Re: கெட்ட பழக்கங்களும் நாமும் - தொடர்

253 views
Skip to first unread message

Haja Muhiyadeen

unread,
Jan 11, 2010, 12:32:09 AM1/11/10
to tamil2...@googlegroups.com, பண்புடன்
ஏதாவது சுவாரஸ்யமாக எழுதலாமே என்று யோசித்த போது - பயண கட்டுரை எழுதியாச்சு - கதை - தொடர்கதை எழுதியாச்சு  சரி ஒரு கட்டுரை தொடர் எழுதலாமே என்று - நம்முடைய பழக்கங்களை பற்றி எழுதலாம் என்று தோன்றியது. 

பழக்க வழக்கத்தில் என்ன சுவாரசியம் என்று யோசித்த போது முன்னம் நான் படித்த சுஜாதாவின் ஒரு பதில் என்னை ரசிக்க வைத்தது. 

சுவர்க்கம் நரகம் எது உங்கள் சாய்ஸ் என்றால் - சொர்க்கத்தில் தினசரி சுலோகங்களும் பஜனையும் ரெண்டு நாளைக்கு மேலே எனக்கு போர் அடித்துவிடும். நரகம் சுவாரஸ்யமான மனிதர்களை கொண்டது என்ற அவரது எதிர் மறை பதில்..

அதன் பின்னே - ஹீ ஹீ அந்த மாதிரி சுவாரஸ்யமான கதைகள் கொண்ட சுவாரஸ்யமான நட்பும் - அறிந்த மனிதர்களும் இருந்த போதிலும்..

அதை எழுத விரும்பினாலும்  -

மட்டுறுத்தினர்களின் கிடுக்கி பிடியில் சிக்கி - இரண்டாவது நாளே - நான் காணாமல் போகும் சாத்திய கூறுகள் அதிகம் இருந்த காரணத்தினால் - சைவமான கெட்ட பழக்கங்களை பற்றி மட்டும் எழுதி...

என்ன!!! அறிவுரை கூற போகிறாயா? என்று முதுகு பக்கம் உருவ காத்திருக்கும் "துரை"மார்களுக்கும் - 

நீயெல்லாம் கட்டுரை எழுதி என்று சொடுக்க காத்திருக்கும் தம்பி தங்கைகளுக்கும் சொல்லி கொள்வது என்னவென்றால் -

நான் ஒன்றும் சொல்ல போவது இல்லை என்பதை தான்.

காலம் காலமாக நாம் சுவாரஸ்யமாக செய்து வரும் சில சிறு - குறு - பெரு - சிலி கெட்ட பழக்கங்களை பற்றி இங்கு லேசாக அலசப்படும். காயப்போட்டு அயன் செய்து கொள்ளலாம் - சம்பந்தப்பட்டவர்கள் விருப்பமிருந்தால். 

அதற்கு ஏன் நாமும் என்று தலைப்பு போட்டு "வல்லடியாக" எங்களையும் இழுக்கிறாய் என்று என் மேல் பாய காத்திருக்கும் சிங்கம் புலி சிறுத்தை அனைவருக்கும்  -

இந்த தொடர் முடியும் வரை காத்திருந்து இதில் வரும் எந்த கெட்ட பழக்கமும் உங்களுக்கு இல்லை என்றால் - சிறப்பு பரிசாக - காற்று வாங்க புர்ஜ் கலிபா மொட்டை மாடி வரை நடத்தி அழைத்து செல்லப்படுவீர்கள் என்று இந்த சமயத்தில் கூறி கொள்ள கடமை பட்டுள்ளேன்.

நாளை - பெண்ணின் காலை தொட்டு!!!

sadayan sabu

unread,
Jan 11, 2010, 12:38:48 AM1/11/10
to panb...@googlegroups.com
காஜா பாய்
 
இந்த 'வல்லடி' சொற்றொடரை எங்கேயிருந்து பிடித்தீர்கள். எங்கள் பக்கத்து வட்டாரச் சொல் இதேபோல 'வங்கொலை' என்ற வார்த்தை பிரயோகமும் உண்டு .

2010/1/11 Haja Muhiyadeen <muhiy...@gmail.com>


அதற்கு ஏன் நாமும் என்று தலைப்பு போட்டு "வல்லடியாக" எங்களையும் இழுக்கிறாய் என்று என் மேல் பாய காத்திருக்கும் சிங்கம் புலி சிறுத்தை அனைவருக்கும்  -

அன்புடன்
சாபு

Haja Muhiyadeen

unread,
Jan 11, 2010, 12:42:50 AM1/11/10
to panb...@googlegroups.com, தமிழ்
எங்க ஊர் சைடும் பேசறாங்க. தஞ்சாவூர் நாகப்பட்டினம் திருவாரூர் பக்கம். ஆமா உங்க AREAYAVAI தெரிஞ்சிக்கலாமா?


2010/1/11 sadayan sabu <sadaya...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
J. HAJA MUHAYADEEN
ஆயிரம் மைல் பயணம் - முதல் அடியில் தொடங்குகிறது

sadayan sabu

unread,
Jan 11, 2010, 12:47:10 AM1/11/10
to panb...@googlegroups.com
ஏரியா என்னங்க பிறந்த ஊரின் பெய்ரையே தருகிறேன். கூத்தாநல்லூர்

2010/1/11 Haja Muhiyadeen <muhiy...@gmail.com>
எங்க ஊர் சைடும் பேசறாங்க. தஞ்சாவூர் நாகப்பட்டினம் திருவாரூர் பக்கம். ஆமா உங்க AREAYAVAI தெரிஞ்சிக்கலாமா?


--

Haja Muhiyadeen

unread,
Jan 11, 2010, 1:14:21 AM1/11/10
to panb...@googlegroups.com
அது எங்கே இருக்கு? எனக்கு தெரியாதே. நான் திருவாரூர்

2010/1/11 sadayan sabu <sadaya...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Kandavel Rajan

unread,
Jan 11, 2010, 1:18:07 AM1/11/10
to panb...@googlegroups.com
கூத்தாநல்லூர் (ஆங்கிலம்:Koothanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.



--
உதவி செய்தல்தான் உறவின் துவக்கம்.  அங்கே உண்மையிருப்பின் உறவு பலப்படும்.

நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

sadayan sabu

unread,
Jan 11, 2010, 1:25:19 AM1/11/10
to panb...@googlegroups.com
 
திருவாரூர் என்றால் கொடிக்கால்பாளையமா ? அடியற்கை மங்கலமா? புலிவலமா? ஆழியூரா ? பொதக்குடியா ? பூதமங்கலமா ? கூத்தூரா ? சிககலா ?
 
மெய்யாகவே கூத்தாநல்லூர் தெரியாதா ? அதுவும் ஆரூரில் இருந்து கொண்டு 'சின்ன சிங்கப்பூர்' என பெயர் பெற்றது.


2010/1/11 Haja Muhiyadeen <muhiy...@gmail.com>
அது எங்கே இருக்கு? எனக்கு தெரியாதே. நான் திருவாரூர்

Asif Meeran AJ

unread,
Jan 11, 2010, 3:38:23 AM1/11/10
to panb...@googlegroups.com
யோவ் பெருசு

வங்கொலையா வந்து மாட்டுனீரய்யா!
பக்கத்து ஊருகாரனுக்கே தெரியாத ஒரு குக்கிராமத்தை வச்சுக்கிட்டு சின்ன சிங்கப்பூர்ன்னு பில்ட்ப்பு வுட்டு சிங்கப்பூரு பேரைக் கெடுத்துப்புட்டீரய்யா.

Haja Muhiyadeen

unread,
Jan 11, 2010, 5:13:14 AM1/11/10
to panb...@googlegroups.com
சிங்கபூரே சின்னது தான் . அதுக்கு ஒரு தங்கச்சி பாப்பாவா? அதுவும் ஆரூர் பக்கத்தில?


2010/1/11 sadayan sabu <sadaya...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

jse ramesh

unread,
Jan 11, 2010, 8:57:04 AM1/11/10
to panb...@googlegroups.com
என்ன haja anna? ....thodar appadiye ninnudichi???

2010/1/11 Haja Muhiyadeen <muhiy...@gmail.com>
என்றும் அன்புடன்,
ரமேஷ்

Haja Muhiyadeen

unread,
Jan 12, 2010, 12:39:50 AM1/12/10
to tamil2...@googlegroups.com, பண்புடன்
"அந்த நா.. என்னை தொட்டபோது அருவருப்பா இருந்திச்சு. உடம்பு முழுக்க பூரான் ஊருற மாதிரி ... கூசிடுச்சு.. இப்ப கூட அத நினச்சா செத்துரனும் போல இருக்கு.. "

லாங் ரூட் பஸ் ஒன்றில் தன கை குழந்தையுடன் பயணம் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளான பின்னர் எனக்கு நன்கு அறிமுகம் ஆன ஒரு பெண் என்னுடன் பகிர்ந்து கொண்ட செய்தி இது.

ஏதோ ஒரு கூடுதல் நன்மைக்காக  நம்ம ஊர் கண்டக்டர்கள் சில பல டிக்கெட்டுகளை கூடுதலாக ஏற்றி கொள்ள - அவர்களும் பஸ்ஸில் ஒரு துண்டையோ - பேப்பெரயோ விரித்து படுத்து கொண்டு தங்கள் சில்மிஷ வேலைகளை ஆரம்பித்து விடுகிறார்கள்.

முதலில் தெரியாமல் படுவது போல லேசாக காலில் ஒரு டச். அப்புறம் கொஞ்சம் துணிச்சலுடன் முன்னேற்றம்.

பாவம் இவள் கையில் கை குழந்தையும் வைத்து கொண்டு திண்டாடி இருக்கிறாள். கொஞ்ச நேரம் காலை மடக்கி கொண்டு மடியில் வைத்து கொண்டு - பிறகு காலை கீழே வைத்தால் மீண்டும் தொல்லை. 

மனித மன விகாரங்களின் அடுத்த கட்டம் இது.

எதையும் துணிச்சலுடன் எதிர் நோக்கும் என் உறவு கார ராட்சசி ஒருத்தியிடம் இது மாதிரி உனக்கு நடந்தால் எப்படி சமாளிப்பாய் என்று ஒரு பிட்டை போட்டேன்.

"நடந்தால் என்ன - நடந்திருக்கிறது. நான் அப்படியே விட்டு விட்டேன்" என்று தூக்கி வாரி போட்டு விட்டாள்.

நான் கிளுகிளுத்து போனேன்.

"கொஞ்ச நேரம் அப்படியே விட்டு விட்டு அவன் பயம் விலகி - இன்னும் கொஞ்சம் முன்னேறியதும் - என் ஹை ஹீல்ஸ் முனையால் அவன் கையில் வைத்து அழுத்தினேன் பார் ! - இனி அவன் ஒரு மாசத்துக்கு கழுவி கொள்ள முடியாது. பாதி எரிந்த பிணம் மாதிரி எழுந்து எழுந்து அடங்கினான்"  என்று தீவிரவாதியாய் சொன்னாள். 

அவள் துபாய் போனபோது வாங்கி வந்த - அந்த ஹீல்ஸை பயத்துடன் பார்த்தேன். அடிப்பாவி, அவன் கையில் ரத்தகுழி விழுந்திருக்குமே!!!

"என்றாலும் உன் அளவுக்கு துணிச்சல் வராது. அந்த பொண்ணு மாதிரி சாந்தமான பொண்ணுக்கு என்ன செய்ய முடியும்? பாவம் அவள்"  என்று அவளை தூக்கி வைத்தேன்.

"சிம்பிள்" - காற்றில் கைகளை அலைந்தபடி சொன்னாள் - "கையில் உள்ள தண்ணி பாட்டிலை மூடியை கழட்டி கீழே போட்டால் போதும் தண்ணியில் எப்படி படுத்து கிடப்பான்" என்றால் கூலாக.

அட ஆமால்ல.

நாளை - சாவு வீட்டில் பொண்ணு கேட்டவர்...








sadayan sabu

unread,
Jan 12, 2010, 11:24:11 PM1/12/10
to panb...@googlegroups.com
மெய்யாகவே cook கிராமம் அய்யா
கூத்தாநல்லூர் பிரியாணி
கூத்தாநல்லூர் தால்(ச்)சா
கூத்தாநல்லூர் அடுக்கு புரோட்டா + கொத்து புரோட்டா
கூத்தாநல்லூர் வட்லப்பம்
 
இன்னும் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பசியார வகைகள்.

2010/1/11 Asif Meeran AJ <asifm...@gmail.com>
யோவ் பெருசு

வங்கொலையா வந்து மாட்டுனீரய்யா!
பக்கத்து ஊருகாரனுக்கே தெரியாத ஒரு குக்கிராமத்தை வச்சுக்கிட்டு சின்ன சிங்கப்பூர்ன்னு பில்ட்ப்பு வுட்டு சிங்கப்பூரு பேரைக் கெடுத்துப்புட்டீரய்யா.

Haja Muhiyadeen

unread,
Jan 13, 2010, 12:25:08 AM1/13/10
to tamil2...@googlegroups.com, பண்புடன்
அது ஒரு மதிய நேர தொழுகை. இமாம் சப்தமிட்டு ஓத மாட்டார். மனதுக்குள் எல்லாருமே ஓதி கொண்டிருப்பார்கள். வரிசையாக கை கட்டி நின்று கொண்டிருக்கிறோம். ஒரு மாதிரியான அமைதி. 

திடீர் என்று வந்தது பாருங்கள் ஒரு குரல்..

அந்த நலாவ தான் நான் கையில புடிச்சேன் .. என் ராசாவுக்காக... (அதற்கு பிறகு அதன் தொடர் மூசிக்)... 

எனக்கு தூக்கி வாரி போட்டது... 

அந்த ஆள் நோக்கியாவை நோக்கி அதை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் - கண்ணை மூடு அதை நான் காட்டுறேன் வந்து விட்டது. 

இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு மரண வீடு...

எல்லாரும் விசும்பி கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் மவ்னம். பேசுபவர்கள் கூட ரகசியம் பேசினார்கள். 

அங்கேயும் ஒருவருடைய மொபைல் அலறியது..

"குச்சு குச்சு ராக்கம்மா பொண்ணு வேணும்" 

தினசரி யாரோ ஒரு பரம சாது இது மாதிரி மறந்து போய் ரிங் டோன் வைத்து - வாங்கி கட்டி கொள்கிறார். 

ஆப் செய்த நல்ல பிள்ளைகள் அலை பேசியின் சொந்தக்காரரை செத்த எலியை பார்ப்பது போல பார்க்கிறர்கள். அவரோ கூனி குருகுகிறார்.

இளையராஜாவை ரசித்து நாம் ஏற்றி வைத்த ரிங் டோன்கள் - அசந்தர்ப்பமாக அலறி நம்முடன் சேர்த்து இளையராஜாவின் மரியாதையும் கெடுக்கின்றன.

இந்த விசயத்தில்  மகளிர் அணி ரொம்ப உஷார். தனக்கு போன் வருவது தன் நிழலுக்கு கூட தெரிய கூடாது என்ற உயர்ந்த கொள்கை திட்டத்தை வைத்திருப்பதால் - சட்டை பட்டன் கீழே விழுந்த மாதிரி ஒரு சின்ன சப்தம் வரும்.

என்னடா என்று திரும்பி பார்க்கும் முன் - ஏர்போர்ட் அன்நோவ்ன்ஸ்மென்ட் மாதிரி கிசு கிசுப்பாக பேசி விட்டு அலைபேசியை மடக்கி இருப்பார்கள்..

போனை எடுக்க சொல்லி கொஞ்சும் பெண்ணின் குரல், ஹெலோ சொல்லும் மங்கையின் ஐஸ் கிரீம் வாய்ஸ், கிரீச்சிடும் குழந்தையின் அலறல், டேய் போனை எடுடா என்ற மச்சியின் வாய்ஸ் - பீரோவை நகர்த்தும் சப்தம் - ரோட்டில் டயர் தேயும் சப்தம் என்று எல்லாம் பார்த்தாகிவிட்டது.

ஆத்தா.. என்னை விட்டுட்டு போயிட்டியே என்ற ரிங் டோன் மட்டும் தன் இனி வரவேண்டி இருக்கு.  

நாளை - தமன்னா வாங்கிய மூச்சு!!!


மஞ்சூர் ராசா

unread,
Jan 13, 2010, 1:41:27 AM1/13/10
to panb...@googlegroups.com
இதில் கொடுமை என்னான்னா சினிமா தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது சத்தமாக பேசி சினிமா பார்க்கவிடாமல் தடுப்பது.  அது போல ஏதேனும் முக்கியமான நிகழ்ச்சி மேடையில் நடந்துக்கொண்டிருக்கும் போது மைக்கில் பேசுபவர் அல்லது பாடுபவரின் சவுண்டைவிட அதிக சவுண்டில் போனில் பேசி எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்புவது.


ஆசாத்

unread,
Jan 13, 2010, 2:17:51 AM1/13/10
to பண்புடன்
> இதில் கொடுமை என்னான்னா சினிமா தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது
> சத்தமாக பேசி சினிமா பார்க்கவிடாமல் தடுப்பது.  

அய்யா ஒருநாளில் ஆமிர்கான் சித்திரத்தில்
நெய்யா யுருகியென் நினைவிருக்க - பொய்யில்லை
மெல்ல மணியடித்து மேட்டினியைக் கொன்றார்கள்
செல்போன் பிடிக்கும் சிலர்

தஞ்சை-மீரான்

unread,
Jan 13, 2010, 4:01:23 AM1/13/10
to panb...@googlegroups.com
"வம்படியாக" , "வலுகட்டாயமாக"
 
இப்படியாக சொல்வார்கள் எங்கள் ஊர் பக்கம்...........

11 ஜனவரி, 2010 8:38 am அன்று, sadayan sabu <sadaya...@gmail.com> எழுதியது:
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
நட்புடன்
மீரான்
www.sinegum.wordpress.com
www.vaalkaikalvi.blogspot.com



சாதிக் அலி

unread,
Jan 13, 2010, 2:10:03 PM1/13/10
to panb...@googlegroups.com
ஹாஜா ஒரு திருத்தம் .... அது புர்ஜ் கலீஃபா இல்லை..... பர்ஜ் கலீஃபா என்று சொல்ல வேண்டும். 

பர்ஜைத் தான் ஆங்கிலத்தைல் but, gut, nut, surge என்று எழுதுவதைப் போல Burj என்று எழுதுகிறார்கள்.

பர்ஜ் என்றால் கோபுரம், tower என்று பொருள்.

--
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

        sade...@gmail.com
-----------  அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

சாதிக் அலி

unread,
Jan 13, 2010, 2:12:13 PM1/13/10
to panb...@googlegroups.com


2010/1/11 sadayan sabu <sadaya...@gmail.com>

 
திருவாரூர் என்றால் கொடிக்கால்பாளையமா ? அடியற்கை மங்கலமா? புலிவலமா? ஆழியூரா ? பொதக்குடியா ? பூதமங்கலமா ? கூத்தூரா ? சிககலா ?
 
மெய்யாகவே கூத்தாநல்லூர் தெரியாதா ? அதுவும் ஆரூரில் இருந்து கொண்டு 'சின்ன சிங்கப்பூர்' என பெயர் பெற்றது.




வடிவேலு துபாய்னா அபிதாபியா,  மஸ்கட்டா என்று கேட்பது போல இருக்கு...

 

சாதிக் அலி

unread,
Jan 13, 2010, 2:23:37 PM1/13/10
to panb...@googlegroups.com

வெகுஜோர் ஹாஜா... அருமையா எழுதிறீங்க..! இதுவும் நாட்டு நடப்புத் தான்.. சில நேரம் ரிங்டோன்களை ரசித்தாலும் பல நேரங்களிம் அது அசௌகர்யம் தான். 

சரியான நேரம் பார்த்து இது மாதிரியான ரிங்டோன்கள் பழிவாங்கி விடும்.


2010/1/13 Haja Muhiyadeen <muhiy...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Haja Muhiyadeen

unread,
Jan 13, 2010, 11:56:18 PM1/13/10
to panb...@googlegroups.com
திருத்தியமைக்கு நன்றி சாதிக்


2010/1/13 சாதிக் அலி <sade...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

Haja Muhiyadeen

unread,
Jan 14, 2010, 12:14:42 AM1/14/10
to பண்புடன், தமிழ்
வில்லன் படத்தில் கிரணும் - பொண்டாட்டி தேவை படத்தில் அஸ்வினியும் பஸ் பிடிக்க ஓடி வருவதை பார்த்திருப்பீர்கள் தானே? ஹீ ஹீ பார்த்திருப்பீர்கள்....

கண்டேன் காதலை படத்தில் அதே மாதிரி வெள்ளெலி தமன்னா ரயில் பிடிக்க ஓடி வருவார். வண்டி மூவ் ஆன பிறகு ஓடி வந்து ஏறியதும் அல்லாமல் - எப்பவும் நான் இப்படி லாஸ்ட் மினிட்ல தான் வந்து ஏறுவேன் ஒரு தடவை கூட ரயில் மிஸ் ஆனதில்லை என்று அலப்பரை வேறு செய்வார். 

இந்த மாதிரி லாஸ்ட் மினிட்ஸ் கேசுகளை நானும் பார்த்திருக்கிறேன்.

ஓட்டமாய் ஓடி வருவார்கள்.

பெரும்பாலும் எப்படியாவது ஏறி விடுவார்கள். ஆனால் இது நல்லது தானா? இது ஒரு தடவை தான் இவர்கள் வாழ்கையில் நடக்கிறதா?

பெரும்பாலும் ரயிலில் போக விரும்புபவர்கள் - தன் பயணத்தை சௌகரியமாக அமைத்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் தான். சில பேர் RESERVATION வரை கூட முன்கூட்டியே செய்து கொள்கிறார்கள்.

ஆனால் ரயிலை பிடிக்கிற அவசரத்தில் வரும் டன்சனால் முழு பயணமும் அமைதியற்றதாகிவிடும் . அல்லது அதுவே இறுதி பயணத்தையும் தயார் செய்து விடும்.

நம்ம ஊர் போக்குவரத்தும் - வண்டிகளின் இருப்பும் - முன் கூட்டியே திட்டமிட கூடியது அல்ல. எந்த நேரத்தில் என்ன நெருக்கடி ஏற்படும் என்று சொல்ல முடியாது. 

சென்னை எக்மோரில் ஒரு அப்பாவும் ஒரு டீன் டிக்கெட்டும் இப்படி ஓடி வர கண்டேன். (பெரிதாக கற்பனை ஒண்ணும் வேண்டாம்)

கஷ்டப்பட்டு ஏறி விட்டார்கள். ஆனால்?

அந்த பெரியவர் ரொம்ப தான் மூச்சு வாங்கினார் வியர்த்து வழிந்தார். பேச முடியவில்லை. அவர் சகஜ நிலைக்கு திரும்பி வர எவ்வளவு நேரம் ஆச்சு தெரியுமா?  தாவணிக்கும்  வியர்த்து விறுவிறுத்து விட்டது. பெரியவரின் டன்சன் எனக்கும் ஒட்டிக்கொண்டு நான் அல்லாடி  கொண்டிருக்க இந்த பெண் வேறு நான் அதையே பார்க்கிறேன் என்று நினைத்து இழுத்து இழுத்து விட்டு கொண்டது.

பயணிகள் கவனிக்கவும் என்பது இதை தானா?

----------------------------------------------------------
நாளை - லஜ்ஜை இல்லாத மனிதர்கள்.


Asif Meeran AJ

unread,
Jan 14, 2010, 8:24:46 AM1/14/10
to panb...@googlegroups.com
வில்லன் படத்தில் கிரணும் - பொண்டாட்டி தேவை படத்தில் அஸ்வினியும் பஸ் பிடிக்க ஓடி வருவதை பார்த்திருப்பீர்கள் தானே? ஹீ ஹீ பார்த்திருப்பீர்கள்....

இப்படி நீங்கள் எழுதுவீர்கள் என்று தெரிந்துதான்......
 
 இந்த பெண் வேறு நான் அதையே பார்க்கிறேன் என்று நினைத்து இழுத்து இழுத்து விட்டு கொண்டது.

அப்படி அந்தப் பெண் செய்திருக்குமென்று நான் சொல்வேனென்றா நினைத்தீர்கள்..ஹிஹி. அப்படியெல்லாம் யோசிக்குற ஆள் நானில்லை

Haja Muhiyadeen

unread,
Jan 14, 2010, 10:24:51 PM1/14/10
to பண்புடன், தமிழ்
சின்ன ராஜீவ் காந்தி மாதிரி அவ்வளவு அழகாக இருப்பார்.

 எஞ்சினியர். நல்ல சம்பளம். நல்ல பதவி தான். கனடாவில் சிடிசன் சிப் கூட வாங்கி இருக்கிறார். நன்றாகவும் பழகுவார். 

இருந்தாலும் அவருடன் கை குலுக்க எங்களுக்கு சுணக்கம்.

அவர் உபயோகிக்கும் பொருள்களை தொட ஒரு தயக்கம்.

வேறு ஒன்றும் இல்லை. சும்மா விரலை வைத்து கொண்டு பூந்து விளையாடுவார் மனுஷன்.

எல்லாரும் பார்க்கிறார்கள் . நாம் பப்ளிக்கில் இருக்கிறோம் என்று கூட தெரியாமல் - மூக்கு காது கண்ணு வாய்க்குள் என்று அவர் விரல் விட்டு ஆட்டாத இடங்களே இல்லை. அவர் படித்த படிப்பும் - அவர் வயதுக்கு ஏற்ற அனுபவமும் அந்த பழக்கத்திலிருந்து அவரை காப்பாற்றவில்லை. 

சில பொண்ணுங்க கூட தலையை சொறி சொறி என்று சொரிந்து விட்டு நகக்கண்ணில் அழுக்கு இருக்கிறதா என்று பார்க்கும்..

சிலர் பல்லிடுக்கில் மாட்டிகொண்ட மட்டன் ஸ்லிப்பை விரல் விட்டு தேடி இழுத்து கையில் எடுத்து பார்ப்பார்கள்.

உவ்வேக்..

என் சித்தி வீட்டில் டிவி வந்த புதிது

பக்கத்துக்கு வீட்டு (கல்யாணம் ஆன அழகான) பொண்ணு) சித்தி வீட்டு நடு ஹாலில் சப்பரமாய் உட்கார்ந்து கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்தது.

சின்ன தூக்கத்துக்கு பிறகு ரூமிலிருந்து வெளியே வந்து - ஹாலில் தரையில் உட்காந்திருந்த அவளது பின்பக்கத்தை பார்த்த நான் அதிர்ந்து போனேன்.

அந்த பெண் உட்காந்திருந்த நிலையிலேயே உடம்பு வெட்டி வெட்டி இழுத்து கொண்டிருந்தது.

அடுப்பங்கரையில் அப்பளம் பொரித்து கொண்டிருந்த சித்தியிடம் ஓடி போய் விசயத்தை சொல்ல - சட்டுவத்துடன் ஓடி வந்து பார்த்தால் -

டென்சனில் நகத்தை கடித்து கடித்து இழுத்து கொண்டிருக்கிறாள்.

எனக்கு தான் முதுகில் ரெண்டு விழுந்தது.

திங்கள் - கொசு புகையும் கிளுகிளுப்பும். 

மஞ்சூர் ராசா

unread,
Jan 15, 2010, 1:28:51 AM1/15/10
to panb...@googlegroups.com
சாப்பிடும் போது வாயை திறந்தப்படியே சாப்பிடுவதும் காப்பி அல்லது டீ சாப்பிடும் போது கால்நடைகள் கழுநீர் குடிப்பது போல சத்தமெழுப்பி குடிப்பதும் பலரால் மாற்ற முடியாத பழக்கங்கள்.


மூக்கை நோண்டுவதும் தலையை சொறிவதும் பயங்கரமான தும்மல் சத்தங்கள் எழுப்புவதுமான ஒருவர் எங்க அலுவலகத்தில் இருந்தார். நம்ம ஊர் காரர் தான்.  அவருக்கு கைக்கொடுக்க யாருமே விரும்புவதில்லை. தப்பி தவறிக்கொடுக்க நேர்ந்தால் உடனடியாக பாத்ரூம் சென்று சோப் போட்டு கையை கழுவுகின்றனர்.  டைப்ரைட்டரில் அவர் ஏதேனும் அடித்துவிட்டு அந்த பக்கம் நகர்ந்ததும் வரவேற்பாளர் அலுவலக பையனை கூப்பிட்டு டைப்ரைட்டரையும் சுற்றியுள்ள இடங்களையும் சுத்தம் செய்ய சொல்வாள்.  இது அன்றாடம் நடக்கும் நிகழ்வு.

சாதிக் அலி

unread,
Jan 15, 2010, 2:10:33 AM1/15/10
to panb...@googlegroups.com
ஆமாம் மஞ்சூர் ராசா,

இது போன்ற மனிதர்கள் சிறு வயது முதலே அப்படி பழகியவர்கள். அவர்களின் தாய் தந்தையர் சொல்லித் திருத்தியிருக்க வேண்டும். இனி அவர்கள் திருந்த சாத்தியமே இல்லை. 

நாசூக்கு என்பார்களே அந்த டிசிப்பிளின் உள்ள மனிதர்கள் எல்லா நிலையிலும் மற்றவர்கள் முகஞ் சுளிக்க எந்தச் செயலையும் செய்ய மாட்டார்கள்.

அந்த நாசூக்கு தெரியாத ரகங்கள் தான் யாரையும் பார்க்காமல் அவர்களுக்கு அந்த நேரத்தில் எதை செய்யத் தோணுதோ அதை செய்துக் கொண்டிருப்பார்கள்.

மனிதர்களில் வெட்கமற்ற ஜடங்கள்.


2010/1/15 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>
சாப்பிடும் போது வாயை திறந்தப்படியே சாப்பிடுவதும் காப்பி அல்லது டீ சாப்பிடும் போது கால்நடைகள் கழுநீர் குடிப்பது போல சத்தமெழுப்பி குடிப்பதும் பலரால் மாற்ற முடியாத பழக்கங்கள்.


