- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி (CALOTROPIS PROCERA)
நவக்கிரக மரங்கள் - I எருக்கு CALOTROPIS GIGANTEA, RBR, ASCLEPIADACEAE
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் - பாடல் :
இலையார் தரசூலப் படையெம்
பெருமானாய்
நிலையார் மதில்மூன்று நீறாய்
விழவெய்த
சிலையான் எருக்கத்தம்
புலியீர்த் திகழ்கோயில்
கலையான் அடியேத்தக் கருதா
வினைதானே
எருக்கஞ் செடிகளில் பல வகைகள் உண்டு. அனைத்து வகைகளிலும் பூக்கள் இருக்கும். பால் வடியும், பார்ப்பதற்கு ஒரே விதமாய்த் தெரியும். ஆனால் அதில் வரும் மொட்டுக்கள், பூக்களின் நிறம், மணம், குணம் ஆகியவை மாறுபட்டு இருக்கும்.
வெள்ளை எருக்கன் செடிக்கு விசேஷ மருத்துவக் குணங்கள் இருக்கின்றன. வெள்ளைநிறப் பூக்கள்தான் ஈஸ்வரனுக்கு பூஜை செய்ய பயன்படுத்துவார்கள். இதனை ஆங்கிலத்தில் SWALLOW WORT, ARKA, CALOTROPIS PROCERA R.BR என்றும், உருதுவில் மதார், ஆக் என்றும் அழைப்பார்கள்.
சூரிய பகவானுக்கு உரிய நாள் ஞாயிற்றுக்கிழமை. இவரின் தேவியர் சாயா தேவி அம்மன், உஷா தேவி அம்மன் ஆவர். இவர் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சிவப்பு நிற ஆடை அணிந்து உலா வருவார்.
இவருக்கு தானியங்களில் கோதுமையும், நவரத்தினங்களில் மாணிக்கமும் உரியவை ஆகும்.
சூரிய பகவான் கிழக்கு திசையில் சிம்மராசியின் மீது ஆட்சி செய்கின்றான். சூரிய பகவானுக்கு, வெள்ளை எருக்கன் செடி உரியது ஆகும். எனவேதான் நவக்கிரக ஆலயங்களில் கீழ்க்காணும் முறைப்படி சூரியனை வணங்குகின்றனர்.
வேலூர் மாவட்டம் பொன்னை அருகில் உள்ள ஒட்டநேரி விநாயகபுரத்தில் அருள்மிகு நவக்கிரக கோட்டை ஆலயம் அமைந்து இருக்கின்றன. இந்த ஆலயத்தில் முறையாக சாயா தேவி, உஷா தேவி ஆகியோருடன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் அமர்ந்துள்ளார். சிவப்பு நிற ஆடை அணிந்து, கோபுர கலசத்தில் கோதுமைத் தானியம் நிரப்பி, நவரத்தினத்தில் மாணிக்கக்கல் பதித்து, கிழக்கு திசை நோக்கி, வெள்ளை எருக்கன் செடியை அருகில் நட்டு சிம்ம ராசியில் தினசரி பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலயத்தின் ஸ்தாபகர் திரு.வேலு சுவாமிஜி அவர்களிடம் இதைப்பற்றி விசாரித்தபோது, அவர் சொன்னார் : ”நான் ஒரு தாவரவியல் நிபுணர். வெள்ளை எருக்கன் செடிக்கு ஒரு தனி மகத்துவம் உண்டு. இதில் அதிக மருத்துவக் குணங்கள் இருக்கிறது.
சிம்ம ராசி கொண்டவர்களின் நோயைக் குணமாக்குகின்றது. நவரக்கிரகத்தின் நன்மைகள் பெறவும், கெடுதல்களை அகற்றவும், வெள்ளை எருக்கன் செடி பயன்படுகிறது. அம்மனுக்கும், சூரிய பகவானுக்கும் பூஜைக்கு இந்த செடியைத்தான் பயன்படுத்துகின்றோம்” என்றார்.
‘அதர்வண’ வேதத்தில் எருக்கஞ்செடியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. இது ருத்ரருடன் தொடர்பு கொண்டு உள்ளதால் “புனித செடி” என்று கூறப்படுகிறது.
“அக்கினி புராணம்” என்னும் நூலில் எருக்கன் இலைகளை மன்னர் அணிந்து சென்றால் வெற்றி நிச்சயம் என்று கூறப்படுகிறது. நரபலி, சதி போன்றவற்றில் பழங்காலத்தில் பயன்படுத்தப்படும் ஒன்பது மரங்களில் எருக்கனும் ஒன்றாகும்.
சிவபெருமானை விடியற்காலையில் பூஜிக்க பயன்படும் பூக்களில், எருக்கம் பூக்களும் ஒன்று என “சிவமஞ்சரி” என்ற நூலில் கூறப்படுகிறது.
“நாரத புராணா” என்ற நூலில் சிவபெருமானுக்கு எருக்கம் பால் வைத்து நிவேதனம் செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. கிராமங்களில் அரக்கம்மா, அரக்கேஸ்வரி, அர்க்காமுர்ஸடா ஆகிய பெண் தெய்வங்களுக்கும் இதனைப் படைக்கின்றார்கள்.
