ஆதாம் ஏவாள் ஏதேன் தோட்டம் குறித்த சுவாரசியமான அறிவியல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள்

690 views
Skip to first unread message

yesu rajan

unread,
Dec 24, 2015, 11:49:18 PM12/24/15
to பண்புடன், mintamil

நன்றி


ஆதாம் ஏவாள் ஏதேன் தோட்டம் குறித்த சுவாரசியமான அறிவியல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள்

பைபிள் கூறும்  ஆதாம் ஏவாள் கதை - அறிய இங்கே கிளிக் செய்க

ஆதாம் ஏவாள் என்ற ஆண் பெண் வாழ்ந்தனரா? அவர்கள் தான் அனைவருக்கும் தாய் தந்தையரா? வாருங்கள் கண்டறிவோம்.

இந்த கூற்றை மெய்ப்பிக்க ஒரே வழிதான் - அதாவது உலகில் உள்ள அனைவரும் ஒரே தாய் தந்தையில் இருந்து பல வருடங்களுக்கு முன்னர் பலுகி பெருகி வந்துள்ளனர் என்பதே. இது எளிதல்ல. ஆனால் மனப் பூர்வமாக நம்பலாம். அறிவியல் கூறும் உண்மை இது!

"மரபணு சோதனை" என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். மரபணு சோதனை மூலம் ஒரு குழந்தையின் உண்மையான தாய் தந்தை யார் என்று எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இந்த மரபணு சோதனை எப்படி செய்வார்கள் என்று பார்போம்.

அதாவது ஒவ்வொரு மனிதரின் உடலும் பல உயிரணுக்களால் (செல்கள்) உண்டானது. ஒவ்வொரு உயிரனுக்குள்ளும் உயிரணுக்கரு (நியூக்ளியஸ்) இருக்கும். இந்த உயிரணுக்கருவில் தான் பரம்பரையை கண்டுபிடிக்க கூடிய மரபணுக்கள் (ஜீன்ஸ்) இருக்கும். இந்த ஜீன்கள் (மரபணு), டி.என்.ஏ என்ற அமிலத்தால் உண்டானவை. இந்த அமிலத்தை ஒப்பிட்டு ஒரு குழந்தையின் உண்மையான தாய் தந்தை யார் என்பதை கண்டு பிடித்துவிடலாம். இதே டெஸ்ட் மூலம் ஒரு குழந்தையின் பாட்டி தாத்தாவையும் கண்டு பிடிக்கலாம். இப்படி அந்த குழந்தையின் முன்னோர்களை கூட கண்டு பிடிக்கலாம். ஆனால், சில முந்திய தலைமுறைகள் முன்பு வரை கண்டுபிடித்துவிட்டபிறகு இந்த ஜீன்கள் அதற்கு முன்னிருந்த அந்த குழந்தையின் முன்னோரை அடையாளம் காட்ட தவறுகிறது. எனவே, இந்த டெஸ்டை வைத்து அனைவரும் ஒரே தாயில் இருந்து வந்தவர்கள் என்பதை நிரூபிக்கமுடியாது.


ஆனால், இந்த உயிரணுக்கருவில் உள்ள டி.ஏன்.ஏ மட்டும் அன்றி, உயிரணுகருவிற்கு வெளியில் சில டி.ஏன்.ஏ அமிலம் மைட்டோகாண்டிரியா (இழைமணி) என்ற உயிரணு பகுதியிலும் உள்ளது. இந்த மைட்டோகாண்டிரியா பகுதியில் உள்ள டி.ஏன்.ஏ எத்தனை தலைமுறைகள் ஆனாலும் மாறாமல் அப்படியே சந்ததி சந்ததியாக வந்து கொண்டே இருக்கும். ஏன் என்றால், உயிரணுகருவில் உள்ள டி.ஏன்.ஏ தந்தையால் ஒவ்வொரு சந்ததியிலும் மாறுபட்டுகொண்டே இருக்கும். ஆனால் மைட்டோகாண்ட்ரியாவில் உள்ள டி.ஏன் ஏ ஒரு தாயில் இருந்து அப்படியே காலங்காலமாக வந்துகொண்டேயிருக்கும். இன்னும் பத்தாயிரம் சந்ததிகள் போனாலும் மாறவே மாறாது. எனவே இந்த மைட்டோகாண்டிரியாவில் உள்ள டி.ஏன்.ஏ - வை கொண்டு பல மக்களிடம் சோதனை செய்து பார்த்தால் இவர்கள் எல்லாம் ஒரே தாயில் இருந்து வந்தவர்களா என்று தெரிந்துவிடும்!

இதற்காக சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், உலகின் பல்வேறு மூலைமுடுக்குகளில் இருந்து கிட்டத்தட்ட 150 மக்கள் வரவழைக்கப்பட்டனர். அதவாது, ஒரு கருப்பு இனத்தை சார்ந்த ஆப்ரிக்கர், ஒரு வெள்ளை காரர், ஒரு சீனர், ஒரு இந்தியர், ஒரு விஞ்ஞானி, ஒரு விவசாயி, ஒரு ஆதிவாசி, ஒரு பட்டணத்தார், ஒரு பழங்குடி இனர் என்று பல்வேறு தரப்பில் மக்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களில் நடத்தப்பட்ட இந்த மரபணு சோதனை மிகவும் முக்கியமானது! ஏன் என்றால், அத்தனை பேருக்கும் வியக்க வைக்கும் வண்ணம் ஒரே மைட்டோகாண்டிரியா டி.என்.ஏ தான் இருந்தன. இதன் மூலம் இவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் ஒரே தாயில் இருந்து தான் வந்திருக்கமுடியும் என்று நூறு சதவீதம் கூறுகின்றனர்!

