உலகத்திலுள்ள பெரும்பாலான முஸ்லீம் நாடுகள் ஒன்றாய் கொதித்து
எழுந்திருக்கின்றது அதிபர் சார்கோசியின் இந்த உத்தரவால்.
"The problem of the burka is not a religious problem, it's a problem
of liberty and women's dignity. It's not a religious symbol, but a
sign of subservience and debasement. I want to say solemnly, the burka
is not welcome in France. In our country, we can't accept women
prisoners behind a screen, cut off from all social life, deprived of
all identity. That's not our idea of freedom."
....
....
....
"We must not fight the wrong battle. In the republic, the Muslim
religion must be respected as much as other religions."
தனிப்பட்ட முறையில் இந்த உத்தரவு என் மனதிற்கு பெரும் சந்தோசத்தைத்
தந்திருக்கின்றது. விவாதங்கள், கண்டனங்கள், சர்ச்சைகள் என்று எப்படியோ
இந்தப் பிரச்சினை கவனம் பெற்று விட்டதில் மிகவும் மகிழ்ச்சியே.
பல்வேறு தளங்களில் இது குறித்து நடைபெற்ற விவாதங்களில் பர்தாவை ஒருவர்
எந்தளவு அத்தியாவசியத் தேவையாய் சொல்லுகின்றார் என்றால்,
"ஆமா முதல்ல இவங்க பர்தா அடிமைத்தனம்னு அதை தூக்குவாங்க. அப்புறம் நான்
சிகரெட் குடிக்கிறது தப்புன்னு சொல்லுவானுங்க. அப்புறம் நான் பேசினாலே
தப்புன்னு சொல்லுவானுங்க. ஆதிக்க வெறி பிடித்த வெள்ளையர்கள்"
நேரக் கொடுமை பாருங்க. ஆதிக்க வெறியனுங்கன்னு யாரு சொல்றாங்க பாருங்க.
காலம் காலமாய் பெண்களை அடிமைப்படுத்தி எல்லா வகை விலங்குகளையும் பூட்டி
அவள் மீது ஆதிக்கம் செலுதியதன் ஒரு வடிவமான பர்தாவை ஆதரிக்கும் இவர்கள்
இன்னொருத்தரை ஆதிக்க வெறியர்கள்னு சொல்றானுங்க. நேரக் கொடுமைடா சாமி.
அப்புறம்...?
நீங்க பர்தாவ அடிமை விலங்குன்னு சொல்றீங்க செரி, பர்தான்னா என்னாண்ணு
மொதல்ல கொஞ்சம் சொல்லுங்க, அது அடிமை விலங்கா இல்லியான்னு நீங்க சொல்றத
வெச்சுக்கினு அப்புறம் பேசிக்கலாம்.
கருப்பா தலைலேர்ந்து கால் வரைக்கும் மூடிக்ற அங்கிதான் பர்தான்னு நீங்க
சொன்னீங்கன்னா, உங்கக்கிட்ட பேசத்துக்கு எனக்கு ஒண்ணும் இல்லை.
பொண்ணு இப்படித்தான் உடை போடணும்னு சொல்றதே தப்பு அவங்க எப்படின்னாலும்
உடையப் போட்டுக்கலாமுன்னு சொன்னீங்கண்ணாலும் உங்க கிட்ட எனக்கு
இப்பத்திக்கு பேசறதுக்கு ஒண்ணும் இல்லை.
பொண்ணுங்க எப்படி உடைபோடணும் உடை போடக்கூடாதுன்னு சொல்ற உரிமை அந்தப்
பொண்ணோட அப்பா, அம்மா, அவ வாழ்ற சமுதாயம், இவங்க யாருக்குமே உரிமை
இல்லலன்னு நீங்க சொல்றீங்கன்னு வெச்சுக்கங்க, உங்க வழியப் பாத்துக்கு
நீங்க போங்க என் வழியப் பாத்துக்குனு நான் போறேன்.
பர்தா பெண்களை அடிமைதான் படுத்துது, நீங்க என்ன சொன்னாலும்
ஒத்துக்கமாட்டேன்றீங்காளா? சரி கொழப்பமில்ல, அதனால என்ன? அப்படி நீங்க
சொல்லிட்டதால இப்ப என்ன நடக்கப்போவுது? அப்படிக் கேட்டுட்டுப் போயிக்கினே
இருப்பேன்.
அப்ப்டில்லாம் இல்லை உடைன்றது கலாசாரத்தோட சம்மந்தப்பட்டதுன்னு கொஞ்சம்
எறங்கிவந்தீங்கன்னா, பேசலாம். இல்லேன்னா வுட்ருங்க.
காலம் காலமாய் பெண்களை அடிமைப்படுத்தி எல்லா வகை விலங்குகளையும் பூட்டி அவள் மீது ஆதிக்கம் செலுதியதன் ஒரு வடிவமான பர்தாவை ஆதரிக்கும் இவர்கள்
மே மாதம் 31-ம் தேதியிட்ட "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா,"வில் தீப்தி ஷர்மா எழுதிய."Is lipstick feminism at all real?" என்ற ஒரு பதிவின் சுட்டியைக் கீழே தந்திருக்கிறேன்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் ஒரு படத்தில் அவர் ஒரு பாட்டுவித்துவானாக வருவார். ஒரு கச்சேரிக்குக் கிளம்புகிற தறுவாயில், மிருதங்க வித்துவான் இல்லாமல் போகவே, தெருவில் தப்பட்டை வாசிக்கும் ஒருவனை மிருதங்கம் வாசிக்கச் சொல்லி அழைத்துக்கொண்டு போவார். ஒரே தாளத்தில் வாசித்துப் பழக்கப்பட்டு விட்ட அந்த ஆள், சற்றும் சுருதியோடு சேர்ந்து வாசிக்காமல், அவன் இஷ்டத்துக்கு வாசித்துக்கொண்டே போக, இறுதியில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவனது தாளத்துக்கு ஏற்பப் பாட ஆரம்பித்து விடுவார். இது தான் இன்று பெண்ணியம் விஷயத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. தப்பாக வாசிக்கும் தப்பட்டை வித்துவான்களின் தாளத்துக்கு ஏற்ப, வித்துவான்கள் வித்தை காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
பர்தா அடிமைத்தனத்தின் சின்னமென்றால், பர்தா அணியாத பிற பெண்கள் எல்லாம் மிகவும் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்றா அர்த்தம்? ரவிக்கை கூட அணியாமல் கிராமப்புறங்களில் சாணிபொறுக்குகிற, வயலில் வேலைபார்க்கிற, வயிற்றைக்கழுவுவதற்காக பிறர் வீட்டு எச்சில் பாத்திரங்களைக் கழுவுகிற பெண்களெல்லாம் பர்தா அணிந்த பெண்களை விடவும், சுதந்திரமாக இருக்கிறார்களா என்ன?
உடையில் மாற்றங்கள் ஏற்பட்டால் உலகம் மாறி விடும் என்பதை ரங்கனாதன் தெருவில் ஜவுளிக்கடை வைத்திருப்பவர்கள் வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளுவார்கள்.
(சே, திரும்பத் திரும்ப ஆணாதிக்கவாதி என்பதை ஏன் தான் வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறேனோ தெரியவில்லை!)
மே மாதம் 31-ம் தேதியிட்ட "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா,"வில் தீப்தி ஷர்மா எழுதிய."Is lipstick feminism at all real?" என்ற ஒரு பதிவின் சுட்டியைக் கீழே தந்திருக்கிறேன்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் ஒரு படத்தில் அவர் ஒரு பாட்டுவித்துவானாக வருவார். ஒரு கச்சேரிக்குக் கிளம்புகிற தறுவாயில், மிருதங்க வித்துவான் இல்லாமல் போகவே, தெருவில் தப்பட்டை வாசிக்கும் ஒருவனை மிருதங்கம் வாசிக்கச் சொல்லி அழைத்துக்கொண்டு போவார். ஒரே தாளத்தில் வாசித்துப் பழக்கப்பட்டு விட்ட அந்த ஆள், சற்றும் சுருதியோடு சேர்ந்து வாசிக்காமல், அவன் இஷ்டத்துக்கு வாசித்துக்கொண்டே போக, இறுதியில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவனது தாளத்துக்கு ஏற்பப் பாட ஆரம்பித்து விடுவார். இது தான் இன்று பெண்ணியம் விஷயத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. தப்பாக வாசிக்கும் தப்பட்டை வித்துவான்களின் தாளத்துக்கு ஏற்ப, வித்துவான்கள் வித்தை காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
பர்தா அடிமைத்தனத்தின் சின்னமென்றால், பர்தா அணியாத பிற பெண்கள் எல்லாம் மிகவும் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்றா அர்த்தம்? ரவிக்கை கூட அணியாமல் கிராமப்புறங்களில் சாணிபொறுக்குகிற, வயலில் வேலைபார்க்கிற, வயிற்றைக்கழுவுவதற்காக பிறர் வீட்டு எச்சில் பாத்திரங்களைக் கழுவுகிற பெண்களெல்லாம் பர்தா அணிந்த பெண்களை விடவும், சுதந்திரமாக இருக்கிறார்களா என்ன?
உடையில் மாற்றங்கள் ஏற்பட்டால் உலகம் மாறி விடும் என்பதை ரங்கனாதன் தெருவில் ஜவுளிக்கடை வைத்திருப்பவர்கள் வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளுவார்கள்.
(சே, திரும்பத் திரும்ப ஆணாதிக்கவாதி என்பதை ஏன் தான் வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறேனோ தெரியவில்லை!)
அண்ணாச்சி எனது மகளும் மனைவியும்கூட 'பர்தா' என்று சொல்லப்படும் கருப்பு
அங்கியை சவூதிக்கு சென்று வந்த நாள்கள் தவிர மற்ற நாள்களில் அணிவதில்லை
என்பது இன்னொரு உபரித் தகவல். ஆனால், ஆக்டிவாவை எடுத்தால் ஐம்பது கிலோ
மீட்டருக்குக் குறையாமல் ஓட்டும் மகள் வண்டியோட்டும்போது அணிவது கருப்பு
அங்கிப் பர்தாவை விடவும் அதிகமானது, நகரின் தூசுக்கும் வெயிலுக்கும்...
இறுக்கமாக உடம்பைப் பிடித்தபடி இல்லாமலும், தலை முடியை மறைப்பதுமான
உடைதான் பர்தா. இது எனது விளக்கம். சிலர் முகத்தை மறைக்கவேண்டுமென்பார்,
சிலர் விரல்களையும் மறைக்கவேண்டுமென்பார், சிலர் உடம்பின் எந்த வளைவும்
தெரியாமல் கொத்தாக தலையிலிருந்து கால்வரையில் கூடாரத்தைப் போல்
தொங்கவேண்டுமென்பார், அவரவருடைய புரிதல், தேவை, சட்டம், கட்டாயம்
இத்தியாதிகள்.
என்னைப் பொருத்தவரையில் பர்தா விஷயத்தில் நான் பி.ஜெய்னுல்லாபிதீனின்
ரசிகன். இந்திரா காந்தி அணிந்திருந்த உடையேகூட நல்ல பர்தாதான் என்பார்.
நமக்கும் அதேதான்.
நல்ல சல்வார் கமீஸ் - வெங்காயச் சருகாக இல்லாமல் கொஞ்சம் அடர்வாக
இருக்கும் துணியால் ஆனது, தலையில் துப்பட்டா, முடிந்தது.
விளம்பரப் படங்களில் வருவதுபோலல்லாமல் ஒழுங்கான முறையில் கட்டப்பட்ட
சேலை, முக்காடிட்ட தலை, முடிந்தது.
மிகவும் இறுக்கமாக இல்லாதபடி பேண்ட், ஷர்ட், கோட், தலையில் ஸ்கார்ஃப்,
முடிந்தது.
அடர்வான துணியில் நைட்டி (அங்கி), தலையில் துணி, முடிந்தது.
ஒருசாரார் வூடு கட்டி அடிக்கிறார்கள் என்பதற்காக நாமும் பர்தாவை
வேறுவிதமாக விளங்கிக்கொள்கிறோம்.
மேலும், அதன் பெயர் 'ஹிஜாப்'.
பர்தா என்பது உருதுச்சொல், பர்தா என்றால் திரை. இப்போது திரை என்னும்
பொருளில் அது கையாளப்படுவதில்லை.
கீன்ச்சுலேனா வோ மேரா *பர்தே*க்கா கோனா தஃபதன் - அவுர்
துப்பட்டே ஸே தேரர வோ மூவ் ச்சுப்பானா யாத் ஹை!
(திரை விலக்கப்பட்டதும் துப்பட்டாவால் முகத்தை மறைத்தது நினைவில்
இருக்கிறது)
பர்தாவ ஹிஜாபாக்குன புண்ணியவான் யாருன்னு தெரிஞ்சா.....
http://www.youtube.com/watch?v=xOum-fUcDiU
இந்த இழையின் புண்ணியத்தால் இளமையில் கண்டு ரசித்த 'பர்தா ஹை' பாடலை
மீண்டும் ஒருமுறை குரலில் கேட்டு ரசித்தேன். நீங்களும்
கேட்கவேண்டுமென்றால் மேலே சொடுக்குங்கள்.
ரஃபி சாஹேபின் குரலை இதுவரையில் கேட்டிருக்காத இளைஞர்களும், கவ்வாலி
இசையின் அறிமுகம் வேண்டுமென நினைப்போரும் கொஞ்சம் சொடுக்கி
கேட்டுவிடுங்கள்.
அன்புடன்
பர்.தாசாத்
> பர்தாவுக்கும், ஹிஜாப்புக்கும் உள்ள வித்தியாசம் போன்றவை....
பர்தான்னா திரை.
ஹிஜாபுன்னா பெண்னுக்கு ரெக்கமண்ட் பண்ணப்பட்ட உடை.
ஹிஜாபத்தான் நாம பேச்சு வழக்குல பர்தான்னு சொல்லி பழகிட்டோம்.
புர்க்கான்னா உடம்பை முழுசுமா மறைக்ற உடை.
> சரி சவுகரியத்துக்காகத்தான் அணியச் சொல்கிறார்கள் என்றால், அதை
> கட்டாயாப்படுத்துவது சரியா போன்ற கேள்விகள் எழுகின்றன....
கட்டாயப்படுத்தறது சரியும் கெடையாது; அவங்களா போட்டுக்குனா அவங்களை
அடிமையாகிட்டாங்கன்னு சொல்றதும் சரி கெடையாது.
நான் கேள்விப்பட்டிருக்கிறேன் பல இடங்களில் அது கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது என்று (தவறாக இருந்தால் திருத்தவும்)....சென்னையில் கூட சிலர் அந்தக் கல்லூரிகளில் போடச் சொல்கிறார்கள் அல்லது வீட்டில் போடச் சொல்கிறார்கள் என்பதற்காகவே தங்கள் விருப்பமென்று எதுவும் இல்லாமல் போட்டுச் செல்கிறார்கள் என்று சொல்லக் கேள்வி உண்மையா???
