என்றும் அன்புடன்
கௌசல்யா
//நீ
கொடுத்த
சுவாசக் காற்றினை
உன்னுள்ளேயே
பெற்றுக் கொண்டாயோ?//
வலி கொண்ட பாதைக்கு
வழியாகவேனும்
இதழ் சுவை இதமளித்த
அதரமாகவேனும்
நீ
நினைத்திருந்த
உன் நிழல் ஓவியங்களின்
தூரிகையாய்
நானாகாவேனும்....
நீ
என்னை
அழைக்க கூட வேண்டாம்
உன் கையில்
எப்பொழுதும் வாழும்
செல் பேசியாக
இருந்து விட்டு போகிறேன்
தூக்கி எறிந்த
கல்லின் நீர்த்திவலைகளாய்வட்டமிடுகிறேன் - உன்
நினைவுகளின்
குளம் தன்னில் ...
இதயம் கொத்திய
மரங்கொத்தியாய் நீ
உன்னை
என்றும் விலகா
அன்றிலாய் நான்
நீ மட்டும்
அழகில்லையடி
உன் மொழி பேசும்
கொலுசும் தான் ...
நினைவுகளின்
நிழல்களில் - உன்
பாதை தொடரும்ஒரு வழி
பயணமாய்...
என்றும் அன்புடன்
கௌசல்யா
On 5/19/08, கார்த்திக் <karth...@gmail.com> wrote://நீ
கொடுத்த
சுவாசக் காற்றினை
உன்னுள்ளேயே
பெற்றுக் கொண்டாயோ?//
வெளகெண்ணை வழிச்சு சீவி
ரெட்டை சடை பூச்சூடி
பள்ளிக்கூடம் போக சொன்னா
பாண்டியாட போனேனே
நல்ல கற்பனை ...
அன்பின் கௌசல்யா பூஞ்சோலை கவிதையாக வரையறுத்துவிட முடியாது.
நாட்டுப்புற, தெம்மாங்கு பாடலுக்கான வடிவம்.
பூஞ்சோலை நன்றாக வந்துள்ளது
என்றும் அன்புடன்
கௌசல்யா
ஒரு மாலையில்....
பூங்காவின் நெரிசலில் ஒரு
ஓரமாய் நின்றிருந்தேன்
நிதர்சனங்களும்
நிஜங்களின்
நிழலாடும் எண்ணங்களும்
அலைகளாய் ஆடி
சென்றன மனதுள்....
வார்த்தை பரிமாற்றங்களும்
வசந்தத்தின் கற்பனைகளும்
வாயிலின் முன்
நேர் கோடுகளாய்
வரிசையாய் சென்ற
எறும்புகளின் தேடல்களும்
எண்ணங்களின் இசை பாடல்களும்
எல்லையில்லா ஆசையாய் ....
வலை கிழிந்து கீழ் விழுந்த
சிலந்தியின் வலியும்
ஆதரவிழந்து தட்டேந்திய
சிறுவனின் வலியும்
கணக்கத்தான் செய்தது
காத்திருத்தலாய்...
எப்போதும் அந்த மரத்தின் அடியில்
நிற்கும் கிழவியை காண வில்லை
இன்று யாரும் இல்லை
நாளை யாரோ.....
நாளையும் செல்வேன்வலை பின்னிய சிலந்தியையும்
பாட்டி நின்ற வெற்றிட மரத்தையும்
கண் முன்னே காண.....
கவிதை நன்று.. வாழ்த்துக்கள்..
##############
காதல் கவிதைகள்....ஒரு விழி பார்வையால்
தீண்டுகிறாய்
ஓராயிரம் அர்த்தங்கள்தந்து விலகுகிறாய்
###############
முத்து மாலை
அருந்து விட்டதாககூறினேன் ...நீ
முத்த மாலை
சூட வா என்கிறாய்....
###############எவ்வளவு நேரம்
காத்திருப்பது
உன் வருகைக்காகவும்
கை பற்றி நீ கொடுக்கும்
மறை முத்தத்திற்காகவும்
##############வானத்தையே சேலையாக
தருகிறேன் என்றாய்...
பிங்க் வண்ணம் கிடைக்குமா
என்கிறேன் நான்.....
தீந்தமிழாய் இசைகிறது
மொழி என்றால்.....
