பிடித்த கதைகள்..

11,649 views
Skip to first unread message

சென்ஷி

unread,
Apr 13, 2010, 7:38:38 AM4/13/10
to panb...@googlegroups.com
எஸ்.ராவின் 100 சிறந்த சிறுகதைகளுக்காக, மற்ற சிறுகதைகளைத் தேடிக் கொண்டிருக்கையில் கிடைத்த, வாசிக்கையில் எனக்குப் பிடித்த சிறுகதைகளை -இங்கு தொகுக்கலாம் என்று நினைக்கிறேன். நண்பர்களும் பிடித்தமானதை தொகுக்கலாமே. இலக்கியத்தரமானது, அபுனைவு, அறிவியல் தன்மை, ஒருபக்கத்தானது என்ற பாகுபாடு இல்லாமல் தொகுப்பதால் ரசனைக்குறைபாட்டுக்கு மன்னிக்கவும்.

இது முற்றிலும் இணையத்தில் கிடைக்கும் கதைகளை ஓரிடத்தில் தொகுக்கும் முயற்சியே!!

சில பிடிஎஃப் கோப்புகள் கிடைத்துள்ளன. அதையும் ஓரிடத்தில் சேமிக்க எண்ணம்.

நன்றி!

--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

சென்ஷி

unread,
Apr 13, 2010, 7:40:16 AM4/13/10
to panb...@googlegroups.com

1.  பொய்:எழில் வரதன், ஓவியங்கள்: ஸ்யாம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எனது அப்பாவின் பழைய ஈஸி சேர் இரண்டாக உடைந்தபோது, நான் தரையில் மல்லாக்க விழுந்துகிடந்தேன். என் முதுகெலும்பின் நடுவில் நாய் கடிப்பது போன்ற வலி. நிமிஷா பதறி ஓடி வந்தாள். “ஐயோ மாமா! ஈஸி சேரைத் திருப்பிப் போட்டுக்கிட்டு ஏன் தலைகீழா நிக்கிறீங்க?” என்று ஏழு வயதுச் சிறுமி அப்பாவியாகக் கேட்டதும்தான், நான் எத்தனை அலங்கோலமாக, விபரீதமாக விழுந்திருக்கிறேன் என்பது புரிந்தது.

பிரசவத்துக்குப் பிறகு வாக்கிங் போகிற ஒட்டகச் சிவிங்கிபோல எழுந்து நின்றவனிடம், நிமிஷா அந்த அதிர்ச்சிகரமான சங்கதியைச் சொன்னாள், “மாமா, ஜெயந்தி அக்கா வாந்தி எடுக்கறா!”

ஈஸி சேரில் இருந்து நான் விழுந்தது உண்மை. ஆனால், புருஷனைப் பார்த்து பெண்டாட்டி வாந்தி எடுக்கிற அளவுக்குப் பயங்கரமாக விழவில்லை. நான் ஆத்திரத்தோடு ஜெயந்தியைப் பார்க்கப்போனேன். கத்தி காட்டிய திருடனுக்கு முன்னால் நிற்கிற முழுச் சம்பளக்காரனைப்போல வியர்த்து விகாரமாக இருந்தாள். என்னைப் பார்த்ததுமே துவண்டு தரையில் படுத்துக்கொண்டாள்.

பிங்க் நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு, என் முதுகெலும்புக்கு வைத்தியம் பார்த்த அதே பெண் டாக்டர்தான், என் மனைவியைப் பரிசோதித்துவிட்டு நான் தந்தை ஆகப்போகிறேன் என்பதையும் உறுதி செய்தாள். எனக்குக் குழந்தைகள் என்றால் கோடி சந்தோஷம்.

கிரிக்கெட் பந்தைவிடவும் பெரிதாக இருந்த லட்டை ஒரே வாயில் போட்டுக்கொண்ட லட்சுமணன்தான் முதலில் என் சந்தோஷ லாரியைப் பஞ்சர் ஆக்கினான். “ம்! அப்பா ஆகப்போற! ஆமா, எத்தனை ஏக்கர் நிலம் வெச்சிருக்கே? எந்தெந்த பேங்க்ல பணம் வெச்சிருக்கே? எஜுகேஷன் மினிஸ்டரைத் தெரியுமா?” என்று சம்பந்தம் இல்லாமல் அவன் கேட்டதும், நான் பதறிப்போனேன். குழந்தை பிறக்கப்போகிற சந்தோஷத்தைக் கொண்டாடுவதற்காக, குட்டை டவுசர் போட்டவனிடம் எல்லாம் லட்டு கொடுத்தது தப்பு.

இனி, உன் வாட்ச் சரியாக ஓடாது, மீன் தொட்டி உடையும், சுவரில் உன் படம் பேய்போல வரையப்பட்டு இருக்கும், பக்கத்து வீட்டுக்காரனின் ஜன்னல் கண்ணாடி உடைத்ததற்காக நீ போலீஸ் ஸ்டேஷன் போவாய், பள்ளிக்கூடத்து டீச்சர்கள் உன்னிடம் மரியாதைக் குறைவாகப் பேசுவார்கள், எத்தனை சம்பாதித்தாலும் ஏழையாக இருப்பதுபோல உணர்வாய் என்றெல்லாம் சொல்லி, என் எதிர்காலம் குறித்து மிரட்ட ஆரம்பித்தார்கள். வெங்காயத்தை நறுக்கியவனும், குழந்தையைப் பெற்றவனும் கண்ணீர் சிந்தியே ஆக வேண்டும் என்பதுதான் அவர்கள் இறுதியாகச் சொன்ன தத்துவம்.

ஓட்டத் தெரியாதவன், 'சைக்கிளில் பெட்ரோல் இல்லை!' என்று சொன்ன கதையாகத்தான் இருக்கிறது இவர்கள் கதை. குழந்தை வளர்க்கத் தெரியாத அசடுகளாக இருந்துகொண்டு, குழந்தையே பயங்கரம் என்றால், அதை இந்த ரேடியோ மெக்கானிக் ஒப்புக்கொள்ள மாட்டான். கரப்பான்பூச்சி முட்டைவைத்த காலி டப்பாவையே ரேடியோவாக்கி சில்க் ஸ்மிதாபோலப் பாடவைத்த என் போன்றவன் குழந்தை வளர்த்தால் அது தப்பாகப் போய்விடுமா?


குட்டி ஸ்வெட்டர், பொம்மைகள், பற்பசை, குழந்தை சைக்கிள் என்று பிறக்கப்போகிற பிள்ளைக்காக நிறைய வாங்கிக் குவித்தேன். குழந்தையை எப்படிக் குளிப்பாட்டுவது, எப்படி உடுத்துவது, எப்படிப் பாடம் நடத்துவது, என்ன நீதிக் கதை சொல்லி எப்படி அறிவோடு வளர்ப்பது என்பதை எல்லாம் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருந்தேன். உலகத்தில் யாருமே வளர்க்காதபடி சிறப்பாகக் குழந்தையை வளர்க்க வேண்டும் என்பதே என் லட்சியம். ஆர்வமும் ஆர்ப்பாட்டமுமாக நான் குழந்தை வருகைக்காகக் காத்திருந்தேன். ஆனால், குளிப்பதற்காக ஆர்வமாக இருப்பவனிடம் குளத்தில் முதலை இருக் கிறது என்று யாராவது சொல்லி விட்டுப்போனால், குளிக்கப் போகிறவன் மனசு என்ன கதியாகும்?

வாத்து, கோழி வளர்ப்பது எப்படி என்கிற புத்தகங்களைப்போலவே குழந்தை வளர்ப்பது எப்படி என்கிற புத்தகமும் சந்தையில் கிடைக்கிறது. வீராச்சாமி வீட்டில் ஒரே ஒரு குழந்தையும், நூற்றுக்கணக்கான குழந்தை வளர்ப்புப் புத்தகங்களும் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், வீராச்சாமியால் தன் குழந்தையை ஒழுக்கமாக வளர்க்க முடியவில்லை.

நிமிஷாவை ஏழு வயதுக் குழந்தை என்றால் வீராச்சாமி ஒப்புக்கொள்ள மாட்டான். செய்வது எல்லாம் ரவுடித்தனம். பேசுவதெல்லாம் பொய். அவளைச் சுற்றி நடப்பது எல்லாம் கலவரமும் பயங்கரமும். வீராச்சாமி ஓர் அப்பாவி. அமைதியும் ஒழுக்கமுமாக வாழ நினைப்பவன். ஆனால், அவன் குணத்துக்கு நேர் எதிராக நிற்பவள் நிமிஷா. வயதுக்கு மிஞ்சிய அறிவும், ஓயாமல் பேசுகிற வாயும், எல்லாக் குற்றங்களையும் செய்துவிட்டு அதை மறைப்பதற்கான தந்திரமும் தெரிந்த நிமிஷாவைக் கட்டி மேய்ப்பதற்கான தகுதி வீராச்சாமிக்கு இல்லவே இல்லை.

நிமிஷாவைத் திருத்துவதற்கு எத்தனையோ வித்தை செய்து பார்த்தான் வீராச்சாமி. மண்டிபோடவைப்பது, காதைத் திருகுவது, தலையில் கொட்டுவது, கண்ணீர்விட்டு அழுவது, கோயிலில் மண் சோறு தின்பது என்று என்ன தந்திரம் செய்தும் நிமிஷா திருந்தவில்லை. தனக்குப் பிறந்த பிள்ளை என்பது, ஆர்வக்கோளாறில் செய்த குற்றத்துக்கான அதிகபட்ச தண்டனை என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தான் வீராச்சாமி. வீராச்சாமியைப் பார்த்து எனக்குச் சிரிப்புதான் வந்தது.

பருத்திக் கொட்டையைத் தின்னத் தெரிந்தவனுக்குத்தான் பசு மாட்டையும் நன்றாக வளர்க்கத் தெரியும் என்பதுதான் என் சித்தாந்தம். பிள்ளைகளோடு பிள்ளையாக வளர்கிற எனக்குக் குழந்தைகளின் மன உலகம் தெரியும். நிமிஷாவை ரிப்பேர் செய்வதற்கு என்னால் ஆகும் என்று நான் நம்பினேன். விளையாட்டும், பொம்மைக் கதையும், சின்னப் பொய்யும், பாராட்டும், பரிசுப் பொருட்களும் இருந்தால் எப்படிப்பட்ட அடாவடியான குழந்தையையும் அற்புதமாக மாற்றிவிடலாம் என்று உறுதியாக இருந்த எனக்கு, நிமிஷா பரிசோதனை எலி ஆனாள்.

அதன்பிறகு நிமிஷாவோடு நான் விளையாடிய விளையாட்டுக்கள் எல்லாமே நீதி, நேர்மை, தருமம், புண்ணியம், உத்தமபுத்திரி, உலகத்தின் ஒளிவிளக்கு, அரம் செய்ய இரும்பு, அறுப்பது ரம்பம் என்கிறரீதியில் உலகத்துக்கே வால்நட்சத்திரமாக இருந்து உபதேசம் செய்கிற நீதி விளையாட்டுக்களாகவே இருந்தன. நான் சொல்கிற கதைகளில், வருகிற எல்லோருமே பரிசுத்தமானவர்களாகவும், பாவிகளைச் சபிப்பவர்களாகவும், பொய் சொன்னவர்கள் வாயில் புண் வரவைப்பவர்களாகவுமே இருந்தார்கள். கெட்டவர்களுக்கு எல்லாம் கோரைப் பல் இருந்தது. நல்லவர்கள் தலையில் ஒளி வட்டம் சுற்றியது.

திருடினால் மூக்கின் மீது கொப்புளம் வரும், பொய் சொன்னால் வாயில் இருக்கிற பல் உதிர்ந்துபோகும், பெற்றவர்கள் பேச்சைக் கேட்காவிட்டால் கரன்ட் கம்பம் தலைமீது விழும், குறும்பு செய்தால் உச்சந்தலையில் இடி விழுந்து தலைமுடி கொட்டிப்போகும் என்று ஆதாரமே இல்லாத என் கதைகளை ஆர்வமாகக் கேட்டாள் நிமிஷா!

குழந்தைகள் என்பவர்கள் எந்தப் பக்கம் திருப்பினாலும் அந்தப் பக்கம் திரும்புகிற ஸ்குரூ போன்றவர்கள் என்ற என் நம்பிக்கை வீண்போகவில்லை. நிமிஷா நுரை பொங்கத் துவைக்கப்பட்ட பட்டுச் சட்டைபோல மாறிவிடுவாள் என்ற நம்பிக்கை வந்தது.

பிரசவத்துக்காக மனைவியை மாமியார் ஊருக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு திரும்பிய எனக்கு மூளைக்கோளாறு உண்டாவதற்கான எல்லா சாத்தியங்களும் காத்திருந்தன. எப்போதும் துறுதுறுவென்று இருக்கிற நிமிஷா, மூன்று நாட்களாகச் சாப்பிடாமல் அடம் பிடிக்கிறாளாம். ஐயையோ! நிமிஷா ஏன் சாப்பிடவில்லை என்று தேவையே இல்லாமல் பதறிக்கொண்டு ஓடினேன்.

வாசலில் சோகமே உருவாக இருந்தான் வீராச்சாமி. “என்ன ஆச்சி வீரா? எதுனா திட்டினீங்களா... அடிச்சீங்களா... நிமிஷா ஏன் சாப்பிடலே?” என்று கேட்டபோது, அவன் முகத்தில் விரோதம் இருந்தது. நான் கேட்ட கேள்வியின் குற்றம் எனக்குப் புரியவில்லை. அடங்காத பிள்ளைகளின் வாயில் சிகரெட் சூடு போட்ட அப்பன்களை எனக்குத் தெரியும். அதனால் கேட்டேன். அவன் முறைக்கிறான். நான் நிமிஷாவைப் பார்த்தேன். பார்க்கவே பரிதாபமாக இருந்தாள்.

“ஏன் நிமிஷா சாப்பிடலே?”

“மாமா, நீங்க சொன்ன மாதிரியே என் வாயில புண் வந்துடுச்சி. பல்லு எல்லாம் விழுந்துபோயிடுச்சி. டாக்டர்கிட்ட காட்டினா அவரு லைட் அடிச்சிப் பாத்துட்டு, வாயில புண்ணே இல்லைன்னு பொய் சொல்றாரு. கண்ணாடி போட்ட டாக்டருக்குக் கண்ணே தெரியல!”

நான் அதிர்ச்சியோடு நிமிஷாவின் வாயைத் திறக்கச் சொல்லிப் பார்த்தேன். பால் பற்கள் பத்திரமாக இருந்தன. வாயில் புண் இல்லை. நான் நிமிஷாவைப் பார்த்தேன். அவள் பொய் சொல்கிறாள். அல்லது மிரட்சிக் கனவு காண்கிறாள். வாயில் புண் இல்லை என்றால், அவள் என்னையும் குருட்டு மெக்கானிக் என்று சொல்வாள். எனக்குத் தெரியாத குழந்தை விளையாட்டா?

“ஏய் நிமிஷா... உண்மையைச் சொல்லு? உன் வாயில ஏன் புண்ணு வந்துச்சி! பொய் சொன்னியா... பொம்மை திருடினியா... அப்பாவுக்குத் தெரியாம தப்பு ஏதும் பண்ணியா? நான்தான் சொன்னேனே! பொய் சொன்னா புண்ணு வரும்னு. பாத்தியா வந்துடுச்சி.”

எனக்குள் இருந்த தரும தேவன் விவரங்கெட்டத்தனமாக நேரங்கெட்ட நேரத்தில் தருமத்தை உபதேசிக்க ஆரம்பித்தான். வாசற்படியில் நின்றிருந்த வீராச்சாமி வகைதொகை இல்லாமல் கத்த ஆரம்பித்தான், “ஏய், அறிவில்லாதவனே! முட்டைக்கோஸை குப்பைத்தொட்டியில போட்டா, வாயில புண்ணு வருமாடா? மண்ணுல விளையாடலேன்னு பொய் சொன்னா, மண்டையில இடி விழுமாடா? பொம்மைத் துப்பாக்கியைத் தொலைச்சுட்டு வந்தா, மூணுகண்ணன் மூக்கைக் கடிப்பானாடா? பச்சப்புள்ளகிட்ட விவரம் இல்லாமப் பேசி ஏன்டா சாவடிக்கிறே?''

நான் அதிர்ச்சியோடு வீராச்சாமியைப் பார்த்தேன். வாயில் இருக்கிற புண்ணுக்கும் முட்டைக்கோசுக்கும் என்ன சம்பந்தம்? யார் துப்பாக்கியைத் தொலைத்தது? எவரை மூணுகண்ணன் கடித்தான்? குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால், பெற்றவர்களுக்கு மனக்கோளாறு வந்துவிடுமா? வீராச்சாமி பேசுவதில் ஓரிரு வாக்கியங்களாவது புரிந்தது. அவன் மனைவி பேச ஆரம்பித்ததும் நான் இன்னும் குழம்பினேன்.

“ஐயோ செல்லம்... காக்கா தூக்கிட்டுப் போன துப்பாக்கி லஞ்ச் பேக்லதான் இருக்கு. அப்புறம் எப்படிப் பல்லு விழும்? மண்ணுல விளையாடறதுதான் மாரியம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும். பல் விழாத பிள்ளைங்க பொய் சொன்னா, சாமி பால் சோறு ஊட்டும். பேட்டராயன் சாமி வந்தா, நீ வீட்டுல இல்ல, ஸ்கூலுக்குப் போயிட்டேன்னு சொல்லிடறேன்! சாமி கண்ணைக் குத்த வந்தா, நான் கால்ல விழுந்து, குத்தாதேன்னு கும்பிட்டுக்கிறேன். உனக்குப் புண்ணு சரியாயிடும். தைரியமா இரு கண்ணு!”

இங்கே என்ன நடக்கிறது..? இந்த வீட்டில் துப்பாக்கியால்தான் பல் விழவைப்பார்களா? லஞ்ச் பேக்கில் துப்பாக்கி இருந்தால் பல் விழாதா? உருட்டிவிடப்பட்ட தாமிர அண்டாவுக்குள் உட்கார்ந்திருப்பது போன்ற கிறுகிறுப்பு வந்துவிட்டது எனக்கு.

குறைவான கோபத்தோடு இருந்த நிமிஷாவின் அம்மாதான் நடந்த கதையைச் சொன்னாள்: அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமையாம். மூட்டைப்பூச்சி நாற்றமடிக்கிற முட்டைக்கோஸைக் குப்பையில் கொட்டிவிட்டு, சாப்பிட்ட

தாக ஒரு பொய் சொன்னாளாம் நிமிஷா. தீபாவளி துப்பாக்கியைப் பென்சில் டப்பாவுக்கு இரவலாகத் தந்துவிட்டு, அது தொலைந்துபோனதாகச் சாதித்தாளாம். மண்ணில் விளையாடிவிட்டு இல்லை என்றாளாம். நிமிஷா வழக்கமாகச் சொல்கிற பொய்களும், செல்லக் குற்றங்களும்தான் இதெல்லாம். ஆனால், அன்றைக்கு மழை பெய்துவிட்டதாம். இடி இடித்ததாம். கரன்ட் போய்விட்டதாம். இடிச் சத்தம் கேட்டு இருளில் ஓடி வந்த நிமிஷா தடுக்கி தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்துவிட்டாளாம். மின்னல் வெளிச்சம். இடிச் சத்தம். தண்ணீரில் விழுந்த அதிர்ச்சி. அவளுக்கு வாயில்தான் சிறிது காயம். பல் விழவில்லை. ஆனால், பொய் சொன்னதால் வாயில் இருக்கிற பல் எல்லாம் விழுந்து புண்ணாகிவிட்டது என்று கதறுகிறாளாம். காய்ச்சல் வந்துவிட்டதாம். சாமி வந்து கண்ணைக் குத்தும் என்று தூங்காமல் இருக்கிறாளாம்.

இந்த இடத்தில்தான் வீராச்சாமி என்னை படுபயங்கரமாக முறைத்துப் பார்த்தான். இந்த இடத்தில்தான் நான் சொன்ன நீதிக் கதையின் உக்கிரமே இருந்தது. பொய் சொன்ன நிமிஷாவைப் பேட்டராயன் சாமிதான் வந்து கீழே தள்ளியது என்று குழந்தை சாதிக்கிறது என்றால், என் நீதிக் கதையின் வலிமைபற்றி நானே சொல்லக் கூடாது. ஆனால், நீதிக் கதைகளைப் பாராட்டுகிற ஆர்வத்தில் வீராச்சாமி இல்லை. அவன் கத்தினான், “டேய்! பச்சைப் பிள்ளை பொய் சொன்னா வீடு பத்திக்கிட்டு எரியுமாடா? தப்பு செய்யாத புள்ளை உலகத்தில் இருக்கா? இந்தப் புள்ளைகிட்ட போயி அது இதுன்னு சொல்லி காய்ச்சல்ல படுக்கவெச்சிட்டியேடா!”

துவண்டுகிடந்த நிமிஷாவின் வறண்ட உதடு என்னை வேதனைப்படுத்தியது. சிறுபிள்ளைக்குச் சொன்ன பெரிய நீதிக் கதையின் அபத்தம் எனக்குப் புரிந்தது. வீராச்சாமி சொல்வதுதான் உண்மை. குழந்தைகள் சொல்கிற பொய்யில், குழந்தைகளின் செல்லத் திருட்டில், குழந்தைகள் செய்கிற குற்றங்களில் அழகுதான் இருக்கும். ஆபத்துஎன்பது இருக்காது. பெரியவர்களுக்குச் சொல்வதுபோலவே பிள்ளைகளுக்கும் குற்றங்களுக்கான நீதிக் கதைகளைச் சொன்னது என் தவறுதான். நான் நிமிஷாவின் பக்கத்தில் உட்கார்ந்து என் குற்றத்திற்கான பரிகாரத்தைத் தேடினேன்.

நான் சொன்ன எல்லாக் கதைகளும் உதவாக்கரை என்றும், கதை பொய் என்றும் நிமிஷாவிடம் நான் சொன்னேன். பொய்யான கதை சொன்ன என் வாயில் புண்ணே வரவில்லை பார், என்று நான் வாய் திறந்து காட்டி அவளுக்கு நிரூபித்தேன். அதன் பிறகுதான் கொஞ்சமாக ரசம் சோறும், வேகவைத்த முட்டையும் சாப்பிட்டாள் நிமிஷா.

பேராசையும், துரோகமும், வஞ்சகமும் இருக்கிற இந்த உலகத்தில் பிள்ளைகளை உத்தமர்களாக வளர்த்தால் என்ன ஆகும்? சமயோசிதமும், தந்திரமும், சின்ன கபடமும்கொண்ட பிள்ளைகளாய் இருந்தால் அதில் என்ன குற்றம்? குழந்தைகளுக்கான என் ரிப்பேர் தொழில்நுட்பத்தை நான் மாற்றிக்கொண்டேன். அதன்பிறகு என் கதைகளில் வருகிறவர்கள் எல்லோரும் வசீகரமான பொய் பேசுகிறவர்களாகவும், உலகத்தின் நல்லதற்காகத் திருடுகிறவர்களாகவும், கெட்டவர்களை அழிக்க வீட்டு ஜன்னல்களை உடைப்பவர்களாகவும், புத்தி சொல்வதற்காக உடைகளைக் கிழிப்பவர்களுமாக இருந்தார்கள். ஆபத்து இல்லாத அதே சமயத்தில் அடாவடியான தேவதைகள் என் கதையில் வந்தார்கள். இப்போது நிமிஷாவுக்கு மட்டுமல்ல... ஏராளமான பிள்ளைகளுக்கு நான் கதை சொல்லிக்கொண்டு இருந்தேன். அற்பனின் ஆனந்தம் அரை நாள்கூட நீடிக்காது. மரத்தில் எறிந்த கல் என் மண்டையிலேயே வந்து விழப்போகிறது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

வாக்கிங் செல்கிற பழக்கம் எனக்குச் சின்ன வயதில் இருந்தே கிடையாது. என்ன கெட்ட காலமோ, அன்றைக்கு நான் உடல் இளைக்க வேண்டும் என்ற உருப்படாத ஆசையினால் வாக்கிங் சென்றேன். எதிரில் அடையாளம் தெரியாத ஒருத்தன் வந்தான். வந்த வேகத்திலேயே என்னுடைய சட்டைக் காலரைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டான். அடுத்தவன் என் சட்டையைப் பிடிப்பதற்கு வசதியாக நான் எதற்கு என் சொந்தச் செலவில் சட்டைக்கு காலர் வைக்க வேண்டும்? ''ஏய், யார் நீ? சட்டையை விடு!” என்றேன்.

'தருமராஜ் யாருன்னு தெரியுமாடா? அது நான்தான்டா! பிள்ளையார் கோயில் பக்கத்தில் இருக்கிறவன். ஆமா, என் பொண்ணுங்க சினேகா, ஜோதிகாகிட்ட பொய் பேசினா, ஆகாயத்தில் இருந்து ஐஸ்க்ரீம் கொட்டும்னு கதை விட்டவன் நீதானே!” அவன் நிதானமாகக் கேட்டான். எனக்கு விபரீதத்தின் ஆரம்பம் புரிந்தது.

''100 ரூபாயை ரெண்டு மணி நேரத்துல எட்டு வயசுப் பொண்ணு செலவு பண்ணுது. அதுவும், பக்கத்து வீட்டுக்காரன் பணம். காசு எடுத்ததும் இல்லாம பொய் மேல பொய் பேசுதுங்க. பணத்தை நாங்க எடுக்கல, பணம் எங்களோடது, பணம் அப்பாவோடது, பணம் சிக்கிச்சி, பணம் காக்கா தூக்கிட்டு வந்து போட்டுச்சின்னு விதவிதமாப் பொய் பேசுதுங்க. எல்லாம் உன்னாலதான்டா!”

என்னால்தான் என்று எனக்குத் தெரிந்தது. ஆவென்று வாய் பிளந்து சினேகாவும், ஜோதிகாவும் கதை கேட்டபோதே நான் சந்தேகப்பட்டேன். அழகான பொய் சொல்லச் சொன்னேன். அடுத்த வீட்டுக்காரன் பணத்தை நான் எங்கே திருடச் சொன்னேன்?

“பாருங்க தருமராஜ்... நான் அரை பிளேடுவெச்சு பிசினஸ் பண்றவங்களுக்குத் தொழில் சொல்லித்தர்றவன் கிடையாது. புள்ளைங்களோடு விளையாடும்போது கொஞ்சம் நீதிக் கதை சொல்லுவேன். குழந்தைங்க பொய் பேசினா உலகம் அழிஞ்சிபோயிடாது. குழந்தைங்க பேசறது நல்ல பொய்யி. அதுல ஒரு அழகு இருக்கும். அதை ரசிக்கக் கத்துக்கங்க?”

“பொய் அழகாடா... மொதவே ஊருக்குள்ள அநியாயம், அக்கிரமம் அதிகமாயிடுச்சி. ஏமாத்தறான், குடி கெடுக்கிறான். எதைப் பண்ணாலும் தப்பில்லேன்னு தறிகெட்டு அலையிறான். நீ சொல்லற நல்ல பொய்யி பேசினா நான் ரசிக்கணுமா? நான் ரசிச்சா நாட்டுல தேனாறும் பாலாறும் ஓடுமா? பெட்ரோல், டீசல் விலை குறைஞ்சிடுமா? வறுமை தீர்ந்திடுமா? யுத்தம் நின்னுடுமா? வெடிகுண்டு செய்ய மாட்டாங்களா?” தருமராஜ் என் மூச்சே நின்றுபோகும்படி பேசினான்.

“நாட்டு வறுமைக்கும், குண்டு வெக்கறதுக்கும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் புள்ளைங்க பேசற பொய்தான் காரணம்னு சொல்றீங்களா தருமராஜ்?”

“ஆமான்டா! உன் உபதேசத்தைக் கேட்டு ரத்தம் எல்லாம் பொய்யா ஊறி வளர்ற பிள்ளை பெரிசான பிறகு எந்தப் பாதகத்தைச் செய்யவும் அஞ்சாது. அப்ப குண்டு செய்யும், புரளி கிளப்பும், யுத்தம் வர ஏற்பாடு செய்யும். இதுதான்டா நடக்கும். ஊரான் பிள்ளைய உபதேசம் பண்ணிக் கெடுத்தா, தன் பிள்ளை தானே கெடும்னு சொல்லுவாங்கடா! உனக்கும் ஒரு பிள்ளை பிறக்கும்தானே! அப்ப பாக்கறேன்டா நீ எப்படி வளக்கறேன்னு!” சொல்லிவிட்டு, அவன் தலையில் அடித்துக்கொண்டு போனான்.

இப்போதுதான் இந்தக் குழந்தைகளின் உலகம் எனக்கு வேதாள உலகம்போலத் தோன்ற ஆரம்பித்தது. ஒரு குழந்தை பொய் பேச வேண்டாம் என்றால், காய்ச்சலில் படுத்துக்கொள்கிறது. இன்னொரு குழந்தை பொய் பேசு என்றால், காசு திருடுகிறது. முன்னால் போனால் கடிக்கும், பின்னால் போனால் உதைக்கும் என்கிற தெனாலிராமன் குதிரைபோல் பிள்ளைகள் இருந்தால் நான் எப்படி என் பிள்ளையை வளர்ப்பேன். நான் விதைத்த துன்பம் அதோடு முடியவில்லை. குழந்தை பெற்ற எல்லோருமே வழியில் பார்த்து என்னைத் திட்ட ஆரம்பித்தார்கள். உன்னால்தான் என் பிள்ளைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கின்றன. உன்னால்தான் என் பிள்ளை பரீட்சையில் சைபர் மார்க் வாங்கியிருக்கிறாள். உன்னால்தான் என் பிள்ளை ஜன்னல் கண்ணாடியை உடைத்தது என்று என் மீது வீசப்பட்ட குற்றம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. நல்லது என்று நான் எதையெல்லாம் போதித்தேனோ அதையெல்லாம் விபரீதமாக்கிவிட்டார்கள் இந்தப் பிள்ளைகள்.

உத்தமன், சத்தியன், ஊர் போற்றுகிற அறிவாளியாக பிள்ளை இருக்க வேண்டும் என்ற ஆசையில்தான் ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். ஆனால், உலகத்தில் இன்றைக்கு எத்தனைக் குற்றவாளிகள்... எத்தனை திருடர்கள்... எத்தனை குடி கெடுப்பவர்கள். இவர்கள் எல்லாம் எப்படி வந்தார்கள்? பெற்றவர்கள் நினைப்பதுபோலப் பிள்ளைகள் வளரவே வளராது என்று முழுசாக நான் தெரிந்துகொண்டபோதுதான், “உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆரோக்கியமாக இருக்

கிறது!” என்று சொன்னாள் ஒரு குண்டு நர்ஸ்.

“குழந்தை ஆரோக்கியம்தான். இனி நான் ஆரோக்கியமாக இருப்பேனா?” என்ற என் சந்தேகத்தைக் கேட்டேன். ஜன்னலுக்குப் பக்கத்தில் மறைவாக நின்றிருந்த என் மாமியார் அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தார். என் விபரீதப் பேச்சைக் கண்ணீர்க் காவியமாக மாற்றி ஊரெல்லாம் பரப்பப் போகிற என் மாமியாரை நினைத்து நானும் அதிர்ந்தேன்.

மூக்குப் பொடி போட்டவன் எல்லாம் தும்மியே ஆக வேண்டும், குழந்தை பெற்றுக்கொண்டவன் எல்லாம் சந்தோஷப்பட்டே ஆக வேண்டும் என்கிற சமூக விதிக்கு நானும் கட்டுப்பட்டவன்தான். என்றாலும், குழந்தை பிறந்திருக்கிறது என்றதும் என்னால் சந்தோஷப்பட முடியவில்லை. பிறந்த குழந்தை எதுவும் தந்தையின் சொல் பேச்சைக் கேட்காது, கண்டபடி வளர்ந்து கலவரத்தை உண்டாக்கும் என்றால், பிள்ளை பெற்றவன் எதற்காக கூலிக்குச் சந்தோஷப்பட வேண்டும். குழந்தை பிறந்த பிறகு சித்தப்பிரமை பிடித்தவன்போல இருந்த என் மாற்றத்திற்கான காரணம் என் மனைவிக்குப் பிடிபடவில்லை.

“மாமா, தோட்டத்துல ஒரு நாய் மூணு குட்டி போட்டிருக்கு! வாங்க காட்டறேன்!” என்று நிமிஷா அதிசயமாக ஒருநாள் கூப்பிட்டாள். குழந்தை வளர்ப்பது குறித்த பீதியில் இருந்த எனக்கு உலகத்தில் எதுவுமே அதிசயம் இல்லை என்று தோன்றியது. குட்டி போட்ட நாய், தன் குட்டிகளுக்கு நீதிக் கதை சொல்லித்தான் வளர்க்குமா? நான் ஜடம்போல நிமிஷாவோடு போனேன்.

“மாமா! உயரமா நிக்காதீங்க. இப்படி உசரமா இருந்தா குட்டி பயந்துக்கும். ஃப்ரெண்ட்ஸ் ஆகாது. அது மாதிரியே குள்ளமா உட்காந்துக்கங்க. இப்படி!” புழுதி மண்ணில் மண்டியிட்டு உட்கார்ந்தபடி நாய்க் குட்டி பார்த்த நிமிஷா எனக்கு உத்தரவிட்டாள். என் மூளைக்குள் சுளீரென்று ஒரு அறிவு வெட்டியது. நிமிஷா நாய்க் குட்டிகளை எப்படிப் பார்ப்பது என்ற சூட்சுமத்தைச் சொல்லவில்லை. குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்கிற சூட்சுமத்தைத்தான் சொல்லியிருக்கிறாள்.

பிள்ளைகளின் உலகத்தில் பிள்ளைகளுக்கான நீதிதான் செல்லும். பிள்ளைகளை வளர்க்கக் கூடாது, வளர்வதை வேடிக்கைதான் பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

முக்கால் டவுசர் முழுசாக அழுக்கு ஆனாலும் பரவாயில்லை என்று நானும், நிமிஷா பக்கத்தில் புழுதி மண்ணில் மண்டியிட்டு உட்கார்ந்து நாய்க் குட்டிகளைப் பார்க்க ஆரம்பித்தேன். மூக்குக்கு வெரு அருகில் நாய்க் குட்டிகளைப் பார்ப்பது எத்தனை அற்புதமானது என்று நான் ஆச்சர்யப்பட்டபோது, “கீழ விழுந்திட்டீங்களா?” என்று அதிர்ச்சியோடு கேட்டபடி வந்தாள் நிமிஷாவின் அம்மா.

நாய்க் குட்டிகளையும், அதற்குப் பக்கத்தில் ஆடுபோல மண்டியிட்டு நின்றிருந்த என்னையும் கேவலமாகப் பார்த்தாள். “குழந்தை பொறந்த பின்னாடியும் நீங்க திருந்தறதா இல்லே! இன்னும் மோசமான லூஸாத்தான் ஆகறீங்க!” என்று அலுத்துக்கொண்டு போனாள்.

அறிவும், ஞானமும் பெற்ற ஞானிகளைக் கிறுக்கர்கள் என்று சொல்வது உலகத்தில் இது ஒன்றும் புதியதில்லையே என்று குதர்க்கமாக யோசிக்கத் தெரிந்த எனக்கு, குட்டி போட்ட நாய் கோபத்தோடு பின்னால் நின்றாலும் நிற்கும் என்று யோசிக்கத் தெரியவில்லை. அதன் பிறகு ரேடியோ மெக்கானிக்குக்கு குழந்தை பிறந்ததைப்பற்றி யாரும் அதிசயமாகப் பேசவில்லை. ரேடியோ மெக்கானிக்கை ஒரு தெரு நாய் எங்கே கடித்தது என்றுதான் ஆர்வமாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள்!

சென்ஷி

unread,
Apr 13, 2010, 7:45:27 AM4/13/10
to panb...@googlegroups.com

2. ஊமைச் செந்நாய் - ஜெயமோகன்

யானைத்துப்பாக்கியை தூக்கி தனக்கு இணையாக நிறுத்திக்கொண்டு துரை என்னைப்பார்த்து கண்ணைச்சிமிட்டினான். பெரும்பாலான துரைகளுக்கு கண்களைச் சிமிட்டும் பழக்கம் உண்டு. சின்னவயதில் நானும் என்ன செய்வதென்று தெரியாமல் பதிலுக்கு கண்களைச் சிமிட்டிக் காட்டுவேன். அது துரைகளுக்கு கோபத்தை உருவாக்கும் என்று சீக்கிரமே புரிந்து கொண்டேன். அதன்பின் முப்பதுவருட வேட்டைத்துணைவனின் வாழ்க்கையில் நான் மிகமிக அமைதியாக இருக்கக் கற்றுக்கொண்டேன். வேட்டை நாய் எப்படி இருக்குமோ அப்படி இருப்பேன். நான் கூடச்செல்வதே தெரியாது. தேவையான இடத்தில் மட்டும் சைகை செய்வேன். சைகைமூலம் சொல்லமுடியாத விஷயத்துக்கு மட்டும் குரல். அதுவும் ஒருசொல் அல்லது இரண்டு சொல். எனக்கு ஆங்கிலம் சொற்களாகத்தான் தெரியும். ஆகவே என்னை ‘ஊமைச்செந்நாய்’ என்று அவர்கள் அழைத்தார்கள்.

”என்னை வில்சன் என்று கூப்பிடு” என்றான் துரை. அவனுக்கு நாற்பது வயதுதான் இருக்கும். ஆனால் நம்மூரில் நாற்பதுவயதில் இருபது வயதான மகன் வந்து அவனுக்கும் பிள்ளை பிறந்து தாத்தா ஆகி மிச்சமிருக்கும் நாட்களை எண்ண ஆரம்பித்திருப்பார்கள். தொப்பை சரிந்து தடைக்கு கீழே சதை தொங்கி கண்ணுக்கு கீழே கறை விழுந்து தெரிவார்கள். துரை இறுக்கமாக பனைநாரால் பின்னிச் செய்தவன்போல இருந்தான். நரம்புகள் பச்சை நிறமாக தோளிலும் கழுத்திலும் கைகளிலும் தெரிந்தன. உதடே கிடையாது.காட்டுபூனையின் கண்கள். இரு பக்கங்களிலும் கைகளைக் கொடுத்து அழுத்திச் சப்பியது போன்ற முகம் அவனுக்கு. மூக்கு நீளமாக வயதான கழுகின் அலகு போல. தேங்காய்நார்போன்ற தலைமுடி. சேற்றுப்பாறை போல மடிப்பு மடிப்பாக இறுகி இருந்த அவன் வயிற்றைப் பார்ப்பவர்கள் அவன் ஒரே வேளையில் இரண்டு காட்டுச்சேவல்களைத் தின்பவன் என்று நம்ப மாட்டார்கள்.

துரையளவுக்கு உயரம் இருந்தது துப்பாக்கி. அதன் கட்டைக்கு நல்ல ஈட்டியை போட்டிருந்தார்கள். கைபட்டு கைபட்டு எண்ணை ஊறி வழவழப்பாக கறுத்திருந்த அந்த தடி ராஜநாகம் போலிருந்தது. அதன்மீது நல்ல மினுமினுக்கும் உருக்கில் இரட்டைக்குழாய்கள். துப்பாக்கியின் விசைக்கொண்டி பித்தளை. அதில் விரல்படும் இடம் பொன்னிறமாக இருந்தது. சொந்த தம்பியை கூட நிறுத்தி அணைத்துக் கொள்பவன்போல துரை நின்று புளியங்கொட்டைகள் போன்ற பற்களைக் காட்டி சிரித்தான். ”எப்படி இருக்கிறது?” என்றான். நான் புன்னகை செய்தேன்.”ஒரே குண்டுபோதும். மத்தகம் பிளந்து மூளை வெளியே கொட்டும்….வெண்ணைப்பானை உடைவது போல” நான் அவன் சொன்னதைப் புரிந்துகொண்டாலும் அதே புன்னகையை மட்டும் காட்டினேன்.

”நாம் நாளைக்காலை கிளம்புவோம். விடிவதற்கு முன்பாக…”என்றான் துரை.  நான் அதற்கும் புன்னகை மட்டுமே செய்தேன். துப்பாக்கியை மெல்ல சாற்றிவிட்டு அவன் நாற்காலியில் அமர்ந்தான். கால்மேல் கால் போட்டுக்கொண்டு ஒரு வெள்ளி சம்புடத்தை எடுத்து திறந்து உள்ளிருந்து ஒரு சுருட்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான். கரிய ஆண்குறி போல பெரிய சுருட்டு. அதை பற்றவைக்க அவனிடம் ஒரு கருவி இருந்தது. அதை பலமுறை சொடுக்குவான். சிட்டுக்குருவி சிலைப்பு போன்ற அந்த ஒலி எனக்குப் பிடிப்பதில்லை. என் முதுகு சிலிர்த்துக் கொண்டிருக்கும். அதில் சுடர் அடியில்சிவப்புள்ள நீலநிறத்தில் சங்குபுஷ்ப இதழ் போல எரிய ஆரம்பித்ததும் அதில் சுருட்டை கருக்குவான். சுருட்டு புகைய ஆரம்பிப்பது எனக்குப் பிடிக்கும். பின்னர் புகையை ஊதி உள்ளிழுத்து மூக்கு வாய் வழியாக வெளியே விடுவான். அவன் வரும் மோட்டாரின் பின்பக்கம் அதேபோலத்தான் புகை எழுகிறது.

நான் நின்றுகொண்டிருந்தேன். துரை என்னைப் பார்த்து ”ஒரு சுருட்டு எடுத்துக்கொள்”என்றான். நான் அதை மறுத்தேன். மறுக்க வேண்டும் என்றுதான் துரைகள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அந்தச்சுருட்டு அதன் காகிதச் சுருள் வரை வந்ததும் எனக்கு தந்துவிடுவார்கள். நான் அப்படி நிறைய சுருட்டு வைத்திருந்தேன். என் மடியில் கூட இரண்டு சுருட்டுத்துண்டுகள் இருந்தன. தினம் இரு முறை நான் சுருட்டு பிடிப்பேன். சாராயம் குடித்தபின் சுருட்டை இழுக்க மிகவும் பிடிக்கும். துரையின் பற்களில் சுருட்டுக்கறை அடுப்புக்கல் போல பழுத்திருந்தது. அவன் சுருட்டு பிடிக்கும்போது ஏதாவது ஒரு திசையைக் கூர்ந்து பார்ப்பான். மெல்ல ஆங்கிலத்தில் முனகிக் கொள்வான். அது பெரும்பாலும் ஏதாவது பாட்டாக இருக்கும்.

துரை என்னிடம் மிஞ்சிய சுருட்டைத் தந்ததும் நான் அதை வாங்கி குத்தி அணைத்து மடியில் வைத்துக் கொண்டேன். மெதுவாக பின்னுக்கு நகர்ந்து பங்களாவின் பின்பக்கம் சமையலறைக்குச் சென்றேன். தோமா சமையல் செய்துகொண்டிருந்தான். நான் வெளியே நின்றேன். ”எந்தா கோணா, எந்து காரியம்?” என்றான். நான் மெல்ல ”சோறு?” என்றேன். ”இரியெடே…சாயிப்பு உண்டிட்டில்ல….நினக்கு நாய்க்கும் பின்னீடு ஆவாம்…” என்றான்.

நான் சமையலறையின் சிறிய வராந்தாவிலேயே அமர்ந்திருந்தேன். பங்களாவின் முன்னால் நின்ற பெரிய இலந்தைமரத்தின் உச்சியில் ஒரு தேன்கூடு, அல்ல அது பழஉண்ணி. பெரியது. நிதானமாக, கொடிக்கயிறில் மழைத்துளி போவதுபோல,  கிளைவழியாகச் சென்றது. பழ உண்ணியைப் பிடிக்கவேண்டுமென்றால் அதன் வழியை நன்றாக கவனித்தபின் அங்கே பொறி வைக்க வேண்டும். அதன் வழியைக் கண்டுபிடிப்பது எளியது. முகர்ந்துபார்த்தால் போதும். பழ உண்ணி தலைகீழாக கிளையில் நகர்ந்து இலைகளுக்குள் சென்றது.

பெரிய தட்டில் முழுதாகப் பொரித்த இரண்டு வான்கோழிகளுடன் தோமா முன் அறைக்குச் சென்றான். பிறகு சீமைப்பலாவும் பன்றியிறைச்சியும் போட்டுச்செய்த கறி, செங்கல் போன்ற பெரிய ரொட்டி, ஒரு பெரிய கண்ணாடி குடுவை நிறைய  நிறைய பொன்னிறமான அன்னாசிப் பழச்சாறு. பெரிய வெள்ளைத்தகரப்பாத்திரம் நிறைய வெங்காயம் வெள்ளரிக்காய் உப்பு போட்ட முள்ளங்கி துண்டுகள். அவன் உள்ளே அவற்றை பரப்பி வைப்பதை என்னால் காண முடிந்தது. பங்களாவின் ஜன்னல்கள் மிகவும் பெரியவை. தாழ்வானவையும்கூட.  தோமா அங்கே தொங்கிய ஒரு நாழிமணியின் நாவை பிடித்து ஒருமுறை அடித்தான்.

துரை எழுந்து வந்து ஒரு வெண்ணிறத் துண்டை கழுத்தில் கட்டிக்கொண்டு அமர்ந்து கொண்டான். மனைவி போல தோமா அருகே நின்று துரைக்கு முதலில் காய்கறிக¨ளை பரிமாறினான். துரை பூனைக்கால் கரண்டியால் அவற்றைக் குத்தி எடுத்து வாயிலிட்டு உதடுகளை மூடிக்கொண்டு மென்று தின்றான். அவனது சவரம் செய்யப்பட்ட தாடை உரித்த கோழியின் தொடை போல சிவப்பாக இருந்தது. அவன் மெல்வதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பின் வான்கோழிகளை கத்தியால் வெட்டி பூனைக்கால் கரண்டியால் குத்தி பிய்த்து தின்றான். அவன் பழச்சாறை குடித்து முடித்ததும் அருகே நின்ற தோமா அவன் வாயை துடைத்தான்.

நான் காத்திருந்தேன். தோமா தட்டுகளுடன் வந்தான்.  அவற்றில் வான்மோழியின் எலும்புகளும் கொஞ்சம் சதையும் இருந்தன. தோமா தனக்காக சோறு பொங்குவான். தேங்காய் போட்டு வான்கோழிக் குழம்பும் வைப்பான்.  கொஞ்ச நேரத்தில் எனக்கு சட்டியில் சோறு வந்தது. வான் கோழிக்குழம்பு ஊற்றப்பட்டிருந்தாலும் துண்டுகள் இல்லை. துரை மிச்சம் வைத்த பொரித்த கோழி எலும்புகளை சோற்றுடன் சேர்த்து போட்டிருந்தான். நான் ஆவலுடன் சோற்றை வாரி வாரித் தின்றேன். நான் காலைமுதலே ஒன்றும் சாப்பிடவில்லை. மேலும் எனக்கு வேகமாக தின்றுதான் பழக்கம்.

சுருட்டை எடுத்து மூக்கில் வைத்து அதன் வாசனையை முகர்ந்த பிறகு நான் மெல்ல நழுவி கக்கூஸ் சுவருக்கு அருகே அமர்ந்து என் கச்சையில் இருந்து சிக்கிக்கல்லை எடுத்து உரசி நுங்கெண்ணை தோய்த்த பஞ்சுப் பிசிறை பற்ற வைத்து சுருட்டை கொளுத்தினேன். அதை ஆழமாக இழுத்து மெல்லமெல்ல விட்டேன். என் மனதில் சிந்தனைகள் நிறைந்தன. ஆனால் நான் எதைப்பற்றி சிந்திக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை.

தோமா என்னை அழைத்த ஒலி கேட்டு ஓடிச்சென்றேன். ”சாயிப்பினு பெண்ணு வேணும்…ஓடிப்போ”. நான் கொல்லைப்பக்கம் பள்ளத்தில் இறங்கி ஊடு வழியை அடைந்து அதன்வழியாக காட்டுக்குள் சென்றேன். காட்டுக்குள் மதிய வெயில் ஆறுவதன் வெக்கை இலைமணத்துடன் கலந்து வீசியது. ஒரு கீரி என் வழியை கடந்து சென்றது. செள்ளைப்பாறை ஏறி மறுபக்கம் சென்று ஒடைக்கரையில் இருந்த குடிகளை அடைந்தேன். என்னைக்கண்டதும் அங்கே கூவைக்காயை உரலில் இடித்துக்கொண்டிருந்த பெண்கள் வேலையை நிறுத்தி கூர்ந்து பார்த்தாகள்.

”துரையினு கூட்டு வரணும்” என்று சொன்னேன். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. தரையில் இருந்த சேவப்பெண்ணை பார்த்தார்கள். சேவப்பெண்ணை நான் பையனாக இருந்தபோது பார்த்திருக்கிறேன். அப்போது அவள் முலைகள் தேங்காய் போல இருக்கும். இப்போது அவை தூக்கணாங்குருவிக்கூடுகள் போல இருந்தன. சேவப்பெண்ணு என்னை பார்த்து ”நீயல்லடா எரப்ப நாயி?” என்றாள். நான் புன்னகைத்தேன். ”சோதி நீ போயிட்டு வாயெடீ” என்றாள் கிழவி. ”சோதி வேண்டா…” என்றேன் ”துரை அடிப்பான்” கிழவி தூ என்று துப்பி ”சோதி மதி…நீ போடி பெண்ணே”என்றாள்

சோதி என்னுடன் வரும்போது தலை குனிந்து மெல்ல அழுதபடியே வந்தாள். விசும்பல் ஒலி கேட்டு நான் ”நீ எந்தெடீ குட்டி கரையுந்நே?” என்றேன். அவள் தூ என்று தரையில் துப்பினாள். நான் அதன்பின் அவளைப் பார்க்கவில்லை. நாங்கள் மீண்டும் பங்களாவை அடைந்தபோது தோமா வாசலிலேயே நின்றான். ”இவளா? இவளை அந்நு சாயிப்பு சாட்டை கொண்டு அடிச்சானே”என்றான்.

தோமா சோதியை கூட்டிச்சென்று முற்றத்தில் வைத்தே அவளுடைய முண்டுகோந்தலையை அவிழ்த்து நிர்வாணமாக ஆக்கினான். அவள் தன் கையால் முலைகளை பொத்தியபடி கண்ணீருடன் என்னைப் பார்த்தாள். அவளுடைய பின்பக்கம் பருத்து இரு பலாக்காய்களை சேர்த்து வைத்தது போல் இருந்தது. தோமா அவள் புட்டத்த்¢ல் படீரென்று அடித்து ”போ போ” என்றாள். அவள் தயங்கி உள்ளே செல்வதற்கு முன் என்னை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

நான் வராந்தாவில் மீண்டும் கால் மடித்து அமர்ந்துகொண்டேன். தோமா பக்கவாட்டில் சென்று நின்று ஜன்னல் வழியாக உள்ளே பார்த்து சிரித்தான். திரும்பி என்னைப்பார்த்து வா வா என்று கைகாட்டினான். நான் எழுந்து தோமாவின் அருகே நின்றேன். உள்ளே துரை நிர்வாணமாக நின்று தரையில்  அமர்ந்திருந்த சோதியின் முகத்தை தன் இடுப்புடன் சேர்த்து, அவள் தலைமயிரைப் பிடித்து இறுக்கி வேகமாக அசைத்தான். அவள் மூச்சுத்திணறி துடித்துக் கொண்டிருந்தாள்.

தோமா என்னிடம் பெரிய பற்களைக் காட்டி சிரித்தான். நான் பேசாமல் நின்றேன். கொஞ்ச நேரத்தில் துரை மாட்டுத்தோல் சாட்டையால் சோதியை அடித்துக்கொண்டே நரி குழறுவது போல ஏதோ சொன்னபடி அவளை துரத்தி வந்தான். அவள் முலைகள் குலுங்க ”என்றே தேவே…என்றெ தேவே”என்று அலறியபடி ஓடி வந்து முற்றத்தில் நின்றாள். நிர்வாணமாக வந்த துரை முற்றத்தில் துப்பி விட்டு உள்ளே போனாள். சோதி தரையில் குந்தி அமர்ந்து ஓங்கரித்து கோழையைத் துப்பினாள்.

தோமா அவளை தலைமுடியைப் பிடித்து தூக்கி சமையலறைக்குள் இழுத்துக் கொண்டு சென்றான். அவள் ”என்றெ தேவே என்றெ தேவே’ என்று சொல்லி அழுதுகொண்டிருந்தாள். அவன் உள்ளே சென்றதுமே அவளை கீழே தள்ளிப் போட்டு மேலே படுத்துக் கொண்டான். நான் அவன் செய்வதை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பழ உண்ணி கீழே இறங்கி வருவதைக் கண்டேன். அது அடுத்த மரம் நோக்கி வேகமாக ஓடிப்போய் ஏறிக் கொண்டது.

நிர்வாணமாக சோதி வந்து என்னிடம் அவளுடைய முண்டுதுணியை எடுத்து தரச்சொன்னாள். நான் எடுத்துக் கொடுத்ததும் அதை அவள் தோளில் முடிச்சிட்டு தற்றுடுத்துக் கொண்டாள். தோமா பீடி பற்ற வைத்தபடி உள்ளிருந்து வந்து ”இந்நாடீ , இதெடுத்தோ”என்றான். அவன் சுட்டிக்காட்டிய பெரிய சட்டியில் பழையசோறும் வான்கோழிக்கறியும் சேர்த்து கொட்டப்பட்டிருந்தது. சோதி அந்த சட்டியை எடுத்துக் கொண்டாள்.

நாங்கள் நடந்து செல்லும்போது அவள் தலைகுனிந்தே வந்தாள். நான் சட்டியை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன். அவள் திரும்பியே பார்க்கவில்லை. முச்சலோடை அருகே வந்தபோது அவள் சட்டியை கீழே வைத்துவிட்டு முண்டுசுற்றை அவிழ்த்து கரையில் வைத்துவிட்டு நீரில் இறங்கினாள். அவளுடைய முலைகள் நீரில் மிதப்பதைப் பார்த்துக்கொண்டு இலஞ்சி மரத்து வேரில் அமர்ந்திருந்தேன். அவள் என்¨னைப் பார்க்கவில்லை. நீரில் இருந்தபடியே சேற்றுமண் எடுத்து பல் தேய்த்தாள். பிறகு எழுந்து வந்து என்னை தாண்டிச்சென்று உடையை எடுத்தாள். அவளை நான் திரும்பிப்பார்த்தபோது அவள் கூந்தல் புட்டத்தில் நீரைச் சொட்டிக்கொண்டிருந்தது.

சட்டென்று சோதி என்னை பின்னாலிருந்து வந்து அணைத்துக் கொண்டாள். அவளுடைய குளிரான கனத்த முலைகளை நான் என் முதுகில் உணர்ந்தேன். உடனே நான் அவளை திரும்பி தழுவிக்கொண்டேன். அவளுடைய கைகளும் கால்களும் என்னை இறுக்கிக் கொண்டன. அவள் என்னை ”நாயே நாயே” என்று திட்டிக்கொண்டும் என் முதுகை தன் நகங்களால் பிராண்டிக்கொண்டும் இருந்தாள். கடைசியில் என் தோளில் அத்தனை பற்களும் பதிந்து ரத்தம் வரும் அளவுக்கு கடித்தாள்.

பின்னர் நாங்கள் இருவரும் ஓடையில் இறங்கிக் குளித்தோம். இலவம்பஞ்சு வெடித்ததுபோல சிறிய வெண்பற்கள் காட்டி அவள் சிரித்து என் மீது வண்டலை வாரி வீசினாள். நான் குளித்தபின் என்னுடைய காக்கி நிக்கரையே மீண்டும் அணிந்துகொண்டேன். எனக்கு ஒரே நிக்கர்தான் உண்டு. அவள் எழுந்து தன் உடைகளை அணிந்து கொண்டு சட்டியை எடுத்தாள். என்னிடம் ”பயிக்கிணா?” என்றாள். எனக்குப் பசித்தது. ”ஆந்நே” என்றேன்.

அவள் ஒரு தேக்கிலையை பறித்து பரப்பி அதில் குழம்பு கலந்த பழைய சோற்றை போட்டாள். நான் வேகமாக தின்றேன். ”தோனே  வேணுமா?” என்று கேட்டபோது தலையாட்டினேன். நானே எல்லா சோற்றையும் தின்றுவிட்டேன். அவள் சட்டியை ஓடையில் கழுவினாள். நான் ”நினக்கு நான் மானிறைச்சி தரும்”என்றேன். ”எப்போ?” என்றாள். ”நெலாவு கறுக்கும்போ…நாளையிலெ நான் ஆனை வேட்டைக்கு போகும்”என்றேன். அவள் என்னைப் பார்த்தபடி கொஞ்ச நேரம் இருந்துவிட்டு ”காரிக்கொம்பனையா?”என்றாள். ”ஓ” என்றேன்.

சோதி ”காரிக்கொம்பனுக்கு மலதெய்வம் மாதி துணையுண்டு….தீயுண்டை அவன்டெ மேலே கொள்ளுகில்ல”என்றாள். நான் மலைதெய்வங்கள் துரைகளைப் பார்த்தால் பயபப்டும் என்றேன். மலைதெய்வங்களெல்லாம் இப்போது மலைதாண்டி பாண்டிநாட்டுக்கு போய்விட்டன என்று தோமா என்னிடம் சொன்னான். சத்திய வேத தெய்வம் மட்டும்தான் இனி மலைகளுக்கு தெய்வம். அது துரைகளுக்குக் கட்டுப்பட்ட தெய்வம். அந்த தெய்வம் யானைகளுக்குக் காப்பு அல்ல. ஆகவே காரிக்கொம்பனை துரை கண்டிப்பாகக் கொல்வார்.

சோதி பேசாமல் எழுந்து சட்டியுடன் நடந்தாள். நான் அவள் பின்னால் சென்றேன். அவளை பின்தொடர்ந்து சென்று சத்தியவேத தெய்வத்தைப்பற்றி தோமா சொன்னதைச் சொல்ல விரும்பினேன். சோதியின் குழந்தைகளுக்கு தேன் கொண்டு கொடுக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் அந்த பழ உண்ணியைப்பற்றி நினைக்க ஆரம்பித்தேன்.

சோதியைவிட்டுவிட்டு நான் திரும்பி வந்தேன். தோமா சமையல் அறைக்குள் வாயை திறந்து வைத்து கனத்த குரட்டை விட்டுக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான். நான் அவனைப்பார்த்தபின் மெல்ல உள்ளே போய் சட்டியை திறந்து மிஞ்சியிருந்த கோழிக்கறியின் துண்டுகளை எடுத்துத் தின்றேன். அதன்பின்னர் பங்களாவுக்கு வந்தேன். துரை உள்ளே குரட்டை விடும் ஒலி கேட்டது. நான் மெல்ல நடந்து உள்ளே சென்றேன்.

துரையின் மேஜைமீது நீலநிறமான வாத்துக்கழுத்து குப்பியில் சீமைச்சாராயம் இருந்தது. மெல்லிய கண்ணாடியால் ஆன கொக்குக்கால் கோப்பையில் கொஞ்சம் சாராயம் மிச்சம் இருந்தது. நான் சராயத்தை ஊற்றி நாலைந்து முறை குடித்தேன். பின் அந்தக் குப்பியில் இருந்தும் கொஞ்சம் குடித்தேன்.காட்டில் அம்மச்சிப்பலா அருகே பலாப்பழம் பழுத்து உதிர்ந்து அழுகி நாறுவது போல ஒரு இனிமையான குமட்டல் அதற்கு.

அதன் பின் மெல்ல உள் அறைக்குச் சென்றேன். அங்கே அந்த யானைத்துப்பாக்கி சுவரில் மாட்டப்பட்டு நின்றிருந்தது. அதை கையில் எடுத்துப்பார்த்தேன். பெண்ணின் கை போலவே மென்மையாக இருந்தது. அதன் குழாயில் என்னுடைய பிம்பம் சப்பிப்போய் தெரிந்தது. அதை திறந்து குழாய் வழியாக கண்ணை வைத்துப் பார்த்தேன். இரண்டு குண்டுகளை அதில் ஒரே சமயம் போட முடியும். குழாய்க்கு ஒரு குண்டு. அதன் வழியாக நான் ஜன்னலுக்கு அப்பால் தெரிந்த காட்டை பார்த்தேன். எனக்கு பாட வேண்டும் போலிருந்தது. எனக்கு சின்ன வயதில் என் தாத்தா சொல்லித்தந்த பாட்டை பாடினேன்.

கன்னங்கறுத்திட்ட பாறையாணே -ஓளே
பென்னம்பெரியொரு பாறையாணே
தும்பிக்கை உள்ளொரு பாறையாணே -ஓளே
அம்பரம் போலத்தே பாறையாணே…
[ 2 ]
மறுநாள் அதிகாலையில் நான் குளிருக்குள் எழுந்து தோமாவை எழுப்பினேன். அவன் என்னை ”புலையாடி மோனே” என்று திட்டியபடி எழுந்து சிலுவை போட்டபின்பு போய் அடுப்பில் ஒரு சில்லாட்டையை பற்றவைத்து காப்பிக்கு தண்ணீர் போட்டான். நான் சென்று துரையின் சப்பாத்துகளை எடுத்து வைத்தேன். அவற்றை நேற்றே பாலீஷ் போட்டு வைத்திருந்தேன். வராண்டாவில் நான் காத்து நின்றபோது தோமா கையில் பெரிய வெள்ளைத்தகரக் கோப்பையில் சூடான காப்பியுடன் சென்று துரையை எழுப்பினான். துரை தலைக்குமேல் கம்பிளியை இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான்.

அவனருகே நின்று தோமா ”குட்மானிங்! குட்மானிங் !” என்று நிறைய தடவை சொன்னான். போர்வைக்குள் இருந்து துரை குழறலாக ஏதோ சொன்னான். தோமா அதற்கும் ”குட்மானிங்!” என்றான். துரை போர்வையை விலக்கி எழுந்து அமர்ந்து தோமாவின் கன்னத்தில் அறைந்தான்.  ”டாமிட் ஸ்டுபிட்….கண்ரி ·பூல்… ·பக் யுவர் ஆஸ்” என்று அவன் வழக்கமாகச் சொல்வதைச் சொன்னான். அடிபட்டபோதும் தோமா காபியை தளும்ப விடவில்லை. ”காபி சாய்பே”என்று பவ்யமாக நீட்டினான்.

துரை ஒன்றும் சொல்லாமல் காபியை ஊதி ஊதி குடிக்க ஆரம்பித்தான். தோமா அதற்குள் பக்கத்து அறைக்கு ஓடினான். துரை டீ குடித்த பின்னர் நிர்வாணமாக எழுந்து பின்பக்க அறைக்குச் சென்றான். அங்கே ஒரு மர முக்காலியில் ஓட்டை போட்டு வைத்திருந்தான். அதன் கீழே தோமா நாலைந்து தேக்கிலைகளை பரப்பி வைத்திருந்தான். துரை முக்காலியில் அமர்ந்து மலம் கழிக்க ஆரம்பித்தான். அப்போது தோமா அவனுக்கு பனையோலை போலிருந்த மென்மையான கூரிய கத்தியால் ஷேவ் செய்து விட்டான். முகத்தை தைலம்போட்டு துடைத்து முடித்த பின்னர் துரையின் பின்பக்கத்தை ஒரு பெட்டியில் இருந்து எடுத்த இலவம்பஞ்சால் நன்றாக நாலைந்து முறை துடைத்தான்

துரையை ஈரமான டவலால் தோமா துடைத்துவிடுவதை நான் பார்த்துக்கொண்டு நின்றேன். அந்த பங்களாவில் எல்லா கதவுகளும் மிக அகலமானவை. உயரமானவை. முன்வாசல் கதவை மட்டுமே இரவில் மூடுவார்கள். எல்லா அறையும் எல்லா இடத்திலும் தெரியும். துரை எழுந்து ஒரு மரத்தொட்டியில் தோமா கொண்டு வந்து வைத்த வெந்நீரால் தன் முகத்தையும் கைகளையும் அக்குளையும் கழுவிக்கொண்டான். அதன் பின் தோமா அவனை துடைத்தான்.

துரை தன் காக்கி கால்சட்டைக்குள் கால்களை நுழைத்து அதன் மீது நிறைய பைகள் தைத்த காக்கி சட்டையை அணிந்து உள்ளே செலுத்தினான். அப்போது அவன் ஒரு மரப்பொம்மை போல ஆகிவிட்டதாக எனக்குத் தோன்றியது. முழங்கால்களுடன்கூடிய பெரிய ரப்பர் சப்பாத்துக்களைப் போட்டபின் யானைத்துப்பாக்கியை எடுத்தான். அதன் குழாயை திறந்து உள்ளே கண்விட்டு பார்த்தான். சுவர் அடுக்குப்பெட்டியில் இருந்து சிறிய அலுமினியப்பெட்டியை எடுத்து அதில் இருந்த சிறிய கரிய புட்டியை எடுத்து  திறந்தபோது எரியும் தைலமணம் எழுந்தது. அந்த கரிய குழம்பை பஞ்சில் தேய்த்து குச்சியில் பொருத்தி உள்ளே விட்டு இழுத்தான். அதே எண்ணைக்குழம்பை துப்பாக்கியின் விரல்வளையத்துக்கு உள்ளே இருந்த இடைவெளிவழியாக விட்டு உள்ளே இருந்த சிறிய சக்கரங்களில் பூசினான்.

என்னிடம் ” இவள் ரொம்ப அழகி இல்லையா?” என்று கேட்டு கண்ணைச் சிமிட்டினான். அப்போதுதான் துரை அந்த துப்பாக்கியை பெண்ணாக நினைப்பது எனக்குப் புரிந்தது. அதை மெல்ல முத்தமிட்டு விட்டு ”அவள் வெடி நிறைந்தவள்..”என்று என்னிடம் சொல்லி மடியில் கிடைமட்டமாக வைத்துக் கொண்டான். அதன் வளைவில் என் தோற்றம் ஒரு நிறமாக தெரிந்தது.

தோமா ரொட்டியும் பொரித்த கோழியும் பால் இல்லாத காபியும் கொண்டுவந்து பரிமாறிவிட்டு மணியை அடித்தான். துரை சாப்பிட ஆரம்பித்தபோது நான் பேசாமல் நின்றேன். துரை எனக்கு ஒரு ரொட்டித்துண்டை எடுத்து வீசினான். நான் அதைப்பொறுக்கி மண்போக ஊதிவிட்டு வேகமாக தின்றேன். அதற்குள் எனக்கு கோழித்தொடை ஒன்றை அவன் எறிந்தான். துரை சாப்பிட்டு எழுந்ததும் நான் வெளியே சென்றேன்.

எடை குறைவான பெரிய மரப்பெட்டியில் துரைக்கு தேவையான பொருட்கள் நான்குநாட்கள் முன்னரே எடுத்து வைக்கப்பட்டிருந்தன.மென்மையான காகிதங்களில் சுற்றப்பட்ட நன்றாக வெயிலில் உலர்த்திய ரொட்டிகள். டப்பாக்களில் காற்று புகாமல் அடைக்கப்பட்ட வெண்ணை. சாராயக்குப்பிகள். மாற்று உடைகள். இன்னும் ஒரு சப்பாத்து. கூடாரம் கட்டும் துணி என்று பலவகையான பொருட்கள். அவற்றை முறையாக உள்ளே அடுக்கவும் திருப்பி எடுக்கவும் என்னால் மட்டும்தான் முடியும்.

துரை தன் தோளில் மாட்டிய தோல்வார் கொண்ட கித்தான் பையில் வடக்குநோக்கி கருவி, பாட்டுபெட்டி ஆகியவற்றையும் துப்பாக்கிக்குரிய அலுமினியப்பெட்டியையும் புகையிலை டப்பாவையும் வைத்தான். தலையில் கட்டிக்கொள்ளும் விளக்குகள். கையில் பிடித்துக்கொள்ளும் விளக்கு ஆகியவையும் அவனிடம்தான் இருந்தன. என்னுடைய பெட்டிக்குள் பத்து பேட்டரிகள் மேலதிகமாக வைத்திருந்தேன். துரை ஒரு துவாலை பத்து கைக்குட்டைகள் ஆகியவற்றையும் எடுத்துக்கொண்டான். கழுத்தில் தூரநோக்கி குழாயை தொங்கவிட்டான். துப்பாக்கி தோளில் குறுக்காக தொங்கியது. இடுப்பில் கட்டப்பட்ட தோல்பட்டையில் ஒருபக்கம் தோலுறைக்குள் சிறிய கைத்துப்பாக்கியும் இன்னொரு பக்கம் குடிநீர் பையும் தொங்கின.அலுமியியத்தால் ஆன ஊன்றுகம்பு. அதை விரித்து குத்திவிட்டு முக்காலிபோல உட்கார்ந்தும் கொள்ளலாம். துரை தயாரானதும் தோமா கொண்டுவந்த இன்னொரு காப்பியை சூடாகக் குடித்துவிட்டு தன்னுடைய காக்கி நிறமான சட்டித்தொப்பியையும் வைத்துக்கொண்டான்.

நான் பெட்டியை என் தோளில் வார்களைப் போட்டு பின்பக்கம் தூக்கிக்கொண்டதும் நாங்கள் கிளம்பினோம்.  நான் முந்தைய நாளே நன்றாக கூர் தீட்டி வைத்திருந்த என்னுடைய நீளமான கத்தியை எடுத்துக் கொண்டேன்.  துரை படிகளில் கால் வைத்ததும் ”ஜீஸஸ்!”என்று சொல்லி சிலுவைக்குறி போட்டுக்கொண்டான். பங்களாவில் இருந்து இறங்கி இடுங்கலான பாதை வழியாக நாங்கள் காட்டுக்குள் நுழைந்தோம்.

காலைநேரத்தில் காடு தலைக்குமேல் பறவைகளின் ஒலியால் நிறைந்திருந்தது. இருட்டு விலகாத இலையடர்வின் உள்ளே  இளமழை போல பனித்துளிகள் சொட்டின. நானும் துரையும் சில கணங்களிலேயே நன்றாக நனைந்து விட்டோம். குளிரில் என் உடம்பு சிலிர்த்து அசைந்து. துரை இருபக்கமும் பார்த்தபடி தனக்குள் ஏதோ முனகியபடி நடந்துவந்தான். துரை அவ்வளவு எளிதில் மூச்சுவாங்குவதில்லை என்பதை நான் கவனித்திருக்கிறேன். ஊரில் வாழ்பவர்கள் என்றால் சீராக மேடேறிச் சென்றுகொண்டே இருக்கும் இந்த ஒற்றையடிப்பாதையில் இதற்குள் மூச்சு திணறி நின்றிருப்பார்கள்.

காட்டில் அப்பகுதி முழுக்க காட்டிலந்தை, சீலாந்தி ,பெருநெல்லி, கொடுந்தை மரங்களும் தவிட்டைப்புதர்களும்தான். எவையுமே காயோ கனியோ கொட்டையோ தருவதில்லை. மேலே நெடுந்தூரத்துக்கு ஏறிய பின்பு காட்டுச்செடிகளின் அடர்த்திக்குள் சுழலிப்பாறை தெரிந்தது. பாறையின் வெடிப்பு வழியாக தண்ணீர் கசிந்து வழிந்தது. பாறையை அடைந்ததும் துரை மூச்சுவிட்டபடி சற்று அமர்ந்துகொண்டார். நான் பெட்டியை தரையில் வைத்துவிட்டு அமர்ந்து கொண்டேன். அப்போதெல்லாம் உடனடியாக தூங்கி விடுவேன். எனக்குதெரியாத எங்கெல்லாமோ சென்றுகொண்டிருந்துவிட்டு குரல் கேட்டதும் திரும்பி விடுவேன். அப்படி நான் போகும் இடங்களும் காடுகள்தான். ஆனால் நான் அங்கே நன்றாகவே ஆங்கிலம் பேசிக்கொண்டிருப்பேன்.

துரை ஒரு சுருட்டைப் பற்றவைத்தான்.சில நிமிடங்கள் ஆழமாக இழுத்துவிட்டு உடனே அதை குத்திஅணைத்து திரும்பி தன் இடுப்பு பைக்குள் வைத்துக் கொண்டபின் ”நேற்று அந்த பெண்ணை நீயா கூட்டி வந்தாய்?”என்றான். நான் ”அவள்தான் இருந்தாள்”என்றேன். ”அவளுக்கு நோய் இருக்கிறது. அவளை வரக்கூடாது என்று நான் சொல்லியிருந்தேன்…”என்றான். நான் ஒன்றும் சொல்லாமல் பார்த்தேன். ”பெருச்சாளி போல பார்க்காதே…இந்தியக் கறுப்புப் பெருச்சாளி… ”என்று சொல்லி துரை என் மீது ஒரு கல்லை எடுத்து எறிந்தான். ”கரடி போல நாற்றமடிக்கிறாள் அந்த வேசி…அவளை இனிமேல் கூட்டிவந்தால் உன்னையும் அவளையும் சுட்டுவிடுவேன்” துரை என் கண்களைப் பார்த்து ”டாமிட்”என்றான்.

மீண்டும் நாங்கள் கிளம்பி பாறைக்கு அப்பால் சரிந்து இறங்கும் காட்டுச்சாலையில் சென்றோம். அது யானைப்பாதை. அவ்வப்போது தேனெடுக்கும் காணிகளும் சென்றிருக்கலாம். மழைபெய்துகொண்டே இருப்பதனால் இலைகள் வளர்ந்து வழியை மூடியிருந்தன. சிலஇடங்களில் காட்டு ஈஞ்சையும் துடலியும் முள்கொடிகளை நீட்டியிருந்தன. அவற்றை வெட்டித்தள்ளி துரை வருவதற்கு வழிசெய்துகொடுத்தேன். துரை ஒரு செடியில் இருந்து பச்சைப்பாம்பு ஒன்றை சட்டென்று பிடித்தான். மிகவும் சின்ன பாம்பு. பச்சைநிறமான அரக்கால் செய்தது போல இருந்தது.

”பார் பச்சைக்கண்ணாடிக் குழாய் போல இருக்கிறது…”என்றான் துரை. அது அவன் பிடியில் நின்று நெளிந்து நாக்கை பறக்கச் செய்தது. அவனது முழங்கையில் வாலைச்சுற்றி வைத்துக்கொண்டது. நான் முன்னால் சென்றபோது பின்பக்கம் அந்த பாம்புடன் துரை மெல்ல ஏதோ சொன்னபடியே வந்து கொண்டிருந்தான். எனக்கு அந்த குரலை விட்டு கவனத்தை நீக்கவே முடியவில்லை. மெல்லமெல்ல என் பதற்றம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் நான் அவன் கையில் நெளியும் பாம்பைப்பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தேன்.

காட்டுக்குள் ஈரம் உலர்ந்து நீராவி எழ ஆரம்பித்தது. எனக்கு வியர்த்துக் கொட்டியது நான் நவரப்பச்சிலைகளைப் பறித்து மென்று சாற்றைக் குடித்து சக்கையை உமிழ்ந்து தாகத்தை தணித்துக்கொண்டு நடந்தேன். துரை தன் புட்டியில் இருந்து தண்ணீர் குடித்துக் கொண்டான். பாதையைக் கடந்து சென்ற கொடி காட்டுகும்பளம் என்று கண்டதும் நான் அதை தொடர்ந்துசென்று ஒரு கும்பளக்காயை பறித்தேன். அதன் சாறைக் குடித்து முடித்ததும் என்னுடைய தாகம் முழுமையாக நீங்கியது.

நாங்கள் மீண்டும் அமர்ந்தபோது துரை என்னிடம் ” இவள் நல்ல நடனக்காரி இல்லையா?”என்றான். பச்சைப்பாம்பு அதன் வாயைத்திறந்து மூச்சுக்காக ஏங்கியபடி எரியும் கயிறு போல முறுகியது. துரை அதை கீழே போட்டு தன் சப்பாத்தால் அதன் தலையை அழுத்தி தேய்த்தான் அதன் வால் தீயின் நாக்கு போல துடிதுடித்து சப்பாத்தின் பக்கவாட்டு ரப்பரில் அறைந்தபின் மெல்ல சொடுக்கிச் சொடுக்கி அசைவிழந்தது. துரை மீண்டும் அந்த எஞ்சிய சுருட்டை பற்றவைத்து இழுத்தான்.

நாங்கள் மீண்டும் கிளம்பி சுண்டுமலை நோக்கிச் சென்றோம். காட்டுக்குள் வெயில் கண்ணாடிக்குழாய்கள் போலவும், திரைசீலைகள் போலவும், காட்டருவி போலவும், பெரிய அடிமரங்கள் போலவும், சில இடங்களில் வெள்ளைச் சுவர் போலவும் விழுந்துகிடந்தது. வெயில் காற்றில் ஆடுவதைக் காட்டில்தான் காணமுடியும். இலைகள் மீது விழுந்த பச்சைநிற ஒளிவட்டங்கள் காற்றில் குளத்து நீரின் ஆம்பல் இலைகள் போல அலையடித்தன. வெயில் எங்கள்மீது அடிக்கவில்லை என்றாலும் நன்றாக புழுங்கியது. குளிர்ந்த காற்று மேலே பட்டபோது மெல்ல புல்லரித்தது.

மதிய உணவுக்கு என்று துரை ஒரு சிறிய ஓடையின் கரையில் நின்றான். ஓடையில் தெளிந்த நீர் பாசிபடிந்த உருளைப்பாறைகள் நடுவே சத்தமேதும் இல்லாமல் சாரைப்பாம்பு போல வழுக்கிச் சென்றுகொண்டிருதது. தண்ணீர் தேடி வந்த காட்டுச்செடிகள் நீரை நோக்கி அடர்ந்து வரம்பிட்டிருந்தன. பாறைகள் நடுவே கொக்குக்கால் விரல்கள் போல ஏராளமான வேர்கள் தெரிந்தன. துரை ஒரு பாறை மேல் அமர்ந்து கொண்டான்

நான் என் வாளுடன் காட்டுக்குள் புகுந்தேன். ஒரு நீளமான மூங்கிலை வெட்டி நுனியைச் செதுக்கி அதன் மீது என் இடுப்பில் இருந்து கூரிய ஈட்டிநுனியை எடுத்து ஒருமுறை பாறையில் தேய்த்துவிட்டு இறுகப்பொருத்தினேன். ஈட்டியுடன் தழைகள் நடுவே மெல்ல மெல்ல ஊர்ந்துசென்றேன். என்னை ஒரு சிறுத்தையாகக் கற்பனை செய்துகொண்டேன். சிறுத்தை செல்லும்போது மண் அதிரக்கூடாது. புல் அலையக்கூடாது. சிறுத்தை, மீன் நீரில் செல்வது போல காட்டுப்புதருக்குள் செல்லக்கூடியது

புதருக்குள் என் எதிரே நான் ஒரு மானைக்கண்டேன். கொம்பு விரியாத கேழைமான். அது படுத்திருந்த இடத்தில் இருந்தே என்னுடைய வாசனையைக் கேட்டு காதுகளை என்கப்பக்கமாக குவித்து முன்னங்காலை தூக்கி வைத்தது. என்னை அது பார்த்து உடல்சிலிர்த்து எழுவதற்குள் நான் ஈட்டியை எறிந்தேன். ஈட்டியுடன் அது பாய்ந்து ஒரு மரத்தில் முட்டி விழுந்து குளம்புகளை உதைத்துக் கொண்டது. நான் ஓடிச்சென்று அதை நெருங்கி ஈட்டியை பிடுங்கி அதன் இதயத்தைப்பார்த்து இருமுறை குத்தினேன். உடைந்த கருங்கல்சில்லு போல ஈரம் மின்னிய கரிய கண்களால் அது என்னைப் பார்த்தது. நேற்று நான் சோதியின் மேலே முரட்டுத்தனமாக இயங்கிகொண்டிருந்த போது அவள் கண்கள் அப்படித்தான் இருந்தன என்று தோன்றியது. அவளுக்கு உச்சம் வந்தபோது அந்த மானைப்போலத்தான் உலுக்கிக் கொண்டு தொண்டை கமறும் ஒலியை எழுப்பினாள். அதன் பின் அவள் கண்கள் அப்படித்தான் மெல்ல இமை மூடின

நான் அந்த மானை அங்கேயே போட்டு என் வாளால் அதன் தோலை உரித்தேன். சதையில் இளஞ்சூடும் துடிப்பும் இருந்துகொண்டே இருந்தது. தொடை நரம்பை வெட்டியதும் ரத்தம் என் கைகளை நனைத்தது. இதயத்தை வெட்டி எடுத்தபோது ஊற்றுபோல ரத்தம் என் மீது பீரிட்டு அடித்தது. தொடைச்சதைக¨ளையும் மார்புச்சதைகளையும் எலும்பு இல்லாமல் போதிய அளவு வெட்டி எடுத்து பரப்பிய தேக்கிலை மீது வைத்திவிட்டு கீழே கிடந்த கமுகுப்பாளை ஒன்றை எடுத்து பையாகக் கோட்டி அதில் இறைச்சியை நிறைத்து எடுத்துக்கொண்டு ஓடைக்கரைக்கு வந்தேன்.

காட்டில் எப்போதும் ஓடைக்கரையில்தான் காய்ந்த விறகு கிடைக்கும். ஓடைவழியாகச் சென்றபோது பாறைகள் ஓடையை திசை திருப்பிய இடத்தில் நீரில் வந்து மட்கி உலர்ந்த சுள்ளிகளும் மரங்களும் சிக்கி இருந்தன. உலர்ந்த மரங்களைப் பொறுக்கிக் கொண்டுவந்து குவித்தேன். தேக்கிலையில் மான்கறியை நன்றாக பொட்டலங்களாகக் கட்டி அதை ஓடையில் எடுத்த களிமண்ணில் பொதிந்து உருட்டி உருளைகளை அடுக்கி விறகு போட்டு தீயை மூட்டினேன். காட்டுக்குள் சென்று இலைகளை ஆராய்ந்து காய்ச்சிலைக் கண்டுபிடித்து, அதன் கொடியை தூக்கி வேரைக் கண்டுபிடித்து, கிழங்கை தோண்டி எடுத்து கொண்டுவந்து தீயில் போட்டேன்.

தீயருகே அமர்த்து கொண்டு கிழங்குகளையும் இறைச்சி உருண்டைகளையும் புரட்டிப்போட்டு சுட்டேன். களிமண் சிவந்து கருகியதும் உருட்டி எடுத்து ஓரமாக வைத்தேன் மூன்று உருண்டைகளைக் கொண்டுசென்று துரை அருகே தேக்கிலையில் வைத்தேன். துரை அதை சிறிய கல்லால் உடைத்தான். உள்ளிருந்து வெந்த வாசனையுடன் மானின் நெய் வழிந்தது. கறி உருகி வெந்து வெண்மை கொண்டிருந்தது. துரைக்கு என் பெட்டியில் இருந்து உலர்ந்த ரொட்டி வில்லைகளையும் சாராயக்குப்பியையும் எடுத்துக் கொண்டு சென்று வைத்தேன். அவன் மானிறைச்சியின் நெய்யில் உலர்ந்த ரொட்டியை தோய்த்து கடித்து மென்று தின்ன ஆரம்பித்தான்.நடுநடுவே சாராயத்தையும் ஓரிரு வாய் குடித்தான்.

துரைக்கு உப்பில்லாத கறி பிடிக்கும். எனக்கு கொஞ்சம் உப்பும் மிளகாயும் தேவைப்படும். வரும் வழியிலேயே காந்தாரி மிளகாய் பறித்து வைத்திருந்தேன். என்னிடம் எப்போதுமே உப்பு இருக்கும். மிளகாயையும் உப்பையும் சேர்த்து பாறையில் வைத்து இடித்து பசையாக ஆக்கி வைத்துக் கொண்டேன். காய்ச்சில்க்கிழங்கை உடைத்து சூடாக பிய்த்து எடுத்து மான்கறியில் கலந்து பிசைந்து உப்புமிளகாயில் தொட்டுக்கொண்டு தின்றேன். என்னால் இரண்டு இறைச்சி உருளைகளை மட்டுமே தின்ன முடிந்தது. துரை இன்னும் ஒரு இறைச்சி உருளை கேட்டான்.

துரை சுருட்டை தீயில் மீண்டும் பற்றவைத்து இழுத்தான். நான் தண்ணீர்விட்டு அதை அணைத்துவிட்டு ஓடையில் தண்ணீர் அள்ளி குடித்துவிட்டு புறப்பட ஆயத்தமாக என் பெட்டியை நன்றாக மூடி கட்டி அதன் வார்களை தோளில் மாட்டியபடி அமர்ந்திருந்தேன். மிஞ்சிய எட்டு இறைச்சி உருளைகளை பாளைப்பையில் போட்டு கையில் எடுத்துக் கொண்டேன். துரை ஏப்பம் விட்டு துப்பியபடி எழுந்ததும் நானும் பெட்டியுடன் எழுந்துகொண்டேன்.

நாங்கள் மெல்லமெல்ல இறங்கி சென்றுகொண்டே இருந்தோம். சுண்டுமலையின் உச்சி மரங்களுக்கு மேல் சாய்ந்த வெயிலில் ஒளிவிட்ட மடம்புகள் மடக்குகளுடன் தெரிந்தது. அதன் ஒருபக்கம் மழைநீர் வழிந்த கரிய தடம். மேலே நீல வானத்தில் இரண்டு மேகப்பொதிகள் மாபெரும் வெண்முயல்கள் போல நின்றன. முயல்களின் காதுகளைக்கூட பார்க்க முடிந்தது.

மலையை நோக்கிச் சென்று கொண்டே இருந்தோம். மலை நாங்கள் எத்தனை நடந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அங்கேயே இருந்தது. காட்டுக்குள் மெல்லமெல்ல வெளிச்சம் அணைய ஆரம்பித்தது. பறவைகளின் ஒலிகள் கனத்து ஒலித்தன. வானத்தில் கூட்டம் கூட்டமாக கொக்குகள் மேற்கு நோக்கிச் சென்றன. குளத்தில் பரல்மீன்கூட்டம் செல்வதுபோல் இருந்தது. கொசுக்கள் புகைப்படலம் போல பறந்துவந்து எங்கள் முகங்களில் அப்பின. துரை துப்பிக்கொண்டே இருந்தான்..

காட்டுக்குள் இருட்டு கனத்துக்கொண்டே வந்தது. அப்போதும் சுண்டுமலை தூரத்தில்தான் இருந்தது. அதன் மேல் இன்னொரு பெரிய மேகம் வந்து படிந்து தன் சிறகுகளைத் தாழ்த்தி அமர்ந்திருந்ததைக் கண்டேன். வவ்வால்கள் கலைந்து, சிவந்த ஒளி பரவிய வானத்தில் பறக்க ஆரம்பித்தன. பலவகையான பறவைகள் பெரிய கலவர ஒலியுடன் கூடணைந்த மாபெரும் அயனி மரம் ஒன்றை தாண்டிச்சென்றோம். அதன் கீழே பறவை எச்சத்தின் காரவாசனை நிறைந்திருந்தது.

காட்டுக்குள் ஒரு தட்டையான பாறையைக் கண்டதும் துரை அங்கே தங்கலாம் என்று சொன்னான். நான் மேலே ஏறி இடம் பார்த்தேன். பெட்டியில் இருந்து கூடாரத்துணியையும் கயிறுகளையும் ஆணிகளையும் எடுத்தேன். பாறை இடுக்குகளில் ஆணியை கல் வைத்து அறைந்து இறுக்கியபின்னர் அவற்றில் கயிறு கட்டி இறுக்கி கூடாரக்காம்பை நிறுத்தினேன். கூடாரத்துணியை விரித்து அந்தக் காம்புகளில் இறுகக் கட்டி இழுத்து கூடாரத்தை நிற்கச்செய்தேன். உள்ளே மெத்தைவிரிப்பை போட்டு பக்கவாட்டு துணிகளையும் தொங்கவிட்டேன். ஊரும் பூச்சிகள் உள்ளே செல்லாமலிருக்க பக்கவாட்டு கித்தானை நன்றாக மடித்து உள்ளே செருகினேன். கூடாரம் தயாராகும் வரை துரை பாறைமேல் மல்லாந்து படுத்திருந்தான். அவனருகே யானைத்துப்பாக்கி படுத்திருந்தது.

துரை கூடாரத்துக்குள் சென்று பார்த்துவிட்டு தன்னுடைய உறக்கப்பையை எடுத்து உள்ளே போட்டுக்கொண்டான்.நான் காட்டுக்குள் போய் பெரிய உலர்ந்த மரங்களை தூக்கி வந்து போட்டு தீ பொருத்தினேன். காட்டுக்குள் இருந்து இருட்டு வந்து எங்களைச் சூழ்ந்துகொண்டது. இருட்டுக்குள் தீ புலியின் நாக்கு போல சிவப்பாக எரிந்து புகை விட்டு வெடித்து கங்குகளை மேல் நோக்கி உமிழ்ந்து நெளிந்தது. பெட்டியில் இருந்து மெல்லிய கம்பியை எடுத்து தீயின் இருபக்கமும் நட்ட மரத்துண்டுகளில் கட்டி அதில் அலுமினிய கெட்டிலை தொங்கவிட்டேன்.

துரை வந்து தீயருகே அமர்ந்துகொண்டான். நான் என்னிடமிருந்த இறைச்சி உருளைகளை அவனுக்குக்கொடுத்தேன். அவன் அதை வாங்கி உடைத்து அதில் உலர் ரொட்டியை தோய்த்து தின்றான். புட்டியில் இருந்த சாராயத்தை தீயில் லேசாக காட்டி அதனுள் இருந்து ஆவி கிளம்பியதும் அந்த ஆவியுடன் சேர்த்தே குடித்தான். நான் டீயை வெள்ளைத்தகரப் போணியில் ஊற்றி கொடுத்ததும் சாராயத்தை அந்த டீயில் விட்டு ஊதி ஊதிக் குடித்தான்.

நான் உட்கார்ந்தபடியே தூங்க ஆரம்பித்தபோது துரை ஏதோ கேட்டான். நான் விழித்து புன்னகைசெய்தேன். ”நீ அந்த வேசியைக் கொண்டு சென்று  அவள் கிராமத்தில் விட்டாய் அல்லவா?”என துரை கேட்டான். நான் அதற்கு பேசாமல் பார்த்தேன். சட்டென்று துரை எழுந்து என்னை ஓங்கி உதைத்தான் ”நீ அவளை அனுபவித்தாய்…நீ அவளை அனுபவித்தாய்..நீ  என் நாய்…நீ என் நாய்”என்று கூவியபடி நாலைந்து முறை உதைத்தான்

நான் பக்கவாட்டில் சரிந்து விழுந்து அந்த உதைகளை என் விலாவிலும் தோளிலுமாக வாங்கிக்கொண்டேன். துரை என் மீது துப்பிவிட்டு திரும்பி கூடாரத்துக்குள் சென்றுவிட்டான். நான் எழுந்து தீயை நன்றாக தூண்டி விட்டுக் கொண்டேன். தீயருகே என் உடலைக் காட்டிக்கொண்டு அமர்ந்தேன். வானில் கரிய பரப்பில் நட்சத்திரங்கள் மொட்டுகள் போல தெரிந்தன. அவற்றில் இருந்து நுண்மையான மழைபோல குளிர் என் மீது கொட்டியது. என் முதுகில் குளிரும் மார்பில் கனலும் இருந்தன. நான் தீ¨யையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தூங்கிவிட்டேன்.

[ 3 ]

மறுநாள் காலை நான் இருட்டுக்குள்ளேயே எழுந்து கங்குவிட்டிருந்த தீயை தூண்டி எரியவிட்டுவிட்டு கெட்டிலுடன் பக்கத்துகோடைக்குச்சென்று குச்சி ஒடித்து பல்தேய்த்து மலம்கழித்துவிட்டு கெட்டிலில் தண்ணீர் அள்ளி வந்து தீயில் தொங்கவிட்டுவிட்டு கூடாரத்துக்குள் சென்று துரையை எழுப்பினேன். எழுந்ததுமே அவன் என்னை அடிப்பான் என எண்ணி நான் காத்து நின்றாலும் அவன் என்னை வெறித்துப் பார்த்துவிட்டு பற்களைக் காட்டி ”குட்மானிங்”என்றான். நான் அவனை பேசாமல் பார்த்தேன். ”நீ ஒரு மிருகம்…” என்று அவன் சொன்னான். நான் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. ”டீ இருக்கிறதா?”என்றான். நான் ஆமாம் என்றேன்

துரை எழுந்து வெளியே வந்து சோம்பல் முறித்தான். இரு முறை கொட்டாவி விட்டபின் நேராகச் சென்று தீயருகே அமர்ந்துகொண்டான்.நான் அவனுக்கு டீ கலந்து கொடுத்தேன். ”என் பிராந்தியை எடுத்துவா”என்று அவன் சொன்னான். அதில் கொஞ்சத்தை டீயில் விட்டு குடித்தான். பின்னர் எழுந்து யானைத் துப்பாக்கியை மட்டும் எடுத்துக்கொண்டு அவனே நடந்து காட்டுக்குள் சென்றான் நான் அவன் பின்னால் சென்றேன். அவன் துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு ஒரு சிறிய பாறைமீது ஏறி அமர்ந்து மலம் கழித்தான். என்னைப்பார்த்து கண் சிமிட்டினான். நான் அவனுக்கு துடைத்துவிட்டதும் அவன் எழுந்து ஓடையில் இறங்கி வாயைக் கொப்பளித்து கழுத்தையும் முகத்தையும் கழுவிக்கொண்டான்.

தலைக்குமேல் பறவைகள் கலைந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்த காலையில் மங்கலான ஒளியில் காட்டுச்செடிகளின் இலைகள் எல்லாம் தெளிவான பச்சை நிறம் கொண்டிருந்தன. எங்களை தாண்டி ஒரு பெரிய மிளா உடல்முழுக்க சருகுகள் ஒட்டியிருக்க திமிர் தெரியும் தசையசைவுகளுடன் சென்றது. துரை அதை நோக்கி துப்பாக்கியைக் குறி வைத்தான். சுடுவதற்காக அல்ல என்று தெரிந்தது. சாய்வாக காட்டுக்குள் விழுந்த இளவெயிலில் காடு தூள்பாசியும் நூல்பாசியும் நிறைந்த நீர் கொண்ட ஒரு பச்சைநிறத் தடாகம் போல தெரிந்தது. உள்ளே இறங்கிய வெயிலில் இலைகள் பளபளவென அ¨சைவதை நான் கனவுகளிலும் கண்டிருக்கிறேன்.

ஒருமுறை அமர்ந்து சுருட்டு பிடித்துவிட்டு எழுந்து மீண்டும் நடந்தோம். துரை ஒரு நவர இலையைப் பறித்து ”இதை நான் சாப்பிட முடியுமா?”என்றான். ”இதை சாறு மட்டும்தான் குடிக்கவேண்டும். சக்கையைத் தின்றால் பேதி போகும்”என்றேன். ”உனக்கு ஆங்கிலம் பேச வருகிறதே”என்றான். நான் ஒன்றும் சொல்லவில்லை. 

சுண்டுமலை அருகே தெரிய ஆரம்பித்தது. அதன் சிகரத்துக்கு விலாவில் இருந்த காடு அதன் மடக்குகளுக்குள் கசிந்து பசுமையாக இறங்கியிருந்ததையும் மரங்கள் சிறிய புற்பூண்டுகள் போல தெரிவதையும் கண்டேன். கூர்ந்து கவனித்தபோது மலைப்பாறையில் ஒரு மடிப்புவழியாக தலைவகிட்டில் பேன்கள் செல்வது போல வரையாடுகள் செல்வதைக் கண்டேன். துரை என்னிடம் ”என்ன?”என்றான். நான் வரையாடுகளைச் சுட்டிக் காட்டினேன். துரை தன் துப்பாக்கியை தூக்கி அந்த ஆடுகளை விளையாட்டாகக் குறி வைத்தபின் என்னை நோக்கி கண்களைச் சிமிட்டினான்.

நாங்கள் பாதை இல்லாதபடி வளர்ந்து கிடந்த யானைப்புல் பரப்பை வந்தடைந்தோம். உள்ளே செல்லவேண்டுமானால் புல்லை சரித்து பாதையை உருவாக்க வேண்டும். நான் ஒரு பெரிய குச்சியை எடுத்து புல்லை அடித்து சரித்து வகிடு எடுத்து அதன் வழியாக சென்றேன். காலில் சதுப்புச்சேறு மிதிபட்டது. யானைப்புல்லின் விளிம்பு பட்டு என்னுடைய உடலெங்கும்  கீறல்கள் விழுந்தன. சில கீறல்களில் ரத்தம் கசிந்து எரிந்தது.

நான் முதலில் வாசனையை உணர்ந்தேன். துரைக்கு கையைக் காட்டினேன். துரை அப்படியே சிலை மாதிரி நின்றான். மிகமெல்ல துப்பாக்கியை திருப்பி அதன் கட்டையை தன் அக்குள்சதைமேல் வைத்துக்கொண்டு விசையில் விரலை நுழைத்தான். தரையில் மண்டியிட்டு முன்னால்சென்று நான் யானைப்பிண்டத்தைக் கண்டடைந்தேன். சிலமணி நேரம் முந்திய பிண்டம் அது. சக்கையின்மீது இருக்கும் சாணிப்பசை உலர ஆரம்பித்துவிட்டிருந்தது. இன்னும் சிலமணி நேரத்தில் அதில் வண்டுகள் துளைபோட்டு முட்டை போட்டிருக்கும். பிண்டத்தின் அருகே இருந்த யானையின் காலடித்தடங்களைப் பார்த்தேன்.

துரை அருகே வந்து ”அதுதானா?”என்றான். நான் சைகையால் ஆமாம் என்றேன். அந்த அளவுக்கு அகலமான இடைவெளியுள்ள வேறு யானைக் காலடித்தடம் காட்டுக்குள் வேறு இல்லை. துரை அருகே வந்து அந்த காலடித்தடத்தை கூர்ந்து நோக்கினான். நான் அந்த பிண்டத்தை காலால் புரட்டிப்பார்த்தேன். ஈஞ்சைச்சக்கையாக இருந்தது. சுண்டுமலையின் தென்புறம் ஈஞ்சைக்காடு அடந்திருக்கும். இரவு அங்கே தங்கிவிட்டு காலையில் அங்கிருந்து இங்கே வந்திருக்கிறது. வெயில் ஏறிவிட்டதனால் திரும்பி ஈஞ்சைக்காட்டுக்கே சென்றிருக்கும். நான் அந்த புல்லடர்வு முழுக்க ஊடுருவி வேறு பிண்டங்கள் கிடக்கின்றனவா என்று பார்த்தேன். கொம்பன் ஒற்றையானை. அது இருக்கும் இடத்தில் பிற யானைகள் வராது. மதம் கொண்டு இளகும்போது மட்டுமே அது பிடியானைகளை தேடி பிறயானைப்பற்றங்களுக்குச் செல்லும்.

”இப்போது எங்கே இருக்கும் அது?” என்று துரை கேட்டான். ”ஈஞ்சைக்காடு…”என்று நான் சொன்னேன். ”அங்கே முள் அடர்ந்திருக்கும். இங்கே திறந்த வெளி இருக்கிறது. இங்கேயே தங்குவோம். காலையில் இங்கே வரும்…”என்று துரை சொன்னான். ஆனால் அங்கே மரங்கள் ஏதும் இல்லை. நேரடியாக வெட்டவெளியில் நின்று யானையை எதிர்கொள்வது சிரமம். நான் அதைச் சொல்லவில்லை. துரையே ஊகித்துக் கொண்டு தன் துப்பாக்கி¨யை காட்டி கண்களைச் சிமிட்டினான்.

கொம்பனின் பிண்டத்தை அள்ளி சதுப்புக்குழியில் இருந்த நீரில் கலக்கி உடல்மீது தெளித்துக் கொண்டோம். சுருட்டு பிடிக்கக்கூடாது. சாராயம் குடிக்கக்கூடாது, ரொட்டி இறைச்சியை தின்பதும்கூட சரியில்லைதான். ஆனால் நான் எஞ்சிய இறைச்சி உருண்டையை உடைத்து கொடுத்தேன். நான் இரண்டு உருண்டை தின்றேன். துரை மிஞ்சிய நான்கு உருண்டைகளை தின்றான்.

நாங்கள் புல்நடுவே அமர்ந்துகொண்டோம். எங்கள்மேல் தவளைகள் எம்பிப் பாய்ந்தன. கண்ணாடிவிரியன் இருக்கக்கூடும் என்று நான் மோப்பம் பிடித்துக்கொண்டே இருந்தேன். கொசுக்கள் எங்கள் மேல் பரவி போர்வை போல ஒட்டிக்கொண்டன. துரை துப்பிக்கொண்டே இருந்தான். துவாலையால் முகத்தை மூடி அவை மூக்குக்குள் போவதை தடுத்தான்.

இருட்டிக்கொண்டே வந்தது. நட்சத்திரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்தன. மேற்குவானில் சரிபாதிப் பிறைநிலவு எழுந்துவந்தது. ஒரு தும்மல் ஒலியை அருகே கேட்டேன். பெரிய மிளா ஒன்று என்னருகே நின்று என்னை உற்று பார்த்தது. அதன் கண்களின் மெல்லிய மினுமினுப்பைக் கண்டேன். அது மீண்டும் தும்மியது. துரை ”முட்டாள் மிருகம்”என்று சொன்னான்.மிருகங்களில் முட்டாளே இல்லை.

துரை அமர்ந்தவாறே தூங்க ஆரம்பித்து பின்னர் முழங்காலைக் கூட்டிவைத்து நன்றாகவே தூங்கிவிட்டான். அவன்மேல் கொசுக்கள் ரீங்காரமிட்டன. நான் தூங்காமல் நிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டு நிறைய விஷயங்களை நினைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். என்னுடைய அம்மாவைப் பற்றியும் என் ஊரான நெடுமங்காட்டைப்பற்றியும் நினைத்தேன். சிறு வயதில் அம்மா ·ப்ளெட்சர் துரையின் வீட்டில் சமையல்செய்தாள். அப்போதுதான் நான் பிறந்தேன். என்னை சிறு வயதில் என் மலைக்குடியில் காட்டுபூனை என்று அழைத்தார்கள். அப்போது என் கண்கள் நீலமாகவும் என்னுடைய தோல் கறுப்பாகவும் இருந்தது. பிறகு என் கண்கள் ஓநாயின் கண்கள் போல ஆகிவிட்டன.

என் அம்மாவுக்கு சீக்கு வந்து உடம்பெல்லாம் புண் ஆகியபோது நான் அம்மா சொன்னதைக்கேட்டு பிளெட்சர் துரையிடம் பணம் கேட்கச் சென்றேன். அவர் என்னை ”போ போ”என்று சொல்லி திட்டி குடையை என் மீது எறிந்தார். அம்மா செத்துப்போனபிறகு நான் சிம்ஸன் தோட்டத்தில் வேலைக்குச் சென்றேன். அங்கே நான் காட்டிலேயே இருந்தேன். என்னுடன் எவருமே பேசுவதில்லை. செந்நாய் கண்கள் கொண்டவன் தீய தெய்வங்களுக்கு நெருக்கமானவன் என்று சொன்னார்கள். நான் தீய தெய்வங்களைக் கண்டதேயில்லை.

முதல்முறையாக நான் செந்நாயைக் கண்டபோது அது என்னை அடையாளம் கண்டுகொள்ளும் என்று எதிர்பார்த்தேன். முப்பத்திரண்டு வருடம் முன்பு காரிமலைக்காட்டுக்குள் நான் புதருக்குள் குந்தியமர்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது அது என்னருகே மிக நெருங்கி வந்திருந்தது. நான் அதன் சீறல் கேட்டு கண்விழித்தேன். மாலைநேர மஞ்சள் வெளிச்சத்தில் அதன் தேங்காய் நிறமான பிடரிமுடி சிலிர்த்து நிற்பதைக் கண்டேன். கண்கள் என்னை விழித்துப்பார்த்தன. வாயை திறந்து கரிய ஈறுகளில் வெண்ணிறப்பற்கள் தெரிய ர்ர்ர் என்றது. நான் மெல்ல கையை என் இடுப்பில் இருந்த கத்தியை நோக்கிக் கொண்டுசென்றேன். அது பாய்ந்து ஓடி புதருக்குள் வால் சுழற்றி தாவி மறைந்தது. புதருக்குள் இருந்த மேலும் பல செந்நாய்கள் அதைத்தொடர்ந்து ஓடின.

காலையில் நன்றாக குளிர ஆரம்பித்தது. நான் கைகளை என் வெற்றுடல் மேல் கட்டி இறுக்கிக் கொண்டேன். வானத்தில் நட்சத்திரங்கள் இடம்மாறிவிட்டிருந்தன. கீழ்வானில் வெள்ளி தெரிந்தது. எனக்கு நன்றாகவே பசித்தது. ஆனால் அப்போது எதையாவது உண்பதைப்போல முட்டாள்தனம் ஏதுமில்லை. அப்போது நான் நிலம் அதிர்வதை உணர்ந்தேன். காற்று மறு திசைநோக்கி வீசியதனால் மோப்பம் கிடைக்கவில்லை. ஆனால் அது நல்லதுதான் எங்கள் மோப்பமும் அதற்குக்கிடைக்காது.

நிலம் அதிர்வது நெருங்கிவந்தது. நான் எழுந்து பார்த்தபோது இருளுக்குள் கொம்பனின் உயரமான மத்தகத்தைப் பார்த்தேன். செம்மண் மீது கொன்றைப்பூக்கள் உதிர்ந்து கிடந்தன. துதிக்கை மடிப்புகளில் மண் வரியடித்து உலர்ந்த சேறூ வெடித்தது போல் இருந்தது. தோணி போன்ற இரு பெரும் தந்தங்களும் கீழ் நோக்கி சரிந்திருந்தன. துரையை மெல்ல உலுக்கினேன். அக்கணமே அவன் விழித்துக்கொண்டு தோளில் சரிந்த துப்பாக்கியை சரியாகப்பிடித்துக்கொண்டு மெல்ல எழுந்தான்.இருவரும் யானையைப் பார்த்தபடி அசையாமல் நின்றோம்.

துரை துப்பாக்கியை யானையின் மத்தகத்தை நோக்கி நீட்டி குறி வைத்தான். அந்தக் கணங்கள் மிகமெல்ல அடிவயிற்றை தரையில் ஒட்டி தவழ்ந்து முன்னேறும் புலி போல நீண்டன. என்ன செய்கிறான் என்று நான் வியந்தேன். அவன் மீண்டும் மீண்டும் குறி பார்த்தால். கண்முன் நிற்கும் யானையைச் சுடுவதற்கு ஏன் கிளையில் அமர்ந்த பறவையைச் சுடுவதற்கு பார்ப்பதுபோல் குறியை தீட்டிக் கொள்கிறான்? அவன் விரல்கள் துப்பாக்கிக் கட்டையில் நடுங்கியபடி பற்றியிருப்பதைக் கண்டேன். அவன் மனம் பதறுகிறது என்று ஊகித்தேன்.

மலைதெய்வமான மாதி காட்டுக்குள்ளேயே மிகவும் தலையெடுப்புமிக்க யானைமீது அமர்ந்திருப்பாள் என்று குடிகளில் சொல்வார்கள். சின்னஞ்சிறு குழந்தைகள் மட்டுமே அவளைப் பார்க்க முடியும். மாதி துரையின் கைகளை பிடிக்கிறாளா? துரை இதயம் உடைந்து விழுந்து ரத்தம் கக்கி செத்துப்போகப்போகிறானா? நான் அவனையே பார்த்தேன். என் இதயம் துடித்து வாய்க்குள் அதன் அதிர்வு தெரிந்தது.

துரையின் விரல் விசையை அழுத்தியதும் துப்பாக்கியின் பூட்டு விடுவித்துக்கொண்டு ‘லிலிக்’ என்றது. அந்த ஒலியிலேயே கொம்பனின் காதுகள் நின்றன. அதன் மத்தகம் திரும்பி எங்களைப் பார்த்தது. கண்களை சந்திக்க முடியவில்லை. காதுகளை அசையாமல் நிறுத்தி அது எங்களைப் பார்த்தது. ஒரு பெரும் காட்டுபாறை உயிர்கொண்டு என்னைப் பார்ப்பது போல உணர்ந்தேன். பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு முன்பே இருந்து கொண்டிருக்கும் பாறை. தெய்வங்கள் பிறப்பதற்கு முந்திய பாறை.

ஆனால் கொம்பன் அசையவில்லை. முன்னால் வரவும் இல்லை. துரை சில அடிகள் பின்னால் நகர்ந்தான். அவன் முதுகில் சட்டை வியர்வையில் ஒட்டியிருந்தது. கன்னங்களில் வியர்வை வழிந்தது. நெற்றியில் நீல நரம்பு புடைத்தது. கொம்பன் மீண்டும் காதுகளை ஆட்டிக்கொண்டு புல்லை பிடுங்கி சுழற்றி தன் முன்வலதுகாலில் அடித்து மண் களைந்து, வாழைப்பூ போல தொங்கிய வாய்க்குள் போட்டு மெல்ல ஆரம்பித்தது

துரை பெருமூச்சு விட்டான். பின்னர் ஒரு அடி முன்னால் வைத்தான். நான் யானையையே பார்த்துக்கொண்டிருந்ததனால் என்னருகே யானைத்துப்பாக்கி செவி பிளக்க வெடித்த ஒலியில் திடுக்கிட்டு அதிர்ந்தேன். என் செவிகளில் தேனீ ரீங்காரம் ஒலித்தது. யானை திகைத்து நின்றது அதன் முன்காலுக்கு மேல் குண்டுபட்ட இடத்தில் சிவந்த குழி உருவானதைக் கண்டேன். பாறை பிளக்கும் ஒலியுடன் பிளிறியபடி கொம்பன் எங்களை நோக்கி ஓடி வந்தது.

நான் துரையை நோக்கி ”ஓடுங்கள்…”என்று கூவியபடி யானையை நோக்கி ஓடினேன். துரை பின்பக்கமாக விலகி ஓடினான். நான் யானையை நோக்கிச் சென்று அதனிடம் ”ஹோ!”என்று கை நீட்டி ஆர்ப்பரித்தபின் வலப்பக்கமாக திரும்பி புல்லை ஊடுருவி வெறி பிடித்தவன் போல ஓடினேன். கொம்பன் பிளிறியபடி என்னை துரத்தி வந்தது.

யானையை மனிதன் ஓடி வெல்லமுடியாது. இன்னும் சில கணங்களில் எனக்கு ஒரு மரம் கிடைத்தாக வேண்டும். மரம் மரம் மரம் என்று என்னுடைய மனம் எண்ணிக்கொண்டிருக்க நான் ஓடிக்கொண்டே இருந்தேன். ஒரு பெரிய பலா மரம் என்னை நோக்கி வந்தது. அதில் கனத்த கொடிவள்ளிகள் அடர்ந்து பின்னி மேலேறியிருந்தன. நான் போனவேகத்திலேயே அதைப்பற்றி மேலேறி மூன்றாமடுக்கு கிளைக்குச் சென்றுவிட்டேன். என் உடலெங்கும் புல்க்கீறல்களும் முள்க்காயங்களுமாக ரத்தம் கசிந்தது. என் உடலில் வியர்வை ஆவி பறந்தது. நான் வாயாலும் மூக்காலும் காதுகளாலும் மூச்சு விட்டேன். என் நெஞ்சு உடைந்து விடுவது போலிருந்தது

யானை மரத்தருகே வந்து ஆவேசமாக மரத்தில் மத்தகத்தால் முட்டியபோது மரம் அதிர்ந்து மேலிருந்து சருகுகள் அதன் மேல் உதிர்ந்தன. அதன் வலதுகால் முழுக்க ரத்தம் சேறாக குமிழிகளுடன் வழிந்திருப்பதைக் கண்டேன். மறுபக்கம் துரை ஒரு பாறை மீது கைகளை ஊன்றி ஏற முயன்றுகொண்டிருந்தான். துப்பாக்கியுடன் அவன் ஓடியதனால் ஏற முடியவில்லை. துப்பாக்கியை உதறிவிட்டு ஓட அக்கணம் அவனால் எண்ண முடியவில்லை.

என்னைப்பிடிக்க முடியாது என யானை புரிந்துகொண்ட வேகம் என்னை ஆச்சரியம் கொள்ளச்செய்தது.நானறிந்து எந்த யானையும் அபப்டி சிந்தனைசெய்ததில்லை. அது திரும்பி புல்கூட்டத்தை மிதித்து ஒரு பிளவை உருவாக்கியபடி துரையை நோக்கிச் சென்றது. துரையை பிடித்துவிடுமென தெரிந்ததும் நான் கூவியபடி பலாமரத்தில் இருந்து குதித்து கீழே கிடந்த கற்களை எடுத்து யானைமேல் வீசினேன். யானை நின்று வால் சுழலத் திரும்பி வெறியுடன் என்னை நோக்கி வந்தது.

நான் மீண்டும் பலா மரத்தில் ஏறிக்கொண்டேன். யானை என் மரத்தின் அடியில் வந்து நின்றபோது வெம்மையான குருதி வீச்சத்தை நான் உணர்ந்தேன். யானை மரத்தில் சாய்ந்து அடிபட்ட காலை தூக்கியபடி நின்றது. துதிக்கை மலைப்பாம்பு போல மாபெரும் தந்தங்கள் மேல் ஏறி சறுக்கியது. அந்த தந்தங்களுக்காகத்தான் துரை வந்திருக்கிறான். தெந்திருவிதாங்கூரிலேயே பெரிய தந்தங்களாக அவை இருக்கும். துரையின் யானை இல்லாத நாட்டில் ஏதோ சீமாட்டியின் பெரிய நிலைக்கண்ணாடியின் இருபக்கமும் அது இருக்கும். இரண்டு வெள்ளைக்கார வேலைகாரர்களைப்போல.

நான் மூச்சு அடங்கி என் உடல் எரிச்சலை உணர்ந்தபடி யானையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது மெல்ல எழுந்து மேலே துதிக்கை நீட்டி என்னை பிடிக்க முயல்வது போல அல்லது என்னிடம் எதையோ சொல்ல முயல்வது போல நுனியை அசைந்தது. கைக்குழந்தையின் சிவந்த வாய் போன்ற துதிக்கை முனை.

கொம்பன் மெல்ல திரும்பி வாலைச் சுழற்றியபடி புல்லுக்குள் சென்று மறைந்தது. அது போன பாதை புல்லில் தெரிந்தது. மேலே மரக்கிளைகள் விரிந்த இருண்ட காட்டுக்குள் சென்றதும் அது ‘ப்பாய்ய்ங்’ என்ற ஒலியை எழுப்பியது. காட்டிலெங்கோ ஒரு பாறை அதை எதிரொலி செய்தது. சற்று தள்ளி மீண்டும் அந்த பிளிறல் எழுந்தது.

துரை பாறை மேல் இருந்து கைகாட்டி என்னை அழைத்தான் ”ஊமைச்செந்நாயே…” நான் கையைத் தூக்கிக் காட்டியபடி இறங்கி அவனை நோக்கிச் சென்றேன். யானை எங்கள் பெட்டியை எதுவும் செய்யவில்லை. துரையும் இறங்கி என்னை நோக்கி வந்தான். ”…மிருகம்…தப்பிவிட்டது…”என்றான் துரை. ”பூட்டின் ஒலியை கேட்டு அது திரும்பாவிட்டால் இந்நெரம் மண்டை பிளந்திருக்கும்”

துப்பாக்கியபோட்டுவிட்டு அவன் பெட்டியிலிருந்து சாராயத்தை எடுத்து நேரடியாகவே மடமடவென குடித்தான். ஏப்பம்விட்டு தலையைக் குனிந்தான். இருமுறை ஆவியை உமிழ்ந்தான். ”ஜீஸஸ்!” என்று தலையை உலுக்கினான். நான் பெட்டியை மூடி நன்றாகக் கட்டினேன்.

”அதை விடக்கூடாது. அது அதிக தூரம் போயிருக்காது. சீக்கிரமே அதன் ரத்தம் தீர்ந்துவிடும்…”என்றான் துரை. ”அது சிந்திக்கிறது…”என்றேன். ”டாமிட்”என்றான் துரை. ”நாம் அதைபின் தொடர்ந்து செல்கிறோம்…ரத்தத்தைப்பார்த்தே அது போனவழியை கண்டுபிடிக்க முடியும்…”

நான் ஒன்றும் சொல்லாமல் பெட்டியை எடுத்துக்கொண்டேன்.

[ 4 ]
நாங்கள் சென்ற வழி முழுக்க சிறிய கட்டிகளாக ரத்தம் கையேந்தி நின்ற இலைகள் மீது கொட்டியிருந்தது. ரத்த வாசனையை வைத்தே தடம் பார்த்துச் செல்ல முடிந்தது. ஒரு நுணா மரத்தில் கொம்பன் சாய்ந்து நின்றிருக்க வேண்டும். அந்த மரத்தடியில் ரத்தம் கொட்டி தாமரையிலகளின் வடிவில் கிடக்க அதன் மேல் படலம் உருவாகி சிறிய பூச்சிகள் வந்து சுற்றிப்பறந்து கொண்டிருந்தன.

”அது எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் ஓடும்…எப்போது அதன் ரத்தம் வற்றி உடல் தளர்கிறதோ அப்போது விழுந்து கிடக்கும்…”என்றான் துரை. நான் அவனைப்பார்த்துவிட்டு முன்னால் சென்றேன். அந்த யானை வெறும் மிருகம் அல்ல என்றும் அதற்கு நாங்கள் பின் தொடர்ந்து வருவோம் என்றும் தெரியும் என்றும் சொல்ல விரும்பினேன். அந்த யானை இந்நேரம் எங்களை எதிர்பார்த்து அதற்கு மிக வசதியான இடத்தில் நின்றிருக்கும். ஆனால் நான் சொல்லவில்லை. என் சொற்கள் பெரும்பாலும் உதடுகளுக்கு வருவதில்லை.

”நீ ஒரு ஆங்கிலேயனைப்போன்ற இயல்புகொண்டவன்…..”’என்றான் துரை. நான் திரும்பி அவனைப்பார்த்தேன். ”நீ எப்போதும் எதையும் சொல்வதில்லை. ஆனால் நீ நினைப்பது என் கண்ணுக்கே தெரிகிறது..”

அவன் சொல்ல வருவதென்ன என்று எனக்குப் புரியவில்லை. துரை,  ”நீ இரவில் என் துப்பாக்கியை எடுத்துப் பார்த்தாய்…அதை நான் கண்டேன் என்பதை இப்போதுதான் நினைவுகூர்ந்தேன். அது கனவு போல் இருந்தது…இப்போது நான் சுடும்போது நீ என் துப்பாக்கியைப் பார்த்ததை எண்ணிப்பார்த்தேன். உந்னால் ஒரே பார்வையிலேயே என் துப்பாக்கியின் விசையைப்பற்றியும் குண்டுபோடும் முறையைப்பற்றியும் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது என்று தெரிந்தது…உன் அம்மாவைப்புணர்ந்த அந்த வெள்ளையன் உனக்குள் அந்த அறிவை அளித்திருக்கிறான்”

நான் பேசாமல் நடந்தேன். துரை பேசியபடியே என் பின்னால் வந்தான் ”ஆனால் நீ ஒரு நாய்..ஆங்கிலேயன் ஒருபோதும் ஒருபோதும் அடிமையாக இருப்பதில்லை. அதை நீ மறந்துவிட்டாய். நீ என் காலை நக்கும் ஒரு நாய் மட்டும்தான். உன்னுடைய செந்நாய்க்கண்களைப் பார்க்கும்போதெல்லாம் உன் தலையை குண்டுகளால் சிதறடிக்க எனக்கு வெறி வருகிறது…” துரை மூச்சிரைத்தான் ” நீ ஆங்கிலேயரை உன் இருப்பின் மூலமே அவமானம்செய்கிறாய்…கடவுளே! உன்னைக்கொல்ல நான் எத்தனை தூரம் விரும்புகிறேன் தெரியுமா?”

நான் அவன் ஏறி வருவதற்காக காத்து நின்றேன். ”இந்த துப்பாக்கியை நீ தொடக்கூடாது…இனி இந்த துப்பாக்கி மேல் உன் கைபட்டால் நான் உன் மூளையை சிதறடிப்பேன்… கண்டிப்பாக அதைச் செய்வேன்” என்றான். மேலே ஏற நான் கை கொடுத்தேன். ”நீ வெள்ளைப்பெண்ணை  எப்போதாவது புணர்ந்தாயா?” நான் ஒன்றும் சொல்லவில்லை ”சொல்லித்தொலை ஊமைச்செந்நாயே..உன்னை கொல்லும்படிச்செய்யாதே” நான் இல்லை என்றேன். ”உன் கண்களைப்பார்த்தால் அவர்கள் கூப்பிடுவார்கள். நீ எப்போதாவது வெள்ளைப்பெண்ணுடன் படுத்தாய் என்று தெரிந்தால் நான் உன்னை தேடிவந்து கொல்வேன்…”

பெரிய வேங்கைமரத்து வேர்கள் பரவி சிறிய இறக்கத்தில் மௌனமாக இறங்கினேன். பள்ளத்தில் நின்று கூர்ந்து பார்த்தேன். ரத்தம் சொட்டியிருந்தது குறைந்திருந்தது. ஆங்காங்கே சில இலைகளில் கருஞ்சிவப்பு முத்துக்கள் மட்டுமே தென்பட்டன ”நீ எனக்கு தேவைபப்டுகிறாய்… இல்லையேல் உன்னைக்கொல்வதே எனக்குக் கொண்டாட்டம்”என்றான் துரை. நான் வாயில் கைவைத்து காட்டினேன். அவன் துப்பாக்கியை தோளில் ஏற்றிக்கொண்டான். ”நீ மனதுக்குள் ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறாய். அதை எங்களிடமிருந்து மறைக்கவே நீ பேசுவதே இல்லை…முட்டாள். முட்டாள்தனமான ஊமைச்செந்நாய்”என்று பல்லைக்கடித்தபடி அவன் கிசுகிசுத்தான்

நான் என் கைகளை ஊன்றி கிட்டத்தட்ட தவழ்ந்து முன்னே சென்றேன். புதர்களுக்கு அப்பால் மண் மீண்டும் மேலேறிச்சென்றது. மேட்டில் இரு பாறைகள்  இணைந்து நிற்கும் யானைகள் போல் நின்றன. அதற்கு அப்பால்தான் என்று எனக்கு தெளிவாகப்புரிந்தது. நான் மெல்லமெல்ல காலடி எடுத்து வைத்து பின்னால் வந்தேன். கைநீட்டி ”அங்கே” என்றேன்.

”எங்கே?”என்று துரை கிசுகிசுத்தான். ”அந்த இரு பாறைகளுக்கு நடுவே…” என்றேன். அவன் உடனே அதைப்புரிந்துகொண்டான். ”அது ஒரு சாத்தான்…சாத்தான்தான் மிருக வடிவில் வந்திருக்கிறது… மிருகங்கள்  ஒருபோதும் இப்படிச்சிந்திப்பதில்லை! ”என்றான். துப்பாக்கியின் எட்டும் தொலைவுக்குள் எங்கே சென்றாலும் மேட்டில் இருந்து யானை வேகமாக கீழே பாய்ந்துவந்து தாக்கமுடியும். நாங்கள் பின்ன்வாங்க வேண்டுமென்றால் எங்களுக்குப் பின்னால் உள்ள மேட்டில் ஏற வேண்டும். அதற்குள் அது எங்களைப்பிடித்துவிடும்.

”மேலே ஏறிக்கொள்வோம்…”என்றபடி துரை பின்பக்க மேட்டில் ஏறிக்கொண்டான். ”இப்போது செய்யக்கூடியது ஒன்றுதான்..பொறுமைச்
சீட்டாட்டம்…” என்றான் துரை ”வா… வேசிமகனே..வா விளையாடுவோம்”என்று பாறைக்கு அப்பால் நின்ற கொம்பனை நோக்கிச் சொல்லிவிட்டு வேர்மீது ஏறி அமர்ந்துகொண்டான். துப்பாக்கியை தோள்மேல்  ஏந்திக்கொண்டான்.

துப்பக்கிக்குண்டுத் தொலைவுக்கு அப்பால் இரு பாறைகளும் மிக அமைதியாகக் காத்து நின்றன. இப்பால் துரை மெல்லிய குரலில் வைதுகொண்டும் துப்பிக்கொண்டும் காத்திருந்தான். நேரம் சென்றுகொண்டே இருந்தது. பொறுமை விளையாட்டில் மிருகங்களை வெல்ல எந்த மனிதனாலும் முடியாது என்று சொல்ல நான் விரும்பினேன்.

துரை துப்பாக்கியை தோள்மாற்றினான். ”உன்னை ஏன் உன் குடிப்பெண்கள் மணந்துகொள்வதில்லை?” என்றான். நான் பாறையையே பார்த்துக்கொண்டிருந்தேன். ”உன் கண்களைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள் அல்லவா?” நான் பாறையை விட்டு கண்களை எடுக்கவில்லை.

நெடுநேரம் கழித்து துரை ”ஜீஸஸ்..இது என்னைக் கொல்கிறது”என்றான். ”என் பிராந்தியை எடு” நான் பிராந்தியுடன் ரொட்டியையும் அவனுக்குக் கொடுத்தேன். அவன் ரொட்டியைத் தின்று பிரந்தியைக் குடித்தான். அவன் முகம் வெந்த சீனிக்கிழங்கு போல சிவந்தது. மூக்கு காரட்கிழங்கு போலிருந்தது.

இரவுக்கு முன்னால் யானை வெளியே வந்தாக வேண்டும். இருளில் யானைக்கு ஆயிரம் கண்கள். இருட்டிவிட்டதென்றால் மரங்களில் ஏறி அமர்ந்து இரவைக் கழிக்க வேண்டியதுதான். உணவும் மதுவும் எல்லாம் இன்னும் மூன்றுநாட்களுக்கு இருந்தன. இத்தனை சீக்கிரம் கொம்பனைக் காண்போமென நான் எதிர்பார்க்கவில்லை. சுண்டுமலைக்கு அப்பால் தெற்குக்காட்டில் பலாமரங்கள் அதிகம். அங்கேதான் இருக்கும் என்று எண்ணியிருந்தேன்.

காட்டுக்குள் ஒலிகள் மாறுபட ஆரம்பித்தன. நிழல்கள் எங்களை நோக்கி சரிந்து வந்தன ”சாத்தானுக்குப் பொறுமை அதிகம்…”என்றான் துரை. துப்பி விட்டு கைகளை உரசிக் கொண்டு மீண்டும் துப்பாக்கியை எடுத்தான். ”சரி, இப்போது ஒரே வழிதான். நீ முன்னால்செல்…அதை கூப்பிடு”என்றான்

கீழே உருளைக்கற்களும் சருகுகளும் நிறைந்த பள்ளம். அது மழைக்காலத்தைய ஓடைகளில் ஒன்றாக இருக்கலாம். அதில் நான் ஓடித்தப்ப முடியாது. நான் துரையை கூர்ந்து நோக்கினேன். துரை என்னை நோக்கி துப்பாக்கியை திருப்பினான் ”போ…இல்லாவிட்டால் உன்னைச் சுடுவேன்…கண்டிப்பாகச் சுடுவேன்…”

நான் அவனுடைய கண்களைப் பார்த்து ஒரு கணம் நின்றபின் மெல்ல பள்ளத்தில் இறங்கினேன். பாறைகளில் என் கால்கள் இடறின. கொடிகளில் பாதங்கள் பின்னிக்கொண்டன. நான் ஒவ்வொரு உறுப்பாலும் மேலே நின்ற யானையைப் பார்த்தபடி முன்னால் சென்றேன். துப்பாக்கியின் எல்லை வரும்வரை என் பின்னால் வந்தபின் துரை நின்றுகொண்டான். ”ம்ம் போ”என்றான். நான் மேலும் முன்னகர்ந்தேன். என் கால்கள் மிகமிகக் கனமாக இருந்தன

நான் பக்கவாட்டில் ஓடி தப்பிவிட்டாலென்ன என்று எண்ணியதுமே துரை ”ஓடினால் உன்னைச் சுடுவேன்… நீ தப்பிவிட்டாலும்கூட எல்லா காட்டுக்கும் ஆளனுப்பி உன்னை பிடித்துவந்து சுடுவேன்…”என்றான்.

நான் மெல்லமெல்ல முன்னேறினேன். பாறைக்கு அப்பால் ஒரு அசைவு நிகழ்வதை என் காது கேட்கவில்லை, சருமம் கேட்டறிந்தது. ”ம்ம்..போ…மேலே போ”என்றான் துரை. நான் மேலும் முன்னால்சென்றேன். எனக்குப் பின்னால் துரை துப்பாக்கியின் பூட்டை விடுவித்தான். அப்பால் யானையின் காதுகள் நிலைக்கின்றன என்று அறிந்தேன்.

நான் எதிர்பார்த்து நின்ற அக்கணத்தில் காட்டுமரம் சரியும் ஓலம் போல பிளிறியபடி கொம்பன் துதிக்கையை தூக்கிச் சுழற்றிப் பாய்ந்து என்னை நோக்கி வந்தது. நான் உறைந்து போய் அது வருவதை அணுஅணுவாகப் பார்த்தபடி நின்றிருந்தேன். பின்னர் என் உடல் தசைகள் எல்லாம் துடிக்க திரும்பி ஓட முயலவும் கூழாங்கல்லில் கால் தடுக்கி விழுந்து விட்டேன். அதே கணத்தில் துப்பாக்கி வெடித்து காட்டுக்குள் பல இடங்களில் எதிரொலி முழங்கியது.

யானை பிளிறியபடி அதே வேகத்தில் வந்து முன்காலை மடித்து முன்னால் விழப்போயிற்று. கனத்த கொம்புகள் நிலத்தில் ஊன்றின. துரை மீண்டும் சுட்டான். யானை பக்கவாட்டில் சரிந்து விலா மண்ணில் அழுந்தி மறுபக்கம் வயிறு புடைத்தெழ விழுந்து துதிக்கையையும் இரு கால்களயும் உதைத்துக்கொண்டது.

நான் எழுந்து யானையை நெருங்கினேன். அது என்னைக் கண்டதும் பிளிறியது. துதிக்கை அடிபட்ட மலைப்பாம்பு போல புழுதியில் புரண்டு  நெளிந்தது. பின்னங்கால் மட்டும் நீண்டு அதிர்ந்துகொண்டிருந்தது. கொம்பனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து அதன் மத்தகம் வழியாக மண்ணில் சொட்டியது. அதன் அசைவுகள் அடங்குவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

பின்பக்கம் ”செந்நாயே..”என்று துரையின் குரல் கேட்டது. கையில் துப்பாக்கியுடன் கோணலான புன்னகையுடன் துரை நெருங்கி வந்தான் ”பயமுறுத்தப்பட்டால் நீ மிகவும் தைரியமாகச் செயல்படுகிறாய்…”என்றான். யானையை நெருங்கி அதன் மீது தன் சப்பாத்துக்காலைத்தூக்கி வைத்தான். யானையின் வயிற்றிலும் துதிக்கை நுனியிலும் மெல்லிய அசைவு மிச்சமிருந்தது. அதன் கண்கள் மெல்ல மூடிக்கொண்டிருந்தன, அந்த விழிகள் கரிய உடலுக்குள் மெல்லமெல்ல புதைந்து மறைவதுபோல் உணர்ந்தேன்.

துரை அதன் தந்தங்ளை துப்பாக்கியால் தட்டிப்பார்த்தான்.”அனேகமாக இதுதான் இந்தியாவிலேயே பெரிய யானைத்தந்தம்”என்றான். ”ஆப்ரிக்க யானைகளின் அளவுக்கே பெரியது…. ஆமாம், இது ஒரு மன்னன். யானைகளில் ஒரு மன்னன்” என்றான். யானையின் முன்னங்கால் மேல் அமர்ந்துகொண்டு தன் ஒரு சப்பாத்தைக் கழற்றினான்.

”மிகப்பெரியது…கன்ன எலும்பைப்பார்த்தால் எண்பது வயதுகூடச் சொல்லலாம். மூத்தவர்”என்றான் துரை என்னிடம். நான் அவன் கண்களிலும் புன்னகையிலும் மகிழ்ச்சியே இல்லாததைக் கவனித்தேன். அதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பெரிய வேட்டையை கொன்றதும் ஏமாற்றம் வந்துவிடுகிறது. ஏனென்றால் அதற்குமேல் வேட்டையாட ஏதுமில்லை. ஆனால் அது மட்டுமல்ல. மிருகம் எப்போதுமே சாவின்மூலம் மனிதனை வென்றுவிடுகிறது. வேறு ஒரு உலகைச்சார்ந்ததாக ஆகிவிடுகிறது. அதை மகத்தானதாகவும் பெருந்தன்மை மிக்கதாகவும் நாம் நினைக்க ஆரம்பித்து விடுகிறோம் என்று சிம்ப்ஸன் பெரிய துரை ஒருமுறை சொன்னார். புலி ஒன்றைக்கொன்றபின் அவர் அதனருகே நின்று பிரார்த்தனை செய்துகொண்டே கண்ணீர் விட்டார்.

துரை என்னிடம் ”நான் புதருக்குள் விழுந்துவிட்டேன். என் தொப்பியை எடுத்துவா ”என்றான்’என் உடம்பெங்கும் முள்” நான் புதரை நோக்கிசென்றேன். துடலிமுள் அடர்ந்த குட்டையான புதருக்குள் துரையின் தொப்பி கிடந்தது. அதை  எடுக்கச்சென்றபோது என் மூக்கு அதிர்ந்தது. கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டு துரையை நோக்கி திரும்பினேன்.

துரை யானைமீதிருந்து எழுந்து கையை ஆட்டி ஏதோ சொல்ல முயன்றான். துப்பாக்கி நழுவி கீழே விழுந்தது. அவன் வாய் இழுத்துக்கொண்டது. அவன் கழுத்து அறுபட்ட கோழி போல நடந்து,  சில அடி தூரம் முன்னால் வந்து,  குப்புற விழுந்தான். நான் அவனை நோக்கி ஓடி அவன் சப்பாத்துகளை உருவி எடுத்தேன். அவன் சப்பாத்துக்கு சற்றுமேல் கண்ணாடிவிரியனின் கடித்தடம் இருந்தது.

நான் இடையில் வைத்திருந்த ஈட்டி நுனியால் அந்த இடத்தை கிழித்தேன். பிளந்து ரத்தம் கொட்டிய காயத்தை அழுத்திப்பிழிந்தபின்னர் காட்டுக்குள் ஓடினேன். இலைகளுக்குள் முழந்தாளிட்டு துழாவியபடி வெறியுடன் அலைந்தேன். கைநீலி செடியைக் கண்டுபிடித்ததுமே கைநிறைய இலைகளைப் பறித்துக்கொண்டு வேகமாக ஓடிவந்தேன். அந்த இலைகளில் ஒரு தளிரை வாயிலிட்டு பார்த்தேன். என் குடல்கள் வரை கடும் கசப்பு பரவி உடல் அதிர்ந்தது.

பச்சிலையைக் கசக்கி வெட்டுக்காயத்தில் சாற்றைச் சொட்டினேன்.  பலா இலையைக் கோட்டி அதில் பச்சிலையைச் சாறு பிழிந்தேன் கிட்டித்துவிட்டிருந்த துரையின் வாயை ஈட்டி நுனியால் நெம்பித்திறந்து உள்ளே சாற்றை செலுத்தி வாயில் வாய் வைத்து ஊதி உள்ளே புகுத்தினேன். கண்களிலும் மூக்கிலும் காதுகளிலும் பச்சிலைச்சாற்றை செலுத்தியபின் துரையை திருப்பிப்போட்டு எஞ்சிய சக்கையை அவன் குதத்துக்குள் செருகினேன்.

துரையின் ரத்தம் கெட்டிப்படாமலிருக்க அவன் கைகால்களை மடக்கி நீட்டியபடி இருந்தேன். கைகால்கள் இறுகியபடியே வந்தன. பின்னர்மெல்ல அவை இலகுவாயின. துரையின் மூக்கு வழியாக கொஞ்சம் கரிய ரத்தம் வந்தது. வெட்டுக்காயத்தில் வழிந்த ரத்தம் கரிய பசையாகவும் தெளிந்த நீராகவும் பிரிந்து வெட்டுக்காயம் மாங்காய் பிளந்தது போல வெளிறி தெரிந்தது. மீண்டும் பச்சிலை கொண்டுவந்து துரைக்குக் கொடுத்தேன்.

மெல்ல துரையின் இமைகளில் அசைவை உணர்ந்தேன். அது பிரமையா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் இமை மெல்ல மெல்ல துடித்து பிளவு விட்டு வெண் விழிகாட்டி பின்பு திறந்துகொண்டது. ”தண்ணீர்…தண்ணீருக்குள்…ஆழம்”என்றார் துரை. அவன் பார்வை தண்ணீருக்குள் இருப்பது போல அலையடிக்கிறது என்று தெரிந்து கொண்டேன். மீண்டும் கண்களில் இரு சொட்டு பச்சிலையை விட்டேன். துரை ”கப்பலில்…ஒரு ஸீகல்..கப்பல்…ஆனால் நீ என்னை…”என்றான். அவன் உதடுகள் துடித்துக்கொண்டே இருந்தன ”நான் வந்துவிடுவேன்…பெரியம்மை ஜீஸஸ்”என்று உளறிக்கொண்டிருந்தான்

சட்டென்று தீபட்டவன்போல துடித்தெழுந்து தன் துப்பாக்கிக்காக கை நீட்டினான். நான் துப்பாக்கிகளை ஏற்கனவே எடுத்து அகற்றியிருந்தேன். அவன் என்னிடம் ”நான் உன்னைக் கொல்வேன் ஊமைச்செந்நாயே…”என்றான். வரண்ட வாயில் நான் மீண்டும் சாற்றை பிழிந்தேன் ”… இது மிகவும் தித்திப்பானது”என்று நக்கினான்.கண்களை மூடிக்கொண்டான்.

இரு சடலங்கள் போல யானையும் துரையும் மண்ணில் கிடந்தார்கள். யானையின் ரணத்தில் சிறிய பூச்சிகள் வர ஆரம்பித்து விட்டிருந்தன. நான் பெட்டியில் இருந்து துணியை எடுத்து யானை ரத்தத்தில் தோய்த்தபின் சிறிய கிழிசல்களாக ஆக்கிக்கொண்டேன்.

துரை மீண்டும் கண்விழிந்த்தபோது சோர்வாகவும் தெளிவாகவும் இருந்தான். மெல்லிய குரலில் ”எந்த இடம்?”என்றான். ”காடு”என்றேன். அவன் கையை ஊன்றி எழுந்து கொண்டான். தலை சுழன்றதனால் மீண்டும் படுத்தான் ”எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது…” என்றான். நான் அவனுக்கு பச்சிலைச்சறு பிழிந்து சேர்த்த தண்ணீர் கொடுத்தேன்.”இனிக்கிறதா?”என்றேன்.

”கொஞ்சம்…” என்றான். ”இன்னும் விஷம் போகவில்லை…” என்றேன். துரை ”என் தலை சுழல்கிறது”என்றான் ”உங்கள் ரத்தத்தில் பாதி நீராக மாறிவிட்டது…இனி நீங்கள் நன்றாக ஆவதற்கு ஒரு வருடம்கூட ஆகும்…” என்றேன்

துரை முழுபலத்தாலும் எழுந்து அமர்ந்துவிட்டான். ”இங்கே இருக்கமுடியாது…இன்னும் சற்று நேரத்தில் செந்நாய்களும் நரிகளும் வந்துவிடும்” நான் ”ஆம்”என்றேன். ”என்னைப் பிடித்துக்கொண்டு மெல்ல நடந்தால் போய்விடலாம்…”

”கிளம்புவோம்”’என்றான் துரை. பெட்டியை நான் சுமக்க முடியாது என்பதனால் அதை நன்றாக மூடி தூக்கி ஒரு மரத்தடியில் வைத்தேன். துரைக்கு ஒரு கம்பு வெட்டி ஊன்றிக்கொள்ளக் கொடுத்துவிட்டு யானைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு நடந்தேன். துரை ஒரு கையை என் தோளில் வைத்து மறுகையில் குச்சி ஊன்றி மெல்ல நடந்தான்

”நாம் அதிக தூரம் வந்துவிடவில்லை, நல்ல வேளை…”என்றேன். யானை ரத்தம் தோய்ந்த கிழிசல்துணிகளை செடிகளில் கட்டியபடி நடந்தேன். சிலநாட்களுக்குப் பின்னர் ஒரு வேட்டைநாய் துணையுடன் வேலையாட்களுடன் வந்து தந்தங்களை எடுத்துக் கொண்டு போகலாம்.அழுகிய சதையில் இருந்து தந்தங்களை வெட்டிஎடுப்பது எளிது. யானையின் உடலில் சிறு பகுதிதான் அப்போது மிஞ்சியிருக்கும்.
[ 5 ]
இரவாகும் வரை நாங்கள் நடந்தோம். துரை ஒன்றும் பேசாமல் உரக்க மூச்சுவிட்டபடி, அவ்வப்போது ”ஜீஸஸ்!”என்று குரலெழுப்பி அழுதபடி, என் தோளில் எடையை அளித்து தள்ளாடி வந்தான். நான்கு இடங்களில் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டு எஞ்சிய மதுவைக்குடித்தான். இரவு ரீங்காரத்துடன் வானில் இருந்து பொழிந்து காட்டை மூடியது. துரைக்கு நான் மீண்டும் மீண்டும் பச்சிலைச் சாற்றைக் கொடுத்தேன். அதன் இனிப்பு குறைந்து வந்தது. கசப்பு தெரிய ஒரு வாரம்கூட ஆகும்.

”நாம் ஏதாவது மரத்தின்மேல் ஏறிக்கொள்ளலாம்”என்றேன்.துரை  ”என்னால் மரமேற முடியாது…பாறை மீது தங்குவோம்”என்றான். ”இன்றிரவு இங்கே நிறைய செந்நாய்களும் நரிகளும் திரண்டு வரும்..”என்றேன். ஒரு யானையின் சடலம் அவற்றுக்கு பலநாள் உணவாகும். துரை பெருமூச்சு விட்டான்.

நான் அவனை அமரசெய்துவிட்டு மரத்தில் ஏறி கொடிகளை வெட்டி கயிறாக்கி தொங்கவிட்டேன். அவன் பலத்த முனகல்களுடன் மெல்லமெல்ல ஏறிவந்தான். அவனை என் பலத்தால் தூக்கி மரக்கிளையில் அமரச்செய்தேன். அதன்பின் காட்டுகொடிகளால் அவனை கிளைகளுடன் சேர்த்துக் கட்டினேன். ”நீங்கள் தூங்கினாலும் பிரச்சினை இல்லை. நான் விழித்திருப்பேன்”என்றேன்.

துரை மெல்ல ”ஜீஸஸ்”என்றான். நான் இன்னொரு கிளையில் அமர்ந்து என் தோளை அடிமரத்தில் சாய்த்துக்கொண்டேன். காட்டுக்குள் பன்றிக்கூட்டம் ஒன்று செல்லும் உறுமல்தொகைகள் கேட்டன. சில்வண்டுகளின் ரீங்காரத்துடன் காற்று செல்லும் ஓசையும் இணைந்துகொண்டது. நான் காட்டுக்கு மேல் இலைக்கூரைக்கு அப்பால் கரியவானில் மின்னியபடி விரிந்திருக்கும் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டேன். துரை தூங்கிவிட்டானா என்று தெரியவில்லை.

துரை அசையும் ஒலி கேட்டு நான் ”ம்?”என்றேன். துரை ”ஊமைச்செந்நாயே”என்றான் ”நீ என்னை ஏன் காப்பாற்றினாய்?” நான் இருட்டுக்குள் பேசாமல் இருந்தேன். ” நீ என்னை விட்டுவிட்டு போயிருக்கலாமே” நான் ஒன்றும் சொல்லவில்லை.

துரை சற்றுநேரம் பேசவில்லை. பின்பு ”என்னைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”என்றான். நான் அதற்கும் பதில் சொல்லவில்லை ”சொல்” நான் மெல்ல கனைத்ததுடன் சரி. ”நீ சொல்ல மாட்டாய் எனத் தெரியும்”என்றான் துரை. ”ஆனால் நீ ஒன்று தெரிந்துகொள்ளவேண்டுமென நான் விரும்புகிறேன்…நான் கெட்டவன் அல்ல. ஆணவம் பிடித்தவனாக இருக்கலாம் . இனவெறியனாக இருக்கலாம். ஆனால் நான் உள்ளூர கெட்டவன் அல்ல…”

அவன் நான் ஏதேனும் சொல்லக்கூடுமென எதிர்பார்த்தான். பின்னர் தொடர்ந்தான் ” ஊமைச்செந்நாயே, நாடுவிட்டு இந்த வெப்பநாட்டுக்கு வந்திருக்கும் நானும் என்னைப்போன்றவர்களும் எங்கள் சமூகத்தில் உன்னைப்போலவே கடைப்பட்டவர்கள். எங்களை எவரும் மனிதர்களாக மதிபப்தில்லை. ஒரு நல்ல குடும்பத்துப்பெண் எங்களை ஏறிட்டும் பார்க்கமாட்டாள். ஒரு சாதாரண விருந்தில்கூட நாங்கள் கலந்துகொள்ள முடியாது. எங்கள் கழுத்துக்குட்டைகளையும் காலுறைகளையும் தொப்பிகளையும் பார்த்து அவர்கள் சிரிப்பார்கள். அவர்கள் சிரிக்கும்தோறும் நாங்கள் மேலும் கோமாளிகள் ஆவோம்….நாங்கள் எங்கள் சமூகத்தில் உள்ள புழுப்பூச்சிகள் தெரியுமா?”

பேச ஆரம்பித்ததும் அவனுக்கு பேச்சு வந்தது ”எல்லாவற்றையும் உதறிவிட்டு இந்த வெயில் காடுகளுக்குள் வந்து பதுங்கிக்கொள்கிறோம். எங்களை வெறுப்பவர்களை நாங்கள் வெறுக்க முடியாது. அவர்கள் எங்கள் எஜமானர்கள். ஆகவே உங்களை வெறுக்கிறோம். சாட்டையால் அடிக்கிறோம். அவமானபப்டுத்துகிறோம். நீயே பார்த்திருப்பாய், அடிமைகள் அனைவருமே நாய் வைத்திருப்பார்கள்.”

நெடுநேரம் இருவர் நடுவே இருள் மட்டும் இருந்தது. பின்பு துரை ”நீ அசாதாரணமான மனிதன். என்னைவிட நீ எத்தனையோ பெரியவன். நான் சாதாரணமானவன்…ஆனால் நான் உனக்கு ஏதாவது தரவேண்டும்…பதிலுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். உனக்கு என்ன வேண்டும்?” அவன் என்னை நோக்கி கை நீட்டி என் முழங்காலை தொட்டான். அவன் கை சூடாக நடுங்கிக்கொண்டிருந்தது ”சொல்…உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்?”

நான் ஒன்றும் சொல்லாமலேயே இருந்தேன் .என் முழங்காலைப் பிடித்து அவன் உலுக்கினான் ”சொல்…நிறைய பணம் தருகிறேன்.கீழே கிராமத்துக்குப் போய் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு நிலம் வாங்கி வீடுகட்டி விவசாயம்செய்…” அவன் மேலும் உலுக்கினான் ”சொல் என்ன வேண்டும் உனக்கு? அந்த சோதியை திருமணம் செய்துகொள்கிறாயா? அவளை கட்டாயப்படுத்தி உன்னை மணக்கச் செய்கிறேன்…”

நான் பேசாமலிருந்ததும் அவன் வெறிகொண்டான் ”சொல், முட்டாளே, சொல்…ஊமைச்செந்நாயே…உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்? சொல். வாயைத்திறந்து சொல்…ஏன் பேசாமலிருக்கிறாய்?”

நான் மெல்ல ”ஏனென்றால் நான் ஒரு ஊமைச்செந்நாய்’என்றேன். அவன் தளர்ந்து மெல்ல சாய்ந்துகொண்டான். ”நான் உன்னிடம் சொல்வதெல்லாம் இவ்வளவுதான். நீ என் நண்பன். என் சகோதரன். என் வாழ்நாளெல்லாம் நான் உன்னை நினைத்திருப்பேன்…ஒருநாளும் உன் நினைவை நான் இழக்க மாட்டேன்” அவன் குரல் தழுதழுத்திருந்தது.

அதன்பின் அவன் பேசவில்லை. ஆனால் அவன் இரவெல்லாம் தூங்கவில்லை. பெருமூச்சு விட்டபடியும் நெளிந்தபடியும்தான் இருந்தான். இருமுறை தண்ணீர் கேட்டான். விடியற்காலையில் அவன் சற்று தூங்கிவிட்டிருந்தான்.

தலைக்குமேல் பறவைகளின் ஒலி கேட்டபோது நான் எழுந்து அவனை எழுப்பி அவன் கட்டுகளை அவிழ்த்தேன். அவன் முகம் தெளிவாக இருந்தது. அது தூங்கியதனால் இருக்கலாம். அல்லது இரவு அவன் பேசியதனாலும் இருக்கலாம். என்னிடம் ”இன்று நானே நடப்பேன் என்று நினைக்கிறேன்”என்றான். நான் புன்னகைசெய்தேன்.

காட்டுக்குள் இறங்கி இருவரும் சென்றோம். அவன் சற்று திடமாகவே நடந்தான். ஏற்றங்களில் மட்டும் நான் சற்று பிடிக்க வேண்டியிருந்தது. மலைப்பாதை பெரிய குன்றின் விலாவில் வளைந்து சென்றது. கீழே மிக ஆழத்தில் பாம்புச்சட்டை போல ஆறு ஓடும் பள்ளம் தெரிந்தது. ”அது காரோடையா?” என்றான். நான் ஆம் என தலையசைத்தேன்.

அவனை மரத்தடியில் நிறுத்திவிட்டு நான் காட்டுக்குள் சென்றேன். பாதையோரத்தில் சிறிய பாறை ஒன்றின் இடுக்கில் ஊற்று கசிந்து அப்பால் பள்ளம் இறங்குவதைக் கண்டேன். நீரை அள்ளிச்செல்ல ஒரு கமுகுப்பாளை எடுத்து கோட்டிக்கொண்டிருந்தபோது சீறல் ஒலியைக் கேட்டேன். என் முன்னால் மாங்கொட்டை நிறத்து உடலுடன் ஒரு செந்நாய் நின்றது. அதன் பழுப்புக்கண்களை பார்த்துக்கொண்டே நான் காலை தூக்கி பின்னால் வைத்தேன்.

புதர்களுக்குள் மெல்லிய அசைவுகளாக நான் செந்நாய்களைக் கண்டேன் எந்த திசை நோக்கி விலகுவது என நான் கண்களை மட்டும் திருப்பி பார்ப்பதற்குள் செந்நாய் ஒன்று என் விலாப்பக்கமிருந்து என்னைத்தாக்கியது. யானைரத்தம் தோய்ந்த துணி அங்கே இருந்தது. அதை முகர்ந்து பின்னால் வந்த கூட்டம் அது. நான் என் இடுப்புத்துணியை உருவிவிட்டுக்கொண்டு பாய்ந்து அந்தப்பாறையில் ஏறினேன். என் அலறல் கேட்டு துரை திரும்பிப்பார்த்து ”ஜீஸஸ்!” என்றபடி தன் கைத்துப்பாக்கியை உருவி இருமுறை சுட்டான்.

காடே ஒலியில் அதிர செந்நாய்கள் வால் சுழற்றி எம்பிப்பாய்ந்து புதர்களுக்குள் விலகி ஓட துரை என்னை நோக்கி வருவதைப்பார்த்திருந்தபோது காட்சி சற்றே ஆடுவதை உணர்ந்தேன். அதைப்புரிந்துகொள்ளும் சில கணங்களுக்குள் நான் நின்றிருந்த சிறிய பாறை மண்ணுடன் பெயர்ந்து சரிவில் இறங்கியது.

நான் அதிலிருந்து குதித்து ஒரு தவிட்டைச்செடியைப்பற்றினேன். பாறை பெயர்ந்து உருண்டு வேகம் கொண்டு தம்ம்ம் என்ற ஒலியுடன் ஆழத்துக்காட்டை அடைந்தது. தவிட்டைச்செடி என் எடையை தாங்காமல் பிடுங்கப்பட்டு வந்தது. நான் பல்வேறுசெடிகளைப்பிடிக்க முயன்று ஈரமண்ணில் வழுக்கி வழுக்கி கீழிறங்கி செங்குத்தான சரிவின் விளிம்பில் நின்ற ஒரு வேரைப்பற்றிக்கொண்டு தொங்கினேன். மண்ணில் ஊன்ற முயன்று வழுக்கிய என் கால்களுக்குக் கீழே ஆழத்தை பார்க்காமலேயே  உணர்ந்தேன்.

துரை ஓடிவந்து மேலே குப்புறப்படுத்துக்கொண்டு ”பயபப்டாதே …பயபப்டாதே…ஒரு நிமிடம்.. ”என்று கூவினான். தன் இடுப்பில் இருந்து பெல்ட்டை உருவி அதன் ஒரு நுனியை தன் கையில் சுற்றிப்பிடித்துக்கொண்டு அதை நீட்டினான்.

பெல்ட் என் முகத்தருகே வந்தது. என் வலக்கையை நீட்டி அதைப் பிடித்தபடி மேலே பார்த்தேன் ”’பிடித்துக்கொள்…நான் இழுக்கிறேன்’என்று அவன் கூவினான்.

நான் ”நரகத்துக்குப் போ!” என்று அவன் கண்களைப் பார்த்துச் சொல்லி காறித் துப்பிவிட்டு என் பிடிகளை விட்டேன். அடியாழத்தில் விரிந்திருந்த பசுமையான காடு பொங்கி என்னை நோக்கி வர ஆரம்பித்தது.

சென்ஷி

unread,
Apr 13, 2010, 8:04:13 AM4/13/10
to panb...@googlegroups.com
ஊமைச் செந்நாய் - மீதி..

சென்ஷி

unread,
Apr 13, 2010, 8:06:34 AM4/13/10
to panb...@googlegroups.com

3. அவ்வா - சாரு நிவேதிதா

ஒரு ஐப்பசி மாதத்து அடைமழை இரவின் போது தான் அந்த நாயின் தீனமான அழுகைச் சத்தம் கேட்டது.

அந்தத் திரு.வி.க. வீதியில் நாய்கள் அதிகம். அதிலும் விதவிதமான நாய்கள். பல இனத்தைச் சேர்ந்த நாய்கள் நறுக்கி விட்டதைப் போல் குட்டி வாலும் நீண்டு மெலிந்த உடலும் கொண்ட டாபர்மேன் வகை நாய்கள் கூட தெருவில் கேட்பாரற்று அலைந்து கொண்டிருக்கும்.

எனக்கானால் நாய்களைக் கண்டால் பிடிக்காது. இரவுகளில் இந்த நாய்கள் தான் பெரும் பிரச்சினை. மரணத்தின் வருகையை அறிவிப்பது போன்ற இதுகளின் ஊளைச் சத்தத்தைக் கேட்டு உறக்கம் கலைந்து எழும் அவந்திகா ‘ சூ… சூ…. ‘ என்ற அதுகளை விரட்டிக் கொண்டிருப்பது இன்னொரு பிரச்சினை.

மனிதக் குரல் கேட்டு மிரண்டு ஓடி தெரு மூலையில் நின்று கொண்டு மீண்டும் ஓலமிடும். அல்லது தங்களது தீராச் சண்டையை ஆரம்பிக்கும். அந்தச் சண்டையில் அடுத்த தெரு நாய்களும் கலந்து கொள்ளும். உச்ச ஸ்தாயியில் பல விதமாய்க் குரைத்து மூர்க்கமாகச் சண்டையிடும். நீண்ட நேரம் நீடிக்கும் அச் சண்டை எந்த இலக்கும் இல்லாமல் தானாகவே ஓய்ந்து போகும்.

காலையில் எழுந்து ” இரவெல்லாம் தூக்கமில்லை. கண் எரிகிறது ” என்பாள் அவந்திகா.

பகலில் பரம சாதுவாக எல்லாம் குப்பைத் தொட்டியில் இரை தேடி கொண்டிருக்கும். அப்போது அதுகளைப் பார்த்தால் பாவமாக இருக்கும்.

எங்கள் தெரு குப்பைத் தொட்டி கொஞ்சம் விசேஷமானது. முனிசிபாலிடியில் குப்பைத் தொட்டி என்று நான்கு உயரமான சுவர்களும் , கதவு அளவுக்கு ஒரு திறப்பும் கொண்ட ஒரு ஸ்ட்ரக்சரைக் கட்டிக் கொடுத்துக் ” குப்பைகளைத் தயவு செய்து குப்பைத் தொட்டியில் போடவும். உங்கள் சுற்றுப்புறம் அழகாக இருக்க உதவுங்கள் ” என்று எழுதியும் கொடுத்திருந்தார்கள்.

ஆனாலும் , எங்கள் தெரு ஜனங்கள் அந்தச் சுவர்களுக்கு உள்ளே போடாமல் (மிகச் சரியாக) வெளியில்தான் குப்பையைப் போடுவார்கள். சுவரைச் சுற்றிலும் குப்பை மலையாய்ச் சேர்ந்த பிறகு , குப்பையை உள்ளே போட நினைக்கும் சிலர் கூட சுவரை நெருங்க முடியாமல் வெளியிலேயே போட்டு விட வேண்டியிருக்கும்.

” சிவிக் சென்ஸே இல்லாத ஜனங்கள். இவ்வளவு பெரிய குப்பைத் தொட்டியைக் கட்டிக் கொடுத்தும் எங்கே போடுகிறார்கள் பாருங்கள் ” என்பாள் அவந்திகா.

உண்மை தான். அளவில் பெரியது தான். எப்போதாவது வெளியூர் போகும் போது , ஊருக்கு வெளியே இந்த மாதிரி ஸ்ட்ரக்சர்களைப் பார்த்திருக்கிறேன். மேலே கூரை ஒன்று இருக்கும். அது தான் வித்தியாசம். அந்த ஸ்ட்ரக்சர்களுக்கு வெளியே நரிக்குறவர் குடியிருப்பு , அம்பேத்கர் குடியிருப்பு என்று ஏதாவது எழுதியிருக்கும்.

இந்தக் குப்பைத் தொட்டியைப் பார்க்க எனக்கு வினோதமாக இருக்கும். அதில் என்னென்னவெல்லாம் கிடக்கும் என்று பார்க்க உள்ளுக்குள் ஒரு ஆசை கிளம்பும். இரை தேடும் நாய்களை விரட்டி விட்டு ப்ளாஸ்டிக் டப்பாக்களையும் , பாலிதீன் கவர்களையும் சேகரித்துக் கொண்டிருப்பார்கள் சில பேர்.

ஆனால் எங்கள் தெருவை அடுத்த பாரதியார் தெரு ஜனங்கள் பரவாயில்லை. அங்கே குப்பைத் தொட்டியும் இல்லை. குப்பையும் இல்லை. சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பு மையத்தில் உறுப்பினராகி மையம் அனுப்பி வைக்கும் வண்டிகளில் தங்கள் குப்பைகளைச் சேர்த்து விடுகிறார்கள்.

அவந்திகாவுக்கும் அதில் சேர்வதில் தான் விருப்பம். ஆனால் அதற்கு அவள் வேலைக்கு முழுக்குப் போட வேண்டியிருக்கும். ஏனென்றால் மையத்தின் பையன் காலை பதினோரு மணிக்குத் தான் இந்தப் பக்கம் வருவான்.

பாரதியார் தெரு மக்கள் , சுற்றுப்புறச் சூழல் மீது கொண்ட ஆர்வத்தால் அந்தத் தெரு நாய்களின் பாடு மிகவும் திண்டாட்டமாகப் போய்விட்டது. அன்றைக்குப் பாருங்கள். நான் ஆபிஸ் முடிந்து வந்து கொண்டிருந்தபோது அந்தக் காட்சியைக் காண நேர்ந்தது. எலும்பும் தோலுமாய் நறுங்கிப் போயிருந்த நாய் ஒன்று காய்ந்த மனிதப் பீயைத் தின்று கொண்டிருந்தது. எனக்கு ஒரு மாதிரி மனசே சரியில்லாமல் போய்விட்டது.

அவந்திகா ஆபீசிலிருந்து வந்ததும் அவளுக்கு டீ போட்டுக் கொடுத்து விட்டு இதைச் சொன்னேன்.

” பாரேன். முறுக்கு சாப்பிடுவதைப் போல் அந்தப் பீஸை ‘ நறுக் முறுக் ‘ குனு சாப்பிடுது. பாவமா இருந்திச்சும்மா ” அவ்வளவுதான். குடித்துக் கொண்டிருந்த டீயோடு வாந்தியெடுத்து விட்டாள்.

” சரியான முட்டாள்ப்பா நீ. இப்படியா டீ குடிச்சுக்கிட்டு இருக்கும்போது இதைச் சொல்றது ?”

அன்று இரவு அவள் சாப்பிடவில்லை. தொடர்ந்து ஓக்களித்துக் கொண்டே இருந்தாள்.

” குடலே வந்திடும் போலருக்கே. இந்த வாந்தியை நிறுத்த ஏதாவது செய்யேன். ”

காய்ந்த உப்பு நாரத்தங்காயைப் பிய்த்துக் கொடுத்துத் தூங்கச் செய்தேன்.

அவளைப் பார்த்தாலும் பாவமாகத்தான் இருந்தது. ஆனால் ஆச்சரியமாகவும் இருந்தது. பீ என்று சொன்னால் வாந்தி வந்து விடுமா ? உங்களுக்கு வருகிறதா ?

எனக்கு சான்ஸே இல்லை. எங்கள் ஜாதியே பீயெடுக்கும் ஜாதிதான். நான் தான் கொஞ்சம் படித்து கிடித்து வேறு வேலைக்கு வந்து விட்டேன்.

என் தம்பி இன்னமும் பீ தான் எடுத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு என்னைப் போல் படிப்பு வரவில்லை. ஆனால் தைரியசாலி , பட்லர் இங்கிலீஷ் பேசுவான். அதைப் பார்த்து எனக்கு ஆத்திரமாக வரும். ஒழுங்காகத் தெரிந்தால் பேச வேண்டும். இல்லாவிட்டால் பேசக் கூடாது. ஒழுங்காகத் தெரிந்த எனக்கே இங்கிலீஷ் பேச வராதது இன்னமும் ஒரு குறையாகத்தான் இருக்கிறது. ஆனால் , என் தம்பி அந்த பட்லர் இங்கிலீஷை வைத்தே பெரிய ஆளாகிவிட்டான். ஜெர்மன் எம்பஸியில் வேலை. இங்கிலீஷையே தப்பும் தவறுமாக உளறிக் கொட்டும் அந்த நாய் இப்போது ஜெர்மனில் பிளந்து கட்டுகிறது. இப்போது ஜெர்மனியில் இருக்கிறான். டாய்லெட் க்ளீனர் வேலையில் இருந்தாலும் வீடு , கார் எல்லாம் வைத்திருக்கிறான்.

” ஏண்டா இப்படி ஜெர்மனிக்குப் போயும் நம்மோட குலத் தொழிலைத்தான் செய்யணுமாடா ?” என்பேன்.

” அடப் போண்ணே நீ வேற…. அந்த ஊரு டாய்லெட்டெல்லாம் நம்ம சினிமா ஸ்டாருங்க கன்னம் மாதிரி இருக்கும். இன்னோரு விஷயம். அந்த வெள்ளக்காரப் பயலுவளோட பீ கூட நாற மாட்டேங்குது ”.

” அப்படியா ? அப்ப அதையே தின்னுக்கிட்டு அங்கயே இரு ”

” சாப்பிட்டாலும் தப்பில்லே. நம்ம அவ்வா குடுத்த சாப்பாட்டை விட நல்லாத்தான் இருக்கும் ” ( தம்பி சொன்னதைப் பற்றி விளக்க வேண்டுமானால் ஒரு ஆயிரம் பக்கங்களாவது எழுத வேண்டும். ஆனால் இந்தக் கதையோ நாய்களைப் பற்றியது. கதையின் இடையே புகுந்ததும் அல்லாமல் ஒரு முக்கியப் பிரச்சினையை வேறு கிளப்பி விட்டு விட்டான். அதைப் பற்றி சுருக்கமாகப் பார்த்துவிட்டுக் கதையைத் தொடருவோம்)

அவ்வாவுக்கு சித்தூர்தான் சொந்த ஊர். அங்கே பிழைக்க வழியில்லாமல் தஞ்சாவூர் ஜில்லா வந்து எப்படியோ நாகூரில் செட்டிலாகி விட்டது. பணக்கார வீடுகளின் எடுப்புக் கக்கூசில் பீ அள்ளுவது தான் வேலை. அப்பா சின்ன வயதிலேயே செத்துவிட்டார். கக்கூஸ் எடுக்கும் வீடுகளில் அரிசியும் , மிஞ்சிய சோறும் கொடுப்பார்கள். அரிசியை அப்படியே பத்திரப்படுத்திவிட்டு சோற்றை உபயோகித்துக் கொள்ளும். அந்தச் சோற்றை காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது வெந்நீர் விட்டுக் கலக்கிக் கொடுக்கும் அவ்வா. அந்தச் சோறு காயும் போது ஒரு நாற்றம் நாறும் பாருங்கள். பீ நாற்றமெல்லாம் பிச்சையெடுக்க வேண்டும். அரிசி இருந்தால் புயல் மழைக் காலங்களில் பட்டினி கிடக்காமல் வயிறு நிரம்பும். வெட்டாற்று வெள்ளம் ஊருக்குள் பாயும்போது அதன் தலைவாசலில் இருப்பது எங்கள் தொம்பங்குடிசை தான்.

சில வருடங்களுக்கு முன் நாகூர் போயிருந்த போது அந்தப் பெயரை ‘ தொல்காப்பியர் சதுக்கம் ‘ என்று மாற்றியிருந்ததைப் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. தொல்காப்பியருக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் ? அவரும் அவ்வாவைப் போல் பீ அள்ளியிருக்கிறாரா ? அவர் எங்கள் ஜாதியைச் சேர்ந்தவரா ? ஆனால் பெயர் தான் மாறியிருந்ததே ஒழிய மற்றதெல்லாம் அப்படியே தான் இருந்தது. ஊரில் எடுப்புக் கக்கூசுகள் மறைந்து ஃப்ளஷ் அவுட் டாய்லெட் வந்திருந்தது. எங்கள் ஜனமும் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களாக மாறியிருந்தார்கள். ஊரைப் பெருக்கிச் சுத்தம் செய்யும் வேலை.

அவ்வா என் தங்கையோடு அவள் வீட்டுக்குப் போய் விட்டது. தங்கை கணவரும் என்னைப் போல் படித்தவர். போலீஸ் இன்ஸ்பெக்டர்.

அவ்வாவுக்கு என் மீது கோபம். நம் ஜாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் அய்யர் வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன் என்று. அய்யர் இல்லை அய்யங்கார் என்று சொன்னால் அதற்குப் புரியாது.

வாந்தியெடுத்து விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த அவந்திகாவிடம் இதையெல்லாம் சொல்ல நினைத்தேன். ‘ நீ எங்கள் அவ்வா மாதிரி பீ அள்ளியிருந்தால் என்ன ஆகியிருப்பாய் அவந்திகா ?’ அவந்திகா எனக்காக பெங்களூர் போர்க் சமைத்துத் தருகிறாள். மிக ருசியாக , ஐந்து நட்சத்திர ஓட்டலின் செஃப் போல. நன்றி. ஆனால் , நான் இருபது வயது வரை மனிதப்பீயை மட்டுமே உணவாகக் கொண்ட கருப்புப் பன்றிகளையே சாப்பிட்டு வளர்ந்தவன் என்று உனக்குத் தெரியுமா ? அதையெல்லாம் பேச ஆரம்பித்தாலே ‘ வேண்டாம் , பழசை விடு ‘ என்பாள்.

தெருவில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரு நாள் வீட்டு மாடியில் உலர்த்தியிருந்த என் சட்டைகளைத் துண்டு துண்டாய்க் கிழித்துப் போட்டிருந்தன நாய்கள்.

எனக்கு சட்டைகள் என்றால் மிகவும் விருப்பம். அழகழகான சட்டைகள். மாடியிலிருந்து கீழே பார்த்தேன். அடுத்த வீட்டு மாடியின் படிக்கட்டில் நான்கைந்து நாய்கள் தூங்கிக் கொண்டிருந்தன. சத்தம் செய்யாமல் கீழே வந்தேன். எவர்சில்வர் பாத்திரத்தில் வெந்நீர் வைத்து நன்றாகக் கொதிக்க விட்டு , வெகு பத்திரமாக என் மீது சிந்தி விடாமல் இரண்டு பக்கமும் துணி கொடுத்து மேலே எடுத்துச் சென்று மாடியின் கைப்பிடிச் சுவரில் வைத்து விட்டு ஓசையெழுப்பாமல் கீழே பார்த்தேன். நாய்கள் தூங்கிக் கொண்டிருந்தன. வெந்நீரை அவற்றின் மேல் சாய்த்தேன். செவிச்சவ்வுகளே கிழிந்து கிழிந்து விடுகிறாற் போல் கத்திக் கொண்டு ஓடின நாய்கள்.

காட்டூர் கந்தன் இப்படித்தான் கத்தினான். அவ்வா அவன் முகத்தில் வெந்நீரை ஊற்றியபோது.

அவ்வா நிறைய பன்றிகள் வைத்திருந்தது. ஆனால் , அதற்கு உடம்பு முடியாமல் போனபோது பன்றிகள் ஒவ்வொன்றாய்க் குறைய ஆரம்பித்தன. அதை விற்று வருகிற பணத்தில்தான் என் படிப்பும் , என் தங்கையின் படிப்பும் நடந்து கொண்டிருந்தது. நல்ல வேளை. தம்பிக்குப் படிப்பு வரவில்லை. ஒன்பதாம் கிளாசுக்கு மேல் தாண்டாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். இல்லா விட்டால் அவன் செலவும் சேர்ந்திருக்கும்.

நான் பி.எஸ்ஸி. ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருந்தேன் ஹாஸ்டலில் தங்கி. ஸ்டடி ஹாலிடேஸில் ஊருக்கு வந்திருந்தேன். ஹாஸ்டல் ஃபீஸ் , எக்ஸாம் ஃபீஸ் என்று பணம் கட்ட வேண்டியிருந்தது. வீட்டிலிருந்த கடைசிப் பன்றியையும் விற்று விட வேண்டியதுதான்.

” பொட்டப் பன்னி. குட்டி போட்டா நமக்குத்தான் நல்லது. விக்கணுமா அவ்வா ?” என்று கேட்டபோது , ” அதையெலாம் யோசிக்க முடியாது. நீ வேலைக்குப் போய்ட்டா நூறு பன்னி வாங்கலாம் ” என்று சொல்லி விற்று விட்டது அவ்வா. விற்ற விஷயம் எப்படியோ பன்றிக்குத் தெரிந்து போய் வீட்டை விட்டு ஓடி விட்டது.

பதைபதைப்புடன் கையில் சுளுக்கியோடு எங்கெங்கோ தேடியலைந்தது அவ்வா. எங்குமே கிடைக்கவில்லை. கடைசியில்தான் விஷயம் தெரிந்தது. காட்டூர் கந்தன் எங்கள் பன்றியைப் பிடித்து விற்று விட்டான் என்று.

காட்டூர் கந்தன் திருச்சிக்குப் பக்கத்திலுள்ள காட்டூரில் ஒரு கொலை செய்து விட்டு எங்கள் ஊருக்கு வந்து பதுங்கியவன். அதற்குப் பிறகு இங்கேயே தங்கி விட்டான். பக்கத்திலுள்ள மேட்டுத் தெருவில் தான் அவன் குடிசை. எந்த வேலைக்கும் போகாமல் சிறு வியாபாரிகளை மிரட்டிப் பணம் பறித்து வாழ்ந்து கொண்டிருந்தான். அவ்வப்போது திருடுவதும் உண்டு. ஊரில் அவனைக் கண்டால் எல்லோருக்கும் ஒரு பயம் உண்டு.

அவ்வா நேராகக் கந்தனின் குடிசைக்குப் போனது. அப்போது கந்தன் குடிசையில் இல்லை. பக்கத்தில் வந்து விசாரித்தவர்களிடம் , ” அவன் மட்டும் உண்மையிலேயே ஆம்புளையா இருந்தா என் வூட்டுப் பக்கம் வரச் சொல்லுங்க ” என்று சொல்லி விட்டு வந்து விட்டது அவ்வா.

எனக்கு உள்ளுக்குள் திகில். ‘ இன்று ஒரு கொலை தான் விழப் போகிறது ‘ என்று முடிவு கட்டி விட்டேன். என் உயிரைக் கொடுத்தாவது அவ்வாவின் உயிரைக் காப்பாற்றுவது என திட்டம் செய்து கொண்டேன். ‘ நான் செத்தால் கூடப் பரவாயில்லை. அவ்வா செத்து விட்டால் தம்பி தங்கைகளின் கதி ?’ ஆனால் அவ்வாவிடம் இது பற்றி நான் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.

அடுப்பைப் பற்ற வைத்து சோற்றுப்பானையை வைத்துவிட்டு அரிசியைக் களைய ஆரம்பித்தது. அப்போது அங்கே புயலைப் போல் வந்தான் கந்தன்.

” ஏய் வாடி வெளியே…. எவடீ என்னெ ஆம்பளயான்னு கேட்டது ?”

” டேய் கந்தா… எம் பன்னியத் திருடி வித்தியா நீ ?”

ஆமான்டீ , வித்தேன். என்னடீ பண்ணுவே ? பீ அள்ளுற தேவுடியா செருக்கிக்கு அவ்வளவு திமிரா ? வாடீ …. நான் ஆம்பளயா இல்லையான்னு காமிக்கிறேன் ” என்று சொல்லியபடி ஒரே தாவாகத் தாவி அவ்வாவின் முடியைப் பற்றியிழுத்தான்.

நான் செய்வதறியாமல் திகைத்து நின்றேன்.

கண்ணிமைப்பதற்குள் ஒருக்கணம் அவன் கையைத் தட்டி விட்டு விட்டு உள்ளே ஓடிய அவ்வா அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து வந்து அவன் முகத்தில் ஊற்றியது.

இதைச் சிறிதும் எதிர்பார்க்காத கந்தன் பன்றியைப் போல் அலறினான். மறுபடியும் உள்ளே ஓடிய அவ்வா அடுப்பில் எரிந்து கொண்டிருந்த கொள்ளிக்கட்டையை எடுத்து வந்து அவன் ஆண்மையில் ஓங்கிச் செருகியது.

நல்ல வேளையாக அவ்வா ஜெயிலுக்குப் போகவில்லை. கந்தனை என்ன செய்வதென்று போலீஸே திணறிக் கொண்டிருந்தது போலும். விபத்தில் மரணம் என்று சொல்லி கேஸை முடித்து விட்டது போலீஸ்.

அதற்குப் பிறகு அந்த நாய்கள் மாடிப்பக்கம் வரவில்லை.

——————————————————————————–

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக சத்தம் வந்து கொண்டிருந்த திசையில் தேடிப் பார்த்தேன்.

ஒரு சின்னஞ்சிறிய நாய்க்குட்டி. பிறந்து சில தினங்களே ஆகியிருக்கும் போல் தோன்றியது. முட்புதரில் சிக்கிக் கொண்டு குளிரில் நடுங்கியபடி கிடந்தது. அருகில் சென்றபோது குரைத்தது.

கவனமாக முட்களை விலக்கி விட்டுக் குட்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தேன். ஆர்வமாக வந்து பார்த்து விட்டுச் சென்ற அவந்திகா கம்பளியைக் கொண்டு வந்து போர்த்தினாள். ஒரு கிண்ணத்தில் பால் ஊற்றிக் கொடுத்தேன்.

ஆவலுடன் குடித்து விட்டு , ஓட முடியாமல் விழுந்தும் எழுந்தும் தடுமாறி வந்து என் மடியில் ஏறிக் கொண்டது அந்த நாய்க்குட்டி.

சென்ஷி

unread,
Apr 13, 2010, 8:09:29 AM4/13/10
to panb...@googlegroups.com

4. உத்தரவிடு.. பணிகிறேன் - ஆல்பர்ட்டோ மொராவியா (தமிழில் -நாகூர் ரூமி)

(Command, I will Obey You by Alberto Moravia)

நான் ஒரு வங்கியில் மெசஞ்சராக இருந்தேன். பணிபுரிவோரையெல்லாம் ஒரு வடிகட்டுக்கு உள்ளாக்கியபோது எனக்கு மூட்டை கட்டிவிட்டார்கள். முதலில் எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. எல்லாவிதமான உத்தரவுகளையும் பெறுவதற்கே நான் பழக்கப்பட்டிருந்தேன். மணியடிப்புகள், இண்டிகேட்டரில் பச்சை சிவப்பு சிக்னல்கள் காட்டுதல், வாடிக்கையாளர்களின் வேண்டுகோள்கள், எவருக்காவது செய்தி சொல்லச் செல்லல் இன்னபிற. திடீரென்று ஒன்றுமில்லாமல் போய்விட்டது. கால்களை மடக்கி, கைகளைக் கட்டி, சூனியத்தை வெறித்துக்கொண்டு வரவேற்பறை சோஃபாவில் அமர்வதைத் தவிர.

ஆனால் நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட விரும்பவில்லை. செய்வதற்கு இனி ஒன்றுமில்லாமல் இருந்தது நான் வேலையில்லாமல் இருந்ததனால் அல்ல. யாரும் எனக்கு எவ்வித உத்தரவுகளும் பிறப்பிக்காததால்தான். ஒருகால் சிலர் இந்த வித்தியாசத்தைப் பார்க்காமலிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த அளவில் வித்தியாசமிருந்தது. மிகப்பெரிய அளவில்.

விளக்கிவிடுகிறேன். வேலை தேடிச்சலித்த சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் காலை படுக்கையில் படுத்துக் கொண்டு, இன்னும் தூங்குவதாக என்னை நானே ஏமாற்றிக்கொள்ள முயன்று கொண்டிருந்தபோது, என் மனவியின் குரல் என்னை குதித்து எழ வைத்தது. குரல் கோபமன தொனியில் சொல்லிக் கொண்டு இருந்தது :  “ இந்த நேரத்தில் என்னதான் இந்த உலகத்தில் செய்து கொண்டிருக்கிறீர்கள் படுக்கையிலங்கே? உங்களுக்கே வெட்கமா  இல்லை? நான் உடை மாற்றிக் கொண்டிருக்கிறேன். எழுந்து முகம் கழுவிவிட்டு குறைந்த பட்சம் பயனுள்ளவராக ஆக்கிக்கொள்ளுங்கள். காலை உணவைத் தயார் செய்யுங்கள் ”.

மேலோட்டமாக அவ்வார்த்தைகள் சாதாரணமானவை. முக்கியத்துவமற்றவை. ஆனால் போர்வைகளுக்குள் சுருண்டு கிடந்த என்மீது அவை முழுவதும் வித்தியாசமானதொரு பாதிப்பை ஏற்படுத்தின. நான் எனக்கே சொல்லிக் கொண்டேன். எழுந்திரு, உடைமாற்று, உன்னைப் பயனுள்ளவனாக ஆக்கிக்கொள். காலை உணவு தயார் செய். இவைகள் உத்தரவுகள். நிஜமானவை. வங்கியில் நான் பெற்றுக்கொண்டிருந்தவைகளைப் போலவே இவைகளும் தெளிவானவை.  முடிவானவை. அதிகாரமிக்கவை. இவைகள் உத்தரவுகள். இவைகளினால் தூண்டப்பட்டது போல ஏதோவொன்று என் மனதிலிருந்து கால்கள்

வழியாக பயணித்தது. உடனே நான் போர்வைகளை எறிந்தேன். தரையில் பாதங்களை வைத்தேன். பாத்ரூமுக்குச் சென்றேன். கதவைத் திறந்தேன். ஷவரைத் திறந்தேன். சுருங்கச் சொன்னால், சொல்லப்பட்டதையெல்லாம் செய்தேன்.

பின் என்னை நானே உசுப்பிக்கொண்டேன். எளிமையாகத் தோன்றிய இந்த உத்தரவுகளில் மேலும் பல உத்தரவுகள் உட்குறிப்பாக இருந்ததை உணர்ந்தேன். அதாவது இரண்டாம் மூன்றாம் தரமான உத்தரவுகள். உதாரணமாக இந்த சிறிய வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம். ‘காலை உணவைத் தயார் செய்’. இந்த வாக்கியம் சொன்னது : முதலில் சமயலறைக்குப் போ. இரண்டாவது, காஸ் குக்கரை ஏற்று. மூன்றாவது, காப்பியையும் நீரையும் பாத்திரத்துள் ஊற்று. நாலாவது, ப்ரெட்டை வெட்டு. ஐந்தாவது, க்ரில்லை அடுப்பில் வை. ஆறாவது, சீனி, எண்ணெய் பாத்திரங்களோடு தட்டை தயார் செய். ஏழாவது, காப்பி பானையையும் ட்டோஸ்ட்டையும் தட்டுக்கு மாற்று. எட்டாவது, படுக்கையறைக்கு தட்டைக்கொண்டுபோய் படுக்கையில் வை.

கொடுத்த கணத்திலேயே நான் என் மனைவியின் உத்தரவைச் செயல்படுத்தா விட்டால், பல்வேறு இழைகள் பின்னிப் பிணைந்த அதன் தன்மையினால், ஒன்றன்பின் ஒன்றாக பல செயல்களைச் செய்வது கடினமாகிவிடும். அதோடு, நான் ஏற்கனவே சொல்லியபடி, இந்த இரண்டாம் தரமான உத்தரவுகள் சில மூன்றாம் தரமானவைகளை உள்ளடக்கியவை. உதாரணமாக, தட்டில் வெண்ணெயை வைப்பதென்றால், ஃப்ரிஜ்ஜிலிருந்து வெண்ணெயை எடுப்பது, அதைச் சுற்றியுள்ள தாளிலிருந்து அதை விடுவிப்பது, கத்தி கொண்டு அதை வெட்டுவது, வெட்டிய துண்டுகளை உணவில் வைப்பது இன்னபிறவும். இதெல்லாம் சொல்வது என்ன? வங்கியிலிருந்து என்னை மூட்டைகட்டி அனுப்பிய சில இயக்கமற்ற நாட்களுக்குப் பின் இயங்குகின்ற ஒரு இருப்பைக் கண்டுகொண்டேன் என்ற பிரக்ஞையை நான் மெல்ல அடைந்துகொண்டிருந்தேன் என்பதை. அப்போது நான் ஒரு ஃப்ங்ஷனரியாக இருந்தேன். இப்போது மறுபடியும் ஆகிக்கொண்டு வருகிறேன். காரணம் – வார்த்தை விளையாட்டை மன்னியுங்கள் – நான் மறுபடியும் ஃப்ங்ஷன் பண்ண ஆரம்பித்தேன்.

என் மனைவி ஒரு ஷார்ட் ஹேண்ட் டைப்பிஸ்ட். தினமும் அலுவலகம் செல்வாள். அன்று காலை அவள் எனக்கு எந்த உத்தரவும் தரவில்லை. அவள் செய்ததெல்லாம் என்னை நோக்கிக் கத்திவிட்டு ஓட்டமாகச் சென்றதுதான். “ தொலைபேசியைக் கவனித்துக் கொள்ளுங்கள். பெயர்களைக் குறித்துக்கொள்ளுங்கள்.” அது எனக்குப் போதுமானதாய் இருந்தது.

வரவேற்பறையில் அமர்ந்தேன். சோஃபாவில் காத்திருந்தேன். எதற்காக? தொலைபேசி மணி ஒலிப்பதற்காக. அந்த தொலைபேசி அழைப்புகளுக்கு நன்றிகள். இரண்டு மணி நேர இயக்கமின்மையில் இருபது அல்லது நாற்பது அல்லது அறுபது வினாடிகள் இருப்பை, அதாவது இயக்கத்தை கொடுத்தன அவை. என்னுடைய கருத்தில் இதுவே பெரிய விஷயம். அதோடு தொலைபேசி அழைப்புகள் ஒன்றுக்கு மேலிருந்தால், எனது இருப்பிற்கு ஒரு தொடர்ந்த, முறைப்படுத்தப்பட்ட குணம் கிடைத்துவிடும். இவைகளைப் பற்றி நான் யோசித்தேன். நிமிர்ந்தபோது எனக்கு எதிரில், ஜன்னலோரம் இருந்த மேஜைமேல் டைப்ரைட்டர் இருந்தது. மிஞ்சிய அலுவலக வேலை ஏதாவது இருந்தால் முடிப்பதற்கு என் மனைவி அதைப் பயன்படுத்துவாள். முக்கியமான வார்த்தைகளைக் கொண்டிருந்தும், அந்த சமயம் சப்தமின்றி, இயக்கமின்றி இருந்த அதைப் பார்த்தபோது எனக்குள் ஒரு சகோதர உணர்வு ஏற்படுவதை நான் உணர்ந்தேன்.  நானும் அதைப்போலவே என் மனைவி இல்லாதபோது இயக்கமற்றும் இருக்கும்போது இயங்கிக்கொண்டும் இருந்தேன்.

நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். நாம் இருவரும் சகோதர சகோதரியைப் போல.ஒரு வகையில் அந்த இயந்திரம் என்னைவிட மனிதத்தனம் மிகுந்ததாக இருந்தது. ஏனென்றால் அதற்காவது துடிப்பான, திரும்பத் திரும்ப ஒலிக்கின்ற குரலிருந்தது. நான் அனேகமாக எப்போதுமே மெளனியாகவே இருந்தேன்.

அன்று தொலைபேசி மணி ஒலிப்பு மட்டும்தான் இருந்தது. ஆனால் எந்த நேரமும் ஒருவன் உத்தரவுகள் பெறலாம் என்பதை நடைமுறையில் நான் கண்டேன். கவனம் செலுத்தினால் போதும். வாசல் மணி ஒலித்தது. எழுந்திருக்கவும். சென்று கதவைத் திறக்கவும். யார் வந்தாரென்று பார்க்கவும். இங்கே ஒரு உத்தரவிருந்தது. தெருவோரம் இரண்டு பெண்கள் உரத்த குரலில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். எழுந்து சென்று ஜன்னல் வழியாக என்ன நடக்கிறதென்று பார்க்க இங்கே ஒரு உத்தரவிருந்தது. சமையலறையில் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. குழாயை அடக்க இது ஒரு உத்தரவு. இப்படியாக. இப்படியாக.

உண்மையில் நான் சந்தோஷப்பட்டேன். ஆனால் சொட்டிக்கொண்டிருக்கும் குழாயைத் திருகி மூடுவதுதான் ஒருவனின் ஒரே வேலை என்றால் ஒருவன் வாழ முடியாது. இன்னும் முக்கியமானது தேவைப்படுகிறது. அல்லது குறிப்பிட்ட கால இடைவெளி விட்டுத் தொடர்கிற, அடிக்கடி நிகழ்கிற காரியமாயிருக்க வேண்டும். உதாரணமாக சொட்டிக் கொண்டிருக்கும் நூறு தண்ணீர் பம்ப்புகளை பத்து நிமிஷத்துக்கொருதரம் ஒவ்வொன்றையும் திருகி மூடவேண்டும். இருந்தாலும் என் மனைவி வரும்வரை ஆடாமல் அசையாமல் அமைதியாய் உட்கார்ந்திருக்கும் டைப்ரைட்டரைவிட இது எவ்வளவோ பரவாயில்லை. ஏதோ கொஞ்சம்.

அன்றிலிருந்து என் வங்கி மேனேஜரின் இடத்தை தான் பிடித்துவிட்டதுபோல என் மனைவியிடமிருந்து உத்தரவுகள் சுருக்கமாகவும், விரைவாகவும் மொத்தமாகவும் வர ஆரம்பித்தன. “ நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர். எப்போதும் நேரத்தை வெட்டித்தனமாக வீணடிப்பவர். சுய நலம். ஏதாவது உபயோகமாய் இருங்கள். சுத்தப்படுத்துங்கள். துணிகளைத் துவையுங்கள். சட்டைகளைப் பெட்டி போடுங்கள். மார்க்கட்டுக்குச் செல்லுங்கள். ஏதாவது சமையல் செய்யுங்கள்.” இப்படியாக.

தினசரி உதவுவதையும் நிறுத்திவிட்டாள். நான் வேலை இல்லாமல் வீட்டுக்கு ஏதேனும் பணம் கொண்டுவர முடியாதவனாக இருப்பதால் என்னைத் தண்டிக்க அவள் நினைக்கிறாள் என்பதாக யாரும் நினைத்திருக்கலாம். ஆனால் எனக்கு இன்பம் கொடுத்துக்கொண்டிருந்தாள் என்பதை அவள் உணரவில்லை.

என்ன சொன்னேன்? இன்பம்? அதாவது அவள் என்னை இயங்க, அதாவது இருக்க வைத்துக்கொண்டிருந்தாள். காலைகளில் அவள் எனக்குப் பிறப்பித்த உத்தரவுகளை நான் அவள் வெளியே செல்லுமுன் எழுதி வைத்தேன். பின் நாள் முழுவதும் அவைகளைப் பூரணமாக, யந்திர மயமாகச் செய்து முடித்தேன். செய்வதற்கு எந்த உத்தரவுகளுமற்ற நேரங்களில் நான் மேன்மேலும் என் இயக்கத்திற்கு அவளையே சார்ந்துள்ளேன் என்பது பிரக்ஞையில் தட்டியது. அவள், அவள் மட்டுமே, என் கைகளை, கால்களை, விரல்களை இயக்க முடியும். இதன் பின், நன்றியுணர்ச்சி, நம்பிக்கை கலந்த ஒரு தீவிரமான அன்புணர்ச்சியை நான் அனுபவித்தேன்.

இதைப்போல நாங்கள் கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழித்தோம். பின்பு, பல அடையாளங்களைக் கொண்டு, குறையற்றதாகவும் இயக்கமுடையதாகவும் தோன்றிய இந்த உறவு மெல்ல அழிந்துகொண்டு வருவதை நான் உணரத்தலைப்பட்டேன். ஏற்கனவே சொன்ன உவமானத்தைத் திரும்பச் சொல்வதானால், இது ஒரு டைப்பிஸ்ட்டுக்கும் டைப்ரைட்டருக்கும் இடையேயான உறவாயிற்று. போகப்போக, டைப்ரைட்டரில் எஞ்சும் காகிதம் போன்ற மிச்சங்களை எடுத்து சுத்தம்செய்ய வருபவனுக்கும் அதற்கும் உள்ள உறவாயிற்று.

ஒருகால் இப்படி உத்தரவுகள் தந்து என்னைத் தொல்லைப்படுத்துவதன் மூலம் என்னைத் தண்டிப்பதற்குப் பதிலாக எனக்கு ஒரு இருப்பை ஏற்படுத்த உதவுவதை அவள் உணர்ந்திருக்கலாம். ஒருகால், என்னைவிடச் சிறப்பாக அவள் உத்தரவுகளைச் செயல்படுத்தும் ஒருவனை அவள் கண்டிருக்கலாம். எப்படியோ. வெளியில் செல்லுமுன் நான் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்னவென்று சொல்வதை அவள் மறக்க ஆரம்பித்தாள் என்பதே உண்மை. எனவே மறுபடியும் என்ன நிகழ ஆரம்பித்ததென்றால், நான் அடிக்கடி வரவேற்பறை சோஃபாவில் கால்களை மடக்கி, கைகளைக் கட்டி, சூனியத்தை வெறித்துக்கொண்டு, முதுகில் சாவியும் நெஞ்சில் ஸ்பிரிங்கும் கொண்ட உண்மையான பொம்மையைப் போல இயக்கமின்றியிருக்க ஆரம்பித்தேன்.

ஏதோ ஒரு வெறுக்கத்தக்க அவசரத்தால் உந்தப்பட்டதுபோல என் மனைவி இருந்தாள். என்னோடு பேசாமலே ஆடை மாற்றினாள். அவளுக்கு மட்டும் காஃபி போட்டுக்கொண்டாள். ‘போய்விட்டு வருகிறேன்’கூடச் சொல்லாமல் அவசரமாக வெளிச்செல்லலானாள். சமயங்களில் பகல் பூராவும். சமயங்களில் இரவும்கூட வராமலிருந்தாள்.

இதற்கிடையில் எந்த தொலைபேசி அழைப்பும் கிடையாது. யாரும் வாசல் மணியை அழுத்தவில்லை. அவள் சொல்லாததால் நான் சந்தேகத்திலேயே எதையும் சுத்தப்படுத்தாமல் இருந்தேன். சாப்பிடுவதைப் பொறுத்தவரை அடிக்கடி நிகழாத, வரையறுக்கப் படாத, என் வயிற்றின் தூண்டுதல்களுக்கு நான் அடிபணிந்தேன். நான் பெற்ற ஒரே உத்தரவுகள் வயிற்றின் அழைப்புகள்தான். டப்பாவில் அடைக்கப்பட்டதை வைத்து நான் இதை சரிக்கட்டினேன்.

இப்படியாக எங்கள் வீடு நாளுக்கு நாள் அசிரத்தைக்கும் இருளுக்குமான இடமாகிப் போனது. தேய்க்கப்படாத தரை, கண்டபடி கிடக்கும் ஃபர்னிச்சர், சமையலறையில் அழுக்குப் பீங்கான்கள், க்ளாசுகள், மூலைகளில் வேஸ்ட் பேப்பர் துண்டுகள், நாற்காலிகளின் மீது துணிகள், சரிசெய்யப்படாத படுக்கைகள்என. என் மனைவிக்கு வெளிப்படையாகவே இவையெல்லாம் தெரிந்தன.

ஆனால் அவள் இதைப்பற்றியெல்லாம் சிரத்தை கொள்ளவில்லை என்று யாரும் முடிவுக்கு வர முடியும். ஆனால் இதையெல்லாம் பார்த்துவிட்டு அவள் எனக்கு ஒரு உத்தரவு தர – ஒரு வேளை – நினைத்திருக்கலாம். ஆனால் அது என்னவென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஞாயிறுகளில் ஒரு இரண்டு மணி நேரம் அவள் வீட்டிலிருந்தாள். மிகவும் சுருக்கமான முறையில் எங்கள்வீட்டின் இரண்டு அறைகளையும் அப்போது சுத்தப்படுத்துவாள்.

ஒரு நாள் காலை நான் விழித்தபோது ஏற்கனவே வெளியே செல்வதற்குத் தயாராக உடைமாற்றியிருந்த அவள், படுக்கையின் மீதிருந்த ஒரு பெட்டியை அமைதியாய் தயார் செய்துகொண்டிருந்தாள். சொருவுகளுக்கும் பெட்டிக்குமாய் அவள் சென்று வந்துகொண்டிருந்ததை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். முடிவில் இந்த வருதலையும் போதலையும் ஒரு உத்தரவாக, ஒரு கசப்பான, வேதனை தருகின்ற, என்ன நடக்கிறதென்று அவளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உத்தரவாக அர்த்தப்படுத்தினேன். எனக்குள் ஏதோ வெடித்தது. வார்த்தைகளை என் இதழ்கள் உச்சரித்தன.

“ என்ன செய்கிறாய் நீ? ”

திரும்பி என்னைப் பார்த்தாள். பின் படுக்கையில் வந்து அமர்ந்துகொண்டு சொன்னாள்.

“ டூலியோ, நாம் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் உங்களுக்குப் புரியவைக்க எல்லா வழிகளிலும் முயற்சிகள் எடுத்தேன். எனவே சொல்லி ஆகவேண்டி நிர்ப்பந்திக்கப் படுகிறேன். நம் திருமண வாழ்வுக்கு முடிவு ஏற்பட்டு விட்டது. என்னை நேசிக்கின்ற, நானும் நேசிக்கின்ற, ஒரு மனிதனை நான் கண்டுவிட்டேன். சொல்லப் போனால் கடந்த இரண்டு மாதங்களாக நான் அவரோடுதான் வாழ்ந்து வருகிறேன்.

“ என்னுடைய இருப்பு இனி இங்கே தொடர முடியாது. நீங்கள் அதைக் கவனிக்கவில்லை. ஆனால் சில கந்தல் துணிகளையும் இந்த டைப்ரைட்டரையும் தவிர எனதென்று இங்கு எதுவுமில்லை. எப்போதும் போலவே நீங்கள் இப்போதும் அன்பாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். யாரோடு வாழப்போகிறேனோ அவர் கீழே வீதியில் எனக்காக காரில் காத்திருகிறார். எனக்காக தயவு செய்து இந்த டைப்ரைட்டரை எடுத்துக் கீழே சென்று காரில் வையுங்கள். அவ்வளவுதான் நான் கேட்பது. ”

பயங்கரமானதொரு வலியை, வேதனையை நான் உணர்ந்தேன். அதன் தீவிரத் தன்மையினாலேயே, தவிர்க்கமுடியாதபடி ஒரு உத்தரவாக மாற்றப்பட வேண்டிய வேதனை. நான் சொன்னேன் :

“ ஆனால் நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது ”

அதுதான் உண்மையாக இருந்தது. அவளிடமிருந்து உத்தரவுகள் வராமல் என்னால் இருக்க முடியாது. ஆனால் என் வார்த்தைகளை அவள் பாணியில் அவள் புரிந்து கொண்டாள்.

“ துரதிருஷ்டவசமாக, நீங்கள் இல்லாமல் என்னால் நன்றாகவே வாழ முடியும் ”. அவள் பதிலளித்தாள். “ நீங்கள் உங்களை பயனுள்ளவராக ஆக்கிக்கொள்கிறீர்கள் என்பது உண்மை. ஆனால் அது மட்டும் போதாது. நீங்கள் அவசியமானவராகவும் இருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் தேவையில்லை. அழுக்கு உறிஞ்சும் யந்திரத்தையோ மின்சாரத்தில் துவைக்கும் யந்திரத்தையோ அல்லது தொலைபேசிக்கு தானாக பதிலளிக்கும் யந்திரத்தையோ உங்களுக்குப் பதிலாக நான் வைத்துக்கொள்ளலாம்.”

என்ன வேதனை ! இட்ட உத்தரவிற்கு அடிபணிந்து கொண்டிருந்த நான் சொன்னேன் : “ உன்னை நான் போக விட மாட்டேன். ”

அவள் உறுதியாகச் சொன்னாள் : “ குழந்தை மாதிரி நடந்து கொள்ளாதீர்கள். உடை மாற்றிக்கொள்ளுங்கள். டைப்ரைட்டரை எடுத்துக்கொண்டு போய் காரில் வையுங்கள். பெட்டியை நானே எடுத்து வருகிறேன். ”

நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்ததிலிருந்து முதல் முறையாக என் முன் முரண்பட்ட இரண்டு உத்தரவுகள். ஒரு பக்கம் என் வேதனை அவளைப் போகவிடாதே என உத்தரவிட்டது. மறுபக்கம் டைப்ரைட்டரைக் கீழே கொண்டுபோகச் சொல்லி அவளே உத்தரவிடுகிறாள். எதைச் செய்வது என்று சிந்திக்க ஆரம்பித்தேன். இதற்கிடையில் அவள் உத்தரவிட்டபடி உடை மாற்றிக்கொண்டேன். என் மனைவி வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தாள். பின் பெட்டியை மூடினாள். கண்ணாடி முன் சென்றாள். என் பக்கம் முதுகு காட்டி.

என்னுள் உணர்வு செயல்பட்டது. ‘ நீ என்னைவிட்டு போக முடியாது ‘ என்று சொல்லிக்கொண்டே அவள்மீது பாய்ந்தேன்.

அவள் கழுத்தைப் பிடித்தேன். எல்லாமே சுருக்கமாகவும் எளிதாகவும் தன்னிச்சையாகவும் நடந்தேறியது. திடீரென்று நொண்டியானதுபோல் என்னையே தள்ளுமளவுக்கு அவள் உடல் கீழே சரிய ஆரம்பித்ததை உணர்ந்ததும் நான் அவளை இழுத்து வந்து படுக்கையின் குறுக்கே கைகளை நீட்டி மல்லாக்க கிடத்தினேன்.

அடுத்த உத்தரவை நிறைவேற்ற நேரமாகிவிட்டிருந்தது. டைப்ரைட்டரை அதன் உறைக்குள்ளிட்டேன். ஃப்ளாட்டைவிட்டு கீழே க்ரெளண்ட் ஃப்ளோருக்கு லிஃப்டில் சென்றேன். கீழே காரிருந்தது. வாசல் கதவுக்கு எதிரில். கண்ணாடி மின்னியதால் நான் ட்ரைவரைப் பார்க்க முடியவில்லை. காரைச்சுற்றி வந்து ‘டிக்கி’யைத் திறந்து டைப்ரைட்டரை உள்ளே வைத்தேன். பின் மறுபடியும் மேலே ஃப்ளாட்டுக்கு சென்றேன்.

வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்தேன். கால்களை மடக்கி. கைகளைக் கட்டிக்கொண்டு. சூனியத்தை வெறித்துக்கொண்டு. உத்தரவுகளுக்காக காத்துக்கொண்டு.

சென்ஷி

unread,
Apr 13, 2010, 8:11:50 AM4/13/10
to panb...@googlegroups.com

5. சுவர்ப்பேய் - யுவன் சந்திரசேகர்

வேலையில் சேர்ந்த முதல்நாள் சாயங்காலம் இனம் புரியாத வெறுமை மனமெங்கும் நிறைந்திருந்தது. பட்டப்படிப்பை முடித்து விட்டு வீட்டில் காத்திருந்த நாட்களில் என் மனத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் நாடித்துடிப்பு மாதிரி நிறைந்திருந்த நாள் நிஜமாகவே வந்து கடந்த பிறகு ஒருவித வெற்றிடம் உருவாகிவிட்டது. அதில் வேறு கற்பனைகளை இனிமேல்தான் நிரப்பியாக வேண்டும்.

வங்கிக் கட்டடத்தின் எதிர்மருங்கில் இருந்த தேநீர்க்கடையில் தனியாக நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். அந்தத் தனிமையும், யாருக்காகவும் ஒளிந்து குடிக்க அவசியமற்று என் கையில் புகைந்த சிகரெட்டும் தந்த விட்டேற்றியான மனநிலை வெகு ஆனந்தமாக இருந்தது. யாரோ என் தோளைத் தொட்டார்கள்.

காசுத்துறை அதிகாரி அருணாசலம். அவருடைய மொழியும் பேச்சும் வித்தியாசமானவை. புதுமைப்பித்தனின் கதையிலிருந்து இறங்கி வந்த கதாபாத்திரம்போலப் பகல் முழுவதும், கிளை முழுவதும் ஒலித்துக்கொண்டிருந்தது அவரது உரத்த குரல்.

தனீயா நின்னு சீரெட்டை என் ஜாய் பண்ணுதீராக்கும்?

வண்டிக்காரத் தெருவில் போய்க் கொண்டிருந்த ஓரிருவர் திரும்பிப் பார்த்தார்கள். நான் அவசரமாக சிகரெட்டைப் பின்புறம் கொண்டு போனேன்.

குடியும் குடியும். உத்தியோகத்துலே சேந்தாச்சு. இன்னமே நீரும் பெரியமனுசன்தானே வே.

என்று சிரித்தார். தலைமுடியும் வரிசைப் பற்களும் போட்டி போட்டுக்கொண்டு வெளுத்திருந்தன. தாமும் ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டார். நான் அசட்டுத்தனமாகச் சிரித்துக்கொண்டே கையை முன்புறம் கொண்டுவந்தேன்.

ஒமக்குப் பூர்வீகம் எந்தூர்ன்னு சொன்னேரு?

கரட்டுப்பட்டி சார்.

எது, சோளவந்தான் கரட்டுப் பட்டியா?

ஆமா சார்.

அட. அங்கினெ நம்ம பய ஒர்த்தென் வாத்தியா இருந்தானே . . .

ஞாபக அடுக்குகளில் எதையோ தேடுகிற மாதிரி அவர் முகத்தில் தியானம் கவிந்தது. விழிகளைச் சுருக்கி தெருவை வெறித்தார். நினைவு வந்துவிட்டமாதிரிக் கண்கள் மலர்ந்தபோது என்னிடம் சொன்னார்.

அதுவும் இருக்குமே, ஆறேளு வருசம் இருக்கும். ஆச்சு, டச்சு விட்டுப்போய் ரொம்ப வருசம் ஆச்சு. இப்பொ எங்கினெ இருக்கானோ?

தன் ஞாபக அடுக்குகளுக்குள் புகுந்து அவர் தேடிய அதே சமயம் நானும் மானசீகமாகக் கரட்டுப்பட்டிக்கும் மதுரைக்கும் சென்று வந்திருந்தேன். பின்னாட்களில், கல்லூரியில் படித்த காலத்தில், தல்லாகுளம் பொது நூலகத்தில் எடுத்து வந்த காஞ்சனையில் கந்தசாமிப் பிள்ளையின் பேச்சில் ராஜுவாத்தியார் வாசனையடித்தது உடனடியாக நினைவு வந்து விட்டது.

ராஜூ வாத்தியாரா சார்?

அவம்தான். ராசுதான். நமக்குத் தூரத்துச் சொந்தக்காரென்வே அவன். எங்க அம்மெ வளியிலே . . . நல்ல பய. அவனெ மாதிரி ஒரு ஜெம்மைப் பாக்க முடியாது . . .

சிகரெட்டை வேகமாக இழுத்தார். புகை அதைவிட வேகமாக வெளியேறியது.

. . .ம்ஹும். விடு, நல்ல மனுசங்களைத்தானெ தெய்வம் தொரத்தித் தொரத்தி அடிக்கிது. சவம் நம்ம கோயில்கள்ள குடியிருக்கது சாமியா பிசாசான்னு சமயத்திலெ சந்தேகம் வந்துருது.

அவர் சிகரெட்டைக் கீழே போட்டுத் தேய்த்த விதத்திலேயே தெரிந்தது, விஷயத்தை அவர் முடித்துக் கொண்டுவிட்டார் என்பது. அவர் வங்கியை நோக்கியும் நான் என்னுடைய புது அறை நோக்கியும் நகர்ந்தோம்.

மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு அறை நண்பர்களுடன் திரும்பினேன். என்னுடைய வழக்கப்படி மொட்டைமாடியில் படுக்கச் சென்றேன். நண்பர்கள் வெட்டவெளியில் படுப்பதை விரும்புவதில்லையாம். எனக்கானால் கூரைக்குக் கீழ் படுத்தால் தூக்கம் வராது. திருமணத்துக்குப் பிறகு என்ன செய்வீர்கள் என்று என் புதிய நண்பர் ஒருவர் கேட்டுச் சிரித்தார். தெரியாது என்று நானும் சிரித்துக்கொண்டே பதில் சொன்னேன்.

மொட்டைமாடியில் இருட்டும் நிசப்தமும் அடர்ந்திருந்தன. கீழே வீதியில் எப்போதாவது ஒரு வாகனம் உறுமிச் செல்லும் எந்திர ஓசை. யாரோ ட்ரான்ஸிஸ்டர் கேட்கிறார்கள். இன்ன பாட்டு என்று தெரியாத, ஆனால் பாட்டு என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிற, தொலைவிலிருந்து ஒலிக்கும் இசையைக் கொஞ்சநேரம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு சிகரெட் பற்றவைத்தேன். முடித்துவிட்டு மடக்குக் கட்டிலில் மல்லாந்து படுத்தேன். நானும் ஒரு ஆகாயம் நிரம்ப நட்சத்திரங்களும் மட்டும் பகிர்ந்து கொண்ட தனிமையில் அமிழ்ந்திறங்கும்போது ராஜு வாத்தியார் ஞாபகம் கனத்து எழுந்தது.

அப்பாவின் மரணத்தையொட்டி கிராமத்தைவிட்டு வெளியேறிவிட்டோம். அதன்பிறகு ஒன்றே கால் வருடம் கழித்து மதுரையில் வந்து குடியமர்ந்தோம். நாங்கள் கிராமத்தைவிட்டுக் கிளம்புவதற்கு ஆறேழு மாதங்கள் முன்னால் மேல்நாச்சிகுளம் நடுநிலைப் பள்ளிக்கு மாற்றலாகி வந்தார் ராஜூ வாத்தியார்.

கிராமப் பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி ஆசிரியர்கள் கிடையாது. வகுப்பாசிரியர் என்று ஒருவர் இருப்பார். எல்லாப்பாடத்தையும் அவர்தான் எடுத்தாகவேண்டும். ராஜு வாத்தியார் எந்தப் பாடமானாலும் சுவாரசியமாக எடுக்கக்கூடியவர். அவர் பேசுகிற தமிழ் இன்னும் பிரமாதமாக இருக்கும்.

லே மக்கா . . . சேசுராசு . . .

என்று கூப்பிடுவதும், கேக்கான் பாக்கான் குட்மாணிங் வைக்கான் கூப்புடுதான் அந்தாலே இந்தாலேவாறு கால் ஓவு என்றும் அவர் பேசப்பேசக் கேட்டுக்கொண்டேயிருக்கத் தோன்றும் . . . அவ்வையார் மீது எனக்கு இன்றுவரை இருக்கும் காதலுக்கு ராஜூ வாத்தியார்தான் முதல் காரணம்.

அவ வலுத்த கிளவீல்லா . . .

என்று ஆரம்பித்து அவ்வையார் பாடல்களை – பாடப்பகுதியில் வந்தவை போக – ஏகப்பட்டது மனப்பாடமாகச் சொல்லுவார்.

அவர் பணிபுரிந்தது மேல்நாச்சி குளத்தில் என்றாலும், குடியிருந்தது கரட்டுப்பட்டியிலிருந்த நாட்டாமைக்காரர் வீட்டில் என்று சொன்னேனல்லவா? அந்த வீட்டில் மேற்குப்புறம் ஒரு சுவர் இருந்தது. உண்மையில், முற்காலத்தில் அது சுவராக இருந்திருக்க வேண்டும். பிறகு என்ன காரணத்தாலோ நடுவில் மாத்திரம் இடிந்து, மேற்கூரையில்லாத குட்டிச்சுவராகி நின்றது. சிவப்பு நிறத்தில் இளித்துக்கொண்டு நிற்கும் செம்மண் சுவர். சுவரையொட்டி உட்புறம் இருந்தது திறந்த வெளி முற்றம்தான் என்பதால் குடி வந்தவர்கள் யாரும் அதைப் பொருட்படுத்தாமல் விட்டு விட்டார்கள் போல.

ராஜுவாத்தியார் அந்தச் சுவரைப் பற்றி எங்களுக்கு ஒரு கதை சொன்னார். அவ்வையார் ஒரு தடவை கரட்டுப்பட்டி வழியாக வந்தாராம்.

சாடையிலே அந்தக் கிளவி நம்ம முத்தாச்சி மாதிரியே இருப்பா . . .

என்றார் வாத்தியார்.

ஆனா ஒண்ணு, சேலையைக் கெண்டைக்கால் வரைக்கி எறக்கித்தான் கட்டுவா கிளவி. முத்தாச்சி மாதிரித் தொடை வரைக்கி வளிச்சு ஏத்தியிருக்கமாட்டா.

வகுப்பு ஓவென்று சிரித்தது. தாமும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார் வாத்தியார்.

அவ்வைக்குக் கடுமையான பசி. கையில் காசில்லை. வழக்கமாகத் தோளிலிருக்கும் கந்தை மூட்டையில் தினை மா கொண்டுவருவார். சமயநல்லூருக்கு அருகில் வரும்போதே அதுவும் தீர்ந்தாகிவிட்டது. இனிமேல் நிலக்கோட்டை போனால்தான் சாப்பாடு கிடைக்கும். அங்கே தார்வேந்தன் என்று ஒரு பிரபு இருக்கிறார். அவர் மேல் பாடுவதற்கு ஓரிரண்டு வெண்பாக்கள் கட்டலாம் என்றால், பார் மேலும் சீர் மேவும் கார் போலும் என்று எதுகைகள் உதிக்கிறதே தவிர கரு திரள மாட் டேனென்கிறது. வயிற்றைக் கிள்ளுகிற பசிதான் காரணம்.

நம்ம நாட்டாமெக்காரரோட கொள்ளுப்பாட்டனுக்கு ஒரு கொள்ளுப்பாட்டன் இருந்தாரு. அவரு சம்சாரம் ஒரு ஆச்சி இருந்துச்சே, அதுக்கு நீலி ஆச்சின்னு பேரு. அது ரெம்பத் தடவை இந்தச் செவுத்தெக் கெட்டி நிறுத்தீறணும்னு நோங்குச்சு. அதாண்டே, நாங்க இருக்க வீட்டுலெ ஒரு குட்டிச் செவுரு நிக்கில்லா, அதெத்தாம். கொத்தரு வந்து கெட்டுவாரு, கூலியெ வாங்கிக்கிட்டு அவரு நகந்ததும் செவுரு வுளுந்திரும். உள்ளூர்லெ கோடாங்கி அடிச்சுப் பாத்தாக. அப்பத்தான் நூஸு தெரிஞ்சுச்சு. இந்தச் செவுருக்குள்ற முனியில்லா இருக்காம். பாக்க அப்புராணி மாதிரி நிக்ய செவுரு. உள்ளுக்குள்ள எம்புட்டுப் பெரிய ரகசியம் வச்சிருக்கு பாரு.

ஆச்சி சுதாரிச்சுக்கிச்சு. வெளியூர்லருந்து வேலெ தேடி வார கொத்தமார்ட்டெ கண்டிசனாச் சொல்லிப்போடும். செவுர எடுத்துக் கெட்டீட்டு ராத் தங்கிறணும். காலையிலே செவுரு நின்னா பதக்கு நெல்லு கூலி, இல்லாட்டி இல்லே.

இந்தச் சமயத்திலேதான் நம்ம அவ்வெ வாராக. கிளவி நீலி ஆச்சிட்டெ வந்து சாப்பாடு கேக்கா. ஆச்சி, போடுதேன், செரமம் பாக்காமெ இந்தச் செவுர எடுத்துக் கட்டிர்றியா? ன்னு கேக்கு.

எம்புட்டுக் கூலிங்கா அவ்வை யாரு. ஒரு பதக்கு நெல்லுத்தாரேன்ங்கு ஆச்சி. போர வளிக்காச்சேன்னு தலையாட்டுதா அவ்வெ. சாப்புடும்போது ஆச்சி வெசயத்தெ வௌக்கமாச் சொல்லுது. அப்பிடியா சேதின்னு கிட்டெப்போயி செவுத்தெத் தட்டிப்பாக்கா அவ்வெ. தலையத் தலைய ஆட்டிக்கிடுதா. ஏதோ புரிஞ்சு போச்சு அவளுக்கு.

செம்மண்ணெக் கொழைச்சுத்தாறதுக்கும் பாண்டுலெ நெரப்பித் தூக்கியாறதுக்கும் ஒரு ஆள் மட்டும் ஏற்பாடு செஞ்சாக் கட்டீறலாம்ன்னு ஆச்சிட்டெச் சொல்றா. கிளவியா இருக்காளே, கூட ஒரு பதக்கு நெல்லுத்தானே, சவம் செவுரு நின்னாச் சரிதான்னு ஆச்சி ஒத்துக்கிடுது. செவுரைக் கெட்டி முடிச்சுட்டு கும்பா நெறையக் கூழ் வாங்கிக் குடிக்கா அவ்வெ. குடிச்சு முடிச்சுத் திரும்பிப்பாத்தா, செவுரு லேசா ஆட்டம் காட்டுது . . . அந்தாலே செவுரெப் பாத்து ஒரு பாட்டுப் பாடுதா.

மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்கு வந்தேன்

சொற்கொண்ட பாவின் சுவை யறிவா ரீங்கிலையே

விற்கொண்ட பிறைநுத லாள் நீலி தரும் கூலி

நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே . . .

அப்புறம் அவ்வைக் கிழவி சாகும்வரை அந்தச் சுவர் வீழாமல் நின்றதாம். பிறகு ஏதோ ஒரு கால கட்டத்தில் மின்னல் தாக்கியதில் மீண்டும் குட்டிச் சுவராகிவிட்டது.

கையில் எடுத்த சிட்டிகைப் பொடியை, கண்களை இறுக மூடிக்கொண்டு உறிஞ்சி முடித்தார் வாத்தியார். நாசியில் ஏறிப் புகுந்த துகள்கள் நிஜமாகவே ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

டியூப் லைட்டுலெ வெளிச்சம் இருக்கது எதுனாலெ? உள்ளாறே கரண்டு ஓடுது. அதேதாம்லெ மின்னலுக்கும். ஒரு மின்னல்லெ இருக்க கரண்டெ வெச்சு நம்ம முனியாண்டி கோயில் டியூப்லைட்டெ ஆயிரம் வருசத்துக்கு எரிய வைக்கலாம் . . .

என்று விஞ்ஞானப் பாடத்துக்குத்தாவினார் ராஜூ வாத்தியார்.

