பழைய பாடல் Vs புதிய பாடல் - வாதங்கள் மட்டும்.

6,096 views
Skip to first unread message

Naresh Kumar

unread,
Nov 19, 2009, 2:19:12 AM11/19/09
to பண்புடன்
பழைய பாடலா புதிய பாடலா பட்டி மன்றத்தின் வாத, விவாதங்கள் மட்டும் இந்த இழையில்....இது படிப்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும்....வாதங்கள் மீதான பின்னூட்டங்கள் பழைய இழையிலும், கும்மிகள் தனி இழையிலுமே தொடருங்கள்...
 
புதிதாக வாதம் வைப்பவர்களும் பழைய இழையிலேயே வையுங்கள், அதையே இங்கு காப்பி செய்து போட்டுக் கொள்கிறோம்.......நன்றி!!!
 
 

Naresh Kumar

unread,
Nov 19, 2009, 2:20:21 AM11/19/09
to பண்புடன்

பட்டி மன்றம்: பழைய பாடலா, புதிய பாடலா....

பேசவேண்டியவை : சமுதாயம் குறித்த கருத்துகள், காதல், தமிழின் மேன்மை மற்றும் இலக்கியம்

வரையறை: அன்னக்கிளிக்குப் பின் வந்தவை புதிய பாடல்கள், அன்னக்கிளிக்கு முன் வந்தவை பழைய பாடல்கள்

 

Naresh Kumar

unread,
Nov 19, 2009, 2:21:32 AM11/19/09
to பண்புடன்

புதிய பாடல் அணி: வில்லன்

அறிமுகம் பண்ணிக்கோங்கனு சொன்னதும்  எனக்கு இண்டர்வ்யூல கேட்கப்படும் டெல் மீ அபெட் யுவர் செல்ப் தான் நியாபகம் வருது,

அதனாலயே கொஞ்சம் டென்சனா,நெர்வசாவே எனது உரையை தொடங்குகிறேன்.

நட்டுவர் அவர்களே,,,

சமூக கருத்துகளையு, காதலையும், தமிழையும் தமிழிலக்கணத்தையும் மேம்படுத்தியது  புதிய பாடலே என்ற அணியின் சார்பில் இங்கே உரையாற்ற வந்திருக்கிறேன் நட்டுவர் அவர்களே....

நட்டுவர் அவர்களே அந்த காலத்திலே சமூக கருத்துனா அது எம் ஜி ஆர் மட்டுமே... அவரும் அவர் கட்சி விளம்பரத்துக்காக பல பல சமூக கருத்து பாடல்களை வியாபார நோக்கோடு பாடினார் நட்டுவர் அவர்களே...

ஆனால், புதிய பாடல்கள் காலத்திலே ரஜினி முதல் வடிவேல் வரை சமூக சிந்தனைகளை வியாபார நோக்கோடு அல்லாமல் நிஜமான சமூக சிந்தனைக்காகவே முயன்றவர்கள் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் நட்டுவர் அவர்களே........

எட்டனா இருந்தா எடூரு எம்பாட்டை கேட்கும்,

பத்தனா இருந்தா பத்தூரு எம்பாட்டை பாடும் என்றும்,

காசுக்குத்தான் மதிப்பு இருக்கு மனுசனுக்கு எங்கே இருக்கு என்றும்

ரஜினியும், வடிவேலும் இளையராஜாவின் இசையினிலே பாடியிருப்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன் நட்டுவர் அவர்களே.........

 அடுத்து காதல்.........

பழைய பாடல்களில் காதல் என்பது பல் போன வயசானவர்கள் மெல்லும் அவலை போன்றது நட்டுவர் அவர்களே.....

அந்த கால காதல் பாட்டிலே வெறும் மெல்லிசை மட்டும்தான் இருந்தது நட்டுவர் அவர்களே... பிரிவுக்கும் அதே ட்ர்யூனு, சந்தோசம் மகிழ்ச்சிக்கு அதே ட்யூனு, சோகம்னா கொஞ்சம் கம்பியை மீட்டும் இசைக்கருவியை கொஞ்சம் எக்ஸ்ட்ராவா இழுப்பார்கள், அதுதான் அவர்கள் காமிக்கும்

டிபர்ன்சியேசன்.....

நம்ம புதியவங்க பாடுறாங்க பாருங்க,

நேரம் தின்றாய் நினைவை தின்றாய் என்னை தின்றாய் பிழையில்லையா...என்று காதலியின் கடைக்கன் பார்வை கிடைக்காமல் அவளை பார்த்து ஒரு துடிப்புடன் பாடுகிறான் நட்டுவர் அவர்களே.

அதே காதலி கடைக்கண் அசைவுக்கு பின் இது வரை எனக்கில்லை முகவரிகள் அதை நான் தந்தேன் உன் புன்னகையில்என்று ஒரு பிட்டை போட்டு அவனோட காதலை அழகாக மேம்படுத்தி காட்டுகிறான் நட்டுவர் அவர்களே........

அடுத்ததாக தமிழும், தமிழிழக்கணமும் ......

6.5 கோடி பேர்களின் ஒருவன் அடியேன் தமிழன் என்று ஆஸ்கர் நாயகனில் குரலிலே, தமிழனை மேம்படுத்தி காட்டப்படுகிறது நட்டுவர் அவர்களே...

மேலும் நமது உறவெல்லாம் நம்நாட்டில் தான் என்று நினைத்தோம் தவறாகத்தான்.இங்கும் உறவு உள்ளது.. தமிழன் மனது பெரியதுஎன்று நா.முத்துகுமார் வரிகளிலே ராக தேவனின் இளவலின் இசையிலே தமிழனை மேலும் மேம்படுத்தி காட்டப்பட்டது நட்டுவர் அவர்களே.......

கவல ஏதுமில்ல ரசிக்கிறேன் கேட்டுப்படி, சேரிக்கும் சேரவேணும், அதுக்கொரு பாட்டப் படி, என்னயே பாரு எத்தன பேரு,    தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டும் பாடு.....

சொன்னது தப்பா தப்பா...ஆஆஆ... சொன்னது தப்பா தப்பா,

ராகத்தில் புதுசு என்னுதப்பா என்று தமிழிழக்கணத்தை எளிமை படுத்தி பெருமை கொள்கிறார் ராகதேவன் இசைஞானி இளையராஜா..............

நேரம் இல்லாத காரணத்தால், சிறு அறிமுகத்தோடு எனது முதல் அவை உரையை நிறைவு செய்கிறேன்..  வாய்ப்பு தந்த நட்டுவர்களுக்கும் அனைவருக்கும்

.... நன்றி......... வணக்கம்..........

Naresh Kumar

unread,
Nov 19, 2009, 2:25:01 AM11/19/09
to பண்புடன்
ஆஹா! காதல், தமிழ், தமிழ் இலக்கணம் என்று எல்லாத்தையுமே புதிய சினிமாப் பாட்டுத் தான் மேம்படுத்தியதுன்னு சொல்லி முதல் பந்திலேயே சிக்சர் அடிச்சிட்டாரயா வில்லன்!

 
எட்டனா இருந்தா எடூரு எம்பாட்டை கேட்கும், 
பத்தனா இருந்தா பத்தூரு எம்பாட்டை பாடும் 


என்னா பாட்டு! என்னா தத்துவம்! 

காசே தான் கடவுளப்பா- அந்தக் 
கடவுளுக்கும் இது தெரியுமப்பா 
கைக்குக் கை மாறும் பணமே -உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே 
நீ தேடும் போது வருவதுண்டோ 
விட்டுப் போகும் போது சொல்வதுண்டோ? -ன்னு ஆறு வரியிலே டி.எம்.எஸ்.பாடினதை வடிவேலு ஒரே வரியிலே பாடிட்டார் பாருங்கய்யா! 


பழைய பாடல்களில் காதல் என்பது பல் போன வயசானவர்கள் மெல்லும் அவலை போன்றது நட்டுவர் அவர்களே.....

அது தானே! 

இயற்கை என்னும் இளையகன்னின்னு ஒரு பாட்டுயா! அதுலே பார்த்தீங்கன்னா, ஜெமினி இக்கரையிலிருந்து பாடுவாரு, காஞ்சனாம்மா அக்கரையிலிருந்து பாடுவாங்க....அவரைப் போயி காதல் மன்னன்னு சொல்லிட்டுத் திரியறாங்க பழைய ஆளுங்க! இப்படி ஒரு கிலோ மீட்டர் 'கேப்" வுட்டு நின்னா காதல் என்னாத்துக்கய்யா ஆவுறது?  


பிரிவுக்கும் அதே ட்ர்யூனு, சந்தோசம் மகிழ்ச்சிக்கு அதே ட்யூனு, சோகம்னா கொஞ்சம் கம்பியை மீட்டும் இசைக்கருவியை கொஞ்சம் எக்ஸ்ட்ராவா இழுப்பார்கள், அதுதான் அவர்கள் காமிக்கும்
டிபர்ன்சியேசன்.....

சிரிச்சா சிதார் வாசிப்பாங்க! அழுகை காட்சின்னா ஷெனாய் வாசிப்பாங்க!! சண்டைக் காட்சின்னா ட்ரம்ஸ்! சங்கர் கணேஷ் சண்டைக்காட்சின்னா "அச்சிப் பிச்சி உய்யாலா...கிச்சுப் பிச்சு குய்யாலா" ன்னு கோரசிலே குரல் கொடுப்பார். டைரக்டர் கர்ணன் படம் பாருங்க! குறைஞ்ச பட்சம் ராஜ் கோகிலாவைப் பார்க்கிரதுக்காவது பாருங்க.  


“இது வரை எனக்கில்லை முகவரிகள் அதை நான் தந்தேன் உன் புன்னகையில்” என்று ஒரு பிட்டை போட்டு அவனோட காதலை அழகாக மேம்படுத்தி காட்டுகிறான் நட்டுவர் அவர்களே.......

பாருங்கப்பா! காதலனைப் பார்த்ததுக்கு அப்புறம் தான் அவளுக்கு ரேஷன் கார்டு இல்லைன்னே ஞாபகத்துக்கு வருது பாருங்க!  


எதிர்த் தரப்புக் காரங்க என்ன சொல்லப்போறாங்களோ? வாருங்கையா! ஜீவ்ஸ்! வாங்க!! 

தமிழன் வேணு 

Naresh Kumar

unread,
Nov 19, 2009, 2:29:57 AM11/19/09
to பண்புடன்

பழைய பாடல்: ஜீவ்ஸ்

பழைய பாடலே என்ற தலைப்பில் பேச அணித்தலைவர் மிகவும் பிசியாக இருப்பதால் அவருக்குப் பதில் நானே முதலில் வாதிட வருகிறேன்.

 

 

நடுவர் உள்ளிட்ட அவையை வணங்குகிறேன்.

 

பாருங்க நடுவர் அவர்களே, புதுப்பாடல் அணித்தலைவர்க்கு கொஞ்சம் கூட டீசன்ஸியே இல்ல. அவைக்கு ஒரு வணக்கம் வச்சாரா ? எப்படி வரும் ? புதுப்பாட்டைக் கேட்டுட்டே இருந்தா எப்படி வருங்கறேன்?

 

பாருங்க நடுவர் அவர்களே, நேத்து பஸ்ஸில போய்ட்டு இருந்தேன். திடீர்னு பாத்தா யாரோ சண்டை போடறாங்க. " போடா, போடி, போடா, போடி " அப்படின்னு. பக்கத்துல இருந்த சின்ன பையன் கிட்ட  கேட்டேன் நடுவர் அவர்களே. அவன் சொன்னான். அண்ணே  இது கந்த சாமி படத்தோட பாட்டுன்னான். இதெல்லாம் பாட்டாம்? இப்படி பட்ட பாட்டைக் கேட்டா என்னாகும்? இப்படித்தான் மரியாதையே இல்லாம ஆரம்பிப்பாங்க.

 

எதிரணித்தலைவர் சொன்னார் வடிவேலு சமூகச் சிந்தனையோட எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்டைக் கேக்கும் அப்படின்னு பாட்டை பாடினாராமா. காசு இருந்தா தான் எல்லா இடத்திலையும் மதிப்புங்கறதை அப்படி சொன்னாங்கன்னு..  இவரு சீரியஸா சொல்றாரா இல்லை வடிவேலு மாதிரி ஜோக்குக்கு அதெல்லாம் ஒரு பாட்டுன்னு கொண்டு வந்துட்டாரான்னு தெரியல. அவருக்குத் தெரிஞ்சது ஒரு பாட்டு தான் நாங்க எத்தனை வேணும்னாலும்  தருவோம்.

 

கையில வாங்குனேன் பையில போடல காசு போன இடம் தெரியல. இந்தப் பாடல்ல  ஒரு நடுத்தர வர்கத்தோட துயரம் எவ்வளவு அழகா சொல்லிருப்பாங்க.

காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் அது தெரியுமப்பா, பணம் பந்தியிலே குணம் குப்பையிலே அப்படின்னு காசு பத்தின பாடல்கள் இருக்குங்க பாத்துக்கிடுங்க.

 

சமூகச் சிந்தனை உள்ள பாடல்கள் அப்படின்னாலே பழைய பாடல்கள் தான்னு அவருக்கு ஏனோ தெரியாமப் போச்சு

 

"ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பதும் மாறாதா " இன்றைக்காவது இந்த நிலைமை மாறி இருக்கிறதா ? இல்லையே

 

" தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா.. மனிதன் தானா "   எதிரணித்தலைவர் அவரைத்தான் கேட்கிறேன் என்று முறைக்கிறார். இல்லை நடுவர் அவர்களே.  தீய வழியில் செல்லும் ஒவ்வொரு மனிதனையும் பார்த்து  கேட்கப் படும் கேள்வி இது.  வேண்டுமானால் புதுப்பாடல்களை விரும்பிக் கேக்கும் ஒவ்வொருவரையும் கேட்டதாக வைத்துக் கொள்ளலாம்.

 

ஒரு மனிதன் எப்படி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று அழகாகச் சொல்லும் பாடல் " அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் .. இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் "  என்பதை மறுக்க முடியுமா ?

 

அதை விடுங்கள் நடுவர் அவர்களே, அந்தக் காலத்துக் கவிஞன் தன் பாடலில் நிலவுக்கே ஆடை கட்டி பார்த்தவன்.  நிலவு எப்படி வந்ததாம் ?

 

" ஆடை கட்டி வந்த நிலவோ ..." பாருங்கள் வெறும் நிலவென்று சொல்லாமல் ஆடை கட்டி வந்த நிலவு என்று என்ன அற்புதமான உவமை.

 

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா

இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்

திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா

 

என்று புத்தி மதி சொல்வதாகட்டும்,

 

அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை திராவிடர் உடமையடா

 

என்று நெஞ்சில் உரமூட்டுவதாகட்டும் பழைய பாடலுக்கு நிகர் பழைய பாடல் தான் நடுவர் அவர்களே!   எல்லாவற்றிற்கும் மேலாக

 

" சந்தேகக் கோடு அது சந்தோசக் கேடு " என்று இரண்டே வார்த்தைகளில் வாழ்க்கையின் தத்துவத்தை எடுத்து வைத்தது எங்கள் பழைய பாடல் தான்.

 

 

அடுத்து காதலைப் பற்றி சொன்னார்கள் எதிரணித் தலைவர்.

நேரம் தின்றாய் நினைவை தின்றாய் என்னை தின்றாய் பிழையில்லையா...  என்று காதலன் காதலியைப் பார்த்து பாடுகிறாராம். என்ன கொடுமை இது. காதலி என்ன நரமாமிசம் சாப்பிடுபவளா? இல்லை  காதலன் தான் கடலை பட்டாணியா எடுத்து தின்பதற்கு ? இதை எல்லாம் கேட்பதற்கு ஆளில்லையா நடுவர் அவர்களே ?

 

பழைய பாடல்களில் காதலை எவ்வளவு நாசூக்காக சொல்லி அதுவும் தொடவும் அனுமதி கேட்டிருக்கிறார்கள். அது கண்ணியம்

 

" மெதுவா மெதுவா தொடலாமா .. தொடலாமா, உன் மேனியிலே கை படலாமா... படலாமா " உடனே அந்த அம்மா பாடும்

"வெக்கம் இப்போது வரலாமா... விலகிச் செல்வது சரிதானா "

 

இதாவது பரவாயில்லை.

காதலனும் காதலியும் தோட்டத்தில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் பாடிக்கொண்டே

 

" வாடிக்கை மறந்ததும் ஏனோ எனை வாட்டிட ஆசை தானோ "  அப்படி பாடிக் கொண்டிருக்கையில் நாயகன் கை நாயகியின் கை மீது பட்டுவிடும். உடனே நாயகி பாடுவார்

 

" பொறுமை இழந்திடலாமோ, பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ .

நான் கருங்கல்லு சிலையோ காதலெனக்கில்லையோ

வரம்பு  மீறுதல் முறையோ "

 

 

 

என்ன தான் காதலன் காதலி என்றாலும் வரம்புக்குள் இருக்க வேண்டும் என்ற சமூக ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பது பழைய பாடல்கள் அல்லவா? அல்லது

" கட்டிப் புடி கட்டிப் புடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா " என்று அழைக்கும் புதிய பாடல்களா ?

 

தமிழைப் பற்றி புதியப் பாடல்கள் பேசுவதாய் கூறி நகைப்பூட்டுகிறார் எதிரணித் தலைவர். புதுப் பாடல்கள் சிலவற்றை பாருங்கள் தமிழ் எங்கே இருக்கிறது என்று தேடலாம்

 

" எக்ஸ் மச்சி ஒய் மச்சி எஃப் எம் மச்சி "

" எக்ஸ்க்யூஸ்மி மிஸ்டர் கந்தசாமி " இந்த பாடலில் " ஹாட்டா கோல்டா நீயே தொட்டுப் பாரு " என்று கதாநாயகனை இழுக்கிறார் நாயகி... கருமம் கருமம்.

 

பழையபாடல் வரிகளைப் பாருங்கள்

 

" செந்தமிழா எழுந்து வாராயோ.. உன் சிங்காரத் தாய் மொழியைப் பாராயோ "

 

என்று அழைத்து அவனுக்கு மொழியுணர்வு ஊட்டியது பழைய பாடல்கள் தான்.  தமிழுக்கும் அமுதென்று பேர் என்று தமிழின் இனிமையை எடுத்துக் காட்டுவது பழைய பாடல்கள் தான்.

 

பழைய பாடலின் உவமை நயத்தை பாருங்கள் நடுவர் அவர்களே

 

 

 

 பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோதநான் வளை கொண்ட கையாலே மெதுவா மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாகநான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூறஆஹா ஆஹா இன்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம்.

 

 

மொத்தத்தில் சமூக நலமாகட்டும், காதலாகட்டும் தமிழும் இலக்கியமும் ஆகட்டும் அதை  நிலை நாட்டுவதில் முன்னால் நிற்பது பழைய பாடல்கள் என்பதைச் சொல்லிக் கொண்டு

 

இதைக் கேட்டே எதிரணிக் கலங்கி ஓட்டம் எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்று மீண்டும் எதிர்வாதம் வைக்க நரேஷ் வருவாராயின் எங்கள் சென்ஷி பதிலடித் தர காத்துக்  கொண்டிருக்கிறார் என்பதையும் இங்கே தெளிவுப் படக் கூறி என் வாதத்தை முடிக்கிறேன்

 

( சோடா குடுங்கப்பா... நாக்கு வரளுது )

Naresh Kumar

unread,
Nov 19, 2009, 2:34:12 AM11/19/09
to பண்புடன்

நடுவர் வாதம்

பாருங்க நடுவர் அவர்களே, புதுப்பாடல் அணித்தலைவர்க்கு கொஞ்சம் கூட டீசன்ஸியே இல்ல. அவைக்கு ஒரு வணக்கம் வச்சாரா ? எப்படி வரும் ? புதுப்பாட்டைக் கேட்டுட்டே இருந்தா எப்படி வருங்கறேன்?

 

 பரவாயில்லே விடுங்க! அவர் பாட்டுக்கு புதுப் பாடல் ஸ்டைலிலே "வாய்யா வாய்யா என் பேர் வில்லன். நடுவா நீயோ சொத்தைப் பல்லன்"ன்னு பாடாம இருந்தாரே! அது வரைக்கும் சந்தோசம்! 

 

 திடீர்னு பாத்தா யாரோ சண்டை போடறாங்க. " போடா, போடி, போடா, போடி " அப்படின்னு. பக்கத்துல இருந்த சின்ன பையன் கிட்ட  கேட்டேன் நடுவர் அவர்களே. அவன் சொன்னான். அண்ணே  இது கந்த சாமி படத்தோட பாட்டுன்னான். இதெல்லாம் பாட்டாம்? இப்படி பட்ட பாட்டைக் கேட்டா என்னாகும்?

 

 இதைப் பத்தி ஏதாவது சொன்னா இன்னொரு இழையிலே தமிழன் வேணு ஒரு ஆணாதிக்கவாதின்னு திட்டிருவாங்க! இதையும் விட்டிரலாம்.

 

கையில வாங்குனேன் பையில போடல காசு போன இடம் தெரியல. இந்தப் பாடல்ல  ஒரு நடுத்தர வர்கத்தோட துயரம் எவ்வளவு அழகா சொல்லிருப்பாங்க.

 

 அப்படிப் போடுங்கய்யா! இந்த மாதிரி பாட்டெல்லாம் யார் எழுதறாங்க இப்போ? இத்துனூண்டு முத்தத்திலே இஷ்டமிருக்கா இல்லே இங்கிலீஷ் முத்தத்திலே கஷ்டமிருக்கான்னு எழுதறாங்க! அதென்னையா இங்கிலீஷ் முத்தம், தெலுங்கு முத்தமுன்னுக்கிட்டு...? இவனுக ஆங்கில மோகத்துக்கு ஒரு அளவே இல்லையா? 

 

 சமூகச் சிந்தனை உள்ள பாடல்கள் அப்படின்னாலே பழைய பாடல்கள் தான்னு அவருக்கு ஏனோ தெரியாமப் போச்சு

 

 அனுபவம் பத்தாதுங்கிறேன்! வலியோரை வாழ்த்தி எளியோரை வாட்டும் உலகே உன் செயல் தான் மாறாதா?ன்னு மனம் குமுருற பாடல் எல்லாம் இப்போ வருதா? 

 

 

"ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பதும் மாறாதா " இன்றைக்காவது இந்த நிலைமை மாறி இருக்கிறதா ? இல்லையே

 

 அதே பாட்டுலே "படித்த மாந்தர் நிறைந்த நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடைமை. நல்ல மனமும் பிள்ளைக் குணமும் எங்கள் வீட்டின் தனியுடைமை"ன்னு வீடு எப்படியிருக்கனும், நாடு எப்படியிருகக்கணுமுன்னு சொன்னது மாதிரி யாராவது இப்போ சொன்னாங்களா? 

 

 ஒரு மனிதன் எப்படி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று அழகாகச் சொல்லும் பாடல் " அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் .. இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் "  என்பதை மறுக்க முடியுமா ?

 

 "அச்சமின்றி ஆடிப் பாட வேண்டும் விடுதலை

அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை"ன்னு புரட்சித் தலைவர் பாடினதை எப்படிய்யா மறந்தீங்க வில்லன்? 

 

 " ஆடை கட்டி வந்த நிலவோ ..." பாருங்கள் வெறும் நிலவென்று சொல்லாமல் ஆடை கட்டி வந்த நிலவு என்று என்ன அற்புதமான உவமை.

 

 இது நமீதா யுகமய்யா! அவுங்களுக்கெல்லாம் ஆடை கட்டத் தெரியாது. எல்லாப் பொம்பிளைங்களும் கையிலே பலகையைத் தூக்கிட்டு "சினிமா நடிகைங்களே, ஒழுங்கு மரியாதையா போர்த்திக்கிட்டு நடியுங்க"ன்னு சொல்லுற அளவுக்கு சினிமா இருக்கு! இவங்க எங்கே நிலவுக்கு ஆடை கட்டுறது. த்ரேதாயுகம், துவாபர யுகமுன்னு சொல்லுவாங்க! இப்போ ஷ்ரேயா யுகம் நடந்திட்டிருக்கே! 

 

 குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா

இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்

திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா

 

 ஆஹா! கேளுங்க அப்பு! 

 

 அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை திராவிடர் உடமையடா

 

 வாழ்ந்தவர்கள் கோடி மறைந்தவர் கோடி

மக்களின் மனதில் நிற்பவர் யார்?

 

மக்கள் திலகம் அய்யா! அந்தக் காலத்துலே கதாநாயகன் என்ட்ரி ஆகும்போது இந்த மாதிரிப் பாட்டு வரும். இப்போ என்னடான்னா 'கைப் படாத சி.டி. கழுவாத ஜாடி"ன்னு பாட்டு போடுறாங்க. 

 

 " சந்தேகக் கோடு அது சந்தோசக் கேடு " என்று இரண்டே வார்த்தைகளில் வாழ்க்கையின் தத்துவத்தை எடுத்து வைத்தது எங்கள் பழைய பாடல் தான்.

 

 இல்லியா பின்னே?

 "தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்- அதற்கு

சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தை ஆகும்"னு சி.எஸ்.ஜெயராமன் "தெய்வப்பிறவி" படத்துலே பாடின பாட்டை எப்படி மறக்க முடியும்? 

 

 காதலி என்ன நரமாமிசம் சாப்பிடுபவளா? இல்லை  காதலன் தான் கடலை பட்டாணியா எடுத்து தின்பதற்கு ? இதை எல்லாம் கேட்பதற்கு ஆளில்லையா நடுவர் அவர்களே ?

 

 அதானே! உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?ன்னு பாட்டு! இவனை என்ன, அந்தம்மா ஜாடியிலேயா மூடி வைச்சிருக்காங்க? 

 

 " மெதுவா மெதுவா தொடலாமா .. தொடலாமா, உன் மேனியிலே கை படலாமா... படலாமா " உடனே அந்த அம்மா பாடும்

"வெக்கம் இப்போது வரலாமா... விலகிச் செல்வது சரிதானா "

 

 இங்கே பாருங்கய்யா! பர்மிஷன் கேட்டுத் தான் தொடவே செய்வாங்க அவுங்க. 

 

 " பொறுமை இழந்திடலாமோ, பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ .

நான் கருங்கல்லு சிலையோ காதலெனக்கில்லையோ

வரம்பு  மீறுதல் முறையோ "

 

 பட்டுக்கோட்டையா கொக்கான்னேன்! 

 

 " கட்டிப் புடி கட்டிப் புடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா " என்று அழைக்கும் புதிய பாடல்களா ?

 அது சரி, யாரைக் கட்டிப் புடிக்க சொல்லுறான்னு விசாரிச்சீங்களாய்யா? 

 

 " எக்ஸ் மச்சி ஒய் மச்சி எஃப் எம் மச்சி "

" எக்ஸ்க்யூஸ்மி மிஸ்டர் கந்தசாமி " இந்த பாடலில் " ஹாட்டா கோல்டா நீயே தொட்டுப் பாரு " என்று கதாநாயகனை இழுக்கிறார் நாயகி... கருமம் கருமம்.

 

 அந்த ஆளு என்ன தர்மாமீட்டரா? இப்போ வர்ற பாட்டெல்லாம் தமிழ் சினிமாவோட "கர்மா"மீட்டரா இருக்கய்யா! 

 

  பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோதநான் வளை கொண்ட கையாலே மெதுவா மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாகநான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா? -உன்

கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பதை அறிவாய் இல்லையா?

 

கூந்தலை மேகமாகவும், பூச்சரத்தை மின்னலாகவும் உவமித்த கவியரசு மாதிரி இன்னொருத்தர் பொறந்து வரணுமையா!

 

தூள் கிளப்பிட்டீங்க! பாவம், எதிரணிக் காரங்க என்ன செய்வாங்களோ தெரியலே! யாரு வரப்போறீங்க! வாங்க! வாங்க!!

 தமிழன் வேணு

Naresh Kumar

unread,
Nov 19, 2009, 2:45:50 AM11/19/09
to பண்புடன்

புதிய பாடல்: நரேஷ்

நடுவர் அவர்களே,

என்னடா இவனும் வணக்கம் சொல்லாம ஆரம்பிக்கிறானேன்னு பாக்கறீங்களா??? என்னமோ இங்க இருக்கிற எல்லாருக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியாத மாதிரியும், இப்பதான் அறிமுகம் ஆகற மாதிரியும், வணக்கம் வைக்கலைங்கறதை ஒரு குத்தமா சொல்றாங்க..... நாங்க புதுப் பாட்டு ஆசாமிங்க நேரடியா பேசித்தான் பழக்கம், அதான் நேரா விஷயத்துக்கு எங்க ஆளு வந்தாரு...அவிங்க, பழைய பாட்டு ஆசாமிங்கன்னு எப்படி நிரூபிக்கிறாங்க பாருங்க, எதையுமே வளா வளா, கொல கொலன்னுட்டு.... சமூகம் எங்களை மாதிரி இளைஞர்களை எப்படி தப்பா புரிஞ்சிட்டிருக்கோ, அதே மாதிரிதான் இந்தப் புதுப் பாடலையும் தப்பா புரிஞ்சிட்டிருக்கு....

 

எதிரணில எடுத்தவுடனே ஆரம்பிச்சாங்க, காசோட முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஏகப்பட்ட பாட்டு பழசுல வந்திருக்கு. புதுசுல வர்லைன்னு....உண்மைதான் நாங்க காசைப் பத்தி எழுதுறதில்லை..காதலைப் பத்திதான் அதிகம் எழுதுறோம்... ஏன்? காசுதான் முக்கியம், காசுதான் முக்கியம்னு எல்லாரும் அடிச்சுகிட்டு சாகாதீங்கடா...ஒருத்தரை ஒருத்தர் அன்பு செய்யுங்கடான்னு சொல்றோம்.. இது புரியாமா காசுதான் முக்கியம், காசுதான் முக்கியம் அவிங்க மாதிரி தப்பான வழியில போகச் சொல்ல நாங்க விரும்பலை....

 

நீ மனுசந்தானா ந்னு பழசுல பாட்டு பாட்டு பாடுனாங்களாம், அதை இவரு தூக்கிட்டு வந்திட்டாரு, பொல்லாதவன் படத்துல கருணாஸ் எல்லார்கிட்டியும் நீ கேளேன், நீ கேளேன் ந்னு கேக்குற மாதிரி ஏனுங்க நீ மனுசந்தானா, நீ மனுசந்தானான்னு இவரு கேட்டுகிட்டே இருக்காரு...சார், கேள்வி கேக்காதீங்க சார்...பதில் சொல்லி பழகுங்க..நாங்க சொன்னோம்ல..மனிதன் மனிதன் எவந்தான் மனிதன், வாழும்போது செத்து பிழைப்பவன் மனிதனா........தன்மானம் காக்கவும், பிறர்மானம் காக்கவும் வாழும் மனிதன் எவனோ அவனே மனிதன் தெளிவா சொன்னோம்ல.....தன்மானம் காக்கவும், பிறர் மானம் காக்கவும்னா, எங்க அணி மானம் மட்டுமில்லாம, உங்க அணி மானத்தையும் காப்பாத்தா கூட நாங்கதான் வரணும்னு சொன்னா புரிஞ்சுக்காம பழைய பல்லவியை பாடிகிட்டு....

 

இவரு போடா போடின்னு பாட்டு கேட்டுட்டு ஷாக் ஆயிட்டாராம்...எப்பேர்பட்ட விஷயத்தை அந்தப் பாட்டுல நாங்க சொல்லியிருக்கிறோம்...இது கார்ப்பரேட் உலகம், அலுவலகத்தில் எப்படி எல்லாரையும் பாலின வேறுபாடோ, பதவி வேறுபாடோ இல்லாம பெயர் சொல்லி அழைக்கிறோமோ அதே மாதிரி, குடும்பத்திலும் ஆணும் பெண்ணும் சமம் என்பதைத்தான் மறைமுகமா அந்தப்பாட்டுல சொல்லியிருக்கோம்....காதலி / மனைவி வாயால செல்லமா ச்சீ போடா, ம் அவ்ளோதானா, ராஸ்கல், போன்ற வார்த்தைகளை(கவிதைகளை), திட்டல்களை?(கொஞ்சல்களை) கேக்குற சுகம் இருக்கே, அடடா!!!....அதை விட்டுட்டு அந்த காலம் மாதிரி அத்தான், பொத்தான், ’பிராணநாதாந்னு கூப்பிட்டு பாட்டு எழுதனுமாக்கும், அதுக்கு பிராணத்தையே விட்டுடலாம்.... அந்த காலத்துல கணவன் பேர் சொல்றதையே பெருங்குத்தமா சொன்னாங்க, ஆனா நாங்க சமத்துவ சமுதாயத்தையே படைக்கிறோம்....

 

காதல் பாட்டு கேக்கனும்னு கட்டிபுடி கட்டிபுடி பாட்டை கேட்டாராம்...ஏம்பா, நைட்டு யாருக்கும் தெரியாம மிட்நைட் மசாலா பாத்துட்டு இங்க வந்து நல்லவங்களாட்டாம் ஆக்டிங் உடுறது??? இதுல விசேஷம் என்னான்னா, இந்த மாதிரி ஜொள்ளு பார்ட்டிங்க, வயசான காலத்துல கேட்டு ரசிக்கனும்னு கூட நாங்க பாட்டு போட்டிருக்கோம் பாருங்க, அதான் ஸ்பெஷலே!!! காதலை எப்படி நாங்க சொல்லியிருக்கோம்னு கீழ சொல்றேன்.....

 

தமிழ் இலக்கியத்தைப் பத்தி சொன்னாங்க...பாரதியாரின் பாடல்களை ஏழாவது மனிதனிலும், பாரதி படத்திலும், இன்னும் எத்தனையோ படங்களில் பயன்படுத்தி மக்களுக்கு கொண்டு போய்சேர்க்கவில்லையா....குனித்த புருவமும், பனித்தசடையும்னு தளபதியில உபயோகப்படுத்துலியா??? நறுமுகையே பாட்டுல அகநானூறுப் பாட்டான செம்புலப் பெயர் நீர்கொண்டு வரலியா? அதே பாட்டை அடிப்படையா வெச்சு,  கம்பங்கூழில் போட்ட உப்பு கஞ்சியெல்லாம் சேர்தல் போலபாட்டைக் கொடுக்கலியா? பழைய பாட்டுல என்னா பண்ணாங்க?

