Malayalam Movies

10 views
Skip to first unread message

Asif Meeran AJ

unread,
Oct 22, 2007, 1:34:11 PM10/22/07
to panb...@googlegroups.com
சில படங்களைப் பார்க்கும்போது 'ஏண்டா பார்த்தோம்?' என்றும் சில படங்களைப் பார்த்து முடித்ததும் 'மீண்டும் எப்போது பார்க்கப் போகிறோம்?' என்றும் தோன்றும்.பெரும்பாலான தமிழ்ப்படங்கள் முதலாம் ரகத்தைச் சேர்ந்தவை. இன்று 917ஆவது தடவையாக 'மணிச்சித்ரத்தாழ்' பார்த்தபோது ஒரு மனவியல் நிபுணனின் வேதனை பரவி நிற்கும் மோகன்லாலின் முகபாவமும், 'ஒருமுறை வந்து பார்த்தாயா?' என்று அதீத உக்கிரத்துடன் கொலைவெறியில் நடனமாடும் நாகவல்லியையை அப்படியே கண்முன் கொண்டு வந்த ஷோபனாவின் அசத்தலான உடல்மொழியும் ம.சி.தா ரெண்டாம் ரகம் என்பதைச் சொல்லாமல் சொல்லியது.

*********

இங்கே குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு மலையாளப்படமும் இருக்கிறது. கே.ஜி.ஜார்ஜ் மலையாளத்தில் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களில் ஒருவர். திரைப்பட நேர்த்தியும், அந்த ஊடகத்தின் வீச்சு பற்றிய பிரக்ஞையும் கொண்டு நல்ல படங்களை மலையாளத்திற்குத் தந்திருப்பவர். அவரது இயக்கத்தில் 80களில் வெளிவந்த படம்தான் 'பஞ்சவடிப்பாலம்'

கேரள அரசியலை இவ்வளவு சாமர்த்தியமாக நக்கலடித்து முழுக்க முழுக்க நகைச்சுவை உணர்வோடு கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

கேரள அரசியல் என்றா சொன்னேன் - தவறு - இந்திய ஜனநாயக அமைப்பில் ஜனங்களைப் பார்வையாளர்களாக்கி அரசியல்வாதிகள் நடத்தும் ஆட்சி என்ற தெருக்கூத்தை அழகாக திரையில் விரித்திருக்கிறார் ஜார்ஜ் (மலையாளிகள் சொல்வது போலென்றால் ஜோர்ஜ்ஜ்;-)

12 ஆண்டுக்ளாக பஞ்சாயத்து தலைவராக இருக்கும் குருப்புவின்(கோபி) இருப்பை ஊரில் இருப்பவர்கள் புரிந்து கொள்ளும்படி ஏதேனும் செய்ய வேண்டுமென அதே பஞ்சாயத்தில் உறுப்பினரான நெடுமுடி வேணு தீர்மானிக்கிறார். ஆனால் அதற்காக ஏதேனும் திட்டம் வேண்டுமே?! காயலின் குறுக்கே இருக்கும் பஞ்சவடிப் பாலத்தை உடைப்பது என்று திட்டமிடுகிறார்கள். எனவே பாலம் உடைப்பு மற்றும் 12 ஆண்டுகால ஆட்சியைக் கொண்டாடுவது என்று தீர்மானிக்கிறார்கள். பாலம் உடைந்த சப்தம் கேட்டதாக பாலத்தின் அடியிலுள்ள புறம்போக்கு நிலத்தில் வசிப்பவரை கள்ள சாட்சி செய்யச் சொல்லி, பொதுப்பணித்துறையின் பொறியாளரை முழுக்க 'நீரில் நனைத்து' அவரிடமும் சான்றிதழ் வாங்கி பாலம் போக்குவரத்துக்கு ஏற்றதல்ல என்று பஞ்சாயத்து தீர்மானிக்கிறது. அதைக் கண்காணிக்க வரும் காவலர் பகலில் பேருந்தில் வருபவர்களை இறக்கி பாலத்தின் மேல் நடக்க விட்டு இரவில் பாரம் ஏந்தி வரும் லாரிகளைக் காசு வாங்கி பாலத்தின் மீது போக அனுமதிக்கிறார். இதற்கிடையில் எதிர்க்கட்சி இதற்கெதிராகக் குரல் கொடுக்க அவர்களை வீட்டிற்கழைத்து 'சரக்கு', சாப்பாடு என்று சொல்லி சரிக்கட்டுகிறார்கள். அப்படியே இருந்தால் மட்டும் போதாது என்பதால் இருக்கும் பாலத்தை உடைத்து புதியபாலம் அமைக்க அனுமதி வாங்கி அதன் மூலம் சம்பாதிக்க திட்டமிடப்படுகிறது. இதன் பின்னர் எதிர்க்கட்சி அதற்கு வைக்கும் முட்டுக்கட்டையும், அரசு இயந்திரம் செயல்படும் கோணங்கித்தனங்களும், காசு சமபாதிப்பது என்று வந்து விட்டால் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒரே குரலில் இணைந்து ஒலிப்பதுமாகக் காட்சிகள் அரங்கேறி பாலம் கட்டப்பட்டு திறக்கப்படும் நாளிலேயே பாலம் உடைவதுடன் படம் நிறைவுபெறுகிறது.

