நமது குழும நண்பர் கவிஞர் அகிலன் இந்த வார தமிழ் மண நட்சத்திரமாக மிளிர்கிறார்.
அகிலனுக்கு வாழ்த்துகள்
இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு இதே மேமாதத்தின் ஏதோ ஒரு நாளில் நான் முதல் முதலாக கணிணியைத் தொட்டிருக்கிறேன். ஒரு பொருத்தத்திற்காக மே மாதம் என்று சொல்கிறேன் என நினைக்க வேண்டாம் உண்மையிலேயே அது அப்படித்தான் நடந்தது. எங்களிற்கு பிசிக்ஸ் படிப்பிச்ச வாத்தியாரான அல்லது நண்பரான பிரதீப் என்றவருடன் நான் 2004 ஏப்ரல் ல நடந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் முடிவடைந்ததும் தான் நான் அது வரை கண்காட்சிகளில் மட்டுமே பார்த்து வந்த கணியியை தொட்டுப் பார்த்தேன் முதல் முதலாய். அதற்கு முன்பாக கணிணி என்கிற சொல்லைக் கேள்விப்பட்டதோடு சரி. அல்லது அந்தப் பொருளை ஏதோ ஒரு பிராணியைப் பார்ப்பது போல கண்காட்சிகளில் பார்ப்போம் கொழும்பு அல்லது வவுனியாவில் இருந்து வருகிற கணிணி விற்பன்னர்கள் யாராவது எங்களிற்கு அந்த அற்புத விளக்கின் அருமைபெருமைகளையெல்லாம் சொல்லுவார்கள்.
கணிணியில் நான் முதல் முதலில் தெரிந்து கொண்ட விசயமே இன்ரநெற் எக்ஸ்புளோரர்தான். (அதன் முக்கியமான காரணம் அநேகமாக நீங்கள் நினைப்பதுதான்) இணையத்திற்குள் எப்ப நுழைய வேண்டும் என்கிற விசயங்களையெல்லாம் பிரதீப் சொல்லித்தந்தார் ஒரே ஒரு நாள் எங்களுடன் வந்து. அதற்கு அடுத்த நாள் நானும் பிரசாந் என்கிற நண்பனும் இன்ரநெற் and இமெயில் என்று யாரோ எழுதிய புத்தகத்தை துணைக்கு கூட்டிக்கொண்டு ஒரு இமெயில் கிரியேட் பண்ணுவதற்காக போனோம் கொட்மெயிலைத் திறந்து ஏறக்குறைய பலதடைவைகள் விடாது முயற்சித்த பின் இமெயில் கணக்கு திறக்கப்பட்டு வெல்கம் கோபாலப்பிள்ளை என்று சொன்னது கணிணித் திரை. நீங்கள் நினைக்கலாம் நான் அகிலன் நண்பன் பிரசாந் ஏன் வெல்கம் கோபாலப் பிள்ளை எண்டு சொல்லுது என்று எங்களது ஆங்கில அறிவினதும் போதாக்குறை பிரசாந்திற்கு கிரியேற் பண்ண அது கோபாலப்பிள்ளைக்கு (அவன்ர அப்பாக்கு) கிரியேற்றாச்சு. இதில பாஸ் வேட் வேற பிரசாந்தின்ர அவான்ர பேர்ல. விதியை நொந்து கொண்டே 200 ரூபாய் கொடுத்து விட்டு வெளியில் வந்தோம் அப்போது மணிக்கு 100 ரூபாய் இணைய உலாவி மையங்களில் இணையம் பயன்படுத்துவதற்கு வசூலிப்பார்கள். அதற்குப்பிறகான நாட்களில் நாங்கள் வெற்றிகரமாக எங்களிற்காக மெயில்களை திறந்து விட்டாலும் வெல்கம் கோபாலப்பிள்ளைதான் எங்கள் முதல் கன்னி அல்லது கணிணி முயற்சி.
என்ன இருந்தாலும் இணையத்தை நான் சரளமாகப் பயன்படுத்தியது இரண்டாயிரத்து ஐந்தின் இறுதியில் இருந்துதான். நான் கவிதைகள் என்று எழுதியவற்றை பஹீமா அக்காவிற்கு அனுப்பிக்கொண்டிருப்பேன் அவர்தான் எனது கவிதைகளை அன்புடன் என்கிற குழுமத்தில் இட்டார் முதலில் பிறகு என்னையும் சேர்த்துவிட்டார் அந்த குழுமத்தில். இணையத்தில் எனது எழுத்து என்றால் குழுமங்களில் எழுதியதுதான் முதல் தடைவை. (பஹீமா அக்காவிற்கு நன்றி) அதற்குப் பிறகு கீற்று, திசைகள், திண்ணை போன்ற இணைய இதழ்களிற்கு கவிதைகள் அனுப்பினேன். அதில் பிரசுரமான கவிதைகளை எடுத்து அன்புடன் குழுமத்தில் இட்டதிலிருந்து அதற்குப்பிறகான நிறைய உதவிகளைத் தொடர்ந்து இன்றுவரைக்கும் செய்துவருகிறார் விக்கி அண்ணா. (விக்கி அண்ணாவிற்கும் நன்றி)
எனக்கு தமிழ் மணத்தை 2006ல் அறிமுகப்படுத்தியவர் நண்பர் நிலவன். அதற்குப் பிறகு நான் சொந்தமாக வலைப்பூக்களைத் திறந்து கொண்டேன் (விக்கி அண்ணா மற்றும் சேதுக்கரசி அக்காவின் தொழில் நுட்ப உதவிகளோடு.) இதே இப்போது இரண்டாண்டுகள் கழித்து நண்பர் சயந்தனின் உதவியோடு சொந்த இணையத்தளத்தில் இருந்து என் நட்சத்திர வாரத்திற்கு எழுதுகிறேன்.
நான் கிளிநொச்சியில் இருந்து சென்னைக்கு வரும்போது யாரும் இல்லாமல் வந்தேன். இணைய மூலம் கிடைத்த நண்பர்கள்தான் எனக்கு உதவினார்கள் இந்தியாவில் முதல்முதலாக. தனியாய் இன்றைக்கு கிளிநொச்சியில் இருக்கிற யாராவது இந்த நட்சத்திர வணக்கத்தினை படிப்பதற்கான சாத்தியங்கள் எவ்வளவிற்கிருக்கின்றன? மணிக்கு 100 ரூபாய்க்கோ அல்லது 200 ரூபாய்க்காவது இணைய வசதி அங்கே இருக்கிறதா? அல்லது 2003 ற்குப் பின் வந்த கணிணிகளைத் இயக்குவதற்கான மின்சாரம் இருக்கறதா? பதுங்குழி வாழ்க்கை வாழ்கின்ற அவர்களின் தற்போதைய வாழ் நாட்களில் இந்தக் கேள்விகளிற்கெல்லாம் பதில் அநேகமாக இல்லை என்பதே. எப்போது வரைக்கும் இந்தப் பதில் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. என் மண்ணில இருக்கிற யாராவது பார்ப்பதற்குச் சாத்தியங்கள் இல்லை என்கிற போதும் கிளிநொச்சியில் இருந்து முதல் முதலில் வலைப் பதிய ஆரம்பித்தவன் என்கிற வகையில் மிகவும் பெருமையடைகிறேன் நட்சத்திரமானதற்கும்.
குறிப்பு
கிளிநொச்சியில் திருநகர் என்கிற அழகான கிராமத்தில் இருக்கிற என் வீட்டில்
என்னுடைய மேசையில் மின்சாரமற்றுப் பாழடைந்து போயிருக்கக் கூடிய நான்
விட்டு விட்டு வந்த என்னுடைய முதல் கணிணிக்கு இந்தப் பதிவு காணிக்கை.
- த.அகிலன்.
அந்த வேதனையிலும் எனக்குப் பொத்துக்கொண்டு சிரிப்பு வந்தது. பின்ன நாலு நளா கோல்ட் ஆக்ட்,சமஹன்,பனடோல்,ஆக்சன் 500 எண்டு முயற்சி செய்து செய்து தோத்துப்போய் ஆஸ்பத்திரிக்குப்போனா. போன உடனேயே ஒரு நர்சம்மா வாயில தெர்மா மீட்டரை செருகி உடைஞ்சா 100 ரூபாய் எண்டு சொன்னா சிரிப்பு வருமா வராதா? ஒரு வேளை நோயால் துவண்டு போயிருக்கும் நோயாளிகளை கொஞ்சம் சிரிப்பு மூட்டத்தான் அவா இந்த விசயத்தை சொல்லியிருப்பாவோ? என்னவோ? ஆழ்வார்ப் பேட்டை ஆண்டவா இது என்ன மனோபாவம்? நேரடியாகப் பேரத்தில் இறங்குகிற மனோபாவம்;. ஒரு நோயாளியிடம் முதலிலேயே பணத்தைப் பற்றிப் பேசினால் மனசுக்கு எப்படித் தெம்பு வரும். எனக்கு கோபம் கூட வந்தது. ஆனா அந்தச் சம்பவம் ஆஸ்பத்திரிகள் பற்றிய என் நினைவுகளை நான் கடந்து வந்த ஆஸ்பத்திரிகளை மறுபடியும் நினைச்சுப்பார்க்க வைச்சது.
சென்னைக்கு வந்த இவ்வளவு நாளில் நான் இரண்டாவது தடைவையாக ஆஸ்பத்திரிக்கு போயிருக்கிறேன். மற்றபடி கை வைத்தியம்தான். எனக்கு ஊசிபோல உடம்பென்பதால் கொஞ்சம் நோய்ப்பிரச்சினையும் குறைவாகத்தான் இருந்தது எண்டு வையுங்கோவன். அம்மா அரசாங்க உத்தியோகம் (ரீச்சர்) பார்க்கிறவா எண்டதால நாங்கள் அரசாங்க ஆஸ்பத்திரியில மருந்தெடுக்கிறது குறைவு. ஏன்? நான் பிறந்ததே ஒரு பிறைவேற் ஆஸ்பத்திரியில தான் எண்டாப் பாருங்கோவன்.(ரொம்ப முக்கியம்) இலங்கையில் அதுவும் கிளிநொச்சியில் பிள்ளைகள் அரசாங்க ஆஸ்பத்திரியில் பிறப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். அதுவும் இற்றைக்கு கால் நூற்றாண்டுக்கு முன்பு அப்படி ஒரு பிறைவேற் ஆஸ்பத்திரியில் பிறக்கிறது பெரிய விசயம் தான். (இப்ப அம்மா என்னைக் காசு கொடுத்து பெத்தது குறித்து கவலைப் படுறா எண்டது வேறு விசயம்)
எனக்கு நினைவு தெரிஞ்சு ஆஸ்பத்திரி நினைவுகளில்
முதலாவதாக இருப்பது. காலில் சிராய் ஏறினதுதான். அதைவிட ஆஸ்பத்திரி
என்றவுடன் நினைவுக்கு வருவது சாந்தி கிளினிக்தான். இப்போதும் நல்லா
நினைவிருக்கு கரடிப்போக்குச் சிங்கர் கொம்பனிக்கு பக்கத்தில நீலக்கலர்
பெயின்ற் அடிச்ச சின்னக் கட்டிடம். ஒரே ஒரு வாங்கு அது பச்சைக் கலர் கடும்
பச்சை. கொஞ்சம் மண்ணிறப் போத்தலுகள் அதுக்குள்ள திரவ மருந்துகள்.
கத்திரிக்கோல் இன்ன பிற டாக்குத்தர்மாரின்ர தடியள் பொல்லுகள்(அவர்கள்
பாவிக்கிற உபகரணங்கள்) எண்டு காட்சி அளிக்கும் அந்தக் கிளினிக். அதே
மாதிரி டொக்ரர் என்றாலே நினைவுக்கு வாறது சுப்பையா டொக்ரர் தான். அவற்ற
தான் சாந்தி கிளினிக். இப்ப அவர் உயிரோட இருக்கிறாரா? இல்லையா? என்றது
தெரியாது. ஏனென்றால் அவர் அப்பவே முக்காக்கிழவர். அவற்ற வயிறு மேசையில்
முட்டிக்கொண்டிருக்க கழுத்தில தொங்கிற தெதஸ்கோப்போட அவர்
வீற்றிருக்கிறதைப் பாத்தால் எனக்கு பூந்தளிர் புத்தகத்தில வாற கண்ணாடி
போட்ட யானைதான் நினைவுக்கு வரும். அங்கயும் ஆஸ்பத்திரிக்கு போன உடன
வாய்க்குள்ள தெர்மா மீற்றர் வைச்சுப் பாக்கிறவைதான் (ஆனா உடைஞ்சா நூறு
ரூபாய் எண்டு சொல்ல மாட்டினம்) என்ன வியாதிக்கு வைத்தியம்
பார்க்கப்போனாலும் போன உடன சுப்பையர் வயித்தைத்தான் முதல்
பிடிச்சிழுப்பார் யானை தன் தும்பிக்கையால் இழுக்கிற மாதிரியே இருக்கும்.
இதுக்குள்ள தன்ர கரகரத்த குரலால் “என்னடா குழப்படியா” எண்டு வேற கேப்பார்.
எப்படியிருக்கும் எண்டு நினைக்கிறியள் (உங்கள் கற்பனைக்கு சின்ன இடைவெளி)
சுப்பையர் மீது எனக்கு லோசான பயம் இருக்கிறதுக்கு அவரோடு
நிகழ்ந்த முதல் சந்திப்புத்தான் காரணமாயிருக்கலாம் எண்டு நினைக்கிறேன்.
அநேகமாக எனக்கு முதல் சந்திப்புக்கள் எப்பவும் ஏடாகூடமாத்தான் நிகழும்.
என்ர ராசி அப்படி. மாமா வீட்டில் வீடு கட்ட அடுக்கியிருந்த
பனந்தீராந்திகளில ஏறி விளையாடக் கூடாது எண்டு வீட்டுக்காரர்
சொல்லியிருந்தாலும் நாங்கள் அதற்கு மேல ஏறி விளையாடிறனாங்கள். நீ
அப்படித்தான் செய்திருப்பாய் என்றதைச் சொல்லித்தான் தெரியோணுமோ எண்டுதானே
உள்ளுக்குள்ள நினைக்கிறியள் அப்பயிருந்து இப்ப வரைக்கும் வீட்டுக்காரர்
சொல்லிறதை எப்பவாவது கேட்டிருக்கிறனா? அதை விடுவம். விளையாடேக்க ஒரு
பனந்தீராந்திக்கு என்ர காலை மிகவும் பிடிச்சுப்போய் இரண்டு மூன்று சிராயை
சுருக்கெண்டு என்ர கால்ல ஏத்தி விட்டுது. கால்ல ஒரு ஒண்டரை இன்ஞ்சிக்கு
சிராய் ஏறியிருந்தாலும். விசயத்தை சொல்லி அம்மாட்ட எதுக்கு ஒண்டரை அடி
நீளமான கம்பால அடிவாங்குவான் எண்டு நினைச்சு சொல்லாம அமைதிகாத்திட்டன்.
சிராய் உள்ளுக்குள்ள கால்மீதான தன்ர பிரியத்தை கொஞ்சம் அதிகமாக் காட்டக்
காட்ட கொதி வலிதாங்காம நான் காத்த அமைதியைக் குலைத்து நான் கத்த. (இங்க
கட் பண்ணினா……)
சுப்பையரின்ர சாந்தி கிளினிக்கில நிக்கிறம் நானும் பெரியக்காவும் அம்மாவும். மூன்று தையல் போடவேண்டி வரும் என்றார் சுப்பையர். நான் ஏதோ தையல் மெசினில வைச்சுக் காலைத் தைக்கப்போறாங்களாக்கும் எண்டு நல்லாப் பயந்திட்டன். பிறகு பாத்தா என்னைக் கட்டில்ல படுக்க வைச்சிட்டு சுப்பையரும் நேசும் ஒரு சின்னப் பெட்டியோட வந்திச்சினம். அப்ப தையல் போடுறதெண்டிறது ஏதோ சின்னப் பிரச்சினைதானாக்கும் எண்டு நான் நினைச்ச நினைப்பு கனநேரம் நீடிச்சிருக்காதெண்டு உங்களிற்குத் தெரியும்தானே. கட்டில்ல என்னை அமத்திக் கிடத்தி. சுப்பையர் தன்ர சிறிய பளபளப்பா மினுங்கும் கத்தியை பெட்டிக்குள்ள இருந்து எடுத்து ஓங்கவும் ( ஒரு பில்டப்புக்கு) அய்யோ என்னை வெட்டுறாங்கள் எண்டு நான் கத்திக்கொண்டு கட்டிலை விட்டுக் குதிக்கவும் சரியா இருந்தது.
அண்டைக்கு அந்தச் சம்பவத்தை நேரில் பாத்த இரண்டு சாட்சிகள் கனநாளைக்கு அந்தச் சம்பவத்தை நினைவில் வைச்சிருந்தவை. ஒராள் எங்கட பள்ளிக் கூடத்தில் படிப்பிச்ச கலா ரீச்சர். இந்த விசயம் நடந்து கிட்டத்தட்ட மூண்டு வருசம் கழிச்சு நாலம் வகுப்பில நான் அவாட்ட படிக்கிற சந்தர்ப்பம் வாய்ச்சது. அவா முதல் நாள் வகுப்பிலேயே புத்தகத்தை தந்து என்னை வாசிக்கச் சொல்லிப்போட்டு வாசிச்சு முடிக்கும்போது கேட்டா “டேய் நீதானே சுப்பையர்ற கிளினிக்ல என்னை வெட்டுறாங்கள் வெட்டுறாங்கள் எண்டு கத்திக்கொண்டு ஓடினது?” பெடியளெல்லாம் கொல்லெண்டு சிரிப்பு. பெட்டையள் கெக்கெக்கே பிக்கெக்கே எண்டு ஒரே சிரிப்பு. எனக்கு அதுக்குப்பிறகு பள்ளிக் கூடத்தை விட்டு வரும் வரைக்கும் கலாச்ரீச்சர் மீது நல்ல அபிப்பிராயம் வராததற்கு இந்த சம்பவம்தான் காரணம் எண்டு நினைக்கிறன்.
மற்ற இன்னொரு சாட்சி அணில். என்னடா இவன் காலுக்குத் தையல் தானே போட்டவன் என்ன ராமர் பாலம் கட்டின மாதிரி அணில் எண்டு சொல்றானே எண்டு பார்க்காதேங்கோ. அது அவாக்கு பட்டப்பேர். அவா ஒரு இயக்க அக்கா. அம்மாட்ட படிச்சவாவாம். (பாவம் அவா!!) ரீச்சற்ற மகன் அழுகிறானே எண்டு நினைச்சு அவா என்னை ஆறுதல் படுத்தும் விதமாக நாலு வார்த்தை சொல்லி தன்ர பொக்கற்றுக்க வைச்சிருந்த ஒரு ஸ்டிக்கரை எடுத்துத் தந்தவா. பச்சைக்கலர் தமிழீழப் படத்தின்ர பின்னணியில பிரபாகரனும் மாத்தையாவும் பக்கத்தில பக்கத்தில நிக்கிற படம் போட்டிருந்தது அந்த ஸ்டிக்கரில. அவாவை நினைவு வைச்சிருக்கிறதுக்கு அந்த ஸ்ரிக்கர் மட்டும் காரணமில்லை. அவா வெட்டியிருந்த கிப்பியும்தான் காரணம். கிப்பி வெட்டியிருக்கிறாக்களை அப்ப எங்கட ஊரில பார்க்கிறது அரிது. அப்படி வெட்டினாக்களைத் திமிர் பிடிச்சாக்கள் எண்டு சொல்ற ஒரு காலமும் இருந்தது. கூடுதலா இயக்க அக்காக்கள் தான் கிப்பி வெட்டியிருப்பினம். நான் அவாக்கு அணில் எண்டு பேர் வைச்சன் ஏன் எண்டது நினைவில்லை. நான் அந்த ஸ்டிக்கரை கனநாள் ஒட்டாமலே என்ர மற்ற ஸ்ரிக்கருகளோட சேர்த்து வைச்சிருந்தனான். பிறகொருநாள் பெரியண்ணா அந்த ஸ்ரிக்ரை எடுத்து ரெண்டா வெட்டிப் பாதியைக் கிழிச்செறிஞ்சிட்டான். இதோ இப்பயும் அந்தத் தழும்பைப் பார்க்கிறன் அப்படியே கிடக்கு கால்ல நினைவுகளைக் கிளறிக்கொண்டு.
இந்த சிராய் ஏறின நினைவுதான் சுப்பையர் எண்டதும் முதல் எனது நினைவடுக்குகளில் வருவது. அதற்குப்பிறகு ஆண்டுக் கணக்குகளாக பலதடைவைகள் அவரிடம் வைத்தியத்துக்குப் போயிருக்கிறேன். அங்க சிவானந்தி எண்டொரு அக்கா கனநாளா வேலை செய்தவா. பிறகு கிளிநொச்சியில் இருந்து இடம் பெயரும் மட்டும்தான் இதெல்லாம். இடப்பெயர்வோட சுப்பையர் வவுனியாவுக்கு அங்கால போட்டார். பிறகு சிவானந்தி அக்கா பிக்பென்ஸ் புத்தகக் கடையில வேலை செய்து கொண்டிருந்ததைக் கண்டன். அவா என்னைச் ரீச்சற்ற மகன் எண்டு நினைவு வச்சிருந்தவா அது ஒன்றே அந்தப் புத்தகக் கடைக்கு பிறகு நான் போகாததற்கு காரணமாயிருந்தது.
அதற்குப்பிறகு வந்த அகதி வாழ்வின் ஆஸ்பத்திரி அனுபவங்கள் வித்தியாசமானவை. பிணியும் துயரமும் தான் மக்களைப் பாடாய்ப்படுத்தியது. உடலை விட மனம் அதிகமாய்ப் பாதிக்கப் பட்டிருந்தது. அதிகமாக இருந்த வியாதி மலேரியா எங்கெங்கு காணிலும் மலேரியா. மலேரியா மட்டுமல்ல மலேரியான்ர அக்கா தங்கச்சி காய்ச்சலுகளும் கூட. மக்களை வாட்டி எடுத்தது. அப்போது இலங்கையின் இராணியாக இருந்த சந்திரிகா எங்களை ஊரை விட்டுத் துரத்தி. எங்கட ஊருக்கு வருகிற மருந்துப்பொருட்களையும் மொத்தமாக தடை செய்திருந்தார். அந்த மலேரியாக் காலத்தில் எங்களைக் காப்பாற்றியது இரண்டு ராணிகள். இந்த இராணிகள் இரண்டு பேரும் இல்லாவிட்டால் நிச்சயமாய் வன்னிப் பகுதியின் சனத்தொகை பாதியாகக் குறைந்திருக்கும்.
அவர்களில் ஒருத்திக்குப் பேர் குளோரோக் குயீன் மற்றவாக்குப் பெயர் பிறீமாக் குயீன். குளோரோ அக்கா என்றால் பிறீமா தங்கச்சி. இரண்டும் செம வட்டம். இந்த இரண்டு ராணிகளிடமும் தான் மொத்த மக்களும் சரணாகதி அடைந்திருந்தார்கள். இராணிகளும் பாவம் பார்க்காம எல்லாருக்கும் தங்கள் அன்பைப் பொழிந்தார்கள். காய்ச்சல் எண்டு சொன்னாப்போதும் உடன கண்ணை மூடிக்கொண்டு தருவார்கள் இந்த இரண்டு குயீனையும். காய்ச்சல் வராம இருக்கோணுமா அதுக்கும் இதுதான் கிழமைக்கு இரண்டு குளேராக் குயீன் அடியுங்கோ மலேரியா தலைவைச்சுப் படுக்காது. ஆனா அப்படியெல்லாம் கிழமை தவறாமக் குடிச்சும் மலேரியா கட்டில்போட்டே படுத்திருக்கு சிலர் உடம்பில. ஒரு பாலர் வகுப்புப் பெடியனைக் கூப்பிட்டுக் கேட்டாலே அவன் தலைகரணமாச் சொல்லுவான். ஒரு மலேரியா டோஸ் எப்படி என்ன அளவுகளில எப்ப எப்ப போடவேணும் என்றதை.
காய்ச்சல் சம்மந்தப்பட்ட மலேரியான்ர அக்கா தங்கச்சி வியாதிகளான நெருப்புக்காய்ச்சல்,மூளைக்காய்ச்சல் இன்னும் டிசைன் டிசைனான காய்ச்சல்களுக்கெல்லாம் ஒரே மருந்து அருமருந்து குளோரோக்குயின் மற்றும் பிறீமாக் குயின்தான். (வேற மருந்திருந்தாலும் கிளிநொச்சியில அதெல்லாம் கிடைக்கிறது அரிதப்பு) மலேரியா சம்மந்தமான வியாதிகளால் நிரம்பி வழிந்தன வைத்திய சாலைகள் (கள் பொருந்தாது எண்டு நினைக்கிறன்) ஒண்டே ஒண்டு இருந்தது கிளிநொச்சியில அக்கராயன் வைத்தியசாலை. அதில கூட்டத்தை சமாளிக்க முடியாம திணறிச்சினம் வைத்தியர்மார். விடியக் காலை இரண்டு மூண்டு மணிக்கெல்லாம் போய் நம்பர்த்துண்டு எடுக்கவேண்டியிருந்தது. எனக்கு தெரிஞ்சு பெரியப்பா விடியப்புறம் 3 மணிக்கு போய் நம்பர்த்துண்டு எடுத்திருக்கிறார். அப்படி நேரத்தோட போனாலும் ஒரு இருநூறாவதோ முன்னூறாவதோத்தான் நம்பர் கிடைக்கும். இந்தக் கூட்டத்தை சமாளிக்க முடியாம மலேரியாவுக்கு இது இதுதான் குழிசை நீங்களே இதை இன்ன இன்ன அளவுகளில் போட்டுக்கொள்ளலாம் எண்டு ஈழநாதத்தில விளம்பரம் செய்தார்கள்.
அது தவிரவும் சென்னையில் துணிக்கடை,கணினிக் கடை எண்டு எல்லாத்துக்கள் விளம்பரம் பெரிய அளவுகளில வைக்கப்பட்டிருக்கே. துணிக்கடைக்கான விளம்பரத்தில துணிகள் குறைவாகவும் பெண்களின் இடுப்பை அதிகமாகவும் பயன்படுத்தி பெரிய டிஜிட்டல் பேனர்கள் வைத்திருப்பது போல மலேரியாவுக்கான குழிசைகளை என்ன அளவுகளில் உட்கொள்ள வேண்டும் என்பதை பெரிய அளவுகளில் முக்கியமான இடங்களில் பெயின்றால் எழுதி விளம்பரம் செய்திருப்பார்கள். அதில ஒரு சின்ன வட்டத்தில நுளம்பும். ஒரு காய்ச்சல் காரர் இருமுற மாதிரியும் படம் போட்டிருக்கும். இந்த இரண்டு ராணிகளும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள்.
மலேரியா வந்தால் அதுல சொல்லப்பட்டிருக்கிற அளவுக்கு இந்தக் குழிசைகளை (மாத்திரைகளை)குடிச்சாலே மனிசன் பாதி செத்துப் போயிருவான். ஒரு கிலோ நல்ல முத்தின பாவற்காயாப் பாத்து வாங்கி அப்படியே ஒரு சொட்டுக் கூட வீணாகாமல் யூசாப் பிழிஞ்சு நீங்கள் காய்ச்சலா இருக்கும்போது தந்தால் எப்படியிருக்கும். (நலமாய் இருக்கும்போது மட்டும் குடிக்கலாமாக்கும்) அப்பிடித்தான் இருக்கும் ஒரு குளோரோக் குயின். இதில 4 குளிசையை ஒண்டாக் குடிக்க வேண்டியும் வரும். சுப்பையா டொக்கரர் தையல் போட்டதே பரவாயில்லைப்போல என்று நினைக்குமளவுக்கு இருக்கும். அப்பிடியே ஒரு குழிசையைத் தண்ணியை ஊத்தி வாயில் போட்டால்…. (இந்த இடத்தில் போட்டால்…….ஆல் ஆல் எண்டு எக்கோ எபக்ற் குடுக்கவும்)
வயித்துக்குள்ள பாதி வழி போன மச்சான் திரும்பி வருவான் உள்ளயிருக்கிற மிச்ச மச்சான் மாரையும் கூட்டிக்கொண்டு. கொஞ்சமாச் சாப்பிட்டிருப்பம் அதுவும் சாப்பிட முடியாமச் சாப்பிட்டிருப்பம் குளோரோக் குயின் போட்டாப்போதும் சாப்பிட்டதைவிட அதிகமா வெளியில வரும். அதுக்கு அப்படி ஒரு சக்தி சத்தியை(வாந்தி) வரவைக்கிற சக்தி. இந்த நேரங்களில் தான் எனக்கு அபிதாவில எரிச்சல் எரிச்சலா வரும். அபிதா என் எருமை அய்யோ அருமைத் தங்கச்சி. மனுசன் சத்தி எடுத்துப்போட்டு கைச்சல் கொஞ்சம் குறைவாக் கிடக்கே எண்டு நிம்மதியாகிற நேரத்தில வருவாள் அண்ணா எடுத்த சத்திக்கு மண்போடுறன் எண்ட பாசப்போர்வையோட.(இப்படித்தான் நிறையத் தங்கச்சிமார் அலையினம் கவனம்) வந்து பூதக்கண்ணாடி வைச்சுப் பாத்து பெரியம்மா…… எண்டொரு இழுவை அழைப்பை மேற்கொள்வாள். அண்ணா குழிசையையும் சேர்த்து சத்தி எடுத்திட்டான் எண்டு அக்கறையோடு தன்ரை கண்டு பிடிப்பை வெளியிடுவாள். பெரியம்மாவும் உடன அப்ப திரும்பவும் ரெண்டு குழிசையைப் போடவேணும் எண்டு சொல்லுவா. மனுசன் குடுத்திருக்கிற அளவையே குடிக்கமுடியாமத் திண்டாடுறான் இதுக்கிள்ள எக்ஸ்ரா பிட்வேற.