மூக்கை நோண்டுவதும் தலையை சொறிவதும் பயங்கரமான தும்மல் சத்தங்கள் எழுப்புவதுமான ஒருவர் எங்க அலுவலகத்தில் இருந்தார். நம்ம ஊர் காரர் தான்.  அவருக்கு கைக்கொடுக்க யாருமே விரும்புவதில்லை. தப்பி தவறிக்கொடுக்க நேர்ந்தால் உடனடியாக பாத்ரூம் சென்று சோப் போட்டு கையை கழுவுகின்றனர்.  டைப்ரைட்டரில் அவர் ஏதேனும் அடித்துவிட்டு அந்த பக்கம் நகர்ந்ததும் வரவேற்பாளர் அலுவலக பையனை கூப்பிட்டு டைப்ரைட்டரையும் சுற்றியுள்ள இடங்களையும் சுத்தம் செய்ய சொல்வாள்.  இது அன்றாடம் நடக்கும் நிகழ்வு.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

Asif Meeran AJ

unread,
Jan 15, 2010, 2:23:31 AM1/15/10
to panb...@googlegroups.com
சின்ன தூக்கத்துக்கு பிறகு ரூமிலிருந்து வெளியே வந்து - ஹாலில் தரையில் உட்காந்திருந்த அவளது பின்பக்கத்தை பார்த்த நான் அதிர்ந்து போனேன்.

இப்படிப் பார்க்கக் கூடாததைப் பார்த்தால்....

எனக்கு தான் முதுகில் ரெண்டு விழுந்தது.

இப்படித்தான் நடக்கும்

Haja Muhiyadeen

unread,
Jan 15, 2010, 2:43:58 AM1/15/10
to panb...@googlegroups.com, தமிழ்
ஹீ ஹீ . அப்பல்லாம் அது வசதியாக உட்கார்ந்து கொள்வதற்கு என்று மட்டும் தான் தெரியும். நீங்க வேறே.

2010/1/15 Asif Meeran AJ <asifm...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

Asif Meeran AJ

unread,
Jan 15, 2010, 2:46:23 AM1/15/10
to panb...@googlegroups.com
மனிதர்களில் வெட்கமற்ற ஜடங்கள்.

சாதிக் அலி

அப்படி ஒரேயடியாக ஒதுக்கி விட முடியாது
சில மனிதர்கள் சில ஒடுக்கப்பட்ட இடங்களிலிருந்து வந்திருப்பார்கள்
உங்களைப் போன்றோ அல்லது என்னைப் போன்றோ பெரும் வ்சதிகளற்ற இடங்களிலிருந்து வரும்போது அவர்களுக்கு இயல்பில் தொற்றிக் கொண்ட பழக்கங்களை வைத்து  மட்டும் அவர்களை ஒதுக்கி விடக் கூடாது நாகரிகம் போன்றவைகளெல்லாம் நாம் கற்றுக் கொள்வதுதான்

வாய்வழியாக ஏப்பம் விட்டால் நம்மவர்களுக்கு பண்பாட்டு குறைவில்லை
மேலை நாட்டுக்காரர்கள் அதை நாகரிகமில்லை என்பார்கள்

இங்கே தோசையை முள்கரண்டி வைத்து சாப்பிடும் சில பேர்வழிகளைப் பார்க்கிறேன் இந்த வெட்கம் கெட்ட ஜனங்களுக்கு அந்த வெட்கம் கெட்ட ஜனங்களே மேல்.

அதை விடுங்க ஒரு கத சொல்லுதேன்

பின்பக்கம் வழியாக காற்றை விட்டால் நம்மூரில் முறைப்பார்கள் மேலைநாட்டான் சிரிப்பான்
ஒருமுறை எலிசபெத் ராணி ஜார்ஜ் புஷ்ஷை அழைத்துக் கொண்டு தனது குதிரை லாயத்தை சுற்றிக்காட்டியிருக்கிறார். அந்த நேரம் பார்த்து சாபத்தா மாதிரி வாயுத்தொலையால் அவதிப்படும் குதிரையொன்று ‘ட்மால்’ என்று பின்பக்கத்தில் வெடித்திருக்கிறது ராணிக்கும் புஷ்ஷூகும் ஒரு மாதிரியாகிவிட்டதாம். உடனே ராணி ஒருவித மன்னிப்பு கேட்கும் பாவனையில் ‘ஐ யாம் சாரி’ என்றிருக்கிறார். உடனே புஷ் வடிவேலு மாதிரி  ‘அடடே! பரவாயில்லீங்க. நான் கூட குதிரையோன்னு நெனச்சுட்டேன்’னாராம்..

Haja Muhiyadeen

unread,
Jan 15, 2010, 2:49:48 AM1/15/10
to panb...@googlegroups.com, தமிழ்
ஹா ஹா ஹா 

சிரிப்போ சிரிப்பு

அதுவுமில்லாமல் சாபத்தா நேத்து ஜாலர் முர்தாபா அப்படி வட்லாப்பம் என்று தனது குக் கிராமத்தை பத்தி சொல்லும்போதே தெரியும்.. இப்ப தான் தெரியுது அவரோட HORSE பவர் என்னான்னு 

2010/1/15 Asif Meeran AJ <asifm...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

Asif Meeran AJ

unread,
Jan 15, 2010, 2:50:24 AM1/15/10
to panb...@googlegroups.com
ஹீ ஹீ . அப்பல்லாம் அது வசதியாக உட்கார்ந்து கொள்வதற்கு என்று மட்டும் தான் தெரியும். நீங்க வேறே.

எங்க?? கக்கூசுலயா??
சரி. அப்ப அவ்வளவுதான் தெரியும்

இப்ப என்னெல்லாம் தெரியும்?

இங்கயும் ஒரு கத சொல்லிடுதேன்

ஒரு சின்னப்பய அவனோட டிக்கியப் பார்த்ததேயில்லயாம்
ஒரு நாள் அவன் சேட்டை பண்ணவும் டீச்சரம்மா புளியங்கொம்பை வச்சு விளாறிட்டாங்களாம். வீட்டுக்கு வந்த பையன் கண்ணாடில டிக்கியப் பார்த்து அரண்டு போய்
“ராட்சசி. ரெண்டா உடைச்சுட்டாளே”ன்னாம் . அந்தைப் பையன் பேரு ஹாஜான்னு ஊரெல்லாம் பேச்சா இருக்கே ஹாஜா அண்ணே. உண்மைதானா??

Haja Muhiyadeen

unread,
Jan 15, 2010, 2:59:44 AM1/15/10
to panb...@googlegroups.com
இப்ப டாக்டருக்கும் அது யூஸ் ஆகும்னு தெரியும். 
(அயோ அதுக்கு மேலே கேட்காதீங்க வெக்கமா இருக்கு)

2010/1/15 Asif Meeran AJ <asifm...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

sadayan sabu

unread,
Jan 15, 2010, 10:42:38 PM1/15/10
to panb...@googlegroups.com
ஒய்
 
உமெக்கென்ன 'டெலிபதி' யா
 

முந்தா நாள் இரவு நெஞ்சுவலியால் அவதிப்பட்டு அடுத்தநாள்

மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள் வீட்டுக்காரி

. மருத்துவர்

நன்றாக பரிசோதித்து விட்டு பயப்படும் படியாக் ஒன்றுமில்லை

'

வாயுக்கோளாறு' எல்லாம் சரியாகி விடும் என மாத்திரை எழுதிக்

கொடுத்திருக்கிறார்

.

ஓய் உமக்கு

Baked Beans கதை தெரியுமா ?
 
2010/1/15 Asif Meeran AJ <asifm...@gmail.com>
அந்த நேரம் பார்த்து சாபத்தா மாதிரி வாயுத்தொலையால் அவதிப்படும் குதிரையொன்று ‘ட்மால்’ என்று பின்பக்கத்தில் வெடித்திருக்கிறது ராணிக்கும் புஷ்ஷூகும் ஒரு மாதிரியாகிவிட்டதாம். உடனே ராணி ஒருவித மன்னிப்பு கேட்கும் பாவனையில் ‘ஐ யாம் சாரி’ என்றிருக்கிறார். உடனே புஷ் வடிவேலு மாதிரி  ‘அடடே! பரவாயில்லீங்க. நான் கூட குதிரையோன்னு நெனச்சுட்டேன்’னாராம்..

Haja Muhiyadeen

unread,
Jan 18, 2010, 12:49:22 AM1/18/10
to தமிழ், பண்புடன்
"வண்டிய ஸ்டார்ட்லையே வச்சிக்க. செல நேரம் நாம ஓடி தப்பிக்க வேண்டி இருக்கும்" என்றான் என்றான் என் ஆருயிர் நண்பன். அவனுடன் இன்னொருவனும் செல்ல - என்ன ஏது என்று புரியாமல்  நானும் இன்னொரு நண்பனும் இரண்டு வண்டிகளையும் ஸ்டார்ட் செய்து காத்திருந்தோம் 

தாய்லாந்து அரைக்கை சட்டையும் - சார்லி செண்டும் - கொமன்ஜானும் வாங்க - வாங்கடா போலாம் என்று கிளப்பி கொண்டு போனது நான் தான். பாரிமுனையில் உள்ள காசி செட்டி தெரு - சேட்டு கடைக்கு போகலாம் என்று முடிவானது.

பைக்கை பார்க் பண்ணுவதற்கு முன்பே -

கொசு புகை அடிக்கும் வண்டி வந்து விட்டது. சின்ன குறுகலான தெருக்களில் கொசு மருந்து புகை அடித்து கொண்டு வர - தொட்டபெட்டா மேகம் மாதிரி - பக்கத்தில் யார் நின்றாலும் தெரியாத அளவுக்கு புகை. 

அவனுங்க ரெண்டு பேர் முகத்திலும் இனம் புரியாத ஆனந்தம்! 

"எங்கேடா போறீங்க" என்று நான் கேட்டு முடிப்பதற்குள் -ரெண்டு பெரும் அவசரம் அவசரமாக - புகைக்குள் மறைந்து போனார்கள்.

ரெண்டே நிமிடத்தில் அரக்க பறக்க ஓடி வந்தார்கள் 

 கை கொடுடா மாப்ளே நல்ல சான்ஸ் - நீ இறங்கு நான் ஓட்றேன் என்று வண்டியை சீற விட்டான். 

"ரெண்டு சேட்டு பொண்ணுங்க.செம கட்டை. ரொம்ப நாள் ஆசை இன்னிக்கு நிறைவேறிடுச்சு" என்று சொன்னதும் தான் என் மர மண்டைக்கு புரிந்தது.

அட பாவிங்களா !

இவங்க ரெண்டு பெரும் ரங்கநாதன் தெரு பார்ட்டிகள் என்று ஏற்கனவே தெரியும். இப்ப கொசு புகையை பயன்படுத்தி இங்கேயும் தன் "கை" வரிசையை காட்டி இருக்கிறார்கள். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்!!! இனி இந்த பசங்களுடன் வெளியே திரிவது உடம்புக்கு நல்லதல்ல!!!

சில ஆண்டுகளுக்கு பிறகு  எங்கள் ரெண்டு பேருக்கும் திருமணம் ஆன நிலையில் -

ரெண்டு பெரும் எங்கள் மிசஸ்களுடன் தேவி பாராடயஸ் போயிருந்தோம்.

சினிமா முடிந்து மாடியிலிருந்து படி வழியாக இறங்கி - தியேட்டர் காம்ப்ளெக்ஸ் கடந்து - மசாலா பால் - வந்து ஆட்டோ பிடிக்கும் வரை -

புது மனைவியை முன்னே நடக்க விட்டு - அவள் இரண்டு தோளிலும் கைகளை வைத்து கொண்டு  - அவளை தள்ளி கொண்டு பின்னால் நடந்து வந்தான்.

"அவங்களை ப்ரீயா நடக்க விடேன்.  எதற்கு தொங்கி கொண்டே வருகிறாய்?" என்றேன்.

"உனக்கு சிட்டி பத்தி தெரியாது (?) மாப்ளே. எப்படா சான்ஸ் கிடைக்கும் இடிக்கலாம் என்று இங்கே நிறைய நாய்ங்க சுத்தும். அதன் நாம பின்னால  வரது தெரிஞ்சா கொஞ்சமாவது அல்லு இருக்குமே"

நாளை : பேச்சை நிறுத்திய குழந்தை!!!


Haja Muhiyadeen

unread,
Jan 19, 2010, 12:46:29 AM1/19/10
to பண்புடன், தமிழ்
குழந்தைகள் உணர்வு பூர்வமானவர்கள். அவர்களை அணுகும் முறை பெரியவர்களை அணுகும் முறையை விட வேறுபட்டது. 

நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் கூர்ந்து கவனிக்கும் குழந்தைகள் - நமது முக சுளிப்பையும் - கடும் வார்த்தைகளையும் மனதில் உள் வாங்கி கொள்கிறது. பல நேரங்களில் அது ஆறாத ரணமாக குழந்தைகள் உள்ளத்தில் தங்கி போகிறது. 

பெரியவர்களுக்கு - மனம் புண்பட்டால் - ஆறுதலுக்காக வேறு வழிகளை நாட அவர்களுக்கு தெரியும்.

குழந்தைகளின் வட்டம் மிக சிறியது. 

அதில் அவர்களுடன் இருக்கும் பத்து பேரும் தன் மீது அன்பு பாராட்ட வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால் அந்த பத்து பேரிலும் ஒரு சிலர் நடந்து கொள்ளும் முறைகள் - குழந்தைகள் மனதை உடைத்து போடுகின்றன. 

எனது நெருங்கிய உறவினர் வீட்டில் இப்போது நடக்கும் சம்பவம் இது.

அவர்கள் வீட்டில் தங்கைக்கும் - சிறிது இடைவெளி விட்டு அண்ணனுக்கும் திருமணம் நடந்தது. ஐந்து வருடங்களாக அண்ணனுக்கு குழந்தை இல்லை. தங்கைக்கு ஒரு பெண்குழந்தை. இப்போது LKG படிக்கிறாள்.

செம சுட்டி அவள். நுண்மையாக பார்க்கும் திறன். பிரித்தறியும் திறன். புரிந்துகொள்ளும் திறன் எல்லாம் பெற்றவள். ஒரு இடத்தை ஒரு தடவை  பார்த்தால் - மீண்டும் அடுத்த தடவை எப்போது சென்றாலும் சரியாக சொல்லிவிடுவாள்.

பள்ளியில் நடிக்கும் பாடங்கள் அப்படியே மனப்பாடம். மிஸ் எப்படி பாடம் நடத்துவார்களோ அப்படியே புரிந்துகொள்வாள். வீட்டில் மிஸ் மாதிரியே நடித்து காட்டுவாள்.

பள்ளி முடிந்து வீடு திரும்பிய பின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். ரய்ம்ஸ் பாடுவது - பேசுவது - நடனம் ஆடுவது எல்லாம் இன்னைக்கெல்லாம் பார்த்து கொண்டே இருக்கலாம்.

அந்த குழந்தை தான் இரண்டு மாதத்துக்கு முன்னால் பேச்சை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டது.

பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் பெரும்பாலும் தனியாக உட்கார்ந்து ஏதாவது கிறுக்கி கொண்டிருப்பாள். இல்லை தூங்குவாள்.

டிவியில் எந்த சானல் மாற்றினாலும கவலைப்படாமல் பார்ப்பாள் . டிவியை நிறுத்தி விட்டாலும் வெறுமனே - உட்கார்ந்து இருப்பாள்.

சாப்பாடு கொடுத்தால் சாப்பிடுவாள். இது வேணும் அது வேணும் என்று வழக்கமான எதிர்பார்ப்பு இல்லை.

விளையாட்டு முற்றிலுமாக நின்று விட்டது.

இதெற்கெல்லாம் காரணம் சிறு சிறு சம்பவங்கள் தான்.

தொடர்ந்த மருத்துவ சிகிச்சைகளுக்கு பின்னர் அண்ணிக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறக்கும் வரை அந்த சுட்டி பாப்பா தான் அங்கே ஹீரோ. 

தங்கையின் குழந்தை எது சொன்னாலும் ரசிப்பார்கள். பாராட்டுவார்கள். கொண்டாடுவார்கள்.

அவர்களுக்கு குழந்தை பிறந்த பின் - புது குழந்தையை கவனிக்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. 

அது மட்டுமின்றி - உஷ். சத்தம் போடதே.. பாப்பா தூங்குது போன்ற வார்த்தைகள் -தொடரவே - குழந்தையின் ஆரவாரம் உற்சாகம் எல்லாம் படிப்படியாக குறைந்தது.

பள்ளியிலிருந்து வீடு திரும்பினால் - தன்னை வரவேற்க ஆளில்லை

தான் பேச்சை கேட்க ஆளில்லை

பேசினாலோ - பாடினாலோ - புதிய குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து -

நான் புறக்கணிக்க படுகின்றேன்..

இப்போது - மருத்துவர் ஆலோசனை படி தினசரி - குழந்தைகள் நிறைய விளையாடும் இடங்களுக்கும் - கடற்கரைக்கும் அழைத்து செல்ல படுகிறாள்

அவளை பேச வைத்து பாட வைத்து பெற்றோர் பாராட்டுகிறார்கள். ரசித்து முத்தம் கொடுக்கிறார்கள்.

மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறாள்

நான்கு வயது குழந்தைக்கும் மனசு இருக்கும். 

நாளை : ஒரே கருத்து - ஒட்டு மொத்த கருத்து 





Asif Meeran AJ

unread,
Jan 19, 2010, 1:44:39 AM1/19/10
to panb...@googlegroups.com
நான்கு வயது குழந்தைக்கும் மனசு இருக்கும்.

ஒருவகையா ’அந்தப் பக்கம்’ ’இந்தப் பக்கம்’ பார்க்காம ஒரு மேட்டர் எழுதிட்டீங்கண்ணா :-))

Ganesh kumar

unread,
Jan 19, 2010, 9:08:31 AM1/19/10
to panb...@googlegroups.com
குழந்தை இல்லை. தங்கைக்கு ஒரு பெண்குழந்தை. இப்போது LKG படிக்கிறாள்.

 
செம சுட்டி அவள். நுண்மையாக பார்க்கும் திறன். பிரித்தறியும் திறன். புரிந்துகொள்ளும் திறன் எல்லாம் பெற்றவள். ஒரு இடத்தை ஒரு தடவை  பார்த்தால் - மீண்டும் அடுத்த தடவை எப்போது சென்றாலும் சரியாக சொல்லிவிடுவாள்.
 
 
 
 
 
பாப்பா அம்மா பேரு சொல்லு , அப்பா பேரு என்னன்னு குழந்தைய கேட்டுட்டே இருப்பாங்க..இப்படி கேட்பது ஒரு விதத்துல நல்லது தான்.
திருவிழா கூட்டத்தில் அந்த குழந்தை தொலைந்து போகும் போது , யாராவது
அம்மா அப்பா பேரு என்னன்னு கேட்டா ,  முழிக்காம பதில் சொல்லிடும் அந்தக் குழந்தை

 

Haja Muhiyadeen

unread,
Jan 19, 2010, 10:15:02 PM1/19/10
to பண்புடன், தமிழ்
நமக்கு தெரியாத ஒரு விசயத்தை பற்றிய ஒரு விஷயம் மட்டும் ஒரு நாள் நமக்கு தெரிய வரும்போது - அதை நம் மனது பதிய வைத்து கொள்ளும். பிறகு அந்த விஷயம் பற்றி ஒரு மாற்று கருத்து வரும்போது - நம் மனசு அதை அவ்வளவு சீக்கிரம் ஏற்காது. முன்பு பதிய வைத்தது தான் சரி என்று மனம் முரண்படும்.

படிப்போம் - கேட்போம் - தெரிந்து கொள்வோம் என்று இல்லாமல் பதியவைக்கப்படும் இது போன்ற கருத்துக்கள் - மேம்போக்கானவை. பெரும்பாலும் உண்மையற்றவை.

ஊர் காரன் ஒருத்தனை பல வருடங்களாக சந்திக்க முடியவில்லை. அவன் புருனையில் வேலை பார்த்து கொண்டிருந்தான். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஊரில் வைத்து அவனை சந்தித்தேன்.

"நம்மளயெல்லாம் எங்கே நாபகம் வச்சிக்க போறீங்க - கல்யாணம்லாம் முடிஞ்சிடுச்சுன்னு கேள்வி பட்டேன்" என்று பொருமினான்.

"புருனை சுல்தானுக்கு பத்திரிக்கை அனுப்பும்போது உனக்கும் சேர்த்து அனுப்பி கொடுக்க சொன்னேன். பாவம் வேல ஜாஸ்தி இருந்திருக்கும். அதான் கொடுக்க மறந்திட்டார் -உங்க வீட்ல அட்ரெஸ் குடுன்னு கேட்டா புள்ள கப்பல்ல இருக்குது தெரியும். வாரத்துக்கு ஒரு தட போனு பண்ணும். கடிதாசி எல்லாம் போடாதே என்று சொல்கிறார்கள். உனக்கு நான் எந்த அட்ரசுக்கு பத்திரிக்கை அனுப்ப" என்று சமாளித்து வைத்தேன். பயல் நம்பிவிட்டான்.

"சரி ஏதோ நல்லா இருந்தா சரி. ஆமா பொண்ணு எந்த ஊரு?" என்று அனுசரணையாய் கேட்டான்.

"சென்னை"

"ஏண்டா நம்ம ஊர்ல பொண்ணு இல்லாமயா அவ்ளோ தூரம் போனே. பொண்ணு சொந்தமா பிறத்தியா" 

"பிறத்தி தான்"

அடுத்த கேள்விக்கு முன் ஒரு தயக்கம் இருந்தது. அப்படியே பேச்சை மாற்றிவிட்டான்.

அவன் என்ன கேட்க நினைத்தான் என்பது எனக்கு தெரியும். பல பேர் இது போல தயங்கி பேச்சை மாற்றி இருக்கிறார்கள்.

- வெளிநாட்டு காரர்கள் எல்லாம் அறிவாளிகள்

- கொரியாகாரர்கள்  எல்லாரும் நாய் கறி தின்பார்கள் 

துபாய் முழுக்க எண்ணெய் கிணறுகள் இருக்கும்.

பாகிஸ்தானிகள் எல்லாரும் பயங்கர வாதிகள்

முஸ்லிம்கள் எல்லாருடைய பாக்கெட்டிலும் தலா ஒரு குண்டு வைத்து கொண்டு திரிவார்கள்.

அமெரிக்கர்கள் எல்லாரும் காமாந்தகர்கள்

பணக்காரர்கள் எல்லாரும் சந்தோசமாக இருப்பார்கள் 

என்ற ஒட்டு மொத்த கருத்துக்கள் வரிசையில் -

அவன் என்னிடம் கேட்க நினைத்து கேட்காமல் விட்டதற்கு பின் உள்ள அவனுடைய ஒட்டு மொத்த கருத்து 

 - சிட்டி பெண்கள் எல்லாரும் கெட்டு போனவர்கள்.



நாளை : அந்த பூனை குட்டி இன்னும் வாழ்கிறதா?









 





Ahamed Zubair A

unread,
Jan 19, 2010, 11:46:26 PM1/19/10
to tamil2...@googlegroups.com, பண்புடன்


2010/1/20 Haja Muhiyadeen muhiy...@gmail.com

 
 - சிட்டி பெண்கள் எல்லாரும் கெட்டு போனவர்கள்.
 
அவர் என்ன கேக்க நினைச்சார்னு உங்களுக்கு என்ன தெரியும்??
 
உங்களுக்கு சொந்தத்தில பொண்ணு இருந்திருக்கலாம். இல்லன்னா அவருக்கு தெரிஞ்ச பொண்ணு இருந்திருக்கலாம். அதெல்லாம் இல்லாம ஏன் சென்னைக்கு போய் பொண்ணு எடுத்தீங்கன்னு கேட்டிருக்கலாம்.
 
எல்லாத்தையும் பாஸிடிவ்வா பாருங்க சார்... :)

ஆசாத்

unread,
Jan 20, 2010, 12:05:05 AM1/20/10
to பண்புடன்
> <ahamedzub...@gmail.com> wrote:
> எல்லாத்தையும் பாஸிடிவ்வா பாருங்க சார்... :)

பேசுறது சுபைருங்களா? ஆராச்சும் ஐடிய ஹேக் பண்ணிட்டாங்களா?

Ahamed Zubair A

unread,
Jan 20, 2010, 12:49:06 AM1/20/10
to panb...@googlegroups.com


2010/1/20 ஆசாத் <banu...@gmail.com>

> <ahamedzub...@gmail.com> wrote:
> எல்லாத்தையும் பாஸிடிவ்வா பாருங்க சார்... :)

பேசுறது சுபைருங்களா? ஆராச்சும் ஐடிய ஹேக் பண்ணிட்டாங்களா?
அதுக்குத் தான் நகைப்பான் போட்டேன். இதைக் கட்டாயம் எதிர்பார்த்தேன்.. :)

ஆசாத்

unread,
Jan 20, 2010, 1:08:14 AM1/20/10
to பண்புடன்
> > > எல்லாத்தையும் பாஸிடிவ்வா பாருங்க சார்... :)
> > பேசுறது சுபைருங்களா? ஆராச்சும் ஐடிய ஹேக் பண்ணிட்டாங்களா?
> அதுக்குத் தான் நகைப்பான் போட்டேன். இதைக் கட்டாயம் எதிர்பார்த்தேன்.. :)

ஹல்லோ அது நகைப்பானோ பகைப்பானோ இந்த எல்லாத்தையும் பாசிட்டிவ்வா பாக்றத
என்னோட கொள்கைய நெனச்சேன், நானே சிரிச்சுக்கினேன், பாவம் இந்த ப்ளட்
டெஸ்ட்டுக்காரவுகள நெனச்சுக்கினேன், பாசிட்டிவா பாக்கணுமுன்னு ஹெச்.ஐ.வி.
டெஸ்ட்டுல அல்லாருக்கும் பாசிட்டிவ் ரிசல்ட்டு குடுத்தா இன்னா ஆவும்
ஒலகம்.

Asif Meeran AJ

unread,
Jan 20, 2010, 1:38:02 AM1/20/10
to panb...@googlegroups.com

ஹல்லோ அது நகைப்பானோ பகைப்பானோ இந்த எல்லாத்தையும் பாசிட்டிவ்வா பாக்றத
என்னோட கொள்கைய நெனச்சேன், நானே சிரிச்சுக்கினேன், பாவம் இந்த ப்ளட்
டெஸ்ட்டுக்காரவுகள நெனச்சுக்கினேன், பாசிட்டிவா பாக்கணுமுன்னு ஹெச்.ஐ.வி.
டெஸ்ட்டுல அல்லாருக்கும் பாசிட்டிவ் ரிசல்ட்டு குடுத்தா இன்னா ஆவும்
ஒலகம்.


ம்க்கும் இதத்தான் நானும் சொல்லணும்னு நெனச்சேன் :-)
 

Haja Muhiyadeen

unread,
Jan 20, 2010, 1:41:25 AM1/20/10
to panb...@googlegroups.com
ஹீ ஹீ அவருக்கு கொடுத்தா நமக்கு நல்லா இருக்கும. சாக்லேட் சாப்பிடுங்க..


2010/1/20 Asif Meeran AJ <asifm...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Ahamed Zubair A

unread,
Jan 20, 2010, 2:22:58 AM1/20/10
to panb...@googlegroups.com


2010/1/20 ஆசாத் <banu...@gmail.com>

ஹெச்.ஐ.வி. டெஸ்ட்டுல அல்லாருக்கும் பாசிட்டிவ்
 
அங்க நெகட்டிவ் தான் பாஸிட்டிவ்...
 
உங்களுக்கு இன்னும் வாழ்க்கைல நிறைய கத்துக்க வேண்டியது இருக்கு... :)

ஆசாத்

unread,
Jan 20, 2010, 2:48:49 AM1/20/10
to பண்புடன்
> > ஹெச்.ஐ.வி. டெஸ்ட்டுல அல்லாருக்கும் பாசிட்டிவ்

> அங்க நெகட்டிவ் தான் பாஸிட்டிவ்...
> உங்களுக்கு இன்னும் வாழ்க்கைல நிறைய கத்துக்க வேண்டியது இருக்கு... :)

எல்லாம் நேரமுங்கோவ்

Ahamed Zubair A

unread,
Jan 20, 2010, 3:27:04 AM1/20/10
to panb...@googlegroups.com


2010/1/20 ஆசாத் <banu...@gmail.com>

> உங்களுக்கு இன்னும் வாழ்க்கைல நிறைய கத்துக்க வேண்டியது இருக்கு... :)

எல்லாம் நேரமுங்கோவ்
 
சீக்கிரமே கத்துக்குறீங்க...வெரிகுட்...

Haja Muhiyadeen

unread,
Jan 21, 2010, 12:12:42 AM1/21/10
to panb...@googlegroups.com, தமிழ்
சில இக்கட்டான நேரங்களில் நாம் கைகட்டி நிற்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறோம். உண்மையில் அந்த மாதிரி நேரங்களில் தான் நமது உதவி மற்றவர்களுக்கு தேவைப்படுகிறது. ஆனால் அது போன்ற நேரங்களில் நாம் வேடிக்கை பார்ப்பவர்களாக மாறிவிடுகிறோம். 

ஆபிரகாம் லிங்கன் ஒரு தடவை காரில் சென்று கொண்டிருந்தபோது - ரோடு ஓரத்தில் உள்ள சாக்கடையில் ஒரு பன்றி குட்டி சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் தவிப்பதை பார்க்கிறார். உடனே காரை நிறுத்த சொன்ன அவர் ௦ - தானே சென்று அந்த பன்றி குட்டியை மேலே ஏற்றி விட்டுவிட்டு மீண்டும் புறப்பட்டு செல்கிறார். 

டிரைவர் ரொம்ப ஆச்சரியமாக பார்த்தார்.

"இந்த பன்றி குட்டியை காப்பாற்றவேண்டிய அவசியம் எனக்கு இல்லை இருந்தாலும் இதை காப்பாற்றாமல் வந்த குற்ற உணர்வு என்னை தூங்க விடாது. அசிங்கத்தை விட எனக்கு நல்ல தூக்கம் அவசியம்"என்றார்.

கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு சம்பவத்தை நான் சமீபத்தில் சந்தித்தேன்.

எனது இருப்பிடத்திலிருந்து முப்பது நிமிட நடை உள்ள ஒரு மருத்துவமனைக்கு சமீபத்தில் செல்ல வேண்டி இருந்தது. 