அவ்வையாரின் பெயரோடு முத்தாச்சியின் முகமும் பொருந்திக் கிடந்துவருகிறது எனக்குள். மேற்சொன்ன கதையின் ஆரம்பத்திலேயே இது நிகழ்ந்துவிட்டது என்று தோன்றுகிறது. இவ்வளவுக்கும் அவ்வையார் முத்தாச்சிபோல தொடர்ந்த வெற்றிலைப் பழக்கத்தால் காவியேறிய பற்கள் கொண்டவரா, பொக்கைவாய்க் கிழவியா என்று எனக்குத் தெரியாது.

ராஜு வாத்தியாரின் வீட்டுக்கு மேற்குப்புறம் முத்தாச்சிக் கிழவியின் வீடு. ஊரின் கடைசி வீடு. வீட்டின் முன்வாசல் முற்றத்தையும் திண்ணையையும் சிறு கடையாக மாற்றியிருந்தாள். நாங்கள் பள்ளிக்கூடம் போகும்போதும் வரும்போதும் முத்தாச்சி கடைமுன் சற்று நின்றுவிட்டுப் போவோம், அட்டைகளில் தொங்கும் வற்றல்கள், வடகங்கள், பல்லிமிட்டாய்ப் பொட்டலங்கள் ஊறுகாய்ப் பாக்கெட்டுகளை வேடிக்கை பார்த்தபடி. இதுபோக எந்நேரமும் அந்த வீட்டுக்குள்ளும் சுற்றுப் புறத்திலும் நிரம்பியிருக்கும் கருவாட்டு மணம். அவளுடைய திண்ணையில் எந்நேரமும் யாராவது வெளியூர்ப் பெண்கள் வந்து அமர்ந்திருப்பார்கள். அக்கம்பக்க கிராமங்களிலெல்லாம் கிழவியின் கைவைத்தியத்துக்குப் பெரும் மவுசு.

முழங்காலுக்கு மேல் ஏற்றிச் சொருகிய கண்டாங்கிச் சேலையுடன் பழைய ஒரு ரூபாய் நாணயம் அளவு விட்டமுள்ள சிவப்புக்கல்தோடுகள் அணிந்து திண்ணையின் ஓரத்தில் அமர்ந்து சதா வெற்றிலைமென்றுகொண்டிருப்பாள் முத்தாச்சி. ஏந்திய கீழுதட்டிலிருந்து வார்த்தைகளும் கெட்ட வார்த்தைகளும் செந்நிற எச்சில் சாரலும் சரமாரியாய்க் கொட்டும். அவற்றின் வேகத்துக்கிசைய புத்தர்போல வளர்த்த காதுச் சவ்வின் கீழ்ப்புறம் தோடுகள் ஊசலாடும்.

சற்று அதிகநேரம் நாங்கள் நின்று விட்டாலோ, கூட்டம் அதிகமாகச் சேர்ந்துவிட்டாலோ எங்களை நோக்கி ஆவேசமாய்க் கேட்டு விரட்டுவாள்.

இங்கென்னா வேலெ. அம்மணக்குண்டி ஆட்டம் பாக்க வந்தீகளாக்கும்?. ஓடு ஓடு, பள்ளிக் கொடத்துல மணியடிச்சுரும்.

இதையெல்லாம்விட, முத்தாச்சி எனக்குக் கற்றுத்தந்த பாடம்தான் முக்கியமானது.

ஆண்களும் பெண்களும் சமம் என்ற கருத்தை முதன்முதலில் எனக்குள் விதைத்தவள் முத்தாச்சிதான். எங்கள் வீட்டிலெல்லாம் நிலைமை வேறு மாதிரியிருந்தது. அப்பாவைக் கேட்காமல் அம்மா ஒரு துரும்பைக்கூட நகர்த்த மாட்டாள்.

எங்கே . . . அவ எடுத்த முடிவெ சாதுர்யமா என் வாயாலெ வர வழைச்சுர்றா.

என்று அப்பா கேலி பேசினாலும், இறுதி முடிவுகள் அப்பாவின் பெயரால்தான் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. அண்ணன்மார் இன்னும் ஒருபடி மேலே போனார்கள். குறிப்பாக இரண்டாவது அண்ணா. அவன் மன்னியைக் கண்மூடித்தனமாக அடிக்கும்போது இந்தக் குடும்பத்துக்கும் அந்த நிகழ்வுக்கும் சம்பந்தம் கிடையாது என்பதுபோன்று ஒரு பொது அமைதி நிலவும். வீங்கின முகத்துடன் தனியாக உட்கார்ந்து அழும் மன்னியை அணைத்துக்கொள்ள வேண்டும்போல எனக்குப் பரபரக்கும். நல்லவேளை, நானெல்லாம் பெண்ணாய்ப் பிறக்கவில்லை என்று ஆறுதல் பட்டுக் கொள்வேன். ஏழாம் வகுப்புப் படிக்கும் மனத்துக்கே உரிய ஆறுதல் அது என்று பிற்பாடு பலநாட்கள் தோன்றியதுண்டு.

இந்த இடத்தில்தான் முத்தாச்சியின் முக்கியத்துவம் வருகிறது. பிள்ளையார் கோவில் திடலில் விளையாடிக்கொண்டிருக்கும்போது, வெள்ளைக்கரடுவரை போய்விட்டு வரலாம் என்று பாண்டி யோசனை சொன்னான். கரட்டை ஒட்டி ஏகப்பட்ட புதர்கள் இருக்கும். சப்பாத்திக் கள்ளிகளும் கருவேல மரங்களும் காவல் காக்கும் ஒற்றையடிப்பாதை வழியே வரும்போது கரட்டான்களும் பாம்புகளும் நத்தைகளும் மரவட்டைகளும் வெல்வெட் பூச்சிகளும் தவளைகளும் பார்க்கக் கிடைக்கும். தாத்தா வாத்தியாரின் காச நோய் வைத்தியத்துக்கு நத்தை பொறுக்க ரீஸஸ் பீரியடில் எங்களை அழைத்துச் செல்லும்போது பார்த்திருக்கிறேன்.

எங்கள் வீட்டில் அந்தப் பக்கமெல்லாம் போக விடமாட்டார்கள். பெண் குழந்தைகளுக்குச் சமமான பாதுகாப்புடன் என்னை வளர்த்து வந்தார்கள். பாண்டி இருந்த தைரியத்தில், அப்பா மறைவுக்குப் பிறகு அம்மா திண்ணையில் உட்கார்ந்து ஊர்ப்பெண்களுடன் வம்பு பேசுவது குறைந்துவிட்ட தைரியத்தில், அண்ணன்மார் எவரும் தற்சமயம் ஊரில் இல்லை என்ற தைரியத்தில், பாண்டியின் யோசனைக்கு உடன்பட்டேன். வழியில் காய்ந்தும் பச்சையாகவும் கிடந்த மலக் குச்சங்களைப் பார்க்கும்போதெல்லாம்,

தாயில்லாப் பிள்ளெ கெடக்கு. பாத்து வா.

என்று எச்சரித்தபடி கைபிடித்துக் கூட்டிப் போன பாண்டி, சட்டென ஓரிடத்தில் என் கையை அழுத்தி நிறுத்தினான். உதட்டில் ஆள்காட்டி விரலை வைத்து எச்சரித்தான். அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் முத்தாச்சி குத்த வைத்து அமர்ந்திருந்தாள்.

இடுப்புக்கும் மேலே வழித்தேற்றிய சேலைக்குக் கீழே பளிங்கு போலப் பளபளத்த புட்டத்தை விடவும் என் கவனத்தைக் கவர்ந்த வேறு ஒரு சங்கதி இருந்தது. அவள் கம்பீரமாக சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தாள். இதெல்லாம் ஆம்பளைகள் சமாசாரமில்லையா என்று ஒரு கணம் தோன்றியது. என்றாலும், பெண்கள் சம்பந்தமான பிற்கால அறிதல்கள் பலவற்றுக்கு ஒரு ஆரம்பப்புள்ளியாய் அந்தச் சுருட்டு என்னையறியாமலே எனக்குள் ஏறி அமர்ந்தது.

எஸ்ஸெஸ்ஸெல்ஸியில் நல்ல மதிப் பெண் வாங்கி பள்ளிக்கூடத்தில் இரண்டாவது மாணவனாகத் தேறியபோது, கரட்டுப்பட்டிப் பிள்ளையாரைப் பார்த்து நன்றிகூறி வரச் சொன்னாள் அம்மா. மீசை அரும்பிவிட்ட பருவம் என்பதால் தனியாகச் சென்றுவர அனுமதி கிடைத்தது. பிள்ளையாருக்கு விடல் போட்டுவிட்டு ஊருக்குள் போனேன்.

கடைவாசலில் கால்நீட்டி உட் கார்ந்து பஞ்சுபோல் முழுக்க நரைத்த தலைமுடியை ஈருவளியால் சிடுக்கெடுத்துக்கொண்டிருந்தாள் முத்தாச்சி. ரவிக்கை போடும் வழக்கம் இல்லாதவள். இடது முலை சேலைக்குள் பாதி மறைந்தும் பாதி தெரிந்தும் அவள் இடுப்பில் நிரந்தரமாகச் செருகியிருக்கும் சுருக்குப்பையின் சாயலுடன் ஆடியது. அக்குள் ரோமங்களில் நரை பாய்ந்திருந்தது. தெருவில் நடந்துவந்து அவள் கடை வாசலில் நின்றுவிட்ட என்னைக் கண்களைச் சுருக்கிப் பார்த்தாள்.

ஆத்தாடி, ஐயரு மகென்தானே, அம்மா நல்லாருக்காகளா சாமீ?

என்று கூவினாள். வியாபாரப் பொருட்களைப் பரத்திய திண்ணையின் ஓரமாக எஞ்சியிருந்த இடத்தில் என்னை உட்காரச் சொன்னாள்.

கலர் சாப்புடுறீகளா?

நாலே வருடத்தில் முத்தாச்சிக்கு இருபது வயது கூடிவிட்ட மாதிரிக் கிழடு தட்டியிருந்தாள். அதற்கு இரண்டு வருடங்கள் கழித்து இடது மார்பில் புற்றுநோய் தாக்கி சில மாதங்கள் போராடிவிட்டு இறந்தே போனாள் என்று கேள்விப்பட்டேன். நான் பார்த்த நாளில் அந்த நோய் வேர்பிடித்து ஆழ இறங்கத் தொடங்கியிருக்கலாம் ஒருவேளை, அவளே அறியாதவண்ணம்.

வாத்தியார் வீடு பூட்டிக்கெடக்கே ஆச்சி?

அதையேங் கேக்குறீக? அவுகதேன் ஊரெ விட்டே போய்ட்டாகளே?

அப்பிடியா? எந்தூருக்குப் போனாங்க ஆச்சி?

தேவதானப்பட்டிக்கி அங்குட்டு ஏதோ ஒரு பள்ளிக்கொடமாம்.

ஏன், என்னாச்சு?

அது பெரீய்ய கதெ சாமி.

போனவருடம் சாமிகும்பிடு முடிந்த மறுநாள் ஊர்ப்பெண்கள் எல்லாம் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்று முல்லையாற்றில் கரைத்துத் திரும்பினார்கள் அல்லவா, வாத்தியாரின் மனைவி சிரித்து முத்தாச்சி பார்த்தது அன்றுதான் கடைசி.

தொடர்ந்து நாட்கணக்காக உற்சவம் நடத்தி முடித்த களைப்பில் ஊரே உறக்கத்தில் மூழ்கிக் கிடந்தபோது, ராஜூ வாத்தியாரின் வீட்டுக்குள் திருடன் புகுந்துவிட்டானாம். உடைந்த சுவர் வழியாக முற்றத்தில் நுழைந்து பம்மிக் காத்திருந்திருக்க வேண்டும் என்பது முத்தாச்சியின் யூகம்.

நள்ளிரவில் குட்டிச்சுவருக்கு இந்தப்புறம் சிறுநீர் கழிக்க எழுந்து வந்தாளாம் முத்தாச்சி. வாத்தியார் வீட்டிலிருந்து வாட்டசாட்டமான ஒரு ஆள் இறங்கி ஓடியிறங்கியிருக்கிறான். வீட்டுக்குள் வாத்தியார் சம்சாரம் அழும் சப்தமும் வாத்தியார் அவளுக்கு சமாதானம் சொல்கிற மாதிரியும் கேட்டதாம். இதுவரை சாதாரணமாகச் சொல்லி வந்த முத்தாச்சியின் குரல் சடாரென்று தழைந்தது.

ஏஞ் சாமீ, களவாங்க வந்தவன் வீட்லயிருந்து எறங்கி ஓடுறான். நம்ம கூட்டாளமிண்டா என்ன செய்வோம்? திருடன் திருடன் ஓடுறான் புடிண்டு அலற மாட்டோம்? வாத்தியார் வீட்லெருந்து ஒரு சின்ன மொனக்கங்கூட இல்லே.

ம்

அதுனாலெதான் எனக்கு இன்னமும் சந்தேகம் . . .

இருந்த இடத்தில் இருந்தவாறே, பாவனையாக என் காதருகில் தன் உதட்டைக் கொண்டுவந்தாள் முத்தாச்சி. குரலில் மேலும் கொஞ்சம் ரகசியம் சேர்ந்தது.

. . . வந்தவென் வெறுங்கையோட ஓடுன மாரித்தான் இருந்துச்சு சாமி. அவன் ஓடுன சீரெப்பாத்தா பொருளெக் களவாங்க வந்தவனெ மாரித் தெரீலே. ஆனா, அவென் சீவரங்கொளத்தான் இல்லேண்றது மட்டும் நிச்சியம். அவிங்ய ஆளுமேல கைவய்க்க மாட்டாங்ய.

இதற்குள் முத்தாச்சியைப் பார்ப்பதற்காக இரண்டு பெண்கள் வந்து சேர்ந்தார்கள். தாயும் மகளும்போல இருந்தார்கள். இருவர் முகத்திலும் உயிர்க்களை இல்லை. அந்தப் பெண் தேவையில்லாமல் அடிக்கடி தன் அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறாள் என்று எனக்குத் தோன்றியது. என்னிடம் பேசிய போது இருந்த பாவத்துக்குச் சம்பந்தமேயில்லாத அதிகாரத் தொனியில் முத்தாச்சி கேட்டாள்

எந்தூரு?

நீரேத்தான்.

பதில் சொன்ன மூத்தவளின் குரலில் லேசான நடுக்கம் இருந்தது. நான் முத்தாச்சியைப் பார்த்துத் தலையாட்டிவிட்டுக் கிளம்பினேன். எதிர்ச்சாரிப் பொட்டலில் மண்டியிருந்த எருக்கலஞ்செடிகளின் ஊடாகப் பழுப்பும் வெள்ளையும் கலந்த நாய் ஒன்று புகுந்து ஓடியது.

ஞாபகத்தின் ஆழ்பரப்பில் புதையுண்டு கிடக்கும் எந்த ஒரு சம்பவமாவது தனியாகக் கிடக்கிறதா, சொல்லுங்கள்? வியர்த்த உடம்புடன் மணல்தரையில் புரண்டு எழுந்த மாதிரி, மேற்பரப்புக்கு எழுந்துயரும் எந்தவொரு நிகழ்ச்சி, தனிநபர், அல்லது நாளுடனும் பல்வேறு உபரி நினைவுத் துகள்கள் ஒட்டிக்கொண்டு வரத்தானே செய்கின்றன. ராஜு வாத்தியார் என்ற பெயர் தன்னுடன் இழுத்து வரும் வால் வெகு நீளமானது. கரட்டுப்பட்டி, முத்தாச்சி, அவ்வையார், ராஜு வாத்தியாரின் கருகருவென்ற சுருள்முடி, இடது கைக் கட்டை விரல் நகத்தில் அவர் நாலைந்து தடவை தட்டிவிட்டுத் திறக்கும் பழுப்புநிறப் பொடி மட்டை, கரும்பலகையில் சச்சதுரமாகத் திரண்டு வரும் சாக்பீஸ் எழுத்துகள், முல்லையாற்றுக்கரையில் சாயங்காலம் அவருடன் நடந்து வரும் அவரது மனைவி, அந்த அம்மாளின் நிமிர்ந்த நடையில் மிளிரும் கம்பீரம் . . .

ராஜு வாத்தியாரைவிட அவருடைய மனைவி ஒரு பிடி உயரம். வாத்தியார் நல்ல சிவப்பு நிறம். உள்ளங்கைகள் செக்கச்செவேலென்று பூவிதழ்கள் மாதிரி மிருதுவாக இருந்தது நினைவு வருகிறது. அந்த அம்மாள் சற்று நிறம் மட்டுத்தான். எங்கள் ஊர்ப்பக்கம் புதுநிறம் என்பார்கள். இருந்த கொஞ்ச மாதங்களில் அவர்கள் வீட்டுக்கு வாரந்தோறும் சென்று வந்திருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சேரும் குமுதத்தைச் செவ்வாய்க்கிழமை கொண்டு கொடுப்பதும், வியாழன் அல்லது வெள்ளியன்று திரும்ப வாங்கி வருவதும் என்னுடைய வேலை.

இருவரும் சேர்ந்திருக்கும் சந்தர்ப்பங்களில் நேருக்கு நேராகப் பேசிக் கொண்டு நான் பார்த்ததே கிடையாது. பள்ளிக்கூடத்தில் சதா பேசிக் கொண்டே இருக்கும் வாத்தியார், வீட்டுக்குள் நுழைந்ததும் மௌனமாகிவிடுகிறாரே என்று தோன்றும். அவர்கள் வீட்டினுள் எப்போதுமே நிலவும் அமைதி எங்கள் வீட்டின் சூழ்நிலைக்கு நேர்மாறானது. கொண்டாட்டமாகவோ, தகராறாகவோ மனிதக் குரல்களும், பெரியக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததையொட்டி வீட்டுக்குப் புதிதாக வந்திருந்த பிலிப்ஸ் வால்வு ரேடியோவின் சினிமாப் பாட்டுகளும், சமையலறையில் எந்நேரமும் இருந்துகொண்டிருக்கும் பாத்திர ஒலிகளும் எனச் சதா ஓசையால் நிரம்பியிருக்கும் வீடு எங்களது. இந்த வித்தியாசத்தைப் பற்றி அம்மாவிடம் ஒருநாள் கேட்டேன்.

கொழந்தையில்லாத வீடு இல்லையா? நிசப்தமாத்தான் இருக்கும்.

என்று சுலபமாகச் சொன்னாள்.

சோழவந்தான்- நிலக்கோட்டையை இணைக்கும், வாகனப் போக்குவரத்து நிறைந்த, தார்ச் சாலையை ஒட்டிய வளாகத்தில் உள்ள வீடு எங்களுடையது, ஊர்க் கோடியில் ஆள் நடமாட்டமே அரிதாக இருக்கும் பகுதியில் ராஜு வாத்தியார் வீடு இருந்தது என்பது அவள் சொல்லாத இன்னொரு காரணம்.

நினைவில் பதிந்த எண்ணற்ற முகங்கள் தாமாகக் கொள்ளும் சுழற்சிவிதியின் பிரகாரம், ராஜு வாத்தியார் முகமும் விதவிதமான சந்தர்ப்பங்களில் ஞாபகம் வந்து போகும். ஆனால், அவரைத் தவிர வேறு நினைவு இல்லாதபடி மனம் குவியக் கிடைத்த சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. நான் வேலையில் சேர்ந்தது 1983 ஏப்ரல் 7ஆம் தேதி. முன்னரே சொன்னபடி, அன்றிரவில் அழுத்தமாக மேலெழுந்த ராஜு வாத்தியார் ஞாபகம் வேறு இரண்டு சந்தர்ப்பங்களிலும் தீர்க்கமாக நினைவு வந்தது.

ஒன்று, 79-ல். கல்லூரி நூலகத்திலிருந்த தனிப்பாடல் திரட்டு நூலை எடுத்துப் படித்து வந்த ஒரு நாளில், அவ்வையார் பாடியதாக எங்களுக்கு ஒரு கதைபோல விரிவாக ராஜூ வாத்தியார் சொன்ன, பேய்ச் சுவரை நிறுத்திய, பாடல் அந்தப் புத்தகத்தில் இருந்தது.

அந்தப் பாடலைப் பாடியவர் கம்பர். அவ்வையார் இல்லை. இந்தத் தகவல் தெரிந்த கணத்தில் என் மனம் முழுக்க ராஜு வாத்தியார் நிரம்பினார். அவர் சொல்லி நினைவிலிருக்கும் பழம் பாடல்கள் அத்தனைக்கும் நேர் எதிரில் மானசீகமாக நிலைகொண்டிருந்த புலவர்களின் பெயர்கள் இடம்பெயர்ந்து கொசுக்கள்போலத் தன்னிச்சையாகப் பறக்க ஆரம்பித்தன.

அதன் பிறகு, நானும் எழுதவென்று ஆரம்பித்த பின்னர், ராஜு வாத்தியாரின் அருமை வேறு ஒரு விதமாகத் தெரிய வந்தது. எங்கோ நடந்துகொண்டிருந்த அவ்வையாரையும் அந்தப் பாடலையும் கரட்டுப்பட்டி ஊருக்குள் அழைத்துவந்த தன் சிருஷ்டிகரமும், அதன்வழியே என்றும் மறக்கவியலாதபடி என் மனத்தில் பதிய வைத்த பயிற்றுவிக்கும் கலையும் வெகு விசேஷமானவையாகத் தென்பட்டன.

புரவலர்களையும் மன்னர்களையும் அரசவைகளையும் பரிசில்களையும் மாணாக்கர்களையும் விமர்சகர்களையும் எதிரிகளையும் இழப்புகளையும் தன்வசம் கொண்டிருந்த கம்பர் போன்ற காவியகர்த்தாவை விடவும், ஊரும் உறவும் அற்றுத் தனியாய்த் திரிந்த, உப்புக்குப் பாடி, புளிக்கும் ஒரு பாட்டுப் பாடிய, தேசாந்திரிக் கிழவிக்குத்தான் அந்தப் பாடல் நெருக்கமாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது என்றும் தோன்றியது.

இயற்றியவர் பெயர் மட்டுமில்லை, வேறு சில பாடபேதங்களும் ராஜு வாத்தியார் கூறிய பாடலுக்கு உண்டு. நெற்கூலி கொடுத்த பெண்ணின் பெயர் நீலி அல்ல, வேலி. அவள் பிறைநுதலாள் அல்ல, வாணுதலாள் . . . இப்போது வேறு ஒரு குழப்பம் வந்துவிட்டது. ஒருவேளை ராஜு வாத்தியார் சரியாகவே சொல்லி, நான் நினைவில் ஏற்றுக்கொண்ட பதிவுகள்தாம் தவறாக இருந்திருக்குமோ என்று.

அவர் சொன்ன பாடல் மட்டுமல்ல, அவர் சம்பந்தமாக நான் அறிந்து வைத்திருந்த விதமும் கூடத் தவறாக இருக்கலாம் என்பது புரிய 2002 வரை நான் காத்திருக்க வேண்டியிருந்தது, வாத்தியார் திருநெல்வேலிக் கொச்சைவழக்கில் பேசினாலும்கூட, புதுமைப்பித்தனின் கதையிலிருந்து இறங்கி வந்தவராய் இல்லாமல், கு ப ராஜகோபாலனின் கதையிலிருந்து இறங்கி வந்தவரோ என்ற சந்தேகத்தைக் கிளப்பிய ஒரு தருணம் வரும்வரை.

அந்த முறை வந்த ஞாபகத்தில் இன்னும் முக்கியமான அம்சம் ஒன்று இருந்தது. ஒரே சமயத்தில் தத்துவார்த்தமாகவும் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்ததாகவும் மனம் பிளவுகொண்டது. உலகம் மிகவும் சுருங்கிவிட்டது போன்ற சித்திரம், அல்லது ஒன்றுக்கொன்று தொடர்பற்ற ஏகப்பட்ட விஷயங்களை ஒன்றாக நான் கோத்துப் பார்ப்பதால் அது சுருங்கிவிட்ட மாதிரித் தோன்றுகிறதோ என்ற சந்தேகம் ஒருபுறம். மறு புறம், இனம்புரியாத ஒரு வேதனை மனத்தில் கனத்தது. அதற்கு முன்புவரை ராஜுவாத்தியாரை நான் நினைவுகூர்ந்த சந்தர்ப்பங்களெல்லாம் சந்தோஷத்தால் நிரம்பியவை . . .

பத்மினி தன் தாயாருக்கு உடல் நலம் சரியில்லை என்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பிறந்தகம் சென்றிருந்தாள். மனித வாசனை முழுக்க அற்றுவிட்டது போன்ற இறுக்கம் சூழ்ந்திருந்தது வீட்டை. நான் மட்டும் தனியாக இருந்தேனா, கொசுக்களுக்குச் சமமாகத் தனிமையும் மண்டி ரீங்கரித்தது.

பொழுதின் கழுத்தில் கை வைத்து நெட்டித் தள்ளுவதற்காக, பழைய தினசரிகள் பத்திரிகைகள் கிடந்த மர அலமாரியைக் குடைந்து கொண்டிருந்தேன். ஆங்கில தினத்தாளுக்கு ஈடாகப் பெண்கள் பத்திரிகைகள் விதவிதமாகச் சேர்ந்திருந்தன. நூதனமான சமையல் குறிப்புகளுக்காக பத்மினி அவற்றை விடாமல் வாங்கிச் சேர்ப்பாள். அவளுக்கும் அவளுடைய தாயாருக்கும் நடந்த உரையாடல் நினைவு வந்தது.

விதவிதமாச் சமைச்சுப்போட்டு கொழந்தைகளுக்கு இப்பிடி நாக்கை வளத்துவிடறயே பத்தா.

அது சரி. ஒனக்கு உண்டைக் கட்டி சாதமும் ஒரு கரண்டி தயிரும் போதும். எல்லாரும் ஒன்னை மாதிரி இருப்பாளா? ஒத்தொருத்தர் ருசியும் பசியும் ஒவ்வொரு மாதிரி.

மிகப் பிரபலமான பத்திரிகைக் குழுமம் சென்ற வருடம் தொடங்கியிருந்த பெண்கள் பத்திரிகையின் பழைய இதழ் ஒன்று அகப்பட்டது. புரட்டினேன். பொதுவாக இது போன்ற பத்திரிகைகளில் இருக்கும் வழக்கமான சமாசாரங்கள்தாம், சமையல், கை வேலைப்பாடுகள், பதினாறு புள்ளி எட்டுவரிசைக் கோலம், வீட்டிலிருந்தே பணம் சம்பாதித்தல், ஜோசியம், அசட்டுத்தனமான ஓரிரு சிறுகதைகள் என்று.

ஆனால், இந்தப் பத்திரிகைகளில் வாசகர் பங்கேற்பாக வரும் பகுதிகள் சுவாரசியமாக இருக்கும். அதிலும்கூட, வெள்ளைப்படுவது, மார்பகம் விகிதாசாரக் குறைவாகச் சுருங்கியிருப்பது, விடாய்க் காலத்தில் பிறப்புறுப்பில் தாளமுடியாத நமைச்சல் என்பது போன்று மருத்துவரிடம் நேரில் சென்று ஆலோசனை கேட்க வேண்டிய விஷயங்களை நாலு வரிப் போஸ்ட் கார்டில் எழுதிப் போடும் வாசகிகள் உண்மையிலேயே வாசகிகள்தாமா, அல்லது ஆசிரியர் குழுவின் கற்பனைக்குப் பெயர் மட்டும் நல்குகிறவர்களா என்று சந்தேகமும் உண்டு. தவிர, பெண்கள் பத்திரிகையில் ஆண்களுக்கான தனிப்பகுதியோ இது என்றும் சந்தேகம்.

நான் பார்த்த இதழில், வாசகியர் தம் வாழ்வின் சில அந்தரங்கமான நெருக்கடிகளில் எடுக்க நேர்ந்த முடிவு சரியா தவறா, தொடர்ந்து தான் எந்தத் திசையில் செல்வது என்ற குழப்பத்தை முகம் தெரியாத எண்ணற்ற சக வாசகியருடன் பகிர்ந்துகொள்ளும் பகுதி ஒன்று இருந்தது. முந்தைய இதழில் விரிவாக வெளியான கடிதத்தின் சுருக்கம் இந்த இதழில் பிரசுரமாகியிருந்தது. விஷயம் இதுதான். கணவரை இழந்தவரான அறுபத்தைந்து வயது வாசகி ஒருவர். இளம் வயதில் தம்மைக் காதலித்தவர் இப்போது திரும்பவும் தன் வாழ்க்கையில் குறுக்கிட்டிருக்கிறார், தம்மோடு வாழ வரும்படி அழைக்கிறார், குழந்தைகள் அரைக் கிழமாகிவிட்ட நாட்களில், பேரக்குழந்தைகள் கல்லூரி செல்லும் நாட்களில், சமூக மரியாதையும் நெடுநாள் காதலும் எதிரெதிராய் இழுக்கும்போது தாம் என்ன முடிவெடுப்பது என்று வாசகியரிடம் ஆலோசனை கேட்டிருந்தார்.

இந்த இதழில் வாசகியர் வாக்களித்திருந்த விதம் அசாதாரணமானது. 97 சதவீதம் காதலருடன் வாழச் செல்லும்படி அறிவுறுத்தியிருந்தது. 3 சதவீதம் மட்டும் பலவீனமான காரணங்களைச் சொல்லி வேண்டாம் என்று கூறியிருந்தது.

தொடர்ந்து, இந்த இதழுக்கான கட்டுரைக் கடிதம். சாய்வு நாற்காலியில் சென்று உட்கார்ந்து கொண்டு சாவகாசமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

அன்புள்ள தோழியருக்கு,

முதலில் என்னைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே சொல்லி விடுகிறேன். அப்போதுதான் என் பிரச் சினை உங்களுக்கு நன்றாகப் புரியும்.

நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். வீட்டின் செல்லக் குழந்தை. மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் அன்பானதாய் தந்தையரும் என்று ஆனந்தமாகப் போய்க் கொண்டிருந்த இளமைப் பிராயம். அந்த நாட்களில் நான் ஏறாத மரமில்லை. நீந்தாத நீர்நிலை இல்லை. பனைமரத்தில் நான் ஏறும் வேகத்தைப் பார்த்து என் சகோதரர்களே ஆச்சரியப்படுவார்கள். பாவாடையை ஏற்றிச் செருகிக்கொண்டு கபடி விளையாடுவேன். என் பால்ய ஞாபகங்களில் நான் பாண்டியோ பல்லாங்குழியோ விளையாடியதாக நினைப்பே இல்லை.

பருவ வயதை எட்டியபோது, இத்தனைபேருடன் இருந்தபோதும், ஒருவிதமான தனிமையை உணரத் தொடங்கினேன். கிராமத்தின் தெருக்களில் ஓடியும் சாடியும் நான் தீர்த்துக்கொண்ட தினவு, என் உடம்புக்குள் ஆழ ஆழப் புதைந்து கொண்டது. உடல் வளர்வதற்கு இணையாக எனக்குள் அது வளர்ந்துகொண்டும் போனது. எவ்வளவுதான் சுதந்திரம் நிலவும் வீடாக இருந்தாலும், பிறருடன் பகிர்ந்துகொள்ள முடியாதது அது. ரகசியமாகக் கிளைவிரித்துப் படரும் தாவரம்போல எனக்குள் வளர்ந்து வந்தது.

இந்த நேரத்தில் எனக்குத் திரு மணம் பேசினார்கள். எங்களைப் போன்ற நடுத்தர வருமானமுள்ள குடும்பம்தான். நாகரிகமான மனிதர்கள். அந்த நாட்களில் பெண்ணைப் பெற்றவர்கள் படும் பண ரீதியான சிரமத்தையோ, மனச்சிக்கலையோ சற்றும் எதிர்கொள்ளாமலே என் பெற்றோர் என்னை மணமுடித்து அனுப்பினார்கள்.

வேறொரு கிராமத்தில் நாங்கள் தனியாகக் குடியமர்ந்தோம். அவர் மிருதுவானவர். அதிர்ந்து பேசக்கூடமாட்டார். எதிராளியின் மனத்தைப் புண்படுத்திவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருப்பார். சுத்தத்தைப் பற்றி அபார அக்கறை கொண்டவர். தினந்தோறும் சலவை உடைதான் அணிவார். சும்மா இருக்கும் நேரங்களில் வீட்டின் ஏதாவது ஒரு பகுதியைச் சுத்தம் செய்துகொண்டேயிருப்பார். ஒரு தடவை சொன்னார். மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையறாது நடந்துவரும் மாபெரும் போரில் இயற்கை கைக்கொள்ளும் கொடூரமான ஆயுதம் தூசிதானாம். இது தம்முடைய கண்டுபிடிப்பு அல்ல என்றும், ஏதோ ஒரு விஞ்ஞானப் புத்தகத்தில் படித்ததாகவும் சொன்னார்.

சைவப் பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவள்தான் நானும் என்றாலும் மசாலாப் பொருட்கள் கலந்த சமையலில் மிகவும் பிரியம் கொண்டவள். சமையலில் உப்பு புளி காரம் எண்ணெய் எல்லாமே மிதமாகத்தான் இருக்கவேண்டும் அவருக்கு. பத்தியச் சாப்பாடு மாதிரி. உறுத்தாத மெல்லிய மணம் உள்ள ஊதுபத்தியோ தசாங்கமோ சதா மணம் நிரப்பியி ருக்கும் வீடு. எல்லாமே தாறுமாறாகக் கிடக்கும் என் தாய் வீட்டின் சூழ்நிலைக்கு நேர் விரோதமாக நேர்த்தியும் அழகும் அலங்காரமும் அமைதியும் கொண்டிருந்த எங்கள் தனிவீடு முதல்நாள் முதலே வேறு யாருடைய வீடோபோலத் தோன்ற ஆரம்பித்துவிட்டது எனக்கு.

வீட்டின் சகல முனைகளிலும் நிலவிய அந்நியத்தன்மை எங்கள் படுக்கையறையையும் விட்டு வைக்கவில்லை. தாம்பத்திய வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லாமல்தான் பார்த்துக்கொண்டார் என்னவர். உண்மையில், இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரை என்னவர் என்று குறிப்பிடும்போது மிகவும் நெகிழ்வாக உணர்கிறேன். அவரை நான் அடைந்தது எனது பல ஜென்மப் பேறு என்று நிஜமாகவே நம்புகிறேன்.

இவ்வளவு இருந்தும், என் அக ஆழத்தில் ஒரு பள்ளம் இருப்பது போலவும், அது நிரம்பாமலே என் வாழ்நாள் கழிந்துகொண்டிருக்கிறது என்கிற மாதிரியும் உணர ஆரம்பித்தேன். ஏழு வருடங்கள் இப்படியே கழிந்தன.

ஏழாவது வருடத் துவக்கத்தில் எனக்கு ஒரு கனவு அடிக்கடி வரத் தொடங்கியது. எங்கள் ஊர்ப் பக்கம் கந்த சஷ்டியை ஒட்டி சூரன் வேடம் தரித்து வருவார்கள். அப்படிப்பட்ட ஒரு சூரன் என் கனவில் தவறாமல் வருவான். கல்த் தொட்டியாக ஆகியிருக்கும் என் அடிவயிற்றைக் கூர்மையான சூலத்தால் குத்திப் பிளப்பான். நானானால் சிரித்துக்கொண்டிருப்பேன்.

இந்நிலையில் எங்கள் வீட்டுக்குள் நள்ளிரவில் ஒருவன் புகுந்து விட்டான். திருட வந்தவனாகத் தான் இருக்க வேண்டும். கத்தி முனையில் எங்களை நிறுத்தித் தூணோடு கட்டிப்போட்டு விட்டு, அலமாரிச் சாவியைக் கேட்டு மிரட்டினான். என் முகத்திலும் அவர் முகத்திலும் டார்ச் லைட் ஒளி பட்டுப் பட்டு விலகியபோது பார்வை கூசியது எனக்கு. கண்களைச் சுருக்கிக் கொண்டு பார்த்ததில் வந்தவனுடைய உருவமும் முகமும் ஓரளவு துலங்கியது. இளைஞன்தான். வயது இருபத்தைந்தை ஒட்டி இருக்கலாம்.

என்ன நினைத்தானோ, எதைக் கண்டானோ, சடாரென்று என்னை நெருங்கி என் கட்டுகளை மட்டும் அவிழ்த்துவிட்டான். பல்லிடுக்கில் கவ்விய கத்திக்கு மறுபுறம் மலர்ந்த முறுவல் பயங்கரமானதாக இருந்தது. பிறகு அவன் என் கணவரின் கண்முன்னே என்னை . . . என்னை . . .

இதற்காகவே வந்தவன்போல இறங்கிப்போய்விட்டான். தான் தேடி வந்ததை விடவும் அதிகமாகவே கிடைத்துவிட்டதாக உணர்ந்தானோ என்னவோ.

நான் குமுறிக் குமுறி அழுதேன். என்னவர் அருகில் அமர்ந்து ஆறுதல் சொன்னார். விபத்தில் ஒரு அங்கம் ஊனமாகிறவர்கள் கிடையாதா, இதை ஒரு விஷய மாகவே நினைக்க வேண்டியதில்லை, யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ளலாம் என்றெல்லாம் பலவிதமாகத் தேற்றினார். சில விஷயங்களை அப்படியெல்லாம் மூடி மறைத்துவிட முடியாது என்பதுகூடத் தெரியாத அப்பாவி அவர். அவருடைய அன்பின் ஜ்வாலையில் அப்படியே பொசுங்கிவிட மாட்டோமா என்று ஏக்கமாக இருந்தது.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல வேறு இரண்டு பிரச்சினைகள் முளைத்தன. என்னவரின் அன்பில் ஒரு இம்மி அதிகரித்துவிட்டது போலவும், அதற்குக் காரணம் அவரால் இனி வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத அந்த இரவுதான் என்றும், தன்னுடைய உபரிப் பரிவின் மூலம் எனக்கும் அதை சதா நினைவூட்டி வருகிறார் என்றும் தோன்றத் தொடங்கியது எனக்கு. எங்களுக்குள் தொடுகை என்பதே அநேகமாக நின்றுபோய் விட்டது என்பதுபோக, நான் ஒரு பிச்சைப் பாத்திரத்துடன் எந்நேரமும் அவர் முன்னால் இறைஞ்சிக்கொண்டு நிற்பதுபோல உணர ஆரம்பித்தேன்.

இரண்டாவது விஷயம்தான் இன்னும் சிக்கலானது. சூலத்தால் கல்த் தொட்டியைப் பிளக்க வந்து சேரும் கனவுச் சூரனுக்கு ஒரு முகம் கிடைத்துத் தொலைத்தது. வேளை கெட்ட வேளைகளில் கண்முன் அந்தரத்தில் மிதந்து பழிப்புக் காட்டியது.

அதிக நாட்கள் இந்தச் சித்திரவதையைத் தொடர அனுமதிக்கவில்லை நான். என்னவரைப் பிரிந்து பிறந்தவீடு திரும்பிவிட்டேன். விட்ட இடத்திலிருந்து படிப்பைத் தொடர்ந்து நானாக உத்தியோகம் தேடித்தனியாக வாழ்ந்து தீர்த்து போன ஆண்டுதான் ஓய்வு பெற்றேன். நான் பிரிந்துபோவதாக அறிவித்த பிறகுகூட ஒரு சொல் வன்மமாக உதிர்க்காத, கோர்ட் படியேறாத உத்தமரைப் பிரிந்து வந்தது தவறோ என்று சமீபகாலமாக அடிக்கடி தோன்றுகிறது. வயதாகிவிட்டதில்லையா, குற்றவுணர்ச்சியின் வேகம் தாள முடியாததாக இருக்கிறது.

வாசகிகள்தாம் சொல்ல வேண்டும், நான் செய்தது சரியா தவறா என்று.

ஆனால், அவர்களிடம் இன்னொரு உண்மையையும் நான் மறைக்க விரும்பவில்லை. எனக்குள் ஒரு பள்ளம் நிரந்தரமாக இருந்து வந்தது என்று சொன்னேனில்லையா, அது நிரம்பித் ததும்பியதும் அந்த விபத்து நடந்த இரவில்தான் . . .

பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

சென்ஷி

unread,
Apr 13, 2010, 8:15:54 AM4/13/10
to panb...@googlegroups.com

பழைய ஒரு சிறிய காதல் கதை - வைக்கம் முகமது பஷீர், தமிழில் சுந்தர ராமசாமி

காதல் வயப்பட்டிருந்த கால கட்டத்தில், முன்பு யுகங்களுக்கு முன்னால் என்பதைப் போல நடைபெற்ற… பழைய ஒரு சிறிய காதல் கதையைக் கூறப் போகிறேன். காதலுக்குள் எப்போதும் காமமும் இருக்குமல்லவா? அப்போது மிகவும் இளம் வயது. கோபம், தைரியம்… இளமையின் உஷ்ணத் தில் நான் இருந்தேன். கேள்வி கேட்பதற்கு யாருமில்லை. தாவிக் குதிப்பது… இதயம் காட்டும் வழியில் பயணிப்பது… தெளிவற்ற வசீகரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்!

பசித்துப் பசித்து அப்படியே வாழ்வது… எல்லா வகைப்பட்ட பசியும்… எல்லா வகைப்பட்ட தாகமும்… அவை இல்லாமல் போவதற்கு ஒரு வழியும் இல்லை. யார் மீதோ எதன் மீதோ கோபம் இருந்தது. பயங்கரமான கோபம். எனினும், ஆசையின் அழகான பாதையில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. எல்லாம் சரியாகும்… சரி செய்வேன். சூடான குருதியில் கழுவி பிரபஞ்சங்களை முழுமையாகப் புதுமையாக்கு வேன். புரட்சிவாதி… கொல்வதற்குத் தயங்காத பயங்கரவாத இயக்கத் தின் தலைவன்… கத்தியையும் ரிவால்வரையும் கையில் வைத்துக் கொண்டு நடந்து திரிந்த பயங்கர பயங்கரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்!

பேனாவின் முனையிலிருந்து அன்று நெருப்பு மழை பெய்து கொண்டிருந்தது. சூறாவளி வீசிக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் இலக்கு சம்ஹாரம் செய்வதாக இருந்தது. இந்த லட்சியத்துடன் ஒன்று சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்தனர். அன்று எங்களுக்கு ஒரு பத்திரிகை யும்… நான்தான் பத்திரிகையின் ஆசிரியர்.

நெருப்புப் பெட்டியைப் போன்று இருந்த சிறிய ஒரு அறைதான் பத்திரிகை அலுவலகம்.

தங்கியிருந்ததும் அங்கேதான். இரவும் பகலும் சிந்தனைதான். எழுத்துதான். இரவும் பகலும் கலந்துரையாடல்கள்… இரவும் பகலும் செயல்பாடுகள்…

என்னுடைய வார்த்தைதான் வேத வார்த்தை… நான் மிகவும் நல்ல மனிதன். மறுக்க முடியாத தலைவன். எனினும், இதயத்திற்குப் பெரிய எரிச்சல். ஒரு அழுகை. சிறிய அளவில் கவலையும் இருந்தது.

பயங்கரவாத செயல்களுக்கு இவை எதுவும் பொருத்தமானவை அல்ல. எனினும், கவலைகள் நிறைந்த பாடல்களைப் பாட வேண்டும் என்று தோன்றும்.

இரண்டு வகைப்பட்ட உணர்ச் சிகள் மனதில். இரண்டும் போராடிக் கொண்டிருக்கின்றன. மொத்தத் தில்- ஒரு மூச்சு அடைப்பதைப் போல.

இப்படித் தோன்றும்போது முற்றத்திற்கு வருவேன். சுவரின் அருகில் சென்று பரந்து கிடக்கும் உலகத்தையே பார்ப்பேன். அப்ப டிப் பார்த்துக் கொண்டு நிற்கும் போது ஒருநாள் அழகான தோற்றத் தைக் கொண்ட ஒரு இளம் பெண் ணைப் பார்த்தேன். அழகான இளம் பெண்… பெண்ணரசி!

முதல் பார்வை…

பிறகு காதல் வலையில் சிக்கு வதற்கு அதிக நிமிடங்கள் தேவைப் படவில்லை. அழகு தேவதையே, தேவீ, உன்னை நான் வழிபடுகி றேன்- மகாமாயே!

இப்படிப் பாடலைப் பாடிய வாறு நான் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். வழிபாடுதான்… வழிபாடு!

இந்த விஷயங்கள் எதுவும் அவளுக்குத் தெரியாது. அவள் என்னைப் பார்க்கவே இல்லை.

நான் அவளைப் பார்த்ததே ஒரு எதிர்பாராத சம்பவம்தான். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பார்த் தேன். அவளைப் பார்த்துவிட்டேன்!

உடனடியாக அந்த இடம் புண்ணிய இடமாக மாறிவிட்டது. நான் நின்று கொண்டிருந்த இடமா? ஹோ! அவளை நின்று கொண்டே பார்த்த இடம் அல்லவா? புண்ணிய பூமியின் பகுதி!

முழங்கைகள் இரண்டையும் கற்சுவரில் வைத்து, கை விரல்களை தலையின் இரண்டு பக்கங்களிலும் வைத்துக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டு நான் நின்றிருந்தேன். சுவரின் அந்தப் பக்கத்தில் வாழை கள் நிறைந்த ஒரு தோட்டம். தோட்டத்தின் எல்லையில் காம்பவுண்ட் சுவர். அதைத் தாண்டி தெற்கு வடக்காக பொதுச்சாலை… சாலையின் அருகில் இரண்டடுக்கு வீடுகள்.

என்னுடைய இடப் பக்கத்தில் கிழக்கு மேற்காக நகரத்தை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஓடும் அசுத்தமான ஒரு பெரிய வாய்க்கால். வாய்க்காலின் இரு பக்கங்களிலும் உயர்ந்த கற்சுவர்கள். அந்தக் கரையில் உள்ள கற்சுவரைக் கட்டும் காலத்தில் சுவர் இருந்த வழியில் ஒரு தென்னை மரம் நின்றிருந்தது. தென்னை மரத்து டன் சேர்த்து இருக்கிற மாதிரி சுவரைக் கட்டி விட்டார்கள். காலம் சிறிது கடந்து சென்றதும், அந்த தென்னை மரத்தை வெட்டி னார்கள். அதைத் தொடர்ந்து அந்த வெள்ளை நிறச் சுவரில் ஒரு வெற்றிடம் எஞ்சியது.

அந்த வெற்றிடம் என்று கூறப் படும் இடைவெளி வழியாகத்தான் நான் அவளைப் பார்ப்பேன். சதைப் பிடிப்புடன் பருமனாக இருக்கும் வெளுத்த அழகி… ப்ரேஸியருக்குள் அழுத்தப்பட்டு இருக்கும் கனமான மார்பகங்கள் திரண்டு திரண்டு உந்திக் கொண்டு நின்று கொண்டிருக்கின்றன- உடலை ஒட்டிக் கொண்டிருக்கும் வெள்ளை ரவிக்கைக்குள். மெல்லிய ரவிக்கை யின் வழியாக அனைத்தும் நன்றா கத் தெரியும். கூந்தலை அவிழ்த்துத் தோளில் விரித்துப் போட்டுக் கொண்டு அவள் கனவு காண்கிறாள்!

தெய்வமே!

அவளுடைய இனிய கனவு என்னவாக இருக்கும்? என்னைப் பார்க்கவில்லையா? சொர்க்கத்தின் அழகியே, ஏன் இங்கு பார்க்காமல் இருக்கிறாய்?

நான் நின்று இருமினேன். ஒன்றல்ல, பத்தல்ல- இருமல்; இருமல்களின் சிறிய சிறிய மேக கர்ஜனைகள்!

அனைத்தும் வீணாகிவிட்டது. அந்த கனவுப் பேரழகி கேட்க வில்லை. ஏன் கேட்கவில்லை?

அதற்குப் பிறகு அங்கு இருமல் தான் வாழ்க்கை. இருமல்களின் பரவலான போராட்டம்! அந்த புண்ணிய இடத்திற்குச் சென்று நிற்பது, கருத்த இடைவெளி வழியாகப் பார்ப்பது… அவள் அங்கு எங்காவது இருப்பாளா? திடீரென்று பார்த்தால், உடனடியாக இரும வேண்டும்! முறையாக இருமுவதற் காக ஏராளமான இருமல்களை ஸ்டாக் பண்ணி வைத்துக் கொண்டு காத்து நின்றிருந்தேன். சில நேரங் களில் மின்னலைப் போல பார்ப் பேன். அரை டஜன் இருமல்களை ஒவ்வொன்றாக குறுகிய கால அளவில் வெளியே விடுவேன்! ஒரு பயனும் இல்லை. இருமலைக் கேட்கவும் இல்லை. பார்க்கவும் இல்லை. மரணத்தைத் தழுவி விட்டால் என்ன?

இப்படியே கவலை நிறைந்த ஒன்று, ஒன்றரை மாதம் கடந்து சென்றது. அதற்குள் அந்த வீட்டின், அதன் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் வரலாறுகளை நான் தெரிந்து கொண்டேன். குறிப்பிட் டுக் கூறும்படி எதுவும் இல்லை. மானத்துடன் இருக்கும் மானிடர் களின் வீடுகள்.

நான் வழிபடும் தெய்வம் ஒரு வேலைக்காரி. சர்வன்ட்!

அதனாலென்ன? காதலுக்கு ஓலைக் குடிசை என்றும் அரண் மனை என்றும் உள்ள பெரிய வித்தியாசங்கள் ஏதாவது இருக்கிறதா என்ன? காதல் நிரந்தரமானது. புனிதமானது.

ஆனால், அவள் என்னைப் பார்க்கவில்லை. அவளுடைய மன உலகத்தில் நான் தோன்றவே யில்லை.

ஏராளமான இருமல்களின் ஸ்டாக்குடன் நான் நின்று கொண்டிருந்தேன். இறுதியில் நான் முழுமையான ஏமாற்றத் திற்குள்ளானேன். என்னுடைய இருமல்கள் அனைத்தும் இறந்து விட்டன. என்னுடைய உலகம் இருண்டது. இறந்துவிட்டால் என்ன?

ஆச்சரியம்! அவள் என்னைப் பார்த்துவிட்டாள்…! அமிர்த கிரணங்களைப் பரப்பியவாறு உயர்ந்து கொண்டிருக்கும் குளிர் நிலவு என்னைப் பார்த்தது. நான் பார்த்தேன். அவள் பார்த்தாள். நான் பார்த்தேன். அவள் புன்னகைத்தாள். என்னால் புன்னகைக்க முடியவில்லை. புன்னகை என்பது ஒரு பலவீனம் அல்லவா? எனினும், எனக்குள் புதிய ஒரு உற்சாகம் பிறந்தது. இதோ எனக்கு ஒரு புதையல் கிடைத்திருக்கிறது! இறுதியில் என்னுடைய மோகினி மறைந்து போய் விட்டாள். நான் சூனியமாக ஆனேன்.

கவலை நீங்கியது. செயல்களில் அதிகமான உற்சாகம் புரண்டு கொண்டிருந்தது. வாழ்க்கை அழகானதாகத் தோன்றியது.

தினமும் நாங்கள் பார்ப்போம். அவள் புன்னகைப்பாள். நானும் சற்று புன்னகைக்கக் கற்றுக் கொண்டேன்.

காதல் வயப்பட்ட நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. கவித் துவமான நாட்கள்.

அப்படி நாட்கள் போய்க் கொண்டிருந்தபோது ஒரு மாலை நேரம் வந்தது. வானத்திலிருந்து பன்னீர் தெளிப்பதைப் போல கொஞ்சம் மழை பெய்தது. சான்டோ பனியனும் அரை கால் சட்டையும் அணிந்து நான் அந்த கறுத்த இடைவெளிக்கு நேராக வாய்க்காலின் இந்தக் கரையில் நின்று கொண்டிருந்தேன். இடுப் பில் உறை இல்லாத கத்தி இருந்தது. ஒரு தீவிர செயல்கள் செய்பவனிடம் எப்போதும் பயங்கரமான ஆயுதம் இருக்க வேண்டும் அல்லவா?

நான் காதல் தேவதையை எதிர் பார்த்து எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தேன். லாட்ஜுக்கு வருபவர்களும் லாட்ஜில் இருந்து செல்பவர்களும் என்னைப் பார்த் தார்கள். யாராவது வரும்போது “ஒன்றுக்கு’ போவதைப் போல நான் கீழே உட்காருவேன். அப்படி உட்கார்ந்தும் நின்றும் நேரம் சிறிது கழிந்தது. திடீரென்று கறுத்த இடைவெளி வெள்ளை யால், அழகாக நிறைந்தது.

நான் முற்றிலும் சூடாகி விட்டேன். இதயம் தாங்க முடியாத அளவிற்கு… ஓ! வாயில் நீர் வற்றி விட்டது. அப்போது வசீகரமான, இனிய ஒரு குரல்!

“”ஏன் மழையில நனைஞ்சுகிட்டு இருக்கே?”

“”சும்மா…”

உணர்ச்சிமயமான நிமிடங்கள் நகர்கின்றன. எதைப் பற்றியும் அறியாமல் மனிதர்கள் மின்சார வெளிச்சத்தில் மூழ்கி சாலையின் வழியாகப் போய்க் கொண்டிருக் கிறார்கள். நாற்றமெடுக்கும் வாய்க் காலில் எங்கோ ஒரு தவளையை தண்ணீர் பாம்போ சாரைப் பாம்போ வேறு ஏதோ பாம்போ பிடித்திருக்கிறது. தவளை தாங்க முடியாமல் மரண வேதனையுடன் கத்துகிறது. இருட்டிற்கு அடர்த்தி அதிகமாகிக் கொண்டு வருகிறது. காட்சிகள் மறைந்து கொண்டிருக் கின்றன. அவள் கேட்டாள்:

“”போயாச்சா?”

“”இல்லை. நான் அங்கே வரட்டுமா?”

“”எதற்கு?”

“”சும்மா!”

“”வேண்டாம்!”

“”வேணும். நான் வருவேன்!”

“”நாய் இருக்கு!”

“”பரவாயில்லை!”

“”அவர்கள் இந்தப் பக்கம் சாப்பிடுவதற்கு இப்போ வருவார் கள்!”

“”பரவாயில்லை. நான் வருவேன்!”

“”அய்யோ… வேண்டாம்!”

நிறைந்து நின்றிருந்த வெள்ளை நிறம் போய்விட்டது. இடைவெளி முழுமையாகக் கறுத்தது.

நான் சுவரில் ஏறி உட்கார்ந்தேன். வெளிச்சம் வாய்க்காலில் விழுந்து கொண்டிருந்தது- சுவரின் மேற் பகுதியிலும். நான் வாய்க்காலில் மெதுவாக இறங்கலாம் என்று பார்த்தேன். கால்கள் எட்டவில்லை. கால்களை நீட்டி, கைப்பிடியை விட்டேன். ப்ளும்… முழங்கால் வரை சேறு. இடுப்பு வரை நீர். காட்டுச் செடிகளின் முட்களும் புட்டித் துண்டுகளும் இருக்கின்றன என்று தோன்றுகிறது. பாதங்களில் கற்களை வைத்து கட்டிவிட்டிருப்ப தைப் போல கனமாக இருக்க, நான் முன்னோக்கி நகர்ந்தேன். வாய்க்காலின் நடுப்பகுதியை அடைந்தேன். வெளிச்சத்தில் நான் நன்கு தெரிய நின்றிருந்தேன். புரட்சிவாதி…! ஒரு அடிகூட முன்னால் வைக்க முடியவில்லை. சேற்றில் சிக்கி நின்றிருக்கிறேன். ஆட்கள் பார்ப்பார்கள்! முன் னோக்கி நகர வேண்டுமே! நான் முன்னோக்கி நகர்ந்தேன். நகர்ந்து நகர்ந்து வாய்க்காலின் அந்தக் கரையை அடைந்தேன். நான் மேலே பார்த்தேன். அதிர்ச்சி யடைந்து விட்டேன்!

நீர்ப்பரப்பிலிருந்து வானம் வரைக்கும் என்பதைப் போல சுவர் உயரமாக இருந்தது. என்ன செய்வது? எப்படி ஏறுவது? திரும்பிப் போவது என்றால்…? ச்சே… ஏறிவிட வேண்டும்! கை எட்டாத உயரத்தில் சுவரில் ஒரு சிறிய ஆலஞ்செடி வளர்ந்து நின்றிருந்தது.

அந்த ஆலஞ்செடியை நான் பாய்ந்து பிடித்தேன். பிறகு நான் தெரிந்து கொண்டது- நான் சுவரின் மேற்பகுதியில் இருக்கிறேன் என்ற விஷயம்தான்.

“ஹவ்’ என்று அவள் உண்டாக் கிய ஆச்சரியக் குரல் கேட்டது.

ஆனால், அதற்குப் பிறகும் தூரம் இருந்தது. கீழே குதிக்க முடியாது. தூரத்தில் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் அரைச் சுவர் இருந்தது. அது சிறியதாக இருந்தது. பூனையைப் போல சுவரின் வழியாக நான் நடந்தேன். மேற்கு வீட்டின் காலி இடத்தில் இறங்கினேன். அங்கு ஒரு தொழுவம் இருந்தது. அது வளைந்து போகும் போது “கிருகிரா’ என்று இலைகள் சத்தம் உண்டாக்கின. இருட்டில் கால்களை எச்சரிக்கையாக வைத்து… வைத்து… மிகவும் மெதுவாக வைத்து… அரைச்சுவரின் அருகில் சென்றேன்.

அவள் மெதுவாக அந்தப் பக்கம் வந்தாள்.

நான் இரண்டு கைகளையும் நீட்டி அவளின் தோளைப் பற்றி இழுத்தேன். மேலே ஏற்றியபோது கல்லின் ஏதோ முனை பட்டு அவளு டைய ரவிக்கை “பர்ர்ர்’ என்று கிழிந் தது. வெள்ளை நிற மார்பகங்கள்.

தொடர்ந்து என்னுடைய காதலின் கன்னத்தில் இரண்டு பலமான, மிகவும் பலமான அடிகள் கிடைத்தன!

எப்படி என்றால்… “”அய்யோ!… அவர்கள் எல்லாரும் இப்போ சாப்பிடுவதற்காக இந்தப் பக்கம் வருவார்கள். போ!” என்று கூறிய போது, மோசமான கெட்ட நாற்றம் கொண்ட ஒரு காற்று அவளுடைய வாயிலிருந்து என்னுடைய முகத் தில் வந்து பட்டது. என்னுடைய தலை மரத்துப் போனதைப் போல ஆனது.

நான் சற்று விலகி நின்றேன். கொஞ்சம் சிறு சிறு குச்சிகள் ஒடிந்தன. ஒரு நாய் குரைத்தது.

“”போ…” என்று கூறி அவள் அங்கிருந்து சென்றாள்.

பிறகு நாய்கள் குரைக்கும் சத்தம்தான். இந்த அளவிற்கு அதிகமான நாய்களா?

நான் மிகவும் மெதுவாக நடந்து சிறிய சுவரில் ஏறினேன். அங்கிருந்து பெரிய சுவரில். அப்ப டியே சற்று முன்னோக்கி நகர்ந் தேன். அப்போது அந்த சுவரும் கீழே இருந்த முற்றமும் வெளிச்சத் தில் மூழ்கியது.

வாழையின் ஒரு இலை நுனி மட்டுமே எனக்கு இருந்த ஒரே மறைப்பு. காற்று வீசும்போது இலை அகலும். நான் வெளிச்சத்தில் நன்றாகத் தெரிவேன்!

அந்தச் சமயத்தில் என்னுடைய சில நண்பர்கள் என்னுடைய அறைக்கு அருகில் போவதைப் பார்த்தேன். அவர்களுக்கு என்னைப் பார்ப்பதற்கு எந்தவொரு சிரமமும் இருக்காது. ஆனால், அவர்கள் பார்க்கவில்லை. என்னை எப்படி சந்தேகப்படுவார்கள்?

என்னவோ பேசிக் கொண்டு இரண்டு மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும்! அவர்களில் வயது குறைவான ஆள்- இளைஞன்- முற்றத்திற்கு வந்து நான் அமர்ந் திருந்த பக்கமாக வந்தான். என்னைப் பிடிப்பதற்காக வருகிறான். பார்த்துவிடுவான். அவமானம்!

“நீ அங்கு இருட்டில் என்னடா செய்றே?’ என்று கேட்டவாறு என்னைப் பிடிப்பான்.

ஆட்கள் கூடுவார்கள். “ஓ… இது நம்முடைய அந்த நெருப்புப் பொறி பத்திரிகையின் ஆசிரியராச்சே! தலைவர்!’ ஆட்கள் கூடுவார்கள்.

தெய்வமே! என்னை இதில் இருந்து ஒரு தடவை காப்பாற்றி விடு! இனிமேல் நான் எந்தவொரு தவறையும் செய்ய மாட்டேன். சத்தியமா… அவன் என்னை பார்த்துவிடக்கூடாது!

நான் கத்தியைக் கையில் எடுத் தேன். அவன் கண்டுபிடித்து விட்டால்… கத்தியைப் பயன்படுத்தி என்னுடைய கழுத்தை அறுக்க வேண்டும்! தெய்வமே! அவனு டைய கண்களின் பார்க்கும் சக்தியை சிறிது நேரத்திற்கு இல்லாமல் செய்!’

கடவுளே!… என்னுடைய நண்பர்கள் என் பெயரைக் கூறி சத்தம் போட்டு அழைக்கிறார்கள். தலைவரைத் தேடுகிறார்கள்! தெய்வமே! என்னை அவமானப் படுத்தி விடாதே.

அவன் எந்தப் பக்கமும் பார்க்காமல் எனக்கு மிகவும் அருகில் வாழை மரத்திற்குக் கீழே வந்து சிறுநீர் கழித்துவிட்டு எழுந்து போனான்.

எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது. எனக்குள் என்னவோ இல்லாமல் போயிருக்கிறது.

அதற்குப் பிறகு நடந்தது எதுவும் சரியாக ஞாபகத்தில் இல்லை. யாரும் எதையும் தெரிந்து கொள்ள வில்லை. வாய்க்காலுக்குள் குதித்த தையும், உடலெங்கும் கிழித்து ரத்தம் வந்ததையும், சேற்றில் புதைந்ததையும், சுவரில் ஏறி அறை யின் அருகில் சென்று என்னுடைய நண்பர்களுக்கு முன்னால் நின்றதையும் தெளிவில்லாமல் நினைத் துப் பார்க்கிறேன்.

அவர்கள் பதைபதைப்பு அடைந்து என்னைப் பார்த்தார்கள். காதல் சம்பந்தப்பட்ட ஒரு சாகசப் பயணம் முடிந்து வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் நினைக்க வில்லை. தலைவர் ஏதோ மிகவும் உயர்ந்த செயலைச் செய்துவிட்டு வந்திருக்கிறார் என்பது அவர் களின் நினைப்பு. கடவுளே!

நான் சோப்பு போட்டு நன்றா கக் குளித்துவிட்டு அறைக்கு வந்து ஆடைகளை மாற்றி, தலையை வாரி முடித்து நாற்காலியில் போய் உட்கார்ந்தேன். நடந்த சம்பவங்கள் முழுவதையும் சிஷ்யர்களிடம் சொன்னேன்.

இறுதியில் அவர்கள் கூறினார் கள்:

“”இப்போதே நாம் இந்த இடத்தை மாற்ற வேண்டும்!”

மாறினோம். கனமான இதயத் துடன் இரவின் அமைதியான சூழ்நிலையில் காதல் நகரத்தில் இருந்து நாங்கள் கவலையுடன் விடை பெற்றோம். அந்த வகை யில்… அந்த வகையில்… அவமானத் தின் காயத்தை உண்டாக்காமல் கடந்து சென்ற- காதல் நிறைந்த- தாகம் கொண்ட- மிக உயர்ந்த- கவலை நிறைந்த கால கட்டமே, உனக்கு வணக்கம்!

மங்களம்.

சென்ஷி

unread,
Apr 13, 2010, 9:03:39 AM4/13/10
to panb...@googlegroups.com
7. மாஷ்கா - மாக்ஸிம் கார்க்கி (தமிழில் சுந்தர ராமசாமி)

ஒரு கோடைகாலத்தின் இரவு நேரத்தில், நகரத்தின் எல்லையில் தனியாக இருந்த ஒரு தெருவில் நான் ஒரு அசாதாரணமான காட்சியைக் கண்டேன். ஒரு பெரிய சேற்றுக் குவியலுக்கு நடுவில் ஒரு பெண் நின்று கொண் டிருந்தாள். சிறு குழந்தை களைப்போல அவள் தன்னு டைய கால்களால் சேற்றை யும் நீரையும் மிதித்துத் தெறிக்கச் செய்து கொண்டி ருந்தாள். சேற்று நீரைத் தெறிக்கச் செய்ததுடன், மூக்கைப் பிடித்துக்கொண்டு பேசுவதைப் போன்ற குரலில் ஏதோ ஒரு மோசமான பாடலை அவள் பாடிக் கொண்டும் இருந்தாள்.

அன்று மிகப்பெரிய சூறாவளிக் காற்று நகரத்தின்மீது படுவேகமாக வீசி அடித்துக் கொண்டிருந்தது. பெய்து கொண்டிருந்த மழை அந்தத் தெருவை ஒரு சேற்றுக் குவியலாக மாற்றி விட்டிருந்தது. சேறு மிகவும் ஆழமானதாக இருந்தது. கிட்டத்தட்ட முழங்கால்வரை அந்தப் பெண்ணின் கால்கள் சேற்றுக்குள் இருந்தன. குரலை மிகவும் கவனமாகக் கேட்டால், அந்தப் பாடலைப் பாடும் பெண் மது அருந்தியிருக்கிறாள் என்பதை மிகவும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். நடனம் ஆடிக் களைத்துப் போய்விட்டால், அவள் அந்த சேற்றில் மூழ்கிப்போவதற்கான எல்லா சாத்தியங்களும் இருந்தன.

என்னுடைய கால்களில் அணிந்திருந்த காலணி களை நீக்கிவிட்டு அந்த சேற்றில் மெதுவாகக் கால்களை வைத்தேன். சேற்று நீரில் நின்று துள்ளிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் கைகளை பலமாகப் பிடித்து இழுத்து, அந்த சேற்றிலிருந்து அவளை வெளியே கொண்டு வந்தேன். ஒரு நிமிட நேரத்திற்கு அவள் பயந்திருக்க வேண்டும். அதனால் எதுவும் பேசாமல் கீழ்ப்படியும் மன நிலையுடன் அவள் என்னுடன் வந்தாள். ஆனால் திடீரென்று தன்னுடைய சரீரத்தை உதறிக்கொண்டு, வலது கையை எடுத்து என்னுடைய நெஞ்சில் அடித்தவாறு அவள் உரத்த குரலில் சத்தம் போட்டாள்: “”உதவிக்கு வாங்க…”

அடுத்த நிமிடம் என்னையும் இழுத்துக்கொண்டு அவள் அந்தச் சேற்றுக் குவியலுக்குள் இறங்கினாள்.

“”நீங்க நாசமாப் போகணும்”- அவள் சாபம் போட்டாள். “”நான் போக மாட்டேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியும். நான் இல்லாமல் நீயும் வாழ முடியுமான்னு பார். என்னைக் காப்பாற்றுங்க…”

இருட்டுக்குள்ளிருந்து ஒரு இரவு நேரக் காவலாளி அங்கு வந்து நின்றான். அவன் எங்களிடமிருந்து ஐந்தடி தூரம் தள்ளி நின்றுகொண்டு முரட்டுத்தனமான குரலில் கேட்டான்:

“”ஏன் சண்டை போடுறீங்க?”

அந்தப் பெண் சேற்றுக்குள் விழுந்து இறந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதையும், அதிலிருந்து அவளை வெளியே கொண்டு வருவதற்கு நான் முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்பதையும் நான் அந்த ஆளிடம் சொன்னேன். அந்தக் காவலாளி இன்னும் சற்று அருகில் நகர்ந்து நின்று கொண்டு அவளையே வெறித்துப் பார்த்தான். சத்தமாக காரித்துப்பிய அவன் உரத்த குரலில் சொன்னான்:

“”மாஷ்கா, வெளியே வா.”

“”எனக்கு வரப் பிடிக்கலைன்னு சொல்றேன்ல!”

“”வெளியே வான்னு நான் சொல்றேன்.”

“”நான் வரமாட்டேன்.”

“”என்னிடம் உதை வாங்கினால்தான் உனக்கு சரியாக இருக்கும். அப்படித்தானே?”- அவன் சொன்னான். தொடர்ந்து நான் இருந்த பக்கம் திரும்பி அவன் நட்புணர்வுடன் சொன்னான்:

“”இவள் இங்கே… பக்கத்தில்தான் இருக்கிறாள். இவள் பெயர் மாஷ்கா ஃப்ராலிக்கா. ஆண்களை வசீகரித்து இழுப்பது இவளின் தொழில். இவளை மேலே கொண்டு வரணுமா?”

நாங்கள் சிகரெட்டைப் பற்ற வைத்தோம். சேற்றைத் தெறிக்க வைத்துக்கொண்டு அவள் உரத்த குரலில் கத்தினாள்: “”பெரிய முதலாளிகள் தேடி வந்திருக்காங்க! பேசாம போங்கடா… நான்தான் எனக்கு முதலாளி. இங்க பாருங்க… உங்களுக்குப் பிடிச்சிருந்தா நான் இதில் கொஞ்சம் மூழ்கிட்டு வர்றேன்.”

“”நான் உன் முதுகில் ஒரு அடி கொடுக்கப் போறேன்”- காவலாளி எச்சரித்தான்.

அவன் ஒரு பலம் கொண்ட தாடி வளர்த்திருந்த மனிதனாக இருந்தான். எல்லா இரவு வேளைகளிலும் இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணுவது என்பது அவளுடைய வாடிக்கையான செயலாகி விட்டது. வீட்டில் இரண்டு கால்களும் இல்லாத ஒரு சிறுவன் இவளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பான்.

“”இங்கேயிருந்து ரொம்பவும் தூரத்திலா இவள் இருக்கிறாள்?”

“”சாகடிக்கப்பட வேண்டிய ஒருத்தி இவள்!” – என் கேள்விக்கு பதில் கூறாமல் அவன் சொன்னான்:

“”யாராவது இவளை வீட்டில் கொண்டுபோய்விட்டால் நன்றாக இருக்கும்”- நான் சொன்னேன்.

காவலாளி தன்னுடைய தாடையில் மூக்கின் வழியாகப் புகையை விட்டவாறு, அந்த சிகரெட் வெளிச்சத்தில் என்னைப் பார்த்தான். அந்த சேற்றை அழுத்தி மிதித்துக்கொண்டு அவன் நடந்து சென்றான். போவதற்கு மத்தியில் அவன் இப்படிச் சொன்னான்:

“”இவளை அழைச்சிட்டுப் போ. ஆனால் அதற்கு முன்னால் இவளுடைய மூஞ்சில ஒண்ணு கொடு.”

அந்தப் பெண் சேற்றில் நின்றுகொண்டு தன்னுடைய கைகளையும் கால்களையும் அசைத்துக்கொண்டிருந்தாள். மூக்கு அடைத்துக்கொண்டதைப் போன்ற கரடுமுரடான குரலில் அவள் சொன்னாள்:

“”கடலில் இப்படியே… போகணும் ஐலஸா…”

வானத்திலிருந்த இருட்டிலிருந்து ஒரு பெரிய நட்சத்திரம், குழம்பைப்போல இருந்த அந்த நீரில் தெரிந்தது. சேற்றில் அலைகள் உண்டானபோது அந்தத் தோற்றம் இல்லாமல் போனது. நான் மீண்டும் அந்தச் சேற்றில் இறங்கிச் சென்றேன். பாட்டு பாடிக் கொண்டிருந்த பெண்ணின் இரண்டு கைகளின் இடுக்குகளிலும் கைகளை வைத்துத் தூக்கி, என்னுடைய முழங்கால்களால் முன்னோக்கித் தள்ளி நான் அவளை வெளியே கொண்டு சென்றேன். அவள் என்னை எதிர்த்தவாறு, கையை ஆட்டிக் கொண்டு சவால் விட்டாள்:

“”வா… என்னை அடி. நான் பார்க்கிறேன்… என்னை அடி. யாருக்கு என்ன இழப்பு? டேய், பிராணியே… பிச்சைக்காரப் பயலே… வாடா… என்னை அடி…”

நான் அவளை அந்த வேலியின்மீது சாய்த்து நிற்க வைத்தேன். அவள் எங்கே இருக்கிறாள் என்று நான் விசாரித்தேன். அவள் மதுவின் போதையுடன் தொங்கி ஆடிக்கொண்டிருந்த தலையை உயர்த்தினாள். கறுத்த பீளை விழுந்திருந்த கண்களால் அவள் என்னைப் பார்த்தாள். அவளுடைய தாழ்ந்து காணப்பட்ட மூக்கின் நடுப்பகுதியை நான் பார்த்தேன். அதன் மீதமிருந்த பகுதி ஒரு பொத்தானைப்போல மேல்நோக்கித் தள்ளிக் கொண்டு நின்றது. அவளுடைய மேலுதடு காயம்பட்டு சற்று வளைந்திருந்தது. அதன் வழியாகப் பற்களின் ஒரு வரிசை வெளியே தெரிந்தது. அந்தச் சிறிய சதைப் பிடிப்பான முகம் ஆர்வத்துடன் என்னைப் பார்த்தது.

“”அப்படியென்றால் சரி… வா… நாம போகலாம்”- அவள் சொன்னாள்.

வேலியின் மேற்பகுதியில் அவ்வப்போது சாய்ந்தவாறு அவள் முன்னோக்கி நடந்தாள். அவளுடைய பாவாடையின் ஈரமான நுனி என்னுடைய கால்களில் அவ்வப்போது பட்டுக் கொண்டிருந்தது.

“”பேசாம வா என் தங்கமே”- சுய உணர்விற்குத் திரும்பி வந்தவாறு அவள் சொன்னாள்: “”நான் நல்ல பிள்ளையா இருக்கேன். நான் உனக்கு சுகம் தர்றேன்.”

ஒரு பெரிய இரண்டு அடுக்குகள் கொண்ட ஒரு கட்டிடத்தை நோக்கி என்னை அவள் அழைத்துச் சென்றாள். ஒரு கண்பார்வை தெரியாதவளைப்போல குதிரை வண்டிகள், பீப்பாய்கள், பிய்ந்துபோன பெட்டிகள் ஆகியவற்றின் வழியாக தட்டுத் தடுமாறி அவள் முன்னோக்கி நடந்தாள்.

தரையில் ஒரு பெரிய துவாரத்திற்கு அருகில் சென்றதும் அவள் நின்றாள்.

“”கீழே இறங்கு”- அவள் சொன்னாள்.

அந்த அடர்த்தி குறைந்த சுவரின்மீது சாய்ந்து கொண்டு, நடுங்கிக் கொண்டிருந்த பெண்ணின் சரீரத்தை என்னுடைய கைகளில் தாங்கியவாறு, அந்த வழுக்கிக் கொண்டிருந்த படிகள் வழியாக நான் கீழே இறங்கினேன். இருட்டில் சற்று தேடிப் பார்த்துக் கொண்டே நான் அந்தக் கதவின் தாழ்ப்பாளைக் கண்டுபிடித்தேன். கதவைத் திறந்த பிறகு, முன்னோக்கி நகரத் தயங்கியவாறு நான் கதவின் அருகிலேயே நின்றுவிட்டேன்.

“”அம்மா, நீங்கதானே?”- இருட்டிற்குள்ளிருந்து ஒரு மெல்லிய குரல் கேட்டது.

“”ஆமாம்… நான்தான்.”

தார், சிதிலம் ஆகியவை கலந்த ஒரு தாங்க முடியாத வாசனை என்னுடைய நாசிக்குள் நுழைந்தது. நெருப்புப் பெட்டியை உரசியபோது, அதன் மெல்லிய வெளிச்சத்தில் ஒரு சிறுவனின் வெளிறிப்போன முகத்தை நான் பார்த்தேன்.

“”என்னைத் தவிர வேறு யார் இங்கே வருவாங்க? இது நானேதான்”- தன்னுடைய உடலின் எடை முழுவதையும் என்மீது சாய்த்துக் கொண்டு அவள் சொன்னாள்.

இன்னொரு நெருப்புக் குச்சியையும் எடுத்து உரசினேன். கண்ணாடி டம்ளரின் “சில்’ சத்தம் கேட்டது. அந்த சிறிய மெலிந்து காணப்பட்ட கை தகர விளக்கை எரியச் செய்தது.

“”என் தங்கமே…”- ஒரு மூலையில் சாய்ந்து விழுந்துகொண்டே அவள் நீண்ட பெருமூச்சை விட்டாள். செங்கற்களாலான அந்தத் தரையிலிருந்து அதிக உயரத்தில் என்று கூற முடியாத அளவிற்குப் படுப்பதற்கான ஒரு இடம் தயார் செய்யப்பட்டிருந்தது.

விளக்கின் ஒளியைக் குறைப்பதற்காக அந்தச் சிறுவன் அதன் திரியைத் தாழ்த்தினான். அப்போது அது புகையத் தொடங்கியது. அவனுடைய முகத்தில் ஒரு தீவிரத்தன்மை இருந்தது. அவன் கூர்மையான மூக்கின் நுனியையும், பெண்பிள்ளைகளிடம் இருப்பதைப் போன்ற தடிமனான உதடுகளையும் கொண்டிருந்தான். சிறிதும் பொருத்தமற்ற முறையில் வண்ணம் பூசப்பட்ட ஒரு ஓவியத்தைப்போல அவன் இருந்தான். விளக்கைச் சரி பண்ணிய வுடன், தன்னுடைய கூர்மையான பார்வையால் என்னைப் பார்த்து அவன் சொன்னான்:

“”அம்மா மது அருந்தியிருக்காங்கள்ல?”

அவ்வப்போது தேம்பித் தேம்பி அழுதுகொண்டும், இடையில் குறட்டை விட்டுக் கொண்டும் அவனுடைய தாய் அந்தப் படுக்கை யில் மல்லாக்கப் படுத்துக் கிடந்தாள்.

“”இவங்களோட ஆடையை மாற்றணும்”- நான் சொன்னேன்.

“”அப்படின்னா ஆடையை மாற்றுங்க”- கண்களைத் தாழ்த்திக் கொண்டு அவன் சொன்னான்.

நான் அவளுடைய நனைந்த பாவாடையை அவிழ்க்க ஆரம்பித் தவுடன், மிகவும் தீவிரமாக குரலைத் தாழ்த்திக்கொண்டு அவன் கேட்டான்:

“”விளக்கை அணைக்கணுமா?”

“”எதற்கு?”

அதற்கு அவன் பதில் கூறவில்லை. ஒரு சாக்கு மூட்டையை அவிழ்ப்பதைப்போல அந்தப் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்துக் கொண்டே நான் அவனைப் பார்த்தேன். சாளரத்திற்குக் கீழே போடப்பட்டிருந்த ஒரு மரப்பெட்டியில் அவன் உட்கார்ந்திருந் தான். நல்ல உறுதியான பலகைகளைக் கொண்டு உண்டாக்கப் பட்டிருந்த அந்தப் பெட்டியின் மேலே கறுப்பு எழுத்துக்களில் இப்படி எழுதப்பட்டிருந்தது.

“மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். எல்.ஆர். அன்ட் கம்பெனி.’

சதுர வடிவத்தில் இருந்த அந்தச் சாளரத்தின் அடிப்பகுதி அந்தச் சிறுவனின் தோளுக்கு அருகில் இருந்தது. சுவரில் சிறிய அடுக்குகளைக் கொண்ட அலமாரி இருந்தது. அந்த அடுக்குகளில் பலவகைப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளும் நெருப்புப் பெட்டி களும் இருந்தன. அந்தச் சிறுவன் உட்கார்ந்திருந்த பெட்டிக்கு அருகில் மஞ்சள்நிறத் தாளால் மூடப்பட்டு, மேஜையாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெட்டி இருந்தது. மிகவும் மெலிந்து போய்க் காணப்பட்ட கைகளால் அவன் தன்னுடைய கழுத்திற்குப் பின்னால் பிடித்திருந்தான். இருள் நிறைந்த சாளரத்தின் பலகைகளுக்கு அப்பால் அவனுடைய பார்வை இருந்தது.

அந்தப் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து நான் அவற்றை அடுப்பிற்கு மேலே விரித்துப் போட்டேன். அந்த அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த மண்பானையிலிருந்து நீரை எடுத்து, நான் கைகளைக் கழுவினேன். கைக்குட்டையால் கைகளைத் துடைத்த நான் சொன்னேன்:

“”சரி… குட்பை.”

என்னைப் பார்த்து சற்று கொஞ்சுகிற குரலில் அவன் கேட்டான்:

“”நான் இந்த விளக்கை அணைக்கட்டுமா?”

“”உன் விருப்பம்…”

“”என்ன? நீங்க போறீங்களா? நீங்க இங்கே படுக்கலையா?”

தன்னுடைய மெலிந்த கையை அவன் தன்னுடைய தாயை நோக்கி சுட்டிக் காட்டினான்: “”இவங்ககூட…”

“”எதற்கு?”- நான் அலட்சியமாகக் கேட்டேன்.

“”அதை நீங்களே தெரிஞ்சிக்குவீங்க”- சர்வசாதாரணமாக அவன் சொன்னான்: “”இங்கே வர்றவங்க எல்லாரும் அப்படி நடப்பதுதான் வழக்கம்.”

கடைக் கண்களால் நான் சுற்றிலும் பார்த்தேன். நான் நின்றிருந்த இடத்தைவிட்டு சற்றுத் தள்ளி அழுக்கான ஒரு அடுப்பு இருந்தது. அதற்கடுத்து கழுவ வேண்டிய பாத்திரங்கள் கிடந்தன. மரப்பெட்டிக்குப் பின்னால் தார் புரண்ட கயிறும், ஓக் மரத்தின் கொம்பு ஒன்றும், மரத்துண்டுகளும், ஒரு தாழ்ப்பாளும் கிடந்தன.

என்னுடைய கால்களுக்கு அருகில் அந்த மஞ்சள் நிறத்தைக் கொண்ட பெண்ணின் உடல் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தது.

“”உன்னுடன் கொஞ்ச நேரம் இருக்கட்டுமா?”- நான் அந்தச் சிறுவனிடம் கேட்டேன்.

கவலையுடன் என்னைப் பார்த்துக்கொண்டே அவன் சொன்னான்:

“”உங்களுக்குத் தெரியுமா? நாளை காலை வரை அவங்க எழுந்திருக்க மாட்டாங்க.”

“”அப்படியா? எனக்கு அவள் தேவையில்லை.”

அந்த மரப்பெட்டிக்கு அருகில் சப்பணம் போட்டு அமர்ந்து கொண்டு, அவனுடைய தாயைப் பார்த்த சூழ்நிலையை நான் விளக்கிச் சொன்னேன். மிகவும் சுவாரசியத்துடன் நான் பேச முயற்சித்தேன்.

“”அவள் அந்த சேற்றில் இருந்துகொண்டு துளாவ ஆரம்பிச் சிட்டா- துடுப்பால் தோணியைச் செலுத்துவதைப்போல… பாட்டு பாடிக்கொண்டே…”

தன்னுடைய மெலிந்த மார்புக் கூட்டின்மீது தடவிக் கொண்டே ஒரு வெளிறிய சிரிப்பை எனக்கு வெளிப்படுத்தியவாறு அவன் தலையை ஆட்டினான்.

“”அம்மா அதிகமாகக் குடிச்சிட்டாங்கன்னா இப்படித்தான். சுய உணர்வு வந்த பிறகும் அம்மா ஒவ்வொரு தமாஷ்களும் பண்ணு வாங்க… சின்ன பெண் குழந்தைகளைப்போல…”

இப்போது என்னால் அவனுடைய கண்களைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அந்தக் கண்களின் மேற்பகுதியில் நிறைய உரோமங்கள் வளர்ந்திருந்தன. அசாதாரணமான அளவில் பெரிதாக இருந்த புருவங்களையும், சற்று அதிகமாகவே சிறு உரோமங்கள் வளர்ந்திருந்த இமைகளையும் அவன் கொண்டிருந்தான்.

உடல் வெளிறிப்போய் இருப்பதை எடுத்துக்காட்டுவதைப் போல அவனுடைய கண்களுக்குக் கீழே நீல நிறம் படர்ந்து விட்டிருந்தது. மூக்கின் இணைப்புப் பகுதியில் நீளமான ஒரு வளைவு இருந்தது. அதற்குச் சற்று மேலே நெற்றியில் சிவப்பு நிறத்தில் உரோமங்கள் வளர்ந்து காணப்பட்டன. கண்களில் சாந்தம் குடிகொண்டிருப்பதைப்போல தோன்றினாலும், அது விளக்கிக் கூற முடியாதது மாதிரி இருந்தது. அமானுஷ்யமானதாகவும் அசாதாரணமானதுமாகவும் இருந்த அவனுடைய பார்வையை மொத்தத்தில் என்னால் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே முடிந்தது.

கீழே கிடந்த கிழிந்த துணிகளை எடுத்துப் போட்டு தன்னுடைய மெலிந்துபோன கால்களில் ஒன்றை அவன் வெளியே எடுத்தான். அடுப்பிலிருந்து நெருப்புக் கனலை எடுத்து மாற்று வதற்கு பயன்படக்கூடிய ஒரு இடுக்கியைப்போல அது இருந்தது. அவன் தன்னுடைய கால்களைக் கையால் எடுத்து அந்த மரப்பெட்டியின்மீது வைத்தான்.

“”உன் கால்களுக்கு என்ன ஆச்சு?”

“”இங்கே பாருங்க… இது எப்படி இருக்குன்னு பார்த்தீங்களா? பிறக்கும்போதே இது இப்படித்தான் இருந்தது. அதனால் நடக்க முடியாது. இந்தக் கால்களுக்கு உயிர் இல்லை. ஒரு பயனும் இல்லாமல்…”

அவன் தான் கூற வந்ததை முழுமையாகக் கூறி முடிக்கவில்லை.

“”அந்தச் சிறிய பெட்டிக்குள் என்ன இருக்கு?”

“”அது என்னுடைய மேஜிக் பெட்டி”- ஒரு குச்சியை எடுத்துக் கீழே போடுவதைப்போல, கையால் அந்த கால்களை எடுத்து மரப்பெட்டிக்குக் கீழே வைத்த அவன் சொன்னான். நல்ல பிரகாசமான சிரிப்புடன் அவன் தொடர்ந்து சொன்னான்:

“”நீங்க அதைப் பார்க்கணுமா? அப்படியென்றால் பொறுமையா உட்கார்ந்திருக்கணும். வாழ்க்கையில் எந்தச் சமயத்திலும் இப்படிப்பட்ட ஒரு மேஜிக்கை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க.”

மெலிந்துபோன, அசாதாரணமான நீளத்தில் தோற்றம் தந்த கைகளின் வேகமான அசைவுகளால் தன்னுடைய சரீரத்தை உயர்த்திப் பிடித்துக்கொண்டவாறு, அந்த அலமாரியிலிருந்த ஒவ்வொரு பெட்டிகளையும் எடுத்து, அவன் என்னுடைய கையில் தந்தான்.

“”பத்திரமா வச்சிருங்க. பெட்டிகளைத் திறக்கக் கூடாது. அவை ஓடிப்போய் விடும். அந்தப் பெட்டிகளில் ஒன்றை காதில் வச்சுப் பாருங்க, சரியா?”

“”உள்ளே ஏதோ ஓடுறது மாதிரி இருக்கே!”

“”ஆமா… அதுதான் எட்டுக்கால் பூச்சி. செண்டை மேளம் அடிப்பவன் என்று நான் அவனுக்குப் பெயர் வச்சிருக்கேன். அவன் புத்திசாலி!”

அவனுடைய கண்கள் பிரகாசமாக இருந்தன. அந்த நீலநிறத்தில் இருந்த முகத்தில் சிறிய ஒரு புன்சிரிப்பு மலர்ந்தது. கைகளை வேகமாகச் செயல்பட வைத்து அலமாரியிலிருந்த சிறிய பெட்டிகளை எடுத்து, முதலில் தன்னுடைய காதிலும் பிறகு என்னுடைய காதிலும் அவற்றைச் சேர்த்து வைத்துக்கொண்டு, மிகுந்த ஆர்வத்துடன் அவன் கூறத் தொடங்கினான்:

“”அவன்தான் அனீஸம் என்ற கரப்பான் பூச்சி. ஒரு பட்டாளக்காரனைப்போல சத்தம் போட்டுக் கொண்டிருப்பான். இதோ இது ஒரு ஈ… திருமதி. அஃபீஸ்யல் என்று அழைக்கலாம். ஒரு கேடுகெட்ட படைப்பு. நாள் முழுவதும் முனகிக் கொண்டே இருக்கும். எல்லாரிடமும் போய் ஏதாவது சொல்லிக்கொண்டி ருக்கும். அது என் தாயின் தலைமுடியைப் பிடித்துத் தரையில் இழுத்தது. அது ஈ அல்ல… தெரியுதா? தெருவிற்கு அப்பால் ஒரு பெண் இருக்கிறாள். ஈயைப் பார்க்குறப்போ அவளைப்போலவே இருக்கும். இனி… இதோ… இன்னொருவன். கருவண்டு! பெரிய ஆள்… ஒரு முதலாளி. சாதாரண மோசக்காரன் அல்ல. குடிகாரன், வெட்கம் இல்லாதவன்… அவ்வளவுதான். போதை ஏறிவிட்டால் ஒரு ஃபர்லாங் தூரத்திற்கு நிர்வாணமாக நகருவான். ஒரு கறுப்பு நிற நாயைப்போல உரோமங்கள் நிறைந்தவன். இனி… மணியன் ஈயைப் பற்றி… அங்கிள் நிக்கோடிம். நான் இந்த ஆளை வெளியில் இருந்து பிடித்தேன். இளவரசன்… அது உண்மை. கொடுத்து வைத்த ஊர்சுற்றி என்று அவன் தன்னைப் பற்றிக் கூறிக்கொள்வான். ஏதோ தேவாலயத்திற் காகப் பணம் வசூலிப்பதாக அவனுக்கு நினைப்பு. ஓசியாகக் கிடைத் தவன் என்று என் தாய் அவனைப் பற்றிக் கூறுவாள். அவனும் என் தாயின் காதலர்களில் ஒருவன். என் தாய்க்கு எத்தனையோ காதலர்கள் இருக்கிறார்கள்.”

“”அவள் உன்னை அடிப்பாளா?”

“”யார்? என் தாயா? எனக்கு அது பிடிக்கும். நான் இல்லாமல் அவங்களால் வாழ முடியாது. அவங்க ஒரு இளகிய இதயத்தைக் கொண்டவங்க. மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டவங்க என்பது வேறு விஷயம். ஆனால் எங்களுடைய தெருவில் இருப்பவர்கள் எல்லாரும் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டவர்கள்தான். என் தாய் ஒரு பேரழகி. எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவங்க. முழுமையாக மது அருந்தி, போதையில் ஆழ்ந்து கிடப்பாங்க. ஒரு கிராமத்து தேவடியாள். நான் அவங்கக்கிட்ட கூறுவேன்: “என்னு டைய பாவப்பட்ட பெண்ணே! மது அருந்துவதை நிறுத்துங்க. நீங்க பணம் சம்பாதிக்கலாம்’ என்று. ஆனால் அவங்க வெறுமனே சிரிப்பாங்க. ஒரு முட்டாள்தனமான பெண்! இல்லாவிட்டால் வேறு என்ன? ஆனால் அவங்க நல்லவங்க. அவங்க கண் விழிச்ச பிறகு, நீங்கள் அதைத் தெரிஞ்சுக்குவீங்க.”

அவன் இதயத்திலிருந்து சிரித்தான். அவன் சிரித்தபோது என்னுடைய இதயத்திற்குள் என்னவோ பொங்குவதைப்போல இருந்தது. என் இதயம் இரக்கம் கொண்டு எழுந்து அடங்கியது. அந்த நகரம் முழுவதும் கேட்பது மாதிரி சத்தம் போட்டு அழ வேண்டும்போல எனக்குத் தோன்றியது. கழுத்திற்கு மேலே அவனுடைய தலை ஒரு அசாதாரண மலரைப்போல ஆடியது. உணர்ச்சிவசப்பட்டதால் அவனுடைய கண்களில் இருந்து மேலும் அதிகமாக பிரகாசம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. பதில் கூற முடியாத அளவிற்கு அது என்னை தன்னை நோக்கி இழுத்தது.

சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், கருணை கலந்த அவனுடைய சிந்தனைகளைக் கேட்டு ஒரு நிமிட நேரத்திற்காவது நான் எங்கே இருக்கிறேன் என்ற விஷயத்தைக்கூட மறந்துவிட்டேன். ஆனால் அடுத்த நிமிடம் சிறையில் இருப்பதைப் போன்ற சாளரத் தைப் பற்றியும், வெளியே இருந்த சேற்றுக் குவியலைப் பற்றியும், அறைக்குள் இருந்த அடுப்பைப் பற்றியும், அறையின் மூலையில் கிடக்கும் மரத்துண்டுகளைப் பற்றியும் என்பதைப்போல, மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த பெண்ணைப் பற்றியும் நான் மனதில் நினைத்துப் பார்த்தேன்.

“”நல்ல சுவாரசியமான மேஜிக். அப்படித்தானே?”- அந்த சிறுவன் பெருமையுடன் கேட்டான்.

“”நல்ல சுவாரசியமான விஷயம்தான்.”

“”பட்டாம்பூச்சிகள் இல்லை… பட்டாம்பூச்சிகளும் மின்மினிப் பூச்சிகளும் இல்லை.”

“”உன் பெயர் என்ன?”

“”லியோங்கா.”

“”நீ என்னுடைய பெயரைக் கொண்ட புத்திசாலிப் பையனா?”

“”உண்மையாகவா? நீங்கள் எப்படிப்பட்டவர்?”

“”நானா? யாருமே இல்லாதவன்…”

“”என்னிடம் உண்மையைச் சொல்லுங்க. எல்லாரும் ஏதாவ தொரு வகையைச் சேர்ந்தவர்கள்தான். எனக்கு அது தெரியணும். நீங்கள் நல்ல மனிதர் என்று தோன்றுகிறது.”

“”இருக்கலாம்.”

“”எனக்குத் தெரியும். நீங்கள் ஒரு பயந்தாங்கொள்ளியும்கூட.”

“”பயந்தாங்கொள்ளியா?”

“”வேணும்னா நாம் பந்தயம் வைக்கலாம்.”

எல்லாம் தெரியும் என்பது மாதிரியான ஒரு சிரிப்பைச் சிரித்த வாறு அவன் என்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினான்.

“”நான் பயந்தாங்கொள்ளி என்று எதை வச்சு நீ நினைச்சே?”

“”அதுவா… நீங்க இப்போ என் பக்கத்துல இருக்கீங்க. உங்களுக்கு இரவு நேரத்தில் வெளியே போவதற்கு பயம் இருப்பதால்தான் நீங்க அப்படி நடந்து கொள்கிறீர்கள்.”

“”ஆனால் பொழுது புலர ஆரம்பிச்சிடுச்சு.”

“”அப்படின்னா நீங்க போயிடுவீங்க.”

“”உன்னைப் பார்க்குறதுக்கு நான் மீண்டும் வருவேன்.”

அவன் என்னை நம்பவில்லை. அவன் தன்னுடைய அழகான கண்களை இமைகளைக் கொண்டு மூடினான். ஒரு நிமிட இடைவெளிக்குப் பிறகு அவன் கேட்டான்:

“”எதற்கு?”

“”உன்கூட இருக்குறதுக்கு. நீ நல்ல ரசிகனாச்சே! நான் வரட்டுமா?”

“”சரி… இங்கே எவ்வளவு ஆட்கள் வருவது உண்டு.” ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவன் தொடர்ந்து சொன்னான்:

“”நீங்க சும்மா விளையாட்டுக்குச் சொல்றீங்க.”

“”விளையாட்டுக்குச் சொல்லல. உண்மையாகவே நான் வருவேன்.”

“”அப்படியென்றால் சரி. ஆனால் நீங்க என்னைத் தேடி வந்தால் போதும். என் தாயிடம் போக வேண்டாம். அவங்களை யாருக்கு வேணும்? நாம ரெண்டு பேரும் நண்பர்களாக இருப்போம்.”

“”சரி…”

“”ஒரு விஷயம்… நீங்கள் என்னைவிட வயதானவர் என்பது ஒரு விஷயமே அல்ல. உங்களுக்கு என்ன வயது?”

“”இருபத்தொண்ணு நடக்குது.”

“”எனக்கு பன்னிரண்டு நடக்குது. எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. எனக்கு இருப்பது அந்த நீர் கொண்டு வரும் பெண்ணின் மகள் காத்கா மட்டும்தான். என்கிட்ட வந்தால் அவளை அவளுடைய தாய் உதைப்பாள். நீங்க ஒரு திருடனா?”

“”இல்லை. ஏன் அப்படிக் கேட்கிறே?”

“”உங்க முகம் அந்த அளவிற்கு கோரமாக இருக்கு. நீளமான மூக்கும், சுருக்கங்கள் விழுந்த முகமும்… அசல் திருடனுக்கு இருப் பதைப்போலவே இருக்கு. இங்கே இரண்டு திருடர்கள் வழக்கமா வருவாங்க. ஒரு ஆளின் பெயர் ஸாஷ்கா. அவன் ஒரு முட்டாள். ஆனால் நல்ல பலசாலி. இன்னொரு ஆளின் பெயர் வனிய்கா. அவன் இரக்க குணம் படைத்தவன். ஒரு நாயைப் போன்றவன். உங்கக்கிட்ட சிறிய பெட்டிகள் ஏதாவது இருக்குதா?”

“”நான் கொண்டு வர்றேன்.”

“”சரி… நீங்க மீண்டும் வருவீங்கன்னு நான் என் தாயிடம் சொல்ல மாட்டேன்.”

“”என்ன காரணம்?”

“”அது அப்படித்தான். ஆண்கள் வருவது என்பது என் தாய்க்கு எல்லா நேரங்களிலும் விருப்பமுள்ள ஒரு விஷயம். அவங்களுக்கு ஆண்களை மிகவும் பிடிக்கும். ஆண்களின் பைகளையும்தான். அம்மா ஒரு தமாஷான பெண். அவங்களோட பதினைந்தாவது வயதில் நான் அவங்களுக்குக் கிடைச்சேன். ஆனால் அது எப்படி நடந்தது என்று என் தாய்க்கு இப்போதும் தெரியாது. நீங்க இனிமேல் எப்போ வருவீங்க?”

“”நாளைக்கு சாயங்காலம்…”

“”சாயங்காலம் நேரம் வந்துவிட்டால், என் தாய் நல்லா குடிச்சி ருப்பாங்க. திருடவில்லையென்றால் பிறகு நீங்கள் எப்படி வாழுறீங்க?”

“”நான் பவேரியன் க்யாஸ் விற்கிறேன்.”

“”அப்படியா? எனக்கு ஒரு குப்பி கொண்டு வந்து தருவீங்களா?”

“”தாராளமா… கட்டாயம் கொண்டு வந்து தர்றேன். நான் புறப்படட்டுமா?”

“”சரி… நீங்க மீண்டும் வருவீங்களா?”

“”கட்டாயமா…”

அவன் அந்த நீண்டு மெலிந்த கைகளை நீட்டிப் பிடித்தான். அந்த குளிர்ந்துபோன கைகளை என் கைகளுக்குள் வைத்து நான் குலுக்கினேன். திரும்பிப் பார்க்காமல் ஒரு மது அருந்தியவனைப் போல வேகவேகமாக நான் அந்த வாசலுக்கு வந்தேன்.

நேரம் விடிந்து கொண்டிருந்தது. அணையப் போகும் வெள்ளி நட்சத்திரம் நடுங்கியவாறு அந்த நனைந்து கிடந்த கட்டிடங்களுக்கு மேலே வானத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. கீழ்தளத்தில் இருந்த கட்டிடத்தின் சாளரங்கள் ஒரு குடிகாரனின் சுருங்கிப்போன, அசிங்கமான கண்களைப்போல என்னைப் பார்த்தன. வாசலில் நின்ற குதிரை வண்டியில் சிவந்த முகத்தைக் கொண்ட ஒரு மனிதன் படுத்திருந்தான். அவனுடைய பெரிய கால்கள் விரிந்து கிடந்தன. சிறு தாடி வானத்தை நோக்கித் தூக்கிக் கொண்டிருந்தது. வெள்ளை நிறத்தில் இருந்த பற்கள் அதற்கு மத்தியில் தெளிவாகத் தெரிந்தன. அவன் கண்களை மூடிக்கொண்டு யாரையோ கிண்டல் பண்ணி சிரித்துக் கொண்டிருக்கிறான் என்று நமக்குத் தோன்றும். முதுகில் முடிகள் உதிர்ந்த ஒரு நாய், நான் நீரில் நடக்கும் சத்தத்தைக் கேட்டு எனக்கருகில் வந்து கால்களை முகர்ந்து பார்க்கத் தொடங்கியது. என்னுடைய இதயத்தில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத இரக் கத்தை எழுப்பியவாறு பசியின் கொடுமையை அது வெளிப்படுத்தியது.

முந்தைய இரவு உண்டான அந்த சேற்று நீரில், அதிகாலை வேளையில் வானம் தன் முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. நீலநிறமும் குங்குமத்தின் நிறமும் சேர்ந்து தெரிந்த வானத்தின் தோற்றம் அந்த சேற்று நீரில் மனதை மயக்கி வசப்படுத்தும் அட்டகாசமான இனிய உணர்வைப் படைத்தது.

மறுநாள் நான் வசித்துக் கொண்டிருந்த பகுதியில் இருந்த சிறுவர்களிடம் எனக்குக் கொஞ்சம் வண்டுகளையும் பூச்சிகளையும் பிடித்துத் தரவேண்டும் என்று சொன்னேன். மருந்துக் கடைக்காரனி டம் அழகான சிறிய அட்டைப் பெட்டிகளை வாங்கினேன். ஒரு குப்பி க்யாஸ், கொஞ்சம் தேனில் செய்யப்பட்ட கேக்குகள், பன்கள் ஆகியவற்றையும் வாங்கிக் கொண்டு நான் லியோங்காவைப் பார்ப்பதற்காகச் சென்றேன்.

மிகுந்த ஆச்சரியத்துடன் லியோங்கா என்னுடைய பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டான். அந்தப் பகல் வெளிச்சத்தில் அவனுடைய கண்கள் எப்போதும் இருப்பதைவிட அழகாகவும் மலர்ந்தும் காணப்பட்டன.

“”கடவுளே!”- ஒரு சிறுவனிடமிருந்து வரும் குரல் என்பதைப் போல இல்லாமல் ஆழத்திலிருந்து புறப்படுவதைப்போன்ற குரலில் அவன் சொன்னான்:

“”இங்கே பாருங்க… நீங்க ஒரு பணக்காரரா? இல்லாவிட்டால் இதெல்லாம்…? இதெல்லாம் எப்படி முடியும்? ஒரு வசதி படைத்த மனிதர் வறுமை வேடம் போட்டுக்கொண்டு திரிகிறீர்கள். நீங்கள் ஒரு திருடர் இல்லை என்று நீங்களே சொன்னீங்க. அடடா… என்ன அழகான பெட்டிகள்! என் கைகள் கழுவப்படாமல் இருப்பதால் எனக்கு அதைத் தொடுவதற்குக்கூட தயக்கமாக இருக்கிறது. அதற்குள் என்ன இருக்கு? அந்த வண்டு என்ன மாதிரி சத்தம் போடுகிறான்! எல்லாம் சிவப்பு நிறத்தில் இருக்கின்றன. சில பச்சைக்காரர்களும் இருக்கிறார்கள். கடவுளே! போடா, பறந்து போடா… போகமாட்டியா? ம்… அது நடக்காது.”

தொடர்ந்து அடக்க முடியாத சந்தோஷத்துடன் அவன் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தான்.

“”அம்மா… சீக்கிரமா கொஞ்சம் வாங்க. ஏய்… விலைமாதுவே! நீங்க என் கைகளைக் கொஞ்சம் கழுவிவிடுங்க. இந்த மனிதர் என்ன வெல்லாம் கொண்டு வந்திருக்கிறார் என்பதை வந்து பாருங்க. இவரை உங்களுக்குத் தெரியுமா? கடந்த இரவு வேளையில் உங்களை இங்கே கொண்டு வந்த மனிதர்… போலீஸ்காரரைப்போல பார்ப்ப தற்கு இருக்கிறார். இவருடைய பெயரும் லியோங்காதானாம்.”

“”நீ அவருக்கு நன்றி சொல்லு”- சிறிதும் அறிமுகமில்லை என்று தோன்றக்கூடிய சாந்தமான குரல் எனக்குப் பின்னாலிருந்து கேட்டது.

சிறுவன் பலமாகத் தலையை ஆட்டினான்.

“”நன்றி… நன்றி…”

முடி இழையைப் போன்ற தூசுப்படலம் ஒரு மேகக் கூட்டத் தைப்போல அந்த தரைக்கு மேலே பரவியது. அதற்குள்ளிருந்து ஒரு பெண்ணின் புன்சிரிப்பில் தெரிந்த கொஞ்சம் பற்களையும், மங்கலாகத் தெரிந்த முகத்தையும் என்னால் பார்க்க முடிந்தது.

“”குட் மார்னிங்!”

“”குட் மார்னிங்!”- அந்தப் பெண் திரும்பச் சொன்னாள். அவளுடைய அடக்கிப் பிடித்த குரல்… ஒரு விதத்தில் மிகவும் சக்தி படைத்ததாக இருந்தது. தன்னுடைய சிறிய கண்களைக் கொண்டு, சற்று கேலி பண்ணுவதைப்போல அவள் என்னைப் பார்த்தாள்.

லியோங்கா என்னை மறந்து போயிருந்தான். அவன் ஒரு தேன் கேக்கைச் சுவைத்துக் கொண்டிருந்தான். அந்த அட்டைப் பெட்டி களை மிகவும் கவனமாகத் திறந்துகொண்டே அவன் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். கண்களுக்குச் சற்றுக் கீழே நீலநிறத்தைப் பரவச் செய்துகொண்டு அவனுடைய இமைகள் நிழல் விரித்துக்கொண்டிருந்தன. ஒரு கிழவனின் தெளிவற்ற பார்வை யைப்போல சூரியன் சேறு படிந்த சாளரத்தின் கண்ணாடிகள் வழியாக உள்ளே பார்த்துக் கொண்டிருந்தது. அந்தச் சிறுவனின் சிவந்த தலைமுடியில் அது சிறிதும் கடுமை இல்லாத பிரகாசத்தைப் பரப்பியது. கழுத்துப் பகுதியில் அவனுடைய சட்டை திறந்து கிடந்தது. அந்தச் சிறிய எலும்புக் கூட்டிற்குள் அவனுடைய இதயம் துடிப்பதை என்னால் கேட்க முடிந்தது. அவனுடைய மார்பில் மிகவும் சிரமப்பட்டு பார்க்க முடிகிற மார்புக் கண்களும் வெளித் தோலும் அந்தத் துடிப்பில் உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்தன.

அவனுடைய தாய் அடுப்பிற்கு அருகில் இருந்து எழுந்தாள். துவாலையை நனைத்து எடுத்து அவள் லியோங்காவின் அருகில் சென்றாள். அவள் அவனுடைய இடக் கையைத் தன் கையால் எடுத்தாள்.

“”அதோ அவன் ஓடுகிறான். அங்கேயே நில்லுடா”- மரப் பெட்டிகளை இறுகப் பற்றிக்கொண்டு, கீழே போட்டிருந்த துணிகளைத் தாறுமாறாக்கி, மெலிந்த கால்களை வெளியே காட்டியவாறு அவன் உரத்த குரலில் சத்தம் போட்டுக் கத்தினான்:

“”அவனைப் பிடிங்க…”- அவன் ஆர்ப்பாட்டத்தை அதிகரித்தான்.

அந்த வண்டைப் பிடித்துத் தன்னுடைய உள்ளங்கையில் வைத்து, சோள மலரின் நிறத்தைக் கொண்ட கண்களால் அதையே வெறித்துப் பார்த்தவாறு, அதிகமான நாட்கள் பழக்கம் இருப்ப தைப்போல காட்டிக் கொண்டு அவன் என்னுடன் பேசினான்.

“”இவை எங்களுக்கு நிறைய இருக்கு. இவற்றை நெருக்கிக் கொன்னுடாதீங்க”- முன்னெச்சரிக்கையாகக் கூறுவதைப்போல அவன் சொன்னான்: “”நல்லா தண்ணி அடிச்ச ஒரு நாள், என் தாய் என்னுடைய மேஜிக் பெட்டிகளின்மீது ஏறி உட்கார்ந்து, இருந்தவை அனைத்தையும் நாசம் பண்ணிட்டாங்க.”

“”அதை மறந்திடு சிறுவனே!”

“”பிணங்கள் ஒரு குவியலாக இருந்தன. அவை எல்லாவற்றையும் நான் நெருப்பு வைத்து எரித்தேன்.”

“”ஆனால் பிறகு ஒருநாள் சில வண்டுகளை நான் உனக்குப் பிடித்துத் தந்தேன்ல?”

“”அதனால் என்ன பிரயோஜனம்? என் தாய் அன்னைக்கு நசுக்கிக் கொன்ற வண்டுகள் அனைத்தும் பயிற்சி பெற்றவையாக இருந்தன. அவை இறந்தவுடன், நான் அவற்றை அடுப்பில் போட்டு எரியவிட்டேன். இதோ… பார்த்தீங்களா? நான் இங்கு ஒரு சுடுகாட்டை உண்டாக்கி வைத்திருக்கிறேன். நான் நடந்து சென்று அவற்றை அதில் போடுவேன். உங்களுக்குத் தெரியுமா? என் கையில் மிங்கா என்ற ஒரு எட்டுக்கால் பூச்சி இருந்தது. கிட்டத்தட்ட என் தாயின் வாடிக்கையாளர்களில் ஒருத்தனைப்போல- அந்த அடிதடி களில் ஈடுபடக்கூடிய தடியன் இருந்தானே…. இப்போ சிறையில் நிரந்தரமாக இருக்கும் ஒருத்தன்… அவனைப்போல அந்த எட்டுக்கால் பூச்சி இருக்கும்.”

“”அடடா… என் செல்ல மகனே!”- அந்தப் பெண் குச்சியைப் போல இருந்த சிறிய விரல்களைக் கொண்ட கைகளால் அவனுடைய தலைமுடியை ஒதுக்கிவிட்டு அவனைக் கொஞ்சினாள். முழங்கை யால் என்னை சீண்டியவாறு, புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்த கண்களுடன் அவள் என்னிடம் கேட்டாள்:

“”நல்ல பையன்… என்ன அழகான கண்கள்! சரியா?”

“”என் கண்களில் ஒன்றை எடுத்து, அதற்கு பதிலாக எனக்கு என்னுடைய கால்களைத் தந்தால் போதும்”- லியோங்கா சிரித்துக் கொண்டே சொன்னான். ஒரு வண்டை கூர்மையாகப் பார்த்துக் கொண்டே அவன் தொடர்ந்து சொன்னான்:

“”இந்தத் தடியன் இரும்புப் பானையைப்போல இருக்கிறான். அம்மா, இவன் அந்த பாதிரியார் மாதிரியே இல்லே? நீங்க ஒரு ஆளுக்கு கோணி சரி பண்ணி தந்தீங்கள்ல அம்மா? அந்த ஆளை ஞாபகத்துல இருக்குதா?”

“”ஞாபகத்துல இருக்குன்னு கட்டாயம் சொல்வேன்.”

சிரித்துக்கொண்டே அவள் அந்தக் கதையைக் கூறத் தொடங்கினாள்:

“”ஒருநாள் ஒரு பாதிரியார் வந்தார். அவருடைய தோற்றத்தைப் பார்க்கவே சகிக்கலை. அவர் என்னிடம் சொன்னார், “நீ ஒரு தையல் பண்ணக்கூடிய பெண்தானே? நீ எனக்கு சணலாலான ஒரு கோணியை உண்டாக்கித் தரமுடியுமா?’ என்று. “அப்படிப்பட்ட கோணிகளைப் பற்றி நான் இன்றுவரை கேள்விப்பட்டதே இல்லை. என்னால் முடியாது’ என்று நான் சொன்னேன். “அப்படியென்றால் உனக்கு நான் கற்றுத் தருகிறேன்’ என்று அவர் சொன்னார். அவர் தன்னுடைய ஆடையை அவிழ்த்தார். நீங்க நம்புவீங்களா? அவருடைய இடுப்பைச் சுற்றி பலமான நீளம் கொண்ட ஒரு கயிறைச் சுற்றி வைத்திருந்தார். சணலைப் பயன்படுத்திக் கோணி தயாரிப்பது எப்படி என்பதை எனக்கு அவர் கற்றுத் தந்தார். அந்தக் கோணியை நெய்து கொண்டிருந்தபோது, நான் மனதில் நினைத்தேன்- “இந்தக் கோணியை வைத்து அவர் என்ன செய்யப் போகிறார்? தேவாலயத்திற்குள் நுழைந்து திருடுவதற்காக இருக்குமோ?’ என்று.”

அவள் சிரித்தாள். ஒரு கையால் அவள் சிறுவனைத் தடவ ஆரம்பித்தாள்.

“”அந்த மனிதர் சரியான நேரத்திற்கு வந்தார். நான் அவரிடம் சொன்னேன், “திருடுவதற்காக நீங்கள் இதை பயன்படுத்துவதாக இருந்தால், நான் இந்த வேலையைச் செய்ய முடியாது’ என்று. ஆனால் அந்த தந்திரசாலியான மனிதர் சிரித்துக்கொண்டே சொன்னார், “இல்லை. ஒரு சுவரில் ஏறிப் பிடிப்பதற்குத்தான். என் வீட்டைத் தாண்டி பெரிய சுவர் இருக்கிறது. நாங்கள் பாவம் செய்பவர்கள். சுவரின் ஒரு பக்கத்தில் இருந்துகொண்டு நாங்கள் பாவம் செய்கிறோம். உனக்குப் புரியுதா?’ என்று. நான் கோணியை நெய்ய ஆரம்பித்தேன். இரவில் என்னுடன் உடலுறவு கொண்ட பிறகு அவர் வெளியே போனார். அப்போ நாங்க எப்படியெல்லாம் சிரிச்சோம் தெரியுமா?”

“”சிரிக்கிறதுன்னா மிகவும் விருப்பமான விஷயமாச்சே!” – ஒரு முதிர்ந்த ஆணின் குரலில் அந்தச் சிறுவன் கேட்டான்: “”பாத்திரத்தை எடுத்து வச்சு தேநீர் தயாரிக்கக்கூடாதா?”

“”அதற்கு இங்கே கொஞ்சம்கூட சர்க்கரை இல்லை.”

“”போயி வாங்கிட்டு வாங்க.”

“”பணமில்லை.”

“”ஓ! உங்களுடைய பாழாய்ப்போன குடிப்பழக்கம்தான் இதற்கெல்லாம் காரணம்! இவரிடமிருந்து கொஞ்சம் பணம் கடன் வாங்குங்க” – அவன் நான் இருந்த பக்கம் திரும்பினான்: “”உங்க கையில காசு இருக்கா?”

நான் அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் காசு கொடுத்தேன். உற்சாகத்துடன் அவள் வேகமாக எழுந்தாள். காய்ந்துபோன, கரி படிந்த சிறிய ஒரு பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்து வைத்து விட்டு, ஒரு பாட்டை மெதுவான குரலில் பாடியவாறு அவள் வெளியே சென்றாள்.

“”அம்மா, அந்த சாளரத்தைக் கழுவுங்க. வெளியே இருக்கும் காட்சிகள் எதையும் என்னால் பார்க்க முடியல” – அந்தச் சிறுவன் உரத்த குரலில் சொன்னான்.

“”டேய், பூச்சிகளா! நீங்க அந்த அளவுக்கு புத்திசாலிகளாக இருக்க வேண்டாம். நான் சொல்றேன்”- அவன் சொன்னான். பூச்சி கள் இருந்த ஒவ்வொரு சிறிய பெட்டியையும் மிகவும் கவனமாக அவன் அலமாரியில் வரிசைப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தான். ஈரமான சுவரில் அறையப்பட்டிருந்த ஆணியின் பலத்தில் நின்று கொண்டிருந்த அலமாரிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. “நல்லா வேலை செய்கிற என் தாய் நூல் நூற்க ஆரம்பித்து விட்டால் நமக்கு இருமல் வரும். இந்த அறை முழுவதும் தூசி நிறைந்து விடும். அப்போது நான் அழுவேன். “அம்மா, கடவுள் புண்ணியமா என்னை வெளியே கொண்டு போங்க. இல்லாவிட்டால் நான் இங்கே கிடந்து அருகிலேயே இறந்துவிடுவேன்’ என்று சொல்வேன். ஆனால் நான் அதையெல்லாம் சகிச்சுக்கிடணும் என்று என் தாய் சொல்லுவாங்க. நான் அவங்ககூடவே இருக்கணும்னு சொல்லுவாங்க. என் அம்மாவுக்கு என்மீது ரொம்ப பிரியம். அதில் சந்தேகமே வேண்டாம். வேலை செய்றப்போ அம்மா பாடிக் கொண்டே இருப்பாங்க. என் தாய்க்கு எவ்வளவோ பாடல்களைத் தெரியும்.”

உணர்ச்சிவசப்பட்டதன் காரணமாக அவனுடைய கண்கள் ஒளிர்ந்தன. அடர்த்தியான புருவங்கள் உயர்ந்து வளைந்து நின்றன. கரடுமுரடான உற்சாகக் குரலில் அவன் பாட ஆரம்பித்தான்.

“”ஸோஃபாவில் கிடப்பது யார்? ஸோஃபிதானே?” – சிறிது நேரம் அந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு நான் சொன்னேன்.

“”அது நல்ல பாட்டு இல்ல…”

“”அந்தப் பாட்டுகள் எல்லாம் அப்படிப்பட்டவைதான்”- லியோங்கா உரத்த குரலில் சொன்னான். திடீரென்று எதையோ கேட்டதைப்போல அவன் சொன்னான்: “”அந்தப் பாட்டைக் கேட்டீங்களா? சீக்கிரமா என்னைக் கொஞ்சம் தூக்குங்க.”

சாம்பல் நிறம் படர்ந்த தோலால் மூடப்பட்டிருந்த அந்த சிறிய எலும்புக் கூட்டை நான் எடுத்துத் தூக்கினேன். தன்னுடைய தலையை சாளரத்தின் வழியாக வெளியே வைத்துக்கொண்டு ஆர்வத்துடன் அவன் கூர்ந்து கவனித்தான். அவனுடைய அசைவே இல்லாத கால்கள் சுவரிலிருந்து கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருந்தன. வெளியே தெருவில் ஆர்கனில் ஒரு அருமையான பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு பையனின் கரடுமுரடான குரலுடன், நாயின் ஊளைச் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தப் பாட்டுடன் சேர்ந்து லியோங்கா முனகிக் கொண்டிருந்தான்.

தறியில் தூசு குறைந்து விட்டிருந்தது. அவனுடைய தாயின் தலைக்குப் பின்னால் சிதிலமடைந்த சுவரில், ஒரு நாணயத்தின் அளவிற்குப் பெண்டுலம் இப்படியும் அப்படியுமாக ஆடிக்கொண் டிருந்தது. சமையலறையில் பாத்திரங்கள் கழுவாமல் கிடந்தன. அங்குள்ள எல்லா பொருட்களின் மீதும் தூசியால் ஆன ஒரு அடர்த்தியான படலம் படர்ந்து விட்டிருந்தது. மிகவும் அதிகமாக தூசு படர்ந்திருந்தது அந்த அறையின் மூலையில் இருந்த எட்டுக்கால் பூச்சியின் வலையின்மீதுதான்.

லியோங்காவின் இருப்பிடம் தூசிப்படலம் நிறைந்த ஒரு பொந்தைப்போல இருந்தது. அந்த துவாரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஏராளமான தூசிகள் படிந்திருந்தன.

தேநீர் கொதித்துக்கொண்டிருந்த பாத்திரம் அதற்கென்று இருக்கக்கூடிய சத்தத்தை உண்டாக்கியது. அதன் சத்தத்தைக் கேட்டு பயந்துவிட்டதைப்போல, தெருவில் ஒலித்துக் கொண்டிருந்த ஆர்கனின் சத்தம் நின்றுவிட்டது. அதற்கு பதிலாக ஒரு முரட்டுத்தனமான குரல் வெளியே கேட்டது: “”ரிஃப் ராஃப்.”

“”என்னைக் கீழே விடுங்க”- நீண்ட பெருமூச்சை விட்டவாறு

லியோங்கா சொன்னான்: “”ஆட்கள் அவனை அங்கேயிருந்து விரட்டி விட்டுட்டாங்க.”

நான் அவனை அந்த பெட்டியின்மீது உட்கார வைத்தேன். நெஞ்சைத் தடவிக்கொண்டும், அசைந்து கொண்டும் இருந்த அவன் மிகவும் கவனமாக இருமினான்.

“”என் நெஞ்சு வலிக்குது. கொஞ்ச நேரம் சுத்தமான காற்றை சுவாசிப்பது என் உடலுக்கு நல்லது அல்ல. நீங்க எப்போதாவது பேயைப் பார்த்திருக்கீங்களா?”

“”இல்ல…”

“”நானும் பார்த்தது இல்ல. இரவு வேளையில் அவை வெளியே வருவதை எதிர்பார்த்துக்கொண்டு அடுப்பிற்குக் கீழே நான் உட்கார்ந்திருப்பேன். பேய்கள் சுடுகாட்டில் சுற்றித் திரியும். அப்படித்தானே?”

“”உனக்கு அவற்றால் என்ன ஆகணும்?”

“”அது ஒரு சுவாரசியமான விஷயம். அந்தப் பேய்களில் நல்லவர்களும் இருக்கலாமே! நீர் கொண்டு வரும் பெண்ணின் மகள் காத்கா அந்தத் தரைக்குக் கீழே இருக்கும் அறையில் ஒரு பேயைப் பார்த்திருக்கிறாள். அவளுக்கு பயம் வந்துவிட்டது. ஆனால் அப்படி பயப்படச் செய்யும் விஷயங்கள் எதுவும் என்னை பயமுறுத்த வில்லை.”

தன்னுடைய காலைச் சுற்றிக் கிழிந்த துணிகளை இழுத்து சுற்றிக்கொண்டே அவன் மிகவும் வேகமாகப் பேசிக் கொண்டி ருந்தான்.

“”எனக்கு அவற்றைப் பிடிக்கும். பயப்படச் செய்யும் கனவுகள்மீது எனக்கு மிகவும் விருப்பம். மேலே வேர்கள் இருக்கும்- இலைகளும் கிளைகளும் தலைகீழாக வளரும்- வேர்களுடன் வானத்தைத் தள்ளிக் கொண்டு நிற்கும் ஒரு மரத்தை நான் கனவில் கண்டேன். வியர்வையால் குளித்து நான் கண்விழித்து விட்டேன். ஒருநாள் நான் என் தாயைக் கனவில் கண்டேன். எந்தவித ஆடைகளும் இல்லாமல் என் தாய் படுத்திருந்தாள். ஒரு நாய் என் தாயின் வயிற்றின்மீது உட்கார்ந்து மாமிசத் துண்டைச் சுவைத்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு துண்டையும் தின்று முடித்து, அவன் எலும்புத் துண்டைத் துப்பிக் கொண்டிருந்தான். எங்களுடைய வீட்டை ஒரு வழிபண்ணி, அவன் தெரு வழியாக ஓட ஆரம்பித்தான். கதவுகளும் சாளரங்களும் பெரிய சத்தத்துடன் மூடின. ஒரு பூனைக்குட்டி அதற்குப் பின்னால் ஓட ஆரம்பித்தது…”

அவன் தன்னுடைய நடுங்கிக்கொண்டிருந்த தோள்களை உயர்த்தினான். ஒரு வண்ணத்தாளை எடுத்து அதைச் சுத்தம் செய்து விரித்து, சாளரத்தின் படியில் வைத்துவிட்டு அவன் சொன்னான்:

“”இந்தத் தாளை வைத்து அழகான பல பொருட்களை நான் உண்டாக்குவேன். இல்லாவிட்டால் நான் இவற்றைக் காத்காவிற்குக் கொடுப்பேன். இப்படிப்பட்ட நல்ல பொருட்களை அவளுக்கு மிகவும் பிடிக்கும். கண்ணாடித்துண்டு, பாத்திரத் துண்டுகள், தாள், வேறு சிறு சிறு பொருட்கள்…. இவை எல்லாம் அவளுக்குப் பிடிக்கும். ஒரு வண்டிற்கு நாம் தினமும் நன்றாக இரை கொடுத்தால், அது குதிரையைப்போல பெரியதாக ஆகும். அப்படித்தானே?”

அவன் அதை முழுமையாக நம்புகிறான் என்று எனக்குத் தோன்றியது. அதனால் நான் சொன்னேன்:

“”அதற்கு ஒழுங்காகத் தீனி போட்டால் அப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது.”

“”உண்மையாகவா?”- மிகுந்த சந்தோஷத்துடன் அவன் கேட்டான்: “”ஆனால் என் தாய் சிரிக்கிறாங்க. ஒரு பைத்தியக்காரப் பெண்!”

ஒரு மோசமான வார்த்தையையும் அவன் சேர்த்துச் சொன்னான்.

“”அவங்க ஒரு பைத்தியம்தான். நன்றாகத் தீனி கொடுத்தால், ஒரு பூனையை திடீரென்று குதிரை அளவிற்குப் பெரியதாக ஆக்க முடியும். இல்லையா?”

“”முடியும். என்னால் அதை உறுதியாகக் கூற முடியும்.”

“”அதற்குக் கொடுக்கக்கூடிய அளவிற்கு உணவு என் கையில் இல்லை. இதை அதிர்ஷ்டக் கேடு என்று அல்லாமல் வேறு எப்படி அழைப்பது? அப்படிச் செய்ய முடியுமானால் விஷயம் நல்லபடி நடக்கும்.”

உணர்ச்சிவசப்பட்ட காரணத்தால் அவன் இறுக்கமாகத் தன்னைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டு, கைகளைச் சுருட்டிக் கொண்ட அவன் அவற்றைத் தன் மார்பில் அழுத்தி வைத்துக் கொண்டான்.

“”ஈக்கள் ஒரு நாய் அளவிற்குப் பெரிதாகிப் பறந்து திரியும். வண்டுகளுக்கு ஒரு குதிரை அளவிற்குப் பெரிய தோற்றமும் பலமும் கிடைத்து விட்டால், அதன்மீது ஒரு குவியல் செங்கற்களை ஏற்றினா லும் அவன் அதைக் கொண்டுபோய் விடுவான். இல்லையா?”

“”அவனுக்கு தாடியும் கிருதாவும் இருக்கும் என்பதுதான் பெரிய பிரச்சினையே!”

“”அது ஒரு பிரச்சினையே இல்லை. கடிவாளம் போட நாம் அதை பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லாவிட்டால் ஆடி ஆடி நடக்கும் ஒரு எட்டுக்கால் பூச்சியின் பிரச்சினையை எடுப்போம். எதைப்போல அது இருக்கிறது என்று கூறுவது? ஒரு பூனைக் குட்டியைவிட பெரிய அளவை அவனுக்குக் கொடுக்க முடியாது. எனக்கு கால் இருந்திருந்தால், அவன் எப்படி நடப்பான் என்பதை நானே நடந்து காட்டியிருப்பேன். அப்படியென்றால், கடினமாக உழைத்து என்னுடைய வளர்ப்பு மிருகங்கள் எல்லாவற்றுக்கும் நல்ல முறையில் தீனி கொடுப்பேன். நான் ஒரு கடையை ஆரம்பிப்பேன். வெளியே பரந்து கிடக்கும் வயலில் இன்னொரு வீட்டை உண்டாக்குவேன். திறந்து கிடக்கும் வயலில் நீங்கள் எப்போதாவது நடந்திருக்கிறீர்களா?”

“”நடந்திருக்கிறேனே! என்ன விஷயம்?”

“”அது எப்படி இருக்கும் என்று எனக்குக் கொஞ்சம் சொல்ல முடியுமா?”

வயல்களைப் பற்றியும் மைதானங்களைப் பற்றியும் நான் அவனுடன் பேசத் தொடங்கினேன். மிகுந்த கவனத்துடன் அவன் அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் உறங்க ஆரம்பித்த வுடன் கண் இமைகள் கண்ணுக்கு மேலே தாழ்ந்து விட்டிருந்தன. வாய் மெல்லத் திறந்தது. அதைப் பார்த்தவுடன் நான் என்னுடைய பேச்சின் சத்தத்தைக் குறைத்தேன். ஆனால் கொதித்துக் கொண்டிருந்த பாத்திரத்துடன் அவனுடைய தாய் அங்கு வந்தாள். அவனுடைய இன்னொரு கையில் ஒரு தாள் பொட்டலம் இருந்தது. அவளுடைய ரவிக்கைக்குள்ளே ஒரு குப்பி வோட்கா வெளியே தள்ளிக் கொண்டிருந்தது.

“”நான் வந்துட்டேனே!”

“”வெறும் புல்லும் பூக்களும் மட்டும்”- அவன் சொன்னான்: “”அம்மா, ஒரு தள்ளு வண்டியில் ஏற்றி உட்கார வைத்து என்னை வெளியே இருக்கும் வயலுக்கு அழைத்துக்கொண்டு போகக் கூடாதா? ஒரு முறைகூட அதைப் பார்க்காமலேயே நான் இறந்து விடப் போகிறேன்! நீங்க ஒரு அசிங்கம் பிடித்த பன்றி… அம்மா!”- மிகுந்த கவலையுடனும் கோபத்துடனும் அவன் சொன்னான்.

ஆனால் மிகுந்த கனிவுடன் அந்தப் பெண் அதற்கு எதிர்வினை ஆற்றினாள். “”நீ இப்படியெல்லாம் கோபமாகப் பேசக்கூடாது. உனக்கு அதற்கான வயது ஆகவில்லை.”

“”கோபமாக பேசக்கூடாது என்று கூறுவது உங்களுக்கு மிகவும் சர்வசாதாரணமான ஒரு விஷயம். உங்களுக்கு விருப்பமான இடத்திற்கு ஒரு நாயைப்போல நீங்கள் போகலாம். நீங்கள் கொடுத்து வைத்தவள்…”- எனக்கு நேராகத் திரும்பிக் கொண்டு அவன் தன் பேச்சைத் தொடர்ந்தான்: “”இந்த வயல்களையும் மைதானங்களையும் படைத்தது கடவுள்தானே?”

“”அப்படித்தான் நான் நினைக்கிறேன்.”

“”எதற்காக அவற்றைக் கடவுள் படைத்தார்?”

“”மனிதர்கள் அந்த வழியே நடந்து திரிய…”

“”திறந்து கிடக்கும் வயல்கள்…!”- அவன் கூறிக் கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் விருப்பங்களை வெளிப்படுத்தும் அடையாளமாகப் புன்சிரிப்பு மலர்ந்து காணப்பட்டது. “”நான் என்னுடைய பிராணிகள் அனைத்தையும் அந்த வயலில் இறக்கி விடுவேன். என்னுடைய வளர்ப்பு மிருகங்களும் அந்த சுகத்தைக் கொஞ்சம் அனுபவிக்கட்டும். சரி… தெய்வத்தை அகதிகள் இல்லத்திலா படைக்கிறார்கள்?”

அவனுடைய தாய் தலையில் அடித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தாள். படுக்கையில் விழுந்து, கைகளையும் கால்களையும் ஆட்டியவாறு அவள் உரத்த குரலில் சொன்னாள்:

“”யாராவது என்னை மேலே கொஞ்சம் கொண்டு போவார்களா? என் தங்கமே…”

புன்சிரிப்புடன் லியோங்கா அவளைப் பார்த்தான். பாசம் பொங்க அவளைப் பார்த்து அவன் சொன்னான்:

“”சின்ன பிள்ளையைப்போல இவ்வளவு பெரிய பெண் சிரிக்கிறாங்க. அம்மாவுக்கு சிரிப்புமீது மட்டுமே விருப்பம்!”

அந்த வார்த்தைகளை அவன் மீண்டும் சொன்னான்.

“”அவள் சிரிக்கட்டும்!” – நான் சொன்னேன்: “”நீ அதைப் பெரிதாக எடுக்க வேண்டாம்.”

“”இல்லை. நான் அதைப் பெரிதாக எடுக்கவில்லை” – லியோங்கா ஒப்புக் கொண்டான். “”சாளரத்தின் கண்ணாடிகளைக் கழுவாத போதுதான், நான் என் தாயை வாய்க்கு வந்தபடி பேசுவேன். “சாளரத் தைக் கழுவு… சாளரத்தைக் கழுவு’ என்று நான் கெஞ்சிக்கொண்டே இருப்பேன். வார்த்தைகளால் விவரிக்க முடியாத, கொடுத்து வைக்கப்பட்ட பகல் வெளிச்சத்தை என்னால் பார்க்க முடியாது. ஆனால் என் தாய் எல்லா நேரங்களிலும் அதை மறந்து விடுவாங்க.”

தேநீர் பாத்திரத்தைக் கழுவுவதற்கு மத்தியில், அவள் மெதுவாக சிரித்துக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தவாறு அவள் அந்த நீல நிறக் கண்களில் ஒன்றைச் சிமிட்டினாள்.

“”இங்கே பாருங்க… இவன் ஒரு முத்து ஆயிற்றே! இவனுடைய இதயம் எந்த அளவிற்குப் பரிசுத்தமானது! இவன் மட்டும் இல்லாமல் போயிருந்தால், நான் என்னுடைய உயிரை எப்போதோ முடித்துக் கொண்டிருப்பேன்! ஆமாம்… நான் தூக்கில் தொங்கி இறந்திருப்பேன்…”

புன்னகைத்துக்கொண்டே அந்தப் பெண் இவை எல்லாவற்றை யும் சொன்னாள்.

அந்த நிமிடமே லியோங்கா என்னிடம் கேட்டான்: “”நீங்கள் ஒரு முட்டாளா?”

“”எனக்குத் தெரியாது. ஏன்?”

“”அம்மா சொல்றாங்க, நீங்க ஒரு முட்டாள் என்று.”

“”ஆமாம்… நான் அப்படிச் சொன்னேன் என்பதென்னவோ உண்மைதான். எதற்காக அப்படிச் சொன்னேன்?”- எந்தவொரு கூச்சமும் இல்லாமல் அவள் சொன்னாள்: “”தெருவில் மது அருந்தி ஆர்ப்பாட்டம் பண்ணும் ஒரு பெண்ணை இந்த மனிதர் அவளு டைய வீட்டில் கொண்டு வந்து விடுகிறார். அவளைப் படுக்கையில் படுக்க வைத்து விட்டு, அங்கேயிருந்து வெளியேறுகிறார். அவ்வளவுதான். நான் இதைச் சொல்றதுக்குக் காரணம் துரோக எண்ணத்தால் அல்ல. என்ன முட்டாள் மனிதன்டா நீ!”

அவளும் ஒரு சிறுகுழந்தையைப் போலவே பேசினாள். அவளுடைய பேசும் முறை ஒரு சிறிய பெண் குழந்தையை ஞாபகப் படுத்தியது. அவளுடைய கண்கள் ஒரு பெண் குழந்தையின் கண் களைப் போலவே இருந்தன. உள்ளே போன மூக்கும், உயர்ந்த உதடும், அதற்கு உள்ளே தெரிந்த ஒரு பல்லும் பார்க்கவே சகிக்க முடியாமல் இருந்தன. அசிங்கமான நடையும், சந்தோஷத்துடன் செய்யும் கிண்டல்களும் அவளின் இன்னொரு பக்கமாக இருந்தன.

லியோங்காவிற்கு மிகவும் அருகில் இருந்த ஒரு பழைய பெட்டியின்மீதுதான் தேநீர்ப் பாத்திரம் எடுத்து வைக்கப்பட்டி ருந்தது. அதன் மூடியின் வழியாக ஆவி வெளியே கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருந்தது. லியோங்கா தன்னுடைய கைகளில் ஒன்றை ஆவி பறப்பதற்கு மேலே வைத்தான். ஆவியால் உள்ளங்கையில் ஈரம் உண்டானதும், அவன் அதை தலைமுடியில் துடைத்துக் கொண்டான். அவனுடைய கண்களில் கனவுகள் தெரிந்தன.

“”நான் பெரியவனாக ஆகும்போது, என் தாய் என்னை ஒரு கை வண்டியில் ஏற்றி தள்ளிக்கொண்டு போவாங்க. தெரு முழுவதும் பிச்சை கேட்டு கெஞ்சி நாங்கள் பணம் சம்பாதிப்போம். அதற்குப் பிறகு நான் அந்த திறந்து கிடக்கும் வயலில் இறங்குவேன்.”

“”ஓஹோ!”- அந்தப் பெண் நீண்ட பெருமூச்சை விட்டுக் கொண்டு சொன்னாள்: “”வயல் ஒரு சொர்க்கம் என்று இவன் நினைத் துக் கொண்டிருக்கிறான். பாவம்! பட்டாள முகாம்களும், வெட்கம் கெட்ட பட்டாளக்காரர்களும், குடிகாரர்களும் மட்டும்தான் அங்கே இருக்கிறார்கள் என்ற விஷயம் இவனுக்குத் தெரியாது.”

“”ஏய்… அப்படி எதுவும் இல்ல…”- அவன் தன் தாயின் கருத்தை எதிர்த்தான். “”இவர்கிட்ட கேட்டுப் பார். இவர் நிறைய வயல்களைப் பார்த்தவர்.”

“”நானும் பார்த்திருக்கேன்.”

“”அது கள்ளு குடித்த பிறகு…”

சிறு குழந்தைகளைப்போல தாயும் மகளும் சண்டை போட ஆரம்பித்தார்கள். அறிவுப்பூர்வமாக அந்தச் சண்டை நீண்டு கொண்டிருந்தது. உற்சாகமான அந்த மாலைப்பொழுது நிறை வடைந்து கொண்டிருந்தது. புகைந்து கொண்டிருந்த வானத்தில், சாம்பல், நீல நிறங்களில் இருந்த மேகங்கள் பரவி விட்டிருந்தன. வீட்டிற்குள் இருள் பரவியது.

ஒரு கோப்பை தேநீர் உள்ளே போனவுடன் சிறுவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. என்னை ஒருமுறை ஓரக்கண்களால் பார்த்த அவன் தன் தாயின் பக்கம் திரும்பிச் சொன்னான்:

“”என் வயிறு நிறைந்துவிட்டது. எனக்குத் தூக்கம் வருது.”

“”அப்படியென்றால் தூங்கு”- தாய் சொன்னாள்.

“”அப்படின்னா இவர் போகப் போறாரா? நீங்க போயிடுவீங்களா?”

முழங்காலால் என்னைச் சீண்டிய அவள் சொன்னாள்: “”பயப்படாதே… நான் இவரை விடமாட்டேன்.”

“”போகக்கூடாது… தெரியுதா?”- லியோங்கா சொன்னான். கண்களை மூடிக்கொண்டு நன்கு பரவி அந்த மரப்பெட்டியின்மீது அவன் உடலை நீட்டிக் கொண்டு படுத்தான். திடீரென்று தலையை உயர்த்தித் தன் தாயைப் பார்த்து திட்டுகிற குரலில் அவன் சொன்னான்:

“”மற்ற பெண்கள் செய்வதைப்போல… அம்மா, நீங்க இவரைக் கல்யாணம் பண்ணினால் என்ன? கண்களில் கண்ட ஆட்களுடன் எல்லாம் நீங்கள் ஏன் பழகுறீங்க? அவர்கள் உங்களை அடிப்பதைத் தவிர வேறு என்ன செய்கிறார்கள்? இவர் ஒரு அன்பான மனிதர்…”

“”தூங்கப் பார்…”- தேநீர்க் கோப்பையுடன் தன் உதடுகளைச் சேர்த்து வைத்துக்கொண்டு அவள் சொன்னாள்:

“”இவர் ஒரு பணக்காரர் வேறு…”

அவலட்சணம் பிடித்த தன்னுடைய உதடுகளால் அந்தக் கோப்பையிலிருந்து தேநீரை உறிஞ்சிக் குடித்துக் கொண்டே, பழைய ஒரு நன்கு அறிமுகமான மனிதனிடம் கூறுவதைப்போல அவள் என்னிடம் சொன்னாள்:

“”இப்படித்தான் தட்டியும் முட்டியும் எங்களுடைய வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. நாங்கள் இரண்டுபேர் மட்டுமே இருக்கக்கூடிய இந்த வாழ்க்கை… வெளியே இருப்பவர்கள் என்னை பைத்தியம் என்று அழைப்பார்கள். அதனால் என்ன? எனக்கு அதைப்பற்றி எந்த வெட்கக் கேடும் இல்லை. வெளியே நான் ஒரு கேடு கெட்ட சரக்குத்தான். அந்த விஷயம் உங்களுக்கு என்னைப் பார்க்கும்போதே தெரியும்ல? நான் எதற்கு லாயக்கு என்ற விஷயம் உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். அவன் தூங்கிவிட்டான். அவன் ஒரு நல்ல பையன்…”

“”ஆமாம்… மிகவும் நல்ல பையன்.”

“”என்னால் அவனை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்க முடியவில்லை. அவன் நல்ல புத்திசாலி. சரிதானா?”

“”பிறகு? நல்ல அறிவுள்ள பையன்.”

“”நீங்கள் சொன்னது ஒரு வார்த்தைகூடப் பிசகாமல் சரியானது. அவனுடைய அப்பா நல்ல ஒரு மனிதராக இருந்தார். வயதான மனிதர். இந்த சட்டங்கள் எல்லாம் எழுதுவார்களே… அவர்களை நாம் எப்படி அழைப்போம்.”

“”நோட்டரி…”

“”ம்… அதேதான். நல்ல மனிதராக இருந்தார். அவருக்கு என்மீது நல்ல பிரியம் இருந்தது. நான் அவருடைய வீட்டில் வேலை பார்த்தேன்.”

அவள் அவனுடைய கால்களுக்கு மேலே துணியை இழுத்து விட்டாள். அவன் தலையணையாக பயன்படுத்திய அந்தக் கறுத்த துணிக்கட்டை அவள் சரியாக வைத்தாள். தொடர்ந்து மிகவும் சாதாரண முறையில் அவள் தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தாள்:

“”திடீரென்று அவர் இறந்துவிட்டார். நான் அங்கேயிருந்து வேலை முடிந்து திரும்பி வந்த பிறகு அது நடந்தது. ஒரு இரவு வேளையில் வெறுமனே தரையில் நிலை குலைந்து விழுந்து அவர் இறந்துவிட்டார். உங்களுக்கு க்யாஸ் விற்பதுதானே வேலை?”

“”ஆமாம்…”

“”சொந்தத் தொழிலா?”

“”இல்லை, ஒரு முதலாளிக்குக் கீழே…”

மேலும் சற்று நெருக்கமாக நகர்ந்து உட்கார்ந்து கொண்டு அவள் சொன்னாள்:

“”என்னைப் பார்க்குறப்போ உங்களுக்கு வாந்தி எடுக்கணும் போல இருக்கக்கூடாது. எந்தச் சமயத்திலும் நான் ஒரு மோசமான பிறவியாக இருந்தது இல்லை. இந்தத் தெருவில் இருக்கும் யாரிடம் வேண்டுமென்றாலும் கேட்டுக்கோங்க… எல்லாருக்கும் என்னைத் தெரியும்.”

“”எனக்கு வெறுப்போ வாந்தி எடுக்கணும் என்றோ தோணல.”

“”வெட்டப்பட்ட நகங்களும் முரட்டுத்தனமான விரல்களும் இருந்த தன்னுடைய கையை என்னுடைய முழங்காலில் வைத்துக்கொண்டு அவள் தொடர்ந்து சொன்னாள்:

“”லியோங்காவிற்காக நான் உங்களிடம் எப்போதும் நன்றி உள்ளவளாக இருப்பேன். அவன் இன்று மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறான். இன்று நல்ல ஒரு நாளாக இருந்தது. நீங்க நல்ல காரியத்தைச் செய்தீங்க.”

“”நான் போக வேண்டிய நேரம் வந்திடுச்சு!”- நான் சொன்னேன்.

“”எங்கே?”- அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“”எனக்கு வேலை இருக்கு.”

“”இங்கே தங்குங்க.”

“”அது முடியாது.”

“”தன்னுடைய மகனையும் சாளரத்தையும் வானத்தையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, மிகவும் அமைதியாக அவள் சொன்னாள்:

“”ஏன் மெதுவா போகக்கூடாது? நான் என்னுடைய முகத்தை ஒரு துணியால் மூடிக்கொள்கிறேன். என் மகனுக்காக உங்களிடம் நன்றியைக் காட்டாமல் என்னால் இருக்க முடியாது. நான் இங்கு எங்காவது மூடிப் போர்த்திக் கொண்டு படுத்துக் கொள்கிறேன். போதுமா?”

மிகவும் உண்மை துடித்துக் கொண்டிருந்த மன சந்தோஷத்து டன் அவள் பேசினாள். அவளுடைய கண்களில்- குறும்புத்தனமான முகத்தின் சிறுபிள்ளைத்தனம் ததும்பிக் கொண்டிருக்கும் கண் களில் புன்சிரிப்பு மலர்ந்திருந்தது. ஒரு பிச்சைக்காரியின் புன் சிரிப்பாக அது இல்லை. தன்னுடைய நன்றியைத் தெரிவிக்கும் கடமையை நிறைவேற்றக்கூடிய ஒரு வசதி படைத்த பெண்ணின் புன்சிரிப்பு அந்தக் கண்களில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

“”அம்மா…”- அந்தச் சிறுவன் உரத்த குரலில் அழைத்தான்: “”பூச்சிகள் அரிக்கின்றன அம்மா. கொஞ்சம் சீக்கிரம் வாங்க…”

“”அவன் கனவு காண்கிறான்”- தன் மகனுக்கு நேராக குனிந்து கொண்டே என்னிடம் அவள் சொன்னாள்.

நான் வெளியேறினாலும் சிந்தனையில் மூழ்கியவாறு அந்த வாசலிலேயே நின்றிருந்தேன். அந்த வீட்டின் திறந்துவிடப்பட் டிருந்த சாளரத்தின் வழியாக ஒரு தூங்க வைக்கும் பாடல் மிதந்து வந்து கொண்டிருந்தது. ஒரு தாயின் தாலாட்டுப் பாடல் அது. மூக்கை அடைத்துப் பிடித்துக் கொண்டுள்ள ஒரு குரலில் அவள் பாடிக்கொண்டிருந்தாள். முன்பு எந்தச் சமயத்திலும் கேட்டிராத ஒரு பாடலை என்னால் தெளிவாகக் கேட்க முடிந்தது.

“பூச்சியும் பிராணியும் வந்தாச்சு

துன்பமும் தொல்லையும் வந்தாச்சு

துன்பத்தின் கணக்கு தெரியாது- அது

நெஞ்சைக் குத்திக் கிழிக்கிறது!

துயரம்… துயரம்… துயரம் மட்டும்…

எங்கே நாங்கள் பறப்பது?’

சத்தம் போட்டு அழுதுவிடக் கூடாது என்பதற்காக பற்களை யும் உதடுகளையும் சேர்த்து அழுத்தி வைத்துக்கொண்டு நான் அந்த வாசலில் இருந்து தெருவில் இறங்கினேன்.

சென்ஷி

unread,
Apr 13, 2010, 9:09:33 AM4/13/10
to panb...@googlegroups.com
8. சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும் - சுரேஷ்குமார இந்திரஜித்

நான் சிங்கப்பூரிலிருந்து, தாய்லாந்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அதிர்ஷ்டவசமாக எனக்கு அடுத்த இருக்கையில் ஜப்பான் எழுத்தாளர் டோகுடோ ஷோனினைச் சந்தித்தேன். முதலில் அந்தப் பெயரை பார்த்ததும் ‘சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும், என்ற நாவல் எழுதியிருந்த டோகுடோ ஷோனின் ஞாபகமே எனக்கு வந்தது. அதனால் அவரை விசாரித்து அவர்தான் இவர் என்று அறிந்து கொண்டேன். நான் விசாரித்தது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருப்பதை அவர் முகம் காட்டியது. ‘நீங்கள் இந்தியாவா, ஸ்ரீலங்காவா ? ‘ என்று அவர் கேட்டார்.

ராபர்ட் அகஸ்ஸி மொழிபெயர்த்திருந்த அவரின் ‘சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும் ‘ நாவல் என்னை மிகவும் ஈர்த்திருந்தது. ஒரு சிறுமியின் இயற்கையான அறிவுக்கூர்மையும் சிருஷ்டிகரமும் அவரின் பெற்றோர், சுற்றத்தார், பள்ளி ஆசிரியைகள் ஆகியோரினால் நாசமாக்கப்படுகின்றது என்பதை வெவ்வேறு கோணங்களில் அந்நாவலில் அவர் சித்தரித்திருக்கிறார். நாவலில் வரும் சிறுமிக்குப் பெயர் கிடையாது. அவள் மனம் இயற்கையாக கட்டமைக்கப்படுவதைச் சுற்றியுள்ளவர்கள் காலங்காலமாகச் சொல்லப்பட்டுவரும் கருத்துக்கள் ஆக்கிரமிப்பதையும், பள்ளிக்கூடங்கள் பயத்தை உருவாக்கி மதத்தைச் சாரும் மனத்தை உருவாக்குவதையும் ஆழமான பார்வையுடன் பார்த்திருந்தார். வீட்டின் பின்புறத்திலுள்ள நந்தவனத்தில் திரியும் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் சிறுமிக்கும் உள்ள உறவை அவர் சித்தரிக்கும் இடங்களில் இயற்கையான கவித்துவம் வெளிப்பட்டிருந்தது.

நான் டோகுடோ ஷோனிடம் இந்த நாவலை சிலாகித்துப் பேசினேன். தான் எழுதிய நாவல்களில் பிடித்தமான நாவலாக இதைக் கருதுவதாகவும், ஆனால் பெரும்பாலோர் ‘சுழலும் காலம் ‘ என்ற நாவலையெ முக்கியமானதாகச் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். அவர் எழுத்துத்துறைக்கு வந்த விதம் பற்றிக் கேட்டேன். அவர் கூறியதின் சுருக்கத்தைக் கூறுகிறேன்.

நான் எழுத்தாளர் யாசுனாரி கவாபாட்டாவின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தேன். அதன் விளைவாக எழுத முற்பட்ட எனக்கு என் ஆசிரியர் கரஷமாவின் வழிகாட்டல் உதவியாக இருந்தது. அவர் மது அருந்தும் சந்தர்ப்பங்கள் என் விருப்பத்துக்குரியனவாக இருந்தது. அவருக்கும் தெரிந்த எந்த ஒரு விஷயம் பற்றியும் கூர்மையான பார்வையுடன் வித்தியாசமாகப் பேசுவார். நான் எழுதியிருந்த கதையை முதலில் அவரிடம் காட்டியதும், அவர் அதை படித்துவிட்டு ‘இந்த கதையைக் கிழித்து உன் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு மலர்ச்செடியின் கீழே புதைத்துவிடு ‘ என்று கூறினார். சில நாட்கள் கழித்து என்னைக்கூட்டிக்கொண்டு மியூசியம் சென்றார். அங்கு இருந்த சிலைகள் அவர் சுட்டிக்காட்டிய பின்னே அவற்றினுடைய சிருஷ்டிகரம் என்னைத் தாக்கியது. அவர் கூடச் சென்று கொண்டிருக்கும்போது திடாரென்று ஒரு மரத்தையோ, செடியையோ கல்லையோ காட்சியையோ சுட்டிக் காண்பித்துப் பார்க்கச் சொல்லுவார். அவற்றின் அழகு என் மனத்தில் பதியத்தக்கதாக இருக்கும். அவர் கூட ஒரு நாள் சென்று கொண்டிருக்கும்போது வழியில் ஒரு வாடகைக்கார் டிரைவர், அவரைப் பார்த்து ஓடிவந்தான். அந்த டிரைவர் தன்னுடைய குடும்ப விவகாரங்களை ஏற்கெனவே இவருக்குத் தெரிவித்திருப்பான் போலிருக்கிறது. மனைவியை இழந்த இரண்டு குழந்தைகளையுடைய அவனை மறுமணத்திற்கு உறவினர்கள் வற்புறுத்திக்கொண்டிருந்த போதிலும் மறுத்துக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது. நோயுற்ற மனைவி உயிரோடு இருந்தவரை அவளது நலனுக்காகவும் தற்போது குழந்தைகளின் நலனுக்காகவும் தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளவனாகத் தோன்றினான். தியாகியாக பாவித்து இயங்கிக் கொண்டிருப்பது மனத்திற்கு சோர்வைத்தரும் என்றும், உட்புறமாக மறுமணத்தின் விருப்பத்தை மனம் வற்புறுத்திக்கொண்டேயிருப்பதால் வெளிப்புறத்தில் மனம் அதை மறுத்துக்கொண்டேயிருக்கிறது என்றும், மறுமணம் செய்வதின் மூலம் மனம் சோர்விலிருந்து விடுதலையடைந்து உற்சாகமுறும் என்றும் ஆனால் மறுமணத்திற்குப் பின்னாலும் ஏதாவது ஒரு தியாகத்தைத் தேடி மனம் அலைந்தால் அதை அவன் பரிசீலனை செய்யவேண்டும் என்றும் கரஷ்மா கூறினார்.

அவருக்கு பல வகையான மனிதர்கள் நண்பர்களாக இருந்தனர். எவ்வாறு இத்தனை வகையான மனிதர்களிடம் இவர் நட்புறவு கொண்டிருக்கிறார் என்று நான் ஆச்சரியமடைவதுண்டு. சமூகத்தின், அந்தஸ்து மிக்க மனிதர்கள், வட்டாரப் போக்கிரிகள், சிறு வியாபாரிகள், கெய்ஷா பெண்கள் என்று அவருடைய உலகம் பெரியதாக இருந்தது. ஒரு நாள் நான் அவரை காணச் சென்றிருந்தபோது வெளியே கிளம்பிக்கொண்டிருந்தார். ஒரு கெய்ஷா பெண்ணைப் பார்க்கச் செல்வதாகக் கூறி, நான் மறுத்த போதும், விடாது என்னையும் கூட்டிச் சென்றார். கரஷீமா மீது மிகுந்த மரியாதையுடையவளாக அவள் தோன்றினாள். அவளுக்கு லெளகீகக் காரியங்களில் இவர் பல உதவிகள் செய்திருக்கிறார் என்று என்னால் யூகம் செய்து கொள்ள முடிந்தது. அவர்களுடைய பேச்சு, பிரதானமாக குழந்தைகளுக்கும், பெரியவர்கள், சூழல், சமூகம் ஆகியவற்றிற்கும் இடையேயான உறவைப் பற்றியதாக இருந்தது. ஒரு சுற்றுலா மையத்தில் மரங்கள் சூழ்ந்திருந்த குளக்கரையில் சிறுமியான தன் மகளுடன் அமர்ந்திருந்த போது, பளபளக்கும் நீரைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறுமி கையில் இருந்த சிறு தட்டை அக்குளத்தில் மிதக்கும் படியாக வீசி எறிய வேண்டும் போல் இருப்பதாகத் தெரிவித்த சம்பவத்தை அப்பெண் கூறினாள். இதே போல் இன்னொரு நாள் டேபிள் வெயிட்டான கண்ணாடி கோளத்திற்குள்ளே செல்லவேண்டும் போல் இருப்பதாகக் கூறியதாகவும் மற்றொரு நாள் வண்ணத்துப் பூச்சிகளுடன் பறந்து திரியும் கனவு கண்டதாகவும் கூறியதாகவும், இவை எல்லாம் மனத்தின் சிருஷ்டிகர அடையாளங்கள் என்றும், இவற்றை நாசப்படுத்தும் சக்திகளே குழந்தைகளைச் சுற்றிலும் உள்ளதாகவும் அந்தப்பெண் தெரிவித்தாள். அனைத்து விஷயங்களிலும், பெரியவர்களின் கருத்து திணிக்கப்படும் நிலையில், குழந்தைகளின் இயற்கையான கூர்மை அறிவு நிலையில் சிதைக்கப்படுவதாக கரஷ்மா கூறினார். அந்தப்பெண்ணின் பெயர் எனக்கு நினைவில் இல்லை. இது நடந்த பலகாலம் ஆகிவிட்டது. கரஷ்மாவும் இறந்து விட்டார். இந்த உரையாடல் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அப்போது அந்த அறையில் இருந்த சிலபொருட்கள் அவற்றின் வடிவம், நிறம், அவர்கள் உட்கார்ந்திருந்த தோரணை ஆகியவை தற்போதும் அப்படியே நினைவில் உள்ளன. எழுத ஆரம்பித்தபின் இந்த உரையாடல் என்னை தொந்திரவு செய்து கொண்டேயிருந்தது. கலை வடிவமாக எழுத இயலாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். தொந்திரவை தாள இயலாமல் எப்படியோ எழுத ஆரம்பித்து முடித்துவிட்டேன். அதுதான் நீங்கள் விரும்பும் ‘சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும் ‘ என்ற நாவல்.

- டோகுடோ ஷோனின் கூறியதின் சுருக்கத்தை மேலே கொடுத்திருக்கிறேன். அவரின் தொழில் பற்றி விசாரித்ததற்கு ஒரு எலக்ட்ரானிக் கம்பெனியில் பணிபுரிவதாகக் கூறி அது சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கூறினார். அதில் எனக்குச் சிறிதளவிற்கு மேல் எதுவும் விளங்கவில்லை. தவிர அவை இந்தக் கதைக்கு அவசியமானதுமல்ல.


சென்ஷி

unread,
Apr 18, 2010, 4:19:42 AM4/18/10
to panb...@googlegroups.com

நன்றி: அழியாச்சுடர்கள் தளம்

கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா -  ஜி. நாகராஜன்

``எனக்கு முதலில் பயமாய் இருந்தது; ஹாஸ்டலில் யாருமில்லை. ராணியும் ஜேனும் `ஷாப்பிங்’ சென்றிருந்தார்கள். எங்கள் மூவரைத் தவிர மற்றவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். நானும் கிளம்புவதாகத் தான் இருந்தேன். ஆனால் ராணிதான் இருவரும் ஒரு சினிமாப் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று வற்புறுத்திக்கொண்டிருந்தாள். மேலும் அந்தக் காதர் நான் குளிக்கப் போகும்போது, `பாப்பா, ஒரு நா இருந்திட்டுப் போயேன்’ என்றான். காதரை உனக்குத் தெரியுமே. மொட்டை மண்டை; பொக்கை வாய். அவனை நோட்டுப் புத்தகம், காகிதம், ஏதாவது வாங்கிக் கொண்டு வரச் சொல்லும்போது சமயங்களில் அவன் கை என்மீது பட்டுவிடும். அப்போது எனக்கு ஒரு மாதிரி இருக்கும். அவன் முகத்திலும் கள்ளத்தனம் தெரியும். ஆடவரே இல்லாத இடத்தில் அவன் ஒரே ஆடவனாக இருந்ததால் இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன்.

நான் என் அறையில் தனியே இருந்தேன். கொஞ்சம் பயம். இருந்தாலும் காதர் வர வேண்டும்போல் இருந்தது. அவன் வராது போய்விடுவானோ என்றுகூடப் பயம். ஹாஸ்டலில் அவனுக்கென்று ஒரு அறை உண்டு. அங்கு போய் ஏÊதாவது சாக்குச் சொல்லி அவனைப் பார்த்துவிடலாம் என்றுகூட நினைத்தேன். ஹாஸ்டலில் ஸ்டோர் ரூம்தான் அவனுடைய அறை. ஓரிரு தடவை அவனைக் கூப்பிட அங்கு சென்றிருக்கிறேன். மிகவும் சிறிய அறை, எப்படித்தான் காலை நீட்டிப் படுத்துறங்குவானோ? அந்த அறைக்குள் சென்று சுருண்டு படுத்துறங்க வேண்டும் என்ற ஆசை எனக்கு சில தடவைகள் வந்ததுண்டு.

காலடிச் சத்தம் கேட்டது. வழக்கமான மெல்லிய காலடிச் சத்தம். காதர் என் அறையைக் கடந்து இரண்டு எட்டு சென்றுவிட்டுத் திரும்பி நடந்து என் அறைக்குள் நுழைந்தான். `பாப்பாவுக்கு என்ன வேணும்?’ என்று கேட்பான் என்று எதிர்பார்த்தேன். உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டான். `என்ன காதர்?’ எனக் கத்தினேன். `ஏம் பாப்பா, கத்தறே, நான் கிளவன்’ என்றான் காதர். `ஏங் கதவே அடச்சே?’ என்றேன். `ஒன்னெத் தொட்டுக் கும்பிட’ என்று சொல்லிக்கொண்டே, காதர் மண்டியிட்டு என் இரு பாதங்களையும் பற்றினான். அவன் கை பட்டது எனக்கு இதமாக இருந்தது’’.

ஹெட்கிளார்க் சுகுணா உள்ளே வரவும் நிர்மலா கடிதத்தை மேஜைமீது வைத்து அதன்மீது ஒரு டேபிள் வெய்ட்டை வைத்தாள். ``பாரதி மூப்பனார் வந்திருக்காரு’’ என்றாள் சுகுணா. ``மூப்பனாரா? அவர் பில் பாஸ் ஆயிடுச்சின்னு சொல்லு. நாளைக்கழிச்சு வந்து செக்கை வாங்கிட்டுப் போகட்டும்’’ என்றாள் நிர்மலா. சுகுணா அறையை விட்டகலவும் கடிதத்தைத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று தோன்றவில்லை நிர்மலாவுக்கு. அவள் ஏற்கனவே ஒருமுறை படித்த கடிதம்தான். இருந்தாலும் அது அவள் கையைச் சுற்றிச் சுற்றிக்கொண்டிருந்தது. இப்போது அவள் நினைவு அவளது மாணவிக் காலத்துக்குச் சென்றது. மூன்று மணி நேரம் மெய் மறந்து, ஒரு முக்கோணத்தின் ஒன்பது புள்ளி வட்டம் அதன் உள்வட்டத்தைத் தொட்டுச் செல்லும் என்று நிரூபித்தது; பதினேழு பக்கங்கள் கொண்ட ஒரு ஒழுங்குப் பல கோணம் வரைய ஒரு மாதம் தொடர்ந்து முயன்று தோல்வியுற்றது; ஒரு கோணத்துக்கு இரு சமவெட்டி உண்டு என்று ஏற்றுக்கொண்டாலன்றி, அதனை வரைய முறை காணமுடியாதென்று ஆசிரியரோடு வாதிட்டது; இறுதியில் ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை மெய்ப்பிக்க முயன்று `ரிசேர்ச்’ உதவித்தொகையை இழந்தது, எல்லாமே அவள் மனத்தினூடே பாய்ந்து சென்றன.

மறக்க முடியாத அப்பாவின் நினைவு! `நீ எம் மூத்த குழந்தையாப் பிறந்த பாவத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுட்டேம்மா! இன்னைக்கு நெனெவிலே இருக்கு. உன்னை ஹாஸ்டல்லே வந்து பார்க்க வந்தேனே, அப்ப எல்லாக் குழந்தைகளும் விதவிதமாய் போட்டிட்டு, கவலையே இல்லாம, வரதும் போறதுமா இருக்கும்போது, நீ ஒரு கிழிஞ்ச ரவிக்கையைப் போட்டுக்கிட்டு எங்கூட ஸ்டேஷனுக்கு வரேனியே!’ `அய்யோ, அப்பா! இப்ப இதெல்லாம் பத்தி என்ன பேச்சு? நீங்க நிம்மதியா இருங்க. உங்களுக்கு ஒரு கவலையும் வேண்டாம். நான் எப்பவும் சந்தோஷமாத்தான் இருந்தேன்; இப்பவும் சந்தோஷமாத்தான் இருக்கேன். சாந்தாவைப் பத்தியோ, மனோகரைப் பத்தியோ கவலைப்படாதீங்க. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க ரொம்ப நல்லவர். ஆனா, நீங்க வாழத் தெரியாம வாழ்ந்திட்டீங்க...’

நிர்மலா மேஜை மீது இருந்த கடிதத்தை எடுத்துத் தொடர்ந்து படிக்கலானாள்.

``நிமிர்ந்து நின்றேன். என் பாதங்களைப் பற்றியிருந்த காதரின் கரங்கள் உயர்ந்துவந்து என் கணுக்கால்களை வருடின. காதரின் கைகள் மெல்ல உயர்ந்தன. என்னால் நிற்க முடியவில்லை; அப்படியே கட்டிலில் அமர்ந்தேன். `நில்லு பாப்பா, நில்லு’ என்று கெஞ்சினான் காதர். நான் மீண்டும் நிற்கவும், பொக்கை வாய் சிரிப்போடு, மண்டியிட்டு, காதர் என்னை நோக்கிக் கொண்டிருந்தான்...’’

நிர்மலா கடிதத்தை மேஜை மீது வைத்துவிட்டு இரு கைகளையும் அகல விரித்து சோம்பல் முறித்தாள்.

வருஷம் பூரா இரண்டு சேலை; மூணு ஜம்பர். அத்தனை அவமானமும் எதுக்கு? என்னத்தை சாதித்துவிட்டேன்? அர்த்தமில்லாத தியாகம். அது தியாகமா? அதுவுமில்லியே! ஒரு வகையில் நிர்ப்பந்தம்தானே? ஒன்றையும் காணவில்லையே! ஒரு தெய்வமும் எனக்குத் தட்டுப்படவில்லையே! ஒரு உண்மையும் பிடிபடவில்லையே! இருபது வருடங்களுக்கு முன் தோன்றிய வினாக்களுக்கு இன்னும் விடைகளில்லையே? சாந்தா சந்தோஷமாக இருக்கிறாள்; மனோகர் முன்னுக்கு வந்துவிட்டான். இப்ப இருவரும் சேர்ந்து `அக்காளுக்கு உலகம் தெரியவில்லை’ என்கிறார்கள்.

நிர்மலா கடிதத்தை எடுத்துத் தொடர்ந்து படித்தாள்.

``... என் கால்கள் தடுமாறின. எனக்குப் பசுவிடத்துப் பால் உண்ணும் கன்றின் நினைவு ஏற்பட்டு, அருகில் லயித்துத் தடுமாறினேன். காதர் எழுந்து என்னை அணைக்க வேண்டும்போல் இருந்தது. நான் விழுந்து விடாதபடி அவன் கைகள் ஆதரவாக என் பின்புறத்தைப் பற்றியிருந்தன.’’

மிஸ் நிர்மலா வாசித்த கடிதம் கடந்த ஆண்டு அவளது கல்லூரியில் படித்த லைலா தற்போது ஹாஸ்டலில் தங்கிப் படித்து வரும் இந்திராவுக்கு எழுதிய கடிதம். இந்திரா கவனக்குறைவாக அதைத் தனது சினிமா சஞ்சிகைக்குள் வைத்திருந்தாள். அந்த சஞ்சிகையை எடுத்த அண்ணன் மூலம் அது இந்திராவின் தகப்பனார் டாக்டர் சந்திரசேகரன் கைக்குப் போய்விட்டது. ``நான் ஒரு டாக்டர். எனவேதான் அளவுக்கு மீறிக் கலவரப்படாது, இந்தக் கடிதத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவதோடு நிறுத்திக்கொண்டு, மேலும் பல்கலைக்கழக, அரசாங்க மட்டங்களில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்’’ என்று பயமுறுத்தாது, பயமுறுத்தியிருந்தார் டாக்டர்.

`அடேயப்பா, டாக்டரின் விசால புத்தியைப் பாராட்டத்தான் வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டே, நிர்மலா காதரைப் பற்றி நினைத்தாள். கிழவனுக்கு அப்படி ஒரு ஆசை! உம். எதைப்பற்றி ஆச்சரியப்படுவது? எல்லாமே ஆச்சரியப்பட வேண்டியதுதானே! நாமாக அது இயற்கை, இது இயல்பு, அது பகுத்தறிவு, இது நடைமுறை அனுபவம் என்று கற்பனை செய்துகொள்வதால்தானே இத்தனைப் `புதுமைகளும்’, `முரண்பாடுகளும்’, `இயற்கைக்கு மாறானவையும்!’ சன்னல் வழி வந்த சூரிய ஒளியின் பக்கம் நிர்மலா திரும்பினாள். ஒளி என்ன? புரியவில்லையே! மனிதனின் கணிதக் கட்டுக்கோப்புகள் அதை அடைத்து விடுவதால் அதைப் புரிந்துகொண்டதாகிவிடுமா? விஞ்ஞானிகளை முற்றிலும் புரிந்துகொள்ள முடிகிறதா? ஆமாம். `லாசரை’யும், `டி.வி.’யையும் படைத்துவிடுகிறார்கள். இருந்தாலும் அந்தக் காதர்! அந்தக் காதர்!! அவள் கல்லூரியில் முதலாண்டில் படித்த புத்தகம் ஒன்று இப்போது அவள் நினைவுக்கு வந்தது. அழகழகான படங்களைக் கொண்ட புத்தகம். ஐன்ஸ்டைனின் வியப்பு நிறைந்த கண்கள். நீல்ஸ்போரின் பெருமிதம். மிலிக்கனின் சாமர்த்தியம். டிப்ராலியின் அழகு... காதர் முகத்திலும் எப்படி அப்படி ஒரு ஒளி? இல்லை, வெறும் கற்பனையா? எல்லாமே நாமாக நினைத்துக் கொள்வதுதானா?

நிர்மலா மணியை அழுத்தவும் சுகுணா வந்தாள்.

``ஹாஸ்டல் வாச்மேன் காதரை வரச் சொல்லு.’’

``சரிங்க, மிஸ்.’’

மிஸ், மிஸ், மிஸ்... ஆனால், படிப்புக்குக் குறைச்சல் இல்லை. அந்தஸ்துக்குக் குறைச்சல் இல்லை. ஆமாம், அவமானத்துக்கும் குறைச்சல் இல்லை. எதுக்குமே குறைச்சல் இல்லை! ஆனால்... நிர்மலா தனது வலது கையைக் கொண்டு சேலையைச் சரி செய்துகொள்வதுபோல், இல்லை, மார்பகத்தைத் தடவிக்கொள்வது போல், சேலையைச் சரி செய்துகொண்டாள். லேசாக ஏதோ தட்டிற்று; அவ்வளவுதான்.

காதர் வந்து நின்றான். மொட்டை மண்டை. பொக்கை வாய்.

``ஹாஸ்டலுக்கு வேறே வாச்மேன் போட்டிருக்கேன்.’’

``நல்லதுங்க’’ என்றான் காதர்.

அரை நிமிடம் இருவரும் பேசவில்லை. நிர்மலா அந்தக் கடிதத்தைப் படிப்பதாகப் பாவனை செய்தாள்.

``உனக்குத் தோட்ட வேலை தெரியுமா?’’

``தோட்ட வேலைக்குத்தானே நம்ம காலேசுக்கு வந்தேன்?’’

``அப்படியா, எனக்குத் தெரியாதே! இனிமே எம் பங்களாத் தோட்டத்தெ கவனிச்சுக்க. ரத்தினம்மா ஹாஸ்டலைப் பார்த்துக்கட்டும்.’’

``உத்தரவு அம்மா’’ என்றான் காதர். இருந்தாலும் அவன் முகத்தில் ஒரு கள்ளத்தனம் இருந்ததாகப் பட்டது, மிஸ் நிர்மலாவுக்கு.

காதர் அறையை விட்டு வெளியேறவும், நிர்மலா தனது வலது கையைக் கொண்டு சேலையைச் சரி செய்துகொள்வது போல், இல்லை, மார்பகத்தைத் தடவிக்கொள்வது போல், சேலையைச் சரி செய்து கொண்டாள். லேசாக ஏதோ தட்டிற்று; அவ்வளவுதான்.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

சென்ஷி

unread,
Apr 28, 2010, 10:03:33 AM4/28/10
to panb...@googlegroups.com
பரிசுச்சீட்டு (ஆண்டன் செகாவ். தமிழில் தீபா)

இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு சோஃபாவில் வந்தமர்ந்த ஐவன் திமித்ரி அன்றைய நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தான்.
ந‌டுத்தர‌வ‌ர்க்க‌த்தைச் சேர்ந்த‌ ஐவன் ஆண்டுக்கு ஆயிர‌த்து இருநூறு ரூபிள் ச‌ம்ப‌ள‌த்துட‌ன் திருப்திக‌ரமாக வாழ்க்கை நடத்தி வருபவன்.

"இன்னிக்கு நான் பேப்பர் படிக்கவே மறந்துட்டேன்" என்றவாறே அங்கு வந்தாள் அவனது மனைவி. "பரிசுச் சீட்டு முடிவுகள் வந்திருக்கா பாரு"

"ஆமா, வந்திருக்கு. ஆனா உன் சீட்டு காலாவதியாயிருக்குமே?"

"இல்ல, செவ்வாய்க்கிழமை தான் வாங்கினேன்."

"நம்பர் என்ன?"

"வரிசை 9,499. நம்பர் 26"

"சரி, இரு பாக்கலாம்... 9,499 26...."

ஐவனுக்குப் ப‌ரிசுச்சீட்டுக‌ளிலெல்லாம் ந‌ம்பிக்கை இல்லை; பொதுவாக‌ இதையெல்லாம் பார்த்துச் சொல்ல‌ச் ச‌ம்ம‌தித்திருக்க‌ மாட்டான். ஆனால் இப்போது 'சும்மா தானே இருக்கோம்' என்றும், க‌ண்முன்னே நாளித‌ழ் கிட‌ந்த‌தாலும் அந்த‌ எண்க‌ளின் மீது விர‌லையோட்டிப் பார்க்க‌ ஆர‌ம்பித்தான்.

ச‌ட்டென்று அவ‌ன‌து ந‌ம்பிக்கையின்மையைக் கேலி செய்வ‌து போல், இர‌ண்டாவ‌து வ‌ரிசையிலேயே அந்த‌ எண் அவ‌ன் க‌ண்க‌ளில் ப‌ட்ட‌து ‍ 9,499.


தன் கண்களையே நம்ப முடியாமல், அடுத்து சீட்டுக்குரிய‌ எண்ணைக் கூடப் பார்க்காமல் பேப்பரை நழுவ விட்டான். திடுமென்று யாரோ வாளி நிறைய சில்லென்ற தண்ணீரை முகத்தில் கொட்டிவிட்டுப் போனதைப் போல் உணர்ந்தான். அடிவயிற்றில் ஜிலீரென்றது.

நடுங்கும் குரலில், "மாஷா 9,499 வரிசை வந்திருக்கு."

அதிர்ந்திருந்த அவ‌னது முகத்தைப் பார்த்த அவன் மனைவி அவன் விளையாடவில்லை என்று உணர்ந்தாள்.

மேஜையைத் துடைத்துக் கொண்டிருந்தவள் அதை அப்படியே போட்டு விட்டு வெளிறிய முகத்துடன் கேட்டாள் ""9,499?"

"ஆமாம், ஆமாம். இதோ இங்கே..."

"சீட்டு நம்பர் என்ன வந்திருக்கு?"
"இரு இரு அதையும் தான் பார்க்க‌ணும்.அனா கொஞ்சம் இரு. எப்படியும் நம்ம வரிசை வந்திருக்கு. புரியுதா."


மனைவியைப் பார்த்து அர்த்தமில்லாமல் சிரித்தான். சின்னக் குழந்தை ஒன்று கண்கவரும் பொம்மையைப் பார்த்தவுடன் சிரிப்பது போல.

அவன் மனைவியும் புன்னகைத்தாள். அவளுக்கும் அவன் வரிசை எண்ணை மட்டும் பார்த்து சீட்டு எண்ணைப் பார்க்காமல் சற்றுத் தாமதித்தது பிடித்திருந்தது. ஆஹா! கிடைக்கப் போகும் புதையலைப் பற்றிக் கனவில் திளைப்பது தான் எவ்வளவு இன்பமானது!


"நம்ப வரிசை தான் வந்திருக்கு. நம்ப நம்பராக் கூட இருக்கலாம். ஒரு சான்ஸ்தான்... ஆனா அப்படியே இருந்துட்டா?"

"அய்யோ சீக்கிரம் பாரேன்!"

"கொஞ்சம் பொறு. ஏமாற்றமடைய நமக்கு நிறைய நேரமிருக்கு. மேலேர்ந்து ரெண்டாவது வரிசை. அதனால பரிசுத் தொகை எழுபத்திஅஞ்சாயிரம் ரூபிள்.
அது வெறும் ப‌ணம் இல்லம்மா. முதலீடு, அதிகாரம்! இதோ ஒரு நிமிஷத்துல பார்க்கப் போறேன். இருபத்திஆறாம் நம்பர் மட்டும் இருந்திச்சுன்னா? ஏய்! நாம நெஜம்மாவே ஜெயிச்சிட்டோம்னா?"


கணவனும் மனைவியும் கலகலவெனச் சிரித்து ஓய்ந்து ஒருவரை ஒருவர் மௌனத்துடன் வெறிக்க ஆரம்பித்தனர். அவ்வளவு பணத்தை ஜெயித்து விடக்கூடும் என்ற நினைப்பே அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தியது.
எழுபத்தி ஐயாயிரம் ரூபிள்களுக்குத் தங்களுக்கு என்ன தேவை, அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது, என்ன வாங்குவது என்று அவர்களைக் கேட்டால் தெளிவாக நிச்சயம் சொல்லி இருக்க முடியாது. 9499 என்ற எண்ணையும் 75000 என்ற எண்ணையும் மாறி மாறிக் கற்பனை செய்து கிறங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஐவன் பேப்பரைக் கையில் வைத்துக் கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடக்கத் தொடங்கினான். கொஞ்சம் படபடப்பு அடங்கியதும், பணம் கைக்கு வந்தால் என்ன செய்யலாமென்று நிதானமாக எண்ணமிட‌ ஆரம்பித்தான்.

"நாம மட்டும் ஜெயிச்சிட்டா, நமக்கு ஒரு புது வாழ்வு தொடங்கிடும்; அப்படியே எல்லாம் தலை கீழா. அந்தச் சீட்டு உன்னோடது. என்னோடதா மட்டும் இருந்தா முதல்ல இருபத்தையாயிரத்துக்கு ஒரு எஸ்டேட் வாங்குவேன். பத்தாயிரம் உடனடி செலவுகளுக்காக. வீட்டுக்குப் புது சாமான் செட்டுகள், ஊர் சுத்திப் பார்க்க, கடன்களை அடைக்க.. அப்புறம் மீதி நாற்பதாயிரத்தை பாங்க்ல போட்டு நிம்மதியா வட்டி வாங்கிட்டு இருக்கலாம்."


"ஆமா ஒரு எஸ்டேட் வாங்கினா நல்லாத் தான் இருக்கும்" என்றபடி நாற்காலியில் சாய்ந்தாள் அவன் மனைவி.

"டூலா, இல்லேன்னா ஓர்யோல்ல வாங்கணும். அப்போ தான் அதை டூரிஸ்டுகளுக்கு வாடகைக்கு விட்டா நமக்கு நல்ல வருமானமும் கிடைக்கும்."

அவனது மனதில் மேன்மேலும் செழிப்பான வாழ்க்கை குறித்து வரையறை இல்லாமல் சித்திரங்கள் பெருகத் தொடங்கின. அவற்றிலெல்லாம் தன்னை ஒரு வசதியான கனவானாக, இளமையும் ஆரோக்கியமும் நிறைந்த கவலையில்லாத மனிதனாகக் கண்டான். கோடைக்காலத்தில் வீட்டுக்கு வெளியே சின்னச் சிற்றோடையின் அருகே மரத்தடியில் படுத்திருக்கிறான். அவனது சின்ன மகனும் மகளும் அருகே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 'இன்னிக்கு வேலைக்குப் போக‌ வேண்டாம்; 'இன்னிக்கு ம‌ட்டுமில்ல‌, இனி எப்ப‌வுமே போக‌ வேண்டாம்' என்ற‌ நினைப்பே அவ‌னுக்குச் சொல்ல‌ முடியாத‌ சுகமாக‌ இருக்கிறது. ச‌ற்று நேரம் க‌ழித்து வ‌ய‌ற்காட்டுப் ப‌க்க‌ம் போகிறான். அப்ப‌டியே காட்டுக்குள் காளான் சேக‌ரிக்க‌; இல்லையென்றால் ஆற்றுக்குப் போய் குடியான‌வ‌ர்க‌ள் மீன்பிடிப்ப‌தை வேடிக்கை பார்க்க‌.

அந்தி சாயும் நேர‌த்தில் பூத்துவாலையும் சோப்பும் எடுத்துக் கொண்டு மிக‌ அழ‌கிய‌ ப‌ளிங்கு குளிய‌ல‌றைக்குச் செல்கிறான். சாவ‌காச‌மாக‌ உடைக‌ளைக் க‌ளைந்து சோப்பு நுரைகள் நிறைந்த தொட்டியில் மூழ்கிக் குளிக்கிறான். குளித்த‌ பிற‌கு க்ரீம் ரொட்டிக‌ளும் தேனீரும் சாப்பிடுகிறான். மாலையில் வாக்கிங் போகிறான் அல்லது நண்பர்களுடன் கேளிக்கைக‌ளில் ஈடுப‌டுகிறான்.

"ஆமா, ஒரு எஸ்டேட் வாங்கினா ந‌ல்லாத்தானிருக்கும்" - அவ‌ன் ம‌னைவி அவ‌ன் நினைவுக‌ளைக் க‌லைத்தாள். அவ‌ள் முக‌பாவ‌னையிலிருந்து அவ‌ளும் ஆழ்ந்து க‌ற்ப‌னை செய்து கொண்டிருந்தாள் என்று தெரிந்த‌து.


ஐவ‌ன் இப்போது இலையுதிர்க் கால‌ங்க‌ளைப் ப‌ற்றிக் க‌ன‌வு காண‌ ஆர‌ம்பித்தான். அந்த‌ப் ப‌ருவ‌த்தில் தோட்ட‌த்திலும் ஆற்ற‌ங்க‌ரையோர‌மாக‌வும் நீள‌ ந‌டைக‌ள் ந‌ட‌ப்பான். பின்பு குளிர் அதிக‌மான‌வுட‌ன் வீட்டுக்கு வ‌ந்து ஒரு பெரிய‌ கோப்பை வோட்கா அருந்துவான்; காளான்களும் வெள்ளிரிகாய்களும் சேர்த்துச் ச‌மைத்த‌ க‌றி சாப்பிடுவான். தோட்ட‌த்திலிருந்து பிடுங்கிய‌ கார‌ட்டுக‌ளையும் முள்ள‌ங்கிக‌ளையும் அள்ளிக் கொண்டு குழ‌ந்தைக‌ள் ஓடி வ‌ருவார்க‌ள். பின்பு இவ‌ன் சோபாவில் நீட்டிப் ப‌டுத்துக் கொண்டு ப‌ள‌ப‌ள‌க்கும் அட்டை கொண்ட‌ ஏதாவ‌து வார‌ இத‌ழைப் புர‌ட்டிய‌வாறே தூங்கிவிடுவான்.

இலையுதிர் கால‌த்துக்குப் பிற‌கு க‌டுமையான‌ குளிர் மற்றும் மழைக் கால‌ம் வ‌ருமே. அப்போது எங்கும் போக‌ முடியாது. வீட்டு நாய்க‌ளும், மாடுக‌ளும் கூட‌ச் சோர்ந்து ப‌டுத்திருக்கும். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிட‌க்க‌ வேண்டிய‌து தான். என்ன‌ கொடுமை!

அப்போது தான் க‌ற்ப‌னையை நிறுத்தி ம‌னைவியைப் பார்த்தான் ஐவ‌ன்.
"நான் வெளிநாடு போக‌ விரும்ப‌றேன் மாஷா."

அடுத்து குளிர்கால‌த்தில் போக‌ விரும்பும் நாடுக‌ளைப் ப‌ற்றி எண்ண‌மிட்டான்; இத்தாலி, இந்தியா?!

"நானும் க‌ண்டிப்பா போவேன். ஆனா முத‌ல்ல டிக்கட் ந‌ம்ப‌ரைப் பாரு!"

"இரு.. இரு..."

மீண்டும் குறுக்கும் நெடுக்கும் ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்த‌ அவ‌ன் த‌ன் ம‌னைவியை அழைத்துக் கொண்டு வெளிநாடு சென்றால் எப்ப‌டியிருக்கும் என்று எண்ணினான். த‌னியாகப் போவ‌து ஆன‌ந்தமாக‌ இருக்கும். இல்லாவிட்டால் குடும்ப‌ வாழ்க்கையைப் ப‌ற்றியும் நாளையைப் பற்றியும் பெரிதும் அக்க‌றையில்லாத‌ சில‌வ‌கைப் பெண்க‌ளுட‌ன் சென்றால் ந‌ன்றாக‌ இருக்கும்! ச‌தா குழ‌ந்தைக‌ளைப் ப‌ற்றிய பேச்சும், ஒவ்வொரு பைசா செல‌வையும் க‌ண‌க்குப் பார்க்கும் புல‌ம்ப‌ல்க‌ளையும் த‌விர்க்க‌லாம்.

ஐவ‌ன் த‌ன் ம‌னைவியுட‌ன் ஏதோ ர‌யிலில் ப‌ய‌ண‌ம் செய்வதை நினைத்துப் பார்த்தான். ஒரு பாடு மூட்டை முடிச்சுக‌ள், பைக‌ள் கொண்டு வ‌ருவாள். அத்தோடு 'ர‌யில் பிர‌யாண‌ம் ஒத்துக்க‌லை, த‌லை வ‌லிக்குது, இதுவரைக்கும் எவ்ளோ ப‌ண‌ம் விர‌ய‌ம் ப‌ண்ணிட்டோம்' என்று எதைப் ப‌ற்றியாவ‌து புல‌ம்பிக் கொண்டிருப்பாள். மேலும் ஒவ்வொரு ஸ்டேஷ‌னிலும் சுடு த‌ண்ணீர் பிடிக்க‌வும், தின்ப‌ண்ட‌ங்க‌ள் வாங்க‌வும் நாயாக‌ நாம் ஓட‌ வேண்டி இருக்கும். 'என‌க்குக் கொடுக்கும் ஒவ்வொரு பைசாவுக்கு அநியாய‌ பிசுநாரித்த‌ன‌ம் ப‌ண்ணிக்குவா! டிக்க‌ட் அவ‌ளுதாச்சே. என்னொட‌தில்லையே? த‌விர‌ அவ‌ளைக் கூட்டிக்க்கிட்டு வெளிநாடு போற‌துல‌ என்ன‌ பிர‌யோஜ‌ன‌ம்? அவ‌ளுக்கு அங்கே என்ன‌ வெச்சிருக்கு? ஹோட்டல் ரூம்ல‌யே அடைஞ்சு கிட‌ப்பா. என்னையும் எங்கையும் போக‌ விட‌மாட்டா; ஆமா!'

அப்போது தான் முத‌ன் முறையாக‌த் த‌ன் ம‌னைவிக்குக் வ‌யதாகி அவலட்சணமாகி விட்ட‌தாகவும், தானோ இன்னொரு முறை க‌ல்யாண‌ம் செய்து கொள்ளும் அள‌வு இளமை மாறாமல் இருப்பதாகவும் உண‌ர்ந்தான்.

'ஹூம் இவ‌ளுக்குப் ப‌ண‌ம் கிடைச்சிட்டா, என‌க்குத் தெரியாம‌ ம‌றைச்சிடுவா. அவ‌ சொந்த‌க் கார‌ங்க‌ளுக்கெல்லாம் ந‌ல்லாக் குடுப்பா. என‌க்குத் த‌ர்ர‌துக்கு ரொம்ப‌ அல‌ட்டிக்குவா.'

ஐவ‌ன் இப்போது அவ‌ள‌து உற‌வின‌ரைப் ப‌ற்றி நினைத்துப் பார்த்தான். அவளுடைய மாமா, ம‌ச்சான், அக்கா, த‌ங்கை, அண்ண‌ன் த‌ம்பி மார்க‌ளெல்லாரும் ப‌ரிசு விழுந்த‌ செய்தி கேட்ட‌தும் ஓடோடி வ‌ருகிறார்க‌ள். கூச்ச‌லும் போலி சிரிப்புமாய் பிச்சைக்கார‌ர்களைப் போல் இவ‌ர்க‌ள் வீட்டையே சுற்றிச் சுற்றி வ‌ருகிறார்க‌ள். எவ்வ‌ள‌வு கொடுத்தாலும் திருப்தியாகாம‌ல் திரும்ப‌த் திரும்ப் வ‌ருகிறார்க‌ள். கொடுக்க‌ முடியாதென்று ம‌றுத்தாலோ அடிவ‌யிறு குலுங்க‌ச் ச‌பித்து விட்டுப் போகிறார்க‌ள்.


பிற‌கு த‌ன் உற‌வின‌ர்க‌ளையும் நினைத்துப் பார்த்தான். இவ‌ர்க‌ளைப் ப‌ற்றி முன்பு விருப்பு வெறுப்பு ஏதுமில்லையென்றாலும் இப்போது இவ‌ர்க‌ளை நினைக்க‌வும் அருவ‌ருப்பாக‌ இருந்த‌து. "எல்லாம் ப‌ச்சோந்திக‌ள்."

பார்க்க‌ப் பார்க்க‌ ம‌னைவியின் முக‌மும் விகார‌மாக‌த் தெரிந்த‌து. அவ‌ளைப் ப‌ற்றிக் கோப‌மும் ஆத்திர‌மும் பொங்கி எழுந்த‌து. 'அவளுக்கு என்ன‌ தெரியும் ப‌ண‌த்தைப் ப‌த்தி? க‌ஞ்ச‌ப் பிசுனாறி! அவ மட்டும் ஜெயிச்சான்னா போனாப் போவுதுன்னு என‌க்கு நூறு ரூபிள் த‌ந்துட்டு எல்லாத்தையும் பூட்டி வெச்சுக்குவா."

ஆத்திரத்துடன் மனைவியைப் பார்த்தான். அவளும் அதே வெறுப்பும் ஆத்திரமுமாய் அவனைப் பார்ப்பதைக் கண்டான். அவளுக்கும் சொந்தக் கற்பனைகள், திட்டங்கள் இருந்தனவே! கணவனின் மனவோட்டத்தையும் அவள் அனுமானித்திருந்தாள். தனக்குப் பரிசு கிடைத்தால் முதலில் பிடுங்கிக் கொள்ள நினைப்பவன் அவன் தான் என்று உணர்ந்திருந்தாள். அவ‌ள் க‌ண்க‌ள் அவ‌னைப் பார்த்து, 'அடுத்த‌வ‌ங்க‌ செல‌வில குளிர் காய‌ற‌து ரொம்ப‌ சுக‌மாத்தான் இருக்கும்; நினைச்சுக் கூட‌ப் பார்க்காதே' என்று சொல்வ‌தைப் போலிருந்த‌து.


ஐவ‌னுக்கு அது புரிந்த‌து. ம‌ன‌தில் மீண்டும் வெறுப்பு ம‌ண்ட, அவளை வெறுப்பேற்ற விரும்பி, அவசர அவசரமாய்ப் பேப்பரை எடுத்தான்; நாலாம் பக்கத்தைப் பிரித்து வெற்றிக் கூக்குரலுடன் படித்தான்.

"வ‌ரிசை 9,499. எண் 46, 26 இல்ல‌."

வெறுப்பும் கனவுகளும் ஒருசேர ம‌றைந்து போயின‌. திடீரென்று இருவருக்கும் தங்கள் வீடு இருண்டும் குறுகியும் தெரிந்தது. சற்று நேரத்துக்கு முன் ரசித்துச் சாப்பிட்ட‌ உண‌வு தொண்டையிலேயே நிற்ப‌தாக‌ப் ப‌ட்ட‌து. பொழுது க‌ன‌த்து வெறுமை ப‌ட‌ர்ந்தது.

"என்ன‌ எழ‌வு இதெல்லாம்?" சிடுசிடுக்க‌ ஆர‌ம்பித்தான் ஐவ‌ன். "வீட்ல‌ எங்க‌ பாத்தாலும் குப்பையும் கூள‌முமாய். வீட்டை ஒழுங்காக் கூட்டறதே இல்ல. எங்க‌யாவது வெளிய போய்த் தொலையலாமான்னு இருக்கு. போய் முதல் வேலையா தும்பைச் செடியில தூக்குப் போட்டுக்கப் போறேன்."

ஆன்டன் செகாவ் எழுதிய "The Lottery Ticket" என்ற ருஷ்யச் சிறுகதையின் தமிழாக்கம்.

சென்ஷி

unread,
Apr 29, 2010, 6:26:44 AM4/29/10
to panb...@googlegroups.com

நம்பிக்கையாளன் - ஜெயமோகன்

திடீரென்று ரேடியோ கிர்ர் என்றது. அறைக்குள் இருந்த ஆழ்ந்த அமைதியை அது கிழிக்க அத்தனைபேரும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தனர். இளைஞன் தகாததுசெய்ததுபோன்ற சிறு உடற்குன்றலுடன் அதை நிறுத்தினான்.

‘ ‘ இறைமறுப்பாளர்களின் கருவி ‘ ‘ என்றார் குழுத்தலைவர் வெறுப்புடன். ‘ ‘ அது இறையடியார்களுக்கு ஒருபோதும் உரிய காலத்தில் உதவியது இல்லை ‘ ‘

‘ ‘சாத்தானின் நாக்கு ! ‘ ‘ என்றார் இன்னொருவர்.

‘ ‘ஆனால் இப்போது நமக்கு வேறுவழியில்லை. வெளியுலகத்தொடர்புக்கு இதுமட்டும்தன் இருக்கிறது. ‘ ‘ இளைஞன் திடம்பெற்று மெல்ல சொன்னான். அதை அவன் மீண்டும் மீட்டினான். வெறும் ஒலி மட்டும்தான் கேட்டது .

‘ ‘இந்த ஒலியைக்கேட்டு சொற்கத்துக்கா போகப்போகிறாய் ? ‘ என்றார் ஒருவர். பிறர் புன்னகை செய்தனர்.

சாலமோன் காலத்தையது என்று நம்பப்பட்ட குகை. பாலைவன நடுவே மணற்பாறையில் குடையப்பட்டது. வெளியே எரிந்த கடுமையான பாலைவனவெப்பம் உள்ளே வருவதில்லை. போர்க்கொத்தளமாக ஆக்கப்பட்ட பிறகு கனத்த வெளிச்சுவர்களும் இரும்பு கான்கிரீட் கதவுகளும் பொருத்தப்பட்டு நன்றாக மூடப்பட்டது. உள்ளே அறைகளில் ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பல வருடங்களுக்குப்போதுமான பாதுகாக்கப்பட்ட உணவு , குடிநீர். அது மெய்யிறைப் போராளிகளின் முக்கியமான மறைவிடங்களுள் ஒன்று. அங்கிருந்த ஒன்பதுபேரும் , ஒரு முதிய மதகுரு உட்பட தேர்ச்சிபெற்ற போர்வீரர்கள். பத்துவருடங்களுக்கும் மேலாக நடந்துவந்த உலகப்போரில் ஒவ்வொருநாளும் ஈடுபட்டவர்கள்.

ரேடியோ சட்டென்று மசாகி மொழியில் குழற ஆரம்பித்தது. அனைவரும் அதைச்சூழ்ந்தனர். சொற்கள் ஆங்கங்கே சிதைந்து உருவிழந்திருந்தன. உலோகஒலி கொண்ட குரல்.

‘ ‘ எல்லையற்ற கருணை கொண்ட இறைவனின் திருப்பெயரால் வாழ்த்துகிறோம். முழுமுதல் நாயகன் நாமம் வாழ்க!. அவன் அடியார் வெல்

க! ‘ ‘ குரல் உணர்ச்சிப் பெருக்குடன் கூவியது ‘ ‘ நாம் தோற்கவில்லை. நான் இன்னமும் எஞ்சுகிறோம். எவராலும்வெல்லமுடியாத நம் போராளிகள் பல இடங்களில் பதுங்கியிருக்கிறார்கள்.. இறையருள் நம்முடன் இருக்கையில் நாம் எவராலும் வெல்லப்பட முடியாதவர்கள். இறுதிவெற்றிக்குரியவர்கள் நாமே… மெய்யிறை மார்க்கம் தோற்க இயலாது .அவர்களுக்கு வெற்றி இறைவனால் ஆணையிடப்பட்டுள்ளது…. ‘ ‘

குகையறைக்குள் முழங்கிய உரத்த குரல்களில் அவர்கள் தங்கள் வாழ்த்தொலியையும் போர்க்குரலையும் எழுப்பினர்.

‘ ‘நல்ல சேதி! ‘ ‘ என்றார் தலைவர், பெருமூச்சுடன். ‘ ‘ நாம் காத்திருப்போம்… ‘ ‘

‘ ‘ஆம். நாம் வெல்வோம் ‘ ‘ என்றார் இன்னொருவர்.

‘ ‘ஆனால் வெளியே என்ன நடக்கிறதென்று தெரியவில்லையே ‘ ‘ இளைஞன் சொன்னான்.

‘ ‘பொறு கேட்போம் ‘ ‘

வெகுநேரம் போர்க்குரல்களே ஒலித்தன. ‘ ‘நாம் ஆங்கிலத்தில் ஏதேனும் செய்தி உள்ளதா என்று பார்க்கலாம். ‘ ‘ என்றான் இளைஞன்.

‘ ‘வாயைமூடு ‘ ‘ என்றார் தலைவர். ‘ ‘அவர்கள் கக்கும் பொய்களை நாம் ஏன் கேட்க வேண்டும். இறைவன் அங்கீகரித்த ஒரே மொழியான மசாகி அல்லாத அனைத்துமே பொய் மொழிகள்தான்… ‘ ‘

இளைஞன் ஒன்றும் சொல்லவில்லை. ரேடியோவையே பர்த்துக் கொண்டிருந்தான். ஒருவர் ரொட்டி பரிமாறினார். அவர்கள் மெளனமாக உண்டனர்.மெல்லும் ஒலி மட்டும் கேட்டது.

மீண்டும் இயக்கப்பட்டபோது ரேடியோ ஒலிமாறுபட்டது. மெய்யிறைப் போராளிகளின் தலைமை நிலைய அறிவிப்பு என்று குரல் எழுந்தது. பிறகு அவரது மெல்லிய இனிய குரல் ஒலித்தது .

‘ ஒரே இறைவனின் திருப்பெயரை வாழ்த்துவோம். அவனது அளவிலாக்கருணையும் எல்லையற்ற வல்லமையும் நமக்கு துணையிருக்கும். அனைவருக்கும் குதா- அலா-சமீஷ் போராளிகளமைப்பின் வாழ்த்துக்கள். நாம் மிக மிகச் சிக்கலான நிலையில் இருக்கிறோம். நமது போர் முக்கியமான திருப்புமுனையை அடைந்துள்ளது. இறைமறுப்பாளர்களான பொருள்வெறிகொண்ட அற்பர்கள் நம் மீது சாத்தானின் மகத்தான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதுவரை இருபது ஹைட்ரஜன் குண்டுகள் வெடிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லபப்டுகிறது. இப்பூமியின் மையமான புனித சா-உம்-துல் மீது நடந்த தாக்குதலில் அப்பகுதியே முழுமையாக அழிந்தது என்று தகவல்கள் சொல்கின்றன. இறைநம்பிக்கையாளர்களின் நாடுகள் அனைத்தும் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மக்கள் ஏறத்தாழ அனைவருமே முழுமையாக அழிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. பெரும்புகைப்படலத்தால் பூமி முழுமையாக மூடப்பட்டுள்ளது. தூசியாலான வானளாவிய நாய்க்குடைக் கோபுரங்கள் மட்டுமே எங்கும் தெரிகின்றன . வானம் இளஞ்சிவப்பு நிறமாகவும் கருமை கொண்டும் காணப்படுகிறது. நாட்கள் இருண்டு விடியவில்லை. பாதுகாப்புஅறைகளுக்குள் எஞ்சிய சிலர் மட்டுமே பிழைத்திருக்கிறோம். நமது கடமை என்ன , பெரும்கருணையாளனாகிய இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பதென்ன என்று தெரியவில்லை. நாம் அவன் சொற்களுக்காக காத்திருப்போம்… இந்தப்போருக்கு ஒரேமுடிவுதான். நம் இறைவனின் ஆட்சி உலகில் நிறுவப்படுதல். இப்பூமியை அவன் ஆகத்- சும் -ஆவ் ஆக ஆகமாற்றுதல். இந்த போருக்கு ஒரே ஒரு முடிவுதான் இருக்க இயலும். இறையாட்சி வருமை. இறைநம்பிக்கியாளர்கள் முழுவெற்றி அடைந்து இறைமறுப்பாளர்களை முற்றிலும் அழித்தல். இறைவனுக்கான போரில் சமரசமே பெரும் பாவம் என்று நம் புனித மறை அறைகூவுகிறது. ஆகவே நாம் தோற்கமாட்டோம். நாம் அடங்க மாட்டோம். நாம் இன்னும் இன்னும் இன்னும் போராடுவோம்… ஆம் தோழர்களே, நமக்கு இன்னும் போர் முடியவில்லை. காத்திருப்போம்… ‘ ‘

ஒலி தேய்ந்தது.

பெருமூச்சுகளுடன் அனைவரும் தொய்ந்தனர்.

‘ ‘அப்படியானால் உண்மைதான். புனித சா-உம்-துல் அழிந்தது. சாத்தானின் ஏவலாட்கள் அதைச்சாதித்துவிட்ட்னர்… ‘ ‘

‘ ‘அதை நம் புனிதமறைநூல் தெளிவாகவே முன்கூட்டிச் சொல்லியிருகிறது. ‘ ‘ என்றார் முதிய மதகுரு. அவர் குரல் நிதானமாகவே இருந்தது ‘ ‘ … நாற்பத்தியேட்டாம் அத்தியாயம் முழுக்க பூமியின் அழிவைப்பற்றி விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. கைசாமத் ஃபலவா என்றால் இறுதிநாளின் அடையாளம். பத்து முக்கிய அடையாளங்கள் தென்படும் என்று புனிதமறை சொல்கிறது. முன்னோடிகளான மூன்று தீர்க்கதரிசிகள் விண்ணிலிருந்து மண்ணுக்குத் திரும்புவார்கள். ஒரே மாதத்தில் மூன்று சந்திரக்கிரகணங்கள் தோன்றும்… ஒன்று மேற்கில் ஒன்று கிழக்கில் ஒன்று புனித சா-உம்-துல் மீது… ‘ ‘ கிழவர் சொன்னார் . ‘ ‘ அதை நாம் கண்களால் கண்டோம் நம்பிக்கையாளர்களே. சென்ற மாதம் சந்திரன் இருண்டு மறைவதை நானே இருமுறை கண்டேன். … ‘ ‘

‘ ‘ஆமாம்…ஆமாம் ‘ ‘ குரல்கள் ஒலித்தன ‘இறைவனுக்கு மகிமை !புனிதநூலுக்கு மகிமை! ‘ ‘

இளைஞன் மெல்லிய குரலில் ‘ ‘ அது அவர்களின் பெரும் வேவுகோள்கள் உருவாக்கிய நிழல் மறைப்பு… ‘ ‘ என்றான்

‘ ‘ எப்படியானாலும் நாம் கண்டது கிரகணம்தானே ? ‘ ‘ தலைவர் கேட்டார்.

இளைஞன் பெருமூச்சு விட்டான்.

‘ ‘ இப்படிச் சொல்லப்பட்டுள்ளது… அதன் பிறகு இனிய சொற்கள் பேசும் கொடூரமான மன்னன் ஒருவன் பெரும்படையுடன் கிளம்பி நம் சா-உம்-துல் மீது படையெடுப்பான். அவனுக்குத் துணையாக நரகத்திலிருந்து ஊறிவரும் கருநீலப்புகை ஒன்று பூமிமீது பரவும். அப்புகையை ஆயுதமாகக் கொண்டு அவன் இறை நம்பிக்கையாளர்களை முழுமையாக தோற்கடிப்பான்… அதன் பின் புனித சா-உம்-துல் அழிக்கப்படும்…. ‘ ‘

‘ ‘இப்போது நடந்திருப்பது அதுதான் ‘ ‘ என்றார் தலைவர். ‘ ‘ பெரும் புகை! ‘ ‘

மதகுரு தொடர்ந்தார் ‘ ‘ …. இனி நடப்பதும் சொல்லப்பட்டுள்ளது. புனித சா-உம்-துல் அழிந்ததும் பூமிமீது கற்பூரமணம் ஒன்று பரவும். பட்டுச்சல்லாபோன்ற இனிய குளிருள்ள ஓர் அலையாக அது வீசும். அது கடும் விஷத்தின் அலை. இறைநம்பிக்கையாளர்கள் ஒருவர்கூட எஞ்சாமல் அதில் அழிவார்கள். நம் இறைவனின் பெயரைச்சொல்ல ஒருவர் கூட எஞ்சமாட்டார்கள். கடைசி இறைநம்பிக்கையாளன் அழிந்ததும் இப்பூமி முற்றிலுமாக இறைமறுப்பாளர்களால் ஆனதாக ஆகிவிடும். உடனே இறைமன்னிப்பின் வாசல் மூடிவிடும். அதன்பிறகு கொள்ளும் இறைநம்பிக்கையால் எந்தவிதமான பயனும் இருக்காது. மறுநாள் தொடங்கி நூற்றிஇருபதுநாள் சூரியன் உதிக்காது. எங்கும் அரை இருளே சூழ்ந்திருக்கும். இறைமறுப்பாளர் தங்கள் அறிவால் அதை வெல்ல முயல்வார்கள் . அதில் அவர்கள் தோல்வி அடைவார்கள். அவர்கள் செய்வதறியாது விழிப்பார்கள். அப்போது மண்ணுக்குமேல் உள்ள கிசாபத் அம்னா என்ற நரகத்திலிருந்து கொடும் சாபம் ஒன்று பூமிமீது விழும். மண்ணுகு அடியில் உள்ள சமாபத் அம்னா என்ற நரகத்திலிருந்து இன்னொரு பெரும்சாபம் மக்கள் மீது எழும். அப்போது எல்லா உலக நியதிகலும் நிலைமாறும். ஒட்டகங்களுக்கு பைத்தியம் பிடிக்கும். ஆறுகளில் நெருப்பு ஓடும். கடல்கள் எல்லைகளை இழக்கும். ‘ ‘ மதகுரு மெல்லிய குரலில் அவ்வரிகளை பாடினார்

‘ ‘பின்பு கிழக்குத்திசையிலிருந்து கடுமையான சுவாலைகொண்ட நெருப்பு அலையலையாகக் கிளம்பிவந்து உலகை மூடும். அது இப்பூமியின் எஞ்சியுள்ள அனைத்தையும் முற்றாக அழிக்கும். ஒரு உயிர்கூட மிஞ்சாது. அதன் பிறகு சொற்கத்தின் வாசல்கள் திறக்கும். நம் இறுதி இறைதூதர் தன் நீதியின் உருவிய உடைவாளுடன் மீண்டும் கிளம்பிவருவார். அன்று கல்லறைகள் திறக்கும். இறந்த அனைவரும் எழுவார்கள்.அவர் முன் தங்கள் பாவபுண்ணியங்களுடன் அனைத்து மக்களும் நிற்பார்கள். நம் அருமறை இறுதிநிற்றல் என இதை விளக்குகிறது தோழர்களே. நாம் தேடியவை நமக்களிக்கபப்டும். பாவங்களைத்தேடியவன் நகரகநெருப்பை அடைவான். நற்செயல்களை தேடியவன் சொற்கத்தை அடைவான். கூலி இல்லாத செயலென்று இப்பூமியில் ஏதுமில்லை என்கிறது புனித மறை ‘ ‘

அறைக்குள் அனைவரும் கைகளை மேலே தூக்கி இறைவனை நோக்கி அடைக்கலம் கோரிக் கூவினார்கள்.

மதகுரு கண்மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.

இளைஞன் மெல்ல ரேடியோவைத் தூண்டினான். அது கரகரவென ஒலித்தபடியே இருந்தது.

‘ ‘ஏன் அப்படி கத்துகிறது சைத்தானின் பெட்டி ? ‘ ‘

‘வானமெங்கும் கதிர்வீச்சு இருக்கிறது ‘ என்றான் இளைஞன்

ரேடியோ மெல்ல உயிர்பெற்றது. ஆங்கிலக்குரல் குழறிகுழறிப்பேசியது ‘ ‘ஆம், உலகம் முழுக்க வாழும் மக்களுக்கு இது கடுமையான துயரத்தை அளிக்கக் கூடும் என்பதை மறுப்பதற்கில்லை. அனால் ஜனநாயகத்துக்காகவும் மனித உரிமைக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடும் மனிதாபிமானச் சக்திகளுக்கு வேறு வழியே இருக்கவில்லை. வல்லமைமிகுந்த நூறு அணுகுண்டுகள் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டு நம் முக்கியநகரங்களை நோக்கி ஏவப்படவுள்ளன என்று ஒருங்கிணைந்த பாதுகாப்பமைப்பின் துணைக்கோள் உளவுகருவிகள் அடையாளம் கண்டன. அந்த ஏவுகணைகள் கிளம்பியதை உணர்ந்த பிறகே நமது தானியங்கிக் கருவிகள் நமது ஏவுகணைகளை கிளம்பச்செய்தன. ஜனநாயகப் பாதுகாப்புக் கூட்டுப்படைகளின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி பதினேழு உயரழுத்த, மிதக்கதிர்வீச்சு ஹைட்ரஜன் குண்டுகள் வெடிக்கப்பட்டுள்ளன. பேரழிவுகளை உருவாக்கியபடி பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்த மிகக்கொடுமையான போர் இத்தாக்குதலுடன் முழுமையான முடிவுக்கு வந்தது. எதிரிநிலைகள் அனைத்தும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. அவர்கள் தரப்பில் போரிலீடுபட்ட தேசங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டுவிட்டன. கடந்த பத்தாண்டுகளாக கடுமையான உயிரிழப்பையும் அழிவையும் உருவாக்கிவந்த மாபெரும் உலகப்போர் முடிவுக்குவந்ததன்மூலம் மீண்டும் சமாதான சகவாழ்வுக்கு வழிபிறந்திருப்பதாகவும் இது ஆறுதலுக்குரிய விஷயம் என்றும் கூட்டுநடவடிக்கைத்தலைவர் குறிப்பிட்டார்…. ‘ ‘

‘ ‘ முட்டாள்கள். இறைவனுடன் அவர்கள் போர்செய்கிறார்கள். அழிவுதான் அவர்களுக்கு…. ‘ ‘ தலைவர் சொன்னார்.

‘ ‘இறைவனுக்கு எதிரானவர்களுக்கு ஒருபோதும் வெற்றியும் அமைதியும் இன்பமும் சுவர்க்கமும் இல்லை என்று புனிதநூல் சொல்கிறது ‘ ‘ முதிய மதகுரு சொன்னார்.

ரேடியோவில் எச்சரிக்கைக்கான கருவி மீண்டும் ஒலித்தது ‘ ‘ அறிவிப்பு ! எச்சரிக்கை! உலகம் முழுக்க உள்ள மக்களுக்கு கதிரியக்க எச்சரிக்கை. மரணத்தையும் பிற கடுமையான உடற்சீரழிவுகளையும் உருவாக்கும் கதிரியக்கம் உலகம் முழுக்க பரவியுள்ளது. ஏறத்தாழ பதினைந்து நாட்களுக்குக் இக்கதிரியக்கம் அபாயகரமாக இருக்கக் கூடும். ஆகவே பாதுகாப்பறைகளில்வாழும் அனைவரும் உள்ளேயே வாழும்படிக் கோரப்படுகிறார்கள். நிலத்தடி நீரை மட்டுமே அருந்தவேண்டும். வெளியுலகக் காற்று நேரடியாக சுவாசிக்கப்படலாகாது. வெளியில் உள்ள எப்பொருளும் தீண்டப்படக்கூடாது. வெளியே உள்ள விளைபொருட்கள் முற்றாக தவிர்க்கப்படவேண்டும். உலகின் பல்வேறுநாடுகளில் பாதுகாப்பற்ற வெளிகளில் வாழ்ந்த மக்கள் அழிந்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் பூமிமீதுள்ள பாக்டாரியாக்கள் கதிர்வீச்சால் அழிந்துவிட்டமையால் அவர்களின் உடல்கள் அழுக வாய்ப்பில்லை. பலத்த உயிரிழப்பு நிகழ்ந்துவிட்டது என்பது துயரத்துக்குரியதேயாகும். ஆனால் வேறு வழியில்லை. உலகில் முழுமையான சமத்துவ சகவாழ்வும் அமைதியும் நிகழவேண்டுமானால் இந்த சூழ்நிலையை நாம் சந்தித்தே தீரவேண்டும்…. இது தவிர்க்க முடியாத இழப்பு. சமாதானத்துக்காகவும் எதிர்கால நன்மைக்காகவும் நாம் இந்த தியாகத்தைச் செய்தேயாகவேண்டியிருந்தது… ‘ ‘

‘ ‘அந்தக் கதிர்வீச்சுக்கு கற்பூரவாசனை இருக்கிறதா ? ‘ ‘ என்றார் மதகுரு. அனைவரும் திடுக்கிட்டனர்.

‘ ‘அது மென்பட்டுசல்லா போல குளுமையானதாக இருக்கும்….நம் புனித நூல் தவறாகசொல்லாது ‘ ‘ என்றார் கிழவர் மீண்டும். ‘ ‘அதன் பெயர் ஊகாத். இறைவனின் நன்மூச்சு ‘ ‘

இளைஞன் பெருமூச்சுடன் ரேடியோவை திருப்பினான்.

‘ ‘மூடு அதை ‘ ‘ என்றார் தலைவர். ‘ ‘ நாம் இறைவனை பிரார்த்தனைசெய்வோம்… ‘ ‘

அவர்கள் மெளனமாகத் தொழுதனர். பிறகு சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொண்டனர்.

பின்னிரவில் மீண்டும் அவன் ரேடியோவை இயக்கினான். மசாகி மொழியில் ஒரு மதகுருவின் குரல் ஒலித்தது. அவனால் அதை உள்வாங்க முடியவில்லை. பிறகு உலகமொழிகள் அனைத்திலும் அதே அறிவிப்பு மீண்டும் மீண்டும் ஒலித்தது. அதற்குள் அனைவரும் விழித்துக் கொண்டனர். மீண்டும் மசாகி மொழி ‘ ‘ புனித மறை சொல்லிய இறுதிநிற்றல் நாள் வந்துவிட்டது. கைசாமத் ஃபலவா ! கைசாமத் ஃபலவா ! கைசாமத் ஃபலவா! இறைநம்பிக்கையாளர்களே, கற்பூரமணமும் மென்பட்டின் குளுமையும் கொண்ட ஊகாத் வீசுகிறது. கைகளை தூக்கி நம் படைத்தவனை துதித்தபடி நாம் வெளியே இறங்குவோம். வானை நோக்கி அழைத்து அவன் அருளைக்கோருவோம். இனி நம்பிக்கையாளர்கள் எவருமே எஞ்சலாகாது ‘ ‘

‘ ‘ இறைவனுக்கு மகிமை. படைத்தவனே பெரியவன் ‘ ‘ என்று அக்குழு உரக்க வீரிட்டது. ‘ ‘ கிளம்புங்கள்! கிளம்புங்கள்! ‘ ‘ .