ஆசாத் நான் சொல்ல விருக்கும் காரணங்களை நீங்கள் முன்பே தெரிந்து
வைத்திருப்பதாலோ அல்லது சொல்வதாலோ அந்த வார்த்தைகளின் கனம் குறைந்து
விடாது. ஆம் நான் சொல்லவிருக்கும் மிக முக்கிய குற்றச்சாட்டு இன்ன
உடையைத்தான் நீ அணிய வேண்டும் என்று மற்றவர்கள் கட்டுப்படுத்துவது.
இதற்கு உங்களிடம் பதிலில்லாவிட்டாலும் சரி அல்லது இதைப்பற்றி நீங்கள் பேச
மறுத்தாலும் சரி இது என்னைப் பொறுத்த வரை மோசமான விஷயமே.
//பொண்ணுங்க எப்படி உடைபோடணும் உடை போடக்கூடாதுன்னு சொல்ற உரிமை அந்தப்
பொண்ணோட அப்பா, அம்மா, அவ வாழ்ற சமுதாயம், இவங்க யாருக்குமே உரிமை
இல்லலன்னு நீங்க சொல்றீங்கன்னு வெச்சுக்கங்க, உங்க வழியப் பாத்துக்கு
நீங்க போங்க என் வழியப் பாத்துக்குனு நான் போறேன். //
அப்பா, அம்மா சரி யாருங்க ஆசாத் அந்த சமுதாயம். பக்கத்து வீட்டுக்காரனா?
நண்பர்களா? சம்பந்தி வீட்டுக்காரர்களா? அல்லது கிராமத்திலிருக்கும்
தூரத்து சொந்தக்காரர்களா? எவரை நீங்கள் சமுதாயம் என்கிறீர்கள்? கௌரவமான
வார்த்தைகளால் பெண்களின் மேல் பல்வேறு தரப்பினர் சேர்ந்து திணிக்கும்
விஷயங்களை நீர்த்துப் போகச் சொல்கிறீர்கள் ஐயா.
அப்பாவோ, அம்மாவோ அட சமுதாயத்தினருக்கோ உரிமகள் உண்டுதான். ஆனால்
கட்டாயப்படுத்த முடியாதல்லவா? "வேலைக்கு போகும் பெண்களை வேசிகளைப்
போன்றவர்கள்" என்று காஞ்சிமடத்துக்காரர்(ன்) சொன்னது போல பர்தா அணியாத
பெண்களை பார்க்கக்கூடாதல்லவா? அதைத்தான் நான் சொல்கிறேன். எந்த
மதத்தினராய் இருந்தாலும் ஒழுக்க விதிகளை ஆண்களுக்கு ஒருவாறும்,
பெண்களுக்கு ஒருவாறும் என்று விதிப்பதை ஆதிக்க உணர்வுகள் என்றும்,
அடக்குமுறைத்தனம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
//அப்ப்டில்லாம் இல்லை உடைன்றது கலாசாரத்தோட சம்மந்தப்பட்டதுன்னு கொஞ்சம்
எறங்கிவந்தீங்கன்னா, பேசலாம். இல்லேன்னா வுட்ருங்க.//
ஆசாத் எல்லா விவாதங்களும் ஒருவர் இன்னொருவர் சொன்னத சரி என்று ஒத்துக்
கொண்டு விட்டார் என்ற சுப முடிவுடன் முடிவதில்லை. பேசுவதற்கு தேவை
அடுத்தவர் சொல்வதை அமைதியாய் ஒரு கணமேனும் யோசித்துப் பார்க்கும்
பண்பும், தடித்திடா வார்த்தை பிரயோகங்களும் மட்டுமே. அதற்கு நான்
தயாராயிருக்கிறேன்.
//பர்தா அடிமைத்தனத்தின் சின்னமென்றால், பர்தா அணியாத பிற பெண்கள்
எல்லாம்
மிகவும் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்றா அர்த்தம்? ரவிக்கை கூட அணியாமல்
கிராமப்புறங்களில் சாணிபொறுக்குகிற, வயலில் வேலைபார்க்கிற,
வயிற்றைக்கழுவுவதற்காக பிறர் வீட்டு எச்சில் பாத்திரங்களைக் கழுவுகிற
பெண்களெல்லாம் பர்தா அணிந்த பெண்களை விடவும், சுதந்திரமாக இருக்கிறார்களா
என்ன? //
ஒரு விஷயத்தை தவறு என்று சொன்னால் அதற்காக மற்ற விஷயங்கள் சரி என்று
அர்த்தம் ஆகி விடுமா? பெண்ணியத்தின் பல்வேறு கூறுகளில் தலித் பெண்ணியமும்
ஒன்றுதான். அதில் நீங்கள் சொன்ன அந்த ரவிக்கையில்லா, சாணி பொறுக்குகிற,
பிறர் வீட்டு எச்சில் பாத்திரங்களை கழுவும் பெண்களின் முன்னேற்றத்தைப்
பற்றியும், அவர்களுக்கான உரிமைகளைப் பற்றியும் பேசுகின்றார்கள்.
பெட்ரோல் விலையைக் குறைப்போம் என்று அரசு அறிவித்தால், அடப் போய்யா.
இதனால ரோட்டோர மற்றும் சேரி மக்களுக்கு என்ன பிரயோசனம் என்று
சொல்லுவீர்களா அல்லது நல்ல முடிவு என்று பாராட்டுவீர்களா?
இன்ன உடையைத்தான் தமிழன் வேணு அய்யா அவர்கள் அணிய வேண்டும் என்று
சொன்னால் உங்களுக்கு கோபம் வருமா வராதா? அப்படி அணிய மறுப்பதாலேயே
உங்களது ஒழுக்கத்தை தவறாக நினைத்தால் உங்களது சுயமரியாதை உணர்வுகள்
காயப்படுமா படாதா?
அண்ணாச்சி கழுவுற மீன்ல நழுவுற மீன் மாதிரி பதிலைச் சொல்றீங்க. :)
எலேய் உருப்படியா ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிற.
அதுக்காக என்ன இப்பன்னு முன்னமேயே சொல்லிட்டேன் நந்தா.
உங்க கருத்து வேற, என் கருத்து வேற.
உங்க அளவுல அது மோசமான விஷயம்னா இருந்துட்டுப் போகட்டும். என்னளவுல அது
மோசமான விஷயம் கெடையாது.
கருத்து வேறுபாடு இருக்குன்னு தெரிஞ்சு அவங்கவுங்க அவங்கவுங்க தளத்துல
போய்க்கினே இருக்றதுதான் நல்லது.
உங்களோட பேசத்துக்கு பர்தா மேட்டர்ல எனக்கு ஒண்ணும் இல்ல.
> எந்த மதத்தினராய் இருந்தாலும் ஒழுக்க விதிகளை ஆண்களுக்கு ஒருவாறும்,
> பெண்களுக்கு ஒருவாறும் என்று விதிப்பதை ஆதிக்க உணர்வுகள் என்றும்,
> அடக்குமுறைத்தனம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
ட்ராக் மாறுது.
உடைகலாசாரத்துலேர்ந்து ஒழுக்க விதிக்குப் போயிருச்சு.
எப்படியிருந்தாலும், உங்களோட மதம் தொடர்பான ஒழுக்க விதிகள விவாதிக்ற
அளவுக்கு எனக்கு மனப்பக்குவம் இல்லை.
எல்லாரும் சாத்துசசத்துன்னு சாத்துற பர்தா விவகாரன்றதால இழைக்குள்ள
வந்தேன். கொஞ்சம் எறங்கி வந்து பேசுவீங்கன்னு நெனச்சேன், அது நடக்கல. என்
வழியப் பாத்துக்குனு நான் போய்க்கினே இருக்கப் போறேன்.
உங்க வழி உங்களுக்கு, என் வழி எனக்கு. ரெண்டும் ஒண்ணு சேராது,
சேராணும்ன்ற அவசியமும் இல்லை.
நீங்க அடிமைத்தனமுன்ற பார்வைலயே இருங்க.
அதுக்கு மாறான பார்வைல நான் இருப்பேன்.
நன்றி.
ஒரு பொண்ணு சுடிதாரிலோ, சேலையிலோ, உடலை பெரும்பாலும் மறைத்த லூசான உடைகளை
அணிந்தால் கூட ஆண்களிற்கு இச்சை வரும் அதனாலதான் சொல்றது "ஒழுங்கா
முழுக்க மூடிக்கிட்டு போகச் சொல்லுன்னு " சொல்றீங்களா அண்ணாச்சி.
ஏன் நீங்க ரெண்டு Extreme End points ஐ வைத்து மட்டும் பேசுகின்றீர்கள்.
இடைப்பட்ட புள்ளிகளில் மனிதர்களே இல்லையா? கோஎட் காலேஜுல புள்ளையை படிக்க
விட்டா கெட்டுப் போயிடும் கிராமத்து பெரிசு மாதிரி பேசாதீங்க. உங்களை
அறியாமலே உங்க வயசு இப்படி வெளிப்பட்டுடுது. :)
ஒரு ஆண் வெகு எளிதாய் இயல்பான உடை அணிந்த பெண்ணிடம் இச்சை கொள்கிறான்
என்பது ஆணின் தவறா? அல்லது பெண்ணின் தவறா? இது வரை அப்படிப்பட்ட ஆணை
அடக்க என்ன முயற்சிகளை இந்த மத குருமார்கள் எடுத்தார்கள். எளிதில் வந்த
வழி பொண்ணை கவர் பண்ணிக்கிட்டு போகச் சொல்லு என்பதுதானே...
அலுவலக உதாரணத்திற்கு கொள்ளி வைக்க. அங்க ஒழுக்க விதிகளோ,
ஆம்பிளைங்களுக்கு அல்லது பெண்களுக்கு மட்டும்தான் டிரஸ் கோடுன்னோ
ஒண்ணும் கிடையாது. பொதுவான விதிமுறைகள்தான் இருக்கு.
உண்மை! ஆனால் பெண்ணியத்தின் அளவுகோலாகவோ, அடக்குமுறையின் அடையாளமாகவோ
கருதப்பட வேண்டியது ஆடைகள் அல்ல. சொந்த விருப்பத்தின் பேரிலோ அல்லது
நாகரீக ஈர்ப்பின் காரணமாகவோ, சிலர் தங்களது உடையணிகிற பழக்கங்களை
மாற்றிக்கொள்ளுகிறபோது, அதை பெரிதாக சிலாகித்து அது தான் துவக்கம் என்று
கருதி விடக்கூடாது. கட்டுப்பாட்டை மீற விரும்பாதவர்களைப்
பிற்போக்குவாதிகள் என்றும் கருதி விடக்கூடாது.(இதை நான் கொடுத்த இழையில்
பெண்களே சொல்லியிருக்கிறார்கள்)
//அதில் நீங்கள் சொன்ன அந்த ரவிக்கையில்லா, சாணி பொறுக்குகிற,
பிறர் வீட்டு எச்சில் பாத்திரங்களை கழுவும் பெண்களின் முன்னேற்றத்தைப்
பற்றியும், அவர்களுக்கான உரிமைகளைப் பற்றியும் பேசுகின்றார்கள். //
ஆம். ஆனால் அவர்களது அடிப்படைப் பிரச்சினையே தீரவில்லை. அதனால் தான்,
வெளிப்புறத்தோற்றங்களைக் குறித்த சர்ச்சைகள் மட்டுமே மிஞ்சி விடுமோ என்ற
பயம் ஏற்படுகிறது. இன்னும் கோஷங்கள் கிராமப்புறங்களுக்குச் செல்ல
போக்குவரத்து கிடைக்காமல் நகரத்துக்குள்ளேயே முடங்கிவிட்டதோ என்ற
சந்தேகம் இருக்கிறது.
//பெட்ரோல் விலையைக் குறைப்போம் என்று அரசு அறிவித்தால், அடப் போய்யா.
இதனால ரோட்டோர மற்றும் சேரி மக்களுக்கு என்ன பிரயோசனம் என்று
சொல்லுவீர்களா அல்லது நல்ல முடிவு என்று பாராட்டுவீர்களா? //
பெட்ரோல் விலை பலமுறை குறைந்தும், பணவீக்கம் தொடர்ச்சியாக இரண்டு வாரம்
கீழ்நோக்கிச் சென்றும், இன்னும் விலைவாசி குறையவில்லை என்பது தானே உண்மை?
ஆகவே, அப்படியொரு கேள்வியை எழுப்பலாமே?
//இன்ன உடையைத்தான் தமிழன் வேணு அய்யா அவர்கள் அணிய வேண்டும் என்று
சொன்னால் உங்களுக்கு கோபம் வருமா வராதா? அப்படி அணிய மறுப்பதாலேயே
உங்களது ஒழுக்கத்தை தவறாக நினைத்தால் உங்களது சுயமரியாதை உணர்வுகள்
காயப்படுமா படாதா? //
பல தனியார் நிறுவனங்களில் உடையணிவது குறித்த கட்டுப்பாடுகள்
இருக்கின்றனவே. நான் ஒரு தொழிற்சாலையில் பணி புரிந்தபோது, எனக்கு
சாக்குப்பை போல ஒரு அங்கி கொடுத்து, முழங்காலளவுக்கு ரப்பர் காலணியணிந்து
கொண்டு வரச்சொன்னார்கள். இப்போது நான் பணிபுரியும் இடத்தில் கூட
உடைகுறித்த கட்டுப்பாடுகள் எழுத்துமூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதை
நிறுவனத்தின் சட்டங்களுக்கு உட்பட்டு நடத்தலின் ஒரு பகுதியாக நான்
கருதிக்கொண்டிருக்கிறேன்.
தமிழன் வேணு
ஆசாத் நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன் அதனால்யே, நான் சாரா இன்னொரு மத
விவகாரங்களை இதுதான் சாக்கென்று ஒரு அல்ப எண்ணத்தோடு அணுகுகின்றேன் என்று
ஒரு வேளை நீங்கள் நினைத்திருந்தால் அதை தவறென்று சொல்லிக் கொள்ள
விரும்புகின்றேன். என்னவோ இந்த வரிகள் அந்த சந்தேகத்தை தந்தது. அதனாலேயே
இந்த சுய விள்க்கம். இந்து மதங்களில் நிரம்பி இருக்கும் அபத்தங்களை,
அவலங்களை பல இடங்களில் நானும் இடித்துரைத்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.
நீங்கள் அதை சொன்னாலும் நான் கோபம் கொள்ள மாட்டேன். உண்மையென்று
நினைப்பதை எவர் ஒருவருக்கும் சொல்ல உரிமை இருக்கிறது.
அதேபோல் ட்ராக்கும் மாறலை ஆசாத். உங்களுக்கு உடை கலாச்சாரமாய்
தோன்றுகின்ற ஒரு விஷயம் எனக்கு அடக்குமுறையாகவும், ஒழுக்க விதி
வேறுபாடுகளாகவும் தெரிகின்றது. அவ்வளவே. அதற்கு இது வரை எவரிடமும் தோதான
பதில் கிடைக்காததால் நான் இன்னமும் அதில் உறுதியான நிலைப்பாட்டுடன்
இருக்கின்றேன்.
