enakku piditha mp3

49 views
Skip to first unread message

Ahamed Zubair A

unread,
Nov 5, 2008, 1:52:20 AM11/5/08
to panb...@googlegroups.com
நீண்ட நாட்களுக்குப் பிறகு, என் உயிர் லயித்த ஒரு புத்தம் புது பாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் பட்டேன்.
 
வாரணம் ஆயிரம் படத்தின் எல்லா பாடலும் எனக்குப் பிடித்திருப்பினும் இந்த பாடல் மிகவும் பிடித்துப்போனது..
 
கவிதாயினி தாமரை அவர்களின் சொக்கும் வரிகளும், நரேஷ் ஐயர், பிரஷாந்தினி குரல்களில், ஹாரிஸின் இசையில்...
 
பாடல் வரிகள் இதோ...
 
முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ
நாட்களும் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன
(முன்தினம்..)

துலாம் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலா பாரம் தோற்காதோ பேரழகே

முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே
ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு
விடை சொல்லடி
(முந்தினம்..)

கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்து பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே

பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரொன்று உரைய கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே
(முன்தினம்..)

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், பிரஷாந்தினி
 
 

Asif Meeran AJ

unread,
Nov 5, 2008, 2:53:39 AM11/5/08
to panb...@googlegroups.com
ஒரு காலத்தில் வைரம் செய்தது போலவே
வெண்ணிலா
பெண்ணிலா
உன்னிலா
என்னிலா
கண்ணிலா
கடைத்தெருவிலா
என்று எழுதுவதிலிருந்து தாமரை மோட்சம் பெற எல்லாம் வல்ல இறையை பிரார்த்ததிக்கிறேன்
ஆனால் பாடல் எனக்கும் பிடித்திருக்கிறது என்பது உதிரி செய்தி :-)

இந்த இழைக்கு உயிரூட்டியதற்கு நன்றி

lucky shajahan

unread,
Nov 5, 2008, 3:25:04 AM11/5/08
to panb...@googlegroups.com
//பிறகு, என் உயிர் லயித்த//
 
தம்பி இப்படி எல்லாத்துக்கும் உயிர் லயிச்சா அப்பாலிக்கா
நல்லா இருக்காது..சொல்லிப்போட்டேன் :-)

 
2008/11/5, Asif Meeran AJ asifm...@gmail.com:

--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.

ஆசாத்

unread,
Nov 5, 2008, 3:27:00 AM11/5/08
to பண்புடன்
> <asifmee...@gmail.com> wrote:
> ஒரு காலத்தில் வைரம் செய்தது போலவே
> வெண்ணிலா
> பெண்ணிலா

தெய்வம் கல்லிலா - ஒரு
தோகையின் சொல்லிலா

இன்பம் கட்டிலா - அவள்
தேகக் கட்டிலா

எண்ணிலா ஆசைகள்
என்னிலா(ட்) கொண்டதே - அதைச்
சொல்வாய் வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா

கவியரசராச்சே! கவிப்பேரரசு அப்படி எழுதியிருக்காரா? கவிப்பேரரசு முத்திரை
இயைபுல வெளையார்ரது இல்லீங்க ஆசிப். இயைபு வெளையாட்டுக்கு வாலியும்,
கவியரசுந்தான்.

> என்று எழுதுவதிலிருந்து தாமரை மோட்சம் பெற எல்லாம் வல்ல இறையை
> பிரார்த்ததிக்கிறேன்

ரெண்டு வாரத்துக்கு முந்தி தாமரைது இண்டர்வ்யூ எதுலயோ பாத்தேன்.

கவிஞனால என்ன பண்ண முடியும் உணர்வு பூர்வமானா அதக் கவிதைலதான் கொட்ட
முடியும், களத்துல எறங்கி போராட முடியுமா? அப்படீன்ற மாதிரி
பேசுனாங்க...சல்தாஹை!

பாரதியும் பாரதிதாசனும் களமிறங்காம வெறுமனே கவித மட்டுமா எழுதிக்கினு
இருந்தாங்கன்னு கேக்கத்தோணுச்சு.