 

பழைய பாடல்கள் என்பது, ஒரு சின்ன வட்டத்துக்குள்ளியே சுத்திட்டிருந்துது....ஆனா புதுப் பாடல்கள் அப்படியில்லை...எல்லா தரப்பினருக்கும், சமூகத்திற்கும், மக்களுக்கும் பாட்டை கொடுத்திருக்கு....கிராமிய பாட்டுகளை மக்களுக்கு அதிகம் கொண்டு சென்று சேர்த்திருக்கிறது, இன்னிக்கும் ஒத்த ரூவா தாரேன் பாட்டோ, வாளை மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் போன்ற பாடல்களோ இல்லாதா கிராமிய திருவிழாவை உங்களால் காட்ட முடியுமா? கிராமத்து முளைப்பாரி பாட்டை வைத்து இசைக்கப்பட்ட மிகச் சிறந்த ஆயிரம் தாமரை மொட்டுகளேபாட்டுக்கு இணையாக ஒன்றைக் காட்ட முடியுமா?? கிராமியப் பாடல்களை அடிப்படையாகக் கொண்ட மேகங் கருக்கையிலே புள்ள தேகங் குளிருதடி, பஞ்சு மிட்டாய் சேலை கட்டி போன்ற பாடல்களைத்தான் பழசுல காட்ட முடியுமா?

 

கிராமத்தில் முறைப் பொண்ணை சீண்டும் பாடலா பொத்தி வெச்ச மல்லிக மொட்டு”, ”அரிசி குத்தும் அக்கா மகளே”, ”ஆத்தங்கரை மரமே அரச மர இலையே”, திருப்பி மாமனை ஓட்டும் பாட்டா, கருத்த மச்சான், கஞ்சத்தனத்தை எடுத்து வச்சான்”, கல்லூரி மாணவர்கள் சந்தோஷமாக ஆடிப்பாடி சுற்றுலா போகிறார்களா, ”கானாப் பாட்டு  இப்படி நம் மக்களின் அன்றாட வாழ்க்கையை சந்தோஷாமாக்க நாங்கள் பாடல்களைக் கொடுத்திருக்கிறோம்...

 

நண்பர்கள் தினமா, முஸ்தஃபா முஸ்தஃபா”, ”ஓ நண்பனே ஓ நண்பனே”, ”நட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணுவேன்”, அன்னையர் தினமா அம்மா என்றழைக்காத உயிரில்லையே”, ”நானாக நானில்லை தாயே”, புத்தாண்டா, ”இளமை இதோ இதோஎன்று இந்தப் பாடல்களை ஒளி(லி)பரப்பாத நாட்களை, சேனலை உங்களால் காட்ட முடியுமா?

 

எதுகை, மோனைகளைப் பத்தி புதுப்பாட்டுகாரங்ககிட்ட பேசாதீங்க....

"ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக

நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ?..", 

 

முத்துரத்தினம் உனக்கு சூட முத்திரைக்கவி இசைந்துபாட

நித்தம் நித்திரை கரைந்து ஓட சித்தம் நித்தமும் நினைந்து கூட..

சிறுமழலை மொழிதனிலே இனிமைத்தமிழில் இதயம் மகிழ

இருமலரின் விழிகளிலே இரவும் மறைய பகலும் தெரிய””

என்ன ஒரு சிந்தனை, என்ன ஒரு கவிதை நயம்...இப்படி ஒரு சிந்தனை மாதிரி வருமா???

 

அப்புறம் உவமையைப் பத்தி பேசுனாரு, எங்காளுங்க சொல்றாங்க பாருங்க உவமையை...."தேகமழை நானாகும் தேதியை தேடுவேன்... மேகவயல் நீயாக மேனியை மூடுவேன்..." முடியுமா இதுமாதிரி?

 

சமூக அவலங்களைச் சுட்டும் பாடல்களா, விடை கொடு எங்கள் நாடே”, ”ஆறு எங்க ஆறு; அட போடா வெட்க்க் கேடு; மழை பெஞ்சா தண்ணி ஓடும்; மறுநாளே வண்டி ஓடும் பாடல்களைக் கேட்டால் உங்கள் உடல் சிலிர்த்ததில்லையா?

 

நம்பிக்கையூட்டும் பாடல்கள் வேண்டுமா, ”வாழும் வரை போராடு”, :தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ மறுக்கலாமா”, தத்துவப் பாடல்களா நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்”, ”கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்”, இரண்டையும் கலந்து சொல்ல வேண்டுமா ஆற்றுக்குப் பாதையிங்கே யார் போட்டது, காற்றுக்கு பாட்டுச் சொல்லி யார் தந்தது இப்படி இந்தப் பாடல்கள் உணர்த்தும் அர்த்தங்கள்தான் எத்தனை எத்தனை!!!

 

அப்புறம் காதல் பாட்டைப் பத்தி சொன்னாங்க...கை வந்து மேல பட்டுச்சாம், உடனே கலாச்சாரம், பண்பாடுன்னுட்டு கையை உதறிட்டு வரம்பு மீறுதல் முறையோன்னு பாட்டு பாடுனாங்களாம்...எங்க போய் முட்டிக்கறதுன்னு தெரியலை...நான் கேக்குறேன், காதலிக்கிறப்ப கூட காதலியைத் தொடமுடியாட்டி அப்புறம் அந்த கருமத்தை என்னாத்துக்கு பண்ணிகிட்டு??? வாழ்க்கையில பகுதியை வீணாக்கிட்டு என்ன வாழ்க்கையை வாழ்ந்தீங்க நீங்கள்லாம்??? வேண்டுமானால் உயிரோடு இருந்தோம் என்று சொல்லிக் கொள்ளுங்கள்...வாழ்ந்தோம் என்று சொல்லாதீர்கள்!!!

 

எவ்ளோ அருமையா காதலை நாங்கள் சொல்லியிருக்கிறோம்!!! காதலோடு கவிதையைச் சொன்னவர்கள் நாங்கள் பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்ச நேரமே, சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே”!!!! அதிலேயேயே அறிவியலும் கலந்திருக்கிறோம்...நிலவிலும் பொருள் எடை இழக்கும், நீரிலும் பொருள் எடை இழக்கும், காதலில் கூட எடை இழக்கும் இன்று கண்டேனடி”. அடுத்து முத்தாய்ப்பா ஒண்ணு சொல்லியிருக்கோம் பாருங்க....காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாதுஇதைவிட காதலைப் புனிதப் படுத்த யாரால் முடியும்??? 

இன்னொன்று இங்கே சொல்லிக் கொள்கிறேன் வழக்கமான காதலை யார் வேண்டுமானாலும் சொல்லியிருப்பார்கள்...ஆனால் சில நுண்ணிய உணர்வுகளை புதிய பாடல்கள் பதிவு செய்த அளவிற்கு பழைய பாடல்கள் செய்யவில்லை....காதலில் நிராகரிப்பின் வலியை எப்படி பாடியிருக்கிறோம் பாருங்கள், கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை, காத்திருந்தால் மனம் கனிவதில்லை, ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய கண்ணாடி இதயமில்லை”, அடுத்து இன்னும் அழுத்தமா சொல்றோம் பாருங்க....  கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்  என் காதல் மனம் துண்டு துண்டாய் உடையக் கண்டேன்இதைவிட அழுத்தமாக வலியினை பதிவு செய்ய முடியுமா???

காமம் வந்தால் அது காதலில்லை என்பதெல்லாம் அப்பட்டமான பொய். முதல் காதல் தோன்றும் போதே அதன் பின்னால் காமம் ஒளிந்து நின்று என்னை கண்டுபிடி என்று கெக்கலிக்கும், அந்தக் காமம் கலந்த காதலை, அந்த வலியை, இன்பத்தை, உணர்வுகளை சொல்லியிருக்கிறோம் பாருங்கள் ....

பெண்ணின் உணர்வுகள் எப்போதுமே ரகசியமானவை, மாறாக ஓங்கி ஒலிப்பது ஆணினுடையது. அதை அப்படியே பிரதிபலிக்கும் பாடலின் வரிகள் "தாழம்பூவு ஈரமாச்சு.. தலையில் சூடும் நேரமாச்சு.." என்று அவள் தன் வீட்டின் இருள் சூழ்ந்த மூலையில் பதுங்கும் போது, "பார்வையால நூறு பேச்சு.. வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு.." என்று அவன் வயல்வெளிகளில் பறையறிவித்துக்கொண்டே ஓடுவான்... இறுதியாக "போதும் போதும் காமதேவனே" என்று பணிவான்.... என்ன ஒரு அழகு....

 

அதே பெண்களின் அடி மன உணர்வுகளை, விரகம் பொதிந்தும் அதை வெளிப்படுத்த முடியாத கட்டுப்பாடுகள் நிறைந்த வலியை உணர்த்தும் பாடல்களைத் தந்திருக்கிறோம்.... விரகத்தை தன்னுள் தேக்கி வைத்திருக்கும் நாயகி, ஒரு அசந்தர்ப்பத்தில் மது அருந்த நேரிடுகிறது.. அது ஏக்கம் பாடலாக வெளிப்படுகிறது. எங்கேனும் ஒரு வலியுணரும் கண்ணில் இந்தப் பாடலைக் கேட்க கேட்க ஈரம் கசியக்கூடும்….”பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு..உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது..பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்.. விரகம்..நரகம்..நரகம்”.., இன்னொன்று, என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது?.. ஏன் வாட்டுது?..ஆனால் அதுவும் ஆனந்தம்..” …….. 

இதைக்கேட்க நேர்வது நமக்கும் கூட ஆனந்தம் தானே? அதுவும் உங்கள் மனைவியோ, கணவனோ ஊருக்கு போயிருக்கும் குளிர்காலத்தில் தனிமையான ஒரு நாளின், ஊரடங்கியப்பொழுதில் எங்கோ அடுத்த தெருவிலிருக்குமொரு இசை ரசிகரின் வானொலியில் ஒலிக்கும் இப்பாடல்கள் காற்றில் பயணித்து மிக மெலிதாக உங்கள் காதுகளை அடையும் பொழுதுகள் அறிவிக்கும்.. சொர்க்கம் என்றால் என்னவென்று..!! 

மாறாக விரகதாபமா, அபச்சாரம், தப்பு என்று சொல்வீர்களேயாயின், ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நீங்க இன்னும் வளரனும் தம்பி

இவ்வளவு ஏங்க, ஊருல எத்தனை பண்பலை, இசை சானல்கள் இருக்குது? போய் பாருங்க எல்லாத்துலியும் என்ன ஓடுதுன்னு? ஆகையால், இறுதியாக நடுவர் அவர்களே, இன்றும், கல்யாணத்திலிருந்து கல்யாணகேசட் வரை, காது குத்திலிருந்து கருமாதி வரை, திரு விழாவிலிருந்து தெருவிழா வரை எல்லாராலும் விரும்பப் படுவது, சிறந்தது புதியபாடல்களே என்று கூறி நிறைவு செய்கிறேன்.....

Naresh Kumar

unread,
Nov 19, 2009, 2:52:07 AM11/19/09
to பண்புடன்

நடுவர் வாதம்

நரேஷை சும்மா சொல்லக் கூடாது. நெத்தியடி அடிக்கிறாரு மனுசன்.

 

//என்னடா இவனும் வணக்கம் சொல்லாம ஆரம்பிக்கிறானேன்னு பாக்கறீங்களா??? என்னமோ இங்க இருக்கிற எல்லாருக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியாத மாதிரியும், இப்பதான் அறிமுகம் ஆகற மாதிரியும், வணக்கம் வைக்கலைங்கறதை ஒரு குத்தமா சொல்றாங்க.....//

மரியாதையெல்லாம் மனசிலே இருந்தாப் போதுமய்யா! இல்லாட்டாலும் இருக்குன்னு சொன்னா யாரு என்ன பண்ண முடியும்?

 

//காசுதான் முக்கியம், காசுதான் முக்கியம்னு எல்லாரும் அடிச்சுகிட்டு சாகாதீங்கடா...ஒருத்தரை ஒருத்தர் அன்பு செய்யுங்கடான்னு சொல்றோம்..//

இவங்கெல்லாம் ஏன் இப்படி காசாசை பிடிச்சு அலையுறாங்களோ தெரியலே!

 

//சார், கேள்வி கேக்காதீங்க சார்...பதில் சொல்லி பழகுங்க..நாங்க சொன்னோம்ல..மனிதன் மனிதன் எவந்தான் மனிதன், வாழும்போது செத்து பிழைப்பவன் மனிதனா........தன்மானம் காக்கவும், பிறர்மானம் காக்கவும் வாழும் மனிதன் எவனோ அவனே மனிதன்தெளிவா சொன்னோம்ல....//

மனிதா மனிதா இனியுன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்-னு சொன்னது யாருங்கிறேன்?

பதவியின் பிடியில் பாரதமாதா பரிதவிக்கிறாள்

சுதந்திரதேவி சுயநலப்புலிகளின் துணிதுவைக்கிறாள்-னு புதுசா வந்தவங்க தானே சொன்னாங்க?

இன்பதுன்பம் என்பது இரவுபகலைப் போன்றது

காலம் நாளை மாறலாம் காயமெல்லாம் ஆறலாம்-னு நம்பிக்கை கொடுத்தவங்களும் புது ஆளுங்க தானே?

 

 

//காதலி / மனைவி வாயால செல்லமா ச்சீ போடா, ம் அவ்ளோதானா, ராஸ்கல், போன்ற வார்த்தைகளை(கவிதைகளை), திட்டல்களை?கொஞ்சல்களை) கேக்குற சுகம் இருக்கே, //

என்ன அழகா சொல்லிட்டாரு? காதலியோ மனைவியோ வாடா போடான்னு கூப்பிடறதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணுமய்யா!

 

 //காதல் பாட்டு கேக்கனும்னு கட்டிபுடி கட்டிபுடி பாட்டை கேட்டாராம்...ஏம்பா, நைட்டு யாருக்கும் தெரியாம மிட்நைட் மசாலா பாத்துட்டு இங்க வந்து நல்லவங்களாட்டாம் ஆக்டிங் உடுறது??? //

இவுங்க மட்டும் அந்தக் காலத்துலே ஜோதிலட்சுமி, விஜயலலிதா நடிச்ச "கன் ஃபைட் காஞ்சனா,ரிவால்வர் ரீட்டா," மாதிரி படங்களையெல்லாம் திருட்டுத்தனமாப் போய்ப் பார்த்ததில்லையா?

"மைலேடி கட்பாடி நீயே என் ஜோடி

மீட் மீ டுனைட் இன் தி மூன்லைட்"டுன்னு பாட்டுப் பாடலியா?

 

 

//தமிழ் இலக்கியத்தைப் பத்தி சொன்னாங்க...பாரதியாரின் பாடல்களை ஏழாவது மனிதனிலும், பாரதி படத்திலும், இன்னும் எத்தனையோ படங்களில் பயன்படுத்தி மக்களுக்கு கொண்டு போய்சேர்க்கவில்லையா....குனித்த புருவமும், பனித்தசடையும்னு தளபதியில உபயோகப்படுத்துலியா??? நறுமுகையே பாட்டுல அகநானூறுப் பாட்டான செம்புலப் பெயர் நீர்கொண்டு வரலியா? அதே பாட்டை அடிப்படையா வெச்சு,  கம்பங்கூழில் போட்ட உப்பு கஞ்சியெல்லாம் சேர்தல் போலபாட்டைக் கொடுக்கலியா? பழைய பாட்டுல என்னா பண்ணாங்க?//

நல்லா கேளுங்கய்யா! 

 

//பழைய பாடல்கள் என்பது, ஒரு சின்ன வட்டத்துக்குள்ளியே சுத்திட்டிருந்துது....ஆனா புதுப் பாடல்கள் அப்படியில்லை...எல்லா தரப்பினருக்கும், சமூகத்திற்கும், மக்களுக்கும் பாட்டை கொடுத்திருக்கு....கிராமிய பாட்டுகளை மக்களுக்கு அதிகம் கொண்டு சென்று சேர்த்திருக்கிறது, //

அம்மனுக்குக் கூழ் ஊத்தினாலும் சரி, விநாயகர் சதுர்த்தியானாலும் சரி, மகாசிவராத்திரியானாலும் சரி யாராவது பழைய பாட்டை ஒலிபெருக்கியிலே போடுறாங்களாய்யா?

 

 //கிராமத்தில் முறைப் பொண்ணை சீண்டும் பாடலா பொத்தி வெச்ச மல்லிக மொட்டு”, ”அரிசி குத்தும் அக்கா மகளே”, ”ஆத்தங்கரை மரமே அரச மர இலையே”, திருப்பி மாமனை ஓட்டும் பாட்டா, கருத்த மச்சான், கஞ்சத்தனத்தை எடுத்து வச்சான்”, கல்லூரி மாணவர்கள் சந்தோஷமாக ஆடிப்பாடி சுற்றுலா போகிறார்களா, ”கானாப் பாட்டு  இப்படி நம் மக்களின் அன்றாட வாழ்க்கையை சந்தோஷாமாக்க நாங்கள் பாடல்களைக் கொடுத்திருக்கிறோம்...//

எவ்வளவு விபரமாச் சொல்லுறாருய்யா!

 

 

//நண்பர்கள் தினமா, ”முஸ்தஃபா முஸ்தஃபா”, ”ஓ நண்பனே ஓ நண்பனே”, ”நட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணுவேன்”, அன்னையர் தினமா அம்மா என்றழைக்காத உயிரில்லையே”, ”நானாக நானில்லை தாயே”, புத்தாண்டா, ”இளமை இதோ இதோஎன்று இந்தப் பாடல்களை ஒளி(லி)பரப்பாத நாட்களை, சேனலை உங்களால் காட்ட முடியுமா? //

எப்படி முடியும்? இதுங்களை வச்சுத் தானே நிறைய சேனலே ஓடிட்டிருக்குங்கிறேன்.

 

//நம்பிக்கையூட்டும் பாடல்கள் வேண்டுமா, ”வாழும் வரை போராடு”, :தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ மறுக்கலாமா”, தத்துவப் பாடல்களா நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்”, ”கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்”, இரண்டையும் கலந்து சொல்ல வேண்டுமா ஆற்றுக்குப் பாதையிங்கே யார் போட்டது, காற்றுக்கு பாட்டுச் சொல்லி யார் தந்ததுஇப்படி இந்தப் பாடல்கள் உணர்த்தும் அர்த்தங்கள்தான் எத்தனை எத்தனை!!!//

சோதனை மேல் சோதனை, சட்டிசுட்டதடா, உலகே மாயம், படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே-ன்னு புலம்பித்தள்ளுற ஆசாமிங்களுக்குப் புரியறா மாதிரி சொல்லுங்கப்பா! 

 

//நான் கேக்குறேன், காதலிக்கிறப்ப கூட காதலியைத் தொடமுடியாட்டி அப்புறம் அந்த கருமத்தை என்னாத்துக்கு பண்ணிகிட்டு???//

அதுக்குத் தானேய்யா காதலே பண்ணுறாங்க? சும்மா கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப்பழம் அங்கிருக்கன்னு பாடிக்கிட்டு இருக்குறதுக்கா காதல்?

 

 

//வாழ்க்கையில பகுதியை வீணாக்கிட்டு என்ன வாழ்க்கையை வாழ்ந்தீங்க நீங்கள்லாம்??? வேண்டுமானால் உயிரோடு இருந்தோம் என்று சொல்லிக் கொள்ளுங்கள்...வாழ்ந்தோம் என்று சொல்லாதீர்கள்!!!//

 

எவ்வளவு பெரிய தத்துவத்தை எவ்வளவு சாதாரணமா சொல்லிட்டாரு பாருங்க!

 

 //”நிலவிலும் பொருள் எடை இழக்கும், நீரிலும் பொருள் எடை இழக்கும், காதலில் கூட எடை இழக்கும் இன்று கண்டேனடி”. //

இங்கே பாருங்கய்யா! ஆர்க்கிமிடீஸ் தத்துவத்தையெல்லாம் பாட்டிலே சொல்லியிருக்காங்க!

 

//காதலில் நிராகரிப்பின் வலியை எப்படி பாடியிருக்கிறோம் பாருங்கள், “கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை, காத்திருந்தால் மனம் கனிவதில்லை, ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய கண்ணாடி இதயமில்லை”, அடுத்து இன்னும் அழுத்தமா சொல்றோம் பாருங்க.... //

இது புரியாம "உன்னைச் சொல்லிக் குற்றமில்லை; என்னைச் சொல்லிக் குற்றமில்லை"ன்னு கடவுள் மேலே குத்தம் கண்டுபிடிக்கிறாங்க அவுங்க!

 

 //பெண்ணின் உணர்வுகள் எப்போதுமே ரகசியமானவை, மாறாக ஓங்கி ஒலிப்பது ஆணினுடையது. அதை அப்படியே பிரதிபலிக்கும் பாடலின் வரிகள் "தாழம்பூவு ஈரமாச்சு.. தலையில் சூடும் நேரமாச்சு.." என்று அவள் தன் வீட்டின் இருள் சூழ்ந்த மூலையில் பதுங்கும் போது, "பார்வையால நூறு பேச்சு.. வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு.." என்று அவன் வயல்வெளிகளில் பறையறிவித்துக்கொண்டே ஓடுவான்... இறுதியாக "போதும் போதும் காமதேவனே" என்று பணிவான்.... என்ன ஒரு அழகு....//

 

ஆர்.டி.பர்மனே கேட்டு அசந்து போன பாட்டய்யா அது. 

 

 

 

//”பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு..உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது..பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்.. விரகம்..நரகம்..நரகம்”.., இன்னொன்று, ”என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது?.. ஏன் வாட்டுது?..ஆனால் அதுவும் ஆனந்தம்..” …….. //

பாருங்க! எல்லாரும் மறந்து போன வாணி ஜெயராம் பாட்டைக் கூட ஞாபகமாச் சொல்லுறார் பாருங்க

 

//மாறாக விரகதாபமா, அபச்சாரம், தப்பு என்று சொல்வீர்களேயாயின், ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நீங்க இன்னும் வளரனும் தம்பி” //

என்ன ஒரு பெருந்தன்மை இந்தப் புதுப்பாட்டுக் காரங்களுக்கு!

 

//இன்றும், கல்யாணத்திலிருந்து கல்யாணகேசட் வரை, காது குத்திலிருந்து கருமாதி வரை, திரு விழாவிலிருந்து தெருவிழா வரை எல்லாராலும் விரும்பப் படுவது, சிறந்தது புதியபாடல்களே என்று கூறி நிறைவு செய்கிறேன்.....//

 

புதிய பாடல்களிலே காதல் இருக்கு, விரகதாபம் இருக்கு, வீரம் இருக்கு, சமூகப்பொறுப்பிருக்கு, நம்பிக்கையிருக்குன்னு உதாரணங்களோட அருமையாச் சொல்லிட்டார் நரேஷ்!

 

இதுக்கு பதில் சொல்லப்போறது யாரு? யாராயிருந்தாலும் சீக்கிரமா வாங்க!

 

தமிழன் வேணு

Naresh Kumar

unread,
Nov 19, 2009, 2:54:50 AM11/19/09
to பண்புடன்

பழைய பாடல்: சென்ஷி

நடுவர் அவர்களுக்கும், எங்கள் அணியின் தலைவர் அவர்களுக்கும் மற்றும் எதிரணியில் வெற்றுக்கூச்சலுக்காக மாத்திரம் உதார் விட்டுக்கொண்டிருக்கும் சவுண்ட் பார்ட்டிகளுக்கும் அவர்கள் சொல்ல மறந்த வணக்கத்தையும் சேர்த்துச் சொல்லிக் கொள்கின்றேன்.

 

 பாடலைப் பற்றிய பட்டிமன்றம் என்ற வகையில் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சி என்ற அடிப்படை கொடுத்த வகையில் பாராட்டும் நெஞ்சம் பாடல் புரிவதற்கான முயற்சி என்பதனை மறைத்தல் எவ்வகையில் நியாயமென்று புரியவில்லை.

 

 என்னால் இங்கு விவாதத்தை இரண்டு வகையில் தொடர முடிகிற அளவில் வாய்ப்பளித்துவிட்டு சென்ற நரேஷின் நல்லுள்ளத்தை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. இவர் கூறிய அத்தனைக்கூற்றுகளையும் உடைத்துச் சொல்ல முடியும் என்ற கருத்தாக்கம் தாண்டிய வகையில் பழைய பாடல்களை ரசித்தலின் இன்பம் புரிதலின் சுகம் என்ற அற்புதங்களைப் பற்றியும் நான் கூறித்தான் ஆக வேண்டும்.

 

 நரேஷ் முன் வைத்த வாதங்களை பின் வாங்க வைக்கும் எனது வாக்கிய அமைப்புகள் இனி...

 

 ஏம்ய்யா யோவ்... இன்னாது காசு வேணாம் அன்புதான் வேணும்ன்னு பாட்டு படிக்கறீங்களா.. அப்போ எப்படி ஃபிரியா காசில்லாம அன்பு மாத்திரம் தயாரிப்பாளர்கிட்ட வாங்கிக்கிட்டு எழுதிக் கொடுக்கறீங்களா.. உங்களைச் சொல்லி என்ன செய்ய.. ஒரு பாட்டு உலகத்துல எந்த மூலையில வந்திருந்தாலும் அதை அப்படியே கொஞ்சம்கூட மாத்தாம அப்படியே எடுத்து காப்பி பேஸ்ட் செய்யற கலையை கத்து வச்சிருக்கற உங்களுக்கு அன்புதான் முக்கியமாப் படும். அஹிம்சைதான் நம்பிக்கையா தெரியும். புதுப்பாட்டுல அடிக்கற காப்பியெல்லாம் ஒண்ணு விடாம யு-டியுப்ல போட்டு நாறடிக்க வைக்கறானுங்க. இன்னும் இவங்க பேசற லொள்ளுக்கு குறைச்சல் இல்ல. அன்பு வேனும்னு கேக்கறது எதுக்காக இவங்க இங்க பாட்ட திருடினது அவங்களுக்கு தெரிஞ்சா சமாதானமா போயிடலாமேன்னு மாத்திரம்தான் போலருக்குது.

 

 அது என்னது.. நண்பர்கள் தினம், புத்தாண்டு தினம், அம்மாக்கள் தினத்துக்காகப் பாட்டு ரெடி செஞ்சு கொடுக்கறீங்களா.. அடக்கெரகம் புடிச்சவங்களா.. இதுக்கூட வெளிநாட்டுல கொண்டாடுற பண்டிகைன்னு சொல்லிக்கறது தெரியாம, இதையும் காப்பி பேஸ்ட் செஞ்சு இங்க கொண்டாடுறதுமில்லாம அதுக்கு பாட்டையும் போட்டு பிரிச்சு மேயறீங்களே.. உங்களையெல்லாம் என்னத்த சொல்ல.. காதலுக்கு, நட்புக்கு, தாய்மைக்கு இதுக்கெல்லாம் டேட் போட்டு கொண்டாடுற புதுக்கலாச்சாரத்தாலதான்  அம்மாங்கற நெனைப்பும்,. நண்பனைப் பத்தின நெனைப்பும் உங்களுக்கு அந்த நாள்ல மாத்திரம்தான் வருமா தலைவரே.... நண்பனைப் பாத்ததும் வாடா மச்சான்னு தோள்ல கை போட்டு கூட்டிட்டு போகும்போது முஸ்தஃபா பாடுவீங்களா.. யோவ் அது பிரியறதுக்கான பாட்டுய்யா பாட்டு.

 

 நாங்க போட்டோம் பாரு. பழைய நினைவுகளை வருடி மெட்டெடுத்து கால ஓட்டம் மங்காத நினைவு வெள்ளத்தில் நதியலைகளைத் தொட்டுச் சென்று ஓட்டத்துடன் தீராத மூச்சிறைப்பின் ஊடாக ஊட்டுகின்ற ~அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... நண்பனே நண்பனே.. நண்பனே~ இன்னும் டாஸ்மாக் போனாக்கூட எவனாச்சும் ஒருத்தன் இந்தப் பாட்டைப் பாடுவாங்களேய்யா. அது உங்களுக்குத் தெரியாதா நரேஷ்.

 

 மாமன் பொண்ண சீண்டுறதுக்கு பாட்டைப் போட்டிருக்கீங்களா.. அதுவும் எப்படி பொத்தி வச்ச மல்லிக மொட்டு, அரிசி குத்தும் அக்கா மகளே.. ஆத்தங்கரை மரமா... நல்லாப் பாத்துக்குங்க நடுவர் அவர்களே.. மாமன் பொண்ணு பேரைச் சொல்லக்கூட முடியாம பயந்தாங்கொள்ளிப் பசங்க உவமையை எதுமேலயோ ஏத்தி உருவகத்தை இங்க கொண்டு வந்து கொட்டுறாங்களாமாம். இது எப்படி இருக்குன்னு யோசிக்கவே கடுப்பாகுது.

 

 உறவுக்காக தோள்கொடுக்கும் எந்த பாடலைச் சொல்ல.. ஆஹா காதல் மாத்திரம் தேடுகின்ற வாழ்க்கையில் உற்றவர்கள் கொண்டாடும் ~அத்தைமடி மெத்தையடி~யை சொல்வதா... மகளின் நிம்மதியான கண்ணுறக்கத்திற்கு மாமனைத் துணைக்கழைக்கும் பாசமலரை மறந்துவிட்டு செல்ல முடியுமா.. இல்லை நிலவினை காதலியின் சகோதரியாக்கும் ~என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே~ என்று குறிப்பிட்டுக் கொண்டாடும் அந்த அழகு எங்கே.. என்னவென்று சொல்வது. ரசிப்பதற்கென்ற மனங்கள் கொண்டாடும் சித்திரங்கள் கொட்டிக் கிடக்கும் அற்புதச்சுரங்கப் புதையல்லல்லவா பழைய பாடல்கள்...

 

 

தமிழ் இலக்கியத்தைப் புதிய பாட்டில எழுதிக் கொண்டாடுறாராம். எதால சிரிக்கன்னு தெரியலை நடுவர் அவர்களே.. புதியதாய் பாடல் எழுதத் தோன்றாமல் பழைய்ய பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் குத்தாட்டம் ஆட உபயோகப்படுத்தும் இவர்களுக்கு சங்க காலப் பாடல்களை மாத்திரமா விட்டு வைத்திடப் போகிறார்கள்.  உருவுடா அதையும் உருவியிருக்காங்க பாருங்க. அது தெரியாம இப்படி ஒரு புள்ள வக்காலத்து வாங்கிட்டு இருக்குது.

 

 இவங்க போட்ட ஒரு நல்ல பழைய்ய பாட்ட கெடுத்து இவங்க எழுதுன ரீமிக்ஸு.. வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா... நடுவுல இவங்க வுடுற டீலு.. காதல் என்பது காஃபியைப் போலே ஆறிப்போனா கசக்கும்ன்னு.. காபி மாத்திரம்தான் கசக்கும்போல.. பழைய்ய பாட்டு இனிக்குதோ :)

 

 

எதுகை மோனை, உவமை உருவகமெல்லாம் வச்சு எழுதலாம்ங்கறதே இவங்க எந்தக் காலத்துல கத்துக்கிட்டாங்கன்னு தனியா பாடம் நடத்தற அளவுக்கு பழைய பாடல்கள் கொட்டிக்கிடைக்கறது உங்களுக்குத் தெரியாதா நடுவர் அவர்களே...

 

 காதல் பிரிவு துயரம், ஊடல்,  காதலன் வருகை எதிர்பார்த்துக் காத்திருக்க அவன் வராது சென்ற நேரத்தில் உறுத்துகின்ற நிலவின்பால் கொடுக்கின்ற பாடல் தவிக்கின்ற மனதுடன் கேட்பவரை உருக வைக்கும் அந்தப் பாடல் நமக்கு கேட்கத் திகட்டுமா..

 

 நாளை இந்த வேளைப் பார்த்து ஓடிவா நிலா.. இன்று எந்தன் தலைவன் இல்லை. சென்று வா நிலா.. தென்றலே எந்தன் தனிமை கண்டு நின்று போனதே

 

 இது மாத்திரமா...

 

 நீயில்லாத உலகத்திலே நிம்மதியில்லைபிரிவாற்றாமையை இன்னும் உருக்கமாக எடுத்துக் கொடுக்கும் எத்தனையெத்தனைப் பாடல்கள் கிடைத்துவிடும் நமக்கு.

 

 

ஊடலுக்கு உரியதாய் வெற்றிக்கொடி கட்டிகொண்டிருக்கும்..  மிஸ்ஸியம்மாவின் ~வாராயோ வெண்ணிலாவே~ஐ மறந்தவர் உண்டோ...

 

இதுல நரேஷ் குறிப்பிட்டதுலயே தலையில அடிச்சுக்கறா மாதிரி ஒரு விசயம்ன்னா      காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாதுன்னு எழுதியிருக்காங்களாம். எப்பேர்ப்பட்ட ஆணாதிக்கத்தன்மை மிகுந்த ஒரு பாடல் இது. இதையும் கூச்சப்படாம பாராட்டுறாங்கன்னா இவங்க எத்தகையதன்மை உடையவங்கன்னு நல்லா தெரிஞ்சுக்க முடியுது நடுவர் அவர்களே.. காதல், தாய்மை ரெண்டையும் சுமக்க வேண்டியது பெண் தான். அதனால் ஆணுக்கு அதோட பாரத்தைப் பற்றிய கவலை இல்லைன்னு நாசூக்கா எழுதி வைச்சத என்னை மாதிரி பின்நவீனத்துவவாதிகள் உடைச்சு பிரிச்சுக்காட்டலைன்னா எப்படி நடுவர் அவர்களே... இதுல பட்டவர்த்தனமா சொல்றாரு ஆம்பளைங்க காம உணர்வு ஓங்கி ஒலிக்குமாம். அப்போ இப்ப புதுப்பாடல்ல்ல கூட பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காம ஆம்பளைங்கள தூக்கி வைச்சு கொண்டாடுற ஒரு தன்மையாத்தான் இருந்துட்டு இருக்குது.

 

 யோசித்துப் பாருங்கள்.. நாணங்கொண்ட பெண்ணொருத்தி முதலிரவு அறைக்குள் நுழைந்து பின்பும் நாயகனை நேர்கொண்ட பார்வைக்கு கொடுக்கின்ற பாடலை சுகித்ததுண்டா.. பெண்களின் குரலை பெருங்குரலாக்கித் தந்த அந்த பாசமலரை மறக்க முடியுமா..