//கொஞ்சம் எறங்கி வந்து பேசுவீங்கன்னு நெனச்சேன், அது நடக்கல.//
நான் என்ன சொன்னால் இறங்கி வருவது என்று நினைப்பீர்கள் என்று எனக்கு
தெரிய வில்லை. நான் என்னுடைய எண்ணங்களை மட்டுமே சொன்னேன். சரி நான்
இல்லாவிட்டாலும் வேரு எவரும் இதை படிக்கலாம் அல்லவா. பர்தா உடைக்
கலாச்சரம் பற்றி உங்களுக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள். நான்
வேண்டுமானால் உங்களிடம் விவாதம் செய்யாமல் வாசகனாக படித்துப்
பார்க்கின்றேன்.
நன்றி.
வேணு ஐயா, ஒரு பொண்ணு நல்ல பொண்ணா கெட்ட பொண்ணா என்பதை அவளாது ஆடைகளை
வைத்து மூன்றாம் மனிதர்கள் தீர்மானிக்கும் காலம் இது. நீங்கள்
சொன்னவற்றில் ஒரு சின்ன திருத்தம். அப்படி அளாவுகோல்களாக பெண்ணியம்
கொண்டிருப்பது ஆடைகளை மட்டும் அல்ல. அதைத்தாண்டி இன்ன பல விஷயங்களைத்தான்
அது அளவுகோலாக வைத்திருக்கின்றது. இது ஒரு சின்ன கூறு அவ்வளவே.
இதைப்பற்றி பேசுவதாலேயே மற்ற விஷயங்கள் இல்லையென்று ஆகிவிடுமா என்ன?
இதற்கு முற்றிலும் நேர்மாறான குற்றச்சாட்டுகளாஇத்தான் நாங்கள்
சொல்லுகின்றோம். மாற்றங்களை விரும்புபவர்களை ஒழுக்கக் கேடானவர்கள் என்று
சொல்லி விடக்கூடாது மிக முக்கியமாய் ஊர் கூடி விலக்கி வைத்து விடுவோ
என்று மிரட்டக் கூடாது. பிற்போக்குவாதிகள் என்று சொல்வதே உங்களை
கோபப்படுத்துகிறதெனில் இதை என்னவென்று சொல்லுவது.
அலுவலக டிரஸ்கோடை ஏற்கனவே அண்ணாச்சி சொல்லி இருக்கின்றார். அலுவலகம்
என்று வரும் போது பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. பன்னாட்டு கம்பெனிகள்,
கார்ப்பரேட் கல்ச்சர், தொழிலாளார்கள் அதிக எண்ணிக்கையிலான மெக்கானிக்கல்
டைப் கம்பெனிகள், எழுத்தர் வேலைகள் அதிகமிருக்கும் மிடில் கிளாஸ் மக்கள்
புழங்கும் அலுவலகங்கள், இப்படி பல இருக்கின்றன.
எந்த ஒரு அலுவலகமும் தனது வேலையாளை கட்டுபடுத்த ஆடைவிதிகளை இடுவதில்லை.
தனது வேலைகளுக்கேற்ற வசதிகளுக்காகவே உடைகளிற்கான கட்டுப்பாடுகளை
இடுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாய் அலுவலகங்களில் எந்த விதிகளோ
பாதிக்கப்பட்டால் அல்லது நமது சுய மரியாதை காயப்படுத்தப்பட்டால் போங்கடா
நீங்களும் உங்க வேலையும் என்று வேறு இடத்திற்கு மாறிவிட நமக்கு
வாய்ப்புகளிருக்கின்றது. அதையும் இதையும் ஒரே நோக்கில் எப்படி பார்க்க
இயலும்?
உங்களுக்கு உடை கலாச்சாரமாய்தோன்றுகின்ற ஒரு விஷயம் எனக்கு அடக்குமுறையாகவும், ஒழுக்க விதிவேறுபாடுகளாகவும் தெரிகின்றது. அவ்வளவே. அதற்கு இது வரை எவரிடமும் தோதான
பதில் கிடைக்காததால் நான் இன்னமும் அதில் உறுதியான நிலைப்பாட்டுடன்இருக்கின்றேன்.
திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார்.
சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார்.
பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.
'ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.
சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு "பெண்கள் பகுதி" க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன்.
செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!
சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.
மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.
"சவுகரியமா? இதன் மூலமா?" என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.
எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.
நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.
மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த "பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்" இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.
பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர்.
ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த 'மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்' என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.
சரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா? அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.
என்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, "கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்!" என்றார்.
நிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: "எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்?"
அதற்கு அவர், "நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா? அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை!" என்றார்.
"முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்" என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன்.
"இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா?" பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.
"இல்லவே இல்லை! இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி...!" என்றார்.
அத்துடன் நில்லாமல், "இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே? பின்பு ஏன் கவலை?" என்றார்.
அப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், "புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா?" என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.
என் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.
"உங்களுக்குத் தெரியுமா?" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். "மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை!" என்றார்.
"கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்" என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.
பொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.
என் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், "தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக"க் குறிப்பிட்டார். "சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை!" என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.
வியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?
அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.
இந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.
அதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.
அந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.
அந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்."நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா?" என்று கேட்டு விட்டேன்.
நொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: "இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது" என்றார்.
என்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:
"செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா?" என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.
இச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் கூன்கட் (Ghoonghat) எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள்.
அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, "கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்?" என்று பெருமையாகக் கூறுயதே விடையாகக் கிடைத்தது.
எனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.
மும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே 'அடிமைத்தனம்' என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் 'பெண்ணடிமை'த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன்? என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.
ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.
என்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா?
பெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,
இல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை!
சவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்! -
இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்?
இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றதுஅணிய கட்டாயப்படுத்துவது ஏன்? முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் முக்கியமானதாகத் திகழ்கின்றது.
முதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திணிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை.
விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல் உலகில் மனிதனிடம் ஏற்படும் தடுமாற்றங்களையும் கூறுவதோடு நில்லாமல் அதைப் போக்கும் காரணிகளையும் விளக்குகிறது. அது போலவே பர்தா(ஹிஜாப்) விஷயத்திலும் இஸ்லாம் கட்டாயப்படுத்தவில்லை.
இஸ்லாம் இவ்வுலகில் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், எப்படி வாழ்ந்தால் கண்ணியமாக வாழ முடியும் என்பதை தெளிவாக கற்றுத்தருகிறது.
மனிதனின் இயற்கையான உணர்வான வெட்கம் என்பது மனிதர்களுக்கே உரித்தான உயர்ந்த சிறந்த பண்பாகும். வெட்கமின்றிச் செயல்படுதலை இஸ்லாம் நடை, உடை, பாவனை என எல்லா காரியங்களிலும் தடை செய்கிறது.
நாகரீகம் வளர்ச்சி அடையாத காலங்களில் கூட மனிதன் தன் உடம்பை இலை, தழைகளை வைத்து மறைப்பதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டான். எனில் உடம்பை மறைத்தல் என்பது மனிதர்களுக்கு இடையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரிய செயல் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
அத்தகைய சமூகத்தில் மரியாதையும் கண்ணியமும் பெற்றுத் தரும் உடை விஷயத்தில் இஸ்லாம் அதிகக் கவனம் செலுத்துகிறது.
உடை என்பது சமூகத்தில் ஒழுக்க வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. எனவேதான் ஒருவர் உடை அணியும் விதம் மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பாத விதத்தில் இருப்பதற்கும், தங்களது மறைவான பகுதிகள் வெளியில் தெரியும்படியான இறுக்கமான ஆடைகளை தவிர்க்கும்படியும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது. இது இருபாலருக்குக்கும் பொதுவானதுதான்.
பெண்களைப் பொறுத்தவரை முகம் மற்றும் கை மணிக்கட்டுக்கு கீழ் தவிர மற்ற எல்லா பகுதிகளையும் மறைத்துக் கொள்ள இஸ்லாம் அறிவுறுத்துகிறது. இவ்வாறு மறைப்பதற்கு ஏதுவான உடையாக தற்காலத்தில் வடிவமைத்திருக்கும் பர்தா இருப்பதனாலேயே இஸ்லாம் கூறும் அறிவுரையை மனப்பூர்வமாக பேணும் பெண்கள் இதனை அணிகின்றனர்.
கண்ணியத்தையும் பாதுகாப்பையும் சமுதாயத்திலிருந்து பெற விரும்பும் பெண்களுக்கான சிறப்பான பரிந்துரையாகவே இஸ்லாம் இதனைக் கூறுகிறது. இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட பெண்கள் மட்டுமே பர்தாவை அணிகின்றனர். இதனை தங்கள் உடலை முழுமையாக மறைத்துக் கொள்ளும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கையை வைத்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
பர்தா போன்ற உடை அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறை திருக்குர்ஆனின் 33 வது அத்தியாயம் ஸூரத்துல் அஹ்ஜாப்பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள்
தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன். மிக்க அன்புடையவன்.
பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும், அவர்கள் சமூகத்தில் மோசமானவர்களால் விளையும் தொல்லைகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காகவும் தான் பர்தா போன்ற உடையை உபயோகிக்க இஸ்லாம் பெண்களுக்குப் பரிந்துரைக்கிறது. இறைவன் மிக அறிந்தவன்.
பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் அது 'ஹிஜாப்' என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.
முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.
'ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!'' என்று முற்போக்குவாதிகளும் அறிவுஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் அந்தப் போலித்தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.
'ஹிஜாப்' என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.
இதுபற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.
ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித்தனம்
ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். அனால் சமத்துவம் பேசும் இவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை, பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் அந்தக் கோலத்தில் இருக்கிறான். இதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை எதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை.
தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் அந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.
அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல்மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை எதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் அந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் அவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் அந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே உழைக்கும் வர்க்கத்துப் பெண்கள் அவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட அந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. என் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே அதை அனுமதிக்க மாட்டார்கள்.
'ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்'' என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று?
பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று?
முழு அளவுக்கு இல்லையானாலும் ஒரளவுக்கு அவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.
மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு யாருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.
பெண்களுக்கு பாதுகாப்பு
இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.
ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இருபாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. அதன் காரணமாகத்தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு அதுதான்.
பெண்களின் ரசனை அத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. அதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப்பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.
ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம்.
ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே இவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்
.
அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது.
பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம்.
தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.
இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். அந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு அவ்வாதம் வலுவானதன்று.
ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும், ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.
இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. அனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.
அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.
ஹிஜாபைக் குறை கூறுவோர் அதைச் சிந்திப்பதில்லை.
பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்குவாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர்.
'இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச்சட்டம் இங்கும் வேண்டும்'' என்றெல்லாம் கூறுகின்றனர்.
ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.
பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது?
பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?
பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் என்?
பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும்போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?
பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?
எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.
இவ்விடத்தில் எழும் மற்றொரு சந்தேகத்தை விளக்கியாக வேண்டும்.
பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத்தானே ஆக வேண்டும் என்ற கேள்வி நியாயமானதுதான். அதைவிட நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் அந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.
ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக்குறைவே. பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்று அஞ்சுவதுதான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இதுதான் காரணம்.
முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும்போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.
ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுயரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்டவேண்டும்.
மேலும் முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.
பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகம் மறைத்து பல தவறுகளைச் செய்யக்கூடிய நிலமையும் ஏற்படலாம்.
எனவே தான் பெண்களின் முகம் ரசிக்கத்தக்கதாக இருந்தும், மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.
நபித்தோழியர் எவரும் தாங்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைத்துக்கொண்டதில்லை என்று வரலாற்று நூற்களில் காண்கிறோம்.
கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபட கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக்கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். அதனால்தான் மணிக்கட்டு வரை கைகளை மறைத்துக் கொண்டு மற்ற பகுதியை மட்டும் மறைக்காமலிருக்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கின்றது.
இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக்கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை. அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவர்களே பெண்களை அரை நிர்வாணத்துடனும் கால் நிர்வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனர்.
முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை எனக் கூறுவதும் ஏற்கக்கூடிய வாதமன்று.
இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.
பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் ஆடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக்கொண்டிருப்பதில்லை.
ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படிஏற்க முடியும்?
அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.
ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது. அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள். குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர்மாறாக நடப்பதுதான் நமக்கு வியப்பாகவுள்ளது.
இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.
கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் (பர்தா - புர்கா, -துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது) குறை கூற முடியாது.
அஹ்மத் தீதாத் சவுத் ஆஃப்ரிக்காவிலிருந்து உதித்த மிகப்பெரிய மார்க்க அறிஞர்
.இஸ்லாம் பற்றிய வாதங்களை மிக அழகாக எடுத்து வைப்பவர். தர்க்க ரீதியாக வாதங்களை எதிர் கொள்வது மட்டுமல்லாமல் சவாலாகவே எடுத்து கொண்டு வாதம் செய்பவர். அப்படி ஒரு முறை கிறித்துவ பாதிரியார் ஒருவர் அஹ்மத் தீதாத்தை வாதத்திற்கு அழைத்தார்.என்ன தர்க்கம், இஸ்லாம் மதத்தின் பெயரால் பெண்களை புர்கா அணிவிக்கச் சொல்லி அடிமைப் படுத்துகிறது.நேரடி தர்க்கம் சர்ச்சில் நடப்பதென
நாள் குறிக்கப்பட்டு , குறிப்பிட்ட நாளில் சர்ச்சையும் தொடங்கியது. தீதாத் எவ்வளவோ காரணம் சொல்லியும் கிறித்துவ பாதிரியார் ஒத்துக் கொள்வதாக் இல்லை. ஏராளமான் மக்கள் திரண்டிருந்த கூட்டம். இவருக்கு என்ன சொல்லி புரிய வைப்பது என தீதாத் யோசித்து கொண்டிருந்த வேளையில் முன் வரிசையில் வரிசையாக கிறித்துவ பெண்கள் காலிலிருந்து தலை வரை கருப்பு அங்கியால் மூடப்பட்டவர்கள்.தீதாத்
, பாதிரியாரை நோக்கி, இவர்கள் யார் என வினவுகிறார். அடுத்து இவர்கள் ஏன் கருப்பு அங்கியால மூடப்பட்டிருக்கிறார்கள் என கேட்கிறார். பாதிரியார் பெருமையோடு பதில் சொல்கிறார், இவர்கள் கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள், இவர்களை ஆண்கள் யாரும் கெட்ட எண்ணத்தோடு பார்க்கக் கூடாதென்பதற்காக கருப்பு அங்கி அணிவித்திருக்கிறோம்.அப்படியா
, நீங்கள் சில பெண்களை மட்டும், ஆண்கள் கெட்ட எண்ணத்தோடு பார்க்கக் கூடாதென புர்கா(கருப்பு அங்கி) அணிவித்திருக்கிறீர்கள், நாங்கள் எல்லாப் பெண்களுக்கும் அந்நிலை வரக் கூடாதென கருப்பு அங்கி அணிவித்திருக்கிறோம் எனச் சொன்னவுடன், பாதிரியாரும் அம்பேல் கூட்டமும் அம்பேல்.எவர் ஒருவரும் வெகு எளிமையான கேள்விகளுக்கு பதிலளிக்காமல், பத்தி
பத்தியாய் அங்க நடந்தது, இங்க நடந்தது என்று கட்டுரைகளை இடுகின்றீர்கள்.
//விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது
என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல் உலகில்
மனிதனிடம் ஏற்படும் தடுமாற்றங்களையும் கூறுவதோடு நில்லாமல் அதைப்
போக்கும் காரணிகளையும்
விளக்குகிறது. அது போலவே பர்தா(ஹிஜாப்) விஷயத்திலும் இஸ்லாம்
கட்டாயப்படுத்தவில்லை. //
சாபண்ணா மார்க்கம் கட்டாயப்படுத்துகிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை.
நடைமுறை எவ்வாறு இருக்கிறது என்பதே எனது கேள்வி. இந்த கேள்விக்கு
நேரடியான பதிலை சொல்லாமல் எதற்காக மார்க்கத்தை துணைக்கழைக்க வேண்டும்.
//அப்படியா , நீங்கள் சில பெண்களை மட்டும், ஆண்கள் கெட்ட எண்ணத்தோடு
பார்க்கக் கூடாதென புர்கா(கருப்பு அங்கி) அணிவித்திருக்கிறீர்கள்,
நாங்கள் எல்லாப் பெண்களுக்கும் அந்நிலை வரக் கூடாதென கருப்பு அங்கி
அணிவித்திருக்கிறோம் எனச்
சொன்னவுடன், பாதிரியாரும் அம்பேல் கூட்டமும் அம்பேல். //
தயவு செய்து தப்பாய் நினைக்க வேண்டும் சாபண்ணா. இந்த நிகழ்ச்சி மகா
மொக்கையாய் எனக்கு தோன்றுகிறது. அது சரி இரண்டு மத அபிமானிகள்
பேசிக்கொண்டால் “நீ யோக்கியமா?” கேள்விகள் மட்டுமே மிஞ்சும் என்பதில்
மாற்றுக்கருத்தில்லை.
//ஹிஜாப் பற்றிய விளக்கங்கள் நன்றாகவே இருக்கிறது. ஆனாலும் கேள்விகள்
தொடர்ந்து
கொண்டேதான் இருக்கும், என்றே நினைக்கிறேன். //
கேட்ட கேள்விகளுக்கு பதில் கிடைக்கா விட்டால் கிடைக்கும் வரை கேட்டுக்
கொண்டுதானே இருக்க வேண்டும் தஞ்சை மீரான். :)
//ஆனா இவங்க ஒரு ஆளு சொல்றதாலேயே இது செல்லாது செல்லாதுன்னு பெண்ணிய
முந்தானைக்குள் முடிச்சு போட்டுக் கொண்ட நந்தா சொல்லுவாரு பாருங்க.
வாய்யா வா
:-) //
அண்ணாச்சி உங்களுக்குள்ள இருக்கிற மனசாட்சி இப்படி கொஞ்சம் நடுநிலைமையா
கூட யோசிக்க வெச்சுடுது. பாவம் நீங்க என்ன செய்வீங்க. சொன்னாலும்
சொல்லாட்டியும் உண்மை அதானே.
ஆண்களால் கூடிய சமுதாயம் எல்லாம் ஒன்று சேர்ந்து பெண்களுக்கு விதிக்கும்
பல்வேறு கட்டாய விதிமுறைகளின் ஒரு வடிவ தான் பர்தா என்பதில் இந்த நொடி
வரை எனக்கு மாற்றுக் கருத்தில்லை. சரியான பதிலும் கிடைக்க வில்லை. இதைத்
தவிர ஒவ்வொரு மதத்திலும் இப்படி மதத்தின் பெயரால் சில கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
நமது குடும்ப அமைப்புகளில் உள்ள சில காரணிகளும், மதங்களும் பெண்க்ளை
ஒடுக்கும் இயந்திரமாய் பயன்படுத்துகின்றன என்பது இதன் நீட்சியாய்
இருக்கின்றது. வெறுமனே இதை பர்தா விவகாரம், இன்னொருவர் மத சம்பந்தப்பட்ட
விஷய்ம் என்று ஒற்றைத் தன்மையிலும் பார்க்கலாம். அல்லது பெண்ணியத்தின்
பல்வேறு கூறுகளாய் இதன் நீட்சிகளை உண்மையான மனதோடு யோசிக்கவும்
செய்யலாம்.
சாபண்ணா கோவிச்சுக்காதீங்க. ஒரு வேளை ரொம்ப திமிர் பிடித்தவனாய்
உருமாற்றம் அடைந்து வருகிறேனோ என்னவோ? அண்ணாச்சியைக் கேட்டாதான்
தெரியும்.
அண்ணாச்சி தனியா இருக்கும் போது இந்த காரணங்களை சொல்லி காட்டி கூட
கலாய்க்கலாம். பார்க்கும் போது கேட்கணும். :)
இந்திய வெய்யில் மற்றும் வேர்த்து கொட்டும் நிலைக்கு பர்தா, கொடுமையான
உடையே. இஸ்லாமிய கலாச்சாரம் இங்கு பரவிய போது வந்திருக்கலாம்.
தமிழக இஸ்லாமிய மக்கள் விவசாயம் செய்வது அரிது. ந்கரங்களிலும், சிறு
நகரங்களிலும் வியாபாரம். சிறுதொழில் தான் தொழில். தாழ்த்தப்பட்ட,
பிற்படுத்தப்பட்ட இந்து மக்களை போல விவசாயம் செய்ய வேண்டியிருந்தால்,
பர்தா தானாகவே இருந்திருக்காது. விவசாய வேலைகளில் பெரும்பகுதி
பெண்கள் தாம் இன்றும் செய்கின்றனர். நாத்து நடுவதில் தொடங்கி, அறுவடை,
ஆடு, கோழிகள், மாடுகளை பரிமாறிப்பது வரை பல வேலைகள். கூலி வேலைகளும்
அதிகம் செய்வர். கடும் வெய்யிலில், கருப்பு பர்தா கொடுமையாக இருக்கும்.
தேவையும் இல்லை. ஆகவே விவசாய மக்களுடம் அது வந்திருக்காது என்று
ஒரு அனுமானம்.
இதே போல வெள்ளையனிடம் இருந்து, டை மற்றும் கோட், பூட்ஸ் ஆகியவற்றை
பெற்று, வேக்காட்டுல் நனைவதும் ஒரு முரண் நகை. ஏஸி கார் மற்றும் ஏஸி
அலுவலகத்தில் வேலை செய்வோருக்கு பிரச்சனை இல்லை. பிறருக்குத்தான்.
உடைகளை தீர்மானிப்பது தனி மனித உரிமை. Socio-economic condtioning என்று
சொல்வார்கள். வளர்ப்பு முறையில் சில விசியங்கள் ஆழ் மனதில்
பதிக்கப்படும். கற்பு (பெண்களுக்கு மட்டும்), மற்றும் இதர பெண்ணடிமை
முறைகள் அப்படி பதிக்கப்படும். அதை எதிர்க்க பகுத்தறிவு அதிகம் வேலை
செய்யாது. அதனால், கட்டாயப்படுத்தாமலே பல இஸ்லாமிய பெண்கள் பர்தா
அணிவார்கள். இதில் படித்த, மேல் தட்டு, நகர்புற பெண்கள் பெரும்பாலும்
அப்படி
இருப்பதில்லை என்பது கவனிக்கத் தக்கது. ஏழை மற்றும் நடுத்தர, சிறு நகர
மற்றும்
ந்கர இஸ்லாமிய பெண்கள் அதிகம் அணிவர்.
21ஆம் நூற்றாண்டில் இது தேவையில்லை. மற்றவர்களை போல புடவை அல்லது
சுடிதார் அணிந்தால் பாதுகாப்பு குறைந்து போய்விடாது. ஆனால் இதை
பழமைவாதிகள்
இன்றும் ஏற்க்க மாட்டர்கள். நிலபிரவுத்வ மதிபீடுகள் இன்றும் நிலவுகிறது.
தயவு செய்து தப்பாய் நினைக்க வேண்டும் சாபண்ணா. இந்த நிகழ்ச்சி மகா
மொக்கையாய் எனக்கு தோன்றுகிறது. அது சரி இரண்டு மத அபிமானிகள்
பேசிக்கொண்டால் “நீ யோக்கியமா?” கேள்விகள் மட்டுமே மிஞ்சும் என்பதில்
மாற்றுக்கருத்தில்லை.
அன்புடன்
சாபு
ஃப்ரான்சில் பர்தாவிற்குத் தடை
உலகத்திலுள்ள பெரும்பாலான முஸ்லீம் நாடுகள் ஒன்றாய் கொதித்து
எழுந்திருக்கின்றது அதிபர் சார்கோசியின் இந்த உத்தரவால்.
"The problem of the burka is not a religious problem, it's a problem
of liberty and women's dignity. It's not a religious symbol, but a
sign of subservience and debasement. I want to say solemnly, the burka
is not welcome in France. In our country, we can't accept women
prisoners behind a screen, cut off from all social life, deprived of
all identity. That's not our idea of freedom."
....
....
....
"We must not fight the wrong battle. In the republic, the Muslim
religion must be respected as much as other religions."
தனிப்பட்ட முறையில் இந்த உத்தரவு என் மனதிற்கு பெரும் சந்தோசத்தைத்
தந்திருக்கின்றது. விவாதங்கள், கண்டனங்கள், சர்ச்சைகள் என்று எப்படியோ
இந்தப் பிரச்சினை கவனம் பெற்று விட்டதில் மிகவும் மகிழ்ச்சியே.
பல்வேறு தளங்களில் இது குறித்து நடைபெற்ற விவாதங்களில் பர்தாவை ஒருவர்
எந்தளவு அத்தியாவசியத் தேவையாய் சொல்லுகின்றார் என்றால்,
"ஆமா முதல்ல இவங்க பர்தா அடிமைத்தனம்னு அதை தூக்குவாங்க. அப்புறம் நான்
சிகரெட் குடிக்கிறது தப்புன்னு சொல்லுவானுங்க. அப்புறம் நான் பேசினாலே
தப்புன்னு சொல்லுவானுங்க. ஆதிக்க வெறி பிடித்த வெள்ளையர்கள்"
நேரக் கொடுமை பாருங்க. ஆதிக்க வெறியனுங்கன்னு யாரு சொல்றாங்க பாருங்க.
காலம் காலமாய் பெண்களை அடிமைப்படுத்தி எல்லா வகை விலங்குகளையும் பூட்டி
அவள் மீது ஆதிக்கம் செலுதியதன் ஒரு வடிவமான பர்தாவை ஆதரிக்கும் இவர்கள்
இன்னொருத்தரை ஆதிக்க வெறியர்கள்னு சொல்றானுங்க. நேரக் கொடுமைடா சாமி.
--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com
www.mypno.com
எண்ணம் பொறுத்ததாம் எச்செயலும் அத்துடன்
உன்னைப் பொறுத்தே உலகு
பர்தாவிற்கு எங்கள் நாட்டில் தடை என்று முதன் முதலில் ஒரு பெருத்த
குரலில் வந்திருக்கிறது. அப்படிப்பட்ட உத்தரவுகள் பல்வேறு இஸ்லாமிய
நாடுகளிடையேயும் மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
இருக்கின்றது.
இத்தனை நாட்கள் பர்தா போட்டேதான் ஆக வேண்டும் என்ற ஆதிக்க நிலைபாடு தன்னை
விட வலிமை வாய்ந்த ஒருவனால் "போடக்கூடாது அல்ல போடத் தேவையில்லை" என்று
தன் மீதே விதிக்கப்படும் போது திடீரென்று சுதந்திரம், அடக்கு முறை, போலி
முற்போக்குவாதம், இன்ன பிற வார்த்தைகளை சொல்லி பெருங்குரலில் விமர்சனம்
எழுகின்றது என்பதே வேடிக்கையாக இருக்கிறது. இன்னொருவருக்கு தான் அளிக்க
முன்வராத சுதந்திரத்தை தனக்கு மட்டும் மற்றவர்கள் தந்து விட வேண்டும்
என்று எதிர்பார்ப்பது எவ்வளாவு சுய நலம்?
சார்கோஸியின் இந்த அறிவிப்பு அரசியல் காரணங்களுக்ககவோ, யாரையோ
திருப்திப்படுத்தவோ அல்லது உண்மையா பெண்ணிய நோக்கிலோ கூட இருக்கலாம்.
ஆனால் என்னுடைய கேள்வி பர்தாவை அணியச்சொல்லி கட்டாயப்படுத்தும் அடக்கு
முறைகள் உலகில் அதிகமாய் இருக்கிறதா? இல்லை கண்டிப்பாய் அணியக்கூடாது
என்று சொல்லி கட்டாயமாய் திணிக்கும் அடக்குமுறைகள் அதிகமாய்
நிகழ்கின்றதா? அவ்வாறு கட்டாயப்படுத்துதலை எதிர்க்கும் பெண்களின் மீதான
உடலியல் மற்றும் மன ரீதியிலான தாக்குதல்கள் எதில் கொடூரமாயும்,
மனிதாபிமானம் சாராததாய் இருக்கிறது?
பல்வேறு தரப்புகளிலிருந்தும் பெண்ணிய அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ் போன்ற மதம்
சார்ந்த அமைப்புகளிலிருந்தும் இந்த பர்தா விஷயம் தீவிர விவாதப்பொருளாய்
வைக்கப்பட்டு பலமான எதிர்குரல்கள் கிளம்பிக் கொண்டுதான் இருக்கின்றது.
ஒரு வேளை நீங்கள் இந்த எதிர்குரல்களைக் கூட கட்டாயப்படுத்துதல் அல்லது
வேண்டாதவற்றை திணித்தல் என்ற பிரிவின் கீழ் கொண்டு வருகிறீர்களோ.
முதலிலேயே ஒன்றைச் சொல்லி விடுகின்றேன் மத அமைப்புகள் இந்த பிரச்சினையை
அணுகும் நோக்கமே வேறானவை. அது தன்னுடைய மதத்தின் தூய்மையானதாய்
நிரூபிக்கும் பொருட்டு இன்னொரு மதத்தின் தவறுகளை விளம்பரப்படுத்தும் அற்ப
அரசியல் அங்கே எந்த ஒரு புள்ளியிலும் மனிதம் என்ற ஒன்று இல்லவே இல்லை.
சல்மான் ருஸ்டியை கொலை செய்வேன் என்று கிள்ம்பிய இந்து அமைப்புகள்,
தஸ்லீமாவிற்காக மட்டும் கருத்து சுதந்திரம் என்று பிதற்றிய குரூர புத்தி
அது.
ஆனால் பெண்ணிய அமைப்புகளின் இந்த தொடர் முழக்கமானது மனிதம் சார்ந்த,
பெண்ணை உடல் அரசியலிலிருந்து வெளிக் கொணரும் முயற்சியாக பார்க்க
வேண்டும். இது ஒரு வகையான கருத்துப் பிரச்சாரம். காலம் காலமாய் "ஆண்டான்
அடிமை" கலாச்சாரத்தில் மூழ்கிப் போயிருந்த ஒரு இனத்திடம் இனி நீங்களும்
செருப்பு போட்டுக் கொள்ளலாம், டீக்கடைகளில் மற்றவர்களுக்கு இணையாக
நீங்களும் அமரலாம், குத்துக்காலிட்டு அமரும் பழக்கத்தை மறந்து விடுங்கள்
என்று சொல்லிக் கொடுத்த போது அவர்களிடமிருந்தே கூடத்தான் "நாங்க
இப்படியே வாழ்ந்துக்கிறோம்.இந்த புதுப்பழக்கமெல்லாம் எங்களுக்கு ஒத்து
வராது" என்ற குரல்கள் வெளிப்பட்டது. அதையும் தாண்டி தொடர் கருத்துப்
பிரச்சாரங்களின் மூலம்தான் தங்களது பலத்தை மெல்ல மெல்ல அவர்களே உணர
முடிந்தது.
