'மறுகாலனியவாதம்' என்னும் பிதற்றல்
ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்ட கிழக்கிந்திய கம்பேனியின் ஞாபகம் இன்னும் பலரையும்
வாட்டுகிறது. சூழ்னிலைகளும், கால கட்டமும் பலவாக மாறினாலும் இந்த பயம் இன்னும் பல இடது மற்றும் பிற சிந்தனைகளை இன்றும் பாதிக்கிறது.
'பன்னாட்டு நிருவனங்களை இங்கு தொழில் தொடஙக அனுமதித்தால், அவை நம் வளங்களை சூறையாடும் ; ஏழை தொழிலாளிகளை சுரண்டும், சிறு தொழில்களை அழிக்கும், அரசின் கொள்கைகளை மறைமுகமாக கட்டுப்படுத்தும்' ; இவ்வாறாக பல குற்றச்சாட்டுகள், பயங்கள். 1950 முதல் 1991 வரை நமது பொருளாதார கொள்கைகள் இதன் அடிப்படையிலேயே வகுக்கப்பட்டன.
1955இல் யு.எஸ்.ஸ்டீல் என்னும் அமெர்க்க கம்பெனி, பிகார் / ஒரிசா பகுதிகலில் ஒரு
பெரிய எஃகு ஆலை அமைக்க விரும்பியது. ஆனால் நமது 'ஜனனாயக சோசியலிச' அரசாங்கம் அதற்கு மறுத்துவிட்டது. அந்நிறுவனம் முதலீடு (டாலர்களில்), தனது தொழில்நுட்பம் மற்றும் (மேனெஜ்மென்ட்) நிர்வாக மேலான்மை போன்றவற்றை முழுவதும் இங்கு பயன்படுத்த தாயாராக இருந்தது. ஆனால் அரசு மிக அதிக செலவில், பொதுத் துறையில், பிலாய் எஃகு ஆலை அமைத்தது. அந்த ஆலைக்கு தேவையான பல ஆயிரம் கோடி முதலீட்டை நாம் கடன் வாங்கியும், மக்களின் வரிப்பணத்திலிருந்தும் செலவளித்தோம். பல ஆண்டுகள் நஷ்டத்திலும், லஞ்ச ஊழ்ல்களிலும், நிர்வாக சீர்கேடுகளிலும் அது நமக்கு மிகப் பெரிய சுமையாக இருந்தது. அதே சமயம் எஃகு தேவை மிக அதிகரித்ததால், பற்றாக்குறைகள், கருப்பு மார்க்கெட் உருவானது. சோசியலிச கொள்கைகளின்படி, எந்த ஒரு தனியார் நிறுவனமும் தனது இஷ்ட்டம் போல் தன்து உற்பத்தியை பெருக்க அனுமதி இல்லை. அதனால் டாடா ஸ்டீல் நிறுவனமும் உற்பத்தி திறனை (புதிய ஆலைகள் அமைத்து) அதிகப்படுத்த முடியவில்லை. கடுமையான பற்றாக்குறை, விலை உயர்வு, கள்ள சந்தை, ஊழல் உருவாகின.
சிமன்ட், சர்கரை, உரம், மருந்து, பொறியியல் எந்திரங்கள், ஜவுளி ஆலைகள் மற்றும் அனைத்து துறைகளிலும் இதே கதைதான். செயற்கையான பற்றாக்குறை, உலக சந்தையை விட மிக அதிக விலை, தரக்குறைவான பொருள்கள், கள்ள மார்க்கெட், லஞ்சம், பதுக்கல், கடத்தல், போன்ற எதிர்மறையான விளைவுகளே உருவாகின. விலைவாசி இதன் மூலம் கடுமையாக உயர்ந்ததால் வறுமை மிக அதிகமானது.
வரி விதிப்பும் மிக மிக அதிகமாக்கப்படதால் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாக்க தொழில் முனைவோர் விரும்பவில்லை. அரசாங்க வேலைக்கு செல்லவே பெரும்பாலான இளைஞ்ர்கள் விருப்பினர். ஆனால் எல்லேருக்கும் அரசு வேலை தர எந்த காலத்திலும் இயலாது. ஆகவே வேலை இல்லா திண்டாடம் மிக மிக அதிகமானது.
1977இல் அய்.பி.எம் நிறுவனத்தை ஜனதா அரசு நாட்டை விட்டே துரத்தியது. அவர்கள்
தாய்லாந்திலும், சைனாவிலும் தங்கள் ஃபெக்ட்ரிகளை அமைத்தனர். நாம் பல ஆண்டுகளை வீணடித்தோம். இறக்குமதி செய்ய டாலர்கள் இல்லாததால், உலக வங்கி (ஐ.எம்
.எஃப்) இடமிருந்து பல ஆயிரம் கோடி டாலர்கள் கடன் வாங்க வேண்டிய கட்டாயம். வட்டி கட்டவே மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை. இவ்வாறு திவால் நிலைக்கு தள்ளப்பட்டதால், வேறு வழியின்றி கட்டுப்பாடுகளை தளர்தி, அந்ந்திய முதலீடுகளையும், பன்னாட்டு நிறுவனஙகளையும் 1991க்கு பின் தாராளமாக அனுமதித்தோம்.
இன்று பல நூறு பன்னாட்டு நிறுவங்கள் இங்கு சுதந்திரமாக தொழிறசாலைகள் அமைத்து மிக அருமையான, மலிவான பொருட்க்களை உற்பத்து செய்கின்றனர். இதனால் பல லச்சம் பேர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு, அரசுக்கு மிக அதிக வரி வசூல், மற்றும் மக்களுக்கு மலிவான, தரமான பொருள்கள் கிடைக்கின்றன.
உதாரணமாக : நோக்கியா செல் போன் நிறுவன்ம் சென்னை அருகே உருவானவுடன், 1500 ரூபாய்க்கு நல்ல செல்போன் கிடைக்கிறது. இன்டெல், அய்.பி.எம், மைக்ரோசாஃப்ட்,
ஜி.ஈ., அல்ஸ்தோம், ஹுன்டாய், போர்ட், எ.பி.பி., ஹோன்டா, மிட்ஷுபிஷி, மற்றும் பல நிறுவனங்கள் வந்து உள்ளன. அன்னிய செலாவானி இருப்பும் மிக,மிக அதிகமாகி இன்று அய்.எம்.எஃப் வங்கியிடம் கடனே வாங்க அவசியமில்லா நிலை !!!
புதிய போட்டியினால், இதுவரை ஏகபோகத்தில் சுகமாக வளர்ந்த இந்திய நிறுவனங்கள் (உ.ம் : பி.ஸ்.என்.எல், பஜாஜ் ஆட்டோ, அய்.டி.அய், எஸ்.பி.அய் போன்றவை) தஙகளின் மெத்தன போக்கிலிருந்து மீண்டு, தரத்தை உயர்த்தி, உற்பத்தி செலவை குறைத்து, நவீன தொழில் நுட்பத்தை உபயோகப் படுத்த ஆரம்பித்தனர்.
பன்னாட்டு நிறுவனங்கள், எதோ ஹைடெக் பொருட்க்களை 'பணக்காரர' வர்கத்திற்க்காக மட்டும், ஏழை தொழிலாற்களை 'சுரண்டி', தயாரிக்கினறன என்ற பொய்யான வாதத்தை, பிரமையை இடதுசாரிகள் உருவாக்குகின்றனர். இந்தியாவை மீண்டும் காலனியாக்குகின்றன இவை,என்றும் கதைக்கிறார்கள். முதலாவுதாக இது போன்ற நிருவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, மற்ற நிறுவனங்களை விட மிக அதிக சம்பளம், சலுகைகள். மக்களுக்கு மிக நல்ல சேவைகள்/பொருட்க்கள். அரசாஙக்திற்க்கு நல்ல வரி வசூல் (அதன் மூலம் ஏழ்மை ஒழிப்பு திட்டங்கள், நலத்திட்டங்களை அமல் படுத்த வாய்ப்பு). நாட்டின் பொருளாதாரம் முன்னேற வாய்ப்பு.