சொன்னா கோச்சுக்கக்கூடாது தாமரை மேடம் இப்ப கொஞ்சம் குண்டாகிட்டாங்க, மொத
ரொம்ப ஒல்லியா இருப்பாங்க.

> ஆனால் பாடல் எனக்கும் பிடித்திருக்கிறது என்பது உதிரி செய்தி :-)

வாரணம் ஆயிரம் பாட்டுங்க ம்யூசிக் இண்டியால போட்டது ஒரு ரவுண்டு
கேட்டுட்டேன். புடிச்சிருந்துச்சு.

ஒரு பாட்ட யாரோ புண்ணியவான் யூட்யூபுலயும் சுட்டு போட்டுட்டான். செகண்ட்
ரவுண்டு கேக்கும்போதுதான் கொஞ்சம் தெளிவாகும்.

lucky shajahan

unread,
Nov 5, 2008, 3:35:39 AM11/5/08
to panb...@googlegroups.com
//தெய்வம் கல்லிலா - ஒரு

தோகையின் சொல்லிலா

இன்பம் கட்டிலா - அவள்
தேகக் கட்டிலா

எண்ணிலா ஆசைகள்
என்னிலா(ட்) கொண்டதே - அதைச்
சொல்வாய் வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
//
 
கேட்டுவிட்டு வாலி அடித்த கமெண்ட் : இவரரிந்த பாட்டில எழுதாம
விட்டது பிரதர் இன் லாவும் ஃபாதர் இன் லாவும் மட்டும் தான் போ

 
2008/11/5, ஆசாத் banu...@gmail.com:

ஆசாத்

unread,
Nov 5, 2008, 3:46:02 AM11/5/08
to பண்புடன்
> <luckyshaja...@gmail.com> wrote:
> கேட்டுவிட்டு வாலி அடித்த கமெண்ட் : இவரரிந்த பாட்டில எழுதாம
> விட்டது பிரதர் இன் லாவும் ஃபாதர் இன் லாவும் மட்டும் தான் போ

அது செரி.

கவியரசு
'தேன்' எழுதுனாரு (பார்த்தேன் சிரித்தேன்)
'காய்' எழுதுனாரு (அத்திக்காய் காய் காய்)
'நிலா' எழுதுனாரு (வான் நிலா)
'ஆ/ஓட்டம்' எழுதுனாரு (தேரோட்டம் ஆனந்த செண்பகப்)

வாலி
'பால்' எழுதுனாரு (பால் தமிழ்ப்பால்)

புலமப்பித்தன்
'இனம்' எழுதுனாரு (இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்)

கவிப்பேரரசு
ஊதாப்பூ வண்டுகள் வந்து ஊதாப் பூ
கொய்யாப்பூ _ _ _ கொய்யாப் பூ அப்படீன்னு என்னென்னவோ வூடு கட்டுனாரு,
ஆனாலும், இன்னும் இந்த மூணு பேரு பதிச்ச முத்திரைய வைரம் பதிக்கல.
ஒருவேளை பதிச்சு நானு கவனிக்காம வுட்டிருந்தா, ஆராச்சும் சுட்டுங்க.

lucky shajahan

unread,
Nov 5, 2008, 3:47:50 AM11/5/08
to panb...@googlegroups.com
ஏன் கண்ணுக்கு மை அழகு..
அதிசயம்.. பூவுக்குள் ஒளிந்திருக்கும் ..
 
நிறைய சொல்லலாம் அண்ணா

 
2008/11/5, ஆசாத் <banu...@gmail.com>:
> <luckyshaja...@gmail.com> wrote:
> கேட்டுவிட்டு வாலி அடித்த கமெண்ட் : இவரரிந்த பாட்டில எழுதாம
> விட்டது பிரதர் இன் லாவும் ஃபாதர் இன் லாவும் மட்டும் தான் போ



ezhil arasu

unread,
Nov 5, 2008, 3:55:13 AM11/5/08
to panb...@googlegroups.com

வைரமுத்துவின் திறமையை அவரது over confidence    அழித்து விடுகிறது. 

'காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்' என்று ஒரு வரி. இது எப்படி கவிதையாகும்?

பாட்டை நீயும் பாடி விடு உயிரோடிருந்தால் (முழுக்க) கேட்கிறேன் என்று கத்த வேண்டும் போல இருக்கும்.