மே, ஜுன் மாதங்களில் வெயிலின் கடுமை தாங்க முடியாமல் செடி, கொடிகள் மடிந்து கொண்டிருக்கும் நிலையில் எருக்கஞ்செடி முழு அளவில் வளரும். இந்தச் செடி நம் நாட்டில் அனைத்து பாகங்களிலும், சாலை ஓரங்களிலும் தானாகவே வளரும். இது ஒன்றரை மீட்டர் முதல் 2 மீட்டர் வரை உயரமாக வளரும். இந்தக் செடியின் இலைகளின் மீது தூசு படிந்திருப்பதைப் போல் பச்சை நிறத்தில் வெள்ளை நிறம் காணப்படும்.
சிறிய பூக்கள், காய்களின் வடிவில் இருக்கும். அதை விரல்களால் அழுத்தினால் உடைந்துவிடும். இதனுள் விதைகள் இருக்கும். இதன் இலைகள், பூக்கள், தண்டு, வேர் அனைத்து பாகங்களிலும் பால் இருக்கும். அவைகளையும் உடைத்தால் பால் வடியும்.
எருக்கஞ்செடிகள் அனைத்து பாகங்களும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உடலின் உஷ்ணத்தை அதிகரிக்கும்.
இலைகளின் மருத்துவ குணங்கள் :
* சிலருக்கு முகம் அழகாக இருக்கும். ஆனால், பல் அசிங்கமாக இருக்கும். முத்துப் போன்ற பற்களில் மஞ்சள்நிறக் கரைகள் படிந்து முகத்தின் அழகையே கெடுத்துவிடும். இதைப் போக்கி பற்களை பளபளப்பாக்கிட எருக்கு இலைகளை நிழலில் உலர வைத்து அத்துடன் மிளகு சம அளவில் சேர்த்து, அரைத்து பவுடராக்கிக் கொள்ள வேண்டும். இதைப் பல் பொடியாக, பல்லில் தேய்த்தால் கரைகள் நீங்கும்.
* இலைகளை நல்லெண்ணெயில் கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டிய எண்ணெயை மூட்டு வலி, மூட்டு வாதம், இடுப்பு வலி, தொண்டை நரம்பு வலி ஆகியவற்றுக்கு வலியுள்ள பாகத்தில் பூசினால் குணமாகும்.
* இலைகளை எரித்து, அதன் புகையை முகர்ந்தால் - வாய் வழியாகச் சுவாசித்தால், மார்ப்புச்சளி வெளியேறும். ஆஸ்துமா, இருமல் கட்டுப்படும்.
* இலைகளை நல்லெண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொள்வார்கள். பக்கவாதம் நீங்கிட இதைத் தடவி மசாஜ் செய்வார்கள்.
* இலைகளின் சாற்றை கடுமையான தோல்நோய் நீங்க பூசுவார்கள்.
* உலர்ந்த எருக்கம் இலைகளைப் பவுடராக்கி, அடிபட்ட காயங்கள், புண் அழுகிப்போன சதையின் மீது தூவி கட்டுக்கட்டுவார்கள். அதனால் விரைவில் குணமடையும்.
* இதன் இலைகள், பூக்கள், வேர், பட்டைகள், எண்ணெய் அனைத்துமே நச்சுக் கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தது.
மொட்டுகளின் மருத்துவ குணங்கள்
* எருக்கம் மொட்டுக்கள், சுத்தமான தேன், பசு நெய் - மூன்றையும் சேர்த்து அரைத்து இதை ஆண்குறியின் தண்டின் மேல் பாகத்தில் பூசினால் விரைப்பு தன்மை அதிகரிக்கும். எண்ணையைப் பூசிய பிறகு ஆண்குறியின் மீது ஆமணக்கு இலையைக் கட்ட வேண்டும்.
* வியர்வையுடனும், நடுக்கத்துடனும் குளிர் ஜுரம் ஏற்படும். அது குறித்த நேரத்தில் தான் வரும். ஜுரம் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எருக்கம் மொட்டு ஒன்றை எடுத்து வெல்லத்தில் வைத்து சாப்பிட்டால் மலேரியா ஜுரம் நீங்கும்.
* இதன் மொட்டுக்கள், சுக்கு, ஓமம், கறுப்பு உப்பு ஆகிய பொருட்களையும் மெல்லியதாக பொடியாக்கி, சிறிது தண்ணீர் கலந்து, பட்டாணி அளவிற்கு மாத்திரைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். தினசரி 2 மாத்திரைகள் வீதம் 2 வேளைகள் சாப்பிட்டு வந்தால் அஜீரணம், பசியின்மை, கேஸ்டிரபுள், உப்புசம் ஆகியவை நீங்கி வயிற்றுக்கும் சக்தி தரும்.
பூக்களின் மருத்துவ குணங்கள்
* எருக்கம் செடிகளையும், பூக்களையும் எரித்து அதன் சாம்பலை ஆஸ்துமா, மார்புச்சளி நீங்கிட அரிசி அளவிற்குத் தருவார்கள்.
* காலரா, வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் ஏற்பட்டு உடல் வெகு சீக்கிரம் பலவீனமடைந்து விடும். இந்நிலையில் 2 எருக்கம் பூக்களை வாயில் போட்டு நன்றாக மென்றால் சுய நினைவு திரும்பும்.
