயலலிதா மரணம் அடைந்திருந்தால், இப்படி வேறு ஒருவரை முன்னிறுத்தும் வேலைகளைத் தொடங்கியிருக்க மாட்டார்கள். ஆட்சி நிறைவடைய இன்னும் நான்கரை ஆண்டு காலம் இருக்கிறது. அதுவரையில் இந்த அதிகாரத்தை விட்டுக் கொடுக்க இவர்கள் விரும்பவில்லை. அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள இவர்களை விட்டால் வேறு யாருமில்லை. தற்போது அதிகாரத்தில் இருக்கும் அதிகப்படியான அதிகாரிகளை இவர்கள்தான் நியமனம் செய்தார்கள். அதனால் அவர்கள் சொல்வதைக் கேட்டு கட்டுப்பட்டு நடக்கிறார்கள். மீதமுள்ள ஆட்சி காலத்தைப் பயன்படுத்தி எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்றுதான் பார்க்கிறார்கள். ஜெயலலிதா பிறந்தநாளன்று எவ்வளவு சுவரொட்டிகள் ஒட்டினார்கள்? அவர் இறந்தபோது எவ்வளவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன? அப்படியானால் இவர்கள் அனைவரும் பதவிக்காக இவ்வளவு காலம் நடித்துக் கொண்டிருந்தார்களா? அவர் இறந்த அடுத்த நொடியிலேயே காட்சிகள் மாறிவிட்டன. ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார்கள். அவர் சிறையில் இருந்தபோது, 'நம்மைப் பார்ப்பார்' என்ற காரணத்துக்காக, அழுது புரண்டு ஒப்பாரி வைத்தவர்கள் எல்லாம் அமைதியாக இருந்தது ஏன்?" என ஆதங்கத்தோடு பேசத் தொடங்கினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தொடர்ந்து நம்மிடம் பேசினார். 

முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. ' அவர் முழுக்க குணமாகிவிட்டார்; விரைவில் வீடு திரும்புவார்' என்றார்கள். மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தால், இன்னும் நன்றாகத்தானே குணமடைந்திருக்க வேண்டும். திடீரென்று உயிர் போகும் அளவுக்குப் பலவீனம் எப்படி ஏற்பட்டது? அப்படியானால் இதுவரையில் மருத்துவர்கள் தெரிவித்த கருத்துகள் தவறா? என் அம்மாவுக்கு வைத்தியம் பார்க்கிறேன் என்றால், யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். 75 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்திருக்கிறார். அவருக்காக ஓட்டுப் போட்ட ஒவ்வொருவருக்கும் அவரது உடல்நிலையைப் பற்றி அறிந்து கொள்ளும் உரிமை இருக்கிறது. 'மருத்துவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார்' என்று சொன்னார்கள். அதைப் படம் எடுத்து வெளியிட்டிருக்கலாம். அப்படி வந்திருந்தால் இந்தக் கேள்விகள் எழுந்திருக்காது. அப்போலோவில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. பத்திரிகையாளர் சோவுக்கு வைத்தியம் பார்த்ததற்கான அடையாளமாக சிரின்ஜ் ஏற்றிய சுவடுகள் இருக்கின்றன. ஜெயலலிதாவுக்கு அப்படி எதேனும் சுவடுகள் தென்பட்டதா? அவரது கன்னத்தில் எம்பால்மிங் செய்ததற்கான குழிகள் இருக்கின்றன. அதைப் பார்க்கும்போதுதான் சந்தேகம் வலுப்பெறுகிறது. ஏன் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்கவில்லை?

எம்.ஜி.ஆர் சிகிச்சையில் இருந்தபோதுகூட அவர் தொடர்பான படங்கள் வெளியானது. ஜெயலலிதா விஷயத்தில் யாருமே அவரைப் பார்க்கவில்லை. ஆளுநரோ ராகுலோ யாருமே அவரைச் சென்று சந்திக்கவில்லை. 'முழுக்க குணமாகிவிட்டார்' என பிரதாப் ரெட்டி சொன்னது உண்மையா? முழுக்க குணமான உடலில் திடீர் பழுது எப்படி வந்தது? இதற்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்? 'அவருடைய வெற்றிக்கு சசிகலா துணையாக இருந்தார்' என்கிறார்கள். இதை ஏன் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது, இந்தத் தலைவர்கள் தொலைக்காட்சிகளில் பேசவில்லை? ' அவர் செய்தது மிகப் பெரிய தியாகம்' என்கிறார்கள். ஒருவருக்குத் தோழியாக இருப்பதே தியாகம் என்றால், இந்த நாட்டுக்காக செக்கிழுத்து, சொத்துகளை இழந்து கடைசி காலத்தில் மண்ணெண்ணெய் விற்று இறந்து போன வ.உசிக்கு என்ன பெயர்? செல்வந்தராகப் பிறந்து சொத்துகளை எல்லாம் ஏழை மக்களுக்குக் கொடுத்துவிட்டு காவி வேட்டி அணிந்து வாழ்ந்த முத்துராமலிங்கத் தேவருடைய தியாகத்துக்கு  என்ன பெயர்? ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தேச விடுதலைக்காக சிறையில் இருந்தார் காமராஜர். அவரை நாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது? 

ஜெயலலிதா உடலைப் பார்த்து, அப்பாவி மக்கள்தான் கதறியபடி நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்கள். ஓர் அமைச்சர் கதறியதைக்கூட கண்ணால் பார்க்க முடியவில்லை. ஓர் எம்.எல்.ஏ, ஒரு மாவட்டச் செயலாளர் என ஒருவராவது மொட்டை அடித்தார்களா? சாமி வரம் கொடுக்கும் வரையில்தான் நல்ல சாமி என நினைத்து இவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். உளவியல்ரீதியாக இந்த அமைச்சர்கள் எப்படி இதைக் கடந்து போகிறார்கள். அவர்களுக்கு நிம்மதியாகத் தூக்கம் வந்திருக்கலாம். அன்று இரவு முழுக்க என்னால் தூங்கவே முடியவில்லை. தூரத்தில் இருந்த நமக்கே இப்படி என்றால், அருகில் இருந்தவர்கள் ஜெயலலிதா இறப்பை, ஒரு பெரிய இழப்பாகவே காட்டிக் கொள்ளவில்லை. அப்படியானால், அவரது மரணம் முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. அப்படித்தான் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. 1969 பிப்ரவரி 3-ம் தேதி அண்ணாதுரை இறந்து போனார். உடனே யாரும் பதவியேற்கவில்லை. தற்காலிக முதல்வராக நெடுஞ்செழியன் பதவியேற்றார். அவரை அடக்கம் செய்த பிறகே, முதலமைச்சராக கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார். எம்.ஜி.ஆர் இறந்தபோதும் தற்காலிக முதல்வராக நெடுஞ்செழியனை அறிவித்தார் ஆளுநர் குரானா. அதன்பிறகு கட்சி எம்.எல்.ஏக்கள் கூடி வி.என்.ஜானகியை தேர்வு செய்தார்கள். தற்போது ஜெயலலலிதா மரணத்துக்குப் பிறகு ஏழு நாள் துக்கத்தை அரசு அறிவித்தது. அதன்பிறகு, ஓ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டிருந்தால், எல்லாம் இயல்பாக நடந்திருக்கும். உயிர் போன அடுத்த நொடியில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பது என்பது என்ன மாதிரியான மனநிலை? அதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. ஒரு மனிதனாக தொலை தூரத்தில் இருந்து பார்க்கும்போது எப்படி நினைப்பது? ஒரு வீட்டில் துக்க காரியம் நடந்தால் ஓர் ஆண்டுக்கு எந்த நல்ல காரியமும் நடப்பதில்லை. 

கமலஹாசன் செவாலியே விருதை வாங்கிக் கொண்டு வருகிறார். அந்த விருதை வாங்கியதற்காக கேரள முதல்வர் வாழ்த்தினார். ஜெயலலிதா வாழ்த்தவில்லை. ஆனால், ஜெயலலிதா உடல்நிலையைக் காரணம் காட்டி தன்னுடைய பிறந்தநாளைத் தள்ளிப் போட்டார் அவர். ரஜினிகாந்த், 'பிறந்தநாளையே கொண்டாட வேண்டாம்' என்றார். சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் தங்களுடைய நிகழ்வுகளை ரத்து செய்கின்றனர். ஜெர்மன் பயணத்தை ரத்து செய்தார் தமிழிசை. உங்களால் மட்டும் இறந்த அடுத்த நொடியில் எப்படி பதவியேற்க முடிகிறது ஓ.பி.எஸ்? இந்தக் காட்சிகளைப் பார்க்கும் ஒரு மனிதன் எப்படிப்பட்ட மனநிலைக்கு ஆளாவான்? இருக்கும் வரையில் புரட்சித் தலைவி அம்மா, டாக்டர், தங்கத் தாரகை, இதய தெய்வம் என்றெல்லாம் அழைத்தீர்கள். இறந்தவுடன், செல்வி ஜெயலலிதா என்கிறார்கள். யார் மரணம் அடைந்தாலும், எப்படி நடந்தது என எல்லோரும் கேட்பார்கள். அதுபோன்ற ஒரு விசாரணைகூட வேண்டாம் என்றால் எப்படி? 'அதிகாரம் மிக வலிமையானது' என அம்பேத்கர் சொல்வார். ஆனால், அதிகாரம் மிகக் கொடுமையானது என்பது ஜெயலலிதாவின் இறப்பின்போதுதான் உணர முடிகிறது. 'இறந்து போனவர் திரும்பி வரவா போகிறார்' என திருநாவுக்கரசர் கேட்கிறார். அதையே நானும் கேட்கிறேன். 'என் இனத்தையே போர் தொடுத்து அழித்ததால், செத்துப் போன ராஜிவ்காந்தி திரும்ப வந்துவிடுவாரா? 

ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில், மத்திய அரசின் நீட் தேர்வு, சரக்கு சேவை வரி(ஜி.எஸ்.டி), உணவுப் பாதுகாப்பு மசோதா, உதய் மின் திட்டம் ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தார். காரணம். 'மாநில உரிமைகளுக்காக நிற்கின்ற கட்சி அ.தி.மு.க. மாநில நலனை பாதிக்கும் இதுபோன்ற திட்டங்களை ஏற்க முடியாது' என அறைகூவல் விடுத்தார் ஜெயலலிதா. ஆனால், அவர் உடல் நலமில்லாமல் போனபோது, கட்சியின் பொதுக்குழு கூடி அறிவிக்காமல் முதல்வரின் அதிகாரங்களை ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கினார் ஆளுநர். அடுத்த ஒரு வாரத்தில் இந்த நான்கு திட்டங்களிலும் எதிர்ப்பில்லாமல் தமிழக அரசு இணைந்துவிட்டது. கட்சியின் தலைவர் எதிர்த்த ஒன்றுக்காக, பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஓ.பி.எஸ் கையெழுத்துப் போடுகிறார். ஒருவேளை அவர் சிகிச்சை முடிந்து மீண்டு வந்திருந்தால், இதையெல்லாம் எதிர்த்தது போல் நடித்தீர்களா எனக் கேள்வி கேட்டால், ஜெயலலிதாதான் பதில் சொல்லியிருக்க வேண்டும். அவர்கள் எதிர்த்த ஒன்றுக்கு கையெழுத்து போடுகிறீர்கள் என்றால், அவர் திரும்பி வர மாட்டார் என முடிவு செய்துவிட்டதாகத்தானே அர்த்தம்.

ஜெயலலிதா இறந்தபோது ஒரே நாளில் அடக்கம் செய்துவிட்டார்கள். அந்தக் குழியில் அதே அளவுக்கான சிமென்ட் கல் குறுகிய காலத்துக்குள் யார் தயாரித்தது? அதை பாலிஷ் போடுவதற்கு எவ்வளவு நாட்கள் தேவைப்பட்டிருக்கும்? முதல்வரின் உடல் அளவுக்கு சந்தனப் பேழையை எங்கு தயார் செய்தார்கள்? மாலை நான்கரை மணிக்குள் சந்தனப் பேழையைத் தயாரிக்க முடியுமா? உடற்கூறு ஆய்வும் நடத்தப்படவில்லை. மருத்துவமனையில் சேர்த்த இரண்டாவது நாளிலேயே, அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மார்க் பதிவு செய்தார்கள். இப்போது அதே இடத்தில்தான் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கிறது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் இதுகுறித்தெல்லாம் கேள்வி எழுப்பாமல் எப்படிக் கடந்து போக முடியும்? மிகுந்த வலியோடுதான் இந்தக் கேள்விகளை எழுப்புகிறேன். யாரிடமும் கேட்க வழியில்லாமல் எனக்குள் நானே கேட்டுக் கொள்கிறேன். இவ்வளவு காலம் ஒரு மனுஷியை நேசித்ததாகக் காட்டியது எல்லாம் வேடமா? ஒரேநாளில் வேறு ஒருவரின் படத்தை நெஞ்சுக்குள் எப்படி செருக முடிந்தது? இதை தூரத்தில் இருந்து பார்ப்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்" என வேதனையோடு பேசி முடித்தார் சீமான். 
http://www.vikatan.com/news/tamilnadu/75112-seeman-slams-ops-and-aiadmk-cadres.art?artfrm=news_most_read

R.VENUGOPALAN

unread,
Dec 17, 2016, 3:11:08 AM12/17/16
to பண்புடன்
04/0/2012 அன்று ‘பண்புடன்’ குழுமத்தில் எழுதிய பாடல். கொஞ்சம் பட்டி டிங்கரிங் பண்ணிப் போட்டாச்சு.
-------------------------------------------------------

வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ
வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ
அதிகாரம் கொண்டு தலைமை தாங்கி
அலங்கோலம் செய்ய வாராயோ

வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ

பிணக்குள்ள தொண்டன் கருத்து-அதைப்
பேசாமல் வேலை நடத்து
சுணக்கங்கள் இல்லை நமக்கு- நம்
சுகபோகம் நெஞ்சில் நிறுத்து
அடியின்றி மாடும் பணியாது
அதிகாரபோதை தணியாது
அடியின்றி மாடும் பணியாது
அதிகாரபோதை தணியாது

வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ

கரம்கூப்பிக் காலில்விழுவோம்-எங்கள்
கலிதீர்க்க வேண்டித் தொழுவோம்
தொலைக்காட்சி பேட்டியளித்து- ரொம்ப
துயரம்போல் நாங்கள் அழுவோம்
எதிராகப் பேச எவருண்டு?
எதிர்ப்போரை வீழ்த்தப் பணமுண்டு

அனுதாபம் இன்னும் இருக்கு- கொஞ்சம்
அசந்தாலே தீரும் கணக்கு
விடலாமா  நல்ல தருணம்- நல்ல
விஷயம்தான் இந்த மரணம்
தலைதூக்கலாமா தமிழ்நாடு?
தயங்காமல் வந்து நடைபோடு
வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ
வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ
அதிகாரம் கொண்டு தலைமை தாங்கி
அலங்கோலம் செய்ய வாராயோ

வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ

--

ஸ் பெ

unread,
Dec 17, 2016, 3:12:46 AM12/17/16
to panbudan
ஹ ஹ ஹ.. டைமிங் ஐயா..

ஸ் பெ

unread,
Dec 17, 2016, 3:17:20 AM12/17/16
to panbudan

சசிகலா: ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை! - புதிய தொடர் -1

சசிகலா

ஜெயலலிதா மீதான சசிகலாவின் விசுவாசம் அப்பழுக்கற்றது; கேள்விகளுக்கு அப்பாற்பட்டது’. இதைச் சொல்வது கடினமாக இருக்கலாம்; கேட்பது எரிச்சலாக இருக்கலாம்; புரிந்துகொள்ள சிரமமாகத் தோன்றலாம். ஆனால், ஜெ. - சசி நட்பின் வரலாற்றில், இதை ஆணித்தரமாய் எடுத்துச்சொல்ல, ஓராயிரம் உதாரணங்கள் இருக்கின்றன. சசிகலாவின் விசுவாசத்தை ஜெயலலிதா மனதார உணர்ந்திருந்தார். சசிகலா, ஜெயலலிதாவுக்கு அதைச் சரியான சந்தர்ப்பங்களில் உணர்த்தி இருந்தார். இந்த உணர்வுக்கடத்தல்தான், ஜெயலலிதாவின் கடைசி மூச்சு, உடலைவிட்டுப் பிரியும்வரை, சசிகலாவைப் அவர் பக்கத்திலேயே வைத்திருக்கக் காரணம். 

34 ஆண்டுகளுக்கு முன், கடலூரில் ஜெ. - சசியின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அந்தச் சந்திப்பு, பார்த்தால் புன்னகைக்கும் அறிமுகமாக மாறியது; அந்த அறிமுகம், ஜெ. - சசி நட்பாக வளர்ந்தது; அந்த நட்பு, ‘சசிகலா என் உடன்பிறவா சகோதரி’ என்று ஜெயலலிதாவை அறிவிக்கத் தூண்டியது; அந்த அறிவிப்பே, “சசிகலாவைத் தவிர எனக்கு இந்த உலகத்தில் யாரும் இல்லை” என்ற முடிவுக்கு, ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவைத் தள்ளியது. கடலூரில் ஏற்பட்ட ஜெ. - சசி சந்திப்பின் வரலாறு, மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் முடிவுக்கு வந்தது. இடைப்பட்ட 34 வருடங்களில் நடந்தது என்ன? 

ஜெயலலிதாவின் வாழ்வில், கடினமான காலகட்டங்கள் உருவானபோது, சசிகலாவின் நட்பு, ஜெயலலிதாவுக்கு அரணாக நின்றது; எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின், ரத்தக்களறியாய் கிடந்த, அரசியல் களத்தின் துரத்தல்களைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு அடைக்கலம் கொடுத்தது. வாழ்நாளின் இறுதிவரை, அபினைப் போல் ஜெயலலிதாவுக்கு ஆறுதல் அளித்தது. எதிர்திசையில் பார்த்தால், ஜெயலலிதாவின் நட்பு சசிகலாவுக்கு கோடிகளைக் கொட்டும் பம்பர் பரிசாய் அடித்தது; பொதுவில் அதிகமாய் தலைகாட்டாத சசிகலாவுக்கு, கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரம் செய்யும் சக்தியைக் கொடுத்தது. கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத சசிகலாவுக்கு, ‘நிழல்’ தலைவராக வலம்வரும் வாய்ப்பை வழங்கியது. அரசாங்கத்தில் எந்தப் பதவியிலும் அமராத சசிகலாவுக்கு, ‘நிழல்’ முதல்வராக ஆணையிடும் அதிகாரத்தைக் கொடுத்தது. அது எப்படி? 

இந்த வாய்ப்பைத் தக்கவைக்க, ஜெயலலிதாவின் பக்கம் இருந்த மற்ற காய்களை, சசிகலா கவனமாக வீழ்த்திக்கொண்டே இருந்தார். தன்னைத்தவிர... தன் குடும்பத்தைத்தவிர, ஜெயலலிதாவின் பக்கம், வேறு யாராவது சேர நினைத்தாலே... அவர்களைக் களையெடுத்துவிடுவார் சசிகலா. அதில், ஒருபோதும் சசிகலா அஜாக்கிரதையாக இருந்தது கிடையாது. இந்த விஷயத்தில் யாருக்கும், தயவுதாட்சண்யமே பார்க்கமாட்டார். சசிகலாவின் இந்த வியூகத்தால், ஜெயலலிதா யாரும் இல்லாதவர் ஆனார். வலம்புரிஜான், சசிகலா பற்றி ஒருமுறை குறிப்பிட்டபோது, “மொகலாய சாம்ராஜ்ஜியத்தில் மட்டும் சசிகலா இருந்திருந்தால், வெள்ளைக்காரனே இந்தியாவுக்குள் காலடி வைத்திருக்க முடியாது” என்றார். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு, சசிகலாவை இப்படிக் கணித்திருந்தார். தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இவை என்பதை காலம் நிரூபித்தது. அப்படி சசிகலா வீழ்த்திய காய்கள் யார்... யார்? 

ஜெ. - சசி நட்பால், தமிழகம் சந்தித்த வரலாற்றுச் சோதனைகள் என்ன... ஜெ. - சசி குவித்த சொத்துக்களின் பின்னணி என்ன.... தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் இருந்தும், விளாரில் இருந்தும் புற்றீசல்போல் கிளம்பிய சசிகலாவுடைய உறவுகளின் வரலாறு என்ன... 34 வருட ஜெ. - சசி நட்பின் பயணத்தில் மொத்தமாக சசிகலா செய்தது என்ன... செய்யாமல் தவிர்த்தது என்ன... இவ்வளவு சர்ச்சைகளுக்குப் பின்னாலும், ‘ஜெயலலிதா மீதான சசிகலாவின் விசுவாசம் அப்பழுக்கற்றது’ என்று சொல்லப்படுவது எதன் பொருட்டு, அத்தனைக்கும் பதில் சொல்கிறது, ‘சசிகலா: ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை!’ 

நாளை முதல்...
http://www.vikatan.com/news/coverstory/74533-how-sasikala-became-bestie-of-jayalalithaa-new-series.art

ஸ் பெ

unread,
Dec 17, 2016, 3:17:46 AM12/17/16
to panbudan

மன்னார்குடி மணமகள்-விளார் மணமகன் - கருணாநிதி நடத்திவைத்த திருமணம்! - சசிகலா: ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை! அத்தியாயம் 2

 

மன்னார்குடி மணமகள்-விளார் மணமகன் - கருணாநிதி நடத்திவைத்த திருமணம்!

 

 

 

ராமநாதபுரம் டூ மன்னார்குடி  

ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் சந்திரசேகரன் பிள்ளை. அவருக்கு சரியான பிழைப்பு இல்லை. அதனால், வறட்சி மிகுந்த ராமநாதபுரத்தைவிட்டு, சந்திரசேகரன் பிள்ளை வளமான தஞ்சை நோக்கி இடம்பெயர்ந்தார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ‘ஜாகை’ ஏற்படுத்திக் கொண்டு, அங்கும் தனக்குத் தெரிந்த நாட்டு வைத்தியத்தையே தொழிலாகச் செய்தார்.  சந்திரசேகரன் பிள்ளையின் மகன் விவேகானந்தன், ஒரு படி மேலே போய், ‘இங்கிலீஷ் மருந்துக் கடை’ வைத்தார். அப்போது எல்லாம், இங்கிலீஷ் மருந்துகள் விற்கும் ‘மெடிக்கல் ஷாப்’கள் அரிதிலும் அரிது. அதனால், விவேகானந்தன் வைத்து நடத்திய, ‘இங்கிலீஷ் மருந்துக் கடை’ திருந்துறைப்பூண்டியில் பிரபலமானது. அந்தப் பிரபலம்,  விவேகானந்தனின் வீட்டோடும் ஒட்டிக்கொண்டது.  ‘இங்கிலீஷ் மருந்துக் கடைக்காரர் வீடு’ என்று அவருடைய வீடும் அந்த ஊரில் பிரபலமானது.  மிராசுதாரர் விவேகானந்தன், கிருஷ்ணவேணி என்பவரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு, சுந்தரவதனம், வனிதாமணி, விநோதகன், ஜெயராமன், சசிகலா, திவாகரன் என்று ஆறு பிள்ளைகள் பிறந்தனர். 5-வது பிள்ளை சசிகலாதான், பின்னாளில் ஜெயலலிதாவின் உடன்பிறவாத் தோழியானவர்; தமிழக ஆட்சியதிகாரத்திலும், அ.தி.மு.க என்ற அரசியல் இயக்கத்திலும், நம்பர் 2-ஆக  வலம்வந்தவர்.   

திருத்துறைப்பூண்டியில் இருந்த விவேகானந்தன், பிள்ளைகளின் படிப்புக்காக மன்னார்குடிக்கு இடம்பெயர்ந்தார். காரணம், மன்னார்குடியில்தான் அப்போது, ஆங்கிலேயேர்களால் நிறுவப்பட்ட ‘பின்லே’ போர்டு ஹை ஸ்கூல் இருந்தது. சசிகலா அந்தப் பள்ளியில்தான் படித்தார். பள்ளி நாட்களில் ஓட்டப்பந்தயங்களில் ஆர்வமுடன் கலந்து கொண்டு இருக்கிறார். சில பரிசுகளையும் வாங்கி உள்ளார். மாணவர் மன்றத்தில் பங்களித்துள்ளார். ஆனாலும் பத்தாம் வகுப்போடு சசிகலாவின் படிப்பை வீட்டில் நிறுத்திவிட்டனர். 

‘விளார்’ ஏற்படுத்திய திருப்புமுனை

மூன்று பாசக்கார அண்ணன்களின் செல்லத் தங்கையாக, சாதரண கனவுகளுடன் இளம் பெண்ணாக திருத்துறைப்பூண்டி வடக்குச் செட்டித் தெருவில் வலம் வந்து கொண்டிருந்தார் சசிகலா. அவரது வாழ்வை அதிகாரமையங்களுக்கு அருகில் கொண்டுவரக் காரணமாக அமைந்தது ‘விளார்’ என்ற ஊர். தஞ்சையில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள விளார் என்ற ஊரில் இருந்த சிறு விவசாயி மருதப்பன். அவருடைய மகன் நடராஜன். 60-களின் காலகட்டத்தில், தமிழகம் முழுவதும் கொழுந்து விட்டெரிந்து, தீயாப் பரவிக் கொண்டிருந்த திராவிட இயக்கங்கள், நடராஜனிடம் தமிழ் ஆர்வத்தையும்,  அரசியல் ஈடுபாட்டையும் உருவாக்கி இருந்தது. தி.மு.க மாணவர் இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்டு நடராஜன் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவராக இருந்த நடராஜன், 1965-ம் ஆண்டு நடைபெற்ற, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். மொழிப்போராட்டத்தில் நடராஜனின் சமகாலத்தவர்கள்தான், தி.மு.க முதன்மைச் செயலர் துரைமுருகன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டவர்கள். அப்போது, இந்தப் போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்துச் சென்ற எல்.கணேசனின் ஆஸ்தான சீடராக நடராஜன் வலம்வந்தார்.  இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு, தி.மு.க ஆட்சியில் ஏ.பி.ஆர்.ஓ வேலைகளில் கருணாநிதி முன்னுரிமை கொடுத்தார். அந்தவகையில், ‘விளார்’ நடராஜனுக்கும், மக்கள் தொடர்புத் துறையில் உதவியாளர் வேலை கிடைத்தது. வேலை கிடைத்ததும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. விளார் விவசாயி மருதப்பனின் மகன் நடராஜன், திருத்துறைப்பூண்டி, இங்கிலீஷ் மருந்துக் கடைக்காரர் விவேகானந்தனின் மகள் சசிகலாவைத் திருமணம் செய்துகொண்டார். 1970-ம் ஆண்டு நடராஜன்-சசிகலா திருமணம் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட தி.மு.க.வின் அன்றைய தளகர்த்தராக விளங்கிய, மன்னை நாராயணசாமி தலைமையில், தி.மு.க தலைவர் கருணாநிதி நடராஜன்-சசிகலா திருமணத்தை நடத்திவைத்தார். வரலாற்று விநோதம் இது!

இந்தக் காலகட்டம்வரை சசிகலாவுக்கு, ஜெயலலிதா என்றால் அவர் எம்.ஜி.ஆர் என்ற மிகப்பெரிய ஹீரோவோடு சேர்ந்து நடிக்கும் கதாநாயகி. திரைப்படங்களிலும் போஸ்டர்களில் மட்டும்தான் ஜெயலலிதாவைப் பார்க்க முடியும் என்ற மனநிலைதான் இருந்திருக்க முடியும். ஆனால், காலம் அந்த மனநிலையை வேறுவகையில் மாற்ற, எம்.ஜி.ஆர் மூலம் ஒரு கணக்கைப் போட்டு வைத்திருந்தது.

அது என்ன.... 
http://www.vikatan.com/news/coverstory/74629-sasikala-married-natarajan-with-the-blessings-of-dmk-chief-karunanidhi.art

ஸ் பெ

unread,
Dec 17, 2016, 3:19:22 AM12/17/16
to panbudan

கேசட் கடை டூ போயஸ் கார்டன்.. சசிகலாவுக்கு ரூட் போட்டுக்கொடுத்த சந்திரலேகா! அத்தியாயம் 3

1980-கள் எம்.ஜி.ஆர் இரண்டாவது முறையாக முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றிருந்தார். அந்த நேரம், ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் ஒதுக்கி வைத்திருந்தார். கட்சிக்காரர்கள் யாரும் அவருடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்று கட்டளையிட்டு இருந்தார். அந்தக் கட்டளை கட்சிக்காரர்களுக்கானது மட்டுமே. தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னனாகவும், முதலமைச்சராகவும் இருந்த எம்.ஜி.ஆரின் அந்தக் கட்டளையை சினிமா உலகமும் பின்பற்றத் தொடங்கியது. அதனால், ஜெயலலிதாவுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தன. இதனால், சினிமா, எம்.ஜி.ஆர் என்ற இரண்டு விஷயங்களை மட்டுமே, தனக்கான ஆதார மையமாக வைத்திருந்த ஜெயலலிதாவின் உலகம் சுருங்கியது. ஆனால், அவர் முடங்கிவிடவில்லை. நாடகங்கள் போட்டார். நடித்துக் கொண்டிருந்தார். அதை யாரும் தடுக்கவில்லை. ஆனாலும், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் மிகமிக சிரமமான காலகட்டமாகவே அது இருந்தது.அது கட்சியின் சீனியர்கள் சிலருக்கு ஜெயலலிதா மீது ஒருவித இரக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. 

அந்த நேரம் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடத்த, முதலமைச்சர் எம்.ஜி.ஆர் திட்டமிட்டார். மாநாட்டின் சிறப்பு நிகழ்ச்சிகளாக நிறைய நாடகங்களும் இடம்பெற்றன. ‘காவிரி தந்த கலைச் செல்வி’ என்ற நாடகத்தை நடத்தும் வாய்ப்பை ஜெயலலிதாவுக்குக் கொடுக்கலாம் என எம்.ஜி.ஆரின் நம்பிக்கையைப் பெற்ற சீனியர்கள்  பரிந்துரைத்தனர். பெரும் தயக்கத்துக்குப் பிறகு, எம்.ஜி.ஆர் ஒத்துக் கொண்டார். எம்.ஜி.ஆரின் சம்மதத்தால், ஜெயலலிதாவும் உற்சாகமானார். மதுரையில் நடைபெற்ற நாடகத்தை ஜெயலலிதா சிறப்பாக நடத்தியதைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு, ஜெயலலிதா மீது இருந்த கோபம் தணிந்தது. 

அ.தி.மு.க-வில் ஜெயலலிதா!

 

சசிகலா

சினிமா வாழ்க்கையில் தன்னோடு இணைந்து பலகாலம், பயணித்த ஜெயலலிதாவுக்கு கட்சியிலும் ஏதாவது பொறுப்பு கொடுக்கலாம் என்று நினைக்க ஆரம்பித்தார். அப்போது, எம்.ஜி.ஆர்-ன் உடல்நிலையும் கொஞ்சம் சரியில்லாமல் இருந்தது. ஒத்துக் கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் எம்.ஜி.ஆரால் போக முடியாத சூழல் அடிக்கடி ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சிகளுக்கு வேறு சீனியர் தலைவர்களை அனுப்பினால், அதற்கான வரவேற்பு மிகமிக குறைவாகவே இருந்ததையும் எம்.ஜி.ஆர் உணர்ந்திருந்தார். இந்த வெற்றிடத்தை ஜெயலலிதாவை வைத்து நிரப்பலாம் என்று எம்.ஜி.ஆர் கணக்குப்போட்டார். கட்சியின் மற்ற சீனியர்களை தான் ஒத்துக் கொண்ட நிகழ்ச்சிகளுக்கு அனுப்பும்போது கூடும் கூட்டத்தைவிட ஜெயலலிதாவை அனுப்பினால் அதற்கு கூட்டம் அதிகம் கூடும் என்று அவர் கணித்தார். அது பொய்க்கவில்லை. இதையடுத்துத்தான், கடலூர் மஞ்சக்குப்பத்தில் 1982-ம் ஆண்டு, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளர் என்று எம்.ஜி.ஆர் அறிவித்தார். அதோடு சத்துணவுத் திட்ட உயர் மட்டக்குழு உறுப்பினர் பதவியையும் ஜெயலலிதாவுக்கு அளித்தார். ஏனென்றால், சத்துணவுத் திட்டத்தை, தனது செல்லப் பிள்ளையாகவே எம்.ஜி.ஆர். கருதினார். அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து, நாடாளுமன்ற மக்களவை எம்.பி. பதவியையும் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் வழங்கினார். எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையான, சத்துணவுத் திட்டத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியை ஜெயலலிதா முதன்முதலில் கடலூரில் தொடங்கினார். அப்போது, கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்தவர், பின்னாளில் ஆசிட் வீச்சுக்கு ஆளான சந்திரலேகா. 