மனிதர்கள் ஒரே தாயில் இருந்து தான் வந்திருக்க வேண்டும் என்ற கண்டுபிடிப்பையும், மூன்று கண்டங்களான ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகியவை கூடும் இடத்தில் தான் (துருக்கியும் அங்கு தான் உள்ளது) அந்த ஒரே தாயில் இருந்து வந்த ஆதி மக்கள் வாழ்ந்து, பெருகி உலகம் முழுவதும் பரவியிருக்கவேண்டும் என்ற கண்டுபிடிப்பையும் ஆய்வியல் தான் கூறுகிறது 

- இதனை விக்கிபீடியா சென்று, Mitochondrial Eve என்ற தலைப்பின் கீழ் காணலாம்!

ஒரே தாய் என்றால், ஓர் தந்தை இருக்க வேண்டும். அது மட்டும் இல்லை. அந்த மூதாதையர் ஆசிய, ஆப்ரிக்கா, ஐரோப்பா கண்டங்கள் ஒன்று சேரும் இடத்தில் தான் இருந்திருக்க வேண்டும் என்று நிச்சயித்து கூறுகின்றனர்.  அந்த மூன்றும் கண்டங்களும் கூடும் இடத்தில் தான் இன்றைய துருக்கி நாடு உள்ளது. இந்த துருக்கி நாடு பைபிளில் ஒரு முக்கிய இடத்தை தன்னுள் கொண்டிருக்கிறது! அது - ஏதேன் தோட்டம் (விவரங்கள் கீழே)

துருக்கி நாட்டில் 1994 ஆடு மேய்க்கும் ஒரு இடையர் வித்யாசமாக 'T' வடிவத்தில் சில கற்கள் அந்த பகுதியில் இருப்பதை கண்டு துருக்கி அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்க, அவர்கள் ஜெர்மன் நாட்டில் இருந்து சில அகழ்வாராய்ச்சி நிபுனர்களை வரவழைத்து அவர்கள் உதவியுடன் அந்த இடங்களை அகழ்ந்து ஆராய்ந்தனர். அப்பொழுது உலகின் மிக பழமையான அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. அந்த இடத்திற்கு பெயர் 'கொபெக்லி திபே'. இதுவே ஆதாம் ஏவாள் வாழ்ந்த ஏதேன் தோட்டம் இருந்த இடமாக இருக்கும் என்று சந்தேகிக்கபடுகிறது! பல குறிப்புகள் பைபிளுடன் ஒத்து போகின்றன.


1) 'கொபெக்லி திபே' கற்களை விட பழமையான மனிதனால் செதுக்கப்பட்ட கட்டிடகலை உலகில் எங்குமே இல்லை. கொபெக்லி திபே கற்களை ஆராய்ந்ததில் அவை 13,000 வருடங்களுக்கு முன்பு (கி.மு11000) செதுக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொபெல்கி திபே கற்களுக்கு பிறகு கிட்டத்தட்ட 6,500 வருடங்கள் வரை மனிதனால் ஆக்கப்பட்ட, செதுக்கப்பட்ட எந்த  கல் கட்டிடக்கலையும் இல்லை. எனவே ஆதி மனிதர்கள் துருக்கி பகுதியில் தான் வாழ்ந்தனர் என்றும் அங்குதான் முதலில் நாகரீகம் பிறந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - (பைபிளில் உள்ள முதல் இடம் - ஏதேன் தோட்டம்)

2) 'கொபெக்லி திபே' கொண்டுள்ள கட்டிடகலை ஒரு வழிபாட்டு தளம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது! 'மனிதன் வசித்த வீடு போன்ற இடம்' என்பதற்கு எந்த தடயமும் அங்கு இல்லை. ஆனால், T வடிவ செதுக்கப்பட்ட தூண்கள் வட்ட வட்டமாக அமைந்துள்ளன. மேலும் சித்திரங்களும் சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன. இதனால் சரித்திரம் மிக பெரிய மாற்றத்தை பெற்றுள்ளது. 'கொபெக்லி திபே' கண்டுபிடிப்பிற்கு முன்பு வரை, முதலில் விவசாயம் பிறந்திருக்கும் அதன் பின்பு தான் இறை வழிபாடு பிறந்திருக்கும் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், இந்த கண்டுபிடிப்புக்கு பின் வழிபாடே முதலில் வந்தது என்பது உறுதியாகி விட்டது. ஏன் எனில் இதற்கு பல ஆண்டுகளுக்கு  பின்பு தான் விவசாயத்திற்கான அறிகுறிகள் தெரிகின்றன - (பைபிளில் முதலில் வழிபாடு பின்பே விவசாயம்)

3) 'கொபெக்லி திபே' கற்கள் அமைந்துள்ள இடம் பழங்காலத்தில் செடிக்கொடி மரங்கள் நிறைந்த இடம் என்பது அந்த இடத்தில் அகழந்த போது கிடைத்த படிமங்கள் மூலம் தெரியவந்தது - (ஏதேன் தோட்டம் மரஞ்செடிகள் நிறைந்த இடம்)


4) 'கொபெக்லி திபே' கற்கள் பெரும்பாலும் சிங்கம், வாத்து, நெருப்புகோழி, ஊர்வன மிருகங்கள் போன்ற சிற்பங்கள் தான் கொண்டுள்ளன - (ஏதேன் தோட்டத்தில் விலங்குகள் பறவைகள் நிறைந்திருந்தன)


5) 'கொபெக்லி திபே' தளத்தில் முழுதாக செதுக்கப்பட்ட ஒரு ஆண் சிலையும், ஆடைகளின்றி அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணின் சிலையும் உள்ளது - (ஆதாம் என்ற ஆணும், ஏவாள் என்ற பெண்ணும் ஆடைகளின்றி ஏதேனில் வாழ்ந்தனர்)