 

 மயங்குகிறாள் ஒரு மாது. தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது.. ஆஹா.. பெண்ணின் உணர்வை உண்பதற்கு பெண்குரல் தந்துவிட்ட அந்த இனிமை எங்கே.. பெண்ணின் உணர்வுகளை தின்றுமுடித்து பெருங்குரலெடுத்துக் கொடுக்கும் இவர்கள் எங்கே..

 

 வஞ்சிக்கோட்டை வாலிபனில் ஒருவன் மீது மையல் கொள்ளும் இருவரின் போட்டிப்பாடலுக்கு போட்டியாக இருவரையும் தழுவி ஆடும் ஆபாசக்கலாச்சாரம் புதிய பாடல்களில் மாத்திரம்தானே இருக்கிறது நடுவர் அவர்களே...

 

 விரகதாபம் அபச்சாரம் அல்ல. ஆனால் நீங்கள் எழுதிக்கொடுக்கும் அம்மாடி ஆத்தாடி உன்னை எனக்குத் தர்றியாடியிலும், நேத்து ராத்திரி யம்மாவிலும் மற்றும் எந்தப் பாடல் எடுத்தாலும் ஒலிக்கும் மோகக்கூச்சலான ஹம்மா ஹம்மாவில் தான் பெண்குரல் உபயோகப்படுகிறது என்பதுதான் எங்களின் உச்சக்கட்ட வருத்தமாக இருக்கிறது நண்பர்களே...

 

 வளருதல் என்பது அறிவால் என்பதைக்கூட எங்களின் பட்டுக்கோட்டையார் பாட்டுக்கோட்டை கட்டி வைத்திருக்கும் சுயத்தால் என்பது பாடப்புத்தகங்களில் கூட உண்டய்யா உண்டு..

 

 நீரிலும் பொருள் எடை இழக்குமாம். அப்படியா அப்ப நீச்சல் தெரியாதவன் ஆத்துத்தண்ணில விழுந்தா ஏன் குய்யோமுய்யோன்னு கத்துறான். அப்படியே மெதக்க வேண்டியதுதானே.. நல்லா எழுதுறாங்க பாட்டு. அதையும் இங்க எடுத்து வைக்கறாங்க கேட்டு. இந்தக் கொடுமைக்கெல்லாம் ஒரு முடிவு இல்லையா நடுவர் அவர்களே...

 

 இன்னொரு வாதமா சொல்றாரு. வழக்கமான காதலை யார் வேணும்னாலும் சொல்லலாம். இவங்க சொல்றது நுண்ணிய காதலாம். அது என்னடா அது நுண்ணிய காதல்ன்னு பார்த்தா கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லைன்னு பாடுறாரு. அட ராமா.. அது ஒன்சைட் லவ் பாட்டுய்யா.. உருப்படாத தறுதலப் பய சூப்பர் பிகரா இருக்கற சேட்டுப் பொண்ண ரூட் விட்டு அது கிடைக்கலன்னு பாடுற பாட்டுல உங்களுக்கு நுண்ணிய உணர்வு கிடைக்குதா.. அது சரிதான்..

 

 ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ.பாட்டைக் கேட்டதுண்டா நண்பர்களே.. நாட்டின் ராணி ஒரு அடிமையின் மேல் கொண்ட காதலை உள்ளுயிர்ப்போடு எடுத்துக்கொடுத்து மங்காத இசை வடிவமாக மாற்றிய அந்தப் பாடலை விடவா உங்கள் புதுப்பாடலில் காதலின் நுண்ணுனர்வை கண்டு சொல்லிவிடுவீர்கள்..

 

 இன்னும் வேண்டுமா உங்கள் நுண்ணுனர்விற்காகவே எடுத்துத்தருகிறேன் நீண்டதொரு கவிப்பட்டியலை..

 

 மாசிலா உண்மைக் காதலே.. மாறுமோ செல்வம் வந்த போதிலே

போய்வா நதியலையே.. அவள் பூச்சூடும் நாள் பார்த்துவா

வளர்ந்த கலை மறந்துவிட்டால் கேளடா கண்ணா~

ஓடம் நதியினிலே.. ஒருத்தி மட்டும் கரையினிலே உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலேஇன்னும் எத்தனை எத்தனை பாடல் வேண்டும் உங்களுக்கு..

 

 கடைசியாக ஒன்று சொல்லிக்கொண்டு முடித்துக் கொள்கிறேன் நடுவர் அவர்களே..

 

 சாரு சந்தோசமாக கூறிக்கொள்கிறார். இப்போது வருகின்ற பாடல்கள் எழுதுவது பற்றிய அவரது குறிப்பினை அவரது வார்த்தையில் கூறுதல் சாலச்சிறந்ததாக இருக்கும்.

 

 //இதேபோல் நான் இயற்றிய பாடலைக் கேளுங்கள்: அம்மா இங்கே வா வா, அஸ்கு புஸ்கு தா தா, இலையில் சோறைப் போட்டு ஈஃபல் டவரைக் காட்டு.

35 ஆண்டுகள் மாங்கு மாங்கு என்று எழுதி என்னத்தைக் கண்டோம். இப்படி ஒரு நாலு வரி எழுதி பிரபலமாகி விடலாமே என்று தோன்ற, இதேபோல் 40 கவிதைகளை இயற்றி தேவிஸ்ரீ  பிரசாத்துக்கு அனுப்பியிருக்கிறேன். என்னுடைய கவித் திறனின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை ஒரு பக்கம்.//

 

 பாருங்கய்யா சாருவெல்லாம் பாட்டு எழுத ரெடிங்கற அளவுக்குத்தான் இப்போதைய தமிழ்ப்பாட்டு இருந்திட்டு இருக்குதுன்னா இதைவிட சொல்லிக்கற அளவுக்கு வேற ஏதும் தேவைப்படலை. இந்த வசனத்தைப் படிச்சும் இவங்க தைரியமா புதுப்பாட்டுதான் பெஸ்ட்டுன்னு சொன்னாங்கன்னா தைரியமா சாருவும் பாட்டு எழுதலாம்.

 

 பழம் பெருமை பேசுதல் என்பது வெட்டிப்பொழுது போக்கும் பிழைப்பல்ல. வரலாற்றை மீள் ஆய்வு செய்தலின் சுகத்தின் வெளிப்பாடு, நல்லதொரு பொழுதை பழைய பாடல்கள் மேல் கொண்ட காதலாய் மாற்ற வைத்த அனைவருக்கும் எனது நன்றிகள்..

Naresh Kumar

unread,
Nov 19, 2009, 3:58:43 AM11/19/09
to பண்புடன்

நடுவரின் வாதம்

//சொல்ல மறந்த வணக்கத்தையும் சேர்த்துச் சொல்லிக் கொள்கின்றேன்.//

பொதுவா பட்டிமண்டபமுன்னா கணவன்-மனைவி பற்றி ஒரு நகைச்சுவைத் துணுக்காவது சொல்லணும்கிற அண்மைக்கால சம்பிரதாயத்தை இதுவரை யாரும் கடைபிடிக்காதது வருத்தமாயிருந்தாலும், இந்த நடுவருக்கு இதுவே அதிகம்னு அதிரடியா பதில் வருமோங்கிற பயத்துனாலே அதை வற்புறுத்த விரும்பலே!

 

//பழைய பாடல்களை ரசித்தலின் இன்பம் புரிதலின் சுகம் என்ற அற்புதங்களைப் பற்றியும் நான் கூறித்தான் ஆக வேண்டும்.//

கூறுங்கள்! கூறுங்கள்!!

 

//ஏம்ய்யா யோவ்... இன்னாது காசு வேணாம் அன்புதான் வேணும்ன்னு பாட்டு படிக்கறீங்களா.. அப்போ எப்படி ஃபிரியா காசில்லாம அன்பு மாத்திரம் தயாரிப்பாளர்கிட்ட வாங்கிக்கிட்டு எழுதிக் கொடுக்கறீங்களா.. //

ஆமா, இவங்க காசு கொடுத்திட்டாலும்...! பத்து ரூபாய்க்கு செக் கொடுத்தா திரும்பி வருதாமய்யா!

 

//புதுப்பாட்டுல அடிக்கற காப்பியெல்லாம் ஒண்ணு விடாம யு-டியுப்ல போட்டு நாறடிக்க வைக்கறானுங்க. இன்னும் இவங்க பேசற லொள்ளுக்கு குறைச்சல் இல்ல. அன்பு வேனும்னு கேக்கறது எதுக்காக இவங்க இங்க பாட்ட திருடினது அவங்களுக்கு தெரிஞ்சா சமாதானமா போயிடலாமேன்னு மாத்திரம்தான் போலருக்குது.//

இப்படி அன்பு,நேசம்,பாசமுன்னு சொல்லி ஊரை ஏமாத்த எத்தனை பேரய்யா கிளம்பியிருக்கீங்க? (நான் பொதுவாச் சொன்னேனுங்க! யாராச்சும் சண்டைக்கு வந்திராதீய...!)

 

//இதுக்கூட வெளிநாட்டுல கொண்டாடுற பண்டிகைன்னு சொல்லிக்கறது தெரியாம, இதையும் காப்பி பேஸ்ட் செஞ்சு இங்க கொண்டாடுறதுமில்லாம அதுக்கு பாட்டையும் போட்டு பிரிச்சு மேயறீங்களே.. உங்களையெல்லாம் என்னத்த சொல்ல.. //

கலிமுத்திருச்சில்லே? அங்கண ஏதாச்சும் பண்டிகை கொண்டாடுனா உடனே நம்மாளும் வாழ்த்துறான். போற போக்கைப் பார்த்தா ஒபாமா பொறந்த நாளக் கூட நம்மாளு ஏதாச்சும் பெயர் வச்சுக் கொண்டாடினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லே!

 

 

//நண்பனைப் பாத்ததும் வாடா மச்சான்னு தோள்ல கை போட்டு கூட்டிட்டு போகும்போது முஸ்தஃபா பாடுவீங்களா.. யோவ் அது பிரியறதுக்கான பாட்டுய்யா பாட்டு. //

பிரியறதுக்கான பாட்டுக் கூட அப்போ பாடினாங்களே! "பசுமைநிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே"ன்னு!

 

//நாங்க போட்டோம் பாரு. பழைய நினைவுகளை வருடி மெட்டெடுத்து கால ஓட்டம் மங்காத நினைவு வெள்ளத்தில் நதியலைகளைத் தொட்டுச் சென்று ஓட்டத்துடன் தீராத மூச்சிறைப்பின் ஊடாக ஊட்டுகின்ற ~அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... நண்பனே நண்பனே.. நண்பனே~ இன்னும் டாஸ்மாக் போனாக்கூட எவனாச்சும் ஒருத்தன் இந்தப் பாட்டைப் பாடுவாங்களேய்யா. அது உங்களுக்குத் தெரியாதா நரேஷ். //

எங்க வீட்டுப் பக்கத்துலே இருக்கிற டாஸ்மாக்கிலே "உலகே மாயம் வாழ்வே மாயம்" தான் பாடுறாங்க! அதுவும் பழைய பாட்டுத்தானே? இருந்திட்டுப் போகட்டும்.

 

//மாமன் பொண்ண சீண்டுறதுக்கு பாட்டைப் போட்டிருக்கீங்களா.. அதுவும் எப்படி பொத்தி வச்ச மல்லிக மொட்டு, அரிசி குத்தும் அக்கா மகளே.. ஆத்தங்கரை மரமா... நல்லாப் பாத்துக்குங்க நடுவர் அவர்களே.. மாமன் பொண்ணு பேரைச் சொல்லக்கூட முடியாம பயந்தாங்கொள்ளிப் பசங்க உவமையை எதுமேலயோ ஏத்தி உருவகத்தை இங்க கொண்டு வந்து கொட்டுறாங்களாமாம். இது எப்படி இருக்குன்னு யோசிக்கவே கடுப்பாகுது. //

அந்தக் காலத்துலே பாடினாங்க ஒரு பாட்டு! "புள்ளையாரு கோவிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும் பிள்ளை யாரு இந்தப் பிள்ளை யாரு?"

"அத்தைக்கு மீசை வச்சுப் பாருங்கடி முத்தத்தில் மாலை கட்டிப் போடுங்கடி"ன்னு எல்.ஆர்.ஈஸ்வரி பாடுனத இவங்க எங்கே கேட்டிருக்கப் போறாங்க?

 

"நேத்துப் பூத்தாளே ரோசாமொட்டு பறிக்கக் கூடாதோ லேசாத்தொட்டு,"ன்னு வாத்தியார் குதிச்சுக்கின்னே பாடுற பாட்டை கேளுங்கப்பு! 

 

//என்னவென்று சொல்வது. ரசிப்பதற்கென்ற மனங்கள் கொண்டாடும் சித்திரங்கள் கொட்டிக் கிடக்கும் அற்புதச்சுரங்கப் புதையல்லல்லவா பழைய பாடல்கள்...//

ஒரு கோடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா - மறக்க முடியுமா?

பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கிறது...

பூமுடித்தாள் இந்த பூங்குழலி....

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே...

இந்த மாதிரி யாரையா பாட்டு எழுதுறாங்க இப்போ?

 

 

//புதியதாய் பாடல் எழுதத் தோன்றாமல் பழைய்ய பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் குத்தாட்டம் ஆட உபயோகப்படுத்தும் இவர்களுக்கு சங்க காலப் பாடல்களை மாத்திரமா விட்டு வைத்திடப் போகிறார்கள். //

வசந்த முல்லை போலே வந்து ....அட பாவீங்களா! இதை இன்னிக்கு இருக்கிற எந்தப் பாடகனாவது பாட முடியுமா? அதுலே போய் பேல்பூரி மாதிரி என்னத்தைஎல்லாமோ சேர்த்து நாசமாக்கிட்டேங்களே!

 

//உருவுடா அதையும் உருவியிருக்காங்க பாருங்க. அது தெரியாம இப்படி ஒரு புள்ள வக்காலத்து வாங்கிட்டு இருக்குது.//

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது - இது ஒளவையார் எழுதின பாட்டிலிருந்து கையாளப்பட்ட வரிகள்.

 

பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன் - இது 'மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன்'ன்னு பட்டினத்தார் பாடின பாட்டிலிருந்து கையாளப்பட்டது.

 

வீடுவரை உறவு வீதி வரை மனைவி...அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே..விழியான்போழுக மெத்திய மாதரும் வீதி மட்டே! இதுவும் பட்டினத்தார் பாட்டு தான்.

 

இவங்க போட்ட ஒரு நல்ல பழைய்ய பாட்ட கெடுத்து இவங்க எழுதுன ரீமிக்ஸு.. வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா... நடுவுல இவங்க வுடுற டீலு.. காதல் என்பது காஃபியைப் போலே ஆறிப்போனா கசக்கும்ன்னு.. காபி மாத்திரம்தான் கசக்கும்போல.. பழைய்ய பாட்டு இனிக்குதோ :)

 

இவங்களுக்கு காதலைப் பத்தியும் தெரியாது. காப்பியைப் பத்தியும் தெரியாது. எல்லா ஹோட்டலிலேயும் தான் 'Cold Coffee" ன்னு விக்குறாங்களா இல்லையா? 

 

//எதுகை மோனை, உவமை உருவகமெல்லாம் வச்சு எழுதலாம்ங்கறதே இவங்க எந்தக் காலத்துல கத்துக்கிட்டாங்கன்னு தனியா பாடம் நடத்தற அளவுக்கு பழைய பாடல்கள் கொட்டிக்கிடைக்கறது உங்களுக்குத் தெரியாதா நடுவர் அவர்களே...//

 

அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே ஒண்ணு போதாதா?

 

//பிரிவாற்றாமையை இன்னும் உருக்கமாக எடுத்துக் கொடுக்கும் எத்தனையெத்தனைப் பாடல்கள் கிடைத்துவிடும் நமக்கு. //

 

கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப் பழம் அங்கிருக்க....

காதல் சிறகைக் காற்றினில் விரித்து....

கண்கள் இரண்டும் என்று

எத்தனை எத்தனை பாடல்கள் அய்யா!

 

//இதுல நரேஷ் குறிப்பிட்டதுலயே தலையில அடிச்சுக்கறா மாதிரி ஒரு விசயம்ன்னா      காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாதுன்னு எழுதியிருக்காங்களாம். எப்பேர்ப்பட்ட ஆணாதிக்கத்தன்மை மிகுந்த ஒரு பாடல் இது. //

 

அட, நரேஷ் ஆணாதிக்கவாதியா? வணக்கம் நரேஷ் !!

 

//இதுல பட்டவர்த்தனமா சொல்றாரு ஆம்பளைங்க காம உணர்வு ஓங்கி ஒலிக்குமாம். அப்போ இப்ப புதுப்பாடல்ல்ல கூட பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காம ஆம்பளைங்கள தூக்கி வைச்சு கொண்டாடுற ஒரு தன்மையாத்தான் இருந்துட்டு இருக்குது.//

உட்கார்ந்து நிறைய யோசிச்சிருக்கீங்க! 

 

 

//மயங்குகிறாள் ஒரு மாது. தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது.. ஆஹா.. பெண்ணின் உணர்வை உண்பதற்கு பெண்குரல் தந்துவிட்ட அந்த இனிமை எங்கே.. பெண்ணின் உணர்வுகளை தின்றுமுடித்து பெருங்குரலெடுத்துக் கொடுக்கும் இவர்கள் எங்கே..//

 

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இது தான் முதல் இரவு. சாவித்திரியும் அந்த ஈர உதடுகளும், துறுதுறுப்பான விழிகளும்...மறக்க முடியுமா?

 

//வஞ்சிக்கோட்டை வாலிபனில் ஒருவன் மீது மையல் கொள்ளும் இருவரின் போட்டிப்பாடலுக்கு போட்டியாக இருவரையும் தழுவி ஆடும் ஆபாசக்கலாச்சாரம் புதிய பாடல்களில் மாத்திரம்தானே இருக்கிறது நடுவர் அவர்களே...//

இல்லாம பின்னே? 

 

 

 

//விரகதாபம் அபச்சாரம் அல்ல. ஆனால் நீங்கள் எழுதிக்கொடுக்கும் அம்மாடி ஆத்தாடி உன்னை எனக்குத் தர்றியாடியிலும், நேத்து ராத்திரி யம்மாவிலும் மற்றும் எந்தப் பாடல் எடுத்தாலும் ஒலிக்கும் மோகக்கூச்சலான ஹம்மா ஹம்மாவில் தான் பெண்குரல் உபயோகப்படுகிறது என்பதுதான் எங்களின் உச்சக்கட்ட வருத்தமாக இருக்கிறது நண்பர்களே...//

பொம்பிளைன்னா கிள்ளுக்கீரையா? தனி இழை வந்திரும் ஜாக்கிரதை!!

 

 

//வளருதல் என்பது அறிவால் என்பதைக்கூட எங்களின் பட்டுக்கோட்டையார் பாட்டுக்கோட்டை கட்டி வைத்திருக்கும் சுயத்தால் என்பது பாடப்புத்தகங்களில் கூட உண்டய்யா உண்டு..//

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தாண்டா வளர்ச்சி....

 

//நல்லா எழுதுறாங்க பாட்டு. அதையும் இங்க எடுத்து வைக்கறாங்க கேட்டு. இந்தக் கொடுமைக்கெல்லாம் ஒரு முடிவு இல்லையா நடுவர் அவர்களே...//

சீக்கிரமா முடிஞ்சா சரி தான் !

 

//இவங்க சொல்றது நுண்ணிய காதலாம். அது என்னடா அது நுண்ணிய காதல்ன்னு பார்த்தா கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லைன்னு பாடுறாரு. //

கண்ணாலே பேசும்போது கண்ணாடியைக் கழட்டிட்டுப் பேசுங்கய்யா!

அட ராமா.. அது ஒன்சைட் லவ் பாட்டுய்யா.. உருப்படாத தறுதலப் பய சூப்பர் பிகரா இருக்கற சேட்டுப் பொண்ண ரூட் விட்டு அது கிடைக்கலன்னு பாடுற பாட்டுல உங்களுக்கு நுண்ணிய உணர்வு கிடைக்குதா.. அது சரிதான்..//

 

அதென்னவோ தெரியலே! சினிமாவிலே வேலைவெட்டியில்லாத பசங்க பெரிய பெரிய படிப்புப் படிச்ச பொண்ணுங்களை மடக்கிடறாங்க! ரெண்டு நாள் சவரம் பண்ணாம ஒரு பாட்டுப் பாடுனா வேலை சுளுவா முடிஞ்சுருது!

 

//”ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ.பாட்டைக் கேட்டதுண்டா நண்பர்களே.. நாட்டின் ராணி ஒரு அடிமையின் மேல் கொண்ட காதலை உள்ளுயிர்ப்போடு எடுத்துக்கொடுத்து மங்காத இசை வடிவமாக மாற்றிய அந்தப் பாடலை விடவா உங்கள் புதுப்பாடலில் காதலின் நுண்ணுனர்வை கண்டு சொல்லிவிடுவீர்கள்..//

 

//அந்தப் பாட்டைக் கேட்டு கதாநாயகனோட யதார்த்தமான சிந்தனையைப் புரிஞ்சுக்கிட்டு கதாநாயகி "உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்"னு பாடுனதையும் கேளுங்க!//

 இன்னும் எத்தனை எத்தனை பாடல் வேண்டும் உங்களுக்கு..

அப்படிக் கேளுங்க ராசா!

 கடைசியாக ஒன்று சொல்லிக்கொண்டு முடித்துக் கொள்கிறேன் நடுவர் அவர்களே..//

 

நானே சொல்லணுமுன்னு நினைச்சேன்! அப்பாடா!!

 

//இதேபோல் நான் இயற்றிய பாடலைக் கேளுங்கள்: அம்மா இங்கே வா வா, அஸ்கு புஸ்கு தா தா, இலையில் சோறைப் போட்டு ஈஃபல் டவரைக் காட்டு//

இந்தப் பாட்டு இன்னும் வெளிவரவில்லையா?

 

 

இதேபோல் 40 கவிதைகளை இயற்றி தேவிஸ்ரீ பிரசாத்துக்கு அனுப்பியிருக்கிறேன். என்னுடைய கவித் திறனின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை ஒரு பக்கம்.//

 

அட, நடுவர் கிட்டே இந்த மாதிரி 150 பாட்டு இருக்கு! பண்புடனுக்கு வந்தாலே பார்க்கலாமில்லே?

 

//பழம் பெருமை பேசுதல் என்பது வெட்டிப்பொழுது போக்கும் பிழைப்பல்ல. வரலாற்றை மீள் ஆய்வு செய்தலின் சுகத்தின் வெளிப்பாடு, நல்லதொரு பொழுதை பழைய பாடல்கள் மேல் கொண்ட காதலாய் மாற்ற வைத்த அனைவருக்கும் எனது நன்றிகள்.. //

பார்த்தீங்களா? எப்படி ஆதாரத்தோட அடுக்கி அடுக்கித் தன்னோட வாதத்தைப் பலப்படுத்தியிருக்கிறாருன்னு கவனியுங்க! அந்தப் பக்கத்திலேருந்து யாராவது வர்றீங்களா இல்லாட்டி நான் தீர்ப்பைச் சொல்லிடவா?

 

தமிழன் வேணு

Naresh Kumar

unread,
Nov 19, 2009, 4:02:04 AM11/19/09
to பண்புடன்

புதிய பாடல்: ராஜா

நடுவர் அவர்களுக்கு வணக்கம்  !

 

புதிய பாடல் அணிக்காக என்னை பேசுமாறு அழைத்த பழைய பாடல்கள் அணித்தலைவர் ஜீவ்ஸ் அவர்களுக்கு என் சிறப்பு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். (இதிலிருந்து என்ன தெரியுது புதிய பாடல்கள் அணியில் உள்ள அனைவருமே தலைமை பண்பாளர்களாக தகுதிஉடையவர்கள்என்ற செய்தியை மேலிடத்திற்கு என்மூலம்  தெரியப்படுத்துகிறேன். )

 

புதுசு கண்ணா புதுசுன்னு இருக்கும் என் அணி தோழர்களுக்கும் , பழசு தாத்தா பழசுன்னு இருக்கும் பழமைவாதிகளுக்கும் என் வணக்கம்.

 

நடுவர் அவர்களே பழமைவாதிகள் என்றும் பலமிழந்த வாதிகள்ன்னு நான் சொல்லிக்கொள்கிறேன் . புதியனவற்றை கண்டுபிடிக்கவோ இல்லை ஏற்றுக்கொள்ளவோ தைரியம் இல்லாத கோழைகள்.

 

பழையபாடல்களில் தத்துவ பாடல்கள் தான் அதிகமென்று மார்தட்டிக்கொள்ளும் பழமைவாதிகள் எல்லா காலகட்டத்திலும் அவைகள் சரியாக வருமென்பதும் அதை மீறி ஏதாவது நடந்தால் அவை தவறு என்று தனக்கு தானே ஒரு வட்டம் போட்டுக்கொண்டு அதற்குள் மட்டுமே உழன்று கொண்டு இருக்கும் கிணற்று தவளைகள்.

 

"மன்மதலீலையை வென்றார் உண்டோன்னு"எம்.கே.டி இருபது அடி தூரத்திலிருந்து லீலை செய்வார். நான் கேட்க்கிறேன் நடுவர் அவர்களே இருபது அடி தூரத்தில இருந்து அவர் என்ன லீலை செய்திருக்க முடியும்?

 

ஏதாவது நம்பும் படி பேசுவது என்பது பழைமை வாதிகளுக்கு பழக்கமில்லாத ஒன்று. இதே நம்ம புது பாட்ட  பாருங்க "மன்மதராசா .....மன்மதராசா கன்னி மனச கிள்ளதேன்னு" பாடினாங்க தமிழ்நாடே ஆடி போனது .இந்த ரெண்டு பாடலில் எது பெரிய அளவில் வெற்றி பெற்றது என்று உங்களுக்கு மட்டுமல்ல அந்த பழமை வாதிகளுக்கும் ஏன் உலகறிந்த உண்மை.

 

ஒருபாடல் கேட்டால் நம் உள்ளே மறைந்திருக்கும்  இருக்கும் ஒரு பாடகர் , பாடலாசிரியர், டான்சர், நடிகர் இவையாவும் வெளிக்கொணரும் படி இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். இயல், இசை , நாடகமேன்னும் முத்தமிழும் அதில் சங்கமிக்க வேண்டும் . இவையாவும் புது பாடல்களில் மட்டும் தான் இருக்கிறது என்பது என்வாதம். பழைய பாடல்கள் எல்லாம் கேட்டால் இப்படித்தான் எதிர் அணியினரை போல் செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு கொடுத்தது போல் உட்கார்ந்து கேக்கணும். இதுவா இசை ? இதை கேட்டால் நாமளும் அவர்களைப் போல் ஜடமாகி விடுவோம் நடுவர் அவர்களே .

 

இங்கே ஒருவர் போடா போடி பாடலை பற்றி பேசினார் அவர்களுக்கு அதை பற்றி பேசவே தகுதி  இல்லை நடுவர் அவர்களே , பழைய பாடல்களில் என்ன மரியாதையான வார்த்தைகள் இருக்கு ? " அண்ணன் என்னடா தம்பி என்னடா " போனால் போகட்டும் போடா " காசேதான் கடவுளடா " இதை விட நம்ம போடா போடி பாடல் எந்த விதத்திலும் நம்ம குறைந்தது இல்லை. அதே பாடலில் ஆரம்ப வரிகளை பாருங்கள் நடுவர் அவர்களே "எக்ஸ்கியூஸ்மி மிஸ்டர் கந்தசாமி" இதை விட பண்பான வாத்தையை நம்ம பண்புடனில் கூட பார்க்க  முடியுமா என்பது சந்தேகமே !

 

பழைய பாடல்களில் காதல், வீரம்,கல்வி, செல்வம், தத்துவம், தாய்பாசம்  என்று தனித்தனியாக சொல்லி நேரவிரயம் செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை மறுக்க முடியுமா நடுபவர் அவர்களே ! ஆனால் நாங்க ஒரே பாடலில் எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறோம், " பறை பறை பறை கைவிலங்கு உடைத்து எழுந்த பறை ......வெற்றி பறை.....வீரப் பறை " அதே பாடலில்  காதல்  " மாட்டு வாலப் பிடிச்சு மாடக்குளம் கடந்து தாமரைப் பூப் பறித்தேன் என் தங்கத்திற்கு "  பின்பு சோகம் என்று ஒரு பாடலில் மேலே நான் கூறிய அனைத்து விதமான உணர்ச்சிகளையும் அழகாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது.  எது சிறந்ததென்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் நடுவர் அவர்களே .

 

புதிய பாடல்களில் அந்நிய மொழி கலப்பு இருக்கிறது என்பதை நான்

ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது பிறமொழியையும் அந்த நாட்டு இசையையும் அதே மெட்டில் அது போன்ற வரிகளை பயன்படுத்தி  நம் மக்கள் புரிந்து கொள்ளும்வகையிலும்

உலக இசை பற்றி ஒரு தெளிவான ஒரு கண்ணோட்டம்  மக்கள் மத்தியில் பெருக வேண்டுமென்ற நோக்கத்திலேயே அவைகள் இடம் பெறுகின்றன. இசைக்கு மொழி

ஒரு தடை இல்லை என்று கூறிய  இந்த பழமை வாதிகளே தற்போது குறைசொல்வது நவீன அரசியலுக்கு ஒப்பானது  நடுவர் அவர்களே.

 

உதாரணமா சொல்லனும்ன்னா " ஒமகசியா ஒகியாகா "

வேற்றுநாட்டு மொழிதான் மார்கழி மாதத்தில் பாடப்படும் பஜனை பாடலாம் . இதை நம் மக்களுக்கும் தெரியப் படுத்தியது நம் புதுபாடலே. இதையெல்லாம் எதிர் அணியினர்

ஒரு கலாசார சீரழிவாகவே பார்க்கின்றனர் ஆனால் நாங்கள் அதை கலாசார பரிமாற்றம் மற்றும் வளர்ச்சியாகவே பார்க்கின்றோம்.தங்களுக்கு புரியவில்லை அல்லது புரிந்து கொள்ள போதுமான அறிவு வளர்ச்சி இல்லை என்பதாலேயே எல்லாவற்றையும் குற்றம் சொல்வது முறையா நடுவர் அவர்களே ??  

 

அடுத்ததாக (ரீமிக்ஸ்) பழையபாடலை புதுமை படுத்தும் முயற்சியிலும் நாங்கள் 

வெற்றிபெற்று வருகிறோம். அந்த பழைய பாடல்கள் வெளிவந்த போது இருந்த வரவேற்ப்பு அதை புதுமை படுத்தியபோது பன்மடங்காக உயர்ந்தது. உதாரணமாக               

 " தொட்டால் பூ மலரும் " பாடலை கூறலாம்,  மக்கள் தினசரி முனுமுனுக்கும் பாடலாகவே மாற்றியது நாங்கள்.  இந்த வகையில் நாங்கள் மறைமுகமாகவும் பல உதவிகள் செய்தும் நன்றி இல்லாமல் வசை பாடுவது மட்டுமே அவர்களுக்கு கை வந்த கலை நடுவர் அவர்களே.

 

 கடைசியாக ஒன்று சொல்லி கொள்கிறேன் நடுவர் அவர்களே.  பழைய பாடலை சாதரணமாக படித்தும் புதியபாடலை பூதக் கண்ணாடி கொண்டு படிக்கும் வழக்கத்தை வைத்துள்ள இந்த பழைய பஞ்சாங்கங்கள் கடைசி வரை தங்களை திருத்திக் கொள்ள

போவது இல்லை. நீங்கள் இவர்களை பற்றி எந்த வித கவலையும் கொள்ளாமல்,  நாங்கள் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் அவர்களை விடுத்து,  திரு. சாலமன் பாப்பையா அய்யா போல் இல்லாவிடினும் அவர் கசின் பிரதர் பாலமன்ஆப்பையா போலாவது

எங்களுக்குநல்லதொரு  தீர்ப்பை வழங்க வேண்டுமென்று வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டு புதிய பாடல்களே சிறந்தவை என்பதை மீண்டும்ஒருமுறை

உரக்க கூறிவிட்டு நல்லதொரு வாய்ப்பை எனக்கு அளித்த அத்துணை

நல்லுள்ளங்களுக்கும் நன்றி பாராட்டி   இத்துடன் என் வாதத்தை நிறைவு செய்கிறேன் .

 நன்றி !  வணக்கம் ! 

 

பி. கு.: (நேரமின்மையால் இத்துடன் முடிக்கிறேன், அடுத்த சுற்று இருந்தால் கண்டிப்பாக என் வாதத்தை தொடருவேன் என்று எதிர் அணியை  எச்சரிக்கிறேன் )

Naresh Kumar

unread,
Nov 19, 2009, 4:06:49 AM11/19/09
to பண்புடன்

நடுவர் வாதம்

//நடுவர் அவர்களுக்கு வணக்கம்  ! //

வாங்க ராஜா! வாங்க பழகலாம்!! 

 

//இதிலிருந்து என்ன தெரியுது புதிய பாடல்கள் அணியில் உள்ள அனைவருமே தலைமை பண்பாளர்களாக தகுதிஉடையவர்கள்என்ற செய்தியை மேலிடத்திற்கு என்மூலம்  தெரியப்படுத்துகிறேன். //

ஆனா, நடுவருக்கு எதுவுமே கிடையாதா? 

 

//புதியனவற்றை கண்டுபிடிக்கவோ இல்லை ஏற்றுக்கொள்ளவோ தைரியம் இல்லாத கோழைகள்.//

சரி தான்! ஒரு முடிவோட தான் களம் இறங்கியிருக்கீங்க போலிருக்கு. 

 

//எல்லா காலகட்டத்திலும் அவைகள் சரியாக வருமென்பதும் அதை மீறி ஏதாவது நடந்தால் அவை தவறு என்று தனக்கு தானே ஒரு வட்டம் போட்டுக்கொண்டு அதற்குள் மட்டுமே உழன்று கொண்டு இருக்கும் கிணற்று தவளைகள். //

இப்போ எதுக்கு தேவையில்லாம என்னோட வலைப்பதிவு பேரை இங்கே இழுக்கறீங்க! உங்களுக்கு ஒண்ணரை மார்க் மைனஸ்!