ஜெயலலிதா-சந்திரலேகா-நடராஜன் 

கடலூரில் ஜெயலலிதா நடத்திய சத்துணவுத் திட்ட நிகழ்ச்சி வெகுவாக கவனம் ஈர்த்தது. அதற்கு காரணம், அப்போது, கலெக்டர் சந்திரலேகாவிடம் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜன். அவர், முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்ததை சிறப்பாக செய்தியாக்கினார். தமிழகம் முழுவதும் திறமையாகக் கொண்டு சேர்த்திருந்தார். ஜெயலலிதா-சந்திரலேகா-நடராஜன் காம்பினேஷன் செய்த வேலை, எம்.ஜி.ஆரை மகிழ்ச்சி அடைய வைத்தது. 

 

ஜெயலலிதாவை அரசியலுக்கு தயார்படுத்த நினைத்த எம்.ஜி.ஆர், சந்திரலேகாவை வைத்தே, அரசாங்க விதிகள் மற்றும் நாடாளுமன்ற செயல்பாடுகள் பற்றி சொல்லிக் கொடுக்க வைக்கலாம் என்று நினைத்து,  அவரை சென்னைக்கு மாற்றிக் கொண்டுவந்தார். அப்போது, சந்திரலேகாவிடம் பி.ஆர்.ஓ-வாக இருந்த நடராஜனும் சென்னைக்கு ・டிரான்ஸ்பர்・வாங்கிக் கொண்டார். நடராஜன், தன் மனைவி சசிகலாவுடன், ஆழ்வார்பேட்டையில் குடியேறினார். அவர் பி.ஆர்.ஓ என்பதால், புகைப்படக்காரர்கள், வீடியோ எடுப்பவர்களின் தொடர்பு அவருக்கு இருந்தது. புகைப்படம் எடுப்பது பழைய மெத்தட். ஆனால், வீடியோ எடுப்பது புதிய மெத்தட். இது போட்டியில்லாத தொழிலும் கூட. அதனால், ஒரு வீடியோ கடை ஒன்றை ஆரம்பித்தால், அரசு சம்பளத்தைவிட கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கணக்குப்போட்டார். வீடியோ என்றால் என்ன, வீடியோ கேசட் என்றால் எப்படி இருக்கும்?・என்று தமிழகத்துக்கே தெரியாத காலத்தில், நடராஜன், ஜெமினி பார்சன் காம்ப்ளக்ஸில் வீடியோ கடை ஆரம்பித்தார். 'வினோத் வீடியோ விஷன்' என்று அந்தக் கடைக்குப் பெயர். அது சசிகலாவின் அண்ணன் வினோதகனின் ஞாபகமாக இருக்கலாம் என்கின்றனர். சிலர், அந்தக் கடைக்குப் பெயரே ・சசி வீடியோ விஷன்・தான் என்கிறார்கள்.  அந்தக் கடையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சசிகலாவுடையது. அரசு நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கும் வாய்ப்புகளை நடராஜன், தனது தொடர்புகள் மூலம் பெற்று, அவற்றை தனக்குச் சொந்தமான வீடியோ கடை மூலமே செய்து கொடுத்தார். 

சசிகலா வருகை ஆரம்பம்!

ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா...

அதேநேரத்தில் சந்திரலோகவும் ஜெயலலிதாவுக்கு, நாடாளுமன்றம் தொடர்பான ஆவணங்கள் விதிமுறைகளைப் பற்றிக் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, ‘நீங்கள் ஓய்வு நேரத்தை எப்படிக் கழிப்பீர்கள்? நீங்கள் போனபிறகு, எனக்குப் பொழுதே போவதில்லை・என்று ஜெயலலிதா சந்திரலேகாவிடம் குறைபட்டுள்ளார். 党நான் வீடியோ கேசட்டுகளில் படம் பார்ப்பேன். என்னுடைய துறையில் பி.ஆர்.ஓ-வாக இருந்த ஒருவர் வீடியோ கடையும் வைத்துள்ளார். அவரிடம்தான் நான் கேசட் வாங்குவேன். உங்களுக்கும் தரச் சொல்கிறேன்・என்று சொன்ன சந்திரலேகா, உடனடியாக நடராஜன் மூலம் அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.  நடராஜன், சசிகலாவிடம் ஆங்கிலப் படங்களின் வீடியோ கேசட்களை கொடுத்து போயஸ் கார்டனுக்கு அனுப்பினார். சசிகலாவின் போயஸ்கார்டன் பயணம் 1982-ம் ஆண்டு இப்படித்தான் தொடங்கியது. 

போயஸ்கார்டனுக்குள் புதிதாக ஒரு பெண் நுழைந்துள்ளார் என்பதை அறிந்த எம்.ஜி.ஆர் என்ன செய்தார்? 
http://www.vikatan.com/news/coverstory/74814-from-video-shop-to-poes-garden---chandralekha-helps-sasikala---series-3.art

ஸ் பெ

unread,
Dec 17, 2016, 3:19:34 AM12/17/16
to panbudan

சசிகலாவுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ‘அசைன்மென்ட் ’ : சசிகலா: ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை! - அத்தியாயம் 4

சசிகலா

சசிகலா-நடராஜன் திருமணமான சமயத்தில்..

சென்னையில், வீடியோ கடை நடத்திக் கொண்டிருந்த சசிகலாவுக்கு, போயஸ் தோட்டத்துக்குள் கால்வைக்க, கலெக்டர் சந்திரலேகா ‘ரூட்’ போட்டுக் கொடுத்தார்; அவ்வளவுதான். ஆனால், அந்த ‘ரூட்’டில் சசிகலாவை, கச்சிதமாக, கவனமாக, பத்திரமாக 34 ஆண்டுகள் பயணம் செய்ய வைத்தவர் அவருடைய கணவர் நடராஜன்தான்.  

நடராஜனை வைத்து ஜெயலலிதா போட்ட கணக்கு

சசிகலா-ஜெயலலிதா நட்பை வளர்த்தெடுத்ததிலும் நடராஜனின் பங்கு அளவிட முடியாதது. அதற்கு குறுக்கே, எம்.ஜி.ஆர் போட்ட தடைகளையே சமார்த்தியமாக தகர்த்து எறிந்தார் நடராஜன். எப்படி என்றால், கேசட் பரிமாற்றத்துக்காக ஏற்பட்ட, சசிகலா ஜெயலலிதா அறிமுகம் கொஞ்சம் நட்பாக துளிர்விடத் தொடங்கி இருந்தது. சசிகலாவின் குடும்ப விபரங்களை ஜெயலலிதா கேட்டுத் தெரிந்துகொண்டார். “ராமநாதபுரத்தில் இருந்து ஒருங்கிணைந்த தஞ்சைக்கு தன் முன்னோர்கள் குடிபெயர்ந்த கதை; திருத்துறைப்பூண்டியில் ‘இங்கிலீஷ்’ மருந்துக் கடைக்காரர் குடும்பம் என்று தன் குடும்பத்துக்கு பெயர் வந்த கதை; தனது அண்ணன் விநோதகன் டாக்டரான கதை” என்று சசிகலா சொன்னதில், ஜெயலலிதாவுக்கு பெரிதாக ஆர்வம் ஏற்படவில்லை. ஆனால், சசிகலா அவருடைய கணவரைப் பற்றிச் சொன்னபோது, ஜெயலலிதாவுக்கு கண்கள் ஆச்சரியத்தில் மலர்ந்தன. “தன் கணவர் நடராஜன், மொழிப்போராட்ட வீரர்; தி.மு.க மாணவர் இயக்கங்களில் பங்கெடுத்தவர்; அண்ணா, கருணாநிதியோடு நல்ல அறிமுகம் உள்ளவர்; பி.ஆர்.ஓ-வாகப் பணியாற்றுகிறார்; கலெக்டர் சந்திரலேகாவை தமிழகம் முழுவதும் பிரபலமாக கொண்டு சேர்த்ததில் தன் கணவரின் பங்கு அதிகம்'' என்றெல்லாம், சசிகலா சொல்லச் சொல்ல, ஜெயலலிதா மனதில் மின்னல் வெளிச்சம் பரவியது. 

ஜெயலலிதாவுக்கு நடராஜனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஒரு சுபயோக சுபதினத்தில், சசிகலா புண்ணியத்தில், நடராஜனும் போயஸ் கார்டன் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார். ‘நடராஜன் தான் நினைத்ததுபோல், மிக சாதூர்யமான ஆள்’ என்பதை ஜெயலலிதா உணர்ந்து கொண்டார். ஆனால், அப்போது ஜெயலலிதா தன்னுடைய எதிர்காலத் திட்டங்கள் எதையும் நடராஜனிடம் பகிர்ந்துகொள்ளவில்லை. அது ஒரு சாதாரண அறிமுகமாகத்தான் இருந்தது. ஆனால், எப்படியும் இந்த நபர், தனது அரசியல் வாழ்வில், மிகப்பெரிய  அஸ்திரமாக இருக்கப்போகிறார் என்பது ஜெயலலிதாவுக்கு மனதாரப் புரிந்தே இருந்தது. 

இந்த காட்சிகள், போயஸ் கார்டனில் நடந்து கொண்டிருந்தபோதே, எம்.ஜி.ஆருக்கு விஷயம் போனது. அதற்காகவே, ஜெயலலிதாவின் வீட்டைச் சுற்றி எப்போதும் ஒற்றர்களை நியமித்து இருந்தார் எம்.ஜி.ஆர். போயஸ் கார்டனுக்குள் வந்துபோகும், புதிய பெண் யார் என்று விசாரிக்கச் சொன்னார். அவர்களை நேரில் வந்து சந்திக்கச் சொன்னார். 

சசிகலாவுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ‘அசைன்மென்ட்’

எம்.ஜி.ஆரின் உத்தரவு, சசிகலாவுக்கும் நடராஜனுக்கும் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவைச் சந்திக்க, போயஸ் கார்டனுக்குப் போனதுபோல், நடராஜனும், சசிகலாவும் எம்.ஜி.ஆரைச் சந்திக்க ராமாவரம் தோட்டத்துக்கும் போனார்கள். நடராஜனை நேரில் பார்த்தபோது, எம்.ஜி.ஆருக்கு நன்றாக அவரைத் தெரிந்திருந்தது. தி.மு.க சகவாச நினைவுகள், நடராஜனை எம்.ஜி.ஆரின் நினைவடுக்குகளில் மேலே கொண்டு வந்தன. எம்.ஜி.ஆருக்கு மகிழ்ச்சி. காரணம், “நடராஜனுக்கு ஒரளவுக்கு நிலவரம் தெரியும். எனவே, தான் நினைத்த வேலை எளிமையானது” என்று எம்.ஜி.ஆர் நினைத்தார். “போயஸ் கார்டன் வீட்டில் என்ன செய்கிறீர்கள்” என்று ஒப்புக்கு கேட்டு வைத்தார். “ கேசட் கொடுப்பதற்காக என் மனைவி அங்கு போகிறார்” என்று நடராஜனும்  ஒப்புக்கு சொல்லி வைத்தார். சிரித்த முகத்தோடு கேட்டுக் கொண்ட எம்.ஜி.ஆர், சசிகலாவுக்கு கூடுதலாக ஒரு வேலையைக் கொடுத்தார். “போயஸ் கார்டனுக்கு வருகிறவர்கள் யார், ஜெயலலிதா யாரோடு பேசுகிறார், மொத்தமாக அங்கு என்ன நடக்கிறது?” என்பது பற்றி தெளிவாகத் தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார். “இந்தத் தகவல்களை கொடுக்க, எந்த நேரம் வேண்டுமானாலும் சசிகலா, ராமாவரம் தோட்டத்துக்கு வரலாம்... ஜானகி அம்மாள் உள்பட யாரும் தடுக்கமாட்டார்கள்” என்ற உத்தரவாதத்தையும்  எம்.ஜி.ஆர் சசிகலா-நடராஜன் தம்பதிக்கு அளித்திருந்தார். இதை ராமாவரம் தோட்டத்து ஊழியர்களும், பத்திரிகையாளர் வலம்புரிஜானும் பல்வேறு தருணங்களில் உறுதி செய்துள்ளனர்.

ஜெயலலிதாவை வைத்து நடராஜன் போட்ட கணக்கு

எம்.ஜி.ஆர் கொடுத்த அசைன்ட்மெண்டுக்கு சரியென்று தலையாட்டிவிட்டு வந்த நடராஜன்-சசிகலா தம்பதி, அந்த திட்டத்தை மாற்றிக் கொண்டதற்கு காரணம் இருந்தது. அப்போது, சசிகலாவின் வீடியோ கடை மூலம், ஜெயலலிதா பங்கேற்ற ஈரோடு, சென்னை நிகழ்ச்சிகள் படம் பிடிக்கப்பட்டன. ஜெயலலிதா அந்த வாய்ப்பை சசிகலா-நடராஜனுக்கு வாங்கிக் கொடுத்திருந்தார். அப்போது, ஜெயலலிதாவுக்குக் கூடிய கூட்டம் நடராஜனை பிரமிப்பில் ஆழ்த்தியது. ஏனென்றால், மாணவர் போராட்டங்களுக்கு கூட்டம் திரட்டிய அனுபவம் நடராஜனுக்கு இருந்தது. பத்துப்பேரை ஒரு நிகழ்ச்சிக்கு திரட்டுவதற்குள் நாக்குத் தள்ளிவிடும். ஆனால், ஜெயலலிதாவுக்கு தன்னிச்சையாக சாரை சாரையாக கூட்டம் திரண்டது. சாதாரண விஷயமில்லை இது. இதைப் புரிந்து கொண்ட நடராஜன், இப்போது ஜெயலலிதாவை வைத்து ஒரு கணக்குப்போட்டார். “இப்போதைக்கு எம்.ஜி.ஆர்தான் கட்சி; எம்.ஜி.ஆர்தான் ஆட்சி என்ற நிலை இருக்கலாம்; எம்.ஜி.ஆரைச் சுற்றி இருக்கும் அதிகாரமையங்களில் ஜெயலலிதா கடைசி இடத்தில் இருக்கலாம்; ஆனால், எம்.ஜி.ஆருக்குப் பிறகு, ஜெயலலிதாவால் மட்டும்தான் கட்சியாக முடியும்; அதன்மூலம் ஜெயலலிதாவால் மட்டும்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும். அந்த ஆட்சியில் அதிகாரம் செலுத்த வேண்டுமானால், ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக வேண்டும்; ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக வேண்டுமானால், அது சசிகலாவின் வழியாகத்தான் தனக்குச் சாத்தியம்” என்று தீர்வுகளை அடுக்கியது நடராஜன் போட்ட கணக்கு.  அதனால், ஜெயலலிதாவை வேவு பார்க்கச் சொன்ன, எம்.ஜி.ஆரை எல்லாவழிகளிலும் சமாளிக்க முடிவு செய்தார் நடராஜன். சசிகலாவுக்கும் அதில் சில திட்டங்களைச் சொல்லிக் கொடுத்தார். “எம்.ஜி.ஆருக்கு விசுவாசமாக இருப்பதைவிட, ஜெயலலிதாவுக்கே விசுவாசமாக இருக்க வேண்டும்” என்று சசிகலாவுக்கு அறிவுறுத்தினார். ஆனால் நடராஜன் சொல்லாமலேயே, சசிகலாவுக்கு இயல்பாக அதுதான் கைவந்தது. “ஜெயலலிதாவும் பெண்; சசிகலாவும் பெண்” என்ற விதி வகுத்த நியதி அது. அதுபோல, தன் மனைவியைத் தவிர, வேறு யாரும் ஜெயலலிதாவை புதிதாக நெருங்காமல் பார்த்துக் கொண்டார் நடராஜன். சசிகலாவுக்கு முன்பே, ஜெயலலிதாவை நெருங்கி நட்பாக இருந்தவர்களை, எதிர்பாராத நேரங்களில் எல்லாம், அடித்துக் காலி செய்தார் நடராஜன். சசிகலா-ஜெயலலிதாவுக்கு இடையில் இருந்த, சசிகலா-ஜெயலலிதாவுக்கு இடையில் முளைத்த, அத்தனை தலைகளையும் நடராஜன் வெட்டித் தள்ளினார். அன்றும் சரி... இன்றும் சரி... இந்திரஜித்தைப்போல, மறைந்து இருந்தே அம்புகளைத் தொடுத்துப் பழக்கப்பட்டவர் நடராஜன். அவர் எப்போது தாக்குவார்? எப்படித் தாக்குவார்? எங்கிருந்து தாக்குவார் என்று அவர் எதிரிகள் திணறிக் கொண்டிருக்கும்போது, அவர்களை வீழ்த்திவிட்டு, அடுத்த களத்துக்குத் தயாராகிவிடுவார் நடராஜன். ஜெயலலிதாவுக்கு சசிகலாவைத் தவிர வேறு யாருமே இல்லாத நிலையை கச்சிதமாக உ ருவாக்கிய பிறகே ஒய்ந்தார் நடராஜன். 

ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா இருந்ததுபோல், சசிகலாவுக்குப் பின்னால் நடராஜன் இருந்தார்.

(இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்)

(கதை தொடரும்)
http://www.vikatan.com/news/coverstory/74895-assignment-given-by-mgr-to-sasikala-episode-4.art

ஸ் பெ

unread,
Dec 17, 2016, 3:20:04 AM12/17/16
to panbudan

போயஸில் சசிகலாவால் வீழ்த்தப்பட்டவர்கள்! : கேசட் கடை டூ போயஸ் கார்டன்: அத்தியாயம் 5

 

 

1982-முதல் ஜெயலலிதாவுக்கு நட்பாக இருந்த சசிகலா, ஆரம்பத்தில் போயஸ் கார்டன் வீட்டில் நிரந்தரமாகத் தங்கவில்லை. அலுவலகத்துக்குப் போவதுபோல்தான், போயஸ் கார்டனுக்குப் போய் வந்தார்; பிறகு,  போயஸ் கார்டன் வீட்டில் இரவில் தங்க ஆரம்பித்தார்; பிறகு, இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து அங்கேயே இருக்கப் பழகினார். யாரையும் எளிதில் நம்பாத ஜெயலலிதா எதற்காக சசிகலாவை இவ்வளவு நம்பினார், அவருக்கு இவ்வளவு இடம் கொடுத்தார்? என்பது பலருக்கும் புரியாத புதிர். அந்தப் புதிருக்கான விடை, பெங்களூரு ‘பிரைவேட்’ மருத்துவமனைக்குள் ஒளிந்து இருந்தது. அது தனி அத்தியாயம்.  

வலம்புரிஜான், மாதவன் நாயர், ஜெயமணி!

சசிகலா ஜெயலலிதாவின் வீட்டில், அதிகமாகத் தங்க ஆரம்பித்த நேரத்தில், அவருக்கு அதில் கொஞ்சம் தொந்தரவுகள் இருந்தன. சசிகலாவுக்கு முன்பே, ஜெயலலிதா வீட்டுக்குள் வந்தவர்கள், போயஸ் கார்டனில் சசிகலாவைவிட சுதந்திரமாக வலம் வந்தனர்; அவர்கள், ஜெயலிதாவின் நம்பிக்கைக்கும், அன்புக்கும் பாத்திரமானவர்களாக இருந்தனர்; ஊழியர்கள் என்பதைத்தாண்டி, ஜெயலலிதாவோடு ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு ஆத்மார்த்தமான பிணைப்பு இருந்தது; இது சசிகலாவுக்கு சங்கடமாக இருந்தது. இவர்களைத் தொந்தரவுகளாக பார்த்தார் சசிகலா. சசிகலாவால், தொந்தரவாகப் பார்க்கப்பட்டவர்களில் முக்கியமானவர், மாதவன் நாயர். சந்தியா காலத்தில் இருந்து, ஜெயலலிதா குடும்பத்தோடு இணைப்பில் இருந்தவர். 35 வருட குடும்பப் பழக்கம்.

சசிகலா

ஜெயலலிதாவை தூக்கி வளர்த்ததை பெருமையாகக் கருதினால், மாதவன் நாயர் அந்தப் பெருமைக்கு உரியவர்.  அதனால், போயஸ் வீட்டு, வீட்டு வரவு செலவுக் கணக்குகளைப் பார்க்கும் பொறுப்பை, மாதவன் நாயரிடம் ஜெயலலிதா ஒப்படைத்திருந்தார். அதுபோல், ஜெயமணி என்று ஒரு டிரைவர் நீண்ட நாட்களாக ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தார். சேடபட்டி முத்தையா சிபாரிசு செய்து அனுப்பிய ஆள் அவர். அதுபோல, எம்.ஜி.ஆர் நடத்திய ‘தாய்’ பத்திரிகையின் ஆசிரியர் வலம்புரிஜானும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்துபோகும் அதிகாரம் பெற்றவராக இருந்தார். பொது விஷயங்கள், உலக வரலாறுகள், ஜெயலலிதாவின் மேடைப் பேச்சுகளுக்குத் தேவையான குறிப்புகள் எடுத்துத் தருவது, பல நேரங்களில் ஜெயலலிதாவுக்கு மேடைப் பேச்சுக்கான உரைகளை எழுதித் தரும் வேலைகளை, வலம்புரிஜானிடம் எம்.ஜி.ஆர் ஒப்படைத்திருந்தார்.   ஜெயலலிதாவுக்கும் வலம்புரிஜான் மீது ஒரு பிரமிப்பும் மரியாதையும் இருந்தது. வலம்புரிஜான், அந்தக் காலத்திலேயே ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், தமிழக சட்டசபை மேல்சபை உறுப்பினராகவும் (எம்.எல்.சி) இருந்தவர். ஜெயலலிதாவோடு சேர்ந்து டெல்லிக்கு ராஜ்யசபா உறுப்பினராக சென்று வந்தவர். இவர்களைப் போல, இன்னும் பல ஊழியர்கள் போயஸ் கார்டனில் நிரந்தரமாகவும், அவ்வப்போது வந்து ஊழியம் செய்துவிட்டுப் போகிறவர்களாகவும் இருந்தனர். இவர்களைக் களையெடுக்க நினைத்தார் சசிகலா. நடராஜன் அதற்கான களங்களைத் தயார் செய்தார்.  

 

36 ஆயிரம் ரூபாய் ஒரு காரணமா?

மாதவன் நாயருக்கு முதலில் குறிவைக்கப்பட்டது. அவர்தான், போயஸ் கார்டனுக்குள், சசிகலாவின் சுதந்திரத்துக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்தவர். காசு விஷயத்திலும், மாதவன் நாயர் கறார் பேர்வழி. எனவே, அவரைக் களையெடுப்பதுதான் முதல்வேலை என்று நடராஜனிடம் சொன்னார் சசிகலா. மாதவன் நாயரைத் தோண்ட ஆரம்பித்ததில், அவருடைய வங்கிக் கணக்கு மட்டும் சிக்கியது. அதில், சொந்தக் கணக்கில் மாதவன் நாயர், 36 ஆயிரம் ரூபாய் சேர்த்து வைத்திருந்தார். அதை ஒரு விஷயமாக்கி, ஜெயலலிதாவிடம் கொண்டுபோனார் சசிகலா. “மாதவன் நாயர் தப்புக் கணக்கு எழுதி, நீங்கள் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தைச் சுரண்டுகிறார். அவருடைய வங்கிக் கணக்கில் 36 ஆயிரம் ரூபாய் சேர்த்து வைத்துள்ளார்.

அவருக்கு எங்கே இருந்து வந்தது இவ்வளவு பணம்” என்று  ஜெயலலிதாவிடம் கேள்வி எழுப்பினார் சசிகலா. அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் முயற்சியில் ஜெயலலிதா இறங்கவில்லை; மாதவன் நாயரிடமும் விளக்கம் கேட்கவில்லை; 35 வருடங்கள் வேலை பார்ப்பவர் கணக்கில் 36 ஆயிரம் இருக்காதா? என்று யோசிக்கவும் இல்லை. மாறாக, “மாதவன் நாயரை இனிமேல் வரவேண்டாம்” என்று சொல்லிவிட்டார். ஜெயலலிதா. அதுபோல, டிரைவர் ஜெயமணி, “வீட்டுக்குள் நடப்பதை வெளியில் பேசிக் கொண்டு திரிகிறார்; ஜானகி அம்மாளுக்காக, உங்களை வேவு பார்க்கும் ஆள் தான், இந்த ஜெயமணி. அதற்காகத்தான், சேடபட்டி முத்தையா ஜெயமணியை இங்கு வேலைக்கு சேர்த்துள்ளார்” என்று ஜெயலலிதாவிடம் சொன்னார் சசிகலா. அதோடு, ஜெயமணியின் வேலையும் காலி. அதற்குப் பிறகு, அந்த இடங்களுக்கு புதிய ஆட்கள் கொண்டுவரப்பட்டனர். அவர்கள், நடராஜன் அனுப்பிய ஆட்கள். புதிய ஆட்களுக்கு ஜெயலலிதா வீட்டில் வேலையும் சம்பளமும் ஏற்பாடு செய்து கொடுத்தார் நடராஜன். அவர்கள், அதற்குப் பதிலாக சசிகலாவிடம் விசுவாசத்தையும் மரியாதையையும் காட்டினார்கள். 

வலம்புரிஜானும் ஒரு அட்டைப்படமும்  
 
வலம்புரிஜானைப் பொறுத்தவரை, அவரும் சாதரண ஆள் கிடையாது. அரசியல் அறிந்தவர்; அதற்குள் இருக்கும் அபாயங்களை உணர்ந்தவர். அவரை ஜெயலலிதாவின் வட்டத்தில் இருந்து பிரிக்கவேண்டுமானால், வேறு வகையில் வேலை பார்க்க வேண்டும் என்று யோசித்தார் நடராஜன்.  அதற்கு கே.ஏ.கே-வின் தயவை நாடினார் நடராஜன். அந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு, சினிமாவில் பலம், ஆர்.எம்.வீரப்பன் என்றால், அரசியலில் பலம், கே.ஏ.கே என்பார்கள். அவருக்கே தெரியாமல், அவர் மூலம் காய்களை நகர்த்தினார் நடராஜன். அந்தக் காலகட்டத்தில் நடராஜன், கே.ஏ.கே-வின் ஆளாக வலம் வந்தவர் என்பது இங்கே குறிப்பிட வேண்டியது.  வலம்புரிஜானுக்கு எதிரான செய்திகளை கே.ஏ.கே நடராஜன் மெல்ல மெல்ல கடத்திக்கொண்டே இருந்தார். அந்தச் செய்திகள், கே.ஏ.கே மூலம் ஜெயலலிதா, ஜானகி, எம்.ஜி.ஆர் என்று எல்லாத் திசைகளுக்கும் போனது. அதைத்தான் எதிர்பார்த்தார் நடராஜன். 

அந்த நேரத்தில், எம்.ஜி.ஆருக்கும் ஜானகி அம்மாளுக்கும் ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டு பல நாட்கள் இருவரும் பேசாமல் இருந்தனர். அவர்களைச் சமாதானப்படுத்த விரும்பிய சிலர், வலம்புரிஜான் பொறுப்பில் இருந்த, ‘தாய்’ பத்திரிகையில் ஒரு அட்டைப்படத்தை பிரசுரிக்கச் சொன்னார்கள். ‘எம்.ஜி.ஆர்-ஜானகி’ இளமைக்காலத்தில் சேர்ந்து எடுத்த படம் அது. நல்ல விஷயம்தானே என்று நினைத்த வலம்புரிஜான், அந்தப் படத்தை அட்டையில் வைத்தார். இதே நேரத்தில், ஜெயலலிதாவுக்கும் ஜானகி அம்மாளுக்கும் கடும் பனிப்போர் நடந்து கொண்டிருந்த விபரத்தை வலம்புரிஜான் கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால், அதைக் கச்சிதமாக கவனத்தில் வைத்திருந்த நடராஜன், ‘தாய்’ அட்டைப்படத்தை ஜெயலலிதாவின் கவனத்துக்கு சசிகலா மூலம் கொண்டுபோனார். அதோடு, “வலம்புரிஜான் ஜானகி அம்மாளின் ஆள். அதனால்தான், எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மாளும் பேசிக் கொள்ளாத இந்த நேரத்தில் இப்படி ஒரு அட்டைப் படத்தைப்போட்டு, அவர்களை சமாதானம் செய்கிறார். அதன்மூலம் உங்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடைவெளியை அதிகரிக்கப் பார்க்கிறார்” என்று ஒரு விளக்கத்தையும் கொடுத்தார். ஆத்திரமடைந்த ஜெயலலிதா, வலம்புரிஜானைத் தொடர்பு கொண்டு திட்டித் தீர்த்தார். அதில் குழம்பிப்போன வலம்புரிஜான், நமக்கு எதற்கு வம்பு என்று நினைத்து அடுத்த வாரம் ஜெயலலிதாவின் போட்டோ ஒன்றை அட்டையில் போட்டார். ஆனால், விடவில்லை நடராஜன். அதையும் பிரச்னை ஆக்கினார்.

இந்தமுறை ஜெயலலிதா அட்டை படத்தை, ஜானகி அம்மாள் கவனத்துக்கு கொண்டுபோனார். அதோடு, “வலம்புரிஜான் எப்போதும் ஜெயலலிதாவின் ஆள்; ஜெயலலிதாவை அரசியலில் வளர்து எடுக்க துடிக்கிறார்; ஜெயலலிதாவுக்கு மேடைப் பேச்சுக்களை இவர்தான் எழுதித் தருகிறார்; ஜெயலலிதாவை கட்சியில் செல்வாக்கு மிக்கவராக மாற்றவே, ‘தாய்’ பத்திரிகையில் அவர் படத்தைப் போட்டுள்ளார்” என்று அங்கும் ஒரு விளக்கத்தை கொடுத்தார். அதோடு நிறுத்தவில்லை, ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்டு, “உங்கள் படத்தை மிக மோசமான தெளிவில்லாத ‘லே-அவுட்’ செய்து பத்திரிகையில் வலம்புரிஜான் பிரசுரித்துள்ளார். இதன்மூலம், உங்களை அவமானப்படுத்த நினைக்கிறார்” என்று ஜெயலலிதாவுக்கும் ஒரு தகவலைச் சொல்லி வைத்தார். இப்படியாக, வலம்புரிஜானுக்கு எதிராக தொடர்ந்து நடராஜன் காய்களை நகர்த்திக் கொண்டே இருந்தார். நடராஜன் பரப்பிய இந்தச் செய்திகள் மின்னல் வேகத்தில் சென்று  சேர்ந்தன.