6) அதே இடத்தில், பாம்பின் உருவம் ஒரு கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது - (ஏதேனில் ஏவாள் பாம்பால் வஞ்சிக்கபட்டாள்)


7) 'கொபெக்லி திபே' பகுதியில் இருந்து சிறிது விலகி தனியாக ஒரு மரம் மட்டும் உள்ளது. இந்த அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பிற்கு முன்பிருந்தே அந்த பகுதி வாசிகள் அந்த மரத்தை காரணமே தெரியாமல் காலங்கலமாக புனிதமாக எண்ணி வருகின்றனர். அநேகமாக ஒரு மரம் பட்டுவிட்டவுடன் அந்த இடத்தில் பட்டுப்போன மரத்தின் விதையில் இருந்து மீண்டும் மரக்கன்று வளர்த்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது - (ஏதேன் தோட்ட சிறப்பு 2 வாய்ந்த மரங்களை பைபிள் குறிப்பிடுகிறது)


8) 'கொபெக்லி திபே' தளத்தில் இறகுகளுடன் கூடிய சில மனிதர்கள் நிற்பது போன்ற உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன - (ஏதேன் தோட்டத்தை  சுற்றி இறைவன் கேருபீன்கள் என்ற தேவதூதர்களை காவல் வைத்தார்)


9) 'கொபெக்லி திபே' தளம் இதெக்கேல் ( TIGIRIS ), ஐபிராத்து (EUPHRATES) என்ற நதிகள் ஒன்று கூடும் இடத்தின் அருகில் உள்ளது - (ஏதேன் தோட்டம் இதெக்கேல், ஐபிராத்து நதிகள் கூடும் இரண்டு நதிகள் கூடும் இடத்தின் அருகில் இருந்ததாக பைபிள் கூறுகிறது - இன்னும் 2 நதிகள் பரலோக நதிகள் என்பது கவனிக்கத்தக்கது)

10) விவசாயத்திற்கான முதல் அறிகுறி, கொபெக்லி திபே காலத்திற்கு பின்பு, துருக்கியில் தான் தென்படுகிறது - (ஆதாம் ஏவாளின் முதல் மகன் காயீன் விவசாயம் செய்பவனாக மாறியதாக பைபிள் கூறுகிறது)

11) விவசாய அறிகுறிக்கு சில ஆண்டுகளுக்கு பின்பு கால்நடை வளர்ப்புக்கான முதல் அறிகுறியும் துருக்கி நாட்டில் தான் தெரிகிறது - (ஆதாம் ஏவாளின் இரண்டாம் மகன்  ஆபேல் ஆடு மேய்ப்பவனாக மாறியதாக பைபிள் கூறுகிறது)

12)  கொபெக்லி திபே பகுதியின் அருகில் மற்றும் சுற்று புறங்களில் இறைவனுக்கு உயிர்களை பலி கொடுக்கும் சம்பவங்கள் பல்லாயிர கணக்கான வருடங்களுக்கு முன்பு விளங்கியது உறுதி செய்யபட்டுள்ளது. அந்த பகுதிகளில் தோண்டிய போது மண்டை ஓடு இல்லாத மனித எலும்புக்கூடுகள் கிடைத்தன. அருகிலேயே தனியாக மண்டை ஓடுகள் மட்டும் புதைக்கப்பட்டுள்ளன - (காயீனும் ஆபேலும் முதற்பலனை கடவுளுக்கு கொடுத்ததாக பைபிள் கூறுகிறது. மேலும் காயீன் ஆபேலை கொன்றதாகவும் பைபிள் கூறுகிறது)

ஆக மொத்தம், பைபிள் எழும்பவதற்கு முன்பிருந்தே ஆதாம் ஏவாள் பற்றி மக்களுள் செய்திகள் விளங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொபெக்லி திபே ஏதேன் தோட்டம் அமைந்த இடமாக என்று பல காரணங்கள்  ஒத்து போவாதால் சந்திக்கப்படுகிறது. மக்கள் அவ்விடத்தில் கற்களை செதுக்கி, மனித உருவங்களை செதுக்கி வழிபட்டு வந்ததும் உறுதி செயப்பட்டுள்ளது.

"மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப் பட்டவைகளோ, இந்த நியாயப் பிரமாணத்தின் வார்த்தைகளின் படியெல்லாம் செய்யும் படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்." - உபாகமம் 29:29 (பைபிள்)

பைபிளில் உள்ள ஆதாம் ஏவாள் சம்பவங்களுக்கு சில தடயங்கள் கிடைத்துள்ளன. அவற்றின் பட்டியல்.

