சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று...

192 views
Skip to first unread message

ப்ரியன்

unread,
Oct 29, 2007, 3:21:18 AM10/29/07
to பண்புடன்
‘சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது...’

& பிரமிளின் புகழ்பெற்ற இந்தக் கவிதையை வெளியிட்டது ‘அஃக்’ இதழ். எட்டு
ஆண்டுகள் தமிழ் இலக்கியத்துக்கு அஃக் இதழ் ஆற்றிய கடமை அளப்பரியது.

அதை நடத்திய பரந்த்தாமன் அச்சுக்கும் பதிப்புக்குமாகச் சேர்த்து மூன்று
முறை தேசிய விருது பெற்றவர். சொந்த வீட்டை விற்று இலக்-கியச் சேவை செய்த
பரந்த்தாமன், இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஒரு முட்டுச் சந்தில்
ஒடுங்கிப்போய்க் கிடக்கிறார்.

‘‘இலக்கியம், சினிமா, ஃபுட்பால்... இதெல்லாம்-தான் இந்தப் பரந்த்தாமன்.
இன்றைக்கும் டி.வி&யில் ஃபுட்பால் ஆட்டத்தைப் பார்த்தா என் கால்கள்
தன்னாலே பரபரக்குது. மனசும் உடம்பும் ஒத்து-ழைச்சா களத்தில் இறங்கி
ஆடலாம் போல அப்படி ஒரு வெறி! சேலம்,


சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே சங்கு, அணில், டமாரம் எனச்
சிற்றிதழ்கள் வரும். அதை ஓட்டைக்காலணா (அக்கால நாணயம்) கொடுத்து வாங்கிப்
படிப்பேன். எழுத்தாளன் ஆகணும்னா நிறையப் படிக்கணும்; சினிமா டைரக்டர்
ஆகணும்னா நிறைய சினிமா பார்க்கணும். அதனால் படிப்போடு, இந்த இரண்டையும்
தொடர்ந்து செய்தேன்.

அப்போ சேலத்தில் ‘இம்பீரியல்’னு ஒரு தியேட்டர் இருந்தது. மரக்கடை
கொட்டாய்னு சொல்வோம். அங்கே ஒரு நாள் விட்டு ஒரு நாள் உலகத் தரத்திலான
ஆங்கில, இந்தி சினிமாக்கள் போடுவாங்க. என் பள்ளிப்பருவத்தில் ஒரு
சினிமாவைக்கூட நான் தவறவிட்டதில்லை. சத்யஜித்ரே, ஆன்டனி குயின்,
ஹிட்ச்காக் எல்லாம் எனக்கு அறிமுகமானது அங்குதான். அப்போ ஃபிலிம்ஃபேர்
பத்திரிகையில் ‘ரே’யின் அட்டைப் படத்தைப் போட்டு ஒரு இதழ் வெளியிட்டாங்க.
நண்பனிடமிருந்து அந்த இதழை வாங்கி ரேயின் படத்தைக் கிழித்துப்
பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். நான் படித்த, சுயமாக எழுதிய கவிதைகளை
அழகாக லே&அவுட் பண்ணி, அதற்கு உயிர் கொடுத்து, வீட்டுச் சுவர்களிலும்,
கதவுகளிலும் ஒட்டி வைப்பேன்’’ என்று அந்நாளைய நினைவு-களில் தோய்ந்து
பேசுகிறார் பரந்த்தாமன்.