இந்த விஷயத்தில், பத்திரிகைக்கு செய்தி ஆசிரியராக இருந்த வலம்புரிஜான், ஒரு பி.ஆர்.ஓ-விடம் தோற்றுத்தான் போனார். நடராஜன் பரப்பிய செய்திகளுக்கு, விளக்கம் கொடுக்கவே, வலம்புரிஜானுக்கு நேரம் சரியாக இருந்தது. ஜெயலலிதாவுக்கும் அவர் மேல் இருந்த நம்பிக்கை போனது. ஒரு கட்டத்தில், ஜெயலலிதாவே, வலம்புரிஜானுக்கு எதிராக எம்.ஜி.ஆரிடம் பேசவும், அவரை மட்டம் தட்டி வைக்க எம்.ஜி.ஆரோடு சண்டை போடவும் செய்தார். நடராஜனின் உள்ளடி வேலைகள் அந்தளவுக்கு வேலை செய்தன. ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருப்பவர்களை கணக்கெடுப்பது, அவர்களுடை பலவீனங்களை புரிந்து கொள்வது, தவறுகளை தெரிந்து கொள்வது, அதை ஜெயலலிதாவிடம் கச்சிதமாகக் கொண்டுசேர்ப்பது, அவர்களால், ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படப்போகிறது என்று பீதியைக் கிளப்புவது என்று நடராஜன் செயல்பட்டார்.  நடராஜனின் இந்த செய்வினைகளை, தாக்குப்பிடிக்க முடியாமல், ஜெயலலதாவுக்கு நெருக்கமானவர்கள் முடங்கிப்போனார்கள். போயஸ் கார்டன் வீட்டுக்குள் இருந்தவர்களுக்கு மட்டுமல்ல, கட்சியில் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்தவர்களுக்கும் இதே வேலையைத்தான் நடராஜன் பார்த்தார். 

நடராஜன் வெட்டிய பள்ளத்தில் திருநாவுக்கரசர், சேலம் கண்ணன், ஆர்.எம்.வீரப்பன் என்று வரிசையாக பலர் வீழ்ந்தனர். 

(கதை தொடரும்)

ஸ் பெ

unread,
Dec 18, 2016, 2:05:56 AM12/18/16
to panbudan

ஜெயலலிதாவை சசிகலா செல்லமாக எப்படி அழைப்பார் என தெரியுமா?

ஜெயலலிதாவை சசிகலா செல்லமாக எப்படி அழைப்பார் என தெரியுமா?

Last Modified: சனி, 17 டிசம்பர் 2016 (16:58 IST)

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். வீரப் பெண்மணியாக திகழ்ந்த ஜெயலலிதாவை மரணம் கூட 75 நாட்கள் போராடி தான் வென்றது. ஜெயலலிதாவுடன் பல ஆண்டு காலம் வாழ்ந்தவர் அவரது நெருங்கிய தோழி சசிகலா.


 
 
சில நேரங்களில் சசிகலாவை போயஸ் கார்டனை விட்டு ஜெயலலிதா வெளியே அனுப்பினாலும், அவரால் சசிகலாவை பிரிந்து இருக்க முடியாமல் மீண்டும் சேர்த்துக்கொண்டார். அப்படி ஒரு பாசப்பிணைப்பு என்கிறார்கள்.
 
இந்நிலையில் ஜெயலலிதாவை சசிகலா ‘குட்டிப்பையா’ என செல்லமாக அழைப்பாராம் என்ற தகவல் வந்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாளும் அவருடன் இருந்தது சசிகலா தான்.
 
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு வருவதற்கு ஒரு நாள் முன்பு அவரது அறைக்குள் சென்ற சசிகலா ஜெயலலிதாவை பார்த்து, குட்டிப்பையா எல்லாம் சரியாயிடும்டா என சொல்லி கொஞ்சிக் கொண்டு இருந்தாராம். அந்த நேரத்தில் மருத்துவர்கள் அங்கு வர சசிகலா அமைதியாகிவிட்டார். பொதுவாக சசிகலா ஜெயலலிதாவை குட்டிப்பையா என்றுதான் அழைப்பார் என மருத்துவர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
http://tamil.webdunia.com/article/regional-tamil-news/sasikala-called-jayalalithaa-as-kutti-paiya-116121700019_1.html

Ahamed Zubair A

unread,
Dec 18, 2016, 2:17:41 AM12/18/16
to பண்புடன்
வேணுஜி.... 

இப்படி சட்டுனு பாட்டோட சந்தத்துல செட்டாகிற வித்தையை எங்களுக்கும் சொல்லிக்கொடுங்களேன் ;))

ஸ் பெ

unread,
Dec 18, 2016, 2:22:52 AM12/18/16
to panbudan

கார்டனுக்கு சசிகலா... கட்சிக்கு நடராஜன்... - சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை - அத்தியாயம் 6

1973 முதல் 1980-வரை, ‘எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா’ சந்திப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஜெயலலிதாவை, தன் நாட்களில் மட்டுமல்ல, நினைவுகளில் இருந்தே, அகற்றி வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். உண்மையில், அபபோது, அவர் மகிழ்ச்சியாக இருந்தார். தனிக்காட்டு ராஜாவைப்போல், கட்சியையும் ஆட்சியையும் நடத்திச் சென்றார். 1982-ல் ஜெயலலிதா கட்சிக்குள் வந்ததும், எம்.ஜி.ஆரின் நிம்மதி தொலையத் தொடங்கியது; அவருக்குத் தலைவலி ஆரம்பித்தது; அ.தி.மு.க-வில் ஏட்டிக்குப் போட்டிகள் தலைதூக்கின. எம்.ஜி.ஆரின் இரண்டு கரங்களாகத் திகழ்ந்த சீனியர்கள் ஒன்றைச் சொல்வார்கள்; அந்த வழியில் எம்.ஜி.ஆரைக் கொண்டுபோக நினைப்பார்கள். அதில், ஏதாவது ஒரு இடத்தில் வந்து, ஜெயலலிதா ‘செக்’ வைப்பார்; கட்சிக்குள் சலசலப்பு ஏற்படும்; பத்திரிகைகள் பரபரப்பாகும்; இந்தச் சலசலப்புக்கும் பரபரப்புக்கும் காரணம் யார்? என்று தொண்டர்கள் ஆர்வமாகத் தேடுவார்கள். அனைத்துக்கும் காரணகர்த்தா, ‘ நான்தான்’ என்று ஜெயலலிதா அங்கே காட்சியளிப்பார். உண்மையில், இப்படி எல்லாம்  செய்வதற்கு அன்றைய ஜெயலலிதாவுக்கு விபரம் போதாது. நடைமுறைகள் தெரியாது. ஆனால், ஜெயலலிதாவை அப்படி வழிநடத்தியவர் நடராஜன். 

சசிகலா

 

ஜெயலலிதாவின் முதலமைச்சர் கனவு!

சாதாரண கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு, அப்போதே முதலமைச்சர் கனவு வந்திருந்தது. கட்சியில்  ‘நம்பர் ஒன்’ எம்.ஜி.ஆர் மட்டும்தான். அவரைத்தவிர மற்றவர்கள் பூஜ்யம் என்றே ஜெயலலிதா மதிப்பிட்டு இருந்தார். “இத்தனை பூஜ்ஜியங்களை வைத்துக்கொண்டு, எம்.ஜி.ஆரால் ஆட்சியைப் பிடித்து, பூஜ்ஜியங்களுக்கும் ராஜ்ஜியத்தில் பொறுப்பு கொடுத்து,  வெற்றிகரமாக அதைக் கொண்டு செலுத்த முடிகிறது என்றால், அது தன்னால் முடியாதா?” என்று கருதினார் ஜெயலலிதா. அவரின் கண்களுக்குள், குடியேறி இருந்த இந்தச் சந்தேகக்  கனவைக் கலைத்துவிடாமல், கண்களை எரிக்கும் லட்சிய வெறியாக அதை வளர்தெடுத்தார் நடராஜன். அது ஜெயலலிதாவுக்கான லட்சியம் அல்ல; ஜெயலலிதா மூலம் தன் மனைவி சசிகலாவுக்கான லட்சியம்; தன் மனைவி சசிகலா மூலம், அது தனக்கான லாபம்” என்பது நடராஜனின் எண்ணமாக இருந்திருக்கலாம். 

கார்டனுக்குள் சசிகலா!

இந்த லட்சிய இலாபங்களை அடைய, போயஸ் கார்டன் வீட்டுக்குள் சசிகலா சில வேலைகளைச் செய்தார்; அ.தி.மு.க- என்ற கட்சிக்குள்  சில வேலைகளைச் செய்தார். போயஸ் கார்டன் ஊழியர்களுக்கு வேட்டு வைத்து சிதறடித்தைப்போல, அவ்வப்போது, போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்துபோகிறவர்களுக்கும் வெடி வைத்தார் சசிகலா. அதில் சிக்கிச் சிதறியவர்களில் முக்கியமானவர், ஜெயலலிதாவின் நீண்ட நாள் தோழி லீலா. தோட்டம் வளர்ப்பதில் லீலா கெட்டிக்காரர். ஜெயலலிதா, மனம்விட்டுப்பேசும் ஒரு சில தோழிகளில் லீலாவும் ஒருவர். ஒரு நாள் லீலாவைத் தொடர்பு கொண்ட ஜெயலலிதா, சில புத்தகங்களை கொண்டுவரச் சொன்னார். ஜெயலலிதா சொன்னநாளில், சொன்ன நேரத்துக்கு லீலாவும் வந்தார். ஆனால், அவருக்கு வாசலிலேயே முட்டுக்கட்டை விழுந்தது. “இன்றைக்கு அம்மா யாரையும் வரச்சொல்லவில்லையே” என்றார் போயஸ் கார்டன் வாசல்  செக்யூரிட்டி. இது சசிகலாவின் வேலை. திகைத்துப்போன லீலா, “இல்லையே... இன்றைக்குத்தானே என்னை வரச் சொன்னார்” என்றார். “எங்களுக்கு அப்படி ஒரு தகலும் இல்லை. வேண்டுமென்றால், நீங்கள் வேண்டுமானால், உள்ளே வெயிட் பண்ணுங்கள்” என்று வேண்டாவெறுப்பாக உள்ளே அனுப்பினார் செக்யூரிட்டி. லீலாவுக்கு அப்போதே மனம் விட்டுப்போனது. “சரி வந்ததுவந்துவிட்டோம்.... உள்ளே ஒரு எட்டுப்போய் காத்திருக்கலாம்” என்று வீட்டுக்குள் வந்து அமர்ந்தார் லீலா. 

ஜெயலலிதா அப்போது மாடியில் இருந்தார். அவருக்கும் லீலா வந்த தகவல் சொல்லப்படவில்லை. தகவல் சொல்ல வேண்டிய சசிகலா, சொல்லவில்லை. ஆனால், லீலாவிடம் வந்து, “ஜெயலலிதா உங்களை இன்னொரு நாள் வரச் சொல்லிவிட்டார். நீங்கள் இப்போது கிளம்பலாம்” என்றார். லீலாவுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. “நம்மை வரச் சொல்லிவிட்டு, வந்தபிறகு பார்க்க முடியாது எனத் திருப்பி அனுப்பினால், என்ன அர்த்தம்” என்று சினந்து கொண்டே சென்றுவிட்டார். அவர்போனபிறகு, “ஜெயலலிதாவிடம் சென்ற சசிகலா, “உங்களைப் பார்க்க லீலா வந்தார்... காத்திருக்கச் சொன்னேன், எனக்கு காத்திருக்க எல்லாம் நேரமில்லை” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்” என்றார். இப்போது, ஜெயலலிதாவுக்கு  கோபம், “அவர் வந்து எவ்வளவு நேரம் ஆனது” என்று சசிகலாவிடம் கேட்டார். “இப்போதுதான் வந்தார். வந்ததும் ஜெயலலிதா எங்கே?” என்றார். “5 நிமிடங்களில் வந்துவிடுவார். வெயிட் பண்ணுங்கள் என்றேன். ஆனால், அவர் கேட்கவில்லை” என்று சசிகலா சொன்னதை ஜெயலலிதா அப்படியே நம்பினார். “ஒரு 5 நிமிடம் கூட எனக்காகக் காத்திருக்க முடியாதா?” என்று என்று ஜெயலலிதாவுக்கும் கோபமும் ஏமாற்றமும். அதோடு அவர் லீலாவைத் திருப்பி எப்போதும் அழைக்கவே இல்லை. அதன்பிறகு, எப்போதும் லீலாவை அழைக்காதபடி, சசிகலா பார்த்துக்கொண்டார். 

கட்சிக்குள் நடராஜன்!

இதையே, கட்சிக்குள் வேறு விதமாக நடராஜன் செய்தார். அன்றைக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்தவர் ஜனார்த்தனன். அன்றைக்கு ஜெயலலிதா கட்சியின், சாதரண கொள்கை பரப்புச் செயலாளர் அவ்வளவுதான். இன்னும் விளக்கமாகப் புரிந்துகொள்ளவேண்டுமானால்,  ஜனார்த்தனனை இன்றைக்கு ஜெயலலிதா இருந்த இடத்திலும், ஜெயலலிதாவை இன்றைக்கு நாஞ்சில் சம்பத் இருக்கும் இடத்திலும் வைத்துப் பார்க்க வேண்டும். 

அப்போது, அ.தி.மு.க சார்பில், ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குத் தலைமை அன்றைக்கு கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஜனார்த்தனன். ஆனால், வேறு சில வேலைகளால்,  அந்த கூட்டத்தில் ஜனார்த்தனன் கலந்து கொள்ளவில்லை. கட்சி அரசியலில் இது சாதரண விஷயம். ஆனால், ஜனார்த்தனன் கலந்து கொள்ளாததை அரசியல் ஆக்கினார் ஜெயலலிதா. அப்போது, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, கட்சியின் சர்வ அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கும் பொதுச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், “கட்சிக்காரர்கள் கஷ்டப்பட்டு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கின்றனர். அதில் போய் நீங்கள் கலந்துகொள்ளவில்லை என்றால் அவர்கள் மனம் புண்படும். அது கட்சியை பலவீனப்படுத்தும். ஆகவே, அந்தக்கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று விளக்கம் சொல்லுங்கள்" என்று குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதோடு, அந்த நோட்டீஸ் விவகாரத்தை எல்லாப் பத்திரிகைகளுக்கும் கொண்டு சேர்த்தார். 

“ஒரு கொள்கை பரப்புச் செயலாளர், ஒரு கட்சியின் பொதுச்செயலாளருக்கு எப்படி நோட்டீஸ் அனுப்பலாம்?” என்று கட்சிக்குள் சீனியர்கள் உறுமினர். “அந்தம்மா, கேட்பது நியாயம்தான்” என்று தொண்டர்கள் முனுமுனுத்தனர். இந்த யோசனை, யோசனையை செயல்படுத்திய ஜெயலலிதா, ஜெயலலிதா செய்ததைப் பத்திரிகைகளுக்குக் கொண்டு சேர்த்ததற்குப் பின்னால் இருந்தது, சாட்சாத் பி.ஆர்.ஓ நடராஜன் தான். இதில், மனதளவில் அடிபட்ட ஜனார்த்தனன், மெல்லவும் முடியாமல், விளக்கம் சொல்லவும் முடியாமல் அவமானத்தால் குறுகிப்போனார். அதன்பிறகு, எம்.ஜி.ஆர் ஏதோ செய்து அவரைச் சமாதானப்படுத்தினார். இது சாதரணமான விவகாரமாகத் தோன்றலாம். ஆனால், கட்சியில் உள்ள பெரும்பகுதி தொண்டர்களின் பார்வையை, ஜெயலலிதாவின் மேல் திரும்ப வைத்தது. “கட்சியில், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் எல்லாம் சும்மாதான்... இனி எல்லாம் அம்மாதான்” என்று அப்போதே அவர்களை குழப்பி அடித்தது. அன்று ஜெயலலிதா செய்ததை, இன்றைக்கு நினைத்துப் பார்க்க முடியுமா?

இன்றைக்கு  அ.தி.மு.க-வில் இருக்கும் நாஞ்சில் சம்பத், விளக்கம் கேட்டு, ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப முடியுமா? அப்படி அனுப்பினால், நாஞ்சில் சம்பத் அடுத்த நொடி கட்சிக்குள் மட்டுமல்ல.. வேறு எங்கேயாவது, எதுவாகவாவது இருக்க முடியுமா? ஆனால், எம்.ஜி.ஆர் காலத்தில், ஜெயலலிதா அப்படி ஒரு காரியத்தைச் செய்தார். நடராஜன் அதைச் செய்ய வைத்தார். ஜெயலலிதாவுக்குப் பின்னால் நடராஜன் இருப்பதை அறிந்த, மூத்த அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், அப்போதே நடராஜனின் வளர்ச்சியை வீக்கம் என்று வருணித்தார். 

எம்.ஜி.ஆரின் தந்திரம்!

கட்சிக்குள் ஜெயலலிதாவுக்கும் சீனியர்களுக்கும் ஏற்பட்ட இந்த முட்டல்மோதலை எம்.ஜி.ஆர் ஒருபக்கம் ரசித்தார் என்று சொல்பவர்களும் உண்டு. “தன் கண் முன்னாலேயே, ‘எம்.ஜி.ஆருக்கு அடுத்து, இவர்தான்’ என்று யாரும் யாரையும் பேசவிடக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர் கவனமாக இருந்தார். அதற்காக, இரண்டாம் இடத்தில் உள்ள சீனியர்களை ஜெயலலிதாவை வைத்தும், ஜெயலலிதாவை இரண்டாம்கட்ட சீனியர்களை வைத்தும் தலையில் தட்டிக்கொண்டே இருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், எம்.ஜி.ஆரின் இந்த வித்தையை, ஒரு கட்டத்துக்கு மேல், அவருக்கே எதிராகப் பயன்படுத்த ஆரம்பித்தார் ஜெயலலிதா. அதற்குப் பின்னால் இருந்தவர்கள் சசிகலா-நடராஜன்.
http://www.vikatan.com/news/coverstory/75184-from-cassette-shop-to-poes-garden--poes-for-sasikala---party-for-natarajan-chapter-6.art

R.VENUGOPALAN

unread,
Dec 18, 2016, 2:35:21 AM12/18/16
to பண்புடன்
2016-12-18 12:46 GMT+05:30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
வேணுஜி.... 

இப்படி சட்டுனு பாட்டோட சந்தத்துல செட்டாகிற வித்தையை எங்களுக்கும் சொல்லிக்கொடுங்களேன் ;))

நான் பண்ற கூத்துக்கு ஒரு பட்டறை வேறயா? கவிஞர்கள் உலாவும் இடத்தில் இதெல்லாம் நல்லாவா இருக்கும்? 

Ahamed Zubair A

unread,
Dec 18, 2016, 2:38:35 AM12/18/16
to பண்புடன்
அது சரி... நீங்க ”கவி”களைப் பத்தி சொல்றீங்க போல :)

--

R.VENUGOPALAN

unread,
Dec 18, 2016, 2:46:38 AM12/18/16
to பண்புடன்
இந்த இழையில் கருத்து சொல்லும் அளவுக்கெல்லாம் எனக்கு அரசியல் விழிப்புணர்ச்சி கிடையாது என்றாலும்....
காங்கிரஸ் மற்றும் தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளை துவக்கம் முதலே பிடிக்காமல் போனது எனக்கு. சிவாஜி வெறியனாக இருந்தாலும், எம்.ஜி.ஆரின் அரசியலை ஆதரித்து வந்திருக்கிறேன். ஜெயலலிதாவை ஆதரித்ததற்கு காரணம், அவரும் அய்யங்கார் என்பதற்காக அல்ல. அப்போது விடுதலைப்புலிகள் குறித்த எனது நிலைப்பாட்டோடு ஜெயலலிதாவின் நிலைப்பாடும் இருந்தது. மற்றபடி அவர் பிராமணர்களுக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்ற ஆதங்கம் உண்டு. இட ஒதுக்கிவிடு விஷயத்தில் அவர் மீது கடுமையான கோபமும் உண்டு. ஆனால், காங்கிரஸ் தி.மு.க ஆகிய கட்சிகளை ஒதுக்க அ.தி.மு.க தேவை என்று கருதியதால் ஜெயலலிதாவை ஆதரித்து வந்திருக்கிறேன். ரஜினி வாய்ஸ் கொடுத்தபோது கூட அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவைத்தான் ஆதரித்து ஓட்டும் போட்டேன்.

ஆனால், சசிகலா கட்சித் தலைமை என்பதெல்லாம் அசிங்கம். இனி காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க மூன்று கட்சிகளுக்கும் ஒட்டு கிடையாது. மிஞ்சி இருப்பது பா.ஜ.க தான்! இவர்களுக்கு அந்தக் கட்சி எவ்வளவோ தேவலாம். மோடி ஜிந்தாபாத்!

R.VENUGOPALAN

unread,
Dec 18, 2016, 2:51:09 AM12/18/16
to பண்புடன்
2016-12-18 13:07 GMT+05:30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
அது சரி... நீங்க ”கவி”களைப் பத்தி சொல்றீங்க போல :)

ஏற்கனவே தம்பி இப்னு ஹம்துனுக்கு ஒரு வாக்கு கொடுத்துவிட்டு வாளா இருக்கிறான். கோவிச்சுக்காதீங்க தம்பி. இப்பத்தான் திரும்ப எழுத ஆரம்பிச்சிருக்கேன். :-)

R.VENUGOPALAN

unread,
Dec 18, 2016, 2:52:09 AM12/18/16
to பண்புடன்
வாளா இருக்கிறேன் என்று வாசிக்கவும். 

Ahamed Zubair A

unread,
Dec 18, 2016, 2:55:46 AM12/18/16
to பண்புடன்
ஹா ஹா ஹா.... அதான் நினைச்சேன்... இருக்கிறான்னு இப்னுவை சொல்லி இருக்கீங்களோன்னு...

இப்னுஜிக்கும் உங்க வயசு இருக்கும் ;)))

--

R.VENUGOPALAN

unread,
Dec 18, 2016, 8:33:38 AM12/18/16
to பண்புடன்
2016-12-18 13:25 GMT+05:30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
ஹா ஹா ஹா.... அதான் நினைச்சேன்... இருக்கிறான்னு இப்னுவை சொல்லி இருக்கீங்களோன்னு...

இப்னுஜிக்கும் உங்க வயசு இருக்கும் ;)))

please don't mistake. both typographical as well as vision problem. 

Ibnuji, dont mistake.

சீதாலட்சுமி அம்மா சமீபத்துல சென்னை வந்திருந்தபோது என்னோட ஜாதகத்தைப் பார்த்திட்டு, 'டேய், நீ டிசம்பர் தாண்டறதுக்குள்ள ஒரு பெரிய கண்டம் இருக்குன்னு சொன்னாங்க. ஆரம்பிச்சிடுச்சு போலிருக்கு. :-) 

Ahamed Zubair A

unread,
Dec 19, 2016, 12:57:46 AM12/19/16
to பண்புடன்
டிசம்பர் மாச கண்டம்ன்றது சென்னைக்கே சொன்ன ஜாதக பலன்... உங்களுக்கு மட்டும் இல்ல..

:-))

தியாகு

unread,
Dec 19, 2016, 4:49:23 AM12/19/16
to பண்புடன்
//சசிகலா கட்சித் தலைமை என்பதெல்லாம் அசிங்கம். இனி காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க மூன்று கட்சிகளுக்கும் ஒட்டு கிடையாது. மிஞ்சி இருப்பது பா.ஜ.க தான்! இவர்களுக்கு அந்தக் கட்சி எவ்வளவோ தேவலாம். மோடி ஜிந்தாபாத்!//


அதெப்படி ஜெ சிங்கம் அவர் தோழில் அசிங்கம் ஆவார்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
தியாகு

-

R.VENUGOPALAN

unread,
Dec 19, 2016, 7:23:30 AM12/19/16
to பண்புடன்


On 19 Dec 2016 15:19, "தியாகு" <seewty...@gmail.com

அதெப்படி ஜெ சிங்கம் அவர் தோழில் அசிங்கம் ஆவார்
இருக்கீங்களோன்னு...

ஐயையோ தெரியாம சொல்லிட்டேன் தோழரே! முன்னை மாதிரி என்னால நீட்டி முழக்க முடியாது. மன்னிச்சுக்கோங்க தியாகு. :-)

ஸ் பெ

unread,
Dec 19, 2016, 12:22:32 PM12/19/16
to panbudan

5 ஆண்டுகளுக்கு முன் விரட்டப்பட்ட சசிகலா குடும்பத்தினர்... இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?

'கட்சியில் உதவி செய்ய வைத்திருந்தவர்கள், கட்சியிலும், ஆட்சியிலும் உச்சபட்ச அதிகாரத்தை செலுத்துவதா?' என சீறித்தான் சசிகலாவுடன் அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்கள் 13 பேரை, 5 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் வெளியேற்றினார் ஜெயலலிதா. கட்சியை விட்டு நீக்கியதுடன், சிலர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலும் அடைத்தார். இன்று வரையில் சசிகலாவைத்தவிர மற்றவர்கள் யாரும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படவில்லை.

அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இன்றோடு 5 ஆண்டுகள் கடந்து விட்டது. போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்ட இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இன்று போயஸ் தோட்டம் இயங்குவதாக சொல்லப்படுகிறது. அன்று ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர்களின் இன்றைய நிலை என்ன என்பதைத்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.

ம.நடராஜன் (சசிகலாவின் கணவர்)

ஜெயலலிதா அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையை, எண்ணத்தை அவரிடம் விதைத்ததே இவர்தான் என சொல்லப்படுவதுண்டு. ஆரம்ப காலத்தில் சசிகலாவுடன் கார்டனில் ஆளுமையோடு வலம் வந்தவர் நடராஜன். பின்னர் கார்டனை விட்டு வெளியேறினாலும், தனக்கென ஒரு லாபியை உருவாக்கி இயங்க ஆரம்பித்தார். இது ஜெயலலிதாவுக்கு பிடிக்காமல் போக, அவரை விலக்கி வைக்க ஆரம்பித்தார். ஆட்சி அதிகாரத்தில் எல்லை மீறுவதை அறிந்த ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் உள்ளிட்டோரை வெளியேற்றினார். சசிகலாவை மீண்டும் சேர்த்துக்கொண்ட போதும், நடராஜன் மீது கோபத்துடனே இருந்தார். ஆள் கடத்தல், நில அபகரிப்பு வழக்குகள் நடராஜன் மீது பாய்ந்தது. சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் அதிகாரம் செலுத்தத் துவங்கியிருக்கிறார். போயஸ் கார்டனில் இப்போது இல்லை என்றாலும், சசிகலாவுக்கு ஆலோசனை சொல்வது நடராஜன்தானாம். நடராஜனின் மூவ்தான் சசிகலாவின் மூவ் என்கிறார்கள்.

மன்னார்குடி திவாகரன் (சசிகலாவின் தம்பி)

மன்னார்குடி சந்தரகோட்டையில் வசிக்கிறார் திவாகரன். டெல்டா பகுதியில் 'பாஸ்' என்றுதான் இவரை அழைக்கிறார்கள். மன்னார்குடியில் கிளைமேட் சோடா கம்பெனி நடத்தி வந்தவர், இப்போது கல்லூரியை நடத்தி வருகிறார். ஆள் கடத்தல், கொலை முயற்சி, அடிதடி என பல வழக்குகள் இவர் மீது ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சர்வ அதிகாரத்துடன் வலம் வருகிறார். தனது சம்பந்தியான ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரனை உளவுப்பிரிவு அதிகாரியாக நியமித்திருக்கிறார். டெல்டா மாவட்டங்களில் இவருக்குதான் முதல் மரியாதை.  அரசியலில் மீண்டும் வலம் வரத்துவங்கி விட்டார்.

வி.என். சுதாகரன்

சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மூன்றாவது மகன்தான் சுதாகரன். சுதாகரனை வளர்ப்பு மகனாக அறிவிக்கும் அளவுக்கு சுதாகரன் மேல் ஜெயலலிதாவுக்கு பிரியம் இருந்தது. வளர்ப்பு மகன் திருமணமும், சசிகலாவுடனான நட்புமே 1996 தேர்தலில் தோல்விக்கு காரணமாக அமைய... சசிகலாவோடு சுதாகரனும் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் சுதாகரனை ஜெயலலிதா கண்டுகொள்ளவே இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராக வந்தபோதுகூட சுதாகரனை ஜெயலலிதா திரும்பிக்கூட பார்த்ததில்லை. ஜெயலலிதாவின் மறைவிற்கு சுதாகரன் வந்திருந்தார். இவருக்கு மிக முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், அதிகாரத்தை செலுத்துவார் என்றே சொல்லப்படுகிறது.

டி.டி.வி. தினகரன்

வனிதாமணியின் மூத்த மகன் டி.டி.வி. தினகரன். ஒருகாலத்தில் அம்மாவின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர். ஆரம்ப காலத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணிகளை இவர்தான் கவனித்து வந்தார். 1999ல் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனவர், அதன் பின்னர் தேனிக்கே குடியேறிவிட்டார். அப்போது அறிமுகமான ஓ.பன்னீர்செல்வம், தினகரனிடம் காட்டி பவ்யத்தால்தான், 2001ல் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார். கட்சியில் ஓரங்கப்பட்டதால் யார் கண்ணிலும் படாமல் புதுச்சேரியில் குடியேறிய தினகரன், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இப்போது மீண்டும் தமிழகம் வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறாது.

வி.பாஸ்கரன்

வனிதாமணியின் இரண்டாவது மகன். ஆரம்பத்தில் இவர்தான் ஜெயா டிவியின் நிர்வாக இயக்குநராக இருந்தார். ஆங்கில சேனல்களுக்கு இணையாக தொழில் நுட்பக் கருவிகளை பயன்படுத்தினார். ஆரம்பத்திலிருந்தே கல்குவாரி பிசினஸ் செய்து வந்தவர். சினிமாவில் ஆர்வம் காட்டினார்.  சினிமாவெல்லாம் வேண்டாம் என சசிகலா எச்சரிக்கை விடுக்க... அதையும் புறந்தள்ளி, 'தலைவன்' என்ற படத்தில் நடித்தார். மீடியாக்களில் இவர் கொடுத்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்த... இவர் மீது வழக்குகள் பாய்ந்தன. சிறையில் தள்ளப்பட்டார். தற்போது கல்குவாரி பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார் பாஸ்கரன். மீண்டும் கார்டன் பக்கம் தலை காட்டக்கூடும் என்கிறார்கள்.

டாக்டர் வெங்கடேஷ்

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன்தான் டாக்டர் வெங்கடேஷ். நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை, கட்சியின் போஸ்டர்கள், புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகளை கவனித்து வந்தார். ஜெயலலிதா, இவர் திருமணத்தை நடத்தி வைத்தார். ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை மாநிலச் செயலாளராக ஆக்கப்பட்டார். தனக்கு எதிராக சதி செய்தார் என சொல்லப்பட்டு கட்டம் கட்டப்பட்டவர்களில் வெங்கடேஷும் ஒருவர். இவர் மீது பல வழக்குகளை பதிவு செய்த ஜெயலலிதா, சிறையில் தள்ளினார். அதன் பிறகு தனக்கு சொந்தமான ஸ்கேன் சென்டரை கவனிப்பது, கோல்ப் விளையாடுவது என 'தான் உண்டு தன் வேலை உண்டு' என இருந்தவர்,  ஜெ மறைவிற்கு பிறகு மீண்டும் ஆக்டிவ்வாக செயல்படத்துவங்கி இருக்கிறார். சசிகலா மீதான அதிருப்தியாளர்களை சரிசெய்ய இவருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

இராவணன்

சசிகலாவின் சித்தப்பா கருணாகரனின் மருமகன்தான் ராவணன். மிடாஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர், மெல்ல மெல்ல கார்டனுக்குள் நுழைந்து, மேற்கு மண்டலத்தின் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்டம் போட்டார். ஜெயலலிதாவுக்கும் மேலே சென்று ஆட்டம் போட்டவர் என சொல்லப்பட்ட ராவணன், பல வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டார். எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என தெரியாமல் இருந்த இவர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தலை காட்டத்துவங்கி இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு தன் புகைப்படத்தைப் போட்டு விளம்பரம் கொடுத்தவர், மீண்டும் மேற்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்த துவங்கி இருக்கிறார்.

ராமச்சந்திரன்

நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரனுக்கு தொண்டர்கள் தரும் மனுவை பரிசீலிக்கும் பொறுப்புதான் முன்னர் வழங்கப்பட்டது. கட்சியை விட்டு நீக்கியபிறகு அண்ணன் நடராஜன்தான் எல்லாம். நடராஜன் ஆலோசனைப்படிதான் இயங்குவார். அவர் எதிரில் உட்கார கூட மாட்டார். அந்தளவு மரியாதை. இப்போது சென்னை போயஸ் கார்டனில் இருந்து வரும் உத்தரவுகளை அண்ணன் நடராஜனுக்கு கொண்டு சேர்ப்பது இவர்தான். விரைவில் கட்சியிலும் அதிகாரம் செலுத்துவார் என்கிறார்கள்.