ஒரு நெடுஞ்சாலையை கடந்து அந்த பக்கம் போகவேண்டிய நிலை. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வகானங்கள் பறக்கின்றன.  நான் வலது பக்க வாகனப்பாதையை கடந்து நடு பகுதிக்கு வந்தேன் அங்கே சிமென்ட் பிளாட்பாரமும் அதில் குறிப்பிட்ட இடைவெளியில் மரக்கன்றுகளும் நடப்பட்டிருந்தன. இனி நான் இடது பக்கத்தை கடந்து அந்த பக்கம் போக வேண்டும். 

அந்த நேரத்தில் தான் நான் கவனித்தேன். ஒரு அழுக்கு பூனை குட்டி கத்திகொண்டே அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்தது. ஒரு பக்க பாதையை கடந்து எப்படியோ நடு ரோட்டுக்கு வந்துவிட்டது. அடுத்த பக்கம் போவதற்குள் வாகனங்கள் வந்திருக்க வேண்டும்.

இரண்டு பக்கமும் போக முடியாமல் நடுவில் மாட்டிகொண்டு தவித்தது.

இப்போது நான் ஒன்று பூனைக்குட்டியை கையில் தூக்கி கொண்டு அடுத்த பக்கம் போய் விட வேண்டும். இல்லாவிட்டால் யாராவது அதை செய்ய  வேண்டும். 

எனக்கு பூனைக்குட்டியை தொட்ட அனுபவம் இல்லை. அது பஞ்சு மாதிரி நெளிந்து கொண்டு எனக்கு அது ஒரு வகை பயம். எந்த செல்ல பிராணியையும் நான் தொட்டதில்லை. 

எந்த பக்க ரோட்டில் இறங்கினாலும் என் கண் எதிரே அது சட்னி ஆக போகிறது. அதன் கூக்குரலோ என் நெஞ்சை பிசைந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பூனை பிடிப்பவர் யாருமில்லை

அப்படியே விட்டுவிட்டு செல்லவும் மனம் வரவில்லை. எதற்கும் நாமே பிடிப்போம் என்று போனால் - பயித்தியம் அங்கேயும் இங்கேயும் ஓடுகிறது. ஒரு வேளை - எனக்கு பயந்து ரோட்டுக்கு நடுவில் இறங்கினால்.. அந்த காட்சியை எல்லாம் என்னால் பார்க்க முடியாது.

கடைசியில் மனதை திடப்படுத்திக்கொண்டு - யாராவது வந்து காப்பற்றுவார்கள் என்று திரும்பி பார்க்காமல் நடந்து போய்விட்டேன். ஆனால் அந்த கூக்குரல் என்னை அன்று இரவு வரை துரத்தியது. குற்றஉணர்வு பிடுங்கி தின்றது.

இது நடந்து சில நாட்களுக்கு பின்னர் தான் அமைச்சர்கள் வேடிக்கை பார்க்க SI கால் உடைந்த நிலையில் துடித்தார்.

ஒரு பூனைக்குட்டியை கூட காப்பாற்ற துப்பில்லாத எனக்கு இந்த சம்பவம் பற்றி பின்னூட்டம் இட மனசு வரவில்லை. என்னை மாதிரி தான் அந்த அமைச்சர்களும் மனதில் வலியுடன் அந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருந்திருக்க கூடும்.

ஆனால் இது மாதிரி நெருக்கடி நேரங்களில் என்ன செய்வது என்று நமது மனது யோசிக்க மறுத்த காரணத்தினாலும் - கை வைகக நாம் தயங்குவதாலும் எத்தனை இழப்புகள் இங்கு நம்மை போன்ற தனிமனிதனாலும் நடக்கின்றன. 

அந்த பூனைக்குட்டியை யாராவது காப்பாற்றி இருப்பார்களா? இன்னும் வாழ்கிறதா அந்த பூனைக்குட்டி? 

நாளை : நாளை என்ற தொடுவானம் 












மஞ்சூர் ராசா

unread,
Jan 21, 2010, 5:47:16 AM1/21/10
to panb...@googlegroups.com
அரபு நாடுகளில் அதிக பூனைகள் இருப்பதும் அவை அடிக்கடி ரோட்டின் குறுக்கே பாய்ந்து இறப்பதும் சகஜம்.  ஆனால் காப்பாற்ற வருபவர்கள் மிகவும் குறைவு.

இமலாதித்தன்

unread,
Jan 21, 2010, 10:11:11 AM1/21/10
to tamil2...@googlegroups.com, பண்புடன்

2010/1/20 Haja Muhiyadeen <muhiy...@gmail.com>

அவன் என்ன கேட்க நினைத்தான் என்பது எனக்கு தெரியும். பல பேர் இது போல தயங்கி பேச்சை மாற்றி இருக்கிறார்கள்.

வெளிநாட்டு காரர்கள் எல்லாம் அறிவாளிகள்

துபாய் முழுக்க எண்ணெய் கிணறுகள் இருக்கும்.

பாகிஸ்தானிகள் எல்லாரும் பயங்கர வாதிகள்

பணக்காரர்கள் எல்லாரும் சந்தோசமாக இருப்பார்கள் 
 
சிட்டி பெண்கள் எல்லாரும் கெட்டு போனவர்கள்.


ரொம்ப அனுபவ பூர்வாமாக எழுதி இருக்கீங்க ஹாஜா ஜி.நானும் இதைஎல்லாம் ஒரு சமயம் இப்படியே நினைத்திருக்கிறேன்.

உங்கள் எழுத்து நடை எனக்கு ரொம்ப பிடித்திருக்கு.ஒருவேளை நம்ம ரெண்டு பேரும் ஒரே ஊரு பக்கமா இருக்குறதுநாளா கூட அது இருக்கலாம்.

பூனை குட்டி இன்னும் வரல போல..



தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com

வீரம் எனது குலத்தொழில்


செல்வன்

unread,
Jan 21, 2010, 5:55:36 PM1/21/10
to panb...@googlegroups.com

சூப்பரா எழுதறீங்க ஹாஜா.தொடர்ந்து படிச்சுகிட்டிருக்கேன்.
2010/1/21 இமலாதித்தன் <emalat...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
செல்வன்

www.holyox.tk

"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson

Haja Muhiyadeen

unread,
Jan 21, 2010, 11:12:38 PM1/21/10
to தமிழ், பண்புடன்
முன்பு ஒரு தடவை நான் படித்த செய்தி துணுக்கு இது.

இறந்து போன பிச்சைக்காரனின் சாக்கு பைக்குள் கத்தை  கத்தையாய்  பணம். அவனுக்கு பேங்க் அக்கௌன்ட் இருந்திருக்கிறது. அதிலிருந்த  பணம் ஏழு லட்சமாம். அட பிச்சைகாரா!

இந்த பணத்தை வைத்துகொண்டு நீ ராஜாவாட்டம் வாழ்ந்திருக்கலாமே. நன்றாக சாப்பிட்டு - உன் வியாதிக்கு நன்றாக வைத்தியம் பார்த்திருந்தேயானால் இன்னும் கொஞ்ச நாள் இங்கே கிடந்திருப்பாயே.

நம்மில் முக்காலே மூணு வீசம் பேர் இது மாதிரி தான். 

நம் சந்தோசங்களை ஒத்தி போட்டுக்கொண்டே இருக்கிறோம்.

சின்ன வயசு சந்தோசங்களை இழந்து - காலேஜ் போனா தான் ஜாலி என்று நினைக்கிறோம்.

காலேஜ் வந்த போது படிக்கிறது பெரிய போர் எப்படியாவது அரியர் எல்லாத்தையும் முடிச்சா தான் நிம்மதி என்று நினைக்கிறோம்

காலேஜ் முடிந்ததும் - ஒரு நல்ல  வேலை கிடைத்து செட்டில் ஆனா தான் நிம்மதி என்கிறோம்.

நல்ல வேலை கிடைத்தாலோ பிகர் ஒண்ணும் சிக்க மாட்டேங்குது - என்ன வாழ்க்கைடா என்று முகாரி பாடுகிறோம். 

கார் வாங்கினா தான் சந்தோசம்!!

வீடு கட்டினா தான் சந்தோசம்!!

நகை வாங்கினா தான் சந்தோசம்!
.
இப்படி எல்லா நிலையிலும் எதிர்காலத்தில் அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும் என்று கனவு கண்டு கொண்டே நிகழ் கால சந்தோசங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

வீடோ - காரோ நமது இலக்காக இருக்கலாம். இலக்கை நோக்கி தினசரி நாம் நகர வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே நேரம் இன்றைய சந்தோசங்களை இழந்து விடுவதில் உடன்பாடு இல்லை. 

SUCCESS IS NOT A DESTINATION: ITS A JOURNEY என்று ஒரு ஆங்கில பழமொழி இருக்கிறது. இலக்கை அடைவது மட்டும் வாழ்க்கை அல்ல. இலக்கை நோக்கிய பயணமே நம் வாழ்க்கை. 

வாழ்க்கை என்பது கடைசி வரை போராட்டமாகவே இருக்க போகிறது. எது சந்தோசம் என்று உணரும்போது நம் வாழ்க்கையின் கடைசி அத்தியாத்தில் இருக்க போகிறோம். 

இந்த நிமிஷமும் இன்றைய பொழுதும் இனி நம் வாழ்க்கையில் திரும்ப வரவே போவதில்லை

ஒரு சிலரை பற்றி நினைத்தாலே அவருடைய சிகப்பு கலர் பச்சை கலர் சட்டை தான் நாபகம் வரும். காலம் காலமாக அதையே திரும்ப திரும்ப போட்டுகொண்டிருக்கும் நபர்களை எனக்கு தெரியும். புது சட்டை வாங்க போலாமா என்று நாம் கொக்கி போட்டால் - அதெல்லாம் ஊருக்கு போகும்போது பார்த்து கொள்ளலாம் என்று ஜகா வாங்குவார்கள். அடப்பாவி.. ஒரு வருடத்தில் அதிகமான நாள் நீ இங்கே தான் இருக்கிறாய். இங்கே நீ ரெண்டு சட்டை அழகாக வாங்கி போட்டு கண்ணாடியில் பார்த்தால் உனக்கே ஒரு தன்னம்பிக்கை தோன்றாதா?

இன்றைக்கு கடவுள் நமக்கு விதித்திருப்பது நம் வசமே உள்ளது அதை உணர்வு பூர்வமாக நாம் ஏன் உள்வாங்கவில்லை?

நம் சாப்பாட்டு தட்டில் அம்மா அடுக்கி வைக்கும் மீன்களின் எண்ணிக்கை நமக்கு ஏன் புரிவதில்லை.?

சாதாரண இட்லிக்கு மனைவி செய்த புதுவித சைடு டிஷ் சுடன் சாப்பிட்டுவிட்டு - அவள் கன்னத்தில் (லேசாக!!!) தட்டி பாராட்டி விட்டு செல்லும் இன்பத்தை நாம் ஏன் அனுபவிப்பதில்லை?

நாம் வீட்டுக்கு வந்ததும் குழந்தை காத்திருந்து நமக்கு சொல்லும் செய்திகளை காது கொடுத்து கேட்க நமக்கு ஏன் நேரம் இருப்பதில்லை?

மழை, தென்றல், பூக்கள், பட்டாம்பூச்சி, கடல், ரயில், செல்ல பிராணிகள் நட்பு, உறவு, புத்தகங்கள், இசை, இளமை என்று எத்தனையோ சந்தோசங்கள் நம்மை சுற்றி கொட்டி கிடக்க நாம் நாளையை நடிப்போவது ஏன்?

ரெண்டு நாள் சாப்பிடாவிட்டால்மூணாவது நாள் நம்மால் சேர்த்து சாப்பிட முடிவதில்லை. past is past. 

இன்றைக்கு நமக்கு கிடைத்த உணவை ருசித்து சாப்பிட நமக்கு நேரம் இல்லாவிட்டால் - நாளை நமக்கு ருசியான உணவு கிடைக்கும்போது - அன்று நாம் மாத்திரைகளையே உணவாக உட்கொண்டிருக்கலாம். 

சில பெண்களை பார்த்தால் எப்ப பார்த்தாலும் nighthy போட்டுக்கொண்டே இருப்பார்கள்.

என் சொந்தகார பெண் ஒருத்தி சரியான புடவை பைத்தியம். அவளுடைய அண்ணன்கள் - புருஷன் - எல்லாம் வாங்கி கொடுக்கும் வெளிநாட்டு புடவைகள் தவிர - டி நகர் வரும்போது - கடை கடையாக ஏறி இறங்கி - புடவை வாங்கி குவிப்பாள்.

ஒரு தடவை அவளுடைய பர்சனல் அலமாரியை எனக்கு முன் அவள்  திறக்க வேண்டிய கட்டாய நிலை.

திறந்து பார்த்தால் -  

ஒரு பெரிய புடவை கடையே உள்ளே இருந்தது.

அம்மாடியோவ் என்று ஏங்கி போனேன்.

"கண்ணு வச்சிட்டியா? இனிமே எனக்கு புடவை சேராது. போய்த்தொலை அந்த பக்கம்" என்று துரத்தி விட்டாள். 

"இவ்வளவு புடவைகளை அடிக்கி வைத்து கொண்டு நீ ஏன் எப்ப பார்த்தாலும் இந்த கண்றாவியை போட்டுக்கொண்டே திரிகிறாய். உன் புருஷன் புள்ளைக்கு எல்லாம் உன்னை பார்த்தால் போர் அடித்துவிடாதா?  இதை போட்டுகொண்டு கண்ணாடியை பார்த்தால் உனக்கே உன்னை பிடிக்காது" என்று போட்டு வாங்கினேன்.

பக்கத்திலேயே கொஞ்சம் ஜீன்ஸ் அடுக்கி இருந்தது..

"இது யாருடையது" என்று கேட்டேன்

"என்னுடையது தான். ஆசைப்பட்டு வாங்கினது. இன்னிக்கு போடலாம் நாளைக்கு போடலாம் என்று வைத்திருந்து வைத்திருந்து இப்ப அது சின்னதாக போய்விட்டது"

"தப்பு. நீ தான் பெருத்து விட்டாய்" என்றேன் துணிச்சலாக.

திங்கள் - நமக்கு நாமே சூனியம் வைத்து கொள்வது போல.. 




Kandavel Rajan

unread,
Jan 21, 2010, 11:29:30 PM1/21/10
to tamil2...@googlegroups.com, panbudan
2010/1/22 Haja Muhiyadeen <muhiy...@gmail.com>

சாதாரண இட்லிக்கு மனைவி செய்த புதுவித சைடு டிஷ் சுடன் சாப்பிட்டுவிட்டு - அவள் கன்னத்தில் (லேசாக!!!) தட்டி பாராட்டி விட்டு செல்லும் இன்பத்தை நாம் ஏன் அனுபவிப்பதில்லை?

நாம் வீட்டுக்கு வந்ததும் குழந்தை காத்திருந்து நமக்கு சொல்லும் செய்திகளை காது கொடுத்து கேட்க நமக்கு ஏன் நேரம் இருப்பதில்லை?


எல்லாம் ஒரு ஈகோ தான் நம்ம மனைவி, நம்ம பிள்ளை எப்பனாலும் தாட்டிகிலாம், கேட்டுக்கலாம்ன்னு....


மழை, தென்றல், பூக்கள், பட்டாம்பூச்சி, கடல், ரயில், செல்ல பிராணிகள் நட்பு, உறவு, புத்தகங்கள், இசை, இளமை என்று எத்தனையோ சந்தோசங்கள் நம்மை சுற்றி கொட்டி கிடக்க நாம் நாளையை நடிப்போவது ஏன்?


அருமை.............


"என்னுடையது தான். ஆசைப்பட்டு வாங்கினது. இன்னிக்கு போடலாம் நாளைக்கு போடலாம் என்று வைத்திருந்து வைத்திருந்து இப்ப அது சின்னதாக போய்விட்டது"

"தப்பு. நீ தான் பெருத்து விட்டாய்" என்றேன் துணிச்சலாக.

ஹா ஹா ஹா.........

அடி வாங்கலையே...............


--
உதவி செய்தல்தான் உறவின் துவக்கம்.  அங்கே உண்மையிருப்பின் உறவு பலப்படும்.

நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

stalin felix

unread,
Jan 22, 2010, 12:45:19 AM1/22/10
to panb...@googlegroups.com
அருமை ஹாஜா

2010/1/22 Kandavel Rajan <kandav...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/

Haja Muhiyadeen

unread,
Jan 25, 2010, 12:40:28 AM1/25/10
to தமிழ், பண்புடன்
"முடியலிங்க. ஏண்டா வாங்கினோம்னு இருக்கு. ரெண்டு லட்ச ரூவாய கடன் வாங்கினா இருக்கிற காச வச்சி ஊட்ட கட்டி முடிச்சிரலாம்னு ஆரம்பிச்சு - இப்ப ஊடும் முழுசா முடியாம இருக்கு. காசு பத்தாதால மாடில தட்டு ஓடு போடமுடியாம போய் மழைக்காலம் வந்த தண்ணி உள்ளார இறங்கி மேல் கூர முழுக்க தண்ணி கசியுது. யான வாங்கியாச்சு அங்குசம் வாங்க முடியலன்கிற கதையா மேலே ஒரு தட்டு ஓடு போட்டுட்டா பிரச்னை தீந்திரும். பழைய கடனும் தீரலை. வட்டி பாட்டுக்கு ஏறிக்கிட்டே இருக்கு.அசல் எப்ப கட்டுறது. சம்பாதிக்கிறது முழுக்க வட்டிகட்டியே அழிக்கிறேன்.  தரித்திரம் எப்ப தீரும்னு தெரியலைங்க"

என்று ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்டதை போல - நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் கண்டிப்பாக இருக்கும்.

கடன் வாங்குவதே கொடுமை எனும்போது - வட்டிக்கு வாங்குவது அதை விட கொடுமை.

நம்முடைய வருமானத்திலிருந்து ஒரு லட்ச ரூவா நம்மால் சேமிக்க முடியவில்லை என்ற உண்மை நமக்கு தெரிந்திருக்க - எந்த நம்பிக்கையில் திருப்பி செலுத்தி விடுவோம் - என்று வட்டி கடன் வாங்குகிறோம் என்று தெரியவில்லை.

கொஞ்ச காலம் அசலும் வட்டியும் ஒழுங்காக கட்டுவோம். அப்புறம் வட்டி மட்டும்.

பிறகு வட்டிக்கு வட்டி கூடி - கழுத்தை நெருக்கும்..

மிகப்பெரிய ஜாம்பாவான்கள் என்று கருதப்பட்ட ஜீவி, குஞ்சுமோன், பாக்யராஜ், புன்னகை அதிபர் பாலு எல்லாரும் - நம் கண்ணெதிரே  வட்டிக்கு என்னும் வன் கொடுமைக்கு பலியானாதை பார்க்கிறோம்.

கடன் கிடைக்கும்போது இருக்கின்ற சந்தோசம் - அது தான் தான் கடைசி சந்தோசம்!

எனினும் வட்டியின் விஷ கொடுக்கை பற்றி இன்னும் யாரும்  அதிகமாக கவலைப்பட்டதாக தெரியவில்லை.

உயிர் போர்கிற அவசரம் என்றால் கூட பரவாயில்லை. வீடு கட்டவும், தொழில் தொடங்கவும் தொழிலை மேம்படுத்தவும், கல்யாணம் பண்ணவும் என்று எல்லாவற்றுக்கும் அந்த நேரத்தில் பரவாயில்லை என்று வாங்கிவிட்டு மாட்டிகொண்டு முழிக்கிறோம். 

கல்யாணத்துக்கு வாங்கியவர்கள் அதை அடைப்பதற்குள் - சீர் வரிசை - பிள்ளை பேறு என்று மேலும் செலவுகள் வரிசை கட்டி நிற்கின்றன. தொழிலை தொடங்குகிறேன் என்று வட்டிக்கு வாங்கியவர்கள் - கிடைக்கும் லாபத்தை திருப்பி கட்டி கொண்டிருப்பார்கள். கொள்முதல் செய்ய பைசா இல்லாமல் மேலும் கடன் வாங்கி - மேலும் வாங்கி - இப்படி தான் ஓய்ந்து போவார்கள். 

வட்டிக்கு வாங்கிவிட்டு -  பயந்து பயந்து நடந்தவர்களும், கடன் காரனுக்கு பயந்து வீட்டிற்குள் இருந்து பூட்டிகொண்டவர்களும் - மானம் மரியாதைக்கு பயந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டவர்களும் நமக்கு வெறும் செய்தி தான். படிப்பினை ஆகவில்லை.

மானம் மரியாதை கவ்ரவம் உயிர் வீடு வாசல் சந்தோசம் நிம்மதி எல்லாம் நாம் வட்டிக்கு பணம் வாங்கியதற்கு நாம் கொடுக்கும் விலைகள். அது மட்டும் அல்ல வாழும்போதே நமது ஆன்மாவை குத்தி கிழிக்க வல்லது இந்த வட்டி. 

இன்று வட்டியை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தால் அமெரிக்கா - துபாய் போன்ற அசைக்க முடியாத நாடுகளே ஆடி போய் இருக்கின்றன. பெரிய பெரிய வங்கிகளே மண்ணை கவ்வி இருக்கின்றன. 

கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற இராமாயண வரிகள் - இதை விட தெளிவாக கடன் வாங்குவதால் ஏற்படும் STRESS பற்றி எப்படி சொல்ல முடியும்?

வட்டி பற்றி கூறுகையில் இஸ்லாமிய மார்க்கம் - வட்டி வாங்குபவர் இறைவனுக்கு எதிராக போர் தொடுப்பதாக -ரொம்பவும் சீரியஸாக எடுத்து கொள்கிறது

பிரபல பேச்சாளர் ஒருவரின் தொலைக்காட்சி உரையில் சொல்லப்பட்ட தகவல்

கடன்காரன் வீட்டு வாசலில் நின்று கத்துவதை பொறுக்க முடியாத ஒரு பெண் - வெளியே யாருக்கும் தெரிய கூடாது என்று - தயவு செய்து உள்ளே வந்து பேசுங்கள் என்று சொல்லி இருக்கிறாள்.

சரி சிறிது சிரித்து பேசி சமாளித்து அனுப்பி விடலாம் என்று அவள் போட்ட கணக்கு தப்பாக போயிற்று.

அவளது சிரிப்புக்கும் - உபசரிப்புக்கும் மயங்கி போன அவன் - அவளை பற்றி தப்பாக நினைத்து கொண்டு அடிக்கடி வர ஆரம்பித்தான்.

இவன் அடிக்கடி ஆம்பிளை இல்லாத வீட்டிற்கு வருவதை அறிந்த தெருமக்கள் அரசால் புரசலாக பேச ஆரம்பித்தார்கள்

இந்த செய்தி சிங்கபூருக்கு அவனது கணவனுக்கு செல்கிறது (அங்கு கட்டிட வேலைக்காக சென்றவன்) மனைவியிடம் அவன் விளக்கம் கேட்க அப்படி எதுவும் இல்லை என்று உண்மையாக சொன்னாலும் அவன் நம்ப தயாராக இல்லை.  இந்த பிரச்னையால் கோபம் கொண்டு அவன் பணம் அனுப்புவதையும் நிறுத்தி விட்டான். இத்தனைக்கும் அவர்கள் திருமணம் காதல் திருமணம் தான். 

கடனையும் வாங்கிவிட்டு வட்டியையும் கட்ட முடியாமல் திண்டாடி போன அந்த பெண் - திரும்பி சொந்த வீட்டுக்கும் செல்ல முடியாத நிலை. கணவனும் புறக்கணித்து - ஊரின் அவ பேச்சும் சம்பாதித்து - கடைசியில் அந்த காமுகனின் வலையில் வீழ்ந்தாள்.

முக்கியமான விஷயம் - அவள் கடன் வாங்கியது கணவன் சிங்கப்பூர் செல்ல தான்..

நாளை : தாங்கமுடியலைடா சாமி.






Haja Muhiyadeen

unread,
Jan 26, 2010, 12:43:49 AM1/26/10
to தமிழ், பண்புடன்
பர்சனல் ஹைஜீனிக் எனப்படும் சுய ஆரோக்ய விழிப்புணர்வு (தமிழ் சரி தானே? ) இல்லாதவர்களிடம் பல தடவை நான் சிக்கி கொண்டு திக்கு முக்காடியிருக்கிறேன். 

என்னத்தை தான் தின்கிறானோ - என்று ஆவேசப்படும் அளவுக்கு - வாயை திறந்தாலே பண்டோரா பாக்ஸ் திறந்த கணக்கா நச்சு நாத்தம். பேசினாலோ வீச்சம் அடிக்கிது ரொம்ப தூரத்துக்கு. பல்லை விலக்கி எத்தனை நாளாச்சோ?  இல்லாட்டி முழிச்சதும் நேரா மத்தவங்களை சாகடிச்சே தீருரதுன்னு வெளியில கிளம்பிடுவாங்க போலிருக்கிறது. 

என் போனில் மத்தவங்க வந்து பேசுவது எனக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை. ஆனா இந்த மாதிரி ஒரு ஆளு என் போனை யூஸ் பண்ணிட்டு போனவுடன் அல்கஹால் வச்சி கிளீன் பண்ணாம என்னால அடுத்த போன் பண்ண முடியாது. நீ என்ன அவ்ளோ பெரிய கொம்பனா - மனுசங்களை மதிக்க தெரியாதவனா என்று என் மேலே பாய வேண்டாம்.. சத்தியமா அந்த நுகர்வை நீங்க அனுபவசீங்கன்னா என் மேலே தான் நீங்க  பரிதாபப்படுவீங்க. 

எனக்கென்ன ஆத்திரம்னா - இப்படி தூரத்தில நின்னு நகந்து போற நமக்கே இப்படி நாக்க புடுங்குதே.. இவங்க பொண்டாட்டியோட எப்படி french kiss எல்லாம் கொடுப்பாங்கன்னு தான். (தாஜ் என்று ஒரு நண்பர் இதற்கும் ஒரு பதில் வைத்திருந்தார். "இவங்கள மாதிரியே அவங்களும் இருந்தா - மைனசும் மைனசும் பிளஸ் ஆகிடும்) 

முந்தய நிறுவனத்தில் ஒரு தடவை வேறு துறையை சேர்ந்த ஒரு மேனேஜர் - (அவரும் ஒரு இந்தியர்) - பிரியப்பட்டு கூப்பிடுகிறாரே என்று காரில் போய் விட்டேன். ஐயோ.. அந்த கொடுமைய ஏன் கேட்கறீங்க!!! எங்கிருந்து அந்த நாத்தம் வருகிறது.. எப்படி வருகிறது என்று என்னால் சொல்ல தெரியவில்லை.. குமட்டுபவர்கள் அடுத்த பாராவுக்கு தாவுங்க சீக்கிரம்.. சீழ் பிடித்த மாதிரி ஒரு நாத்தம். வண்டியை கண்ணாடி ஏற்றி விட்டு ஏசி எல்லாம் போட்டு - 15 நிமிஷத்தில் நான் நரகத்தின் வாசலை மிதித்து வந்தேன்..நான் ஓவராக அலம்பல் பண்ணுகிறேன் என்று கருதுபவர்கள் இந்த மாதிரி ஆட்களிடம் இன்னும் சிக்கவில்லை என்று கருதி கொள்க. 

சவுதியில் எங்களுடன் வேலை செய்யும் எகிப்து காரர்களுக்கு குளியல் என்றால் என்ன என்று தெரியாது போல இருக்கு.  நம்மூர் பன்னீர்தாஸ் அண்ணாச்சி மாதிர் கோட்டை மாட்டிகொண்டு வந்து விடுவார்கள். 

நண்பர் மன்னார்குடி ராஜா தான் சுவையாக சொல்வார். "இவங்க எல்லாம் கோட்டை கழட்டாம இருக்கிறது தான் நல்லது. கழட்டினா நாம செத்தம்" என்று 

பஸ்ல ஸ்டான்டிங் போறப்ப - இந்த மாதிரி கொடுமைக்கு நான் நிறைய ஆளானதுண்டு. ஒரு தடவை சென்னையில் - இப்படி தான் என்னடா ஒரு போர் எரிந்த மாதிரி ஒரு ஸ்மெல் வருகிறதே என்று லேசாக திரும்பினால் ஒரு ஆள் மேலே கம்பியை பிடித்திருந்தார் சரியாக அவருடைய கையும் உடம்பு சேரும் இடம் என் முகத்தின் அருகே இருந்தது. இது வரைக்கும் கூட மன்னித்து விடலாம். கண்றாவியே.. இப்படியா புதர் மாதிரி.. உவ்வேக்.

ஒரு தடவை சோழன் எக்ஸ்ப்ரசில் - சென்னை முதல் மயிலாடுதுறை வரை பகல் நேர பயணம். எக்மோரில் கூட்டத்தில் அடித்து பிடித்து ஏறிய பின் - உட்கார இடம் இல்லை எல்லாம் FULL. அப்போது தான் கவனித்தேன் - நான்கு வடக்கத்தி காலேஜ் பிகர்கள் ஜீன்ஸ் பனியன் போட்டு பிளாஸ்டிக் தொங்கட்டான் போட்டு கால் மேல் கால் போட்டு உட்காந்திருந்தார்கள். கையில் சிட்னி செல்டன் வைத்திருந்தார்கள் 

கெட்டதிலும் ஒரு நல்லது இப்படியே வேடிக்கை பார்த்துக்கொண்டே ஊர் போய் சேர்ந்து விடலாம் என்று அங்கேயே நின்று கொண்டேன்.

அதில் ஒரு பம்ப்லி மாஸ் - என் அருகே உள்ள பரு மூஞ்சியிடம் என்னவோ இந்தியில் உத்தரவிட்டாள். கையில் சிப்ஸ் வைத்து பம்பிக்கொண்டிருந்த அந்த பெண் என்னை அண்ணாந்து பார்த்து - நான் அப்பாவி தான் என்று கன்பார்ம் ஆன பிறகு அவள் ஏரியாவை சுருக்கி கொண்டு எனக்கு உட்கார இடம் கொடுத்தாள். அவள் என் மேல் பட்டதையும் நான் அவள் மேல் பட்டதையும் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல் அவர்கள் கலகலத்து கொண்டிருந்தார்கள்.