தேன் மொழியாய்
இனிக்கிறது
உன் முத்தம்.....##############
குடை கொண்டு
வந்தாலும்
நனையவே
விரும்புகிறேன்
மழையிலும் உன்
முத்தத்திலும்
#############இரு கைப்பற்றி
முத்தமிடுகிறாய்
ஒரு ஓசையும்
இல்லாமல்
ஓவியமாகிறேன் .....
வாவ்.. வாவ்.. அருமையான வரிகள்..
##############இதழோர புன்னகை வீசி
விட்டு செல்கிறாய்
என் இதயமும்
சென்று விட்டதடா
உன் புன்னகையுடன்
:-)
என்றும் அன்புடன்
கௌசல்யா
On 8/20/08, sree Koushi <sreek...@gmail.com> wrote:
நன்றி ஆசிஃப் அண்ணா... :)
என்றும் அன்புடன்
கௌசல்யா
On 8/20/08, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:
ஒருவகையாய் கவிதை எழுதத் துவங்குகிறீர்கள் கௌசலயா :-)
வாழ்த்துகள்.
நாளையும் செல்வேன்வலை பின்னிய சிலந்தியையும்
பாட்டி நின்ற வெற்றிட மரத்தையும்
கண் முன்னே காண.....
அருமை அருமைகெளசிக்கா என்னமோ தெரில, இப்டி கவிதைகள்? தான் நமக்கு ரொம்போ புடிச்சிப்போகுதுதொடருங்கள், காத்திருக்கிறோம் (நானும், என் அலுவலக நண்பர்களும்)
ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு
அன்பை செலுத்த இயலும். Jesus Christ / The Holy Bible நீ பிறரின் குணாதிசயங்களைக்
கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/ =============================
ரொம்ப சாதாரணமாய் முதலில் உள்ள வரிகள் எல்லாம் தோன்றின. எத்தனையோ பேர் இப்படி சுவற்றில் படமாய் இருந்ததை சொல்லி இருக்கிறார்கள். இது என்னமோ மனதை செய்கிறது! வெறும் சொற்கள் அல்ல படைக்கப்படுபவை எல்லாம் என்ற என் நம்பிக்கை மீண்டும் உறுதிப்படுகிறது.இந்த கடைசி வரிகள் சாதாரணமாய் இருந்தாலும் உணர்வை வெளியே கொண்டு வந்ததில் அசாத்திய வெற்றி பெற்று விட்டன!
உங்கள் உணர்வை, படித்த என் போன்ற சடத்துக்கும், பதித்ததில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்!
நன்றி சாந்தி அக்கா....அக்கம் பக்கம் நடந்த நிகழ்வுகள் ....மனம் கணக்க வைத்த முடிவுகள்....
என்ன சொல்வது....?இன்னும் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன...விடையில்லா கேள்வியாக....
நல்ல கவிதை கௌசல்யா. நிறைய வழக்கத்தில்லாத வார்த்தைகள் இருக்கிறதே கவிதையில். அவற்றுக்கு அருஞ்சொற்பொருள் தந்தால் என்னை மாதிரி ஆட்களுக்கும் கொஞ்சம் புரியும்
>தீநுரை<
மன்னிக்கவேண்டும்! இது கடலின் நுரையல்ல! கடல்நுரை என்பது ஒரு வகை மீனின் ஓடு! நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதன் பெயரே தீநுரை! கடலின் நுரையல்ல! நான் கௌசல்யா அவர்கள் திராவகம் என்ற பொருளில் சொல்கிறாரோ என்று நினைத்துக் கொண்டிருதேன்.
ஓமிடியை இப்படி பயன்படுத்தலாமா என்று தெரியவில்லை! ஓ நாசமானோம் என்னும் பொருள் செப்புவது போல் வரும்.
கிலேசம் என்பதன் பொருள் துக்கமும், துயரமும் தான்!
>தீநுரை<
மன்னிக்கவேண்டும்! இது கடலின் நுரையல்ல! கடல்நுரை என்பது ஒரு வகை மீனின் ஓடு! நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதன் பெயரே தீநுரை! கடலின் நுரையல்ல! நான் கௌசல்யா அவர்கள் திராவகம் என்ற பொருளில் சொல்கிறாரோ என்று நினைத்துக் கொண்டிருதேன்.
தீநுரைக்கு கடல் நுரை என்று தான் பொருள் குறிப்பிட்டு இருக்கிறது
ஆமாம் கௌசல்யா அவர்களே! Cuttle-bone எனும் அந்த பொருளுக்கு கடல்நுரை என்றுதான் பெயர். நீங்கள் படித்த அகராதியில் பக்கத்தில் ஆங்கில பெயரை போடாததால் நீங்கள் குழம்பியிருக்கலாம். சென்னை பல்கலைக்கழக அகராதியில் போட்டிருக்கிறார்கள் பாருங்கள்!