மகாதேவன்

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன். கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரத்தோடு வலம் வந்தவர். ஜெ பேரவை மாநிலச் செயலாளராகவும் இருந்தார். கட்சியை விட்டு விரட்டப்பட்ட பின்னர், வழக்குகள் பாய்ந்தன. எல்லாவற்றையும் சமாளித்து மருத்துவமனை, பேருந்து போக்குவரத்து தொழிலை நடத்தி வந்தவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிகாரம் செலுத்த துவங்கினார். ஜெயலலிதா மறைந்த அன்று, ஜெயலலிதாவின் உடலுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்தார். சசிகலா பொதுச்செயலாளராக ஆக வேண்டுமென தஞ்சை பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், மகாதேவன் படமும் இடம்பெறும் அளவுக்கு, அதிகாரத்துடம் வலம் வரத்துவங்கி விட்டார்.

கலியபெருமாள்

சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்திதான் கலியபெருமாள். திருச்சி. கே.கே. நகரில் வசிக்கும் இவரின் கட்டுப்பாட்டில்தான் மத்திய மண்டல அ.தி.மு.க. இயங்கியது. தனக்கு வேண்டிய உளவுத்துறை அதிகாரி மூலம் கட்சி ஆட்களை உளவு பார்ப்பது இவரது முக்கிய வேலை. இப்போது அமைதியாகவே இருக்கிறார். மீண்டும் மத்திய மண்டல பொறுப்பாளராக வலம் வருவார் என்கிறார்கள்.

பழனிவேலு

நடராஜனின் சகோதரர் பழனிவேலு. நீக்கப்பட்டவர்களில் இவருடைய பெயர் 4வது இடத்தை பிடித்தது. இவர் போலீஸ்துறையில் பணியாற்றியதால், இவரை ஜெயலலிதா தனது பாதுகாப்பு அதிகாரியாக நியமித்துக்கொண்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கார்டனுக்குள் செல்வதும் வருவதுமாக இருந்தவர். தற்போது அண்ணன் நடராஜன் கிழித்த கோட்டை தாண்டுவதில்லை. விரைவில் நடராஜனின் ஆதரவோடு, அதிகாரத்துடன் வலம் வருவார் என சொல்லப்படுகிறது.

தங்கமணி

மகாதேவனின் தம்பி தங்கமணி. கட்சி விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க மாட்டார் என்றாலும், தன்னிடம் வரும் சிபாரிசுகளை செய்து கொடுக்க மட்டும் அதிகாரத்தை பயன்படுத்துவார். கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் இருக்கின்ற இடம் தெரியாமல் இருந்தார். இப்போதும் அப்படித்தான் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறார். சசிகலா ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது, இவர் சீனுக்கு வரலாம் என்கிறார்கள்.

- ஏ. ராம்
http://www.vikatan.com/news/politics/75355-the-rise-of-mannargudi-family-in-tn-politics.art

ஸ் பெ

unread,
Dec 19, 2016, 12:23:00 PM12/19/16
to panbudan

ஐந்தாண்டுகளுக்கு முன் சசிகலாவுக்கு ஜெயலலிதா ‘குட் பை’ சொன்ன நாள் இன்று! அன்று என்ன நடந்தது?

மிழக அரசியலில் 'அம்மா' என்ற வார்த்தை மெல்ல மெல்ல மறைந்து 'சின்னம்மா' என்ற வார்த்தை அதிகளவில் உச்சரிக்கப்பட்டு வரும் காலகட்டம் இது. 'அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவி ஏற்க வேண்டும். தமிழக முதல்வராகவும் நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்' என சசிகலாவிடம் அ.தி.மு.க. நிர்வாகிகள் கெஞ்சி வரும் காட்சிகளால் தமிழக அரசியல் பரபரத்துக்கிடக்கிறது. சசிகலா எப்படி இந்த உயரத்துக்கு வந்தார் என்பது புரியாமல் பலரும் திகைத்து நிற்கிறார்கள்.

'தாய் தந்த வரம்' என்றும் ஜெயலலிதா தந்து விட்டு சென்ற வாரிசு என்றும் அடையாளம் காட்டப்பட்டு வருகிறார் சசிகலா. இன்று கட்சியையும், ஆட்சியையும் தலைமை ஏற்று நடத்தும் முடிவுக்கு சசிகலா வந்திருக்கலாம். ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலாவின் நிலையே வேறு. இந்த நாளை சசிகலா ஒரு போதும் மறந்திருக்க முடியாது. ஆம்.. 5 ஆண்டுகளுக்கு முன்னர் போயஸ் கார்டனை விட்டும், கட்சியை விட்டும் சசிகலா வெளியேற்றப்பட்ட தினம் இன்று.

முதலில் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்து, பின்னர் உற்ற தோழி, உடன்பிறவா சகோதரி என ஜெயலலிதாவை மிக நெருங்கிய சசிகலா, போயஸ் கார்டனுக்குள் ஜெயலலிதாவுக்கு அடுத்து எல்லாமுமாக இருந்தார். ஜெயலலிதாவுக்கு அடுத்து என்ற நிலையில் இருந்த வரை சசிகலாவுக்கு எந்த சிக்கலும் இருக்கவில்லை. ஜெயலலிதாவுக்கும் மேலே சென்று கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரம் செலுத்த முயன்றபோதுதான் பெரும் சிக்கலை சந்தித்தார் சசிகலா.

''எனக்குத் தெரியாமல்... நான் இல்லாமல்... நீங்கள் எனக்கு இணையாக அரசை நடத்துகிறீர்களா?" என சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு எதிராக சீறிய ஜெயலலிதா, 5 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில், (2011, டிசம்பர் 19ம் தேதி) துரோகி என்றும், தனக்கு எதிராக சதி செய்வதாகவும் சொல்லி சசிகலாவை கட்சியை விட்டு வெளியேற்றினார். அவரோடு அவரது கணவர் நடராஜன் உட்பட உறவினர்கள் 13 பேரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்கள்.

சசிகலா கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் அதே மாதத்தின் இறுதியில் நடந்த பொதுக்குழுவிலும் சசிகலாவுக்கு எதிராக ஆவேசம் காட்டினார் ஜெயலலிதா. “தவறு செய்து, துரோகம் புரிந்து கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாகத் தொடர்பு கொண்டு, நாங்கள் மீண்டும் உள்ளே சென்று விடுவோம். மீண்டும் செல்வாக்குடன் இருப்போம். இப்போது எங்களைப் பகைத்துக் கொண்டால், நாங்கள் மீண்டும் உள்ளே சென்ற பிறகு, உங்களைப் பழி வாங்கி விடுவோம்.

ஆகவே எங்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி தலைமை மீது சந்தேகம் வரும் வகையில் பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களின் பேச்சைக் கேட்டு நம்பி செயல்படும் கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்புக் கிடையாது”  என சசிகலாவையும், அவரது ஆதரவாளர்களையும் எச்சரித்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவை மீறி சசிகலா இயங்க துவங்கியதுதான் இந்த பிரச்னைகளுக்கும் காரணம் என சொல்லப்பட்டது. 'ஜெயலலிதாவுக்கு மாற்றாக யாரை முதலமைச்சராகக் கொண்டுவரலாம்?' என்று இந்தக் குடும்ப உறுப்பினர்கள் சிலர் பேசத்துவங்கியதன் பின்னணியில் தான் இந்த முடிவை ஜெயலலிதா எடுத்ததாக சொல்லப்பட்டது. 'என்னை வைத்து ஆதாயம் பெறுபவர்கள் எனக்கு எதிராகவே சதி செய்வதா?’ என்று கொந்தளித்துதான் சசிகலாவை ஜெயலலிதா வெளியேற்றினார்.

ஆனால் இந்த பிரிவு வெகு காலம் நீடிக்கவில்லை. 3 மாதங்களில் மீண்டும் ஜெயலலிதா - சசிகலா நட்பு துளிர்த்தது. "அக்காவுக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் எனக்கு வேண்டாதவர்கள். அக்காவுக்கு எதிரான உறவுகளை நான் துண்டித்து விட்டேன். அரசியலில் ஈடுபடும் எண்ணமோ, பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசையோ துளியும் இல்லை. என் வாழ்க்கையை ஏற்கனவே அக்காவுக்கு அர்ப்பணித்து விட்டேன். இனியும் எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவுக்கு பணி செய்து உதவியாக இருப்பேன்," என  ஏப்ரல் மாதத்தில் அறிக்கை வெளியிட்டார் சசிகலா.

இதன் பின்னர் போயஸ் தோட்டத்தின் மிகப்பெரிய கதவு சசிகலாவுக்கு மீண்டும் திறந்தது. சசிகலா மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவ டிக்கை ரத்து செய்யப்படுவதாகவும் ஜெயலலிதா அறிவித்தார். சசிகலாவை மட்டுமே சேர்த்துக்கொண்டார். அவருடன் நீக்கப்பட்டவர்கள் கட்சியில் மீண்டும் சேர்க்கப்படவில்லை.

'ஜெயலலிதாவை, அவர் வகிக்கும் பதவியில் இருந்து விலக்குவதற்கும் அந்த இடத்தில் அமர்வதற்கும் திவாகரனும், ராவணனும் சதி செய்தார்கள்' என சொல்லப்பட்டதை இல்லை என சொல்லி விடவில்லை. 'சசிகலா அப்பாவி. அவருக்கு தெரியாமல் நடந்து விட்டது' என்ற ரீதியில்தான் ஜெயலலிதா சொல்லி இருந்தார்.

இப்போது காட்சிகள் மாறிவிட்டன. "அரசியலில் ஈடுபடும் எண்ணமோ, பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசையோ துளியும் இல்லை" என ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியவர், இப்போது அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும், கட்சியின் முதல்வராகவும் பொறுப்பேற்க முடிவு செய்து விட்டார். ஜெயலலிதாவுக்கு மாற்றாக யாரை முதல்வராக கொண்டு வரலாம் என திட்டமிட்டு சதி செய்ய முற்பட்டதாக கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள், இப்போது மீண்டும் நேரடியாக அதிகாரம் செலுத்த துவங்கி இருக்கிறார்கள்.

அ.தி.மு.க. எனும் பேரியக்கம், சசிகலாவை தலைமையேற்று நடக்கத் துவங்கியிருக்கிறது. ஏனென்றால், அரசியலில் பழைய கதைகள் பெரும்பாலும் செல்லுபடியாவதில்லை.
http://www.vikatan.com/news/coverstory/75335-5-years-before-jayalalithaa-expels-sasikala-from-party.art?artfrm=read_please

ஸ் பெ

unread,
Dec 19, 2016, 12:24:41 PM12/19/16
to panbudan

சசிகலா ஜெயலலிதாவின் ஆளா... எம்.ஜி.ஆர். ஆளா? - சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை அத்தியாயம் 7

 

அ.தி.மு.க என்ற மாபெரும் கட்சிக்குள், சீனியர்களையும் ஜெயலலிதாவையும் மோதவிட்டு எம்.ஜி.ஆர் ரசித்துக் கொண்டிருந்தார். ஆனால் இதே ஆயுதத்தை ஜெயலலிதா,  எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கையில் எடுத்தார்; ஜானகி,  ஜெயலலிதாவுக்கு எதிராக கையில் எடுத்தார்;  சசிகலாவும் நடராஜனும் இன்னும் நூதனமாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஜானகி ஆகிய மூவருக்கும் எதிராக அவ்வப்போது எறிந்தனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், எல்லோரின் ஆயுதங்களும், அதனதன் இலக்கைச் சரியாக வீழ்த்தி வெற்றியைக் கொடுத்தன;  எம்.ஜி.ஆருக்கு வேதனையைக் கொடுத்தன. 

ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை நோக்கி எறிந்த ஆயுதம்!?

ஜெயலலிதா ஒருமுறை அமெரிக்கா கிளம்பினார். அரிதாக அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களில் அதுவும் ஒன்று. போகும்போது, வருமானவரி நடைமுறைகளைச் சமாளிக்க, “நான் ‘ட்ரீட்மென்ட்டு’க்காகவே அமெரிக்கா போகிறேன்” என்று வருமானவரி அலுவலகத்துக்கு கடிதம் கொடுத்துவிட்டுப்போனார். இந்த விவகாரம் வெளியில் கசிந்து, “ஜெயலலிதாவுக்கு விபரீதமான நோய்” என்று, தி.மு.க பத்திரிகையான, முரசொலியில் செய்தி வந்தது. ஜெயலலிதா,  எம்.ஜி.ஆரை உலுக்கி எடுத்தார். இந்தச் செய்தியைப் பரப்பியவர்களை, கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தார். ஜெயலலிதாவின், ஆத்திரத்துக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் அவசியமே இல்லை. ஏனென்றால், முரசொலியில் வெளியாகி இருந்த அந்தச் செய்தி, ஜெயலலிதாவைவிட, எம்.ஜி.ஆரை, அதிகம் வேதனைப்படுத்தி இருந்தது. விசாரணையில் இறங்கினார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் கடிதத்தை ‘டீல்’ செய்த அதிகாரிகளை எம்.ஜி.ஆர் ‘டீல்’ செய்தார். அதில் ஒரு அதிகாரிக்கு வேலையே போனது. ஆனாலும்கூட, எம்.ஜி.ஆருக்கு சமாதானம் ஏற்படவில்லை. அந்தக் கடிதம் தொடர்பான தகவல்களில், ஏதோ ஒரு தவறு ஒளிந்திருப்பதாக அவர் உள்மனம் சொன்னது. கடிதம் வெளியிட்டவர்களைக் கண்டுபிடித்துவிட்ட எம்.ஜி.ஆரால், வெளியிடச் சொன்னவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதுவும் அவருக்கு உறுத்தலாக இருந்தது. 

சசிகலா, ஜெயலலிதா மீது எறிந்த ஆயுதம்!

கடிதத்தை வெளியிட்டவரை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு எம்.ஜி.ஆர் இருந்தார். அதை மனதுக்குள் வைத்துக் கொண்டு, ரகசிய விசாரணை ஒன்றை நடத்திக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவருடைய விசாரணை சசிகலாவிடம் வந்து முடிந்தது. “கடித விவகாரம் எப்படி வெளியானது?” என்று எம்.ஜி.ஆர் சசிகலாவிடம் கேட்டார். “ஜெயலலிதாதான் கடிதத்தை வெளியிட்டார்” என்று சசிகலா ஆணித்தரமாக அடித்துச் சொன்னார். அதோடு, வருமானவரி அதிகாரி ஒருவர் போயஸ் தோட்டத்துக்கு வந்து போன விபரங்களையும் எம்.ஜி.ஆரிடம் தெளிவாகச் சொன்னார். சசிகலாவின் பதிலில், எம்.ஜி.ஆரின் கேள்விகள் அனைத்துக்கும் பதில் இருந்தது. ஆடிப்போனார் எம்.ஜி.ஆர். “தான் கற்றுக்கொண்ட அரசியலில், இப்படி ஒரு பாடம் சொல்லித்தரப்படவில்லையே!” என்று மிரண்டுவிட்டார். இந்தத் தகவலை எம்.ஜி.ஆருக்குச் சொல்லிவிட்டு, அதற்கு உபகாரமாக, பட்டிவீரன் பட்டியில் தனக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு சசிகலா, மெடிக்கல் 'சீட்' ஒன்றை வாங்கிக்கொண்டார். அதன்பிறகு மூன்று நாட்கள் எம்.ஜி.ஆர்,  ஜெயலலிதாவைச் சந்திக்கவில்லை. கடித விவகாரத்தில் நாடகமாடிய ஜெயலலிதா மீது அவர் கோபத்தில் இருந்தார். அதன்பிறகு, வழக்கம்போல், மாம்பலம் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா சந்திப்பு நடைபெற்றது. ஜெயலலிதா மீதான எம்.ஜி.ஆரின் கோபம் அவ்வளவுதான். 

திசை திருப்பிய நடராஜன்!

பி.ஆர்.ஓ-ஆக இருந்த நடராஜன், பதவி உயர்வுக்காக போராடிக் கொண்டு இருந்தார். நடராஜன் பணிபுரிந்த துறையின் அமைச்சராக அப்போது இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அவருக்கு நெருக்கமானவர், ‘தாய்’ பத்திரிகை ஆசிரியர் வலம்புரிஜான். அதனால் நடராஜன், அடிக்கடி வலம்புரிஜானை சந்தித்து, “எனது பதவி உயர்வுக்காக ஆர்.எம்.வீ-யிடம் பேசுங்கள்” என்று கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார். ஆனால், ஏனோ நடராஜனின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அப்போதே ஆர்.எம்.வீரப்பன், நடராஜனை கணித்து இருந்திருக்க வேண்டும். ஆனால், தன் கோரிக்கையை ஆர்.எம்.வீ-க்கு கொண்டு செல்லாமல், வலம்புரிஜான்தான் முட்டுக்கட்டை போடுகிறார் என்று புரிந்துகொண்டார் நடராஜன். அதனால், நடராஜனின் கோபம் அவர் மீது திரும்பி இருந்தது. கோபத்தைத் தீர்த்துக்கொள்ள நடராஜனுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம், கடித விவகாரத்தில் கிடைத்தது. ஜெயலலிதாவைச் சந்தித்த நடராஜன், “கடித விவகாரத்தை வெளியிட்டது நீங்கள்தான் என்று வலம்புரிஜான் எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டார். அதனால்தான், எம்.ஜி.ஆர் உங்கள் மீது கோபமாக இருந்தார்” என்று ஒரு தகவலைச் சொன்னார். இப்போது, ஜெயலலிதாவின் கோபம், வலம்புரிஜான் மீது திரும்பியது. வலம்புரிஜானை வார்த்தைகளால் எரித்துவிட்டார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை கடித விவகாரத்தை வெளியில்விட்டது ஜெயலலிதா; ஜெயலலிதாவைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் தன்னை எம்.ஜி.ஆரிடம் போட்டுக் கொடுத்தது வலம்புரிஜான். இரண்டு வில்லங்கமான புரிதல்களுக்கு இடையில், சசிகலா-நடராஜன் இருந்தனர். போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுக்கும், இராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு விசுவாசமானவர்களாகவும் சசிகலா-நடராஜனின் பயணம் தொடர்ந்தது. 

கதை தொடரும்...

(இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

http://www.vikatan.com/news/coverstory/75333-sasikala--mgrs-bestie-jayalalithas-bestie-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---7.art?artfrm=editor_choice

தியாகு

unread,
Dec 21, 2016, 3:29:07 AM12/21/16
to பண்புடன்
/ஐயையோ தெரியாம சொல்லிட்டேன் தோழரே! முன்னை மாதிரி என்னால நீட்டி முழக்க முடியாது. மன்னிச்சுக்கோங்க தியாகு. :-)/

மகிழ்ச்சி

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
தியாகு

-

ஸ் பெ

unread,
Dec 29, 2016, 12:43:46 AM12/29/16
to panbudan

சசிகலா தலைமையை ஏற்போம் #LIVEUPDATES அதிமுக பொதுக்குழு கூட்டம்...

அதிமுக அவசர பொதுக்குழு கூட்டம்.. புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...

சசிகலாவிடம் தீர்மான நகலை வழங்கினார் ஓபிஎஸ்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பொதுக்குழு தீர்மானம் போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தீர்மான நகலை, சசிகலாவிடம் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். அப்போது, கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்க வேண்டும் என்று சசிகலாவை  ஓபிஎஸ் கேட்டுக் கொண்டார்.

தீர்மானத்துக்கு பின் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பேனருக்கு மேல் சசிகலாவை வரவேற்று பிரமாண்ட பேனர்கள் அமைக்கப்படுகிறது

 

ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

* எல்லோருக்கும் எப்பொழுதும் சத்தான உணவு என்பது சாத்தியமான லட்சியமே என்பதை மெய்ப்பித்த முதலமைச்சர் அம்மாவுக்கு, மானுட சேவைக்கான பிலிப்பன்ஸ் நாட்டின் ரமோன் மக்சையாய் விருது மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகளை செய்தல் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

*  சசிகலா தலைமையில் பணியாற்ற உறுதி என தீர்மானம் நிறைவேற்றம். 

 பொள்ளாச்சி ஜெயராமன் இரங்கல் தீர்மானம் வாசித்தார்

*   அ.தி்.மு.க. பொதுக்குழு வரலாற்றில் 45 பேர் மேடையில் அமர்ந்த முதல் பொதுக்குழு இது தான்

*  அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள்! தீர்மானங்களை எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்தார்.

*  பொதுக்குழுவில் கண்ணீர் மல்க உரையாற்றுகிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

கண்ணீர் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி

*  அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், பொன்னையன் பண்ருட்டி ராமச்சந்திரன் மேடையில் உள்ளனர். மேலும் தம்பிதுரை, எடப்பாடி பழனிச்சாமி, அன்வர் ராஜா, சரோஜா உட்பட 45 பேர் மேடையில் உள்ளனர்

 

  • * அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று 9.30 மணிக்கு ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி  திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
  •  
  • ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் வகையில் ஜெயலலிதாவின் இருக்கை அரங்கில் வைக்கப்பட உள்ளது. 

அதிமுக அவசர பொதுக்குழு கூட்டம்.. புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...

  • முதலமைச்சர் ஓ.பி.எஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள கிளம்பினார். 
  • பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று காலை 7 மணியளவில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு  பொதுகுழு நடக்கும் இடத்தை அடைந்தனர்.
  • இதனிடையே சசிகலா தான் அதிமுகவின்  பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அதிமுக முக்கிய நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகின்றனர். 

 

சசிகலா பொதுச்செயலாளரா? இணைப் பொதுச்செயலாளரா? 

ஆளும் அ.தி.மு.க.வின் பொதுக்குழு-செயற்குழு கூட்டம் இன்று நடக்கவுள்ளது.அப்போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் சசிகலா ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பதவியை அப்படியே விட்டுவிட்டு,புதிதாக உருவாக்கப்படும் இணைப்பொதுச் செயலாளர் பதவியை ஏற்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகி அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் சசிகலா செல்கிறார் என்ற தோற்றம் ஏற்படும். அதனால் தனக்கு அதிமுகவில் உள்ள ஒரு சில எதிர்ப்புகளையும் சமாளித்துவிட முடியும் என்று சசிகலா நம்புவதாக அ.தி.மு.க. சீனியர்கள் தெரிவிக்கின்றனர். அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர்.மறைவுக்குப் பிறகு அக்கட்சியில் அவர் வகித்து வந்த தலைவர் பதவியைக் காலியாக வைத்துவிட்டு, தனது மரணம் வரையிலும் பொதுச் செயலாளராக மட்டுமே ஜெயலலிதா பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு அவசர சிகிச்சைப் பிரிவில், சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 75 நாட்களாகத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் இந்த மாதம் 5-ம் தேதி திடீரென அவர் மரணமடைந்தார். இந்திய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அவரின் மரணம். இந்தச் சூழ்நிலையில் தங்களது தலைவியை இழந்த நிலையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு-செயற்குழு இன்று  நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

இந்தப்பதவிக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரவேண்டும் என்று அ.தி.மு.க.வின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் வற்புறுத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில், நிர்வாகிகள் கூட்டத்தைக்  கூட்டி தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர். அமைச்சர்கள், கட்சியின் தலைமை நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்,  அ.தி.மு.க.வின் பல்வேறு அணி நிர்வாகிகள் என்று அனைவரும் போயஸ் கார்டன் சென்று நேரிலும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சசிகலாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவர்களும் நேரில் சசிகலாவுக்கு ஆதரவு அளித்தனர்.

இதனையடுத்து பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்ற நிலை உருவானது. இந்த நிலையில் அ.தி.மு.க.வின் எம்.பி.சசிகலா புஷ்பாவின் கணவர்,கட்சியின் தலைமை அலுவலகம் சென்று பொதுச் செயலாளர் பதவிக்கு விண்ணப்பம் அளிக்க வந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த கைகலப்பில் அவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அங்கிருந்து காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இந்த நிகழ்வால் அ.தி.மு.க.வின் தலைமைக்கழக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மாதிரியான எதிர்ப்புகளை சசிகலா தரப்பு விரும்பவில்லை என்றும் அதனால் இணைப் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.    

                       .
அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என்பது கட்சி விதி. இதையொட்டி அ.தி.மு.க. செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று (வியாழன்) காலை 9.30 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.செயற்குழு கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதோடு, சசிகலாவை பொதுச் செயலாளராக்கும் தீர்மானமும் கொண்டு வரப்படவுள்ளது.

செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதலும் பெறப்பட உள்ளது. ஒவ்வொரு முறை செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் போதும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால் இந்த முறை சிறப்பு அழைப்பாளர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. செயற்குழு-பொதுக்குழு நடக்கவுள்ள வானகரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Jaisankar Jaganathan

unread,
Dec 29, 2016, 1:34:57 AM12/29/16
to பண்புடன்
இதுல நோபல் பரிசு மட்டும் கண்ணை கட்டுது

Thevan

unread,
Dec 29, 2016, 11:17:22 AM12/29/16
to panb...@googlegroups.com
Key facts about Sasikala, the Chinnamma of Tamil Nadu
Sasikala’s rise to fame in Tamil Nadu politics owes less to her
leadership qualities and more to the enigmatic and yet firm
relationship she shared with the late chief minister.


http://indianexpress.com/article/india/key-facts-about-sasikala-the-chinaamma-of-tamil-nadu-4450349/

Thevan

unread,
Dec 29, 2016, 11:18:26 AM12/29/16
to panb...@googlegroups.com
After all the anticipation regarding who will take over as General
Secretary of the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
post the death of J Jayalalithaa, her close aide and confidant
Sasikala Natarajan has been appointed to the role till she is formally
elected. While making the appointment, Sasikala’s contribution to the
growth of the party was cited as deserving credit. However, Sasikala’s
rise to fame in Tamil Nadu politics owes less to her leadership
qualities and more to the enigmatic and yet firm relationship she
shared with the late chief minister.

WATCH VIDEO | 5 Lesser Known Facts About Sasikala Natarajan
5 Lesser Known Facts About Sasikala Natarajan

Being the closest aide of Jayalalithaa, it was she who stood
unyielding beside her in the last hours before her death. It was
Sasikala who managed the party affairs when the beloved Amma of Tamil
Nadu was admitted in hospital. Sasikala’s presence beside the late
chief minister in her final hours, in the absence of any other family
member of Jayalalithaa had made clear who would have the reigns of
party power following her demise.
As the AIADMK welcomes their Chinnamma (little mother), here are few
facts you should know about Sasikala and her rise to power.
1 Sasikala was born in Mannargudi, a small town in Tamil Nadu. Her
parents, though not very rich, belonged to the influential kallar
community. Sasikala was introduced to Jayalalithaa about twenty years
later in 1976 through the district collector of Cuddalore, V S
Chandralekha.
WATCH VIDEO | Sasikala Natarajan Appointed AIADMK General Secretary
Sasikala Natarajan Appointed AIADMK General Secretary

2. When Sasikala first met Jayalalithaa, she worked as a video
recorder. Her husband at this point in time had lost his job and her
family was going through a rough path with finances. Following her
introduction to Jayalalithaa, Sasikala started recording all her
public events. With time their friendship grew, and she would be seen
alongside Jayalalithaa in all her rallies and other events.
3. After the death of Jayalalithaa’s political mentor MGR in 1987,
Sasikala is said to have offered emotional support to Jayalalithaa. In
1989, she moved into the late chief minister’s residence at Poes
Garden and is reported to have got 40 domestic helps with her from her
hometown.
sasikala, sasikala natarajan, AIADMK, AIADMK general secretary,
jayalalithaa, jayalalithaa death, new general secretary of AIADMK, who
is sasikala, Indian Express After the death of Jayalalithaa’s
political mentor MGR in 1987, Sasikala is said to have offered
emotional support to Jayalalithaa. (PTI)
4. Sasikala along with her husband and extended family had taken
complete control over AIADMK functioning. She was in fact described by
Jayalalithaa as her udanpiravaa sagodhari (sister not related through
blood). A crucial milestone in the relationship between the two was
when Jayalalithaa’s foster son, Sudhakaran, who was also nephew of
Sasikala was married off to the granddaughter of actor, Sivaji
Ganesan. The opulence showered in the wedding had left Tamil Nadu
stunned. Following the wedding and the controversy surrounding it,
Sudhakaran maintained a distance with Sasikala.
5. The following year in 1996, the AIADMK lost the state elections,
and Sasikala was arrested on orders of the DMK led government for
violating the Foreign Exchange Reugulation Act (FERA). While
Jayalalithaa did distance herself from Sasikala following her arrest,
things soon smoothed out.
6. The stumbling block in their relationship came in 2011, when
Sasikala was dramatically ousted from the Poes Garden residence. The
move was taken by Jayalalithaa on account of reports she had of
Sasikala and her clan plotting to seize power in the event of the
former’s arrest on grounds of corruption charges. Along with her, 14
of her family were also expelled. However, the bitterness in their
relationship was short lived and Sasikala soon returned to
Jayalalithaa’s favour, though her family along with her husband
remained deposed.
sasikala, sasikala natarajan, AIADMK, AIADMK general secretary,
jayalalithaa, jayalalithaa death, new general secretary of AIADMK, who
is sasikala, Indian Express While Sasikala has been a noticeable
public figure since the 1980s, she was especially involved in the
party politics since the time Jayalalithaa fell ill. Source: courtesy:
Nakkeeran)
7. When Jayalalithaa was arrested on account of the Tamsi land scam in
2014, Sasikala was arrested along with her for a period of four years.
She was also asked to pay a fine of Rs. 10 crore.
8. While Sasikala has been a noticeable public figure since the 1980s,
she was especially involved in the party politics since the time
Jayalalithaa fell ill. After Jayalalithaa’s death, her entire family,
earlier expelled by the former chief minister, suddenly made a
controversial re-appearance.
9. Sasikala has never made a public speech and definitely lacks the
charisma and personality that marked Jayalalithaa’s career. However,
the ingenuity with which she has kept the party glued together post
the death of Amma is being regarded as her achievement and the reason
for her succession to the role of General Secretary.

ஸ் பெ

unread,
Jan 6, 2017, 2:25:44 AM1/6/17
to panbudan

சசிகலாவுக்கு 20 கேள்விகள்!

பொதுச்செயலாளர் பேச்சு...

சிகலா முதன்முறையாக மைக் முன்பு வந்து நின்றிருக்கிறார். அவருடைய `அக்கா’வைப் போலவே எழுதிவைத்த உரையை ஏற்ற இறக்கத்தோடு முழங்கியிருக்கிறார். நவரசங்களும் கொட்டிய அவருடைய பேச்சு சொல்வது என்ன? அந்தப் பேச்சில் ஏகப்பட்ட முரண்பாடுகள். அதில் எழும் கேள்விகள் என்னென்ன?

1. ‘‘என் உயிரில் நான் சுமக்கிற அம்மாவை, எந்நாளும் நெஞ்சத்தில் சுமந்து வாழும், என் அன்பு சகோதர, சகோதரிகளே!’’ என உரையைத் தொடங்கினார். ‘உயிரில் சுமந்த’ ஜெயலலிதாவின் உடல்நிலை தொடங்கி, உயிர் போகும் வரையில் அவருக்கு என்ன நடந்தது என்பதை மறைத்தது ஏன்? 

2.
 ‘‘என்னை பொதுச்செயலாளராக ஒரு மனதாகத் தேர்வு செய்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி’’ எனச் சொன்னார். உங்களைத் ‘தேர்வு’ செய்யவில்லை. ‘நியமனம்’தான் செய்திருக்கிறார்கள்.  இது உங்களுக்குத் தெரியாமல் போனது ஏன்? 

