தொட்டுக் கும்பிட்டு..

1 view
Skip to first unread message

Saharathendral

unread,
Feb 17, 2009, 2:51:22 AM2/17/09
to முத்தமிழ், panb...@googlegroups.com, Pira...@googlegroups.com

** தொட்டுக் கும்பிட்டு.. **

வாழ்வு எப்போதும் ஏதாவதொன்றை நோக்கி நம்மை ஈர்த்துக் கொண்டேயிருக்கிறது,
சுழலச் செய்கிறது, ஜீவித்திருப்பதற்கான ஈரத்தைத் தருகிறது... இன்னும்
என்னவெல்லாம் இயலுமோ அதை எல்லாம் நினைக்க வைத்தது அவ்விடத்தில் அவர்களைப்
பார்த்த அக்கணத்தில். இரவு கவியத் தொடங்கும் ஒரு பொழுதொன்றில் சந்தோஷமும்
கூச்சலுமாய் அக்கோயிலில் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தவர்களைப்
பார்த்த போது விளக்கிட முடியாத ஒரு நெகிழ்வும், சிறு புன்னகையும் என்னுள்
நிரம்பியது. ஒருவர் உடையை மற்றவர்கள் பற்றிக் கொண்டு ஒரு சங்கிலித்
தொடராய் 'தொட்டுக் கும்பிட்டு.. தொட்டுக் கும்பிட்டு..' என்று ஒவ்வொரு
இடத்தையும் தொட்டுத்தொட்டு கண்களில் ஒற்றியபடி பிள்ளையாரை சுற்றி வரும்
அக்குழந்தைகளை பார்த்தபடியே என் தரிசனம் ஆரம்பித்திருந்தது. என் சிறு
வயதில் முன்னிருப்பவர் உடுப்பைப் பற்றிக் கொண்டு ஓஓவென கத்தியபடி
விளையாடிய நிகழ்வு ஒரு மெல்லிய பனித்திரையாய் வந்து போனது. அவர்களைப்
போல் குதூகலத்துடன் விளையாடிக் களிக்க காலமும் சூழலும் அனுமதியாத
ஓரிடத்தில் அவர்களைப் பார்த்திருத்தல் மட்டுமே அப்போது சாத்தியமென்று
தோன்றியது.

வகுப்பறையில் பாடல்களை ஒப்பிப்பது போல் அங்கிருந்த கடவுள் சிலைகளுக்கு
முன்னால் அவர்களுக்கு கற்பிக்கப்பட்ட இராகத்தின்படி பிசகாமல் பாட்டைச்
சொல்லிவிட்டு பின் ஹோஓவென்ற சப்தத்தோடு சிரித்தபடி ஓடும் அக்குழந்தைகளைக்
கண்டபோது வளர்ந்த பிறகு இதுமாதிரியான மகிழ்வையும், கபடமற்ற தன்மையும்
என்றும் அவர்கள் கொண்டிருக்க முடியுமா? நம்மிடமிருந்தது இப்போது எங்கே
போய் ஒளிந்து கொண்டது என்ற எண்ணம் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.


இந்நிகழ்விற்குப் பின் தான் அக்கோயில் சிறு குழந்தைகளால்
நிரம்பியிருப்பதை கவனிக்க முடிந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையினராய் பல
சேட்டைகளும், குறும்புகளும், அம்மாபிள்ளையாய் பெற்றவளின் கைபற்றிச்
சுற்றி வருவதையும் காண முடிந்தது. விதவிதமான உடுப்புகளில் சந்தோஷத்தைத்
தன்னுடனே சுமந்தபடி இருக்கும் குழந்தைகள் நம்மை வேறு உலகினுக்கு
அழைத்துச் செல்லும் அனுபவம் எப்போதும் வேண்டும் என பேராசைப்படத்
தொடங்கியது மனம். அதிலும் பெண் குழந்தைகள் காலில் கொலுசும், உச்சியில்
சிறு சிண்டும் பட்டுப் பாவாடை சட்டை அணிந்து நம்மருகே நின்றிருக்கும்
போதோ அல்லது நம்மைக் கொஞ்சலுக்கு/கெஞ்சலுக்கு ஆட்படுத்திக்
கொண்டிருக்கும் போதோ இந்த வரத்தைத் தவிர வேறென்ன வேண்டும் என்று
நிமிடத்தில் நினைக்கச் செய்துவிடும் வல்லமை வாய்ந்தவையாக இருப்பதை பல
நேரங்களில் உணர்ந்திருக்கிறேன்.