இளைஞன் நம்ப முடியாது தவித்தான்.. ‘ ‘ இல்லை! இல்லை! இது…. ‘ ‘ என்று தடுமாரினான் ‘ ‘ இருங்கள் ‘இந்த அறிவிப்பு பொய்யாக இருக்கலாம். சாத்தானின் தூதர்களின் சதியாக இருக்கலாம் ‘ ‘

‘ ‘ அப்படி இருந்தாலும் அது அவர்களுக்கு அழிவே ‘ ‘ மதகுரு சொன்னார் ‘ ‘ இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் அழிந்தால் அதன் பின் இப்பூமி ஒருகணம் கூட எஞ்சாது .அது அருமறையில் சொல்லப்பட்ட அழியா வாக்கு… கிளம்புங்கள்… ‘ ‘

‘ ‘நாம் போராடுவோம்…ஆம் . நாம் போராடவேண்டியவர்கள். நாம் தற்கொலைசெய்யக்கூடாது. நாம் போராடுவோம்… ‘ ‘

‘ ‘ இதோபார். திருமறையின் கட்டளைக்குக் கட்டுப்படுவதே நமது போராட்டம் . கிளம்பு ‘ ‘ தலைவர் கிளம்பினார்

‘ ‘ முட்டாள்தனம். இது கதிர்வீச்சு. பதினைந்துநாளில் சரியாகிவிடும்… ‘ ‘

‘ ‘ அப்படியானால் நீ வரவில்லையா ? ‘ ‘ என்றார் மதகுரு

‘ ‘இல்லை. முடியாது. இது முட்டாள்தனம் ‘ ‘

‘ ‘உன்னை நாங்கள் தடுக்கவில்லை. எங்களைப்பொறுத்தவரை மனித ஆயுதங்களால் நாங்கள் இதுவரை நடத்திய புனிதப்போர் முடிந்துவிட்டது. இறைநம்பிக்கையாளனைப்பொறுத்தவரை அவன் வாழ்வின் ஒரே நோக்கம் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரே கடமை இறைமறுப்பாளர்களுடன் போர்புரிவதே… இனி நம்மால் போராட முடியாது. போரிடாமல் நாம் வாழ்வதிலும் பொருள் இல்லை. ஆகவே இனிமேல் செய்வதற்கு ஒன்றுதான். போரை இறைவனே நேரில் நடத்த விட்டுவிட்டு அவன் முன் சரண் அடைவது…. ஆம் வேறு வழி இல்லை. உனக்கும் வேறு வழி இல்லை ‘ ‘

‘ ‘புரியாமல் பேசவேண்டாம்…கதிரியக்கம் சீக்கிரமே முடிந்துவிடும்…சொல்வதைக் கேளுங்கள்… ‘ ‘

‘ ‘இப்போது உலகம் முழுக்க இறைநம்பிக்கையாளர்கள் வெளியே இறங்கி ஊகாத் காற்றை அனுபவித்து சொற்கத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இன்னும் சில மணிநேரத்தில் இறைநம்பிக்கையாளர்கள் முழுமையாக அழிந்துவிடுவார்கள்… நீ மட்டும் எஞ்சி என்ன செய்யப்போகிறாய் ? ஒருவேளை நீமட்டும் எஞ்சினால் உனக்காக இறைவனின் தாக்குதல் தாமதிக்கக் கூடும். நீ உயிர்வாழும் காலம்வரை இறைவன் காத்து நிற்கக் கூடும். ஆறுமாதமோ ஒருவருடமோ ஏன் ஐம்பது வருடமோ…அதைத்தான் நீ விரும்புகிறாயா ? கருணையற்ற லாபவெறியர்கள் அதுவரை தாங்கள் அடைந்தவற்றை சுகித்து வாழ அனுமதிக்கப் போகிறாயா ? ‘ ‘

‘ ‘இதெல்லாமே பைத்தியக்காரத்தனம். இது ஊகாத் அல்ல. கதிரியக்கம்… ‘ ‘

‘ ‘நீ சாத்தானின் மொழியைப் பேசுகிறாய்… ‘ ‘ என்றார் தலைவர். ‘ ‘ இறைவன் உனக்கு நல்வழி காட்டட்டும் . உனக்கு அமைதி உருவாகுக ‘ ‘

அவர்கள் ஒவ்வொருவராக வெளியே சென்றனர். அவன் அவர்களை தடுக்க பலவிதமாக கூவி அரற்றினான். பின்பு அழுதபடி முகத்தைப்பொத்திச் சுருண்டுப் படுத்துக் கொண்டான். ஒரு கணம் எழுந்து பின்னால் ஓடினாலென்ன என்று தோன்றியது.ஆனால் அவனால் முடியவில்லை. அவனுக்கு அக்கணமே இனிய ஒளிமிக்க வானமும் பசுமைபரவிய பூமியும் அகக்கண்ணில் எழுந்துஒளள்ளம் விம்மியது. தேம்பித் தேம்பி அழுதான். அப்படியே தூக்கமயக்கத்தில் ஆழ்ந்தான்.

பலவகையான பிரமைகளும் குழம்பிய நினைவுகளும் மனதை நிறைக்க அர்த்தமின்றி அரற்றி அழுதபடி அவன் குகையறைக்குள் விழுந்துக் கிடந்தான். அந்த நெருக்கடியை தவிர்க்க விழைந்த அவன் மனம் இனிய பகற்கனவுகளைக் கற்பனைசெய்துகொண்டது. மென்மையான வெயில்பரவிய பாலைவனக்காடுகளில் அவனும் எட்டு சகோதரர்களும் தந்தையும் மின்னும் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்றார்கள். வரையாடுகளை சுமந்துகொண்டு ஊர் திரும்பின்பார்கள். இரவுகளில் ஊரே சேர்ந்தமர்ந்து ஒரே ரொட்டியை நாற்புறமும் பிய்த்து உண்டு ஒரே கோப்பையில் சமாக் குடித்தார்கள். அலாங் பாடலைப் பாடி ஆடினார்கள். அவனுடைய தங்கை தன் இனிய சிறுமுகத்தைவெட்கத்தால் சிவக்கவைத்தபடி அவனிடம் ஏதோ சொன்னாள். அவனது பிரியமான ஒட்டகம் துலீன் தாடையை அசைத்தபடி திரும்பி தன் நிழலை ஆர்வத்துடன் பார்த்து முனகிக் கொண்டது. எங்கோ மயாம்ப் வாத்தியத்தின் இனிய ஓசை. புதிய பாலைக்காற்றின் புழுதிவாசனை… அவனது கிராமம். அங்கு எப்போதுமே வறுமை இருந்தது, ஒருநாளும் ஏற்றதாழ்வு இருந்ததில்லை…

விழித்துக் கொண்டபோது அவன் உடனடியாக நாள்களைக் கணக்கிட ஆரம்பித்தான். பகலிரவுகள் தெரியவில்லை. ரேடியோவை திருப்பியபடியே இருந்தான். திடாரென்று ஒரு நிலையத்தில் அன்றைய தேதி சொன்னார்கள். இன்னும் ஏழு நாட்கள் கதிரியக்கம் இருக்கும்…. ஏழுநாட்கள் ,ஏழுநாட்கள்…. ஏழு பகல்கள், ஏழு இரவுகள்….அதன் பின், அதன் பின், பூமி ! வானம்…! அவ்விரு சொற்களையும் அவன் உடலின் ஒவ்வொரு செல்லும் அறிந்தது . பாலைவனத்தில் மழைபோல அவனது வரண்ட ஆத்மா மீது அச்சொற்கள் பொழிந்தன. பூமி! வானம்…

அவன் அவ்வப்போது சாப்பிட்டான். வெகுநேரம் தூங்கினான். விழிக்கும்போது அறைக்குள் அவர்கள் இருப்பார்கள், எல்லாம் கனவென தெளியும் என்று எண்ணினான். பின் மனமுடைந்து அழுதான்.

ரேடியோ மீண்டும் மீண்டும் அந்த அறிவிப்பை சொல்லிக் கொண்டிருந்தது. அது பதிவுசெய்யப்பட்டு நிரந்தரமாக ஓடவிடப்பட்ட அறிவிப்பு என்று அவன் சிலநாட்கள் கழித்துதான் புரிந்துகொண்டான். ஐந்து நாட்கள். கடவுளே . நெருங்கிவிட்டது. இன்னும் ஐந்து நாட்கள்…

எழுந்து ரேடியோவை திருப்பினான். ஆங்கில உரையாடல் ஒன்றைக் கேட்டான்

‘ ‘…. ஆம். போர் முடிந்துவிட்டது. அவர்கள் எவருமே எஞ்சவில்லை. ஒருவர் கூட . வரிசை வரிசையாக அவர்கள் தங்கள் இறைவனைநோக்கி கைநீட்டிக் கூவியபடி பாதாள அறைகளைவிட்டுவெளியெ வந்து கதிரியக்கத்தை உண்டு அழிந்தார்கள். வெற்றிதான் இல்லையா ? முழுவெற்றி ! கொண்டாடவேண்டியதுதான் இல்லையா ? டாக்டர் சாம், எதற்காக நான் கொண்டாட வேண்டும் ? ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் குடிசைகளில் வாழ்ந்த கோடிக்கணக்கான மக்கள் முற்றாக அழிந்துவிட்டார்கள். புழுக்கூட்டங்கள் போல. கோடிகள். எண்ணிக்கையே அபத்தம். உலக மக்கள்தொகையில் எழுபது சதவீதம் அழிந்துவிட்டது… பூமியின் சுமை குறைந்தது என்று சொல்லும் பொருளியல் நிபுணர்கள் இருக்கக் கூடும்.. . ஆனால் மிருகங்கள் பூச்சிகள் நுண்ணிய உயிர்கள்… அவை இல்லாமல் உயிர்வாழ்வே நடக்க முடியாதே.. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏறத்தாழ எல்லா மக்களும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். கீழை நாடுகளில் அங்கேவாழ்ந்த உயர்குடிகள் மற்றும் அதிகாரவற்கம் பாதாள அறைகளில் பாதுகாப்பாக இருக்கிறது. அவர்கள் இதுநாள் வரை ஐரோப்பாவுக்கு விசுவாசமாக இருந்தார்கள். பதிலுக்கு பலமான அறைகளைக் கட்டித்தந்து அவர்களுக்கு நாம் கைம்மாறு செய்தோம்… இதுவரை உலகை ஆண்டவர்கள் இப்போது ஆளப்பட எவரும் இல்லாமல் எஞ்சியிருக்கிறார்கள். பாதாள அறைகளில் கதிரியக்கம் விலகும் நாளை எதிர்நோக்கியிருக்கிறார்கள். அந்நாள் ஒரு புதிய கிறிஸ்துமஸாக இருக்கக் கூடும்… ஆனால் டாக்டர் சாம் இனிமேல் என்ன நடக்கும் ? பூமியின் உயிர்ச்சமநிலை என்ன ஆகும் ? இந்த கதிரியக்கக் கொந்தளிப்பின் பின் விளைவுகள் என்ன ?ரசாயனமாறுதல்கள் எப்படிப்பட்டவை ? உண்மையான பேரழிவு இனிமேல்தான்… ஆம், இப்போதுதான் அழிவே தொடங்கியிருக்கிறது… ‘ ‘

‘ ‘ நீங்கள் உணர்ச்சிவசப்படுகிறீர்கள் டாக்டர் விஷ்ணு. போர் என்றால் அழிவுகள் இருக்கக் கூடும். அவை நம் நரம்புகளைத்தாக்கக் கூடும்… ‘ ‘

‘ ‘இருக்கமால். இன்றைய உலகம் கோரும் எஃகாலான நரம்புகள் என்னிடம் இல்லை என்றே நானும் எண்ணுகிறேன். என்னைபோன்ற அறிவியலாளர்களுக்கு இன்று குரலே இல்லை. இதேபோல ரேடியோக்களில் புலம்புவதுடன் அவர்கள் நின்றுவிட வேண்டியதுதான். டாக்டர் சாம், ‘நாம் பகிர்ந்த ரொட்டி ரொட்டியை விட மேலானது ‘– கான்ராட் ஐக்கின் எழுதிய கவிதைவரி. எனக்கு மிக மிகப் பிடித்தவரி அது. இந்த பூமி பகிரப்படுகையில் இனிதாகும் ஒரு ரொட்டி . ஆனால் பகிரப்படாதபோது அது கொடும் விஷம். அரை நூற்றாண்டாக நாம் அடக்கிச்சுரண்டி வாழும் விதிகளை உண்டுபண்ணி இதை அழித்தோம்…ஆம் அழித்துவிட்டோம்…முற்றாக ‘ ‘

‘ ‘என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள் ? ‘ ‘

‘ ‘பூமியின் நுண்ணுயிர்கள் பல அழிந்துவிட்டன. ஆனால் பூமிக்கு அடியில் இன்னும் ஏராளமான நுண்ணுயிர்கள் உள்ளன .அவை பூமிக்குமேல் வந்து பல்கிப்பெருகலாம். காற்றுவெளிக்கு மேலே உள்ள நுண்ணியிர்கள் பூமிக்குவந்து பல்கிப்பெருகலாம். அவை உருவாக்கும் நோய்களை இப்போது கற்பனைசெய்வதே சிரமம். வெளிப்புலத்தின் கதிர்வீச்சு சமநிலை மாறுபாட்டால் பலவகையான சக்திகொந்தளிப்புகள் நிகழலாம்… ‘ ‘

அவன் பித்துபிடித்த கண்களுடன் அவ்வறையின் முகட்டுவளையை நோக்கி அமர்ந்திருந்தான். மெல்ல அவனுக்கு காலஇட உணர்வு முற்றாக அழிந்துவிட்டது. அவன் மனம் தன்னை தக்கவைத்துக் கொள்வதற்காக அந்த தற்காலிக மனப்பிரமையை உருவாக்கிக் கொண்டது. அவன் இறந்தகாலத்தில் தன் பாலைவனக்கிராமத்தில் உயிர்ப்புடன் வாழ்ந்துகொண்டிருந்தான்.

பிறகு அவன் விழித்துக் கொண்டபோது வெகுநேரம் ஏதும் புரியவில்லை. பின்பு பாய்ந்து ரேடியோவை எடுத்தான். அதை வெறிகொண்டவன் போலத் திருப்பினான். இன்னும் எத்தனை நாள் … வானமே பூமியே…

இசையும் உற்சாகக் குரல்களும் எல்லா புள்ளிகளிலிருந்தும் கொப்பளிக்கக் கேட்டான். ஐரோப்பிய மொழிகளெல்லாம் குதூகலித்துக் கொண்டிருந்தன. லட்சக்கணக்கான மக்களின் களியாட்ட ஒலிகள்…

‘ ‘ ….நாடெங்கும் மக்கள் ஒரு கொடும்கனவின் முடிவை கொண்டாடுகிறார்கள். இன்று எவருமே தங்கள் வீடுகளுக்குள் இல்லை. நகரங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று தோன்றுகிறது. தெருக்களில் மதுவெள்ளம் ஓடுகிறது. மக்கள் ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக நடனமிட்டபடி எங்கும் சுற்றிவருகிறார்கள். கதிரியக்கம் முற்றகா இல்லை என்பதைக் காட்டும் வண்ணமாக நடிகையர் பலர் தெருக்களின் நிர்வாணமாக வந்து நடனமிட்டனர். அதிபர் இரண்டுமூறை மக்களிடையே உரையாற்றினார். தன் வரலாற்றுச்சிறப்பு மிக்க பேருரையில் இழப்புகளை நாம் மறக்கலாகாது என்றார் அவர். அவை கசப்பானவை ஆனால் தவிர்க்க இயலாதவை. பூமி முழுக்க சமாதானமும் சமத்துவமும் உருவாக இப்போர் தேவையாயிற்று. இதோ போர் முடிந்து நாம் எஞ்சியிருக்கிறோம். நாம் வென்றிருக்கிறோம். வெற்றியைக்காண நாம் இருக்கவேண்டும் என்பது இறைவனின் ஆணை. விண்ணகங்களை ஆளும் பிதாவின் ஆணையை எந்த சக்தியால் வெல்ல முடியும் ? நாம் வென்றோம். இரவு என்றால் விடிவும் உண்டு என்பதை நாம் கண்டோம். இந்த நாளை விடியல்நாள் என்று கொண்டாடுவோம். இது சமாதானத்துக்கான நாள். ஒற்றுமைக்கான நாள். இனி இதுவே உலகின் முதல்பெரும் திருவிழா நாள் என்றார். கதிர்வீச்சில் உலகின் உயிர்ச்சமநிலையே மாறிவிட்டது என்றும் பலவகையான அழிவுகள் காத்திருக்கின்றன என்றும் சில அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். பூமியே அழியக்கூடும் என்றார்கள். அது அறிவியல். நம் கடவுளின் ஆசியை நாடுவோம். தேவனாலே கூடாத்து என்று ஏதுமில்லை என்று நம் புனித நூல் கூறுகிறது. அவரது முன் நாம் மண்டியிடுவோம். அவர் அருளால் சோதனைகளை கடந்துசெல்வோம். ஒருபோதும் தோற்கமாட்டோம்.ஏனெனில் வெற்றிக்காக தேர்வுசெய்யப்பட்டவர்கள் நாம் என்றார் அதிபர்… ‘ ‘

ரேடியோவில் பேரிசை மலையூற்றில் இருந்து நீர் போல பீச்சியடித்தது. ப்ல்லாயிரம் மக்களின் உற்சாகக் கூக்குரல்கள். ஆரவாரங்கள். இசை. அதை திருப்பி திருப்பி கேட்டான். எல்லா புள்ளிகளும் ஒரேபோல உற்சாகத்தில் அதிர்ந்துகொண்டிருந்தன.

அவன் கண்ணீருடன் தலை குனிந்து அமர்ந்திருந்தான். திடாரென்று எழுந்து ‘ ‘நானா ? ‘ ‘ என்றான். ‘ ‘ ஒருவேளை … ‘ ‘

பின்பு ஆவேசத்துடன் ஓடிகதவுகளைத் திறந்து வெளியே வந்தான். வெளியே மெல்லிய இருள் இருந்தது. கிழக்குத்திசை இளஞ்செம்மையுடன் சுடர்விட்டது. அதைப்பார்த்தபடி அவன் உடல்நடுங்க நின்றான். பின்பு ஆவேசத்துடன் தன் கைத்துப்பாக்கியை எடுத்தான். வாய்க்குள் நுழைத்து ‘ ‘ கருணைக்கடலான இறைவா! ‘ ‘ என்று வீரிட்டபடி விசையை இழுத்தான்.

சென்ஷி

unread,
May 3, 2010, 3:41:13 AM5/3/10
to panb...@googlegroups.com

தினம் ஒரு பூண்டு

ஆபிதீன்

சுமார் ஐநூறு மீட்டர் தூரத்திலிருந்த மரத்தின் கிளையில் தாவிக்கொண்டிருந்த ஒன்றை அது ஒரு குரங்குதானென்று கண்டுபிடித்து என் மனைவியிடம் சொல்லுமுன்னரே அவள் , 'ஹை...ஆம்புளெ கொரங்கு ' என்று பரவசமாக என்னிடம் சொன்னாள் முன்பு. அத்தனை கூர்மையான கண்கள் அவளுடையது. அந்தக் கண்கள் இப்போது கடுமையான கோபத்தில் சிவந்திருந்தன.

பெண்களின் கண்களே இப்படித்தானாம். சக்திப்பிழம்பாகச் சொல்வார்கள் ஹஜ்ரத். 'ஒரு செகண்ட்தான் பாப்பா. ஒங்க மூக்கு முடி, கம்கட்டு மஞ்ச பூத்துக்கிறது, கால்நவம் வெட்டாம இக்கிறதுண்டு எல்லாம் தெரிஞ்சிடும். ஒரு படத்துலெ சொல்லுவான்: 'அஹ தூங்கிக்கிட்டிக்கிறாஹா. நாம வெளையாடிக்கிட்டிக்கிறோம். அஹ முழிச்சாஹா.... ? நாம தொலெஞ்சோம் 'ண்டு. அவ்வளவு பவர் இக்கிது. அவ பேசுறதுலாம் இல்ஹாம். துனியாவெ அலஹாக்குக்குறதே கொலந்தெயும் பொம்பளெயும்தாம்ப்பா... ஒண்ணு தெரியுமா ? எதுக்கும் கட்டாயப்படுத்த முடியாது அவளுவளெ.. ஏதோ பக்கத்து வூட்டுக்காரி எதுத்த வூட்டுக்காரி சொல்லிக்கொடுத்துட்டா....பால் கொடுக்கனும் பாய் விரிக்கனும்ண்ட்டு. அவளுவளும் ஏமாந்துபோயி ஏத்துக்கிட்டு.. ஏதோ ஓடுது. அதுவரைக்கிம் சலாமத்து '

இப்படியும் பெண்கள் ஆண்களிடம் கருணை காட்டிவிடக்கூடாது. ஆனால் ஹஜ்ரத்தின் பேச்சில் உண்மையும் இருக்கிறதுதான். அஸ்மாவின் பார்வையில் நான் எரிந்து விடுவேன் போல்தான் இருந்தது. பொதுவாக அபூர்வமாகவே அவளுக்குக் கோபம் வரும். அபூர்வம் இனி தினமும் வரும் போலிருக்கிறது.

ஏதோ பாடப் போகிறாள் என்னை. திட்டுவதை , பாடுவது என்பது ஊர் வழக்கம். பாட்டம் உடுறது... சாபம் வாங்கித் தொலைத்த சபராளியை என்ன சொல்லிப் பாடினாலும் தகும்தான். pond+frog+plop ? அவன் எதுவும் அல்ல.

வலா ஹவ்ல வலா குவ்வத்த...

பொறுத்துப் பொறுத்துப்பார்த்துதான் அஸ்திரத்தை வீசியிருக்கிறாள். எழுந்து கண்ணைக் கசக்கிக்கொண்டிருந்த அதே நொடியில் வீழ்ந்தேன் வேறு வழியில்லாமல். பரம்பைசா இல்லாத முஸாபரைப் பார்த்து பால்பவுடர் வாங்கச் சொல்கிறாளே... அப்படி ஒன்றும் நான் பிச்சைக்காரனல்ல. முழுதாக ஒரு பதினோரு பைசா நாணயம் என் சட்டைப் பையில் இருக்கத்தான் செய்தது. இந்த செல்வச் செழிப்பு இருந்தும் கூட அனீஸின் பசியைத் தீர்க்க முடியாதது என் குற்றமா அரசாங்கத்தின் குற்றமா ? வேலை தராத பா-ரதமாதா, என்னை இந்தப் பாடு படுத்துகிறாயே...

அஸ்மாதாவிடம் அமைதியிழந்து சொன்னேன்: 'இவ்ளோபெருசா வச்சிக்கிட்டு ஏன்புள்ளே இல்லேங்குறா ? கொடேன் '. சுரப்புக்கும் அதற்கும் சம்பந்தமில்லையென்ற விஞ்ஞானமெல்லாம் தெரியாத கொழுப்பெடுத்தவன் நான்.

'சுத்தமா நிண்டுடிச்சி மச்சான்.. நீங்களும் அப்பப்ப வாயை வச்சிப்புடுறீங்க.. என்னா பண்ணித் தொலையிறது ? ' - படபடப்பாகச் சொன்னாள். என் அசட்டு இளிப்பைப் பார்த்து அத்தோடு விடாமல் , 'பெருசா இருந்தா வரணும்டு சட்டமா ? பக்கத்துவூட்டு நானாவுக்கு 'பலாப்பளம் ' பெருசாத்தான் இக்கிது ' என்று பொரிந்தாள். 'மர்ஹபா ' என்றேன். நொடியில் சுதாரித்துக்கொண்டு , '..ண்டு சொல்றாஹா.. ' என்று தொடர்ந்தாள். 'அஹலுக்கு புள்ளையை காணோம். நான் பெத்த சீதேவி மவனுக்கு இவ்வளவு நோவுனை.. ' என்று முடித்து அழுதாள். 'மர்ஹப்தைன் ' என்று பாராட்டைப் பன்மையாக்கினேன். செளதியிலிருந்தவனல்லவா ? ஊரில் 'ரெட்டெ மர்ஹபா ' என்பார்கள் எளிமையாக. 'கொட்டெ மர்ஹபா ' என்பதுதான் இன்னும் பொருத்தமாயிருக்கும் என்று நினைக்கிறேன்.

குடித்துவிட்டு உளறும்போதும் துக்கத்தை பிழியப்பிழிய அழுது தீர்க்கும்போதும் உண்மை வெளிப்படும் என்று சொல்வார்கள். உண்மைதான் போலிருக்கிறது. பார்த்தால் கூட பலாப்பழம் இனிக்குமே.. முள்தோல் போர்த்திய 'மூன்றுமுடிச்சு ' காட்டி வேதனையிலும் முறுவலிக்க வைத்தீர்களே நானா , நீர் வாழ்க. அஸ்மா , உன்னைச் சொல்லி குற்றமில்லை. கொல்லைசுவர் இடிந்து விழுந்திருப்பதில் நானும் கூடப் பார்த்தேன். 'கொல்லையிலெ போவா ' என்று ஏகத்திற்கு நாம் சின்னவயதில் திட்டுவாங்கியதன் பலனால்தான் இம்மாதிரி பெரும் கொடைகளைக் கொள்ளையடித்து நம் கொல்லை கொடுக்கிறது போலும்.

பெரிதாக இருப்பதாலேயே சிறப்பு வந்துவிடாதுதான். என்னைக்கூட ஊரில் பெரிய அறிவாளி என்றுதான் ஒருவர் கருதுகிறார். அட, நான் அல்லங்க அது. எதற்கு வீண்வம்பு என்று யாருடனும் பேசாமல் ஒதுங்கிப் போனால் இப்படியா ? பேசினால் உளறிவிடுவேன் என்ற பயத்தில்தானே அப்படி வாயைப் பொத்துகிறேன். அப்போதும் விடுவதில்லை.

'ரொம்ப நாளா சத்ததையே காணோமே ' என்று கேட்டார் அவர்.

'பாங்குதான் சொல்லனும் அதுக்கு '

'அல்லாஹூ அக்பர், ஒங்கட்டயா பேசமுடியும் ? ' என்று நகர்ந்து விட்டார் அவரும் பேச்சில் அப்பைசப்பையல்ல. வறுமை ஏறஏற வாய்க்கொழுப்பு அதிகமாகுமோ ?. தர்ஹா மார்க்கெட்டில் அவரை 'உல்லான் வாங்கலையாங்கனி.. ? ' என்று கேட்டிருக்கிறான் கடைக்காரன். 'உள்ளானுக்கு உல்லான். நான் இல்லான் ' - இவர். 'ஜோக் ' அடிப்பதல்ல, கொல்லாபுரம் மனிதர்களின் இயல்பே அதுதான். என்னமோ சொல்ல வந்தேனே...ஆங்...நான் அறிவாளியாகத் தெரிவதற்குக் காரணம் அகலமான என் நெற்றியாம். இந்த சாமூத்திரகா லட்சணப்படிப் பார்த்தால் அஸ்மாவுக்கு கூடத்தான் நெற்றி அகலம்.

தமாஷூக்குச் சொன்னேன். 'மஹ்சரின் கண் 'ணாக ஐந்தாவதோடு வீடடக்கப்பட்டாலும் அஸ்மா அறிவாளிதான். என்னைப்போன்ற பிழைக்கத்தெரியாத மடையனுக்கு அவள் கிடைத்தது பேரதிர்ஷ்டம். 'புராக் மாதிரி இக்கிது அந்த புள்ளே ' என்று ஊர்ப்பெண்களை பராக்கு பார்க்க வைத்த பேரழகி. ஜிவ்வென்று தூக்கிக்கொண்டு பறக்கும் குதிரை. Onewayல் ஊர் வந்திருந்த நான் கொஞ்சம் கூட முகம் சுண்டக் கூடாதென்று நினைப்பவள். அவள் மட்டும் இல்லையென்றால் கஷ்டங்கள் வந்திருக்குமா ? 'கஷ்டங்கள் வருவது புடம்போட. நாம் யார் என்று தெரிய ' என்பது ஆன்மீகத்தின் பாலபாடம். ஆன்மீகமே கஷ்டம்தானே என்கிறீர்களா ? அதைப்புரிவதும் ஆன்மீகம்தான் - குருவை நிராகரிப்பவர் பெரும் குருவாவதுபோல.

குரு என்றதும் கக்கூஸ் ஞாபகம் வருகிறது. கக்கூஸ் இல்லாத வீடு ஒரு வீடா ? முடியெடுப்பதற்கு மட்டுமல்ல கக்கூஸ், முக்கிக்கொண்டே முடிவெடுக்கவும்தான். முதுகுத்தண்டை நேராக வைத்துக்கொண்டு குதத்தைச் சுருக்கி விரிக்கச்சொல்லும் அந்தத் தரீக்கா ரகசியங்களெல்லாம் இப்போது வேண்டாம். எடுப்புக் கக்கூஸை எடுத்தெறிந்து எங்கள் மானம் காக்க தீர்மானம் போட்டாள் அஸ்மா. மாமிக்கு கால்வலியென்று ஸ்பெஷலாக யூரோப்பியன் கக்கூஸ் போட்டதில் பாதி காசு போயிற்று. W.Cயின் மேல் வெளிநாட்டு கம்பெனி பெயர் DURR என்று - Uக்கு மேல் இரண்டு புள்ளிகளுடன் - இருந்ததில் மாமிக்கு வெள்ளைக்காரி போல ஒரு மிதப்பு. அவர்கள் போய் வரும்போதெல்லாம் மிதக்கும். 'ஏன்டி , flush செய்ய மாட்டாஹலா ஒங்க உம்மா ? ' என்று அஸ்மாவிடம் கேட்டால் , 'செஞ்சிப்பாஹா மச்சான்; அஹ பீக்கு வெயிட் பத்தலே போலக்கிது ' என்று சொல்லிக் கொண்டேயிருந்தாள். இதற்குமா செலவு செய்வது ? 'ஒலக்கையெ முழுங்கட்டும் ' என்று சொல்லிவிட்டு மீதியிருந்த மூவாயிரம் ரூபாயில் காரைக்கால் போய் கம்ப்யூட்டர் கற்றேன். திறமை வளர்ந்தால் சந்தர்ப்பம் தானாக வருமென்பார்களே...அதனால்தான். அந்தப் பெரும்பிசாசு அந்த நேரத்தில்தான் எங்கள் ஊர்ப் பக்கம் வந்திருந்தது. இப்படியெல்லாம் செய்வதற்குப் பதிலாக மிருகத்தின் உடல்பலத்தையும் வேட்டையாடும் லாவகத்தையும் பெற்றிருந்தேனென்றால் எதையாவது பிடித்தோ அடித்தோ லட்சங்கள் சம்பாதித்திருக்கலாமோ ? தெரியவில்லை. இப்போது புலம்பிப் புண்ணியமுமில்லை.

சவுதி அராம்கோவிலிருந்து திருடிவந்த - கறுப்புத்திரையில் பச்சை எழுத்துக்கள் வரும் - அந்த ஒரே ஆயுதத்தை வைத்து அந்த ஆள் சார்லஸ்பாபேஜின் சகாமாதிரி அலட்டினாலும் நான் கொஞ்சம் கற்றுக்கொண்டேன் என்றே சொல்ல வேண்டும். முக்கியமாகக் கற்றது , எப்படி முட்டாள்தனமாக நாம் செலவழிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் , மானிடரை 'உர்ர் 'ரென்று முறைத்துப் பார்க்கும் உலகக்கலையில் தேர்ந்தேன். இதற்குக் காலைதோறும் போய்வர பஸ் செலவு ? அஸ்மாதான் கொடுத்தாள்.

மாலைநேரக் கடைத்தெருவில் கமிஷன் வேலை பார்த்து நான் கொடுத்த காலணாவில் , 'குண்டும் இல்லாம மருந்தும் இல்லாம ' குடும்பத்தை ஓட்டுவதற்கு அவள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. பரிசாக அவளுக்கு நான் கொடுத்தது , இரவுநேரத்தில் , 'தொப்பித்தலையன் ' என்று அவள் செல்லமாக அழைக்கும் என் 'துப்பாக்கி 'யிலிருந்து வந்த தொடர் குண்டுகள்தான். உடல் சரியில்லாத சமயங்களில் 'ஊசி ' போடச்சொல்வாள். அவ்வளவுதான். 'சே, இதுவா.. ' என்றால் பிரிவின் கொடுமை உணர்ந்த மனைவியின் நோக்கில் பாக்கனும்ங்க... 'உம்மாவெ பிரிஞ்சி வாப்பா, ஒன்னெப் பிரிஞ்சி நான் ' என்று காத்து பிரிஞ்சிக்கிட்டே கவிதை வாசிப்பதெல்லாம் பத்தாது. முப்பது வருடம் தொடர்ந்து சபரில் இருந்தால் -ஆமீன்- முப்பது மாதம் மனைவியுடன் சேரலாம். நல்லபிள்ளையாக மாதம் இருபது என்று அதைக் கணக்கிட்டால் கூட மொத்தத்தில் ஆறுநூறு முறைதான் மனைவியை மருவலாமென்றால் என்ன மயிரு வாழ்க்கை இது ? அனுபவித்திருக்கிறீர்களா ? இடக்கரலடக்கல் பற்றி மட்டும் இளித்துக் கொண்டு சொல்ல வந்து விடுவீர்கள். எல்லாம் தொங்கிப்போன வயதில் , குறியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, 'அஸ்மா, சரியா சொன்னா ஒனக்கு பத்து மார்க். லெஃப்ட்லெ வுலுவுமா ரைட்லெ வுலுவுமா ? ' என்று நான் பந்தயம் கட்டப் போகும் காலத்தை நினைத்தாலே பகீர் என்கிறது. அஸ்மாக்கள் தோற்கவே மாட்டார்கள்.

செளதியிலிருந்தபோது , 'ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் அசந்து குசுநாறிப்போய் பெண்டாட்டியைச் செய்வார்கள். நாங்கள் ஊர் வந்தால் ஒட்டுமொத்தமாக சேர்த்து ஒரேமாதத்தில் போடுவோமாக்கும் ' என்று மேதாவி மாதிரி நான் கடிதம் எழுதியதற்கு நண்பன் ரகுதான் செருப்பாலடித்த மாதிரி பதில் எழுதினான்.

நல்லா இருக்கேடா நீ சொல்றது.. ஒண்ணு செய், ஏன் தினமும் பேலனும் ? அதையும் ரெண்டு வருஷம் சேர்த்து வச்சி ஊர் வந்து ஒரேயடியா பேலுங்க.

இன்னும் அந்த வாசகம் மறக்கவில்லை.

அதற்காகத்தான் செல்லக்கிளி alias வெட்டுக்கிளி அத்தனை முக்கியத்துவம் கொடுத்தாள் இப்போது . செமபோடு. அவள் உடல் தந்த நிம்மதி இந்த ஜென்மத்திற்கும் போதும். அத்தனை வகைகள். கலவி ஒன்று போதும் கவலை மறக்க . இதில் Top : #89தான். 'விஷயத்தை ' பரஸ்பரம் சும்மா பார்த்துக்கொண்டே இருப்பது. ஒரே ஒரு கஷ்டம், மறதி அநியாயமாக வரும். பார்த்ததாகத் தெரியாது. மறுபடிமறுபடிப் பார்ப்போம்.

'பொண்டாட்டியோட படுக்குறதை சாதாரணமா நெனச்சிடாதீங்க. அதை வுட ரூஹானியத் , இபாதத் கிடையாது. சரியா செய்ய முடியாத காரணத்துனாலதான் அதுக்குள்ள லாபத்தை அடையமுடியாம போவுது உங்களாலெ.. ' என்பார்கள் ஹஜ்ரத் - தன் சீடர்களிடம். ஒரு பாட்டும் வரும் உற்சாகமாக :

'உச்சந் தலையிலு முகங்கண்ணிலு

முவந்த இருகன்னங் குழிதழும்

இச்சையுட னிருவிலாபுறமு

மிசைந்த தனமிரண்டு மிடை நடுவும்

பச்சமுடன் றெப்பு ழரையல்குலும்

பரிந்து நாவு கொண்டாட்டி நீட்டி

யச்சமின்றியே யமுதம் வாங்கி

யருந்தும் பெரியோர்களமலாகுமே ' (*3)

அமல்... கல்யாணமான ஹஜ்ரத்துகளின் கானாப்பாட்டே தனிதான். வக்கிரமோ உக்கிரமோ , தஸவ்வுஃப் தெரிந்தபிறகு தவறு செய்யக்கூடாது. அதுவும் நக்கலாக எழுதுபவன். ஆனால் இப்போது அமல் அல்ல , அமுல்தான் தேவை. அரேபிய மருத்துவத்தில் அற்புதப் பங்கை வகிக்கும் தேனைச் சுவைத்தும் தேனீக்கள் கொட்டின. உவாங் வேண்டியிருந்தது எதற்கும்.

யுவாங்சுவாங்கைகூடப் பார்த்து விடலாம், இந்த 'உவாங்உவாங் 'ஐப் பார்ப்பது அத்தனை கஷ்டம். உவாங் என்றால் ஊரில் பணம். மலாய் பாஷை. 'ஆப்பாபியாங் ஓராங் ஆப்பையெ தூக்கிட்டு ஓட்றான் ' என்பார்கள் என் வாப்பா வேடிக்கையாக. உண்மையிலேயே முப்பது வருஷம் ஆப்பையைத் தூக்கிக்கொண்டு நெருப்பில்தான் நின்றார்கள் கோலாலம்பூரின் மஸ்ஜித்இந்தியா ஹோட்டல்களில். என் சீதேவி வாப்பா....

என்ன செய்வதென்று புரியவில்லை. சொந்தங்கள் , கடைத்தெரு என்று எல்லோரிடமும் கடன் வாங்கியாகி விட்டது. துபாய் கஃபாலத் விசாவை வாங்கி இதோஅனுப்புகிறேன் அதோ அனுப்புகிறேன் என்று ஒரு நண்பன் இழுத்தடித்துக் கொண்டிருந்தான். பணத்திற்கு எப்படித் தோது பண்ணுவதென்று தெரியவில்லை. உம்மாவின் முகமோ எரிமலையாய் இருந்தது. அப்படி அவர்கள் முகம் காட்டினால்தான் ஃபிரான்ஸில் தட்டு கழுவி பணம் அனுப்பும் தம்பிக்குப் பிடிக்கும். என் பங்காக மாதப்பணம் கொடுத்து மாதங்கள் பலவாகிவிட்டன. ஆயினும் தொடர்ந்து பகல் சாப்பாடை மட்டும் உம்மா வீட்டில்தான் சாப்பிட்டேன். 'உம்மா என்றழைக்காத உயிரில்லையே.. உம்மாவை வணங்காமல் உயர்வில்லையே.. ' என்று உயிரைவிட்டுப் பாடினேன் காசுதாஸாக. பாட்டா ? யாருக்கு வேணும் ? நோட்ட தா மவனே..

கல்யாணமாகாத மூத்த தங்கச்சியால் அன்போடு வைக்கப்படும் தட்டின் சத்தம் நாளுக்கு நாள் அதிகரித்தது. தாய்சொல்லைத் தட்டக்கூடாது. வெறும் தட்டை வைத்தாலும் சாப்பிடு. திட்டைப் பொருட்படுத்தாமல் அங்கே கோபித்துக்கொண்டு பகல்வேளையில் மனைவியிடம் போனால் என்னால் அவளுக்கு மேலும் செலவு அதிகரிக்குமென்று தவிர்த்தேன். கடன் வாங்கியாவது காடை பொறிப்பாள் அஸ்மா. என் 'காடை 'க்கு ரொம்ப முக்கியம். அஸ்மாவின் உம்மாவும் முணங்க ஆரம்பித்தார்கள். மகளின் நகைகள் வட்டிக்குப் போவதும் விற்கப்படுவதும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. என்ன செய்வது ? அந்த நகைகளுக்கும்தான் பிடிக்கவில்லை. அஸ்மாவை செய்வதைத்தவிர வேறு ஏதாவதும் நான் செய்தாக வேண்டும். என்ன செய்ய ?

அஸ்மாவிடம் புலம்பினால் 'அல்லாஹ் இக்கிறான் ' என்கிறாள் பெரிய அவுலியா மாதிரி. அட, யார் இல்லையென்றது ? அல்லஹூ சமது.. எந்தத் தேவையுமற்றவன். மனிதர்களைக் காப்பாற்றும் தேவை கூட அவனுக்குக் கிடையாது. தன்னைக் கேடயமாக வைத்துக்கொண்டு பிழைக்கும் முஃப்திகளின் பரிந்துரையில் , எழுத்தாளர்களின் தலைக்கு மேலே ஃபத்வா கத்திகள் தொங்கினால் மட்டும் பரம இன்பம். கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் பாலுக்கு நாயாய் அலைபவர்களல்ல என்றா ? 'நானோ என் நபியோ அப்படி சொல்லலையேப்பா.. ' என்று அவனும் புலம்பலாம். அவன் படும் கஷ்டம் சொல்லி மாளாது. சரி, அதைவிடு அஸ்மா, உனக்கு என்ன வேண்டும் இப்போது ? பால்பவுடர் . செரிமானத்தை lock செய்யாத செரிலாக் அல்ல , அமுல். ஆறுமாதம் வரை அதுதான். எப்படியாவது வாங்கி வந்து கொடுக்க வேண்டும். அவ்வளவுதானே ?

'காசுக்கு எங்கேடி போவேன் ? '

'வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபிbல்லாஹ்.. போக்கு காட்டாம புள்ளைக்கி மாவுடின்னுக்கு வளியெ பாருங்க. ஹூம்.. ' - முகத்திலடித்தாற்போல சொன்னாள் அஸ்மா.

பெரிய அரபுக்காரி என்ற நினைப்பு... ஆனால் வாக்கியத்தின் அர்த்தம் தெரியாமலேயே சொல்கிறாள். சங்கடம் வரும்போதெல்லாம் , மகத்துவமிக்க அல்லாஹ்வின் புகழை இப்படித்தான் ஊர் பாடுகிறது. 'அல்லாஹ்வைத் தவிர எந்த ஆற்றலும் யாருக்கும் இல்லை ' என்று அர்த்தம். இல்லாபில்லாஹி= அல்லாஹ்வைத் தவிர. இதைக் கொல்லாபுரம் ஆலிம்ஷாக்களிடம்தான் கேட்டறிந்தேன். வேறு ஒரு அரபி வாக்கியம் சொல்லி அதற்கு அர்த்தம் கேட்டபோது இது கிடைத்து விட்டது. எது தெரிந்து என்னாகப் போகிறது, எனக்குத் தெரிய வேண்டியது அஸ்மாவின் கோபத்தை எப்படித் தணிக்க வேண்டும் என்பதுதான்.

டெலிஃபோன், டி.வி என்று அவள் கேட்பதற்கெல்லாம் நான் ஏதாவது சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருந்ததில் கோபம் வரத்தான் செய்யும். நான் என்ன செய்வேன் ? அப்போது அதெல்லாம் பெரிய மனிதர்கள் வீட்டில்தான் எங்கள் ஊரில் இருந்தது.

பாவம், கோபப்படக்கூடாது அவள்மேல். பால்கொடுக்கவெல்லாம் கட்டாயப்படுத்த முடியுமா ? 'ஒட்டகத்தின் அம்பாரியிலிருந்தாலும் கணவன் கூப்பிட்டால் மனைவி வரவேண்டும் ' என்ற ஹதீஸைப் படுக்கைக்குப் பயன்படுத்தவே பதறும்போது , பால் நின்றுபோனவளிடம் பாய பைத்தியமா ? பெண்களின் அத்தியாவாசியக் கடமையா இது ? வேறுவேலையற்ற வானவர்கள் விடியும்வரை வைதால் வைது விட்டுப் போகட்டும். நான் சொல்ல மாட்டேன். வானவர்களை விட மனிதன் உயர்ந்தவன் என்று குறிப்பாகச் சொல்கிறது இறைமறை(*1).

அந்தக்கால அரபுநாட்டில் பால்கொடுக்கவே தனியாக செவிலித்தாய்கள் இருந்திருக்கிறார்கள். நாயகத்திற்கு கொடுக்கவந்த ஹலீமாவின் வற்றிப்போன மார்பகம் கூட வற்றாத ஜம்ஜம்-ஆக மாறி அமுதம் சுரந்ததும் பக்கத்தில் படுத்திருந்த கிழட்டு ஒட்டகையின் மடு கூட பருத்ததும் வரலாறு. 'பெண்மணி ஆமினா பெற்றிடு தவமணி ஹலிமா வின்பால் அருந்திய மன்மணி 'யான நாயகமா நாமெல்லாம் ? இன்னல்லாஹ வ மலாயி கத்தஹூயுஸல்லூன அலந்நபிய்யி யா அய்யுஹல்லதீன் ஆமனூஸல்லூ அலைஹிவ ஸல்லிமூ தஸ்லீமா (*2). 'கரடுமுரடான ' சிறுகதைக்குள் நாவல் எழுதக் கூடாதென்பது விதியென்பதால் தொடராமல் விடுகிறேன்.

வெளியாளை வைத்து ஏற்பாடு செய்யலாம். என் சொந்தக்காரர் ஒருவருக்கு வீட்டு வேலைக்காரி பக்கிரிச்சிதான் பால் கொடுத்தாளாம். வளர்ந்தபிறகு அவர், பால்கொடுத்தவளின் மகளையே பதம் பார்த்தாரென்றாலும் பாசம் மட்டும் மாறவில்லை. அஸ்மா வீட்டில் வேலைக்காரி கிடையாது. என்மேல் அவ்வளவு நம்பிக்கை. அடுப்படிவேலைக்கு உதவுகிறேன் என்று ஒரு கிழவி எப்போதாவது வரும். அஸ்மாவின் உம்மாவைச் சொல்லவில்லை , கோபித்துக் கொள்வார்கள். தன் துணிகளைத் துவைக்கும்போது அப்படியே காற்றில்லாத நீள பலூனாகத் தொங்கும் தன் முலைகளையும் தரையில் விட்டு அலசிப்பிழிந்து முதுகுப்பக்கம் போட்டு காயவைக்கும் முத்திமுறுவுன கிழவி அது. நானாவது கொடுக்கலாம் என்றாலோ பாழும் இந்த இயற்கை பெரும் வஞ்சனை செய்து விட்டது. இயற்கையை வெல்லவே மனிதன் பிறந்திருக்கிறான். அவன் பால்பவுடரைக் கண்டுபிடித்தான்.

தாய்ப்பாலுக்கு இருக்கிற நோய்எதிர்ப்பு சக்தி , அதைக் கொடுக்கும்போது பிள்ளைக்கும் தாய்க்கும் உருவாகும் விவரிக்க இயலாத உறவு , பால்பவுடரில் கிடையாது என்கிறார்கள். எனக்கு இதில் நம்பிக்கையில்லை. என் உம்மாவுக்கும் எனக்குமுள்ள உறவே சாட்சி. சாலியா , சதக்குப்பை என்று லேகியம் கிண்டி சாப்பிடாமலேயே திடனாக இருந்த உம்மா , எனக்கு நாலு வயது வரை தாய்ப்பால் கொடுத்தார்கள். எதற்கும் ஒரு பாதுகாப்புக்கென்று வாங்கிவைத்த மாவுடின்னுக்கு வேலையே இல்லையாம். எனக்கிருக்கும் எழுபத்தெட்டு நோய்கள் இருக்கட்டும், வந்ததும் வளர்ந்திருப்பதும் உறவா ? துறவு. தாய்ப்பால் குடிக்கும் பிள்ளைகள் மற்றபிள்ளைகளைவிட புத்திசாலிகளாக இருக்கும் என்பதும் சரியில்லை. உலகத்தில் நான் ஒருவன் மட்டும் இருந்தால்தான் அது உண்மையாகும். எதிலுமே உண்மை கிடையாது என்று தத்துவம் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை. அனீஸூக்கு இப்போது பால் வேண்டும். அதை வாங்கப் பணம் வேண்டும். பணம்தான் உண்மை. ஆன்மிகமெல்லாம் அப்புறம்தான்.

அஸ்மா பக்கமும் இதில் குற்றம் இருந்தது. என் உம்மாவிடம் போட்ட சண்டைகளைச் சொல்லவில்லை. சண்டையில்லாமல் மருமகளா ? ரகுவின் படித்த மனைவி எழுதியிருந்த ஒரு பாட்டிவைத்தியத்தை அவள் ஆரம்பத்திலிருந்தே கடைப்பிடிக்காததைச் சொல்கிறேன். அது ஒன்றுமில்லை, அற்பத்திலும் அற்பமான பூண்டு. அதை Elixre of Life என்றிருந்தது மீனாட்சி. அண்டவாதம்,கபால வாயு, மூலவாயு போன்ற முன்னூற்றிருபது நோய்கள் போக்குவது தவிர பால் சுரக்கவும் அற்புதமான மருந்தாம் அது. பாலில் நாலைந்து பூண்டுப் பல்லைப் போட்டு சிறிது ஏலப்பொடியும் சேர்த்துக் காய்ச்சி கொடுத்து வந்தால் பால் நன்றாக சுரக்குமாம். பூண்டு தின்னும் தாயின் பால் , குழந்தைகளுக்கு ருசியாகவும் இருக்கும் என்று சொல்லியிருந்தது அது. Allium sativum , பைபிள், சீனா A.D. 510 , வெஸ்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிட்டியில் ஆஸ்டின் எஸ்.வீஜ், பர்ஜர், ஜாக் பென்ஸ்கி ஆகிய விஞ்ஞானிகள் ஈடுபட்ட புற்றுநோய் ஆய்வு , செலீனியம் ஜெர்மானியம்... இதெல்லாம் அதிகப்படி. சரிதான், இஞ்சிப்பூண்டு நிறையக் கொடுத்த எந்தக் கறிப் பெரட்டல் ஆனாலும் போட்டு சுழாட்டும் அஸ்மாவுக்குப் பிடிக்க வேண்டுமே... 'பால்லெ கொதிக்கவச்சா கெழங்குமாதிரி இக்கிம் ' என்றார்கள் மாமி. உவ்வே... 'நாலஞ்சி பல்லை சுட்டாச்சும் திண்ணுடி ' என்றும் சொன்னார்கள். அதற்கும் மறுத்துவிட்டாள். இறைவனின் கருணையை நினைத்து என் காதுகள் அசைந்தன. அதிகம் அசைந்தால் தங்களை முகரவைத்து விடுவான் என்று நிறுத்திக்கொண்டன.

பூண்டின் நாற்றம் எனக்கும் பிடிக்கவே பிடிக்காது. பெயரே முதலில் சரியில்லையே... Stinking Rose. எனவே 'A garlic a day keeps everyboby away ' என்பதில் முழு உடன்பாடு - சின்னவயதிலிருந்தே.

அப்போதெல்லாம் மலேயாவிலிருந்து மீன் எண்ணெய் மாத்திரைகள், பூண்டு மாத்திரைகள் பாட்டில்பாட்டிலாய் வரும் என் உம்மா வீட்டுக்கு. மீன் எண்ணெயாவது பரவாயில்லை. குத்தும் இந்தப் பூண்டின் நெடி... சகிக்காது. அலறவைக்கும் யுத்த நெடியிலும் மலக்குவியல்களுக்கு நடுவேயும் மனிதர்கள் வாழும் பல இடங்களின் கொடூரத்தைப் படித்தும் கொஞ்சம் பார்த்தும்கூட இந்த சாதாரணப் பூண்டுக்கு இத்தனை அருவருப்படைவது என் நாற்றத்தைச் சொல்லவே சொல்கிறது. ஆனாலும் என்ன, பூண்டு நாற்றம்தான். நாயகத்தை எனக்கு பிடித்துப் போனதுகூட 'பச்சைப் பூண்டு , வெங்காய நாற்றத்தோடு -பள்ளிக்கு- வராதீர்கள் ' என்ற ஹதீஸ்தான் காரணம் என்று நினைக்கிறேன். அடுத்த மனிதர்களின் சிறுமுகச்சுளிப்பைக் கூட அளந்த எங்கள் அருமை நாயகம். 'மஹா லெளகீக தந்திரி ' . எங்கள் ஊர் கவிஞர், 'இருட்டில் இருந்தான் இறைவன் - நபி இங்கே பிறந்திடும் முன்பு ' என்பார். தன் வீட்டில் மின்சாரமே இல்லாத நிலையிலும் அப்படிப்பாட எவ்வளவு அன்பு வேண்டும்.. அல்லது தன்னையே இறைவனென்று சொல்லிக்கொண்டாரா ? இருக்கலாம். இந்த சூஃபிஸம் படாத பாடு படுகிறது.

அந்த நாயகம் பிறந்த மண்ணில் , பின்னர் நாய்படாத பாடு நான் பட்டதற்கு ஆலிவ் எண்ணெயில் ஊறிய பச்சைப் பூண்டை மென்றுகொண்டே இருந்த ஒரு அரபியும் காரணம். புராதன எகிப்தியர்கள் பூண்டை வணங்கினார்கள், கிரேக்க ஒலிம்பிக் வீரர்களுக்கு அது பெரும் சக்திப்பிழம்பாக இருந்தது என்றெல்லாம் அவன் சொல்வான். தான் தொழப்போவாததற்காகவும் இருக்கலாம். அதிசயமாகப் படித்தவன் இல்லையா ? சம்பளம் கேட்டால் மட்டும் வாயை 'ஃப்பூ ' என்று ஒரு ஊது. ஏய், உன் மனதை விடவா அது நாற்றம் ? முன்னரோ பின்னரோ - நாம் ஏறி ஓட்டியே ஆகவேண்டிய - மரணம் என்ற 'ஜமல் அஸ்வத் ' நம் ஒவ்வொருவரின் வீட்டு வாயிலும் நிற்கிறது... புரிந்து நட ஏ.. முதலாளியே..என் அப்துல்லா-அல்-கால்தியே...

'யா தஅபாbன், ஹதா மூ கஸ்வா. கருப்பு ஒட்டகம்தானே ? அதில் ஏறும்முன் அதையும் 'ஏறி 'க்கொள்கிறேன். ப்பூ.. ' - மறுபடியும் பூண்டு நாற்றம். தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.. 'த்தோம் ' என்றால் அரபியில் பூண்டு. 'பbஸல் அbபியத் ' என்பார்கள் என்னைப்போல உட்டாலக்கடி அரபி பேசுபவர்கள். எந்த மொழிதான் எனக்குச் சரியாக வந்திருக்கிறது , மெளனம் உட்பட ?

என்னதான் சொல்லுங்கள், சுட்டாலும் குடலைப்பிடுங்கும் நாற்றம்தான் அது. பூண்டைச் சொல்கிறேன்.

என் ருசிபற்றித் தெரியாமல் , கோமளாதேவி குத்தாலிங்கம் என்ற விசிறி வேறு அதையே போட்டுத்தாட்டி ஒரு சமயம் கொடூரமாகப் பழிவாங்கினார். மாயவரத்தில் இருந்தார். எழுதிய ஒரே கதைக்கு கிடைத்த ஒரே விசிறி. முடை சிற்றிதழில் வெளியாகியிருந்த எனது 'தொங்கல் ' அவருக்கு ரொம்பப் பிடித்துப் போனதாலோ என்னவோ கடிதம் போட்டு அன்போடு கூப்பிட்டிருந்தார். அப்போது நான் தனியன். அஸ்மா தப்பித்திருந்தாள். செலவுசெய்து விருந்துக்குப் போனால்... பூண்டில் எத்தனைவகையுண்டோ அத்தனை வகையும். பூண்டு ரசம், பூண்டுக் குழம்பு , பூண்டு ஊறுகாய். பூண்டு சோறும் பூண்டுத் தயிரும் மட்டும்தான் இல்லை. பூண்டோடு ஒழிந்தேன். அதைவிடக் கொடுமை , அவர் ரசித்துப் பாராட்டிய அந்தக் கதை..அந்தக் கதை... அது என் கதையே அல்ல. இது காதில் மாட்டுவதாக்கும். ஆனால் நாமொன்று எழுதினால் தாமொன்று வலியப் புரிந்துகொள்ளும் - குழாயைத் திறக்கச் சொன்னால் மூடியே வைக்கச் சொல்வதாக 'உரிமையுடன் ' எடுத்துக் கொள்ளும் - வாசகர்களுக்கு இந்த டாக்டரம்மா தேவலைதான். ஒரு உண்மையையும் சொல்ல வேண்டும். காதைக் காட்டுங்கள். அந்தக் கதை என் கதையை விட நன்றாகவே இருந்தது.

கதை எழுதுவதையே விட்டுவிட்டேன் அன்றிலிருந்து.

ஒருவேளை அதற்காகத்தான் அந்த விசிறி பூண்டு வைத்தியம் எனக்குச் செய்தாரோ என்னவோ. என்னிடம் நேரில் சொல்லியிருக்கலாம் இல்லையா ? அங்கிருந்து கழன்றுகொண்டு வருவதற்குள் உயிர் போய்விட்டது. கழன்றுகொன்டு... ஊர்பாஷையில் : புண்டுகிட்டு . பூண்டு மட்டுமல்ல இந்தப் புண்டும் ரொம்ப அபாயமான வார்த்தை. 'புஞ்சை ' பற்றி பிரமீள் அடித்த கமெண்ட் ஞாபகம் வருகிறதா ?. அஸ்மா அதைப் பயன்படுத்தும் விதம்தான் ஜோர். பொரித்த கோலாமீன் சாப்பிடும்போது அதன் முள்ளை நாசூக்காக எடுத்தவண்ணம் சதையைப் பிட்டுப்பிட்டு எனக்கு வைப்பவள், பிடரியிருந்து அற்புதமாகப் பாடும் அரபிப் பாடகிகளின் ர ஹ ஸ் ய மா ன குரலில் , குறுகுறுபார்வையோடு சொல்வாள்:

'ஒங்களுக்குத்தான் புண்டமீனுண்டா ரொம்பப் புடிக்குமே '

உண்ட மீனெல்லாம் வெளியில் வந்து விடும் எனக்கு சிரிப்பில். அடி ஷைத்தான், நான் தேவல புள்ளே..

பூண்டைத் தின்னமாட்டேன் என்று என்னைப்போலவே சங்கற்பம்_பூண்ட இவளிடம் போய் என்னத்தைச் சொல்ல ? பாரதியை மீண்டும் இழுக்கலாமா ? 'வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா ' . ஆமாண்டா , உன் செல்லம்மாவுக்கு வந்தது. என் செல்ல அஸ்மாவுக்கு வரலையே.. என்ன செய்ய ? அதற்கு மாற்றுதான் கேட்கிறாள் இப்போது. வழி தெரியவில்லை. சீட்டுக்கவிகள் எழுதினால் சீ.கு.சீனிவாசன் M.Dக்குப் பிடிக்காது.

பசும்பாலைக் கொடுக்கலாம் என்று பார்த்தால் டாச்செலவைக் குறைக்கிறேன் என்று அதையும் நிறுத்தியாகி விட்டது. தேவைப்பட்டால் பிள்ளைக்கு மட்டும் வாங்க வேண்டியதுதான் என்று நினைப்பு. 'அரபிலாம் சுலைமானிதான் குடிப்பானுவ ' என்றுசொல்லி அடக்கி வைத்திருந்தேன். 'அரபிட்ட காரும் இக்கிமே ' என்று கேலிசெய்த அஸ்மாவை பொருட்படுத்தவில்லை. எந்தப் பக்கம் அவள் சொல்வாளோ அந்தப்பக்கம் எனக்கு காது கேட்காமல் போய்விடும் கடுமையான வியாதி வந்திருந்தது.

அஸ்மா படு உஷார். ஒரு டியூப் வைத்து என் இருகாதையும் இணைத்து உரக்கச் சொன்னாள் : 'வர்ற வெள்ளிக்கிழமை செடிக்கால்பாளையம் தர்ஹாக்கு கார் எடுத்துக்கிட்டு போவனும். புள்ளைக்கி நேர்ந்திருந்தேன் '

'அல்லாவே , வர்ற வெள்ளிக்கிழமையா ? '

'ஏன்மா ? '

'அன்னக்கி எனக்கு அம்மை வார்க்கும் புள்ளே '

அந்த சமாளிப்பெல்லாம் இப்போது நடக்காது. உடனடியாகச் செய்ய வேண்டியது பக்கத்து வீட்டுக்கு வந்ததால் பகையாளிகளாகப் போனவர்களிடம் கடனேயென்று பால் வாங்கச் சொல்வது. அடுத்தது நான் ஆண்பிள்ளையென்று 'காட்ட ' வேண்டும்.

செவ்வாய்க்கிழமை பஜார் விடுமுறை. பீடையாம். எலியட் இருந்தால் 'Ash Tuesday ' என்று பாடியிருப்பான். பஜார் தப்பித்தது மனிதர்களிடமிருந்து . என்னிடமிருந்தும்தான்.

நூருலமீன்நானாவைப் பார்க்கப்போனால் என்ன ?

வெளிப்படையாக உங்களுக்கு காரணத்தைச் சொன்னால், வீட்டிலிருந்து வெளியே ஓடினால்தான் வழிபிறக்கும் என்று பட்டது. குஞ்சுகளுக்கு இரைதேட தாய்ப்பறவை வெளியில் போகிறதே.. எத்தனை தீர்மானம், நம்பிக்கை. ஏதாவது கொண்டுவருகிறதா இல்லையா ? நம் குஞ்சு பொரித்த குஞ்சுக்கும் இப்படித்தான் வழிதேட வேண்டும். இறைவன் மேலானவன்.

தொக்குத்தெரு சென்றேன். நாட்டுக்கு ஒரு குத்பு - இறைநாயகர் - வேண்டுமென்றால் நாலு குத்பு வேண்டும் இந்தத்தெருவுக்கே. அவ்வளவு கொடுமையான தெரு. அதிலிருந்த ஒரே மனிதன் அவர்தான். அதனால் தனியாகத்தான் இருந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது மனம் ராஹத் ஆகும். குழப்பம் அதிமானால் தெளிவு பிறக்கும், இல்லையா ? ஹஜ்ரத் மவுத்தானபிறகு மனசு ரொம்ப குழப்பமாக இருந்தால் அவரைத்தான் நாடுவது வழக்கம். ஹஜ்ரத் இருந்திருந்தால் ஏன் குழப்பமும் வருகிறது ?

'க்யூங் ஜிந்தகி கி ராஹ் மேங் மஜ்பூர் ஹோ கயே ' என்று பாடிக்கொண்டிருந்தவர் , கசங்கிய என் முகத்தைப் பார்த்ததுமே உடனே புரிந்து கொண்டார். 'அதாவது.. ஜனாபுக்கு தற்கொலை பண்ணிக்கலாம்டு வருது ' என்றார்.

'சரியான எடத்துக்குத்தானே வந்திக்கிறேன் '

'இது போதும். நம்மட வேலையெ இன்னொருத்தவனை வுட்டு பண்ணணும். இப்ப இந்த வூட்டு வரி , காட்டு வரிண்டு இக்கிது. நானா கட்டுறேன் ? சிங்கப்பூருலேந்து ஒருத்தன் நான்தான் கட்டுறேண்டு கெஞ்சிக்கெஞ்சி கட்டுறான். என்னத்தைக் கொடுக்குறேன் அவனுக்கு ? வெறும் மொஹப்பத். அன்பு '

'அதெல்லாம் எனக்குத் தெரியாது நானா. இப்ப மாவுடின் வேணும் எனக்கு. கையிலே ஒரு பைசாகூட இல்லை. இருந்தா கொடுங்க '

'ஓய் அடப்பு. அது தெரியாது எனக்கு ? டன்ஹில்லேர்ந்து பீடிக்கு வந்து அதையும் தெருவுல பொறுக்குற எத்தனெப் பேரெ நான் பாத்துக்கிட்டிக்கிறேன். ஒமக்கு மாவுடின்தானே வேணும் ? அதுக்கு 'மின்னல் ஹபீபு ' எதுக்கு ? மொனைக்கடை ஜானிபாய்ட்டே நான் சொன்னதா சொல்லி வாங்கிக்கும் '

'அவனுக்கு நீங்க காசு கொடுத்துத்தானே ஆவனும் நானா ? '

'கொஞ்ச நஞ்சமில்லே.. முழுசா முப்பதாயிரத்து நானூத்தி சொச்சம். அதெ அடுத்தமாசம் சாதுல்லாகாக்காட்ட வாங்கி கொடுத்துடுவேன், இன்ஷா அல்லாஹ் '

'சாதுல்லாகாக்காக்கு திருப்பிக் கொடுக்கனும்லே நானா எப்படியும் ? '

'அதெ அடுத்தவருஷம் ஹாஜாமரைக்கார்ட்டெ வாங்கி கொடுத்துட்டாப் போச்சு '

எனக்குத் தலை சுற்றியது. போகிறபோக்கில் என்னிடமே கடன் வாங்கிடுவார்போல் இருந்தது. அப்படியெல்லாம் செய்யவில்லை. வற்புறுத்தி , பகல் தன்னுடனேயே சாப்பாடு சாப்பிட வைத்தார். அது எந்த ஹோட்டலிலிருந்தோ வந்திருந்தது. அடுக்குசட்டியை வைத்தவனும் ஏதோ ராஜாவுக்கு வைக்கிறார்போல்தான் வைத்தான். நான் நானாவைப் பார்த்தேன். சிரித்தார். 'கொடுக்குறது அவன் ' என்று மேலே கை காட்டினார். 'அவன் ' இவரிடம் நிறைய கடன்பட்டிருந்தாற்போல்தான் தோன்றியது. 'தைரியமா போவும் வூட்டுக்கு. அல்லா வழி காட்டுவான். நம்பிக்கையில்லேண்டா ஜானிகடை. ok ? ஃபிஅமானில்லா ' என்றார்.

மாலை திரும்பும்போது , இடையில்வந்த ஜானிகடையின் மேல் கண் பதிந்தாலும் ஏதோ அசட்டுத்துணிச்சலில் தாண்டினேன். மனதில் இனம் தெரியாத நம்பிக்கையும் தைரியமும். போகிறவழியில் வானத்திலிருந்து மாவுடின் பொத்துக்கொண்டு விழுந்தாலும் விழுமென்றில்லை, உம்மாவிடம் கடைசியாக கேட்டுப்பார்க்கலாமென்றுதான். உம்மாட்ட போயி யாராச்சும் மானம் அவமானம் பாப்பாஹலா ? எரிஞ்சி வுழுந்தாத்தான் என்னா ? 'பொன்னும் மணியுமிங்கே - பெற்ற தாய்தமக் கிணையாமோ ? ' என்பார் கவிஞர் அம்புடன்புஹாரி.

உம்மாவீட்டில் நுழைந்தால் வீடு பரபரவென்றிருந்தது. கொல்லையிலிருந்து லாப்பை சுடும் வாசம் வந்தது. பண்டாரிவைத்து பெரிய அளவில் பண்ணிக்கொண்டு இருந்தார்கள். உம்மாவைப் பார்த்தேன். 'அஸ்மாவுக்கு பா.. ' என்று ஆரம்பித்ததுமே விருட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு போனார்கள். 'ல் 'ஐ நெருப்பில் எரிந்தேன்.

என்ன நடக்கிறது ?

தெருவாடி மனிதர்கள் ஒவ்வொருவராய் வீட்டுக்குள் நுழைந்து கூடத்தில் விரித்திருந்த பாயில் உட்காரும்போதுதான் மெல்ல விளங்கிற்று. நடக்கப்போவது தங்கச்சியின் கக்கிலி. கல்யாண முன் ஒப்பந்தம். அதாவது.. இரண்டாவது வரை படித்த அரபுநாட்டு புரட்சி மாப்பிள்ளைக்கு , அருவருப்பான பணம் வேண்டாம், அழகான பங்களா மட்டும் போதும் போன்றவைகளை உறுதிபடுத்திக்கொள்வது. என் புர்ரட்சியை உம்மா ஏமாற்ற அவர்களை அஸ்மாவின் உம்மா ஏமாற்றியது தனிக்கதை. அப்புறம் சொல்கிறேன்.

அறையில் அடைந்திருந்த துப்பட்டிக் கும்பலில் என் அஸ்மா மட்டும் இல்லை. கூப்பிடாமலிருந்தால்தான் சொல்லியும் வரவில்லையென்று நிறுவலாம். நிகழ்ச்சி முடிந்து ஜனங்கள் வெளியேறும்வரை நெருப்பில்தான் குளித்தேன் என்று சொல்ல வேண்டும். 'என்னாடா... வூட்டுக்காரஹ நீயே 'ஙே.. 'ண்டு பாத்துக்கிட்டு நிக்கிறா. லாச்சாராவுலெ இக்கிது...லட்டும் சர்பத்தும் ஒலுங்கா பவுந்தியா இல்லையா வந்தஹலுக்கு.. ? ' - ஒரு பொன்னையனின் குரலில் சற்று உஷார் வந்தது. இவர்களாவாவது பிறந்திருக்கலாம்.

வூட்டுக்காரஹ... நானா ? லாத்தாவின் முழுக் கல்யாணச் செலவும் என் தலையில் விடிந்ததிலிருந்து நிறையச் சொல்ல வேண்டும். நேரமில்லை. அஸ்மாவையும் தேடுகிறது. என்னதான் செய்திருக்கிறாளோ என்னை... முக்கியப் பிரச்சனை என் கல்யாணத்திலிருந்துதான் ஆரம்பித்தது என்று மட்டும் சுருக்கமாக சொல்லிக் கொள்கிறேன். நான் அஸ்மாவுடன் வீட்டிற்கு வந்து தங்குவதில்லையென்பதும் உம்மாவின் பெரும் குறை . எங்களுக்கென்று இருக்கும் ஒரே அறையில், அந்தப் பழைய வீட்டில் , எப்படி எல்லோரும் தங்க முடியும் ? - மனம் ரணமானது.

ரணத்திற்கு ஒரு மணமும் உண்டுதான். மச்சான் ஞாபகம்... உம்மா போலவே ஜைனப்மாமியும் அவர்களின் மகனைப்பற்றிக் குறைப்பட்டார்கள். தன் உயரமான மனைவியை வீட்டுக்குக் கூட்டி வந்த சித்திக்மச்சான் , அவர்களின் ஒரே அறைக்குள்ளேயே படுதாவைப்போட்டு மறைத்து , அடுத்த பக்கத்தில் எம்பிஎம்பி இயங்கியதில் ஏக ரகளை. மருமகள், 'ஹா..ஹூ ' என்று பெருமூச்சு விட்டாலும் பரவாயில்லை, 'அங்கதான்.. அங்கதான்.. ' என்று ஆவேசமாக சத்தம் போட்டால் ? ஒரே கூக்குரெ ஆகிவிட்டது. 'இஸ்லாமான பொம்பளையிலுவ அடக்க ஒடுக்கமா இக்கிறதில்லே.. ? சீ. ' என்று தெருபூராவும் பேச்சு. என் விஷயம் நேர் எதிர்.

ரகசியம் எப்போதும் ரகசியமாகவல்லவா இருக்க வேண்டும் ? உம்மாவிடம் ரகசியம் ஏதுமில்லை. மகனை அவமானப்படுத்த வேண்டுமென்றில்லை. மறந்து விட்டார்கள். அவ்வளவுதான். சம்பாத்தியமே இல்லாமல் மலேயாவில் முடங்கிப்போன வாப்பா இப்போது வீட்டில் இருந்தாலும் அவர்களிடமும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். 'உரவோர் உரவோர் ஆக மடவம் ஆக மடந்தை நாமே ' பாடிய மாதா மரித்துப் போனாள்.

'உலகிலேயே உற்றதுணை எனக்கு யார் யா ரசூலுல்லா ? ' என்று கேட்டவரிடம் நாயகம் (ஸல்) சொன்னார்கள் : 'உன் தாய் '. 'அடுத்தது ? ' . 'உன் தாய் '. 'அடுத்தது ? '. 'உன் தாய் '. 'அடுத்தது ? '. 'உன் தந்தை '(*a). தந்தையர்தாம் மடையர். கல்யாணம் முடிஞ்சாவது சொல்வியா உம்மா ? 'தாயில்லாமல் நானில்லை ' என்று தாய் மடியில் படுத்துக்கொண்டே தமிழ் கதாநாயகர்கள் காலாகாலத்துக்கும் தம்பட்டம் போட்டுக்கொண்டிருப்பதெல்லாம் சும்மா இல்லை. தாயின் சபதங்களுக்காகத்தான் பக்கத்து நாடுகளை பதம் பார்க்கின்றன தாய்த்திருநாடுகள். தாய்மொழி. தாய்க்குத் தலைமகன். தாய்க்குப் பின் தாரம்....மா துஜே சலாம்.

'உங்கள் சொர்க்கம் உங்கள் தாயின் காலடியில் இருக்கிறது ' என்று நாயகம் (ஸல்) சொல்லியிருக்கிறார்கள். 'இருமூன்றில் தாய் இழந்த நபி 'யின் தாய்ப்பாசத்திற்கு ஈடில்லை. அதனால்தான் அவர்களின் உம்மத்துக்களுக்கு , ஒன்றுக்குப் பதிமூன்றாக தாய்மார்கள் கிடைத்தார்கள்(*b).

பழங்கணக்கை விடுவோம், நமக்குக் கிடைத்த ஒரு தாய் , தாயாக இருந்தால் போதாதா ? சொர்க்கத்தை யாருக்கும் காட்டக்கூடாதென்று அவர்கள் ஏன் ஒரே இடத்தில் நிற்க வேண்டும் ? ஏன், இப்படியும் எடுத்துக் கொள்ளலாம்: சொர்க்கத்தை மிதித்துக்கொண்டு நிற்கிறார்கள் அவர்கள். ஆமாம், அதுதான் சரி. இது தந்தையாலா சிந்தையாலா ? தாயின் காலடியில் சொர்க்கம் என்றால் அவர்களின் செருப்பை சொர்க்கமென்று எடுத்துக் கொள்ளனுமோ ? மகான்களின் மிதியடியை தலையில் பவ்யமாக பல பக்தர்கள் வைத்துக் கொள்கிறார்களே, அதுபோலவா ? இல்லை, இதெல்லாம் இலக்கிய நயம். 'கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே 'வைக் கேட்பவர்கள் ஹனிஃபாவின் கண்ணில் இறங்கி நீந்தவா செய்வார்கள் ? மிதிபடும் சுவனம்... எப்படியோ , வாழ்க சுவனத்துச் சுந்தரிகள். கோபத்தைக் கொட்ட வழி தெரியவில்லை. கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாதாகையால்தான் தாயைப் படைத்தான் என்கிற யூதப் பழமொழி நினைவுக்கு வந்து இன்னும் என்னை எரிச்சல் படுத்திற்று. ஆமாங்கனி, அதனால்தான் இருக்கமுடியாமல் தொலைந்து போனான். அதுகூட அவனுக்கு உம்மா இல்லாமலிருந்ததால்தான் முடிந்திருக்கும்.

ஊர் உம்மாக்களை மாற்ற ஒரே வழி, வீட்டு ஆண்கள் சாமத்தியம் பண்ணுவதுதான். அதற்கு சபர் போக வேண்டும். பிறகு மறு சபர் போவதற்கும் சாமத்தியம் பண்ண வேண்டும். இன்னும் எத்தனை சபர் போக வைப்பாய் என் ரப்பே...

சபரில் மாட்டிகொண்டு முழிப்பதை வேப்பமரத்துப் பேய்பிடிப்பதாகச் சொல்வார்கள். அது ரொம்பப் பழசு. உமர்குட்டி என்ற மலையாளிதான் சவுதியில் சொன்னான் புதுசாக. ஒன்றுமில்லை, குஞ்சாலிஹாஜியார் ஒரு எருமை வளர்த்தார். வளைந்த இரு பெரும் கொம்புகள் அதற்கு. ஹாஜியார் மிகவும் புத்திசாலி. எருமையின் கொம்புகளுக்கிடையே தன் தலையை விட்டுப் பார்த்தால் என்ன என்று நினைப்பு வந்தது அவருக்கு. ரொம்..ப நாளாக யோசித்து யோசித்து கொம்பின் இடையில் தன் தலையை ஒரு நாள் நுழைத்தும் விட்டார். அவ்வளவுதான். அது வெறிகொண்டு ஓட ஆரம்பித்து விட்டது. அல்லாஹ்வைக் கூப்பிட்டு அலறியபடி தொங்கிக்கொண்டே போனார் அவர். அல்லாஹ்தான் எங்கும் இருப்பானே... எவனோ ஒருவனது வேடத்தில் வந்து அவரைக் காப்பாற்றிக் கேட்டிருக்கிறான் :

'முட்டாள் ஹாஜியாரே..இதெல்லாம் யோசிச்சி செய்யவாணாமா ? '

ஹாஜியார் சொன்னாராம் அப்பாவியாக : 'ரெண்டு வருஷமா யோசிச்ச பொறவுதானே தலையை வுட்டேன் '

ஹாஜியார்களை அவன் காப்பாற்றலாம் , என்னைக் காப்பாற்றுவானா ?

கனத்த மனத்துடன் அஸ்மா வீடு சென்றேன். இருள் கப்பியிருந்தது தெரு. போகும் வழியெல்லாம் ஒளிமயமான தெய்வத்தின் நினைப்புதான். ஒவ்வொரு மதத்து தெய்வங்களும் கருணையாகவே தன் பக்தர்களுக்கு பால் ஊட்டியிருக்கின்றன போட்டி போட்டுக் கொண்டு. விஸ்வரூபமெடுக்கும் சில தெய்வங்கள் , பக்தர்களின் பாலை ரத்தத்தோடு உறிஞ்சவும் செய்யும். அது வேறு. பாற்கடல்... மந்திரக்கோலால் மனங்கவர்ந்த லா.ச.ரா கதைகளில்கூட தெய்வத்தின் மார்பிலிருந்து பால் பீறிட்டடிப்பதில் பலமுறை நனைந்திருக்கிறேனே..இல்லை, இவைகள் வெறும் கதைகள்.

அனீஸை வைத்துக்கொண்டிருந்த மாமியார் என்னைப் பார்த்ததுமே திடுக்கிட்டு, 'யாநபி பைbத் 'துக்கு எழுந்திருப்பதைப்போல நின்றுகொண்டார்கள். ஓடவில்லை. மருமகன் மேல் ரொம்பவும் அன்பு. 'தோ..பாரு..காக்காபீ.. ' என்றார்கள் என்னைக் காட்டி. அவனும் அது சரிதான் என்பதுபோல் மிழற்றினான். முகம் தெளிவாகத்தான் இருக்கிறது. என்னமோ நடந்திருக்கிறது. 'காக்காபீ 'யைப் பார்த்ததாலோ ? காக்காபீ ஒரு பைத்தியம். வாயால் 'கிர்ர்ர் ' என்று ஓசையெழுப்பிக்கொண்டே அங்குமிங்கும் ஊரில் ஓடிக் கொண்டிருப்பான். நிஜத்தில் அவனாகவே இருந்திருக்கலாம். தொல்லையே இல்லை. அவனால் ஊர் ஜனங்களுக்கு சந்தோஷமும் கூட. ரெட்டிப்பு சந்தோஷம் சமயத்தில் அவன் ஆடையில்லாமல் ஓடுவது.

'அஸ்மாவா ? ரூமுலெ இக்கிறாம்மா ' என்றார்கள்.

அனீஸைக் கூட வாங்காமல் ரூமில் நுழைந்தேன். அங்கே ஆச்சரியம் காத்திருந்தது. ஆமாம், அஸ்மாவின் காலடியில் நிஜ சொர்க்கம் இருந்தது. 1/2அடியுள்ள அமுல்டின். ஆனால் பழையது. ஆனாலும் அந்த டின்னுக்குள் பால்பவுடர்தான் இருக்கும் என்று எனக்கு சர்வநிச்சயமாகத் தெரிந்தது. பெண்ணுக்கு மட்டும்தான் பொங்கிக்கொண்டு இல்ஹாம் வருமா என்ன ? 'இல்ஹாம் ' என்றால்... ம்..ஆன்மிக அரபியில் இருப்பதால் பெரிதாக நினைத்து விட வேண்டாம். . 'ஸ்ட்ரைக் ஆச்சு எனக்கு ' என்கிறோமல்லவா ? அதுதான். 'பொறி தட்டியது ' என்பார்கள் எலித்தாளர்கள்.

நான் நுழைவதைக்கூட பார்க்காமல் இவளின் பார்வை என் அபூர்வமான புத்தக அலமாரியில் ஏன் நிலைத்திருக்கிறது ? கொஞ்சம்கூட விளங்காத மொழிகளில் உள்ள உலக இலக்கியங்களை சிரமப்பட்டுச் சேர்த்த என் மேதைமை புரியவில்லையா ? விரைவில் எடைக்குப் போட்டு விடுகிறேன் என் கண்ணே... இல்லை, எடுக்க மாட்டார்கள். வெட்டாறு வீணானலும் சரி, அதிலேயே போட்டு விடுவோம்.

ஆணோ பெண்ணோ மனித இனமே அசடுதான். கீழே சொர்க்கத்தை வைத்துக்கொண்டு எதையோ பார்த்துக் கொண்டிருக்கும் வர்க்கம். ஆனால் அன்னை ஒரு ஆலயமென்பதை மட்டும் மறுக்கக் கூடாது. அஸ்மா ஒரு பள்ளிவாசல் என்பதையும்தான். நான் ? வாசலுக்கு வெளியிலுள்ள பல்லி. அவமானப்பட்டு நிற்பவனைப் 'பல்லியாப் போய்ட்டாஹா.. ' என்பார்கள் ஊரில். அவமானப்படும் மனிதன்தான் வளரமுடியுமென்றாலும் அவமானமென்றால் என்னவென்று பல்லிக்குத் தெரியுமா ?

'எப்படி வந்திச்சி புள்ளே இது ? '

'ஒங்க உம்மாதான் மருமவளுக்கு கொடுத்து வுட்டாஹா.. '

'அல்லாஹூ ரப்பி. ஹக்கானபடிக்கி ? '

சத்தியம்தான். 'ரொம்..ப அவுரியமான சாமான். ஆனா அல்லா காப்பாத்திட்டான். இப்ப நல்லா பால் சொரக்குது ,தெரியுமா ?. ஒங்களுக்கும் வைப்பேன் ' என்றாள். குரலில் மட்டும் ஏனோ புகைச்சலும் கேலியும் . தொலையட்டும், எந்த மருமகளுக்குத்தான் மாமியாரைப் பற்றிச் சொல்லும்போது மனிதகுணம் வருகிறது ?

எனக்குள் ஏதோ ஒன்று உடைந்தது. என் உம்மா...உனக்கும் பார்வை கூர்மைதான். கண்கலங்கிற்று. அஸ்மா சொன்ன அந்த 'ஆனா ' மட்டும் நெருடுகிறதே... அதைப் பற்றிக் கேட்குமுன் சின்னதாக ஒரு சிணுக்கம் கூடத்திலிருந்த அனீஸிடமிருந்து வந்ததைக் கேட்டு , 'என்னட ஜூஜூஜூ... ' என்று வேகமாக விரைந்தாள். பிள்ளையின் பெயரை சரியாக அழைப்பவள் இவள் ஒருத்திதான். 'மருமகள் வரும் கணத்திலே மவுத்தாவாள் உம்மா ' என்றாலும் பெரும் நுணுக்கம் இந்தப் பெண்மை. கந்தூரி களேபாரத்திலும் கூட கவனம் சிதறாது. ரத்தம் பாலாகும் அதிசயங்கள் நிறைந்த அற்புதப் படைப்பென்பதிலும் சந்தேகமேயில்லை. பிள்ளைக்கென்றே பதமாக வரும் பாலின் அந்த இளஞ்சூட்டை நினைத்தாலே பரவசம்தான். இதற்குமுன் , 'கோதுமைக்கனி 'க்காகக் கொக்கரிக்கும் அகங்காரம் பிடித்த ஆண் கண்டிப்பாக ஒரு பல்லியேதான். தவிரவும், ஆணுக்குச் சுரப்பதெல்லாம் அஹமது மரைக்காயர் செக்காலையில் சும்மாதானே கிடைக்கிறது.

'ஹூம்.. விந்தோட மதிப்பு மட்டும் புரிஞ்சீங்கண்ணா முகத்துலெ தடவிக்கிட்டு அலைவீங்க.. ' என்பார்கள் ஹஜ்ரத். சொல்லிமுடித்த அவர்களின் முகத்தை உடனே நான் பார்த்தேன் அப்போது. அவர்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. அல்லது துடைத்துவிட்டுச் சொன்னார்களா ? இருக்கலாம்.

அஸ்மா நகர்ந்ததும் , அந்த டின்-ஐ ஏனோ திறந்து பார்க்கத் தோன்றியது. நான் குழந்தையாக இருக்கும்போது உம்மா வாங்கிய அதே டின்போலத் தெரிந்தாலும் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டாமா ? அஸ்மாவுக்கு மறுபடியும் சுரக்காவிட்டால் உபயோகப்படுமே.. அப்படியொன்றும் கடவுள் கருணையில்லாதவன் இல்லைதான். அமுதச்சுனை கொஞ்சமாவது உலகத்தில் அங்கங்கே வற்றாமலிருப்பதற்கு அவனுடைய அருள்தான் காரணம்.

டின்-ஐத் திறந்தேன்.

என் இல்ஹாமில் இடிவிழ. பால்பவுடரா ? 'குப் 'பென்று கொடும் நாற்றத்தைக் கிளப்பியவண்ணம் வெள்ளை வெளேரென்று என்னைக் கேலி செய்தபடி உருண்டோடின உரித்த பூண்டுகள். வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லா , அல்ல , பொல்லாப் பூண்டுகள். வெகு தூரத்தில் பெரும் எருமைக் கொம்புகளுடன் ஒரு வினோத கறுப்பு ஒட்டகம் வந்து கொண்டிருப்பது போல காட்சி... அஸ்மா வந்ததும்தான் கேட்கவேண்டும் அது ஆணா பெண்ணா என்று.

(முற்றும்)

படித்துறையில் (Dec '2004) பிரசுரமானது

விளக்கக் குறிப்புகள் :

குர்ஆன் வசனங்கள் : *1 (2 : 30-32) , *2 (33:56)

*a புஹாரி ஹதீஸ் 8:2

*b ஜமால் எழுதிய 'மறுவிலா முழுமதி '. 11ஆம் பதிப்பு. பக் : 289

*3 'உச்சந் தலை.. ' பாடல் - நூஹூ லெப்பை ஆலிம் அவர்களின் வேதபுராணத்திலிருந்து (இல்முன்னிஸா படலம்)

சபராளி - சம்பாதிக்க வெளிநாடு செல்பவர் (சஃபர் - பிரயாணம்)

இல்ஹாம் - இறைஉதிப்பு

சலாமத் - பாதுகாப்பு

முஸாஃபர் - பயணி , பிச்சைக்காரன்

மஹ்சர் - மறுமைநாள்

புராக் - பறக்கும் குதிரை. பெருமானார் (ஸல்) தனது 'மெஹ்ராஜ் ' பயணத்தின்போது ஏறியது. (மெஹ்ராஜ் - விண்ணேற்றம்)

ரூஹானியத் - ஆன்மிகத்தின் 'உயிர் ' சார்ந்த

தஸவ்வுஃப் - (சூஃபிகள் செய்யும்) யோகம்

அமல் - செயல்

முஃப்தி - ஃபத்வா வழங்கும் 'தகுதி ' பெற்றவர்

'யா தஅபாbன் ' - 'ஏ சோதாப்பயலே ' என்று திட்டுவது

'ஹதா மூ கஸ்வா ' - 'அது கஸ்வா இல்லை ' [கஸ்வா - 'ஹிஜ்ரத் 'ன் போது பெருமானார் (ஸல்) ஏறிய ஒட்டகத்தின் பெயர்]

மின்னல் ஹபீபு - பணத்தை வேடிக்கையாகச் சொல்வது

லாச்சாரு - தொந்தரவு

கர்பலா - நபி(ஸல்)யின் பேரரான இமாம் ஹூசைன்(ரழி)-ஐ எதிரிகள் கொன்ற இடம் [61 A.H. (680 A.D.)]

யாநபி பைbத் - நபி(ஸல்)க்கு சலாம் சொல்லும் பைbத்(பாமாலை). சுபுஹான மவுலூதில் ஓதப்படும். (மவுலூது - புகழ்மாலை)

கோதுமைக்கனி - பெண்குறியை மறைவாகச் சொல்வது

அவுரியம் - அபூர்வம்

*

நன்றி : முத்து, சந்திரவதனா செல்வகுமாரன் ( பூண்டுகள் பற்றிய வலைப்பதிவுக்காக)

சென்ஷி

unread,
May 13, 2010, 8:58:13 AM5/13/10
to panb...@googlegroups.com
காமரூபிணி - ஜெயமோகன்

ரப்பர் மரக்காட்டில் ஒரு சாணியுருளை கிடந்தது. இன்னும் ஒருவாரம் கழித்து அதை எடுத்துப்பார்த்தால் தக்கையாக இருக்கும். உலர்ந்த சாணியின் ஓட்டுக்குள் ரப்பர்மரத்தின் வேர்நரம்புச்சுருள்கள் உருண்டு சுருண்டு சொம்மியிருக்கும். அதை மண்ணுடன் இணைப்பது ஒரு சிறிய வேர்ச்சரடுதான். கடைசித்துளி வரை உறிஞ்சப்பட்ட கூடு. “லே மக்கா, ரப்பர்ணாக்க நீ என்னண்ணுலே நெனைக்கே மயிரே? அவ யச்சியில்லா? முண்டும்முலக்கச்சயும் இட்ட நம்ம ஊருயச்சியில்லலே. சட்டையும் காதோலையும் இட்ட கிறிஸ்தியானி யச்சியாக்கும் அவ!” என்றார் நாராயணன் அண்ணன்.

பொதுவாக தெற்குத்திருவிதாங்கூர் முழுக்க யட்சிகளும் நீலிகளும் அதிகம். தூய தமிழில் இயக்கி. நாஞ்சில் தமிழில் ஏக்கி. ‘கருங்கண் இயக்கி’ என்று சிலப்பதிகாரம் சொல்லும். ஆயர்குல மூதாட்டி மாதரி அவளுக்குப் பாலுடன் சேர்த்த அன்னம் கொடையாகக் கொடுத்து வழிபட்டாள். சங்ககாலத்தில் நெய்தீபம் ஏற்றி ஊன்பலி கொடுத்து வணங்கிய குடைவரை எழுதிய தொல்தமிழ்ப்பாவை இயக்கியாக இருக்கலாம். மதுரையில் மாதரி வழிபட்ட இயக்கி இருந்தது கோட்டைக்கு வெளியே. கோட்டைக்குள் அரன் அமர்ந்தும் மால் நின்றும் அணி செய்து பூசனை கொண்டிருப்பார்கள். அவர்கள் பெருந்தெய்வங்கள். சொல்லால் வழிபட்டால் அருள்பவர்கள். உலகளந்தாயே, ஆயிரம் கண்ணனே என்றழைத்தால் குளிர்பவர்கள். யட்சிகள் நம் பாட்டியரைப்போல அத்தனை லௌகீகமானவர்கள். குளத்துக்குள் இருக்கும் பாறைபோலக் குளிர்ந்தவர்கள்.

தென்திருவிதாங்கூரில் யட்சிகளுக்கு நாள்பூசைகளில்லை. செய்ய ஆரம்பித்தால் அதன்பின் வேறுவேலைக்கு நேரமிருக்காது. நெடுநாள் நின்றமரத்தடியில் எல்லாம் யட்சியர் துறுபல்லும் உறுவிழிகளுமாக இருந்தருளினர். வருடம் ஒருமுறை கொடைபெறுவர் துடியான தேவியர். அதுவும் கிடைக்காமல் கல்லில் எழுதிய கண்மட்டுமேயாக காட்டில் காத்திருப்பவர்களும் உண்டு. கொடை என்றால் கொடுக்கப்படவேண்டியது. பண்டு கொடுக்கப்பட்டிருந்தது குருதி மட்டுமே. ஆகவே பலி என்ற சொல்லே குருதி என்ற சொல்லாக இடமாற்றம் செய்யப்பட்டது. ஆடு, கோழி, எருமை . . . அபூர்வமாக பன்றி. இன்று மஞ்சள்பொங்கலும் மஞ்சணைக்குழம்பும் கொடுத்து 'குருதி' கழிக்கிறார்கள். படையலிட்டு விடப்பட்ட யட்சிபீடங்கள் மங்கலம் கலைந்த அழகுள்ளவை, களைத்த மணப்பெண்போல. சிதறிய மஞ்சள்தூள் காய்ந்த தெச்சிப்பூ அரளிப்பூ எச்சில்இலைகள். எண்ணைக்கறை வழிந்த கருங்கற்கள்.

ஆனால் ஒருதுளியேனும் ரத்தமில்லாமல் அடங்காத யட்சியர் உண்டு. விறகுக்கட்டின்மீது தென்னங்கொதும்பு மட்டையுடன் சேர்த்துக் கட்டி தலைமேல் கொண்டுசெல்லப்படும் செஞ்சேவல் காந்தாரி மிளகு பிளந்தன்ன வாய்திறந்து கீழ்த்தாடை பதைபதைக்க மணிக்கண்களால் திரும்பித் திரும்பி ஊரைப் பார்த்தபடி காடு செல்லும். ஈரத்துணிசுற்றி இடுப்பில் வைத்து ரகசியமாகக் கொண்டுசெல்வதும் உண்டு. கழுத்து வளைய கோழித்தலையைத் திருப்பி வளைவுமுனையை சிறு பேனாக்கத்தியால் சற்றே அறுத்து சொட்டும் வெங்குருதியை ஒவ்வொரு தேவிக்கும் ஒரு சொட்டு என விடுவார்கள். மழைபட்டு கறுத்த கல்பரப்புகளில் ரத்தம் சிறு குமிழிகளுடன் உப்புவீச்சமுள்ள சுடுமணம் எழ, பரந்து நுனிகளில் வந்து முத்துவிட்டு, மண்ணில் உதிரும். மண்ணுக்கு ரத்தம் எப்போதுமே பிரியமானது. அக்கணமே உறிஞ்சி அமையும். மண்ணில் விழும் ரத்தமெல்லாம் பாதாள உலகில் இருளுக்குள் கண்கள் ஒளிர அலையும் எண்ணிலா மூர்த்திகளால்உண்ணப்படுகிறது. மண்ணுக்கு அடியிலிருந்தபடி அவர்கள் தாகமான வாய்திறந்து ரத்தம் ரத்தம் என்கிறார்கள். கனவுகளில் வந்து ரத்தம் கேட்டு மன்றாடுகிறார்கள். மண் என்பது பாதாளம் தன் மீது போர்த்தியிருக்கும் மெல்லிய ஆடை.

உடையவர் குலத்திலிருந்தே ஒரு துளி ரத்தம் கிட்டாமல் பீடத்திலமராத யட்சிகள் சிலர் உண்டு. இரிட்டிமூலையில் யட்சியின் பிரதிஷ்டை கிடைக்கல்லின்மேல் அமர்ந்த நீளக்கல் என்ற புராதன சிற்பவடிவம் கொண்டது. மேலே தெற்குமலைக்காற்று பெருநதியென எந்நேரமும் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் மரக்கூட்டங்களின் பசுநீலநிழலிருளுக்குள் சருகுகள் குவிந்துமூடிய காஞ்சிமரத்தடியில் இரிட்டிக்காரி ஓணானோடும் சலசலப்பில் திடுக்கிடும் பூச்சிகளின் மௌனத்துக்குள் அமர்ந்திருப்பாள். குடும்பத்தாரும் குலத்தாரும் அவ்வழிச்செல்வதில்லை. அவர்கள் செல்லக்கூடாத வழிகளே அதிகம். ஆனால் அருகேயுள்ள முட்டன்வயல்வெளிக்கு நடவுக்கும் களைபறிப்புக்கும் வரும் புலயத்திப் பெண்கள் அங்கே கூடியமர்ந்து பச்சை மாங்காயை உடைத்து உப்புவைத்துத்தின்றும், பசும்புளி பறித்துத் தோடு உடைத்துச் சப்பியும்,  கின்னாரமும் களியாட்டும் பேசி வெண்பல் ஒளிரச் சிரித்து கூடியிருப்பார்கள்.

எட்டானுடன் நான் முதன்முதலில் இரிட்டிக்காரியைக் கண்டபோது அதிர்ந்தே போனேன். இருளுக்குள் இரு கண்கள். கண்கள் கூட அல்ல. வெறும் பார்வை. பார்வை கூட அல்ல, வெறும் வெறுப்பு. உக்கிரமான ஒரு பகைமை. விஷப்பூ போல காட்டில் மலர்ந்து நின்றது அது. யார் மீதோ யாருக்கோ எப்போதோ உருவான வெறுப்பு காலங்களைத் தாண்டி கருங்கல்லில் செதுக்கிய ராஜநாகம்போல பத்திவிரித்து நின்றது. அத்தனை உக்கிரமான ஒன்று ஒரு போதும் அணையமுடியாது. ஜடத்தை உண்டு எரியும் நெருப்புக்கு எல்லை உண்டு, முடிவிலா நினைவுகளைத் தின்று எரியும் அக்னி அணையவே அணையாது.

ஆடிமாதம் தெற்குக் காடுகள் பேய் பிடித்த பெண்களைப்போல அலறிக்கூவி தலைமுடி சுழற்றி நடுங்கியாடும் பருவம். வானில் சாம்பல்நிற மேகங்கள் கொடுங்கனவிலெனக் குளிர்ந்துறைந்து நிற்கும் காலம். மேகங்களிலிருந்து குளிர்ந்த காற்று சுழன்றிறங்கி குன்றுச் சரிவுகளில் செம்மண்சுழலியாக உருண்டெழுந்து சருகுகளையும் குப்பைகளையும்  துதிக்கை நீட்டி அள்ளிச்சுருட்டி எடுத்துக்கொண்டு சமவெளிகளை அடைகிறது. கீழ்க்கிராமங்களிலும் சூழ்ந்த குறுங்காடுகளிலும் களபசெந்தூரம் காய்ந்து சருகுமாலையணிந்து தவமிருக்கும் நாட்டுதெய்வங்களையெல்லாம் கண் விழித்தெழச் செய்கிறது. அவர்களின் புராதனமான உதிரதாகம் கனல்கொள்கிறது. அவர்களின் வரலாறு தகிக்கும் விழித்த கண்களுக்கு முன் அவர்கள் அறியாத புதிய உலகின் இளம்குருதி அலையடிக்கிறது. அதில் ஒரு மிடறு. ஒரு மிடறு அமுதம். ஒரு மிடறு உயிர். ஒரு மிடறு வெறுப்பு. ஒரு மிடறு பகை . . .

இருட்டிக்காரிக்கு ரத்தம் கொடுக்க வேண்டிய கடமை தெங்கும்மூட்டு வீட்டின் வாரிசுகளுக்குண்டு. நிலத்தில் விழுந்த நீர்த்துளியென அவர்கள் சிதறிப் பரந்து நெடுங்காலமாகிறது. திருவனந்தபுரம், நாகர்கோயில், பம்பாய், டெல்லி, அமெரிக்கா, துபாய் என உலகமெங்கிலுமிருந்து வருடத்திலொருநாள் சிலர் வந்து சேர்கிறார்கள். குடும்பங்கள் அறிமுகங்களைப் புதுப்பிக்கின்றன, மனத்தாங்கல்களையும் உரசிக்கொள்கின்றன. நீளக் குடுமி வைத்து தொப்பைமேல் அழுக்குப் பூணூல் நெளிய, இடுப்பில் செம்பட்டு சுற்றிய வைராகி கையில் பூஜைப்பொருட்களுடன் முன்னால் நடக்க சவரப்பச்சைக் கன்னங்களும் வெயில்படாது வெளுத்த, குழைந்த வெற்றுத்தோள்களும் பழக்கமில்லா வேட்டிகளுமாக உயர்தர கைக்கடிகாரங்கள் பளபளக்க தங்கச்சங்கிலிகள் நரைமயிர்மார்புகளில் புரள மெல்லப் பேசியபடி தெங்குமூட்டுவீட்டார் நடப்பார்கள். இருளில் எரிந்து நிற்கும் குரோதத்தைக் கண்டதுமே பேச்சு அவிந்து அவர்கள் ஒருவரை ஒருவர் நெருங்கி நிற்பார்கள்.

களபசெந்தூரப்பொடி குழைத்துப் பூசி, உறை பிளந்து கமுகப்பூக்குலை பிரித்துச் சாற்றி, அரளிமலர்மாலை சூட்டி, தெச்சிமலர் குவித்து, சீவிய செவ்விள நீரும் உருளியில் ஆவி தயங்கும் மஞ்சள்ச்சோறும் அரிசிப்பொரியும் படைத்து, கொம்பூதி, ஒற்றைச்செண்டை கொட்டி, தாலமணி அடித்து ஆராதனை நடத்தும்போது மெல்லமெல்ல இரிட்டிக்காரியின் கண்கள் இரைமுன் நிற்கும் பெண் சிங்கத்தின் கண்களாக மாறுகின்றன. வைராகியின் உதடுகள் இறுகி, கழுத்து நரம்புகள் உடுக்குவார்களென முறுகி, கால் கட்டைவிரலில் நடுக்கமேறி, தொடைகள் துடித்து, தோள்கள் அதிர்ந்து, அடிவயிறு எக்கி ஒரு அலறலாக அவள் வெளிப்படுகிறாள். "ய்ய்ய்யே . . ."

கோலுரசும் முழவின் உறுமலெனக் குரல் "வந்தீயளாலே எம் மக்கா . . . ஏலே எனக்க காடு சவிட்ட வந்திய இல்லியாலே . . .? ஏலே . . . எங்கலே போவீய? ஏலே என்னைய விட்டுட்டு எங்கலே போவிய? விடமாட்டேம்பிலே . . . நானுண்டுலே இங்க . . . இருந்தகாளி நின்ன காளி நெறைஞ்ச காளி நானுண்டுலே இங்க . . . ஏலே எங்கலே போவீய? ஏலே மக்கா என்னைய விட்டுட்டு எங்கலே போவிய . . .? விடுவேனா . . . விடுவேனாலே . . . ம்ம்ம்?" பாறைகள் உருளும் நகைப்பு. பின் பனையோலை மண்ணில் உரசுவதுபோல் சீறும் அழுகை "என்னைய கொண்ணு போட்டானுகளே . . . ஏலே என்னைய கொண்டு போட்டானுகளே . . . அறு கொலை செஞ்சானுகளே . . . எனக்கு அன்னமும் தண்ணியும் இல்லியே . . . இந்தக் காட்டில எனக்கொரு நாதியில்லியே . . ." பின்னர் சொல்திரளாத ஏதோ காட்டுமொழியில் பெயர்களைச் சொல்லி கூவி அலறுகிறாள். "மச்சீ, தாகீ, சூரீ, மாடா . . ." நெஞ்சுடைய ஓங்கி ஓங்கி அறைந்து கதறுகிறாள்.

எண்ணெய்பட்ட தீயென மீண்டும் குரோதம் எழுகிறது. "ரெத்தம் கொண்டாலே . . . ஏலே சூடுரெத்தம் கொண்டாலே எனக்கு . . . என் சங்கு குளிர குருதி கொண்டாலே . . . என் சங்குத்தீ அணைய நிணம் கொண்டாலே . . . ஏலே . . . ய்ய்ய்யே . . ." துள்ளித் துள்ளிச் சுழன்று சட்டென்று கால்வாரப்பட்டது போல வைராகி தெறித்து விழுகிறார். அவரைத் தொட்டுத்தூக்க அஞ்சி, புல்லரித்து மயிர்ப்புள்ளிகள் பரவிய கழுத்தும் தோள்களுமாக குடும்பத்தவர் கைகட்டி நடுங்கி நிற்கிறார்கள். அவரே எச்சில் வழிய ஒருக்களித்து பின்பு மெல்ல எழுந்து அமர்ந்து செம்பு நிறைய ஓடைநீர் குடித்து இளைப்பாறுகிறார். தெங்குமூட்டாரின் உடைந்த கூரைமேல் காட்டுவள்ளிகள் படர்ந்தழிந்த பழைய வீட்டின் தெற்குப்புரையில் பூட்டிவைத்திருக்கப்படும் துருப்பிடித்த பள்ளிவாள் மஞ்சள் துணியில் பொதிந்து அவரால் கொண்டுவரப்பட்டு மாமரத்தடியில் காத்திருக்கும். அதை எடுத்துப் பிரித்து அம்மைமுன் வைத்து கிண்டி நீரில் தெச்சிமலர் தொட்டு வணங்கி அதன் மேல் இட்டு பூசைசெய்து எடுத்து கையிலேந்தி நிற்கிறார்.

சென்ற வருடம் குஞ்ஞன்பிள்ளை. இந்த வருடம் வேலப்பன் பிள்ளை வரட்டும். ஆனால் அவருக்கு சர்க்கரை நோய் உண்டல்லவா? அப்படிச்சொன்னால் முடியுமா? எல்லாருக்கும்தான் நோய் நொடிகள் இருக்கிறது. எல்லாருக்கும் பங்குள்ள விஷயமல்லவா? மேலும் இது ஒரு வாதைஒழித்தலும்கூட. அகம் நிறைந்து நொதித்துக் கிடக்கும் பலவற்றை அன்னை உறிஞ்சி எடுத்துவிடுவாள். குடும்பத்தில் உள்ள நோயும் நோவுகளும் நீங்கும். அம்மைக்கு அர்ப்பித்தபின் உடலில் ஒரு புதிய வலிமை ஏறும். எடைகுறைந்ததுபோல் உணர்வீர்கள். வாருங்கள். தன் தாய்தந்தை மூத்தாரிடமிருந்து யாரால் தப்பிச் செல்லமுடியும். பாவபுண்ணியங்கள் இரண்டும் தந்தை தாய்வழிச் சொத்துகள் அல்லவா? வேலப்பன்பிள்ளை சார் வரட்டும் . . . வாருங்கள் சார் . . .  என்ன பயம் . . .

வேலப்பன்பிள்ளை மெல்ல முன் வந்து நடுங்கும் வலதுகையை நீட்டுகிறார். வாட்சைக் கழற்றுங்கள். பயப்பட வேண்டாம். வேறுபக்கம் பார்த்து நில்லுங்கள். எத்தனைமுறை ஆஸ்பத்திரியில் ஊசி போட்டிருப்பீர்கள். வாள் விரலை நெருங்குவதை முகம் திருப்பியிருக்கும் நிலையிலேயே அவர் உணர்கிறார். சட்டென்று அவர் கை பின்னுக்கிழுக்க முயல்கையில் இருவர் அவரைப் பிடிக்கிறார்கள். வெட்டியாகிவிட்டதா . . . ஆமாம். ரத்தம் சொட்டுகிறது. அவரது விரலை இறுகப்பற்றி வைராகி அவரைக் கொண்டுசென்று இரிட்டிக்காரியின் பீடத்தின் மேல் ஊமைக்கல்லில் அந்த நாளுக்கெனக் களபத்தால் வரைந்த செக்கச் சிவந்த வாயில் சொட்டுகிறார். உள்ளிருந்து தழல்நுனிபோல் நாக்கு ஒன்று வந்து நக்கிச்சென்றதா என்ன? ஒரு பெரிய ரணம் அந்த வாய். எரிந்தெரிந்து காத்திருக்கும் வாய். மனித உடலில் வாய் என்பது ஒருபோதும் ஆறாத ஒரு ரணமல்லவா?

2

"நீக்கம்பு நக்கி நாசமாட்டு போறதுக்கு, இஞ்சயுள்ள ஏக்கிமாரு குடிச்ச ரெத்தம் போராதுண்ணுல்லா எனக்க அப்போ, இந்நா மாப்பிள்ளமாரு அவனுகளுக்க ஏக்கிய கொண்டுவந்து வச்சிருக்கானுக . . . ஒண்ணும் காணாம கேக்காம எனக்க கண்ணடஞ்சாபோரும் எனக்க கோரோயில் முருகா . . ." என்றாள் கோலம்மை ஆசாரிச்சி அகப்பை விற்க வந்தபோது. "இம்பிடு கஞ்சிவெள்ளத்தில நாலுமுத்து உப்பிட்டு கொண்டுவரணும் அம்மிணியே. சங்கடச்சுல்லா போச்சு . . . மேலேத்தேரி கேறும்பம் இந்நா எனக்க சூத்திலோட சீவன் போச்சுண்ணாக்கும் நெனைச்சேன் . . ."

யட்சிவிளையாட்டம் போலத்தான் ரப்பர் எங்களூரில் பரந்து படர்ந்தது. யாரும் சீண்டாமல் பிறுத்தி படர்ந்து கிடந்த மலைப்பொற்றைகளை எல்லாம் மாப்பிள்ளைமார் பத்மநாபனின் புத்தன் சக்கரத்தை எண்ணிக்கொடுத்து வாங்கினார்கள். பாண்டிநாட்டிலிருந்து வேலையாட்களைக் கொண்டுவந்து குடில்கட்டி தங்கவைத்து காடும்புதரும் வெட்டி நீக்கி குழி தோண்டி ரப்பர் நட்டார்கள் தளிரெழும் ரப்பர் யட்சி பெற்ற குழந்தை போல அழகானதுதான். காட்டுக்குள் மரத்தடிகளில் குடியிருந்த யட்சிகள், நீலிகள், போத்திகள், மாடன்கள், வாதைகள் எல்லாரும் பெயர்த்தெடுக்கப்பட்டு பீடத்தோடு கொண்டுவந்து முச்சந்திகளில் குவிக்கப்பட்டார்கள். திற்பரப்பில் கதகளி கண்டு திரும்பும்போது நெஞ்சிடிப்பைக் காதில் கேட்கவைத்த அயனிக்கரை யட்சி சுக்கான் ராவுத்தரின் சாயாக்கடையருகே சரிந்துகிடப்பதைக் கண்டேன். "ராவுத்தன்மாருக்கு ஊதிக்கெட்டு உண்டுல்லா . . . யச்சி தொடமாட்டா . . ." அவரது கடையில் முகமெல்லாம் அம்மைத்தழும்புடன்  மாவாட்டும் தடித்தபெண் அயனிக்கரை யட்சிதான் என்றான் ராதாகிருஷ்ணன். அவளுடைய நட்டுச்சியில் ஆணியடித்த தடத்தை அம்மிணியம்மா கண்டாளாம். நான் அவளை ஓரக்கண்ணால் பார்த்து “ஒரு பருப்பு வட” என்றேன். மாவாட்டு  கையில் முலைமேடுகளில் கரிய சுழிகள் எழுந்தன.

ரப்பர் தழைத்தபோது கிராமமே இருண்டது. பறவைச்சத்தம் குறைந்தது. பின்னர் பச்சைப்படப்புமேல் காற்று பெருகிச்செல்லும் இரைச்சலாக ஆயிற்று கிராமத்தின் ஒலி. இருண்ட இரவின் ஆழத்தில் ஊரைமூழ்கடிக்க மலையிறங்கிவரும் பேரருவி ஒன்றின் ஒலியெனக் கேட்டது அது. மண்ணுக்கு அடியில் ரப்பர்வேர்களின் வலை மெல்ல மெல்ல நான்குபக்கமும் விரிந்தது. யாருமறியாமல் அது மாமரங்கள் பலாமரங்களின் உதிரத்தை உறிஞ்சிக்குடித்தது. அவை நின்ற இடத்தில் வெளிறி இலை குறைந்து சோர்ந்தன. பக்கக் கிளை காய்ந்து அடுப்பட்டை காய்ந்து பட்டு நின்றன. சாணிக்குழியில் உரம் அள்ளும்போது குழியின் விளிம்புகளெங்கும் வெண்ணிற மண்புழுக்களின் குவியல்கள் போல முட்டிமோதி  இறங்கியிருக்கும் ரப்பர்வேர்களைக் கண்டோம். அடுக்களைப்புறத்து அம்மியைச் சற்றே விலக்கியபோது அடியில் ரப்பர் வேர்களின் நரம்புப் பின்னல் நெளிந்தது. தோட்டத்தில் பசு இட்ட சாணிக்குள் மூன்றாம்நாள் முழுக்க ரப்பர்வேர்கள். “இக்கணக்கில போனா இந்த ரப்பர் பசுவுக்க சூத்தில கேறி உள்ள இருக்கப்பட்ட சாணியயும் திண்ணுபோடுமே மக்கா” என்றார் நாராயணன் அண்ணன்.

“அந்த வளிக்கு நல்லதுண்ணுவைடே . . . பண்டு இந்தக் காடு முழுக்க நிண்ண எடம் நெறைச்சு யச்சியும் வாதையுமாக்குமே. இப்பம் எல்லாம் போச்சு ஒத்த ஒரு யச்சிமட்டும் எண்ணாச்சு . . . இனி அதப்பத்தி கவலப்பட்டாப்போருமே . . .” மலைக்கெழங்கு மாதவன் அண்ணன் சொன்னார். முன்பு மலைக்குப்போய் மரச்சீனிக்கிழங்கு வாங்கி சைக்கிளில் கொண்டுவந்து ஊர்தோறும் விற்கும் வேலை செய்திருந்தார். மலைக்கிழங்குக்கு மலைத்தெய்வங்களின் ருசி உண்டு. மலைச்சுனைகளில் ஊறிய ருசி. மதியத்துக்கு முன் கிழங்குடன் வரவேண்டுமென்றால் பின்னிரவில் மலையேறவேண்டும். பத்து வருடம் முன்பு மாதவண்ணன் களியல் ஏற்றமேறும்போது சாலையோரத்து வாகை மரத்தடியில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். குலஸ்திரி எனத் தோற்றம். ஆனால் அச்சமில்லாமல் அக்காட்டுப்பாதையில் நிற்பவள் யட்சியன்றி வேறு யார்? அண்ணனின் அகம் நடுங்கியது.

என்றாலும் மெல்ல நெருங்கிச் சென்றார். அவளுடைய கால்கள் மண்ணில் ஊன்றித்தான் இருந்தன. அருகே ஓடிய சிற்றாறில் நீராடி ஈரத்துடன் ஏறி அமர்ந்திருந்தாள். விரித்த கருங்கூந்தல் பின்பக்கம் நீர்சொட்டிக் கொண்டிருந்தது. மார்பின் நேரியதுகட்டுக்குள் நிறைந்து பிதுங்கிய முலைகள். பலாத்தடி கடைந்து செய்தது போல மஞ்சள் மினுங்கும் விரிந்த தோள்கள். அண்ணன் இடையில் கட்டிய மந்திரத்தாயத்தைத் தொட்டு மண்டைக்காட்டம்மையை மனதில் கும்பிட்டு இடையிலிருந்து சூரிக்கத்தி எடுத்து விரித்து சைக்கிளின் பலத்தில் மெல்ல மெல்ல அவளை நெருங்கினார். அவள் அவரைக் கவனிக்கவேயில்லை. அப்படியே அவர் கடந்துசென்றிருக்க முடியும். ஆனால் அவள் பின்னால் வந்தால் என்ன செய்வது?

அண்ணன் மெல்ல கனைத்து அவளிடம் “யாரு?” என்றார். அவள் திரும்பிப்பார்த்து எந்தத் தொடர்பும் இல்லாமல் ஏதோ சொன்னாள். “யாரு நீ? ஏன் இங்க இருக்கே? இந்நேரத்துல?” அதற்கும் பொருளில்லா பதில். கண்கள் நிலை பதற பலவிதமான முகபாவனைகள். அண்ணன் தன் சூரிக்கத்தியை நீட்டி அவள் உடலை மெல்லத் தொட்டார். அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. அப்படியானால் யட்சி இல்லை. மெதுவாக அவள் உடலைத் தொட்டார். அப்போதும் அவளுக்கு எந்த மாறுபாடும் இல்லை. மீன்போல் குளிர்ந்த விரல். நீராடிய ஈரம். அண்ணனுக்கு விஷயம் மெல்லத் தெளிந்தது, அவள் சித்த சுவாதீனமில்லாத பெண். ஏதோ நல்ல வீட்டுப்பெண், கட்டறுத்து வந்துவிட்டிருக்கிறாள்.

அவளிடம் நைச்சியமாகப் பேசி அவள் வீடிருக்கும் இடமும் குடிப்பெயரும் கேட்க முயன்றார். அவளால் எதையுமே சொல்ல முடியவில்லை. மீண்டும் மீண்டும் வீடெங்கே என்று கேட்டபோது கிழக்காகக் கைநீட்டி அங்கே என்றாள். “சரி வா . . . நான் உன்னைய வீட்டில கொண்டுபோய் விடுகேன்” என்று சொல்லி கைப்பிடித்து இழுத்தும் மெல்ல உந்தியும்  நடக்க வைத்தார். அவள் புத்தி நிலைக்காத குழந்தைபோலிருந்தாள். சட்டென்று ஒரு இலையை பறிக்கத் திரும்புவாள், ஒரு பூவை நோக்கி ஓடி மலைச்சரிவிலிறங்குவாள். காற்றடித்தால் இருகைகளையும் விரிப்பாள். உருண்ட முலைகள் நடக்கும்போது மாவிலைச் சுட்டிப் புடவைக்குள் குலுங்கின. இறுகிய தொடைகள் குதிரைச்சதைபோல அசைந்து அதிர்ந்தன. அண்ணன் மெதுவாகக் காமவயப்பட்டார். பின்னர் அவளிலிருந்து கண்களை விலக்கவே அவரால் முடியவில்லை.

ஆனைக்குன்று ஏறி மறுபக்கம் மலைச்சரிவில் இறங்கும்போது அவள் கைநீட்டிச் சொன்னாள், அங்குதான் தன் வீடு என்று. காமம் உரசும் கனத்த கார்வை கொண்ட இனிய குரல். அக் குரலையே கட்டிப்பிடித்து முத்தமிடத் தோன்றியது. சுட்டிய விரலில் முத்தமிடத் தோன்றியது. அவள் மிதித்துச் செல்ல, குழிந்த மண்ணில் முத்தமிடத் தோன்றியது. எங்கே செல்கிறோமென்ற சிந்தனையே இல்லை. அக்காட்டில் எங்கும் வீடுகள் இல்லையே என்ற எண்ணமே இல்லை. குன்றிறங்கும்போது இலவங்காய் உலர்ந்து வெடித்த பஞ்சுபோல மெல்ல மிகமெல்ல காற்றில் தவழ்ந்திறங்குவதாகப் பட்டது.

பன்றிமுக்குத் திரும்பியபோதுதான் கண் நிறைத்து, திசை தழுவி, நிலம் மூடி, வானம் ததும்பி, பரந்துகிடந்த காடு தென்பட்டது. நிலவில் காடு என்பது கடவுளின் பித்து. தாழம்பூவின் மணம். நறுமணங்களுக்கே ஒரு தன்மை உண்டு, மெல்லியதாகும்தோறும் அவற்றின் வலிமை அதிகரிக்கிறது. தொலைவிலாகும்தோறும் இசையில் கனவு கலப்பது போல. காடு அசைவற்றிருந்தது. தூங்கவில்லை, கனவுகண்டுகொண்டிருந்தது. சட்டென்று அண்ணன் அவரது பாட்டனின் சொற்களை நினைவுகூர்ந்தார். “மனுசன்னாக்க ஒரு செறிய ஜீவியாக்கு மெடே மக்கா.. பெரிய ஒண்ணையும் அவனால தின்ன முடியாது பாத்துக்கோ” அன்றுதான் அதன் பொருள் கைக்குச் சிக்கியது. தொண்டையில் தூண்டில்முள் மாட்டியாயிற்று. ஆனாலும் உதறி விடுபட முடிந்தது பாட்டன் செய்த புண்ணியம். மனதை வல்லமையாக மாற்றி கால்களைத் திருப்பி மெல்ல பின்னால் நகர்ந்தார். அப்போது அவளுடைய முகம் மாறியது. காற்றுபட்ட தீ போல எரியும் கண்களுடன் அவள் “எந்தா?” என்றாள். “நான் போறேன் . . . நான் பாவமாக்கும்” என்றார் அண்ணன்.

“எந்தினு பயக்குந்நு?” என்று அவள் கேட்டபோது உதடுகளில் மழலைச் சிரிப்பு. ஆனால் அண்ணன் அவள் கால்களைக் குனிந்து நோக்கினார். எருமைக்குளம்புகள் கொண்ட பாதங்கள். கனவிலென இரும்புக்குண்டுகளாகக் கனத்த கால்களுடன் மூச்சுவாங்க ஓடி ஓடி ஓடிபாதைக்குவந்து குப்புறவிழுந்து மயக்கமானார். மறுநாள் புல்லரியச்செல்லும் பெண்களால் கண்டெடுக்கப்பட்டார். இரண்டு செந்நாய்கள் சற்று அப்பால் புதருக்குள் இருந்தன, மரணம் காத்து. இருபத்தைந்து நாள் காய்ச்சலடித்தது. எழுந்தபோது இடுப்பு தளர்ந்து கிடந்தது. “நீ சுகுருதம் உள்ளவனாக்குமெடே மாதவா . . . எனக்க சீவிதத்திலே மாட்டுயச்சிக்க பிடிதப்பி வந்த ஒருத்தன நான் கண்டதில்ல . . . பண்டெல்லாம் மாசம் மூணு சவமுல்லா விளும் . . . அங்கிண குழிச்சு மூடிட்டு வந்துபோடுவோம் . . .” என்றார் அச்சுதனாசான்.

“அவனுக்க சுகுருதம் மூப்பிலான் மாருக்க சொல்லிலயாக்கும் . . .” என்றார் போத்தி. “காமமும் அகங்காரமும் ஆக்கும் யட்சிமாருக்க தூண்டிலிலே சாடிப்போய் கொத்துதது . . .” வெற்றிலையைத் துப்பியபின் “ஒண்ணு சிந்திச்சா தல தெளியும். இந்த அழகூண்ணு சொல்லுகதே ஒரு பொறியாக்கும் கேட்டையா? அழகுக்க உள்ள என்னமோ இருக்குலே மக்கா. அது மனுச ஜீவிக்கு என்னைக்குமே மன சிலாவக்கூடிய காரியம் இல்ல . . . அழகுக்கு உள்ள ஒரு விளி இருக்குல்லா அது என்னத்துக்க விளியாக்கும்லே?  சொல்லப்போனா இங்க வா வான்னுள்ள அந்த விளியையாக்கும் நாம் அழகுண்ணு சொல்லுகது . . . மீனைக்கேட்டா தூண்டில்புழுவாக்கும் அழகுன்னு சொல்லும்னு நெனைக்கேன். லே மக்கா, மாதவா, பத்தாளை முக்கிக் கொன்ன ஆழமுள்ள கொளத்துக்கு அப்பிடி ஒரு அழகுக்க விளி உண்டு கண்டிருக்கியாலே? ஆழமுள்ள மலைப்பள்ளத்துக்கு அந்தமாதிரி ஒரு விளி உண்டு. ஞாறலிக்காய் கண்டிருக்கியா, என்ன அழகு. எடுத்து வாயில வைச்சா அப்பம் கத தீந்துது. நல்லபாம்புக்கு இல்லாத அழகாடே? முன்ன நம்ம செறயன் வீட்டில தீப்பிடிச்சப்ப வலியநாயரு நின்னு பாத்து ரசிச்சு சிரிக்காரு. ‘தீ கண்டோ போற்றி? எந்து ஒரு அழகாணு அல்லே? பொன்னாணே, பொன்னு!’ன்னு சொல்லி சொல்லி டான்சு   களிக்காரு. தல மறிஞ்சு போச்சு. பிறவு நேரே ஆவல்ல . . . அதுகொண்டாக்கும் நம்ம பாட்டன்மாரு அழகுள்ள எதைக் கண்டாலும் நேரா கொண்டுவந்து தெய்வத்துக்க காலில வச்சு கும்பிட்டுட்டு போனாங்க. அது தெய்வத்துக்கு நாம சொல்லுத ஒரு பதிலாக்கும் கேட்டையா? அந்த சோலியே நம்மகிட்ட வேண்டாம், சாதனத்த நீயே வச்சுக்கோன்னு சொல்லுகது மாதிரி. பின்ன என்ன மயித்துக்குடே மார்த்தாண்டவர்மா மகாராஜாவு முத்தும் மணியும் கொண்டுவந்து ஆதிகேசவனுக்குப்படைச்சாரு? தலை உண்டானா போராது, சிந்திச்சுப் பாக்கணும் . . .”

தெங்குமூட்டு வீட்டைச்சுற்றி இருட்டெல்லாம் யட்சிகள் நின்றிருப்பார்கள் என்றார் போற்றி. கொஞ்சநாள் பூட்டியிட்டிருக்கும் அறையைத் திறந்தால் உள்ளே தூசும் ஒட்டடையும் மணப்பதன் ஊடாகச் செண்பகப்பூவின் வாசனையும் இருக்கும். கொஞ்சநேரம் அந்த மணத்தை உள்ளிழுத்து நின்றுவிட்டால் அது அழுகிய சதையின் அல்லது புழுத்த மலத்தின் நாற்றமாக மாறும். இருட்டுக்குள் கண்களின் மினுக்கம் தெரியும். அவற்றில் குரோதம் விறகிலாதெரியும் நெருப்பு போல உடலிலாது மின்னுவதைக் காணலாம். அக்கண்களைக் கண்டு நின்றால் கண்களைச்சுற்றி ஒரு உடல்வரிவடிவம் உருவாகிவரும். அதைக் கண்டபலரும் சித்தமிழந்து விட்டிருக்கிறார்கள். ஆகவே எல்லாக் கதவுகளிலும் மணி கட்டியிருப்பார்கள். மும்முறை அதை ஒலித்த பின்னரே எக்கதவையும் திறப்பார்கள். தெங்கும்மூட்டுவீட்டில் சந்ததிகள் தொடர்ந்து செத்துக்கொண்டிருந்தார்கள். வெளிறி உதிரமிழந்து கண்கள் மீன்விழிகள் போல விரைத்து குழந்தைகள் காலையில் படுக்கைகளில் கிடந்தன. துட்டி குளிப்பாட்டும்போது மூட்டிப்பிடித்த சிறு கைகளுக்குள் இருந்து அம்பட்டத்தி காயாத புதிய செண்பக மலர்களை எடுத்துப்போட்டபோது கதறியபடி பெண்கள் எழுந்தோடி விழுந்தனர். குனிந்த உடல் மேல் முன்நெற்றி  புடைத்த கனத்த பெரிய தலைகளும், பிதுங்கிய கண்களும், மன்னிப்பு கோரி மார்போடு சேர்த்து வணங்கிய கைகளுமாக சாபிள்ளைகள் உதிரமற்ற கருநீர் வழியாக வழுக்கிறங்கி பாளையில் விழுந்து கிடந்தன. அவற்றின் உடலைக் கிள்ளிப் பார்த்த வயற்றாட்டி அவை மாவுப் பொம்மைகள் போலக் குருதியிலாதிருந்தன என்றாள்.

தெங்குமூட்டுவீட்டில் தினமும் மந்திரவாதம்தான். வடக்கன் நம்பூதிரிகள், தெற்கு மலைக்காணிகள், கிழக்கன் தமிழ் மந்திரவாதிகள் என வந்தபடியே இருந்தார்கள். பூஜைகள் பலிகள் நோன்புகள். பெரிய எஜமானன் குளிப்பதற்காக இளங்காலை இருளில் இல்லக்குளத்திற்குச் சென்றவர் குளித்து கல்படி ஏறி வரும்வழியில் எதையோ கண்டு அஞ்சி ஓடிவந்து குப்புற விழுந்து இறந்து கிடந்தார். அவரைப் புரட்டிப்போட்டபோது தன் முழங்கையையே அவர் கடித்து இறுக்கி சதைபிய்ந்து வாய்க்குள் நிறைந்திருக்கக் கண்டார்கள். அதன் பின் வீட்டைப் பூட்டிவிட்டு வாரிசுகள் குழித்துறையில் குடியேறினார்கள். அங்கிருந்து பாறசாலைக்கும் திருவனந்தபுரத்துக்கும் சென்றார்கள். வீடு இருண்டு அமைதி கொண்டது. அமைதி கொண்ட வீடு மட்கிக்கொண்டிருக்கிறது என்று பொருள். அதன் மீது கொடிகள் படர்ந்தன. சருகுகள் பெய்து மூடின.

பிறகு நாகர்கோயிலில் கூடிய வாரிசுகள் பேசி சொத்துகளைப் பங்கிட்டுக் கொண்டார்கள். எட்டுப்பேருக்குப் பொதுவான சொத்தாக வந்தது குடும்பவீடும் இருபதேக்கர் நிலமும். குஞ்ஞுமாத்தன் முதலாளி அனைவரையும் இரு கார்களிலாக ஏற்றி அருமனைப் பதிவாளர் அலுவலகத்துக்குக் கொண்டுசென்று ஆதாரம் எழுதி கைச்சாத்திட்டு சொத்தை வாங்கினார். மா, பலா, நுணா, கோங்கு, அயனி, மஞ்சணம், இலந்தை, நாவல் எனக் கொழித்திருந்த தோட்டத்தை வெட்டி வெளிச்சமாக்கி குழி எடுத்து ரப்பர் நட்டார். வீடும் தெற்குமூலை பகவதி கோவிலும் மட்டும் குடும்பச் சொத்தாக எஞ்சின. நூற்றாண்டு எரு கலந்த மண்ணில் ரப்பர் அடர்ந்து சூழ்ந்தது. அதன் வேர்கள் வீட்டுக்குள் நுழைந்து உள்ளறைகளில் எங்கும் பரவிப் பின்னி உறிஞ்சின. சுவர்கள் வெடித்துச் சரிந்து கூரை குடைசாய்ந்து கொம்பு நிலத்தில் குத்தி விழும் காட்டானை போல வீடு விழுந்தது. கூடு மிஞ்சி மழையில் நனைந்து காளான் பூத்தது. பின் மெல்லமெல்ல வெட்டுகல்லால் ஆன சுவர்களும் கருங்கல் அஸ்திவாரமுமாக எஞ்சியது.

நான் முதன்முறையாகப் பார்க்கும் போது ரப்பர் இலைதழைத்த பருவம். சருகுக்குவியல்கள் மட்கும் மேட்டுக்குள் வீட்டின் கற்குவியல்கள் பரவியிருந்தன. இலைகளை ஊடுருவி வந்த இளவெயிலுக்கும் பச்சை நிறமிருந்தது. சரிந்து கிடந்த தீபலட்சுமியின் உடைந்த சிலை மேல் இருந்த பச்சோந்தி சாம்பல்நிறப்பிடரிச் செதில்களை விரித்து வாயைத்திறந்து அந்த சூழலை விழுங்கி உடலுக்குள் நிறைத்துக்கொண்டிருந்தது. அதன் தலை கல் நிறத்திலிருந்து பச்சை நிறமாக மாறியது. வாலில் நுனி மட்டும் கல் நிறமாக எஞ்சி எழுந்து விரைத்து ஆடியது. என் காலடியோசையில் திடுக்கிட்டு சருகுமேல் ஓடிப் பாய்ந்து ரப்பரிலை மேல் அமர்ந்து இன்னுமிருமுறை தலையாட்டியபோது வாலும் பச்சை நிறமாக ஆயிற்று.

3

முன்பெல்லாம் வீடுகள் இருண்டிருக்கும். திண்ணைகளிலேயே தளிரிருள் துடிக்கும். முற்றத்தில் நின்று பார்த்தால் வீடுகளின் அகம் நிழல் பரவிக்கிடக்கும் குளிர்ந்த காட்டுப்பொய்கை போலிருக்கும். உள்ளே அசைவுகள், உடையொளிர்வுகள், சுவரில் நிழல்கள், மெல்லிய குரல்கள். ‘அக்கா!’ என்றோ ‘மாமீ’ என்றோ அழைத்து காத்து நின்றால் நீராழத்திலிருந்து சிறகசையாமல் எழுந்து வரும் ஒற்றைப்பரல் மீன்போல ஒரு வெண்ணிற வேட்டி தோன்றி நெருங்கி வரும்போது முகம் தெரியும். பெரும்பாலும் நடுவயது மாமிகள். ஒரு அசையாத கனவிலிருந்து உசுப்பப்பட்டமையின் எரிச்சல் தெரியும் முகபாவனை. உள்ளே இருட்டு கூழ்போலத் தேங்கிய சிறு சிறு அறைகளுக்குள் கண்கள் ஒளிரும் அக்காக்கள். தேன்கூட்டின் அறுகோண அறைகளுக்குள் இருக்கும் சிறகுமுளைக்காத தேனீக்குஞ்சுகள் போல. அன்னியக் குரல் என்றால் அத்தனை தலைகளும் விரல்தொட்ட குளத்துப் பரல்குஞ்சுகள் போல நொடியில் மறையும். பின்னர் தடாகமெங்கும் இமைக்காத கண்களாகும். தடாகமே ஒரு பதைக்கும் விழியாகும்.

முற்றத்துவெயில் முகத்தில் விழாமல் வளர்பவர்கள் குடிப்பெண்டிர். வெளிச்சத்தில் அவர்களுக்குக் கண்கள் கூசும். இமைசரித்து தலைகுனிந்து நிலம்நோக்கி நடப்பார்கள். சூழலின் ஒலியையெல்லாம் அதிர்வாக வாங்கும் தவுலின் தோல் பரப்புபோல அவர்களின் சருமம்சிலிர்த்து அதிரும். பதற்றம் கழுத்துக்குழியில் பறவைநெஞ்சுபோலத் துடிக்கும்.யார் எது கேட்டாலும் மூச்சுத்திணறி உடல் குழையும். சொற்களெல்லாம் உள்ளே செறிந்த கற்பாறைகளில் முட்டிமோதி  நுரை மட்டும் வெளியே வரும். அவர்கள் மிரண்டபசுபோலக் காலெடுத்துவைத்து கோயிலுக்கு பிரதோஷம் தொழுவதற்குச் செல்லும்போது இருபக்கமும் நிறையும் கண்கள் நடுவே முலைகளையும் தொடைகளையும் கனத்துச் சுமந்துசெல்வார்கள்.

ஆனால் அறையிருளில் அவர்களுக்கு மெல்லமெல்ல வல்லமை அதிகரிக்கிறது. குரல்களுக்கு வெப்பமும் கண்களில் கூர்மையும் உருவாகிறது. வேலைக்காரி செல்லம்மையைத் தண்டிப்பதற்காகத் தலைமுடியைப் பற்றி இழுத்துச்செல்லும் பங்கஜாட்சி அத்தையைக் கண்டு நான் கால்சட்டையில் சிறுநீர் கழித்திருக்கிறேன். ஏதோ பூசலில் தாட்சாயணிமாமிக்குப் பதில் சொல்ல கலைந்து சரிந்த நீள்கருங்குழலும், விழித்த கண்களும், சீறும் பற்களுமாக அறையிலிருந்து அங்கணத்துக்கு வந்த லட்சுமியக்காவின் கண்கள் என் கனவில் வருவதுண்டு. அவர்களின் வலிமையே இருட்டில்தான். இருள் அடரும் தோறும் அவர்கள் வெல்ல முடியாதவர்களாக ஆகிறார்கள். நீரில் முதலைகள் போல அங்கே அவர்களுக்குக் கண்ணுக்குத்தெரியாத நூறுகைகள் முளைக்கின்றன. வீட்டிருளிலிருந்து வெறிமூத்து அவர்கள் காட்டிருளுக்குச் சென்றுவிடுவதுமுண்டு. காட்டுக்குள் எப்போதும் இருள். நூற்றாண்டுகள் யுகங்கள் பழமையுள்ள இருள். அங்கே ஒளியென்பதே இருட்டு உண்டுமகிழ்வதற்கான இளம் பச்சை நிறமுள்ள உணவுமட்டும்தான்.

லட்சுமியக்காவின் இரு கணவர்கள் விட்டுப்போனார்கள். கடைசிவரை இருந்தவர் மூன்றாவது கணவனான கேசவன் போற்றி. வயோதிகர். “கௌவனுக்கு மந்திரம் தெரியும்லே அண்ணா . . . இல்லாம அடங்குமா யட்சி?” என்றார் நாராயணன் அண்ணன். இரண்டாவது கணவரான பாறசாலையைச்சேர்ந்த திவாகரண்ணன் எட்டுமாதம் மட்டுமே இருந்தார். அங்கே அவருக்கு நிலங்களும் ஒரு கடையும் இருந்தது. வந்துபோனவர் வருகை குறைந்து முற்றிலும் நிறுத்திக் கொண்டார். ஆள்தேடிச் சென்றால் பணம் கொடுத்து, சோப்பு பவுடர் துணிகள் என வாங்கித்தந்து இதோ வருகிறேன் என்று சொல்லி அனுப்பிவிடுவார். கடைசியாகப் பார்த்துவந்த கோலம்மை சொன்னாள், “அது இனி பாக்காண்டாம் அம்மிணியே . . . அந்த ஜீவன் ரெச்சப்பட்டுப் போச்சு . . . பாவம் பய்யனில்லா . . . விடுங்க . . . சூடுள்ள வல்லதும் உண்டா கும்பி நனைக்கியதுக்கு?” குளப்படியில் பேச்சை நான் கவனித்தேன். “ஒராள் ரெண்டாளாவுததும் ரெண்டாள் நாலாளாவுததும் கண்டா ஆருடே நிமுந்து நிப்பான் . . . ஆணுக்கு ஒரு கணக்குண்டுடே . . .” புரியாத சிரிப்புகள் குறிப்பேச்சுகள். “பூநாகத்துக்க வெசமிருக்கே அது அஞ்சு ராஜநாகத்துக்க வெசத்துக்குச் சமானமாக்கும் பாத்துக்கோ . . .”

நாகம் எப்போதும் தாழைமரப் படர்ப்புக்குள்தான் முட்டையிடும் என்பார்கள். அங்குதான் எப்போதும் ஈரமுலராத சதுப்பும் தாழைமடல் சருகுகுவிந்த செத்தைகளின் மெதுப்பும் இருக்கும். சின்னஞ்சிறு சோழிமுத்துகள் போன்ற முட்டைகள் விரியும்போது உளுந்துப்பப்படத்தைத் தேங்காயெண்ணெயில் பொரிக்கும் வாசனை வரும். விரியன் என்றால் வசூரி முத்துகள் உடைந்து சீழ் வரும் வாசனை. கருக்குழந்தையின் கைவிரல்கள் போன்ற நாகக்குஞ்சுகள் துடித்து நெளிந்து சதுப் புச்செத்தைகளுக்குள் ஒளிந்துகொள்ளும். அங்கே பெருகிவளரும் புழுக்களையும் மின்மினிகளையும் உண்டு வளரும். வளரும் அவசரத்தில் அவை உறங்குவதேயில்லை. இரண்டுவாரங்களில் அவை நீண்டு தடித்துப் பெரிய சர்ப்பங்களாக ஆகி தங்கள் பாதைகளைத் தாங்களே கண்டுகொள்கின்றன. பசியே நாக்காகி நெளிவதுபோன்ற சர்ப்பக்குஞ்சுகளுக்கு எப்போதும் கோபம். தீண்டுமெதையும் அக்கணமே அவை கொத்தும். கொத்தப்பட்ட உயிருக்குப் பின்னர் நேரமில்லை. யாரும் மிதித்து அரைத்து விடக்கூடிய புழுக்களானதனால்தான் இந்த விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது போலும். பாக்டீரியாக்களுக்கு இன்னும் விஷம். வைரஸுக்கு மேலும் பலமடங்கு விஷம்.

தாழம்பூவின் மணமென்பது சர்ப்பக்குஞ்சுகளின் மணமும்கூட என்று பாட்டி சொல்வாள். தாழம்பூ விடிகாலையிலேயே விரியும். பின்னிரவில் தாழம்பூ மணம் குளிர்காற்றிலேறி வந்தால் “சிவ சிவ” என்று அவள் செவிமூடுவாள். “ஒருத்தனுக்க கணக்கு எழுதியாச்சு . . . போகட்டும் . . . அவனுக்குக் கைலாசம் . . .” ஒரு பாம்பு போட்ட முட்டைகள் பொரித்து வரும் சர்ப்பங்களில் ஒன்று ஒருவரை பலிகொள்ளும் என்பது நம்பிக்கை. பாம்பு தீண்டிச் செத்தவன் அரன் உறையும் கைலாசமேகுவான் என்றும். முட்டையிலிருந்து எழும் சர்ப்பக்குஞ்சுகள் சின்னஞ்சிறு தீச்சுவாலைகள் போல நெளிந்து நெளிந்து இலையடிகள் தேடி ஓடும். தாழம்பூ மணம் அவற்றுக்குப் பித்தேற்றுகிறது. ஆனால் அவற்றால் அதிக உயரத்துக்கு ஏற முடியாது. ஆனால் முடியாதவற்றைச் செய்யும் ஒருவன் எங்குமிருப்பான். அவன் ஏறி விரியாத தாழம்பூக்குலைக்குள் இடம் பிடிப்பான். ஒவ்வொரு இதழ் விரிகையிலும் பொன்னிறத் தோணி போன்ற அம்மடலின் விரிந்த அடிநுனியில் செம்பருத்தி அரும்புபோன்ற சிறு செந்தலையை நீட்டி, செந்நரம்பு நாக்கு தீப்பொறியெனப் பறக்க காத்திருப்பான். கருவறைக்குள் மீண்டும் நுழைந்தவன். அதனால் மூன்று மடங்கு விஷமேறியவன். நறுமணத்தில் மயங்கி முடிவிலாத கனவே    இருப்பாக ஆனவன். அவனுக்கு யானையைக் கொல்லும் விஷம் உண்டு -  பாட்டி சொன்னாள். அவனுடைய ஆனந்த நித்திரை கலைந்தால் பின்னர் அவன் காடெரிக்கும் நெருப்பின் முதல் துளி போல. உதிரம் கொள்ளச் சீறிவரும் யட்சியின் நாநுனி போல.

தெங்குமூட்டுவீட்டிலிருந்து திருவனந்தபுரத்துக்குப் போன ஸ்ரீகண்டன் பிள்ளையும் அவரது மூத்தமகளும் மட்டும் இருபத்துமூன்று வருடம் கழித்து மீண்டும் ஊருக்கே திரும்பிவந்து நாகர்கோயிலுக்கு இடம்பெயர்ந்த நேசமாணிக்கம் பெருவட்டரின் பெரிய வீட்டை விலைக்கு வாங்கிக் குடியேறினார்கள். வீட்டைச்சுற்றி தலைக்குமேல் உயர்ந்து நிற்கும் பெருங்கல்மதில். இரும்பு வாசல் கதவு. உள்ளே நான்கு பெரிய சீமைநாய்கள். அவற்றின் நாக்கு வெளியே நீண்டு மழைக்கால வாழையிலை போல நீர் சொட்டியது. நடக்கும்போது அவற்றின் குறிகள் இருபக்கமும் அசைந்து குலுங்கின. அவற்றின் கண்களில் உள்ள மிருகத்தை எங்களூர் நாய்களில் காணமுடியாது. எங்கள் நாய்களெல்லாம் இதோ பேசப்போகின்றன, எல்லாவற்றையும் சொல்லிப் புலம்பப்போகின்றன என்ற பாவனையிலேயே எப்போதும் இருக்கும். “அது சிங்கத்துக்க வித்தெடுத்து உண்டாக்கின நாயாக்குமே” என்றார் நாராயணன் அண்ணன்.

ஸ்ரீகண்டன்பிள்ளை ஏதோ பெரிய வேலையில் இருந்து ஓய்வுபெற்றவர். யாருடனும் அவர் பேசுவதில்லை. அவருடன் நட்புகொள்ள விழைந்துசென்ற ஊர்ப்பெரியவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தி அப்பால் நின்றுபேசி அனுப்பிவிட்டார். “அவனுக்கு அந்த நாயிகள் பேசினாத்தானே மனசிலாவும் . . . எளவு கொரைக்கல்லாவே செய்யுதான்?” என்றார் தங்கராஜ் டீக்கனார். மலையாள இதழ்கள் அனைத்தும் அங்கு வாங்குவார்கள். தினமும் போஸ்ட்மேன் வரக்கூடிய ஒரே வீடு அது.  கடி தங்களையெல்லாம் வாசலில் வாய் திறந்து பின்பக்கத் துளையை உள்ளே வைத்து நிற்கும் சிவப்புப் பெட்டியில் போடுவார்கள். அதில் நாங்கள் தாள்களை மடித்துப்போட்டால் நாராயணன் அண்ணன் திட்டுவார் “லே லே . . . மக்கா அங்கிண யச்சி உண்டுலே . . . ராத்திரி உனக்கெல்லாம் பைப்பில ரெத்தம் வந்து செத்துபோவே பாத்துக்கோ . . . பிறவு காலம்பற பாத்தா ஐஸிலிட்ட சாளை கணக்கா, இஞ்சபாரு இப்பிடி, மலர்ந்து கெடப்பே . . .”

ஸ்ரீகண்டன்பிள்ளையின் மகள் கேசினி பேரழகி. ராஜாரவிவர்மா ஓவியங்களில் உள்ள நாயர் முகமுள்ள தேவகன்னிகைகளின் சாயல். பருத்து புஜங்களை அழுத்தும் உருண்ட முலைகள், தொடைகள், இருபக்கமும் விரிந்து நடுவே உருண்டு செழித்த புட்டம், இளம் பாளைபோல் உயிர்பளக்கும் சருமம், யானைத்தந்தம்போல் உருண்ட கைகள், முலைகள், தொடைகள், புட்டம், ஒரு கணம் மட்டும் கண்களைச் சந்தித்து சற்றே அழுத்தி சில்லிட வைத்து அலட்சியமாகத் திரும்பும் பார்வை, சற்றே தூக்கம் எஞ்சியிருக்கும் தடித்துச் சரிந்த இமைகள், வனமுலைகள், பெருந்தொடைகள், பல்லாப்பப் புட்டம், நடுவே சற்று வெடித்ததுபோல இரண்டாகப் பகுந்து சிவந்து மலர்ந்த பெரிய கீழுதடு, உப்புப்பரல்போன்ற பற்களுக்கு மேல் செம்பளிங்கு வாசல் வளைவுபோலக் குவிந்த மேலுதடு, முலைகள், தொடைகள், புட்டம், நெற்றியின் இருபக்கமும் சுருண்டு நின்று கொடித்தளிர் சுருள்கள் போலக் காற்றிலாடும் குழல்பிசிறுகள், இணைக்காளைகளை மெல்லத்தட்டும் சாட்டைகுச்சம்போல பிருஷ்டத்தில் மாறி மாறித் தடவி உலையும் நீண்ட கருங்கூந்தல், முலைகள், தொடைகள், புட்டம், இடுப்பின் சதைச்சரிவில் வியர்வையின் மெல்லிய கோடு, முத்துக்கம்மலின் ஒளிவிழுந்திருக்கும் பூனைமயிர் பரவிய கன்னம்,   முலைகள், தொடைகள், புட்டம் . . .

கேசினி அதிகமாக வெளியே வருவதில்லை. அவளைப் பார்ப்பது எளிய விஷயமல்ல. மிக அபூர்வமாக அவள் யாரையாவது அழைக்கவோ நாயைப் பிடிக்கவோ வெளிவாசலைத் திறந்து வந்தால் அவள் வீட்டுமுன்புள்ள முச்சந்தியில் அமைதி பரவும். கண்கள் சிலை விழிகளாக ஆகும். வாசல்மூடி அவள் சென்ற அக்கணமே நாராயணன் அண்ணனின் குரல்தான் எழும். “பெண்ணாகி வந்தது ஒரு மாயப்பிசாசம் பிடித்தே எனை மண்ணாக்கி நீறாக்கி சுடுகின்றதய்யோ . . .” “நாராயணா லே எரப்பே அடிவாங்கி சாவுகதுக்காக்கும்லே உனக்கு விதி” சாயாக்கடை கேசவனின் குரல் கேட்டு நாராயணன் அண்ணன் ஓணான் போலக் கழுத்தை நீட்டிச் சிரிப்பார். துடைப்பத்தால் அடித்துத் தூக்கிப் போடப்பட்ட சிலந்தி போலச் சுள்ளிக் கைகால்களைக் கண்டபடி பரப்பி தன் வெற்றிலைபாக்குக் கடையின் பலகை மேல் அமர்ந்து “அதுக்காச்சுட்டி செத்தாலும் இந்த நரக ஜீவிதத்துக்கு ஒரு பொருளுண்டு அண்ணோ” என்பார். “வௌங்கமாட்டே மவனே . . . மாமா கேட்டுதா . . . இவனுக்கு மத்த உருப்படி இல்ல. காரணம் இவன் அப்பனுக்கு பெறக்கல்லை. இவனுக்க அம்மை சூடுதாங்காம கையிட்டுக் களிச்சதினால உண்டான பயலாக்கும் . . .” என்றார் பார்பர் தங்கப்பன்.

கேசினியின் வீட்டில் என்றும் வேலைக்கு ஆள் தேவை. அதிகாலையிலேயே குளித்து ஈரம் உலராத கரிய உடலில் எருமைப் பளபளப்புடன் கையில் மண்வெட்டியுமாக ஆட்கள் வாசலில் காத்து நிற்பார்கள். “ஏசுவடியானே, லே மயிரே, கேற்று சாடுத காளைக்குக் கோலொடிஞ்சு மரணம்னு ஒரு சொல்லுண்டுலே . . .” என்று நாராயணன் அண்ணன் கூவுவார். ஏசுவடியான் சிரித்து வேறுபக்கம் திரும்ப “பயலுக்கச் சிரிப்பபாத்தேரா? லே மக்கா இனி வழிச்சுவிட்ட தோசைக்கும் மாவு திகையாம ஆவும்லே . . . பாத்து வச்சுகிட்டா உனக்க சந்ததிக்கு கொள்ளாம்” “நாராயணா, லே மயிராண்டி . . . உனக்கு என்னத்துக்க தீனம்லே? உன்னால நாங்களுமில்லா அடிவேங்கப்போறம்?” நாராயணன் அண்ணனுக்கு அல்லும்பகலும் கேசினி நினைப்புதான் “திற்பரப்பு மகாலிங்கம் அக்கினி ஸ்வரூபனாக்குமே . . . தினமும் அஞ்சுநேரம் பாலும் பஞ்சாமிர்தமும் கொண்டு அபிஷேகம் செய்து சாந்தி செய்யல்லேன்னா நாடெரிஞ்சு சாம்பலாயிடுமே எனக்க அண்ணோ.”

கேசினி மாதத்தில் ஒருநாள் பிரதோஷம் கும்பிடக் கோயிலுக்கு வரும்போது அவளைக் காண்பதற்காகவே பெண்கள் கூடியிருப்பார்கள். அவள் யாரையும் பார்க்காமல் நிமிர்ந்த நோக்குடன் சென்று, அரைமண்டபத்தில் ஏறி, எண்ணைத் தூக்கையும் பூக்கூடையையும் போற்றியிடம் கொடுத்துவிட்டு, கைகட்டி தூண் சாய்ந்து சிற்பம்போல நிற்பாள். அப்பால் பெண்கள் முட்டி மோதி அவளைப் பார்ப்பார்கள். ஒருவருக்கொருவர் கிள்ளிச் சீண்டியும் கிசுகிசுபேசியும் வாய்பொத்திச் சிரித்தும் ததும்புவார்கள். சின்னஞ்சிறு பெண்களுக்குக்கூடத் தெரியும் என்பது கண்களில் தெரியும். “சீ நிந்நு முட்டாம போயி சோலியப்பாருங்கட்டி சவங்களே” என்பாள் கழகக்காரி பாக்கியம்மை. “வாறாளுக. கெட்டியவனைத் தீர்த்தக் குளத்தில குளிக்கவிடுகது மாதிரி அங்க சொல்லிவிடுகது. பின்ன அவனிட்ட கதைகேட்டு ரெசிக்குதது . . . உனக்கெல்லாம் எந்த நாட்டு நீக்கம்புடீ?” ஆனால் பெண்களுக்கு அதுவும் சிரிப்புதான். பூஜைமுடிந்து கேசினி சென்றபின் பாக்கியம்மை மடப்பள்ளி ஒட்டுமூலையில் குந்தி அமர்ந்து சுருள் புகையிலையைப் பிய்த்துப் பல்லிடுக்குகளுக்குள் இறுகச் செருகியபடி, “போன சென்மத்தில மழ காணா பூமியாக்கும். அதனால இப்பம் இந்நா பிடீண்ணு திருவந்தரம்     கெழக்கக் கோட்டையத் தெறந்திட்ட கணக்காட்டுவச்சு குடுத்திருக்கு. மூடாக்கதவும் மேலே வெங்கலமணியும் எல்லா மாட்டு . . . இருந்து திண்ணு ஆறட்டும் . . . மேலே உள்ளவனுக்கு இதெல்லாம் ஓரோ தமாசுல்லா . . . ஏட்டி அங்கிண நிண்ணு குணுங்காம வீட்டுக்குப் போயி அவளுகளுக்க நெலவாசலைத் தெறந்து வச்சுக் கெடங்கட்டீ எளக்கக்காரிச் சவங்களே. வேணுமானா போயி ஓரோ செம்பகப்பூவெடுத்து முடி தோறும் வச்சுகிடுங்க . . . செம்பகம் நல்லதாக்கும். மற்றவன்மாருக்க அடைப்பு எளகும் . . . கலிகால வைபவம் . . . இல்லாம என்னத்த சொல்லுகதுக்கு . . . மகாதேவாராமா நாராயணா. . .”

செண்பகக்காடு ஆற்றுக்கு அப்பால் செந்தேரியின் மறுசரிவில். இப்போது அங்கே நாலைந்து செண்பக மரங்கள் மட்டும்தான். முன்பு செண்பகம் செறிந்த காடாக இருந்தது. அதன் நடுவே இருந்தது செண்பக யட்சியின் பிரதிஷ்டை. பெரியதோர் மண்குவியல் நடுவே கல் பீடத்தில் மழைபட்டு முலையும் மூக்கும் தேய்ந்துபோன கற்சிற்பம் நின்றிருக்கும். நட்டுவைத்த கலைமான் கொம்புகள் போலச் செண்பகமரங்கள். மான்செவி போல அவற்றின் இலைகள். நீலவிழிகள் போல் உதிர்ந்துகிடக்கும் மலர்கள். அங்கே நின்றால் செண்பகம் நாறிக் குமட்டலெழும். ஆனால் இரவில் இளம் காற்று ஆற்றைத்தாண்டிக் கொண்டுவரும் செண்பக மணம் மனதை மயக்குவது.

இரவில் செண்பக மணத்தை அறிந்தால் தேவியை எண்ணித் துதி சொல்லிக் கண்மூடிப் படுத்துவிடவேண்டும் என்று எல்லாப் பையன்களுக்கும் சொல்லிவைப்பார்கள். எக்காரணத்தாலும் வாசல் திறக்கக் கூடாது. வேண்டாத சிந்தனைகள் கூடா. வேண்டாத எதையும் செய்யவும் கூடாது. செண்பக மணம் ஏன் வேண்டாதவற்றை மட்டுமே நினைக்கச் செய்கிறது? செண்பகப்பூவின் இதழ்களின் கீழ் விளிம்பில் மலர்ச்சுழிக்குள் ஒரு சிறு விரல் உண்டு. செண்பகப்பூ பூவே அல்ல. வாசல்திறக்கும் தைரியம் யாருக்கும் வருவதில்லை. கேட்ட கதைகள் பல. எழுந்துசென்று கதவின் குளிர்ந்த பித்தளைத் தாழில் கைவைத்து நெடுநேரம் நின்றதுண்டு. கதவுக்கு அப்பால் யாரோ நிற்கிறார்கள். மூச்சொலி இல்லை, உடல் மணமும் இல்லை, அசைவோ நிழலோ இல்லை. ஒன்றுமில்லை. ஆனால் மனம் அறிகிறது அங்கே நிற்கும் ஒருவரை. தூய எண்ணம் மட்டுமேயான ஒருவரை. தாழை சற்றே விலக்கவேண்டியதுதான், வெளியே நிலவும் செண்பக மணமும் சேர்ந்து உருவாக்கிய இன்னொரு உலகம். தாழை அசைக்க முடியும். சற்றே நீக்கினால் போதும். ஆனால் அது பலமடங்கு எடைகொண்டிருக்கும். குளிர்ந்து இறுகி நின்றிருக்கும்.

என்றோ ஒருநாள் ஒருவர் தாழ்நீக்கி வெளியே சென்றுவிடுகிறார். பிறகு அவர் திரும்புவதில்லை. கண்களில் எப்போதும் காய்ச்சலிருக்கும். எவரையும் முகமறிவதில்லை. எப்போதும் ஒரே பாவனை. திருவட்டார் கோயிலில் சிலைத்த யட்சனின் பாவம். அன்னத்தைத் தூதனுப்பும் நளனாக நட்டாலம் திரிலோசனன்நாயர் ஆடும் கதகளி சிருங்கார பாவம். எங்கே எப்படி மூடியிட்டாலும் காலையில் செண்பகக் காட்டில் குப்புறக் கிடக்கக் காணலாம். தொடைகளில் விந்து கஞ்சிப்படலமாகப் படிந்துலர்ந்திருக்கும். கருணன் அண்ணனைச் சங்கிலியில் கட்டிப் போட்டார்கள். கனத்த உலோகக் கண்ணிகள் ஒலிக்க அவர் நிலவுநாளில் எழுந்து நின்று மார்பை அறைந்து மயிரை அள்ளிப்பிடுங்கி அலறித் திமிறினார். எழுந்து விடைத்து நின்ற ஆண்குறி புதர் விலக்கி வரும் சர்ப்பம்போல் வேட்டியை மீறி நீலமோடிய சிவப்புத் தலை நீட்டி நின்றது. அலறும் தொண்டைபோல் அதில் நரம்புகள் புடைத்திருந்தன. நிறைசந்திரிகைநாளில் செத்து மல்லாந்து கிடந்தபோதும் இறுகிய முஷ்டிபோல நின்றிருந்தது அது. கண்கள் விழித்து முகத்தில் பரவசம்.

“அவளுக்கு நெறையாது மக்கா. ஆகாசத்தில உள்ள அக்கினிக்கு மண்ணில நெய்யூத்தி சாந்தி செய்யுகது நடக்கப்பட்ட காரியமா?” போற்றி சொன்னார். “பின்ன அதாக்கும் மனுசப்பயலுக்க சீவிதம். குதிரைக்கு உள்ள இருக்க குதிரைக்குக் குதிரைக்கால் சின்னதாக்கும் கேட்டியா? கண்ணுகெட்டை அவுத்துவிட்டா குதிரை ஓடியோடி நுரைதள்ளி செத்துப் போயிடும்ணாக்கும் கணக்கு . . .” அச்சு மூப்பர், “மேலேகாவில யட்சிய தளைச்சது மாதிரி இதையும் தளைக்கல் லேன்னா மாம்பூவும் பிஞ்சுமாட்டு கொண்டு போயிட்டேதான் இருப்பா” என்றார். “பொத்திவச்ச கருப்பட்டியிலயும் புளுவருதுடே அச்சு . . .” என்று போற்றி நீட்டி துப்பி நாவால் பாக்குத்தூள் நெரட ஆரம்பித்தார். மேலேக்காவில்  யட்சி இப்போது ஆண்டுக்கொருமுறை ஆடிமாதத்தில் சாந்திபலியுடன் மறக்கப்படுபவள். கொள்ளை நோய்போல உயிர்குடித்து அலைந்த அவளை அடக்கியது வடக்கன் நம்பூதிரி ஒருவர். மாமந்திரவாதியான மூத்த நம்பூதிரியைக் கூட்டிவரச்சென்றார்கள். அவர் மரணப்படுக்கையிலிருந்தார். காலில் விழுந்து அழுத கிராமத்து மூப்பர்களைக் கண்டு மனம் கனிந்து முதிராவயதான தன் கடைசி மகனை கல் மோதிரமும் மந்திரம் உருவிட்டு முடிச்சிட்ட மஞ்சள் நூலும் கொடுத்து ஆசியளித்து அனுப்பி       வைத்தார்.

இளையநம்பூதிரி திருவட்டாறு வழியாக நடந்து வந்து ஊருக்குள் நுழையாமல் வயல் வழியாகச் சென்று மேலேக் காட்டுக்குள் புகுந்தார். நிலவொளியில் சர்ப்பம்போல் ஒளிர்ந்து நெளிந்தோடும் சிற்றாறின் கரையில் நாணத்தால் குனிந்த முகமும் நாணமில்லா உடலுமாக அவரை எதிர்கொண்டாள் யட்சி. தன் தோட்டத்துக்கு அவரை அவள் அழைத்துச் சென்றாள். கொடுவேனிலில் தளர்ந்து நின்றிருந்த மரங்களெல்லாம் அவள் வந்ததும் பூத்துக் குலுங்கி மணம் நிறைத்தன. பொய்கைகளில் எல்லாம் பூர்ணசந்திரன் சுடர்ந்தது. கண்கள் கலந்து, விரல் நுனிகள் தொட்டு, நகைபரிமாறி, ஆலிங்கனம் கொண்டு, இடைவளைத்து, முலைதழுவி, இதழ் சுவைத்து அவளை இட்டுச்சென்றார். அவள் அவரது மந்திரச்சரடை தூக்கி எறிய வைக்க தன் சொற்களையெல்லாம் செலவழித்தாள். ஊடினாள். பின் முயங்கிக் கொஞ்சினாள். பின் முத்தமிட்டு உடல்சுவையளித்துக் கெஞ்சினாள். அவர் அதைப் புன்னகையுடன் தவிர்த்தார்.

காமவிளையாட்டின் நடுவே அறியாதது போல் அவர் கைமோதிரம் நழுவி அருகே இருந்த பாழ்கிணற்றில் விழுந்தது. என் மோதிரத்தை எடுத்துவா என்றார் அவர். எடுத்துவந்தால் அந்த சரடை விலக்குவீர்களா என்றாள் அவள். ஆமென்று அவர் வாக்களித்தார். அவள் கிணற்றில் இறங்கியதும் தன் இடுப்பிலிருந்த மந்திர மஞ்சள் நூலை எடுத்து கிணற்றின் மேல் கட்டி அவளை உள்ளே சிறையிட்டுவிட்டார். அவர் குரல்கேட்டு ஊரார் கூடினர். அப்போதே கற்பாளங்களைத் தூக்கி வைத்து கிணற்றை மூடி மேலே பீடமெழுப்பி அவளைக் கருங்கல்லில் பிரதிஷ்டையாக்கினர். நம்பூதிரி தட்சிணை பெற்றுத் திரும்பும்போது யட்சியின் பின்விளி கேட்டது. “விமோசனமிலா சாபம் என்பதில்லை. எனக்கு விடுதலை எப்போது?” என்றாள். “காத்திருக்க எனக்கொரு நாள் வேண்டும் . . . எண்ணிக்கொண்டிருக்க ஒரு வழி வேண்டும் . . .”

நம்பூதிரி, “நானோ என் சந்ததிகளோ இங்கே மறுபடியும் கால்வைத்தால் உனக்கு விடுதலை. அதன் பின் நீ கட்டுப்படமாட்டாய்” என்றார். “நான் பேசியிருக்கத் துணை யார்?” என்றாள் அவள். அவள் மேடையருகே ஒரு அரசமரத்தை நட்டு நம்பூதிரி சொன்னார். “உன்னுடன் உரையாட இதோ ஆயிரமாயிரம் துடிக்கும் நாக்குகள்” செல்லும் வழியில் ஒரு ஆசாரிக்குடியிலிருந்து உளியை வாங்கி தன் ஆண்குறியை வெட்டி ஆற்றில் எறிந்தார் நம்பூதிரி.

மேலேகாவில் யட்சியருகே நான் சென்றிருந்து மேலே வான் நிறைத்துத் துடிக்கும் நாக்குகளின் பேச்சைக் கேட்டிருப்பதுண்டு. மழுங்கிய கருஞ்சிலையை அருகே சென்று நோக்கி அந்த யட்சியை அகக்கண்ணால் காணமுனைவேன். அறிந்த பெண்களின் முகங்களும் உடல்களும் அதன் வழியாகப் பாய்ந்தோடிச் செல்லும், பாறைமீது வழியும் காட்டாறுபோல.

4

கண்டெடுத்த முத்தைக் கையில் ஏந்தி நோக்கும் காட்டாளத்தியைப்போல அன்றெல்லாம் காட்டின் கையிலிருந்தது எங்கள் கிராமம். நூறு வீடுகள், நடுவே ஒரு சிவன்கோயில். அப்பால் ஒரு தேவாலயம். ஆற்றுக்கு அப்பால் நின்றபெருமாள் கோயில். மகாதேவன் உக்ரமூர்த்தி. மார்த்தாண்டவர்மா மகாராஜா அரண்மனையைப் புதுப்பித்தபோது அடிபருத்த அம்மச்சிப்பலாவுக்காகக் காடுதோறும் ஆளனுப்பினார். அன்று கொடுங்காடாகக் கிடந்த இப்பகுதியில் எட்டாள் தழுவினாலும் அடங்காத பலா ஒன்று நின்றது. மூத்தாசாரி வந்து பார்த்து இந்த ஊற்றம் யட்சிகுடியிருப்பதனால் மட்டுமே வரக் கூடியதென ஊகித்தார். ஆனால் மரத்தைக் கண்டபின் விட்டுப்போவது முறையல்ல என்று பிரதான சர்வாதிக்காரர் அய்யப்பன் மார்த்தாண்டன் சொன்னார்.

பாண்டிநாட்டிலிருந்து புகழ்பெற்ற மந்திரவாதியான தீப்பாஞ்சானை பிள்ளையை வரவழைத்து களம் எழுதி யந்திர மையத்தில் உடைவாள் நட்டு அதில் நூற்றியொரு ஆட்டுக்கடாக்களைக் குத்திச்செலுத்தி உக்கிரபலி கொடுத்தார். யட்சியை அடக்கி ஒரு மரக்கிளையில் ஏற்றிக்கொண்டுசென்று திருவட்டாற்றில் ஆற்றங்கரையில் நட்டார். பலாவை முறித்தபோது வானத்தில் பறவைகள் கலகல ஒலியெழுப்பிப் பறந்து அலை மோதின. அடிமரத்தை வெட்டியபோது ஓணான்களும் பாம்புகளும் பதறியோடி பச்சையடுக்குகளுக்குள் செருகிக்கொண்டன.  உருட்டி ஆற்றிலிட்டு நீர்வழியாகக் கொண்டுசென்றபோது குரங்குகள் தலைக்குமேல் அழுதபடி தாவித்தாவி கேசவபுரம் விலக்கு வரை சென்றன. மரத்திற்குள் அடங்கியிருந்த தேவன் மெல்ல வெளிவந்து கண் திறந்து தன்னைச் சுற்றி கிடந்த மஞ்சள் மரச்சிம்புகளைத் திகைப்புடன் பார்த்தார். மரம் வெட்டிய வெளியில் வானத்து வெயிலின் வெள்ளிப்பேரருவி கண்கூசக் கொட்டியது. அங்கே கீழ்த்தடத்து மனைக்கல் நம்பூதிரி வந்து ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.

சிவலிங்கம் ஒரு விதை. மரம் வடக்கே கங்கைக்கரையில் காசியில் உள்ளது. அங்கிருந்து பரந்து நதியோடும் நிலமெல்லாம் லிங்கம் முளைக்கிறது. கிராமங்கள் முளைக்கின்றன. மாநகர்கள் எழுகின்றன. கீழ்த்தடம் நம்பூதிரிக்குக் குலச்சொத்தாக அந்தக் கோயிலும் சுற்றியுள்ள காடும் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதற்கு காரியக்காரர்களாக, தங்கள் மடத்தில் ஊழியம்செய்த கொச்சுமார்த்தாண்டன் பிள்ளையை நியமித்தார்கள். உருவிய வாளும் தோளில் மழுவுமாக கொச்சுமார்த்தாண்டன் பிள்ளை வந்தார். காட்டு மிருகங்களையும் காட்டாளர்களையும் காட்டாளத்திகளையும் அடிமைகளாகப் பிடித்து சங்கிலியில் பிணைத்து வேலைசெய்ய வைத்தார். காடு வகிடெடுத்து பாதை தெருவாகியது. தெரு கிளைவிரித்து ஊராகியது. ரத்தம் நனைத்து நிணம் உரமிட்டு வளர்த்தவை தெங்குமூட்டுவீட்டின் மரங்கள் என்பது வாய்மொழிக்கதை.  தெங்குமூட்டு வீட்டின் முதல் காரணவர் கொச்சுமார்த்தாண்டன் பிள்ளை கட்டியதுதான் அங்கே எழுந்த முதல் அதிகாரிமனை.

எழுநாழியரிசி பொங்கி தேங்காய்ப்பால் சேர்த்து உருட்டி உண்ணும் தெங்கு மூட்டுப்பிள்ளைமார் ஒருவர் பின் ஒருவராக வந்துகொண்டிருந்தார்கள். ஊருக்கு அவர்களே வரிசெலுத்தினார்கள். கண் எட்டும் தொலைவுவரை குன்றெல்லாம், குன்றுநடுக்காடெல்லாம், காட்டுநடு ஊரெல்லாம் தெங்குமூட்டுக் குடும்பச் சொத்தென்பது பத்மநாபபுரம் கொட்டார நீட்டு. ஊரில் அவர்களை போத்தன் பிள்ளைமார் என்று சொல்வார்கள். எருமை நடை, எருமைப்பார்வை, எருமைத்திமிர். தெங்குமூட்டு வீட்டின் நிலவறைகளில் பொன்நாணயங்கள் பெருகின. வீடு வளர்ந்து வளர்ந்து கோட்டையாக ஆகியது. அதன் விரிந்த கல்முற்றத்தில் தீப்போலச் செம்பட்டுத்திரைச் சீலைகள் நெளியும் பல்லக்குகள் நின்றன. மாந்தளிர் மின்னும் குதிரைகள் குனிந்து பிடரி சிலிர்த்து கால்மாற்றின. ஆயுதப்புரைகளில்  வாள்களும் ஈட்டிகளும் குவிந்து கிடந்தன.

தெங்குமூட்டு நாராயணபிள்ளைதான் இரிட்டிக்காரியைக் கழுவிலேற்றினார் என்று கதை. குதிரைமீதேறி ஈட்டியுடன் அவர் காடுகாணச் சென்றபோதுதான் மலைமேட்டில் குடில் முன்னால் அமர்ந்து குழந்தைக்குப் பால்கொடுத்துக் கொண்டிருந்த கறுத்த காட்டாளத்தியைக் கண்டார். கருங்கல்முலைகண்டு நாராயணபிள்ளைக்குக் காமம் எழுந்தது. அவர் அவளைப் பிடிக்கச் சென்றபோது அவள் திமிறி விலகி காட்டில் ஓடி ஒளிந்துகொண்டாள். மீனுக்கு நீர்போல அவளுக்குப் புதர். தெங்குமூட்டுப்பிள்ளை கல்லெறிந்து காட்டுத்தேனீக்கூடுகளைக் கலைத்தார். தேனீ கொட்டிய கைக் குழந்தை கதறியபோது அவளைக் கண்டு பிடித்து இழுத்துவந்தார். இணங்க மறுத்த அவளை இழுத்துப் பாறையிலிட்டார். அவள் குழந்தையைத் தூக்கி பாறைமீது வீசிக் கொன்று அவளை எருமையிறங்கிய காட்டுப்பொய்கையைப்போல அழித்தார். தன் ஈட்டியை நட்டு அதில் அவளைக் கழுவேற்றி அமரச்செய்துவிட்டுத் திரும்பி நடந்தார்.

கழுமரத்திலிருந்து உதிரம் ஒழுக அவள் அவரை உற்று நோக்கினாள். வலியால் இழுபட்டு அதிர்ந்துகொண்டிருந்த முகத்தில் மெல்ல மெல்ல ஒரு அமைதி கூடியது. பின் அவள் உதடுகளில் ஒரு மெல்லியசிரிப்பு வருவதைக் கண்டு அவர் நம்பமுடியாமல் கைவாளை நழுவவிட்டார். சிரிப்பு அவள் முகமெங்கும் பரவி உக்கிரமான இளிப்பாக மாறியது. கண்கள் மட்டும் ரத்தம்கண்ட ஓநாயின் நோக்கு கொண்டிருந்தன. “எனக்க பசி மண்ணுக்க பசிபோலே அணையாம நிக்கட்டே” என்று ஆழ்ந்த அடிக்குரலில் காட்டாளத்தி சொன்னாள்.

காட்டில் நடக்கும்போது மலைதெய்வங்களைக் கண்டு முடிவதேயில்லை. மரமெல்லாம் வாதைகள். கல்லெல்லாம் மூப்பன்கள். தினமொரு தெய்வம் முளைத்த காலமொன்று இருந்திருக்கிறது. கல்லின் மீதொரு கல் ஏறி அமர்ந்தால் கடவுளாகிறது. கற்களெல்லாம் அப்படி ஏறியமரத் துடிக்கின்றனவா என்ன? ஆணும் பெண்ணும் போல? கல்லெடுத்துக் கடவுள் செய்பவன் அக்கணத்திலறியும் உக்கிரமென்ன? மண்ணில் ஒரு தெய்வத்தையாவது விட்டுச்செல்ல வேண்டுமென்பது என்னுடைய ஆசையும்கூட. ஆனால் மனிதர் வழியாக வெளிப்படும் தருணத்தை தெய்வங்களே தீர்மானிக்கின்றன. திரைக்கு அப்பால்  அவர்கள் காத்து நின்றுகொண்டிருக்கிறார்கள்.

இப்போது ஊரில் எல்லா யட்சிகளும் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். மேலாங் கோட்டு யட்சியின் கோயிலை சிமிண்டால் கட்டி எழுப்பி ஏஷியன் பெயின்ட் அடித்து வெயிலில் கண்கூச நிறுத்தியிருக்கிறார்கள். ‘அருள்மிகு நடுக்காட்டு இசக்கியம்மன்’ நாகர்கோயில் நகரத்தின் நடுவே உறைகிறாள். நகரெங்கும் யட்சிகள் நிற்கிறார்கள். வாகையடி யட்சி, இலந்தயடி ஏக்கியம்மை, தேரடி இசக்கி . . . துணிக்கடைக்காரனாக இருந்த காக்கும்பெருமாளுக்குச் சொந்தமான பன்னிரு வாடகைவீடுகள் கொண்ட காக்கும்பெருமாள் காம்பவுண்டுக்குள் வள்ளியம்மை இசக்கியுண்டு. சுண்ணத்தால் கட்டப்பட்ட பழைய கோயிலுக்குள் மயிலாடிக் கல்லில் செதுக்கப்பட்ட கருஞ்சிற்பம் வெள்ளிக் கண்களும் வெள்ளிமூக்குத்தியுமாக கருகிய அரளிமாலையணிந்து செம்பட்டு சுற்றி உண்டியல் காத்து நிற்கிறது. வள்ளியம்மை இசக்கிக்கு அமாவாசை தோறும் படுக்கை உண்டு. ஆடிமாதம் அமாவாசையன்று கொடை. காம்பவுண்டில் வசிக்கும் நாகசாமிக்கோனார் அவளை நேரில் கண்டிருக்கிறார். உயிருடன்.

வடசேரி கனகமூலம் சந்தையின் புகழ்பெற்ற வேசியாக இருந்தாள் வள்ளியம்மை. ஏதோ பனங்காட்டிலிருந்து பிழைப்புக்காக வந்தவள். காய்கறி வியாபாரமும் உண்டு. நான்குபேரைக் கட்டியபின் கணவனெல்லாம் ஒத்துவராது எனத் தனியாக நின்றாள். குழந்தைகள் இல்லை. கரும்பனைபோல ஆறடி உயரதேகம். அகன்ற கரிய முகத்தில் எருமைக்கண்கள். கருங்கலயம் கவிழ்த்த பெருமுலைகள். குடக்கழுத்துபோல இடுப்பு. மதயானைத்துதிக்கை போலத் தொடைகள். யாருக்கும் அஞ்சாதவள். அத்துமீறிய சண்டியர் கண்ணுமூத்தானை ஒரே அடியில் வீழ்த்தி சந்தைமுகப்பில் போட்டுவிட்டு அவன் சிங்கிடிகளிடம் “இனியாரும் உண்டாலே?” என்று கேட்டு நிலமதிர நடந்து சென்றவள். “ஆயிரம் பேரு முங்கி நீந்திக் கரையேறினாலும் வைரவன்கொளம் கலங்குமாலே? இந்நாண்ணுல்லா கெடக்கும், திரையும் தணுப்புமாட்டு? அதாக்கும் கத!” என்றார் நாகசாமிக்கோனார். கருணையுள்ளவள் வள்ளியம்மை. அரைக்காசு கொடுத்தாலும் கனிந்து கெட்டியவளைக் காட்டிலும் சினேகிப்பவள். காசில்லை காமம் உண்டு என்று ஒருவன் வந்து நின்றாலும் திருப்பியனுப்பமாட்டாள். “லே மக்கா மனுச சென்மத்துக்கு ரெண்டுபசியில்லாடே? அன்னமிட்ட புண்ணியம் அவளுக்கும் உண்டுன்னு வையி . . .”

வள்ளியம்மையின் அழகைக்கண்டு பெரிய பெரிய முதலாளிகளும் தம்புரான்களும் வந்து அழைத்திருக்கிறார்கள். வடசேரிச் சந்தையை விட்டு அவளால் போகமுடியாது. பகலெல்லாம் பெரிய குங்குமப்பொட்டுபோட்டு சுங்கிடிப் புடவையைப் பாண்டிச்சுற்று சுற்றிக்கட்டி, வாய் நிறைய வெற்றிலையுடன் காய்கறிக்கூடை முன் அமர்ந்து போகிறவர்களையெல்லாம் முறைசொல்லிக் கூவியழைத்து, பகடிபேசி, தொண்டை அதிரச் சிரித்து, நீட்டித்துப்பி, சாயா குடித்து, பசித்தவர்களுக்கெல்லாம் தோசைக்கும் சாயாவுக்கும் பணம் கொடுத்து, வெயிலில் திளைத்தால்தான் அவளுக்கு வாழ்க்கை. எந்நேரமும் அவளிடம் வாங்கித்தின்ன சந்தைப் பையன்களின் கூட்டம் ஒன்று பின்னாலிருக்கும், எருமைக்குமேல் உண்ணி பொறுக்கும் காக்காக்கூட்டம் போல. கடைசியில் பறங்கிப்புண் வந்து தொடை அழுகி பாதங்களில் சொட்டியபோதும் இளம்வேசிகளின் பிரியத்துக்குரிய ‘வள்ளியக்கா’ ஆக அங்கேயே இருந்தாள். மற்ற வேசிகளைப்போல அவள் யாரையும் திட்டுவதில்லை, சபிப்பதும் இல்லை. அவள் பேசினாலே சுற்றியிருப்பவர்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். “ . . .செட்டி தேடுகான் தேடுகான் அப்பிடி தேடுகான் எனக்க கோலம் மையே . . .” “என்னக்கா தேடினான்? பைசாவயா?” “இல்ல குட்டி, பண்டத்த”    சிரிப்பொலி கேட்டு அருமைநாயகம் நாடார் திரும்பி, “ச்சீ தேவடியாளுகளா? என்ன மயித்துக்குட்டீ பகலில வந்து இருக்கிய? போங்கட்டீ” என்றார் செல்லமாக. “ஏன் ராத்திரியில இனிக்கபட்டது பகலில கசக்குமோ?” “ஆமாட்டி பண்டமும் பாத்திரமும் எல்லாருக்கும் உள்ளது தான் . . . அதக் கொண்டுவந்து உச்ச வெயிலில ஊரறிய காய வைப்பாவளாட்டீ? வாறாளுக பேச . . . போங்கட்டீ.”

காக்கும்பெருமாளின் அப்பா சிவனணைஞ்சபெருமாள் நாடார் வீக்கம் வந்து உப்பி மரணப்படுக்கையில் கிடந்தபோது சுரவேகத்தில் “வள்ளீ வள்ளீ” என்று புலம்பினார்.  பன்னிரண்டு நாளாக இழுத்துக்கொண்டிருந்தும் மூச்சு அடங்கவில்லை. பதினான்குநாள் இழுத்தவனுக்கு மாதேவனே வந்து சொன்னாலும் யமதர்மன் சொர்க்கம் கொடுக்க மறுத்து விடுவான். வைத்தியர் குண்டுவய்யர் சொன்னார், “இது மத்தவளைத்தான் மக்கா” ஆனால் சிவனணைஞ்ச பெருமாள் பரம யோக்கியர். சிவப்பழம். சித்தாந்த ஞானி. அவருக்கு எப்படி வள்ளியம்மையைத் தெரியும்? ஒருவேளை முருகனின் குறமகள் வள்ளியைச் சொல்கிறாரா? ஏதாவது சித்தாந்த ரகஸியம் இருக்குமோ? “போலே மயிரே. வாறான் வள்ளி தெய்வானைன்னுட்டு. லே மக்கா, மனபோகம்னு ஒண்ணு உண்டுடே . . . மனுச சென்மத்துக்கு லிங்கபோகம் ஆயிரம்னா கைபோகம் லெச்சம், மனபோகம் கோடீன்னாக்கும் மேலே உள்ளவன் கணக்கு . . . போயி கூட்டிட்டுவாடே அவள” வள்ளியம்மையைக் கூட்டிவர காக்கும்பெருமாளே சென்றார். அவள் மறு பேச்சு பேசாமல் வந்தாள். மூத்தநாடாரின் தலையை எடுத்துத் தன் முலைகள்மேல் அழுத்தி அணைத்து வாயிலிட்ட தாம்பூலத்தை அவருக்குக் கொடுத்தபோது அவர் சிரித்தபடி அப்படியே கண்மூடி சாந்தமானார். காக்கும்பெருமாள்  நீட்டிய நோட்டுக்கட்டிலிருந்து ஒரு இதழைக் கூட உருவாமல், தாம்பூலம் மட்டும் எடுத்துக்கொண்டு சொல்லிக்கொண்டு வள்ளியம்மை படியிறங்கினாள்.

வள்ளியம்மை நோய்மூத்து நடமாட்டமில்லாமல் ஆனபோது காக்கும்பெருமாள் அவரே காரில்சென்று கிழவியைத் தூக்கிவந்து தன் காம்பவுண்டில் ஓரத்து வீட்டில் குடியேற்றி உதவிக்கு ஒரு வேலைக்காரியையும் நியமித்தார். “ஒரு கணக்கில அவ நம்ம அம்மையில்லா?” என்றார். எண்பத்தி ஒன்றாம் வயதில் நல்ல நிறைந்த ஆடியமாவாசையில் பிரம்ம முகூர்த்தத்தில் தன் வீட்டு முற்றத்தில் இருந்து “எக்க அம்மோ” என்று ஏங்கி நெஞ்சைப்பிடித்தவள் அப்படியே இடப்பக்கம்சரிந்து விழுந்து இறந்தாள். அங்கேயே காக்கும்பெருமாள் அவளுக்கொரு கோயில் கட்டினார். இன்று அது இன்னும்பெரிய கோயிலாக ஆகி விட்டிருக்கிறது. தகரக்கூரை இறக்கி தாழ்வாரம் கட்டியிருக்கிறார்கள். குமாரசாமி வைராவி வந்து நித்ய பூஜைசெய்கிறார். குழந்தைகளுக்கு வரும் நோய்களுக்கு வள்ளியம்மை இசக்கியின் பிரசாதம் கைகண்ட மருந்து என்று தேடி வருகிறார்கள்.

கையில் குழந்தையுடன் நின்று பஞ்சவன்காட்டு நீலி வண்டியில் செல்பவர்களிடம் “இம்பிடு சுண்ணாம்பு இருக்கா அண்ணா?” என்று கேட்டபாதை வழியாக நான் தினமும் பேருந்தில் அலுவலகம் செல்கிறேன். வணிகனாக வந்து அவளை மணந்து வேற்றூர் கூட்டிச் சென்ற திருடன் அங்கு வைத்துத்தான் அவளுடைய தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப்போட்டான். கணவனுடன் வந்த தன்னைக் கொன்று சென்ற திருடர்களை வழிதவறி அவ்விடத்துக்கே வரச்செய்து கள்ளிமரம்போல ஒரு உடலில் பத்துக்கிளையுடல்களுடன் பேருருவம் காட்டி நின்ற கள்ளியங்காட்டு யட்சியின் இடத்தில் வீடுகட்டி வாழ்கிறேன். ‘சதுரகிரி மலையோரம் சாய்ஞ்சிருக்கும் திருகு கள்ளி! திருகுகள்ளி பாலெடுக்க திரிஞ்சனடி சிலகாலம் . . .’ இதோ பேருந்திலேறும் பெண்களில் ஒருத்தியாகக் கள்ளியங்காட்டு நீலியும் இருக்கக்கூடுமோ? உச்சியில் மந்திர ஆணியடித்து யட்சிகளை அடக்கி சாதாரணப்பெண்களாக ஆக்கிவிடமுடியும். வில்லுக்குறி மந்திரவாதி இடலக்காட்டு நீலியை மந்திரத்தால் அடக்கி உச்சியில் ஆணியடித்து கொண்டுசென்று தன் மனைவிக்குப் பணிப்பெண்ணாக்கினான். நிறைசூலியான அவளிடம் பேன் பார்க்கச் சொன்னாள் நீலி. உச்சியிலென்ன ஆணி என்று கேட்டபோது அதை எடுத்துவிடு என்றாள். ஆணி பிடுங்கப்   பட்டபோது வான்முட்ட எழுந்து நின்று சூலி வயிறு பிளந்து பிள்ளையுடன் கள்ளிமுள் காட்டுக்குள் ஆயிரம் நரிபோல ஊளையிட்டபடியோடிச்சென்றாள்.

அணைக்கும்வரை தெரிவதில்லை யட்சியை. மருந்துக்கோட்டை நீலியை அய்யப்பன் செண்பகராமன் ஏழுநிலை மாளிகையாக மாறிய அவளுடைய கரும்பனை உச்சிக்குப்போய் மேகங்கள் கூரையிட்ட பனங்குருத்துப்படுக்கைமீது படுத்து கட்டியணைத்து முயங்கியபோது தோணிபோல அவள் முதுகு குழிந்து உள்ளீடில்லாமலிருப்பதைக் கண்டார். யட்சியர் ஒருபோதும்  மானுடரைக் கூட முடிவதில்லை. காமம் மூத்து மெய்கலக்கும்போதே அவன் யட்சியை அறிந்துவிடுகிறான். மரண வெறியில் விறைத்த அவன் உடல்மீது பச்சை விறகு மேல் புகையும் நெருப்பு போல நின்று அவள் தகிக்கிறாள். நான் கேசினியை எண்ணிக் கொண்டேன். மார்கழி மாதம் குளிரில் கூட வீட்டுக்குளத்தில் அதிகாலையில் நீராடுகிறவள். “காந்தாரி மொளகாக்குமே அரைச்சு தேய்க்கியது . . . மகா சாபம் . . . வேற என்னத்தச் சொல்ல?” வேலைக்காரி செல்லம்மை சொன்னாள். அதிகாலையில் கையையும் காலையும் துணியால் கட்டிக்கொண்டு அந்தக்குளத்தில் குதித்துச் செத்தாள். செல்லம்மை குளிக்கச் சென்றபோது தெளிநீல நீருக்குள் கடைசிப்படியருகே செங்கதலி வாழையின் அடிமரம்போல மூழ்கி அலைகளில் ஆடினாள். நீர்ப்பாசி போலக் கருங்கூந்தல் நெளிந்தது.

செல்லம்மையின் அலறல் கேட்டு வேலைக்காரர்கள் ஓடிவந்தார்கள். சமையற்காரி பாறுவம்மை “நாயிடமக்களே ஒற்ற ஒருத்தன் அவள தொடப்பிடாது . . . தொட்டவனை வெட்டிப்போடுவேன் . . . மாறுங்கலே” என்று அரிவாள்மணையுடன் வந்து அலறினாள். “மீசகுருத்தவன் ஒருத்தன் இங்க நிக்கப்பிடாது . . . பொலி போட்டிருவேன் . . . போங்கலே தடிதூக்கி நாயிகளே . . .” அத்தனை ஆண்களையும் துரத்திவிட்டு செல்லம்மையும் பாறுவம்மையும் சேர்ந்து அவளை மேலே தூக்கி எடுத்தார்கள். கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட வெண்கலக்கும்பா போல நீர்ப்பாசி படிந்த இளம்பாளை உடல். அடி வயிற்று மென்மயிர் பரவல். இமைகளில் நீலநரம்பு வலை. “அல்லிப்பூவுக்க எதளு போலுள்ள எமையாக்குமே அம்மிணியே . . . கைய இப்பிடி இறுக்கிப் பிடிச்சிருந்தது. கையில என்னமோ இருக்குண்ணு பிடிச்சு வெலக்கி பாத்தம் . . . ஒண்ணுமில்ல. வெறும் கையாக்கும் கேட்டுதா?” “பின்ன? அவள்க்கு வேற எந்து கிட்டும்?” என்றாள் அம்மா.

கையில் குழந்தையுடன் வந்து “சொல்பம் அந்தால போயி இருங்க சார்” என்று நிற்கும் இந்த ஊதாநிறச் சேலை கட்டிய மெலிந்த பெண் பஞ்சவன்காட்டு நீலியாக இருக்கக்கூடாதா என்ன? ஆனால் யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.

ஓவியங்கள்: ராஜன் புதியேடம்


சென்ஷி

unread,
May 13, 2010, 9:01:04 AM5/13/10
to panb...@googlegroups.com
முந்தின மடலில் சில பகுதிகள் சரியாய் சேராததால் கடைசிப் பத்தியிலிருந்து கதையைத் தொடர்ந்திருக்கின்றேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

************


காமவிளையாட்டின் நடுவே அறியாதது போல் அவர் கைமோதிரம் நழுவி அருகே இருந்த பாழ்கிணற்றில் விழுந்தது. என் மோதிரத்தை எடுத்துவா என்றார் அவர். எடுத்துவந்தால் அந்த சரடை விலக்குவீர்களா என்றாள் அவள். ஆமென்று அவர் வாக்களித்தார். அவள் கிணற்றில் இறங்கியதும் தன் இடுப்பிலிருந்த மந்திர மஞ்சள் நூலை எடுத்து கிணற்றின் மேல் கட்டி அவளை உள்ளே சிறையிட்டுவிட்டார். அவர் குரல்கேட்டு ஊரார் கூடினர். அப்போதே கற்பாளங்களைத் தூக்கி வைத்து கிணற்றை மூடி மேலே பீடமெழுப்பி அவளைக் கருங்கல்லில் பிரதிஷ்டையாக்கினர். நம்பூதிரி தட்சிணை பெற்றுத் திரும்பும்போது யட்சியின் பின்விளி கேட்டது. “விமோசனமிலா சாபம் என்பதில்லை. எனக்கு விடுதலை எப்போது?” என்றாள். “காத்திருக்க எனக்கொரு நாள் வேண்டும் . . . எண்ணிக்கொண்டிருக்க ஒரு வழி வேண்டும் . . .”

நம்பூதிரி, “நானோ என் சந்ததிகளோ இங்கே மறுபடியும் கால்வைத்தால் உனக்கு விடுதலை. அதன் பின் நீ கட்டுப்படமாட்டாய்” என்றார். “நான் பேசியிருக்கத் துணை யார்?” என்றாள் அவள். அவள் மேடையருகே ஒரு அரசமரத்தை நட்டு நம்பூதிரி சொன்னார். “உன்னுடன் உரையாட இதோ ஆயிரமாயிரம் துடிக்கும் நாக்குகள்” செல்லும் வழியில் ஒரு ஆசாரிக்குடியிலிருந்து உளியை வாங்கி தன் ஆண்குறியை வெட்டி ஆற்றில் எறிந்தார் நம்பூதிரி.

மேலேகாவில் யட்சியருகே நான் சென்றிருந்து மேலே வான் நிறைத்துத் துடிக்கும் நாக்குகளின் பேச்சைக் கேட்டிருப்பதுண்டு. மழுங்கிய கருஞ்சிலையை அருகே சென்று நோக்கி அந்த யட்சியை அகக்கண்ணால் காணமுனைவேன். அறிந்த பெண்களின் முகங்களும் உடல்களும் அதன் வழியாகப் பாய்ந்தோடிச் செல்லும், பாறைமீது வழியும் காட்டாறுபோல.

4

கண்டெடுத்த முத்தைக் கையில் ஏந்தி நோக்கும் காட்டாளத்தியைப்போல அன்றெல்லாம் காட்டின் கையிலிருந்தது எங்கள் கிராமம். நூறு வீடுகள், நடுவே ஒரு சிவன்கோயில். அப்பால் ஒரு தேவாலயம். ஆற்றுக்கு அப்பால் நின்றபெருமாள் கோயில். மகாதேவன் உக்ரமூர்த்தி. மார்த்தாண்டவர்மா மகாராஜா அரண்மனையைப் புதுப்பித்தபோது அடிபருத்த அம்மச்சிப்பலாவுக்காகக் காடுதோறும் ஆளனுப்பினார். அன்று கொடுங்காடாகக் கிடந்த இப்பகுதியில் எட்டாள் தழுவினாலும் அடங்காத பலா ஒன்று நின்றது. மூத்தாசாரி வந்து பார்த்து இந்த ஊற்றம் யட்சிகுடியிருப்பதனால் மட்டுமே வரக் கூடியதென ஊகித்தார். ஆனால் மரத்தைக் கண்டபின் விட்டுப்போவது முறையல்ல என்று பிரதான சர்வாதிக்காரர் அய்யப்பன் மார்த்தாண்டன் சொன்னார்.

பாண்டிநாட்டிலிருந்து புகழ்பெற்ற மந்திரவாதியான தீப்பாஞ்சானை பிள்ளையை வரவழைத்து களம் எழுதி யந்திர மையத்தில் உடைவாள் நட்டு அதில் நூற்றியொரு ஆட்டுக்கடாக்களைக் குத்திச்செலுத்தி உக்கிரபலி கொடுத்தார். யட்சியை அடக்கி ஒரு மரக்கிளையில் ஏற்றிக்கொண்டுசென்று திருவட்டாற்றில் ஆற்றங்கரையில் நட்டார். பலாவை முறித்தபோது வானத்தில் பறவைகள் கலகல ஒலியெழுப்பிப் பறந்து அலை மோதின. அடிமரத்தை வெட்டியபோது ஓணான்களும் பாம்புகளும் பதறியோடி பச்சையடுக்குகளுக்குள் செருகிக்கொண்டன.  உருட்டி ஆற்றிலிட்டு நீர்வழியாகக் கொண்டுசென்றபோது குரங்குகள் தலைக்குமேல் அழுதபடி தாவித்தாவி கேசவபுரம் விலக்கு வரை சென்றன. மரத்திற்குள் அடங்கியிருந்த தேவன் மெல்ல வெளிவந்து கண் திறந்து தன்னைச் சுற்றி கிடந்த மஞ்சள் மரச்சிம்புகளைத் திகைப்புடன் பார்த்தார். மரம் வெட்டிய வெளியில் வானத்து வெயிலின் வெள்ளிப்பேரருவி கண்கூசக் கொட்டியது. அங்கே கீழ்த்தடத்து மனைக்கல் நம்பூதிரி வந்து ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.

சிவலிங்கம் ஒரு விதை. மரம் வடக்கே கங்கைக்கரையில் காசியில் உள்ளது. அங்கிருந்து பரந்து நதியோடும் நிலமெல்லாம் லிங்கம் முளைக்கிறது. கிராமங்கள் முளைக்கின்றன. மாநகர்கள் எழுகின்றன. கீழ்த்தடம் நம்பூதிரிக்குக் குலச்சொத்தாக அந்தக் கோயிலும் சுற்றியுள்ள காடும் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதற்கு காரியக்காரர்களாக, தங்கள் மடத்தில் ஊழியம்செய்த கொச்சுமார்த்தாண்டன் பிள்ளையை நியமித்தார்கள். உருவிய வாளும் தோளில் மழுவுமாக கொச்சுமார்த்தாண்டன் பிள்ளை வந்தார். காட்டு மிருகங்களையும் காட்டாளர்களையும் காட்டாளத்திகளையும் அடிமைகளாகப் பிடித்து சங்கிலியில் பிணைத்து வேலைசெய்ய வைத்தார். காடு வகிடெடுத்து பாதை தெருவாகியது. தெரு கிளைவிரித்து ஊராகியது. ரத்தம் நனைத்து நிணம் உரமிட்டு வளர்த்தவை தெங்குமூட்டுவீட்டின் மரங்கள் என்பது வாய்மொழிக்கதை.  தெங்குமூட்டு வீட்டின் முதல் காரணவர் கொச்சுமார்த்தாண்டன் பிள்ளை கட்டியதுதான் அங்கே எழுந்த முதல் அதிகாரிமனை.

எழுநாழியரிசி பொங்கி தேங்காய்ப்பால் சேர்த்து உருட்டி உண்ணும் தெங்கு மூட்டுப்பிள்ளைமார் ஒருவர் பின் ஒருவராக வந்துகொண்டிருந்தார்கள். ஊருக்கு அவர்களே வரிசெலுத்தினார்கள். கண் எட்டும் தொலைவுவரை குன்றெல்லாம், குன்றுநடுக்காடெல்லாம், காட்டுநடு ஊரெல்லாம் தெங்குமூட்டுக் குடும்பச் சொத்தென்பது பத்மநாபபுரம் கொட்டார நீட்டு. ஊரில் அவர்களை போத்தன் பிள்ளைமார் என்று சொல்வார்கள். எருமை நடை, எருமைப்பார்வை, எருமைத்திமிர். தெங்குமூட்டு வீட்டின் நிலவறைகளில் பொன்நாணயங்கள் பெருகின. வீடு வளர்ந்து வளர்ந்து கோட்டையாக ஆகியது. அதன் விரிந்த கல்முற்றத்தில் தீப்போலச் செம்பட்டுத்திரைச் சீலைகள் நெளியும் பல்லக்குகள் நின்றன. மாந்தளிர் மின்னும் குதிரைகள் குனிந்து பிடரி சிலிர்த்து கால்மாற்றின. ஆயுதப்புரைகளில்  வாள்களும் ஈட்டிகளும் குவிந்து கிடந்தன.

தெங்குமூட்டு நாராயணபிள்ளைதான் இரிட்டிக்காரியைக் கழுவிலேற்றினார் என்று கதை. குதிரைமீதேறி ஈட்டியுடன் அவர் காடுகாணச் சென்றபோதுதான் மலைமேட்டில் குடில் முன்னால் அமர்ந்து குழந்தைக்குப் பால்கொடுத்துக் கொண்டிருந்த கறுத்த காட்டாளத்தியைக் கண்டார். கருங்கல்முலைகண்டு நாராயணபிள்ளைக்குக் காமம் எழுந்தது. அவர் அவளைப் பிடிக்கச் சென்றபோது அவள் திமிறி விலகி காட்டில் ஓடி ஒளிந்துகொண்டாள். மீனுக்கு நீர்போல அவளுக்குப் புதர். தெங்குமூட்டுப்பிள்ளை கல்லெறிந்து காட்டுத்தேனீக்கூடுகளைக் கலைத்தார். தேனீ கொட்டிய கைக் குழந்தை கதறியபோது அவளைக் கண்டு பிடித்து இழுத்துவந்தார். இணங்க மறுத்த அவளை இழுத்துப் பாறையிலிட்டார். அவள் குழந்தையைத் தூக்கி பாறைமீது வீசிக் கொன்று அவளை எருமையிறங்கிய காட்டுப்பொய்கையைப்போல அழித்தார். தன் ஈட்டியை நட்டு அதில் அவளைக் கழுவேற்றி அமரச்செய்துவிட்டுத் திரும்பி நடந்தார்.

கழுமரத்திலிருந்து உதிரம் ஒழுக அவள் அவரை உற்று நோக்கினாள். வலியால் இழுபட்டு அதிர்ந்துகொண்டிருந்த முகத்தில் மெல்ல மெல்ல ஒரு அமைதி கூடியது. பின் அவள் உதடுகளில் ஒரு மெல்லியசிரிப்பு வருவதைக் கண்டு அவர் நம்பமுடியாமல் கைவாளை நழுவவிட்டார். சிரிப்பு அவள் முகமெங்கும் பரவி உக்கிரமான இளிப்பாக மாறியது. கண்கள் மட்டும் ரத்தம்கண்ட ஓநாயின் நோக்கு கொண்டிருந்தன. “எனக்க பசி மண்ணுக்க பசிபோலே அணையாம நிக்கட்டே” என்று ஆழ்ந்த அடிக்குரலில் காட்டாளத்தி சொன்னாள்.

காட்டில் நடக்கும்போது மலைதெய்வங்களைக் கண்டு முடிவதேயில்லை. மரமெல்லாம் வாதைகள். கல்லெல்லாம் மூப்பன்கள். தினமொரு தெய்வம் முளைத்த காலமொன்று இருந்திருக்கிறது. கல்லின் மீதொரு கல் ஏறி அமர்ந்தால் கடவுளாகிறது. கற்களெல்லாம் அப்படி ஏறியமரத் துடிக்கின்றனவா என்ன? ஆணும் பெண்ணும் போல? கல்லெடுத்துக் கடவுள் செய்பவன் அக்கணத்திலறியும் உக்கிரமென்ன? மண்ணில் ஒரு தெய்வத்தையாவது விட்டுச்செல்ல வேண்டுமென்பது என்னுடைய ஆசையும்கூட. ஆனால் மனிதர் வழியாக வெளிப்படும் தருணத்தை தெய்வங்களே தீர்மானிக்கின்றன. திரைக்கு அப்பால்  அவர்கள் காத்து நின்றுகொண்டிருக்கிறார்கள்.

இப்போது ஊரில் எல்லா யட்சிகளும் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். மேலாங் கோட்டு யட்சியின் கோயிலை சிமிண்டால் கட்டி எழுப்பி ஏஷியன் பெயின்ட் அடித்து வெயிலில் கண்கூச நிறுத்தியிருக்கிறார்கள். ‘அருள்மிகு நடுக்காட்டு இசக்கியம்மன்’ நாகர்கோயில் நகரத்தின் நடுவே உறைகிறாள். நகரெங்கும் யட்சிகள் நிற்கிறார்கள். வாகையடி யட்சி, இலந்தயடி ஏக்கியம்மை, தேரடி இசக்கி . . . துணிக்கடைக்காரனாக இருந்த காக்கும்பெருமாளுக்குச் சொந்தமான பன்னிரு வாடகைவீடுகள் கொண்ட காக்கும்பெருமாள் காம்பவுண்டுக்குள் வள்ளியம்மை இசக்கியுண்டு. சுண்ணத்தால் கட்டப்பட்ட பழைய கோயிலுக்குள் மயிலாடிக் கல்லில் செதுக்கப்பட்ட கருஞ்சிற்பம் வெள்ளிக் கண்களும் வெள்ளிமூக்குத்தியுமாக கருகிய அரளிமாலையணிந்து செம்பட்டு சுற்றி உண்டியல் காத்து நிற்கிறது. வள்ளியம்மை இசக்கிக்கு அமாவாசை தோறும் படுக்கை உண்டு. ஆடிமாதம் அமாவாசையன்று கொடை. காம்பவுண்டில் வசிக்கும் நாகசாமிக்கோனார் அவளை நேரில் கண்டிருக்கிறார். உயிருடன்.

வடசேரி கனகமூலம் சந்தையின் புகழ்பெற்ற வேசியாக இருந்தாள் வள்ளியம்மை. ஏதோ பனங்காட்டிலிருந்து பிழைப்புக்காக வந்தவள். காய்கறி வியாபாரமும் உண்டு. நான்குபேரைக் கட்டியபின் கணவனெல்லாம் ஒத்துவராது எனத் தனியாக நின்றாள். குழந்தைகள் இல்லை. கரும்பனைபோல ஆறடி உயரதேகம். அகன்ற கரிய முகத்தில் எருமைக்கண்கள். கருங்கலயம் கவிழ்த்த பெருமுலைகள். குடக்கழுத்துபோல இடுப்பு. மதயானைத்துதிக்கை போலத் தொடைகள். யாருக்கும் அஞ்சாதவள். அத்துமீறிய சண்டியர் கண்ணுமூத்தானை ஒரே அடியில் வீழ்த்தி சந்தைமுகப்பில் போட்டுவிட்டு அவன் சிங்கிடிகளிடம் “இனியாரும் உண்டாலே?” என்று கேட்டு நிலமதிர நடந்து சென்றவள். “ஆயிரம் பேரு முங்கி நீந்திக் கரையேறினாலும் வைரவன்கொளம் கலங்குமாலே? இந்நாண்ணுல்லா கெடக்கும், திரையும் தணுப்புமாட்டு? அதாக்கும் கத!” என்றார் நாகசாமிக்கோனார். கருணையுள்ளவள் வள்ளியம்மை. அரைக்காசு கொடுத்தாலும் கனிந்து கெட்டியவளைக் காட்டிலும் சினேகிப்பவள். காசில்லை காமம் உண்டு என்று ஒருவன் வந்து நின்றாலும் திருப்பியனுப்பமாட்டாள். “லே மக்கா மனுச சென்மத்துக்கு ரெண்டுபசியில்லாடே? அன்னமிட்ட புண்ணியம் அவளுக்கும் உண்டுன்னு வையி . . .”

வள்ளியம்மையின் அழகைக்கண்டு பெரிய பெரிய முதலாளிகளும் தம்புரான்களும் வந்து அழைத்திருக்கிறார்கள். வடசேரிச் சந்தையை விட்டு அவளால் போகமுடியாது. பகலெல்லாம் பெரிய குங்குமப்பொட்டுபோட்டு சுங்கிடிப் புடவையைப் பாண்டிச்சுற்று சுற்றிக்கட்டி, வாய் நிறைய வெற்றிலையுடன் காய்கறிக்கூடை முன் அமர்ந்து போகிறவர்களையெல்லாம் முறைசொல்லிக் கூவியழைத்து, பகடிபேசி, தொண்டை அதிரச் சிரித்து, நீட்டித்துப்பி, சாயா குடித்து, பசித்தவர்களுக்கெல்லாம் தோசைக்கும் சாயாவுக்கும் பணம் கொடுத்து, வெயிலில் திளைத்தால்தான் அவளுக்கு வாழ்க்கை. எந்நேரமும் அவளிடம் வாங்கித்தின்ன சந்தைப் பையன்களின் கூட்டம் ஒன்று பின்னாலிருக்கும், எருமைக்குமேல் உண்ணி பொறுக்கும் காக்காக்கூட்டம் போல. கடைசியில் பறங்கிப்புண் வந்து தொடை அழுகி பாதங்களில் சொட்டியபோதும் இளம்வேசிகளின் பிரியத்துக்குரிய ‘வள்ளியக்கா’ ஆக அங்கேயே இருந்தாள். மற்ற வேசிகளைப்போல அவள் யாரையும் திட்டுவதில்லை, சபிப்பதும் இல்லை. அவள் பேசினாலே சுற்றியிருப்பவர்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். “ . . .செட்டி தேடுகான் தேடுகான் அப்பிடி தேடுகான் எனக்க கோலம் மையே . . .” “என்னக்கா தேடினான்? பைசாவயா?” “இல்ல குட்டி, பண்டத்த”    சிரிப்பொலி கேட்டு அருமைநாயகம் நாடார் திரும்பி, “ச்சீ தேவடியாளுகளா? என்ன மயித்துக்குட்டீ பகலில வந்து இருக்கிய? போங்கட்டீ” என்றார் செல்லமாக. “ஏன் ராத்திரியில இனிக்கபட்டது பகலில கசக்குமோ?” “ஆமாட்டி பண்டமும் பாத்திரமும் எல்லாருக்கும் உள்ளது தான் . . . அதக் கொண்டுவந்து உச்ச வெயிலில ஊரறிய காய வைப்பாவளாட்டீ? வாறாளுக பேச . . . போங்கட்டீ.”

காக்கும்பெருமாளின் அப்பா சிவனணைஞ்சபெருமாள் நாடார் வீக்கம் வந்து உப்பி மரணப்படுக்கையில் கிடந்தபோது சுரவேகத்தில் “வள்ளீ வள்ளீ” என்று புலம்பினார்.  பன்னிரண்டு நாளாக இழுத்துக்கொண்டிருந்தும் மூச்சு அடங்கவில்லை. பதினான்குநாள் இழுத்தவனுக்கு மாதேவனே வந்து சொன்னாலும் யமதர்மன் சொர்க்கம் கொடுக்க மறுத்து விடுவான். வைத்தியர் குண்டுவய்யர் சொன்னார், “இது மத்தவளைத்தான் மக்கா” ஆனால் சிவனணைஞ்ச பெருமாள் பரம யோக்கியர். சிவப்பழம். சித்தாந்த ஞானி. அவருக்கு எப்படி வள்ளியம்மையைத் தெரியும்? ஒருவேளை முருகனின் குறமகள் வள்ளியைச் சொல்கிறாரா? ஏதாவது சித்தாந்த ரகஸியம் இருக்குமோ? “போலே மயிரே. வாறான் வள்ளி தெய்வானைன்னுட்டு. லே மக்கா, மனபோகம்னு ஒண்ணு உண்டுடே . . . மனுச சென்மத்துக்கு லிங்கபோகம் ஆயிரம்னா கைபோகம் லெச்சம், மனபோகம் கோடீன்னாக்கும் மேலே உள்ளவன் கணக்கு . . . போயி கூட்டிட்டுவாடே அவள” வள்ளியம்மையைக் கூட்டிவர காக்கும்பெருமாளே சென்றார். அவள் மறு பேச்சு பேசாமல் வந்தாள். மூத்தநாடாரின் தலையை எடுத்துத் தன் முலைகள்மேல் அழுத்தி அணைத்து வாயிலிட்ட தாம்பூலத்தை அவருக்குக் கொடுத்தபோது அவர் சிரித்தபடி அப்படியே கண்மூடி சாந்தமானார். காக்கும்பெருமாள்  நீட்டிய நோட்டுக்கட்டிலிருந்து ஒரு இதழைக் கூட உருவாமல், தாம்பூலம் மட்டும் எடுத்துக்கொண்டு சொல்லிக்கொண்டு வள்ளியம்மை படியிறங்கினாள்.

வள்ளியம்மை நோய்மூத்து நடமாட்டமில்லாமல் ஆனபோது காக்கும்பெருமாள் அவரே காரில்சென்று கிழவியைத் தூக்கிவந்து தன் காம்பவுண்டில் ஓரத்து வீட்டில் குடியேற்றி உதவிக்கு ஒரு வேலைக்காரியையும் நியமித்தார். “ஒரு கணக்கில அவ நம்ம அம்மையில்லா?” என்றார். எண்பத்தி ஒன்றாம் வயதில் நல்ல நிறைந்த ஆடியமாவாசையில் பிரம்ம முகூர்த்தத்தில் தன் வீட்டு முற்றத்தில் இருந்து “எக்க அம்மோ” என்று ஏங்கி நெஞ்சைப்பிடித்தவள் அப்படியே இடப்பக்கம்சரிந்து விழுந்து இறந்தாள். அங்கேயே காக்கும்பெருமாள் அவளுக்கொரு கோயில் கட்டினார். இன்று அது இன்னும்பெரிய கோயிலாக ஆகி விட்டிருக்கிறது. தகரக்கூரை இறக்கி தாழ்வாரம் கட்டியிருக்கிறார்கள். குமாரசாமி வைராவி வந்து நித்ய பூஜைசெய்கிறார். குழந்தைகளுக்கு வரும் நோய்களுக்கு வள்ளியம்மை இசக்கியின் பிரசாதம் கைகண்ட மருந்து என்று தேடி வருகிறார்கள்.

கையில் குழந்தையுடன் நின்று பஞ்சவன்காட்டு நீலி வண்டியில் செல்பவர்களிடம் “இம்பிடு சுண்ணாம்பு இருக்கா அண்ணா?” என்று கேட்டபாதை வழியாக நான் தினமும் பேருந்தில் அலுவலகம் செல்கிறேன். வணிகனாக வந்து அவளை மணந்து வேற்றூர் கூட்டிச் சென்ற திருடன் அங்கு வைத்துத்தான் அவளுடைய தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப்போட்டான். கணவனுடன் வந்த தன்னைக் கொன்று சென்ற திருடர்களை வழிதவறி அவ்விடத்துக்கே வரச்செய்து கள்ளிமரம்போல ஒரு உடலில் பத்துக்கிளையுடல்களுடன் பேருருவம் காட்டி நின்ற கள்ளியங்காட்டு யட்சியின் இடத்தில் வீடுகட்டி வாழ்கிறேன். ‘சதுரகிரி மலையோரம் சாய்ஞ்சிருக்கும் திருகு கள்ளி! திருகுகள்ளி பாலெடுக்க திரிஞ்சனடி சிலகாலம் . . .’ இதோ பேருந்திலேறும் பெண்களில் ஒருத்தியாகக் கள்ளியங்காட்டு நீலியும் இருக்கக்கூடுமோ? உச்சியில் மந்திர ஆணியடித்து யட்சிகளை அடக்கி சாதாரணப்பெண்களாக ஆக்கிவிடமுடியும். வில்லுக்குறி மந்திரவாதி இடலக்காட்டு நீலியை மந்திரத்தால் அடக்கி உச்சியில் ஆணியடித்து கொண்டுசென்று தன் மனைவிக்குப் பணிப்பெண்ணாக்கினான். நிறைசூலியான அவளிடம் பேன் பார்க்கச் சொன்னாள் நீலி. உச்சியிலென்ன ஆணி என்று கேட்டபோது அதை எடுத்துவிடு என்றாள். ஆணி பிடுங்கப்   பட்டபோது வான்முட்ட எழுந்து நின்று சூலி வயிறு பிளந்து பிள்ளையுடன் கள்ளிமுள் காட்டுக்குள் ஆயிரம் நரிபோல ஊளையிட்டபடியோடிச்சென்றாள்.

அணைக்கும்வரை தெரிவதில்லை யட்சியை. மருந்துக்கோட்டை நீலியை அய்யப்பன் செண்பகராமன் ஏழுநிலை மாளிகையாக மாறிய அவளுடைய கரும்பனை உச்சிக்குப்போய் மேகங்கள் கூரையிட்ட பனங்குருத்துப்படுக்கைமீது படுத்து கட்டியணைத்து முயங்கியபோது தோணிபோல அவள் முதுகு குழிந்து உள்ளீடில்லாமலிருப்பதைக் கண்டார். யட்சியர் ஒருபோதும்  மானுடரைக் கூட முடிவதில்லை. காமம் மூத்து மெய்கலக்கும்போதே அவன் யட்சியை அறிந்துவிடுகிறான். மரண வெறியில் விறைத்த அவன் உடல்மீது பச்சை விறகு மேல் புகையும் நெருப்பு போல நின்று அவள் தகிக்கிறாள். நான் கேசினியை எண்ணிக் கொண்டேன். மார்கழி மாதம் குளிரில் கூட வீட்டுக்குளத்தில் அதிகாலையில் நீராடுகிறவள். “காந்தாரி மொளகாக்குமே அரைச்சு தேய்க்கியது . . . மகா சாபம் . . . வேற என்னத்தச் சொல்ல?” வேலைக்காரி செல்லம்மை சொன்னாள். அதிகாலையில் கையையும் காலையும் துணியால் கட்டிக்கொண்டு அந்தக்குளத்தில் குதித்துச் செத்தாள். செல்லம்மை குளிக்கச் சென்றபோது தெளிநீல நீருக்குள் கடைசிப்படியருகே செங்கதலி வாழையின் அடிமரம்போல மூழ்கி அலைகளில் ஆடினாள். நீர்ப்பாசி போலக் கருங்கூந்தல் நெளிந்தது.

செல்லம்மையின் அலறல் கேட்டு வேலைக்காரர்கள் ஓடிவந்தார்கள். சமையற்காரி பாறுவம்மை “நாயிடமக்களே ஒற்ற ஒருத்தன் அவள தொடப்பிடாது . . . தொட்டவனை வெட்டிப்போடுவேன் . . . மாறுங்கலே” என்று அரிவாள்மணையுடன் வந்து அலறினாள். “மீசகுருத்தவன் ஒருத்தன் இங்க நிக்கப்பிடாது . . . பொலி போட்டிருவேன் . . . போங்கலே தடிதூக்கி நாயிகளே . . .” அத்தனை ஆண்களையும் துரத்திவிட்டு செல்லம்மையும் பாறுவம்மையும் சேர்ந்து அவளை மேலே தூக்கி எடுத்தார்கள். கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட வெண்கலக்கும்பா போல நீர்ப்பாசி படிந்த இளம்பாளை உடல். அடி வயிற்று மென்மயிர் பரவல். இமைகளில் நீலநரம்பு வலை. “அல்லிப்பூவுக்க எதளு போலுள்ள எமையாக்குமே அம்மிணியே . . . கைய இப்பிடி இறுக்கிப் பிடிச்சிருந்தது. கையில என்னமோ இருக்குண்ணு பிடிச்சு வெலக்கி பாத்தம் . . . ஒண்ணுமில்ல. வெறும் கையாக்கும் கேட்டுதா?” “பின்ன? அவள்க்கு வேற எந்து கிட்டும்?” என்றாள் அம்மா.

கையில் குழந்தையுடன் வந்து “சொல்பம் அந்தால போயி இருங்க சார்” என்று நிற்கும் இந்த ஊதாநிறச் சேலை கட்டிய மெலிந்த பெண் பஞ்சவன்காட்டு நீலியாக இருக்கக்கூடாதா என்ன? ஆனால் யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.

ஓவியங்கள்: ராஜன் புதியேடம்


சென்ஷி

unread,
May 13, 2010, 9:06:29 AM5/13/10
to panb...@googlegroups.com

பி.விஜயலெட்சுமியின் சிகிட்சை குறிப்புகள்

எஸ் ராமகிருஷ்ணன் – உயிர்மை இதழில் வெளியானது

இரண்டு வருடங்களுக்கு முன்பாக வெளியான என்னுடைய இந்த கதையை வாசிப்பதற்கு தேடுவதாக அமெரிக்காவில் இருந்து சிவசங்கரன் என்ற நண்பர் மின்னஞ்சல் அனுப்பி கேட்டிருந்தார். இது போன்று கடந்த நாலு மாதங்களில் ஆறேழு நண்பர்கள் இக்கதையை வாசிப்பதற்காக கேட்டிருந்தார்கள். அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி இக் கதையை மறுபிரசுரம் செய்திருக்கிறேன்.