NilaRaseegan

unread,
Nov 5, 2008, 3:55:53 AM11/5/08
to panb...@googlegroups.com
//ன்னும் இந்த மூணு பேரு பதிச்ச முத்திரைய வைரம் பதிக்கல.
ஒருவேளை பதிச்சு நானு கவனிக்காம வுட்டிருந்தா, ஆராச்சும் சுட்டுங்க.//

இந்த மூணுபேரும் என்பதில் வாலியும்,புலமைபித்தனையும் விட வைரமுத்துவின் பாடல்கள் ஒரு படி மேல் என்பது என் கருத்து.
But always கண்ணதாசன் is the best!

2008/11/5 lucky shajahan <luckys...@gmail.com>



--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
கவிதைகள் --> http://www.nilaraseeganonline.com/
English Poems: http://nilaenglishpoems.blogspot.com/
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/

ezhil arasu

unread,
Nov 5, 2008, 3:58:33 AM11/5/08
to panb...@googlegroups.com


>ஏன் கண்ணுக்கு மை அழகு..   நிறைய சொல்லலாம் அண்ணா<

உண்மையில் க‌விஞ‌ன் காத‌லியை இப்ப‌டி சொல்ல மாட்டான் என்றே நினைக்கிறேன்.

காத‌லியின் க‌ண்ணான‌து மையினால் அழ‌காகிற‌து என்ப‌து செய்தியாகுமே ஒழிய‌ க‌விதையாகாது.

இமைத் தொட்டு நிற‌ம் பெற‌ மைய‌துவும் த‌வ‌ம் செய்யும் என்ப‌து போல் வ‌ந்தால் காத‌ல் க‌விதையாகும். காத‌ல் க‌விதையில் மிகைப்ப‌டுத்துத‌ல் இய‌ல்பு.

இங்கே அதுவும் குழ‌ப்ப‌மாகிவிட்ட‌து.

ezhil arasu

unread,
Nov 5, 2008, 4:00:34 AM11/5/08
to panb...@googlegroups.com


>இந்த மூணுபேரும் என்பதில் வாலியும்,புலமைபித்தனையும் விட வைரமுத்துவின் பாடல்கள் ஒரு படி மேல் என்பது என் கருத்து.<

வாலி ப‌ற்றி சொல்ல‌ தெரிய‌வில்லை. புல‌மைப்பித்த‌ன் ந‌ல்ல‌ திற‌மைசாலி.  வைர‌முத்து த‌ன் திற‌மையை த‌ன் அதீத‌ த‌ன்ன‌ம்பிக்கையால் அழித்து விடுகிறார்.

lucky shajahan

unread,
Nov 5, 2008, 4:11:50 AM11/5/08
to panb...@googlegroups.com
அது கவிஞர்களுக்கே உரியது :-)

2008/11/5, ezhil arasu <nan...@gmail.com>:


வைர‌முத்து த‌ன் திற‌மையை த‌ன் அதீத‌ த‌ன்ன‌ம்பிக்கையால் அழித்து விடுகிறார்.

NilaRaseegan

unread,
Nov 5, 2008, 4:13:46 AM11/5/08
to panb...@googlegroups.com
//காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்//

எல்லா வரிகளிலும் கவிதையை எதிர்பார்க்க முடியாதே நண்பரே

"எங்கே நிம்மதி எங்கே நிம்மதி" கண்ணதாசனின் வரிகள் இவை. இதில் கவிதை எதிர்பார்ப்பதைவிட் அந்த சூழ்நிலையை புரிந்துகொள்ளல் அவசியமாகிறது.

அதுபோல்


காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்

இவ்வரிகள் கப்பலில் வேலை பார்ப்பவனின் மனக்கிடக்கையை வெளிப்படுத்துகிறது. இப்பாடலில் ஒளிந்திருக்கும் வலி இப்பாடலில் வெற்றியாக அமைகிறது.



2008/11/5 ezhil arasu <nan...@gmail.com>

lucky shajahan

unread,
Nov 5, 2008, 4:19:42 AM11/5/08
to panb...@googlegroups.com
இந்தப் பாடல் எழுதிய சூழலை கேள்விப்பட்டேன்..
 