ஆண்டான் அடிமை அளவு இல்லை எனினும் பர்தா விவகாரத்தில் இஸ்லாமிய பெண்களின்
மன நிலையும் அப்படித்தான். அண்ணாச்சி இதை நீங்கள் கருத்துத்
திணிப்புகளாய் பார்க்கிறீர்கள். ஆனால் நாங்கள் இதை மன மாற்றத்திற்கான
எதிர்ப்புப் பிரச்சாரமாய் பார்க்கின்றோம். இன்றளளாவு அணிய மறுத்த
பெண்களின் மீதான அடக்கு முறைகள்தான் பதிவாகி இருக்கின்றதேயொழிய
அப்படித்தான் அணிவேன் என்று திடமாய் சொன்னவர்களின் மீது பெரிதான அடக்கு
முறைகள் எதுவும் இல்லை.
எந்த மதமாய் இருந்தால் என்ன இது காட்டுமிராண்டித்தனமான பழக்கம் என்பதில்
எனக்கு மாற்றுக்கருத்தில்லை.
இதற்கும் வேலைக்குப் போற பொண்ணுங்க மோசமானவங்க என்று சொன்ன கேவலமான
வார்த்தைகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
http://www.vinavu.com/2009/06/29/amen/
ஒரு மனிதனின் தவறு என்பது அவனது சமூகத்தாலும், சமூக நடவடிக்கைகளாலும்தான்
திருத்த முடியும். ஒரு கணவனால் கொடுமைக்குள்ளாக்கப்படும் இசுலாமியப்
பெண்ணொருத்தியின் தீர்வுக்கு குர்ஆனையும், ஹதீசையும் புரட்டுவதால் என்ன
பயன்? பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டா
மதத்தின் தீர்வுகள் முடிவு செய்யப்படுகின்றன?
எல்லா மதங்களும் மனித சமூகத்தின் தவறுகளைப் பாவம், புண்ணியம் என்ற மத
நம்பிக்கையின் மூலம்தான் அணுகுகின்றன. 21ஆம் நூற்றாண்டின் மனிதகுலப்
பிரச்சினைகளுக்கு மிகப் பழைய நூற்றாண்டின் புண்ணிய நூல்களில் தீர்வுகள்
தேடப்படுகின்றன. உண்மையில் மதத்தை வைத்து ஆதாயம் தேடும் ஆளும்
வர்க்கத்தின் பல பிரச்சினைகள் இத்தகைய மத நூல்கள் மூலம் கேள்வியின்றி
தீர்க்கப்படுகின்றன.
ஜெஸ்மி தனது சுய வரலாற்றில் ஒரு பாதிரியார் எல்லா கன்னியாஸ்திரிகளையும்
கட்டித்தழுவி முத்தம் கொடுப்பதைக் குறிப்பிட்டு, தான் மட்டும் அதற்கு
எதிர்ப்புத் தெரிவித்தாகவும் அதற்கு அந்தப் பாதிரியார் முத்தம்
கொடுப்பதை நியாயப்படுத்தும் வாசகத்தை பைபிளிலிருந்து படித்துக்
காண்பித்ததாகத் தெரிவிக்கின்றார். பச்சையான பாலியல் இச்சைகளையும்,
வன்முறைகளையும் கூட பைபிளின் பெயரால் நியாயப்படுத்த முடியும் என்றால்
கன்யாஸ்திரிகளுக்கு விடுதலை என்பது எப்படி சாத்தியம்?
மற்றவர்களின் பாவங்களுக்கு தேவனின் பிரதிநிதியாய் இருந்து மன்னிப்பை
வழங்கும் ஒரு பாதிரியார் தனது பாவம் என்பது தேவனால் அங்கீகரிக்கப்பட்டது
என்று காட்ட முயல்வதன் மூலம் கடவுள் என்பவரே கற்பனையானவர் என்பதைத்
தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்கின்றார். ஏசுவின் மேல் நம்பிக்கை
கொள்ளும் ஒரு ஏழை அல்ல; ஏசுவின் தரகர்களாக வலம் வந்து பாவ
புண்ணியங்களைத் தீர்மானிக்கும் இந்தப் பாதிரியார்கள்தான்
அபாயகரமானவர்கள். இந்த அபாயம் பக்தர்களின் கேள்விக்கிடமற்ற நம்பிக்கை
தரும் துணிச்சலிலிருந்து எழுகின்றது.
எல்லா மதங்களும் தமக்கு வேண்டிய நம்பிக்கைகளைக் கண்டிப்பான
கண்மூடித்தனமான முறையில்தான் ஒரு கட்டளையைப் போலவே பக்தர்களிடம்
கோருகின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு மத நம்பிக்கையில் ஐயமோ,
சந்தேகமோ, நம்பிக்கையின்மையோ வரக்கூடாது என்பதால்தான் மதப் பூசாரிகளின்
அட்டூழியங்கள் அதற்குரிய பொருளில் பார்க்கப்படுவதில்லை. நடிகைகளோடு
கூடிக்குலாவியும், சங்கர ராமனை ஆள் வைத்துக் கொன்றவர் என்றாலும்
ஜகத்குரு என உலாவரும் சங்கராச்சாரியை பெரும்பான்மையான பார்ப்பன
மேல்சாதியினர் இன்னமும் புனிதவானாக நம்புகின்றார்கள் என்றால் இந்தப்
பக்தர்களின் விமரிசனமற்ற நம்பிக்கைதான் நமது விமரிசனத்திற்குரியது.
விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், பேச்சு வார்த்தைகள் இவை எவற்றாலும்
ஏற்கெனவே ஒருவர் ஏற்றிருக்கும் சித்தாங்களை மாற்றிவிடமுடியாது என்பதிலும்
நம்பிக்கை உள்ளவனாக இருக்கிறேன்.
வளர்ப்பு, பயிற்சி, சூழல், அணுகுமுறை, சமுதாயம் எல்லாமுமாகச் சேர்ந்து
நம் மனதில் உண்டாக்கியிருக்கும் ஆழமான அபிப்பிராயங்களைக் களைந்துவிடுவது
அத்தனை எளிதானன்று. அதனால், இப்படியான குழும விவாதங்களின் கருத்துப்
பரிமாற்றங்களால் மனதை மாற்றும் மாயத்தைச் செய்ய முடியாது என்பது
இன்றுவரையில் எனது நம்பிக்கை.
நாம் சார்ந்திருக்கும், நமக்குத் தேவைப்படும் கருத்துகளை முன்னிறுத்தியோ
அல்லது அப்படிப்பட்ட கருத்துகளால் ஈர்க்கப்பட்டோ அதனைப் படித்து
அதிலிருந்து மேற்கோள்கள் தருவதும் அதே கோணத்தில் சிந்திப்பதும் பரவலாக
எங்கும் நிகழ்வதுதான்.
அதுதான் இங்கும் நிகழ்கிறது.
பெண்ணியச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அந்த நினைவுகளை முன்னிறுத்தி தனது
ஆளுமையை அமைத்துக்கொண்டிருக்கும் நந்தாவுக்கு பர்தா வழக்கம் பெண்களை
அடிமைப்படுத்துவதாகத் தோன்றுவதில் வியப்பேதும் இல்லை.
இதுவரையில், ஒரு பார்வையாளனாக எனது எண்ணம் இதுதான்.
*
ஆனால், தொடர்ந்த மடலாடல்களும் கருத்துப் பரிமாற்றங்களும் சில சந்தேகங்களை
விதைத்துள்ளன.
முதலில் தென்படுவது மூர்க்கம். அடுத்து தோன்றிய சந்தேகம், குளிர்
காய்தல்.
*
மூர்க்கத்தைப் பார்ப்போம். நந்தா அவர்கள் இங்கே நடந்த விவாதத்தில்
'திமிர் பிடித்தவனாக' தன்னை முன்னிறுத்திப் பேசுகின்றார்.
கருத்துகளை முன்வைத்து மடலாடிக்கொண்டிருக்கையில் 'நான் திமிர்
பிடித்தவனாக உருமாறிக்கொண்டிருக்கிறேன்' என அறைகூவல் விடுவது என்னவோ
புகார் நகரத்து மல்லர்கள் தோள் பலத்தைக்காட்டி 'என்னை எதிர்ப்போர் யாரும்
உண்டோ' என்பதான கதைக்காட்சியை நினவிற்குக் கொணர்கிறது, சல்தாஹை! அவர்
எழுத்து, அவரது திமிர் எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளட்டும் என்று
விட்டுவிடலாம், சராசரி மனிதர்களை. ஒரு சமுதாயத்தின் வழிமுறை குறித்த
கேள்விகளை முன்வைத்து மடலாடும் இளைஞரின் 'திமிர்' என்ற வார்த்தையை அத்தனை
சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதனால், முன்பு கேட்டது போல
இப்போதும்...
பர்தாவால் அடக்கி ஆளப்பட்டு மூலையில் இஸ்லாமியப் பெண்ணினம் முடங்கிக்
கிடப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் நந்தா அவர்கள் இந்த வன்கொடுமையை
முற்றிலுமாக நீக்க தன்னளவில் என்ன செய்யப்போகிறார் என்பதை
அறிந்துகொள்வதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன்.
இஸ்லாமியனாக இருக்கும் நானாவது என்னளவில் ஓரிரு பெண்களை பர்தாவிற்காக
கட்டாயப்படுத்தாமல் எனது புரிதலின்படி பெண்ணுக்குக் கண்ணியமான உடை என்று
எது தோன்றுகிறதோ அதை அணியும்படி கேட்டுக்கொண்டு பெரிய ஒரு சமுதாயத்தில்
இரண்டு பெண்களுக்காவது அடக்குமுறையிலிருந்து விடுதலையளிக்க இயலும்
(விடுதலை என்பது நந்தாவின் பார்வையிலான விடுதலை).
திமிர் பிடித்தவராக தன் ஆளுமையை முன்னிறுத்தி மடலாடும் நந்தா அவர்களிடம்
முன்னம் மடலாடும்போது வைத்த கேள்வியையே இப்போதும் வைக்கிறேன்.
உங்களால், கொடுமை, அதிகாரம் என்று புரிந்துகொள்ளப்பட்டுள்ள இந்த பர்தா
கொடுமையிலிருந்து இஸ்லாமியப் பெண்களைக் காப்பதற்காக என்னென்ன திட்டங்கள்
வைத்திருக்கின்றீர்கள்?
நானெல்லாம் சாதாரணமானவன், எனக்கு திட்டங்களெல்லாம் கிடையாது, வெந்ததைத்
தின்று சராசரி பிறவியாக எனது மதம் சொல்வதை உண்மையென்று நம்பி செக்கு
மாடாக உழன்று கொண்டிருக்கிறேன். என்னைப்போன்ற சாமானியனின் கருத்தைப்
புறந்தள்ளுங்கள்.
உங்கள் திமிர் பிடித்த ஆளுமையை முன்னிறுத்தி இஸ்லாமியப் பெண்களை பர்தாக்
கொடுமையிலிருந்து காப்பதற்காக என்னென்ன செயல் திட்டங்களை
வைட்திருக்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றேன்.
எழுத்தளவில் மட்டுமே உங்கள் திமிர் இருக்காதென்பதும் இஸ்லாமியப் பெண்களை
பர்தாக் கொடுமையிலிருந்து உங்கள் திமிரை முன்னிறுத்தி இரட்சிப்பீர்கள்
என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எந்தெந்த பள்ளிவாசலில் முன் என்றென்று நின்று இஸ்லாமியப் பெண்களை பர்தாக்
கொடுமையிலிருந்து விடுவிப்பதற்கான கண்டனப் பேரணிகளை, ஆர்பாட்டங்களை
செய்யப் போகின்றீர்கள்?
ஒரு சாமானியனிடம் இந்தக் கேள்விகளைக் கேட்கமாட்டேன். திமிர் பிடித்தவனாக
உருமாறிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞர் தனது திமிரை இஸ்லாமியப் பெண்களை
பர்தாக் கொடுமையிலிருந்து உய்விக்க உபயோகிப்பார் என்னும் நம்பிக்கையில்
கேட்கிறேன்.
*
குளிர்காய்தலைப் பார்ப்போம்.
ஒரு சமுதாயத்தின் உடையமைப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டதற்காக மகிழ்ந்து
கொள்ளும் நந்தா அவர்களை நான் சந்தேகமான கோணத்தில் பார்க்கிறேன்.
எனது பார்வையும் கோணமும் சந்தேகமும் எப்படி நந்தா அவர்களுக்கு
முக்கியமாகப் படப்போவதில்லையோ, அப்படித்தான் இங்கே யார் எதைச் சொன்னாலும்
அதனை மறுத்து தனக்கு மிகவும் திமிர் என்று பகிரங்கமாகப்
பறைசாற்றிக்கொள்ளும் நந்தாவின் எழுத்துகளாலும் எந்த மாற்றமும்
வரப்போவதில்லை.
நந்தா அவர்களின் மகிழ்வு குறித்த எனது பார்வை என்னவென்றால் -
'சர்ச்சையைக் கிளப்பிக் குளிர் காய்வது'.
இணையத்தில் அதிகமாக விரவிக்கிடக்கும் இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்துகளைப்
போகிறபோக்கில் அடித்துட்டு பெண்ணியம் என்னும் போர்வையில் இஸ்லாமை எள்ளி
நகையாடிவிட்டு பண்புடனில் இருக்கும் கட்டற்ற சுதந்திரத்தை இஸ்லாமிய
எதிர்ப்புக்கும் கொஞ்சம் உபயோகித்தால் என்ன என்னும் அணுகுமுறையை நந்தா
அவர்கள் கொண்டிருக்கிறாரோ என்று நான் சந்தேகப்படுகின்றேன்.
ஏனென்றால், 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பதான பாணியில் 'நான்
மதத்தை முன்னிறுத்திப் பேசவில்லை' என்னும் முத்தாய்ப்போடு
பேசத்துவங்கினார்.
சமுதாயக் கட்டமைப்பு போன்ற விவகாரங்களில் நந்தாவுக்கு
நம்பிக்கையில்லையென்றால் அது அவரைச் சார்ந்த குழப்பம், அது நமக்குத்
தேவையில்லை.
ஆனால், அந்த நம்பிக்கையின்மையை இஸ்லாமியப் பெண்மணிகளின் உடை தொடர்பான
மடலாடல்களில் நுழைத்து ஏதோ எல்லா இஸ்லாமிய பெண்மணிகளும் பர்தாவுக்குள்
அடைப்பட்டு அடிமைத்தனத்தில் உழன்று கொண்டிருப்பதான அமைப்பில் தனது
உரையாடல்களை நிகழ்த்தி வருகின்றார்.