**

ஆனங்குளத்தில் உள்ள ராமவர்மா வைத்தியசாலைக்கு சிகிட்சைக்காக கொண்டு வரப்பட்ட போது பி. விஜயலட்சுமி முப்பத்தியாறு கிலோ எடையுள்ளவளாக இருந்தாள். அவளுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்திருந்தன. சிகிட்சை அளிக்கப்பட்ட காலம் நாற்பது வாரம். அந்த நாட்களில் அவளோடு ஆர்யமாலா என்ற பணிப்பெண் மட்டுமே உடனிருந்தார். பி. விஜயலட்சுமிக்கு அளிக்கபட்ட சிகிட்சை பற்றி அவளது பெற்றோருக்கு எதுவும் தெரியாது. அவளது கணவரான வைகுந்தராமன் மட்டும் மாதம் இரண்டாவது ஞாயிற்று கிழமையில் அவளை பார்ப்பதற்கு அனுமதிக்கபட்டிருந்தார்; ஆனால் அவர் பெரும்பாலும் வருவதேயில்லை. மருத்துவசெலவிற்கான தொகை மட்டும் மருத்துவமனை பெயருக்கே காசோலையாக அனுப்பபட்டு வந்தது.

சிகிட்சைக்கு கொண்டு வரப்பட்ட நாள்:

ஆனங்குளத்தில் உள்ள ராமவர்மா வைத்தியசாலையில் பி. விஜயலட்சுமி 21.4. 2003 அன்று பின்னிரவில் நாலு மணிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கபட்டாள். அன்று அவள் டி.என்.3792 என்ற டாக்சியில் ஏற்றி கொண்டு வரப்பட்டிருந்தாள். அவள் வந்த இரவு கொச்சினை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்துகொண்டிருந்தால் காரின் ஒட்டுனர் வழி தவறி நெடுங்காடு என்ற இடத்திற்கு சென்று சுற்றியலைந்து விசாரித்த போது அது போல ராமவர்மா வைத்தியசாலை இங்கே இல்லை என்றும் அது அடுத்த ஊரான சர்ப்பக்காவில் இருக்க கூடும் என்றார்கள்.

வயல்வெளிகளில் கார் ஊர்ந்து போய்க்கொண்டிருந்த போது பின்சீட்டில் சுருண்டுகிடந்தாள் பி. விஜயலட்சுமி. அவளது காலில் லேசாக குளிர்காற்று உரசிக்கொண்டிருந்தது. தலைமயிர் சுற்றிய பித்தளை வளையம் ஒன்று அவளது இடதுகாலை கவ்விபிடித்தபடியிருந்தது. பித்தவெடிப்பேறிய அவளது பாதங்களை மடக்கிவிட்டு அருகில் உட்கார்ந்திருந்தாள் பரிமளம். யாரோ கதவை தட்டுவது போல மழை காரின் மீது தன் விரல்களால் தட்டியபடியே வந்தது. அவளை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக விஜயலட்சுமியின் மாமனார் வரதராஜ பெருமாள் மட்டுமே வந்திருந்தார்.அவரும் சக்கரைநோயாளி என்பதால் உறக்கத்தை கட்டுப்படுத்துவது இயலாததாக இருந்தது. கார் புனலுர் தாண்டும் போதே உறங்கியிருந்தார்.

காரை ஒட்டிவந்த சுப்பு மட்டும் எப்போதாவது பின்சீட்டில் இருந்த விஜயலட்சுமியை பார்த்து கொண்டே வந்தான். ஒரு சாயலில் அவன் குடியிருந்த லயன் வீட்டில் இருந்த கணபதி புலவரின் மகளை போலவே அவள் இருந்தாள். பி. விஜயலட்சுமியின் தோற்றம் உருக்குலைந்திருந்தது.அவளது தலைமயிர் எண்ணெய் வைக்கபடாமல் சிடுக்கேறியிருந்தது. நெற்றி ஏறிப்போய் கழுத்து எலும்புகள் வெளியே துருத்திக் கொண்டிருந்தன. அவளது வலதுகையில் பெரிய காயம் ஒன்று சீல்வடிந்து கொண்டிருந்தது. தண்ணீருக்குள் விழுந்த பஞ்சை போல அவள் உடம்பு சுருங்கிப்போயிருந்தது. அவளது கண்கள் மஞ்சளேறியிருந்தன. இமைகள் பருத்து வீங்கி அவள் பல நாட்களாக உறங்காமலேயிருக்கிறாள் என்பது பார்த்த நிமிசத்திலே தெரிந்தது.

சர்ப்பக்காவில் உள்ள வைத்தியசாலையை தேடி டாக்சியில் சென்று சேர்ந்தபோது வெளிவாசலை மூடியிருந்தார்கள். மழைக்குள்ளாகவும் ஏதோவொரு மூலிகை செடியின் வாசனை கமந்து கொண்டிருந்தது. நோயாளியை உள்ளே கூட்டிக் கொண்டு போய்விடலாமா என தெரியாமல் டிரைவர் வெளியில் இருந்தபடியே ஹார்ன் அடித்து கொண்டிருந்தான். யாரும் வரவில்லை. மழைசப்தத்தில் கேட்காமலிருக்க கூடும் போலிருந்தது. பாதி உறக்கத்தில் இருந்த வரதராஜ பெருமாள் ஹார்ன் சப்தத்தில் விழித்து கொண்டு உள்ளே போய் கேட்டுவரச் சொன்னார்

டிரைவர் மழைக்குள் இறங்கி ஒடத்துவங்கிய போது பி. விஜயலட்சுமி மழைக்குள் அசைந்தபடியே இருக்கும் ஒரு கேந்திபூச்செடியை பார்த்து கொண்டேயிருந்தாள். மழையின் வேகத்தை தாங்கமுடியாமல் கேந்திச்செடி வளைந்து கொண்டிருந்தது. டிரைவர் உள்ளே ஒடியபோது ஒரேயொரு எண்ணெய் விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. அவன் பலத்த குரலில் சப்தமிட்டான். உள்ளிருந்து அறுபது வயதை கடந்த ஒரு ஆள் வெறும்மேலோடு வெளியே வந்து நின்று யார் வேணும் என்று மலையாளத்தில் கேட்டார். சங்கரன்கோவிலில் இருந்து தான் வருவதாகவும் நோயாளியை கொண்டு வந்திருப்பதாகவும் சொன்னான். ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று கேட்டதற்கு அதைபற்றி தனக்கு தெரியாது என்றும் நோயாளி ஒரு பெண் என்றும் சொன்னான். அந்த ஆள் உள்ளேயிருந்த லைட்டை போட்டு பெரிய பேரேடு ஒன்றை புரட்டி பார்த்து கொண்டிருந்தபோது அறையின் மூலையில் வைக்கபட்டிருந்த பாடம் பண்ணப்பட்டிருந்த முதலை ஒன்றை கண்டான். அறையில் ஆள் உயர விளக்கு ஒன்று இருந்தது. சுவரில் நடனமாடும் பெண்ணின் சித்திரம் ஒன்று தீட்டப்பட்டிருந்தது.

மருத்துவமனை ஆள் பொண்ணுக்கு என்ன கோளாறு என்று கேட்டான். டிரைவர் தயங்கியபடியே சித்தபிரம்மை என்று சொன்னதும் அதுக்கு வைத்தியசாலை ஆள் ஆனங்குளம் வைத்தியசாலைக்கு இல்லே நீங்கள் போகணும் என்றான். டிரைவர் அது எங்கேயிருக்கிறது என்று கேட்டதும் நீங்கள் வழி தவறி வந்துவிட்டீர்கள். இப்படியே நாற்பது கிலோ மீட்டர் கிழக்காக போனால் மெயின்ரோடு வந்து சேரும். அங்கிருந்து மேற்காக பனிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு எரிந்து கொண்டிருந்த லைட்டை அணைத்தான்.

டிரைவர் மழைக்குள்ளாகவே வாசலுக்கு வந்தபோது காரின் பின்கதவு திறந்து கிடந்தது. பின்சீட்டில் இருந்த பரிமளம் கிழே இறங்கி போய் ஒரு செடியின் மறைவில் குத்துகாலிட்டு உட்கார்ந்து மூத்திரம் பெய்து கொண்டிருந்தாள். அவளது முதுகில் மழை பெய்து கொண்டிருந்தது. பி. விஜயலட்சுமி அந்த கேந்தி செடியை விட்டு கண்ணை விலக்கவேயில்லை. தலையில் விழுந்த மழைத்துளியை தட்டிவிட்டபடியே பரிமளம் காரில் ஏறிக் கொண்டு என்னப்பா ஆச்சு என்றாள். அந்த ஆஸ்பத்திரி வேற எங்கயோ இருக்காம் என்றபடியே காரை எடுத்தான் டிரைவர்.

பரிமளம் தனது பருத்த கையால் பி. விஜயலட்சுமியின் தலையில் ஒரு அடி கொடுத்தபடியே இந்த எழவை கட்டி இழுக்குறத்துக்குள்ளே என் தாலி அறுந்து போகுது என்றாள். பி. விஜயலட்சுமியின் கவனம் அப்போதும் அந்த செடியின் மீதே இருந்தது. மழையின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க துவங்கியிருந்தது.

மிக மெதுவாக கார் ஊர்ந்து சென்றது. ஒரு செக்போஸ்டில் கார் நின்றபோது வரதராஜ பெருமாள் தனக்கு பசிக்கிறது என்றார். டாக்சி டிரைவரும் அவரும் இறங்கி சாலையோர உணவகத்தில் பிஸ்கட் சாப்பிட்டார்கள். ஆனங்குளத்தை தேடி அவர்கள் போய் சேர்ந்த போது மழை பெய்து முடித்திருந்தது.

வைத்தியசாலை நூற்று நாற்பது ஏக்கர் பரப்பில் மிகப்பெரியதாக இருந்தது. நுழைவாயிலில் யானை சிலை ஒன்றிருந்தது. இரவெல்லாம் பெய்த மழையில் நனைந்து அந்த சிலை நிஜ யானையை போன்றேயிருந்தது. தாழ்வான ஒடு வேய்ந்த கட்டிடங்கள். சிறியதும் பெரியதுமான குடியிருப்புகள். செதுக்கி வளர்க்கட்டிருந்த பெரிய புல்தரை, வளைந்து செல்லும் மரங்கள் அடர்ந்த சாலைகள் என அது ஒரு தனி உலகமாக இருந்தது. கார் உள்ளே சென்ற போது இரவு பணியாளர்கள் விழித்திருந்தனர். ஏதோ தைல எண்ணெய் காய்ச்சிக் கொண்டிருப்பது போல மணம் கமழ்ந்து வந்து கொண்டிருந்தது. வரதராஜ பெருமாள் அவர்கள் நீட்டிய பேரேடுகளில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார்.

முண்டு அணிந்த ஒரு வயதான பெண் காரின் கதவை திறந்து பி. விஜயலட்சுமியை எழுப்பிய போது அவள் அங்கிருந்த கல்வாழையின் இலை அசைவதை பார்க்க துவங்கியிருந்தாள். முண்டு அணிந்தவள் பரிமளத்திடம் நீங்கள் அவளது அம்மாவா என்று கேட்டாள். அதற்கு பரிமளம் எரிச்சலுடன் அந்த நாய்கள் தன்வேலை முடிச்சிருச்சினு எங்க தலையில கட்டிட்டு போயிட்டாங்க. நாங்க தான் உசிரை கொடுக்கிறோம் என எரிச்சல் அடைந்தபடியே நான் இவ அத்தை என்றாள். முண்டு அணிந்தவள் விஜியை கைகொடுத்து துக்கிய போது ஒரு பள்ளி சிறுமியை துக்குவது போலவே இருந்தது.ஒரே ஜாக்கெட்டை பலமாதமாக அணிந்திருந்த காரணத்தால் அவளது முதுகில் பட்டை போல தடம் விழுந்திருந்தது.பி. விஜயலெட்சுமியின் பொருட்கள் என்று ஒரு பழைய வயர்கூடையில் அடைத்து எடுத்து வரப்பட்டிருந்த பொருட்களை பரிமளம் தன் கையில் எடுத்து கொண்டாள்.

முண்டு அணிந்தவள் மழை தண்ணீர் தேங்கியிருந்த பாதையில் விஜயலட்சுமியை தன்னோடு சாய்த்து கொண்டு நடந்த போது விஜயலட்சுமிக்கு நடக்கவே கால் கூசுவதை உணர்ந்தாள். உடம்பில் பிசுபிசுப்பும் துர்நாற்றமும் வந்து கொண்டிருந்தது. கிழக்கு பார்த்த ஒரு அறையின் கதவை திறந்து உள்ளே விஜயலட்சுமியை படுக்கையில் உட்கார வைத்த போது பரிமளம் பெருமூச்சுவிட்டபடியே கதவை மூட வேண்டாம் அவ துங்கவே மாட்டா . நிலை குத்தினது மாதிரி உட்கார்ந்தே இருப்பா. என்றாள். முண்டு அணிந்தவள் தலையசைத்தபடியே அறையின் பூட்டை மேஜையின் மீது வைத்து விட்டு வெளியேறினாள்.

வரதராஜ பெருமாள் அந்த அறைக்கு வந்து சேர்ந்தபோது விஜயலட்சுமி சுவரை பார்த்தபடியே ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பரிமளம் இரவிலே கிளம்பி போய்விடுவதா இல்லை காலையில் புறப்படலாமா என்று கேட்டாள். இருவரும் அதைப்பற்றி பேசிக் கொண்டேயிருந்தார்கள். முன்பு வந்த அதே முண்டு அணிந்த பெண் இப்போது ஒரு பிளாஸ்டிக் வாளியும் கொசுவர்த்தி சுருள் ஒன்றும் கொண்டு வந்து வைத்தபடியே ஆம்பளைகள் இங்கே தங்குவதற்கு அனுமதியில்லை என்றாள். வரதராஜ பெருமாள் தாங்கள் இரவிலே கிளம்பவுதாக சொல்லியபடியே இரண்டு நாட்களுக்குள் அவளுக்கு துணையாக யாராவது ஒரு ஆளை ஊரிலிருந்து அனுப்பி வைப்பதாக சொன்னார். முண்டு கட்டியவள் அதைக் கேட்டு கொண்டதாகவே தெரியவில்லை. வரத ராஜ பெருமாள் கிளம்பும் போது அந்த பணிப்பெண்ணிடம் இவளுக்கு பச்சைதண்ணி ஆகாது.. குளிக்க வச்சா கத்துவா என்று சொல்லியபடியே டாக்சியை நோக்கி நடந்தார்.

மழைக்கு பிந்திய இரவு என்பதால் வானில் நட்சத்திரங்களே இல்லை. டிரைவர் அந்த வைத்தியசாலையை விட்டு வெளியே வந்த போது வரதராஜ பெருமாள் இதுக்கு மாசம் ரெண்டாயிரம் ஆகும். இந்த சனியனை கட்டிகிட்டு வந்ததுக்கு என்னவெல்லாம் தொரட்டை அடைய வேண்டியதிருக்கு பாரு என்றார். பரிமளம் பின்சீட்டில் தனி ஆளாக சாய்ந்து படுத்தபடியே மூளைக்கோளாறு ரொம்ப நாளாவே இருந்திருக்கணும். நம்ம தலையில கெட்டி வச்சிட்டாங்க இனிமே இவ செத்தாலும் பிழைச்சாலும் நமக்கென்ன விடு என்றாள்.

கார் பிரதான சாலைக்கு வந்த போது விடிய துவங்கியிருந்தது. வரதராஜ பெருமாளுக்கு திரும்பவும் பசிக்க துவங்கியிருந்தது. அவர் ஏதாவது சாப்பிடவேண்டும் என்று ஹோட்டலில் நிறுத்த சொன்னார். டிரைவர் ஆற்று பாலத்தை கடந்து போன போது அப்படியே வண்டியை நிறுத்திவிட்டு குளித்து ஒரு துக்கம் போடலாம் என்று நினைத்தான். காரில் இருந்த இரண்டு பேரும் உறங்கியிருந்தார்கள். சாலை ஈரத்தில் நனைந்து கிடந்தது. ஏனோ அவனுக்கு பி. விஜயலட்சுமியை பற்றிய வருத்தம் உண்டானது. அவன் பாதி துக்கமும் மனதில் வலியுமாக வண்டியை சங்கரன்கோவிலை நோக்கி ஒட்டி போய் கொண்டிருந்தான்

நோய் குறிகள்

பி. விஜயலட்சுமி கடந்த ஒரு வருட காலமாக உளவியல் மருத்துவர் டாக்டர் செல்வமகேந்திரனிடம் சிகிட்சை பெற்றிருக்கிறாள். அவரது மருத்துவகுறிப்பின்படி அவளுக்கு ஏற்பட்டிருப்பது அதீத பயம் மற்றும் மனசிதைவு. இதற்கான காரணங்களாக அவர் கருதுபவை
1) விஜயலட்சுமி திருமணம் நடந்த நாளில் இருந்து ஒரு மாதகாலம் பகலிரவு என பேதமில்லாமல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கபட்டிருக்கிறாள். அதனால் அவளது பால்உறுப்பு அழற்சி அடைந்திருக்கின்றது. அத்தோடு அவளது உடலில் பதினோரு இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. முன்பல்லில் ஒன்று பாதி உடைபட்டிருக்கிறது
2) விஜயலட்சுமி கடந்த 11.7.2002 முதல் தொடர்ந்து நாற்பத்திரெண்டு நாட்கள் துங்காமல் இருந்திருக்கிறாள். ஆரம்ப நாட்களில் அவள் படுக்கையில் கிடந்தபடியே உறக்கம் வராமல் புரண்டு படுத்திருக்கிறாள். அதன்பிறகு அவள் படுத்துக்கொள்வதேயில்லை. சுவர் ஒரமாகவே இரவு முழுவதும் நின்று கொண்டேயிருந்திருக்கிறாள். யாராவது அவளை அழுத்தி உட்கார வைத்தால் கூட தானா எழுந்து நின்று கொண்டு விட்டிருக்கிறாள். இதற்காக அரசு பொதுமருத்துவனையில் மூன்று நாட்கள் சிகிட்சை அளிக்கபட்டபிறகு அவள் எழுந்து நிற்பதில்லை. மாறாக கர்ப்பசிசுவை போல கைகால்களை ஒடுக்கி கொண்டு உட்காந்திருந்திருக்கிறாள்
3) 2002ம் வருட ஆகஸ்டு மாதத்தில் ஒரு முறை அவளை திருவந்தியம் கோவிலுக்கு அழைத்து போயிருந்த போது அவள் இடைவிடாமல் மூத்திரம் பெய்தபடியே இருந்திருக்கிறாள். அதனால் ஆத்திரமாகி அவளை அடித்ததில் இடதுதொடையில் பெரிய காயம் ஏற்பட்டிருக்கிறது
4) பி. விஜயலெட்சுமி திருமணமாகி வந்த இரண்டு மாதங்களில் நாலைந்து முறை கணவனோடு சண்டையிட்டிருக்கிறாள். ஒவ்வொரு சண்டையின் முடிவிலும் அவளை கணவனோ அல்லது அவனது வீட்டு ஆட்களோ தாக்கியிருக்கிறார்கள். ஒரு முறை அவளை வீட்டில் உள்ள ஒரு ஆண் ( யார் என்று தெரியவில்லை) தனது ஆண் உறுப்பை அவளது முகத்தில் தேய்த்திருக்கிறார். அன்று அவள் தற்கொலை செய்ய முயற்சி செய்து கண்டுபிடிக்கபட்டு சமையல்பொருட்கள் போட்டு வைக்கும் அறையில் மூன்று நாட்கள் அடைத்து வைக்கபட்டிருக்கிறாள்.
5) இரண்டு முறை அவளுக்கு கர்ப்பசிதைவு ஏற்பட்டிருக்கிறது. முதல்முறை திருமணமான நாற்பதாவது நாளும் இரண்டாவதுமுறை கரு வளர்ந்து 95 நாட்கள் ஆன பிறகும் ஏற்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் அவள் வீட்டில் இருந்தவர்கள் எல்லோரையும் கடுமையாக திட்டியிருக்கிறாள். சில நேரங்களில் அவள் அழுவது நாள் கணக்கில் நீடித்திருக்கிறது
6) 2002ம் ஆண்டின் மேமாதத்தில் அவள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தனது பதிவு எண்ணை நீடிப்பதற்காக சென்னை செல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். அதை அனுமதிக்க மறுத்ததோடு அவள் தானே கிளம்பி போய்விடக்கூடும் என்று அவளது சான்றிதழ்களை யாவையும் எரித்து விட்டார்கள் என்றும் அன்றிரவு அவள் திரும்புவம் தற்கொலை செய்ய முயன்று காப்பாற்றபட்டு தயாளன் ஆர்எம்பி என்ற மருத்துவரிடம் சிகிட்சைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறாள். அந்த சிகிட்சை முடிந்து வந்த சில வாரங்களுக்கு பிறகு அவளது உடலில் ஆங்காங்கே காரணமில்லாமல் பருத்து வீங்க துவங்கியிருந்தது. இதற்கான சிகிட்சை அளிக்கபடவேயில்லை
7) துக்கமின்மை. நடந்த விசயங்களை திரும்ப திரும்ப சொல்வது. கற்பனையாக பயம் மற்றும் தான் இறந்து போய்விட்டதாக நம்புவது உள்ளிட்ட பல நோய்கூறுகள் அவளிடம் துல்லியமாக வெளிப்படுகின்றன

உளவியில் மருத்துவரின் இந்த நோய்கூறுகள் பற்றிய அவதானிப்புகளை போல அவளது கணவன், மாமனார், மாமியார், சின்ன அத்தை மற்றும் அந்த வீட்டின் வேலைக்காரி ஆகியோர் அவதானித்த அவளது நோய் குறிப்புகள்

1) விஜயலட்சுமிக்கு திருமணத்தின் போது இருபத்தைந்து வயது முடிந்திருக்கிறது. ஆனால் அதை பெண் வீட்டில் இருபது என்று பொய் சொல்லியிருக்கிறார்கள். இதை அவளது கணவன் வைகுந்தராமன் சான்றிதழ்களில் இருந்து கண்டுபிடித்தான். அதைபற்றி விஜயலட்சுமியிடம் கேட்டபோது வைகுந்த ராமனுக்குகூட முப்பத்தைந்துவயது முடிந்து விட்டிருக்கிறது, ஆனால் பொய் சொல்லிதானே கல்யாணம் செய்திருக்கிறான் என்று வீண்வாதம் செய்தாள். இதனால் அவளை வைகுந்தராமன் கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அன்றிரவு இந்த சண்டை காரணமாக அவள் உடலுறவு கொள்வதற்கு அனுமதி மறுக்கவே வைகுந்தராமன் அவளை கட்டிலில் இருந்து கிழே தள்ளி வன்புணர்ச்சி மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது அவள் பிடித்து தள்ளியதில் வைகுந்தராமனின் முந்நுறு ரூபாய் பெறுமானமுள்ள ஆல்வோ கடிகாரத்தின் கண்ணாடி உடைந்து போனது குறிப்பிட்டதக்கது.
2) விஜயலட்சுமி வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் தபாலில் எம்ஏ படிக்க முயன்றிருக்கிறாள். அப்படி அவளுக்கு வந்த பாடப்புத்தகங்களை அவள் ஒளித்து வைப்பதற்கு இடமில்லாமல் படுக்கையின் அடியில் வைத்திருந்தை தற்செயலாக அவளது மாமனார் வரதராஜ பெருமாள் கண்டுபிடித்து விசாரித்த போது அவள் படிப்பது தவறு ஒன்றும் இல்லையே என்று வார்த்தைக்கு வார்த்தை எதிர்வாதம் செய்த போது அவர் வழியில்லாமல் அவளது செவுளில் இரண்டு அடி தரவேண்டியதாகியது. அன்றிரவும் விஜயலட்சுமி வன்புணர்ச்சிக்கு உள்ளாகினாள். ஆனால் அவள் மற்ற நாட்களை போல இல்லாமல் ஆடைகளே இல்லாமல் வீட்டின் ஹாலுக்கு வந்து தனது மாமனார் முன் நின்றபடியே நீதானடா சொல்லி குடுக்குறே. என்று மரியாதையின்றி கத்தியிருக்கிறாள்.
3) விஜயலட்சுமியின் தம்பி விடுமுறைக்கு வந்த நாளில் அக்காவின் கட்டிலில் ஒரு மதியம் உறங்கி கொண்டிருந்ததை கண்டு வைகுந்தராமன் அவனை அடித்து எழுப்பி விரட்டவே அந்த பிரச்சனையை விஜி பெரிதாக எடுத்து கொண்டு கத்தியிருக்கிறாள். அப்போது அவளை வைகுந்தராமன் அடிக்க முற்பட அதை விஜியின் தம்பி தடுத்திருக்கிறான் வேறு வழியில்லாமல் அந்த பையன் கழுத்தை பிடித்து தள்ளி இனிமேல் அவனோ, அவளது வீட்டு ஆட்களோ அவளை தேடி வரக்கூடாது என்று விரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது
4) விஜயலட்சுமிக்கு சினிமா பாட்டுகளை கேட்பதும் பாடுவதுமான பழக்க மிருந்திருக்கிறது. எப்போதும் ஏதாவது ஒரு சினிமா பாடலை பாடிக் கொண்டேயிருந்ததால் அதை தடுப்பதற்கு வேறு வழியில்லாமல் அவளது உதட்டில் சூடு போட வேண்டிய நிர்ப்ந்தம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது
5) விஜயலட்சுமி கணவனையும் மற்றவர்களையும் சிறைக்கு அனுப்ப திட்டம் போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது அதை தடுத்து அவளை பொதுமருத்துவமயில் சேர்த்து மின்சார சிகிட்சை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த வகையில் செலவு மட்டும் பனிரெண்டாயிரம் ஆனது. அதை மாமனார் வீட்டில் வைகுந்தராமன் பெருந்தன்மையாக கேட்கவேயில்லை

6) கணவரை உடல் உறவில் திருப்தி படுத்த முடியாத தன்மையும், வீட்டில் வேலைகள் செய்யாமல் கற்பனையில் முழ்கி கிடப்பதும் புத்தகம் படிப்பதும் அவளது முக்கிய நோய்குறிகள்.

பி. விஜயலட்சுமியின் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்

2002ம் வருடம் மார்ச் மாதம் 8 ம் தேதி செய்துங்கநல்லுர் பெத்தையா- செல்லம்மாள் தம்பதியின் குமாரத்தியான பி. விஜயலெட்சுமி என்ற விஜயாள் பி.ஏவிற்கும், சங்கரன்கோவில் பூவிளங்கும் பெருமாள் பேரனும் வரதராஜ பெருமாளின் சிரேஷ்ட பையனும் கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளராக பணிபுரியும் வைகுந்தராமன் பி.காம். டி.கோப் அவர்களுக்கும் சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்தில் காலை 9 முதல் 10.30 வரையான முகூர்த்ததில் திருமணம் நடைபெற்றது. அந்த விழாவில் வைகுந்தராமனின் நண்பர்கள் நுற்றுக்கும் மேற்பட்டவர்களும் விஜயலெட்சுமியோடு படித்த கண்மணி , விமலா என்ற இருவர் மட்டும் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. விஜயலட்சுமியின் திருமணத்திற்காக நாற்பது பவுன் நகையும் 50 ஆயிரம் ரொக்க பணமும் ஒரு யமஹா பைக்கும் வாங்கி தருவது என்று நிச்சயக்கப்பட்டிருந்த வண்ணம் யாவும் இனிதாக நிறைவேற்றி வைக்கபட்டது. விருந்தில் விஜயலட்சுமி இன்னொரு அப்பளம் கேட்டபோது வைகுந்தராமன் ஏண்டி சாப்பாட்டுக்கு அலையுறே என்றதும் அவனது குடும்பமே சிரித்தது.

திருமணநாளின் மதியத்தில் விஜயலட்சுமியும் வைகுந்தராமனும் புது தலையணை, போர்வை சகிதமாக ஒரு அறையில் தங்க வைக்கபட்டபோது வைகுந்தராமன் அவளிடம் தான் பத்து நாட்களாக ஜிம்மிற்கு போய் உடம்பை தயார் செய்து வைத்திருப்பதாகவும் அதனால் இன்றிரவு அவள் பலமுறை உடல்உறவுக்கு தயராக இருக்க வேண்டும் என்றும் கூறினான். அவள் பதிலே சொல்லவில்லை.

இரவு அவள் படுக்கைக்கு சென்ற போது அவளது வலதுகையை முறுக்கியபடியே அவன் ஒரே கடியில் முழு ஆப்பிள் ஒன்றை தின்றபோது அவளுக்கு பயமாக இருந்தது. அவளின் விருப்பம் கூடுவதற்குள் அவன் தனது செயலை முடித்துவிட்டு தட்டில் வைத்திருந்த பழங்கள் யாவையும் தின்று தீர்கக துவங்கினான். அவள் எழுந்து மூத்திரம் பெய்துவிட்டு வர விரும்பினாள். அதற்கு கதவை திறந்து வெளியே போக வேண்டும். உள்ளே வருதற்குள் போய்விட்டு வந்திருந்தால் என்ன என்று அவன் கத்தினான். அவள் சுருண்டு படுத்து கொண்டாள். விடிந்து எழுந்த போது அவளது உடலில் நாலைந்து சிறு காயங்களிருந்தன. அதை விடவும் அவன் பாதி கடித்து போட்டிருந்த ஆப்பிள்சதைகள் ஆங்காங்கே கிடந்தை காணும் போது அருவருப்பாக இருந்தது. அவள் துக்க கலக்கத்தோடு அவசரமாக மூத்திரம் பெய்வதற்காக வெளியே சென்றாள்.

**
திருமணமான பத்து நாட்களுக்கு பிறகு அவர்கள் வைகுந்தராமனின் பாட்டி ஊருக்கு சென்றிருந்தார்கள். அந்த வீடு மிக சிறியது. உள்ளே ஒரு நார்கட்டில் போட்டிருந்தார்கள். அதில் இருவர் படுக்க முடியாது. ஆனாலும் அவனது கட்டாயத்தால் அவள் அதில் ஒட்டிக் கொண்டு படுக்க வேண்டியதாகியது. இரவில் அவனது ஆத்திரத்தால் அவளது கால்முட்டியில் கட்டில் குத்தி ரத்தம் கொட்டியது. இந்த கிராமத்தில் எந்த டாக்டரை பார்ப்பது என்று அவன் திட்டியதோடு அப்படியே விட்டுவிட்டான் . அங்கிருந்த மூன்று நாட்களும் அவளால் வலது காலை அசைக்கவே முடியவில்லை. ஊருக்கு வந்ததுமே அவளுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அவன் ஆத்திரத்தில் அவள் காய்ச்சலை பற்றி பொருட்படுத்தாமல் அவளோடு உறவு கொண்டான். மறுநாள் அவள் மருத்துவரிடம் காட்டியபோது அவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கும் படியாக சொன்னார். வைகுந்தராமன் அவளை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு ஊருக்கு போன் செய்து அவளது அப்பாவை வரச்சொல்லிவிட்டு தனக்கு அலுவலக வேலை இருப்பதாக சென்னைக்கு கிளம்பி சென்றான்

**
வீட்டு பிரச்சனைகளில் இருந்து மனதை திசைதிருப்புவதற்காக விஜயலட்சுமி வாடகை நுலகம் ஒன்றில் உறுப்பினராக சேர்ந்தாள். அங்கே உள்ள புத்தகத்திலே மிக அதிகமான பக்கங்கள் கொண்ட ஏதாவது ஒரு புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து வந்து வாரக்கணக்கில் படித்து கொண்டிருப்பாள். அப்படி ஒரு நாள் அவள் யாருக்காக மணி ஒலிக்கிறது என்ற புத்தகத்தை எடுத்து வந்து வாசித்து கொண்டிருந்த போது வீட்டு பெண்களை போல அவள் வேலைகள் செய்யாமல் எதற்கு படித்துக் கொண்டேயிருக்கிறாள் என்று ஆத்திரமாக கத்திய வைகுந்தராமன் உடனடியாக அந்த நாவலை பிடுங்கி கிழித்து அடுப்பில் போட்ட போது அவள் வேண்டும் என்றே தனது தலையை சுவரில் பலம் கொண்ட மட்டும் முட்டிக் கொண்டாள். ஆனால் அப்போதும் அவளது மண்டை உடையவேயில்லை அத்தோடு அவளது ஆத்திரமும் தீரவில்லை.

**
ஒரு நாள் மதியம் சாப்பாடு போடும்போது தட்டில் ஒரு தலைமயிர் ஒட்டிக் கொண்டிருந்ததை காரணம் காட்டி விஜயலட்சுமியின் மாமனார் வரதராஜ பெருமாள் அன்றிலிருந்து அவள் தரையில் போட்டு சாப்பிட வேண்டும் என்று கத்தினார். அதை வைகுந்தராமனும் ஆமோதித்ததோடு அப்போதே அவள் தரையில் போட்டு சாப்பிட வேண்டும் என்றான். அன்றிலிருந்து விஜயலட்சுமி தானாகவே தரையில் சாப்பிட துவங்கினாள். அதை பின்நாட்களில் ஒருவரும் தடுக்கவேயில்லை

**
வைகுந்தராமன் அலுவலகத்திலிருந்து வரும்வரை இரவில் அவள் படுக்கையில் சும்மா உட்கார்ந்து கொண்டு ஸ்ரீராமஜெயம் எழுதிக்கொண்டிருக்கிறாள் என்பதால் தேவையற்ற மின்சார செலவு ஏற்படுகிறது என்று மின்விளக்குகளை அணைக்க சொல்லி சண்டையிட்ட பிறகு அவள் தனது அறையில் எப்போதுமே விளக்கு போடாமல் இருட்டிலே இருக்க பழகத்துவங்கினாள். இந்த பழக்கம் பகலிலும் நீண்டுவிடவே அவளாக வீட்டு ஜன்னல்களை ஆணி வைத்து அடித்து ஒரு போதும் திறக்க முடியாதபடி மூடிவிட்டாள்.

**
துணி துவைக்கும் சோப்பு மற்றும் அவளுக்கான எண்ணெய், பவுடர், சீப்பு போன்றவற்றை அவர்கள் தங்களது அலமாரியில் வைத்து பூட்டிக் கொண்ட நாளில் இருந்து அவள் ஒரே உடையில் நாள் கணக்கில் இருக்கவும் குளிப்பதற்கு மறுக்கவும் துவங்கினாள்

***
ஒவ்வொரு முறை கர்ப்பம் கூடி கலைந்த போதும் அவள் தனது பிறக்காத குழந்தைக்கு ஒரு பெயரிட்டு அதை தான் வளர்ப்பது போன்று கற்பனையாக செயல்பட துவங்கினாள். இதற்காகவே அவள் அடிவாங்கியதும் சிலமுறை நடந்தேறியிருக்கிறது.

வைத்தியசாலையில் சில தினங்கள்

விஜயலட்சுமி வைத்தியசாலைக்கு வந்த நாலு வாரங்கள் யாரோடும் பேசவேயில்லை. ஒரு இரவு அவள் தனது அறையினுள் வந்துவிட்ட தவளை ஒன்றை இரவு முழுவதும் அருகில் உட்கார்ந்து பார்த்து கொண்டேயிருந்தாள். தவளை கண்ணை மூடுவதும் திறப்பதையும் காண்பது வசீகரமாக இருந்தது. விடிகாலையில் அந்த தவளை அறையை விட்டு படியில் தாவி குதித்தது. அப்போது அவளும் படிக்கு வந்து நின்றாள். தவளை இன்னொரு குதி குதித்து செடிக்குள் மறைந்த போது அவள் சந்தோஷத்துடன் கைதட்டினாள்

**
ஒரு நாளிரவு அறையின் ஜன்னல் வழியாக நிலா வெளிச்சம் தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. விஜயலட்சுமி தனது கைகளை அந்த வெளிச்சத்தில் காட்டினாள். நிலா வெளிச்சம் கைகளில் ஊர்ந்து போக துவங்கியது. நிலா அறையில் நகர நகர அவளும் தன் கைகளை நீட்டிக் கொண்டேயிருந்தாள். அன்று இரவு அவள் உடலில் நடுக்கம் அதிகமானது.

**
ஒரேயொரு முறை அவள் எண்ணெய் குளியல் செய்வதற்காக அழைத்து போகபட்டபோது வழியில் கிடந்த சிவப்பு துணியை காட்டி இது பாம்பில்லை துணி என்ற ஒரேயொரு வார்த்தை பேசினாள். அதன்பிறகு பலவாரங்கள் பேசவேயில்லை.
**
பலாமரத்தில் ஒரு நாளைக்கு எத்தனை எறும்புகள் ஏறுகின்றன எத்தனை எறும்புகள் இறங்குகின்றன என்று பகல் முழுவதும் எண்ணிக்கொண்டேயிருந்தாள். ஏறிய எறும்புகளில் பத்துக்கும் மேற்பட்டவை கிழே இறங்கவேயில்லை என்பது அவளுக்கு வருத்தம் தருவதாக இருந்தது
**
கூட்டு பிரார்த்தனைக்காக அழைத்து போகப்பட்ட போது அவள் மனம் உருகி தான் ஒரு கொசுவாக மாறிவிட்டால் மற்றவர்களின் ரத்தத்தை உறிஞ்சி வாழலாம் என்று பிரார்த்தனை செய்தாள்.
**
இருளிலிருந்து வெளிச்சத்திற்கும் மௌனத்திலிருந்து பேச்சிற்கும் அவள் நகர்ந்து வருவதற்கு ஆறு மாதங்களுக்கும் மேலானது. ஆனாலும் அவளது உடலில் உள்ள தழும்புகளை கண்ணாடியில் கண்டதும் அவள் முகம் வெளிறி ஒடுங்கி போவதை ராஜ வைத்தியத்தாலும் குணப்படுத்த முடியவேயில்லை

**
பின்குறிப்பு : 21.12.2003 மதியம் இரண்டு மணிக்கு ஆனங்குளத்தில் உள்ள வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்த ஐம்பது வயதை தாண்டிய நபர் நரைத்த தலைமயிரும் கவலை தோய்ந்த முகமும் கொண்டிருந்தார். அவரது கண்களில் துக்கம் படிந்திருந்தது. நடுங்கும் குரலில் தான் விஜயலட்சுமியின் தகப்பன் என்றும் தங்களிடம் விஜயலட்சுமி படிப்பதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கபட்டிருப்பதாக வைகுந்தராமன் சொல்லி ஏமாற்றிவிட்டான் என்றும் அவளை தான் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று சொன்னார். வைத்திசாலை ஆட்கள் அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார்கள். அந்த வயசாளி தன்னை மீறி அழுதபடியே என் பொண்ணுய்யா என்று கத்தினார்.

வழியில்லாமல் ஒரு முறை அவளை பார்ப்பதற்கு அனுமதித்தார்கள். அவர் பார்த்தபோது சிறிய பச்சைநிற அங்கி அணிந்தபடியே அவள் படியில் உட்கார்ந்திருந்தாள். அவளது தலைமயிர் கொட்டி போயிருந்தது. அவள் தன் அப்பாவை பார்த்ததும் பலவீனமான குரலில் நீயும் இங்கே வந்துட்டயாப்பா என்று கேட்டாள். அவர் பதில் சொல்லமுடியாமல் கதறிஅழுதார்.

அன்றிரவு வைத்தியசாலையில் இருந்த பணிப்பெண்ணிற்கு பணம் கொடுத்து யாரும் அறியாமல் தன் பெண்ணை அவர் அங்கிருந்து கூட்டிப் போய்விட்டார் என்றும் ஒருவேளை அவர்கள் ஆந்திராவில் உள்ள மதனபள்ளியிலோ, கர்நாடகாவில் உள்ள கொல்லுரிலோ. மஹாராஷ்டிராவில் உள்ள சீரடியிலோ காணக்கூடும் என்கிறார்கள்.

உங்கள் பயணங்களில் தலைமயிர் கழிந்த, வெறித்த பார்வை கொண்ட ஒரு பெண்ணையும் அப்பாவையும் நீங்கள் சந்திக்க கூடுமாயின் தயவு செய்து அவர்களை கடந்து போய்விடுங்கள். அவர்கள் யாவரிடமிருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். அல்லது சாவைத் தேடி நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் நமது நற்குடும்பத்தின் சந்தோஷ வாழ்வை எவ்விதத்திலும் தொல்லை செய்யமாட்டார்கள். அவர்கள் போகட்டும் விட்டுவிடுங்கள்.

சென்ஷி

unread,
May 15, 2010, 9:20:55 AM5/15/10
to panb...@googlegroups.com
புவியீர்ப்புக் கட்டணம் - அ. முத்துலிங்கம்


கடிதத்தைப் பிரிக்கும்போதே அவனுக்குக் கை நடுங்கியது. அது எங்கேயிருந்து வந்திருக்கிறது என்பது தெரியும். இது மூன்றாவது நினைவூட்டல். மூன்று மாதங்களாக அவன் புவியீர்ப்புக் கட்டணம் கட்டவில்லை. இப்போது உடனே அதைக் கட்ட வேண்டும் என்று இறுதிக் கடிதம் வந்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இந்தத் தொல்லை. அதற்கு முன் இப்படி விபரீதமான ஒரு துறை - புவியீர்ப்புத் துறை - உண்டாகியிருக்கவில்லை.

'அம்மையே!'

'சொல்லுங்கள், நான் உங்களுக்கு இன்று எப்படி உதவலாம்?'

'புவியீர்ப்புக் கட்டணத்தைக் கட்டும்படி மீண்டும் நினைவூட்டல் கடிதம் வந்திருக்கிறது.'

'நீங்கள் யார் பேசுவது?'

'நான் 14 லோரன்ஸ் வீதியிலிருந்து பேசுகிறேன்.'

'சரி, உங்களுக்கு என்ன பிரச்சினை?'

'இந்தக் கட்டணம் அதிகமாக இருக்கிறது. இன்னொருமுறை பரிசீலிக்க முடியுமா?'

'இதோ கணினியில் உங்கள் கணக்கைத் திறந்திருக்கிறேன். சென்ற மாதமும் உங்களோடு பேசியிருக்கிறேனே? அதற்கு முதல் மாதமும் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். ஆரம்பத்தில் இருந்து ஒழுங்காகப் பணம் கட்டிவந்த உங்களுக்குத் திடீரென்று என்ன நடந்தது?'

'என்னுடைய நிதிநிலைமை மோசமாகிவிட்டது.'

'அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்கள் துறையின் விதிமுறைகள் அடங்கிய கையேட்டை உங்களுக்கு அனுப்பியிருந்தோமே. அதன் பிரகாரந்தான் கட்டணம் அமைத்திருக்கிறோம்.'

'அம்மையே, உங்கள் கையேடு மிகவும் பாரமாக உள்ளது. எழுத்துகள் எறும்புருவில் படித்து முடிப்பதற்கிடையில் ஓடிவிடுகின்றன. உங்கள் கட்டண அமைப்பும் ஒன்றுமே புரியவில்லை. மிக அநியாயமாக இருக்கிறது.'

'புரியாதது எப்படி அநியாயமாகும்? நீங்கள் தண்ணீருக்குக் கட்டணம் செலுத்துகிறீர்கள். மின்சாரக் கட்டணம், சமையல்வாயுக் கட்டணம், சூரியஒளி வரி, காற்றுத் தூய்மை வரி என்று சகலதும் கட்டுகிறீர்கள். தொலைக்காட்சி, தொலைபேசி, செல்பேசி எல்லாம் பட்டுப்பட்டென்று தீர்த்துவிடுகிறீர்கள். இதிலே மாத்திரம் என்ன குறை கண்டீர்கள்?'

'அம்மையே, புவியீர்ப்புக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். ஆதியிலிருந்து அது இருந்துகொண்டுதானே இருக்கிறது. நியூட்டன் அதைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர்கூட இருந்திருக்கிறது. இவ்வளவு நாளும் அதற்கு வரி விதிக்கவில்லை. இப்பொழுது இரண்டு வருடங்களாக அதற்கும் வரி கட்ட வேண்டுமென்றால், எப்படி?'

'ஐயா, நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தக் கேள்வியை ஏன் இரண்டு வருடத்திற்கு முன்னரே கேட்க உங்களுக்குத் தோன்றவில்லை? தண்ணீரை உங்கள் வீட்டுக்குக் கொண்டுவருகிறோம். காற்றைத் தூய்மையாக்கிச் சுவாசிக்க வழங்குகிறோம். கூரையிலே விழும் சூரிய ஒளியில் உங்கள் சாதனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கிறோம். சமையலுக்கு வாயு தருகிறோம், மின்சாரம் தருகிறோம். எல்லாவிதக் கட்டணமும் கட்டிவிடுகிறீர்கள். ஆனால் புவியீர்ப்புக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். யோசித்துப் பாருங்கள், புவியீர்ப்பு இல்லாமல் உங்களால் ஒரு நிமிடம் வாழ முடியுமா? கார் ஓட்ட முடியுமா? நடக்க முடியுமா? உங்கள் பிள்ளைகள் ஓடியாடி விளையாட முடியுமா? ஒன்றுக்குப் போவதுபோல ஒரு சின்னக் காரியங்கூட உங்களால் செய்ய முடியாதே?'.

'அம்மையே, என்னுடைய சுண்டெலி மூளையில் இவையெல்லாம் புரிய தாமதமாகிறது. ஆனால் உங்கள் துறை என்ன செய்கிறது? புவியீர்ப்பைச் சுத்தம் செய்கிறதா அல்லது வீடு வீடாய்க் கொண்டுபோய் அதை இறக்குகிறதா? இது மிகப் பெரிய அநியாயமாகப் படவில்லையா?'

'அமெரிக்காவில் உள்ள அத்தனை பேரும் புவியீர்ப்புக் கட்டணம் கட்டுகிறார்கள். ஐரோப்பா கட்டுகிறது. சில ஆப்பிரிக்க நாடுகளும் கட்டத் தொடங்கிவிட்டன. உலகம் படுவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு தேசப்பற்றாளராக நடந்துகொள்ளவில்லை. புவியீர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் அதனை முற்றிலும் பயன்படுத்தியும் அதற்கான கட்டணத்தை நீங்கள் கட்டத் தயங்குவது விசனத்துக்குரியது. இதைப் பற்றி நான் மேலிடத்துக்கு முறைப்பாடு செய்ய வேண்டியிருக்கும்.'

'அம்மையே, உங்கள் இனிமையான குரலும் 'முறைப்பாடு' என்னும் வார்த்தையும் ஒரே வாசகத்தில் வரலாமா? இந்தத் துறை தொடங்கிய காலத்திலிருந்து நான் கட்டணத்தைச் சரியாகக் கட்டி வந்தேன். எனக்குத் தேசப்பற்றும் பூமிப்பற்றும் புவியீர்ப்புப் பற்றும் அதிகம் உண்டு. புவியீர்ப்புக் கவிதை ஒன்றாவது படிக்காமல் நான் தூங்கப் போவதில்லை. அம்மையே, எப்படியும் கட்டிவிடுகிறேன். சிரமத்துக்கு மன்னியுங்கள். வணக்கம்.'

'வணக்கம்.'

'ஹலோ.'

'ஹலோ.'

'அது யார்? 14 லோரன்ஸ் வீதிதானே? வீட்டுச் சொந்தக்காரரா பேசுவது?'

'நான்தான், சொல்லுங்கள்?'

'ஐயா, நான் புவியீர்ப்புத் துறையிலிருந்து பேசுகிறேன். நீங்கள் கடந்த நாலு மாதம் கட்டணம் கட்டாமல் எங்கள் சேவையைப் பயன்படுத்தி வருகிறீர்கள். உங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டம் நெருங்கி வருகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.'

'அம்மையே, இது என்ன அநியாயம். நான் பணக் கஷ்டத்திலிருக்கிறேன். கொஞ்சம் கருணை காட்டுங்கள். நான் கட்ட முடியாது என்று சொல்லவில்லையே, எனக்குச் சிறிது அவகாசம் கொடுங்கள். புவியீர்ப்பு முடிவதற்கிடையில் எப்படியும் கட்டிவிடுவேன்.'

'நீங்கள் இடக்காகப் பேசுவதாக நினைக்கிறேன். உங்களுக்கு இத்துடன் எட்டு அவகாசங்கள் கொடுத்தாகிவிட்டன. எங்கள் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் நீங்கள் ஏமாற்றும் பேர்வழி எனத் தெரிகிறது. நீங்கள் உடனடியாக முழுப்பணத்தையும் கட்டாவிட்டால் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.'

'அம்மையே, பெரிய வார்த்தை சொல்லலாமா? ஏமாற்றுவது என்னும் வார்த்தையை எழுத்துக்கூட்டக்கூட எனக்கு வல்லமை போதாது. நான் அப்படியான ஆளும் அல்ல. சின்ன வயதில் அம்மாவின் கோழிக் குஞ்சு ஒன்றை அவருக்குத் தெரியாமல் திருடி விற்றது பற்றி யாரோ சொல்லியிருக்கிறார்கள். தேவ சங்கீதம் போல ஒலிக்கும் உங்கள் குரலில் இந்த வார்த்தைகள் வரலாமா? நான் இந்த மாதம் முழுக்காசையும் கட்டிவிடுகிறேன்.'

சரி, அப்படியே செய்யுங்கள். அடுத்த மாதம் எங்கள் துறையிலிருந்து ஒருவர் உங்களை அழைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

'மெத்தச் சரி. அம்மையே, ஒரு விளக்கம் கூற வேண்டும்.'

'சொல்லுங்கள்.'

'ஒவ்வொரு மாதமும் இந்தக் கட்டணம் ஏறிக்கொண்டே வருகிறதே, அது ஏன்?'

'நாங்கள் அனுப்பிய சுற்றறிக்கை 148.8ஐ நீங்கள் படிக்கவில்லையா?''

'இல்லை, அம்மையே.'

'அதில் 48ஆம் பக்கத்தைப் படிக்க வேண்டும். புவியீர்ப்பை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் மனைவி பயன்படுத்துகிறார். உங்கள் இரண்டு பிள்ளைகளும் பயன்படுத்துகிறார்கள். உங்கள் எடை மாதாமாதம் கூடுகிறதல்லவா, அதுதான் காரணம். உங்கள் எட்டு வயது மகனைக் கேட்டிருந்தால் அவன் பதில் சொல்லியிருப்பானே.'

'உங்களுக்கு எப்படி என் மகனின் வயது எட்டு என்று தெரியும், இது பெரிய அநியாயமாக இருக்கிறதே.'

'ஐயா, எங்களுக்கு எல்லாம் தெரியும். உங்கள் மகன் பிறந்தது அல்பெர்ட் மார்ட்டின் மருத்துவமனையில். அவனுடைய எடை பிறக்கும்போது 7 ராத்தல் 8 அவுன்ஸ் என்பதும் பதிவாகியிருக்கிறது. உங்கள் மனைவியின் சுற்றளவு அதிகமாகிவருகிறதே, அதைக் கவனித்தீர்களா?'

'நீங்கள் எல்லைமீறிப் பேசுகிறீர்கள்?'

'ஏன் கட்டணம் கூடுகிறது என்று கேட்டீர்கள், அதற்குக் காரணம் கூறினேன். இந்தத் திட்டத்தால் பயன்பெற்றவர்கள் அதிகம். சிலர் தங்கள் எடையைக் கணிசமாகக் குறைத்துவிட்டார்களே.'

'அம்மையே, எங்கள் எடை எப்படி உங்களுக்குத் தெரியும்?'

'நீங்கள் சுற்றறிக்கை 133.6ஐ படித்திருக்க வேண்டும். உங்களுடைய இன்றைய எடை 174, கடந்த மாதம் அது 172ஆக இருந்தது. உங்கள் வீட்டு மூலைகளில் பொருத்தியிருக்கும் மந்திரக் கண்கள் இந்தத் தகவல்களை எமக்கு அனுப்புகின்றன.'

'அம்மையே, நாங்கள் இரண்டு வாரகாலம் இந்த நாட்டில் இல்லை. வெளிநாட்டுக்குப் பயணம் போயிருந்தோம். அதற்குக் கழிவு ஒன்றும் இல்லையா? நாங்கள் இந்த நாட்டுப் புவியீர்ப்பைப் பயன்படுத்த வில்லையே?'

'ஐயா, இதையெல்லாம் எங்கள் துறை முன்கூட்டியே ஆழமாகச் சிந்தித்திருக்கிறது. உங்கள் சட்டத் தரணிமூலம் ஒரு சத்தியக் கடுதாசி தயாரித்து அனுப்பிவிடுங்கள். இந்தத் தேதியிலிருந்து இந்தத் தேதிவரை நாங்கள் இந்த நாட்டுப் புவியீர்ப்பைப் பாவிக்கவில்லை. நாங்கள் பயணம் சென்ற தேசத்தில் அவர்களுக்குச் சேர வேண்டிய புவியீர்ப்புக் கட்டணத்தைச் செலுத்திவிட்டோ ம். இப்படி எழுதி அனுப்புங்கள். நாங்கள் அதற்கான கழிவை உங்கள் கணக்கில் சேர்த்து விடுவோம்.'

'நன்றி அம்மையே, நன்றி. உங்கள் அறிவுக்கூர்மை என் நெஞ்சைத் துளைத்தாலும் உங்கள் குரலின் இனிமை என்னைத் திக்குமுக்காடவைக்கிறது. இன்னும் ஒரேயொரு கேள்வி கேட்க அனுமதிப்பீர்களா?'

'சரி, கேளுங்கள்.'

'என்னுடைய மாமியார் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர் ஒரு கட்டிலில் தூங்குகிறார். அவருக்குப் பக்கத்தில் ஒரு கிளாசில் அவர் பல் தூங்குகிறது. அவர் புவியீர்ப்பைப் பாவிப்பதே இல்லை. அதற்கு ஏதாவது சலுகை உண்டா?'

'இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்களே. நான் வெட்கப்படுகிறேன். உங்கள் மாமிக்குப் புவியீர்ப்பு இல்லையென்று வையுங்கள். அவரால் கட்டிலில் படுத்திருக்க முடியுமா? இப்பொழுது செவ்வாய் கிரகத்தைத் தாண்டியல்லவோ பறந்து போய்க்கொண்டிருப்பார்.'

'மன்னியுங்கள். என்னுடைய மூளையைப் பிரகாசிக்க வைத்துவிட்டீர்கள். இன்றே புவியீர்ப்புக் கட்டணத்தைக் கட்டிவிடுவதாக வாக்குறுதியளிக்கிறேன்.'

'முதலில் செய்யுங்கள்.'

'ஹலோ'

'ஹலோ'

'ஐயா, உங்கள் வாக்குறுதியும் செவ்வாய் கிரகத்தைத் தாண்டிப் பறந்துகொண்டிருக்கிறது. இறுதி எச்சரிக்கை தருவதற்காக வருந்துகிறேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் நீங்கள் நிலுவைக் கட்டணம் முழுவதையும் கட்டிவிட வேண்டும்.'

'அம்மையே, இது என்ன இப்படி வெருட்டுகிறீர்கள். நான் என்ன வைத்துக்கொண்டு இல்லையென்கிறேனா? காற்று வரி கட்டினேன், வாயுக் கட்டணம் கட்டினேன், தண்ணீர்க் கட்டணம் கட்டினேன், மின்சாரக் கட்டணம் கட்டினேன்.'

'அதைத்தான் நானும் கேட்கிறேன். எல்லாத் துறைகளுக்கும் கட்டுகிறீர்கள், புவியீர்ப்புக் கட்டணத்தைக் கட்டுவதற்கு மட்டும் ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள்?'

'அதன் காரணம் உங்களுக்குத் தெரியுந்தானே.'

'இல்லை, தெரியாது. தயவுசெய்து என் அறிவைக் கூட்டுங்கள்.'

'மின்சாரக் கட்டணம் கட்டாவிட்டால் இணைப்பைத் துண்டித்துவிடுவார்கள். தண்ணீர்க் கட்டணம் கட்டாவிட்டால் தண்ணீரை வெட்டிவிடுவார்கள். காற்று, தொலைபேசி, வாயு எல்லாத்தையும் வெட்டிவிடுவார்கள். புவியீர்ப்புக் கட்டணம் கட்டாவிட்டால் அதைத் துண்டிப்பீர்களா? நியூட்டன் திரும்பப் பிறந்து வந்தால்கூட அதைச் செய்ய முடியாதே.'

'ஐயா, சுற்றறிக்கை வாசிக்கத் தெரியாத நீங்கள் இவ்வளவு சிந்திப்பீர்கள் என்றால் இந்தத் துறையை நடத்தும் விஞ்ஞானிகள் எவ்வளவு சிந்திப்பார்கள். சென்றவாரம் செய்தித்தாள் படித்தீர்களா?'

'நீங்கள் உபாத்தினி பெண்போலக் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கிறீர்கள்.'

'ஐயா, நீங்கள் சுற்றறிக்கைதான் படிப்பதில்லை, பேப்பர் என்ன பாவம் செய்தது, அதைப் படிக்கலாம் அல்லவா?'

'அம்மையே, என் கனவில் துர்த்தேவதைகள் வந்து ஆட்டிப்படைக்கின்றன. நான் என்ன செய்ய?'

'சரி, துர்த்தேவதைகள் போன பிறகு பேப்பரைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.'

'அம்மையே, என் ஆவலைப் பெருக்க வேண்டாம். தாங்க முடியவில்லை. பேப்பரில் என்ன செய்தி வந்தது, தயைகூர்ந்து செப்புங்கள்.'

'செப்புகிறேன். ஒருவர் எட்டு மாதத்துக்குப் புவியீர்ப்புக் கட்டணம் கட்டாமல் உங்களைப் போல ஏமாற்றிக்கொண்டே வந்தார்.'

'அப்படியா?'

'அவருக்குத் தண்டம் விதித்தோம், அவர் அதையும் கட்டவில்லை. ஆகவே புவியீர்ப்பை அவர் இனிமேல் பாவிக்கக் கூடாது என்று தீர்மானித்தோம்.

'பிறகு என்ன நடந்தது?'

'அவரை விண்வெளிக்கலத்தில் ஏற்றிச்சென்று புவியீர்ப்பு இல்லாத இடத்தில் இறக்கிவிட்டோம். அவர் ஒரு தடவை பூமியைச் சுற்றிவந்தார். அதற்கிடையில் மனம் மாறிச் சம்மதித்துவிட்டார். திரும்பவும் அவரைப் பூமியில் கொண்டுவந்து இறக்கிவிட நேர்ந்தது.'

'உண்மையாகவா!'

'மனிதர் முழுக்காசையும் கட்டினார்; தண்டத்தையும் கட்டினார்; வட்டியையும் கட்டினார். ஆனால் ஒரு பிரச்சினை?'

'அது என்ன?'

'விண்வெளிக்கலத்தில் ஏற்றிச்சென்ற பயணச் செலவு, விண்வெளி உடையின் விலை இன்ன பிற செலவுகளை மாதாமாதம் கட்டுகிறார். 2196 மாதங்களில் கட்டிமுடித்துவிடுவார்.'

'2196 மாதங்களா?'

'ஓமோம், கட்டி முடிக்க 183 வருடங்கள் ஆகும்.'

'அவ்வளவு வருடம் வாழ்வாரா?'

'அது தெரியாது. அவருடைய பிள்ளைகள் நிலுவைக் கணக்குக்கு உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்கள்.'

'அம்மையே, நான் இன்றே உங்கள் கட்டணத்தை ஒரு சதம் மிச்சம் வைக்காமல் கட்டிவிடுகிறேன்.'

'ஹலோ.'

'ஹலோ.'

'உங்களைப் பற்றிப் புவியீர்ப்புத் துறையினர் சிலாகித்துச் சொன்னார்கள். நீங்கள் கட்டணத்தை உடனுக்குடன் கட்டிவிடுவதாகப் புகழ்கிறார்கள்.'

'நன்றி. நீங்கள் யார் பேசுவது? தொண்டை அடைத்த வாத்தின் குரல்போல இருக்கிறதே!'

'நான் பூமிப் பயணத் துறையில் இருந்து பேசுகிறேன்.'

'இது என்ன புதுத்துறையா?'

'என்ன ஐயா எங்களுடைய கடிதம், சுற்றறிக்கை ஒன்றும் கிடைக்கவில்லையா? மூன்று மாதக் கட்டணம் நிலுவையில் இருக்கிறதே.'

'என்ன கட்டணம்?'

'பூமிப் பயணக் கட்டணம். அதாவது பூமி சூரியனைச் சுற்றிவருவது உங்களுக்குத் தெரியும். ஒருமுறை பூமி சூரியனைச் சுற்றும்போது நீங்கள் 149,600,000 மைல்களைக் கடக்கிறீர்கள். நினைத்துப் பாருங்கள், இத்தனை மைல்கள் நீங்கள் இலவசமாகப் பயணம் செய்கிறீர்கள். ஒரு சதம் செலவு இல்லாமல். இனிமேல் இது இலவசம் கிடையாது. பயணத்துக்குக் கட்டணம் கட்ட வேண்டும்.'

'அப்படியா. அருமையான விசயம். இனிமேல் நாள் நாளாக எண்ணாமல் மைல் மைலாக எண்ணலாம். நினைத்துப் பார்க்கும்போதே புல்லரிக்கிறது.'

'முதலில் மூன்று மாதக் கட்டணத்தை அனுப்பி விடுங்கள். பிறகு புல்லரியுங்கள். நீங்கள் பயணம் செய்த தூரம் 37,400,000 மைல்கள்.'

'அதற்கென்ன. பாட்டுப் பாடிக்கொண்டு ஒரு காசோலை எழுதி ஒப்பம் வைத்து அனுப்பிவிடுகிறேன். ஒரு கேள்வி அம்மையே. இதிலே, விமானத்தில் இருப்பதுபோல முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என்று இருக்கிறதா?'

'இல்லை. இல்லவே இல்லை. எல்லோரும் சரிசமந்தான்.'

'மிச்சம் நல்லது. சமத்துவம் என்றால் எனக்குப்பிடிக்கும். என்னுடைய அம்மாவுக்கும் பிடிக்கும்.'

'உங்களுக்கு ஒரு சலுகையும் இருக்கிறது.'

'அப்படியா, சொல்லுங்கள்.'

'லீப் வருடத்தில் ஒரு நாள் அதிகம் அல்லவா? ஆனால் நாங்கள் கட்டணத்தைக் கூட்டப்போவதில்லை. லீப் வருடத்திலும் அதே கட்டணந்தான்.'

'நம்பவே முடியவில்லை. இந்த நற்செய்தி கொடுத்த உங்களுக்கு ஒரு முத்துமாலை பரிசளித்தாலும் தகும். அல்லாவிடில் புள்ளி விழாத சிவந்த ஆப்பிள் கொடுத்தாலும் தகும். கேட்கும்போதே மனம் புளகிக்கிறது. அம்மையே, பணக்காரர்களுக்கு நல்ல வசதியிருக்கிறது. அவர்கள் அதிக கட்டணம் கட்டலாம் அல்லவா?'

'பாருங்கள், உங்கள் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. உங்களைப் போல ஆள்கள்தான் பூமிக்குத் தேவை. நீங்கள் விமானத்தில் போகும்போது அளவுக்கு அதிகமான பொதி கொண்டுபோனால் மிகைக் கட்டணம் கட்ட வேண்டும். அப்படித்தான் இங்கேயும்.'

'உதாரணமாக?'

'ஒரு பணக்காரரிடம் நாலு வீடுகள், ஐந்து கார்கள், அப்படி ஏராளமான பொருள்கள் இருந்தால் அவர் மிகைக் கட்டணம் கட்ட வேண்டும். சாதாரண குடும்பத்தவர்கள் மிகைக் கட்டணம் கட்டத் தேவையில்லை. உங்களுக்கு அந்த அபாயம் கிடையாது.'

'அம்மையே, உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. இன்றே என் பயணக் கட்டணத்தை அனுப்பிவிடுவேன்.'

'நல்லது. அது என்ன சத்தம்?'

'ஒன்றுமில்லை. பூமி பிரண்டு மறுபக்கம் திரும்பும் சத்தம்.'

'சரி, நீங்கள் என்னிடம் பத்து நிமிடம் பேசியபோது 11,000 மைல்கள் பிரயாணம் செய்துவிட்டீர்கள். அதற்கும் சேர்த்துப் பணத்தைக் கட்டிவிடுங்கள்.'

'உடனே, உடனே செய்வேன். இதனிலும் பார்க்க மகிழ்ச்சி தரும் விசயம் எனக்கு வேறு என்ன இருக்கிறது? இன்னொன்று.'

'என்ன?'

'நான் ஒரு சுற்றுலா போவதற்குத் திட்டமிட்டிருந்தேன். இந்தப் பெரிய பிரபஞ்சப் பயணம் போகும்போது சின்னஞ்சிறு சுற்றுலா என்ன கேடு என்று அதை நிறுத்திவிட்டேன். அந்தக் காசை மிச்சம் பிடித்துப் பூமிப் பயணக் கட்டணத்தை உடனேயே கட்டிவிடுகிறேன்.'

'பூமிப் பற்றாளர் என்றால் நீங்கள்தான்.'

'அம்மையே, ஓர் ஆலோசனை. நட்சத்திரங்கள் சும்மா சும்மா மினுங்கிக்கொண்டு கிடக்கின்றன. அதற்கு ஒருவரும் வரி கட்டுவதில்லை. சந்திரன் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கிறான். அவனையும் வளைத்துப்போட வேண்டும். ஒருவருமே கவனிப்பதில்லை.'

'அருமையான யோசனை. கவனிக்கிறோம். கவனிக்கிறோம்.'

****


நன்றி: காலச்சுவடு

சென்ஷி

unread,
May 31, 2010, 1:38:18 AM5/31/10
to panb...@googlegroups.com

ஆப்பிரிக்கப் புல்வெளி

ray_bradbury1அமெரிக்காவைச் சேர்ந்த ரே ப்ராட்பரி (Ray Bradbury) சிறந்த அறிவியல் புனைகதை எழுத்தாளராக அறியப்படுபவர். 1920 ஆம் ஆண்டு பிறந்த இவர் இளமைக்காலத்தின் பெரும்பகுதியை நூலகங்களில் செலவழித்தவர். “நூலகங்களே என்னை வளர்த்தன. கல்லூரி, பல்கலைக்கழகங்களின் கல்வியில் எனக்கு நம்பிக்கையில்லை” என்று சொல்கிறார் ரே ப்ராட்பரி. ‘Faranheit 451′ என்ற நாவலும், ‘The Martian Chronicles’ என்ற சிறுகதைத் தொகுப்பும் இவருடைய ஆகப்பிரபலமான படைப்புகள். இவருடைய வெகு பிரபலமான சிறுகதைகளில் ஒன்றான ‘The Veldt’ என்ற சிறுகதையை விஸ்வநாத் சங்கரின் மொழிபெயர்ப்பில் வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.

மொழிபெயர்ப்பு: விஸ்வநாத் சங்கர்

“ஜார்ஜ்! குழந்தைகளுடைய விளையாட்டு அறையைக் கொஞ்சம் பார்த்துவிட்டு வருகிறாயா?”

“ஏன்? அங்கே எதாவது சரியில்லையா?”

“தெரியவில்லை”

“பிறகு என்ன? அப்புறம் பார்க்கலாம்”

“ஒரு முறை எட்டிப் பார்த்துவிட்டுதான் வாயேன். உன்னால் முடியவில்லை என்றால் ஒரு மனோதத்துவ நிபுணரையாவது கூப்பிடு”

“மனோதத்துவ நிபுணரா? அவர் வந்து என்ன செய்யப்போகிறார்?”

“உனக்கு தெரியாதா… அவர் என்ன செய்வார் என்று?” அவன் மனைவி சமையல் அறையின் நடுவே நின்றபடி, சத்தம் எழுப்பிக்கொண்டிருந்த அடுப்பைக் கவனித்து வந்தாள். நான்கு பேருக்கான அன்றைய இரவுச் சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது.

“அந்த அறை இப்போதெல்லாம் முன்பு போல இல்லை. என்னமோ வித்தியாசமாகத் தெரிகிறது”

“சரி வா. பார்த்துவிட்டு வருவோம்”

அவர்கள் இருவரும் கூடத்தில் நடக்கத் தொடங்கினர். ‘இன்ப வாழ்க்கை இல்லம்’ - அவர்கள் வசிக்கும் வீட்டின் பெயர். ஒலி ஊடுருவக் கூட அனுமதியில்லாத அந்த அமைதியான வீட்டைக் கட்டிமுடிக்க முப்பதாயிரம் வெள்ளிகள் செலவாயின. அந்த வீடே அவர்களுக்கு எல்லாமாய் இருந்தது. உணவு ஊட்டியது, உடை உடுத்தியது, தாலாட்டி தூங்கக்கூட வைத்தது. அவர்களும் இன்பமாகவே இருந்தார்கள். அவர்கள் வருவதை அறிந்த முகம் காட்டாத மின்சாரக் குமிழ் ஒன்று, அவர்கள் விளையாட்டு அறைக்கு பத்தடி தூரத்தில் இருக்கும் போதே அறையின் விளக்குகளுக்கு எல்லாம் உயிர் தந்தது. அதே போல, அவர்கள் கடந்து வந்த கூடத்தின் விளக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக தானாக அணைந்தன.

“நன்றாகத்தான் இருக்கிறது” என்றான் ஜார்ஜ் ஹேட்லி.

அவர்கள் அறையின் வேய்ந்த தரையில் வந்து நின்றனர். நாற்பது அடி நீளமும், நாற்பது அடி அகலமும், முப்பது அடி உயரமுமாய் பெரிதாக இருந்தது அந்த அறை. வீட்டைக் கட்டும்போது பாதி செலவு இதற்கே போனது. “ஆனால் நம் குழந்தைகளுக்கு எதுவுமே ரொம்ப அதிகமாக போனால் நல்லதில்லை” என்று தொடர்ந்தான் அவன்.

அந்த அறையில் அமைதி மட்டுமே இருந்தது. அதைத்தவிர வேறு எதுவுமில்லை. உச்சி வெயிலை உறிஞ்சிக்கொண்டிருக்கும் பொட்டல் காட்டைப்போல அது காலியாகக் கிடந்தது. சுவர்களும் இரண்டே பரிமாணங்களுடன் வெறுமையாய் நின்றன. ஜார்ஜ் மற்றும் லிடியா ஹேட்லி அறையின் மத்தியில் நின்ற பொழுது, கீறும் ஓசையுடன் சுவர்கள் மெல்ல பின்னோக்கி நகர்ந்து ஒரு தெளிவான தூரத்தில் போய் ஒட்டிக் கொண்டன. இப்போது அந்த இடத்தில் ஒரு ஆப்பிரிக்கப் புல்வெளி உருவானது! மூன்று பரிமாணங்களில், நான்கு திசைகளிலும், வைக்கோல் மற்றும் கூழாங்கல்லின் வண்ணங்களை தெளித்துக் கொண்டு அந்தப் புல்வெளி கடகடவென வளர்ந்து, கம்பீரமாக அவர்களைச் சூழ்ந்து கொண்டது. அவர்கள் தலைக்கு மேல் இருக்கும் கூரை இப்போது நீல வானமாகி இருந்தது. அதில் நெருப்பைக் கக்கும் மஞ்சள் பந்தாய் ஒரு கதிரவன்!

ஜார்ஜ் தன புருவத்தில் தோன்றிய வியர்வைத் துளியைத் துடைத்துக் கொண்டான்.

“இந்த வெயிலில் காய வேண்டாம். கிளம்பலாம். இது கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒன்றும் தப்பாகத் தெரியவில்லை” என்றான்.

“கொஞ்சம் பொறு” என்றாள் அவள்.

அடுத்த சில நொடிகளில் எங்கேயோ ஒளிந்து கொண்டிருந்த வாசனைக் கருவிகள், கொதிக்கும் காட்டின் நடுவில் இருந்த அந்த இருவரை நோக்கி வாசக் காற்றை வீசத் தொடங்கின. அது ஒரு கதம்பமான வாசனை. காய்ந்த வைக்கோலின் வறட்டு வாசம், மறைந்திருக்கும் குட்டையின் குளிர்ச்சியான பச்சை மணம், காட்டு விலங்குகளின் உடலிலிருந்து பிரிந்த நாற்றம், அனலில் காயும் மிளகாயிலிருந்து வெளியேறும் கார நெடி என்று பலதும் அந்தக் கதம்பத்தில் கலந்திருந்தன. வாசத்தைத் தொடர்ந்து இப்போது ஓசை! எங்கோ தூரத்துப் புல்வெளியில் துள்ளியோடும் புள்ளிமானின் காலடிச் சத்தமும், கூடவே வானில் வட்டமிடும் வல்லூறுகளின் இரைச்சல்களும் அதனோடு சேர்ந்து… இதிலும் ஒரு கலப்படம்! வானத்தில் ஒரு நிழலாடியது. வேர்த்து விறுவிறுத்த படி, வான் நோக்கி இருந்த ஜார்ஜின் முகத்தில் அந்த நிழல் அரை கணம் தங்கிவிட்டு சென்றது.

“ச்சே! கருமம் பிடித்த ஜந்துக்கள்!” - தன் மனைவியின் அருவெறுப்பை கேட்டுக் கொண்டே நின்றான் அவன்.

“பருந்துகள்”

“அங்கே தூரத்தில் பார்… சிங்கங்கள் தெரிகிறதா? பார்! பார்! இப்போது தண்ணீர் குடிக்க குளத்திற்கு வருகின்றன. எதையோ தின்றுவிட்டு வருகின்றன என்று நினைக்கிறேன். என்னவென்று தெரியவில்லை” என்றாள்.

“ஏதோ மிருகம்” - ஜார்ஜ் தன் உள்ளங்கையை இறுக்கி கண்களுக்கு தொப்பியாக மடக்கி சுள்ளென்று சுடும் சூரியனிலிருந்து தப்பிக்க முயன்று கொண்டிருந்தான். “ஒரு வரிக்குதிரையோ இல்லை ஒரு குட்டி ஒட்டகச் சிவிங்கியாகவோ இருக்கலாம்”

“நிச்சயமாகத் தெரியுமா?” - லிடியாவின் குரலில் ஒரு வினோதமான பதட்டம் இருந்தது.

“இப்போது நிச்சயமாகச் சொல்ல முடியாது. அங்கே பார் வெறும் எலும்புத் துண்டுகளே சிதறிக் கிடக்கின்றன. பருந்துக் கூட்டமும் ஒட்டிக் கொண்டிருக்கும் மிச்ச மீதியை சாப்பிடப் பறக்கின்றன” என்று வேடிக்கை பார்த்தபடி பதில் அளித்தான்.

“அந்த அலறல் சத்தத்தை கேட்டாயா நீ?”

“இல்லை”

“அட! ஒரு நிமிடம் முன்பு வந்ததே! கேட்கவில்லையா?”

“இல்லையம்மா. கேட்கவில்லை.”

சிங்கங்கள் வந்து கொண்டிருந்தன. ஜார்ஜ் ஹெட்லி இந்தப் பிரமாதமான விளையாட்டு அறையை கருவாக்கி, உருவாக்கி, நிர்மாணித்தப் பொறியியலாளரின் மேதாவித்தனத்தை நினைத்து மீண்டும் மீண்டும் வியந்தான். ஒரு மாபெரும் அதிசியத்தை முட்டாள்தனமாக அடி மாட்டு விலைக்கு விற்று விட்டார்கள்! ஒவ்வொரு வீட்டிலும் இது போன்ற ஒரு அறை கட்டாயமாக இருக்க வேண்டும். அட ஆமாம்! சில நேரங்களில் தங்களுடைய அதிநுட்பமான துல்லியத்தால் உங்களை பயப்படுத்தும், அதிர்ச்சியூட்டும், அச்சம் தரும். ஆனால் பல சமயங்களில் இது ஒரு அற்புதமான விளையாட்டு சாதனம். உங்கள் மகனுக்கோ, மகளுக்கோ மட்டுமில்லை… உங்களையே இது ஒரு குழந்தையாக்கி விடும்! கண நேரத்தில் காட்சியை மாற்றி எங்கோ ஒரு தூர தேசத்தில் தூக்கி எறிந்து அழகு பார்க்கும். இப்போது நடந்ததே… அதைப்போல!

seசிங்கங்கள் அருகில் வந்துவிட்டன. மிக மிக அருகில்… பதினைந்தே அடி தூரந்தான்! ரொம்பவும் நிஜமாகவும், தத்ரூபமாகவும் இருந்தன. அவைகளுக்கு உயிர் இருப்பது உண்மையோ என்றே கூட தோன்றிவிடும்! அப்படியொரு உண்மை அங்கே காணப்படும் எல்லாவற்றிலும் தெரிந்தது! பறக்கும் கூர்மையான பிடரி முடிகள் உங்கள் கைகளை குத்திவிடும். அடிக்கும் புழுதிக் காற்றோ உங்கள் நாசித் துவாரங்களை நெரித்து அடைக்கும். சிங்கங்களின் மஞ்சள் நிறமோ, புதிதாக சாயம் பூசப்பட்ட மஞ்சள் துணியைப் போல உங்கள் கண்களில் ஒட்டிக்கொண்டுவிடும். அரிமாக்களின் மஞ்சள் மட்டுமில்லை. அவை அருகே இருந்த புல்லின் பச்சை வண்ணமும், அவை இறைக்கும் மூச்சின் சத்தமும், எச்சில் ஒழுகும் வாயிலிருந்து எட்டிப்பார்க்கும் மாமிசத் துண்டின் மணமும் நிஜமாகவே இருந்தன.

தங்களுடைய கொடூரமான பச்சை-மஞ்சள் கண்களால் சிங்கங்கள் ஜார்ஜையும், லிடியாவையும் பார்த்தன.

“ஐயோ!” - அலறினாள் லிடியா.

சிங்கங்கள் அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்தன.

லிடியா பாய்ந்தோடினாள். பின்னால் ஜார்ஜும் ஓடினான். அறைக்கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியே கூடத்துக்கு வந்த பின் அவன் சிரித்தான். அவள் அழுதாள். இருவரும் மற்றவருடைய செய்கையைக் கண்டு திகில் அடைந்தனர்.

“ஜார்ஜ்!”

“லிடியா! என்னடா செல்லம்! ரொம்பவும் பயந்துவிட்டாயா?”

“இப்போது உயிருடன் இருப்பதையே நம்ப முடியவில்லை”

“லிடியா! ஞாபகம் வைத்துக்கொள். அவை வெறும் பளிங்கு சுவர்கள் தான். உன் வரவேற்பு அறையில் ஒரு ஆப்பிரிக்க வனம் வந்தது உண்மையைப் போல இருந்தாலும் அது நிஜமில்லை. மாயைதான்! இங்கு இருப்பது கண்ணாடித் திரைக்குப் பின்னால் உள்ள வண்ணப் படச் சுருளும், வாசனைக் கருவிகளும், மற்றும் ஒலிப் பெருக்கிகளும் மட்டும்தான். பயப்படாதே! வியர்வையைத் துடைத்துக்கொள். இதோ என் கைக்குட்டை.”

“எனக்கு பயமாக இருக்கிறது” - அவள் அவனருகில் வந்து அவனை அணைத்துக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினாள். ” நீயே பார்த்தாய் இல்லையா? உனக்கு இப்போது புரிந்ததா? இதெல்லாம் எப்படி உண்மையாக இருக்கிறது பார்!”

“லிடியா…”

“வென்டியும் பீட்டரும் இனி எப்போதும் ஆப்ரிக்காவைப் பற்றி படிக்கக் கூடாது என்று நீதான் அவர்களை கண்டிக்க வேண்டும்”

“சரி” - அவளைத் தட்டி கொடுத்தான்.

“சத்தியமாக?”

“சத்தியமாக.”

“கூடவே என் பயம் குறையும் வரையில், அந்த விளையாட்டு அறையைக் கொஞ்ச நாட்களுக்கு பூட்டி வை”

“அது கஷ்டம். உனக்கே தெரியும் பீட்டர் அதற்கு சம்மதிக்க மாட்டான். போன மாதம் அவனைக் கண்டிப்பதற்காக கொஞ்ச நேரம் அந்த அறையை பூட்டியதற்கே அவன் எப்படி குதித்தான் என்று நினைவிருக்கிறது அல்லவா? வென்டியும் ஒத்துக்கொள்ள மாட்டாள். அவர்கள் வாழ்வதே அந்த விளையாட்டு அறைக்காகத்தான்.”

“அதெல்லாம் தெரியாது. அது மூடப்பட வேண்டும். அவ்வளவுதான்”

“சரி”. தயங்கித் தயங்கி அந்த அறையைப் பூட்டினான். “நீ ரொம்ப களைப்பாக இருக்கிறாய். போய் சற்று ஓய்வெடு”.

“எனக்குத் தெரியாது…எனக்குத் தெரியாது” - விம்மிப் புடைக்கும் மூக்கின் வழியே காற்றை பெரிதாக இழுத்து விட்டுக் கொண்டு அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். உடனே அது தூளியாய் ஆடி அவளை ஆசுவாசப்படுத்தியது. “எனக்கு இங்கே நிறைய வேலையில்லை போலும். ஒருவேளை, எனக்கு சிந்திக்க நிறைய நேரம் கிடைக்கிறதோ என்னமோ? நாம் ஏன் கொஞ்ச நாட்களுக்கு முழு வீட்டையும் பூட்டிவிட்டு எங்காவது வெளியே சுற்றுப்பயணம் செய்யக் கூடாது?”

“என்ன சொல்கிறாய்? நீ எனக்கு முட்டை வறுத்துத் தர தயாரா?”

“ம்ம்” - மெல்லமாக தலையாட்டினாள்.

“என் காலுறைகளை துவைத்துப் போட?”

“ஆமாம்” - கண்களில் நீர் தளும்ப வேகமாக தலையை அசைத்தாள்.

“வீட்டைக் கூட்டிப் பெருக்கக் கூடத் தயாரா?”

“அட! ஆமாம்… ஆமாம்!”

“ஆனால் இதையெல்லாம் நாம் செய்ய வேண்டாம் என்பதற்காகத்தானே இந்த வீட்டையே வாங்கினோம்?”

“சரிதான். ஆனால் இப்போது எனக்கு இங்கே பிடிக்கவில்லை. இந்த வீட்டில் என்னை நான் அன்னியமாக உணருகிறேன். இந்த வீடே தாயாகவும், மனைவியாகவும், பணிப்பெண்ணாகவும் இருக்கிறது. என்னால் அந்த ஆப்பிரிக்கக் காட்டோடு போட்டியிட முடியுமா? இல்லை, அந்த தானியங்கி குளிப்பாட்டியைப் போல நம் பிள்ளைகளுக்கு அதிசுத்தமாகக் குளிப்பாட்டி விட முடியுமா? கண்டிப்பாக முடியாது! நான் மட்டுமில்லை. நீயும்தான். நீயும்தான் இப்போதெல்லாம் பதட்டமாக இருக்கிறாய்.”

“நான் கொஞ்சம் அதிகமாகப் புகைக்கிறேன். அவ்வளவே.”

“நீயும் இந்த வீட்டில் இருந்துகொண்டு என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறாய். தினமும் காலையில் அதிகமாக புகைக்கிறாய்; மதியம் அதிகமாகக் குடிக்கிறாய்; இரவிலோ அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிடுகிறாய். நீயும் உன்னை தேவையில்லாதவனாய் நினைக்கத் தொடங்கிவிட்டாய்.”

“நானா?” - ஒரு வினாடி தன்னிடம் எதாவது பிரச்சனை இருக்கிறதா என்று ஆராயத் தொடங்கினான்.

அவள் அவன் பின்னால் உள்ள விளையாட்டு அறையின் கதவைப் பார்த்தபடி சொன்னாள், “ஜார்ஜ்! அந்த சிங்கங்கள் அதைத் தாண்டி வராது அல்லவா?”

அவன் திரும்பினான். கதவு அதிர்ந்தது. ஏதோ ஒன்று அதை முட்டி மோதுவது போல இருந்தது.

“அதெல்லாம் வராது” என்றான்.

இரவில் இருவர் மட்டும் தனியே உணவருந்தினார்கள். வென்டியும், பீட்டரும் நகரில் நடைபெறும் சிறப்புப் பொருட்காட்சிக்குச் சென்றுவிட்டார்கள். வருவதற்கு நேரமாகும் என்றும், பெற்றோர்கள் சாப்பிடலாம் என்றும் அங்கிருந்தே தொலைக்ககாட்டிப்பேசியில் சொல்லிவிட்டார்கள். தன் இயந்திர உட்புறத்திலிருந்து சுடச்சுட உணவைத் தயாரித்து தந்துகொண்டிருந்த சாப்பாட்டு மேசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஜார்ஜ்.

“சட்னியை மறந்துவிட்டோம்” என்றான்.

“மன்னிக்கவும்”, என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு, சட்னியைத் தந்தது மேஜை.

ஜார்ஜ் ஹேட்லி மெல்ல சிந்திக்கத் தொடங்கினான். சில நாட்களுக்கு அந்த விளையாட்டு அறையை பூட்டி வைப்பதனால் பிள்ளைகளுக்கு ஒன்றும் ஆகாது. எதுவுமே அதிகமாகப் போனால் யாருக்கும் நல்லதில்லை. அதுவும் தவிர, இதையெல்லாம் பார்க்கும் போது குழந்தைகள் தங்கள் நேரத்தை ஆப்பிரிக்காவில் அதிகமாகச் செலவிடுகிறார்கள் என்று தெரிகிறது. அந்த சூரியன்! அதன் சுடும் கதிர்க் கரங்கள் பிராண்டியதால் உண்டான சூட்டுக் கோடுகள் இன்னமும் அவன் கழுத்தில் வெந்து கொண்டுதான் இருந்தன. அந்த சிங்கங்கள்! அந்தக் குருதியின் வாசம்! குழந்தைகளின் மனதை அறிந்து, அவர்களின் ஆசைகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த அறையின் மந்திர சக்தியை நினைத்தால் பிரம்மிப்பாக இருக்கிறது. அவர்கள் சிங்கங்களை நினைத்தால், சிங்கங்கள் தோன்றுகின்றன. வரிக்குதிரைகளை நினைத்தால், வரிக்குதிரைகள் வருகின்றன. சூரியன் என்றால் சூரியன், ஒட்டகச்சிவிங்கி என்றால் ஒட்டகச்சிவிங்கி, மரணம் என்றால் மரணம்!

ஆமாம் மரணம்! தட்டில் இருந்த மாமிசத் துண்டை சுரத்தேயில்லாமல் மென்று கொண்டிருந்தான். மரணத்தை குறித்த எண்ணங்கள்… குழந்தைகள் யோசிக்கிறார்கள்! வென்டியும், பீட்டரும் சிறுவர்கள். மரணத்தைப் பற்றி யோசிக்கிற வயதா அவர்களுக்கு? இல்லை, மரணத்தைப் பற்றி சிந்திக்க வயது முக்கியமில்லையா? இறப்பு என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள தொடங்கும் முன்பே நாம் அதை யார் மீதோ பொருத்திப் பார்க்க ஆசைப்படுகிறோம். நம் இரண்டு வயதிலேயே நாம் மற்றவரை பொம்மைத் துப்பாக்கிகளால் சுடத் தொடங்கிவிடுகிறோம்.

ஆனால் இது? இந்த அடர்த்தியான, பெரிய ஆப்பிரிக்கக் காடும், சிங்கங்களின் முரட்டுப் பிடியில் சிக்கி அதில் ஏற்படும் கொடூரமான சாவும்… மீண்டும் மீண்டும் அவன் மனதில் தோன்றின.

“எங்கே போகிறாய்?”

லிடியாவிற்கு அவன் பதில் சொல்லவில்லை. ஏதோ எண்ணங்களில் மூழ்கியபடி, மெல்ல விளையாட்டு அறையை நோக்கி நடந்தான். அவன் முன்னால் இருந்த விளக்குகள் எல்லாம் எரிய, பின்னால் இருந்தவை அணைந்தன. கதவில் காதை வைத்துக் கேட்டான். எங்கோ தூரத்தில் ஒரு சிங்கம் கர்ஜித்தது.

கதவைத் திறந்து கொண்டு, காட்டுக்குள் காலெடுத்து வைக்கும் முன்னே, தொலைதூரத்து அலறல் ஒன்றை அவன் கேட்க முடிந்தது. அதைத் தொடர்ந்து சிங்கங்களின் கர்ஜனை. உடனே அதுவும் தணிந்தது.

காட்டுக்குள் நுழைந்தான். கடந்த ஒரு வருடத்தில் எத்தனை முறை இந்த கதவைத் திறந்து கொண்டு இங்கே வந்திருப்பான்? அப்போதெல்லாம் அவன் பார்த்தது மாய உலகமோ, ஆலிசோ, போலி ஆமையோ, அலாவுதீனோ, அவனுடைய அற்புத விளக்கோ, ஓஸின் பரங்கித்தலையன் ஜாக்கோ, டாக்டர் டூலிட்டில்லோ, இல்லை நிலவைத் தாண்டும் அந்த பசு மாடோ… இப்படி ஏதாவது ஒரு மகிழ்வூட்டும் விந்தை சித்திரத்தைக் கொண்ட காட்சியாகவே இருக்கும். எத்தனை முறை வான் கூரையில் பறக்கும் பெகஸஸ்ஸையும், சிகப்பு நீர் ஊற்றாய் தோன்றும் வான வேடிக்கையையும், தேவதைகளின் இனிமையான சங்கீதத்தையும் பார்த்திருப்பான்? கேட்டிருப்பான்? ஆனால் இப்போது காண்பதெல்லாம் இந்த மஞ்சள் நிறக் காடும், தகிப்பிலே கேட்கும் மரண ஓலமும் தான். லிடியா சொன்னது சரியே. பிள்ளைகளுக்கு இந்தக் கற்பனை உலகிலிருந்து ஒரு சின்ன இடைவெளி தேவைதான். இது கற்பனையைத் தாண்டி நிஜமாக வளர்ந்துவிட்டது. அதுவும் பத்து வயது குழந்தைகளுக்கு இதெல்லாம் ரொம்ப அதிகம். எப்போதாவது சில நேரங்களில் இது போன்ற கோமாளிக் கற்பனையை மனதில் கொண்டிருந்தால் தவறில்லை. ஆனால் இந்த பிஞ்சு நெஞ்சங்களில் எப்போதும் இதுவே குடி இருப்பதென்றால்…? அப்பப்பா! அவன் ஆழமாக யோசிக்கத் தொடங்கினான். கடந்த ஒரு மாதமாகவே, சிங்கங்களின் கர்ஜனை இரைச்சலும், அவற்றின் தேக வாசமும், அவனுடைய அலுவலகக் கதவிடுக்கு வழியே கசிந்து வந்திருக்கின்றன. அவனோ தன் வேலைப் பளுவில் அதனை கவனிக்கவில்லை.

ஜார்ஜ் காட்டில் தனியாக நின்றான். சிங்கங்கள் சாப்பிட்டபடி அவனை நிமிர்ந்து பார்த்தன. அந்த மாயவுலகின் ஒரே ஒரு நிஜ உலகத் தொடர்பு… அவனால் திறந்திருந்த கதவின் வழியே கூடத்தின் மற்றொரு மூலையில் உட்கார்ந்திருந்த தன் மனைவியைப் பார்க்க முடிந்ததுதான். அவள், வரைந்து வைத்த ஓவியம் போல உயிரற்று உணவருந்திக் கொண்டிருந்தாள்.

“சீ! போ!” என்று சிங்கங்களைத் துரத்தினான்.

அவை அசரவில்லை. அசையவில்லை.

அவனுக்கு அந்த அறையின் அடிப்படைக் கோட்பாடு நன்றாகத் தெரியும். முதலில் உன் எண்ணங்களை நீ துரத்தி விடவேண்டும். பின் நீ எதை நினைத்தாலும் அது தோன்றிவிடும். “அலாவுதீனும் அற்புத விளக்கும் வரட்டும்” என்று சொடுக்கிட்டான். ஒன்றும் மாறவில்லை. காடு அப்படியே இருந்தது. சிங்கங்கள் அப்படியே இருந்தன.

“அறையே! எனக்கு அலாவுதீனைக் கொண்டு வா!” என்று மறுபடியும் ஆணையிட்டான்.

எதுவும் வரவில்லை. போகவுமில்லை. சிங்கங்கள் தங்கள் உணவை மென்று கொண்டிருந்தன.

“அலாவுதீன்!”

அவன் சாப்பிடத் திரும்பிவிட்டான். “அந்த முட்டாள் அறை வேலை செய்ய மாட்டேன் என்கிறது. நான் சொல்வதை கேட்க மறுக்கிறது”

“அப்படியும் இருக்கலாம்…”

“அப்படியும் என்றால்? வேறு எப்படி?”

“அது கேட்க மறந்தும் இருக்கலாம். குழந்தைகள் ஆப்பிரிக்கா, சிங்கம், மரணம், இவற்றைப் பற்றியெல்லாம் நிறைய யோசித்து யோசித்து, அந்த அறையை வேறு எதையும் கேட்க முடியாத வகையில் மரத்துப்போகச் செய்திருக்கலாம்.”

“இருக்கலாம்”

“இல்லை பீட்டர் அதை இப்படியே இருக்கும்படி பொருத்தியிருக்கலாம்”

“அவனுக்கு அவ்வளவு விஷயமெல்லாம் தெரியுமா என்ன?”

“ம்ம்.. அவன் பட்டறைக்குச் சென்று எதையாவது நோண்டியிருக்கலாம் அல்லவா?”

“அவனுக்கு பட்டறை சமாச்சாரம் எல்லாம் ஒன்றும் தெரியாது”

“அவன் பத்து வயதுக்கு ரொம்ப புத்திசாலியாக இருக்கிறான். அவனுடைய ஐ. க்யு. மிக அதிகம்…”

“இருந்தாலும் பட்டறை…”

“அம்மா! அப்பா!”

இருவரும் திரும்பிப் பார்த்தனர். வென்டியும் பீட்டரும் முன் வாசல் வழியாக வந்தனர். பஞ்சுமிட்டாய் கன்னங்களும், பிரகாசமான நீல நிற கோலிகுண்டு கண்களும், ஹெலிகாப்டர் பயணத்தால் சட்டையில் இறங்கிவிட்ட ஓசோன் வாசமும் குழந்தைகளை மிக அழகாகக் காட்டின.

“சரியாகச் சாப்பிட வந்துவிட்டீர்கள்”, என்றனர் பெற்றோர் இருவரும்.

“ஐஸ் க்ரீமும், ஹாட் டாகும் சாப்பிட்டதால் வயிறு நிரம்பிவிட்டது. நாங்கள் சாப்பிடவில்லை, சும்மா உட்கார்ந்து கொள்கிறோம்” - கைகோர்த்தபடியே பிள்ளைகள் பதில் சொன்னார்கள்.

ஜார்ஜ் ஆரம்பித்தான். “சரி. எங்களுக்கு விளையாட்டு அறையைப் பற்றி சொல்லுங்கள்”

அண்ணனும் தங்கையும் முழித்தபடியே சொன்னார்கள், “விளையாட்டு அறையில் என்ன?”

“அதுதான் அந்த ஆப்பிரிக்காவும், காடும், மற்ற எல்லாமும்” - அப்பாவிடம் ஒரு போலி புன்னகை இருந்தது.

“எனக்குப் புரியவில்லை” என்றான் பீட்டர்.

“உன் அம்மாவும், நானும் இப்போதுதான் ஆப்ரிக்கா, டாம் ஸ்விப்ட், மற்றும் மின்சார சிங்கம், எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்தோம்”.

“அங்கு அப்பரிக்காவெல்லாம் ஒன்றுமில்லை”

“பீட்டர்… பொய் சொல்லாதே! எங்களுக்கு நன்றாகத் தெரியும்”

“எனக்கு அப்படி எதுவும் ஞாபகமில்லை. உனக்கு?” என்று வென்டியைப் பார்த்து கேட்டான்.

“இல்லை”

“சரி. ஓடிப் போய் பார்த்துவிட்டு வா.”

சிட்டாகப் பறந்தாள்.

“வென்டி! போகாதே. திரும்பி வா” என்று ஜார்ஜ் தடுப்பதற்குள் போய்விட்டாள். வீட்டின் மின்சார விளக்குகளும் அவளை மின்மினிப் பூச்சியாய்ப் பின் தொடர்ந்தன. தான் இறுதியாக அந்த அறையைப் பார்த்துவிட்டு வரும்போது அதன் கதவைப் பூட்ட மறந்ததை அப்போதுதான் ஜார்ஜ் உணர்ந்தான். அதற்குள் வென்டி ஓடியேவிட்டாள்.

“வென்டி பார்த்துவிட்டு வந்து சொல்வாள்” என்றான் பீட்டர்.

“அவள் ஒன்றும் சொல்லத் தேவையில்லை. எனக்குத் தெரியும்.”

“அப்பா! நீங்கள் எதையோ தப்பாகப் பார்த்திருக்கறீர்கள்.”

“இல்லை பீட்டர். என் கூட வா”

அதற்குள் வென்டி மூச்சு வாங்கியப்படி ஓடி வந்தாள். “அங்கு ஒன்றும் ஆப்ரிக்கா இல்லையே”

“என்ன சொல்கிறாய் நீ? எல்லோரும் என்னோடு வாருங்கள். பார்த்துவிட்டு வருவோம்”. நால்வரும் நடக்கத் தொடங்கினர்.

அறையின் கதவைத் திறந்தால்…. அங்கு பச்சைப் பசேல் என்று ஒரு சோலை. பாட்டுப் பாடும் ஒரு அழகான ஓடை, ஊதா நிறத்தில் உயர்ந்து நிற்கும் மலை முகடுகள், கூவும் குயில்கள், குலுங்கும் மலர்கள், பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள், நீண்ட கருங்கூந்தலோடு அழகான வன தேவதையாக ரம்மியமான ரீமா! ஆப்பிரிக்கா இல்லை; அந்தப் புல்வெளி இல்லை; சிங்கங்கள் இல்லவே இல்லை. ரீமா மட்டுமே இருக்கிறாள், அழகாகப் பாடிக்கொண்டு. அவள் பாட்டைக் கேட்டால் ஆனந்தக் கண்ணீர் வந்துவிடும்.

ஜார்ஜ் இந்தப் புதுக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். பின் குழந்தைகளைப் பார்த்து “போய் தூங்குங்கள்” என்றான்.

எதையோ சொல்ல அவர்கள் வாயைத் திறக்க,

“சொன்னது கேட்டது அல்லவா?” என்று அதட்டினான்.

பின் அவர்கள் வாயுக் குழாய்க்குள் புகுந்து கொள்ள, ஒரு பெரிய காற்றலை வந்து அவர்களை கவ்விக் கொண்டு, பள்ளியறையில் துப்பிவிட்டு சென்றது.

ஜார்ஜ் அந்த சோலையை ஒரு முறை சுற்றி வந்தான். முன்பு சிங்கங்கள் நடமாடிய பகுதியில் விழுந்து கிடந்த ஏதோ ஒன்றை பொறுக்கிக் கொண்டு தன் மனைவியை நோக்கி திரும்பினான்.

“என்னது இது?”

“என் பழைய பணப்பை”

அவன் அவளிடம் காண்பித்தான். அதில் காய்ந்த புல்லின் வாசமும், சிங்கத்தின் நாற்றமும் கலந்திருந்தன. கன்னாபின்னாவென்று கடிபட்டிருந்த அதில் எச்சில் துளிகளும், இரத்தக் கரையும் இருந்தன.

அவன் விளையாட்டு அறையின் கதவை நன்றாக இழுத்து மூடி இறுக்கிப் பூட்டினான்.

நடுநிசி. அவன் விழித்துக் கொண்டிருந்தான். அவன் மனைவியும் தூங்கவில்லை என்று அவனுக்குத் தெரியும். இருட்டைக் கிழித்துக் கொண்டு வந்தது அவள் குரல்,”வென்டி தான் மாற்றியிருப்பாள் என்று நினைக்கிறாயா?”

“நிச்சயமாக”

“அவளா காட்டை சோலையாக மாற்றி, சிங்கங்களுக்கு பதில் ரீமாவை அங்கு வைத்திருப்பாள்?”

“ம்ம்”

“எதற்காக?”

“தெரியாது. ஆனால் நான் கண்டுபிடிக்கும் வரை அது பூட்டியே கிடக்கும்”

“எப்படி உன் பணப்பை அங்கு சென்றது?”

“எனக்கு எதுவும் தெரியாது. தெரிந்ததெல்லாம் ஒன்றுதான்… அந்த அறையை வாங்கியதன் மூலம் நம் பிள்ளைகளுக்குப் பெரிய தீங்கைச் செய்துவிட்டோம். நம் குழந்தைகளின் மனம் கெட்டுப்போகவில்லை என்றால் அந்த அறை இப்படி எல்லாம் இருக்குமா…?”

“கெட்டுப்போன மனதை ஆரோக்கியமான முறையில் சரி செய்வதற்காகத்தானே அந்த அறையே இருக்கிறது”

“அதன் மீது எனக்கு இப்போது சந்தேகம் வருகிறது” - விட்டத்தை வெறித்த படி சொன்னான்.

“நாம் அவர்களுக்கு என்ன குறை வைத்தோம்? அவர்களை எப்படியெல்லாம் தாங்கினோம்? கேட்டதெல்லாம் மறுக்காமல் கொடுத்தோமே! அதற்கு அவர்கள் செய்யும் மரியாதை இதுதானா? அடங்காமல் மறுத்துப் பேசுவதும், இரகசியமாகத் தப்புக் காரியங்கள் செய்வதும்…ச்சே!”

” ‘குழந்தைகள் மிதியடி மாதிரி…அவ்வவ்போது அவர்களை மிதிக்க வேண்டும்’ என்று யார் சொன்னது? நாம் கையைக் கூட ஓங்கியதில்லை. அவர்களுக்குக் கஷ்டம் என்றால் என்ன என்று கூட தெரியாதபடி ரொம்பவும் செல்லம் கொடுத்துவிட்டோம். அதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அவர்கள் இஷ்டத்திற்கு வருகிறார்கள், போகிறார்கள். நம்மைக் குழந்தைகள் போல நடத்துகிறார்கள். அவர்கள் கெட்டுவிட்டார்கள்; நாமும் கெட்டுவிட்டோம்”.

“சில மாதங்களுக்கு முன் அவர்கள் ராக்கெட்டில் நியூ யார்க் நகரத்திற்குச் செல்லக் கூடாது என்று நீ தடுத்தாய் இல்லையா… அப்போதிலிருந்தே அவர்கள் நடவடிக்கைகள் எல்லாம் கிறுக்குத்தனமாகவே இருக்கின்றன.”

“நான்தான் அப்போதே சொன்னேனே, அப்படித் தனியாக செல்ல அவர்களுக்கு வயது போதாது என்று?”

“உன் விளக்கமெல்லாம் யாருக்கு வேண்டும்? அவர்கள் அன்றிலிருந்தே நம்மை மதிப்பதில்லை. அதுதான் உண்மை.”

“நாளை காலையில் டேவிட் மெக் க்லீனைக் கூப்பிட்டு அந்த ஆப்பிரிக்காவைக் காட்டப் போகிறேன்”

“அங்குதான் இப்போது ஆப்பிரிக்கா இல்லையே. சோலையும், ரீமாவும் மட்டுமே இருக்கிறார்கள்”

“நாளைக்குள் மீண்டும் அங்கு ஆப்ரிக்கா வந்துவிடும் என்று எனக்கு தோன்றுகிறது”

அடுத்த நொடி அவர்கள் அலறல்களைக் கேட்டனர்.

இரண்டு அலறல் சத்தங்கள். கீழிருந்து இருவர் கூவிக் கொண்டிருந்தனர். அது அடங்கிய பின் சிங்கங்களின் கர்ஜனை.

“வென்டியும் பீட்டரும் அவர்கள் அறையில் இல்லை” என்றாள்.

அவன் மெத்தையில் படுத்துக்கொண்டிருந்தான். அவன் இதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது.”ஹூம்! அவர்கள் பூட்டை உடைத்துக் கொண்டு அறைக்குள் போய்விட்டார்கள்”

“அந்த அலறல்களை முன்பே எங்கோ கேட்டது மாதிரி இல்லை?”

“அப்படியா?”

“ஆமாம். பயமாக இருக்கிறது.”

அந்த கட்டில் எவ்வளவுதான் தாலாட்டினாலும் அந்த இருவரையும் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு தூங்க வைக்க முடியவில்லை. இரவுக் காற்றில் பூனைகளின் வாசனை மிதந்து வந்தது.

“அப்பா!” என்ற பீட்டரின் குரலுக்கு…

“என்ன?”

பீட்டர் தன காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தன் தந்தை, தாயைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.

“நீங்கள் விளையாட்டு அறையை மொத்தமாகப் பூட்ட மாட்டீர்கள் இல்லையா?”

“தெரியாது. அது சிலவிஷயங்களைப் பொருத்து உள்ளது”

“எதை?”

“உன்னையும், உன் தங்கையையும்தான். நீங்கள் இந்தக் கொடூரமான ஆப்பிரிக்கப் புல்வெளியைக் கொஞ்சம் மாற்றினீர்கள் என்றால்…ஒரு ஸ்வீடனோ, நார்வேயோ, இல்லை ஒரு சீனாவோ அங்கு அமைப்பீர்கள் என்றால் நான் மூடமாட்டேன்”.

“நாங்கள் விரும்பியபடி விளையாட எங்களுக்கு அனுமதி உள்ளது என்று நினைத்தேன்”

“ஆம். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு”

“அப்பிரிக்காவில் என்ன தப்பு அப்பா?”

“அப்போது நீ ஆப்பிரிக்காவை உருவாக்கியதை ஒப்புக் கொள்கிறாய்?”

“ஒரு பொழுதும் விளையாட்டு அறை பூட்டப்படக் கூடாது” - பீட்டர் தீர்க்கமாகச் சொன்னான்.

“சொல்லப்போனால், நாங்கள் முழு வீட்டையும் ஒரு மாதத்திற்குப் பூட்டிவிட்டு, யாரும் கேட்பாரற்ற வாழ்க்கை வாழலாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்”

“சீ! இதைக் கேட்கும் போதே கைகாலெல்லாம் நடுங்குகிறது. அது மாதிரி ஆகுமானால் தானியங்கி காலணிப்பான் இருக்காதா? நானே என் காலணிகளை மாடிக் கொள்ள வேண்டுமா? நானே என் பல்லைத் தேய்த்துக் கொண்டு, தலை முடியை சீவிக்கொண்டு, குளித்துக்கொண்டு… ஒரே போர்!”

“அந்த மாற்றமும் வேடிக்கையாகத்தான் இருக்கும்”

“இல்லவே இல்லை. அது ரொம்பவும் வெறுப்பாக இருக்கும். போன மாதம் நீங்கள் அந்த ஓவியந்தீட்டியை எடுத்துக் கொண்டு போனதே எனக்குப் பிடிக்கவில்லை.”

“ஏனென்றால் நீயாகவே வரையக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன்”

“நான் எதையும் கற்றுக் கொள்ள விரும்பவில்லை. எனக்கு எல்லாவற்றையும் பார்த்து, கேட்டு, நுகர்ந்து கொண்டிருந்தாலே போதும். வேறென்ன வேண்டும்?”

“அப்படியே செய். போய் அப்பிரிக்காவில் விளையாடு… போ!”

“நிஜமாகவே வீட்டைப் பூட்டத்தான் போகிறீர்களா?”

“அதைப் பற்றி யோசிக்கிறேன்.”

“நீங்கள் மேலும் அதைப் பற்றி சிந்திக்க வேண்டாம் என்று நான் சொல்லுவேன்”

“என் மகனிடமிருந்து எனக்கு எந்த மிரட்டலும் வருவதை நான் விரும்பவில்லை.”

“சரி ஆகட்டும்”. பீட்டர் விளையாட்டு அறையை நோக்கி நடந்தான்.

“நேரத்திற்கு வந்துவிட்டேனா?” என்று கேட்டுக்கொண்டே நுழைந்தார் டேவிட் மேக் க்லீன்.

“சாப்பிடுகிறீர்களா?” என்றான் ஜார்ஜ்.

“வேண்டாம். இப்போதுதான் சாப்பிட்டேன். என்ன பிரச்சனை?”

“டேவிட்! நீங்கள் ஒரு மனோதத்துவ நிபுணர்தானே?”

“அப்படித்தான் நினைக்கிறேன்”

“நல்லது. அப்போது எங்கள் விளையாட்டு அறையை ஒருமுறை பார்த்து விடுங்கள். சென்ற ஆண்டு நீங்கள் இங்கு வந்திருந்த போது பார்த்தீர்கள். அப்போது ஏதாவது விசித்திரமாக உங்கள் கண்ணில் பட்டதா?”

“அப்படி ஒன்றும் இல்லை. வழக்கமாகக் காணப்படும் வன்முறைதான். அங்கேயும், இங்கேயுமாக கொஞ்சம் பயங்கலந்த சந்தேகத்தன்மை. பெற்றோரிடம் எப்போதும் அடங்கியிருக்கும் குழந்தைகளிடம் இதெல்லாம் சகஜம் தான். வேறொன்றும் பெரிதாக இல்லை”

அவர்கள் கூடத்தில் நடந்து கொண்டிருந்தபோது, ஜார்ஜ் சொன்னான், “நான் விளையாட்டு அறையைப் பூட்டிவிட்டேன். ஆனால் நேற்றிரவு அவர்கள் மறுபடியும் அதை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார்கள். அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். அவர்கள் செய்திருக்கும் கோலத்தை நீங்கள் பார்க்கலாமே!”

விளையாட்டு அறையிலிருந்து பயங்கரமான ஒரு சத்தம் கேட்டது.

“கேட்டதா? வந்து பாருங்கள்” என்றான் ஜார்ஜ்.

குழந்தைகளிடம் ஒரு வார்த்தை பேசாமல் உள்ளே சென்றனர்.

அலறல் அடங்கிவிட்டது. சிங்கங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தன.

“குட்டிகளா!! ஒரு நிமிடம் வெளியே போய் விளையாடுங்கள். எதையும் மாற்ற வேண்டாம். சுவரெல்லாம் அப்படியே இருக்கட்டும்” என்றான் ஜார்ஜ்.

குழந்தைகள் சென்ற பின் அவர்கள் இருவரும் அங்கே இருந்தனர். தூரத்தில் சிங்கக் கூட்டம் வேட்டையாடிய ஏதோ ஒன்றை ரசித்து, ருசித்துத் தின்றுகொண்டிருந்தன.

“அது என்னவென்று தெரிந்தால் நன்றாகயிருக்கும். சில சமயங்களில் என்னால் பார்க்கமுடிகிறது. ஒரு சக்தி வாய்ந்த பைனாகுலரால் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்” பேசிக்கொண்டிருந்த ஜார்ஜை நிறுத்தும்படி இருந்தது டேவிடின் வறட்டுச் சிரிப்பு.

“கஷ்டம்தான். எத்தனை நாளாய் இப்படி இருக்கிறது?” - சுற்றி நாலாப்புறமும் பார்த்துக் கொண்டிருந்தார்.

“கிட்டத்தட்ட ஒரு மாதமாக”

“நிச்சயமாக இது சரியாகப் படவில்லை”

“எனக்கு உண்மை வேண்டும். உணர்வுகள் இல்லை.”

“அன்புள்ள ஜார்ஜ்! ஒரு மனோதத்துவ நிபுணர் அவன் வாழ்க்கையில் ஒரு பொழுதும் உண்மையை தேடுவதில்லை. அவன் எப்போதும் உணர்வுகளையும், எண்ணங்களையுமே பார்க்கிறான், கேட்கிறான். இது சரியில்லை. என் உள்ளுணர்வுகளை நம்புங்கள். இங்கு ஏதோ தப்பாகத் தெரிகிறது. ரொம்பத் தப்பாக. இந்த அறையை மொத்தமாக இடித்துவிட்டு, பிள்ளைகளை அடுத்த ஒரு வருடத்துக்கு தினமும் என்னிடம் சிகிச்சைக்குக் கூட்டி வாருங்கள்.”

“இதென்ன அவ்வளவு மோசமா?”

“அப்படித்தான் தெரிகிறது. இந்த சுவர்களின் பிம்பங்களை வைத்து குழந்தைகளின் மனதை நிதானமாக அறிவதே இப்படிப்பட்ட விளையாட்டு அறைகளின் உண்மையான நோக்கம். ஆனால் அழிவைத் தூண்டும் வக்கிரமான எண்ணங்களை துரத்துவதற்கு பதிலாக அவற்றை இந்த அறை வளர்ப்பது போல தெரிகிறது”.

“இது உங்களுக்கு முன்னமே தோன்றவில்லையா?”

“நீங்கள் உங்கள் குழந்தைகளை ரொம்பவும் கெடுத்துவிட்டீர்கள். மேலும், அவர்களை எதோ ஒரு வகையில் அடக்குகறீர்கள். எந்த வகையில்?”

“நான் அவர்களை நியூயார்க்குக்கு அனுப்பவில்லை.”

“வேறு?”

“வீட்டிலிருக்கும் சில இயந்திரங்களை அணைத்துவிட்டேன். மற்றும், சில மாதங்களுக்கு முன் அவர்கள் வீட்டுப் பாடம் செய்யவில்லை என்பதற்காக இந்த அறையை சில நாட்களுக்குப் பூட்டி வைத்தேன். கொஞ்சமாவது பயம் காட்ட வேண்டாமா?”

“ஹா…ஹா..”

“இதற்கு என்ன அர்த்தம்?”

“நிறைய இருக்கிறது. முன்பு சாண்டா க்ளாஸ் இருந்த இடத்தில் இப்போது ச்க்ரூஜ் இருக்கிறது. குழந்தைகளுக்கு எப்போதும் சாண்டா க்ளாஸ் தான் பிடிக்கும் என்று தெரியுமல்லவா? உங்கள் அன்புக்கு பதிலாக நீங்கள் இந்த அறையையும், வீட்டையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டீர்கள். இப்போது இந்த அறைதான் அவர்களுக்குத் தாய், தந்தை. உங்களை விட, அவர்களுக்கு இதுதான் இப்போது மிக முக்கியமாகி விட்டது. நீங்களோ இதை திடீரென்று பூட்டிவிட வேண்டும் என்கிறீர்கள். அதை அவர்கள் வெறுப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அந்த வெறுப்பு வான் வழியாக வருகிறது. இந்தச் சூரியனைப் பாருங்கள்! உங்களுக்கே புரியும். ஜார்ஜ்! நீங்கள் மாற வேண்டும். மற்றவர்களைப் போல நீங்களும் இந்த வீட்டைக் கட்டி இயந்திர சுகங்களுக்கு நடுவில் உங்களைப் புதைத்துக் கொண்டுவிட்டீர்கள். நாளைக்கே உங்கள் சமையல் அறையில் எதாவது பிழை என்றால் நீங்கள் பட்டினிதான். உங்களுக்கு ஒரு முட்டையைக் கூட உடைக்கத் தெரியாது. போகட்டும்! எல்லாவற்றையும் அணைத்துவிடுங்கள். மூடிவிடுங்கள். புதிதாய்த் தொடங்குங்கள். நேரமாகும். ஆனால் ஒரு வருடத்தில் நாம் பிள்ளைகளைத் திருத்தி விடலாம் பாருங்கள்.”

“ஆனால் திடீரென்று இப்படி ஒரேயடியாக இதைப் பூட்டினால் குழந்தைகளுக்கு அதிர்ச்சியாக இருக்காதா?”

“அவர்கள் மேலும் இதற்குள் இறங்கக் கூடாது என்று நான் சொல்வேன். அவ்வளவு தான்”

சிங்கங்கள் விருந்தை முடித்துவிட்டு காட்டின் ஒரு ஓரத்தில் நின்றபடி இவர்களைப் பார்த்தன.

“எனக்கு என்னமோ பண்ணுகிறது. இங்கிருந்து கிளம்பலாம். நான் எப்போதும் இது போன்ற அறைகளைக் கண்டு கொண்டதில்லை. இப்போது ஒரு மாதிரி பதட்டமாக இருக்கிறது. படபடவென வருகிறது.” என்றார் மெக்லீன்.

“சிங்கங்கள் உண்மையாகத் தெரிகின்றன இல்லையா? ஒருவேளை அவை உண்மையாகவே…?” என்று ஆரம்பித்தான் ஜார்ஜ்.

“என்ன?”

“உண்மையாகவே வந்து விடுமோ?”

“எனக்குத் தெரிந்து அப்படி நடக்க முடியாது”

“இயந்திரத்தில் எதாவது பிழை? இல்லை யாராவது எதையாவது நோண்டிவைத்து…?”

“அதெல்லாம் இல்லை”

கதவருகே சென்றனர்.

“இந்த அறை தான் அணைக்கப்படுவதை விரும்பாது என்று நினைக்கிறேன்” என்றான் ஜார்ஜ்.

“எதுவுமே தான் இறப்பதை விரும்பாது… அது ஒரு அறையாக இருந்தாலும்”

“ஒருவேளை நான் இதை அணைக்கப் போவதைக் கண்டு இந்த அறை என்னை வெறுத்து விடுமோ?”

“இங்கு எல்லோருக்கும் பைத்தியம் தான் பிடித்திருக்கிறது. வேண்டும் என்றால் அதையே கேளுங்களேன்” என்றபடி ஒரு இரத்தம் படிந்த சால்வையை எடுத்தார் மெக்லீன்.”இது உங்களுடையதா?”

“இல்லை. லிடியாவுடையது” - ஜார்ஜின் முகம் இறுகியிருந்தது.

அவர்கள் மின்சாரப் பெட்டி அருகே சென்று அந்த அறையை அணைத்தனர்.

குழந்தைகள் இருவரும் ஏறக்குறைய பைத்தியமாகி விட்டனர். அவர்கள் அழுதனர், அரற்றினார், கையில் கிடைத்தவற்றை தூக்கி எறிந்தனர், வீட்டில் உள்ள பொருட்கள் மீது ஏறிக் குதித்து அழிச்சாட்டியம் செய்தனர்.

“நீங்கள் விளையாட்டு அறையைப் பூட்டக் கூடாது”

அவர்கள் சோபாவில் குப்புறப் படுத்துக் கொண்டு அழுதனர்.

“ஜார்ஜ்! இப்படி திடீரென்று அணைத்தால் எப்படி? கொஞ்ச நேரத்திற்கு அதைத் திறந்து விடுங்களேன்” என்றாள் லிடியா.

“முடியாது”

“நீங்கள் இவ்வளவு பிடிவாதமாக இருக்கக்கூடாது”

“லிடியா, அது அணைக்கப்பட்டுவிட்டது. இனி எப்போதும் அணைந்து தான் இருக்கும். இந்த முழு வீடே இப்போது சாகப் போகிறது. இங்கே நடக்கும் கூத்தைப் பார்த்தால் எனக்குப் பற்றிக்கொண்டு வருகிறது. இந்த இயந்திர, மின்னணு தொப்புள் கோடியை நம்பி நாம் வாழ்ந்ததெல்லாம் போதும். அறுத்து எரிந்து விட்டு சுத்தமான காற்றை சுவாசிப்போம் வா!”

அவன் வீட்டைச் சுற்றி நடந்து ஒவ்வொரு சாதனமாய் அணைக்கத் தொடங்கினான். பேசும் கடிகாரம், அடுப்பு, உஷ்ணக் கருவி, காலணிப்பான், காலணி துடைப்பான், துடைப்பம், குளிப்பாட்டி, சோர்வு போக்கி, என்று கைக்கு எட்டியது எல்லாவற்றையும் அணைத்தான்.

இயந்திரங்களின் பிணக்குவியலில் வீடு நிறைந்திருந்தது போலிருந்தது. வீடே இயந்திர சுடுகாடாய் ஆகிவிட்டது. எங்கும் அமைதி. ஓடும் கருவிகளின் மின்சார ரீங்காரம் நின்றுபோய் ஒரு மயான அமைதி நிலவியது

பீட்டர் மாடியில் உட்கார்ந்து கொண்டு வீட்டோடு பேசினான், “அவர்களைத் தடுங்கள். அப்பா உங்களைக் கொல்லுவதை அனுமதிக்காதீர்கள்”. பின் தன் தந்தையை நோக்கி, “நான் உங்களை வெறுக்கிறேன்” என்றான்.

“இப்படியெல்லாம் என்னை அவமதிப்பதால் ஒன்றும் ஆகப் போவதில்லை”

“நீங்கள் இறந்துவிட்டால் தேவலாம்!”

“நாம் எப்போதோ இறந்துவிட்டோம். இப்போதுதான் உண்மையான வாழ்க்கை வாழப் போகிறோம். இங்கே இயந்திரங்களுக்கு இடையே பொம்மை போல இருப்பதற்கு பதில், மனிதர்களாக வாழ்வோம்.”

வென்டி அழுது கொண்டிருந்தாள். பீட்டரும் அவளோடு சேர்ந்து அழுதான். “ஒரு நிமிடம். ஒரே ஒரு நிமிடம் மட்டும் அந்த விளையாட்டு அறையைத் திறந்துவிடுங்கள்” - கெஞ்சினார்கள்.

“ஜார்ஜ்! பாவம் அவர்கள். ஒரு நிமிடத்தில் ஒன்றும் ஆகாது” என்று லிடியாவும் சொன்னாள்.

“சரி சரி. அவர்கள் பேசாமல் இருப்பார்கள் என்றால் திறந்துவிடுகிறேன். ஒரு நிமிடம் மட்டும் தான். அதற்கு மேல் கிடையாது.”

“அப்பா! அப்பா!” என்று துள்ளினர் அந்த அழுமூஞ்சிக் குழந்தைகள்.

“அதற்குப் பிறகு நாம் புறப்படுகிறோம். டேவிட் மெக்லீன் இன்னும் அரை மணியில் வந்து நம்மை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வார். நான் போய் உடை மாற்றிக்கொள்கிறேன். நீ அந்த அறையின் கதவைத் திறந்து விடு. லிடியா! ஞாபகம் இருக்கட்டும்… ஒரு நிமிடம் மட்டும்தான்.”

அம்மாவும், பிள்ளைகளும் எதையோ வம்படித்துக் கொண்டே கிளம்பினார்கள். ஜார்ஜ் வாயுக் குழாய் வழியாக மாடிக்கு வந்து உடை மாற்றிக் கொண்டான். ஒரு நிமிடத்திற்கு பின் லிடியாவும் அங்கு வந்தாள்.

“நாம் இங்கிருந்து கிளம்புவதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.”

“அவர்களைத் தனியாகவா விட்டுவிட்டு வந்தாய்?”

“நானும் உடை மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவும் அந்த பாழாய்ப் போன ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?”

“சரி. நாம் இன்னும் ஐந்து நிமிடங்களில் ஐயோவாவிற்குக் கிளம்புகிறோம். கடவுளே! நாம் ஏன் இந்த வீட்டிற்கு வந்தோம்? எது நம்மை இந்தக் கண்றாவியை வாங்கத் தூண்டியது?”

“பணம், கர்வம், முட்டாள்தனம்.”

“பிள்ளைகள் அந்த மிருகங்களோடு மூழ்கிப் போவதற்குள் நாம் கீழே போகலாம் வா.”

அப்போதுதான் அவர்களை குழந்தைகள் அழைத்தார்கள், “அம்மா! அப்பா! சீக்கிரம்… சீக்கிரம்!”

அவர்கள் வாயுக் குழாய் மூலம் கீழே இறங்கி, கூடத்தில் ஓடினார்கள். குழந்தைகள் தென்படவேயில்லை. “வென்டி! பீட்டர்!”

விளையாட்டு அறைக்குள் ஓடினார்கள். புல்வெளி காலியாக இருந்தது. சிங்கங்கள் சாவகாசமாக நின்று அவர்களைப் பார்த்தன. “பீட்டர்? வென்டி?”

கதவு சாத்தப்பட்டது.

“வென்டி! பீட்டர்!”

ஜார்ஜும், அவன் மனைவியும் திரும்பி கதவருகே ஓடினர்.

கதவின் தாழ்ப்பாளைத் திருகியவாறே ஜார்ஜ் கத்தினான், “கதவைத் திறவுங்கள்! என்ன… அவர்கள் நம்மை வெளியிலிருந்து பூட்டிவிட்டார்களா? பீட்டர்! கதவைத் திற!” அவன் கதவை அடிக்கத் துவங்கினான்.

வெளியிலிருந்து பீட்டரின் குரல் கேட்டது,”அவர்களை இந்த அறையையும், வீட்டையும் அணைக்கச் செய்யாதீர்கள்.”

ஜார்ஜும், லிடியாவும் கதவைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். “குழந்தைகளே! முட்டாள்தனமாக எதையும் செய்யாதீர்கள். நேரமாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நிமிடங்களில் மெக்லீன் அவர்கள் இங்கு வந்துவிடுவார். அப்புறம்…”

அந்த சமயத்தில் சத்தங்கள் கேட்கத் தொடங்கின.

அவர்களைச் சுற்றி மூன்று திசைகளிலும், மஞ்சள் புல்லையும், காய்ந்த வைக்கோலையும், தங்களின் பெரிய பாதங்களால் மிதித்துக் கொண்டு, கம்பீரமான குரலில் கர்ஜித்தப்படியே சிங்கங்கள் வந்தன.

சிங்கங்கள்!

ஜார்ஜ் அவன் மனைவியைப் பார்த்தான். பின் இருவரும் சிங்கங்களைப் பார்த்தனர். இறுக்கிய வாலோடு சிங்கங்கள் அவர்களை நோக்கி மெல்லமாக அடியெடுத்து வைத்தன.

திரு. ஜார்ஜ் ஹெட்லீயும், அவன் மனைவியும் அலறினார்கள்.

அவர்கள் அதற்கு முன்பு கேட்ட பிற அலறல்களுக்கான காரணம் புரிந்தது.

டேவிட் மெக்லீன் விளையாட்டு அறையின் வாயிலில் வந்த பின், “நான் வந்துவிட்டேன். ஹலோ! இருக்கிறீர்களா?” என்றார். அந்த திறந்த வெளியின் மத்தியில் உட்கார்ந்து மதிய உணவை உண்டுகொண்டிருக்கும் இரு குழந்தைகளையும் முறைத்துப் பார்த்தார். அவர்களுக்குப் பின் நீர்க்குட்டையும், மஞ்சள் புல்வெளியும் காணப்பட்டன. மேலே சுடும் சூரியன்! அவருக்கு வியர்க்கத் தொடங்கியது. “எங்கே உங்கள் அப்பா, அம்மா?”

சிறுவர்கள் புன்னகையுடன் சொன்னார்கள், “இங்கே வந்துவிடுவார்கள்”.

“நல்லது. நாம் புறப்பட வேண்டும்”

தூரத்தில் சிங்கங்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்வது தெரிந்தது. பிறகு அவை அமைதியாக நிழலுக்கு கீழ் சென்று சாப்பிடத் துவங்கின.

மெக்லீன் கண்களை இறுக்கிக் கொண்டு சிங்கங்களையே பார்த்தார்.

அவர் முகத்தில் ஒரு நிழலாடியது. பல நிழல்கள் ஆடின. ஆகாயத்தில் பருந்துகள் பறந்து வந்தன.

வென்டி அந்த அமைதியைக் கலைத்துக் கொண்டு கேட்டாள், “தேநீர் அருந்துகிறீர்களா?”

சென்ஷி

unread,
May 31, 2010, 1:38:51 AM5/31/10
to panb...@googlegroups.com

(இது சொல்வனம் வெளியிடும் ‘ரே ப்ராட்பரி’யின் இரண்டாவது மொழிபெயர்ப்புக்கதை. முதல் கதையான ‘ஆப்பிரிக்கப் புல்வெளி’யில் ரே ப்ராட்பரியைப் பற்றிய குறிப்பைப் படிக்கலாம்.)

“ரெடி.”

“ரெடி.”

”இப்பவா?”

“சீக்கிரம்.”

“சைன்டிஸ்ட்டுகளுக்கு நிஜம்மா தெரியுமா? இன்னிக்கு நடக்கப் போறதா, நடக்குமா?”

”பாரு, பாரு; நீயே பாரேன், தெரியும்!”

குழந்தைகள் ஒருவரோடொருவர் நெருக்கினார்கள், ஏகப்பட்ட ரோஜாக்களும், புல்பூண்டுகளும் கலந்தடித்தாற்போல, மறைந்திருக்கும் சூரியனைப் பார்க்க எட்டி எட்டி நோக்கியபடி.

கன மழையாய்க் கொட்டியது.

ஏழு வருடமாக மழை பெய்கிறது; ஆயிரமாயிரம் நாட்களையும் கூட்டிக் குவித்தால் எல்லாம் மழை, ஒரே நீர்த்தாளம், பீறிக் கொண்டு ஓடும் நீரொலி, அவ்வப்போது இனிமையாக மணிமணியாகச் சிதறும், சில நாள் புயலாக மழை பெய்து பெரும் சுவர்களைப் போல எழுந்து அலைகள் அந்தத் தீவுகளை அறையும். ஆயிரம் காடுகள் மழையில் அழிக்கப்பட்டு, ஆயிரம் காடுகள் மறுபடி எழுந்து மறுபடி அழிந்திருக்கின்றன. இப்படித்தான் வாழ்க்கையே காலம் காலமாக ஓடியிருக்கிறது இந்த வெள்ளிக் கிரகத்தில்; இந்த மழை உலகில் நாகரீகத்தைத் துவக்க ராக்கெட்களில் வந்திறங்கிய் மனிதர்களின் - ஆண்கள், பெண்களின் குழந்தைகளுடைய பள்ளிக்கூட அறை இது. அவர்களெல்லாம் இங்குதான் வாழப் போகிறார்கள்.

“நிக்கிறது. நிக்கப் போகிறது!”

“ஆமா,ஆமா!”

மார்காட் அவர்களிடம் ஒட்டாமல் நின்றாள், மழை, மழை மேலும் மழை என்றிருக்கிறதைத் தவிர வேறு ஒரு காலம் இருந்ததே நினைவில் இல்லாத அந்தக் குழந்தைகளிடம் இருந்து ஒதுங்கி நின்றாள். அவர்கள் எல்லாரும் ஒன்பது வயதுக் குழந்தைகள். ஏழு வருடத்துக்கு முன் சூரியன் வெளி வந்து ஒரு மணி நேரம் தன் முகத்தை அதிர்ந்து போய் நின்ற உலகத்துக்குக் காட்டி மறைந்திருந்தால், அப்படி ஒரு சம்பவம் அவர்களுக்கு நினைவிருக்காதுதான். சில நேரம், இரவில், அவர்கள் விதிர்த்துப் புரள்வதை அவள் கேட்பாள், அவர்களுக்கு அந்த நினைவு வருகிறது போலிருக்கும். தங்கத்தையோ, மஞ்சள் நிறக் க்ரேயானையோ, உலகத்தையே விலைக்கு வாங்கி விடக் கூடிய அளவு பெரிய நாணயம் ஒன்றையோ பற்றி அவர்கள் கனவு காண்கிறார்கள் என்று அவளுக்குத் தெரியும். ஒரு கதகதப்பை, முகத்திலோ, உடலிலோ, கைகளிலோ, கால்களிலோ, நடுங்குகிற உள்ளங்கையிலோ குப்பென்று ரத்தம் பாய்வது போன்ற ஒரு உணர்வைத் தாம் நினைவு கூர்வதாக அவர்கள் கருதினார்கள் என்று அவளுக்குத் தெரியும். ஆனால், அவர்கள் விழித்ததும் கேட்பதோ இடைவிடாத அந்த டமாரச் சத்தம், கூரையிலிருந்து இடைவிடாமல் மணிமாலைகள் போலக் கொட்டும் தண்ணீரின் சத்தம், நடைகளில், தோட்டங்களில், காட்டில் எங்கும் கேட்கும் சத்தம், அவர்களுடைய கனவுகள் அழிந்து போகும்.

நேற்று முழுதும் வகுப்பில் அவர்கள் படித்தார்கள், எல்லாம் சூரியனைப் பற்றியே. எப்படி ஒரு எலுமிச்சையைப் போல அது இருக்கும், எவ்வளவு சூடாக இருக்கும். சிறு சிறு கதைகளையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் அதைப் பற்றி அவர்கள் எழுதினார்கள்:

என் நினைப்பில் சூரியன் என்னவாம்,
ஒரு மணியே பூக்கும் பூ.

இது மார்காட் எழுதிய சிறு கவிதை. சன்னமான ஒரு குரலில் அவள் வகுப்புக்கு முன் படித்தாள், வெளியே மழையோ கொட்டிக் கொண்டிருந்தது.

”ஏ.., இதை நீ ஒண்ணும் எழுதல்லை,” ஒரு பையன் எதிர்த்தான்.

”நாந்தான் எழுதினேன்,” மார்காட் சாதித்தாள். “நாந்தான்.”

”வில்லியம்!” ஆசிரியை அடக்கினாள்.

ஆனால் அது நேற்று. இன்றோ மழை ஓயத் துவங்கியது, அந்த்த் தடிமனான பெரும் கண்ணாடி ஜன்னல்களருகே குழந்தைகள் நசுக்கி அடித்து மொய்த்தார்கள்.

”டீச்சர் எங்கே?”

“வந்துடுவாங்க.”

“சீக்கிரம் வரணுமே. நாம இதைப் பாக்காமப் போயிடப் போறோம்.”

அவர்கள் தங்களுக்குள்ளேயே சுற்றினார்கள், ஜுரவேகத்தில் சுழலும் கம்பிகள் கொண்ட சக்கரம் போல.

மார்காட் தனியே நின்றாள். மெலிந்த பெண்ணாக இருந்தாள். பல வருடமாக மழையில் தொலைந்து போனவள் போல, அந்த மழை அவளுடைய கண்ணின் நீலநிறத்தை, உதடுகளிலிருந்து சிவப்பு நிறத்தை, தலை முடியிலிருந்து மஞ்சள் நிறத்தை எல்லாம் கரைத்துப் போய்விட்ட மாதிரி நீர்த்த நிறங்களோடு நின்றாள். பழைய ஃபோட்டோ ஆல்பத்தில் வண்ணங்களெல்லாம் போய் வெளுத்துப் போன படம் போல இருந்தாள். பேசினால் குரல் ஒரு ஆவியின் குரல் போல ஒலித்தது. இப்போது அவள், ஒதுங்கி, அந்தப் பெரிய கண்ணாடிச் சுவருக்கு அப்பால் இருந்த இரைச்சலான, ஈரமான உலகைப் பார்த்தபடி நின்றாள்.

“ஏய், நீ என்னத்தைப் பாக்குற?” வில்லியம் கேட்டான்.

மார்காட் ஏதும் சொல்லவில்லை.

“கேட்டேனில்ல? கேட்டாப் பதில் சொல்றியா இல்ல.” அவளை ஒரு தள்ளு தள்ளினான். அவளோ சிறிதும் நகரவில்லை; இன்னும் சொன்னால், அவன் தன்னை நகர்த்த அவள் அனுமதித்தாள், வேறேதும் செய்யவில்லை.

மற்றவர்கள் அவளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகினார்கள், அவளைப் பார்க்க மறுத்தார்கள். அவர்கள் போனதை அவள் அறிந்திருந்தாள். அந்தத் தரையடி பாதாள நகரில், ஒலி எதிரொலிக்கும் சுரங்கப் பாதைகளில் அவள் அவர்களுடன் எந்த விளையாட்டுகளையும் விளையாட மறுத்து வந்தாள், அதனால் இப்படி விலகினார்கள். அவளைத் தொட்டு விட்டு ஓடிப் போய் தங்களைப் பிடிக்கச் சொன்னால், அவள் அவர்களைத் துரத்த மறுத்தாள். வகுப்பில் எல்லாரும் சந்தோஷத்தைப் பறறி, வாழ்க்கையில் விளையாட்டுகள் பற்றிப் பாட்டுகள் பாடினால் அவளுடைய உதடுகள் துளிதான் அசைந்தன. சூரியனைப் பற்றியும், கோடையைப் பற்றியும் பாடும்போதுதான் அவள் உதடுகள் திறந்தன, அப்போதும் அவள் நனைந்து ஈரமான ஜன்னல் வழியே வெளியை வெறித்தாள்.

அவள் செய்ததில், எல்லாவற்றையும் விட மோசமான குற்றம், ஐந்து வருடங்கள் முன்னால்தான் அவள் பூமியை விட்டு இங்கு வந்திருக்கிறாள்- அவள் சூரியனை நன்கு நினைவு வைத்திருந்தாளா, அவளுக்கு அப்போது நான்கு வயதாகி இருந்தது, அவள் இருந்த ஒஹையோவில் சூரியன் எப்படி இருந்தது, வானம் எப்படி இருந்தது, எல்லாமே. அவர்களோ, அவர்களோ வெள்ளி கிரஹத்திலேயே வாழ்நாள் பூரா இருந்திருக்கிறார்கள், சூரியன் கடைசியாக வெளியே வந்தபோது அவர்களுக்கு இரண்டு வயதுதான் ஆகியிருந்திருக்கும், அந்த நிறம், சூடு, அப்புறம் அதெல்லாம் வெளியில் எப்படி இருந்தது என்பதெல்லாம் அவர்களுக்கு மறந்தே போயிருந்தது. ஆனால் மார்காட்டுக்கு நினைவிருந்தது.

“அது ஒரு பென்னி காசு போல இருக்கும்,” அவள் ஒரு முறை சொன்னாள், கண்களை மூடிக் கொண்டபடி.

“இல்லவே இல்லை!” மற்ற குழந்தைகள் கத்தினார்கள்.

“நெருப்பு மாதிரி எரியும்,” அவள் சொன்னாள், “அடுப்பில் இருக்கே அதுபோல.”

”ஒரே பொய். புளுகுணிப் பொண்ணு. உனக்கு ஒண்ணும் ஞாபகமில்லே.” அவர்கள் கத்தினார்கள்.

ஆனால் அவளுக்கு ஞாபகமிருந்தது, அவள் அவர்களிடமிருந்து ஒதுங்கி அமைதியாக நின்றாள், ஜன்னலில் கோடோடும் நீரைப் பார்த்தபடி. ஒரு தடவை, ஒரு மாதம் முன்னால், பள்ளியில் ஷவரில் குளிக்க அவள் மறுத்தாள், காதுகளைக் கைகளால் அடைத்துக் கொண்டு, தலையைக் கைகளால் இறுக்கிப் பிடித்துக் கொண்டு. அதற்கப்புறம், கொஞ்சம், கொஞ்சமாக, அவளுக்குப் புரியத் துவங்கியது, தான் வித்தியாசமானவள் என்று, அவர்களுக்கு அவளுடைய வித்தியாசம் தெரிந்திருந்தது, விலகினார்கள்.

வருகிற வருடம் அவள் அப்பாவும், அம்மாவும் அவளை மறுபடி பூமிக்கு அழைத்துப் போகப் போகிறார்கள் என்று ஒரு பேச்சு இருந்தது; அவளை பூமிக்கு அனுப்ப  பல ஆயிரம் டாலர்கள் அவள் குடும்பம் செலவழிக்க வேண்டும் ஆனாலும், அது எப்படியாவது நடக்க வேண்டும் என்றிருந்தது. மற்ற குழந்தைகள் அவளை வெறுத்தது இதனால்தான், சில பெரிய, சில சிறிய காரணங்கள், எல்லாவற்றுக்குமாகச் சேர்த்துத்தான். அவளுடைய பனி போல வெளுத்த முகத்தை, எதற்கோ காத்துக் கொண்டிருக்கும் மௌனத்தை, அவளுடைய ஒல்லி உருவத்தை, அவள் எதிர்காலத்தை. எல்லாவற்றையும்தான் வெறுத்தனர்.

“போய்த் தொலையேன்!” அந்தப் பையன் இன்னொரு தள்ளு தள்ளினான். “எதுக்கு இங்க காத்துகிட்டு இருக்கெ?”

அப்போது, முதல் தடவையாக, அவள் திரும்பி அவனைப் பார்த்தாள். எதற்கு அவள் காத்துக் கொண்டிருந்தாள் என்பது அவள் கண்களிலேயே தெரிந்தது.

“அப்படின்னா, இங்கே காத்துக்கிட்டு நிக்காதே!” அந்தப் பையன் கத்தினான், வெறியோடு. “நீ இங்க ஒண்ணையும் பாக்க முடியாது.”

அவள் உதடுகள் அசைந்தன.

”ஒண்ணுமே இல்லெ!” அவன் கத்தினான். “எல்லாம் வெறும் ஜோக், அப்பிடித்தானே?” மற்ற குழந்தைகளைப் பார்க்கத் திரும்பினான். “இன்னிக்கு ஒண்ணும் நடக்கப் போறதில்ல. அப்பிடித்தானே?”

அவனைப் பார்த்த குழந்தைகள் கண்களைக் கொட்டினார்கள். ஏதோ புரிந்து கொண்டு, தலையை ஆட்டிச் சிரித்தார்கள். “ஆமா! ஒண்ணும் இல்லெ, ஒண்ணுமே இல்லெ.”

“ஓ, ஆனா,” மார்காட் ரகசியம் போலப் பேசினாள், கண்களில் அகதித்தனம். “ஆனா, இன்னிக்கிதான் அந்த நாள், விஞ்ஞானிகளெல்லாம் கணக்குப் போட்டுச் சொல்லியிருக்காங்க; அவங்க நிச்சயமாச்சொன்னாங்க, அவங்களுக்குத் தெரியும், சூரியன்….”

“எல்லாம் வெறும் ஜோக்!” அந்தப் பையன் சொன்னான், அவளை முரட்டுத்தனமாகப் பிடித்தான். “ஏய், எல்லாரும் வாங்க, இவளை அந்த பெரிய அலமாரில தள்ளிப் பூட்டிடலாம், சீக்கிரமா, டீச்சர் வரதுக்குள்ள!”

“விடுங்க!” மார்காட் கத்தினாள், பின்னால் ஒதுங்கினாள்.

அவர்கள் கூட்டமாக அவளைச் சுற்றினார்கள், பிடித்து இழுத்தார்கள், கட்டித் தூக்கிக் கொண்டு போனார்கள், அவள் முரண்டினாள், கெஞ்சினாள், கேவி அழுதாள், சுரங்கப்பாதைக்குள் இழுத்துப் போனார்கள், ஒரு அறை, ஒரு பெரிய அலமாரி, அவளை உள்ளே தள்ளி, பெரிய கதவுகளை அறைந்து மூடிப் பூட்டினார்கள். அவள் உள்ளே கதவை மோதி இடித்துத் தள்ளியதால் அக்கதவுகள் அதிர்ந்தன, அதைப் பார்த்து நின்றார்கள். அவளுடைய அழுகை ஒலி மங்கலாகக் கேட்டது. பின், சிரிப்போடு, திரும்பி, சுரங்கப் பாதையை விட்டு வெளியே போய், டீச்சர் வருமுன் அறைக்குத் திரும்பினார்கள்.

“தயாரா, எல்லாரும்?” ஆசிரியை கேட்டார்.

“ஆமா!” எல்லாரும் சொன்னார்கள்.

”எல்லாரும் இருக்கீங்களா?” அவர் கேட்டார்.

“ஆமாம!”

மழை இன்னும் கொஞ்சம் குறைந்தது. அவர்களெல்லாம் கதவுப்பக்கம் நெருக்கித் தள்ளி நின்றார்கள். மழை நின்றது.

பெரும் பனிச்சரிவு அல்லது, ஒரு சுழற்புயல், ஒரு சூறாவளி, ஒரு எரிமலை வெடிப்பு, இவற்றைப் பற்றிய ஒரு படம் ஓடிக் கொண்டிருக்கையில் திடீரென்று ஏதோ கோளாறில் ஒலி எந்திரங்கள் சிக்கி, எல்லா ஓசையும் தேய்ந்து கடைசியில் சுத்தமாக நின்று போனது போல இருந்தது. எல்லா இடிஒலியும், எதிரொலியும், மறுபடி பேரொலிகளும், அப்புறம் அந்த ப்ரொஜெக்டரில் இருந்து படத்தைப் பிய்த்து எடுத்து, பதிலாக ஒரு அமைதியான வெப்பப் பிரதேச நதியின் சலனமற்ற ஓட்டத்தைக் காட்டியது போல இருந்தது. உலகமே திடீரென்று நின்று போனது போல. அந்த அமைதி பிரும்மாண்டமாக, நம்ப முடியாததாக, காதுகளில் ஏதோ போட்டு அடைத்தது போல, கேட்கும் சக்தியே அற்றுப் போனது போல இருந்தது. குழந்தைகள் தம் காதுகளைக் கைகளால் மூடிக் கொண்டார்கள். தனித்தனியே நின்றார்கள். கதவுகள் வழுக்கி விலகின. பேரமைதியுடன், உலகம், மௌனத்தின் வாசனையோடு அவர்களை நோக்கி வந்தது.

சூரியன் வெளியே வந்தான்.

பற்றி எரிகிற தாமிர நிறம். பெரீய்ய்தாக இருந்தது. அதைச் சுற்றி இருந்த வானமோ தஹிக்கும் நீல நிறம். காடு சூரிய ஒளியில் மூழ்கிச் சுட்டது. மந்திரம் போட்டதால் மயங்கியது போல இருந்த சிறுவர்கள் திடீரென விடுபட்டு, பெரும் கூச்சலோடு, அந்தக் கோடைவெளியினுள் பாய்ந்தோடினர்.

“இங்க பாருங்க, ரொம்ப தூரம் ஓடாதீங்க!” ஆசிரியை அவர்களைக் கூப்பிட்டாள். “மொத்தம் ஒரு மணி நேரம்தான் இதெல்லாம். தெரியுதில்ல? தூரமாப் போனீங்க…நல்லா மாட்டிப்பீங்க!”

அவர்களோ ஓடினார்கள், ஓடினார்கள், முகத்தை வானோக்கி வைத்துக் கொண்டு, தங்கள் கன்னங்களில் சூடான சூரியன் ஒரு கதகதப்பான இரும்பைப் போலச் சுட ஓடினார்கள். போட்டிருந்த மேல் கோட்டுகளைக் கழற்றினார்கள், சூரியன் தங்கள் கைகளை எரிக்கக் காட்டி ஓடினார்கள்.

“இது வீட்டுல இருக்கற சூரிய விளக்கை விடப் பிரமாதமா இருக்கில்ல?”

”எவ்வளவோ உசத்தி!”

வெள்ளிக் கிரஹத்தைச் சூழ்ந்து மூடிய காட்டினுள் நுழைந்து ஓடுவதை நிறுத்தினார்கள். வளர்ந்து கொண்டே இருந்த காடு, வளர்வதைச் சற்றும் நிறுத்தாத காடு, பார்த்துக் கொண்டே இருக்கையிலேயே மளமளவென்று பெரும் களேபரமாக வளர்ந்த காடு. பெரிய ஆக்டபஸ்களைப் போல சதைப் பற்றோடு கைகளை நீட்டி வளர்ந்த பூண்டுகளாலான காடு. கரங்களை ஆட்டி, இந்த சிறு நேர வசந்தத்தில் சரேலெனப் பூத்து மண்டிய காடு. ரப்பர் போல, சாம்பல் போல அதன் நிறம். எத்தனையோ வருடங்களாகச் சூரிய ஒளியையே பார்த்திராத காடாயிற்றே. கற்களின் நிறத்தில் இருந்த காடு, வெள்ளைப் பாலாடைக் கட்டி போலும், மசியைப் போலுமெல்லாம் இருந்த காடு.

குழந்தைகள் அந்தக் காட்டு மெத்தையில் அங்குமிங்கும் புரண்டு அலைந்தார்கள். அது தம் கீழ் கீச்சிட்டும், பெருமூச்சு விட்டும் அசைந்து உயிர்ப்புடன், அசாதாரணத் தெம்புடன் அளைந்ததைக் கேட்டார்கள். மரங்களின் நடுவே ஓடி, வழுக்கி எல்லாம் விழுந்தார்கள். ஒருவரை ஒருவர் தள்ளினார்கள், கண்ணாமூச்சி விளையாடினார்கள், ஓடிப் பிடித்து விளையாடினார்கள். ஆனால் சூரியனை உற்று உற்றுப் பார்த்து நின்றதுதான் அனேக நேரம், கண்களில் நீர் பெருகும் வரை விடாமல் சூரியனை உற்றுப் பார்த்தார்கள். அந்த மஞ்சள் நிறத்தை நோக்கிக் கரங்களை நீட்டினார்கள். சூழ்ந்த அதிஅற்புத நீலத்தைத் தொட்டு விட விழைந்தார்கள். புத்தம் புதுக் காற்றை வேகவேகமாகப் பசியோடு உள்ளே இழுத்து மூச்சு விட்டார்கள். அசைவேதுமில்லாதும், ஒலியேதுமில்லாதுமிருக்கும் ஒரு கடலில் அவர்களை மிதக்க விட்ட பெரும் மௌனத்தை அவர்கள் கேட்டார்கள், கேட்டார்கள், உன்னித்துக் கேட்டார்கள். திடீரென்று, குகைகளில் இருந்து தப்பித்து ஓடும் விலங்குகளைப் போல, கட்டற்று, கூச்சலிட்டு வட்டமாக ஓடினார்கள், மறுபடி மறுபடி ஓடினார்கள். ஒரு மணி நேரமும் ஓடியபடியே இருந்தார்கள், நிறுத்தாமல் ஓடினார்கள்.

அப்போது-

ஓட்டத்தின் நடுவில், ஒரு பெண் கேவினாள்.

எல்லாரும் ஸ்தம்பித்தனர்.

அந்தப் பெண், திறந்த வெளியில் நின்றவள், தன் கையை நீட்டிக் காட்டினாள்.

“ஐயோ, பாருங்க, பாருங்க!” என்றவள், நடுங்கினாள்.

அவர்கள் மெல்ல வந்து, அவளுடைய திறந்திருந்த உள்ளங்கையை நோக்கினார்கள்.

சிறிது குவித்த அவள் கையின் நடுவில், பெரியதாக ஒரு மழைத் துளி.

அதைப் பார்த்தபடியே, அவள் அழத் துவங்கினாள்.

அவர்கள் அவசரமாக வானை நோக்கினார்கள்.

“ஓ, ஐயோ!”

சில குளிர்ந்த துளிகள் அவர்களுடைய மூக்குகளின் மேலும், கன்னங்களிலும், வாய்களிலும் வீழ்ந்துதிர்ந்தன. சாரல் புகையாகச் சிலிர்க்க, சூரியன் அதன் பின்னே மறைந்தான். காற்று சிலீரென்று அவர்களைச் சுற்றி விசிறியது. அவர்கள் திரும்பி, சிரிப்பை எல்லாம் தொலைத்தவர்களாய், கைகள் உடலருகே தொங்கியிருக்க, தரையடி வீட்டை நோக்கி நடந்து வர ஆரம்பித்தனர்.

ஒரு பேரொலியோடு இடி வீழ்ந்து அவர்களை அதிர்ச்சியூட்டியது. புயற்காற்றில் சிக்கிய இலைகள் போல அவர்கள் சிதறி ஓடினர். ஒருவர் மேல் ஒருவர் வீழ்ந்து தவித்து ஓடினர். மின்னல் பத்து மைலுக்கப்பால் எங்கோ பளீரென அடித்தது, ஐந்து மைல்களுக்கு அப்பால், ஒரு மைலுக்கு, அரை மைலுக்கு அப்பால். வானம் நள்ளிரவாய் இருண்டது, ஒரே கணத்தில்.

தரைகீழ் வீட்டு வாயிலில் ஒரு கணம் நின்றனர். கடும்மழை துவங்கும் வரை. பின் அந்தக் கனமான கதவுகளைச் சாத்தினர், டன் கணக்கில் வெளியிலெங்கும் வீழ்ந்த கனமழையின் ஆர்ப்பரிப்பை, எங்கும் பேரருவியாக ஊற்றிய நீரின் பளுவான ஒலியை, எந்த நேரமும் கேட்கப் போகிற அழுத்தத்தைக் கேட்டனர்.

”இன்னும் ஏழு வருடங்களாகுமா?”

“ஆமாம், ஏழுதான்.”

அப்போது ஒரு சிறுவன் சின்னக் குரலில் தேம்பினான்.

“மார்காட்!”

“என்னது?”

“அவள்… இன்னும்… நாம தள்ளிப் பூட்டின அலமாரியிலேயே… இருக்கிறாள்.”

“மார்காட்.”

யாரோ அவர்கள் எல்லாரையும் முளைகளைத் தரையில் அடித்துப் பிணைத்து விட்ட மாதிரி அறைந்த நிலையில் நின்றார்கள். ஒருவரை ஒருவர் பார்த்து விட்டுப் பின் பார்வையை அகற்றிக் கொண்டு பார்க்காமல் நின்றனர். வெளியில் விடாமல் பெய்த மழையைப் பார்த்தபடி நின்றனர். மழை பெயதது, பெய்தது, விடாமல் பெய்தபடி. யாரும் யாருடைய பார்வையையும் சந்திக்க இயலாமல் நின்றனர். அவர்கள் முகங்கள் குமுறிக் கொண்டிருந்தன, வெளுத்திருந்தன. தங்கள் கைகளை, கால்களைப் பார்த்து, முகம் தாழ்த்தி நின்றனர்.

“மார்காட்.”

ஒரு பெண் சொன்னாள், “இப்போ….?”

யாரும் நகரவில்லை.

“போலாம்,” மென்குரலில் உந்தினாள் அந்தப் பெண்.

குளிர்ந்த மழையின் ஒலி நிரம்பிய அந்த பெரிய அறை வழியே நடந்தார்கள். வாயில் வழியே திரும்பி, அறைக்குள் வந்தார்கள், புயலின் ஒலியும், இடியும் சூழ்ந்து, அவர்கள் முகங்களை நீலமாக, பயமூட்டும் விதமாக ஒளியூட்டின. அந்த மூடிய கதவருகே மெல்ல வந்து, அதனருகே நின்றனர்.

கதவுக்குப் பின்னே, கனத்த மௌனம்தான் இருந்தது.

இன்னுமே மெதுவாகப் பூட்டைத் திறந்தனர், மார்காட்டை வெளியில் விட்டனர்.

சென்ஷி

unread,
May 31, 2010, 1:40:51 AM5/31/10
to panb...@googlegroups.com

அக்ரகாரத்தில் பூனை

தமிழின் மிக முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர் திலீப்குமார். சிறுகதை எழுதுவதோடு மட்டுமல்லாமல், இந்திய இலக்கியம் குறித்து மிக விரிவாகத் தெரிந்து வைத்திருக்கும் தேர்ந்த இலக்கிய ஆளுமை இவர். இதே இதழில் வெளியாகியிருக்கும் இவரைப் பற்றிய அறிமுகம் தரும் திருமலைராஜன் எழுதியதொரு  கட்டுரையுடன், இவருடைய முக்கியமான சிறுகதைகளில் ஒன்றான ‘அக்ரகாரத்தில் பூனை’ சிறுகதையை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.  இந்தச் சிறுகதை ‘க்ரியா பதிப்பகம்’ வெளியீடாக வந்த ‘கடவு’ என்ற திலீப்குமாரின் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றது. இந்தச் சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு The Leeds University Journal-இல் 2005-ஆம் ஆண்டு வெளிவந்தது.

”இந்த கிழட்டுமுண்டைக்கு ஒரு சாவு வர மாட்டேன் என்கிறது. இதோடு இது ஏழாவது தடவை!” பப்லிப் பாட்டி அசூயையுடன், தாழ்ந்த குரலில் குஜராத்தியில் கறுவினாள்.

சமையற்கட்டிலிருந்து வெளியே வந்த மதூரி பாய் பார்த்ததும் புரிந்துகொண்டாள். “குடித்துவிட்டுப் போய்விட்டதா, மறுபடியும்!” “பீடை, ஒரு நிமிஷம் இந்த வீட்டில் இப்படி அப்படி நகர முடிகிறதா”… என்ற பப்லிப் பாட்டி சட்டென்று, “அது சரி மகாராணி, திறந்த வீட்டில் பூனை நுழைந்ததுகூடத் தெரியாமல் அப்படி என்ன செய்துகொண்டிருந்தீர்களோ!” என்று தன் மருமகளைப் பார்த்து இலக்கணச் சுத்தமாக வக்கணை செய்தாள்.

கிழவிக்கு இதற்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று மதூரிக்குத் தெரியும். ‘நான் பூஜை முடிப்பதற்குள் கடலை மாவு பிசைந்து முருங்கைக்காய் கறியைச் செய்து முடித்துவிடு’ என்று அவள்தான் சற்றுமுன் கூறியிருந்தாள். கடலை மாவு ‘கமகம’ என்று வறுபட்ட வாசனையைக் கிழவி மோப்பம் பிடிக்காமலா இருந்திருப்பாள். சமையலறைக் கதவருகே, தன் முக்காட்டை நழுவவிடாமல் இரு விரல்களாள் பிடித்தபடி, வழக்கமான கோணத்தில் வழக்கம்போல் அமைதியாக நின்றாள் மதூரி.

“சரி, சரி என்ன பார்க்கிறாய், போ, இன்னொரு கிண்ணம் பால் எடுத்துக்கொண்டு வா!… இன்று நட்டூ வந்ததும் இந்தப் பூனைச் சனியனுக்கு ஏதாவது வழிசெய்ய வேண்டும்” என்றாள் பப்லிப் பாட்டி.

பப்லிப் பாட்டி வீட்டில் சலசலப்புக் கேட்டதும், அந்த முதல் மாடி முற்றத்தில் ஜட்டி அலசிக்கொண்டிருந்த கோபால் பாயும், பாத்திரம் விளக்கிக்கொண்டிருந்த சாரதா பெஹ்னும் வந்து எட்டிப்பார்த்தார்கள். “கெட்டிக்காரப் பூனைதான்! நான் பார்க்கப்பார்க்க நொடியில் மாயமாக மறைந்துவிட்டதே” என்று தாடையில் கைவைத்து நாசூக்காய் அங்கலாய்த்தாள் சாரதா பெஹ்ன். பப்லிப் பாட்டி பதில் சொல்லாமல் பூஜை அலமாரிப் பக்கம் திரும்பினாள்.

தங்கசாலைத் தெருவில் ஏகாம்பரேஸ்வர் கோயிலுக்குப் பின்புறம் தெப்பக்குளத்தைச் சுற்றி ஏகாம்பரேஸ்வர் அக்ரஹாரம் ‘ப’ வடிவில் இருந்தது. பொதுவாக ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகளே நுழைவதில்லை. கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளில் அக்ரஹாரத்தில் ஒரு பூனைகூட நுழைந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அக்ரஹாரவாசிகளும் பூனைகளை அவ்வப்போது தங்கசாலைத் தெருவிலோ கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலோ அல்லது  கொண்டித்தோப்பிலோதான் பார்க்க நேரிட்டது. ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகள் நுழையாததற்குச் சூழலியல் காரணங்கள் என்பதைவிடவும் தத்துவார்த்தக் காரணங்கள்தான் ஏதாவது இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அக்ரஹாரவாசிகளில் பெரும்பாலோர் புஷ்டி மார்க்கி வைஷ்ணவர்கள். தென்கலை வைஷ்ணவர்களுக்குப் பூனைகளின்மீது இருக்கக்கூடிய அபிமானம் புஷ்டி மார்க்கிகளிடம் இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. ‘பாலகிருஷ்ண’ பிரதானமான புஷ்டி பார்க்கத்திலும் பஷு பட்சிகளிடம் அன்பு என்ற உப கோட்பாடு இருப்பது வாஸ்தவம்தான். ஆனாலும், பாலித்தின் பைகளையும், சினிமாப் போஸ்டர்களையும் தின்று, கண்ட இடத்தில் சாணி போடும் மாடுகளுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். கிருஷ்ண பரமாத்மனே ஒரு மாட்டுக்காரந்தானே! பூனைகளின் உள்ளுணர்வு இந்தப் பேருண்மையைச் செம்மையாக விளக்கிக்கொண்டிருந்தது போலும் — அஃதாவது சென்ற ஏப்ரல் மாதம்வரை.

image courtesy: http://dogsandcats.co.uk/

image courtesy: http://dogsandcats.co.uk/

மே மாதம், மேற்கூறிய கிழட்டுப் பெட்டைப் பூனை எதேச்சையாக அக்ரஹாரத்தில் நுழைந்ததை யாரும் எதேச்சையாகக்கூடக் கவனிக்கவில்லை. அக்ரஹாரத்தின் 24 மத்தியவர்க்கக் குஜராத்திக் குடும்பங்கள் வாழும் 25-ஆம் எண் கட்டடத்தில், முதல் மாடியில் 9ஆம் எண் வீட்டின் முன்னறையில் பப்லிப் பாட்டி பூஜைக்குப் பால் எடுத்துவைத்துவிட்டு பாலகிருஷ்ணனுக்காக பீடா தயாரிக்க வெற்றிலையைக் கழுவ உட்கட்டுக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களில் துல்லியமாகப் பிரசன்னமாகி, தயக்கமின்றி உள்ளே புகுந்து ஒரு முழுக் கிண்ணப்பாலை நக்கித்தீர்த்துவிட்டு எதுவுமே நடக்காததுபோல் அது திரும்பிக்கொண்டிருந்தபோதுதான் முதல்முறையாகக் கண்ணில் பட்டது.

பூனையைப் பார்த்ததும் பப்லிப் பாட்டிக்கு முதலில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. “அரே… அரே… பிலாடி., பிலாடி. மதூ பிலாடி… மதூ பிலாடி.”(பிலாடி - பூனை மதூ - மதூரி) என்று சத்தமாக குஜராத்தியில் உளறினாள். சத்தம் கேட்ட பூனை திரும்பிப் பார்த்துச் சலனமின்றி ஓரிரு கணங்கள் நடுக்கூடத்தில் நின்று, பாட்டியைக் கண்ணுக்கு கண் பார்த்தது. பிறகு அலட்சியமாக நடந்து சென்றது. கதவருகே இருந்த மடிக்கோலைப் பாட்டி சட்டென்று எடுத்துப் பூனையை நோக்கித் தாறுமாறாக எறிந்தாள். பூனை லாவகமாக நகர்ந்து மறைந்தது.

குழாயடியிலிருந்து ஈரக்கையுடன் ஓடிவந்த மதூரிக்குத் தன் மாமியாரின் கலவரமடைந்த முகத்தைப் பார்த்ததும் முதலில் சிரிப்புதான் வந்தது. ஆனால் சிரிக்கவில்லை அவள். பப்லிப் பாட்டி உதட்டை மடித்து ஆதங்கத்துடன் நின்று கொண்டிருந்தாள். “போனால் போகிறது விடுங்கள் பா, வாயில்லா ஜீவன்” என்ற மதூரியை, “ச்சீ வாயை மூடு, மலட்டுக் கழுதை” என்று வன்மத்துடன் இரைந்தாள். சிறுமைப்பட்டு நின்றாள் மதூரி.

பப்லிப் பாட்டிக்கு பாரியான சரீரம். நரைதிட்டான சிறு கொண்டை. நீண்ட பெரிய மூக்கு. மெலிதான எஃகு பிரேம் போட்ட மூக்குக்கண்ணாடி. கழுத்தில் துளசிமாலை.

செக்கச்செவேலென்று பழம்போல் இருப்பாள்.

அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து குளித்து, வெள்ளைப் புடவை அணிந்து, பாழும் நெற்றியோடு, ஐந்து கட்டடம் தள்ளியிருந்த ஹவேலிக்குச் (புஷ்டி மார்க்கிகளின் கோயில்) சென்றால் 10 மணிக்குத்தான் திரும்பிவருவாள். வந்தபின், தன் குடும்ப விக்ரஹங்களுக்கு விஸ்தாரமாகப் பூஜை செய்யத் துவங்குவாள். சமையலைறைக் கதவருகே இருக்கும் கண்ணாடிச்

சட்டமிட்ட ஒரு தேக்கு அலமாரிமுன் உட்கார்ந்துகொள்வாள். அலமாரியைத் திறந்தால் சின்னச்சின்ன விக்ரஹங்கள் ஜரிகைத் துணி அணிவிக்கப்பட்டுக் குட்டிக்குட்டி மெத்தைகள்மேல் உட்கார்ந்திருக்கும். பாட்டி எல்லாவற்றையும் முறையாக வெளியே எடுப்பாள். ஜரிகை உடைகளைக் கழற்றிவிட்டு, விக்ரஹங்களுக்கு ஸ்நானம் செய்விப்பாள். வெல்வெட் துணியால் அவற்றைத் துடைத்து, பிறகு பெரிய பிஸ்கட் டப்பாவிலிந்து புதிய வஸ்திரங்களை எடுத்து நிதானமாக அணிவிப்பாள். பிரதான விக்ரஹமான பாலகிருஷ்ணனுக்குக் கட்டைவிரல் சுற்றளவில் ஒரு ஜரிகைத் தொப்பியும் இருக்கும். குங்குமப்பொட்டு வைத்து முடித்தபின் மீண்டும் அவற்றைக் குட்டிக்குட்டி மெத்தைகள் மேல் உட்காரவைப்பாள். பிறகு, அலமாரிக்குமுன் ஒரு பலகைமேல், ஒரு பெரிய தாம்பாளத்தில் அன்றைய உணவு வகைகள் எல்லாவற்றையு, சிறுசிறு கிண்ணங்களில் வட்டமாக அடுக்கிவைப்பாள். ஒரு கிண்ணத்தில் சின்னச்சின்ன பீடாக்கள்கூட இருக்கும். சற்றுக் கழித்து தீபாராதனை காட்டி, மணி அடித்து, ஜெய ஜெகதீஸ்வர ஹரே மெட்டில் ஒரு பஜனை பாடி அலமாரியை மூடிவிடுவாள். அதற்குப் பிறகுதான் பச்சைத் தண்ணீர்கூடக் குடிப்பாள்.

பப்லிப் பாட்டியை முன்னிட்டு ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்திற்க்கு அபார பிரக்யாதி ஏற்பட்டிருந்தது. ஆன்மீக விஷயங்களில் கரைகண்டவள் என்று பெயரெடுத்திருக்கிறாள். அதிலும் குறிப்பாகப் புஷ்டி மார்க்க நியம நிஷ்டைகளில் அவள் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. என்ன பிரச்சினைக்கு என்ன விரதம், என்ன பூஜைக்கு என்ன பலன், சிரார்த்தத்திர்ற்கு, திருமணத்துக்கு, வளைகாப்புக்கு, நவராத்திரிக்கு, நலங்குக்கு என்று எல்லா வைபவ விதிமுறைகளும், பரிகார உப விதிமுறைகளும் அவளுக்கு அத்துபடி. பாகவதத்தை தலைகீழாக ஒப்பிப்பாள். தத்துவ விசாரத்தில்கூட அதன் நுட்பமான எல்லைகள்வரை சென்று வாதிடுவாள். (சில வாரங்களுக்கு முன்பு, புஷ்டி பார்க்கம் குறித்து முனைவர் பட்ட ஆய்வுசெய்துகொண்டிருந்த ஒரு மாணவி பரோடாவிலிருந்து வந்து இவளுடன் பேசிக் தெளிந்துவிட்டுப் போனாள்.) ஒரு விசேஷத்திற்கு அவள் வந்திருக்கிறாள் என்றால் அங்கு மந்திரம் சொல்ல வந்திருக்கும் பிராமணர்கள்கூட உஷாராக இருப்பார்கள்.

பப்லிப் பாட்டி இவ்வளவு அருமை பெருமைகளுடன் திகழ்ந்து கொண்டிருந்தாலும் அவளது மாட்டுபெண்ணான மதூரி அவற்றைப் பிடிவாதமாக ஏற்க மறுத்தாள். மதூரியைப் பொறுத்தவரை “கிழவி லேசுபட்டவள் இல்லை” என்ற எண்ணமே இருந்தது.

என்றாலும், தன் மாமியாரின் பூஜைக்கு இப்படி அடிக்கடி பங்கம் ஏற்படுவது குறித்து அவளுக்கும் வருத்தம்தான். சென்ற ஆறு முறையும் இப்படித்தான் நிகழ்ந்தது. விளக்குத் திரி எடுக்க, பருப்பு சாதம் பிசைய, பழங்கள் நறுக்க, தீப்பெட்டி எடுக்க என்று பப்லிப் பாட்டி உட்கட்டுக்குள் மறைந்த ஓரிடு நிமிடங்களில் சொல்லிவைத்தாற்போல் வந்து கண் இமைக்கும் நேரத்தில் காரியத்தை முடித்துவிட்டுப் போய்விடும் அந்தக் கில்லாடிப் பூனை.

அன்று மாலை, பப்லிப் பாட்டியின் மகன் நட்டூ(என்கிற நட்வர்லால்) அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும் அவனிடம் பாட்டி பூனையைப்பற்றிப் புகார்செய்தாள்.

“நட்டூ, நீ என்ன செய்வாயோ ஏது செய்வாயோ எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கிழட்டுப் பீடையை எப்படியாவது ஒழித்துக்கட்டிவிடு.”

நட்டூ பார்ப்பதற்க்குத்தான் போலீஸ்காரன் போல் வாட்டசாட்டமாக இருப்பானே ஒழிய சரியான அசமாந்தம். சத்தம்போட்டு பேசக்கூடப் பயப்படுவான். செம்புதாள் தெருவில் ஒரு மார்வாடி வியாபாரிக்கு 2-ஆம் நம்பர் கணக்கு எழுதுகிறான். நட்டூ 1-ஆம் நம்பரில் ஆயிரமும் 2ம் நம்பரில் ஆயிரமும் சம்பளம் வாங்குகிறான். வம்புதும்பு, பீடி சிகரெட், சினிமா-டிராமா எதுவும் கிடையாது. அவன் உண்டு. அவன் வேலையுண்டு. அலுவலகம் விட்டு வீடு திரும்பியதும் உடைமாற்றி, டீ சாப்பிட்டுவிட்டு ஹவேலிக்குப் போய்விடுவான். இரவு எட்டு மணிக்கு மேல்தான் திரும்புவான். சனிக்கிழமை மட்டும் இரவு பத்து மணிக்கு பஜனைக்குப் போவான். குஜராத்தி வருஷப்பிறப்பு அன்று மதூரியை சினிமாவுக்கோ பீச்சுக்கோ அழைத்துச்செல்வான்.

“என்ன பா சொல்கிறாய்! பூனையைக் கொல்வது பாவமில்மையா?” என்று பதறினான் நட்டூ.

”அட உப்பில்லாதவனே, பூனையைக் கொல்லவா சொன்னேன். அந்தக் கழுதையை எங்காவது விரட்டிவிட்டு வா என்கிறேன். பூனையைக் கொல்வது பாவம் என்று எனக்குத் தெரியாதா…. பேசிகிறான் பார்.”

”எங்கேயென்று போய் விரட்டுவது, பா. விரட்டுவதற்கு முதலில் அது கண்ணில் பட்டால்தானே. எல்லாம் உன் அஜாக்கிரதையினால்தான். பூஜை பண்ணுகிறேன் என்று, ஊருக்கு முன்னால் பால் கிண்ணத்தை எடுத்து வந்து நடுக்கூடத்தில் வைத்துவிட வேண்டியது. அப்புறம், ஹாய் ஹாய் என்று அலற வேண்டியது.” (ஹாய்=அய்யோ)

“போதும் போதும்”, ரொம்ப சமர்த்தாகாதே. பூஜை எப்படிப் பண்ணுவது என்று இனி நான் உன்னிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது.”

“சரி சரி, விடு. சூரியிடம் சொல்கிறேன். அவந்தான் இந்த மாதிரி வேலைக்கு லாய்க்கு.”

“உன் மூளை பிசகித்தான்விட்டது! போயும் போயும் அந்த துஷ்டப் பயலா. அந்த அக்கிரமி பூனையை நிஜமாகவே கொன்றாலும் கொன்ருபோட்டுவிடுவான். ஜாக்கிரதை.”

“நீ அதைப்பற்றிக் கவலைப்படாதே. எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான் நட்டூ தீர்மானமாக.

சூரி - பப்லிப் பாட்டியின் தம்பி ரஞ்சித்சிங்கின் மூத்த மகன் சுரேந்திரன். வேலைவெட்டி இல்லாதவன். ‘பளிச்’சென்று உடைகள் அணிந்து நண்பர்கள் புடைசூழ, கல்கத்தா பீடாவை ஓயாமல் குதப்பிக்கொண்டு உற்சாகமாகத் திரிந்துகொண்டிருப்பான். குஜராத்தி மற்றும் தமிழ் மொழிகளின் எல்லாம் கெட்டவார்த்தைகளையும் சரளமாகப் பயன்படுத்துவான். கடவுளையும் பணக்காரர்களையும் அவனுக்குப் பிடிக்காது. ஆனால் அன்புக்குக் கட்டுப்பட்டவன். அக்ரஹாரத்தில் எல்லாத் தப்பு-தண்டாவுக்கும் அவன்தான் கட்டைப் பஞ்சாயத்து. ‘நீதிக்குப் பின்தான் சாதி’ என்ற அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு, அக்ரஹாரத்திற்க்குப் பூ விற்க வந்த பெண்ணிடம் வம்புசெய்த ஒரு குஜராத்தி நடுவயதுக்காரர்களின் சைக்கிளைச் சேறும் பாசியும் படிந்த கோயில் தெப்பக்குளத்திற்குள் தூக்கிக் கடாசிவிட்டான்.

சமையலறையில் சப்பாத்திக்கு மாவு பிசைந்துகொண்டிருந்த மதூரிக்குத் தாயும் மகனும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. அவள் அந்த வெள்ளைப் பூனையை நினைத்துக்கொண்டாள்.

அந்த வயதான பூனை முகம் தளர்ந்து, தோல் சுருங்கி, ரோமம் உதிர்ந்து சாகக் காத்திருக்கும் பாவனையில் பரிதவித்துக் காணப்படும். அது உற்றுப்பார்த்தபோது திடீரென்று ஏதாவது பேசத்துவங்கிவிடும் என்றுகூடத் தோன்றும் அவளுக்கு. பப்லிப் பாட்டி வீட்டில் இல்லாத சமயங்களில் அது முன்கதவருகே வந்து களைத்துப்போன குரலில் ‘மியாவ்’ என்று வாயைப் பிளந்து காட்டும். தவறாமல் ஒவ்வொரு முறையும் அதற்குப் பால் கொடுத்திருக்கிறாள் மதூரி. ஒரு வகையில் தனக்கும் அந்த பூனைக்கும் அதிக வித்தியாசமில்லை என்று நினைத்தாள். அந்தப் பூனைபோலவே தானும் பதுங்கிப் பதுங்கி வாழ்வதாகப் பட்டது. அந்தப் பூனைக்குக் குட்டிகள் இருக்குமா? நிச்சயம், அதன் பருவத்தில் அது ஓரிரு குட்டிகளையாவது ஈன்றிருக்கும்.

அல்லது ஒருவேளை அதுவும் தன்னைப்போல் மலடுதானா. அதன் நிராதரவான சின்ன வாழ்க்கையின் சின்ன சாகஸங்களைப்போல்தான் தன் வாழ்க்கையிலும் என்று நினைத்தாள் மதூரி.

பூனைக்கு ஒரு கிண்ணம் பால் என்பது தனக்கு ஒரு புடவை அல்லது கடற்கரையில் ஒரு மாலை அல்லது ஒரு இந்திப் படம். அந்த பூனையைப் போலவே தானும் ஒரு நாள் முதிர்ந்து சிதைந்துவிடுவோம் என்று தோன்றியது. அந்த பூனையைப்போலவே தன்னையும் ஒரு நாள் தனிமை வாட்டும். அன்புக்கான சந்தர்ப்பம் வயோதிகத்தில் நிச்சயம் இருக்காது.

செலுத்துவதற்காக மண்டியா கிடக்கிறது அன்பு. அப்படியானால் யாருடைய இதயத்தில். பப்லிப் பாட்டியின் இதயத்திலா. தன் கணவன் நட்டூவின் இதயத்திலா. எங்கே… எங்கே பதுங்கிக் கிடக்கிறது அன்பு என்ற அபத்தம். அந்த கிழட்டுப் பூனையின் பழுப்பு நிறக் கண்களிலா?

பிசைந்த சப்பாத்தி மாவைத் திரட்டித் தட்டில் ஓங்கி அறைந்தாள் மதூரி.

நட்டூவுக்குப் பூனை விஷயம் பெரியதாகப் படவில்லை. அவன் அதை உடனே மறந்துவிட்டான். ஹவேலியிலிருந்து திரும்பும்போது சூரியைப் பார்த்ததும்தான் ஞாபகம் வந்தது.

”மனே கயி தீத்துந்தே நட்டூ பாய்! சம்ஜோ தமாரு காம் தய் க்யூந்.”(என்னிடம் சொல்லிவிட்டீர்கள் அல்லவா, நட்டூ அண்ணா. உங்கள் காரியம் ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள்.) சூரி உற்சாகமாகக் கூறினான். “நீங்கள் சொன்னால் அந்தப் பூனையை அக்ரஹாரத்தைவிட்டு என்ன, அமெரிக்காவிற்கேகூட ‘பாக்’ செய்யமாட்டேனா என்ன?”

நட்டூ கலவரத்துடன், “அதெல்லாம் வேண்டாம். 25-ஆம் நம்பர் பக்கம் வராமல் செய்துவிடு. அது போதும்” என்றான்.

“டன், நட்டு அண்ணா டன்” என்று ஆங்கிலத்தில் உறுதி அளித்தான் சூரி.

மறுநாள் காலை பாட்டியின் மாப்பிள்ளை ஹன்ஸ்ராஜ் வேலை விஷயமாகக் கொச்சியிலிருந்து வந்து இறங்கினார். அவர் எப்போதும் இப்படித்தான். சொல்லாமல்கொள்ளாமல் திடுதிப்பென்றுதான் வருவார்.

பப்லிப் பாட்டி தன் மாப்பிள்ளையை ரொம்பவும் உயர்வாகத்தான் மதித்தாள். அவரிடம் அவளுக்குப் பிடிக்காத விஷயம் அவர் பொடிப் போடுவார் என்பதுதான். ஹன்ஸ்ராஜூக்கு முப்பத்தெட்டு வயதுதான். பாகவதர் கிராப்போடு முகத்தை மறைக்கும் அடர்ந்த தாடி மீசையுடன் பேண்ட் போட்ட சாமியார்போல் இருந்தார். கல்யாணத்திற்குப் பிறகுதான் இப்படி ஆகிவிட்டார் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள்.

பப்லிப் பாட்டியின் மகள் நிம்மு, கல்யாணத்திற்கு முன் சாதாரணமாக இருந்தவள், கல்யாணம் ஆனவுடன் திடீரென்று உடல் பருக்க அரம்பித்துவிட்டாள். முதலில் ஏதோ கல்யாணமான சந்தோஷத்தில் தான் உடல் பருக்கிறது என்று நினைத்தார்கள். பிறகு, கொஞ்சம்கொஞ்சமாக அவ்ள் ரொம்பவும் குண்டாகிப்போனபோதுதான் அது எதோ வியாதி என்று தெரிந்தது.

ஹன்ஸ்ராஜுக்குப் பூர்வீகச் சொத்தும் இருந்ததோடு அவரும் நிறையச் சம்பாதித்தார். தன் மனைவிக்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தார். பயன் இல்லை. நிம்மு முப்பது வயதில் அசாத்திய குண்டாகிவிட்டாள். ஜாக்கட் தைக்க 2 1/4 மீட்டர் துணி தேவைப்பட்டது. ஆட்டோவில் அவள் ஒருத்திதான் உட்கார முடியும். பத்து அடி நடப்பதற்குள் மூச்சுவாங்கும்.

வீட்டில் கூட அவள் உட்கார்ந்தோ தவழ்ந்தோதான் காரியங்களைச் செய்வாள். அவளது  உடல்வாகிற்கு அனுகூலமான வகையில் சமையல்கட்டையே மாற்று அமைத்திருந்தார்.

ஹன்ஸ்ராஜ். நிம்மு தன் பருமனைபற்றி அதிகம் கவலைப்படமாட்டாள். சிரிக்கச் சிரிக்க எல்லோரிடமும் அன்பு பாராட்டுவாள். அவளுடன் பத்து நிமிடம் பழக நேர்பவர்கள்கூட நெகிழ்ந்து துடித்துவிடுவார்கள். விருந்தினர்கள் வரும்போது, சமையலைறைக்குள் ஒரு சிறு குழந்தையைப்போல் தவழ்ந்து தவழ்ந்து காரியங்கள் செய்து உபசரிப்பாள். அதிகம்போனால் அவள் இன்னும் பத்து ஆண்டுகள்தான் உயிர்வாழ்வாள் என்று டாக்டர்கள் கூறிவிட்டார்கள். “நான் செத்தால் என்னைத் தூக்குவதற்குப் பதினாறு பேர் வரவேண்டும் என்று சொல்லி ‘கெக்கெ கெக்கெ’ என்று சத்தமாக சிரிப்பாள் நிம்மு. ஹன்ஸ்ராஜூக்கு தன் நிம்முமீது உயிர்.

ஹன்ஸ்ராஜ் தங்கியிருந்த ஒரு வாரமும் பூனை பப்லிப் பாட்டி வீட்டுப்பக்கம் வரவில்லை. மாப்பிள்ளைக்கு உபசரணை செய்யும் மும்மரத்தில் பாட்டிகூட அதை மறந்துவிட்டிருந்தாள்.

ஹன்ஸ்ராஜ் ஊருக்குக் கிளம்பும்போது நிம்முக்குப் பிடித்த பட்சணங்களை ஒரு பெரிய டப்பாவில் போட்டுக் கொடுத்தாள்.

“இந்தக் தீபாவளியிலிக்காவது நிம்முவை அழைத்துவர முடியுமா என்று பாருங்கள்,” என்றாள்.

“அவள் நிலைமைதான் உங்களுக்குத் தெரியுமே. அவள் வருவதென்றால் வேன் வைத்துத்தான் அழைத்துவர வேண்டும். அதற்கு நீங்களே பேசாமல் கொச்சிக்கு வந்து ஒரு வாரம் தங்கிவிட்டுப் போங்களேன். உங்களுக்கும் மாறுதலாக இருக்கும்.”

”என்ன மாறுதல் போங்கள். நீங்கள் சொன்னால் ஆகிவிட்டதா? நான் கிளம்பிவிட்டால் வீட்டை யார் பார்த்துக்கொள்வார்கள்? இவளுக்கு துப்பிக் கிடையாது. கவர்னர் பட்வாரிக்குக் கூட நேரம் கிடைத்துவிடும். எனக்கு எங்கே?” என்று மருகினாள் பாட்டி.

வாசல் பக்கம் நட்டூவைப் பார்த்ததும், “சரி நீங்கள் கிளம்புங்கள். நட்டூ ரிக்‌ஷாக்கூடக் கூட்டிவந்துவிட்டான்.”

வாசல்வரை வந்து வழியனுப்பிய பாட்டி, தன் மகளை நினைத்து, அந்த அழுகையை அடக்கிக்கொண்டாள். “போய்வருகிறேன் சகோதரி” என்று மதூரியைப் பார்த்துச் சொல்லிவிட்டுக்

கிளம்பினார் ஹன்ஸ்ராஜ்.

பத்து நாட்கள் கழித்து தீடீரென்று ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 25-ஆம் எண் கட்டடத்திற்குச் சூரி வந்தான் அந்த கிழட்டுப் பூனையுடன். பப்லிப் பாட்டு வீட்டுக் கதவருகே வந்ததும் குழந்தைகளும் பெரியவர்களும் அவனைச் சூழ்ந்துகொண்டார்கள். சூரியின் மடக்கிய இடது கைக்குள், அவன் மார்பில் தலைசாய்ந்து ஒரு குழந்தையைப்போல் ஒடுங்கிக்கொண்டிருந்தது பூனை.

”என்ன ஜாலம்டா இது! திருட்டுச் சனியன் உன்னிடம் இப்படிக் குழைகிறதே” என்று வியந்தாள் பப்லிப் பாட்டி.

“அதுதான் சூரி! தெரிந்துகொள்ளுங்கள். இந்தப் பத்து நாட்களில் ஐந்து லிட்டர் பாலையும் எட்டு டபுள் ஆம்லெட்டுகளையும் விழுங்கியிருக்கிறது இது. பூனையை வசியம்செய்வது என்றால் சும்மாவா! கொண்டுபோய் விடுவதற்குமுன் உங்களிடம் காண்பித்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன். சொல்லுங்கள் அத்தை, எங்கே கொண்டுபோய் விடட்டும்…. திருவொற்றியூரிலா திருவான்மியூரிலா?”

சூரி தன் வலது கையால் அதன் முதுகைத் தடவிக் கொடுக்கக் கொடுக்க, பூனை புதுப்பெண்போல் கூச்சத்துடன் நெளிந்து நெளிந்து காட்டியது.

பூனையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த பப்லிப் பாட்டி, ஏதோ தீர்மானித்தவள்போல், “டேய் சூரி, போய்விடாதே, இதோ வருகிறேன்” என்று உள்ளே சென்றாள். தன் மாப்பிள்ளை மறந்துவிட்டுச் சென்ற பொடி டப்பியைத் தேடினாள்.

அவசரமாகத் திரும்பி வாசலுக்கு வந்தாள். ரகசிய பாவத்துடன் கையசைத்துச் சூரியை அருகே வரச்சொன்னாள். பின் தாழ்ந்த குரலில் பூனையைத் தன்னருகே கொண்டுவரும்படி சொன்னாள். சூரி பூனையின் வயிற்றைப் பிடித்தபடி அதை பாட்டிக்குமுன் நீட்டினான். பாட்டி, சட்டென்று இடுப்பில் வைத்திருந்த மூடிய கையைப் பூனையின் முகத்தருகே கொண்டுவந்து, அதேநொடியில் உள்ளங்கையைத் திறந்து அதிலிருந்த மூக்குப்பொடி முழுவதையும் பூனையின் மூக்கில் வைத்து அழுத்தித் தேய்த்துவிட்டாள்.

மறுகணம், மின்சாரம் தாக்கியதுபோல் பூனை சூரியின் கைகளிலிருந்து எகிறி மல்லாக்கக் கீழே விழுந்தது. அதற்குப் பொறி கலங்கியிருக்க வேண்டும். பூனை எழுந்து நிற்க முனைந்ததும் மறுபடியும் எம்பித் தாறுமாறாக விழுந்தது. முற்றத்தின் குழாயடி, சாக்கடை, கழிவறைக் கதவு என்று மாறி மாறி மோதி விழுந்தது. அது எழுப்பிய வினோதமான குரல் பயங்கரமாக இருந்தது. ஒவ்வொரு முறையுமது சமாளித்து எழுந்து நடக்க யத்தனித்தபோது கால்கள் குழைந்து விழுந்தன. தன் சிறிய தலையை இப்படியும் அப்படியுமாகத் திருப்பிப் பரிதாபமாகத் தும்மித்தும்மி விழிந்தது.

பப்லிப் பாட்டி கையை உதறினாள். பூனைக்குப்போக, எஞ்சியிருந்த மூக்குப்பொடி காற்றில் பறக்க, குழுமி இருந்தவர்கள் பலரும், சூரி உட்படத் தும்ம ஆரம்பித்தார்கள். தள்ளி நின்றுகொண்டிருந்த சில ஆண்களும் சிறுவர்களும் பூனை தும்மி விழுவதைப் பார்த்துக் குலுங்கிக்குலுங்கிச் சிரித்தார்கள். பூனை அந்த முதல் மாடி விளிம்பின் ஒற்றைக்கல் சுவரில் ஏறி, மீண்டும் தும்மி, சத்தத்துடன் கீழ்த்தளத்தில் விழுந்தது. பிறகு மெல்ல எழுந்து கட்டடத்தை விட்டு ஓடியது.

சிரிந்துக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து மிக மிக ஆபாசமான ஒரு வசையைக் கத்திவிட்டுச் சூரி பூனையைத் தொடர்ந்து கீழே ஓடினான்.

திடீரென்று அங்கு ஒரு நிசப்தம் படர்ந்தது. ஒவ்வொருவராக எல்லோரும் கலைய ஆரம்பித்தார்கள். பாட்டி, வீட்டின் உட்புறம் திரும்பியதும், நடுக்கூடத்தில் மதூரி நின்றுக்கொண்டிருந்தாள். பாட்டி சட்டென்று தலைகுனிந்து முன்னே நகர்ந்து அவளைக் கடந்தாள்.

அன்று மாலை பாட்டியைப் பார்க்க யாரோ வந்தார்கள். பப்லிப் பாட்டி ஆரம்பித்தாள் : “புஷ்டி மார்க்கம் என்ன சொல்கிறதென்றால்……..”

சென்ஷி

unread,
May 31, 2010, 1:51:44 AM5/31/10
to panb...@googlegroups.com

வஞ்சம்

ஆதவன் தீட்சண்யா

மசங்கல் இளகின விடிபொழுது. கொய்யக் காத்திருக்கும் சாமந்திக்காடாய் மீன் சிரிச்சுக் கிடக்கு காசம் முழுக்க. தோள் நழுவிய துணியாட்டம் கள்ளமா தரையிறங்குது பனித்தாரை. வரப்படியில் அண்டின பூச்சிப்பொட்டுக குளுர்தாங்காம சில்லாய்க்கிறதில் காதடையுது.

Old man and boy காவாயில் ஜதிபோட்டு ஓடியாரும் தண்ணி வெதுவெதுன்னு பாயுது. வெடிப்புல மண்டியிருந்த தாகம் ஈரம் பட்டதும் இளஞ்சூடா கரையுது காத்தில். சாரையும் நாகமும் விரியனும் மிலுமிலுக்கும் வயக்காடுன்னு தாத்தாவும் தருமனும் சொன்னது நெசந்தான். சீத்துசீத்துனு சீறிக்கிட்டு எலி விரட்டி அலையும் சத்தம்.

ஆள் பொழக்காட்டம் அருகின இப்படியான ராப்போதுகள்ல காசம் தொட மரமெல்லாம் ரகசியமா வளரும் போல. ரயில் ரோட்டோர பனைமரங்க செஞ்செவிக்க நிக்குதுங்க தலைசிலுப்பி. சாரியா ஒசந்ததில் மூனாம் மரம் தாத்தாவுது. ஒத்தமரத்துக் கள் குடிச்சா ஒடம்பு கனியும்னு தாத்தாவுக்கு தனிச்சியுட்ட மரம். கடேசி மடக்கை உறிஞ்சினதும் மீசையொதுக்கி செருமறாப்ல இருக்கு இப்பமும். குளுகுளுன்னு கள் உள்ள இறங்கினதும் ஆளை கிளப்பியுட்ரும் போல. மடி முட்டுன கன்னுக்குட்டியா கும்மாளம் பொங்கிரும் அவருக்கு. கோமணம் தொங்கறது தெரியறாப்ல வேட்டிய நெஞ்சுவரைக்கும் மடிச்சி ஏத்திக் கட்டிக்கிட்டு மரத்தடி சேக்காளிங்க ஒவ்வொருத்தர் கிட்டயும் ஞாயம் நீளும். மப்பு சாஸ்தியாகி கண் சொருகி அங்கயே கமுந்தடிச்சிக் கெடக்கறது சகஜம். தெளிஞ்சு எழுந்து வர்றப்ப வாடை அவருக்கே குமட்டுமோ என்னமோ, வரப்புல துளசி கிள்ளி மோந்துகிட்டே வருவார். வெண்ணங்கொடி முனியாட்டம் செவந்து பிதுங்குன முழிங்க பயங்காட்டும்.

அந்தமரத்துக்கள் மேல அனேகம் பேருக்கு ஆசை. கிழவன் மூச்சிருக்கிற வரை கிடைக்காது யாருக்கும்னு பேசிப்பாங்க. அதென்னமோ நெசந்தான். முட்டியில ஒருசொட்டு தங்காது. ஒறம்பரைசரம்பரையே வந்தாலும் வேற மரத்தடிக்கு நகந்துட வேண்டியதுதான்.

இப்ப யாரும் அந்தமரத்துல பாளை சீவறதில்ல. முட்டிக்கு பத்து ரூவா சேத்துத் தாறேன்னு முன்சீப் மவன் கேட்டதுக்குக்கூட தாத்தாம்மா முடியாதுன்னிட்டா. தாத்தா ஞாவகார்த்தமா நுங்குக்கு விட்டாச்சு. சடைசடையா குடுவையாட்டம் பத்திருவது குலையிறங்கி மினுங்கும். முத்தின கடுக்கா நுங்கு கூட தனிருசி. தப்பின கொட்டைங்கள மேங்காட்டுத் திட்டுகள்ல மொளைக்கப் போட்டு ஊராருக்கு கெழங்கெடுத்து குடுக்கறதுல தாத்தாம்மாவுக்கு நிம்மதி. ஊர்ல பசங்க உருட்டி வெளையாடற வண்டிக்கெல்லாம் இந்தமரத்து புருடைங்கதான் சக்கரம். பழம் சுடறப்ப வாசம் ஆளைத்தூக்கும். வெந்து கருகுன மேந்தோலுக்குள்ள மஞ்சமசேல்னு மாம்பழமாட்டம் இருக்குற பனஞ்சேகை நார்நாரா போறமுட்டும் மென்னுகிட்டேயிருக்கலாம். அவ்ளோ இனிப்பு.

தாத்தா மரம்போக மத்தது மன்னானுக்கு. தாத்தாவுக்கு நல்ல சேக்காளி. இப்பமும் குடும்பத்துக்கு நல்ல ஒத்தாசை. தொழில்ல மகா கெட்டிக்காரன். பாகு காய்ச்சும் வாசனைக்கு பக்கம்பராந்திரி பிள்ளைங்கல்லாம் வந்துடுவாங்க. வஞ்சனையில்லாம வழிச்சுக் குடுப்பான் கொட்டமுத்துத் தழையில. முறுகக் காய்ஞ்ச ஓலைய செல்லக்கரண்டியா உடைச்சு பாகு வழிச்சு சப்பும் பிள்ளைங்க, கொப்பரையச் சுத்தி ஈயா மொச்சுக்கிடப்பாங்க. கொதிக்கிற பாகு தெறிச்சு கொப்பளம் எழுந்தாலும் அச்சுல வார்க்குற வரைக்கும் அடுப்பச் சுத்தியே அலையுங்க.

பாகு காய்ச்சி பதம் எடுத்தான்னா அப்படியொரு பக்குவம். வருசம் நாலானாலும் வெல்லத்துக்கு வில்லங்கமில்ல. அம்பது உண்டை வெல்லமும் வேணும்கிறப்ப தெளுவும் பருவத்து ஈடா குடுக்கறான்.

கொப்பரைக்குப் போக மிச்சமரத்துல கள்ளுக்கு வழி பண்ணிட்டான் மன்னான். தாத்தா காலத்திலிருந்தே இது வழமை. காலங்காலைல ஜனமான ஜனம் குமியும். குருத்தோலைல தெத்தின கோட்டையில ஊத்தியூத்தி குடிச்சிட்டு வயனம் பேசி வம்பாடி கரம்பக்காட்ல வுழுந்து கெடப்பாங்க. நெதானந்தப்பி ரயிலுக்கு வேட்டியவுத்துக் காட்ற வேடிக்கைக் கூத்துக்கும் பஞ்சமில்ல.

தாத்தா போனதிலிருந்து ரஞ்சிதம் வர்றதில்ல. அவ வந்துபோன கொடித்தடத்துல அவளுக்கப்பறம் யாரும் நடக்காம அனாதையா நெளிஞ்சிருக்கு அவளாட்டமே. எப்ப வேணும்னாலும் அவ வந்துடுவாள்னும், இனிமே அவ வந்துபோறதுக்கு முகாந்திரமேயில்லைன்னும் இருகூறா அயிப்ராயமிருக்கு. இப்பவும் அவளோட பலகாரக்கூடை வாசம் பனைமரத்துச் செதில்ல படிஞ்சிருக்குன்னு நம்பறவங்க இருக்காங்க.

முன் கொசவம் வச்ச செவத்தா தான் இப்பவெல்லாம் கூடையெடுத்தாறா. பேருதான் செவத்தா. நெருப்புமேல தண்ணியூத்தினாப்ல ஆளு காக்கா செவப்பு. நெறத்துல என்னயிருக்கு? ம்ஹ¥ம்... முந்தானைல கோலின சும்மாடு மேல கூடைய வச்சிக்கிட்டு கை ரெண்டையும் கரகாட்டக்காரியாட்டம் வீசிவீசி வர்றப்ப கெழவன் கூட கெறங்கிருவான். கூடைக்காரிங்கறதால கூப்புட்ற முடியுமா? மானம் போயி மந்தைல நிக்கமுடியுமா? வம்பு பண்ணினான் வாயாடினான்னு நாளைக்கு ஊர்ப்பொதுவுல ஞாயம் கீயம் வெச்சுட்டாள்னா...? எதுக்கு பொல்லாப்புன்னு ஆளாளுக்கு வுட்ட பெருமூச்சுல இன்னம் கறுக்குறா செவத்தா.

செவத்தா, சந்தை நாள்ல ரத்தப்பொரியலும் வறுத்தக்கொடலும் கொண்டாருவா. மத்த நாள்ல சுருக்குனு காரமேத்துற போண்டா, வடை, தாளிச்ச காரமணி, அவரை, நரிப்பயறு சுண்டல்னு கமகமக்கும். இருந்தாலும் ரஞ்சிதம் கைப்பக்குவம் யாருக்கு வரும்கிற அங்கலாப்பு இருக்கு நெடுநாளா மரத்தடியில.

மக நட்சத்திரம் இன்னம் கீழ இறங்குல. அதுக்கும் தாழ ஒத்தையா ஜொலிக்கற மீனுதான் உன் தாத்தான்னு காட்டுவா தாத்தாம்மா. வளவுல படுத்துக்கிட்டு வச்சக்கண் வாங்காம அதையே பாத்திருப்பா. திடும்னு உசுரு வந்தவளாட்டம் வெத்தலச்சாற பீச்சித் துப்பிக்கிட்டே கொசுறு கொசுறா எதாச்சும் பேசுவா தாத்தா பத்தி. பின்னயும் கண்ணொழுக்கி சிலையா படுத்திருப்பா. காசத்துக்கும் அவளுக்கும் தொலவு மங்கி மறஞ்சி புருசன் கைபிடிச்சி தனிச்சி வாழறாப்ல தெரியும். பொதையலக் காக்குற பூதமாட்டம் அது நம்பளையேத்தான் பாத்திருக்கும்னு தணிஞ்சக்குரல்ல அவளுக்கே ரகசியம் சொல்றாப்லா முணுமுணுப்பா. ஊரடங்கி நாய்ங்களும் மொடங்குன பிற்பாடு வாடா எஞ்செல்லமேன்னு என்னை இழுத்து வயித்துச்சூட்டுல தழையவுட்டுத் தூங்கிருவா.

செத்ததுக்குப் பின்னயும் அல்லாரையும் பாத்துக்க தாத்தா மீனுரு பூண்டு அங்கயிருந்து காக்குறாராம். அதும்பக்கத்துல துக்கிலியா தெரியற ரெண்டுமீனுந்தான் உங்கொப்பனும் உங்கம்மாளும்னு தாத்தம்மா சொல்வா. நடுவூட்டு சாமிமாடத்துல போட்டாவா தொங்கறாங்க ரெண்டுபேரும். ரயில்ரோட்ட தாண்டறப்ப வண்டியில சிக்கி அவங்க சாகறப்ப நான் ஒருவருச சிசுவாம்.

மீனுரு மாத்திரமில்ல எந்த அவதாரமும் எடுக்கற சாத்ரீகமுண்டு தாத்தாவுக்கு. கையூனி கரணம் போட்டு அந்தரத்துல மிதக்கற மந்தரமும் தந்தரமும் அறிஞ்சவர். நெனைச்சதை சாதிக்க எந்த ரூபமும் கைக்கூடும் அவருக்கு.

இன்னிக்கும் கூடயிருந்து குடும்பத்த நடத்தறாப்லதான் தோணுது. இவ்ளோ காலத்துக்கப்பறமும் காத்தாட்டம் இங்கயேதான் காடு முழுக்க நெறஞ்சிருக்கறதா நெனச்சிருக்கோம். அதனாலயே ஒருமாதிரி பயமும் தைரியமும் ஒழுங்கும் தானா படிஞ்சிருக்கு எதுலயும். பாக்கப்பாக்க அந்தமீன் தாத்தாவோட சுருட்டாட்டம் கனலுது. அவர் சொடக்கு போட்டு உதுத்துவிட்ட சுருட்டுச் சாம்பலா பனி படியுது மேல. வயக்காடு முழுக்க பொகலை கருகுற நெடி வீசுது இப்ப.

காவாக்கரை தென்னமரத்துலயிருந்து முத்தின நெத்து காத்து தாங்காம அத்து வுழுந்த சத்தம் கேட்டு கொட்டாய்க்கிட்டயிருந்து செவலையன் கொலைக்குது. அகாலத்துல அந்த சத்தம் எதையெதையோ ஞாபகம் பண்ணச் சொல்லுது.

தாத்தா செத்தன்னிக்கு ராத்திரி இப்பிடித்தான் செவலையன் 'ஓ'ன்னு கூப்பாடு போட்டு கொலைச்சிக்கிட்டிருந்தது. என்ன ஏதுன்னு யாராச்சும் மாமரத்தடிக்கு ஓடிப் பாத்திருந்தா தாத்தா
சாகறதைக்கூட தடுத்திருக்கலாமோன்னு எப்பவாச்சும் தோனும். அன்னம் தண்ணி காரமில்லாம நாலஞ்சு நாள் குழிய சுத்திசுத்தி திரிஞ்சிக்கிட்டிருந்திச்சு செவலையன். வாயில்லா சீவனுக்கும் பேசறத்துக்கு விஷயமிருக்கும் போல.

அத்தினி வயசுல பிறத்தியாரானா நாயா பேயா நாண்டு நாறித்தான் செத்திருப்பாங்க. சவமாயிருச்சா கிழம்னு எட்டயிருந்து மோந்துப் பாத்து ஏன் இன்னமும் சாகலேன்னு ஊரும் உறவும் பஞ்சாங்கம் பாக்கும் விடிய விடிய. எறும்புக்கும் ஈய்க்கும்கூட எளக்காரமாகி ஒரு கவளம் சோத்துக்கு உயிரலைஞ்சு சாகும். தளந்து தள்ளாடி தாவாரத்துல கெடக்கறப்ப ஏன்னு கேக்க எந்த நாயும் பக்கம் வராது. தாத்தா அப்பிடியில்ல. கடைசிவரைக்கும் கைத்திடத்துல இருந்தார். கண் தெரிஞ்சு நடந்தார். நோவுநொடின்னு ஒருநாளும் சாய்ஞ்சதில்ல. கொட்டப்பாக்கை நொடக்குனு கடிக்கிறப்ப மத்தங்களுக்கு பல் வலிக்கும். இவர் தாடைய பிடிச்சிக்கிட்டு கேலி பண்ணுவார்.

ஆனது ஆகாததுன்னு எதுவுமில்ல. ருசியாயிருந்தா வெஷத்தையும் தின்னு, முறிக்கிற மருந்து இல்லாமயாப் போயிரும்பார். கோழியாட்டம் தீனியெடுத்தா குக்கநோவு வந்து செத்துப்போயிடுவே, நல்லாத் தின்னுடா கண்ணும்பார். வெங்கலக் கிண்ணியில விழுற சோத்துல ஒரு பருக்கை சிந்தாது சிதறாது. சாப்பாட்ல அவ்வளவு கவனம். கறி ஆக்கும் நாள்ல கதை தனி.

நெனைக்கற நாள்ல கறி வேணும். வெள்ளிக்கிழம, நடுசனி, பொரட்டாசின்னு யாராச்சும் சொன்னா தீந்தாங்க. பச்சப்பொணத்த பிச்சித் திங்கற சாமியக் கும்புடற ஒனக்கும் எனக்கும் என்னாடா சாங்கியம்... காவு போட்டு படையல்ல கவுச்சி படைக்காதப்ப தன்னோட நாக்கையே கடிச்சி ரத்தம் சப்புற சாமிடா நம்புளுது. நாளாம்...கெழமையாம்... ஓடிப்போய் ஒரு கூறு கறி வாங்கியாம்பார். எந்தஊர் சந்தையில யார் யார் கசாப்புக்காரன்னு கச்சிதமாத் தெரியும். எனக்கு-சாக்கனுக்குன்னு சொல்லு. சுக்கூர்பாய் பதமா குடுத்தனுப்புவான்னு போற ஊருக்கும் ஆளுக்கும் தக்குனாப்ல சொல்லிடுவார். எங்கயும் ப்படாத நாள்ல களத்துமேட்டுல கிளைக்கிறக் கோழி வயித்துக்குள்ள இரையெடுக்கும்.

பக்கத்துல உக்கார வச்சுக்கிட்டு எலும்பில்லாத செங்கறியா நிமிட்டி எடுத்து தருவார். நான் திங்கவா இதெல்லாம், உனுக்காவத்தாண்டா கண்ணு. தின்னு சாமி.. இந்தா ஈரல்னு ஊட்டுவார். ஏண்டி, மிச்சக்கறிய சட்டியா தின்னும் ... எடுத்துப்போட்டு அதக்கி முழுங்கேன்னு தாத்தம்மாளை செல்லமா சீண்டுவார். மப்பு உச்சியேறிட்டா நாய்க்கும் ஊட்டிவிட்டுட்டுத் தான் மறுவேலை. வேஷம் கட்டி கூத்தாடுன ஞாபகம்லாம் வந்து ஹோன்னு படுகளத்துல பாடுற பாட்டு கிளம்பிடும்.

பத்துப் பவுனழுச்சு
படுக்கக் குறிஞ்சிசெஞ்சு
படுத்தால் அழுந்துதுன்னு
பக்கம் வந்தாக் காந்துதுன்னு- நீங்க
பரமனோட பஞ்சு மெத்தெ
படுத்தா சொகமுனு
பறந்தோடிப் போனீங்கொ

எட்டுப் பவுனழுச்சு
இருக்கக் குறிஞ்சி செஞ்சு
இருந்தா அழுந்துதுன்னு - நீங்க
எமனோட பஞ்சு மெத்தெ
இருந்தா சொகமுனு
எழுந்தோடிப் போனிங்கோ

..........................................
.............................................

அடே காலா, யாரென்று தெரியாமல் உன் பாசக்கயிறை வீசிவிட்டாயா?
குலத்துக் கொடி விளங்க கொழுந்தாய் தழைத்த சிசுவை
நீ கொண்டு போன சூதென்ன மாயமென்ன... ஹோ...
அடே கிங்கரா, இதோ உன்னை வாள் கொண்டு கிழிப்பேன்
உன் வம்சத்தை அழிப்பேன்..தத்தாங்...தித்தாங்...

முன்னூறு மூங்க வெட்டி - என் ராசா
ஒனக்கு மூனு முக தேரு கட்டி
எம் மவனே நீ போற ரதம்
அந்த வெள்ளி ரதம் நம்ம ரதம் - னு

பாட்டும் வசனமும் கூத்துக்கதையிலயிருந்து பொரண்டுத்தாவி மவனும் மருமவளும் செத்ததுல நிக்கும். அக்கம்பக்க கொட்டாய்க்காரங்க வந்து கெழவனுக்கு வாழச்சாறு ஊத்தி படுக்கவையுங்கன்னு பக்குவம் சொல்லிப் போவாங்க. எச்சக்கையோட எழுந்து அடவு பிடிச்சு ஆடறதுமுண்டு. புத்திர சோகம் பொறத்தால நழுவி பபூன் பாட்டுகூட வந்துடும். கெழவனுக்கு இப்பந்தான் பிராயம் திரும்புதும்பாங்க.

பனங்கறுக்குல கீறினாக்கூட சொட்டு ரத்தம் வராத கெட்டித் திரேகம், திடகாத்ரம். அவரோட வாட்டசாட்டமும் வளச்சிப்போடற பேச்சும் எதுக்கும் துணிஞ்ச கிருதியும் தான், வயசுப்பசங்க வலைக்கெல்லாம் வழுக்கித் தப்பின ரஞ்சிதத்தை தாத்தாக்கிட்ட இழுத்து நிறுத்தியிருக்கும்னு தோணுது. சிக்கிக்கெடந்தாளா சொக்கிக்கெடந்தாளான்னு சொல்லிற முடியாது. சாகறன்னிக்கு கூட மொதக்கோழி கூப்புடறதுக்கு முன்னாடி மாமரத்தடியில ரஞ்சிதம் வந்து கொஞ்சிட்டுப் போனாள்னும் அதுக்கப்புறம்தான் தாத்தா உசுரு பிரிஞ்சதுன்னும் ஊர்ல ஒரு பேச்சிருக்கு.

அவங்க வழமையா கூடுற இடம் அதுதான். அந்நேரத்துக்கு அமுட்டுத் தொலவுல இருந்து ஒண்டியா கௌம்பி வர்றதுன்னா தெகிரியம் இருக்கிறதால மட்டுமில்ல, அவரைப் பாக்காம அவளால இருக்க முடியாதுங்கறதும் தான். இன்னிவரைக்கும் அவர் செத்த நாள்ல மாமரத்தடிக்கும் குழிக்கும் வந்து படையல் போட்டுட்டு வெடியறதுக்குள்ள அவ போயிடற விசயம் ஊருக்கே தெரியும்.

ஏரிக்கு அந்தாண்ட இருக்கும் மண்ணப்பாடியில, மல்லிகக் கொடியோடி கூரையே பச்சையா மாறி ராவும் பகலும் மணக்குற குடிசல்ல இருந்துதான் ரஞ்சிதம் வருவா. மஞ்சளும் பூவும் பவுடரும் சேர்ந்து குழைஞ்ச வாசனை அவளுக்கும் முன்னயே வந்து கமகமங்கும். மாயக்கல்லுல செஞ்சாப்புல சின்னமூக்குத்தி. வெயில்ல அது மின்னுறப்ப பொறி கலங்கி கண்ணும் நெனப்பும் கனாவுல மெதக்கும். ஈரக் கொண்டையிலயிருந்து சொட்டும் தண்ணி நெகுநெகுன்னு முதுகுல கோடு பிடிச்சு கொசுவத்துக்குள்ள எறங்குறதைப் பாத்து எதேதோ நெனப்பு பொங்கி எத்தினியோ நாள் தூக்கம் மடிஞ்சிருக்கு.

தாத்தாவுக்கு தொடுப்பா இருக்கறவளைப் பத்தி இப்பிடி தாறுமாறா நெனக்கலாமான்னு யோசிச்சா, தொடுப்பா இருக்கறவளோட என்னத்த உறவுமுறை பாக்குறதுன்னு எதிர்கேள்வி வந்துருது. தாத்தா முந்திக்கிட்டார். இல்லாட்டி அவளை சுண்டிப் பிடிச்சிருக்க முடியும்னுதான் இப்பவும் தோணுது. இதையெல்லாம் வெளியில சொல்லிற முடியுமா? நெனச்சு நெனச்சு நெஞ்சுக்கூடே நெருப்புமேடா கருக வேண்டியதுதான்.

அவ புருஷன் மூணுவேளை கஞ்சிக்கும் வருசத்துல ரெண்டு வேட்டித்துண்டுக்கும் ஆயிரம் ரூவா ரொக்கத்துக்கும் மாரப்பக் கவுண்டரோட பண்ணையத்துல ஆளிருந்தான். கொழுத்தப் பண்ணையம். ஆம்பளன்னா நாலுவேலை இருக்கும். அங்கயிங்க போய்வரணும். பொழுதும் உன்னைய அள்ளையில மல்லாத்தி கொஞ்சிக்கிட்டிருக்க முடியுமாடின்னு பொண்டாட்டி வாயைப் பொத்திட்டு கவுண்டர் போய்ச்சேருமிடம் புதுப்பட்டி வலசக்கவுண்டன் மகள்கிட்ட தான்னு ஊருக்கே தெரியும். ஆளில்லாத காட்டுக்கொட்டாய்ல தனியாயிருக்க பயந்து மாட்டுக்கொட்டாயிலும் மோட்டார் ரூம்லயும் ஆளுக்காரனோட தூங்கியெழுந்தா கவுண்டர் பொண்டாட்டி. சந்தேகந்தட்டி அவர் ஜாடைமாடையா வேவு பாக்கறது தெரிஞ்சு உஷாரா ரெண்டுபேரும் எங்கயோ ஓடிப்போயிட்டாங்க.

புருஷனப்பத்தி இத்தினி வருசத்துல ஒரு தகோலுமில்ல ரஞ்சிதத்துக்கு. வயித்துப்பாட்டுக்கு வழி வேணுமேன்னு பலகாரக்கூடை தூக்கினவ அங்கயிங்க அலைஞ்சி கடைசியா தாத்தாகிட்ட அண்டிட்டா. கள்ளெறக்குற மரத்தடிக்கு அவ வர்றதுக்கு முந்தியே தாத்தாவோட தொடுப்பாயிருச்சுன்னும், அதுக்கப்பறம் தான் இங்க வந்து போக ஆரம்பிச்சாள்னும் கூட ஒரு பேச்சிருக்குது. அது நெசமா இருந்தாலும் இருக்கும். ஏன்னா, அதுக்கும் முன்னாடியே கூட அவளோட பொட்டலம் தாத்தா கையில மணந்திருக்கு.

தாத்தா சாவுக்கப்புறம் அவ கூடை எடுத்தாறதில்ல. வெளி நடமாட்டமேயில்லாம குடிசல்லயே மொடங்கிக் கெடக்காளாம். மல்லியக்கொடியில பறிக்காமயே பூவுங்க உதுந்து காய்ஞ்சு பூஞ்சருகு மூடி குடிசலே மணந்து கெடக்காம். எப்பவாச்சும் நேர்ப்படறப்ப சின்னவங்க எப்படியிருக்காங்கன்னு என்னையப் பத்தி செவத்தாகிட்ட கேக்கறதுண்டாம். போய் பாத்துட்டு வரணும்னு ஆசையிருந்தாருலும் என்னமோவொன்னு இழுத்துப் பிடிக்குது காலை. தாத்தம்மாளுக்கு இந்த நெனப்பு தெரிஞ்சா ராக்காசியாயிருவா.

தாத்தாம்மாவுக்கும் ரஞ்சிதம் தொடுப்பு சமாச்சாரம் தெரியாமயில்ல. ஆனா கண்ணுங் காதும் இல்லாதவளா இருந்தாள். ரஞ்சிதம்னேயில்ல. மேங்காட்டு சின்னப்பன் பொண்டாட்டி கனகி, வகுரன் மவ பொன்னுருவி, முத்தம்பட்டி பிரிவுரோடு பொட்டிக்கடைக்காரி வசந்தா, வண்டிக்காரன் கொழுந்தியா ஜெயக்கொடின்னு யாராச்சுமொரு வாளிப்பான பொம்பளைங்களோட அப்பப்ப அவருக்கிருந்த சகவாசம் பத்தியும் அறிஞ்சேயிருந்தா. ஆடறது ஒரு காலம்னா அடங்குறது ஒரு காலம்னு பொறுமையாத்தானிருந்தா. ஆனா, அடங்கற பிராயம்னு ஒண்ணு நேரவேயில்ல தாத்தாவுக்கு.அழிஞ்சி அம்பலம் ஏற மேல்பந்தயம் கட்டுற மனுசனை என்ன பண்ணி என் கட்டுக்குள்ள நிறுத்தறதுன்னு தெரியலையேன்னு வெம்பி பொலம்பி வெகாளம் பிடிச்சித் திரிவா தாத்தம்மா.

மத்த சிறுக்கிங்களாட்டம் இவளும் கூடி கும்மாளம் போட்டுட்டு கைக்கு சிக்கறத சுருட்டிட்டு போயிடுவாள்னு லேசாத்தான் நெனச்சா தாத்தம்மா. ஆனா ரஞ்சிதம் அவங்க ஜதையாயில்ல. அவ, கட்டுன பத்தினியாட்டம் வேத்து ஆம்பளை நெழல்ல வெயிலுக்கும் ஒதுங்காதவளா இருந்தாள். எத்தினி நாளைக்குத்தான் இப்பிடி கூடை தூக்கி அலையறது.... இங்கயே வந்துடறதுக்கு ஒரு வழி பண்ணுங்களேன்னு தாத்தாவ அவ நச்சரிக்கற விசயம் எப்பிடியோ தெரிஞ்சி பதறிட்டா தாத்தம்மா. ஆளக் கவுத்தது பத்தாம குடும்பத்தயே கூறு போடணும்னு கேக்குறாளா சக்காளத்தின்னு பொரிஞ்சி திரிஞ்சா. ஆத்துல சுழி இருக்குன்னா எறங்காம இருந்துடலாம், வூட்லயே இருக்குன்னா எப்பிடி பொழைக்கறது? பேரன் நிக்கறான் கண்ணால வயசுல, நீ பிப்பெடுத்து அலையறயேன்னு தாத்தாகிட்ட சண்டை போட ஆரம்பிச்சா. சண்டை வந்துட்டா தாத்தா திண்ணையில ஒக்காந்து வெடிய வெடிய சுருட்டு புடிச்சிக்கிட்டிருப்பார். வெடியக்காலம் மாமரத்தடியில இருமுவார்.

நோய்நொடி எதுவுமில்லாமயிருந்த தாத்தா எப்பிடி செத்தார்னு யாருக்குமே புரியல. தூங்கறாப்ல தான் சவமிருந்துச்சி மாமரத்து அடிவேர்ல தலைசாய்ச்சி. கெழவன் பிடிகொடுக்காத தால ஆத்திரப்பட்டு ரஞ்சிதமே கொன்னிருப்பாளோன்னு சிலவங்க சொன்னத என்னால ஏத்துக்க முடியல. எனக்கு தெரியும் அவளால அவருக்கு எதிரா சின்னத்துரும்பக்கூட கிள்ளறதுக்கு மனசு வராதுன்னு.