உட்கார்ந்த பிறகு தான் தெரிந்தது. இவர்கள் பயணம் தொடங்கியதில்ருந்து குளிக்கவே இல்லை என்பது. ஏன்டா உட்காந்தோம் என்றாகிவிட்டது. 

இதற்கு தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா!!!

மக்சிமம் தம் பிடித்து உட்கார்ந்திருந்துவிட்டு ரெண்டு மணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். நம்பினால் நம்புங்கள் - ஊர் போய் சேர்ந்தவுடன் ஜுரம் வந்து காலேஜுக்கு மூணு நாள் போகவில்லை.. 

இப்படி பல்லு விளக்காம - குளிக்காம - முடி எடுக்காம - நகம் வளத்துக்கிட்டு -கண்ட இடத்தில துப்பிக்கிட்டு நாத்தம் புடிச்சி திரியும் நல்ல உள்ளங்களே. மத்தவங்களையும் கொஞ்சம் நெனெச்சி - உங்க கொள்கை பிடிப்பை கொஞ்சம் தளர்த்துங்கள் ப்ளீஸ். 

நாளை: நண்பனை துரத்திய கதை!!!






துரை.ந.உ

unread,
Jan 26, 2010, 1:07:01 AM1/26/10
to tamil2...@googlegroups.com, பண்புடன்
அன்பின் ஹாஜா ,
 
உங்கள் பதுவுகள் ஒவ்வொன்றும் பாசில்களாகிப் பலன் கொடுக்க வாழ்த்துகள்
அனைத்தும் பாதுகாக்கவேண்டிய முத்துகள்
 
அருமை, அருமை ,
 


 

--
தமிழ் நண்பர்கள் Thamizh Friends
 
URL : http://groups-beta.google.com/group/Tamil2Friends
Email : Tamil2...@googlegroups.com
If you are unable to read Tamil Fonts or to type Tamil...
Please install ekalappai20b_anjal.zip from http://groups.google.com/group/Tamil2Friends/web/ekalappai20b_anjal.zip
For Online Thamizh Typing Use the Link :http://tamil2friends.com/tamil or http://www.google.com/transliterate/indic/Tamil
Website URL : http://Tamil2Friends.com



--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

Haja Muhiyadeen

unread,
Jan 27, 2010, 1:28:19 AM1/27/10
to tamil2...@googlegroups.com, பண்புடன்
"மெட்ராசிலிருந்து வந்துவிட்டானா" 

"வந்துவிட்டான். தூங்குகிறான் எழுப்பவா?"

"வேண்டாம், நான் பேசியதாக சொல்லுங்கள். சீடி திரும்ப வேண்டும் என்று சொல்லுங்கள்"

அடுத்த நாள் காலை நேரில்

"சீடியை கொடு. உடனே தருகின்றேன் என்று வாங்கி வந்தேன்."

"அடடா. ஒரு சீடிக்காகவா (?) இவ்வளவு தூரம் வந்தாய்? நானே கொண்டு வந்து தந்திருப்பேனே. நான் தான் பார்க்க முடியாது மெட்ராஸ் போகிறேன் சரி மச்சானும் பார்க்கவேண்டும் என்றார். சரி என்று கொடுத்து விட்டேன். இப்போது தங்கை வீட்டுக்கு தான் போயி கொண்டிருக்கிறேன்.உடனே கொண்டுவந்து தருகிறேன். நீ வீட்டுக்கு செல்"

அடுத்த நாள் -போனில்

"என் தங்கைக்கு கல்யாணம் பண்ணி குழந்தையும் பெற்றுவிட்டாள். இன்னும் பொறுப்பு வரவில்லை (?) பார்.  சீடிக்களை குழந்தைடம் கொடுத்து விளையாட செய்திருக்கிறாள். அது எங்கு தூக்கி வீசியதோ? நேற்று முழுக்க உன் வேலை (?) தான். இன்னும் தேடிகொண்டிருக்கிறாள். கிடைத்தவுடன் (?) உடனே கொண்டு வந்துவிடுகிறேன். கோபித்து கொள்ளாதே!!"

அன்று மாலை - போனில்

"நானே உனக்கு போன் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். பாவம் குழந்தை. அதற்கு என்ன தெரியும். சீடியை தரையில் போட்டு விளையாடி கிராச் செய்துவிட்டது. கவலைப்படாதே!!  இன்னொரு மச்சான் அடுத்த மாதம் துபாயிலிருந்து வருகிறார். நான் dvd வாங்கி வர சொல்கிறேன். "

"நீயும் உன் மச்சானும். இப்போது நான் வாங்கியவருக்கு என்ன பதில் சொல்வது?"

"என்ன செய்வது. உனக்கே தெரியும் எனக்கு எவ்வளவு அலைச்சல் என்று. இதற்கிடையில் படத்தை பார்த்துவிடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் கொடுத்து (?) வைக்கவில்லை"

போன லீவில் - நேரில்

"என்ன MESSAGE படத்தை பார்த்துவிட்டாயா"

"இன்னும் பார்க்கவில்லை. அந்த படம் இன்டர்நெட்டில் கிடைக்கிறது என்று சொன்னார். நான் உனக்கு லிங்க் கேட்டு (?) சொல்கிறேன். நீ DOWNLOAD செய்து கொள்" (எனக்கேவா?)

----

இவனை என்ன செய்யலாம்?

அந்த படத்தை அவனும் பார்க்கவில்லை. இது வரை நானும் பார்க்கவில்லை.
 அவன் மச்சான் பார்த்தாரா என்று தெரியவில்லை. 

நாளை: இது நம்ம வீடு!!











"








Ahamed Zubair A

unread,
Jan 27, 2010, 1:33:04 AM1/27/10
to panb...@googlegroups.com, tamil2...@googlegroups.com


2010/1/27 Haja Muhiyadeen muhiy...@gmail.com

 
"நானே உனக்கு போன் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். பாவம் குழந்தை. அதற்கு என்ன தெரியும். சீடியை தரையில் போட்டு விளையாடி கிராச் செய்துவிட்டது. கவலைப்படாதே!!  இன்னொரு மச்சான் அடுத்த மாதம் துபாயிலிருந்து வருகிறார். நான் dvd வாங்கி வர சொல்கிறேன். "
 
நானும் 100 திர்ஹாம் கொடுத்து “சக்தே இந்தியா” டிவிடி வாங்கினேன். எல்லா டெலிட்டட் சீனும் இருக்கும். அதில இன்ஸ்ப்ரேசன் ஸ்பீச் ஒன்னு இருக்கு. அதனால வாங்கினேன்.
 
கூட வேலை செய்யுற ஆளோட பையன் அதை எடுத்து குண்டூசியால கீறினா சத்தம் நல்லா வருதுன்னு கீறி கிழிச்சிட்டான். அவனை அடிக்கவா முடியும்???
 
100 திர்ஹாம் போச்சு... கூட கொஞ்சம் தலைவலியும்.. :(

Haja Muhiyadeen

unread,
Jan 27, 2010, 1:38:05 AM1/27/10
to பண்புடன், தமிழ்
விட்டுப்போன வரிகளுடன் மீண்டும் - மன்னிக்கவும். 

ஒரு நண்பன் என்னிடம்

"மெசேஜ் படத்தின் சீடி உன்னிடம் இருக்கிக்ரதாமே. கொடு காப்பி செய்துவிட்டு தந்துவிடுகின்றேன்"

"இருக்கின்றது. அது என்னுடையது அல்ல . நான் காப்பி செய்துவிட்டு உனக்கு தருகிறேன்"

அடுத்த நாள் - போனில் 

காப்பி செய்துவிட்டாய"

"இல்லை. நான் தேடிச்சென்ற ஆள் இல்லை. இன்று நான் பார்த்துவிட்டு தந்து விடுகின்றேன். இரவு ஏழு மணிக்குள்"

அடுத்த நாள் - போனில் 

"அவன் இல்லையே தம்பி. மெட்ராஸ் போய்விட்டான் நாளை காலை வந்துவிடுவான்"

ஏதாவது சீடி கொடுத்து சென்றான"

"இல்லையப்பா"

அடுத்த நாள் காலை போனில் 
--
J. HAJA MUHAYADEEN
ஆயிரம் மைல் பயணம் - முதல் அடியில் தொடங்குகிறது

Haja Muhiyadeen

unread,
Jan 27, 2010, 11:46:56 PM1/27/10
to பண்புடன், தமிழ்
ஒரு உடை உடுத்தினா அதை வச்சி அதை உடுதியிருப்பவர்களின் குண நலனை ஓரளவு கெஸ் பண்ண முடியும்!  அதே மாதிரி ஒரு வீட்டுக்குள்ள உள்ள ஒழுங்கை வச்சி அங்கே வசிப்பவர்களின் மெண்டாலிடியை புரிந்து கொள்ளலாம். 

உலகத்தில நாம எந்த மூலையில சுத்திக்கிட்டு இருந்தாலும் திரும்பி வரதுக்கு ஒரு காரணம் இருக்கணும்னா அது நம்ம வீடு இருக்குங்கற ஒரு விஷயம் தான்.

வீடு ஒரு கோவில் மாதிரி மனசுக்கு அமைதி தர விஷயமா இருக்கணும். சுத்தமா இருக்கணும் என்கிற காரணத்தினால் தான், அந்த காலத்தில வீட்டுக்குள்ள நகம் வெட்ட கூடாது - தலை சீவிட்டு முடிய போடகூடாது - ஒட்டடை சேரகூடாதுன்னு நேரடியா சொல்றதுக்கு பதிலா - அதை எல்லாம் செஞ்சா வீட்டுக்கு லட்சுமி வரமாட்டா தரித்திர தேவி தான் வருவா னு ஒரு சொல்லி வச்சாங்க. அல்லாஹ்வோட பரக்கத் (அபிவிருத்தி) வராதுன்னு சொல்வாங்க. 

வீட்டுக்காரங்க சுறுசுறுப்பானவங்களா  - சோம்பேறி பார்ட்டியானு அந்த வீட்டோட லட்சணத்தை வச்சே தெரிஞ்சுக்கலாம். 

சில வீடுங்க உள்ள ரொம்ப அமைதியா இருக்கும். மியூசியம் மாதிரி எல்லா பொருளும் அது அது இடத்தில அழகா இருக்கும். இந்த வீட்ல சாமான்களை கலச்சி போட குழந்தங்க கூட இல்லியோன்னு தோணும். 

மிட்டாய தின்னுட்டு கவர்  தாளை கீழே போட கூட மனசு வராது. 

ஆனா பல வீடுங்கள்ல வேட்டையாபுரம் அரண்மனை மாதிரி எவ்ளோ ஒட்டடை தொங்கும். பூச்சிங்க ஓடும். அந்த வீடுங்கள்ல மனுசங்க வாழறாங்களா . அல்லது பேய்ங்க நடமாட்டம் உண்டுமானு தோணும்.

வீட்டை கூட்டி பெருக்கி அள்ளி இருக்க மாட்டங்க. அப்படியே கூட்டி இருந்தாலும் அதை ஓரமா ஒதுக்கி வச்சிருப்பாங்க. அது காத்தடிச்சா மறுபடியும் பறந்து பரவும். கட்டிலுக்கு அடியில் எல்லாம் குனிஞ்சு கூட்ட மாட்டாங்க.

நம்மளோட ஒரு ரூவா காயின் கட்டிலுக்கு அடியில ஓடி போயிருச்சுன்னா அப்படியே விட்டுடணும். மீறி குனிஞ்சு எடுத்திட்டு எழுந்திருச்சா அவ்ளோ தான்.  பாழடைந்த பங்களாவுக்கு உள்ளே போயிட்டு வந்த மாதிரி நம்ம உடம்பு முழுக்க ஒட்டடையும் தூசியும். 

ராத்திரி வச்ச கொசுவர்த்தி காயிலோட சாம்பல் ஒரு மாசமா அப்படியே இருக்கும். அதோட ஸ்டீல் ஸ்டாண்ட் ஆங்காங்கே கிடக்கும்.

கண்ணாடி பக்கத்தில சீப்பா பார்த்தா ஒரு பண்டில் முடி அதில சுத்தி இருக்கும் . சீப்பை கழுவி இருக்க சான்சே இல்லை. 

ஒரு மூலையில துணிங்க எல்லாம் தாறுமாறா குவிஞ்சு கிடக்கும். துவச்ச துணியா துவைக்காத துணியானு வீட்டு காரங்களுக்கே தெரியாது.

பாத்ரூம் போனா - நடனம் தான் ஆடணும். காலை ஸ்திரமா ஊன்டலன்னா படுக்கையில நாலு மாசம் ரெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கும். மீறி போயிட்டா அங்கே கழட்டி போட்ட துணிகள். உள்ளாடைகள் என்று எக்க சக்கம் தொங்கும். வழிஞ்சு போனா ஷாம்பூ - மிச்சம் போன குட்டி குட்டி சோப்புங்க - பழைய ப்ளேடுங்க - துருப்பிடிச்ச நகவெட்டி - பிச்சு போட்ட ஷாம்பூ பேப்பர் - சீயக்கா என்று ஒரே களேபரமா இருக்கும். 

அடுப்பங்கரை பார்த்தா - கழுவாத சட்டிங்க ஒரு பக்கம் அடுக்கி கிடக்கும். அதில நாலு ஈ. மிஞ்சி போன டீ. சிந்திப்போன குழம்பு. கீழே நச நசன்னு மாடு கண்ணு போட்ட மாதிரி அப்படி கிடக்கும். 

சில வீடுங்கள்ல மெயின் ஹாலிலேயே அவ்வளவு குப்பை. விருந்தாளிய உள்ளே போனா உட்கார சொல்லி வற்புறுத்துவாங்க . உட்கார தான் இடம் கிடைக்காது. 

சோபா நிறைய துணிங்க போர்வை. பக்கத்தில கிடக்கிற நாற்காலி மேலே பழைய டவல் உள்பாவாடை இத்யாதிகள்.

வாங்க வாங்கன்னு வாய் நிறைய வரவேற்றுகொண்டே எல்லாத்தையும் நகர்த்துவார்கள்.

"இந்த பசங்களோட மல்லடிக்கிரதிலையே நேரம் சரியா இருக்கு. இதெயெல்லாம் ஒதுங்க வச்சி முடியாதுங்க" என்று அவர்களாகவே ஒப்புதல் வாக்குமூலம் தருவார்கள்.

ஒரு அலமாரிய திறந்தா - திறக்கிறதுக்கு முன்னாடி ஹெல்மெட் எல்லாம் போட்டுக்கிடணும். எப்படா திறப்பாங்கன்னு கட்டவிழ்த்துவிட்ட காள மாடு மாதிரி - அந்த அலமாரியிலிருந்து ஒரு கும்பல் பொருள் நம்ம மேலே தான் விழும்.

ஏதாவது சர்டிபிகேட் இல்லாட்டி ஒரு பில்லு கேட்டா அப்ப தான் தேட ஆரம்பிப்பாங்க. இங்கே தான் வச்சேன்னு சொல்லி தேடிட்டே இருப்பாங்க. அவங்க குடையுற இடத்தில எல்லாம் பார்த்தா ஊரப்பட்ட வேண்டாத சாமான்கள் நிறைய இருக்கும். தேடுற அயிட்டம் மட்டும் இருக்காது.

இதை எல்லாம் விமர்சிச்சு எழுதறதால நான் ரொம்ப பர்பாக்ட் என்று அர்த்தம் இல்லை. ஆனால் இப்படி மோசமாக விமர்சிக்க வேண்டிய அளவுக்கு ஆளானவன் இல்லை. 

அழுக்கு பங்களாவை விட சுத்த குடிசை சூப்பர் தானே. என்ன சொல்லுதீக? 

நானும் நண்பர்களும் ஒரு தடவை பஹ்ரைன் டூர் போயிருந்தோம். (ஹீ ஹீ. சவுதியிலிருந்து பஹ்ரைன் போனேன் என்று சொன்னால் சகிலா படம் பார்க்க போன மாதிரி தான் பார்ப்பாங்க!!) 

டூரின் ஒரு பகுதியாக என் நண்பரின் நண்பர்கள் இருக்கும் ரூமுக்கு சென்றோம். அருமையான ரூம் ஊரை ஞாபக படுத்தும் விஷயங்கள் நிறைய. அந்த ரூமில் நான்கு பேர் தங்கி இருந்தார்கள். சொந்த சமையல் வேறு. சமைத்தார்கள். பிரியாணி எல்லாம் போட்டு நன்றாக என்ஜாய் பண்ணினோம்.

ரூம் சுத்தமாக இருந்தது 

பாத்ரூம் கூட சுத்தமாக தான் இருந்தது.

ஆனால் ஏதோ ஒரு கெட்ட வாடை வீசி கொண்டிருந்தது.

"பாத்ரூமில் ஏதோ குழாய் ரிப்பேர் போல இருக்கு. லீக் ஆகுதோன்னு சந்தேகம். லேசா ஸ்மெல் அடிக்குது" என்று போட்டு வாங்கினேன்.

அதில் ஒரு நண்பர் வந்து பார்த்துவிட்டு - அங்கிருக்கும் வாளியை காட்டினார்.  அதில் துணிகள் ஊற போட்டிருந்தது.

"நம்ம ஆளு தான் ஒரு வாழைபழ சோம்பேறி. துவைக்க போட்டு மூன்று நாள் ஆகிவிட்டது. நாளைக்கு நாளைக்கு என்று இன்னும் துவைத்த பாடில்லை. அது தான் ஸ்மெல்" என்று சொல்லிவிட்டு சம்பந்தப்பட்டவரிடம் போய் மீண்டும் விசயத்தை சொல்லி வைத்தார்.

டிவி பார்த்துகொண்டிருந்த அவர் எழுந்து போனார். சரி துவைக்க போகிறார் போலிருக்கு என்று நினைத்து கொண்டு நான் இருந்த போது ஐந்து நிமிடத்தில் திரும்ப வந்து டிவி பார்க்க உட்கார்ந்து கொண்டார். எனக்கு தாளவில்லை.

கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் நான் எழுந்து போய் பாத்ரூமில் அந்த துணி வாளியை பார்த்தேன்.

அதே வாளி அதே துணிகள். அந்த தண்ணீரை மட்டும் களைந்துவிட்டு புது தண்ணீர் ஊற்றி விட்டு சென்றிருக்கிறார்.

இன்னும் மூணு நாளைக்கு கவலை இல்லை.. கடவுளே கடவுளே..

நாளை:  கூட இருந்தே கொல்லும் பழக்கம். 










Haja Muhiyadeen

unread,
Jan 28, 2010, 10:53:07 PM1/28/10
to தமிழ், பண்புடன்
மகளை சோப்பு வாங்க கடைக்கு அனுப்புவாள் அந்த தாய். ஆனால் என்ன சோப்பு என்று சொல்ல மறந்துவிடுவாள்.

மகள் கடைக்கு போனவுடன் பரிதவிப்பாள். புலம்புவாள். அவள் நினைத்திருந்த சோப்பு வாங்கி வராவிட்டால் - மகளுக்கு பரு வரும். வாழ்க்கையே வீணாகிவிடும் என்று கதறுவாள்.

ரொம்பவும் அத்து மீறிய கற்பனை தான் (அப்படியே வாங்கி வந்தாலும் அந்த சோப்பை கடாசிவிட்டு புதுசு வாங்கறது தானே?) இந்த விளம்பரத்தில் உள்ள தாயை போல நிஜத்திலும் மனிதர்கள் இருக்கின்றார்கள்.

முன்தினம் இரவே இவர்களின் கவலை தொடங்கிவிடும். இவர்கள் கவலைப்படாத நேரமே இருக்காது. ஒரு கவலை முடிந்துவிட்டால் இன்னொன்று தொடங்கிவிடும். 

பழைய அனுபவங்களை வைத்து நாளை என்ன நடக்குமோ என்று இவர்கள் நடத்தும் மனப்போராட்டம் சொல்லி மாளாது.

கவலைகள் எல்லாமே பாழ் படுத்தப்பட்ட எண்ணங்களே. 

புலி அடித்து செத்தவனை விட கிலி அடித்து செத்தவன் தான் அதிகம் அது கவலைகளுக்கும் பொருந்தும். பெரும்பாலான கவலைகள் வீணான எண்ணங்கள்..

அப்படி நடக்குமோ இப்படி நடக்குமோ என்று நினைத்து வருந்தி சந்தோஷ தருணங்களை ரணமாக்கி வைத்திருப்போம். 

ஆனால் எதிர்பார்த்த எதுவும் நடக்காது. 

பெரும்பாலும் நாம் இப்படி தான் வாழ்க்கையை வீணாக்குகிறோம்.

போன மாதம் நாம் கவலைப்பட்டதை நினைத்தால் இப்போது சிரிப்பாக வரும். என்றாலும் நாளை பற்றி நாம் கவலைப்படுவதை நிறுத்துவதில்லை. 

இந்த மிகப்பெரிய பிரபஞ்சத்தில் நம் பூமி சிறிய பந்து. அந்த சிறிய பந்தில் நாம் ஒரு தூசுக்கு சமம். நாம்முடைய வாழ்க்கையும் அற்பத்திலும் அற்பம். நிலைமை இப்படி இருக்க - உலகத்தையே நாம் தான் சுமந்து கொண்டிருக்கிறோம் என்ற ரேஞ்சுக்கு சிந்தித்து மனதையும் உடலையும் வருத்தி கொள்வது எவ்வித புத்திசாலித்தனம்.

கவலை இல்லாமல் வாழ்வது என்பது பொறுப்பற்று வாழ்வது என்று அர்த்தமாகாது. பொறுப்பாக இருப்பது வேறு கவலைப்பட்டு நொந்து போவது வேறு. 

உலகில் பிரச்னை இல்லாத மனிதர்களும் இல்லை. 


கவலைப்படுவதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை. 

எனக்கு பிடித்த ஒரு கவிதை-



காலுக்கு செருப்பு இல்லை என்று கவலைப்பட்டேன்



காலே இல்லதாவனை காணும் வரை





உலகின் மிக சிறந்த பிரார்த்தனைகளில் ஒன்றான - 

இறைவா. நான் விரும்பும் மாற்றங்களை செய்யகூடிய சக்தியை எனக்கு கொடு. மாற்ற முடியாதவற்றை அப்படியே ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் கொடு 

என்ற பிரார்த்தனையே நமது மூல மந்திரமாக கொள்ள வேண்டும்..

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது 
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது 
எது நடக்க இருக்கிறதோ, 
அதுவும் நன்றாகவே நடக்கும் 
உன்னுடையதை எதை நீ இழந்தாய்? 
எதற்காக நீ அழுகிறாய்? 
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? 
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ? 
எதை நீ எடுத்து கொண்டாயோ, 
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. 
எதை கொடுத்தாயோ, 
அது இங்கேயே கொடுக்கப்பட்டது. 
எது இன்று உன்னுடையதோ 
அது நாளை மற்றொருவருடையதாகிறது 
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். 

என்ற கீதாசாரமோ - 

அல்லாஹ் விதித்ததை அன்றி வேறு எதுவும் ஒரு போதும் எங்களை அணுகாது என்ற (நபியே) நீர் கூறும் என்பன போன்ற அருள் மறை குர் ஆன் வசனங்களும் - 

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கவலைக்கான மருந்து.

மற்றவர்கள் கூட - "வந்தா மலை. போனா டேஷ்" என்ற மருந்தை பயன்படுத்தலாம். 

துபாயிலிருக்கும் எனது நண்பர் ஒருவருக்கு (முன்பு கத்தாரில் நாங்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தோம்!!)  தினசரி ஒரு கவலை கண்டிப்பாக இருக்க வேண்டும் அவருக்கு. கடந்த ஒரு வருடமாகவே அவருடைய கவலை - வேலையே விட்டு தூக்கி விடுவார்களோ என்பது தான். நானும் அவர் எப்போது போன் செய்தாலும் ஆறுதல் சொல்லி கொண்டே இருப்பேன். இதுவரை எதுவும் நடக்கவில்லை. இந்த பொருளாதார நெருக்கடியிலும் - கம்பெனி அவர் எதிர்பாராத வகையில் மிக பெரிய போனஸ் எல்லாம் கொடுத்திருக்கிறது.

இவ்வளவு கருப்பாக இருக்கிறேனே எனக்கு பொண்ணு கிடைக்குமா? - என்பது தான் அவருடைய போன வருடத்திய கவலை.

திங்கள் : எரியும் வயிறு! 

Haja Muhiyadeen

unread,
Feb 1, 2010, 12:26:41 AM2/1/10
to பண்புடன், தமிழ்
பில்கேட்ஸ் வீட்டு வாசலில் எத்தனை ferrari நின்றிருந்தாலும் அது நமக்குள் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாது. அது ஒரு இயற்கையான செய்தி. 

ஆனா நம்ம பக்கத்து வீட்டுக்காரன் ஒரு பழைய ambassador கார் வாங்கிவிட்டால் போதும் -

நம்மால் அதை ஜீரணிக்க முடிவதில்லை.

நள்ளிரவுக்கும் தூக்கம் வருவதில்லை.

எப்படி வாங்கினான்? இவனுக்கு மட்டும் இப்படி பிரஸ்டீஜ் கூடுகிறது. 

பெரிய ஆளாகி வருகிறானோ? 

மனம் குமைய ஆரம்பிக்கிறது. தீ எரிகிறது. பொறாமை தீ..

அவனே வாங்கும்போது நம்மால் ஏன் வாங்க முடியவில்லை. நாமும் வாங்க முயற்சிப்போம் என்று நினைப்பது தான் நலல பிள்ளைக்கு அழகு.

ஆனால் நம் மனசு நம் சொல்வதை கேட்காது. நம்மை தூண்டி விடும்.. சுற்றி சுற்றி அடிக்கும். கனன்று கனன்று அல்சர் வரும் அளவுக்கு வயிறு பற்றி எரியும்..

"பெரிய இவனா அவன்? எப்படி வாங்கினானு தெரியாதா?  எவன் எவனோ வீட்டுக்கு வந்திட்டு போனான். சந்தேகப்பட்டது சரியா போச்சு. "

அவதூறு பேச வைக்கும்.

"என்னை ஒரு பய இனி மதிக்க மாட்டானே. "

சுய கழிவிரக்கம் ஏற்படுத்தும்.

"என்னடி அவனையே பார்த்துட்டு இருக்கே. கார்ல போறவன் தான் உனக்கு புடிக்குமா? "

சந்தேகத்தை ஏற்படுத்தும்.

"எங்கயாவது மோதி சப்பயாவணும்"

கோபத்தை ஏற்படுத்தும்.

."எப்படியாவது இவனை மட்டம் தட்டனும்"

சந்தோசங்களை இழக்க வைக்கும்.

மனசு முழுக்க அனல் உள்ளவனால் ஒரு கவளம் சோறு கூட ஒழுங்காக உங்க முடியாது. தூக்கம் வராது. கவலை அனத்தும். 

அதற்கு தான் பொறாமையை பொறாமை தீ என்றே சொல்கிறார்கள்.

 எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை; அவனுக்கு ரெண்டு கண்ணும் போக வேண்டும் என்பதே வயிற்றெரிச்சல் கோட்பாடு. 

பெண்களுக்கு தான் பொறாமை கொள்வதில் அதிக பங்கு இருக்கிறது. 

எங்கேயோ மினுக்கிக்கிட்டு போறா வரா என்று இவர்களுடைய பொறாமை அவர்கள் கற்பை களங்கப்படுத்துவது வரை நீள்கிறது. 

விவாகரத்துக்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சில சமயம் கொலை கூட. 

பொறாமை தீயின் உச்ச கட்டம் மன நோய்.

ஒனிடா விளம்பரத்தில் வருமே 

கொண்டுள்ளவருக்கோ பெருமை. அண்டை வீட்டாருக்கு பொறாமை என்று 

அது தான் பொறாமை பிசாசு.

எனக்கு பிடித்த ஒரு பொன்மொழி

நமது உறவினர்கள் நன்றாக இருக்கட்டும்.; நாம் அவர்களிடம்(உதவி கேட்டு)  செல்லாமல் இருக்கட்டும் 

இஃது இவ்வாறிருக்க. - இது போல வயிறெரிச்சல் கோஷ்டிகளுக்கு எண்ணெய் ஊற்றுவதற்கு என்றே சில கோஷ்டிகள் இருக்கின்றன. இவர்கள் பொறாமை தீயை யோகம் போல வளர்ப்பார்கள். 

என்கிட்டே அது இருக்கு இது இருக்கு என்று தம்பட்டம் அடித்து வயிறு ஏறிய வைப்பதில் ஜித்தர்கள் இவர்கள்.

இது மாதிரி தான் ஒரு ஊர் பெரிய மனுஷன் இருந்தாராம்.

அவருக்கு எப்பவும் பெருமை அடிக்கணும். புதுசு புதுசா சாமான்கள் வாங்கி வீட்டில் வைத்து எல்லாரையும் கூட்டி வந்து காண்பிப்பார். அவர்களும் வயிறு எரிந்து புழுங்கி விட்டு ரொம்ப சந்தோசமா இருக்கு என்று சொல்லிவிட்டு செல்வார்கள். அவர் வீட்டு பெயரே சிங்கபூரார் வீடு தான்.  இத்தனைக்கும் அவர் சிங்கப்பூர் போகவில்லை. அங்கே உள்ள பொருள்கள் அவர் வீட்டில் இருக்கும்.

ஒரு தடவை சிங்கப்பூரில் இருக்கும் அவர் மச்சினன் மச்சானின் பெருமையை மேம்படுத்தும் பொருட்டு தங்கத்தில் செயின் மோதிரம் இத்யாதிகளுடன் சிங்கப்பூர் சட்டை, பனியன், ஜட்டி கூடவே செருப்பு எல்லாம் வாங்கி அனுப்பினான்.

இவற்றை கிடைக்கபெற்ற சிங்கபூர்காரர் சும்மா இருப்பாரா? ஒரு தேநீர் பார்ட்டி ஏற்பாடு செய்தார்.