இயக்குனர் கதை சொன்ன பிறகு இசையமைப்பாளர் தத்தகாரம் சொல்லியபிறகு
யோசித்துக் கொண்டே வந்த கவிஞர் சாப்பிட டைனிங் டேபிளில் அமர்ந்தபோது
பிறந்தது முதல் வரி.. பின் ரசம் வருவதற்குள் முழுப்பாடலும் வர தொலைபேசியிலேயே
சொல்லிவிட்டாராம் முழுபாடலை..
 


 
2008/11/5, NilaRaseegan nilara...@gmail.com:

ஆசாத்

unread,
Nov 5, 2008, 4:24:45 AM11/5/08
to பண்புடன்
> <luckyshaja...@gmail.com> wrote:
> ஏன் கண்ணுக்கு மை அழகு..
> அதிசயம்.. பூவுக்குள் ஒளிந்திருக்கும் ..

லக்கி,

நானு இயைபுல வூடுகட்டி அடிக்றதப் பேசிக்கினு இருக்கேம்'மா. அந்த மை அழகு,
அதிசயம் மேட்டரெல்லாம் தீம். தீம்னா...இப்ப பனியில்லாத மார்கழியா ஒரு
தீம்...அந்த மாதிரி, நானு சொல்றது வேற இது வெளையாட்டு.

ezhil arasu

unread,
Nov 5, 2008, 4:26:11 AM11/5/08
to panb...@googlegroups.com


>எங்கே நிம்மதி எங்கே நிம்மதி" கண்ணதாசனின் வரிகள் இவை. இதில் கவிதை எதிர்பார்ப்பதைவிட் அந்த சூழ்நிலையை புரிந்துகொள்ளல் அவசியமாகிறது.<

நிச்ச‌ய‌மாக‌ உங்க‌ள் க‌ருத்துட‌ன் வேறுப‌டுகிறேன் ந‌ண்ப‌ரே!

எங்கே நிம்ம‌தியில் ஒரு இய‌ல்பான‌ ந‌டையாவ‌து இருக்கிற‌து. 'காத‌ல் வ‌ந்தால் சொல்லிய‌னுப்பில்' அதுவும் இல்லை.

>இவ்வரிகள் கப்பலில் வேலை பார்ப்பவனின் மனக்கிடக்கையை வெளிப்படுத்துகிறது. இப்பாடலில் ஒளிந்திருக்கும் வலி இப்பாடலில் வெற்றியாக அமைகிறது.<

'காத‌ல் வ‌ந்தால் சொல்லிய‌னுப்பு உயிரோடிருந்தால் வ‌ருகிறேன்' என்ப‌தில் ஒரு மாலுமியின் எண்ண‌வோட்ட‌ம் எங்கே தெரிகிற‌து? இந்த‌ வ‌ரியை ஒரு கல்லூரி இளைஞ‌னும் சொல்ல‌லாம்.

 

>இயக்குனர் கதை சொன்ன பிறகு இசையமைப்பாளர் தத்தகாரம் சொல்லியபிறகு
யோசித்துக் கொண்டே வந்த கவிஞர் சாப்பிட டைனிங் டேபிளில் அமர்ந்தபோது
பிறந்தது முதல் வரி.. பின் ரசம் வருவதற்குள் முழுப்பாடலும் வர தொலைபேசியிலேயே
சொல்லிவிட்டாராம் முழுபாடலை..<


:))))))))))))))))))))

lucky shajahan

unread,
Nov 5, 2008, 4:31:00 AM11/5/08
to panb...@googlegroups.com

அதுக்காக
ஆசையே அலைபோல...
ஓடம் கரையில்னிலே ஒருவன் மட்டும்
காகித ஓடம் கடலைலை மீது
 
அப்படின்னு சூழல வச்சா எழுத முடியும் பிரதர்:-)
 
2008/11/5, ezhil arasu <nan...@gmail.com>:


'காத‌ல் வ‌ந்தால் சொல்லிய‌னுப்பு உயிரோடிருந்தால் வ‌ருகிறேன்' என்ப‌தில் ஒரு மாலுமியின் எண்ண‌வோட்ட‌ம் எங்கே தெரிகிற‌து? இந்த‌ வ‌ரியை ஒரு கல்லூரி இளைஞ‌னும் சொல்ல‌லாம்.