நெஞ்சு நோவுல, இல்லாட்டி பூச்சிப்பொட்டுங்க தீண்டி செத்திருக்கலாம்னும், கெழவி அனத்தலும் ரஞ்சிதம் புடுங்கலும் தாங்காம ஒடுவன் தழையவோ அரளிக்கொட்டையவோ அரைச்சி முழுங்கியிருக்கலாம்னும் ஆளாளுக்கொரு யூகமிருந்தது. ஏதோவொரு வகையில ரஞ்சிதத்துக்கு சாவுல சம்பந்தமிருக்குன்னு இப்பமும் சொல்றான் சாணான். அதுக்கும் காரணம் இல்லாமயில்ல. ஆத்தங்கரையில மேஞ்சாலும் அரமணையில வளந்தாலும் ஆட்டுக்கு வாலு அளவாத்தாண்டா இருக்கணும்... நீ கெட்டக்கேட்டுக்கு எங்க ஜாதியில கூத்தியா வேணுமா... வெட்டி பொலி போட்டுருவோம்ணு அவளோட சொந்தக்காரங்க ஆறேழு பேர் போறப்ப வர்றப்ப தாத்தாவ ஏரியில குறுக்காட்டி நிறுத்தி ஏகத்துக்கும் வம்பிழுத்திருக்கானுங்க. வாய் வார்த்தை வாய்ல இருக்கறப்பவே கை நீட்டியிருக்காங்க ஒருவாட்டி. தாத்தா தாட்டிகம் தான் ஊரறிஞ்சதாச்சே... கைக்கு சிக்குனவங்கள பொரட்டி எடுத்திருக்கார். தோதறிஞ்சப் பயலுக கண்ணுக்கு மொளகாப்பொடி அடிச்சிட்டு சுதாரிக்கறதுக்குள்ள உள்ளடி ஊமையடியா தாத்தாவ மொத்திட்டு ஓடிட்டானுங்க.

அன்னைய சண்டைக்கப்பறமும் அவனுங்க அடங்காம பொங்கித்தான் இருந்தாங்க. தாத்தா மாத்திரம் மசியற ஆளா... இமுட்டு நாளா இல்லாத வழக்கமா அவ வூட்டுக்கே போக்குவரத்துன்னு மாறிட்டார். ஒருநாள் வூட்ல இருக்கறப்ப வெளிய தாழ் போட்டுட்டு ஊரையே கூப்புட்டு காறித்துப்ப வைக்கிறம் பாருன்னு கறுவுன ஒருத்தனைக் கூப்பிட்டு ரஞ்சிதம் நாலுபோடு போட்டப்புறம் அவனுங்க யாரும் அந்த தெசைக்கே திரும்பாம திரிஞ்சாலும் ஆத்திரம் கொறையாமத்தான் அலைஞ்சானுங்க. அவனுங்க தான் தாத்தாவ தீத்துக் கட்டியிருக்கணும்கிறது தான் சாணான் கணக்கு.

வெளிச்சமே இல்லாம பாம்பாட்டம் நீண்டு கடக்குது வண்டியொன்னு. ஒத்தக் கண்போல முன்னாடி மட்டும் சன்ன வெளிச்சம். கூட்ஸாயிருக்கும். மெயிலுக்கு இன்னமும் நேரமிருக்கு. ஆறு மணிக்கு கரண்ட் நின்னுரும். அதுக்குள்ள ரண்டு வயலும் ஒரு குண்டுக்காலும் பாய்ஞ்சாகணும்.

பனியில நமுத்து துப்புட்டி சில்லுன்னு ஆயிருச்சு. குருத்தெலும்பு வரைக்கும் நடுக்குது. செத்தைங்கள பத்தவச்சு சூடு பாக்கவும் வழியில்ல. பனி ஈரம். தாத்தாவாட்டம் சுருட்டு பிடிக்கப் பழகியிருந்தாலாவது கொஞ்சம் சூடு கெடைக்கும்.

தாத்தா இருந்தமட்டுக்கும் ஒரு வேல பாக்கவிட்டதில்ல. ராத்திரி கரண்ட்டோ பகல் கரண்ட்டோ அவரேதான் மடைதிருப்புவார். "புதுப்பெண்ணின் மனதைத்தொட்டுப் போறவரே உங்க எண்ணத்த சொல்லிவிட்டு போங்க" இல்லாட்டி "சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா"ன்னு சீக்கையடிச்சு பாடிகிட்டே வரப்புல நடந்தபடியே எல்லா வேலைங்களையும் முடிக்கிற மாயம் அவர்க்கிட்ட இருந்தது. ராத்திரியில பாட்டுச்சத்தமும் பேட்ரி வெளிச்சமும் ஓயறப்ப ரஞ்சிதத்தோட கால்தண்டை சிணுங்கற சத்தம் கேட்கும். அந்நேரமுட்டும் தூங்கறவளாட்டம் திண்ணையில கெடக்குற தாத்தம்மா தூத்தேறி...ன்னு அந்த தெசையில ஓங்காரிச்சு துப்பிப்புட்டு உள்ளவந்து படுப்பா. விடிஞ்சி மரத்தடிக்குப் போய்ப்பாத்தா ஒடஞ்ச கண்ணாடிவளையல் துண்டு செதறிக் கெடக்கும்.

தாத்தாவுக்கப்புறம் காட்டுவேலையப் பாத்துக்க வச்சிருந்த தொப்பளான் மவன் தருமன், அவங்கக்காளுக்கு கண்ணாலம்னு ஒருவாரமா வரல. வயிலெல்லாம் தண்ணியில்லாம பாளம்பாளமா வெடிச்சுப்போயிட்டதால ராத்திரிக்கு நானே மோட்டார் எடுத்துவுட்டு மடைதிருப்பறேன்னா "வேணான்டா கண்ணு, விடிஞ்சா உங்க தாத்தனுக்கு வௌக்கு வைக்கிற நாளு. செத்தநாள்ல படையலெடுக்க வரும்டா அது"ன்னு நைநைன்னு தாத்தம்மா தொணக்க ஆரம்பிச்சிட்டா. தோது சொல்லி வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு. மொதத்தடவையா கொட்டாய்ல தாத்தம்மா தனியா கெடக்குறா.

கொட்டாய் வளவுல செவலையன் கொலைக்கறது மெயில் சத்தத்த மீறி இங்க கேக்குது. அது ரொம்ப சுட்டி. ஒரு அன்னி அசலை அண்டவுடாது எல்லையில. ஆனா தெரிஞ்சவங்கன்னா மேல தாவி மூஞ்சிய நக்கிரும்.

செவலையன் சத்தம் வளவுல இருந்து கம்பங்காட்டு வழியா ஓடி அது நெட்டுக்கும் ரயில்ரோட்டோரம் கேக்குது. எங்கக் காட்டோரம் எதுக்கு ஓடறேன்னு ரயிலப்பாத்து கொலைக்கறதும் அதுக்கு வழக்கந்தான். ஒவ்வொரு வண்டியோடயும் இந்தச் சண்டை ஓயாம நடக்கும். வண்டி போனப்பறமும் அந்தத்தெசையப் பாத்து கொஞ்சநேரம் கொலைச்சிட்டுத்தான் திரும்பும்.

பளபளன்னு விடியறப்ப கரண்ட் நின்னுருச்சி. அப்பவும் அந்த குண்டுக்கால்ல பாதி கொறையா தங்கிருச்சி. இன்னிக்கு ராத்திரி இதுக்குப் பாய்ச்சிட்டுத்தான் குச்சிக்காட்டுக்கு திருப்பணும்.

மமுட்டியக் கழுவி கொய்யாக்கெளைல மாட்டிட்டு தொட்டித்தண்ணில முங்கியெழுந்து கொட்டாய்க்கு திரும்பறப்பவும் செவலையன் அங்கயே நின்னு கொலைச்சிக்கிட்டிருக்கு. இவ்ளோ நேரமாகியும் ஆங்காரம் மங்காம சத்தம் கூடி வருது. கிட்டப்போய் ஒரு அதட்டு போட்டாத்தான் அடங்கி திரும்பும்னு போய்ப்பாத்தா... ரயில்ரோட்ல சில்லாப் பில்லையா செதறிக் கெடக்கா பொம்பள ஒருத்தி. ரயில்ல இருந்து வுழுந்துட்டாளோ இல்ல குறுக்கப் பாய்ஞ்சாளோ எவனாச்சும் தள்ளிவுட்டுட்டானோ... அட கோரமே நெஞ்சு நசுங்கி கொதகொதன்னு இன்னமும் ரத்தம் பொங்கிட்டிருக்கு. அதங்கி வெளிய தொங்குற கண்ணுங்க காசத்துல எதையோ தேடறாப்ல இருக்கு. துண்டாகி தூரத்தள்ளி கெடக்குற செவத்த கெண்டைக்கால் சதையில 'சாக்கன்'னு பச்சைக்குத்தி... ஐயோ ரஞ்சிதம்... நீயா இப்பிடி...

வெடவெடன்னு நடுங்குது திரேகம். அங்கயிருந்தே தாத்தம்மாள கூப்புடறேன். நான் கூப்புடறது எனக்கே கேக்கல. கேட்டாலும் அவ எழமாட்டா. ராத்திரி முழுக்க தாத்தாவப் பத்தி பெனாத்திக்கிட்டிருந்துட்டு விடியறப்பதான் கர்ருபுர்ருனு கொரட்டைவுட்டுத் தூங்குவா. தூங்கிட்டாள்னா எழுப்பறது அசகாய வேலை. எழுப்பிக் கூட்டியாந்து இப்பவாச்சும் உனக்கு நிம்மதியான்னு கேக்கணும்னு ஆத்திரத்தோட ஓடிப்பாத்தா திண்ணையில கொரவளி அறுந்து கெடக்கா தாத்தம்மா. பக்கத்துல ரத்த ஈரம் காயாம கெடக்குற அருவாமனையில ஈ மொய்ச்சி எரையுது.

தாத்தா சாவுக்கும் தாத்தம்மா சாவுக்கும் காரணம் பிடிபடறாப்ல இருக்கு. யார்க்கிட்ட நின்னு அழறதுன்னு புரியாம கொட்டாய்க்கும் ரயில்ரோட்டுக்கும் பித்துபுடிச்சாப்ல ஓடியோடி திரும்பறேன். எல்லாம் தெரிஞ்சிருந்தும் எதுவுஞ் சொல்லமுடியாம என்கூடவே செவலையன் அலையுது நெழலாட்டம்.

- ஆதவன் தீட்சண்யா
( visaia...@yahoo.co.inஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

சென்ஷி

unread,
May 31, 2010, 1:55:28 AM5/31/10
to panb...@googlegroups.com

சொல்லவே முடியாத கதைகளின் கதை

-ஆதவன் தீட்சண்யா
என் கதையை நானே சொல்லணும்னு ஆசைதான். ஆனா யார்ட்ட சொல்றது? 'உம்' கொட்ட யாரிருக்கா... அவவங்களுக்கு அவவங்க கதையே பெருசு. இதுல அடுத்தாளு கதையைக் கேக்க யாருக்கு ஏலும்...? அதனால தான் யாரும் யார்க்கிட்டயும் எதையும் சொல்றதில்ல. உப்பரிகை மஞ்சத்துல ஒய்யாரமா படுத்திருந்தது, அண்டரண்ட பட்சிக்கிட்ட அளவளாவிக் கிடந்தது, அகிலும் சந்தனமும் பூசி அரண்மனைத் தடாகத்துல நீராடினது, தாதியும் சேடியும் தங்கக் கிண்ணத்துல சோறூட்டினதுன்னு பெருமையா சொல்றதுக்கு நாம என்ன ராசகுமாரியா? மந்திரிமகளா...? கோடுகொடுமையா கெடக்குற பொழப்புல கும்மாளமேது கொண்டாட்டமேது...? சின்னப்பட்டது சீரழிஞ்சதுன்னு நல்லத்தங்கா கதையாட்டந்தான் நம்ம கதையும்.

Woman கதை சொல்றதில் எங்க பாட்டிக்கு ஈடா இன்னொருத்தர் பொறந்து வரணும். அவ்ளோ கதை சொல்வா. தெருப்புள்ளைங்க பூராவுக்கும் எங்க வளவுல தான் ராப்படுக்கை. மழைக்காலத்துல தான் அமுட்டுப்பேரும் படுக்க திண்டாட்டமாயிரும். அந்தா அங்க இடிஞ்சி குட்டிச்செவரா கெடக்கே அதுதான் அப்ப ஸ்கோல். ஸ்கோல்னா என்னா, ராமம்போட்ட வாத்தியார் ஒருத்தர் மாசத்துல ரண்டொருநாள் வந்துபோறதுதான். மத்தநாள்ல பூட்டித்தான் கெடக்கும். நான்கூட ஒருவருசம் போனேன்.

எங்கூர்லயே மொதமொத படிக்கப் போனவள்னுதான் எனக்கு பள்ளிகொடத்தாள்னு பேர் வந்தது. எனக்கப்புறந்தான் அஞ்சாறு பொண்ணுங்க சேந்தாங்க. நாங்க என்னா பண்ணுவம்னா பாட்டியோட அந்த ஸ்கோல் நடைக்கு போயிருவம். மழைக்கு பயந்து ஒண்டியிருக்குற ஆடுங்க தள்ளியிருக்கும் புளுக்கைய தொவரம்மார்ல ஒதுக்கித் தள்ளினப்புறம் சபை கூடும். செவத்தோரமா ஆரம்பிச்சு வட்டங்கட்டி ஒக்காந்தா நான்தான் உம் கொட்டுவேன்னு அடிபிடி நடக்கும். கரோமுரோன்னு கூச்சலாயிரும். பத்தாததுக்கு ஆடுங்களும் பயத்துல மொட்டவாலை ஆட்டிக்கிட்டு செருமும். அடங்கலைன்னா நான் போயிருவேன்னு பாட்டி ஒரு சத்தம் குடுத்தாள்னா போதும் அத்தினி கூச்சலும் அமிஞ்சிரும். அதுல அதிசியம் என்னான்னா ஆடுங்கக்கூட கம்முனு அடங்கிக் கேக்கிறதுதான்.

பாதிகதையில அஞ்சாறு பேருக்கு தலைசாய்ஞ்சிடும். கடைசிவரைக்கும் கதையைக் கேட்டு முடிச்சிட்டுத்தான் தூங்கினேன்னு சொன்னது ஒருத்தருமில்லை. ஏன்னா பாட்டி ஒருநாள்லயும் முடியற கதையை சொன்னதேயில்லை. மறாநாள் வந்து நேத்து எங்க நிறுத்தினேன்னு கேட்பாள் ஒருத்தருக்கும் சொல்ல வராது. எல்லாருமே தூங்கிப் போனப்புறமும் பாட்டி கதை சொல்லிக்கிட்டேயிருந்திருக்கிறா. ஆரம்பிச்சக் கதைய முடிக்கமாட்டாம நாங்கள்லாம் தூங்கிட்டோம்னு தெரிஞ்சிக்கிட்டே சொல்லிக்கிட்டிருந்தாளோ என்னமோ ... ஆனா கடைசிவரைக்கும் ஆடுங்க கேட்டிருக்கும்.

சின்னக்கதையா சொல்லு பாட்டின்னா ஒரு ஊர்ல ஒரு நரியாம் அதோட கதை சரியாம்னு சிரிப்பா. இல்லாட்டி, ஏக்கழுதைங்களா ஏழுசீமைய கட்டியாண்ட ராசாக் கதைய, பதினெட்டுநாள் பாரதத்த, அல்லிஅரசாணிய, அரவான் பலிதானத்த, பதனாலுவருச வனவாசத்த, சீதைய ராவணன் சிறையெடுத்தத, அரிச்சந்தரன் மசானங் காத்ததை, ஒங்களுக்கு ஒருராப்பொழுதுல சொல்லிறமுடியுமான்னு கோவிச்சுக்குவா. அப்புறம் மலையிலிருக்குற சாமிய மடுவுக்கு எறக்கறாப்லதான். காலைகைய அமுக்கி கெஞ்சிக் கூத்தாடினப்பறம் ராசியாவாள். இத்தினிக் கதைய சொன்னவ ஒரு நாளும் அவ கதைய சொன்னதுமில்ல. சொல்லுன்னு நாங்களும் கேட்டதுமில்ல. கதைன்னாலே அது சாமிங்க, ராசாராணிங்க இல்லின்னா மந்திரவாதிங்க, மந்திரத்தை தந்திரத்தால ஜெயித்த மதியூகிங்களைப் பத்திதான் இருக்கும்னு பாட்டியும் நாங்களும் நெனைச்சிருந்திருக்கோம்.

ஒவ்வொருத்தருக்கும் தனியா ஒரு கதை இருக்குன்னு நீ சொல்றது ஆச்சரியமாத்தான் இருக்கு. ஆனா அதையெல்லாம் மறுக்கா நெனைச்சுப் பாக்குற தகிரியமும் பலமும் வேணுமே...கதைன்னா பொழைச்சது மட்டுமா... ஆசைப்பட்டதையும் அடக்கிவச்சதையுமெல்லாம் கூட சொல்லிவரணுமே...அதையெல்லாம் சொன்னா தாங்குமா பூலோகம்... ஆம்பளையா பொறந்திருந்திருந்தா கிருதியா பொழச்சிருக்கலாம்னும் பொம்பளயா பொறந்திருந்தா பொத்திபொத்தி வளத்திருப்பாங்கன்னும் ஆளாளுக்கு மாத்திமாத்தி ஆசைப்பட்டாலும் அததுக்கு அள்ளையில ஒரு சொள்ளையிருக்கு.

கனகம்பீரமான ஆம்பளையாள்கூட கழுவத்தெரியாத கவண்டப் பிள்ளைங்ககிட்டயும் கணக்கய்யரூட்டு பொம்பளைங்ககிட்டயும் கைகட்டி நிக்கவேண்டியிருக்கு. ஊரெல்லாம் ஒடுங்கிநடுங்கி வர்ற அப்பேர்ப்பட்ட ஆம்பளைக்கிட்ட கூட ஒருவார்த்தை தகிரியமா பேசமுடியறதில்ல பொம்பளைக்கு. மேலன்னத்துல நாக்கு ஒட்டிக்குது. அதுவே பரவால்ல. இல்லாட்டி குடிச்சுட்டு வந்து சரிக்குசரியா ஆம்பளையோட வழக்காடறியாடின்னு நெப்புநிதானமில்லாம அடிக்கிறதை வாங்கிக்க எவ ஒடம்புல தெம்பிருக்கு...?

ஏய்...ஈனசாதி நாய்களா...உங்க கதைய பேசத்தான் இங்க வந்தீங்களா.. சாயந்திரம் வரப்புமேல ஏறுறப்ப கூலியில கொஞ்சம் கொறைச்சுட்டா ஒத்துக்குவீங்களா... வேலை நேரத்துல வேலையப் பாக்காம கதைசொல்ல கிளம்பிட்டீங்க.... டேய், யார்டா நீ... மேயற மாட்டை நக்கற மாடு கெடுத்தாப்ல...

தப்பா நினைச்சுக்காதப்பா... நீ போய்டு... பண்ணாடி பாத்துட்டாரு... இதுக்குமேல பேசினா சாணிப்பாலா சவுக்கடியான்னு தெரியாது.. அவசியம் என்கதைய தெரிஞ்சிக்கணும்னா ராத்திரி சாப்பாட்டுக்கப்பறம் வளவுலத்தான் படுத்திருப்போம். அங்க வேணும்னா வாங்க...சொல்றேன்.

வரப்பில் பண்ணாடியும் கொத்துக்காரனும் வரும்போது எந்த வேலையாளும் பேசக்கூடாதுதானே... பொழுதுவிடிய வந்தால் பொழுதமரும் வரைக்கும் வேலையாட்கள் நேரம் கூலி தருபவர்க்கு மட்டுமே பாத்தியப்பட்டது. அதனால் பேச்சும் கதையும் இங்கேயே நிற்கிறது.

வா தம்பி, கொஞ்சம் சாப்பிடறியா... சாம சோறு, கொள்ளுப்பருப்பு தொவையல்... நல்லாருக்கும். சாப்புட்டே வந்திட்டியா ... சரி மறுக்கா வர்றப்ப சாப்டாம வா. நீ போனப்புறமும் பண்ணாடி வஞ்சிக்கிட்டுத்தான் இருந்தாரு... நான் ஒன்னும் பேசல. பேசிறத்தான் முடியுமா... தப்பித்தவறி பேசிப்புட்டா அப்பறம் எங்கப்போய் அண்டுறது... புலிப்பல் பதக்கம் போட்ட செயினும் சிலுக் ஜிப்பாவும் மாட்டிக்கிட்டு இந்தாளைவிடவும் அட்டூழியம் பண்ற பண்ணைங்களையெல்லாம் சவுக்கால வெளுத்து எங்களாட்டம் கூலிங்களுக்கு விமோசனம் தர்ற எம்சியாருக்காவத்தான் சூரியனுக்கு ஓட்டுப் போட்டம்... என்னா ரொணத்தைக் கண்டோம்...

நாயை அடிச்சாக்கூட வாயில்லாத சீவனை ஏண்டா அடிக்கிறேம்பாங்க நாலுபேர். ஆனா எங்காளுங்க 44 பேரை உசுரோட கொளுத்திப் போட்டாங்களே இந்த பண்ணையாருங்கெல்லாம் சேந்து... எங்களுக்காவ சாட்டையுந் தூக்கவேணா சவுக்கும் எடுக்கவேணாம் அனுசரணையா ஒரு வார்த்தை பேச எந்த எம்சியாரும் வரல. அதைவுடு. அந்த சனியத்தப் பேசி இப்ப என்னா வரப்போவுது...

பொழுதும் குனிஞ்சத்தலை நிமிராம களையலசினதால ஏகத்துக்கும் இடுப்புவலி. தண்ணியிலயே இருந்ததுல காலெல்லாம் ஜவஜவன்னு குஞ்ஜு இழுக்குது. அதோடயே வந்து கஞ்சி காய்ச்சறதுக்குள்ள பிள்ளைங்க பசிபசின்னு மொணங்கிக்கிட்டே சொணங்கிப் படுத்துருச்சிங்க. எழுப்பி ஆளுக்கொரு வாய் ஊட்டி படுக்க வைக்கறதுக்கே இவ்ளோ நேரமாயிருச்சு. இன்னம் சட்டிமுட்டி ஒதுக்கிவச்சு கட்டைய கிடத்தறதுக்கு வவுநேரமாகும். ச்சோன்னு ஓஞ்சு படுக்கறப்ப தூங்கிக்கிட்டிருக்கற ஆளுக்கு முழிப்பு தட்டிரும். தூரமாகி ரத்தம்நிக்காத நாள்லயும் பக்கத்துல படுக்காட்டி கொலையாட்டம் போடும் புத்தி அதுக்கு.

அதை கண்டுக்காம வுட்டுட்டு ஒரு வேத்தாளை ஒக்கார வச்சு என்கதைய சொல்லவந்தா வூட்டு ஆம்பளை ஒத்துக்குமா... எங்கூடப் படுக்காம எவனையோ இழுத்தாந்து இவ்ளோ நேரத்துக்கு என்னாடி பேச்சு... யாருடி அவன்... எமுட்டு நாளா நடக்குது இந்த கேப்மாரி வேலைன்னு பிலுபிலுன்னு சண்டைக்கு பிடிச்சுக்கும்... கள்ளப்புருசன் வச்சிருக்கிறவ புருசன் கமுக்கமா இருப்பான். எதுமில்லாதவளைப் புடிச்சிக்கிட்டு ஏலம்போடும் இந்த மனுசன். அடிஉதைன்னா பிரச்னையில்லை. எப்பவும் வாங்கறதுதான்... ஆனா அவுசாரி பட்டம் கட்டி அடிச்சா உடம்பு தாங்கினாலும் மனசு தாங்காதய்யா. நீ போயிட்டு இன்னொருக்க வாயேன்... அப்ப என் கதைய சொல்றேன்...

''பாதுகாக்கப்பட்ட இடம். அத்துமீறி பிரவேசிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்'' என்று மானசீக போர்டு தொங்கும் குடும்பத்திற்குள் வேற்றாள் நுழைய முடியாதாகையால் கதை தொடங்கப்படாமல் முடங்கியேக் கிடக்கிறது என்பதை அறிவீராக.

*****

ஏயப்பா... இவ்ளோநாள் கழிச்சும் ஞாபகம் வச்சிருந்து வந்துட்டியே... வயக்காட்டுலதான் ஒழப்பிக்கிட்டிருப்பாள்னு எங்கூருக்குப் போய் தேடிப் பாத்துட்டு இங்க வந்தியா... நான் ரோட்டுவேலைக்கு வந்துட்டேன்னு உனக்கு யார் சொன்னாங்க... ஊர்ல ஒரு குஞ்சுகுளுவான் கூட இருந்திருக்காதே... எல்லாருந்தான் ராத்திரியோட ராத்திரியா ஊரைக் காலிபண்ணிட்டு வந்துட்டமே.. பொறந்த ஊர் புகுந்த ஊருங்கறதுக்காக புள்ளைகுட்டிங்களோட பட்டினிகெடந்து சாகமுடியுமா.. உட்டுட்டு வரமுடியாதளவுக்கு நமக்குன்னு அங்கென்ன நஞ்சையும் புஞ்சையுமா கெடக்கு... சொந்தமடமில்லாதவங்களுக்கு , ஆனா அந்தமடம் ஆகாட்டி சந்தமடம்.

மழையா மாரியா... ஒருபருவம் தப்பினா உருட்டிபொரட்டி பிழைச்சுக்கலாம். முப்போகம் விளையற பூமியில புல்பூண்டு ஒண்ணுமில்ல.. என்னைத்தேடி போனப்ப நீயே பாத்திருப்பியே... கஞ்சியில்லாமக் கூட இருந்துடலாம். தண்ணியில்லாம இருக்கமுடியுமா... அய்யோ சாமி தாகத்துல உசிர்போகுதுன்னு கத்தினாலும் இந்தான்னு ஒருசொட்டு குடுக்க யார்க்கிட்ட இருக்கு...? கெணறுமுழுக்க வறண்டு தவக்களையும் மீனும் செத்து நாறுது...

தாதுவருசப் பஞ்சத்துலயும் இது கொடுமைன்னு பொலம்பிக்கிட்டேயிருந்த எம்மாமனார்ல ஆரம்பிச்ச வைசூரி பாதிசனத்தை அள்ளிக்கிட்டுப் போயிருச்சு... மிச்சமிருந்தவங்களுக்கு ஒரே கிலேசம்... நீஞ்சத்தெரியாத பிள்ளைய தண்ணிக்குள்ள அமுக்கினாப்ல தத்தளிச்சுப்போயிட்டம். பொணத்தை குளிப்பாட்டக்கூட தண்ணியில்ல. இடுகாட்டுல மேல்மண்ணையே பொறண்டியெடுக்க முடியல. அப்பறமெங்க குழியெடுத்து பொதைக்கறது... அதுக்காவ நாயோ நரியோ இழுத்துக்கிட்டுப் போகட்டும்னு விட்டுடமுடியுமா... சாதி வழக்கமில்லேன்னாலும் எரிச்சோம்...

காலக்கொடுமைய என்னன்னு சொல்றது... பசிதாங்காம பிள்ளைங்க எலி பிடிச்சு சுட்டுத் தின்னதை நெனைச்சா இப்பவும் நெஞ்சு பதறது. வயித்துக்கு சேரலையோ இல்ல மனசு ஒம்பலயோ என்னான்னு தெரியல, புள்ளைங்க கொமட்டி கொமட்டி வாந்தி எடுக்குதுங்க. வெளிய சொல்லமுடியுமா... மானம் போயிரும். ஆனது ஆகட்டும்னு இவங்கப்பன் அன்னிக்கு ராத்திரி கோயில்கலசத்துல பதனம்பண்ணி வச்சிருந்த வெதைதானியத்த களவாண்டு கொண்டாந்துருச்சி. ஆரியமும் கொள்ளும் தான்.

அஞ்சாறு படி சோளமிருக்கும். நெல்லையெல்லாம் ஏற்கனவே யாரோ களவாடியிருக்காங்க. ஊர் அடுப்பெல்லாம் அவிஞ்சுக்கெடக்கறப்ப எங்கூட்டு கூரையில மட்டும் பொகை எழுந்தா சந்தேகம் வந்துடுமேங்கிற பயத்திலயே பாதி உசுரு போயிருச்சு. அதில்லாம, மொதல்ல புள்ளையார் வாகனத்த பொசுக்கித் தின்னிருக்கு புள்ளைங்க, இப்ப அப்பன்காரன் பங்குக்கு கோயில்லயே கைவச்சாச்சு... இப்பிடி அடந்தாப்ல பண்ற தெய்வகுத்தம் அடுக்குமா குடும்பத்துக்குன்னு எம்மாமியா அனத்தல்வேற...

எங்கூட்ல தான் இப்படின்னுயில்ல. ஊரே ஒருவாக்கா முழிபிதுங்கிக்கெடக்கு. இன்னம் எத்தினி நாளைக்கு இந்த நிம்சைன்னு ஊர்க்கூட்டம் போட்டு எல்லாரும் பஞ்சம் பொழைக்க எங்காச்சும் போறதுன்னு முடிவுபண்ணி ஊரைவிட்டுக் கிளம்பினம். அஞ்சாறு குடும்பம் டும்கூர் போயிருக்கு. கொஞ்சம்பேர் ஆந்திராவுக்கு. பெங்ளுர் போலாமான்னு எம்மச்சாண்டார் சொன்னதை யாரும் ஏத்துக்கல.

அங்க ஏற்கனவே போன நம்மூர் சனங்க நாயோட மல்லுகட்டிப்பொழைக்குது. நாமளும் போட்டியா அங்க எதுக்குன்னுதான் திருட்டுரயிலேறி இங்க வந்தம். அந்தா தெரியுதே அந்த மரத்தடியில தான் இருக்கோம். ஒரு சம்சாரி தலைக்கு மூணுபடி ஆரியமாவு. சாத்துசெலவுக்கு சந்தைநாள்ல அஞ்சோ பத்தோ தருவாங்க. சம்பளம் கூலின்னு எதும் கணக்கா பேசல. இப்போதைக்கு கால்வயித்துக்காவது கஞ்சியும் காத்தாட கட்டையக்கெடத்த ஒரு எடமும் போதும்னு ஆயிருச்சு. அதுக்குமேல என்னா வேணும் ஒரு மனுசனுக்கு....

பழக்கமில்லாத வேலைதான். ஆனா கத்துக்கிட்டம். இந்தா இந்த புண்ணெல்லாம் தார் தெறிச்சு பழுத்ததுதான்... எனக்காச்சும் பரவால்ல, எங்கூட்டுக்காரருக்கு தார் சூடு ஒம்பாம வெளிக்கிருந்தா ரத்தரத்தமா போகுது. எதுக்கும் அசராத மனுசன் இப்ப தவியா தவிச்சுத் துடிக்கிறத கண்கொண்டு பாக்கமுடியல. பெரிய புள்ள இங்கதான் இருக்கா. களி கிண்ட தெரியல இன்னம். கட்டியும் புட்டையுமாயிடுது. ஆனா இங்க அக்கம்பக்கம் காட்ல பண்ணைரக்கிரி பறிச்சாந்து வயனமா அவ காய்ச்சுற சாறுதான் அவங்கப்பனுக்கு புடிக்குது. சின்னவ காளேஸ்பரத்துல என்தம்பியூட்ல இருக்கா.

மத்தியான சோறு போடறதால ஸ்கோல் போறா. அவளும் இங்க எங்களோடயே வந்திருக்க வேண்டியவதான். எம்மாமனார் சாவுக்கு வந்திருந்தவன்கூட கௌம்பிப்போனவ அங்கியே நின்னுட்டா. இந்த வைகாசி வந்தா மூணுவருசமாகப்போவுது. புள்ளை இந்நேரம் நெடுநெடுன்னு வளந்திருப்பா. கண்ணுலயே இருக்கற மாதிரியிருக்கு... அவளையும் கூட்டியாந்திருக்கணும் கையோட. அழாதீங்கன்னு சொல்றது உங்களுக்கு ரொம்ப சுளுவு. பெத்தவளால எப்பிடி முடியும்...? அய்யய்யோ... சளி மேல உழுந்துருச்சா... வெள்ளைசட்டையில அப்பிடியே தெரியுமே... அழுதுக்கிட்டே எதோ ஞாபகத்துல சிந்தி சொழட்டிட்டேன்... தப்பா நெனைச்சுக்காதப்பா...சரி...சரி...கிளம்பு... மேஸ்திரி வர்றான்... பேசிக்கிட்டிருக்கறதப் பாத்தான்னா வள்ளும்பான்...

''ஆட்கள் வேலை செய்கிறார்கள். வேறுபாதையில் செல்லவும்'' என்று மேஸ்திரி நிறுத்திச் செல்லும் அறிவிப்பு பலகையில் உள்ளதை கடைபிடிக்காமல் ஒரு சித்தாளிடம் பிறத்தியார் பேசுவதோ சித்தாள் பிறரிடம் பேசுவதோ நெடுஞ்சாலைத்துறையின் நடைமுறை விதிகளை மட்டுமல்ல, ‘பேச்சை குறைப்பீர் உழைப்பை பெருக்குவீர்’ என்ற இருபதம்சத் திட்டத்தையும் மீறுகிற குற்றமாகவும் கருத இடமுண்டாகையால் கதை இப்போதும் துவங்கமுடியாமல் நிற்கப் போகிறது என்பதை மடையர்களும் அறிந்துகொள்ளக்கூடும். கதை இல்லாவிட்டால் என்ன... கவியரசர் கண்ணதாசன் உங்களுக்காகவே எழுதியிருக்கும் இந்த பாட்டைக் கேளுங்களேன்...

அறுபதுகோடி வயிறு நிறைந்திட
இருபதம்சத் திட்டம் வந்ததம்மா...

இருபதம்சத் திட்டம் வந்து என்ன கிழித்தது என்று பாட்டைக் கேட்கும்போதே நீங்கள் யோசிப்பது அரசின் உளவுத்துறைக்கு தெரிந்துவிடும் பட்சத்தில் உங்கள் முதுகுத்தோலும் உதடும் கிழியும் அபாயமிருப்பதை அறியுங்கள். உயிர் வாழ்வதற்கான உரிமையே கிழித்தெறியப்படும் எமர்சென்சியில் நீங்கள் யோசிப்பது சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது. சுதந்திரம், ஜனநாயகமெல்லாம் பறிபோய்விட்டாலென்ன ரயில்கள் தாமதமின்றி குறித்த நேரத்தில் வருவதற்காகவும் ரேசன்கடையில் எடைக்குறைவின்றி பொருட்கள் கிடைப்பதற்காகவும் சந்தோசமடையுங்கள்.

பிரயாணம் போகவும் ரேசன் வாங்கவும் மக்களிடம் காசில்லையே என்று தேசவிரோதமாக யோசிக்காதீர். அப்புறம் புல்டோசரோடும் விருத்தி நரம்பை வெட்டியெடுக்க கத்திரியோடும் சஞ்சய்காந்தி வரக்கூடும். ஆமாம், தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும். பசுவும் கன்றும் முட்டி பரலோகம் சேர்ந்தவர்களின் லிஸ்டை பார்க்க விரும்புவோர் அணுகவேண்டிய முகவரி: ஜெயபிரகாஷ் நாராயண், இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு மற்றும் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று அடுக்குமொழி பேசுவதற்கு முன்பிருந்த கருணாநிதி.

நாலைந்துநாள் தாடியை மழித்துக் கொள்ளப்போனவன் பெண்கள் தங்கள் கதையைச் சொல்வதற்கு எத்தனைத் தடைகள் பார்த்தீர்களா என்றான் பக்கத்தில் அமர்ந்திருந்தவனிடம். பாத்தா படிச்ச ஆளா தெரியறீங்க... சலூனுக்குள்ளாற அரசியல் பேசக்கூடாதுன்னு எழுதிப் போட்டிருக்கறதை படிக்கமாட்டீங்களா... அடுத்தவன் கொள்கைய மதிக்கற பண்பை வளத்துக்குங்க சார்... என்ற அறிவுரைக்கு கீழ்படிந்து வெளியே தலைகாட்டாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான் வெகுகாலம். அதனாலும் கதையின் கதி இப்படியானது.



வா கண்ணு.. நல்லாருக்கியா....கண்ணில்லேன்னாலும் உன்குரல் ஞாபகத்துல இருக்கய்யா. கடைசியா ரோட்டு வேலையில பாத்தது.. அவரு செத்தப்பறம் தனியா ஆம்பிளைத் துணை இல்லாம வெளிய எங்கயும் போகக் கூடாதுன்னிட்டான் தம்பி. சரின்னு அவன்வூட்லயே கொஞ்சநாள் இருந்தோம். காதுதான் கூடப்பிறந்துச்சு, தோடுமா கூடப் பிறந்துச்ச...? அவம்பொண்டாட்டி கண்டதுக்கெல்லாம் நொடுக்குநொடுக்குன்னா. அவங்களையும் பகைச்சுக்கிட்டு எங்கப்போறது வயசுக்கு வந்தப்புள்ளைங்களோட.... அரளிக்கொட்டையோ ஒடுவன்தழையோ ஆளுக்குக் கொஞ்சம் தின்னுட்டு மாஞ்சிரலாமான்னு கூட நெனைச்சேன்...

ஊரையே அழிச்சு முழுங்கின அப்பேர்பட்ட வைசூரி கூட பொழைக்கட்டும்னுதானே நம்மள உயிரோட விட்டுச்சு... அப்பறம் ஏன் நாம சாவணும்னு யோசிச்சுத்தான் பேசாம இருந்துட்டேன் இத்தினிவருசமா... ஆம்புளப்புள்ள வேணும்னு எந்தம்பியே பெரியவளை ரண்டாந்தாரமா கட்டிக்கிட்டான்... சக்காளத்தியாளா வருவான்னு தெரியாம கவுடத்து வூட்ல சேத்தினனேன்னு அவம்பொண்டாட்டி இன்னமும் சாபம்விடுறா... ஆனா எம்மவளுக்கும் பொட்டையாத்தான் பொறந்தது... அன்னையிலயிருந்து, மாமன் முன்ன மாதிரியில்லம்மா... போக்கே சரியில்ல, நாம வேற எங்கியாச்சும் போயிறலாம்னு சின்னவ நச்சரிச்சா.

படிச்சப்புள்ளை இல்லியா... கொஞ்சம் தகிரியம்... அவளாவே அங்க இங்க சுத்தி இந்த வேலையில சேந்துட்டா... தம்பிக்கு இதுல விருப்பமில்ல. அவனுக்கு வேற கணக்கு இருந்திருக்கும்போல.. டவுன்ல புள்ளை ஒத்தையா இருக்கப்படாதுன்னு சொல்லிட்டு நானும் வந்துட்டேன் சின்னவக்கிட்டே. பாவம் பெரியவ... இவன் குடிக்கும் கும்மாளத்துக்கும் அவ எங்கயிருந்து ஈடுகட்டப்போறா...

ஆமா நீ ஏன் இப்பிடி வலுக்கோலா என்கதையக் கேட்டுத் திரியறே... டவுன்காரங்க கதையெல்லாம் உனக்கு பிடிக்கலயா இல்லே கேட்டுக்கேட்டு புளிச்சிருச்சா... காலம்போன காலத்துல என்னைக்கேட்டா எந்தக் கதைய சொல்றது... திரும்பிப் பாக்கற மாதிரியா இருக்கு நான் பொழச்ச பொழப்பு... இல்லே இப்ப இருக்குற இருப்புதான் சொல்லிக்கறாப்ல இருக்கா... இந்தா ஊரே அடங்கிப்போச்சு, காத்தால போன புள்ளை இன்னம் வூடு திரும்பல. கண்ணவிஞ்ச இந்தக் குருடிக்கு அவ வந்தாத்தான் ஒருவாய் சோறு... எப்ப வருவாளோ மவ...

இந்த சின்னவ இருக்காளே, இவ இருக்கறதே பெரிய கதைதான்... இவ பொறந்ததும் எம்மாமியாக்காரி ரண்டாவதும் பொட்டையான்னு கறுவிக்கிட்டே இருந்தா. அப்பிடி இப்பிடின்னு நல்லதும் பொல்லதும் சொல்லி இவளை கொன்னுப் போடறதுக்கு வூட்டாளுகளை ஒத்துக்க வச்சுட்டா. எதுத்து என்னால ஒருவார்த்தை பேசமுடியல. மாலைமாலையா அழுதுகிட்டிருக்கேன். ஆம்பிளையாளுங்க வெளியப் போய்ட்டாங்க. மத்தியானம். தாவரத்துல கிடத்தி பால் குடுத்துக்கிட்டிருக்கேன். வெடுக்குன்னு சிசுவைப் புடுங்கிக்கிட்டு போனவ வூட்டுள்ளப்போய் தாள் போட்டுக்கிட்டா. கொழந்தை வர்வர்னு கத்துது.

கத்தறேன் கதறறேன் ஏன்னு கேக்க ஒரு நாய் வரல... ஆனதுஆகட்டும்னு கூரைத்தடுக்கை பிரிச்சுக்கிட்டு உள்ற எறங்கிப் பாக்கறேன்... சக்கரைத்தண்ணிய கொழந்தை உடம்பு முழுக்க பூசிவிட்டிருக்கா. அடித்தேவிடியா எறும்புக்கு படையல் போடறதுக்காடி எம்புள்ளை...ன்னு மயித்த இழுத்துப் போட்டு பொரட்டியெடுத்துட்டேன் அவளை. நான்மட்டும் அப்ப உள்ளாற போகாட்டி சக்கரைத்தண்ணி வாசத்துக்கும் ருசிக்கும் ஊர்லயிருக்குற அத்தினி எறும்பும் புள்ளைய கடிச்சிருக்கும். வலிதாங்காம கத்திக் கத்தி தொண்டை காய்ஞ்சு நாவடங்கி செத்திருக்கும். ம்ஹ¥ம்... என்னிக்கோ செத்திருக்க வேண்டியவ... அந்த புண்ணியவதிதான் இன்னிவரைக்கும் என்னைத் தாங்கிக்கிட்டிருக்கா.

இன்னங் கொஞ்சநேரத்துல அவ வந்துடுவா. கல்யாணமாகாத ஒரு பொண்ணு வூட்ல இப்பிடி இருட்டினப்பறம் ஒரு ஆம்பளை இருந்தா நாலுபேர் நாலுவிதமா சொல்வாங்க... தயவுசெஞ்சு நீ போயிருப்பா... என்கதைய திருத்தமா கோர்த்து சொல்லணும்னா அதுக்கு எம்மவதான் பொருத்தம். வேணும்னா நாளைக்கு அவளோட ஆபிஸ்ல போய்ப்பாத்து பேசு...பாத்து பத்திரமா போப்பா... வழியெல்லாம் இருட்டு...

கிழவி சொன்ன இருட்டு வழிமுழுக்க நிரம்பியிருந்ததால் திசைமாறிப் போய்விடக்கூடிய அபாயம் உண்டென்ற அச்சத்தோடேயே வீடுதிரும்பியதால் கதைகேட்க போனவனுக்கு மனநிலை பிறழ்ந்துவிட்டது என்ற டிரமாடிக் அல்லது சினிமாடிக் திருப்பத்தை நீங்கள் விமர்சனமின்றி ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். எனவே அவன் பரபரப்பாய் வெளியிட்டு பெயரெடுக்க விரும்பிய உண்மைக்கதை இன்னும் தொடங்கவேயில்லை. (இன்னொரு) எனவே எவ்வித மனவுறுத்தலுமின்றி நீங்கள் வழக்கமான அம்புலிமாமா அல்லது அக்ரகாரத்து அம்மாஞ்சிகளின் கதைகளையோ, கிராமியக்கதைகள் என்ற பெயரில் கம்மாயில் குளிக்கும் பெண்களின் கக்கத்தில் எத்தனை மயிர் என்கிற ஆய்வுகளையோ படித்து பொழுதை எப்படியாவது போக்குமாறு நேர்ந்துவிடப்படுகிறீர்கள்...

பிளாஸ்டிக் குப்பைகளை பொறுக்கிவந்து எடைபோட்டு லாரியில் ஏற்றி எங்கேயோ எதற்கோ அனுப்புகிற அந்த அலுவலகத்தை கண்டுபிடிப்பது அத்தனை கடினமில்லை. செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நம் செல்வம்... என்ற பெரிய பலகைக்குப் பின்னிருந்து வெளியே வந்தவள் கிழவியா அவளின் மகளா என்று துல்லியமாய் பிரித்தறிய முடியவில்லை. பின்கொசவம் முன்கொசவம் தாண்டி அம்மாவுக்கும் மகளுக்கும் அடிப்படையில் வேறெந்த வித்தியாசத்தையும் காணமுடியாமலிருந்தது. கிழவியின் முகத்திலிருந்த துயரத்தின் அத்தனை ரேகைகளும் இவளுக்குமிருந்தன. சிசுவிலேயே பதிந்துவிட்ட அச்சவுணர்வினாலோ என்னவோ மேலெங்கும் மொய்த்து ஊர்கிற எறும்புகளிடமிருந்து தப்பிக்கத் துடிப்பவளைப்போன்று பதற்றத்தோடேயே இருந்தாள். ஓயாமல் இருகைகளாலும் நினைவில் கடிக்கும் எறும்புகளை துரத்தியபடியுமிருந்தாள். குப்பைக்காகிதங்களின் வீச்சத்தை மீறி அவள் திரேகத்திலிருந்து சர்க்கரைத் தண்ணியின் வாசம் இப்போதும் வீசிக்கொண்டுதானிருக்கிறது.

அடுத்தநாளே நீங்க வருவீங்கன்னு எங்கம்மா சொல்லியிருந்தா. நீங்க ஏன்வரலேன்னு விசாரிச்சப்ப உங்களுக்கு மறை கழண்டுருச்சிங்கிற தகவல் கிடைச்சது. ஏற்கனவே நீங்க லூசாயிருக்கறதாலத்தான் எங்கம்மா கதையக் கேக்க நீங்க வந்துபோறீங்கன்ற என்னோட அபிப்ராயத்தில் எந்த மாற்றமுமில்லை. இருந்தாலும் இன்னிக்காவது வந்தீங்களேன்னு சந்தோசம். ஆனா என்ன பேசுறது...? ஏன் இவ்வளவு காலமா பேசமுடியாம இருக்கோம்கிறதை வேணும்னா பேசலாம். பேசமுடியாததுக்கு இன்னின்னார்தான் ஜவாப்தாரின்னு குற்றம்சாட்டலாம். இல்லேன்னா எங்களுக்கே தைரியமில்லாதப்ப, யாரைச்சொல்லி என்ன புண்ணியம்னு நொந்துக்கலாம். ஆனா முடிவு என்னன்னா நாங்க பேசவேப் போறதில்லைங்கறதுதான்.

மத்தவங்க எப்படியோ நானெல்லாம் ரொம்ப முற்போக்குவாதின்னு சொல்லிக்கிற உங்களாட்டம் ஆட்கள்கூட பெண்ணை என்னன்னு பாக்குறீங்க... அந்தா பாருங்க, அந்தநாய் கம்பத்துல ஒண்ணுக்கடிக்குது. அதே உபாதை உங்களுக்கு வந்துட்டா பஸ்ஸ்டேன்டோ பள்ளிக்கூட காம்பவுண்டான்னு பாக்கமாட்டீங்க... ஆயிரம்பேர் ஊர்வலம் போனாலும் அவுத்துக்கிட்டு நிப்பீங்க. ஆனா அப்படியொரு பொது இடத்துல புடவைய வழிச்சுக்கிட்டு நான் உட்காந்துரமுடியுமா.... என்ன இருந்தாலும் ஒரு பொம்பளைக்கு இவ்வளவு கொழுப்பும் ஆங்காரமும் இருக்கக்கூடாதுன்னோ தெனவெடுத்து திரியறான்னோ நினைக்கறதைத்தவிர உங்களுக்கு வேறென்ன யோசிக்கத்தெரியும்...?

இந்த ‘என்ன இருந்தாலும்’கிற வார்த்தைக்கு பின்னால் ஒளிஞ்சிக்கிட்டுத்தான் பெண்ணை வெறும் உடம்பா சதையா பாக்கற உங்க ஊளைப்புத்தியை களத்தில் இறக்குகிறீர்கள்.... இப்படி பேசறது தவிர்க்கமுடியாம ஆண்களை குற்றம்சாட்டுவதாகத் தானிருக்கும். தனிப்பட்ட ஆம்பளைகள் இதற்கு பொறுப்பேற்க முடியாதுன்னாலும் அதில் தானுமொரு அங்கம்னு நினைக்கிறதாலேயே நீங்கக்கூட எனக்கு எதிரா மாறுறதுக்கான வாய்ப்பிருக்கு. வேலைக்குப்போற பொம்மனாட்டிகள்ல 90 சதம்பேர் ஒழுக்கங்கெட்டவங்கன்னு பெரியவா (பெரியவான்னா காண்டாமிருகத்துக்கோ யானைக்கோ பொறந்தவர்னு நீங்க நினைச்சுக்க மாட்டீங்கதானே...) சொன்னது சரிதான்னு கொட்டையெழுத்துல போடுவீங்க... ‘பொம்பளைன்னா அடக்கஒடுக்கமா இல்லாம இப்படியா பேச வர்றது... அப்படியே பேசவந்தாலும் அடக்கஒடுக்கமா இருக்கறதைப்பத்தி பேசவேண்டியதுதானே... படிச்சிருக்கோம்கிற திமிர்ல என்னென்ன பேசுறா...’ன்னு எகிறுவீங்க.

எங்கம்மா காலத்திலாவது பகல் மட்டுந்தான் பண்ணாடிகளுக்கு சொந்தம். இப்பவெல்லாம் ராத்திரிகளும்கூட எங்களுக்கில்லை. நாங்கள் இப்போது நைட்ஷிப்டுகளுக்கும் வருகிறோம். அதனால் பகலோ இரவோ பூட்டியிருக்கும் நுகத்திலிருந்து நாங்கள் நிமிர்ந்துவிடமுடியாது. நிமிர்ந்து நிற்கிற இல்லேன்னா நிமிராமலேயே கூட பேசத்துணிகிற ஒரு காண்டிராக்ட் தொழிலாளியை - அதிலும் ஒரு பெண்ணை - விரும்புகிற முதலாளியோ ஆணோ இதுவரை பிறக்கவில்லை.

.நீங்க கேக்கறீங்களேன்னு இதையெல்லாம் நிஜமல்ல கதைன்னோ கதையல்ல நிஜம்னோ நீங்க போடுற மேடையிலயும் நாங்கவந்து பேசமுடியாது. ஏன்னா பேசிட்டு வந்தப்பறமும் நாங்க பழையமாதிரியேதான் வாழப்போறோம்.. பழசை மாத்தாத எந்தப்பேச்சும் வெறும்பேச்சு மட்டுமில்ல வெட்டிப்பேச்சும்தான். நேரத்தை போக்க வழியில்லாதவங்க பேசிக் கலையலாம். இல்லைன்னா யாரையாச்சும் பேசவிட்டு ரசிக்கலாம். அதுக்குன்னு பாப்பையாக்களும் சுகி சிவம்களும் லியோனிகளும் இருக்காங்க. எங்களை விட்டுடுங்க.

இப்போது கிளம்புங்கள்....

நாலெழுத்து படித்தாலே பொம்பளைகளுக்கு பொடனி சிலுத்துக்கும் என்று தான் உள்ளுக்குள் ரகசியமாய் வைத்திருக்கும் கருத்தை இந்தப் பெண்ணும் உறுதிபடுத்திவிட்டதாக கருதி மகிழ்ச்சியடைந்தவன் வழக்கம்போல் கதை எழுதத் தொடங்கிவிட்டான். ஏன் தங்கள் கதையை சொல்லமுடியவில்லை என்று ஒவ்வொரு பெண்ணும் சொல்ல விரும்புவதையே அவளின் கதையாக அவன் எழுதப்போகிறான் இனியும். நீங்களும் படித்துத் தொலைவீராக....‘ஒரே ஒரு ஊர்ல....’ .

சென்ஷி

unread,
May 31, 2010, 1:58:06 AM5/31/10
to panb...@googlegroups.com

சிதைவு

-பவா செல்லதுரை 

என் எட்டு வயதிலிருந்து பதினெட்டு வயது வரை தொடர்ந்து நடந்த இந்தத் தாக்குதல்களையெல்லாம் திரட்டி ஒரு புள்ளியில் நிறுத்த முடியவில்லை. என் பதினெட்டாவது வயதில் கல்லூரியில் சேர்ந்து ஓரிரு மாதங்களே கடந்திருந்த ஒரு சாயங்காலத்தில் வழக்கம் போல என்னை அடிப்பதற்கு அப்பா கை தூக்கியபோது, தடுத்து நிறுத்தி அவர் கையைப் பிடித்து முறுக்கி, அவர் அலறலில் தெருவே கூடி நின்று வேடிக்கை பார்த்ததும், பலபேர் என் திமிறலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியதும், அத்தனை ஆண்டுகளாய் அவரிடமிருந்து கேட்டு, கேட்டு ஊறிப்போயிருந்த மொத்த கெட்ட வார்த்தைகளையும் அவருக்கெதிராய் தெருவில் நின்று நான் பேசியதும்தான் என் மீதான அப்பாவின் இறுதித் தாக்குதல்.

வீட்டுக்குள் விழும் அடிகளைப் பொறுக்க முடியாமல் தெருவுக்கு ஓடியதும் எப்போது என நினைவுபடுத்த முடியவில்லை. பத்துக்குப் பத்து அறையில் விழும் அடிகள் அபாயகரமானவை. கையில் எது கிடைக்கிறதோ அதை எடுத்து என் மீது வலுவாகப் பிரயோகிப்பதைப் பொறுக்க முடியாமல்தான் வாசல் தாண்டி தெருவுக்கு ஓடிவந்தது. என்னைத் துரத்திக்கொண்டு ஓடிவரும் அப்பாவிடமிருந்து தப்பிப்பது என் இளவயது கால்களுக்குச் சுலபமாக்கப் பட்டிருந்தது. என் மறைவின் உறுதிப்படுத்தலோடு, முனகிக் கொண்டே வீட்டுக்குத் திரும்புவார்.

சரியாக வளர்க்கவில்லையென கெட்ட வார்த்தைகள் அம்மா பக்கம் திரும்பும். அம்மாவின் மறுபேச்சுக்கு அடியோ, அல்லது கால் மிதிகளோ கிடைப்பதும் வழக்கமாகி விட்டிருந்தது எங்கள் வீட்டில்.

அப்பாவிடம் தப்பித்து ஓடி மறைந்து விட்டபின் மீண்டும் வீடு திரும்பலுக்காக நான் பட்ட பிரயத்தனங்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம். ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு மாதிரியான அவஸ்தைகளும், அவமானங்களும். என் +1, +2 காலத்தில் கவிதைத் தனத்தோடு காதல் கடிதங்களை எழுதி கொடுத்து, வாங்கிக் கொண்டிருந்தபோதும் இது தொடர்ந்தது.

அடிபட்ட உடம்போடு நண்பர்கள் வீட்டுக்குப் போவதும், அவர்களின் அப்பா அம்மாவின் அறிவுரைகளால் உடம்பு இன்னும் வீங்குவதும் தாங்கமாட்டாமல் இனி நண்பர்களின் வீடு நம் பதுங்குகுழி அல்ல என முடிவு செய்தபிறகு, கட்டி முடிக்கப்படாத வீடு, வாழ்ந்து இற்று விழுந்த, வாழ்வின் அடையாளமான குட்டிச்சுவர்களின் கொஞ்சம் சுமாரான பகுதிகள், என் வீட்டுக்குப் பின்னாலேயே அப்பாவுக்குத் தெரியாத மறைவுப்பிரதேசங்கள். யாரோ ஒரு பெயிண்டரோடு ஓடிப்போனபின் எப்போதும் பூட்டிக் கிடக்கும் ஜூலி அக்காவின் வீடு... இது எல்லாமும் அப்பாவால் சுலபமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அவரால் யூகிக்க முடியாத ஒரு மறைவிடத்திற்கு மனதால் திட்டமிட்டுக் கொண்டிருந்த போதுதான் அந்தத் தாக்குதலும், துரத்தலும் நிகழ்ந்தது.

தெருவிலேயே விழுந்த இரண்டு மூன்று அடிகளுக்குப் பிறகு அவரிடமிருந்து பிடிநழுவி நாலுகால் பாய்ச்சலில் அடுத்த தெருவுக்குள் நுழைந்து தார் ரோட்டைக் கடந்து, பூட்டியிருந்த சர்ச் கேட்டின் மீதேறி, கீழே குதித்து வெளிச்சத்தில் பார்த்த போதுதான் லேசான ரத்தக்கசிவின் பிசுபிசுப்பை உணர முடிந்தது. அதுவரை உள்ளடங்கியிருந்த வலியும் மெல்ல மெல்ல தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. சர்ச் படிக்கட்டில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் யோசித்தபோது, பிரிக்க முடியாத வலைப்பின்னல்கள் போல என் வாலிபப் பருவம் என் அப்பாவின் கைகளில் மாட்டிக் கொண்டு விட்டதே என்ற துக்கம் என்னைச் சூழத் தொடங்கியது.

ஆனால் பல நேரங்களில் அவர் என் மீது செலுத்தின பேரன்பின் நினைவுகள் வெடித்த இலவம்பஞ்சுபோல என் முன்னே காற்றில் பறந்துகொண்டிருந்தன. நான் மூணாம் வகுப்பு முடிக்கும்வரை தன் தோளில் போட்டுக் கொண்டு தெருவில் நடந்து நடந்து எனக்குக் கதைகள் சொன்ன மனதும் அப்பாவுடையதுதான் என்பதும், எனக்கு இரண்டு காலிலும் கடுவான் வந்து கால்களை அசைக்க முடியாமல் பாயில் படுக்க வைத்திருந்தபோது, குதிரைச்சாணத்தைப் பையில் கொண்டு வந்து சூடாக என் கால்களின் மீது தடவித்தடவி விட்டதும், என்னை ஜட்காவண்டி பிடித்து சந்தப்பேட்டை மிஷன் ஆஸ்பத்திரிக்கு ஒருமாதமாய்க் கூட்டிக்கொண்டு அலைந்ததும் இதே அப்பாதான். வன்முறைக்கும் பேரன்புக்கும் இடையில் நின்று கொண்டிருக்கிற ஒரு திடகாத்திரமான ஹெட்மாஸ்டர் தான் அவர். இந்த ஜென்மத்துக்கும் அடி வாங்காமல் இருக்க நான் என்ன செய்யவேண்டும் என, சர்ச் லைட் வெளிச்சத்திலிருந்து விலகிப் போய் வேப்ப மரத்துக்குக் கீழே பரவியிருந்த இரவின் அடர்த்தியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு யோசித்த வாக்கில் அப்படியே தூங்கிவிட்டிருந்தேன்.

அந்த அடர்ந்த இருட்டைச் சுக்கு நூறாக்கிய தேவாலய மணி ஓசையின் சப்தம், குளிரில் முடங்கிக் கிடந்த என் உடலில் மின்சார ஒயர்கள் பாய்ச்சப்பட்டது போலப் பிடித்து எழுப்பியது. பயமும், உடலில் ஒட்டியிருந்த மீதி வலியும், நான் எங்கிருக்கிறேன், நேற்றிரவு என்ன நடந்தது, இப்போது என்ன ஆனது என்பதையெல்லாம் உடலில் பரவும் காய்ச்சல்போல உணர்த்தியது.

எழுந்து சப்ளாங்கோல் போட்டு உட்கார்ந்து கொண்டேன். சப்தம் என்னிடமிருந்து அறவே அகற்றப்பட்ட ஒன்று போல விலகிவிட்டிருந்தது. கூர்மையாக்கப்பட்டு, சகல கவனத்தோடும் உற்று நோக்கப்படும் ஏதாவதொரு கண்களுக்குத் தவிர்த்து என் இருப்பை அறிய சாத்தியமேயில்லை.

மணி ஒலித்துக் கொண்டேயிருந்தது. விட்டு விட்டு இரட்டை இரட்டையாக ஒலித்த அதன் ஓசை யாருடைய மரணத்தையோ சபைக்குச் சொல்லிக்கொண்டிருந்தது. இப்படியே நான் இந்த வேப்பமரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டாலும் இந்த மணி இப்படித்தான் ஒலிக்குமோ என்ற யோசனை வந்துபோனது. என் மீது ஒட்டிக்கிடக்கும் இந்தத் தனிமையை நான் துடைக்க முயன்ற நேரம், தாஸ் ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு சர்ச் படிக்கட்டில் உட்கார்ந்தான். அந்த இரவைப் பிளப்பதற்கு அவனுக்கு ஒரு பீடி நுனியின் கங்கு போதுமானதாய் இருந்தது.

ஒரு நொடியில், அந்தப்படிக்கட்டின் மத்தியில் உட்கார்ந்து அவனை நெருங்கியிருந்தேன். என்னை பார்த்த நிமிடம் அவன் அதிர்ச்சிக்குள்ளாகி மீளுவது எனக்கு உறைத்தது.

இந்த அகாலம், இந்த இடம், தேவாலயத்திலிருந்து ஒரு சின்ன கேட்டை திறந்தால் விரியும் பழைய கல்லறை. அதனுள்ளிருந்து வந்த என் வருகை அவனை நிலைகுலைய வைத்து, வார்த்தைகள் வெளிவராமல் மௌனத்தால் உறைந்திருந்தான். நானேதான் பேச ஆரம்பித்தேன்.

“ஒண்ணுமில்லே, வழக்கம் போலதான் ... ராத்திரி அப்பா செமத்தியா அடிச்சிட்டார்”

“வயசாச்சேன்னு அந்தாளுக்கும் அறிவில்லை, வயசு ஏறுதேன்னு உனக்கும் புத்தியில்லை”

இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவன் என் அப்பாவை அறிவில்லாதவன் என்று சொன்னது அவன் மீது எரிச்சலை ஏற்படுத்தியது. இந்தக் கோயில்பிள்ளை வேலையே அப்பா அவனுக்குப் போட்ட பிச்சை என்பது எனக்குத் தெரியும். பேச்சை மாற்ற,

“யாரு செத்துட்டாங்க?”என்றேன்

“தேவஇரக்கம் அய்யாவோட அம்மா”

இன்னொரு பதட்டத்துக்கு நகராமல் மனம் சமாதானம் அடைந்தது.

“நான் வீட்டுக்கு போறேண்ணா”

என்று அங்கிருக்கப் பிடிக்காமல் அவன் பேச ஆரம்பிக்கும்முன் அங்கிருந்து அகன்றேன். எகிறி குதிக்க அவசியமின்றி சர்ச் கேட் திறந்து கிடந்தது.

பனியில் லேசாக நனைந்திருந்த தார் ரோட்டில் வெறும் கால்களோடு நடப்பது கொஞ்சம் சுகமானதாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை இருட்டு அடர்ந்திருந்தது. தெரு ட்யூப் லைட்டுகளில் எங்கோ ஒன்றுக்கு மட்டும் தான் உயிர் இருந்தது. அந்த இருட்டு இந்த என் மனநிலைக்கு ரொம்பவும் அவசியப்பட்டது. திசை எதுவாகிலும் இலக்கில்லாமலே நடக்கவே விரும்பினேன். எதுவுமற்றவனாகி எல்லாவற்றின் மீதும் வெறுப்பு மேலோங்கியது. ஆனாலும், வேட்டவலம் சாலை சந்திப்பை நோக்கியே நடக்க ஆரம்பித்தேன். எனக்கு நானே துணையில்லாத தருணமது.

எல்லா இரவுகளுமே இப்படியான அமைதியில்தான் மூழ்கியிருக்குமோ என நினைத்தேன். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே வாசலில் படுத்து கதை கேட்ட இரவுகள் ஞாபகத்துக்கு வந்துபோனது.

அஞ்சு நிமிஷ இலக்கற்ற என் நடை, அந்தப் புளியமர இருட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய ஒரு சைக்கிளால் நின்றது. அந்த ஆள் தன் முகம் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில், என்னைத் திரும்பி பார்க்காமல் வேகமாக மிதித்துக் கடந்தான்.

பருத்தகன்ற புளிய மரத்தின் பின்னாலிருந்து ஒரு குச்சியை சுற்றியடி அவள் வெளிப்பட்டாள்.

விஜயா.

அவள் உண்மையான பெயரே கூட அதுவாக இருக்கலாம். ஆனால் இந்தப் பெயரில்தான் சமீப நாட்களில் எங்கள் பகுதியில் அவள் இரகசியமாக அறியப்பட்டாள். வசீகரமான உடல்வாகு அவளுக்கு வாய்த்திருந்தது. கண்கள் மட்டும்தான் எந்நேரமும் வெளியில் வந்து விழுந்துவிடலாம் என பயமுறுத்திக் கொண்டிருந்தது.

தன் குடிசை வீட்டில் மூன்றாம்தரமான பெண்களை வைத்துத் தொழில் நடத்திக்கொண்டிருந்த டில்லி அம்மாவுக்கு விஜயாவின் வருகை லாட்டரிதான் என்று தெருவில் பேசிக்கொள்வார்கள். ஆறேழு மாதங்களாக எங்கள் பகுதியில் விஜயாவின் நடமாட்டம் வயது பேதமின்றி ஆண்கள் மத்தியில் ஒருவித ஈர்ப்பை உருவாக்கியிருந்தது. பொழுது மங்கும் சில சமயங்களில் யாராவது ஒரு சின்னப்பையனை சைக்கிள் கேரியரில் உட்கார வைத்துக்கொண்டுச் சத்தமாகப் பாடிக்கொண்டே அவள் சைக்கிள் ஓட்டுவதைத் திருட்டுத்தனமாகவேனும் பார்க்கும் கண்களை நானறிவேன். மடிப்பு மடிப்பான அவள் இடுப்புச்சதை ஆண்களின் ஏக்கப் பெருமூச்சுகளாலும், நிறைவேறாத கனவுகளாலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

அடிக்கடி வந்த என் தொடர் கனவில், விஜயா சைக்கிள் ஓட்டும் காட்சியும், கேரியரில் நான் உட்கார்ந்திருப்பதும், அவள் பழைய காதல் பாடல்களை பாடிக்கொண்டே யாருமற்ற ஒற்றையடிப் பாதையைக் கடப்பதும், சுகமான அவஸ்தையாக வளர்ந்து கொண்டிருந்தது.

“இந்த நேரத்துல எங்கேருந்து வர்ற ...” என்ற அவள் கேள்விக்கு நான் முகம் திருப்பிக் கொண்டேன்.

“என் மேல கோவமா?”

நான் மௌனமாகத்தான் நின்றேன்.

“இந்த வயசுல நீ கெட்டுப்போய்டுவேன்னுதான் அன்னிக்கி அப்படிச் சொன்னேன்.”

நான் தலைகவிழ்ந்து நின்று கொண்டிருந்தேன். புளியமர இருட்டு என் மௌனத்தை அடைகாத்தது.

கார்த்திகை திருவிழாக் காலங்களில் ஊரின் முகமே மாறும். புதுப்புது மனிதர்கள், புதுப்புது விளையாட்டுகள், ரங்கராட்டினம், வித்தை காட்டுபவர்கள், மூணுசீட்டாடுபவர்கள், சிங்கம், புலி, கரடி படம் வரைந்து காசு வைக்கச் சொல்லி ஏமாற்றுபவர்கள் என ஊர் பலவித மனிதர்கள், பலவித வேடிக்கைகளால் நிறையும்.

டியூஷன் முடிந்து பிரபாகரனோடு வந்து கொண்டிருந்த ஓர் முன்னிருட்டில் முனிசிபல் ஸ்கூலுக்கருகில் சுற்றி நின்றிருந்த கூட்டத்திற்கு முன்னால் ஒருவன் தன் மொழியால் வித்தை காட்டிக் கொண்டிருந்தான். சாணி மெழுகப்பட்ட மூங்கில் கூடை ஓர் ஓரமாக வைக்கப்பட்டிருந்தது. தன் வார்த்தைகளால் அவன் கூட்டத்தைக் கட்டிப் போட்டிருந்தான். அவன் நெற்றியில் தீட்டப்பட்டிருந்த கறுப்பு மையும், அதன் மீதே அப்பப்பட்டிருந்த குங்குமமும், துணியால் தைக்கப்பட்டிருந்த ஒரு பொம்மைக்கு அவன் செய்திருந்த அச்சமூட்டும் அலங்காரமும் ஒருவரையும் நகரவிடாமல் செய்து விட்டிருந்தது. கூட்டத்திற்குள் நுழைந்து திரும்பிப் பார்த்தேன். பிரபா விடுபட்டிருந்தான். அடுத்த ஐந்தாவது நிமிடம் அந்தக் கூட்டத்தின் அச்சம் எனக்குள்ளும் அப்பிக் கொண்டிருந்தபோது, முழுக்க வண்ண வண்ண வளையல்கள் அணிந்த ஒரு கையால் என் கை பிடிபடுவதை உணர்ந்தேன். முரட்டுத்தனமான பிடி அது.

“தள்ளி நில்லுடா”

பதட்டமாகி விலகினேன். அவள் பார்வை கீழிறங்கி என் கால் சட்டையில் நின்றது.

“படிக்கிற வயசுல ...” என முனகிக் கொண்டே அவள் அங்கிருந்து நகர்ந்ததும், என் மீது விழுந்த அற்பப் பார்வைகளைப் பிடுங்கிக் போட்டுக் கொண்டே மிகுந்த அவமானமுற்று நானகன்றதும் தான் அவளுடைய இன்றைய விசாரிப்பு.

“சொல்லு என் மேல கோபம்தானே ...”

இப்போது என் கன்னத்தைத் தொட்டு முகத்தை நிமிர்த்திக் கேட்டாள்..

என்னை மிக நெருங்கியிருந்த அவள் மீதிருந்து பரவிய மணம் நானறியாதது. மயக்கத்தைக் கோருவது.

“இல்லை .... ஆமாம் ...”

பளீரெனச் சிரித்தாள். மிருதுவான விரல்கள் என் கன்னத்திலிருந்து விடுபடாமலே “டீ குடிக்க வர்றீயா?" என்றாள்.

மறுத்துத் தலையாட்டினேன்.

‘ஆமாம் எங்கூட வரமுடியாதுதான். நீ முன்னாலே போ, நான் கொஞ்ச நேரம் சென்னு வர்றேன்’ என்ற வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு வேட்டவலம் சாலைச் சந்திப்பை நோக்கி நடந்தேன்.

ஏ.பி.கே. ரைஸ்மில்லைத் தாண்டும்போது இரண்டாம் ஆட்டம் முடிந்து யாரோ இரண்டுபேர் சத்தமாகப் பேசிக் கொண்டே என்னைக் கவனிக்காமல் போய்க்கொண்டிருந்தார்கள். இந்த ரைஸ்மில்லிலிருந்து ஆரம்பித்து பெட்ரோல் பங்க்வரை ரோட்டின் மேற்கே அழகழகான குடிசைகள் நிறைந்திருந்தபோது இத்தனிமையின் அவஸ்தை இல்லை. குளிர்காலங்களில் கூட போர்வைப் போர்த்திய நெருங்கிய உடல்களின் தெருவோர உறக்கம் காணக்கிடைக்கும். ஸ்கூலுக்கு சைக்கிளில் போகும்போது தென்னந்தட்டி மறைப்பில் குளித்து, மார்புவரை உயர்த்திக் கட்டிய பாவாடையும், தோள்மீது கிடக்கும் புடவையுமாக அவசர கதியில் மறையும் அன்னக்கிளி அக்காவின் தோற்றத்திற்காக தவிக்கும் மனசு பல நேரம் பீடிப்புகை பெருகும் உதட்டோடு வெளிப்படும் அவள் புருஷனின் உருவம் கண்டடங்கும்.

நெடுஞ்சாலைத்துறையால் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஜே.சி.பி. மொத்த வீடுகளையும் சில மணி நேரங்களில் துடைத்து, மனிதர்களை திசைகளின் இடுக்குகளில் தூக்கி எறிந்து, சாலையின் இரு பக்கங்களையும் துடைத்தடங்கிய போது நிரந்தர இருட்டும், பயமும் குடிசைகளுக்குப் பதில் குடியேறிருந்தது. 

டீக்கடைக்குப் போகலாமா? இப்படியே வீட்டிற்கு ஓடிவிடலாமா? என்கிற இரண்டு சிந்தனைகளுக்கிடையில் நடந்து கொண்டிருந்தேன்.

அவளோடு பேசினதும், அவள் என்னைத் தொட்டதும், அது விவரிக்க முடியாத அவஸ்தையைக் கொடுத்ததும், பிரக்ஞை திரும்பி, சகஜ நிலையில் அதை யாராவது பார்த்திருந்தால் தன் குடும்பத்திற்கு எத்தனை பெரிய அவமானமென்றும் நினைத்தேன். ஆனால் சகஜ நிலைக்குத் திரும்பாமல் இருப்பதையே மனம் விரும்பியது. என்னென்னமோ யோசனைகளின் மீதான நடை டீக்கடைக்கு கொண்டு போய் நிறுத்தியது.

விஜயா எனக்கு முன்னமே அங்கு வந்துவிட்டிருந்தாள். அந்தக் கடைக்கே அவள்தான் எஜமானி போல அங்கிருந்தவர்களிடம் சத்தமாகப் பேசிச் சிரித்துக்கொண்டு அந்த பின்னிருட்டைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தாள். டியூப் லைட் வெளிச்சத்தில் அவளை உற்றுப்பார்த்தேன். அவள் பிருஷ்டம்வரை தொங்கிய மல்லிகைச் சரம், அப்போதுதான் வைத்த மாதிரி கலையாமல் இருந்தது. நான் பார்ப்பதை யாரும் பார்க்கிறார்களோ என்ற பதட்டமே அவளுக்கு என்னைக் காட்டிக் கொடுத்தது. இந்த முறை தனக்குள் ஆழமாய்ச் சிரித்துக் கொண்டு, எனக்கு ஒரு டீ ஆர்டர் தந்தாள். அவளைத் தொட முயன்று அவள் பார்வையின் தீவிரத்தைத் தாங்க முடியாமல் அவளைத் திட்டிக் கொண்டே நகர்ந்த டிரைவர் ஒருவன் என்னையும் முறைத்தான்.

டீக்கடைக்காரன் என்னைச் சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டே டீ கொடுத்தான். என் அப்பாவிடம் இந்த இரவைப் பற்றி இவன் சொல்லக்கூடுமோ என்ற பயம் எனக்குத் தொத்திக் கொண்டது.

“எனக்கு வேண்டாண்ணே” என்று மறுத்துவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். யாருமே இல்லாத அந்தத் தார்ச்சாலையில் கண்ணன் ரைஸ்மில்லைத் தாண்டுவதற்குள் அவள் இவனை சமீபித்து “ஸ்கூல் கிரவுண்டுக்கு வரமுடியுமா, கொஞ்சம் பேசணும்” என்றாள்.

“உங்கூட நான் எதுக்கு வரணும்”

சொல்லும் போதே அவளோடு போனால் என்ன? என நினைத்தேன்.

“புடிக்கலைன்னா வேணாம்” என்று நின்று கொண்டாள்.

இப்போது எனக்கேற்பட்டிருந்த தைரியம் என்னை என் வீட்டிற்கனுப்பியது. யாருமற்ற இது போன்ற இரவுகள் என்னை எங்கெல்லாமோ கொண்டு போய்விடுமோ என்றும், கொண்டு போக வேண்டும் என்றும் நினைத்தேன்.

உறங்கும் தெரு மீது இருட்டு ஒரு போர்வை போல மூடியிருந்தது.

என் வீட்டில் எல்லா விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தது என்னை பதட்டப்படுத்தியது. மெல்ல உள்நுழைந்து எட்டிப் பார்த்தேன். பாட்டி மட்டும் கால்களை நீட்டிப் போட்டுக் கொண்டு, சின்ன உரல் உலக்கையால் வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தாள்.

இரகசியமான குரலில் “ஆயா அப்பாவும், அம்மாவும் எங்க?” என்றேன்.

அதிக பதட்டப்படாமல், “ஏண்டா எங்க போயிருந்த, அந்த மனுசன் இந்த பொம்பளைய கூட்டிக்கிட்டு ராத்திரியெல்லாம் உன்னை தேடிக்கிணுகீறான்” என்றாள்.

‘சாப்டயா’ என்ற தளர்ந்த குரல் கவனப்பாரின்றி கரைந்தது.

சத்தம் போடாமல் கட்டிலுக்குக் கீழே ஒரு பாயைப் போட்டு படுத்துக் கொண்டேன். விஜயாவின் உலகம் குறித்துப் பொறாமையாக இருந்தது. அவள் சைக்கிள் ஓட்டுவதும், நீளும் இரவுகளின் வெளிகளில் சுத்துவதும், டீக்குடிப்பதும், யாரோடு வேண்டுமானாலும் ஸ்நேகித்திருப்பதும் எத்தனை சுதந்திரமானவள் என்ற நினைவின் நீடிப்பினூடே ..

தெருவில் துரத்தி, துரத்தி அடிக்கிற அப்பா அவளுக்கு வாய்க்காமல் போனது எவ்வளவு அதிர்ஷ்டவசமானது என்பதோடு கூடவே ...

அவள் திரும்பிப் போக, வீட்டில் இது மாதிரி பின்னரவில் விளக்கெரியாமல் இழுத்து மூடப்பட்ட கதவுகளுக்குப்பின் குறட்டை விட்டு நிம்மதியாய் தூங்கிக்கொண்டிருந்த ஓரு கணவனின் முகம், அந்தப் பின்னரவில் கெட்ட வார்த்தைகள் சொல்லி என்னைத் திட்டிக் கொண்டே உள்ளே நுழைந்த அப்பாவின் குரலில் சிதைந்தது.

- பவா செல்லதுரை

சென்ஷி

unread,
May 31, 2010, 2:04:04 AM5/31/10
to panb...@googlegroups.com

பிரார்த்தனைகளும் பிரசாதங்களும்

இராசேந்திர சோழன்

இவன் கட்சிக்கு வந்த இந்த ஏழெட்டு ஆண்டுகளில் இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் போகாமலிருந்ததில்லை. ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம், மாநாடு, ஆர்ப்பாட்டம், தர்ணா என, எல்லாவற்றுக்கும் - பல நிகழ்ச்சிகள் இவனுக்கு நேரடியாக சம்பந்தமற்றவை என்றாலும்கூட - எல்லாத் தோழர்களையும் சந்திக்க, அளவளாவ ஒரு வாய்ப்பு என்று தோளில் பையை மாட்டிக் கொண்டு கிளம்பிவிடுவான். 

மாநாட்டில் பேராளராகக் கலந்து கொள்வது என்பது பெரும் வாய்ப்புதான் என்றாலும் இந்த மாநாட்டில் இவனால் கலந்து கொள்ளமுடியவில்லை. அலுவலகத்தில் தணிக்கை நடந்து கொண்டிருந்தது. முக்கியப் பொறுப்பில் இருக்கும் இவனுக்கு விடுப்பு பெற முடியாத நிலை. தவிர, துணைவியாருக்கும் இது பேறு காலமயிருந்தது. இளம் மனைவி. முதல் பிரசவம். இப்பவோ அப்பவோ என்று இருக்க உதவிக்கும் வேறு யாரும் இல்லாத சூழல். தனியே விட்டு விட்டுப் போக முடியாத சங்கடம்.

வேறுவழியின்றி தன் கருத்துகளை எழுத்துவடிவில் சகபேராளர் ஒருவர் மூலம் தந்தனுப்பிவிட்டு, மாநாட்டு முடிவை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருந்தான்.

மாநாடு என்பது கட்சி வரலாற்றில் இயல்பாக நடைபெறக்கூடிய ஒன்றுதான் என்றாலும், இது அமைப்பு மாநாடு என்பதாலும், இதில் பல முக்கிய முடிவுகளை மேற்கொண்டு கட்சியின் செயல்பாடுகளில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் மாநாடு என்பதாலும் இதற்கு முக்கியத்துவம் தந்திருந்தான்.

சமீப சில ஆண்டுகளாகவே கட்சிக்குள் ஒரு மத மதத்த தன்மை ஊடுருவி, தோழர்கள் பலரும் உற்சாகமின்றி இருந்து வருவதை இவனால் உணரமுடிந்தது. ஏறக்குறைய இவனுக்கும் அதேபோல்தான் இருந்தது. கட்சி செயல்பாடு என்பது ஆண்டுக்கு ஏதாவது சில நிகழ்ச்சிகள், உள்ளூர்ப் பிரச்சனைக்கு இரண்டு, உலகப் பிரச்சனைக்கு இரண்டு ஏதாவது போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று நடத்தி கட்சியின் இருப்பைக் காட்டுவது அல்லது தக்க வைத்துக் கொள்வது என இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருந்தது ஒரு புறம் இருக்க தேர்தல் வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு கூட்டணியில் அணிகளையும் அதற்கேற்ப வளைக்க தோழர்கள் பெரிதும் களைப்படைந்திருந்தார்கள்.

“என்னா தோழர் கட்சின்னா, ஒரு ‘க்ரியேடிவ் பாலிடிக்ஸ்’ இருக்க வேண்டாம்?. சும்மா தேர்தலே அரசியல்னு அதுக்காகவே கட்சி நடத்தற மாதிரி இருக்குது. அப்பப்ப மாத்தி மாத்தி ஏதாவதொரு கட்சியோட கூட்டு வச்சிக்னு”

“அதவுட்டாதான் வேற என்னா இருக்கறது சொல்லுங்க. தேர்தல்தான அரசியலே...”

“இப்படியே இருந்தா இருக்கறதும் தேஞ்சிடும். புதுசா வர்ர தோழர்கள ஈர்க்க மாதிரி, அவங்களோட தெறமைகள ஆற்றல்களப் பயன்படுத்திக்கிற மாதிரி கட்சில என்னா வேலைத்திட்டம் இருக்குது சொல்லுங்க. பூர்ஷ்வா கட்சிங்க மாதிரி தேர்தலுக்குத் தேர்தல் ஒலிபெருக்கியக் கட்டிக்னு ஒட்டுக் கேக்கறதுதான் வேலைத்திட்டம்னா யாருக்குத்தான் உற்சாகம் இருக்கும்”

இப்படி அதிருப்திகள பரிமாறிக் கொள்ளப்படும் போதெல்லாம் “நமக்கு மட்டும் இப்பிடி இல்ல தோழர் பல பேருக்கு இப்பிடி இருக்குது. எல்லாம் இந்த மாநாட்டுல விவாதத்துக்கு வரும். பேசி நல்லவிதமா ஒரு முடிவு எடுப்பாங்க. அப்புறம் கட்சியினுடைய தன்மையே வேற மாதிரி ஆயிடும் பாருங்க” என்று சில தோழர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.

இது எல்லாவற்றையும் வைத்துத்தான் இவனும் இந்த மாநாட்டை மிகுந்த ஆவலோடு எதிர் நோக்கியிருந்தான். பேராளராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே மாநாட்டில் என்னென்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதையெல்லாம் திட்டமிட்டிருந்தான். ஆனால் இப்படி போகமுடியாமல் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை வீட்டில்தான் இருந்தானேயொழிய மனசெல்லாம் மாநாட்டில்தான் இருந்தது. யார் யார் வந்திருப்பார்கள் என்னென்ன பேசியிருப்பார்கள், என்னென்ன புதிய முடிவுகள் மேற்கொண்டிருப்பார்கள், திருப்பு முனையாக கட்சி என்னென்ன நிலைபாடுகள் எடுத்திருக்கும் என்று இதே சிந்தனையாக இருந்தான்.

மூணுநாள் மாநாட்டில் நிறைவு நாளான இன்று ஒரு நாள் மட்டுமாவது போய் வந்துடலாமா என்ற நினைத்தான். மாநாடு நடைபெறும் இடத்துக்கு போகவே அரைநாள் ஆகிவிடும். அதற்குள் அங்கு பேராள்கள் அரங்கம் முடிந்து விடும். பிறகு ஊர்வலம் பொதுக்கூட்டம் பார்த்து இரவே திரும்புவதானாலும் கூட காலையில்தான் வந்தசேர முடியும். மனைவி இருக்கிற நிலையில் தனியாக விட்டுவிட்டு எங்கே கிளம்புவது என்று நினைத்துக் கொண்டான்.

சொல்லி வைத்தமாதிரி சோதனையாக மாலை 5 மணிவாக்கில் மனைவிக்கு பிரசவ வலியெடுக்க மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தான். இரவு ஏழு மணிவாக்கில் சுகப்பிரவசம், பெண் குழந்தை. நல்ல வேளை பக்கத்திலிருந்தது நல்லதாய்ப் போயிற்று என்று சொல்லிக் கொண்டான்.

இரவு முழுக்க மாநாடுபற்றியே ஏதோதோ கனவுகளாக வர, விடிய எழுந்து மருத்துவமனை போய் மனைவிக்கு காபி, ரொட்டி தேவையானவற்றை வாங்கிக் கொடுத்துவிட்டு, அடுத்த தெருவில் நண்பனைப் பார்க்கப் புறப்பட்டான்.

நண்பன் மனைவி வராந்தாவிலேயே எதிர்ப்பட்டாள்.

“வந்துட்டாரா...”

“இப்பத்தாங்க வந்து படுத்தாரு. ஒரு அரைமணி நேரம் இருக்கும். ராத்திரியெல்லாம் தூக்கமில்ல ஒரு ஒம்பது மணிக்கா எழுப்பி உடுபோதும்ன்னார்! எழுப்பவா” என்றாள்.

இவன் சற்றுத் தயங்கி, “வேணாம், ஆபிஸ்ல பாத்துக்கறேன்” என்று சொல்லி விட்டுத் திரும்பினான். சற்று முன்னதாகவே அலுவலகம் வந்து காத்திருந்தான். பத்தரை மணிவாக்கில் நண்பன் வந்தான். தூக்கத்தைத் தவறவிட்டு நேரங்கெட்டு தூங்கியெழுந்தால் இரப்பைகள் கனத்துத் தெரியும். அதுபோல தூக்கம் முற்றாகத் தெளியாத முகத் தோற்றத்துடனேயே தெரிந்தான்.

இருக்கையில் அமரப்போனவனை “என்னப்பா மாநாடெல்லாம் எப்படி” என்று கேட்டபடியே எதிர் இருக்கையில் அமர்ந்தான்.

“ரொம்ப சிறப்பா இருந்தது. மூணுநாளும் என்.வி. தான், மொத நாள் மீன் கொழம்பு, ரெண்டாம் நாள் சிக்கன், மூணாவது நாள் மட்டன். கூடவே வட பாயாசம் வேற”

இவன் சிரித்தான் “ஏம்ப்பா. நான் அதையா கேட்டேன் மாநாடு எப்பிடி இருந்ததுன்னா...”

“எல்லா வழக்கம் போலதான்”

“என்னா...”

“கொடியேற்றல். அறிக்கை, பிரதிநிதிகள் விவாதம், தொகுப்புரை, புதிய நிர்வாகிகள் தேர்வு, ஊர்வலம். பொதுக்கூட்டம் எல்லாம் தான்..”

“புதிய நிர்வாகிகள் யாரு?

“எல்லாம் பழசுதான். எதுவும் மாற்றமில்ல. மாநிலக் குழுவுக்கு ரெண்டுபேரு; மத்தியக் குழுவுக்கு ஒருத்தரு மட்டும் புதுசா சேர்ந்திருக்கறாங்க. மற்றபடி எல்லாம் அதேதான்”.

“புதுசா சேத்தது யார் யார..”

நண்பன் விபரம் சொன்னான்.

“அப்பிடியா... எல்லா ஜால்ராவா தான் பாத்து சேத்துக்கறங்க” என்றான். “சரி அப்பறம் என்ன முக்கிய முடிவுகள்”

“முக்கிய முடிவுகள் என்ன, தேர்தல்தான். வரக்கூடிய தேர்தல்ல நமக்கு யாரோட கூட்டு, எப்பிடி நடந்துக்கணும், தேர்தல் வேலைகளை எப்பிடி செய்யனும். நிதி எப்படி வசூல் பண்ணனும்ன்னுதான்...”

“வேற போராட்டம் ஏதாவது...”

“ம்....”

“என்னா...?”

“மத்திய மாநில அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து மார்ச் 18 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா...”

“போன வருடமும் இதான் நடத்தனம்”

“வருஷா வருஷம் நடத்திக்னே இருக்க வேண்டியதுதான்”

“இதியே நடத்திக்கின்னு இருந்தா வித்தியாசமா ஏதாவது...”

“வித்தியாசமா. அது 20 ஆம் தேதின்னா இது பதினெட்டாம் தேதி. அதான் வித்தியாசம். போதாதா”

“புதுசா வேற ஏதாவது..”

“வேற ஒண்ணும் இல்ல. இதுதான்”

“எதிர்காலத் திட்டங்கள், நடவடிக்கைகள்”

“எதிர்காலத் திட்டம் என்ன? எதிர்காலம் இருள் மயமானது, தொழிலாளி வர்க்கம் விழிப்போடிருந்து ஒன்றுபட்டுப் போராடி அத முறியடிக்கனும். அவ்வளோதான்”.

“ஆமா. எதிர்காலம் எப்பதான் ஒளிமயமா இருந்தது? எதிர்காலம் எப்பவுமே அமாவாசதான். போன மாநாட்டிலேயும் இதியேதான் சொல்லி அனுப்பனாங்க. இந்த மாநாட்டிலேயும் இதேயே தான் சொல்லி அனுப்பியிருக்கறாங்க...” இவன் சலித்துக் கொண்டான்.

“இருக்கறத்தானப்பா சொல்ல முடியும். இல்லாததையா சொல்ல முடியும். பிரச்சனைகளை யதார்த்தமா பாக்க வேணா?” நண்பன் சிரித்தான்.

இவன் கொஞ்சம் யோசித்து “புதுசா புஸ்தம் ஏதாவது வந்திருந்துதா. எதுனா வாங்கனியா” என்றான்.

“புதுசா ஒண்ணும் இல்ல. எல்லாம் பழசுதான். என்ன விசேஷம்னா இந்த வருஷம் டீக்கடை, பெட்டிக்கடை, புக்ஸ்டாலு, தள்ளுவண்டிகள் எல்லாத்தியும் டெண்டருக்கு உட்டுட்டிருக்கறாங்க, மாநாட்டு செலவுகள் ஈடுகட்டறதுக்கு, கட்சிக்கு நிதி சேக்கறதுக்குன்னு, அதுல ஒரு போண்டா ஸ்டாலு. அங்க தான் நல்ல கூட்டம். ஒய்வு ஒழிச்சல் இல்லாம சுடசுட போட்டுத் தள்ளிக்கினே இருந்தான். ரெண்டு போண்டா அஞ்சு ரூபா. அதுக்கே பெரிய க்யூ. டோக்கன் வாங்கிக்கினு போய்த்தான் வாங்கணும்.”

இவன் யோசனையோடு நண்பன் முகத்தைப் பார்த்தான். மாநாட்டுக்குப் போகாமலிருந்ததே நல்லதுதானோ என்று தோன்றியது. இவனுக்கு வெளியூர் நண்பன் ஒருவன். விரிந்த படிப்பாளி. யாரோ ஒர் அறிஞன் சொன்னதாக அடிக்கடி அவன் சொல்வான் “எந்த இடத்தில் நீ கற்றுக் கொள்ள ஒன்றுமில்லையோ அந்த இடத்தைவிட்டு உடனடியாக வெளியேறிவிடு” என்று. “இப்ப கட்சில நாம்ப கத்துக்கறதுக்கு ஒன்ணுமில்லைப்பா. கத்துக்குடுக்கறதுக்கும் ஒண்ணும் இல்ல. எதுக்கு தெண்டத்துக்கு அதுல நாளத் தள்ளிக்னு. பேசாம வெளியே வந்து உருப்படியா வேற வேல எதுனா இருந்தா பார்க்கலாம்” என்பான்.

அந்த வார்த்தையின் ஞாபகம் நெஞ்சை உழற்ற “அப்பறம் வேற என்னதான் மாநாட்டுல சிறப்பு அம்சம்?” என்றான்.

“சிறப்பு என்ன? ஏற்பாடுகள் தான் சிறப்பு. முந்தைய மாநாடுகள் மாதிரியெல்லாம் இல்ல, இந்தத் தரம், வந்திருந்த தோழர்களுக்கு எந்தக் கொறையும் இல்லாம எல்லா ஏற்பாடுகளும் சிறப்பா செய்து வச்சிருந்தாங்க. தண்ணி கஷ்டமே தெரியாத அளவுக்கு லாரி வச்சி அடிச்சாந்து குடுததுட்டாங்க. ஸ்பெஷலா எஸ்.டி.பூத், க்ளினிக் எல்லாம் ஏற்பாடு பண்ணிவச்சிட்டாங்க. வந்திருந்த தோழர்களுக்கு யாருக்கும் ஒண்ணும் எந்தப் பிரச்சனையும் இல்ல. எதுக்கும் வெளிய போவனும்னு அவசியமும் இல்ல..”

நண்பன் தொடர்ந்து மாநாட்டின் பிற ஏற்பாடுகள், நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் மசால்வடை, சுண்டல், வேர்க்கடலை ஸ்டால்களின் விற்பனைகள் பற்றி சொல்லிக் கொண்டிருந்தான். கேட்பதான பாவனையில் தலையாட்டிக் கொண்டிருந்தானே தவிர மனம் அதில் லயிக்கவில்லை.

இந்த வெள்ளிக் கிழமை கோயிலுக்குப் போய்த் திரும்பிய மனைவி கையில் மடித்திருந்த காகிதப் பொட்டலத்தைப் பிரித்து இவன் முன் நீட்டி “கொஞ்சோண்டு நெத்தில இட்டுக்கோங்க” என்றாள்.

இவன் அவளை முறைத்து “இதெல்லாம் உன்னோடவே இருக்கட்டும்னு சொல்லியிருக்கறன் இல்ல” என்றான்.

“என்னைக்காவது ஒரு நாளைக்கு இட்டுக்கக் கூடாதா”

“ஒரு நாளைக்கு இட்டா என்ன? தெனம் இட்டா என்னா எல்லாம் ஒண்ணுதான்.”

“பிரசவம் நல்லபடியா ஆவனும்னு உங்களுக்கு அக்கறையில்லையா...”

“அதுக்கு இதுக்கும் என்னா?

“இது அதுக்காக வேண்டிக்கினு வந்தது இன்னைக்கு மட்டும் கொஞ்சம் இட்டுக்கோங்க”.

அவள் முகத்தைப் பார்க்க இவனுக்குச் சங்கடமாக இருந்தது. இருந்தாலும் மறுத்து “இதெல்லாம் என்ன, சென்டிமென்ட். எல்லாம் நல்லபடியா நடக்கும் கவலப்படாத...” என்று அவளைத் தட்டிக்கொடுத்துத் தேற்றிவிட்டு அப்பால் நகர்ந்தான்.

சம்பந்தமேயில்லாமல் ஏனோ தற்போது அது ஞாபகத்திற்கு வந்தது மனதை சங்கடப்படுத்துவது போல் தோன்றியது. பேறு நல்லபடியாக முடிந்து விட்டதில் பிரச்சனையில்லை. இல்லாவிட்டால் அதுவேறு பெரும் மன உளைச்சலாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.

மாநாட்டின் இதர நிகழ்ச்சிகளை வருணித்துக் கொண்டிருந்த நண்பனை, கடைநிலை ஊழியர் வந்து மேலாளர் அழைப்பதாகக் கூற நண்பன் “அப்பறம் பேசுவம்” என்று எழுந்தான்.

இவனும் எழுந்து தன் இருக்கைக்கு வர, நண்பன் திரும்ப வந்தான். “ஒரு முக்கியமான விஷயம். உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். மாநாட்டுல எல்லாருக்கும் பஞ்சாமிர்தம் கொடுத்தாங்க. நம்ப தோழர் ஒருத்தர் பஞ்சாமிர்த வியாபாரம் பண்றாராம். வெளி மார்க்கட்ல வெல அம்பது ரூவா. நம்ப தோழர்களுக்கு 10 ரூ சலுகை வெலையல நாப்பது ரூபான்னு குடுத்தாங்க. நெறையப் பேர் வாங்கனாங்க. நானும் வாங்கனேன். உனக்கும் ஒண்ணும் வாங்கியாந்திருக்கேன். வரும்போது எடுத்து வருவம்னு நெனைச்சேன் மறந்துட்டேன். சாயங்காலம் போவும்போது எடுத்துக்கலாம்” என்றான். இவன் நண்பனைப் பார்த்து சிரித்தான். நண்பன் தொடர்ந்தான்.

“அப்பிடியே வாசன விபூதி பாக்கெட் கூட நாலு வாங்கிக்னு வந்தேன். நம்ப இட்டுக்கலண்ணா கூட ஊட்டுல இருக்கறவங்க இட்டுக்கறாங்க இல்ல. உனக்கு வேணும்னாலும் ஒண்ணு எடுத்துக்க. அந்த விபூதி ரொம்ப ஃபேமசாம் வாசனையா இருக்கும்ன்றதோட மட்டுமில்ல பவரும் ஜாஸ்தியாம்” என்றான்.

இவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. யோசனையோடு நிற்க வணக்கம் காம்ரேட் என்றபடியே புன்முறுவலோடு தோழர் வந்தார்.

மாநாட்டுத் தீர்மான நகலைத் தந்து அப்பிடியே மாதாந்திர லெவியையும் வாங்கிக் கொண்டு போக வந்திருக்கலாம் என்று சொல்லிக் கொண்டான்.

- இராசேந்திர சோழன்

சென்ஷி

unread,
May 31, 2010, 2:05:04 AM5/31/10
to panb...@googlegroups.com
பவா செல்லதுரை 

சொந்த ஊருக்குப் போகிறோம் என்கிற நினைப்பே மற்ற எல்லாத் துயரத்தையும் வடியச் செய்தது. உடல் முழுக்க புது ரத்தம் ஊறுவது மாதிரியிருந்தது. பஸ் முழுக்க கூட்டம் நசநசவென்றிருந்தது.

Koothu எல்லாவற்றிற்கும் பழக்கப்பட்டிருந்தது மனசு. சிட்டி ரவுண்ட் மார்க்கெட் மோரி நாத்தம் பழகி புதிய மணமாய் அவனுள் உறைந்திருந்தது. சீட் நெம்பர் தேடி உட்கார்ந்து ஆசுவாசமாய் பக்கத்தில் பார்த்தான். அழுக்கும் சோர்வும் அப்பிய முகங்களில் அதையும் மீறின லேசான உற்சாகம் துளிர்ந்ததைக் கவனிக்க முடிந்தது. ஊருக்குப் போகிறோம் என்கிற, துளியே துளியான சந்தோஷம் அது. கிராமத்தில் இரண்டொரு நாளில் அது மறையும். பக்கத்து சீட்டில் இருப்பவனைப் பார்த்து விட்டு இவ்வளவு யோசிக்க முடிகிறது. இப்போது பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வந்தது.

பெங்களூரில் சாய்ந்த தலை ஓசூரில் வந்துதான் நிமிர்ந்தது. அப்புறமும் தூங்க முயன்று, முடியாமல் முழித்துக் கிடந்தபோது வந்த பயம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

ஏன் இப்படி சம்மந்தமில்லாத நினைவுகள் வந்து அலைகழிக்கிறது? எல்லாவற்றையும் சிட்டி ரவுண்ட் மார்க்கெட் மோரியிலேயே கரைத்தாகிவிட்டது. எதைப் பற்றியும் நினைக்காமல் ஊர்போய்ச் சேர வேண்டும். மனசு மட்டும்தான் இப்படி நினைத்தது. கண்கள் இப்படியும் அப்படியும் அலைந்தது. பஸ்ஸில் உட்கார்ந்திருப்பவர்களில் சிட்டி ரவுண்ட் மார்க்கெட் முகங்கள் அடையாளம் தெரிகிறது. பழக்கூடை சுமந்து காய்ப்பேறிய கைகள் அவனைக் கஷ்டப்படுத்துகிறது. அழுகை அழுகையாய் வருகிறது.

இறங்கி விடலாமா?

இல்லை. இந்த நகரம் இனியும் எனக்கு வேண்டாம்.

ஊருக்குப் போய் என்ன பண்ண?

குடும்பத்தோட கொளத்துல விழுந்து மாஞ்சாலும் சரி, இங்க வேணாம். கம்பியில் தலை சாய்ந்து, கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான். எதற்கோ காத்திருந்தது போல, எது ஞாபகம் வரக்கூடாதோ அதெல்லாம் பிய்த்துக்கொண்டு வந்தது.

‘ஏழுமலை, கூத்தாடும் போதுதான் இந்த ஜிட்டு தலப்பெல்லாம். கூடை தூக்குறப்போ வேணாம். கெராப்பு வெட்டிக்கோடா.’

சொல்றவனுக்கு இவன் மகன் வயசிருக்கும். இங்கு எல்லாருமே போடா வாடாதான். எத்தனை வயசுக்காரனயும் இப்படி சொல்ல சிட்டி ரவுண்ட் மார்க்கெட் சீனியாரிட்டி தைரியம் கொடுத்திருந்தது. யாரும் எதையும் பேச முடியாது. மரியாதைக்கெல்லாம் ஆசைப்பட்டா எவன் கை வேணுன்னாலும் நீளும். கைகள் ஊர்வாரியா, ஜில்லாவாரியா, ஜாதிவாரியா பிரியும்.

எந்த நேரமாயிருந்தாலும் கூடையை இறக்கி வைத்துவிட்டு ஆட வேண்டும். பாதங்களில் சலங்கைகளின் சப்தம் எழ, சுற்றி ஆடின ஊர் ஞாபகம் மனசில் முட்ட, மார்க்கெட் கொய்யா இலையும், சப்போட்டா இலையும் காலில் மிதிபடும். மார்க்கெட்டில பல உருவங்கள் நின்று பார்க்கும். ‘‘லூசு’’ என்ற புரிதல் பல முகங்களில் எதிரொலிக்கும். அதெல்லாம்தான் அவனுக்கு மரண அடிகள், வேட்டைநாய் மாதிரி துரத்தித்துரத்திக் குதறியது. தப்பிக்க, எங்கும் ஓடிப்போக முடியவில்லை. சுற்றிச்சுற்றி சிட்டி ரவுண்ட் மார்க்கெட்டுக்குள்ளேயே வாழ்க்கை அவனை இயக்கிக் கொண்டிருந்தது.

மீறியாகி விட்டது. இதுவரை இவன் மென்னியைப் பிடித்துக் கொண்டிருந்த வாழ்வின் கலகத்தைத் திருப்பி இறுக்கியாகி விட்டது. இனி ஊர்போய்விட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாய் வெளியாக இந்த எண்ணம் உருக்கொண்டது. ஊர்தான் இவனை நெட்டித் தள்ளி காண்டோன்மென்ட் நெரிசலில் தள்ளியது என்பதெல்லாம் இதுவரை இருந்த வெறியில் ஞாபகம் வரவில்லை. ஆனால் இந்த பஸ் பயணம் இப்போதே அதைக் கொண்டு வந்து ரப்பர் பந்து மாதிரி மனசில் மோதுகிறது.

சுற்றுப்பக்கம் இருபது மைலுக்கு இருபது மைல் ‘‘ஏழுமலை ஜமா’’ தான். பாக்கு வைக்கும்போதே கிராமங்களுக்குள் போட்டி கிளம்பும். அத்தனை மவுசிருந்தது ஏழுமலை ஜமாவின் சலங்கை சத்தத்திற்கு. கிராமங்களுக்குப் பெரும்பாலும் நடந்தே புறப்படுவார்கள். அது ஒரு மாதிரியான போதை. வழிநெடுகப் பேசிக் கொண்டே போவது. சாராயம் விற்கிற புதரை நோக்கிக் கால்கள் தானாக அடையும். ஒரு மாதிரியான பக்தியோடு யாருக்கும் அதிகமாகி விடாமல் மருந்துமாதிரி குடிப்பார்கள். அப்புறம் பேச்சு நின்றுவிடும். பாட்டு... பாட்டுதான் வழிநெடுக.

பாட்டின் சத்தமும், லயமும், இந்தப் பிறவிக்கான முழு சந்தோஷத்தையும் இம்மி, இம்மியாக அனுபவிக்கிற மாதிரி மற்றவர்களைப் பொறாமைப்படுத்தும் அடர்த்தியான அந்த ராத்திரிகளின் நினைவுகள்தான் இவனை பஸ் ஏற்றி விட்டிருக்கிறது. விடியவிடியக் கூத்து நடக்கும். மறக்க முடியாத கதைகள். கூத்து முடிய, காலை பத்து, பதினொன்றுகூட ஆகும். வேஷம் கலைக்காமலேகூட படுதாவுக்குப் பின்னால் சாராயம் குடிப்பார்கள். புதுசாய்ப் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாய் இருக்கும். பீமன், தர்மர், துரியோதனன், கர்ணன் என்று ஆளாளுக்கு ஒரு டம்ளரை உள்ளே இறக்குவார்கள்.

அநேகமாய்ப் பல ஊர்களில் ஏழுமலையை விட்டுவிட்டு ‘‘ஜமா’’ ஊர் திரும்பும். ஏழுமலைக்கென்று திறக்கும் கதவுகளும், ஒரு கோடி பிரியத்தோடு பரிமாறப்படும் மாட்டுக்கறியும், சாராயமும், ராத்திரிக்கு கிடைக்கும் ஒடம்பும் என அவனுடைய வாழ்வின் சுவாரஸ்யங்களே தனிதான். ரெண்டு மூன்று நாட்கள்கூட ஆகும் ஊர் திரும்ப.

திகட்டத்திகட்ட வாழ்கிற மாதிரி இருந்தது, செல்லங்குப்பம் கூழ்வார்க்கும் விழா நோட்டீஸ் வருகிறவரை. நம்பமுடியாமல் மறுபடி மறுபடி படித்தான். நோட்டிஸின் கீழே கொட்டை எழுத்துகளில் போட்டிருந்தது. இரவு எட்டு மணிக்கு ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே வீடியோ படம் காண்பிக்கப்படும். ஏதோ மனசுக்குள் அறுந்து விழுவது கேட்டது. இவன் திமிரத்திமிர ஒரு திகில் வந்து வலுக்கட்டாயமாய் இவனுள் நுழைவது புரிந்தது.

‘‘இன்னாடா இது, சாமிக்கு முன்னாடி, சினிமாக்காரனை ஆடவுட்ரானுங்க’’, வேதனை வாய்வழியே சிந்திவிடாமல் கேட்டான்.

அதன் நியாயம் பல வகைகளில் அவனுக்கு விளக்கப்பட்டது.

‘‘உங்களுக்குன்னா ரெண்டாயிரம், மூவாயிரம் ஆவும். இது முன்னூறு நானூறுல எல்லாம் முடிஞ்சிடும். மழை மாரி இல்லாத இந்த நேரத்தல ஜனங்க கைல காசு இல்லைன்னா...’’

‘‘போதும், போதும். நிறுத்திக்குங்க.’’ தாங்க முடியவில்லை. அவனுக்கு எல்லோருக்கும் முன்னால் ஆத்திரம் சிதறியது.

அப்பறம் சுத்துப்பக்க கிராமத்துல இருந்து வந்த எல்லா நோட்டீஸ்களிலும் நடிகர், நடிகைகள் பெயராகத்தான் மாறியிருந்தது. இத்தனைக்குப் பிறகும்கூட சில ஊர்த்தெருக்களில் கூத்து நடந்து கொண்டிருந்தது இவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

‘‘இந்தக் காலனிக்காரனுங்கதான் இப்படி சினிமாக்காரனுக காலுல உழுந்துட்டானுங்க ச்சீ... இந்த ஜாதில பொறந்தம்பாரு’’ சதா இதே புலம்பல்தான். கூத்துக்காக இதுவரை ஊர்த்தெருவில் இந்தப் பாதம் பட்டதில்லை.

கரும்பு வெட்ட, சூளை போட, ரிக்ஷா ஓட்டவென்று, தர்மரையும், பீமனையும், பாஞ்சாலியையும் வாழ்க்கை பிரித்தனுப்பியது. இவன்தான் பிடிவாதமாய் எதிர்த்து நின்றான்.

எந்தப் பிடிவாதமும் ஒரு மாசத்துக்குக் கூட தாக்குப் பிடிக்கவில்லை. ஊருக்குச் செல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, நடுராத்தரியில் பெங்களூருக்கு பஸ் ஏறினான். போதும், போதும் என்னை நெரிக்காதே என்று ஏதோ எதிரில் நின்ற பிசாசிடம் கெஞ்சுவது மாதிரிதான் சிட்டி ரவுண்ட் மார்க்கெட்டில் இருந்து இதோ இப்போது தப்பியது.

தெருவில் நடக்கிறபோது ஒன்றிரண்டு வீட்டு அரிக்கேன் விளக்குகள் விழித்திருப்பது தெரிந்தது. நடை தானாகவே சத்தத்தை குறைத்துக் கொண்டது. இவனுக்கு இவ்வளவு அந்நியமாகிவிட்ட ஊரைப் பார்க்கப் பார்க்கக் கோபமாய் வந்தது.

சத்தம் போடாமல் வள்ளியை எழுப்பினான். ரெண்டு பேருக்குமே பேச ஏதுமற்றுப்போனது. விரித்திருந்த பாயில் படுத்து அவள் பழைய புடவையைப் போர்த்திக் கொண்டான். அவள் இவனைப் போர்த்திக் கொண்டாள்.

மத்தியானத்துக்கு மேல், இவன் வந்திருப்பது ஊருக்குத் தெரிந்தது. ஒவ்வொரு கூரையிலும், கேள்விகள் முளைத்தது. இதுக்குப் பயந்துதான் பெங்களூருக்கு ஓடினது. மீண்டும் அதே கேள்விகள். எப்படி ஏழுமலை வந்தாப்பலே?

இப்படித்தான் துவங்கின அவை. அப்புறம், அவை காயத்தில் குத்துகிற கோணி ஊசிகளாய் மாறும், மாறின. சித்தப்பிரமை பிடித்தவன் மாதிரி எல்லாருக்கும் ஒரே பதில் சொன்னான்.

‘‘அப்புறம் இன்னா பண்ணப் போற?” யார் மூலமோ வாழ்வு அவனைக் கேட்கிற அழுத்தமான கேள்வி இது. முடியவில்லை இதற்கு பதில் இல்லாமலே பெங்களூரை விட்டுப் புறப்பட்டிருக்கிறான்.

இருட்டினதுக்கப்பறம், ‘‘ஜமா’’ ஆட்கள் விசயம் கேள்விப்பட்டு வந்தார்கள். அதே மரியாதை இருந்தது ஒவ்வொரு மொகத்திலும். கரும்பு வெட்டக் கூப்பிட்டார்கள், சந்தையில் மாட்டுத்தரவு செய்வது கவுரவமான தொழில் என்றார்கள், எதையும் கேட்கிற மாதிரி இல்லை மனசு.

‘‘எவனுக்கும் கூத்த போடலாம் வாத்தியாரேன்னு சொல்ற தைர்யம் வரலையே’’ என்று குச்சியால் தரையைக் கிளறிக் கொண்டிருந்தான்.

எல்லாரும் போனபிறகு மனசு கனத்திருந்தது. எதுக்கோ ஏங்கியது. வாடகைக்கு சைக்கிள் பேசி எடுத்துக் கொண்டு வேளானந்தலை நோக்கி மிதித்தான். பிரிட்ஜ்ஜைத் தாண்டுகிற போது ஆசை வந்தது.

‘‘பாடிப் பார்க்கலாமா?”

முடியவில்லை திட்டுத் திட்டாய் மனதில் உறைந்திருந்த ரத்தக் கறைகளில் பாட்டும் சந்தோஷமும் ஒட்டிக் கிடந்தன. பாட்டுக்கு ஏதோ ஒன்று முட்டித் தள்ளுவதும், பின்பு அதுவே கையைப் பிடித்துக் கொள்வதுமாய் அவஸ்தைப் பட்டான்.

மொத்தமாய் நாலு டம்ளர் குடித்து, பச்சை மொளகா அதிகமா போடச் சொல்லி, மொச்சையை கையில் வாங்கி சைக்கிள் மிதிச்சப்போ நிதானம் இழக்க ஆரம்பித்தான். இன்னைக்கு மத்தியானம் கண்ணுசாமி காட்டின கோணலூர் கூழ் ஊத்ர நோட்டீஸ் ஞாபகம் வந்தது. ‘‘அம்மன் கோயில் கிழக்காலே’’ கலர்ப் படமாம்.

சொந்த ஊரே இவனை எட்டி ஒதைச்சி, வேணான்னு முடிவு செஞ்சிட்டப்புறம் இனி எவன் கூப்புடுவான்? சொந்த ஊர்க்காரனை விட, விஜய்காந்தும், ராதாவும் முக்கியமாகி விட்டது ஊருக்கு.

பிரிட்ஜ்ஜை தாண்டும்போது லாரி ஒன்று இவனைக் கடந்து போனது. நிதானமாக சைக்கிள் ஓட்ட முயன்றான்.

வடக்கே இருந்து கூத்துப்பாட்டு சத்தம் கேட்டது.

பிரமை. வெறும் பிரமை. நாளெல்லாம் இதே நெனப்போட இருந்தா இப்படித்தான்.

இல்லை சைக்கிள் நகர நகர பாட்டு துல்லியமாகிக் கொண்டே வந்தது.

இப்போது பெட்ரோமாக்ஸ் வெளிச்சமும் தெரிந்தது. வெறிபிடித்த பிசாசு மாதிரி சைக்கிள் வேகமெடுத்தது. மண்ரோட்டில் சைக்கிளை நிறுத்திவிட்டுத் தட்டுத் தடுமாறி மரத்தடிக்கு நடந்தான்.

பத்துப் பதினைந்து உருவங்கள் மங்கலாய்த் தெரிந்தன. மர ஸ்டூல் போட்டு ஒருத்தன் உட்கார்ந்திருந்தான். கையில் பெரிய நோட்டிருந்தது. கூத்துப் பழகிக் கொண்டிருந்தவர்கள் எல்லாருமே புது ஆட்கள், எல்லார் முகத்திலும் அது திட்டுத்திட்டாய்த் தெரிந்தது. ஒரு செடி, மனசுக்குள் முளைப்பது மாதிரி இருந்தது இவனுக்கு. தள்ளாடி விழப் போனவனை மரம் தாங்கிக்கொண்டது. கூர்ந்து அந்தக் கால்களைப் பார்த்தான். சரியில்லை. அந்தக் கிருதாக்காரனின் அடவு தப்புத் தப்பா வருது. உள்மனசு இவனுக்குள்ளேயே பேசிக் கொள்வது கேட்டது. என்ன வாத்தியார் இவன், அடவைக் கவனிக்காம புஸ்தகத்தைப் பாத்து படிச்சிட்டா போதுமா, ‘‘அடவு தாண்டா உசுரு ஆட்டத்துக்கு.’’

கிருதாக்காரன் தொடர்ந்து தப்புப் பண்ணிக் கொண்டே இருந்தான். ஏதோ உள்ளிருந்து கிளம்ப, ‘தகிதோம், தகிதோம்’ என அந்த வட்டத்துக்குள் பெரிய வன்முறையாளனைப் போலக் குதித்தான். அவசரமாய் ஒருவன் பெட்ரோமாக்ஸ் விளக்கை நகர்த்திக் கொண்டான். அவனுக்குள்ளிருந்த வெறிபிடித்த பேய் விடாமல் ஆடியது.

மடேரெனக் கீழே விழந்தபோது, ரெண்டொருவர் அதிர்ந்தனர். பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில், ஒரு கை மூக்கில் கை வைத்துப் பார்த்தது.

‘‘மூச்சி இருக்கு’’

‘‘போதை போலிருக்கு.’’

வாத்தியார் நிதானமாய் எழுந்து வந்தார். முகத்தைத் திருப்பி வெளிச்சத்தில் பார்த்தார்.

‘‘நம்ம கோணலூர் ஏழுமலை’’

எல்லோரும் வாத்தியாரையே பார்த்திருந்தார்கள். யாருமே எதிர்பார்க்காமல் அவர் கால்களைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு ‘‘தண்ணி கொண்டாடா’’ என்ற சத்தத்திற்குப் பலகால்கள் ஓடின. அந்த வார்த்தைகளில் அவ்வளவு பிரியமும் ஏதோ நம்பிக்கையுமிருந்தது.

- பவா செல்லதுரை
( vamsi...@yahoo.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

சென்ஷி

unread,
May 31, 2010, 2:07:10 AM5/31/10
to panb...@googlegroups.com

கடிகாரம்

ஜீ.முருகன் 

சீட்டு விளையாடுவதற்கு நண்பன் ஒருவனது வீட்டு மொட்டை மாடியை நாங்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். குடித்தனம் செய்வதற்கு லாயக்கற்ற அந்தப் பழைய வீட்டை ஒரு எலக்ட்ரிக் கடைக்காரன் வாடகைக்கு எடுத்து குடௌனாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தான்.

ஒரு கோடை காலத்தின் சாயந்திர வேளையில் எங்கள் கச்சேரி நடந்துகொண்டிருந்தது. ஒரு கீற்றுக் கொட்டகையை இதற்குப் பிரத்யேகமாக ஏற்பாடு செய்து வைத்திருந்தோம். கான்கிரீட் தளம் சூடேறி, வெக்கையானது எங்கள் கிளப்பையும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. பக்கத்து வீட்டுப் பாதாம் மரத்தின் இலைகளில்கூட துளியும் அசைவில்லை. காற்று ஸ்தம்பித்து நின்றிருந்தது. உடல்கள் வேர்வையில் நனைந்து கசகசத்தன. ஆட்டத்தின் தீவிரத்தில் இதெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. இந்தக் கதையின் வில்லன், அறி என்று நாங்கள் சுருக்கமாக அழைக்கும் அறிவழகன் மட்டும் சட்டையை கழட்டி ஒரு மூங்கில் கொம்பில் மாட்டிவிட்டு வெற்றுடம்புடன் ஆடிக் கொண்டிருந்தான். புஸ்புஸ்ஸென்று அவன் எழுப்பிய சத்தம் எங்களுடைய அதிகப்படியான சகிப்புத் தன்மையை வேண்டி நின்றது.

நான் எங்கள் ஜமாவில் சேரும்போது அவன் அதனுடைய பழைய வாடிக்கையாளன். நான் அப்போது குடியிருந்த தெருவில் அவனுக்கு சொந்தமான ஒரு வாடகை வீடு இருந்தது. அந்த வீட்டைத் தவிர இன்னும் இரண்டு வீடுகளும், நாலு ஆட்டோக்களும் அவனுக்குச் சொத்துக்கள்.

Wall clock ஒரு நாள் ஏதேச்சையாக அவனை எங்கள் தெருவில் பார்த்தேன். வாடகை வசூல் செய்ய வந்திருந்தான். வீட்டுக்குக் கூப்பிட்டதில் அவனுக்கு ரொம்ப சந்தோஷம். மனைவிக்கு அறிமுகப் படுத்தினேன். அவள் காப்பி தயார் செய்ய உள்ளே போனாள்.

அவன் தேர்ந்தெடுத்து உட்கார்ந்த நாற்காலி தனது அந்திமகாலத்தில் இருந்ததால் ஒரு அசம்பாவிதத்தை எதிர்பார்த்திருந்தேன் நான்.

கேட்டான், “இந்த வீட்டுக்கு எவ்வளவு வாடகை தர்றே?”



சொன்னேன்.

இன்னும் இரண்டு மூன்று மாசம் போனால் இதைவிட குறைந்த வாடகையில் இதைவிட சிறந்த ஒரு வீட்டை அவனே ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னான். அவனுடைய கவனம் மேஜைமேல் இருந்த கடிகாரங்களின் பக்கம் திரும்பியது.

“உனக்கு இந்த வேலையெல்லாம் கூடத் தெரியுமா?” என்று கேட்டான் ஆச்சரியத்துடன்.

“தெரியும்” என்றேன்.

வெகு நாட்களாக சுவர் கடிகாரம் ஒன்று அவனுடைய வீட்டில் பழுதடைந்து கிடக்கிறதாம், அதை சரிபடுத்தித்தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டான். பிறகு அவனுடைய அக்கறை என் உத்தியோகத்தைப் பற்றித் திரும்பியது. நான் வேலையை விட்டுவிட்ட விபரத்தை தெரிந்து வைத்திருந்தான்.

“ஏன் நல்ல வேலையை விட்டுவிட்டு வந்தாய்?” என்று கேட்டான்.

“இதுபற்றி இப்போது என்ன? பிறகு பேசிக் கொள்ளலாம்” என்றேன்.

“இந்த விஷயத்தில் நீ இவ்வளவு அநாவசியமாக இருக்கக்கூடாது” என்றவன் “நிரந்தரமான ஒரு உத்தியோகமாக ஏன் தேடிக் கொள்ளக்கூடாது?” என்று கேட்டான்.

எனக்கு இதுநாள் வரை தோன்றாத யோசனை அது! மிக்சரும் காப்பியும் வந்தது.

“உங்க வீட்டுக்காரு இன்னும் விஷயம் தெரியாத ஆளாவே இருக்காரே! நீங்களாச்சும் சொல்லக்கூடாதா? வேலைன்னா அந்த இடத்துல நம்பளமாதிரியே ஆட்கள் இருப்பாங்கன்னு எதிர்பார்க்கமுடியுமா? அப்படி ஒத்து வரலேன்னா அங்க இங்க அலையாம வாட்ச் ரிப்பேர் பண்ணியே காசு சம்பாதிக்கலாம்”

என் பக்கம் பார்த்து சொன்னான், “இன்னிக்கி ரிப்பேர் தொழில்ல என்ன காசு தெரியுமா?”

மீண்டும் அவள்பக்கம் திரும்பி, “நாலு காசு கையிலே இல்லேன்னா என்ன இருக்கு சொல்லுங்க? இந்த காலத்துல கை நிறைய சம்பாதிக்கறவனாலேயே தாக்கு பிடிக்கமுடியலை....”

அவன் சொன்னதை ஆமோதிப்பவள் போல புன்னகைத்துவிட்டு அவள் உள்ளே போய்விட்டாள். நல்ல வேளையாக என் மனைவி அதிகம் பேசும் ரகம் இல்லை. இருந்தாலும் என் புத்திசாலித்தனத்தைப் பற்றி அவளுக்கு அதிருப்தி இருந்து வந்தது உண்மை. வேலை பற்றிய பேச்சுக்கள் எல்லாமே கடும் மனக்கசப்பில் கொண்டு போய் நிறுத்திக்கொண்டிருந்தன.

அவனுடைய அடுத்த கேள்வி, “கல்யாணமாகி எத்தனை வருஷமாகிறது?” என்பது.



சொன்னேன்.

“மூன்று வருஷமாகிறதே ஏன் இன்னும் குழந்தைப் பெற்றுக் கொள்ளவில்லை?”

நான் பதில் சொல்லவில்லை. அவனும் அதை எதிர்ப்பார்த்தவனாக தெரியவில்லை. நல்ல டாக்டரை பார்க்கச் சொன்னான். ஒரு டாக்டர் பெயரை பரிந்துரை செய்தான்; மேலும் அவருடைய மகிமைகள்....

உபதேசிகளை சிரச்சேதம் செய்த அற்புதம் எங்கேயாவது நடந்திருக்கிறதாயென்று யோசித்துப் பார்த்தேன். ஒன்றும் ஞாபகத்தில் வரவில்லை. ஒரு வழியாக கிளம்பினான். வாசலில் போய் நின்றுகொண்டு என் மனைவியிடம் சொன்னான்.

“நல்ல நேரம்னு ஒன்னு வந்தா, எல்லாம் சரியாப் போயிடும் கவலைப் படாதீங்க”

அந்த நாற்காலிக்கோ அவனுக்கோ எந்த சேதாரமும் ஆகவில்லை. எங்கள் வீட்டுக்கு கிருஷ்ணபரமாத்மாவின் முதல்வருகை இப்படி எந்த வித அசம்பாவிதமும் நிகழாமல் முடிவடைந்தது.

மறுநாள் காலையில் ஒரு பெரிய சுவர் கடிகாரத்துடன் தனது ஆட்டோவில் வந்து இறங்கினான். இதற்கு முன்னால் எப்போதும் அப்படி ஒரு கடிகாரத்தை நான் பார்த்ததில்லை. அவனுடைய தாத்தா காலத்திலிருந்தே அது அவனுடைய வீட்டில் இருக்கிறதாம். அனேகமாக ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்திலிருந்துதான் அதை அவர் திருடிக் கொண்டு வந்திருக்கவேண்டும். அவன் வைத்திருந்த ஸ்கூட்டர் கூட அப்படித்தான் பாதிநாள் ஒர்க்ஷாப்புகளிலேயே தன் ஆயுளை கழித்துக்கொண்டிருந்தது. அந்த கடிகாரத்திற்கு உயிர் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை துளி கூட எனக்கேற்படவில்லை. அதை எப்படியாவது சரி செய்து கொடுத்துவிடுவது என்று அதிக சிரத்தை எடுத்துக்கொண்டேன். அதற்குள் ஐந்து முறை என் வீட்டுக்கு வந்து போயிருந்தான். அதில் இரண்டு முறைதான் நான் வீட்டில் இருந்தேன். என் மனைவி என்னிடம் அந்த கடிகாரத்தை திருப்பிக் கொடுத்துவிடும்படியும் அவன் இங்கே வருவதை விரும்பவில்லையென்றும் சொன்னாள். எப்படியோ முயன்று அந்த கடிகாரத்தை நான் ஓடவைத்துக் கொடுத்தனுப்பிவிட்டேன்.

இது நடந்து ஒரு மாதம் ஆகியிருக்கும். அன்று உற்சாகமாக பறந்து கொண்டிருந்த சீட்டுகளுக்கு மத்தியிலும் அவனுடைய கவனம் முழுவதும் என் பக்கமே இருந்தது. அவன் ஆடிக்கொண்டிருந்த ஆட்டத்தை விட முக்கியமான விஷயம் ஒன்று இருப்பதை எனக்கு குறிப்புணர்த்திக் கொண்டிருக்கிறானாம். இதை நான் பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

அன்றைய ஆட்டம் முடிந்து புறப்பட்டபோது என்னுடனேயே புறப்பட்டு வந்தான். அவன் ஏதோ பேசும் ஆர்வத்தில் இருந்தது தெரிந்தது. என் பேரிலும் என் குடும்பத்தின் பேரிலும் அவனுக்கு அக்கறை இருப்பதால்தான் இந்த விஷயத்தை சொல்ல வருகிறானாம். அவன் சொல்லப் போகும் விஷயம் அதிர்ச்சி தருவதாக இருந்தாலும் நான் நிதானமாக கேட்டு முடிவெடுக்க வேண்டும் - இது பீடிகை. எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லும்படி கேட்டேன். குரலை தாழ்த்தி ரகசியம் சொல்வதைப் போல சொன்னான். எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பஸ் நிறுத்தத்தில் அதற்கு முன் தினம் என்மனைவியுடன் இன்னொரு ஆளையும் பார்த்தானாம். மிகவும் அந்நோன்யமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்களாம். சந்தேகமில்லாமல் அது என் மனைவிதான் என்று சொன்னான். தெருவின் ஓரத்தில் ஒதுங்கி நின்று கொண்டேன். அவனும் வந்து பக்கத்தில் நின்று குழப்பத்துடன் என்னைப் பார்த்தான். மேலும் பேச நான் கொஞ்சம் நிதானப்படுத்திக் கொள்ளவேண்டியிருந்தது. என் மனைவியின் கற்பை பாதுகாக்கும் வேலை அவனுக்கு அவசியமற்றதென்னும் எச்சரிக்கைக்கு பின்னால், அவளுடன் அன்று பேசிக் கொண்டிருந்தது அவளுடைய தம்பி என்றும்; அவனை வழியனுப்பத்தான் அவள் அங்க போயிருந்தாள் என்றும் சொன்னேன். இந்த விளக்கமே எனக்கு அருவருப்பான ஒன்றாகப் பட்டது. ஒரு மடையனிடம் நான் எதற்காக இதை தெளிவுபடுத்திக் கொண்டிருக்கவேண்டும்?

“ஸ்....ஓ! சரிசரி நான் வேற யாரோன்னு தப்பா நினைச்சிட்டேன் சரி சரி....” என்றான், ஏதோ ஆச்சரியத்தை கேட்டவனைப் போல. என்னிடம் மட்டுமல்ல என் நண்பர்கள் சிலரிடமும் அவன் இந்த அநியாயத்தைப்பற்றி முறையிட்டிருக்கிறான் என்ற விஷயம் எனக்கு பின்னால்தான் தெரியவந்தது.

கோடை வெப்பம் மிகுந்த ஒரு நாளைப் பற்றிதானே நான் சொல்ல ஆரம்பித்தேன்? அன்று அதிர்ஷ்ட தேவதை அவன் கட்சியில் இருந்திருக்கவேண்டும். ஆரவாரத்துடன் உடம்பை அசைத்தும், சிரித்தும் தனது வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தான். அவன் நல்ல சிவந்த நிறம். அறிவுதான் கொஞ்சம் கம்மியே தவிர அழகன்தான். அவனுடைய மார்பில் தடிமனான தங்கச் சங்கிலி ஒன்று அசைந்து கொண்டிருக்கும். அவனுக்கு அபாரமான ஞாபகச் சக்தி. குறிப்பாக தனது சூட்சும அறிவையும், புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தும்படி அமைந்த ஆட்டங்கள்தான் அபாரமாக அவன் ஞாபகத்தில் இருக்கும். அதையெல்லாம் வார்த்தைகளாலேயே திரும்ப ஆடிக் காண்பித்துவிடுவான். சீட்டுக்களின் ஏதேச்சைத்தன்மையின்மேல் நம்பிக்கை வருவது அவன் மோசமாகத் தோற்ற ஆட்டங்களின் போது மட்டும்தான்.

அன்று மாலை திரும்பும்போது என்னுடன் வழி முழுக்க பேசிக் கொண்டே வந்தான். தவிர்க்க முடியாத சில கட்டங்களில் அவன் சொல்வதை நான் ஆமோதித்தேன். ‘என்ன சொல்கிறாய்’ என்றோ ‘அப்படித்தானே’, போன்ற இடங்களில் நான் ‘சரிதான்’ என்று பதில் சொல்வேன். வேண்டா வெறுப்பாகவே எனது குரல் எழுந்தாலும் அவன் திருப்தியடைந்துவிடுவான். நாம் ஏதாவது ஒன்று சொல்ல அது அவனுக்கு வாய்ப்பாகப் போய்விடக்கூடாதே என்ற எனது சாதூர்யம் ஒன்றும் அவனிடம் பலிக்கவில்லை. அன்று பார்த்து அவனுடைய ஸ்கூட்டர் ரிப்பேர் ஆனது என்னுடைய துரதிஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். பஸ்நிறுத்தம் வந்ததும் அவனே பேச்சை நிப்பாட்டிக் கொண்டான். என் நன்றிக்குரிய நான்கைந்து பேர் அங்கே நின்றிருந்தார்கள்; இல்லையென்றால் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்திருப்பான்.

முன்பே முடிவு செய்து கொண்டிருந்தானோ என்னவோ என்னை மது அருந்த கூப்பிட்டான். அன்று நான் குடிக்கும் மனநிலையில் இல்லை. அதிலும் அவனுடன் குடிப்பது நினைத்துப் பார்க்கவே எரிச்சலாக இருந்தது. என்னால் வரமுடியாது என்று சொல்லிவிட்டேன். உடனே வந்துவிடலாமென்றான். எனக்கு வேறு முக்கியமான ஒரு வேலை இருப்paதாகச் சொன்னேன். ‘பரவாயில்லை வா’ என்றான். அவனுடைய குரல் கொஞ்சம் உரத்து ஒலிக்க சிலர் எங்கள் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். இது என்னை சங்கடத்துக்குள்ளாக்கியது. கையைப் பற்றிக்கொண்டு இழுத்தான். இப்படி ஒரு சூழலையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டான்.

ஒரு பிராந்திக்கடைக்கு பின் பக்கமாக இருந்த ஒரு ஓட்டுவீடு பாராக அவதாரம் எடுத்திருந்தது. அங்கே அதிக கூட்டமில்லை. ஒரு மேஜையைத் தேர்ந்தெடுத்து எதிரெதிரே உட்கார்ந்து கொண்டோம். இரண்டு மேஜைகளுக்கு மத்தியில் மேலே சுற்றிக்கொண்டிருந்த மின் விசிறி வெப்பக்காற்றை வெறுமனே தள்ளிவிட்டுக் கொண்டிருந்தது. திரும்பத் திரும்ப ஒரு விதமான இறுக்கத்திற்குள் நான் அகப்பட்டுக் கொள்வதாகப்பட்டது.

எனக்குத் தேவையான அயிட்டத்தைப்பற்றிக் கேட்டான். நான் சொல்லும் வரை காத்திருப்பவனைப் போல என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். வேறு வழியில்லாமல் ‘விஸ்கி’ என்றேன். அவனுக்கு அது சரிபட்டு வராதாம். அரைபாட்டில் பிராந்திக்கும் இரண்டு ஆம்லெட்டுக்கும் ஆர்டர் சொன்னான்; கலப்பதற்கு சோடா. இதற்கு என்னை கேட்கவேண்டிய அவசியமில்லையே!

நான் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எங்களுக்கு பக்கத்திலிருந்த மேஜையில் மூன்று இளைஞர்கள் உட்கார்ந்திருந்தனர். மேஜையின் மேலிருந்த வகையறாக்களை பார்த்தபோது மதுவை எவ்வளவு அற்புதமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் என்பது புரிந்தது. அவர்களுடைய பேச்சு ரொம்பவும் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் இருப்பவர்கள் எப்போதோ அவர்களுக்கு மறந்து போயிருக்கவேண்டும். அதில் தனியாக உட்கார்ந்திருந்த ஒரு ஒடிசலான இளைஞன் மட்டும் மற்ற இருவரின் பேச்சைக் கேட்டு குழந்தையைப் போல சிரித்துக்கொண்டிருந்தான். அவ்வப்போது தாடியை அழுத்தமாக தடவிவிட்டுக் கொண்டான்.

எனக்கு எதிரே இரண்டு மேஜை தள்ளி, சுவரில் ஒரு கேலண்டர்தொங்கிக் கொண்டிருந்தது. அது மதுபான கம்பெனி ஒன்றின் விளம்பரப்படம். விஸ்கி பாட்டில் ஒன்று நீளமான ஒரு கயிற்றில் பெண்டுலம் மாதிரி தொங்கவிடப் பட்டிருக்கிறது; நிர்வாண கோலத்திலிருக்கும் ஒருத்தி மூடிக்கு மேலே நின்று கயிற்றை தன் இரண்டு செழித்த முலைகளுக்கிடையே அழுத்திப்பிடித்தபடி உல்லாசமாக ஆடிக்கொண்டிருக்கிறாள். அந்த பார் இருந்த இடம் இதற்கு முன் ஒரு வீடாக இருந்து அதில் ஒரு குடும்பம் வசித்திருக்கும் என்பதை யோசிக்கவே பொருத்தமற்றதாக இருந்தது.

இவன் பேசிக் கொண்டிருந்தான். கடிகாரம் குறித்து அவன் ஏதோ சொல்லத் தொடங்கியதும் திரும்பினேன். அந்த சுவர் கடிகாரத்தை என்னிடம் கொடுப்பதற்கு முன்னால் வேறு இரண்டு கடைகளில் கொடுத்திருக்கிறான். காசுதான் செலவானதேயொழிய கடிகாரம் சரியாக ஓடவில்லை என்றான். என்னைப் போல திறமையுள்ள ஆட்களைப் பார்ப்பது அபூர்வம் என்றான். அவனுடைய கடிகாரத்தை ரிப்பேர் செய்து கொடுத்ததற்கு நான் பணம் எதையும் வாங்கிக் கொள்ளாதது அவனுக்கு வருத்தமாம். அதற்கு பிரதி உபகாரமாக இன்று எவ்வளவு வேண்டுமானாலும் எனக்காக செலவழிக்கத் தயாராக இருப்பதாகச் சொன்னான். இதுதான் விஷயம் போலும்! இதெல்லாம் அவசியமில்லாதது என்று சொல்லி நான் தலையைத் திருப்பிக் கொண்டேன். இரண்டு உயரமான கண்ணாடி டம்ளருடன் இரண்டு பாட்டில் சோடாவும் அரைபாட்டில் பிராந்தியும் வந்தன. அவனே அளவு பார்த்து ஊற்றினான். சோடா பாட்டிலை குலுக்கி அதன் வாயை விரல்களால் அழுத்திக் கொண்டு டம்ளரில் பீய்ச்சியடித்து கலந்தான். ‘சியர்ஸ்’ சடங்குக்குப் பிறகு குடிக்க ஆரம்பித்தோம். ஆம்லெட் வந்தது. விரைவாகவே நான் போதையின் பிடிக்குள் சிக்கினேன். உடல் சமநிலை தளர்ந்து மயக்கம் கொள்ளத் தொடங்கியது.

தனது வியாபார நுட்பங்களைப்பற்றி அவன் பேசிக்கொண்டிருந்தான். அவனுடைய வெற்றிகள் குறித்தும், தோல்விகள் நெருங்கிய காலத்தில் அதை எப்படி சமாளித்து வெளிவந்தான் என்பதைப் பற்றியும் அவன் பேசியதாக ஞாபகம்.

என்னுடன் பிணைக்கப்பட்டிருந்த ஒரு கயிற்றின் முனையை பிடித்து தொங்கியபடி ஒரு இரும்பு குண்டைப் போல அவன் ஊசலாடிக் கொண்டிருந்தான். வலி கயிற்றின் வழியே ஏறி விஷம்போல என்னுள் பரவிக் கொண்டிருந்தது. எனக்கு நானே பரிதாபம் கொள்ளக்கூடிய நிலையில், விடுதலை செய்துவிடும்படி அவனிடம் கெஞ்சிக் கேட்கத் தயாராகிக் கொண்டிருந்தேன்.

“இந்தா இன்னொரு டம்ளர் குடி” என்றான் அதிகாரத்துடன்.

“எனக்குப் போதும்” என்றேன்.

அவனுடைய முகம் போதையில் நொடித்தது. அவன் இன்னுமொரு கால் பாட்டில் வரவைழத்திருந்தான். என்னை முறைத்துப் பார்த்தபடி சொன்னான். “பேசாம குடி, நீயா காசு குடுக்கப்போற?”. அந்த போதையிலும் நான் குன்றிப்போனேன். அதற்கு மேலும் நான் குடிக்க விரும்பவில்லை. மீதியை அவனே குடித்தான்.

பாரை விட்டு நாங்கள் வெளியே வந்தபோது ஒன்பதரை மணிக்கு மேல் இருக்கும். அவன் நிதானம் தவறியிருந்தான். அவனை வீட்டில் கொண்டுபோய் சேர்க்கவேண்டிய பொறுப்பு என் மேல் விழுந்தது. ஆட்டோவில்தான் அவனைக் கொண்டு போக முடியும். ஜோபியிலிருந்த காசு போதுமாவென்று பார்த்து ஆட்டோவைக் கூப்பிட்டேன். ஆட்டோக்காரனுக்கு இவனைத் தெரிந்திருந்தது.

வழியில் உளறிக்கொண்டே வந்தான். தானும் சில ஆட்டோக்களுக்கு சொந்தக்காரன் என்ற உரிமையில் ஆட்டோகாரனின் தன்மானத்தை சீண்டும் விதமாக சில வார்த்தைகளைப் பேசினான். கேட்டருகில் ஆட்டோவை நிறுத்தச் சொல்லி அவனை கீழே இறக்கி நிற்க வைத்தேன். ஆட்டோக்காரனே கேட்டைத் திறந்து விட்டான். வீட்டிலிருந்து ஒரு நாய் குரைத்துக் கொண்டே ஓடி வந்தது. கதவைத் திறந்துகொண்டு அவன் மனைவி வெளியே வந்தாள். நாய் பக்கத்தில் வந்ததும் குரைப்பதை நிறுத்திக்கொண்டு வாலாட்டியது. இரண்டு கதவையும் பறக்க திறந்துவிட்டு அவள் கடுமையான முகத்துடன் ஒதுங்கி நின்று கொண்டாள்.

ஆட்டோக்காரனைக் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு, அவனை வீட்டுக்குள் இழுத்துக் கொண்டுபோய் ஒரு பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்தேன். எது நடந்து விடக்கூடாது என்று நான் பயந்தேனோ அது அப்போது நடந்துவிட்டது; அவன் வாந்தியெடுக்கத் தொடங்கினான். அவனுடைய மனைவியின் பார்வையை சந்திக்க அச்சப்பட்டு திரும்பும்போது வரவேற்பறையின் சுவரில் இருந்த அந்த ராட்சஷ கடிகாரத்தைப் பார்த்தேன்; மணி பன்னிரண்டு ஐம்பதைக் காட்டியது. பெண்டுலத்தில் அசைவில்லை. கடிகாரம் நின்றுவிட்டிருந்தது.

- ஜீ.முருகன்
( gmurug...@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

சென்ஷி

unread,
May 31, 2010, 2:09:15 AM5/31/10
to panb...@googlegroups.com

குரங்குகளின் வருகை

ஜீ.முருகன் 

சித்திரை மாதத்தில் ஒரு நாள் உச்சிப்பொழுதில் அவை காட்டைவிட்டு ஊருக்குள் பிரவேசித்தன. அப்பொழுது எங்கள் கிராமத்தில் பெரும்பாலானவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். இரவு முழுக்க கண்விழித்து கூத்துப் பார்த்த தூக்கமயக்கம் அவர்களை ஆட்கொண்டிருந்தது. மஞ்சள் நிற வேட்டியுடுத்தி, கைகளில் காப்புக்கட்டி, பூநூல் மாட்டியிருந்த கூத்தாடிகளில் பாதிப்பேர் நாடகக் கொட்டகையில் இடமில்லாமல் பண்ணை நிலங்களிலிருந்த மாட்டுக்கொட்டகைகளிலும், பம்பு செட்டுகளிலும், மரத்தடிகளிலும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

monkey_280அவ்வூர் சிறுவர்கள் உறங்கவில்லை. தண்டாயுதம், சூலாயுதம், ஆங்காங்கே ஜிகினா காகிதம் ஒட்டப்பட்ட வில் அம்பு முதலிய ஆயுதங்களுடன் மறைவான  இடங்களை நோக்கி அவர்கள் போய்க்கொண்டிருந்தார்கள். இரவு முன்வரிசையில் இடம்பிடித்துப் பார்த்த கூத்தினை பகல் நேரத்தில் அவர்கள் ஆடிப்பார்க்கப்போகிறார்கள். ஆட்ட களம் வெறிச்சோடி தூங்கி வழியும் நாடகக்கொட்டகையின் அருகில் சில சிறுவர்கள் வண்ணக்காகிதங்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்களோ மதிய உணவுக்குப்பின் தங்களுடைய வாழைத் தோட்டங்களிலும் வயல்களிலும் மும்முரமாக வேலைபார்த்துக் கொண்டிருந்தார்கள். எதிர்பாராத இந்தச் சந்தர்ப்பத்தில் அவை காட்டிலிருந்து இறங்கி வந்தன. ஒன்றல்ல, இரண்டல்ல ஐம்பதுக்கும் மேற்பட்ட குரங்குகள்.

குரங்குகளை முதலில் பார்த்தது பாஞ்சாலையம்மாதான். வாழைத் தோட்டத்தில் நிம்மதியுடன் வெளிக்குப் போய்கொண்டிருந்தவள், பின்னால் ஏதோ சலசலப்பு கேட்கிறதே என திரும்பிப் பார்த்தவள், குரங்குகளைக் கண்டவுடன் வெலவெலத்துப் போய், தோட்டத்தைவிட்டு வெளியே ஓடிவந்தாள். இதற்குமுன் அவள் குரங்குளைப் பார்க்காதவள் அல்ல. காடுகளிலும் கோயில்களிலும் பார்த்திருக்கிறாள். இப்படி திடுதிப்பென்று வாழைத் தோட்டத்துக்குள் பார்ப்போமென்று நினைத்திருப்பாளா அவள்?

மத்தியானமே கண் விழித்துவிட்ட முருகேசக் கவுண்டன் அன்று உடைக்கப்போகும் சுரைக்காய் தண்டாயுதங்களுக்கு   கலர் காகிதம் ஒட்டிக்கொண்டிருந்தான். அவன் இன்னும் மத்தியானச் சாப்பாட்டை முடிக்கவில்லை. அவனுடைய மகன் கொண்டுவந்து வைத்துவிட்டுப்போனது பக்கத்திலேயே இருந்தது. வாதாபி தர்பாரில் பஃபூனாக வரும் மாதவக் கவுண்டனை இந்தச் சுரைக்காய் தண்டாயுதங்களால்தான் துரத்தித் துரத்தி அடிக்கவேண்டும். அடித்து உடைக்க வேண்டும். அப்போதுதான் பார்வையாளர்கள் மகிழ்ந்து சிரிப்பார்கள். ஒன்பது நாள் வன்னியன் கூத்தில் ஐந்தாம் நாள் ஆட்டம் முடிந்திருந்தது.

பிள்ளையார் கோயிலுக்கு முன்னால்தான் ஆட்டப் பந்தல். கோயிலை அணைத்த மாதிரி வடக்குப் பக்கத்தில் தென்னங்கீற்றாலான ஒரு கொட்டகை. இதில் தான் வேஷம் தரிப்பது, கலைப்பது, சாப்பிடுவது, தூங்குவது எல்லாம். பின்பக்கம் அழிஞ்சன் கிளைகளால் ஆன வேலி வேயப்பட்டிருந்தது. முருகேசக்கவுண்டன் கீற்றுக் கொட்டகையில் உட்கார்ந்து கலர் காகிதம் ஒட்டிக் கொண்டிருந்த அத்தருணத்தில்தான் வேலி வழியாக திடீரென்று உள்ளே புகுந்துவிட்ட குரங்குகள் கோபுரத்தின் மேலும், ஆட்டப்பந்தல் மேலும் தாவிக் குதித்தன. அப்போது ஆட்டப்பந்தல் மேல் கேட்ட சத்தம் அவனை திடுக்கிடச் செய்தது. அவனது தலைக்கு மேலும் அதே சத்தம் தொடர்ந்த போது அவன் அவசரத்துடன் எழுந்து வெளியே வந்து பார்த்தான். குரங்குகளைக் கண்டு துணுக்குற்றான். சுரைக்காய் ஒன்றைக் கையிலெடுத்து அவைகளை விரட்ட ஆரம்பித்தான். ஆட்டக் களத்தை எங்கே துவம்சம் செய்துவிடுமோ என்று அஞ்சினான் அவன். இந்த ரகளையால் மிரண்டு எழுந்த சிலரும் அவனுடன் சேர்ந்து கொண்டார்கள்.

அதன் பின் வந்த நாட்களில் வாழைத் தோட்டங்களும், தென்னந் தோப்புகளும், மாந்தோப்புகளும் அவைகளுக்கு விளையாட்டுக் களமாயின. வீடுகளுக்குள் புகுந்து சட்டி பானைகளை உருட்டுவது, கட்டுத்தறியில் இருக்கும் மாடுகளை அச்சுறுத்துவது, நாய்களைச் சீண்டுவது என அதன் விளையாட்டுகள் பெருகின.

செங்கல்வாடியான் வீட்டு மாங்காய்த் தோப்பில்தான் அவைகள் கூடாரமிட்டிருந்தன. அது டவுனில் இருக்கும் ஒரு முசல்மானுக்குக் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த வருஷம் நல்ல காய்ப்பு. காவலுக்கு உட்கார்ந்திருந்த கிழவன், அவைகளின் தொல்லை தாங்காமல் நகரத்துக்குப் போய் மொதலாளியிடம் குரங்குகளுடன் மாரடிக்க தம்மால் ஆகாதென்று சொல்லிவிட்டான். வாழைத்தோட்டங்களில் புகுந்து வாழைத்தார்களைச் சாய்த்து அவைகள் செய்யும் நாசத்தைத் தாங்காத விவசாயிகள், முற்றிய தார்களை உடனே வெட்டிக்கொண்டு போகும்படி வியாபாரிகளை நச்சரித்துக் கொண்டிருந்தனர்.

கூத்துக் காலத்துச் சந்தோஷங்கள் ஒரு புறமிருக்க குரங்குகளின் விளையாட்டுக்களை காணவொண்ணா காட்சியாகக் கண்டு பரவசமுற்றார்கள் சிறுவர்கள். தோட்டம் தோட்டமாக அவைகளைத் தேடிப்போனார்கள். குறும்புத்தனமாகக் கற்களை வீசி விரட்டினர். அவைகள் சீறிக்கொண்டு எதிர்க்கையில் பயந்து ஓடிவந்தார்கள். கேபிள் டிவி ஒயர்களைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு தலைகீழாக அவை நடக்கையில் அதியத்துடன் பார்த்தார்கள். பயன்பாடின்றிப் போன ஐந்தாறு டிவி ஆண்டனாக்களை தாட்சண்யமில்லாமல் உடைத்துப் போட்டன குரங்குகள்.

ஊருக்குள் வந்துவிட்டால் எந்தத் தெருவில் அவைகள் நுழைகிறதோ அங்கே உள்ளே ஓடி எல்லா கதவுகளையும் சார்த்திவிட்டு கிலேசத்துடன் சிரித்துக் கொண்டனர் பெண்கள்.

திரும்பவும் வந்த வழியே அவைகள் காட்டுக்குள் போய்விடும் என்ற அவர்களுடைய எதிர்பார்ப்பு பலிக்கவில்லை. கிழக்குக் காட்டிலிருந்து இறங்கிவந்த அவைகள் மேற்கு திசைத் காட்டுக்குப் போகத்தான் இங்கே வந்துள்ளனவே தவிர நிரந்தரமாகத் தங்காது என்று சொன்ன சில அனுதாபிகளின் கூற்றுகள் உண்மையல்ல என்று ஆகியது.

குரங்குகளை எப்படித் திரும்புவம் காட்டுக்குள் ஓட்டுவது என்ற கேள்வி எல்லோருடைய மனதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. எங்கும் எப்போதும் அவைகள் வரலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டார்கள் அக்கிராமத்தினர். வாதாபி சூரனின் படைகளுடன் வன்னிய மகாராசனின் படைகள் மோதும் வேளையில் இடையே வாலியின் படைகள் எங்கே புகுந்துவிடப்போகிறதோ என்று அச்சத்துடன் இருந்தார்கள் ஆட்டக்காரர்கள். அப்படி ஒன்றும் நடக்காதது அவர்களை நிம்மதியடையச் செய்தது.

கூத்து முடியும் வரை காத்திருந்த ஜனங்கள் அடுத்த நாளே மும்முரமாக யோசிக்கத் தலைப்பட்டார்கள். ஆளாளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். ஊரில் இருந்த எல்லா வேட்டைக் காரர்களும் ஒன்று சேர்ந்து துப்பாக்கியால் அவைகளை வேட்டையாடிவிடலாம் என்றார்கள். ஒரு சாராரோ, அது பாவம் என்றும் தெய்வக் குற்றம் என்றும் சொல்லித் தடுத்தனர். அதனால் அம்முயற்சி கைவிடப்பட்டது. சிலரது யோசனைப் படி பட்டாசுகள் வாங்கிவந்து  வெடித்தார்கள், பறை அடித்தார்கள்,  அனுமனுக்குப் பொங்கல் வைத்தார்கள்; ஒன்றுக்கும் அவை பயப்படுவதாக இல்லை. புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்ட ஒருவன், தண்ணீர்ப் பாம்புகளைப் பிடித்துவந்து பொட்டலமாகக் கட்டி அவைகளிடம் போட்டால் பாம்புகளைக் கையில் பிடித்தபடி கத்தியே அவை செத்துப்போகும் என்றான். இந்த யோசனை பலரையும் அச்சமடையச் செய்தது. அப்படி ஒரு கொடுமையைச் செய்வதைவிட சுட்டுக் கொன்றுவிடுவதே உத்தமம் என்று அது தவிர்க்கப்பட்டது. இன்னொருவன் இறுதியாக சொன்ன யோசனை எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. அதைச் சொன்னவன் ஆற்றுத்தெரு வடிவேல் உடையான். மொடாக் குடியனாக இருந்தாலும்கூட அவனது யோசனையைச் செயல்படுத்தவே எல்லோரும் ஆர்வம் கொண்டார்கள்.

இத்திட்டம் உருக்கொண்ட அன்று சாயும்காலமே யாரும் எதிர்பார்க்காத அந்த விபத்து நடந்தது. பஃபூன் மாதவன்  பம்புசெட் பள்ளத்தில் விழுந்து, தலை மோட்டாரில் அடித்து நசுங்கிச் செத்துப் போனான். மாதவனின் இறப்பு குறித்து நிறைய வதந்திகள் ஊருக்குள் உலாவந்தன. காப்புக் கட்டிக் கொண்டு கூத்தில் சேர்ந்த பிறகும்கூட சாராயம் குடித்ததால் நேர்ந்த தெய்வகுற்றம் தான் என்றார்கள், தூங்கும் போது தவறி விழுந்துவிட்டான் என்றார்கள்,பங்காளிகள்தான் அடித்துப்போட்டு விட்டார்கள் என்றார்கள், பம்புசெட்டில் தூங்கிக் கொண்டிருந்த பஃபூனை குரங்குகள்தான் பள்ளத்தில் உருட்டிவிட்டன என்றுகூடச் சொன்னார்கள்.

குரங்குகள் ஊருக்குள் வந்தது, நெருப்பில் இறங்கிய வன்னியனின் பாதத்தில் தீக்கொப்புளங்கள் போட்டது, பஃபூன் மாதவன் செத்துப்போனது இவை எல்லாவற்றையும் பார்த்த ஊர்க்காரர்கள் இதெல்லாம் ஏதோ பெரும் தீங்கின் முன் அறிகுறி என்றே கருதினர்.

வடிவேல் உடையான் சொன்ன திட்டத்தின் முதல்படி அந்த மந்தையிலிருந்து ஒரு குரங்கு பிடிக்கவேண்டும் என்பது. அதனால் ஒரு குழு குரங்குகள் முகாமிட்டிருந்த மாங்காய்த் தோப்பை நோக்கிப் புறப்பட்டது. இன்னும் சில குழுக்கள்  குரங்குகள் அதிகமாக புழங்கும் இடங்களைக் குறி வைத்து வேட்டையைத் துவக்கின. குரங்கைப் பிடிக்கப்போகிறோம் என்பதே எல்லோரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள் காலியாக இருந்தன. தோட்ட வேலைகள் தடைப்பட்டன.

சுருக்குக் கயிறுகளுடனும் தடிகளுடனும் தோட்டம் தோட்டமாக அலைந்தார்கள், கண்ணிகள் வைத்தார்கள்; எதிலும் அவைகள் பிடிபட மறுத்தன, லகுவாக நழுவிச்சென்றன. ஊரின் பலமுனைகளிலிருந்தும் வியூகம் அமைக்கப்பட்டு குரங்கு வேட்டை நடந்தது.

கடும் முயற்சிக்குப் பின்னால் ஒரு குரங்கு அகப்பட்டது. அதைச் சாதித்தது காளி கோயிலுக்கு அருகிலிருந்த பூங்காவனம்தான். மிரண்டு ஓடிக்கொண்டிருந்த குரங்குக்கூட்டத்திலிருந்து பிரிந்த குரங்கொன்று பூங்காவனத்தின் வீட்டுக்குள் நுழைந்த போது அவள் கதவைச் சார்த்திவெளியே தாளிட்டாள். ஆட்களைக் கூட்டிவர ஓடினாள். வீட்டுக்குள் பெரும் ரகளை நடந்து கொண்டிருந்தது. அதனுடன் வந்த சில குரங்குகள் வீட்டுக் கூரை மேல் பரபரப்புடன் இங்கும் அங்கும் ஓடி அதைக் காப்பாற்ற முயற்சித்தன. ஒரு பெரிய கொசுவலை கொண்டுவரப்பட்டு கதவைத் திறந்ததும் வெளிப்பட்ட குரங்கை வலையில் பிடித்தனர். ஒரு பெண்ணின் சாதாரண தந்திரத்திலேயே அகப்பட்டு விடுவோம் என்று தெரிந்திருந்தால் ஊர்ப்பக்கம் வந்திருக்குமோ என்னமோ அது.

இன்னும் பிரிக்காமல் இருந்த கூத்துக் கொட்டகைக்கு எதிரே பிடிப்பட்ட குரங்கைக் கொண்டுவந்து, பாய்ச்சல் காளையைக் கட்டுவது போல ஒரு நீண்ட கயிற்றின் நடுவில் பிணைத்தார்கள். கயிற்றின் இரண்டு முனைகளையும் இரண்டு குழுக்கள் பற்றிக்கொண்டிருந்தன. ஊரே அங்கே கூடிநின்றிருந்தது. சிறு கற்களை வீசியும் நீண்ட கழிகளால் சீண்டியும் அதை வேடிக்கை பார்த்தது கூட்டம். மிரண்டுபோன குரங்கு கண்களை உருட்டி உருட்டி கிறீச்சிட்டபடி முன்னும் பின்னுமாகக் கயிற்றில் இழுபட்டது. ஆக்ரோஷத்துடன் சீறிக்கொண்டு முன்னால் பாய முயற்சித்து தலைகுப்புற விழுந்தது. இரண்டு மூன்று பேர் குரங்கை அசையாமல் பிடித்துக்கொண்டு கருநீலச் சாயத்தை முகத்தில் பூசினர். ஒரு பையனின் பழைய டவுசர் சட்டையை கொண்டு வந்து மாட்டினர். புது அவதாரம் பூண்டது குரங்கு. இத்தனை நாள் குரங்குகள் செய்த சேட்டைகளுக்கெல்லாம் பழி வாங்கிவிட்டதான திருப்தி பெரும்பாலானவரின் முகத்தில் தெரிந்தது.

இறுதியாகக் கயிற்றிலிருந்து விடுவிக்கப்பட்ட குரங்கை நீண்ட கழிகளுடன் கிழக்குப் பார்த்து விரட்டினர். சிறிது தூரம் ஓடிய குரங்கு நின்று திரும்பிப் பார்த்துவிட்டுத் திரும்ப ஓடியது. ஊர் எல்லையைத்தாண்டும் வரை விரட்டிக்கொண்டு போயினர். அக்காட்சி ஒரு குரங்கை விரட்டுவது போல இல்லாமல் சிறு பையனை விரட்டுவது போலத் தோன்றியதால் சிலர் மனவருத்தம் கொண்டனர்.

மனிதர்களால் அவலட்சணப்படுத்தப்பட்ட அக்குரங்கு தனித்து தோப்பை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. இத்தந்திரம் புரியாத தோப்பிலிருந்த குரங்குகளோ, இதை ஏதோ இதுவரை காணாத புதுவகை மிருகம் என நினைத்து மிரண்டு தோப்பிலிருந்து இறங்கி காட்டை நோக்கி ஓடின. எப்படியாவது மந்தையில் சேர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பின்னாலேயே இதுவும் ஓட எல்லா குரங்குகளுமே காட்டுக்குள் சென்றுவிட்டன. மனிதனின் தந்திரத்தில் மீண்டும் ஒருமுறை தோல்வியைச் சந்தித்தன குரங்குகள்.

குரங்குகளை விரட்டி விட்ட சந்தோஷத்தில் இருந்த ஊர்ஜனங்களோ சிறிது சிறிதாக வெறுமையை உணர ஆரம்பித்தனர். ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்த கூத்தும் முடிந்து விட்டது. வேடிக்கை பார்க்கக் கிடைத்த குரங்குகளும் காட்டுக்குத் திரும்பிபோய் விட்டன. சிறுவர்கள்தான் அதிகம் ஏமாந்து போனார்கள்.

இச்சம்பவம் நடந்து பல மாதங்கள் கழித்து, சம்பவத்தை எல்லோரும் மறந்து கொண்டிருந்த தருவாயில், ஒரு குழந்தை வாலுடன் பிறந்ததுதான் அந்தக் கிராமத்தினரை அதிர்ச்சிடையச் செய்தது.

சென்ஷி

unread,
May 31, 2010, 2:15:25 AM5/31/10
to panb...@googlegroups.com

ஈரம்

சுப்ரபாரதிமணியன் திங்கள், 03 மார்ச் 2008 15:26
மின்னஞ்சல் அச்சிடுக PDF

 

insect கதவை அடைப்பதற்கான நேரம் வந்து விட்டது. இந்த நேரம் இப்போதெல்லாம் முன்னதாகவே வந்து விடுகிறது. மாலை ஆறு மணிக்கு என்று முன்பிருந்தது. சமீபமாய் குறைந்து இன்னும் முன்னதாகவே என்றாகிவிட்டது. கதவை அடைப்பதைத்தவிர வேறு வழியில்லை என்பதை சிவக்கண்னனும் உணர்ந்திருந்தான்.

செல்வி கதவையடைப்பதற்கு முன் பனியன் கம்பெனியின் வேலை முடிந்து போதும் வேலை என்று புறந்தள்ளி விட்டு வருபவள்தான். ஆனாலும் ஏழெட்டு மணியாகி விடுகிறது. நன்கு இருட்டின பின்பு வந்து கதவைத் தட்டும் பேர்வழியாக மாறி விட்டாள். அவன் கதவைத் திறக்கிற ஒவ்வொரு நாளும் கத்துவது இப்படித்தான் இருக்கும்: "முந்தியே வந்து தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்ற உசிரெ வாங்கறே"

அணையிலிருந்து வரும் பூச்சிகளிலிருந்து தப்பிப்பதற்காகக் கதவை அடைக்க வேண்டியிருக்கும். அணையைச் சுற்றியிருக்கிற எல்லா வீடுகளிலும் இப்படித்தான். முன்பெல்லாம் கொசுவை அடிப்பது போலத்தான் நினைத்து உடம்பில் ரத்தக்கறைகளைக் கொண்டிருந்தான். கொசுக்கள் ரொம்பவும்தான் கொழுத்துத் திரிகின்றன என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவை கொசுக்களல்ல என்று தெரிந்தற்கே பல மாதங்களாகி விட்டன. அவை ஏதோவகைப் பூச்சிகள் , ரசாயனப்பூச்சிகள்.

அணையில் தேங்கி நிற்கும் ரசாயனக் கழிவுகளைத் தின்று பெருத்து விட்டன. ரசாயனக்கழிவுகளின் மினுங்கும் வர்ணங்களில் எவையும் வீழ்ந்து விடும். இந்தப்பூச்சிகளும் விழுந்து எழுகிற போது ராட்சதையாக மாறி விடும். இல்லாவிட்டால் எப்படி இவ்வளவு சீக்கிரம் கொழுக்கும். விவசாயத்திற்கென்று கட்டப்பட்ட அணை. சாயக்கழிவுகள் ஆற்றில் கலந்தோடி வந்து நிற்கிற இடமாகி விட்டது.

அணை நிரம்பி விட்டது. வெடிக்கவிருக்கும் வெடிகுண்டைப்போல தகதகத்து நிற்கிறது. மதகுக் கதவுகள் இற்றுப் போய் விட்டன. அணைக்கதவுகளைத் திறந்து விட வேண்டும். இல்லாவிட்டால் நீர் மெல்ல மெல்ல வழிய ஆரம்பிக்கும். அணை நிரம்பிய பின்பு திறந்து விடாமல் இருக்க முடியாது. சமீபமாய் பெருத்த மழை பெய்து விட்டது. திறந்து விட வேண்டாம் என்று கரையின் ஓரத்தில் இருக்கும் விவசாயிகள் கதறுகிறார்கள். சாயக்கழிவு தண்ணீரோடு கலந்து இருபது மைல்களுக்குப் பரவ எல்லாம் சாயமாகி விடுகின்றன என்று தூரத்து ஊர்க்காரர்களெல்லாம் அலறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிவக்கண்ணனுக்கு எல்லாம் மூழ்கிப்போய் விட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். சாயங்களை அடித்துக் கொண்டு போவதற்கு பதிலாக மனிதர்களை கும்பல்கும்பலாக அடித்துக் கொண்டு போகட்டும் என்றிருக்கும்.

கதவை அடைத்து விட்டால் இருக்கும் அசௌகரியங்களில் ஒன்று தண்ணீர் லாரிகளின் பிரத்யேக ஓசையும் தடதடப்பும் சரியாகக் கேட்க முடியாமல் போவதுதான். அணைக்கட்டும், சுற்றியுள்ள நிலமும் சாயம் பூத்து விட்டன. குடிப்பதற்கு லாயக்கற்றுப் போய்விட்டபோது நாற்பது கி.மீ.க்கு அப்பாலிருந்து தடதடத்து தண்ணீர் லாரிகள் வந்து போகின்றன. குடிக்கிற தண்ணீரை ஏற்றி வரும் தண்ணீர் லாரிகள். கதவை அடைத்து விட்டால் கதவுகளுக்குப் பின்னாலும் ரசாயனப்பூச்சிகளின் ரீங்காரம் கேட்டு விடுவதால் தண்ணீர் லாரிகளின் ஹாரன் சப்தங்கள் சில சமயங்களில் கேட்காமல் போய் விடுவதுண்டு. யாராவது கதவைத் தட்டி சொல்லி விட்டுப் போங்களேன் என்று சிவக்கண்னன அலறியிருக்கிறான். ரசாயனப்பூச்சிகளின் ரீங்காரத்துக்குள் எல்லாக் கதறல்களும் அடக்கம் என்பது போலாகிவிட்டது.

ரசாயனப்பூச்சிகளை விரட்டுவதற்காக ஆளுக்கொரு உபாயம் வைத்திருக்கிறார்கள். சிவக்கண்ணனுக்கு எல்லாமே வினோதமாகத்தான் தெரிந்தன. கைகளை அப்படியும் இப்படியும் ஆட்டி பயமுண்டாக்கி துரத்திவிடலாம் என்றுதான் முன்னம் நினைத்திருந்தான். ஆனால் தேனடையை மேய்க்கும் தேனீக்கள் மாதிரி கொசகொசவென்று உடம்பை மொய்ப்பது சாதரணமாகிவிட்டது. சிவக்கண்ணனுக்குத் தெரிந்த ஒரே வித்தை வேப்பிலை புகை போடுவதுதான். முன்பெல்லாம் கொழுந்தை விட்டு விட்டு முற்றின இலைகளைக் கொண்டு வந்து போட்டு புகையெழுப்புவான். கமறலுடன் அறைகள் முழுக்கப் பரவும். இப்போதெல்லாம் எவ்வளவு அடர்த்தியாய் புகை கிளம்பினாலும் கமறல் வருவதில்லை. முத்துசாமி செய்யும் வித்தையும் செலவும் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. டுயூப்பிலிருந்து பற்பசை மாதிரி எதையோ பிதுக்கிக் கொள்வான். உள்ளங்கையில் வைத்து நசுக்கிக் கொண்டு முகர்ந்து பார்ப்பான். சரசரவென்று கைகள் மற்றும் கால்களில் பரவலாகத் தேய்த்துக் கொள்வான்.

"பறக்கிற டைனோசர் இருக்கா?”

" இருந்திருக்கும். இல்லீன்ன நாலெட்டு வச்சு ஒரு தெருவையேன் அடச்சிக்குற டைனசரை சினிமாவிலெ காமிப்பாங்களா ". அவன் டுயூப் பிதுக்கலுக்கென்று செலவு செய்யும் தொகை செல்வியின் ஒரு வாரச் சம்பளத்திற்கு ஏக தேசம் வந்திருந்தது. லாரித்தண்ணீரை நம்பாமல் மினரல் வாட்டர் கேனை ஊருக்குள் கொண்டு வந்தவன் முத்துசாமி என்ற பெயரும் பெருமையும் ஊருக்குண்டு. சிறுவாணித் தண்ணீரின் சுவையை விட மினரல் கேன் தண்ணீரின் சுவை அவனை திணறடித்தது என்பது சமீப சாதனை. இன்னொரு சாதனைச் செய்தி சமீபமாய் பதிந்தது என்னவென்றால் ஆயுத பூஜையின்போது செல்வி அவள் வேலை செய்யும் பனியன் கம்பனியிலிருந்து வழக்கமாய் கொண்டு வரும் பத்து படி பொட்டலத்துடன் ஒரு டி சட்டையையும் கொண்டு வந்தது. கிடைத்த டி சட்டையைப் போடப்போகிற கற்பனை அவனைச் சுத்தமான அணை நீருக்குள் நீச்சலடிக்க இறக்கி விட்ட மாதிரி இருந்தது. டி சர்டின் நீலமும் பச்சையும் சிவப்பும் கலந்த வர்ணக் கலவை அவனுக்குப் பிடித்திருந்தது. "நம்ம ஊரு அணையில உங்களை முக்கி எடுத்த மாதிரி இருக்கீங்களோ" ரசாயனப் பூச்சியென்று அவனை அவள் சொல்லாதது ஆறுதலாகத்தான் இருந்தது.

தண்ணிர் லாரி நேற்றுதான் வந்திருந்தது. இன்றைக்கு வராது என்பது மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. கதவைச் சாத்திவிட்டுப் புகை போடலாம்.. ஆரம்ப நிலையிலானக் கமறலைத் தவிர்த்து விட்டால் மூச்சு முட்டுவது கூடத் தெரியாது. கமறல் இப்போதெல்லாம் அபூர்வமாகத்தான் வருகிறது.

வேப்பிலைகளை மூலையில் சேர்த்திருந்தான். நேற்று நல்லூர் போனபோது வேப்பிலைகளைப் பறித்து பிளாஸ்டிக் பை ஒன்றில் நிரப்புவதற்கென்று ரொம்பதூரம்தான் போக வேண்டியிருந்தது. பக்கத்து கிராமங்களில் இருக்கும் மரங்களெல்லாம் மொட்டையாகி விட்டன. நல்லூர்ப்பக்கம் போகிறபோது வெளுத்ததாய் சில தென்படும் விளக்கெண்ணெயைக் கண்களில் ஊற்றிக் கொண்டு பார்க்க வேண்டியிருக்கும். வேப்பங்குச்சிகளையும் கொஞ்சம் ஒடித்துப் போட்டுக் கொள்வான். பற்கள் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டன. கிருஷ்ணமூர்ர்த்தி பிரஸ் போட வேண்டாம். கைகளில் விளக்கவும். பற்பசை வேண்டாம். ஆயுர்வேதப் பல்பொடி போதும். வேப்பங்குச்சி குறைந்தது நான்கு நாட்களுக்காகும். ஒரு முனையை ஒரு நாள் என்று ஆரம்பித்து நான்கு நாளில் பிடி அளவிற்கு வரும் வரையில் உபயோகப்படுத்துவதில் தன்னைத் தேர்ச்சியுள்ளவனாக்கிக் கொண்டான்.

புகை போடும் மண் சட்டிகள் அடிக்கடி உடைந்து போகின்றன. சூடான நிலையில் அவற்றை கையில் தொடுவதும், நகர்துவதும் சிரமமாக இருந்தது. பழைய ஒடுக்கு விழுந்த அலுமினியச் சட்டியை சமீபமாய்ப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தான். செத்த எலியைத் தூக்குவது மாதிரி அலுமினியச் சட்டியைப் பயன்படுத்துவது அவனுக்குச் சுலபமாக இருந்தது.

வேப்பிலை பழுப்பு நிறத்துடன் துவண்டு போய் விட்டது. பிளாஸ்டிக் பையிலிருந்து கொட்டும் போது காய்ந்த இலைகளுக்கான சரசரப்பு வந்து விட்டது. காகிதங்களைப் போட்டு தீ மூட்டினான். சோம்பலுடன் எரிய ஆரம்பித்தது. ஒரு சொட்டு விளக்கெண்ணை அல்லது பெட்ரோல் இருந்தால் சுலபமாகப் பற்றிக் கொள்ளும். குனிந்து ஊத சாம்பல் துணுக்குகள் முகத்தில் தெறித்தன.

மெல்ல புகை பரவ ஆரம்பித்ததும் முன் பக்க அறையின் இடது மூலையில் வைத்தான். உள் அறைக்குள் மெல்ல புகை பரவும். தூக்கம் வரவில்லையென்றாலும் கண்களை மூடிக்கொண்டு கிடக்கலாம். ரசாயனப் பூச்சிகள் எங்காவது மூலைகளில் ஒதுங்கிக் கொள்ளட்டும். அவனே அவனைப் பாராட்டிக்கொள்வதைப் போல் வலது கையின் மேற்பகுதியைக் கொசுவை அதட்டுவது போலத் தட்டிக் கொண்டான். மெல்ல புகை ஆரம்பித்தது. லேசான கமறல் வந்தது ஆச்சர்யமாக இருந்தது. புகையினுள் மூழ்க ஆரம்பித்தான். இடது கையில் வந்து தைரியமாக உட்கார்ந்தது ஒரு ரசாயனப் பூச்சி. புகையை விழுங்கி அது சிவக்கண்ணனின் பாதி உடம்பிற்கு வந்தது. வாயைத் திறந்தபோது புகை வெளிவந்தது. கண்களைச் சிமிட்டிக் கொண்டு அது வாயைத் திறந்தது.

* பத்திரிக்கையாளர் சந்திப்பிற்காக சிவக்கண்ணனை உட்கார வைத்திருந்தார்கள். பத்திரிக்கையாளர் சங்கத்தின் பெயர் அவன் தலைக்குப் பின்புறம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. முன்னால் போடப்பட்டிருந்த நாற்காலிகள் அடைபட்டிருந்தன. ஏகதேசம் நாற்காலிகளில் அடைபட்டிருந்தவர்களின் கைகளில் இருந்த கேமிராக்கள் ஒரே சமயத்தில் ஒளிர்ந்து நின்றன. வந்து சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் வெவ்வேறு நேரங்களில் இருந்து வந்த காரணத்தால் அவர்கள் கேட்டது ஒரே மாதிரியான கேள்விகள் சிவக்கண்ணனுக்கு அலுப்பைத் தந்திருந்தது.

சிவக்கண்ணனுக்கு கால்களில் ஒரு வலி ஆரம்பித்திருந்தது. வலது காலை எடுத்து இடது காலின் மேல் போட்டுக் கொண்டான். ஒருவகை ஆசுவாசமாய் பெருமூச்சு வந்தது.. பெரும்பான்மையோர் கேட்ட கேள்வி: "ரசாயனப் பூச்சியை இந்த வெற்றிப் படத்தில் நடிக்க வைப்பதற்காக நீங்கள் எப்படி அதன் மொழியை புரிந்து கொண்டு கட்டளையிட ஆரம்பித்தீர்கள்"

ரசாயனப் பூச்சியைப் பார்த்தான், தனது இடுப்பு உயரத்திற்கு இருந்தது. முப்பது நாற்பது கிலோ எடையாவது இருக்கும். சற்று சிரமப்பட்டுதான் இடுப்பில் அதை வைத்து இடுக்கிக் கொண்டு ஸ்டுடியோவிற்கும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கும் சென்றிருந்தான். அதன் கண்களில் ஒளிர்ந்த ஒளியில் இருட்டான பகுதி வெளிச்சமாகி இருந்தது. ஏதாவது சிரமம் வருகிறபோது ராட்சத பூச்சியின் நகங்களைச் சுலபமாக தற்காப்பிற்கென்று பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவு சௌகரியமான நீளத்தில் இருந்தது.

"படத்தில் ராட்சத மனிதர்களையெல்லாம் செத்த எலிகளைத் தூக்கிப் போடுவது போல போடுகிறாயே ரசாயனப் பூச்சியே, உனது அன்பு முகத்தை தடவலாமா." பெண் நிருபர் ஒருத்தி கேட்டாள். அவளின் கண்களில் ஒரு வகை பயம் இருந்தது. கேள்விகளைக் கேட்டு விட்டு நாற்காலியிலேயே உட்கார்ந்திருந்தாள். "என்ன எதிர்பார்க்கிறீர்கள். எனது ராட்சதப் பூச்சி உங்களை நெருங்கி முத்தமிட வேண்டுமா அல்லது பலாத்காரம் செய்ய வேண்டுமா" சிவக்கண்ணன் ஆங்கிலத்தில் கேட்டபடி முறுவலித்தான். பெண் நிருபரும் சிரித்தாள். லேசான லிப்ஸ்டிக் அவளின் உதட்டை வசீகரமாக்கியிருந்த்து. அவள் போட்டிருந்த காலர் சட்டையில் பறந்து கொண்டிருந்தது ஓர் பட்சி. ரசாயனப் பூச்சி காலர் சாட்டையில் இருந்த பட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது. உடம்பை அசைத்துக் கொண்டிருந்தாலும் பட்சி சற்றே பறப்பது போலக் காட்சியளித்தது.

"நீ துவம்சம் செய்ய யார் யாரோ இருக்கிறார்கள். தீயது தோற்கும்." என்ற தர்மத்தை நீயும் வெற்றி பெற்றுச் சொல்லிக்கொண்டிருக்கிறாய் இப்படத்தில். ஆனால் நீ ரசாயனப் பூச்சியாக இல்லாமல், கிருஸ்ணப்பருந்தைப் போலவோ, ராட்சதப் புறாவைப் போலவோ இருந்திருந்தால் உனக்கு கோவில் கட்டலாம்." கிழ நிருபரின் தாடி ஏக தேசம் வெளுத்திருந்தது. மீசைக்கு மட்டும் டை அடித்து அழுத்தமான கறுப்பாக்கியிருந்தார். அது அவர் போட்டிருந்த முரட்டுக் கதர் சட்டையின் அழுக்குச் சட்டைக்குப் புது நிறத்தைக் கொண்டு வந்திருந்தது.

"சினிமாவில் நடிக்கிற எல்லோருக்கும் கோவில் கட்டி விடுவீர்கள் போலிருக்கிறது. கதாநாயகர்கள், நாயகிகள் மூலஸ்தானத்தில் இருக்கும் போது இது போன்ற பட்சிகளும் ராட்சதபறவைகளும் மூல ஸ்தானத்தைப் பிடிக்க முடியாதே" சொல்லி வைத்த மாதிரி எல்லா காமிராக்களும் மிளிர்ந்து மறைந்தன. வீடியோ காமிராக்களின் பிரேமிற்குள் ரசாயனப்பூச்சியின் ஒளிரும் கண்களை அடைத்தார்கள். எல்லோரும் வேலை இருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் போல அவசர கதியில் எழுந்தார்கள்.

" ராட்சத மனிதர்களையெல்லாம் அலாக்காகத் தூக்கிப் போடும் இப்பூச்சி ரசாயன அணைக்கட்டை வாரியெடுத்து எங்காவது கொண்டு போய் விடலாம்". பூச்சியை நெருங்கியவர் சிவக்கண்ணனைப் பார்த்தபடி சொன்னார். திகைப்பில் பூச்ச்சியின் கண்கள் மிளிர்ந்தன.

"தற்கொலை செய்து கொண்ட நடிகையின் அம்மா பேட்டி அடுத்த ஒரு மணி நேரத்தில் இருக்கிறது. நட்சத்திர ஓட்டலில் நடிகையின் தற்கொலை பற்றின கிசுகிசுக்களுக்கு முறையான பதில் கிடைக்கலாம். நடிகையின் குடிப்பழக்கமும், மூன்றாவது காதலன் அவளைத் திருமணம் செய்து கொள்ள தாமதப்படுத்தியது பற்றி நிறைய ஹேஸ்யங்கள் கிடைக்கும்." கலைந்து போவதில் சீரான வேகம் இருந்த்து. பெண் நிருபர் ரசாயனப் பூச்சியின் அருகில் வந்தாள். அவளின் காலர் சட்டையில் இருந்த பட்சி மெல்லப் பறந்து கொண்டிருந்தது. ராசாயனப்பூச்சியின் சொரசொரக் கன்னத்தைத் தடவினாள். பூச்சி கிறங்கிப்போனது போல கண்களை மூடியிருந்தது. கண்களைத் திறக்காதபடி இறுக்கியிருந்தது. வெடுக்கென்று வலது பக்க இறக்கையொன்றை பிய்த்தெடுத்தாள். பூச்சி ஒருவகை வலியை மூடிமறைப்பதற்காக இன்னும் கண்களை மூடியிருந்தது. கண்களைத் திறக்காதபடி இறுக்கியிருந்தது. வெடுக்கென்று வலது பக்க இறக்கையொன்றை பிய்த்தெடுத்தாள். பூச்சி ஒருவகை வலியை மூடி மறைப்பதற்காக இன்னும் கண்களை மூடியபடியே இருந்தது.

"சினிமாவில் நடித்த ராட்சச பூச்சி ஆயிற்றே.. ஞாபகமாக இருக்கட்டுமே". இன்னொரு நிருபர் சற்றே முதிர்ந்த இறக்கையினைப் பிய்த்தெடுத்தார். ஒருவகை வரிசை அமைந்து விட்டது. வருகிற ஒவ்வொருவரும் ராட்சதப்பூச்சியினைத் தொட்டு அவர்களின் கைவிரல்களின் வலிமைக்கேற்ப அதன் உடம்பிலிருந்து எதையாவது பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். "பெர்லின் போயிருந்தபோது கிழக்கு செர்மனிக்கும், மேற்கு செர்மனிக்கும் இடையிலான பெர்லின் சுவரின் இழந்த இடிந்த துண்டை எடுத்து வந்து வீட்டில் வைத்திருக்கிறேன். இதுவும் இருக்கட்டுமே" ராட்சதப்பூச்சி அதன் இறகுகளை மெல்ல இழந்து முழு நிர்வாணமாகிக் கொண்டிருந்தது. அதன் கண்களில் ஒளி வலுவிழந்திருந்தது. ஒரு வாகை சோம்பல் தன்மையுடன் கண்களைத் திறந்து மூடியது. கண் புருவத்திற்கு மேலிருந்த மயிர்களும் உதிர்ந்திருந்தன. சமையலுக்கென்று சுத்தம் செய்யப்பட்ட கோழி போல் பூச்சியின் உடம்பு நிர்வாணமாகிச் சிறுத்தது. ஓங்கித் தட்டினால் கொசுவைப் போலச் சிறுத்துவிடும் என்றபடி வலது கையினை முழுபலத்தையும் பிரயோகித்து கீழிறக்கினான்.

வேப்பிலை புகை முழுசாகக் குறைந்து போயிருந்தது. கண்களைத் திறக்காதபடி எரிச்சல் அப்பியிருந்ந்தது. வலது கையை உயர்த்தித் தாழ்த்தியபோது சற்றே ஈரம் தென்பட்டது. கொசு ஒன்றின் ரத்தக் கசிவு பிசுபிசுப்பாக ஒட்டியிருந்தது.

- சுப்ரபாரதி மணியன்

VJagadeesh

unread,
May 31, 2010, 2:17:13 AM5/31/10
to panb...@googlegroups.com

இப்படியே 80 கதை போட்டு 1000 அடிக்க ப்ளானிங்கா. பாஸ், மூச்சு முட்டுற அளவு கதைலாம் போட்டா ஒரு சிலரை தவிர யாரும் படிக்க போறதில்லை.

 

ஒரு நாளைக்கு 1-2 அனுப்பினாதான் கொஞ்சம் பேராச்சும் படிப்பாங்க.

 

எத்தனை அனுப்பினோம் என்பது சரித்திரமில்லை, எத்தனை பேரை படிக்க வைச்சோம் என்பதே சரித்திரம். அதனால ப்ளீஸ் ஒரிருவரி மொக்கை போடுங்க உங்க 1000 டார்கெட்டுக்கு. நான் அப்படியே டபார்னு ஷிப்ட் டெலிட் பண்ண ஈசியா இருக்கும்.

 

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of ??????

சென்ஷி

unread,
May 31, 2010, 2:21:01 AM5/31/10
to panb...@googlegroups.com
பாஸ், நானே இதுல பல கதைகள் தேடிட்டு இருந்தது. ஸ்டார் போட்டு சேமிச்சு வைச்சு பொறுமையா படிப்பேன். நீங்களும் அதையே செய்ங்க

அடுத்த மாசம் இந்த வேலை கட்டு :(

2010/5/31 VJagadeesh <VJaga...@prouindia.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

சென்ஷி

unread,
May 31, 2010, 3:03:25 AM5/31/10
to panb...@googlegroups.com



அபூர்வ சகோதரிகள்

பா. ராகவன்

கலி முற்றிய காலத்தில், மனுஷத்தனம் மரித்துவிட்ட சென்னைப் பட்டணத்தில், ஒரு கூட்டுக் குடும்பத்தில் என்னை உத்தியோகம் பார்க்க விதித்து அனுப்பி வைத்தான் எம்பெருமான்.

பத்தாங்கிளாஸ் படித்தவள் என்பது தெரிந்தால் பெருக்கித் துடைக்கச் சொல்ல அனேகமாக யார் மனமும் இடம் கொடுக்காது என்பது என் அனுபவ ஆசான் போதித்த பாடமாகையால், பணியாற்றப் போகுமிடங்களில் நான் என் கல்வித் தகுதி குறித்து ஒருபோதும் பிரஸ்தாபிப்பதில்லை. அப்படியே துருவித் துருவி கேட்கும் சில ஜீவராசிகளும் உண்டு இவ்வுலகில். அச்சமயங்களில் வழக்கமான வேலைக்காரச் சலிப்பை மேல்போர்வையாகப் போர்த்திக்கொண்டு, ‘ஆமா, படிச்சிக் கிழிச்சேன் போ’ என்றோ, இதற்கொத்த வேறு விதமான சுவாரசியமற்ற சொற்களைக் கொண்டோ பேசுபொருளை மாற்றிவிடுவேன்.

ரொம்ப சுலபம். குடிகாரக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட வயதில் இன்னும் இரண்டு, மூன்றைக் குறைத்துச் சொல்லி, அனுதாப ஓட்டு பெற்றுவிடலாம். ஐயோ, பாவம் சின்னப் பெண் தலையில் இப்படி எழுதிட்டானே.

இருக்கட்டும். உருப்படாத புருஷன் வாய்த்தால் உத்யோகம் பெண்கள் லட்சணம். புரைதீர்ந்த நன்மைக்காக வாய்மையிடத்தில் பொய்யை வைத்தே தீரச் சொல்கிறது வாழ்க்கை.

ஏழெட்டு வீடுகள் பார்த்துவிட்டு, ஒரு மாசம் முன்புதான் இந்த வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்கு அல்ல. ஆத்துக்கு. மாமி மிகவும் ஆசார சீலி. விடிந்தால் போதும், சாமிகளுடன் பிஸினஸ் நிகழ்த்த ஆரம்பித்துவிடுவாள்.

இருபுறமும் சங்கு, சக்கரம் ஏந்தியவனே, துளசி அணிந்தவனே, நெற்றி நிறைய திருமண் தரித்தவனே, அவனே, இவனே, நமஸ்காரம். கட்டத் தொடங்கியிருக்கும் வீட்டுக்கு மேஸ்திரி வஞ்சனை எண்ணாமல் நீ பார்த்துக் கொள்வாய். அழகிய தாமரையின் மேல் அமர்ந்து முறுவல் புரிபவளே, உனக்கும் ஒரு நோட்டீஸ். எண்ட்ரன்ஸ் எழுதியிருக்கும் கடைசிப் பையனுக்கு அண்ணா பல்கலையிலேயே அனுமதி கிடைக்கச் செய்வது உன் பொறுப்பு. ஹிரண்யவர்ணாம் ஹரிணீ, இரு மாட்டுப் பெண்களும் முறைத்துக்கொண்டு நிற்காமல் குடும்ப கவுரவம் காக்கச் செய்வது உன் கடமை.

எனக்கு அவரிடம் பிடித்த விஷயம் அந்த நேர்மை. ஆமாம். நான் கடவுளிடம் பேரம்தான் பேசுகிறேன் என்று மிகவும் வெளிப்படையாகச் சொல்வார்.

”வாரத்துக்கு எட்டுநாள் நான் விரதம் இருக்கேன். தினசரி பூஜை பண்றேன். அவனை நினைக்காத நாளே கிடையாது. எனக்கு வேண்டியதைக் கேட்டால் என்ன தப்பு? கேளுங்கள், கொடுக்கப்படும். தட்ஸ் ஆல்” என்பார் மிகத் தீர்மானமாக.

எட்டுபேர் கொண்ட குடும்பம், வாரக் கடைசி நாளின் காலை உணவுக்கு ஒன்றுசேரும். பத்து மணிக்கு நான் துணிகள் துவைத்து என் பிறப்புரிமையை நிலைநாட்டத் தொடங்கும்போது, குடும்பம் குழம்பு சாதத்திலும் கடந்த வாரத் தலைப்புச் செய்திகளிலும் இருக்கும். முக்கால் கிரவுண்ட் நிலம் வாங்கி ஒரு வீடு கட்டத் தொடங்கியிருக்கிறார்கள். அது பற்றிய பேச்சு வரும்போது மாமியின் முகம் ஒரு குழந்தையினுடையது போலாகிவிடும்.

அவருக்கு மூன்று மகன்கள். இரண்டு பேருக்குத் திருமணமாகி விட்டது. மூன்றாமவரின் படிப்பும் முளைத்திருக்கும் வீடும் நல்லபடியாக முடிந்தாக வேண்டும் அவருக்கு. “பாருங்கடா, ஒரே காம்பவுண்ட். ஒரே வீடு. மூணு போர்ஷன். இந்த பைத்தியமும் படிச்சு முடிச்சி, ஒரு கல்யாணம் பண்ணிண்டுடுத்துன்னா, உன் கடமை முடிஞ்சசுடும். அப்புறம் ஒவ்வொருத்தனோடவும் ஒரு வாரம் வந்து இருப்பேன். உட்கார்ந்த இடத்துக்கு சாதம் வந்து விழணும். அப்புறம், இஷ்டப்படி ராமா, கிருஷ்ணான்னு என் ஆத்துக்காரரைக் கூட்டிண்டு கிளம்பிடுவேன்.” என்று ஒரே வசனத்தை 1349வது முறையாக ஒலிபரப்புவார். (நான் வருவதற்கு முன் எத்தனை முறை ஒலிபரப்பப்பட்டிருக்கிறது என்பதை அறிய எனக்குமுன் இங்கிருந்த கனக லட்சுமியைக் கேட்க வேண்டும். ஆனால் கனகா இப்போது துபாய் போயிருக்கிறாள்.)

“இந்த தனித்தனி போர்ஷன் சமாசாரமும் தான் பிடிக்கலை. போர்ஷன் தனித்தனியா இருந்தாலும் சமையல் ஒண்ணாவே இருக்கட்டுமே” என்பார் மாமியின் ஹார்ட் அட்டாக் வந்த கணவர்.

நான் மிகவும் ரசித்து அனுபவிக்கும் தருணம் அது. கான்க்ரீட்டில் அவர் ஒரு கட்டடம் கட்டுகிறார். அதை ஒரு வீடாக்கும் பொறுப்பைத் தலையில் சுமந்திருக்கும் இரு மருமகள்களும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

ஆவலுடன் அவர்களின் முகங்களை கவனிக்கிற விநாடி, என் வாழ்வின் கவித்துவக் கணங்களுள் ஒன்று.

ஆனால் உலகம் தெரிந்த மாமி அந்தப் பேச்சை முளையிலேயே கிள்ளிவிடுவாள். மாமியும் அவரது பழமொழிகளும். தாயும் பிள்ளையும், வாயும் வயிறும். மேலும் உறவு என்பது ஒரு சமையலில் மட்டுமே ஒளிந்திருப்பது அல்ல. ஒத்த உணர்வு என்பது ஒரு லயம். நன்கு இழுத்துக் கட்டப்பபட்ட தம்பூராவின் தந்தியை மீட்டும்போது எழும் நாதத்துக்குச் சமமானது அது. (மாமிக்குக் கொஞ்சம் சங்கீதம் தெரியும். “மாருபல்க” எனும் ஒரு தெலுங்குப் பாட்டை அடிக்கடி சுமாரான சுருதியுடன் பாடுவார். சமயத்தில் குரல் சதி செய்து அவரை அவமானத்துக்கு உள்ளாக்கும்போது ‘வயசாயிடுத்து. இப்பல்லாம் முடியறதில்லை’ என்பார். எப்போதாவது முடிந்திருக்க வேண்டும்.)

என் அனுபவத்தில், நான் வேலை பார்க்கும் வீடுகளில் உள்ளவர்களைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு அதிகபட்சம் மூன்று நாட்கள் போதும். நல்ல மாதிரியா, சிடுமூஞ்சியா, தாராள உள்ளம் படைத்தவர்களா, கஞ்சூஸா, வம்புப் பிரியரா, வதந்திப் பிரியரா, நல்லுறவாளர்களா, அன்புடன் பிரியப் போகிறவரா – என மனக் கண்ணில் விஸ்வரூப தரிசனம் விழுந்துவிடும். அதற்கேற்ற மாதிரி அவர்களுடன் என் பேச்சு வார்த்தை எல்லைகளை வகுத்துக் கொள்வேன்.

ஆனால் என்னால் சற்றும் புரிந்துகொள்ள முடியாத பிரகிருதிகளாக இருந்தார்கள், மாமியின் மாட்டுப் பெண்கள். இரண்டு பேர். இரண்டு அழகிய புதிர்கள்.

என் குடிகாரப் புருஷனை நான் சமாளிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று, எனக்கு அவர்களின் பெரிய உத்யோகத்துப் புருஷர்களைப் பார்த்ததும் தோன்றிவிட்டது. அட ஒருத்தராவது, ஒரு தினமாவது பார்க்கக் கிடைக்க வேண்டுமே! அவர்கள் எப்போது வீட்டுக்கு வருகிறார்கள், எப்போது கிளம்புகிறார்கள், நள்ளிரவு வீடு திரும்புபவர்கள் பெண்டாட்டி சாப்பிட்டாளா, எத்தனை வேளை சாப்பிட்டாள், என்ன சாப்பிட்டாள், வேறென்ன விசேஷம் என்று விசாரிப்பார்களா, அதற்கெல்லாம் அவகாசம் இருக்குமா? அட, அன்புடன் ஒரு முத்தம்? பாசமுடன் ஒரு பார்வை?

இவர்கள்தான் அன்றைய தினத்தில் நடந்ததைச் சொல்வார்களா, ஒரு முழம் பூ வாங்கி வராதது பற்றி இனிய சண்டை போடுவார்களா… எப்போது, நடு ராத்திரி பன்னிரண்டு மணிக்கும், ஒரு மணிக்குமா… ரொம்ப ஆச்சர்யமாகத்தான் இருக்கும் எனக்கு. இவர்கள் கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்தது அவரவர் கணவர்களையா, மாமியாரையா என்று சந்தேகம் வரும், சமயத்தில். ஆனால் ஒரு முகச்சுளிப்பும் சலிப்பும் அவர்கள் முகத்தில் பார்த்ததில்லை நான். அவரவர் உலகின் கதவு, ஜன்னல்களை இழுத்துச் சாத்தி, கொக்கி மாட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டும் நான் அதிகம் கண்டதில்லை. இருக்கியா, இருக்கேன். சாப்டியா, சாப்டேன். சவுக்கியமா, சவுக்யம். கடைக்குப் போறேன், நீ வரியா. இல்லை. நான் வரலை. நீ போயிட்டு வா. காஸ்காரன் வந்தா சொல்லு. சரி, சொல்றேன். நாளைக்கு நான் என் அம்மா ஆத்துக்குப் போகப் போறேன். அப்படியா, சரவணால எனக்கு ஒரு அஞ்சலி கட்டர் வாங்கிண்டு வரியா.

இவ்வாறாகத் தழுவல்களோ, உரசல்களோ அற்ற ஒருவித ஞானகர்ம சந்யாச உறவாயிருந்தது அவர்களுடையது. இதுதான் என் ஆர்வத்தை அதிகம் தூண்டியது. பெண்களால் அன்பு வளர்க்காமல் இருக்க முடியாது. பெண்களால் வம்பு வளர்க்காமல் இருக்க முடியாது. பெண்களால் சண்டை போடாமல் இருக்க முடியாது. பெண்களால் சமாதானம் கொள்ளாமல் வாழ முடியாது. ரொம்ப முக்யம், இரு பெண்கள் ஒரு நேர்க்கோட்டில் ஒருவர் பின் ஒருவராகச் செல்ல முடியாது. மோதிக் கவிழ்வதும், கவிழ்ப்பதும், எழுந்து தட்டிக் கொள்வதும், தட்டி விடுவதுமாக உலகம் பெண்களால் பிரசன்னமடைந்து வருகிறது.

ஆனால் மாமியின் மாட்டுப்பெண்கள் இருவரும் இயல்பாக ஒரு புதிய இலக்கணம் எழுதி வந்தார்கள். மானசீக லட்சுமணக் கோட்டின் இருபுறமும் அவரவர் தம் சமஸ்தானங்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

பத்து நாட்கள் முன்பு இரண்டாவது மாட்டுப்பெண் வயலின் வாசிக்கக் கற்றுக் கொள்கிறேன் என்று தன் டி.வி.எஸ். 50யில் ஒரு நாள் திடீரென்று கிளம்பினாள். மாமிதான் ஏற்பாடு செய்து தந்தாராம். ‘மூத்தவளுக்கு சங்கீதத்துல ஆர்வம் இல்லை. இவ கத்துக்கறேன்னா. அதான் நானே கூட்டிண்டு போய் பம்மல் விஜயலட்சுமி கிட்ட சேர்த்துவிட்டேன். அவ தூர்தர்ஷன்ல கார்த்தால ப்ரோக்ராம்லாம் குடுத்திருக்கா.’ என்று பக்கத்து வீட்டு கல்யாணியிடம் சொல்லிக் கொண்டிருக்கக் கேட்டேன்.

இந்தக் காலத்தில் மாமி இன்னும் தூர்தர்ஷன் பார்த்து வயலின் வாத்தியார் தேர்ந்தெடுக்கிறாரே என்று நினைத்துக்கொண்டேன். நினைத்ததோடு நிறுத்திக்கொண்டால் அப்புறம் எப்படி வாழ்க்கையின் சுவாரசியத்தைக் கூட்டுவது? நானும் பெண் அல்லவா. ஆகவே இத்தலையாய செய்தியை மூத்தவளிடம் தெரிவித்து அவளது கருத்தை அறிந்துகொள்ள மிகவும் விரும்பினேன். மறுநாள் என் ஜனநாயகக் கடமைகளை முடித்துவிட்டு வீடுதிரும்பும்போது, அவளை வாசலில் பிடித்து, “தங்கச்சி வயலின் க்ளாஸ்க்குப் போகுது போல?” என்று ஸ ப ஸ பிடித்தேன்.

“தெரியலயே” என்றாள் அந்தக் குலவிளக்கு.

“அம்மாதான் சேர்த்து விட்டாங்களாம். இப்பத்தான் வண்டில போகுது” என்று என் சமூக சேவையை முடித்துக்கொண்டு என் வழியே போனேன்.

எனக்குக் கொஞ்சம் வியப்புத்தான். ஒரே வீட்டுக்குள் இருக்கிறார்கள். ஒரு சம்பவம் – பின்னாளில் அது சரித்திர முக்கியத்துவம் கொண்ட சம்பவமாகலாம் – நடக்கிறது. அது வீட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியாதோ? அதுவும் உப்பு உறைப்புகள் சரியாக உள்ள ஒரு ‘கூட்டு’க்குடும்பத்தில்?

மறுநாள் நான் என் தொழிலிடத்துக்குப் போனதும் முதல் வேலையாக அந்த மூத்த குல விளக்கிடம், ‘கேட்டியா? நெசந்தானே?’ என்று கேட்டேன். பதில்தான் என்னைத் தூக்கி வாரிப் போடச் செய்தது. இதுல நான் கேட்க என்ன இருக்கு? அவளுக்கு இஷ்டம். போறா. எனக்குப் பாட்டும் பிடிக்காது. ஒரு மண்ணாங்கட்டியும் பிடிக்காது.” என்றாள்.

“அதுக்கில்லம்மா. நீ மூத்தவ. ஒரு மரியாதைக்காகவாவது உங்கிட்ட சொல்லலாமில்ல?”

“அதெல்லாம் நான் எதிர்பார்க்கல. நீ உன் வேலயப் பார்” என்றாள் தன்னிகரற்ற நிதானமுடன். ஆகவே, நான் என் வேலையான பெருக்கல், கழுவல், துவைத்தலில் என் பிரத்யேக ஈடுபாட்டுடன் மூழ்கிப் போனேன்.

கிளம்பும்போது இம்முறை இளைய குலவிளக்கு சாலையில் எதிர்ப்பட்டது.

“வீணை க்ளாஸெல்லாம் நல்லாப் போகுதாம்மா?” என்றேன் உள்ளார்ந்த அக்கறையுடன்.

“ஐய, வீணை இல்ல கற்பகம், வயலின் க்ளாஸ்” என்றாள் சிநேகப் புன்முறுவலுடன். அப்பாவித்தனம் என்ற போர்வைக்குள் அணுகுண்டு தயாரித்தாலும் யார் கண்ணுக்கும் படாது போலிருக்கிறது. ஆகவே கேட்டேன் :

“அது என்னமோ க்ளாஸ். நான் என்னத்தைக் கண்டேன்? ஒரு ஆர்வத்துல உங்க அக்காகிட்ட கேட்டேன். தங்கச்சி என்னமோ கத்துக்குதே, நீ அதுக்கெல்லாம் போகறதில்லையான்னு.”

“என்ன சொன்னா?” என்று வலையைத் தேடி வந்து விழப் பார்த்தது இளைய குலவிளக்கு.

“கெட்டுது போ. அதுக்கு நீ போறதே தெரியாதாமில்ல? என்னாம்மா, ஒரே வீட்டுலதானே இருக்கீங்க, இப்படி சொல்றியேன்னா, உன் வேலையப் பார்’னுடுச்சி.”

“ச்சீ ஆமாப்பா. நானாவது சொல்லியிருக்கணும். தோணலை” என்று ஸேம் சைடு கோல் போட்டுவிட்டு போயே விட்டாள்.

பின்னொரு நாள் மூத்தவள் நல்லிக்குப் போய், தன் மாமியாரின் திருமண நாளை முன்னிட்டு, ரூபா 6850/-க்கு ஒரு பட்டுப்புடவை வாங்கி வந்திருந்தாள். வந்ததும் மாமியாரிடம் விலை விவரமுடன் எடுத்துக் காட்டியவள், உடனே புடைவையை பீரோவில் வைத்துப் பூட்டியதைக் கண்டேன்.

அன்று மாமி வத்தல் பிழிவது எனும் முழுநாள் யாகம் வைத்துக் கொண்டிருந்ததால் நானும் காலை முதல் மாலை வரை உடன் இருக்க வேண்டியதானது. வயலின் வகுப்பை முடித்துவிட்டு மாலை திரும்பிய தன் இளவலிடம் ஒரு ஆர்வத் துடிதுடிப்புடன் தான் வாங்கி வந்த (அதுவும் மாமியாருக்கு) புடைவையை எடுத்துக்காட்டி ஒரு அலட்டு, அலட்டிக்கொள்ள வேண்டாமோ? ம்ஹ¤ம்! யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் வம்சாவளிக் கொழுந்தாக “இன்னிக்கு K TVல ராத்திரி என்ன படம் போடறான்?” என்று பேச ஆரம்பித்தாள்.

ஒரு வேளை இரவு குடும்ப உறுப்பினர்கள் கூடும்போது சொல்வாளாயிருக்கும் என்று நினைத்தேன். மறுநாள் பொறுக்க மாட்டாமல் நானே நம்பர் 2விடம் புடைவை பார்த்தியா என்று கேட்டபோது, ‘என்ன புடைவை?’ என்று அவள் அன்று பிறந்த குழந்தை மாதிரி கேட்டாள்.

நல்ல குடும்பம் பல்கலைக் கழகம். எனக்கென்ன போயிற்று என்று நான் சும்மா இருந்திருக்கலாம். நானும் பெண்ணாய்ப் பிறந்து தொலைத்த பாவத்துக்கு எவ்வாறு அப்படி இருந்துவிட முடியும்? வாகான ஒரு தினம், மாமி மட்டும் வீட்டில் தனியே இருந்தபோது மேற்படி அபூர்வ சகோதரிகளின் குணவிசேஷம் குறித்து சாங்கோபாங்கமாகப் பேச்செடுத்தேன்.

“என்னத்த சொல்றது போ. என் கண்ணு முன்னாடி அடிச்சிக்கிறதில்லை. அவ்வளவுதான். இப்படி விட்டேத்தியா இருக்காதீங்கடி. ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிண்டு, சிரிச்சிண்டு, உதவிகரமா இருங்கோ. ஒரு வீட்டுல இருக்கறதைவிட ஒத்துமையா இருக்கறமாங்கறதுதான் முக்கியம்னு நான் சொல்லாத நாள் கிடையாது. சரிம்மாங்கறாளே தவிர ரெண்டுபேரும் சேர்ந்து சிரிச்சு நான் பார்த்து அறியேன்..”

சுய சோகத்தில் மாமியின் மூக்கு சிவந்துவிட்டது.

“நீங்க ஏம்மா கவலைப்படறீங்க? ஊருல உலகத்துல இருக்கற பொண்ணுங்கள விட நம்ம குழந்தைங்க எவ்வளவோ தேவலை.” என்று எதற்கும் இருக்கட்டும் என்று சொல்லி வைத்தேன்.

மாமி சில கணங்கள் பேசாதிருந்தாள். ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் என்று தோன்றியது. கூட்டுக் குடும்பத்தின் எதிர்காலம் குறித்த கவலைகளாயிருக்கலாம்.

“பாரு, மூணாவது மனுஷி. வந்து ஒரு மாசமாகலை. உன் வரைக்கும் அவா நடவடிக்கை எட்டியிருக்குன்னா என்ன அர்த்தம்? இதுங்களை வெச்சுண்டு நான் எப்படி குறை காலத்தை ஓட்டப் போறேன்னு கவலையா இருக்குடி.” என்றாள் மாமி.

“எல்லாம் சரியா போயிடும் மாமி. பச்சையம்மாளுக்கு ஒரு தேங்காய் நேர்ந்துக்கங்க” என்று நானறிந்த சாத்வீகத் தீர்வை முன்வைத்துவிட்டுப் புறப்பட்டேன்.

மறுநாள் மாமி வீட்டில் ஒரு சம்பவம் – இது நிச்சயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததுதான் – நிகழ்ந்தது என்பதை அவர்களது பக்கத்து வீட்டு வேலைக்காரி – என் சக பயணி மூலம் அறிந்தேன். விதி என்னை அன்று விடுமுறை எடுக்கச் செய்திருந்தது.

அன்று காலை மாமி குளித்து முழுகி, பூஜையில் அமர்ந்ததும் வழக்கமான எக்ஸ்பிரஸ் வேக மந்திர உச்சாடணங்கள் புறப்படவில்லை. மாறாக, ஆழ்ந்த தியானத்தில் இருப்பவள் போல் வெகுநேரம் கண் மூடி அமர்ந்திருந்தாள். மாமியின் இந்த மாறுபட்ட நடவடிக்கையால் கலவரமடைந்த மருமகள்கள் இருவரும் அக்கறையாக அருகே சென்று, என்ன என்று விசாரித்திருக்கிறார்கள்.

“கட்டிண்டிருக்கற வீடோ, என் புருஷனோ, பிள்ளைகளோ எனக்கு இப்ப முக்கியமில்லை. நீங்க ரெண்டு பேரும் சமத்தா, ஒத்துமையா, ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிண்டு, சிரிச்சிண்டு, சொந்த அக்கா தங்கை மாதிரி இருப்போம்னு சத்தியம் பண்ணுங்கோ. ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பி நடக்கறது, நீ எக்கேடு கெட்டா எனக்கென்னன்னு இருக்கறது, ஹாஸ்டல்ல ரூம்மேட்டா இருந்து தொலைக்க விதிச்சவாளாட்டும் நடந்துக்கறது, இந்த வழக்கங்கள் மாறணும்…’

“ஐயோ என்னம்மா என்னென்னமோ பேசறீங்க? இப்ப நாங்க என்ன பண்ணிட்டோம்?” என்று பதறினார்கள் சகோதரிகள்.

“ஒண்ணும் பண்ணலை. ஆனா அவாவா ரூம்ல மாட்டின கடிகாரம் மாதிரி, மணி அடிக்கறதோட கடமை முடிஞ்சி போயிடறதா? வேலைக்காரி கேக்கறா, ஏம்மா உன் மருமகப் பொண்ணுங்க ரெண்டும் இப்படி வடக்கு, தெற்கா இருக்குங்க’ன்னு. ஏண்டி இப்படி மூணாவது மனுஷி பேசற அளவு வெச்சுக்கறீங்க? இந்த வீட்டுல சண்டை போட ஒரு சந்தர்ப்பம் உண்டா? முறைச்சுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கறதா? நான் மாமியார் மாதிரியா நடந்துக்கறேன்? அம்மா இல்லியா?….”

மாமியின் கண்கள் கலங்கிவிட்டன. இரண்டுபேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அதானே? முறைத்துக் கொள்வதற்கும் முகமும் அகமும் திருப்பிப் போவதற்கும் என்ன இருக்கிறது? இருவரின் நிலையும் பொதுவானது. இருவரின் கஷ்டங்களும் பொதுவானவை. வீட்டில் இருவருக்கான உரிமைகளும் கூடப் பொதுவானவையே அல்லவா?

“சரி இப்ப நாங்க என்ன பண்ணணும்?” என்றார்கள் ஏககாலத்தில்.

“சத்தியம் பண்ணுங்கோ. நீ யாரோ, நான் யாரோன்னு இருக்க மாட்டோம்னு..” மாமி தீர்மானமாகச் சொன்னாள்.

சில வினாடிகள் அவர்கள் பேசாமல் இருந்தார்கள். நாடகத் தன்மை கூடிவிடும் சந்தர்ப்பம் குறித்த சிந்தனையாயிருக்கலாம். பிறகு மறுபடியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டுவிட்டு, “சரி, சத்தியம். இனிமே ஒத்துமையா இருப்போம். போதுமா?” என்றார்கள்.

“நிஜமா” என்று சந்தேகம் தீரமாட்டாத மாமி கேட்கவே, “ஆமா, ஆமா, ஆமா” என்று அழுத்திச் சொன்னவர்கள், “இனிமே வீட்டு விஷயங்களைக் கூட ரெண்டுபேரும் சேர்ந்தே முடிவுசெய்து, செயல்படுத்தறோம்” என்று நம்பிக்கை கொடுத்தார்கள்.

மாமியின் மாட்டுப்பெண்கள் சொன்ன சொல் காப்பதில் அரிச்சந்திர புத்திரிகள் போலிருக்கிறது. மறு நாளிலிருந்தே அவர்களின் ஒற்றுமை நடவடிக்கைகள் அமலுக்கு வந்துவிட்டதில் மாமி மிகுந்த சந்தோஷத்துக்கு உள்ளானாள்.

எனக்குத்தான் சங்கடம். கூட்டணி ஆட்சியின் முதல் உத்தரவு, என் வேலை நீக்கம் சம்பந்தப்பட்டதாயிருந்தது.

சென்ஷி

unread,
May 31, 2010, 3:08:28 AM5/31/10
to panb...@googlegroups.com




விசித்ரி

எஸ். ராமகிருஷ்ணன்

விசித்ரி என்று அழைக்கபடும் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் சித்ரலேகா என்றும் அவள் தனது பனிரெண்டு வயதின் பின்மதியப் பொழுதிலிருந்து இப்படி நடந்து கொள்கிறாள் எனவும் சொன்னார்கள். அந்த மதிய பொழுதில் என்ன நடந்தது என்பதை பற்றி யாரும் இந்நாள் வரை அறிந்திருக்கவில்லை.

அன்று கோடை வெயில் உக்கிரமேறியிருந்தது. வேம்பில் கூட காற்றில்லை. வீதியில் வெல்லத்தின் பிசுபிசுப்பு போல கையில் ஒட்டிக் கொள்ளுமளவு படிந்திருந்தது வெயில். வீட்டுக் கூரைகள், அலுமினிய பாத்திரங்கள் வெயிலேறி கத்திக் கொண்டிருந்தன. தெருவில் நடமாட்டமேயில்லை.

சித்ரலேகா தெருவில் நிர்வாணமாக ஒடிவந்ததையும் அவள் கேசத்தில் தூசியும் புழுதி படிந்து போயிருந்ததையும் முத்திருளன் வீட்டின் திண்ணையில் திருகை அரைத்துக் கொண்டிருந்த வள்ளியம்மை கண்டதாக சொல்கிறார்கள். வள்ளியம்மை இறந்து போகும்வரை இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்தியபடியே இருந்தாள்.

அப்படி நினைவுபடுத்தும் போது நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து கொண்டே வந்து முடிவில் சித்ரலேகாவை யாரோ துரத்திக் கொண்டு வந்ததையும், உடல் முழுவதும் காயங்களுடன் அவள் அலறியபடியே ஒடி வந்ததையும் அவள் பின்னால் கறுத்த நாய் ஒன்று உளையிட்டபடியே வந்ததாகவும் சேர்ந்து கொண்டது. உண்மையில் என்ன நடந்தது என்பதைப் பற்றி சித்ரலேகா இன்று வரை யாரிடமும் தெரிவிக்கவில்லை. இப்போது அவளுக்கு வயது நாற்பத்தி எட்டைக் கடந்திருக்கிறது.

ஒடிவந்த நாளில் இருந்து அவள் யாரோடும் பேசுவதும் பழகுவதும் குறைந்து போனது. அத்தோடு அன்றிலிருந்து தான் அவளது விநோதப் பழக்கம் துவங்கியது. அவளிடமிருந்த அத்தனை பாவடை சட்டைகளையும் அவள் ஒன்றின் மேல் ஒன்றாக அணிந்து கொள்ள ஆரம்பித்தாள். ஏதோ பயத்தில் அப்படி செய்கிறாள் என்று அப்படியே உறங்கவிட்டுவிட்டார்கள்.

ஆனால் மறுநாள் காலையில் அவள் அம்மாவின் பழம்புடவைகள், மற்றும் சகோதரிகளின் உடைகள் அத்தனையும் சேர்த்து அணிந்து கொள்ள துவங்கிய போது அவள் முகத்துக்கு நேராகவே சகோதிரிகள் திட்டினார்கள். சித்ரலேகா அதை கண்டு கொள்ளவேயில்லை. அவள் தன் உடலை எப்படியாவது மறைத்துக் கொண்டுவிட வேண்டும் என்று தீவிர முனைப்பு கொண்டவள் போல ஒரு உடைக்கு மேலாக மற்றொரு உடையை போட்டு இறுக்கிக் கொண்டிருந்தாள். இதனால் அவள் ஒரு துணிப்பொம்மை போன்ற தோற்றத்திற்கு வந்த போதும் கூட அதைப்பற்றி கவலைப்படவில்லை.

அத்தனை உடைகளுடன் அவள் உறங்கவும் நடமாடவும் பழகியிருந்தாள். குளிக்கும் நேரத்தில் கூட அவள் இந்த உடைகளில் ஒன்றையும் கழட்டுவதில்லை. ஈர உடைகளுடன் இருந்தால் உடம்பு நோவு கண்டுவிடும் என்று சகோதரிகள் திட்டி அவள் உடைகளை அவிழ்க்க முயன்ற போது ஆத்திரமாகி இளைய சகோதரி கைகளில் கடித்து வைத்தாள் சித்ரலேகா.

வலி தாங்கமுடியாமல் அவள் அழுதபடியே அம்மாவிடம் சொன்ன போது அம்மாவும் சகோதரிகளும் சேர்ந்து அவளது ஈர உடைகளை அவிழ்க்க முயன்றார்கள். அவள் கூக்குரலிட்டு அழுததோடு அத்தனை பேரையும் அடித்து உதைக்க துவங்கினாள். அப்படியே இருந்து சாகட்டும் சனியன் என்று அம்மா திட்டியபடியே அவளை தனித்துவிட்டு சென்றாள். ஈர உடைகள் அவளுக்கு பழகிவிட்டன.

ஆனால் அம்மாவும் சகோதரிகளும் சேர்ந்து தன் உடைகளை அவிழ்த்துவிடுவார்களோ என்று பயந்த அவள் சணல் கயிற்றாலும் ஊக்காலும் ஆடைகளை அவிழ்க்க முடியாதபடி பிணைத்துக் கொண்டு உடலோடு கட்டிக் கொள்ள துவங்கினாள். அதன்பிறகு உடைகளை யாரும் தொடுவதை கூட அவள் அனுமதிக்கவில்லை.

அதுவே கேலிப்பொருளாகி அவர்கள் வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் அவள் உடைகளை அவிழ்க்க போவதாக பொய்யாக பாவனை செய்த போது சித்ரலேகாவிடமிருந்து அலறல் குரல் பீறிடும். சித்ரலேகாவை சமாதானம் செய்வது எளிதானதில்லை. அவள் வீட்டிலிருந்து ஒடி தெருவில் வந்து உட்கார்ந்து கொள்வாள். சில நேரம் இரவில் தெருவிலே உறங்கிவிடுவதும் உண்டு.அப்போதும் அவள் கைகள் உடைகளை இறுகப்பற்றிக் கொண்டேயிருக்கும்.