பார்டிக்கு முதல் நாள் இந்த பொருள்களை வருபவர்களிடம் எப்படி காட்டுவது என்று கண்ணாடி  முன் நின்று  ப்ராக்டிஸ்  செய்தார்.  கையில் வேட்டியை பிடித்து தூக்கி நெஞ்சு வரை உயர்த்தி கொண்டு கையை ஆட்டி ஆட்டி |வாங்க வாங்க என்று வருபவர்களை வரவேற்பது போல ப்ராக்டிஸ் செய்தார். 

அதாவது அவருடைய புதிய செருப்பு உள்ளாடை பனியன் கை மோதிரம் வாட்ச் எல்லாம் மற்றவர் பார்க்க வேண்டும்.

அடுத்த நாள் பார்ட்டிக்கு எல்லாவற்றையும் எடுத்து அணிந்து கொண்டார். பழக்க தோஷத்தில் உள்ளாடை மட்டும்  அணிய தவறிவிட்டார்.

நாளை : கோபம் ஏனோ கண்ணா? 















Haja Muhiyadeen

unread,
Feb 2, 2010, 12:43:39 AM2/2/10
to பண்புடன், தமிழ்
கோபம் ஏன் வருகிறது என்று ஒரே வரியில் சொல்லிவிடலாம்.

தன் விருப்பப்படி எதுவும் நடக்காத போது சம்பந்தப்பட்டவர்கள் மீது அல்லது சமூகத்தின் மீது வரும் வெறுப்பே கோவம். 

ஒரு வகையில் பார்த்தால் கோவம் நல்ல விஷயம் தான்.  கோவம் இல்லாத வாழ்க்கை மழையில் நனைந்த அப்பளம் மாதிரி சவசவ என்று இருக்கும். காந்தி பாரதி நேதாஜி இவங்கல்லாம் கோவப்பட்டதனால தான் சுதந்திரம் எல்லாம் கிடைச்சது. இன்னொரு சய்டுல போனா கோவம் ஒரு மிகப்பெரிய கெட்ட பழக்கம்.

கோவத்தை சரியா கவனிச்சம்னா அது ஒரு பேடித்தனம் என்று நல்லா தெரியும். நாம கோவப்படறது எல்லாம் பணத்தில பலத்தில நம்ம விட ஒசத்தியா உள்ளவங்க  கிட்ட இருக்காது. நம்மளோட கோவம் இவங்க கிட்ட செல்லாதுன்னு நமக்கே தெரியும். இவங்க கிட்ட கோவப்பட்டா நம்ம நிலை என்னன்னு நமக்கு முன்பே தெரியும்

நம்ம கோவம் முழுக்க அம்மாகிட்ட அப்பாகிட்ட பொண்டாட்டி கிட்ட பிள்ளைங்க கிட்ட தனக்கு கீழே வேலை செய்றவன் கிட்ட இப்படி தான் இருக்கும். இவங்க கிட்ட கோவப்படரதால  இவங்க திருப்பி மூஞ்ச காட்டமாட்டாங்க  - நம்ம மூஞ்சிக்கும் ஆபத்து இல்லைன்னு  ஒரு நல்ல பாதுகாப்பு இருக்கு னு நம்ம புத்திக்கு நல்லாவே தெரியும்.

அதே மாதிரி வெளில பார்த்தீங்கன்னா பாவப்பட்ட கண்டக்டர் - ஆட்டோகாரன் - காய்கறி காரன் - பிளாட்பார கடைக்காரன் இப்படி தான் இருக்கும். இவங்க கிட்டயும் அதிக எதிர்ப்பு இருக்காது (மிஞ்சி போனா போய்யா சாவு கிராக்கி|)

வேட்டைக்காரன் செல்லா கிட்ட நாம கோவப்பட்டா என்ன ஆவும்னு நமக்கு தெரியும்கிறதால நாம அந்த லெவெலுக்கு போறதில்லை. ஜஸ்ட் A.C ரூமுக்குள்ள உக்கந்திக்கிட்டு "letter to the editor" எழுதறதோட சரி. இதுக்கு தான் பேடித்தனம்னு சொல்லியாச்சு. 

இன்னொரு பக்கம் சில பேரு தற்காப்புக்காக கோவப்படுவாங்க பிரபு தேவா தாடி வளக்கிற மாதிரி. அந்த ஆளு மோசமனவருயா .. டெரர் னு காமிச்சிக்கிரதுக்காககிரதுக்காக.  உள்ளுக்குள்ள ஆயிரம் கோடி பயம் இருக்கும். இதுவும் பேடித்தனதில தானே அடங்கும்.

வருஷத்தில ஒரு தடவை அதுக்கான காரணத்தோட FIRE பண்ணினா அதுக்கு நல்ல EFFECT கிடைக்கும். பொழுது விடிஞ்சு பொழுது பட்டா வாள் வாள்னு கதிக்கிட்டிருந்தா.. இந்த ஆள் இப்படி தான் குரைக்கிற நாய் கடிக்காதுன்னு  ஓரமா நமக்கும் சேத்து குழி தோண்ட ஆரம்பிச்சிடுவாங்க. 

கோவம் வந்தா விஜயகாந்த் மாதிரி கண்ணு சிவந்திடும். குரல் ஓங்கிரும். உடம்பெல்லாம் ஆடி போயிரும். இதனால யாருக்கு நஷ்டம்.. நம்ம உடம்பை நாமலே பொட்டிக்கு அனுப்பறோம். 

என் நண்பர் ஒருத்தரோட மனைவி குணத்தில் தங்கம். அப்படி ஒரு நல்ல பொண்ணு. அயோ. கோவம் வந்தாலோ - கையில கிடைக்கிறதை எடுத்து எதிர்ல எல்லார் மேலேயும் வீசிட்டு - நரம்பு புடைக்க கத்திட்டு - தன்னாலேயே மயக்கம் போட்டு விழுந்திரும். என் நண்பன் ஆயிரத்தில் ஒருவனில் கல் சுத்துற மாதிரி இடத்தில மாட்டிக்கிட்டா கூட கார்த்திக் மாதிரி கல்லு படாம தப்பிச்சிருவான். அவனுக்கு அந்த அளவுக்கு அதில அனுபவம் இருக்கு. 

எப்பவுமே உணர்ச்சி வேலைய காட்டும்போது அறிவு வேலை செய்யாது. அதுவும் கோவம் கொப்புளிக்க நாம கண்ணு சிவக்கும்போது நாம என்ன செய்றோம்னு நமக்கே தேராது பாரதிராஜா படத்தில எரவானத்திலே அருவாளை உருவுக்கிட்டு ஒன்னு பின்னால ஒன்னு ஜனங்க ஒடுவாங்கள்ள அதுவும் இந்த மாதிரி கேசு தான். 

அதுக்காக கோவப்படாமையும் இருந்திருக்க கூடாது. நம்ம மேலே சின்ன சின்ன எலி எல்லாம் ஏறி விளையாட ஆரம்பிச்சிரும். அந்த கோவத்தால நமக்கு எந்த கஷ்டமும் வராம பார்த்திக்கிடனும். 
 
எப்பவும் சிரிசிக்கிட்டிருக்கிற மூஞ்சி என்னிக்காவது எள்ளும் கொள்ளும் வெடிச்சா - உடனே புரிஞ்சிக்கிடுவானுங்க. தலை கோவத்தில இருக்குன்னு. . 

அவங்களும் சூதானமா நடந்துக்குவாங்க. மெனக்கெட்டு பேயாட்டம் ஆட வேண்டாம். கோவப்பட்டதுக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும். 

ஆனா என்னிக்கும் சூடா இருக்கிறவனுக்கு காட்டு காத்தல் கத்தினாலும் எதிர்பார்த்த விளைவு இருக்காது.

கோவத்தை குறிப்பால் காட்டினால் போதும். குதிக்க வேண்டாம் என்பது தான் என் அனுபவம்

நாளை : அண்டாவுக்குள்ளும் கை நுழைக்கலாம் 












மஞ்சூர் ராசா

unread,
Feb 2, 2010, 4:19:30 AM2/2/10
to panb...@googlegroups.com
கோபத்தை பற்றி கோபிக்காமெ எழுதிட்டீங்க....

அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

Raseem

unread,
Feb 2, 2010, 5:36:41 AM2/2/10
to panb...@googlegroups.com
ஹாஜா,
 
உங்கள் ஒவ்வொரு பதிவையும் நான் தவறவிடுவதே இல்லை, அழகான எழுத்து நடை, யதார்த்தமான explanations
 
வாழ்த்துக்கள்
தொடருங்கள்,
காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு

senthil kumar.n

unread,
Feb 2, 2010, 5:52:17 AM2/2/10
to panb...@googlegroups.com
எல்லாம் உண்மை, உண்மை அன்றி வேற எதுவும் இல்லை
 

நன்றியுடன்,
செந்தில் குமார்

2010/2/2 Raseem <md.r...@gmail.com>

--

Haja Muhiyadeen

unread,
Feb 3, 2010, 12:34:26 AM2/3/10
to பண்புடன், தமிழ்
சின்ன வயசில எனக்கு நல்லா நாபகம் இருக்கு. 

தந்திக்கார பயபுள்ள ராத்திரி நேரத்தில தான் வந்து பெல் அடிப்பான். தந்தி வந்திருச்சுன்னு கேட்டவுடனேயே வீட்ல எல்லாருக்கும்  கை கால் தந்தி அடிக்க ஆரம்பிச்சிரும். (தந்தி என்றாலே யாரோ இறந்து விட்டார்கள் என்று தான் அர்த்தம்) மெல்ல மெல்ல பக்கத்துக்கு வீடு எதிர் வீடு என்று வெளிச்ச பூக்கள் ஆரம்பித்து தெருவே டென்ஷன் ஆகும்.. தந்தியை படிச்சு சொல்ல தெருவில எவனும் படிச்சவன் இருக்க மாட்டான் வெளிநாட்டுக்கு போன எவனோ ஒருவன் (எங்க ஊர்ல நிறைய பேரு சிங்கப்பூர் மலேசியா என்று இருந்த காலம்) ரொம்ப பொறுப்பா நான் வருகிறேன் என்று தகவல் சொல்ல ஊரே டென்சனில் தவிக்கும். 

அறியாமையால் வரும் டென்ஷன் இது. இப்பவும் ஒரு புதிய ஆபீசுக்கு போனாலோ - ஒரு புது ஆளை பார்க்க காத்திருந்தாலோ அவன் எப்படி இருப்பான் - என்ன சொல்வான் என்று அறியாததால் வரும் டென்ஷன். 

ஏற்கனவே ஒரு விசயத்தில் அனுபவம் இருந்தால் இப்படி இப்படி செய்யலாம் - இந்த ஆள் இப்படி இருப்பான் என்று மனசுக்குள் ஒட்டி பார்த்துக்கொள்ள முடியும். தெரியாத பட்சத்தில் இந்த பதட்டத்தை தவிர்க்கவே முடியாது. 

இந்த மாதிரி போது இடத்தில முழி பிதுங்கி நிற்பதை பார்த்த மாத்திரத்திலேயே - தம்பி ஊருக்கு புதுசு - என்று இதெற்கென்றே காத்திருக்கும் சீட்டேர்ஸ் ரெடி ஆகிவிடுவார்கள். 

புதுசா எங்கியாவது போய் முழிக்கிற நிலை ஏற்ப்பட்டால் ஒரு கண்ணாடியை எடுத்து போட்டு கொள்வேன். என் முழி வெளியே தெரியாது. இல்லாட்டி இருக்கவே இருக்குது சூயிங்கம்.  அப்புறம் ரெண்டு கையையும் பேண்ட் பக்கத்தில் போட்டுகொண்டு எனக்கு தெரியாத இந்த ஊர் பத்தி என்று நடப்பேன். 

நம்ம சென்னை ஏர்போர்ட் விட்டு வெளியே வரதுக்குள்ள ஆட்டோ - டாக்ஸி -வட்டிக்கு பணம தரவர் -  அந்நிய செலாவணி மாற்றுபவர் என்று நம்மை சுற்றி ஒரு வழி பண்ணிடுவாங்க. அவங்க கிட்டேந்து எஸ்கேப் ஆகனும்னா விஜய் மல்லையா மாதிரி நடந்து வர தெரிஞ்சிருக்கணும். 

இதெல்லாம் அறியாமையால் வர பதட்டம்.

இன்னொரு பதட்டம் நமக்கு டெட் லைன் தெரியும். தெரிஞ்சிக்கிட்டே அப்புறம் பார்த்துக்கலாம்னு இருந்துட்டு - சாகப்போற நேரத்தில சங்கரா சங்கரான்னு கூவுறது.

யாரை பார்க்க போறோம் அவங்க என்ன என்ன கேப்பாங்க எல்லாம் தெரியும் தெரிஞ்சிட்டே prepare பண்ணாம போயிட்டு கடைசி நேர பதட்டத்தில தவிக்கிறது 

இண்டர்வீயு போயிட்டு - ஒழுங்கா ரெடி பண்ணிக்கமா - அவங்க ஒரிஜினல் கொடுங்க என்று கேட்கும்போது - பின் பண்ணாம வச்சிருக்கிற எல்லா காப்பியையும் தடால்னு கீழே போட்டுட்டு ரூம் முழுக்க பொறுக்கிக்கிட்டு திரியறது..

ஓடிவந்து பஸ் ஏறுறது - கடைசி நேரத்தில EB பில் கட்டுறது - கடைசி நேரத்தில தேர்வு அறைக்குள்ள வியர்த்து விறுவிறுத்து வந்து சேருரதுன்னு..

நாமாகவே உருவாக்கிக்கிற பதட்டம் தான் ரொம்ப ஜாஸ்தி.

எத்தனை மணிக்கு எழுந்திருச்சு எத்தனை மணிக்கு குளிச்சா எத்தனை மணிக்கு ஆபீஸ் போகலாம்னு நமக்கு நல்லாவே தெரியும் இருந்தாலும் காலை நேர பரபரப்பு ஒரு நாள் கூட கொரஞ்சதேயில்லை..

இன்னும் சில ஆளுங்க மறந்திட்டு தேடுவாங்க. இங்க தான் வச்சேன் இங்கே தான் வச்சேன்னு வாலில ரிப்பன் கட்டின  பூனை மாதிரி ரவுண்டு அடிப்பாங்க. 

அட எந்த பொருளையும் எடுத்த எடுத்த இடத்தில வைக்கிற பழக்கம் இருந்தா இந்த மாதிரி தேட வேண்டிய அவசியம் இல்லை தானே?

இன்னிக்கும் நிறைய பேருக்கு - இன்னிக்கு என்ன கிழமை அப்படீன்னு கேட்குற பழக்கம் இருக்கு. கேட்டுட்டு ஐயோ நான் புதன் கிழமை என்றுள்ள நெனெச்சேன் என்று தலை தெறிக்க ஒடுபவர்களையும் பார்க்கலாம்.

இன்னிக்கு வர வியாதிகள்ள பாதி பரபரப்புல தான்னு சொல்றாங்க. திங்கள் கிழமை காலைல தான் ஹார்ட் அட்டாக்கும் - விபத்துக்களும் அதிகம் நடக்கின்றன என்று கண்டுபிடிச்சிருக்காங்க. 

எப்பவும் பரபரப்பா எந்திர மயமா வாழறது ஒரு வாழ்க்கையா? 

அவசரமா போக வேண்டியது ஆம்புலன்சும் தீவண்டியும் தான். மனுசங்க இல்லை.

அவசரத்தில கை விட்டா அண்டாவில கூட கை நுழையாது. சில நேரத்தில நாக்கே குழறி போகும். 

இப்படி தான் ஒரு பிரபல டைரக்டர் புதுமுகத்துக்கு வசனம் சொல்லி தந்தாராம்.

"சொல். நாதா நின்ன காணாது நன்னு தேகம் மெலிந்து - குற்றுயிராய் வாடினேன்.  இன்று நின்ன கண்டதும் நான் பரவசமானேன்"

ready. lights on. start. action camira.

அவள் பதட்டத்தில் சொன்னாள்

"நாதா நின்ன காணாது நன்னு தேகம் மெலிந்து - குற்றுயிராய் வாடினேன்.  இன்று நின்ன கண்டதும் நான் பிரசவமானேன்"

நாளை:  நான் தாழ்த்தப்பட்டவன். 







 







Haja Muhiyadeen

unread,
Feb 4, 2010, 1:10:58 AM2/4/10
to பண்புடன், தமிழ்
வேறு எந்த நாட்டில இருக்குதோ இல்லியோ நம்ம இந்திய திருநாட்டில் மக்களிடம் ஒரு அடிமை மனப்பான்மை இருக்குது.

இது இங்கிலீஷ் காரன் நம்மளை ஆண்டதற்கு முன்னாடியா பின்னாடியா இப்படி ஒரு பழக்கம் வந்ததது என்று தெரியவில்லை..

வெள்ளையும் சொள்ளையுமா ஒரு ஆளை பார்த்ததுமே - இவன் நம்ம விட பெரிய ஆளுன்னு இவங்க மனசு முடிவுக்கு வந்திருது. நாம் அவன விட தாழ்ந்தவன்னு தோணிடுது.

நான் முதன் முதல்ல சவூதி வந்து கொஞ்ச காலம் saudi aramco ஆயில் கம்பெனில வொர்க் பண்ணினேன். அந்த ப்ராஜெக்ட் முடியும்போது எனக்கு மேலாளர ஒரு பிரிட்டிஷ் காரன் இருந்தான். என் காண்ட்ராக்ட் முடியும்போது எனக்கு ஒரு எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகாட் அடிச்சி கொடுன்னு கேட்டேன்.

அப்படீன்னா என்னன்னு கேட்டான் முதல்ல. (அடப்பாவி!!) 

அப்புறம் அவனுக்கு எல்லாம் விளக்கி சொன்னவுடன் நான் எழுதி தருகிறேன் நீ பிரிண்ட் பண்ணி கொடு என்று வழிக்கு வந்தான். சரி என்று அவன் பக்கத்தில் நான் ஒரு மணி நேரம் நின்றிருந்தேன். நான்கே வரிகள் இங்கிலிஷில் எழுதுவதற்கு அந்த பிரிட்டிஷ் காரன் பட்ட பாடு -

முதன் முதலா லவ் லெட்டர் எழுதறா மாதிரி அடித்தான். கிழித்தான் வேறு ஒன்று எழுதினான். இப்படியாக ஒரு வழியாக முடித்து கொடுத்தான்.

அவன் எழுதிய லெட்டரை நீங்கள் பார்த்தாலே போதும் ரீமா சென் மாதிரி காறி துப்புவீர்கள்.

ஒரு இங்கிலீஷ் காரனுக்கு அவன் சொந்த மொழியில் எழுத தெரியவில்லை. எழுதியதை பார்த்தால் மூணு வயசு குழந்தை கிறுக்கியது மாதிரி இருக்கு. 

இந்த லட்சணத்தில் இருக்கும் இவர்களை பார்த்த மாத்திரத்திலேயே பட்டிக்காட்டான் ஜெயலலிதாவை பார்த்த மாதிரி வாய் பிளந்ததன் காரணமாக தான் அன்று கிழக்கிந்திய கம்பெனி ஒரு சாம்ராஜ்யமாக உருவெடுத்திருக்க கூடும்.

இந்த உலகத்தில் கோடிக்கணக்க்கான உயிர்களை படைத்த இறைவன் மனிதர்களுக்கு மட்டுமே பகுத்தறியும் திறனை கொடுத்து மற்ற உயிரினங்களை விட்டும் மேலாக்கி வைத்திருக்கிறான். இருப்பினும் மனிதன் தன்னையே தாழ்த்தி கொள்கிறான். 

"நீங்க சொன்னா சரிதான்" நீட்டிய இடத்தில கைநாட்டு வைக்கிறான். 

மனிதத்தன்மை கூட இல்லாதவர்களிடம் தெய்வத்தன்மை பொருந்தியவர் என்று நம்பி காலில் விழுகின்றான். 

சுய தேடல் இன்றி அடுத்தவர் அறிமுகப்படுத்தினார் என்று போய் பினான்ஸ் கம்பனியில் காசை தொலைக்கின்றான்.

கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை வாஸ்து மாற்றம் என்று எவனோ சொன்னான் என்று நம்பி இடிக்கின்றான் 

அடுத்த வேலை சோற்றுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் ஜோசியர் கையில் நம் வாழ்கையே ஒப்ப்டைக்கின்றான் 

உண்மையில் நம்மை விட உயர்ந்தவன் உலகில் இல்லை. அதே சமயம் தாழ்ந்தவனும் இல்லை. 

பெரியவர்களுக்கு மரியாதை தரவேண்டும்  என்பதில் மாற்று கருத்து எதுவும் இல்லை. ஆனால் அவர்களும் மல ஜலம் சுமக்கும் - பசி வரும் - தூக்கம் வரும் மனிதர்கள் என்று மனதில் ஒப்புகொள்ள வேண்டும். 

நம்மை நாமே தாழ்த்திக்கொள்வது நம் ஆன்மாவை அழிக்கும் செயலாகும்.

நம்மை தாழ்த்தி கொள்வதன் மூலம் நான் உங்களை ஓவர்டகே செய்ய மாட்டேன் என்று புலப்ப்டுதுகின்றோம்.

ஆனால் அதுவே நம்மை மற்றவர் ஏமாற்ற காரணமாகும்.

இப்படி தான் ஒரு பணக்கார அம்மாவுக்கு எப்பவும் தலை வலி வந்து கொண்டே இருக்கும். என்ன வைத்தியம் செய்தும் பலனில்லை. 

யாரோ சொன்னார்கள் என்று ஒரு ஜோசியரிடம் போய் சரணடைந்தாள்.

ஜோசியர் பலே கில்லாடி.

பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துவிட்டது எதனால் தலைவலி வருகிறது என்று.

"உங்களுக்கு தோஷம் இருக்கின்றது. சமீபத்தில் வைரம் ஏதாவது வாங்கினீர்களா? அந்த வைரத்தின் தோஷம் தான் உங்களை படுத்துகிறது. உங்கள் தலைவலிக்கு அது தான் காரணம்" என்று ரீல் விட்டார்.

"ஆமாங்க. இந்த வைர மூக்குத்தி தான் வாங்கினேன்" என்றால் அந்த அம்மா.

"சரி தான். இதில் தான் தோஷம் இருக்கின்றது. இது தலைவலியில் ஆரம்பித்து ஆளையே அடித்துவிடும். ஒன்று செய்யுங்கள். வேறு மூக்குத்தி அணிந்து கொள்ளுங்க. இந்த மூக்குத்தியை தானம் செய்துவிடுவதாக மனதில் நினைத்து என்னிடம் கொடுத்துவிடுங்கள். இந்த வைரத்தை விற்றாலும் அந்த தோஷம் தீராது:" என்று மறக்காமல் வாங்கி கொண்டார்.

அந்த அம்மாவுக்கு தலைவலியும் தீர்ந்தது. அதற்கு உண்மையான அறிவியல் காரணம் வைரத்தின் வெட்டுக்களில் பிரதிபலிக்கும் வெளிச்சம் அந்த அம்மாவின் கண்களில் பிரதிபலித்து தலைவலியை உண்டாக்கி இருக்கிறது. 

நினைவு கொள்வோம் - நம்மை யாரும் தாழ்த்தி விட முடியாது - நம்மை தவிர.

நாளை: அகங்காரிகள் 






மஞ்சூர் ராசா

unread,
Feb 4, 2010, 1:32:52 AM2/4/10
to panb...@googlegroups.com
ரொம்ப சுவாரஸ்யமா பயனுள்ள விசயங்களை எழுதிவருகிறீர்கள்.  நன்றி.

senthil kumar.n

unread,
Feb 4, 2010, 2:50:17 AM2/4/10
to panb...@googlegroups.com
நன்றி ஹாஜா அவர்களே, 
                                                 நான் சமிபத்தில்தான் இந்த குழுமத்தில் இணைந்தேன், தயவு செய்து முதல் மின் அஞ்சழலில் இருந்து, எனக்கு திரும்ப அனுப்ப முடியுமா,

அன்புடன்

செந்தில்


2010/2/4 Haja Muhiyadeen <muhiy...@gmail.com>

Haja Muhiyadeen

unread,
Feb 4, 2010, 10:26:17 PM2/4/10
to தமிழ், பண்புடன்
பத்மாசுரன் அழிந்து போன கதை நமக்கு எல்லாருக்கும் தெரியும் தானே?

நான் ஒருவன் தலையில் கைவைத்தால் அவன் அழிந்து போகணும் என்று சிவனிடம் வரம் வாங்கிய பத்மாசுரன் - சிவன் தலையிலேயே டெஸ்ட் பண்ண நினைக்க - ஓடிப்போகும் சிவன் விஷுனுவின் ஹெல்பை நாடுகிறார். 

விஷுனுவும் பெண் வேடமிட்டு பத்மாசுரனை கவர்ந்து - மொதல்ல குளி அப்புறம் தான் எல்லாம் என்று ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட 

குளிக்க போன பத்மாசுரன் தலையில் கைவைத்து தானே அழிந்த புராணக்கதை அது. 

அகங்காரிகளுக்கு எப்பவும் பத்மாசுரன் கதி தான்.

 என்னைவிட்டால் யாருமில்லை என்று கர்வத்தின் உச்சியில் இருப்பவர்கள் - கடந்த காலத்தில் தான் என்னவாக இருந்தோம் என்று யோசித்தல் நலம். அல்லது தன் நிலையில் கடந்த காலத்தில் இருந்தவர்கள் என்னவானார்கள் என்று யோசிக்கலாம்.

இந்த உலகம் இருவதினாலு மணிநேரமும் சுற்றிகொண்டிருக்கிறது. நாம் இருந்தாலும் சுற்றும் இல்லாவிட்டாலும் சுற்றும்.

நாம் ஒரு வேலையில் இருக்கிறோம். அந்த வேலையே பற்றி கரைத்து குடித்திருப்போம். நம்மை தவிர வேறு யார் செய்தாலும் அந்த வேலை நடக்காது என்று நமக்கு தெரியவரும்போது நம் கர்வம் தொடங்கும். 

உண்மை என்னவென்றால் நாம் அந்த வேலையே விட்டு நின்றுவிட்டாலும் வேறு ஒரு ஆள் வந்து அதை முடிப்பான். 

முன்பு நான் இருந்த கம்பெனியில் PRESIDENT உடன் கொஞ்ச நாள் வொர்க் பண்ணினேன். 

அந்த கம்பெனி நியமப்படி யாராவது கம்பெனியை விட்டு வெளியே போறதாக இருந்தால் அதற்கு இறுதி ஒப்புதல் PRESIDENT தான்.

கம்பெனிக்கு அந்த சந்தர்ப்பத்தில் நிறைய ப்ரோஜெக்ட்ஸ் கிடைத்திருந்தது. வேலை செய்ய தான் ஆள் இல்லை. எனவே அதிக விலைக்கு வெளியே ஆள் ஹயரிங் எடுத்து செய்ய ஆரம்பித்தார்கள். 

இதை எப்படியோ மோப்பம் பிடித்த சில தொழில் நுட்ப வேலையாட்கள் -எங்களுக்கு இவ்வளவு சம்பளம் வேணும் இல்லாட்டி exit அனுப்பு என்று மிரட்டலாக லெட்டர் எழுதினார்கள். அவர்களுடைய எண்ணம் - வேலைக்கு ஆள் இல்லை. நாம் எவ்வளவு கேட்டாலும் கம்பெனி தரும் என்று தான்.

இந்த மாதிரி லெட்டர்ஸ் கண்ட மாத்திரத்தில் exit approved என்று ப்ரெசிடென்ட் போட்டு அனுப்பி கொண்டே இருப்பார். 

ஆளே இல்லை என்று வெளியில் எடுக்கின்றோம். இந்த லட்சணத்தில் இருக்கின்ற ஆளையும இப்படி கூட்டம் கூட்டமாக அனுப்பினால் என்னாவது ?

ஒரு சரியான சந்தர்ப்பத்தில் அவருடைய வாயிலிருந்தே அந்த ரகசியத்தை தெரிந்து கொண்டேன்.

"என்னுடைய தொழிலாளர்களின் குடும்பத்தினர் பிரார்த்தனையில் தான் நாங்கள் வாழுகின்றோம் என்று நான் மறுக்கவில்லை. ஒரு போர்க் லிப்ட் ஆப்பரேட்டராக வாழ்க்கையை துவக்கிய நான் கையில் பத்து ரியால் இல்லாமல் பசி பட்டினியுடன் உழைத்து கஷ்டப்பட்டு இந்த சாம்ராஜ்யத்தை அமைத்தேன். ஆனால் நேற்று வந்த இவர்கள் கர்வம் பிடித்து என்னை மிரட்டி பார்க்கிறார்கள். 

இவர்கள் போனாலும் வேறு ஒரு ஆள் வந்து அந்த வேலையை பார்ப்பான். இவர்கள் ஊருக்கு போய் பசி பட்டினி கடன் என்று வரும்போது தான் தான் கர்வத்தை உணர்வார்கள். இதில் என் தப்பு ஒன்றும் இல்லை" என்றார்.

ஒருகாலத்தில் மிகப்பெரிய ஜாம்பவான் என்று புகழ பெற்ற ஒரு இசை அமைப்பாளர் இன்று அதிக நேரம் ஒய்வு எடுக்கின்றார். 

தான் போட்டு கொடுப்பது தான் டியூன். அதை மாற்றி கேட்க  யாருக்கும் அதிகாரம் இல்லை முடி சூடா சக்ரவர்த்தியாக இருந்தவர் - அவருடைய இசை எல்லாருக்குமே பிடிக்கும். அதில் மாற்று கருத்து இல்லை. 

ஆனால் அவர் கொண்ட கர்வமும் தனிமையும் - நெருங்க முடியாத தயாரிப்பாளர்களை மாற்று தேட வைத்தது. இன்னொரு இசை மேதை அவர் இடத்தை பிடித்து கொண்டார். ஆனால் முதாலமவரின் கர்வம் தனக்கு வராமல் புகழின் உச்சியிலும் அமைதி காக்கிறார். எல்லா புகழும் இறைவனுக்கே என்கிறார்.

குப்பை கோபுரத்துக்கும் போகும். திரும்ப குப்பைக்கும் போகும். 

ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும். வண்டி ஒரு நாள் ஓடத்திலேரும்.

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் கர்வம் கொண்டவன்  நிலை அறிய ஒரு அழகான கதை சொல்லுவார். 