1991க்கு முன் இருந்த நிலைமையே பரவாயில்லையா ? ஒப்பிட்டு பாருங்கள். அனேகமாக இதை படிக்கும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பன்னாட்டு நிருவனங்களினால் பயன்டைந்திருப்பீர்கள். அல்லது வேலை வாய்பை பெற்றிருப்பீர்கள். யோசியுங்கள் நணபர்களே.
செல்வன்
![]() |
|
இந்தியா சுதந்திரம் பெற்றதும் நேரு சோஷலிசப்பாதையில் இந்தியாவை கொண்டு சென்றார்.ரஷ்யாவை ரோல்மாடலாகக் கொண்ட இம்முறையில் உற்பத்தியை விட வினியோகமே முக்கியமானதாகக் கருதப்பட்டது.இம்போர்ட் சப்ஸ்டிட்யூஷன் எனும் கொள்கையை கண்ணை மூடிக்கொண்டு இந்தியா பின்பற்றியது.Be Indian,buy Indian, garibi hatavo,தேசியமயமாக்கல்,பொதுவுடமை போன்ற கவர்ச்சிக் கோஷங்களும் இந்தியா முழுவதும் உச்சரிக்கப்பட்டன.
1947 முதல் 1992 வரையிலான காலகட்டத்தை பொருளாதார நிபுணர்கள் பல கிண்டலான பெயர்களில் அழைப்பார்கள்.லைசன்ஸ் ராஜ், control regime என்பார்கள்.அதாவது ஒரு தொழிற்சாலை தனது உற்பத்தியை பெருக்க வேண்டுமானால் அரசிடம் அனுமதியோ லைசன்ஸோ பெற வேண்டும்.டில்லிக்கு காவடி தூக்கி அந்த துறையை பற்றி சுத்தமாக எதுவும் தெரியாத ஐ.பி.எஸ் அதிகாரியிடமோ அல்லது அமைச்சரிடமோ உற்பத்தியை அதிகரிக்க அனுமதி வாங்க வேண்டும்.3000 மூட்டை சிமென்ட் உற்பத்தி செய்யும் கம்பனி 4000 மூட்டையாக உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமானால் டில்லியில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும்.(லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்)
வெள்ளையர்கள் மீதான அவநம்பிக்கை தான் இறக்குமதி மறுப்பு கொள்கைக்கு முக்கிய காரணம்.இக்கொள்கை நமது தொழில்துறையை கிட்டத்தட்ட முடக்கி குட்டிச்சுவராக்கியது.நவீன இயந்திரங்கள்,தொழில்நுட்பம் கிடைக்காததால் இந்திய தொழிற்சாலைகள் உலகின் மற்ற நாடுகளின் தொழிற்சாலைகளை விட பின் தங்கின.லைசன்ஸ் முறை போட்டியை ஒழித்ததால் மட்டுமே இத்தொழிற்சாலைகள் உள்ளூர் சந்தையில் தாக்குப்பிடித்தன.
ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமெனில் 1960ல் இருந்து 1992 வரை ஒரே வடிவமைப்பில் வந்த அம்பாசிடர் காரை குறிப்பிடலாம்.உலகின் ஆடொமொபைல் துறை இக்காலகட்டத்தில் அசுர வளர்ச்சி அடைந்தது.டயோட்டா,Honda போன்ற கம்பனிகள் புதுப்புது மாடல்களுடன் போட்டி போட்டுக்கொண்டு உலக சந்தையை ஆகிரமித்து அசுர வளர்ச்சி அடைந்தன.தீவிர போட்டியால் விலைகுறைப்பு,புது தொழில் நுட்பம்,புது டிசைன்கள்,எரிபொருள் சேமிப்பு என பலவற்றை செய்தே தீரவேண்டிய கட்டாயம் இன்னுறுவனங்களுக்கு ஏற்பட்டன.அதனால் வாடிக்கையாளருக்கு நன்மையும் ஏற்பட்டது.இக்கம்பனிகளும் திறமை வாய்ந்தவையாயின,.
அம்பாசிடர் கம்பனிக்கு(Hindustan Motors) இந்த போட்டி போடும் பிரச்சனை எல்லாம் கிடையாது.கார் இறக்குமதி,புதுகார் கம்பனி ஆரம்பிப்பது,பழைய கார்கம்பனிகள் உற்பத்தியை பெருக்குவது இவை அனைத்தும் அரசால் தடை செய்யப்பட்டிருந்தன,அதனால் அம்பாசிடர் கம்பனிக்கு போட்டி என்பதே இல்லாமல் போனது.உற்பத்தியை விட தேவை மிக அதிகம் என்பதால் விற்பனை செய்யவும் சிரமப்படவேண்டியதில்லை.விளம்பரமும் தேவைஇல்லை.நவீன தொழில்நுட்பமும் தேவை இல்லை.தரத்தை உயர்த்த வேண்டிய சிரமமும் இல்லை. Price control சட்டம் இருந்ததால் விலையை பற்றி கவலைப்பட வேண்டிய பிரச்சனையும் இல்லை.சுருக்கமாக சொன்னால் சந்தைபடுத்துதுதலின் 4P's( Product,price,place and promotion ) பற்றி ஒரு சந்தைப்படுத்தும் நிறுவனம் கவலைப்பட வேண்டியதில்லை என்றாகிவிட்டது.
அம்பாசிடர் என்றில்லை,அனைத்து துறைகளிலும் இந்நிலை தான் காணப்பட்டது.ஸ்கூட்டரில் லம்பிரெட்டா,பஜாஜ் என இரண்டே கம்பனிகள் தான்.முழுபணத்தையும் கட்டி 1 வருடம் காத்திருந்தால் மட்டுமே ஸ்கூட்டர் கிடைக்கும் என்ற நிலை.தரம்,எரிபொருள் சிக்கனம்..மூச்ச்....
எதை உற்பத்தி செய்தாலும் விற்கும் என்ற நிலைதான் அப்போது நிலவியது.இறக்குமதியை தடை செய்து உள்நாட்டு உற்பத்தியை கட்டுபடுத்தியதால் குறிப்பிட்ட சிலர் மட்டும் பணம் சம்பாதிக்கவும்,வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிக்கவும் இந்நிலை வழிவகுத்தது.
ஐந்தாண்டு திட்டங்களை சோவியத் ரஷ்யாவிடமிருந்து இந்தியா காப்பியடித்தது இந்நிலையை மேலும் மோசமாக்கியது.இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்திலிருந்து நாசம் துவங்கியது என சொல்லலாம்.இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தை(1956 - 1961) மகலனோபிஸ் எனும் வங்காள கம்யூனிஸ்ட் பொருளாதார நிபுணர் உருவாக்கினார்.உருவாக்கினார் என்பதே தவறு.வரிக்கு வரி ரஷ்ய ஐந்தாண்டு திட்டத்தை காப்பி அடித்து கொடுத்து விட்டார்.அத்திட்டத்துக்கு மகலனோபிஸ் திட்டம் என்றே பெயர்.