அம்மம்மா இப்படி குழிசை குடிக்க அஞ்சுபவனாய் நான்
இருக்கிறதால. தான் குடிநீர் வைச்சுத்தாறன் அதைக் குடிச்சால் மலேரியா
துண்டைக்காணம் துணியைக் காணம் எண்டு ஓடிரும் எண்டு சொன்னா. நானும் ஒரு அறு
சுவையோட ஒரு தேவ பானத்தை எதிர்கொண்டு காத்திருந்தன். ஆனா அம்மம்மா கொண்டு
வந்த பானத்தைக் கண்டு நான் துண்டைக் காணம் துணியைக்காணம் எண்டு
ஓடவேண்டியதாப் போச்சுது. அம்மம்மா மலேரியாத் தடுப்பெண்டும் அதோட சேத்து
மற்ற எல்லாக்கிருமிகளுக்கும் வேட்டு வைக்குமென்றும் சொல்லி வேப்பம்
பட்டையை அவிச்சு அதைக்குடிக்கச் சொல்லிக் கொடுமைப்படுத்துவா. இதுக்கு
குளோரோக் குயினே தேவலாம் போல இருக்கும்.
ஆனால் இப்படிக் கசப்பான குழிசைகளையும் தேனாமிர்தம் மாதிரி சப்பிச் சாப்பிடுற அதிசயப் பிறவி ஒருத்தன் எனக்கு நண்பனா வாய்ச்சவன் சதீஸ்கண்ணா எண்டது அவன்ர திருநாமம். இந்த முக்கியத்துவமும் அதிசயமும் ஒருங்கே அமையப்பெற்ற தகவலைச் சொல்லாவிட்டால் நான் பெரிய வரலாற்று தவறிழைத்தவனாவேன் எண்டதால இதைச்சொல்றன். மலேரியாச் சகோதரி வியாதிகள் மட்டுமல்ல அவ்வப்போது சில காதல் பிரச்சினைகளுக்கும் இந்த இரண்டு ராணிகளும் தீர்வுகள் எடுத்துக் குடுத்திருக்கினம். வீட்டுக்காரர் தான் காதலிக்கிறவரை கட்டவிடமாட்டினம் எண்டு நினைக்கிற பிள்ளையள் சிலது குளோரோக்குயினை கொஞ்சம் அதிகமா வாங்கி போட்டுத் தற்கொலை முயற்சிகளிலும் இறங்கியிருக்கினம். சிலபேருக்கு கைகொடுத்து நிம்மதியா மேலபோய்ச் சேந்தும் இருக்கினம். சிலபேர் தப்பி காதலனோடும் சேந்திருக்கினம். ஏன் வயலுக்கு அடிக்கிற பூச்சிமருந்தில முயற்சிக்கிறது வலு ஈசி வழியெண்டு நீங்கள் நினைக்கிறது எனக்கு தெரியுது. ஆனால் அப்ப அரசாங்கம் புலிகள் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள்ள வயலுக்கு உரங்கள் பூச்சி மருந்துகள் கொண்டு வாறதுக்கு கூடத்தடைவிதிச்சிருந்தவை. உது தவறினா அரளிக்கொட்டை அது இதெண்டு கொஞ்சம் லோக்கலா இறங்கவேணும். அதைவிட இது லேசுதானே என்ன?
ஆஸ்பத்திரிகளில் அப்ப எல்லாம் சனம் நிரம்பிவழியும் என்னதான் வெளியில்
பார்மசி வழிய குளிசை வாங்கலாமெண்டாலும் அதை வாங்குறதுக்கு நிறையச்
சனங்களிட்ட காசிருக்கேல்ல எண்டது கொடுமை. அதால அரசாங்க ஆசுப்பத்திரிக்கு
எப்பவும் சனம் இருந்துகொண்டேயிருக்கும். ஆனால் அரசாங்க ஆஸ்பத்திரியில்
மருந்துப்பொருட்கள் எந்தநாட்களும் இருந்து கொண்டிருக்குமென்று சொல்ல
முடியாது. எப்பவாவது செஞ்சிலுவைச் சங்க அணிவகுப்பில கொண்டுவரப்படுகிற
மருந்துகள் தான்.
எனக்கு மருந்தத் தடையெண்டோண்ண பண்டிதர் ச.வே.பஞ்சாச்சரம் கவியரங்கத்தில
வாசிச்ச கவிதை வரிகள் நினைவுக்கு வரும்.
“சிறீமாக் குயின் பெத்த குயின்
பிறீமாக் குயினுக்கும் தடை போட்டா..” இதான் அந்த வரிகள்.
எங்கட சித்தி ஒராள் மருந்தில்லாமலுக்கு அக்கராயன் ஆஸ்பத்திரியில் செத்துப்போனவா. காய்ச்சல் தவிர அப்பப்ப கிபிரடி செல்லடி எண்டு ஆமிக்காரரும் தங்கடை பங்குக்கு கொஞ்சப் பேரைக் காயப்படுத்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள். ஆஸ்பத்திரியில் கட்டில்கள் எப்போதும் நிரம்பியே இருந்தன. ஆஸ்பத்திரியின் நடைபாதைகளிலெல்லாம் நோயாளிகள் பாய்விரித்துப் படுத்திருந்தார்கள். அங்கு நல்ல நிலையில் போகிற ஒருவனையும் அச்சமூட்டி நோயாளி ஆக்குகிற நிலையில் அன்றைய கிளிநொச்சியின் நிலைமை இருந்தது. இது தவிர அப்பப்ப கொஞ்சம் நாய்கடி, அதைவிட முக்கியமா முதலைக் கடிக்கு கூட மருத்துவம் பார்க்கவேண்டியிருந்தது. உண்மையா நிறையச் சனங்களிட்ட சொந்தமா வீடுகள் இருக்கேல்ல ஒரே வளவுக்குள்ள நிறை குடும்பங்கள் கோடைகாலத்தில வத்திப்போற கிணறுகள் சனங்களை முதலைக்கு விருந்தாய் குளத்தை நோக்கி அனுப்பிக்கொண்டிருந்தது. குளத்தில் குளிச்சா சனத்துக்கு இரண்டுவிசயங்கள் ஒரு வட்டக்கடி,சொறி,சிரங்கு போன்ற தோல்வியாதிகள் தாராளமாய் கிடைக்கும் இரண்டாவது தண்ணி தாராளமாய்க் கிடைக்கும். இதற்கெல்லாம் உஜாலாக் கலரில் ஒரு மருந்து தருவாங்கள் அதைப்பூசிக்கொண்டு திரியிறாக்களைப் பார்க்கவே அருவருப்பா இருக்கும். ஆனால் எனக்கும் வந்தது கையெல்லாம் கொப்புளம் கொப்புளமா..
ஆனா எல்லாத்துக்கும் மேல ஆஸ்பத்திரிக்கெண்டு ஒரு வாசனை இருக்கு. மூக்கை அரிக்கிற நெடி எல்லா ஆஸ்பத்திரிகளிலும் அந்த வாசனை ஒரே மாதிரியானதாகத்தான் இருந்தது.
பாம்பைக் கண்டாப் படையும் நடுங்கும் எண்டிற மாதிரி எனக்கு ஊசியைக் கண்டால் நடுங்கும். ஒருக்கால் மாமா வீட்டு நாய்க்கு விசர் பிடிச்சு அது கடிச்சாக்கள்,கடிக்காதாக்கள், முகர்ந்து பாத்திட்டு விட்டிட்டுப் போனாக்கள் எண்டு எல்லாருக்கும் மொத்தமா தொப்புளைச் சுத்தி தொடர்ச்சியா பதினாலு நாள் ஊசி. வயிறு கல்லு மாதிரி இறுகித்தான் கிடந்தது. அப்ப சரியா நோகுதெண்டு நான் கொஞ்சம் நெளிஞ்சு வளைஞ்சு தான் நடப்பன். மாமா நக்கலடிப்பார் சிவாஜிகணேசன் தோத்தான்ரா உன்னட்டை என்ன ஒரு நடிப்பெண்டு. (இப்ப நான் சென்னைக்கு வந்தது மாமாவின்ர ஊக்குவிப்பால தான் எண்டு தப்புக்கணக்குப் போடவேண்டாம்) அப்படி ஊசிக்கும் எனக்கும் சோதனையான அறிமுகங்கள் இருக்கிறதால பெரும்பாலும் டாக்குத்தர் ஊசி எழுதியிருக்கிறார் எண்டு தெரிஞ்சாலே துண்டைக்காணம் துணியைக் காணம் எண்டு பறந்திருவன். பொதுவாவே இந்த ஊசிபோடுற அறையளைப் பார்க்கும்போதே ஏதோ சித்திரவதைக்கூடத்துக்குள் போறமாதிரியே ஒரு உணர்வு. பொட்டா ரத்தம் கசிஞ்சிருக்கிற பஞ்சுத் துண்டுகள் நிறைஞ்ச ஒரு குப்பைக்கூடை, ஒரு பக்கம் அப்படியே கொதிச்சுக்கொண்டிருக்கிற ஊசி அவியவைக்கிற பாத்திரங்கள் எண்டு கொஞ்சமா உங்களிட்ட கற்பனைத்திறன் இருந்தாலே போதும் அது உங்களிற்கு ஒரு நரகலோகமாகவே தெரியும். பத்தாக்குறைக்கு ஊசி போடுறதுக்கு குண்டா ஒரு நேசிருந்தா எண்டு வையுங்கோ எம கிங்கரர்களையும் சேர்த்தே கற்பனை பண்ணலாம். குண்டா இருக்கிற நேஸ்மார் ஊசியை இறுக்கி நோகத்தக்கதாகத்தான் போடுவினம் எண்ட கண்டுபிடிப்பை முதலில் செய்தது சின்னக்காதான். கிளிநொச்சியில் ஒரு குண்டு நேஸ் இருந்தவா. ஒராள் என்ன ஒருசிலரைத்த தவிர எல்லாரும் குண்டாத்தான் இருந்திச்சினம் எண்டது வேறு கதை. அதில இவா ஓராள் (மிஸ் எக்ஸ) அவாவைச்சின்னக்கா நெடுகிலும் பேசுவா அந்தக் குண்டுச்சனியன் போட்டா இன்னமும் பெரிசா நோகும் எண்டு. அது எவ்வளவோ பரவாயில்லை. எப்பயாச்சும் உங்களுக்கு ஏழரைச் சனியன் உச்சத்தில் இருக்கும் பட்சத்தில் ஆம்பிளை நேர்ஸ் மாரிட்ட மாட்டினியள் எண்டு வையுங்க சொர்க்கத்தையே……… காட்டுவாங்கள்.
மண்டை உடைஞ்சது,இன்னும் சில பல காயங்களிற்கெல்லாம் வெளியில சுப்பையரிட்டயே மருந்து கட்டீட்டு ஏற்பூசி போட மட்டும் அரசாங்க ஆஸ்பத்திரிக்கு போறது. வெளியில் மருந்து கட்டினதுஅ ரசாங்க ஆஸ்பத்திரி டொக்ரரிற்குத் தெரிஞ்சுதோ அவ்வளவுதான். நீ மருந்து கட்டின இடத்தில போய் ஊசியைப் போடு எண்டிருவாங்கள். அதுக்கெல்லாம் ஆஸ்பத்திரியில் ஆள் இருக்கவேணும் எங்களுக்கும் அப்படித் தெரிஞ்ச ஒராள் இருந்தவா தனுஸ் அன்ரியெண்டு, அவவின்ர பெயர் தனுஸ் இல்லை. என்ர தோழன் ஒருத்தனுக்குப் பெயர் தான் தனுஸ் அவன்ர அன்ரி இவா எண்டிறதால இவாக்கு அந்தப்பெயர். இவாட்ட சொன்னா டொக்ரரிட்ட போகாமலே ஊசியைப்போட்டு விடுவா. இவா போடேக்க மெதுவாப்போடுற மாதிரித்தான இருக்கும் ஆனாலும் நோகும். நீங்கள் மருந்தையும் அரசாங்க ஆஸ்பத்திரியிலயே கட்டலாம் தானே எண்டு கேப்பியள் நியாயந்தான் ஆனால் இங்க காயத்தை காட்டினியள் எண்டு வையுங்கோ சுத்தமாக்கிறன் பேர்வழியெண்டு கத்திரிக்கோல் நுனியில் பஞ்சை வைச்சுப்போட்டு துடைக்கிறமாதிரித்தான் இருக்கும் ஆனால் வெறுங்கத்திரிக்கோலால பிறாண்டித்தான் எடுப்பினம் காயத்தில இருக்கிற அசடை. இந்த விசயத்துக்குப் பயந்து கொண்டுதான் நான் அரசாங்க ஆஸ்பத்திரியில் மருந்து கட்டுவதைத் தவிர்த்து வந்தேன். ஆனா அதைவிடவும் ஒரு காரணம் இருந்தது. அரசாங்க ஆஸ்பத்திரியில் பஞ்சு, மருந்து கட்டுற பண்டேஜ் போன்றவற்றிற்கு எப்பவும் தட்டுப்பாடு. அதாலதான் அவையள் அதைக் கொஞ்சமாச் செலவழிக்கினம். அநேக நேரங்களில் வீட்டில இருந்து துணியைக் கொண்டு போனால்தான் மருந்து கட்டுவினம் எண்டுற அளவுக்கு அதுக்கெல்லாம் தட்டுப்பாடு இருந்தது. யுத்தம் அகோரமா நடக்கிற நாட்களில் ஆஸ்பத்திரி தொண்டர்கள் வீடு வீடா வந்து பழைய வெள்ளைத் துணிகள் சேகரிச்சுக்கொண்டு போறதும் நடக்கிறது.
சின்னவயதில் கொஞ்சம் அச்சமூட்டக் கூடிய ஒன்றாய் இருந்த ஆஸ்பத்திரி. பிறகு வயதாக ஆக வேறு மாதிரித் தோற்றம் பெற்றது. வயசு ஆக ஆக எண்டு இழுக்கிறதைப் பாத்து அழகான நேஸ்மாரைச் சைற்றடிக்கிற வயசைச் சொல்றன் எண்டு நினைக்கிறியளோ? அதையும் சேர்த்து அந்த கறைபடிந்த சுவர்களிற்குள்ளும், ஒரே மாதிரி சவலோன் நாற்றமடிக்கும் அந்த சூழலுக்குள்ளும் ஒரு இதயம் துடித்துக்கொண்டிருப்பதையும் என்னால் உணர முடிந்தது. சொல்லப் போனால் மனிதர்களின் இதயத்துடிப்புக்களை அது காத்துக்கொண்டிருந்தது. எத்தனை அழகான பிறப்புக்கள் தினந்தோறும் வைத்தியசாலையின் மடியில் நிகழ்கின்றன. எத்தனை பேரைப் பிணிகளில் இருந்து அது விடுவிக்கிறது. மறுபடியும் வாழ்க்கையின் வட்டத்தில் சேர்க்கிறது. ஒரு மனிதனை வாழ வைக்க அது கடைசிவரைக்கும் முயற்சித்துக் கொண்டேயிருக்கிறது. சில தவிர்க்க முடியா மரணங்களும். ஆனால் எல்லாவற்றையும் மீறி அந்த அசுத்தமான அழகுக்குள் கனிவும் அக்கறையும் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள்.
வைத்திய சாலைகள் அழுக்கான சுவர்களுடனும் கொஞ்சம் அழகான மனங்கள் கொண்ட மனிதர்களுடனும். உண்மையில் நிரம்பி வழிகிற வைத்திசாலை இருக்கைகளில் இருக்கைகளையும் மீறி தரையிலும் காத்திருக்கிற நோயாளிகளையும். வைத்திய சாலைக் கட்டில்களையும் மீறி வார்டுகளின் வராந்தாக்களில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளையெல்லாம் பராமரித்த வைத்தியர்கள் விரல்களிற்குள் அடங்கிவிடுற எண்ணிக்கையிலதான் இருந்தார்கள் என்றால் நம்பமுடிகிறதா? இன்னமும் என் ஊரில் இதே மாதிரித்தான இருக்கின்றன வைத்தியசாலைகள். அதே யுத்தம் அதே மருந்துத் தட்டப்பாடு அதே மனிதர்களில் தப்பிப் பிழைத்த மீதிப்பேருக்கும் திரும்பவும் அதே துன்பங்கள்.
ஆனால் இங்கே சென்னையில் அப்படி அல்ல என் வீட்டை விடச்
சுத்தமாயிருக்கிறதோ என்கிற அளவுக்கு சுத்தமாய்ச் சுவர்கள் இருக்கின்றன.
தரை இடியப்பமும் சொதியும் ஊத்திச் சாப்பிடலாம் என்கிற அளவுக்குச்
சுத்தமாயிருக்கிறது. எல்லா நோய்களையும் தீர்த்து விடுகிற அளவுக்கு
மருத்துவ அறிவிருக்கிறது. மருந்துகள் வருவதற்குத் தடை விதிப்பார் யாரும்
கிடையாது. தங்களுடைய ஆஸ்பத்திரிக்கே வாருங்கள் எண்டு விளம்பரம் வேறு.
அதுவும் அழகான பெண்களை வைத்து(சும்மா சொல்லக் கூடாது இங்க நேஸ் மாரும்
நல்லாத்தான் இருக்கினம்) ஆனாலும் என்ன தெர்மா மீட்டரை நோயாளியின்வாயில்
வைத்து விட்டுப் கவனமாகப்பிடியுங்கள் என்று சொன்னாலும் பரவாயில்லை பதிலாக
உடைந்தால் 100 ரூபாய் என்று வியாபாரம் பேசுகிறார்கள்……..!!!!!!
- த.அகிலன்.
நன்றி கென்
நான் எழுத நினைத்து மறந்து போன விசயம்
அகிலனோடு யுகபாரதி இல்லத்தில் தலைப்பாக்கட்டு பிரியாணியை
தலை உயர்த்தாமல் ஒரு கட்டு கட்டியதுதான் நினைவுக்கு வருகிறது :-)
அந்த வேதனையிலும் எனக்குப் பொத்துக்கொண்டு சிரிப்பு வந்தது. பின்ன நாலு நளா கோல்ட் ஆக்ட்,சமஹன்,பனடோல்,ஆக்சன் 500 எண்டு முயற்சி செய்து செய்து தோத்துப்போய் ஆஸ்பத்திரிக்குப்போனா. போன உடனேயே ஒரு நர்சம்மா வாயில தெர்மா மீட்டரை செருகி உடைஞ்சா 100 ரூபாய் எண்டு சொன்னா சிரிப்பு வருமா வராதா? ஒரு வேளை நோயால் துவண்டு போயிருக்கும் நோயாளிகளை கொஞ்சம் சிரிப்பு மூட்டத்தான் அவா இந்த விசயத்தை சொல்லியிருப்பாவோ? என்னவோ? ஆழ்வார்ப் பேட்டை ஆண்டவா இது என்ன மனோபாவம்? நேரடியாகப் பேரத்தில் இறங்குகிற மனோபாவம்;. ஒரு நோயாளியிடம் முதலிலேயே பணத்தைப் பற்றிப் பேசினால் மனசுக்கு எப்படித் தெம்பு வரும். எனக்கு கோபம் கூட வந்தது. ஆனா அந்தச் சம்பவம் ஆஸ்பத்திரிகள் பற்றிய என் நினைவுகளை நான் கடந்து வந்த ஆஸ்பத்திரிகளை மறுபடியும் நினைச்சுப்பார்க்க வைச்சது.
சென்னைக்கு வந்த இவ்வளவு நாளில் நான் இரண்டாவது தடைவையாக ஆஸ்பத்திரிக்கு போயிருக்கிறேன். மற்றபடி கை வைத்தியம்தான். எனக்கு ஊசிபோல உடம்பென்பதால் கொஞ்சம் நோய்ப்பிரச்சினையும் குறைவாகத்தான் இருந்தது எண்டு வையுங்கோவன். அம்மா அரசாங்க உத்தியோகம் (ரீச்சர்) பார்க்கிறவா எண்டதால நாங்கள் அரசாங்க ஆஸ்பத்திரியில மருந்தெடுக்கிறது குறைவு. ஏன்? நான் பிறந்ததே ஒரு பிறைவேற் ஆஸ்பத்திரியில தான் எண்டாப் பாருங்கோவன்.(ரொம்ப முக்கியம்) இலங்கையில் அதுவும் கிளிநொச்சியில் பிள்ளைகள் அரசாங்க ஆஸ்பத்திரியில் பிறப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். அதுவும் இற்றைக்கு கால் நூற்றாண்டுக்கு முன்பு அப்படி ஒரு பிறைவேற் ஆஸ்பத்திரியில் பிறக்கிறது பெரிய விசயம் தான். (இப்ப அம்மா என்னைக் காசு கொடுத்து பெத்தது குறித்து கவலைப் படுறா எண்டது வேறு விசயம்)
எனக்கு நினைவு தெரிஞ்சு ஆஸ்பத்திரி நினைவுகளில்
முதலாவதாக இருப்பது. காலில் சிராய் ஏறினதுதான். அதைவிட ஆஸ்பத்திரி
என்றவுடன் நினைவுக்கு வருவது சாந்தி கிளினிக்தான். இப்போதும் நல்லா
நினைவிருக்கு கரடிப்போக்குச் சிங்கர் கொம்பனிக்கு பக்கத்தில நீலக்கலர்
பெயின்ற் அடிச்ச சின்னக் கட்டிடம். ஒரே ஒரு வாங்கு அது பச்சைக் கலர் கடும்
பச்சை. கொஞ்சம் மண்ணிறப் போத்தலுகள் அதுக்குள்ள திரவ மருந்துகள்.
கத்திரிக்கோல் இன்ன பிற டாக்குத்தர்மாரின்ர தடியள் பொல்லுகள்(அவர்கள்
பாவிக்கிற உபகரணங்கள்) எண்டு காட்சி அளிக்கும் அந்தக் கிளினிக். அதே
மாதிரி டொக்ரர் என்றாலே நினைவுக்கு வாறது சுப்பையா டொக்ரர் தான். அவற்ற
தான் சாந்தி கிளினிக். இப்ப அவர் உயிரோட இருக்கிறாரா? இல்லையா? என்றது
தெரியாது. ஏனென்றால் அவர் அப்பவே முக்காக்கிழவர். அவற்ற வயிறு மேசையில்
முட்டிக்கொண்டிருக்க கழுத்தில தொங்கிற தெதஸ்கோப்போட அவர்
வீற்றிருக்கிறதைப் பாத்தால் எனக்கு பூந்தளிர் புத்தகத்தில வாற கண்ணாடி
போட்ட யானைதான் நினைவுக்கு வரும். அங்கயும் ஆஸ்பத்திரிக்கு போன உடன
வாய்க்குள்ள தெர்மா மீற்றர் வைச்சுப் பாக்கிறவைதான் (ஆனா உடைஞ்சா நூறு
ரூபாய் எண்டு சொல்ல மாட்டினம்) என்ன வியாதிக்கு வைத்தியம்
பார்க்கப்போனாலும் போன உடன சுப்பையர் வயித்தைத்தான் முதல்
பிடிச்சிழுப்பார் யானை தன் தும்பிக்கையால் இழுக்கிற மாதிரியே இருக்கும்.
இதுக்குள்ள தன்ர கரகரத்த குரலால் “என்னடா குழப்படியா” எண்டு வேற கேப்பார்.
எப்படியிருக்கும் எண்டு நினைக்கிறியள் (உங்கள் கற்பனைக்கு சின்ன இடைவெளி)
சுப்பையர் மீது எனக்கு லோசான பயம் இருக்கிறதுக்கு அவரோடு
நிகழ்ந்த முதல் சந்திப்புத்தான் காரணமாயிருக்கலாம் எண்டு நினைக்கிறேன்.
அநேகமாக எனக்கு முதல் சந்திப்புக்கள் எப்பவும் ஏடாகூடமாத்தான் நிகழும்.
என்ர ராசி அப்படி. மாமா வீட்டில் வீடு கட்ட அடுக்கியிருந்த
பனந்தீராந்திகளில ஏறி விளையாடக் கூடாது எண்டு வீட்டுக்காரர்
சொல்லியிருந்தாலும் நாங்கள் அதற்கு மேல ஏறி விளையாடிறனாங்கள். நீ
அப்படித்தான் செய்திருப்பாய் என்றதைச் சொல்லித்தான் தெரியோணுமோ எண்டுதானே
உள்ளுக்குள்ள நினைக்கிறியள் அப்பயிருந்து இப்ப வரைக்கும் வீட்டுக்காரர்
சொல்லிறதை எப்பவாவது கேட்டிருக்கிறனா? அதை விடுவம். விளையாடேக்க ஒரு
பனந்தீராந்திக்கு என்ர காலை மிகவும் பிடிச்சுப்போய் இரண்டு மூன்று சிராயை
சுருக்கெண்டு என்ர கால்ல ஏத்தி விட்டுது. கால்ல ஒரு ஒண்டரை இன்ஞ்சிக்கு
சிராய் ஏறியிருந்தாலும். விசயத்தை சொல்லி அம்மாட்ட எதுக்கு ஒண்டரை அடி
நீளமான கம்பால அடிவாங்குவான் எண்டு நினைச்சு சொல்லாம அமைதிகாத்திட்டன்.
சிராய் உள்ளுக்குள்ள கால்மீதான தன்ர பிரியத்தை கொஞ்சம் அதிகமாக் காட்டக்
காட்ட கொதி வலிதாங்காம நான் காத்த அமைதியைக் குலைத்து நான் கத்த. (இங்க
கட் பண்ணினா……)
சுப்பையரின்ர சாந்தி கிளினிக்கில நிக்கிறம் நானும் பெரியக்காவும் அம்மாவும். மூன்று தையல் போடவேண்டி வரும் என்றார் சுப்பையர். நான் ஏதோ தையல் மெசினில வைச்சுக் காலைத் தைக்கப்போறாங்களாக்கும் எண்டு நல்லாப் பயந்திட்டன். பிறகு பாத்தா என்னைக் கட்டில்ல படுக்க வைச்சிட்டு சுப்பையரும் நேசும் ஒரு சின்னப் பெட்டியோட வந்திச்சினம். அப்ப தையல் போடுறதெண்டிறது ஏதோ சின்னப் பிரச்சினைதானாக்கும் எண்டு நான் நினைச்ச நினைப்பு கனநேரம் நீடிச்சிருக்காதெண்டு உங்களிற்குத் தெரியும்தானே. கட்டில்ல என்னை அமத்திக் கிடத்தி. சுப்பையர் தன்ர சிறிய பளபளப்பா மினுங்கும் கத்தியை பெட்டிக்குள்ள இருந்து எடுத்து ஓங்கவும் ( ஒரு பில்டப்புக்கு) அய்யோ என்னை வெட்டுறாங்கள் எண்டு நான் கத்திக்கொண்டு கட்டிலை விட்டுக் குதிக்கவும் சரியா இருந்தது.