பர்தா அணிய மறுத்ததால் பிரச்சனைகள் அதிகமா? பர்தா அணிந்ததால் பிரச்சனை
அதிகமா? என்று ஏதேதோ புள்ளி விவரங்களைத் திரட்ட மற்றவர்களுக்கு
ஆணையிடுகின்றார். மறுப்போர்தான் புள்ளி விவரம் முதலில் தரவேண்டும்.
எந்தெந்த ஜமாத்தில் என்னென்ன பிரச்சனைகள், பர்தா அணிய மறுத்து
கொடுமைக்குள்ளாக்கப்பட்ட இஸ்லாமிய சமுதாயப் பெண்மணிகளில் பெயர்கள்,
நாடுகள் என எல்லாவற்றையும் இணையத்தில் தேடியெடுத்து அழகிய பட்டியலாக
வெளியிட்டு முன்னம் சொன்னதுபோல் 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்னும்
முன்னுரையோடு இஸ்லாமிய எதிர்ப்பாளனாக தன்னை அடையாளம்
காட்டிக்கொள்ளட்டும், நளினப் பதிப்பாக ஏன்?
உடை என்பது எல்லாருக்கும் கட்டாயம், அவரவர் கலாசாரத்திற்கேற்ப அளவு
மாறுபடும் அவ்வளவே.
தனது சமுதாயத்தில் இதுதான் பெண்ணின் உடையளவு என்பதை முடிவுசெய்யக்கூடியது
சமுதாயமேயன்றி தன்னைத் திமிர் பிடித்தவன் என்று பறைசாற்றிக்கொள்ளும்
நந்தா கிடையாது.
பண்புடனில் மதத் துவேஷங்கள் இல்லையென நினைத்தேன், இஸ்லாமிய எதிர்ப்பின்
நளினப் பதிப்புகள் இருக்கின்றனவோ என்னும் சந்தேகம் உண்டாகத்
துவங்கியிருக்கின்றது. பொறுத்திருந்து பார்க்கலாம்.
அண்ணாச்சி இனி எனது மடல்களை மட்டுறுத்தலில் வைக்கவேண்டுகிறேன்.
//உங்கள் திமிர் பிடித்த ஆளுமையை முன்னிறுத்தி இஸ்லாமியப் பெண்களை பர்தாக்
கொடுமையிலிருந்து காப்பதற்காக என்னென்ன செயல் திட்டங்களை
வைட்திருக்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றேன்.
எழுத்தளவில் மட்டுமே உங்கள் திமிர் இருக்காதென்பதும் இஸ்லாமியப் பெண்களை
பர்தாக் கொடுமையிலிருந்து உங்கள் திமிரை முன்னிறுத்தி இரட்சிப்பீர்கள்
என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்த ‘திமிர் பிடித்த ஆளுமை’ என்று வாசகத்திற்கு கடும் கண்டனத்தையும், பண்புடன் அன்பர் ஒருவரை மற்றொரு அன்பர் சொல்வதாக இது ஆகிவிட்டதே என்று வருத்ததையும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன் :(
அப்படியா? இதில் திரிப்பதற்கு ஒன்றுமே இல்லை. அவரேதான் நான் திமிர்
பிடித்தவனாக மாறிக்கொண்டிருக்கிறேன் என்னும் சந்தேகம் வருகின்றது எனத்
தெளிவாக முன்மொழிந்தார். அதனை நான் வழிமொழிகின்றேன். இதில் திரிப்பு
என்னும் பார்வைக்கே இடமில்லை.
> மேலும் இதற்கு மதச்சாயம் பூச நேரிடுமென்றால் பண்புடனின் ‘கட்டற்ற
> சுதந்திரதுக்கே’ பங்கம் நேரிடுவதாகத்தான் நான் கருதுவேன்.
இதைப்போலத்தான் பல 'கருதுவேன்'களை நானும் முன்னிறுத்துகிறேன்.
> பண்புடனில் கருத்துக்களுக்காக யாரும் மட்டுறுத்தப்படுவதில்லை.
எது கருத்து?
'நான் திமிர் பிடித்தவனாக மாறிக்கொண்டிருக்கின்றேன்' என்பது கருத்தா?
அல்லது தனிமனிதப் பெருமையா?
இனிய பிரேம்,
எனது 'மடலிலேயே சென்ற முறை எழுப்பியதைப் போன்ற' என்று
குறிப்பிட்டிருக்கிறேன்.
ஒவ்வொருவருக்கும் ஒரு தன்மை இருப்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்வதைப் போல,
இது எனது பார்வை என ஏற்றுக்கொள்வதில் உங்களுக்குத் தயக்கம் இருக்கலாம்.
'களப்பணி ஏதும் உண்டா?' என்று கேட்கும் எனது தன்மையை அண்ணாச்சி நையாண்டி
செய்திருந்தாலும்கூட அதுதான் எனது பார்வை என இங்கே முன்பு
சொல்லியிருக்கிறேன்.
> பதில் சொல்வதை விட்டுவிட்டு ஒரு முட்டுக்கட்டை போடுவது போலத்தான் இருக்கிறது
> உங்களின் இந்த பாங்கு
மன்னிக்கவேண்டுகிறேன்.
நந்தாவிற்கும் அவரது எழுத்திற்கும் என்னால் முட்டுக்கட்டை போடமுடியும்
என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? முடியவே முடியாது.
நான் சொல்வதை நான் சொல்கிறேன், அவர் சொல்வதை அவர் சொல்வார், அவ்வளவே.
ஒருவரின் பார்வை செல்லும் கோணத்தில்தான் இன்னொருவரின் பார்வையும்
செல்லவேண்டுமென்ற அவசியம் இல்லை.
எலேய் வர வர நானும் பண்புடன் குழுமம் மாதிரி ஆயிட்டேன். எல்லாரும் வந்து
விவாதம் பண்றாங்களோ இல்லையோ எனக்கு ஒரு பேரு வெக்க துடிச்சுடறாங்க.
இன்னிக்கு திமிர் பிடித்தவன். ஈழத் தமிழர்கள் விவகாரம் குறித்து
பேசினப்போ இறையாண்மைக்கெதிரானவன், நாட்டுப் பற்றில்லாதவன். கொஞ்ச
நாளைக்கு முன்னாடி ஆர்.எஸ்.எஸ் போன்ற மத அமைப்ப்புகளால் புனிதபிம்பப்
படுத்தப்படும் சாவர்க்கரின் மீது விமர்சனம் வைத்த போது ப்சூடோ
செக்யூலரிஸ்ட், இந்து மத விரோதி. நடுவில பெண்ணிய வியாதிங்கிற பட்டம்
ரொம்ப நாளாவே இருக்கு.
கணக்குப் போட்டுப் பார்த்தா, எனக்கும் பண்புடனிற்கும் பூர்வ ஜென்ம பந்தம்
ஏதோ இருக்குதுன்னு நினைக்கிறேன்.
நான் கேட்க வேண்டிய கேள்விகளை, முன்னதாக நீங்களாகவே கேட்டு மேற்கொண்டு
அதைத் தொடர விருப்பமில்லாததால் உங்களுடனான விவாதத்தை “ஒரு வாசகனாக
இருந்து பங்கு பெறுகின்றேன்” என்ற அந்த புள்ளியிலேயே முடித்துக்
கொண்டேன். திரும்ப திரும்ப உங்களிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று
சொல்ல வில்லை.
ஆனால் சாபண்ணாவிடமும், அண்ணாச்சியிடமும், தமிழன் வேணு அவர்களிடமும் நான்
பேசிக் கொண்டிருந்தேன். அதிலும் சாபண்ணாவை நேரில் சில முறை பார்த்து
பேசியவன் என்பதால், அந்த உரிமையில் சில சிறு எள்ளல்களை கலந்து
பேசியிருக்கிறேன். அண்ணாச்சிக்கான பதிலில் அது ரொம்பவே இருக்கும். அதற்கு
இப்படி ஒரு பொல்லாப்பு வரும் என்று நினைத்துக் கூடப் பார்க்க வில்லை.
அது என்ன சீரியஸா பதில் பேசற இடத்தில எள்ளல்னெல்லாம் கேட்டுடாதீங்க. இந்த
க்ரூப்பு ஓனரே ( :) ) பெரும்பாலும் இப்படித்தானாமாம்.
மத்தபடி ரொம்ப டைப் பண்ணி பெரிசா விளக்கம் கொடுத்து என்ன பிரயோசனம்.
எப்படியும் அதுல ஒரு குத்தத்தைக் கண்டு பிடிக்கப் போறீங்க.
நல்லா இருங்கடே.
//சொல்ல மறந்துட்டேன். சகுந்தலா நரசிம்மன் தன் மனம் மாறியதாய் சொன்ன
காரணங்கள் கவுண்டமணி காமெடியை பார்த்த மன நிறைவைத் தந்தது.
சாபண்ணா கோவிச்சுக்காதீங்க. ஒரு வேளை ரொம்ப திமிர் பிடித்தவனாய்
உருமாற்றம் அடைந்து வருகிறேனோ என்னவோ? அண்ணாச்சியைக் கேட்டாதான்
தெரியும்.//
இனிய பிரேம்,
ஒரு பேட்டியை விமர்சனம் செய்யும் பாதையில் ஒருவர் சொல்லிய வார்த்தைகளை
நான் திருப்பிச் சொன்பதற்கே கடுமையான கண்டனமென்றால், அதே வர்த்தையை
முதலில் சொல்லியவருக்கு என்ன மாதிரியான கண்டனங்களை முன்வைக்கப்
போகிறீர்கள்?
//சொல்ல மறந்துட்டேன். சகுந்தலா நரசிம்மன் தன் மனம் மாறியதாய் சொன்னகாரணங்கள் கவுண்டமணி காமெடியை பார்த்த மன நிறைவைத் தந்தது.சாபண்ணா கோவிச்சுக்காதீங்க. ஒரு வேளை ரொம்ப திமிர் பிடித்தவனாய்
உருமாற்றம் அடைந்து வருகிறேனோ என்னவோ? அண்ணாச்சியைக் கேட்டாதான்
தெரியும்.//
இனிய பிரேம்,
ஒரு பேட்டியை விமர்சனம் செய்யும் பாதையில் ஒருவர் சொல்லிய வார்த்தைகளை
நான் திருப்பிச் சொன்பதற்கே கடுமையான கண்டனமென்றால், அதே வர்த்தையை
முதலில் சொல்லியவருக்கு என்ன மாதிரியான கண்டனங்களை முன்வைக்கப்
போகிறீர்கள்?
எல்லாவற்றிற்கும் விளக்கம் கொடுத்தீர்கள் சரி. சந்தடி சாக்கில் நந்தா மேல் மதச்சாயம் பூச பார்த்தீர்களே, அதற்கும் விளக்கம் உண்டா?
பக்கம் பக்கமாக யார் எதை எடுத்துப் போட்டாலும் அதனை கவுண்டமணி
காமெடியாகப் பார்க்கும் உரிமை உங்களுக்கு இருக்கும்போது, உங்கள்
வார்த்தைகளுக்கு உள்ளர்த்தம் கற்பிப்பதில் தவறில்லை. நீங்கள் செய்ததை
நான் திருப்பிச் செய்கின்றேன், அவ்வளவே.
முன்னதில் எது நியாமோ அதுவே பின்னதிலும் நியாயம்.
> மத்தபடி ரொம்ப டைப் பண்ணி பெரிசா விளக்கம் கொடுத்து என்ன பிரயோசனம்.
> எப்படியும் அதுல ஒரு குத்தத்தைக் கண்டு பிடிக்கப் போறீங்க.
இதைத்தான் நான் முதலிலேயே சொன்னேன், என்ன எழுதி என்ன பிரயோசனம்
எப்படியும் அதனை எதிர்க்கபோகிறீர்கள்.
> நல்லா இருங்கடே.
நல்லதுடே
இனிய பிரேம்,
இழையின் தலைப்பு, இழையின் துவக்கத்தில் ஒரு சமுதாயத்தின் மீது
சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள், இஸ்லாமிய நாடுகளின் அதிருப்தியில்
மகிழ்வு, தொடர்ந்து நடந்த விவாதங்கள், மற்றவர்கள் கொடுக்கும் விளக்கங்களை
ஏற்கும் மனப்பக்குவம், சமுதாயக் கட்டமைப்பில் நம்பிக்கையின்மை என்பதான
முன்னிறுத்தல், இப்படியாக அனைத்தையும் பார்த்த பின்னரே எனது சந்தேகத்தை
முன்வைத்தேன்.
இதில் சந்தடிசாக்கெல்லாம் கிடையாது, போகிறபோக்கில் அடித்துவிட்டுப்
போகவில்லையே, தெளிவாக நேரிசையாகவே சொல்லியிருக்கிறேன். எண்ணிக்கையிட்டு
'இது எனது சந்தேகம்' என்றுதானே சொல்லியிருக்கிறேன்.
முன்னமேயே சொல்லிவிட்டேன், ஒருவரது கருத்தை தனக்குரிய கண்ணோட்டத்தில்
பார்க்கும் உரிமை அவருக்கு இருக்கையில், அவரது கருத்தை வேறு
கண்ணோட்டத்தில் பார்க்கும் உரிமை எனக்கு இருக்கிறது.
ஆனால் சாபண்ணாவிடமும், அண்ணாச்சியிடமும், தமிழன் வேணு அவர்களிடமும் நான்
பேசிக் கொண்டிருந்தேன். அதிலும் சாபண்ணாவை நேரில் சில முறை பார்த்து
பேசியவன் என்பதால், அந்த உரிமையில் சில சிறு எள்ளல்களை கலந்து
பேசியிருக்கிறேன்.
இனிய ஆசிப்,
தமிழ் உலக, ஆர்.கே.கே. நாள் முதலாக குழுமங்களில் நான் இயங்கி வருவதை
உங்களிடம் சொல்லத் தேவையில்லை. எனது அணுகுமுறைகள் குறித்த
விளக்கங்களையும் சொல்லத் தேவையில்லை.
எனது சந்தேகம் தீரவேண்டிய அவசியத்தைவிடவும் பர்தா குறித்த விவகாரங்களை
முன்முடிவுடன் அணுகியும், பிரான்சில் அதற்குத் தடையேற்பட்டதால் தனக்கு
மகிழ்ச்சி என்று இழையின் தலைப்பை வைத்து யார் என்ன சொன்னாலும்
ஒத்துக்கொள்ளப்போவதில்லை என்பதான பாணியிலேயே விவாதத்தை
அமைத்துக்கொண்டும், எள்ளி நகையாடுவதையே பாணியாகக்கொண்டு விவாதங்களை
அமைத்துக்கொள்வதும், பர்தா குறித்த எந்தவிதமான அடிப்படையும் எனக்குத்
தெரியத் தேவையில்லை - அது பெண்ணடிமையின் அடையாளம்தான் என்பதில் நிலையான
நோக்குடனும் இழையை எடுத்துச் செல்பவரின் அணுகுமுறை மாறவேண்டும்.
பர்தா குறித்து நீங்கள், வேணு, சாபு, யார் தந்த கருத்திலும் அதன் மையக்
கருத்தை அணுகிப் பார்க்காமல், இப்னு ஹம்துன் தந்த சுட்டியை கொஞ்சமும்
கண்டுகொள்ளாமல், நீங்கள் என்ன சொன்னாலும் எனது காட்டம் குறியாது என்னும்
அணுகுமுறையுடன் எனது பதிலுக்கு மறுமொழி சொன்னவரது பார்வையை நான் எப்படி
அணுகவேண்டும்.