ஒரு ஊர் பெரிய மனுஷன் ஊர்க்காரர்கள் விசேஷங்களுக்கு தான் செல்லாமல் தன் செருப்பை மட்டும் அனுப்பி வைப்பாராம். தன் செருப்பு வந்தால் - தான் வந்ததுக்கு சமானம் என்பது அவர் நிலைப்பாடு. அந்த அளவுக்கு கர்வம். 

ஒருநாள் அவர் மண்டையை போடும் வேலை வந்தது. 

அவர் இறந்த அன்று அவரை தூக்கி போட ஊர்காரர்கள் ஒருவரும் அவர் வீட்டில் இல்லை. அவர் வீட்டை சுற்றி- இறுதி சடங்கில் கலந்து கொண்ட அடையாளமாக 

ஊரில் உள்ளவர்களின் செருப்புகள் தான் கிடந்தன.


திங்கள் :  எப்போது நேரம் கிடைக்கும்? 





Haja Muhiyadeen

unread,
Feb 8, 2010, 1:05:01 AM2/8/10
to tamil2...@googlegroups.com, பண்புடன்
நம்மை படைத்த இறைவன் நாம் எல்லாரையும் ஒன்று போல படைக்கவில்லை. உடல் வலிமை உள்ளவனையும் நோஞ்சானையும், புத்தி கூர்மை உள்ளவனையும், மந்தமானவனையும், அழகானவானையும் ஊனமுற்றவனையும், வெள்ளையாகவும், கருப்பாகவும் இப்படி கோடிக்கணக்கான டிசைன்களில் நம் ஒவ்வொருவரையும் படைத்திருக்கின்றான்.

ஆனால் எல்லாருக்கும் பொதுவாய் அவன் கொடுத்தா வரம் நேரம் தான்.

எல்லாருக்கும் 24 மணி நேரம் தான்.

ஏழைங்களுக்கு பத்து மணி நேரமும் பணக்காரங்களுக்கு 48 மணி நேரமும் என்று அவன் பாகுபாடு பார்க்கவில்லை.

பிரதமருக்கும், தொழிலாளிக்கும், பிச்சைக்காரனுக்கும், குழந்தைக்கும், பெரியவருக்கும்,  மருத்துவருக்கும், நோயாளிக்கும் - எல்லோருக்கும் ஒரே கோட்டா தான்.

இந்த 24 மணி நேரத்தில் நாம் என்ன செய்கிறோமோ - என்ன சிந்திக்கிறோமோ - அது தான் நமது எதிர்காலம் - உலகின் எதிர்காலம்.

நேரம் கிடைக்கலை என்ற புலம்பல் நம்மில் அனைவருக்குமே இருக்கும் கெட்ட பழக்கம்.

பீச் மணலில் - பிகருடன் - மொட்டை வெயிலில் சப்ஜெக்ட் கூட இல்லாமல் மணிக்கணக்காக மொக்கை போட நமக்கு நேரமிருக்கிறது. நம் குழந்தை தன் பள்ளி ஆண்டுவிழாவுக்கு அழைத்தால் - டாடிக்கு நேரம் இல்லைடா. அம்மாவை அழைச்சிட்டு போ -  என்று முத்தம் கொடுத்து அனுப்பி வைக்கிறோம். 

டாடி - ஆண்டுவிழாவுக்கு தமன்னா தான் கெஸ்ட் என்று மகள் சொல்லி பார்க்கட்டும். கிளம்பி விட மாட்டோமா?

அமிஞ்சிக்கரையில் ஒரு நாள் ப்ரோக்ராம் இருக்கு. வருகிறாயா என்று நண்பன் அழைத்தால் - "சாரிடா. பத்து நிமிஷம் கூட என்னால இங்கிட்டு அங்கிட்டு நகர முடியாது" என்று சொல்கிறோம்.

இன்னொரு ப்ரோக்ராம் அமெரிக்காவில் இருக்கிறது. நமக்கு ரெண்டு பாஸ் கிடைத்திருக்கிறது. உனக்கு தான் டைம் இல்லையே - என்று அவனே சொன்னால் - அவனை நாம் கட்டி பிடித்து முத்தம் தந்து பெட்டி கட்ட மாட்டோமா?

சில பேரிடம் புத்தகம் படிக்க தந்தால் ஒரே மூச்சில் படித்து கொடுத்துவிடுவார்கள்.  இன்னும் சிலர் இன்னும் படிக்கவில்லை என்று மாதக்கணக்கில் இழுத்தடிப்பார்கள்.

ஸோ - பேசிக் என்னவென்றால் -

நமக்கு ஒரு விஷயம் பிடித்திருக்கிறது என்றால் எப்படியாவது நேரம் கிடைத்து விடுகின்றது.

இஷ்டமில்லாத காரியங்களுக்கு எப்போதும் நேரம் கிடைப்பதே இல்லை.

இப்படி நேரம் கிடைக்காமல் - தவற விட்ட உறவுகள் - நண்பர்கள் - படிக்க விட்டு போன புத்தகங்கள் - செல்ல முடியாத இடங்கள் - என்று நாம் காணும் இழப்புகள் தினசரி ஏராளம். 

இன்ஷா அல்லாஹ் என்று ஒரு வார்த்தை இருக்கிறது. (நான் முயற்சி செய்து பின்னர்) இறைவன் நாடினால் - என்று இதற்கு அர்த்தம். 

ஆனால் இதை நான் செய்யபோவதில்லை என்று முன்கூட்டியே முடிவு செய்துகொண்டு இன்ஷா அல்லாஹ் என்று சொல்கிறவர்களும் - நாம் கேட்கும்போதெல்லாம் நேரம் கிடைக்கவில்லை நான் என்ன செய்வது என்று இழுத்தடிப்பவர்களும் ஏராளம்.

நமக்கு எந்த காலத்திலும் நேரம் மொத்தகமாக கிடைக்க போவதில்லை. அலை எப்ப ஓயறது? நாம எப்ப குளிக்கிறது? 

நமக்கு போர் அடிக்கும் - பிடிக்காத காரியங்களை செய்ய ஒரே வழி என் அனுபவத்தில் - பிட்டு பிட்டாக செய்வது தான். 

ஆயிரம் மைல் பிரயாணம் என்றால் நினைக்கும்போதே அசதி வரும். கொட்டாவி வரும். அப்புறம் பார்த்துக்கலாம் என்று தோணும்.  முதல் அடி எடுத்து வைத்துவிட்டாலே பயணம் தொடங்கிவிட்டது இலக்கை அடைய போகிறோம் என்று தான் அர்த்தம். 

ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை தினம் பத்து பக்கம் படித்தால் நூறு நாட்களில் முடித்துவிடலாம்.

வீட்டு வேலை என்றால் - தினம் ஒரு தட்டு என்று நான்கு நாட்களில் ஒரு அலமாரியை சுத்தப்படுத்தலாம். தினம் ஒரு அறை என்று வைத்தல் வீட்டை ஒரு வாரத்தில் பளபளக்க வைக்கலாம். 

அலுவலக வேலை என்றால் பெண்டிங் வொர்க் எல்லாம் கம்ப்ளீட் செய்ய தினசரி பத்து நிமிடம் போதும். 

நம்மால் கடிகாரத்தை மட்டுமே நிறுத்த முடியும். நேரத்தை அல்ல. 

நாளை: மூட் அவுட் 

மஞ்சூர் ராசா

unread,
Feb 8, 2010, 1:25:04 AM2/8/10
to panb...@googlegroups.com
”வாங்க வாங்க எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம். ஃபோனும் காணோம்”


”ரொம்ப பிஸி.. டைமே கிடைக்கறதில்லே”


இப்படி சொல்பவர்களே இப்ப எங்கும் நிறைந்திருக்கின்றனர்.  ஆனால் இதில் எத்தனை பேர் உண்மையிலேயே பிஸி என்று பார்த்தால்.......

Haja Muhiyadeen

unread,
Feb 9, 2010, 1:37:43 AM2/9/10
to பண்புடன், தமிழ்
இந்த உலகத்தில் எல்லாரும் நம்மை தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என்று நம் மனசு நினைக்கிறது. ஆனால் இது சாத்தியம் இல்லை என்பது புத்திக்கு தெரியும். 

நம்மை யாராவது பாராட்டினால் - மனசில் சந்தோசம் பொங்குது. திட்டினால் தொய்ந்து தொங்குகிறது. மூட் அவுட் ஆகிறது.

மூட் அவுட் ஆகின்ற காரணிகள் வெளியிலிருந்து வரவில்லை. நம் மனசு தான் பிரதிபலிக்கின்றது.

இவரை போல வருமா? என்று சொல்லும்போது குதூகலிக்கின்றது. 

நீயும் ஒரு மனுஷனா என்னும்போது வருத்தப்படுகின்றது.

இது வரை சரி தான். இது தான் யதார்த்தம்.

ஆனால் இந்த வருத்தம் அடிக்கடி நிகழும்போது தப்பு நம்ம மேலே தான் இருக்கின்றது.

வருஷத்தில ஒரு தடவை மூட் அவுட் என்றால் நம்பலாம்

ஒரு நாளைக்கு மூணு தடவை என்றால் என்ன அர்த்தம்? நம் மனசு நம் கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தம்,

மூட் அவுட் என்பது நிகழ்கால நெருக்கடியிலிருந்து தப்பிக்க நாம் சொல்லும் சால்ஜாப்பு

எப்பவும் மூட் அவுட்டில் இருக்கும் நிர்வாகியிடம் அவர் கீழே வேலை செய்பவர் எப்படி பிரச்னைகளை கொண்டு செல்ல முடியும்?

எப்பவும் மூட் அவுட்டில் இருக்கும் குடும்ப தலைவனிடம் மனைவி எப்படி சுதந்திரமாக அணுக முடியும்?

நான் மூட் அவுட்டில் இருக்கேன். அப்புறம் பார்க்கலாம் - என்று சொல்லும்போதே பிரச்னை தள்ளி போடப்படுவதை பார்க்கலாம்.

நம் மனசு - அதுக்கு பிடிக்காத ஒண்ணு நடந்திடுசுன்னா - அதை அப்படியே திரும்ப திரும்ப போட்டு காட்டிக்கொண்டே இருக்கும்.

எதிர்பார்ப்பே இல்லாமல் வாழும்போது ஏமாற்றமே வராது. ஏமாற்றம் இல்லாவிட்டால் மூட் அவுட் வராது.

இன்னொரு வகை மூட் அவுட் - திட்டமிடாத வாழ்கையால் வருவது.

எதையாவது தொலைத்துவிட்டு மறந்து தேடுவது. ஒரு ஆளை சந்திக்க வருவதாக சொல்லாமல் சென்றுவிட்டு அவர் இல்லாமல் போவது - முக்கிய தோலை பேசி எண்களை குறித்து வைக்காமல தேவைப்படும்போது தேடிக்கொண்டிருப்பது இதெல்லாம் இது மாதிரி மூட் அவுட் உண்டாக்கும்.

மூட் அவுட் என்பது பாஷனாக சொல்லப்படும் ஒரு வார்த்தை ஆகிவிட்டது.

உண்மையில் இது பிரச்னைக்குரிய வார்த்தை. இது நம் நேரத்தை கொல்கின்றது. சின்ன பிரச்னையை தள்ளி போடும்போது பிரச்னையை பெரியதாக்குகின்றது.

சுறுசுறுப்பான தேனிக்கு துக்கப்பட நேரமில்லை. வாட்ஸ் நெக்ஸ்ட் என்று தட்டிவிட்டு கிளம்பி விட்டால் எப்பவும் நல்ல மூட் தான்.

நடிகை மூட் அவுட் என்று ஷூட்டிங்கை கேன்சல் செய்யலாம். 

நடிகர் மூட் அவுட் என்று ஷூட்டிங்கை கேன்சல் செய்யலாம்

ஏன் - DIRECTOR கூட கேன்ஸல் செய்வார்.

ஆனால் PRODUCER ஷூட்டிங்கை கேன்ஸல் செய்ய மாட்டார்.

ஏனெனில்  - அவர் தான் பணம் போட்டிருக்கிறார். ஒரு நாள் ஷூட்டிங்க கேன்சல் ஆனால் எவ்வளவு நட்டம் வரும் - எவ்வளவு வட்டி போகும் என்று அவருக்கு தான் தெரியும்.

நேரத்தின் அருமையை உணர்ந்தவர்களும் - வாழ்க்கையின் அருமையை உணர்ந்தவர்களும் எதற்கும் மூட் அவுட் ஆக மாட்டார்கள் 

நாளை : அவதூறு என்னும் சேறு. 

Haja Muhiyadeen

unread,
Feb 10, 2010, 12:02:38 AM2/10/10
to தமிழ், பண்புடன்
இதை தான் இட்டுக்கட்டி பேசறதுன்னு போது வழக்கில சொல்வாங்க.

ஒரு சின்ன லிங்க் கிடைச்சிட்டா போதும். ஈறை பேனாக்கி - பேனை பெருமாளாக்கிடுவாங்க. ஒரு சப்பை மேட்டருக்கு கண்ணு மூக்கு காத்து வச்சி ஊதி விட்டு - விளைவுகளை பார்த்து ரசிக்கிற க்ரூரம் - அது ஒரு மன நோய் - அது தான் அவதூறு பேச வைக்கிது.

எங்காளு ஒருத்தருக்கு இந்த மாதிரி கதை விடறது கைவந்த கலை. அவர பேச வச்சி ரொம்ப ரசிசிக்கிட்டிருப்பம். ஆரம்பத்தில அவரோட பேச்சை ரசிக்கிரதுக்காக விட்டு வச்சோம். 

சவுதில இருந்துக்கிட்டே ஊர்ல உள்ள விசயங்களை பத்தி அக்கு வேறு ஆணி வேராக சொல்வார். அந்த பொண்ணு வயசுக்கு வந்திடுச்சு - இந்த பொண்ணு ஊட்டை விட்டு ஓடிடுச்சு - அந்த பய்யன் அவள வச்சிருக்கான் என்று தினசரி ஒரு கதை இருக்கும்.

உங்க ஊரை பத்தியே வெளியூர் காரங்ககிட்ட இப்படி சொல்றீங்களே. நாங்கல்லாம் தப்பா நெனக்க மாட்டோமா?  என்று கேட்டால் உண்மையா தானே சொல்லுதோம் என்பார். அவர் சொல்றபடி பார்த்தால் இவர் வீட்டை தவிர ஊரில் உள்ள மற்றவர்கள் எல்லாம் கேசுகள். 

ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி மனுசனை கடிச்ச கதையாக - கூட வேலை செய்றவங்களை பத்தியும் - கூட தங்கி இருக்கிறவங்க பத்தியும் அவங்களோட வீட்டு சமாச்சாரங்கள் எல்லாம் நேர்ல பார்த்த மாதிரி சொல்ல ஆரம்பிச்சிட்டார். அப்ப தான் நாங்கல்லாம் முழிச்சம். இது தான் இவரோட குணம் என்று தெரிந்த பிறகு - பொம்பளை மாதிரி நாம இதெல்லாம் பேச கூடாது என்று ரோஷம் வரவைத்தோம். அவர் கேட்கிற படியாக தெரியவில்லை. 

பத்திரிக்கையாளர்கள் பிழைப்பு நடத்துவதே இந்த கெட்ட பழக்கத்தை வைத்து தான்.

ஒரு ஸ்கூப்பாவது கிடைக்காதா என்று நாக்கை தொங்க போட்டு அலைவார்கள். 

ஏதாவது தகவல் தெரிந்தால் முதுகு எலும்பு இல்லாமல் கழுகார் ஆந்தையார் பூனையார் என்று மிருகங்கள் பெயரில் கிசு கிசு எழுதுவார்கள்.

மூன்று மணி நேரம் விழாவில் இருந்து வைரமுத்து பேசியதை பற்றி எழுதாமல் - போகும்போது வைரமுத்து லச்மிராயை காரில் கூட்டிக்கொண்டு போனார் என்று எழுதுவார்கள். 

வைகை புயலின் அலுவலகத்துக்கு மாணவிகள் யூனிபார்ம் போட்டுக்கொண்டே வந்து போவதையும் விலாவாரியாக எழுதுவார்கள். 

வால் முனையை விட பேனா முனை வலுவானது என்று தெரிந்தும் அதை வைத்து முதுகு சொறிந்து கொள்வார்கள்.
 
அவதூறு பேசுவது சொறி சிரங்கு மாதிரி சொறிய சொறிய சுகமாக இருக்கும். புண்ணாகி போனது அப்புறம் தான் தெரியவரும். 

நான் கத்தாரில் இருக்கும்போது என் அலுவலக நண்பர் ஒருவர் என்னுடன் மனம் விட்டு பேசுவார். (என் பக்கத்துக்கு ஊர் காரர்)  அவர் தம்பிக்கு திடீர் என்று கண்பார்வை குறைந்து வருவதாகவும் அடிக்கடி மயக்கம் வருவதாகவும் தஞ்சாவூர் சென்று சிகிச்சை எடுத்து கொள்வதாகவும் சொல்லி இருக்கிறார்.

ஒரு தடவை அவருக்கு வநத மொட்டை மின் அஞ்சலை என்னிடம் காட்டினார்

அதில் எழுதி இருந்ததாவது:

உன் மனைவியும்  தம்பியும் சேர்ந்து ஊர் சுற்றுகிறார்கள். அடிக்கடி தஞ்சாவூர் பக்கம் பார்க்கிறேன். xxx ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி வந்து செல்கிறார்கள். அந்த ஆஸ்பத்திரி எதற்கு பெயர் பெற்றது என்று தெரியும் தானே? மானம் கப்பலேறும் முன் காப்பாத்திக்க. உன் நலம் விரும்பி. 

அவர் சிரித்தார் சிரிப்பில் கசப்பு இருந்தது. 

நாளை: குழந்தைகளுக்கு முன்னாடி. 

வில்லன்

unread,
Feb 10, 2010, 5:29:43 AM2/10/10
to panb...@googlegroups.com, தமிழ்
ஒருத்தரோட பெர்சனல் விசயங்களை பேசுவதே தப்பு, அதிலும் இப்படி இட்டுக்கட்டி பேசுறவங்களை கண்டா எனக்கு கோபம் அதிகமா வரும்.

என்ன பண்ண கோபமும் கெட்டபழக்கம்னுட்டிங்க. அதனால அமைதியா படிச்சிட்டு கிளம்பிடறேன்.

நாளை: குழந்தைகளுக்கு முன்னாடி. 

ம்ம் மிக முக்கியமானதுதான், காத்திருக்கிறோம்

2010/2/10 Haja Muhiyadeen <muhiy...@gmail.com>

நான் கத்தாரில் இருக்கும்போது என் அலுவலக நண்பர் ஒருவர் என்னுடன் மனம் விட்டு பேசுவார். (என் பக்கத்துக்கு ஊர் காரர்)  அவர் தம்பிக்கு திடீர் என்று கண்பார்வை குறைந்து வருவதாகவும் அடிக்கடி மயக்கம் வருவதாகவும் தஞ்சாவூர் சென்று சிகிச்சை எடுத்து கொள்வதாகவும் சொல்லி இருக்கிறார்.

ஒரு தடவை அவருக்கு வநத மொட்டை மின் அஞ்சலை என்னிடம் காட்டினார்

அதில் எழுதி இருந்ததாவது:

உன் மனைவியும்  தம்பியும் சேர்ந்து ஊர் சுற்றுகிறார்கள். அடிக்கடி தஞ்சாவூர் பக்கம் பார்க்கிறேன். xxx ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி வந்து செல்கிறார்கள். அந்த ஆஸ்பத்திரி எதற்கு பெயர் பெற்றது என்று தெரியும் தானே? மானம் கப்பலேறும் முன் காப்பாத்திக்க. உன் நலம் விரும்பி. 

அவர் சிரித்தார் சிரிப்பில் கசப்பு இருந்தது. 

நாளை: குழந்தைகளுக்கு முன்னாடி. 

-- 

--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

Haja Muhiyadeen

unread,
Feb 11, 2010, 3:09:55 AM2/11/10
to panb...@googlegroups.com, தமிழ்
நானும் என் தங்கையும் தங்கையின் நண்பி வீட்டுக்கு அருகில் உள்ள ஊருக்கு சென்றோம்

பெண்கள் உள் ஹாலில் பேசிக்கொண்டிருக்க நான் வெளி ஹாலில் டிவி பார்த்து பொழுது போக்கி கொண்டிருந்தேன். மூணு அல்லது நாலு வயது குழந்தை ஒன்று அடிக்கடி வெளியே வந்து என்னை பார்த்து சிரித்துவிட்டு வெட்கப்பட்டு உள்ளே திரும்பி போய் கொண்டிருந்தது. நானும் அதை தாஜா செய்து அருகில் வர வைத்து என்னுடன் உட்கார வைத்து மலரும் மொட்டும் மாதிரி கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன்.

கையில் ரெண்டு டூத் பிருஷ் வைத்திருந்தது. சும்மா இல்லாமல் 

- இது என்ன அழுக்கு பிரஷ் வைத்துகொண்டு விளையாட்டு 

என்றேன்.

இது டாடி இது மம்மி என்றது குழந்தை. அதோடு நிற்காமல் பிரஷ் பகுதியை ஒன்றாக வைத்து

- டாடியும் மம்மியும் இப்படி தான் முத்தம் போட்டுக்குவாங்க 

என்று எனக்கு விளக்கம் கொடுத்தது. 

குழந்தையின் பேச்சு எனக்கு பிடித்திருந்தது. இருந்தாலும் அவள் அம்மாவிடமிருந்து மட்டுறுத்தல் வரும் என்று எதிர்பார்த்தேன். நினைத்தது நடந்தது. உள்ளிருந்து ஒரு உறுமல் வந்தது உள்ளே போன குழந்தை திரும்ப வரவில்லை. 

அடுத்தது -

நான் சென்னையில் இருக்கும்போது ஊரிலிருந்து வந்த ஊர் காரங்க குடும்பத்திற்கு டி நகர் சென்று ஷாப்பிங் செய்ய உதவிக்கு பணிக்கப்பட்டேன்.  அந்த குடும்பத்தில் ஏழு வயது பெண் குழந்தையும் இருந்தது. என்னுடன் நன்றாக ஒட்டிக்கொண்டு அரட்டை அடித்து கொண்டே இருந்தது.

ஒரு துணிக்கடைக்குள் நுழைந்து அந்த குழந்தையின் அம்மா நய்ட்டி தேடி கொண்டிருந்தாள். திடீரென்று அந்த பாப்பா ' ஐ இது அம்மாடே' (அம்மாவுடையது) என்று சப்தமாக சொல்லிக்கொண்டே ஒரு உள்ளாடையை தொட்டு காட்டினாள்.

அது சாதரணமாக அணிவது அல்லாமல் ஸ்பெசலாக இருந்த உள்ளாடை. எனக்கு சங்கோஜமாக போய்விட்டது. கடைக்காரன்  வேறு    இருந்தது. 

அவள் சொல்லி முடித்த மாத்திரத்தில் அம்மாக்காரி அவள் நடு மண்டையில் நங் என்று ஒரு கொட்டு வைத்தாள். 

அம்மா எதற்கு அடித்தாள் என்று கூட குழந்தைக்கு தெரியாது. கண் கலங்கிவிட்டாள். 

இந்த ரெண்டு சம்பவத்திலும் குழந்தைகள் மேல் எந்த தப்பும் கிடையாது. அவர்கள் களங்கமற்றவர்கள்.

தான் பார்த்த விசயத்தை பகிர்ந்து கொள்ளும் துடிப்பு அவர்கள் பேச்சில் இருந்தது. அது சரியா தவறா என்று அவர்களுக்கு தெரியாது. அவர்கள் கண்ணில் பார்ப்பது எல்லாம் அவர்களுக்கு சரி தான்.

இது போன்ற விசயங்களை புரிந்து கொள்ளும் வயது வரை அவர்களிடம் அவர்களுக்கே தெரியாமல் மறைத்து வைப்பது தான் நல்லது

நிஜத்தில் பெரும்பாலும் மறைத்து வைத்துவிட முடியும். ஆனால் நம்மை கிளுகிளுப்படைய வைக்கும் நிழல் படங்கள் - சினிமா - டிவி போன்றவை - குழந்தைகளுக்கு நிச்சயமாக ஓவர்டோஸ் தான். அட்லீஸ்ட் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்க வேண்டி இருக்கிறது.

தஞ்சாவூரை சேர்ந்த ஒரு நண்பர் அவர் வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார். 

அவர் மகன் ஆறு வயது. துருதுருத்த வால் பையன்.

டிவி சினமா எது என்றாலும் அதை போல நடித்து காட்டுவான் செயல்படுவான். ஒரு பெண்ணை கடத்தி அவளை கட்டி வைத்து வாயில் மாஸ்கிங் டப் ஓட்டுவதை ஒரு கிளிப்பிங்கில் பார்த்திருக்கிறான் அதற்கு பிறகு என்ன செய்திருப்பான் என்று கடைசி வரியில் தெரிந்து கொள்ளுங்கள்.

அவர்கள் எதிர்வீட்டு சின்ன பையன் ரெண்டு வயசு தான். இவர்கள் வீட்டிருக்கு வந்து தான் விளையாடுவான் 

ஒரு நாள் அந்த சிறுவன் அவர்கள் வீட்டில் துடித்து துடித்து அழுகின்றான் 

ஏதாவது பூச்சி கீச்சி கடித்து விட்டதா என்று பார்க்கிறார்கள். அது மாதிரி எதுவும் தெரியவில்லை. என்ன நடந்தது என்று சொல்ல தெரியவில்லை. கண் வேறு மேலே சொருகுகிறது 

வயிறு உப்பி கொண்டே போகிறது

சற்றும் தாமதியாமல் மருத்துவமனைக்கு எடுத்து செல்கிறார்கள்.

போன இரண்டாவது நிமிடமே - சிறுநீர் கல் என்று நினைத்து டாக்டர் சிறுவனின் ஜட்டியை கழற்ற -

சிறு நீர் வெளியேற முடியாமல்  ஆணுறுப்பை சுற்றி  மாஸ்கிங் டேப்பால் சுற்றப்பட்டிருக்கிறது. 

நாளை : வன்மம் 








Haja Muhiyadeen

unread,
Feb 12, 2010, 1:38:46 AM2/12/10
to பண்புடன், தமிழ்
சாதாரணமாக  கொலைகள் நடப்பதை பார்த்தால் கத்தியால் குத்தி இருப்பார்கள். துப்பாக்கியால் சுட்டு இருப்பார்கள். இல்லை விஷம் வைத்து கொன்றிருப்பார்கள். 

ஆனால் வன்மத்தில் நடக்கும் கொலைகளை பார்த்தால் குரூரமாக இருக்கும். பீஸ் பீஸாக ஆக்கி இருப்பார்கள். தலையை துண்டித்து இருப்பார்கள்.தலையில் அம்மி குழவியை போட்டிருப்பார்கள். அல்லது சித்திரவதை செய்து கொன்றிருப்பார்கள் 

அளவுக்கு மீறிய காழ்ப்புணர்ச்சி - சிதிலமடைந்து - முற்றி - மன நோயாகி வன்மமாக - பகையாக மாறுகிறது. 

இந்திய திருநாட்டில் இதுவரை நிகழ்ந்த எல்லா கலவரங்களும் ஒரு சில வன்ம மனசு உள்ளவர்களால் தூண்டிவிடப்பட்டவை.

கலவர சமயங்களில் வன்மத்தின் வெளிப்பாடு மிக மிக அதிகமாக இருக்கும். உயிரோடு கொளுத்தி விடுவது, கொளுத்திய டயர்களை கழுத்தில் மாலையாக போட்டுவிடுவது, கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்து பொசுக்குவது, கற்பழிப்பது, கடைகளை சூறையாடுவது, பெண்ணின் அடிவயிற்றில் மாட்டின் கொம்பால் சொருகுவது, கேக் ஓவனில் உயிரோடு வைத்து அவிப்பது என்று வன்ம மனதின் வெளிப்பாடு மிக கொடூரமாக இருக்கும்.

கலவரங்கள் திடீரென்று துவங்குபவையாக இருந்தாலும் - மிக குறைந்த நேரத்தில் நிறைய பாதிப்புகளை திட்டமிட்டு செய்வதை பார்த்தால் - அது நெடு நாள் காத்திருந்து காத்திருந்து - சரியான நேரத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டதாக இருக்கும். 

வன்மம் மிக்கவர்களை அடையாளம் காணுவது மிக கடினம். நம்முடன் தான் இருப்பார்கள். ஒரே தட்டில் சாப்பிடுவார்கள். உயிரையே தருவதாக காண்பிப்பார்கள். தக்க சமயத்துக்காக காத்திருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்கள் நடந்தது கொள்வதை பார்க்கும்போது - விளையாட்டுக்கு தான் செய்கிறான் என்று தோன்றும் அளவுக்கு இருக்கும். 

ஒரு சில சம்பவங்களால் மற்றவர்கள் மீது நாம் கொள்ளும் கோபத்தை அன்றே துடைத்தெறிவது நமது உடலுக்கும் மனதுக்கும் மிக நல்லது. 

அக்னி குஞ்சாக அடைக்காப்பது தீராத விளைவுகளை கொண்டு வந்து சேர்க்கும்.

கோபம் உள்ள இடத்தில குணம் இருக்கும். ஆனால் பொறாமை உள்ள இடத்தில வன்மம் இருக்கும். 

எனக்கு தெரிந்து கிழக்கு சீமையிலே - தேவர் மகன் - அய்யா போன்ற சினிமாக்களில் ஜன்ம ஜென்மமாக தொடரும் பகை உணர்ச்சியை தெளிவாக படம்பிடித்திருப்பார்கள்.

இன்று நாம் புதைக்கும் கன்னி வெடிகளுக்கு மேலே நம் குழந்தைகள் விளையாடக்கூடும். தீட்டி வைத்த ஈட்டிகள் நமக்கு எதிராகவே திரும்ப கூடும்.

அனைவரும் சகோதரர்கள் - உன் வாழ்க்கை உனக்கு என் வாழ்க்கை எனக்கு என்ற தெளிவான மனம் இல்லாவிட்டால் -

நாம் புலிவாலை பிடித்திருக்கிறோம் என்று அர்த்தம். 

திங்கள் :  நம்பிக்கை துரோகங்கள்.. 



Haja Muhiyadeen

unread,
Feb 15, 2010, 8:31:07 AM2/15/10
to தமிழ், பண்புடன்
நம் வாழ்க்கையே நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. நம் சுற்றமும் நட்பும் கூட நம்பிக்கையை அடிப்படையாக வைத்தே பின்னப்படுவது.

பாம்பை கண்டால் அடிக்கின்றோம். தேளை கண்டால் அடிக்கின்றோம். பூரானை கண்டால் அடிக்கின்றோம். ஏனென்றால் அதன் மீது நமக்கு நம்பிக்கை இல்லை. அசந்த நேரத்தில் நம்மை அனுப்பி வைத்துவிடும் என்று பயப்படுகிறோம். அது பாட்டுக்கு வேறு சிந்தனையில் ஓரமாக நகர்ந்து போனாலும் குச்சியை விட்டு குடைந்து வெளியே எடுத்து சாகடித்து விட்டு தான் மறுவேலை. 

இப்படி தான் நம்பிக்கை இல்லாவிட்டால் ஒருத்தருக்கு ஒருத்தர் அடித்துக்கொண்டு செத்து விடுவோம். ஒருத்தருடைய நடவடிக்கையை நடை உடை பாவனையை பார்த்து சட்டென்று அவர் மீது நம்பிக்கை கொண்டு பின்பு அவரால் ஏமாற்றப்படுவது  இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. 

ஆனால் அதிக காலம் எடுத்து கொண்டு பழகி - இவரை போல வருமா என்று ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு அதற்கு பிறகு இழைக்கும் துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது. 

என் உறவினர் ஒருவர் துபாயிலிருக்கும்போதே சென்னையில் ஒரு பிசினஸ் தொடங்கி கொண்டு ஊரில் செட்டில் ஆகலாம் என்று முடிவு செய்து கிட்டத்தட்ட பதினைந்து வருடம் பாடுபட்டு சேர்த்த பணத்தை அவர் ஆருயிர் நண்பரிடம் கொடுத்து எல்லாரும் சேர்ந்து வீடியோ ஆடியோ ஜெராக்ஸ் லமினாசன் கடை ஒன்றை துவக்கினார்கள். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வீடியோ கடைகள் பிரபலம்.

நடிகர் ஜெயஷங்கர் தான் கடையை துவக்கி வைத்தார். அண்ணா நகரில் அந்த கடை அப்போது மிக மிக பிரபலம் ஆனது. நடிகர் ப்ரித்வி ரஹ்மான் நடிகை ஹீரா உட்பட மிக பிரபலமானவர்களும் IAS ஆபீசர்ஸ் - central revenue department அதிகாரிகள் எல்லாரும். அந்த கடையில் உறுப்பினர் ஆனார்கள். பணம் போட்டவர் துபாயில் தான் இருந்தார்.

 நண்பர் சென்னையில் தனது மகன்களுடன் ஆட்டத்தை ஆரம்பித்தார். வருகின்ற லாபத்தை எல்லாம் செலவாக கணக்கு காட்டி கே கே நகரிலும் புரசை வாக்கதிலும் மகன்களுக்கு தனி தனியாக கடை ஆரம்பித்தார். செலவு மட்டும் அல்லாமல் கடையே அடமானமாக வைத்து சேட்டுகளிடம் கடன் வாங்கினார்.  

உறவினர் வரலாமா வேண்டாமா என்று யோசித்து யோசித்து வந்தே விட்டார். எல்லா கடன்களும் - செலவுகளும் அவர் பெயரில் விழ மனிதர் உடைந்து போய்விட்டார். அத்துடன் அவர் மகளுக்கு திருமணம் வேறு எற்பாடு செய்யப்பட்டிருக்க மிக பெரிய கடன் காரராகிவிட்டார். 

பத்து வருடத்துக்கு பிறகு வாயில் ஏற்பட்ட கான்சர் புரயோடியும். சங்கிலி புகைப்பிடிப்பாளராக இருந்த காரணத்தினாலும் அந்த நண்பர் சிகிச்சை செய்ய பணம் இன்றி தான் இறந்து போனாராம். 

அவர்களது மகன்களும் அந்நிய செலாவணி மோசடி கேசுகளில் அலைக்கழிந்து கொண்டிருப்பதாகவும் வாழ்க்கை நடத்தவே போராடிக்கொண்டிருப்பதாக்வும் கேள்வி பட்டேன். 

இது என்னவோ சினிமா கதை மாதிரி இருக்கலாம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இதை கியாஸ் தியரியாக எடுத்து கொள்ளலாம்.

உழைக்கின்ற காசே நிற்பதில்லை. துரோகத்தில் விளைந்த காசு எவ்விதம் நிற்கும்?

ஊரை அடித்து உலையில் போடலாமா? சிவன் சொத்து குல நாசம் அல்லவா?

நம்மை நம்பி ஒருவர் சொல்லும் ரகசியத்தை லீக் அவுட் செய்வதும் கூட துரோகமே. 

தன்னை நம்பி வெளியில் அனுப்பி வைக்கும் பெற்றோருக்கு தெரியாமல் boy friend / girl friend என்று ஊர் சுற்றுவதும் துரோகமே. 

பாதிக்கப்பட்டவர்களின் சாபங்கள் கடவுளிடத்தில் உடனடியாக ஏற்கப்படுகின்றன. 

ஓடிப்போன நிதி நிறுவனர்களும் - அமானித பணத்தை சூறயாடியவர்களும்,  அறநிலையதுறையில்  ஒதுக்கியவர்களும் - அனாதைகளின் சொத்தை அபகரித்தவர்களும் - தேசத்தை கட்டி கொடுப்பவர்களும் - வரலாற்றை திரித்தவர்களும் - கணவனுக்கு துரோகம் செய்த மனைவியும் - மனைவிக்கு துரோகம் செய்த கணவனும் - பெற்றோருக்கு செய்த பிள்ளைகளும் இன்னும் இன்னும் இன்னும் நம்பிக்கைக்கு வெட்டு வைத்த எல்லா சுற்றமும் நட்பும் 

குற்றம் புரிந்தவர்களே.

குற்றம் புரிந்தவர் வாழ்விலே நிம்மதி ஏது? 

நாளை: பொய் சொல்லும் நல்ல பழக்கம். 

Asif Meeran AJ

unread,
Feb 15, 2010, 8:33:00 AM2/15/10
to panb...@googlegroups.com
யார் பின்னுட்டமிட்டாலும் இடாவிட்டாலும் தொடர்ந்து எழுதும் உங்கள் நல்ல பழக்கத்தை நான் மனமுவந்து பாராட்டுகிறேன். இம்மாதிரி தொடர்களுக்குப்பின்னூட்டமிடும் கெட்ட பழக்கம் கொண்டவர்களைக் கண்டுகொள்ளாமல் தொடரவும்

சென்ஷி

unread,
Feb 15, 2010, 8:36:07 AM2/15/10
to panb...@googlegroups.com
//யார் பின்னுட்டமிட்டாலும் இடாவிட்டாலும் தொடர்ந்து எழுதும் உங்கள் நல்ல பழக்கத்தை நான் மனமுவந்து பாராட்டுகிறேன். இம்மாதிரி தொடர்களுக்குப்பின்னூட்டமிடும் கெட்ட பழக்கம் கொண்டவர்களைக் கண்டுகொள்ளாமல் தொடரவும்//

பின்னூட்டம் வராத சிறந்த மடல்களுக்கு டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுவதை வாய்ப்பாய்க் கொண்டிருக்கும் தன்னிகரில்லாத்தனித்தமிழ் நாயகர் ஆசிப் அண்ணாச்சியை வாழ்த்த வயதில்லை. கால்ல வுழுந்து கும்ப்ட்டுக்குறேனுங்கோ...

2010/2/15 Asif Meeran AJ <asifm...@gmail.com>
யார் பின்னுட்டமிட்டாலும் இடாவிட்டாலும் தொடர்ந்து எழுதும் உங்கள் நல்ல பழக்கத்தை நான் மனமுவந்து பாராட்டுகிறேன். இம்மாதிரி தொடர்களுக்குப்பின்னூட்டமிடும் கெட்ட பழக்கம் கொண்டவர்களைக் கண்டுகொள்ளாமல் தொடரவும்



நம் வாழ்க்கையே நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. நம் சுற்றமும் நட்பும் கூட நம்பிக்கையை அடிப்படையாக வைத்தே பின்னப்படுவது.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

Haja Muhiyadeen

unread,
Feb 15, 2010, 8:45:03 AM2/15/10
to panb...@googlegroups.com, தமிழ்
குழுமங்களிலிருந்து பின்னூட்டங்களும் வருகிறது. தனி மடல்களும் நிறைய வருகிறது. அனைவருக்கும் மிக நன்றி

நண்பர் இப்னு ஹம்துன் விருப்பப்படி www.mypno.com இணைய தளத்தில் ஒவ்வொரு வாரமும் விருந்தினர் பக்கத்தில் இந்த தொடர் வெளியிடப்படுகிறது. 

எனது எழுத்து திறமையை வளர்த்துக்கொள்ள  முடிகிறது

அனைவருக்கும் நன்றி. 

2010/2/15 சென்ஷி <senshe...@gmail.com>



--

Raseem

unread,
Feb 15, 2010, 8:45:13 AM2/15/10
to panb...@googlegroups.com
//
தன்னை நம்பி வெளியில் அனுப்பி வைக்கும் பெற்றோருக்கு தெரியாமல் boy friend / girl friend என்று ஊர் சுற்றுவதும் துரோகமே. ///
 
enna madiriyae yosikireenga haja\
good :-)

Haja Muhiyadeen

unread,
Feb 16, 2010, 8:46:23 AM2/16/10
to tamil2...@googlegroups.com, பண்புடன்
"உண்மையா சொன்ன யாரு சார் கேக்கிறாங்க. விலைய கூட்டி வச்சி சொன்னா. கொறச்சி கேக்கிறாங்க. அவங்க விருப்பப்படி கொறச்சி தரும்போது சந்தோசமா வாங்கிட்டு போறாங்க. இன்னிக்கு பொய்யில்லாம வியாபாரம் பண்ண முடியாதுங்க"

அவர் சொல்றதில ரொம்ப நியாயம் இருக்கு.

பொய் சொல்றது கெட்ட பழக்கம் என்று இருந்திருக்கு ஒரு காலத்தில. இன்னிக்கு பொய்யில்லாம வாழ முடியாது தேவைப்பட்டா (?) பொய் சொல்லலாம் என்று ஆயி போச்சு. 

இப்பல்லாம் உணமைய சொன்னா கிண்டல் பண்ணி விட்டுடறாங்க. 

"தோடா. அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு. இவரு பொய்யி பேச மாட்டாராமா" என்று நம்மை தனிமை படுத்தி விடுகிறார்கள். 

பொய் சொல்லிட்டா - அடடே. எப்படி சமாளிசிருக்கான் பார். நீ மிடுக்கண்டா என்று பாராட்டுகிறார்கள். 

கடவுளே கடவுளே! 

பள்ளி காலத்தில் நான் உண்மை விளம்பியாக இருந்து கூட்டாளிகளிடம் மாட்டிகொண்டு முழித்திருக்கிறேன்.  அவர் தம் அம்மாமாரிடம் நான் ஊர் சுற்றிய கதைகள் சொல்லிவிட - மவனே, நீ மட்டும் நல்ல பேரு எடுத்துக்கிறே. உன்னை இப்படியே விட்ட சரி வரமாட்டே. இனிமே எங்க கூட வந்து பாரு அப்புறம் இருக்கு என்று நான் தனிமை படுத்தப்படிருக்கிறேன் 

அப்புறம் அநேகமா கல்லூரி காலத்தில் தான் பொய் ஊர்வலம் புறப்பட்டிருக்க வேண்டும். வெளியில் மாங்கு மாங்கு என்று சுற்றி  வெளியில் சாப்பிட்டுவிட்டு - எனக்கு பசி இல்லை என்று சொல்லிவிட்டு படுத்துவிடுவது உண்டு. அவ்வப்போது பொய்யான ஸ்பெசல் க்லாசுகளும் இருந்ததுண்டு. 

கொஞ்ச காலம் கழித்து நாம் பொய் பொய் சொல்ல ஆரம்பிச்சாச்சே என்று நொந்து கொண்டபோது - இதுவரை சொன்னது போதும் இனிமே கவனமாக இருக்கலாம் என்று நினைத்த போது தான் சுஜாதாவின் ஒரு சிறுகதை படித்தேன்.

அது ஒரு பயந்த சுபாவமுடைய அய்யங்கார் ஆத்து மாட்டு பெண் பற்றிய கதை. (கதை பெயர் ஞாபகமில்லை)

மார்கெட்டுக்கு போகும் அந்த பெண் ஒரு ரவுடி கொலை செய்வதை பார்த்து விதிர் விதிர்த்து வீட்டுக்கு ஓடிவந்து எல்லாரிடமும் சொல்கிறாள். இவள் கொலையை பார்த்தது அந்த ரவுடிக்கும் தெரியும்.

வீட்டில் எல்லாரும் அந்த பெண்ணை ஆசுவாசப்படுத்தி வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம். ரவுடியால் நமக்கு தான் பிரச்னை என்று அறிவுரை கூறுகிறார்கள். அந்த பெண்ணுக்கு உண்மையை சொன்னால் என்ன என்ன பிரச்னை வரும் தெரிகிறது. 

அந்த நேரத்தில் வீட்டுக்கு வரும் போலிசும் உண்மையை சொல்ல வேண்டாம் என்று எச்சரிக்கிறது

அவளும் ஒத்து கொள்கிறாள்

என்கொயரி வரும்போது சொல்வாளா மாட்டாளா என்று டென்சனில் கதை ஓடும்.

கடைசி கடைசி வரியில் மட்டும்

"ஆமா. நான் பார்த்தேன் இவன் தான்" என்பாள்.

என் மனதை ரொம்பவும் தைத்த கதை இது. பயந்த பெண்ணாக இருந்தாலும் - பிரச்னை வரும் என்று தெரிந்தாலும் ஏகப்பட்ட மனப்போராட்டத்திற்கு பின்னர் உண்மையை சொல்ல

தில்லு வேணும்

கனகராஜ் என்று ஆளை எனக்கு தெரியும். என்னிடம் அறிமுகப்படுத்தி கொண்ட போதே நான் பத்தாம் வகுப்பு வரை ரஷ்யாவில் தான் படித்தேன் என்று ஆரம்பித்திருந்தான்.

போக போக தான் போஜனம் இல்லாமல் வாழ்ந்தாலும் வாழ்வான் இவனால்  பொய் இல்லாமல் வாழவே முடியாது என்று உணர்ந்தேன். வாயை திறந்தால் அப்படி சொல்வான். எல்லாருக்குமே தெரியும் இவன் பொய்யால கெட்டவன் என்று.

ஒரு நாள் வந்து போட்டான் ஒரு போடு.

சரத்குமாருக்கும் ராதிகாவுக்கும் கல்யாணம் நடந்துவிட்டது என்று.

அப்பவே எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தோம். அவனால் தங்க முடியவில்லை. இது உண்மை தான் என்று எல்லாரிடமும் நிரூபிக்க அவனுக்கு வேறு வழியே தெரியவில்லை

எல்லார் தலையிலும் கை வைத்து சத்தியம் செய்தான்.

வேறே வேலை இருந்தால் பார் என்று சொல்லி துரத்தி விட்டோம்.  நொந்து போனான்.

அடுத்த நாள் தான் புலி வந்தே விட்டதை அறிந்தோம்..

பொய் சொல்ல கற்பனை திறனும் நாபக சக்தியும் அவசியம் தேவை.

பொய்யும் புரட்டும் நாம் நிகழ் வாழ்வின் பிரச்னைகளை திசை திருப்ப உதவும்

கல்லா நிரம்பலாம். வயிறு நிரம்பலாம். ஆனால் வாழ்க்கை நிரம்புமா என்று தெரியவில்லை.

இப்ப கூட போன் வந்தது "என்னங்க நேத்து போனை காணோமே.. என்னாச்சு?"

"கொஞ்சம் பிஸியா இருந்தேண்டா" என்று பொய் தான் சொன்னேன். 

நாளை:  வெறி 










senthil kumar.n

unread,
Feb 16, 2010, 7:19:09 AM2/16/10
to panb...@googlegroups.com
நன்றி தங்களது தொடருக்கு, 
                                                                தொடர்ந்து எழுதவும்,

அன்புடன்,

செந்தில், மதுரை, 

2010/2/15 Haja Muhiyadeen <muhiy...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
நட்புடன்,
செந்தில் குமார்.நா

எல்லாருக்கும் பொதுவாய் இறைவன் கொடுத்த வரம் நேரம் தான்.

எல்லாருக்கும் 24 மணி நேரம் தான்.

ஜோசப் குரியன்

unread,
Feb 16, 2010, 11:21:57 PM2/16/10
to panb...@googlegroups.com
அருமையா இருக்கு, ஆனா இது பொய் இல்லை, உண்மை.

On 16/02/2010, Haja Muhiyadeen <muhiy...@gmail.com> wrote:
"உண்மையா சொன்ன யாரு சார் கேக்கிறாங்க. விலைய கூட்டி வச்சி சொன்னா. கொறச்சி கேக்கிறாங்க. அவங்க விருப்பப்படி கொறச்சி தரும்போது சந்தோசமா வாங்கிட்டு போறாங்க. இன்னிக்கு பொய்யில்லாம வியாபாரம் பண்ண முடியாதுங்க"


--
அன்புடன்

ஜோசப் பி கே
------------------------------------------------------
எதை நான் தருவேன் இறைவா
உன் இதயத்தின் அன்பிற்கீடாக
------------------------------------------------------
 

senthil kumar.n

unread,
Feb 16, 2010, 11:27:23 PM2/16/10
to panb...@googlegroups.com
பொய் சொல்வது சரியா? தவற? 

2010/2/16 Haja Muhiyadeen <muhiy...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

Haja Muhiyadeen

unread,
Feb 17, 2010, 8:43:00 AM2/17/10
to panb...@googlegroups.com, தமிழ்

"வெட்டுறா அவனை" என்று சொல்லி கொண்டு ஓடி பாருங்கள். உங்கள் பின்னால் அரிவாள், கட்டைகள் ஏந்தி கொண்டு நூறு பேர் ஓடி வருவார்கள். 

யாரை வெட்டணும் எதுக்கு வெட்டணும் - யாரும் கேள்வி கேட்பதில்லை. நாயும் யானையும் டென்சன் ஆவது போல வெறி கொண்டு திரிகின்ற மக்கள் யாராவது போட்டு தள்ள வாய்ப்பு கிடைக்காதா? என்று திரிந்து கொண்டிருக்கிறார்கள். எவனாவது அடிக்கணும். ஆனா கேசு ஆவ கூடாது.

மூர்க்கத்தோட பிறந்த மனுசங்க மிருகங்களோட சேந்து மிருகமா தான் வாழ்ந்து வந்திருக்காங்க. நான் வேட்டையாடிய உணவு மீது எவனாவது கைவச்சான அவனுக்கு அன்னிக்கு கடைசி நாள். எனக்கு புடிச்ச ஜோடிய இன்னொருத்தன் தள்ளிட்டு போனா அவனுக்கு அன்னிக்கு சங்கு தான்.

வலியவன் தான் வாழ்வான் என்று இருந்த நிலமைய தனக்குள்ளே கட்டுப்பாடுகள் கொண்டு வந்து பிரிசிக்கிட்டான். இது என்னோட வீடு உள்ளே வரணும்ன கேட்டுட்டு தான் வரணும். இங்கே இருக்கிறது நான் கொண்டு வந்த சாப்பாடு..

இது என்னோடு பிகர். கல்யாணம் கட்டியாச்சி. இனி இந்த பக்கம் தலை வச்சி படுத்தீன்னா  மூஞ்சி பேந்திடும். 

அதுக்கு அப்புறம் எல்லாரும் சந்தோசமா வாழ்ந்திருக்காங்க. கொஞ்ச நாள் தான். 

அப்புறம் வேறே ஒரு இடத்தில உள்ள க்ரூப் இங்கே வந்து எட்டி பார்க்கவும் க்ரூப் கருப்பா அடிச்சிக்கிட்டாங்க.

எல்லா உயிரினத்தையும் படைச்ச கடவுளுக்கு தெரியும். மிருகங்கள் எல்லாம் அது அது நியதிப்படி வாழ்ந்திட்டு இருக்கு. மனுசப்பயலுகளுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா ஒரு சிம்மு வச்சி விட்டது தப்பா போச்சி. 

எல்லாரும் ஒத்துமையா இருங்கடா என்று தான் வேதங்களையும் தூதர்களையும் அனுப்பி மனுசங்களை நல்வழிப்படுத்தினான் 

நல்லவங்களா இருக்கிறவங்களும் இருக்க தான் செய்றாங்க. ஆனா வெறி பிடிச்சவங்களும் இன்னும் இருக்காங்க.

மறுபடியும் பழைய நிலமைக்கு திரும்பிட்டு இருக்கு.

இது என்னோட ஏரியா உள்ள வந்தா கால ஒடிச்சி போடுவேன் என்று ஒரு கூட்டம் கூப்பாடு போட்டுட்டு இருக்கு.

இன்னொரு இடத்தில என்கிட்டே கிளம்பிற தண்ணி எனக்கு மட்டும் தான் போய்யா வேலைய பாத்துகிட்டுன்னு வம்புக்கு நிக்கிறாங்க.

உன்ன புதைக்க இந்த சுடுகாட்டுல இடம் இல்லைன்னு ஒரு க்ரூப் இன்னும் மல்லடிக்கிது.

மதத்து பேரை சொல்லிக்கிட்டு அதை பத்தி புரியாம ஒரு க்ரூப் குண்டு வைக்கிது. இன்னொரு க்ரூப் கலவரத்தை ஏற்படுத்தி ரத்தம் சிந்த வக்கிது. 

சாதி - மதம் - மொழின்னு தனக்கு தானே வட்டம் போட்டுக்கிட்டு வெறியோட திரிகிற கூட்டங்களுக்கு நாம செய்றது எவ்ளோ மோசமான வேலைன்னு. இருந்தாலும் நமக்கு ஒரு கண்ணு போன பரவால்லை. அடுத்தவனுக்கு ரெண்டு கண்ணு போவணும்னு ஒரு வெறி. 

யானைக்கு மதம் பிடிக்கும்போதும் நாய்க்கு வெறி பிடிக்கும்போதும் அது அதோட நிலையில இருக்கிறது இல்லை.. 

மனுசங்களும் அப்படி தான். 

நாம்மோட கொள்கையில நம்மோட மொழியில நம்மோட சாதியில நாம பற்று வைக்கலாம். அதுக்காக அடுத்தவங்களை பற்ற வைகக கூடாது.

நம்ம தாயை நாம் அளவு கடந்து நேசிக்கிறோம்.. நம்மை பெற்றெடுத்து உருவாக்கிய தாயை நேசிப்பது இயற்கை தான்.

அதே நேரம் அடுத்தவன் தாயை - அவள் தாயில்லை என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. 

நமக்கு நம் தாய் உசத்தி. அவனுக்கு அவன் தாய் உசத்தி.

அன்று மனிதனுக்குள் உறங்க போன மிருகம் இனி விழிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் அவசரம். 

நாளை : கேலியும் கிண்டலும். 








Haja Muhiyadeen

unread,
Feb 18, 2010, 8:55:37 AM2/18/10
to தமிழ், பண்புடன்
எங்க ஊர் பக்கம் - மீன்ஸ் திருவாரூர் அடியக்க மங்கலம் கூத்தநல்லூர் இந்த ஏரியா பக்கம் வந்து - காதர் வீட்டுக்கு போகணும்னு கேட்டா எந்த காதர் எப்படி இருப்பார் எங்கே இருக்கார்னு ஆயிரம் கேள்வி கேப்பாங்க. ஒட்டை தொப்பி காதர் னு சொல்லி கேளுங்க - 

அந்தாள கோழி மேயுதுள்ளே. அதுக்கு பீச்சாங்கை பக்கம் உள்ள தெருவுலே ஒரு குப்பை தொட்டி இருக்கும். அதுக்கு பக்கத்தில ஒரு கிராதி போட்ட ஊடு. வாசல்ல ஒரு புல்லேட்டு போத்தி கிடக்கும் 

அப்படீன்னு வழி காட்டி விடுவாங்க. தாத்தாவோ தாத்தாவுக்கு தாத்தாவோ யாரோ போட்ட ஓட்டை தொப்பி கேலி பொருளாகி வீட்டு பேரே ஆயிடுச்சு அநேகமா எங்க ஏரியாவில எல்லார் வீட்டுக்கும் ஒரு பட்ட பேரு உண்டு. 

கிராமங்கள்ள கேலி செய்யுறது சகஜமா இருந்தாலும் கேலி செய்யப்படுபவரின் மன நிலையை பொறுத்து அது ரசிக்கப்படும். ஒருவர் எல்லா நேரத்திலும் ஒரே மூடில் இருப்பார் என்று சொல்ல முடியாது. கொலை வெறி மூடில் இருந்தால் கேலி பண்ணுனவர் தொலைந்தார். 

என்னோட ஆசிரியர் அடிக்கடி சொல்வார்

ஒரு க்ரூப்புல ஒரு ஜோக்கு சொன்னா அதில எல்லாரும் சிரிக்கணும். ஒருத்தன் மட்டும் உள்ளுக்குள்ள அழுவ மத்தவங்க சிரிக்க கூடாதுன்னு

சின்ன குழந்தைங்களை - அதோட கற்பனா சக்தியை கொண்டு - ஏதாவது க்ரியேடிவா செஞ்சுச்சுன்னா அதை பாராட்டி - அந்த திறமைய முன்னுக்கு கொண்டு வர முயற்சிக்கணுமே தவிர - அயே என்று கிண்டல் பண்ண கூடாது

கிண்டல் பண்ணி வளருற குழந்தைங்க - தாழ்வு மனப்பான்மை கொண்டு - யார்கிட்டயும் ஒட்டாது. நண்பர்களை சேராது. தனியா ஒதுங்க ஆரம்பிச்சிரும். ரிசர்வ்டு டைப்பா வளருற இந்த மாதிரி குழந்தைங்க கிட்ட என்ன தான் நிறய திறமை இருந்தாலும் அதை வெளி கொணருற சக்தி போய்டும்

இதை நாம வெளி காட்டுனா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்களோன்னு மறைஞ்சி வாழும். 

நாளைக்கு வெளி உலகத்துக்கு வரும்போது மற்ற ஆளுங்க கூட பழகாம தனிமைய விரும்பி வாழும். படிச்சி FIRST கிளாஸ்ல பாஸ் ஆனாலும் அதை வெளிக்கொணர அறியாமல் இண்டர்வீவ் எல்லாத்திலும் கோட்டை விடும்.

நண்பர்களுக்கு இடையே நிகழும் கிண்டலும் கேலியும் ஒரு அளவோடு இருக்கிறது நல்லது. அடுத்தவரோட ஈகோவை தகர்க்கிற மாதிரி கேலி பண்றது மோசமான விளைவுகளை கொண்டு வந்துவிடும்.

ஒருத்தரோட உடல் உறுப்புகளின் அமைப்பை வைத்து - டேய் மூக்கா - கோயில் யானை - இருட்டு கலர் - இட்லி குண்டான் - பம்ப்ளிமாஸ் - சொட்டை மண்டையா என்றெல்லாம் விமர்சிப்பது அவரை உள்ளுக்குள் கருவ செய்யும். நமக்கு எதிரான ஒரு செயல் நடக்கும்போது நிச்சயமாக அவர் நம் எதிர் அணியில் இருப்பார். 

இன்னும் கொஞ்ச பேரு ஊனத்தை கிண்டல் பண்றாங்க. 

குருட்டு பயலே - நொண்டி - கூனா என்று அவர்களை விமர்சிப்பது கடவுளை பலிப்பது போலத்தான். 

இளைய தளபதி  விஜய் பீல்டுக்கு வந்தப்ப - ஹீரோ ஆகி முதல் படம் குமுதத்தில் விமர்சனம் வந்திருந்தது. 

ஒண்ணுமே எழுதலை அவங்க.

"இந்த மூஞ்செல்லாம் பார்க்கணும்னு தமிழ்நாட்டு மக்களுக்கு தலையெழுத்து" 

இது மட்டும் தான் விமர்சனம். (அடுத்த இதழ்ல மன்னிப்பு கேட்டுட்டாங்க) 

இன்னிக்கும் அவர் கோமாளி நடிப்பை விடலைன்னாலும் - அவரோட வாழ்க்கை தரத்தை - திறமைகளை ஒப்பிட்டு பார்த்தா - எப்படி வளர்ந்திருக்கார்னு தெரியும்.

யார்கிட்ட என்ன திறமை இருக்குன்னு யாருக்குங்க தெரியும்.

உருவத்தை வச்சி அண்டர் எஸ்டிமேட் பண்றது ரொம்ப தப்பு. 

சர்தார்ஜிகளை பற்றி கிண்டல் பண்ற முட்டாள் தனமான ஜோக்ஸ் ரொம்ப பிரபலம்.

அதே மாதிரி ஒரு சர்தார்ஜி பற்றி ஜோக் அடிசிட்டிருந்தப்ப இன்னொருத்தர் சொன்னாராம்.

தமிழர்கள் இப்படியே கிண்டல் பண்ணி ஜோக் அடிச்சிட்டு இருக்காங்க. ஆனா சர்தார்ஜி எல்லாம் முன்னேறி இப்ப  செங்கோட்டைல கொடி எத்தற அளவுக்கு வந்திட்டாங்க. 

நாளை: click forward!!! 


rathnavelu velmurugan

unread,
Feb 18, 2010, 8:47:07 PM2/18/10
to panb...@googlegroups.com
nanraha irrukkirathu thodarnthu ezhuthungangal

2010/2/15 Haja Muhiyadeen <muhiy...@gmail.com>

--

மஞ்சூர் ராசா

unread,
Feb 19, 2010, 2:08:34 AM2/19/10
to panb...@googlegroups.com
தமிழ்ப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் ஊனமுற்றவர்களை கேவலப்படுத்தும் கிண்டல்கள் மிக அதிகம்.