அண்டைக்கு அந்தச் சம்பவத்தை நேரில் பாத்த இரண்டு சாட்சிகள் கனநாளைக்கு அந்தச் சம்பவத்தை நினைவில் வைச்சிருந்தவை. ஒராள் எங்கட பள்ளிக் கூடத்தில் படிப்பிச்ச கலா ரீச்சர். இந்த விசயம் நடந்து கிட்டத்தட்ட மூண்டு வருசம் கழிச்சு நாலம் வகுப்பில நான் அவாட்ட படிக்கிற சந்தர்ப்பம் வாய்ச்சது. அவா முதல் நாள் வகுப்பிலேயே புத்தகத்தை தந்து என்னை வாசிக்கச் சொல்லிப்போட்டு வாசிச்சு முடிக்கும்போது கேட்டா “டேய் நீதானே சுப்பையர்ற கிளினிக்ல என்னை வெட்டுறாங்கள் வெட்டுறாங்கள் எண்டு கத்திக்கொண்டு ஓடினது?” பெடியளெல்லாம் கொல்லெண்டு சிரிப்பு. பெட்டையள் கெக்கெக்கே பிக்கெக்கே எண்டு ஒரே சிரிப்பு. எனக்கு அதுக்குப்பிறகு பள்ளிக் கூடத்தை விட்டு வரும் வரைக்கும் கலாச்ரீச்சர் மீது நல்ல அபிப்பிராயம் வராததற்கு இந்த சம்பவம்தான் காரணம் எண்டு நினைக்கிறன்.
மற்ற இன்னொரு சாட்சி அணில். என்னடா இவன் காலுக்குத் தையல் தானே போட்டவன் என்ன ராமர் பாலம் கட்டின மாதிரி அணில் எண்டு சொல்றானே எண்டு பார்க்காதேங்கோ. அது அவாக்கு பட்டப்பேர். அவா ஒரு இயக்க அக்கா. அம்மாட்ட படிச்சவாவாம். (பாவம் அவா!!) ரீச்சற்ற மகன் அழுகிறானே எண்டு நினைச்சு அவா என்னை ஆறுதல் படுத்தும் விதமாக நாலு வார்த்தை சொல்லி தன்ர பொக்கற்றுக்க வைச்சிருந்த ஒரு ஸ்டிக்கரை எடுத்துத் தந்தவா. பச்சைக்கலர் தமிழீழப் படத்தின்ர பின்னணியில பிரபாகரனும் மாத்தையாவும் பக்கத்தில பக்கத்தில நிக்கிற படம் போட்டிருந்தது அந்த ஸ்டிக்கரில. அவாவை நினைவு வைச்சிருக்கிறதுக்கு அந்த ஸ்ரிக்கர் மட்டும் காரணமில்லை. அவா வெட்டியிருந்த கிப்பியும்தான் காரணம். கிப்பி வெட்டியிருக்கிறாக்களை அப்ப எங்கட ஊரில பார்க்கிறது அரிது. அப்படி வெட்டினாக்களைத் திமிர் பிடிச்சாக்கள் எண்டு சொல்ற ஒரு காலமும் இருந்தது. கூடுதலா இயக்க அக்காக்கள் தான் கிப்பி வெட்டியிருப்பினம். நான் அவாக்கு அணில் எண்டு பேர் வைச்சன் ஏன் எண்டது நினைவில்லை. நான் அந்த ஸ்டிக்கரை கனநாள் ஒட்டாமலே என்ர மற்ற ஸ்ரிக்கருகளோட சேர்த்து வைச்சிருந்தனான். பிறகொருநாள் பெரியண்ணா அந்த ஸ்ரிக்ரை எடுத்து ரெண்டா வெட்டிப் பாதியைக் கிழிச்செறிஞ்சிட்டான். இதோ இப்பயும் அந்தத் தழும்பைப் பார்க்கிறன் அப்படியே கிடக்கு கால்ல நினைவுகளைக் கிளறிக்கொண்டு.
இந்த சிராய் ஏறின நினைவுதான் சுப்பையர் எண்டதும் முதல் எனது நினைவடுக்குகளில் வருவது. அதற்குப்பிறகு ஆண்டுக் கணக்குகளாக பலதடைவைகள் அவரிடம் வைத்தியத்துக்குப் போயிருக்கிறேன். அங்க சிவானந்தி எண்டொரு அக்கா கனநாளா வேலை செய்தவா. பிறகு கிளிநொச்சியில் இருந்து இடம் பெயரும் மட்டும்தான் இதெல்லாம். இடப்பெயர்வோட சுப்பையர் வவுனியாவுக்கு அங்கால போட்டார். பிறகு சிவானந்தி அக்கா பிக்பென்ஸ் புத்தகக் கடையில வேலை செய்து கொண்டிருந்ததைக் கண்டன். அவா என்னைச் ரீச்சற்ற மகன் எண்டு நினைவு வச்சிருந்தவா அது ஒன்றே அந்தப் புத்தகக் கடைக்கு பிறகு நான் போகாததற்கு காரணமாயிருந்தது.
அதற்குப்பிறகு வந்த அகதி வாழ்வின் ஆஸ்பத்திரி அனுபவங்கள் வித்தியாசமானவை. பிணியும் துயரமும் தான் மக்களைப் பாடாய்ப்படுத்தியது. உடலை விட மனம் அதிகமாய்ப் பாதிக்கப் பட்டிருந்தது. அதிகமாக இருந்த வியாதி மலேரியா எங்கெங்கு காணிலும் மலேரியா. மலேரியா மட்டுமல்ல மலேரியான்ர அக்கா தங்கச்சி காய்ச்சலுகளும் கூட. மக்களை வாட்டி எடுத்தது. அப்போது இலங்கையின் இராணியாக இருந்த சந்திரிகா எங்களை ஊரை விட்டுத் துரத்தி. எங்கட ஊருக்கு வருகிற மருந்துப்பொருட்களையும் மொத்தமாக தடை செய்திருந்தார். அந்த மலேரியாக் காலத்தில் எங்களைக் காப்பாற்றியது இரண்டு ராணிகள். இந்த இராணிகள் இரண்டு பேரும் இல்லாவிட்டால் நிச்சயமாய் வன்னிப் பகுதியின் சனத்தொகை பாதியாகக் குறைந்திருக்கும்.
அவர்களில் ஒருத்திக்குப் பேர் குளோரோக் குயீன் மற்றவாக்குப் பெயர் பிறீமாக் குயீன். குளோரோ அக்கா என்றால் பிறீமா தங்கச்சி. இரண்டும் செம வட்டம். இந்த இரண்டு ராணிகளிடமும் தான் மொத்த மக்களும் சரணாகதி அடைந்திருந்தார்கள். இராணிகளும் பாவம் பார்க்காம எல்லாருக்கும் தங்கள் அன்பைப் பொழிந்தார்கள். காய்ச்சல் எண்டு சொன்னாப்போதும் உடன கண்ணை மூடிக்கொண்டு தருவார்கள் இந்த இரண்டு குயீனையும். காய்ச்சல் வராம இருக்கோணுமா அதுக்கும் இதுதான் கிழமைக்கு இரண்டு குளேராக் குயீன் அடியுங்கோ மலேரியா தலைவைச்சுப் படுக்காது. ஆனா அப்படியெல்லாம் கிழமை தவறாமக் குடிச்சும் மலேரியா கட்டில்போட்டே படுத்திருக்கு சிலர் உடம்பில. ஒரு பாலர் வகுப்புப் பெடியனைக் கூப்பிட்டுக் கேட்டாலே அவன் தலைகரணமாச் சொல்லுவான். ஒரு மலேரியா டோஸ் எப்படி என்ன அளவுகளில எப்ப எப்ப போடவேணும் என்றதை.
காய்ச்சல் சம்மந்தப்பட்ட மலேரியான்ர அக்கா தங்கச்சி வியாதிகளான நெருப்புக்காய்ச்சல்,மூளைக்காய்ச்சல் இன்னும் டிசைன் டிசைனான காய்ச்சல்களுக்கெல்லாம் ஒரே மருந்து அருமருந்து குளோரோக்குயின் மற்றும் பிறீமாக் குயின்தான். (வேற மருந்திருந்தாலும் கிளிநொச்சியில அதெல்லாம் கிடைக்கிறது அரிதப்பு) மலேரியா சம்மந்தமான வியாதிகளால் நிரம்பி வழிந்தன வைத்திய சாலைகள் (கள் பொருந்தாது எண்டு நினைக்கிறன்) ஒண்டே ஒண்டு இருந்தது கிளிநொச்சியில அக்கராயன் வைத்தியசாலை. அதில கூட்டத்தை சமாளிக்க முடியாம திணறிச்சினம் வைத்தியர்மார். விடியக் காலை இரண்டு மூண்டு மணிக்கெல்லாம் போய் நம்பர்த்துண்டு எடுக்கவேண்டியிருந்தது. எனக்கு தெரிஞ்சு பெரியப்பா விடியப்புறம் 3 மணிக்கு போய் நம்பர்த்துண்டு எடுத்திருக்கிறார். அப்படி நேரத்தோட போனாலும் ஒரு இருநூறாவதோ முன்னூறாவதோத்தான் நம்பர் கிடைக்கும். இந்தக் கூட்டத்தை சமாளிக்க முடியாம மலேரியாவுக்கு இது இதுதான் குழிசை நீங்களே இதை இன்ன இன்ன அளவுகளில் போட்டுக்கொள்ளலாம் எண்டு ஈழநாதத்தில விளம்பரம் செய்தார்கள்.
அது தவிரவும் சென்னையில் துணிக்கடை,கணினிக் கடை எண்டு எல்லாத்துக்கள் விளம்பரம் பெரிய அளவுகளில வைக்கப்பட்டிருக்கே. துணிக்கடைக்கான விளம்பரத்தில துணிகள் குறைவாகவும் பெண்களின் இடுப்பை அதிகமாகவும் பயன்படுத்தி பெரிய டிஜிட்டல் பேனர்கள் வைத்திருப்பது போல மலேரியாவுக்கான குழிசைகளை என்ன அளவுகளில் உட்கொள்ள வேண்டும் என்பதை பெரிய அளவுகளில் முக்கியமான இடங்களில் பெயின்றால் எழுதி விளம்பரம் செய்திருப்பார்கள். அதில ஒரு சின்ன வட்டத்தில நுளம்பும். ஒரு காய்ச்சல் காரர் இருமுற மாதிரியும் படம் போட்டிருக்கும். இந்த இரண்டு ராணிகளும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள்.
மலேரியா வந்தால் அதுல சொல்லப்பட்டிருக்கிற அளவுக்கு இந்தக் குழிசைகளை (மாத்திரைகளை)குடிச்சாலே மனிசன் பாதி செத்துப் போயிருவான். ஒரு கிலோ நல்ல முத்தின பாவற்காயாப் பாத்து வாங்கி அப்படியே ஒரு சொட்டுக் கூட வீணாகாமல் யூசாப் பிழிஞ்சு நீங்கள் காய்ச்சலா இருக்கும்போது தந்தால் எப்படியிருக்கும். (நலமாய் இருக்கும்போது மட்டும் குடிக்கலாமாக்கும்) அப்பிடித்தான் இருக்கும் ஒரு குளோரோக் குயின். இதில 4 குளிசையை ஒண்டாக் குடிக்க வேண்டியும் வரும். சுப்பையா டொக்கரர் தையல் போட்டதே பரவாயில்லைப்போல என்று நினைக்குமளவுக்கு இருக்கும். அப்பிடியே ஒரு குழிசையைத் தண்ணியை ஊத்தி வாயில் போட்டால்…. (இந்த இடத்தில் போட்டால்…….ஆல் ஆல் எண்டு எக்கோ எபக்ற் குடுக்கவும்)
வயித்துக்குள்ள பாதி வழி போன மச்சான் திரும்பி வருவான் உள்ளயிருக்கிற மிச்ச மச்சான் மாரையும் கூட்டிக்கொண்டு. கொஞ்சமாச் சாப்பிட்டிருப்பம் அதுவும் சாப்பிட முடியாமச் சாப்பிட்டிருப்பம் குளோரோக் குயின் போட்டாப்போதும் சாப்பிட்டதைவிட அதிகமா வெளியில வரும். அதுக்கு அப்படி ஒரு சக்தி சத்தியை(வாந்தி) வரவைக்கிற சக்தி. இந்த நேரங்களில் தான் எனக்கு அபிதாவில எரிச்சல் எரிச்சலா வரும். அபிதா என் எருமை அய்யோ அருமைத் தங்கச்சி. மனுசன் சத்தி எடுத்துப்போட்டு கைச்சல் கொஞ்சம் குறைவாக் கிடக்கே எண்டு நிம்மதியாகிற நேரத்தில வருவாள் அண்ணா எடுத்த சத்திக்கு மண்போடுறன் எண்ட பாசப்போர்வையோட.(இப்படித்தான் நிறையத் தங்கச்சிமார் அலையினம் கவனம்) வந்து பூதக்கண்ணாடி வைச்சுப் பாத்து பெரியம்மா…… எண்டொரு இழுவை அழைப்பை மேற்கொள்வாள். அண்ணா குழிசையையும் சேர்த்து சத்தி எடுத்திட்டான் எண்டு அக்கறையோடு தன்ரை கண்டு பிடிப்பை வெளியிடுவாள். பெரியம்மாவும் உடன அப்ப திரும்பவும் ரெண்டு குழிசையைப் போடவேணும் எண்டு சொல்லுவா. மனுசன் குடுத்திருக்கிற அளவையே குடிக்கமுடியாமத் திண்டாடுறான் இதுக்கிள்ள எக்ஸ்ரா பிட்வேற.
அம்மம்மா இப்படி குழிசை குடிக்க அஞ்சுபவனாய் நான்
இருக்கிறதால. தான் குடிநீர் வைச்சுத்தாறன் அதைக் குடிச்சால் மலேரியா
துண்டைக்காணம் துணியைக் காணம் எண்டு ஓடிரும் எண்டு சொன்னா. நானும் ஒரு அறு
சுவையோட ஒரு தேவ பானத்தை எதிர்கொண்டு காத்திருந்தன். ஆனா அம்மம்மா கொண்டு
வந்த பானத்தைக் கண்டு நான் துண்டைக் காணம் துணியைக்காணம் எண்டு
ஓடவேண்டியதாப் போச்சுது. அம்மம்மா மலேரியாத் தடுப்பெண்டும் அதோட சேத்து
மற்ற எல்லாக்கிருமிகளுக்கும் வேட்டு வைக்குமென்றும் சொல்லி வேப்பம்
பட்டையை அவிச்சு அதைக்குடிக்கச் சொல்லிக் கொடுமைப்படுத்துவா. இதுக்கு
குளோரோக் குயினே தேவலாம் போல இருக்கும்.
ஆனால் இப்படிக் கசப்பான குழிசைகளையும் தேனாமிர்தம் மாதிரி சப்பிச் சாப்பிடுற அதிசயப் பிறவி ஒருத்தன் எனக்கு நண்பனா வாய்ச்சவன் சதீஸ்கண்ணா எண்டது அவன்ர திருநாமம். இந்த முக்கியத்துவமும் அதிசயமும் ஒருங்கே அமையப்பெற்ற தகவலைச் சொல்லாவிட்டால் நான் பெரிய வரலாற்று தவறிழைத்தவனாவேன் எண்டதால இதைச்சொல்றன். மலேரியாச் சகோதரி வியாதிகள் மட்டுமல்ல அவ்வப்போது சில காதல் பிரச்சினைகளுக்கும் இந்த இரண்டு ராணிகளும் தீர்வுகள் எடுத்துக் குடுத்திருக்கினம். வீட்டுக்காரர் தான் காதலிக்கிறவரை கட்டவிடமாட்டினம் எண்டு நினைக்கிற பிள்ளையள் சிலது குளோரோக்குயினை கொஞ்சம் அதிகமா வாங்கி போட்டுத் தற்கொலை முயற்சிகளிலும் இறங்கியிருக்கினம். சிலபேருக்கு கைகொடுத்து நிம்மதியா மேலபோய்ச் சேந்தும் இருக்கினம். சிலபேர் தப்பி காதலனோடும் சேந்திருக்கினம். ஏன் வயலுக்கு அடிக்கிற பூச்சிமருந்தில முயற்சிக்கிறது வலு ஈசி வழியெண்டு நீங்கள் நினைக்கிறது எனக்கு தெரியுது. ஆனால் அப்ப அரசாங்கம் புலிகள் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள்ள வயலுக்கு உரங்கள் பூச்சி மருந்துகள் கொண்டு வாறதுக்கு கூடத்தடைவிதிச்சிருந்தவை. உது தவறினா அரளிக்கொட்டை அது இதெண்டு கொஞ்சம் லோக்கலா இறங்கவேணும். அதைவிட இது லேசுதானே என்ன?
ஆஸ்பத்திரிகளில் அப்ப எல்லாம் சனம்
நிரம்பிவழியும் என்னதான் வெளியில் பார்மசி வழிய குளிசை வாங்கலாமெண்டாலும்
அதை வாங்குறதுக்கு நிறையச் சனங்களிட்ட காசிருக்கேல்ல எண்டது கொடுமை. அதால
அரசாங்க ஆசுப்பத்திரிக்கு எப்பவும் சனம் இருந்துகொண்டேயிருக்கும். ஆனால்
அரசாங்க ஆஸ்பத்திரியில் மருந்துப்பொருட்கள் எந்தநாட்களும் இருந்து
கொண்டிருக்குமென்று சொல்ல முடியாது. எப்பவாவது செஞ்சிலுவைச் சங்க
அணிவகுப்பில கொண்டுவரப்படுகிற மருந்துகள் தான்.
எனக்கு மருந்தத் தடையெண்டோண்ண பண்டிதர் ச.வே.பஞ்சாச்சரம் கவியரங்கத்தில
வாசிச்ச கவிதை வரிகள் நினைவுக்கு வரும்.
“சிறீமாக் குயின் பெத்த குயின்
பிறீமாக் குயினுக்கும் தடை போட்டா..” இதான் அந்த வரிகள்.
எங்கட சித்தி ஒராள் மருந்தில்லாமலுக்கு அக்கராயன் ஆஸ்பத்திரியில் செத்துப்போனவா. காய்ச்சல் தவிர அப்பப்ப கிபிரடி செல்லடி எண்டு ஆமிக்காரரும் தங்கடை பங்குக்கு கொஞ்சப் பேரைக் காயப்படுத்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள். ஆஸ்பத்திரியில் கட்டில்கள் எப்போதும் நிரம்பியே இருந்தன. ஆஸ்பத்திரியின் நடைபாதைகளிலெல்லாம் நோயாளிகள் பாய்விரித்துப் படுத்திருந்தார்கள். அங்கு நல்ல நிலையில் போகிற ஒருவனையும் அச்சமூட்டி நோயாளி ஆக்குகிற நிலையில் அன்றைய கிளிநொச்சியின் நிலைமை இருந்தது. இது தவிர அப்பப்ப கொஞ்சம் நாய்கடி, அதைவிட முக்கியமா முதலைக் கடிக்கு கூட மருத்துவம் பார்க்கவேண்டியிருந்தது. உண்மையா நிறையச் சனங்களிட்ட சொந்தமா வீடுகள் இருக்கேல்ல ஒரே வளவுக்குள்ள நிறை குடும்பங்கள் கோடைகாலத்தில வத்திப்போற கிணறுகள் சனங்களை முதலைக்கு விருந்தாய் குளத்தை நோக்கி அனுப்பிக்கொண்டிருந்தது. குளத்தில் குளிச்சா சனத்துக்கு இரண்டுவிசயங்கள் ஒரு வட்டக்கடி,சொறி,சிரங்கு போன்ற தோல்வியாதிகள் தாராளமாய் கிடைக்கும் இரண்டாவது தண்ணி தாராளமாய்க் கிடைக்கும். இதற்கெல்லாம் உஜாலாக் கலரில் ஒரு மருந்து தருவாங்கள் அதைப்பூசிக்கொண்டு திரியிறாக்களைப் பார்க்கவே அருவருப்பா இருக்கும். ஆனால் எனக்கும் வந்தது கையெல்லாம் கொப்புளம் கொப்புளமா..
ஆனா எல்லாத்துக்கும் மேல ஆஸ்பத்திரிக்கெண்டு ஒரு வாசனை இருக்கு. மூக்கை அரிக்கிற நெடி எல்லா ஆஸ்பத்திரிகளிலும் அந்த வாசனை ஒரே மாதிரியானதாகத்தான் இருந்தது.
பாம்பைக் கண்டாப் படையும் நடுங்கும் எண்டிற மாதிரி எனக்கு ஊசியைக் கண்டால் நடுங்கும். ஒருக்கால் மாமா வீட்டு நாய்க்கு விசர் பிடிச்சு அது கடிச்சாக்கள்,கடிக்காதாக்கள், முகர்ந்து பாத்திட்டு விட்டிட்டுப் போனாக்கள் எண்டு எல்லாருக்கும் மொத்தமா தொப்புளைச் சுத்தி தொடர்ச்சியா பதினாலு நாள் ஊசி. வயிறு கல்லு மாதிரி இறுகித்தான் கிடந்தது. அப்ப சரியா நோகுதெண்டு நான் கொஞ்சம் நெளிஞ்சு வளைஞ்சு தான் நடப்பன். மாமா நக்கலடிப்பார் சிவாஜிகணேசன் தோத்தான்ரா உன்னட்டை என்ன ஒரு நடிப்பெண்டு. (இப்ப நான் சென்னைக்கு வந்தது மாமாவின்ர ஊக்குவிப்பால தான் எண்டு தப்புக்கணக்குப் போடவேண்டாம்) அப்படி ஊசிக்கும் எனக்கும் சோதனையான அறிமுகங்கள் இருக்கிறதால பெரும்பாலும் டாக்குத்தர் ஊசி எழுதியிருக்கிறார் எண்டு தெரிஞ்சாலே துண்டைக்காணம் துணியைக் காணம் எண்டு பறந்திருவன். பொதுவாவே இந்த ஊசிபோடுற அறையளைப் பார்க்கும்போதே ஏதோ சித்திரவதைக்கூடத்துக்குள் போறமாதிரியே ஒரு உணர்வு. பொட்டா ரத்தம் கசிஞ்சிருக்கிற பஞ்சுத் துண்டுகள் நிறைஞ்ச ஒரு குப்பைக்கூடை, ஒரு பக்கம் அப்படியே கொதிச்சுக்கொண்டிருக்கிற ஊசி அவியவைக்கிற பாத்திரங்கள் எண்டு கொஞ்சமா உங்களிட்ட கற்பனைத்திறன் இருந்தாலே போதும் அது உங்களிற்கு ஒரு நரகலோகமாகவே தெரியும். பத்தாக்குறைக்கு ஊசி போடுறதுக்கு குண்டா ஒரு நேசிருந்தா எண்டு வையுங்கோ எம கிங்கரர்களையும் சேர்த்தே கற்பனை பண்ணலாம். குண்டா இருக்கிற நேஸ்மார் ஊசியை இறுக்கி நோகத்தக்கதாகத்தான் போடுவினம் எண்ட கண்டுபிடிப்பை முதலில் செய்தது சின்னக்காதான். கிளிநொச்சியில் ஒரு குண்டு நேஸ் இருந்தவா. ஒராள் என்ன ஒருசிலரைத்த தவிர எல்லாரும் குண்டாத்தான் இருந்திச்சினம் எண்டது வேறு கதை. அதில இவா ஓராள் (மிஸ் எக்ஸ) அவாவைச்சின்னக்கா நெடுகிலும் பேசுவா அந்தக் குண்டுச்சனியன் போட்டா இன்னமும் பெரிசா நோகும் எண்டு. அது எவ்வளவோ பரவாயில்லை. எப்பயாச்சும் உங்களுக்கு ஏழரைச் சனியன் உச்சத்தில் இருக்கும் பட்சத்தில் ஆம்பிளை நேர்ஸ் மாரிட்ட மாட்டினியள் எண்டு வையுங்க சொர்க்கத்தையே……… காட்டுவாங்கள்.
புகைவண்டியாகத்தான் எனக்கு இரயில் பழக்கமானது. ஆனாலும் இந்தப்பாடலைக் கேட்பதற்கு முன்னாலேயே நான் இரயிலில் பயணித்திருப்பதாக அம்மா பின்னாட்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு நினைவிருப்பது இந்தப்பாடலை பாடிக்கொண்டு நாங்கள் பாலர்வகுப்பு மரத்தை ஒருவர் தோளை ஒருவர் பிடித்துக்கொண்டு சுத்தி வந்தது தான்.
எங்கள் வீட்டில் அம்மாவையும் அப்பாவையும்
தவிர்த்து ( அப்பாவும் இப்ப இல்ல)நான் ஒருத்தன் தான் ரயிலில் பயணம் செய்த
சாதனையைச் செய்தவனாயிருந்தேன்,ஏறக்குறைய 1990 ல் இருந்து 2005 வரை சுமார்
பதினைந்து வருடங்கள் கழித்து என் தம்பியால் அந்தச் சாதனை முறியடிக்கப்
பட்டது. எங்கள் வீடு பிரதான வீதிக்குப் (main road) பக்கத்தில் இருந்தது.
அதனால் ரயில் போவதை வீட்டிலிருந்தே பார்க்க முடியும். அது எப்படி
வாகனங்கள் போவதைத்தானே பார்க்க முடியும் என்று நீங்கள் நினைப்பது எனக்கு
தெரிகிறது. இலங்கையில் இரும்புப் பாதைகள் எப்போதும் பிரதான வீதிகளை
அண்டித்தான் போடப்பட்டிருக்கும். பெரும் பாலான மாலை வேளைகளில் எங்களது
முக்கியமான விளையாட்டில் ஒன்று ரெயினுக்கு டாட்டா காட்டுவது. அதில் போகிற
பயணிகளும் கைகாட்டுகிறார்கள் என்று வேறு நினைத்துக்கொள்வோம். எங்கள்
வீட்டிலிருந்தே யாராவது போகிறார்கள் என்றால் குழந்தைகள் அப்படியே கும்பலாக
நின்று கைகாட்டுவதுதான் வேலை. அது என்நினைவுக்குள் சின்னதாக மிகமிகச்
சின்னதாகத் தான் இருக்கிறது.

அந்த யாழ்தேவி
வழக்கமாகச் சொல்வது போல ரயிலிலும் குண்டுகள் வெடித்தன. கொலைகள் நிகழ்ந்தன. அதன்பிறகு தண்டவாளங்களும்,சிலுப்பர் கட்டைகளும் பதுங்குழிகள் அமைக்கப் பயன்பட்டன. வெறும் சரளிக்கல் மாத்திரம் எஞ்சியிருந்த ரயில் பாதையில் நாங்கள் பாதங்களில் சரளிக்கல் குத்தக் குத்த நடந்து விளையாடினோம். கிளிநொச்சிக்கு கடைசியாக ரயில் வந்தது. 1990 ம் ஆண்டென்று நினைக்கிறேன். இன்றைக்கு அந்த ரயில் பாதைகளில் சரளிக்கற்கள் கூட இல்லாமல் வெறும் புழுதிச்சாலையாக மாறிவிட்டது.
எனக்கு ஏறக்குறைய பதினேழு வருடங்கள் கழித்துச் சென்னையில் மறுபடியும் ரயில் பயணம் வாய்த்தது.(2007) இன்னமும் இலங்கையில் அது புகைவிடும் இரதமாகத்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். இங்கே மின்சார ரயில். வாசலில் கம்பியைப் பிடித்தபடி காற்று முகத்திலறைய நின்று கொண்டேன். லேசான தூறல் அந்த அனுபவத்தை மேலும் ரம்மியமாக்கியது. மனம் ஒரு குழந்தையைப் போல குதூகலித்தது. ரயில் ஒரு தீராத பயண அனுபவம் தான்.கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் சில நேரங்களில் கூட யாரோ ஒரு பிஞ்சுக்குழந்தையின் நெருடலற்ற பதிலாய் ஒரு புன்னகைகூட எதிர்பார்க்காத புன்னகை ஒன்று அந்தத் தவித்தலை அழகாக்குகிறது.