1) எல்லாரும் ஒரு தாய் மக்கள் என்ற அறிவியல் கண்டுபிடிப்பு
2) உயிர்கள் மண்ணில் இருந்து தோன்றிய தடயங்கள்
3) பாம்புகள் கால்களுடன் இருந்தன என்ற கண்டுபிடிப்பு
4) ஆதி மனிதர்கள் துருக்கியில் தான் வாழ்ந்திருக்க முடியும் என்ற ஆய்வு
5) துருக்கியில் தான் நாகரீகம் முதலில் தோன்றியுள்ளது என்ற கண்டுபிடிப்பு
6) விவசாயத்திற்கு முன்பு வழிபாடு தோன்றிய கண்டுபிடிப்பு
7) கொபெல்கி திபே பகுதியின் தனி அம்சங்கள்
  • உலகிலேயே பழங்கால முதல் கல் கட்டிடகலை
  • ஏதேன் தோட்டம் அமைந்திருந்ததாக கூறப்படும் அதே இடம்
  • செடிகொடிகள் நிறைந்த இடமாக விளங்கியது என்ற ஆய்வு முடிவு
  • பறவை விலங்குகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன
  • முழுவதாக செதுக்கப்பட்ட ஒரு ஆண் சிலை
  • ஆடையின்றி அமர்ந்திருக்கும் ஒரு பெண் சிலை
  • அங்கேயே காணப்படும் பாம்பின் சிலை
  • தேவதூதர்கள் போன்ற அமைப்புடைய சிற்பங்கள்
  • புனிதமாக எண்ணப்படும் ஒரு தனி மரம்
  • வழிபாட்டு ஸ்தலம் என்ற முடிவு
  • அருகிலேயே விவசாயத்திற்கான முதல் அறிகுறிகள்
  • அதன் பின்பு தோன்றும் கால்நடை வளர்ப்பிற்கான முதல் அறிகுறிகள்
  • பலி நரபலி செலுத்தியதற்கான அறிகுறிகள்
8) குறிப்புகள் என்று புதிர் போடும் பைபிள்!

Ramesh Murugan

unread,
Dec 26, 2015, 4:44:16 AM12/26/15
to பண்புடன்
இயேசு ராஜன்,
உங்கக்கிட்ட தொடர்ந்து இந்த மாதிரியான அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம். எங்களுக்கும் பொழுது போகனும்ல.. :)
 
2015-12-25 7:49 GMT+03:00 yesu rajan <yesura...@gmail.com>:
ஆதாம் ஏவாள் ஏதேன் தோட்டம் குறித்த சுவாரசியமான அறிவியல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள்

/


--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

yesu rajan

unread,
Dec 26, 2015, 6:16:28 AM12/26/15
to பண்புடன்
//எங்களுக்கும் பொழுது போகனும்ல.. :)//

அன்பரே

உறுப்படியான வேலை இருந்தால் பாருங்கள் ஏன் வீணே பொழுதை போக்கனும்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Jaisankar Jaganathan

unread,
Dec 26, 2015, 12:25:22 PM12/26/15
to panb...@googlegroups.com
ஆதாமும் ஏவாளும் செதுக்கும் சிற்பதுக்கு டூல்ஸ் யாரு குடுத்தது இயேசுராஜன். ஒரு வேளை அந்த காலத்துலேயே மெஷின் கட்டிங் இருந்திருகுமோ 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

Ramesh Murugan

unread,
Dec 27, 2015, 12:16:31 AM12/27/15
to பண்புடன்
உங்களோட ஆராய்ச்சி கட்டுரையைவிட வேற என்ன பொழுதுபோக்கு இருந்துடபோவுது...
பகிருங்கள் அன்பரே காத்திருக்கிறோம். :)

2015-12-26 14:16 GMT+03:00 yesu rajan <yesura...@gmail.com>:
அன்பரே

உறுப்படியான வேலை இருந்தால் பாருங்கள் ஏன் வீணே பொழுதை போக்கனும்

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 27, 2015, 11:28:41 AM12/27/15
to பண்புடன்
//உறுப்படியான வேலை இருந்தால் பாருங்கள் ஏன் வீணே பொழுதை போக்கனும் 
//

ஆசிப் அண்ணாச்சி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

Jaisankar Jaganathan

unread,
Dec 27, 2015, 12:00:59 PM12/27/15
to panb...@googlegroups.com
ஐயப்பன் அண்ணா\
வனவாசம் முடிஞ்சதா  
--
regards,
jaisankar jaganathan

yesu rajan

unread,
Dec 27, 2015, 11:16:38 PM12/27/15
to பண்புடன்
////உறுப்படியான வேலை இருந்தால் பாருங்கள் ஏன் வீணே பொழுதை போக்கனும் 
//

ஆசிப் அண்ணாச்சி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.
//

ha ha haa

yesu rajan

unread,
Dec 27, 2015, 11:58:27 PM12/27/15
to பண்புடன்

ஏசுநாதரின் வாழ்க்கை வரலாறும் புராண கதாப்பாத்திரங்களின் கதைகளும்


சுட்டது :http://ivaryaar.blogspot.in/2013/03/blog-post_23.html?showComment=1422953680524#c7126253597332776052

டாவின்சி கோட் வெளியாகி ஒரு வருடத்திற்குள் கிறிஸ்தவத்திற்கு எதிராக எழுந்த இன்னொரு திரைப்படம் 'செய்கிஸ்ட்'. ஏசுநாதரின் வாழ்க்கை வரலாறு பண்டைய புராணக் கதாபாத்திரங்களின் கதைகளை இணைத்து உருவாக்கப்பட்டது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறது இத்திரைப்படம். டாவின்சி கோட் போட்ட புதிருக்கு விடை தந்து ஓய்ந்த கிறிஸ்தவர்கள் மீண்டும் பட்டயத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

யூதாசின் மறுதலிப்பு

ஹோரஸ், மித்ரா, டைநோசிஸ், கிருஷ்ணா போன்ற பண்டைய புராண கதாப்பாத்திரங்களின் கதைகளை இணைத்து உருவாக்கப்பட்டதே ஏசுநாதரின் வாழ்க்கை வரலாறு என்று இத்திரைப்படம் கூறுகிறது. செய்கிஸ்ட் விடுத்த குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதில்கள் இப்பதிவில் உள்ளன.

ஏசுநாதரின் வாழ்கையை புராண கதைகளுடன் ஒன்றிணைக்க மேலோட்டமான வாதங்களையும்  ஏமாற்று செய்திகளையும் இத்திரைப்படம் முன்வைக்கிறது என்பதே உண்மை... வாருங்கள் காண்போம்.