3. ‘‘ஆயிரம் ஆயிரம் கூட்டங்களுக்கு நான் அம்மாவோடு சென்றிருக்கிறேன். ஆனால், இன்று, மேடைக்கு வந்து பேசுகிற சூழல் உருவாகி இருக்கிறது’’ என்கிறார். ‘அரசியலில் ஈடுபடும் எண்ணமோ பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசையோ எனக்குத் துளியும் கிடையாது’ என 2012 மார்ச் 28-ம் தேதி நீங்கள் வெளியிட்ட அறிக்கை உங்களுக்குத் தெரியாமல் வெளியானதா?

4.
 ‘‘நன்கு உடல் நலம் தேறிவந்த நம் அம்மா... அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு வருகிற அளவுக்கு உடல் நிலையில் முன்னேற்றம்...’’ என்றெல்லாம் திரும்பத் திரும்ப அழுத்திச் சொல்வதற்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன? 

5. ‘‘75 நாட்கள் எவ்வளவோ போராட்டங்கள்’’ எனச் சொல்லியிருக்கிறார். அந்தப் போராட்டங்களின் ஒரு படத்தைக்கூட ஏன் வெளியிடவில்லை?

6. ‘‘நம் அம்மாவுக்கு இந்த இயக்கம்தான் வாழ்க்கை. எனக்கோ அம்மாதான் வாழ்க்கை’’ என்கிறவர், அவர் இறந்த 26-வது நாளிலேயே இயக்கம்தான் வாழ்க்கை என வந்தது ஏன்?

7. ‘‘சில நாட்களில் அம்மாவை பூரண நலம் பெற்ற முழுமதியாக போயஸ் தோட்டத்துக்கு அழைத்து வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன்’’ எனச் சொல்கிறார். அந்த நம்பிக்கைக்கு என்ன ஆதாரம்?

8. ‘அழைத்து வந்துவிடுவோம்’ என்பதற்குப் பதிலாக ‘அழைத்து வந்துவிடுவேன்’ என ஜெயலலிதாவைப் போலவே ‘நான்’ என்கிற மனோபாவம் வெளிப்பட்டது ஏன்?

9. ‘‘10 கோடி தமிழ் மக்களின் பாசத் தாயை இறைவன் பறித்துக்கொண்டான்’’ எனச் சொல்கிறார். இந்த மக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் மரணம் பற்றிய சந்தேகம்தான் இருக்கிறது. அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்.
10. ‘‘33 வருடங்களாக அம்மாவுடன் மட்டுமே என் வாழ்நாட்களைக் கரைத்துவிட்டேன்’’ என்கிறீர்கள். அது சங்கடமான வாழ்க்கையா? அப்படி வாழ்க்கையை கரைத்துவிட்டதற்கு காரணம் என்ன?

11. 
``அக்கா, கோட்டைக்குக் கிளம்பிட்டீங்களா? மதிய சாப்பாட்டுக்கு என்ன வேண்டும்?’’ என அனுதினமும் அம்மாவைப் பற்றிய சிந்திப்புகளிலேயே என் வாழ்நாட்களை செலவழித்தவள் நான்’’ என சொல்லியிருக்கிறீர்கள். ‘அக்காவின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்திருக்கிறேன்’ எனச் சொல்லும் நீங்கள், கோட்டைக்குப் போக ஆசைப்பட்டது ஏன்?

12. ‘‘அம்மாவும், கழகமுமே உலகம் என்று வாழ்ந்த என்னை, கழகக் கண்மணிகளுக்காகவும் நான் வாழ வேண்டும் என்கிற உறுதியை எனக்குள் எடுக்க வைத்திருக்கிறது’’ எனச் சொல்கிறார் சசிகலா. ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆனபோது இந்தக் கண்மணிகள் உயிர் தியாகம் செய்தார்களே... அந்தக் கண்மணிகளிடம் இருந்து அம்மாவை மறைத்தது ஏன்?

13. ‘‘எத்தனையோ போராட்டங்கள், அரசியல் நெருக்கடிகள், எதிரிகளின் சூழ்ச்சிகள், ஏற்றத்தாழ்வுகள் என எவ்வளவோ வந்தபோதிலும், அதில் எல்லாம் அம்மா வென்று வருவார்; நான் உறுதுணையாக இருப்பேன்’’ என்கிறீர்கள். இந்தச் சோதனைகள் எல்லாம் யாரால் வந்தன? சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவைத் தள்ளியது யார்? உங்கள் குடும்பத்தினருக்கு அதில் பங்கு இல்லையா? அனைவரும் சேர்ந்துதானே நீதிமன்றப் படியேறினீர்கள். இதைத்தான் போராட்டம், நெருக்கடி எனச் சொல்கிறீர்களா?

14. ‘‘அம்மாவின் அரசியல் பிரவேசம், பெண் இனத்துக்கே வழிகாட்டுதலையும், நம்பிக்கையையும் கொடுத்தது. இன்றும் அம்மாவுக்குப் பிறகு ஒரு பெண்ணாக, நான் பொதுச்செயலாளர் கடமையை ஆற்றுவதற்கு முன் வந்திருக்கிறேன்’’ எனச் சொல்வது ஜெயலலிதாவைப் போலவே உங்களுக்கும் அரசியல் பாரம்பர்யம் உள்ளது என்று சொல்ல வருகிறீர்களா? 

15 ‘‘தந்தை பெரியாரின் தன்மானம், பேரறிஞர் அண்ணாவின் இனமானம், புரட்சித் தலைவரின் பொன்மனம்’’ என்றெல்லாம் எதுகை மோனை நடையில் பேசுகிறீர்கள். தலைமைச்செயலகத்துக்குள் சோதனை போட்டபோதும் துணை ராணுவப் படை வந்தபோதும் ‘தன்மானம்’ எங்கே போனது? ‘இனமானம்’ எங்கே இடறியது? 

16. ‘‘அம்மா, நமக்குக் கற்றுத் தந்திருக்கிற அரசியல் பாடங்களை, பாதத் தடங்களை, வேதமெனப் பின்பற்றுவோம்’’ எனச் சொல்கிறார். உதய், துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், ஜி.எஸ்.டி. என ஜெயலலிதா எதிர்த்தத் திட்டங்களை எல்லாம் ஏன் இப்போது ஆதரிக்கிறீர்கள்? அந்தப் பாதத் தடங்களில் பயணிக்காமல் மத்திய அரசுக்கு வெண்சாமரம் வீசுவது அம்மாவுக்குச் செய்யும் துரோகம்தானே? இதுதான் அவர் காட்டிய பாதையா? அதில்தான் உங்கள் பயணமா?

17. ‘‘அண்ணா, புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, இவர்கள்தான் அ.தி.மு.க-வின் அடையாளங்கள். இவர்களைத் தவிர, வேறு யாரும் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்கள் என்பது உறுதி’’ எனச் சொல்கிறீர்கள். பிறகு எப்படி உங்கள் படத்தை மட்டும் பெரிதாகப் போட்டு ஃபிளெக்ஸும் பேனர்களும் முளைக்கின்றன?

18.
 ‘‘நம் அம்மா காட்டிய வழியில் இருந்து இம்மிகூட விலகாமல் இந்த இயக்கத்தைக் கொண்டு செலுத்துவோம்’’ என்கிறார். பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரூபாய் ஏற்றினாலே ஜெயலலிதாவிடம் இருந்து கண்டன அறிக்கை வரும். ஆனால், ‘செல்லாக்காசு’ அறிவிப்புக்குப் பிறகு மக்கள் வீதியில் நிறுத்தப்பட்டபோதும் ஒரு அறிக்கைகூட வரவில்லையே... இதுதான் இம்மியளவா?

19.
 ‘‘தமிழக மக்களால் ஆராதிக்கப்படுகிற கழக அரசின் மீதான மக்களின் அன்பில் குன்றிமணி அளவுக்கும் குறை வராது பாதுகாப்போம்’’ என முழங்குகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்த மத்திய அரசு, அதன்பிறகு பல்டி அடித்ததை ஜெயலலிதா இருந்திருந்தால் சும்மா விட்டிருப்பாரா? ஆனால், குன்றிமணி அளவுகூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே?

20.
 ‘‘தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று, நேர் வழி சென்றால், நாளை நமதே’’ என்று பாடினீர்கள். நாளை நமதே என்று எம்.ஜி.ஆர் சொன்னது உங்களுக்காகத்தானா?

- எஸ்.ஏ.எம். பரக்கத் அலி
http://www.vikatan.com/juniorvikatan/2017-jan-08/politics/127354-20-questions-to-admk-sasikala.art

ஸ் பெ

unread,
Jan 6, 2017, 2:40:11 AM1/6/17
to panbudan

மிஸ்டர் கழுகு: “சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால்... அம்மா இருந்திருக்க மாட்டார்!”

‘‘சசிபாரதம் ஆரம்பம்!”

அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இருந்து கழுகார் அனுப்பிய தலைப்பு இதுதான். அடுத்த சில மணி நேரத்தில் அலுவலகத்தில் லேண்ட் ஆனார் கழுகார்.

‘‘இதுவரை அம்மா தி.மு.க-வாக இருந்தது. இனி, அது சின்னம்மா தி.மு.க. ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவி அம்மா வடிவில் கண்டோம். புரட்சித் தலைவி அம்மாவை மதிப்புக்குரிய சின்னம்மா வடிவில் கண்டு, கழகப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவோம்’ என்று சூளுரைத்துள்ளார்கள். ‘அம்மாவின் வழிகாட்டுதல்களை நினைவில்கொண்டு சின்னம்மா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்றுவோம்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இனி, மொத்தமும் சசிகலா கையில்தான். அவரே அ.தி.மு.க-வை ஆக்கவும் அழிக்கவும் வல்லவராக ஆகிவிட்டார். இதுவரை பின் சீட் டிரைவிங்கில் இருந்து வந்த சசிகலா, முன் சீட்டுக்கு வந்துவிட்டார். அதனால்தான் `சசிபாரதம் ஆரம்பம்’ என்று சொன்னேன்” என்றபடி சொல்ல ஆரம்பித்தார் கழுகார்.

‘‘சசிகலா தனது காய் நகர்த்தலை கன கச்சிதமாக நடத்தி முடித்துவிட்டார். பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதாக இருந்தால் 20 நாட்கள் அவகாசம் தேவை. அதற்குள் யாராவது சிக்கல் செய்யலாம். அதனால், காதும் காதும் வைத்தது மாதிரி சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்துவிட்டார்கள். அதாவது, இப்போது நடந்துள்ளது பொதுச்செயலாளர் தேர்தல் அல்ல. பொதுச்செயலாளர் நியமனம்தான். இனிமேல்தான் தேர்தலே நடத்த வேண்டும்.”

‘‘ஓ! அப்படியா?”

‘‘ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டதற்கு மறுநாளில் இருந்து, அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளராக சசிகலா வரவேண்டும் என அ.தி.மு.க-வுக்குள் கோரிக்கைகள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின. சசிகலாவை சந்திக்க தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க நிர்வாகிகள் போயஸ் கார்டனுக்குப் படையெடுத்தனர். ‘சின்னம்மாதான் பொதுச்செயலாளர் ஆக வேண்டும்’ என்று இவர்கள் வலியுறுத்தினர். சில ஊடகப் பிரமுகர்களும் சசிகலாவை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்புகள் மூலம் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடம் சசிகலாவுக்குத்தான் என்ற பிம்பத்தை அ.தி.மு.க-வில் படிப்படியாகக் கட்டமைத்தனர். ‘சின்னம்மாதான் அடுத்த பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்படுவார்’ என்று அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பொன்னையன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

சசிகலா பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என்று கட்சியின் கிளை அமைப்புகள், மாவட்ட அமைப்புகளில் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பிவைத்தனர். சசிகலாவுக்கு ஆதரவாக நமது எம்.ஜி.ஆரில் கட்டுரைகளும், விளம்பரங்களும் வெளியிடப்பட்டன. நாளிதழ்களிலும் விளம்பரங்கள் வரிசைகட்டின. சசிகலாவுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டன. அ.தி.மு.க பொதுக்குழுவைக் கூட்டக் கூடாது என்று அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், கட்சியின் பொதுக்குழு கூடுவதைத் தடுக்க முடியாது என்று மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டனர்.”

‘‘இந்த பீடிகைகள் எல்லாம் எதற்காக நடந்தன?”

‘‘சசிகலா நேரடியாக பொதுச்செயலாளராக வர முடியாது என்பதால்தான் இதை எல்லாம் செய்தார்கள். அ.தி.மு.க-வில் உறுப்பினர் ஆகி 5 ஆண்டுகள் நிறைவடைந்த ஒருவரைத்தான் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க-வின் ‘பை-லா’ சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் சசிகலா இந்தக் கட்சியில் சேர்க்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகும். எனவே, சசிகலா பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லை என்பதால் அ.தி.மு.க-வின் ‘பை-லா’ திருத்தப்படலாம் என்று கூறப்பட்டது. அப்படி எந்தத் திருத்தமும் இதில் வரவில்லை. பொதுச்செயலாளராக இப்போது நியமனம் செய்துவிட்டு, பின்னர், தேர்தல் வைத்து தேர்ந்தெடுத்துக்கொள்ளத் திட்டமாம்.”

‘‘ம்!”

‘‘தம்பிதுரை அல்லது எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக போட்டுவிட்டு சில மாதங்கள் கழித்து சசிகலாவை பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யலாம் என்ற திட்டம் இருந்தது. அல்லது ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்துவதற்காக ஓராண்டு காலம் கட்சிக்கு பொதுச்செயலாளர் இல்லாமல் அவரது நாற்காலியைக் காலியாகவைத்து இருப்பது. அல்லது சசிகலாவை துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்வது... இப்படி பல யோசனைகள் இருந்தனவாம். இவை அனைத்தையும் சசிகலா குடும்பத்தினர் ஏற்கவில்லையாம். ‘சர்ச்சை எப்போதும் இருக்கத்தான் செய்யும். இதைப் பார்த்தால் சின்னம்மா எப்போதும் பொதுச்செயலாளர் ஆக முடியாது. இந்தப் பரபரப்பிலேயே அவரை பொதுச்செயலாளர் ஆக்கிவிட வேண்டும்’ என்று அந்தக் குடும்பத்தினர் சொல்லி இருக்கிறார்கள். 

இந்த நிலையில், பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட சசிகலா புஷ்பாவுக்காக விண்ணப்பம் வாங்க, கடந்த 28-ம் தேதி அ.தி.மு.க அலுவலகம் வந்த அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன் தாக்கப்பட்ட சம்பவம் காரணமாகக் கடைசிக்கட்டப் பரபரப்பு எழுந்தது. இதைக் காரணம் காட்டி நீதிமன்றத்தை அணுகி பொதுக்குழுவுக்குத் தடைபோடுவார்களோ என்றெல்லாம் பயம் இருந்தது.”

‘‘அப்படியா?”

‘‘இதனால் 28-ம் தேதி இரவே, பொதுக்குழு நடந்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபம் மற்றும் மண்டபத்தைச் சுற்றி உள்ள பகுதிகளை போலீஸார் தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்திருந்தனர். 29-ம் தேதி காலையில் மண்டபத்தின் அருகே கோயம்பேடு - பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டிருந்தது. மண்டபத்தைச் சுற்றி இருந்த அப்பார்ட்மென்ட்களில்கூட போலீஸார் நின்றிருந்தனர். சசிகலாவுக்கு எதிராக யாரும் கறுப்புக் கொடியுடன் நுழைந்துவிடக் கூடாது என்பதில் போலீஸார் கவனமாக இருந்தனர். காலை 7 மணிக்கெல்லாம் அ.தி.மு.க நிர்வாகிகள் பேருந்துகள் மூலம் பொதுக்குழுவுக்கு வந்தனர். ஓ.பி.எஸ்., தம்பிதுரை உள்ளிட்ட சிலர் மட்டும்தான் கார்களில் வந்தனர். பதற்றமும், பரபரப்புமான சூழலில் வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அ.தி.மு.க பொதுக்குழு கூடியது. பொதுக்குழு உறுப்பினர்கள் 2,770 பேரும் பங்கேற்றனர். ஜெயலலிதா பங்கேற்ற அந்தக் காலப் பொதுக்குழுக்கூட்டங்களை மாநகராட்சி கவுன்சிலராக இருந்த நூர்ஜகான் தொகுத்து வழங்கினார். ஆனால், இந்த முறை அ.தி.மு.க முன்னாள் ராஜ்யசபா எம்.பி ரபி பெர்னார்ட் தொகுத்து வழங்கினார்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது நடந்த பொதுக்குழுவின்போது பொதுக்குழு மேடையில் ஜெயலலிதா, ஓ.பி.எஸ் உள்ளிட்ட சிலர் மட்டுமே அமர்ந்திருப்பர். ஆனால், அ.தி.மு.க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பொதுக்குழு மேடையில் ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, அன்வர் ராஜா, சரோஜா உள்ளிட்ட 45 பேர் உட்கார்ந்திருந்தனர். 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை எடப்பாடி பழனிசாமி முன்மொழிய, தம்பிதுரை வழிமொழிந்தார். 14 தீர்மானங்களைப் படித்து முடித்த உடன், பொதுக்குழு உறுப்பினர்கள் சுரத்தில்லாமல் கைகளைத் தட்டினர்.”

‘‘சோகத்தில் இருந்திருப்பார்கள்!”

‘‘14 தீர்மானங்களில் 5-வது தீர்மானம்தான் முக்கியமான ஒன்று. ‘பொதுச்செயலாளர் முதல்வர் அம்மா விண்ணுலகம் சேர்ந்த நிலையில் அ.தி.மு.க-வைக் காப்பாற்றவும், வழிநடத்தவும், கட்சி பொதுச்செயலாளர் நியமனத்துக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது’ என்று தீர்மானத்தில் கூறி இருக்கிறார்கள். சசிகலா,  அ.தி.மு.க-வில் 5 ஆண்டுகள் உறுப்பினர் ஆக இல்லாத நிலையில் அவரைப் பொதுச்செயலாளராக தற்காலிகமாக நியமிப்பதாகவே பொதுக்குழுவில் சொல்லி இருக்கின்றனர். `சட்டவிதி 20 பிரிவு(2)-ல் கூறப்பட்டுள்ளபடி கழகப் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படும்வரை மதிப்புக்குரிய சின்னம்மா சசிகலா அவர்களை அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆக நியமிப்பது என பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றுகிறது’ என்றும் பொதுக்குழு தீர்மானத்தில் சொல்லி இருக்கின்றனர். 

சசிகலா பொதுச்செயலாளராக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உடனேயே மண்டபத்துக்கு வெளியே, பேனர் வைத்துவிட்டனர். `அம்மாவின் ஒரே அரசியல் வாரிசு எங்கள் தியாகச் செல்வி சின்னம்மா’ என்று  புகழ்ந்து தள்ளியிருந்தார்கள்.”

‘‘பொதுக்குழுவில் பேசும் வைபவம் நடந்ததா?”

‘‘பொதுக்குழுவில் உறுப்பினர்கள் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தனர். முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியபோது, ‘1996-ம் ஆண்டு போடப்பட்ட வழக்கில் சின்னம்மா அப்ரூவர் ஆகி இருந்தால், அம்மாவும் இருந்திருக்க மாட்டார்; அ.தி.மு.க-வும் இருந்திருக்காது’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் கொடுத்தார். பொன்னையன் பேசியபோது, ‘சின்னம்மா மட்டுமல்ல, சின்னம்மா குடும்பமே அ.தி.மு.க-வுக்காக உழைத்திருக்கிறது. எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க கொடி ஏற்றமுடியாத நிலை இருந்த கிராமங்களில் திவாகரன் அரிவாளுடன் சென்று கொடி ஏற்றினார்’ என்றவர், எம்.நடராஜன் பெயரைக் குறிப்பிடாமல் ‘சின்னம்மாவின் கணவர், கட்சிக்காக நிறைய ஆலோசனைகள் கூறி இருக்கிறார். சின்னம்மா குடும்பமே பண்ணையார் குடும்பம்’ என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தார்.

‘அம்மாவைப் பார்க்க உங்களை அனுமதிக்கவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கலாம். உங்களது பாசம் எங்களுக்கும் புரிகிறது. நீங்கள் சென்று சந்திப்பதால் அம்மாவுக்கு இன்ஃபெக்‌ஷன் ஆகிவிடக்கூடாது என்பது மட்டுமல்ல. உங்களுக்கும் இன்ஃபெக்‌ஷன் வந்துவிடக்கூடாது என்பதால்தான் இந்த முடிவெடுத்தோம்’ என்றும் பொன்னையன் சொன்னார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியபோது, ‘அ.தி.மு.க. என்பது ஒரு விமானம் போன்றது. அதில் ஒரு பைலட்டும் ஒரு கோ பைலட்டும் இருப்பார்கள். ஆபத்து வந்தால் நம்மைக் காப்பாற்றுவதற்குத்தான் இந்த ஏற்பாடு. அம்மா பைலட். சின்னம்மா கோ பைலட்’ என்று விளக்கம் அளித்தார்”

‘‘புல்லரிக்க வைக்கிறார்களே?”

 ‘‘பொதுக்குழுவின் தீர்மானத்தை எடுத்துக் கொண்டு ஓ.பி.எஸ்., தம்பிதுரை உள்ளிட்டோர் போயஸ்கார்டன் பறந்தனர். ஓ.பி.எஸ் தீர்மானத்தின் நகலை சசிகலாவிடம் கொடுத்தார் ஓ.பன்னீர் செல்வத்திடம்  இருந்து நகலை வாங்கிய சசிகலா, கார்டனில் இருந்த ஜெயலலிதாவின் படத்தைப் பார்த்து அழுதார். அவருக்கு அருகில் தினகரன், டாக்டர் வெங்கடேஷ், இளவரசியின் மகன் விவேக் ஆகியோர் இருந்தார்கள். பின்னர் ஓ.பி.எஸ்., தம்பிதுரை இருவரும் சசிகலாவிடம் பேசிக்கொண்டிருந்தனர். தீர்மான நகலை ஜெயலலிதா படம் முன் வைத்து சசிகலா வணங்கினார். அதன்பிறகு ஓபி.எஸ். வெளியில் வந்தார். கார்டனை விட்டு வெளியே வந்த ஓ.பி.எஸ்., ‘பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதை சின்னம்மா ஒருமனதாக ஏற்றுக்கொண்டார்’ என்று கூறினார். வேறு சில கேள்விகளை நிருபர்கள் கேட்டபோது, சிரித்துக் கொண்டே காரில் ஏறிச் சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் ஓ.பி.எஸ்-ஐ வரச்சொன்ன சசிகலா, அவரிடம், ‘பொதுக்குழு கூட்டத்தை முடிக்கச் சொல்லுங்கள். நான் பொதுக்குழுவுக்கு வரவில்லை’ என்று சொன்னாராம். இந்தத் தகவல் அங்கு போய்ச் சேர்ந்தது!”

‘‘ம்!”

‘‘இதன் பின்னர்தான் பொதுக்குழுவில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 12.04-க்கு மேடையேறி, ‘சின்னம்மா பொதுச்செயலாளர் ஆக  இருப்பதற்கு  சம்மதம் தெரிவித்து விட்டார்’ என்று அறிவித்தார். அதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கைகளைத் தட்டி வரவேற்றனர்.  அதன் பின்னர் பொதுக்குழுக் கூட்டம் முடிவுக்கு வந்தது. சசிகலா பொதுச்செயலாளர் ஆக அறிவிக்கப்பட்ட தகவல் கார்டன் வந்து சேரும் முன்னர், சில முக்கியஸ்தர்கள் பொக்கேயுடன் கார்டன் வந்துவிட்டனர். அதிகாரிகளைத் தொடர்ந்து சசிகலா குடும்பத்தினர் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.

‘‘பொதுக்குழுவில் வேறு என்ன விசேஷம்?”

‘‘போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதாவின் நாற்காலி தனி காரில் கொண்டுவரப்பட்டது. அந்த நாற்காலியை மேடையில் போட்டு அதில் ஜெயலலிதா படத்தை வைத்தார்கள். நடுநாயகமாக அந்தப் படம் இருந்தது. அதன்முன் சிறு மேஜை வைக்கப்பட்டது. அதில் பூக்கள் இருந்தன. கண்ணீருடன் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள். ஓ.பன்னீர்செல்வம் அழுதார். நிர்வாகிகளும் அழுதார்கள். ‘அம்மா இறந்த அன்று அமைச்சரவை பதவி ஏற்றது. அப்போது யாருமே அழவில்லை. இன்று அழுகிறார்கள்’ என்று ஒருவர் கமென்ட் அடித்தார்.!”

‘‘அப்படியா?”  

‘‘பொதுக்குழுவில் காலையில் இட்லி, பொங்கல், கிச்சடி என டிபன் வழங்கப்பட்டது. மதியம், காய்கறி வகைகளுடன் காரைக்குடி செட்டிநாடு சைவ சாப்பாடு போடப்பட்டது. ஜெயலலிதா இருந்தபோது நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டங்களின்போது சிக்கன், மட்டன் என அசைவ சாப்பாடு போடப்படும். இந்த முறை அசைவம் இல்லை என்றதால் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஏமாற்றத்துடன் சைவ சாப்பாட்டை சாப்பிட்டனர். ‘ஜெயலலிதா இறந்த துக்கத்தை அனுஷ்டிப்பதற்காக சைவம் போடப்பட்டது’ என்று சொல்கிறார்கள். மொத்தத்தில் சசிகலா தனது ஆபரேஷனை அமைதியாக ஆரம்பித்துவிட்டார். அவருக்கு எதிர்ப்பு என்பது அந்த மண்டபத்தில் இல்லை!”

‘‘சிறப்பு அழைப்பாளர்களை அழைக்கவில்லையே?”

‘‘சிறப்பு அழைப்பாளர்கள் வந்தால் அவர்களில் யாராவது சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால் அந்தமாதிரியான நபர்களையே அழைக்கவில்லையாம்.!” 

‘‘சசிகலா புஷ்பா சிக்கல் தொடருமா?”

 ‘‘அவர் குடைச்சல் தொடரும் என்றுதான் சொல்கிறார்கள். பொதுச்செயலாளராகப் போட்டியிட தன் கணவர் லிங்கேஸ்வர திலகரைஅனுப்பி விண்ணப்பம் வாங்கி வரச் சொல்லியிருந்தார் சசிகலா புஷ்பா. 28-ம் தேதி அ.தி.மு.க அலுவலகம் வந்த லிங்கேஸ்வர திலகரை அங்கிருந்த ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரைதான் முதலில் பார்த்திருக்கிறார். தனது நண்பர் சிந்து ரவிச்சந்திரனிடம் சொல்லி, ‘அவரை அடிச்சு விரட்டு’ என்று  உத்தரவு போட்டாராம். அதன்படிதான் சிந்து ரவிச்சந்திரன், லிங்கேஸ்வர திலகரை அடித்தார் என்கிறார்கள். சட்டப் போராட்டத்தை சசிகலா புஷ்பா தொடர்வார் என்றே சொல்லப்படுகிறது” என்றபடி எழுந்த கழுகார்,

‘‘சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜோசப் என்பவர், ‘ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுத் தாக்கல் செய்து இருந்தார். இது நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி, தனது கருத்தாக சில விஷயங்களைச் சொல்லி இருக்கிறார். ‘ஜெயலலிதா மரணத்தில் எனக்கும் சந்தேகம் இருக்கிறது. அவர் மருத்துவமனையில் இருந்தபோது அவரது புகைப்படத்தை வெளியிடவில்லை. இறந்தபிறகாவது மருத்துவமனைக் காட்சிகளை வெளியிட்டு இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையில் இருந்தபோது கூட புகைப்படம், வீடியோ வெளிவந்தன. ஜெயலலிதா விஷயத்தில் இதைச் செய்ய அரசு ஏன் தயங்குகிறது? ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் அங்கு ஏன் அனுமதிக்கப்படவில்லை? தொடர்ந்து பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வரும் சந்தேகங்களுக்கு, பொதுமக்கள் மற்றும் பத்திரிகைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மெளனம் காப்பது ஏன்? பிரேதப் பரிசோதனை செய்தால்தான் உண்மை வெளிவருமா?’ என்ற கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்த வார்த்தைகள் அவரது ஆர்டரில் இல்லை. ஆனால், நீதிமன்றத்தில் தனது கருத்தாகப் பதிவு செய்துள்ளார். ஜனவரி 9-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் வரப் போகிறது. 

எழும்பூர் நீதிமன்றத்தில் கீதா போட்ட வழக்கு இருக்கிறது. சசிகலா புஷ்பா உயர் நீதிமன்றத்தில் போட்ட வழக்கில்,  மாநில அரசுக்கும் அப்போலோ நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளில் இருந்து மீண்டு வருவதே சசிகலாவுக்கு பெரும் தலைவலியாக மாறிப்போகும்” என்றபடி பறந்தார்!

படங்கள்: சு.குமரேசன், ஆ.முத்துக்குமார்

ஸ் பெ

unread,
Jan 6, 2017, 2:42:21 AM1/6/17
to panbudan

கார்... சேர்... ஹேர்! - ஜெயலலிதாவாக மாறிய சசிகலா!

ஜெயலலிதாவின் கார் பின் சீட்டில் அமர்ந்தும் ஆட்சியின் நிழலாகவும் இருந்துவந்த சசிகலா, முன் சீட்டுக்கு வந்துவிட்டார். நிழல் நிஜமாகிவிட்டது.

ஜெயலலிதா, தலைமை அலுவலகம் வந்தால் போயஸ் கார்டன் டு ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு வரை திருவிழாதான். அது வழக்கமான சம்பிரதாயம். முதன்முறையாக சசிகலா பொறுப்பேற்று வரும்போது சும்மா இருப்பார்களா? ஜெயலலிதாவுக்கு இல்லாத அளவுக்குப் பதவிக்காகப் பட்டையை கிளப்பிவிட்டார்கள் கட்சியினர். முதல்வர் பதவியேற்கும்போது அண்ணா, எம்ஜி.ஆர் சமாதிகளில் அஞ்சலி செலுத்துவது ஜெயலலிதாவின் ஸ்டைல். அதை ஃபாலோ அப் செய்தார் சசிகலா. பொதுக்குழு முடிந்து ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தவர்கள் சமாதிக்கு வந்து அட்டெண்டன்ஸ் போட்டார்கள். ஜெயலலிதா பயன்படுத்திய TN07 AD 0006 பதிவு எண் கொண்ட காரில் முன் சீட்டில் அமர்ந்தபடி ஜெயலலிதா சமாதிக்கு வந்தார் சசிகலா. முதல்வர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அவைத்தலைவர் மதுசூதனன் என முன்னணித் தலைவர்கள் பலரும் சசிகலாவுக்காகக் காத்திருந்தார்கள். பொதுக்குழுத் தீர்மானத்தை ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து வணங்கினார் சசிகலா. அங்கே அஞ்சலி வைபவம் முடிந்ததும் எம்.ஜி.ஆர்., அண்ணா சமாதிகளுக்கும் சென்றார். 

அடுத்த நாள். கட்சித் தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள். ‘‘புரட்சித் தலைவி’’ கோஷத்துக்குப் பதிலாக ‘‘சின்னம்மா வாழ்க’’ என ஸ்ருதி மாறியிருந்தது. கூட்டம் சேர்க்கும் பொறுப்பு சென்னையை சேர்ந்த மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நிர்வாகிகள் மட்டுமே சசிகலாவை ஆதரிக்கும் நிலையில் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த ஏற்பாடு. தலைமை அலுவலகத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலைக்குச் செல்ல மேடை, சசிகலாவை வரவேற்க நின்ற நிர்வாகிகள் என ஜெயலலிதாவுக்குத் தரப்பட்ட மரியாதைக் காட்சிகள் அப்படியே ரிப்பீட் ஆகின. முதல்வர் பன்னீர்செல்வம் கார் முதலில் வந்து நின்றது. அவர் இறங்கிச் சென்றவுடன் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் ஓடிவந்து ‘‘சின்னம்மாவின் கார் இங்கேதான் நிற்கும். உடனடியாக முதல்வர் காரை வெளியே எடுங்கள்’’ என விரட்டினார்கள். பன்னீர் கார் வெளியேறியது. கூட்டம் முடிந்து சசிகலா சென்ற பிறகு, தனது காரைத் தேடி முதல்வர் பன்னீர்செல்வம் ரோட்டுக்கு வர வேண்டியிருந்தது.