குழந்தைகள் கடவுளை வணங்குவதே அலாதியானது. சின்னஞ்சிறு கைகளைக் குவித்து
கண்மூடி நிற்பதைப் பார்க்கும் போது எதிரே இருக்கும் கடவுள் தன் ஜீவிதத்தை
குழந்தைகளிடம் மாற்றிக் கொண்டுவிட்டாரோ என்று நினைக்கத் தோன்றும்.
இன்னும் சில பொடிசுகள் சுட்டு விரலை வாயில் வைத்தபடி தன் அம்மாவையும்,
சாமியையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருக்கும். அப்போது அதன் மனதில்
என்னவிதமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும் என்பதை கண்டறிய வேண்டும் என்ற
குறுகுறுப்பும் மெலிதாய் மனதில் ஓடி மறையும்.

வேண்டுதல்களெல்லாம் முடிந்து ஓரிடத்தில் அமர்ந்திருந்த போது மனதின்
அமைதியையும் மீறி எதையோ எதனுடனோ தொடர்புபடுத்திப் பார்த்துக்
கொண்டிருந்தேன். எவ்விதமான முன்முடிவுகளும், அடுத்தநாளை, நிகழ்வை
எதிர்கொள்வதற்கான எந்தத் தயாரிப்புகளுமின்றி இக்குழந்தைகளைப் போலவே
வாழ்ந்துவிட முடியுமா குறைந்தபட்சம் ஒருநாளையாவது என நினைக்கத்
தோன்றியது. என்றாலும், அதற்கான சாத்தியங்கள் இலட்சத்தில் ஒன்றுக்கும்
குறைவு என்பதையும் சொல்லியது மனம். சந்தோஷமும் சலிப்பும் மாறி மாறி வந்து
கொண்டிருக்கும் இவ்வாழ்வில் உயிர்த்திருத்தலுக்கான காரணிகளில் ஒன்றாக
குழந்தைகள் இருப்பதை அப்போது உணர முடிந்தது.


- சகாராதென்றல்

mynah

unread,
Feb 18, 2009, 12:58:31 AM2/18/09
to பண்புடன்
//சந்தோஷமும் சலிப்பும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் இவ்வாழ்வில்

உயிர்த்திருத்தலுக்கான காரணிகளில் ஒன்றாக
> குழந்தைகள் இருப்பதை அப்போது உணர முடிந்தது.//

மிகச்சரி சகாரா. சில சமயம் சகாராவாய் வாழ்க்கை பயமுறுத்தும் போது
தென்றலாய் ஆறுதல் தருபவர்கள் குழந்தைகளே.
அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம்.....

jmms

unread,
Feb 20, 2009, 12:48:03 AM2/20/09
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com


குழந்தைகள் கடவுளை வணங்குவதே அலாதியானது. சின்னஞ்சிறு கைகளைக் குவித்து
கண்மூடி நிற்பதைப் பார்க்கும் போது எதிரே இருக்கும் கடவுள் தன் ஜீவிதத்தை
குழந்தைகளிடம் மாற்றிக் கொண்டுவிட்டாரோ என்று நினைக்கத் தோன்றும்.
இன்னும் சில பொடிசுகள் சுட்டு விரலை வாயில் வைத்தபடி தன் அம்மாவையும்,
சாமியையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருக்கும்.

அழகுதான்..

 
அப்போது அதன் மனதில்
என்னவிதமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும் என்பதை கண்டறிய வேண்டும் என்ற
குறுகுறுப்பும் மெலிதாய் மனதில் ஓடி மறையும்.

வேண்டுதல்களெல்லாம் முடிந்து ஓரிடத்தில் அமர்ந்திருந்த போது மனதின்
அமைதியையும் மீறி எதையோ எதனுடனோ தொடர்புபடுத்திப் பார்த்துக்
கொண்டிருந்தேன். எவ்விதமான முன்முடிவுகளும், அடுத்தநாளை, நிகழ்வை
எதிர்கொள்வதற்கான எந்தத் தயாரிப்புகளுமின்றி
இக்குழந்தைகளைப் போலவே
வாழ்ந்துவிட முடியுமா குறைந்தபட்சம் ஒருநாளையாவது என நினைக்கத்
தோன்றியது.


அனேகமா ஆன்மிக்கத்தில் நுழைந்தால் அப்படித்தானே...

வேதாகமத்திலும் இது பற்றி சொல்லப்பட்டிருக்கு, " குழந்தைகளைப்போல் இருங்கள் " என்றும் " பறவைகளைப்பாருங்கள் , அவைகள் நாளை பற்றி கவலைப்படுவதுமில்லை சேகரிப்பதுமில்ல்லையென..."


கடினமே.:)

 
உயிர்த்திருத்தலுக்கான காரணிகளில் ஒன்றாக
குழந்தைகள் இருப்பதை அப்போது உணர முடிந்தது.

 
நன்று...


--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================
Reply all
Reply to author
Forward
0 new messages