 

//நான் கேட்க்கிறேன் நடுவர் அவர்களே இருபது அடி தூரத்தில இருந்து அவர் என்ன லீலை செய்திருக்க முடியும்? //

அவரு கையிலே ரிமோட் வச்சிருந்தாரய்யா!

 

//இதே நம்ம புது பாட்ட  பாருங்க "மன்மதராசா .....மன்மதராசா கன்னி மனச கிள்ளதேன்னு" பாடினாங்க தமிழ்நாடே ஆடி போனது .//

 

ஆமாய்யா!

 

//இயல், இசை , நாடகமேன்னும் முத்தமிழும் அதில் சங்கமிக்க வேண்டும் . இவையாவும் புது பாடல்களில் மட்டும் தான் இருக்கிறது என்பது என்வாதம். //

இதென்னய்யா புதுப்புரளி?

 

//" அண்ணன் என்னடா தம்பி என்னடா " போனால் போகட்டும் போடா " காசேதான் கடவுளடா " இதை விட நம்ம போடா போடி பாடல் எந்த விதத்திலும் நம்ம குறைந்தது இல்லை. //

அதானே? அவங்க விரக்தியிலே போடாங்கிறாங்க! இவங்க விரசமாப் போடாங்கிறாங்க! இதுலே போய் வித்தியாசமெல்லாம் பார்த்துக்கிட்டு!

 

//"எக்ஸ்கியூஸ்மி மிஸ்டர் கந்தசாமி" இதை விட பண்பான வாத்தையை நம்ம பண்புடனில் கூட பார்க்க  முடியுமா என்பது சந்தேகமே !//

அந்த "எக்ஸ்க்யூஸ் மீ"ங்கிறதைக் கேட்கும்போதெல்லாம், எனக்கு "யெஸ் ஸ்க்வீஸ் மீ!"ங்கிறா மாதிரி மனசை இறுக்கிப் பிழியுதய்யா! 

 

//பழைய பாடல்களில் காதல், வீரம்,கல்வி, செல்வம், தத்துவம், தாய்பாசம்  என்று தனித்தனியாக சொல்லி நேரவிரயம் செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை மறுக்க முடியுமா நடுபவர் அவர்களே ! //

அதானே! இது ஃபாஸ்ட் ஃபுட் யுகம்! சட்டுப்புட்டுன்னு சொல்ல வந்ததைச் சொல்லுறது தானே நல்லது?

 

 

//புதிய பாடல்களில் அந்நிய மொழி கலப்பு இருக்கிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது பிறமொழியையும் அந்த நாட்டு இசையையும் அதே மெட்டில் அது போன்ற வரிகளை பயன்படுத்தி  நம் மக்கள் புரிந்து கொள்ளும்வகையிலும்  உலக இசை பற்றி ஒரு தெளிவான ஒரு கண்ணோட்டம்  மக்கள் மத்தியில் பெருக வேண்டுமென்ற நோக்கத்திலேயே அவைகள் இடம் பெறுகின்றன. //

என்ன ஒரு உலகளாவிய பார்வை பாருங்க! 

 

//இதை நம் மக்களுக்கும் தெரியப் படுத்தியது நம் புதுபாடலே. //

சுராங்கனியை மறந்திட்டீங்களேய்யா! சுராங்கனிகா மாலு கெனவா! அப்புறம் மாரோ மாரோ சௌக்கா சக்கா சோ மாரோ! Friendship என்பது RAC; Love Confirm பண்ண நீ யோசி-ன்னு காதலையும் ரயில் முன்பதிவையும் ஒப்பிட்ட கற்பனை யாருக்கு வரும்?

 

//இதையெல்லாம் எதிர் அணியினர் ஒரு கலாசார சீரழிவாகவே பார்க்கின்றனர் ஆனால் நாங்கள் அதை கலாசார பரிமாற்றம் மற்றும் வளர்ச்சியாகவே பார்க்கின்றோம்.//

அப்படிப் போடுங்க!

 

//அடுத்ததாக (ரீமிக்ஸ்) பழையபாடலை புதுமை படுத்தும் முயற்சியிலும் நாங்கள் வெற்றிபெற்று வருகிறோம். //

உலகமே எல்லாத்தையும் ரீசைக்கிள் பண்ணுங்கன்னு சொல்லுது! பாட்டை ரீமிக்ஸ் பண்ணினா அது ஒரு குத்தமா?

 

 

//பழைய பாடலை சாதரணமாக படித்தும் புதியபாடலை பூதக் கண்ணாடி கொண்டு படிக்கும் வழக்கத்தை வைத்துள்ள இந்த பழைய பஞ்சாங்கங்கள் கடைசி வரை தங்களை திருத்திக் கொள்ள போவது இல்லை. //

பழைய பஞ்சாங்கத்தை எதுக்குத் திருத்தணும்? மாம்பலத்துலே புதுசு புதுசா கிடைக்குதே

 

//திரு. சாலமன் பாப்பையா அய்யா போல் இல்லாவிடினும் வர் கசின் பிரதர் பாலமன்ஆப்பையா போலாவது எங்களுக்குநல்லதொரு  தீர்ப்பை வழங்க வேண்டுமென்று வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டு புதிய பாடல்களே சிறந்தவை என்பதை மீண்டும்ஒருமுறை உரக்க கூறிவிட்டு என் வாதத்தை நிறைவு செய்கிறேன் . //

நீங்களே என்னை ஆப்பையா ஆக்கினதுக்கு அப்புறம் நான் சும்மா இருப்பேனா? நல்ல தீர்ப்பா வழங்கறேன்.

 

இந்த ராஜா இருக்காரே, பழைய பாட்டைப் பத்திப் பெருமையாப் பேசறவங்களை என்ன பிடி பிடிச்சிருக்காரு பாருங்க! இவருக்கு நெத்தியடி கொடுக்கப் போறது யாரு? வாங்கய்யா...வாங்க...

 

தமிழன் வேணு

Naresh Kumar

unread,
Nov 19, 2009, 4:08:42 AM11/19/09
to பண்புடன்

பழைய பாடல்: அகமது சுபைர்

ஊரென உள்ளோர் உயிரில் கலந்தவர்

பாரது போற்றும் பகலவன் ஈடென

சீரது கொண்ட சிறப்பினை வென்றவர்

நேரது எந்தன் குழு.

 

இந்தக் குழுவின் இந்த பட்டிமன்றத்தின் நடுவர் அவர்களுக்கும், மற்றும் என் எண்ண ஓட்டத்தில் ஓடிவரும் சக தோழர்களுக்கும், எதிரணியில் இருந்தாலும் மனதிற்குள் பழைய பாடலை ஏற்றுக்கொண்டு, புதுப்பாடல்களுக்கு வக்காலத்து வாங்குவதாய் நினைத்துக்கொண்டு, எங்கள் அணிக்காக விவாதம் புரியும் நண்பர்களுக்கும், ஏனைய குழும பார்வையாளர்களுக்கும் வணக்கம்.

 

விவாதம் என்பது தன் கருத்தை எடுத்து வைத்து, எதிரணி எந்தெந்த விதங்களில் சரிந்திருக்கிறது என்பதை நடுவர் உள்ளிட்ட அவைக்கு எடுத்து வைப்பதே ஆகும். ஆனால் எனக்கு முன்பு பேசிய எதிரணி சகோதரர்கள் விவாதம் என்பதன் அர்த்தம் தெரியாதவர்கள். ஏன்னா, புதுப்பாடல்களுக்கு வக்காலத்து வாங்கும்போதே அவங்க அறிவின் யதார்த்தம் புரிகிறது. அவங்க எல்லாருக்கும் ஆண்டவன் நல்ல புத்தியை கொடுக்கணும்.

 

என் விவாதத்தை இரண்டு பகுதியாக பிரிக்கப் போகிறேன். முதலாவதாக எதிரணியின் வாதங்கள். இரண்டாவதாக எனது வாதம்.

 

பட்டிமன்றத்தின் தலைப்பு கொடுக்கும் போதே ////பேசவேண்டியவை :  சமுதாயம் குறித்த கருத்துகள், காதல், தமிழின் மேன்மை மற்றும் இலக்கியம்//// அப்படின்னு சொன்னதுக்கப்புறம் என்னாத்துக்கு இந்த இழை.

 

புதிய பாடல்களில் இலக்கியம் எங்க இருக்கு?? தமிழின் மேன்மை எங்க?? தமிழுக்கு வலிப்பு வந்துகிடக்குயா புதுப்பாடல்கள்ல..

 

நிலாகாயுது..பாட்டை குடும்பத்தோட கேட்க முடியுமா?? அது காதலை சொல்லுதுன்னு சொல்வாய்ங்க புதுப்பாட்டுக்காரங்க..

 

சமுதாயம் குறித்த கருத்துகள்” - புதுப்பாட்டுல இருக்கா இல்லையான்னு தெளிவா தெரியாம போச்சு.. ஏன்னா இந்த புதுப்பாட்டு கோஷ்டி அந்த வகையில விவாதம் பண்ணுதுங்க...

 

வில்லன் விவாதம் பண்ண ஆரம்பிக்கும்போதே //நட்டுவர் அவர்களே//ன்னு ஆரம்பிக்கிறார். நடுவர்னு எழுதத்தெரியாத நண்பர் தமிழின் மேன்மையை எப்படி பேசப்போறார்?? இல்லை நான் வேணுக்கும்னு தான் எழுதினேன்னு சொன்னா, பண்பாடு தெரியாத பன்னாடைன்னு வேணு ஐயா திட்டுவாரா இல்லையா?? சமுதாயத்துடன் ஒட்டி வாழத்தெரியாதவங்க என்ன சமுதாயம் குறித்த கருத்துகளைபேசப்போறாங்க??

 

//காசுக்குத்தான் மதிப்பு இருக்கு மனுசனுக்கு எங்கே இருக்கு என்றும் ரஜினியும், வடிவேலும் இளையராஜாவின் இசையினிலே பாடியிருப்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன் நட்டுவர் அவர்களே......... //

 

என்.எஸ்.கிருஷ்ணன் ஐயா பணத்தை பத்தி பாடுன பாட்டு இதுக்கு பக்கத்துல வருமாயா?? ”கருப்பு மார்க்கெட்டில் புகுந்து கொண்டாயோ? கள்வன் கையினில் சிக்கிக்கொண்டாயோ??.......... அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்??”...

 

இரண்டு வரியை மட்டும் எடுத்தாலே இம்புட்டு தப்பு.. இதில எதிரணிக்காரங்க தலைவர் வேற...மிஸ்டர் வில்லர்..முதல்ல எதிரியோட பலம் தெரிஞ்சு மோதலாமா வேணாமான்னு முடிவு பண்ணுங்க. அப்புறம் ரொம்ப அடிச்சுட்டான்னு வருத்தப்படாதீங்க..

 

//காசோட முக்கியத்துவத்தை வலியுறுத்தி

ஏகப்பட்ட பாட்டு பழசுல வந்திருக்கு. புதுசுல வர்லைன்னு....உண்மைதான் நாங்க காசைப் பத்தி எழுதுறதில்லை..காதலைப் பத்திதான் அதிகம் எழுதுறோம்... ஏன்?// இப்படின்னு நரேஷ் சொல்லியிருக்கார். எதிரணியில புத்திசாலித்தனமான்ன வாதம்னா நரேஷ் ஒருத்தர்தான்னு நினைக்கிறேன். சரி விஷயத்திற்கு வருவோம்..

 

பழைய பாட்டுல காசு தான் முக்கியம்னு ஒரு இடத்துல சொல்லச்சொல்லுங்க... பணம் என்னடா பணம் பணம், குணம் தானடா நிரந்தரம்” - பழைய பாட்டா?? புதுபாட்டா??

 

காதலைப் பத்தி என்ன எழுதிக்கிழிச்சுட்டாங்க இவங்க??

 

ஒரே சீனுங்க நடுவரே... ஒருத்தனுக்கு ஏகப்பட்ட ஃபிகர்ங்க கிடைக்குது. அந்த ஃபிகர்ங்க கூட அவன் பாட்டு பாடணும்.

 

புதுப்பாட்டுக்காரங்க எழுதினாங்கையா பாட்டு எதுக்கு பொண்டாட்டி என்னைச்சுத்தி வப்பாட்டின்னு.. இதை சின்னக்குழந்தைங்க பாடும்போது பாட்டை எழுதினவனை அப்படியே கழுத்தை நெரிச்சு கொல்லத்தோணுது.

பழைய பாட்டுல பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்எப்படிப்பட்ட பாட்டு.. ஆனா ஒரே சீன் :-)

 

//காதல் பாட்டு கேக்கனும்னு கட்டிபுடி கட்டிபுடி பாட்டை கேட்டாராம்...ஏம்பா, நைட்டு யாருக்கும் தெரியாம மிட்நைட் மசாலா பாத்துட்டு இங்க வந்து நல்லவங்களாட்டாம் ஆக்டிங் உடுறது??? //

 

நரேஷ், உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா?? மிட்நைட் மசாலால்ல நாங்க சத்தமே வைக்க மாட்டோம். இந்த மாதிரி பாட்டை ம்யூட்ல வச்சி பாக்குறது. பாட்டை ஏன் கேக்குறதில்லைன்னா, மனுசன் கேக்க முடியுமா அந்த பாட்டுங்களை??

 

//ஒத்த ரூவா தாரேன் பாட்டோ// - நரேஷ், இதை என் நண்பனான நீ சொல்வது வெட்கக்கேடான விஷயம். ஒத்த ரூவா பாட்டுல ஒரு ஆண் ஒரு பொண்ணுகிட்ட நான் அதைக்கொடுக்கிறேன், இதைக்கொடுக்கிறேன்னு மயக்க பாக்குறான். அதுக்கு அந்த அம்மா குஷ்பூ வேற ஆடுற ஆட்டம்?? இதை நீ வக்காலத்து வாங்குற...ஷேம் ஆன் யூ மேன்.

 

அப்புறம் ராஜா.. அவர் ஏன் இந்த விவாதத்துக்கு வந்தாருன்னு தெரியல.. அவர் பேசின வாதங்கள்லாம் சிப்பு சிப்பா வருது..அதுக்கு தனியா எழுதணும். காலம் கருதி விட்டுர்றேன்.

 

இப்ப என் வாதத்தின் இரண்டாம் பாகம்.

 

சமுதாயம் குறித்த கருத்துகள்:

 சமுதாயம்னா நாம எல்லாரும் சேர்ந்தது. இங்க அது சம்பந்தமான கருத்துகள் பழைய பாடல்கள்ல அதிகமா இல்லை புதுபாடல்கள்ல அதிகமா??

 

ஒரு புள்ளிவிவரத்துக்காக சொல்றேன். ஒரு திரைப்படம் என்பது 5 பாடல்கள் கொண்டது. பழைய படங்கள்ல எல்லாமே சமுதாயம் சார்ந்த கருத்துகள் இருக்கும். புதுப்படங்கள்ல ஹீரோ இண்ட்ரோ மட்டும் சமுதாயம் சார்ந்ததா இருக்கும். ஒத்துக்கிறீங்களா இல்லையா?? அதிலையும் இப்ப ஹீரோ இண்ட்ரோ ஏதோ காட்டு விலங்கு இண்ட்ரோ மாதிரி இருக்கு.. புலி உறுமுது..புலி உறுமுதுன்னு பாட்டு வேற..கெரகம்.

 

காதல்:

 மனதின் மெல்லிசை காதல். சும்மா லப்டப்னு துடிக்கிற இதயம் அவ பேர் சொல்லி துடிக்க வைக்கிறது காதல். அதை அப்படியே பிக்கப் பண்ணிட்டு போகாம, பிக்கப் ட்ராப் எஸ்கேப்புனு இருக்காங்க புதுப்பாட்டுக்காரங்க.

 

காதல் என்பது காமம் - இளவயதுக்கு, ஆதரவு - முதுமைக்கு. ஏதாவது ஒரு புது காதல் பாட்டுல முதுமையை பத்தி எழுதி இருக்காங்களா?? ஏன்னா இவங்களைப் பொறுத்தவரைக் காதல் என்பது காமம். மன்மதலீலை பாட்ட ஏன் தூரமா நின்னு பாடுறார்னு கேக்குறாங்க. காமத்துக்கு தான் அருகாமை வேணும். காதலுக்கு தேவை இல்லை. என்னை மாதிரி பசங்க காதலிச்ச பொண்ணை விட்டுட்டு 5000 கி.மீ. தூரத்தில இருந்தாலும், அவ அடிக்கிற மிஸ்டு கால்ல ஜீவன் வாழுதே அது காதல். அவங்க பக்கத்தில இருந்தாத்தான் வரும்னா அது காமம்.

 

தமிழின் மேன்மை:

 அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்பாட்டு ஒன்னு போதும். காதல் பாட்டு தான். ஆனா, எம்புட்டு தான் தான்னு முடியுது. இதை மாதிரி நிறைய பாட்டுங்களை சொல்லலாம்.

 

இலக்கியம்:

 இலக்கியத்தில தூதுன்னு ஒரு வகை. அந்த தூதுக்கு நம்ம பழைய பாட்டு ஆளுங்க, நிலா, தென்றல், என்னென்ன தூது அனுப்பி இருக்காங்க.. எங்க ஆளு கண்ணதாசன் ஒரு படி மேல போய், “பறக்கும் பந்து பறக்கும், அது பறந்தோடி வரும் தூதுன்றார்.

 

நடுவர் அவர்களே, பழையபாடலின் சிறப்பைப்பற்றி எழுதும்போது, நிறுத்தவே முடிவதில்லை. அள்ளக் குறையாத தெள்ளமுது பழைய பாடல்கள்.

 

நடுவர் அவர்களே, பழைய பாடல்களே சிறந்தது என்ற தங்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்.

 

நன்றி.. வணக்கம்.

Naresh Kumar

unread,
Nov 19, 2009, 4:15:04 AM11/19/09
to பண்புடன்

//ஆனால் எனக்கு முன்பு பேசிய எதிரணி சகோதரர்கள் விவாதம் என்பதன் அர்த்தம் தெரியாதவர்கள். //

வந்தவேகத்திலேயே பவுன்சர் போடுறாரு பாருங்க!

 

//”நிலாகாயுது..பாட்டை குடும்பத்தோட கேட்க முடியுமா?? //

எப்படி முடியும்? நானே தனியாத் தானே போய் படம் பார்த்தேன்?

 

நடுவர் வாதம்

//வில்லன் விவாதம் பண்ண ஆரம்பிக்கும்போதே //நட்டுவர் அவர்களே//ன்னு ஆரம்பிக்கிறார். நடுவர்னு எழுதத்தெரியாத நண்பர் தமிழின் மேன்மையை எப்படி பேசப்போறார்?? //

எது எதுலே அழுத்தம் கொடுக்கணுமுன்னு கூட தெரியலே பாருங்க

 

//இல்லை நான் வேணுக்கும்னு தான் எழுதினேன்னு சொன்னா, பண்பாடு தெரியாத பன்னாடைன்னு வேணு ஐயா திட்டுவாரா இல்லையா?? //

அதெல்லாம் மாட்டேன். வில்லன் உள்ளூர்க்காரரு!

 

//இரண்டு வரியை மட்டும் எடுத்தாலே இம்புட்டு தப்பு.. இதில எதிரணிக்காரங்க தலைவர் வேற...மிஸ்டர் வில்லர்..முதல்ல எதிரியோட பலம் தெரிஞ்சு மோதலாமா வேணாமான்னு முடிவு பண்ணுங்க. அப்புறம் ரொம்ப அடிச்சுட்டான்னு வருத்தப்படாதீங்க..//

ஆமா, சுபைர் ஆட்டோ அனுப்பிருவாரு, ஜாக்கிரதை

 

//எதிரணியில புத்திசாலித்தனமான்ன வாதம்னா நரேஷ் ஒருத்தர்தான்னு நினைக்கிறேன். //

 

உங்க கட்டாயம் புரியுதுங்க! 

 

//பழைய பாட்டுல காசு தான் முக்கியம்னு ஒரு இடத்துல சொல்லச்சொல்லுங்க... பணம் என்னடா பணம் பணம், குணம் தானடா நிரந்தரம்” - பழைய பாட்டா?? புதுபாட்டா??//

நாணயம் என்றால் அதன்பேர் நேர்மையென்பது

நல்லவர்க்குக் காசுபணம் தேவையற்றது..ன்னு சொன்னாங்களே! மறக்க முடியுமா?

 

//“எதுக்கு பொண்டாட்டி என்னைச்சுத்தி வப்பாட்டின்னு.. இதை சின்னக்குழந்தைங்க பாடும்போது பாட்டை எழுதினவனை அப்படியே கழுத்தை நெரிச்சு கொல்லத்தோணுது.//

இதையெல்லாம் பெண்ணுரிமை பத்திப் பேசுறவங்க எப்படி கவனிக்காம விடுறாங்கன்னே தெரியலே!

 

//பழைய பாட்டுல பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்எப்படிப்பட்ட பாட்டு.. ஆனா ஒரே சீன் :-)//

அதுலே கூட "வானமெங்கும் ஓடி வாழ்க்கையின்பம் தேடி நீயும் நானும் ஆடலாம் ஞானப்பாட்டுப்பாடி,"ன்னு ஒரு தேடல் இருக்குதய்யா!

 

//நரேஷ், உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா?? மிட்நைட் மசாலால்ல நாங்க சத்தமே வைக்க மாட்டோம். இந்த மாதிரி பாட்டை ம்யூட்ல வச்சி பாக்குறது. பாட்டை ஏன் கேக்குறதில்லைன்னா, மனுசன் கேக்க முடியுமா அந்த பாட்டுங்களை??//

ஓஹோ! நீங்களும் நம்மள மாதிரி தானா? பேஷ்! பேஷ்!!

 

////ஒத்த ரூவா தாரேன் பாட்டோ// - நரேஷ், இதை என் நண்பனான நீ சொல்வது வெட்கக்கேடான விஷயம். ஒத்த ரூவா பாட்டுல ஒரு ஆண் ஒரு பொண்ணுகிட்ட நான் அதைக்கொடுக்கிறேன், இதைக்கொடுக்கிறேன்னு மயக்க பாக்குறான். அதுக்கு அந்த அம்மா குஷ்பூ வேற ஆடுற ஆட்டம்?? இதை நீ வக்காலத்து வாங்குற...ஷேம் ஆன் யூ மேன்.//

எவ்வளவு கோபம் வந்தா ஆங்கிலத்துலே ஒரு ஆளு பேசுவாருன்னு புரிஞ்சுக்குங்க

 

//அப்புறம் ராஜா.. அவர் ஏன் இந்த விவாதத்துக்கு வந்தாருன்னு தெரியல.. அவர் பேசின வாதங்கள்லாம் சிப்பு சிப்பா வருது..அதுக்கு தனியா எழுதணும். காலம் கருதி விட்டுர்றேன்.//

அவரா வரலே! யாரோ மண்டபத்திலே எழுதிக் கொடுத்ததை ஒப்பிச்சாருன்னு சொல்லறீங்களா?

 

 

//சமுதாயம் குறித்த கருத்துகள்:

சமுதாயம்னா நாம எல்லாரும் சேர்ந்தது. இங்க அது சம்பந்தமான கருத்துகள் பழைய பாடல்கள்ல அதிகமா இல்லை புதுபாடல்கள்ல அதிகமா??//

இப்போ வர்ற பாட்டுக்கள்லே கருத்தே இல்லியேய்யா!

 

//ஒரு புள்ளிவிவரத்துக்காக சொல்றேன். ஒரு திரைப்படம் என்பது 5 பாடல்கள் கொண்டது. பழைய படங்கள்ல எல்லாமே சமுதாயம் சார்ந்த கருத்துகள் இருக்கும். புதுப்படங்கள்ல ஹீரோ இண்ட்ரோ மட்டும் சமுதாயம் சார்ந்ததா இருக்கும். ஒத்துக்கிறீங்களா இல்லையா?? அதிலையும் இப்ப ஹீரோ இண்ட்ரோ ஏதோ காட்டு விலங்கு இண்ட்ரோ மாதிரி இருக்கு.. புலி உறுமுது..புலி உறுமுதுன்னு பாட்டு வேற..கெரகம்.//

டண்டாணா டர்ர்றா..டணக்குடக்கா டர்ர்றா-னு பாடறாங்க. சரி, இறுக்கமான பேண்ட்டைப் போட்டுக்கிட்டு இந்த ஆட்டம் ஆடி துணி தான் டர்ர்னு கிழிஞ்சிருச்சின்னு பாடறாங்களோன்னு நினைச்சிட்டேன்.

 

//காதல்:

காதல் என்பது காமம் - இளவயதுக்கு, ஆதரவு - முதுமைக்கு. ஏதாவது ஒரு புது காதல் பாட்டுல முதுமையை பத்தி எழுதி இருக்காங்களா?? ஏன்னா இவங்களைப் பொறுத்தவரைக் காதல் என்பது காமம். //

டேய், கையை வச்சிட்டு சும்மாயிருடா-ன்னு பாடறாங்க! யோவ், நீ முதல்லே கையை வச்சிட்டு பாட்டு எழுதறதை நிறுத்துன்னு சொல்லலாம் போலிருக்கு

 

//மன்மதலீலை பாட்ட ஏன் தூரமா நின்னு பாடுறார்னு கேக்குறாங்க. காமத்துக்கு தான் அருகாமை வேணும். காதலுக்கு தேவை இல்லை. //

அவங்க தூரமா பாடுனாலும் பரவாயில்லேய்யா! இந்தக் காலத்துப்படத்துலே காதல் வந்திட்டா உடனே வெளிநாடு போய் பாடுறாங்க! இவ்வளவு தூரத்துலே போயா டூயட் பாடணும்!

 

 

//அவ அடிக்கிற மிஸ்டு கால்ல ஜீவன் வாழுதே அது காதல். அவங்க பக்கத்தில இருந்தாத்தான் வரும்னா அது காமம்.//

நான் கூட செலவை மிச்சம் புடிக்கத் தான் மிஸ்டு கால் வுடுறாங்க போலிருக்குன்னு நினச்சிட்டேன்யா

 

 

//தமிழின் மேன்மை:

 அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்பாட்டு ஒன்னு போதும். காதல் பாட்டு தான். ஆனா, எம்புட்டு தான் தான்னு முடியுது. இதை மாதிரி நிறைய பாட்டுங்களை சொல்லலாம். //

ஒண்ணா ரெண்டா? ஓராயிரம் பாட்டு இருக்குதே

 

//இலக்கியம்:

இலக்கியத்தில தூதுன்னு ஒரு வகை. அந்த தூதுக்கு நம்ம பழைய பாட்டு ஆளுங்க, நிலா, தென்றல், என்னென்ன தூது அனுப்பி இருக்காங்க.. எங்க ஆளு கண்ணதாசன் ஒரு படி மேல போய், “பறக்கும் பந்து பறக்கும், அது பறந்தோடி வரும் தூதுன்றார்

தூது சொல்ல ஒரு தோழி இல்லையென

துயர் கொண்டாயோ தலைவி

துள்ளும் காற்று வந்து மெல்லச் சேலைதொட

சுகம் கண்டாயோ தலைவி!//

குறுந்தொகையைப் பிழிஞ்சு ஜூஸ் எடுத்துக் கொடுத்திருக்காரய்யா நம்ம கவியரசு

 

//நடுவர் அவர்களே, பழையபாடலின் சிறப்பைப்பற்றி எழுதும்போது, நிறுத்தவே முடிவதில்லை. அள்ளக் குறையாத தெள்ளமுது பழைய பாடல்கள்.//

ஆமாம். ஆமாம்! அதுக்காக ரொம்ப இழுத்திராதீங்க! நடுவருக்கு அரையாண்டுக் கணக்கு வேலை இன்னும் முடியலே!

 

//நடுவர் அவர்களே, பழைய பாடல்களே சிறந்தது என்ற தங்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்.//

 மரபுக்கவிதை மன்னர் சுபைர், சுருக்கமாப் பேசினாலும் சுருக்குன்னு தைக்குது. தமிழ் இலக்கியம், கலாச்சாரம், காதல், பாசம் இன்னும் பிற மெல்லிய மனித உணர்வுகளை இசையோடு இழைந்து வந்து நெஞ்சைத்தாலாட்டுகிற சிறப்பு பழைய பாடல்களுக்கு மட்டுமே இருந்து வந்திருக்கின்றன என்பதை மிகவும் ஆணித்தரமாக கூறிவிட்டார்.

 

புதுப்பாட்டு குறித்து இன்னும் பேச யாராவது இருக்கீங்களா? இருந்தா வந்து எழுப்புங்க!

 

தமிழன் வேணு

Naresh Kumar

unread,
Nov 19, 2009, 8:26:09 PM11/19/09
to பண்புடன்
புதிய பாடல்: ரிஷான்

இந்தப் பட்டிமன்றத்தின் தலைவருக்கும், நடுவருக்கும், பழைய பாடலெனும் கிழிந்த ஆடையை இன்னும் உடுத்திக் கொண்டு ஆதிப் போர்வையிலிருந்து இன்னும் துயில் கலையாத எதிரணியினருக்கும், புதிய பாடல்களின் கருத்தாழம் உணர்ந்து ரசித்து உரையாற்றிய, உரையாற்றக் காத்திருக்கும் எனது அணியினருக்கும், பார்வையாளர்களுக்கும் வந்தனத்தைக் கூறிக்கொண்டு எனது உரையைத் தொடர்கிறேன்.

எனக்கு முன்பு வாதிட்டுச் சென்ற சகோதரர் சுபைர், பயணத்தைப் பற்றிப் பேசச் சொன்னால், வயல் விதைப்பைப் பற்றிப் பேசுவது போல பாட்டைப் பற்றிப் பேசச் சொன்னால் சம்பந்தமேயில்லாமல் எதையெதையோ பேசிவிட்டுப் போயிருக்கிறார்.


சமுதாயம் :

சுபைர்  "சமுதாயம்னா நாம எல்லாரும் சேர்ந்தது. இங்க அது சம்பந்தமான கருத்துகள் பழைய பாடல்கள்ல அதிகமா இல்லை புதுப்பாடல்கள்ல அதிகமா??" என்று கேட்கிறார். அவரது அறியாமையை விளக்க இந்தக் கேள்வியொன்றே போதும். ஒரு திருட்டுக் கும்பல் அதிகமாக இருக்கிற இடத்துக்குத்தான் காவல்துறையின் பங்களிப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது என்பது போல சமுதாயம் சீர்கெட்டு இருக்கின்ற அறியாமைக் காலத்தில்தான் சமுதாயம் சம்பந்தமான விழிப்புணர்வுக்கான கருத்துள்ள பாடல்கள் தேவைப்படுகின்றன. தற்போதைய சமூகம் எல்லாவற்றிலும் முன்னேற்றமடைந்த சமூகம். அப்படியிருக்கும்பொழுது பாடலால் சமூகத்தைத் திருத்தமுடியுமென்ற மூட நம்பிக்கையை இன்னும் தொடர வேண்டுமா? அக்காலத்தில் தான் மட்டும் சமூகத்தில் மேம்பட்டிருப்பதாகக் காட்டுவதற்காக, அக் காலத்தைய திரைப்படக் கதாநாயகர்கள் இது போன்ற கருத்துப் பாடல்கள் மூலம் தனக்கான நல்ல விம்பத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்தார்களே தவிர, அவர்கள் நடித்த அப்பாடல்களால் சமுதாயம் எள்ளளவும் திருந்தவில்லை. மதுபானத்தைத் தொடவேண்டாம் என எழுதிய கவிஞர்களே மதுபோதையோடுதான் அப்பாடல்களை எழுதினார்களென அன்றைய சமூகம் அறிந்திருந்தால், அந்தப் பாடல்களை நிச்சயமாகக் கொண்டாடியிருக்க மாட்டார்கள்.

சமுதாயத்திற்காகப் பாடப்பட்ட எத்தனையோ நல்ல புதிய பாடல்கள் சுபைரினதும், அவரது அணியினரதும் காதுகளை எட்டவேயில்லையா?

உதாரணத்திற்கு, ஒரு பாடல் கேளுங்கள்

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே
வாழ்த்துப் பாடு
கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழணும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...

எவ்வளவு அழகான ஆழமான அர்த்தத்தைக் கொண்டிருக்கும் பாடல் இது? வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்பதையும் ஒற்றுமையை வலியுருத்தவும் எவ்வளவு ஆழமான வரிகள் பயன்பட்டிருக்கின்றன புதிய பாடலில்..பாடலின் அடுத்த வரிகளைப் பாருங்கள்.

நாம் எல்லாம் சுவாசிக்க தனித் தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள்
இடங்களைப் பார்த்துப் பொழியாது
கோடையில் இன்று இலையுதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும்
பாடங்கள் தானே

கேளடி

கேளுங்கள்..இது போன்ற ஆழமான அர்த்தம் கொண்ட பழைய பாடல் ஏதேனும் உண்டா?

இந்தப் பாடல் பாமரர்க்குப் புரியாத மொழியெனச் சொல்லப் போகும் பழைய அணியினருக்காக இன்னுமொரு பாடல்.. ஊர்ப் பேச்சு வழக்கில் எல்லோர்க்கும் புரியும்படி எழுதப்பட்ட பாடல்...கேளுங்கள்..

தாயி விருமாயி மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும் உன் முகமே தெரியுதும்மா
தங்கம் போல நான் வளர்த்த தங்கச்சி பிரியக் கண்டு
கத்தாழங் காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா
வாசப்படி கடக்கையிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிப்புட்டா பாதி உயிர் போச்சு

அண்ணே போய் வரவா அழுது போய் வரவா
மண்ணே போய் வர்வா மாமரமே போய் வரவா
அணில் வால் மீச கொண்ட அண்ணே உன்னைவிட்டு
புலிவால் மீசை கொண்ட புருசனோட போய் வரவா
சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம்தானே
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடம்தானே


ஒரு பெண் தன் பிறந்த வீட்டை விட்டு முதன்முதலாக தனது கணவன் வீட்டுக்குப் போவதை இதை விடவும் சோகத்தோடு, உண்மையான வரிகளோடு எந்தப் பழைய பாடலாவது சொல்லியிருக்கிறதா?