 


 


ezhil arasu

unread,
Nov 5, 2008, 4:44:53 AM11/5/08
to panb...@googlegroups.com

>அதுக்காக
ஆசையே அலைபோல...
ஓடம் கரையில்னிலே ஒருவன் மட்டும்
காகித ஓடம் கடலைலை மீது
 
அப்படின்னு சூழல வச்சா எழுத முடியும் பிரதர்:-)<


கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை

என்று எழுதினதும் இப்போதைய இள‌ம் கவிஞர்தானே (நா. முத்துக்குமார்)? மனதை முகம் பார்க்கும் க‌ண்ணாடியோடு ஒப்பிட்டு, அதில் எதுவும் நிலைத்து படியாத தன்மையை சொன்னதும் கவிதைதானே!

இங்கே அந்த சூழலை வைத்து எழுத வேண்டாம். ஒரு மூத்த கவிஞர் ஒரு கனமான காதல் சூழ்நிலைக்கு எழுதுகிற வரியா அது?  ஆனால் எல்லோருமே எழுத முடிகிற வரியை எழுத கவிஞன் எதற்கு? அவனிடம் சொல்லும், பொருளும் அற்புதமாய் நடமிட வேண்டாமா?



On 11/5/08, lucky shajahan <luckys...@gmail.com> wrote:

ஆசாத்

unread,
Nov 5, 2008, 4:46:17 AM11/5/08
to பண்புடன்
> <nilarasee...@gmail.com> wrote:
> இந்த மூணுபேரும் என்பதில் வாலியும்,புலமைபித்தனையும் விட வைரமுத்துவின்
> பாடல்கள் ஒரு படி மேல் என்பது என் கருத்து.
> But always கண்ணதாசன் is the best!

இனிய நிலா ரசிகன்,

இயைபு விளையாட்டில் அவர்கள் மூவரும் செய்ததுபோல் இன்னும் வைரமுத்து
செய்யவில்லை, அத்துடன் எனது சேதி முடிந்துவிடுகின்றது. யாரினும் யார்
உயர்ந்தோர் என்னும் பார்வையை நான் முன்வைக்கவில்லை.

நீங்கள் எழுதியதால் சொல்கிறேன், புலமைப்பித்தனின் பாடல்கள்
தொட்டிருக்கும் எல்லைகள் பரந்தவை. அழகியல் மட்டுமல்லாமல் கொள்கைப்
பாடல்களாக எம்.ஜி.ஆருக்கு வடித்தவைகள் பலவற்றை உதாரணமாக்
எடுத்துப்போடலாம். அந்தப்புரத்தில் சிவாஜிக்கு ஒருமகராணியும்,
எம்.ஜி.அருக்கு ஆயிரம் நிலவே வாவுமாக புலமைப்பித்தன் சாதித்தவை நிறையவே
உண்டு. தூக்க மருந்தினைப் போன்றவை பெற்றவர் போற்றும் புகழுரைகள் என்னும்
வரிகளைச் சொல்லிக்காட்டியவர்கள் பலர்.

இளையவர்களுக்கு அவர் எழுதவில்லையென்றல்ல, சங்கர்லாலின் இளங்கிளியே
இன்னும் விளங்கலியேவும், உன்னால் முடியும் தம்பியின் புஞ்சையுண்டு
நஞ்சையுண்டு அவர்தான்.