சித்ரலேகாவின் உடை பழக்கம் தான் அவளுக்கு விசித்ரி என்ற பெயரை உண்டாக்கியிருக்க வேண்டும். அதன் பின்வந்த நாட்களில் எங்கே எந்த துணி கிடைத்தாலும் அதை எடுத்து உடுத்திக் கொள்ள துவங்கினாள். இதனால் அவள் தோற்றம் அச்சமூட்டுவதாக மாறத்துவங்கியிருந்தது. இருபது முப்பது பாவடைகள். அதன் மீது பத்து சேலைகள், அதன் மீது பழைய தாவணி அதன் மீது கிழிந்த துண்டு என்று அவள் உடலை போர்த்தியிருந்த ஆடைகளை கண்டு பெண்களே எரிச்சல் கொண்டனர்.

ஒருவகையில் அவள் ஊரிலிருந்த மற்ற பெண்களுக்கு தங்கள் உடல் குறித்த கவனத்தை தொடர்ந்து உண்டாக்கி கொண்டிருந்தாள். அவளை பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் தன் உடலை ஒருமுறை கவனம் கொள்வதும் உடைகளை கவனமாக இழுத்து விட்டுக் கொள்வதும் நடந்தேறியது.
விசித்ரியின் இந்த பழக்கம் அறிந்தவர்கள் அவள் எவர் வீட்டிலிருந்து எந்த உடையை எடுத்துக் கொண்டு போன போனதும் அவளிடம் கோவம் கொள்வதேயில்லை. விசித்ரியின் ஆவேசம் பல வருசமாகியும் தணியவேயில்லை.

கோடையின் முற்றிய பகலில் அவள் வீட்டை விட்டு வெளியே வருவதேயில்லை. நத்தைகள் சுவரில் ஒட்டிக் கொண்டிருப்பதை போன்று வீட்டு சுவரில் சாய்ந்து ஒடுங்கிக் கொண்டிருப்பாள். சித்ரலேகாவின் மற்ற சகோதரிகள் திருமணமாகி போன போதும் கூட அவள் வீட்டின் உள்ளேயே அடைபட்டு கிடந்தாள்.

சில வேளைகளில் அவள் மீது ஆதங்கம் கொண்ட அம்மா அருகில் சென்று உட்கார்ந்து சிறுமிகளை விசாரிப்பது போல தலையை தடவி விட்டுக் கொண்டு அன்னைக்கு என்னடி நடந்துச்சி என்று கேட்பாள். விசித்ரியிடமிருந்து பதில் வராது. அவள் கண்களை மூடிக் கொண்டுவிடுவாள். அல்லது நகத்தை கடிக்க துவங்கி ரத்தம் வரும்வரை கடித்துக் கொண்டேயிருப்பாள். அம்மாவிற்கு அவளை தான் சித்ரவதை செய்கிறோமோ என்ற குற்றவுணர்ச்சி வந்துவிடும். அப்படியே விலகி போய்விடுவாள்.

விசித்ரியை என்ன செய்வது என்று அவர்கள் குடும்பத்திற்கு இந்த நாள் வரை தெரியவேயில்லை. வீட்டு பெண்கள் திருமணமாகி சென்று பிள்ளைகள் பெற்று அந்த பிள்ளைகளும் கூட இன்று திருணம வயதை அடைந்து விட்டார்கள். ஆனால் விசித்ரியின் மனதில் நேற்று மதியம் நடந்தது போலவே அந்த சம்பவம் அப்படியே உறைந்து போயிருந்தது. யார் அவள் மனதில் உள்ள அந்த சித்திரத்தை அழிப்பது. எந்த காட்சி அவள் மனதில் அப்படியொரு கறையை உருவாக்கியது என்று உலகம் அறிந்து கொள்ள முடியவேயில்லை.

என்ன நடந்திருக்க கூடும் என்பது குறித்து சில சாத்தியங்களை விசித்ரியின் அம்மா அறிந்திருந்தாள். அதில் அவள் நம்பிய ஒன்று. புளியந்தோப்பில் மதிய நேரங்களில் யாரும் இருக்க மாட்டார்கள். பெரும்பாலும் சீட்டாடும் நபர்கள் மட்டுமே ஒன்று கூடுவார்கள். அதுவும் சந்தை நடக்கும் நாட்களில் தான் அதிகம் மனிதர்களை காண முடியும். மற்ற நாட்களில் புளியந்தோப்பினுள் நடமாட்டமேயிருக்காது.

அங்கே ஒரு மனிதன் எப்போதுமே உதிர்ந்த புளியம்பழங்களை பொறுக்குவதற்காக அலைந்து கொண்டிருப்பான். அவனுக்கு வயது முப்பது கடந்திருக்கும். சீனிக்கிழங்கு போல வளைந்து பருத்த முகம். குள்ளமாக இருப்பான். எப்போதுமே அழுக்கடைந்து போன வேஷ்டியொன்றை கட்டியிருப்பான்.மேல் சட்டை அணிந்திருப்பது கிடையாது. அவன் மார்பில் இருந்த நரைத்த ரோமங்கள் காய்ந்த கோரைகளை நினைவுபடுத்தியபடி இருந்தன. அவன் புளியந்தோப்பினுள் உள்ள கிணற்றடியில் படுத்துகிடப்பான். அல்லது புளியம்பழங்களை பொறுக்கி கொண்டிருப்பான்.

அவனுக்கு என்று குடும்பமோ, மனைவியோ இல்லை. அருகாமையில் உள்ள ஊரை சேர்ந்தவன் என்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும். அவன் புளியந்தோப்பில் பெண்கள் யாராவது தனியே நடந்து செல்வது தெரிந்தால் நாய் பின்தொடர்வது போல பின்னாடியே வருவான். சிலநேரங்களில் நாயை போலவே புட்டத்தை ஆட்டிக் காட்டுவான். பெண்களில் எவராவது அப்படி செய்வதை கண்டு சிரித்துவிட்டால் உடனே தன் வேஷ்டியை விலக்கி ஆண்குறியை கையில் எடுத்து காட்டுவான். அதை கண்டு பெண்கள் பயந்து ஒடிவிடுவார்கள். அது அவனை மிகுந்த சிரிப்பிற்கு உள்ளாக்கும்.

அப்படியொரு முறை சித்ரலேகாவின் அம்மாவின் முன்னால் அவன் தன் ஆண்குறியை காட்டியிருக்கிறான். அவள் தன் இடுப்பில் சொருகி வைக்கபட்டிருந்த கதிர் அருவாளால் அவனை கொத்தப்போவதாக சொன்னாள். அவனோ இடுப்பை ஆட்டியபடியே தன் வேஷ்டியை உறிந்து எறிந்துவிட்டு அவள் முன்னால் ஆடினான். அவள் புளியதோப்பை விட்டு ஒடிவரும்வரை அவன் ஆடிக் கொண்டேயிருந்தான். வீட்டிற்கு வந்த போதும் அந்த காட்சி மனதிலிருந்து விலகி போகவேயில்லை. அன்று இரவெல்லாம் நரகலை மிதித்துவிட்டது போன்ற அசூயை அவளுக்கு தந்தபடியே இருந்தது.

அவன் சிறுமிகளிடமும் இப்படி நடந்து கொள்வான் என்பதை கேள்விபட்டிருக்கிறாள். ஒருவேளை அவன் தன்மகளிடம் ஆண்குறி காட்டி பயமுறுத்தியிருக்க கூடும். அவள் ஆத்திரமாகி கல்லால் அடித்துவிடவே அவள் பாவடையை உறித்து எறிந்துவிட்டு அவளை வன்புணர்ச்சி கொள்ள முயன்றிருக்க கூடும் என்று தோன்றியது. அதை பற்றி எப்படி சித்ரலேகாவிடம் கேட்பது என்று அம்மாவிற்கு புரியவில்லை.

இதற்காக ஒரேயொரு முறை சித்ரலேகாவை அழைத்து கொண்டு புளியந்தோப்பின் உள்ளேநடந்து சென்றாள். அப்போதும் அந்த மனிதன் புளியங்காய்களை பொறுக்கி கொண்டு அலைந்தான். அவர்களை பார்த்தவுடன் உடலை குறுக்கியபடிய கும்பிடுறேன் தாயி என்று சொன்னான். அம்மாவும் மகளும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டார்கள். விசித்ரி அவனை நேர் கொண்டு பார்த்த போதும் அவள் முகத்தில் மாற்றமேயில்லை. அம்மா அவனை நோக்கி காறி துப்பிவிட்டு பெண்ணை கூட்டிக் கொண்டு நடந்து போகத் துவங்கினாள்.

அவர்கள் தொலை தூரம் போன பிறகு அம்மா திரும்பி பார்த்தாள். அவன் வேஷ்டியை அவிழ்த்து கையில் பிடித்தபடியே நிர்வாணமான உடலை அவர்களை பார்த்து ஆட்டிக் கொண்டிருந்தான். அம்மா கிழே குனிந்து மண்ணை வாறி தூற்றினாள். அந்த மனிதன் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தான்.
ஒருவேளை அவனாக இல்லாமலும் இருக்ககூடும் என்று சித்ரலேகாவின் அம்மாவிற்கு ஏனோ தோன்றியது.

விசித்ரி ஒரு இரவில் தன் உடலோடு சேர்த்து துணியை ஊசி நூலால் தைத்து கொள்ள முயற்சித்தாள். அதனால் ரத்தம் கசிந்து ஒடத்துவங்கியது. ஆனால் அவள் கத்தவேயில்லை. தற்செயலாக அவளை பார்த்த இளையவள் பயந்து கத்தியபடியே அய்யாவை அழைத்து வந்த போது அவர் செவுளோடு அவளை அறைந்து கையிலிருந்த ஊசியை பிடுங்கினார். அவளோ வெறிநாய் போல ஊளையிட்டபடியே ஊசியை அவரிடமிருந்து மீட்க பார்த்தாள்.

அய்யாவும் ஆத்திரமாகி அவளை காலால் மாறிமாறி மிதித்தார். அவளது கையை முறுக்கிக் கொண்டு அடித்தார். அதில் அவளது வலது கை பிசிகியிருக்க கூடும். நாளைந்து நாட்களுக்கு வீக்கமாக இருந்தது. யாரும் அதை தொட அவள் அனுமதிக்கவில்லை. படுத்தே கிடந்தாள்.

அப்போது அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வந்து கொண்டிருந்த கொண்டிச்சி சொன்னாள். ஊரில் புதிதாக வந்திருக்க தபால்காரனுக்கு பெண்மோகம் அதிகம் என்றும் கடிதம் கொடுப்பது போல அவன் பெண்களின் மார்பை பிடித்துவிடுகிறான் என்றும் ஒரு முறை அவள் தனியே இருந்த போது அவளிடம் தன்னோடு படுக்கமுடியுமா என வாய்விட்டு கேட்டுவிட்டதாகவும் செங்கல் சூளையில் வேலை செய்யும் செவஸ்தியாளை அவன் கீரைபாத்திகளில் தள்ளி உறவு கொண்டுவிட்டான் என்றும் சொன்னாள்.

அதை அம்மாவால் நம்ப முடியவில்லை. அவள் தபால்காரனை கண்டிருக்கிறாள். அவனுக்கு ஐம்பது வயதை நெருங்கியிருக்கும். மனைவியும் இரண்டு பையன்களும் மூன்று மகள்களும் இருந்தார்கள். அவர்களில் சிலர் சைக்கிளில் பள்ளிக்கு போய்வருவதை அவளே கண்டிருக்கிறாள்
எதற்காக அந்த மனிதன் பெண்களுக்கு அலைய வேண்டும் என்று கொண்டிச்சியிடம் கேட்ட போது அவன் ஆசை அடங்காதவன். சொன்னால் நம்பமாட்டீர்கள் அவன் மனைவியே இதை எல்லாம் தன்னிடம் சொல்லி புலம்பினாள் என்றும் அவன் ஒருவனே பின்மதிய நேரங்களில் தனியே அலைந்து கொண்டிருப்பவன் என்றும் சொன்னாள்.

ஒருவேளை அதுவும் உண்மையாக இருக்க கூடும். சித்ரலேகாவின் அம்மா வயல்வேலை செய்து கொண்டிருந்த பகல்பொழுதில் அந்த மனிதன் புழுதி பறந்த சாலையில் தனியே போய்க் கொண்டிருப்பதை கண்டிருக்கிறாள். அது போலவே ஒரு நாள் அவள் மூத்திர சந்து ஒன்றில் நடந்து போய்க் கொண்டிருந்த போது அந்த மனிதன் அதற்குள் தனியே நின்று கொண்டிருந்தான். அங்கே என்ன செய்கிறான் என்று புரியாமல் அவள் அவசரமாக கடந்து போனாள். ஒருவேளை அவன் சித்ரலேகாவை ஏமாற்றி இது போன்ற மூத்திரசந்திற்கு அழைத்து போய் புணர்ச்சிக்கு மேற்கொண்டிருக்கவும் கூடும். ஆனால் இந்த சந்தேகம் ஒன்றால் மட்டும் எப்படி அந்த மனிதனிடம் போய் கேட்க முடியும்

சித்ரலேகாவின் அண்ணன் ஊரில் இருந்த ஜவுளிசெட்டி ஒருவன் மீது தனக்கு அதிக சந்தேகம் இருப்பதாக சொன்னான். அந்த ஜவுளி செட்டியின் வீடு மிகப்பெரியது. அதில் அவர்கள் அண்ணன் தம்பி இரண்டு பேர் மட்டுமே வசித்தார்கள். இருவரும் ரங்கூனிலிருந்து திரும்பியவர்கள். அவர்களது மனைவியும் குழந்தையும் பர்மாவில் விட்டுவந்துவிட்டதாக சொல்லிக் கொள்வார்கள். அவர்களே அடிக்கடி பர்மாவிற்கு போய்வருவதாக கிளம்பி சில மாதங்கள் ஆள் இருக்க மாட்டார்கள்.

அவர்கள் வீட்டின் எதிரில் இருந்த பெண்கள் அத்தனை பேருக்கும் ஜவுளி செட்டிக்கும் தொடர்பு இருக்கிறது, அந்தப் பெண்களில் பலரும் புதிது புதிதாக ரங்கூன் சேலைகள் கட்டிக் கொள்வது இதனால் தான் என்றும் அந்த செட்டிகள் அடிக்கடி மதுரைக்கு சென்றுவருவது வேசைகளுடன் படுத்து உறங்கி கழிப்பதற்காக மட்டுமே என்று சொன்னான் சித்ரலேகாவின் அண்ணன்.
ஒருவேளை அப்படி செட்டிகளில் ஒருவன் நீலமும் மஞ்சளும் கலந்த பட்டு துணி ஒன்றை தருவதாக சொல்லி சித்ரலேகாவை வீட்டில் தனித்து அழைத்து கட்டி தழுவியிருக்க கூடும். அவள் உடைகளை உருவி எடுத்திருக்க வேண்டும். அதில் பயந்து போய் தான் சித்ரலேகா ஒடிவந்திருப்பாள்.

அவள் ஒடிவந்த திசையில் இருந்த ஒரே வீடு ஜவுளி செட்டியின் வீடு மட்டுமே. அவர்கள் குற்றம் செய்யாதவர்களாக இருந்தால் எதற்காக பகலும் இரவும் அந்த வீட்டின் கதவுகள் ஜன்னல்கள் மூடப்பட்டேயிருக்கின்றன என்று கேட்டான் சித்ரலேகாவின் அண்ணன்.

இந்த வாதங்கள் சந்தேகங்கள் எதையும் விசித்ரி கண்டுகொள்ளவேயில்லை. அவள் மண்ணில் புதைத்து வைக்கபட்ட துணி பொம்மை போல முகம் வெதும்பி போய் கண்கள் ஒடுங்க துவங்கியிருந்தாள். அவள் உதட்டில் ஏதோ சில சொற்கள் தட்டி நின்று கொண்டிருந்தன. எதையோ நினைத்து பெருமூச்சு விடுவதும் பின்பு அவளாக கைகளை கூம்பி சாமி கும்பிட்டுக் கொள்வதையும் வீட்டார் கண்டிருக்கிறார்கள்.

ஒரு நாளில் விசித்ரி உறங்கிக் கொண்டிருந்தபோது யாரோ அவளிடம் வம்பு செய்வதற்காக அவள் கால்பாதங்களில் கரித்துண்டை வைத்து தேய்த்திருக்கிறார்கள். கூச்சத்தில் அவள் நெளிந்த போது அவள் கால்கள் தானே உதறிக் கொண்டன. அவள் எழுந்து தன்பாதங்களை கண்டபோது அதில் கரியால் ஏதோ சித்திரம் போல வரையப்பட்டிருப்பதை கண்டு அலறி கத்தினாள். வீட்டிற்குள் ஒடிப்போய் காலில் தண்ணீர் ஊற்றிக் கழுவினாள். அப்படியும் அவள் மனது நிலை கொள்ளவில்லை. உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றிக் கொண்டாள். இரவு வரை கால்பாதங்களை துடைத்துக் கொண்டேயிருந்தாள்.

அன்றிரவு வீட்டில் இருந்த சகோதரிகளின் பழைய சேலைகளை கிழித்து தன் காலில் சுற்றிக் கொள்ள துவங்கினாள். அப்படி சுற்றி சுற்றி காலின் மீது பெரிய பொதி போல சேலைகள் இறுகியிருந்தன. அத்தோடு அவள் சேலையை சணலாலும் இறுக்கி கட்டிக் கொண்டாள். காலில் சேலைகள் கட்டியதிலிருந்து அவளால் எழுந்து நடப்பதற்கு சிரமமாக போயிருந்தது. ஆனால் அதைப்பற்றி அவள் கவலை கொள்ளவில்லை. மண்டியிட்டபடியே நடந்து போக ஆரம்பித்தாள். அது அவள் தோற்றத்தில் இன்னமும் பயத்தை உருவாக்கியது.

விசித்ரியை இப்படியாக்கியது கனகியாக கூட இருக்க கூடும் என்று சொன்னார் பெட்டிக்கடை வைத்திருக்கும் மகாலிங்கம். அதை சித்ரலேகாவின் அண்ணன்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். கனகியை பற்றி அப்படியான சில கதைகள் ஊரிலிருந்தன. கனகியின் கணவன் ராணுவத்தில் இருந்தான். அவன் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே ஊர் திரும்பிவருவான். மற்ற காலங்களில் கனிகி தனித்திருந்தாள். அவளுக்கு வயது இருபத்தைந்து கடந்திருக்க கூடும். எப்போதும் கூந்தல் நிறைய பூவும் வெற்றிலை சாறுபடிந்த சிவப்பு உதடுகளுமாக இருப்பாள்.

தன்னை அலங்கரித்து கொள்வதில் அவளுக்கு நிகரான ஊரில் எவருமில்லை. முல்லைமொட்டுகளை அவளுக்காக மட்டுமே கொண்டு வந்து தரும் பூக்காரன் ஒருவன் இருந்தான். அவளது உடைகளும் கூட மினுக்கானவை. அவளோடு எப்போதுமே இரண்டு இளம்பெண்கள் இருப்பார்கள். அவர்களுடன் வாசல்படிகளில் உட்கார்ந்து அவள் பேசிக் கொண்டேயிருப்பாள். அப்போது அவர்கள் சிரிப்பு சப்தம் தெருவெங்கும் கேட்கும்.

அவளுக்கு பகல் உறக்கம் கொள்ளும் பழக்கம் இருந்தது. தனது தோழிகளான இரண்டு இளம்பெண்களுடன் அவள் வீட்டின் கதவை சாத்திக் கொள்வதை சித்ரலேகாவின் அண்ணன் கண்டிருக்கிறான். மாலையில் அந்த வீட்டு கதவு மறுபடி திறக்கும் போது காலையில் பார்த்ததை விடவும் அலங்காரியாக கனகி வாசல்படியில் வந்து உட்கார்ந்து கொள்வாள். பின்பு இரவு வரை அந்த பெண்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்.

கனகியின் மீது உள்ளுர் ஆண்கள் அத்தனை பேரும் மோகம் இருந்தது. ஆனால் ஒருவன் கூட அதை அவளிடம் வெளிப்படுத்தவேயில்லை. கனகி முன்பொரு நாள் சித்ரலேகாவோடு பேசிக் கொண்டிருந்ததை அவள் அண்ணன் கண்டிருக்கிறான். ஒருவேளை அவள் தன் தங்கையை மோகித்திருக்க கூடும் என்று அவன் மனது சொல்லியது. ஆனால் கனகியோடு எந்த ஆணுக்கும் தொடர்பில்லை என்பதை ஊரே அறிந்திருந்தது.

அவள் கணவன் வரும் நாட்களில் அவர்கள் ஒன்றாக பைக்கில் சுற்றியலைவார்கள். அப்போது அவள் கணவன் கனகி பற்றிய கேலியை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வான்.

இப்படியாக சித்ரலேகாவை பயமுறுத்தியது நகருக்கு படிக்க சென்று வரும் ஸ்டீபன் சாரின் மகன் மைக்கேல் என்றும், நாவிதர்களில் ஒருவனான கருப்பையா கூட தனியே பெண்கள் கிடைத்தால் நோங்க கூடியவன் என்றும், பள்ளியின் கணித ஆசிரியராக உள்ள வையாளி கூட பெண்கள் விஷயத்தில் துணிந்தவர் எனவும், தண்ணீர் வண்டியோட்டும் ராயன், ரயில்வே தண்டவாள வேலை செய்ய போன சங்கு, நில அளவையாளர் கடிகைமுத்து. நூற்பு ஆலைக்கு வேலை செல்லும் மச்சேந்திரனோ அவனது தம்பியோ கூட காரணமாக இருக்க கூடும் என்றார்கள்.

இந்த சந்தேகம் ஊரில் இருந்த ஆண்கள் பெண்கள் மீது பட்டு தெறித்த போதெல்லாம் அது உடனே மௌனத்தில் புதையுண்டுவிடுவதாக இருந்தது. யாரும் இதை தொடர்ந்து சென்று உண்மையை அறிந்து கொள்ள முடியவில்லை.

விசித்ரியின் முப்பத்திரெண்டாவது வயதில் அவளை ஆறு நாட்கள் உப்பத்தூர் அருகில் உள்ள தர்க்கா ஒன்றில் சிகிட்சைக்காக கொண்டு போய்விட்டுவந்தார்கள். பிராத்தனையும் இரும்பு கம்பியால் போட்ட சூடும், குடம் குடமாக தலையில் தண்ணீர் கொட்டிய போதும் விசித்ரியிடம் ஒரு மாற்றமும் உருவாகவில்லை. அவளை மறுபடியும் ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். ஊர் வந்த சில நாட்களுக்கு அவள் பசி தாளாதவள் போல சாப்பிட்டுக் கொண்டேயிருந்தாள். அதன்பிறகு அவள் இயல்பாக மாறுவதற்கு ஒரு மாதகாலமானது. அவள் எப்போது போலவே முப்பது ஆடைகள் அணிந்தவளாக இருந்தாள்.

விசித்ரியின் வீடு அவள் இளமையிலிருந்தது போன்ற வளமையை இழந்து போகவே திசைக்கொரு சகோரர்களாக பிரித்து போக துவங்கினார்கள். வீட்டில் அவளும் வயதான அம்மையும் மட்டுமேயிருந்தார்கள். பண்டிக்கைக்கு ஊருக்கு சகோதரிகள் வருவதும் கூட நின்று போய் நாலு வருசமாகி விட்டது. அவர்கள் வீடு இருந்த தெருவில் இருந்த மனிதர்கள் கூட இடம் பெயர்ந்து போய்விட்டார்கள். வாகை மரங்கள் வெட்டி சாய்க்கபட்டு அங்கே தண்ணீர் தொட்டி வைக்கபட்டுவிட்டது. தெருவில் இருந்த வயதானவர்கள் இறந்து அதே ஊரின் மண்ணில் புதையுண்டு அந்த இடங்களில் தும்பை முளைத்தும் விட்டது.

விசித்ரிக்கு போக்கிடம் இல்லை. அவள் எப்போதும் போலவே தன் உடலை சுற்றி முப்பது நாற்பது சேலைகளை சுற்றிக் கொண்டு கால் பெருவிரல் வரை துணியால் கட்டி முடிச்சிட்டு வீட்டிற்குள்ளாகவே இருக்கிறாள். சமையல் அறையின் புகைக்கூண்டை ஒட்டியே வாழ்ந்த பல்லி கருத்து பருத்து போய் கண்கள் மட்டுமே பிதுங்க இருப்பது போன்று அவள் தோற்றம் மாறிப்போயிருந்தது. ஒருவேளை அவள் இறந்து போன அன்று கூட அப்படியே தான் அவளை புதைக்க கூடும் என்று அம்மா புலம்பிக் கொண்டிருந்தாள்

விசித்ரியின் பனிரெண்டாவது வயதின் கோடை பகலில் என்ன தான் நடந்தது. யார் அவள் உடலில் இருந்த உடைகளை உருவியது. எல்லோரும் உண்மையின் ஏதோவொரு பகுதியை அறிந்திருக்கிறார்கள். உண்மையை முழுமையாக அறிந்த விசித்ரி அதை விழுங்கி புதைத்துவிட்டாள்.

ஆனால் முற்றிய வெயில் காமம் உடையது என்பதையோ, அது ஒரு மனிதனின் அடக்கப்பட்ட இச்சையை பீறிடச் செய்யக்கூடியது என்பதையும் பற்றி உள்ளுர்வாசிகள் அறிந்தே வைத்திருந்தார்கள். அல்லது வெயிலை காரணம் சொல்லி தன் மனதின் விகாரத்தை வெளியே நடமாட அனுமதித்திருக்கிறார்கள். அதை வெயில் அறிந்திருக்கிறது. இல்லை இரண்டுமே புனைவாகவோ, இரண்டுமே அறிந்து வெளிப்படுத்தபடாத ரகசியமாகவோ இருக்க கூடும்.

எதுவாயினும் காமம் தனி நபர்களின் உணர்ச்சி வெளிப்பாடுடன் சம்பந்தமுடையது மட்டுமில்லை. அது ஒரு புதைசுழல். கோடையின் பின்மதியப் பொழுதுகள் எளிதாக கடந்து போய்விடக்கூடியவை அல்ல. அதனுள் மர்மம் பூத்திருக்கிறது. அதன் சுழிப்பில் யாரும் வீழ்ந்துவிடக்கூடும் என்பதையே விசித்ரி நினைவு படுத்திக் கொண்டிருக்கிறாள். அது தான் பயமாக இருக்கிறது.

சென்ஷி

unread,
May 31, 2010, 3:11:15 AM5/31/10
to panb...@googlegroups.com


எரிந்த கூந்தல்: எஸ். ராமகிருஷ்ணன்

எஸ். ராமகிருஷ்ணன்

கனடாவிலிருந்து வெளிவரும் காலம் இதழில் வெளியான சிறுகதை.

கெந்தியம்மாள் கத்திக் கொண்டிருந்தாள். வாசலில் மேய்ந்து கொண்டிருந்த கோழிக்குஞ்சுகளில் ஒன்றிரண்டு அவள் கால்களை சுற்றியலைந்து கொண்டிருந்தன.

“ஆரு சொல்றதையும் கேட்காம நடந்தா எப்படி.. அதான் காது எழவு கேட்கமாட்டேங்குது. கண்ணு வேற அவிஞ்சி போச்சி. வீட்ல கிடக்க வேண்டியது தானே. இன்னும் அப்படி என்னதான் அந்த பொட்டக்காட்டிலே இருக்கோ… எங்கயாவது வழியில விழுந்து செத்துப் போனா.. தூக்கிட்டு வந்து போடுறதுக்கு கூட வீட்ல நாலு ஆளு கிடையாது பாத்துகோங்க. யாராவது வந்து மண்டையை போட்டுடாருனு சொன்னாகூட எனக்கு என்னனு தான் உட்கார்ந்து இருப்பேன். ஏலே முருகேசு. நீயாச்சி இந்த கிழவன் கூட போயிட்டு வாய்யா.. இந்த வீட்ல என் பேச்சை ஒரு நாதி கேட்கிறதில்லை. ஆக்கி போட்டதை திங்க மட்டும் வந்து நில்லுங்க. அப்போ வைக்குறேன் சட்டு அகப்பையாலே.“
தன் ஆத்திரம் தீருமட்டும் கத்தியபடியே கோழிக்குஞ்சுகளுக்கு வடிகஞ்சி யோடு தவிட்டை கலந்து போட்டுக் கொண்டிருந்தாள். வீட்டு நாய் கோழிக்குஞ்சுகளை முந்திக் கொண்டு திங்க வந்தது. அதைக்கண்டதும் அவளது ஆத்திரம் நாயின் மீது திரும்பியது. கையில் இருந்த அகப்பையால் நாயின் தலையில் ஒங்கி ஒரு போடு போட்டபடியே கத்தினாள்

“அதான் உனக்கு தனியா வைக்கணே. மூதி அதுக்குள்ளே ஏன் வாயை வைக்குறே..“

நாய் அவள் அடியை உதறிவிட்டபடியே உடைந்த மண்கலயத்தில் ஊற்றிய கஞ்சியை நாக்கால் நக்க துவங்கியது. அவள் தெருவையே பார்த்துக் கொண்டிருந்தாள். வேலய்யா கம்பை ஊன்றியபடியே தனியே போய்க் கொண்டிருந்தார்.

வள்ளி வீட்டின் உரலில் கட்டப்பட்டிருந்த ஆட்டுகுட்டியொன்று கத்திக் கொண்டிருந்தது. உடைந்து போனமாட்டுவண்டியொன்று �நெடுங்காலமாகவே தெருவின் இடப்பக்கம் கிடந்தது. அதை யாரும் கவனித்து பார்ப்பது கூட கிடையாது. ஆனால் உடைந்து விறகாக்க யாருக்கும் தைரியம் வரவில்லை போலும்.

கிட்ணப்ப நாயக்கரின் வீட்டுவாசலில் மட்டும் பெரிதாக கோலம் போட்டிருந்தார்கள். மற்றவீடுகளில் கோலமிடுவதற்கு யார் இருக்கிறார்கள். வெள்ளி செவ்வாய்க்கு நாலு புள்ளியில் கோலம் போடுவதோடு சரி. அப்படியே கோலமிட்டாலும் பகல் முழுவதும் புழுதியை வாறி இறைக்கும் காற்று சில நிமிசங்களில் கோலத்தை அடையாயம் தெரியாமல் ஆக்கிவிடும்.

முன்பு போல கோலப்பொடி விற்கின்றவனும் அவர்கள் ஊருக்கு வருவதில்லை. அந்தக் குரல் அழிந்து வருசமாகிவிட்டது. கெந்தியம்மாள் தன் வீட்டை தெளிப்பதோடு சரி. கோலம் போடுவதை எல்லாம் விட்டுவிட்டாள். வீட்டில் அவளும் இந்த வயசான கிழவனும் அவளது ரெண்டு பிள்ளைகளும் மட்டுமே தானே இருக்கிறார்கள்.

வடக்கே எங்கோ கட்டிட வேலைக்காக போன அவளது புருஷன் மாதம் ரெண்டு நாளோ மூணு நாளோ ஊருக்கு வருகிறான். அவன் வருகின்ற நாளில் கூட கோலம் போடுவதற்கு அவள் விரும்புவதில்லை. அவனும் அதை எல்லாம் கண்டு கொள்வதில்லை. வீட்டுக்கு வந்த நேரத்திலிருந்து அவன் உறங்கி கொண்டேதான் இருப்பான். சாப்பாடு வேளையில் எழுப்பினால் தட்டை கவனித்து பார்க்க கூட விருப்பமில்லாமல் தின்றுவிட்டு படுத்துக் கொள்வான். எத்தனை நாள் தூக்கம் இல்லாமல் கிடந்தானோ என்று தோன்றும்.

ஊரில் பாதிக்கும் மேலான ஆம்பளை பொம்பளைகள் நகரங்களில் நடக்கும் கட்டிட வேலைக்காக போய்விட்டார்கள் . பத்து நாட்களுக்கு முன்னதாக கூட மருளுத்திலிருந்து பரமசிவம் வந்து ஆட்களை கூப்பிட்டுக் கொண்டிருந்தான். கெந்தியம்மாள் தன் பிள்ளைகளுடன் வேலைக்கு வந்தால் நாள் ஒன்றுக்கு நூற்றிஇருபது ரூபாய் கூலி தருவதாகச் சொன்னான். நல்ல வேலை தான். அதுவும் சாப்பாடு போட்டு சம்பளமும் கொடுக்கிறார்கள். ஆனால் இந்த கிழவன் இருக்கிற வரைக்கும் தனியே விட்டு எப்படி போவது. அவுக வரட்டும் கலந்துகிட்டு சொல்றேன் என்று சொல்லி முன்பணமாக நீட்டிய நூறு ருபா தாளை கூட கெந்தி தள்ளிவிட்டாள்.

மருளுத்துகாரன் விடாப்பிடியாக பாட்டையாவையும் கூட கூட்டிட்டு வந்துருங்க. அவங்க தங்குறதுக்கு இடம் ஏற்பாடு பண்ணி தர்றேன். மூக்கன் கூட அவங்க அய்யாவை கூட்டிகிட்டு தான் வர்றாப்லே . தவங்காம ஒத்துக்கோங்க என்று விடாப்பிடியாக பணத்தை கையில் திணித்தான். அவளுக்கு தள்ளுவதற்கு மனசே கேட்கவில்லை. எதற்கு ஒரு வார்த்தை கேட்டுவிடலாமோ என்ற நப்பாசையில் அன்றிரவு பாத்திரம் கழுவியபடியே அவரிடம் நீங்களும் எங்க கூட டவுனுக்கு வந்து சௌரியமா இருக்கலாம்லே என்று கேட்டாள். அவர் பதில் சொல்லாமல் தொண்டையில் இருந்த கோழையை காறி தரையில் துப்பிவிட்டு ஈ ஒட்ட துவங்கினார். அது அவளுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.

“டவுன்லயும் மனுசன் மக்கள் எல்லாம் இருக்காங்க. உசிரு போற வரைக்கு இந்த ஊர்லயே இருக்கிறதுக்கு இங்கே என்ன அரண்மனையா கட்டி வச்சிருக்கீங்க“ என்று கோபத்தோடு சொன்னாள்.

அவர் அந்த பேச்சை கவனம் கொள்ளாமல் ஈயை பார்த்தபடியே இருந்தார். இந்த கிழவனை என்ன சொல்லியும் ஊரைவிட்டு கொண்டு போக முடியாது என்ற ஆதங்கம் என்ற அவளை சுணங்க வைத்தது. மருளுத்துகாரன் திரும்பவும் அடுத்த மாசம் வருதவாக சொல்லிப் போனான்.

எப்படியும் அதற்குள் அவள் புருஷன் வந்துவிடுவான். அப்போது பேசி எப்படியாவது இந்த கிழவனை டவுனுக்கு கொண்டு போய்விட்டால் நிம்மதியாக போய்விடும். இல்லாவிட்டால் கிழவன் பாடு முடியுற வரைக்கும் நாதியத்து போன இந்த ஊரில் கெடந்து அவதிப்பட வேண்டியது தான் என்று சலித்தபடியே அவள் தவிட்டை கொத்தி மணலில் போடும் கோழிக்குஞ்சுகளை தள்ளிவிட்டபடியே வீட்டிற்குள் சென்றாள்

**

வேலய்யாவிற்கு நடக்க நடக்க தெரு நீண்டு போய்க் கொண்டேயிருந்தது. ஒரு காலத்தில் இந்த தெருவிற்குள் கால் எடுத்து வைப்பதற்குள் வீடு வந்துவிடும் . ஆனால் இப்போது வெகு தொலைவிற்கு தெரு நீண்டுபோய்விட்டது போலிருந்தது. வீட்டு வாசலில் மருமகளின் தலை தென்படுகிறதா பார்ப்பதற்காக பாதி தெருவில் நின்றபடியே திரும்பி பார்த்தார். ஆளைக் காணவில்லை.

அவள் சொல்வது எல்லாம் வாஸ்தவம் தான். அவருக்கு காது பட்டுப்போய்விட்டது. கண்களும் பஞ்சடைந்துவிட்டன. வீட்டின் முன்னால் நிற்கும் அடிபருத்த வேம்பு கூட தெளிவில்லாமல் தான் புலப்படுகிறது.

நேற்று ராத்திரி சாப்பிட உட்கார்ந்த போது குண்டு பல்பு எரிவது கண்ணில் தெரிந்த போதும் சாப்பிடுகின்ற தட்டு கண்ணில் தென்படவில்லை. பாதி தட்டு தெரிகிறது. சாப்பாடு தெரியவில்லை. கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தால் தட்டின் விளம்பு தெரிகிறது. அவர் தன்விரலால் சோற்றைத் துழாவினார். கையில் அள்ளிய சாதத்தை உற்று பார்த்த போது கூட தெளிவாக தென்படவில்லை. வாய்க்கு கொண்டு போனவர் தன்னை அறியாமல் அதை வாயில் போடுவதாக நினைத்து கிழே போட்டார்.

நல்லவேளை மருமகள் பக்கத்தில் இல்லை. கைக்கும் வாயக்கும் இடைவெளியாகி போச்சின்னா இனிமே ரொம்ப நாள் உசிரு தங்காது என்று அவருக்கு தோணியது. சாப்பாட்டை . ஒதுக்கி வைத்துவிட்டு எழுந்து கொள்ள முயன்றபோது மருமகள் அருகில் வந்து நின்று கத்தினாள்.

“வேளை வேளைக்கு சுடுசோறு வேணும்னா நான் எங்க போறது. காலையில வடிச்ச சோறு இறங்கலையாக்கும்.சாப்பிடுற லட்சணம் பச்சை புள்ளை தாவலை. இதை எல்லாம் யாரு கூட்டி பெறக்கி சுத்தம் பண்றது. நாளையில இருந்து மண்சட்டியில கஞ்சிதான் தருவேன். குடிச்சிட்டு அப்படியே கட்டிலுக்கு கிழே வச்சிகிடுங்க.�“

அவர் காதில் எதுவும் விழவில்லை. அவள் ஏதோ பேசுகிறாள் என்பது மட்டும் கேட்டது. சப்தங்கள் அநேகமாக அவரை விட்டு மறைந்து போய்விட்டது. பகலும் இரவும் உலகம் அமைதியாக இருந்தது. உடம்பில் ஏதாவது ஊர்ந்து போவது போல தெரிவதை தவிர வேறு உணர்ச்சிகளும் அதிகமில்லை.

ஆனாலும் அவரால் வீட்டில் படுத்துகிடக்க முடியவேயில்லை. சில நாட்களாகவே அவருக்கு ஒரு கனவு வந்து கொண்டிருந்தது.

ஊரின் மேற்கில் உள்ள கட்டபனையொன்று தீப்பிடித்து� எரிந்து கொண்டிருந்தது போல அக்கனவு வந்தது. அது கனவு என்பதாக கூட இல்லாமல் நாசியில் அந்த பனையின் மணமேறுவதுபோல நிஜமாக இருந்தது.

பனைக்கு யார் நெருப்பு வைத்தார்கள். ஏன் பனை எரிவதை யாரும் தடுக்கவேயில்லை என்று புரியாமல் அவர் நெருப்பின் முன்னால் நின்று கொண்டிருந்தார். திகுதிகுவென நெருப்பு கொளுந்துவிட்டு எரிய பனையின் வலப்பக்க கூந்தல் கரிந்து விழுந்தது.

அந்த நெருப்பு அவர் முன்பு பார்த்திருந்த நெருப்பை போல இல்லாமல் உக்கிரமாக இருந்தது. அதன் ஒசை அவர் காதுகளுக்கு பாம்பின் சீற்றமெனக் கேட்டது. பற்றி எரிகையில் அது பனையை முறித்து வீழ்த்திவிட்டு தான் ஒய்வேன் என்று சபதமிட்டிருப்பது போன்ற ஆவேசமிருந்தது. பனை எரியுது. பனை எரியுது என்று அவர் வாய் ஒயாமல் சொல்லிக் கொண்டிருந்தார்.

அந்தக்குரல் யாருக்கும் கேட்கவேயில்லை. ஒருவேளை அவர் கத்தவேயில்லையா? அம்மன் கோவிலுக்கு அக்னிச்சட்டி எடுத்து வரும் போது காற்றில் விசிறி செல்லும் தணல் போல எரிந்து கொண்டிருந்த பனையிலிருந்து� �பொறிட்டு நெருப்பு பறந்து கொண்டிருந்தது. பனை எரிவதை பார்க்க துயரமாக இருந்தது.

எதிர்ப்போ. மறுப்போ இல்லாமல் தன் சுயவிருப்பத்தின்படியே எரிய அனுமதித்தது போல பனை நெருப்பிடம் தன்னை ஒப்படைத்திருந்தது. புகையும் உக்கிரமும் ஆவேசமுமாக எரிந்து கொண்டிருந்த பனையின் முன்னால் நிற்க முடியவில்லை. வெக்கை வாறியடித்தது. அவர் தன்னை அறியாமல் துக்கமும் வலியுமாக காற்றில் கைகளை வீசி போ போ என்று விரட்டிக் கொண்டிருந்தார்.

நெருப்புமெதுவாகபனையை விட்டு தரையிறங்கி அவரை நோக்கி வரத்துவங்கி அவர் பார்த்துக் கொண்டிருந்த போதே நாகம் ஒன்று வருவது போல நெருப்பு அவர் காலை நோக்கி கொத்த வந்து கொண்டிருந்தது. தன்னை மீறிய பயத்தால் அவர் ஒடத்துவங்கினார். நெருப்பு பின்னாடியே ஒடிவந்தது. மண்ணில் அவர் தடுமாறி விழுந்த போது நெருப்பு அவர் மீது பற்றாமல் அருகில் இருந்து பார்த்துக் கொண்டேயிருந்தது.

அவர் கையெடுத்து கும்பிட்டபடியே என்னை விட்ரு சாமி என்று கதறினார்.�

நெருப்பு அவரை பார்த்தபடியே இருந்தது. அவர் நெருப்பை பார்த்துக் கொண்டிருந்தார்.. நீண்ட நேரத்தின் பிறகு சர்ப்பம் திரும்பி போவது போல நெருப்பு விடுவிடுவென பனையை நோக்கி சென்று அதன் கூந்தலில் ஏறிக் கொண்டது.

அவர் மண்ணில் விழுந்து கிடந்தார். உடம்பு நடுங்கிக்கொண்டேயிருந்தது. தன்னை அறியாமல் மூத்திரம் போகத் துவங்கியது. அப்போது தான் அவருக்கு விழிப்பு வந்தது. கட்டிலிலே மூத்திரம்போயிருந்தார். கட்டியிருந்த வேஷ்டி, விரிப்பு எல்லாமும் மூத்திரமேறியிருந்தது. கைகளால் தடவி பார்த்தார். ஈரம்பட்டது. அதை நாசியின் அருகில் வைத்து முகர்ந்து பார்த்தார். நிஜம் தான் மூத்திரம்போயிருக்கிறேன்

என்றபடியே எழுந்து கோலை ஊன்றியபடியே தடுமாறி வெளியே வந்து மீதமிருக்கும் மூத்திரத்தை பெய்து முடித்தார்.

படுக்கைக்கு போக மனது வரவில்லை. இருட்டுக்குள்ளாக வே உட்கார்ந்து கொண்டபடியே பனை எரிவதை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தார். இது எல்லாம் மனப்பிரம்மை தானா ? இல்லை நிஜமாகவே பனை இப்போது எரிந்து கொண்டிருக்கிறதா? தன் வாழ்வில் பனை எரிந்து ஒருமுறை கூட அவர் பார்த்தது இல்லை. பின்பு எதற்காக இப்படி கனவு வருகிறது.�

பனை உண்மையில் எரிகின்றதா என்று போய் பார்த்துவிட்டு வரலாமா என்று தோன்றியது. ஆனால் வீட்டிலிருந்து எப்படி போவது என்று யோசனையாக இருந்தது. கண்ணை கசக்கி தேய்த்து பார்த்த போதும் தெரு தென்படவில்லை.

பகலிலாவது லேசாக புகைமூட்டம் போல பார்வையிருக்கிறது. இரவில் எதுவுமில்லை. வெளிச்சத்தின் ஒரு துளி கூட அவர் கண்ணில் சேகரமாகியிருக்கவில்லை என்பது வேதனை தருவதாகயிருந்தது.

ஆத்திரத்துடன் அவர் தன் பலவீனத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து தெருவில் கோலை ஊன்றி நடந்து இரண்டு மூன்று அடி சென்றபோது எதன்மீதோ மோதி விழுந்தார். என்ன பொருள் அது என்று தெரியவில்லை. உலகம் மிகவும் சுருங்கி கொண்டுவிட்டது என்று ஆத்திரமாக வந்தது. விழுந்த இடத்திலிருந்துஎழுந்து கொள்ளமுடியவில்லை.அப்படியே சுருண்டு கொண்டு படுத்துக் கொண்டார்.

பனை எரிந்து கொண்டிருக்கிறது. பனை எரிந்து கொண்டிருக்கிறது என்று அவராக அரற்றிக் கொள்ள துவங்கினார். அதை கேட்க பின்னிரவில் யாருமேயில்லை.

விடிகாலையின் போது எருமைமாடுகளை கறவைக்கு ஒட்டிப்போன முத்தையாலு அவர் தெருவில் விழுந்து கிடப்பதை பார்த்து கைதாங்கலாக கூட்டி வந்து கட்டிலில் படுக்க வைத்து போனான். நல்லவேளை கெந்தியம்மாள் முழிக்கவில்லை. ஆனால் பகலானதும் பனையை கட்டாயம் ஒரு எட்டு போய் பார்த்து வர வேண்டும் போலிருந்தது.

யாரையாவது துணைக்கு கூட்டிக் கொண்டு போகாலமா என் நினைத்தார். சொன்னால் சிரிப்பார்கள் முடிஞ்ச வரைக்கும் நாமளே போய் வந்திர வேண்டியது தான் என்றபடியே அவராக நடக்க துவங்கினார். கெந்தியம்மாள் அப்போது தான் கத்த துவங்கினாள்.
**
தெருவைக் கடந்து போவது மிகச் சிரமமாக இருந்தது. தண்ணீருக்குள் கண்ணை விழித்து பார்ப்பது போல தான் வீடுகளும் தெருக்களும் இருந்தன. எந்த வீடு யாருடையது என்ற தெரியவில்லை. ஆள் முகங்களும் கூட ஒன்று போலாகிவிட்டது. மரங்கள் செடிகள், வானம் பூமி எல்லாமும் தெளிவற்று போய்விட்டது. கோலை ஊன்றியபடியே அவர் ஊரின் புறவெளிக்கு வந்த போது வெயிலேறியிருந்தது.

வெட்டவெளி தரும் இதம் வீடுகளுக்குள் இல்லை என்று தோன்றியது. உடலில் பற்றி ஏறும் வெயிலை ஏற்றுக் கொண்டபடியே அவர் ஊன்று கோலை வலுவாக ஊன்றி நடக்க ஆரம்பித்தார். காற்றேயில்லை. தும்பை செடிகளும் காலில் தென்படவில்லை.

நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர் ஆடுமேய்ப்பதையே வேலையாக கொண்டிருந்தார். சில வருசம் குல்லூரில் ஒரு தோட்டம் குத்தகைக்கு எடுத்து பார்த்து வந்தார். அந்த நாட்களில் தான் அவரது மகன் மகள் எல்லாம் பிறந்தார்கள். அப்போது சொந்தமாக இருபது ஆடுகளுக்கும் மேலாக அவரிடமிருந்தது.

குல்லூரிலே இருந்திருக்கலாம். ஆனால் எங்கோ தொலைவிற்கு போன பிறகும் ஊர் அவரை வா வாவென கூப்பிட்டுக் கொண்டேயிருந்தது. அவராகவே குல்லூர் ரெட்டியாரிடம் சொல்லிக் கொண்டு வந்து ஊர் வந்து சேர்ந்து தன் வீட்டை கூரைமேய்ந்து திரும்பவும் ஆடு மேய்க்க துவங்கினார்.

ஊரை சுற்றிலும் மேய்ச்சல் தரை எங்கும் கிடையாது. ஊர் பசுமையே கண்டதில்லை.எப்போதாது மழைக்கு பின்பு லேசாக ஈரப்பதம் தட்டுபடும் . மற்ற நாட்களில் வேலிசெடிகளை மேய்வது தான் ஆடுகளின் வாடிக்கை. சில நாட்களில் கண்மாய்க்குள் உள்ள கருவேல மரத்திலிருந்திருந்து காய்களை அறுத்து போடுவது உண்டு. மற்ற நேரங்களில் ஆடுகள் தரையை முகர்ந்தபடியே தன்னிஷ்டம் போல மேய்ந்து கொண்டிருக்கும்.

கிழட்டு யானை போல சூரியன் மிக மெதுவாக நடந்து நடந்து வானை கடந்து போகும்.
அவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு கட்டபனை அருகே போய் உட்கார்ந்து கொண்டுவிடுவார். அந்த பனை அதிகம் வளரவில்லை. கூந்தலும் அதிகமில்லை. சிறுவர்கள் ஏறி விளையாடுவார்கள். அந்த பனையடி அவருக்கு பிடித்திருந்தது.

தொலைவில் ஆடுகள் கானலை மேய்ந்தபடியே இருக்கும். எப்போதாவது சிறு சப்தம் கொடுத்தால் போதும். ஆடுகள் தலை து�க்கி பார்த்துவிட்டு சப்தமிடும்.

அவர் ஆடுமேய்க்கும் நாட்களில் பறவைகள் வலசை போவதையும் ,விதவிதமான மேகக் கூட்டங்களை கண்டிருக்கிறார். அதுவும் சில மாலை வேளைகளில் ஆற்றில் ஊற்று எடுப்பது போன்று ஆகாசத்தில் பெருகியோடும் மேகங்களை காண்பது ஆச்சரியமாக இருக்கும். அதில் போய் நனைந்து குளிக்கலாம் என்று தோன்றும்.

மழைவட்டம்போடும் நாட்களில் மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சப்தமிடுவதை கேட்டிருக்கிறார். மேலக்கண்மாயை தாண்டி ஆடுகளை ஒட்டிக் கொண்டு திரும்பி வந்த ஒரு நாளில் எதிர்பாராமல் மழை பிடித்து முதுகில் அடிக்க ஆரம்பித்தது. ஆடுகள் திசைக்கொன்றாய் ஒடத்துவங்கியது. அது போன்ற முரட்டு விரல்களை உடைய மழையை அதன் முன்னே அவர் கண்டதேயில்லை.�

சட்டுசட்டு என்று முதுகில் அறைந்தபடியே அந்த மழை அவரைத் தள்ளாடச் செய்தது. எதிரில் இருந்த பூமி தெரியாதபடி மழை வலுவானது. அவர் ஆடுகளை விரட்டியபடியே ஒடினார். ஒதுங்குவதற்கு இடமில்லாத வெட்டவெளியில் அவரும் ஆடுகளும் ஒடிக் கொண்டிருந்தார்கள். மின்னல் வெட்டு பளீர் என்று அடித்து எங்கோ இடி விழுந்தது. நிச்சயம் ஏதாவது ஒரு மரம் பிளந்திருக்க கூடும். அவர் மழையை தள்ளியபடியே ஒடினார். ஆடுகள் விடாது சப்தமிட்டன.

அவர்கள் ஊரை நெருங்கும் போது ஊரில் ஒரு சொட்டு மழையில்லை. ஆனால் அவரும் ஆடுகளும் நனைந்து ஈரம் சொட்ட வருவதை கண்ட கிராமவாசிகள் எந்த பக்கம் மழை பெய்யுது என்று ஆர்வத்துடன் விசாரித்தார்கள். மேற்கிலிருந்து மழை வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னதும் ஊரே மழையை எதிர் கொள்ள தயாராக இருந்தது.

அவர் தன்னுடைய வீடு வந்து சேர்ந்த போது மழைக்காற்று ஊரில் சுற்றியலைய துவங்கியது. மேகம் இருண்டது. வேலய்யாவின் மகள் இருவரும் பானைகளை மழைத்தண்ணீர் பிடிக்க வெளியே கொண்டு வந்து வைத்தார்கள். இடிச்சப்தம் கேட்டதேயன்றி மழை ஊருக்குள் வரவேயில்லை. ஆளுக்கு ஆள் தெருவில் நின்றபடியே ஆகாசத்தை வெறித்து பார்த்தபடியிருந்தனர். அன்று அவர்கள் ஊருக்கு வர வேண்டிய மழை ஒடைப்பட்டியில் பெய்தது.

ஊர்காரர்கள் இரவெல்லாம் அதற்காக கவலைப்பட்டார்கள். மழையை எதிர் கொண்டு சந்தித்த வேலய்யா மட்டும் மழையின் உன்மத்தம் பற்றி இரவெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். ஏன் மழை அவர்கள் ஊரை விலக்கி போனது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் யாவருக்கும் ஆத்திர ஆத்திரமாக வந்தது. வானத்தோட குரல்வளையை கடித்து துப்பிரலாம் போலிருக்கு என்று முத்திருளன் சொன்ன போது யாவரும் சேர்ந்து தலையசைத்தார்கள்.

அது நடந்து பல வருசமிருக்கும் ஆனால் அவருக்கு இப்போது தான் வீட்டை நோக்கி ஒடிவந்தது போலிருந்தது. .ஒருவேளை அதுதான் உண்மையோ என்னவோ, தனக்கு பார்வை தடுமாறியது கெந்தியம்மாள் கத்தியது எல்லாமும் கனவாக இருக்ககூடுமோ என்றும் தோன்றியது.

அவர் தன் உடலை தடவி பார்த்துக் கொண்டார். அதில் ஈரமில்லை. குனிந்து மண்ணை கையில் அள்ளி முகர்ந்து பார்த்தார். அதில் குளிர்ச்சியே இல்லை. மண்புரண்டு நெடுநாட்களாகிவிட்டது போலும். ஆடுமாடுகளின் ஒசை ஊரில் குறைந்துபோய்விட்டது. மொத்தமே ரெண்டு ஜோடி காளைகள் இருக்கின்றன. ஆடுகளும் கூட அதிகமில்லை. நாலைந்து எருமைகளும் ரெண்டு பசுவும் இருந்தன. மற்றபடி வாத்து கௌதாரி போன்றவை இருந்த அடையாளமேயில்லை.

அவர் ஆடு மேய்த்த நாட்களில் கட்டபனை தான் அவரது தங்குமிடம். ஆடுகளைஒட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு கட்டபனை அருகே � உட்கார்ந்து கொள்வார். ஆள் உட்காருவதற்கு வாகாக அருகில் ஒரு பாறாங்கல் கிடந்தது.அதில் உட்கார்ந்தபடியே கையில் கோலை வைத்துக் கொண்டு ஏதாவது யோசனை செய்து கொண்டிருப்பார்.�

சில நேரம் அவர் யோசனையை கலைப்பது போல மைனா சப்தமிடும். சில நேரம் கரிச்சான் குருவிகள் கடந்துபோகும். மற்றபடி ஆள் நடமாட்டமிருக்காது. சிறார்கள் எப்போதாவது கிளி பிடிப்பதற்காக பனையை தேடி வருவார்கள். மற்ற வகையில் அவர் ஒற்றை ஆளாக மேயும் ஆடுகளும் வீழ்ந்து கிடக்கும் ஆகாசமுமாக உட்கார்ந்திருப்பார். வெட்டவெளியை பார்த்துக் கொண்டிருப்பது விசித்திரமாக இருக்கும். சில நேரம் மனதில் நினைத்துக் கொண்ட உருவங்கள் வெட்டவெளியில் நடப்பது போலவே இருக்கும்.

அந்த பனைக்கு அருகாமையில் பாம்பு கடித்து செத்து போன சௌடியின் ஞாபகம் வரும். மூணு பிள்ளைகளின் தாய். தும்பை செடியின் ஊடாக வாயில் நுரை தள்ள விழுந்து கிடந்தாள். வேலய்யா தான் கண்டு து�க்கி கொண்டு வந்து சேர்த்தார். வீடு வருவதற்குள் செத்து போயிருந்தாள். அவளது பிள்ளைகள் அழுத அழுகை அப்படியே மனசில் நிற்கிறது. இவ்வளவிற்கும் சௌடியோடு அவள் உயிரோடு இருந்த நாட்களில் ஒரு வார்த்தை பேசியது கிடையாது.

பல நாட்கள் பனையடியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது சௌடி தும்பை செடிகளின் நடுவில் உட்கார்ந்திருப்பது போலவே இருக்கும். அவள் யாரோடும் பேசுவதில்லை. அவராக சில நேரம் தொலைவில் இருந்தபடியே சௌடி உன் பிள்ளைகள் எல்லாம் நல்லா இருக்குது. நிம்மதியா போயி பூமிக்குள்ளே ஒடுங்கு தாயி என்று கையெடுத்து கும்பிட்டு சொல்லுவார். ஆனால் சலனமேயிருக்காது.

ஆடுகள் தனித்தனியாக மேய்ச்சலில் இருந்தாலும் அதுகளுக்குள் பிரிக்க முடியாத சுபாவமிருந்தது. �ஒரு ஆடு சப்தமிட்டாலும் உடனே இன்னொரு ஆடு தலை நிமிர்த்தி பார்க்கும். அதுவும் அவரது குரலை கேட்டுவிட்டால் ஆடுகள் தலையை சிலுப்பியபடியே பார்க்கும். அவர் தான் சொல்ல விரும்பிய அத்தனையும் ஆடுகளிடம் தான் சொல்லியிருக்கிறார்.தன் பெண்டாட்டியை பற்றிய குறைகளை �பிள்ளைகளை பற்றிய கவலைகளை எல்லாவற்றையும் ஆடுகளிடம் தான் சொல்லுவார். ஆடுகள் தலையசைத்தபடியே நடந்து கொண்டிருக்கும்.

இப்போது அவர் சப்தத்திற்கு திரும்பும் ஆடுகள் அவரோடில்லை. ஆடுகளுக்கும் வயதாகி போனால் தன்னை போலவே கண்பார்வைபோய்விடுமா என்ன? தான் வளர்ந்த ஆடுகளில் ஒன்று கூட இன்று உயிரோடு இல்லை. யாவும் எவரெவர் பசிக்கோ உணவாகிவிட்டது.

தொலைவிலிருந்து பார்த்த போது பனை தென்படவில்லை. பனை மட்டுமில்லை. வெட்டவெளியின் பிரம்மாண்டமும் அடிவானம் வரை விழுந்து கிடக்கும் ஆகாசமும் கூட அவருக்கு புலப்படவில்லை. அவர் தன் கைகளால் காற்றில் தடவியபடியே முகர்ந்து பார்த்தார். காற்றிலும் ஈரமில்லை.

கலங்கலாக காட்சிகள் தெரிந்தன. தடுமாறி நடந்தபடியே அவர் பனையின் அருகாமைக்கு போன போது அது சலனமற்று நின்றிருந்தது. கட்டப்பனை அருகே ஆட்கள் வருவதேயில்லை. ஆடுமேய்ப்பது முற்றிலுமாக நின்று போன பிறகு அங்கே வருவற்கு யார் இருக்கிறார்கள். அவர் தன் கைகளால் பனையை தடவி பார்த்தார்.

பனை எரியவில்லை. தனக்கு வந்தது வெறும்கனவு என்று தோன்றியது. அவர் தான் வழக்கமாக உட்காரும் பாறை எங்கேயிருக்கிறது என்று கைக்கோலால் தடவிப் பார்த்தார்.அந்தப்பாறைகாணவில்லை.

யாரோ பெயர்த்து கொண்டுபோய்விட்டார்கள். தும்பை செடிகளின் நடுவே இப்போதும் சௌடி உட்கார்ந்திருக்க கூடுமோ என்ற ஆசையில் சௌடி சௌடி என்று அழைத்து பார்த்தார். காற்று அவர் குரலை அடித்து சிதறியது.

பனை எரியவில்லை என்ற போதும் அவர் மனதின் ஆதங்கம் அடங்கவேயில்லை. அவர் மனது அதை நம்ப மறுத்து பனை எரியுது பனை எரியுது என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. அவர் பனையை கட்டிக் கொண்டு காதை உன்னிப்பாக வைத்து கேட்டார். வயசாளியின் மூச்சிரைப்பை போல ஒரு சப்தம் கேட்பதாகயிருந்தது.

அவர் பனையை அண்ணாந்து பார்த்தார். பனையோலை அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. பனையும் காய்ப்பதை நிறுத்தி பலவருசமாகிவிட்டது. இனி அதை யார் சீண்ட போகிறார்கள். அவர் பனையடியில் உட்கார்ந்து கொண்டபடியே கெந்தியம்மாளையும் தன் மகனையும் பற்றி நினைத்து கொள்ள துவங்கினார்.

தன் சாவோடு அவர்களுக்கு இந்த ஊரின் பந்தம் முடிந்து போய்விடும். அதன் பிறகு ஏதாவது ஒரு நகரத்தில் கூலி வேலை செய்து பிழைக்க போய்விடுவார்கள். இந்த ஊரும் பனையும் ஆடுகளும் மேகங்களும் எதுவும் நினைப்பில் இருக்காது. தன்னையும் அப்படியே மறந்து போய்விடுவார்கள். அதுவும் நல்லது தான். நினைத்துக் கொள்ளும்படியாக தான் என்ன செய்துவிட்டேன்.

நகரத்தில் பனைகள் இருக்குமா என்று தெரியாது. தன்னை போல ஆடு மேய்கின்றவர்கள் நகரில் இருப்பார்களா? நகரில் ஆடுகள் இருக்குமா? அவை மேய்க்கபட வேண்டுமா? ஒருவேளை நகரிலும் மழைகள் இல்லாமல் ஆடுகள் தாகமிகுதியால் அலைய வேண்டுமா? நகரில் உள்ள பனைகளும் பற்றி எரிய துவங்குமா ?ஏதேதோ யோசனையாக வந்து கொண்டிருந்தது.

திடீரென ஊரில் எத்தனை சேவல்கள் இருக்கின்றது, ஒன்றிரண்டைக் கூட கண்ணில் காணவேயில்லையே என்று பட்டது. தான் பார்த்த மனிதர்கள். தன்னோடு ஆடுமேய்த்தவர்கள், தனக்கு கஞ்சிதண்ணி வார்த்த பொம்பளைகள் அத்தனையும் அழிந்து மண்ணுக்குள் போய்விட்டார்கள். அது எத்தனை பேர் ஞாபகத்தில் இருக்கும்.

தானும் அழிந்து மண்ணாகி போனால் நிச்சயம் ஒரு தும்பை செடியாகி விடக்கூடும். ஆனால் அதை மேய்வதற்கு ஆடுகள் இருக்குமா? தும்பை பூவை இப்போது யாராவது நின்று முகர்ந்து அதில் உள்ள தேனை நாவில் ருசித்து பார்க்கிறார்களா என்ன?

தும்பை செடியானாலும் தனித்து இருந்து ஆகாசத்தை பார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்

மருமகள் சொல்வது போல நகரத்திலும் மனிதர்கள் வசிக்க தானே செய்கிறார்கள். அவர்கள் சந்தோஷத்திற்காகவாவது இந்த ஊரை விட்டு போய்விட வேண்டியது தானே. ஏன் ஊர் தன்னை விட மறுக்கிறது. அவருக்கு குழப்பமாக இருந்தது.

நெடுநேரம் அவர் அந்த இடத்தில் தலைகவிழ்ந்தபடியே உட்கார்ந்திருந்தார். சௌடியை கடித்த பாம்பும் இந்நேரம் செத்து போயிருக்கும் இல்லையா என்று ஏனோ தோணியது. எழுந்து வீட்டை நோக்கி போக மனதேயில்லாமல் உட்கார்ந்தேயிருந்தார். அவரை மீறிய துக்கம் பீறிட அழ வேண்டும் போலிருந்தது. ஆனால் அழுவதற்கு அவர் விரும்பாமலிருந்தார். மனதை அடக்கி கொண்டு உட்கார்ந்திருந்தார். திடீரென எழுந்து ஆவேசமானவர் போல பனை எரியுதுடா பனை எரியுது என்று கத்தினார்.

பிறகு ஏதோ சந்நதம் கொண்டவரை போல தன் கைக்கோலால் இல்லாத ஆடுகளை விரட்டியபடியே அவர் வீட்டை நோக்கி நடக்க துவங்கினார். வழி முழுவதும் பனை எரிந்து கொண்டிருக்கிறது என்று அவர் கத்திக் கொண்டே வந்தார். அதை நின்று கேட்பதற்கு வீழ்ந்து கொண்டிருக்கும் சூரியனை தவிர அந்த வெட்டவெளியில் யாருமேயில்லை.

சென்ஷி

unread,
May 31, 2010, 3:12:57 AM5/31/10
to panb...@googlegroups.com



இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன

எஸ். ராமகிருஷ்ணன்

இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன என்பதை, கடந்த மூன்றாண்டுகளாகவே நான் அறியத் துவங்கியிருக்கிறேன். முன்பு கடற்கரையைக் கடந்து செல்கையில் எப்போதாவது பறவைகள் கடந்து போவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் மீதான என் கவனம் கூடியதில்லை. ஆனால் இந்த மூன்றாண்டிற்குள் நகரில் எங்கெங்கும் எந்த வகைப் பறவைகள் வந்து அடைகின்றன. அதன் குரல் எப்படியிருக்கும். எந்தத் திசையில் அவை பறந்து போகின்றன என்பதைக் கவனமாக அறிந்திருக்கிறேன். என்னை இயங்க வைத்துக்கொண்டிருப்பது இந்தப் பறவைகள்தான். பறவை என்பது எனக்கு வெறும்காட்சிப் பொருள் அல்ல. அது ஒரு இயக்கம். அது ஒரு பரவசம். என்னை முன் நடந்தும் ஒரு உந்துதல்.

பறவைகளைத் தேடி நாங்கள் ஒவ்வொரு நாளின் மாலையிலும் சில மணி நேரங்களாவது நடந்து அலைகிறோம். இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன. அவை எப்போதாவது தன்னை மறந்து சப்தமிடுகின்றன. மிக அரிதாகச் சண்டையிட்டுக் கொள்கின்றன. அந்தக் குரல்கள் இயல்பாக இல்லை. பறவைகள் களிப்பில் சிறகடிப்பதையோ, ஒன்றையொன்று உரசி விளையாடுவதையோ காணவே முடிவதில்லை.

இந்த நகரின் பறவைகள் அலுப்பூட்டத் துவங்கிவிட்டன. அவற்றின் இயந்திரகதியான அசைவுகளும் சிறகடிப்பும் சகித்துக்கொள்ள முடியாதபடி ஆகி வருகின்றன. பெரும்பான்மை நேரங்களில் இந்தப் பறவைகளும் சப்தம் ஒடுங்கி மனிதர்களைப் போல சாலை இயக்கத்தை வெறித்தபடியே அமர்ந்திருக்கின்றன. கைவீசி கலைத்த போதும் பறவைகளின் நிசப்தம் கலைவதேயில்லை. அரிதாகக் கரையும் போதும் வாகன இரைச்சலிடையே அதன் துருவேறிய குரல்கள் அமுங்கிப்போய்விடுகின்றன.

எனக்கு இது போன்ற அரித்துப் போன குரல்கள் தேவையற்றவை. எனக்கு அசலான பறவையின் குரல் வேண்டும். அந்தக் குரல் வாழை இலையில் உருண்டோடும் தண்ணீரைப் போல நரம்புகளில் ஊர்ந்து செல்ல வேண்டும். கத்தியால் கை நரம்புகளைத் துண்டிக்கும் போது கசிந்து பீறிடும் ரத்தத்தைப்போல வெம்மையாகவும் வலியோடும் பிசுபிசுப்போடும் அவை பீறிட வேண்டும். எனக்குப் பறவைகளின் விசித்திரமான குரல்கள் வேண்டும்.

ஏதாவது ஒரு பறவையின் குரலின் வழியாக மட்டுமே என் சுகியின் பேச்சை நான் மீட்டு எடுக்க முடியும். ஆறு வயதைக் கடந்த பின்னும் பேச்சு வராத என் சுகிக்காகப் பறவைகளின் அகவல்கள் வேண்டும். என் கண்கள் கடந்து செல்லும் மரங்களைத் துளையிடுகின்றன. மனம் ஆகாசத்தின் அகண்டவெளியில் சப்தமில்லாது பறக்கும் பறவைகளைப் பின்தொடர்கின்றன. எனக்குப் பறவைகள் வேண்டும். ஓயாது குரலிடும் பறவைகள் வேண்டும்.

இரண்டு கற்கள் உரசப்படுகையில் நெருப்பு பற்றிக் கொள்வது போல ஏதோவொரு பறவையின் குரல் என் மகளின் குரலோடு உரசி சொற்கள் பீறிட வேண்டும். அது வரை நான் பறவைகளைத் தேடிக் கொண்டேயிருப்பேன். என் மகளின் குரலை மீட்டுத்தரப்போகின்ற ஒரு பறவை இந்த நகரின் ஏதோவொரு மரக்கிளையில் இருக்கக்கூடும். இன்றில்லாமல் போனாலும் நாளை இந்த நகரை நோக்கி வந்து கொண்டிருக்க சாத்தியமுண்டு.

இதற்காகவே ஒவ்வொரு நாளும் மாலை வருவதற்காகவே காத்திருக்கிறேன். தண்ணீரில் கரைந்து கொண்டிருக்கும் உப்பைப் போன்ற பகலின் நிசப்தம் என்னை அழுத்துகிறது. எனது ஆர்வம் ஒடுங்கிக் கொண்டே வருகின்றது. பின் இரவிலான தெருவிளக்கின் நிழல் போல யாருமறியாமல் நாங்கள் இந்த நகரில் அலைந்து கொண்டேயிருக்கிறோம்.

என் சுகி சாலையோரம் நின்றபடியே பறவைகளை அவதானித்துக் கொண்டிருக்கிறாள். பறவையின் கழுத்து அசைந்தபடியே இருக்கின்றது. பறவைகள் ஒரு போதும் சாந்தமடைவதில்லை. பறவைகளின் கண்கள் காட்சிகளை விழுங்கியபடியே இருக்கின்றன. கால்கள் எப்போதும் பறப்பதற்கான துடிப்பில் பட்டும் படாமலும் நிற்கின்றன. றெக்கைகள் ஒடுங்கியும் அசைந்தும் கொண்டிருக்கின்றன. நிம்மதியற்றவை பறவைகள்.

பறவைகள் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதில்லை. அவை இரவைக் கடந்து போவதற்காக மட்டுமே மரங்களுக்கு வந்துசேர்கின்றன. விடிந்ததும் பகலின் கடைசி நுனிவரை தேடிச் செல்கின்றன. என் நினைவில் வேறு எதுவுமில்லை. பறவைகள், பறவைகள், பறவைகள் மட்டுமே.

*

என் மகள் சுகி ஆறு வருடத்தின் முந்தைய ஒரு பகல் பொழுதில் முதுகுளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் பிறந்தாள். அப்போது நான் எனது அலுவலகப்பணி காரணமாக கோட்டயத்திலிருந்தேன். காலை எட்டரை மணிக்கு போன் செய்து வித்யாராணியின் அப்பா தகவலைச் சொன்னார். மதியம் வேலையை முடித்துவிட்டுப் புறப்பட்டு வருவதாகச் சொல்லியபடியே தங்கியிருந்த அறையை விட்டுக் கீழே இறங்கி உணவகத்திற்காக நடந்து சென்றேன்.

நானும் அப்பாவாக ஆகிவிட்டேன் என்பது மனதில் சந்தோஷத்தை உருவாக்கியிருந்தது. ஆனால் எதிர்பார்த்த ஒன்றுதானே நடந்திருக்கிறது என்பது போன்று உற்சாகம் அடங்கியே இருந்தது. சாலையைக் கடந்து போகின்ற ஆண்களை உற்றுக் கவனிக்கத் துவங்கினேன். அப்பாவாக ஆனவர்கள், என்றாவது அப்பாவாக ஆகப் போகின்றவர்கள் என்று இரண்டாகப் பிரிந்து தென்படத் துவங்கியது.

அத்தோடு என் வயதை ஒத்தவர்கள், அதைக் கடந்தவர்கள், வயதானவர்கள் ஒவ்வொருவரைக் காணும்போது இவர்கள் யாருடைய அப்பா, எத்தனை பிள்ளைகளை இவர்கள் உருவாக்கியிருப்பார்கள் என்று வியப்பான எண்ணங்கள் உருவாகின. அத்தோடு தாங்கள் ஒரு அப்பா என்பதற்கான எந்தச் சுவடும் இன்றி அவர்கள் தன்னியல்பாகப் போவதும் வருவதும் எனக்குப் பிடித்திருந்தது.

அப்பாக்களின் உலகம் மிகப் பெரியது. அதற்குள்ளாகத்தான் என் அப்பா இருக்கிறார். என் அண்ணன் இருக்கிறார். என் தாத்தா இருக்கிறார். நான் அறிந்த அத்தனை ஆண்களும் அப்பாக்கள் உலகின் பிரதிநிதிகள்தானே. இதில் நானும் இன்றிலிருந்து ஒரு ஆள் என்பது மனதில் களிப்பை உருவாக்கியது.

உணவகத்தில் இனிப்பு தருவித்துத் தனியே சாப்பிட்டபடியே சுகியைப் பற்றி நினைக்க ஆரம்பித்தேன், திருமணமான சில வாரங்களிலே வித்யாராணி கர்ப்பமாகிவிட்டாள். அதை உறுதி செய்ய மருத்துவரிடம் சென்று வந்த மறுநாளே அவள் பிறக்கப் போகும் குழந்தையின் பெயரை முடிவு செய்துவிட்டாள்.

சுகி என்னும் பெயரை எப்படித் தேர்வு செய்தாள் என்று தெரியவில்லை. தனக்குப் பெண்தான் பிறக்கும் என்று தீர்மானமாக நம்பினாள். அத்தோடு சுகி என்னும் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்லத் துவங்கினாள். அந்தச் சொல்லின் மீது அவளுக்கு அதீத மயக்கம் உருவாகியிருந்தது. கையில் கிடைக்கும் காகிதங்களில் எல்லாம் சுகி சுகி என்று எழுதித் தள்ளினாள்.

அத்தோடு வித்யாராணி குழந்தையை எப்படி வளர்ப்பது, அதை எந்தப் பள்ளியில் சேர்ப்பது அவளை என்ன படிக்க வைப்பது, எங்கே வேலைக்கு அனுப்புவது, அவளுக்கு யாரைத் திருமணம் செய்து தருவது, வயதான காலத்தில் அவளோடு தங்கிக் கொள்வது வரை மனதில் கற்பனையானதொரு உலகை சிருஷ்டிசெய்து கொண்டு விட்டாள்.

எதற்காக பெண்கள் இவ்வளவு முன்திட்டமிடுகிறார்கள் என்று எனக்குப் புரியவேயில்லை.

நான் வித்யாராணியிடம், அவரசப்பட்டுவிட்டோம். நாம் இன்னும் தேனிலவிற்குக் கூடப் போய்வரவில்லை என்றேன். அவள் அதைப் பற்றிய அக்கறையின்றி எப்போ இருந்தாலும் பெத்துக்கப்போற பிள்ளைதானே, இப்பவே பெத்துட்டா நல்லது என்றாள். கர்ப்ப காலத்தில் அவளது பேச்சு, உடல் மொழி மற்றும் செய்கைகள் யாவுமே மாறத்துவங்கியிருந்தன.

திருமணம் செய்து கொள்ளும் வரை எனக்குக் குழந்தைகள் பற்றிய நினைப்பே கிடையாது. கைகளில் குழந்தைகளைத் தூக்கியே பல வருடகாலமாக இருக்கும். எப்போதோ சிறுவயதில் அருகாமை வீட்டிலிருந்த சர்வேயர் மகனைத் துணியில் சுற்றி பத்திரமாகப் பிடித்துக்கொள்ளும்படியாகக் கையில் தந்தார்கள். அந்தக் குழந்தை உறங்கிக்கொண்டிருந்தது. சில நிமிசங்கள் கையில் வைத்திருப்பதற்குள் கூச்சமாகிப் போனது.

அதன்பிறகு குழந்தைகளுடனான என் உறவு வெகுவாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. அண்ணன் வீட்டில் குழந்தைகள் பிறந்த போதுகூட எட்ட இருந்து பார்த்திருக்கிறேன். மற்றபடி குழந்தைகள் பிறக்கிறார்கள், வளர்க்கிறார்கள் என்பது எல்லாம் வெறும் செய்தியாகவே இருந்தது.

திருமணம் நடந்து முடிந்த சில நாட்களில் ஒரு நாள் படுக்கையில் வித்யாராணி நமக்கு எத்தனை குழந்தைகள் வேண்டும் என்று கேட்டாள். நான் அதைப்பற்றி அதுவரை யோசித்ததேயில்லை. இதை எப்படி நாம் முடிவு செய்ய முடியும் என்ற எண்ணம் மட்டுமே எனக்குள்ளிருந்தது. ஆனால் அவளாகவே எல்லா வீட்டிலும் ரெண்டு பிள்ளைகள் தான் இருக்கு. நமக்கு ஒண்ணு போதும். அதுவும் பொம்பளைப் பிள்ளையா இருந்துட்டா நல்லது என்றாள். நான் எதற்காக என்று கேட்டுக் கொள்ளவில்லை.

பிறகு அவளாகவே தன் வலது கையை நீட்டி தன் கையிலோடும் ரேகைப்படி ஒரேயொரு பிள்ளைதான் தனக்குப் பிறக்கும் என்று சொன்னாள். நீ கைரேகை எல்லாம் பார்த்திருக்கிறாயா என்று கேட்டேன். அவள் சிரித்தபடியே தன்னோடு படித்த மீனாவிற்குக் கை ரேகை பார்க்கத் தெரியும் என்றும் அவள் ஒரு நாள் கையைப் பார்த்து இப்படி பலன் சொன்னாள் என்ற படியே அவள் சொன்ன மாப் பிள்ளை மாதிரித்தான் நீங்கள் இருக்கீங்க என்றாள்.

பள்ளிக்கூட வயதிலே பிள்ளைகள் பெத்துக்கொள்வதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டாயா என்று கேட்டேன். அவள் ஆறாம் வகுப்பிலே படிக்கும் போதே யாரைக் கல்யாணம் பண்ணிக்கிடுறதுனு பொம்பளைப் பிள்ளைகளுக்குள்ளே போட்டி நடக்கும். நான் அப்பவே மெட்ராசுல இருந்து வர்ற மாப்பிள்ளையைத்தான் கட்டிக்கிடுவேனு சொன்னேன். எதுக்குன்னா மெட்ராசில இருக்கிறவங்கள் எல்லாம் ரெண்டு பிள்ளைகள் தான் பெத்துக்கிடுவாங்களாம். ஊர்ப்பக்கம்னா நாலு அஞ்சு பெத்துக் கொள்ள வேணுமில்லை என்று சொல்லிச் சிரித்தாள்.

என் கல்லூரி நாட்களில் ஒரு நாளும் நான் குழந்தைகளைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. நேற்றுவரை என் உலகில் என்னைத் தவிர யாருமேயில்லை. அந்த உலகிற்குள் வித்யாராணியைச் சேர்த்துக்கொள்வதற்கே எனக்குச் சில மாதங்கள் ஆனது. இதில் குழந்தையைப் பற்றி எதற்காக யோசனை செய்ய வேண்டும் என்று விட்டுவிட்டேன்.

பள்ளி, கல்லூரியில் படித்த நாட்களிலும் வேலைக்குச் சேர்ந்த பிறகும் நான் தனியாகவே இருந்தேன். இந்த உலகம், அதன் பரபரப்பு, முந்தித்தள்ளும் போட்டிகள் என்னைப் பற்றிக் கொள்ளவேயில்லை. ஆனால் எதற்கு எனப் புரியாத ஆழமான வருத்தம் ஒன்று என்னைப் பற்றியிருந்தது. அதை என்னால் தீர்த்துக் கொள்ள முடியாது என்றும் தீவிரமாக நான் நம்பியிருந்தேன்.

என் அறை, நாலைந்து உடைகள், ஒன்றிரண்டு சினிமாப் பாடல் கேசட்டுகள், ஒரு பைக் இவ்வளவு மட்டுமே என் உலகம். மரங்கள், பறவைகள், ஆகாசம், மழை, வெயில், காற்று எதுவும் என் கண்ணில் படவேயில்லை. எப்போதாவது மழை பெய்யும் போதுகூட என்னை அறியாமல்தான் ஒதுங்கி நின்றிருக்கிறேன். மழையை நின்று கவனித்ததேயில்லை.

உலகோடு நெருக்கமாக இல்லாமல் இருந்ததால் எனக்கு ஒரு நஷ்டமும் வந்துவிடவில்லை. மாறாக என் தனிமை என்னை ஒரு பாதுகாப்பு வலை போலப் போர்த்தி வைத்திருந்தது. அரிதாகச் சில நேரங்களில் பெண்களைப் பார்ப்பதுண்டு. அப்போதும்கூட மனதில் காமம் மட்டுமே நெளிந்து போகும். கடவுள் பிரார்த்தனை, திருவிழா, ஜனக்கூட்டம் என எதிலும் நான் கலந்து கொண்டதேயில்லை.

நான் வேலை செய்யும் பன்னாட்டுத் தனியார் வங்கி, அதன் கிளைகள், நீல நிற, மஞ்சள் நிற ரசீதுகள், என் முன்னே இயங்கிக் கொண்டிருக்கும் கணினி, சப்தமின்றி ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரம் இவை மட்டுமே என் உலகம். வித்யாராணியைத் திருமணம் செய்து கொள்வதைப் பற்றிக்கூட அதிகம் யோசனை செய்து முடிவு எடுக்கவில்லை. அப்பாவே அதையும் தீர்மானம் செய்திருந்தார்.

நான் அவளைப் பெண்பார்க்கப் போன நாளில் அவள் அணிந்திருந்த இறுக்கிப்பிடித்த ஜாக்கெட் எனக்குள் அவசரமான காமத்தை உருவாக்கியது. ஒருவேளை அதனால்தான் திருமணத்திற்குச் சம்மதித்தேனோ என்னவோ தெரியாது. அவள் என்னைக் கவனித்த அளவிற்கு நான் அவளைக் கவனிக்கவேயில்லை. அவள் முன்னிருந்த நிமிடங்களில் ஒரு நீர்ப்பூச்சி குளத்தின் மீது ஊர்ந்து போவது போல காமம் என் உடலில் பட்டும் படாமலும் ஊர்ந்து கொண்டிருந்தது. திருமணம் அவள் ஊரில்தான் நடந்தது.

திருமணமான சில நாட்களுக்கும் மனதில் காமம் மட்டுமேயிருந்தது. உடல் சோர்வடையும் வரை காமத்திலே திளைத்துப் போயிருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தது போல காமம் எனக்குள் இருந்த தீராத தனிமையைப் போக்கவில்லை. மாறாக அது அதிகப்படுத்திவிட்டது.

அவளை விட்டு எங்காவது ஒரு நாள் தனியாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாக இருந்தன. அது என்னைக் கடுமையாக அழுத்தத் துவங்கியது. ஒருவேளை அந்த அழுத்தம் காரணமாகவோ என்னவோ ஒரு இரவு முழுவதும் காய்ச்சல் கண்டது.

நான் அறையில் தனியே கிடந்தேன். ஈரத்துணிகள் காற்றில் உலர்வது போல எனக்குள் இருந்த காமம் கொஞ்சம் கொஞ்சமாக உலரத் துவங்கியது. இரண்டு நாட்களின் பின்பாக எழுந்து கொண்ட போது வித்யாராணியும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் மற்றப் பெண்களைப் போல தெரிந்த பெண்ணாகியிருந்தாள். அவளுக்கும் கூடுதலில் அதிக நாட்டமில்லை. கர்ப்பமாகிவிட்டபிறகு அவள் யோசனைகள் முழுவதும் அப்படியே குழந்தை பக்கமாகத் திரும்பிவிட்டன. நான் அவள் உலகிலிருந்து வெளியேறத் துவங்கியதைப் போலவே உணர்ந்தேன்.

*

கர்ப்பம் பெண்களிடம் காரணமற்ற ஆத்திரத்தை கோபத்தை உருவாக்கி விடுகிறது என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் துவங்கினேன். ஆறாவது மாதத்திற்குப் பிறகு வித்யாராணி காரணம் இல்லாமலே என்னோடு சண்டையிடத் துவங்கினாள். அல்லது நான் அவளோடு அற்ப காரணத்திற்காகக் கத்தத் துவங்கியிருந்தேன். இந்தச் சண்டையின் முடிவில் அவள் அழுதபடியே படுக்கையில் கிடப்பதைப் பலமுறை கண்டிருக்கிறேன். எதற்காக அவள் அப்படி அழ வேண்டும், அப்படி என்ன நடந்துவிட்டது என்று ஆத்திரமாக வரும். இருவருமே சில நாட்களுக்குப் பேசாமல் இருப்போம். பிறகு அது தானே கலைந்து போய்விடும்.

அவள் எப்போதும் யோசனையில் பீடிக்கப்பட்டவளாகவே இருந்தாள். ஒருநாள் வீடு திரும்பும் போது தன்னுடைய உதட்டில் வெள்ளையாக ஏதோ மரு போலப் படரத்துவங்கியிருக்கிறது. உடனே மருத்துவரிடம் சென்று காட்ட வேண்டும் என்று சொன்னாள். நீ கிளம்பி அலுவலகம் வந்திருந்தால் அப்படியே மருத்துவரிடம் போய்வந்திருக்கலாமே என்றேன். அது அவளுக்குள் ரௌத்திரத்தை உருவாக்கியது. இப்படியே நான் செத்துப் போயிருந்தாக்கூட உங்களுக்கு நல்லாதான் இருந்திருக்கும் என்றாள். நானும் கத்தினேன். அவள் ஓங்காரமாக அழுதாள்.

பிறகு இருவரும் மருத்துவமனையை அடையும்போது எட்டரை மணியாகியிருந்தது. பெண் மருத்துவரிடம் மட்டுமே காட்டுவேன் என்று அவள் அடம்பிடித்தாள். உதட்டில் உள்ள மருவிற்கு யாரிடமும் காட்டலாம் என்ற போதும் அவள் சமாதானம் அடையவேயில்லை. ஆனால் அன்று வேறுவழியில்லாமல் ஆண் மருத்துவரிடமே காட்டவேண்டிய சூழ்நிலை உருவானது. அவர் கர்ப்பிணிகளுக்கு இதுபோன்ற வெளிறிய உதடுகள் இருப்பது வழக்கம்தான். பயப்படத் தேவையில்லை. தேவைப்பட்டால் விட்டமின்கள் அதிகம் சாப்பிடுங்கள் என்று சிபாரிசு செய்தார். வித்யாராணி அதில் திருப்தி படவேயில்லை.

அவள் தன்னை மருத்துவரும் சேர்ந்துகொண்டு ஏமாற்றுவதாக உணர்ந்தாள். வீட்டிற்கு வந்த பிறகு கண்ணாடியைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு உதட்டையே பார்த்துக்கொண்டிருந்தாள். உதட்டைக் கையால் தேய்த்துத் தேய்த்துப் பார்த்தாள். பிறகு அவளாக குமுறிக் குமுறி அழத்துவங்கினாள். மறுநாள் அவளை ஒரு பெண்மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு போனேன். அவரும் இது வழக்கமான ஒன்று தான், பயப்படத் தேவையில்லை என்றார். ஆனால் வித்யாராணிக்கு இவை எவையும் சமாதானம் ஆகவில்லை.

மாறாக தனக்குத் தீர்க்கமுடியாத நோய் உண்டாகியிருக்கிறது. அதை எல்லோரும் மறைக்கிறார்கள் என்று நம்பத் துவங்கினாள். அவள் வேண்டுமானால் ஒரு வார காலம் ஊரில் போய் இருந்துவிட்டு வரட்டும் என்று அனுப்பி வைத்தேன். திரும்பி வந்தபோது உதட்டில் இருந்த வெள்ளை மறைந்து போயிருந்தது. அவள் வெட்கத்துடன் வெறும் தேமல், இதுக்குப் போயி பயந்துட்டேன், என்னை அறியாமலே மனசிலே நிறைய பயமாக இருக்கு. எதுக்குனு தெரியலை என்றாள்.

ஊருக்குப் போய்விட்டுத் திரும்பிய பிறகு திடீரென என் மீது அளவிற்கு அதிகமான அக்கறை காட்டத் துவங்கினாள். பத்து நிமிசத்திற்கு ஒரு முறை அலுவலகத்திற்கு போன் செய்து நலம் விசாரிப்பாள். சாப்பாட்டைத் தானே அலுவலகத்திற்குக் கொண்டுவருவாள். என் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு உறங்குவாள். அவள் செய்கைகள் எனக்குள் குழந்தை பிறப்பு தொடர்பான கசப்புகளை அதிகப்படுத்தியிருந்தது. இதற்கு மேல் குழந்தைகளே வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டேன்.

எட்டாவது மாசத்திலிருந்து அவள் யாருடனும் பேசிக்கொள்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டுவிட்டாள். யாராவது ஏதாவது கேட்டால் மட்டுமே ஒரு வார்த்தை பேசுவாள். மற்றநேரங்களில் யோசனையின் பெருஞ்சுழலில் தனியே மாட்டிக் கொண்டிருந்தாள்.

சுகி பிறப்பதற்குப் பத்து நாட்கள் முன்பாக வித்யாவைக் காண்பதற்கு அவள் ஊருக்குச் சென்றிருந்தேன். அவள் முகத்தில் விவரிக்கமுடியாத பயம் அப்பிப்போயிருந்தது. அத்தோடு அவள் குரல் உடைந்திருந்தது. கை நிறைய கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தாள். நெற்றி நிறைய திருநீறு இருந்தது. நீ பயப்படும் அளவு ஒன்றுமேயில்லை என்று அவளிடம் ஏதோ ஆறுதல் சொன்னேன். அன்று ஊருக்குத் திரும்பி வரும்போது கூட குழந்தையைப் பற்றி என் மனதில் எவ்விதமான சித்திரமும் உருவாகவில்லை. சொல்லப்போனால் எனக்குள்ளும் அப்பா என்பதைப் பற்றிய பயம் உருவாக ஆரம்பித்திருந்தது.

நீண்ட நாட்களுக்கு சுகி என்னும் சொல் எனக்கு வெறும் சொல்லாகவே இருந்தது. மருத்துவமனையில் இருந்த என் குழந்தையை அருகில் சென்று பார்த்த போது தான் அந்தச் சொல் குழந்தையோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. என்னை அறியாமல் சுகி சுகி என்று மெல்லிய குரலில் அழைத்தபடியே விரலால் குழந்தையின் கேசத்தை வருடிவிட்டேன்.

தூக்கம் கலைந்த முகத்துடன் இருந்த வித்யாராணி என்னை மாதிரி இருக்கா உங்களை மாதிரி இருக்கா என்று கேட்டாள். உன்னை மாதிரியேதான் என்றேன். அதைத் தான் எங்கம்மாவும் சொல்றா என்று சிரித்தாள். அந்தச் சிரிப்பு அதன் முன்பு நான் கண்டறியாதது. பிரசவம் பெண்ணிற்கு முன் இல்லாத ஒரு அழகை உருவாக்குகிறது போலும். அவள் குழந்தையைக் கையில் எடுத்து பால் புகட்டத் துவங்கினாள். குழந்தை அவள் மார்பில் முட்டியபடியே உறங்கத் துவங்கியது.

அவள் என் கையில் குழந்தையைக் கொடுத்தாள். அது என் குழந்தை. நான் குழந்தையின் அப்பா என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் துவங்கினேன். உலகில் அதுவரை பிறந்திருந்த அத்தனை குழந்தைகளும் என் கவனத்தை விட்டுப் போய் ஒரேயொரு குழந்தை, அது என்னுடைய குழந்தை என்பது மட்டுமே முக்கியமாகிக் கொண்டிருந்தது. அப்போது தோன்றியது அப்பா என்பது ஒரு பொறுப்புணர்வு. தீராத சந்தோஷம் என்று.

*

சுகி ஒரு வயது வரை மற்றக் குழந்தைகளைப் போல் அழுவதேயில்லை. பெரும்பாலும் உறக்கம். விழித்திருந்த போதுகூட எதையோ உற்று நோக்கி நிலைகுத்திய பார்வையோடு அப்படியே இருந்தாள். எதற்காக அவள் பார்வை அப்படியே நிலை குத்தியிருக்கிறது. அப்படி என்ன கவனிக்கிறாள் என்று வியப்பாக இருக்கும். பிற குழந்தைகளைப் போல அவளிடம் பரபரப்போ துடிப்போ இல்லை. தரையில் விட்டால்கூட அவள் அதிகம் தவழுவது இல்லை. எதையாவது உற்றுப் பார்க்கத் துவங்கி அப்படியே நிலை கொண்டுவிடுவாள். யாராவது தூக்கிக்கொண்டு வெளியே வந்தாலும் அவள் பார்வை ஒன்றின் மீதே குவிந்துவிடும்.

வித்யாராணிக்கு இது பயத்தை உருவாக்கத் துவங்கியது. அவளாகவே குழந்தையைக் கோவிலுக்குக் கொண்டு செல்வதும் நேர்ச்சைகள் செய்வதுமாக இருந்தாள். நான் அலுவலகம் இல்லாத சிலநாட்களில் சுகியைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும்போது அவள் சோர்வாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

குழந்தைகளுக்கான மருத்துவர்கள் அவளைச் சோதித்துவிட்டு பொதுவான சத்துக்குறைவு காரணமாகவே அவள் இப்படியிருக்கிறாள் என்பதைக் கண்டுபிடித்தார்கள். ஆனால் இரண்டு வயது வரை சுகியிடம் எந்த மாற்றமும் வரவில்லை. சுகி ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை என்பதை வித்யாராணி கண்டுபிடித்த நாளில் அவள் கதறி அழத்துவங்கினாள். என் பிள்ளைக்குப் பேச்சு வரலையே என்று சப்தமாகக் கத்தினாள். அப்படியெல்லாம் இருக்காது, அவள் சப்தம் கேட்டால் திரும்புகிறாள். அதனால் நிச்சயம் தப்பாக எதுவும் ஆகாது என்றேன். வித்யா சமாதானம் அடையவில்லை.

இதற்கான சிறப்பு மருத்துவரிடம் சுகியைக் கொண்டு சென்றோம். ஏதோ பெயர் தெரியாத குறைபாட்டினைக் காரணம் காட்டி மருந்துகள் தந்ததோடு அவள் முன்பாகத் தொடர்ந்து ஏதாவது பேசிக் கொண்டேயிருங்கள் என்றார்.

அன்றிலிருந்து வித்யாராணி குழந்தையைத் தன்மடியில் வைத்துக் கொண்டு அம்மா சொல்லு. . . அப்பா சொல்லு . . . தாத்தா சொல்லு . . . என்று வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டேயிருந்தாள். அந்த சப்தங்களும் அவளைக் கவரவேயில்லை. நானும் மாலைநேரங்களில் சுகியைத் தூக்கி வைத்துக் கொண்டு தெரிந்த சொற்கள் யாவையும் சொல்லிப் பழக்கினேன். அவள் சொற்களைத் தனக்குள் அனுமதிக்கவேயில்லை. தண்ணீருக்குள் விழுந்த கூழாங்கற்களைப் போல அந்தச் சொற்கள் கரையாமல் அப்படியே விழுந்தன.

இரண்டு வார காலம் விடுமுறை எடுத்துக்கொண்டு குழந்தையோடு கோவில் கோவிலாகப் பயணம் செய்தோம். வழி முழுவதும் தென்பட்ட சூரியன், காற்று, மலை, மரம், ஆறு, நாய், வீடுகள், தெருக்கள், வாகனங்கள் என யாவையும் பெயர் சொல்லிச் சொல்லி அலுத்துப் போன பிறகும் குழந்தையின் கவனம் சொற்களின் மீது குவியவேயில்லை.

சில நேரங்களில் சுகியின் மௌனம் என்னை பயமுறுத்தியது. அவள் கையில் ஒரு ஸ்பூனை வைத்துக்கொண்டு அதையே மணிக்கணக்கில் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆத்திரத்தில் அந்த ஸ்பூனைப் பிடுங்கி வீசி எறிய வேண்டும் போலிருந்தது. அப்படிச் செய்தும் பார்த்தேன். ஆனால் அது சுகியை அசைக்கவேயில்லை. தன்னுடைய கைப்பொருள் பறிபோன போதும்கூட அவளிடம் அழுகையோ ஆர்ப்பாட்டமோ இல்லை.

இன்னொரு பொருள் தன் கைக்குக் கிடைக்கும் வரை அவள் தரையை வெறித்துப் பார்க்கத் துவங்கினாள். அன்றிரவு அவளைப் போலவே ஒரு ஸ்பூனைக் கையில் எடுத்துக்கொண்டு நானும் உற்றுப் பார்க்க ஆரம்பித்தேன். இதன் முன்பாக உலகில் அப்படியொரு பொருளை நான் கண்டதேயில்லையோ எனும்படியாக இருந்தது ஸ்பூன். அதை வித்யாராணி கவனித்திருக்க வேண்டும். பிள்ளை தான் படுத்தி எடுக்குதுன்னா. நீங்களும் ஏன் என் உயிரை வாங்குறீங்க என்று ஸ்பூனைப் பிடுங்கி வீசினாள்.

எனது சண்டைகள், கத்தல்களால்தான் குழந்தைக்கு இப்படியாகியிருக்கிறது என்றுவேறு அவள் நம்பத் துவங்கியிருந்தாள். நானும் கர்ப்பகாலத்தில் அவள் ஆத்திரமாக நடந்துகொண்டதும் கத்திக் கூப்பாடு போட்டு அழுததும்தான் குழந்தையை இப்படி ஆக்கிவிட்டது என்று கத்தினேன். அவள் ஆமாம் எல்லாமே என்னாலேதான் வந்தது நான் இப்படியே செத்துப் போய்விடுகிறேன். நீங்கள் சந்தோஷமாக இருங்கள் என்று ஆத்திரமுற்றாள். அப்போதும் சுகி பாட்டிலின் மூடி ஒன்றைக் கையில் வைத்து உற்றுப் பார்த்தபடியே அசைவற்று உட்கார்ந்தேயிருந்தாள். அப்பாவாக இருப்பது என்பது பொறுப்புணர்வு மட்டுமில்லை என்பது புரியத் துவங்கியது.

*

சுகியை அழைத்துக்கொண்டு பழனியில் உள்ள சித்த வைத்திய நிலையம் ஒன்றிற்குச் சென்றிருந்தோம். மலையின் பின்புறமிருந்தது. குழந்தையின் குரல்வளையில் சிறிய பிளவு இருப்பதாகச் சொல்லிய படியே வைத்தியம் ஆரம்பித்தார்கள். நாற்பது நாட்கள் சிகிச்சைகள். ஒவ்வொரு நாளும் மலையின் மீது படரும் பகலொளியைப் பார்த்த படியே இருப்போம். சுகியின் கண்கள் தொலை தூர மலையைவிட அருகாமையில் கடந்து செல்லும் சிற்றெறும்பின் மீது நகர்ந்து கொண்டிருந்தது. பகலிரவாக இருவரும் குழந்தையைப் பார்த்தபடியே இருந்தோம். எவ்விதமான மாறுதலும் இல்லை. அதன்பிறகு டி.கல்லுபட்டி, மார்த்தாண்டம், வாராங்கால், ஏர்வாடி என்று எங்கெங்கோ சிகிச்சைக்காக அழைத்துக்கொண்டு சென்றோம். சுகிக்கு நாலு வயது முடியும் வரை அவள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அது போலவே மற்றவர்கள் பேசும் ஒலிகளும் அவளுக்கு உவப்பாக இல்லை.

வித்யாராணி தனது தவற்றின் காரணமாகவே சுகி இப்படியிருப்பதாக நினைத்துக்கொண்டு உபவாசம், முடிகொடுத்தல் என்று தன்னை வருத்திக் கொள்ளத் துவங்கினாள். அவள் முகத்தில் எப்போதுமே படபடப்பும் வெளிக்காட்டிக்கொள்ள முடியாத பயமும் ஒட்டிக்கொண்டிருந்தது.

சாயாவனம் என்ஏம் சிற்றூரிலிருந்த மூலிகை வைத்தியர் ஒருவரைக் காண்பதற்காக விடிகாலையில் அவர் வீட்டிற்குப் போனபோது முதன்முதலாக சுகி அங்கிருந்த கிளி ஒன்றின் சப்தத்தைக் கேட்டு வேகமாக முகத்தைத் திருப்பியதைக் கவனித்தேன். அந்த வீட்டில் இருந்த நேரங்களில் கிளி கத்தும் போது எல்லாம் சுகியின் முகம் தானே அதை நோக்கித் திரும்பியதைக் கண்டேன். சுகியைக் கிளிக்கூண்டு அருகில் கொண்டு சென்றேன். அவள் வியப்போடு கிளியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். உனக்குக் கிளி வேண்டுமா என்று கேட்டேன். அவள் இமை மூடாமல் கிளியைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். கிளி விட்டு விட்டுக் கத்தியது. கிளி சப்தமிடும் போது சுகியின் கண்கள் வேகமாகச் சிமிட்டிக்கொண்டன.

*

ஊர் திரும்பிய பிறகு ஒரு மாலையில் சுகியை அழைத்துக்கொண்டு நகரிலிருந்து மேற்காகச் செல்லும் சாலையில் பைக்கில் பயணம் செய்யத் துவங்கினேன். நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில் சாலையோரம் உள்ள ஒரு தர்க்கா ஒன்றையும் அதன் முன் அடர்ந்திருந்த மரங்களில் வந்து கூடும் பறவைகளின் இரைச்சல் ஒலியையும் ஒரு முறை கடந்து செல்கையில் கேட்டிருக்கிறேன். பைக்கில் அந்தச் சாலையை நெருங்கிச் செல்லும்போதே இடைவிடாத பறவைகளின் கரைப்பொலி கேட்கத் துவங்கியது.

மரம் தெரியாமல் காகங்களும் குருவிகளும் ஒன்றிரண்டு கொக்குகளும் சாம்பலும் இளஞ்சிவப்பும் கலந்த பறவைகளும் காணப்பட்டன. சுகி அந்த சப்தங்களால் கவரப்பட்டாள் என்பது அவள் முகமாற்றத்திலே தெரிந்தது. அவள் மரத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டேயிருந்தாள். காதைத் துளையிடும் அந்த ஒலி அவளுக்குள் நிரம்பத் துவங்கியிருந்தது. அவள் முகத்தில் பிரகாசமான வெளிச்சம் படர்ந்துகொண்டிருந்தது போல உணர்ந்தேன். இருட்டும் வரை நாங்கள் இருவரும் அங்கேயே இருந்தோம். சுகியின் கைவிரல்கள் தாளமிடுவது போல அசைந்து கொண்டிருந்தன. வரும் வழியில் மரப்பட்டை நிறத்திலிருந்த ஆந்தை ஒன்றைக் கூடக் கண்டோம்.

அன்றிரவு வித்யாராணியிடம் சுகி பறவைகளின் சப்தத்தால் கவரப்படுகிறாள். நாம் சில பறவைகளை வாங்கி வீட்டில் வைத்து அதன் சப்தத்தைக் கேட்க வைக்கலாமே என்றேன். வித்யாராணி ஒத்துக் கொண்டாள். புறாக்கள், மைனா, கிளி என்று கூண்டுப்பறவைகளைக் கொண்டுவந்து சுகியின் முன்பாக சப்தமிடச் செய்தோம். ஆரம்பத்தில் ஆர்வம் காட்டிய சுகி சில நாட்களுக்குள் அதில் கவனம் கொள்ளவேயில்லை. மாறாக அந்த சப்தங்கள் தன்னைக் குத்திக்காட்டுவது போலவே வித்யாராணி உணரத் துவங்கினாள். வீட்டில் அதை வைத்துக்கொள்ள முடியாது என்று வேலைக்காரப் பெண்ணிடம் தூக்கித் தந்துவிட்டாள்.

அதன்பிறகு அலுவலகத்தில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரின் வழியாக ஒரு ஆலோசனை கிடைத்தது. பதிவு செய்யப்பட்ட பறவைகளின் குரல்கள் உள்ள குறுந்தகடுகள் கிடைக்கின்றன. அதை வாங்கி கேட்க வைத்துப் பாருங்கள் என்றார். பதிவுசெய்யப்பட்ட பறவைகளின் குரல்கள் உள்ள இசைத்தட்டிற்காகத் தேடி அலைந்து ரிச்சி தெருவில் வாங்கிவந்தேன். நூறு பறவைகளின் ஒலிகள் அதில் அடங்கியிருந்தன.

ஒவ்வொரு பறவையின் ஒலியும் கேட்கும்போது சுகியின் கண்கள் தன்னை அறியாமல் விரிவடையத் துவங்கின. ஆனால் அவள் அந்தப் பறவை எங்கேயிருக்கிறது என்று சுற்றிலும் தேடத் துவங்கினாள். ஒரு இயந்திரத்தைக் காட்டி அவளை ஏமாற்றுகிறோமோ என்னும் குற்றவுணர்வு எனக்குள் உருவாகத் துவங்கியது.

அதற்காகவே அவளை அழைத்துக்கொண்டு பறவைகளைத் தேடி மாலையில் அலைந்து திரிவது என்று முடிவு செய்தேன். ஆரம்ப நாட்களில் பறவைகள் இந்த நகரில் இருக்கின்றனவா என்று சந்தேகம் வருமளவு அரிதாக இருந்தன. ஆனால் விசாரித்து விசாரித்து பறவைகள் எந்த மரங்களில் அடைய வருகின்றன. எந்த நேரத்தில் தரையிறங்குகின்றன என்பதை அறிந்துகொண்டு அதை நோக்கி நடக்கத் துவங்கினோம்.

பரபரப்பான வாகன இயக்கங்களைத் தாண்டி நாங்கள் மூவரும் மெதுவாக நடந்து கொண்டேயிருப்போம். ஏதாவது வீட்டின் சுவரிலோ, புழுதியடைந்து போன மரங்களிலோ பறவையொலி கேட்டால் அங்கேயே நின்றுவிடுவோம். சுகியின் கண்கள் பறவையைத் தேடத்துவங்கும். நானும் அதற்குப் பழகியிருந்தேன். சில நாட்கள் இலக்கற்று நடக்கத் துவங்கி அலுப்பும் வெறுமையாகவும் வீடு திரும்பி வந்திருக்கிறோம்.

ஏன் குரல்கள் அவளுக்குள்ளிருந்து எழும்புவதேயில்லை. எல்லாச் சொற்களும் ஏன் வடிந்து போய்விடுகின்றன என்னும் குழப்பம் தூக்கத்திலும் எனக்குள் பீறிட்டுக் கொண்டேயிருந்தது. அவள் கவனத்தைக் குவியவைப்பதற்காக ஏதேதோ செய்த போதும் மாற்றமேயில்லை. ஆனால் இதைத் தவிர சுகியிடம் வேறு வித்தியாசம் எதுவுமில்லை. அவளாகக் குளித்துக்கொண்டாள். அவளாக உடைகளை உடுத்திக் கொண்டாள். பசித்த வேளைகளில் மிகக் குறைவாகச் சாப்பிட்டாள். யாவும் மௌனமாக நடந்தன என்பதுதான் இதன் முக்கிய பிரச்சனை.

நாளுக்கு நாள் சுகி பறவைகளைத் தேடிப் போய் அதன் சப்தங்களைக் கேட்பதில் ஆர்வம் கொள்ளத் துவங்கினாள். ஆனால் எந்தப் பறவையின் குரலுக்கும் அவள் மறு மொழி தந்ததில்லை. இதற்காகவே நான் பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ளத் துவங்கினேன். சலீம்அலியின் புத்தகங்களை வாங்கி வந்து இரவெல்லாம் படித்தேன். எனக்குத் தெரிந்தவரை பறவைகளைப் பற்றி இடைவிடாமல் அவளோடு பேசினேன்.

அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டு மின்சார ரயிலில் சென்று ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து செல்லும் கிளைவழிகளில் எங்கே என்ன பறவைகள் இருக்கக்கூடும் என்று அலைய ஆரம்பித்தேன்.

நகரம் எண்ணிக்கையற்ற கிளை வழிகளும் தெருக்களும் சந்துகளும் நிரம்பியதாக இருந்தது. நகரில் வாழும் மனிதர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவான பறவைகளே நகரில் இருந்தன.

தேடி அலுத்துப் போன நாட்களில் பயணம் செய்து காடுகளை நோக்கிச் செல்லத் துவங்கினோம். ஒரு புதிய பறவையைக் கண்டு பிடித்தபோது சுகியின் முகத்தில் சொல்லமுடியாத மகிழ்ச்சி ததும்புவதைக் கண்டிருக்கிறேன். எங்களோடு வித்யாராணி கூடவே அலைந்துகொண்டிருந்தாள். அவளுக்குப் பறவைகளோ, அதன் குரல்களோ எதுவும் முக்கியமாகவேயில்லை. குழந்தை எப்படியாவது பேசிவிட வேண்டும் என்ற ஒற்றைப் பிரார்த்தனை மட்டுமேயிருந்தது.

சுகியை அவ்வப்போது காட்டிற்குள் அழைத்துப் போகத் துவங்கியதில் ஏற்பட்ட முதல் பாதிப்பு, காற்று. அவளால் சீரற்ற காற்றின் வேகத்தை எதிர் கொள்ள முடியவில்லை. அவள் நடுக்கத்தோடும் தலையைச் சிலுப்பியபடியும் காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தாள். அதுவும் அதிகாலை நேரக் காற்று அவள் உடலைத் துவளச் செய்தது. அதன் காரணமாக அடிக்கடி காய்ச்சலுக்கு உட்பட்டாள்.

இதற்காகவே காட்டை விலக்கி நகருக்குள் சுற்றியலையத் துவங்கினோம். சுகியின் உலகில் பறவைகள் மட்டுமேயிருந்தன. அதன் தொடர்ச்சியான பறத்தல், விசித்திரமான சப்தங்கள் மட்டுமே நிரம்பியிருந்தது. இந்த மூன்று வருடங்களில் நாற்பது ஐம்பது நாட்கள் மட்டுமே அலுவலகம் சென்றிருப்பேன். மற்ற நாட்களில் சுகிதான் என் கவனமாகிப் போனாள்.

*

சுகி வளரத் துவங்கியிருந்தாள். ஆறு வயது முடியப்போகிறது என்றாலும் பத்து வயதுச் சிறுமி போன்ற தோற்றம் உருவாகியிருந்தது. தன்னிச்சையாக அவள் வீட்டிலிருந்து இறங்கி தெருவில் நடந்து போய்வருவதும் எங்காவது சாலையில் பறவையின் குரலைக் கேட்டால் அப்படியே நின்றுவிடுவதும் இயல்பாக இருந்தது.

தன் மகளால் பேசவே முடியாது என்று முழுமையாக நம்பியவளைப் போலவே அவளுடன் சைகையில் உரையாடத் துவங்கினாள் வித்யாராணி. அது சுகியை இன்னமும் ஆத்திரப்படுத்தியிருக்க வேண்டும். அவள் அந்தச் சைகைகள் எதற்கும் பதில் தருவதேயில்லை. பசிக்கும் நேரங்களில் அவளாக எடுத்துச் சாப்பிடுவதும் பின்பு ஜன்னலை ஒட்டி ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டுக்கொண்டு வெளியே பார்த்துக்கொண்டிருப்பதையும் இயல்பாக்கிக்கொண்டிருந்தாள்.

சுகிக்காகவே வீடு மாற்றத் துவங்கினேன். சில மாதங்கள் நகரை விட்டு விலகி கடற்கரையை ஒட்டிய ஒரு பழைய வீட்டிற்குக் குடிமாறிப் போனோம். அந்த வீட்டிலிருந்து நடந்தே கடற்கரைக்குப் போய்விடலாம். சுகி அதிகாலை நேரங்களில் தனியே கடற்கரையில் அலைந்து கொண்டிருப்பாள். மீன்களைக் கொத்தியலையும் பறவைகளும் கடலின் மீது தாழப்பறக்கும் பறவைகளும் அவளை உற்சாகம் ஊட்டின. ஆனால் அந்த உற்சாகம் நெடுநாள் நீடிக்கவில்லை.

தன் வீட்டின் பின்னால் உள்ள ஏரியில் எண்ணிக்கையற்ற கொக்குகளும் நாரைகளும் வந்து போகின்றன என்று நண்பர் ஒருவர் சொன்னதை நம்பி இரட்டை ஏரி பகுதிக்கு வீடு மாறி சில மாதங்கள் வசித்திருந்தோம். அந்த வசீகரமும் நீடிக்கவில்லை. எல்லாமும் துளை விழுந்த பலூன் போலச் சில நிமிசங்களில் வடிந்துபோய்விடுகின்றது. சுகியைக் குழந்தையாகப் பார்த்த போது அவள் கண்கள் எப்படி நிலை குத்தியிருந்ததோ அப்படியே இப்போதும் இருந்தன.

பல இரவுகளில் அவள் உறங்கும் போது அருகில் அமர்ந்து அழுதிருக்கிறேன். எதற்காக சுகியின் மனதில் ஒரு வார்த்தைகூடத் தங்குவதில்லை. ஏன் அவள் உதடுகள் உறக்கத்திலும் இறுகிக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை நானும் வித்யாராணியும் போட்டுக் கொண்ட சண்டைகள் கர்ப்பத்திலே அவள் வாயைக் கட்டிவிட்டதா? எவருடனும் பேச வேண்டிய அவசியமேயில்லை என்று இந்த வயதிற்குள் முடிவுசெய்துவிட்டாளா?

மெல்ல சுகியால் பேசமுடியவில்லை என்ற துயரம் எனக்குள் உறைந்து இறுகிப்போக ஆரம்பித்தது. எவரிடமும் பகிர்ந்து கொள்ளவோ, ஆறுதல் படுத்திக் கொள்ளவோ முடியாத அந்த துக்கம் கடுகடுத்த வலியோடு எனக்குள் பூரணமாக வேர்விட்டிருந்தது.

*

கரிக்கலிக்கு சகியை அழைத்துக் கொண்டு போனபோது தொலைவிலே பறவைகளின் ஒலி கேட்கத் துவங்கியிருந்தது. ஏதேதோ நாடுகளிலிருந்து பறவைகள் புலம்பெயர்ந்து அங்கே வந்து சேர்கின்றன என்று சொன்னார்கள். சுகி தனியே நடந்து அலைந்தபடியே அந்தப் பறவைகளின் குரல்களை உன்னிப்பாகக் கேட்டாள். பிறகு கீழே விழுந்து கிடந்த நீலநிற இறகு ஒன்றை எடுத்துக் கையில் வைத்து ஆட்டிய படியே ஒரு சப்தத்தைப் பின் தொடர்கின்றவள் போல நடந்து போகத் துவங்கினாள். நான் அவள் பின்னாடியே சென்றேன். அவள் மிகக் கவனமாக நடந்து போய் புதர் போன்ற கிளைகளை விலக்கியபடியே அந்த சப்தத்தைப் பின் தொடர்ந்து சென்றாள். பிறகு அண்ணாந்து பார்த்தபடியே வியப்போடு சொன்னாள்,

புல்புல்.

ஆமாம் என்று தலையாட்டினேன். பிறகுதான் புரிந்தது. சுகி பேசினாள் என்பது. ஆச்சரியத்துடன் அது என்னவென்று கேட்டேன். அவள் பதிலற்று புல்புல்லின் சப்தத்தில் தன்னை மறந்து போயிருந்தாள். சுகியால் பேச முடிகிறது என்பது எவ்வளவு பெரிய விஷயம். ஆனால் அவள் பேசவிரும்பவில்லை. அல்லது பேசுமளவு அவளை வேறு எந்தச் செயலும் உந்தவில்லை. வரும்வழியெங்கும் ஏதேதோ பேச வைக்க முயன்றும் அவளிடமிருந்து வார்த்தை வரவில்லை. ஆனால் அன்றிரவு முழுவதும் அந்த ஒற்றைச் சொல் எனக்குள் நீந்திக் கொண்டேயிருந்தது

வீடு வந்தபிறகு வித்யாராணியிடம் அதைப்பற்றிச் சொன்னேன். அவளால் நம்பமுடியவில்லை. ஒரு முறை தானும் புல்புல் என்று சொல்லிக் கேட்க வேண்டும் என்பதற்காக அவள் எவ்வளவோ முயற்சி செய்தாள். ஆனால் மூடிக் கொண்ட சிப்பியைப் போல ஒரு சொல்லோடு அவள் மௌனம் திரும்பிவிட்டிருந்தது.

நிச்சயம் இன்னொரு பறவையால் அவள் மனதிலிருந்து இன்னொரு சொல்லைக் கொத்தி எடுத்து வந்துவிட முடியும் என்று நம்பினேன். இதற்காகவே அவளை அடையாற்றில் உள்ள ஆற்றின் கழி முகம் மற்றும் கிண்டி பூங்காவின் மரங்கள் அடர்ந்த பகுதி, நந்தனம் விளையாட்டு மைதானத்தின் புல் வெளி, மீனம்பாக்கத்தை ஒட்டிய கிராமங்கள் என்று எங்கெங்கோ கூட்டிக் கொண்டே சென்றேன்.

நாளாக ஆக அவள் பறவைகளின் ஒலியால் அடைந்த பரவசத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறாள் என்பது புரிந்தது. இப்போது அவள் வேறுவேறு பறவைகளின் சப்தத்தைவிடவும் முன்பு கேட்ட பறவையின் ஒலியை மறுபடியும் எங்கே எப்போது கேட்போம் என்பதில்தான் நாட்டம் கொண்டிருக்கிறாள் என்பதை அறிய முடிந்தது.

அவளுக்காக பறவைகளை அறியத் துவங்கி என் உலகில் பறவைகளின் விசித்திரமான நிறங்கள் மாறுபட்ட குரல்கள் அது எழுப்பும் அக உணர்வுகள் மட்டுமே நிரம்பியிருந்தன. அன்றாட உலகின் வாகனங்கள், திரையரங்குகள், மின்சார ரயில்கள், உணவகங்கள் என யாவும் என்னிலிருந்து கழன்று போகத் துவங்கியது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை நானும் சுகியும் கேளம்பாக்கத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது சட்டென ஒரு இடத்தில் என் முதுகில் கையை வைத்து வண்டியை நிறுத்தும்படியாக அழுத்தினாள் சுகி. நான் சாலையோரமாக வண்டியை நிறுத்தியபோது அருகாமையில் இருந்த மரத்தில் பறவையைக் காட்டினாள். இவ்வளவு ஒதுங்கிய மரத்திலிருந்த பறவை எப்படி அவள் கண்ணில் பட்டது என்னும் வியப்புடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தலையும் மார்பும் வயிறும் வாலும் வெளுத்து மற்றெங்கும் செந்நிறமாக இருந்த பறவையது. கடல் மீது இதுபோன்ற பறவைகள் சுற்றியலைவதைக் கண்டிருக்கிறேன். பறவை விருட்டெனப் பறந்து இன்னொரு மரத்தின் உச்சிக்கிளைக்குச் சென்றது. அவள் ஆதங்கத்துடன் சொன்னாள்,

ஆலா . . . மழை வரும்.

நிச்சயம் சுகியால் பேச முடிகிறது. நான் சுகியைக் கட்டிக் கொண்டு பேசுடா பேசுடா என்றேன். சுகி பேசவில்லை. அவள் என் கைகளைத் தள்ளிக் கொண்டு பைக் நிறுத்தப்பட்ட இடத்திற்குப் போய் நின்று கொண்டாள். பறவை பறந்து போயிருந்தது. வெற்று மரத்தை இருவரும் வெறித்தபடியே சில நிமிசங்கள் நின்று கொண்டிருந்தோம். பிறகு மௌனமாக வீடு திரும்பிவிட்டோம். சுகி ஏன் பேச்சை உனக்குள்ளாகவே ஒளித்துக் கொள்கிறாய். உனக்குப் பிடித்தமான பறவைகள் பெயரை மட்டுமாவது நீ சொல்லிக்கொண்டேயிரேன் என்று அன்றிரவு படுக்கையில் கிடந்தபடியே அரற்றினேன். ஆனால் அவளிடம் மாற்றமே இல்லை.

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வார்த்தை சுகி பேசிவிட மாட்டாளா என்னும் நம்பிக்கையின் மீதே ஊர்ந்து நகர்கிறது. இன்றைக்கும் நானும் சுகியும் வித்யாராணியும் புறநகரின் மண்பாதைகளில் சுகியோடு பறவைகளைத் தேடி சுற்றியலைந்தபடியே இருக்கிறோம்.

பேசுவது என்பது எளிமையானதில்லை. அது ஒரு விந்தை என்று எங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத்துவங்கியிருக்கிறது. இப்போதெல்லாம் மிக அரிதாகவே நாங்களே எங்களுக்குள் பேசிக் கொள்கிறோம். கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த வாளியைப் போல பேச்சு எங்களுக்குள்ளாகவே அறுந்து விழுந்து கிடக்கிறது.

ஏதோவொரு பறவை இன்னமும் என் மகளைப் பேச வைத்துவிடும் என்னும் நம்பிக்கையிருக்கிறது. ஆயிரமாயிரம் மனிதர்கள், நெருக்கடியான வாகனங்கள், நான்குவழிச் சாலைகள், உறங்க இடமற்ற பிளாட் பாரவாசிகள், நோயாளிகள், உதிரி மனிதர்கள், எண்ணிக்கையற்ற அலுவலகங்கள், வீசி எறியப்பட்ட கழிவுகள் என நிரம்பி வழியும் இந்த மாநகருக்குள்ளும் பறவைகள் இருக்கின்றன. அவற்றில் ஏதோ வொன்று என் மகளுக்கான ஒரு வார்த்தையைச் சுமந்தபடியே அலைந்து கொண்டிருக்கிறது.

*

அப்பா என்னும் சொல் எத்தனை வெளிக்காட்ட முடியாத கனமும் துக்கமும் வலியும் நிராசைகளும் நிரம்பியது என்பதை இப்போது முழுமையாக உணர்ந்திருக்கிறேன்.

இந்த இரவில் எரிந்து வீழும் நட்சத்திரத்தின் அவசரத்தில் செல்லும் அந்தப் பெயர் தெரியாத பறவையைக் காணும் போதெல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்,

அப்பாவாக இருப்பதும் எளிமையானதில்லை. அது தராசின் முள்ளைப் போல எப்போதும் நடுங்கிக் கொண்டேயிருக்கும் ஒரு ஸ்திதி.

சென்ஷி

unread,
May 31, 2010, 3:14:01 AM5/31/10
to panb...@googlegroups.com



ஹசர் தினார்

எஸ். ராமகிருஷ்ணன்

காலம் இதழில் வெளியான சிறுகதை

அவனுக்குப் பெயர் கிடையாது.அவனை விலைக்கு வாங்கியவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவனது பெயர் மாறிக் கொண்டேயிருந்தது. கடைசியாக அவனை விலைக்கு வாங்கிய வணிகன் ஆயிரம் தினார் விலை கொடுத்து வாங்கியிருந்தான். அன்றிலிருந்து அவனை ஹசர் தினார் என்று அழைக்கத் துவங்கினார்கள்.

அந்த வணிகனிடம் அவனைப் போல இருபதுக்கும் மேற்பட்ட இளவயது ஆண்களிருந்தார்கள்.தேசம் முழுவதுமே ஆண் மோகம் கொண்டவர்கள் அதிகமாகியிருந்தார்கள்.அழகான பெண்களை அடைவதை விடவும் ஆண்களோடு உடல் உறவு கொள்வதற்கே ஆசைபட்டார்கள்.

ஹசர் தினாரின் உரிமையாளன் விசித்திரமான பழக்கங்கள் கொண்டவன். அவன் பருவ வயது ஆண்களோடு சல்லாபம் செய்தபடியே குளிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தான். இதற்காகவே குளியலின் போது எப்படியெல்லாம் களிப்பை உண்டாக்க முடியும் என்பதை அவனிடமிருந்த அடிமைகள் யோசிக்க வேண்டியதிருந்தது.

ஹசர் தினாரின் பால்யம் முழுவதும் வேசைகளோடும், வேலைக்காரப் பெண்களோடுமே கழிந்தது. ஆகவே அவனால் உடல் உணர்ச்சிகளை எளிதாக மீட்டி மேலேற்ற முடிந்தது.அதற்காகவே ஒரு குளியல் தொட்டியை உருவாக்கியிருந்தான்.அதில் வேளைக்கு ஒரு நறுமணமும்,குளியல் முறையையும் அறிமுகம் செய்து கொண்டிருந்தான் ஹசர் தினார்.

டெல்லியில் அப்போது சுல்தான் கில்ஜியின் ஆட்சி நடந்தது கொண்டிருந்தது. வேசையர் விடுதிகள் யாவையும் தடை செய்துவிட்ட கில்ஜி நகரமெங்கும் ஒருபால் புணர்ச்சிக்கான ஆண்களையும் பால்திரிபு கொண்ட அரவாணிகளையும் மட்டுமே அனுமதித்திருந்தார்.விலக்கபட்ட வேசைகள் பிச்சைகாரர்களை விடவும் கேவலமாக பசியோடு தெருவில் அலைந்து திரியத் துவங்கினார்கள்.

இளவயது பையன்களை புணர்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் கேளிக்கை கூடங்கள் நகரமெங்கும் உருவாகின. கில்ஜி வெளிப்படையாகவே தனக்கு பிடித்தமான ஆண்களோடு ஒன்றாக பவனி வரவும் பொது இடங்களில் அவர்களது அந்தரங்க உறுப்புகளோடு விளையாடவும் செய்கின்றவராகயிருந்தார். டெல்லி நகரமே மோகத்தின் கொந்தளிப்பில் இருந்தது.

ஹசர் தினார் தன் பெயரை எப்படியாவது தன்னிடமிருந்து விலக்கி விட வேண்டும் என்ற வெறியோடு இருந்தான். பெயரே இல்லாமலிருந்தால் கூட பரவாயில்லை இந்த பெயர் ஒரு கறைபடிந்த அடையாளமாக இருந்தது. தனிமையில் அவன் தனக்கு உரிய பெயர் எதுவாக இருக்கும் என்று யோசித்து கொண்டேயிருப்பான். வேசையின் பிள்ளையாக பிறந்து ஒரு பெயரைக் கூட தனக்கு சொந்தமாக்கி கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் அவனுக்குள் கொதித்து கொண்டிருந்தது

அவனுக்கு சொந்தமானது ஒரு அறை மட்டுமே. அந்த அறையில் இருந்த கூண்டில் ஒரு குருட்டு கிளி மட்டுமே துணையாக இருந்தது. அது தான் கற்று வைத்திருந்தசில வார்த்தைகளை திரும்பத் திரும்ப கத்திக் கொண்டேயிருந்தது. சில வேளைகளில் அந்த குருட்டு கிளியை தன் கைகளில் இறுக்கி கொன்றுவிடலாமா என்று ஆத்திரப்படுவான்.

அந்த கிளியும் இல்லாமல் போய்விட்டால் தனது கோபத்தை கொட்டுவதற்கு கூட ஆள் இருக்கமாட்டார்கள் இல்லையா? பகலும் இரவும் அவன் யார் யார் மீதோ இருந்த வெறுப்பை அந்த கிளியிடம் காட்டிக் கொண்டிருந்தான். கிளி பயந்து கூண்டில் ஒண்டிக் கொண்டிருந்தது.

வணிகனின் வீட்டிலிருந்து அவனுக்கு இரண்டு வேளை பரிமளம் மிக்க உணவு வந்து சேர்ந்துவிடுகிறது. பகல் நேரங்களில் அறையை ஒட்டியிருந்த வீதியை கடந்து செல்லும் ஒசைகளை கேட்டுக் கொண்டிருக்கலாம். அதைத் தவிர வேறு இயக்கம் கிடையாது. எப்போதாவது படைவீரர்களின் ஏதாவது ஒரு நகரத்தை கைப்பற்ற செல்லும் ஒசை கேட்கும். தானும் அவர்களை போல குதிரையேறி சென்று சண்டையிட முடியாத என்று யோசித்தபடியே இருப்பான் ஹசர் தினார்.

அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உலகின் மீது வெறுப்பும் ரௌத்திரமும் அதிமகாகிக் கொண்டே வந்தது. தனது நீண்ட தலைமயிரையும் மழிக்கப்பட்ட முகத்தையும் தானே சிதைத்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

இந்தூரில் அப்போது எதிர்பாரத கலகம் உருவானது . அதை அடக்குவதற்காக கில்ஜியின் தளபதிகளில் ஒருவன் வந்திருந்தான். ஆறாயிரம் குதிரைபடைகளும் அவனோடு வந்திருந்தன. அந்தப் படைகள் கடந்து போன இரவில் ஹசர் தினார் குதிரைகளின் குளம்படி ஒசையை கேட்டுக் கொண்டேயிருந்தான். விட்டில் பூச்சியைப் போல பிறந்திருந்தால் கூட தன்னிச்சையாக கண்காணாத இடத்திற்கு சென்று விடலாமே என்று நினைத்து கொண்டிருந்தான்.

இரண்டு நாட்களில் கலவரம் ஒடுக்கபட்டிருந்தது. வெற்றி பெற்று திரும்பும் தளபதிக்கு விருந்து கொடுப்பதற்காக வணிகர்கள் போட்டியிட்டார். ஹசர் தினாரின் உரிமையாளன் தளபதியை மகிழ்விப்பதற்காக அவனை அனுப்பி வைப்பது என்று முடிவு செய்தான்.

ஹசர் தினாரோடு உறவுகொள்ளும் போது கில்ஜியின் தளபதி தண்ணீர் உஷ்ணமேறி கொதிக்கையில் இடையுறாது குமிழ்கள் தோன்றி மறைவது போல தன் உடலில் காமம் கொதித்து குமிழ்விடுவதையும். ரத்த நாளங்களில் ஒரு லாகிரி கலந்துவிட்டது போல இச்சை கரைந்து போவதையும் உணர்ந்தான்.

மறுநாளே கில்ஜிக்கு உரியவன் இந்த அடிமை தான் என்று முடிவு செய்வதவனாக அவனை அரசருக்கான பரிசாக தன்னோடு அழைத்து போவதாக உத்தரவிட்டான். வணிகன் ஹசர் தினாரின் கைகளை பிடித்து கொண்டு ஒரு சிறுவனை போல அழுதான். ஹசர் தினாரின் கண்களில் சலனமேயில்லை. அந்த அறையில் இருந்த குருட்டு கிளியை மட்டும் தன்னோடு கொண்டு செல்வதற்காக எடுத்துக் கொண்டான்.

இரண்டு பகலிரவுகள் பல்லக்கில் கடந்து சென்று டெல்லியை கண்டபோது நகரம் பனிமூட்டத்தினுள் முழ்கியிருந்தது. கிளி அதன் முன்பு அறிந்திராத குளிர் காற்றை உணர்ந்தபடியே தனக்குத் தானே கத்திக் கொண்டே வந்தது. கோட்டைகளும் காவல்வீரர்களின் நடமாட்டமும் தென்பட்டது. விடிகாலை நட்சத்திரம் ஒன்றை உற்று நோக்கியபடியே ஹசர் தினார் டெல்லிக்குள் பிரவேசிக்க துவங்கினான்.

பதினோறு நாட்களுக்கு பிறகு ஹசர் தினார் நறுமணக் குளியல் செய்யப்பட்டு வாசனை திரவியங்கள் பூசி, வெண்பட்டு உடுத்தபட்டு, சிகையில் மயிலிறகு சூடி தோளில் குருட்டு கிளி அமர்ந்து கொள்ள கில்ஜியின் படுக்கையறைக்கு அனுப்பி வைக்கபட்டான். பிரம்மாண்டமான அந்த அறையில் நான்கு முக விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அறைகாவலர்களாக கூட பதின் வயது சிறுவர்களே அமர்த்தபட்டிருந்தார்கள்.

டெல்லி நகரமெங்கும் மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது. அத்தோடு மது கடத்துபவர்கள் உயிரோடு புதைக்கபட்டார்கள். ஆகவே அரண்மனையிலும் மது தடை செய்யப்பட்டிருந்தது. மாறாக போதையேற்றும் புகை குழாய்களும், கல்பங்களும் புழக்கத்திலிருந்தன.

ஹசர் தினார் அந்த அறையின் படுக்கையில் அமர்ந்தபடியே உறக்கமற்று காத்துக் கொண்டிருந்தான்.கிளி பயத்தில் மெதுவான குரலில் கத்திக் கொண்டிருந்தது. அடிமைகளில் ஒருவன் வெள்ளி சரிகை சுற்றப்பட்ட கோந்து போன்ற கல்பம் ஒன்றை அவனிடம் தந்து ருசிக்க சொன்னான். அதை நாவிலிட்டதும் உடலில் எறும்புகள் அப்பிக் கொள்வதை போல உணர்வு ஏற்படுவதை உணர்ந்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக உடல் அவிழ்ந்து வெண்ணெய் உருகுவது போலிருந்தது.ஹசர் தினார் உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்த போது அறையில் முன்பு இல்லாத சுகந்தம் நுழைந்தது. கில்ஜி அறையில் பிரவேசித்திருந்தார். அவர் தன் இருபுறமும் இரண்டு ஆண்களை அணைத்தபடியே நடந்து வந்தார். அவர்கள் பிறந்தமேனியாக இருந்தார்கள்.

ஹசர் தினாரின் அருகில் வந்த கில்ஜி அவனது ஆடைகளை அவிழ்த்து எறிந்துவிடும்படியாக சொன்னார். பிறகு அவனிடம் தன்னுடைய உடலில் அவனுக்கு பிடித்தமான இடம் ஒன்றை தேர்வு செய்து தொடும்படியாக சொன்னார். அவரோடு இருந்த அடிமை ஆண்கள் பரிகாசமாக சிரித்தார்கள்.

ஹசர் தினார் தனது சிகையிலிருந்த மயிலிறகை கையில் எடுத்தபடியே அவரது உடலில் மெல்ல ஊர்ந்து செல்ல துவங்கினான். குருடன் தொலைந்து போன தன் கைப்பொருளை தேடுவதை போல மிக கவனமாக உடலின் நரம்புகளைத் தேட துவங்கினான். கில்ஜி சில நிமிசங்களில் அங்கிருந்த மற்ற அடிமைகளை அறையை விட்டு வெளியேறும்படியாக ஆணையிட்டார். அதன் பிறகு இரண்டு பகலிரவுகள் கில்ஜி அந்த அறையை விட்டு வெளியேறி வரவில்லை. வெளிச்சம் வராத அறையில் குருட்டு கிளி மட்டுமே எதையோ கத்திக் கொண்டேயிருந்தது.

அதன் பிறகு கில்ஜியின் நடவடிக்கைகளில் முன்பு இல்லாத மாற்றங்கள் துவங்கின.அவர் காதலில் விழுந்தவரை போல சதா ஹசர் தினாரின் கைகக்குள் தன்னை ஒப்பு கொடுக்கவே துடித்து கொண்டிருந்தார். ஹசர் தினார் தனக்கு என்று தனியாக ஒரு மாளிகை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றான். அதன்படியே நடந்தது.

அவனது மாளிகை எங்கும் அரவாணிகள் காவல் ஆட்களாக நியமிக்கபட்டார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு அவன் இரவில் அவன் தனியே குதிரையில் சுற்றியலைய துவங்கினான். கண்ணில் தென்படும் யாவையும் அழித்து ஒழிக்க வேண்டும் என்ற ஆவேசம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது. கில்ஜி அவனது மோகத்திலிருந்து விடுபட முடியாதவராகயிருந்தார்.

ஹசர் தினார் மீதான பொறமை அரண்மனை எங்கும் பீறிட துவங்கியது. பட்டத்து ராணி உள்ளிட்ட யாவரும் அந்தப் புதிய அடிமை பற்றி ரகசியமாக பேசிக் கொண்டார்கள். ஆனால் எவரும் ஹசர் தினாரை நேர் கொண்டு கண்டதேயில்லை. கில்ஜியின் தர்பாருக்கு ஒரு நாள் ஹசர் தினார் கவச உடையணிந்து கம்பீரமாக அவரோடு கைகோர்த்து வந்தபோது அரண்மனையில் இருந்த பெண்களில் பலரும் தங்களை மறந்து அவனைப் பார்த்து கொண்டிருந்தார்கள்.

அரண்மனை அதிகாரம் யாவும் தன் கைவசமான போதும் அந்த பெயர் தன்னை விட்டு போக மறுப்பது ஹசர் தினாருக்கு எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. உடனடியாக அவன் தனக்கு ஒரு பெயரை ஏற்படுத்திக் கொள்ள ஆசைப்பட்டான்.அதற்காக அவன் சில பெயர்களை தேர்வு செய்தும் வைத்திருந்தான். ஆனால் தன் முதுக்கு பின்னே பல நுறு கண்கள் தன்னை பரிகசரித்து கொண்டிருப்பதையும் வெளிப்டையாகயே அவனை பலரும் ஹசர் தினார் என்று சொல்லி கேலி செய்வதையும் தவிர்க்க முடியவேயில்லை.

தன்னை நிரூபித்து கொள்வதற்காக அவன் காத்து கொண்டேயிருந்தான். கில்ஜியின் உடலில் மேகநோய்கான அறிகுறிகள் தோன்ற துவங்கின. சுல்தான் நோயை கண்டு பயப்பட துவங்கினார். அரண்மனையில் இருந்த தன் படுக்கை அறையை விட்டு வெளியேறி வர மறுத்து உள்ளேயே அடங்கியிருந்தார்.

ஹசர் தினார் தனக்காக கதவுகள் திறக்கபடுகின்றன என்பதை உணர துவங்கினான். அவன் சுல்தானிடம் தன்னை அரசபிரதியாக அறிவிக்க வேண்டும் என்றான். சுல்தானின் மோகம் அனுமதித்தது. அதன் சில மாதங்களில் அரண்மனையில் ஹசர் தினாரை எதிர்ப்பவர்கள் பலரும் சிரச்சேதம் செய்யப்பட்டார்கள்.

கறுப்பு நிற அராபிய குதிரை ஒன்றில் போர் வீரனை போல உடையணிந்தபடியே பகலிரவாக ஹசர் தினார் டெல்லியின் வீதிகளில் சுற்றியலைந்து கொண்டிருந்தான். அவன் கூடவே குருட்டு கிளியை வைத்திருந்தான்.ஹசர் தினாரின் ஆவேசம் கிளியிடம் பயத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அது பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி கொண்டு விட்டது

ஹசர் தினாருக்கு டெல்லி நகரமே ஒரு பிரம்மாண்டான கழிப்பறையைப் போல அசூயை ஊட்டுவதாகயிருந்தது. அவன் தன் உடலில் இருந்த மென்மையை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க துவங்கினான். பாறையை போல அவனது உடல் உரமேற துவங்கியது.

அரண்மனை எங்கும் அரவாணிகளை முக்கிய பதவியில் அமர்த்தினான். அதிகாரம் அவனது விளையாட்டுப் பகடை போலானது. அதன் பிறகு அவன் சுல்தானிடம் தனக்கு ஒரு பெயரை சூட்டுமாறு யாசித்தான். நோயும் சாவின் மீதான பயமும் கொண்ட கில்ஜி அவனுக்கு ஒரு புதிய பெயரை வழங்கினார். மாலிக் கபூர் அதாவது எஜமானனுக்கு அடிமை என்ற அந்த புதிய பெயர் அவனுக்கு முன்பு இல்லாத அதிகாரத்தை உருவாக்கியது.

அவன் ஒராயிரம் தடவை தன் பெயர் மாலிக்கபூர் என்று குருட்டு கிளியிடம் உளறிய போதும் அது அந்த பெயரை திரும்ப சொல்லவேயில்லை. அவன் ஒரேயொரு முறை அந்த கிளி பேசினால் கூட பரவாயில்லை என்று ஆத்திரப்பட்டு அதை வீசி எறிந்தான். அடிப்பட்டு விழுந்த போது அந்த கிளி கத்தவேயில்லை.

மாலிக் கபூர் குனிந்து அந்த கிளியை கையில் எடுத்து தடவிக் கொடுத்தபடியே உன்னை போலவே நானும் என் மனதை குருடாக்கிவிட்டேன். இனி பேசுவதற்கு எனக்கும் எதுவுமில்லை என்றபடியே தன் மாபெரும் குதிரைபடையோடு டெல்லியை விட்டு புறப்பட்டான்.கண்ணில்படும் நகரங்களையும், தேசங்களையும் சூறையாடியபடியே அந்த அடிமையின் ரத்தம் முன்னறி சென்று கொண்டிருந்தது.

மூர்க்கமும், ஆவேசமும் கொண்ட போர்வீரனாக உருமாறிய மாலிக் கபூர் பல்லாயிரம் பேர்களை கொன்று குவித்த போதும் அவனது மனது சாந்தியடையவேயில்லை. மாலிக் கபூர் என்ற பெயர் மக்களிடம் பயத்தை ஏற்படுத்துவதை அவன் ரசிக்க துவங்கினான். அந்த பெயர் தன்னோடு ஒட்டிக் கொண்டு விட்டது என்று சந்தோஷமடைந்தான்

எண்ணிக்கையற்ற வெற்றிகளுக்கு பிறகு டெல்லி திரும்பிய மாலிக்கபூர். ஒரேயொரு இரவு கில்ஜியோடு சேர்ந்து உறங்க விரும்பினான். கில்ஜியின் உடலில் நோய் முற்றியிருந்தது. சாவின் ரேகைகள் அவர் உடலில் ஒட துவங்கியிருந்தன. அறையில் இப்போது சுகந்தமேயில்லை. மரணத்தின் வாசனை மட்டுமே கமழ்ந்து கொண்டிருந்தது,

அவனை தழுவதற்காக கைகளை அருகில் நீட்டபயந்து நின்ற கில்ஜியின் உதடுகளை மாலிக்கபூர் தன் வலிமையான முரட்டு உதடுகளால் கவ்வி முத்தமிட்டான். அவன் கையிலிருந்த மதுக்கோப்பை கில்ஜியின் உதடுகளை தொட்டது. கில்ஜி அதை விலக்கினார். குழந்தைக்கு மருந்து ஊட்டுவதை போல கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை புகட்டினான். சில நிமிசங்களில் கில்ஜியின் உடல் தளர்ந்து சரிந்தது. இறந்து கிடந்த கில்ஜியின் உடலை அணைத்தபடியே ஒரு இரவு மிக நன்றாக உறங்கினான் மாலிக் கபூர்.

விடிந்து எழுந்த போது ஹசர் தினார், ஹசர் தினார் என்ற குரல் கேட்டது. அவன் திடுக்கிட்டு விழிக்க அவனது குருட்டு கிளி அந்த பெயரை திரும்ப திரும்ப கத்திக் கொண்டேயிருந்தது. ஆத்திரத்தில் அவன் தன் வாளால் கிளியின் தலையை இரண்டாக துண்டித்தான். அப்போதும் அந்த குரல் அரண்மனை சுவர்களுக்குள்ளாகவே சுற்றிக் கொண்டிருந்தது போலவே இருந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு அப்பெயர் திரும்பவும் தன்னிடம் வந்து ஒட்டிக் கொண்டதை போல உணர்ந்த ஹசார் தினார் தன்னை மீறி வெடித்து அழுதான். அந்த கேவல் ஒசையை கேட்க அறையில் யாருமேயில்லை. ஹசார் தினார் என்ற அவனது பெயரை அறிந்த குருட்டு கிளியும் இறந்து போன பிறகு அப்பெயர் அவனை விட்டு நிரந்தரமாக விலகி போக துவங்கியது.

அதன் பிறகு அவன் தன் சாவின் கடைசி நிமிசம் வரை மாலிக் கபூராகவே வாழ்ந்து இறந்தான்.

**

சென்ஷி

unread,
May 31, 2010, 3:15:34 AM5/31/10
to panb...@googlegroups.com

காட்சிக் கூண்டு

எஸ். ராமகிருஷ்ணன்

மாநகராட்சியின் பொதுப்பூங்காவில் அப்படியொரு கூண்டினை உருவாக்க வேண்டும் என்றொரு யோசனையை யார் முன்மொழிந்தது என்று தெரியவில்லை. ஆறுமாதங்களாகவே நகரின் முக்கிய பூங்காங்கள் யாவும் மறுசீரமைப்பு செய்யபட்டு வந்தன. செயற்கை நீருற்றுகள், சிறார்களுக்காக சறுக்கு விளையாட்டுகள், அலங்கார விளக்குள், ஆள் உயர காற்றடைக்கபட்ட பொம்மைகள் நாளிதழ்கள் வாசிப்பதற்காக வாசகசாலை என்று பூங்காங்களின் தோற்றம் பொலிவு கண்டிருந்தது.

ஆனால் நகரின் வேறு எந்த பூங்காவிலும் இல்லாத தனிச்சிறப்பாக இரட்டை சாலைசந்திப்பின் அருகிலிருந்த ஔவை பூங்காவில் இரும்பு கூண்டு ஒன்றை உருவாக்கியிருந்தார்கள். ஆறடிக்கு பத்தடி அளவில் உருவாக்கபட்ட அந்த இரும்பு கூண்டு சர்க்கஸில் சிங்கம் அடைத்து வைக்கபட்ட கூண்டினை விடவும் சற்றே பெரியதாக இருந்தது.

மின்சாரத்தால் இயங்கும் அந்த கூண்டில் விரும்புகின்ற யார் வேண்டுமானாரும் உள்ளே சென்று உட்கார்ந்து கொள்ளவோ, நின்று கொண்டு இருக்கலாம். கூண்டினில் ஆட்கள் சென்ற மறுநிமிசம் தானாக கதவு மூடிக் கொள்ளும்படியாக மின்சாரத்தால் உருவாக்கபட்டிருந்தது. சரியாக ஐந்துநிமிசங்கள் கூண்டு மூடியிருக்கும். பிறகு கதவு தானே திறந்து கொண்டுவிடும்.

கூண்டில் ஆட்கள் ஏறி மூடிக் கொண்ட மறுநிமிசம் அதிலிருந்து மியமிங்மியமிங் என்று விசித்திரமானதொரு சப்தமிடும். அது பார்வையாளர்களை தன் பக்கம் இழுக்க கூடியதாகயிருந்தது. மற்ற நேரங்களில் கூண்டில் எந்த சலனமும் இருக்காது.

கூண்டினை பூங்காவில் பொருத்தபட்ட மூன்று தினங்களுக்கு அதில் எவரும் நுழையவேயில்லை. இவ்வளவிற்கும் கூண்டின் அருகாமையில் பெரியதாக விளம்பர பலகை வைக்கபட்டிருந்தது. முதன்முறையாக அந்த கூண்டில் நடைபயிற்சிக்காக தினமும் பூங்காவிற்கு வரும் ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் உள்ளே நுழைந்தார். அவருக்கு கூண்டை பார்க்கும் போது அவரது அலுவலக அறை போன்று நினைவிற்கு வந்திருக்க கூடும்.

அவர் தரையில் இருந்து சற்று உயரமாக வைக்கபட்ட கூண்டிற்குள் போவதற்காக இரண்டு படிகள் ஏறி கூண்டின் கதவை திறந்து உள்ளே போன போது கதவு தானாக மூடிக் கொண்டது. மறுநிமிசம் மியமிங்மியமிங் என்ற சப்தம் உரத்து கேட்க துவங்கியது. நடை பயிற்சியில் இருந்தவர்கள், பூங்காவில் விளையாண்ட சிறுவர்களுக்கு திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். வங்கி அதிகாரி கூண்டிற்குள் இருந்தபடியே வெளியே பார்க்க ஆரம்பித்தார். அப்படி அவர் ஒரு நாளும் அந்த பூங்காவை கண்டதேயில்லை.

கூண்டிற்குள் இருப்பது ரொம்பவும் பாதுகாப்பாகவும் இயல்பாகவும் இருந்தது. அவர் கூண்டின் வலுவான இரும்புகம்பிகளை பிடித்தபடியே நின்று கொண்டிருந்தார். அவருக்கு தெரிந்த சிலர் நடைபயிற்சியின் ஊடாகவே அவரை பார்த்து சிரித்தபடியே போனார்கள். அவருக்கும் அவர்களை பார்த்து சிரிக்க வேண்டும் போலிருந்தது. கம்பியில் முகம்பதித்து கொண்டு அவர் வெளியே பார்த்து சிரித்தார். சிறார்கள் கூண்டின் அருகில் வந்து நின்றபடியே அவரை பார்த்து பரிகாசம் செய்தார்கள்.

வங்கி அதிகாரி கூண்டிற்குள்ளாகவே அங்குமிங்கும் நடக்க துவங்கினார். அப்போது அவரது செல்போன் அடிக்க துவங்கியது. போனில் பேசியபடியே அவர் நடந்து கொண்டிருப்பதை கண்ட ஒரு இளம் பெண் வியப்போடு அவருக்கு கையசைத்தபடியே போனாள்.

தான் கூண்டிற்குள் இருப்பது எப்படியிருக்கும் என்று தனக்கு தெரியாதே என்பதால் அவருக்கு திடீர் யோசனை உருவானது. அந்த பெண்ணை கைதட்டி அழைத்து தன்னை ஒரு புகைப்படம் எடுத்து தரும்படியாக செல்போனை நீட்டினார். அந்தப் பெண் கூண்டிற்குள் அவர் நிற்பதை புகைப்படம் எடுத்து தந்தாள். அதை பார்க்கும் போது அவருக்கே சிரிப்பாக வந்தது. இரண்டு மூன்று நிமிசங்களுக்கு பிறகு அவரது கால்கள் வலிப்பது போல இருந்தன.

கூண்டிற்குள்ளாக உட்கார்ந்து கொள்ளலாமா என்று பார்த்தார்.இருக்கைகள் எதுவும் இல்லை. எப்படி உட்காருவது என்று யோசித்துக் கொண்டிருந்தார். கடந்த இருபது ஆண்டுகளில் அவர் ஒரு முறை கூட தரையில் உட்கார்ந்ததேயில்லை. சரி உட்கார்ந்து பார்க்கலாமே என்று கூண்டின் தரையில் அவர் உட்கார முயன்ற போது கால் முட்டிகளில் வலி உருவானது. மண்டியிட்டு காலை மடக்கி ஒருவழியாக உட்கார்ந்து தன்னை நிலைபடுத்திக் கொள்ளும் போது கூண்டின் இசை நின்று கதவு தானே திறந்து கொண்டது. அவ்வளவு தானா என்றபடியே அவர் கூண்டினை விட்டு வெளியே இறங்கி நடக்க துவங்கினார். அன்றைக்கு வேறு எவரும் கூண்டிற்குள் ஏறி தன்னை அடைத்துக் கொள்ளவில்லை.

ஆனால் மறுநாள் பூங்காவிற்கு வழக்கமாக வரும் காதலர்கள் இருவர் கூண்டிற்குள் தங்களை அடைத்து கொண்டார்கள். இருவருக்கும் அது வேடிக்கையாக இருந்தது. அவர்களை தொடர்ந்து வணிகபிரதிநிதி ஒருவன், கிரிக்கெட் ஆடும் சிறுவர்கள் இரண்டு பேர் என்று பத்திற்கும் மேற்பட்டவர்கள் கூண்டிற்குள் அடைத்து கொண்டார்கள்.

ஞாயிற்றுகிழமை காலையில் முதன்முறையாக ஒரு குடும்பம் அந்த கூண்டிற்குள் ஏறி தன்னை அடைத்துக் கொண்டது. அது மிக வேடிக்கையானதாக இருந்தது. அந்த குடும்பத்தில் கணவன் மனைவி இரண்டு மகள்கள், ஒரு பையன் மற்றும் மகளின் கணவன் மற்றும் கைக்குழந்தை யாவரும் ஒரே நேரத்தில் உள்ளே ஏறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏழாவது குறுக்குதெருவில் உள்ள அரசு குடியிருப்பில் இருப்பவர்கள் என்று பூங்காவின் காவலர் சொன்னார்.

நாற்பது வயதை கடந்த அந்த அந்த வீட்டின் பெண்மணி கூண்டினை தொட்டு தொட்டு பார்த்தபடியே நல்ல காற்றோட்டமாக இருக்கிறது. வெளிச்சம் கூட எப்படி சீராக விழுகிறது பாருங்கள் என்று கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளது கணவரோ வீட்டிலிருந்து ஏதாவது சமைத்து கொண்டுவந்திருந்தால் அதற்குள் உட்கார்ந்து சாப்பிடலாமே என்று ஆதங்கபட்டுக் கொண்டிருந்தாள்.

கூண்டிற்குள் அடைக்கபட்ட இரண்டு இளம்பெண்களும் கம்பிகளை பிடித்தபடியே வெளியே நடந்து செல்லும் இளைஞர்களை பார்த்து சிரித்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி கூண்டில் ஒரு கண்ணாடி மாட்டி வைத்திருந்தால் முகம் பார்க்க உதவியாக இருக்கும் என்று சலித்து கொண்டாள்.

சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தவர்கள் அந்த பெண்களை பார்த்து சிரித்தார்கள். சிறுவனோ கூண்டின் இசையோடு சேர்ந்து மியமிங்மியமிங் என்று கத்திக் கொண்டிருந்தான். ஆறுநிமிசங்களுக்கு பிறகு அவர்கள் வெளியே வந்தபோது குடும்பத்துடன் ஒருவரை கைகளை தட்டியபடி ஆரவாரமாக கத்தினார்கள்.

அன்றைக்கு கூண்டிற்குள் தன்னை அடைத்து கொள்வதற்கு இருநூறு பேர்களுக்கும் மேலாக முன்வந்தார்கள். அது பூங்காவில் பெரிய வேடிக்கையாக இருந்தது. யார் எப்போது கூண்டிற்குள் போவார்கள். கதவு மூடப்பட்டவுடன் கூண்டிற்குள் என்ன செய்வார்கள் என்று வேடிக்கை பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்தது. இதற்காகவே பூங்காவிற்கு நிறைய கூட்டம் வரத்துவங்கியது.

கூண்டில் தங்களை தானே அடைத்துக் கொள்வதில் மக்கள் காட்டும் ஆர்வம் அதிகமானதை கண்டு அதை ஒழுங்குபடுத்தவதற்காக இரண்டு காவலர்கள் நியமிக்கபட்டிருந்தார்கள். அவர்கள் கூண்டிற்குள் போவதற்காக காத்திருப்பவர்களை வரிசையில் நிற்க செய்தார்கள். விடுமுறை நாட்களில் அந்த வரிசை பூங்காவை விட்டு வெளியே சாலை வரை நீண்டு போவதாக மாறியது.

முதன்முறையாக ஒரு வயதானவர் தன் வீட்டிலிருந்து மடக்கு நாற்காலி ஒன்றை கொண்டு வந்து கூண்டிற்குள் போட்டு உட்கார்ந்து கொண்டு நாளிதழ் படித்தார். தன் உடலை செம்மை படுத்துவதில் ஆர்வம் கொண்ட நடுத்தரவயது ஆண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பாக கூண்டிற்குள்ளாகவே யோகா செய்ய ஆரம்பித்தார்.

புதிதாக திருமணம் ஆன கணவன் மனைவி இருவரும் மதிய உணவிற்கு பிறகு கூண்டிற்குள் வந்து உட்கார்ந்து கொண்டு சீட்டாடினார்கள். அந்த பகுதியின் வார்டு கவுன்சிலர் தன்னுடைய விசுவாசிகள், நண்பர்கள் என கூண்டில் இடமில்லாமல் நெருக்கடி ஏற்படும் அளவு நாற்பத்தி ஆறு பேர்களுடன் கூண்டினுள் தன்னை பூட்டிக் கொண்டார். அவரிடம் கூண்டிற்குள் குடிநீர் இணைப்பு குழாய் ஒன்று பொருத்தபட வேண்டும் என்பதற்கான புகார் மனு அளிக்கபட்டது. அடர்ந்த தாடி கொண்ட ஒரு இருபது வயதை கடந்த இளைஞன் கூண்டிற்குள் சென்றதும் சுருண்டு படுத்து நிம்மதியாக உறங்க துவங்கினான்.

வரலாற்று பேராசிரியர் ஒருவர் அது கடந்த கால நினைவுகளுக்குள் நம்மை அழைத்து செல்வதாகவும், குற்றவாளிக்கூண்டுகள் அமைப்பதை பற்றி மதுராந்தகத்தில் ஒரு சோழர்கால கல்வெட்டு இருப்பதாகவும் உடன் வந்த ஆய்வுமாணவர்களிடம் தெரிவித்தார்.

பூங்கா இரவு பதினோறு மணி இதற்காகவே திறந்து வைக்கபட்டிருந்தது. நகரின் பல்வேறு பகுதியில் இருந்து கூண்டில் தன்னை அடைத்துக் கொள்வதற்காக மக்கள் பயணம் செய்து வந்து பூங்கா திறக்கும் முன்பாகவே காத்திருந்தார்கள்.

இரண்டு தினங்களுக்கு முன்பாக நூறடி சாலையில் உள்ள ஒரு உணவகத்தை நடத்துகின்றவர் அந்த கூண்டினை பார்வையிட்டு அதை உருவாக்குவதற்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்று விசாரித்து கொண்டிருந்தார். பூங்காவில் காவலர் தனக்கு தெரியவில்லை என்றபோது அந்த கூண்டின் அருகாமையில் தான் ஒரு துரித உணவகபிரிவை துவங்குவதற்கு யோசனையிருக்கிறது என்று சொன்னார். பூங்கா காவலனும் அது மிக அவசியமாக ஒன்று வரிசையில் நிற்பவர்கள் சில நேரம் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள் என்று சொன்னான்.

கூண்டின் பாதுகாப்பிற்காக வந்திருந்த சப்இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னை ஒருமுறை கூண்டில் அடைத்துக் கொண்டார். அவருக்கு கூண்டு அவ்வளவு பெரியதாக இருப்பதில் உடன்பாடில்லாமல் இருந்தது. நடக்க இடமில்லாமல் தலைமுட்டும்படியாக அடைக்கபடும் போது தான் கூண்டின் முக்கியத்துவம் தெரியும் என்று அலுத்துக் கொண்டார்.

பல நேரங்களில் மக்கள் வரிசையில் நின்றும் கூண்டுகாலியாக கிடைக்காமல் போவதால் கூண்டிற்குள் அடைக்கபடும் நேரத்தினை மூன்று நிமிசமாக மாற்றி உத்திரவிட்டது அரசு. அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நடைபயிற்சியில் வரும் சில பணம்படைத்தவர்கள் தனியாக தங்களது வீடுகளில் அது போன்ற கூண்டுகளை தாங்களே வடிவமைப்பு செய்து உருவாக்கி கொண்டார்கள்.

காதலர்கள், கஞ்சாபுகைப்பவர்கள், குடுபத்தவர்கள், அரசியல்வாதிகள், சாதாரண மக்கள், அதிகாரிகள், சுற்றுலா பயணிகள் என்று அந்த கூண்டு ஒய்வில்லாமல் கத்திக் கொண்டேயிருந்தது. அந்த கூண்டினை பற்றிய சிறப்பு கட்டுரையை நாளிதழ்கள் வெளியிட்டன .இரண்டு நாட்களின் முன்பாக அந்த கூண்டிற்குள் தொலைகாட்சி ஒன்றின் நேரடி நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் ஏன் தங்களை கூண்டில் அடைத்துக் கொள்கிறார்கள் என்பதை பற்றி ஒவ்வொருவரும் ஒரு பதில் சொன்னார்கள்.

இப்படியாக காட்சிக்கூண்டு அதிமுக்கியத்துவம் அடைய துவங்கியதை கண்டு மாநகராட்சி நகரின் அத்தனை பூங்காங்களிலும் இது போன்ற கூண்டுகளை உருவாக்கும் புதிய திட்டம் ஒன்றை கொரிய அரசின் ஒத்துழைப்போடு உருவாக்க திட்டமிட்டது.

ஆறுமாதங்களில் நகரில் புதிது புதிதாக நூற்றுக்கும் மேற்பட்ட கூண்டுகள் திறக்கபட்டன. இந்த கூண்டுகளில் வெறுமனே ஒலிபரப்பாகும் இசைக்கு பதிலாக தங்களது விளம்பரங்களை ஒலிபரப்பலாமே என்று பன்னாட்டு குளிர்பான நிறுவனம் முன்வந்த பிறகு கூண்டுகளின் நிறம் மற்றும் வடிவம் புத்துருவாக்கம் கொள்ள துவங்கின.

மாநகரில் இப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட காட்சிக் கூண்டுகள் இருப்பதாகவும் அதன் விளம்பர வருமானம் பதினெட்டு கோடி என்றும் மாநகராட்சி பெருமையாக அறிவித்தது. ஆனால் இதுவரை ஒருவர் கூட கூண்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவேயில்லை என்பதோடு யார் இந்த யோசனையை உருவாக்கியது என்பது குறித்தும் அறிந்து கொள்ளவேயில்லை.

மனவருத்தம் தீராத நாற்பது வயது மனிதன் ஒருவன் ஒரு இரவில் பூங்காவில் நுழைந்து அந்த கூண்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான். அதன் காரணமாக நகரில் உள்ள அத்தனை கூண்டுகளுக்கும் உற்றுநோக்கும் கேமிரா பொருத்தபட்டது. அதை கண்காணிக்கும் அலுவலகம். அதற்கான பணியாளர்கள், பராமரிப்பாளர்கள், சோதனை அதிகாரிகள், என்று தனித்துறை உருவானது.
நாளடைவில் மக்களுக்கு சலித்து போக ஆரம்பித்தது. எவரும் கூண்டில் ஏறி தன்னை அடைத்துக் கொள்ளவில்லை. மெல்ல புறக்கணிப்பின் கரங்கள் அதை பற்றிக் கொள்ள மழை வெயிலில் துருவேறிய கூண்டு கவனிப்பாரற்று போக துவங்கியது.

ஆனால் அரசின் கூண்டு பராமரிப்பு துறையோ தன் உயர் அலுவலர், கண்காணிப்பாளர், பணியாளர்கள், பாதுகாவலர்கள் என்று ஆயிரக்கணக்கான ஆட்களுடன் இன்றைக்கும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. யாரும் அதை பற்றி சிறு குறை கூட தெரிவிக்கவில்லை என்பதே அதன் சிறப்பம்சம்

சென்ஷி

unread,
May 31, 2010, 3:17:51 AM5/31/10
to panb...@googlegroups.com

எல்லா நாட்களையும் போல

எஸ். ராமகிருஷ்ணன்



ஒரு சிறிய தவறு அது. காலையில் வங்கியில் செலுத்துவதற்காக எடுத்து சென்ற அலுவலக பணத்தை பறிகொடுத்துவிட்டேன். இவ்வளவிற்கும் பணத்தை செலுத்துவதற்கு துணையாக என்னோடு பழனியப்பனும் வந்திருந்தான். எப்போதும் போலவே வங்கியின் வாசல் வரை ஒன்றாக வந்தோம். அப்போது பழனியப்பனின் செல்போன் அடித்தது. அவன் இரைச்சல் சப்தத்தை விட்டு ஒரமாக நின்று பேச துவங்கினான்.

கையில் பணப்பையை வைத்து கொண்டு நான் எப்போதும் போலவே கண்ணாடி கதவை திறந்து வங்கியின் உள்ளே நுழைந்தேன். வாசலையொட்டி நின்றிருந்த நடுத்தர வயது நபர் கையில் இருந்த சிறிய காகிதம் ஒன்றை பலமாக ஊதியது தெரிந்தது. மறுநிமிசம் என் கண்கள் எரிய துவங்கியது. ஒரு நிமிசம் என்னையும் அறியாமல் கைகளால் இரண்டு கண்களையும் தேய்க்க துவங்கினேன். மிளகாய் பொடி பட்டது போல திகுதிகுவென எரிய துவங்கியது.

கண்ணைத் துடைத்துக் கொண்டு பார்க்கும் போது நான் கொண்டு வந்திருந்த லெதர் பை காணமல் போயிருந்தது. என்னால் நம்ப முடியவேயில்லை. என் கையிலிருந்த பணம் ஆறுலட்சத்திநாற்பதினாயிரம் பறிபோய்விட்டிருக்கிறது. என்னால் கத்த முடியவில்லை. கைகள் நடுங்க துவங்கின. சுற்றிலும் பார்த்து கொண்டிருந்தேன். எப்போதும் போலவே காசாளார் கத்திக் கொண்டிருந்தார். பணம் செலுத்துவதற்காக நாலு பேர் வரிசையில் நின்றிருந்தார்கள். ஒரு ஆள் நாலைந்து மஞ்சள் நிற ஸ்லீப்புகளை நிரப்பிக் கொண்டிருந்தார்.

என்னிடமிருந்த பணத்தை பறித்தது யாராகயிருக்கும். அந்த ஆள் இவ்வளவு நேரம் இங்கேயே நின்று கொண்டிருப்பானா என்ன? அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. கண்களில் எரிச்சல் அதிகமாகி நீர்வடிந்து கொண்டிருந்தது. பழனியப்பன் என் தோளில் கைவைத்தபடியே என்ன சார் என்றபோது தான் எனக்கு தன்னிலை உணர துவங்கியது.

பணம் போய்விட்டது. பழனியப்பனிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. தொண்டையில் வலி ஏற்பட்டு உடல் நடுங்க துவங்கியது. முகம் வியர்த்து வழிந்திருக்க வேண்டும். பழனியப்பன் என் கையில் பையில்லாததை கண்டுபிடித்தவனை போல என்ன சார் ஆச்சி என்று கத்தினான். யாரோ பணத்தை திருடிட்டாங்க என்று நான் மென்றுவிழுங்கி சொன்ன மறுநிமிசம் வங்கியே ஸ்தம்பித்து போகுமளவு பழனியப்பன் கத்தினான்.

கண்ணாடி கதவுகள் சாத்தப்பட்டன. வங்கியின் மேலாளரும் அலுவலக ஊழியர்களும் என்னை சுற்றிலும் நின்று ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார்கள். வங்கியின் காவலர் சந்தேகத்துக்கு உரியவராக யாரும் வெளியே செல்லவில்லை என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். பழனியப்பன் யாருக்கோ போன் செய்து கொண்டிருந்தான்.

வங்கியினுள்ளே நின்றிருந்தவர்கள் அவரவர்களுக்கு தெரிந்த திருட்டு கொடுத்த பழைய சம்பவங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். மேலாளர் தனது அறைக்குள் வரும்படியாக என்னை அழைத்து கொண்டு போனார். . திடீரென அந்த வங்கி இதற்கு முன்னதாக நான் பார்த்து அறியதா ஒரு புதிய இடம் போல தோற்றமளிக்க துவங்கியது. கண்ணாடி தடுப்புகள். கணிப்பொறி. மேஜை மீதுள்ள கண்ணாடி கோளம் யாவும் விசித்திரமான பொருட்கள் போல தெரிந்தன.

மேலாளர் அறை சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் காலண்டரில் இருந்த குழந்தை ஏன் இத்தனை நாட்கள் கண்ணில் படவேயில்லை. அந்த குழந்தை என்னை பார்த்து சிரிப்பது போலவே இருந்தது. அந்த குழந்தை யாராக இருக்கும். அதற்கு நான் திருட்டு கொடுத்த விபரம் தெரியுமா? நான் அதை உற்று பார்ப்பதை விரும்பாமல் தலையை தொங்கிவிட்டு கொண்டிருந்தேன்.

வங்கிக்கும் எனக்குமான உறவு ஆறாண்டுகாலமாக நடந்து கொண்டிருக்கிறது. அநேகமாக தினமும் ஒருமுறை இங்கே வந்து போயிருக்கிறேன். ஊழியர்களுக்கு என்னை எளிதாக அடையாளம் தெரிந்திருந்தது. ஆனால் இன்றைக்கு அது எதுவும் பலன் அளிக்கவில்லை. வங்கியின் கணக்காளராகயிருந்த பெண்மணி ரொம்ப நாளாக உங்களை கவனிச்சிட்டு இருந்தவங்க தான் யாரோ திருடியிருக்கிறாங்க என்று சொன்னாள். என்னை யார் தினமும் கவனித்து கொண்டிருந்திருப்பார்கள்.

நான் என்ன உடை உடுத்துகிறேன். எப்படி தலைசீவியிருக்கிறேன் என்பதில் என் மனைவிக்கே அக்கறை கிடையாது. அநேகமாக எனக்கே அது தன்னிச்சை செயல்போல தான் நடக்கிறது. என்னை கவனித்து கொண்டேயிருந்த மனிதன் எப்படியிருந்திருப்பான். என்னை பற்றி எந்தவிதமான எண்ணங்கள் கொண்டிருப்பான். அவன் முகம் எவ்வளவு யோசித்தும் நினைவிற்கு வரவில்லை.

வங்கியின் காசோலைபிரிவில் உள்ள கண்ணாடி அணிந்த பெண் சார் எப்பவும் எதையோ யோசிச்சிகிட்டு வேற நிப்பாரு.. நானே பாத்திருக்கேன். ஒரு நாள் பேனாவை மூடிகிட்டே கையெழுத்து போட்டாரு.. எனக்கே சிரிப்பா இருந்துச்சி என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அது எல்லோருக்கும் ஏற்படகூடிய ஞாபககுறைவு தானில்லையா? ஏன் என்னிடம் இத்தனை நாள் அவள் இதை சொல்லவேயில்லை. ஒருவேளை மற்ற அலுவலர்கள் இதை பற்றி பேசி சிரித்திருப்பார்களா? நான் அவர்களில் எவரையும் நேர் கொண்டு பார்க்கவிரும்பவில்லை

பழனியப்பன் அலுவலகத்திற்கு தகவல் சொல்லியிருக்க வேண்டும். எனது அலுவலகத்திலிருந்து உயரதிகார் திருட்டு எப்படி நடந்தது என்பதை பற்றி விசாரிக்க துவங்கினார். என்னால் கோர்வையாக பதில் சொல்ல முடியவில்லை. தான் அங்கே வருவதாகவும் அதன் பிறகு காவல் நிலையம் செல்லலாம் என்றும் உறுதியாக சொன்னார்.

இந்த நாற்பத்திரெண்டு வயது வரை நான் பறிகொடுத்தவை எல்லாம் அற்பமான பொருட்கள் மட்டுமே. ஒரு முறை திருப்பதி போகும்போது எனது சூட்கேஸ் ஒன்றை யாரோ ரயிலில் திருடிக் கொண்டு போய்விட்டார்கள். மற்றவகையில் நான் ஏமாந்தவை யாவும் சில்லறைகாசுகள். தலைவாறும் சீப்பு. குடை. ஒன்றிரண்டு டிபன்பாக்ஸ், வாழைப்பழங்கள் இவ்வளவு மட்டுமே.

வங்கி மேலாளர் என்னை பற்றிய சுயவிபரங்களை கேட்டுக் கொண்டிருந்தார். ஆறுவருடத்திற்கும் மேலாக தினமும் இதே வங்கிக்கு வந்து கொண்டிருக்கிறேன். ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் மேலளாருடன் பேச வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் என் பெயரை கேட்டு கொண்டதேயில்லை. இன்றைக்கு முதல்முறையாக எனது பெயர் வீடு எங்கேயிருக்கிறது. பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள் என்பதை பற்றி விசாரித்து கொண்டிருந்தார்.

பழனியப்பன் வெளியில் நின்றபடியே யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் கடுமையேறியிருந்தது. எனது உயரதிகாரி வந்து சேர்ந்து வங்கிமேலாளருடன் ஏதோ பேச்சுவார்த்தை நடத்தி முடிவில் என்னையும் பழனியப்பனையும் மட்டும் காவல் நிலையம் அனுப்புவது என்று முடிவு செய்தார்கள். ஆனால் அலுவலகத்தின் காரை உபயோகபடுத்த வேண்டாம், ஆட்டோ பிடித்து போய் வரவும் என்று உயரதிகாரி கண்டிப்புடன் கூறினார்.

என்னை கைது செய்வார்களா என்று பயமாகயிருந்தது. பழனியப்பனிடம் இதை பற்றி எப்படி கேட்பது என்று கூச்சமாகயிருந்தது. ஒரு வேளை கைது செய்யப்பட்டால் என்ன செய்வது. உடனே ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார்களா? வீட்டிலிருந்து கொண்டு வந்த டிபன்பாக்சை என்ன செய்வது? அலுவலகத்தில் உள்ள வேறு யாரையாவது சாப்பிட சொல்லிவிட வேண்டும். நேரமாகி விட்டால் அது கெட்டு போய்விடும். யாரை சாப்பிட சொல்லலாம் என்ற யோசனை திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தது.

பழனியப்பனுக்கு என்னோடு பேசுவதற்கு பிடிக்கவில்லை போலும். அவன் ஆட்டோவில் இருந்தபடியே சாலையை வெறித்து பார்த்துக் கொண்டு வந்தான். நான் அவனிடம் தயங்கி தயங்கி என்னை கைது செய்தால் வீட்டுக்கு தகவல் தெரியப்படுத்துவார்களா என்று கேட்டேன். அவன் பதில் சொல்லவில்லை. என்னால் அவனுக்கு அதிக சிரமமில்லையா என்று மறுபடியும் கேட்டேன். அவன் ஆத்திரத்துடன் நீ ஒரு மசிரும் பேச வேண்டாம். உன்னாலே நானும் தாலி அறுக்க வேண்டியிருக்கு என்று கோபத்தோடு சொன்னான்.

பழனியப்பன் எனக்கு கீழ் வேலைபார்க்கும் ஊழியன். இதுவரை அவன் இப்படி என்னிடம் பேசியதில்லை. பல நாட்கள் நாங்கள் வங்கியில் பணம் செலுத்திவிட்டு வெளியே வந்து இண்டியானா பேக்கரியில் சாவகாசமாக அமர்ந்து பிளம்கேக்குகள் சாப்பிட்டிருக்கிறோம். ஒரு முறை பழனியப்பன் வங்கிக்கு என்னோட துணைக்கு வரவேயில்லை. நானோ அவன் என்னோடு சேர்ந்து வந்ததாக ரிஜிஸ்தரில் பதிவு செய்திருக்கிறேன். இவ்வளவு இருந்தும் இன்றைக்கு அவன் என்னிடம் நடந்து கொள்ளும் விதம் எனக்கு அதிருப்தி தருவதாகயிருந்தது.

போலீஸ் ஸ்டேஷனிற்கு இதற்கு முன்பு நான் சென்றதேயில்லை. பேருந்தில் பயணம் செய்யும் போது ஒன்றிரண்டு முறை பார்த்திருக்கிறேன். அதுவே அச்சம் தருவதாகயிருக்கும். எப்போதும் உள்ளே சிலரை லத்தியால் அடித்து கொண்டேயிருப்பார்கள் என்ற எண்ணமே எனக்கிருந்தது. சில திரைப்படங்களில் அப்படி காவல்நிலையங்களை காட்டியதும் நினைவிலிருக்கிறது.

நாங்கள் சென்ற காவல்நிலையம் மிக நவீனமாக இருந்தது. உள்ளே யாரையும் அடிக்கும் சப்தம் கேட்கவில்லை. காவலர்கள் அதி நவீன செல்போன்கள் வைத்திருந்தார்கள். கம்ப்யூட்டர் திரை முன்பாக உட்கார்ந்திருந்த ஒரு காவலரிடம் பழனியப்பன் ஏதோ சொன்னதும் எங்களை உள்ளே அழைத்து சென்றார்கள். இளவயதிலிருந்த போலீஸ் அதிகாரி விசாரிக்க துவங்கினார். வங்கி மேலாளர் கேட்ட அதே கேள்விகள். அதேபதில்கள்.

திருட்டை கண்டுபிடித்துவிடலாம் என்று ஆறுதல் சொல்லியபடியே இரண்டு நாட்களுக்கு பிறகு வரும்படியாக அனுப்பி வைத்தார். பழனியப்பன் தனக்கு வேலையிருக்கிறது என்று சொல்லி என்னை மட்டும் தனித்துவிட்டு கிளம்பி சென்றான். பேருந்தில் அலுவலகம் செல்லலாம் என்ற யோசனையோடு காத்திருக்க துவங்கினேன்.

பரபரப்பாக வாகனங்கள் போவதும் வருவதுமாகயிருந்தன. நகரில் எத்தனையோ ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். அவர்களில் எவன் என்னிடமிருந்த பணத்தை திருடி சென்றது. ஒரு ஆளாக இருக்குமா அல்லது கும்பலா? என்னை போல பணம் பறி கொடுத்தவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள். அந்த பணத்தை என்ன செய்வார்கள்.? ஒவ்வொரு நாளும் என்னை போல யாரோ சிலர் இப்படி திருட்டு கொடுத்துவிட்டு புலம்பி கொண்டுதானிருப்பார்கள் இல்லையா? உடம்பு முழுவதும் எறும்பு ஊர்வது போல ஏதோ கேள்விகள் என்மீது ஊர்ந்து கொண்டிருந்தன.

என்ன யோசனை இது என்று என் மீதே எனக்கு ஆத்திரமாக வந்தது. நடந்தே அலுவலகம் செல்வது என்று முடிவு செய்து நடந்து செல்ல துவங்கினேன். இந்த நேரம் அலுவலகம் முழுவதும் என்னை பற்றி தான் பேசிக் கொண்டிருப்பார்கள். வீட்டிற்கு போன் பண்ணி சொல்லியிருந்தால் மரகதம் அழுது கொண்டிருப்பாள். அல்லது பள்ளியிலிருந்து பிள்ளைகளை கூட பாதியில் அழைத்து கொண்டு வந்திருப்பாள்.

அவளுக்கு போன் செய்து பேசலாமா என்று தோணியது. ஆனால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. இத்தனை வருடத்தில் அலுவலகத்திலிருந்து அவளுக்கு ஒரு முறை கூட போன் பண்ணி பேசியதேயில்லை. பொதுவாக வீட்டிலேயே அவளுடன் பேசுவது குறைந்து போய் தானிருந்தது. இந்த வருடம் அவர்கள் கல்யாண நாளை கூட இருவருமே மறந்து போயிருந்தார்கள். அதைப்பற்றி பிறகு நினைவு வந்த போது அவர் வெளிக்காட்டி கொள்ளவேயில்லை.

நடக்க நடக்க தான் காணாத நகரம் ஒன்றில் நடந்து போய்க் கொண்டிருப்பது போலவே இருந்தது. சாலையோரம் உள்ள மரநிழலில் ஒரு ஆள் நன்றாக உறங்கி கொண்டிருந்தான். வாகன இரைச்சலோ, ஜனநடமாட்டமோ அவனை எதுவும் செய்யவில்லை. உறக்கத்திலும் அவன் முகத்தில் சிரிப்பு கசிந்து கொண்டிருந்தது. தான் வாழ்நாளில் ஒரு முறை கூட இப்படி சாலையில் உறங்கியதில்லை. ஒரு வேளை உறங்க வேண்டிய சந்தரப்பம் வந்தால் கூட இப்படி தன்னால் உறங்க முடியுமா என்று தெரியவில்லை.

கட்டிடங்கள், விளம்பர பலகைகள், சாலையோர கடைகள் என யாவும் புதிதாக தெரிந்தன. அலுவலகம் வந்து சேர்ந்த போது யாரும் அவனோடு பேசவேயில்லை. உயரதிகாரி மட்டும் அவனை தற்காலிக நீக்கம் செய்திருப்பதகாவும் அவன் திருட்டு கொடுத்த பணத்தை ஒருவாரத்திற்கு திரும்ப செலுத்த வேண்டியது அவனது பொறுப்பு என்றும் அப்படி செலுத்த முடியாவிட்டால் அவன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தெரிவித்தார்.

தனது சம்பளம் முழுவதையும்ம பிடித்து கொண்டால் கூட இந்த பணத்தை கட்டுவதற்கு ஏழுட்டு வருசங்களாகிவிடும். அதுவரை வீட்டிற்கு என்ன செய்வது என்று குழப்பமாகயிருந்தது. தனது மேஜையின் அடியிலிருந்து டிபன்பாக்சையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து கொண்டு கிழே வரும் போது கடைநிலை ஊழியர் ஒருவர் தன்னை பற்றி ஏதோ சொல்லி சிரிப்பது தெரிந்தது.

வீட்டிற்கு போவதற்கு மனதில்லை. வங்கிக்கு திரும்ப சென்று ஏதாவது தகவல் கிடைத்திருக்கிறதா என்று கேட்கலாம் என தோணியது. ஒரு ஆட்டோ பிடித்து வங்கிக்கு போன போது உள்ளே கூட்டமேயில்லை. காலையில் நடந்த சம்பவத்தின் அறிகுறியே அற்றது போல இயங்கி கொண்டிருந்தது.

மேலாளர் அறைக்கதவை தள்ளி உள்ளே போனபோது அவர் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். போலீசில் புகார் கொடுத்து வந்த விபரத்தை சொன்ன போது அவரிடம் எந்த முகமாற்றமும் இல்லை. தேநீர் குடித்து முடித்துவிட்டு எங்களாலே ஒரு உதவியும் பண்ண முடியாது. இது உங்க தப்பு என்றபடியே எழுந்து வங்கியின் உள்ளே செல்ல துவங்கினார். அந்த அறையில் தனித்து இருந்த போது சுழன்று கொண்டிருக்கும் காற்றாடி கூட என்னை திருட்டு கொடுத்தவன் என்று திரும்ப திரும்ப சொல்வது போலவேயிருந்தது.

ஐந்துமணிக்கு வெளியே வந்த போது வங்கியின் முத்திரைபோடுகின்றவன் என்னை தனியே அழைத்து இப்படி திருட்டு போறது இந்த பேங்கில நாலைந்து தடவை நடந்திருக்கு..நீங்க எதுக்கும் வெட்டுவான் கோயில்வரைக்கு போய் காசை வெட்டி போட்டு பாருங்க. திருடிட்டு போன பயலுக யாரா இருந்தாலும் ரத்த கக்கி செத்துபோயிருவாங்க என்றான்.

என்னால் அதை நம்பமுடியவில்லை. அதே நேரம் நம்பாமலும் இருக்க முடியவில்லை. வெட்டுவான் கோவில் எங்கேயிருக்கிறது என்ற விபரத்தை கேட்டு கொண்டு பேருந்தை பிடித்து பிராட்வேயில் உள்ள குறுகலான தெருக்களை தாண்டி போனபோது சிறிய கோவிலாக இருந்தது. துண்கள் கருமையேறியிருந்தது. ஆனால் கோவிலுக்குள் நிறைய கூட்டமிருந்தது.

பூசாரி ஒருவர் என்னிடம் திருடு போயிருச்சா என்று கேட்டார். நான் தலையசைத்தவுடன் பைக்கா? பர்சா என்னது என்று மறுபடியும் கேட்டார். அலுவலக பணம் என்று சொன்னதும் அவர் இதுக்கு எலுமிச்சைபழம் வெட்டி போடணும். இருநுறு ரூபாய் கொடுங்கள் என்று வாங்கி கொண்டு உள்ளே அழைத்து சென்றார்.

எண்ணெய் விளக்கின் நெடி நாசியில் ஏறியது. உள்ளே பத்திற்கும் அதிகமானவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். பூசாரி அவர்களும் திருட்டு கொடுத்தவர்கள் தான் என்று சொன்னார். ஏனோ அவர்களை பார்க்கையில் சற்று ஆறுதலாகயிருந்தது. எல்லோரது கண்களிலும் பயம் ஒளிந்து கொண்டிருந்தது. வயதை மறந்து அவர்களோடு நெருக்கமாக இருப்பது போன்று தோன்றியது.

பூசாரி எலுமிச்சம்பழங்களை குங்குமம் பூசி அறுத்து போட்டுக் கொண்டிருந்தான். ரத்தம் போலவே சொட்டிக் கொண்டிருந்தது. திருட்டு கொடுத்தவர்களுக்காகவே இப்படியொரு கோவில் ஒன்றிருப்பது இன்று தான் எனக்கு முதல்முதலில் தெரிந்திருக்கிறது.

இந்த நகரில் இதுவரை எவ்வளவு திருட்டு நடந்திருக்கும் . ஏன் தினசரி பேப்பர் வாசிக்கையில் திருட்டு நடந்ததுபற்றிய செய்திகள் இதற்கு முன்பாக நமக்கு அதிரச்சியளிக்கவில்லை என்று யோசனையாக இருந்தது.

ஒரு வேளை நாளை காலை என்னைப்பற்றியும் செய்தி வெளியாகும். புகைப்படத்தோடு வெளியிடுவார்களா என்று தெரியாது. நான் சமீபமாக புகைப்படம் எடுத்து கொள்ளவில்லை. ஒரு வேளை பழைய புகைப்படம் எதையாவது வெளியிடுவார்களாக இருக்கும். இப்படிதான் இதற்கு முன்னால் வெளிவந்த திருட்டு கொடுத்த மனிதர்களின் புகைப்படங்களுக்கு பழையதாக இருந்திருக்குமா?

மனது ஒரு இடத்தில் நிற்கமறுத்து அலைந்து கொண்டேயிருந்தது. கோவிலில் தீபராதனை காட்டும் மணிச்சப்தம் கேட்டது. பூசாரி என்னிடம் பாதி எலுமிச்சைபழம் ஒன்றை தந்து ஒரு ருபாய் காசை வெளியே உள்ள பீடத்தில் வைத்து வெட்டி போடும்படியாக சொன்னார். ரத்தம் போல வடியும் எலுமிச்சை பழத்தை வாங்கி கொண்டு வெளியே வந்தேன்.

ஒரு முரட்டு ஆள் பலிபீடத்தின் அருகே நின்றபடியே காசை வெட்டி போட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து தந்தேன். அவன் ஒங்காரத்தோடு வெட்டி துண்டாக்கினான். பலிபீடத்தின் கீழே எண்ணிக்கையற்ற நாணயங்கள் துண்டாகி கிடந்தன.

கோவிலை விட்டு வெளியே வரும்போது இருட்ட துவங்கியிருந்தது. வழக்கமாக இந்த நேரம் வீட்டிற்குபோயிருப்பேன். அதன் பிறகு காலை அலுவலகம் கிளம்பும் வரை வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டேன். ஆனால் இன்றைக்கு இங்கேயே இருட்ட துவங்கியிருந்தது.

நான் திருட்டு கொடுத்தவன். ஜெயிலுக்கு போக இருப்பவன். எனது வாழ்நாள் எண்ணப்பட்டுவிட்டது. இனிமேல் நான் வேறுவிதமான வாழ்க்கைக்கு பழகி கொள்ள வேண்டும். கோவிலை விட்டு நடந்து பேருந்தில் ஏறி கடற்கரையை அடைந்த போது கடற்கரை கொள்ளாமல் மக்கள் அலைந்து கொண்டிருந்தார்கள்.

வயதான குதிரையொன்று தனியே மணலை மேய்ந்து கொண்டிருந்தது. கடற்கரை மணலில் நடந்து உள்ளே போய் உட்கார்ந்து கொண்டேன். தொலைவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நடைபயிற்சி செய்கின்றவர்கள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தார்கள்.

நான் நடைபயிற்சி செய்கின்றவன் இல்லை. எனது குழந்தைகள் கடற்கரையில் இப்படி விளையாடியதில்லை. இத்தனை மனிதர்களுக்கு நடுவிலும் நான் தனித்து இருப்பது போலவேயிருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் மணலை கை நிறைய அள்ளி அள்ளி கொட்டிக் கொண்டேயிருந்தது.

மணலில் புதைந்து கிடந்த ஒரு சாவியொன்று கையில் அகப்பட்டது. வீட்டு சாவிபோலயிருந்தது. யாருடைய வீட்டு சாவியது. யார் தொலைத்திருப்பார்கள்.தொலைந்த மனிதன் அன்று கடற்கரையெங்கும் தேடியிருப்பான் இல்லையா? அந்த சாவியை என்ன செய்வது என்று தெரியாமல் கையில் வைத்தபடியே இருந்தேன்.

எவ்வளவு நேரம் கடற்கரையில் இருந்தேன் என்று தெரியாது. நியான் வெளிச்சம் கடல் மணலில்ஒளிர்ந்து கொண்டிருந்தது. காற்று மெல்ல என் உடலை தழுவி ஆடையை நெகிழ செய்து கொண்டிருந்தது. யாரோ ஒரு ஆணும் பெண்ணும் என்னருகே தழுவிக் கொண்டிருந்தார்கள். கடலின் சப்தம் மனதை சாந்தம் கொள்ள செய்திருந்தது. கடற்கரையில் கிடக்கும் கோடான கோடி மணல்துகள்களில் ஒன்று தான் தானும் என்று தோணியது.

ஆகாசம் நட்சத்திரங்களால் நிரம்பியிருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு நெடுநேரம் வெளியே இருந்துவிட்டேன் என்று தோணியது. காலையில் இருந்து மனது கொண்டிருந்த பரபரப்பு அடங்கியிருந்தது. வீடு வந்து சேர்ந்த போது குழந்தைகள் உறங்கியிருந்தார்கள். என்னை பார்த்த மாத்திரத்தில் மனைவி கதறி அழத்துவங்கினாள். அவள் சப்தம் கேட்டு அருகாமை வீட்டிலிருப்பவர்கள் சிலர் வந்து சேர்ந்தார்கள். என்னிடம் மாறி மாறி எப்படி பணத்தை தொலைத்தீர்கள் என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

உறங்கி கொண்டிருந்த குழந்தைகள் கூட எழுந்து வந்து அழத் துவங்கின. என் வீட்டில் இவ்வளவு அழுகையை நான் கேட்டதேயில்லை. யாருக்கும் பதில் பேசாமல் நின்று கொண்டேயிருந்தேன். அருகாமை வீட்டு பெண் தனக்கு நினைவுள்ள பழைய திருட்டு சம்பவம் ஒன்றை சொல்லிக் கொண்டிருந்தாள். எவ்வளவு நேரம் என் மனைவி அழுது கொண்டிருந்தாள் என்று தெரியாது.

எனக்கு பசிக்க துவங்கியிருந்தது. காலையிலிருந்து நான் எதுவும் சாப்பிடவில்லை என்று உணர துவங்கியது. அவளிடம் பசிக்கிறது என்றேன். அவள் அதான் எங்களை விழுங்கிட்டு வந்துட்டீங்களே .. இனிமே நாங்க பிச்சை எடுத்து தான் சாப்பிடணும் என்று கத்தினாள். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. எதை நம்புவது என்று தெரியவில்லை.

தெரியாமல் நடந்துவிட்டது என்று நான் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தேன். அதை யாரும் கேட்டு கொண்டது போல தெரியவேயில்லை. வீடும் பிள்ளைகளும் மனைவியும் கூட யாரோ போல தெரிந்தார்கள். எனக்கு என் மீதே ஆத்திரமாக வந்தது.

அப்போது கூட என்னிடமிருந்த பணத்தை திருடிய மனிதன் விழித்து கொண்டிருப்பானா? துங்கியருப்பானா ? அவன் மனைவிக்கு திருடிய விஷயம் தெரிந்திருக்குமா? அவனது பிள்ளைகள் பணத்தை எண்ணியெண்ணி பார்த்து சிரிப்பார்களா என்ற எண்ணம் வந்து கொண்டே தானிருந்தது.

நீண்ட நேரத்திற்கு பிறகு துக்கமும் வலியும் தாளமுடியாமல் நான் தனியே அழத்துவங்கினேன். அப்போது யாவும் மறந்து வீடே உறங்கி கொண்டிருந்தது.

சென்ஷி

unread,
May 31, 2010, 3:18:38 AM5/31/10
to panb...@googlegroups.com

அப்பா புகைக்கிறார்

எஸ். ராமகிருஷ்ணன்

தனது அலுவலகத்திலிருந்து ருக்மணி வெளியே வந்தாள். மணி ஆறு இருபது ஆகியிருந்தது. சாலையில் செல்லும் வாகனங்களின் மீது வெயில் பட்டு தெறித்துக் கொண்டிருந்தது. கோடைகாலம் என்பதால் மாலையிலும் வெயில் அடங்கவில்லை. மின்சார ரயிலைப்பிடிப்பதற்காக செல்லும் வழியில் கடைக்கு போய் ஒரு சிகரெட் வாங்கலாமா என்று ருக்மணிக்கு தோணியது.

இப்படி சில தினங்கள் தோன்றுவதுண்டு. சில வேளைகளில் அவள் சிகரெட் வாங்குவதை பலரும் கவனிப்பார்களே என்று தன்னை அடக்கி கொண்டுபோயிருக்கிறாள். சில வேளைகளில் யாரையும் பற்றிய கவலையின்றி கடைக்கு போய் சிகரெட் வாங்கியிருக்கிறாள்.

அவளது அலுவலகத்திலிருந்து உடன் வரும் ஆண்களில் சிலர் பெட்டிக்கடைக்களில் நின்று புகைப்பதை கண்டிருக்கிறாள். அவர்கள் முன்னால் தானும் போய் சிகரெட் கேட்பது அவர்களை திகைப்படைய செய்யக்கூடும். ஆனால் அது அவளுடைய நோக்கமில்லை.

அவளுக்கு சிகரெட் ஒன்று வேண்டும். அது புகைப்பதற்காக அல்ல. அவள் ஒரு போதும் சிகரெட் புகைத்ததுமில்லை. ஆனால் அவளுக்கு சிகரெட்டின் மணம் தெரியும், சிகரெட்டை நசுங்காமல் எப்படி கையில் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று தெரியும். சிகரெட் புகையின் வளையங்கள் காற்றில் எப்படி கரைந்து போகும் என்பதைக் கூட அறிந்திருக்கிறாள்.

பேக்கரியை ஒட்டியிருந்த பெட்டிக்கடையினுள் அவள் நுழைந்தவுடன் கடைக்காரன் அவள் கேட்காமலே ஷாம்பு வேண்டுமா என்று கேட்டான். மாலையில் யார் ஷாம்பு வாங்க போகிறார்கள் என்று அவளாக நினைத்துக் கொண்டு இல்லை என்றாள். உடனே அவன் விக்ஸ் மிட்டாய், ரீபில், சேப்டி பின் வேண்டுமா என்று கேட்டான்.

அந்தக்கடையில் பெண்கள் வாங்கக்கூடிய பொருட்கள் என்று இந்த நான்கு மட்டும் தான் இருக்கிறது என்று முடிவு செய்திருப்பான் போலும். அவள் கண்ணாடி பாட்டில்களுக்கு பின்னால் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிகரெட் பெட்டிகளை பார்த்து கொண்டேயிருந்தாள்

யாரோ ஒரு ஆள் அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்து பான்பராக் வாங்கி வாயில் போட்டுக்கொண்டு மீதி சில்லறையை அள்ளிக் கொண்டு போனான். சில நிமிச யோசனைக்கு பிறகு ருக்மணி ஐந்து ரூபாய் காசை அவன் முன்னால் நீட்டியபடியே ஒரு சிகரெட் கொடு என்றாள். கடைக்காரனின் முகம் மாறியதை அவள் காணமுடிந்தது. அவன் ஏளனம் செய்வது போன்ற குரலில் என்ன சிகரெட் என்று கேட்டான்.

கடைக்கு ஒரு நாளைக்கு நூறு ஆண்கள் சிகரெட் வாங்க வருகிறார்கள். அவர்களில் ஒருவரிடம் கூட இந்த ஏளனத்தை அவன் காட்டியிருக்க மாட்டான் என்று ஆத்திரமாக வந்தது. அவள் பில்டர் சிகரெட் என்று சொன்னாள். கடைக்காரன் முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு அதான் என்ன சிகரெட்டுனு கேட்கிறேன் என்றான்.

வில்ஸ்பில்டர் என்று சொன்னாள்.

கடைக்காரன் சிகரெட் பெட்டியை உருவி அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து தந்துவிட்டு சில்லறையை கண்ணாடி பாட்டில் மீது வைத்தான்.
அவள் சிகரெட்டை கையில் எடுத்து பார்த்த போது கடைக்காரன் அவனை முறைத்து பார்த்தபடியே இருப்பது தெரிந்தது. அவள் வேண்டும் என்றே இரண்டுவிரல்களுக்கும் நடுவில் சிகரெட்டை பிடித்துக் கொண்டு நின்று கொண்டேயிருந்தாள். கடைக்காரன் அவளை கேலி செய்வது போன்று தீப்பெட்டியை எடுத்து முன்னால் நீட்டினான். அவள் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு கடையிலிருந்து வெளியேறி நடந்தாள்.

கையில் ஒரு சிகரெட்டோடு நடந்து செல்லும் தன்னை பலரும் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பது அவளுக்கு தெரிந்தேயிருந்தது. அதைப்பற்றிய கவலையின்றி அவள் சிகரெட்டை கையில் பிடித்தபடியே ரயில் வருவதற்காக காத்திருந்தாள். அவளை கடந்து செல்லும் முகங்கள் சிகரெட்டினை கண்டு அதிர்ந்து போயின. அவள் சிகரெட்டை முகர்ந்து பார்த்தாள். அதே வாசனை. இன்னும் அப்படியே இருந்தது.

கடைக்கு போய் சிகரெட் வாங்குவது ருக்மணியின் பதினாலாவது வயது வரை அன்றாட வேலையாக இருந்தது. அவர்கள் வீடு இருந்த தெருவில் உள்ள எல்லா கடைகளிலும் அவள் சிகரெட் வாங்கியிருக்கிறாள்.

ருக்மணியின் அப்பா சிகரெட் பிடிக்க கூடியவர். அப்பா சிகரெட் புகைக்கிறார் என்ற சொற்கள் அவளை பொறுத்தவரை மறக்கமுடியாத ஒரு வடு. அந்த சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் தலையிலிருந்து கால் வரை குபுகுபுவென ரத்தம் உச்சம் கொள்வதை அவள் பலமுறை உணர்ந்திருக்கிறாள்.

எதற்காக தன்னை அப்பா கடைகடையாக போய் சிகரெட் வாங்க சொன்னார் என்று அவளுக்கு புரிந்ததேயில்லை. அந்த நாட்களில் தான் பெண்ணாக தானே இருந்தோம். பத்து வயதில் தவறாக இல்லாதசெயல் இருபது வயதில் ஏன் தவறாக கொள்ளப்படுகிறது. அப்போது தன்னை எவரும் ஒருமுறை கூட இப்படி வேடிக்கை பார்க்கவோ அல்லது கேலி செய்வதோ நடந்தது இல்லையே. அது ஏன் காரணம் சிகரெட் பிடிக்கின்றவர்கள் ஆண்கள். அது அவர்களுக்கு மட்டுமேயான ஆடுகளம்.

ருக்மணியின் அப்பா புள்ளியியல் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அலுவலகத்தில் ஒருவரோடு கூட சண்டையே போட்டதில்லை. மிக அமைதியான ஊழியர் என்று சொல்லிக் கொண்டார்கள். வீட்டிலிருந்தே சாப்பாட்டை கொண்டு போய்விடுவார். தினமும் காலை மாலை இரண்டு நேரமும் கோவிலுக்கு போக கூடியவர். விடுமுறை நாட்களில் கூட அலுவலகம் சென்று வேலை செய்யக்கூடியவர்.

ஆனால் இதுஎல்லாம் வெளி உலகிற்கு. வீட்டில் அப்பா எப்போதும் கத்திக் கொண்டும் அம்மாவோடு சண்டை போட்டபடியும் தானிருந்தார். அம்மாவின் மீதான கசப்புணர்வு அவருக்குள் பீறிட்டுக் கொண்டேயிருந்தது. அவளை அடிக்காத நாட்களே இல்லை. பத்து தடவைக்கும் மேலாக அம்மாவிற்கு மண்டை உடைந்து தையல் போட்டிருக்கிறார்கள். அத்தனையும் மறந்துவிட்டு தான் அம்மா அவருக்காக ஒடியோடி சாப்பாடு செய்து தருகிறாள். சில வேளைகளில் அம்மாவும் தன் மனதில் இருந்த அத்தனை கோபத்தையும் ஒன்று திரட்டி வசையிட்ட போதும் அவர்களுக்குள் இருந்த கசப்புணர்வு குறையவேயில்லை.

அதற்காக தான் அப்பா புகைபிடிக்க துவங்கினாரோ என்னவோ, அம்மாவோடு சண்டையிட்ட பிறகு அப்பா ஆவேசத்துடன் சிகரெட் பிடிக்க ஆரம்பிப்பார். தொடர்ச்சியாக ஏழு எட்டு சிகரெட்களை கூட பிடித்திருக்கிறார். சிகரெட் பிடிக்கும் போது அவர் முகம் இறுக்கமடைந்து போயிருக்கும். பதற்றமும் எரிச்சலுமாகவே அவர் புகைபிடிப்பார். ஏதோவொன்றை அடக்கி ஆள்வது போன்ற ஆவேசம் அவருக்கு இருக்கும்.

அப்பா பலவருசமாக புகைபிடித்துக் கொண்டுதானிருந்தார். ஆனால் ஒருநாளும் அவர் கடையில் போய் அவருக்காக சிகரெட் வாங்கிக் கொண்டதேயில்லை. காலையில் ஒரு முறையும் மாலையில் இருமுறையும் ருக்மணி தான் கடைக்கு போய் அவருக்காக சிகரெட் வாங்கி வருவாள். சிகரெட் வாங்க கொடுத்த காசில் மீதமிருந்த சில்லறைகளை கூட அவர் கவனமாக கேட்டு வாங்கிக் கொண்டு விடுவார். அவர் வழக்கமாக பிடிக்கும் சிகரெட் இல்லையென்றால் எங்கேயாவது போய் தேடி வாங்கி வரவேண்டும் இல்லாவிட்டால் அவளுக்கும் அடிவிழும்.

ஒவ்வொரு நாளும் கடைக்கு போய் சிகரெட் வாங்கும் போது அதை ருக்மணி முகர்ந்து பார்ப்பாள். புகையிலையின் மணமது. சிகரெட் பெட்டிகள் இல்லாமல் போன நாட்களில் நாலைந்துசிகரெட்டுகளை ஒன்றாக கையில் பொத்தி கொண்டுவருவாள். அப்போது சிகரெட்டுகள் நழுவி விழந்துவிடுமோ என்று பயமாக இருக்கும். சிகரெட் உதிர்ந்து போயிருந்தால் அதற்கும் வசவு விழும்.

இரவில் எத்தனை மணி ஆனாலும் அவளை கடைக்கு அனுப்பி சிகரெட் வாங்கிவர செய்வார் அப்பா. இருள் படிந்த தெருவில் பயமும் நடுக்கமாக கண்ணை மூடிக் கொண்டு ஒடிப்போய் பலமுறை வாங்கி வந்திருக்கிறாள்.
அப்பா சிகரெட் புகையை வீடு முழுவதும் நிரப்ப வேண்டும் என்று விரும்புகின்றவரை போல இந்தபக்கமும் அந்தப்பக்கமும் தலையை திருப்பி கொண்டு புகைவிடுவார்.

யார்மீதுள்ள கோபத்தையோ தணித்துக் கொள்வதற்கா புகைபிடிக்கிறார் என்பது போலவே அவரது முகபாவம் இருக்கும். சிகரெட்டின் சாம்பலை தட்டுவதற்காக அவர் கையில் கிடைக்கும் சில்வர் டம்ளர், தட்டு, பவுடர் டப்பாமூடி என எதையும் எடுத்துக் கொள்வார்.

ஒருமுறை அவர் அம்மாவின் உள்ளங்கையை நீட்ட சொல்லி அதில் கூட சிகரெட் சாம்பலை தட்டியிருக்கிறார். காரணம் இந்த வீட்டில் உள்ள எல்லாமும் தான் வாங்கி வந்தவை தானே இதில் எதில் சிகரெட்டின் சாம்பலை தட்டினால் என்ன குறைந்துவிடப்போகிறது என்ற எண்ணமே.

அது போலவே சிகரெட்டை அணைத்து வீட்டிற்குள்ளாகவே தூக்கி எறிவார். அவர் புகைக்கும் இடத்தின் அருகில் தான் ஜன்னல் இருந்தது. ஆனால் ஒரு போதும் அவர் ஜன்னலுக்கு வெளியே சிகரெட்டை எறிந்ததேயில்லை.
அம்மா கவனமாக அவர் வீசி எறிந்த சிகரெட் துண்டை பொறுக்கி எடுத்து வெளியே போடுவாள். அப்பா சிகரெட் பிடிப்பதற்காக வைத்துள்ள தீப்பெட்டியை அவர்கள் அடுப்பு மூட்ட ஒரு போதும் உபயோகிக்க கூடாது. அது அவர் உறங்கும்போது கூட தலையணியின் அருகாமையிலே இருக்கும்.

நள்ளிரவில் கூட எழுந்து பாயில் உட்கார்ந்து கொண்டு அப்பா புகைத்துக் கொண்டிருப்பார். அந்த வாடை நாசியில் ஏறி யாராவது செருமினால் கூட அவருக்கு ஆத்திரம் அதிகமாகி விடும். வேண்டும் என்றே முகத்தின் அருகாமையில் ஊதுவார்.

அவர்கள் மீது அவருக்கு உள்ள உரிமையை நிலை நிறுத்துவதற்கு இருந்த ஒரே அடையாளமாக சிகரெட் இருந்தது.

ஒருநாள் அம்மா அவர் சட்டை பையில் வைத்திருந்த சிகரெட்டை துணி துவைக்கும் போது கவனமாக எடுத்து வைக்க மறந்து துவைத்துவிட்டாள் என்பதற்காக அவளது வலது கையில் சூடு போட்டார் அப்பா. அன்றிரவு அம்மா வீட்டிற்கு உறங்குவதற்கு வரவேயில்லை. அருகாமையில் உள்ள வரலட்சுமி வீட்டில் போய் படுத்துக் கொண்டாள்.

அவளை வீட்டிற்கு கூட்டி வரும்படியாக அப்பா ருக்மணியை அனுப்பி வைத்தார். ருக்மணிக்கு ஆத்திரமாக வந்தது. அவள் வரலட்சுமியின் வீட்டு வாசலில் போய் நின்றபடியே வாம்மா வீட்டுக்கு வாம்மா வீட்டுக்கு என்று கூப்பிட்டுக் கொண்டேஇருந்தாள். ஆனால் அம்மாவின் காதில் அந்தக்குரல் விழவேயில்லை. தானும் அங்கேயே படுத்துக் கொள்ள வேண்டியது தான் என்பது போல அவளும் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

சில நிமிசங்களில் வரலட்சுமி வீட்டு வாசலில் அப்பாவின் குரல் கேட்டது. அவர் ஆவேசத்துடன் கத்திக் கொண்டு நின்றிருந்தார். அவரது ஆபாசமான பேச்சை தாள முடியாமல் வரலட்சுமியக்கா அம்மாவை வீட்டிற்கு போகும்படியாக அனுப்பி வைத்தாள். ருக்மணி பயத்துடன் கூடவே நடந்து வந்தாள். அப்பா தன் கையில் இருந்த பத்து ரூபாயை தந்து சிகரெட் வாங்கிக் கொண்டுவரும்படியாக சொல்லிவிட்டு அம்மாவை வீட்டிற்கு இழுத்துக் கொண்டு சென்றார்

ருக்மணி இருட்டில் அப்பாவை திட்டியபடியே நடந்து போனாள்.

இருட்டிற்குள்ளாக ஒரு ரிக்ஷாகாரன் அமர்ந்து பீடி புகைத்து கொண்டிருந்தான். பகலும் இரவும் எண்ணிக்கையற்ற ஆண்கள் சிகரெட் பிடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். உலகம் முழுவதும் அந்த புகை பெண்களை நோக்கியே திரும்புகிறது என்று நினைத்தபடியே அவள் நடந்தாள். கடைகள் யாவும் சாத்தியிருந்தன. எங்கே போய் சிகரெட் வாங்குவது என்று தெரியவில்லை.

அவள் மீன்மார்க்கெட் வரை நடந்து போய் பார்த்தாள். அநேகமாக கடைகள் யாவும் மூடப்பட்டிருந்தன. சிகரெட் இல்லாமல் வீட்டிற்கு போனால் அப்பா தன்னை அடிக்க கூடும் என்ற பயமாக இருந்தது. அவள் சினிமா தியேட்டர் முன்பாக சிகரெட் கடையிருக்க கூடும் என்று நடந்தாள். இரண்டாவது காட்சி துவங்குவதற்காக பாடல் கேட்டுக் கொண்டிருந்தது.

ருக்மணி சிகரெட் வாங்கிக் கொண்டு திரும்பும் போது சைக்கிளில் வந்த ஒருவன் பாதி புகைத்த சிகரெட்டை அப்படியே தூக்கி எறிந்துவிட்டு தியேட்டர் உள்ளே செல்வது தெரிந்தது. ஒடிப்போய் அந்த சிகரெட்டை எடுத்து பார்த்தாள். பாதி சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. சுற்றிலும் யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அந்த சிகரெட்டை அவள் ஒரு முறை இழுத்து பார்த்தாள். நெஞ்சினுள் அந்த புகை சென்றதும் புறை ஏறிக் கொண்டு இருமல் வந்தது. சிகரெட்டை வீசி எறிந்துவிட்டு இருமினாள்.

அடங்கவேயில்லை. அடிவயிறு பிடித்துக் கொண்டுவிடும் போலிருந்தது. பயத்துடன் கண்ணீர் முட்ட தன்னுடைய தலையில் தானே தட்டிக் கொண்டாள். வீட்டிற்கு வந்து சேர்ந்த போது அப்பா வாசலில் ஈஸி சேரை போட்டு உட்கார்ந்திருந்தார்.

அவள் சிகரெட்டை அவரிடம் தந்துவிட்டு உள்ளே போய் அம்மா அருகில் படுத்துக் கொண்டாள். சிகரெட்டின் சுவை நாக்கில் அப்படியே இருந்தது. அம்மா அந்த மணத்தை உணர்ந்திருக்க கூடும். அவள் பக்கம் திரும்பி முகர்ந்து பார்த்தாள். பிறகு ஆவேசம் ஆனவள் போல சிகரெட் பிடிச்சயாடி. சிகரெட் பிடிச்சயா என்று மாறிமாறி முகத்தில் அறைய துவங்கினாள். ருக்மணி என்னை மன்னிச்சிரும்மா என்னை மன்னிச்சிரும்மா என்று கத்தினாள். ஆனால் அடி நிற்கவேயில்லை.

அப்பா அதை கவனித்தபடியே சாய்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தார். அம்மா கை ஒயும்வரை அடித்துவிட்டு அவளை கட்டிக் கொண்டு அழுதாள். பிறகு இவரும் ஒன்றாக படுத்துக் கொண்டார்கள். அதன்பிறகு சிகரெட் வாங்க போகும்போது அந்த வாசனை தன் மீது படிந்து விடக்கூடாது என்று கையை தனியே நீட்டியபடியே போவாள் ருக்மணி.

அவளை போலவே சிகரெட் வாங்க வரும் சிறுவர்கள் சிறுமிகள் நிறைய இருந்தார்கள். எதற்காக ஆண்கள் மட்டுமே சிகரெட் பிடிக்கிறார்கள் என்று அம்மாவிடம் கேட்டாள். அவரு சம்பாதிக்கிறாரு சிகரெட் பிடிக்கிறாரு அதனாலே என்ன என்று சொன்னாள் அம்மா.

ஆறாம்வகுப்பு படிக்கும் போது ஒரு முறை ருக்மணியின் பள்ளிக்கு அப்பாவை அழைத்து வரும்படியாக சொல்லியிருந்தார்கள். அவர்கள் வகுப்பிலிருந்து இரண்டு மாணவிகள் தேர்வுசெய்யப்பட்டு டெல்லியில் நடைபெறும் கலச்சார விழாவில் கலந்து கொள்ள செய்யப்பட்ட ஏற்பாடு அது. அப்பாவை வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு போகும்வழியே தயங்கி தயங்கி ருக்மணி சொன்னாள்.

ஸ்கூல்ல வந்து நீங்க சிகரெட் பிடிக்க கூடாதுப்பா

அப்பா அதை கவனித்தது போலவே தெரியவில்லை. பிரேயர் முடிந்தபிறகு பிரின்ஸ்பலை சந்திக்கும்படியாக சொல்லிய வகுப்பு ஆசிரியை அப்பாவை வெளியே காத்திருக்க சொன்னாள்.

அப்பா அதற்குள் புகைக்க துவங்கியிருந்தார். அவ்வளவு மாணவிகளுக்கு நடுவில் நின்றபடியே ருக்மணி கண்ணை மூடி பிரார்த்தனை செய்ய துவங்கியிருந்த போதும் காற்றில் சிகரெட் புகை கரைந்து வந்து கொண்டேயிருந்தது. பிரேயர் முடியும்வரை யாரும் எதுவும் சொல்லவேயில்லை. அப்பாவாக அதற்குள் பிரின்ஸ்பல் அறையை கண்டுபிடித்து உள்ளே சென்றிருந்தார். பிரின்ஸ்பல் அறைக்குள் நின்றபடியும் அவர் புகைத்துக் கொண்டுதானிருந்தார்.

பிரின்ஸ்பல் தன் அறையில் புகை பிடிக்க அனுமதியில்லை என்று கடுமையான குரலில் சொன்ன போது அது தன்னுடைய தனிப்பட்ட விஷயம். அதில் தலையிட பள்ளிக்கு அருகதையில்லை என்று சொல்லியபடியே இன்னொரு சிகரெட்டை எடுத்து புகைக்க துவங்கினார்.

இதற்குள் வகுப்பு ஆசிரியை ருக்மணியை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். அப்பா நிதானமாக புகை பிடித்துக் கொண்டு தன்மகளை வெளியே அனுப்ப தனக்கு இஷ்டமில்லை பொம்பளை பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்றார். அந்த அறையில் புகை நிரம்பிக் கொண்டிருந்தது. வகுப்பு ஆசிரியையும் பிரின்ஸ்பலும் தனியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

சில நிமிசங்களில் ருக்மணியை அழைத்து அப்பாவை வெளியே அழைத்து செல்லும்படியாக சொன்னார்கள். அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்த போதும் அவர் புகைத்துக் கொண்டே வந்தார். பள்ளியின் வாசலை தாண்டுவதற்குள் நிச்சயம் தன்னை டெல்லிக்கு அனுப்பமாட்டார்கள் என்று ருக்மணிக்கு தெரிந்துவிட்டிருந்தது.

அப்பாவின் மீது ஆத்திரமாக வந்தது. அப்பா அவர்களது ஆத்திரம் கோபம் வசை எதைப்பற்றியும் ஒரு போதும் கருத்தில் கொண்டதேயில்லை. சிகரெட் பிடிப்பதை தவிர வேறு ஒரு கெட்டபழக்கமும் உங்க அப்பாவுக்கு கிடையாது. சம்பாதிக்கிற பணத்தை ஒழுங்கா வீட்டில் கொண்டுவந்து கொடுத்துவிடுகிறார். ஆபீஸ் விட்டா நேராக வீட்டிற்கு வந்துவிடுகிறார் என்று அம்மாவே பல நாட்கள் அவரை பாராட்டியும் இருக்கிறார்

ஆனால் அவளுக்கு அப்பாவை பிடிக்காமலே ஆகிப்போனது. அவள் மனதில் எப்போதும் அப்பா புகைக்கிறார் என்ற படிமம் உறைந்து போயிருந்தது. அதனால் தானோ என்னவோ சிகரெட் பிடிக்கின்றவர்களை கண்டாலே அவளுக்கு ஆத்திரமாக வரத்துவங்கியது.

அவள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நாட்களில் அப்பா புகைப்பது மிக அதிகமாகி போயிருந்தது. அதற்கு காரணம் ஒய்வில்லாத சண்டை. ஒவ்வொரு நாளும் அவள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போதும் பயமாக இருக்கும் காரணம் அப்பா அம்மாவை திட்டிக் கொண்டிருப்பாள். அல்லது அடித்துக் கொண்டிருப்பார். அதன் சில நிமிசங்களில் அவள் சிகரெட் வாங்க போக வேண்டியதிருக்கும். பேசாமல் பள்ளிக்கூடம் விட்டு திரும்பி வரும்போதே கடையில் நாலைந்து சிகரெட்டுகள் வாங்கிக் கொண்டு வந்துவிடலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருப்பாள்

அப்படியொரு நாள் வீடு திரும்பும் போது வீட்டில் நிறைய ஆட்கள் திரண்டிருந்தார்கள். அம்மா சுவர் ஒரமாக சாய்ந்து கிடந்தாள். அவள் உடல் தலை கலைந்து கிடந்தது. சேலை கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவளை சுற்றிலும் உட்கார்ந்திருந்த பெண்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள். அப்பா சலனமில்லாமல் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவரிடம் அருகாமை வீட்டு ஆண்களில் சிலர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டிற்குள் ருக்மணி வருவதைக்கண்டதும் அங்கிருந்த பெண்களில் ஒருத்தி உரத்த குரலில் அழுதபடியே இப்படியொரு பொம்பளை பிள்ளையை தனியா தவிக்க விட்டுட்டு சாகப்போறதுக்கு உனக்கு எப்படி மனசு வந்தது என்று அம்மாவை உலுக்கினாள்.