இதே போல வழி தவறிப் போகும் ஆணின் நிலையைச் சொல்லும் இன்னுமொரு பாடல்வரிகள் இப்படி

தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா

இது போல அருமையான வரிகளில் உண்மை நிலையை விளக்கும் பழைய பாடல் உண்டா?
வாழ்க்கையின் சந்தர்ப்பசூழ்நிலைகளைச் சொல்லும் அருமையான பாடலொன்றின் வரிகள் இவை.

அதுபோலவே தனது பிள்ளையின் புதுவரவையும், தனது நண்பனின் மேன்மையையும் ஒரே பாடலில் விளக்கும் அருமையான வரிகள் இவை.

உயிர் கொடுத்தத் தந்தை இங்கே
உரு கொடுத்த அன்னை அங்கே
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே?

தாலாட்ட அன்னை உண்டு!
சீராட்டத் தந்தை உண்டு!
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு!

ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் உண்டு!
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு!

இது போல ஆழமான அர்த்தம் கொண்ட பழைய பாடல் ஏதேனும் உண்டா?

பிஞ்சுக் குழந்தைகளைப் பற்றிச் சொல்லும் புதுப்பாடலைக் கேளுங்கள்

ரோஜாப்பூ கைரெண்டும்
காற்றோடு கதைபேசும்
உன் பின்னழகில் பெளர்ணமிகள்
தகதிமிதா ஜதிபேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை
ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால்வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டைப் பிடித்துவிட்டான் இப்படி ஓர்
அட்டினக்கால் தோரணை

இது போல குழந்தைகளை அழகாக வர்ணிக்கும் பழைய பாடல்கள் உண்டா?

உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்..

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்

யாருக்கில்லைப் போராட்டம்?
கண்ணில் என்ன நீரோட்டம்?
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்

இது போல வாழ்க்கை பற்றிய உண்மைக் கருத்துக்களைச் சொல்லி தன்னம்பிக்கையூட்டும் வரிகள் கொண்ட பழைய பாடல் ஏதேனுமிருக்கிறதா?

இதுவரை வாழ்க்கை, சமூகம், கணவன், அண்ணன், தங்கை, குழந்தை, மொழியென எல்லாம் கலந்த நம் சமுதாயத்தைக் குறிக்கும் அழகிய புதியபாடல்களைக் கொண்டு சமுதாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதியபாடல்களைப் பற்றி விளக்கினேன்..நிச்சயமாக எதிரணியினருக்கும் நடுவருக்கும் புதிய பாடல்களின் மகத்துவம் புரிந்திருக்கும்.. இனி காதலைப் பற்றிப் பார்ப்போம்.

காதல் :

அடுத்து காதலைப்பற்றி எதிரணியைச் சேர்ந்த சுபைர் புதுப்புது வியாக்கியானங்களையெல்லாம் எடுத்துவைக்கிறார். கேட்கும்பொழுது சிரிப்புத்தான் வருகிறது. சுபைர் சொல்வது மாதிரி காதல் என்றால் அது சந்தோஷம் மட்டும்தானா? ஆனந்த உணர்ச்சியை மட்டுமே கிளறிவிடுவதென்றால் அதற்குப் பெயர் வேறு.. காதல் என்றால் அதில் எல்லா உணர்ச்சிகளும் அடங்கியிருக்கும். அன்பு, ஆனந்தம், அழுகை, சோகம், பிரிவு, விட்டுக் கொடுத்தல், புரிந்துணர்தல் எல்லாமே..புதிய பாடல்களில் இவை ஒவ்வொன்றுக்குமே பாடல்கள் உண்டு.. பழைய பாடல்களில் அப்படியிருக்கிறதா சுபைர்?

காதல் என்றால் என்ன என்று ஒரு புதிய பாடல் சொல்கிறது. முழுதாகக் கேளுங்கள்.

ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரஸ்யமானது காதல் மிக மிக சுவாரஸ்யமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்ல சொன்னாலும் சொல்வதும் இல்லை மனமானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிச்சத்தைப் போல அது சுதந்திரமானதும் அல்ல
ஈரத்தை இருட்டினை போல அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டு கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத்தனே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினை போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரனும் மெல்ல

இதைவிடவும் காதலைப் பற்றிச் சொல்லும் அழகான பழைய பாடலேதும் உண்டா?

சரி..இனி காதலர்களைப் பார்ப்போம்..ஒரு ஆண், ஒரு பெண்ணைப் பார்க்கிறான்..அவன் நிலைமையில் தோன்றும் மாற்றங்களைப் பாருங்கள்.

ஒலியின்றி உதடுகள் பேசும்
பெரும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம்

பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல 

இனி ஒரு பெண்ணைப் பார்த்து, பழகி, அவளிடம் காதல் வந்ததும் ஒரு ஆணின் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துகிறது இந்தப் புதிய பாடல்.

நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை

சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை

அவனால் எல்லாம் செய்யமுடியும். ஆனால் காதலைச் சொல்ல மட்டும் முடியவில்லை. காரணம் உண்மைக் காதல். ஆனாலும் அவன் மனம் ஏங்கிக் கொண்டே இருக்கும். அவளைத் தேடிக் கொண்டே இருக்கும். கீழுள்ள வரிகளைப் பாருங்கள்.

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே

கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்த்தது உள்ளே செல்ல
சுகங்களும் கூடுது உன்னை தேடியே

உன்னை உன்னை தாண்டி செல்ல
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ
உன்னை உன்னை தேடி தானே
இந்த ஏக்கம் இந்த பாதை
இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ

இதே காதல் பெண்ணுக்கு வரும்போது அவள் நாணமடைகிறாள்.. ஆணிடம் தன் காதலைச் சொல்லத் தயங்குகிறாள். அதை எவ்வளவு அருமையாக புதிய பாடல் வெளிப்படுத்துகிறது.

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வுதான் ஏனோ?

அதே போல காதலைச் சொல்லிவிட்டாலும் இதே நாணம் எப்படி உருப்பெறுகிறது பாருங்கள்.

கருவிழி இரண்டுமே கருவறையாகிறதே
உனை நான் சுமந்தேன்
ஒரு காதல் இளம் புயல் நெஞ்சில் வீசியதால்
அழகானேன் புதிதாய் பிறந்தேன்

இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன்
இதயத்தை திறந்தின்று விடுதலை தருகிறேன்
வெட்கங்களின் இரகசியம் உணர்ந்தேன்
அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன்
உயிர்த் தேடல் நிகழ்கின்ற கூடல் நாடகத்தில்
உன்னிடம் நான் படித்தேன் படைத்தேன்

இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதைக் காண்கிறேன்
பகலெல்லாம் பனித்துளி சிதறியும் வேர்க்கிறேன்
நீ அருகினில் இருக்கின்ற நேரம்
மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும்

காதலில் விழுந்திட்ட அந்தப் பெண்ணுக்கு இரவும் பகலாகத் தெரிகிறது.. காலநிலை வேறுபட்டுத் தெரிகிறது.. இவ்வளவு அழகாக பெண்ணின் நிலையை பழைய பாடல்கள் விளக்குகிறதா?

காதலர்கள் திருமணத்தில் சேர்ந்தாலும் அதற்கும் அழகிய பாடல்கள் உண்டு..

இனி இரவே இல்லை,
கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை.
இனிப் பிரிவே இல்லை,
அன்பே உன் உளரலும் எனக்கு இசை..

உன்னைக் காணும் வரையில்
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்..
கண்ணால் நீயும் அதிலே
எழுதிப்போனாய் நல்ல ஓவியம்..

எவ்வளவு அழகான வரிகள்... இது போலவே உறவிலும் பிரிவிலும் உதாரணம் சொல்ல புதிய பாடல்களில் நிறையப்பாடல்கள் உண்டு. பழைய பாடல்களில் அப்படி உள்ளனவா?

 
தமிழின் மேன்மை:
 
”அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்” பாட்டு ஒன்னு போதும்" என்று சுபைர் சொல்கிறார்.. இதில் தமிழின் மேன்மை எங்கே வெளிப்படுகிறது?

”அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்..எப்படிச் சொல்வேனடி?"
சொல்லத் தெரியாவிட்டால் எதற்குப்பாட வேண்டும்?

தமிழின் மேன்மையை மிக அழகாகச் சொல்லும் ஒரு புதிய பாடலைக் கேளுங்கள்..நமது 'மொழி'யைப் பற்றிய இந்தப் பாடலைப் பாருங்கள்.

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்


இதை விடவும் அழகாக தமிழின் மேன்மையைப் பற்றிச் சொல்லும் பழைய பாடல் ஏதாவதொன்று இருக்கிறதா? இன்னுமொரு பாடல் கேளுங்கள்.

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ

நமது மொழியை உயர்த்திச் சொல்ல வேறு என்ன பழைய பாடல்கள் இருக்கின்றன இதைப்போல?

இலக்கியம்:
 
இலக்கியத்திலும் புதிய பாடல்கள்தான் முதலிடத்தை வகிக்கின்றன. அழகாகப் புரியும் மொழியில் இலக்கியத்தை மிகவும் அழகாக நம் மனதில் உணரச் செய்கின்றன புதியபாடல்கள்.. உதாரணத்துக்கு இப் பாடலைப் பாருங்கள்.

ஒரு ஆணின் கர்வம் அழித்த பெண்ணின் நினைவைப் பற்றி ஒரு புதிய பாடல் இலக்கியநயத்தோடு இப்படிப் பாடப்பட்டிருக்கிறது.

நேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழைவது போல்
உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பதுபோல்
மனம் கலங்கி புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி

இதுவே பெண்ணின் நிலையிலிருந்து இப்படிப் பாடப்பட்டிருக்கிறது.

பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப்பூவைத்துப் பூவைத்த
பூவைக்குள் தீ வைத்தாய்

இனி ஆணும், பெண்ணும் காதல் கொண்டவிடத்து எழுகிறது இப்பாடல்,

மங்கை மான்விழி அம்புகள்
என் மார் துளைத்ததென்ன
பாண்டிநாதனைக் கண்டு என்
மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை
யாயும் யாயும் யாராகியறோனென்று நேர்ந்தததென்ன
யானும் நீயும் எவ்வழி அரிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன

இதைவிடவும் இலக்கியத்தரமான, அழகிய பழைய பாடலேதாவது இருக்கிறதா? புதுப்பாடல்கள்தான் இவ்வாறாக இலக்கியத்திலும் மேலே நிற்கின்றன.

எனவே மேற்சொன்னபடி, உதாரணங்களோடு விளக்கிய உண்மைகளெல்லாம் நடுவர்களுக்கும் நம் எதிரணியினருக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றாக விளங்கியிருக்கும். உண்மைத் தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கும் உங்கள் அனைவரினதும் அன்புக்குரிய,

- ரிஷான் !!!

Naresh Kumar

unread,
Nov 19, 2009, 8:30:21 PM11/19/09
to பண்புடன்
நடுவர் வாதம்

வாங்க ரிஷான்! மேடைக்குப் பின்பக்கமா இன்னொரு இழையிலே திரிசமம் பண்ணினாலும் சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க
 
எனக்கு முன்பு வாதிட்டுச் சென்ற சகோதரர் சுபைர், பாட்டைப் பற்றிப் பேசச் சொன்னால் சம்பந்தமேயில்லாமல் எதையெதையோ பேசிவிட்டுப் போயிருக்கிறார்.

அதானே! பழைய பாட்டுக்காகப் பரிஞ்சு பேசுறவர் ஏன் புதுப்பாட்டு பாணியிலே பேசணும்?
 
தற்போதைய சமூகம் எல்லாவற்றிலும் முன்னேற்றமடைந்த சமூகம். அப்படியிருக்கும்பொழுது பாடலால் சமூகத்தைத் திருத்தமுடியுமென்ற மூட நம்பிக்கையை இன்னும் தொடர வேண்டுமா?

ஓஹோ! அதுனாலே தான் அதைப் பத்தி யாரும் கவலைப்படலியா? சரி சரி!
 
மதுபானத்தைத் தொடவேண்டாம் என எழுதிய கவிஞர்களே மதுபோதையோடுதான் அப்பாடல்களை எழுதினார்களென அன்றைய சமூகம் அறிந்திருந்தால், அந்தப் பாடல்களை நிச்சயமாகக் கொண்டாடியிருக்க மாட்டார்கள்.

அந்தப் பாட்டைப் பாடிக்கிட்டே இவங்களும் மதுபானம் குடிச்சாங்களாமய்யா!

 

எவ்வளவு அழகான ஆழமான அர்த்தத்தைக் கொண்டிருக்கும் பாடல் இது? வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்பதையும் ஒற்றுமையை வலியுருத்தவும் எவ்வளவு ஆழமான வரிகள் பயன்பட்டிருக்கின்றன புதிய பாடலில்..

அப்புறம் சினிமாப்பாட்டுலே கருத்து மட்டும் எப்படி நிரந்தரமா இருக்கும்?
 

முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும்
பாடங்கள் தானே

கேளடி

கேளுங்கள்..இது போன்ற ஆழமான அர்த்தம் கொண்ட பழைய பாடல் ஏதேனும் உண்டா?

ரொம்ப ஆழமாத் தானய்யா இருக்கு! இன்னும் கொஞ்சம் தோண்டினா தண்ணியே வந்திரும்போலிருக்கே
 
ஊர்ப் பேச்சு வழக்கில் எல்லோர்க்கும் புரியும்படி எழுதப்பட்ட பாடல்...கேளுங்கள்..

சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம்தானே
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடம்தானே


ஒரு பெண் தன் பிறந்த வீட்டை விட்டு முதன்முதலாக தனது கணவன் வீட்டுக்குப் போவதை இதை விடவும் சோகத்தோடு, உண்மையான வரிகளோடு எந்தப் பழைய பாடலாவது சொல்லியிருக்கிறதா?

லேடீஸ் சென்டிமென்டா? இதுக்கும் நடுவருக்கும் ரொம்ப தூரமாச்சே!

தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா

இது போல அருமையான வரிகளில் உண்மை நிலையை விளக்கும் பழைய பாடல் உண்டா?

எப்படிப்பட்ட பாட்டு! அதுலேயும் அந்தப் பாட்டுலே ஸ்ரீதேவி....! ஹும்ம்ம்
 
தாலாட்ட அன்னை உண்டு!
சீராட்டத் தந்தை உண்டு!
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு!
இது போல ஆழமான அர்த்தம் கொண்ட பழைய பாடல் ஏதேனும் உண்டா?

நீங்க ஆழத்திலேயே இருக்கீங்க! கொஞ்சம் மேலே ஏறி வாங்க!

ரோஜாப்பூ கைரெண்டும்
காற்றோடு கதைபேசும்

இது போல குழந்தைகளை அழகாக வர்ணிக்கும் பழைய பாடல்கள் உண்டா?

அழ.வள்ளியப்பா வேண்ணா எழுதியிருக்கலாம்.

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்


இது போல வாழ்க்கை பற்றிய உண்மைக் கருத்துக்களைச் சொல்லி தன்னம்பிக்கையூட்டும் வரிகள் கொண்ட பழைய பாடல் ஏதேனுமிருக்கிறதா?

இருக்கும்! யாராவது வந்து சொல்லுவாங்க பாருங்க

இனி காதலைப் பற்றிப் பார்ப்போம்.

மேஜர் சப்ஜெக்டுக்கு வந்திட்டீங்க

காதல் என்றால் அது சந்தோஷம் மட்டும்தானா? ஆனந்த உணர்ச்சியை மட்டுமே கிளறிவிடுவதென்றால் அதற்குப் பெயர் வேறு.. காதல் என்றால் அதில் எல்லா உணர்ச்சிகளும் அடங்கியிருக்கும். அன்பு, ஆனந்தம், அழுகை, சோகம், பிரிவு, விட்டுக் கொடுத்தல், புரிந்துணர்தல் எல்லாமே..புதிய பாடல்களில்

எவ்வளவு விட்டுக் கொடுக்கிறாங்க இந்தக் காலத்துக் காதலர்கள்?புரியாமப் பேசப்படாது.
 
வாசனை வெளிச்சத்தைப் போல அது சுதந்திரமானதும் அல்ல
ஈரத்தை இருட்டினை போல அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல


இதைவிடவும் காதலைப் பற்றிச் சொல்லும் அழகான பழைய பாடலேதும் உண்டா?
அப்படிக் கேளுங்க
இனி ஒரு பெண்ணைப் பார்த்து, பழகி, அவளிடம் காதல் வந்ததும் ஒரு ஆணின் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துகிறது இந்தப் புதிய பாடல்.

நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை

தமிழிலே சொல்லியிருக்கலாமே?

காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை
 
தெரியாத காரியத்துலே இறங்கக் கூடாதய்யா
 
இதே காதல் பெண்ணுக்கு வரும்போது அவள் நாணமடைகிறாள்.. ஆணிடம் தன் காதலைச் சொல்லத் தயங்குகிறாள்.

நெசமாவா?
 
காதலில் விழுந்திட்ட அந்தப் பெண்ணுக்கு இரவும் பகலாகத் தெரிகிறது.. காலநிலை வேறுபட்டுத் தெரிகிறது.. இவ்வளவு அழகாக பெண்ணின் நிலையை பழைய பாடல்கள் விளக்குகிறதா?
 
யாராவது வந்து விளக்குங்கப்பா

உன்னைக் காணும் வரையில்
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்..
கண்ணால் நீயும் அதிலே
எழுதிப்போனாய் நல்ல ஓவியம்..

எவ்வளவு அழகான வரிகள்... இது போலவே உறவிலும் பிரிவிலும் உதாரணம் சொல்ல புதிய பாடல்களில் நிறையப்பாடல்கள் உண்டு. பழைய பாடல்களில் அப்படி உள்ளனவா?

உள்ளனவா?
 

”அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்..எப்படிச் சொல்வேனடி?"
சொல்லத் தெரியாவிட்டால் எதற்குப்பாட வேண்டும்?
 
அவுங்க சொல்லத்தெரியலேன்னு தானே சொன்னாங்க? பாடத்தெரியலேன்னு சொன்னாங்களா?

உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்


மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ

நமது மொழியை உயர்த்திச் சொல்ல வேறு என்ன பழைய பாடல்கள் இருக்கின்றன இதைப்போல?

சரியான கேள்வி

இலக்கியத்திலும் புதிய பாடல்கள்தான் முதலிடத்தை வகிக்கின்றன. உதாரணத்துக்கு இப் பாடலைப் பாருங்கள்.


கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி

ஆஹா! 


பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப்பூவைத்துப் பூவைத்த
பூவைக்குள் தீ வைத்தாய்


யாயும் யாயும் யாராகியறோனென்று நேர்ந்தததென்ன
யானும் நீயும் எவ்வழி அரிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன

இதைவிடவும் இலக்கியத்தரமான, அழகிய பழைய பாடலேதாவது இருக்கிறதா?
இருக்கிறதா?
 
கில்லி படத்துலே செமிஃபைனல்லே தோத்து ஃபைனலுக்குப் போயி ஆடி ஜெயிச்ச விஜய் மாதிரி நம்ம ரிஷான் தூள் கிளப்பிட்டாரு! இவருக்கு பதில் சொல்ல வரப்போறவர் யாரு? வாங்க வாங்க!

தமிழன் வேணு

Naresh Kumar

unread,
Nov 26, 2009, 4:23:48 AM11/26/09
to பண்புடன்
புதிய பாடல்: சகாராத் தென்றல்
 
நடுவர் அவர்களே!

புதிய பாடலில் குறையைக் கண்டுபிடிக்க முடியாதனாலோ என்னமோ, வணக்கம்
வைக்காததையும், நடுவருக்கு ‘ட்’ சேர்த்ததையும் குறையாகச் சொல்லும் பழைய
பஞ்சாங்க கோஷ்டியினருக்கும், நடுவருக்கும், எமது அணியினருக்கும் வணக்கம்
சொல்லாமலே என்னுரையைத் தொடங்குகின்றேன்.

பாட்டு இருக்குங்களே பாட்டு, அத கேக்குறதே ஒரு சொகம்ங்க. அதுலயும் இந்தப்
புதுப்பாட்டு இருக்கே.. அடடா!! எல்லாவிதமான சூழ்நிலைக்கும் பொருந்திப்
போகும்ங்க. புதுப்பாடல்கள் தர்ற சந்தோஷத்தை அனுபவிக்கனும். அதை
விட்டுட்டு பழைய பாட்டு அது இதுன்னு ஆராயக்கூடாது.

உதாரணத்துக்கு ஒன்னு சொல்லறேன் கேளுங்க (படிங்க) தினம் தினம் நாம
பார்த்து ரசிக்கற ஒரு ஜீவன் ‘அவங்கவங்க அம்மா’ தான். (நீங்க வேற அம்மாவை
நினச்சுக்கிட்டா அதுக்கு எங்க அணி பொறுப்பில்லை) அம்மாவ பத்தி ஒரு பாட்டு


இருக்குது.

‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே’

இந்தப்பாட்டுல எனக்கு பொன்னும் பொருளும் புகழும் வேண்டாம் அம்மா. உங்கூட
நான் இருக்கணும் உன்னோட அருள், அன்பு, பாசம் இதெல்லாம் எனக்கு வேணும்னு
சொல்லிருக்காங்க. அம்மாவை உயர்வா நினைக்கற, அவங்களை சந்தோஷமா வச்சிக்குற
சமுதாயம் தான் உயர்வடையும். அத தான் இதுல சிம்பாலிக்கா
சொல்லியிருக்காங்க. இது மாதிரி ‘நீ மட்டும் தான் எனக்கு வேணும்
அம்மா’ன்னு எங்காச்சும் பழைய பாட்டுல சொல்லியிருக்காங்களா நடுவர்
அவர்களே..

இதே மாதிரி இன்னொரு பாட்டு. ஒரு அம்மா தன்னோட குழந்தைக்காக பாடற
தாலாட்டு.

‘வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி’

இந்தப்பாட்டைக் கேட்டு கண்ணீர் சிந்தாத விழிகள் இருக்க முடியாது. லாலி
லாலின்னு ஆரம்பிக்கும் போதே நம்மைத் தூக்கிட்டு போய் தொட்டில்ல
போட்டுடும் இந்தப் பாட்டு. ‘ஆரிராரிரோ’ங்கும் போது கண்ணுல தூக்கம்
நிக்கும். அந்தத் தூக்கம் சலிச்சுப் போய் வந்தது இல்லே. இயல்பா பாட்டோட
ஒன்றிப் போய் தூக்கம் வர வைக்கற பாட்டுங்க இது. அதுல தன்னோட குழந்தை
தனக்கு சாமின்னு சொல்லறா. ஒவ்வொரு தாய்க்கும் தன்னோட குழந்தை சாமி தான்.
அதை எவ்வளவு அழகா சொல்லியிருக்காங்கன்னு பாருங்க.

இன்னொரு பாட்டு கூட இருக்குங்க. ‘கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல்
ஒன்று’ இந்தப் பாட்டை முழுசா கேக்க முடிஞ்ச நண்பர்கள் பாக்கியசாலிகள்
நடுவர் அவர்களே.. ஏன்னா இந்தப் பாட்டும் நம்மை அப்படியே கரைச்சுரும்.
இந்த மாதிரி பழைய பாட்டுங்க இருக்கா?


இன்னொரு முக்கியமான பாட்டும் அதுல ஒரு சங்கதியும் இருக்கு.

‘சிப்பியிருக்குது முத்துமிருக்குது
திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி’

இதனோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, மெட்டுக்கு பாடல் வரிகளை எப்படி
அமைக்கறதுன்னு இந்தப் பாடல் மூலமாகவே காட்டியிருப்பாங்க. காதலி
சந்தங்களைத் தருவா, அதுக்கேத்த மாதிரி வரிகள் அமைச்சு தன்னோட மனசுல
இருக்கற காதலை காதலன் அவளுக்கு வெளிப்படுத்தற மாதிரி அமைச்சிருப்பாங்க
இந்தப் பாட்டை.

'தனன தனன னானா
மழையும் வெயிலும் என்ன?'

'தன்னனன தனன னான னானா
உன்னைக் கண்டால் மலரும் முள்ளும் என்ன? '

‘கவிதை உலகம் கெஞ்சும் உன்னைக் கண்டால்
கவிஞர் இதயம் கொஞ்சும்’

இந்த வரிகள் தமிழையும் காதலியையும் சேர்த்துக் குறிப்பதா
அமைச்சிருப்பாங்க. ரொம்ப அருமையா எதார்த்தத்தைக் கலந்து கொடுத்த பாடல்
இது. இது போல் சந்தத்துக்கு பாட்டெழுதும் முறையை காட்சிப்படுத்தியது பழைய
பாடல்களில் இருக்கா?

‘ராகங்கள் பதினாறு உருவான வரலாறு’ இந்தப் பாட்டுல ஒரு வரி வரும். ரொம்ப
அற்புதமா இருக்கும். மொத்தப்பாடலுமே அருமையா தான் இருக்கும் என்பதையும்
இங்கே சொல்லிக் கொள்ள விழைகிறேன்.

‘இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்’

அட்டகாசமான வரிகள் நடுவர் அவர்களே. ‘இலையோடு சேர்ந்த கொடி’ எவ்வளவு அழகான
வார்த்தையாடல் இது. இதை தன் கண்முன்னே இருக்கற பெண்ணுக்கு ஒப்பா சொன்னது
தான் எத்தனை அழகு, எத்தனை அருமையான ரசனை. இதுல போய் இலக்கியமில்ல அது
இல்ல இது இல்லன்னுட்டு இருக்காங்க எங்களோட எதிரணியினர். இது மாதிரி
இன்னும் நிறைய பாடல்களைக் காட்ட முடியும். பெண்ணை வர்ணிச்சுப் பாடற
பாட்டை ஒரு உதாரணமா சொல்லறேன்.

‘சந்தனக்கிண்ணத்தில் குங்குமச் சங்கமம்
அரங்கேற அது தானே உன் கன்னம்’

என்ன மாதிரி வரிகள் இது. ஒரு பெண் வெட்கத்தில் கன்னம் சிவக்கின்ற
நிமிடங்களை எவ்வளவு அழகா வார்த்தைப்படுத்தி இருக்காங்க. இதையெல்லாம்
கேட்டதுக்கப்பறமும்(கேட்டுருக்காங்களா??) புதுப் பாட்டுல இலக்கியமில்லே
தரமில்லேன்னுட்டு இருக்காங்க.

இன்னும் சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு. அது என்னன்னா,
தங்களோட உணர்வுகளை, அது காதல் பிரிவு சோகம்ன்னு எதுவா இருந்தாலும் அதை
பெண்களே வெளிப்படையா சொல்ல களம் அமைச்சுக் குடுத்தது புதிய பாடல்கள்
தான். இதை பழைய பாடல்கள் அனுமதிக்கல. ஒரு பெண்ணோட காதல் கூட ஆண்களின்
வார்த்தையாலயே வெளிப்படுத்தப்பட்டிருக்கு பழைய பாடல்கள்ல. அவங்கவங்க
உணர்வுகளை அவங்கவங்களே சொல்லறதுல தான் அதனோட ஜீவனே இருக்கு. எனக்கு பதிலா
நீ சொல்லேன், நீ சொல்லேன் அப்படின்னா அது எப்படி சரியா அமையும்ங்கறேன்.
இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் நடுவர் அவர்களே.

பெண்மையின் உணர்வுகளைக் காட்டுவதற்கு இந்த ஒரே பாடல் போதுமே..

'வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்'

நீ மட்டும் இருந்தா போதும், உன்னோட மடில நான் தூங்கினா போதும் இந்த
ஜென்மம் மட்டும் இல்ல என்னோட முன், பின் ஜென்மங்களோட ஏக்கங்கள்
அத்தனையும் தீந்து போயிடும்னு சொல்லியிருக்காங்க. இந்த மாதிரி பழைய
பாட்டுல ‘நீ மட்டும் போதும்’னு எங்காச்சும் இருக்கா??

'தினமும் நீ குளித்ததும் எனை தேடி என் சேலை நுனியால்
உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை'

இந்த வரிகளோட அர்த்தங்களை நேரடியா உணர்ந்தவங்களுக்குத் தெரியும்.
எந்தளவுக்கு அந்த சந்தோஷத்தை அனுபவிச்சு எழுதியிருக்காங்கன்னு புரியும்.
இந்த அளவுக்கு வெளிப்படையா சொல்ல அனுமதித்தது புதிய பாடல்கள் தான் நடுவர்
அவர்களே..

‘அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா’ ன்னு ஒரு பாட்டு இருக்கு. காதலன்
காதலிகிட்ட கேப்பான், உன்னோட கோபங்கள் சுகமான்னு? அதுக்கு பதில் சொல்லற
காதலி, நீ சுகமா, உன் தனிமை சுகமா, உன்னோட பொய்கள் சுகமான்னு கேப்பா.
இந்த மாதிரி காதலியின் கோபத்தையும் காதலனோட பொய்களையும் காட்டிய
பாட்டுக்கள் பழசுல இருக்கா?

தலைவனை சேர முடியுமா முடியாதாங்கற ஏக்கத்துல ஒரு பாட்டு.

‘அனல் மேலே பனித்துளி
அலை பாயும் ஒரு கிளி’

என்ன மாதிரி வரிகள்!! அட்டகாசம்… இந்த வரிகள்ல இருந்து தான் அந்தப்
படத்தோட இன்னொரு பாதி ஆரம்பிக்குது. பாடல் வரிகள், காட்சிப்படுத்தல்,
முந்தைய நிலை, ஏக்கம், சோகம், இசைன்னு அத்தனை விஷயத்துலயும்
பின்னியிருப்பாங்க. ரொம்ப எளிமையான பாடல் தான். ஆனா மொத்தமா பார்க்கும்
போது பிரம்மாண்டமா இருக்கும். மொத்த படத்தையும் ஒரே பாடல்ல


சொல்லிருப்பாங்க.

வெறும் காதல் பத்தின பாட்டுக்கள் தான்னு இல்லை. சமுதாயம் பத்தின பாட்டா..
அதும் இருக்கு. தத்துவப்பாட்டா.. அதும் இருக்கு. ஆட்டம் போட வைக்கிற
பாட்டா… அதுவும் இருக்கு. புதுப்பாடல்களில் சொல்லாத விஷயங்களே இல்லை.

**சமுதாயப்பாட்டு**

1. 'தோளை உயர்த்து, தூங்கி விழும் நாட்டை எழுப்பு, எதையும் முடிக்கும்
இதயம் உன்னில் கண்டேன்…'
2. 'ஆணென்ன பெண்ணென்ன, நீயென்ன நானென்ன எல்ல்லாம் ஓரினம்தான்…'
3. 'ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை…'
4. 'வெள்ளைப் பூக்கள் உலகமெங்க்கும் மலரவே, விடியும் பூமி அமைதிக்காக
விடியவே…'
5. 'ஜனகனமன என ஜதி சொல்லும் நேரம், ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்…'

**தூது**

'மேகத்தை தூது விட்டா திசை மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே தண்ணியை நான் தூது விட்டேன்'

இது மாதிரி இன்னும் நிறைய இருக்குங்க நடுவர் அவர்களே..

**********

இனி எதிர் அணியினரோட வாதத்துக்கு வரேன். 'காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது' இந்தப் பாட்டுல ஆணாதிக்கம் இருக்கறதா எதிர் அணி
நண்பர்கள் சொன்னாங்க. ஆனா இதுல ஆணாதிக்கமே இல்லேங்குறேன். ஏன் ஆண் காதலை
சுமந்தா ஒத்துக்க மாட்டீங்களா? அப்பறம் எப்படிங்க காதல் பாட்டாவே எழுதி
தள்றாங்க?? காரணம் சொல்லறேன். தலைவி தங்களோட அன்புக்கு அடையாளமா இருக்கற
வாரிசை தன் வயித்துல சுமக்கறா. ஆண் தன்னோட காதலையும் அந்தக் காதலுக்குரிய
தன்னோட மனைவியையும் சேர்த்து தன் கைகளில்/நெஞ்சுல சுமக்கறான். அதை சொல்ல
முடியாம தவிக்கறான். ரெண்டுமே சுமை தான். சுமக்க வேண்டிய, சுமக்க முடியாம
தவிக்கற ஒரு சுகமான சுமை. காதலில் தலைவனுக்கு தலைவியானவள்
குழந்தையாகிறாள். இந்தப் பரிசுத்தமான அன்பைப் போய் ஆணாதிக்கம் அது
இதுன்னுட்டு… சரியான பழமைவாதிகள்னு நிரூபிக்கறாங்கப்பா!!

நடுவர் அவர்களே, அன்னக்கிளிக்கு முன்பு வந்த பாடல்கள் எல்லாம் பழைய
பாடல்கள் என்று சொன்னாலும், அதற்கு முன்பு, எம்ஜிஆர், சிவாஜி போன்றோர்
காலத்தில் எளிமையான பாடல்களே இருந்தன. அதற்கு முன்பு இருந்த்தெல்லாம்
பாடலா, அழுகையா என்று பிரித்தறிய முடியாத ஒரே இழுவை ராகம்தான். பாட
ஆரம்பித்தால் 'அய்யா சாமி!! எப்ப முடிப்பீங்க..' என்ற ரீதியிலேயே
இருக்கும்.

ஆங்கிலத்தை வைத்து பாட்டு எழுதுகிறார்கள், அரைகுறை ஆடையில் பாடல்களை
எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு வேறு! எனக்கு புரியாதது என்னன்னா பழைய
பாடலில் ஆங்கிலத்தை வைத்து பாட்டு எழுதலையா, கிளப் டான்ஸ் பாடல்கள்
வைக்கவில்லையா? எம்ஜிஆர் பாடல்களில் சிருங்காரம் மிகவில்லையா? பரிணாம
வளர்ச்சி என்பது எல்லா விசயத்திற்குமே உண்டு. என்னமோ இவங்க ஒன்றும்
செய்யாதது போன்றும், எல்லா தவறுகளுமே புதிய பாடலில் வந்ததுங்கற
ரீதியிலும் பேசிட்டு இருக்காங்க.

ஒரு சின்ன வட்டத்துக்குள்ளயே சுற்றிக் கொண்டிருந்த பாடலை அதற்குரிய
இயல்புகளோடு சுதந்திரமாக இயங்க தளம் அமைச்சுக் கொடுத்ததும் நிறைய
பேருக்கு பாட்டெழுதும் வாய்ப்புக்களை அள்ளித்தந்ததும் புதிய பாடல்கள்
தான் நடுவர் அவர்களே.. இதை பழைய பாடல்கள் தரல.