வேணு சொன்ன உடை முதல் மற்ற சமூகப் பிரச்ச்னைகளையும் கண்டுகொள்ளாமல்,
மற்றவற்றிலிருந்து விடுபடமுடியும், *மதத்தை விட்டொதுக்க முடியுமா என்னும்
அர்த்தம் தொனிக்கும்* கேள்வியை வேணுவின் முன்னால் வைத்தவரின் வாதங்களை
நான் எப்படி அணுகிப் பார்க்கவேண்டும்.
பர்தாவிற்காக மதத்தை விட்டு விலகுவதை ஆதரிப்பதான அர்த்தம் தொனிக்கும்
உரையாடலை நிகழ்த்துபவரை மதம் சார்ந்த அணுகுமுறையல்லாமல் நான் மட்டும்
அணுகிப்பார்க்கவேண்டுமென்றால், அது ஒருபக்கம் மட்டுமே பணிந்து
போகவேண்டும் என்பதான கருத்தை முன்னிறுத்துவதாக இருக்காதா?
--
அன்புடன்
சகோ. அபூ சுமையா.
*****************************************************
"நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."(49:10)
ஆசாத் அண்ணாவின் தெள்ளத்தெளிவான விளக்கம் உள்ளிட்ட அனைத்தையும் தொடர்ந்து அவதானித்து வருகிறேன்.
கருப்புநிற மேலங்கி தான் அணியவேண்டுமென்பதை, உண்மையிலேயே இஸ்லாத்தைத் தெளிவுற உணர்ந்த ஒழுக்கநெறி ஒளிர வாழ்ந்திடும் எப்பெண்ணும் நம்பமாட்டாள். நம் தமிழகத்திலேயே, பல்வேறு நிற ஆடைகள் அணியப்படுவதைக் கண்டிருக்கிறோம்.
கட்டு [விதிமுறை] என்றால் என்ன? அதன் அவசியம் என்ன? அது பேணப்படவில்லை எனில் சமூக ஒழுங்கு எவ்விதம் பாதிப்படையும்? என்று பகுத்து உணரும் பக்குவம் இருந்தால் தான்... அதை ஏன் உடைக்க வேண்டும்? அதன் அவசியம் என்ன? எனத் தெளிவுற இயலும்.
உணருவார்களா மேதைகள்! :-)
நானோ, சார்லஸ் அந்தோணியோ, பிரேமோ ஆரம்பத்திலேயே எளிமையாய் கேட்ட
கேள்விகளுக்கு நீங்கள் அது குறித்து பேசவே விரும்பாத நிலையில், சாபண்ணாவோ
மற்றவர்களும் கூட அதைத் தவிர மார்க்கத்தில் சொல்லி இருப்பதையும்,
உதாரணங்களையும் சொல்லி இருந்தார்களே தவிர, இது
கட்டாயப்படுத்தப்படுவதையும், மறுப்பவர்களின் மீதா சில இடங்களில் நிகழும்
மன ரீதியிலான, உடல் ரீதியிலான முக்கியமாய் கேரக்டர் அசாசினேஷன்
குறித்தும் எந்த வித பதிலும் இல்லை. அதனாலேயே நான் ஏற்கனவே தெளிவாய்
சொல்லி இருக்கின்றேன் "இதுவரை நான் கேட்ட கேள்விகளுக்கு இந்த நொடி வரை
பதில் கிடைக்காத நிலையில் எனது கருத்திலும் மாற்றம் இல்லை என்று" இதற்கு
மேலும் ஒருத்தன் என்ன சொல்லி தனது நிலையை விளக்க முடியும்.
நான் யாருக்கு பதில் சொன்னேனோ அந்த சாபண்ணாவிற்கோ, ஆசிஃபிற்கோ அது மத
துவேஷமாகவோ, திமிர்த்தனமாகவோ தோன்றாத நிலையில் இது பற்றி நான் பேசவே
விரும்ப வில்லை என்று சொல்லி சென்ற உங்களுக்கு மட்டும் அது எப்படி
அழுத்தமாய் நான் குளிர்காய நினைப்பது போல் தோன்றுகிறது. எந்த வகையிலும்
பர்தா குறித்த கேள்விகளை எவரும் எழுப்பி விடக் கூடாது. மீறி எழுப்பினால்
பெண்ணிய நோக்கில் நீ பேசினால் நான் உன்னுடன் விவாதம் செய்யவே வர வில்லை
என்பதன் மூலம் தப்பிக்கலாம். அப்படியும் மீறி வேறு எவரிடமேனும்
தொடர்ந்தால் நீ மூர்க்கன், மத துவேசத்தோடு எழுதுபவன் என்று குற்றச்சாடின்
மூலம் இந்த பர்தா விவகாரத்தின் பின்னே நான் கேட்கும் பெண்ணிய நோக்கிலான
கேள்விகளிடமிருந்து தப்பித்துக் கொள்கிறீர்கள் என்று நான் ஏன் குற்றம்
சாட்டக் கூடாது.
நீங்களாகவும் அதாவது உங்கள் சமுதாயத்திற்குள்ளாகவும் இது குறித்தான
சுயபரிசோதனை செய்ய மாட்டீர்கள். பெண்ணிய நோக்கில் விமர்சனம்
செய்பவர்களையும் மதநோக்கில் எழுதுபவன் என்று முத்திரை குத்தி விடுவீர்கள்
அப்படித்தானே. "மதாபிமானம் ஒரு மனிதரின் உணர்வுகளை எவ்வளவு தூரம்
நீர்த்துப் போகச் செய்கின்றது..." இது உங்களுக்கு மட்டுமல்ல. முந்திய
பதிவான இந்து மத ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் துதிபாடப்படும் வீர சாவர்க்கர்
ஒரு தீவிர இந்துத்வாவாக மாறியதனால் எடுத்த சில முடிவுகளை விமர்சிக்கும்
போது இதே வார்த்தைகளாஇ ஒரு இந்து மதாபிமானிக்கும் பயன்படுத்தி இருந்தேன்.
இங்கேயும் பயன்படுத்துகின்றேன். மதங்கள்தான் மாறுபடுகின்றதே தவிர ஒவ்வொரு
மதத்தின் மீது விமர்சனமற்ற பற்று கொண்ட மதாபிமானிகளின் உணர்வுகள்
மாறுவதில்லை. ஆனால் எல்லாருமே அப்படி இருக்க முடியாதே. என்ன செய்ய?
அப்புறம் ஆசாத் நீங்கள் கூட இதை முன் முடிவுடன்தான் எழுதுகின்றீர்கள்.
"நான் திமிர் பிடித்தவனாய் மாறிக் கொண்டிருக்கிறேனோ என்னவோ" என்ற
வார்த்தைகளையெல்லாம் எழுதுவதற்கு முன்பாகவே "எப்படியிருந்தாலும், உங்களோட
மதம் தொடர்பான ஒழுக்க விதிகள விவாதிக்ற அளவுக்கு எனக்கு மனப்பக்குவம்
இல்லை" என்பதன் மூலமே நீங்கள் இதை அது எப்படி இன்னொரு மத்தத்துக்காரன்
எங்க விஷயத்தை விமர்சனம் பண்ணலாம் என்ற ரீதியிலேயேதான்
பார்த்திருக்கிறீர்கள். பெண்ணிய நோக்கில் நான் எழுப்பிய
கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல பிரியப்படாத நீங்கள் கேள்வி கேட்டதற்காக
பட்டம் மட்டும் சுமத்தத் துடிக்கின்றீர்கள்.
எந்த ஒரு விஷயத்தையும், மனிதம் சார்ந்தும், பெண்ணியம் உள்ளிட்ட
அடக்குமுறைகளுக்கு எதிரான கோட்பாடுகள் வழியாகவும் மட்டுமே பார்க்கப்
பழக்கப்பட்டிருக்கிறது எனக்கு. மதத்தின் ஆழ்ந்த விமர்சனங்களற்ற பற்று
வைத்திருப்பவர்களுக்கு அத்தகைய பார்வைகள் எரிச்சலூட்டக்கூடியவையாய்
இருப்பதில் வியப்பேதுமில்லை.
//பெண்களை தனது உடல் முழுவதும் மறைக்க சொல்வது சரியா? தவறா? அப்படி
சொல்வது பெண்
அடிமைதனமா? //
ஆம். எனது பார்வையில் அப்படித்தான். இங்கே சொல்வது என்ற வார்த்தையை
நீங்கள் உபயோகப்படுத்தி இருக்கின்றீர்கள். அதற்குப்பதில்
கட்டாயப்படுத்துவது என்ற வார்த்தையை மாற்றிப் போட்டுக் கொள்ளுங்கள். அது
மிகப்பெரும் அடக்குமுறையே.
ஏற்கனவே சொன்னதுதான். "இன்னும் எத்தனை நாளைக்குதான் ஆம்பளை புள்ளை
கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான். பொம்பளைப் புள்ளைதான் அடங்கி
ஒடுங்கிப் போகணும் என்று சொல்லிக் கொண்டு ஆண்கள் செய்யும் தவறுகளை
திருத்தாமல் பெண்களுக்கு மட்டும் கடிவாளங்களை இட்டுக்
கொண்டிருப்பீர்கள்."
நீங்கள் எல்லோரும் ஒண்ணு பர்தா, இல்லைன்னா அரை குறை ஆடைகளோடயே திரிவாங்க
என்ற ரீதியிலேயே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இதை விட அசிங்கமாய் உங்கள்
பெண்களை வேறு எவரும் அசிங்கப்படுத்தி விட முடியாது. கொஞ்சம் விட்டா
போதுமே தறிகெட்டுப் போயிடுவாளுங்க என்ற ஆண்டை மனப்பான்மை இது. ஏன் ஊர்ல
வேற பொண்ணுங்க யாரும் சுடிதார், சேலை, அல்லது வேறு உடலை நார்மலாக
மறைக்கும் வகையில் போகவே இல்லையா?
உங்களது மற்றொரு கேள்விக்கும் திரும்ப திரும்ப பதில் சொல்லிக் கொண்டேதான்
இருக்கின்றேன். இப்போதும் சொல்கிறேன். எவரொருவருக்கும் அறிவுறுத்த
உரிமைகள் உண்டுதான். ஆனால் கட்டாயப்படுத்த உரிமை இல்லை.
ஆசாத் எதுக்கும் அண்ணாச்சியைத்தான் கேட்கணும்னு ஒரு நகைப்பான்
போட்டிருக்கேனே உங்களுக்கு தெரியலையா? ஒரு சில வார்த்தைகள் ஒரு சிலருக்கு
மட்டும் இன்னும் பல அர்த்தங்களைத் தரும். இந்த திமிர் வார்த்தையும்
அவ்வாறே. நான் அண்ணாச்சியிடமும், சாபண்ணாவிடமும் உரையாடிக்
கொண்டிருப்பதனால் உங்களை கருத்தில் கொள்ளாமல் அந்த வார்த்தைகளைப்
போட்டேன். அது ஏற்கனவே அண்ணாசியும் நானும் சும்மாவாச்சுக்கும்
அடிச்சுக்கும் விஷயங்களில் ஒன்று. அது உரையாடலை நளினமாய் எடுத்துப்
போவதற்காக, நான் சேர்த்து போட்ட வார்த்தைகள்.
அண்ணாசியே தனது பதிலில் நீங்க என்ன சொல்ல அவன் உண்மையிலேயே திமிரு
பிடிச்சவன்தான் என்பதை நான் எளிதாய் எடுத்துக் கொண்டதும், அவர் என்னிடம்
எள்ளலுடம் பேசிய விதத்திலிருந்தும் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
இல்லை புரிஞ்சுக்க மாட்டேன்னு தயவு செய்து அடம் பிடிக்காதீர்கள்.
இவ்வளவு ஏன் "க்ரூப் ஓனரே" இப்படித்தான் என்றொரு வார்த்தையையும்
கூடத்தான் சொல்லி இருக்கின்றேன். அந்த க்ரூப் ஓனர் என்ற வார்த்தயைக்
கேட்டாலும் கூட அண்ணாச்சிக்கும், எனக்கும், இலக்குவணிற்கும், நரேஷ்,
பிரேம் வகையறாக்களிற்கும் சிரிப்பு வரும். எங்களாது உரையாடல்களின் போது
கலகலப்பாய் போவதற்காக இதைக் கூட நாங்கள் அடிக்கடி பயன் படுத்துவோம்.
கிழக்கு பதிப்பகம் காத்தவராயன், க்ரூப்பு ஒண்ணு விற்பனைக்கு இருக்கு,
துரோகத் துரு பிடித்த அச்சாணி இப்படி பல வார்த்தைகள் இருக்கின்றது ஆசாத்.
இவைகள் பலவற்றின் பின்புலங்கள் இருக்கிறது. இது போல குழுமத்தில் உள்ள
வேறு சிலரிடம் அவர்களுக்குள் மட்டும் தெரிந்த வேறு சில வார்த்தைகள்
இருக்கின்றன. அது எனகு தெரியாமல் இருக்கலாம். அதனால் திமிர் பிடித்தவனோ
என்ற எனது வார்த்தைகளுக்கு நீங்கள் இவ்வளவு டென்ஷன் ஆக வேண்டாம். யாரிடம்
உரையாடல் நிகழ்த்தினேனோ அவர்கள் இதை கண்டு கொள்ள வில்லை. நீங்கதான்
நடுவில தேவையில்லாமல் உணர்ச்சி வசப்பட்டு இருக்கீங்க.
மனாமி அவரு எங்க விளக்கம் சொல்றாரு. எடுத்த உடனேதான் ஆட்டைக்கு வரலைன்னு
சொல்லிட்டாரே. அதுக்கப்புறம் என்னுடைய கேள்விகளுக்கு எதுவும் பதில் வரலை.
மாறா குற்றச்சாட்டுகளும், பட்டமும் மட்டும்தான் வந்தது. அவரோட
வார்த்தைகளேதான் அவருக்கு. சல்தா ஹை.
//[ஆழ்ந்து நோக்கினால்,சங் பரிவார வெறி அமைப்புகளின் சதித்திட்டங்களின்
பிரச்சாரகர்களாக தான் அறியாத/விரும்பாத நிலையிலேயே அடிமைப்பட்டுக்
கொண்டு இருக்கிறார்களோ? என்பதை ஊகிக்கத் தூண்டுகிறது; எச்சரிக்கையா
இருங்கப்பூ...!] //
பாஸ் நீங்க நான் அடிச்ச பதில்களை எல்லாம் படிக்கறீங்களா இல்லையா?
"முதலிலேயே ஒன்றைச் சொல்லி விடுகின்றேன் மத அமைப்புகள் இந்த பிரச்சினையை
அணுகும் நோக்கமே வேறானவை. அது தன்னுடைய மதத்தின் தூய்மையானதாய்
நிரூபிக்கும் பொருட்டு இன்னொரு மதத்தின் தவறுகளை விளம்பரப்படுத்தும் அற்ப
அரசியல் அங்கே எந்த ஒரு புள்ளியிலும் மனிதம் என்ற ஒன்று இல்லவே இல்லை.