1) ஏசுநாதரின் வாழ்க்கையும் ஹோரஸின் புராண கதையும் ஒன்றா?

ஹோரஸ்

செய்கிஸ்ட் கூறும் ஒப்பீடு:
பண்டைய எகிப்து தேசத்தில் தெய்வமாக வழிபடப்பட்ட புராண கதாப்பாத்திரம் தான் ஹோரஸ். ஹோரஸ் டிசம்பர் 25 அன்று கன்னித்தாயிடம் பிறந்தார். அவர் பிறந்த போது மூன்று ஞானிகள் குழந்தை ஹோரஸை காண வந்தனர். ஹோரஸ் பன்னிரெண்டாம் வயதிலே தன் ஞானத்தை வெளிப்படுத்தி ஆச்சிரயப்படுத்தினார். அவருக்கு 12 சீடர்கள் இருந்தனர். அதன் பின் அவர் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார். ஆக ஏசுநாதரின் வாழ்க்கை ஹோரஸின் புராண கதையை வைத்து உருவாக்கப்பட்டது என்கிறது செய்கிஸ்ட்.

உண்மை என்ன?
ஏசுநாதரின் வாழ்க்கை ஹோரசின் புராண கதையை வைத்து எழுதப்பட்டது அல்ல. ஏசுநாதரின் வாழ்கையை வைத்து ஹோரசிற்கு புதிய கதையை செய்கிஸ்ட் கூறுகிறது.

அ) ஹோரஸ் டிசம்பர் 25ஆம் தேதி பிறந்தவரா?
முதலாவதாக இயேசு டிசம்பர் 25 அன்று தான் பிறந்தார் என்று பைபிள் கூறவில்லை. இயேசு நாதரின் பிறந்தநாள் எது என்பது பற்றி எந்த வித ஆதாரப் பூர்வமான சான்றுகளும் இல்லை. டிசம்பர் 25 ஏசுநாதரின் பிறப்பை நினைவு கூறுவதற்காகவே  கிறிஸ்துமஸ் பண்டிகையாக அனுசரிக்கப்படுகிறது. மேலும் ஹோரஸ் டிசம்பர் 25 பிறந்தார் என்று செய்கிஸ்ட் கூறுவதும் உண்மையல்ல. எகிப்திய புராணங்கள் ஹோரஸ் கொய்யக் என்ற மாதத்தில் பிறந்ததாக கூறுகிறது. எகிப்திய நாள்காட்டியில் 'கொய்யக்' அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நிகழ்கின்றது. எனவே ஹோரஸின் பிறந்தநாள் டிசம்பர் 25 அல்ல. செய்கிஸ்டின் கூற்று உண்மையற்றது.

ஆ)  ஹோரஸ் கன்னி தாயிடம் பிறந்தவரா?
ஹோரஸ் பிறப்பதற்கு முன்பே ஹோரசின் தந்தை ஒரிசிஸ் இறந்துவிட்டார். எனவே ஹோரசின் தாயான இசிஸ் இறந்த தன் கணவனின் உடலோடு புணர்ந்து கர்ப்பந்தரித்து ஹோரசை பெற்றெடுத்தார் என்று எகிப்திய புராணங்கள் கூறுகின்றன. இதற்கு பெயர் கன்னி பிறப்பா?

இ) மூன்று ஞானிகள் குழந்தை ஹோரசை காண வந்தனரா?
செய்கிஸ்ட் எவ்வாறு ஹோரசை குறித்து இவ்வாறு கூறியது என்று சரித்திரவான்கள் குழம்பி வருகின்றனர். ஏனெனில் இச்செய்தியை குறித்து செய்கிஸ்ட் எந்த ஆதரங்களையும் சமர்ப்பிக்கவில்லை. ஹோரசின் புராண கதைகளிலும் மூன்று ஞானிகள் குழந்தை ஹோரசை காண வந்ததாக செய்திகள் இல்லை. செய்கிஸ்டின் இந்த கூற்றும் உண்மையல்ல. ஏசுநாதரை காண வந்த ஞானிகள் எத்தனை பேர் என்று சுவிசேஷங்கள் கூறவில்லை. பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம் ஆகியவற்றை குழந்தை ஏசுவிற்கு பரிசுகளாக வைத்து சென்றதாகவே கூறுகின்றன. இச்சம்பவம் நிகழ்ந்த போது இயேசு ஒரு வயதை கடந்திருந்தார்.

ஈ) ஹோரஸ் தன் பன்னிரெண்டாம் வயதில் தன் ஞானத்தை வெளிப்படுத்தினாரா?
இயேசு தன் 12ஆம் வயதில் ஆலய குருக்களை வியக்க வைக்கும் படி போதனை வழங்கினார் என்று வேதம் கூறுகிறது. ஹோரஸ் குறித்த இச்செய்தி அடங்கியுள்ள குறிப்பு காலத்தால் பிந்தியது. சுவிசேஷத்திற்கு முந்திய எந்த குறிப்புகளையும் செய்கிஸ்ட் சமர்ப்பிக்கவில்லை.

உ) ஹோரசிற்கு 12 சீடர்கள் இருந்தனரா?
பெரும்பாலான எகிப்திய புராணங்கள் ஹோரசின் சீடர்களின் எண்ணிக்கை என்ன என்று கூறவில்லை. சில ஹோரசிற்கு 4 சீடர்கள் இருந்ததாக கூறுகின்றன. எவ்விடத்திலும் ஹோரசிற்கு 12 சீடர்கள் இருந்தனர் என்ற குறிப்பு இல்லை.

