நா. கணேசன்
On Apr 20, 11:59 pm, வி. சு. <vijayakumar.subbu...@gmail.com> wrote:
> Tech - தெற்கு (திசை) / ( Tech as in technic / technology )
> தொடர்புடைய சொற்களா?
தொடர்பில்லாச் சொற்கள்.
Tech - dexterity தொடர்புடையன.
-----------------------
தமிழின் திசைப் பெயர்களைப் பற்றி என் கருத்தை எழுதவேண்டும்.
குணக்கு - (குள்-/குளம்/குண்டம்/குண்டா ....) கடலின் ஆழத்தில் இருந்து
சூரியன் உதிக்கும் திசை.
குடக்கு (கிடக்கு) - கதிரவன் மறையும் திசை
(கிழக்கு - மேற்கு பின்னால் ஏற்பட்டது, கேரளாவிற்குக் கூடப் பொருந்தாது.
பொருள் வெள்ளிடை மலை.)
தெற்கு, வடக்கு தொல்தமிழரின் திரை கடலாடும் திறனால் ஏற்பட்ட
பெயர்கள்.
தெற்கு:
--------------
தெல்/தெள் ( > - தள்(ளு)) காற்றால் படகு, வங்கம், கப்பல் பிரயாணம்
எளிதாவதை
உணர்ந்ததால் ஏற்பட்ட பெயர். பண்டை இந்தியருக்குக் திரைகடல் ஆடும் பொழுது
காற்று உதவிற்றா என்பதை திரு. நரசையா போன்றவர்களிடம் அறிய ஆசை.
(1) புள்ளாங்குழல்/புல்லாங்குழல், (2) தெள்ளவாரி/தெல்லவாரி (கம்பன்
பயன்படுத்தும்
வார்த்தை. கன்னடத்தில் உள்ளதை வை.மு.கோ. காட்டியிருப்பதை ஹரிகிருஷ்ணன்
சொன்னார்), (3) அள்ளைக்கை/அல்லக்கை .... ஆவதுபோல், தெள்ளு/தெல்லு
தெற்கு என்ற சொல்லின் வேர். தெல்- > தென்(கு) ஆகும்.
இத்திசையின் சிறப்பான மரம் தெங்கு/தென்னை (< தெல்-).
தமிழர் கடலாடிய காலத்தில் தென்கிழக்கு ஆசியத் தீவுகளில் கண்டறிந்த மரம்.
பயனுக்காக இந்தியா கொண்டுவரப்பட்டது.
வடக்கு:
------------
வடக்கு - வடம்/வளைதல் என்பதால் ஏற்பட்ட பெயர். துருவ நட்சத்திரம்
கடலாடும்போது மிக முக்கியமாய் உதவியது. பண்டை இந்திய இலக்கியங்களில்
இருக்கு வேதம், சமண சமய, ... போன்றவற்றின் நூல்களில் ‘போல் ஸ்டார்’-ஐ
ஆல மரத்துடன் இணைத்து ஏராளமான இடங்களில் பேசப்பட்டுள்ளது.
வட மீன் -துருவ நட்சத்திரம், அது தொடர்பாக ஏற்பட்ட திசைப்பெயர் வடக்கு.
வேதத்தில் ஆலமரத்தின் தமிழ்ப் பெயர் இருக்கிறது -
வட விருக்ஷம். வடம் (வளையும் கயிறுபோன்ற) ஆலம் விழுதுகள் - aerial roots
of the Banyan tree.
சிவபிரானுக்கு உகந்தமரம் ஆல். ஆலங்காடு, பழுவூர் > வழுவூர்.
பழு = ஆலம் விழுது. பழுமேடு. ஆல் என்பதும் யாலுதல்/நாலுதல்/ஞாலுதல்
(Cf. யான்/நான்/ஞான் என்பதுடன் ஒப்பிடலாம்) என்னும் அடியாய் ஏற்பட்ட
பெயர்,
யானை/ஆனை என்னும் பெயர்ச்சொல்லிலும் தும்பிக்கை (யால்-/ஆல்- இருக்கிறது).
வடக்கு, தெற்கு தோன்றியதற்கு என்ன எழுதியிருக்கிறார்கள் என்று படிக்க
வில்லை இன்னும். பார்க்கணும். உ-ம்: பாவாணர், திராவிடவியல் அறிஞர்கள்
ஃசுலெபில், பி. கிருஷ்ணமூர்த்தி, ....
எனக்குத் தெரிவது வடக்கும், தெற்கும் கடலாடும் பண்டைத் திறனால் ஏற்பட்ட
பெயர்கள் இவை. ஆலும், தெங்கும் அத்திசைக்கான மரங்களின் பெயர்கள்.
பிற பின்,
நா. கணேசன்