என் சின்ன வயது ரயில் பயணங்களில் ( இலங்கையில்) நினைவடுக்கில் எஞ்சிக்கிடப்பது மூன்று விசயங்கள்தான். ஒன்று “வட வட வடே இஸ்ஸோ வடே” என்கிற வடை விற்பவரின் சிங்களக் குரல். மற்றது ரயில் ஓடிக்கொண்டிருக்கும் போதே தாவி ஏறுகிற இறங்குகிற வடைவிற்பவரின் லாவகம். அதைவிட முக்கியமாய் எழுத்தாளர் அகிலனின் பெயரை நான் முதல் முதலில் கேள்விப்பட்டது என் முதல் ரயில் பயணத்தில்தான். ஜன்னல் வழியே தலையை நீட்ட முயன்ற என் வயிற்றைக் கிள்ளிப்பிடித்து இருத்திய பாதர்(பாதிரியார்) ஒருத்தர். என்ன பெயர் என்று என்னிடம் கேட்டார். நான் “அகிலன்” என்று சொன்னேன். அகிலன் யாரென்று தெரியுமாவெனக் கேட்டார். நான் தான் அகிலன் என்று சொன்;னேன். இல்லை அவர் ஒரு எழுத்தாளர் என்று சொன்னார் அவர். எழுத்தாளர் எண்டா என்னம்மா எண்டு அம்மாவைக் கேட்டேன். அம்மா தன்னுடைய கௌரவத்தை அந்த பாதர் முன்னிலையில் நான் குறைத்துவிட்டதாகச் கோபமாய்ச் சிரித்துக்கொண்N;ட(கோபமாய்ச் சிரிக்கிறது எப்படி எண்டு தெரியுமோ?) எழுத்தாளரெண்டா தெரியாதே ஆ… கதைகளலெ;லாம் எழுதுவினமே அவைதான் எண்டா… நான் அம்புலிமாமாவிலயா என்று எழுந்த கேள்வியை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டேன். இதைத் தவிர மற்ற இரண்டு நினைவுகளையும் இலங்கையில் ரயிலகளில் பயணம் செய்யும் எவரும் அனுபவிக்கத் தவறியிருக்க மாட்டார்கள். இப்போதும் அந்த ரயில்களில் வடைச் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். (போகிறவர்கள் சொல்லலாம்) எனது சிறிய வயது ரயில் நினைவுகளில் என்னுள் மிஞ்சிக்கிடப்பது இந்த நினைவுகள் தான்.
இப்போது சென்னையில் ரயில் அன்றாட வாகனம். தினமும் பலதடைவைகள் பதினேழு ஆண்டுகாலம் பயணிக்காதிருந்த பாக்கி எல்லாவற்றையும் சேர்த்துப் பயணித்துத் தீர்த்துவிட்டேன். மனசு சரியில்லாத தருணங்களில் எந்த நிலையத்திலும் இறங்காமல் ரயிலில் நீள வழிகளில் மாறிமாறிப் பயணித்திருக்கிறேன். ஆனாலும் ரயில் பயணம் என்பது எனக்குப் பிடித்த ஒன்றாகவே இருக்கிறது எப்போதும். ஒரு வேளை பதினேழு வருடங்கள் மறுக்கப்பட்டிருந்த ஒன்றை அனுபவிக்கிற மகிழ்ச்சியின் நீடிப்பாய் இருக்கிறதோ என்று தெரியாது. இதோ இந்த ரயிலுக்கும் வடேக் குரல் மாதிரியான என் நீள் நினைவுகளில் தேக்கி வைக்கப்படுகிற குரலாக ஒன்றை கருதினால் அது பிச்சைக்காரர்களின் குரலாகத்தான் இருக்கும். உயிரை உலுக்கி எடுக்கின்ற குரல்கள். பிச்சையிடாதவர்களை குற்றவுணர்வென்னும் தண்டவாளத்தில் தள்ளி நசித்தபடி ஏறிச்செல்லும் குரல்கள். ஆனாலும் ஒரு வேடிக்கை என்னிடம் பிச்சைக்காராகளுக்குத் தருவதற்குப் பணமிருக்கிற நேரங்களில் அவர்களின் பாடல்கள் நன்றாக இருப்பதைப்போலவும் பணமற்ற நேரங்களில் நாராசமாகவும் தோன்றிக் கொண்டேயிருக்கிறது.
என்னால் ஒருவரை இனிமேல் காலத்துக்கும் மறக்கமுடியாது என்று தோன்றுகிறது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் புல்லாங்குழல் விற்கிற பெரியவர். நான் அவர் அருகே அதிக நேரம் அமர்ந்திருக்கிறேன் துளைகளால் வழியும் அவரது இசையில் வீழ்ந்தபடி. அவரது புல்லாங்குழல் இசையிருக்கிற போதுதான் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் உயிரோடிருப்பது மாதிரித் தோன்றும் எனக்கு. அதைவிட முக்கியமாய் அவர் தன் புல்லாங்குழலை இசைக்கும் போதெல்லாம் அதன் இசை காற்றில் ஓவியம் வரைவதாய்த் தோன்றிக் கொண்டேயிருக்கும் எனக்கு. அவரது விதவிதமான இசைக்கு நான் விதவிதமன ஓவியங்களைக் கற்பனை பண்ணிக் கொள்ளுவேன். ஒரு குருடனின் வர்ணங்கள் ஒலிகளாலானவை போல. நிறைய நாட்களில் நான் அவரோடு பேச்சுக்கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் முடிந்ததில்லை. அவரது அந்தப் புல்லாங்குழலிசையை நான் ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தேன். நான் முன்பு வேலை பார்த்த இணைய உலாவி மையத்தில் (நெவ உயகந) அதனை சேமித்திருந்தேன். அதை நண்பர் அழித்து விட்டார். அந்தப் புல்லாங்குழல் பெரியவர் இல்லாத நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வெறும் உயிரற்ற கூடாய்த் தோற்றமளிக்கும். அவரது இசையற்றுச் சலசலக்கும் மனிதக் குரல்கள் காதில் ஈட்டியாய் இறங்கும்.
நான் இன்னொருத்தியைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவள் அழகி பிச்சைக் காரர்களிலும் அழகிகள் இருக்கிறார்கள் என்பது அவளைக் கண்டபிறகுதான் எனக்கு தெரிந்தது. (அழகு என்பதன் வரையறைகள் ஆளாளுக்கு வேறு படுவதால் நீங்களும் அவ்வாறே நினைக்க வேண்டும் என்பதில்லை) ( பிச்சைக் காரியையும் பிகராப் பாக்கிறானே என்று கல்லோடு காத்திருப்பவர்கள் மன்னிக்கவும்) ஆனால் அவள் தமிழழகி கிடையாது. அவள் எந்த மொழி அழகி என்பதைக் கண்டறிவதற்கு என் இந்தியப் பிராந்திய மொழிகளிலான அறிவு உதவி செய்யவில்லை என்று சொல்வதை விடப் போதவில்லை என்பது பொருத்தம். ஆனால் அவளிடம் எல்லோருக்கும் புரிகிற மொழிகள் இரண்டு இருந்தது. ஒன்று பார்வை. இன்னொன்று இசை. அவள் குரல் அவளைவிட அழகாயிருந்ததாய்த் தோன்றிற்று. (அப்போதும் என்னிடம் காசிருக்கவில்லை) அவள் தமிழ் மொழியில் இப்படி இசைக்கப்பட்ட பாடலை…
“ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்”
இந்தப் பாடலை வேறு ஏதோ ஒரு மொழியில் பாடிக்கொண்டிருந்தாள். அந்த வரிகளின் அர்த்தம் இதுதானா என்று எனக்குத் தெரியாது. ஆனால் மெட்டு இதுதான். அவள் ஒரு சின்னப் பெண்ணோடு வந்திருந்தாள். கையில் இரண்டு கட்டைகளை வைத்துக்கொண்டு (நாரதர் வைத்திருப்பாரே அதைப்போல) ரயிலின் தடதடப்பையும் தனது கட்டையின் தட்டலையும் பிசைந்து தன் பாடலுக்குப் பின்ணணி இசையாக்கிப் பாடிக்கொண்டிருந்தாள். ரயிலின் கூரையை வெறித்தபடியிருந்தது அவளது பார்வை. அவளோடு வந்திருந்த சின்னப்பெண் எல்லார் எதிரிலும் சில்லறைத் தட்டுக்களைக் குலுக்கிய படியிருந்தாள். எனக்கு ஏனோ எங்களுரில் தங்கள் வீட்டுச் சின்னப்பிள்ளைகளோடு கோயிலுக்கோ வெளியிடங்களுக்கோ வரும் அழகிகள் நினைவுக்கு வந்தார்கள். அவள் ரயில் முழுதாக நிற்றும் முன்னரே குதித்திறங்கி அடுத்த பெட்டியில் ஏறிப் பாடத்தொடங்கியிருந்தாள். அவளது குரலும் கட்டைத் தட்டலும் கேட்டுக்கொண்டிருந்தது ரயில் புறப்படும் வரை. அதற்குப்பிறகு மின்சார ரயில் பயணங்கள்; எல்லாவற்றிற்கும் அவளது குரலைக் கேட்பதற்கும் அவளைக் காண்பதற்குத் தயாரான மனநிலையோடும் போகிறேன். ஆனால் அதற்குப் பிறகெப்போதும் அவளது குரலும் அவளும் எதிர்ப்படுவதேயில்லை.
ஒரு சின்னப் பெண் இருக்கிறாள். அவள் எப்போதும் அவள் அம்மாவோடுதான் வருவாள். தாய் டங்கு டங்கென்று ஒரு மேளத்தை அடித்தபடியிருக்க சின்னச் சின்ன வளையங்களிற்குள் நுழைந்து நுழைந்து அவள் வித்தைகாட்டுவாள். அவளது வித்தை நன்றாகத்தான் இருக்கும். தாயின் தோளில் தொங்கும் தூளியில் ரயிலின் தடதடப்பையும் இந்த மேளச்சத்தத்தையும் மீறி ஒரு குழந்தை தூங்கிக் கிடக்கும். நாள் அந்தச் சின்னப் பெண்ணைப் பார்த்திருக்கிறேன். அவள் தான் காட்டுகிற வித்தையை யாரேனும் பார்க்கிறார்களா என்கிற சிந்தனையும் கவனமும் அவளிடம் இருப்பதாய்ப் படவில்லை எனக்கு. இதோ இந்தக் கட்டுரைக்கே ஏதோ ஓர் எதிர்வினையை மனசின் ஓரத்தில் எதிர்பார்த்த படியே தான் நான் எழுதுகிறேன். அவள் பணத்தை எதிர் பார்க்கிறாள். கலைக்குப் பணம் தேவைதான். ஆனால் அதையும் மீறி நாங்கள் அது குறித்தான ஓர் எதிர்வினையை (அது அநேகமாகப் பாராட்டுத்தான்) எதிர்பார்க்கிறோம் இல்லையா? ஆனால் அவள் தன் திறமை குறித்து பாராட்டுகளை எதிர்பார்க்காதவளாயிருக்கிறாள். ஒரு கட்டத்தில் வித்தையை நிறுத்தி விட்டு சில்லறைக்காகத் தட்டை நீட்டத் தொடங்குவாள். எனக்கு ஒரு மாதிரி இருக்கும். மனசை யாரோ பிறாண்டுவது போல.
நீங்கள் எப்போதாவது பிச்சைக்காரர்கள் அழுது பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன். வெட்கத்தை விடத் தகிப்பான ஒரு கிழவரின் கண்ணீர்த் துளிகளைக் கண்டிருக்கிறேன். மற்றவர் எதிரில் அவர் கரங்கள் நீளுகின்ற போதெல்லாம் அவர் அவமானத்தால் குறுகிப்போகிறார் என்று தோன்றும். புதுப் பிச்சைக் காரராயிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். அவரால் இன்னமும் வெட்கத்தை முழுசாகக் கடந்து விட முடியவில்லை. கைகளைக் கும்பிட்டு உயர்த்துவது போல முழங்கையால் விழிகளைத் துடைத்தபடி கிழவர் கடந்து போனபின்பும் அவரது கண்ணீர்த்துளி என் தூக்கத்தை நனைத்துக்கொண்டிருந்தது, அந்த இரவு முழுதும்.
இந்தத் துயரங்களிற்கெல்லாம் தீர்வுதிட்டங்கள் ஆலோசனைகள் எதுவும் என்னிடமில்லை. ரயிலின் தடதடப்பையும் மீறிப் பதட்டமாய் மனசில் பதிந்து கிடக்கும் நினைவுகள் இவை அவ்வளவுதான். இந்தத் துயரும் பதட்டமும் கடந்தும் ரயில் பயணங்களை அவ்வப்போது ரம்மியமாக்குகின்ற நினைவுகளும் உண்டு. அம்மாக்களின் தோளில் தொங்குகிற குட்டித் தேவதைகளின் புன்னகைகள்,எதிர் பிளாட்பாரத்தில் காத்திருக்கிற அழகுத் தேவதைகள் பிச்சையிடுகிற பார்வைகள், இன்னும் எவ்வளவோ… இப்படியான மென் நினைவுகளின் நகரும் கூடாரமாய் தடதடத்து ஓடிக்கொண்டேயிருக்கிறது ரயில் நீளத்துக்கும்….
ஹலோ!
வணக்கம் யார் இது.
நான் சாவகச்சேரியில் இருந்து ஞானதிரவியம் கதைக்கிறன்.
உங்களை திரவியம் எண்டு கூப்பிர்றதோ ஞானம் எண்டு கூப்பிர்றதோ?
ஹி ஹி ஹி அது உங்கட விருப்பம்.
ஆ திரவியம் சொல்லுங்கோ யாருக்கு வாழ்த்துச் சொல்லப்போறீங்க?
போனமாசம் 4ம் தேதி என்ர மச்சாளுக்குப் பிறந்தநாள் அவாக்கு வாழ்த்துச்
சொல்லவேணும் அவாக்காக கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா எண்ட
பாட்டுப் போடுங்கோ
யார் யாரெல்லாம் கேக்கிறீங்க..
மச்சாள் அன்னபூரணி அவான்ர தங்கச்சி கோமளவல்லி சித்தப்பா டூ….ட் டூ….ட்.
இதோ ஞானதிரவியத்திற்காக அவர்விரும்பிக் கேட்வர்களுக்காககவும்
அந்தப்பாடல்…..
உரையாடலின் இடையில் அறிவிப்பாளர் அடிக்கடி இதைச் சொல்லுவார். உங்கட வானொலிப் பெட்டியின் சத்தத்தை குறைச்சு வையுங்க ( வால்யூமைக் கம்மி பண்ணுங்க)…… குறைக்காட்டி கட் பண்ணிருவன்……(இந்த இடைவெளி அவசியம் விடப்படும்); லைனை.
எவ் எம் றேடியோக்களின் இவ்வாறான உரையாடல்களால். நிம்மதியாக பாரில் உட்கார்ந்து தண்ணி அடிக்கக் கூட முடியவில்லை என்று யாரோ ஒருவருடைய பதிவில் படித்ததாக நினைவு. யாருக்குத்தான் கடுப்பாகாது. இப்படியான வெறுப்பேற்றும் உரையாடல்களை எத்தனை மணிநேரம் தான் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருக்க முடியும். இது போதாதென்று போன் பண்ணுகிறவர்களில் பலபேர் தாங்கள் பாட்டுப்படித்து விட்டுத்தான் போவேம் என்று அடம்வேறு. வானொலிகள் நேயர்களைக் கட்டிப்போட்டிருந்து காலம் என்றொண்டுண்டு.
நான் சென்னைக்கு வந்ததும் என்னைச் சந்திக்கிற நண்பர்கள் யாரும் இலங்கை வானொலியையும் அதன் அறிவிப்பாளர்களைப் பற்றியும் பேசாமல் இல்லை. அவ்வளவு தரமான நிகழ்ச்சிகளை அவர்கள் வழங்கிக்கொண்டிருந்தார்கள் அதனால்தான் இவ்வளவு காலம் அந்த அறிவிப்பாளர்களால் கடல்கடந்தும் நினைவில் நிற்க முடிகிறது. இப்போதிருக்கிற வானொலிச் சூழல் குறிப்பாக இலங்கையில் எப்படியிருக்கிறது என்பது குறித்து தனது கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார் இலங்கைவானொலியின் மூத்த ஒலிபரப்பாளர் எஸ். எழில் வேந்தன். இவரைப் பற்றி என் ஆரம்ப நாள் பதிவுகளில் ஒன்றான யேசுதாஸ் ஏன் அழுதார் என்கிற பதிவில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். நண்பர்கள் அதையும் படிக்கலாம். இனி அவருடனான உரையாடல்.
1. அறிவிப்பாளராக ஆகும் வரையான எழில் வேந்தன் பற்றிய குறிப்புகள்?
கிழக்கிலங்கையில், மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மட்டக்களப்பிலிருந்து 22 மைல் தொலைவிலுள்ள ஒரு சிறு கிராமம் பெரிய நீலாவணை. பெரிதாக அறியப்படாத கிராமம். அதுவே என் தந்தையின் ஊர். நான் பிறந்து வளர்ந்தது இங்குதான். என் ஊர் அப்போது பெரிதாக அறியப்பட்டிருக்கவில்லை. (அண்மையில் ஏற்பட்ட சுனாமியின்போது அதிக அழிவைச் சந்தித்ததால் இவ்வூர் சற்று அதிகம் பேசப்பட்டது வேறு கதை). ஊரின்மேல் கொண்ட பற்றுக் காரணமாக “நீலாவணன்” என்று பெயர் சூட்டிக்கொண்ட கே.சின்னத்துரை என் தந்தை. தாயார் அழகேஸ்வரி என அறியப்பட்ட அழகம்மா. இருவரும் ஆசிரியத் தொழில் பார்த்தவர்கள். இவர்களின் காதல் மணத்தின் அறுவடையாகக் கிடைத்த ஐந்து பிள்ளைகளில் தலைச்சன் பிள்ளை நான். மூன்று தங்கைகள். ஒரு தம்பி. தம்பி வலது குறைந்தவன்.
அம்மாவின் ஊரான பாண்டிருப்பில் உள்ள நாவலர் வித்தியாலயத்தில் ( அப்போது அது பாண்டிருப்பு அரசினர் மெதொடிஸ்த பாடசாலை என அழைக்கப்பட்டதென நம்புகிறேன்) பாலர் கல்வி. பின்னர் சொந்த ஊரான பெரியநீலாவணையில் உள்ள இரு பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி. தொடர்ந்து மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆகியவற்றில் இடைநிலை மற்றும் உயர் கல்வி. இதுவே என் இளமைக்காலம். எல்லோரையும் போலப் பாடசாலை நாட்களில் நாடகம், கலை நிகழ்ச்சிகள், போட்டிகளில் கலந்து கொண்டதும், பரிசுகள் பெற்றதும் உண்டு.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் உயிரியல் விஞ்ஞான மன்ற உருவாக்கத்தில் ஒருவனாய் இருந்தேன் என்பதும் இம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்ட “உயிர்” என்ற கல்விச் சஞ்சிகையின் முதல் ஆசிரியர் என்பதும் சற்றுப் பெருமையான விஷயங்கள்.
பள்ளியில் படித்த காலத்திலேயே தந்தையார் 1975ல் மரணமடைந்துவிட உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு 4 மாதம் இருந்த வேளையில் “எக்ஸ் கதிராளர்”அதாவது “Radiographer” தொழில் வாய்ப்புக் கிடைத்து கொழும்பு வருகை. கொழும்பில் பேராசிரியர் மௌனகுரு மூலம், நாடக இயக்குனர் தாசீசியஸ் அவர்களின் அறிமுகம் கிடைக்க, அவரின் தயாரிப்பில் உருவான கவிஞர் மஹாகவி மாமாவின் “புதியதொரு வீடு” மேடை நாடகத்தில் சிறு பாத்திரத்திலும், தொடர்ந்து நா. சுந்தரலிங்கம் அவர்களின் இயக்கத்தில் “விழிப்பு” மேடை நாடகத்தில் சிறு பாத்திரத்திலும் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அரங்க ஆற்றுகையில் துறை போன இருவரின் நெறியாள்கையில் நடித்த அனுபவமே, 1977 தேசிய நாடக விழாவில் இடம்பெற்ற எஸ். சித்திரவேலின் “செவ்வானத்தில் ஒரு “ என்ற நாடகத்தில் முக்கிய பாத்திரமொன்றில் நடிக்கும் தைரியத்தையும், நாடக இயக்கத்தில் துணை செய்யும் துணிவையும், தலை சிறந்த துணை நடிகர் என்ற விருதையும் தந்தது.
இக்காலத்தில்தான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடு எஸ்.வாசுதேவன் தொகுத்தளித்த “சங்கநாதம்” – இளைஞர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இதுவே என் வானொலிப் பிரவேசத்தின் பிள்ளையார் சுழி. ஒலிபரப்பாளரும் நடிகருமான ஜோக்கிம் ஃபெர்ணாண்டோவின் “இருட்டினில் குருட்டாட்டம்” மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததும், நாடகத்தின் கருப்பொருள் காரணமாக இரகசியப்பொலிசாரின் விசாரணைக்கு ஆளானதும் இக்காலகட்டத்தில்தான்.
“சங்கநாதம்” நிகழ்ச்சியின்மூலம், பாடகர்கள் ரீ. கிருஷ்ணன், எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோரின் அறிமுகம் கிடைத்தபோது அவர்களின் “மெல்லிசைப்பாடல் - அரங்கேற்றம்” நிகழ்ச்சிக்கு பாடல்கள் எழுதிக் கொடுத்ததால் ஒரு பாடலாசிரியரானேன். ஒலிபரப்பாளர் அருணா செல்லத்துரையின் அறிமுகம் இதன்போதே கிடைத்தது.”சூரியா ரெக்கொர்ட்ஸ்” உரிமையாளராக இருந்த பொப் பாடகர் “ஷண்”ணின் அரங்கேற்றம் நிகழ்ச்சிக்கு, அருணா செல்லத்துரையின் அறிமுகத்தின் காரணமாக, பாடல் எழுதுகின்ற வாய்ப்பும், ஷன் தன் கையால் கொடுத்த 500ஃஸ்ரீ ரூபாய் சன்மானமும் (என் மாதச் சம்பளமே அக்கால கட்டத்தில் 450ஃஸ்ரீ ரூபாதான்) கிடைத்ததும் அப்போதுதான். என் எழுத்துக்கு முதன்முதலில் கிடைத்த “சன்”மானம் “ஷன்” மூலமே கிடைத்தது. இக்கால கட்டத்தில்தான். வானொலிக்கலைஞர் தெரிவில் கலந்துகொண்டு கிழக்கு மாகாணப் பேச்சு வழக்கில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலும் உரைச்சித்திரம் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும் ஒரு வானொலிக் கலைஞனென்ற தெரிவையும் அங்கீகாரத்தையும் பெற்றேன். இவையெல்லாம் நடக்கும்போது நான் வானொலி ஊழியன் அல்லேன்.
2. வானொலி என்கிற ஊடகம் எப்படி பயன்படுத்தப் பட வேண்டும்? இப்போது அது அவ்வாறு கையாளப் படுகிறதா?
வானொலி என்பது ஒரு விரிந்த ஊடகம். அது விரைவாக
மக்களைச் சென்றடையக் கூடியது. தொலைக்காட்சிபோல எங்களை கட்டுக்குள்
வைத்திருக்கும் ஓர் ஊடகமல்ல. தொலைக்காட்சியை நெருக்கமான ஊடகம் (ஊடழளந
ஆநனயை) என்பார்கள் இன்றைக்கு ஒருசில ரூபா செலவிலேயே ஒரு வானொலிப்பெட்டியை
நாம் வாங்கிவிடலாம். வானொலிப்பெட்டியை உற்றுப் பார்க்காமலே, எந்த வேலையைச்
செய்து கொண்டும் நாம் வானொலியைக் கேட்கலாம். அதேபோல் ஒரு கையடக்கத்
தொலைபேசியை வைத்துக்கொண்டே வெளிக்களத்திலிருந்து ஒரு நேர்முக வர்ணனையை
அல்லது ஒரு கலந்துரையாடலை ஒலிபரப்பிவிடலாம். இத்தகைய உன்னத சாதனத்தை
வெறும் பாடல் ஒலிபரப்பும் சாதனமாகப் பயன்படுத்துவதில் எனக்கு
உடன்பாடில்லை. முன்னர் நான் சொன்னதுபோல வானொலியை அறிவூட்டும், தகவல்
தரும், களிப்பூட்டும் ஒரு சாதனமாகப் பயன்படுத்தவேண்டுமே தவிர,
பாடல்களுடன், தமிழ்த் திரைத் தாரகைகள் தினமும் எத்தனை மணிக்குக் காலைக்
கடன் கழிப்பார்கள் அல்லது கடைசியாக அவர்கள் எப்போது காலைக் கடன்
கழித்தார்கள் என்பன போன்ற சங்கதிகளை எமக்கு அறிவிக்கும் சாதனமாக அதைப்
பயன்படுத்தக்கூடாது. நடிகர் ஒருவருக்குப் பிறந்திருக்கும் குழந்தைக்கு
என்ன பெயர் வைப்பார்கள் என்று கருத்துக்கணிப்புப் போட்டி நடத்திய
வானொலிகளையும் நாம் கண்டிருக்கிறோம். நாம் அத்தகைய ஒரு காலகட்டத்தில்
வாழ்ந்தோம் என்பதை அவமானத்துடன் பதிவு செய்கிறேன்.
3. தமிழ் வானொலிச் சூழல் பற்றி தங்களுடைய தற்போதைய அவதானிப்புக்கள் இலங்கை அளவில் என்னவாயிருக்கிறது? அதோடு உலகளாவிய ரீதியில் எதுவாயிருக்கிறது?
இலங்கையின் தமிழ் வானொலிச்சூழல் தற்போது மிகுந்த கவலைதரும் ஒன்றாகவே மாறிவிட்டது. வானொலி நிலையங்கள் தம் பிரதான பணிகளான அறிவூட்டல், தகவல் தருதல், களிப்பூட்டல் என்ற நிலையிலிருந்து விலகி தனியே களிப்பூட்டிக்கொண்டிருக்கின்றன. இன்று இலங்கையில் வானொலிகள் தென் இந்தியத் திரை உலகப் பிரமுகங்களின் பிறந்தநாளை யார் சிறப்பாகக் கொண்டாடுவது என்பதில் போட்டி போட்டுக் கொண்டு செயலாற்றுகின்றன. அவை தென் இந்திய அல்லது இந்தியத் திரைத் தகவல் களஞ்சியங்களாக மாறிவிட்டன. மட்டுமன்றி தென்னிந்தியச் சஞ்சிகைகளின் வாசிப்பு அரங்காகவும் மாற்றம் பெற்றுவிட்டன. மொழி, உச்சரிப்பு, என்பவை தொடர்பான எவ்வித பிரஞ்ஞையுமின்றி, ஒலிபரப்பாளர்கள் தாம் நினைத்ததை நினைத்தபடி பேசிவிட்டுப் போகும் ஒரு நிலை தோன்றிவிட்டது. அண்மையில் ஓர் அறிவிப்பாளர் “ அம்மா என்றாலே நிறைய வரும். கொட்டிக்கொண்டு வரும்” என்றார். எது வரும்? எது கொட்டும்? எனச் சொல்லுவார் எனக் கேட்டுக்கொண்டேயிருந்தேன். அவரும் சொல்லவில்லை. நானும் இன்றுவரை யோசித்துக் கொண்டேயிருக்கிறேன். இது ஓர் உதாரணம். இன்னுமோர் ஒலிபரப்பாளர் ஒரு பெண் நேயரிடம் “உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?” எனக்கேட்கிறார். நேயரும் “ஒரு பிள்ளை. ஒரே மகன்” என்கிறார். ஒலிபரப்பாளரின் அடுத்த கேள்வி “ உங்களுக்குத் திருமணமாகி விட்டதா?” . எனக்கோ பலத்த சந்தேகம். கர்ணனின் தாயார் குந்திதேவியுடனா இந்த அறிவிப்பாளர் உரையாடிக்கொண்டிருக்கிறார் என்று. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்வேன்.