வேரின் மேல் தோல், மிளகு - இரண்டையும் சம அளவில் இடித்துப் பொடியாக்கி அதை இஞ்சிச்சாற்றில் இரண்டு மணி நேரம் வரை அரைக்க வேண்டும. பின் அதைப் பட்டாணி அளவுக்கு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் கொண்டு வாந்தி, பேதி, காலரா குணமாக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை 1 மாத்திரை வீதம் சாப்பிடலாம்.
பாலின் மருத்துவ குணங்கள் :
* மூக்கடைப்பு, மண்டைச் சளி, ஒற்றைத் தலைவலி, தும்மல் ஆகியவை நீங்கிட எருக்கம் பாலை, மூக்குப் பொடியாகப் பயன்படுத்தலாம். மாடடுச் சாணியில் செய்யப்பட்ட வரட்டி (எருமட்டை)யை எரித்து அதன் சாம்பலை எருக்கம் பாலில் ஊறவைத்து உலர வைக்க வேண்டும். அதை அரைத்து மூக்குப் பொடியாக முகர்ந்தால் தும்மல் ஏற்பட்டு மண்டைச் சளி நீங்கும்.
* வண்டுக்கடி, படை, சொரி, சிரங்கு மற்றும் நாள்பட்ட தோல் வியாதிகள் இருக்குமிடத்தில் எருக்கம் பாலைப் பூச வேண்டும். அங்கு எரிச்சலாக இருக்கும். ஆனால் சிலருக்கு ஒரே முறை பூசினாலே குணமாகி விடும். குணம் தெரியவில்லை என்றால் சில நாட்கள் மீண்டும் பூச வேண்டும்.
* உலர்ந்த எருக்கம் பாலை நரம்புத் தளர்ச்சிக்கு டானிக்காகப் பயன்படுத்துகிறார்கள்.
* எருக்கம் பால் சுட்டெரிக்கும் மருத்துவ குணத்தை உடையதாகும். தலை வழுக்கை, குஷ்டம், சொரி, சிரங்கு மற்றும் மூலத்தின் மருக்களின் மீது பாலைத் தடவினால் அவை குணமாகும்.
* எருக்கம் செடியின் பாலை, தொழு நோயாளிகளின் அழுகிய புண்கள் நீங்கிட பூசுவார்கள்.
* எருக்கம் பால் தலைப் பொடுகு, படை, மூட்டு வலிகள், மூட்டு வீக்கம், மூல நோய்க்கு மருந்தாகப் பயனளிக்கிறது.
* முடி தேவை இல்லாத இடத்தில் எருக்கம் பாலைப் பூசுவார்கள். தேனுடன் எருக்கம் பாலைக் கலந்து பல் வலியைப் போக்க பூசுவார்கள். அரிசி அளவு உலர்ந்த எருக்கம் பூக்கள் குஷ்ட நோயைக் குணப்படுத்த பயன்படுத்துவார்கள்.
* எருக்கம் பாலை பாம்பு விஷத்தை முறிக்கப் பயன்படுத்துவார்கள்.
வேரின் மருத்துவ குணங்கள் :
* எருக்கம் வேரை எடுத்து அதன் கரியை நல்லெண்ணெயில் கொதிக்க வைத்து, தொழுநோய் தோலின் மீது பூசுவார்கள்.
* ஆண்களுடன் உடல் உறவு கொள்வதால் உண்டாகும் நோய்கள் குணம் பெறவும் இந்தச் செடியைப் பயன்படுத்துகின்றார்கள்.
இதே போல் விபச்சாரிகளையும், தேவதாசிகளையும், அன்னியப் பெண்களையும் அனுபவித்துக் கொண்டு இருக்கும் ஆண்களுக்கு வெட்டை நோயில் இருந்து பாதுகாப்பு பெற வெள்ளை எருக்கன் செடியைப் பயன்படுத்துவர்.
தயாரிக்கப்பட்ட மருந்துகள்
மேற்கண்ட மருந்துகளைத் தயாரிக்க முடியாதவர்கள் பிரபல யுனானி மருந்துக் கம்பெனிகளால் தயாரித்து யுனானி நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படும் கீழ்க்காணும் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.
* ஹப்பே காதரி, ஹப்பே குலே ஆக், ஹப்பே வஜவுல் முஃபாசில் இவைகளில் ஏதேனும் ஒன்றை வாங்கி சாப்பிட்டால் மூட்டு வலி, சளி நீங்கும்.
* ஆண்மை சக்தியை அதிகரிக்க குஷ்தாயே சாந்தி பயன்படுத்தலாம்.
* வெட்டை நோயைக் குணமாக்க குஷ்தாயே நீலா தோத்தா சாப்பிடலாம்.
* இரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி நீங்கிட குஷ்தாயே ஃபவுலாத் தரலாம்.
* மஞ்சள் காமாலை நீங்கிட குஷ்தாயே குப்சுல் ஹதீஸ் சாப்பிடலாம்.
* அஜீரணம் கேஸ்டிரபிள் நீங்கிட ஹப்பே மதார் சாப்பிடலாம்.