ரொம்ப நீளமா சொல்லிட்டேன்னு நினைக்கறேன். புதுப்பாட்டோட அருமையை
சொல்லறதுக்கு வாய்ப்புக் கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்படியே புதுப்பாடலே சிறந்ததுன்னு தீர்ப்பு வழங்கும்படி பகிரங்கமாகவும்,
அப்படி தீர்ப்பு கொடுத்தா, நீங்க எங்க வீட்டுக்கு வரும் போது சூடாக
ஃபஸ்ட் கிளாஸ் காபி/டீ, "சர்க்கரை" சேர்த்துத் தரப்படும் என்பதை
ரகசியமாகவும் சொல்லி விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம்.

Naresh Kumar

unread,
Nov 26, 2009, 4:27:03 AM11/26/09
to பண்புடன்
நடுவர் வாதம்
 
//பழைய பஞ்சாங்க கோஷ்டியினருக்கும், நடுவருக்கும், எமது அணியினருக்கும் வணக்கம் சொல்லாமலே என்னுரையைத் தொடங்குகின்றேன்//

அடா அடா! என்ன பணிவு! என்ன பணிவு!

//புதுப்பாடல்கள் தர்ற சந்தோஷத்தை அனுபவிக்கனும். அதை விட்டுட்டு பழைய பாட்டு அது இதுன்னு ஆராயக்கூடாது.//

ஈயப்பாத்திரத்தைக் காயப்போட்டாலும் மேயப்போன மாடு திரும்பி வராது - இதையும் அனுபவிக்கணும்; ஆராயப்படாது.

//உதாரணத்துக்கு ஒன்னு சொல்லறேன் கேளுங்க (படிங்க) தினம் தினம் நாம

பார்த்து ரசிக்கற ஒரு ஜீவன் ‘அவங்கவங்க அம்மா’ தான். (நீங்க வேற அம்மாவை நினச்சுக்கிட்டா அதுக்கு எங்க அணி பொறுப்பில்லை)//

அடுத்தவங்க அம்மாவை நினைக்கிறதும் தப்புத் தாங்க!

//அம்மாவை உயர்வா நினைக்கற, அவங்களை சந்தோஷமா வச்சிக்குற சமுதாயம் தான் உயர்வடையும். அத தான் இதுல சிம்பாலிக்கா சொல்லியிருக்காங்க. இது மாதிரி ‘நீ மட்டும் தான் எனக்கு வேணும் அம்மா’ன்னு எங்காச்சும் பழைய பாட்டுல சொல்லியிருக்காங்களா நடுவர் அவர்களே..//

தேடிப்பார்த்தாத் தான் உண்டு!

//‘வரம் தந்த சாமிக்கு பதமான லாலி


ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி’


இந்தப்பாட்டைக் கேட்டு கண்ணீர் சிந்தாத விழிகள் இருக்க முடியாது. லாலி லாலின்னு ஆரம்பிக்கும் போதே நம்மைத் தூக்கிட்டு போய் தொட்டில்ல போட்டுடும் இந்தப் பாட்டு. ‘ஆரிராரிரோ’ங்கும் போது கண்ணுல தூக்கம் நிக்கும். அந்தத் தூக்கம் சலிச்சுப் போய் வந்தது இல்லே. இயல்பா பாட்டோட ஒன்றிப் போய் தூக்கம் வர வைக்கற பாட்டுங்க இது. அதுல தன்னோட குழந்தை தனக்கு சாமின்னு சொல்லறா. ஒவ்வொரு தாய்க்கும் தன்னோட குழந்தை சாமி தான். அதை எவ்வளவு அழகா சொல்லியிருக்காங்கன்னு பாருங்க.//

குழந்தையா இருக்கும்போது சாமிதான்; வளர்ந்தா தான் ஆசாமி!!

//இன்னொரு பாட்டு கூட இருக்குங்க. ‘கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று’ இந்தப் பாட்டை முழுசா கேக்க முடிஞ்ச நண்பர்கள் பாக்கியசாலிகள் நடுவர் அவர்களே.. ஏன்னா இந்தப் பாட்டும் நம்மை அப்படியே கரைச்சுரும். இந்த மாதிரி பழைய பாட்டுங்க இருக்கா?//

விசாரிச்சுச் சொல்லுறேன்!

//‘சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி’


இதனோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, மெட்டுக்கு பாடல் வரிகளை எப்படி
அமைக்கறதுன்னு இந்தப் பாடல் மூலமாகவே காட்டியிருப்பாங்க. காதலி
சந்தங்களைத் தருவா, அதுக்கேத்த மாதிரி வரிகள் அமைச்சு தன்னோட மனசுல
இருக்கற காதலை காதலன் அவளுக்கு வெளிப்படுத்தற மாதிரி அமைச்சிருப்பாங்க
இந்தப் பாட்டை.


இந்த வரிகள் தமிழையும் காதலியையும் சேர்த்துக் குறிப்பதா அமைச்சிருப்பாங்க. ரொம்ப அருமையா எதார்த்தத்தைக் கலந்து கொடுத்த பாடல் இது. இது போல் சந்தத்துக்கு பாட்டெழுதும் முறையை காட்சிப்படுத்தியது பழைய பாடல்களில் இருக்கா?//

இருக்கே! ஒன் டூ த்ரீ ஃபோரு ஃபைவ் சிக்ஸ் செவன் எயிட்டு...நண்டு வந்து நரிகிட்டே தான் சொல்லிச்சாம் குட்நைட்டு,"ன்னு ஒரு பாட்டு இருக்கு.

//‘இடையாட வளையாட சலங்கைகள் ஆட

இலையோடு கொடி போல நடமாடினாள்’

‘சந்தனக்கிண்ணத்தில் குங்குமச் சங்கமம்
அரங்கேற அது தானே உன் கன்னம்’


இதையெல்லாம் கேட்டதுக்கப்பறமும்(கேட்டுருக்காங்களா??) புதுப் பாட்டுல இலக்கியமில்லே தரமில்லேன்னுட்டு இருக்காங்க.//

இதை விட பெரிய இலக்கியத்தை இளங்கோவடிகளாலே கூட எழுத முடியாதய்யா.

//தங்களோட உணர்வுகளை, அது காதல் பிரிவு சோகம்ன்னு எதுவா இருந்தாலும் அதை பெண்களே வெளிப்படையா சொல்ல களம் அமைச்சுக் குடுத்தது புதிய பாடல்கள் தான். இதை பழைய பாடல்கள் அனுமதிக்கல. ஒரு பெண்ணோட காதல் கூட ஆண்களின் வார்த்தையாலயே   வெளிப்படுத்தப்பட்டிருக்கு பழைய பாடல்கள்ல. அவங்கவங்க உணர்வுகளை அவங்கவங்களே சொல்லறதுல தான் அதனோட ஜீவனே இருக்கு. எனக்கு பதிலா நீ சொல்லேன், நீ சொல்லேன் அப்படின்னா அது எப்படி சரியா அமையும்ங்கறேன். இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் நடுவர் அவர்களே.//

இப்படியொண்ணு இருக்கா?

//'வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்'//

இந்த மாதிரி பழைய பாட்டுல ‘நீ மட்டும் போதும்’னு எங்காச்சும் இருக்கா??//

இருக்கா?

//'தினமும் நீ குளித்ததும் எனை தேடி என் சேலை நுனியால்

உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை'//

சேலைநுனியா? இது புதுப்பாட்டா பழைய பாட்டா?

//இந்த வரிகளோட அர்த்தங்களை நேரடியா உணர்ந்தவங்களுக்குத் தெரியும்.//

இது தெரியாம வாயைக் கொடுத்திட்டேனே.

//இந்த அளவுக்கு வெளிப்படையா சொல்ல அனுமதித்தது புதிய பாடல்கள் தான் நடுவர் அவர்களே..//

சரி தானுங்க!

//‘அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா’ ன்னு ஒரு பாட்டு இருக்கு. காதலன்
காதலிகிட்ட கேப்பான், உன்னோட கோபங்கள் சுகமான்னு? அதுக்கு பதில் சொல்லற காதலி, நீ சுகமா, உன் தனிமை சுகமா, உன்னோட பொய்கள் சுகமான்னு கேப்பா. இந்த மாதிரி காதலியின் கோபத்தையும் காதலனோட பொய்களையும் காட்டிய பாட்டுக்கள் பழசுல இருக்கா?//

அந்தக் காலத்துலே காதலிக்குக் கோபமெல்லாம் வராதோ என்னவோ?

//தலைவனை சேர முடியுமா முடியாதாங்கற ஏக்கத்துல ஒரு பாட்டு.


‘அனல் மேலே பனித்துளி அலை பாயும் ஒரு கிளி’


ரொம்ப எளிமையான பாடல் தான். ஆனா மொத்தமா பார்க்கும் போது பிரம்மாண்டமா இருக்கும். மொத்த படத்தையும் ஒரே பாடல்ல சொல்லிருப்பாங்க.//

நீங்க சொன்ன சரிதான்!

**சமுதாயப்பாட்டு**

**தூது**

//இனி எதிர் அணியினரோட வாதத்துக்கு வரேன். 'காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது' இந்தப் பாட்டுல ஆணாதிக்கம் இருக்கறதா எதிர் அணி நண்பர்கள் சொன்னாங்க. ஆனா இதுல ஆணாதிக்கமே ல்லேங்குறேன். ஏன் ஆண் காதலை சுமந்தா ஒத்துக்க மாட்டீங்களா? அப்பறம் எப்படிங்க காதல் ட்டாவே எழுதி தள்றாங்க?? காரணம் சொல்லறேன். தலைவி தங்களோட அன்புக்கு அடையாளமா இருக்கற வாரிசை தன் வயித்துல சுமக்கறா. ஆண் தன்னோட காதலையும் அந்தக் காதலுக்குரிய தன்னோட மனைவியையும் சேர்த்து தன் கைகளில்/நெஞ்சுல சுமக்கறான். அதை சொல்ல முடியாம தவிக்கறான். ரெண்டுமே சுமை தான். சுமக்க வேண்டிய, சுமக்க முடியாம தவிக்கற ஒரு சுகமான சுமை. காதலில் தலைவனுக்கு தலைவியானவள் குழந்தையாகிறாள். இந்தப் பரிசுத்தமான அன்பைப் போய் ஆணாதிக்கம் அது இதுன்னுட்டு… சரியான பழமைவாதிகள்னு நிரூபிக்கறாங்கப்பா!!//

ஏற்கனவே இந்தப் பட்டிமண்டபத்துலே தீர்ப்பு வழங்கினா, ரெண்டு அணியிலே யாராவது ஒருத்தர் ஆட்டோ நிச்சயமா அனுப்புவாங்கன்னு பயந்திட்டிருக்கேன். நீங்க வேறே எதுக்குமா ஆணாதிக்கத்தை இழுக்கறீங்க?

//எம்ஜிஆர், சிவாஜி போன்றோர் காலத்தில் எளிமையான பாடல்களே இருந்தன. அதற்கு முன்பு இருந்த்தெல்லாம் பாடலா, அழுகையா என்று பிரித்தறிய முடியாத ஒரே இழுவை ராகம்தான். பாட ஆரம்பித்தால் 'அய்யா சாமி!! எப்ப முடிப்பீங்க..' என்ற ரீதியிலேயே இருக்கும்.//

ஆமாமா!

//ஆங்கிலத்தை வைத்து பாட்டு எழுதுகிறார்கள், அரைகுறை ஆடையில் பாடல்களை எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு வேறு! எனக்கு புரியாதது என்னன்னா பழைய பாடலில் ஆங்கிலத்தை வைத்து பாட்டு எழுதலையா, கிளப் டான்ஸ் பாடல்கள் வைக்கவில்லையா?//

ஐ வில் செல் மை ப்யூட்டி மை சர்வீஸ் இஸ் நைட் ட்யூட்டி-ன்னெல்லாம் பாட்டு எழுதியிருக்காங்க அந்தக் காலத்திலே!


//எம்ஜிஆர் பாடல்களில் சிருங்காரம் மிகவில்லையா?//

சரிதான்! இதுக்குப் பதில் சொல்லி ஆசாத் கோபிச்சுக்கிறதுக்கா? அப்புறம் சிவாஜி, எம்.ஜி.ஆருன்னு இன்னொரு பட்டிமண்டபம் ஆரம்பிக்கும். தேவையா?

//பரிணாம வளர்ச்சி என்பது எல்லா விசயத்திற்குமே உண்டு. என்னமோ இவங்க ஒன்றும் செய்யாதது போன்றும், எல்லா தவறுகளுமே புதிய பாடலில் வந்ததுங்கற ரீதியிலும் பேசிட்டு இருக்காங்க.//

இரத்தம் கொதிக்குது!

//ஒரு சின்ன வட்டத்துக்குள்ளயே சுற்றிக் கொண்டிருந்த பாடலை அதற்குரிய இயல்புகளோடு சுதந்திரமாக இயங்க தளம் அமைச்சுக் கொடுத்ததும் நிறைய பேருக்கு பாட்டெழுதும் வாய்ப்புக்களை அள்ளித்தந்ததும் புதிய பாடல்கள் தான் நடுவர் அவர்களே.. இதை பழைய பாடல்கள் தரல.//

இல்லை! இல்லவே இல்லை!!

//ரொம்ப நீளமா சொல்லிட்டேன்னு நினைக்கறேன். புதுப்பாட்டோட அருமையை சொல்லறதுக்கு வாய்ப்புக் கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.//

பரவாயில்லை! தீர்ப்பு வழங்கும்போது அவசியம் வாங்க! அட்டெண்டன்ஸ் போட்டுட்டு கேன்டீனுக்குப் போயிராதீங்க!

//அப்படியே புதுப்பாடலே சிறந்ததுன்னு தீர்ப்பு வழங்கும்படி பகிரங்கமாகவும், அப்படி தீர்ப்பு கொடுத்தா, நீங்க எங்க வீட்டுக்கு வரும் போது சூடாக ஃபஸ்ட் கிளாஸ் காபி/டீ, "சர்க்கரை" சேர்த்துத் தரப்படும் என்பதை ரகசியமாகவும் சொல்லி விடை பெறுகிறேன்.//

என்ன நல்லெண்ணம்? நடுவர் இன்சுலின் ஊசி போடுற வரைக்கும் விட மாட்டீங்க போலிருக்கே!!

புதிய பாட்டுலே தான் தாய்ப்பாசம், காதல், இலக்கியம் எல்லாம் இருக்குன்னு கவிதாயினி வீராவேசமாகப் பேசிட்டுப்போயிட்டாங்க! இதுக்குப் பதில் சொல்லப்போறவங்க யாரா இருந்தாலும் சரி, எங்கேயிருந்தாலும் சரி....நிதானமா வாங்க! நடுவர் காத்துக்கிட்டிருக்கேன்.

தமிழன் வேணு

Naresh Kumar

unread,
Dec 3, 2009, 6:48:14 AM12/3/09
to பண்புடன்
பழைய பாடல்: தண்டபாணி
 
அரம்போலும் கூரியரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பில்லாதவர் என்னும் மன்னுகுறளுக்கேற்ப மானுடம், இனம், மொழி என்பனவற்றில் மனமொன்றிய பண்புடன் குழுமம்சார் உறுப்பினர்களே!

எழுத்திலும், இசையிலும் வாசிப்போரை நேசிக்கவைக்கும் வணக்கத்துக்குரிய நடுவர் அவர்களே!

பழைய பாடல்களுக்காய்ப் பரிந்து பேசுதற்கு எவரும் முன்வராததால், மீண்டும் புதிய பாடல்களுக்காக இன்னொருவர் வருவதற்கு முன்னர், அவையினரை இருகரம் கூப்பி வணங்கி, எனது கருத்துக்களைச் சொல்ல விழைகிறேன். குற்றம் பொறுத்தருள்வீராக.


"அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே" என்ற பாடலைச் சுட்டிக்காட்டி, இது போன்ற கருத்துள்ள பாடல் பழைய படங்களில் வந்துள்ளதா என்று வினவியுள்ள சகோதரிக்காக நான் பரிதாபப்படுகிறேன். இன்றைய பாடல்களை எந்த சூழ்நிலையிலும் ரசிக்க இயலும் என்ற அவரது வாதத்தில் இருப்பது போல, இதுவும் அவரது நகைச்சுவை உணர்வையே வலியுறுத்துவது போலத் தோன்றுகிறது.

"அன்னையும் தந்தையும் தானே வாழ்வில் அண்டசராசரம் கண்கண்ட தெய்வம்," என்று நம்மில் பெரும்பாலானோர் பிறக்கும் முன்னர் வந்த பழைய திரைப்படம் ஒன்றில் எம்.கே.தியாகராஜ பாகவதரே பாடியிருக்கிறார்.

"அன்னையைப் போலொரு தெய்வமில்லை-அவர்
 அடிதொழ மறந்தவர் மனிதரில்லை" என்ற பாடல் நினைவில்லையா?

"தாயின் மடியில் தலைவைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை," என்ற பாடலை சகோதரி கேட்டிருக்க வாய்ப்பேயில்லை போலும்.

புரட்சித்தலைவர்,மக்கள் திலகம்,பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களில் தாய்குறித்து அவர் பாடாத பாடல்களையா இன்றைய தலைமுறை நடிகர்கள் பாடி விட்டனர். அவரது படத்தின் பெயர்களையே பாருங்கள்: தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், தெய்வத்தாய், தாய்க்குப் பின் தாரம் என்று தலைப்பிலேயே தாயை உயர்த்திய நடிகன் உலகத்தில் வேறு எவர் உளர்?

"தாயில்லாமல் நானில்லை! தானே எவரும் பிறந்ததில்லை," எனவும் "அம்மா என்றால் அன்பு; அப்பா என்றால் அறிவு," என்றும் ஒரே படத்தில் மனித உறவுகள் குறித்த மகத்தான சிந்தனைகளை ம.கோ.ரா சொன்னது போல எவராவது சொன்னதுண்டா?

"வெற்றி மெது வெற்றி வந்து என்னைச் சேரும்-அதை
 வாங்கித் தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்," என்ற பாடலை எப்படி மறந்தார்கள்?


‘இடையாட வளையாட சலங்கைகள் ஆட இலையோடு கொடி போல நடமாடினாள்’


இந்தப் பாடலில் இலக்கிய சுவையில்லை என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனாலும்...

"மாதவிப்பொன்மயிலாள் தோகைவிரித்தாள்-வண்ண
 மையிட்டக் கண்மலர்ந்து தூதுவிடுத்தாள்
 காதல்மழை பொழியும் கார்முகிலாள்-இவள்
 காதலன் நானிருக்கப் பேரெழிலாய்...." என்ற பாடல் கேட்டதுண்டா?

"தூது சொல்ல ஒரு தோழி இல்லையென
 துயர் கொண்டாயோ தலைவி

 துள்ளும் காற்று வந்து மெல்ல சேலைதொட
 சுகம் கண்டாயோ தலைவி?"

இன்னும் இது போன்று குறுந்தொகையையும், அகநானூற்றையும் நினைவூட்டும் பாடல்கள் ஒன்றா இரண்டா?

நடுவர் அவர்களே! பெண்ணை வருணிப்பதென்ன? ஒரு குழந்தையின் நடையை வருணித்திருக்கிறார்கள் பாருங்கள்!

"அல்லித்தண்டுக் காலெடுத்து அடிமேல் அடியெடுத்து
 சின்னக்கண்ணன் நடக்கையிலே சித்திரங்கள் என்ன செய்யும்?"

ஒரு குழந்தையின் தத்துநடையை இவ்வளவு அழகாக வருணித்த ஒரு புதிய பாடல் இருந்தால், சொல்லட்டுமே!

பெண்களின் உணர்வுகளை, அவர்களே சொல்வதற்கு பழைய பாடல்கள் களம் அமைத்துத் தரவில்லை என்று குறைப்படுகிறார் சகோதரி.

"காதல் சிறகை காற்றினில் விடுத்து வானவீதியில் பறக்கவா?
 கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் குளிக்கவா?" என்ற பாடலை இவர் கேட்டதேயில்லையோ?

"என்னையெடுத்து தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி
 தன்னையெடுத்து என்னையணைக்க வந்தாலும் வருவாண்டி," என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா?

"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?"

"செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன்," என்று எத்தனை பாடல்கள் வேண்டும்?

புதிய பாடல்களில் வெளிப்படையாக கருத்துச் சொல்கிறார்களாம். அது பழைய பாடல்களில் இல்லையாம். காதல் என்பது இலைமறைவு காயாக இருக்க வேண்டிய விஷயம் என்பதை மறந்து கொச்சையான வார்த்தைகளையும், ஆபாசமான நடனங்களையும் அமைத்துப் புதிய பாடல்கள் காதலை மலிவாக்கி வருகின்றன என்பதை கருத்தில் கொள்க நடுவர் அவர்களே!

சமுதாயத்திற்குத் தேவையான கருத்தென்றால், அப்போதும் புரட்சித்தலைவரின் பாடல்களே நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு சமுதாயத்துக்கும் குழந்தைகளே ஆணி வேர் என்பதை நன்கு அறிந்த எம்.ஜி.ஆர். குழந்தைகளுக்குச் சொல்வது போல சமூகத்துக்குச் சொன்ன நல்ல கருத்துக்கள் தான் எத்தனை?

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

திருடாதே பாப்பா திருடாதே

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி..

ஒருதாய் மக்கள் நாம் என்போம்...

என்று இந்தப் பட்டியில் மிக நீளம்.

நடுவர் அவர்களே! எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்திற்கு முன்பிருந்த பாடல்களைப் பற்றிக் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். எம்.ஜி.ஆர்-சிவாஜியின் சகாப்தம் முடிந்தவுடன் வந்த திரைப்பாடல்களைக் கவனிக்கவும்.

நேத்து ராத்திரியம்மா..தூக்கம் போச்சுடீயம்மா.

கைவலிக்குது கைவலிக்குது மாமா

சின்னராசாவே சிட்டெறும்பு உன்னைக் கடிக்குதா?

இன்னும் நிறையவே எழுதலாம். ஆனால், விரும்பவில்லை.

எம்.ஜி.ஆர்.பாடல்களில் சிருங்காரம் இல்லையா என்று கேட்கிறார்கள். எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் மொத்தமுள்ள பாடல்களில் எத்தனை பாடல்கள் அந்த வகையைச் சேர்ந்தவை என்று பாருங்கள் நடுவரே!

மொழிநயம், இசை, உச்சரிப்பு என்ற இலக்கணங்களுக்கு உட்பட்டிருந்த திரை இசையை வட்டத்துக்குள்ளிருந்து வெளியே கொணருகிறோம் என்ற பெயரில் அதன் வடிவத்தையே குலைத்தது புதிய பாடல்கள் தான் என்று உறுதியாக சொல்ல விரும்புகிறேன்.

எனவே, தங்களது தீர்ப்பை பழைய பாடல்களுக்குச் சாதகமாக வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.

Naresh Kumar

unread,
Dec 3, 2009, 6:51:51 AM12/3/09
to பண்புடன்
நடுவர் வாதம்
 
//பழைய பாடல்களுக்காய்ப் பரிந்து பேசுதற்கு எவரும் முன்வராததால், மீண்டும் புதிய பாடல்களுக்காக இன்னொருவர் வருவதற்கு முன்னர், அவையினரை இருகரம் கூப்பி வணங்கி, எனது கருத்துக்களைச் சொல்ல விழைகிறேன். குற்றம் பொறுத்தருள்வீராக.//

ஆர்வத்தோடு வந்திருக்கிற உங்களை அன்போடு வரவேற்கிறேன். 

 

"அன்னையும் தந்தையும் தானே வாழ்வில் அண்டசராசரம் கண்கண்ட தெய்வம்," என்று நம்மில் பெரும்பாலானோர் பிறக்கும் முன்னர் வந்த பழைய திரைப்படம் ஒன்றில் எம்.கே.தியாகராஜ பாகவதரே பாடியிருக்கிறார்.


"என்னுடலில் ஒரு ஈ மொய்த்தபோது...," என்று அந்த படத்தின் இறுதியில் வருகிற அந்தப் பாடலின் போது திரையரங்கில் அனைவரும் அழுது விடுவார்களாம் ஐயா!  அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தே....என்ற பாடல் காலத்தால் அழியாததன்றோ?

 
"அன்னையைப் போலொரு தெய்வமில்லை-அவர்
 அடிதொழ மறந்தவர் மனிதரில்லை" என்ற பாடல் நினைவில்லையா?


படத்தின் பெயர், "அன்னையின் ஆணை."

 
"தாயின் மடியில் தலைவைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை," என்ற பாடலை சகோதரி கேட்டிருக்க வாய்ப்பேயில்லை போலும்.


படத்தின் பெயரே "தாயின் மடியில்..."

 
புரட்சித்தலைவர்,மக்கள் திலகம்,பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களில் தாய்குறித்து அவர் பாடாத பாடல்களையா இன்றைய தலைமுறை நடிகர்கள் பாடி விட்டனர்.

அது தானே?

 
அவரது படத்தின் பெயர்களையே பாருங்கள்: தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், தெய்வத்தாய், தாய்க்குப் பின் தாரம் என்று தலைப்பிலேயே தாயை உயர்த்திய நடிகன் உலகத்தில் வேறு எவர் உளர்?


குடியிருந்த கோயில் படம்? 


"தாயில்லாமல் நானில்லை! தானே எவரும் பிறந்ததில்லை," எனவும் "அம்மா என்றால் அன்பு; அப்பா என்றால் அறிவு," என்றும் ஒரே படத்தில் மனித உறவுகள் குறித்த மகத்தான சிந்தனைகளை ம.கோ.ரா சொன்னது போல எவராவது சொன்னதுண்டா?

நல்லா கேளுங்க! 


"வெற்றி மெது வெற்றி வந்து என்னைச் சேரும்-அதை
 வாங்கித் தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்," என்ற பாடலை எப்படி மறந்தார்கள்?


தாய்ப்பாலில் வீரம் கண்டேன்.
தாலாட்டில் தமிழைக் கண்டேன்...

மறக்கக் கூடிய வரிகளா இவைகள்...?

 
"மாதவிப்பொன்மயிலாள் தோகைவிரித்தாள்-வண்ண
 மையிட்டக் கண்மலர்ந்து தூதுவிடுத்தாள்
 காதல்மழை பொழியும் கார்முகிலாள்-இவள்
 காதலன் நானிருக்கப் பேரெழிலாய்...." என்ற பாடல் கேட்டதுண்டா?


நாட்டியப்பேரொளியும் நடிகர் திலகமும் கலக்கிய பாடல் ஆயிற்றே அது..? 


"தூது சொல்ல ஒரு தோழி இல்லையென
 துயர் கொண்டாயோ தலைவி
 துள்ளும் காற்று வந்து மெல்ல சேலைதொட
 சுகம் கண்டாயோ தலைவி?"


"இடையணி மேகலை கழன்ரிடும் வண்ணம் ஏக்கம் கொண்டால் இந்தத் தலைவி...
கடையிருந்தும் பொருள் கொள்வோர் இல்லையே கலக்கம் வராதோ தோழி...

"பச்சைவிளக்கு," பாடலை நினைவூட்டி விட்டீர்களே.


இன்னும் இது போன்று குறுந்தொகையையும், அகநானூற்றையும் நினைவூட்டும் பாடல்கள் ஒன்றா இரண்டா?


எக்கச்சக்கம்! எடுத்து விட்டால் தாள மாட்டார்கள். 

 
ஒரு குழந்தையின் தத்துநடையை இவ்வளவு அழகாக வருணித்த ஒரு புதிய பாடல் இருந்தால், சொல்லட்டுமே!


மலர்ந்தும் மலராத பாதி மலர் போல பாடலின் பல்லவியும் குழந்தையை வருணிப்பது தான். 

 
"காதல் சிறகை காற்றினில் விடுத்து வானவீதியில் பறக்கவா?
 கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் குளிக்கவா?" என்ற பாடலை இவர் கேட்டதேயில்லையோ?

"என்னையெடுத்து தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி
 தன்னையெடுத்து என்னையணைக்க வந்தாலும் வருவாண்டி," என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா?


கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ? காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ? "மன்னாதி மன்னன்," பாடல் கூட தலைவியின் வலி கூறும் பாடல் தானே? 


காதல் என்பது இலைமறைவு காயாக இருக்க வேண்டிய விஷயம் என்பதை மறந்து கொச்சையான வார்த்தைகளையும், ஆபாசமான நடனங்களையும் அமைத்துப் புதிய பாடல்கள் காதலை மலிவாக்கி வருகின்றன என்பதை கருத்தில் கொள்க நடுவர் அவர்களே!


அந்தக் கன்றாவியைத் தான் தினமும் பார்த்திட்டுத் தானே இருக்கோம்...?


சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
திருடாதே பாப்பா திருடாதே
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி..
ஒருதாய் மக்கள் நாம் என்போம்...
என்று இந்தப் பட்டியில் மிக நீளம்.


ஒண்ணா இருக்க கத்துக்கணும். இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்.

செல்லக் கிளிகளாம் பள்ளியிலே....

சிவாஜி படத்துலே கூட இந்த மாதிரி பாடல்கள் வந்திருக்கு.


எம்.ஜி.ஆர்-சிவாஜியின் சகாப்தம் முடிந்தவுடன் வந்த திரைப்பாடல்களைக் கவனிக்கவும்.


இந்த மாதிரி பாட்டுன்களைக் கேட்டுத் தான் சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல் எல்லாம் பரவியிருக்கு நாட்டுலே...


எம்.ஜி.ஆர்.பாடல்களில் சிருங்காரம் இல்லையா என்று கேட்கிறார்கள். எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் மொத்தமுள்ள பாடல்களில் எத்தனை பாடல்கள் அந்த வகையைச் சேர்ந்தவை என்று பாருங்கள் நடுவரே!


எவ்வளவு கூட்டினாலும் அந்த மாதிரி பாடல்கள் பத்து கூட தேறாதே! 


மொழிநயம், இசை, உச்சரிப்பு என்ற இலக்கணங்களுக்கு உட்பட்டிருந்த திரை இசையை வட்டத்துக்குள்ளிருந்து வெளியே கொணருகிறோம் என்ற பெயரில் அதன் வடிவத்தையே குலைத்தது புதிய பாடல்கள் தான் என்று உறுதியாக சொல்ல விரும்புகிறேன்.


அப்படிப் போடுங்க....


எனவே, தங்களது தீர்ப்பை பழைய பாடல்களுக்குச் சாதகமாக வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.

 

அருமையா வாதம் பண்ணியிருக்கீங்க! அடுத்து புதுப் பாடலுக்கு வரப்போறது யாரு....? வாங்க வாங்க....

பிரேம்குமார் சண்முகமணி

unread,
Dec 5, 2009, 7:36:50 PM12/5/09
to பண்புடன்
எல்லோருக்கும் முதலில் என் வணக்கங்கள்

யாருடா இவன் திடீருன்னு இந்த இழையில் குதிக்குறானேன்னு பாக்குறீங்களா?
ஆணி நிறைய ஆகிட்டதாலே இந்தப்பக்கம் அதிகமா வர முடியல. இருந்தாலும் இந்த
இழையில் என் கருத்துக்களை பதிவு செய்ய நண்பர் நரேஷ் அழைத்ததால் ஓடோடி
வந்தேன்.

முதலில் இரண்டு கருத்துக்களை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

திரைப்படங்கள் வாழ்க்கைமுறையா பாதிக்குதா இல்லை மனிதர்களின் வாழ்வு தான்
திரைப்படங்களா காட்டப்படுதான்னு கேட்டா, இரண்டுமே என்று தான் சொல்ல
வேண்டும். அப்படி தான் திரைப்பாடல்களும். வாடா போடா என்று பாடல்களில்
பாடுகிறார்களே என்று கேட்பவர்கள் தன் காதலியை எப்படி கொஞ்சுகிறார்கள்
என்று கேட்க வேண்டும். இன்னும் கண்ணே, முத்தே என்றா???

இன்னொன்று, பழைய பாடல்களில் இல்லாததை நீங்கள் என்ன சொல்லிவிட்டீர்கள்
என்று சிலர் கேட்கலாம். அப்படி பார்த்தால் பழைய காதல் பாடல்களிலும்
திருக்குறளிலும், புறநானூற்றிலும் இல்லாதவை என்ன இருந்துவிட போகிறது?
எல்லாமே பழைய கள்ளு தான்; மொந்தை தான் புதிது புதிதாக தெரிகிறது

சரி, இனி எனக்கு பிடித்த சில புதிய பாடல்களை பார்க்கலாம்.

நிறைய விஞ்ஞான, உலக செய்திகளை தன் பாட்டினூடே வைப்பவர் வைரமுத்து.