ஊ) ஹோரஸ் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தாரா?
செய்கிஸ்ட் கூறிய இன்னொரு பொய் இது. ஹோரஸ் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததாக எந்த குறிப்புகளும் இல்லை. ஹோரசின் புராண கதைகள் எழுதப்பட்ட காலத்தில் சிலுவை தண்டனைகளே இல்லை. ஹோரசின் புராண கதைகள் எழுந்து கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு பின்பு தான் சிலுவை தண்டனைகள் நடைமுறைக்கு வந்தன. மேலும் சிலுவை தண்டனைகளை நடைமுறைப்படுத்தியவர்கள் ரோமர்கள்.  எகிப்தியர்கள் அல்ல.

ஹோரசின் புராண கதைகளுக்கும் ஏசுநாதரின் வாழ்க்கை வரலாறுக்கும் செய்கிஸ்ட் போடும் பாலங்கள் உறுதியற்றவை.

2) ஏசுநாதரின் வாழ்க்கை மித்ராஸ் புராண கதையை வைத்து எழுதப்பட்டதா?

செய்கிஸ்ட் கூறும் ஒப்பீடு:
மித்ராஸ் முதல் நூற்றாண்டில் ரோமர்களால் வணங்கப்பட்ட பேகன் தெய்வம்.  கன்னித்தாயிடம் டிசம்பர் 25 அன்று பிறந்த மித்ராவை மேய்ப்பர்கள் கண்டு தொழுதனர். அதன் பின் மித்ராசுக்கு 12 சீடர்கள் உண்டாயினர். இறுதியில் மித்ராஸ் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். ஏசுநாதரின் வாழ்க்கை வரலாறு  மித்ராசின் புராண  கதையை வைத்து உண்டாக்கப்பட்டதே என்கிறது செய்கிஸ்ட்.

உண்மை என்ன?

அ) மித்ராஸ் கன்னியிடம் பிறந்தவரா?
முதலில் மித்ராவிற்கு தாயே இல்லை. மித்ராஸ் பாறையில் இருந்து தோன்றியவர்.

ஆ) மித்ராஸ் டிசம்பர் 25 அன்று பிறந்தவரா?
புராணங்கள் மித்ராவின் பிறந்த நாள் என்ன என்பது குறித்து எந்த குறிப்பும் தராத போது மித்ராவின் பிறந்த நாள் எப்படி டிசம்பர் 25 ஆகும்?

இ) மித்ராஸ் பிறந்த போது மேய்ப்பர்கள் தொழுது கொண்டனரா?


செய்கிஸ்ட் மேலே காட்டப்பட்டுள்ள சிற்பத்தை ஆதாரமாக சமர்ப்பித்து மித்ரா பிறந்த போது மேய்ப்பர்கள் அவரை தொழுது கொண்டதாக கூறுகிறது. நான்காம் நூற்றாண்டை சார்ந்த சிற்பம் அது. ஏசுநாதரின் சுவிசேஷங்கள் முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டன. இடையில் உள்ள 300 ஆண்டுகளை எந்த கணக்கில் சேர்ப்பது?

ஈ) மித்ராவிற்கு 12 சீடர்கள் இருந்தனரா?


இதற்கென இன்னொரு சிற்பத்தை செய்கிஸ்ட் சமர்ப்பிக்கிறது. மித்ராவை சுற்றி காணப்படும் பன்னிரண்டு உருவங்கள் மித்ராவின் சீடர்கள் என்கிறது செய்கிஸ்ட்.  உண்மை என்ன? அவை மித்ராவின் சீடர்கள் அல்ல. மேஷம் முதல் மீனம் வரையிலான ராசி குறியீடுகள். பேகன் மதங்களில் ராசி சின்னங்கள் தெய்வங்களை சுற்றி செதுக்கப்படுவது வழக்கமே.

உ) மித்ரா சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தாரா?
செய்கிஸ்ட் ஏசுநாதரின் வரலாறை வைத்து மித்ராவிற்கு புது கதை எழுதி உள்ளது. புராணங்கள் மித்ரா இறக்கவில்லை என்றும் உயிரோடு தேரின் மீது அமர்ந்து வானத்திற்கு சென்றுவிட்டதாகவும் கூறுகின்றன. பைபிளில் காணப்படும் எலியாவின் கதை இது. மித்ராவிற்கு 800 ஆண்டுகளுக்கு முன்பே எலியாவின் வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டன.

ஏசுநாதரை மித்ராவுடன் இணைக்க செய்கிஸ்ட் போட்ட வீண் முடிச்சுகள் இவைகளே.

3) ஏசுநாதரின் வரலாறு டைநோசிஸ் புராண கதைகளை கடன் வாங்கி உள்ளதா?

குற்றச்சாட்டு:
டைநோசிஸ் கிரேக்கர்களாலும் ரோமர்களாலும் திராட்சை ரசத்தின் தெய்வம் என்று போற்றப்பட்டவர். டிசம்பர் 25 அன்று கன்னித்தாயிடம் பிறந்த இவர் சிலுவையில் அறையப்பட்டு இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்றும் டைநோசிஸ் கதையை கடன் வாங்கி ஏசுநாதரின் வரலாறு எழுதப்பட்டது என்றும் செய்கிஸ்ட் கூறுகிறது.