அடுத்தது, புதிய பாடல் ஒலிபரப்பும் போட்டி. புதிய பாடலொன்றை ஒலிபரப்பிவிட்டு இந்தப் பாடலை முதலில் ஒலிபரப்பியது நாமே என்றோ இப்பாடலை ஒலிபரப்பும் உரிமை எமது நிலையத்துக்கு மட்டுமே உண்டு என்றோ அபத்தமாகக் கூறும் நிலை தற்போது தோன்றியுள்ளது. இப்பாடலை எழுதிய கவிஞரோ, இசையமைத்த இசையமைப்பாளரோ, பாடிய பாடகரோ, பாடல் காட்சியை இயக்கிய இயக்குனரோ, இவர்கள் அனைவருக்கும் அப்பால் கந்து வட்டிக்கு கோடி கோடியாகக் கடன் வாங்கிப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளரோ கூட இந்தப் பாடலுக்கு இத்தனை உரிமை கொண்டாடுவார்களா தெரியாது. இத்தனைக்கும் இப்பாடல் இணயத்திலிருந்து தரவிறக்கப்பட்டிருக்கும்; அல்லது ஒரு 80ஃஸ்ரீ ரூபா செலவில் வாங்கப்பட்ட திருட்டு இறுவட்டிலிருந்து ஒலித்திருக்கும். பாடல் ஒலிபரப்புவதற்காக உரிமத்தொகை ஒன்றுள்ளது என்பதைக் கூட இவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
இன்னும் சொல்வேன். எழுவாய் பயனிலை இல்லாத வசனங்களும் பன்மையில் ஆரம்பித்து ஒருமையில் முடியும் வசனங்களும் தாராளமாகவே காற்றலை ஏறுகின்றன. ல, ள, ழ பேதங்கள் கிடையாது. ன, ண, ந வித்தியாசம் தெரியாது. சுசந்திகா என்பது சுசன்திகா என்றே எழுதப்படுகிறது;வாசிக்கப்படுகின்றது.’ ந் ‘, ‘ற்’ போன்ற எழுத்துக்கள் தமிழில் இருப்பதே சிலருக்குத் தெரியாது. இது இவ்வாறிருக்க குற்றியலுகர, இகரங்கள் பற்றியெல்லாம் இவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பது அதிகப்படி. பேசப்படும் சொற்களில் 50%ற்கும் அதிகமானவை ஆங்கிலச் சொற்களாகவே உள்ளன. அதுவும் பொருத்தமற்ற இடங்களில் ஆங்கிலச்சொற்கள் வலிந்து கலக்கப்படுகின்றன. ஊரில் பாட்டிமார் பழமொழியொன்று சொல்வார்கள் “காகம் அன்னநடை நடக்கப் போய் தன்னடையும் கெட்டதென”. அதன் பொருளை இப்போது நேரில் காண முடிகின்றது. இந்தியத்தமிழ் பேச முயன்று அது இந்தியத் தமிழுமின்றி இலங்கைத் தமிழுமின்றி ஒரு புதிய “இலந்தியத் தமிழ்” உருவாகி கர்ண கடூரமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இலங்கையில் வானொலிகளை இவ்வாறு புலம்பிக் கொண்டுதான் கேட்கவேண்டியுள்ளது. அதனால் இப்போதெல்லாம் நான் வானொலி கேட்பது குறைவு.
மாறாக புலம்பெயர்ந்த நாடுகளில் எம் ஒலிபரப்பாளர்கள் எவ்வித சமரசங்களும் செய்துகொள்ளாமல் இன்றும் நல்ல வானொலி நிலையங்களை நடத்திக் கொண்டுதான் உள்ளனர். இங்கிலாந்து, ஜேர்மனி,ஃப்ரான்ஸ், நோர்வே போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், அவுஸ்திரேலியா, கனடா போன்ற தேசங்களிலும் நல்ல தமிழ் வானொலி நிலையங்கள் ஒலிபரப்பைச் செய்கின்றன. இலங்கை இனப் பிரச்சினை எமக்கு எத்தனையோ பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும் இன்று உலகெங்கும் நல்ல தமிழ் ஒலிக்கவும் வழி வகுத்துவிட்டது. தமிழ் நாட்டு வானொலிகள் பற்றி நான் ஒன்றுமே கூறவரவில்லை . தமிழ் தொலைக்காட்சிகள்மீது சுமத்தப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் இவர்கள்மீதும் சுமத்தலாமா தெரியவில்லை.
மொத்தத்தில் என்னைப்பொறுத்தவரையில் தனியார் வானொலிகளின் வருகையென்பது தமிழ் மொழிக்கு ஏற்பட்ட சாபக்கேடு என்றே கூறுவேன். ‘வானொலி முதலாளிகளின்’ சுய விருப்பு வெறுப்புகளுக்குத் தீனிபோடும் கருவிகளான் இந்த வானொலிகள், தமிழ் மொழிக்கு வெகு விரைவில் பாடை கட்டிவிடுமோ என அஞ்சுகிறேன். ஒரு சில நல்ல, திறமையான ஒலிபரப்பாளர்களும் இந்த வலையில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவிப்பதுதான் இதில் வேதனையான விஷயம்.
4. மொழி குறித்தான பிரக்ஞை இப்போது இருக்கிற இளந் தலைமுறை அறிவிப்பாளர்களிடம் இருக்கிறதா? ஒரு அறிவிப்பாளருக்கு அது எந்த அளவுக்கு இருக்க வேண்டும்?
ஒருசிலரைத்தவிர ஏனையோரிடம் இல்லை என்றே சொல்வேன். ஒருமை - பன்மை , இறந்த காலம் – நிகழ்காலம்- எதிர்காலம், ல-ள-ழ- அல்லது ன-ண-ந வேற்றுமை என்ற தமிழ்மொழியின் மிக அடிப்படை அறிவில்லாதவர்களே இன்று பெரும்பாலான வானொலிகளில் பணியாற்றுகின்றனர். சொல் வளம் இல்லாமல் சொற்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது ஆங்கிலச் சொற்களைக்கொண்டு இட்டு நிரப்புகின்றனர். ‘Quick காச் சொல்லுங்கோ” “ஆருக்கு dedicate பண்ணுறீங்கள்” என்பதெல்லாம் இப்போது தமிழ் வானொலிகளில் சர்வசாதாரணம். ‘Hello’, ‘bye’, ‘jolly’ என்பனவெல்லாம் தமிழ்ச் சொற்களாகவே ஆகிவிட்டன.
மொழி தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க வானொலி கேட்கலாம் என்றிருந்த காலம் போயே போய் விட்டது. தன் சொந்த மொழியில் (அதற்குத் தாய் மொழி என்று வேறு பெயரும் சூட்டிக் கொண்டு) சரளமாக, சரியான உச்சரிப்புடன் அறிவிக்க முடியாதவருக்கெல்லாம் ஏன் அறிவிப்பாளர் தொழில்? இப்போது அறிவிப்பாளருக்குத் தேவையான அடிப்படைத் தகுதி தொலைபேசியில் அபத்தமாக உரையாடத் தெரிந்திருத்தல் மட்டுமே. என்னிடம் ஓர் ஆசிரியை ‘ஆயிரத்தித் தொளாயிரத்தி அறுபத்தி நாலு’ என்பது சரியா? அல்லது ‘ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்து நான்கு’ என்பது சரியா? என எழுதிக்கேட்டிருந்தார். காரணம், ஓர் அறிவிப்பாளர் ‘ஆயிரத்தித் தொளாயிரத்தி அறுபத்தி நாலு’ என்று அறிவித்ததைக் கேட்ட தன் மாணாக்கரில் ஒருவர், அவ்வாறே கூற முயன்றதாகவும் தான் அதனைத் திருத்தப்போக இந்த அறிவிப்பாளர் இப்படித்தானே அறிவிக்கிறார் என வாதிட்டதாகவும் எழுதியிருந்தார். இதை இங்கு நான் கூற வந்ததன் நோக்கம் பள்ளிச் சிறுவர்களிலிருந்து படித்துப் பட்டம் பெற்றவர்கள்வரை தம்மைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ஓர் அறிவிப்பாளன் உணர்ந்திருக்க வேண்டும் என்பதையும் எமது இளந்தலைமுறையினரை மொழிதொடர்பாக வழிநடத்துவதில் ஒலிபரப்பாளருக்கும் பாரிய பங்குள்ளது என்பதையும் உணர்த்தவே.
அறிவிப்பாளன் தன் மொழி குறித்த நல்ல இலக்கண அறிவு பெற்றிருக்கவேண்டும். மட்டுமின்றி மொழியைச் சரியாக, எவ்விதத் தவறுமின்றி உச்சரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ‘பிரபல திருடன்’, ‘பிரபல கொள்ளைக்காரன்’ போல ‘பிரபல அறிவிப்பாளர்’ ஆக முயற்சி செய்யாமல் தயவுசெய்து ‘புகழ்பெற்ற’ அறிவிப்பாளராக முயற்சி செய்யவேண்டும். அதற்கு மொழி அறிவு மிக முக்கியம்.
5. இப்போது அவர்கள் பாவித்துக் கொண்டிருக்கிற மொழி நடையும்,அறிவிப்புப் பாணியும் உங்கள் காலத்திலிருந்து எவ்வாறு வேறு படுகிறது? மாற்றம் ஆரோக்கியமானதாக இருக்கிறதா?
இப்போது அறிப்பாளர்களால் கையாளப்படும் தமிழ் தறிகெட்டு ஓடுகின்றது. நாம் எமது இளைய சமுதாயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் பணியாற்றினோம். மொழி குறித்த நல்ல அறிவு அவர்களுக்குக் கிடைக்கவேண்டுமென்பதில் மிகுந்த அக்கறை காட்டினோம். அதேசமயம் எமது ஒலிபரப்பைக் கேட்டுக்கொண்டிருக்கும் அறிஞர்களும் புலமை மிக்கோரும் எம்மில் பிழை கண்டுபிடிக்கக்கூடாது என்ற கவனத்துடன் இருந்தோம். அப்போது படித்தோரும் புலமை மிக்கோரும் வானொலியைக் கூர்ந்து செவிமடுத்தனர். ஒரு சிறு தவறையும் உடனே சுட்டிக் காட்டினர். இப்போதெல்லாம் வானொலியைச் செவிமடுப்போர் யார் யார் என்பதை நீங்கள் ஒரு மணி நேரம் வானொலியைக் கேட்டுக் கொண்டிருந்தாலே இலகுவில் கணிப்பிட்டுவிடலாம். மொழி தொடர்பாக மிகுந்த பிரஞ்ஞையுடனிருந்தோம். நிறைய வாசித்தோம்.தெரியாதவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டோம். பிறமொழி வானொலிகளைச் செவிமடுத்தோம். அதன்மூலம் பிறமொழிப் பிரயோகங்கள் பற்றிய அறிவைப் பெற்றோம். மூத்த ஒலிபரப்பாளர்களுடன் நல்ல உறவைப் பேணினோம். அவர்களுடன் கலந்துரையாடினோம். விமர்சனங்களை ஏற்றுக்கொண்டோம். பிறர் எம் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அவற்றை ஏற்று எம்மை நாமே திருத்திக் கொண்டோம். தமிழ்மொழி தொடர்பான அறிவை வளர்த்துக்கொண்டோம். தமிழை நாம் வளர்க்காவிட்டாலும் குறைந்தது சிதைக்காது பார்த்துக்கொண்டோம். நிகழ்ச்சிகளுக்கு தமிழில் பெயரிட்டோம். தாய் மொழியைச் சிதைப்பது தாயைச் சிதைப்பதற்குச் சமனானது என்பதை உணர்ந்து ஒலிபரப்புச் செய்தோம்.
இன்று நிகழ்ச்சிகளின் பெயர்களையே பாருங்கள். ஒரு தமிழ் வானொலி தன் காலை நிகழ்ச்சிக்கு, ‘Breakfast Show’ என்கிறது. மற்றொரு வானொலி அதற்கும் ஒரு படி மேலே போய் ‘Morning Breakfast Show’ என்கிறது. காலையில் Breakfast ‘ சாப்பிடாமல் இரவிலா ‘Breakfast ‘சாப்பிடுவார்கள்? முதல்வர் கலைஞர், தமிழ்ப் பெயர் சூட்டும் தமிழ்ப்படங்களுக்கு வரி விலக்கு அளித்ததுபோல், வன்னியில் குழந்தைகளுக்குத் தூய தமிழ்ப்பெயர் சூட்டுவோருக்குப் பரிசளிப்பதுபோல், வானொலியிலும் நிகழ்ச்சிகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவோருக்குப் பரிசளிக்கும் காலமொன்று உருவானால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இன்றைக்கும் நான் பெருமையுடன் கூறுவேன். நான் சூட்டிய சில நிகழ்ச்சிப் பெயர்கள் இந்தப் புதிய சூறாவளியிலும் தாக்குப் பிடித்து நிலைத்து நிற்கின்றன. ‘சந்தன மேடை’, ‘தங்கக் கொழுந்து’, ‘வணக்கம் தாயகம்’ ‘வளையோசை’ (இப்பெயரை ஒரு வானொலி கைவிட மற்றொரு வானொலி பிடித்துக்கொண்டது), ‘குட்டிச் சுட்டி’, ‘அரும்புகள்’ ‘வயலோடு வசந்தங்கள்’, ’முத்துக்கள் பத்து’, இவை சில உதாரணங்கள். இன்னும் உள்ளன.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு தமிழ் ஒலிபரப்பின் மிக உயர் பதவியிலுள்ள, அதாவது பிரதம நிறைவேற்று அதிகாரியான ஒரு பெண்மணி “எனக்குத் தமிழிலும் பேசத் தெரியும். வாரும் பேசிப் பார்ப்போம்” என, தனக்குக் கீழே பணிபுரிந்த ஒரு தமிழ் ஆர்வலரிடம் ஆங்கிலத்தில் சவால் விடும் நிலைதான் தற்போதுள்ளது. அவர் தமிழில் பேசி நான் கேட்டது குறைவு. அவர் அதிகமாகப் பேசும் தமிழ் “ச்சொல்லுங்கோ”. நிலமை இவ்வாறிருக்க அவர் தனக்குக் கீழே பணிபுரிவோரின் தமிழ்மொழி தொடர்பான தவறுகளை எவ்வாறு திருத்துவார்?
6. ஆனால் தங்களுடைய மொழியும் பாணியும் நேயர்களோடு தங்களை நெருக்கி வைக்க உதவுகிறதாய் இப்போதைய அறிவிப்பாளர்கள் கருதுகிறார்கள்?
சாதாரண பேச்சுத் தமிழில் உரையாடுவதால் நேயர்கள் தம்மோடு நெருக்கமாவதாக தற்போதைய தமிழ் ஒலிபரப்பாளர்கள் கருதுகிறார்களென்றால் இந்த மாற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னர் இருந்த எம் நேயர்கள் எம்மோடு நெருக்கமாக இருக்கவில்லையென்றா சொல்லவருகிறீர்கள்? “முடக்குதிரைக்கு சறுக்கியது சாட்டு” என்பார்களே. அதுதான் இது. இன்று இவர்களின் நேயர்கள் யார் என்பதிலிருந்துதான் நாம் இதனைப் பார்க்க வேண்டும். வெறுமனே பாடல்களை விரும்பிக் கேட்கும் நேயர்கள், அதுவும் தமது குரலில் தமது பெயரையும் உறவினர் நண்பர்கள் பெயர்களையும் வானொலியில் அறிவிக்க விரும்பும், (அதன் மூலம் தற்காலிக அறிவிப்பாளராக மனத்திருப்திகொள்ளும்) ஒருசில இளைய தலைமுறையினர் , அல்லது யாரோ வெளிநாடுகளில் கடும் குளிரில் விறைத்தபடி தொழில் பார்த்து, தமது ஆசைகளை அடக்கியபடி டொலர்களாகவும் யூரோக்களாகவும் பௌண்ட்ஸ்களாகவும் சேமித்து அனுப்ப, இங்கே அறை எடுத்துச் சொகுசாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தினரே இவர்களின் நேயர்கள். இவர்களின் கல்வித்தரமென்ன? சமூக நிலையென்ன? என்ன செய்து கொண்டிருக்கிறீர்களென்றால், படித்துவிட்டு வீட்டிலிருக்கிறேன் என்பதே பதிலாகக் கிடைக்கிறது. எதுவரை படித்தார்களென்பதைக் கேட்டால் தவறு. கேட்கக் கூடாது. தப்பித் தவறிக் கூட ஒரு தொழிசார் நிபுணரோ உயர்பதவி வகிப்போரோ இந்த வானொலிகளைக் கேட்பதாகத் தெரியவில்லை. ஒருமுறை கலையகத்திலிருந்து வடதுருவம் பற்றி ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்புச் செய்துவிட்டு, அலுவலகத்துக்கு வந்து பார்த்தால் புவியியல் தொடர்பாக அமெரிக்காவில் கலாநிதி கற்கை நெறியை முடித்துவிட்டு அதற்கும் மேலே தன் படிப்பைத் தொடரும் ஒரு பெண் கல்வியியலாளர் – அதுவும் இலங்கையர்- எமது நிகழ்ச்சியை இணையத் தளம் மூலம் கேட்டுவிட்டு , நாம் நிகழ்ச்சியில் தந்த தகவல் ஒன்றில் தவறிருப்பதைச் சுட்டிக்காட்டி மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். எத்தனை ஆசிரியர்கள்,அதிபர்கள், அலுவலர்கள் நிகழ்ச்சிகளைக் கேட்டுக்கொண்டிருந்ததில் நேரம் தவறியதாகச் சொல்ல அவர்களை அன்புடன் கண்டித்து அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். ஆனால் இன்றோ..?
இதைப்பற்றிய எவ்விதக் கவலையும் ‘வானொலி முதலாளிகளுக்குக்’ கிடையாது அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ‘rating’ அல்லது தரக் கணிப்பு. தரமென்றால் நிகழ்ச்சியின் தரமென்பதல்ல. இன்று தரக்கணிப்புச் செய்யும் நிறுவனங்கள், சந்தை ஆய்வு செய்யும் நிறுவனங்களாகவேயுள்ளன. எத்தனை பேர் ஒரு வகை சவர்க்காரத்தைப் பாவிக்கிறார்கள் என்று சந்தை ஆய்வு செய்வதைப்போல எத்தனை பேர் இந்த வானொலியைக் கேட்கிறார்கள் என்பதையே ஆய்வு செய்து வெளியிடுகின்றன. இதை வைத்துக்கொண்டு தாமே முதல் தர வானொலியென்று தமக்குத் தாமே முடி சூடிக்கொள்கின்றார்கள். முதல் தரமென்பது நிகழ்ச்சியின் தரமாக இருக்கவேண்டுமே தவிர அதிகம்பேர் ‘பாவிக்கிற’ வானொலியென்பதாக இருக்கக்கூடாது. உங்கள் கேள்விக்கு வருகிறேன்.
கொச்சைப் பேச்சுத் தமிழில் ஒலிபரப்பினால்தான் நேயர்களை நெருக்கமாக வைத்திருக்கும். அவர்களை இலகுவில் சென்றடையும் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்வோமே. அவ்வாறெனில் ஒரு வானொலி நிலையத்தின் மிக முக்கிய நிகழ்ச்சியான செய்திகளை நீங்கள் ஏன் கொச்சைத் தமிழில் அல்லது பேச்சுத் தமிழில் ஒலிபரப்புவதில்லை? “இண்டைக்குக் காலையிலை வந்து பாருங்கோ ஒரு பத்துமணிபோல கொழும்பிலையிருந்து எயார்போட் போன SLTB பஸ் ஒண்டு ஜா எலக்குக் கிட்ட அக்சிடெண்டானதிலை 3 பேர் செத்துப் போச்சினமாம். 8 பேருக்குக் காயமாம். அதிலையும் 4 பேருக்கு சீரியசாம். சீரியசானவையை கொழும்பு பெரியாஸ்பத்திரியிலை அட்மிட் பண்ணியிருக்கினமாம் “ எனச் செய்தி வாசித்தால் அது இன்னும் மக்களை நெருங்கி அல்லது நெருக்கிச் செல்லுமே? யாராவது ஒரு ‘வானொலி முதலாளி ‘ இதனை முயற்சி செய்து பார்க்கலாம். அது வெற்றியளித்தால், இதற்கான புலமைச் சொத்துரிமையாக (Copyright) இலங்கை ரூபா 5 லட்சத்தை எனக்குத் தந்துவிட வேண்டுமென இப்போதே சொல்லிவிட்டேன்.
நல்ல தமிழில் வாசிக்கப்படுகின்ற செய்திகளைப் பாமர மக்களும் புரிந்துகொள்ள முடியுமென்றால், ஏனைய அறிவிப்புகளையும் நல்ல தமிழில் செய்தால் அவர்கள் புரிந்து கொள்வார்கள். மக்களைப் பற்றி நீங்கள் குறைவாக மதிப்பிடவேண்டாம். அவர்கள் எங்கள் அறிவிப்பாளர்களைவிடப் புத்திசாலிகள்.
7. நீங்கள் வர்ணணை யாளராகவும் , அறிவிப்பாளராகவும் பணியாற்றியவர் என்கிற அனுபவத்தில் இரண்டு துறைகளுக்கும் இறையிலான வேறுபாடுகளாக எதை உணர்கிறீர்கள்?
முதலில் என்னை ஒரு ஒலிபரப்பாளன் என்று கூறுவதையே நான் விரும்புகிறேன். ஓர் ஒலிபரப்பாளன் ஒலிபரப்பின் அனைத்துத் துறைகளிலும் ஓரளவேனும் அனுபவம் பெற்றிருக்கவேண்டுமென நம்புபவன் நான். வானொலி நிகழ்சிகளில் கலந்துகொள்ளும் ஒரு கலைஞனாக ஆரம்பித்த நான், அறிவிப்புச் செய்துள்ளேன், வானொலி தொலைக்காட்சிகளில் நேர்முக வர்ணனை செய்திருக்கிறேன், சமகால மொழிபெயர்ப்புச் செய்துள்ளேன். நிகழ்ச்சித் தயாரிப்பு, நிகழ்சித் தொகுப்பு செய்துள்ளேன். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் செய்தி ஆசிரியராகவும் செய்தி வாசிப்பாளனாகவும் (அதுவும் தொலைக்காட்சியியில் எனக்கு நானே மேக் அப் போட்டுக்கொண்டு) பணியாற்றியுள்ளேன். வானொலி நாடகம் - மெல்லிசைப்பாடல்கள் உட்பட வானொலிப் பிரதிகள் எழுதியுள்ளேன். விளம்பரப் பிரதிகள் எழுதியுள்ளேன். விளம்பரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளேன். மேடையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்துள்ளேன். ஆங்கிலம்-தமிழ், சிங்களம் – தமிழ் மொழிபெயர்ப்புச் செய்துள்ளேன், வானொலி மாமாவாகச் சிறுவர் மலர் நிகழ்ச்சியை 8 ஆண்டுக்காலம் நடத்தி வந்துள்ளேன். தட்டச்சு செய்பவர் வராதபோது தட்டச்சும் செய்துள்ளேன். வெளிக்களத்தில் சிரமமான நாட்டுக்கூத்து போன்ற நிகழ்ச்சிகளை தனியே ஓர் ஒலிவாங்கியின் துணையுடன் ஒலிபரப்புத் தரத்துடன் ஒலிப்பதிவு செய்துள்ளேன். கலையகங்களில் தொழில் நுட்பக்கலைஞர்கள் மட்டுமே செய்யும் ஒலிப்பதிவு (Recording) ஒலித்தொகுப்பு (Editing என்பவற்றைத் தனியே செய்துள்ளேன். ஏன் ஒரு விளம்பரத்திற்காக பாட்டும் பாடியுள்ளேன். இதை நான் என்புகழ் பாடவேண்டும் என்பதற்காக மட்டும் கூறவில்லை. தன்னை ஒரு முழுமையான ஒலிபரப்பாளனாகக் கருதும் அனைவரும் இதில் பாதியாவது செய்திருக்கவேண்டும் எனக் கருதுவதால் சொல்கிறேன். இன்று இப்படி எத்தனை பேர் உள்ளனரோ நானறியேன்.
இனி உங்கள் கேள்விக்கு வருவோம். அறிவிப்பாளனுக்குரிய பணிகள் மட்டுப்படுத்தப்பட்டவை. கொடுக்கப்படும் நிகழ்ச்சிக்குப் பொருத்தமான அறிவிப்பைச் செய்தல் அல்லது கொடுக்கப்படும் பிரதியை அறிவித்தல் என்பவற்றோடு அவனது பணிமட்டுப்படுகிறது. இன்று எஃப் எம் வானொலிகளில் செய்யப்படுவது அறிவிப்புத்தானா என்ற ஒரு கேள்வியும் இங்கே எழுகின்றது. ‘‘Disk Jockey’ அல்லது DJஎனப்படும் பாடல் தொகுத்துப் போடுபவரின் பணியைத்தான் இப்போதுள்ளவர்கள் செய்கிறார்கள். இடையிடையே ஏதோ பேசவேண்டும் என்பதற்காக ஏதேதோ பேசிவிட்டும் போகிறார்கள்.
ஒரு நேர்முக வர்ணனையாளனின் பணியென்பது இதை விடப் பாரியது. பொறுப்பானது. தனது நேயருக்கு - அவர் பார்வையற்றவராகக்கூட இருக்கலாம் – ஒரு நிகழ்வை காட்சிப்படுத்துவதே நேர்முக வர்ணனையாளரின் பிரதான பணி. காட்சிகளின் விபரிப்பு அந்த நிகழ்வை உங்கள் நேயர் காணச் செய்வதாக அமைய வேண்டும். அதற்காக உங்கள் நேயருக்கு அளவுக்கதிகமாகவும் காட்சிப்படுத்தத் தேவையில்லை. கிரிக்கெட் அரங்கினுள் நாயொன்று நுழைந்து ஆட்டத்தில் தடையேற்படும்போது நாயின் மைதானப்பிரவேசம் வர்ணிக்கப்படவேண்டியதே. ஆனால் அங்கு பறந்து செல்லும் காகத்தைப்பற்றிய வர்ணனை தேவையற்றது. எனவே நிகழ்வின் தன்மை குறித்து எதை வர்ணிக்கவேண்டும் எதைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பும் வர்ணனையாளன் கையிலேதான் உள்ளது.
வர்ணனைகள் இருவகையென நான் நினைக்கிறேன். ஒன்று திட்டமிடப்பட்ட நிகழ்வுகளின் வர்ணனை. அதாவது ஓர் அரச தலைவரின் விஜயம் போன்றவை. இத்தகைய திட்டமிடப்பட்ட நிகழ்வுகளை வர்ணனை செய்யும்போது போனோமா வர்ணனை செய்தோமா என்றும் இருக்க முடியாது. அதற்காக நிறைய ‘வீட்டு வேலைகள்’(Home Work) செய்யவேண்டியிருக்கும். மற்றையது திடீரென நிகழும் நிகழ்ச்சிகள். குண்டு வெடிப்புகள், விமான விபத்துகள், வெள்ள அனர்த்தங்கள் போன்றவை. இங்கு முன் ஆயத்தங்கள் குறைவெனினும் அபத்தமாகப் பேச முடியாது. என்னைப் பொறுத்தவரை வர்ணனை என்பதே சிரமமான பணி.
8. இலங்கை வானொலிச் சூழலில் இலங்கை இனப்பிரச்சினை ஏற்படுத்திய முக்கிமான தாக்கம் என்று எதனை முக்கியமாகச் சொல்வீர்கள்?
சந்தேகங்கள் காரணமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்த அத்தனை தமிழ் ஊழியர்களையும் ஒட்டு மொத்தமாக கட்டாய விடுமுறையில் வீட்டுக்கனுப்பி மனத்தளவில் எம்மை நோயாளியாக்கிப் பார்த்தமை ஒரு தாக்கம். (இதில் தன் மதத்தைத் தழுவிய ஒரு தமிழ்ப் பெண்மணியை மணந்த நண்பர் பி.எச். அப்துல் ஹமீதும் , ஒரு தமிழரின் தூரத்துப் பேர்த்தியை மணந்த சிங்கள நண்பர் ஆனந்த புஞ்சிஹேவாவும் அடக்கம்) 83 ஜூலைக் கலவரம் காரணமாக புலம்பெயர்ந்த ஒலிபரப்பாளர்கள், வானொலிக் கலைஞர்கள், வானொலி எழுத்தாளர்கள் ஏற்படுத்திய வெற்றிடம் மற்றொரு தாக்கம். அதனால் ஏற்பட்ட தமிழ்நிகழ்ச்சி ஒலிபரப்பு நேரக்குறைப்பு இன்னுமொரு தாக்கம். வடகிழக்கிலிருந்து கலைஞர்கள், குறிப்பாக இசைக்கலைஞர்கள் கிராமிய நிகழ்ச்சிக் கலைஞர்களின் கொழும்பு வருகை தடைப்பட்டமையால் ஏற்பட்ட தாக்கம், மண்டைதீவு ஒலிபரப்பு நிலையம் மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட ஒலிப்பதிவுக் கூடம் என்பவை இயங்காது போனதால் ஏற்பட்ட தாக்கம், வடகிழக்கில் வெளிக்கள ஒலிபரப்பு, ஒலிப்பதிவுகளில் ஏற்பட்ட தடங்கல்கள் ஏற்படுத்திய தாக்கம் என தாக்கங்கள் அனேகம். ஆனால் தமிழர்கள் மீதான சந்தேகம் இன்னும் தொடர்வதால் நல்ல தமிழ்பேசும் ஒலிபரப்பாளர்களுக்குப் பதிலாக கொச்சைத்தமிழ் பேசும் ஒலிபரப்பாளர்கள் பெருகியுள்ளதையே நான் முக்கிய தாக்கமாகத் தற்போது காண்கிறேன்.