தி.மு.க.காரரான பாலுவின் (டி.ஆர்.பாலு அல்ல) படத்தில் 'சட்டம் என்
கையில்'
'நல்ல நல்ல தலைவர்கள் நாட்டில் பிறந்தார்
ஏழை வீட்டில் பிறந்தார்
நாட்டினைக் காக்கச் சிறைக் கூட்டிலிருந்தார்'
என்னும் வரிகளை புலமைப்பித்தன் எழுதியிருந்தார். திரையில் இந்த வரிகள்
வரும்போது பின்னணியில் கலைஞரின் படம் இருக்கும். இந்த வரிகள்
வெளிவரும்போது புலமைப்பித்தன் அச்சு அசல் அ.தி.மு.க. அரசியல்
அறிந்தோர்க்கு டி.என்.பாலுவின் அந்த விளையாட்டு வியப்பாகவே இருந்தது.
எழுபதுகளின் இறுதியில் எம்.ஜி.ஆர். கருணாநிதி அரசியல் மோதல்கள்
எப்படிஉச்சத்தில் இருந்தன, அப்போது எம்.ஜி.ஆர். அணியிலிருக்கும் ஒருவரின்
பாடல் அப்படிப் படமாக்கப்பட்டிருக்கிறதென்றால் நிகழ்வுகள் எப்படி
பேசப்பட்டிருக்கும், வரிகளை கொஞ்சம் அரசியல் சூழலுடன் இணைத்துப்
பார்த்தால் இதன் வேகம் விளங்கும்.

(இதனை நிகழ்வாகத்தான் சொல்கிறேனேயன்றி, இதனைச் சொல்வதால்
புலமைப்பித்தனின் வரிகளுக்கு வாதாடுகிறேன் என்று பொருள் கொள்ளவேண்டாம்)

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அரசு தரப்பில் நடந்த கவியரங்கமொன்றில்
(பெண் கவிஞர்கள் மட்டும்) அன்றைய முன்னணிக் கவிஞர்கள் கவிதை
வாசித்தார்கள். அரசு மணிமேகலை, பொன்மணி வைரமுத்து, ரோகிணி, சௌந்தரா
கைலாசம், நிர்மலா சுரேஷ் என எல்லாரும் கவியுலக ஹெவிவெயிட்டுகள், அன்றைய
கவியரங்கத் தலைவர் மட்டும் ஆண், புலமைப்பித்தன். அவரது நொடியில் கவிதை
பாடும் திறனை அன்றைய கவியரங்கில் ரசித்தேன். ஆற்றல் மிக்கவர்
புலமைப்பித்தன்.

அவரது வருகை திரையில் நிகழ்ந்தபோது, 'தமிழறிந்தவர்கள் திரைக்குப்
பாடல்கள் எழுத வருவதை வரவேற்கிறேன்' என்றிருக்கிறார் கண்ணதாசன்.
அடிப்படையில் புலமைபித்தனவர்கள் தமிழாசிரியர்.

lucky shajahan

unread,
Nov 5, 2008, 4:47:37 AM11/5/08
to panb...@googlegroups.com
ஒத்துக் கொள்கிறேன் பிரதர்..சமயங்களில் இப்படித்தான்.. அதில் ஒரு சூட்சுமம்
இருக்கிறது. இந்த கவிஞர் ஒரு படத்தின் எல்லா பாடல்களும் தான்
எழுதுவதாக இருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்கிறாராம்.

 
2008/11/5, ezhil arasu nan...@gmail.com:

ezhil arasu

unread,
Nov 5, 2008, 4:57:45 AM11/5/08
to panb...@googlegroups.com
வைரமுத்து சொன்னது:

''ஐயாயிரத்தைந்நூறு பாடல்களைத் தாண்டியும் இன்னும் கவிதைத் தமிழும் கற்பனைச் சிறகும் இளமைத் துள்ளலுடன் இருக்கிற சாதனைக்குக் காரணம் என்ன?''

'' 'ஆயிரம் பல்லவிகள்' என்று நானாகவே ஒரு திட்டம் வகுத்துக்கொண்டு, இரவுபகலாகப் பல்லவிகள் எழுதி வருகிறேன். இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகான பசிக்கும் இப்போதே என்னால் பந்தி வைக்க முடியும். ஆனால், வாங்கிக்கொள்ளத் தான் வயிறுகள் இல்லை.

இப்போதெல்லாம் நான் ஒரு பல்லவி, இரண்டு சரணம் என்றுதான் கொடுக்கிறேன். நான்கைந்து பல்லவிகள் கொடுத்தால், அதில் சுமாரான ஒன்று தேர்வாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. அதற்காக நான் குறைவான வரிகளே எழுதுகிறேன் என்று பொருள் இல்லை. நான் கொடுப்பதே பதினொன்றாவது பல்லவிதான். முதல் பத்து, எனக்குள்ளே இருக்கும் குப்பைக் கூடைக்குத்தான்.