‘‘நான் பிறந்த ஆறு மாசத்திலேயே அப்பா இறந்துட்டார். அம்மாதான் என்னை
வளர்த்-தாங்க. நான் எது கேட்டாலும் மறுக்காம வாங்கித் தருவாங்க. பிள்ளை
இப்படி சினிமா, இலக்கி-யம்னு சுத்துறானே, இவன் உருப்படுவானாங்கிற கவலை
அம்மாவுக்கு இருந்தது. ஆனாலும், என் மீது கோபப்பட்டது இல்லை. அன்பே
உருவான அம்மாவையும் என்னோட செயல் ஒண்ணு கோபப்படுத்திடுச்சு. ஃபுட்பால்
ஆடப் போகும்-போது ருக்மணினு ஒரு பொண்ணைச் சந்திச்சேன். ரெண்டு பேரும்
பழகினோம்; காதலிச்-சோம். கோயில் திருவிழாக்களில் டான்ஸ் ஆடுற பொண்ணு அது.
ரொம்ப நல்ல பொண்ணு. ஆனா, அந்தக் காலத்தில் பேன்ட் போடுறவன் தப்பான-வன்;
கிராப்பு வெச்சுக்கிறவன் மோசமான-வன்; மீசை வெச்சுக்கிறவன் அயோக்கியன்.
அது மாதிரி, டான்ஸ் ஆடுறவங்களும் கெட்டவங்க என்கிற பார்வைதான் பரவலா
இருந்தது. அம்மா கோபத்தில் என்னைப் போட்டு அடிச்சது அந்த
விஷயத்துக்காகத்தான். என் காதல் முறிஞ்சு போச்சு! வேதனை பொறுக்க
முடியாமல் நான் சென்னைக்குக் கிளம்பி வந்துட்டேன். ருக்மணி விஷம்
குடிச்சுத் தற்கொலை பண்ணிக்கிட்டா. இன்னிக்கு யோசிச்சுப் பார்க்கிறப்போ,
பருவ வயசில் வரும் இயல்பான சில உணர்ச்சிகளை அன்னிக்கு எனக்குப் பக்குவமா
கையாளத் தெரியலைனு தோணுது. இலக்கணமே தெரியாமல் கதை, கவிதை எழுதத்
துவங்கியவன்தானே நான்! வாழ்க்கையின் சில கணக்குகள் தவறிப்போனால், காலம்
நம்மை ஃபுட்பால் மாதிரி பந்தாடிடும். அப்படிப் பந்தாடப்பட்டவன் நான்!’’
என்கிறார் பரந்த்தாமன்.

‘‘ஒரு நாள், சேலத்துக்கு கு.அழகிரிசாமி வந்தி-ருந்தார். அவரைப் பார்க்கப்
போயிருந்தேன். ‘என் கதைகள் எல்லாம் படிச்சிருக்கியா?’னு கேட்டார்.
‘ஒண்ணுகூடப் படிச்சதில்லை’னு சொன்னேன். சிரிச்சுட்டு, ‘நீ இப்படித்
தைரியமா உண்மையைச் சொன்னது பிடிச்சிருக்கு. எங்கூட சென்னைக்கு
வர்றியா?’னு கேட்டார். நான் சரின்-னேன். என் வீட்டுக்கு அவரை அழைச்-
சுட்டுப் போனேன். கதவு, சுவரெல்லாம் நான் ஒட்டி வெச்சிருந்த கதை, கவிதை,
சினிமா தொடர்பான விஷயங்கள் எல்லாவற்றையும் பார்த்-துட்டு, ‘என் கூட வா!
உன்னை டைரக்டர் மல்லியம் ராஜகோபாலிடம் சேர்த்துவிடுகிறேன்’ என்றார்.
பின்னர் நான் சென்னைக்கு வந்து, சினிமா-வோடு நெருங்கிய தொடர்பு வெச்சி-
ருந்தாலும், என்னோட ஆசை எல்லாம் நல்ல லே&அவுட்டில் நாம் விரும்புகிற
எழுத்துக்களைத் தாங்கி ஒரு பத்திரிகை தொடங்க வேண்டும் என்பதுதான்.

அம்மாவிடமும் நண்பர்களிடமும் பணம் வாங்கி ‘அஃக்’ பத்திரிகை துவங்கினேன்.
எதிர்பாராத இடங்-களில் இருந்தெல்லாம் அந்தப் பத்திரிகைக்குப் பாராட்டு
கிடைச்சுது. சுந்தரராமசாமி, கி.ராஜநாராயணன், வண்ணதாசன், பிரமிள், நகுலன்
எனத் தொண்-ணூறுக்கும் மேற்பட்ட தரமான எழுத்-தாளர்களுக்கு அஃக் இதழ் அடிப்-
படையானதொரு தளமாக இருந்தது. பத்திரிகையில் லே&அவுட்டுக்கு அதிக
முக்கியத்துவம் கொடுத்து, அதில் அக்கறையும் கவனமும் செலுத்திய-வர்கள்
எஸ்.எஸ்.வாசனும், சாவியும்-தான். சிறு பத்திரிகைகளில் லே&அவுட்-டுக்கு
முக்கியத்துவம் கொடுக்க மாட்-டார்கள். படைப்பின் தரம் மட்டும்-தான்
முக்கியம். ஆனால், அஃக் இதழ், தரத்தோடு லே&அவுட் டிலும் சிறப்பான
முறையில் வெளி-யாயிற்று. ஆனால், இதழைக் கொண்டு வருவதில் ஏகப்பட்ட
பிரச்னைகள். அச்சகத்தில் கொண்டுபோய்க் கொடுத்தால். நேரத்துக்கு
அச்சடித்துக் கொடுக்க -மாட்டார்கள். இதை அடிக்கிற நேரத்தில் திருமண
அழைப்பிதழோ, வாழ்த்து அட்டையோ, நோட்டீஸோ அடித்துக் கொடுத்தால் உடனடி-
யாகக் காசு பார்க்கலாமே! அதனால், இதைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, வேறு
வேலை-யின்றிச் சும்மா இருக்கும் நேரத்தில் அடித்துத் தருவார்கள்.
எனக்குக் கோபம் கோபமாக வரும். சில சமயம் இதனால் அடி-தடிகூட
ஆகியிருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு, நாமே சொந்தமாக ஒரு
பிரின்ட்டிங் பிரஸ் துவங்குவது-தான் எனத் தீர்மானித்தேன்.