"நிலாவிலே காற்றே இல்லை
இது எத்தனை பேருக்கு தெரியும்
காதல் வந்தால் கண்ணே இல்லை
காதல் கொண்ட யாருக்கும் தெரியும்"

காதலுக்கு கண்ணில்லை என்பது தெரிந்த செய்தி, ஆனால் அதனோடே நிலாவில்
காற்றில்லை என்பதையும் அழகாய் சொல்லிவிடுகிறார் பாருங்கள்

சாதி மத பேதங்கள் எல்லாம் வீணர்கள் செய்யும் விபரீதங்கள். குழந்தைகளுக்கு
அதெல்லாம் கிடையாது. அது போலவே காதலர்களுக்கும். இம்மாதிரியான பேதங்கள்
அவர்களை பிரித்துவிட முடிவதில்லை. அதை அவ்வளவு அழகாக புதிய பாடல்
சொல்கிறது பாருங்கள்

"கடலில்ளே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலில் உறவுகள் எறிவதில்லை

அடி பூகம்ப வேளையிலும்
இரு வான்கோழி கலவி கொள்ளும்"

இன்னும் எளிமையாய் சொல்லிவிடுகிறார் இன்னொரு பாடலில்

"சாதி மத பேதம் எல்லாம்
மூத்தவுங்க செஞ்ச மோசம்"

காதல் எப்போது யாரிடம் உதிக்கும் என்பது யாருக்கும் புரியாது புதிர்.
பக்கத்திலேயே இருந்திருப்பார்கள். ஆனாலும் அதை இனங்காண முடியாமல்
எங்கெல்லாமோ தேடி அலைவதுண்டு. சுவாசமாக இருக்கும் வரை காற்றை நாம்
உணர்வதில்லை. அது தென்றலாக வீசும் போது தான் புரிகிறது. ஆனால் காற்று
எப்போதும் காற்று தான்

"காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்"

பெண்களை வர்ணித்து பாடும் பாடல்களை எந்த காலத்திலும் ஆண்கள் தான் எழுதி
இருக்கிறார்கள். அவர்களின் கண்ணோட்டம் பெரும்பாலும் ஒரே மாதிரி தான்
இருந்திருக்கிறது. ஒரு பெண்ணின் அழகு அவள் உடலோடு முடிந்து விடுவதில்லை.
அவள் செயல்கள், அவள் தன்னை வெளிக்காட்டி கொள்ளும் விதம் எல்லாமும் அழகு
தான். அதை சொல்ல ஒரு பெண் கவிஞர் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு
வாய்ப்பை இந்த புதிய பாடல் நமக்கு தந்திருக்கிறது

"விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசும்போதிலே
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே
புடவையின் தேர்ந்தமடிப்பில் விசிறிவாழைகள்
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல்காடுகள்"

அவள் வசீகரமானவள் என்பதை எவ்வளவு எளிதாக சொல்லிவிடுகிறார் பாருங்கள்
கவிஞர்
"அவள் கடந்திடும்போது
தலை அணிச்சையாய் திரும்பும்"

ஒரு உண்மையான காதலன் தான் காதலிக்கும் பெண்ணை வீட்டாருக்கு பிடிக்க
வேண்டும் என்று மிகவும் விரும்புவான். அவளை கண்டிப்பாக வீட்டாருக்கும்
அறிமுகப்படுத்தி அவளுக்கும் அவர்களை பிடிக்க வேண்டும் என்று நினைப்பான்.

"என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்"

இதை விட அழகாக ஒரு காதலின் உணர்ச்சியை சொல்லவும் வேண்டுமா?

பசலை வந்துவிட்டால் தலைவிக்கு மற்றவர்கள் எல்லாம் தேவையற்றவர்களாகத்தான்
தெரிவார்கள். காதலன் இல்லாத உலகத்தில் வேறு என்ன இருக்கிறது என்று
புலம்புவாள். வீட்டின் செடிகொடிகளோடு தான் புலம்பி கொண்டிருப்பாள்

"வாசல்வாழையோடு வார்த்தையாடலாச்சு
இனியும் பேச புதிய கதைகள் ஏது
ஒருவர் வாழும் உலகில்
மௌனம்தானே பேச்சு

விழாக்களில் இவள் தனித்திருக்கிறாள்
கனாக்களில் தினம் விழித்திருக்கிறாள்
"

நட்புக்கும் காதலுக்கும் நூலளவு தான் வித்தியாசம். ஒரு பக்கத்தில்
இருந்து இன்னொரு பக்கத்துக்கு எப்போது மனம் போகும் என்று சொல்ல இயலாது.
நட்பை தொலைக்கவும் விரும்பாமல் காதலை சொல்லவும் முடியாமல் தவிப்போர்
எத்தனையோ. எந்த மனப்போராட்டத்தை அழகாய் சொல்லுது இந்த பாடல்.

"நட்புக்குள்ளே நம் காதல் சிக்கிக்கொள்ள..
யாரிடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல..
திட்டமிட்டே நாம் செய்த குற்றமல்ல..
போராடக் களம் இல்லையே
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே!
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே"

நமக்கு என்ன பிடிக்கும் என்பதை நம்மை காட்டிலும் நம் அம்மாவுக்கும்
மனைவிக்கும் தான் தெரியும். நமது அசைவுகளை வைத்தே நம்மை
கணிக்கக்கூடியவர்கள்.
தனக்கு பிடித்தை எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் தன் மனைவிக்கு, என்ன
பிடிக்கும் என்று ஒரு ஆடவனுக்கு தெரிவது குறைவே. அவன் ஆயுள் முழுதும் கூட
அந்த தேடல் தொடர்ந்துவிடுகிறது

"எனைப் பற்றி எனக்கே தெரியாத பலவும்
நீயறிந்து நடப்பதை வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்.
"

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்
என்பது போல, பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. இனியாவது புதிய
பாடல்களை பற்றி அவதூறு பேசுபவர்கள் கொஞ்சம் யோசித்துவிட்டு பேசலாம் :-)

வாய்ப்பளித்த பட்டிமன்றத்திற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி :)

சென்ஷி

unread,
Dec 5, 2009, 10:21:53 PM12/5/09
to panb...@googlegroups.com
பிரேமு களத்துல குதிச்சுட்டாரே.. பழைய பாடல்ல இவரை ரவுண்டு கட்ட யாரு வரப் போறான்னு தெரியலையே.. சொக்கா சொக்கா நானில்ல நானில்ல.. பிரேமை கிழிக்கனும்னு நினைச்சு சும்மா வெறும் வாயை அசை போட வேண்டியிருக்குதே.. ஜீவ்ஸ் நம்மாளுங்களை இறங்க சொல்லுங்கப்பா

Naresh Kumar

unread,
Dec 15, 2009, 3:05:04 AM12/15/09
to panb...@googlegroups.com
நடுவர் வாதம்

யாருடா இவன் திடீருன்னு இந்த இழையில் குதிக்குறானேன்னு பாக்குறீங்களா?

ஆணி நிறைய ஆகிட்டதாலே இந்தப்பக்கம் அதிகமா வர முடியல. இருந்தாலும் இந்த
இழையில் என் கருத்துக்களை பதிவு செய்ய நண்பர் நரேஷ் அழைத்ததால் ஓடோடி
வந்தேன்.

நல்ல பட்டிமண்டபமய்யா இது! யாரோ காதலைப் பத்திப் பேசுறாங்கன்னு மண்டபம் காலியாயிருச்சு! பாவம், நரேஷுன்னு ஒரு பார்வையாளர் வந்து என்னை எழுப்பி உசுப்பி விடுறாரு! இங்கே பேச வேண்டியதை ஒருத்தரு வராண்டாவிலே பேச, அவரைக் குண்டுக்கட்டாத் தூக்கிட்டு வந்து இங்கே போட்டிருக்காங்க! சரி, சரி பேசுங்க பேசுங்க!!

வாடா போடா என்று பாடல்களில்
பாடுகிறார்களே என்று கேட்பவர்கள் தன் காதலியை எப்படி கொஞ்சுகிறார்கள்
என்று கேட்க வேண்டும். இன்னும் கண்ணே, முத்தே என்றா???

அதானே? இன்னும் என்னப்பா அந்தக் காலம் மாதிரி மாசறுபொன்னே, வலம்புரி முத்தே, காசறுவிலையே,கரும்பே தேனே...னு கூப்பிட்டுக்கிட்டு! 
 
அப்படி பார்த்தால் பழைய காதல் பாடல்களிலும்
திருக்குறளிலும், புறநானூற்றிலும் இல்லாதவை என்ன இருந்துவிட போகிறது?

அட பட்டினத்தார் கிட்டேயிருந்தெல்லாம் எடுத்துக் கையாண்டிருக்காங்களே அந்தக் காலத்துலே...

 
 காதலுக்கு கண்ணில்லை என்பது தெரிந்த செய்தி, ஆனால் அதனோடே நிலாவில்
காற்றில்லை என்பதையும் அழகாய் சொல்லிவிடுகிறார் பாருங்கள்

காதலுக்கு வாயில்லாமப் போயிருந்தா, இந்தப்பட்டிமண்டபத்துக்கே அவசியம் ஏற்பட்டிருக்காது! நல்ல வேளை, கண்ணில்லாததோடு போச்சு!
 
"கடலில்ளே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலில் உறவுகள் எறிவதில்லை


ஆஹா! ரோமியோ-ஜூலியட், லைலா-மஜ்னு, அம்பிகாபதி-அமராவதி என்று எத்தனை உதாரணங்கள்!

 
அடி பூகம்ப வேளையிலும்
இரு வான்கோழி கலவி கொள்ளும்"


அதுக்கு என்ன தெரியும், ரிச்டர் ஸ்கேலிலே எவ்வளவு அதிர்வு ஏற்பட்டிருக்குன்னு...? அதென்ன டி.வியா பார்க்குது..??


 
"சாதி மத பேதம் எல்லாம்
மூத்தவுங்க செஞ்ச மோசம்"


மூத்தவங்களா? முன்னவங்களா? சரி எதுவாயிருந்தாலும் பொருள் ஒன்று தான்! மேட்டுக்குடியும் சேரியும் ஒன்று சேர்ந்தால் முதலாளி-வேலைக்காரன் என்ற வித்தியாசம் போய் விடுமே என்ற சுயநலம் தான், காதல் விரோதிகளின் முதல் களம்.

 
காதல் எப்போது யாரிடம் உதிக்கும் என்பது யாருக்கும் புரியாது புதிர்.


சில பேருக்கு காதலே வருவதில்லையே. அதுவும் ஒரு புதிர் தான் போலிருக்கு. ஹூம்....!

 
"காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்"


இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்திருக்கிறான் காதலுக்காக! பழைய பாட்டு கடவுளைப் பற்றி சொல்லியது. இந்தப் பாட்டு காதலைப் பத்திச் சொல்லுது. சரி தான்.
 

பெண்களை வர்ணித்து பாடும் பாடல்களை எந்த காலத்திலும் ஆண்கள் தான் எழுதி
இருக்கிறார்கள். அவர்களின் கண்ணோட்டம் பெரும்பாலும் ஒரே மாதிரி தான்
இருந்திருக்கிறது.

அதென்னவோ சரி தான்!


 
"விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசும்போதிலே
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே
புடவையின் தேர்ந்தமடிப்பில் விசிறிவாழைகள்
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல்காடுகள்"


அவங்க கற்பனைச் சிறகை விரித்தால் தாங்குமா?
 

"அவள் கடந்திடும்போது
தலை அணிச்சையாய் திரும்பும்"


உன் வெள்ளிகொலுசொலி கேட்டால் அத்தனை ஜன்னலும் திறக்கும்.
நீ சிரிக்கும்போது பவுர்ணமி நிலவு அத்தனை திசையிலும் உதிக்கும்
நீ மல்லிகைப்பூவைச் சூடிக்கொண்டால் ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும்
நீ பட்டுப்புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும்.

இதுவும் புதுப்பாடல் தானே?
 

"என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்"


ஆஹா! சமீரா ரெட்டி பிறந்தநாளா அதுவுமா, இந்தப்பாட்டை நினைவுபடுத்திட்டீங்களே?


இதை விட அழகாக ஒரு காதலின் உணர்ச்சியை சொல்லவும் வேண்டுமா?


எதற்காக? இதை விட அழகாக எப்படிச் சொல்வதாம்...?


 
"வாசல்வாழையோடு வார்த்தையாடலாச்சு
இனியும் பேச புதிய கதைகள் ஏது
ஒருவர் வாழும் உலகில்
மௌனம்தானே பேச்சு


காதல் மயக்கத்திலே பாடும்போது "பார்வையாலே நூறு பேச்சு; வார்த்தையிங்கு மூர்ச்சையாச்சு," ன்னு பாடுறவங்க, பிரிவுலே எப்படிப் பாடுறாங்க பாருங்க! இங்கும் மவுனம் தான்!


 
விழாக்களில் இவள் தனித்திருக்கிறாள்
கனாக்களில் தினம் விழித்திருக்கிறாள்


பரிதாபம் போங்கள்


நட்பை தொலைக்கவும் விரும்பாமல் காதலை சொல்லவும் முடியாமல் தவிப்போர்
எத்தனையோ.

"நட்புக்குள்ளே நம் காதல் சிக்கிக்கொள்ள..
யாரிடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல..
திட்டமிட்டே நாம் செய்த குற்றமல்ல..
போராடக் களம் இல்லையே
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே!
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே"


இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையை எவ்வளவு எளிமையாகச் சொல்லியிருக்கிறார்கள் பாருங்களேன்.


 
தனக்கு பிடித்தை எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் தன் மனைவிக்கு, என்ன
பிடிக்கும் என்று ஒரு ஆடவனுக்கு தெரிவது குறைவே. அவன் ஆயுள் முழுதும் கூட
அந்த தேடல் தொடர்ந்துவிடுகிறது

"எனைப் பற்றி எனக்கே தெரியாத பலவும்
நீயறிந்து நடப்பதை வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்.


இதையெல்லாம் பழைய பாட்டுலே சொல்லியிருக்காங்களா? யாராவது சொல்லுங்க!


 
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்
என்பது போல, பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது.

ஆமாம்! பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்; குற்றம் கண்டுபிடித்துப் பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்! இந்தப் பழைய பாட்டுக்காகப் பேசுறவங்கெல்லாம் ரெண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள் போலிருக்கிறது.

 
இனியாவது புதிய
பாடல்களை பற்றி அவதூறு பேசுபவர்கள் கொஞ்சம் யோசித்துவிட்டு பேசலாம் :-)


அப்படிச் சொல்லுங்க!

Naresh Kumar

unread,
Dec 21, 2009, 1:15:50 AM12/21/09
to பண்புடன்

புதிய பாடல் அணியின் தொகுப்புரை

 

 அறியாமை என்ற இருளிலேயே தொடர்ந்து இருந்து கொண்டு, மாற்றம் ஒன்றே நிலையானது என்று நன்கு தெரிந்தும், மாற மாட்டோம் என்று அடம்பிடித்துக் கொண்டு, சப்பைக்கட்டு என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை புரியவைத்துக் கொண்டிருக்கும் பழைய பாடல் அணியினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு எமதணியின் தொகுப்புரையை சமர்ப்பிக்கின்றோம்...

பழைய பாடல் செய்யாத செயல்களில் ஒன்றாக, கிராமத்து பாடலை புதிய பாடல்தான் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது என்று நாங்கள் சொன்னால், 'ஒத்த ரூவா' பாடலில், அது தரேன், இது தரேன் என்று பெண்ணை ஏமாற்றுகின்றோமாம்....எதையும் அரைகுறையாகவே புரிந்து கொள்வது அவர்களுக்கு பழக்கமாகி விட்ட்து...அந்த பாடல் முடிவில் தலைவி சொல்லுவாள் பாருங்கள், நீ எதுவும் கொடுக்க வேண்டாம், மஞ்ச தாலி கட்டு, அதுதான் நீ எனக்கு தரும் பெரிய சொத்து என்று....அதை முழுதாக கேட்காமல் அடம்பிடிப்பவர்களை என்ன செய்வது??? கிராமத்து பாடலை மட்டுமல்ல கிராமத்துப் பெண்களின் உணர்வையும் பிரதிபலித்தது புதியபாடல்கள் மட்டும்தான் என்பதே எங்கள் வாதம்...கிராமத்துப் பாடல்களை புதிய பாடல்கள் கொண்டு போய் சேர்த்த அளவிற்கு பழைய பாடல்கள் ஒன்றும் செய்யவில்லை என்பதையும் இங்கே நினைவூட்டுகின்றேன்...

மன்மதலீலையை வென்றார் உண்டோ பாடல் இத்தனை வருடங்கள் ஆகியும் மக்கள் மனதில் நிற்கின்றதாம்....உண்மைதான், ஆனால் அதற்கு அடுத்தடுத்து வரும் வரிகளை நம் மக்களிடம் போய் கேட்டுப் பாருங்கள்...யாருக்கும் தெரியாது, அதற்கப்புறம் எல்லாம் ஒரே இழுவையாகத்தான் இருக்கும்...இப்படித்தான், பழைய பாடல்களின் ஆரம்பத்தில் இருந்த பெரும்பாலான பாடல்கள் மிகக் குறைந்த மக்களால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது..அப்பொழுதெல்லாம் பொழுது போக்கு என்று ஒன்றுமே இல்லாத காரணத்தால் வேறு வழியில்லாமல் எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டிருந்தார்கள்....இன்றும் அப்படியே இருக்க முடியுமா (வேண்டுமா) என்ன?

நாங்களும் சமூகக் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறோம் என்று நாங்கள் சொன்னால், என்னமோ ஹீரோ பில்டப்புகளுக்காக மட்டுமே கொடுத்தோம் என்று ஓவர் பேச்சு வேறு!!! ஏதோ கலைவாணர், பட்டுகோட்டை போன்ற ஜாம்பவான்களை எங்களுக்கு கொடுத்த ஒரே காரணத்தால் உங்களை சும்மா விடுகின்றோம்....வெறும் அரசியலுக்காக மட்டுமே நீங்கள் சமூகப் பாடல்களைத் தந்தீர்கள் என்று நாங்கள் சொன்னால் எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் நீங்கள் சொல்வது. விஜய் மாதிரி ஆட்களின் பில்டப் பாடல்களை நாங்களே கண்டு கொள்வதில்லை!!! நீங்கள் அதுதான் சமூகப் பாட்டு என்று நினைத்துக் கொண்டால் நாங்கள் என்ன செய்வது??? புதுப்பாடலின் சில நல்ல, நல்ல சமூகப் பாடல்களை சகாரா கொடுத்திருக்கிறார். கீழே நானும் கொடுத்திருக்கிறேன்.நீங்கள் எத்தனையோ பாடல்கள் கொடுத்திருக்கலாம்....தமிழின் அமுதம் பெருக பெருக, அதே சமயம் ஒரு சமூக அவலத்தை சொன்ன எங்கள் புதுப்பாடலுக்கு ஈடாக ஒரு பாடலைக் காட்டமுடியுமா???

நெல்லாடிய நிலமெங்கே...?

சொல்லாடிய அவையெங்கே...?

வில்லாடிய களமெங்கே...?

கல்லாடிய சிலையெங்கே...?

தாய் தின்ற மண்ணே...!!! கயல் விளையாடும்

வயல் வெளி தேடி

காய்ந்து கழிந்தன கண்கள்...!

 

காவிரி மலரின்

கடி மணம் தேடி

கருகி முடிந்தது நாசி..!

 

சிலை வடிமேவும்

உளி ஒலி தேடி

திருகி விழுந்தன செவிகள்..!

 

ஊன் பொதி சோற்றின்

தேன் சுவை கருதி

ஒட்டி உலர்ந்தது நாவும்..!

மேற்சொன்ன வரிகள் சின்ன சாம்பிள்தான்...முழுப்பாடலையும் கேட்டு, உங்கள் கண்ணில் சிறிதேனும் நீர் சுரக்காவிட்டால் என்னை ஏனென்று கேளுங்கள்....

ஒரு அருமையான கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்... அன்னையர் தினம், நண்பர்கள் தினம் எல்லாம் வெள்ளைக்காரர்கள் கண்டுபிடிப்பாம்!!! மற்ற நாட்களில் பாசமே கிடையாதா, அந்த நாளில்தான் பாசமா என்று கேட்கிறார்கள்....மற்ற நாட்களில் எல்லாம் நண்பன் மேலோ, மனைவி மேலோ மற்ற யார் மேலோ பாசமோ, அன்போ கிடையாதா? ஏன் நண்பனுடைய, மனைவியுடைய, காதலியுடைய பிறந்த நாள், திருமண நாள், முதன் முதலில் பார்த்த நாள் என்றெல்லாம் ஞாபகம் வைத்து பரிசையோ, வாழ்த்துகளையோ சொல்கிறீர்கள்??? இவை யாவும் நம் அன்பை பரிமாறிக்கொள்ள, வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு அவ்வளவே, அதை விடுத்து வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சா என்ன, வெள்ளைக்காரி கண்டு பிடிச்சா என்ன? நல்லதை யார் சொன்னாலும் எடுத்துக் கொள்ளலாமே!!! வாழ்த்து அட்டைகள், நகைகளின் வியாபாரத்திற்காகத்தான் இந்த நாட்கள் என்று சொல்லாதீர்கள்!!! உண்மையான அன்பை பரிசுகளில்தான் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வெளிப்படுத்துவதில் மட்டுமே இருக்கிறது.

நண்பர்கள் தினம், புத்தாண்டு, அன்னையர் தினம்தான் வெள்ளைக்காரர்கள் கண்டு பிடித்தது!!! சுதந்திர தினம், குடியரசு தினத்திற்கெல்லாம் பாட்டு எழுதியிருக்கிறோமே!!! அப்படி என்றால் என்ன அர்த்தம்? மற்ற நாட்களில் தேச பக்தி இல்லை என்றா??? மேட்டர் என்னவென்றால் நாங்கள் சொன்ன சிச்சுவேஷனுக்கெல்லாம் அவர்களிடம் பாட்டு இல்லை என்று நினைக்கின்றேன்...

அது மட்டுமில்லாமல், கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் போது, பெண்கள் ஆடுவதற்கேற்றார் போன்றே பாடல்களை கொடுத்திருக்கிறோம்...பூ பூக்கும் மாசம் தை மாசம்”, சின்ன சின்ன வண்ணக் குயில்”, ”ஓகோ மேகம் வந்ததோ இந்த பாடல்கள் அரங்கேறாத பள்ளி,, கல்லூரி மேடைகளைக் உங்களால் காட்ட முடியுமா???  அந்தக் காலத்தில் பெண்களை எங்கே மதித்தார்கள், அவர்களுக்கென்று ஒரு பாடலை வைக்க!!! இன்னமும் சுசீலாம்மா பாடிய தனிப் பாடல்கள் ஒரு பெரிய விஷயமாகப் பார்க்கப் படுகிறதென்றால் பழைய பாட்டு ஆளுங்களோட லட்சணத்தை தெரிந்து கொள்ளலாமே!!! சுதந்திர தினமா தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடிசின்ன பிள்ளைகள் கலை நிகழ்ச்சியா அச்சம் அச்சம் இல்லை, இனி அடிமை எண்ணம் இல்லை இப்படிப்பட்ட பாடல்களை பழசில் தேடினாலும் கிடைக்காது

பெண்ணென்றால் தலை குனிந்து நடக்க வேண்டும் என்றெல்லாம் ஓவர் அட்வைஸ் பண்ணிய பழைய பாடல்களை விடுத்து ஓ ஒரு தென்றல் புயலாகி வருமே”, “மனதில் உறுதி வேண்டும் என்று புதுமைப் பெண்ணைக் கொணர்ந்தவர்கள் புதிய பாடல்களே!!! மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும், விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்”, “இதைக் கேக்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது”, என்று புரட்சிக் கருத்துக்களையும்,  மதமென்னும் மதம் ஓயட்டும், தேசம் மலர் மீது திகில் கொள்ளட்டும்”, “இது அன்னை பூமி, எங்கள் அன்பு பூமி, இது ரத்தம் சிந்த என்ன காரணமோ மத நல்லிணக்கம் என்று பல்வேறு பட்ட விஷயங்களைத் தொட்டுச் சென்றது புதுப்பாடல்களே!!!  

எப்பொழுதும் குற்றங்களை மட்டும் சொல்லும் பழைய பாடல் கோஷ்டிக்கு இன்னொன்றும் சொல்லிக் கொள்கின்றேன். எல்லாரும் தாய் தாலாட்டு பாடுவதாக காட்டிய போது, எங்க ஆளுங்க போட்டார்களே தாய்க்கே தாலாட்டு பாடிய மாதிரி!!! ஆராரிரோ நானிங்கே பாட தாயே நீ கண்ணுறங்குன்னு”.

யாரடா மனிதன் இங்கே மற்றும் நீ மனிதந்தானா என்றெல்லாம் பாட்டு போட்ட பழைய பாடல் கோஷ்டியினர் அதற்கான தீர்வினைத் தரவில்லை...அதற்கும் புதுப்பாட்டு ஆளுங்கதான் யார் மனிதன் என்று கேள்வி கேட்டதுமில்லாமல் பதிலையும் தந்தனர்....சரி என்னத்தை செய்ய?? அதான் எங்க புதுப்பாட்டுலியே நா.முத்துகுமார் சொல்லிட்டாரே!!!

காலம் காலமாக பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா

என்றும் வானவில்லை போல இளமையடா ரொம்ப புதுமையடான்னு

நடுவர் அவர்களே, நாங்கள் திருப்பித் திருப்பி சொல்வது என்வென்றால், புதிய பாடலில் பழைய பாடலில் சொன்ன அத்தனை கருத்துக்களையும் (தமிழ் இலக்கியம், சமூக் கருத்துக்கள், காதல், வீரம்) என்று அனைத்தையும் சொல்லியிருக்கின்றோம்....ஆனால் (கிராமத்து பாடல்கள், ஒரு விதவையின் மன உணர்வுகள் (அழகு மலராட, இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே, இன்பத்தில் ஆடுது என் மனமே!!!), விரக உணர்வுகள், காதலின் வலி, பெண்ணின் உணர்வினை பெண்ணே சொல்வது) என்று புதிய பாடல் சொன்ன பல விஷயங்களை பழைய பாடலில் அழுத்தமாக சொல்லப்பட வில்லை....அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது...பழைய பாடல்கள் அனைத்துமே ஒரு சின்ன வட்டத்திற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தது.... காதல்னா ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் நின்று பாடுவது, ஓவர் அட்வைஸ் இல்லாவிடில் சட்டி சுட்டதடா என்று ஓவர் ஃபீலிங்ஸ் என்று எதிலுமே ஓவர் டோஸ்தான்.....அது அந்தைய காலகட்டம், அவ்வளவுதான்...

சிம்ரனை எனக்கு மிகப் பிடிக்கும் என்பதற்காக இப்பவும் சிம்ரனை ஹீரோயின்னாக மட்டும் நடிக்கவைத்து பார்ப்போம் என்று அடம்பிடிக்க முடியுமா??? வேண்டுமானால் சில பால்ய கால நினைவுகளைப் போல் அவருடைய பழைய படங்களை பார்த்து மகிழ்ச்சி கொள்ள வேண்டியதுதான்!!! இல்லை அவர்கள்தான் என்றுமே ஹீரோயின், மற்றவர்கள் தேவையில்லை என்பவர்கள் பேசாமல் பழைய பாடல் அணியில் போய் சேர்ந்து கொள்ளுங்கள். உண்மையில் அவர்கள் இப்போது திரையில் நடிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது....

நடுவர் அவர்களே நாங்கள் பழசை மறக்கவோ, தேவையில்லை என்றோ சொல்லவில்லை. மாறாக அதை அவ்வப்போது நினைத்துப் பார்த்துவிட்டு, ரசித்து விட்டு, நனவுலகத்திற்கு வாருங்கள் என்றுதான் சொல்கிறோம். இந்த விஷயம் புரிந்த்தால்தான் ஒட்டு மொத்த திரை இசை நிகழ்ச்சிகளில் ஒருமணி நேரம் முதல் இரண்டு மணி நேரம்வரை மட்டுமே பழைய பாடல்களை ஒளி(லி) பரப்புகிறார்கள்!!!

பெரியவர்களிடத்திலும், மற்றவர்களுக்கும் பழைய பாடல் மிகப் பிடித்தமானதாகத்தான் இருக்கும்...காரணம் என்ன??? அந்த காலங்களில் பொழுது போக்கு அம்சமே கிடையாது..ஒவ்வொரு படத்தையும், பாடலையும் கேட்க அவர்கள் பெரிதும் சிரமப்பட வேண்டும்..அத்தனை சிரமங்கள், அத்தனை வசதி குறைவு, அந்த சிரமங்களுக்கு மத்தியில் அவர்கள் பார்த்தது எல்லாம் அவர்கள் மனதில் என்றும் ஒரு மலரும் நினைவாகவே இருக்கும். ஆனால் இன்று அப்படியல்ல. ஒரு பாடல் பிடிக்காவிட்டால் அதே சமயத்தில் குறைந்த பட்சம் வேறு மூன்று பாடல்களைப் பார்க்கும் (கேட்கும்) வாய்ப்பு இருக்கிறது. அத்தனை ஊடகங்கள், அத்தனை வாய்ப்புகள், அத்தனை பாடல்கள்....அதற்காக இதனை சொத்தை என்று சொல்லிவிட முடியுமா??? சில மோசமான பாடல்கள் இருக்கின்றன என்பதற்காக ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடியுமா???

சென்னை பெங்களூரு சாலையில் சில இடங்களில் குழிகளாக இருக்கின்றன என்பதற்காக அந்த சலைகளில், வண்டியில் போகமாட்டோம், பழங்காலங்களைப் போல் நடைபயணமாகவே காட்டு வாழியில் போய்கொள்கிறோம் என்று அடம்பிடிக்காமல் இந்த சாலைகளில் உள்ள குழிகளை அகற்றி நல்வழியினை அமைக்க ஒன்றுபடுவோம் வாருங்கள் என்று கூறி விடைபெறுகிறேன்....நன்றி வணக்கம்!!!

 

Naresh Kumar

unread,
Dec 21, 2009, 1:21:14 AM12/21/09
to பண்புடன்
பழைய பாடல் அணியின் தொகுப்புரை
 
நடுவருக்கு மீண்டும் சிரமம் தரவிரும்பாமல் இரண்டு தொகுப்புரைக்கும் ஒரே நேரத்தில் பதிலளிக்கும் வகையில் நடுவருள்ளிட்ட இந்த குழுமத்திற்கு மீண்டும் ஒரு வணக்கத்தை வைத்து விட்டு என்னுடைய தொகுப்புரையை ஆரம்பிக்கிறேன். 

**

நடுவர் அவர்களே,

பட்டுக் கோட்டையார் இந்தப் புதுப்பாட்டுக்காரங்கள வச்சு தான் அருமையான ஒரு பாட்டை அப்பவே எழுதி வச்சிருக்கார்.

" இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம்

ஒரு கண்ணாய் இருக்கனும் அண்ணாச்சி "

..

பொதுநலம் பேசும் புண்யவான்களின்

போக்கினில் அனேக வித்தியாசம் ;

புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்

புவியை மயக்கும் வெளிவேஷம் - அந்தப்

பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த

நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்"

நடுவர் அவர்களே பேச வந்த விஷயம் விட்டுட்டு மத்த எல்லாம் பேசுனாங்களே தவிர உருப்படியா புதுப்பாடல்களில் இலக்கியத்தரம் எவ்வாறு கையாளப்பட்டிருக்கிறது, சமூக மேம்பாட்டிற்கு எப்படி உதவி செய்தது,  தமிழின் வளர்ச்சிக்கு எப்படி உதவினது அப்படின்னு ஒருத்தரும்  சரியா பேசல. பேசமுடியலை அவங்களால அப்படிங்கறது தான் உண்மை. அப்படி பேச அங்க எதுவும் இல்லைங்கறது தான் காரணம்.

கடவுள்  இருக்கிறாரா இல்லையா என்று இன்றும் மக்கள் அடித்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். அவர்களின் மூடத்தனத்தை கண்டு வெகுண்டெழுந்த எங்கள் கவிஞர் எழுதினார் பாருங்கள்.

 

"கடவுள் இருப்பதும், இல்லை என்பதும்

கவைக்குதவாத வெறும் பேச்சு

கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே

கருதவேண்டியதை மறந்தாச்சு -

பழங் கதைகளைப் பேசி காலம் வீணாச்சு " என்று அதிரடியான பாடல். ஆனாலும்  அதே கவிஞனை கடவுளைப் பற்றிப் பாடச்சொன்னார்கள். ஆனாலும் நடுவர் அவர்களே அந்தக் கவிஞர் சமூகத்தை மறக்கவில்லை

" அம்பிகையே முத்து மாரியம்மா

உன்னை நம்பி வந்தேன் ஒரு காரியமா

ஆளை விழுங்கி ஏப்பமிடும் காலமம்மா காளியம்மா

ஏழை எங்கள் நிலைமையைத்தான்

எடுத்துச் சொல்றோம் கேளுமம்மா!(அம்)

இன்பம் என்று சொல்லக் கேட்டதுண்டு-அது

எங்க வீட்டுப் பக்கம் வந்ததுண்டா?

பண்பும் அன்பும் நிறைஞ்சிருக்குது

பணம் அதைக் கண்டு ஒதுங்கி நிக்குது  "

என்று அதிலும் சமூகத்தின் அவலங்களை ஏற்றி அதை வேண்டுகோளாக வைத்தாரே எங்கள் கவிஞர் அதுவல்லவா சமூக சிந்தனை ?

இன்றைய கவிஞன் எழுதுகிறான்

" கும்பிடப் போன தெய்வம்

குறுக்கே வந்ததம்மா..

குறுக்கே வந்த தெய்வம்

என் கூட ஆடுதம்மா

பாலை ஊத்துடா தேனை ஊத்துடா

நேந்துகிட்டு நேந்து கிட்டு சூடம் ஏத்துடா

இதைவிட மோசமாய் கடவுள் நம்பிக்கையாளர்களை இழிவு செய்ய முடியாது. அதிலும் அந்த நடன அசைவுகள் எல்லாம் கடவுளே!!

ஒரு கவிஞர் முகமது சந்த்ர பிம்பமோ என்று எழுதிய பாடல் எங்கே அந்த மதத்தை சார்ந்தவர்களை காயப்படுத்துமோ என்று வதனமோ சந்த்ர பிம்பமோ என்று மாற்றி எழுதிய பாவலர்கள் மிகுந்த நம் தமிழகத்தில் திரைப்பாடல் தரங்கெட்டுப் போனதற்கு முழுக்காரணம் புதுப்பாடல்காரர்களே என்று குற்றம் சாட்டுகிறேன்.

துலாபாரம் என்ற படம் நடுவர் அவர்களே அதில் ஒரு பாடல்

"சங்கம் வளர்த்த தமிழ் ,தாய்ப்புலவர் காத்த தமிழ்கங்கை கொண்ட எங்கள் தமிழ்

வெல்லும் வெல்லும் - ஒருகாலம் வரும் நல்ல பதில்சொல்லும் சொல்லும்"என்று தமிழின் மேன்மையைப் போற்றியப் பாடல்கள் நிறைந்த நாட்டில்" பெரியம்மாவின் பெண்ணைக் காதலித்தால் தப்பே இல்லை" என்று பாடும்  பாடகர்களை வளரவிட்டது யார் குற்றம் ?

தெலுங்கைத் தன் தாய்மொழியாகக் கொண்டாலும் பி.சுசீலா அவர்களின் எந்தப் பாடலில் நாம் உச்சரிப்புப் பிழைக் காண முடியும். அதற்கு காரணம் பிழையாகப் பாடும் பாடகர்களை பாடவைக்க மாட்டேன் என்ற இசையமைப்பாளரும், அப்படிப் பாடுபவர்களுக்கு எழுத மாட்டேன் என்று தன்மானத்துடன் நின்ற கவிஞர்களும்

அல்லவா ? அந்த தன்மானம் எங்கே போனது இப்போதெல்லாம் ?  தன்மானத்தை விடுங்கள் பெண்மானத்தையும் அல்லவா கூறு போட்டு விற்கிறது புதியப் பாடல் தலைமுறை கவிஞர் கூட்டம் ?" என்னாத்த சொல்வேனுங்க வடுமாங்கா ஊறுதுங்க..