1. தீநுரை tī-nurai : (page 1940)
வடிநீர். 3. Sweet liquid of the tender coconut; இனிய இளநீர். தாழைத் தீநீரோடு (புறநா. 24). 4. Acid; திராவகம். (மூ. அ.)
தீநுரை tī-nurai
, n. Cuttle-bone; கடல் நுரை. (யாழ். அக.)
தீப்தம் tīptam
, n. < dīpta. 1. Splendour,
>sponge - நுரைபஞ்சு<
எப்படி நுரை பஞ்சு என்று ஸ்பான்ஜை சொல்கிறோமோ அப்படி cuttle-boneஐயும் கடல் நுரை என்று சொல்கிறோம் என்று சொல்ல வருகிறீரா கணேஷ்? நான் புரிந்துக் கொண்டது சரியா?
>sponge - நுரைபஞ்சு<
எப்படி நுரை பஞ்சு என்று ஸ்பான்ஜை சொல்கிறோமோ அப்படி cuttle-boneஐயும் கடல் நுரை என்று சொல்கிறோம் என்று சொல்ல வருகிறீரா கணேஷ்? நான் புரிந்துக் கொண்டது சரியா?
கௌசல்யா அவர்களின் அனுமதியோடு இந்த இழையில் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன்.
தீநுரை என்ற பெயருக்கு வடிநீர் என்ற பொருள் உண்டு. ஏனென்றால் தீயினால் ஆவியாகி பின் குளிரசெய்வதன் மூலம் அதை பெறுவதால்!
தீநுரை என்று இளநீருக்கு பெயருண்டு. இங்கே தீ என்றால் இனிப்பான என்று பொருள்.
தீநுரை என்று திராவகத்துக்கு பெயர். காரணம் சொல்ல வேண்டுமா என்ன? Acid எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் தான் தெரியுமே!
தீநுரை என்று கடல்நுரைக்கு (cuttle-bone) க்கு ஏன் பெயர் தெரியுமா? மிக அதிக அளவில் அது உஷ்ணத்தை தாங்கும். பொற்கொல்லர்கள் அதை மோல்டாக பயன்படுத்துவர். அதனால் தீநுரை என்று பெயர். :)
கிலேசத்திற்கு ஒரு வகையான சந்தேகம் என்ற பொருள் வருமா என்று தெரியவில்லை.
கிலேசம் kilēcam
, n. < klēša. Affliction, distress, pain, anguish, sorrow, grief; துக்கம்.
கிலேசி-த்தல்
க்லேசம் எனும் சொல் வடமொழி சொல். சரியான உச்சரிப்பு க்லேஷம். அதன் பொருளையும் பாருங்கள்.
1 kleza m. pain , affliction , distress , pain from disease , anguish
இங்கே z என்பது ஷ என்ற எழுத்தை transliterationல் சொல்லுகிறது!
உண்மை தான் எழில்.....நான் வைத்திருக்கும் அகராதியில் தமிழ் - தமிழ் மட்டுமே உள்ளது.
தமிழ் - ஆங்கிலம் இருக்கும் புத்தகம் வாங்குகிறேன்..உங்கள் இந்த பதிவின் மூலம்
நான் பயன்படுத்திய சொற்களின் அர்த்தமும் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி...
என்றும் அன்புடன்
கௌசல்யா.
//நீங்கள் படித்த அகராதியில் பக்கத்தில் ஆங்கிலபெயரை போடாததால் நீங்கள் குழம்பியிருக்கலாம்//உண்மை தான் எழில்.....நான் வைத்திருக்கும் அகராதியில் தமிழ் - தமிழ் மட்டுமே உள்ளது.
தமிழ் - ஆங்கிலம் இருக்கும் புத்தகம் வாங்குகிறேன்..உங்கள் இந்த பதிவின் மூலம்
நான் பயன்படுத்திய சொற்களின் அர்த்தமும் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி...
என்றும் அன்புடன்
கௌசல்யா.
என்னமோ போங்க. பெரியவக, புலவருங்க விவாதிக்கிரீக. நமக்குத்தேன் ஒண்ணும் மண்டையில ஏரல (பாடப் புத்தகம் மாதிரியே!).
என்றும் அன்புடன்
கௌசல்யா