'தங்கத்தில் ஒட்டியிருக்கும் மாசு, தூசு எல்லாவற்றையும் துடைத்துவிட்டுச் சுத்தமாக உங்களிடம் தருகிறேன்' என்று இயக்குநர்களிடம் சொல்லி விடுவது வழக்கம்...

கிராம வாழ்க்கையும் நாட்டுப் பாட்டு நாட்டமும்,

'காதுல நரைச்ச முடி
கன்னத்துல குத்துது குத்துது
சுழியில படகுபோல
எம்மனசு சுத்துது சுத்துது'
என்று எழுதவைத்தது.

உலகம் சுற்றிய அனுபவம்,

'கடல் மேல் சிவப்புக் கம்பளம் விரித்து
ஐரோப்பாவில் குடிபுகுவோம்'
என்று பூகோளம் பேசியது.

இளைஞர்களோடிருக்கும் இடைவெளி இல்லாத தொடர்பு -

'மெல்லினமே மெல்லினமே - நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக
உயர்ந்ததடி - அதை
வானம் அண்ணாந்து பார்க்கும்
நான் தூரத் தெரியும் வானம் - நீ
துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருபத்தைந்து வயதை ஒரு
நொடிக்குள் எப்படி அடைத்தாய்'
என்று உல்லாசப்படுத்தியது.


சந்திப்பு: ரமேஷ் வைத்யா

நன்றி:http://www.tamilnation.org/literature/lyricwriters/vairamuthu/index.htm



 

Asif Meeran AJ

unread,
Nov 5, 2008, 5:00:06 AM11/5/08
to panb...@googlegroups.com
பாட்டெல்லாம் நல்லாத்தான் எழுதுறாரு
ஆனா பேச்சுத்தான்... என்னை விட ரொம்ப ஓவரு :-)))

ezhil arasu

unread,
Nov 5, 2008, 5:01:55 AM11/5/08
to panb...@googlegroups.com
என‌க்கென்ன‌மோ அவ‌ர் வ‌ழ‌க்க‌த்தை விட‌ ப‌ணிவா பேசியிருக்கறா மாதிரி தோணுது. :)

Asif Meeran AJ

unread,
Nov 5, 2008, 5:05:26 AM11/5/08
to panb...@googlegroups.com
என‌க்கென்ன‌மோ அவ‌ர் வ‌ழ‌க்க‌த்தை விட‌ ப‌ணிவா பேசியிருக்கறா மாதிரி தோணுது. :)

ஏன் எழில்? நீங்க அவ்ரை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே?! :-))
எனக்கென்னமோ அப்படித்தான் தோணுது 

பிரேம்குமார்

unread,
Nov 5, 2008, 9:41:48 AM11/5/08
to panb...@googlegroups.com
எழில் அரசு,  வைரமுத்து பேச்சில், அதீத தன்னம்பிக்கையில் குறை சொல்லலாம். அதற்காக 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்' பாட்டு ஒரு பாட்டான்னு கேட்டீங்க பாருங்க......... நியாயமா?

ezhil arasu

unread,
Nov 5, 2008, 11:52:26 AM11/5/08
to panb...@googlegroups.com

பிரேம் குமார்,

அதை நான் நக்கலாகவோ, கிண்டலாகவோ கேட்கவில்லை.
'காதல் வந்தால் சொல்லியனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்' என்பதில் கவிச்சுவை இல்லை என்று என் பார்வையில் பட்டதை சொன்னேன்.

அக்க‌றை இல்லாம‌ல் ச‌ட‌ப‌ட‌வென‌ அந்த‌ பாட‌ல் எழுத‌ப்ப‌ட்ட‌தாக‌ க‌ருதினேன்.

அந்த‌ வ‌ரிக‌ளை நான் எழுதி அதே இசைஅமைப்பாளரிட‌மும், அதே இய‌க்குந‌ரிட‌மும் காட்டி இருந்தால்  போய் வாப்பா என கவிதையோடு என்னை அனுப்பி வைத்திருப்பார்க‌ள்.

Reply all
Reply to author
Forward
0 new messages