வடுமாங்கா ஊறட்டுங்க தயிர் சாதம் ரெடி பண்ணுங்க"இந்தப் பாடல்களை மனப்பாடம் செய்து அதற்கு நடனமாடும் சிறுவர்கள் நாளைய சமுதாயத்தை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள் ? பழைய பாடல்களில் பெண்களை வர்ணிக்காமல் இல்லை. வர்ணித்தார்கள். அதன் அழகைப் பாருங்கள்

" கட்டோடு குழலாட ஆட ஆடகண்ணென்ற மீனாட ஆட.....பாவாடை காற்றோடு ஆட ஆடபருவங்கள் பந்தாட ஆட ஆடகாலோடு கால் பின்னி ஆடகள்ளுண்ட வண்டாக ஆடு "என்று இலை மறைக் காய்மறையாக அதே நேரத்தில் இரசிக்கும் படியும் விரசம் இல்லாமலும் எழதியது எங்கே  இப்போது தயிர்சாதத்தை தேடும் இன்றையத் தலை முறை எங்கே ?

 

நடுவர் அவர்களே, சிறுவன் ஒருவனிடம் பேசுகையில் அவன் என்னை ஒரு கேள்வி கேட்டான் " அண்ணே கட்டெறும்புக்கும் சித்தெறும்புக்கும் என்னா வித்தியாசம்"நானும் யோசிச்சுப் பார்த்து, " தம்பி,  கட்டெறும்பு கருப்பா இருக்கும், பெருசா இருக்கும், சித்தெறும்பு சிறுசா சிவப்பா இருக்கும்டா" ன்னு சொன்னேன்.  அவன் சொல்றான்

"உங்களுக்கு ஒண்ணுமே தெரியலண்ணே.. கட்டெறும்பு  ரஞ்சிதாவை கடிச்சது, சித்தெறும்பு சுகன்யாவைக் கடிச்சுது" அப்படிங்கறான்.எனக்கு ஒண்ணு மட்டும் புரியலை நடுவர் அவர்களே.  சித்தெறும்பு என்னை அழகாகக் கடித்தது அப்படின்னு ரசிச்சு யாராச்சும் பாட முடியுங்களா ?

இதெல்லாம் விட பெண்களை இழிவுப் படுத்தும்  கொடுமையான பல பல புதுப் பாடல்கள் சொல்லலாம் நடுவர் அவர்களே."இடுப்பு அடிக்கடி துடிக்குது, லவுக்க எதுக்கடி வெடிக்குதுவலைக்குள் விழுந்தது ஆம்பள மீனுவழுக்கி விழுந்தது பொம்பள மீனு

அத்த மகனே ஒத்தைக்கு ஒத்த பதில் சொல்ல நானு" இது தானா நடுவர் அவர்களே எதிரணியினர் சொல்லும் விரகத்தையும் காதலையும் சொல்லும் முறை ?  அத்தை மகனிடம் தன் காதலை சொல்லுகிறாள் ஒருத்தி அதற்கு பழைய பாடலில் எப்படி சொல்கிறார்கள் பாருங்கள்

" அத்தை மகனே போய் வரவாஅம்மான் மகனே போய் வரவாஉந்தன் மனதைக் கொண்டு செல்லவாஎந்தன் நினைவைத் தந்து செல்லவா

அத்தை மகனே போய் வரவாமல்லிகை மலர் சூடி காத்து நிற்கவாமாலை இளம் தென்றல் தன்னை தூது விடவாநல்லதோர் நாள் பார்த்து சேதி சொல்லவாநாட்டோரை சாட்சி வைத்து வந்து விடவாநாட்டோரை சாட்சி வைத்து வந்து விடவா

அத்தை மகனே போய் வரவாஅம்மான் மகனே போய் வரவா " பாடலை கவனியுங்கள் நடுவர் அவர்களே. அவள்  இன்றைய புதுப்பாடல் தலைமுறையினைப் போல

" கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா "என்று வரம்பு மீறவில்லை. நாட்டாரை சாட்சி வைத்து வந்துவிடுகிறேன் என்கிறாள். அதுவல்லவா நடுவர் அவர்களே பெற்றோர்க்கும் உற்றோர்க்கும் தரும் கவுரவம் ?

 

ஓரிரு நல்ல பாடல்கள் வந்தன புதியவற்றிலும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால்  நூறு பாடல் அல்லது இருநூறு பாடல்களுக்கு ஒன்று கூட தேறாமல் இருக்கிறது

இன்றைய புதிய பாடல்களில் பெரும்பாலும் காதல் அல்லது விரகம் அல்லது  பெண்ணை இழிவுபடுத்துவதாகவும், மிச்சம் இருப்பவை நாயகர்கள் தங்களின் சாணிமிதித்த செருப்பை படம் பார்ப்பவர்கண்ணில் தேய்த்து அவர்களின் தீரம் சொல்லும் பாடல்கள் அல்லவா ? சமூகம், தமிழ், சுற்றம் உறவுகள் என்று எதற்கும் மதிப்பில்லாமல் போய்விட்டதை நாம் வருத்தத்துடன் அல்லவா பார்த்துக் கொண்டிருக்கிறோம்

அச்சம் என்பது மடமையடாஅஞ்சாமை திராவிடர் உடமையடாஎன்று வீரத்தை ஊட்டிய பாடல்களின் தாக்கம்  ஊசிமுனையளவு இன்றைய பாடலில் உண்டா ?அத்தை மடி மெத்தையடி ஆடிவிளையாடம்மா ஆடும் வரை ஆடிவிட்டு அல்லி விழிமூடம்மா என்று குழந்தைக்கு தன் மடியை மெத்தையாகத் தந்து உறவின் பெருமையை வெளிப்படுத்திய பாடல்கள் எங்கே போயினஅத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவேஇத்திக்காய் காயாதே என்று ஊடலுக்கு நிலவைத் துணைக்கழைத்து அதில் தமிழமுதை ஊற்றி நம்மைத் திளைக்க வைத்த பாடல்களின் மிச்சம் எங்கே போனது ?

கவியரசு கண்ணதாசனுக்கு ஒருமுறை விழா எடுத்தார்களாம். அதில் ஒரு ஆசிரியர் பேசும் போது " என்னப் பார்வை இந்தப் பார்வைஇடை மெலிந்தால் இந்தப் பாவை "என்று அந்தப் பாட்டை  எடுத்து பார்வையில் இருக்கும் இடையினம் அதாவது ர் மெலிய அது பாவையாகிறது என்று சிலாகித்தாராம்.

கண்ணதாசன் பாடியதென்னமோ பெண்ணிடையைப் பற்றி ஆனால் அதன் தமிழின் வளமை நம்மை எப்படிச் சிந்திக்கத் தூண்டுகிறது ?தூது இலக்கியம் என்று ஒரு பிரிவு உண்டு. எத்தனை வகையான தூது ? நம் பழைய பாடல் கண்ணதாசனும் புதுமுறையாக தூது விடுத்தார்

" பறக்கும், பந்து பறக்கும் இது பறந்தோடி வரும் தூது " என்று பந்தை தூதுவிட்டார்.  தண்ணீரைத் தூதுவிட்டு " பாட்டுக்குபாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோதுள்ளி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ "

 

இன்று யாரும் காதலிக்கு தூதுவிடுவதில்லை. செட்டப், பிக்கப், ட்ராப் என்றல்லவா புதியப் பாடல் கலாச்சாரம் சொல்லித்தந்திருக்கிறது.குழந்தைகள் இலக்கியம் என்ற பிரிவை இன்றைய புதுப்பாடல் தலைமுறை மறந்து போய்விட்டது நடுவர் அவர்களே.

ஆயினும் இன்றும் நாம் " எதிர்கால இந்தியா இளைய சமுதாயத்தின் கையில் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அன்று சிறுவர்களின் முன்னேற்றத்திற்கு, வளமையான எதிர்காலத்திற்கென " சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா "

" திருடாதே பாப்பா திருடாதே "" தூங்காதே தம்பி தூங்காதே " என பல பாடல்களை எங்களால் உதாரணம் தர முடியும்.  சிறுவர்களுக்கான வேடிக்கைப் பாடல்கள் வேண்டுமா" சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்"

" மாப்பிள்ள வந்தான் மாப்பிள்ள வந்தான் மாட்டு வண்டியிலே"" மியாவ் மியாவ் பூனைக் குட்டி மீசைக்கார பூனைக்குட்டி "என்று பல உதாரணம் சொல்லலாம். இன்றைக்கு அந்த பூனைக்குட்டி வளர்ந்து விட்டது. புதியப் பாட்டுக்காரன் அதன் மீசையைப் பிடுங்கி விட்டு

" மியாவ் மியாவ் பூன.. மீசையில்லா பூன " என்று பாடுகிறான்.இன்றைய தலைமுறை இலக்கியம் எல்லாம் இரண்டு வகை தான். ஆம் ஒன்று காதல் மற்றது  ஆபாசம்  மட்டும்  தான்.  வருங்கால தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்ல இருப்பது இந்தக் குப்பைகள் என்பதில் மனம் வலிக்கிறது.

இந்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம்.  பழைய பாடல்களை மேலும் நாங்கள் சொல்வதை விட, புதுப்பாடல்காரர்களின் வாக்குமூலம் வழியாகவே வெளிப்பட்டிருப்பதை கவனியுங்கள் இளமை எப்படி அதிகப்படும் என்று புதுப்பாட்டுக்காரர் வாக்குமூலம் தரார் பாருங்க

"இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கேபழைய பாடல் பாடஇளமை திரும்பும் இங்கே பழைய பாடல் போல புதிய புதிய பாடல் இல்லை"பாருங்க மக்களே இந்த வாக்குமூலம்  குடுத்தது புதியப் பாட்டுக்காரங்க. இளமை வந்தா காதல் வரும் காதல் வரும். காதல் வந்தா காதல் கடிதம் எழுதுவாங்க. அதுக்கும் புதுப்பாட்டுக்காரன் பாருங்க

" கண்ண தாசனே கண்ணதாசனே வந்துவிடு  எங்கள்காதல் கவிதையின் வரிகளைக் கொஞ்சம் திருத்திக் கொடு " என்று பழைய பாடல் கவிஞனிடம் அல்லவா கையேந்தினான். ஏன் ஓ வைரமுத்துவே, அறிவுமதியே , தாமரையே என்று கேட்கவில்லை. ஏனென்றால்

பழைய பாடல்களின் தாக்கம் அது.சரி  காதல் எல்லாம் ஆச்சு. வாழ்க்கையில் மறக்க முடியாதவை என்று புதிய பாடல்காரர் பட்டியலிடுவதையும் பாருங்கள்" மறக்க முடியவில்லை.. மறக்க முடியவில்லை..பட்டாம்பூச்சி பிடித்த நாட்களை மறக்க முடியவில்லை

பாலும் பழமும் பழைய பாடல் மறக்க முடியவில்லை"ஆக சண்டைக்காரரே  தானே  உண்மையை வாக்குமூலமாகத் தந்த பின் இதில் மேலும் வாதிட ஏதுமில்லை என்ற காரணத்தாலும் புதியபாடலில் வாதிடத் தேவையான சாரமும் இல்லை என்பதாலும் பழைய பாடலே சிறந்தது என்று தீர்ப்பு வழங்கு மாறு கேட்டுக் கொண்டு இதுவரை கருத்துகளை பொறுமையோடு கேட்டு அதற்கு பதில் அளித்து நல்ல பாடல்கள் எங்கள் சார்பில் என்று தீர்ப்பு வழங்கப் போகும்

நடுவருக்கு நன்றி கூறி முடிக்கிறேன்படித்த அனைவருக்கும் நன்றி

 

Naresh Kumar

unread,
Dec 21, 2009, 1:24:14 AM12/21/09
to பண்புடன்
நடுவரின் தீர்ப்பு
 
அன்புடையீர்,

தொடர்ச்சியான வாதங்களும், அதைத் தொடர்ந்து அணிகளின் தொகுப்புரையும் ஒருவழியாக நடைபெற்று முடிந்திருக்க, தீர்ப்பு வழங்க வேண்டிய தருணம் இப்போது வந்திருக்கிறது. எனது வேலையை எளிதாக்கும் விதமாக, கனகச்சிதமாக தொகுப்புரை வழங்கியிருக்கிற நரேஷுக்கும், ஜீவ்ஸுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, சபையினருக்கு எனது வணக்கத்தையும் செலுத்திவிட்டு, தீர்ப்பை வழங்கவிருக்கிறேன்.

எடுத்துக்காட்டுக்களுக்கு நான் போக விரும்பவில்லை. எண்பது ஆண்டுகளில் வெளிவந்த பாடல்களும் முழுமையாகத் தெரிந்தாலன்றி, ஒப்பீடு செய்வது கடினம். ஆகவே, எனக்கும் உங்களுக்கும் பரிச்சயமான பாடல்களைப் பற்றியே நாம் பேச வேண்டும்; அவற்றை எல்லாரும் பேசியும் விட்டார்கள்.

இந்தப் பட்டிமண்டபத்தில், சமுகக்கருத்துக்கள், காதல், தமிழின் மேன்மை என்ற மூன்று அளவுகோல்களின்படி பழைய பாடல்கள், புதிய பாடல்கள் ஆகிய இரு பிரிவுகளில் எது ஒன்றை விட மற்றொன்று உயர்ந்தது என்பதே விவாதத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் இருக்கிறது.

விஞ்ஞானத்தின் அற்புதக்கண்டுபிடிப்பான சினிமா, தவழ்ந்த காலந்தொட்டு, நாகரீகத்தின் உச்சகட்டமான இக்காலம் வரையிலும் தொடர்ந்து சமூகம், காதல், தமிழ் ஆகியவை குறித்த தனது கண்ணோட்டங்களையும் காலத்திற்கேற்பக் கையாண்டு வருகின்றது என்பதில் சந்தேகமில்லை.

சமூகக்கருத்துக்கள் என்பதை எடுத்துக்கொள்வோம். தமிழில் பேசும்படம் வெளியாகத் தொடங்கிய 1931-ம் ஆண்டு தொடங்கி இன்றைய காலம் வரையிலான 78 ஆண்டுகளில் தமிழ்ச்சமூகம் எவ்வளவு மாறியிருக்கிறது என்பதை பின்புலத்தில் வைத்துக்கொண்டு தான் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த பாடல்களை அணுக முடியும். உதாரணமாக, "புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே, தங்கச்சி கண்ணே, சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே," என்ற பாடலைப் போல இன்று எழுத இன்றைய நவீன கவிஞர்கள் துணிய மாட்டார்கள். அது பெருமளவுக்குப் பெண்ணை அடிமைப்படுத்துவதை நியாயப்படுத்தி எழுதப்பட்டதாகக் கருதப்படலாம். அந்த ஆதங்கம் சரியே என்று ஒப்புக்கொள்ளுகிற அளவுக்கு, பெண்களின் உரிமைகளும் அவர்களது உலகறிவும் அதிகரித்திருக்கின்றன.

சமூக ஏற்றத்தாழ்வுகள் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தபோது தமிழகத்தில் வெளிவந்த ஆரம்பகாலத்திரைப்படங்களில் அந்தக் காலகட்டத்திற்குத் தேவையான பகுத்தறிவு, தேசபக்தி, மொழிப்பற்று போன்றவற்றை அடிப்படியாகக் கொண்ட படங்கள் தயாரிக்கப்பட்டன. அப்படங்களில் இடம்பெற்ற பாடல்களும் இந்த உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருந்தன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்றோரின் பாடல்களில் பொதுவுடமைத் தத்துவங்கள் பளிச்சிட்டன. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நகைச்சுவையில் பெரும்பாலும் ஜாதீய வேறுபாடுகள், மூடப்பழக்க வழக்கங்கள் போன்றவையே மையக்கருத்தாக அமைந்திருந்தன. "நல்ல தம்பி," படத்தில் இடம்பெற்ற ’கிந்தனார் கதாகாலட்சேபம்,’

காதல்! கதாநாயகன் நாயகி ஒருவரையொருவர் தொட்டால் கூட எங்கே தணிக்கை செய்து விடுவார்களோ என்று அஞ்சியஞ்சி காதலை நீளமான வசனங்களாலும், நிறைய பாடல்களாலும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் அன்றிருந்தது. தமிழில் முதலில் "வயது வந்தோருக்கு மட்டும்," என்று சான்றிதழ் பெற்ற திரைப்படம் ஏறக்குறைய நாற்பது வருடங்கள் கழித்தே வெளியானது. இன்று வருடத்துக்கு நாற்பது படங்கள் வந்தால் பாதிக்கு மேல் "ஏ" சான்றிதழ் பெற்ற படங்களே வருகின்றன.

தமிழ்! சுதந்திரம் அடைவதற்கு முன்னரே "நாம் இருவர்," படத்தில் மகாகவி பாரதியாரின் பாடல்களை சேர்த்திருந்தார் ஏ.வி.எம்.மெய்யப்பச் செட்டியார் அவர்கள். பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, சக்தி.கிருஷ்ணசாமி, ஏ.பி.நாகராஜன் போன்றோர் சமூகப்படங்களிலும் செந்தமிழில் வசனங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக ஓரங்க நாடகங்களை வைப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.

புரட்சிக்கவிஞரின் பல பாடல்கள், "தமிழுக்கும் அமுதென்று பேர்," உட்பட, பழைய படங்களிலேயே தான் கையாளப்பட்டன. எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆரின் "பல்லாண்டு வாழ்க," படத்தில் தான் கடைசியாக, "புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்," என்ற பாரதிதாசரின் பாடல் இடம்பெற்றது. பாரதியாரின் பாடல்கள் "சிந்துபைரவி,"யில் கையாளப்பட்டன.அதன் பிறகு "பாரதி" படம் தான்!

பாரதியார், பாரதிதாசன் பாடல்களை எடுத்துக்கையாள்வதை வைத்து மட்டும் தமிழுணர்வை வளர்க்க முடியுமா என்றால் முடியாது. ஆனால், இளையராஜாவினால் பல புதிய நவீனக்கவிஞர்கள் புதிய பாணியுடன் திரைப்பாடல்களில் மொழிநயத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, மதுக்கூர் கண்ணன் எனத் தொடங்கி சமீபத்தில் அக்னிபுத்திரன் வரையிலும் சமகால சிந்தனையுடைய பல கவிஞர்கள் புதிய பாடல்களில் ராஜபாட்டையில் தங்களது பங்களித்திருக்கிறார்கள் என்பதை வாதத்துக்காகக் கூட மறுக்க முடியாது.

ஆனால், தமிழில் ஆங்கிலத்தை இசைநயத்துக்காக அதிகளவில் கலந்து பாடல்கள் வெளிவந்த காலகட்டம் எது? "குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ....," என்று பாட்டின் பல்லவியிலே புரியாத, பொருளற்ற வார்த்தையை வைத்து விட்டு அது ஒரு catchy word என்று சப்பைக்கட்டு கட்டிய காலகட்டம் எப்போது தொடங்கியது? "முக்காலா முக்காபுலா," "முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொரி முஸ்தபா," என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இசைப்புயலின் இந்தப் பாணியால், பிற இசையமைப்பாளர்களும் தாக்கத்திற்குள்ளாகி அனைவருமே இது போன்ற பாடல்களை அவ்வப்போது உருவாக்கியது எந்தக் காலத்தில்..? "என்னவளே அடி என்னவளே," என்ற ஒரு இனிமையான பாடலுக்காக, "ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி," பாடலின் கலப்படத்தை மறக்க முடியுமா...?

இன்றைய புதிய பாடல்களில் இதுவே பிரச்சினை! மொழிநயம், இசைநயம் போன்ற அம்சங்கள் இல்லாத குறைக்காக, படத்துக்கு ஒன்றோ இரண்டோ நல்ல பாடலை வைத்து விட்டு, மீதமுள்ள பாடல்களில் ஆங்கிலம், ஹிந்தி என்று இஷடத்துக்கும் கலப்பது வாடிக்கையாகி வருகிறது. இப்போது முழுநீள ஆங்கிலப்பாடலைக் கூட துணிந்து படங்களில் திணிக்க முடிகிறது. ஆக, ஒரு பக்கம் அணை பலப்படுத்தப்படுகிறது; இன்னொரு பக்கம் ஓட்டையும் பெரிதாகிக்கொண்டிருக்கிறது.

கர்னாடக சங்கீதத்தை அடிப்படையாக வைத்து பாண்டித்யமாக வடமொழியைக் கலந்து, இழுத்து இழுத்துப் பாடிய காலம்போய், இப்போது தமிழுடன் ஆங்கிலத்தை சரளமாகக் கலந்து பாடல் இயற்றுவது வரைக்கும் திரைப்பாடல்கள் மிக தூரத்துக்கு வந்து விட்டிருக்கின்றன. சொல்லப்போனால், திரைப்பாடல்கள் தமிழ்சமூகம் கடந்து வந்திருக்கிற பாதையை விளக்குகிற ஒரு காலக்கண்ணாடியோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது.

ஏறக்குறைய எண்பது ஆண்டுகளில் நாம் நம்மைச் சுற்றிக்காணுகிற முன்னேற்றங்கள் திரைப்பாடல்களிலும் தென்படுகின்றன- குறிப்பாக தொழில்நுட்பம் கண்டிருக்கிற வியத்தகு வளர்ச்சியின் தாக்கத்தை திரைப்பாடல்களிலும் காண முடிகிறது. ஆனால், நமது வளர்ச்சியின் பக்கவிளைவுகளாக நாம் அன்றாடம் எதிர்கொள்ளுகிற சோதனைகளைப் போலவே, திரைப்பாடல்களிலும் பல பக்கவிளைவுகளும் விபரீதங்களும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி பெற்றும், பாடல்கள் இல்லாத படத்தை நாம் விரும்பாமலிருப்பது நமக்கு இயல்பாகவே இசை மீதிருக்கிற நாட்டத்தை வெளிப்படுத்துகிறது என்பது உண்மை தான். ஆனால்....!

இங்கு வாதிட்டவர்கள், பழைய பாடல்களோ, புதிய பாடல்களோ, அவற்றிலிருந்த சொல்லாடல், கவிநயம், கருத்துச்செறிவு பற்றியே மிகுந்த கவனம் செலுத்தியிருக்கின்றார்கள் என்பது எனது கருத்து. ஒரு திரைப்பாடல் காலங்கடந்தும் மக்கள் மனதில் பசுமையாக இருப்பதற்கு கவிநயம், கருத்துச்செறிவு மட்டும் தான் காரணமா...? வெறும் வரிகளாக இருக்கிற பாடல்களுக்கு வடிவம் கொடுப்பது யார்? இசையமைப்பாளர்கள்!

"சின்னப்பயலே சின்னப்பயலே சேதிகேளடா," என்ற பாட்டை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் "ஜனசக்தி," பத்திரிகையில் எழுதியிருந்தால், அது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்?

"பொன்மாலைப் பொழுது," பாடலை கவிப்பேரரசு வைரமுத்து ஏதாவது வாரப்பத்திரிகையில் எழுதியிருந்தால் எத்தனை பேர் வாசித்திருப்பார்கள்? அப்படி வாசித்தவர்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கும்?

கவிதைத்தொகுப்புகளிலும், பத்திரிகைகளிலும் வாசிக்கிற கவிதைகளைக் காட்டிலும் திரைப்பாடல்கள் நம் நெஞ்சில் நிற்பதற்கு என்ன காரணம்? அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்கள், அந்த வரிகளைப் பாடி அவற்றிற்கு உயிர்கொடுத்த பாடகர்கள், அதைத் திரையில் நடித்து காணொலியாக நமது நெஞ்சில் இறக்கி வைத்த நடிகர்கள், இவையெல்லாவற்றையும் ஒருங்கிணைத்த இயக்குனர் என்று எத்தனை காரணகர்த்தாக்கள் ஒரு பாடலுக்குப் பின்புலத்தில் உழைத்திருக்கிறார்கள்..?

சரி! இந்தப் பட்டிமண்டபத்தின் அளவுகோலான "அன்னக்கிளி," படத்தில் வருகிற "மச்சானைப் பார்த்தீங்களா..?" என்ற கிராமீயப் பாடலையே எடுத்துக்கொள்வோம். இந்தப் படம் வெளியானபோது "இது எனது பாடல், இளையராஜா திருடி விட்டார்," என்று ஒரு கிராமீயக் கலைஞர் குமுதம் பத்திரிகையில் பேட்டியளித்திருந்தார். இதே போன்ற ஒரு சர்ச்சை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் "அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு?" பாடல் பிரபலமானபோதும் உண்டானது. இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒரு இசையமைப்பாளரின் உழைப்பு வெற்றியடையும்போது தான், பாடல் பிரபலமாகிறது; அதன் வரிகளும் மக்கள் மனதில் ஆழமாகப் பதிகின்றன.

இதே இளையராஜா இசையமைத்த "ஏரியிலே எலந்தமரம் தங்கச்சி வச்ச மரம்..ஒரு காயுமில்லே பூவுமில்லே தங்கச்சி வச்ச மரம்," என்ற கிராமீயப்பாடல் ஏன் நம் நினைவில் இல்லை! காரணம், அந்தப் பாடல் பிரபலமடையவில்லை. அங்கே இசையோ, பாடகரோ அந்த வரிகளுக்கு நியாயம் இழைக்கவில்லை என்பது தானே..? "கொலக்கொலயா முந்திரிக்கா..நரியே நரியே சுத்திவா..," ஏன் எடுபடவில்லை? ஆனால், அந்தவகையில் "ஒத்த ரூபா தாரேன்," பாடல் வெற்றியே என்பதில் சந்தேகமில்லை.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும் - பழைய பாடல்களின் ஆதரவாளர்கள்!

கிராமத்துப் பாடல்கள் வெள்ளந்தி மனிதர்களின் வெளிப்பாடுகள். "யாரடிச்சா நீயழுதே, அடிச்சாரைச் சொல்லியழு," என்ற தாலாட்டில் தொடங்கி, "தரயெல்லாம் மொழுகி வச்சேன் தலவாழை கழுவி வச்சேன் கழுவுனது பத்தாம கண்ணீரக் கொடுத்திட்டியே...?" என்ற ஒப்பாரி வரைக்கும் வழக்குச்சொற்களால் தமக்குத் தாமே வடிவெடுத்து வருபவை. "யோக்கியரு வாராரு...சொம்பை எடுத்து உள்ள வையீ..," என்ற இயல்பான குசும்பு போல, கிராமத்து மண்ணின் உணர்ச்சிகள் அவர்களது சரளமான வட்டாரவழக்கிலே வந்து விழும். அவற்றை அதிக அளவில் இளையராஜா உபயோகப்படுத்தியிருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆந்திராவின் ராஜமுந்த்ரி பகுதிகளில் திருமணத்தன்று முதலிரவின் போது வெளியே இருந்து கூட்டமாகப் பாடுவதற்கான சில பாடல்கள் உண்டு. அதை மொழிபெயர்த்துப் போட்டால், எல்லாரும் எனது விழியைப் பெயர்த்து எடுத்து விடுவீர்கள்! அதே போல வட இந்தியாவில் ஹோலி பண்டிகையன்று பாடப்படுகிற பாடல்கள்! இவையெல்லாம் தொழிலாளிகளின் இளைப்பாறல்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதில் வருகிற சில சங்கதிகள் அது குறித்து அறியாதவர்களுக்கு அருவருப்பாக இருக்கலாம். ஆனால், அது அவர்களது கலாச்சாரத்தோடு கலந்து விட்ட அம்சமாகும்.

எனவே, வரிகளில் கவித்துவம் இருந்தாலும் சரி, எளிமையிருந்தாலும் சரி! அதை அழகாகப் பரிமாறுகிற திறமையுள்ள இசையமைப்பாளர், அந்தப் பாடலுக்கு உயிர் கொடுக்கிற பாடக,பாடகியர் இல்லையென்றால், கம்பனே வந்து பாடல் எழுதினாலும் அது மக்களைச் சென்றடையாது. எனவே தான் இந்தப் பட்டிமண்டபத்தில் கூட இளையராஜா என்ற இசையமைப்பாளர் அறிமுகமான படத்தை நாம் பிரித்தெடுக்கிற கோடாக வைத்திருக்கிறோமோ என்னவோ!

எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே பாடகர்கள் பாடி ஒலிப்பதிவும் செய்ய வேண்டிய காலகட்டம் இருந்தது. இன்று அமெரிக்காவில் தன் வீட்டிலிருந்து ஜேசுதாஸ் பாடி அனுப்புகிற பாடல் சென்னையில் இசையோடு கலக்கப்பட்டு மலையாளப்படத்துக்குச் செல்லுகிற அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறியிருக்கிறதல்லவா?

சமூகக்கருத்துக்களுக்கு வருவோம்! சிவாஜி, எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் போன்று அரசியலில் மும்முரமாயிருந்த நட்சத்திரங்கள் நடித்த படங்களில் மட்டுமல்ல; ஜெமினி கணேசன், முத்துராமன் போன்று அரசியல் சார்பற்ற நட்சத்திரங்களின் படங்களில் கூட சமுதாயத்துக்கு செய்தி சொல்கிற பாடல்களுக்குக் குறைவேயில்லை.

அதே போல "இதயக்கனி," நீங்கலாக, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.நடித்த எந்தப் படத்திலும் அவரை அறிமுகம் செய்கிற காட்சியில் அவரை வீரன்,தீரன்,சூரன் என்றெல்லாம் வருணிக்கிற பாடல்கள் வெளிவந்ததேயில்லை. "பாட்டுக்கு ஒரு படகோட்டி," என்று அக்காலத்தில் பாராட்டப்பட்ட படத்தில் கூட முதல் பாடல்," தரைமேல் பிறக்க வைத்தான் எங்களைக் தண்ணீரில் பிழைக்க வைத்தான்," என்ற சோகம் ததும்பும் பாடல் தான் முதல் பாடல். இன்றைக்கோ இப்படியொரு பாடல் இல்லாத படமே இல்லையோ என்று கேட்கத்தோன்றுகிறது. எனக்குத் தெரிந்து "இரத்தத்திலகம்," படத்தில் வருகிற "பசுமை நிறைந்த நினைவுகளே..பாடித்திரிந்த பறவைகளே..," என்ற பாடல் இன்றைய கல்லூரி மாணவ மாணவிகளின் பிரிவுபசாரத்துக்கும் பொருத்தமாக இருக்கும்.

பழைய பாடல்கள் ஒரு வட்டத்துக்குள் சிக்கியிருந்தது உண்மை தான்! புதிய பாடல்கள் சிக்கியிருப்பதோ ஒரு சக்ரவியூகத்தில்! ஒரு படத்தில் ஐந்து பாடல்கள் என்றால், அதில் ஒரு குத்துப்பாட்டு, ஒரு ஆங்கிலம் கலந்த மேற்கத்திய இசையில் அமைக்கப்பட்ட பாட்டு, கதாநாயகனை முன்னிறுத்துகிற ஒரு பாட்டு, இனிமை இல்லை என்று சொல்லி விடக்கூடாதே என்பதற்காக சற்றே சுரசுத்தமாக ஒரு பாட்டு என்று அந்த வியூகத்தில் விழித்துக்கொண்டிருக்கின்றன. விளைவு..? பல பாடல்களை குடும்பத்தோடு கேட்க முடிவதில்லை; தொலைக்காட்சியில் பார்க்க முடிவதில்லை.

கவிநயம்,இசைநயம் என்று பேசும்போதெல்லாம் புதிய பாடல்களில் பெரும்பாலும் காதல் குறித்த பாடல்களே மேற்கோள் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. சமூகநோக்கு, தமிழுணர்வு போன்றவற்றைக் குறித்து இங்கே பதிவு செய்யப்பட்டுள்ள புதிய பாடல்கள் மிகக்குறைவு. ஆனால், அன்றைய காலகட்டத்தில் பாடல்களில் செய்தியிருந்தன.

எம்.ஜி.ஆரையும் விஜயையும் புறக்கணித்து விட்டு ஒரு முடிவுக்கு வர முடியாது. தமிழ்த்திரையுலகம் எங்கிருந்து எங்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இவ்விருவரது படங்களும் தான் சரியான உரைகற்கள். ஒரு பரம சிவாஜி அபிமானியாக இருந்தும் கூட, எம்.ஜி.ஆர்.படங்களில் இசைக்கு அவர் அளித்த முக்கியத்துவத்தை எண்ணி எண்ணி எனக்கு வியப்பாக இருக்கிறது.

நல்ல பாடல்கள் வர வேண்டுமென்றால், நல்ல படங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். இன்றும் நாம் அண்ணன்-தங்கை பாசமென்றால் "பாசமலர்" "முள்ளும் மலரும்," என்று தான் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்.

புதிய திரைப்பாடல்கள் மொத்தமும் மோசம் என்றோ, பழைய திரைப்பாடல்கள் மொத்தமும் முத்துக்கள் என்றோ முரண்டு பிடிக்க விரும்பவில்லை. ஆனால், தொழில்நுட்பம், வசதிவாய்ப்புக்கள், திறமையான கவிஞர்கள், நல்ல பாடகர்கள், உலகத்தரம் வாய்ந்த இசையமைப்பாளர்கள் இருந்தும், உளி அம்மி கொத்திக் கொண்டிருப்பது வேதனையாக இருக்கிறது. இதற்கு இசையமைப்பாளர்கள் மட்டும் காரணமல்ல! அவர்கள் பாத்திரமறிந்து பிச்சையிடுகிறார்கள். நல்ல கதையமைப்புடன் தமிழ்ப்படங்கள் வெளிவந்தால், நல்ல பாடல்களைத் தர முடியும்.

எனவே, சமூகநோக்கு, தமிழுணர்வு, காதல் என்ற மூன்று அளவுகோல்களின் படிப் பார்த்தால், புதிய பாடல்களை விடவும் பழைய பாடல்களே சிறந்தவை என்று தீர்ப்பு வழங்கி, எனக்கும் இப்படியொரு வாய்ப்புத் தந்தமைக்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Reply all
Reply to author
Forward
0 new messages