ஏசுநாதரின் திருரத்தத்திற்கு அடையாளமாய் திராட்சை ரசம் கருதப்படுகிறது. மேலும் கானா ஊர் கலியாணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார். இந்த சங்கதிகள் எல்லாம் டைநோசிஸின் புராண கதைகளில் இருந்து எடுக்கப்பட்டவை என்று செய்கிஸ்ட் கூறுகிறது. இதனை செய்கிஸ்ட் தானாய் கூறவில்லை. ஏற்கனவே 'தி ஜீசஸ் மிஸ்டரீஸ்' என்ற நூல் இவ்வாறு ஏசுநாதருக்கும் டைநோசிசிற்கும் ஒப்பீடு செய்தது. கீழுள்ள சிற்பத்தில் சிலுவை வடிவத்திற்கு கீழ் 'பச்சுஸ்' என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. டைநோசிசின் மற்றொரு பெயர் 'பச்சுஸ்'. டைநோசிஸ் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார் என்று 'லியூசிப் அண்ட் கிளிடோபான்' என்ற ஒரு நூல் கூறுகிறது. எனவே டைநோசிசின் கதைகளை கிறிஸ்தவம் தன்னுடன் இணைத்து கொள்கிறது என்று இந்நூல் கூறுகிறது. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஜஸ்டின் என்ற பேகன் இனத்தவர் கிறிஸ்தவத்தை தழுவினார். கிறிஸ்தவம், பேகன் மதம் ஆகிய இரண்டிற்கும் உள்ள சில ஒற்றுமைகளை ஜஸ்டின் தன் நூலில் தெரிவித்துள்ளார். ஜஸ்டினின் கூற்றுகள் பலவற்றை தன் நூலில் எடுத்துக்காட்டி ஏசுநாதரின் வரலாறுகள் டைநோசிசின் புராண கதைகளை வைத்து எழுதப்பட்டது என்று 'தி ஜீசஸ் மிஸ்டரீஸ்' வாதாடுகிறது.

பதில்கள்:
அ) "டைநோசிஸ் கிரேக்கர்களாலும் ரோமர்களாலும் திராட்சை ரசத்தின் தெய்வம் என்று போற்றப்பட்டவர்"
பண்டைய கிரேக்கர்கள் இடி, மின்னல், காற்று, அறுவடை, இயற்கை, கடல், காடு, கல், திராட்சை ரசம், தீ, மண், நீர்  என்று ஒரு பொருளை கூட விடவில்லை. காற்றிற்கு கடவுள் இவர், இடிக்கு கடவுள் அவர், காதலின் தெய்வம் அது, திராட்சை ரசத்தின் தெய்வம் இது என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு கடவுளை உருவாக்கி புராண கதைகளை எழுதி வந்தனர். தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய இயேசு நீரின் மீதும் நடந்துள்ளார், புயலை அடக்கியுள்ளார். கிரேக்கர்கள் நீருக்கும், புயலுக்கும் கூட கடவுளை உருவாக்கி வைத்திருந்தனர். கிரேக்கர்கள் ஒரு பொருளை கூட விட்டு வைக்காத போது எதில் தான் இயேசு நாதரால் அற்புதங்களை நிகழ்த்த முடியும்?

ஆ) "டிசம்பர் 25 அன்று கன்னித்தாயிடம்  பிறந்தவர் டைநோசிஸ்"
டைநோசிசின் தந்தை சியஸ் பாதாளத்தின் ராணி என்று கிரேக்கர்களால் போற்றப்பட்ட பிரஸ்போனை கருவுறச் செய்தார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவரே டைநோசிஸ் என கிரேக்க புராணங்கள் கூறுகின்றன. இதனை எப்படி கன்னி பிறப்பு என்று செய்கிஸ்ட் கூறியது என்பது விளங்கவில்லை. டிசம்பர் 25 அன்று டைநோசிஸ் பிறந்தார் என்பதற்கு கிறிஸ்தவ மரபிற்கு முந்திய ஒரு ஆதாரத்தை கூட செய்கிஸ்ட் சமர்பிக்கவில்லை.

இ) "பச்சுஸ் பெயர் பொறிக்கப்பட்ட சிலுவை குறியீடு & டைநோசிஸ் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய அற்புத செயல்"
"கிறித்தவத்துக்கு முற்பட்ட காலத்தில் ஏற்கப்பட்டிருந்த சமயக் கொள்கைகளையும் கிறித்தவத்திலிருந்து கடனாகப் பெற்ற சில கொள்கைகளையும் இணைத்ததால் உருவானதே ஞானக் கொள்கை. இவ்வாறு உருவான ஞானக் கொள்கை கிறித்தவ மரபுக் கொள்கைக்குப் பல விதங்களில் எதிர்ப்பாக அமைந்தது. அந்த மோதலின் விளைவாக, கிறித்தவம் தன் கொள்கைகளைத் துல்லியமாக வரையறுக்கும் வாய்ப்புப் பிறந்தது" - தமிழ் விக்கி
கிறிஸ்தவம் முதல் நூற்றாண்டில் மிக வேகமாக பரவி வந்தது. கிறிஸ்தவ சுவிசேஷ போதனைகளால் பல பேகன் மதங்கள் மக்களால் கைவிடப்பட்டு அழியத் தொடங்கின. எனவே சில பேகன் இனத்தவர்கள் கிறிஸ்தவ போதனைகளால் தங்கள் நம்பிக்கைகள் அழிவுறாமல் இருக்க 'ஞான உணர்வு' என்ற கொள்கையை போதிக்கலாயினர். அதன் படி பேகன் நம்பிக்கைகளை கிறிஸ்தவ கொள்கைகளோடு இணைத்து போதித்து தங்கள் நம்பிக்கைகளை காத்து கொள்ள முயன்றனர். இந்த கொள்கையை முதல் நூற்றாண்டில் இருந்தே சீடர்களும், திருச்சபை தந்தைகளும் கண்டித்து வந்தனர்.
"ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக் கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானம் என்று பொய்யாய்ப் பேர் பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு" - 1 தீமோத்தேயு 6:20
இதன் படி ஏசுநாதரின் அற்புதங்களை, வரலாறுகளை டைநோசிசுடன் இணைத்தனரே அன்றி டைநோசிசின் புராண கதைகளை கிறிஸ்தவம் கடன் வாங்கவில்லை.