* ஆஸ்துமா குணம் பெற ஹப்பே ஜீக்குந்நஃப்ஸ் சாப்பிடலாம்.
தலவிருட்சம் கொண்ட திருக்கோயில்கள்
திருஎருக்கத்தம்புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. வெள்ளெருக்கு, எருக்கத்தம் புலியூரில் விழாக்காலங்களில் வெள்ளெருக்கம் பூவால் பூசிக்கப்படுகிறது. திருக்கானாட்டு முள்ளூரில் வெள்ளெருக்குடன் அத்தியும் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.
கடலூர் மாவட்டம் எருக்காத்தம் புலியூர் உள்ள குமாரசாமி கோவிலில் சிவபெருமானுக்கு விசேஷமாக வெள்ளை எருக்கஞ்செடியையும், பூக்களையும் சேர்த்தே வணங்குகின்றார்கள்.
சங்க இலக்கியம்
நல்லவும், தீயவும் அல்லவாய் உள்ள எருக்கு மலரைத் தரும் புதர்ச் செடிக்குச் சங்க இலக்கியங்களில், புறநானூற்றில் கபிலர் இடந்தருகின்றார். இது நீல எருக்கு, வெள்ளெருக்கு என இரு வகைப்படும். இது எங்கும் வளரும் வெளிர், நீல எருக்கு. இதில் வெள்ளெருக்க மலரைச் சடையில் சூடியவர் சிவபெருமான் என்பர் கம்பர்.
சங்க இலக்கியப் பெயராக எருக்கு என்றே குறிக்கப்படுகிறது. கபிலர் புறநானூற்றில் எருக்கம் புதர்ச்செடிக்கு ஓர் இடம் வைத்துள்ளார். பூக்களில் நல்லனவும், தீயனவும் உள்ளன. புல்லிய இலை(கெடுமனத்தால்) உடைய எருக்கம் பூவையும் கடவுளர் ஏற்றுப் போற்றுவது போன்று, பாரிவள்ளல் தன்னிடம் வரும் அறிவற்ற எளியவரையும் வரவேற்றுப் பரிசளிப்பதைக் கடமையாகக் கொண்டவர் என்பதைப் பாடுகின்றார்.
இது கொத்தாகப் பூக்கும் என்பதால் ‘குவியினார் எருக்கு’ என்றார் புலவர். மலரில் ஐந்து புறவிதழ்கள் விரிந்தும், அகவிதழ்கள் ஐந்து பட்டையாக ஒட்டிய அகவிதழ்களின் முனை மொட்டையாகவும் அழகாகவும் காட்சி தரும். இதனைக் குவிந்த முகிழ் என்பர் புலவர்.
“குறுமுகிழ் எருக்கங் கண்ணி” என நற்றிணையிலும், “குவிமுகிழ் எருக்கங்கண்ணியும்” என குறுந்தொகையிலும் வரும் பாடல் வரிகளால் இதனைக் காணலாம். எருக்கு இரு வகையானது. வெள்ளிய நிறமுடைய பூக்களை உடையது வெள்ளெருக்கு ஆகும். இது குறைவாகவே காணப்படும். இதனைச் சிவபெருமானின் சடையில் உள்ள பூவாகக் காண்கிறார் கம்பர்.
இம்மலர் நறுமணம் அண்டாதது எனவும், மணமற்றது எனவும் புலவர்கள் மறைமுகமாகக் கூறுவர். உதாரணமாக, தொல்காப்பிய உரையின் மேற்கோளாகக் காட்டப்படும் பாடலைப் பார்ப்போம்.
பரத்தை வீட்டிலிருந்து மீளும் தலைவன், மணமிக்க குவளைப் பூமாலையைச் சூடிவந்தான். தெருவில் எருக்கம் பூவை வைத்து விளையாடிய குழந்தையும் உள்ளே வந்தது. குவளைக் கண்ணி சூடிய தலைவனைப் பரத்தை தழுவியதால் அதனை ஏற்காமல் மகன் சூடியிருந்த எருக்கு நன்றென அவனைத் தழுவினாளாம். அதையே, “ஒல்லேம் குவளை புலா அல் மருங்கின் புல்லெருக்கங்கண்ணி நறிது” என தொல்காப்பியம் சுட்டுகிறது.
மேலும் செந்தாவரையர், அதியன் விண்ணத்தனார் ஆகியோரும் இதுபற்றிப் பாடியுள்ளார். வாட்போக்கிக் கலம்பகம் எனும் நூலிலும் குறிக்கப்பட்டுள்ளது. இச்செடியில் உண்டாகும் பால்கொடிது. ஆனால், மருந்துக்குப் பயன்படுகிறது. வெள்ளெருக்கின் நாரை எடுத்து குழந்தைகட்கு அரைஞாண் கயிறுபோல் கட்டுவர் என சங்க இலக்கியக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
சூரியன்
கஞ்சனூரை அடுத்த 2 கி.மீ. தொலைவில் உள்ளது..
(தொடரும்)சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
BUTEA FRONDOSA, ROXB., PAPILIONACEAE
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் பாடல் :
நிலநீரோ டாகாசம் அனல்காலாகி
நின்றைந்து
புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ்
செய்யார் போற்றோவார்
சலநீத ரல்லாதார் தக்கோர் வாழுந்த
தலைச்சங்கை
நலநீர கோயிலே கோயிலாக
நயந்தீரே.