9. இனப்பிரச்சினை செய்திகளின் தேவையையை அதிகரித்ததோடு செய்திகளை மட்டுமே கவனிக்கிற மனோநிலைக்கு மக்களைக் குறிப்பாக தமிழ் மக்களைத் தள்ளி விட்டிருக்கிறது என்று கொள்ளலாமா? முன்பு போல நிகழச்சிகள் வானொலிகளில் இடம் பெறாமைக்கு அதுவும் ஓர் காரணமா?
இனப்பிரச்சினை, செய்திகளின் தேவையை அதிகரித்ததென்னவோ உண்மைதான். ஆனால் எத்தனை வானொலிகள் இவ்வாறு செய்திகளுக்கு மாத்திரமே முன்னுரிமை கொடுத்து நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன? அதுவும் சுயாதீனமாக, சரியான செய்திகளை ஒலிபரப்புகின்றன? இன்று செய்திக்கான கட்டுப்பாடுகளை மீறி எல்லாச் செய்திகளும் ஒலிபரப்பாவதில்லை. அவ்வாறு ஒலிபரப்பும் வானொலி நிலையங்களும் செய்தியாளர்களும் கண்காணிக்கப்படுகின்றனர். இதனால் 100% உண்மைச் செய்திகளைத் தர வானொலி நிலையங்கள் அஞ்சுகின்றன. தமக்குத் தாமே சில சுய கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு செய்திகளைத் தருகின்றன. இதனால் செய்திகளை அறிந்துகொள்ள மக்கள் இணையத்தளங்களையும் பிறநாட்டு ஒலி, ஒளிபரப்புகளையும் நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் செய்திகளைக் கவனிப்பவர்கள் யார் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. பெயர்கூறிப் பாடல் கேட்பவர்கள் ஒரு வானொலியின் செய்தி நேரத்தில் ஏனைய வானொலிப்பக்கம் போய் விடுகின்றனர். இவர்கள் எல்லா வானொலி நிலையங்களுக்கும் அபிமான நேயர்களாகவேயிருக்கின்றனர். மாவிலாறு தொடர்பாக திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களிலும் மோதல்கள் இடம்பெற்று இடப்பெயர்வும் அனர்த்தங்களும் இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த மூதூர்க் கிராமத்திலிருந்து ஓர் இளைஞன் தன் காதலிக்காகப் பாடல் கேட்கவில்லையா? அதேசமயம் தம் இருப்புத் தொடர்பாக அக்கறை கொண்டோர், செய்திகளின்பால் அக்கறை காட்டாமலுமில்லை. இவர்கள் அனைத்து வானொலிகளையும் செய்தி நேரத்தின்போது மட்டுமே செவிமடுக்கின்றனர் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயமே.
முன்புபோல் வானொலியில் நல்ல நிகழ்ச்சிகள் இடம்பெறாமைக்கு, செய்திகளின் தேவை அதிகரித்ததுதன் காரணமா எனக் கேட்டீர்கள். வானொலி முதலாளிகளும் அங்கு பணிபுரிவோரும் 24 மணி நேரமும் செய்திகளைத் தேடி ஒலிபரப்புவதற்கே தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றனர் என நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தால் அது தவறு. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை இரவுகளில் நல்ல குத்துப்பாட்டுகளைப்போட்டு, தமிழ் இளைஞர்களை குத்தாட்டம் போடுமாறு அறிவிக்கச் சொன்ன ஒரு வானொலி முதலாளியை நான் அறிவேன். எனவே இந்த வானொலி முதலாளிகளின் ஒரே குறிக்கோள் தமது வானொலிகளை ‘No 1 hit music channel’ அதாவது ‘முதல் தர இசை அலைவரிசை’ என்ற இலக்கை எட்ட வைப்பதேயன்றி வேறொன்றும் அல்ல. உண்மையில் இவர்களுக்கு செய்திகள் தொடர்பான அக்கறையிருந்தால் நல்ல உச்சரிப்புடன், அடிப்படைத் தமிழ் இலக்கணப் பிழைகளின்றி செய்திகளைத் தயாரித்துத் தரட்டும் பார்க்கலாம்.
10. FM வானொலிகளின் வருகையும் அவற்றின் 24 மணிநேர ஒலிபரப்பும் வானொலி நிகழ்சிகளின் போதாமைக்கும் தரமின்மைக்கும் காரணம் என்று சொல்கிறீர்களா?
வானொலிகளின் ஒலிபரப்பு 24 மணி நேரமாக விஸ்தரிக்கப்படதுபோல ஒலிபரப்பாளர்களின் அறிவு நிலை விஸ்தரிக்கப்படவில்லை என்பதே இன்று பலராலும் முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் சினிமாப் பாடல்களும் சினிமாத் தகவல்களுமே. அவர்களது அதிகபட்ச வாசிப்பு தமிழக வாராந்தரிகளுடன் மட்டுப்பட்டுவிட்டது. எத்தனையோ பெயர்களுடன் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பானாலும் அத்தனையும் சினிமாப்பாடல்களே. சினிமாப்பாடல்களில்கூட மறைந்துகிடக்கும் நல்ல விஷயங்களைப் பிரித்துத்தர அவர்களுக்குத் தெரியவில்லை. அமரர் எஸ்.கே. பரராஜசிங்கம் தொகுத்துத்தந்த ”திரை தந்த இசை” நிகழ்ச்சியும் சினிமாப்பாடல்களை வைத்துத்தான் தொகுக்கப்பட்டது, ஆனால் அந்தப்பாடல்கள் எந்தெந்த கர்னாடக ராகத்தில் அமைந்ததென கர்நாட இசைக்கு முக்கியமளித்ததாக அமையவில்லையா? நான் தயாரித்து வழங்கிய ‘வணக்கம் தாயகம்’ தனியே பொது அறிவு, தமிழறிவுடன் தொடர்புடையதாக அமைந்தது. அதற்கும் அடிப்படை சினிமாப்பாடல்கள்தான். ராஜேஸ்வரி ஷண்முகம் வழங்கிய ‘பொதிகைத் தென்றல்’ நிகழ்ச்சியும் அப்படித்தான். இப்படி அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளைச் செய்யத்துடிக்கும் சில இளம் ஒலிபரப்பாளர்களின் ஆவலைக்கூட வானொலி முதலாளிகள் மழுங்கடித்துவிடுகின்றனர். இரண்டு பாடல்களுக்கிடையில் 90 செக்கனுக்குமேல் பேசக்கூடாதென உத்தரவிட்டு காலமளக்கும் கருவி (stop watch) ) வாங்கிக்கொடுத்த வானொலி முதலாளிகளும் இருக்கின்றனர். இப்படியிருக்கும்போது நிகழ்ச்சிகளின் தரம் எப்படி அதிகரிக்கும்.
பாடலுக்கோ இசைக்கோ முக்கியத்துவமின்றி ஒலிபரப்புச் செய்யலாமா என்று கேட்பீர்கள். கிரிக்கெட் ஆட்டம்பற்றிய நேர்முகவர்ணனையை வானொலியில் 6 மணிநேரம் பாடலின்றியே தொடர்ந்து கேட்பவர்கள் இல்லையா?‘A Man with the Golden Microphone’, ‘Golden tonsil’ என்றெல்லாம் அழைக்கப்பட்ட John Laws என்ற அவுஸ்திரேலிய ஒலிபரப்பாளரைப்பற்றி அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது அறிந்துகொண்டேன். தனது 71வது வயதில் கடந்த 2007 நவம்பர் மாதம், அவர் ஓய்வுபெறும் வரை, 54 ஆண்டுகளாக நடத்திவந்த வெறும் பேச்சையே அடிப்படையாகக் கொண்ட (talkback) வானொலி நிகழ்ச்சி, நேயர்கள் மத்தியில் புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சியாகும். அவரின் எல்லா நிகழ்ச்சிகளும் காத்திரமான விடயதானங்களைக் கொண்டவை. 2003ல் ஒலிபரப்பு வாழ்வில் John Laws 50 ஆண்டுகளைப் பூர்த்திசெய்தபோது, அவர் பணியாற்றிய 2UE வானொலி நிலையம் 10,000 அவுஸ்திரேலிய டொலர் (இலங்கை ரூபாவில் அதன் தற்போதைய பெறுமதி 10 லட்சம் ரூபா!!) பெறுமதியான தங்கமுலாம் பூசப்பட்ட ஒலிவாங்கியொன்றை அவருக்கு பரிசளித்து மகிழ்ந்தது. இந்தத் தங்க முலாம் பூசப்பட்ட ஒலி வாங்கியைப் பயன்படுத்தியே தனது நிகழ்ச்சிகளை அவர் வழங்குவார். நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அவர் அதனைக் கழற்றிக் கொண்டு போய்விடுவார். இதற்கு முன்னரும் 40 வருட ஒலிபரப்பு வாழ்வைப் பூர்த்தி செய்தபோதும் அவருக்கு இவ்வாறே தங்கமுலாம் பூசப்பட்ட ஒலிவாங்கியொன்று பரிசளிக்கப்பட்டிருந்தது. அவ்வளவு தூரம் அவரது நிகழ்ச்சி புகழ்பெற்றிருந்தது. அதேபோல் அவரது நிகழ்ச்சி, அவர் பணியாற்றிய நிலையத்திற்குப் பெரும் புகழையும், வருமானத்தையும் ஈட்டித்தந்தது. அமெரிக்காவிலும் ஒரு வானொலி அவரது நிகழ்ச்சியை சமகாலத்தில் பெற்று ஒலிபரப்பியது. இவ்வளவுக்கும் அவர் தன்னை ஓர் ஊடகவியலாளன் என்று அழைத்துக்கொண்டதில்லை. எப்போதும் தன்னை களிப்பூட்டுபவராகவே அறிமுகப்படுத்துவார். அதாவது தனது பேச்சு நிகழ்ச்சி நேயர்களுக்குக் களிப்பூட்டும் என்பதில் அவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையிருந்தது. அவுஸ்திரேலியாவிலேயே அதிகூடிய சம்பளம் வாங்கிய ஒலிபரப்பாளர் துழாn டுயறள என்பது வேறு விஷயம்.
தரமான நிகழ்ச்சிகளைத் தந்தால் பாடல்கள் இல்லாமலே ஒலிபரப்பைக் கேட்க மக்கள் தயாராகவுள்ளனர் என்பதற்கு John Laws அவர்களின் நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு.
11. இத்தனை ஆண்டுகால அறிவிப்புத் துறை அனுபவங்களில் நீங்கள் முக்கியமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிற அதிருப்தி என்று ஏதேனும் உங்களிடம் உண்டா?
அனேகமாக நான் செய்ய நினைத்த அனேகமான நிகழ்ச்சிகளை என் மேலதிகாரிகளுடன் சண்டை போட்டாவது செய்து முடித்திருக்கிறேன். என் மேலதிகாரிகளுக்கு எவ்வித அசௌகரியங்களையும் அந்த நிகழ்ச்சிகள் தந்ததில்லை. இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளில் ஒலிபரப்புத் தொடர்பான பயிற்சிகள் பெறும் வாய்ப்புகள் கிடைத்தன. இலங்கையில் மட்டுமன்றி, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், ஃபிரான்ஸ், கனடா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள வானொலி நிலையங்களினூடாக தமிழிலும் தென்னாபிரிக்க வானொலி நிலையமொன்றினூடாக ஆங்கிலத்திலும் ஒலிப்பரப்புச் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. ஒரு முழுநேர ஒலிபரப்பாளனாக மரணிக்கவேண்டுமென விரும்பியிருந்தேன். வஞ்சகம், சூது , பொறாமை காரணமாக, நான் எதிர்பார்த்ததற்கும் முன்னரே ஒலிபரப்பிலிருந்து விலகியிருக்க நேர்ந்தமை துரதிஸ்டமே. இலங்கையில் மீண்டும் ஒலிபரப்பின் பொற்காலம் மலருமா என்ற ஒரேயொரு ஆதங்கமே இப்போது எஞ்சியுள்ளது. இன்று புலம்பெயர்ந்த நாடுகளிலெல்லாம் நல்ல தமிழை வானொலிகளில் எம்மவர்கள் முழங்கிக் கொண்டிருக்க, நாமோ கொச்சைத்தமிழ் பேசுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வெளிநாடுகளிலிருந்து சிலரை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். இறக்குமதியான இவர்களோ வானொலி, தொலைக்காட்சிகளில் எப்படி நரம்பு தெறிக்கக் கத்தலாமென்பதையும் 100க்கு எத்தனை சதவீதம் ஆங்கிலம் கலக்கவேண்டுமென்பதையும் கற்றுத் தருகின்றனர். இவர்கள் எங்கிருந்து இறக்குமதியானார்களோ அங்கெல்லாம் இன்றும் எம் இலங்கை ஒலிபரப்பாளர்கள் போற்றப்படுகின்றனர். இதுதான் புரியாத புதிராகவுள்ளது.
என் வானொலி அனுபவங்களை எழுத்துவடிவில் ஆவணப்படுத்துவதொன்றே
இதுவரை நிறவேறாத என் ஆசை. அதை நிறைவேற்றவேண்டும். பார்ப்போம்.
(1)
ஒவ்வொரு நாளும் புதுப்புது வழிமுறைகளை கையாள வேண்டியிருக்கிறது தகிக்கும்
சுவர்களிடமிருந்து தப்பித்த மனோநிலையைப் பெறுவதற்காக இன்றைய இரவுக்கு ஒரு
படத்தை பார்த்து விடுவதென்று தீர்மானித்தேன். தகிப்பிலிருந்து என்னை
விடுவிக்கும் தன் குளுமையான காட்சிகளால் எனை விழுங்கியது tha king of
masks திரைப்படம்.
ஒரு திருவிழா இரவில் எங்கும் வாணவேடிக்கை நிகழந்து கொண்டிருக்க. ஓரமாய் தன் குரங்கோடு ஒரு கிழவர் வித்தைகாட்டிக் கொண்டிருப்பார். அவரிடம் நிறைய வித்தைகள் இருந்தன. மனதைக் கட்டிப்போடுகிற வித்தைகள். தன் அன்றாட வாழ்க்கையில் அடுத்தவனை ஏமாற்றுவதைத் தொழிலாகக் கொண்டிருக்கும் ஒருவனைக் கூட தன் கண்கட்டி வித்தைகளை நம்பச் செய்துவிடுகின்ற ஆற்றல் கொண்டவர் அந்தக் கிழவர். தன் கையில் வைத்திருந்த விசிறியை வெறும் வெளியில் சடக் சடக் கென்று மடக்கி மடக்கி விரிக்கும் போதெல்லாம் அவர் முகம் வௌ;வேறு முகமூடிகளை அணிந்து கொண்டது. நொடிக்கொரு முகமூடியை மாற்றும் அவர் வித்தையால் மொத்தக் கூட்டமும் குதூகலித்தது. அவர் தான் முகமூடிகளின் ராஜா. (tha king of masks)
ஒரு ஓரத்தில் கிழவர் தன் வித்தையை நிகழ்த்திக் கொண்டிருக்கையில் அந்த நாட்டின் அரசில் மிகுந்த செல்வாக்குள்ளவரும் வாழும் போதிசத்துவா (பெண் தெய்வம்) என்று அழைக்கப் படுபவருமான பிரபலமான இசை நாடக நட்சத்திர நடிகர் மாஸ்டர் லியாங் (சூப்பர் ஸ்டார்) (பெண் வேடங்களிற்கு பெயர் போனவர்) அந்தத் திருவிழாக் கூட்டத்துக்குள் நுழைவார். அவரைப் பார்ப்பதற்காக கூட்டம் முண்டியடித்துக்கொண்டு போகும். பல்லக்கில் அமர்ந்திருக்கிற அவர் அந்தக் கூட்டதிலிருந்து விலகி ஒரு புறமாக சூப்பர் ஸ்டாரான தன்னைக் கூட மறந்துவிடுமளவுக்கு இன்னொரு கூட்டத்தை சேர்த்து வைத்துக்கொண்டிருக்கும் கிழவரைப் பார்ப்பார். கிழவர் காட்டுகிற இந்த முகமூடி மாற்றும் வித்தையிலே தன்னை மறந்து அவரும் சொக்கிப்போவார். அது ஒரு அரிதான அழிந்து வருகின்ற கலை என்பதை மாஸ்டர் லியாங் அறிவார். இப்போது கிழவர் தன் வித்தைகளை நிறுத்தியிருந்தார். தன் முன்னே சிதறிக் கிடக்கும் மிகச் சொற்பமான சில்லறைகளைப் பொறுக்கிவைத்துக்கொண்டு ஒரு திட்டின் மீது யோசனையோடு அமர்ந்திருப்பார். அப்போது வந்து விழுந்த தங்க நாணயத்தை நிமிர்ந்து பார்ப்பார் அது வாழும் போதிசத்துவரான மாஸ்டர் லியாங் போட்ட நாணயமென்று தெரிந்து கொள்வார் கிழவர். மாஸ்டர் லியாங்கும் கிழவரைப் பார்த்து தலையசைத்தபடியே சென்று விடுவார்.
அடுத்த நாள் கிழவரை மாஸ்டர் லியாங் சந்தித்து. கிழவருடைய கலை அற்புதமானதென்றும் கிழவரை தன்னுடைய நாடகக் குழுவில் இணைந்து விடும் படியும் வருமானத்தை பிரித்துக்கொள்வோம் என்றும் கேட்பார்.ஆனால் கிழவர் மறுத்து விடுவார். மேலும் தன் கலையின் ரகசியங்களை பிறத்தியாருக்கு சொல்லித் தரமாட்டேன் என்றும் சொல்லுவார் கிழவர். நான் தனியாள் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை ஆனால் ஒரு வாரிசில்லை என்கிற கவலைதான் என்னைப் பிடித்தாட்டுகிறது சகோதரனே என்று சொல்லுவார். அதற்கு மாஸ்டர் லியாங்கோ நீங்கள் என்னை சகோதரனே என்று அழைத்தாலும் பாதி நாட்களில் பெண்வேடத்தில் பெண்ணாகவே வாழ்ந்து விடுகிறேன். இந்தச் சமூகமும் என்னை பெண்வேடத்திலேயே வைத்திருக்க விரும்புகிறது என்பார். அவரவர் துன்பம் அவருக்கு என்றபடி கிழவரிடம் விடைபெறுவார். கிழவர் விரைவில் தனக்கான வாரிசைத் தேடிவிட வேண்டு மென்றும் அவரது கலையை அழியவிடக் கூடாதென்றும் மாஸ்டர் லியாங் கேட்டுக் கொள்வார்.
மாஸ்டர் லியாங்குடனான சந்திப்பிற்குப் பிறகு கிழவர் தனக்கான வாரிசொன்றை உருவாக்கிவிட வேண்டும் என்று முடிவெடுப்பார். குழந்தைகளை நேர்த்திக்கு விற்கிற ஒரு இடத்திற்கு தனது வாரிசாக உருவாகத் தகுதியான ஆண் பிள்ளையை வாங்குவதற்காக போவார். ஆனால் அங்கே அதிகமும் பெண்குழந்தைகள் தான் இருக்கும். என்னைக் கூட்டிக்கொண்டு போங்கள் என்னைக் கூட்டிக்கொண்டு போங்கள் நான் உங்களிற்காக சுத்தம் பண்ணுவேன் சமைப்பேன் என்று அந்தப் பெண் குழந்தைகள் அவரிடம் கெஞ்சும். ஆனால் கிழவரோ எனக்கு ஒரு ஆண்பிள்ளைதான் தேவை என்று கூறியபடியே அந்தப் பெண்குழந்தைகளைப் புறக்கணித்தபடி நடப்பார். அந்தச் சந்தையில் தனக்குப் பொருத்தமான ஒரு குழந்தை இல்லை என முடிவு செய்து அவர் வெளியேற எத்தனிக்கையில் தாத்தா தாத்தா என்று அழைக்கிற குரல் கேட்டு அவர் திரும்பிப் பார்ப்பார். அங்கே ஒரு சின்னப் பையன் நின்று கொண்டிருப்பான். அந்தச் சின்னப் பையனை விற்க வந்தவனோ பத்து டாலர் தந்தால் பையனைத் தருவேன் என்பான். கிழவர் அது அதிகம் என்றபடி போவார். அவன் ஐந்து டாலருக்கு இறங்கி வருவான். கிழவர் அதுவும் அதிகம் என்று புறப்படுவார். அப்போது தாத்தா தாத்தா என்று அழைக்கிற அந்தக் குழந்தையின் மனசைப் பிசைகிற குரல் அவரை எதுவோ செய்ய அந்தச் சிறுவனை அவர் ஐந்து டாலருக்கு வாங்கிக் கொள்வார்.
இப்போது அவர் தனக்கு வாரிசு கிடைத்து விட்டான் என்ற புழுகத்துடன் எல்லாரிடமும் தான் வாங்கிய பையனை அது தன்னுடைய பேரன் என்று சொல்லிக்கொண்டே செல்வார். அவரது வசிப்பிடம் நதியின் மீது இருந்த ஒரு படகு வீடு. அவர் அங்கு வைத்து அந்தக் குழந்தையிடம் தன் முகமூடி வித்தைகளைச் செய்து காட்டி மகிழ்விப்பார். அவனுக்கு டொக்கி என்று செல்லப் பெயர் வைத்து அழைப்பார். அப்படியே தன்னைவிட்டு முப்பது வருடங்களிற்கு முன்னால் ஓடிப்போன தன்மனைவியைப் பற்றியும், பத்து வயதான தன் மகன் நோய்வாய்;ப் பட்டு இறந்து போனது பற்றியும் சொல்லுவார். இப்போது நீ மட்டும் தான் எனக்கிருக்கிறாய் என்று சொல்லும் கிழவரைச் சிறுவன் பார்த்துக்கொண்டேயிருப்பான். தான் வித்தைகாட்டுகிற இடங்களிற்கு அவனையும் கூட அழைத்துச் செல்வார். அவன் தனக்கும் இந்த வித்தையைக் கற்றுத் தருவீர்களா? என்று கேட்க. ஆமாம் உனக்கு மட்டும் தான் இந்த வித்தை அதை உனக்கு மட்டும் தான் கற்றுத் தருவேன் ஏனெனில் அது குடும்பத்தின் சொத்து. இதை வெளியாட்களும் அதைவிட முக்கியமாகக் பெண்களும் கற்றுக்கொள்ளக் கூடாது. என் வாழ்க்கையில் என்றைக்குமே சொல்லித்தரவும் மாட்டேன் என்று சொல்லுவார். இதைச் சொல்லும் போது கிழவர் மிகவும் அழுத்தமாகச் சொல்லுவார்.
ஒரு நாள் இவர் தனது பேரனைத் தோளில் சுமந்தபடி மாஸ்டர் லியாங் நடிக்கிற இசை நாடகம் ஒன்றைப் பார்ப்பதற்காக போவார். மாடியில் ஒப்பனையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் லியாங் கிழவரைக்; கண்டு விட்டு அவரிடம் அவர் தனது வாரிசைக் கண்டு பிடித்து விட்டதற்கு வாழ்த்துச் சொல்லுவாள். அவரைத் தனது பேரனுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளச் சொல்லுவார். கிழவர் தன் பேரனுக்கு மாஸ்டர் லியாங்கை அறிமுகம் செய்து வைத்து விட்டுப் பேரனுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளுவார். நாடகம் முடிவடைந்ததும் கிழவரும் பேரனும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் ஒரு இடத்தில் கரும்பை யார் சரிபாதியாக நிலைக்குத்தாகப் பிளக்க முடியும் என்று போட்டி வைத்துக்கொண்டிருப்பார்கள். கிழவர் தான் முயற்சிப்பதாய்ச் சொல்லி வெகு அனாசயமாக அதை நிலைக்குத்துச் சரிபாதியாகப் பிளந்தெறிவார் வெண்ணெயைப் போல. அடுத்த கரும்பையும் கிழவர் பிளக்க முயற்சிக்கும் போது போட்டி நடத்துகிறவன் ஒளிந்திருந்து கெட்டப் போலால்(உண்டி வில்) அவரைத் தாக்குவான் கைதவறிக் கத்தி காலில் பட்டு வெட்டிவிடும். கிழவர் டொக்கியை பக்கத்து கடையில் வைன் வாங்கி வரச்சொல்லி விரட்டுவார். வைன் வந்ததும் அதைக் காயத்தின் மீது விசிறியடித்து விட்டு மீதமிருந்த வைனை ஒரு துணியில் நனைத்து எரித்து அந்தச் சாம்பரின் மீது டொக்கியை ஒண்ணுக் கடிக்கச் சொல்வார் அவன் தயங்குவான். என்ன ஒண்ணுக்கு வரவில்லையா பரவாயில்லை அடி அப்பதான் எனக்கு காயம் ஆறும் என்று கிழவர் துரிதப் படுத்து வார். டொக்கி மேலும் தயங்கிய படி அழ ஆரம்பிப்பான் கிழவர் ஏன் அழுகிறாய் அடி என்று சொல்லுவார். அப்போது டொக்கி அழுதபடி தான் ஒரு ஆண் அல்ல என்றும் தான் ஒரு பெண் என்றும் அழுதபடி சொல்லுவாள். கிழவர் திடுக்கிட்டுப் போவார். தான் வெட்டப்பட்டது கத்தியால் அல்ல இவளது சொற்களால் தான் என்பது போல ஆத்திரத்துடன் ஒரு சின்னப் பெட்டை என்னை ஏமாற்றிவிட்டாயே என்று திட்டியபடி எல்லாவற்றையும் விட்டெறிந்து விட்டு கோபத்துடன் நடந்து செல்ல ஆரம்பிப்பார். அவரைத் தொடர்ந்து நடந்து போகிற டொக்கி தான் அவரை ஏமாற்றுவதற்காக அப்படிச் செய்யவில்லை என்றும். தான் இதுவரை நிறையத் தடவைகள் விற்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் யாருமே உங்களைப் போல அன்பாக நடத்தவில்லை எங்கே நான் பெண் என்று தெரிந்தால் நீங்கள் என்னை சேர்த்துக்கொள்ள மாட்டீர்களோ என்றுதான் தான் பொய் சொன்னதாக கிழவருக்கு சமாதானம் சொல்லுவாள். அனால் கிழவரோ சமாதானம் ஆகாதவராக அவள் தன்னை முட்டாளாக்கி விட்டதாக மேலும் மேலும் திட்டிக்கொண்டே போவார்.
இப்போது டொக்கி கிழவரிடம் கெஞ்சுவாள். தான் ஒரு பெண் என்று தெரிந்ததனால் தன்னை மறுபடியும் விற்று விடவேண்டாம் என்று கிழவரிடம் கெஞ்சுவாள். கிழவரோ நான் உன்னை விற்கப்போவதில்லை என்று சொல்லிக் கொண்டே ஒரு பணப்பையை அவளெதிரில் விட்டெறிந்து இதை எடுத்துக்கொள் போ போய் எங்காவது பிழைத்துக்கொள் என்பார். டொக்கியோ தான் எங்கே போவேன் என்கிற கேள்வி தொனிக்க அவரைப் பரிதாபமாய்ப் பார்த்தபடி விம்மி விம்மி அழுதபடியே பணப்பையை எடுக்காமல் இருப்பாள். கிழவர் அவளைக் கரையிலேயே அழுதபடி கைகழுவி விட்டு விட்டு தனது படகு வீட்டை அவிழ்த்து நதியிலே கலக்க விடுவார். டொக்கி அவரது துடுப்பை பற்றியபடி நான் நன்றாக சமைத்து வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறேன் என்னை ஒரு வேலைக்காரியாக மட்டுமாவது வைத்திருங்கள் என்று மன்றாடுவாள். கிழவர் கோபத்துடன் அவளைத் எத்தித் துரத்திவிட்டு படகை எடுத்துக்கொண்டு புறப்படுவார். டொக்கி நதியின் கரைமுழுதும் தாத்தா தாத்தா என்று கத்தியபடியே ஓடுவாள். அவள் ஓடுவதைப் பார்க்கிறபோது எழுந்து அவளுக்கு உதவியாக அந்தக் கிழவருக்கு இரண்டு போடமாட்டோமா என்றிருக்கிறது. கிழவர் மீது கரைபுரண்ட கோபம் எழுகிறது. கரைமுடிந்து போகிற ஒரு இடத்தில் தண்ணீருக்குள் இறங்கி அவரது படகை நோக்கிப் போக முயல்வாள் டொக்கி. நீச்சல் தெரியாத அவள் தாத்தா தாத்தா என்று கதறியபடி மூழ்குவதைப் பார்க்கிற பெரியவர் மனம் கேட்க மாட்டாமல் படகிலிருந்து குதித்து அவளைக் குதித்துக் காப்பாற்றுவார்.