இந்த இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தால் சர்வநாசம் ஏற்பட்டது. ரஷ்ய சோஷலிசத்தோடு காந்திய சோஷலிசத்தையும் கலந்த இத்திட்டத்தின் கீழ் 17 தொழில் துறைகள் தேசியமயமாக்கப்பட்டன.புது கம்பனிகளை ஆரம்பிக்க,உற்பத்தியை பெருக்க,புது பொருட்களை தயாரிக்க அரசு லைசன்ஸ் கட்டாயமாக்கப்பட்டது.கம்பனிகளை மூடவும் அரசு அனுமதி தேவைப்பட்டது.ஒரு தொழிற்சாலை நஷ்டத்தில் ஓடினால் அரசு உதவித்தொகை(subsidy) கொடுக்கும் என சட்டம் போடப்பட்டதால் முதலாளிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.லாபம் வந்தால் பணம்,நஷ்டம் வந்தாலும் பணம் என்றால் சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும்?
லாபம் வரும்படி கம்பனி நடத்துவதை விட நஷ்டம் வரும்படி கம்பனி நடத்துவது லாபகரமாகப் போனது.நஷ்டம் வந்தால் மிஷின்களை விற்றுவிட்டு தொடர்ந்து நஷ்டத்திலேயே கம்பனியை முதலாளிகள் ஓட்டுவர்.அரசு உதவித்தொகை தான் கிடைக்கிறதே?ரொம்ப நஷ்டம் வந்தால் அரசு அத்தொழிலை எடுத்துக்கொள்ளும்.நிலம்,மிஷின ்கள்,பாக்டரி என அனைத்தின் மேலும் கடன் வாங்கிவிட்டு அரசிடம் நஷ்ட ஈடாக கணிசமான ஒரு தொகையையும் பெற்றுக்கொண்டு ஜாலியாக முதலாளிகள் எஸ்கேப் ஆயினர்.ஒரு அரசியல்வாதியை அந்நிறுவனத்தலைவராக அரசு அறிவிக்கும்.அவரும் இஷ்டத்துக்கு சுருட்டுவார்.கம்பனி தொடர்ந்து நஷ்டத்தில் ஓடும்.சம்பளத்தை அரசு கொடுப்பதால் தொழிலாளிகள் அரசு ஊழியர் என்ற தகுதியோடு ஜாலியாக இருப்பார்கள்.
நேருவுக்கு பின்வந்த இந்திரா காந்தி கிட்டத்தட்ட தொழில் துறையை முடித்தே கட்டினார் என்றுதான் சொல்ல வேண்டும்.தேசியமயமாக்கல் என்பதை ஒரு வெறியோடு அவர் செயல்படுத்தினார்.எல்.ஐ.சி,வங்கிகள் ஆகியவை அரசுமயமாக்கப்பட்டன.
இந்திராவுக்கு பின்வந்த ஜனதா அரசு துக்ளக் ராஜ்ஜியம் தான் நடத்தியது.கோக்,ஐபிஎம் ஆகியவற்றை ஜார்ஜ் பெர்ணான்டஸ் இந்தியாவை விட்டு துரத்தினார்.இறக்குமதியை தடை செய்ததால் உணவுபஞ்சம் வந்தது.உணவை இறக்குமதி செய்வதை விட்டுவிட்டு திங்கட்கிழமை தோறும் நாட்டு மக்கள் உபவாசம் இருக்க வேண்டும் எனும் புரட்சிகரமான திட்டத்தை மொரார்ஜி தேசாய் அறிவித்தார்.அவரும் திங்கட்கிழமைகளில் உண்ணாவிரதம் இருக்க துவங்கினார்.ஆசிய விளையாட்டு போட்டியை இந்தியாவில் நடத்த வாய்ப்பு வந்தபோது அது ஆடம்பரம் என்று சொல்லி மொரார்ஜி அரசும், சரண்சிங் அரசும் அதை இந்தியாவில் நடத்த மறுத்தன.
1980 வரை இவர்கள் அடித்த கூத்துக்கு எல்லையே இல்லை என சொல்லலாம்.1950- 1960, 1960- 1970, 1970- 1980 ஆகிய இக்காலகட்டத்தில் இந்திய மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் 3.5% ஆக மட்டுமே இருந்தது.(இக்காலகட்டத்தில் ஜனத்தொகை 2.5% ஆக முன்னேறியதால் உண்மையான வளர்ச்சி விகிதம் 1% தான்)இந்த பெருமை மிகுந்த(!) வளர்ச்சி விகிதத்தை "இந்து வளர்ச்சி விகிதம்" என உலக பொருளாதார நிபுணர்கள் கிண்டலடித்தனர்.
"இந்து வளர்ச்சி விகிதம்" என குறிப்பிட காரணம் அப்போதைய கிழக்காசிய டைகர் எகானமி நாடுகளின் வளர்ச்சி விகிதம் தான்.தென்கிழக்கு ஆசிய நாடுகள்(பவுத்தம்) அசுர வேகத்தில் பாய்ந்து முன்னேறின.மேற்கத்திய நாடுகள்(கிறிஸ்துவம்) பெரும் வளர்ச்சி அடைந்தன.பெட்ரோல் காசு இஸ்லாமிய நாடுகளை பெரும் செல்வந்தர்களின் நாடாக்கியது.இப்படி அனைத்து மத நாடுகளும் அசுர வேகத்தில் முன்னேற, இந்தியா தேவ வேகத்தில்(இந்து வளர்ச்சி விகிதத்தில்) முன்னேறியதால் இவ்வளர்ச்சி விகிதத்தை "இந்து வளர்ச்சி விகிதம்" என கிண்டலாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டனர்.சோஷலிச செக்யூலரிஸ்டுகள் கொண்டு வந்த வளர்ச்சி விகிதம் அப்படி(##)....
1984ல் இந்திய பொருளாதாரத்தை ஆய்வு செய்த எகானமிஸ்ட் பத்திரிக்கை "இது பூட்ட கேஸ்" என்றது."லைசன்ஸ் ராஜ்,உற்பத்தி கட்டுப்பாடு என்றதன் விளைவால் இந்தியாவுக்கு கம்யூனிசம்,முதலாளித்துவம் ஆகிய இரு கோட்பாடுகளின் தீமைகளும் ஒரே சமயத்தில் கிடைத்தன.இந்திய சிறுதொழில்கள் திறமையற்ற உதவாக்கரை கம்பனிகள்.இந்திய பெருங்கம்பனிகள் கொள்ளையடிக்கும் monopolies" என்றது எகானமிஸ்ட்
1985ல் ராஜிவ் அரசு சில தீர்திருத்தங்களை கொண்டுவந்தது.கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு அனுமதி,தொலை தொடர்பு துறையில் முன்னேற்றம்,லைசன்ஸ் ராஜில் தளர்த்தம் என சீர்திருத்தங்களை ராஜிவ் அரசு கொண்டுவந்தது.கம்ப்யூட்டர் வந்ததால் வேலை போய்விடும் என தோழர்கள் கவலைப்பட்டனர்.1985 மே தினத்தை "கம்ப்யூட்டர் எதிர்ப்பு தினமாக" இந்திய கம்யூனிஸ்டு கட்சி அனுசரித்தது.
ராஜிவ் ஆட்சிக்கு பின்வந்த விபிசிங் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் என்று சொன்னாலே அவரது பொருளாதார கொள்கைகளை பற்றி நாம் அறிந்து கொள்ள இயலும்.அவர் ஆட்சி காலம் ஒரே கலாட்டா காமெடி ஆட்சிக்காலம் தான்.அவருக்கு பின்வந்த சந்திரசேகர் காலத்தில் மிகப்பெரும் தலைகுனிவு இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்பட்டது.பெட்ரோல் இறக்குமதி செய்ய காசில்லாமல் உலகின் எந்த நிதி நிறுவனமும் கடன் தர மறுத்த பின் ரிசர்வ் வங்கியில் இருந்த தங்கத்தை பாங் ஆப் இங்கிலாந்திடம் அடகுவைத்து கடன் பெற்ற கதையும் நடந்தது.
