ரோஜாப்பூக்கள் கவிதைகள்...

1,202 views
Skip to first unread message

NilaRaseegan

unread,
Oct 24, 2007, 3:38:50 AM10/24/07
to panb...@googlegroups.com, Pira...@googlegroups.com
ரோஜாப்பூக்கள் கவிதைகள்...
 
1. ரோஜாப்பூக்கள்
உனக்குப் பிடிக்குமென்று
தெரிந்தும் மல்லிகைப்பூக்கள்
மட்டும் வாங்கிவருகிறேன்..
 
ஆசையுடன் பிரித்துப் பார்த்துவிட்டு
ரோஜாக்கள் எங்கே என்று
பார்வையால் கேட்கிறாய் நீ..
 
உலகின் மிக அழகிய
ரோஜாக்கள் இவைதான்
என்று சொல்லி
உன் கன்னம் கிள்ளுகிறேன்..
 
வெட்கத்தில் பூத்து நிற்கிறாய்
ரோஜாவாய்.
 
2. உன் கண்பொத்தி
பால்கனி அழைத்துச்செல்கிறேன்
மெதுவாய் என் விரல்நகர்த்தி
பார்க்கிறாய்..
 
நீ வளர்த்த ரோஜாசெடியில்
சின்னதாய் ஒரு மொட்டைக்
கண்டு சிலிர்க்கிறாய்...
 
மொட்டைக் கண்டு
மலர்கின்ற ரோஜா
நீயென்று உன்னை
அள்ளிக்கொள்கிறேன்
நான்.
 
3. பனித்துளிகள்
சுமந்து நிற்கும் ஒரு
ரோஜாவை உனக்கென
கொய்து வந்து
பனித்துளிக்குள் உன்
முகம் காண்பிக்கிறேன்...
 
குழந்தையென அதில்
உன்னைக் காண்கிறாய்
 
குழந்தையாகிறோம்
நாம்.
 
4.
 
அழகிய புடவையொன்றில்
என் முன் நின்று
எப்படி இருக்கிறேன் என்கிறாய்
நீ.
 
உன் கூந்தலில் ஒரு
ஒற்றை ரோஜாவை சூடி
விட்டு
நம் காதல்செடியில்
ரோஜா மலர்ந்திருக்கிறது
என்கிறேன்
நான்.
 
பவித்திரமானதொரு புன்னகையை
சிந்துகிறாய் தரையெங்கும்
மல்லிகைபூக்கள் சிதறுகின்றன...
 
5. நீ ஆசையாய்
வளர்த்த சிறுரோஜாசெடி
வாடிப்போனது..
 
துடித்துப்போனாய் 
நீ.
 
உனக்கென புதிதாய்
ஒரு செடி வாங்கி வந்தேன்
 
சட்டென்று பூத்து
சிரிக்கிறாய்
செடி கண்டவுடன்.
 
உன் மெல்லிய மனம்
கண்டு,
 
நீ பெண்ணா இல்லை
பூவா
என்று புரியாமல்
தவிக்க ஆரம்பிக்கிறேன்
நான்.
 
-நிலாரசிகன்.


--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
குழுமம்-->  http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ-->http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/

பிரேம்குமார் சண்முகமணி

unread,
Oct 24, 2007, 4:53:07 AM10/24/07
to panb...@googlegroups.com
நோட் பண்ணுங்கப்பா..நோட் பண்ணுங்கப்பா.... ஒருத்தர ரோசாப்பூக் கவிதைகளா பதிவுப் பண்றாருப்பா......

ஐந்தாவது கவிதை ரொம்ப அழகு

lucky shajahan

unread,
Oct 24, 2007, 10:55:39 PM10/24/07
to panb...@googlegroups.com
வாசனையான பதிவுகள்... வளரட்டும் கவிதைகள்..

On 10/24/07, பிரேம்குமார் சண்முகமணி <prem.kav...@gmail.com> wrote:
நோட் பண்ணுங்கப்பா..நோட் பண்ணுங்கப்பா.... ஒருத்தர ரோசாப்பூக் கவிதைகளா பதிவுப் பண்றாருப்பா......

ஐந்தாவது கவிதை ரொம்ப அழகு


லக்கி ஷாஜஹான்.

Asif Meeran AJ

unread,
Oct 25, 2007, 1:18:28 AM10/25/07
to panb...@googlegroups.com
அடடா!! நண்பன் நல்ல 'மூடு'ல இருககரு போல :-))
ம்ம். என்ன நண்பன் பிரசவம் முடிந்த தாய்மை மனப்பன்மையில் வரும் தயாளமா இது? :-) வாழ்த்துகள் நிலா. வாசமுள்ள ரோஜாக்களின் வசீகரமான கவிதைகள்

இப்னு ஹம்துன்

unread,
Oct 25, 2007, 2:31:20 AM10/25/07
to panb...@googlegroups.com
On 10/25/07, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:
அடடா!! நண்பன் நல்ல 'மூடு'ல இருககரு போல :-))
 
ஆசிஃப்,
 
இது 'நண்பன்' ஷாஜஹான் இல்லை,
ரியாத் வாழ் 'தோழர்' ஷாஜஹான் - இந்தியாவுலேர்ந்து.
 
ஏம்பா ஷாஜி,  அறிமுகம் இழையில முறையா அறிமுகப்படுத்திக்கப்பா!
 
 

வாசனையான பதிவுகள்... வளரட்டும் கவிதைகள்..

On 10/24/07, பிரேம்குமார் சண்முகமணி < prem.kav...@gmail.com> wrote:
நோட் பண்ணுங்கப்பா..நோட் பண்ணுங்கப்பா.... ஒருத்தர ரோசாப்பூக் கவிதைகளா பதிவுப் பண்றாருப்பா......



பாண்டித்துரை

unread,
Oct 25, 2007, 7:27:41 PM10/25/07
to பண்புடன்

நிலா சும்மா சொல்லா கூடாது (ரோஜா பொக்கோ கொடுத்து சொல்லனும் என்று
சொல்லவந்தேன்) நிறைய அனுபவம் பேசுகிறதே. ம் நான் எல்லாம் ஒரு ரோஜாவுக்கே
இன்னும் காத்து கிடக்க உங்களுக்கு பல பல ம் நடக்கட்டும் நடக்கட்டும்

கவிதைகள் ரசிக்கும் படியாக இருந்தது.

படித்தவர்களிடையே எத்தனை ரோஜா மலர்ந்ததோ?

அருட்பெருங்கோ

unread,
Oct 26, 2007, 4:17:26 AM10/26/07
to panb...@googlegroups.com
 
3. பனித்துளிகள்
சுமந்து நிற்கும் ஒரு
ரோஜாவை உனக்கென
கொய்து வந்து
பனித்துளிக்குள் உன்
முகம் காண்பிக்கிறேன்...
 
குழந்தையென அதில்
உன்னைக் காண்கிறாய்
 
குழந்தையாகிறோம்
நாம்.
 
 
பனித்துளிக்குள் குழந்தையாக காதலி பிம்பம்!!! அழகுதான் :)
இன்னும் தொடருங்கள் நிலா.

 
--
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

selventhiran@vikatan

unread,
Oct 27, 2007, 3:17:04 AM10/27/07
to panb...@googlegroups.com
அட ஜூப்பருங்கோ.... அண்ணாச்சி இவருதான்  இனிமே நம்ம கவிமடக் கொத்தன்



Coimbatore.
Reply all
Reply to author
Forward
0 new messages