சல்மான் ருஸ்டியை கொலை செய்வேன் என்று கிள்ம்பிய இந்து அமைப்புகள்,
தஸ்லீமாவிற்காக மட்டும் கருத்து சுதந்திரம் என்று பிதற்றிய குரூர புத்தி
அது."
இது நீங்க எந்த மத அமைப்புகள் என்னை மாற்றி இருக்குமோ என்று கருதி
எழுதினீர்களோ அந்த மத அமைப்புகள் குறித்து உங்களை விட வீரியமான
வார்த்தைகளுடன் விமர்சனம் செய்த வரிகள் இவை. முழுசா படிச்சுட்டு
விமர்சனம் பண்ணுங்க பாஸ்.
கமலாதாஸ் தான் அழகற்ற அவலட்சணமான பெண் என்பதாலும் அதனால் ஏற்பட்ட
நிராகரிப்புகள், பாலியல் ஏக்கங்கள் மற்றும் தாழ்வு மனப்பானமையைதான்
எழுத்துக்களாக பதிவு செய்திருக்கிறார்னு அவர்களது மனசுக்குள்ள புகுந்து
போய் கண்டு பிடிச்சு எழுதுன ஜெயமோகன் மாதிரி நீங்களும் எழுதறீங்களே.
அதென்னங்க, ஆனா ஊனா, ஆண்கள் காமக் கண்களோடவே பார்ப்பார்கள் அப்படி இப்டின்னு பேசிகிட்டு இருக்கீங்க???
சிரிப்பு வருகிறது ஆசாத். ஆம். நான் வெகு முன் முடிவுனேயே அணுகிணேன்.
அதாவது இது அடிமைத்தனமானது என்ற பெண்ணிய நோக்கில் வெகு திடமான நம்பிக்கை
கொண்டிருந்தேன். ஆனால் நீங்கள் என்னமோ முன் முடிவுகளே இல்லாமல் அணுகியது
போல பேசுகின்றீர்கள். உங்களது முன் முடிவுகள்தான் உங்களது நீங்கள்
இவ்வளவு தூரம் உணர்ச்சி வசப்படுவதிலேயே தெரிகின்றதே. முன் முடிவுடன்
இருந்தாலும் நிபந்தனைகளற்ற விவாதங்களிற்கு தயாராகவே இருந்தேன். நீங்களோ
அதை பத்தி பேசறதா இருந்தா வராத. வேறு முறையில் பேசுவதாய் இருந்தால்
மட்டுமே நான் ரெடி, இல்லைன்னா உன் வழி உனக்கு, என் வழி எனக்கு என்று
சொன்னீர்கள்.
எந்த வகையிலும் உங்களாது முன் முடிவுகள் மீதான பிம்பம் களைந்து போக
விடாமல் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் இவை. ஆனால் என்னைப் பார்த்து
குற்றம் சாட்டுகின்றீர்கள்.
அப்புறம் ஆம் எனக்கு மகிழ்ச்சி என்று தெளிவாகவே போட்டிருந்தேன். இதற்கு
முன்பு இது குறித்து விமர்சனம் எழுப்பிய பெருந்தலைகள் எவரும் அரசியல்
காரணங்களுக்காக வேறு ஏதேனும் காரணங்களோ அல்லது மழுப்பியோ பேசி வந்த
நிலையில் ஒரு பொது அரங்கில் ஒரு முக்கியமான நபர் இதை
"The problem of the burka is not a religious problem, it's a problem
of liberty and women's dignity. It's not a religious symbol, but a
sign of subservience and debasement. I want to say solemnly, the burka
is not welcome in France. In our country, we can't accept women
prisoners behind a screen, cut off from all social life, deprived of
all identity. That's not our idea of freedom."
என்று தெளிவாக பெண்ணிய நோக்கில் இதை தான் எதிர்ப்பதை சொல்லும் போது
சற்றேறக் குறைய அதே கருத்தை கொண்டிருக்கும் எனக்கு மகிழ்ச்சி ஏற்படத்தானே
செய்யும். இதில் என்ன தவறு? உங்களுக்கு மட்டும் தவறாய் தெரிந்தாலும்
எனக்கு கவலையில்லை.
நீர் இன்னும் ஊருக்கு கிளம்பலையா ஓய்?
அண்ணாச்சி, இப்பதான் கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கவே ஆரம்பிச்சிருக்காங்க....
//பெண்களை தனது உடல் முழுவதும் மறைக்க சொல்வது சரியா? தவறா? அப்படிசொல்வது பெண் அடிமைதனமா? //
ஆம். எனது பார்வையில் அப்படித்தான். இங்கே சொல்வது என்ற வார்த்தையைநீங்கள் உபயோகப்படுத்தி இருக்கின்றீர்கள். அதற்குப்பதில்
கட்டாயப்படுத்துவது என்ற வார்த்தையை மாற்றிப் போட்டுக் கொள்ளுங்கள். அது மிகப்பெரும் அடக்குமுறையே.
நீங்கள் எல்லோரும் ஒண்ணு பர்தா, இல்லைன்னா அரை குறை ஆடைகளோடயே திரிவாங்கஎன்ற ரீதியிலேயே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இதை விட அசிங்கமாய் உங்கள்பெண்களை வேறு எவரும் அசிங்கப்படுத்தி விட முடியாது. கொஞ்சம் விட்டாபோதுமே தறிகெட்டுப் போயிடுவாளுங்க என்ற ஆண்டை மனப்பான்மை இது. ஏன் ஊர்லவேற பொண்ணுங்க யாரும் சுடிதார், சேலை, அல்லது வேறு உடலை நார்மலாகமறைக்கும் வகையில் போகவே இல்லையா?
உங்களது மற்றொரு கேள்விக்கும் திரும்ப திரும்ப பதில் சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றேன். இப்போதும் சொல்கிறேன். எவரொருவருக்கும் அறிவுறுத்த உரிமைகள் உண்டுதான். ஆனால் கட்டாயப்படுத்த உரிமை இல்லை.
இதைத்தானே நான் முன்னம் எனது இடுகையிலும் சொன்னேன்.
உங்களுக்கு பர்தா அடிமைத்தனத்தின் சின்னமாகத் தெரிவதால் இஸ்லாமிய
சமுதாயத்தில் பர்தாவைப் பேணுபவர்களுக்கும் கவலையில்லை.
எங்கள் மதத்திற்குள்ளாக நாங்கள் செய்துகொள்ளும் பரிசோதனைகளை எழுதினால்
ஏற்றுக்கொள்ளவா போகின்றீர்கள். அதையும் எள்ளி நகையாடத்தான்
போகின்றீர்கள். பர்தா குறித்து மாங்குமாங்கென்று ஆசிப் எழுதிய
விளக்கங்களுக்கு உங்கள் பின்னூட்டம் எப்படி இருந்தது என்பதை எல்லாரும்
படிக்கத்தானே செய்தார்கள். எப்படியாவது இஸ்லாம் பெண்களின் மீது பர்தாவைச்
சுமத்தி அடக்குமுறைக்குள்ளாக்கிறது என்னும் கருத்தைத்தானே ஆசிபிற்குத்
தந்த பதிலில் சொல்லியிருந்தீர்கள்.
எது சொன்னலும் பர்தா பெணியத்தின் மீது இஸ்லாம் விதித்திருக்கும்
அடக்குமுறைதான் என்று பேசிவரும் உங்களிடம் இதற்குப் பின்னும் நாங்கள்
செய்துகொண்ட பரிசோதனைகளையெல்லாம் எழுதிக்காட்டிக் கொண்டிருக்கவேண்டிய
அவசியம் எனக்கு இல்லை. அதனைப் படிக்கவேண்டிய அவசியமும் உங்களுக்கு
இல்லை.
> அப்படியும் மீறி வேறு எவரிடமேனும்
> தொடர்ந்தால் நீ மூர்க்கன், மத துவேசத்தோடு எழுதுபவன் என்று குற்றச்சாடின்
> மூலம் இந்த பர்தா விவகாரத்தின் பின்னே நான் கேட்கும் பெண்ணிய நோக்கிலான
> கேள்விகளிடமிருந்து தப்பித்துக் கொள்கிறீர்கள் என்று நான் ஏன் குற்றம்
> சாட்டக் கூடாது.
உங்கள் குற்றச்சாட்டால் எனக்கு எந்த பாதிப்பும் கிடையாது.
உங்கள் எழுத்தின் மீது எனக்கிருந்த அபிப்பிராயத்தை நான் சொல்லியதால்
உங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாததைப் போலவேதான் இதுவும்.
> எந்த ஒரு விஷயத்தையும், மனிதம் சார்ந்தும், பெண்ணியம் உள்ளிட்ட
> அடக்குமுறைகளுக்கு எதிரான கோட்பாடுகள் வழியாகவும் மட்டுமே பார்க்கப்
> பழக்கப்பட்டிருக்கிறது எனக்கு. மதத்தின் ஆழ்ந்த விமர்சனங்களற்ற பற்று
> வைத்திருப்பவர்களுக்கு அத்தகைய பார்வைகள் எரிச்சலூட்டக்கூடியவையாய்
> இருப்பதில் வியப்பேதுமில்லை.
அதானால் என்ன இப்போது?
அப்படி நீங்களாக நினத்துக்கொள்வதைத் தடுக்க யாராலும் முடியாது. அது
இஸ்லாமியர்களின் மீது நீங்கள் கொண்டிருக்கும் முன்முடிவான
காழ்ப்புணர்ச்சி என எனது சந்தேகம் இன்னமும் உறுதியாகின்றது. ஒரு முஸ்லீம்
இபடித்தான் நினைப்பான் என்னும் முன்முடிவு உங்களை இப்படி எழுத
வைக்கின்றது. அது உங்கள் உரிமை, இஸ்லாமியர்கள் அவர்களையே
அசிக்கப்படுத்திக்கொள்வதாக இருக்கட்டும்.
அது உங்கள் பார்வை. இஸ்லாமியர்களை கேலிக்குள்ளாக்கவேண்டும் என்னும்
முடிவுடன் துவங்கப்பட்ட இந்த இழை அதனுடைய காரியத்தை நன்றாகவே
செய்துகொண்டிருக்கிறது. நந்தாவும் சரியாக எங்கெங்கெல்லாம் வாய்ப்பு
கிடைக்கிறட்ஜோ அங்கெல்லாம் இஸ்லாமியர்களை நன்றாக்வே சாடிவிட்டார்.
பார்க்கலாம் இன்னும் எத்தனை தொடர்கிறார் என்று.
எனவேண்டுமானாலும் பேசுங்கள் நந்தா, இஸ்லாமியர்கள்தானே, பொத்திக்கொண்டு
போவார்கள்.
*
ஆசிப்,
மன்னிக்கவேண்டுகின்றேன். நந்தாவின் கருத்துகள் அடிப்படையில் இஸ்லாமியக்
கேலியையே கொண்டிருக்கின்றன என்னும் சந்தேகம் உறுதிப்படுகின்றது.
என் மேலான மதிப்பீடுகளை நீங்கள் மாற்றிக் கொள்ளப் போவதில்லை. நீங்கள் என்
மீது என்ன மதிப்பீடு வைத்திருக்கிறீர்கள் என்றும் எனக்குக் கவலை இல்லை.
இதனால் என்னுடைய நடவடிக்கைகளிலோ, இனி வரும் காலங்களில் நான் செய்யும்
விமர்சனங்களிலோ ஒரு சிறு இழையளவு கூட மாற்றம் இருக்கப் போவதில்லை.
மதிப்பீடுகள் குறித்தான போலி பயங்கள் ஏதும் இல்லாமல் எனக்கு சரி என்று
படுவதையும், தவறு என்று படுவதையும் மத வித்தியாசமின்றி பாராட்டியோ,
இடித்துரைத்தோ என்னுடைய முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
என்றாவது ஒரு நாள் என்னைப் பற்றிய உங்களது மதிப்பீடுகளோ, அல்லது
உங்களைப்பற்றிய எனது மதிப்பீடுகளோ மாறலாம். அன்று நாம் முகம் மலரலாம்.
நன்றி.
இதனால் என்னுடைய நடவடிக்கைகளிலோ, இனி வரும் காலங்களில் நான் செய்யும்விமர்சனங்களிலோ ஒரு சிறு இழையளவு கூட மாற்றம் இருக்கப் போவதில்லை.
அதுவும் ஆணாதிக்கவாதியின் கையால் விருது வாங்கும் பெண்ணியவாதின்னு ஊரு
ஃபுல்லா விள்ம்பரம் பண்ணா இன்னமுமே சந்தோசம். :)
துபாயிலே ஊர் ஃபுல்லா இருக்கும் ஒட்டப்பட்டிருக்கும் விளம்பரம் என்ன தெரியுமா?
"sharing accommodation available" என்பது தான்.
அதைப்போலவே உங்களது இஸ்லாமியப் பர்தா எதிர்ப்பாலும் எந்த மாற்றமும் இந்த
உலகில் நிகழப்போவதில்லை.
> இதனால் என்னுடைய நடவடிக்கைகளிலோ, இனி வரும் காலங்களில் நான் செய்யும்
> விமர்சனங்களிலோ ஒரு சிறு இழையளவு கூட மாற்றம் இருக்கப் போவதில்லை.
அவை வெறுமெனே வெற்று வேட்டுகளென்னும் எனது நினைப்பிலும் இழையளவு
மாற்றமும் இருக்கப்போவதில்லை.
> மதிப்பீடுகள் குறித்தான போலி பயங்கள் ஏதும் இல்லாமல் எனக்கு சரி என்று
> படுவதையும், தவறு என்று படுவதையும் மத வித்தியாசமின்றி பாராட்டியோ,
> இடித்துரைத்தோ என்னுடைய முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
அதனால் இந்தச் சமுதாயத்திற்கு எந்தப் பிரயோசனமும் இல்லை, உங்களது
சுயதிருப்தியைத் தவிர.
> என்றாவது ஒரு நாள் என்னைப் பற்றிய உங்களது மதிப்பீடுகளோ, அல்லது
> உங்களைப்பற்றிய எனது மதிப்பீடுகளோ மாறலாம். அன்று நாம் முகம் மலரலாம்.
> நன்றி.
நீங்கள் மாறாதவரையில் உங்கள் மேலிருக்கும் எனது மதிப்பீடுகள் மாறாது,
எனது மதிப்பீட்டால் உங்களுக்குக் கவலை ஏதும் இல்லையெனும் பட்சத்தில்
அதற்காக ஏன் நானோ நீங்களோ வருத்தப்படவேண்டும்.
பிரேம்,
நீங்கள் விளையாட்டாக எழுதினாலும், யாரேனும் இந்த இழையின் தலைப்பையும்
உள்ளே நடந்த உரையாடல்களையும் படித்தார்களென்றால் அதுதான் உண்மை என்று
விளங்கிக்கொள்வார்கள்.
பிரேம்,
நீங்கள் விளையாட்டாக எழுதினாலும், யாரேனும் இந்த இழையின் தலைப்பையும்
உள்ளே நடந்த உரையாடல்களையும் படித்தார்களென்றால் அதுதான் உண்மை என்று
விளங்கிக்கொள்வார்கள்.