சசிகலா வருகைக்காகப் புத்தம் புதிய சஃபாரி உடை அணிந்த போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சஃபாரி உடைக்குள் வாக்கி டாக்கியும் பிஸ்டலும் தெரிந்தன. வடிகட்டித்தான் உள்ளே நிர்வாகிகளை அனுமதித்தனர் போலீஸார். மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளும் நுழைந்தபோது அடையாள அட்டையைக் கேட்டனர். ‘‘எங்களுக்கு உறுப்பினர் அட்டைதான் கொடுப்பாங்க. இது என்ன ஃபேக்டரியா? என்ன பொறுப்புன்னு போட்டு கார்டு கொடுக்குறதுக்கு?’’ என எகிறினார்கள். ‘‘அம்மா வந்தபோதுகூட இவ்ளோ கெடுபிடி இல்லை’’ எனப் புலம்பினார் கள். அலுவலகத்துக்குள் குறைவான தொண்டர் களையே அனுமதித்தனர். கூட்டம் குறைவாக இருந்தால் வெளியில் நின்ற மகளிர் அணியினரை உள்ளே அழைத்துச் சென்றார்கள். பால்கனியில் இருந்து மைக் பிடித்த செங்கோட்டையன், அங்கு நின்ற ஆண்களைப் பின்னால் செல்லும்படி கூறினார். அந்தப் பகுதி முழுவதும் மகளிர் அணியினர் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர்.

சசிகலா வருவதற்கு முன்பு கார்டனில் இருந்து ஜெயலலிதா பயன்படுத்திய நான்கு குஷன் நாற்காலிகள் எடுத்து வரப்பட்டன. கீழ்த் தளத்துக்கு இரண்டு, மேல் தளத்துக்கு இரண்டு என 4 நாற்காலிகளும் கொண்டு செல்லப்பட்டன. அந்த நாற்காலிகளைத்தான் சசிகலா பயன்படுத்தினார். ஜிம்மி ஜிப் கேமரா, அகண்ட எல்.இ.டி திரைகள் என நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக ஜெயா டி.வி-யின் 11 யூனிட்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றின. வெளியே பிரமாண்ட திரை எல்லாம் ஜெயலலிதா வந்தபோது வைக்கப்பட்டது கிடையாது. ஜெயலலிதாவால் முன்பு நீக்கப்பட்ட டி.டி.வி தினகரனும், டாக்டர் வெங்கடேஷும் அலுவலகத்துக்கு வந்தனர். நான்கு வாகனங்கள் பாதுகாப்புக்கு அணிவகுத்து வர ஜெயலலிதா பயன்படுத்திய TN09 BE 6167 லேண்ட் க்ரூஸர் காரில் வந்து இறங்கினார் சசிகலா. ஜெயலலிதா பெயரில் இருக்கும் இந்த கார், 2010 ஆகஸ்ட்டில் வாங்கப்பட்டது. கார் டேஷ் போர்டில் விநாயகர், பார்த்தசாரதி, ஆஞ்சநேயர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அரசு வீடியோகிராபர் பாபு அ.தி.மு.க. நிகழ்ச்சியை கவரேஜ் செய்து கொண்டிருந்தார்.

கீழ்த் தளத்தில்தான் பொதுச்செயலாளர் அறை இருக்கிறது. அதைப் புதுப்பித்திருந்தார்கள். தரையில் புது டைல்ஸ்கள், இன்டீரியர் மாற்றம் எல்லாம் செய்திருந்தார்கள். அங்கே சென்று சீட்டில் உட்கார்ந்து கையெழுத்துப் போட்டார். பொறுப்பேற்பு சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு முதல் தளத்துக்கு லிஃப்ட்டில் போனார். இந்த லிஃப்டும் ஜெயலலிதா மட்டுமே பயன்படுத்துவது. பால்கனியில் நின்றபடி தொண்டர்களுக்கு போஸ் கொடுத்தார். இதுவும் ஜெயலலிதாவின் ஸ்டைல். வழக்கமான கம்மலை அணியாமல் ஜெயலலிதா அணிந்து வரும் கம்மலைப் போலவே அணிந்துவந்தார்.  ஹேர் ஸ்டைலும் மாறியிருந்தது. கூந்தலை வலை போட்டு மூடியிருந்தார்.

முதல் மாடிக் கூட்ட அரங்கத்தில் சசிகலா உரையாற்றினார். அவரின் முதல் உரையை கேட்க ஏக எதிர்ப்பார்ப்பு இருந்தது. “என் உயிரில் நான் சுமக்கிற அம்மாவை, எந்நாளும் நெஞ்சத்தில் சுமந்து வாழும், என் அன்பு சகோதர, சகோதரிகளே!” என கன்னிப் பேச்சைத் தொடங்கினார். ‘‘நம் அம்மாவுக்கு இந்த இயக்கம்தான் வாழ்க்கை. எனக்கோ அம்மாதான் வாழ்க்கை. ஆனால், இறைவன் தன் அன்பு மகளை தன்னிடம் அழைத்துக் கொண்டுவிட்டார்’’ என  சொன்ன போது கண்ணீர்விட்டார். உடனே “சின்னம்மா நாங்கள் இருக்கிறோம். நீங்கள் அழக்கூடாது. உங்கள் உருவத்தில் நாங்கள் அம்மாவைப் பார்க்கிறோம்” என அ.தி.மு.க. நிர்வாகிகள் கோஷமிட்டனர். இது அரங்கத்துக்கு உள்ளே நடந்தது. ஆனால், வெளியே இருந்த தொண்டர்கள் மத்தியில் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. ‘‘ ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று முழக்கமிட்ட நம் அம்மாவின் வழியில் நம் பயணத்தை மேற்கொள்வோம்” என ஜெயலலிதாவின் வார்த்தைகளுடன் உரையை முடித்தார். கையில் இருந்த கர்ச்சீஃப் அடிக்கடி கண்ணுக்கும் கைக்கும் இடையே ரன்கள்  எடுத்துக் கொண்டிருந்தது.

- எஸ்.ஏ.எம். பரக்கத் அலி, எஸ்.முத்துகிருஷ்ணன், ஜெ.அன்பரசன், பிரம்மா
படங்கள்: வீ.குமரேசன், ப.சரவணகுமார்

http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=127370

ஸ் பெ

unread,
Jan 7, 2017, 7:33:38 AM1/7/17
to panbudan
Posted Date : 06:00 (04/01/2017)

“தவிடு நெல்லாகிவிட்டது... வான்கோழி மயிலாகிவிட்டது!”

மாற்றுப் பாதையில் நாஞ்சில் சம்பத்!

நாஞ்சில் சம்பத் தனது அடுத்த நகர்வைத் தொடங்கி விட்டார். அ.தி.மு.க-வில் இருந்து விலகும் முடிவுக்கு வந்துவிட்டார்.

ஜெயலலிதா மறைந்தபோது வந்து கதறி அழுத நாஞ்சில் சம்பத், அதன்பிறகு சொந்த ஊருக்குப் போய்விட்டார். சசிகலாதான் அடுத்து பொதுச்செயலாளர் ஆக வேண்டும், முதலமைச்சர் ஆக வேண்டும் என்று தினமும் நிர்வாகிகள் போயஸ் கார்டனுக்கு வந்து கோரிக்கை வைத்த கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் இல்லை. இந்த நிலையில், அவரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, சசிகலாவை ஏற்காத மனநிலையில் நாஞ்சில் சம்பத் பேசினார். 28.12.2016 தேதியிட்ட இதழில் அந்தப் பேட்டியை நாம் வெளியிட்டு இருந்தோம். ‘‘அம்மாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என்று சொல்லி இருந்தார். சசிகலாவை ஆதரிக்கும் நிலையில் அவர் இல்லை என்பது தெரிந்தது. ‘‘ஜெயலலிதா மரணத்தில் அவிழ்க்க முடியாத மர்மங்கள் இருக்கின்றன” என்றும் அந்தப் பேட்டியில் சம்பத் சொல்லி இருந்தார். இது சம்பந்தமான சசிகலா புஷ்பாவின் வழக்கால் உண்மை வெளிவர வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்த நாஞ்சில் சம்பத், ‘‘ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பேட்டியில் முதிர்ச்சி இருக்கிறது’’ என்றும் சொல்லி இருந்தார். இவை அனைத்துமே சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாடுகள். இந்தப் பேட்டிக்குப் பிறகு அவரை தொடர்புகொள்ள அ.தி.மு.க தலைமைக் கழகம் துடித்தது.

‘நடராசன் பேசணும்னார், தினகரன் பேசணும்னார்’ என்று பலரும் தொடர்புகொள்ள முயற்சித்தும் யாருக்கும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தி.மு.க தரப்பும் அவரை தொடர்புகொள்ள முயற்சித்தது. அவர்களிடமும் சிக்கவில்லை. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறாரா, மாறிவிட்டாரா, அ.தி.மு.க-வில்தான் இருக்கிறாரா, இல்லையா என்று தெரியாத மர்மம் நீடித்தது. 

சசிகலா பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் நாஞ்சில் சம்பத்தைத் தொடர்புகொண்டோம்.

‘‘எனது பதிலை எழுதி அனுப்புகிறேன்” என்று சொன்ன நாஞ்சில் சம்பத், அடுத்த அரைமணி நேரத்தில் அனுப்பியது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அந்த இரண்டு பக்கக் கடிதம் இதுதான்:

‘‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று இருக்கின்ற சசிகலா அம்மையாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள், 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 135 சட்டப்பேரவை உறுப்பினர்கள், சபாநாயகர், அமைச்சர்கள், மேயர்கள் என அதிகாரத்தின் உச்சம் தொட்ட அனுபவசாலிகளைக்கொண்ட ஒரு பெரிய அமைப்பில் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க சசிகலாவுக்கு மட்டுமே தகுதி உண்டு என்று பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவெடுத்து இருப்பது 2016-ம் ஆண்டின் மிகப்பெரிய சோகம். இந்த சோகத்தில் நான் என்னைக் கரைத்துக்
கொள்ள விரும்பவில்லை. மனதைக் கல்லாக்கிக் கரைந்துகொள்ள என் மனம் கல்லாகிவிடவில்லை.

சசிகலாவை பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்று என்னிடம் தகவல் சொன்ன நண்பன், ‘சசிகலாவின் ஜாதகம் நன்றாக இருக்கிறது’ என்றும் சொன்னான். 

‘அ.தி.மு.க-வின் ஜாதகம் சரியாக இல்லையே?’ என்று நான் சொன்னேன். எம்.ஜி.ஆர். ரசிகர்களின் கொள்ளிடமாக இருக்கின்ற ஓர் அமைப்புக்குத் தலைமை தாங்கும் தகுதி சசிகலாவுக்கு பத்து சதவிகிதம் அல்ல, ஒரு சதவிகித
மாவது இருந்திருக்க வேண்டாமா? வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் நாட்டை ஆளலாம் என்று எந்த நாடாளுமன்றம் தீர்மானம் போட்டுள்ளது?

சசிகலாவுக்கு மட்டுமே தலைமை தாங்கத் தகுதி உண்டென்று முடிவெடுத்துவிட்டார்கள். நிழல் நிஜமாகிவிட்டது. தாழ்வாரம் வீடாகிவிட்டது. தவிடு நெல்லாகிவிட்டது. பொல்லாச் சிறகுள்ள வான்கோழி ஒரேநாளில் தோகை மயிலாகிவிட்டது. தமிழ்நாட்டில்தான் இப்படி நடக்கும். அதுவும் அ.தி.மு.க-வில்தான் இப்படியெல்லாம் நடக்க முடியும்.

யார் உட்கார்ந்த நாற்காலியில் யார் உட்காருவது என்பதை நினைத்தாலே தூக்கம் வரவில்லை. 

திரெளபதியை சூதாட்டத்துக்குப் பாண்டவர்கள் பணயமாக வைத்ததைப் பாடிய பாரதி எழுதியைத்தான் தமிழக மக்களுக்கு நினைவூட்டத் தோன்றுகிறது.

‘வேள்விப் பொருளினையே -புலைநாயின் முன்
மென்றிட வைப்பவர் போல்
நீள்விட்ட பொன்மாளிகை - கட்டிப்பேயினை
நேர்ந்துகுடியேற்றல் போல்
ஆள்விற்றுப் பொன் வாங்கியே - செய்த 
பூணையோர்
ஆந்தைக்குப் பூட்டுதல் போல்’
 - 

என்று ஆவேசப்பட்டான் பாரதி. ‘செருப்புக்குத் தோல் வேண்டியே இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையினை’ என்றும் கொந்தளித்தான் பாரதி. இந்தக் கொந்தளிப்பும் குமுறலும் எதையும் அனுபவித்து அறியாத அப்பாவித் தொண்டனிடம் இருப்பதை அடியேன் அறிவேன். நெஞ்சில் குடிகொண்டிருப்பதை நேரில் பார்த்தும் கேட்டும் தெரிந்துகொண்டேன். 

தரைதட்டி நிற்கிறது அ.தி.மு.க-வும், தமிழக ஆட்சி நிர்வாகமும். அதைப்பற்றிய எந்தக் கவலையும் யாருக்கும் இல்லை. அரசு நிர்வாகம் ஓர் அனாதைக் குழந்தையைப் போல பரிதவித்து நிற்கிறது. பேரறிஞர் அண்ணா ஏற்றிவைத்த மாநில சுயாட்சித் தீபம் அணைந்தேவிட்டது.

மாண்புமிகு முதலமைச்சர் கோட்டையில் கொலுவீற்று இருக்கும்போதே துணை ராணுவத்தின் உதவியோடு தலைமைச் செயலாளரின் அறை சோதனை போடப்படுகிறது. எதையோ எடுத்துவிட்டு வெளியேறுகிறது வருமானவரித் துறை. இதைப் பற்றிய கூச்சமே ஆட்சிப் பொறுப்பில் இருப்பவருக்கும் இல்லை. கட்சிப் பொறுப்புக்கு வந்திருப்பவருக்கும் இல்லை. 1,700 மைல்களுக்கு அப்பால் கொல்கத்தாவில் இருந்து இதைக் கண்டித்து ஒரு குரல் வருகிறது. ஆனால், கோட்டையில் இருந்த முதலமைச்சர் வாய்திறக்க மறுக்கிறார். 

நரேந்திர மோடியின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் வங்கிகளின் வாசலில் காத்துக்கிடக்கிறார்கள் பொதுமக்கள். பரிவர்த்தனைக்குப் பணம் வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களும் பொங்கி எழுகிறார்கள். ஆனால், எல்லாப் பணமும் இங்கே ரெட்டி வீட்டிலும் ராவ் வீட்டிலும் கொட்டிக் கிடக்கின்றன. ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் ரெட்டியும் ராவும். பாவம் தொண்டர்கள். பரிதாபத்தின் மடியில் தமிழகம் தள்ளப்பட்டுவிட்டது.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பொறியற்ற விலங்காக இருக்க முடியவில்லை. இருந்தால் நான் மனிதனல்ல.

சசிகலாவுக்கு மட்டும்தான் பொதுச்செயலாளர் ஆவதற்கான தகுதி இருக்கிறது என்றால், அவரை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்வதற்கான எந்தத் தகுதியும் எனக்கு இல்லை. எனவே, அ.இ.அ.தி.மு.க-வில் இருந்து விடைபெறுகிறேன். விடைபெறுவதன் மூலமாக மனநிம்மதி அடைகிறேன்”

...என்று நாஞ்சில் சம்பத் நமக்கு எழுதி அனுப்பி இருந்தார்.

நாஞ்சில் சம்பத் விலக முடிவெடுத்துவிட்டது தெரிகிறது. அவர் தி.மு.க-வுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ‘சம்பத்தை சேர்த்துக்கொள்வதில் நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லையே?’ என்று ஸ்டாலின் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. ஜனவரி 4-ம் தேதி தி.மு.க பொதுக்குழு. அப்போது இணையவும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

http://www.vikatan.com/juniorvikatan/2017-jan-08/politics/127368-nanjil-sampath-relieve-from-admk.art

Ahamed Zubair A

unread,
Jan 7, 2017, 8:00:21 AM1/7/17
to பண்புடன்
உன் வேகத்தில தீயை வைக்க...!

இன்னைக்கு நாஞ்சில் நெஞ்சை நக்கிட்டு இருக்காரு ;))

--

Jaisankar Jaganathan

unread,
Jan 7, 2017, 8:24:15 AM1/7/17
to பண்புடன்
nanjil.jpg

Thevan

unread,
Jan 7, 2017, 10:38:55 AM1/7/17
to panb...@googlegroups.com
எனக்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன.

1. வேறு யாரை பொதுச் செயலாளராக ஆக்கலாம் என்று நாஞ்சில் சம்பத் கருத்து
தெரிவித்துள்ளாரா?

2. அவர் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்?

Jaisankar Jaganathan

unread,
Jan 7, 2017, 10:44:59 AM1/7/17
to பண்புடன்
//2. அவர் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்?//

எந்த சமுதாயமாக இருந்தாலும் அரசியலில் இருப்பவர் பணம் சம்பாதிக்கவே முயல்வர் தேவன். அவர் ஒன்றும் மக்கள் பணி செய்ய வரவில்லை

Thevan

unread,
Jan 7, 2017, 11:07:28 AM1/7/17
to panb...@googlegroups.com
என் கேள்விக்கு இது பதிலில்லை.

Ahamed Zubair A

unread,
Jan 8, 2017, 12:31:25 AM1/8/17
to பண்புடன்
முடிஞ்சு போனதை ஏன் பேசுறீங்க?

நாஞ்சிலார் தியாகத்தின் பக்கம் மீண்டுவிட்டார் ;)

2017-01-07 19:07 GMT+03:00 Thevan <apth...@gmail.com>:
என் கேள்விக்கு இது பதிலில்லை.

ஸ் பெ

unread,
Jan 9, 2017, 1:25:15 AM1/9/17
to panbudan

சசிகலா சொல்லும் ‘கறையான்’ யார்?

“நான் உங்களுக்கு இணக்கமானவராகத் தான் நடந்துகொள்வேன்” என்பதைத் தனது கட்சியினருக்கு உணர்த்த சசிகலா திறமையாகக் காய் நகர்த்துகிறார் என வியந்துபோகிறார்கள் அ.தி.மு.க-வின் நிர்வாகிகள். சென்னையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அவரின் அணுகுமுறையும் அதைத்தான் காட்டியது.

‘ஜெயலலிதாவின் இடத்தைத் தன்னால் நிரப்ப முடியாது. ஆனால், தனக்கென ஒரு தனித்துவம் இருப்பதை அ.தி.மு.க-வினருக்கு உணர்த்திவிட வேண்டும்’ என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது முதல், அதற்கான திட்டங்களை சசிகலா கச்சிதமாகச் செய்து வருகிறார். அதன் முதல்படியாக ‘மாவட்ட நிர்வாகிகளோடு சந்திப்பு’ என அறிவித்து, கட்சியினருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் 10 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்திக்கிறார். இதில் முதல் நாளான கடந்த 4-ம் தேதி காலை சென்னை மாவட்ட நிர்வாகிகளை சசிகலா சந்தித்தார்.

அவசரமாக வந்த ஓ.பி.எஸ்!

மாவட்ட நிர்வாகிகள் மட்டத்திலான கூட்டம் என்றாலும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தனர். 4-ம் தேதி காலை தலைமைச்செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 9-30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. 10-30 மணிக்குள் கூட்டத்தை முடிக்க வேண்டும் என்று அவசர அவசரமாக நிகழ்வுகளை முடித்துவிட்டு எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓ.பி.எஸ்,  தலைமை அலுவலகத்துக்குச் சென்றார். ரோட்டிலேயே காரை நிறுத்திவிட்டு, நடந்தே அலுவலகத்துக்குள் வந்தார். பெண்கள் கூட்டம் குறைவாக இருந்ததை அங்கிருந்த நிர்வாகிகளிடம் அவர் சுட்டிக்காட்டியதும், சசிகலா வருவதற்குள் அவசரமாக எங்கிருந்தோ ஒரு வேனில் பெண்கள் கூட்டத்தைக் கூட்டிவந்தனர்.

புரட்சித் தலைவி சின்னம்மா!


சசிகலாவின் கார் 10-45 மணிக்கு தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, சுற்றி நின்றவர்கள் ‘‘புரட்சித் தலைவி வாழ்க’’ என கோஷமிட்டனர். அவர் காரை விட்டு இறங்கியபோது, திடீரென அந்தக் கோஷம் நின்றுபோய், ‘‘சின்னம்மா வாழ்க’’ என்று கோஷம் எழுந்தது. அதைப் புன்முறுவலோடு ரசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தார் சசிகலா. எப்போதும் ஜெயலலிதா முன்பு உடலை வளைத்து குனிந்து கும்பிடு போடுவது போலவே, சசிகலா முன்பும் அதே பாணியில் ஓ.பி.எஸ் தொடங்கி அமைச்சர்கள் அனைவரும் வணக்கம் வைத்தனர். அப்போது டைமிங்காக, “புரட்சித் தலைவி சின்னம்மா” என்று வெளியில் நின்றவர்கள் கோஷமிட்டனர்.

ஜெயலலிதா ஸ்டைலில் சசி!

பொதுச்செயலாளராகத் தேர்வாகி பதவியேற்க முதன்முறையாகக் கட்சி அலுவலகம் வந்தபோது கட்சியினரைப் பார்த்து சசிகலா வணக்கம் மட்டுமே வைத்தார். அன்றைக்கு அவர் நடவடிக்கைகளில் ஒருவித தயக்கம் இருந்தது. ஆனால், மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்துக்கு வந்தபோது, அந்தத் தயக்கம் சுத்தமாகக் காணாமல் போயிருந்தது. கம்பீரமாக மாடிக்குச் சென்றவர், ஜெயலலிதா பால்கனியில் நின்று  தொண்டர்களைப் பார்த்துக் கையசைப்பது போல கையசைத்தார். ஜெயலலிதாவைப் போலவே, இரண்டு விரலை உயர்த்திக் காட்டி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.  

ஒன் வுமன் ஆர்மி!

கூட்ட அரங்குக்குள் சசிகலா நுழைந்ததும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் வணக்கம் சொல்ல, சசிகலாவும் பதில் வணக்கம் சொன்னார். முன்பகுதியில் சசிகலா மட்டும் அமர நாற்காலி் போடப்பட்டிருந்தது. ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட உரையைப் பார்த்துப் பேசத் தொடங்கினார். அதன் பிறகு குறிப்புகள் இல்லாமலும் சிறிது நேரம் பேசி அசத்தினார். அமைச்சர்கள் அனைவரும் ஓரமாக அமர்ந்து நிகழ்வுகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர்.  

கறையான்களை நுழையவிடக் கூடாது!

ஜெயலலிதா பற்றிய புகழுரையோடு பேச்சைத் தொடங்கிய சசிகலா, கட்சியின் நிர்வாகிகள் இனி என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். “அம்மா அவர்கள் கட்சியை இரும்புக் கோட்டையாக வைத்திருந்தார். இந்தக் கட்சியில் கறையான்கள் நுழைய, நாம் இடம் தந்துவிடக் கூடாது... இரும்புக்கோட்டையாகவே இனியும் வைத்திருக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் மக்களின் மனதில் நின்று எப்படிக் கழகத்தை வழிநடத்தினார்களோ, அதைவிட அதிகமாகக் கழகத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வழிநடத்த வேண்டும். நமக்குள் எவ்விதப் பிரச்னையும் ஏற்படக் கூடாது. ஜெயலலிதா இருந்திருந்தால் கட்சியை எவ்வளவு தொலைநோக்குப் பார்வையுடன் கட்டுக்குள் வைத்திருப்பாரோ அதேபோல் நாமும் அவர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும்” என்றார். ‘கறையான்கள் என்று அவர் யாரைக் குறிப்பிட்டார்’ என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்தது.

‘‘சசிகலாவின் தலைமையை கொஞ்சம் நெருடலாக நினைப்பவர்களைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறார். அவர்களை மெள்ள மெள்ளக் களையெடுக்க நினைக்கிறார்’’ என்று சொல்கிறார்கள் உள்விவகாரங்களை அறிந்தவர்கள்.

இளைஞர்களுக்கு அழைப்பு!

‘‘கட்சியில் தொண்டர்களை அதிகமாகச் சேர்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர் சக்தியை கட்சிக்குள் அதிகம் கொண்டுவர வேண்டும். கல்லூரி களுக்குச் சென்று இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் சேருங்கள். பாசறை நிர்வாகிகள் இந்தப் பொறுப்பை ஏற்றுச் செய்ய வேண்டும். அவர்கள்தான் கட்சியின் எதிர்காலம். மாவட்டம்தோறும் கட்சிக் கூட்டங்களை அதிக அளவில் நடத்துங்கள். இடைவெளி இல்லாமல், சட்டமன்றத் தொகுதிவாரியாகவும், மாவட்ட வாரியாகவும் கூட்டம் நடத்துங்கள்” என்று இளைஞர்களுக்கும் அழைப்பு விடுத்து அசத்தினார் சசிகலா. 

“தலைவர்களின் பிறந்தநாள், கட்சி தொடங்கப்பட்ட நாள் போன்ற முக்கிய தினங்களின்போது மாவட்டவாரியாக மாணவர்களுக்கான போட்டிகளை நடத்துங்கள். வெற்றி பெறுபவர்களுக்கு நானே பரிசு வழங்கு கிறேன். நான் இல்லாவிட்டாலும், தலைமைக் கழக நிர்வாகிகள் பரிசு வழங்குவார்கள்” என்றார். சுமார் அரை மணி நேரம் சசிகலா பேசினார்.  

`போட்டோ எடுத்துக்கொள்ளலாம்!’

பேச்சை முடித்துவிட்டு சசிகலா கிளம்பத் தயாரானபோது, தென் சென்னை மாவட்டச் செயலாளர் கலைராஜன், சசிகலாவிடம் “உங்களோடு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள அனைவரும் ஆசைப்படுகிறார்கள்” என்று சொன்னதும், புன்முறுவல் பொங்க மாவட்ட நிர்வாகிகள் அனைவருடனும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார். எல்லாம் 45 நிமிடங்களில் முடிந்துவிட்டது இந்த நிகழ்ச்சி. மாலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடனும் இதே போன்ற சந்திப்பை நடத்திமுடித்தார்.

இந்த மக்கள் தரிசனம் முடிந்ததும் ‘முதல்வர்’ ஆகிறார் சசிகலா!

ஸ் பெ

unread,
Jan 9, 2017, 1:35:33 PM1/9/17
to panbudan
'இந்தியா டுடே தமிழ் பதிப்பு வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' - சசிகலா

இந்தியா டுடே தமிழ் பதிப்பு நிறுத்தியது கூட தெரியலையே சசிகலாவுக்கு... அதிமுக தொண்டர்கள் ஷாக்

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-s-first-tv-interview-india-today-271427.html

ஸ் பெ

unread,
Jan 12, 2017, 1:08:55 AM1/12/17
to panbudan

கண்ணீர்... களங்கம்... கொலைப்பழி! - சசிகலா நெக்ஸ்ட்?

ப.திருமாவேலன், படம்: ப.சரவணகுமார்

ளவுபார்க்க வந்தவருக்கு உயர்ந்த பரிசுப்பொருள் கிடைக்கும். ஆனால், நாடே கிடைத்ததாக சரித்திரம் இல்லை. சசிகலா, சரித்திரத்தையே மாற்றியவர்?!

அரசியலுக்கு அது வேண்டும், இது வேண்டும், அது இருக்கிறதா, இது இருக்கிறதா என... நூறு விஷயங்களை அடுக்குவார்கள். அது இது எதுவும் இல்லாமல் லட்சக்கணக்கான தொண்டர்களை வழிநடத்தும் இடத்துக்கு சசிகலா வந்துவிட்டார். சிரமம் இல்லாமல் வந்துவிட்ட அவர், சின்னம்மா அல்ல... அதிர்ஷ்ட அம்மா!

`ஆயிரம் ஆயிரம் கூட்டங்களுக்கு நான் அம்மாவுடன் சென்றிருக்கிறேன். ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ கூட்டங்களில் அவருடன் கலந்துகொண்டேன். ஆனால், இன்று மேடைக்கு வந்து உங்களிடையே பேசும் ஒரு சூழல் எனக்கு உருவாகியிருக்கிறது. உங்களின் அன்புக்கட்டளையை ஏற்கவேண்டிய கடமையும் கட்டாயமும் எனக்கு ஏற்பட்டுள்ளது.

நான் கனவிலும் நினைக்காத ஒன்று, கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத ஒன்று நடந்து​விட்டது' என, கடந்த டிசம்பர் 31-ம் தேதி அன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சசிகலா கண்ணீரோடு உரையாற்றத் தொடங்கினார்.

ஜெயலலிதாவுக்குப் பிறகு, சசிகலா கைக்குத்தான் கட்சி போகும் என கணக்குப்போட, யாருக்கும் தமிழ்நாட்டு அரசியல் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஜெயலலிதாவையும் சசிகலாவையும் ஒரே ஒருமுறை பார்த்தவர்கள்கூட இதை உணர்ந்துவிடுவார்கள்.

இறந்துபோன எம்.ஜி.ஆரின் உடல் அருகே ஜெயலலிதா இருந்தபோது, ஒட்டிய கன்னங்களுடன் உடன் இருந்த சசிகலாவை ஏதோ பணிப்பெண் என்றுதான் நினைத்திருப்பார்கள் பலர். ஆனால், 1991-ம் ஆண்டில் ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சர் ஆனபோது சட்டமன்றத்துக்குள் தன்னோடு சசிகலாவையும் அழைத்துவந்து உட்காரவைத்தபோதே, இவரே ‘அடுத்த கண்’ என உணர்த்தப்பட்டார்.

போயஸ் கார்டனுக்குள் போனவர்களுக்கும் அதிகார மையங்களில் வலம்வருபவர்களுக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது, சசிகலா நினைத்தால்தான் ஜெயலலிதாவைச் சந்திக்க முடியும் என்று; சசிகலா நினைப்பதைத்தான் ஜெயலலிதா செய்கிறார் என்று; சசிகலாவைப் பகைத்துக்கொண்டால் அ.தி.மு.க-வில் எதிர்காலமே இல்லை என்று. அந்த அளவுக்கு தனது இருப்பை ஜெயலலிதாவுடன் நெருக்கப்படுத்திக்கொண்டார் சசிகலா.

‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன்’ என்ற அடைமொழியுடன் சுதாகரன் - சத்தியலட்சுமி திருமணம் நடந்தபோது ‘அடுத்த கண்’ என்பது மட்டும் அல்ல, ஜெயலலிதாதான் சசிகலா... சசிகலாதான் ஜெயலலிதா என்பதும் நாட்டுக்கு அறிவிக்கப்பட்டது. கும்பகோணம் மகாமகத்தில் இருவரும் மாறி மாறி புனித நீராடியதன் மூலமாக, உலகத்துக்கு உரக்கச் சொன்னார்கள்.

1996-ம் ஆண்டு தேர்தலின் மரண தோல்விக்கு, இது மட்டுமே போதுமானதாக இருந்தது. கண்துடைப்புப் படலமாக, சசிகலாவை சில நாட்கள் கட்சியைவிட்டு நீக்கிவைத்திருந்தார் ஜெயலலிதா. அப்போது, சசிகலா சிறையில் இருந்தார். அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வந்த ஜெயலலிதா, வீட்டுக்கு வந்ததும் அவரை நீக்கினார். சில நாட்களில் சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா. அவர் நேராக போயஸ் கார்டனுக்கு வந்ததும், ஆரத்தித் தட்டுடன் நின்றுகொண்டிருந்தார் ஜெயலலிதா. அப்பட்டமான நாடகம் இது. நாடகம் பார்ப்பதில்தானே நமக்கு அலாதியான ப்ரியம்.