அப்பட்டமான அங்கதம் என்பது இதுதான். அரசியல்வாதிகள், அதிகாரிகள், போலிச் சாமியார்கள், பொது மக்கள், பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் என்று சகலரையும் விமர்சனம் செய்திருக்கிறார்கள் சகட்டுமேனிக்கு - முழுக்க முழுக்க நகைச்சுவையோடு.

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக ஆளும்க்ட்சியைச் சேர்ந்தவரின் பலவீனத்தைப் புரிந்து கொண்டு அவரை எதிர்க்கட்சி கடத்திச் செல்வதும், ஆளும்கட்சி அவரை இன்னொரு பெண்ணை ஏற்பாடு செய்து மீட்டெடுப்பதும், காலையில் மீண்டும் எதிர்க்கட்சி அவரைக் கடத்திச் செல்வதும், ஆளும்கட்சி அவரைத் தெளியவைத்து பஞ்சாயத்து அலுவலகத்திற்குக் கொண்டுவருவதுமான காட்சிகள் குலுங்க வைக்கின்றன என்றால் அந்தளவுக்குக் கேவலமாக நமது ஜனநாயக்ம் இருக்கிறதென்பதும் உறைக்காமல் இல்லை.

அதைப்போலவே நம்பிக்கையிலா தீர்மானத்தின் போது எதிரில் ஒரு பெண் உறுப்பினர் இருக்கும் எண்ணம் கூட இல்லாமல் வேட்டியை உயர்த்திக் காட்டும் உறுப்பினரின் செய்கை கேரள சட்டமன்றத்தில் நடந்தேறிய காட்சியினை நினைவுக்குக் கொண்டு வந்தது. நாம் தேர்ந்தெடுக்கும் கொள்கைக்குன்றுகளீன் லட்சணம் எப்படி என்பதை சந்தி சிரிக்கும் வகையில் காட்சியாக்கியிருப்பார் ஜோர்ஜ்ஜ்.

பஞ்சாயத்து தலைவராக கோபி், அவரது அரசியல் ஆலோசகர் மற்றும் அல்லக்கையாக நெடுமுடி வேணு, எதிர்க்கட்சி தலைவராக திலகன், பெண் உறுப்பினராக சுகுமாரி, சுகுமாரியின் கணவராக எதிர்க்கட்சியிடம் காசு வாங்கிக் கொண்டு தகவல் சொல்லும் உளவாளியாக ஜகதி, மந்திரியின் பிரசங்கம் கேடக் காத்திருக்கும் ஊனமுற்றவனாக ஸ்ரீனிவாசன் என்று ஒரே கலக்கல் கூட்டம். பெரும் நட்சத்திரப்ப் படையோ தனியாக நகைச்சுவை காட்சிகளை அமைக்க வேண்டிய அவசியமோ இல்லாமல் முழுக்க முழுக்க சந்தி சிரிக்க வைக்கிறது இந்திய அரசியல்.

இந்த கேலிக் கூத்தை அழகான திரைக்கதையாக்கி தொய்வில்லாமல் நகர்த்தியிருக்கிறார்கள். வசனங்களில் வலிந்து திணித்த நகைச்சுவை ஏதுமில்லாமல் இருந்தும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன என்பதுதான் இந்திய அரசியலின் சிறப்பு.

முன்பெல்லாம் மலையாளத்தில் ப்ரியதர்சன், சத்யன் அந்திக்காடு புண்ணியத்தில் கலப்படமில்லாத அசல் நகைச்சுவைப்படங்களைப் பார்த்து சிரித்த நாட்கள் இப்போதைய மலையாளப் படங்களில் இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில், இந்தப் படம் பார்க்க நேர்ந்தது அந்த ஏக்கத்தை இன்னமும் அதிகப்படுத்தி விட்டது என்பதுதான் உண்மை.

sadayan sabu

unread,
Oct 22, 2007, 11:44:04 PM10/22/07
to panb...@googlegroups.com
One who flew over cukoo's nest (Jack Nicholson) எனும் ஆங்கிலப் படத்தை தழுவி 'தாளவட்டம்" எனும் மலலயாளப் படம் வந்தது. சுமாராக இருந்தது. இதையே தமிழில் 'மன்சுக்குள் மத்தாப்பூ' என எடுத்தார்கள். சுத்த மோசம். தமிழ்ப்படம் பார்ப்பதை விட மலையாளப் படம் எவ்வளவோ தேவலாம்.
 
பி.கு மலையாளப் படமும் சரி பப்படமும் சரி சுவையானது.

 
On 10/22/07, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:
சில படங்களைப் பார்க்கும்போது 'ஏண்டா பார்த்தோம்?' என்றும் சில படங்களைப் பார்த்து முடித்ததும் 'மீண்டும் எப்போது பார்க்கப் போகிறோம்?' என்றும் தோன்றும்.பெரும்பாலான தமிழ்ப்படங்கள் முதலாம் ரகத்தைச் சேர்ந்தவை. இன்று 917ஆவது தடவையாக 'மணிச்சித்ரத்தாழ்' பார்த்தபோது ஒரு மனவியல் நிபுணனின் வேதனை பரவி நிற்கும் மோகன்லாலின் முகபாவமும், 'ஒருமுறை வந்து பார்த்தாயா?' என்று அதீத உக்கிரத்துடன் கொலைவெறியில் நடனமாடும் நாகவல்லியையை அப்படியே கண்முன் கொண்டு வந்த ஷோபனாவின் அசத்தலான உடல்மொழியும் ம.சி.தா ரெண்டாம் ரகம் என்பதைச் சொல்லாமல் சொல்லியது.

*********--
அன்புடன்
சாபு

Chandra Selvakumaran

unread,
Oct 22, 2007, 11:53:12 PM10/22/07
to panb...@googlegroups.com

பெரும்பாலும் மலையாளப் படங்கள் இயல்பான முறையில் எடுக்கப் பட்டிருப்பதை நானும் பார்த்து ரசித்திருக்கிறேன்.

சிங்களப் படங்களும் அப்படித்தான்.பாமகன்

unread,
Oct 23, 2007, 2:58:52 AM10/23/07
to panb...@googlegroups.com
 
யப்பா யாரப்பா சிங்களப்படத்துக்கு சர்ட்டிபிக்கட் கொடுக்குறது மக்கா நீங்க சரியா சிங்களப்படம் பாக்கல.
 