காசு? மறுபடியும் அம்மா-தான்! தன் ஒரே மகனுக்கென்று அம்மா கஷ்டப்பட்டு
ஆசை ஆசையாகக் கட்டின வீட்டை விற்றேன். அதில் வந்த காசை வைத்து
‘பிருந்தாவனம்’ பிரின்ட்-டர்ஸ் என்கிற பப்ளிகேஷனைத் துவங்கினேன்.
அதிலிருந்துதான் அஃக் பத்திரிகை கிட்டத்தட்ட எட்டு வருடம் தொடர்ந்து
வெளி--வந்தது. பெயர்தான் பிருந்தாவனம் என இருந்ததே தவிர, நாளுக்கு நாள்
அது பாலைவனமாகி தன் வனப்பு-களை எல்லாம் இழந்து, ஒரு நாள்
மடிந்துவிட்டது.

வண்ணதாசனின் ‘கலைக்க-முடியாத ஒப்பனைகள்’ என்கிற முதல் சிறுகதைத்
தொகுப்பையும் பிருந்தாவனம்தான் வெளி-யிட்டது. அப்போதே அது அச்சி-லும்
பதிப்பிலும் நேர்த்தி-யாகவும் கவர்ச்சிகர-மாகவும் இருந்ததென அனைவரும்
என்னைப் பாராட்டி-னார்கள். லே&அவுட், அச்சு, பதிப்பகம் என இந்திய அளவில்
எனக்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. ஆனால், அதை வைத்து என்ன செய்ய-
முடியும்? ஒரு கட்டத்தில் பணம் இல்லாமல் அஃக் நின்று போனது.

அம்மா எனக்காக வைத்திருந்தது இரண்டே இரண்டு சொத்துக்கள். ஒன்று, வீடு;
மற்றொன்று வாழைத் தோட்டம். வீட்டை இலக்கியத்-துக்காக விற்றேன்; வாழைத்
தோட்டத்தை சினிமாவுக்காக விற்றேன். இப்பவும் என்னோடு இருப்பது இவள்
மட்டும்-தான்’’ என மனைவி சத்யபாமாவைக் கைகாட்டுகிறார்.

பரந்த்தாமனுக்கு இரண்டு பிள்ளைகள். அவர்களுக்கும் சரியான வேலை இல்லை,
குடும்பத்துக்கும் எவ்வித வருமானமும் இல்லை எனக் கடந்த பத்து
ஆண்டுகளுக்கும் மேலாகப் பரந்த்தாமனின் வாழ்க்கை தள்ளா-டிக்கொண்டு
இருக்கிறது. இலக்கிய சேவை-களுக்காக பரந்த்தாமன் வாங்கிய விருதுகள்
பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன.

அன்று நண்பனிடமிருந்து பெற்ற ஃபிலிம்-ஃபேர் பத்திரிகை அட்டைப் பட
சத்யஜித் ரே, தலைக்கு மேலே சுவரில், ஃப்ரேம் செய்த சட்டத்துக்குள்
இருந்தபடி, மௌனமாகப் பரந்த்தாமனைப் பார்த்துக்கொண்டு இருக்-கிறார்.

- டி.அருள் எழிலன்
படங்கள்: கே.ராஜசேகரன்

நன்றி : விகடன்.

pandii durai

unread,
Oct 29, 2007, 3:55:14 AM10/29/07
to panb...@googlegroups.com
நன்றி ப்ரியன். நானும் நேற்று இரவு படித்திருந்தேன் . இங்குள்ள நண்பர்களுக்கும் உங்களின் கட்டுரையை அனுப்பியுள்ளேன்
Reply all
Reply to author
Forward
0 new messages