இலட்சக்கணக்கில் தாவரங்கள் செடி, கொடி, மரங்கள் இருந்தாலும் முருக்கன் மரத்தை மட்டுமே சந்திர பகவானுக்கு சாமி மரமாக ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கு புராணங்கள் விளக்கம் அளிக்கின்றன.
பிரம்மனுக்கும், பார்வதிக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்ட போது, பிரம்மன் தன்னை முருக்கன் மரமாக மாற்றிக் கொண்டதாக உத்திரகனடா, பத்ம புராணா என்னும் நூல்களில் கூறப்பட்டுள்ளது. இதன் இலையின் நடுவில் விஷ்ணு, இடது பக்கத்தில் பிரம்மா, வலது பக்கத்தில் சிவன் அமர்ந்திருப்பதாக நம்பப்படுகிறது.
தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் நாகபட்டினத்தில் உள்ள விஷ்ணு கோவில்களான தமராய கேசவன் கோவில், செளந்திரராஜர் கோவில், வான்புருஷோத்தமன் கோவில், திருவாரூர் ஸ்ரீநாராயணன் கோவில், நன்மதிய பெருமாள் கோவில், மாதவபெருமாள் கோவில், திருச்சியில் அப்பாகுதந்தம் கோவில், இதேபோல் தஞ்சை அக்னீஸ்வரர் சிவன் கோவில், திருவாரூர் சங்கரனேஸ்வரர் சிவன் கோவில்களிலும் இம்மரத்திற்கு பூஜை செய்யப்படுகிறது.
வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள விநாயகபுரம், ஓட்டநேரி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீநவக்கிரககோட்டை ஆலயத்தில் சந்திர பகவான் கிரகத்துடன் முருக்கன் மரத்தையும் சேர்த்து பூஜை செய்யப்படுகின்றது.
புத்த மதத்தினர் இம்மரத்தின் பூக்களால் நூலைச் சாயம் தீட்டி புனித பூ நூலாகக் கட்டிக் கொள்வார்கள். இதனால் அவர்களின் ஆசைகளையெல்லாம் எரித்து விட்டதாகக் கருதுகின்றனர்.
பிராமணர்கள் ஆண் குழந்தைக்கு பூநூல் அணியும் விழா நடத்துவார்கள். அப்போது முருக்கன் மரப்பொருட்களை விசேஷமாக பயன்படுத்துவார்கள்.
வடநாட்டில் கிருஷ்ணா அஷ்டமி விசேஷங்களில், ஹோலி பண்டிகைகளில், அக்னி பூஜைகளில் முருக்கன் மரத்தைப் பெருமளவில் பயன்படுத்துவார்கள்.
முருக்கன் மரத்தை வட நாட்டில் ‘பலாஸ்’ என்றழைப்பார்கள். நம் நாட்டில் ஆங்கிலேயர்கள் படையெடுத்தபோது வடநாட்டில் ‘பலாஸ்’ என்னும் ஊரில் முருக்கன் மரங்கள் நிறைந்த காடுகளில் ராபர்ட் கிளைவுக்கும், வங்காளத்தின் நவாபுக்கும் போர் நடந்தது. அந்த இடத்தில் செந்நிறப்பூக்கள் நிறைந்த முருக்கன் மரங்கள் இருந்ததால் இந்த மரத்திற்கும் பலாஸ் என்ற பெயர் வந்தது.
முருக்கன் மரத்திற்கு புரசு, காட்டு முருக்கு, வெள்ளைப் புரசு, பொரசு என்று தமிழிலும், பலாஸ் டேசு, பலாஸ்கே பூல், குலே டேசு (பூக்கள்), பலாஸ் பாப்டா (விதைகள்) என்று உருது மொழியிலும், FLAME OF THE FOREST, BUTEA MONOSPERMA என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகின்றது.
முருக்கன் மரம் 9 முதல் 12 மீட்டர் வரை உயரமாக வளரும். இம்மரத்தின் தண்டு, கிளைகள் முறுக்கேறிய நிலையில் கோணலாக வளரும். இலைகள் 7 முதல் 12 செ.மீ. வரை நீளமாகவும், நடுவில் உள்ள இலை 12 முதல் 20 செ.மீ. அகலமும், இரட்டை இலையைப் போல் எதிரெதிராகவும் இருக்கும். இலைகள் 7 முதல்12 செ.மீ வரை அகலமாகவும் இருக்கும். ஜனவரியில் இலைகளெல்லாம் உதிர்ந்து தீப்பிழம்பு போல், செந்நிறத்தில் 4 முதல் 5 செ.மீ. வரை நீளமான பூக்கள் காணப்படும். இது பொதுவாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரமான இடங்களில் விளைகிறது. இம்மரத்தின் பிசின், பட்டை, பூக்கள், விதை, பிண்ணாக்கு, வேர், இலைகள் அனைத்தும் மனிதனுக்குப் பயன்தரும் வகையில் அமைந்திருக்கின்றது.
