Re: [panbudan] சிவரமணி கவிதைகள்

45 views
Skip to first unread message
Message has been deleted

Lakshmanaraja Kannan

unread,
Jan 16, 2008, 9:54:10 PM1/16/08
to panb...@googlegroups.com
:-((.
 
பகிர்ந்தமைக்கு நன்றி.

 
On 1/16/08, அய்யனார் . <ayya...@gmail.com> wrote:
கவிஞர் சிவரமணி  -  கவிதைகளும் அறிமுகமும்
 
நட்சத்திரங்கள் இறந்துபோனவனின் கண்களைப் போல இருக்கின்றன என்ற கவிஞர் சிவரமணியைப் பற்றித் தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா?ஆனந்தவிகடனில் சில வருடங்களுக்கு முன்பு இவரது கவிதை ஒன்றினைப் படித்தேன்.சிவரமணி என்கிற பெயர் மறந்துபோய் கவிதை மட்டும் மனதில் ஒட்டிக்கொண்டது. யுத்தகால இரவொன்றின் நெருக்குதல் எமது குழந்தைகளை வளர்ந்தவர்களாக்கிவிடுகிறது.... என்பதாய் தொடங்கும்.அந்தக் கவிதையை அப்போதைய என் வாழ்வோடு தொடர்பு படுத்திக் கொண்டு பார்த்துக்கொண்டதால் அது அப்படியே மனதில் தங்கிவிட்டது.சேரனின் உயிர் கொல்லும் வார்த்தைகளை நேற்றுப் படித்துக்கொண்டிருந்த போது கவிஞர் சிவரமணி தற்கொலை செய்து கொண்டதை தெரிந்து கொள்ள முடிந்தது.அத்தோடு தற்கொலைக்கு முன் தன் கவிதைகளை எரித்து விட்டதாயும் நண்பர்களிடமிருந்த சில கவிதைகள் மட்டும் எஞ்சியிருப்பதாயும் சேரன் எழுதியிருந்தார் பின் நண்பர் டிசே மூலம் சிவரமணி கவிதைகள் சிலவற்றை இணையத்தில் பெற முடிந்தது..அவற்றுள் சில
 
முனைப்பு

பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.

என்னை
மேகத்திற்குள்ளும்
மண்ணிற்குள்ளும்
மறைக்க எண்ணிய வேளையில்
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர் .
அவர்களின்
குரோதம் நிறைந்த பார்வையும்
வஞ்சகம் நிறைந்த சிரிப்பும்
என்னைச் சுட்டெரித்தன.

எனது
ஆசைகள் இலட்சியங்கள்
சிதைக்கப்பட்டன.
அவர்களின் மனம்
மகிழ்ச்சி கொண்டது.
அவர்களின் பேரின்பம்
என் கண்ணீரில்தான்
இருக்கமுடியும் .

ஆனால் என் கண்களுக்கு
நான் அடிமையில்லையே
அவர்களின் முன்
கண்ணீரக் கொட்ட

என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என்தலை
குனிந்து போனதாய்க்
கனவு கண்டனர்
.

ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன்
.

--சி. சிவரமணி.


மதி கந்தசாமி

unread,
Jan 17, 2008, 1:35:50 PM1/17/08
to பண்புடன்
(sorry for typing in English.)

Ayyanar,

I can only laugh at the irony of cheran talking abour Sivaramani. So
many things have to be talked about (clearly and in detail)
Sivaramani, her writings and other things.

Will stop for now. here are some links that might be useful in
'discovering sivaramani'.

http://peddai.net/?p=28

http://peddai.net/?p=27

am going to remind podichchi about her words

// ஒரு பொடிச்சி said...

பொதுவாகவே எமது பழக்கத்தில் இருக்கிற சில விடயங்கள்
சம்பிரதாயங்கள்தான். உதாரணமாய், என்னிடம் ஒருவர் சொன்ன கருத்தை
எழுதுகையில் 'ஒரு நண்பர் சொன்னார்' என நான் எழுதினால்,அதன் அர்த்தம்
அவர் எனது நண்பர் என்பது அல்ல, 'நண்பர்' என்பதற்கு நமது அகராதியில் என்ன
அர்த்தம் என்றும் பார்த்தால்! அதேபோல சேரன் 'நண்பி' என எழுதுவதும்.
ராஜினி, செல்வி, சிவரமணி இவர்களுடைய சமகாலத்தவர்களான வ.ஐ.ச சேரன்
போன்றவர்கள் அவர்களை 'நண்பி' என எழுதலாம். ஆனால் சேரன் சிவரமணியிலும் 10
ஆண்டுகள் முதியவர் என நினைக்கிறென் (ரமணி 1967 இல் பிறந்தவர்). நான்
இங்கு அவளின் 'நண்பர்கள்' என எழுதுவது, அவளுடன் படித்த, அவளுடன் வாழ்ந்த,
அவளை அறிந்தவர்களை. சேரன் சி.ரமணியைப்பற்றி எழுதுவதை நான்
சித்ரலேகாபோன்ற புத்திசீவியெழுதுவதாயே பார்க்கிறேன். இவர்களது எழுத்து
முக்கியமான 'பதிவுகளாக' இருக்கும். அதற்காப்பால் சி.ரமணியை அறிய இன்னமும்
எதுவும் எழுதப்படவில்லை.
நான் பிறகொருக்கால் சிவரமணியைப் பற்றி கட்டாயம் எழுதுவேன்,
எழுதவேணும். அப்போது இவைகள் பற்றி மேலும் பேசலாம். நன்றி.
//

and ask her to write as she promised.

-Mathy

Asif Meeran AJ

unread,
Jan 18, 2008, 1:29:49 AM1/18/08
to panb...@googlegroups.com
வெல்கம் வெள்ளக்கார அம்மா :-))
ப்ளீஸ் கம் சம் சம் டைம் அண்டு ஆல்சோ
ரைட் சம் சம் தமில்

Reply all
Reply to author
Forward
0 new messages