Haja Muhiyadeen

unread,
Feb 22, 2010, 3:01:53 AM2/22/10
to தமிழ், பண்புடன்
சீசன் இல்லாத நேரங்களில் பாடாவதி பிரஸ்ஸை ஓட்டுவதற் காக முன்பெல்லாம் ஒரு ஐடியா வைத்திருந்தார்கள். ஒரு பிட் நோடீசை அச்சடித்து வெளியிடுவார்கள். இன்ன மாதிரி ஒரு தெய்வத்தின் புகழை சொல்லி - இல்லாவிட்டால் ஒரு செய்தியை எழுதி இதை ஏழு நாட்களுக்குள் 500 நோடீஸ் எடுத்து ஒழுங்காக டிஸ்ட்ரிப்யூட் பண்ணு இல்லாட்டா உன் மண்டை வெடிக்கும். பேதியில போவாய்  இப்படி தான் ஆண்டி பட்டியில் ஒருத்தருக்கு  ஆச்சு. அரசம்பட்டியில ஒருத்தருக்கு ஆச்சு. இதை மதிச்சு ஒழுங்காக விநியோகம் செய்த இன்னார் பெரிய பணக்காரர் ஆனார். கார் வாங்கினார்.பங்களா வாங்கினார். என்று பயமுறுத்தும். என்னடா இது வம்பா போச்சு? எதுக்கு ரிஸ்க் என்று அப்பாவிகள் போனால் போகிறது என்று அந்த பிரஸ் போய் 500 அடிப்பார்கள். 
 
டெக்னாலஜி வளர்ந்து இப்ப ஈமெயில் வந்த பிறகும் கூட பழைய சம்ப்ரதாயம் (?) மாறவில்லை. இன்பாக்ஸை திறந்தால் வாரத்துக்கு ஒரு மிரட்டல் வந்துவிடுகிறது.

மவனே, மரியாதையாய் உன் பிரண்ட்சுக்கு பார்வார்ட் செய் இல்லாட்டா நடக்கிறதே வேறு என்கிறது!! 

மியூசிக் சேர் விளையாட்டு மாதிரி ஒரு விளையாட்டு இருக்கிறது. ரவுண்டு கட்டி உட்காந்து கொள்வார்கள். கையில் ஒரு பந்து அல்லது தலையணை மாதிரி ஏதாவது. பாட்டு ஒலிக்கும். கையில் உள்ள பந்தை கையில் கிடைத்த மாத்திரத்தில் அடுத்தவருக்கு மாற்ற வேண்டும். நம் கையில் பந்து இருக்கும் நேரம் பார்த்து ம்யூசிக்கை நிறுத்தினால் நாம் அவுட்.

இந்த ரேஞ்சுக்கு நண்பர்கள் படுத்துகிறார்கள். அவர்களுக்கு ஏதாவது மெயில் வந்துவிட்டால் லிஸ்டில் உள்ள பத்து பேருக்கு forward செய்துவிடுகிறார்கள்.

அதில் உள்ள செய்தி எத்தனை முக்கியம் - ஸ்பாம என்றெல்லாம் பார்ப்பதில்லை. 

சில நேரம் நமது சிற்றறிவுக்கு எட்டாத விஷயங்கள் எல்லாம் அனுப்பி வைப்பார்கள்.

இப்படித்தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஹார்ட் அட்டாக் வந்தா ஆஸ்பத்திரி வரும் வரை இருமிக்கிட்டே வாங்க அப்ப தான் இதய துடிப்பு நிண்ணு போவாதுன்னு ஒரு மெயில் வந்தது. ஒ! இப்படி ஒரு வழி இருக்கா. நமக்கு ஹார்ட் அட்டாக் வரும்போது ட்ரை பண்ணி பார்க்கலாம் என்று தனி போல்டர் எல்லாம் போட்டு SAVE  பண்ணி வைத்திருந்தேன். ஒரு வாரம் கழித்து இன்னொரு மெயில் வருகிறது. ஹார்ட் அட்டாக்கின் போது இருமினால் சீக்கிரம் போய்சேர்வாய் என. 

இதில் எதை நம்புவது? 

சுஜாதா முன்பு கற்றதும் பெற்றதும் எழுதி கொண்டிருந்தபோது இலக்கியம் பற்றி எல்லாம் விலாவாரியாக எழுதுவார். இதை படித்து புல்லரித்து போன தமிழ் இலக்கிய படைப்பாளிகளும் பண்டிட்டுகளும் அவருக்கு தலையணை தலையணையாக புத்தகங்கள் அனுப்பி வைகக ஆரம்பித்துவிட்டார்கள். கொரியர்காரனிடம் இதை கையெழுத்து போட்டு வாங்கவே திருமதி சுஜாதாவுக்கு நேரம் இல்லாமல் போனது. படிக்கவும் நேரம் இல்லாமல் - தூக்கி போடவும் மனசு இல்லாமல் - அடுக்கி வைக்கவும் இடம் இல்லாமல் அவர் திண்டாடியதை எழுதி
இனிமே எனக்கு தேவைப்பட்டா துட்டு போட்டு வாங்கி படிக்கிறேன். தயவு செய்து அனுப்பாதீர்கள் என்று SLIDE எல்லாம் போட்டார். 

படைப்பாளிகள் (?) கேட்டால் தானே? நான் படைத்ததை (?) நீ படித்து தான் ஆக வேண்டும். அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன் என்று சவால் விடாத குறையாக அனுப்பி கொண்டிருந்தார்கள்.

இன்னும் சில பேருக்கு மத ரீதியான விஷயங்கள் எதாவது புதுமையாக கிடைத்தால் போதும். சிலிர்த்து விடுவார்கள். உடனே click forward தான். 

அதை படித்து பார்த்தாலே மாஜிக் மாதிரி தான் இருக்கும். இந்த மெயிலை வைத்து பார்த்தாயா அற்புதங்களை என்று சொல்ல வருகிறார்களாம்.(கொஞ்ச நாளைக்கு முன்னாடி குழந்தை உடம்பில் இறைவசனம் வருன்றது என்று ஒரு மடல் அடுத்து வானத்திலிருந்து பார்த்தால் புனித தலங்கள் ஜொலிக்கின்றன என்று ஒரு மெயில்) இதெல்லாம் பாசிடிவ் Effect வருவதற்கு பதிலாக மூட நம்பிக்கை வர வர ஜாஸ்தி ஆயிட்டே வருது என்று நெகடிவ் ஆக யோசிக்க வைக்கும். 

நன்கு அறிமுகமானவர்கள் - நண்பர்களே இப்படி மெயில் போட்டு விடுவதால் இதை பில்டரிலும் போட்டு தொலைய முடியாது. சில நேரம் பெர்சனல் மெயிலும் அனுப்பி வைப்பார்கள். 

கொடுமையின் உச்சப்பச்சமாக ஒரு துபாய் நண்பன்  நான் பதிலே போடுவதில்லை என்று குறைபட்டுகொண்டான். நீ மெயில் போட்டால் நான் பதில் போட்டிருப்பேனே என்றேன். 

நேத்து கூட மீனா கல்யாண போட்டோ அனுப்பினேன். நீ நாலு வரி எழுதி இருக்கலாமே என்கிறான். 

ஈமெயில் படிப்பதால் வாழ்க்கையின் 10 வருஷம் வீணாகிறது என்று யாரோ ஆராய்ச்சி முடிவு போட்டிருந்தார்கள். நண்பர்கள் கொஞ்சம் மனது வைத்து இந்த கெட்ட பழக்கத்தை மாற்றிக்கொண்டால் அதில் ஏழு வருஷம் எனக்கு விட்டு தரலாம். 

சமீபத்தில் திருமணமான பிரபல மலையாள நடிகையின் ஷாந்தி முகூர்த்தப்படங்கள் என்று நேற்று ஒரு மெயில் வந்தது. மற்ற வேலையெல்லாம் விட்டுவிட்டு (நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு )அந்த மெயிலை முதலில் ஓபன் செய்து பார்த்தேன். மொத்தம் நான்கு போட்டோஸ். நாலும் செம கருப்பாக இருந்தது. SCROLL செய்து பார்த்த போது கடைசி வரியில் 

ஸாரி! சந்தோஷ் மேனன் லைட்டை ஆப் பண்ணிவிட்டார் என்று செய்தி வேறு.

இது மாதிரி யாரிடமும் சொல்ல முடியாத ஏமாற்றங்களும் நிகழ்வதுண்டு.

நாளை: உலோபித்தனம். 


Haja Muhiyadeen

unread,
Feb 23, 2010, 9:58:59 AM2/23/10
to தமிழ், பண்புடன்
திருமணமான புதிதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு VIP வீட்டில் எங்களை விருந்துக்கு அழைத்திருந்தார்கள். அந்த சமூகத்தினர் சிக்கனத்துக்கு பெயர் பெற்றவர்கள். சென்ற உடன் சிறிய தட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்வீட் - பாதி மேரி பிஸ்கட் பிறகு சிறிய க்ளாசில் ஜூஸ் எல்லாம் வைத்து சாப்பிட சொன்னார்கள் 

என் மனைவி திரு திருவென்று விழித்துக்கொண்டு அசந்த நேரத்தில் - ஏங்க இவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருக்காங்க. பாதி பிஸ்கட் வச்சிருக்காங்க. நம்ம வீடா இருந்தா எல்லா பிஸ்கட்டையும் தட்டு முழுக்க பரப்பி வச்சிருப்பமே என்றாள் கிசுகிசுப்பாக.

அப்புறம் சொல்றேன் என்று சமாளித்தேன்.

உணவு தயாரானதும் பார்த்தால் ராஜ உபசாரம்  அவர்கள் ஊர் முறைப்படி (அவர்கள் பகுதி உணவும் புகழ் பெற்றது!!)  பார்த்து பார்த்து விதம் விதமாக செய்து அசத்தி இருந்தார்கள். அன்புகலந்து உபசரித்து மகிழ்ந்தார்கள்.

பொதுவாகவே அவர்கள் சமூகத்தினர் எல்லா விசயத்திலும் கெட்டி. சிக்கனமோ சிக்கனம். ஆனால் தானம் என்று வந்துவிட்டால் கோயில் குளம் என்று வாரி வழங்குவார்கள். அப்படி ஒரு மனோ நிலை. 

இதற்கு பெயர் சிக்கனம். சிக்கனத்துக்கும் கஞ்சத்தனதுக்கும் சிறிய அளவே வித்தியாசம் உள்ளது

அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றாமல் காசை பதுக்கி வைப்பது தான் கஞ்சத்தனம்,. கஞ்சத்தனத்தால்  சேரும் பணம் எந்த பயனும் இல்லாமல் முடங்கி கிடக்கும். ஒரு நாள் பிச்சுக்கொண்டு போகும்.

எங்கள் ஊரில் ஒரு லட்சாதிபதி இருந்தார். அவர் பெயர் ரஹீம். ரஹீம் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது  அழுக்கு ரஹீம் என்றால் தான் தெரியும். ஒரு பைசா பெயர விடமாட்டார். ஒரு ஸ்கூட்டரில் போவார். அந்த ஸ்கூட்டர் அதில் உள்ள அழுக்கும் - அவர் உடுத்தி இருக்கும் ஆடைகளின் பழமையும் அழுக்கும் அவர் ஒரு அன்றாடங்காய்ச்சி என்று தான் சொல்ல தோன்றும். ஏதாவது வசூல் என்று படி ஏறுபவர்கள் டைம் வேஸ்ட் என்று இவர் வீட்டை தவிர்ப்பார்கள். 

அவருடைய மகளுக்கு திருமணம் ஆன பின் வந்த மாப்பிள்ளை மகா புத்திசாலி. மனைவியையும் கையில் போட்டுக்கொண்டு ஏகப்பட்ட தகிடுதத்தம் எல்லாம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக வீடுகள் வயல்கள் சென்னையில் இருந்த சில பில்டிங்குகள் எல்லாவற்றையும் ஆட்டைய போட்டுவிட்டார்.
என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து யோசித்து அழுக்கு ரகீம் பித்து பிடித்து போனார்.

இன்றைக்கும் எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சிலரை பார்த்தால் ரகீம் நாபகம் வரும். மூன்றே மூன்று வெளுத்த சட்டைகளை வைத்து வாழ்கையை ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு பொறியாளரின் மாத வருமானம் ரெண்டு லட்சம். 

இது போல கிழிந்த பனியன் கிழிந்த சாக்ஸ் என்று காசு சேர்க்கும் ஒரு கூட்டமே இருக்கிறது. 

மறைந்த தென்கச்சி கோ. சுவாமி நாதன் ஒரு கதை சொன்னார்.

ஒரு கருமி  ஒரு கிழிந்த சட்டையுடன் தான் எப்பவும் வலம் வருவான்.

அவனிடம் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று ஒருவர் கேட்டார்

என்னை பற்றி தான் எல்லாருக்கும் தெரியுமே பிறகு எந்த சட்டை போட்டால் என்ன என்றானாம்.

இன்னொரு நாள் பட்டணத்தில் வைத்து இந்த கஞ்சனை அவர் பார்த்துவிட்டு அதே கேள்வியை கேட்டாராம்.

என்னை பற்றி இங்கே யாருக்கும் தெரியாதே பிறகு ஏன் நான் நல்ல சட்டை போடவேண்டும் என்றானாம் அந்த கஞ்சன்

ஆக ஒரு முடிவோடு இருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நாம் சம்பாதிக்கும் பணம் நமக்கும் நம் குடும்பத்துக்கும் பயன்பட்டது போக சிறிதளவேனும் அடுத்தவரின் சந்தோசத்துக்கும் பயன்படவேண்டும்.

இல்லையெனில் செல்வம் செல்வோம் என்று போகும். 

நாளை: சுயநலமிகள். 

Haja Muhiyadeen

unread,
Feb 24, 2010, 9:05:33 AM2/24/10
to தமிழ், பண்புடன்
நானும் என் குடும்பமும் நன்றாக வாழவேண்டும் என்பது வரை சுயநலம் ஒரு நல்ல பழக்கம். நானும் என் குடும்பமும் மட்டும் தான் வாழவேண்டும் என்று போகும்போது அது கெட்ட பழக்கமாகிறது. 

சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில் நடக்கும் குழாய்ச் சண்டை தொடங்கி சத்தாம் ஹுசைன் கழுத்தில் கயிறு மாட்டியது வரை எல்லா யுத்தங்களுக்கும் - நான் மட்டும் - என்ற செல்பிச்னஸ் பின்புலத்தில் இருக்கிறது. 

சாதாரண நடுத்தர மக்களின் சுயநலம் ரேசன் கடை - அசல் பட கவுண்டரில் முண்டியடிப்பதிலும் -  பெத்த குழந்தையை ஜன்னல் வழியாக உள்ளே தள்ளி பஸ்ஸில் இடம் பிடிப்பதிலும் - ட்ரெயினில் பர்த்துக்கு  அலைமோதுவதிலும் முடிந்துவிடும்.

இந்த உலகம் தன்னை தானே சுற்றிக்கொண்டு தன்னையும் சுற்றவேண்டும் என்ற பேராசையில் காய் நகர்த்தும் எவருக்கும் அடுத்தவர் நலத்தை அழிக்காமல் தன் தேவைகளை நிறைவேற்றி கொள்ள முடியாது. தங்கள் ஆதாயத்துக்காக இவர்கள் எந்த விலையையும் கொடுக்க தயங்க மாட்டார்கள். சுயநலத்தின் பின்னணியில் இவர்களுக்கு உயிர் கூட துச்சம். 
இன்றைய அரசியல்வியாதிகள் இதற்கு ஒரு உதாரணம். 

நாம டெய்லி பார்க்கும் சுயநலவாதிகளை சீக்கிரமா அடையாளம் கண்டுக்கலாம். அவர்கள் கண்கள் அலைமோதும். குள்ள நரித்தனம் சூப்பராக தெரியும். நம்மிடம் ஏதாவது அவர்களை கவர்ந்துவிட்டால் அது பற்றி அக்கு வேறு ஆணி வேறு என்று கெட்டு தெரிந்து கொள்வார்கள். அவர்களிடமிருந்து ஒரு வார்த்தை கூட நம்மால் பெயர்த்தெடுக்க முடியாது. எதை கேட்டாலும் தெரியாது என்று சொல்லி விட்டு எஸ்கப் ஆவார்கள். போனிலோ நேரிலோ அவர்கள் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போது நாம் அந்த பக்கம் கிராஸ் ஆனால் போதும் பேச்சு ஆணி அடிச்சா மாதிரி நிண்ணு போகும்.

பின்ன என்ன? இவர்களை பற்றி அறிந்த நண்பர்களிடமிருந்து இவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். 

சுயநலம் பற்றி ஒரு வலைப்பூவில் படித்த ஜென் கதை இது;

ஒரு பெண்ணுக்கு புத்தர் மேலே அளவு கடந்த பக்தி. தன்னுடன் ஒரு தங்க புத்தர் சிலையை எப்போதும் வைத்திருப்பாள்.  அவருக்கு பத்தி கொளுத்தி கும்பிடுவாள். ஆனால் அவளுக்கு அந்த பத்தியின் மனத்தை யாரும் நுகர கூடாது என்று சுயநலம்.

எனவே ஒரு குழாய் உண்டாகி புத்தரின் மூக்கோடு அதை கனெக்ட் பண்ணிவிட்டாள். இப்படி பத்தி புகை ஏறி ஏறி புத்தரின் தங்க மூக்கு கருத்து போனதாம்.

இதயத்தையே எடுத்துக்கொடுத்து மற்றவரை வாழ வைக்கும் அகன்ற மனம் படைத்தவர் வாழும் இந்த உலகில் குறுகிய மனப்பான்மையோடு சுற்றித் திரியும் நம்மில் சிலர் - அதை கண்டாவது இனி மாறவேண்டும்..

நாளை: தீயினால் சுட்ட புண். 




Haja Muhiyadeen

unread,
Feb 25, 2010, 8:06:55 AM2/25/10
to tamil2...@googlegroups.com, பண்புடன்
நாம் ஒருவரை தொடாமலேயே - ஏன் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தே ஒருவரை கட்டுப்படுத்த முடியும். காதலிக்க முடியும். கோவப்பட வைக்க முடியும். அந்த சக்தி நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்கு உண்டு.

உங்களை மாதிரி வருமா என்று உச்சரிக்கும்போது பாசக்கார தலைவர்கள் கூட  உள்ளம் குளிர்ந்து போகிறார்கள். 

ஏன்டா.. நீ சோத்தை திங்கிறியா இல்லை ஜவ்ஜால்யமா என்று உச்சரிக்கும்போது - இந்த வார்த்தைகள் எதிரில் நிற்பவருடைய மூளையில் உணரப்பட்டு - வேதி மாற்றங்கள் நிகழ்ந்து - ரத்தம் சூடாக்கி அருவாளை உருவும் வரை அவரை நாம் உசுப்பேத்துகிறோம்.

ஒரு பெண்ணிடம் நீ ரொம்ப அழகா இருக்கியே என்று சொல்லி அவள் முகத்தை வெட்கத்தில் சிவப்பாக்கி கூட பார்க்கலாம். 

உன்னால் முடியும் தம்பி படத்தில் டெல்லி கணேஷ் தீப்பெட்டி கம்பெனி முதலாளியாக வருவார். அவர் வாயிலிருந்து வருவதெல்லாம் அச்சடிக்க முடியாத அருவருப்பான வார்த்தையாக இருக்கும். அவர் பேசும் பேச்சை சைலெண்டில் கொடுத்துவிட்டு - அந்த ஆபீசில் இருக்கும் செடிகள் துவள்வதை பாலசந்தர் சிம்பாலிக்காக காட்டி அடிக்கடி அந்த செடிகள் ஊழியர்களால் மாற்றப்படுவதையும் காட்டுவார். 

சொல்லாத சொல்லுக்கு மட்டுமே நாம் எஜமானன்.

வலிமையான  இந்த வார்த்தைகளை சிலர் எப்படி பேசுவது என்று தெரியாமல் அடுத்தவரை புண்படுத்துவதிலும் - கோபப்படுத்துவதிலும் செலவிடுகின்றனர்.

ஊரிலிருக்கும்போது நாகப்பட்டினம் சென்று  மீன்கள் வாங்கி வருவது வழக்கமாக இருந்தது. ஆனால் மீன்காரிகளின் வாயிலிருந்து வரும் வசவுகளை கேட்பதை தவிர்க்க அவர்கள் என்ன விலை சொல்கிறார்களோ அதை வாங்கி வந்துவிடுவேன். 

இந்தா.. - எங்கேர்ந்து வந்தே - தொடாதே மீனே என்று - ஒருமையில் தான் கத்துவாள்.

இதெல்லாம் வசவு இல்லை - அவள் பிறந்தது முதல் அப்படி பேசி பழகி வந்திருக்கிறாள் அது தான் காரணம் என்று என் தாய் திருத்துவார்கள். இப்பவும் யாராவது புண்படுத்தும் விதமாக பேசினால் பிறப்பு வளர்ப்பு சரியில்லை போலிருக்கு என்று நானே நினைத்துக்கொள்வேன். 

சென்னை வந்த புதிதில் எனக்கு வா சார் போ சார் - யோவ் -என்கிருந்துயா வந்து தொலைச்சே -  சொல்லிட்டு வந்தியா சாவுகிராக்கி - போன்ற வார்த்தைகள் சுரீர் என்று குத்தும். 

கல்லூரிக்கு பிறகு என் வாழ்க்கை  பண்பாளர் ஒருவரின் கூடத்தான் துவங்கியது. அவர் ஒரு VIP எனினும் எளிமையே உருவானவர். பத்திரிக்கையாளர். எழுத்தாளர்  பேச்சாளர் என்ற பன்முகம் கொண்டவராக இருப்பினும் - அவர் கீழ் பணியாற்றிய எங்களை ஒரு நாள் கூட கடிந்து கொண்டதில்லை. ஒவ்வொரு வார்த்தையும் பூப்போல உச்சரிப்பார். 

அவரிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம். எனினும் அடுத்தவரை எள்ளளவும் புண்படுத்த கூடாது என்ற விசயத்தை நான் மிகவும் அவரிடமிருந்து நான் தீவிரமாக பின்பற்றினேன்.

"இன்னுமா இந்த வேலைய முடிக்காம இருக்கே. என்ன வெட்டி முறிக்கிரியா"  என்று பாய்வதற்கு பதிலாக "இந்நேரம் இந்த வேலையே முடிசிருப்பீங்கன்னு எதிர்பார்த்தேன்" என்பார். 

"தீபாவளிக்கு ரெண்டு இஸ்யூ வருது. அடிச்சி புடிச்சி வேலை செய்யணும். நீங்களே இந்த மாதிரி தப்பு வாராம செஞ்சா எனக்கு கொஞ்சம் நேரம் மிச்சம் ஆகும்" என்று தப்பை சுட்டிக்காட்டுவார். 

இப்படி ஒவ்வொரு விசயத்திலும் நான் அவரை காப்பி அடிக்க தொடங்கி கற்றுக்கொண்டேன். இன்றைக்கும் வார்த்தை தடிக்கும் நேரங்களில் எல்லாம் என் வாயை கட்டுப்படுத்தி சரியான முறையில் உச்சரிக்க வைத்தவர் அவர்.

அறியாமல் பேசிய பேச்சுக்களுக்கு உடனே ஸாரி சொல்லிவிட்டு அடுத்த வேலையே கவனிக்கலாம். ஆனால் மமதையுடன் புண்படுத்திய வார்த்தைகள் வள்ளுவர் சொன்னதை போல வாயினால் சுட்ட வடு. என்றைக்கும் மாறாது. 

எப்போதும் காற்று நம் பக்கம் வீசாது. காயப்பட்டவர் பக்கம் வீசும்போது - அதன் தாக்கம் கடுமையாக இருக்கும்.

உறவுகளை பின்னுவது கடினம். அறுப்பது எளிது.

பின்னுவதும் அறுப்பதும் நம் நாக்கில் தான் இருக்கிறது.

(நாளைக்கு முடிச்சிடுவோம் )






senthil kumar.n

unread,
Feb 26, 2010, 2:21:37 AM2/26/10
to panb...@googlegroups.com
சார்,
தயவு செய்து முடிசிடதிங்க

மேலும் இன்னும் நெறய எழுதுங்க சார்,

படிக்க ஆர்வமாக இருக்கிறேன்

உங்கள் கட்டுரை படிக்கும் போது , எதோ என் அண்ணன் கூட உட்கார்ந்து பேசுற மாதிரி இருக்கு, 

வாழ்கையில் இக்கட்டான சூழ்நிலையில், உங்கள் கட்டுரை நிறைய ஆலோசனை தந்து உதவி செய்து இருக்கிறது,


அன்புடன்,

செந்தில் குமார்.நா 



2010/2/25 Haja Muhiyadeen <muhiy...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Haja Muhiyadeen

unread,
Feb 26, 2010, 12:37:34 PM2/26/10
to tamil2...@googlegroups.com, பண்புடன்
கெட்ட பழக்கங்கள் விருந்தாளி மாதிரி வரும் - ஆனால் எஜமானன் மாதிரி ஆட்டி படைக்கும்.

எண்ணங்கள் செயலாகின்றன. செயல் திரும்ப திரும்ப செய்யப்படும்போது அனிச்சை செயலாகி பழக்கமாகின்றது. அது நல்ல பழக்கமெனில் வாழ்க்கையில் சந்தோசத்தையும் மதிப்பையும் கொண்டு வந்து சேர்க்கும். தீய பழக்கம் எனில் அதற்கான விலையை சிறிது நாட்கள் கழித்து நாம் அனுபவிக்க வேண்டி இருக்கும். 

தீப்பெட்டி தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தீக்குச்சி அடுக்கும் வேகமும் லாவகமும் பழக்கமற்ற யாருக்கும் வராது. ஒரு நாள் முழுக்க நாம் அடுக்கினாலும் நமக்கு ரெண்டு பெட்டி தான் அடுக்க முடியும். 

கார் பழகும்போது க்ளட்சை மெதுவாக விட தெரியாமல் பட்டென்று விட்டு வண்டியை ஆப் செய்துவிடுவோம். அதே நன்றாக பழக்கமானவுடன் எப்போது காலை வைத்தோம் எடுத்தோம் என்று தெரியாது. மாடு குறுக்கே வந்தால் கூட நமக்கே தெரியாமல் பிரேக்கை அழுத்துவோம்.  அந்த அளவுக்கு அது அனிச்சை செயலாகிவிடும்.

எல்லாம் பழக்கம் தான் காரணம்.

ஒரு செயலை தொடர்ந்து 21 நாட்களுக்கு செய்து வந்தால் அது நமது ஆழ மனதில் பதிந்து பழக்கமாகிவிடுகின்றது என்று மனவியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள். அதற்குபிறகு அந்த பழக்கத்தை விட தான் நாம் முயற்சி செய்ய வேண்டி இருக்கும்.

உதாரணமாக விடிகாலை நாலுமணிக்கு கஷ்டப்பட்டு தொடர்ந்து மூணு வாரத்துக்கு எழுந்துவிட்டால் அப்புறம் நாலு மணிக்கு அலாரம் இன்றி அட்டோமட்டிக்காக எழுந்துவிடுவோம். 

தீய பழக்கங்களை கைவிட எளியவழி அதற்கு பகரமாக நல்ல பழக்கங்களை அதிகம் பழகுவது தான்.

தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்றாலும் திரும்பிவிடு என்று ஒரு ஆங்கில பொன்மொழி இருக்கிறது. கெட்ட பழக்கங்களின் சுகம் அலாதியானது. ஆனால் அதனால் வரும் இடைஞ்சல்கள் வேதனையானது. 

சிகரெட் - தண்ணி - கஞ்சா - போதை - லாகிரி என்று விட்டுப்போன கெட்ட பழக்கங்களை எல்லாம் எழுதிக்கொண்டு போனால் வருடம் முழுக்க எழுதலாம் போலிருக்கு. எழுத ஆரம்பித்தபோது இத்தனை எபிசொட் இழுத்தடிப்போம் என்று எனக்கே தெரியாது. 

ஆனால் மேலும் யாரையும் சோதிக்க விரும்பாததால் இத்தோடு முடித்துக்கொள்கிறேன். 

நிறைய நண்பர்கள் பாராட்டி பின்னூட்டம் இட்டார்கள். தலையில் குட்டியவர்களும் உண்டு. (உன்னை யாரு மசாலா சேக்க சொன்னது?)

அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றி. 

இந்தக்கட்டுரைகள் தொடர்ந்து www.mypno.com இணையதளத்தில் விருந்தினர் பக்கத்தில் வந்துகொண்டிருக்கிறது. 

என்றும் அன்புடன் 
உங்கள் அன்பு நண்பன்
ஹாஜா முஹயதீன் 

Naresh Kumar

unread,
Mar 1, 2010, 6:29:26 AM3/1/10
to panb...@googlegroups.com
என்னாது முடிச்சிட்டீங்களா???
 
மிக அருமையான தொடர்...
 
நன்றி

--
நரேஷ்
www.nareshin.wordpress.com

வில்லன்

unread,
Mar 2, 2010, 4:16:57 AM3/2/10
to panb...@googlegroups.com, tamil2...@googlegroups.com
வெல் ஹாஜா தாத்தா,

இன்னும் இழுங்க, சமீபத்தில் எல்லாராலும் விரும்பி படிக்கப்பட்ட தொடர் இது.

மார்ச் இறுதியில்தானே கிளம்புறிங்க, அதுக்கு முன்னாடியே ஏன் நிறுத்தனும். 


2010/2/26 Haja Muhiyadeen <muhiy...@gmail.com>


சிகரெட் - தண்ணி - கஞ்சா - போதை - லாகிரி என்று விட்டுப்போன கெட்ட பழக்கங்களை எல்லாம் எழுதிக்கொண்டு போனால் வருடம் முழுக்க எழுதலாம் போலிருக்கு. எழுத ஆரம்பித்தபோது இத்தனை எபிசொட் இழுத்தடிப்போம் என்று எனக்கே தெரியாது. 


stalin felix

unread,
Mar 2, 2010, 4:41:04 AM3/2/10
to panb...@googlegroups.com
100
 
Valthukkal

2010/3/2 வில்லன் <vom...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/
It is loading more messages.
0 new messages