அம்மா அவள் பக்கம் திரும்பவேயில்லை. அம்மா தற்கொலை செய்வதற்கு முயன்றிருக்கிறாள். பக்கத்துவீட்டு பெண்கள் பார்த்து காப்பாற்றியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இந்த நேரம் செத்துப்போயிருப்பாள் என்று சொல்லிக் கொண்டார்கள்.

அதை கேட்டவுடன் ருக்மணிக்கு கால்கள் நடுங்க துவங்கியது. அவள் அம்மாவின் அருகில்போய் உட்கார்ந்து கொண்டாள். அம்மாவின் கையை எடுத்து தன்னோடு சேர்த்து வைத்துக் கொள்ள முயன்ற போது அவள் தள்ளிவிட்டபடியே போ.. போயி உங்கப்பாவுக்கு சிகரெட் வாங்கிட்டு வந்து குடு என்றாள். ருக்மணிக்கு பேசாமல் தான் செத்துப்போய்விடலாம் என்பது போலிருந்தது.

அவள் யூனிபார்மை கூட கழட்டாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள். அன்றிரவு எட்டரை மணி வரை அவர்கள் வீட்டில் நிறைய ஆட்கள் இருந்தார்கள். பிறகு அப்பா அவளிடம் பசிக்கிறதா என்று கேட்டார். அவள் இல்லை என்று பொய் சொன்னாள். அப்பா தன் சட்டை பையிலிருந்து ஐம்பது ரூபாயை எடுத்து தந்து அவளுக்கு தேவையான இட்லியும் அவருக்கு சிகரெட்டும் வாங்கிக் கொண்டு வரும்படியாக சொன்னார்.

அவள் எழுந்து பணத்தை கையில் வாங்கிக் கொண்டாள். வாசல்படியை விட்டு இறங்கும் போது அப்பா அழைப்பது போலிருந்தது. அவள் திரும்பி பார்த்த போது அப்பா செருப்பை மாட்டிக் கொண்டு அவளை நிறுத்திவிட்டு தானே கடைக்கு போய்வருவதாக சொன்னார். அவளால் நம்ப முடியவில்லை. தானும் கூடவரவா என்று கேட்டாள். அப்பா வேண்டாம் என்றபடியே கிழே இறங்கி நடக்க துவங்கினார்

இரவு பதினோறு மணி வரை அப்பா வீடு திரும்பி வரவேயில்லை. அம்மா அவளை தேடிப்பார்த்து வரும்படியாக சொன்னாள். ருக்மணி ஒவ்வொரு கடையாக போய் எங்கப்பா சிகரெட் வாங்க வந்தாரா என்று கேட்டுக் கொண்டேயிருந்தாள். அப்பா எங்கேயும் வரவில்லை. இந்த இரவில் எங்கே போயிருக்க கூடும். வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொன்னபோது அவள் அவிழ்ந்து கிடந்த கூந்தலை சொருகிக்கொண்டு அவளையும் இழுத்துக் கொண்டு சினிமா தியேட்டர் வரை சென்று பார்த்தாள். ஆனால் அங்கேயும் அப்பா இல்லை.

நள்ளிரவில் அம்மா தெருவில் நின்றபடியே சப்தமாக அழுதாள். மாலையில் அவள் வீட்டில் திரண்டிருந்தவர்கள் எவரும் ஆறுதல்படுத்த வரவில்லை. அவளும் அம்மாவும் மட்டும் அழுதார்கள்

அடுத்த நாள் அம்மாவும் அவளும் அப்பாவின் அலுவலகத்திற்கு தேடிப்போய் பார்த்தார்கள். அப்பா அங்கேயும் வரவில்லை. அப்பாவிற்கு தெரிந்த ஒவ்வொருவர் வீடாக போய் அவர்கள் விசாரித்தார்கள். அப்பா எங்கேயும் வரவேயில்லை. அம்மாவின் கோபம் அவள் மீது திரும்பியது.

ஒரு சிகரெட் வாங்கிட்டு வந்து குடுக்கிறதுல உனக்குஎன்னடி கௌரவம் குறைஞ்சி போச்சி. உங்கப்பா அதுனாலே தானே அன்னைக்கு கோவிச்சிகிட்டு போயிட்டார் என்று அவளை திட்டத்துவங்கினாள்.

அப்பா காணமல்போய் இன்றைக்கு பதினேழு வருடங்கள் ஆகின்றது. ஆனால் அப்பா ஏன் அவளை கடைசியாக சிகரெட்வாங்க அனுமதிக்கவில்லை என்று அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

அப்பா என்னவாகியிருப்பார். எங்காவது சாலை விபத்தில் அடிபட்டு இறந்து போயிருப்பாரா? அல்லது ஏதாவது ஒரு ஊரில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்மு தன்னை போலவே வேறு ஒரு சிறுமிக்கு தகப்பனாகி அவளையும் சிகரெட் வாங்க வைத்துக் கொண்டிருப்பாரா? இல்லை பிச்சைகாரர்களில் ஒருவரை போல அலைந்து திரிவாரா? என்று பலநாட்கள் யோசித்திருக்கிறாள்

சாலைகளில் பேருந்து நிறுத்தங்களில் புகைபிடிக்கும் ஆண்கள் அவளது அப்பாவை நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தார்கள். அப்பா ஏன் அவ்வளவு மூர்க்கமாக புகைபிடித்தார். அவருக்கு ஏதாவது வேதனை இருந்திருக்குமா. என்ன வேதனை அது.

அப்பா காணாமல் போன சில வருசங்களில் அம்மா தானே உடல் நலிந்து போனாள். அவளை மாமா வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு ஹாஸ்டலில் தங்கி படிக்க துவங்கினாள் ருக்மணி. இப்போது வேலை கிடைத்து சம்பாதிக்க துவங்கிய பிறகும் அவளுக்கு ஹாஸ்டல் அறை மட்டுமே ஆறுதல் தருவதாக இருந்தது.

ஆனால் சிகரெட்டின் புகையும் மணமும் அவளுக்குள் அப்பாவின் பிம்பத்தை நாளுக்கு நாள் வலுப்படுத்திக் கொண்டேயிருந்தது. சில வேளைகளில் அதிலிருந்து மீள்வதற்காக அவள் சிகரெட்டை வாங்கிகொண்டு வந்து அறையில் இருந்த மேஜையில் போட்டு வைக்க துவங்கினாள். என்றைக்காவது அப்பா திரும்பி வந்தால் அவருக்கு இந்த சிகரெட்டுகளை புகைக்க தரலாம் இல்லையா?

அன்றைக்கும் அவள் ரயிலில் சிகரெட்டை கையில் வைத்தபடியே வந்ததை பலரும் வேடிக்கை பார்த்தார்கள். ஒவ்வொரு நாளும் இத்தனை ஆயிரம் பேர் பயணம் செய்யும் ரயிலில் ஒரு பெண் கூட சிகரெட் புகைத்து அவள் பார்த்ததேயில்லை. ஏன் புகைக்க கூடாது என்று ஏதாவது சத்தியம் செய்திருக்கிறார்களா அல்லது தடை செய்யப்பட்டிருக்கிறதா?

பொது இடங்களில் நின்றபடியே மூத்திரம் பெய்யும் ஆண்கள், பொது இடங்களில் எச்சில் துப்பும் ஆண்கள், சாலையோர கடைகளில் நின்றபடியே பஜ்ஜி தின்னும் ஆண்கள், பான்பராக் போடும் ஆண்கள், டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் கூட்டமாக மது அருந்தும் ஆண்கள், வாந்தியெடுத்து குப்பையில் விழுந்து கிடந்து உறங்கும் ஆண்கள், பிக்பாக்கெட் அடிக்கும் ஆண்கள், பொதுவெளியில் பெண்களை உரசி பாலின்பம் காணும் ஆண்கள் என அவள் காணும் உலகம் முழுவதும் ஆண்கள் விகாரம் வழிந்து கொண்டிருந்தது. அத்தனை ஆண்களும் புகைக்கிறார்கள். அந்த புகைகள் அடுத்த இருக்கையில் உள்ள பெண்கள் மீது, உடன்வசிக்கும் மனைவி மீது, காதலிக்கும் பெண்ணின் உதட்டிற்குள், அருகில் உறங்கும் குழந்தைகளின் சுவாச கோளங்களில் சென்று நிரம்புகிறது.

ஆண்கள் புகைக்கிறார்கள். அது வெறும் செயல் அல்ல, அது அவளை போன்ற துயரின் வடுமறையாத சிறுவர் சிறுமிகளை உருவாக்கும் வன்முறை. தன்னை ஆண் என்று காட்டிக் கொள்ள வைக்கும் சாதனம். சிகரெட்டை தூக்கி எறிவதை போல, எவ்விதமான எதிர்ப்பும்இன்றி அணைத்து நசுக்குவதை போல தங்களையும் நடத்த முடியும் என்ற எச்சரிக்கை.

ருக்மணி இப்படியான ஏதேதோ யோசனைகளுடன் அறைக்கு திரும்பி மேஜை டிராயரை திறந்து உள்ளே சிகரெட்டை போட்டாள். நாற்பது ஐம்பது சிகரெட்டுகளுக்கும் மேலாக இருந்தது. அதை பார்த்த போது அப்பா ஏன் கடைசியாக தன்னை சிகரெட் வாங்கிவர சொல்லவில்லை என்ற கேள்வி அவளுக்குள் இன்றும் தீராமல் இருந்து கொண்டேயிருந்தது.

அப்பா காணாமல் போனது முதல் அவர் முகம் அவள் நினைவிலிருந்து அழிந்து போக துவங்கியிருந்தது. இப்போது அவரது நினைவாக மிச்சமிருப்பது சிகரெட் மட்டுமே. தன் கடந்த காலத்தின் நினைவாக மிஞ்சியிருப்பது அந்த சிகரெட்டுகள் மட்டுமே தானே என்று தோணியது.

பின்னிரவில் அவள் படுக்கையில் கிடந்தபடியே முகட்டைவெறித்து பார்த்துக் கொண்டிருந்தபோது அறையெங்கும் சிகரெட் புகை நிரம்பியிருப்பது போல தோன்றியது. அந்த மணத்தை அவள் நாசி உணர்ந்து கொண்டிருந்தது. திகைத்து போய் விழித்து பார்த்தாள். அறையில் அவளை தவிர யாருமேயில்லை.

அத்தனை வருசங்களுக்கு அப்பாலும் அப்பாவின் சிகரெட் புகை அவளுக்குள் கரையாமல் புகைந்து கொண்டேயிருக்கிறது என்பது வருத்தம் தருவதாக இருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் அவள் கொஞ்ச நேரம் அழுது கொண்டிருந்தாள். பிறகு தனக்கு தானே பேசிக் கொள்ள துவங்கினாள். அப்போது சட்டென அவளும் தன்னுடைய அம்மா போலவே நடந்து கொள்வதாக தோணியது. அதை தான் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

சென்ஷி

unread,
May 31, 2010, 3:20:48 AM5/31/10
to panb...@googlegroups.com

மதிப்பு மிகுந்த மலர்

வல்லிக்கண்ணன்

 

மாலை உலா வந்த சுந்தரம் அந்த இடத்தில் அப்படி ஒரு காட்சியை எதிர்ப்பார்க்கவில்லை. அதனால் அவர் ஆச்சரியம் அடைந்தார்.

நகரத்தை விட்டு விலகி இருந்தது அந்த இடம். வெறிச்செனக் கிடந்த மேட்டு நிலம். சுத்தமான காற்றை நாடுவோர் மாலை நேரங்களில் அங்கே வருவார்கள். கார்களில், சைக்கிளில், பல ரகமான வேக வாகனங்களில். நடந்தும்கூட. உயர் குடியினர் ஆரோக்கியம் தேடி அந்த வட்டாரத்தில் வசிக்க வருவது உண்டு. அவர்களுக்கு வசதியாக பங்களாக்கள் அங்கும் இங்குமாய் தனித்தனியே கட்டப்பட்டிருந்தன.

அவர்களில் சிலர் பொழுது போக்குவதற்கு என்று 'ரிக்ரியேஷன் கிளப் ' ஒன்று அமைத்திருந்தார்கள். அத்ற்குத் தனிக் கட்டிடம் இருந்தது.

அழகான, சிறு கட்டிடம். அந்த கட்டிடத்தில் மாலை நேரத்திலும் இரவிலும் உயிரோட்டம் இருக்கும். சீட்டாட்டம், கேரம், பேட்மிட்டன் என்று விளையாட்டுக்களில் ஈடுபட்டிருப்பார்கள் பலர். சிலர் ஈசிச்சேரில் வெறுமனே சாய்ந்து ஓய்ந்திருப்பார்கள்.

பொதுவாக மாலை உலா வருகிறவர்களைத் தவிர வேறு யாரையும் வெளியே காண முடியாது. அந்த மேட்டு நிலத்தில், பரந்து கிடக்கும் பெருவெளி அது. எங்கும் காய்ந்து உலர்ந்த புல்லும், கொழிஞ்சி தும்பை போன்ற செடிகளுமே தென்படும். அங்கங்கே ஆவாரம் செடிகளும் பொன் குவியல்களாய் பூத்துச் சிரித்துக் குலுங்குவதும் பார்வையில் படும். ஒன்றிரண்டு மரங்களும் உண்டு.

சுந்தரம் அடிக்கடி அங்கே உலா வருகிறவர். அவரை அறிமுகம் செய்துகொள்ள விரும்பியவர்கள், அல்லது அவராக நெருங்கித் தெரிந்து கொள்வதற்கானவர்கள் அன்றுவரை அங்கே எவரும் குறுக்கிட்டதில்லை.

இப்போது அங்கே, அந்த பெரிய ஆலமரத்தடியில் ஒரு சிறு பெண் தனியாக விளையாடிக் கொண்டிருந்தாள். அது அவருக்கு ஒரு அதிசயமாகவே பட்டது.

அச் சிறுமிக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். நாகரீக ஜவுளிக்கடையில் அலங்காரமாக புது டிசைன் ஆடை அணிவிக்கப்பட்டு காட்சி பொருளாக நிறுத்தப்பட்டிருக்கும் அழகு பொம்மை மாதிரி இருந்தாள் அவள். உணர்ச்சித் துடிப்பும் உயிரியக்கமும் பெற்ற பொம்மை இது. தானாகவே சிரித்துக்கொண்டு, வேறு யாருடனோ பேசுவது போலவும் பாவனைகள் செய்துகொண்டு, அவள் தனக்காக ஒரு தனி உலகம் அமைத்து அதில் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருந்தாள்.

ஆனந்தமாக திரியும் வண்ணத்துப் பூச்சி. கவலையின்றி ஆடிப் பாடிச் சிறகடிக்கும் சிறுபறவை. அழகான பூங்கொத்து. நல்ல குழந்தை – சுந்தரம் அச்சிறுமியை இப்படி வியந்து நின்றார்.

சும்மா வேடிக்கை பார்த்தார்.

சிறுமி அவரைப் பார்த்தாள். அவளது ஒளி நிறைந்த கண்கள் மேலும் சுடரிட்டன. அவள் சிநேகமாகச் சிரித்தாள். இளம் வெயில்போல் அழகாக இருந்தது. அவள் சிரிப்பு.

இது வித்தியாசமான குழந்தை என்று அவர் மனம் சொன்னது. புதியவர்களைப் பார்த்து கூச்சப்படுகிற குழந்தைகள், வெட்கப்படுகிற குழந்தைகள், அநாவசியமாக பயப்படுகிற குழந்தைகள், அழுகிற குழந்தைகள் – இப்படி குழந்தைகள் பல விதம். பயமோ கூச்சமோ கொள்ளாது சிநேகமாகச் சிரிக்கிற குழந்தைகள் அபூர்வமாகத்தான் தென்படுகின்றன. இவளும் ஒரு அபூர்வப் பிறவி என்று சுந்தரம் எண்ணினார்.

சுற்று முற்றும் பார்த்தார். பெரியவர்கள் யாரையும் காணவில்லை. காரில் அல்லது வேறு ரக வாகனங்களில் மேட்டு நில வட்டாரத்துக்கு 'காற்று வாங்க ' வருகிற பெரியவர்கள் எப்பவாவது தங்களோடு குழந்தைகளையும் கூட்டி வருவது உண்டு. அவர்கள் பிள்ளைகளை தாராளமாக வெளியே விளையாட அனுமதிக்க மாட்டார்கள். இப்படித் தன்னந் தனியாக ரொம்ப நேரம் விளையாட விடுவதில்லை.

இவள் யாருடன் வந்திருப்பாள் என்று சுந்தரம் சந்தேகப்பட்டார். அச்சிறுமியிடம் கேட்டார் -

'உன் கூட யார் வந்திருக்கா ? '

யாரும் வரலே. நானாத்தான் வந்திருக்கேன் என்று தயங்காமல் கூறினாள் அவள்.

'உனக்கு பயமாக இல்லே ? '

'பயம் என்ன பயம் ' ' என்று கூறிய சிறு பெண் அவரை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

'நீ தனியாக வந்திருக்கியே, '

அப்பா அம்மா உன்னை தேடமாட்டார்களா ? கோபிக்க மாட்டார்களா ? என்று சுந்தரம் விசாரித்தார்.

அப்பா என்ன பண்ணுவாரோ, எனக்குத் தெரியாது. நான் என் அப்பாவைப் பார்த்தே ரொம்ப வருஷமாச்சு. அம்மா என்னை கோபிக்க மாட்டா. அம்மா தேடுறதுக்கு முந்தி நான் வீட்டுக்குப் போயிடுவேன் என்று அவள் அமைதியாகச் சொன்னாள்.

இது அதிசயமான குழந்தைதான் என்ற எண்ணம் மேலும் வலுப்பட்டது அவருக்கு. 'உன் வீடு எங்கே இருக்கு ? ' என்று கேட்டார்.

'அதோ… அங்கே… என்று குரலை நீட்டி இழுத்து கையையும் ஒரு திசையில் நீட்டினாள் அவள்.

அவள் காட்டிய பக்கம்தான் பெரிய மனிதர்களின் பொழுதுபோக்கு கிளப் இருந்தது. அது அவளுடைய வீடாக இருக்கமுடியாது. அதற்குச் சிறிது தள்ளி ஒரு சிறு வீடு. ஓடு வேய்ந்த சின்ன வீடு. சில அறைகளே கொண்ட கட்டிடம். இச் சிறுவீடு எனது இருப்பிடமாக இருக்கலாம் என்று சுந்தரத்தின் மனம், அதைப் பார்க்கிறபோதெல்லாம் ஆசைப்படுவது வழக்கம். அது சதா பூட்டியே கிடக்கும். அதிலா இந்தச் சிறுமியும் அம்மாவும் குடியிருக்கிறார்கள் ? எத்தனை காலமாக ?

நீ அந்த வீட்டுக்கு வந்து எத்தனை நாளாச்சி ? என்று அவர் கேட்டார்.

'நாலு நாள்தானாச்சு. இன்னமே இங்கேயேதான் இருப்போம் ' என்று அவள் சொன்னாள்.

உடனேயே திடுமென நினைத்துக்கொண்டவள் போல 'நேரமாச்சு நான் போகனும் ' என்று அறிவித்தாள். குதித்துக் குதித்து ஓடிப்போனாள் ; வீட்டை நோக்கி அவள் போவதையே பார்த்து நின்றார் அவர்; சிறுமி அந்தச் சிறிய வீட்டினுள்தான் போனாள்; இந்தப் பிள்ளையோட அம்மாவுக்கு ஏதாவது சீக்காக இருக்கும்; ஆரோக்கியம் தேடி இங்கே வசிக்க வந்திருப்பாள் என்று அவர் எண்ணிக் கொண்டார்.

அதன் பிறகு சுந்தரம் அந்தப் பக்கம் உலா வந்த போதெல்லாம் அச்சிறுமியைத் தவறாது சந்திக்க முடிந்தது: அவள் பெயர் உஷா என்றும் தெரிந்தது.

உஷா அழகான பெயர். உதயம் போல் ஒளியோடு, கலகலப்பாக, ஜீவத்துடிப்போடு தான் இந்தக் குழந்தையும் இருக்கிறது. விடியற்காலத்தின் பொன்னொளி இதன் கண்களில் மின்னுகிறது. இதன் சிரிப்பில் பளீரிடுகிறது; ஒளியின் வைரரேகை மாதிரித்தான் இதன் உருவமும் இருக்கிறது; இப்படிக் கவிதை பேசிக் களித்தது அவர் வனம்.

ஒவ்வொரு சந்திப்பின் போது உஷா அவருடைய ஆச்சர்யத்தை அதிகப்படுத்தி வந்தாள்; எப்பவும் அவள் தனியாகத்தான் காணப்பட்டாள்; சதா சிரித்த முகமாகவே காட்சி தந்தாள்; அவளுடைய சின்ன வாய் எப்போதும் வார்த்தைகளை கலகலப்பாக அள்ளித் தெறிக்கும் ஊற்றாக விளங்கியது.

உஷாவுக்கு பூக்களின் மீது அதிக ஆசை. சுற்றித் திரிந்து ஆவாரஞ் செடிகளின் பொன்னிறப் பூக்களை அதிகம் அதிகமாக சேகரிப்பது அவளுக்கு சந்தோஷம் தரும் காரியமாக இருந்தது. சில பங்களாக்களின் வெளிப்புறச் சுவர்களுக்கு மேலாக வளர்ந்து தொங்கும் செடிகளில் குலுங்கிப் பளிச்சிடும் பிங்க் நிற போகன்வில்லாப் பூக்களும் அவளுக்குப் பிடித்தமானவைதான்; செம்பரத்தம் பூக்கள் அவளது ஆனந்தத்தை அதிகப்படுத்தின. அவற்றை நிறைய நிறையப் பறித்து வைத்து அவள் விளையாடினாள்.

உங்களுக்கு எந்தப் பூ மாமா பிடிச்சிருக்கு ? என்று உஷா ஒரு நாள் சுந்தரத்தைக் கேட்டாள்.

எல்லாப் பூக்களும் எனக்குப் பிடிச்சிருக்கு என்றார் அவர்.

'ஊம்ம், எது ரொம்ப புடிச்சிருக்கு ? '

'ரொம்ப ரொம்ப எனக்குப் பிடிச்ச பூ எது தெரியுமா ? ' என்று அவர் அவள் ஆவலைத் தூண்டும் விதத்தில் கேட்டு நிறுத்தினார்.

'எது மாமா, எந்தப் பூ ? ' என்று அவள் அவசரப் படுத்தினாள்.

'எல்லாப் பூக்களையும் விட அழகாக இருக்கிற உஷா தான் எனக்குப் பிடித்த பூ; உஷா ஒரு பெரிய பூச்செண்டு ' இனிய பூந்தோட்டம்னே சொல்லலாம்; என்று சுந்தரம் கூறினார். சிரித்தார்.

'போங்க மாமா ' கேலி பண்றீங்க ' ' என்று செல்லச் சிணுங்கல் சிணுங்கினாள் உஷா.

'நிஜம்மா நீ ரொம்ப பெரிய பூ தான்; உன் முகம் ஜோரான ரோஜாப்பூ. உன் கைகள்கூட சிறு சிறு ரோஜாக்கள்தான்; கண்கள் கருநீலப்பூ; பாதங்கள் தாமரைப்பூ; உன் மூக்குக்கூட அழகான ஒரு பூதான். அதுக்குப் பேரு தான் எனக்குத் தெரியலே ' என்று சொல்லி, அவர் தன் விரல்கள் இரண்டினால் அவள் குமிழ் மூக்கைப் பிடித்து ஆட்டினார்.

'போங்க மாமா, நீங்க நல்ல மாமா இல்லே ? ' என்றாள் பிறகு ஏதோ சிந்திப்பவள் போல அமைதியில் மூழ்கி நின்றாள்.

'உஷாவுக்கு என்ன திடார் யோசனை ? ' என்று சுந்தரம் கேட்டார்.

'பூக்கள் ஜோராக இருக்கு; அழகு அழகாச் சிரிக்கும் குட்டிக் குட்டி தேவதைகள் போல் தோணுது; அழகாப் பூத்து சந்தோஷம் தருகிற பூக்கள் ஏன் எப்பவும் இப்படியே இருக்கக்கூடாது ? ஏன் வாடிப்போகனும் ? என்று 'சீரியஸ் ' ஆகவே கேட்டாள் அவள்.

'ஊம்ங், அப்புறம் ? ' என்று கிண்டல் தொனியில் அவர் தலையை ஆட்டியபடி வினவினார்.

'அழகானது எல்லாம் சீக்கிரம் அழிஞ்சு போகுது. அல்லது தேய்ஞ்சு மறைஞ்சு போகுது. பூக்கள் அதுக்கு உதாரணம் இல்லையா ? '

'ஆ. டாயர் பிலாசபர் இன் பாவாடை ' அதாவது பாவாடையில் காட்சி தருகிற அருமை தத்துவதரிசியே ' நீ உன் வயசுக்கு மீறி உன் மூளைக்கு வேலை கொடுக்கிறாய். நீ சின்னபிள்ளையாய், சிட்டுக் குருவியாய், வண்ணத்துப் பூச்சியாய், கவலை இல்லாமல் உல்லாசமாகவே விளையாடிக் கொண்டிரு ' என்று உபதேசியார் மாதிரிப் பேசினார் சுந்தரம்.

'வவ்வவ்வே ' ' என்று வாயைக் கோணலாக்கி பழிப்புக் காட்டினாள் சிறுமி. பூக்களைச் சிதறி வீசி விட்டு ஓடிப் போனாள்.

'குரங்கு ' செங்குரங்கு ' ' என்று உரத்துக் கூவினார் சுந்தரம். அழகிய பூக்களை அப்படி அந்தப் பெண் நாசப்படுத்தியது அவருக்கு எரிச்சல் தந்தது.

உஷா திரும்பிப் பார்க்காமலே போய் விட்டாள்.

நாளைக்கு அவளுக்கு அழகான, பூக்கள் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்; அவள் முகமே பெரிய ரோஜாப் பூவாய் சிரிப்பதைக் காண வேண்டும் என்று அவர் எண்ணிக் கொண்டார்.

'ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்று ஆகும் ' என்பது வாழ்க்கையில் சகஜமாக நடப்பதுதான். சுந்தரத்தின் விஷயத்திலும் அப்படித்தான் ஆச்சு.

மறுநாள் மேட்டு நிலம் பக்கம் அவர் உலாப் போக முடியவில்லை. அவரைக் கண்டு சில முக்கியமான விஷயங்கள் பேசுவதற்கென்று சிலர் வந்துவிட்டார்கள். அதுக்கு அடுத்த நாளும்…. அப்புறம்….. தொடர்ந்து பத்து நாட்கள் அவர் அங்கே போக முடியாமலே போச்சு. வெளியூர் போக நேரிட்டது.

சுந்தரம் திரும்பி வந்ததும் மாலை உலா கிளம்பினார். வழக்கமான இடத்துக்குத்தான். உஷா விளையாடிக் கொண்டிருப்பாள்; தன்னைப் பார்த்ததும் மூஞ்சியை உம்மென்று வைத்துக் கொண்டு கோபமாக இருப்பாள்; ஏன் இத்தனை நாள் வரலே என்றுக் கேட்பாள்… இப்படி மனம் எண்ணக் காற்றாடியை மேலே மேலே பறக்கவிட, அவர் வேகமாக நடந்தார்.

பெரிய ஆலமரத்தின் கீழே, ஒளிப்பெருக்கின் வைர ஊசிபோல் திகழக்கூடிய சிறுமி இல்லை. அவளது விளையாட்டுப் பொருள்களும் காணப்படவில்லை. அந்தப் பூங்கொத்து வண்ண வண்ணப் பூக்கள் சேகரிப்பதற்காக அலைந்து திரிகிறதோ என்ற சந்தேகத்தில் அவர் கண்கள் அங்குமிங்கும் தாவித் திரிந்தன.

எங்குமே அந்த உயிர்க் கவிதை இல்லை.

இந்த நேரத்தில் உஷா வீட்டுக்குள் அடைந்து கிடக்க மாட்டாளே ? விசேஷ காரணம் ஏதாவது இருக்க வேண்டும் அவர் மனசில் ஓர் பதைப்பு.

சுந்தரம் அந்தச் சிறிய வீட்டை, பெரிய மனிதர்களின் பொழுது போக்கு மன்றம் உயிரோட்டத்துடன் இயங்கிக் கொண்டிருந்த எடுப்பான கட்டிடத்துக்கு அருகில் இருந்த அழகிய வீட்டை நோக்கி நடந்தார்.

'கிளப் ' ஜீவனோடுதான் தென்பட்டது. பக்கத்துச் சிறிய வீட்டில் ஒளி குன்றிப் போனதாக அவருக்குத் தோன்றியது.

அன்னியமான வீடு. அந்த அம்மாள் அறிமுகமானவளும் இல்லை. சிறு பெண் உஷாவை அவள் விளையாடும் மரத்தடியில் சந்தித்துப் பேசியதுதான். அவளுடன் அவள் வீட்டை எட்டிப் பார்க்க அவர் வந்ததுகூட இல்லையே '

சுந்தரம் வெளி 'கேட் ' மீது கை பதித்தவாறு தயங்கி நின்றார். உஷா என்று அவர் உள்ளம் கூவியது. குரல் கொடுக்கவில்லை அவர்.

உஷாவின் அம்மா வெளியே வந்தாள். எதேச்சையாக வந்தவள், தயங்கி நிற்கும் அவரை பார்த்ததும் அவசரமாக வந்தாள். 'வாங்க, உள்ளே வாங்க ' என்று அழைத்தாள்.

'உஷா உங்களுக்குத் தொல்லை கொடுத்திருப்பாளே; சரியான தொண தொணப்பு இல்லையா ? '

அம்மா அவளாகவே கருத்து தெரிவித்தாள்.

'அப்படி எல்லாம் இல்லை. உஷா அதிசயமான பெண். உற்சாகமான சிறுமி. துள்ளித் திரியும் கவிதை. அவள் செயல்கள், பேச்சு எல்லாம் எனக்கு சந்தோஷமே தரும். அவளை எங்கே காணோம் ? '

சடக்கெனத் தலையைத் தாழ்த்திக் கொண்டு விருட்டென அந்த அம்மாள் ஏன் வீட்டுக்குள் போக வேண்டும் ? அவருக்கு குழப்பம் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் அவள் திரும்பி வந்தாள். முகத்தைத் துடைத்துக் கொண்டு, அவள் கண்கள் கலங்கியிருந்தன.

உஷாவின் கடைசி காலத்தில் அவள் சந்தோஷத்தை அதிகப்படுத்தியவர் நீங்கள். உங்களைப் பற்றி அவள் வாய் ஓயாது பேசுவாள். நீங்கள் தேடி வந்தால், இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னாள் என்று ஒரு கவரை அவள் அவரிடம் தந்தாள்.

அவர் திகைத்தார். 'உஷா…உஷா எங்கே ? ' என்று குழறினார்.

'அந்தப் பூ வாடிவிட்டது ' ' அவள் விம்மினாள்.

மின்னாமல், உறுமாது, பேரிடி ஒன்று விழுந்தது போலிருந்தது சுந்தரத்துக்கு. 'என்னது ? என்ன ? என்று கதறினார்.

'உஷாவுக்கு இருதயக் கோளாறு. எதோ பலவீனம். சிகிச்சைக்காகத்தான் இங்கே வந்து தங்கினோம். அவள் ரொம்ப காலம் வாழ முடியாது என்பது தெரிந்த முடிவுதான். அதனால் இருக்கிற வரை 'அவள் சந்தோஷமாக இருக்கட்டுமே என்று விட்டிருந்தேன். நீங்களும் உங்களாலான உதவி செய்தீங்க. அவ சந்தோஷப்பட்டாள். மூன்று நாட்களுக்கு முன் உஷா போய்விட்டாள். '

அழுகையை அடக்க இயலாதவளாக அவள் உள்ளே போனாள்.

சுந்தரம் தன் கையிலிருந்த கவரைக் பிரித்துப் பார்த்தார். அதில் ஒரு படம் இருந்தது. வெள்ளைத்தாளில், வானவில் வர்ணங்களில் பளிச்சிட்ட ஒரு பூவின் படம். உஷா வரைந்தது. அதன் மேலே மதிப்பு மிக்க மலர் என்று அவள் எழுதியிருந்தாள். கீழே அன்பு நட்பு என்றும் எழுதியிருந்தாள்.

ஆனால் அவ்வார்த்தைகளை அன்பூ – நட்பூ என்று உஷா எழுதியிருந்தாள். வேண்டுமென்றே–தெரிந்தே–செய்யப்பட்ட இலக்கணப் பிழைதான் என்று எண்ணிக்கொண்டார் சுந்தரம்.

அவர் கண்ணிலிருந்து கண்ணீர்ப்பூக்கள் உதிரலாயின.

சென்ஷி

unread,
May 31, 2010, 3:22:29 AM5/31/10
to panb...@googlegroups.com

A, B, C அல்லது D

என்.சொக்கன்
A, B, C அல்லது D
சற்றே அகலமான ரிப்பனைப்போல் நீண்டிருந்த அந்தக் காகிதத்தில், மொத்தம் இருநூறு சிறு வட்டங்கள் இருந்தன. இடது ஓரத்தில், ஒன்றில் தொடங்கி ஐம்பதுவரை வரிசையாக எண்கள் அடுக்கியிருக்க, ஒவ்வொரு எண்ணுக்கும் எதிரே, நான்கு வட்டங்கள். அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பேனாவால் முழுமையாகத் தீற்றி நிரப்பவேண்டும் என்று புரொ·பஸர் தெளிவாக அறிவித்திருந்தார், ‘சும்மா வெறுமனே டிக் செஞ்சாலோ, பெருக்கல் குறி போட்டாலோ மார்க் கிடையாது, எந்த ஆன்ஸர் சரின்னு நினைக்கறீங்களோ, அந்த வட்டத்தை க்ளியரா ஷேட் செய்யணும். அப்போதான் எக்ஸாம் எழுதற டிஸிப்ளீன் வரும்’
பேராசிரியர்கள் எல்லோருமே, ஆங்கிலமும் தமிழும் கலந்துதான் பேசுகிறார்கள். வாக்கியக் கட்டமைப்புகளைத் தமிழில் வைத்துக்கொண்டு, அங்கங்கே ஆங்கில வார்த்தைகளை இட்டு நிரப்பினால்தான் அவர்களுக்குச் சரிப்படுகிறது.
ஆனால், அவர்களையும் குறை சொல்வதற்கில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே படித்தாகவேண்டிய எஞ்சினியரிங் பாடங்களையெல்லாம், தமிழைத்தவிர வேறு பாஷையில் பேசியறியாத பையன்களுக்குச் சொல்லித்தருவதென்றால், இப்படி ஏதாவது நூதன வழிமுறைகளைக் கண்டுபிடித்தால்தான் உண்டு. இல்லையென்றால், வகுப்பறையில் நடத்தப்படுவது நமக்குரிய பாடம்தானா என்றுகூட நிச்சயமாகத் தெரியாதவர்களாக எல்லோரும் திருதிருவென்று விழித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கச் சகிப்பதில்லை.
மூன்றாவது வரிசையில் ஓரமாக அமர்ந்திருந்த கலைவாணன், ஒரு ரகசியப் பெருமூச்சுடன் தனது மேஜை மேலிருந்த கேள்வித் தாளை இன்னொரு முறை வெறித்துப் பார்த்தான். அடுத்த ஒன்றரை மணி நேரமும், விரல் சொடுக்கும் நேரத்தில் ஓடி மறைந்துவிடாதா என்றிருந்தது அவனுக்கு.
பால் வெள்ளைக் காகிதத்தில் கொசகொசவென்று எறும்புகள் மொய்த்ததுபோல் வரிசையாகக் கேள்விகள். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள், அவற்றில் சரியான விடையைக் கண்டறிந்து, அதற்குரிய வட்டத்தைத் தீற்றி நிரப்பவேண்டும்.  இதைவிட சுலபமான தேர்வு முறை இருக்கவேமுடியாது.
ஆனால், அந்தச் சுலபத்துக்குள்தான், எல்லாக் கஷ்டமும் ஒளிந்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டான் கலைவாணன். ஒவ்வொரு கேள்விக்கும், சரியான பதிலைக் கொடுத்துவிட்டு, ஆனால் அதைச் சட்டென்று கண்டுபிடித்துவிடமுடியாதபடி, சுற்றிலும் தவறான பதில்களை நிரப்பிவிடுவது கொடூரமான அநீதியாகத் தோன்றியது அவனுக்கு.
இப்படி மொத்தம் ஐம்பது அநீதிகளைச் செய்துவிட்டு, அந்தக் களைப்பில் சாய்ந்து அமர்ந்திருந்தார் புரொ·பஸர் பத்மனாபன். ஒரு கோணத்தில் பார்க்கிறபோது, அவர் அசந்து தூங்கிக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. ஆனால் அதேசமயம், எங்கேனும் பேச்சுக் குரலோ, கிசுகிசுப்புச் சத்தமோ கேட்டால், சட்டென்று பொங்கியெழுந்து தண்டித்துவிடுவதுபோலவும் தென்பட்டார்.
கலைவாணன் அவரை வெறுப்போடு பார்த்தான். அந்த வகுப்பிலிருந்த மற்ற மாணவ, மாணவிகள் எல்லோருமே, அதே அளவு வெறுப்புடன்தான் புரொ·பஸரை இப்போது சபித்துக்கொண்டிருப்பார்கள் என்று நிச்சயமாக எண்ணினான் அவன்.
ஆனால், எல்லாச் சாபங்களும் பலித்துவிடுவதில்லை. கட்டாயமாக பலிக்கும் சாபங்களை வழங்கவேண்டுமானால், நீங்கள் ரொம்ப நல்லவராக இருக்கவேண்டும். ரொம்ப நல்லவராக இருந்துவிட்டால், அப்புறம் யாரையும் சபிக்கத் தோன்றாது.
கலைவாணன் மீண்டும் தனது கேள்வித் தாளை பஸ்பமாக்கிவிடுவதுபோல் பார்த்தான். உலகத்தில் நல்லவர்களையும், கெட்டவர்களையும் ஒன்றாகச் சேர்த்து வாழவைக்கும் கடவுள்போல், அந்தக் கேள்வித் தாளில் சரியான விடைகளையும், தவறான விடைகளையும் கலந்து கட்டி நிரப்பியிருந்தார் புரொ·பஸர் பத்மனாபன். இந்தக் குவியலிலிருந்து, சரியான விடைகளைமட்டும் பொறுக்கியெடுக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்துக்குப் பெயர், பரீட்சை. த்தூ !
‘மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பாதே’, கிறிஸ்துவப் பாதிரியார்போல் கனவில் பேசினார் பத்மனாபன். அவர் கையில் ஒரு சிறிய மரத் துண்டு இருந்தது. அதை வெகு தூரத்தில் வீசி எறிந்துவிட்டு, ‘ஒரு கொடம் தண்ணி ஊத்தி, அம்பது பூ பூத்ததாம்’, என்று பெண் குரலில் ராகமிழுத்துப் பாடினார் அவர்.
கண்களை மூடியபடி, தலையை பலமாக உலுக்கிக்கொண்டான் கலைவாணன். கனவு உடைந்து, ஐம்பது பூக்களும் திசைக்கொன்றாகச் சிதறி விழுந்தன. ஒவ்வொரு பூவிலும் நான்கு இதழ்கள். அவை ஒவ்வொன்றும், சிறு வட்டங்களாகி, அவனுடைய விடைத்தாளில் நிறைந்திருக்க, இப்போது எதில் எந்த வண்ணத்தைத் தீற்றி நிரப்புவது ?
பேனா நுனியைக் கொறித்தபடி ஜன்னலுக்கு வெளியே பார்த்தான் அவன். கல்லூரி அரங்கத்தை ஒட்டினாற்போலிருந்த ஒரு மரத்தில், பழுப்பும், பச்சையுமாக இலைகள் கலைந்து நிரம்பியிருப்பதை அசுவாரஸ்யமாக வெறித்தவாறு, புரொ·பஸர் மாதாந்திரத் தேர்வை அறிவித்த அந்த வெள்ளிக்கிழமையை நினைத்துக்கொண்டான் கலைவாணன்.
இந்த விஷயத்தில் அவரைக் குற்றம் சொல்லவேமுடியாது. மற்ற ஆசிரியர்களைப்போல் திடுதிப்பென்று நினைத்துக்கொண்டாற்போல் பரீட்சை வைக்காமல், ஒரு வாரம் முன்பாகவே, தேர்வுக்கான தேதி, எந்தெந்தப் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும் என்றெல்லாம் விளக்கமாகச் சொல்லிவிட்டார்.
ஆனால், அந்த ஒரு வாரத் தவணைதான் பிரச்சனையாகிவிட்டது. காலண்டர் மறந்த ஹாஸ்டல் வாழ்க்கையில், அவர் கொடுத்த ஏழு நாள்களும் விருட்டென்று தரையைப் பிளந்துகொண்டு எங்கோ மூழ்கி மறைந்துவிட்டன. மாதாந்திரத் தேர்வுதானே என்கிற அலட்சியத்தில், இன்னும் நாள் இருக்கிறது என்ற நம்பிக்கையில், பரீட்சைக்கு முந்தின நாள்கூட ராத்திரிமுழுதும் உட்கார்ந்து படித்துவிடலாம் என்கிற தைரியத்தில், ‘நாளைக்கு’, ‘நாளைக்கு’ என்று தள்ளிப்போட்டு, இறுதியில், அந்தக் கடைசி ராத்திரி வந்தபோது, மறுநாள் தேர்வு என்கிற விஷயமே அவனுக்கு நினைவில்லை.
இன்றைக்கு வகுப்பில் நுழைந்தபோதுகூட அவனுக்கு இந்தத் தேர்வைப்பற்றி யாரும் சொல்லியிருக்கவில்லை. ஆனால், பெண்கள் எல்லோரும் ஆளுக்கொரு புத்தகத்துடனோ, அல்லது, வகுப்புக் குறிப்புகளை ஜெராக்ஸ் செய்த காகிதங்களுடனோ நிலையற்று அலைந்துகொண்டிருப்பதைப் பார்த்தபோதுதான், கொஞ்சம் சந்தேகப்பட்டு விசாரித்தான், ‘சும்மா ஜோக் அடிக்காதீங்க கலை, இன்னிக்கு மன்த்லி டெஸ்ட், உங்களுக்குத் தெரியாதா ?’, என்று புருவம் சுருக்கிச் சொன்னாள் ஜெனி·பர்.
அந்த அதிர்ச்சியை அவன் முழுவதுமாக ஜீரணிப்பதற்குள், புரொ·பஸர் வந்துவிட்டார். விறுவிறுவென்று வினாத்தாள்களும், விடைத்தாள்களும் வினியோகிக்கப்பட்டன. எல்லோரும் கொஞ்சம் தள்ளித்தள்ளி அமர்ந்துகொண்டு, தேர்வு தொடங்கிவிட்டது.
தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கிற எல்லோரையும் வெறுப்போடு முறைத்தான் கலைவாணன். முக்கியமாக, இந்த ஹாஸ்டல் பையன்கள். நேற்று மாலைமுழுக்க அங்கேயேதானே சுற்றிக்கொண்டிருந்தேன், யாராவது ஒரு பயல் இந்த விஷயத்தை ஞாபகப்படுத்தியிருக்கக்கூடாதா ?
இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான், ஹாஸ்டல் வாழ்க்கையின் சகல சௌகர்யங்களையும் மீறி, அதன்மீது ஒரு வெறுப்பு விழுந்துவிடுகிறது. பள்ளிக்கூடத்தில் படித்தபோது, இப்படி ஒரு பரீட்சையை மறந்திருப்பானா கலைவாணன் ? அவனே மறந்தாலும், அப்பாவும், அம்மாவுமாக, ஒரு முறைக்கு இருபது முறையாவது ஞாபகப்படுத்தி ‘எல்லாப் பாடமும் படிச்சு முடிச்சாச்சா ?’, என்று நச்சரித்துத் துளைத்திருப்பார்களே.
அப்போதெல்லாம், அவர்கள்மீது கோபம்தான் வந்தது. பெற்ற பிள்ளையை நம்பாமல், இப்படி விசாரணைக் கைதியைத் தோண்டித் துருவுவதுபோல் தொந்தரவு செய்கிறார்களே என்று பலமுறை மனதுக்குள் புலம்பியிருக்கிறான். ஆனால், அந்தத் தோண்டல்களும், துருவல்களும் இருந்திராவிட்டால் என்ன நடந்திருக்கும் என்று இப்போதுதான் ஓரளவு புரிகிறது.
சிவந்த கண்களை அழுந்தத் தேய்த்துக்கொண்டான் கலைவாணன். வாட்சைப் பார்த்தபோது, இன்னும் ஒரு மணி நேரத்துக்குமேல் மீதமிருந்தது.
இப்போது இந்தத் தேர்வில் தோற்றுவிட்டால் என்ன ஆகும் என்று கொஞ்சம் யோசித்துப்பார்த்தான் அவன். மாதாந்திரத் தேர்வுகளில் ·பெயில் ஆவதொன்றும் கிரிமினல் குற்றமில்லை. ஆகவே, பெரிதாக எதுவும் நடந்துவிடாது என்றுதான் அவனுக்குத் தோன்றியது.
ஆனாலும், இதில் சில மறைமுகப் பிரச்சனைகள் ஒளிந்திருக்கின்றன. நிறைய மார்க் எடுக்கிற பையன்களைதான் ஆசிரியர்களுக்குப் பிடிக்கும். ஆகவே, இந்தத் தேர்வில் சொதப்பியபிறகு, புரொ·பஸர் பத்மனாபனின் பார்வையில், கலைவாணன் ஒரு மக்குப் பையன் என்று தீர்மானமாகிவிடுகிற சாத்தியங்கள் உண்டு. அவர்தான் இந்தத் துறையின் தலைமைப் பேராசிரியர் என்பதால், அவருடைய இந்த எண்ணம் மற்ற ஆசிரியர்களின்மீதும் படியக்கூடும். எல்லோருமாகச் சேர்ந்து, அவனைக் கல்லூரியிலிருந்து தள்ளிவைத்துவிடுவார்களோ என்னவோ.
தனது அதீத கற்பனையை எண்ணி மெல்லச் சிரித்துக்கொண்டான் கலைவாணன். ஒரு மாதாந்திரப் பரீட்சையைச் சரியாக எழுதவில்லை என்பதற்காக, தன்னுடைய எதிர்காலமே இருண்டுபோய்விடப்போவதில்லை என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது. என்றாலும், மனதின் ஒரு மூலையிலிருந்த குற்றவுணர்ச்சி, அவனை அலைக்கழித்துக்கொண்டுதானிருந்தது.
கை விரல்களைக் கோர்த்து, முன்னே நீட்டி சொடக்கெடுத்தபடி, சுற்றிலும் பார்வையைச் செலுத்தினான் கலைவாணன். அவனைத்தவிர மற்ற எல்லோரும் மும்முரமாகப் படித்துக்கொண்டோ, எழுதிக்கொண்டோ இருந்தார்கள். ஒரு தலைகூட நிமிர்ந்திருக்கவில்லை.
மீண்டும் ஒருமுறை தனது கேள்வித் தாளைப் புரட்டினான் அவன். பெரும்பாலான கேள்விகள் அர்த்தமற்றவையாகத் தோன்றின. ஆனால், அந்தக் கேள்விகள் எல்லாவற்றையும் இதற்குமுன் எங்கோ பார்த்திருக்கிறோம் என்பதுபோல் ஒரு மெலிதான நினைவு, கிணற்றினுள்ளிருந்து கத்துகிற பூனைக்குட்டியின் கீச்சுக் குரல்போல் கேட்டுக்கொண்டிருந்தது.
அந்தக் கேள்விகளுக்கான பதில்கள், மேலும் குழப்பமூட்டின. ஒவ்வொரு கேள்விக்கும் A, B, C, D என்று இலக்கமிட்டு நான்கு பதில்கள் தரப்பட்டிருந்தன. ஆனால், புரிந்த கேள்விகளின் பதில்கள் புரியாமலும், புரியாத கேள்விகளின் பதில்கள் நான்குமே புரிவதுபோலும் தோன்றியது. எல்லாக் கேள்விகளுக்குமே, நான்கு சரியான பதில்கள் இருப்பதாகத் தோன்றியது கலைவாணனுக்கு.
இதற்குமுன் எந்தப் பரீட்சையும் கலைவாணனுக்கு இத்தனை சிரமமாக இருந்ததில்லை. பள்ளி நாள்களில், தினந்தோறும் மாலையில் அன்றன்றைய பாடங்களைப் படித்துவிடுகிற பழக்கம். ஆகவே, தேர்வு சமயங்களில் எல்லாப் பாடங்களையும் வேகமாக ஏழெட்டுமுறை புரட்டிவிட்டாலே போதும்.
என்றாலும், கலைவாணனைப் பொறுத்தவரை, தேர்வுக்குரிய பாடங்கள் ஒவ்வொன்றிலும், எந்த ஒரு தலைப்பையும் விட்டுவைக்காமல் படித்தாகவேண்டும். இல்லையென்றால் அவனுக்குத் திருப்தியே இருக்காது. சில சமயங்களில், சக நண்பர்களோடு சேர்ந்து படிக்கிறபோது, அவர்களிடம் புத்தகத்தைக் கொடுத்து கேள்வி கேட்கச் சொல்வது, மாதிரித் தேர்வுகள் எழுதிப் பார்ப்பது என்று பலவிதங்களில் தனது தயார்த்தன்மையைச் சோதித்துப்பார்த்துக்கொள்வான்.
அதேபோல், ஒவ்வொரு தேர்வுக்குமுன்பும், பேனா முனையில் ததும்புமளவு இங்க் ஊற்றிக்கொள்வான். ஒருவேளை அந்தப் பேனா மக்கர் செய்துவிடுமோ என்கிற பயத்தில், இன்னொரு உபரி பேனாவும், பென்சில், ரப்பர், ஸ்கேல், காம்பஸ் வகையறாக்களும் ஜாமின்ட்ரி பாக்ஸில் கட்டாயமாக இருக்கும். பரீட்சை எழுதிமுடித்தபின், தாள்களைக் கோர்த்துக் கட்டுவதற்கான நூலைக்கூட கையோடு கொண்டுசென்றுவிடுகிறவன் அவன்.
கல்லூரிக்கு வந்தபின், அந்த கவனமெல்லாம் அவசியமற்றதாகிவிட்டது. தினசரி இங்க் ஊற்றி, பழுது பார்த்து, அக்கறையாகப் பராமரிக்கவேண்டிய தடிமன் பேனாக்களை மறந்து, உபயோகம் தீருமுன்பே வீசியெறிய நேர்ந்துவிடுகிற மெலிந்த பிளாஸ்டிக் பேனாக்களுக்கு மாறியதில் தொடங்கி, முன்பிருந்த எல்லா ஒழுங்கும் தடம்புரண்டுவிட்டது.
முதலாண்டு ஆரம்பத்தில், ராக்கிங் பிரச்சனைகளுக்கு பயந்து, எப்போதும் ஹாஸ்டலில் ஒளிந்திருந்தபோதுகூட, ஓரளவு ஒழுங்காகப் படிக்கமுடிந்தது. ஆனால், அதன்பிறகு நண்பர்களோடு வெளியே சுற்றத்தொடங்கியதிலிருந்து, ஒரு நாளுக்கு 24 மணி நேரம் போதவில்லை. தினசரிப் படிப்பெல்லாம் அதீதமான பழக்கம் என்று தோன்றிவிட்டது. தேர்வுக்குச் சில நாள்கள்முன்பு, முழுமூச்சாக உட்கார்ந்து படித்தாலே நல்ல மார்க் வாங்கிவிடலாம் என்று ஓரிரு அனுபவங்களிலேயே தெரிந்துகொண்டுவிட்டான் கலைவாணன்.
அது ஒரு அனுபவம் என்றால், இன்றைக்கு நேர்ந்திருப்பது வேறொரு அனுபவம். பங்குச் சந்தையில் லட்சங்களில் சம்பாதிக்கிறவர்கள், பிறிதொரு நாளில் எல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோல, முற்றிலும் சிநேகிதமற்ற ஒரு கேள்வித் தாளைக் கையில் வைத்துக்கொண்டு திகைப்போடு அமர்ந்திருக்கவேண்டியதாகிவிட்டது. ஆவேசமான பெரிய போர்க்களத்தில், ஆடைகளற்று நிர்வாணியாக நிற்கிறவன்போல் தன்னை உணர்ந்தான் கலைவாணன்.
அவனைச் சுற்றி அமர்ந்திருந்த எல்லோருமே, மும்முரமாகப் போரிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களும் ஒழுங்காகப் படித்தார்களா, இல்லை, குத்துமதிப்பாக ஏதோ விடைகளைத் தீற்றுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனாலும், கேள்விகளைப் படித்து பதில் எழுதுகிற தைரியமாவது அவர்களுக்கு இருக்கிறது.
கலைவாணன் மறுபடி தனது கேள்வித் தாளை நிச்சயமில்லாமல் புரட்டினான். உச்சிமுதல் பாதம்வரை விறுவிறுவென்று பார்வையை ஓட்டியதில், ஐம்பது கேள்விகளில், மொத்தம் மூன்று கேள்விகளுக்குமட்டும் அவனுக்கு பதில் தெரிந்திருப்பதாகத் தோன்றியது.
அந்த மூன்று கேள்விகளுக்குமட்டும் சரியான பதிலைத் தீற்றிக் கொடுத்துவிட்டு வெளியேறிவிடலாமா என்று யோசித்தான் கலைவாணன். இப்போதைய நிலைமையில், வேறு எந்த வழியும் அவனுக்குத் தென்படவில்லை. என்றாலும், அப்படிச் செய்வதில் ரிஸ்க் அதிகம். ஒன்றரை மணி நேரப் பரீட்சையை, முப்பத்தைந்து நிமிடங்களில் முடித்துவிட்டுப் போகிறவனை, எந்த புரொ·பஸரும் வியந்து, மதிக்கப்போவதில்லை. போதாக்குறைக்கு, அடுத்த முக்கால் மணி நேரத்துக்கு அவனுடைய விடைத் தாளின் வெறுமையைப் புரட்டிப் பார்த்து, மனதுக்குள் திட்டிக்கொண்டிருப்பார்கள். அந்த எரிச்சலில், பூஜ்ஜியத்துக்குக் குறைவாக மார்க் சுழித்துவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆகவே, படுகுழியில் விழுவதானாலும், கொஞ்சம் கௌரவத்தோடு விழுவதுதான் நல்லது என்று முடிவுகட்டிக்கொண்டான் அவன். எப்படியாவது ஒன்றரை மணி நேரத்தை இங்கேயேதான் கழித்தாகவேண்டும். அதன்பிறகு, எல்லோரோடும் சேர்ந்து விடைத்தாளைச் சமர்ப்பிக்கும்போது, அவன் ஐம்பது கேள்விகளுக்கும் பதில் எழுதியிருக்கிறானா, இல்லையா என்று புரொ·பஸர் கவனிக்கப்போவதில்லை.
ஆனால், இப்போது மிச்சமிருக்கிற நாற்பத்தேழு கேள்விகளையும் என்னதான் செய்வது ?
மறுபடி யோசனையில் விழுந்துவிட்ட கலைவாணனுக்கு, முந்தைய நாள் இரவுதான் சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது. விடுதியின் டி. வி. அறையில், உருப்படாத ஹிந்திப் படமொன்றை நண்பர்களோடு சேர்ந்து கிண்டல், கேலியுடன் ரசித்த நேரத்தில், கொஞ்சமாவது படித்திருக்கலாம்.
நேற்று அவனோடு படம் பார்த்தவர்கள் யாரும், இப்போது இந்த அறையில் இல்லை என்று கசப்புடன் நினைத்துக்கொண்டான் கலைவாணன். அவர்களெல்லாம் வேறு வகுப்பு. A, B, C அல்லது D என்ற நான்கில் ஒன்றைக் கூர்ந்து நோக்கித் தேர்ந்தெடுக்கிற அவசியம் அவர்களுக்கு இன்றைக்கு இல்லை.
நட்ட நடு ராத்திரியில், புரியாத பாஷைப் படம் பார்க்காமல், பொறுப்போடு உட்கார்ந்து படித்தவர்களெல்லாம், இப்போது குனிந்த தலை நிமிராமல் விறுவிறுவென்று பரீட்சை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நடுவே உட்கார்ந்திருக்க தனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கலைவாணனுக்குத் தெரியவில்லை. இப்படி நினைக்கும்போதே, அவனுடைய தலையில் யாரோ ஏழெட்டு வட்டங்களை வரைந்து, அவற்றின் நடுமத்தியில் அம்பு எய்வதுபோல் ஒரு கற்பனை தொனித்தது.
கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த கலைவாணன், நேராக நிமிர்ந்து உட்கார்ந்தான். அவனுடைய கேள்வித்தாளில், அவனுக்கு விடை தெரிந்திருந்த அந்த மூன்று கேள்விகள்மட்டும், தனியே ஜொலிப்பதுபோல் தோன்றியது. இத்தனை அவமானகரமான சூழ்நிலையிலும், அந்த மூன்று கேள்விகள்மட்டும் தன்னைக் கைவிடாதது எப்படி என்று அவனுக்குப் புரியவில்லை.
அடுத்த பல நிமிடங்களுக்கு, அந்தக் கேள்விகளையே நன்றியுடன் வெறித்துப் பார்த்தவண்ணம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் கலைவாணன். அந்த மூன்று மதிப்பெண்களுக்குத் தான் எந்த விதத்திலும் தகுதியுள்ளவனில்லை என்று தோன்றியது அவனுக்கு.
அன்றைய தேர்வு முடிவடைவதற்கான அடையாளமாக, ஒரு நீண்ட அலாரம் ஒலித்தது. தூக்கத்திலிருந்து கலைக்கப்பட்டவர்போல் திடீரென்று விழித்தெழுந்த புரொ·பஸர், அவசரமாக எல்லோருடைய விடைத் தாள்களையும் சேகரிக்கத் தொடங்கினார். அவரிடம் தருவதற்காக கலைவாணன் தனது வெற்று விடைத் தாளை மடித்தபோது, அதிலிருந்த இருநூறு வெள்ளை வட்டங்களும் அவனைப் பார்த்து அகலச் சிரித்தன.

சற்றே அகலமான ரிப்பனைப்போல் நீண்டிருந்த அந்தக் காகிதத்தில், மொத்தம் இருநூறு சிறு வட்டங்கள் இருந்தன. இடது ஓரத்தில், ஒன்றில் தொடங்கி ஐம்பதுவரை வரிசையாக எண்கள் அடுக்கியிருக்க, ஒவ்வொரு எண்ணுக்கும் எதிரே, நான்கு வட்டங்கள். அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பேனாவால் முழுமையாகத் தீற்றி நிரப்பவேண்டும் என்று புரொ·பஸர் தெளிவாக அறிவித்திருந்தார், ‘சும்மா வெறுமனே டிக் செஞ்சாலோ, பெருக்கல் குறி போட்டாலோ மார்க் கிடையாது, எந்த ஆன்ஸர் சரின்னு நினைக்கறீங்களோ, அந்த வட்டத்தை க்ளியரா ஷேட் செய்யணும். அப்போதான் எக்ஸாம் எழுதற டிஸிப்ளீன் வரும்’

பேராசிரியர்கள் எல்லோருமே, ஆங்கிலமும் தமிழும் கலந்துதான் பேசுகிறார்கள். வாக்கியக் கட்டமைப்புகளைத் தமிழில் வைத்துக்கொண்டு, அங்கங்கே ஆங்கில வார்த்தைகளை இட்டு நிரப்பினால்தான் அவர்களுக்குச் சரிப்படுகிறது.

ஆனால், அவர்களையும் குறை சொல்வதற்கில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே படித்தாகவேண்டிய எஞ்சினியரிங் பாடங்களையெல்லாம், தமிழைத்தவிர வேறு பாஷையில் பேசியறியாத பையன்களுக்குச் சொல்லித்தருவதென்றால், இப்படி ஏதாவது நூதன வழிமுறைகளைக் கண்டுபிடித்தால்தான் உண்டு. இல்லையென்றால், வகுப்பறையில் நடத்தப்படுவது நமக்குரிய பாடம்தானா என்றுகூட நிச்சயமாகத் தெரியாதவர்களாக எல்லோரும் திருதிருவென்று விழித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கச் சகிப்பதில்லை.

மூன்றாவது வரிசையில் ஓரமாக அமர்ந்திருந்த கலைவாணன், ஒரு ரகசியப் பெருமூச்சுடன் தனது மேஜை மேலிருந்த கேள்வித் தாளை இன்னொரு முறை வெறித்துப் பார்த்தான். அடுத்த ஒன்றரை மணி நேரமும், விரல் சொடுக்கும் நேரத்தில் ஓடி மறைந்துவிடாதா என்றிருந்தது அவனுக்கு.

பால் வெள்ளைக் காகிதத்தில் கொசகொசவென்று எறும்புகள் மொய்த்ததுபோல் வரிசையாகக் கேள்விகள். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள், அவற்றில் சரியான விடையைக் கண்டறிந்து, அதற்குரிய வட்டத்தைத் தீற்றி நிரப்பவேண்டும்.  இதைவிட சுலபமான தேர்வு முறை இருக்கவேமுடியாது.

ஆனால், அந்தச் சுலபத்துக்குள்தான், எல்லாக் கஷ்டமும் ஒளிந்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டான் கலைவாணன். ஒவ்வொரு கேள்விக்கும், சரியான பதிலைக் கொடுத்துவிட்டு, ஆனால் அதைச் சட்டென்று கண்டுபிடித்துவிடமுடியாதபடி, சுற்றிலும் தவறான பதில்களை நிரப்பிவிடுவது கொடூரமான அநீதியாகத் தோன்றியது அவனுக்கு.

இப்படி மொத்தம் ஐம்பது அநீதிகளைச் செய்துவிட்டு, அந்தக் களைப்பில் சாய்ந்து அமர்ந்திருந்தார் புரொ·பஸர் பத்மனாபன். ஒரு கோணத்தில் பார்க்கிறபோது, அவர் அசந்து தூங்கிக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. ஆனால் அதேசமயம், எங்கேனும் பேச்சுக் குரலோ, கிசுகிசுப்புச் சத்தமோ கேட்டால், சட்டென்று பொங்கியெழுந்து தண்டித்துவிடுவதுபோலவும் தென்பட்டார்.

கலைவாணன் அவரை வெறுப்போடு பார்த்தான். அந்த வகுப்பிலிருந்த மற்ற மாணவ, மாணவிகள் எல்லோருமே, அதே அளவு வெறுப்புடன்தான் புரொ·பஸரை இப்போது சபித்துக்கொண்டிருப்பார்கள் என்று நிச்சயமாக எண்ணினான் அவன்.

ஆனால், எல்லாச் சாபங்களும் பலித்துவிடுவதில்லை. கட்டாயமாக பலிக்கும் சாபங்களை வழங்கவேண்டுமானால், நீங்கள் ரொம்ப நல்லவராக இருக்கவேண்டும். ரொம்ப நல்லவராக இருந்துவிட்டால், அப்புறம் யாரையும் சபிக்கத் தோன்றாது.

கலைவாணன் மீண்டும் தனது கேள்வித் தாளை பஸ்பமாக்கிவிடுவதுபோல் பார்த்தான். உலகத்தில் நல்லவர்களையும், கெட்டவர்களையும் ஒன்றாகச் சேர்த்து வாழவைக்கும் கடவுள்போல், அந்தக் கேள்வித் தாளில் சரியான விடைகளையும், தவறான விடைகளையும் கலந்து கட்டி நிரப்பியிருந்தார் புரொ·பஸர் பத்மனாபன். இந்தக் குவியலிலிருந்து, சரியான விடைகளைமட்டும் பொறுக்கியெடுக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்துக்குப் பெயர், பரீட்சை. த்தூ !

‘மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பாதே’, கிறிஸ்துவப் பாதிரியார்போல் கனவில் பேசினார் பத்மனாபன். அவர் கையில் ஒரு சிறிய மரத் துண்டு இருந்தது. அதை வெகு தூரத்தில் வீசி எறிந்துவிட்டு, ‘ஒரு கொடம் தண்ணி ஊத்தி, அம்பது பூ பூத்ததாம்’, என்று பெண் குரலில் ராகமிழுத்துப் பாடினார் அவர்.

கண்களை மூடியபடி, தலையை பலமாக உலுக்கிக்கொண்டான் கலைவாணன். கனவு உடைந்து, ஐம்பது பூக்களும் திசைக்கொன்றாகச் சிதறி விழுந்தன. ஒவ்வொரு பூவிலும் நான்கு இதழ்கள். அவை ஒவ்வொன்றும், சிறு வட்டங்களாகி, அவனுடைய விடைத்தாளில் நிறைந்திருக்க, இப்போது எதில் எந்த வண்ணத்தைத் தீற்றி நிரப்புவது ?

பேனா நுனியைக் கொறித்தபடி ஜன்னலுக்கு வெளியே பார்த்தான் அவன். கல்லூரி அரங்கத்தை ஒட்டினாற்போலிருந்த ஒரு மரத்தில், பழுப்பும், பச்சையுமாக இலைகள் கலைந்து நிரம்பியிருப்பதை அசுவாரஸ்யமாக வெறித்தவாறு, புரொ·பஸர் மாதாந்திரத் தேர்வை அறிவித்த அந்த வெள்ளிக்கிழமையை நினைத்துக்கொண்டான் கலைவாணன்.

இந்த விஷயத்தில் அவரைக் குற்றம் சொல்லவேமுடியாது. மற்ற ஆசிரியர்களைப்போல் திடுதிப்பென்று நினைத்துக்கொண்டாற்போல் பரீட்சை வைக்காமல், ஒரு வாரம் முன்பாகவே, தேர்வுக்கான தேதி, எந்தெந்தப் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும் என்றெல்லாம் விளக்கமாகச் சொல்லிவிட்டார்.

ஆனால், அந்த ஒரு வாரத் தவணைதான் பிரச்சனையாகிவிட்டது. காலண்டர் மறந்த ஹாஸ்டல் வாழ்க்கையில், அவர் கொடுத்த ஏழு நாள்களும் விருட்டென்று தரையைப் பிளந்துகொண்டு எங்கோ மூழ்கி மறைந்துவிட்டன. மாதாந்திரத் தேர்வுதானே என்கிற அலட்சியத்தில், இன்னும் நாள் இருக்கிறது என்ற நம்பிக்கையில், பரீட்சைக்கு முந்தின நாள்கூட ராத்திரிமுழுதும் உட்கார்ந்து படித்துவிடலாம் என்கிற தைரியத்தில், ‘நாளைக்கு’, ‘நாளைக்கு’ என்று தள்ளிப்போட்டு, இறுதியில், அந்தக் கடைசி ராத்திரி வந்தபோது, மறுநாள் தேர்வு என்கிற விஷயமே அவனுக்கு நினைவில்லை.

இன்றைக்கு வகுப்பில் நுழைந்தபோதுகூட அவனுக்கு இந்தத் தேர்வைப்பற்றி யாரும் சொல்லியிருக்கவில்லை. ஆனால், பெண்கள் எல்லோரும் ஆளுக்கொரு புத்தகத்துடனோ, அல்லது, வகுப்புக் குறிப்புகளை ஜெராக்ஸ் செய்த காகிதங்களுடனோ நிலையற்று அலைந்துகொண்டிருப்பதைப் பார்த்தபோதுதான், கொஞ்சம் சந்தேகப்பட்டு விசாரித்தான், ‘சும்மா ஜோக் அடிக்காதீங்க கலை, இன்னிக்கு மன்த்லி டெஸ்ட், உங்களுக்குத் தெரியாதா ?’, என்று புருவம் சுருக்கிச் சொன்னாள் ஜெனி·பர்.

அந்த அதிர்ச்சியை அவன் முழுவதுமாக ஜீரணிப்பதற்குள், புரொ·பஸர் வந்துவிட்டார். விறுவிறுவென்று வினாத்தாள்களும், விடைத்தாள்களும் வினியோகிக்கப்பட்டன. எல்லோரும் கொஞ்சம் தள்ளித்தள்ளி அமர்ந்துகொண்டு, தேர்வு தொடங்கிவிட்டது.

தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கிற எல்லோரையும் வெறுப்போடு முறைத்தான் கலைவாணன். முக்கியமாக, இந்த ஹாஸ்டல் பையன்கள். நேற்று மாலைமுழுக்க அங்கேயேதானே சுற்றிக்கொண்டிருந்தேன், யாராவது ஒரு பயல் இந்த விஷயத்தை ஞாபகப்படுத்தியிருக்கக்கூடாதா ?

இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான், ஹாஸ்டல் வாழ்க்கையின் சகல சௌகர்யங்களையும் மீறி, அதன்மீது ஒரு வெறுப்பு விழுந்துவிடுகிறது. பள்ளிக்கூடத்தில் படித்தபோது, இப்படி ஒரு பரீட்சையை மறந்திருப்பானா கலைவாணன் ? அவனே மறந்தாலும், அப்பாவும், அம்மாவுமாக, ஒரு முறைக்கு இருபது முறையாவது ஞாபகப்படுத்தி ‘எல்லாப் பாடமும் படிச்சு முடிச்சாச்சா ?’, என்று நச்சரித்துத் துளைத்திருப்பார்களே.

அப்போதெல்லாம், அவர்கள்மீது கோபம்தான் வந்தது. பெற்ற பிள்ளையை நம்பாமல், இப்படி விசாரணைக் கைதியைத் தோண்டித் துருவுவதுபோல் தொந்தரவு செய்கிறார்களே என்று பலமுறை மனதுக்குள் புலம்பியிருக்கிறான். ஆனால், அந்தத் தோண்டல்களும், துருவல்களும் இருந்திராவிட்டால் என்ன நடந்திருக்கும் என்று இப்போதுதான் ஓரளவு புரிகிறது.

சிவந்த கண்களை அழுந்தத் தேய்த்துக்கொண்டான் கலைவாணன். வாட்சைப் பார்த்தபோது, இன்னும் ஒரு மணி நேரத்துக்குமேல் மீதமிருந்தது.

இப்போது இந்தத் தேர்வில் தோற்றுவிட்டால் என்ன ஆகும் என்று கொஞ்சம் யோசித்துப்பார்த்தான் அவன். மாதாந்திரத் தேர்வுகளில் ·பெயில் ஆவதொன்றும் கிரிமினல் குற்றமில்லை. ஆகவே, பெரிதாக எதுவும் நடந்துவிடாது என்றுதான் அவனுக்குத் தோன்றியது.

ஆனாலும், இதில் சில மறைமுகப் பிரச்சனைகள் ஒளிந்திருக்கின்றன. நிறைய மார்க் எடுக்கிற பையன்களைதான் ஆசிரியர்களுக்குப் பிடிக்கும். ஆகவே, இந்தத் தேர்வில் சொதப்பியபிறகு, புரொ·பஸர் பத்மனாபனின் பார்வையில், கலைவாணன் ஒரு மக்குப் பையன் என்று தீர்மானமாகிவிடுகிற சாத்தியங்கள் உண்டு. அவர்தான் இந்தத் துறையின் தலைமைப் பேராசிரியர் என்பதால், அவருடைய இந்த எண்ணம் மற்ற ஆசிரியர்களின்மீதும் படியக்கூடும். எல்லோருமாகச் சேர்ந்து, அவனைக் கல்லூரியிலிருந்து தள்ளிவைத்துவிடுவார்களோ என்னவோ.

தனது அதீத கற்பனையை எண்ணி மெல்லச் சிரித்துக்கொண்டான் கலைவாணன். ஒரு மாதாந்திரப் பரீட்சையைச் சரியாக எழுதவில்லை என்பதற்காக, தன்னுடைய எதிர்காலமே இருண்டுபோய்விடப்போவதில்லை என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது. என்றாலும், மனதின் ஒரு மூலையிலிருந்த குற்றவுணர்ச்சி, அவனை அலைக்கழித்துக்கொண்டுதானிருந்தது.

கை விரல்களைக் கோர்த்து, முன்னே நீட்டி சொடக்கெடுத்தபடி, சுற்றிலும் பார்வையைச் செலுத்தினான் கலைவாணன். அவனைத்தவிர மற்ற எல்லோரும் மும்முரமாகப் படித்துக்கொண்டோ, எழுதிக்கொண்டோ இருந்தார்கள். ஒரு தலைகூட நிமிர்ந்திருக்கவில்லை.

மீண்டும் ஒருமுறை தனது கேள்வித் தாளைப் புரட்டினான் அவன். பெரும்பாலான கேள்விகள் அர்த்தமற்றவையாகத் தோன்றின. ஆனால், அந்தக் கேள்விகள் எல்லாவற்றையும் இதற்குமுன் எங்கோ பார்த்திருக்கிறோம் என்பதுபோல் ஒரு மெலிதான நினைவு, கிணற்றினுள்ளிருந்து கத்துகிற பூனைக்குட்டியின் கீச்சுக் குரல்போல் கேட்டுக்கொண்டிருந்தது.

அந்தக் கேள்விகளுக்கான பதில்கள், மேலும் குழப்பமூட்டின. ஒவ்வொரு கேள்விக்கும் A, B, C, D என்று இலக்கமிட்டு நான்கு பதில்கள் தரப்பட்டிருந்தன. ஆனால், புரிந்த கேள்விகளின் பதில்கள் புரியாமலும், புரியாத கேள்விகளின் பதில்கள் நான்குமே புரிவதுபோலும் தோன்றியது. எல்லாக் கேள்விகளுக்குமே, நான்கு சரியான பதில்கள் இருப்பதாகத் தோன்றியது கலைவாணனுக்கு.

இதற்குமுன் எந்தப் பரீட்சையும் கலைவாணனுக்கு இத்தனை சிரமமாக இருந்ததில்லை. பள்ளி நாள்களில், தினந்தோறும் மாலையில் அன்றன்றைய பாடங்களைப் படித்துவிடுகிற பழக்கம். ஆகவே, தேர்வு சமயங்களில் எல்லாப் பாடங்களையும் வேகமாக ஏழெட்டுமுறை புரட்டிவிட்டாலே போதும்.

என்றாலும், கலைவாணனைப் பொறுத்தவரை, தேர்வுக்குரிய பாடங்கள் ஒவ்வொன்றிலும், எந்த ஒரு தலைப்பையும் விட்டுவைக்காமல் படித்தாகவேண்டும். இல்லையென்றால் அவனுக்குத் திருப்தியே இருக்காது. சில சமயங்களில், சக நண்பர்களோடு சேர்ந்து படிக்கிறபோது, அவர்களிடம் புத்தகத்தைக் கொடுத்து கேள்வி கேட்கச் சொல்வது, மாதிரித் தேர்வுகள் எழுதிப் பார்ப்பது என்று பலவிதங்களில் தனது தயார்த்தன்மையைச் சோதித்துப்பார்த்துக்கொள்வான்.

அதேபோல், ஒவ்வொரு தேர்வுக்குமுன்பும், பேனா முனையில் ததும்புமளவு இங்க் ஊற்றிக்கொள்வான். ஒருவேளை அந்தப் பேனா மக்கர் செய்துவிடுமோ என்கிற பயத்தில், இன்னொரு உபரி பேனாவும், பென்சில், ரப்பர், ஸ்கேல், காம்பஸ் வகையறாக்களும் ஜாமின்ட்ரி பாக்ஸில் கட்டாயமாக இருக்கும். பரீட்சை எழுதிமுடித்தபின், தாள்களைக் கோர்த்துக் கட்டுவதற்கான நூலைக்கூட கையோடு கொண்டுசென்றுவிடுகிறவன் அவன்.

கல்லூரிக்கு வந்தபின், அந்த கவனமெல்லாம் அவசியமற்றதாகிவிட்டது. தினசரி இங்க் ஊற்றி, பழுது பார்த்து, அக்கறையாகப் பராமரிக்கவேண்டிய தடிமன் பேனாக்களை மறந்து, உபயோகம் தீருமுன்பே வீசியெறிய நேர்ந்துவிடுகிற மெலிந்த பிளாஸ்டிக் பேனாக்களுக்கு மாறியதில் தொடங்கி, முன்பிருந்த எல்லா ஒழுங்கும் தடம்புரண்டுவிட்டது.

முதலாண்டு ஆரம்பத்தில், ராக்கிங் பிரச்சனைகளுக்கு பயந்து, எப்போதும் ஹாஸ்டலில் ஒளிந்திருந்தபோதுகூட, ஓரளவு ஒழுங்காகப் படிக்கமுடிந்தது. ஆனால், அதன்பிறகு நண்பர்களோடு வெளியே சுற்றத்தொடங்கியதிலிருந்து, ஒரு நாளுக்கு 24 மணி நேரம் போதவில்லை. தினசரிப் படிப்பெல்லாம் அதீதமான பழக்கம் என்று தோன்றிவிட்டது. தேர்வுக்குச் சில நாள்கள்முன்பு, முழுமூச்சாக உட்கார்ந்து படித்தாலே நல்ல மார்க் வாங்கிவிடலாம் என்று ஓரிரு அனுபவங்களிலேயே தெரிந்துகொண்டுவிட்டான் கலைவாணன்.

அது ஒரு அனுபவம் என்றால், இன்றைக்கு நேர்ந்திருப்பது வேறொரு அனுபவம். பங்குச் சந்தையில் லட்சங்களில் சம்பாதிக்கிறவர்கள், பிறிதொரு நாளில் எல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோல, முற்றிலும் சிநேகிதமற்ற ஒரு கேள்வித் தாளைக் கையில் வைத்துக்கொண்டு திகைப்போடு அமர்ந்திருக்கவேண்டியதாகிவிட்டது. ஆவேசமான பெரிய போர்க்களத்தில், ஆடைகளற்று நிர்வாணியாக நிற்கிறவன்போல் தன்னை உணர்ந்தான் கலைவாணன்.

அவனைச் சுற்றி அமர்ந்திருந்த எல்லோருமே, மும்முரமாகப் போரிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களும் ஒழுங்காகப் படித்தார்களா, இல்லை, குத்துமதிப்பாக ஏதோ விடைகளைத் தீற்றுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனாலும், கேள்விகளைப் படித்து பதில் எழுதுகிற தைரியமாவது அவர்களுக்கு இருக்கிறது.

கலைவாணன் மறுபடி தனது கேள்வித் தாளை நிச்சயமில்லாமல் புரட்டினான். உச்சிமுதல் பாதம்வரை விறுவிறுவென்று பார்வையை ஓட்டியதில், ஐம்பது கேள்விகளில், மொத்தம் மூன்று கேள்விகளுக்குமட்டும் அவனுக்கு பதில் தெரிந்திருப்பதாகத் தோன்றியது.

அந்த மூன்று கேள்விகளுக்குமட்டும் சரியான பதிலைத் தீற்றிக் கொடுத்துவிட்டு வெளியேறிவிடலாமா என்று யோசித்தான் கலைவாணன். இப்போதைய நிலைமையில், வேறு எந்த வழியும் அவனுக்குத் தென்படவில்லை. என்றாலும், அப்படிச் செய்வதில் ரிஸ்க் அதிகம். ஒன்றரை மணி நேரப் பரீட்சையை, முப்பத்தைந்து நிமிடங்களில் முடித்துவிட்டுப் போகிறவனை, எந்த புரொ·பஸரும் வியந்து, மதிக்கப்போவதில்லை. போதாக்குறைக்கு, அடுத்த முக்கால் மணி நேரத்துக்கு அவனுடைய விடைத் தாளின் வெறுமையைப் புரட்டிப் பார்த்து, மனதுக்குள் திட்டிக்கொண்டிருப்பார்கள். அந்த எரிச்சலில், பூஜ்ஜியத்துக்குக் குறைவாக மார்க் சுழித்துவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆகவே, படுகுழியில் விழுவதானாலும், கொஞ்சம் கௌரவத்தோடு விழுவதுதான் நல்லது என்று முடிவுகட்டிக்கொண்டான் அவன். எப்படியாவது ஒன்றரை மணி நேரத்தை இங்கேயேதான் கழித்தாகவேண்டும். அதன்பிறகு, எல்லோரோடும் சேர்ந்து விடைத்தாளைச் சமர்ப்பிக்கும்போது, அவன் ஐம்பது கேள்விகளுக்கும் பதில் எழுதியிருக்கிறானா, இல்லையா என்று புரொ·பஸர் கவனிக்கப்போவதில்லை.

ஆனால், இப்போது மிச்சமிருக்கிற நாற்பத்தேழு கேள்விகளையும் என்னதான் செய்வது ?

மறுபடி யோசனையில் விழுந்துவிட்ட கலைவாணனுக்கு, முந்தைய நாள் இரவுதான் சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது. விடுதியின் டி. வி. அறையில், உருப்படாத ஹிந்திப் படமொன்றை நண்பர்களோடு சேர்ந்து கிண்டல், கேலியுடன் ரசித்த நேரத்தில், கொஞ்சமாவது படித்திருக்கலாம்.

நேற்று அவனோடு படம் பார்த்தவர்கள் யாரும், இப்போது இந்த அறையில் இல்லை என்று கசப்புடன் நினைத்துக்கொண்டான் கலைவாணன். அவர்களெல்லாம் வேறு வகுப்பு. A, B, C அல்லது D என்ற நான்கில் ஒன்றைக் கூர்ந்து நோக்கித் தேர்ந்தெடுக்கிற அவசியம் அவர்களுக்கு இன்றைக்கு இல்லை.

நட்ட நடு ராத்திரியில், புரியாத பாஷைப் படம் பார்க்காமல், பொறுப்போடு உட்கார்ந்து படித்தவர்களெல்லாம், இப்போது குனிந்த தலை நிமிராமல் விறுவிறுவென்று பரீட்சை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நடுவே உட்கார்ந்திருக்க தனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கலைவாணனுக்குத் தெரியவில்லை. இப்படி நினைக்கும்போதே, அவனுடைய தலையில் யாரோ ஏழெட்டு வட்டங்களை வரைந்து, அவற்றின் நடுமத்தியில் அம்பு எய்வதுபோல் ஒரு கற்பனை தொனித்தது.

கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த கலைவாணன், நேராக நிமிர்ந்து உட்கார்ந்தான். அவனுடைய கேள்வித்தாளில், அவனுக்கு விடை தெரிந்திருந்த அந்த மூன்று கேள்விகள்மட்டும், தனியே ஜொலிப்பதுபோல் தோன்றியது. இத்தனை அவமானகரமான சூழ்நிலையிலும், அந்த மூன்று கேள்விகள்மட்டும் தன்னைக் கைவிடாதது எப்படி என்று அவனுக்குப் புரியவில்லை.

அடுத்த பல நிமிடங்களுக்கு, அந்தக் கேள்விகளையே நன்றியுடன் வெறித்துப் பார்த்தவண்ணம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் கலைவாணன். அந்த மூன்று மதிப்பெண்களுக்குத் தான் எந்த விதத்திலும் தகுதியுள்ளவனில்லை என்று தோன்றியது அவனுக்கு.

அன்றைய தேர்வு முடிவடைவதற்கான அடையாளமாக, ஒரு நீண்ட அலாரம் ஒலித்தது. தூக்கத்திலிருந்து கலைக்கப்பட்டவர்போல் திடீரென்று விழித்தெழுந்த புரொ·பஸர், அவசரமாக எல்லோருடைய விடைத் தாள்களையும் சேகரிக்கத் தொடங்கினார். அவரிடம் தருவதற்காக கலைவாணன் தனது வெற்று விடைத் தாளை மடித்தபோது, அதிலிருந்த இருநூறு வெள்ளை வட்டங்களும் அவனைப் பார்த்து அகலச் சிரித்தன.

சென்ஷி

unread,
May 31, 2010, 3:24:36 AM5/31/10
to panb...@googlegroups.com

கோடம்பாக்கம்: Charu Nivethitha

சாரு நிவேதிதா

ஹாலிவுட் படங்களைக் கொஞ்சம் உல்டா பண்ணி தமிழ் மக்களுக்குக் கொடுத்து, அவர்களைச் சந்தோஷப்படுத்துவது கோடம்பாக்கத்து வழக்கங்களில் ஒன்று. அதன்படி, பிரபல எழுத்தாளன் கச்சிராயனைச் சந்தித்த சிரஞ்சீவி என்ற ஓர் இளம் தயாரிப்பாளர், அவன் கையில் ஒரு டி.வி.டி-யைக் கொடுத்து “இதுதான் என் அடுத்த படம். இதற்கு நீங்கள்தான் வசனம்” என்று சொன்னார்.

சிரஞ்சீவி பற்றி அவன் கேள்விப்பட்டு இருக்கிறான். அவர் இதற்கு முன் தயாரித்த இரண்டு படங்களுமே ஓரளவுக்கு வசூல் கொடுத்தவை. இப்போது இந்தப் படத்துக்கு அவர்தான் இயக்கம். அவரே ஹீரோ, அவரே தயாரிப்பாளர்!

அந்த டி.வி.டி-யைப் பார்த்த அவன் தன் வாழ்நாளின் உச்சகட்ட அதிர்ச்சியை அடைந்தான். காரணம், ‘U Turn’ என்ற அந்தப் படத்தின் கதை அப்படி.

ஜெனிஃபர் லோபஸ் நடித்த அந்தப் படத்தை நீங்கள் பார்த்திருந்தால், உங்களுக்கு அதன் விபரீதம் இதற்குள் புரிந்திருக்கும். பார்த்திருக்காவிட்டால் இப்போது அதன் கதையைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

ஒரு ஆளிடம் வாங்கிய மிகப் பெரிய கடனைத் திருப்பித் தருவதற்காக ஒரு பெரும் தொகையை எடுத்துக்கொண்டு போகிறான் பாபி என்ற இளைஞன். இடையில், ஓர் ஊரில் அவனுடைய கார் ரிப்பேர் ஆகிவிடுகிறது. அந்த நேரத்தில் அவன் நுழைந்த கடையில் நடந்த கொள்ளை முயற்சியில், அவனுடைய பணம் அத்தனையும் பறிபோகிறது. ஏற்கெனவே குறிப்பிட்ட தவணையில் வட்டி கட்டாததால், அந்த ஈட்டிக்காரன் பாபியின் இரண்டு விரல்களைத் துண்டித்திருக்கிறான். இப்போது சொன்னபடி கொடுக்காவிட்டால் எந்த உறுப்பைத் துண்டிப்பானோ?

அதே ஊரில் வாழும் ஒரு தம்பதி ஜெனிஃபரும் அவளுடைய 54 வயதுக் கணவன் ஜாக்கும். ஜெனிஃபரைக் கொன்றுவிட்டால் பெரும் பணம் கொடுத்து பாபியை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதாகச் சொல்கிறான் ஜாக். ஆனால், ஜெனிஃபர் கூறும் கதையோ படுபயங்கரமாக இருக்கிறது. ‘தான் ஜாக்குக்கு மனைவி மட்டும் அல்ல… அவனுடைய மகளும்தான். தன்னைச் சிறு வயதில் இருந்தே பாலியல்ரீதியாகத் துன்புறுத்திக்கொண்டு இருக்கும் ஜாக், என் அம்மாவைக் கொன்றுவிட்டு என்னை மனைவியாக வைத்துக்கொண்டு இருக்கிறான்’ என்கிறாள். ”நீ ஜாக்கைக் கொன்றுவிட்டால் உனக்குப் பெரும் தொகை தருகிறேன்” என்று பாபியிடம் சொல்கிறாள் ஜெனி.

கடைசியில் என்ன நடக்கிறது என்பது இப்போது நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் இந்தக் கதைக்குத் தேவை இல்லை. டி.வி.டி-யைப் பார்த்த ராயன் அடித்துப் பிடித்துக்கொண்டு சிரஞ்சீவியைப் பார்க்க ஓடினான். ஏற்கெனவே இலக்கிய உலகில் அவனுடைய பெயர் கன்னாபின்னா என்று கெட்டுக்கிடந்தது. எப்போதும் பாரிலேயே விழுந்துகிடப்பான்… ஸ்த்ரீலோலன் அப்படி இப்படி என்று அவனைப்பற்றி ஏகப்பட்ட வதந்திகள் உலவிக்கொண்டு இருந்தன. இதெல்லாம் போதாது என்று கச்சிராயனே ‘இன்செஸ்ட்’டை மையமாகவைத்து ஓரிரண்டு கதைகளை எழுதி இருக்கிறான். போதாதா?

ஆனால், சிரஞ்சீவி பேச்சில் வல்லவர். “கதையை நாம் தமிழ்ச் சூழலுக்கு ஏற்றபடி மாற்றிவிடுவோம். கவலையைவிடுங்கள். அப்பாவுக்குப் பதில் மாமா” என்றார்.

“அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? மாமா என்றால் ஜெனி முறைப்பெண் ஆகிவிட மாட்டாளா?”

“சரி, வளர்ப்புத் தந்தை என்று வைத்துக்கொள்ளுங்கள். அதோடு, கதையின் முடிவில் அந்த வில்லனைக் கொன்றுவிடுவோம். பிறகென்ன?”

கச்சிராயன் யோசனையில் ஆழ்ந்தபோது அவன் கையில் ஒரு பணக்கட்டை வைத்தார் சிரஞ்சீவி. “இது அட்வான்ஸ்தான். 10,000 ரூபா. வசனத்தை முடிச்சிட்டா இன்னொரு 40 குடுத்துர்றேன். இது ரொம்ப சின்ன அமௌன்ட். ஆனா, படம் நிச்சயம் பிச்சுக்கிட்டு ஓடும். அப்போ உங்களைச் செமத்தியா கவனிச்சுர்றேன்.”

அவனுடைய இலக்கிய சகாக்கள் எல்லாம் லகரங்களில் வாங்கிக்கொண்டு இருக்கும்போது,இது என்ன பிசாத்து ஐம்பதாயிரம் என்று யோசித்தான் ராயன். ஆனால், அவன் ஒரு சினிமா பைத்தியம். தவிர, எடுத்த எடுப்பிலேயே பணத்தைப்பற்றிப் பேசிக்கொண்டு இருந்தால் இண்டஸ்ட்ரியில் ‘அந்த ஆள் ஒரு வில்லங்கம்’ என்ற பெயர் வந்துவிடும் அல்லவா?

முதலில் கே.கே. நகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆபீஸ் போடப்பட்டது. மதியம் 12 மணிக்கு ஆரம்பிக்கும் டிஸ்கஷன். அதற்குள்ளாகவே ஓர் உதவி (இயக்குநர்) மதியச் சாப்பாடு வாங்கக் கிளம்பி இருப்பார்.

சிரஞ்சீவியைச் சுற்றி ஆறு உதவிகள் இருந்தனர். இவர்களிடையே சீனியா ரிட்டி உண்டு. ஆக, சீனியராக இருந்தவர் பெயர் நாதன். 65 வயதுக்கு மேல் இருக்கும். பார்க்க அந்தக் காலத்து ‘என்னத்தே கண்ணையா’வைப் போல் இருப்பார். 45 ஆண்டுகளாக உதவி இயக்குநர். ஆரம்ப கட்டத்தில் கச்சிராயனுக்கு இது ஒரு புதிராகவே இருந்தது. பிறகு, போகப் போகக் காரணம் விளங்கிவிட்டது. சிவாஜி மற்றும் அவர்படங் களுக்கு வசனம் எழுதிய தூயவன் போன்றவர்களிடம் எல்லாம் வேலை செய்திருக்கிறார் நாதன். இதில் என்ன விசேஷம் என்றால், தூயவனும் கச்சிராயனின் சொந்த ஊரான நாகூரைச் சேர்ந்தவர்.

நாகூரில் இருந்து பிரபலமானவர்கள் யார்? நாகூர் ஹனிபா தவிர, தூயவன். இவர்களுக்குப் பிறகு நாம்தான் என்ற ஓர் எண்ணம் லேசாகத் தலைதூக்கியது ராயனுக்கு. ஆனால், நாதனைப் பார்க்கும்போது எல்லாம் கொஞ்சம் கலவரமாகும். ஓர் ஆள் 45 ஆண்டுகளாக உதவி இயக்குநராகவே காலம் கழிப்பது என்றால், இது என்ன சினிமா உலகம்?

அன்றைய தினம் ராயப்பேட்டையில் உள்ள சபாரி ஹோட்டல் வரை போயிருந்தார் உதவி. அங்கேதான் ஃபிஷ் பிரியாணி நன்றாக இருக்கும். மறுநாள் ஆழ்வார்பேட்டை சாம்கோ உணவகத்தில் இருந்து பிரெய்ன் பிரியாணி வரும். இதே போல் கோடம்பாக்கம், வடபழனி வட்டாரங்களில் உள்ள பல மெஸ்களில் இருந்தும் தருவிக்கப்படும்.

”இதெல்லாம் பரவால்ல சார். முன்னாடி இருந்த டைரக்டர் சபாரில ஃபிஷ் பிரியாணி வாங்கச் சொல்லுவான்; சாம்கோவுல காடை ஃப்ரை; அப்புறம் அங்கேர்ந்து செனடாப்ரோடு தாபா எக்ஸ்பிரஸ்ல ஷாமி கபாப். இப்படி ஒருவேளை சாப்பிடறதுக்கே நாலு கடைக்கு அலையணும். என் சொத்தையே காலி பண்ணிட்டான்” என்று மூக்கால் அழுவார் சிரஞ்சீவி. அந்தப் பழைய இயக்குநர் கொடுத்த டார்ச்சரின் காரணமாகத்தான்இவரே இயக்குவது என்று முடிவு செய்து விட்டதாகவும் சொன்னார்.

இது தவிர, சினிமா துறையில் இருப்பதால் கிடைக்கும் இன்னொரு அனுகூலம், அங்கே கிடைக்கும் அதி பயங்கரமான கிசுகிசுச் செய்திகள். சிரஞ்சீவியின் உதவிகளுள் ஒருவனான கிரி சொன்ன கிசுகிசுவைக் கேட்டு, மூளையே கிறுகிறுத்துப் போனது அவனுக்கு.

இப்போது கிரிக்கு 35 வயது இருக்கலாம். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவன் சென்னைக்கு வந்த புதிது. சினிமா சான்ஸ் தேடி அலைந்த நண்பர்கள், சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்தவர்கள், வேலை தேடிக்கொண்டு இருந்தவர்கள் என்று சிலர் ஒரே அறையில் தங்கி இருந்தார்கள்.

ஒரு நாள் இரவு, அவன் அறையில் தங்கியிருந்த ஒருவன் மிகுந்த பதற்றமாக வந்தான். இப்போது பிரபலமாக இருக்கும் ஒரு நடிகரின் அல்லக்கை அவன். அந்த நடிகரும் அவரது அல்லக்கைகள் சிலரும் சென்னைக்கு வெளியே உள்ள ஒரு பீச்சில் குடித்துக் கும்மாளமிட்டுவிட்டுத் திரும்பி இருக்கிறார்கள். வரும் வழியில் ஏதோ தோன்ற… கார் நேராக ஓர் அநாதை ஆசிரமத்துக்குத் திரும்பிவிட்டது. அந்த ஆசிரமத்துக்குப் படியளக்கும் தர்மகர்த்தாக்களில் நடிகரும் ஒருவர். அங்கிருந்த பார்வைஅற்ற ஒரு பெண்ணை காரில் தூக்கிப் போட்டு ஃபார்ம் ஹவுஸ் சென்றுஇருக்கிறார்கள். நாலு பேர். இறுதியாக இவனை அழைத்தார்களாம். இவன் போகும்போது அவளுக்கு மூச்சுப் பேச்சே இல்லை. இவன் பயந்து போய் வெளியே வந்துவிட்டான். இவனைத் தவிர மற்ற எல்லோரும் வி.ஐ.பி. நபர்களின் பிள்ளைகள்.

”ஒருவேளை ஏதாவது பிரச்னை என்றால் நாங்க பணம் தர்றோம். நீ ஸ்டேஷன் போறியா?” என்று கேட்டுஇருக்கிறார்கள். அவன் மிரண்டு போய் இரண்டு நாட்கள் தலைமறை வாக இருந்தான். நல்லவேளை அந்தப் பெண் பிழைத்துக் கொண்டதால் பிரச்னை இல்லாமல் போயிற்று.

”இது நடந்து 10 வருடங்கள் இருக்கும். இப்போது அந்த ரூம்மேட்கள் எல்லாரும் எங்கே இருக்கிறார்கள்; என்ன செய்கி றார்கள் என்று தெரியவில்லை. அந்த ஆசிரமம் இன்னும் இருக்கிறது. அந்த நடிகர் இப்போது ரொம்பப் பிரபலம்” என்று சொல்லி முடித்தான் கிரி.

இதுபோல் திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா மாதிரி எக்கச்சக்கமான கிசுகிசுக்கள் வந்து விழுந்து கொண்டே இருந்தன.

மதிய உணவுக்குப் பிறகு 3 மணிக்கு ஆரம்பித்தால் டிஸ்கஷன் இடைவேளை மாலை 7 மணிக்கு. அதற்குப் பிறகு டிஸ்கஷன் சரக்கோடு துவங்கும். ராயனுக்கும் சிரஞ்சீவிக்கும் ஆர்.சி.கோல்டு. மற்ற உதவிகளுக்கு ஓல்டு மாங்க், எம்.சி.பிராந்தி, எம்.ஜி.எம்.வோட்கா என்று அவரவர் பிரியப்படி வந்துவிடும். ஆனால், உதவிகள் யாரும் ஒரேயடியாகக் குடித்துவிட்டு மட்டையாகிவிட மாட்டார்கள். அந்தச் சலுகை இயக்குநருக்கும் ரைட்டருக்கும் மட்டும்தான்.

எல்லாம் ராணுவ ஒழுங்கோடும் கட்டுக்கோப்புடனும் நடக்கும். இந்த உதவி இயக்குநர்கள் என்ற பிரிவு மட்டும் இல்லாவிட்டால் சினிமா துறையே ஸ்தம்பித்துவிடும். எல்லோரும் சாப்பிட்ட இலைகளை எடுக்க வேண்டும். டீ கிளாஸை எடுக்க வேண்டும். ஆஷ்ட்ரேயைச் சுத்தப்படுத்த வேண்டும். இன்னும் இப்படிநூற்றுக் கணக்கான வேலைகள். எல்லாம் எதற்காக? ஒரு காலத்தில் ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் போன்றவர் களைப் போல் ஆக வேண்டும்என்ற கனவுதான்.

சரக்கோடு ஆரம்பிக்கும் இரண் டாவது செஷன் டிஸ்கஷன்தான் இன்னும் சூடாக இருக்கும். சமயங் களில் இரவு 3 மணி வரைக்கும் கூட நீளும். அதிலும் இந்த கிரிக்கும் நாதனுக்கும் ஆகவே ஆகாது. கிரி ஒன்று சொன்னால் நாதன் அதற்கு நேர் எதிராக ஒன்று சொல்வார். சமயங்களில் இரண்டு பேரும் கட்டிப்புரண்டு அடித்துக்கொள்வார்களோ என்றுகூடப் பயமாக இருக்கும். இது தவிர, கதை பற்றி இயக்குநர் ஏதாவது சொன்னால் அதற்கும் கட்டையைப் போடுவார் நாதன். கட்டை என்றால் சாதாரண கட்டை அல்ல. பைக்கில் சென்றுகொண்டு இருக்கும்போது குறுக்கே கட்டையைப் போட்டால் எப்படி இருக்கும், அந்த மாதிரி கட்டை.

இயக்குநர் சூடாகி ஏதாவது பதில் சொன்னால், “இவ்வளவும் ஏன் செய்றேன்? படம் ஓட வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவு போராடுறேன். டைரக்டருக்கு ஜால்ரா போடணும்னா சொல்லுங்க. நீங்க எது சொன்னா லும் சரி சரின்னு தலை ஆட்டுறேன். எப்படி இருக்கணும் சொல்லுங்க?” என்று இயக்குநரையே மடக்குவார்.

ம்ஹ§ம்… இவ்வளவு தட்டையாகச் சொல்ல மாட்டார். உள்ளமும் உயிரும் கரைந்து உருகுவது போன்ற தொனியுடன் சொல்லுவார். அது நடிப்போ பாவனையோ இல்லை. நிஜம். ஒன்று மட்டும் சொல்கிறேன். சினிமா மீது அவர்களுக்கு இருந்த காதலைப் போல் இந்த உலகத்தில் யாருக்கும் எதன் மீதும் அவ்வளவு காதல் இருக்காது.

அதிலும் நாதன் இந்தப் படத்தின் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். வில்லன் ஜாக் தன் மனைவியை அதாவது, மகளைக் கற்பழிக்கும்போதும், கொல்ல முயற்சி செய்யும்போதும் நாதன் ஜாக்காகவே மாறி விடுவார். அப்போது கிரிதான் ஜெனியாக நடிப்பான்.
”நாதனின் இந்த இன்வால்வ்மென்ட்தான் இவரை இன்னமும் சகித்துக்கொண்டு இருப்பதன் காரணம்” என்பார் சிரஞ்சீவி.

மேலும், நாதனால் வேறொரு உபயோகமும் இருந்தது. படத்தின் ஒரு கட்டத்தில் விழும் சிக்கலை அவிழ்க்க முடியாமல் உதவி இயக்குநர்கள் எல்லோரும் ஒரு முட்டுச் சந்துக்கு வந்து நிற்கும் போது, சட்டென்று ஒரு வழியை உருவாக்குவார் நாதன்.

கதையில் ஒரு முக்கியமான கட்டம், ஜெனியை ஜாக் ஒரு மலை உச்சியிலிருந்து தள்ளிவிடுவது, ”வில்லன் ஹீரோயினை மலையில் இருந்து தள்ளி விடுவதை ‘மந்திரிகுமாரி’யில் வில்லன் எஸ்.ஏ. நடராஜன் ஏற்கெனவே செய்திருக்கிறார்; அது வேண்டாம்” என்று கட்டை போட்டார் நாதன். அவர் சொல்லித்தான் அந்த விஷயமே மற்றவர்களுக்குத் தெரிந்தது என்றாலும், அந்த ஆட்சேபனை ஏற்கப்பட்டது.

இந்தப் படம் முழுக்கவுமே ஹாலிவுட் படத்தின் ரீ-மேக். அது போதாது என்று பல்வேறு ஹாலிவுட் படங்களிலிருந்து காட்சிகளைச் சுடுவதற்கென்றே இரண்டு உதவி இயக்குநர்களைக் கொண்ட தனி டிபார்ட்மென்ட் ஒன்று இயங்கியது. இருந்தாலும் ஒரு தமிழ்ப் படத்தில் வந்த காட்சி மற்றொன்றில் வரக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தார்கள். அப்படி யானால் ஜெனியை வேறு எப்படிக் கொல்வது?

இதற்கு மட்டுமே டிஸ்கஷன் இரண்டு வார காலத்துக்கு ஓடியது. பல்வேறுவிதமான கொலைகள். ராயனுக்கு கொலைக் கனவாக வந்து கொண்டு இருந்தது. கடைசியில் நாதன்தான் வழி சொன்னார். வில்லன் ஹீரோயினை மலை உச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டியது. சிலருக்கு உயரம் ஒப்புக்கொள்ளாது. அது ஒருமாதிரி ஃபோபியா. அதனால் கீழே விழுந்து செத்துப்போகிறாள் ஹீரோயின்.

ஆர்வம் தாங்க முடியாமல் “ஃபோபியான்னா?” என்று வாயைத் திறந்து கேட்டுவிட்டான் கிரி.
குரலில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் ”பயம்” என்றார் நாதன். “ஆனால் அந்த ஃபோபியாவுக்கு ஏதோ ஒரு பெயர் இருக்கிறது. அந்தக் காலத்தில் ‘பிரக்ஞை’யில் படித்திருக்கிறேன். மறந்துவிட்டது.”

“அக்ரோஃபோபியா” என்று சிக்ஸர் அடித்தான் கச்சிராயன். கூடியிருந்த அத்தனை பேரும் ஆடிப் போய்விட்டார்கள். ஆனால், ராயனுக்கு மட்டும் நாதனைப்பற்றி ஆச்சர்யம். ‘அடப்பாவி. பிரக்ஞைஎல்லாம் படித்திருக்கிறாரே இந்த மனுஷன்!’ என்று. 30 ஆண்டுகளுக்கு முன்னால் வந்துகொண்டு இருந்த ஒரு தீவிரமான இலக்கியப் பத்திரிகை அது.

அன்றைய தினம் எல்லோருக்குமே ஆர்.சி. கோல்டு தருவிக்கப்பட்டது. இதற்கிடையில் வில்ல னுக்கும் ஹீரோயினுக்குமான உறவு தந்தை-மகள் என்று இருக்கக் கூடாது என்பதில் மட்டும் கவனமாகவே இருந்து வந்தான் கச்சிராயன். வளர்ப்புத் தந்தையாக இருந்தாலும் அது வேண்டாம் என்றே விவாதித்தான். சித்தப்பா என்று வைக்கலாம் என்பது நாதனின் கட்சி. இப்படியே அப்பா, சித்தப்பா, மாமா என்று அந்த உறவு மாறி மாறிச் சென்றது.

வளர்ப்புத் தந்தை என்று வைக்கலாம் என்பது சிரஞ்சீவியின் வாதம். ”ஒரு பெண் தன் கணவனை ஹனிமூனுக்கு அழைத்துச் சென்று தன் கள்ளக் காதலனை வைத்துத் தீர்த்துக்கட்டவில்லையா? சொசைட்டில என்னென்னமோ நடக்குது. சினிமாவில் காண்பிக்கக் கூடாதா?” என்றார் அவர். இப்போது என்றால், ‘ஒரு பெண் தன் கள்ளக் காதலைத் தட்டிக்கேட்ட சொந்த மகனையே துண்டுதுண்டாக வெட்டி ஃப்ரிஜ்ஜில் ஒளித்து வைக்கவில்லையா?’ என்று கேட்டிருப்பார்.

படத்தின் டயலாக் போர்ஷன் முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும் ஹீரோயினுக்கும் வில்லனுக்கும் என்ன உறவு என்று முடிவு செய்யப்படவில்லை. ‘சரி, அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டு, நடிகர்களைத் தேடும் படலத்தை ஆரம்பித்தார் சிரஞ்சீவி. எவ்வளவு முயன்றும் வில்லன் நடிகருக்குத் தோதான ஆள் கிடைக்கவில்லை. நடிகர் கிடைத்தால் சம்பளம் கட்டுப்படி ஆகவில்லை.

கடைசியில் கச்சிராயனே அந்த வில்லன் ரோலைச் செய்வது என்று முடிவாயிற்று. கச்சி ராயனின் வயதும் 54 என்பதால் அதுவும் பொருத்தமாகவே அமைந்தது. திடீரென்று இப்படி நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் அவனுக்கு சந்தோஷமே என்றாலும், இந்த உறவுப் பிரச்னைதான் பெரிய தலைவலியாக இருந்தது.

ஹீரோயின் ஒரு புது நடிகை. நடிகைக்கு வேண்டிய முதல் தகுதி கவர்ச்சியும் அழகும். அது அந்தப் பெண்ணிடம் இருந்தது. ஆனால், மற்ற நடிகைகளிடம் இல்லாத ஒரு புது விஷயமும் அவளிடம் இருந்தது. அவள் மும்பையின் காலா கோடா மார்கில் (கறுப்புக் குதிரைச் சதுக்கம்) நடக்கும் பரீட்சார்த்த நாடகக் குழுக்களில் நடித்துக்கொண்டு இருந்த புத்திஜீவி ரகம்.

‘யு டர்ன்’ என்பதால் சம்மதித்துவிட்டாள். புத்திஜீவி என்பதால் சிகரெட், தண்ணி எல்லாம் உண்டு. சிரஞ்சீவி கோஷ்டியோடு சேர்ந்தே தண்ணி அடித்தாள். இரவு 3 மணி ஆகிவிட்டால் அங்கேயே தூங்கிவிட்டு காலையில்தான் போவாள். சுருக்கமாகச் சொன்னால், ஆண்-பெண் வித்தியாசம் இல்லாமல் பழகினாள்.

நாதன், கச்சிராயன் இருவர் காட்டிலும் மழை. சினிமா டிஸ்கஷனுக்கு ஊடாகவே அந்த மும்பைப் பெண்ணுடன் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி (நாடகம்), கீஸ்லோவ்ஸ்கி (சினிமா), ட்சைக்கோவ்ஸ்கி (இசை) போன்ற பல ‘இஸ்கி’களைப் பற்றி மணிக்கணக்கில் விவாதித்தார்கள். அந்த விவாதங்களில் மற்றவர்கள் யாரும் கலந்துகொள்வதில்லை என்பதை சொல்லத் தேவை இல்லை.

இவ்வாறாக, சுமார் ஆறு மாத காலம் ஓடியது கச்சிராயனின் சினிமா பிரவேசம். படப்பிடிப்புக்கு லொகேஷன்கூடப் பார்த்துவிட்டார்கள். படத் துக்குப் பெயர் வைத்தாகிவிட்டது. ஹீரோ சிரஞ்சீவிக்கும் புதிய நாமகரணம் ஆனது. தெலுங்கில் ஒரு சிரஞ்சீவி சூப்பர் ஸ்டாராக இருக்கும்போது அதே பெயரில் எப்படி இன்னொரு சிரஞ்சீவி இருக்க முடியும்?

ஒரு கட்டத்தில் மதிய உணவு கே.கே.நகரில் ஒரு சாதாரண மெஸ்ஸில் இருந்து வர ஆரம்பித்தது. தொட்டுக்கொள்ள அவித்த முட்டைகூட இல்லை என்றதும் கச்சிராயன் புரிந்துகொண்டான். கம்பெனியில் பல மாற்றங்கள் தெரிந்தன.

முன்பெல்லாம் ராயனை பிக்கப் பண்ண கார் வரும்.பிறகு, ஓர் உதவி இயக்குநர் அவருடைய அரதப் பழசான ஒரு பைக்கை எடுத்துக்கொண்டு வந்து ராயனை அழைத்துப் போனார். பிறகு, அந்த பைக் வருவதும் நின்றுபோனது. கச்சிராயனும் பழையபடி தன்னுடைய இலக்கிய உலகத் துக்குத் திரும்பி வந்து சக இலக்கியவாதிகளுடன் ஹோதாவை ஆரம்பித்தான்.

இதெல்லாம் முடிந்து ஆறு மாதங்கள் இருக்கும். ஒருநாள் எதேச்சையாக கிரியைப்பார்த் தான் கச்சிராயன். ராயனை நோக்கி ஆர்வத்துடன் ஓடி வந்த கிரி, ”விஷயம் தெரியுமா சார்?” என்று ஆரம்பித்தான்.

“என்ன?”

“அந்த பாம்பே பொண்ணு இல்ல… நம்ம ஹீரோயின். அதுகிட்ட வேலையைக் காமிச்சுட்டாங்க நம்ம ஆளுங்க. டைரக்டரோ இல்ல அந்த நாதனோதான்… வேற யாரும் செஞ்சிருக்க முடியாது. (வயிற்றைக் கைகளால் சுட்டிக்காட்டி) நாலு மாசம்… உயிருக்கே ரொம்பப் பிரச்னையாப் போய்டுச்சு. டைரக்டர்தான் பேர் கெட்டுரக் கூடாதுன்னு ரொம்ப அலைஞ்சுக் கிட்டு இருந்தாரு… தேவையா இது?”

விஷயத்தைக் கேட்டதும் கச்சிராயனுக்குத் துணுக்கென்றது. அவளிடம் படித்துப் படித்துச் சொன்னோமே, ஐபில் மாத்திரையைப் போட்டுக் கொள்ளச் சொல்லி? போதையில் மறந்துவிட்டாள் போல… அடடா

சென்ஷி

unread,
May 31, 2010, 3:25:24 AM5/31/10
to panb...@googlegroups.com

வெளியிலிருந்து வந்தவன்

சாரு நிவேதிதா

இரவு ஒன்பது மணி சுமாருக்கு அந்தச் சம்பவம் நடந்தது. வீட்டுக் கதவை ‘ பட பட ‘ வென்று யாரோ தொடர்ந்து தட்டினார்கள். இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தபடி வந்து பார்த்தால் வெளியே சுந்தரம். பார்த்த மாத்திரத்தில் தெரிந்து விட்டது – நிறை போதையில் இருந்தான் அவன்.

மது , மாது , சூது என்ற மூன்று தீமைகளில் ( ?) கடைசி இரண்டைப் பற்றியும் எங்களுக்குள் அவ்வளவு பிரச்னை இல்லை , ( எங்களுக்குள் என்பது என்னையும் என் மனைவி ஜென்னியையும் குறிப்பது) அந்த இரண்டும் என்னை அண்டவே அண்டாது என்பதில் ஜென்னி உறுதியாக இருந்தாள். ஆனால் அந்த முதல் விஷயம்தான் உதைத்தது.

அதனால் என்னை ஒரு குடிகாரன் என்று நினைத்து விடாதீர்கள். நான் குடிப்பதில்லை. ஆனாலும் என் நண்பர்கள் பலருக்கும் இந்தப் பழக்கம் இருந்தது. இதைப் பற்றி நான் ஆதரவாகப் பேசியதுதான் ஜென்னியை கலவரப்படுத்தியது என்று சொல்ல வேண்டும்.

இப்படியான ஒரு தினத்தில் தான் இரவு ஒன்பது மணி சுமாருக்கு அந்தச் சம்பவம் நடந்தது.

வீட்டுக் கதவை ‘ பட பட ‘ வென்று யாரோ தொடர்ந்து தட்டினார்கள். இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தபடி வந்து பார்த்தால் வெளியே சுந்தரம்.

பார்த்த மாத்திரத்தில் தெரிந்து விட்டது – நிறை போதையில் இருந்தான் அவன்.

என் வீட்டு முகவரி இவனுக்கு எப்படித் தெரிந்தது ?

குடித்திருந்தாலும் சுந்தரம் புத்திசாலி. என் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு விட்டான்.

” நீ தானே உன் விலாசம் கொடுத்தாய் ? ஞாபகம் இல்லை ? இதோ பார்”

- சொல்லிக் கொண்டே தள்ளாடியபடி தன் ஜோல்னாப் பையிலிருந்து டைரியை எடுத்து பக்கத்தையும் புரட்டிக் காண்பித்தான்.

உருப்பட்டாற்போல்தான். அவன் டைரியில் என் முகவரியை நானே என் கைப்பட எழுதியிருந்தேன்.

‘ இப்போது ஜென்னி வந்து பார்த்தால் என்ன சொல்வது ? இவனை எப்படி பாதுகாப்பாக வெளியேற்றுவது ? நாளைக்கு ஆபீஸ் வேறு இருக்கிறதே ?’ என்று பல விதமாய் குழம்பிக் கொண்டிருந்த போது ஜென்னியே வந்து விட்டாள்.

அவளிடம் சுருக்கமாக அறிமுகப்படுத்தினேன். விமானம் திடீரென்று நடு வானில் பழுதடைந்து விட்டால் ஒரு விமானியின் மூளை எவ்வளவு சடுதியில் வேலை செய்யுமோ அந்த அவசரத்தில் யோசிக்க ஆரம்பித்தது என் மூளை.

” சரி சுந்தரம் … கிளம்பு … பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் வந்து உன்னை ஏற்றி அனுப்புகிறேன்” என்றேன்.

” என்னாழ் நழக்க முழியாது , அதனாழ்தான் உன் வீழ்ழுக்கு வந்தேன்” என்று ழகரத்திலேயே பதில் சொன்னான் சுந்தரம்.

இப்போது இவனை தங்கச் சொல்லி விட்டு பிறகு ஜென்னியிடம் பிரச்னை வைத்துக் கொள்வதில் எனக்கு இஷ்டம் இல்லை.

” பரவால்ல … என் தோளைப் பிடிச்சுக்கிட்டு நட.. பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலதான்” என்றபடி கைத்தாங்கலாகவே அவனை அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.

தெருமுனை தாண்டி மெயின் ரோடு வரை சமாளித்து நடந்தவன் பஸ் ஸ்டாண்ட் வருவதற்குள் தரையில் சாய்ந்து விட்டான்.

தூக்கி விட்டேன் , மறுபடியும் விழுந்தான். நல்ல பளுவாக இருந்தான். இல்லாவிட்டால் விக்கிரமாதித்தன் வேதாளத்தைத் தூக்கிக் கொண்டு போவது போல் போய்விடலாம்.

எல்லோரும் எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றார்கள். அவர்கள் என்னையும் அவனோடு சேர்த்தே நினைத்திருப்பார்கள் என்பது கொஞ்சம் அவமானமாக இருந்தது.

திடீரென்று போலீஸ் பயமும் தொற்றிக் கொண்டது. இரவில் வரும் ரோந்துப் போலீசார் எங்கள் இருவரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போய் விட்டால் என்ன செய்வது ? இரவு முழுவதும் லாக்கப்பில் அல்லவா இருக்க வேண்டும் ? ஜென்னி என்னவெல்லாம் நினைத்துக் கவலைப்படுவாள் ?

என்ன இது முட்டாள்தனம் என்று நொந்து கொண்டேன். முகவரியைக் கொடுத்ததே தவறு , அதைவிடத் தவறு இந்த நிலையில் இவனை இங்கே அழைத்துக் கொண்டு வந்தது …

இவ்வளவு யோசனைகளுக்கிடையிலும் அவனை நான் தூக்கி விடுவதும் அவன் கீழே விழுவதுமான காட்சி தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்றே தெரியவில்லை. சுந்தரத்தின் வேஷ்டி சட்டையெல்லாம் சேறும் சகதியுமாய் ஆகியிருந்தது.

களைப்பும் சோர்வுமாய் அந்த நடைபாதையிலேயே உட்கார்ந்தேன்.

சாலை ஓரத்தில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் விழுந்திருந்த சுந்தரத்தின் வாயிலிருந்து விளங்காத சொற்கள் பல வெளியேறிக் கொண்டிருந்தன.

ஒருகணம் இவனை இப்படியே போட்டு விட்டுப் போய் விட்டால் என்ன என்று தோன்றியது. பிறகு அப்படித் தோன்றியதற்காக எனக்குள் நான் கூனிக் குறுகிப் போனேன்.

சில சந்தர்ப்பங்களில் மனிதனுக்கு எவ்வளவு பாதகமான யோசனைகளெல்லாம் வருகின்றன என்று ஆச்சரியமும் கொண்டேன்.

இப்படியே நீண்ட நேரம் போராடி வீட்டுக்கு அவனைக் கொண்டு வந்து சேர்த்த போது வாசல் படியிலேயே உட்கார்ந்திருந்தாள் ஜென்னி.

” என்னங்க இது… எங்கே போயிருந்தீங்க ? எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலே” என்று சொன்னவளின் கண்கள் கலங்கியிருந்தன.

” அதெழ்ழாம் ஒன்னும் பயப்பழாதே தங்கச்சி. ஒழு சின்ன ப்ழாப்ழம். அழான் லேட்”

” சரி வா… சுந்தரம். தூங்கலாம்” என்றேன்.

” என்ன கண்ணாயிழம்… சாப்பிழாம எப்பழி தூங்கழது ?”

” இந்த நிலைமையில் உன்னால் சாப்பிட முடியுமா ?”

” சாப்பிழாம எனக்கு தூக்கம் வழாதே.” குடித்திருப்பவனிடம் விவாதம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று எண்ணி “என்ன சாப்பிடறே , குழம்பு சாதமா ? தயிர் சாதமா ?” என்று கேட்டேன்.

” ழாத்திழிலெ நா சோழு சாப்பிழ மாட்டனே. இட்ழி தோசை…”

எங்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த ஜென்னி என்னைத் தனியாக அழைத்து “தோசை மாவு இல்லை. உங்க ஃப்ரெண்ட் சப்பாத்தி சாப்பிடுவாரான்னு கேளுங்க… சட்டுன்னு போட்டுத் தந்திர்றேன்…. தொட்டுக்க குழம்பு இருக்கு” என்றாள்.

” என்னது , ராத்திரி பண்ணண்டு மணிக்கு சப்பாத்தியா ? நீ வேற நாளைக்கு ஆபீஸ் போகணும்… விடு”

இப்படி நான் சொல்லி முடிப்பதற்குள் “சப்பாத்தி போழும்” என்ற பதில் வந்தது சுந்தரத்திடமிருந்து.

இரண்டு சப்பாத்தி சாப்பிட்டு விட்டு தட்டிலேயே கை கழுவி விட்டு அந்த இடத்திலேயே சுருண்டான் சுந்தரம்.

‘ இரவில் வாந்தி எடுத்து வைத்து விடாமல் இருக்க வேண்டுமே ‘ என்று பயந்து கொண்டே வந்து படுத்தேன். அதற்குள் தூங்கிப் போயிருந்தாள் ஜென்னி.

காலை நேர அவசர ஓட்டத்தில் அவனை எப்படி கவனிப்பது என்ற கவலை எழுந்தது. எழுந்து கொள்வானா , எழுந்ததும் கிளம்புவானா , குளிக்க வேண்டும் சாப்பிட வேண்டும் என்று சொன்னால் என்ன செய்வது – அவசரத்தில் நானும் ஜென்னியுமே காலை டிபனை வீட்டில் சாப்பிடாமல் ஆபீசுக்கு எடுத்துக் கொண்டு போய்தான் சாப்பிடுவோம். சமயங்களில் டிபன் செய்யவே நேரம் இல்லாவிட்டால் ஆபீஸ் கேண்டீனில்தான் டிபன் – கார்த்திக் (என் பையன்) எழுந்தால் சுந்தரத்தைப் பார்த்து என்ன நினைப்பான். அவனுடைய மதிப்பீட்டில் நான் எவ்வளவு தூரம் தாழ்ந்து போவேன். ஜென்னி இதையெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வாள் என்றெல்லாம் பலவாறாக யோசித்துக் கொண்டே என்னையும் அறியாமல் உறங்கிப் போனேன்.

காலையில் எழுந்து எழுப்பிப் பார்த்தேன். சில வித்தியாசமான சப்தங்களைக் கொடுத்துவிட்டு புரண்டு படுத்தானே ஒழிய எழுந்து கொள்ளவில்லை.

வாசலை ஒட்டி படுத்துக் கிடந்த அவனை கால்களைப் பிடித்து இழுத்து ஓரமாய்க் கிடத்தினேன்.

கார்த்திக் எழுந்து வந்து ‘ இந்த அங்கிள் யார் ?’ என்று கேட்டான். (அங்கிள் என்ற வார்த்தையை அவன் சற்று தயக்கத்துடனேயே சொன்னதாக எனக்குத் தோன்றியது)

” ஊரிலிருந்து வந்திருக்கிறார்…. உடம்பு சரியில்லை” கார்த்திக் பள்ளிக்குக் கிளம்பிச் சென்ற பிறகு சுந்தரத்தை மீண்டும் எழுப்ப முயன்றேன். மணி அப்போது ஏழரை. இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆபீஸ் கிளம்பியாக வேண்டும்.

” கொஞ்சம் மோர் வேண்டும்” என்றான் சுந்தரம் இருந்த தயிரில் கொஞ்சம் எடுத்து நீர் கலந்து மோராக்கிக் கொடுத்தேன்.

குடித்து விட்டு மீண்டும் சாய்ந்து விட்டான். அவன் தாடியில் சிந்தியிருந்த மோரைத் துடைத்து விட்டேன்.

அரை மணி நேரம் சென்று மீண்டும் எழுப்பிப் பார்த்தேன் , பயனில்லை.

” நாம் ஆபீஸ் போக முடியாது. மட்டம் போட்டு விட வேண்டியதுதான்” என்றாள் ஜென்னி.

சுமார் ஒரு மணி இடைவெளி விட்டுவிட்டு எழுந்து மோர் கேட்டான் சுந்தரம். மதியம் எழுப்பி மோர் சாதம் சாப்பிட வைத்தேன். சாப்பிட்டு முடித்ததும் கிளப்பி விட்டு விடவேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன்.

ஆனால் அதுவும் முடியாமல் போனது. சாப்பிட்டவுடன் மீண்டும் தூங்கி விட்டான்.

எப்போது இவன் எழுந்து கொள்வான் என்ற கவலை ஏற்பட்டது எனக்கு. ஏதாவது ஒன்று கிடக்க ஓன்று ஆகி விட்டால் என்ன செய்வது என்ற பயமும் எழுந்தது. இடையில் அம்மாவோ அப்பாவோ தாம்பரத்திலிருந்து வந்து விட்டால் அவர்கள் என்ன நினைப்பார்கள் ? அவர்களிடம் என்ன சொல்லி சமாளிப்பது ? – மனசில் என்னென்னவோ யோசனைகள் வந்து மோதிக் கொண்டிருந்தன.

நான்கு மணி ஆகியும் அவன் எழுந்து கொள்ளாததைப் பார்த்து அவன் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினேன்.

” எழுந்து கொள் சுந்தரம்…. நாங்கள் கொஞ்சம் அவசரமாக வெளியே கிளம்ப வேண்டும்” என்று சமயோஜிதமாக ஒரு பொய்யைச் சொன்னேன்.

எழுந்து முகம் கழுவிக் கொண்டவன் சட்டை அழுக்காகி விட்டது என்று சொல்லி என்னிடமிருந்து ஒரு சட்டை வாங்கிப் போட்டுக் கொண்டான்.

” என்ன கிளம்பலியா… வாங்க… அப்படியே உங்களோடயே நானும் கிளம்பிடறேன்”

‘ அடக் கடவுளே… இது என்ன புதுப் பிரச்னை ‘ என்று நினைத்தபடி இதை எப்படி சமாளிப்பதென யோசித்தேன். ஆனால் அன்றைக்கென்று பார்த்து என் மூளை ஒழுங்காகவே வேலை செய்தது. (பொதுவாக ஆபத்து நேரங்களில் என் மூளை ஸ்தம்பித்து விடுவதுதான் வழக்கம்!)

” இல்லை சுந்தரம்…. ஜென்னி கிளம்ப முன்னே பின்னே ஆகும்…. நீ கிளம்பு” என்றேன்.

” அப்படியா …. அதுவும் சரிதான்” என்றவன் ஜென்னியிடம் “வர்றேன் தங்கச்சி…. ரொம்ப சிரமம் கொடுத்திட்டேன். மன்னிக்கணும்” என்று இரண்டு கைகளையும் கூப்பி வணங்கி விட்டுக் கிளம்பினான்.

வீதி வரை சென்று வழி அனுப்பிவிட்டு வீட்டுக்குள் தயக்கத்துடன் நுழைந்தேன். ஜென்னியை இனிமேல் எப்படி எதிர்கொள்வது என்ற பயம் கவ்வியது.

அப்போது “ஏங்க…. உங்க ஃப்ரென்ட் ரொம்ப பாவம் இல்லீங்க ?” என்றாள் ஜென்னி. அவள் குரலில் உண்மையான வருத்தம் தொனித்தது.

சென்ஷி

unread,
May 31, 2010, 3:32:40 AM5/31/10
to panb...@googlegroups.com

மாஷ்கா – மாக்ஸிம் கார்க்கி

மாக்ஸிம் கார்க்கி

தமிழில்: சுரா

ஒரு கோடைகாலத்தின் இரவு நேரத்தில், நகரத்தின் எல்லையில் தனியாக இருந்த ஒரு தெருவில் நான் ஒரு அசாதாரணமான காட்சியைக் கண்டேன். ஒரு பெரிய சேற்றுக் குவியலுக்கு நடுவில் ஒரு பெண் நின்று கொண் டிருந்தாள். சிறு குழந்தை களைப்போல அவள் தன்னு டைய கால்களால் சேற்றை யும் நீரையும் மிதித்துத் தெறிக்கச் செய்து கொண்டி ருந்தாள். சேற்று நீரைத் தெறிக்கச் செய்ததுடன், மூக்கைப் பிடித்துக்கொண்டு பேசுவதைப் போன்ற குரலில் ஏதோ ஒரு மோசமான பாடலை அவள் பாடிக் கொண்டும் இருந்தாள்.

அன்று மிகப்பெரிய சூறாவளிக் காற்று நகரத்தின்மீது படுவேகமாக வீசி அடித்துக் கொண்டிருந்தது. பெய்து கொண்டிருந்த மழை அந்தத் தெருவை ஒரு சேற்றுக் குவியலாக மாற்றி விட்டிருந்தது. சேறு மிகவும் ஆழமானதாக இருந்தது. கிட்டத்தட்ட முழங்கால்வரை அந்தப் பெண்ணின் கால்கள் சேற்றுக்குள் இருந்தன. குரலை மிகவும் கவனமாகக் கேட்டால், அந்தப் பாடலைப் பாடும் பெண் மது அருந்தியிருக்கிறாள் என்பதை மிகவும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். நடனம் ஆடிக் களைத்துப் போய்விட்டால், அவள் அந்த சேற்றில் மூழ்கிப்போவதற்கான எல்லா சாத்தியங்களும் இருந்தன.

என்னுடைய கால்களில் அணிந்திருந்த காலணி களை நீக்கிவிட்டு அந்த சேற்றில் மெதுவாகக் கால்களை வைத்தேன். சேற்று நீரில் நின்று துள்ளிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் கைகளை பலமாகப் பிடித்து இழுத்து, அந்த சேற்றிலிருந்து அவளை வெளியே கொண்டு வந்தேன். ஒரு நிமிட நேரத்திற்கு அவள் பயந்திருக்க வேண்டும். அதனால் எதுவும் பேசாமல் கீழ்ப்படியும் மன நிலையுடன் அவள் என்னுடன் வந்தாள். ஆனால் திடீரென்று தன்னுடைய சரீரத்தை உதறிக்கொண்டு, வலது கையை எடுத்து என்னுடைய நெஞ்சில் அடித்தவாறு அவள் உரத்த குரலில் சத்தம் போட்டாள்: “”உதவிக்கு வாங்க…”

அடுத்த நிமிடம் என்னையும் இழுத்துக்கொண்டு அவள் அந்தச் சேற்றுக் குவியலுக்குள் இறங்கினாள்.

“”நீங்க நாசமாப் போகணும்”- அவள் சாபம் போட்டாள். “”நான் போக மாட்டேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியும். நான் இல்லாமல் நீயும் வாழ முடியுமான்னு பார். என்னைக் காப்பாற்றுங்க…”

இருட்டுக்குள்ளிருந்து ஒரு இரவு நேரக் காவலாளி அங்கு வந்து நின்றான். அவன் எங்களிடமிருந்து ஐந்தடி தூரம் தள்ளி நின்றுகொண்டு முரட்டுத்தனமான குரலில் கேட்டான்:

“”ஏன் சண்டை போடுறீங்க?”

அந்தப் பெண் சேற்றுக்குள் விழுந்து இறந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதையும், அதிலிருந்து அவளை வெளியே கொண்டு வருவதற்கு நான் முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்பதையும் நான் அந்த ஆளிடம் சொன்னேன். அந்தக் காவலாளி இன்னும் சற்று அருகில் நகர்ந்து நின்று கொண்டு அவளையே வெறித்துப் பார்த்தான். சத்தமாக காரித்துப்பிய அவன் உரத்த குரலில் சொன்னான்:

“”மாஷ்கா, வெளியே வா.”

“”எனக்கு வரப் பிடிக்கலைன்னு சொல்றேன்ல!”

“”வெளியே வான்னு நான் சொல்றேன்.”

“”நான் வரமாட்டேன்.”

“”என்னிடம் உதை வாங்கினால்தான் உனக்கு சரியாக இருக்கும். அப்படித்தானே?”- அவன் சொன்னான். தொடர்ந்து நான் இருந்த பக்கம் திரும்பி அவன் நட்புணர்வுடன் சொன்னான்:

“”இவள் இங்கே… பக்கத்தில்தான் இருக்கிறாள். இவள் பெயர் மாஷ்கா ஃப்ராலிக்கா. ஆண்களை வசீகரித்து இழுப்பது இவளின் தொழில். இவளை மேலே கொண்டு வரணுமா?”

நாங்கள் சிகரெட்டைப் பற்ற வைத்தோம். சேற்றைத் தெறிக்க வைத்துக்கொண்டு அவள் உரத்த குரலில் கத்தினாள்: “”பெரிய முதலாளிகள் தேடி வந்திருக்காங்க! பேசாம போங்கடா… நான்தான் எனக்கு முதலாளி. இங்க பாருங்க… உங்களுக்குப் பிடிச்சிருந்தா நான் இதில் கொஞ்சம் மூழ்கிட்டு வர்றேன்.”

“”நான் உன் முதுகில் ஒரு அடி கொடுக்கப் போறேன்”- காவலாளி எச்சரித்தான்.

அவன் ஒரு பலம் கொண்ட தாடி வளர்த்திருந்த மனிதனாக இருந்தான். எல்லா இரவு வேளைகளிலும் இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணுவது என்பது அவளுடைய வாடிக்கையான செயலாகி விட்டது. வீட்டில் இரண்டு கால்களும் இல்லாத ஒரு சிறுவன் இவளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பான்.

“”இங்கேயிருந்து ரொம்பவும் தூரத்திலா இவள் இருக்கிறாள்?”

“”சாகடிக்கப்பட வேண்டிய ஒருத்தி இவள்!” – என் கேள்விக்கு பதில் கூறாமல் அவன் சொன்னான்:

“”யாராவது இவளை வீட்டில் கொண்டுபோய்விட்டால் நன்றாக இருக்கும்”- நான் சொன்னேன்.

காவலாளி தன்னுடைய தாடையில் மூக்கின் வழியாகப் புகையை விட்டவாறு, அந்த சிகரெட் வெளிச்சத்தில் என்னைப் பார்த்தான். அந்த சேற்றை அழுத்தி மிதித்துக்கொண்டு அவன் நடந்து சென்றான். போவதற்கு மத்தியில் அவன் இப்படிச் சொன்னான்:

“”இவளை அழைச்சிட்டுப் போ. ஆனால் அதற்கு முன்னால் இவளுடைய மூஞ்சில ஒண்ணு கொடு.”

அந்தப் பெண் சேற்றில் நின்றுகொண்டு தன்னுடைய கைகளையும் கால்களையும் அசைத்துக்கொண்டிருந்தாள். மூக்கு அடைத்துக்கொண்டதைப் போன்ற கரடுமுரடான குரலில் அவள் சொன்னாள்:

“”கடலில் இப்படியே… போகணும் ஐலஸா…”

வானத்திலிருந்த இருட்டிலிருந்து ஒரு பெரிய நட்சத்திரம், குழம்பைப்போல இருந்த அந்த நீரில் தெரிந்தது. சேற்றில் அலைகள் உண்டானபோது அந்தத் தோற்றம் இல்லாமல் போனது. நான் மீண்டும் அந்தச் சேற்றில் இறங்கிச் சென்றேன். பாட்டு பாடிக் கொண்டிருந்த பெண்ணின் இரண்டு கைகளின் இடுக்குகளிலும் கைகளை வைத்துத் தூக்கி, என்னுடைய முழங்கால்களால் முன்னோக்கித் தள்ளி நான் அவளை வெளியே கொண்டு சென்றேன். அவள் என்னை எதிர்த்தவாறு, கையை ஆட்டிக் கொண்டு சவால் விட்டாள்:

“”வா… என்னை அடி. நான் பார்க்கிறேன்… என்னை அடி. யாருக்கு என்ன இழப்பு? டேய், பிராணியே… பிச்சைக்காரப் பயலே… வாடா… என்னை அடி…”

நான் அவளை அந்த வேலியின்மீது சாய்த்து நிற்க வைத்தேன். அவள் எங்கே இருக்கிறாள் என்று நான் விசாரித்தேன். அவள் மதுவின் போதையுடன் தொங்கி ஆடிக்கொண்டிருந்த தலையை உயர்த்தினாள். கறுத்த பீளை விழுந்திருந்த கண்களால் அவள் என்னைப் பார்த்தாள். அவளுடைய தாழ்ந்து காணப்பட்ட மூக்கின் நடுப்பகுதியை நான் பார்த்தேன். அதன் மீதமிருந்த பகுதி ஒரு பொத்தானைப்போல மேல்நோக்கித் தள்ளிக் கொண்டு நின்றது. அவளுடைய மேலுதடு காயம்பட்டு சற்று வளைந்திருந்தது. அதன் வழியாகப் பற்களின் ஒரு வரிசை வெளியே தெரிந்தது. அந்தச் சிறிய சதைப் பிடிப்பான முகம் ஆர்வத்துடன் என்னைப் பார்த்தது.

“”அப்படியென்றால் சரி… வா… நாம போகலாம்”- அவள் சொன்னாள்.

வேலியின் மேற்பகுதியில் அவ்வப்போது சாய்ந்தவாறு அவள் முன்னோக்கி நடந்தாள். அவளுடைய பாவாடையின் ஈரமான நுனி என்னுடைய கால்களில் அவ்வப்போது பட்டுக் கொண்டிருந்தது.

“”பேசாம வா என் தங்கமே”- சுய உணர்விற்குத் திரும்பி வந்தவாறு அவள் சொன்னாள்: “”நான் நல்ல பிள்ளையா இருக்கேன். நான் உனக்கு சுகம் தர்றேன்.”

ஒரு பெரிய இரண்டு அடுக்குகள் கொண்ட ஒரு கட்டிடத்தை நோக்கி என்னை அவள் அழைத்துச் சென்றாள். ஒரு கண்பார்வை தெரியாதவளைப்போல குதிரை வண்டிகள், பீப்பாய்கள், பிய்ந்துபோன பெட்டிகள் ஆகியவற்றின் வழியாக தட்டுத் தடுமாறி அவள் முன்னோக்கி நடந்தாள்.

தரையில் ஒரு பெரிய துவாரத்திற்கு அருகில் சென்றதும் அவள் நின்றாள்.

“”கீழே இறங்கு”- அவள் சொன்னாள்.

அந்த அடர்த்தி குறைந்த சுவரின்மீது சாய்ந்து கொண்டு, நடுங்கிக் கொண்டிருந்த பெண்ணின் சரீரத்தை என்னுடைய கைகளில் தாங்கியவாறு, அந்த வழுக்கிக் கொண்டிருந்த படிகள் வழியாக நான் கீழே இறங்கினேன். இருட்டில் சற்று தேடிப் பார்த்துக் கொண்டே நான் அந்தக் கதவின் தாழ்ப்பாளைக் கண்டுபிடித்தேன். கதவைத் திறந்த பிறகு, முன்னோக்கி நகரத் தயங்கியவாறு நான் கதவின் அருகிலேயே நின்றுவிட்டேன்.

“”அம்மா, நீங்கதானே?”- இருட்டிற்குள்ளிருந்து ஒரு மெல்லிய குரல் கேட்டது.

“”ஆமாம்… நான்தான்.”

தார், சிதிலம் ஆகியவை கலந்த ஒரு தாங்க முடியாத வாசனை என்னுடைய நாசிக்குள் நுழைந்தது. நெருப்புப் பெட்டியை உரசியபோது, அதன் மெல்லிய வெளிச்சத்தில் ஒரு சிறுவனின் வெளிறிப்போன முகத்தை நான் பார்த்தேன்.

“”என்னைத் தவிர வேறு யார் இங்கே வருவாங்க? இது நானேதான்”- தன்னுடைய உடலின் எடை முழுவதையும் என்மீது சாய்த்துக் கொண்டு அவள் சொன்னாள்.

இன்னொரு நெருப்புக் குச்சியையும் எடுத்து உரசினேன். கண்ணாடி டம்ளரின் “சில்’ சத்தம் கேட்டது. அந்த சிறிய மெலிந்து காணப்பட்ட கை தகர விளக்கை எரியச் செய்தது.

“”என் தங்கமே…”- ஒரு மூலையில் சாய்ந்து விழுந்துகொண்டே அவள் நீண்ட பெருமூச்சை விட்டாள். செங்கற்களாலான அந்தத் தரையிலிருந்து அதிக உயரத்தில் என்று கூற முடியாத அளவிற்குப் படுப்பதற்கான ஒரு இடம் தயார் செய்யப்பட்டிருந்தது.

விளக்கின் ஒளியைக் குறைப்பதற்காக அந்தச் சிறுவன் அதன் திரியைத் தாழ்த்தினான். அப்போது அது புகையத் தொடங்கியது. அவனுடைய முகத்தில் ஒரு தீவிரத்தன்மை இருந்தது. அவன் கூர்மையான மூக்கின் நுனியையும், பெண்பிள்ளைகளிடம் இருப்பதைப் போன்ற தடிமனான உதடுகளையும் கொண்டிருந்தான். சிறிதும் பொருத்தமற்ற முறையில் வண்ணம் பூசப்பட்ட ஒரு ஓவியத்தைப்போல அவன் இருந்தான். விளக்கைச் சரி பண்ணிய வுடன், தன்னுடைய கூர்மையான பார்வையால் என்னைப் பார்த்து அவன் சொன்னான்:

“”அம்மா மது அருந்தியிருக்காங்கள்ல?”

அவ்வப்போது தேம்பித் தேம்பி அழுதுகொண்டும், இடையில் குறட்டை விட்டுக் கொண்டும் அவனுடைய தாய் அந்தப் படுக்கை யில் மல்லாக்கப் படுத்துக் கிடந்தாள்.

“”இவங்களோட ஆடையை மாற்றணும்”- நான் சொன்னேன்.

“”அப்படின்னா ஆடையை மாற்றுங்க”- கண்களைத் தாழ்த்திக் கொண்டு அவன் சொன்னான்.

நான் அவளுடைய நனைந்த பாவாடையை அவிழ்க்க ஆரம்பித் தவுடன், மிகவும் தீவிரமாக குரலைத் தாழ்த்திக்கொண்டு அவன் கேட்டான்:

“”விளக்கை அணைக்கணுமா?”

“”எதற்கு?”

அதற்கு அவன் பதில் கூறவில்லை. ஒரு சாக்கு மூட்டையை அவிழ்ப்பதைப்போல அந்தப் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்துக் கொண்டே நான் அவனைப் பார்த்தேன். சாளரத்திற்குக் கீழே போடப்பட்டிருந்த ஒரு மரப்பெட்டியில் அவன் உட்கார்ந்திருந் தான். நல்ல உறுதியான பலகைகளைக் கொண்டு உண்டாக்கப் பட்டிருந்த அந்தப் பெட்டியின் மேலே கறுப்பு எழுத்துக்களில் இப்படி எழுதப்பட்டிருந்தது.

“மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். எல்.ஆர். அன்ட் கம்பெனி.’

சதுர வடிவத்தில் இருந்த அந்தச் சாளரத்தின் அடிப்பகுதி அந்தச் சிறுவனின் தோளுக்கு அருகில் இருந்தது. சுவரில் சிறிய அடுக்குகளைக் கொண்ட அலமாரி இருந்தது. அந்த அடுக்குகளில் பலவகைப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளும் நெருப்புப் பெட்டி களும் இருந்தன. அந்தச் சிறுவன் உட்கார்ந்திருந்த பெட்டிக்கு அருகில் மஞ்சள்நிறத் தாளால் மூடப்பட்டு, மேஜையாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெட்டி இருந்தது. மிகவும் மெலிந்து போய்க் காணப்பட்ட கைகளால் அவன் தன்னுடைய கழுத்திற்குப் பின்னால் பிடித்திருந்தான். இருள் நிறைந்த சாளரத்தின் பலகைகளுக்கு அப்பால் அவனுடைய பார்வை இருந்தது.

அந்தப் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து நான் அவற்றை அடுப்பிற்கு மேலே விரித்துப் போட்டேன். அந்த அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த மண்பானையிலிருந்து நீரை எடுத்து, நான் கைகளைக் கழுவினேன். கைக்குட்டையால் கைகளைத் துடைத்த நான் சொன்னேன்:

“”சரி… குட்பை.”

என்னைப் பார்த்து சற்று கொஞ்சுகிற குரலில் அவன் கேட்டான்:

“”நான் இந்த விளக்கை அணைக்கட்டுமா?”

“”உன் விருப்பம்…”

“”என்ன? நீங்க போறீங்களா? நீங்க இங்கே படுக்கலையா?”

தன்னுடைய மெலிந்த கையை அவன் தன்னுடைய தாயை நோக்கி சுட்டிக் காட்டினான்: “”இவங்ககூட…”

“”எதற்கு?”- நான் அலட்சியமாகக் கேட்டேன்.

“”அதை நீங்களே தெரிஞ்சிக்குவீங்க”- சர்வசாதாரணமாக அவன் சொன்னான்: “”இங்கே வர்றவங்க எல்லாரும் அப்படி நடப்பதுதான் வழக்கம்.”

கடைக் கண்களால் நான் சுற்றிலும் பார்த்தேன். நான் நின்றிருந்த இடத்தைவிட்டு சற்றுத் தள்ளி அழுக்கான ஒரு அடுப்பு இருந்தது. அதற்கடுத்து கழுவ வேண்டிய பாத்திரங்கள் கிடந்தன. மரப்பெட்டிக்குப் பின்னால் தார் புரண்ட கயிறும், ஓக் மரத்தின் கொம்பு ஒன்றும், மரத்துண்டுகளும், ஒரு தாழ்ப்பாளும் கிடந்தன.

என்னுடைய கால்களுக்கு அருகில் அந்த மஞ்சள் நிறத்தைக் கொண்ட பெண்ணின் உடல் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தது.

“”உன்னுடன் கொஞ்ச நேரம் இருக்கட்டுமா?”- நான் அந்தச் சிறுவனிடம் கேட்டேன்.

கவலையுடன் என்னைப் பார்த்துக்கொண்டே அவன் சொன்னான்:

“”உங்களுக்குத் தெரியுமா? நாளை காலை வரை அவங்க எழுந்திருக்க மாட்டாங்க.”

“”அப்படியா? எனக்கு அவள் தேவையில்லை.”

அந்த மரப்பெட்டிக்கு அருகில் சப்பணம் போட்டு அமர்ந்து கொண்டு, அவனுடைய தாயைப் பார்த்த சூழ்நிலையை நான் விளக்கிச் சொன்னேன். மிகவும் சுவாரசியத்துடன் நான் பேச முயற்சித்தேன்.

“”அவள் அந்த சேற்றில் இருந்துகொண்டு துளாவ ஆரம்பிச் சிட்டா- துடுப்பால் தோணியைச் செலுத்துவதைப்போல… பாட்டு பாடிக்கொண்டே…”

தன்னுடைய மெலிந்த மார்புக் கூட்டின்மீது தடவிக் கொண்டே ஒரு வெளிறிய சிரிப்பை எனக்கு வெளிப்படுத்தியவாறு அவன் தலையை ஆட்டினான்.

“”அம்மா அதிகமாகக் குடிச்சிட்டாங்கன்னா இப்படித்தான். சுய உணர்வு வந்த பிறகும் அம்மா ஒவ்வொரு தமாஷ்களும் பண்ணு வாங்க… சின்ன பெண் குழந்தைகளைப்போல…”

இப்போது என்னால் அவனுடைய கண்களைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அந்தக் கண்களின் மேற்பகுதியில் நிறைய உரோமங்கள் வளர்ந்திருந்தன. அசாதாரணமான அளவில் பெரிதாக இருந்த புருவங்களையும், சற்று அதிகமாகவே சிறு உரோமங்கள் வளர்ந்திருந்த இமைகளையும் அவன் கொண்டிருந்தான்.

உடல் வெளிறிப்போய் இருப்பதை எடுத்துக்காட்டுவதைப் போல அவனுடைய கண்களுக்குக் கீழே நீல நிறம் படர்ந்து விட்டிருந்தது. மூக்கின் இணைப்புப் பகுதியில் நீளமான ஒரு வளைவு இருந்தது. அதற்குச் சற்று மேலே நெற்றியில் சிவப்பு நிறத்தில் உரோமங்கள் வளர்ந்து காணப்பட்டன. கண்களில் சாந்தம் குடிகொண்டிருப்பதைப்போல தோன்றினாலும், அது விளக்கிக் கூற முடியாதது மாதிரி இருந்தது. அமானுஷ்யமானதாகவும் அசாதாரணமானதுமாகவும் இருந்த அவனுடைய பார்வையை மொத்தத்தில் என்னால் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே முடிந்தது.

கீழே கிடந்த கிழிந்த துணிகளை எடுத்துப் போட்டு தன்னுடைய மெலிந்துபோன கால்களில் ஒன்றை அவன் வெளியே எடுத்தான். அடுப்பிலிருந்து நெருப்புக் கனலை எடுத்து மாற்று வதற்கு பயன்படக்கூடிய ஒரு இடுக்கியைப்போல அது இருந்தது. அவன் தன்னுடைய கால்களைக் கையால் எடுத்து அந்த மரப்பெட்டியின்மீது வைத்தான்.

“”உன் கால்களுக்கு என்ன ஆச்சு?”

“”இங்கே பாருங்க… இது எப்படி இருக்குன்னு பார்த்தீங்களா? பிறக்கும்போதே இது இப்படித்தான் இருந்தது. அதனால் நடக்க முடியாது. இந்தக் கால்களுக்கு உயிர் இல்லை. ஒரு பயனும் இல்லாமல்…”

அவன் தான் கூற வந்ததை முழுமையாகக் கூறி முடிக்கவில்லை.

“”அந்தச் சிறிய பெட்டிக்குள் என்ன இருக்கு?”

“”அது என்னுடைய மேஜிக் பெட்டி”- ஒரு குச்சியை எடுத்துக் கீழே போடுவதைப்போல, கையால் அந்த கால்களை எடுத்து மரப்பெட்டிக்குக் கீழே வைத்த அவன் சொன்னான். நல்ல பிரகாசமான சிரிப்புடன் அவன் தொடர்ந்து சொன்னான்:

“”நீங்க அதைப் பார்க்கணுமா? அப்படியென்றால் பொறுமையா உட்கார்ந்திருக்கணும். வாழ்க்கையில் எந்தச் சமயத்திலும் இப்படிப்பட்ட ஒரு மேஜிக்கை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க.”

மெலிந்துபோன, அசாதாரணமான நீளத்தில் தோற்றம் தந்த கைகளின் வேகமான அசைவுகளால் தன்னுடைய சரீரத்தை உயர்த்திப் பிடித்துக்கொண்டவாறு, அந்த அலமாரியிலிருந்த ஒவ்வொரு பெட்டிகளையும் எடுத்து, அவன் என்னுடைய கையில் தந்தான்.

“”பத்திரமா வச்சிருங்க. பெட்டிகளைத் திறக்கக் கூடாது. அவை ஓடிப்போய் விடும். அந்தப் பெட்டிகளில் ஒன்றை காதில் வச்சுப் பாருங்க, சரியா?”

“”உள்ளே ஏதோ ஓடுறது மாதிரி இருக்கே!”

“”ஆமா… அதுதான் எட்டுக்கால் பூச்சி. செண்டை மேளம் அடிப்பவன் என்று நான் அவனுக்குப் பெயர் வச்சிருக்கேன். அவன் புத்திசாலி!”

அவனுடைய கண்கள் பிரகாசமாக இருந்தன. அந்த நீலநிறத்தில் இருந்த முகத்தில் சிறிய ஒரு புன்சிரிப்பு மலர்ந்தது. கைகளை வேகமாகச் செயல்பட வைத்து அலமாரியிலிருந்த சிறிய பெட்டிகளை எடுத்து, முதலில் தன்னுடைய காதிலும் பிறகு என்னுடைய காதிலும் அவற்றைச் சேர்த்து வைத்துக்கொண்டு, மிகுந்த ஆர்வத்துடன் அவன் கூறத் தொடங்கினான்:

“”அவன்தான் அனீஸம் என்ற கரப்பான் பூச்சி. ஒரு பட்டாளக்காரனைப்போல சத்தம் போட்டுக் கொண்டிருப்பான். இதோ இது ஒரு ஈ… திருமதி. அஃபீஸ்யல் என்று அழைக்கலாம். ஒரு கேடுகெட்ட படைப்பு. நாள் முழுவதும் முனகிக் கொண்டே இருக்கும். எல்லாரிடமும் போய் ஏதாவது சொல்லிக்கொண்டி ருக்கும். அது என் தாயின் தலைமுடியைப் பிடித்துத் தரையில் இழுத்தது. அது ஈ அல்ல… தெரியுதா? தெருவிற்கு அப்பால் ஒரு பெண் இருக்கிறாள். ஈயைப் பார்க்குறப்போ அவளைப்போலவே இருக்கும். இனி… இதோ… இன்னொருவன். கருவண்டு! பெரிய ஆள்… ஒரு முதலாளி. சாதாரண மோசக்காரன் அல்ல. குடிகாரன், வெட்கம் இல்லாதவன்… அவ்வளவுதான். போதை ஏறிவிட்டால் ஒரு ஃபர்லாங் தூரத்திற்கு நிர்வாணமாக நகருவான். ஒரு கறுப்பு நிற நாயைப்போல உரோமங்கள் நிறைந்தவன். இனி… மணியன் ஈயைப் பற்றி… அங்கிள் நிக்கோடிம். நான் இந்த ஆளை வெளியில் இருந்து பிடித்தேன். இளவரசன்… அது உண்மை. கொடுத்து வைத்த ஊர்சுற்றி என்று அவன் தன்னைப் பற்றிக் கூறிக்கொள்வான். ஏதோ தேவாலயத்திற் காகப் பணம் வசூலிப்பதாக அவனுக்கு நினைப்பு. ஓசியாகக் கிடைத் தவன் என்று என் தாய் அவனைப் பற்றிக் கூறுவாள். அவனும் என் தாயின் காதலர்களில் ஒருவன். என் தாய்க்கு எத்தனையோ காதலர்கள் இருக்கிறார்கள்.”

“”அவள் உன்னை அடிப்பாளா?”

“”யார்? என் தாயா? எனக்கு அது பிடிக்கும். நான் இல்லாமல் அவங்களால் வாழ முடியாது. அவங்க ஒரு இளகிய இதயத்தைக் கொண்டவங்க. மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டவங்க என்பது வேறு விஷயம். ஆனால் எங்களுடைய தெருவில் இருப்பவர்கள் எல்லாரும் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டவர்கள்தான். என் தாய் ஒரு பேரழகி. எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவங்க. முழுமையாக மது அருந்தி, போதையில் ஆழ்ந்து கிடப்பாங்க. ஒரு கிராமத்து தேவடியாள். நான் அவங்கக்கிட்ட கூறுவேன்: “என்னு டைய பாவப்பட்ட பெண்ணே! மது அருந்துவதை நிறுத்துங்க. நீங்க பணம் சம்பாதிக்கலாம்’ என்று. ஆனால் அவங்க வெறுமனே சிரிப்பாங்க. ஒரு முட்டாள்தனமான பெண்! இல்லாவிட்டால் வேறு என்ன? ஆனால் அவங்க நல்லவங்க. அவங்க கண் விழிச்ச பிறகு, நீங்கள் அதைத் தெரிஞ்சுக்குவீங்க.”

அவன் இதயத்திலிருந்து சிரித்தான். அவன் சிரித்தபோது என்னுடைய இதயத்திற்குள் என்னவோ பொங்குவதைப்போல இருந்தது. என் இதயம் இரக்கம் கொண்டு எழுந்து அடங்கியது. அந்த நகரம் முழுவதும் கேட்பது மாதிரி சத்தம் போட்டு அழ வேண்டும்போல எனக்குத் தோன்றியது. கழுத்திற்கு மேலே அவனுடைய தலை ஒரு அசாதாரண மலரைப்போல ஆடியது. உணர்ச்சிவசப்பட்டதால் அவனுடைய கண்களில் இருந்து மேலும் அதிகமாக பிரகாசம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. பதில் கூற முடியாத அளவிற்கு அது என்னை தன்னை நோக்கி இழுத்தது.

சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், கருணை கலந்த அவனுடைய சிந்தனைகளைக் கேட்டு ஒரு நிமிட நேரத்திற்காவது நான் எங்கே இருக்கிறேன் என்ற விஷயத்தைக்கூட மறந்துவிட்டேன். ஆனால் அடுத்த நிமிடம் சிறையில் இருப்பதைப் போன்ற சாளரத் தைப் பற்றியும், வெளியே இருந்த சேற்றுக் குவியலைப் பற்றியும், அறைக்குள் இருந்த அடுப்பைப் பற்றியும், அறையின் மூலையில் கிடக்கும் மரத்துண்டுகளைப் பற்றியும் என்பதைப்போல, மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த பெண்ணைப் பற்றியும் நான் மனதில் நினைத்துப் பார்த்தேன்.

“”நல்ல சுவாரசியமான மேஜிக். அப்படித்தானே?”- அந்த சிறுவன் பெருமையுடன் கேட்டான்.

“”நல்ல சுவாரசியமான விஷயம்தான்.”

“”பட்டாம்பூச்சிகள் இல்லை… பட்டாம்பூச்சிகளும் மின்மினிப் பூச்சிகளும் இல்லை.”

“”உன் பெயர் என்ன?”

“”லியோங்கா.”

“”நீ என்னுடைய பெயரைக் கொண்ட புத்திசாலிப் பையனா?”

“”உண்மையாகவா? நீங்கள் எப்படிப்பட்டவர்?”

“”நானா? யாருமே இல்லாதவன்…”

“”என்னிடம் உண்மையைச் சொல்லுங்க. எல்லாரும் ஏதாவ தொரு வகையைச் சேர்ந்தவர்கள்தான். எனக்கு அது தெரியணும். நீங்கள் நல்ல மனிதர் என்று தோன்றுகிறது.”

“”இருக்கலாம்.”

“”எனக்குத் தெரியும். நீங்கள் ஒரு பயந்தாங்கொள்ளியும்கூட.”

“”பயந்தாங்கொள்ளியா?”

“”வேணும்னா நாம் பந்தயம் வைக்கலாம்.”

எல்லாம் தெரியும் என்பது மாதிரியான ஒரு சிரிப்பைச் சிரித்த வாறு அவன் என்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினான்.

“”நான் பயந்தாங்கொள்ளி என்று எதை வச்சு நீ நினைச்சே?”

“”அதுவா… நீங்க இப்போ என் பக்கத்துல இருக்கீங்க. உங்களுக்கு இரவு நேரத்தில் வெளியே போவதற்கு பயம் இருப்பதால்தான் நீங்க அப்படி நடந்து கொள்கிறீர்கள்.”

“”ஆனால் பொழுது புலர ஆரம்பிச்சிடுச்சு.”

“”அப்படின்னா நீங்க போயிடுவீங்க.”

“”உன்னைப் பார்க்குறதுக்கு நான் மீண்டும் வருவேன்.”

அவன் என்னை நம்பவில்லை. அவன் தன்னுடைய அழகான கண்களை இமைகளைக் கொண்டு மூடினான். ஒரு நிமிட இடைவெளிக்குப் பிறகு அவன் கேட்டான்:

“”எதற்கு?”

“”உன்கூட இருக்குறதுக்கு. நீ நல்ல ரசிகனாச்சே! நான் வரட்டுமா?”

“”சரி… இங்கே எவ்வளவு ஆட்கள் வருவது உண்டு.” ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவன் தொடர்ந்து சொன்னான்:

“”நீங்க சும்மா விளையாட்டுக்குச் சொல்றீங்க.”

“”விளையாட்டுக்குச் சொல்லல. உண்மையாகவே நான் வருவேன்.”

“”அப்படியென்றால் சரி. ஆனால் நீங்க என்னைத் தேடி வந்தால் போதும். என் தாயிடம் போக வேண்டாம். அவங்களை யாருக்கு வேணும்? நாம ரெண்டு பேரும் நண்பர்களாக இருப்போம்.”

“”சரி…”

“”ஒரு விஷயம்… நீங்கள் என்னைவிட வயதானவர் என்பது ஒரு விஷயமே அல்ல. உங்களுக்கு என்ன வயது?”

“”இருபத்தொண்ணு நடக்குது.”

“”எனக்கு பன்னிரண்டு நடக்குது. எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. எனக்கு இருப்பது அந்த நீர் கொண்டு வரும் பெண்ணின் மகள் காத்கா மட்டும்தான். என்கிட்ட வந்தால் அவளை அவளுடைய தாய் உதைப்பாள். நீங்க ஒரு திருடனா?”

“”இல்லை. ஏன் அப்படிக் கேட்கிறே?”

“”உங்க முகம் அந்த அளவிற்கு கோரமாக இருக்கு. நீளமான மூக்கும், சுருக்கங்கள் விழுந்த முகமும்… அசல் திருடனுக்கு இருப் பதைப்போலவே இருக்கு. இங்கே இரண்டு திருடர்கள் வழக்கமா வருவாங்க. ஒரு ஆளின் பெயர் ஸாஷ்கா. அவன் ஒரு முட்டாள். ஆனால் நல்ல பலசாலி. இன்னொரு ஆளின் பெயர் வனிய்கா. அவன் இரக்க குணம் படைத்தவன். ஒரு நாயைப் போன்றவன். உங்கக்கிட்ட சிறிய பெட்டிகள் ஏதாவது இருக்குதா?”

“”நான் கொண்டு வர்றேன்.”

“”சரி… நீங்க மீண்டும் வருவீங்கன்னு நான் என் தாயிடம் சொல்ல மாட்டேன்.”

“”என்ன காரணம்?”

“”அது அப்படித்தான். ஆண்கள் வருவது என்பது என் தாய்க்கு எல்லா நேரங்களிலும் விருப்பமுள்ள ஒரு விஷயம். அவங்களுக்கு ஆண்களை மிகவும் பிடிக்கும். ஆண்களின் பைகளையும்தான். அம்மா ஒரு தமாஷான பெண். அவங்களோட பதினைந்தாவது வயதில் நான் அவங்களுக்குக் கிடைச்சேன். ஆனால் அது எப்படி நடந்தது என்று என் தாய்க்கு இப்போதும் தெரியாது. நீங்க இனிமேல் எப்போ வருவீங்க?”

“”நாளைக்கு சாயங்காலம்…”

“”சாயங்காலம் நேரம் வந்துவிட்டால், என் தாய் நல்லா குடிச்சி ருப்பாங்க. திருடவில்லையென்றால் பிறகு நீங்கள் எப்படி வாழுறீங்க?”

“”நான் பவேரியன் க்யாஸ் விற்கிறேன்.”

“”அப்படியா? எனக்கு ஒரு குப்பி கொண்டு வந்து தருவீங்களா?”

“”தாராளமா… கட்டாயம் கொண்டு வந்து தர்றேன். நான் புறப்படட்டுமா?”

“”சரி… நீங்க மீண்டும் வருவீங்களா?”

“”கட்டாயமா…”

அவன் அந்த நீண்டு மெலிந்த கைகளை நீட்டிப் பிடித்தான். அந்த குளிர்ந்துபோன கைகளை என் கைகளுக்குள் வைத்து நான் குலுக்கினேன். திரும்பிப் பார்க்காமல் ஒரு மது அருந்தியவனைப் போல வேகவேகமாக நான் அந்த வாசலுக்கு வந்தேன்.

நேரம் விடிந்து கொண்டிருந்தது. அணையப் போகும் வெள்ளி நட்சத்திரம் நடுங்கியவாறு அந்த நனைந்து கிடந்த கட்டிடங்களுக்கு மேலே வானத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. கீழ்தளத்தில் இருந்த கட்டிடத்தின் சாளரங்கள் ஒரு குடிகாரனின் சுருங்கிப்போன, அசிங்கமான கண்களைப்போல என்னைப் பார்த்தன. வாசலில் நின்ற குதிரை வண்டியில் சிவந்த முகத்தைக் கொண்ட ஒரு மனிதன் படுத்திருந்தான். அவனுடைய பெரிய கால்கள் விரிந்து கிடந்தன. சிறு தாடி வானத்தை நோக்கித் தூக்கிக் கொண்டிருந்தது. வெள்ளை நிறத்தில் இருந்த பற்கள் அதற்கு மத்தியில் தெளிவாகத் தெரிந்தன. அவன் கண்களை மூடிக்கொண்டு யாரையோ கிண்டல் பண்ணி சிரித்துக் கொண்டிருக்கிறான் என்று நமக்குத் தோன்றும். முதுகில் முடிகள் உதிர்ந்த ஒரு நாய், நான் நீரில் நடக்கும் சத்தத்தைக் கேட்டு எனக்கருகில் வந்து கால்களை முகர்ந்து பார்க்கத் தொடங்கியது. என்னுடைய இதயத்தில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத இரக் கத்தை எழுப்பியவாறு பசியின் கொடுமையை அது வெளிப்படுத்தியது.

முந்தைய இரவு உண்டான அந்த சேற்று நீரில், அதிகாலை வேளையில் வானம் தன் முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. நீலநிறமும் குங்குமத்தின் நிறமும் சேர்ந்து தெரிந்த வானத்தின் தோற்றம் அந்த சேற்று நீரில் மனதை மயக்கி வசப்படுத்தும் அட்டகாசமான இனிய உணர்வைப் படைத்தது.

மறுநாள் நான் வசித்துக் கொண்டிருந்த பகுதியில் இருந்த சிறுவர்களிடம் எனக்குக் கொஞ்சம் வண்டுகளையும் பூச்சிகளையும் பிடித்துத் தரவேண்டும் என்று சொன்னேன். மருந்துக் கடைக்காரனி டம் அழகான சிறிய அட்டைப் பெட்டிகளை வாங்கினேன். ஒரு குப்பி க்யாஸ், கொஞ்சம் தேனில் செய்யப்பட்ட கேக்குகள், பன்கள் ஆகியவற்றையும் வாங்கிக் கொண்டு நான் லியோங்காவைப் பார்ப்பதற்காகச் சென்றேன்.

மிகுந்த ஆச்சரியத்துடன் லியோங்கா என்னுடைய பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டான். அந்தப் பகல் வெளிச்சத்தில் அவனுடைய கண்கள் எப்போதும் இருப்பதைவிட அழகாகவும் மலர்ந்தும் காணப்பட்டன.

“”கடவுளே!”- ஒரு சிறுவனிடமிருந்து வரும் குரல் என்பதைப் போல இல்லாமல் ஆழத்திலிருந்து புறப்படுவதைப்போன்ற குரலில் அவன் சொன்னான்:

“”இங்கே பாருங்க… நீங்க ஒரு பணக்காரரா? இல்லாவிட்டால் இதெல்லாம்…? இதெல்லாம் எப்படி முடியும்? ஒரு வசதி படைத்த மனிதர் வறுமை வேடம் போட்டுக்கொண்டு திரிகிறீர்கள். நீங்கள் ஒரு திருடர் இல்லை என்று நீங்களே சொன்னீங்க. அடடா… என்ன அழகான பெட்டிகள்! என் கைகள் கழுவப்படாமல் இருப்பதால் எனக்கு அதைத் தொடுவதற்குக்கூட தயக்கமாக இருக்கிறது. அதற்குள் என்ன இருக்கு? அந்த வண்டு என்ன மாதிரி சத்தம் போடுகிறான்! எல்லாம் சிவப்பு நிறத்தில் இருக்கின்றன. சில பச்சைக்காரர்களும் இருக்கிறார்கள். கடவுளே! போடா, பறந்து போடா… போகமாட்டியா? ம்… அது நடக்காது.”

தொடர்ந்து அடக்க முடியாத சந்தோஷத்துடன் அவன் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தான்.

“”அம்மா… சீக்கிரமா கொஞ்சம் வாங்க. ஏய்… விலைமாதுவே! நீங்க என் கைகளைக் கொஞ்சம் கழுவிவிடுங்க. இந்த மனிதர் என்ன வெல்லாம் கொண்டு வந்திருக்கிறார் என்பதை வந்து பாருங்க. இவரை உங்களுக்குத் தெரியுமா? கடந்த இரவு வேளையில் உங்களை இங்கே கொண்டு வந்த மனிதர்… போலீஸ்காரரைப்போல பார்ப்ப தற்கு இருக்கிறார். இவருடைய பெயரும் லியோங்காதானாம்.”

“”நீ அவருக்கு நன்றி சொல்லு”- சிறிதும் அறிமுகமில்லை என்று தோன்றக்கூடிய சாந்தமான குரல் எனக்குப் பின்னாலிருந்து கேட்டது.

சிறுவன் பலமாகத் தலையை ஆட்டினான்.

“”நன்றி… நன்றி…”

முடி இழையைப் போன்ற தூசுப்படலம் ஒரு மேகக் கூட்டத் தைப்போல அந்த தரைக்கு மேலே பரவியது. அதற்குள்ளிருந்து ஒரு பெண்ணின் புன்சிரிப்பில் தெரிந்த கொஞ்சம் பற்களையும், மங்கலாகத் தெரிந்த முகத்தையும் என்னால் பார்க்க முடிந்தது.

“”குட் மார்னிங்!”

“”குட் மார்னிங்!”- அந்தப் பெண் திரும்பச் சொன்னாள். அவளுடைய அடக்கிப் பிடித்த குரல்… ஒரு விதத்தில் மிகவும் சக்தி படைத்ததாக இருந்தது. தன்னுடைய சிறிய கண்களைக் கொண்டு, சற்று கேலி பண்ணுவதைப்போல அவள் என்னைப் பார்த்தாள்.

லியோங்கா என்னை மறந்து போயிருந்தான். அவன் ஒரு தேன் கேக்கைச் சுவைத்துக் கொண்டிருந்தான். அந்த அட்டைப் பெட்டி களை மிகவும் கவனமாகத் திறந்துகொண்டே அவன் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். கண்களுக்குச் சற்றுக் கீழே நீலநிறத்தைப் பரவச் செய்துகொண்டு அவனுடைய இமைகள் நிழல் விரித்துக்கொண்டிருந்தன. ஒரு கிழவனின் தெளிவற்ற பார்வை யைப்போல சூரியன் சேறு படிந்த சாளரத்தின் கண்ணாடிகள் வழியாக உள்ளே பார்த்துக் கொண்டிருந்தது. அந்தச் சிறுவனின் சிவந்த தலைமுடியில் அது சிறிதும் கடுமை இல்லாத பிரகாசத்தைப் பரப்பியது. கழுத்துப் பகுதியில் அவனுடைய சட்டை திறந்து கிடந்தது. அந்தச் சிறிய எலும்புக் கூட்டிற்குள் அவனுடைய இதயம் துடிப்பதை என்னால் கேட்க முடிந்தது. அவனுடைய மார்பில் மிகவும் சிரமப்பட்டு பார்க்க முடிகிற மார்புக் கண்களும் வெளித் தோலும் அந்தத் துடிப்பில் உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்தன.

அவனுடைய தாய் அடுப்பிற்கு அருகில் இருந்து எழுந்தாள். துவாலையை நனைத்து எடுத்து அவள் லியோங்காவின் அருகில் சென்றாள். அவள் அவனுடைய இடக் கையைத் தன் கையால் எடுத்தாள்.

“”அதோ அவன் ஓடுகிறான். அங்கேயே நில்லுடா”- மரப் பெட்டிகளை இறுகப் பற்றிக்கொண்டு, கீழே போட்டிருந்த துணிகளைத் தாறுமாறாக்கி, மெலிந்த கால்களை வெளியே காட்டியவாறு அவன் உரத்த குரலில் சத்தம் போட்டுக் கத்தினான்:

“”அவனைப் பிடிங்க…”- அவன் ஆர்ப்பாட்டத்தை அதிகரித்தான்.

அந்த வண்டைப் பிடித்துத் தன்னுடைய உள்ளங்கையில் வைத்து, சோள மலரின் நிறத்தைக் கொண்ட கண்களால் அதையே வெறித்துப் பார்த்தவாறு, அதிகமான நாட்கள் பழக்கம் இருப்ப தைப்போல காட்டிக் கொண்டு அவன் என்னுடன் பேசினான்.

“”இவை எங்களுக்கு நிறைய இருக்கு. இவற்றை நெருக்கிக் கொன்னுடாதீங்க”- முன்னெச்சரிக்கையாகக் கூறுவதைப்போல அவன் சொன்னான்: “”நல்லா தண்ணி அடிச்ச ஒரு நாள், என் தாய் என்னுடைய மேஜிக் பெட்டிகளின்மீது ஏறி உட்கார்ந்து, இருந்தவை அனைத்தையும் நாசம் பண்ணிட்டாங்க.”

“”அதை மறந்திடு சிறுவனே!”

“”பிணங்கள் ஒரு குவியலாக இருந்தன. அவை எல்லாவற்றையும் நான் நெருப்பு வைத்து எரித்தேன்.”

“”ஆனால் பிறகு ஒருநாள் சில வண்டுகளை நான் உனக்குப் பிடித்துத் தந்தேன்ல?”

“”அதனால் என்ன பிரயோஜனம்? என் தாய் அன்னைக்கு நசுக்கிக் கொன்ற வண்டுகள் அனைத்தும் பயிற்சி பெற்றவையாக இருந்தன. அவை இறந்தவுடன், நான் அவற்றை அடுப்பில் போட்டு எரியவிட்டேன். இதோ… பார்த்தீங்களா? நான் இங்கு ஒரு சுடுகாட்டை உண்டாக்கி வைத்திருக்கிறேன். நான் நடந்து சென்று அவற்றை அதில் போடுவேன். உங்களுக்குத் தெரியுமா? என் கையில் மிங்கா என்ற ஒரு எட்டுக்கால் பூச்சி இருந்தது. கிட்டத்தட்ட என் தாயின் வாடிக்கையாளர்களில் ஒருத்தனைப்போல- அந்த அடிதடி களில் ஈடுபடக்கூடிய தடியன் இருந்தானே…. இப்போ சிறையில் நிரந்தரமாக இருக்கும் ஒருத்தன்… அவனைப்போல அந்த எட்டுக்கால் பூச்சி இருக்கும்.”

“”அடடா… என் செல்ல மகனே!”- அந்தப் பெண் குச்சியைப் போல இருந்த சிறிய விரல்களைக் கொண்ட கைகளால் அவனுடைய தலைமுடியை ஒதுக்கிவிட்டு அவனைக் கொஞ்சினாள். முழங்கை யால் என்னை சீண்டியவாறு, புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்த கண்களுடன் அவள் என்னிடம் கேட்டாள்:

“”நல்ல பையன்… என்ன அழகான கண்கள்! சரியா?”

“”என் கண்களில் ஒன்றை எடுத்து, அதற்கு பதிலாக எனக்கு என்னுடைய கால்களைத் தந்தால் போதும்”- லியோங்கா சிரித்துக் கொண்டே சொன்னான். ஒரு வண்டை கூர்மையாகப் பார்த்துக் கொண்டே அவன் தொடர்ந்து சொன்னான்:

“”இந்தத் தடியன் இரும்புப் பானையைப்போல இருக்கிறான். அம்மா, இவன் அந்த பாதிரியார் மாதிரியே இல்லே? நீங்க ஒரு ஆளுக்கு கோணி சரி பண்ணி தந்தீங்கள்ல அம்மா? அந்த ஆளை ஞாபகத்துல இருக்குதா?”

“”ஞாபகத்துல இருக்குன்னு கட்டாயம் சொல்வேன்.”

சிரித்துக்கொண்டே அவள் அந்தக் கதையைக் கூறத் தொடங்கினாள்:

“”ஒருநாள் ஒரு பாதிரியார் வந்தார். அவருடைய தோற்றத்தைப் பார்க்கவே சகிக்கலை. அவர் என்னிடம் சொன்னார், “நீ ஒரு தையல் பண்ணக்கூடிய பெண்தானே? நீ எனக்கு சணலாலான ஒரு கோணியை உண்டாக்கித் தரமுடியுமா?’ என்று. “அப்படிப்பட்ட கோணிகளைப் பற்றி நான் இன்றுவரை கேள்விப்பட்டதே இல்லை. என்னால் முடியாது’ என்று நான் சொன்னேன். “அப்படியென்றால் உனக்கு நான் கற்றுத் தருகிறேன்’ என்று அவர் சொன்னார். அவர் தன்னுடைய ஆடையை அவிழ்த்தார். நீங்க நம்புவீங்களா? அவருடைய இடுப்பைச் சுற்றி பலமான நீளம் கொண்ட ஒரு கயிறைச் சுற்றி வைத்திருந்தார். சணலைப் பயன்படுத்திக் கோணி தயாரிப்பது எப்படி என்பதை எனக்கு அவர் கற்றுத் தந்தார். அந்தக் கோணியை நெய்து கொண்டிருந்தபோது, நான் மனதில் நினைத்தேன்- “இந்தக் கோணியை வைத்து அவர் என்ன செய்யப் போகிறார்? தேவாலயத்திற்குள் நுழைந்து திருடுவதற்காக இருக்குமோ?’ என்று.”

அவள் சிரித்தாள். ஒரு கையால் அவள் சிறுவனைத் தடவ ஆரம்பித்தாள்.

“”அந்த மனிதர் சரியான நேரத்திற்கு வந்தார். நான் அவரிடம் சொன்னேன், “திருடுவதற்காக நீங்கள் இதை பயன்படுத்துவதாக இருந்தால், நான் இந்த வேலையைச் செய்ய முடியாது’ என்று. ஆனால் அந்த தந்திரசாலியான மனிதர் சிரித்துக்கொண்டே சொன்னார், “இல்லை. ஒரு சுவரில் ஏறிப் பிடிப்பதற்குத்தான். என் வீட்டைத் தாண்டி பெரிய சுவர் இருக்கிறது. நாங்கள் பாவம் செய்பவர்கள். சுவரின் ஒரு பக்கத்தில் இருந்துகொண்டு நாங்கள் பாவம் செய்கிறோம். உனக்குப் புரியுதா?’ என்று. நான் கோணியை நெய்ய ஆரம்பித்தேன். இரவில் என்னுடன் உடலுறவு கொண்ட பிறகு அவர் வெளியே போனார். அப்போ நாங்க எப்படியெல்லாம் சிரிச்சோம் தெரியுமா?”

“”சிரிக்கிறதுன்னா மிகவும் விருப்பமான விஷயமாச்சே!” – ஒரு முதிர்ந்த ஆணின் குரலில் அந்தச் சிறுவன் கேட்டான்: “”பாத்திரத்தை எடுத்து வச்சு தேநீர் தயாரிக்கக்கூடாதா?”

“”அதற்கு இங்கே கொஞ்சம்கூட சர்க்கரை இல்லை.”

“”போயி வாங்கிட்டு வாங்க.”

“”பணமில்லை.”

“”ஓ! உங்களுடைய பாழாய்ப்போன குடிப்பழக்கம்தான் இதற்கெல்லாம் காரணம்! இவரிடமிருந்து கொஞ்சம் பணம் கடன் வாங்குங்க” – அவன் நான் இருந்த பக்கம் திரும்பினான்: “”உங்க கையில காசு இருக்கா?”

நான் அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் காசு கொடுத்தேன். உற்சாகத்துடன் அவள் வேகமாக எழுந்தாள். காய்ந்துபோன, கரி படிந்த சிறிய ஒரு பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்து வைத்து விட்டு, ஒரு பாட்டை மெதுவான குரலில் பாடியவாறு அவள் வெளியே சென்றாள்.

“”அம்மா, அந்த சாளரத்தைக் கழுவுங்க. வெளியே இருக்கும் காட்சிகள் எதையும் என்னால் பார்க்க முடியல” – அந்தச் சிறுவன் உரத்த குரலில் சொன்னான்.

“”டேய், பூச்சிகளா! நீங்க அந்த அளவுக்கு புத்திசாலிகளாக இருக்க வேண்டாம். நான் சொல்றேன்”- அவன் சொன்னான். பூச்சி கள் இருந்த ஒவ்வொரு சிறிய பெட்டியையும் மிகவும் கவனமாக அவன் அலமாரியில் வரிசைப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தான். ஈரமான சுவரில் அறையப்பட்டிருந்த ஆணியின் பலத்தில் நின்று கொண்டிருந்த அலமாரிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. “நல்லா வேலை செய்கிற என் தாய் நூல் நூற்க ஆரம்பித்து விட்டால் நமக்கு இருமல் வரும். இந்த அறை முழுவதும் தூசி நிறைந்து விடும். அப்போது நான் அழுவேன். “அம்மா, கடவுள் புண்ணியமா என்னை வெளியே கொண்டு போங்க. இல்லாவிட்டால் நான் இங்கே கிடந்து அருகிலேயே இறந்துவிடுவேன்’ என்று சொல்வேன். ஆனால் நான் அதையெல்லாம் சகிச்சுக்கிடணும் என்று என் தாய் சொல்லுவாங்க. நான் அவங்ககூடவே இருக்கணும்னு சொல்லுவாங்க. என் அம்மாவுக்கு என்மீது ரொம்ப பிரியம். அதில் சந்தேகமே வேண்டாம். வேலை செய்றப்போ அம்மா பாடிக் கொண்டே இருப்பாங்க. என் தாய்க்கு எவ்வளவோ பாடல்களைத் தெரியும்.”

உணர்ச்சிவசப்பட்டதன் காரணமாக அவனுடைய கண்கள் ஒளிர்ந்தன. அடர்த்தியான புருவங்கள் உயர்ந்து வளைந்து நின்றன. கரடுமுரடான உற்சாகக் குரலில் அவன் பாட ஆரம்பித்தான்.

“”ஸோஃபாவில் கிடப்பது யார்? ஸோஃபிதானே?” – சிறிது நேரம் அந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு நான் சொன்னேன்.

“”அது நல்ல பாட்டு இல்ல…”

“”அந்தப் பாட்டுகள் எல்லாம் அப்படிப்பட்டவைதான்”- லியோங்கா உரத்த குரலில் சொன்னான். திடீரென்று எதையோ கேட்டதைப்போல அவன் சொன்னான்: “”அந்தப் பாட்டைக் கேட்டீங்களா? சீக்கிரமா என்னைக் கொஞ்சம் தூக்குங்க.”

சாம்பல் நிறம் படர்ந்த தோலால் மூடப்பட்டிருந்த அந்த சிறிய எலும்புக் கூட்டை நான் எடுத்துத் தூக்கினேன். தன்னுடைய தலையை சாளரத்தின் வழியாக வெளியே வைத்துக்கொண்டு ஆர்வத்துடன் அவன் கூர்ந்து கவனித்தான். அவனுடைய அசைவே இல்லாத கால்கள் சுவரிலிருந்து கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருந்தன. வெளியே தெருவில் ஆர்கனில் ஒரு அருமையான பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு பையனின் கரடுமுரடான குரலுடன், நாயின் ஊளைச் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தப் பாட்டுடன் சேர்ந்து லியோங்கா முனகிக் கொண்டிருந்தான்.

தறியில் தூசு குறைந்து விட்டிருந்தது. அவனுடைய தாயின் தலைக்குப் பின்னால் சிதிலமடைந்த சுவரில், ஒரு நாணயத்தின் அளவிற்குப் பெண்டுலம் இப்படியும் அப்படியுமாக ஆடிக்கொண் டிருந்தது. சமையலறையில் பாத்திரங்கள் கழுவாமல் கிடந்தன. அங்குள்ள எல்லா பொருட்களின் மீதும் தூசியால் ஆன ஒரு அடர்த்தியான படலம் படர்ந்து விட்டிருந்தது. மிகவும் அதிகமாக தூசு படர்ந்திருந்தது அந்த அறையின் மூலையில் இருந்த எட்டுக்கால் பூச்சியின் வலையின்மீதுதான்.

லியோங்காவின் இருப்பிடம் தூசிப்படலம் நிறைந்த ஒரு பொந்தைப்போல இருந்தது. அந்த துவாரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஏராளமான தூசிகள் படிந்திருந்தன.

தேநீர் கொதித்துக்கொண்டிருந்த பாத்திரம் அதற்கென்று இருக்கக்கூடிய சத்தத்தை உண்டாக்கியது. அதன் சத்தத்தைக் கேட்டு பயந்துவிட்டதைப்போல, தெருவில் ஒலித்துக் கொண்டிருந்த ஆர்கனின் சத்தம் நின்றுவிட்டது. அதற்கு பதிலாக ஒரு முரட்டுத்தனமான குரல் வெளியே கேட்டது: “”ரிஃப் ராஃப்.”

“”என்னைக் கீழே விடுங்க”- நீண்ட பெருமூச்சை விட்டவாறு

லியோங்கா சொன்னான்: “”ஆட்கள் அவனை அங்கேயிருந்து விரட்டி விட்டுட்டாங்க.”

நான் அவனை அந்த பெட்டியின்மீது உட்கார வைத்தேன். நெஞ்சைத் தடவிக்கொண்டும், அசைந்து கொண்டும் இருந்த அவன் மிகவும் கவனமாக இருமினான்.

“”என் நெஞ்சு வலிக்குது. கொஞ்ச நேரம் சுத்தமான காற்றை சுவாசிப்பது என் உடலுக்கு நல்லது அல்ல. நீங்க எப்போதாவது பேயைப் பார்த்திருக்கீங்களா?”

“”இல்ல…”

“”நானும் பார்த்தது இல்ல. இரவு வேளையில் அவை வெளியே வருவதை எதிர்பார்த்துக்கொண்டு அடுப்பிற்குக் கீழே நான் உட்கார்ந்திருப்பேன். பேய்கள் சுடுகாட்டில் சுற்றித் திரியும். அப்படித்தானே?”

“”உனக்கு அவற்றால் என்ன ஆகணும்?”

“”அது ஒரு சுவாரசியமான விஷயம். அந்தப் பேய்களில் நல்லவர்களும் இருக்கலாமே! நீர் கொண்டு வரும் பெண்ணின் மகள் காத்கா அந்தத் தரைக்குக் கீழே இருக்கும் அறையில் ஒரு பேயைப் பார்த்திருக்கிறாள். அவளுக்கு பயம் வந்துவிட்டது. ஆனால் அப்படி பயப்படச் செய்யும் விஷயங்கள் எதுவும் என்னை பயமுறுத்த வில்லை.”

தன்னுடைய காலைச் சுற்றிக் கிழிந்த துணிகளை இழுத்து சுற்றிக்கொண்டே அவன் மிகவும் வேகமாகப் பேசிக் கொண்டி ருந்தான்.

“”எனக்கு அவற்றைப் பிடிக்கும். பயப்படச் செய்யும் கனவுகள்மீது எனக்கு மிகவும் விருப்பம். மேலே வேர்கள் இருக்கும்- இலைகளும் கிளைகளும் தலைகீழாக வளரும்- வேர்களுடன் வானத்தைத் தள்ளிக் கொண்டு நிற்கும் ஒரு மரத்தை நான் கனவில் கண்டேன். வியர்வையால் குளித்து நான் கண்விழித்து விட்டேன். ஒருநாள் நான் என் தாயைக் கனவில் கண்டேன். எந்தவித ஆடைகளும் இல்லாமல் என் தாய் படுத்திருந்தாள். ஒரு நாய் என் தாயின் வயிற்றின்மீது உட்கார்ந்து மாமிசத் துண்டைச் சுவைத்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு துண்டையும் தின்று முடித்து, அவன் எலும்புத் துண்டைத் துப்பிக் கொண்டிருந்தான். எங்களுடைய வீட்டை ஒரு வழிபண்ணி, அவன் தெரு வழியாக ஓட ஆரம்பித்தான். கதவுகளும் சாளரங்களும் பெரிய சத்தத்துடன் மூடின. ஒரு பூனைக்குட்டி அதற்குப் பின்னால் ஓட ஆரம்பித்தது…”

அவன் தன்னுடைய நடுங்கிக்கொண்டிருந்த தோள்களை உயர்த்தினான். ஒரு வண்ணத்தாளை எடுத்து அதைச் சுத்தம் செய்து விரித்து, சாளரத்தின் படியில் வைத்துவிட்டு அவன் சொன்னான்:

“”இந்தத் தாளை வைத்து அழகான பல பொருட்களை நான் உண்டாக்குவேன். இல்லாவிட்டால் நான் இவற்றைக் காத்காவிற்குக் கொடுப்பேன். இப்படிப்பட்ட நல்ல பொருட்களை அவளுக்கு மிகவும் பிடிக்கும். கண்ணாடித்துண்டு, பாத்திரத் துண்டுகள், தாள், வேறு சிறு சிறு பொருட்கள்…. இவை எல்லாம் அவளுக்குப் பிடிக்கும். ஒரு வண்டிற்கு நாம் தினமும் நன்றாக இரை கொடுத்தால், அது குதிரையைப்போல பெரியதாக ஆகும். அப்படித்தானே?”

அவன் அதை முழுமையாக நம்புகிறான் என்று எனக்குத் தோன்றியது. அதனால் நான் சொன்னேன்:

“”அதற்கு ஒழுங்காகத் தீனி போட்டால் அப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது.”

“”உண்மையாகவா?”- மிகுந்த சந்தோஷத்துடன் அவன் கேட்டான்: “”ஆனால் என் தாய் சிரிக்கிறாங்க. ஒரு பைத்தியக்காரப் பெண்!”

ஒரு மோசமான வார்த்தையையும் அவன் சேர்த்துச் சொன்னான்.

“”அவங்க ஒரு பைத்தியம்தான். நன்றாகத் தீனி கொடுத்தால், ஒரு பூனையை திடீரென்று குதிரை அளவிற்குப் பெரியதாக ஆக்க முடியும். இல்லையா?”

“”முடியும். என்னால் அதை உறுதியாகக் கூற முடியும்.”

“”அதற்குக் கொடுக்கக்கூடிய அளவிற்கு உணவு என் கையில் இல்லை. இதை அதிர்ஷ்டக் கேடு என்று அல்லாமல் வேறு எப்படி அழைப்பது? அப்படிச் செய்ய முடியுமானால் விஷயம் நல்லபடி நடக்கும்.”

உணர்ச்சிவசப்பட்ட காரணத்தால் அவன் இறுக்கமாகத் தன்னைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டு, கைகளைச் சுருட்டிக் கொண்ட அவன் அவற்றைத் தன் மார்பில் அழுத்தி வைத்துக் கொண்டான்.

“”ஈக்கள் ஒரு நாய் அளவிற்குப் பெரிதாகிப் பறந்து திரியும். வண்டுகளுக்கு ஒரு குதிரை அளவிற்குப் பெரிய தோற்றமும் பலமும் கிடைத்து விட்டால், அதன்மீது ஒரு குவியல் செங்கற்களை ஏற்றினா லும் அவன் அதைக் கொண்டுபோய் விடுவான். இல்லையா?”

“”அவனுக்கு தாடியும் கிருதாவும் இருக்கும் என்பதுதான் பெரிய பிரச்சினையே!”

“”அது ஒரு பிரச்சினையே இல்லை. கடிவாளம் போட நாம் அதை பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லாவிட்டால் ஆடி ஆடி நடக்கும் ஒரு எட்டுக்கால் பூச்சியின் பிரச்சினையை எடுப்போம். எதைப்போல அது இருக்கிறது என்று கூறுவது? ஒரு பூனைக் குட்டியைவிட பெரிய அளவை அவனுக்குக் கொடுக்க முடியாது. எனக்கு கால் இருந்திருந்தால், அவன் எப்படி நடப்பான் என்பதை நானே நடந்து காட்டியிருப்பேன். அப்படியென்றால், கடினமாக உழைத்து என்னுடைய வளர்ப்பு மிருகங்கள் எல்லாவற்றுக்கும் நல்ல முறையில் தீனி கொடுப்பேன். நான் ஒரு கடையை ஆரம்பிப்பேன். வெளியே பரந்து கிடக்கும் வயலில் இன்னொரு வீட்டை உண்டாக்குவேன். திறந்து கிடக்கும் வயலில் நீங்கள் எப்போதாவது நடந்திருக்கிறீர்களா?”

“”நடந்திருக்கிறேனே! என்ன விஷயம்?”

“”அது எப்படி இருக்கும் என்று எனக்குக் கொஞ்சம் சொல்ல முடியுமா?”

வயல்களைப் பற்றியும் மைதானங்களைப் பற்றியும் நான் அவனுடன் பேசத் தொடங்கினேன். மிகுந்த கவனத்துடன் அவன் அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் உறங்க ஆரம்பித்த வுடன் கண் இமைகள் கண்ணுக்கு மேலே தாழ்ந்து விட்டிருந்தன. வாய் மெல்லத் திறந்தது. அதைப் பார்த்தவுடன் நான் என்னுடைய பேச்சின் சத்தத்தைக் குறைத்தேன். ஆனால் கொதித்துக் கொண்டிருந்த பாத்திரத்துடன் அவனுடைய தாய் அங்கு வந்தாள். அவனுடைய இன்னொரு கையில் ஒரு தாள் பொட்டலம் இருந்தது. அவளுடைய ரவிக்கைக்குள்ளே ஒரு குப்பி வோட்கா வெளியே தள்ளிக் கொண்டிருந்தது.

“”நான் வந்துட்டேனே!”

“”வெறும் புல்லும் பூக்களும் மட்டும்”- அவன் சொன்னான்: “”அம்மா, ஒரு தள்ளு வண்டியில் ஏற்றி உட்கார வைத்து என்னை வெளியே இருக்கும் வயலுக்கு அழைத்துக்கொண்டு போகக் கூடாதா? ஒரு முறைகூட அதைப் பார்க்காமலேயே நான் இறந்து விடப் போகிறேன்! நீங்க ஒரு அசிங்கம் பிடித்த பன்றி… அம்மா!”- மிகுந்த கவலையுடனும் கோபத்துடனும் அவன் சொன்னான்.

ஆனால் மிகுந்த கனிவுடன் அந்தப் பெண் அதற்கு எதிர்வினை ஆற்றினாள். “”நீ இப்படியெல்லாம் கோபமாகப் பேசக்கூடாது. உனக்கு அதற்கான வயது ஆகவில்லை.”

“”கோபமாக பேசக்கூடாது என்று கூறுவது உங்களுக்கு மிகவும் சர்வசாதாரணமான ஒரு விஷயம். உங்களுக்கு விருப்பமான இடத்திற்கு ஒரு நாயைப்போல நீங்கள் போகலாம். நீங்கள் கொடுத்து வைத்தவள்…”- எனக்கு நேராகத் திரும்பிக் கொண்டு அவன் தன் பேச்சைத் தொடர்ந்தான்: “”இந்த வயல்களையும் மைதானங்களையும் படைத்தது கடவுள்தானே?”

“”அப்படித்தான் நான் நினைக்கிறேன்.”

“”எதற்காக அவற்றைக் கடவுள் படைத்தார்?”

“”மனிதர்கள் அந்த வழியே நடந்து திரிய…”

“”திறந்து கிடக்கும் வயல்கள்…!”- அவன் கூறிக் கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் விருப்பங்களை வெளிப்படுத்தும் அடையாளமாகப் புன்சிரிப்பு மலர்ந்து காணப்பட்டது. “”நான் என்னுடைய பிராணிகள் அனைத்தையும் அந்த வயலில் இறக்கி விடுவேன். என்னுடைய வளர்ப்பு மிருகங்களும் அந்த சுகத்தைக் கொஞ்சம் அனுபவிக்கட்டும். சரி… தெய்வத்தை அகதிகள் இல்லத்திலா படைக்கிறார்கள்?”

அவனுடைய தாய் தலையில் அடித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தாள். படுக்கையில் விழுந்து, கைகளையும் கால்களையும் ஆட்டியவாறு அவள் உரத்த குரலில் சொன்னாள்:

“”யாராவது என்னை மேலே கொஞ்சம் கொண்டு போவார்களா? என் தங்கமே…”

புன்சிரிப்புடன் லியோங்கா அவளைப் பார்த்தான். பாசம் பொங்க அவளைப் பார்த்து அவன் சொன்னான்:

“”சின்ன பிள்ளையைப்போல இவ்வளவு பெரிய பெண் சிரிக்கிறாங்க. அம்மாவுக்கு சிரிப்புமீது மட்டுமே விருப்பம்!”

அந்த வார்த்தைகளை அவன் மீண்டும் சொன்னான்.

“”அவள் சிரிக்கட்டும்!” – நான் சொன்னேன்: “”நீ அதைப் பெரிதாக எடுக்க வேண்டாம்.”

“”இல்லை. நான் அதைப் பெரிதாக எடுக்கவில்லை” – லியோங்கா ஒப்புக் கொண்டான். “”சாளரத்தின் கண்ணாடிகளைக் கழுவாத போதுதான், நான் என் தாயை வாய்க்கு வந்தபடி பேசுவேன். “சாளரத் தைக் கழுவு… சாளரத்தைக் கழுவு’ என்று நான் கெஞ்சிக்கொண்டே இருப்பேன். வார்த்தைகளால் விவரிக்க முடியாத, கொடுத்து வைக்கப்பட்ட பகல் வெளிச்சத்தை என்னால் பார்க்க முடியாது. ஆனால் என் தாய் எல்லா நேரங்களிலும் அதை மறந்து விடுவாங்க.”

தேநீர் பாத்திரத்தைக் கழுவுவதற்கு மத்தியில், அவள் மெதுவாக சிரித்துக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தவாறு அவள் அந்த நீல நிறக் கண்களில் ஒன்றைச் சிமிட்டினாள்.

“”இங்கே பாருங்க… இவன் ஒரு முத்து ஆயிற்றே! இவனுடைய இதயம் எந்த அளவிற்குப் பரிசுத்தமானது! இவன் மட்டும் இல்லாமல் போயிருந்தால், நான் என்னுடைய உயிரை எப்போதோ முடித்துக் கொண்டிருப்பேன்! ஆமாம்… நான் தூக்கில் தொங்கி இறந்திருப்பேன்…”

புன்னகைத்துக்கொண்டே அந்தப் பெண் இவை எல்லாவற்றை யும் சொன்னாள்.

அந்த நிமிடமே லியோங்கா என்னிடம் கேட்டான்: “”நீங்கள் ஒரு முட்டாளா?”

“”எனக்குத் தெரியாது. ஏன்?”

“”அம்மா சொல்றாங்க, நீங்க ஒரு முட்டாள் என்று.”

“”ஆமாம்… நான் அப்படிச் சொன்னேன் என்பதென்னவோ உண்மைதான். எதற்காக அப்படிச் சொன்னேன்?”- எந்தவொரு கூச்சமும் இல்லாமல் அவள் சொன்னாள்: “”தெருவில் மது அருந்தி ஆர்ப்பாட்டம் பண்ணும் ஒரு பெண்ணை இந்த மனிதர் அவளு டைய வீட்டில் கொண்டு வந்து விடுகிறார். அவளைப் படுக்கையில் படுக்க வைத்து விட்டு, அங்கேயிருந்து வெளியேறுகிறார். அவ்வளவுதான். நான் இதைச் சொல்றதுக்குக் காரணம் துரோக எண்ணத்தால் அல்ல. என்ன முட்டாள் மனிதன்டா நீ!”

அவளும் ஒரு சிறுகுழந்தையைப் போலவே பேசினாள். அவளுடைய பேசும் முறை ஒரு சிறிய பெண் குழந்தையை ஞாபகப் படுத்தியது. அவளுடைய கண்கள் ஒரு பெண் குழந்தையின் கண் களைப் போலவே இருந்தன. உள்ளே போன மூக்கும், உயர்ந்த உதடும், அதற்கு உள்ளே தெரிந்த ஒரு பல்லும் பார்க்கவே சகிக்க முடியாமல் இருந்தன. அசிங்கமான நடையும், சந்தோஷத்துடன் செய்யும் கிண்டல்களும் அவளின் இன்னொரு பக்கமாக இருந்தன.

லியோங்காவிற்கு மிகவும் அருகில் இருந்த ஒரு பழைய பெட்டியின்மீதுதான் தேநீர்ப் பாத்திரம் எடுத்து வைக்கப்பட்டி ருந்தது. அதன் மூடியின் வழியாக ஆவி வெளியே கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருந்தது. லியோங்கா தன்னுடைய கைகளில் ஒன்றை ஆவி பறப்பதற்கு மேலே வைத்தான். ஆவியால் உள்ளங்கையில் ஈரம் உண்டானதும், அவன் அதை தலைமுடியில் துடைத்துக் கொண்டான். அவனுடைய கண்களில் கனவுகள் தெரிந்தன.

“”நான் பெரியவனாக ஆகும்போது, என் தாய் என்னை ஒரு கை வண்டியில் ஏற்றி தள்ளிக்கொண்டு போவாங்க. தெரு முழுவதும் பிச்சை கேட்டு கெஞ்சி நாங்கள் பணம் சம்பாதிப்போம். அதற்குப் பிறகு நான் அந்த திறந்து கிடக்கும் வயலில் இறங்குவேன்.”

“”ஓஹோ!”- அந்தப் பெண் நீண்ட பெருமூச்சை விட்டுக் கொண்டு சொன்னாள்: “”வயல் ஒரு சொர்க்கம் என்று இவன் நினைத் துக் கொண்டிருக்கிறான். பாவம்! பட்டாள முகாம்களும், வெட்கம் கெட்ட பட்டாளக்காரர்களும், குடிகாரர்களும் மட்டும்தான் அங்கே இருக்கிறார்கள் என்ற விஷயம் இவனுக்குத் தெரியாது.”

“”ஏய்… அப்படி எதுவும் இல்ல…”- அவன் தன் தாயின் கருத்தை எதிர்த்தான். “”இவர்கிட்ட கேட்டுப் பார். இவர் நிறைய வயல்களைப் பார்த்தவர்.”

“”நானும் பார்த்திருக்கேன்.”

“”அது கள்ளு குடித்த பிறகு…”

சிறு குழந்தைகளைப்போல தாயும் மகளும் சண்டை போட ஆரம்பித்தார்கள். அறிவுப்பூர்வமாக அந்தச் சண்டை நீண்டு கொண்டிருந்தது. உற்சாகமான அந்த மாலைப்பொழுது நிறை வடைந்து கொண்டிருந்தது. புகைந்து கொண்டிருந்த வானத்தில், சாம்பல், நீல நிறங்களில் இருந்த மேகங்கள் பரவி விட்டிருந்தன. வீட்டிற்குள் இருள் பரவியது.

ஒரு கோப்பை தேநீர் உள்ளே போனவுடன் சிறுவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. என்னை ஒருமுறை ஓரக்கண்களால் பார்த்த அவன் தன் தாயின் பக்கம் திரும்பிச் சொன்னான்:

“”என் வயிறு நிறைந்துவிட்டது. எனக்குத் தூக்கம் வருது.”

“”அப்படியென்றால் தூங்கு”- தாய் சொன்னாள்.

“”அப்படின்னா இவர் போகப் போறாரா? நீங்க போயிடுவீங்களா?”

முழங்காலால் என்னைச் சீண்டிய அவள் சொன்னாள்: “”பயப்படாதே… நான் இவரை விடமாட்டேன்.”

“”போகக்கூடாது… தெரியுதா?”- லியோங்கா சொன்னான். கண்களை மூடிக்கொண்டு நன்கு பரவி அந்த மரப்பெட்டியின்மீது அவன் உடலை நீட்டிக் கொண்டு படுத்தான். திடீரென்று தலையை உயர்த்தித் தன் தாயைப் பார்த்து திட்டுகிற குரலில் அவன் சொன்னான்:

“”மற்ற பெண்கள் செய்வதைப்போல… அம்மா, நீங்க இவரைக் கல்யாணம் பண்ணினால் என்ன? கண்களில் கண்ட ஆட்களுடன் எல்லாம் நீங்கள் ஏன் பழகுறீங்க? அவர்கள் உங்களை அடிப்பதைத் தவிர வேறு என்ன செய்கிறார்கள்? இவர் ஒரு அன்பான மனிதர்…”

“”தூங்கப் பார்…”- தேநீர்க் கோப்பையுடன் தன் உதடுகளைச் சேர்த்து வைத்துக்கொண்டு அவள் சொன்னாள்:

“”இவர் ஒரு பணக்காரர் வேறு…”

அவலட்சணம் பிடித்த தன்னுடைய உதடுகளால் அந்தக் கோப்பையிலிருந்து தேநீரை உறிஞ்சிக் குடித்துக் கொண்டே, பழைய ஒரு நன்கு அறிமுகமான மனிதனிடம் கூறுவதைப்போல அவள் என்னிடம் சொன்னாள்:

“”இப்படித்தான் தட்டியும் முட்டியும் எங்களுடைய வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. நாங்கள் இரண்டுபேர் மட்டுமே இருக்கக்கூடிய இந்த வாழ்க்கை… வெளியே இருப்பவர்கள் என்னை பைத்தியம் என்று அழைப்பார்கள். அதனால் என்ன? எனக்கு அதைப்பற்றி எந்த வெட்கக் கேடும் இல்லை. வெளியே நான் ஒரு கேடு கெட்ட சரக்குத்தான். அந்த விஷயம் உங்களுக்கு என்னைப் பார்க்கும்போதே தெரியும்ல? நான் எதற்கு லாயக்கு என்ற விஷயம் உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். அவன் தூங்கிவிட்டான். அவன் ஒரு நல்ல பையன்…”

“”ஆமாம்… மிகவும் நல்ல பையன்.”

“”என்னால் அவனை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்க முடியவில்லை. அவன் நல்ல புத்திசாலி. சரிதானா?”

“”பிறகு? நல்ல அறிவுள்ள பையன்.”

“”நீங்கள் சொன்னது ஒரு வார்த்தைகூடப் பிசகாமல் சரியானது. அவனுடைய அப்பா நல்ல ஒரு மனிதராக இருந்தார். வயதான மனிதர். இந்த சட்டங்கள் எல்லாம் எழுதுவார்களே… அவர்களை நாம் எப்படி அழைப்போம்.”

“”நோட்டரி…”

“”ம்… அதேதான். நல்ல மனிதராக இருந்தார். அவருக்கு என்மீது நல்ல பிரியம் இருந்தது. நான் அவருடைய வீட்டில் வேலை பார்த்தேன்.”

அவள் அவனுடைய கால்களுக்கு மேலே துணியை இழுத்து விட்டாள். அவன் தலையணையாக பயன்படுத்திய அந்தக் கறுத்த துணிக்கட்டை அவள் சரியாக வைத்தாள். தொடர்ந்து மிகவும் சாதாரண முறையில் அவள் தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தாள்:

“”திடீரென்று அவர் இறந்துவிட்டார். நான் அங்கேயிருந்து வேலை முடிந்து திரும்பி வந்த பிறகு அது நடந்தது. ஒரு இரவு வேளையில் வெறுமனே தரையில் நிலை குலைந்து விழுந்து அவர் இறந்துவிட்டார். உங்களுக்கு க்யாஸ் விற்பதுதானே வேலை?”

“”ஆமாம்…”

“”சொந்தத் தொழிலா?”

“”இல்லை, ஒரு முதலாளிக்குக் கீழே…”

மேலும் சற்று நெருக்கமாக நகர்ந்து உட்கார்ந்து கொண்டு அவள் சொன்னாள்:

“”என்னைப் பார்க்குறப்போ உங்களுக்கு வாந்தி எடுக்கணும் போல இருக்கக்கூடாது. எந்தச் சமயத்திலும் நான் ஒரு மோசமான பிறவியாக இருந்தது இல்லை. இந்தத் தெருவில் இருக்கும் யாரிடம் வேண்டுமென்றாலும் கேட்டுக்கோங்க… எல்லாருக்கும் என்னைத் தெரியும்.”

“”எனக்கு வெறுப்போ வாந்தி எடுக்கணும் என்றோ தோணல.”

“”வெட்டப்பட்ட நகங்களும் முரட்டுத்தனமான விரல்களும் இருந்த தன்னுடைய கையை என்னுடைய முழங்காலில் வைத்துக்கொண்டு அவள் தொடர்ந்து சொன்னாள்:

“”லியோங்காவிற்காக நான் உங்களிடம் எப்போதும் நன்றி உள்ளவளாக இருப்பேன். அவன் இன்று மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறான். இன்று நல்ல ஒரு நாளாக இருந்தது. நீங்க நல்ல காரியத்தைச் செய்தீங்க.”

“”நான் போக வேண்டிய நேரம் வந்திடுச்சு!”- நான் சொன்னேன்.

“”எங்கே?”- அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“”எனக்கு வேலை இருக்கு.”

“”இங்கே தங்குங்க.”

“”அது முடியாது.”

“”தன்னுடைய மகனையும் சாளரத்தையும் வானத்தையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, மிகவும் அமைதியாக அவள் சொன்னாள்:

“”ஏன் மெதுவா போகக்கூடாது? நான் என்னுடைய முகத்தை ஒரு துணியால் மூடிக்கொள்கிறேன். என் மகனுக்காக உங்களிடம் நன்றியைக் காட்டாமல் என்னால் இருக்க முடியாது. நான் இங்கு எங்காவது மூடிப் போர்த்திக் கொண்டு படுத்துக் கொள்கிறேன். போதுமா?”

மிகவும் உண்மை துடித்துக் கொண்டிருந்த மன சந்தோஷத்து டன் அவள் பேசினாள். அவளுடைய கண்களில்- குறும்புத்தனமான முகத்தின் சிறுபிள்ளைத்தனம் ததும்பிக் கொண்டிருக்கும் கண் களில் புன்சிரிப்பு மலர்ந்திருந்தது. ஒரு பிச்சைக்காரியின் புன் சிரிப்பாக அது இல்லை. தன்னுடைய நன்றியைத் தெரிவிக்கும் கடமையை நிறைவேற்றக்கூடிய ஒரு வசதி படைத்த பெண்ணின் புன்சிரிப்பு அந்தக் கண்களில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

“”அம்மா…”- அந்தச் சிறுவன் உரத்த குரலில் அழைத்தான்: “”பூச்சிகள் அரிக்கின்றன அம்மா. கொஞ்சம் சீக்கிரம் வாங்க…”

“”அவன் கனவு காண்கிறான்”- தன் மகனுக்கு நேராக குனிந்து கொண்டே என்னிடம் அவள் சொன்னாள்.

நான் வெளியேறினாலும் சிந்தனையில் மூழ்கியவாறு அந்த வாசலிலேயே நின்றிருந்தேன். அந்த வீட்டின் திறந்துவிடப்பட் டிருந்த சாளரத்தின் வழியாக ஒரு தூங்க வைக்கும் பாடல் மிதந்து வந்து கொண்டிருந்தது. ஒரு தாயின் தாலாட்டுப் பாடல் அது. மூக்கை அடைத்துப் பிடித்துக் கொண்டுள்ள ஒரு குரலில் அவள் பாடிக்கொண்டிருந்தாள். முன்பு எந்தச் சமயத்திலும் கேட்டிராத ஒரு பாடலை என்னால் தெளிவாகக் கேட்க முடிந்தது.

“பூச்சியும் பிராணியும் வந்தாச்சு

துன்பமும் தொல்லையும் வந்தாச்சு

துன்பத்தின் கணக்கு தெரியாது- அது

நெஞ்சைக் குத்திக் கிழிக்கிறது!

துயரம்… துயரம்… துயரம் மட்டும்…

எங்கே நாங்கள் பறப்பது?’

சத்தம் போட்டு அழுதுவிடக் கூடாது என்பதற்காக பற்களை யும் உதடுகளையும் சேர்த்து அழுத்தி வைத்துக்கொண்டு நான் அந்த வாசலில் இருந்து தெருவில் இறங்கினேன்.

சென்ஷி

unread,
May 31, 2010, 3:34:24 AM5/31/10
to panb...@googlegroups.com

குட்டிப்பிசாசு: வா.மு. கோமு

வா.மு. கோமு

கீதா விஜயமங்கலம் பஸ் நிறுத்தத் தில் நின்றிருந்தாள். சுந்தர் திருப்பூரி லிருந்து கே.கே.சி பஸ்ஸில் தான் வருவதாகக் கூறியிருந்தான். ஆனால் இப்போதுதான் இவள் கைப்பேசிக்கு அழைத்து பஸ் ஸ்டாண்டில் கே.கே.சி நிற்கிறது என்றும் இன்னமும் வண்டியை எடுக்கவில்லை என்றும் கூறியிருந் தான். இருவரும் பெருந்துறை தேவி சித்ரா திரையரங்கில் வடிவேலின் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் பார்ப்பதாகத் திட்டம் போட்டிருந் தார்கள்.

கீதா நேற்று முன் தினம்தான் ரவியுடன் அந்தப் படத்தை மதியக் காட்சி பார்த்திருந்தாள். அந்தப் படம் கீதாவிற்குச் சுத்த போர் தான். ரவிதான் இவள் விரல்களை இறுக்கமாய்த் தன் விரல்களுக்குள் பிடித்துக்கொண்டு ரசித்துப் பார்த் துக்கொண்டிருந்தான் திரை யையே! இது ஒரு பின் நவீனத்து வப்படம் என்று வேறு இவளிடம் கதையளந்தான். வடிவேல் கண் ணீர் சிந்த, அது ஓடம் போல் ஓடி தேங்கிய குட்டையில் எல்லோ ரும் நீச்சலடிப்பதை நவீனம் நவீ னம் என்றான். இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு முத்தம்கூடத் தராதவனுடன் சினிமா பார்ப்பது படுபோர். அதைவிடப் படமும் படுபோர். ரவியுடன் சினிமா பார்ப்பது இதுவே கடைசி என்று மனதில் முடிவெடுத்தாள்.

சுந்தருக்கோ சொன்னால் புரிய மாட்டேன் என்கிறது. அதே படத் தைத்தான் பார்த்தே ஆக வேண் டும் என்று பிடிவாதம் பிடிக் கிறான். என்னை விட்டுட்டு யாரோட போயி படம் பார்த்தே? என்று கடுப்படிக்கிறான். என் னோட ப்ரண்டு வசுமதிகூடப் போனேன் என்று சுந்தருக்குச் சொல்ல வேண்டி இருந்தது. சுந்தரும் ரவியைப் போலத்தான். என்ன கைவிரல்களைப் பிடிக்கா மல் உரிமையோடு தோளில் கை போட்டுக்கொண்டு படம் பார்ப் பான். பார்த்த படத்தையே யார் பார்ப்பது? பேசாமல் அவன் தோளில் சாய்ந்து தூங்க முயற்சிக்க லாம். ஆயிரம் ப்ளீஸ் போட்டா லும் வேறு படம் வேண்டாம் என்று சொல்லிவிட்டான். கீதாக் குட்டி மேடம் சொன்னால் சரி என்று இந்த சுந்தர் சொல்லியே ஆக வேண்டும். வேண்டும் என்றே இவனை இரண்டு முறை இவன் கூப்பிடுகையில் தட்டிக்கழித்தால் தான் இவன் சரிப்பட்டு வருவான். அதே சமயம் கீதாவின் கைப்பேசி அலறவும் எடுத்து ஹலோ என்றாள்.

“யாரு கீதுவா? நான் சுரேஸ் பேசுறேன். . . நல்லா இருக்கியா?”

“அண்ணா சொல்லுங் கண்ணா. . . இப்பத்தான் உங்களை நெனைச்சேன். . .”