அதன் பிறகு அவள் தன்னோடிப்பதற்கு சம்மதிக்கும் கிழவர். ஆனால் அவள் இனிமேல் தன் வாரிசாக முடியாதென்றும் அவள் ஒரு வேலைக்காரியாகத்தான் இருக்க வேண்டும் என்றும் சொல்லுவார். அவளிடம் தன்னை இனிமேல் தாத்தா என்று சொல்லக் கூடாதென்றும் இன்றிலிருந்து அவள் தன்னை முதலாளி என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் சொல்வார். வேலை செய்தால் மாத்திரமே இனிமேல் உனக்கு சாப்பாடு கிடைக்கும் என்பார். அவள் சரி முதலாளி என்று அவர் சொன்னதற்கெல்லாம் ஒத்துக்கொள்வார். கிழவர் தன் முகமூடி மாற்றும் வித்தையைத் தவிர்த்து விட்டு அவளுக்கு வேறு சில கரணமடிக்கும் வித்தைகள் சொல்லிக்கொடுப்பார். அன்றிலிருந்து அவரும்,டொக்கியும்,அவரது குரங்கு (ஜென்ரல் அதன் பெயர்) சேர்ந்தே வித்தை காட்டப் போவார்கள். டொக்கியும்,குரங்கும் தம் உடலை விதவிதமாய் வளைத்து கரணமடித்து பார்வையாளர்களின் மனசை வளைப்பாள். அவள் கிழவர் தன் கூடாரத்திற்குள் மூகமூடி மாற்றும் வித்தைக்கான ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கையில் ஒளிந்திருந்து அவர் எப்படி அந்த வித்தைக்கு தயாராகிறார் என்பதை ஏக்கத்துடன் பார்ப்பாள். அவளிடம் அந்த வித்தையைக் கற்பதற்கான ஆர்வம் அதிகமிருக்கும். என்னதான் உடலை வில்லாக வளைத்தாலும் அவளால் கிழவரின் மனசை வளைக்க முடியவில்லை. அவர் பெண்களைத் தன் வித்தைக்கு வாரிசாக்குவதில்லை என்னும் முடிவில் உறுதியாக இருந்தார்.
ஒரு நாள் கிழவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவள் அவரது வித்தைப் பெட்டியில் இருந்து முகமூடிகளை எடுத்து தன் முகத்தில் பொருத்திப் பார்ப்பாள். அந்த முகமூடிகள் அவளது முகத்துக்கும் மாற்றத்தைக் கொடுத்தன. அப்போது அவளுக்கு முன்னால் எரிந்து கொண்டிருந்த விளக்கில் தவறுதலாகப் பட்டு முகமூடி பற்றிக்கொண்டு எரிந்துவிடும் அவள் அதை அணைக்க முயற்சி செய்வதற்கிடையில் தீ தொடர்ந்து பற்றி அவர்களுடைய படகு வீடே பத்திக்கொண்டு எரியும் உதவி செய்ய யாருமற்று அவள் தீ தீ என்று கத்திக்கொண்டே அவரது வித்தைப் பெட்டியை மட்டும் தீயிடமிருந்து காப்பாற்றி எடுத்து வருவாள். அந்தப் பிஞ்சின் கனவுகளையும் ஆசையையும் தீ தின்று தொலைத்து விட்டிருக்கும்.
படகு வீடு முற்றிலுமாக எரிந்து போயிருக்கும். கிழவர் வந்து பார்ப்பார் அவள் அவருக்குப் பயந்துகொண்டு வீட்டை விட்டு ஓடிவிடுவாள். கிழவரும் அவள் போவதையே விரும்பியவராக தனது வீடெரிந்து விட்டதே என்கிற துயரத்துடன் அலைந்து கொண்டிருப்பார். டொக்கி மறுபடியும் பிச்சையெடுத்தும் திருடியும் வாழும் நிலைக்கு தள்ளப்படுவாள். அழுக்கேறிய சட்டையுடனும் அதைவிடக் கொடூரமான பசியுடனும் தெருக்களில் அலைந்து கொண்டிருப்பாhள். அப்போது யார் அவளைக் கிழவரிடம் விற்றானோ அவனிடமே மறுபடி அகப்பட்டுக்கொள்வாள். அவளைக் ஒரு இடத்திற்குக் கொண்டு செல்கிற அவன் அவளை ஒரு பழைய மரச்சாமான்கள் வைக்கும் அறையில் அடைத்து வைக்கிறான். இப்போது டொக்கி அந்த அறையில் ஏற்கனவே அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு அழகான குட்டிப் பையனைப் பார்க்கிறாள். அவன் விக்கி விக்கி அழுதுகொண்டிருக்கிறான் மிகச் சிறிய கிண்ணத்தில் தன் முன்னே வைக்கப்பட்டிருக்கும் உணவைக் கூடச் சாப்பிடாமல். அவன் சாப்பிடாமல் வைத்திருக்கும்; உண்வை மிகுந்த பசியுடன் எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடிப்பாள் டொக்கி. அப்போது அந்தச் குட்டிப் பையன் தன் கையிலிருந்த முட்டை ஒன்றையும் இவள் பக்கமாய் நீட்டி இதையும் சாப்பிடு எனபான்;. அவள் அதைச் சட்டென்று வாங்கி ஒரு கடி கடித்துவிட்டு பிறகு ஒருகணம் யோசிப்பாள். அதன் பின்பே அவள் அவனது பெயர் என்ன என்கிறாள். அடுத்து சில நிமிசங்கிளிலேயே அவளை அவன் அக்காவாக ஏற்றுக்கொண்டு விடுகிறான். அவள் தனது தாத்தா king of masks என்று சொல்கிறாள். அவன் தன் தாத்தாவும் கிங் என்று சொல்லுவான். இவள் சிரித்தபடி எனது தாத்தா பெரியவர் நிறைய வித்தைகள் தெரிந்தவர் அப்படி இப்படி என்று கிழவரைப் புகழ்ந்து அந்தச் சின்னப் பையனின் குண்டுக் கண்களை விரியச் செய்வாள்.
இரவானதும் அவள் அவனையும் அழைத்துக்கொண்டு அந்த அறையில் இருந்தும் அவர்களை அடைத்து வைத்திருக்கிற கூட்டத்திடமிருந்தும் தப்பி ஓடுவாள். தப்பித்த அன்று இரவு மறைவான ஒரு இடத்தில் தங்கும்போது அவள் நாளைக்கு உன்னை என் தாத்தாவிடம் அழைத்துச் செல்கிறேன் அவர் உன்னைப்போல ஒரு ஆண் பிள்ளையைக் கட்டாயம் விரும்புவார் என்று சொல்லுவாள்.
அடுத்த நான் அந்தச் சிறுவனை கிழவரின் படகு வீட்டில் விட்டு விட்டு அவள் போய்விடுவாள். கிழவர் தன் படகு வீட்டில் இருக்கிற சிறுவனைப் பார்த்து மகிழ்வார். தனக்கு வாரிசு கிடைத்து விட்டான் என்று அவனைத் தூக்கிக் கொஞ்சுவார். அவர் அவனிடம் உனது வீடு எப்படியிருக்கும் என்று கேட்பார். உன்னை யார் இங்கு கொண்டு வந்தது என்றும் கேட்பார். அவனோ எனது வீடு ஒரு மாளிகை என்றும் தன்னை இங்கு அக்கா கொண்டு வந்தாள் என்றும் சொல்லுவான். அக்கா …. கிழவருக்கு டொக்கி தான் அவனைக் கொண்டு வந்திருக்கிறாள் என்று புரிந்து போகும். அவர் படகு வீட்டை விட்டு வெளியில் வந்து அவளை அளைப்பார் ஆனால் அவள் அங்கிருக்க மாட்டாள். அவன் தன் வீடு மாளிகை மாதிரி என்று சொல்வதை கேட்டுச் சிரிப்பார் கிழவர். ஆனால் அவர் அப்போது அறிந்திருக்கவில்லை அந்தச் சிறுவன் அந்த நாட்டு அரசரின் பேரன் என்பதையும். அவனைக் காணவில்லை என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதையும் கூட. அரச படைகள் குழந்தையைத் தேடிக் கொண்டிருந்தன. அடுத்த நாள் டொக்கி ஒரு தோட்டத்தில் முள்ளங்கிகளைத் திருடிக் கொண்டிருக்கையில் கிழவரை அரசபடைகள் இழுத்துச் செல்வதைக் காண்பாள்.
அவரை ஏன் இளவரசரைக் கடத்தினாய் என்று விசாரிப்பார்கள். அவரோ எனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது என்பார். ஆனால் விசாரணையில் போலீசார்; அவருக்கு அடிப்பார்கள். அவருக்கு உங்ளே அடிவிழும்போது வெளியே மரத்தில் இருக்கிற அவரது குரங்குக் குட்டி தவியாத் தவிக்கும். தன் எஜமானன் அடிவாங்குவதைப் பொறுக்க முடியாமல் பரபரக்கும். இப்போது கிழவர் இளவரசனைக் கடத்திய குற்றத்திற்காக சிறையிலடைக்கப்படுவார். இதுவரை இடம்பெற்ற குழந்தைக் கடத்தல்களிற்கெல்லாம் அவர்தான் காரணம் என்று அவர் மீது அனைத்து வழக்குகளையும் போடுவார்கள்.(எல்லா நாட்டுக் காவல்துறையும் ஓரே மாதிரித்தான் போல) டொக்கி சிறைக் காவலனிடம் கெஞ்சி. கிழவரைப் போய்ப் பார்ப்பாள். அவரிடம் முதலாளி தான் உங்களிற்கு ஒரு ஆண் பிள்ளை வேண்டும் என்பதனாலேயே அவனை அழைத்து வந்ததாகவும் ஆனால் அது உங்களை இப்படிச் சிக்கலில் மாட்டிவிடுமென்று தான் நினைக்கவில்லை உங்களைச் சிக்கலில் மாட்டிவிட்ட என்னைத் தண்டியுங்கள் என்று அவள் அவரிடம் மன்றாடி அழுவாள். ஆனால் கிழவரோ டொக்கி இது என்னுடைய விதி இதற்காக நான் உன்னைக் குற்றம் சொல்லமாட்டேன் என்று சொல்லுவார். டொக்கி தன்னுடன் எடுத்து வந்திருந்த அவரது முகமூடிகளை அவரிடம் கொடுப்பாள். அவரோ அவற்றை வாங்கி அழுதபடி இவற்றோடு விளையாடிபடியே என்வாழ்நாட்களை கழித்து விடலாம் என்று நினைத்தேன் ஆனால் இனி இவற்றிற்கு என்ன வேலை என்று விசும்பியபடி அவற்றைக் கிழித்தெறிவார். இந்தக் கலை என்னுடனேயே அழிந்து போகப் போகிறது என்று அழுவார். அதை அழித்த பாவத்தை நான் செய்யப் போகிறேன் என்று கதறுவார் அவளிடம் அவரது குரங்கைக் கொடுத்து எமது வீட்டில் கொஞ்சப் பணமிருக்கிறது இந்தக் குரங்கையும் உன்னுடன் வைத்துக்கொள் எங்காவது போய்ப் பிழைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவார். டொக்கியோ குரங்கைக் கையில் பிடித்தபடி முதலாளி முதலாளி என்றழைத்துக் கொண்டே அழுவாள். கிழவருக்கு இப்போது அவள் முதலாளி என்றழைப்பது உறுத்தினாலும் ஒன்றும் சொல்லமாட்டார். அதற்குள் டொக்கி கதறக் கதற காவலாளி அவளை இழுத்துச் சென்று சிறைக்கு வெளிளே விடுவான்.
குரங்குடன் அழுதபடி வரும் டொக்கியைக் கண்ட கிழவரின் நண்பர் ஒருவர் அவளிடம் கிழவரைக் காப்பாற்ற ஒரு வழியிருக்கிறதென்றும், அந்த நாட்டின் வாழும் போதிசத்துவர் மாஸ்டர் லியாங் கிழவரின் நண்பர் என்றும். அவர் நாட்டின் செல்வாக்கானவர்களில் ஒருவர் அவரிடம் சென்று நீ உதவி கேள் அவரால் மட்டுமே king of masks இனைக் காப்பாற்ற முடியும் என்று சொல்லுவார். டொக்கி பெரிய பிரயத்தனப் பட்டு ரசிகர்களாலும் பிரமுகர்களாலும் சூழப்பட்டிருக்கிற மாஸ்டர் லியாங்கை சந்திப்பாள். அவரிடம் தான் king of masks ன் பேத்தி என்று அவரிடம் அறிமுகப் படுத்திக் கொள்வாள். மாஸ்டர் லியாங் டொக்கி நீ ஆணாக இருந்தாயே என்பார். டொக்கி அவரிடம் கிழவர் கைது செய்யப் பட்டிருப்பதையும் நடந்த உண்மைகளையும் அவரிடம் சொல்லி தன் தாத்தாவைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டுவாள்.
இப்போது மாஸ்டர் லியாங் அவளைக் கவலைப்பட வேண்டாம் என்றும் தான் அவளுக்கு உதவி செய்வதாகச் சொல்லுவார். ஆனால் அடுத்தநாளே அவர் டொக்கியிடம் கொஞ்சப் பணத்தை கொடுத்து தான் எவ்வளவோ முயற்சி செய்தும் தாத்தாவின் விவகாரத்தில் டொக்கிக்கு உதவ முடியவில்லை என்றும் தன் செல்வாக்கை வைத்துக் கொண்டு உள்ளுர்; அரசியல் விவகாரங்களில் தலையிட முடியாதென்றும் கவலையோடு சொல்லுவார். டொக்கி அழுதுகொண்N;ட வெளியேறுவாள்.
ஆனால் அன்று மாலை மாஸ்டர் லியாங்கின் பரம ரசிகரான காவல்துறை ஜெனரல் கலந்து கொள்கிற மாஸ்டர் லியாங்கின் நாடகம் நடைபெறுவதைத் டொக்கி தெரிந்து கொண்டு. நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தில் கூரை மேல் ஏறிக்காத்திருப்பாள். நிகழ்ச்சி முடிவடைந்ததும் கூரையில் இருந்து கயிற்றில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டே காவல்துறை ஜெனரலைப் பார்த்து கத்துவாள் என் தாத்தா நிரபராதி அவரை விடுதலை செய்யுங்கள் குழந்தைகளைத் தாத்தா கடத்த வில்லை. அந்தக் கடத்தல் கும்பலிடமிருந்து இளவரசரைத் காப்பாற்றி அழைத்து வந்தது நான் தான் தாத்தாவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லுவாள். காவல் துறை ஜெனரல் யார் இவள் என்று கேட்பார். அப்போது மாஸடர் லியாங் நேற்று நான் உங்களிடம் கேட்டேனே king of masks ஐப் பற்றி. அவரது பேத்தி என்று சொல்லுவாள். காவல்துறை ஜெனரலோ அதுதான் நேற்றே சொல்லிவிட்டேனே நாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட முடியாதென்று என்பார். ஆனால் டொக்கியோ மேலே தொங்கிக் கொண்டே நீங்கள் இதைப்பற்றி மீண்டும் விசாரிப்பதாக உறுதி தராவிட்டால் நான் கயிற்றை அறுத்துக்கொண்டு இறந்து விடுவேன் என்று சொல்லுவாள். ஆனால் காவல் துறை ஜெனரலோ இப்படிச் சொல்பவர்கள் ஒரு போதும் அறுத்துக்கொண்டு சாகமாட்டார்கள் நீங்கள் உங்கள் வேலைகளைக் கவனியுங்கள் என்று சொல்லிவிட்டுப் புறப்படுவார். ஆனால் டொக்கி கயிற்றை அறுத்துக்கொண்டு கீழே விழுவாள் அவளை நிலத்தில் விழுந்து விடாமல் மாஸ்டர் லியாங் ஏந்திக் கொண்டு படிகளில் உருண்டு அவளைக் காப்பாற்றுவார். மாஸ்டர் லியாங்கிற்கும் அடிபட்டுவிடும். அவர் காவல்துறை ஜெனரலிடம் இந்தக் குழந்தை தன் உயிரைத் தியாகம் செய்ய முன்வந்த பிறகும் உங்களிற்கு இரக்கம் வரவில்லை என்றால் நீங்கள் தராளமாக கிழவரைப் பற்றி விசாரிக்காமல் விடுங்கள் என்பார். காவல்துறை ஜெனரல் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தான் உடனடியாக இதில் தலையிடுகிறேன் என்பார்.
விடுதலையாகிற கிழவர். மாஸ்டர் லியாங்கிடம் சென்று தன் நன்றிகளைச் சொல்வார் மாஸ்டர் லியாங்கிடம். ஆனால் லியாங்கோ மறுத்தபடி நீங்கள் நன்றி சொல்வதாக இருந்தால் அதை டொக்கிக்குத்தான் சொல்லவேண்டும் ஏனெனில் அவாள்தான் உங்களைத் தன் உயிரைக் கூடத் துச்சமென மதித்து காப்பாற்றினாள் என்று சொல்லுவார். கிழவர் உடைந்த மனநிலையுடன் தன் படகு வீட்டிற்கு போவார் அங்கே வீட்டைச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிற டொக்கியையும் தன் குரங்கையும் பார்ப்பார். இவரைக் கண்டதும் முதலாளி என்று அழைக்கும் டொக்கியை நோக்கி அழுதபடி தன்னைத் தாத்தா என்று அழைக்கும் படி சொல்லுவார். இப்போது டொக்கியின் முகம் துன்பங்கள் வடிந்து பிரகாசமானதாய் மாறும் கூடவே முகமூடிகளாலும்.
(2)
இந்தப்படம் இந்த இரவில் என்னை பெண்களுக்கும் ஆண்களிற்கும் விதிக்கப்பட்டிருக்கிற எல்லைகள் குறித்து சிந்தனைகளைக் கிளப்பி விட்டது. பெண்களுக்கு ஆண்களிற்கு என்று ஒதுக்கப் பட்டிருக்கிற எல்லைகள் சமூகத்தின் எல்லா இடங்களிலும் எல்லாத் தளங்களிலும் இறைந்து கிடக்கிறது. பெண்கள் பேசக் கூடியவிசயங்கள் செய்யக்கூடிய செயல்கள் என்று வரையறைகள் உள்ளன. கிழவரிடம் டொக்கியின் மீPதான பிரியம் உள்ளே ஒளிந்திருந்தாலும். பாரம்பரியத்தில் ஊறிக்கிடக்கிற அவரது மனதின் மறுபாதி அவளுக்கு தன் கலையைச் சொல்லிக்கொடுக்கத் தயங்குகிறது. இவளை எப்படி தன் வாரிசாக கொள்ள முடியும் என்று குமைகிறார். சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளைக்குத்தாள் தன் கலையைச் சொல்லிக்கொடுப்பேன் என்கிறார். அவரைப் பெண்களிற்கு தன்கலையைக் கற்றுக்கொடுக்க கூடாது என்கிற தன் மனோநிலையில் இருந்து இறங்கி வர வைப்பதற்கு டொக்கி நிறையப் போராட வேண்டியிருக்கிறது. அவரிடம் மட்டு மல்ல இந்த சமூகத்திடமும்.
இந்தப்படம் எனக்கு என்னுடைய கோபக்காரா மாமா ஒரு வரை நினைவு படுத்தியது. அவருக்கு 6 பெண்பிள்ளைகள் ஆறுமே பெண்கள் தான். ஒரு ஆண் பிள்ளை கூடக்கிடையாது. அவர் அது குறித்து மிகவும் கவலைப் பட்டார் என்று நினைக்கிறேன். கவலைப் படாமல் இருக்க முடியுமா சீதனம் மாப்பிள்ளை படிப்பு செலவு என்று ஒரே கவலை ஆனால் அதெல்லாவற்றையும் விட அவரை வாட்டி வதைக்கிற ஒரு கவலையாய் தனக்கு கொள்ளி வைக்க ஒரு பிள்ளை இல்லை என்பதாய் இருந்தது. அந்தக் கவலை அவரது ஒவ்வொரு செய்கையிலும் இருக்கிறதாய்ப் படும் எனக்கு.
என் சின்ன வயசில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு முறை மிளகாய்க் கண்டுகளிற்கு தண்ணீர் இறைப்பதற்காக கிணற்றுக்குள் பலகை கட்டி அது கயிற்றில் தொங்கிக் கொண்டு நிற்கும் அந்தரத்தில். அதிலே வாட்டர் பம்பை வைத்து தண்ணீர் இறைத்தால் தான் தண்ணீர் இழுக்கும் பம்ப். ஆழம் அப்படி கிணறுகளில். விஸ்ணு அந்தக் கிணறுகளில் இறங்கித் தேட ஆரம்பித்திருந்தால் இன்னும் வேலை சுலபமாக முடிந்திருக்கும் (அடியதை; தேடுவதற்கு தோண்டுகிற வேலை குறைந்திருக்கும் என்கிறேன்) ஆழம் அப்படி. அப்படி ஒரு முறை இறைத்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு தேத்தண்ணி கொண்டு வந்து கொடுத்தா அவற்ற மகள்களில ஒராள். அப்ப அவர் சொன்னார் பொம்பிளைப் பிள்ளையெண்டபடியா தேத்தண்ணி ஊத்தி கொண்டு வந்துதான் தரேலும் ஆம்பிளைப் பிள்ளையெண்டா என்னோட கிணத்துக்க இறங்கியிருப்பான் எண்டார். எனக்கு ஒரு மாதிரியிருந்திச்சு. அவருக்கு அது ஒரு குழறயாகவும் வருத்தமாகவும் கடைசி வரைக்கும் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவரது மகள்களிற்குக் கொள்ளி வைக்கிற அளவுக்குத் தைரியமும் துணிச்சலும்(சமூகத்தின் வரையறைகளை உடைக்க) அவர் சுதந்திரம் கொடுக்கவும் தவறவில்லை. ஆனால் எங்கள் அம்மாக்களை யெல்லாம் பார்த்து அவர் சொல்லுவார் என்னடி ஆம்பிளைப் பிள்ளையள் வளர்க்கிறியள் எனக்கு ஆம்பிளைப் பிள்ளையள் இருந்தால் எப்படி வளர்ப்பன் தெரியுமா என்பார். என்னதான் அவர் தைரியசாலிகளாக அவர் தன் மகள்களை வளர்த்தாலும் சமூகத்தை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொடுத்தாலும். தான் ஆண்களிற்கு நிகராக பெண்பிள்ளைகளை வளர்த்திருக்கிறேன் என்று சொன்னாலும் அவரது அடிமனதிலும் ஆண் குழந்தைகளை உயர்த்தி வைத்துப் பார்க்கிற மனநிலை இருந்து கொண்டேயிருந்தது.அது இருந்து கொண்டேதான் இருக்கும் கட்டைவேகிற வரைக்கும்.
இதுதான் The king of masks இலும் நிகழ்கிறது. கிழவர் மட்டும்
கெட்டவரல்ல அவரிடமும் டொக்கியைப் பிரிய முடியாத ஏக்கம் இருக்கிறது. அவள்
மீதான பாசம் இருக்கிறது. ஆனாலும் அவருள் இருக்கிற தன் கலையை பெண்களிற்கு
கற்றுக்கொடுக்க கூடாது என்கிற நம்பிக்கை (ஆண் குழந்தைகள் உயர்வானவை
எனுமாப்போல்) அவரைத் தடுக்கிறது. தன் வீட்டில் எல்லா வேலைகளையும் அழகாக
செய்கிற அவளிடம் நீ மட்டும் ஆணாக இருந்தால் என்று பெருமூச்சுடன் சொல்வார்.
டொக்கி கோபத்துடன் ஏன் ஆண்களுக்கு மட:;டும் என்ன வித்தியாசமாக இருக்கிறது
என்பாள் ஒரு சின்னக் குழாய்தான் என்று கிழவர் வறட்சியாய் சிரிப்பார்.
டொக்கி மேலும் கோபத்துடன் அவரிடம் ஏன் நான் வித்தைகள் செய்யவில்லையா
சிறப்பாக வீட்டைக் கவனிக்கவில்லையா எனக்கு என்ன குறை என்று கேட்பாள். சரி
பெண்களிடம் குறை இருக்கும் என்றால் பிறகெதற்காக நீங்கள் போதிசத்வாவை(பெண்
தெய்வம்) மட்டும் வணங்குகிறீர்கள் அவளுக்கு இருக்கிறதா அந்தப் குழாய்
என்று கேட்பாள். கிழவரிடம் பதிலேதும் இல்லாமல் என்ன சொல்வதெனத் தெரியாமல்
கிழவர் மௌனிப்பார்.
(எனக்கு கனிமொழியின் ஒரு கவிதை நினைவுக்கு வந்தது)
இது வெறுமனே ஒரு டொக்கி என்கிற சிறுமிக்கும் கிங் ஒவ் மாஸ்க்கிற்கும் இடையிலான பிரச்சினையில்லை. இது சமூகத்தின் நம்பிக்கைகள் குறித்து அல்லது வாரிசு அரசியல் குறித்த புரிதல்களையும் சேர்த்து கேள்விக்குள்ளாக்குகிற படம். இன்றைக்கும் கொள்ளி வைக்கப் பிள்ளையில்லை என்று கவலைப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். கொள்ளி வைக்க ஆம்பிளைப் பிள்ளையள் இல்லை என்கிற மாதிரித்தான் கிழவரும் தனக்கான வாரிசைத் தேடி அலைகிறார்;. இப்படியான ஒரு நம்பிக்கைகள் குறித்துத் தான் படம் ஒரு சிறுமியைத் கொண்டு கேள்விகளை எழுப்புகிறது. இதோ டொக்கியின் முகத்திலும் கிழவரின் முகத்திலும் முகமூடிகள் ஒரு சேர மாறிமாறி வித்தை காட்டுகின்றன.
குறிப்பு
இயக்குனர் - வூ-தியன்மிங்
சீன மொழித்திரைப்படம்
விக்கிபீடியா
இணைப்பு
நன்றி DVD இரவல் தந்த இயக்குனர் செல்வம் அவர்களுக்கு
அவளது
ஊரின் புழுதிச் சாலையையும்
பழகிய நிலவையும்
பிரியமுடியாக் கிழவியின்
புலம்பலினை ஆற்றமுடியா
அலையின் வார்த்தைகள்
மண்டியிட்டு வீழ்கின்றன.
அவள் காலடியில்.
இந்தக் கடலுக்கு
அப்பால்தான்
நம் ஊரிருக்கிறதா?
மறுபடி மறுபடி
கேட்டுக்கொண்டிருக்கின்றன
குழந்தைகள்.
தன்
முதுமைச் சுருக்கங்களில்
படியும் மெல்லிய
பிரகாசத்துடன்
தலையசைத்த படியிருக்கிறாள்
கிழவி… ஆமென்று.
இந்த நிலவா?
அங்கேயுமிருந்தது?
மறுபடியும் கிழவியின்
நினைவுகளைக் கலைத்த
குழந்தைகள் கேட்டன.
ம் அதேதான்.
வழியவிட்ட பெருமூச்சிற்கிடையில்
இதேதான் அங்கேயுமிருந்ததாய்
கிழவி சொன்னாள்.
அப்ப…..!
நிலவும் அகதியாய்
எம்முடன் வந்ததா?
விடைதரமுடியாக்
கேள்வியைத் தூக்கிக் கொண்டு
குழந்தைகள் ஓடின….