அதன்பின் 1991ல் நரசிம்மராவ் ஆட்சிக்கட்டிலை ஏறினார்.மன்மோகன் சிங் நிதி அமைச்சரானார்.1992 ஜூலையில் இந்திய வரலாற்றை மாற்றி அமைத்த அதிநவீன பட்ஜெட்டை அறிமுகப்படுத்தினார்.சிங் பட்ஜெட்டை படிக்க படிக்க பங்கு சந்தை குறியிட்டு எண் விஷம் போல் ஏறியது.இடதுசாரிகளின் ரத்த அழுத்தம் அதை விட அதிக வேகத்தில் ஏறியது.சிங் பட்ஜெட்டை படித்து முடித்ததும் பொருளாதார நிபுணர்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர்.புதிய இந்தியா 1992ல் பிறந்தது.
வளர்ச்சி அடைந்த புதிய வல்லரசின்,மக்கள் நலன் பேணும் நல்லரசின் விதைகள் அன்று மன்மோகனாலும்,நரசிம்மராவாலும் விதைக்கப்பட்டன.நாரயணமூர்த்தி,ஆசிம் பிரேம்ஜி போன்றவர்களை உருவாக்கி,பல கோடி இளைஞர்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்தார் மன்மோகன்.மன்மோகன் ஏற்றிய ஒளிவிளக்கை சிதம்பரமும்,ஜஸ்வந்த் சிங்கும்,யஷ்வந் சின்காவும் அதன் பின் மீண்டும் சிதம்பரமும் அணையாமல் கொண்டு சென்றனர்.
1992 பட்ஜட்டை படைத்ததற்காக மன்மோகனை இடதுசாரிகள் இன்னும் மன்னிக்கவில்லை."வேலை செய்தால் தான் சம்பளம்" என்று சொல்லிவிட்டாரே என்று கோபம் அவர்களுக்கு."உழைப்பவனுக்கு தான் உயர்வு,சுறுசுறுப்பானவனுக்கு தான் முன்னேற்றம்,சோம்பேறிக்கு ஆப்பு" போன்ற கொள்கைகளை கொண்டு வந்ததால் புதிய பொருளாதார கொள்கையே பிடிக்காமல் போய்விட்டது காம்ரேடுகளுக்கு.
'இந்து வளர்ச்சி விகிதத்தை' ஒழித்துக்கட்டி, நவீன இந்தியாவை படைத்த பாரதத்தின் புதிய கடவுளான மன்மோகனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினாலும் நாம் அவருக்கு பட்ட நன்றிக்கடன் தீராது.
--
செல்வன்
http://www.holyox.tk
http://groups.google.com/group/muththamiz
தனிமடல் தொடர்புக்கு:
hol...@gmail.com
கார்த்திக்,
அந்த குளிர்பானங்கள் குடிக்க சுவை இல்லாதவை.மூணு ரூபாய்க்கு பிரிட்ஜில் வைக்காமல் கடையில் கிடைக்கும்.வேறு வழியில்லாததால் அதை தாகத்துக்கு குடித்துக் கொண்டிருந்தனர் மக்கள்.காளிமார்க் நிறுவனம் கோக் பெப்சி வருமுன்னரே சொத்து பிரச்சனையில் தள்ளாடிக் கொண்டிருந்தது
எல்பிஜி(liberalization, privatisation, globalization ) என்றழைக்கப்படும் புதிய பொருளாதார கொள்கை இந்திய சிறுதொழில்களை நசித்துவிடும்(நசித்துவிட்டது) என வலிந்து பொய்கள் பரப்பப்படுகின்றன. இந்த பொய்யின் அடிப்படையில் மேலும் பல புதிய துறைகளில் அன்னியமுதலீடும், இந்திய பெருவணிகர்களின் முதலீடும் தோழர்களால் எதிர்க்கப்படுகின்றன.
இவர்கள் எந்தெந்த துறையில் தனியார் முதலீட்டை எதிர்த்தார்களோ அந்தந்த துறைகள் ஒவ்வொன்றும் தனியாருக்கு திறந்துவிடப்பட்ட பிறகு தான் அசுரவளர்ச்சி கண்டன என்பது உலகறிந்த உண்மை. ஆயுள்காப்பிடு, தொலைபேசி, தொலைக்காட்சி ஆகிய துறைகள் ஒரு உதாரணம்.இந்த துறைகளில் பன்னாட்டு முதலீடு வந்தபிறகு தான் உள்கட்டுமானத் துறைகளான இவை மிக சிறப்பான வளர்ச்சி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தொலைபேசியும், இணையமும் இன்னும் அரசுவசமே இருந்திருந்தால் தொழில்வளர்ச்சியே பின் தங்கியிருக்கும்.
முதலில் இவர்களின் பொய்களை ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தலாம் என்றிருக்கிறேன். முதலில் புதியபொருளாதார கொள்கையால் சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டனவா என்பதை பார்க்கலாம்.
1993 - 94ல் இந்தியா முழுவதும் இருந்த சிறுதொழிலகங்களின் எண்ணிக்கை 23.84 லட்சம்
1998 - 99ல் இந்த எண்ணிக்கை 31 லட்சமாக உயர்ந்துள்ளது
சிறுதொழிலகங்களில் பணிபுரிந்தோர் 1993- 1994 - 1.39 கோடி
1999 - 2000 - 1.79 கோடி
சிறுதொழிற்சாலைகளின் ஏற்றுமதி
1993 - 25,307 கோடி
2000 - 49,481 கோடி
ஆக புதிய பொருளாதார கொள்கையால் சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டன என்ற இவர்களின் ஜல்லி முதலில் உடைபடுகிறது.
புதிய பொருளாதார கொள்கையின் முதல் பத்தாண்டுகளில்லேயே சிறுதொழிலகங்களின் எண்ணிக்கை, அதில் பணிபுரிவோர் எண்ணிக்கை, அவற்றின் ஏற்றுமதி ஆகியவை கணிசமான அளவு உயர்ந்துள்ளதே தவிர இவர்கள் ஜல்லி அடிப்பது போல் குறையவில்லை . குறிப்பாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், ஏற்றுமதியிலும் சிறுதொழிலசாலைகள் மாபெரும் சாதனைகளை நிகழ்த்திக்காட்டியுள்ளன.
இந்த சிறுதொழிலகங்களின் தற்போதைய நிலை 2000ஆண்டை விட கணிசமாக முன்னேறியுள்ளதும் தெரியவருகிறது.
1993 - 94ல் இந்தியா முழுவதும் இருந்த சிறுதொழிலகங்களின் எண்ணிக்கை 23.84 லட்சம்
2004லில் 36 லட்சம.
சிறுதொழிலகங்களில் பணிபுரிந்தோர்
1993- 1994 - 1.39 கோடி
2004லில் - 2 கோடி
அதாவது பத்தாண்டுகளில் புதிதாக 13 லட்சம் சிறுதொழிலகங்கள் புதிதாக திறக்கப்பட்டு கிட்டத்தட்ட 60 லட்சம் வேலைவாய்ப்புகளை அவை புதிதாக உருவாக்கியுள்ளன. புதிய பொருளாதார கொள்கையாலும், பன்னாட்டு நிறுவனங்களாலும் சிறுதொழில்கள் முன்னேறியுள்லன, வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்பது தான் உண்மையே தவிர இவர்கள் ஜல்லி அடிப்பது போல் சிறுதொழில்கங்கள் பாதிக்கப்பட்டன என்பது அண்டப்புளுகு.