முருக்கன் விதைகளின் மருத்துவ குணங்கள்:
பலாஸ் பாப்படா (டாஹ்க்பாப்படா) டாஹ்க் மரத்தின் விதைகளாகும். இது
காசளவிற்குப் பெரியதாகவும், வட்டமாகவும், மெல்லியதாகவும் இருக்கும். இதன்
மேல்தோல், மஞ்சள் மற்றும் பழுப்பு, வெண்மை கலந்த மஞ்சள் நிறமாகும்.
யுனானி மருத்துவம்:
இயல்பு : உஷ்ணம் - வறட்சி
முக்கிய குணங்கள்:
வாய்வுத் தொல்லையை நீக்கும். வயிற்றுக் கிருமிகளைச் சாகடிக்கும்.
ஜுரங்களைக் கட்டுப்படுத்தும். புண்களைச் சுத்தம் செய்யும், பாம்புக்கடி
விஷத்தை முறிக்கும்.
பயன்படுத்தும் முறை:
வயிற்றுக் கிருமிகளைச் சாகடித்து வெளியேற்றுவதற்காக இதை எரித்தோ அல்லது
பவுடராக்கி தனித்தோ அல்லது பிற மருந்துகளுடன் சேர்த்தோ குடிக்கச்
செய்வார்கள். ரபா ஜுரத்தைப் போக்க ‘கர்ஞ்சுவா’ பருப்புடன் மாத்திரை
தயாரித்து சாப்பிடச் செய்வார்கள். படர் தாமரை நோய்க்கு மேல்பூச்சு
மருந்தாகப் பயன்படுகிறது. புண்களில் உள்ள அசுத்தங்களைப் நீக்கி அவற்றைக்
குணமாக்குகிறது. கண்நோய்க்கும் இதை மருந்தாகப் பயன்படுத்துவார்கள்.
இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை ஆண் உறுப்பைத் திடமாக்க பூசு
மருந்தாகப் பயன்படுத்துவார்கள். காக்காய் வலிப்பு நோய்க்கு இதைச் சொட்டு
மருந்தாகப் பயன்படுத்துவார்கள்.
அளவு : 250 மில்லி கிராம் முதல் 1 கிராம்வரை பயன்படுத்தவும்.
சித்தா, ஆயுர்வேத மருத்துவத்திலும் விதைகள் மருந்தாகப் பயன்படுகிறது. விதைகள், வயிற்று நாக்குபூச்சி தொல்லைகளை நீக்குகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. அழுகிய புண்கள் மீதும், சொறி, சிரங்கின் மீதும் விதைகளை அரைத்து,அதன் பவுடரை எலுமிச்சம் சாற்றில் பசையாக்கிப் பூசலாம். சிலருக்கு பரம்பரையாக தலைமுடி உதிர்ந்து வழுக்கையாகிவிடும். முருக்கன் விதையால் தயாரிக்கப்படும் எண்ணெய் வழுக்கையைத் தடுக்கிறது. இதைப் பூசலாம்.
விஞ்ஞான ஆய்வு:
விதையில் புரதம் மற்றும் கொழுபைச் சுரக்கும் என்சைம்கள் உள்ளன. இதில்
இருக்கும் ஆறு என்சைம்களில் மானோஸ் பெர்மின் என்னும் ஆர்கிளைப் உள்ளது.
இது புழுக்களைக் கொல்லும் குணம் கொண்டது.
முருக்கன் பிசினின் மருத்துவ குணங்கள்:
மரத்தைப் காயப்படுத்தினால் சிவப்பு நிறப் பால் வடியும். இது உலர்ந்தால்
கருப்பாக மாறிவிடும். இதனை பெங்கால்கீனோ, ப்யூட்டாகம், கோந்து, பலாஸ்
என்று அழைப்பார்கள். தொண்டைப் புண், பேதி, பித்த வாந்தி ஆகியவற்றைக்
கட்டுப்படுத்த இதைப் பயன்படுத்துவார்கள்.
யுனானி மருத்துவர்கள் இதை மாமருந்தாகப் பயன்படுத்துகின்றார்கள். விஞ்ஞானிகள் இதை ஆய்வு செய்து பார்த்ததில் இதில் ரிபோபிளேவின் (ஒரு கிராம் எடையில் 138.8 மைக்ரோ கிராம்) மற்றும் தையாமின் (ஒரு கிராம் எடையில் 4.3 மைக்ரோ கிராம்) என்ற இரு வைட்டமின்கள் உள்ளன எனத் தெரிய வந்துள்ளது. இப் பிசினில், லியுகோஸையனிடின், புரோஸையனிடின், வழவழப்பு பொருள் ஆகியவை உள்ளன. இதிலிருந்து பைரோ காடகின் (PYROCATECHIN) என்பதை வடித்தெடுக்கலாம்.
முருக்கன் பட்டையின் மருத்துவ குணங்கள்:
பட்டையை இரவில் ஊற வைத்து காலையில் குடிப்பார்கள். மண்டைச் சளி,
சைனோசைடிஸ், இருமல், ஆஸ்துமா நீங்கிட இதைப் பயன்படுத்துவார்கள்.
விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, பார்த்ததில் இதில் நீரில் கரையும் பகுதி
13.80%, டானின் 5.82%, டானின் அல்லாத பகுதி 7.82% மற்றும் இதரப்பொருட்கள்
உள்ளன என கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் வாழை இலைக்கு பதிலாக உணவைப் பரிமாற முருக்கன் இலைகளையும் பயன்படுத்துவார்கள். பழங்காலத்தில் இந்த இலைகளைத் தைத்து பாத்திரமாகவும் பயன்படுத்துவார்க்ள. இன்றும்கூட ஓட்டல்களிலும், விசேஷங்களிலும் சாப்பிடுவதற்கு தட்டுகளுக்குப் பதிலாக முருக்கன் இலைத் தட்டுகளை பயன்படுத்துவதைக் காணலாம்.
இலைகளின் மருத்துவ குணங்கள்
1. இலைகள் சொரசொரப்பாகவும், முரட்டுத்தனமாகவும் இருக்கும்.
2. ஆடு, பசுமாடுகள் விரும்புவதில்லை. ஆனால், எருமை மாடுகள் சாப்பிடும்.
3. கேரளா மலைவாசிகள் கிளையின் நுனிகளை கருத்தரிக்காமல் பாதுகாக்க பயன்படுத்துகின்றார்க்ள.
4. இலையைப் பிழிந்து அதன் சாற்றை இருமல், பேதியைக் கட்டுப்படுத்தத் தருவார்கள்.
5. காமத்தை அதிகரிக்க, நீரிழிவு மற்றும் மூலநோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
6. மேகம், வெட்டைச்சூடு, கர்ப்பப்பை புண், பெண்களின் மர்ம உறுப்புகளைச் சுத்தம் செய்ய, இந்த இலைகளின் சாற்றைப் பயன்படுத்துவார்கள்.
7. தொண்டைப்புண், வயிற்று நாக்கு பூச்சிகளுக்கும் இதைத் தருவார்கள்.
8. கட்டிகளைக் கரைக்க இலைகளை அரைத்துப் பூசுவார்கள்.
இலைகளை உலர வைத்து ஆய்வு செய்து பார்த்தபோது, இதில் கீழ்க்காணும் புரதச் சத்து உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மொத்தப் புரதம் - 14.79
நார்ப்பொருள் - 21.74
கொழுப்பு - 2.50
மாவுப்பொருள் - 53.99
உலோக உப்புக்கள் - 6.68
கால்சியம் - 2.54
பாஸ்பரஸ் - 0.24
ஜீரணிக்கக்கூடிய பகுதி - 52.20
இயல்பு:குளிர்ச்சி - வறட்சி
முக்கியக் குணங்கள்:மலச்சிக்கலை உண்டாக்கும், இந்திரியத்தை அதிகரிக்கச் செய்கிறது. வயிற்றுக் கிருமிகளைச் சாகடிக்கிறது.
பயன்படுத்தும் முறை: முள் முருங்கையின் இலைகள் மற்றும் பட்டைகள் மலச்சிக்கலை உண்டாக்குகின்ற காரணத்தால் பேதி, வெள்ளைப்படுதல், இந்திரியம் வெளிப்படுதல், நீர்த்துப்போன இந்திரியம் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தவார்கள். குறுகிய கருப்பையை விரிவடையச் செய்யப் பயன்படுகிறது. இதன் மேல் தோலை கஷாயமாக்கிச் சர்க்கரையுடன் கலந்து அல்வா தயாரித்து சாப்பிட்டால் வெள்ளைப்பாடு, நீர்த்துப்போன இந்திரியம், இந்திரியம் வெளிப்படுதல் போன்ற குறைபாடுகள் நீங்கும்.
முக்கியப் பயன்கள்: ஆண்மைக்குச் சக்தியை அளிக்கும். தடைப்பட்ட சிறுநீரையும், மாதவிலக்கையும் பிரியச்செய்யும்.
தீய விளைவுகள் : குடல்களுக்குப் பயனற்றது.
தீய விளைவுகளைச் சரி செய்யும் முறை: இத்துடன் ரோஜா (குலாப்), பாபுனா, பர்கேஷப்தாலு கலந்து பயன்படுத்த வேண்டும்.
அளவு : துளிர் 3 கிராம் முதல் 5 கிராம் வரை, தோல் 5 கிராம் முதல் 15 கிராம் வரை பயன்படுத்தலாம்.
முருக்கன் பூக்களின் மருத்துவ குணங்கள்:இயல்பு : குளிர்ச்சி - வறட்சி (இலேசான உஷ்ணமிருக்கும்)
முக்கியக் குணங்கள்: வீக்கத்தைக் குறைக்கும். உஷ்ணத்தை அகற்றும், மலச்சிக்கலை நீக்குகிறது. சிறுநீர் மற்றும் மாதவிலக்கைப் பிரியச் செய்கிறது.
பயன்படுத்தும் முறை: சிறுநீர் பிரிய, கர்ப்பப்பை கோளாறு நீங்க மற்றும் விரை வீக்கத்தைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது. வெட்டை நோய் மற்றும் வயிற்றப்போக்கு நோய்க்கு இதை ஊற வைத்தோ அல்லது பவுடராகவோ பயன்படுத்துவார்கள்.
அளவு:7 கிராம் முதல் 12 கிராம் வரை பயன்படுத்தலாம். இத்துடன் உப்பு கலந்து பயன்படுத்த வேண்டும்.
விஞ்ஞான ஆய்வு: பூக்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்ததில் தேன் திரவம் அதிகமாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இயற்கையான சாயத்தை எடுக்கின்றார்கள். பூக்களில் பல கிளைகோஸைடுகள் உள்ளன. இவற்றில் ப்யூடின், ப்யூடியின், ப்யூட்ரின், ஐஸோப்யூட்ரின், பலாஸிடரின், கோரியயோப்ஸின், ஐஸோ கோரியோப்ஸின், பலாஸிடரின், கோரியோப்ஸின், ஐஸோ கோரியோப்ஸின், ஸல்ப்யூரியின், மானோஸ் பொமோன்ஸடு, ஐஸோமானோஸ் பெர்மோஸைடு உள்ளன. இவற்றில் மிக அதிகமாக இருப்பது ப்யூட்டரின் என்பதாகும்.
கோவில்களில் வளர்க்கப்படும் கல்யாண முருங்கை மரத்தின் மருத்தவ குணங்கள்:
இன்னொரு வகையைக் கல்யாண் முருங்கை என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில்
INDIAN CORAL TREE என்றும் தாவரவியலில் எரித்திரினா இண்டிகா (ERYTHRINA
INDICA LANK) என்றும் அழைப்பார்கள். இவை காட்டு வேலி ஓரங்களில் வேலி
அமைக்கப் பயன்படுத்துவார்கள். காப்பித் தோட்டங்களில் நிழலுக்காகவும்,
மிளகுச்செடிகளை ஏற்றி வளரச் செய்வதற்கும் நடுவார்கள். இதன் இலைகள் கீழே
உதிர்ந்து பூமியின் ஈரத்தன்மையைக் காக்கிறது.
கல்யாண் முருங்கை மூன்று வகைப்படும். அவற்றில் ஒன்று முள் முருக்கன், இதில் முட்கள் நிறைந்து இருக்கும். இரண்டாவது வகை முள் இல்லாதது. இம்மரங்கள் காப்பித் தோட்டங்களிலும், மிளகுக் கொடித் தோட்டங்களிலும் இதனை வளர்ப்பார்கள். இவ்வகை மரத்தினை தாதம் என்றும் (ERYTHRINA LITHOSPERMA) அழைப்பார்கள். மூன்றாவது வகை சாதாரணமாகவே இரக்கும். இம்மரத்தின் வகையினை எரித்திரினா சுபரோசா என்பார்கள். இதை மிளகுக்கொடியை ஏற்றுவதற்கு நடுவார்கள்.
கல்யாண் முருங்கை மரம் 14 மீட்டர் வரை உயரமாக வளரும். 3 முதல் 4 மீட்டர் வரை நிழல் தரும். இலைகளும் அந்த அளவிற்கு விரிந்து இருக்கும். இச்செடி நேராக வளரும். அவற்றில் இருந்து கிளைகள் உருவாகும். கிளைகளின் நுனியில் மூன்று இலைகள் இருக்கும். இதனை மும்மூர்த்திகள் என்று இந்து சமுதாய மக்கள் அழைக்கின்றனர். இடதுபுறம் இருக்கும் இலையைச் சிவன் என்றும், வலதுபுறம் இருக்கும் இலையைப் பிரம்மா என்றும், நடுவில் இருக்கும் இலையை விஷ்ணு என்றும் குறிப்பிடுவார்கள். சில கோவில்களில் முருக்கன் மரம் கிடைக்காத நிலையில் கல்யாண முருங்கை மரப்பூக்களையும், இலைகளையும் கடவுளுக்குப் படைத்து வழிபடுவார்கள்.
சித்தமருத்துவத்தில் முருக்கன் மரத்தின் அனைத்துப் பொருட்களும் மாமருந்தாகப் பயன்படுத்துவார்கள்.
முருக்கன் மரம் மெல்லிய செடியாக இருக்கும்போது ஆலமர இலைகளைப் போல்
கெட்டியாகவும், அகலமாகவும் இருக்கும். இலையின் மீது மஞ்சள் நிறக் கோடுகள்
இருக்கும். தலையில் காவி மற்றும் சிவப்பு நிறம் கொண்ட அழகான பூக்கள்
இருக்கும். அவை பார்ப்பதற்கு கண்ணுக்கு குளுமையைத் தரும் வகை
ில் இருக்கும். ஜனவரி மாதத்தில் மூன்று அங்குலம் முதல் ஆறு அங்குலம் வரை
பச்சை நிறக்காய்கள் இருக்கும். அது காய்ந்தபின் கருப்பாகக் காணப்படும்.
முருங்கை வடிவில் இருக்கும் இந்தக்காய் சிறிய வடிவில் இருக்கும். இதன்
மேல்தோல் மெல்லியதாக இருக்கும். காய்க்குள் செந்நிற விதைகள் இருக்கும்.
அவை உருண்டை வடிவமாக காணப்படும். அந்த விதைகளைக் குழந்தைகள் எடுத்து
விளையாடுவார்கள். மேலும்.
Nanri ezil