1997-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை, சசிகலாவின் குடும்பம் ஆக்டோபஸ் போல ஜெயலலிதாவை வளைத்துக்​கொண்டது. ஜெயலலிதாவுக்கும் இந்த வலைதான் வசதியாகவும் இருந்தது. மூன்று முறை (1991, 2001, 2011) ஆட்சியின்போதும் முறைவைத்து இயக்கியது சசிகலா குடும்பத்தினர்தான். குடும்பத்தில் தலைகள் மாறியிருக்கலாம். ஆனால், குடும்பம் மாறவில்லை. டி.டி.வி.தினகரன், மகாதேவன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோருக்கு மட்டும்தான் கட்சிப் பதவிகள் நேரடியாகத் தரப்பட்டன. ஆனால், மற்றவர்கள் அனைவரும் கட்சியையும் ஆட்சியையும் நேரடியாகவே இயக்கினார்கள். டெண்டர்கள் இவர்கள் இல்லாமல் நடக்காது. கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை இவர்களே பேசினார்கள். இவர்கள் நினைத்த ஆட்களுக்கு மட்டுமே சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் உரிமை தரப்பட்டது. இவர்கள் நினைத்தவர்கள் மட்டுமே அமைச்சர்கள் ஆனார்கள். பலரது தலைகளை உருட்டியதும் இவர்கள்தான். இதுவரை மறைமுகமாகக் கோலோச்சிவந்தவர்களுக்கு, ஜெயலலிதாவின் மரணம் நேரடியாகவே வந்து உட்கார பாதை அமைத்துக் கொடுத்துவிட்டது.

இவை அனைத்தும் ஜெயலலிதாவுக்குத் தெரிந்தே நடந்தன. அவருக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. ஜெயலலிதாவுக்கு இவை எல்லாம் தெரியாமல் நடந்தன என்று சொன்னால், ஜெயலலிதாவுக்கு என உருவகப்படுத்தும் ஆளுமைத்திறன் அனைத்துமே பொய் என்றாகிவிடும்.

‘ஜெயலலிதா நல்லவர்; சசிகலாதான் கெட்டவர்’ என சிலர் சுருதி மாற்றிப் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். சசிகலா மற்றும் அவரது உறவுகள் செய்தவை அனைத்தும் ஜெயலலிதாவுக்குத் தெரியும் என்பதற்கு, பல உதாரணங்கள் இருக்கின்றன. சசிகலா மற்றும் அவரது உறவுகளின் நடவடிக்கைகளை, ஜெயலலிதா  பட்டவர்த்தனமாக நியாயப்படுத்திப் பேசினார்.

சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், ஜெயலலிதாவின் ஹைதராபாத் தோட்டத்தைக் கவனித்து வந்தார். அவர் திடீரென இறந்துபோனார். அவரது மனைவிதான் இளவரசி. இவர்களது மகள் கிருஷ்ணப்ரியாவின் திருமணம், 2000-ம் ஆண்டு நடந்தது. ‘எனக்கு வேண்டியவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக எந்தத் தவறும் செய்யாத திருமதி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், கடந்த நான்கு ஆண்டுகளாகச் சந்தித்த அவமானங்கள், அவதூறுகள், துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. எனக்காகவும் இந்த இயக்கத்துக்காகவும் வாழும் சசிகலாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆதரவாக இருப்பதை என் கடமையாகக் கருதுகிறேன்' என்று ஜெயலலிதாவே பேசினார். தனக்காகவும் அ.தி.மு.க-வுக்​காகவும், சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் வாழ்கிறார்கள் என, தனது வாயாலேயே மாலை கட்டிய சசிகலாவுக்குத்தான் இன்று பொதுச்செயலாளர் பதவி கிடைத்துள்ளது.

டாக்டர் வெங்கடேஷ் திருமணத்தை நடத்திவைத்துப் பேசிய ஜெயலலிதா, ‘என்னோடு துணையாக இருந்து, எல்லா வகைகளிலும் எனக்கு உதவியாக இருந்ததற்காகவே சசிகலாவுக்கு இப்படி ஒரு தண்டனை’ என்று காரணம் கற்பித்தார். அப்போது மணமேடையில் இருந்த சசிகலா அழுதார். இதோ இப்போதும் சசிகலா அழுகிறார். அன்று அக்கா அங்கீகாரம் தந்தார். இன்று அக்கா, தான் வகித்த பதவியையே தந்துவிட்டுப் போய்விட்டார்.

‘எனக்கு இப்போது 62 வயது. என்னுடைய 29-வது வயது முதல் நம் இதயதெய்வம் அம்மாவோடுதான் இருந்துள்ளேன். எஞ்சி இருக்கும் காலத்தை, கழகத்துக்காக வாழ்வேன்’ என்று சசிகலா சபதம் எடுத்துள்ளார்.

சபதம் சரி. ஆனால், நிலைமை சரியில்லையே!

சசிகலாவின் பொதுவாழ்வு என்பது, கொலைப்​பழியோடு தொடங்குகிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது, சசிகலா ஏதோ செய்துவிட்டார், சசிகலா எதையோ மறைக்கிறார் போன்ற சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியில் பரவலாக இருக்கின்றன.  

அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்கள் மனதிலும் இருக்கிறது. இது ஏதோ அரசியல் குற்றச்சாட்டுகளைப்​போல சாதாரணமானது அல்ல, அதற்கு மேம்போக்கான பதில் அல்ல. உண்மையான விளக்கத்தை மக்கள் மன்றத்தில் சசிகலா வைத்தாக வேண்டும்.

‘நன்கு உடல்நலம் தேறிவந்த நம் அம்மா, தலையில் இடி விழுந்ததைப்போல நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். 10 கோடி தமிழ் மக்களின் பாசத்தாயை நம்மிடம் இருந்து இறைவன் பறித்துக்கொண்டான்’ என்று சசிகலா பேசியதைக் கேட்கும்போது சந்தேகம்தான் கூடுகிறது.

2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி இரவு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். இதயத்துடிப்பு நின்றுபோனதாக அறிவிக்கப்​பட்டது வரையிலான 75 நாட்களும், சிரித்தார், பேசினார், டி.வி பார்த்தார், கிச்சடி சாப்பிட்டார், பந்து தூக்கிப்போட்டார், நர்ஸ்களுக்குப் பரிசு கொடுத்தார், ‘போயஸ் கார்டன் வந்தால் காபி எப்படிப் போடணும் எனச் சொல்லித் தருகிறேன்’ என்றார், டாக்டர்களுக்கே அறிவுரை கூறினார் என்று பல நூறு குணச்சித்திரக் காட்சிகள் பரப்பப்பட்டன. அதாவது கார்டியாக் அரெஸ்ட் ஆவதற்கு முன்பு வரை நன்றாக இருந்தார் என்றே சொல்லப்பட்டது. சசிகலாவும் அதைத்தான் சொல்கிறார். ‘நன்றாக இருந்த’ ஜெயலலிதாவை, யாருக்குமே காட்டாமல் மறைத்துவைத்திருக்கவேண்டிய மர்மம் என்ன? தன்னுடைய இமேஜ் பாதிக்கப்படும் என, ஒருவேளை ஜெயலலிதாவே நினைத்துத் தடுத்திருக்கலாம் என்றால், அவர் இல்லாத நிலையில் மருத்துவம் பற்றி பேசத் தயங்குவது ஏன்?

டிசம்பர் 5-ம் தேதிக்கு முன்னர் வரை ஜெயலலிதா நன்றாகத்தான் இருந்தார் என்பதற்கு ஆதாரமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டால், ஒரு வீடியோ ஆதாரத்தை வெளியிட்டால், சசிகலா மீதான களங்கம் துடைக்கப்படுமே. என்ன தயக்கம், ஏன் தயக்கம்? 

‘கொலைப்பழியோடு’ பொதுச்​செயலாளர் ஆகியிருக்கிறார் சசிகலா. ‘கொலைப்பழியோடு’ முதலமைச்சராகவும் ஆகலாம். இவை இரண்டுமே தானாக வருவன. ஜெயலலிதா தந்துவிட்டுச் சென்றது. யாராலும் தடுக்க முடியாதது. ஆனால், மக்கள் மன்றத்தில் நேரடியாக வாக்குக் கேட்டு சசிகலா செல்லும்போதுதான் இந்தக் கறை மக்கள் மனதில் மீண்டும் மீண்டும் எழும். அவருக்கும் உணர்த்தப்படும். இரண்டு சொட்டு அழுகை, இந்தக் கறையை நீக்கிவிடாது. தன் மீதான பழியை அவர் உடனடியாகத் துடைத்தாக வேண்டும்.

சசிகலாவிடம் கேட்பது மிகவும் சாதாரணமான ஒரு கோரிக்கைதான்...

ஜெயலலிதா நன்றாகத்தான் இருந்தார் என்பதற்கு ஆதாரமான ஒரு வீடியோ கேசட் வெளியிடுங்கள். கேசட் ரிலீஸ் செய்ய, உங்களுக்கு யாரும் சொல்லித் தர வேண்டுமா என்ன?

http://www.vikatan.com/anandavikatan/2017-jan-11/politics/127356-sasikala-political-entry-what-next.art?artfrm=top_most_read

ஸ் பெ

unread,
Jan 14, 2017, 1:21:18 AM1/14/17
to panbudan

சசிகலா முதல்வர் ஆகலாமா? - ஜூ.வி திடீர் சர்வே... ‘திடுக்’ ரிசல்ட்!

ஜெயலலிதாவின் மரணம் தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டு விட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த சாதனையைப் படைத்த ஜெயலலிதாவால், ஐந்து மாத காலம்கூட ஆட்சியை நடத்த முடியவில்லை. திடீரென ஏற்பட்ட அவரின் மரணம் அரசியலில் ஒரு வெற்றிடத்தை உண்டாக்கியது. ‘மர்ம மரணம்’ என ஜெயலலிதாவின் இறப்பு சர்ச்சைகளை உண்டாக்கியது. அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தினமும் அப்டேட் செய்துகொண்டிருந்தார்கள் அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர்களும் அப்போலோ நிர்வாகத்தினரும். ‘‘நர்சுகளுடன் பந்து விளையாடினார்... ‘கார்டனுக்கு வந்தால் சூப்பர் டீ கிடைக்கும்’ என நர்ஸ்களுடன் பேசினார்... கையெழுத்துப் பயிற்சி எடுத்தார்... கிச்சடி சாப்பிட்டார்’’ என்றெல்லாம் சொன்னார்களே தவிர, அதற்கு ஆதாரமாக ஒரு போட்டோவையோ வீடியோவையோ எடுத்துப் போடவில்லை.

கவர்னர் முதல் மத்திய அமைச்சர்கள் வரையில் அப்போலோ வராண்டாவை மட்டுமே தொட்டுவிட்டு வந்தார்கள். ஜெயலலிதாவைப் பார்க்கவே இல்லை. இப்படியான விஷயங்கள் எல்லாமே சேர்ந்து ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகத்தை விதைத்தன. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க-வில் நடந்த அரசியல் நிகழ்வுகள் அதைவிட அதிர்ச்சி.

‘ஜெயலலிதா மர்ம மரணம், அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா நியமனம், சசிகலா முதல்வர் ஆவதற்காக நடத்தப்படும் முயற்சிகள், ஜெயலலிதா இல்லாத தமிழக அரசு, ஜெயலலிதா இடத்தில் யார் இருக்க வேண்டும்’ என அத்தனை விஷயங்கள் தொடர்பான கேள்விகளுக்கும் மக்களின் பதில்கள் என்னவாக இருக்கும்? அறிந்துகொள்ள களமிறங்கியது ஜூ.வி. மக்களின் பல்ஸை அறிவதற்காக விகடன் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், மாணவப் பத்திரிகையாளர்கள் என 80-க்கும் மேற்பட்டோர் களமிறக்கப்பட்டார்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், கிராம, நகரப் பகுதிகள் என புகுந்து புறப்பட்டது சர்வே டீம். மொத்தம் 11,174 பேரைச் சந்தித்து சர்வே  ஃபாரங்கள் பூர்த்தி செய்யப்பட்டன. 

நேரடி சர்வே ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தபோதே ஆன்லைனிலும் சர்வே நடத்தப்பட்டது.   ‘ஒரு கணிப்பொறியில் இருந்து ஒரு சர்வே மட்டுமே பூர்த்திசெய்ய முடியும், தமிழ்நாட்டுக்குள் இருக்கிற ஐ.பி. அட்ரஸில் இருந்து மட்டுமே சர்வேயில் பங்கேற்க முடியும், ஒரு கம்ப்யூட்டரில் இருந்து ஒரு ஓட்டுதான் போட முடியும்’ என கட்டுப்பாடுகளை விதித்து ஆன்லைன் சர்வே பணியை முடித்தோம். நேரடியாக 11,174 நபர்களிடமும் ஆன்லைன் மூலம் 2,151 நபர்களிடமும் என மொத்தமாக 13,325 நபர்களிடம் சர்வே எடுக்கப்பட்டது. நேரடியாக எடுக்கப்பட்ட சர்வேயின் முடிவுகளுடன் ஆன்லைன் சர்வே முடிவுகளும் பிரதிபலிப்பதாக இருந்தன.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது எனப் பலர் சொல்வதை, ‘நம்புகிறேன்’ என 68 சதவிகிதம் பேர் கருத்து சொல்லியிருக் கிறார்கள். ‘உரிய விசாரணையில்தான் தெரியும்’ என 23 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட இதே கருத்துதான் இரண்டாவது கேள்விக்கும் இருந்தது. ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்திகளை ‘மறைத்து விட்டார்கள்’ என 68 சதவிகிதம் பேர் டிக் அடித் திருந்தார்கள். ‘இவ்வளவு ரகசியம் தேவையில்லை’ என 25 சதவிகிதம் பேர் சொன்னார்கள்.

அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, போட்டோ அல்லது வீடியோ வெளியிடாதது பற்றிய கேள்விக்கு ‘எதையோ மறைக்கிறார்கள்’ என 46 சதவிகிதம் பேர் சொன்னார்கள். ‘மர்மமாக இருக்கிறது’ என 
43 சதவிகிதம் பேர் கருத்து பதிந்திருந்தார்கள்.

அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டிருப்பதை ‘எதிர்க்கிறேன்’ என 71 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். 

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலாதான் என அ.தி.மு.க நிர்வாகிகள் சொல்லி வருவது தொடர்பான கேள்வியும் சர்வேயில் இடம்பெற்றிருந்தது. அதற்கு, ‘சசிகலாவுக்கு தகுதியில்லை’ என 70 சதவிகிதம் பேர் டிக் அடித்திருந்தார்கள். ‘அது அ.தி.மு.க-வின் உள்கட்சி விவகாரம்’ என 25 சதவிகிதம் பேர் சொன்னார்கள்.

சசிகலா முதல்வர் ஆவது தொடர்பான கேள்விக்கு, ‘வரவேற்கிறேன்’, ‘எதிர்க்கிறேன்’, ‘கருத்து சொல்ல விரும்பவில்லை’ என மூன்று ஆப்ஷன்கள் தரப்பட்டன. அதில் ‘எதிர்க்கிறேன்’ என 75 சதவிகிதம் பேர் சொல்லியிருந்தார்கள். எட்டு கேள்விகள் அடங்கிய இந்த சர்வேயில் மிக அதிகபட்சமாக 75 சதவிகிதம் பதிவு செய்யப்பட்டது, ‘எதிர்க்கிறேன்’ என்பதற்குதான்.

‘ஜெயலலிதா இல்லாத தமிழக அரசு சிறப்பாக செயல்படும் நம்பிக்கை இல்லை’ என அதிகபட்சமாக 51 சதவிகிதம் பேர் சொன்னார்கள்.

‘ஜெயலலிதாவின் இடத்தில் யார் இருக்க வேண்டும்?’ என்ற எட்டாவது கேள்விக்கு ஆப்ஷன் தராமல் சர்வேயில் பங்கேற்றவர்களையே பூர்த்திசெய்யச் சொல்லியிருந்தோம். இதில் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களைத் தாண்டி மற்ற கட்சித் தலைவர்களையும் பலர் குறிப்பிட்டிருந்தார்கள். சகாயம், டிராஃபிக் ராமசாமி போன்றவர்களையும்கூட சிலர் எழுதியிருந்தார்கள். கருணாநிதி தொடங்கி சீமான் வரையில்கூட பலருடைய பெயர்களையும் குறிப்பிட்டிருந்தனர். 

அ.தி.மு.க-வில் செங்கோட்டையன், தம்பிதுரை, பண்ருட்டி ராமசந்திரன், முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ், எடப்பாடி பழனிசாமி, பி.ஹெச்.பாண்டியன், பெயர்களையும் சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். பல சர்வே பாரங்களில் பெயர்களைக் குறிப்பிடாமல் கருத்துகளை மட்டுமே எழுதியிருந்தார்கள். ‘அ.தி.மு.க-வில் அப்படி யாருமில்லை... திறமை உள்ளவர்... யாராவது ஒருவர்... கட்சிக்காக உழைத்த சீனியர்கள்... மறு தேர்தல் நடத்த வேண்டும்... மன்னார்குடி தலையீடு இல்லாதவர்கள்... எல்லாருமே மோசம்தான்... சசிகலா தவிர்த்து...திறமை மற்றும் ஆளுமை உள்ளவர்கள்... ஜனநாயக முறைப்படி தேர்வுசெய்ய வேண்டும்... 

மக்கள் தீர்மானிக்க வேண்டும்...  ஜெயலலிதா இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது... 

அ.தி.மு.க-வில் அடிமையில்லாத ஒருவர்... ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும்’ என கதம்பமாகக் கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 

ஜெயலலிதா இடத்தில் யார் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு, தீபாவின் பெயரை அதிகம் பேர் பரிந்துரைத்தனர். அதற்கு அடுத்த இடத்தில் ஓ.பன்னீர்செல்வமும், அவருக்கு அடுத்த இடத்தில் சசிகலாவும் இடம்பெற்றனர்.

- ஜூ.வி. டீம்

அட்டை ஓவியம்: ஹாசிப்கான்

http://www.vikatan.com/juniorvikatan/2017-jan-18/investigation/127676-junior-vikatan-survey-result-about-sasikala.art

ஸ் பெ

unread,
Jan 14, 2017, 1:17:25 PM1/14/17
to panbudan

பீட்டா மிரட்டலுக்கு பயந்த முதல்வர் ஓபிஎஸ்! ராமதாஸ் காட்டம்

தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டால் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு விடுத்த வெற்று மிரட்டலுக்கு பயந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக இளைஞர்கள் மீது முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தடியடியை கட்டவிழ்த்து விட்டாரா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு  தடை விதிக்கக் கோரியும் போராட்டம் நடத்திய திரைத்துறையினர் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி கைது செய்துள்ளது. அறவழியில் போராடியவர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு நிச்சயமாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்று கடந்த ஓராண்டாகவே மத்திய அரசும், மாநில அரசும் மக்களிடையே தவறான நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள். கடந்த இரு நாட்களுக்கு முன்பு வரை ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று கூறி வந்த மத்திய, மாநில ஆட்சியாளர்கள் நேற்று முன்நாள் ஜல்லிக்கட்டு சாத்தியமில்லை என்று இரட்டை வார்த்தையில் கூறிவிட்டு ஒதுங்கி விட்டனர். அதனால் ஏமாற்றமடைந்த மக்கள் கொந்தளிப்பில் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவற்றின் தொடர்ச்சியாக மதுரை அவனியாபுரத்தில் இன்று போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. திரையுலகைச் சேர்ந்தவர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்ற இப்போராட்டத்தின்போது சிறு அசம்பாவிதம் கூட நடக்கவில்லை. போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்ட நிலையில், தேவையே இல்லாமல் தடியடி நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்காட்டுப் போட்டிகளுக்கு உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் தடை விதித்தால், அதுகுறித்த உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குக் கூட மாநில அரசு தடைவிதிப்பது கேலிக்கூத்து.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் மைய பூமியாக திகழ்வது மதுரை மாவட்டம் தான். ஆனால், அங்கு தான் ஜல்லிக்கட்டுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. கடந்த 11-ஆம் தேதி மதுரை மாநகரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. 12-ஆம் தேதி சோழவந்தானில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதவாக குரல் கொடுத்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 4 நாட்களில் மூன்றாவது முறையாக காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் காயமடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்பாக கடந்த 11-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,‘‘நானும், தமிழக அரசும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம். இதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம். தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை கட்டிக் காப்போம்’’ என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வீராவேசமாக கூறியிருந்தார். ஆனால், அவரது கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறை இன்று அவர் தங்கியுள்ள இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இளைஞர்கள் மீது தடியடி நடத்தியிருக்கிறது. இது தான் ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டும் லட்சணமா? தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டால் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தியிருந்தன. அந்த வெற்று மிரட்டலுக்கு பயந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக இளைஞர்கள் மீது முதலமைச்சர் தடியடியை கட்டவிழ்த்து விட்டாரா?

மதுரை மாநகர மற்றும் மாவட்டக் காவல்துறை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வட இந்தியராக இருக்கும் நிலையில் தமிழர்களின் கலாசார உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு மரியாதை கொடுக்காமல் பீட்டா உள்ளிட்ட அமைப்புகளின் கையாளாக மாறி தமிழ் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். மதுரையிலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடத்தியதற்காகவும், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதுடன், அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடியடி நடத்த ஆணையிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Advertisement

ஸ் பெ

unread,
Jan 14, 2017, 3:12:30 PM1/14/17
to panbudan

மிஸ்டர் கழுகு: ஜெ. ‘மரண’ விசாரணை... சொத்துக் குவிப்பு வழக்கு... அச்சத்தில் சசிகலா!

‘‘ஏதோ வானிலை மாறுதே” - ஹம் செய்தபடியே என்ட்ரி ஆனார் கழுகார். அவரிடம், ‘‘நீங்கள் இப்படிப் பாடினால் அதற்கு ஏதோ அர்த்தம் இருக்கும்’’ என்று கொக்கிப் போட்டோம்.

‘‘சொல்கிறேன்... ஜனவரி 12-ல் சசிகலா முதல்வர் பதவி ஏற்பார் என்ற பேச்சு பலமாக அடிபட்டுவந்ததல்லவா... இப்போது அது தாமதம் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.” 

‘‘ஏனாம்? என்ன சிக்கல்?”

‘‘ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல், 6 மாதங்களுக்கு முன்பே ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். அதற்குப் பிறகு ஜெ. உடல்நிலை, மரணம் மற்றும் சில காரணங்களால் அதில் தீர்ப்பு வெளியாகாமலேயே இருந்தது. ஆனால், தற்போது உச்ச நீதிமன்ற வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்கள் இந்த (ஜனவரி) மாதத்துக்குள்ளாகவே தீர்ப்பு வெளியாகும் என்று உறுதி செய்கின்றன. சுப்பிரமணியன் சுவாமியும் இதையே சொல்லியிருக்கிறார். வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகத்தான் வரும் என்று சசிகலா தரப்பு உறுதியாக நம்புகிறது. ஆனால், நீதித்துறைக்கு நெருக்கமான டெல்லி வட்டாரங்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சசிகலாவின் அரசியல் வாழ்க்கைக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று தெரிவித்திருக்கின்றன. வழக்கறிஞர் ஆச்சார்யா, ‘ஜெயலலிதாவின் மரணம் எந்த வகையிலும் தீர்ப்பை பாதிக்காது. வாதங்கள் எல்லாம் முடிந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் நேரத்தில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இறந்தாலும், வழக்கம் போல தீர்ப்பைத் தந்த முன்னுதாரணங்கள் பல உள்ளன’ எனக் கூறியிருக்கிறார். எது எப்படியோ... தீர்ப்புக்குப் பிறகே தங்களுடைய அடுத்த அடியை எடுத்துவைக்கலாம் என்றே சசி தரப்பும் யோசிக்கிறது. அதனால்தான், முதலில் 12-ம் தேதி முதல்வர் பொறுப்பேற்பதாக முடிவுசெய்து வைத்திருந்ததைத் தற்போது, மேலும் சில நாட்களுக்குத் தள்ளி வைத்துள்ளனர்.”

‘‘அப்படியா?”

‘‘பொங்கல் அன்று பதவி ஏற்கலாம் என்கிறது ஒரு தரப்பு. பொங்கல் முடிந்தபிறகு எம்.ஜி.ஆர் பிறந்தநாளின் போதோ, அதற்கு மறுநாளோ இருக்கலாம் என்கிறது இன்னொரு தரப்பு. சசிகலா உடனடியாகப் பதவி ஏற்பதில் அவரது குடும்பத்துக்குள்ளேயே மாறுபட்ட கருத்துகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சசிகலா உடனடியாக முதல்வர் ஆக வேண்டும் என்கிறாராம் நடராசன். கொஞ்சம் காத்திருந்து அப்புறம் ஆகலாம் என்கிறாராம் திவாகரன். ‘சசிகலா உடனடியாக முதல்வர் ஆகி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டால் பெரும் பின்னடைவு ஏற்படும்’ என்று இந்தத் தரப்பு சொல்கிறதாம். இது சசிகலாவைக் குழப்பம் அடைய வைத்துள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சசிகலா புஷ்பா எம்.பி., மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் கொடுத்தார். இந்த மனுவை விசாரிக்க சி.பி.ஐ-க்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி இருக்கிறது. ‘ஜெயலலிதா மரணத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்’ எனத் தொடர்ந்து சொல்லி வந்த  சசிகலா புஷ்பா, இதே கோரிக்கையுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து வந்தார். சி.பி.ஐ-க்கு மத்திய உள்துறை அமைச்சகம் இதை அனுப்பும் என்று சசிகலா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இது சசிகலாவை அச்சத்தில் உறையவைத்துள்ளது.”

‘‘ஓ!”

‘‘பிரதமர் மோடிக்கு சசிகலாவும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டி போட்டுக்கொண்டு கடிதம் எழுதுகிறார்களே?” 

‘‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு தபால்தலை மற்றும் சிறப்பு நாணயம் வெளியிட வேண்டும், மீனவர் பிரச்னையில் படகுகளை விடுவிக்க வேண்டும்... இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்கிற முறையில் சசிகலாவும், தமிழக முதல்வர் என்கிற முறையில் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனி கடிதங்களை பிரதமருக்கு எழுதினார்கள். ஆனால், தமிழக செய்தித்துறையினர் சசிகலா தரப்பிலான கடிதம் மீடியாவுக்குப் போய் சேர்ந்ததா என்று உறுதிசெய்துவிட்டு, பிறகுதான் முதல்வரின் கடிதங்களை மீடியாவில் தெரியப்படுத்தினார்களாம். சசிகலா மீது அவர்களுக்கு அவ்வளவு விசுவாசம்!”

‘இந்தியா டுடே’ இதழ் சென்னையில் நடத்திய நிகழ்ச்சி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆன பிறகு சசிகலா கலந்துகொண்ட முதல் பொது நிகழ்ச்சி. உள்ளே நுழைந்ததும் போட்டோஷூட்டுக்கு அமர்த்தலாக போஸ் கொடுத்த சசிகலா, அதன்பின் ஜெயலலிதா புகைப்படக் கண்காட்சியைத் துவக்கி வைத்தார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆங்கில உரையைப் படிக்க ஆரம்பித்த போதே சசிகலா அவசரமாக வெளியேறிவிட்டார்.

‘‘பாவம் பன்னீர்!”

‘‘மாவட்ட வாரியாக கட்சிப் பொறுப்பாளர் களை சசிகலா சந்தித்து வருகிறார். இந்தக் கூட்டத்தின் நோக்கமே கட்சியினரை ஆழம் பார்ப்பதுதான் என்கிறார்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். அமைச்சர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை ஜெயலலிதா மீது விசுவாசம் என்பதைத் தாண்டி ஒரு பக்தியோடு இருந்தார்கள். `அதே விசுவாசத்தை தன்மீதும் வைத்துள்ளார்களா?’ என்ற சந்தேகம் சசிகலாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்சிக்குள் கிளம்பும் புகைச்சல்கள் சசிகலாவை யோசிக்க வைத்துவிட்டன. மாவட்ட அளவிலான நிர்வாகிகள் சந்திப்பை நடத்தி சரிக்கட்டிவிடலாம் என்றே இந்தக் கூட்டங்களை நடத்தியுள்ளார். ’’

‘‘மாஜிக்களையும் சந்தித்துள்ளாரே?’’

‘‘ஆமாம்! மாவட்ட நிர்வாகிகள் சந்திப்புக்கு இடையே முன்னாள் எம்.பி-க்கள் மற்றும்  எம்.எல்.ஏ-க்களையும் சந்தித்துள்ளார். அவர்களிடம் ‘நமது கட்சிக்கு எதிராக நடைபெறும் விஷமப் பிரசாரங்களை முறியடிக்க நீங்கள் எல்லாம் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். கட்சியில் உங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும்’ என்று பேசி குஷியாக்கியுள்ளார். இதே போல் பேச்சாளர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார். அவர்களிடம் ‘இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும். நீங்கள் அம்மா இருந்தபோது எப்படி கட்சி மீது விசுவாசமாக இருந்தீர்களோ, அதே போல் இனியும் இருக்க வேண்டும். நான் இருக்கிறேன் கவலைப்படாதீர்கள்’ என்று உறுதி கொடுத்துள்ளார்.’’

‘‘ம்!’’

‘‘இந்தக் கூட்டத்துக்கு வரும்போதே அனைவருக்கும் டோக்கன் ஒன்று வழங்கப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு பேச்சாளர்களை வெளியே போக வேண்டாம் என்று இருக்க வைத்துள்ளனர். இப்படி மூன்று மணிநேரம் அவர்களைக் காக்க வைத்தனர். இதனால் கடுப்பாகி சிலர் வெளியே கிளம்பிவிட்டார்கள். உட்கார்ந்து இருந்தவர்கள் அனைவருக்கும் ‘டோக்கனை காண்பித்்து கவர் ஒன்றை வாங்கிச் செல்லுங்கள்’ என்று அறிவிக்கப்பட்டது. ஆவலோடு கவரை வாங்கி பிரித்துப் பார்த்துள்ளார்கள். அதில் புதிய இரண்டாயிரம் ரூபாய் தாள் ஒன்றே ஒன்று மட்டும் படபடத்துள்ளது. இதில் பேச்சாளர்களுக்கு ஏக வருத்தமாம். ‘ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு இவர்கள் படியளப்பது இவ்வளவுதானா?’ என்று புலம்பியுள்ளார்கள்.’’

‘‘ம்!”

‘‘தனக்கு எதிரான சிந்தனையுடன் யாரும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் சசிகலா. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒன்றிய துணை நிர்வாகியான ஒரு பெண்மணி, அங்கு நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சிக்கு ஏனோ போகவில்லை. இதுகுறித்த தகவல் சசிகலா தரப்பினருக்குப் போக, ‘ஏதோ அதிருப்தி’ என்று நினைத்து சமாதானம் பேசியிருக்கிறார்கள். அடுத்தகட்டமாக, அந்தப் பெண்மணியின் மகனுக்கு மிகப்பெரிய கான்ட்ராக்ட் வேலையைக் கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் கவனித்த மற்ற நிர்வாகிகள் இப்போது யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.’’ 

‘‘வாய்ப்பு கிடைக்கும்போதே வாரிக்கொள்ள வேண்டியதுதானே!” 

‘‘சேலம் மாவட்டத்தில் ஜெயலலிதா படத்தை சிறியதாகவும், சசிகலா படத்தைப் பெரியதாகவும் போட்டு முதலில் போஸ்டர் ஒட்டப்பட்டது. பிறகு திடீரென அது அப்புறப்படுத்தப்பட்டு ஜெயலலிதா படத்தை பெரியதாக போட்டு புதிய போஸ்டரை ஒட்டினார்கள். இந்த அதிரடி மாற்றத்துக்கான பின்னணி என்ன தெரியுமா? ‘சசிகலாவின் உருவப் படத்தை பிரமாண்டமாகப் போட்டு ஃப்ளெக்ஸ் வைப்பது தமிழகம் முழுவதும் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது’ என்று உளவுப் பிரிவு கார்டனை உஷார்படுத்தியுள்ளது. இதையடுத்து, ‘இனி சசிகலா படத்தை மிகப் பெரியதாகப் போட்டு எந்த ஃப்ளெக்ஸும் வைக்கக்கூடாது’ என்று கடுமையான உத்தரவு போட்டுள்ளார்கள். அதே போல் அ.தி.மு.க-வின் உறுப்பினர் அட்டையும் விரைவில் மாற உள்ளதாம். அதில் புதிய பொதுச்செயலாளர் சசிகலாவின் புகைப்படம் இருக்கும் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது.’’

