லேங்க்ஸ்கேப் – பயிலகம் வழி நடத்தும் ஒரு மாத இலவச இணையவழி பைத்தான் பயிற்சி

11 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Dec 12, 2020, 5:49:16 PM12/12/20
to mint...@googlegroups.com, panbudan, vallamai, tamilmanram

லேங்க்ஸ்கேப் நிறுவனம் முன்னெடுக்கும் இலவசப் பைத்தான் பயிற்சிகள் பயிலகம் பயிற்றுநர்கள் மூலம் தமிழ் வழியில் நடத்தப்படுகிறது. ஒரு மாதம் (திங்கள் - சனி வரை) இப்பயிற்சி நடத்தப்படும். பைத்தான், ஜேங்கோ(Django) ஆகியன பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் இவ்வகுப்புகள் நடத்தப்படும்.

பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமும் நேரமும் உள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். பயிற்சியை முறையாக முடிப்பவர்களுக்கு, லேங்க்ஸ்கேப் நிறுவனத்தின் பணி வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளில் வாய்ப்பு தரப்படும்.

* பயிற்சி முற்றிலும் இலவசமா?
ஆம். முற்றிலும் இலவசம்.

* கல்வித் தகுதி என்ன?
பைத்தான் மிக எளிய மொழி. அதைப் படிப்பதற்குப் பெரிய கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை. ஆர்வம் இருந்து நேரம் ஒதுக்கினாலே போதுமானது.

* இணையவழிப் பயிற்சியா?
ஆம். ஜூம் வழி நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் வரும் நிலையில் யூடியூபில் காணொளிகள் சேர்க்கப்படும்.

* ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டுமா?
தேவையில்லை. முற்றிலும் தமிழ்வழிப் பயிற்சி இது.

* வேறென்ன வேண்டும்?
பைத்தான் பயிற்சிக்கு உங்களிடம் கணினி / மடிக்கணினி இருத்தல் கட்டாயம். ஓரளவு நல்ல இணையம். பயிற்சிக்கு அன்றாடம் ஒதுக்க வேண்டிய நேரம் - இவை மூன்றுமே போதுமானவை.

* எங்கே பதிவது?
இங்கே பதிந்து கொள்ளுங்கள் - https://forms.gle/b57cjQ3aP6j2dgbK7

பதிபவர்களுக்குப் பயிற்சிக்கான இணைப்பு மின்னஞ்சல் வழி அனுப்பி வைக்கப்படும்.

* எப்போது பயிற்சிக்குப் பதிய வேண்டும்?

ஏற்கெனவே, பலரும் பதிந்து இருப்பதால், கூடியவரை 13.12.2020 (நாளைக்குள்) பதிந்து விடுங்கள்.

* பயிற்சி நாள், நேரம்:

14.12.2020 திங்கட்கிழமையே பங்கேற்கத் தொடங்கிவிடலாம்.  நேரம்: இந்திய நேரம் பிற்பகல் 2 - 4 மணி வரை

BHUVANESWARI. P.M.

unread,
Oct 16, 2021, 10:43:18 AMOct 16
to பண்புடன்

BHUVANESWARI. P.M.

unread,
Oct 16, 2021, 10:43:18 AMOct 16
to பண்புடன்

BHUVANESWARI. P.M.

unread,
Oct 16, 2021, 10:43:30 AMOct 16
to பண்புடன்

BHUVANESWARI. P.M.

unread,
Oct 16, 2021, 10:43:30 AMOct 16
to பண்புடன்
cmc...@th.gov.in

On Sunday, December 13, 2020 at 4:19:16 AM UTC+5:30 tshrin...@gmail.com wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages