Kandavel Rajan
unread,Apr 28, 2010, 1:35:12 AM4/28/10Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to tamil2friends, தென்றல், Groups, panbudan, muththamiz, tamilamutham
மதுரை: பச்சைப் பட்டுடுத்தி ஆயிரம் பொன் சப்பரத்தில் அமர்ந்து வைகை ஆற்றில் இறங்கி அருள் பாலித்தார் கள்ளழகர். லட்சக்கணக்கான பக்தர்கள் இதைக்கண்டு கோவிந்தா கோஷம் முழங்கி அழகரை வழிபட்டனர்.
தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண வரும் அழகர் பெருமான், தான் வருவதற்குள் திருமணம்
முடிந்து விடுவதால் கோபம் கொண்டு மதுரை
க்குள் வராமல் ஆற்றோரமாகவே திரும்பிச் சென்று விடுவதாக ஐதீகம்.
அதன்படி நேற்று மதுரைக்கு வந்த கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் குழுமி இருக்க இன்று அதிகாலை தங்கக் குதிரை வாகனத்தில் அழகர் பெருமான் புறப்பட்டார். கருப்பண்ணசாமி கோவிலில் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் வைகை ஆற்றுக்கு வந்தார் அழகர். காலை 7.05 மணியளவில் வைகை ஆற்றில் அழகர் இறங்கினார்.
பச்சைப் பட்டுடுத்தி இன்று அழகர் ஆற்றில் இறங்கினார். பச்சைப் பட்டு உடுத்தியிருந்ததால், இந்த ஆண்டு முழுவதும் விவசாயம் செழித்தோங்கும் என்று பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஆற்றில் இறங்கிய அழகர் பெருமான் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கோவிந்தா கோஷமிட்டும் பக்தர்கள் அழகரை வழிபட்டனர்
--
ஒழுக்கமும் வாழ்க்கையும் ஒரே விதமான விஷயம். கல் தடுக்கும் நேரம் போதும் உயிர் பிரிய, ஒழுக்கம் தவற.பிரிந்த உயிர் உடலுக்கு வருவதும், தவறிய ஒழுக்கம் சரி செய்வதும் நடக்கும் காரியமா?போனது போனதுதான். தவறியது தவறியதுதான்.
நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்