‘‘ஓஹோ?”

‘‘சசிகலாவுக்கு கடும் சவால் கொடுக்கத் தயாராகிவிட்டார் தீபா. அ.தி.மு.க தலைமை மீது வருத்தத்தில் இருக்கும் கட்சியினர் பலர், கடந்த ஒரு வாரமாகவே தீபா வீட்டில், மாலை நேரத்தில் கூட்டமாகக் கூடிவிடுகிறார்கள். மாலை ஐந்து மணிக்கு தனது வீட்டு மாடியில் நின்றுகொண்டு தன்னை சந்திக்க வருபவர்களைப் பார்த்து வருகிறார் தீபா. அத்தை ஜெயலலிதாவின் மேனரிஸத்தையே இவரும் செய்வதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள் மக்கள். தீபா வீட்டு வாசலில் நோட்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் தீபாவை சந்திக்க வருபவர்களின் பெயர்கள், மொபைல் எண்கள், வீட்டு முகவரி போன்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. ‘நீங்கள் எந்த இயக்கத்திலும் உறுப்பினராக உள்ளீர்களா?’ என்ற கேள்வியும் கேட்கப்பட்டு, ‘ஆம்’ என்றால் அது குறித்த விவரங்களையும் பதியச் சொல்லியுள்ளார்கள். அந்த நோட்டில் ஒரு லட்சத்தைத் தாண்டி பதிவுகள் சென்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். இதுதான் தீபாவை உற்சாகப்படுத்தியுள்ளது. அரசியலில் தீவிரம் காட்டும் முடிவுக்கு அவர் வந்துவிட்டார் என்பது மட்டும் உண்மை. 

எம்.ஜி.ஆர் பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட உள்ளாராம். அ.தி.மு.க தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சிலர் இவருக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்!”

‘‘நாஞ்சில் சம்பத் பல்டிக்கு என்ன காரணம்?”

‘‘தி.மு.க-வில் இருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்தார். ஆனால், ஸ்டாலின் ஆர்வம் காட்டவில்லையாம். அதேநேரத்தில் தினகரன் சொன்ன டீல் சம்பத்துக்கு பிடித்து இருந்ததாம்! தன்னை வந்து சந்தித்த சம்பத்திடம், ‘நீங்கள் வராவிட்டால் இன்னோவா காரை நானே திருப்பி அனுப்ப இருந்தேன்’ என்றாராம் சசிகலா. ‘அம்மா அனைவரையும் அலட்சியப்படுத்துவார். சின்னம்மா அனைவரையும் அரவணைத்துப் போகிறார்’ என்று கட்சிக்குள் இப்போதே பாராட்டுப் பட்டயம் வாசிக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.


ல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த விஜயகாந்த், போராட்டத்துக்காக மதுரை செல்லும் வழியில்   சென்னிமலை என்ற இடத்தில் மதிய உணவு சாப்பிடுகிறார்.


அம்பலமான அமைச்சரவை ரகசியம்!

மாநில மின் வாரியங்கள் மற்றும் மின் விநியோக சீர்திருத்தம் தொடர்பான மத்திய அரசின் ‘உதய்’ திட்டத்துக்கு ஜெயலலிதா இருந்தவரை எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, இப்போது முடிவை மாற்றிக்கொண்டு அதில் இணைய கையெழுத்து போட்டிருக்கிறது. 

கடந்த புதன்கிழமை நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில்தான் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு முதல் நாளே மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல், ‘‘அடுத்த வாரம் ஒரு பெரிய மாநிலம் ‘உதய்’ திட்டத்தில் இணையப் போகிறது’’ என தமிழகத்தின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாகச் சொன்னார். மின் வாரியத்தில் நடைபெறும் ஊழல்களை அம்பலப்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பினர், ‘தமிழக அமைச்சரவையில் எடுக்கப்போகும் முடிவு, முன்கூட்டியே மத்திய அமைச்சருக்கு எப்படித் தெரிந்தது?’ என சர்ச்சை கிளப்பி கோர்ட்டுக்குப் போகத் தயாராகி வருகின்றனர்.

http://www.vikatan.com/juniorvikatan/2017-jan-15/kazhugar/127577-mrkazhugu-politics-current-affairs.art

ஸ் பெ

unread,
Jan 15, 2017, 11:52:37 AM1/15/17
to panbudan

தீபாவுக்கு குவியும் பொங்கல் வாழ்த்து, அதிர்ச்சியில் சசிகலா...

தீபா

 

லைமைப் பொறுப்பை ஏற்கச் சொல்லி  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அழைப்பு விடுக்கும் அ.தி.மு.க நிர்வாகிகளின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக்கொண்டே போகிறது.


வாசலில் தோரணம் கட்டியும், வீட்டில் எம்.ஜி.ஆர் படப்பாடல்களை ஸ்பீக்கரில் ஒலிக்க வைத்தும் பொங்கல் நாளில் களை கட்டியது தீபாவின் வீடு.  தீபாவுக்கு பொங்கல் வாழ்த்து சொல்ல ஜனவரி 14-ஆம் தேதி மாலை அவர் வீட்டுமுன் தொண்டர்கள் திரண்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டது.


'தீபாம்மா பொட்டு வைப்பதில்லை என்ற கருத்தை இனி யாரும் சொல்ல முடியாது... அதோ பாருங்க பொட்டு வைத்து தீபாம்மா, அம்மா மாதிரியே கையைக் காட்டிக்கிட்டு வர்றாங்க' என்று நெகிழ்கின்றனர் ஆதரவாளர்கள்.  சென்னை மாநகராட்சி சேர்மன் மற்றும் எழும்பூர்  அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் மகியன்பன், பெரம்பூர் தொகுதி முன்னாள் பகுதிச் செயலாளர் எஸ்.எம்.மாரிமுத்து, திரு.வி.க.நகர் முன்னாள் இளைஞரணி பகுதிச் செயலாளர் எபிநேசன், ஆர்.கே.நகர். சட்டமன்ற தொகுதி செயலாளர் பாலசுப்பிரமணி போன்ற சென்னையின் முக்கிய நிர்வாகிகள் தீபாவுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லி வந்திருக்கிறார்கள்.
இன்னொருபுறம் எம்.ஜி.ஆர் பிறந்தநாளான ஜனவரி 17-ஆம் தேதியன்று சென்னையில் பகுதி வாரியாக பொதுக் கூட்டம் நடத்தும்படி அ.தி.மு.க தலைமையிலிருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு போயுள்ளது. தலைமையின் உத்தரவுப்படி வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா,  பகுதிச் செயலாளர்களைக் கூப்பிட்டு கூட்டத்தை நடத்தும்படி சொல்லியிருக்கிறார்.
 ஆனால், எழும்பூர்  அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் மகியன்பன்  "அப்படியெல்லாம் எனக்கு எந்த எண்ணமும் கிடையாது நான் கூட்ட ஏற்பாடுகளை செய்ய மாட்டேன்" என்று சொல்லி விட்டாராம்.
எழும்பூர் பகுதிக் கழக ஏற்பாட்டில் நடக்கும் கூட்டத்தில் மனோபாலா பேசுகிறார் என்று  போஸ்டர் அச்சடிக்கும் வேலைகளும் நடந்து விட்டது. இந்த நிலையில்தான், "கூட்டம் போடுவதைப் பற்றி என்னிடம் பேச வேண்டாம், கூட்ட ஏற்பாட்டில் என் பெயரையும் போட வேண்டாம்" என்று பாலகங்காவிடம்  மகியன்பன் சொல்லியிருக்கிறார்.
ஜனவரி 17 அன்று  எழும்பூரில் நடக்கிற கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்ற உறுதியோடு பொங்கலன்று  தீபாவையும் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து விட்டு மகியன்பன்  திரும்பியிருக்கிறார்.
 "பாலகங்காவை  மீறி, கூட்டத்தைப் புறக்கணித்ததோடு, தீபாவை பார்த்து பொங்கல் வாழ்த்து சொல்லி  விட்டு வந்ததாக  சொல்கிறார்களே?" என்று மகியன்பனிடம் கேட்டதும்,  "நீங்க கேள்விப்பட்ட அத்தனை தகவல்களும் உண்மைதான்... நாங்கள் தீபாம்மாவை பார்த்து விட்டுத்தான் வந்தோம்" என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார்.
மகியன்பனுடன்  வந்திருந்தவர்கள், "சென்னை மாவட்டமே  இரண்டொரு நாளில் காலியாகி விடப் போகிறது பாருங்கள்... இனி தீபாம்மாதான் கட்சியின் எதிர்காலம். இப்போது  சென்னையில் உள்ள 15 பகுதிச் செயலாளர்களில் ஒருவர் வந்திருக்கிறார்... அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழும்" என்றனர். தீபாவுக்கு ஆதரவு பெருகி வருவதை அடுத்து சசிகலா வட்டாரம் அதிர்ச்சியில் ஆழ்ந்திருப்பதாகத் தெரிகிறது.

அண்மையில் வெளியான ஜூனியர் விகடன் இதழ் சர்வேயில் தீபாவுக்கு அதிக ஆதரவு இருப்பது தெரிவந்துள்ளது. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கும் சசிகலா, தனது ஆதரவை அதிகரிப்பதற்கான வழிகளை யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் டூர் போவது உள்ளிட்ட திட்டங்களை அவர் கைவசம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/77846-sasikala-shocks-as-party-member-support-for-deepa-rises.art

ஸ் பெ

unread,
Feb 10, 2017, 3:19:51 AM2/10/17
to panbudan
Posted Date : 11:43 (10/02/2017)
Last updated : 12:04 (10/02/2017)

'ஆஸ்பத்திரியைவிடக் கொடுமையா இருக்கு!' - ரிசார்ட் உற்சாகத்தில் உதறும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்  #VikatanExclusive

கோல்டன் பீச் ரிசார்ட்

மிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்டப் பதற்றத்தில் இருக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப் பாய்ந்து கொண்டிருக்க, அரசியல் ஜல்லிக்கட்டை முடிவுக்குக் கொண்டு வராமல் தவித்துக்கொண்டிருக்கிறார் சசிகலா. 'பீச் ரிசாட்டில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தனி வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. பல எம்.எல்.ஏக்கள் கதறியடியே கடற்கரையில் காற்று வாங்கிக்கொண்டிருக்கின்றனர்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனி ஆவர்த்தனத்தைத் தொடங்கிய கணத்தில் இருந்து, அவருக்கான ஆதரவுக் கரங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. நேற்று மதியம் அவைத் தலைவர் மதுசூதனன் ஆதரவு கொடுத்ததை கார்டன் நிர்வாகிகளால் நம்ப முடியவில்லை. தமிழக அரசியல் சூழல் குறித்து, குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். கட்சி அதிகாரமும் கையை விட்டுப் போகும் பதற்றத்தில் இருக்கும் மன்னார்குடி உறவுகள், எம்.எல்.ஏக்களைக் குளிர்விக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் ‘கோல்டன் பே பீச் ரிசாட்டில்’ நடக்கும் காட்சிகளை கலவரத்தோடு கவனித்து வருகின்றனர் அப்பகுதி பொதுமக்கள். "கோல்டன் பே ரிசார்ட் அமைந்துள்ள கூவத்தூரைச் சுற்றிலும், வயல் வெளிகளுக்கு வேலைக்குப் போகும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணிக்குச் செல்லும் மக்களை மன்னார்குடி முகாம் நியமித்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்துகின்றனர். கூவத்தூரைச் சுற்றியுள்ள 1 கிலோமீட்டர் தூரத்தை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர். இந்த 1 கிலோமீட்டர் எல்லைக்குள் அவர்கள் அனுமதியில்லாமல் யாரும் செல்ல முடியாது. கல்லூரி, பள்ளிக்குச் சென்று வரும் மாணவர்களையும் அச்சுறுத்துகின்றனர். 150 குண்டர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டள்ளனர். பேன்ட், சட்டை அணிந்து நவநாகரிமாக இருந்தாலும், அவர்களின் செயல்பாடுகளே அவர்கள் யார் என்பதைக் காட்டிக் கொடுத்துவிட்டது. ரிசாட்டில் தமிழ்நாட்டுப் பதிவுள்ள வண்டிகளைக் காண முடியவில்லை. ஆந்திரா, கர்நாடகா, கேரள பதிவெண் வண்டிகள்தான் அதிகளவில் சென்று வருகின்றன" என விவரித்த, கூவத்தூர் பகுதி அரசியல் பிரமுகர் ஒருவர், 

அமைச்சர் விஜயபாஸ்கர்"எம்.எல்.ஏக்களின் சத்தமும் ஆட்டம் பாட்டமும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் நேற்று திரண்டு போய், மன்னார்குடி முகாம் ஏற்பாடு செய்திருந்த பாதுகாவலர்களிடம் தகராறு செய்துள்ளனர். ' நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க. அதைப் பத்தி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. உங்க கட்சி விவகாரம். எங்களை ஏன் டார்ச்சர் பண்றீங்க?' எனச் சத்தம் போட்டுள்ளனர். ' இன்னும் இரண்டு மணி நேரத்தில் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். அதன்பிறகு எம்.எல்.ஏக்கள் கிளம்பிவிடுவார்கள்' என சமாதானப்படுத்தியுள்ளனர்.

நேற்று இரவு ஆளுநரை சசிகலா சந்தித்த பிறகும், எம்.எல்.ஏக்கள் கிளம்பவில்லை. மூன்று நாட்களாக ரிசார்ட்டில் இருந்து கிடைக்கும் தகவல்களும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. ரிசார்ட்டில் இருக்கும் எம்.எல்.ஏக்களில் 25 பேர் பன்னீர்செல்வத்தின் ஆதரவு மனநிலையில் உள்ளவர்களாம். தலைமைச் செயலகத்திலும் அவரோடு நெருக்கத்தைக் காட்டி வந்தவர்கள். இவர்களை மட்டும் தனியாகப் பிரித்து, பல மணி நேரம் வகுப்பு எடுத்துள்ளனர்.

நடிகர் கருணாஸ்'நீங்கள் என்ன மனநிலையில் இருந்தாலும், ஆட்சி கையைவிட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்றால், சின்னம்மாவைத்தான் நீங்கள் ஆதரிக்க வேண்டும். நீங்கள் ஆதரவு கொடுக்கவில்லையென்றால், ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள். மறுபடியும் நீங்கள் போட்டியிட்டாலும், வெற்றி பெற வாய்ப்பில்லை. இப்படியொரு நிலைமைக்கு ஆளாக வேண்டாம். உங்களுக்கு வேண்டியதைத் தருகிறோம்' என அன்பான குரலில் அதட்டியுள்ளனர். இதை ஏற்காத சில எம்.எல்.ஏக்கள், 'எங்களை ஏன் அடைச்சு வச்சு அடிமை மாதிரி நடத்தறீங்க. ஆஸ்பத்திரியைவிட மோசமா இருக்கு. யார்கிட்டயும் பேச முடியல. வெளியில என்ன நடக்குதுன்னே தெரியலை' எனக் கதறியுள்ளனர். 'நிலைமை சுமூகமாகற வரைக்கும் நீங்க இங்கதான் இருக்கணும்' என மிரட்டியுள்ளனர் மன்னார்குடி கோஷ்டியினர். ரிசார்ட்டில் இருந்து அமைச்சர்கள் ஜெயக்குமார், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டவர்கள் அடிக்கடி வெளியில் போய் வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  கட்டுப்பாட்டில்தான் அனைத்தும் நடக்கின்றன" என விவரித்து முடித்தார். 

"நேற்று எம்.எல்.ஏக்களில் சிலர் அதீத உற்சாகத்தில் ஆட்டம் போட்டுள்ளனர். ரிசார்ட்டில் நீச்சல் குளத்தில் குதித்து ஆட்டம் போட்டதில், இரண்டு எம்.எல்.ஏக்கள் தவறி விழுந்துவிட்டனர். அவர்களின் நிலையைப் பார்த்துப் பதறிப் போய், நடிகர் கருணாஸ் தண்ணீரில் குதித்து அவர்களைக் காப்பாற்றியுள்ளார். அவரோடு சில எம்.எல்.ஏக்களும் குதித்து அவர்களைக் காப்பாற்றியுள்ளனர். அளவுக்கு அதிகமாக நீச்சல் குளத்துத் தண்ணீரை அவர்கள் குடித்துவிட்டனர். விடிந்தும் பல எம்.எல்.ஏக்களுக்கு உற்சாகம் குறையவில்லை. நேற்று இரவே ஊருக்குக் கிளம்பும் மனநிலையில் பல எம்.எல்.ஏக்கள் இருந்துள்ளனர். ஆனால், சுமூக சூழ்நிலை திரும்ப இன்னும் ஒரு வாரம் ஆகும் என்ற தகவல் கிடைத்துள்ளதால், அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நேற்று இரவு நண்பர் ஒருவருக்குப் போன் செய்த எம்.எல்.ஏ, 'மிக சந்தோஷமாக இருக்கிறோம்' எனப் பேசிக் கொண்டிருந்தபோதே கதறி அழுதிருக்கிறார். மன்னார்குடி டீம் இங்கிருந்து செல்லும் வரையில் கூவத்தூர் மக்களுக்கும் விடுதலை இல்லை" என ஆதங்கத்தோடு பேசினார் ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர். 

ஸ் பெ

unread,
Feb 14, 2017, 2:01:20 PM2/14/17
to panbudan
Posted Date : 19:44 (14/02/2017)
Last updated : 20:23 (14/02/2017)

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு கடந்து வந்த பாதை! #Infography #DACase

இளவரசி - சசிகலா - ஜெயலலிதா - சுதாகரன் சொத்துக் குவிப்பு வழக்கு

ஜெயலலிதா, 1992-ம் ஆண்டு முதல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து சசிகலா அவருடன் இருந்தார். ஜெயலலிதா செய்த ஒவ்வொரு செயலும் சசிகலாவுக்கு தெரிந்தேயிருந்தது. 1996-ம் ஆண்டு ஆட்சி மாறியபோது... ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது சுப்பிரமணியன் சுவாமி சொத்துக் குவிப்பு வழக்குத் தொடுத்தார். அப்போது, தி.மு.க ஆட்சி நடந்துவந்த சமயம் என்பதால், வழக்கை அந்தக் கட்சியே கையிலெடுத்தது. ஜெயலலிதா மீதும் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவானது. அவர், வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 1997-ம் ஆண்டு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். வழக்கு, பெங்களூரு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வழக்கு நிலுவையில் இருந்துவந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு தண்டனையை உறுதி செய்தது பெங்களூரு உயர் நீதிமன்றம். நால்வருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதத் தொகையும், மற்ற மூவருக்கு 10 கோடி ரூபாய் அபராதத் தொகையும் அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 21 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார் ஜெயலலிதா. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் தீர்ப்பு இன்று (14.02.17) வழங்கப்பட்டது. சசிகலா முதலமைச்சராகப் பதவியேற்க இருந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ''ஜெயலலிதாவும் குற்றவாளிதான். ஆனால், அவர் இறந்துவிட்டதால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறோம்'' என நீதிபதிகள் கூறினர். மற்ற மூவருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 14 ஜூன் 1996 முதல் 14 பிப்ரவரி 2017 வரை சொத்துக் குவிப்பு வழக்கில் நடந்ததைப் பற்றித் தெரிந்துகொள்ள கீழேயிருக்கும் இன்ஃபோகிராஃபிக்கைப் பார்க்கவும்...

 

சசிகலா Sasikala

இதைப் படி

ஸ் பெ

unread,
Feb 14, 2017, 2:03:08 PM2/14/17
to panbudan
Posted Date : 06:00 (04/10/2014)

கற்பனை செய்ய முடியாத கணக்கு அது!

குன்ஹா தீர்ப்பு முழு விவரம்

இந்தியாவையே தனது தீர்ப்பை நோக்கி திருப்பியவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. 1,136 பக்கங்களுக்கு எழுதப்பட்ட தீர்ப்பு அது. முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன.

 குற்றம்சாட்டப்​பட்டவர்​களுக்கு எதிராக உள்ள சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை உறுதியாக உள்ளன என்பதும் அவற்றை எதிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த சாட்சியங்களும் 100 பாயின்ட்களில் விவரிக்கப்படுகின்றன. அதன் பிறகு, 895-வது பக்கத்தில் ஆரம்பித்து 907-வது பக்கம் வரை நீதிபதியின் தீர்ப்பும் 908 முதல் 910-ம் பக்கம் வரை தண்டனையும் விவரிக்கப்பட்டுள்ளன.

அந்தப் பக்கங்களில் உள்ள விவரங்​கள்தான் இவை...

''ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக இருந்த 1991-1996 காலகட்டத்தில் அவருடைய வருமானம் 9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 ரூபாயாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் செய்த செலவுகள் 8 கோடியே 49 லட்சத்து 6 ஆயிரத்து 833 ரூபாய். இதுபற்றி மிக நியாயமான சந்தேகங்களை வழக்கின் புகார்தாரரான அரசுத் தரப்பினர் எழுப்பி உள்ளனர். ஆனால், இந்தக் காலகட்டத்தில் அசையாச் சொத்துகளின் மதிப்பு 53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்த அசையாச் சொத்துகள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூவரின் கணக்குகளில் வருகின்றன. ஆனால், அவை எந்த வழியில் வந்தன என்பதற்குக் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. அதுபற்றி அவர்களால் நியாயமான கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்க முடியவில்லை. தீர்ப்பு அளிக்கப்படும் இந்த நேரத்தில், தங்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு முன்பாக நீதிமன்றம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகக் குற்றவாளிகள் தரப்பினர் சில தகவல்களை நீதிமன்றத்துக்குத் தந்துள்ளனர்.

முதல் குற்றவாளியான ஜெயலலிதா, 'இந்த வழக்கு தன்னுடைய அரசியல் எதிரிகளால், அரசியல் காரணங்களுக்காகவும் தன்னை பழிவாங்குவதற்காகவும் போடப்பட்டது. வழக்கை எனக்கு எதிராகப் போடும்போது என்னுடைய வயது 48. அதன்பின் 18 வருடங்களுக்கு வழக்கு இழுத்தடிக்கப்பட்டு உள்ளது. இப்போது என்னுடைய வயது 66. இந்த இடைப்பட்ட நாட்களில் வழக்கின் காரணமாக நான் தீராத மன உளைச்சலுக்கு ஆளானேன். அதன் காரணமாக என்னுடைய உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் போன்ற நோய்களால் அவதிப்படுகிறேன். அதனால் நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லும்போது, தனக்கு இருக்கும் இந்தப் பிரச்னைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று சொல்லியுள்ளார்.

இரண்டாவது குற்றவாளி (சசிகலா), 'இந்த வழக்கு அரசியல் காரணத்துக்காகப் போடப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் எனக்குத் தீராத மன உளைச்சல், நீரிழிவு மற்றும் கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது குற்றவாளி (சுதாகரன்), 'இந்த வழக்கு அரசியல் காரணத்துக்காகப் போடப்பட்டது. வழக்குப் போடப்பட்டபோது,  பிறந்த என் குழந்தைக்கு, இப்போது அவருக்கு 18 வயதாகிறது. இந்த வழக்குக்காக நான் இழுத்தடிக்கப்பட்ட காலத்தில் என்னுடைய தாயாரை இழந்துவிட்டேன்'' என்று கூறியுள்ளார்.

நான்காவது குற்றவாளி (இளவரசி), 'இந்த வழக்கின் காரணமாக நான் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தப்பட்டேன். அதனால் எனக்குப் பல நோய்கள் ஏற்பட்டுள்ளன. நான் கணவரை இழந்தவர். என்னுடைய குழந்தைகளைப் பாதுகாக்கும் மொத்தப் பொறுப்பும் என் ஒருவருக்கே உள்ளது. தண்டனை வழங்கும்போது இவற்றை நீதிமன்றம் கருத்தில்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். இவர்களின் வழக்கறிஞர்களான பி.குமார், மணிசங்கர் ஆகியோரும் இதையே தங்கள் கருத்துகளாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த நீதிமன்றம், 'நிரஞ்சன் ஹேமச்சல் Vs மகாராஷ்டிரா அரசு’ என்ற வழக்கின் தீர்ப்பின் சாரத்தை நினைவுபடுத்துகிறது. அந்தத் தீர்ப்பில், 'ஊழலையும் அதன் தாக்கத்தையும் எடைபோடும்போது, குற்றம் செய்தவரின் தகுதியை வைத்து அதை எடை போடக் கூடாது. அப்படிச் செய்யவும் முடியாது. ஏனென்றால், ஊழல் என்பது ஒரு தேசத்தின் வளர்ச்சி. தொலைநோக்குத் திட்டம் என தேசத்தின் முன்னேற்றத்துக்கான அனைத்து அம்சங்களையும் சிதைத்து தேசத்தைப் பாழாக்கும். பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைத்துக் குழி தோண்டிப் புதைத்துவிடும்’ என்று உச்ச நீதிமன்றம் நிரஞ்சன் ஹேமச்சல் வழக்கில் குறிப்பிட்டு உள்ளது. அதைக் கருத்தில்கொண்டே இந்த வழக்கின் தீர்ப்பை நோக்கி நாம் போக வேண்டும். ஏனென்றால், அதிகாரத்தில் உள்ளவர்களின் அதிகார மீறல், பொறுப்பில் உள்ளவர்கள் பேராசை காரணமாக தவறான வழிமுறைகளில் பொருளீட்டு¢ம் வேட்கை போன்றவற்றுக்கு இந்த வழக்கு மிகச் சிறந்த உதாரணம். அதிகாரத்தில் உள்ளவர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஜனநாயக நாட்டின் கட்டமைப்பைத் தகர்த்துவிடும்.

பொது ஊழியர் ஆவதற்கு முன்பாக குற்றவாளிகள் தரப்பில் காட்டிய வருமானம் 2 கோடி ரூபாய். ஜெ-சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், ஜெயா பப்ளிகேஷன் ஆகியவற்றின் வருமானங்களும் இந்த இரண்டு கோடி ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. ஆனால், பொறுப்பில் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் வருமானம் உயர்ந்துள்ள வேகத்தை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. இவர்கள் தரப்புக்குச் சொந்தமான பண்ணை 900 ஏக்கர் பரப்பை உடையது. அதை வெறும் ஏழு கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாகக் கணக்கு சமர்ப்பித்துள்ளனர். அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையில்கூட இப்படி வாங்க முடியாது. அதாவது வெறும் 10,000 ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலம் என்ற வகையில் வாங்கி உள்ளனர். இப்படிப் பார்த்தால் ஒரு முழு கிராமத்தையே வாங்கிவிடலாம். இவர்களின் நிறுவனங்கள் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களைத் தங்களுக்குச் சொந்தமாக வைத்துள்ளனர். ஆனால், அந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலம் எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது என்பதை அவர்களால் சொல்ல முடியவில்லை. அவற்றின் மதிப்பு எல்லாம் அரசு மதிப்பீட்டில் கணக்கிடப்பட்டு, இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. சந்தை மதிப்பீட்டின்படி கணக்கிட்டால், இவற்றின் மதிப்பை நாம் கற்பனையில்கூட கணக்குப் போட முடியாத அளவில் உயர்ந்து நிற்கும்.

ஜெயலலிதா இப்படிச் சொத்துகளை வாங்குவதற்கு மற்றவர்கள் உதவி உள்ளனர். புதிது புதிதாக நிறுவனங்களைத் தொடங்கியும் செயல்படாத நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியும் ஜெயலலிதா சொத்துகளைச் சேர்க்க மற்றவர்கள் உதவியுள்ளனர். அந்த நிறுவனங்களில் யாரும் எந்த முதலீடும் செய்யவில்லை. அவற்றின் பங்குகளை வாங்கவில்லை. அதில் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை. ஆனால், நிறுவனம் இவர்களுக்குச் சொந்தமாக உள்ளது. அவற்றின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி, சம்பாதித்த சொத்துகளை அந்தக் கணக்கில் சேமித்து வைக்கவும் அவற்றைத் தங்களுக்கு உரியதாக்கிக் கொள்ளவும் மட்டுமே செய்துள்ளனர். வாதப் பிரதிவாதங்களில் இவை எல்லாம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. அதாவது சொத்துகளை வாங்கிக் குவிப்பதற்கான பணப்பரிமாற்றம் மட்டுமே இந்த வங்கிக் கணக்குகளில் நடந்துள்ளது.  

தமிழ்நாடு அரசாங்கத்தின் மிகப் பெரிய பொறுப்பில் இருந்துகொண்டு, ஜெயலலிதா இந்தக் குற்றங்களில் ஈடுபட்டது குற்றத்தின் கனத்தை அதிகரிக்கிறது. ஏன் அதிகரிக்கிறது என்றால், 'மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்று நீதிமொழி அறிவுறுத்துவதை இங்கு உணர வேண்டும். அந்த வகையில் பார்த்தால், ஜெயலலிதா தனக்குக் கீழ் இருந்த அரசு இயந்திரங்கள், கட்டமைப்புகள், அவற்றைச் சார்ந்த பொதுமக்கள் என ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தவறான வழியைக் காண்பித்துள்ளார். இப்போது இவர்களுக்குத் தண்டனை வழங்கும்போது, இங்கு 'பி.சுப்பையா Vs கர்நாடக அரசு’க்கும்  வழக்கில் இடையில் நடந்த கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் சாரத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்தத் தீர்ப்பில், 'உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் தவறு செய்யும்போது, அதில் காட்டப்படும் சலுகை, ஒரு சமூகத்துக்குச் செய்யும் கேடாக முடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தன் மீது கருணைகாட்ட வேண்டும் என்பதற்காகக் குற்றவாளிகள் சொன்ன காரணங்கள் எதுவும் நியாயமான காரணங்கள் அல்ல. வழக்கு 18 ஆண்டுகள் நடந்தது என்பதில் சந்தேகம் இல்லை. அதற்குக் காரணம் யார் என்பதையும் இப்போது ஆராய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நீதிக்குச் சமாதிகட்ட முயற்சிகள் நடந்ததால்தான் இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இந்த வழக்குக்கு 5 ஆண்டுகளுக்கு தடை இருந்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதன் பிறகு நிறைய நேரத்தை வீணடித்தது குற்றவாளிகளே. அதையும் யாரும் மறுக்க முடியாது. இந்த வழக்குக்கு எந்த வகையிலும் பயன்தராத விஷயங்களைக் கேட்டு தாமதம் செய்தனர். இந்த வழக்குக்கு எந்தத் தொடர்பும் இல்லாத சட்ட நடைமுறைகளைச் சொல்லி தாமதம் செய்தனர். தேவையற்ற காரணங்களைச் சொல்லி சலுகைகளைப் பெற்று வழக்கை தாமதம் செய்தனர். இப்படியே அவர்கள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தனர். எனவே, இவர்கள் சொன்ன காரணங்கள் தண்டனையைக் குறைப்பதற்கு ஏற்ற காரணங்கள் அல்ல.

மேலும், குற்றத்தின் தீவிரம், சொத்துகளின் அளவு, அவற்றைச் சம்பாதிக்கக் குற்றவாளிகள் பயன்படுத்திய வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தண்டனையை தீர்மானிக்க முடியும். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது. சட்டம் சொல்லும் உச்சபட்ச தண்டனையில் பாதிக்கும் மேலாக இவர்களுக்கு வழங்கினால்தான் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டதாகும். ஏனென்றால் இந்த வழக்கின் தீவிரம் அப்படி. அந்தவகையில் ஒவ்வொரு குற்றவாளிக்கும் 4 ஆண்டுகளை சிறைத் தண்டனையாக விதிக்கிறேன்.''

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட விதம் அடுத்த இதழில்!

-ஜோ.ஸ்டாலின், படம்: ரமேஷ் கந்தசாமி

Reply all
Reply to author
Forward
0 new messages