- பச்சுஸ் பெயர் பொறிக்கப்பட்ட சிலுவை குறியீடு கி.பி 300-க்கு பின் செதுக்கப்பட்டது. இயேசு நாதர் பற்றிய சுவிசேஷ நூல்கள் கி.பி 100-க்குள் எழுதி முடிக்கப்பட்டன.

- யோவான் சுவிசேசம் 'லியூசிப் & கிளிடோபான்' குறிப்பிற்கு முன்பு எழுதப்பட்டது. கடன் வாங்கியது யார்?

ஈ) "பேகன் மதத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு" - ஜஸ்டின்
ஜஸ்டின் எழுதியுள்ள இன்னொரு முக்கியமான வாக்கியத்தை 'தி ஜீசஸ் மிஸ்டரீஸ்' மறந்துவிட்டது (மறைத்துவிட்டது). அந்த மேற்கோள் கீழே.
"எந்நிலையிலும் தங்கள் தெய்வங்களை சிலுவையில் அறையப்பட்டவருக்கு இணையாக்க அவர்களால் முடியவில்லை. ஜுபிட்டருடைய புத்திரன்களை கூட அவருக்கு இணையாக்க முடியவில்லை. ஏனெனில் உவமைகளாக சொல்லப்பட்ட போதனைகளை அவர்களால் புரிந்து கொள்ள முடியாதிருந்தது" - ஜஸ்டின் (முதல் மன்னிப்பு - 55)
டைநோசிசின்  தந்தையான சியசின் மற்றொரு பெயர் தான் ஜுபிட்டர். ஜஸ்டின் பேகன் இனத்தவர்களால் ஜுபிட்டருடைய புத்திரன்களை ஏசுநாதருக்கு இணையாக்க முடியாதிருந்தது என்று தெரிவித்திருந்தார். இந்த முக்கியமான மேற்கோளை 'தி ஜீசஸ் மிஸ்டரீஸ்' எடுத்து காட்டவில்லை.

உ) டைநோசிஸ் சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்தாரா?
செய்கிஸ்டின் வழக்கமான பொய் இது. டைநோசிஸ் டைடன்கள் என்பவர்களால் கொலை செயப்பட்டார். அப்பொழுது டைநோசிசின் பாட்டியார் இறந்த தன் பேரனின் மாமிச துண்டுகளையும் சாம்பலையும் சேகரித்து தன் மந்திர சக்தியால் டைநோசிசை உயிர் பெற செய்ததாக கிரேக்க புராணங்கள் கூறுகின்றன.

டைநோசிஸ் குறித்த கதைகளை உற்று நோக்காமல் மேலோட்டமான வாதாங்களை செய்கிஸ்ட் முன் வைக்கிறது.

4) கிருஸ்ணாவின் புராண கதைகளும் ஏசுநாதரின் வரலாறுகளும்
கிருஷ்ணா இந்திய தேசத்தில் வழிபடப்பட்ட புராண தெய்வம். கிருஸ்ணனுடன் இயேசு நாதரை இணைக்க செய்கிஸ்ட் கூறிய பொய்கள் கீழே.


அ) கிருஷ்ணா கன்னி தாயிடம் பிறந்தவர்
"தேவகிக்கு பிறக்கும் எட்டாவது மைந்தனே உனக்கு எமனாவன்" என்று கம்சனிடம் அசரரீ கூறியதாக இந்து புராணங்கள் கூறுகின்றன. ஏற்கனவே ஏழு குழந்தைகளை தேவகி பெற்றிருக்க அவள் எப்படி கன்னியாவாள்? இதனை நோக்காமல் கிருஸ்ணா கன்னி தாயிடம் பிறந்ததாக செய்கிஸ்ட் கூறுகிறது.

ஆ) கிருஸ்ணா பிறக்கும் போது குழந்தைகள் கொலை செய்யப்பட்டன
கிருஸ்ணா பிறக்கும் போது குழந்தைகள் கொலை செய்யப்படவில்லை. கிருஸ்ணனிற்கு முன்பு தேவகிக்கு பிறந்த ஏழு குழந்தைகள் தான் கம்சனால் கொலை செய்யப்பட்டன.

இ) கிருஸ்ணா சிலுவையில் அறையப்பட்டு  மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்
இந்தியர்கள் அனைவருக்கும் இது எந்தளவு பொய் என்பது தெரியும். கிருஸ்ணாவை பற்றி அறியாத மேல்நாட்டு நாத்திகர்கள் கிறிஸ்தவர்களை இந்த பொய்யை கூறி இகழ்ந்து வருவது வருத்தமான செய்தி. கிருஸ்ணா எவ்வாறு இறந்தார்?
"ஜரா என்ற வேடன் மான் ஒன்றை வேட்டையாட அவ்விடம் வந்தான். அங்கு கிருஷ்ணா தவ நிலையில் அமர்ந்திருப்பதை அறியாத அவன் மான் என்று எண்ணி கிருஷ்ணனின் மீது அம்பை எய்து விட்டான்" - மகாபாரதம்
அச்சிலஸ் இறப்பு குறித்து கிரேக்க புராணங்கள் இதே கதையை கூறுகிறது. அச்சிலஸ் இறப்பு குறித்த கிரேக்க புராணங்கள் மகாபாரததிற்கு முன்பு எழுதப்பட்டவை.

கிருஷ்ணனை இயேசு நாதருடன் இணைக்க செய்கிஸ்ட் செய்த ஏமாற்று வேலைகள் இவைகளே.

"பின்பு, அவர் ஒலிவ மலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்து வந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக் கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள் என்றார்" - மத்தேயு 24:3-5
Reply all
Reply to author
Forward
0 new messages