 

 
இயற்கை என‌து நன்பன்
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்
வரலாறு எனது வழிகாட்டி

Siddharth Venkatesan

unread,
Oct 23, 2007, 7:24:25 AM10/23/07
to panb...@googlegroups.com
//

இந்த கேலிக் கூத்தை அழகான திரைக்கதையாக்கி தொய்வில்லாமல்
நகர்த்தியிருக்கிறார்கள். வசனங்களில் வலிந்து திணித்த நகைச்சுவை
ஏதுமில்லாமல் இருந்தும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன என்பதுதான் இந்திய
அரசியலின் சிறப்பு.
//

:)))

ஆனாலும் இதெல்லாம் ஓவர் நக்கல்.. சொல்லிட்டேன் :)


இரண்டு வாரங்களுக்கு முன் "பரதம்" பார்த்தேன்.சிபி மலையில் இயக்கத்தில்
இரவீந்திரன் இசையில் மோகன்லால், நெடுமுடி வேணு, லட்சுமி, ஊர்வசி
ஆகியவர்கள் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான படம். படத்தின் கதை மற்றும்
திரைக்கதை லோகிதா தாஸ். லோகிதா தாஸின் படங்கள் அனைத்திலுமே ஒரு வித
இருண்மை காணக்கிடைக்கும். இப்படத்தில் தாழ்வுமனப்பாண்மை உறவுகளில்
செலுத்தும் ஆளுமையை மிக நேர்த்தியாக கையாண்டிருந்தார்.

பொதுவாக ஒப்பிடு செய்வதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் இப்படத்தை
தமிழில் "பெயர்த்தெடுத்த" நம்ம வாசு அண்ணனை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.
வாசு சார் சந்திரமுகியில் மணிச்சித்திரத்தாழை கொன்றுவிட்டதாக புகார்
செய்பவர்கள் பரதத்தை தழுவி அவர் எடுத்த "சீனு"வில் செய்திருக்கும்
கொடுமையை பார்த்தே ஆக வேண்டும்....

Asif Meeran AJ

unread,
Oct 23, 2007, 1:09:52 PM10/23/07
to panb...@googlegroups.com
சித்தார்த்

இதெல்லாம் நல்லா இல்லை. நானே மறந்து போன விசய்த்தை ஞாபகபப்டுத்தி இருக்குற இடத்தைப் புண்ணாக வைக்குறியே, நியாயமா?
அதுலயும் நெடுமுடி வேணு வேசத்துல அந்த மண்ணாங்கட்டி வாசுவே நடிச்ச கோலாகலத்தை
 'எண்ணிப் பார்த்தால் நெஞ்சம் கலங்குதம்மா
கண்கள் கண்ணீரை வடிக்குதம்மா' ன்னு பாட வேண்டி வரும்

பரதம் படத்தில் நடித்ததற்காக மோகன்லாலுக்கு தேசிய விருது கிடைத்தது. அற்புதமான நடிப்பென்பதை விடவும் பாத்திரத்தின் தனமையுணர்ந்த அழகான முகபாவங்கள். வீட்டுக்குத் தெரியாமல் சகோதரனுக்கு ஈமச்சடங்குகளைச் செய்து விட்டு சகோதரியின் மகள் திருமணத்தில் பாடும்போதும், சகோதரனின் மாலையிட்ட படத்துக்கு முன்னால் வந்து நின்று கதறும்போதும்
லாலேட்டனின் முகாசைவுகளையும் உடல்மொழியையும் பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கும்

நெடுமுடி வேணு மட்டும் சளைத்தவரா? சங்கீத உலகில் தனது கொடி தாழ்ந்து சகோதரனின் கொடி உயர்வதைச் சகிக்க முடியாத மனப்பான்மையை எவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருப்பார்?

ஊர்வசியை நடில்ல்பில் ராட்சசி என்றொருமுறை கமல் குறிப்பிட்டிருந்தார். ஏன் என்பதற்கு இந்தப் படத்திலும் விடை கிடைக்கும்

ஒடுவில் உன்னி கிருஷ்ணன், லட்சுமி என்று அவரவர் பத்திரங்களீல் அவரவர் கலக்கியிருக்க லோகிததாசின் நெருடலில்லாத திரைக்கதையை அழகாக நெய்திருப்பார் சிபிமலையில்.