மாப்பிள்ளை வாறார் மாப்பிள்ளை வாறார்
மாட்டு வண்டியில
பொண்ணு வாறா பொண்ணு வாறா
பொட்டு வண்டியில
எப்போதாவது அம்மம்மா வீட்டில் தங்க நேர்கிற சந்தர்ப்பங்களில் அம்மம்மா
பாடுகிற பாடல்வரிகளில் எனக்கு நினைவிருக்கிற மிகவும் பிடித்த இரண்டு
வரிகள் இவை. அம்மம்மா எப்போதும் இரவுகளில் தூங்குவதில்லை மாலை ஆறுமணிக்கு
மேல் துணையின்றித் தனியாக ஒன்றுக்கும் போகத் தைரியம் வராத வயசில் நான்
இருக்கையில், வாசலை விட்டுக் கீழ இறங்கவே அம்மாவைத் துணைக்குக் கூப்பிட்டு
அம்மாவின் சினத்தையும் சேர்த்துக் கூட்டிக் கொள்ள வேண்டும். ஆனால்
அம்மம்மா வீட்ட நிண்டால் எந்த நடுச்சாமத்திலும் வெளியில போகலாம் ஏனெனில்
அம்மம்மா எப்பவும் முழிச்சிருப்பா. கைவிளக்குப் பெரிசாகப் புகைஞ்ச படி
எரிந்து கொண்டிருக்கும். அம்மம்மா வீட்டை பெரிய பித்தளைக் கைவிளக்கு
இருந்தது அந்தக் காலத்தான். இரவுமுழுதும் சத்தகத்தால் பனையோலையைக்
கிளிக்கிற ‘சரக் சரக்’ என்ற சத்தமும். பெட்டிகள், நீத்துப்பெட்டிகள்
கடகங்கள் பின்னுகிற சத்தமும் கேட்டுக்கொண்டேயிருக்கும் தாலாட்டாய். லேசாக
அருண்டாலும் என்னய்யா வெளியில் போகோணுமே என்று கேப்பா. அம்மம்மா இரா
முழுதும் பாடிக்கொண்டேயிருப்பா. அப்படி அம்மம்மா நிறையப் பாடல்கள்
பாடிக்கேட்டிருக்கிறேன். அவையெல்லாம் அம்மம்மா சின்ன வயசில் பார்த்த
கூத்துக்களில் இடம்பெறுகிற பாடல்கள் என்று சித்தி சொல்லியிருக்கிறார்.
எங்கள் அம்மப்பா ஒரு கூத்துக் கலைஞராம் அரசாங்க உத்தியோகம் பார்த்து
வந்தாலும் கூத்திலும் நாடகத்திலும் அவருக்கு தனி ஆர்வம் இருந்ததாக நான்
பின்னாளில் அறிந்திருக்கிறேன். அம்மம்மாவின் கல்யாணம் காதல் கல்யாணம்
என்று பொன்னம்பலம் ஆச்சி சொல்றவா. ஒன்றும் ஒன்றும் மூன்றான ரகசியம்
இதுதான். அவர் கூத்துக் கலைஞர் இவா கூத்தின் ரசிகை எல்லாத்தையும் ஒன்றாக
முடிச்சிட்டுப் பாhத்தா அம்மம்மா கூத்துப்பாடல்கள் பாடுவதன் ரகசியம்
அம்பலமாகும் என்று நினைக்கிறேன்.
அந்தக் காலத்தில நடக்கிற மாதிரிக் கூத்துகள் இப்ப இல்லை என்று பெரியம்மா
சொல்லுவா. எனக்கு கூத்து என்கிற கலை வடிவத்தின்
சொற்பிரயோகங்கள்,வடிவங்கள்,விதிமுறைகள் வரலாறு இப்படி எதுவும் தெரியாது.
ஒரு ரசிக மனோநிலையில் ஆர்வக்கோளாறாக சில விசயங்களை எழுதலாம் என்று
வெளிக்கிட்டிருக்கிறன். எனக்கு கூத்து என்கிற கலைவடிவத்தின் சொல்லறிமுகம்
அம்மம்மாவிடம் இருந்து கிடைத்தாலும் நான் கூத்து என்கிற பெயரில் முதல்
முதலாகப் பார்த்ததாய் நினைவில் இருப்பது “களத்தில் காத்தான்” சிந்து நடைக்
கூத்து. ஆறு வயதில் என்று நினைக்கிறன். ஆனால் அதில் பாடப்பட்ட சில வரிகள்
தான் எனக்கு இப்பவும் நினைவிருக்கு.
பேப்பரெடுங்கடா விடுதலைப் பேப்பரெடுங்கடா
…………………………….
இப்படிப் பாடியபடி துவக்கேந்திய நாலைந்து பேர் டேய் நைன்ரி பேப்பர் எடன்ரா
என்று ஒரு கிழவரை வெருட்டுவார்கள். எதற்காக இந்தக் காட்சி எனக்கு
நினைவிருக்கிறது எண்டு தெரியவில்லை. சிலவேளை வயது போனவர்களை நைன்ரி என்று
கிண்டலடிக்கிற சொற்பிரயோகத்தை அறிந்துகொண்டதாலா என்று தெரியவில்லை. ஏதோ
நினைவில் நிற்கிறது.
பிறகு நான் பார்த்த கூத்து காத்தவராயன் கூத்து. ஆரியமாலா குளிச்ச தண்ணியே
இவ்வளவு வாசனையாயிருக்கே. அவள் எவ்வளவு வாசனையான அழகியாய் இருப்பாள் என்று
ஆரியமாலையைத் தேடிக் காதலிக்கிற காத்தவராயனின் கதை. காத்தவராயனின் தாய் (
முத்துமாரி என்று நினைக்கிறேன்) மகனே நீ ஆரியமாலையைத் மணமுடிக்க
வேண்டுமாயின் மலையைப் புரட்ட வேண்டும் மடுவைக் கிழிக்க வேண்டும் என்பது
மாதிரியான ஏகப்பட்ட நிபந்தனைகள் வைப்பாள். மகன் அத்தனையும் செய்து மாலையை
மணமுடிக்க சிரமப்படுவான். அந்தக் கூத்திலிருந்தும் ஒரு வரி
நினைவிருக்கிறது. மலையிலே எதிலோ ஏறிக்கொண்டே காத்தவராயன் பாடுவான்.
………. எல்லாம் ஏறிவந்தேன் பெத்தவளே தாயே
என் பாதம் மிக நோகுதம்மா பெத்தவளே தாயே
இப்படியாக எனக்குள் கூத்துப்பார்த்த நினைவுகள் கிடக்கின்றன. நான் மேலே
சொன்ன பாடல் வரிகள் எல்லாம் சரியானவைதான் என்பதை உறுதியாகச் சொல்ல
முடியவில்லை. பிறகு தெருக்கூத்துகள் வந்தன. அவை தெருக்கூத்துகள் என்று
சொன்னாலும் அவை தெருக்களில் நிகழ்த்தப்பட்ட நாடகங்கள் அவ்வளவுதான் என்று
நினைக்கிறேன்.(நான் பாhர்த்தவை) போராட்டத்திற்கு ஆளெடுப்பதற்கு
நிகழ்த்தப்பட்டவை. என்னுடைய அறிவுக்கெட்டியபடி கூத்து என்பதன்
கதைநகர்த்தல் அதிகமாக பாடல்களினூடாகவும் கொஞ்சமாய் வசனமாகவும் இருக்கும்.
(யாரேனும் துறை சார் அறிஞர்கள் விளக்கங்கள் அளிக்கலாம்) நாடகம் என்பதன்
கதைநகர்த்தல் உரையாடல்களிற்கூடாக நிகழ்த்தப்படுவது. இப்படித்தான் நான்
இரண்டையும் புரிந்து வைத்திருக்கிறேன். (மிகப் பெரும் தவறான
விளக்கங்களாகவும் இருக்கலாம் யாரும் வரிந்து கட்டிக்கொண்டு வரவேண்டாம் )

தமிழ் நாட்டில் நிறையக் கூத்துவடிவங்கள் இருக்கின்றன. அவை நிகழ்த்தப் படவும் செய்கின்றன. நிறையக் கூத்துக் கலைஞர்களும் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள். சென்னைக்கு கிட்டவாய் காஞ்சிபுரம் பகுதியில் கூத்துகள் அதிகம் நிகழ்த்தப்படுகின்றன என்றும். சிறந்த கூத்துக் கலைஞர்கள் அங்கேதான் இருக்கிறார்கள் என்றும். எங்களைக் கூத்துப்பார்ப்பதற்காக காஞ்சிபுரம் அழைத்துக்கொண்டு போன நண்பர் முத்துக் கந்தன் சொன்னார். காஞ்சியில் இருக்கிற சுங்குவார்ச் சத்திரம் என்கிற கூத்து நடக்க இருந்த கிராமத்திற்கு நாங்கள் போகவே இரவு 9.30 மேலாயிற்று. நான் கூத்து நடக்க இருப்பது ஏதாவது கோயில் திருவிழாவாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் திருவிழாவின் வாடை கூட அந்த சுற்று வட்டாரத்திலேயே இல்லை. ஒரு வீட்டிற்கு முன்பாக கொஞ்சப் பேர் கூடியிருந்தார்கள் சிறிதாக ஒரு பந்தல் போடப்பட்டிருந்தது அவ்வளவுதான். நண்பர் முத்துக் கந்தன் அது ஒரு காரியக் கூத்து என்றார். நான் என்ன காரியமாக் கூத்து என்றேன். ஆட்கள் இறந்தால் பதினாறாம் நாள் காரியம் செய்வார்கள் இல்லையா அதற்காக நிகழ்த்தப் படுகிற கூத்துதான் காரியக் கூத்து என்றார் முத்து.(இலங்கையில் எட்டுச்சிலவு மாதிரியான சடங்கு) எனக்கு இந்த விசயம் புதுசாக இருந்தது கூத்து என்பதை ஒரு கொண்டாட்ட விசயமாக கருதி மகிழ்வான விழாக்களில் மட்டுமே நிகழ்த்தப் படுவதாக அது இருக்கும் என்றும் கருதியிருந்தேன். அது துயரத்திற்கும் நிகழ்த்தப் படுகிறது என்பது ஆச்சரியமூட்டியது.
கர்ண மோட்சம் கூத்து நிகழ்த்தப்படப் போவதாகச் சொன்னார்கள். இறந்தவர் மோட்சம் போவதற்காக என்று நினைத்துக்கொண்டேன். சென்னையில் இருந்து வந்திருக்கிறோம் என்பதும், நாங்கள் போயிறங்கியிருந்த வாகனமும் எங்கள் கையில் இருந்த கமாராக்களும் ( இரவல் தான்) எங்களை அவர்கள் ஒப்பனை செய்வதைப் பார்ப்பதற்கான அனுமதியைப் பெற்றுத் தர உதவியது. ஒரு சின்னப் பையனும் அந்தக் கூத்துக் குழுவில் இருந்தான். எனக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. அவனது அப்பாவும் அந்தக் குழுவில் இருக்கிறாராம் என்றான்;. (கூத்தாடிக் குடும்பம்.) சின்னவனைத் தவிர மற்றெல்லாருடைய கண்களும் குடித்துச் சிவப்பேறியிருந்தன. ஒப்பனை ஆரம்பமாகியது சின்னவன் உட்பட எல்லோரும் தமக்குத் தாங்களே ஒப்பனை செய்து கொண்டார்கள். நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க அவர்களது முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. அவர்களது சொந்தமுகம் மறைந்து கதாபாத்திரத்தின் முகம் கண்முன்னே விரிந்தது. முகம் மாத்திரமல்ல அவர்களுடைய மனமும் அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுகிறதைப் பார்க்கமுடிந்தது. இங்கே அந்தப் பாத்திரமாக மாறிவிடுகிறது என்று சொல்வது வழக்கமாக எங்கள் சினிமாக்காரர்கள் சொல்கிற அர்த்தத்தில் கிடையாது. இது கலையாடிகள் மாறிவிடுவது போன்ற அர்;த்தத்தில் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதாவது முனியம்மா அருள்வந்ததும் மாரியாத்தா ஆகிவிடுகிறது மாதிரி. அதைப்போல இங்கேயும் கர்ணன் வேசம் போட்டவர் கிட்டத்தட்ட கர்ணணாக மாறிவிடுகிறார்.
ஒப்பனைகள் முடிந்து பபூன் மேடையில் தோன்றவே மணி பதினொன்றரை
ஆகிவிட்டது. கூத்து தொடங்கியது. கூட்டமாக நின்று கொண்டு சத்தமாக அவர்கள்
பாடிய பாடல்கள் சுழன்று சுழன்று அரங்கைச் சுற்றிவந்து ஆடிய வேகம் எல்லாம்
அவர்களுக்குள் நம்மை ஈர்த்தது இந்தக் கலைவடிவத்தை இத்தனை நாள்
தவறவிட்டிருக்கிறோமே என்று கவலைப்பட வைத்தது. அது ஒரு அற்புதமான அனுபவத்தை
கண்முன் விரித்தது. ஒவ்வொரு பாத்திரமும் அறிமுகமாகும் போதும் கூத்து
மேலும் சுவாரசியமானது. அதைவிட அவர்கள் மக்களோடு உரையாடிபடி தங்கள் கூத்தை
நகர்த்திச் சென்ற விதம் ஆச்சரியமூட்டியது. அவர்களுடைய உரையாடல்கள் ஏற்கனவே
தயார் செய்யப்பட்டவை அல்ல கருப்பொருளை மட்டும் மனசில் வைத்து உடனடியாக
நிகழ்த்தப் படுபவை. உதாரணத்திற்கு துரியோதனன் தன்னுடைய நாட்டைப் பற்றிச்
சொல்லுவான்.
நான் துரியோதன மகாராஜா என்னுடைய நாடு பெரியது.
அதிகாரங்கள் வாய்ந்தது
எப்படி?
அதிகாரங்கள் வாய்ந்தது.(பார்வையாளர்கள்)
அது தில்லி மாதிரி. என்னுடைய நாட்டு மக்கள் செல்வச் செழிப்போடும்
புன்னகையோடும் வாழ்வார்கள். இதோ இவர்களை மாதிரி (பார்வையாளர்களில் ஒரு
சிலரைக் காட்டுவார்)
இப்படி பார்வையாளர்களையும் தங்கள் கூத்தில் பங்கேற்பாளர்களாக மாற்றி
கூத்தை நிகழ்த்திச் செல்வார்கள். அது மிகவும் புத்திசாலித் தனமாக அரங்காக,
கலைவடிவமாக எனக்குப் பட்டது.
கூத்து நிகழ்ந்து கொண்டிருக்கையிலேயே பார்வையாளர்களில் சிலபேர் தங்கள்
வித்தைகளைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் குடித்து விட்டு அலப்பறை
பண்ணிக் கொண்டிருந்தார்கள் வேட்டி சரியச் சரிய. இன்னும் சிலபேர் பபூனிடம்
பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று காசு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
காசு கொடுத்ததும் ஆடிக்கொண்டிருக்கும் பாத்திரம் அப்படியே நிற்க பப+ன்
அறிவிப்பார்; சுங்குவார்ச் சத்திரத்தை சேர்ந்த முருகையா இங்கே கர்ணணாக
வேசம் போட்டிருக்கிறவருக்கு பத்துரூபாவும். துரியனாக
வேசமிட்டிருக்கிறவருக்கு பத்து ரூபாவும் ஆக மொத்தம் இருபது ரூபாய்
அன்பளிப்பாக வளங்கியிருக்கிறார் என்று பபூன் அறிவித்ததும் பணம் கொடுத்த
முருகையா அப்படியே (n)காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு எகத்தாளமாய்
கூட்டத்தை ஒரு பார்வை பார்ப்பார். உடனே முருகையாவுக்கு போட்டியாக இன்னொரு
கறுப்பையா வேட்டியை மடிச்சுக்கட்டிக்கொண்டு எழுந்து போய் அவரைவிட
அதிகமாய்க் காசு கொடுத்து விட்டு அவரை விட எகத்தாளமாய் பார்த்துக்கொண்டு
போய் அமர்வார் பபூன் இதை ஊக்குவித்தபடி இருப்பார். நான் இதெல்லாம்
கூத்தில் வருகின்ற விளம்பர இடைவேளை போல என்று நினைத்துக்கொண்டேன். அவர்கள்
அப்படிக் காசு கொடுத்த போது எனக்கு வேறு ஒன்று நினைவுக்கு வந்தது.
இலங்கையின் செத்த வீடுகளில் நடக்கிற கூத்தொன்று இது. ஒரு முறை எங்களுக்கு பிசிக்கஸ் படிப்பிக்கிற சிறீ வாத்தியின்ர அப்பா செத்துப் போனார் வாத்தியார் வவுனியாவுக்குப் போனவர் உடன திரும்பி வரமுடியாத நிலைமை அவர் எங்களுக்குப் படிப்பிக்கும் போது கரும்பலகையோடு சேர்ந்து நித்திரையடிக்கிறதையெல்லாம் மன்னிச்சு நாங்கள் வேறு வழியின்றி அந்தச் செத்த வீட்டு வேலைகளைப் பொறுப்பெடுத்து செய்யவேண்டியதாப் போச்சு. வாத்தியார் வந்தவுடன் கொள்ளிவைக்கத்தயாராய் ஏற்பாடுகள் செய்யவேண்டும். வாத்தியார் வந்திட்டார் வகுப்புப் பெடியள் தான் பாடையைத் தூக்கிக் கொண்டு சுடலை வரைக்கும் போகவேண்டும். சுடலை வீட்டில இருந்து ஒரு இரண்டு கிலோ மீட்டர் வரும். கொஞ்சப் பெருசுகள் தண்ணியைப் போட்டிட்டு பறைமேளம் அடிக்கிறவைக்கு காசைக் காட்டி ஒவ்வொரு சந்தி சந்தியா நிண்டு அடி ம் அடி, இன்னும் வடிவா அடி எண்டு டான்ஸ் ஆடிக்கொண்டு நிக்கினம். பெடியள் தோள் நோகுது மச்சான் கெதியா கிளப்படா இங்களை எண்டுறாங்கள். ஆனால் கிழடுகளோ விடுற பாட்டைக் காணம். பறை மேளம் அடிக்கிறவைக்கு காசு கொடுக்கிறது பிரச்சினையில்லை. பிரச்சினை வேற. சுப்பிரமணியம் ஐம்பது ரூபாய் குடுத்து அடியெண்டா கந்தசாமிக்கு அது கௌரவப் பிரச்சினையாகீரும். அவர் உடன நூறு எடுத்து விசுறுவார் இப்படி அவைக்குள்ள தங்கட ‘கெத்தைக்’ காட்டுறதக்கு ஆற்றையேனும் செத்தவீட்டைப் பயன்படுத்துறது. பறையடிக்கிறவர்களுக்கு என்னதான் காசெண்டாலும் இவங்கள் தங்கட பெருமையக் காட்டி முடிக்கக் கிடையில நாக்குத் தொங்கிப்போடும். ஆனாலும் இது தங்களுக்கு விடுக்கப் பட்ட சவால் எண்டு நினைச்சோ. அல்லது காசைக் காட்டி எங்களை இப்படி வருத்துறாங்களே என்ற கோபத்தையோ அவர்கள் தங்கள் பறையில் பிளந்து கட்டிக்கொண்டிருப்பார்கள். இப்பவும் கூத்துக் கலைஞர்களுக்கு மாறி மாறி இவர்கள் காசு கொடுத்தபோது எனக்கு அதுதான் நினைவுக்கு வந்தது.
கூத்து நடந்து கொண்டிருந்தது. நான் படமெடுத்துக்கொண்டிருந்தேன்.
கலைஞர்களைப் படமெடுத்து முடிந்ததும் குழந்தைகளைப் படமெடுக்கத்
தொடங்கினேன். இரண்டு மூன்று கிளிக்குகள். ஒரு இரண்டு வயதுச் செல்லம்
ஒன்றைப் படமெடுக்க எவ்வளோ முயன்றும் அது இடைவிடாமல்
ஓடிக்கொண்டேயிருந்ததில் எடுக்க முடியவில்லை. அப்போதுதான் கவனித்தேன்
கிராமத்து அழகிகள் எவரையுமே காணவில்லை. ஒரு திருவிழாவில் வளையல்கள்
வாங்கிக் கொண்டோ அல்லது யார் மீதாவது மஞ்சத் தண்ணி ஊத்திக்கொண்டோ
இருப்பார்கள் என்று எதிர் பார்த்த எனக்கு இங்கு திருவிழா நடக்காததே பெரிய
இடி. கூத்தின் சுவாரசியத்தில் அழகிகள் யாரும் இல்லாததைக் கவனிக்காத பெரும்
வரலாற்றுத் தவறொன்றைச் செய்து விட்டோமே என்று மனம் வருந்தினேன். என்ன இது
சிறுவர்கள் சிறுமிகள் பிறகு பழைய அழகிகள், என்று தான் இருந்தார்கள்
குமாரிகள் யாரும் இந்தச் சுங்குவார்ச் சத்திரத்தில் இல்லையா? என்கிற
ஆதங்கத்தை நண்பர் முத்துக் கந்தனிடம் கொட்டியபோது அவர் சொன்னார்,
கல்யாணமாகாத இளம் பெண்கள் இப்படியான கூத்துகள் பார்க்க அனுமதிகிடையாது.
வயசுப் பெண்கள் பார்க்கிற ஒரே கூத்து “அர்ஜூனன் தபசு” என்கிற கூத்து
மட்டும் தான். அந்தக் கூத்தின் முடிவில் தான் எலுமிச்சம் பழங்களை வெட்டி
வீசுவார்கள் அந்த எலுமிச்சம் பழங்கள் யார் மீது விழுகிறதோ அவர்களுக்கு
சீக்கிரம் கல்யாணம் ஆகும் என்பது ஐதீகம் அதனால் அhஜூனன் தபசுக்கு மட்டும்
பெண்கள் வருவார்கள் என்றார். நான் அர்ஜூனன் தபசு எங்கேயாவது நடந்தால்
எனக்குச் சொல்லுங்கள் என்று அவரிடம் சொன்னேன்.
ஆங்காங்கே தண்ணியைப் போட்டு விட்டு அலப்பறை பண்ணிக் கொண்டிருந்தவர்களின்
குரல் இப்போது இன்னும் இன்னும் உயர்ந்தது. டேய் அவளுகளை ஆடச் சொல்லுங்கடா
என்று குரலை உயர்த்திக் கத்திக் கலாட்டா பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
எனக்கு எவளுகளை என்பது புதிராக இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து அது
அவிழ்க்கப் பட்டபோது புரிந்தது எவளுகளை என்பது. கூத்தில் விளம்பர இடைவேளை
மட்டுமல்ல குத்தாட்ட இடைவேளையும் உண்டு என்பதும் புரிந்தது.(சில இடங்களில்
கவர்ச்சி ஆட்டங்களும் கூட உண்டு என்று குமுதத்தில் எழுதியிருந்தது) மஞ்சள்
புடைவையில் இரண்டு மேனா மினுக்கிகள் அரங்கிற்குள் வந்தார்கள் யாரோ
ஓரிருவர் விசில் அடித்தார்கள். இடுப்பையும் மார்பையும் குலுக்கி குலுக்கி
ஏதோ பாட்டுப்பாடி ஆடினார்கள். அந்தப் பாடல் எனக்கு நினைவில்லை (பாட்டை நீ
கேட்டால் தானே) அவர்கள் பெண்வேடமிட்ட ஆண்கள். இப்போது முதலில்
கதாபாத்திரங்களிற்கு பபூனிடம் பணம் கொடுத்தவர்கள் இந்த மினுக்கிகளுக்கு
மட்டும் தாங்களே அரங்கிற்கள் வந்து அவர்களின் முந்தானையில் காசைச்
செருகினார்கள். அப்படி செருகும் ஒவ்வொரு தடைவையும் பார்வையாளர்கள்
மத்தியில் இருந்து ஒரு கிளு கிளுப்பான சிரிப்பு.
இந்தக் கிளுகிளுப்புகளிற்கு மப்பால். இந்தப் பெண் வேட மிட்டு ஆடுகிற நடிக்கிற ஆண்கள் குறித்து நண்பர் முத்து கந்தன் சில தகவல்கள் சொன்னார். அவர்களுடைய துயரங்கள் மிக மோசமானவை என்றார். அவர்கள் மனதளவில் ஆண்களாகவும் மேடையில் மட்டுமே பெண்களாகவும் நடிக்கிறார்கள். ஆனால் சமூகம் இந்தக் கலைஞர்களை ஆண்களாக ஏற்றுக் கொள்வதில்லை அவர்களைப் பெண்களாகப் பார்க்கவே விரும்புகிறது. ஆணாக அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை (வரலாறு அஜித் நினைவுக்கு வருகிறாரா) அரவாணிகள் இந்தச் சமூகத்தில் தாங்கள் மனதளவில் பெண்களாகவே வாழ விரும்புகிறவர்கள். ஆனால் இந்தக்கலைஞர்களுடைய பிரச்சினை வேறு மாதிரியானதாக இருக்கிறது. இவர்கள் மேடையில் மட்டுமே பெண்ணாக நடிக்கிறவர்கள். மற்றபடி ஆண்களாகவே வாழும் விருப்புக் கொண்டவர்கள்.
தனக்குத் தெரிந்து சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடித்திரிந்த நண்பர் ஒருவர் கடைசியில் பிழைப்புக்காக இந்தக் கூத்துக் குழுவில் சேர்ந்து பெண் பாத்திரங்களில் நடித்திருக்கிறார். இதனாலேயே அவரது காதலி அவரை விலகிச் சென்று விட அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் முத்துக் கந்தன் சொன்னார்.
இந்த சமூகம் எவ்வளவு குரூரமான இயல்புகளைத் தனக்குள் கொண்டிருக்கிறது
இல்லையா? தனியே துயரத்தையும் புர்pந்து கொள்ளாமையையும் தான் தன்
சகமனிதர்களிற்கு இது கொடுக்கிறது. அரவாணிகள் தங்களை அரவாணிப் பெண்களாகக்
கருதி ஒரு மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கச் சொல்லி சமூகத்தை நோக்கி குரல்
கொடுக்கிறார்கள். சமூகம் இந்தக் குரல்களை மிகக் கேவலமான மனநிலையோடு
அணுகுகிறது. இதோ இந்தக் கலைஞர்களும் நாங்கள் ஆண்கள் தான் பெண்வேடமிட்ட
குற்றத்திற்காக எங்களைப் பெண்களாகப் பார்க்காதீர்கள் என்கிறார்கள். ஆனால்
வேடிக்கையானதும் குரூரமானதும் இயல்புகள் கொண்ட இந்தச் சமூகம் நீ பெண்
என்று அவர்களை முண்டித் தள்ளுகிறது துயருக்குள். நாங்களும் இந்தச்
சமூகத்தின் ஒரு அங்கம் என்கிற வகையில் இதற்காக வெட்கப் படவேண்டும்.
கூனிக்குறுகி ஒடுங்கிப் போகவேண்டும். சக மனிதனைப் புரிந்து கொள்ளாமல்
வஞ்சிக்கிற எங்கள் புரிதலின்மையை நினைத்து.
கூத்து தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது. நேரம் அதிகாலை 3
மணியாவிட்டது. என் பக்கத்தில் இருந்த கிழவி சூர்யோதயத்திற்கும் கர்ணன்
மோட்சம் அடைவதற்கும் சரியாக இருக்கும் என்று சொன்னார். என்னதான் வ(ஒ)ன் டே
கிரிக்கெட் ரசிக்கும் படி விறுவிறுப்பாய் இருந்தாலும் டுவன்டி டுவன்டி
தேவையாய் இருக்கிறதில்லையா? அது கலைகளுக்கும் பிரயோகிக்கப்
படவேண்டியிருக்கிறதாய் தோன்றிற்று. (இந்தக் கட்டுரையே ஒரு டெஸ்ட் மாட்ச்
மாதிரி இருக்கு அதுக்குள்ள……) சென்னையில் எங்களிற்கு காலையில் நிறைய
வேலைகள் இருந்தன. கிளம்பினோம் கூத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது
வாகனத்தை எடுத்துக்கொண்டு போவது பற்றி அதிகநேரம் யோசிக்கவேண்டியிருந்தது.
அது அவர்கள் மனதைப் புண்படுத்துமோ என்று. பிறகு அவர்களிடம் சொல்லிக்கொண்டே
கிளம்பினோம் வேலைகள் இருப்பதாக. கர்ண மோட்சம் முடிகிறபோதான நிகழ்வுகளை
முத்து கந்தன் சொல்லிக்கொண்டே வந்தார் வழி முழுதும். கர்ணன் இறந்து
பெண்கள் எல்லாரும் மாரடித்து அழுகிறபோது யாருக்கு பதினாறாம் நாள் காரியம்
நடக்கிறதோ அவரைக் கர்ணணாகப் பாவித்து அவரது பெருமைகளையெல்லாம் சொல்லி
அழுவார்களாம். கூத்துக் கலை எல்லாவற்றையும் தனக்குள் உள்வாங்கிக்கொண்டு
நிகழத்தப்படக் கூடிய ஒன்று என்று நினைத்தேன்.
முத்துக் கந்தன் தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருந்தார் அவர் கூத்துப் பற்றிய ஆய்வு மாணவராயிற்றே. ஆனால் என் மனசுக்குள் புரண்டு கொண்டிருந்தது பெண் வேடமிட்ட அந்த ஆண்களின் துயரையும், அர்ஜூனன் தபசுக்கு வரப்போகும் அழகிகளைப் பற்றிய நினைவுகள் தான்.