இந்திய அளவில் நிலைமை இப்படி என்றால் தமிழ்நாட்டில் நிலைமை இன்னும் நன்றாக இருக்கிறது .தமிழக பொருளாதாரத்தில் சிறுதொழில் கூடங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தமிழ்நாட்டு நிறுவனங்களில் கிட்டத்தட்ட 95% நிறுவனங்கள் சிறுதொழில் நிறுவனங்கள். 12,500 கோடி ரூபாய் இவற்றில் முதலீடு செய்யப்பட்டு, சுமார் 30 லட்சம் பேர் இவற்றில் வேலை பார்க்கிறார்கள். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் புலிப்பாய்ச்சலில் முன்னேற்றம் இருந்துள்ளது. 1988 முதல் 1998 வரை தமிழக சிறுதொழில் துறை வருடா வருடம் 12.8% முன்னேற்ரமே கண்டுள்ளது. இதில் வேலைவாய்ப்பும் வருடத்துக்கு 10.9% அதிகரித்தே வந்திருக்கிறது. 1998 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இவற்றின் உற்பத்தி கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்த சிறுதொழிலகங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மட்டும் 2.95 லட்சத்தில் இருந்து 4.20 லட்சமாக அதிகரித்தே வந்துள்ளது.
ஆக தோழர்கள் ஒப்பாரி வைப்பது போல் பன்னாட்டு நிறுவனங்களின் நுழைவால் சிறுதொழில்கள் பாதிக்கப்படவே இல்லை. அதற்கு மாறாக புயல்வேகத்தில் அவை முன்னேறியே வந்துள்ளன.பொய்களையும், கட்டுகதைகளையும் அவிழ்த்துவிட்டு நாட்டு மக்களை ஏமாற்றுவதை இவர்கள் என்று நிறுத்துகிறார்களோ அன்று தான் நாட்டுக்கு விடிவுகாலம் வரும் என்பதுதான் உண்மை.
// இந்த பொய்யின் அடிப்படையில் மேலும் பல புதிய துறைகளில் அன்னியமுதலீடும், இந்திய பெருவணிகர்களின் முதலீடும் தோழர்களால் எதிர்க்கப்படுகின்றன. //
அன்னியமுதலீடு என்பது எந்த நேரத்திலும் திரும்பப் பெறக்கூடிய ஆபத்து நிறைந்தது. ஒருவேளை அப்படி நடக்குமானால் அடுத்த நொடியே இந்தியப் பொருளாதாரம் அவ்வளவுதான். நீங்க சொல்ற தோழர்கள் "அன்னிய" முதலீட்டை தான் எதிர்கிகிறார்களே ஒழிய பொருளாதார வளர்ச்சியை எதிர்க்க வில்லை.
// புதிய பொருளாதார கொள்கையின் முதல் பத்தாண்டுகளில்லேயே சிறுதொழிலகங்களின் எண்ணிக்கை, அதில் பணிபுரிவோர் எண்ணிக்கை, அவற்றின் ஏற்றுமதி ஆகியவை கணிசமான அளவு உயர்ந்துள்ளதே தவிர இவர்கள் ஜல்லி அடிப்பது போல் குறையவில்லை . //
நீங்க சொல்ற மாதிரி இவையெல்லாம் "கணிசமாக" மட்டுமே உயர்ந்துள்ளன. அவர்கள் ஜல்லி அடித்தது சிறுதொழில்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பதற்காக அல்ல. சிறுதொழில்களின் "வளர்ச்சி விகிதம்" குறைந்து விட்டது என்று தான் ஜல்லி அடிக்கிறார்கள். எண்ணிக்கைக்கும், வளர்ச்சி விகிதத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது.
// லட்சம் ரூபாய் கார் வந்தால்
ஸ்கூட்டருக்கு பதில் அனைவரும் கார் ஓட்டுவார்கள். //
ஓகோ! எல்லோரும் ஸ்கூட்டருக்கு பதில் கார் ஓட்டினால் பொருளாதாரம் உயர்ந்துவிடுமோ? மிக அரிய தகவல் . நன்றி.
// அந்த குளிர்பானங்கள் குடிக்க சுவை இல்லாதவை.மூணு ரூபாய்க்கு பிரிட்ஜில் வைக்காமல் கடையில் கிடைக்கும்.வேறு வழியில்லாததால் அதை தாகத்துக்கு குடித்துக் கொண்டிருந்தனர் மக்கள்.காளிமார்க் நிறுவனம் கோக் பெப்சி வருமுன்னரே சொத்து பிரச்சனையில் தள்ளாடிக் கொண்டிருந்தது //
//கியூபா என்ற நாட்டை பற்றி தெரியும், விவசாயத்தில், அதுவும் கரும்பு ஒன்றை மட்டுமே நம்பி அந்த நாடு இருந்தது, இன்றும் அமெரிக்காவை எதிர்த்து நன்றாக தான் இருக்கிறது,//
அமெரிக்காவை எதிர்த்து இருக்கிரது என்றால் எப்படி? நம் ஊர் அரசியல்வாதிகள் மாங்கொல்லையில் நின்றுகொண்டு 'ஜார்ஜ் புஷ்ஷை எச்சரிக்கிறேன்" என முழங்குவார்கள்.அந்த மாதிரி உலக அரங்கில் முழங்கும் கோமாளிதான் காஸ்ட்ரோ.தேர்தல் என்று ஒன்றை வைத்திருந்தால் என்றோ அவர் தூக்கி வீசப்பட்டிருப்பார்:-)
கியூபா மக்கள் கள்ளதோணி,போட்,கப்பல்,படகு,மரக்கட்டை என்று கிடைப்பதை வைத்து கடல்தாண்டி அமெரிக்காவுக்கு ஓடி வருகிறார்கள்.கியூபா நேவி தடுத்து பலரை சுட்டு கொல்கிறது. தடுக்காவீட்டால் ஒட்டுமொத்த கியூபாவும் இன்று ப்ளோரிடாவில் தான் குடியேறியிருக்கும்:-)
//நமது நாடு முழுக்க முழுக்க(70%) விவசாயத்தை நம்பியது,
உங்கள் பெருளாதார வளர்ச்சியினால் கிராமத்திலிருந்து மக்கள் நகரத்திற்கு
இடம் பெயர்த்தது தான் மிட்சம், நகரத்தில் சேரிகள் அதிகமாகி
கொண்டிருக்கிறது, கிராமத்தில் கௌரவமாக வாழ்ந்த ஒருவன் நகரத்தில் பிட்சை எடுக்கும் நிலைக்கு தள்ள பட்டு இருக்கிறான்.(நல்ல வளர்ச்சி//
பொருளாதார கொள்கை வந்தாலும் வரவில்லை என்றாலும் உலகத்தில் எந்த காலத்திலும் எந்த நாட்டிலும் மக்கள் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு குடிபெயர்ந்து தான் கொண்டிருக்கிறார்கள்.
//உங்கள் கருத்து படி பார்த்தாலும் வெளி நாட்டு முதலீடாளர்களுக்கு சிகப்பு
கம்பளம் (மூன்று வருட மின்சார சலுகை, வரி சலுகை.மேலும்......) விரிக்கும்
இந்த அரசாங்கம், உள் நாட்டு சிறு தொழிலாளர்களுக்கு என்ன செய்கிறது.//
செய்யாமலா சிறுதொழில்கள் கடந்த 15 ஆண்டுகளில் கொடி கட்டி பறக்கின்றன?
//உங்கள் கணிப்பின் படி சிறு முதலீட்டார்கள் மட்டுமே இருப்பார்கள், ஆனால்
அவர்களும் உங்கள் பெரிய கம்பெனிகளுக்கு வேலை செய்து கொண்டு
இருப்பார்கள்.//
செய்யட்டுமே?கஸ்டமர்களுக்கு வேலை செய்யத்தானே தொழிற்சாலைகள்?அது சின்ன கம்பனி, பெரிய கம்பனி, வெளிநாட்டு கம்பனி என எதுவாக இருந்தால் என்ன?நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது?