ம்ம்.. இதெல்லாம் எப்போதேனும் பெருமூச்சு விடக் கிடைக்கும் விசயங்கள்

சரி. இன்னும் சில மலையாளப் படங்கள் சொல்கிறேன்
ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா - யாராவது பார்த்திருந்தால் எழுதுங்கள் நானும் வந்து கலந்து கொள்கிறேன்.

Siddharth Venkatesan

unread,
Oct 23, 2007, 2:29:37 PM10/23/07
to panb...@googlegroups.com
ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா இன்னும் பார்க்கவில்லை. ஆனால் தினமும் ஒரு
முறையேனும் கேட்டு விடுகிறேன் அப்படத்தின் பாடல்களை. இந்த
பைத்தியக்காரத்தனம் அடிக்கடி செய்வேன். பிடித்து போய்விட்ட பாடலை விடாமல்
தினமும் கேட்பேன்.. அதன் சுவை மெல்ல மெல்ல இல்லாதாகும் வரை... தேவசபாதலம்
என்று ஒரு பெரிய பாடல் இருக்கிறது இப்படத்தில். 9 நிமிட பாடல்.
எம்.ஜி.ஸ்ரீகுமாரும் ஜேசுதாஸும் பாடியது. ம்ம்ம்... என்னத்த சொல்ல...
நீங்களே கேட்டுப்பாருங்க....

http://www.musicindiaonline.com/p/x/wqQusWs6j9.As1NMvHdW/


--
-----------------------------------------
http://angumingum.wordpress.com

முபாரக்

unread,
Oct 29, 2007, 6:28:15 AM10/29/07
to panb...@googlegroups.com
பஞ்சப்படி பாலம்... ஆசிப் மீரான் விமர்சனத்தின் தொடர்ச்சி
 
.....அதன் பிறகு புதிய பாலம் கட்டவிடாமல் தடுக்க எதிர்க்கட்சியினர் பல தகிடுதத்தங்களையும் செய்து, பின்னர் பாலம் கோயிலுக்கருகில் இருக்கிறது, சர்ச்சுக்கு அருகில் வேண்டும் என்று மதப்பிரச்சினையை ஊதிவிடுவார்கள். பின்னர் இரண்டுக்கும் பொதுவான இடத்தில் பாலம் கட்டும் ஒப்பந்தம் பஞ்.தலைவர் கோபியின் ஆதரவாளருக்கு வழங்கப்படும்.  பாலம் முடிந்து திறப்பு விழா அன்று, பாலத்தைக் கட்டியவருக்கும், கோபியின் மகளுக்கும் திருமணம் முடிந்து அப்பாலத்தில் யானைமீது ஊர்வலம் செல்வார்கள். பாலம் இடிந்துவிடும். எல்லாரும் தப்பித்துவிடுவார்கள்.  படத்தின் ஆரம்பம் முதல் அனைத்து நிகழ்வுகளிலும் பார்வையாளனாக சித்தரிக்கப்படும் ஊனமுற்ற ஸ்ரீனிவாசனின் பலகை மட்டும் ஆற்றில் மிதந்து போகும்.  ஜனநாயகத்தின் ஊனமுற்ற பார்வையாளர்களான மக்கள் திரள் இங்கனமே மூழ்கடிக்கப்படுகிறது என்பதை அற்புதமாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர்.
 
இதில் என்னை மிகவும் கவர்ந்த பாத்திரப்படைப்பு ஊனமுற்றவராக வரும் ஸ்ரீனிவாசன் தான்.  ஊனமுற்ற நிலையில் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு எந்த ஊழல்களிலும் ஈடுபடாமல், அதிகாரத்தின் சுரண்டல்களினால் உயிரிழக்கும் ஊனமுற்றவர். நம்மைப்போலவே.
 
அநேகமாய் இந்தக்கதையும், திரைக்கதையும் ஸ்ரீனிவாசனுடையதாக இருக்கலாம் என்று ஒரு சம்ஸியம்

 
--
முடிவற்ற அன்பின் தேடல்
http://arasanagari.blogspot.com
Reply all
Reply to author
Forward
0 new messages