//நம் நாடு ஒரு கிலோ நெல்லுக்கு வெளி நாட்டில் கை ஏந்தும் நிலையை
எட்டுவோம்,அப்போது இப்போதை காட்டிலும் உங்கள் தாரளமயமாக்கல் கொள்கை சிறப்பாக செயல்படும்.//
அந்த நிலையை நேரு கலத்திலேயே எட்டிவிட்டோம்.அரிசி/கோதுமை இறக்குமதி நேரு காலத்தில் இருந்தே இருக்கிரது.உணவு இறக்குமதி செய்ய காசில்லாமல் மொரார்ஜி தேசாய் 'எல்லோரையும் திங்கள்கிழமை உபவாசம் இருக்க' சொல்லியெல்லாம் வேண்டுகோள் விடுத்தார்.சோஷலிச பொருளாதாரத்தின் மகத்துவம் அப்படி.
சக்கரியா
பன்னாட்டு மூலதனங்களால் பிரபலமடைந்திருக்கிறது தமிழகம். முதலீட்டாளர்களில் பலரும் - உதாரணமாக பி.எம்.டபிள்யூ. கார் நிறுவனம் - கேரளத்துக்கு வந்து முதலீடு செய்வதற்கான சாத்தியங்களை விவாதித்தவர்கள். ஆனால் அவர்கள் உயிர் தப்பி ஓடிவிட்டார்கள். காரணம், கம்யூனிஸ்டுகளும் பிற அரசியல் கட்சியினரும் சேர்ந்து கேரளத்தில் உருவாக்கிவைத்திருக்கும் தொழிற்சூழல் பைத்தியக்கார விடுதிக்குச் சமமானது. தொழிலாளிகளின் மூளைகளை அரசியல் கட்சிகள் பொய்களால் மழித்துவைத்திருக்கின்றன. கம்பெனியைத் திறப்பதில் அல்ல; மூடுவதிலேயே அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் இடையில் நின்று இரு தரப்பினரின் சட்டைப் பைகளிலும் கை போடுகிறார்கள். இன்று கேரளத்தில் முதலீடு செய்வதும் அதைக் கடலில் வீசுவதும் ஏறத்தாழ ஒன்றுதான்.
இங்கே சின்ன அளவிலாவது முதலீடு செய்யத் துணிந்த ஒரு வெளிநாட்டு நிறுவனம் துரதிருஷ்டவசமாகக் கொக்கோகோலா மட்டுமே. அர்த்தமில்லாத ஒரு பானம். அதைக் குடிப்பதனால் தாகம்கூடத் தீராது. அது மட்டுமல்ல, குழந்தைகள் அதைக் குடிப்பதால் குண்டோ தரர்களாகவும் அகாலத்தில் நீரிழிவு நோயாளிகளாகவும் மாறக்கூடும். மதுவைப் போலவே கொக்கோகோலாவும் தீங்கானதுதான். மது நல்லதல்ல என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், கேரளத்தில் அரசே மது விற்பனையை நடத்துகிறது. மது அருந்து பவர்களின் எண்ணிக்கையோ கொக்கோகோலா குடிப்பவர்களின் எண்ணிக்கையைவிடப் பல மடங்கு.
கொக்கோகோலாவுக்குப் பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமடையில் தொழிற்சாலை தொடங்க அனுமதி அளித்தது அன்று ஆட்சியிலிருந்த இடது முன்னணி அமைச்சரவையே. 2000இல் அந்நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கியது. 2001இல் காங்கிரஸ் முன்னணி அதிகாரத்துக்கு வந்தது. அப்போதுதான் பழைய மார்க்சிஸ்ட் முன்னணியில் அங்கமாக இருந்த ஜனதா தளம் (எஸ்) கொக்கோகோலாவுக்கு எதிராகக் களமிறங்கியது.
கொக்கோகோலா தொழிற்சாலை உள்ள பிளாச்சிமடை என்ற பகுதி பெருமாட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்தது. கொக்கோகோலாவுக்கு அங்கே ஆலை நிர்மாணிக்க அனுமதியளித்த பெருமாட்டிப் பஞ்சாயத்து அப்போது ஜனதா தளம் (எஸ்)-இன் கைவசம் இருந்தது. கோலா எதிர்ப்பை முன்னெடுத்ததும் அவர்கள்தாம்.
முன்னெடுத்தார்கள் என்று சொல்லக் காரணமிருக்கிறது. கொக்கோகோலா தொழிற்சாலையின் சுற்றுப்புறங்களில் வசிக்கும் ஆதிவாசிகளுக்கு ஒரு போதும் குடிநீர் கிடைத்தது இல்லை. காரணம் எளிமையானது. ஆதிவாசிகளின் கோரிக்கைகளுக்குக் கேரளத்திலுள்ள அரசியல்-ஆட்சி-சமூகப் பொது அமைப்பு, ரோமத்தின் மதிப்புக்கூடத் தந்ததில்லை என்பதுதான். அவர்களுடைய குடிநீர்த் தட்டுப்பாடு அதிகரித்ததும் அவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். அப்போது கொக்கோகோலா தொழிற்சாலையால்தான் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என்று நம்பவைக்க ஆட்கள் இருந்தார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆதிவாசிகளுக்குக் குடிநீர் கொண்டுவந்து தர யார் கடமைப்பட்டவர்களோ அவர்கள் மிகச் சாமர்த்தியமாகப் பழியைக் கொக்கோகோலாமீது சுமத்தினார்கள். கொக்கோகோலா தொழிற்சாலைக்கு முன்னால் பந்தல் கட்டி ஆதிவாசிகள் போராட்டம் தொடங்கினார்கள்.
உலகமயமாக்கல், முதலாளித்துவம், நவகாலனியாக்கம் போன்ற சொற்களுக்கான மார்க்கெட் இடது சாரி மனோபாவமுள்ள கேரளத்தில் பிரசித்தமானது. தவிரவும், அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் இத்தகைய சொற்களின் நட்சத்திர மதிப்பு கவர்ச்சிகர மானது. அப்படிப்பட்ட சந்தையில் கொக்கோகோலாவுக்கு எதிராகத் திசைதிருப்பிவிடப்பட்டவர்களும் அப்பாவிகளுமான ஆதிவாசிகள் தொடங்கிய போராட்டம் முதல் தரமான விற்பனைச் சரக்காக இருந்தது. அதை ஜனதா தளம் போன்ற உயிர்ப் பிணமான ஒரு கட்சி ஆனந்தமாக முன்னெடுத்தது. ஆதிவாசிகள் பின்னணிக்குத் தள்ளப்பட்டு, அரசியல்வாதிகள் முன்னிலை வகித்தார்கள். சி.கே. ஜானு போன்ற ஆதிவாசித் தலைவர்கள் பின்வாங்கினார்கள்.
தாமதமில்லாமல் பிளாச்சிமடை உலகப் புகழ் பெற்றது. ஜனதா தளம் (எஸ்) கட்சியின் கேரளத் தலைவருக்கு உரிமையான ஒரு பிரபல நாளிதழ் போராட்டத்துக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டது. மேதா பட்கர் முதல் வந்தனா சிவா வரையான உலகப் புகழ்பெற்ற சூழலியலாளர்களின் தீர்த்தாடன கேந்திரமானது பிளாச்சிமடை. மயிலம்மாவைப் போன்ற உள்ளூர் விக்கிரகங்களும் உருவாக்கப்பட்டன. வழக்குகள் தடபுடலாக நடந்தன. கொக்கோகோலா தொழிற்சாலை மூடப்பட்டது. காங்கிரஸ் அரசு போய் கம்யூனிஸ்ட் அரசு வந்தது. ஆட்சிக்கு வந்ததும் அது முதலில் செய்த காரியம் கொக்கோகோலாவுக்குத் தடை விதித்ததுதான். அதாவது, கேரளத்தின் மக்கள் தொகையில் 0.5 விழுக்காட்டினர் குடிக்கும் பானத்தைத் தடைசெய்தது. 90 விழுக்காட்டினர் காலாவதியானதும் உலகளவில் தடைசெய்யப்பட்டதுமான மருந்துகளைப் பயன்படுத்தும் மாநிலத்தில், 60 விழுக் காட்டுக்கும் மேற்பட்டவர்கள் கலப்படம் செய்த மதுவை அருந்தும் மாநிலத்தில், தடை விதிக்கப்பட்டதோ 0.5 விழுக்காடுள்ள ஒரு முட்டாள் பானத்துக்கு.
இதற்கிடையில் கோலாவில் நச்சுக் கொல்லிகளின் கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை இருக்கும் என்பதில் என்ன சந்தேகம்? கோலா தயாரிக்கப் பயன் படுத்தும் தண்ணீரிலும் சர்க்கரையிலும் அவை இருக் கின்றனவே! நச்சுக் கொல்லியின் கணக்கைப் பார்த் தால் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு வரும் எந்தக் காய்கறியையும் எந்தப் பழத்தையும் பயன்படுத்த முடியாது. அவை பூச்சி மருந்துகளில் மூழ்கி எழுந்தவை. அதிகம் எதற்கு? கேரளக் குடிநீர் வாரியம் விநியோகிக்கும் குழாய் நீரைப் பரிசோதித்தால் காணப்படும் நச்சுக் கூறுகள் நம்மை உணர்விழக்கச் செய்யும். ஆனால், இந்த உண்மைகள் வந்தனா சிவாவுக்கும் மேதா பட் கருக்கும் எம்.பி. வீரேந்திர குமாருக்கும் அவசியமில்லை. அவர்களுக்குத் தேவை கொக்கோகோலா போராளிகள் என்ற சர்வதேசப் பெருமை. மக்சேசே போன்ற விருதுகள். குடிநீரில் விஷமிருந்தால் யாருக்கு நஷ்டம்? காய்கறியிலும் பழத்திலும் விஷமிருந்தால் அவர்களுக்கு என்ன? கொக்கோகோலாதானே நட்சத்திரம்.
கொக்கோகோலா நிறுவனத்தை மூடி வருஷங்களாகின்றன. அது தண்ணீரை உறிஞ்சுவதில்லை என்பது வெளிப்படை. ஆனால், பிளாச்சிமடை ஆதிவாசிகளுக்கும் பிறருக்கும் இன்றும் குடிநீர் கிடைக்கவில்லை. இது என்ன ஆச்சரியம்? அப்படியானால் இந்த உலகப் பிரசித்தி பெற்ற போராட்டங்கள் எதற்காக? தமிழ் நாட்டிலுள்ள கொக்கோகோலா தொழிற்சாலைவரை பரவிய இந்தப் போராட்டம் ஏன் ஆதிவாசிகளுக்குக் குடிநீரைக் கொண்டுவரவில்லை? எல்லாரும் கேட்கக் கூடிய கேள்விகள்தாம் இவை.
அண்மையில்தான் இந்திய நாடாளுமன்றத்தில் முதன்முறையாக உண்மை வெளிவந்தது. சி.பி.எம். பொலிட்பீரோ உறுப்பினரும் எம்.பி.யுமான பிரகாஷ் காராட்டின் கேள்விக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் செய்புதீன் ஷேக் அளித்த பதில் பின்வருமாறு:
மத்திய நீர்வளத் துறை பிளாச்சிமடை தண்ணீர்ப் பிரச்சினையைப் பற்றி ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பிளாச்சிமடை உள்ளிட்ட பெருமாட்டிப் பஞ்சாயத்திலுள்ள நிலத்தடி நீரில் 92 விழுக்காட்டையும் அங்குள்ள விவசாயிகளின் குழாய்க் கிணறுகள் தாம் உறிஞ்சியெடுக்கின்றன. சரியாகச் சொன்னால் பெருமாட்டிப் பஞ்சாயத்தில் 17.4 மில்லியன் கன மீட்டர் நீர் இன்று உள்ளது. இதில் 16.12 மில்லியன் கன மீட்டர் நீர் விவசாயப் பாசனத்துக்கும் 1.08 மில்லியன் கன மீட்டர் நீர் வீட்டு உபயோகத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 0.2 மில்லியன் கன மீட்டர் நீரைத்தான் கொக்கோகோலா தொழிற் சாலையும் பிற மதுத் தயாரிப்பு ஆலைகளும் பங்கிட்டுக் கொள்கின்றன. பெருமாட்டிப் பஞ்சாயத்தில் 508 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. அவற்றில் கொக்கோகோலாவுக்கு உரிமையானவை ஐந்து. சாராய ஆலைக்குச் சொந்தமானது இரண்டு.
வந்தனா சிவாவுக்கும் மேதா பட்கருக்கும் இதைப் பற்றிச் சொல்ல ஏதாவது இருக்கிறதா? ஒரு வார்த்தைகூட இல்லை. அமைதி. பொய்களை வைத்து 'மக்கள் போராட்டங்களை' உருவாக்கும் இது போன்ற மாயாவித் திருடர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. குறைவாக இருக்கலாம். அதனால்தான் அடிப்படைப் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் கேரளத்தைவிட ஒளியாண்டுகளுக்கு முன்னால் செல்வதாக நான் முன்பே குறிப்பிட்டேன்.
பிளாச்சிமடையில் நடந்த போராட்டக் கூத்துக்கு இன்னொரு சுவாரசியமான கிளைமாக்ஸ் அண்மையில் நிகழ்ந்தது. கேரள நீர்வளத் துறை அமைச்சர் பிளாச்சி மடைக்குச் சென்றிருந்தார். ஆதிவாசிகளுக்கு இப் போதும் குடிநீர் கிடைப்பதில்லை என்ற உண்மையைக் 'கண்டுபிடித்தார்'. காரணம் என்ன என்கிறீர்களா? அண்மைக் காலம்வரை நீதிமன்ற உத்தரவின்படி கொக்கோகோலா நிறுவனம் ஆதிவாசிகளுக்குக் குடிநீர் கொண்டுவந்து விநியோகம் செய்துவந்தது. கம்பெனி மூடப்பட்ட பிறகும் அது தொடர்ந்துவந்தது.
நிறுவனம் ஊரைக் காலிசெய்ததோடு குடிநீர் விநியோகமும் நின்றுபோனது. நீர்வளத் துறை அமைச்சர் என்.கே. பிரேமசந்திரன் பிளாச்சிமடையில் ஒரு கம்பீரமான அறிவிப்பைச் செய்தார்: "ஆதிவாசிகளுக்குக் கொக்கோகோலாவின் பிச்சை வேண்டாம். இனிமேல் அரசே குடிநீர் வழங்கும்." அப்படியானால் இத்தனை காலமாகக் குடிநீர் வழங்காமல் அவர்களைப் போராட்டத்தில் இறக்கிவிட்டதற்குப் பொறுப்பாளிகள் யார்? கொக்கோகோலாவா?
"முட்டாள்களின் சொர்க்கம்" என்று ஒரு பிரயோகம் உண்டு. அதை நேரடியாக அனுபவித்து அறிய விரும்பினால் கேரளத்துக்கு வந்தால் போதும். நல்வரவு!
//விவசாய பயிர்காப்பு இன்சூரன்ஸ் பெற்றி கேள்விப்பட்டதில்லையா என்ன?இதுவரை 20 கோடி விவசாயிகள் இதனால் பலனடைந்திருக்கிறார்கள்.//
உங்க லிங்க்- கிலேயே தெளிவா இருக்கு. இது ஒரு அரசுத்துறை நிறுவனத்தால் நடத்தப்படுவது. அன்னிய முதலீட்டால் அல்ல.
அந்த ரெண்டாவது லிங்க்- கிலே ஒரு கிராமத்து ஸ்டூடண்டு கம்பியூட்டர் முன்னாடி ஒக்காந்து கீ போர்டுல கைய வச்சுக்கிட்டு இருக்குது.(இதுக்கு மீனிங்: இப்ப கிராமத்துல கூட எல்லாம் கம்பியூட்டர் தானாம். நம்ம நாடு அந்த அளவுக்கு முன்னேறிடுச்சாம்).ஆனா திரும்ப திரும்ப கிராமங்களையும், வறுமையையும் குழப்பாதீங்க. கிராமத்துக்கு கணினி/ தொலைத்தொடர்பு போய் சேந்துட்டா அது அங்க உள்ள வறுமைய துரத்திவிடும்னு அர்த்தம் இல்ல. கம்பியூட்டர்/ தொலைத்தொடர்பு வறுமையில் இருக்கறவனுக்கு சோறு போடுமா? அல்லது பசிக்காம இருக்கறதுக்கு எதாவது புரோக்ராம் போட்டு கொடுக்குமா?
// "முதலாளித்துவம் தான் மேற்கு வங்கத்தை உருப்பட வைக்க ஒரே வழி" என்று புத்ததேவ் பட்டாசார்யாவே ஒத்துக்கொண்டிருக்கிறார். //
ஆமாம் ஆமாம். ஆனால் புத்ததேவ் பட்டாசார்யா வைத்தான் யாரும் கம்யூனிஸ்டு என்று ஒத்துக்கொள்ள மாட்டேனென்கிறார்கள்.பாவம்.
// 12,000 செலவு செய்து கடைக்கு இலவச ப்ரிட்ஜ் கொடுக்கும் குளிர்பான கம்பனிகாரன் அந்த ப்ரிட்ஜில் போட்டி கம்பனி சரக்கை வைக்காதே என்று சொல்லத்தான் செய்வான்.கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்று இருக்க முடியாதே?:-) //
ஆனால், அந்த 12000(?!!!!!!) பிரிட்ஜ் - க்கு வெளியில கூட வைக்கக் கூடாதுங்கிறானே. அதுக்கு என்ன சொல்றீங்க?
// நிஜமாகவே ஜல்லியை எடுத்துதான் பிளாச்சிமடாவில் அடித்து கொண்டிருக்கிறார்கள்.யாரை தெரியுமா?கோக்கை விரட்டிய காம்ரேடுகளை //
ஆமாம் விரட்டியிருப்பார்கள். காரணம் கோக்கை இவ்வளவு தாமதமாக விரட்டியதற்காக.
// அப்போது கொக்கோகோலா தொழிற்சாலையால்தான் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என்று நம்பவைக்க ஆட்கள் இருந்தார்கள்.
கொக்கோகோலா நிறுவனத்தை மூடி வருஷங்களாகின்றன. அது தண்ணீரை உறிஞ்சுவதில்லை என்பது வெளிப்படை. ஆனால், பிளாச்சிமடை ஆதிவாசிகளுக்கும் பிறருக்கும் இன்றும் குடிநீர் கிடைக்கவில்லை.தமிழ் நாட்டிலுள்ள கொக்கோகோலா தொழிற்சாலைவரை பரவிய இந்தப் போராட்டம் ஏன் ஆதிவாசிகளுக்குக் குடிநீரைக் கொண்டுவரவில்லை? எல்லாரும் கேட்கக் கூடிய கேள்விகள்தாம் இவை. //
6 வருடங்களுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 50 மூட்டை அரிசியும், 1500 தேங்காய்களும் உற்பத்தி செய்த அந்த ஊரின் நிலங்கள், 40 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து நாளொன்றுக்கு 1.5 மில்லியன் லிட்டர் நீரை உறிஞ்சி, நிலத்தடி நீரை பூமியின் மறுபக்கம் வரை தோண்டினாலும் கிடைக்காத படி எடுத்து , 20000 மக்கள் பயன்படுத்த போதுமான தண்ணீரை பிடுங்கி தண்ணீரை நம்பி வாழும் 10000 நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறித்து போது மக்களால்
விரட்டப்பட்டு ஓடிய கோக் அவ்வூர் மக்களுக்கு தண்ணீர் சப்ளை பண்ணியது எப்படி இருக்குன்னா, உங்க கிட்ட வழிப்பறி பண்ணிக்கிட்டு ஒடுறவன் போகும்போது வெறுங்கையோட நிக்கிரற உங்களுக்கு வீடு போய்ச் சேர பஸ் சுக்கு காசு கொடுத்துட்டுப் போன மாதிரி இருக்கு.
// அர்த்தமில்லாத ஒரு பானம். அதைக் குடிப்பதனால் தாகம்கூடத் தீராது. அது மட்டுமல்ல, குழந்தைகள் அதைக் குடிப்பதால் குண்டோ தரர்களாகவும் அகாலத்தில் நீரிழிவு நோயாளிகளாகவும் மாறக்கூடும். மதுவைப் போலவே கொக்கோகோலாவும் தீங்கானதுதான். மது நல்லதல்ல என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், கேரளத்தில் அரசே மது விற்பனையை நடத்துகிறது. மது அருந்து பவர்களின் எண்ணிக்கையோ கொக்கோகோலா குடிப்பவர்களின் எண்ணிக்கையைவிடப் பல மடங்கு. //
சாராயம் , கஞ்சா ன்னு பேச்சை மாத்தாதீங்க.தெளிவா சொல்லுங்க. கொக்க கோலா குடிக்கிறது நல்லதா? கெட்டதா?
// உலகமயமாக்கல், முதலாளித்துவம், நவகாலனியாக்கம் போன்ற சொற்களுக்கான மார்க்கெட் இடது சாரி மனோபாவமுள்ள கேரளத்தில் பிரசித்தமானது. தவிரவும், அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் இத்தகைய சொற்களின் நட்சத்திர மதிப்பு கவர்ச்சிகர மானது. //
வார்த்தைகளுக்கெல்லாம் நட்சத்திர மதிப்பு கண்டுபிடித்து முடிந்தால் அதையும் சந்தைப்படுத்தி ஏமாந்தவன் தலையில் கட்டுவதுதான் உங்கள் முதலாளித்துவம்.
இப்படி அமெரிக்க புராணம் பாடுவதை விட்டு விட்டு உருப்படியாக எல்லோருமே யோசித்தால்தான் இந்தியா வல்லரசாகும். இல்லேன்னா தென்னரசு, பேரரசு , தருமபுரி மாதிரி ஆயிடும்.
அத்தியாவச தேவையான பொருள் விலை குறைஞ்சுருக்கானு கேட்கிறிங்க. தமிழகத்தில் சிமெண்ட் கண்ரோல் யாருனு பலருக்கு தெரியும். இத்தனை வருசம செய்யாத தற்போதைய முதல்வர் மு.கருணாநிதி அரசு நியாயவிலை கடை மூலம் சிமெண்ட் விக்கும் என்று அறிக்கை (ஏன்னா அதான் அங்க டகால்டி ஆகிடுச்சே) அப்புறம் கட்சிகாரன் சம்பாதிக்க வேண்டாமா.........................