“மாலுவப் பாத்தியாம்மா? கம் பெனிக்கு ஒழுக்கமா வேலைக்கு வர்றளா? அவ நெம்பருக்குக் கூப் பிட்டேன். . . சுவிட்ச் ஆப் அப்ப டின்னே சொல்லுது. . .என் மேல கோபமோ. . .?”
“அண்ணா அவ பாவம்னா. . . பேசாம இங்கேயே நீங்க கட்டிங் மாஸ்டராவே வேலை செஞ்சிட்டு இருந்திருக்கலாம். மேனேஜர் பேசு னதுக்குக் கோவிச்சுக்கிட்டு நின் னுட்டீங்க. . . இப்ப எந்த கம்பெ னில நீங்க வேலை செய்யறீங்க?”
“வேலையா? நான் தஞ்சாவூர்ல இருக்கேன்டி. . . அப்பா அம்மாவ பார்த்துட்டு போலாம்னு வந்தேன். இங்க தோட்டத்துலதான் பத்து நாளா வேலை. . . அப்பாக்கு ஒடம்பு செரியில்லை. . .”
“அண்ணா என்னண்ணா திடீர்னு குண்டு போடறீங்க. . . ஊருக்குப் போயிட்டீங்களா? மாலினிக்குத் தெரியுமா. என்கிட்ட சொல்லவே இல்ல. எப்பிடி அழறா தெரியுமாண்ணா அவ. . . ம் ஆம் பளைங்களை நம்பி புள்ளைங்க நாங்கதான் என்னேரமும் ஏங்கி அழணும் சரி. . . எப்பண்ணா வர்றீங்க?”
“இன்னம் பத்து நாள் ஆகும் கீது. . . வந்த ஓடனே உங்க வீட் டுக்கு வர்றேன். உன் அப்பா, அம்மா, தங்கச்சி நல்லா இருக் காங்ளா?”
“நீங்க கேட்டதா சொல்லிட றேன். . . போதுமா. . .”
“அப்படியே ஊட்டி போயி என் நண்பனைப் பார்க்கறோம்.”
“ஐயோ நான் வர்ல சாமி.”
“ஏண்டி. வரமாட்டீங்றே? அன் னிக்கு மாதிரி இல்ல. . . நிதானமா பண்ணிக்கலாம்.”
“ஐயோ நான் வர்லண்ணா. சேர்ந்தே ஒட்டுக்கா ஷவர்ல குளிப் போம்னுவீங்க. . . வேணா ஒண்ணு பண்றேன். மாலினிகிட்ட சொல் றேன். கல்யாணம் பண்ணிக்கப் போறவீங்க நீங்க ரெண்டுபேர் மட்டும் போங்க. . .”
“சரி உங்கொப்பா சொன்ன மாதிரி உனக்கு மாப்பிள்ளை பார்த்து இங்க ரெண்டு ஜாதகம் வாங்கி வெச்சிருக்கேன்.”
“ஐயோ இப்ப எனக்குக் கல் யாணமே வேண்டாம். . . நீங்க ஜாதகம் கொண்டாந்தாலும் வேஸ்ட்.”
“ஏண்டி, வயசு உனக்கு இரு பத்தி மூணு ஆச்சில்ல. . . இன்னம் ரெண்டு வருசம் போனா அரைக் கிழவி ஆயிடுவே பான்பராக் மென்னு மென்னு உன் பல் எல்லாம் காரை.”
“அதைச் சரிப்பண்ணி பளீர்னு வெள்ளையா இருக்கறதுக்குத்தான் எங்க ஊர் ப்ரெண்டைக் கூப்புடு றேன், கூப்புடுறேன் போனை எடுக்கமாட்டீங்றாப்ல. என்ன கோபம் என் மேலயின்னு தெரியல தடிமாடு. . . இப்பக்கூட அடிச்சேன். என் நெம்பரை பார்த்தாவே எடுக்க மாட்டீங்றான் தடிமாடு.”
“ஒரு ரூபாய் காய்ன் போட்டு கூப்பிடவேன்டீதுதான.”
“ம். . . அந்தத் தடிமாடு 04294 அப்படின்னு பார்த்தாலும் எடுக் காது. அதா பாத்து எடுத்துச் சுன்னாதான் . . . அண்ணா . . . அந்த சிவா இருக்கான்ல. அவனோட பெருந்துறையில நின்னுட்டு இருந் ததை எங்க ஊரு வாத்தியான் கருமன் ஒருத்தன் இருக்கான்னா. . . அவன் பார்த்துட்டு போயி அது கிட்ட சொல்லிட்டான்.”
“அது அதுங்றியே. ஒரு நாள் எக்ஸ்ஸெல் சூப்பர்ல போனாரே அவரா?”
“ஆமா. . . அதுமோட பேரு பழனிச்சாமி. . . நானு கொரங் குன்னு சொல்வேன். என்னோட பேரை அதுமோட செல்லுல 1/2 கிறுக்குன்னு போட்டு வெச்சி ருக்குது. . . லொள்ளு.”
“ஏண்டி உசுரே எம்மேலதான் வச்சிருக்காப்லைன்னு சொன்னே. . கோபம் வந்தா கொரங்கு அப்பிடின்னுவியா?”
“நான் அப்புடித்தான் சொல் வேன். சரீண்ணா நீங்க வாங்க பத்து நாள்ல. . . இன்னொரு போன் வருது. யார்னு தெரியல. எங்கம் மாவா இருந்தா. சாப்புடாம ஏண்டி போனேன்னு கேக்கும். அண்ணா ஈவினிங் ஏழு மணிக்கு கூப்புடுங்ணா. ஓகே. பை”
கீதா கட் செய்துவிட்டு மிஸ்ட்டு கால் பார்த்தாள். குன்னத்தூர் ராம். சரி மறுபடியும் கூப்பிடட்டும் என்று பான்பராக் பாக்கெட்டை கிழித்து வாயில் கொட்டிக்கொண் டாள். கே.கே.சி. வருவதற்கு முக் கால் மணி நேரம் இருக்கிறது. பேசாமல் வீட்டில் சாப்பிட்டு விட்டே வந்திருக்கலாம் என்று தோன்றியது! பஸ் நிறுத்த நிழல் குடையில் இருந்த பென்ச்சில் அமர்ந்தாள். பழனிச்சாமியைக் கூப்பிடுவோம் என்று எண்ணி செல்லில் இதயம் படம் வைத் திருந்த நெம்பருக்கு ஓடீனாள். இந்த நெம்பரை இனி செல்லில் எடுத்துவிடவேண்டும். பழனிச்சாமி நெம்பர்தான் இதயத்திலேயே இருக்கிறதே. ரிங் போகிறது. ரிங் போகிறது. எட்றா. . . எடுடா. . . எடுத்துத் தொலைடா. நாயி. த்தோ கட்டே ஆயிடிச்சு. ரெண்டு மூணு நாளாவே எடுக்கவே மாட்டீங் றான் திருட்டு நாயி. என்று கீதா நினைத்தபோது ரிங் வந்தது. ஆசை யாய்ப் பழனிச்சாமிதான் திருப்பிக் கூப்பிடுகிறானோ என்று பார்த் தாள். இல்லை. குன்னத்தூர் ராம்.
“ஹலோ நான் ராம் பேசுறண்டி. ஏன் என் கல்யாணத்துக்கு வரலை. லட்சுமி கிட்டயும் சொன்னேன். ரெண்டு பேரும் வரலை.”
“வரப்பிடிக்கலை வரலை.”
“ஏண்டி கோபமா பேசுறே? என்ன ஆச்சு? அந்த மூன்று நாட் களா? அந்த சமயத்துல தான கோபமா. . . எரிச்சல் படுவீங்க.”
“ஆமா அப்படித்தான். எங்க ஊர்க்காரர்ட்ட என்ன சொன் னீங்க?”
“உங்க ஊர்க்காரர்னா யாரு. . . அந்த பழனிச்சாமின்னு சொன் னாரே அவர்கிட்டயா? ஆமா உண்மையச் சொன்னேன்.”
“என்ன உண்மை உங்களுக்குத் தெரியும்? நாலு தடவ தாலி கட்டி னவ அவன்னு சொல்லியிருக் கீங்க. . . நீங்கதான் என்னோட நாலு கல்யாணத்திலயும் தாலி எடுத்துக் குடுத்தீங்ளா? எனக்கு லட்சுமிய உங்க ஊருக்குக் கட்டிக் குடுத்ததாலதான் தெரியும். லட்சுமி எங்க ஊருக்கு வந்து ஏழு வருசம் ஆச்சு. லட்சுமிய உங்க ஊர்ல நீங்க என்ன பண்ணுனீங்க. அப்படி எதாச்சிம் நான் கேட்டனா? உங்க ஊர் பசங்களுக்கு எதுக்கு என் நெம்பரைக் குடுத்தீங்க? அவுனுக எப்பப்பாரு என்னைக் கூப்பிட்டு டார்ச்சர் பண்றானுக. . .”
“சாரி. உன் நெம்பரை நான் யாருக்கும் குடுக்கலை. உன் ஊர் பழனிச்சாமி உன் மேல கோபமா பேசினங்காட்டி, நானும் உன் மேல கோபமா இருந்தங்காட்டி சொன் னேன்.”
“அவரு கோபமா பேசினா. . . அதுக்காக கண்டதீங்கடிதீம் சொல் லணுமா? ஈவ்னிங் ஆறு மணிக்கு மேல விஜயமங்கலம் வாங்க. பேசிட்டு இருப்போம்னு கூப்பிட் டேன். அதை எல்லாம் அவர் கிட்ட, ஆறு மணிக்கு மேல அவ எதுக்குக் கூப்பிடறான்னு எனக்குத் தெரியாதான்னு சொல்லியிருக் கீங்க. . . நான் வெச்சுடறேன். இனிமே என்னை போன்ல கூப்பு டாதீங்க. யாருக்கும் என் நெம்பரை தயவு செஞ்சு குடுக்காதீங்க.”
கீதாவுக்கு மார்பு படபடத்தது! மனசு கெட்டு குட்டிச்சுவர் ஆகி விட்டது போல இருந்தது. இந்த நாய் எதுக்கு இப்போ மத்தியா னத்துல போன் பண்ணினான்? இன்னொரு பான்பராக்கைக் கிழித்து வாயில் கொட்டிக்கொண் டாள். பழனிச்சாமிக்கு மீண்டும் அடித்து அழைக்க முயற்சித்தாள். நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றது. நாயி. ஆப்பே பண்ணிப் போட்டுட் டியா? அந்தத் தொளசாப்புள்ளை ஊட்டுக்கு போயிருக்குமோ? சேச்சே. அங்கதான் போகமாட் டேன்னு சொல்லியிருக்குதே! அவ ஒரு அழகின்னு அவகிட்ட எல் லாம் எப்பிடி போச்சோ? கருமம் என்று பழனிச்சாமியைக் கரித்துக் கொட்டிக்கொண்டிருந்த போது கைப்பேசி மீண்டும் அலறியது! சென்னிமலை மூர்த்தி! ச்சை. இவன் தொல்லை வேறு. ஒருத்தன் அழகா இருக்கானேன்னு பாக்கு றது தப்பா? பார்த்தா ஒடனே காதல் வந்துடுமா?
“ஹலோ. நான் மூர்த்தி பேசு றேன்.”
“சொல்லுங்க. ஏன் இப்படிக் கத்துறீங்க? காதே அடைச்சுப் போச்சு உங்க நர்ஸ் அக்கா வீட்ல இல்ல. நான் பார்க்கவும் இல்லை!”
“நான் எங்க அக்காவைக் கேக் கவே இல்லை. நீங்க சொல்றீங்க. எங்கக்காவைப் பாக்குறதுக்கு வந்தப்பதான் உங்களைப் பார்த் தேன். நீங்க என்னைப் பார்த்தீங்க. உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்னா மாட்டேன் மாட்டேன்னே சொல் றீங்க. என்னை உங்களுக்குப் பிடிக் கலையா? இப்ப சொல்லுங்க. பிடிக்குது பிடிக்கலை ரெண்டுல ஒண்ணு. சொல்லுங்க. ப்ளீஸ். இல் லின்னா ஆறு மணிக்கு நான் கூப்பு டுறேன் அப்ப சொல்லுங்க.”
“உசுரோட இருந்தா சொல் றேன்.”
“ஐய்யோ. என்ன இப்படிச் சொல்றீங்க. ஏங்க எங்கீங்க இருக் கீங்க?”
“விஜயமங்கலத்துலதான் இருக்கேன். இப்பத்தான் டிடிட் டைக் கரைச்சுக் குடிச்சேன். கண் ணெல்லாம் இருட்டு கட்டீட்டு வருது. தறி ஓட்டறதை நிப்பாட் டிட்டு ஆறு மணிக்கு வந்து என் பொணத்தைப் பார்த்துட்டுப் போங்க. வெச்சுடறேன்.” கட் செய் ததும் இன்னொரு ரிங் வந்தது!
“ஹலோ. . . கார்த்தி இப்பத்தான் உங்களைக் கூப்பிடலாம்னு உங் களை நெனச்சிட்டு கே வரிசைக்கு போனேன். உடனே கூப்புடறீங்க. . . அதெப்படி ரெண்டு பேருமே ஒரே நேரத்துல நெனச்சிட்டோம்? அதான் சாமி இருக்குதுன்னு நம்ப ணும். நீங்க நம்பவே மாட்டீங்றீங்க. வீட்ல பிரச்சினை ஆயிடிச்சிங்க கார்த்தி. எங்க அம்மாவும், தங் கச்சியும் உங்களைச் சந்தேகப்பட றாங்க. என்னையும் சந்தேகமாவே திட்டறாங்க. கார்த்தி அண்ணான் னுதானே நீ பேசுறேன்னு கேக்க றீங்க. ஒரு அண்ணன்கூட தின மும் நைட்ல பத்து மணியில இருந்து மணிக்கணக்காவா பேசு வாங்க. அப்படிங்குது எங்கம்மா. கொஞ்சம் நாளைக்கு நைட்ல என்னைக் கூப்புடாதீங்க. ப்ளீஸ் சாரிப்பா. . .”
“பின்ன நீ எப்ப என்னைக் கூப்பிடுவே? கம்பெனிக்கு உள் ளார செல்போனை கொண்டுட் டும் போவக் கூடாது. சொல்லு.”
“நானே கூப்பிடுறேன்.”
“போடி. நீ கூப்பிடவே வேண் டாம்.”
“சாரிப்பா. சாரி சாரி சாரி.”
“சரி உன் வீட்டுக்குப் பக்கத்துல ஒரு வீடு காலியா இருக்குது வாட கைக்கு வீட்டுக்காரம்மா கிட்ட கேட்டுப் பாக்குறேன்னு சொன் னீல்ல. வீடு பார்த்தியா? இங்க ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு எனக்கு வயிறு சரியில்ல. . . டீவி வாங்கிடலாம், சாமான், செட்டுக வாங்கிடலாம். நீ என்கூட வந்து இருந்துக்க. . . நீ வேலைக்கிப் போக வேண்டாம். . .”
“அந்த வீட்டை வாடகைக்குத் தரமாட்டீங்றாங்க. இப்பத்தான் வீட்ல பிரச்சினை ஆயிடிச்சே. அந்த வீடு வேண்டாம். அதும் இல்லாம எங்க ஊர்ல நீங்க வந்து இருக்க வேண்டாம்!”
“சரி அப்ப நான் நைட்ல இனி உன்னைக் கூப்பிடக்கூடாது. அதானே அதான் ரெண்டு மூணு நாளா ஆப்லயே நைட்டு இருந் திச்சா?”
“கொஞ்சம் நாளைக்குத்தான் கார்த்தி அண்ணா. . . ப்ளீஸ்.”
“ஏய் இப்ப தனியாத்தான இருக்கே. அண்ணா சொல்றே?”
“சாரி சாரி. அப்புடியே கூப் பிட்டு கூப்பிட்டு பழக்கமே ஆயி டிச்சு. இந்த வாரம் ஞாயித்துக் கிழமை என்னை சினிமாக்குக் கூட் டிட்டு போறீங்ளா? ம். நான் இன் னம் வேல் பாக்கலை, பழனி பாக் கலை, விஜய் படம்கூட இன்னம் பாக்கலை.”
“ஏன் உங்க ஊர் தோஸ்த்து பழனிச்சாமி கூட்டிட்டு போக லியா?” அவுரு என் கிட்ட பேசு னாரு. அடுத்த முறை ஊருக்கு வந்தா வீட்டுக்கு வாங்கன்னு சொன்னாப்ல. . .”
“உங்க நெம்பர் எப்படி அவருக் குத் தெரியும்?”
“ம். கேப்பேடி. என் செல்லை வாங்கி ஒருக்கா கூப்பிட்டு நீதான பேசினே. சரி மாலினி எப்பிடி இருக்கா?”
“மாலினி பாவம் கார்த்தி. சுரேஸ் அவகிட்ட கூட சொல் லாம தஞ்சாவூர் ஓடீட்டான். அவு ளுக்கு ஒரு போன் பண்ணியாச்சிம் சொல்லி இருக்கலாம்ல. இவ ரூம்ல அழுதுட்டே இருக்கா. சரியா சாப் புடறதுகூட இல்ல கார்த்தி. . . நீயாச்சிம் ஒரு போன் பண்ணி அவளைச் சாப்பிடச் சொல்லு. இந்த லட்சணத்துல எனக்கு தஞ் சாவூர்ல மாப்பிள்ளை பாத்துருக் கானாம். நீங்க அவன்கூடப் பேசாதீங்க!”
“மாலினி நெம்பர் என்கிட்ட இல்லையே. நீதான் என் செல்லுல பொண்ணுக நெம்பரே இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டியே. எடுத்துட்டேன்.”
“சரி. நீங்க சொல்ல வேண்டாம். நானே சொல்லிக்கறேன். ப்ளீஸ்பா. சினிமாக்கு. போலாம். சினிமாக்கு போலாம்!”
“சரி சரி சரி. திருப்பூர்ல பாக்க லாம். ஞாயிற்றுக்கிழமை காலைல நான் போன் பண்ணுறேன். ஓகே வா. செல்லம் எனக்கும் உன்னைப் பார்க்கணும்னுதான் இருக்கு. பழனிச்சாமிக்கு நான் ஒரு போன் போட்டா?”
“நீங்க ஒண்ணும் அவுருக்கு போன் போட வேண்டாம். உங் களுக்கெல்லாம் அவர்கிட்ட பேசவே தெரியாது. துருவித் துருவி கேட்டு கண்டுபுடிச்சிக்கும். அப்பு றம் எங்கிட்ட சண்டை கட் டிட்டே இருக்கும். இப்ப ஒரு வாரமா சண்டை. எங்க ஊர்க் காரன் ஒருத்தன் அதுகிட்ட, திருப் பூர்ல இருந்து ஒருத்தன் ஒரு ரூவா காசப்போட்டு போனுபோட்டு கூப்பிட்டான். இவ பஸ் ஏறிப் போனா. திருப்பூர்லயே நான் பாத் தேன்னு சொல்லிட்டானாம். அதுக்கு என்னை பண்டம்னு சத் தம் போடுது! என்னால சாவும் முட்டும் மறக்கவே முடியாது. என்னை பண்டம்னு சொல்லிப் போடுச்சு. நீங்க தயவுசெஞ்சு போனெல்லாம் அதுக்கு போட்டு கூப்புட்டு சவுக்கியமான்னு கேட் டுட்டு இருக்காதீங்க. சிவா கிட்ட இது போனு போட்டு காரியத்த முடிச்சிட்டீங்ளான்னு கேட்டிருக் குது. அவன் ஏதோ சிரிச்சு பேசி மலுப்பி உட்டுட்டான்.”
“அடிச்செல்லாம் வெச்சுடு வாப்லைன்னு சொன்னில்ல.”
“ஆமா. அடிச்சுப்போடும். உனக்கு என்ன உரிமை இருக்கு துன்னு கேட்டா மறுபடியும் எச்சா அடிக்கும். வேற யாரு அடிச்சாலும் கைய முறிச்சுப்போடுவேன். அது அடிச்சா மட்டும் அப்புடி.”
“அதான் காதலு.”
“க்கும். மண்ணாங்கட்டி. அது என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்டு. . . என்ன வேணாலும் கேப்பேன். மாட்டேன்னு சொல்லாது. இப்பத் தான் போனவாரம் சின்ன மேடம் சின்ன மேடம்னு புதுசா கூப்புட் டுச்சு. குட்டிப் பிசாசுன்னு சொல் லுச்சு. முன்ன. . . அதைத்தான் சிம்பு காளைல கதாநாயகிய கூப் புட்டான் அப்புடின்னு இனிமே உன்னைக் குட்டிப்பிசாசுன்னு கூப்புடமாட்டேனுட்டுது. சிம்புக்கு எப்படிக் குட்டிப்பிசாசு தெரிஞ்சு துன்னு டென்சன்ல இருந்திச்சு.”
“பாரு பழனிச்சாமி பேச்சை எடுத்தா நிறுத்தாம ஓய்வே இல் லாம பேசுறே பாத்தியா.”
“ஆமா அதும் விஜயமங்கலம், நானும் விஜயமங்கலம். நான் வயசுக்கு வந்தப்ப இருந்து என்னை லவ் பண்ணுது, ஆனா ஒரு வாட்டி தான் என்னோட இருவது வயசுல இருபத்தி எட்டாம் தேதி. ஜனவரி மாசம் ஐ லவ் யூன்னு சொல்லிச்சு. அதோட செல்லுல 1/2கிறுக்கு வி.ஜே.எம்.னு போட்டிருக்குது. நான் பண்ற கூத்துக்கு அப்புடித் தான் போடுமாம். குட்டிப்பிசாசே நல்லா இருந்துச்சு. சரி செல்ல காசு என்ன ஆகுறது உங்குளுக்கு? ஈவ்னிங் ஆறு மணிக்குக் கூப்பி டுங்க. வெச்சுடறேன். ஞாயித்துக் கிழமை கண்டிப்பா கூப்பிடுங்க.” கீதா செல்லில் மணி பார்த்தாள். ஒன்று முப்பதுதான் ஆகியிருந்தது. ஒன்று நாற்பத்தி ஐந்திற்குத்தான் கே.கே.சி. விஜயமங்கலம் வந்து சேரும்! வாயில் இருந்த பான் பராக் துகள்களைத் துப்பிவிட்டு, இன்னொன்று புதிதாய்க் கிழித்துக் கொட்டிக்கொண்டாள். செல் போன் மீண்டும் அலறியது! 04294 என்றிருக்க. யார் ஒரு ரூபாய் போட்டுப் பண்ணுவது என்று எடுத்தாள்.
“வணக்கமம்மா. நல்லா இருக்கியாம்மா? வீட்ல அம்மா, அப்பா நல்லா இருக்காங்களாம்மா? சாப்புட் டியாம்மா? ஏன் பேசவே மாட்டீங்றே? யாராச்சிம் வீட்ல திட்டினாங்ளா?”
“சாப்புட்டேன். . . சொல்லுங்க. . . டூட்டி முடிஞ் சுட்டுதா?”
“டூட்டிலதான்மா இருக்கேன். ஈரோடு கோர்ட்டுக்கு வந்தேன். சாப்பாட்டு நேரம். சாப்பிடப்போலாம்னு கடைவீதில நின்னேன்.”
“என்ன பண்ணுவீங்களோ தெரியாது. நாளைக்குப் பெருந்துறை பஸ்ஸ்டாண்டுல காலைல பத்து மணிக்கு நிப்பேன். எனக்குப் பணம் ரெண்டாயிரம் வேணும்.”
“சம்பள டேட்டுக்கு இன்னம் பத்துநாள் இருக் கேம்மா. திடீர்னு பணத்துக்கு நான் எங்க போவேன்மா.”
“அதெல்லாம் முடியாது. எனக்கு பணம் வேணும். நான் நிப்பேன். நீங்க வந்து குடுத்துட்டு டூட்டிக்குப் போங்க. நான் வெச்சுடறேன்.” வைக்காதேம்மா என்ற அவரது குரல் கடைசியாய் காதினுள் விழ விழவே துண்டித்தாள் கீதா. அதே சமயம் விஜய மங்கலம் சந்தைக் கடை வழியாகப் பழனிச்சாமி எக்ஸெல் சூப்பரில் வருவதைப் பார்த்தவள் நிழல் குடையை விட்டு வெளியேறி அவன் பார்வை படு மாறு நின்றாள். பழனிச்சாமியும் இவளைக் கண்டதும் இவளை ஒட்டினாற்போல வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தினான். “உக்காரு கொடுவேரி போறோம் இப்போ.” என்றான். கீதா எதுவும் சொல்லாமல் அவனை ஒட்டி பின்னால் அமர்ந்துகொண்டாள்.
பழனிச்சாமி சந்தைக் கடை வழியாக மேக்கூர் தாண்டியதும் எக்ஸலை முறுக்கினான். திங்களுர் நோக்கி வண்டி விரைந்தது!
- கூப்புட்டா செல்லை எடுத்து என்ன ஏதுன்னு கேட்கவே மாட்டீங்ளா? அப்புடி என்ன கோபம்? எத்தனை தடவை மூணு நாளா கூப்பிட்டுட்டே இருக்கேன் தெரியுமா? சரி நீங்களாச்சிம் கூப்பிட்டு எதுக்கு கூப்பிட்டேன்னு கேக்கலாம்ல? அதுக்கும் மொடையா? என்று பழனிச்சாமியிடம் கேட்டுக் கொண்டிருந்தபோது கீதாவின் செல் அலறியது. கொஞ்சம் மெதுவாப் போங்க. எங்க சுந்தர் அண் ணன் கூப்பிடுது. . .
“அண்ணா சுந்தரண்ணா. சாரின்னா திடீர்னு வயித்து வலி போட்டு கொல்லுதுங்க. என் ப்ரெண்டு வந்தாப்ல ஆமா. வண்டிலதான் போயிட்டிருக்கேன். சாரிண்ணா இன்னொரு நாளைக்குக் கண்டிப்பா வர்றேண்ணா. அதான் சாரி சொல்லிட்டன்ல. என்ன கூடவா. இப்பத்தான சொன்னேன். ப்ரண்டு அப் படின்னு பாத்திங்ளா. சந்தேகமா பேசறீங்க. என்ன? அண்ணா பஸ்சுல ஒரே இறைச்சலா இருக்கு சுந் தரண்ணா. சரியா கேக்க மாட்டிங்குது. . . ம். என்ன ட்ரெஸ்ஸா? ப்ளூ கலர் சுடிதார் போட்டு இருக்கேன்” கீதா பேசிக்கொண்டு இருக்கையிலேயே வண்டியை வேப்பை மர நிழலில் நிப்பாட்டி இறங்கினான் பழனிச்சாமி.
- ஏன் வண்டிய நிறுத்திட்டீங்க? நான் பேசிட்டே வர்றேன். ஓட்டுங்க. ம். சொல்லுங்க சுந்தரண்ணா. என்றபோது பழனிச்சாமி கீதாவின் கன்னம் மீது ஒரு அப்பு அப்பினான். கீதா செல்லை கட் செய்து விட்டு “இப்ப எதுக்கு அடிக்கறீங்க? அண்ணன்னு தான் சொன்னேன்” என்றான்.
- அவன் என்னடி கேட்டான்? என்ன ட்ரஸ்சுங் றான். நீ புளூ கலர் சுடிங்றே? ஏன் வித்தவுட்ல உக்காந்துட்டு போயிட்டிருக்கேன்னு சொல்ல வேண்டீதுதான.
- இதப்பாருங்க. செல்லை ஆப் பண்ணீட்டேன். இனிமே உங்களோட வர்றப்ப, பாக்குறப்ப செல்லை ஆப் பண்ணிடறேன் போதுமா.
- கையில எதாச்சிம் சிக்கி இருந்தா மண்டைப் போடாப் போட்டுக் கொன்னிருப்பே சிரிக்காதடி ஏறு வண்டீல. . . என்றவன் ஸ்டார்ட் செய்து அமர பின்னால் அமர்ந்தவள் இதெதுக்கு உங்களுக்கு இத்தனை கோபம் வருது? என்றாள்.

சென்ஷி

unread,
May 31, 2010, 3:35:08 AM5/31/10
to panb...@googlegroups.com

உறவு, பந்தம், பாசம்

மெளனி 29 November 2009 கதைகள் 306 views No CommentPrint This Post Print This Post Email This Post Email This Post

 

இரவு முழுதும் கொண்ட பிரயாண அலுப்பிலும், அசதியிலும்கூட, ரயில் தன்னூர் நிலையத்தைக் காலையில் அடைந்தபோது, இவன் மனது ஒரு குதூகலம் கொண்டது. ஆனால் இறங்கியதும் ரயிலடியைப் பார்வைக் கொண்டபோது, மனது, குதூகலம் அதிர்ச்சியென மாறலாயிற்று. ஊர் தவறி இறங்கியதென எண்ண முடியாதபடி எதிரே தன்னூர்ப் பெயர்ப்பலகை தன்னை வெறித்து நிற்பதைக் கண்டான். சமீபத்தில் பெரிய அளவில் நிர்மாணித்துக் கட்டப்பட்டிருந்ததால், தான் முன்பு பார்த்ததான எண்ணமே கொள்ள முடியாது தோன்றியதை ஜடமென வெகு நேரம் அவன் கண்டு நிற்கவில்லை. புறக்காட்சியில் மனது ஒருமையில் அனுபவம் கொள்ள, அனுமானம் கொண்டு, திகைப்பு நீங்கச் சிறிதுநேரம் ஆகியது போலும்.

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகவே, ஊரை விட்டகன்றவன்; வெளியூர் வாசம் செய்து, வசதியில் திரும்பியவன். வசீகரமெனத் தோன்றிய, தன்னூர்ப் பாலிய கால வாழ்க்கையை நினைத்து, தன்னுடைய பிற்கால வாழ்க்கையையும் அங்கே கழிக்கத் திரும்பியவன். வீட்டை அடையும் வழிநெடுக ஒரு புதிய ஊர்ப்பிரவேசம் எனத்தான் அடிக்கடி தோன்ற இருந்தது. பழைய இடங்களில் புது வீடுகள் தோற்றமும், அங்காங்கே வெற்றிடங்களில் சிறுசிறு குடிசைகளும், மேலும் ஒரு பெரிய சினிமாக் கொட்டகை, அநேக ஹோட்டல்கள், எல்லாம் முன்பே இவனுக்கு அறிமுகமானதென, மெளனமாக வரவேற்க நின்றிருந்தன போலும்…தன் வீட்டை அடைந்தான். வீட்டின் முன் அறை ஒன்றை மட்டும் தன் உபயோகத்திற்கென வைத்திருந்து, ஏனைய பாகங்களை வாடகைக்கு விட்டிருந்தான்.

வெகு நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த அறையைச் சுத்தம் செய்வித்து, குடியிருக்க வசதி செய்து, காலைக் காரியங்களை முடித்துக் கொண்டிருக்கும்போது, இவன் வருகையை அறிந்த இரண்டு நண்பர்கள் இவனைப் பார்க்க வந்தனர். திண்ணையில் அவர்களோடு அமர்ந்து கொண்டு தெருவையும் கவனித்தபடிப் பேசிக்கொண்டிருந்தான். தான் இல்லாத கால, ஊர் நடப்புகள் என அநேக விஷயங்களை அவர்கள் சொல்லியும் இவன் கேட்டும் தெரிந்து கொண்டான். தன் தெருவே மாறியிருப்பதையும், ஜன நடமாட்டம் பெருகி இருப்பதையும் கண்டு கொண்டிருந்தான். மனது ஏதோ ஒருவகையில் சஞ்சலம் அடைந்து கொண்டிருந்தது. இரண்டொரு நாள் வாழ்க்கையில், பழக்கத்தில், எல்லாம் சரியாகி விடும் என்ற நினைப்பில் பேசிக்கொண்டிருந்தான். முக்கியமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்களை மறந்தும், ஏதேதோ அது இதை விசாரித்துக் கொண்டிருந்தான். ஒரு நண்பனைப் பார்த்து, '…அந்தக் கிழவி செளக்கியமாக இருக்கிறாளா ? ' என்று கேட்டபோது அவர்கள் சிரிக்கலாயினர். எதிரே தெருவில் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண், இடுப்பில் ஒரு குழந்தையுடன் சென்று கொண்டிருந்தாள். கையைப் பிடித்து நடத்தி அழைத்துப்போன மற்றொரு குழந்தையுடன், தன் வயிற்றிலும் ஒரு சிசுவைச் சுமந்தாளென ஒரு பூரண கர்ப்பிணி என அவள் தோன்றினாள்.

'…அதோ போகிறாள் பார் நீ கேட்ட கிழவி… ' என்று இவன் நண்பன் மேலும் சிரித்தான். இவன் திடுக்கிட்டு என்னவென்றதற்கு 'நீ கேட்ட பாட்டியின் பேத்தி அவள் இறக்கும்போது இவள் பிறக்கவில்லை என நினைக்கிறேன்… ' என்றான். மேலும் 'நீ ஊரைவிட்டுச் சென்று எவ்வளவு நாளாகிறது, ஏதோ மறந்து போனதுபோல விசாரிக்கிறாயே. வந்த அசதி போலும் ' என்று சொன்னான். பிறகு வந்து பார்ப்பதாக அவர்கள் விடைபெற்றுச் சென்றனர்.

சாப்பிட்டு, களைப்பு தீர உறங்கி, இவன் எழும்போது, மாலை நான்கு மணிக்கு மேலாகிவிட்டது. காபி சாப்பிட்டு வெளியே சென்று சுற்றி வரலாமென வீட்டை விட்டுப் புறப்பட்டான். கடைவீதியாகச் சென்று மற்றுமொரு வீதியையும் கடந்து மேற்குச் சந்நிதியை அடையலாம். அதையும் கடந்து கோயில் குறுக்காக ரயிலடியை அடைந்து, சிறிது உட்கார்ந்து, வீடு திரும்பினால், சாப்பிட்டுப் படுக்க நேரம் ஆகிவிடும் என்று எண்ணிக் கிளம்பினான். கடைவீதிக் கூட்டத்தைச் சாவதானமாக நடந்து கடந்துவிட்டான். மற்றொரு வீதியைக் கடக்கும்போது ஜன நடமாட்டம் குறைந்து விட்டது தெரிந்தது. இவன் மனதில் பழைய கால ஞாபகங்கள் சிறிது சிறிதாகத் தோன்றலாயின. சந்நிதித் தெருவை அடைந்து, ஒரு வீட்டைக் கடக்கும் போது, இவன் மனதில் ஒரு பரபரப்புக் கண்டது. அவ்வீட்டிற்கு இவன் அநேகதரம் தன்னுடைய மிக நெருங்கிய நண்பனுடன் சென்று இருக்கிறான். அவனை ஊரில் சந்திக்கும் ஆர்வமும், அவனோடு சேர்ந்து இப்போது வாழ்க்கை கொள்ளலாம் என்ற எண்ணமும்தான் இவன் ஊர் திரும்ப ஒருவிதக் காரணம். காலையில் அவனைக் காணாததும், ஏனையோரிடம் அவனைப்பற்றி விசாரிக்காததும், வெகு உணர்ச்சியில் தன் தவறென இவனுக்குத் தோன்றியது…

அவ்வூர்க் கோவில் மிகப்பெரியது. சரித்திரப் பிரசித்தி பெற்றது. மகோன்னத தசையில் ஆண்ட சோழ மன்னன் ஒருவனால், வெகு காலம் முன்பு கட்டப்பட்டது.

ஒரு காலத்தில் அவ்வூரே அந்தக் கோவிலைப் பொருத்து நிர்மாணம் ஆனது. ஆனால் இப்போது அகலமான தேரோடும் வீதிகளையும், சந்நிதிகளையும், தெற்கே ஒதுப்புறமாகப் பாழ்படும் ஒரு அமைதியில் விட்டு, தற்போதைய நகரமென்பது வடக்கே வெகுதூரம் வியாபகம் கொண்டிருந்தது. மேற்கு வீதிக்கப்பால் மேற்கே நெடுந்தூரம் அத்துவான வெளியென, தொடுவானம் வரையில் கண்டவெளி வீதியை மறைக்க ஒன்றுமில்லை. மேற்கே சூரியன் மறைய இருந்தான். மறையும் சூரிய ஒளி சந்நிதித் தெரு முழுதும் படர்ந்து கோபுரவாயிலையும் கடந்து கொடிமரம் வரையில் சென்று தெரிந்தது. மாலையில் கோவிலுக்குச் செல்லுபவர்கள் நிழல்கள், அவர்களை முந்திக் கொண்டு கர்ப்பக் கிருஹ இருளில் மறைந்து ஒன்றாவது, ஒரு உன்னதக் காட்சியென மனதில் கொள்ள இருக்கும்.

மேற்கு கோபுரத்தைத் தாண்டி உட்சென்றவன், பக்கத்தில் இருந்த ஒரு சிறு மண்டபத்தில் உட்கார்ந்தான். ஒருபுறம் கோபுரமும், மறுபுறம் ஈசுவர சந்நிதியும் தெரியும். முன்னும் பின்னும், இடிந்துகொண்டிருக்கும் பிரும்மாண்ட மதில்சுவர்களின் பாழ்படும் தோற்றம். கர்ப்பக்கிருஹம் இப்போதே இருள் கொண்டுவிட்டது. சர விளக்குகள் ஏற்றப்பட்டுத் தெரிந்தன. அந்த ஆழ்ந்த மெளன இருள் ஒளி அமைதியில் அருஉரு என எட்டிய லிங்கம் சோபையில் புலனாகித் தெரிந்தது. மதில்சுவர் இடிபாட்டிற்கிடையில் முளைத்து இருக்கும் புற்பூண்டுகளை, காலம் தவறி மேய்ந்து கொண்டிருந்தன, இரண்டொரு ஆடுமாடுகள்; மற்றும் சில, மூடிய கண்களுடன் அசைபோட்டுப் படுத்துக் கிடந்தன. ஒரு அமானுஷ்ய மயான வெளி அமைதி, அறிவிற்கப்பால் உணரும் வகை, ஒரு சங்கேத மெளனப் புதிரென, புறக்காட்சித் தோற்றம் கொடுத்தது.

எதிரே, ஒளிபடர்ந்த தரையில் நீண்டு வளர்ந்து வரும் நிழல்கள், ஒன்றுகூடிப் பிரிந்து சலிக்கும் ஒரு விநோதக் காட்சியில், உட்கார்ந்திருந்த இவன் லயித்திருந்தான் போலும். யாரோ சிலர் கோவிலுள் நுழைகிறார்கள் போலும். நான்கைந்து பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவள், சிறிது தூரத்திலிருந்தே இவனைக் கவனித்து வந்ததில், இவனைத் தெரிந்து கொண்டவள் போன்று, இவனைக் கடக்கும்போது, பார்த்து, ஒரு புன்சிரிப்பில் நின்றாள். இவன் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை உடன் உணர்ந்து, நடந்து, ஏனையோருடன் கூடிக் கோவிலுக்குள் சென்றாள். அவள் தோற்றம், வசீகரம், புன்னகை எல்லாம் கொஞ்சம் தாமதித்தே இவன் மனது கண்டது போன்று அவளைத் தெரிந்துகொள்ள, அவள் போவதையே கவனித்திருந்தான். அவள் ஒரு தரம் திரும்பி இவனைப் பார்த்தாள். மாலை ஒளி அவள் முகத்தில் விழ அவள் வெகு வசீகரமாகத் தோன்றினாள். அவளை யாரென இவன் தெரிந்துகொள்ள முடியவில்லை. கோவிலுள் சென்று அவர்கள் மறைந்து விட்டனர். ஞாபகம் காண, மறதியைத் தேடுவதில் ஜடமென இவன் அவ்விடத்திலேயே வீற்றிருந்தான். எவ்வளவு நேரமென்பது இவனுக்கு நிதானம் இல்லை. உலகு இருள் கொண்டுவிட்டது. உள்ளே சரவிளக்குகள் வெகு சோபையில் பிரகாசித்துக் கொண்டிருந்தன. திடாரென மணி ஓசை அதிரக் கேட்டது. கோயில் மாலை பூஜை ஆரம்பமாகியது……

அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். எல்லோருமே நாற்பது வயதைக் கடந்தவர்கள். இவனைக் கடக்கும்போது, அவள் இவனுக்கு வெகு சமீபமாக வந்து நின்று '…..யோஜனைகள் இன்னும் முடியவில்லையா…கோவிலுள்ளாவது வந்து இருக்கலாமே….. ' என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். இவனுக்கு அவளைத் தெரியவில்லை. மேலும் அவனுக்கு சஞ்சலம் கொடுக்காவகைக்கு எண்ணியவள் போன்று '….ஏன் தனியாக ? உங்கள் நண்பர் கூட வரவில்லையா ? ' என்றதும், மனதில் ஒரு ஒளி பாய்ந்ததென அவள் யாரெனக் கண்டு கொண்டான். '…என்ன கெளரி. உன் மாதிரித் தோன்றியும் நீயென நினைத்துப் பெண்களோடு பேச முடிகிறதா ?…… ' என்று சொன்னவன், ஏனையவர்கள் எட்டிக் காத்து நின்று இருப்பதைப் பார்த்து, எழுந்து அவளுடன் நடக்கலானான். '…..அங்கே அந்த வீட்டிலேதானே….நான் இன்று காலையில்தான் வந்தேன்….சாப்பிட்டு இரவு வருகிறேன். உன்னிடம் சில விஷயங்கள் பேசித் தெரிந்து கொள்ளவேண்டும்……. ' என்றவன் கோபுர வாயிலைத் தாண்டி அவர்களைப் பிரிந்து சென்றான். அவன் பேச்சுகளுக்குக் கெளரி பதில் பேசவில்லை. இருவரும் தத்தம் பழைய வாழ்க்கைச் சிந்தனைகளில் சென்று கொண்டிருந்தனர்.

இவன் வீட்டிற்குப் போகும் வழியில் இரண்டொரு சிநேகிதர்களைச் சந்தித்தான், வெகு அவசரத்திலும்–காலையில் மறந்தது எனத் தோன்றியதை– தன்னுடைய பாலிய நண்பனைப் பற்றி விஜாரித்தான். அவர்கள் சொன்னது இவனுக்கு ஆச்சரியம் கொடுக்க இருந்தது. சில வருஷங்களுக்கு முன்னால் அவன் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு ஊரை விட்டுப்போய் விட்டதாயும் எக்காரணம் என ஒருவருக்கும் தெரியாதெனவும் அவர்கள் சொன்னார்கள்.

சாப்பிட்டு, சீக்கிரமாகவே கெளரி வீட்டிற்குச் செல்லுவதில் தன் மனது ஆர்வம் கொள்ளுகிறது என்பதை, இவன் கண்டுகொள்ளாமலில்லை. பழைய நினைவுகள் வசீகர மெனப்படுவதிலும், சோகமும் கலந்ததென இவனுக்குத் தோன்றியது. ஊரை விட்டோடிய தன் நண்பனுடன் வெகுகாலம் ஒன்றென வாழ்ந்தவள் கெளரி. எவ்வளவோ நாட்கள் அவனுடன் கூடிக் கொண்டு இவன், அவள் வீட்டிற்குப் போய்ப் பேசியிருக்கிறான். அவனை இப்போது பார்க்க முடியாதது வெகுவாக வருத்தமெனத் தோன்றுகிறது.

இவன் கெளரி இருந்த மேல சந்நிதித் தெருவை அடையும்போது, ஊர் அரவம் அடங்கி, அரை இருளில் தெருவே ஒரு தூக்கத்தில் ஆழ்ந்ததெனத் தோற்றம் கொடுத்தது. ஒரு காலத்தில் அத்தெரு முழுவதும் தேவதாஸிகள் இருந்தனர். வழி வழியாக வாழ்ந்து வந்த ஒவ்வொரு குடும்பப் பிரபல தாஸிகள், அவர்களின் இசை நாட்டிய கலைத் தேர்ச்சி, பழைய பெரிய மனிதர்களுடைய ஈடுபாடு…..என அநேக ஞாபகங்களைக் கொண்ட தெரு அது. ஒரு வசீகரம் பாழ்பட்டுக் கொண்டிருக்கும் காட்சியை அது இப்போது அளித்துக் கொண்டிருந்தது. யார் யார் இப்போது அங்கு வசிக்கிறார்கள் என்பதற்கில்லை. பழைய வீடுகள் நடுநடுவே பெரிய புது வீடுகளும் இருந்தன. திடுக்கிட எங்கிருந்தோ கேட்ட ஒரு நாயின் குரைப்பு, இவனைக் கடந்து ஓடிக் கொண்டிருந்தது. ஒரு சுவான லக்ஷியம் எட்டிய இருளிலும் உருவாகியது போலும்……

கெளரி, தன் வீட்டுச் சிறு திண்ணைத் தூணில் சாய்ந்து நின்றிருந்தாள். பாலிய கால தன் வாழ்க்கை நினைவுகளை எதிர் மாடத்தில் தெரிந்த விளக்கொளியில் கண்டு நின்றாள் போலும். அவள் நிழல் பாதிக்குமேல் பக்கவாட்டில் கீழ் குறட்டுச் சுவரில் ஆடிக் கொண்டிருந்தது. வீட்டு வாயிலை அடைந்தவன் அவள் நிழலைத்தான் முதலில் கண்டான்போலும். ஒரு பயங்கரம், இனிமையைத் தூண்டி இழுக்கும் பிரமையை அடைந்தான். இவனை, இவன் வந்ததை, கெளரி கவனிக்கவில்லை. '….என்ன கெளரி….. ' ' என்ற சப்தம் கேட்டு இவனைப் பார்த்தாள். எதிரே தீபத்தின் சுடரொளியில் தன் நிருத்தியம் கலைவுபட்டதென, ஒரு இனிய கனவு கலைய இந்த நினைவா என்பதில் இவள் மனம் வருத்தமடைந்து….. 'உள்ளே போகலாம் ' எனச் சொல்லி இவன் தொடர அவள் உட்சென்றாள். கூடத்தில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இவனை உட்காரச் சொல்லி அவளும் சிறிது தூரத்தில் உட்கார்ந்துகொண்டாள். வாயிற் கதவு திறந்தபடியே இருந்தது. சாத்தவில்லை. வாயிற் புரைக்கை விளக்கையும் உள்ளே எடுத்து வரவில்லை.

தன் நண்பனுடன், இவன் அநேகந்தரம் இந்த வீட்டிற்கு வந்து இருக்கிறான். கடந்த காலம் பிளவு கொண்டது எனத் தோன்றாவகைக்கு, நேற்றுக்கூடத்தான் இங்கு வந்ததான எண்ணம் கொடுக்கும் வகைக்கு, அவ்வீடு பழைய நிலைமையிலேயே தோன்ற இருந்தது. ஒரு வகையில், காலையிலிருந்து தன் மனம் கொண்ட சஞ்சலம் சிறிது குறைந்ததென இவனுக்கு தோன்றியது.

அநேக குடும்ப நினைவு ஞாபகங்களுக்கு வசீகரம் கொடுக்க நின்ற இந்த வீட்டில்தான் கெளரி, வழி வழியாக வந்த ஒரு கெளரவ தாஸி குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வந்தவள். தன் வழிக்குப் பின் வாரிசு இல்லாது தன் குடும்பமும் தன்னுடன் முடிவு பெறாது இருக்க, அதன் லக்ஷியத்தின் சாசுவதத்தை இப்போது வாழ்வில் கடைப்பிடிக்கிறாள் போலும். பெண்மையின் சக்தி தோன்ற, அவள், பார்ப்பவர்களுக்கு ஒரு இனிமை, கவர்ச்சி, ஒரு பயங்கரம் தோன்ற இருப்பவள் போல ஒருவரிடமும் ஒட்டாது, வெகு சகஜமாக யாரிடமும் பழகுபவள். சிற்சில சமயங்களில் அவள் நடையுடை பாவனைகளிலும் பேச்சிலும், ஒரு நிச்சயம் தோன்றா பிரமிப்புத் தெரிய இருக்கும்.

உட்கார்ந்து கொண்டவன் சிறிதுநேர மெளனத்திற்குப்பின் '…..இன்று காலையில்தான் வந்தேன்…. உன்னைக் கோவிலில் சந்தித்த பிறகு சிறிது நேரம் சென்று கேள்விப்பட்டேன்….. ' என்றான். அவள் குறுக்கிட்டு '…..என்ன….. ' என்றாள். '…..உன் சிநேகிதன்….. நம் நண்பன் ஊரை விட்டுப் போனதை உன்னை விட்டு. ' எனச்சொல்ல அவளும் சிரிக்கலானாள். '…….இல்லை நீங்கள் அதற்கு முன்பே ஊரைவிட்டுப் போய் விட்டார்கள்… ' அவள் பேசியது சிரிப்பது இவனுக்கு ஒரு வகையில் திருப்தி அளிப்பதாக இருந்தும் ஏன் என்பது புரியவில்லை.

இவன் '….உன்னைக் கேட்கலாம் என வந்தேன்… உன்னைவிட்டு ஊரைவிட்டுப்போன காரணம் ? வெகு வருத்தமாகத் தோன்றுகிறது. சொத்தை எல்லாம் விற்று ஊரை விட்டுப்போனது…. ' இவன் பேசுவது இவனுக்கே பொருத்தம் காணாது தட்டுத் தடுமாறியது போன்று இருந்தது. இவன் உதவிக்கென கெளரி பேச்சை ஆரம்பித்தாள். '…..எனக்கும் காரணம் தெரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ள நீங்கள் வந்த காரணமும் தெரியவில்லை…..எதை, எப்படி நான் சொல்லமுடிகிறது ?….. ' ' என்று சொல்லி அவள் வருத்தத்தை, இவன் தன் சிரிப்பில் கலந்து கொண்டாள். தன் வீட்டை ஒரு தரம் மெளனமாகச் சுற்றிப் பார்த்துவிட்டு இவனையும் பார்த்தாள். அவள் அலக்ஷிய பாவத்தை இவனால் ஏற்கமுடியாது. 'என்ன இருந்தாலும்–தாஸி ' என இவன் மனம் எண்ணியது.

சிரித்துக்கொண்டே மேலும் கெளரி பேசலானாள். 'பழைய கதையை, கனவெனக் கண்ணெதிரில் மடிவதைக் கண்டும், அதில் ஒரு வசீகரம் உங்களுக்குக் காணமுடிகிறது. நடந்தது எல்லாம் கண்முன் அர்த்தம் மாறி இசைவு கொள்ள முடியவில்லை ? நடப்பில் என்ன முழுமை காண இருக்கிறது ? நடந்ததின் சாயையும் நடக்கப்போவதின் நிச்சயமின்மையும் கலந்து புதிராகப்படவில்லையா ? '

'என்ன கெளரி உன் வேதாந்தம், வேடிக்கையாக இருக்கிறதே…. ' என்றான்.

'ஆமாம், நான் ஒரு தாஸிதானே….ஒரு பெண் தானே உங்களுக்கெல்லாம்…. ' என்றவள், 'நீங்கள் சாய்ந்து கொண்டிருக்கும் தூணைக் கேட்டுப் பாருங்கள் சொல்லும்…உங்கள் நண்பர் போன காரணம்… ' இவன் நண்பன் இந்தத் தூணடியில்தான் உட்கார்ந்து பேசுவது இவனுக்கு ஞாபகம் வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அவள் முகமடையும் வசீகரம், அவள் வயதைக் குறைத்துக் கொண்டிருந்தது. அவள் பேச்சுகளும் பாவமும், பாலியக் குறுகுறுப்பை அளிப்பதாக இருந்தன.

'உங்கள் நண்பரைப் பற்றித் தெரிந்துகொள்ள நீங்கள் இப்போது என்னிடம் வந்து கேட்பதில் உங்களைக்கண்டு கொள்ள முடியாதா ? காரணம், நம்பிக்கை கொடுக்காவிடின் என்ன பிரயோஜனம்……அவர் சொத்து சுதந்தரம் எல்லாம் விட்டுப் போய்விட்டார். ஏன், என்னையும் உங்களையும் கூட விட்டுவிட்டுச் சிலர் க்ஷேத்திராடனம் போய் இருக்கிறார் என்று சொல்லவில்லை ? அல்லது எங்கேயோ தாங்கள் க்ஷேத்திராடனத்தின்போது, அவரை, அவரைப் போன்ற ஒருவரைச் சாமியாராகக் கண்டு பேசுமுன் மறைந்த மர்ம மகிமையைக் கூறவில்லையா ? சில நாட்களில் நீங்கள் கேள்விப்படலாம்….அல்லது ஜீவன் முக்தனெனத் தோன்ற, தாடி வளர்த்துக் கொண்டு தமுக்குடன் எட்டிய அடிவானத்தையும், யாராவது தன்னுடன் பேச வருகிறார்களா என்ற ஆசையில் திருட்டுப் பின்னோட்டம் விட்டுக் கொண்டு, கடற்கரையில் அவரைக் கண்டதாகச் சொல்லவில்லையா ? கைகட்டி வாய்புதைத்து வரும் கதாசிரியர்களுக்கு ஞானோபதேசம் செய்ய–பூர்வாசிரமம்–கருகிய காதல்–சாதல் இவைகளைக்–கதாநாயகனாகத் தன்னைக் காணத் தமுக்கடிக்கவில்லை ? அப்படியாக நீங்கள் அவரைப் பார்த்துத் தெரிந்து கொண்டால் நானும் ஒரு வகையில் கதாநாயகியாயிருப்பேன் அல்லவா….. ? அவருக்குச் சாமி பூதத்தில் நம்பிக்கை இல்லை. நான் எப்போவாவது அவரைத் திடுக்கிடச் சாமி என்று அழைப்பது உண்டு. ரொம்பப் படித்த அறிவாளிதான். கூப்பிட்ட தோஷம் அவரே சாமியாராக ஓடிவிட்டார் போலும்…. ' என்னெதிரில் ஆக முடியவில்லையே என்ற வெட்கம் கொண்டு, நான் பார்க்க முடியாது, சாமியாராகத்தான் ஓடியிருக்க வேண்டும்…. ' எனச்சொல்லி '……நான் சொல்லுவது சரிதானே……. ' என்று சிரித்தாள்.

அவள் பேசுவது ஒரு சமயம் வேடிக்கையாகவும், பின்பு பரிகாசமாகவும் இவனுக்குத் தோன்றியது. மேலும் அப்போதைக்குப் புரியாது பின்பு புரியவிருக்க ஏதோ உளதாகியதாகவும் பட்டது. ஆதிநாளிலிருந்து தனக்கு அவளைப்பற்றித் தெரிந்த விதம், எப்படி என எண்ண முடியவில்லை. அவளை அவன் நேராகப் பார்க்காது, அடிக்கடி வீட்டைச் சுற்றிப் பார்வை கொண்டிருந்தான். ஆங்காங்கே ஒளிபடராத இருள்மூலை முடுக்குகளில் பழைய நினைவுகள் ஒன்று கூடிப் புரிந்து கொள்ள முடியாவகையில், சதி ஆலோஜனை செய்து கொண்டிருந்தன போலும். முற்றத்தில் ஒரு முல்லைக்கொடி, பகலில் சூரிய வெப்பம் காட்டாது, பந்தலின் மேலே படர்ந்து இருந்தது. இந்த இரவில், பார்வையில்படாது, மலர்ந்த மலர்களினின்றும் பிரிந்து வரும் மணம் வீடு நிரம்பக் கணிசம் கொள்ளுகிறது. வானின்று நுகர ஊர்ந்துவரும், ஒரு கனிவு இவன் மனதில் படுவது என இது இல்லை.

பேசிய பிறகு ஏன் பேசினோம் என்ற மனக்குறை ஏற்படுவது எல்லோருக்கும் உண்டு. ஆனால் கெளரிக்கு அது மாதிரி தோன்றவே முடியாது. அவள் பேசியது அவள் பேசினதாகவே தோன்றாது சப்தம் கொள்ளுகிறது. பேசும்போது அவள் சரீர ஒரு சிறு நெளிப்பில், தான் பேசியதையே தன்னின்றும் எப்படி உதறிவிடுகிறாள் ? தான் பேசியதைத் தானே கேட்பவள் போன்று இருக்கிறது அவள் முகபாவம். எவ்வகையில், காரியத்தில், எவ்விதப் பொறுப்பையும் சுமக்காமல் உதறி, அவளால் வாழ்க்கை காணமுடிகிறது ?

'……அல்லது தன்னை விட்டுப் போன தன் மனைவியை தேடிக்காண ஓடியிருப்பாரோ என்னவோ, யாருக்குத் தெரியும் ? ' என்று அவள் சொல்லி முடித்தது இவனை யோஜனையினின்றும் கலைத்துத் திடுக்கிட வைத்தது. அவள் அறியாமையை நினைக்க, ஒருபுறம் வேடிக்கையாகவும் இருந்தது. தன்னைப் போலவே தன் நண்பனும் கலியாணம் ஆகாதவனென்பது இவளுக்குத் தெரியவில்லை போலும் '

திறந்து இருந்த வாயிற்படியைத் தாண்டி, வெகு சமீபம் வரை வந்தவளை இவன் கவனிக்கவில்லை. '….பேச்சுச் சத்தம் கேட்டுப் பார்க்க வந்தேனக்கா ' என்று சிரித்துக்கொண்டே, ஒருவள் வெகு நிதானமாக வந்து கூடத்தில் ஒரு பக்கமாக உட்கார்ந்து கொண்டாள். அவளைத் தொடர்ந்து வந்த ஒரு சிறுவனைப் பார்த்துக் கெளரி, 'தம்பி, ஐயாவுக்குக் காபி, வெற்றிலைபாக்கு, வாங்கி வா….. ' என்றவளை ஒன்று வேண்டாமென இவன் தடுத்தும் சோடாவாவது வாங்கி வரச் சொன்னாள். மேலும் இவன் பணம் எடுத்துக்கொடுப்பதைத் தடுத்து '…..என்ன ஐயா செய்வது ? அவமானப்படுத்தவா ? விருந்தாளியாக வந்தவரின் அபேக்ஷைகளை நாங்கள் திருப்தி செய்யவேண்டாமா….என்ன அனசூயா நான் சொல்லுவது ' என்று வந்தவளைப் பார்த்துக் கேட்டாள். 'ஆமாம்…..இவர் நம்ப சாஸ்திரபுராணம் படித்ததில்லையோ என்னவோ….. ' என்று ஒரு அசட்டுச் சிரிப்புத் தோன்றச் சொன்னாள்.

அன்று இரவு இவன், அவர்களுடன் பேசிவிட்டு வீடு திரும்பும்போது இரவு வெகுநேரம் ஆகிவிட்டது……

மறுநாள் காலையிலிருந்தே இவனுக்குக் கெளரி வீடு செல்லும் ஆவல் தோன்ற ஆரம்பித்தது…..அன்று மாலை சீக்கிரமாகவே அவள் வீட்டிற்குச் சென்றான். நேராக உள் சென்றவன், இரண்டொரு பெண்களுடன் அவள் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்தான். இவனையும் கூப்பிட்டு உட்காரச் சொன்னாள். நேற்றுக் கோவிலில் பார்த்தவர்கள் எனவும், அவர்களும் தாஸிகளெனவும் கண்டு கொண்டான். சிறிது நேரம் ஊர் உலகம் பேச்சுகளெனப் பேசினர்.

கெளரி இவனைப் பார்த்துக் கேட்டாள். 'நேற்றுத்தானே வந்தது…..மனைவி குழந்தைகளையும் அழைத்துக் கொண்டுதானே….. ' அவள் வசீகரம் மிகக் கடுமையாக இவனைத் தாக்கியது. மனது ஒரு வகையில் குதூகலம் கொண்டது…….

'நீ நினைப்பது எல்லாம் இப்படித் தவறாக இருக்கிறதே ' நானும், அவனும் கல்யாணமே செய்து கொள்ளாதவர்கள்–என்னைப் பற்றித் தெரியாதது இருக்கட்டும். அவனைப்பற்றிக்கூட அவ்வளவு பழகியும் உனக்குத் தெரியாதது சிரிப்பாகத்தான் இருக்கிறது…… ' என்று நெருங்கிப் பேசும் வகையில் கூறினான். ஏனையோரின் ஒருமித்த சிரிப்பில், இவள் கலந்து கொள்ளவில்லை. அதன் எதிரொலி என சிறிது சென்று இவள் முகத்தில் புன்சிரிப்புத் தோன்ற, அதிலும் ஒரு கடுமை தொனித்தது போலும். ஆண்களின் தன்மை ஒருவரிடமும் ஒருவிதத்திலும் சரியெனப்படவில்லை. ஆண் பெண் பாகுபாட்டை, உலகே தவறாகக் கண்டு கொண்டிருக்கிறது. உறவு, பந்தம், பாசம், எல்லாமே வியர்த்தமாகத் தோன்றும் வகைக்கு, தர்மமும், சீர்குலைந்து, ஒத்துப் போவதாகக் காண்கின்றனர் போலும். இவள் மனம், யாரை எதற்காக நொந்து கொள்ளுவது என்பது புரியாது தவித்தது.

'…..எவ்வளவு தவறு. தெரிந்து கொள்ளாதது எவ்வளவு சரியாகவும் இருக்கிறது…. ' என்று ஆரம்பித்த கெளரியைத் தடுத்து…… . 'சரி தவறு எல்லாம் தவறாகவே உனக்கு ஒன்றுதான்…. ' என்றான். எல்லோரும் சிரித்தனர். கெளரியின் சிரிப்பு, மேலும் தன்னைப் பற்றிய அவர்கள் எண்ணம் என்னவென்பதும் புரியவில்லை. மேலே யோசிக்க முடியாது கெளரியைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பைத்தியக்காரச் சதியில் சிக்கித் தவிப்பதான லேசான ஒரு எண்ணம். தன்னை விடுவித்துக் கொள்ள கெளரியை விட்டு வெளிச் செல்லுவதும் மனதுக்குப் பிடித்தமாக இல்லை.

'…ஐயா… ' என்று இவனைக் கூப்பிட்டு அவள் பேச ஆரம்பித்தது ஒரு ஆறுதலாக இருந்தது… 'ஐயா நான் ஒரு பெண்–அதுவும் ஒரு தாஸிப் பெண். தாஸிகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்து இருந்தாலும் பெண்களையும் பற்றித் தெரியுமோ… ? நீங்கள் கல்யாணம் ஆகாதவர்கள். செய்து கொள்ளாதது ஒரு வகையில் சரி. யாரோ, ஒருவன் மனைவி என, யாரோ ஒருவன் மனைவி என உங்களிடம் கற்பிழந்துகொண்டு நிற்க முடியாத வகைக்கு… ' என்று சொல்லிச் சிறிது பேச்சை நிறுத்தினது, இவனுக்குத் திடுக்கிட இருந்தது. சிறிது கோபத்தில் 'என்ன…என்ன சொல்லுகிறாய்–தனக்குப் புரியாது, பிறருக்கும் புரியாத வகைக்கு… ' என்றான் இவன். இவன் பேசுவதையே கவனிக்காதவள் போன்று, 'நாங்கள் பெண்கள்–அதுவும் தாஸிப் பெண்கள். ஒருவிதத்தில் கல்யாணமானவர்கள், மனைவிகள் எனவும் கொள்ளமுடியும். கல்யாணமான ஒருவள், மறதியில் தன் கணவனை எங்கேயோவிட்டு, எங்கும் தேடுவதான பாவனையை என் மனது அடிக்கடி கொள்ளுகிறது ஐயா. ஆண்களால் கலியாணமின்றி வாழமுடியும். பெண்களால் முடிகிறதில்லை. இந்து தர்மம் அப்படித்தானே…. கன்னியென வாழவும் கூடாது…. முடியாது. குமரிக் கன்னியும் ஒருவனை அடைய ஏங்கி, சாசுவதத்தில்தானே, கன்னியெனவாகிறாள்….. மனைவி எனக் கணவனிடம் வாழ்க்கைப்படுவதி, தன் மனத் தூய்மையை, அவனால் எப்போதும் இழக்காமல் இருக்க முடியும் என்று எந்த மனைவியால் நம்பமுடியும் ? தன் புனிதம் தன் கணவனால் பறிபோக, கற்பிழந்தவளாகத் தன்னை அவள் அப்போது கருதமுடியாதா ? ஒருக்கால் உங்களைப் போன்றவர்களால் அவ்வகையில், கணவனாக முடியும் போலும்…. ஆனால் கல்யாணம் செய்துகொள்ளாமல் நிற்கிறீர்களே….. பெண்ணைப் படைத்த 'அவன் ' பெண்மையையும் மறக்கவில்லை….. ' என்று சொல்லியவள் 'என்ன அனசூயா நான் சொல்லுவது ' என்று அவள் அசட்டு ஆமோதிப்பைப் பெற நினைத்து அவனைப் பார்த்து சிரித்தாள். 'உங்கள் நண்பரை அவசியம் கண்டு கொள்ளுங்கள்….. அவர் புரிந்துகொண்டவர் ஒருவள் 'நாழிகை ஆகவில்லையா அக்கா ' ' என்று கேட்டாள். 'ஆமாம் ' என்றவள் இவனைப் பார்த்து 'நீங்களும் வாருங்கள் கோவிலுக்கு….நாழிகை ஆகிவிட்டது ' என்றாள் கெளரி.

மாலை சூரியன் மறைய இருக்கிறான். சந்நிதித் தெரு முழுவதும் சூரிய ஒளி பரவி இருந்தது. கோபுரம் தாண்டியும், கொடி மரம் வரையிலும்கூட இவனும் அவர்களுடன் கூடச் சென்றான். முன் நீண்டு சென்ற நிழல்கள் சலித்து ஒன்றைச் சென்று கலந்தும் விலகியும் தெரு வழியே சென்று கொண்டிருந்தன. முன் சென்ற அவர்கள் உட்சென்று மறையும் வரையில் பார்த்து நின்று இருந்தான். அப்பால் கர்ப்பக்கிருஹ சரவிளக்குகள் ஏற்றப்பட்டுத் தெரிந்தன. …உட்சென்று மறைந்தவர்களை இவனால் பார்க்கமுடியவில்லை….. விளக்குகள் கலைந்து, மறைந்து, தெரிந்து கொண்டிருந்தன.

சென்ஷி

unread,
May 31, 2010, 3:37:20 AM5/31/10
to panb...@googlegroups.com

கதீட்ரல்: ரேமண்ட் கார்வெர்

ஜி குப்புசாமி

என் மனைவியின் பழைய நண்பனான இந்தக் குருடன் எங்கள் வீட்டில் தங்குவதற்காக வந்து கொண்டிருக்கிறான். அவன் மனைவி இறந்துவிட்டாளாம். அதனால் கனெக்டிகட்டில் இறந்து போன மனைவியின் உறவினர்களைச் சென்று சந்தித்துக் கொண்டிருந்தான். அவன் மாமனார் வீட்டிலிருந்து என் மனைவியிடம் பேசினான். ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவன் ஒரு ஐந்துமணிநேர ரயில் பயணத்தில் வரப்போகிறான். என் மனைவி ஸ்டேஷனுக்குச் சென்று அழைத்து வருவாள். பத்து வருடங்களுக்கு முன்பு சியாட்டிலில் ஒரு கோடைப்பருவத்தில் அவனிடம் பணியாற்றியதற்குப்பிறகு அவனை அவள் பார்த்திருக்கவில்லை. ஆனால் அவளும் அந்தக் குருடனும் தொடர்பில் இருந்திருக்கின்றனர். டேப்புகளில் தகவல்களைப் பதிவுசெய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டிருந்தனர். அவன் வருகையைப்பற்றி நான் ஆர்வமாக இல்லை, அவன் யாரென்றே எனக்குப் பரிச்சயமில்லாதது மட்டுமல்ல, அவன் குருடன் என்பது என்னைத் தொந்தரவு படுத்திக்கொண்டிருந்தது. குருட்டுத் தனம் பற்றிய என் கருத்துகளெல்லாம் திரைப்படங்களிலிருந்து வந்தவை. திரைப்படங்களில் குருடர்கள் மெதுவாக நடப்பார்கள். எப்போதுமே சிரிக்கமாட்டார்கள். சிலநேரங்களில் கண்காணிப்பு நாய்களால் வழிநடத்திச் செல்லப்படுவார்கள். குருடன் ஒருவன் என் வீட்டில் தங்குவது நான் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்காத ஒரு விஷயம்.

சியாட்டிலில் அந்தக் கோடைப் பருவத்தின் போது அவளுக்கு ஒரு வேலை தேவையாக இருந்தது. அவளிடம் பணமே இல்லை. அந்தக் கோடையின் இறுதியில் அவள் மணக்கவிருந்தவன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிலையத்தில் இருந்தான். அவனிடமும் பணம் இல்லை. ஆனால் அவன்மேல் அவளுக்குக் காதல், அவள் மேல் அவனுக்குக் காதல், இத்தியாதி, செய்தித் தாட்களில் ஒரு விளம்பரத்தைப் பார்த்தாள்: உதவியாளர் தேவை-பார்வையற்ற ஒருவருக்கு வாசித்துக் காண்பிக்க. அப்புறம் ஒரு தொலைபேசி எண். அவள் போன் செய்து விட்டு அங்கே சென்றாள், உடனே வேலையில் சேர்க்கப்பட்டாள். இந்தக் குருடனிடம் கோடைக் காலம் முழுக்க அவள் பணிபுரிந்தாள். கேஸ் ஸ்டடிக்கள் அறிக்கைகள் போன்ற சமாச்சாரங்களை அவள் வாசித்துக் காட்டுவாளாம். மாவட்ட சமுதாய சேவைத் துறையில் இருந்த அவனது சிறிய அலுவலகத்தை அவனோடு சேர்ந்து சீரமைப்பதில் உதவினாள். என் மனைவியும் அந்தக் குருடனும் நல்ல நண்பர்களாகிவிட்டனர். இந்த விஷயங்களெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்? அவள் என்னிடம் சொன்னாள். அவள் வேறொன்றையும் என்னிடம் சொன்னாள். அலுவலகத்தில் அவளது கடைசி நாளன்று அந்தக்குருடன் அவள் முகத்தைத் தொடலாமா என்று கேட்டிருக்கிறான். இவள் அதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறாள். அவன் விரல்களால் அவள் முகத்தின் எல்லா பாகங்களையும், அவள் நாசி – அவள் கழுத்தைக்கூட! – தொட்டுப் பார்த்ததாக அவள் என்னிடம் கூறினாள். அவள் அதை எப்போதுமே மறக்கவில்லை. அதைப் பற்றி ஒரு கவிதை கூட எழுதுவதற்கு முயற்சித்தாள். கவிதை எழுத எப்போதுமே அவள் முயன்றுகொண்டிருப்பாள். ஒவ்வொரு வருடமும் ஒன்றிரண்டு கவிதைகளை, அவளுக்கு உண்மையிலேயே முக்கியமானதாக எது நடந்ததற்குப் பிறகும் வழக்கமாக எழுதினாள்.

நாங்கள் முதன் முதலாக வெளியே ஒன்றாகப் போக ஆரம்பித்தபோது அந்தக் கவிதையை அவள் காட்டினாள். அந்தக் கவிதையில் அவன் விரல்களையும், அவை அவள் முகத்தின் மேல் எப்படியெல்லாம் ஊர்ந்தன என்பதையும் அவள் நினைவு கூர்ந்திருந்தாள். அந்தச் சமயத்தில் அவள் என்ன உணர்ந்தாள் என்பதையும், குருடன் அவள் நாசியையும் உதடுகளையும் தொட்டபோது அவள் மனதில் என்னவெல்லாம் கடந்து சென்றது என்பதையும் அந்தக் கவிதையில் சொல்லியிருந்தாள். அந்தக் கவிதையை பெரிசாக ஒன்றும் நான் கருதவில்லை என்பது ஞாபகமிருக்கிறது. ஆனாலும் அதனை அவளிடம் நான் சொல்லவில்லை. ஒருவேளை கவிதையை நான் புரிந்து கொள்ளாதவனாக இருக்கக் கூடும். எதையாவது படிக்க வேண்டியிருந்ததால் நான் முதலில் தேடி எடுப்பது அதுவாக இருக்காது என்பதை மட்டும் ஒப்புக்கொள்கிறேன்.

எப்படியோ, முதன் முதலாக அவளது காதலையும் ஆதரவையும் அனுபவித்துக்கொண்டிருந்த அந்த வருங்கால ராணுவ அதிகாரியான அவளுடைய இளம்பிராயத்துக் காதலன் சரி வேண்டாம், நான் சொல்லிக்கொண்டிருந்தது. . . அவள் முகத்தின் மேல் அந்தக் குருடனின் விரல்களை வருடுவதற்கு அனுமதித்த அந்தக் கோடையின் இறுதியில் அவனிடம் விடை பெற்றுக் கொண்டு அவளது இளம்பிராயத்து இத்தியாதியை (அவன் இப்போது ஒரு கமிஷன்டு ஆபீஸர்) மணந்து கொண்டு சியாட்டிலை விட்டுச்சென்றாள். ஆனால் அவர்கள், அவளும் அந்தக் குருடனும், ஒருவருக்கொருவர் தொடர்பில்தான் இருந்தனர். ஒரு வருடமோ என்னமோ கழித்து முதன் முதலாக அவள் தொடர்பு கொண்டாள். அலபாமாவிலிருந்த ஒரு வான்படை முகாமிலிருந்து ஒரு நாள் இரவு அவனுக்கு போன்செய்தாள். பேச விரும்பினாள். அவர்கள் பேசினர். அவள் வாழ்க்கையைப் பற்றிப் பேசி பதிவு செய்து ஒரு டேப்பை அவனுக்கு அனுப்பச் சொன்னான். அவள் அதைச் செய்தாள். டேப் அனுப்பினாள். அந்த ஒலிநாடாவில் அந்தக் குருடனிடம் அவள் கணவனைப் பற்றியும், ராணுவத்தில் அவர்களது வாழ்க்கையைப் பற்றியும் சொன்னாள். அவளுடைய கணவனை அவள் நேசிப்பதாகவும், ஆனால் அவர்கள் வசிக்கும் இடத்தையும், அவன் ராணுவத் தொழிற்சாலையின் ஒரு பகுதியாக இருப்பதையும் அவள் விரும்பவில்லை என்று அந்தப் பார்வையற்றவனிடம் சொன்னாள். அவள் ஒரு கவிதை எழுதியிருப்பதாகவும், அதில் அவன் இருப்பதாகவும் சொன்னாள். ஒரு ஏர்ஃபோர்ஸ் அதிகாரியின் மனைவியாக இருப்பதைப் பற்றி ஒரு கவிதை எழுதிக்கொண்டிருப்பதாகச் சொன்னாள். அந்தக் கவிதை அப்போது முடிக்கப்படவில்லை. இன்னமும் எழுதிக்கொண்டிருந்தாள். குருடன் பதிலை ஓர் ஒலிநாடாவில் பதிந்தான். அவளுக்கு ஒலி நாடாவை அனுப்பினான். அவள் பதிலுக்கு மற்றோர் ஒலிநாடாவைப் பதிந்தாள். இது வருடக்கணக்காகத் தொடர்ந்தது. என் மனைவியின் அதிகாரி ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமிற்குப் பணி மாற்றப்பட்டுக் கொண்டேயிருந்தான். மூடி ஏ.எஃப்.பி., மெக்வைர், மெக்கானெல், இறுதியாக ஸாக்ராமென்டோவின் அருகிலுள்ள ட்ராவிஸ்ஸிலிருந்து அவள் டேப்புகளை அனுப்பிக் கொண்டிருந்தாள். ட்ராவிஸ்ஸில் ஒரு நாள் இரவு தனியாக இருந்தபோது அந்தப் படுவேக ஓட்ட வாழ்க்கையில் நெருங்கி வந்தவர்கள் ஒவ்வொருவரையும் தான் துண்டித்துக்கொண்டே செல்வதாக உணர்ந்தாள். அவளால் இனி ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது போலத் தோன்றியது. எழுந்து, மருந்துகள் வைத்திருந்த அலமாரிக்குச் சென்று அங்கிருந்த எல்லா மாத்திரைகளையும், கேப்ஸ்யூல்களையும் வாயில் போட்டு ஒரு பாட்டில் ஜின்னோடு விழுங்கினாள். பின்னர் வென்னீரில் குளித்துவிட்டு மயக்கத்தில் விழுந்தாள்.

செத்துப் போவதற்குப் பதிலாக துவண்டு வாந்தியெடுத்தாள். அவளது அதிகாரி – அவனுக்கு எதற்காக ஒரு பெயர் இருக்க வேண்டும்? இளம்பருவத்துக் காதலன். அதற்கு மேல் அவனுக்கென்ன வேண்டும் -எங்கிருந்தோ வந்து, அவளைப் பார்த்து அதிர்ந்து ஆம்புலன்ஸை அழைத்தான். கொஞ்சநாள் கழித்து இவையெல்லாவற்றையும் டேப்பில் பதிந்து அந்தக் குருடனுக்கு அனுப்பினாள். வருடங்கள் ஆக ஆக, எல்லா சமாச்சாரங்களையும் டேப்புகளில் பேசி அடுத்தடுத்து அனுப்பினாள். ஒவ்வொரு வருடமும் ஒரு கவிதையை எழுதுவதற்கு அடுத்ததாக பிரதானமான பொழுது போக்காக இதுதான் அவளுக்கு இருந்ததென்று நினைக்கிறேன். ஒரு டேப்பில் அவளுடைய அதிகாரியிடமிருந்து கொஞ்சநாட்களுக்குப் பிரிந்து வாழ்வதென்று முடிவெடுத்திருப்பதாக அந்தக் குருடனிடம் சொன்னாள். வேறொரு டேப்பில் அவளுடைய விவாகரத்தைப் பற்றி அவனிடம் சொன்னாள். நானும் அவளும் பழகத் தொடங்கியபிறகு குருடனிடம் அதைப் பற்றியும் சொன்னாள். எல்லாவற்றையும் அவனிடம் சொல்லியிருக்கிறாள், அல்லது அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. ஒருமுறை அந்தக் குருடனிடமிருந்து வந்த சமீபத்தைய டேப்பைக் கேட்க எனக்கு விருப்பமா என்று கேட்டாள். அது ஒரு வருடத்திற்குமுன்பு. அந்த டேப்பில் நான் இருப்பதாகச் சொன்னாள். எனவே நானும் சரி கேட்கிறேன் என்றேன். மதுபானங்களை எடுத்துக் கொண்டு வசிப்பறையில் அமர்ந்தோம். கேட்பதற்கு எங்களைத் தயார்படுத்திக்கொண்டோம். முதலில் டேப்பை பிளேயரில் செருகி சில டயல்களை அட்ஜஸ்ட் செய்தாள். பின் ஒரு பட்டனை அழுத்தினாள். டேப் கீச்சிட்டது. இந்த உரத்த குரலில் யாரோ ஒருவன் பேசத் தொடங்கினான். அவள் வால்யூமைக் குறைத்தாள். உபத்திரவமில்லாத ஒரு சில நிமிட வளவளப்பிற்குப் பிறகு என் பெயர், இந்த அந்நியன், எனக்குப் பழக்கமேயில்லாத இந்தக் குருடனின் வாயிலிருந்து வருவதைக் கேட்டேன்! அதன் பின் இது: “அவரைப் பற்றி நீ சொன்ன எல்லாவற்றிலிருந்தும் நான் முடிவிற்கு வரமுடிவது என்னவென்றால் . . .” இந்த நேரத்தில் ஏதோ ஒரு தடங்கல் ஏற்பட்டது. கதவை யாரோ தட்டினார்களோ அல்லது வேறு ஏதோ. திரும்பவும் டேப்பைப் போட்டுக் கேட்கவில்லை. ஒரு வேளை அது மட்டுமேயாக இருந்திருக்கலாம். நான் கேட்க வேண்டியது அனைத்தையும் கேட்டுவிட்டிருக்கலாம்.

இதே குருடன்தான் இப்போது என் வீட்டில் தங்குவதற்காக வந்து கொண்டிருக்கிறான்.

“அவனை பவுலிங்கிற்குக் கூட்டிப்போகட்டுமா?” என்று என் மனைவியிடம் கேட்டேன். அப்போது நறுக்குப்பலகையில் உருளைக்கிழங்குகளைத் தோலுரித்துக் கொண்டிருந்தாள். அவள் உபயோகப்படுத்திக்கொண்டிருந்த கத்தியைக் கீழே வைத்துவிட்டுத் திரும்பினாள்.

“என்னை நீங்கள் நேசிப்பதாக இருந்தால், எனக்காக இதைச் செய்யலாம். என்னை நேசிக்காவிட்டால் பரவாயில்லை, விட்டுவிடுங்கள். ஆனால் உங்களுக்கு ஒரு நண்பன் இருந்து, அது எந்த நண்பனாக இருந்தாலும், அந்த நண்பன் வந்தால் நான் அவருக்கு சௌகரியம் செய்து கொடுப்பேன்” அவள் கைகளைப் பாத்திரத் துவாலையால் துடைத்துக்கொண்டாள்.

“எனக்கு குருட்டுநண்பர்கள் யாருமில்லை” என்றேன்.

“உங்களுக்கு எந்த நண்பனுமே இல்லை” என்றாள்.

“நிறுத்துங்கள். காட்டமிட், அவருடைய மனைவி இப்போதுதான் இறந்துவிட்டாள்! உங்களுக்குப் புரிகிறதா? அந்த மனுஷனுக்கு, பெண்டாட்டி செத்துப்போய்விட்டாள்!”

நான் பதிலிறுக்கவில்லை. குருடனின் மனைவியைப் பற்றி கொஞ்சம் சொன்னாள். அவள் பெயர் பியூலாவாம். பியூலா! அது ஒரு கருப்பினப் பெண்ணின் பெயர்.

“அவன் மனைவி ஒரு நீக்ரோவா?” என்று கேட்டேன்.

“உங்களுக்கென்ன பைத்தியமா?” என்றாள். “மூளை பிசகிவிட்டதா அல்லது வேறெதாவதா?” அவள் ஒரு உருளைக் கிழங்கைக் கையில் எடுத்தாள். அது தரையில் மோதி, அடுப்பிற்கடியில் உருண்டு சென்றது. “உங்களுக்கு என்ன ஆகிவிட்டது? குடித்திருக்கிறீர்களா?”

“சும்மா கேட்டேன்” என்றேன்.

உடனே என் மனைவி எனக்கு அக்கறையில்லாத பல விபரங்களை என்னிடம் நிரப்பினாள். ஒரு பானத்தைக் கலந்துகொண்டு சமையலறை மேஜையில் கேட்பதற்கு அமர்ந்தேன். கதையின் துண்டுகள் அவ்வவற்றிற்கான இடத்தில் பொருந்தின.

என் மனைவி அந்தக் குருடனிடம் வேலை பார்ப்பதை நிறுத்திய பிறகு அவனிடம் வேலைக்கு வந்தவள் பியூலா. வெகு சீக்கிரத்திலேயே பெலூவாவும் குருடனும் ஒரு சர்ச்சில் மணம் செய்து கொண்டனர். அது ஒரு சிறிய திருமணம் – முதலில் அத்தகையதொரு திருமணத்திற்கு யார் வருவார்கள்? அவர்கள் இருவர், அப்புறம் பாதிரி, பாதிரியின் மனைவி. ஆனாலும் அது ஒரு சர்ச் திருமணம்தான். அதற்குத்தான் பெலூவா ஆசைப்பட்டாள் என்று சொல்லியிருக்கிறான். ஆனால் அப்போதே அவள் சுரப்பிகளில் புற்று நோயை வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதற்குப் பின் எட்டு வருடங்கள் இணைபிரியாது இருந்தபிறகு இணைபிரியாது, என் மனைவியின் பிரயோகம் – பெலூவாவின் உடல்நலம் வேகமாகச் சீரழிந்தது. ஒரு சியாட்டில் மருத்துவமனையின் அறையில் குருடன் கட்டிலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து அவள் கையைப் பற்றிய படியிருக்க, அவள் இறந்து போனாள். அவர்கள் மணமுடித்து, வாழ்ந்து, ஒன்றாகப் பணியாற்றி, ஒன்றாகத் தூங்கி செக்ஸ் இருந்திருக்கிறது. நிச்சயம் – அதன் பிறகு அவளை அக்குருடன் புதைக்க வேண்டி வருகிறது. இவையனைத்துமே அந்த அசட்டுப்பெண் எப்படித் தோற்றமளிப்பாளென்று அவன் ஒருபோதும் பார்த்திருக்காமலே நடந்திருக்கிறது. இது என் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இதைக் கேட்டபின், அந்தக் குருடன் மேல் எனக்குக் கொஞ்சம் பரிதாபமாக இருந்தது. அதன்பிறகுதான் அந்தப் பெண் எவ்வளவு இரங்கத்தக்கதொரு வாழ்க்கையை வாழ்ந்து தீர்த்திருக்கிறாள் என்பது உறைத்தது. தன் மனதிற்குகந்தவனின் கண்களில் தான் தெரிவதைப் போல தன்னை எப்போதுமே பார்த்துக்கொள்ள முடியாத ஒரு பெண்ணைக் கற்பனை செய்து பாருங்கள்! தன் மனதிற்குகந்தவனிடமிருந்து அவள் அழகை ரசித்துச் சொல்கிற சின்னச் சின்ன பாராட்டுகளை ஒரு நாள் கூடக் கேட்காமல் ஒவ்வொரு நாளையும் கழித்திருந்த ஒரு பெண். அவள் முகத்தின் சலனங்களை, துயரத்தையோ குதூகலத்தையோ எப்போதுமே பார்க்க முடியாத ஒரு கணவனைக் கொண்ட ஒரு பெண். மேக்கப் அணிந்து கொள்ளாமல், அல்லது தவிர்த்துவிடலாம்-அவனுக்கு என்ன வித்தியாசம் தெரியப்போகிறது? அவள் விரும்பினால் ஒரு கண்ணைச் சுற்றி பச்சைக் கலர் மையை ஈஷிக்கொண்டு, மூக்கில் நேராக ஒரு ஊசியும் மஞ்சள் சட்டையும், ஊதா நிறத்தில் ஷுக்களும் அணிந்து கொண்டு வரலாம். அதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. அதற்கப்புறம் மரணத்தில் நழுவிவிடலாம் – அந்தக் குருடனின் கை அவள் கையைப் பற்றியபடியிருக்க, அவனுடைய குருட்டுக் கண்கள் கண்ணீரைச் சொரிந்தபடியிருக்க, இப்போது நான் கற்பனை செய்து பார்க்கிறேன் – அவளது கடைசி நினைவு என்னவாக இருந்திருக்கும்? அவள் எப்படி இருப்பாள் என்று அவன் கடைசி வரை அறிந்திருக்கவில்லை. ஆனால் அவள். அவசரமாக கல்லறைக்கு ஒரு எக்ஸ்பிரஸ்ஸில் ஏறிச்சென்று கொண்டிருக்கிறாள். ராபர்ட்டுக்கு ஒரு சின்ன இன்ஷுரன்ஸ் பாலிசியையும் ஒரு இருபது பெசோ மெக்ஸிக நாணயத்தின் ஒரு பாதித் துண்டையும் அவள் விட்டுச் சென்றிருந்தாள். நாணயத்தின் மற்றப் பாதி அவளோடு சவப்பெட்டிக்குள் சென்றது பரிதாபம்.

எனவே நேரம் புரண்டு சென்றதும் என் மனைவி அவனைக் கூட்டி வர நிலையத்திற்குச் சென்றாள். காத்திருப்பதைத் தவிர வேறெதனையும் செய்யமுடியாமல் – நிச்சயமாக, அதற்காக அவனைக் குறை கூறினேன் – மது அருந்திக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது கார் உள்ளே நுழைகிற சத்தத்தைக் கேட்டேன். சோபாவிலிருந்து பானத்தோடு எழுந்து சன்னலுக்குச் சென்று பார்த்தேன்.

என் மனைவி சத்தமாகச் சிரித்துக்கொண்டே காரை நிறுத்துவதைப் பார்த்தேன். காரிலிருந்து வெளிவந்து கதவைச் சாத்துவதைப் பார்த்தேன். அவள் இன்னமும் ஒரு புன்னகையை அணிந்துகொண்டிருந்தாள். ஆச்சரியம். காரைச் சுற்றிக் கொண்டு மறுபக்கம் செல்ல, அந்தக் குருடன் ஏற்கனவே வெளியே வரத் தொடங்கிவிட்டிருந்தான். இந்தக் குருடன், கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், அடர்த்தியான தாடி வைத்திருந்தான்! குருடனுக்கு தாடி! இது ரொம்பவும் அதிகம் தானென்பேன். குருடன் பின்னிருக் கைக்குச் சென்று ஒரு சூட்கேஸை வெளியில் இழுத்தான். என் மனைவி அவன் கையைப் பற்றி கார் கதவை மூடிவிட்டு, வழியெல்லாம் பேசிக்கொண்டே ஊர்திப் பாதையில் அவனைச் செலுத்தி, முன் முகப்பிற்குக் கைத்தாங்கலாகப் படியேற்றிக்கொண்டு வந்தாள். டிவியை அணைத்தேன். பானத்தைக் காலி செய்துவிட்டு கோப்பையைக் கழுவி கைகளைத் துடைத்துக் கொண்டேன். வாசலுக்குச் சென்றேன்.

என் மனைவி, “ராபர்ட்டை நீங்கள் சந்திக்க வேண்டும். ராபர்ட், இவர் என் கணவர். இவரைப் பற்றி உங்களிடம் சொல்லியிருக்கிறேன்” என்றாள். அவள் குதூகலத்திலிருந்தாள். இந்தக் குருடனின் கோட் சட்டைக் கையைப் பிடித்து அவள் முன்னகர்த்தினாள்.

குருடன் சூட்கேஸைக் கீழே வைத்தான். அவன் கை உயர்ந்தது.

அதைப் பற்றினேன். அவன் என் கையை அழுத்திப் பிசைந்தான் கையை விடாமல் கொஞ்ச நேரம் வைத்திருந்து பின் விடுவித்தான்.

“நாம் ஏற்கனவே சந்தித்திருப்பதைப் போல உணர்கிறேன்” அவன் முழங்கினான்.

“எனக்கும்” என்றேன். வேறு என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. பின், “வெல்கம். உங்களைப் பற்றி நிறையவே கேட்டிருக்கிறேன்” என்றேன். ஒரு சிறிய குழுவாக நாங்கள் தாழ்வாரத்திலிருந்து வசிப்பறைக்கு, அவனைக் கையைப்பிடித்து என் மனைவி வழிகாட்டிக் கொண்டுவர, சென்றோம். இன்னொரு கையில் குருடன் சூட்கேஸைத் தூக்கிக்கொண்டு வந்தான். “உன் இடப்புறத்திற்கு ராபர்ட், அப்படித்தான், இப்போது கவனி. அங்கே ஒரு நாற்காலி இருக்கிறது. அதேதான். இங்கேயே உட்கார்ந்து கொள். இது சோபா. இந்த சோபாவை இரண்டு வாரங்களுக்கு முந்திதான் வாங்கினோம்.”

பழைய சோபாவைப் பற்றி ஏதாவது சொல்லலாமென்று யத்தனித்தேன். அந்தப் பழைய சோபா எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. ஆனால் எதுவும் சொல்லவில்லை. பின் வேறொன்றைப் பற்றிச் சின்ன சம்பாஷணையாக, ஹட்ஸன் செல்லும் வழியில் உள்ள எழிலார்ந்த பயணத்தைப் பற்றிப் பேச விரும்பினேன். எப்படி நீங்கள் நியூயார்க் செல்லும்போது ரயிலின் வலது பக்கத்தில் உட்கார வேண்டும், நியூயார்க்கிலிருந்து திரும்பி வரும்போது இடப்புறத்தில் உட்கார வேண்டும் என்பதைப் போல.

“சரி, ரயில் பயணம் நன்றாக இருந்ததா?” என்றேன், “ரயிலின் எந்தப் புறத்தில் உட்கார்ந்து வந்தீர்கள்?”

“என்ன ஒரு கேள்வி, எந்தப் புறத்தில்!” என்றாள் என்மனைவி. “எந்தப் புறத்திலாக இருந்தால் என்ன?”

“சும்மா கேட்டேன்” என்றேன்.

“வலப்புறம்” குருடன் சொன்னான், “ஏறக்குறைய நாற்பது வருடங்களாக ரயிலில் போயிருக்கவேயில்லை. நான் குழந்தையாக இருந்ததற்கப்புறம். என் வீட்டாரோடு. அது பல காலமாகிவிட்டது. அந்த உணர்வையே மறந்துவிட்டிருந்தேன். இப்போது என் தாடியில் மூப்பு புகுந்துவிட்டது” என்றான்.

“அப்படித்தான் என்னிடம் சொல்கிறார்கள். மேன்மை வாய்ந்தவனாக என்னைப் பார்த்தால் தெரிகிறதா அன்பே?” குருடன் என் மனைவியிடம் கேட்டான்.

“மேன்மை வாய்ந்தவனாகத்தான் தெரிகிறாய், ராபர்ட்” என்றாள். “ராபர்ட்” என்றழைத்தாள். “ராபர்ட், உன்னைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது”

ஒரு வழியாக, குருடனிடமிருந்து பார்வையை நகர்த்தி என்னைப் பார்த்தாள். அவள் பார்த்தது அவளுக்கு விருப்பமானதாக இல்லை போல எனக்குத் தோன்றியது. நான் தோள்களைக் குலுக்கிக்கொண்டேன்.

பார்வையில்லாத யாரையும் நான் சந்தித்ததோ, தனிப்பட்டமுறையில் அறிந்ததோ இல்லை. இந்தக் குருடன் பின் நாற்பதுகளில், கனத்த சரீரத்துடன் வழுக்கையும் தொய்ந்த தோள்களுமாக ஏதோ கனமான பாரத்தைச் சுமந்திருப்பதைப் போல இருந்தான். பழுப்பு நிற அரைக்கைச் சட்டையும், பழுப்பு ஷுக்களும், வெளிர் பழுப்பில் சட்டையும், ஒரு விளையாட்டு வீரர்கள் கோட்டும் அணிந்திருந்தான். பந்தாதான். அவனுக்கு இந்த முழுசான தாடியும் இருந்தது. ஆனால் இவன் கழியை உபயோகிப்பவனாக இல்லை, கறுப்புக் கண்ணாடியும் அணிந்திருக்கவில்லை. குருடர்களுக்குக் கறுப்புக் கண்ணாடி ஒரு கட்டாயம் என்றே எப்போதும் நினைத்து வந்திருக்கிறேன். உண்மையில் சொல்லப்போனால் அவன் அணிந்துகொண்டிருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்த்தேன். முதல் பார்வைக்கு அவன் கண்கள் மற்ற யாருடைய கண்களைப் போலவேதான் இருந்தன. ஆனால் உன்னிப்பாகப் பார்த்தால் அவற்றில் ஏதோ வித்தியாசம் இருந்தது. விழிப்படலத்தில் அதிகப்படியான வெண்மை இருந்தது ஒரு விஷயம். கண் பாவைகள் அவனுடைய கட்டுப்பாடின்றி, அவனால் நிறுத்த முடியாதபடிக்கு விழிக்கோப்பையில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. எனக்குப் புல்லரித்தது. அவன் முகத்தை நான் உற்றுநோக்கியபோது, இடது பாவை அவன் மூக்கை நோக்கி நகர்ந்து வர, மற்றது ஒரே இடத்தில் நிலைத்து நிற்பதற்கு பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அது வெறும் பிரயத்தனம் மட்டும்தான். அந்தக் கண் அவனுக்குத் தெரிந்தோ, அவனுடைய விருப்பமின்றியோதான் அலைந்துகொண்டிருந்தது.

“உங்களுக்கொரு பானம் கொண்டுவருகிறேன். உங்களுக்குப் பிடித்தது என்ன? எங்களிடம் எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் இருக்கின்றன. இது எங்களுடைய பொழுதுபோக்குகளில் ஒன்று.”

“நண்பா, நானே ஒரு ஸ்காட்ச் மனிதன்” அவனுடைய உரத்த குரலில் படுவேகமாகப் பேசினான்.

“சரி” என்றேன். “நண்பா! நிச்சயமாக எனக்குத் தெரியும்.”

அவன் விரல்களை சோபாவிற்குப் பக்கத்திலிருந்த சூட்கேஸிற்குக் கொண்டுவந்து தடவித் திறந்தான். அவனது பொருட்களை எடுக்கிறான். அதற்காக அவனை நான் குறை சொல்லவில்லை.

“மேலே உன் அறைக்கு இதைக் கொண்டு செல்கிறேன்” என்றாள் என் மனைவி.

“வேண்டாம், இருக்கட்டும்” குருடன் உரத்த குரலில் சொன்னான். “நான் போகும்போது அதுவும் போகட்டும்.”

“ஸ்காட்ச்சோடு கொஞ்சம் தண்ணீர்?” என்றேன்.

“மிகக் கொஞ்சமாக” என்றான்.

“நினைத்தேன்” என்றேன்.

“ஒரேயொரு துளி மட்டும். அந்த ஐரிஷ் நடிகன், பாரி ஃபிட்ஸ் ஜெரால்ட் தெரியுமா? நான் அவனைப்போல. ஃபிட்ஸ்ஜெரால்ட் சொன்னான். நான் தண்ணீர் குடிக்கும்போது தண்ணீர் மட்டும் குடிப்பேன். விஸ்கி குடிக்கும்போது விஸ்கி மட்டும் குடிப்பேன்” என் மனைவி சிரித்தாள். குருடன் தன் கையை தாடிக்கு அடியில் வைத்தான். தாடியை மெதுவாக உயர்த்தி பின் கீழே விட்டான்.

பானங்களை நான் பகிர்ந்தேன். மூன்று பெரிய கோப்பைகளில் ஸ்காட்ச்சோடு ஒவ்வொன்றிலும் மிகக்கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்தேன். சௌகரியமாக எங்களை அமைத்துக்கொண்டு ராபர்ட்டின் பயணங்களைப்பற்றிப் பேசினோம். முதலில் வெஸ்ட் கோஸ்ட்டிலிருந்து கனெக்டிகட் வரையான நீண்ட விமானப் பயணத்தைப் பேசி முடித்தோம். பின் கனெக்டிகட்டிலிருந்து இங்கே வரை ரயிலில். பயணத்தின் இந்தப் பகுதியைப் பற்றிப் பேசுவதற்கு இன்னுமொரு சுற்றுக்கு மது ஊற்றிக்கொண்டோம்.

குருடர்கள் புகை பிடிப்பதில்லை என்று எங்கேயோ நான் படித்தது ஞாபகத்தில் வந்தது. அதற்கு அனுமானம் என்னவென்றால், அவர்கள் இழுத்து வெளிவிடுகிற புகையை அவர்களால் பார்க்க முடிவதில்லை என்பதாலாம். பார்வையற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரிந்திருப்பது அவ்வளவுதான் என்று நினைத்தேன். ஆனால் இந்தப் பார்வையற்றவன் சிகரெட்டின் கடைசிப் பஞ்சடைப்பு வரை புகைத்துவிட்டு வேறொன்றைப் பற்றவைத்துக் கொள்கிறான். இந்தக் குருடன் சாம்பல் குடுவையை நிரப்ப, என் மனைவி அதைக் கொட்டிவிட்டு வருகிறாள்.

இரவு உணவுக்கு நாங்கள் மேஜையில் அமரும்போது இன்னொருமுறை குடித்தோம். ராபர்ட்டின் தட்டில் க்யூப் ஸ்டீக், உருளைக்கிழங்குச் சீவல்கள், பச்சை பீன்ஸ் என்று குவித்தாள். அவனுக்காக இரண்டு ஸ்லைஸ் ரொட்டிகளுக்கு வெண்ணெய் தடவினேன். “இதோ உங்களுக்கு ரொட்டியும் வெண்ணெய்யும் வைத்திருக்கிறேன்” என்றேன். என் பானத்தில் கொஞ்சம் விழுங்கினேன். “இப்போது ஜெபம் செய்யலாம்” என்றேன். குருடன் தலையைத் தாழ்த்திக் கொண்டான். என் மனைவி நம்ப முடியாமல் வாயைப் பிளந்தபடி என்னைப் பார்த்தாள். “போன் ஒலிக்கக்கூடாது, உணவு ஆறிப்போகக் கூடாது என்று ஜெபிப்போம் என்றேன்.”

நாங்கள் உணவில் புகுந்தோம். மேஜைமீது சாப்பிட இருந்த எல்லாவற்றையும் சாப்பிட்டுத் தீர்த்தோம். மறுநாளே இல்லையென்பதைப் போலச் சாப்பிட்டோம். நாங்கள் பேசவில்லை. சாப்பிட்டோம். கழுத்து வரைக்கும். அந்த மேஜையை மேய்ந்து முடித்தோம். தீவிரமான உணவருந்தல், குருடன் எடுத்த எடுப்பிலேயே அவன் தட்டு இருக்குமிடத்தை அறிந்திருந்தான். மாமிசத்துண்டின் மேல் அவன் கத்தியையும் முட்கரண்டியையும் பயன்படுத்தும் விதத்தை நாங்கள் வியந்து பார்த்தோம். மாமிசத்தை இரண்டாக வெட்டி, முட்கரண்டியில் குத்தி வாய்க்குள் விட்டு, உருளைக்கிழங்குச் சீவல்களை அடுத்ததாகக் காலியாக்கிவிட்டு, பீன்ஸிற்கு வந்து வெண்ணெய் தடவிய ரொட்டியைப் பெரிய துண்டுகளாகப் பிய்த்து ஒரே விள்ளலில் விழுங்கி முடித்தான். இதற்கடுத்து வைத்திருந்த பெரிய குவளை பாலை ஒரே மூச்சில் குடித்து கீழே வைத்தான். இவையத்தனையின் போதும் விரல்களை ஒருமுறைகூடப் பயன்படுத்த வேண்டியிருக்கவில்லை அவனுக்கு.

ஒரு ஸ்ட்ராபெர்ரி மோதகத்தின் ஒரு பாதி உட்பட அனைத்தையும் முடித்தோம். சில கணங்களுக்கு ஸ்தம்பித்தது போல உட்கார்ந்திருந்தோம். எங்கள் முகங்களில் வியர்வை முத்திட்டன. கடைசியில் சாப்பிட்ட தட்டுகளை அப்படியே விட்டுவிட்டு மேஜையிலிருந்து எழுந்தோம். திரும்பிப் பார்க்கவேயில்லை. வசிப்பறைக்குச் சென்று எங்கள் இருக்கைகளுக்குள் புதைந்தோம். ராபர்ட்டும் என்மனைவியும் சோபாவில் உட்கார்ந்தனர். நான் அந்தப் பெரிய நாற்காலியில் அமர்ந்தேன். இரண்டு அல்லது மூன்று சுற்றுகளுக்கு மதுபானங்களை எங்களுக்கு எடுத்துவைத்துக்கொண்டு அவர்களிருவரும் கடந்த பத்து வருடங்களில் அவர்களுக்கு நடந்த முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேசினர். பெரும்பாலான நேரத்திற்கு நான் வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தேன். அவ்வப்போது சேர்ந்து கொண்டேன். நான் அறையை விட்டுப் போய்விட்டேன் என்று அவன் நினைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. என்னைத் தனியாக விட்டுவிட்டதைப் போல நான் உணர்வதாக அவள் நினைத்துக் கொள்ளவும் நான் விரும்பவில்லை. அவர்கள் கடந்த பத்து வருடங்களில் அவர்களுக்கு -அவர்களுக்கு! – நடந்த விஷயங்களைப் பற்றிப் பேசினர். என் மனைவியின் இனிய இதழ்களிலிருந்து என் பெயர் வருமாவென்று பலனின்றிக் காத்திருந்தேன்: “அப்புறம்தான் என் அன்பிற்கினிய கணவர் என் வாழ்க்கைக்குள் வந்தார்” – என்பது போல ஏதாவது. ஆனால் அதைப் போல எதையுமே நான் கேட்கவில்லை. எல்லாம் ராபர்ட்டைப் பற்றித்தான். ராபர்ட் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் செய்திருப்பான் போலத் தெரிந்தது. குருட்டு சகலகலா வல்லவன். ஆனால் மிகச்சமீபத்தில் அவனும் அவன் மனைவியும் ஓர் ஆம்வே விநியோகத்தை எடுத்ததாகவும், அதன் மூலம் இந்தளவுக்கு அவர்கள் பொருளீட்டியிருப்பதாகவும் அறிந்துகொண்டேன். குருடன் ஒரு ஹாம் ரேடியோ ஆப்பரேட்டர் கூடவாம். அவனுடைய உரத்த குரலில் குவாம்மில், பிலிப்பைன்ஸில், அலாஸ்காவில், டஹிதியில் கூட இருக்கும் அவனுடைய சக ஆப்பரேட்டர்களோடு சம்பாஷிப்பதைப் பற்றிச் சொன்னான். அந்த இடங்களுக்கெல்லாம் அவன் செல்ல விரும்பினால் அவனுக்கு ஏகப்பட்ட சினேகிதர்கள் இருப்பார்களென்றான். அவ்வப்போது அவன் குருட்டு முகத்தை என்னை நோக்கித் திருப்பி, தாடிக்கடியில் அவன் கையைச் செலுத்திக்கொண்டு ஏதாவது கேட்பான். இப்போதிருக்கும் வேலையில் எவ்வளவு காலமாக இருக்கிறேன்? (மூன்று வருடங்கள்) வேலை எனக்குப் பிடித்திருக்கிறதா? (இல்லை) இதிலேயே தொடர்ந்து இருக்கபோகிறேனா? (வேறுவழி?) இறுதியில் கேட்க வேறு எதுவுமில்லையென்று அவனுக்குப் பட்டதாக நான் நினைத்தபோது, எழுந்து டிவியைப் போட்டேன்.

என் மனைவி எரிச்சலோடு என்னைப் பார்த்தாள். கொதிநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள். பின் குருடனைப் பார்த்து, “ராபர்ட் உன்னிடம் டிவி இருக்கிறதா?” என்றாள்.

“அன்பே, என்னிடம் இரண்டு டிவிக்கள் உண்டு. ஒன்று கலர், மற்றது பிளாக் அண்டு ஒயிட்; ஒரு பழைய அடாசு. வேடிக்கை என்னவென்றால் டிவியை நான் போட்டால் – எப்போதுமே போட்டுக் கொண்டிருக்கிறேன் – கலர் டிவியைத்தான் போடுகிறேன். இது வேடிக்கையானதுதான், என்ன சொல்கிறீர்கள்?”

அதற்கு என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. சொல்வதற்கு என்னிடம் சுத்தமாக எதுவுமேயில்லை. கருத்தே கிடையாது. எனவே செய்தி நிகழ்ச்சியைக் கவனித்துக்கொண்டு, அறிவிப்பாளர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்க முயற்சி செய்தேன்.

“இது ஒரு கலர்டிவி” என்றான் குருடன், “எப்படியென்று என்னைக் கேட்காதீர்கள். ஆனால், என்னால் சொல்ல முடியும்.”

“கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் மாற்றினோம்” என்றேன்.

குருடன் அவனது பானத்தை இன்னொருமுறை எடுத்துச் சுவைத்தான். அவன் தாடியை உயர்த்தி முகர்ந்து பார்த்து, கீழே விட்டான். சோபாவில் முன்னால் வந்து சாய்ந்தான். ஆஷ்ட்ரேவை காபி மேஜையில் அமைத்துவிட்டு, லைட்டரை அவன் சிகரெட்டில் வைத்தான். சோபாவில் பின்னுக்குச் சாய்ந்து கால்களைப் பின்னிக் கொண்டான்.

என் மனைவி வாயைப் பொத்திக்கொண்டு கொட்டாவி விட்டாள். சோம்பல் முறித்தாள். “நான் மாடிக்குப் போய் உடைமாற்றிக் கொள்ளலாமென்றிருக்கிறேன். ராபர்ட், சௌகரியமாக இருக்கிறதா?”

“சௌகரியமாக இருக்கிறது”

“இந்த வீட்டில் நீ சௌகரியமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.”

“நான் சௌகரியமாகத்தான் இருக்கிறேன்” என்றான் குருடன்.

*

அவள் அறையை விட்டுச் சென்றதும் அவனும் நானும் வானிலை அறிக்கை கேட்டோம், பின்பு விளையாட்டுச் செய்திகள். அதற்குள் அவள் போய் வெகு நேரமாகி விட்டதால் திரும்ப வருவாளா என்பது எனக்குத் தெரியவில்லை. அவள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருக்க வேண்டுமென நினைத்தேன். கீழே இறங்கிவரக்கூடாதா என்றிருந்தது எனக்கு. குருடன் ஒருவனோடு தனியாக இருக்க எனக்கு விருப்பமில்லை. இன்னொருமுறை மதுவருந்தலாமா என்று கேட்டேன், அவன், நிச்சயமாக என்றான். என்னோடு சேர்ந்து அபின் புகைக்க விருப்பமா என்று கேட்டேன். இப்போதுதான் ஒரு நம்பர் சுருட்டி வைத்திருக்கிறேன் என்றேன். அப்படி எதுவும் செய்திருக்கவில்லை, ஆனால் இப்போது இரண்டு செய்யலாமென்று தோன்றியது.

“உங்களுடன் சேர்ந்து கொஞ்சம் முயற்சி செய்துபார்க்கிறேன்” என்றான்.

“அப்படிச் சொல்லுங்கள். இதுதான் தைரியம்.”

எங்களுக்கான பானங்களை எடுத்துக்கொண்டு அவனோடு சோபாவில் அமர்ந்தேன். தடிமனாக இரண்டு நம்பர்கள் சுருட்டினேன். ஒன்றைப் பற்றவைத்து அவன் விரல்களுக்குக் கொண்டு வந்தேன். அவன் அதைப் பிடித்து வாயில் பொருத்தி இழுத்தான்.

“எவ்வளவு நேரம் முடியுமோ அந்தளவுக்கு தம் பிடித்து வைத்திருங்கள்” என்றேன். அவனுக்கு எதுவுமே தெரியவில்லையென்பது தெரிந்தது.

என் மனைவி அவளது இளஞ்சிவப்பு இரவு உடையில் இளஞ்சிவப்புச் செருப்புகளோடு கீழிறங்கி வந்தாள்.

“என்ன நாற்றம் இங்கே?” என்றாள்.

“கனாபிஸ் கொஞ்சம் புகைக்கலாமென்று நினைத்தோம்” என்றேன்.

என் மனைவி என்னைக் கொடூரமான பார்வை பார்த்தாள். குருடனை நோக்கி, “ராபர்ட், நீ இதெல்லாம் புகைப்பாய் என்று எனக்குத் தெரியாது.”

“இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன் அன்பே, எல்லாவற்றிற்கும் முதல்முறை என்று ஒன்றிருக்கிறது. ஆனால் இதுவரை எனக்கொன்றும் உணரமுடியவில்லை.Ó

“இந்தச் சரக்கு ரொம்ப மென்மையானது. இலேசானது. இதன் போதை மிகவும் மட்டாகவே இருக்கும். புரட்டிப்போட்டுவிடாது.”

“ஒன்றும் அதிகமில்லை, என்னை எதுவும்செய்யாது நண்பா” என்றான். சிரித்தான்.

என் மனைவி குருடனுக்கும் எனக்குமிடையில் சோபாவில் உட்கார்ந்தாள். அவளுக்கு நம்பரைக் கைமாற்றினேன். அவள் அதை வாங்கி இழுத்துவிட்டு என்னிடம் திருப்பித் தந்தாள்.

“இது எந்தச் சுற்றில் செல்கிறது?” என்றாள். “நான் இதைப் புகைக்கவே கூடாது. இப்போதே என் கண்களைத் திறந்து வைத்திருக்க முடியவில்லை. இந்த இரவு உணவு என்னை அழுத்திவிட்டது. இந்தளவுக்கு நான் சாப்பிட்டிருக்கக் கூடாது.”

“அந்த ஸ்ட்ராபெர்ரி மோதகம்தான்” என்றான் குருடன்.

“அதுதான் இந்த வேலையைச் செய்திருக்கிறது” என்று அவனுடைய பலமான சிரிப்பைச் சிரித்தான். தலையைக் குலுக்கிக்கொண்டான்.

“இன்னும்கூட ஸ்ட்ராபெர்ரி மோதகம் இருக்கிறது” என்றேன்.

“இன்னும் கொஞ்சம் வேண்டுமா ராபர்ட்?” என் மனைவி கேட்டாள்.

“கொஞ்ச நேரம் கழித்து” என்றான்.

டி.வி.யின் பக்கம் கவனத்தைச் செலுத்தினோம். என் மனைவி மீண்டும் கொட்டாவி விட்டாள். “உன் படுக்கை தயாராகிவிட்டது, எப்போது படுக்கப் போகிறாய் ராபர்ட்? இன்று முழுக்க உனக்கு அலைச்சல். படுக்கப் போகும்போது சொல்” என்றாள். அவன் கையைப் பிடித்து உலுக்கினாள். “ராபர்ட்?”

அவன் சுதாரித்து, “உண்மையாகவே எனக்கு சுகமாக இருக்கிறது. இது எல்லாவற்றையும் அடித்துவிடுகிறது இல்லையா?” என்றான்.

“இதோ உங்களுக்கு வருகிறது” என்று அவன் விரல்களுக்கிடையில் நம்பரைச் செருகினேன். அவன் புகையை இழுத்து, மார்பை நிரப்பி அப்படியே தம் பிடித்திருந்து பின் வெளிவிட்டான். ஒன்பது வயதிலிருந்தே பழகியிருப்பவன் போல இருந்தது.

“நன்றி நண்பா, இவ்வளவு போதுமென்று நினைக்கிறேன். இது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது போலிருக்கிறது” என்றான். புகையும் சுருட்டை என் மனைவியை நோக்கி நீட்டினான்.

“எனக்கும் அப்படியேதான்” என்றாள் அவள். “டிட்டோ. எனக்குக் கூட” அவள் சுருட்டை வாங்கி என்னிடம் கைமாற்றினாள்.

“நான் இங்கேயே உங்களுக்கு நடுவில் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். உங்களுக்கொன்றும் தொந்தரவு கிடையாதே? உங்களிருவரில் யாருக்காவது? தொந்தரவாக இருந்தால் சொல்லுங்கள். இல்லாவிட்டால் நான் இங்கேயே கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். நீங்கள் படுக்கப்போகும்வரை” என்றாள். “உன் படுக்கை தயாராகிவிட்டது, ராபர்ட். மாடிப்படி முடிவில் எங்கள் அறைக்குப் பக்கத்து அறை. நான் தூங்கிவிட்டால் என்னை எழுப்புங்கள்” அவள் சொல்லிவிட்டு கண்களை மூடி தூக்கத்தில் ஆழ்ந்தாள்.

செய்திகள் முடிந்தது. எழுந்து சானலை மாற்றினேன். சோபாவுக்குத் திரும்பி வந்து சாய்ந்து உட்கார்ந்தேன். என் மனைவி தூங்கிப் போகாமல் இருந்திருக்கலாமென்று தோன்றியது. சோபாவின் முதுகில் அவள் தலை சாய்ந்திருந்தது. வாய் திறந்திருந்தது. அவள் ஒருக்களித்திருந்ததில் அவள் உடை காலிலிருந்து விலகி வாளிப்பான தொடையை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. நான் எழுந்து உடையை சரிசெய்ய யத்தனித்தபோது தான் அந்தக் குருடன் ஒரு கணம் பார்வையில் பட்டான். அடச்சே! உடையைப் பழைய படியே திறந்துவிட்டேன்.

“ஸ்ட்ராபெர்ரி மோதகம் எப்போது வேண்டுமென்று சொல்லுங்கள்.”

“சரி.”

“களைத்திருக்கிறீர்களா? உங்கள் படுக்கைக்கு அழைத்துச் செல்லட்டுமா? படுக்கச் செல்கிறீர்களா?”

“இன்னும் இல்லை” என்றான். “உங்களுடனேயே விழித்திருக்கிறேன், நண்பா. உங்களுக்குச் சரியென்றால் நீங்கள் படுக்கப்போகும்வரை நானும் விழித்திருக்கிறேன். நாமிரு வரும் பேசிக்கொள்ள சந்தர்ப்பமே கிடைக்கவில்லை, இல்லையா? எல்லா நேரத்தையும் நானும் அவளுமே எடுத்துக்கொண்டு விட்டதாக நினைக்கிறேன்.” அவன் தாடியை உயர்த்தி கீழே விட்டான். சிகரெட்டுகளையும் அவனது லைட்டரையும் எடுத்துக்கொண்டான்.

“பரவாயில்லை” என்றேன்.

பிறகு சொன்னேன், “உங்களுடன் நேரத்தைக் கழிப்பத்தில் மகிழ்கிறேன்.”

மகிழ்ச்சியாக இருந்ததாகத்தான் ஊகிக்கிறேன். ஒவ்வோரிரவும் அபின் புகைத்துவிட்டு தூக்கம் வரும்வரை விழித்திருப்பேன். என் மனைவியும் நானும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வது அபூர்வம். நான் தூங்கும்போது இந்தக் கனவுகள் வரும். என் இதயம் தாறுமாறாகப் பேதலித்திருக்க அவற்றிலிருந்து எழுந்திருப்பேன்.

தேவாலயங்களைப் பற்றியும் வரலாற்றின் இடைநிலைக் காலத்தைப் பற்றியும் ஏதோ தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. வழக்கமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ரகமாகத் தெரியவில்லை. வேறு எதையாவது பார்க்கலாமென்று விரும்பினேன். மற்றச் சேனல்களுக்கு மாற்றினேன். எதிலும் ஒன்றுமில்லை. எனவே முதல் சேனலுக்கே திரும்பிவந்து அவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.

“அதற்கென்ன பரவாயில்லை நண்பா” என்றான் குருடன். “நீங்கள் எதைப் பார்ப்பதென்றாலும் எனக்கு ஓக்கே. நான் எப்போதுமே எதையாவது கற்றுக் கொண்டிருக்கிறேன். கற்றுக்கொள்ளுதல் எப்போதுமே முடிவதில்லை. இன்றிரவு எதையாவது கற்றுக்கொண்டால் ஒரு கஷ்டமுமில்லை. எனக்குச் செவிகள் இருக்கின்றன” என்றான்.

*

கொஞ்ச நேரத்திற்கு அவன் எதுவும் பேசவில்லை. என்னை நோக்கித் தலையைத் திருப்பி வலது செவியை டிவியிருக்கும் திசையை நோக்கி முன்னால் சாய்ந்து கொண்டிருந்தான். பார்க்க பச்சாதாபமாக இருந்தது. அவ்வப்போது அவன் இமைகள் செருகின, பின் வெடுக்கெனத் திறந்தன. அவ்வப்போது அவன் தாடிக்குள் விரல்களைச் செலுத்தி கோதிக்கொண்டான், டி.வி.யில் அவன் கேட்டுக் கொண்டிருப்பதைப் பற்றி எதையோ சிந்திப்பவன் போல.

திரையில் தலைமூடாக்கணிந்தவர்கள் சிலரை, எலும்புக் கூடுகள் போல உடையணிந்தவர்களும் பிசாசுகள்போல உடையணிந்தவர்களும் துன்புறுத்துவதைப் போலக் காட்டிக்கொண்டிருந்தனர். பிசாசுகளைப்போல வேடமணிந்தவர்கள் பிசாசு முகமூடிகள், கொம்புகள், நீண்ட வால்கள்அணிந்திருந்தனர். இந்த அணிவரிசை ஓர் ஊர்வலத்தின் பகுதியாக இருந்தது. இதனை வர்ணித்துக்கொண்டிருந்த ஆங்கிலேயன் வருடத்திற்கொருமுறை ஸ்பெயினில் இது நடைபெற்று வருவதாகக் கூறினான். நடப்பவற்றைக் குருடனுக்கு விளக்க முற்பட்டேன்.

“எலும்புக் கூடுகள்” என்றான். “எலும்புக் கூடுகள் பற்றி எனக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டுத் தலையை ஆட்டிக்கொண்டான்.

தொலைக்காட்சி இந்த கதீட்ரல் ஒன்றைக் காட்டியது. பிறகு இன்னொன்றை தூரத்திலிருந்து மெதுவாக நெருங்கியது. பறக்கும் உதை கால்களையும் மேகங்களை எட்டும் தூபிகளையும் கொண்ட பாரீஸின் பிரசித்தி பெற்ற கதீட்ரலுக்கு இறுதியில் காட்சி மாறியது. காமிரா பின் வாங்கி கதீட்ரலின் முழு உருவமும் தொடுவானுக்கு மேலாக உயர்வதைக் காட்டியது.

வர்ணனை செய்து கொண்டிருந்த ஆங்கிலேயன் பலநேரங்களில் எதுவும் பேசாமல் வெறுமனே காமிரா மட்டும் கதீட்ரல்களைச் சுற்றி வருவதை அனுமதித்தான். இல்லாவிட்டால் அதன் பின் காமிரா வயல்களில் வேலை செய்கிற, எருதுகளின் பின்னால் நடக்கிற ஆட்களின் கிராமப்பகுதிகளில் சுற்றும். முடிந்தவரை மௌனமாகக் காத்திருந்தேன். அதன்பின் எதையோ நான் சொல்லவேண்டுமென்று உணர்ந்தேன். “இப்போது இந்த கதீட்ரலின் வெளிப்புறத்தைக் காட்டிக்கொண்டிருக்கின்றனர். நீர்த்தாரைத்தூம்பிகள் கோர உருவங்கள் போலச் செதுக்கப்பட்டிருக்கும் சிறிய சிற்பங்கள். இவையெல்லாம் இப்போது இத்தாலியில் இருப்பதாக ஞாபகம். ஆம், இத்தாலியில்தான் இருக்கின்றன. இந்த ஒரு சர்ச்சின் சுவர்களில் ஓவியங்கள் இருக்கின்றன.”

“அவை ஃபிரெஸ்கோ சுவரோவியங்களா, நண்பா?” என்றபடி அவனது பானத்தை உறிஞ்சினான்.

நான் என் கோப்பையைக் கை நீட்டி எடுத்தேன். ஆனால் அது காலியாக இருந்தது. என்னால் நினைவுகூர முடியுமளவுக்கு ஞாபகப்படுத்திப் பார்த்தேன். “இவையெல்லாம் ஃபிரெஸ்கோக்களா என்று கேட்கிறீர்கள்?” என்றேன். “இது ஒரு நல்ல கேள்வி. எனக்குத் தெரியவில்லை.”

லிஸ்பனுக்கு வெளியேயிருக்கிற ஒரு கதீட்ரலுக்கு காமிரா நகர்ந்தது. பிரெஞ்சு, இத்தாலிய கதீட்ரல்களோடு ஒப்பிடும்போது போர்ச்சுக்கீசிய கதீட்ரலில் அதிகம் வித்தியாசம் இருக்கவில்லை. ஆனால் அவை அங்கே இருந்தன. பெரும்பாலும் உட்புற அலங்காரங்கள். பிறகு எனக்கு ஏதோ தோன்றியவனாக அவனைக் கேட்டேன்: “எனக்கு ஏதோ தோன்றியது. உங்களுக்கு கதீட்ரல் என்றால் என்னவென்று ஏதாவது ஐடியா இருக்கிறதா? அதாவது அவை எப்படித் தோற்றமளிக்கும் என்பதைப் போல? உங்களுக்கு நான் கேட்பது புரிகிறதா? யாராவது உங்களிடம் கதீட்ரல் என்று சொன்னால் அவர்கள் சொல்வது எதைப்பற்றியென்று உங்களுக்கு ஏதாவது புரியுமா? அதற்கும், உதாரணத்திற்கு ஒரு பாப்டிஸ்ட் தேவாலயத்திற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குத் தெரியுமா?”

அவன் வாயிலிருந்த புகையைப் படிப்படியாகத் தப்ப விட்டான். “நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஐம்பது, நூறு வருடங்கள் உழைத்துக் கட்டியவை என்று எனக்குத் தெரியும்” என்றான்.

“இப்போதுதான் அந்த வர்ணனையாளன் சொன்னான். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல தலைமுறையினர் ஒரு கதீட்ரலைக் கட்டுவார்களென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் அதைக் கூட வர்ணனையில் சொன்னான். வாழ்க்கை மொத்தத்தையும் இதற்காகவே உழைத்த அந்த மனிதர்கள் கதீட்ரல் கட்டி முடிக்கப்படும் போது அதைப்பார்க்க உயிரோடு இருக்க மாட்டார்களாம். இந்த விதத்தில் எங்களைப் போன்றவர்களிலிருந்து அவர்கள் அதிகம் வித்தியாசப்பட்டிருக்கவில்லை, இல்லையா நண்பா?” அவன் சிரித்தான். அவன் கண்ணிமைகள் மீண்டும் தாழ்ந்தன. அவன் தலை மெலிதாக ஆடியது. தூங்குவது போலத் தெரிந்தான். ஒரு வேளை தன்னை போர்ச்சுகல்லில் கற்பனை செய்து கொண்டிருக்கலாம். டிவி இப்போது வேறொரு கதீட்ரலைக் காட்டிக் கொண்டிருந்தது. இது ஜெர்மனியில் இருந்தது. ஆங்கிலேயனின் குரல் தொடர்ந்து முனகியது. “கதீட்ரல்கள்” என்றான் குருடன். நிமிர்ந்து உட்கார்ந்து தலையை பின்னும் முன்னுமாக ஆட்டினான்.

“உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்குத் தெரிந்ததெல்லாம் இவ்வளவுதான். இப்போது நான் சொன்னது. அவன் சொன்னதைக் கேட்டது, ஆனால் உங்களால் எனக்கு விவரிக்க முடியுமா? நீங்கள் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். அது எனக்குப் பிடித்தமானதாக இருக்கும். சொல்லப்போனால் எனக்குத் தெளிவான ஒரு சித்திரமே இல்லை.”

டிவியில் காட்டிக் கொண்டிருந்த கதீட்ரலை உற்றுக் கவனித்தேன். விவரிக்க வேண்டுமென்றால் எப்படி ஆரம்பிப்பது? என் வாழ்க்கையே இதில்தான் சார்ந்திருப்பது போல உணர்ந்தேன். புத்தி பேதலித்த முரடன் ஒருவன் இதை நான் செய்தே தீரவேண்டும், இல்லாவிட்டால், என்று மிரட்டுவதைப் போல.

காட்சி கிராமப்புறங்களுக்கு மாறும்வரை கதீட்ரலை மேலும் உன்னிப்பாகப் பார்த்தேன். எந்தப் பலனும் கிடைக்கவில்லை. குருடன் பக்கம் திரும்பி, “முதலாவதாகச் சொல்ல வேண்டியது, அவை மிகவும் உயரமானவை” என்றேன். புலன் ஏதாவது கிடைக்குமாவென அறையைச் சுற்றுமுற்றும் பார்த்தேன். “ரொம்ப உயரத்திற்கு இருக்கும். மேலே மேலே வானத்தை நோக்கி. அவை மிகப்பெரிதாக இருக்கும் சிலவற்றிற்குத் தாங்குவதற்காகத் தாங்கிகள் இருக்கும். தூக்கி நிறுத்துவதற்காக எனலாம். இந்தத் தாங்கிகளுக்கு உதைகால்கள் என்று பெயர். எந்தக் காரணத்தாலோ அவை வாராவதிகளை எனக்கு ஞாபகப்படுத்தும். வாராவதி என்றால் உங்களுக்குத் தெரியாது இல்லையா? சிலநேரங்களில் கதீட்ரலுக்கு முன்னே பிசாசுகள், அவைபோன்ற கோரவுருக்களைச் செதுக்கி வைத்திருப்பார்கள், நடைப்பாலம் போல. சிலநேரங்களில் பிரபுக்களையும் சீமாட்டிகளையும். இவையெல்லாம் எதற்காக என்று என்னைக் கேட்காதீர்கள்.”

அவன் தலையாட்டிக் கொண்டிருந்தான். அவன் உடம்பின் மேற்பகுதி மொத்தமும் முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டிருப்பதைப் போலிருந்தது.

“நான் அவ்வளவு நன்றாகச் சொல்லவில்லை, இல்லையா?” என்றேன்.

அவன் தலையாட்டுவதை நிறுத்திவிட்டு சோபாவின் விளிம்பிற்கு வந்து முன்னால் குனிந்தான். நான் சொன்னதைக் கேட்கும்போது அவன் தாடிக்குள் விரல்களை ஓட்டிக்கொண்டிருந்தான். அவனுக்கு என்னால் புரியவைக்க முடியவில்லையென்று எனக்குத் தெரிந்தது. ஆனால் இதேரீதியில் நான் தொடர்வதற்கு அவன் காத்திருந்தான். என்னை உற்சாகப்படுத்துவதைப் போலத் தலையாட்டினான். வேறு என்ன சொல்வதென்று யோசிக்க முயன்றேன். “அவை உண்மையிலேயே மிகப்பெரியவை” என்றேன். “பிரமாண்டமானவை. கற்களால் கட்டப்பட்டிருக்கும். சில நேரங்களில் பளிங்கினால்கூட. அந்தப் பழங்கால நாட்களில் அவர்கள் கதீட்ரல்களைக் கட்டும்போது கடவுளுக்கு அருகில் செல்ல விரும்பினார்கள். அந்தப் பழங்கால நாட்களில் ஒவ்வொருவருடைய வாழ்விலும் கடவுள் ஒரு முக்கியமான பகுதியாக இருந்தார். இதை அவர்கள் கட்டிய கதீட்ரல் கட்டிடங்களிலிருந்தே உங்களால் சொல்ல முடியும். மன்னிக்கவும் என்னால் அதிகபட்சம் இயன்றது இவ்வளவு தான் போலத் தெரிகிறது. இதில் எனக்கு அவ்வளவு தேர்ச்சி இல்லை.”

“பரவாயில்லை நண்பா” என்றான் குருடன். “ஹே, இதைக் கவனியுங்கள். நான் இதைக் கேட்பதற்கு உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்று நம்புகிறேன். உங்களை ஒன்று கேட்கலாமா? ஒரே ஒரு எளிமையான கேள்விகேட்கிறேன், ஆமாம் அல்லது இல்லை. எனக்கு வெறும்ஆர்வம், தப்பாக எதுவுமில்லை. நீங்கள் என்னுடைய விருந்தளிப்பவர். உங்களுக்கு மத நம்பிக்கை உண்டா? நான் கேட்டதில் உங்களுக்கொன்றும் ஆட்சேபணையில்லையே?”

நான் தலையாட்டினேன், அவனால் அதைப் பார்க்க முடியாதென்றாலும். கண்ணடிப்பதும் தலையாட்டுவதும் ஒரு குருடனுக்கு ஒன்றேதான். “அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது என்று நினைக்கிறேன். எதிலுமே சில நேரங்களில் இது கஷ்டம்தான். நான் என்ன சொல்கிறேனென்று புரிகிறதா?”

“நன்றாகப் புரிகிறது” என்றான்.

“நல்லது” என்றேன்.

ஆங்கிலேயன் இன்னமும் தொலைக்காட்சியில் ஆக்கிரமித்திருந்தான். என் மனைவி தூக்கத்தில் முனகினாள். நீளமாக மூச்சிழுத்து தூக்கத்தைத் தொடர்ந்தாள்.

“நீங்கள் என்னை மன்னித்தாக வேண்டும்” என்றேன்.

“ஒரு கதீட்ரல் எப்படித் தோற்றமளிக்குமென்று உங்களுக்கு என்னால் விளக்க முடியவில்லை. எனக்கு சாமர்த்தியம் இல்லை. நான் விளக்கியதைவிட அதிகமாக என்னால் சொல்லியிருக்க முடியாது.”

குருடன் அசையாமல், தலையைக்குனிந்தபடி நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

“உண்மையைச் சொல்வதானால் கதீட்ரல்கள் என்பவை எனக்கு விசேஷமாக எதையும் உணர்த்தாதவை. ஒன்றுமில்லை. கதீட்ரல்கள் பின்னிரவில் டிவியில் எதையாவது பார்ப்பதற்காக இருப்பவை. அவை அவ்வளவுதான்”

அப்போதுதான் குருடன் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். எதையோ வெளியில் எடுத்தான். அவனது பின்பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்தான். “எனக்குப் புரிகிறது நண்பா. பரவாயில்லை. இதுபோலத்தான் ஆகிவிடுகிறது. அதற்காக கவலைப்படாதீர்கள்” என்றான். “ஹே, நான் சொல்வதைக் கேளுங்கள். எனக்கொரு உதவி செய்கிறீர்களா? எனக்கு ஒன்று தோன்றுகிறது. நல்ல கனமான பேப்பர் ஒன்று எடுத்து வருகிறீர்களா? ஒரு பேனாகூட. நாம் ஒன்று செய்வோம். நாம் ஒன்றாகச் சேர்ந்து ஒன்றை வரையலாம். ஒரு பேனாவும் ஒரு கனமான பேப்பரும் கொண்டு வாருங்கள். போய் எடுத்து வாருங்கள், நண்பா.”

எனவே மாடிக்குச் சென்றேன். என் கால்களில் பலமே இல்லாதது போல உணர்ந்தேன். வெகுதூரம் ஓடிவந்ததற்குப்பின் இருப்பதைப் போல உணர்ந்தேன். என் மனைவியின் அறைக்குள் சுற்றும்முற்றும் பார்த்தேன். அவளது மேஜையிலிருந்த சின்னக் கூடையில் சில பால்பாயின்ட்டுகள் இருந்தன. அப்புறம் அவன் சொன்னதைப் போல அட்டை ஏதாவது இருக்குமா என்று யோசிக்க முயன்றேன்.

கீழிறங்கி வந்து, சமையலறையில் வெங்காயத் தோல்கள் அடியில் இருந்த ஒரு ஷாப்பிங் காகிதப் பையைக் கண்டுபிடித்தேன். அதைக் காலியாக்கி, கவிழ்த்துக் குலுக்கித் தூசுதட்டினேன். வசிப்பறைக்கு வந்து அவன் காலுக்கருகில் தரையில் உட்கார்ந்தேன். அங்கிருந்தவற்றை நகர்த்திவிட்டு, பையின் சுருக்கங்களை நீவி, காபி டேபிளின் மீது பரப்பினேன்.

குருடன் சோபாவிலிருந்து இறங்கி என்னருகில் தரைவிரிப்பில் அமர்ந்துகொண்டான்.

காகிதத்தின் மேல் விரல்களை ஓட்டினான். காகிதத்தின் பக்கங்களில் மேலும் கீழுமாகத் தடவிப் பார்த்தான். ஓரங்கள், விளிம்புகளைக்கூட. மூலைகளில் விரல்களால் மடிப்புகளை நீவினான்.

“ஆல்ரைட்” என்றான், “ஆல்ரைட்” நாம் வரைய ஆரம்பிக்கலாம்.

பேனா வைத்திருந்த என் கையைத் தேடிக் கண்டுபிடித்தான். என் கையின் மேல் அவன் கையை வைத்து மூடினான். “ம். . . ஆரம்பியுங்கள் நண்பா, வரையுங்கள்” என்றான். “வரையுங்கள். உங்களுக்குத் தெரியும். நானும் உங்களோடு தொடர்வேன். அது சரியாக இருக்கும். நான் சொன்னதைப் போலவே ஆரம்பியுங்கள். உங்களுக்குத் தெரியும். வரையுங்கள்.”

எனவே நான் ஆரம்பித்தேன். முதலில் ஒரு வீட்டைப்போலத் தோற்றமளிக்கும் ஒரு பெட்டி வரைந்தேன். அது நான் வசித்திருந்த வீடாக இருந்திருக்கலாம். பின் அதன் மேல் ஒரு கூரையை வைத்தேன். கூரையின் இரண்டு பக்கங்களிலும் கூம்புகளாகத் தூபிகளை வரைந்தேன். அற்புதம்.

“ஆஹா, அற்புதம்” என்றான். “நீங்கள் அழகாக வரைகிறீர்கள். இதுபோல ஒன்று உங்கள் வாழ்நாளில் நடக்குமென்று நினைத்திருக்கவே மாட்டீர்கள் இல்லையா நண்பா? இது ஒரு வினோதமான வாழ்க்கை, நம்மெல்லோருக்குமே தெரியும். வரையுங்கள், தொடர்ந்து வரையுங்கள்.”

சன்னல்களையும் வளைவுகளையும் வைத்தேன். பறக்கும் உதைகால்களை வரைந்தேன். மாபெரும் கதவுகளைத் தொங்கவிட்டேன். என்னால் நிறுத்த முடியவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிந்தது. பேனாவை மூடிக் கீழே வைத்து விட்டு என் விரல்களைத் திறந்தேன். காகிதத்தின் மேல் கைகளைச் செலுத்தி, குருடன் உணர்ந்து பார்த்தான். விரல் நுனிகளைக் காகிதத்தின் மேல், நான் வரைந்திருந்ததின் மேல் எங்கும் வருடிப் பார்த்து விட்டு தலையை ஆட்டினான்.

“நன்றாக இருக்கிறது” என்றான் குருடன்.

நான் பேனாவை மறுபடியும் எடுத்தேன். அவன் என் கையைத் தேடி வந்து பற்றிக்கொண்டான். நான் அவன் கையோடு சேர்த்துச் சுமந்து வரைந்தேன். நான் ஒரு சித்திரக்காரனல்ல. ஆனாலும் தொடர்ந்து வரைந்தேன்.

என் மனைவி கண்களைத் திறந்து எங்களை மலங்க மலங்க வெறித்தாள். அவள் உடை திறந்து தொங்க சோபாவிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? சொல்லுங்கள், எனக்குத் தெரியவேண்டும்.”

நான் பதிலளிக்கவில்லை.

குருடன் சொன்னான். “நாங்கள் கதீட்ரல் ஒன்றை வரைகிறோம். நானும் இவரும் சேர்ந்து வரைகிறோம். அழுத்தி வரையுங்கள்” என்றான் என்னிடம். “அதேதான் அப்படித்தான்” என்றான். “நிச்சயம். உங்களுக்கு வந்துவிட்டது, என்னால் சொல்ல முடியும், உங்களால் முடியாது என்று நினைத்தீர்கள். ஆனால் உங்களால் முடியும், முடியாதா என்ன? நீங்கள் காற்றை வைத்துக் கட்டமைத்துக்கொண்டிருக்கிறீர்கள் இப்போது நான் என்ன சொல்கிறேனென்பது உங்களுக்குத் தெரிகிறதா? இன்னும் ஒரு நிமிடத்தில் நமக்கு ஏதோவொன்று கிடைக்கப்போகிறது எப்படி? இங்கே மனிதர்கள் சிலரை வரையுங்கள். மனிதர்கள் இல்லாமல் ஒரு கதீட்ரலா?”

“என்ன நடக்கிறது இங்கே? ராபர்ட், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்ன நடக்கிறது இங்கே?” என்றாள் என் மனைவி.

“இட்ஸ் ஆல் ரைட்” என்றான் அவன் அவளிடம். என்னிடம் திரும்பி, “இப்போது உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள்” என்றான்.

அப்படியே செய்தேன். அவன் சொன்னதைப் போலவே கண்களை மூடிக்கொண்டேன்.

“கண்கள் மூடியிருக்கிறதா?” என்றான், “ஏமாற்றாதீர்கள்”.

“மூடியிருக்கின்றன” என்றேன்.

“அதேபோல இருங்கள்” என்றான். “இப்போது நிறுத்தாதீர்கள் வரையுங்கள்.”

எனவே தொடர்ந்து வரைந்தோம். காகிதத்தின்மேல் என் கை நகர, அவன் விரல்கள் என் விரல்களின் மேல் ஏறிக்கொண்டன. என் வாழ்க்கையில் இதுவரை அனுபவித்திராதது.

“இதுதானென்று நினைக்கிறேன். நீங்கள் சரியாக அடைந்து விட்டீர்களென்று நினைக்கிறேன்.” என்றான். “எடுத்துப் பாருங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

ஆனால் நான் என் கண்களை மூடிக்கொண்டிருந்தேன். அப்படியே இன்னும் சிறிதுநேரத்திற்குத் தொடர்ந்திருப்பேனென்று நினைத்தேன். நான் செய்ய வேண்டிய ஒன்று அதுதானென்று நினைத்தேன்.

“சரியா?” என்றான். “நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?”

என் கண்கள் இன்னமும் மூடியிருந்தன. நான் என் வீட்டில்தான் இருந்தேன். அது எனக்குத் தெரியும். ஆனால் எதற்குள்ளேயும் நான் இருப்பதாக என்னால் உணர முடியவில்லை.

“இது உண்மையிலேயே ஏதோவொன்றுதான்” என்றேன்.

சென்ஷி

unread,
May 31, 2010, 3:45:44 AM5/31/10
to panb...@googlegroups.com

அவன் மட்டும் இல்லாதிருந்தால்?

ரிஷபன்

கதவைத் தட்டினேன். அழைப்பு மணி பார்வையில் படவில்லை. தட்டியபிறகு தோன்றியது. இத்தனை வேகம் காட்டியிருக்கவேண்டாமென்று.

சுசீலாதான் வந்து கதவைத் திறந்தாள். என்னைப் பார்த்ததும் திகைப்பு.

"உள்ளே வரலாமா"

"வா..ங்க"

சுதாரித்துக் கொண்டு அழைத்தாள். உள்ளே புழுக்கம் இன்னும் அதிகமாய்த் தெரிந்தது.

"தினு ஸ்கூலுக்குப் போயிருக்கானா"

தலையசைத்தாள். கூடவே குழப்பமும். நான் ஏன் இந்த வேளையில் வந்திருக்கிறேன் என்று.

"எதுவும் சாப்பிடுகிறீர்களா"

அவளை நேராகப் பார்த்தேன். 'நீ போ.. நீ போ' என்று கடைசியில் என்னைப் பிடித்துத் தள்ளி விட்டார்கள். எப்படி சொல்லப் போகிறேன்.

"கொஞ்சம் நாம இப்ப வெளியே போகணும். கிளம்பலாமா" என்றேன்.

"எ..துக்கு"

"நத்திங். வந்து.. சரவணன்"

சுசீலாவுக்கு எதுவோ புரிந்திருக்க வேண்டும்.

"இருக்காரா.. இல்லே"

என் மௌனம் அவளை உலுக்கியது. அதைவிட அவளின் நிதானம் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

"போ..லாம்"

உள்ளுக்குள் விசும்ப ஆரம்பித்து விட்டாள்.

"தினுவையும் கூட்டிகிட்டு போயிரலாம்" என்றாள் காரில் ஏறும்போது.

ஹாஸ்பிடலில் போஸ்ட்மார்டம் முடிந்து இறுதிச் சடங்குகளும் முடிய இரவு எட்டு மணியாகிவிட்டது.

என் மனைவியுடன் கோபியின் மனைவியும் சேர்ந்து சுசீலாவுக்குத் துணையாக இருந்தார்கள்.

நாங்கள் மூவரும்தான் ரொம்ப வருஷமாய் சிநேகிதம். எங்களில் சரவணன் மட்டுமே வித்தியாசப்பட்டவன். பழக்கங்களுக்கு அடிமையாகிப் போனவன்.

"நீங்களாச்சும் அவருக்கு புத்தி சொல்லக்கூடாதா?" என்றாள் என் மனைவி ஒருமுறை.

"சொல்லாமலா.. நோ அட்வைஸ் பிசினஸ். அப்புறம் உங்க நட்பே வேணாம்னு போயிருவேன்னான். வேற வழி.. பேசாம விட்டுட்டோம்"

"எனக்கு என்னவோ சரின்னு படலீங்க. வீட்டுக்கு பணமே தரலியாம். பாவம். அவங்க ஒரு தடவை ரொம்ப அழுதுட்டாங்க."

"என்னை என்ன பண்ணச் சொல்றே.. அவன் புத்திமதி கேட்கிற ஆள் இல்லை. மீறி சொன்னா.. இப்ப பேசறதும் போயிரும். அதனால திருந்தப் போறதில்லே. அட்லீஸ்ட் இப்ப எங்க மேல ஒரு மரியாதையாவது வச்சிருக்கான்"

சுசீலாவுக்கு எங்கள் அலுவலகத்திலேயே வேலை கிடைத்துவிட்டது. நானும் கோபியும் மிகவும் முயற்சித்தோம். பலன் கிடைத்தது.

அவ்வப்போது அவளைப்போய் பார்த்துவிட்டு வருவோம். தினு நன்றாகப் படிக்கிறான் என்பது தெரிந்து சந்தோஷப்பட்டோம்.

அன்றும் போயிருந்தோம்.

"தினு.. பிராகிரஸ் ரிப்போர்ட்டைக் காட்டு.. அங்கிள்கிட்டே"

முதல் ரேங்க்! கையைப் பற்றி குலுக்கினேன். லேசாய் வெட்கப்பட்டான். அப்படியே சரவணன் ஜாடை.

எனக்குள் பெருமூச்சு.

"ஹூம்.. அவன் இருந்தா.. சந்தோஷப்பட்டிருப்பான்"

சுசீலாவிடமிருந்து நிதானமாய் பதில் வந்தது.

"இல்லீங்க. இவனும் அவரைப் பார்த்து கெட்டுப் போயிருப்பான். இப்ப அந்த அதிர்ச்சில பொறுப்பு வந்து என் பேச்சை முழுசாக் கேட்கறான். நிச்சயமா இவன் முன்னுக்கு வருவான். எங்களுக்கும் இழந்து போன சந்தோஷம் கிடைச்சுரும்."

சில சமயங்களில் யதார்த்தம் விடுகிற அறை பளீரென்றுதான் விழுகிறது!

சென்ஷி

unread,
May 31, 2010, 3:47:00 AM5/31/10
to panb...@googlegroups.com

தோணியும் அந்தோணியும்

சைதன்யா

சைதன்யா – திண்ணை :: ஏப்ரல் 2- 2003 இந்தியா டுடே வார இதழில் வெளியான கதை

அவை எங்களுக்கான கணங்களாய் அமைந்தன.

விளக்க முடியாதவை அவை. மேலே வானம். சுற்றிலும் கடல். வானத்தில் இருந்து நீலம் வழிந்து கடலில் இறங்கியிருக்கிறது. மெல்லிய குளிர். சல்லாத் துணிபோலும் இருள். நிலக்கடலையின் பாதித்தொலிபோல் சிறுபடகு. கூட மைக்கேல். நாங்கள் பேசிக்கொள்ள எதுவும் இல்லாமல் கிடந்தோம். எங்கள் உள்மெளனங்கள் ஒன்றையொன்று தழுவிக் கிடந்தன. பேசி அந்தக் கணத்தைக் கொச்சைப்படுத்திவிட வேண்டாமாய் இருந்தது. உணர இயற்கை ஆயிரம் விஷயங்களை உள்ளே நிரப்பிக் கொண்டேயிருக்கிறது. பிரமிப்போ மயக்கமோ கூட, சிறுவார்த்தையாடலோ கூட அதை அசக்கிவிடும். குறிப்பாக அந்தக்கணம் தன் பவித்ரத்தினை இழக்க நேர்ந்து விடும். இயற்கை என்பது பூதம். வார்த்தை என்பது குப்பி. பூதம் சீசாவுக்குள் மாட்டிக் கொள்வதாவது ?… என்ன குரூரம். இருவருமே அதை விரும்பவில்லை. மனதின் அந்தரங்க வளாகங்களையும் சற்று இறுக்கம்-தளர்த்திக் கொள்ள, ஆசுவாசப்பட வேண்டித்தானே இருக்கிறது ? திருமணம் என்கிற அளவில்… மனதுக்கினியவர்கள்… பெரியவர்கள் முன்னிலையில் மாலை மாற்றிக் கொள்வதுபோல…. நாங்கள் இயற்கை முன் அதை வழிபாட்டுணர்வுடன் அடிபணிந்து நிற்கிறோம். எங்கள் இருவருக்குமாய் இயற்கை தன் காருண்யத் தழுவலை நிகழ்த்துகிறது. நாங்கள் அதன்முன் ஒட்டிப் பிறந்த ரெட்டைப்பிள்ளைகளாய் உணர்கிறோம். ஒரு தாயின் இரு தனங்களையும் பற்றி ஆளுக்கொரு பக்கம் அமுதுண்கிறோம். அவன் பெறும் தட்பநுட்பம் எனக்கானதாகவும் என் அனுபவம் அவனுடையதுமாகவும் அமைகிறது. மொழியால் இதை விளக்க முடியுமா ? கூடுமா ? இணக்கமான மெளனத்திலும் ஆழங்காற்பட்டு உள்ளிறங்க வேறு எதாலும் இயலுமா ? அன்பின் பரிமாற்றத்தினை ஒரு மெளனம் விளக்கும் அளவு, சிறு புன்னகை தெளிவிக்கும் அளவு மொழி தெரிவிக்க எந்நாளும் சாத்தியப்படாது. உணர்வுக் கடலுக்கு பாத்திவெட்டி விடுகிறது மொழி.

காலம் உறைந்து கிடந்தது எங்களுக்கு வெளியே. அலைக்குதிரைகள் கட்டிக் கிடக்கின்றன. நாங்கள் மல்லாக்கப் படுத்திருந்தோம். மேலே வானம் – பயமுறுத்த வேணாமோ அந்த வானத்தின் முகம். நான் தனியே இப்படி வானத்தைப் பார்த்துப் படுத்துக் கிடக்கவும் கூடுமோ ? வெப்பம் வெளிக்கசிய குளுமையைத் தக்க வைத்துக் கொள்ளும் மண்பானை போல அந்த இணக்கமான நல்லமைதி, நிசப்தம் பிரம்மாண்டத்தோடு தொப்புள்கொடி சுற்றிக் கிடந்தது. ஆ… கூட அவன். நாங்கள் எங்கள் ஆத்மாக்களை இதோ இந்தக் கடலில் வானத்தின் நீலம்போலும் அலசிக் கொண்டிருக்கிறோம் ஒருசேர. எங்கள் மெளனம் ஒருவருக்கொருவர் சமிக்ஞைகளைப் பரிமாற்றம் செய்து கொண்டே யிருக்கிறது. ஆத்மாவின் மெளனம் சதா எதையாவது எப்போதும் பரிமாறிக் கொண்டேதான் இருக்கிறது. நாம் அதை உணர்வதில்லை. தனிமையில்… குறிப்பாக இளவயதின் தனிமையில் உணர்வதேயில்லை. அதை உணர்த்த… உணர… கூட யாராவது வேண்டியிருக்கிறது. அவரும் வெளிப்படையான மனதுடன், பரிமாறும் பெருவிருப்புடன்… அதை வெளிப்படுத்த எவ்விதக் கட்டாயத்தையும் நிர்ப்பந்தத்தையும்… சுயநலமான எதிர்பார்ப்பையும் கொள்ளாதவராய் அமைய வேண்டியிருக்கிறது – எத்தனை ifs and buts, provideds – அப்படி நட்பும் சாத்தியப்பாடுகளுமே… வெகு அரிதாகவே கிடைக்கின்றன. பேசி அதை இழத்தல் தகாது. விளக்கியுரைத்து அதைக் குழப்பிவிடுதல் மகாபாவம்.

பாற்கடலில் துயில்கொண்ட பரமன். மகாலெட்சுமி. அருகே செல்லமோ செல்லமான மனைவியில்லாமல் பரந்தாமனால் அப்படிக் கண்மூடிக் கிடந்திருக்க முடியுமா என்ன ? ஐயோ நான் ஏன் இந்தக் கணங்களுக்காய் வார்த்தைகளைக் குதப்பிக் கொண்டிருக்கிறேன் எனக்குள் ? அவரவர் உள்வாசனையை அவரவர் எட்டிப் பிடிக்க நான் ஒதுங்கி வழிவிட வேண்டும். அதற்கு சக மனிதனை நம்பு. நேசி. கைப்பிடித்துக் கொள். சிரி. ரசி. மனதை – நுரையீரலை விரியத் திற. ஏதாவது உள்நுழையக் காத்திரு. வசதி பண்ணிக் கொடு…. வானத்தின் நீலம் இறங்க இறங்க வெளிற வேணாமோ ? வானம் மேலும் அடிவணடலாய்க் கலங்கி, கெட்டிப்பட்டு… நீலம் கருநீலமாகி… கருப்பாகி விட்டது. நேரமாகி விட்டது. அப்பா தேடுவார். அழகியசிங்கர். கோவில் கைங்கர்யகர்த்தா. பரம்பரை பாத்யதையில் கோவில்சேவகம். வயதாகி விட்டது. என்றாலும் தானே தன் கைப்பட பிரசாதமும் திருத்துழாய்த் தீர்த்த சடாரியும் நல்குவதை ‘அவர்கெளரவமாய் ‘ ஏற்றுக் கொண்டவர். என் கை தளரட்டும். சக்தி ஓயட்டும். உள்ரத்தம் சுண்டட்டும். மனம் ஒடுங்கட்டும்… பிறகு நானே பொறுப்பைக் கைமாற்றுகிறேன், என்கிறார். அவனுடன் பட்டணம் வந்து தங்க அவரால் ஒருக்காலும் இயலாது. அவர் சம்மதியார்.

அடடா எதற்கும் முடிவு என்று இருக்கிறது. பிரிவு என்றிருக்கிறது. இருநிலைப்பாடு கொண்ட அறிவு. மனது. அதன் புரிதல்கள். அதன் வழிப்பட்ட கணிப்புகள். அவை துயரங்களைச் சுமத்துகின்றன. இதைத் தவிர்க்க முடியாதா ? அந்தக் கணங்களின் பவித்ரத்தை எப்போது எந்தப் புள்ளியில் இழந்தான் தெரியவில்லை… இனியொரு வாய்ப்புக்கு – இயற்கைமுன் நிர்வாணப்பட்டு கூச்சமின்றி நான் நானாக, ஆ ‘நானற்ற ‘ நானாக… பிரபஞ்சத்தின் சொத்தெனவே அது உணரும்படி, என்னைக் கறைப்படுத்திக் கொள்ளாமல், தலைபணிந்து என்னை ஒப்படைப்பதற்குக் காத்திருக்க வேண்டியதுதான். காத்திருந்தாலும் வாய்க்குமா ? ஹ்ம்… பார்க்கலாம். மெல்லிய கதகதப்புடன் மைக்கேலின் கரத்தைப் பற்றி ஒரு சிற்றழுத்தத்தைக் கைமாற்றுகிறான். ரத்தநாளங்களில் மன அலை கோஷமிட்டு முட்டிமோதி கால்நடை மந்தையென சிற்றிரைச்சலான ஒழுங்கற்ற ஒலிப்புழுதியைக் கிளப்புகிறது. ஹ்ம், என்கிறான் மைக்கேல் உள்மேகப் பொதிவில் இருந்து கலைந்து. என்ன மோகன் ? – அப்பா தேடுவார். அவனைப் பிரிய, துக்கம் உள்ளே விக்குகிறது. ஆ, வேறு வழியில்லை. ஒரு சுவாச ஆசுவாசத்துக்குப்பின் உள்த்திரும்புகின்றன கடல்மீன்கள். இனி வெளியே அமைதி நிலவட்டுமே. நாங்கள் மனதின் – அறிவின் உள்ளிரைச்சல்களைச் சுமந்து திரிகிறவர்கள் ஆவோம்.

சற்று வெளியே இருந்தது மீனாங்குப்பம். கதவுகளற்ற சிறு வீடுகள். பறவைக் கூடுகள் போல. சிறு தேவாலயத்தில் இயேசப்பா. மேற்சட்டையில்லாத அந்த நிர்வாணம். கைவிரிந்த கையறு நிலை. அதன் விரிந்த தன்மை சொல்லும் பிரம்மாண்டமான துயர வெறுமை. அந்தக் கண்களின் உருக்கத் தத்ரூபம். மீனவர்கள் தத்தமது மாற்றுருவாகவே அந்தத் திருவுருவைக் கண்டார்கள். அப்படியாய் அந்த எளிமையும் ஏழ்மையும் அமைந்திருந்தன. இளவெயிலில் உலர்த்திக் கிடக்கிற வலைகளைச் சுருட்டித் தோளில் எடுத்துவந்து ஆண்டவர்முன் சமர்ப்பித்து வணங்கிவிட்டுக் கடலில் இறங்கப் பிரியப்பட்டார்கள் மீனவர்கள். சூர்ய ஒளியாகிய இனிப்புப் பதார்த்தத்தின் ஜரிகைக் காகிதம் போல காலம் இருளை மெல்லப் பிரிக்கிற வேளையில் அவர்கள் கடலில் இறங்கி விடுகிறார்கள். ஒலிகள் நடமாட்டம் நாயோட்டமாய்த் துவங்கி அந்த வளாகம் சுறுசுறுத்து விடுகிறது. பெரும்படகும் சுற்றிலும் சில சிறு தோணிகளுமாக அவர்கள் கடலில் இறங்குகிறார்கள்…. ஆண்டவர் சாட்சியாக.

குதிகாலைக் கூசச் செய்யும் அதிகாலைக் குளிர். கடற்கரை வளாகம் சுறுசுறுப்பாகி விடுகிறது. தேவாலயமே ஒளிபூத்து மேற்புரக் கண்ணாடிகளின் விதவிதமான நிறங்களில் மினுமினுக்கிறது. அதன் மேல்விதானத்து விளக்கு ஏற்றப்பட்டிருப்பது சேவலின் வைகறை அறிவிப்பு போலிருக்கிறது. அவர்கள் படகுகளைக் கடலுக்குள் செலுத்துவதை ஆண்டவர் ஒருகண் திறந்து பார்க்கிறாற் போல சிறு பிரமை. நம்பிக்கையும் உற்சாகமுமான தருணங்கள். அலைகள் தாண்டிய சிறு துாரத்திலேயே பெரும் படகு நிற்க, தோணிகளின் வளைய வியூகம்.. பெரும்படகு வலையை வீசிப்பரத்துகிறது. விருட்சத்துச் சல்லிவேர் என நீரில் அமிழ்ந்து மிதக்கும் வலை. மீன்பட்டாளம் மேலெழும்பித் தளும்புகின்ற அந்தக் கணம்… வளையவியூகம் பெரும் உற்சாகக் கொந்தளிப்பாய் இரைச்சலாய் குழப்பமாய் வெடிக்கிறது. மீன்கூட்டம் பதறி நிலைகுலைந்து திகைத்து வலைப்பக்கம் ஒதுங்கி சிறைப்படுகின்றன. துரிதமாய் வலை துாக்கப்படுகிறது. சிக்கிய மீன்களைப் பெரும் படகின் ஆட்கள் பிரித்துக் கூடையில் போடுகிறார்கள்… கணநேர அமைதி- காத்திருத்தல்- திடுமென ஒலியெடுப்பு. பிரளயம். பரபரப்பு. வேகவியூகம். மீண்டும் அமைதி… என பெரும் symphony அது. கேட்கத் திகட்டாக் கவிதை. தளிர்க்குளிர். காலைகளில் ரோஜாப்பனித்துளியாய் மினுமினுக்கிறார்கள் அவர்கள்.

எப்படியும் மோகன் மேலேபடித்து பஸ்ஸேறி விடுவான், தெரியும். பிராமணப் பிள்ளை அல்லவா ? புத்தக வாசிப்பில் ருசியுள்ள சமூகம். கம்பியூட்டரும் சோதனைகளும் என கனாக்கறி, புலன்-உணவுக்காரர்கள். மைக்கேல் அவனுடன் பன்னிரண்டாவது வரை படித்துவிட்டு தன்திசை விலகிக் கொண்டான். கையெழுத்திடவும் கணக்கு பார்க்கவும் கடிதம் எழுதவும் மனிதன் படிப்பதாக நம்பும் சமூகம் அது. பெண்களோவெனில் இதற்கும் முன்னதாகவே தாவணி போடுகிற அறிகுறிகள் தென்பட்டாலே படிப்பில் இருந்து விடுபட்டு விடுகிறார்கள். பருவம் பாண்டி ஆட்டம்போல கட்டங் கட்டமாய் அவர்களின் வளர்ச்சியை, வாழ்வம்சங்களை வரையறுக்கிறது – தொடர்ந்து விடுமுறை தினங்கள் என அமைகையில் மோகன் ஊர் திரும்புவான் என்று தெரியும். பஸ்நிறுத்தத்தில் அதிகாலையில் காத்திருக்கிற மைக்கேல். அவர்கள் தழுவிக் கொள்கிறார்கள். சிறு விசாரிப்புகள். பஸ்சில் ஜன்னல்களை ஊடறுத்துப் புகும் குளிர் தாளவொண்ணாமல் மோகன் ஸ்வெட்டர் போட்டிருக்கிறான். மைக்கேல் பெயரளவில் ஒரு சட்டை. தலைமேல் டப்பாக்கட்டு. ஈரிழை குற்றாலத்துண்டு. அதன் இறுக்கத்தில் சொருகியிருக்கும் பீடிக்கட்டு. காலை புகைபிடித்தல் கதகதப்பைத் தருகிறது. அழகியசிங்கர் மைக்கேலுக்கும் சேர்த்து தவறாமல் காபி கலந்து தருவார். ‘ஐயா நாளை மோகனுக்கு எங்க வீட்ல சாப்பாடு- மீன்கறியோட… ‘ என்று சிரிப்பான் மைக்கேல். என்ன அழகான சிரிப்பு… ஆன்மாவின் ஜொலிப்பு அது.

கடல் சுவாரஸ்யமானது. பூமியின் பெரும் பங்கு. தரைப்பரப்பு- ஆசுவாசப்பட என மேற்புறம் வந்த மீன்போல. தாய்க்கருகே பெரும் நம்பிக்கையுடன் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தை தரை. கடல் தாய் போன்றது. மைக்கேல் கடலைப் பற்றிய கதைகள் பேசுவான். கடலின் அந்தரங்கத்தின் அநேகச் சாவிகள் மைக்கேலிடம் அலையொதுங்கி யிருந்தன. காற்றின் திசை பார்த்து மீன்களின் வரத்தைக் கணித்தல். வானத்தின் ‘நாடி ‘ பார்த்து மழையறிவித்தல். மெளனத்தின் பரிபாஷை அது…. மேலே படிக்க மைக்கேலுக்கு ஆசை இருந்தது. ரோஜாவியாபாரியிடம் ஒரு பாரசிகக் கவிஞன் – இந்தப் பூக்களை விற்று இதைவிடச் சிறந்த எதை வாங்கிவிடப் போகிறான்… என வியந்தது ஞாபகம் வருகிறது.

சிறு குளிருக்கும் கதவடைத்துக் கொள்கிற இவன். மைக்கேல் வீட்டுக்குக் கதவுகளே இல்லை. அவன் தந்தை அந்தோணி… வெளியே போட்ட கயிற்றுக் கட்டிலில் அவர் தலைக்குயரம் எதுவுமின்றிப் படுத்திருப்பது பைநாகப்பாய் கண்ட பரமனை ஒத்திருந்தது ஏனோ. அந்த வயதின் உடல்ச் சுருக்கங்களுக்கு வெறும் முதுகுடன் அதுவும் கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்க முடிவதே ஆச்சரியம். இந்த சிறு வயதில் அவனால் அதன் உறுத்தலைத் தாளவியலாது… சட்டையணிந்து அவரைப் பார்த்த ஞாபகமேயில்லை. குரூஸ்கோவிலில் ஒரு திருமணம். அந்தோணி மைக்கேலின் சட்டையைப் போட்டுக் கொண்டிருந்தார். எல்லாரும் ‘மாப்ள வந்தாச்சியப்போவ்… ‘ என்று கலகலக்கிறார்கள். மனசில் திருவிழா கண்ட கணங்கள்.

வேலையுமாகி திருமணமுமாகி நகரவாசம் என்று வாழ்க்கைப் போக்குகள். அலைவாய்க்கரை வர வாய்ப்புகள் தேய்ந்துகொண்டே வந்தன. அழகியசிங்கர் இன்னும் மனந்தளரவில்லை. அதிகாலைப் பனியிலும் எழுந்துகொள்ளச் சுணங்கவில்லை. திகைக்கவில்லை என்பது ஆச்சரியம். ஓய்வென ஒதுங்கிக் கொள்ளாத ஏங்காத அந்தத் தலைமுறை. காலத்தின்பாற்பட்டு நாம் ஓய்வு எனத் தனியே பிரித்து நேர-பட்ஜெட் போடுவது வேடிக்கைதான். வேறு வழியுங் கிடையாது. பிறர் உதவியின்றித் தனியே கோவிலுக்கு வருகிறார். பெருங்கதவுகளை மகாசாவிகள் கொண்டு திறக்கிறார். கதவைத் தள்ளிக்கொண்டு உள்நுழைகிறார். அந்த அதிகாலை யார் வரப்போகிறார்கள் ? ‘திறந்து வை. காத்திரு… நம் வேலை அது ‘ என்று சிரிக்கிறார். ‘நேரம் என்பது நம் கணக்கல்லவா ? இறைவன் எக்கணமும் விழித்திருக்கிறான்… கோவிலில் நான் தனியே இல்லை… ‘ அப்பா அவனைப் பார்த்தார். ‘நீ பிறருக்காகவா உன் நியதிகளை வகுத்துக் கொள்கிறாய் மோகன் ? ‘ – ஆம், ஆனால் அது தவறுதான், என ஒத்துக் கொள்கிறான்.

ஊருக்கு வந்தால் அநேகமாக அப்பாவுடன் விழிப்பு தட்டிவிடுகிறது. அவரது மனதில் ஓடுகிறது கடிகாரம். அப்பா பச்சைத்தண்ணீரில் குளிப்பார். அவர் கிளம்பும்போது தன்னியல்பாய்க் கோவில்வரை கூடப் போவது பழக்கமாகி யிருந்தது. அந்த இருளொளியில் அல்லது ஒளியிருளில் மெல்ல வீதிகளில் நடப்பது சுகம். மென்காற்று. மரவட்டையாய்ச் சுருண்டுகிடக்கிற தெருநாய்கள். கூட்டுறவு பால்டிப்போவில் மாடு-கறக்கிறவர்கள். கன்றுகளை நக்கிக்கொடுக்கும் அல்லது புல் – வைக்கோல் மேயும் மாட்டின் சலங்கையொலி. காலைகளை ரசிக்கக் கற்றுத் தந்த ஆண்டாளுக்கு நன்றி. செல்லப் பெண்டாட்டியின் உடலில் இருந்து அவள் உறக்கம் கலையாதபடி பிரித்துக் கொள்வதுபோல இருள் பிடியுருவிக் கொள்வதைக் காணுதல்… உணர்தல் அழகு.

ஆனால் கடற்கரை சுறுசுறுத்துக் கிடக்கிறது. சிவப்பு பீடிக்கங்குகள் மினுமினுக்கின்றன. அந்தோணி எழுந்தமர்ந்திருக்கிறார். அவர் மீனாட்டத்துக்குப் போவதில்லை. பின்பக்கமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு அவர் நடக்கிறார். குரூஸ்கோவில் வளாகத்து வாசற்படிகளில் வெண்சிறு தேன்கூடாக நரைத்த குறுந்தாடியைத் தடவியபடி உட்கார்ந்திருக்கிறார். அந்தோணியை இங்கிருந்து பார்க்க ஆண்டவர் சிலுவையில் இருந்து இறங்கி வந்தாற் போலிருக்கிறது. பிடித்த விஷயங்கள் மனதில் கவிதைப்பதிவு செய்துகொள்கின்றன தாமே. ‘போயிட்டு வாரன் ‘ என அருகே வந்து நிற்கிறான் மகன். அவர் எழுந்து மைக்கேலை சற்று நடுங்கும் விரல்களால் தொடுகிறார். வார்த்தைகள் அர்த்தமிழந்த உலகில் சில சிறுதழுவல்கள் ஸ்பரிச நெகிழ்ச்சிகள் ஹெர்க்குலிஸ்போல உலகைத் தாங்க வல்லவை. எங்கிருந்தாலும் அவனுடன் அவன் அப்பாவின் நிழல் கூடவே வருகிறாற் போலத் தோணுகிறது.

அந்தமுறை ஊர்திரும்புகையில் மைக்கேல் பஸ்நிறுத்தத்துக்கு வரவில்லை. ஆச்சரியம். வராமல் இருக்க மாட்டான். என்னாயிற்று மைக்கேல் உனக்கு ? சூட்கேஸைவிட அதிகமாய் அந்த நினைவின் கனம். அப்பா தகவல் சொன்னார்- தனித்தோணியில் போன மைக்கேல் திரும்பவே இல்லை… பல்வேறு யூகங்கள் ஊரில். அவன் வழிதவறி யிருக்கலாம். பெரும்சுறா போல எதற்கும் இறையாகி யிருக்கலாம். தோணி கவிழ வேறு கரைக்கு நீந்தியிருக்கலாம்- தகவல் வரலாம் அது பற்றி. இலங்கை ராணுவத்தினரால் விசாரணைக்குப் பிடிபடுகிற அளவில் எல்லை தாண்டி தவறுதலாய்த் தோணியெடுத்திருக்கலாம். ஆ சுடப்பட்டிருக்கலாம். ஒருவாரமாக அவனைப் பற்றிய தகவல்கள் இல்லை.

உலகம் புரண்டுபடுத்து தன் மறுபக்கத்தை முதுகுப்புறத்தைக் காட்டினாற் போலிருந்தது. நதிநீர் இருட்குகைக்குள் புகுந்தாற் போல. குரூஸ்கோவில் ஒளியை எட்டுவைத்து தானே நடை வேகமெடுக்கிறது. ஆண்டவர் வளாகத்தில் பெரியவர் இல்லை. அந்த மணலில் மண்டியிட்டு ஆண்டவரை வணங்குகிறான். என் மைக்கேல்… மைக்கேலுக்கு எதும் ஆகியிருக்கக் கூடாது. ஆண்டவரே ரட்சியும்… வலியும் வேதனையுமான ஆண்டவரின் கரங்கள் அவன் தோளில் கைவைத்தாற் போல ஒரு பிரமை. உடம்பு சிலிர்த்து நடுங்குகிறது. தன்னியல்பாய் மனது, ஆண்டவா அந்தோணியைக் காப்பாற்றும் எனக் குரலெடுக்கிறது. முழுப் பிரார்த்தனையும் முடிக்க முடியாதபடி உள்விக்கல்.

அதோ அந்தோணி கடலைப் பார்க்க நிற்கிறார். கடல் அவரது கூட்டுக்காரன் அல்லவா ? அதனிடம் பகிர்ந்து கொள்ளாமல் இந்தக் கணங்களின் அழுத்தத்தை யாரிடம் அவர் பகிர்ந்து கொள்வார் என்றிருக்கிறது. அவரைத் தொந்தரவு செய்யாமல் அருகில் போய்நிற்கிறான்.. பேசிக் கொள்ள அவசியப்படாத கணங்கள். சிறு தோணியெடுத்து கடலுக்குள் இறங்க அந்தோணி முற்படுகிறாப் போலிருந்தது. ஆ…அவனும் மைக்கேலும் இப்படிப் பயணித்திருக்கிறார்கள். கூட ஏறிக் கொள்ளட்டுமா ஐயா ? அவர் மறுக்கவும் இல்லை. அங்கீகரிக்கவுமில்லை… மீன்பிடிக்கும் ஆரவாரங்களைத் தாண்டிச் செல்கிறது தோணி. சில்லென்ற மெளனம். தண்ணீரை இங்க்ஃபில்லரில் எடுத்தாற்போல பனித்துக் கிடக்கிற காலை. ஆ… அலங்காரங்கள் வேண்டாமே… கடலை மைக்கேலின் கல்லறை என உணர்ந்தாரா அவர் ? ஐயோ அவன் திரும்பி வருவான். கட்டாயம் வருவான். நான் ஏன் இப்படி துக்கங்களை பேன்ட்டுக்குள் சட்டையாக ‘இன் ‘ செய்து கொள்கிறேன்.

துடுப்புகளை மாட்டிவிட்டு படுத்துக் கொள்கிறார் பெரியவர். ஏனோ தன்னை அப்போது மைக்கேலாய் உணரும் மனம். ஒலிகளில் இருந்து, காலத்தில் இருந்து கயிற்றுப்பிடி கழற்றிக் கொண்டிருந்தது தோணி. கடல். வானம். மற்றும் அவர்கள். நியதிகளுக்கு அப்பாற்பட்ட கணங்கள் அவை. மனிதனற்ற கணங்கள். பூசிய கெட்டியான அடிவயிற்றுக் குளிர். இந்தக் கணங்கள் பூமியில் அனைவருக்கும் வாழ்வின் அசுபமுகூர்த்தங்களில் ஆன்மாவில் தட்டவே செய்கின்றன. அவை இயற்கை உன்னில் கருமையாய் இறங்குகிற கணங்கள். இயற்கைக்குத்தான் எத்தனை நிறங்கள். அழுத்தமான… வெண்ணிற… சாம்பல்பூத்த… என நிறக்கலவைகள். காலம் பதிவு செய்யப்படாத கணங்கள்… கண்ணிகளில் கட்டிக் கிடந்தது காலம். சொற்பகாலம். அற்பகாலம். ஆனால் மனதில், நீண்ட, கடற்பாசி உணர்வு மிதவைகளை உணர்த்தும் இயற்கை. எதற்கும் முடிவென்பது நிர்ப்பந்தம் இந்த மானுட சஞ்சார பூமியில். சிறுகாற்றுக்கு உலுக்கப்பட்ட தோணி நியதிகளை அறிவுறுத்துகிறது. நீலஉறையைக் கீறி வானக்காகிதத்தில் சேதி வருகிறது. அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. பேசுவதை அபத்தமாய்க் காட்டிக் கொடுத்தது அந்தச் சூழல். ஹ்ரும்… எனச் செருமி எழுந்து கொள்கிறார் அந்தோணி. அவன் அறிவினால் எட்டவொண்ணாப் பெருவெளியில் கிடந்தார் அவர் என்றே பட்டது. வாழ்க்கை விசித்திரங்கள் நிறைந்தது. புதிர்கள் நிறைந்தது. பெருந்தனிமைக்காரரோ ?

ஒருவேளை அவன் அப்பாவை அவர் இன்னும் இதமாய் உணரக்கூடும். வெயில் உக்கிரப் பட்டிந்தது. கடற்கரையை நெருங்க அவனுக்காய் அழகியசிங்கர் காத்திருப்பதை அந்தோணி பார்த்தார்.

ஃஃஃ

சென்ஷி

unread,
May 31, 2010, 3:48:37 AM5/31/10
to panb...@googlegroups.com

மறுமணம்

விந்தன் 29 November 2009 கதைகள், காதல் கதைகள் 492 views No CommentPrint This Post Print This Post Email This Post Email This Post

அவள் போய் விட்டாள் ‍ எவள் போய்விட்டாள்? தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உயிருடன் மறந்து, "இனி நீயே கதி!" என்று மணப்பந்தலில் பந்துமித்திரர்களுக்கு முன்னால் என் கரத்தை எவள், தன் மலர்க் கரத்தால் பற்றினாளோ, அவள்; வீடு, வாசல் ஒன்று ஏற்படுத்தி, ஏகாங்கியாக எங்கும் போகவிடாமல் எவள் என்னைத் தடுத்தாட்கொண்டாளோ, அவள்; எனக்கு நோய்நொடிகள் வந்த போதெல்லாம் தனக்கே வந்துவிட்டதாக நினைத்து அல்லும் பகலும் என் அருகிலேயே இருந்து எவள் எனக்கு சேவை செய்து வந்தாளோ, அவள்;அன்பு காட்டுவதில் தாயும் தாரமும் ஒன்று தான் என்று எவள் என்னை நினைக்க வைத்தாளோ அவள்; என் வாழ்க்கையில் அவ்வப்பொழுது ஏற்பட்ட சுக துக்கம் இரண்டிலும், இத்தனை நாளும் எவள் பங்கெடுத்துக்கொண்டிருந்தாளோ, அவள்; வாழ்க்கை இந்திர ஜாலம் போன்றது என்று தெரிந்திருந்தும் என்னுடன் எதிர்காலத்தைப் பற்றி எவள் என்னவெல்லாம் திட்டம் போட்டுக்கொண்டிருந்தாளோ, அவள்!

அவள் பெற்ற செல்வம் ரகு இதோ இருக்கிறான்; அவள் பெற்ற கண்மணி ராதை, இதோ இருக்கிறாள்.

நானும் இருக்கிறேன், என் அம்மாவும் இருக்கிறாள்; அவள்? போயே போய் விட்டாள்!

அவள் போய் இன்றுடன் ஆறு மாதங்களாகி விட்டன, நான் ஏன் இருக்கிறேன்? 'அவள் போனால் போகிறாள்!' என்று இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளவா? அம்மா ஏன் இருக்கிறாள்? என் தலையில் இன்னொருத்தியைக் கட்டி வைக்கவா? ரகுவும் சீதையும் ஏன் இருக்கிறார்கள்? 'நீங்கள் இரண்டாம் தாரம் கல்யாணம் செய்துக்கொள்ள வேண்டியது அவசியந்தான்!' என்று பிறர் என்னை வற்புறுத்தவா? எப்படி முடியும்?

தாம்பத்திய வாழ்க்கையில் மனித வர்க்கத்தை விட மணிப்புறாக்கள் எவ்வளவோ மேலானவையாக தோன்றுகின்றன. அவை எந்த காரணத்தைக் கொண்டும் ஏக பத்தினி விரதத்தைக் கைவிடுவதில்லையாம். ஆண்புறா, பெண்புறாவை விட்டுப் பிரிந்தால் ஊணுறக்கமின்றி உயிரை விட்டு விடுமாம்; பெண்புறா ஆண்புறாவை விட்டுப் பிரிந்தால் உயிர் போகும் வரை உண்ணாவிரதமிருக்குமாம் நாமும் அவ‌ற்றைப் பின்ப‌ற்றுவ‌து சாத்திய‌மா? அது எப்ப‌டிச் சாத்திய‌மாகும்! ர‌குவையும் ராதையும் விட்டு விட்டு நாம் எப்ப‌டி ஊணுற‌க்க‌மின்றி உயிரை விட‌ முடியும்?

அப்புற‌ம் அம்மா? ந‌ம‌க்குப்பின் அவ‌ள் க‌தி? அந்த‌ப் புறாக்க‌ளுக்குத்தான் பாச‌மென்றும் ப‌ந்த‌மென்றும் ஒன்றும் இல்லை. கொஞ்ச‌ம் ப‌ற‌க்கும் ச‌க்தி வ‌ந்த‌தும் அவை த‌ங்க‌ள் குஞ்சுக‌ளை விர‌ட்டி விடுகின்ற‌ன‌. ந‌ம்முடைய‌ குழ‌ந்தைக‌ளை நாம் அப்ப‌டி விர‌ட்டிவிட‌ முடியுமா? ஐயோ, எப்ப‌டி முடியும்?

முடியா விட்டால் என்ன‌? இர‌ண்டாந்த‌ர‌ம் க‌ல்யாண‌ம் செய்து கொள்ளாம‌லே நாம் வாழ‌ முடியாதா?

ஏன் முடியாது?

அம்மாவுக்கோ வ‌ய‌தாகிவிட்ட‌து; அவ‌ளால் எந்த‌ காரிய‌த்தையும் இனி க‌வ‌னிக்க‌ முடியாதுதான் அத‌னால் என்ன‌, ச‌மைய‌லுக்குத்தான் ச‌ங்க‌ர‌னை வைத்தாகி விட்ட‌தே! பார்ப்போம்:

நாள‌டைவில் என்னையும் அறியாம‌ல் ஏதோ ஒரு ம‌ன‌க்க‌வ‌லை ஏக்க‌ம்: ஏன் இப்ப‌டி?

இத்த‌னை நாளும் பார்ப்ப‌த‌ற்கு ல‌ட்ச‌ண‌மாயிருந்த‌ ச‌ங்க‌ர‌னை இப்போது பார்க்க‌வே பிடிக்க‌வில்லை. அவ‌ன் ச‌ம‌ய‌லையும் சாத‌ம் ப‌ரிமாறுவ‌தையும் ச‌கிக்க‌வே முடிவ‌தில்லை.

"காப்பி கொண்டு வ‌ர‌ட்டுமா?" சாத‌ம் போட‌ட்டுமா? என்று அவ‌ன் கேட்கும்போதெல்லாம் காதை அடைத்துக்கொள்ள‌ வேண்டும் போல் தோன்றுகிற‌து.விய‌ர்க்க‌ விறுவிறுக்க‌ அவ‌ன் எதிரில் வ‌ந்து நின்றால் என் உட‌ம்பே ப‌ற்றி எரிவ‌து போல் இருக்கிற‌து.

சாட்டைப் போல் த‌லைம‌யிரைப் பின்னிவிட்டுக் கொண்டு, த‌லை நிறைய‌ பூவை வைத்துக் கொண்டு, ஏதாவ‌து ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு கை வ‌ளைக‌ள் க‌ல‌க‌ல‌வென்று ச‌ப்திக்க‌, அப்ப‌டியும் இப்ப‌டியுமாக‌ 'அன்ன‌ ந‌டை' போட்டுக் கொண்டிருந்த‌ அந்த‌ அழ‌கு தெய்வ‌ம் எங்கே, இந்த‌ அவ‌ல‌ட்ச‌ண‌ம் எங்கே?

"காப்பியா? இதோ, கொண்டுவ‌ந்து விட்டேன்?"

"சாத‌மா? இதோ, போட்டு விட்டேன்!" என்று அவ‌ள் குயிலைப் போல‌க் கொஞ்சுவ‌து எங்கே? இவ‌ன் க‌ழுதை போல‌க் க‌த்துவ‌து எங்கே?

அவ‌ன் செய்ய‌வேண்டிய‌து வேலை; வாங்க‌வேண்டிய‌து கூலி இவ‌ற்றைத் த‌விர‌ அவ‌னுக்கும் என‌க்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்?

இப்ப‌டிப்ப‌ட்ட‌ வாழ்க்கையில் அன்புக்கு இட‌முண்டா? அன்புக்கு இட‌மில்லை என்றால் இந்த‌ வாழ்க்கை என்னத்திற்கு ? இந்த‌ உல‌க‌ம் தான் என்ன‌த்திற்கு?

இப்ப‌டியெல்லாம் என்ம‌ன‌ம் இப்பொழுது எண்ண‌மிடுகிற‌து; எண்ண‌மிட்டு ஏங்குகிற‌து.

வீட்டில் உள்ள‌வையெல்லாம் போட்ட‌து போட்ட‌ இட‌த்தில் கிட‌க்கின்ற‌ன‌. ஏற்ற‌ இட‌த்தில் எடுத்து வைக்க‌ப்ப‌ட‌வில்லை' வீடே வெறிச்சென்று கிட‌க்கிற‌து. இத்த‌னைக்கும் அவ‌ளைத் த‌விர‌ வீட்டில் எல்லாமே இருக்கின்ற‌ன‌; இருந்தும் என்ன‌? ஒன்றுமே இல்லாத‌து போல‌ல்லவா இருக்கிற‌து!

ந‌ல்ல‌ வேளையாக‌க் குழ‌ந்தைக‌ளைப் ப‌ராம‌ரிப்ப‌த‌ற்கு ம‌ட்டும் த‌ன் சிநேகிதி சீதாவை அவ‌ள் வைத்துவிட்டுப் போயிருந்தாள்.

எதிர் வீட்டில் குடியிருப்ப‌வ‌ள் அவ‌ள்; வாழ்க்கை இன்ன‌தென்று தெரியுமுன்பே வித‌வையாகி விட்டாள். அவ‌ளுக்குத் த‌க‌ப்ப‌னார் இல்லை. தாயார் இருந்தாள். இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் ஜீவ‌னோபாய‌ம் அளித்து வ‌ந்த‌து ஒரே ஒரு இய‌ந்திர‌ம் தைய‌ல் மெஷின் உண‌ர்ச்சிய‌ற்ற‌து! ஆம். உண‌ர்ச்சியுள்ள‌ உற‌வின‌ர்க‌ள் ப‌ல‌ர் அவ‌ர்க‌ளுடைய‌ திக்க‌ற்ற‌ நிலையைப் பார்த்தும் பார்க்காத‌து போல் இருந்து விட்டார்க‌ள்! அந்த‌ சீதாதான் இப்போது ர‌குவுக்கும் ராதைக்கும் தாயார்!

குழ‌ந்தைக‌ள் இருவ‌ரும் த‌லைவாரிக் கொள்ள‌வேண்டுமா? அவ‌ளிட‌ந்தான் செல்வார்க‌ள். பொட்டிட்டுக்கொள்ள‌ வேண்டுமா? அவ‌ளிட‌ந்தான் செல்வார்க‌ள். ச‌ட்டைப் போட்டுக் கொள்ள‌ வேண்டுமா? அவ‌ளிட‌ந்தான் செல்வார்க‌ள்.

எந்த‌வித‌மான‌ பிர‌திப‌ல‌னையும் எதிர்பாராம‌ல் அவ‌ள் இத்த‌னை காரிய‌ங்க‌ளையும் செய்து வ‌ந்தாள்.

ஒரு நாள் மாலை, வேலையிலிருந்து வீட்டுக்கு வ‌ந்தேன். உள்ளே சீதாவின் பேச்சுக்குர‌ல் கேட்ட‌து, செவிம‌டுத்தேன்.

"நிமோனியாவாம்; மிக்ச‌ர்' கொடுத்தார்!" என்றாள் அவ‌ள்.

அவ்வ‌ள‌வுதான்; "யாருக்கு நிமோனியா" என்று உட‌னே கேட்டுவிட‌ என் ம‌ன‌ம் துடித்த‌து.

அதற்குள் "காலையில் பள்ளிக்கூடத்திற்கு போகும்போது நன்றாகத்தானே போனாள்?" அதற்குள் இப்படி வந்துவிட்டதே? என்று அங்கலாய்த்தாள் என் தாயார்.

"எல்லாம் சரியாய்ப் போய்விடும் மாமி!" என்று தேறுதல் சொன்னாள் சீதா.

நான் உள்ளே சென்றேன். ராதை கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள். தொட்டுப் பார்த்தேன். நல்ல காய்ச்சல்.

"மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மருந்து கொடுங்கள். ஆகாரம் "ஆரோரூட்" கஞ்சியைத் தவிர வேறொன்றும் கொடுக்க வேண்டாம், என்று எச்சரித்து விட்டு, சீதா என்னைக் கண்டதும் 'விருட்'டென்று வெளியே போய்விட்டாள்.

"பகல் பன்னிரண்டு மணிக்கு பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது குழந்தைக்கு நல்ல ஜுரம். சீதா தான் டாக்டர் வீட்டிற்கு அவளை கூட்டிக்கொண்டு போனாள். எனக்கென்ன கண்ணா தெரிகிறது!" என்றாள் தாயார்.

அதற்குள் சங்கரன் கஞ்சியைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்தான். அதை ஆற‌வைத்துக் குழந்தைக்கு குடிப்பாட்ட முயன்றேன். அவள் குடிக்கவில்லை. "அம்மா, அம்மா" என்று அலறினாள்.

"உனக்கு அம்மா இல்லேடி கண்ணு." என்று சொல்லிக் கொண்டே, கரை புரண்டு வந்த கண்ணீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள் தாயார்.

"ஏன் இல்லை? இப்பத்தான் என்னை டாக்டர் வீட்டுக்குக் கூட்டி கொண்டு போனாளே அம்மா!" என்றாள் குழந்தை.

"அந்த அம்மா வாடி? இதோ அழைச்சிக்கிட்டு வறேன்!" என்று தட்டு தடுமாறிச் சென்று, எதிர் வீட்டு சீதாவை அழைத்து வந்தாள் அம்மா.

அவள் வந்து குடிப்பாட்டியபோதுதான் குழந்தை கஞ்சி குடித்தது!

சிறிதுநேரம் இருந்து, ராதை கண்ணயர்ந்த பிறகு சீதா போய்விட்டாள்.

அடுத்த‌ப‌டி ம‌ருந்து கொடுக்கும் வேளை வ‌ந்த‌து. நான் கொடுக்க‌ முய‌ன்றேன். குழந்தை குடிக்க‌வில்லை. அத‌ற்கும் சீதாதான் வ‌ர‌வேண்டியிருந்த‌து.

"ஐயோ, அவ‌ளுக்கு வேலை த‌லைக்கு மேலிருக்குமே" என்று அம்மா வ‌ருந்தினாள்.

" அத‌ற்கென்ன‌ மாமி, ப‌ர‌வாயில்லை!" என்றாள் அவ‌ள். ராதையின் ஜுர‌ம் நீங்குவ‌த‌ற்கு மூன்று வார‌ங்க‌ளாயின‌. அந்த‌ மூன்று வார‌ங்க‌ளும் சீதா, ராதையுட‌னே இருந்தாள்.

இந்த‌ச் ச‌ம‌ய‌த்தில் தான் என் ம‌ன‌த்தில் ஒரு ச‌ப‌ல‌ம் த‌ட்டிற்று. ஏற்கென‌வே ச‌மூக‌ச் சீர்திருத்த‌த்தில் ப‌றுக்கொண்டிருந்த‌ என் ம‌ன‌ம் சீதாவை நாடிய‌து ‍ அவ‌ள் ச‌ம்ம‌திப்பாளா? அவ‌ள் ச‌ம்ம‌தித்தாலும் அவ‌ளுடைய‌ தாயார் ச‌ம்ம‌திப்பாளா?

யார் ச‌ம்ம‌திக்காவிட்டால் என்ன‌? என்னை பார்த்து அவ‌ளும், அவ‌ளைப் பார்த்து நானும் ச‌ம்ம‌தித்தால் போதாதா? ‍ இந்த‌ அநித்தியமான‌ உல‌க‌த்தில் பிற‌ருடைய‌ விருப்பும், வெறுப்பும் யாருக்கு என்ன‌ வேண்டிக்கிட‌க்கிற‌து?

ஒரு நாள் துணிந்து இந்த‌ விஷ‌ய‌த்தை என் தாயாரிட‌ம் வெளியிட்டேன்.

அவ‌ள் "சிவ‌ சிவா!" என்று காதை பொத்திகொண்டு, ரொம்ப‌ ந‌ன்றாய்த்தான் இருக்கிற‌து; இந்த‌ மாதிரி இன்னொரு த‌ர‌ம் சொல்லாதே! என்று சொல்லி விட்டாள்.

அன்று மாலை வீட்டிற்குள் நுழையும்போது, சீதாவுக்கும் தாயாருக்கும் இடையே பின்வ‌ரும் ச‌ம்பாஷ‌ணை ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து.

"என்ன‌ இருந்தாலும் பெண்பிள்ளை இல்லாத‌ வீடு ஒரு வீடு ஆகுமா?"‍ இது சீதாவின் குர‌ல்.

"நானும் அதைத்தான் சொல்லுகிறேன்; கேட்டால்தானே?" இது என் அம்மா."

"ஏனாம்? இவ‌ரைவிட‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள், ஏழெட்டுப் பிள்ளை பெற்ற‌வ‌ர்க‌ள் எல்லாம் இர‌ண்டாந்தார‌மாக‌க் க‌ல்யாண‌ம் செய்துக் கொள்ள‌வில்லையா?"

"இவ‌ன் என்ன‌மோ ச‌மூக‌த்தை சீர்திருத்தி விட‌ப் போகிறானாம்; வித‌வைக‌ளின் துய‌ர‌த்தைத் தீர்த்துவிட‌ப் போகிறானாம். அத‌ற்காக‌ இர‌ண்டாந்தார‌மாக‌க் க‌ல்யாண‌ம் செய்து கொள்வ‌தென்றால் இவ‌ன் எவ‌ளாவ‌து ஒரு வித‌வையைத்தான் க‌ல்யாண‌ம் செய்து கொள்வானாம் இன்னும் என்ன‌வெல்லாமோ சொல்கிறான்; அவற்றையெல்லாம் வெளியில் சொல்ல‌வே என‌க்கு வெட்க‌மாய் இருக்கிற‌து!"

"எந்த‌ வித‌வை இவ‌ரை க‌ல்யாண‌ம் செய்து கொள்வ‌த‌ற்குக் காத்துக் கொண்டிருக்கிறாளாம்? இந்த‌ப் புருஷ‌ர்க‌ள் தான் 'வித‌வா விவாக‌ம்'என்று எப்போது பார்த்தாலும் அடித்துக் கொள்கிறார்க‌ள். எந்த‌ப் பெண்ணாவ‌து அப்ப‌டிச் சொல்கிறாளா? ‍ பைத்திய‌ந்தான்."

இதை கேட்ட‌மாத்திர‌த்தில் என் ம‌ன‌க்கோட்டை இடிந்து விழுந்த‌து. எண்ண‌ங்க‌ள் மூலைக்கு ஒன்றாக‌ சித‌றின‌.

ஆனாலும் ஆசை அத்துட‌ன் என்னை விட்டுவிட‌வில்லை. எத‌ற்கும் ஒரு க‌டித‌ம் எழுதி கேட்டுவிடுவ‌தென்று தீர்மானித்தேன். அந்த‌க் க‌டித‌த்தின் முத‌லில் வித‌வா விவாக‌த்தின் அவ‌சிய‌த்தை வ‌ற்புறுத்தி, ந‌டுவே என் ஆவ‌லை வெளியிட்டு, க‌டைசியில் க‌டித‌ம் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் த‌ய‌வு செய்து ப‌ர‌ம‌ ர‌க‌சியமாகப் ப‌தில் எழுதுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன்.

மேற்ப‌டி க‌டித‌த்திற்கு வ‌ந்த‌ ப‌தில் இதுதான்:

வ‌ண‌க்க‌ம்

ம‌றுமண‌ம் செய்துக் கொண்டால் வித‌வையின் துய‌ர‌ம் தீர்ந்து விடும் என்று சில‌ர் சொல்வதை நீங்க‌ள் ந‌ம்புகிறீர்க‌ளா? ‍ என்னால் அதை ந‌ம்ப‌ முடிய‌வில்லை. அத‌ற்காக‌ வ‌ழிவ‌ழியாக‌ வாழ்ந்து வ‌ரும் காத‌லை கொன்றுவிட‌வும் நான் விரும்ப‌வில்லை.

என‌வே என்னை பொறுத்த‌வ‌ரை, நான் பூசிக் கொண்ட‌ ம‌ஞ்ச‌ளும், வைத்துக்கொண்ட‌ குங்கும‌த் தில‌க‌மும், சூடிய‌ ம‌ல‌ரும், அணிந்த‌ வ‌ளைய‌லும் 'அவ‌'ருக்காக‌த்தான்.

வேறொருவ‌ருக்காக‌ அவ‌ற்றை மீண்டும் அணிந்து கொள்வ‌தென்ப‌து இந்த‌ ஜென்ம‌த்தில் முடியாத‌ காரிய‌ம்.

ம‌ன்னிக்க‌வும்.

சீதா.

மேற்ப‌டி க‌டித‌த்தை ப‌டித்து முடித்த‌தும் பெண்க‌ள் ச‌ப‌ல‌ச் சித்த‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் என்று சொன்ன‌ மேதாவிக‌ளின் மேதையை எண்ணி நான் சிரித்தேன், வைர‌ நெஞ்சுட‌ன் அவ‌ள் வாழும் முறைமையைப் ப‌ற்றி எண்ணியெண்ணி விய‌ந்தேன். அப்போது காற்றிலே மித‌ந்து வ‌ந்த‌ கீத‌மொன்று.

"க‌ற்பு நிலையென்று சொல்ல‌ வ‌ந்தார் – இரு க‌ட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்"

என்று இசைத்து, ம‌றும‌ண‌ம் அல்ல‌ திருமண‌ம், ஒரு ம‌ன‌மே திரும‌ண‌ம்! என்ற முடிவுக்கு என்னை இழுத்துச் சென்ற‌து.

(0)

சென்ஷி

unread,
May 31, 2010, 3:49:57 AM5/31/10
to panb...@googlegroups.com

கிருஷ்ணன் வைத்த வீடு

வண்ணதாசன்

கிருஷ்ணன் வைத்த வீடு, தனுஷ்கோடி அழகருக்கு எப்படி ஞாபகம் இருக்கிறது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவன் ஒரே ஒரு முறைதான் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான். அதுவும் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு.

அவன் ஹாஸ்டலில் இருந்தான். நான் வீட்டிலிருந்து மூன்றாம் நம்பர் பஸ் பிடித்துக் காலேஜ்உக்குப் போய்க் கொண்டிருந்தேன்.

பாப்புலர் டாக்கீஸில் 'தாமரை நெஞ்சம் ' படம் பார்த்துவிட்டு வெளி வருகிற கூட்டத்தில், என் தோளை வந்து அவன்தான் பிடித்தான். சிகரெட் குடித்து, மிட்டாய் சாப்பிட்டிருந்த வாசனையுடன் சிரிப்பு இருந்தது.

'நீ எங்கேடாஇருக்கே ? ' என்றான்.

'எங்கள் வீடு இந்தப் பக்கம்தானே ' என்று சொல்லி அவனை வீட்டுக்கு வந்துவிட்டுப் போகுமாறு அழைத்தேன்.

தனுஷ்கோடி அழகர், தியேட்டர் முன்பு தரையில் பரப்பி வைத்துப் பாட்டுப் புத்தகம் விற்கிற மனிதரைப் பார்த்தான். வளைந்து திரும்புகிற வாய்க்காலில் தண்ணீரே தெரியாமல் பூத்துக்கிடந்த நீலநிறப்பூக்களைப் பார்த்தான். விறகுக் கடையில் விழுந்து கொண்டிருந்த சம்மட்டி அடியிலிருந்தும் ஈரவிறகு வாசனையில் இருந்தும் என்னுடைய அழைப்புக் குறித்த முடிவை எடுத்தது போல் 'சரி, போவோம் ' என்றான். பத்தடி முன்னால் போய்க்கொண்டிருந்த விடுதி நண்பர்களிடம், தான் அப்புறம் வருவதாகக் கையைக் காட்டினான்.

பெருமாள் கோயில் தெருப்பக்கம் நின்ற தேரை நிதானமாகப் பார்த்து, அது எந்தத் திருவிழாவுக்கு ஓடும் என்று விசாரித்தான். 'எல்லா ஊர் சலூன்களுக்கும் ஒரே மாதிரிக் கதவுகள்தான் இருக்கின்றன ' என்று சொல்லிக்கொண்டே சந்திப்பிள்ளையார் முக்குவரை நடந்தான். வாடகைக்கு நிற்கிற ஒற்றை மாட்டு வண்டிகளைப் பார்த்து ஆச்சரியம் அவனுக்கு.

பக்கத்தில் நிற்கிற காந்தி சிலையைப் பற்றி, முக்கியமாக காந்தியின் கால்களைப் பற்றி சிலாகித்தான். என்னைப் போலவே அவனுக்கும் காந்திசிலைக்குப் பக்கத்தில் பழக்கடை போட்டிருப்பவர் எப்போதும் ஊதாச்சட்டைதான் போடுவாரா என்கிற சந்தேகம் வந்தது. அவன் அந்தச் சந்தேகத்தைக் கேட்டதும் தனுஷ்கோடி அழகருக்கும் எனக்கும் ரொம்ப நெருக்கம் உண்டாகிவிட்டது போலத் தோன்றியது.

இந்த நேரத்தில் அப்பா வீட்டில் இருப்பாரா என்று சந்தேகம் உண்டாயிற்று. அம்மா மட்டும் இருந்தால் கூட நல்லது. தின்பதற்கு ஏதேனும் கொடுத்துக் காபியையும் தனுஷ்கோடி அழகருக்குத் தரமுடியும் எனில் நன்றாக இருக்கும். ஒன்றுமே கொடுக்காவிட்டால் கூட எல்லாவற்றையும் கொடுத்துவிட்டது போல அம்மாவால் உபசரித்துவிடமுடியும்.

அம்மா முதலில் ஒரு டம்ளர் தண்ணீர்தான் கொண்டுவந்து கொடுப்பாள். கொடுப்பதற்கு முன் டம்ளரின் வெளிப்புறத்தில் வழிகிற சொட்டுக்களை லேசாக விரல்களால் துடைத்துவிடுவாள். அந்தத் துடைப்பிலேயே எல்லா மாயமும் நிகழ்ந்துவிடும். அம்மாவிடமிருந்து தண்ணீரை வாங்கிக் குடித்த யாரும் அம்மாவை மறந்திருக்க முடியுமா.. தெரியவில்லை.

ஆனால், தனுஷ்கோடி அழகர் அம்மாவை மறந்துவிட்டது போலத்தான் இருந்தது. இத்தனை வருடங்களுக்கு அப்புறம் என்னைப் பார்க்கிறவன் அம்மாவைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.

'அந்த கிருஷ்ணன் வெச்ச வீடு இப்ப இருக்கா ? ' என்று கேட்டான்.

'கிருஷ்ணன் வைத்த வீடா ? அதை நீ எப்போ பார்த்தே ? ' என்று கேட்ட என்னுடைய குரலின் ஆச்சரியம் எனக்கே விநோதமாக இருந்தது. யாருக்கும் தெரியாது என்றும் தெரியக்கூடாது என்றும் நான் என்னுடைய ரகசிய அறையில் ஒளித்து வைத்திருந்த ஒரு விஷயத்தை எடுத்த எடுப்பில் அவன் தொட்டுவிட்டது எப்படி என்று தெரியவில்லை.

எங்கள் தெருவில் கிருஷ்ணன் வைத்த வீட்டுக்குத் தனியான அடையாளமும் மரியாதையும் கூட இருந்தது.

ஒரு சுடலை மாடசாமி பீடத்தை ஆரம்பமாக வைத்து, நூல் பிடித்த மாதிரி சிறியதும் பெரியதுமாக ஐம்பது நூறு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட காரை வீடுகளுக்கும் மட்டப்பா போட்ட வீடுகளுக்கும் மத்தியில் 'கிருஷ்ணன் வைத்த வீடு ' துண்டாகத்தான் தெரியும்.

மற்ற எல்லா வீடுகளும் தரையோடு தரையாக, தெருவும் சாக்கடையுமாக இருக்கிற முன்வாசல் நடையுடன் துவங்குகிறபோது கிருஷ்ணன் வைத்த வீடு நான்கு ஐந்து படிகளுடன், ஆற்றங்கரையில் வெள்ளம் வந்தால் பாதிக்கக் கூடாது என்பது போல கட்டப்பட்டிருக்கும். பத்தடிக்குக் கீழ் தெரு பள்ளத்தில் இருப்பதுபோல வீட்டின் கட்டுமானம் துவங்கும்.

நெடுநெடு என்று வரிசைக்கு இரண்டு பாக்குமரம், இரண்டு தென்னைமரம், முன் வாசலில், நட்டநடுவில், புல்லாங்குழல் வாசிக்கிற கிருஷ்ணர் பொம்மை. பொம்மையின் முதுகுக்கு அண்டை கொடுத்தது மாதிரியான குழாயின் உச்சியில் நீலமான ஒரு ரசகுண்டு. ராத்திரியில் உள்ளுக்குள் பல்பு எரியும். தெருவில் போகிறவர் வருகிறவர்கள் தற்செயலாக ஏறிட்டுப் பார்த்தால், கிருஷ்ணன் நேரடியாக நிலா வெளிச்சத்தில் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு அந்த வீட்டின் முன்னால் நிற்கிறது மாதிரி இருக்கும்.

அதற்கப்புறம் வீடு ஆரம்பிக்கும். தார்சா, பட்டாசல், இரண்டாம் கட்டு, அரங்குவீடு, அடுக்களை என்ற அமைப்பு இல்லாமல் வேறு தினுசில் இருக்கும். செங்கோட்டை என்கிறதும், திருவனந்தபுரத்தில் கரமனை என்கிறதும், இல்லையில்லை இங்கே முனைஞ்சிப்பட்டி மூலைக்கரைப்பட்டி என்கிறதுமாக அந்த வீட்டு ஆட்களின் ஊரைப் பற்றி வெவ்வேறு பேச்சும் அனுமானமும் இருந்தது.

நாகர்கோவிலில், நாகர்கோவிலைத்தாண்டி இரண்டு மூன்று இடங்களில் பெரிய பெரிய ஓட்டல்கள் வைத்திருக்கிறாதாகவும் பெண்ணினுடைய படிப்பையும் பையனுடைய படிப்பையும் உத்தேசித்து இங்கே இருப்பதாகவும் தான் சொன்னார்கள்.

இங்கே கார் நிறுத்துவதற்கு இடமில்லை என்பதால், அடுத்த முடுக்கில் ஒரு காடினாவை வாடகைக்குப் பிடித்திருப்பதும், வீட்டு வாசலில் வந்து ஏற்றிக்கொண்டுபோய், மறுபடி வீட்டு வாசலில் கொண்டுவந்து இறக்கிவிடுவதும், தவிர, அந்த வீட்டுக்காரர்கள் நடந்துபோய் எங்கள் தெருவில் யாரும் பார்த்ததில்லை என்பதும் வாஸ்தவம்தான்.

பையனுக்கு படிப்பு வரவில்லை. எட்டாவது வகுப்பிலேயே இரண்டு தடவை உட்கார்ந்துவிட்டான் என்றும், ஆனால், அவனுடைய அக்கா மகா கெட்டிக்காரி என்றும் சொன்னார்கள்.

வழக்கமாக காலேஜ் தினத்தில் பரதநாட்டியம் ஆடுகிற டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் மகளைப் போன இடம் தெரியாமல் ஆக்கிவிட்டது கிருஷ்ணன் வைத்த வீட்டுப் பெண்ணினுடைய நடனம் என்று குனிந்த தலை நிமிராமல் ஐந்தாம் நம்பர் பஸ் ஏறி கல்லூரிக்குப் போய்விட்டு வருகிற காந்திமதி அக்கா சொல்கிறாள்.

கிருஷ்ணன் வைத்த வீட்டுப் பெண்களைப் பார்த்தது என்பது ரொம்பத் தற்செயலாகவும் அவ்வளவு சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியாத ஒரு நேரத்திலும் எனக்கு வாய்த்தது.

பிச்சம்மாள் ஆச்சி செத்துப் போயிருந்தாள். ஆயுள் பூராவும் வீடு வீடாகத் தோசைக்கு அரைத்துக் கொண்டும் முறுக்கு சுற்றிக் கொடுத்துக் கொண்டும் இது எல்லாம் போதாமல் எப்போதும் இரண்டு மூன்று பூனைக்குட்டிகள் வளர்த்துக் கொண்டும் ஒருத்தி இருக்க முடியும் என்றால், அது பிச்சம்மா அக்கா என்கிற பிச்சம்மா ஆட்சிதான். தெருவில் இருக்கிற எல்லோருமாகச் சேர்ந்துதான் அவளைத் 'தூக்கிப் போடவேண்டிய ' நிலைமை. பாடைக்குக் கிடுகு பின்னுவதற்குத் தென்னை ஓலலித் தேவைப்படும் இல்லை… அதற்காகத்தான் நான் கிருஷ்ணன் வைத்த வீட்டுப் படியேறிப் போனேன்.

எனக்கும் தென்னங்கிடுகுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இருந்தாலும் இதன் பொருட்டுஎன்னை இங்கே அனுப்பின குரல் எது என்று இப்போது ஞாபகமில்லை. வழக்கம் போல இது போன்ற நல்லது — கெட்டதுகளில் முன்னால் நின்று உத்தரவு இடுகிற மீசைப் பெரியப்பா குரலோ, ராமையாப்பிள்ளை குரலோ அல்ல அது. அசரீரி மாதிரி அது எங்கிருந்தோ கேட்க, எங்கிருந்தோ நானும் வந்திருக்க வேண்டும் என்று படுகிறது.

நான் சத்தம் கொடுத்து ரொம்ப நேரம் கழித்து, 'சசி… வாசலில் யாருன்னு பாரு ' என்று குரல் கேட்டது. கதவுகள் திறந்து மூடுகிற நுட்பமான நேரம். கனகாம்பர கலரில் ஒரு தாவணியும் கையில் புத்தகமுமாக அந்தப் பெண் வந்தது. நான் விவரம் சொல்லி, தென்னங்கீற்று வெட்டிக் கொள்ள அனுமதி கேட்டேன்.

'யாரு சசி ? ' மறுபடியும் உள்ளிருந்து குரல் வந்தது.

'வர்றேம்மா ' என்று உள்ளே நகர்ந்த பிறகும் அந்த இடத்தில் கனகாம்பர கலர் இருந்தது. சசி என்ற பெயரின் உச்சரிப்புக் காற்றில் அலைந்தது.

சசியும் சசியுடைய அம்மாவும் வந்தார்கள்.

சசியின் கையில் அரிவாள் இருந்தது. இந்தப் பக்கத்து அரிவாள் மாதிரி இல்லை. அது கூட வேறு மாதிரி இருந்தது.

'வெட்டிக்கொள் ' ' என்று இரண்டு பேருமே சொல்லவில்லை. சசி அரிவாளைத் தரையில் குனிந்து வைக்கும்போது ஜடை முன்னால் விழுந்து, கிட்டத்தட்ட தரையைத் தொட்டது. மஞ்சள் ரிப்பன் பட்டுப் பூச்சி மாதிரி பறந்தது.

நான் பக்கத்து வீட்டு காம்பெளண்ட் சுவரில் ஏறி, வேப்பமரக் கிளையில் உட்கார்ந்து கைக்கு எட்டின தென்னங்கீற்றை இழுத்துப் பிடித்து வெட்டினேன். குறுக்கே போன மின்சார ஒயரில் சற்றுத் தொங்கி ஆடி, தென்னங்கீற்று 'சலார் ' என்று கீழே விழுந்தது.

சசியும் சசியின் அம்மாவும் வாசலிலேயே நின்றார்கள்.

தூரத்திலிருந்து அவர்களை பார்க்கமுடிந்தது போல, பக்கத்தில் போனதும் பார்க்க முடியவில்லை. அரிவாளைக் கீழே வைத்தேன். 'தாங்க்ஸ் ' என்று சொன்னது யார் காதிலும் விழுந்திருக்க முடியாது.

வெளியே கேட்காமல் சொன்ன அந்தச் சொல், பனிக்கட்டி போல உருகி ஓடி சசியின் கால் பெருவிரலைத் தொடுமுன் ஆவியாகிக் கொண்டிருந்தது.

வெளியே நடையிறங்கும்போதுதான், கிருஷ்ணன் வைத்த வீட்டின் கிருஷ்ணன் பொம்மையை இவ்வளவு நேரமும் சரியாகக் கூட பார்க்கவே இல்லை என்று புரிந்தது. இத்தனைக்கும் அது வாசல் நடுவில்தான் இருந்தது. அதைச் சுற்றித்தான் நான் போனது, கேட்டது, வந்தது.. எல்லாம்.

மறுபடியும் தனுஷ்கோடி அழகர் கேட்டான்.

'நான் பார்த்தது இருக்கட்டும். கிருஷ்ணன் வெச்ச வீடு இப்போ இருக்கா ? அதைச் சொல்லு. '

எனக்கு ஒரு கேள்வி – பதில் போல அவ்வளவு திட்டவட்டமாக அதைச் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. வாசல் முழுவதும் புல் பூண்டுகள் மண்டி, ஒரு மழைக்காலத்துக்கு பிந்திய வெயில் நாளில், தட்டான் பூச்சிகள் பறக்கிற கோலத்தில், வாசிக்கின்ற புல்லாங்குழல் முற்றிலும் உடைபட்டு, மூக்கு நுனி மூளியாகி, வலது முழங்கைப் பக்கம் துருபிடித்த கம்பி தெரிய கிருஷ்ணன் அந்த வீட்டில் கால்மாற்றி நிற்பதைப் பற்றி தனுஷ்கோடி அழகரிடம் சொல்ல வேண்டுமா என்ற தயக்கம் வந்தது. உண்மையின் கரிக்கோடுகளால், முப்பது வருஷத்துக்கு முந்திய ஞாபகத்தின் சுவர்களில், தனுஷ்கோடி அழகர் வரைந்து வைத்திருக்கிற, கிருஷ்ணன் வைத்த வீடு பற்றிய சித்திரங்களை நான் கோரப்படுத்த வேண்டுமா ?

நான் இரண்டாவது முறை அந்த வீட்டைப் பார்த்த கோரத்தை விடவா பெரிய கோரம் இருக்கப் போகிறது. நான் மட்டுமா பார்த்தேன் ? தெருவே அல்லவா கூடிப் பார்த்தது. இந்த வீட்டில், பக்கத்து வீட்டில், வேப்பமரக்கிளையில், நகைக்கடைச் செட்டியார் வீட்டுச் சுவரில் என்று எங்கேயெல்லாம் ஆட்கள் இருந்தார்கள். மோர் விற்பதற்கு வருகிற சுப்பையா கோனாருடைய வீட்டுக்காரிகூட பிரப்பங்கூடையும் கறுத்த மோர்ப்பானையும் தலையில் இருக்க, பச்சைக் குத்தின கையால் சேலையை வாயில் வைத்துப் புதைத்துக் கொண்டு நின்றாள். ஓர் இடத்தில் ஐந்து நிமிடம் நிற்கிறவளே இல்லை அவள் '

போலீஸ்காரர்கள் 'தள்ளிப்போ, தள்ளிப்போ ' என்று மச்சுப்படியில் இருந்து சத்தம் போட்டுக் கொண்டே இறங்குகிறார்கள். முனிசிபல் ஆஸ்பத்திரியில் இருந்து கூட்டிக் கொண்டு வரப்பட்டவர்கள் தலைப்பாகையை அவிழ்த்து மூக்கை மறைத்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஜமுக்காளத்தின் நான்கு மூலைகளையும் நான்கு பேர்களாகப் பிடித்தபடி ஒவ்வொரு உடம்பாகக் கீழே கொண்டுவந்து வாசலில் வைக்கிறார்கள்.

முதலில் அந்த வீட்டுப் பையன் உடம்பு. அடுத்து அநேகம் பேர் பார்த்தே இராத அந்த வீட்டுக்காரர் உடம்பு.

தூக்கிக்கொண்டு வந்த தோட்டிகளில் ஒருத்தர், 'இப்படிப் பண்ணிட்டாங்களே முதலாளி ' என்று கீழே உட்கார்ந்து அழுதார். தோள்பட்டையில் கையைக் கொடுத்துத் தூக்கி ஒரு போலீஸ்காரர் அவரை விரட்டினார்.

மறுபடியும் மேலே ஏறினார்கள்.

அந்த அம்மாவைக் கொண்டுவரும்போது நிறையச் சிரமம் இருந்தது. பிடித்துக்கொண்டு வந்த போர்வை, கனம் தாங்காமல் சரிந்துவிடுவது போலவும், படிகளில் தாங்கித் தாங்கி இறங்கித் திசைமாற்றிக் கொண்டு வருவதில் தள்ளாட்டமும் இருந்தது. அதிகம் நாற்றம் அடித்தது என்று கூடச் சொல்லவேண்டும்.

ஏற்கனவே நிறையப் பேர் அழ ஆரம்பித்திருந்தார்கள்.

கடைசியாக சசியை இறக்கும்போது எல்லோரும் வாய்விட்டுச் சத்தம் போட்டு அழுதார்கள். இன்னது என்று சொல்லமுடியாத வகையில் புலம்பல் இருந்தது.

'அட, பாதகத்தி ' ' என்ற குரல் சுழன்று சுழன்று வருகிற ஒரு கூர்மையான கத்தி போல கிருஷ்ணன் வைத்த வீட்டின் மேல் விழுந்து இதுவரை மூடிக்கொண்டிருந்த எல்லாத்திரைகளையும் கிழித்து எறிந்துவிட்டு அப்புறம் போனது.

பழைய சேலைகளாலும், அழுக்கு வேட்டிகளாலும் மூடப்பட்டு வரிசையாகக் கிடத்தப்பட்டிருந்த நான்கு உடல்களிலும், கிருஷ்ணன் சிலைக்கு மிக நெருக்கமாக சசியின் உடல் இருந்தது. கொலுசும் பாதமும் தெரிந்த இடது காலை, காக்கிச் சட்டையுடன் இருந்த முனிசிபல் ஆஸ்பத்திரி சிப்பந்தி மூடிவிட்டார்.

எங்கிருந்து வந்தது என்று தெரியாமல், வேப்பமரத்தின் அடர்த்திக்குள் ஒளிந்திருந்த பளீர் என்ற வெயில் வாசல் முழுவதையும் கொஞ்சம் நேரம் பொசுக்கிற்று. பாக்கு மரத்திலிருந்து பொத்தென்று விழுந்த அணில், பரபரவென்று குறுக்காக ஓடியது. சசியின் உடம்பின் மேல் குதித்து ஓடியதா, தாண்டிப் போனதா என்று அனுமானிக்க முடியவில்லை.

முதுகில் விழுந்திருந்த பழுப்புக் கோடுகளில் சசியைச் சிறகுகளாகச் செருகிக் கொண்டு எந்தப் பக்கம் பறந்தது அது என்று தெரியாமல் போனபோது, வெயில் முற்றிலும் மங்கி, வேப்பமரம் பந்து பந்தாக நிழல்களை எறிந்தது.

வேம்பின் மஞ்சள் இலைகள் பறந்து உதிர்ந்து, கிருஷ்ணன் பொம்மையில் அப்பி, மறுபடி பறக்கும்போது, கிருஷ்ணனின் தலை உச்சியில் இருந்த மயில்பீலிகளையும் பிய்த்துக் கொண்டு போயிற்று.

மேலும் சில பழுத்த இலைகள் ஓலைப் பாய்களைப் போலச் சுருண்டு விரிந்து, அந்த நான்கு பேரையும் அள்ளித் தெருவில் நிற்கிற சக்கடா வண்டியில் ஏற்றப்போவது போல ஆவேசத்துடன் தரையில் நகர்ந்தன.

நான் எங்கே நின்றேன் என்று சொல்ல முடியவில்லை. எல்லா இடங்களிலும், எல்லோருடனும் நின்றிருக்க வேண்டும்.

'ஒண்ணு போலப் போயிரலாம். ஒண்ணு போல வரமுடியுமா உனக்கு ? ' — ஐஸ் விற்கிற முருகனுடைய அப்பா என்னிடம் கேட்டார். இதைக் கேட்கும்போதும் மூச்சுமுட்டுகிற அளவு அவர் குடித்திருந்தார்.

என்னிடம் மட்டும் இதையெல்லாம் ஏன் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. 'வரமுடியாது ' என்ற பதிலையே 'வர முடியுமா ? ' என்ற கேள்வியாகக் கேட்டால் என்ன சொல்ல முடியும்.

நிறைய பேர் பதில் சொல்வதைத்தான் கேள்வியாகக் கேட்பார்கள் போலிருக்கிறது.

'கிருஷ்ணன் வெச்ச வீடு இப்போ இருக்கா ? ' என்று தனுஷ்கோடி அழகர் என்னிடம் கேட்டதுகூட அப்படித்தான் இருக்க வேண்டும்.

சென்ஷி

unread,
May 31, 2010, 3:51:00 AM5/31/10
to panb...@googlegroups.com

ஓடும் குதிரைக்கு பத்து கால்கள்

ரா.கிரிதரன்

 

0. இப்போது

கனமான பித்தளை கடிகாரம் `நங், நங்` எனச் சத்தமிட்டது. அதன் தொண்டையிலிருந்து வந்த சத்தத்தில் பூமி அதிர்ந்தது. மணிக்கொரு முறை சரியாக அதன் உள்ளிருக்கும் வாத்தியக்காரர்கள் இசைப்பர். அந்த சத்தங்கள் அடங்கிய பின் அறைக்குள் மரண அமைதி திரும்பும்.அறுபது நிமிடங்களுக்குப்பின் இந்த சளனமற்ற அறையில் வேறுவிதமான உணர்வுகளை மீட்ட வேண்டுமென்ற உறுதியுடன் கடிகாரம் உறங்கச் செல்லும்.

கடிகாரம் அடங்கிய பின் எழுதுவதைத் துவங்கினேன். `மனிதனுக்கு எத்தனை கர்வம்? தொள்ளாயிரம் கோடி மக்கள் தன்னைச் சுற்றி இருக்கும்போது, தான் உருவாக்கும் பாத்திரங்கள், தன் கற்பனை,கனவு என அவற்றுடன் மட்டும் கொண்டிருக்கும் நட்பை என்னவென்று சொல்வது? யாரும் சிருஷ்டிக்க வேண்டாம், தன் காரியத்துக்கு காரணனும் தானே என்னும் ஜம்பம்! ஆக்கம், காப்பு,அழிவு என மொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டான்.இது மட்டுமா….`

சே..இதற்குமேல் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.என் கால்களைப் போல் எழுத்தும் முட்டுக்கட்டையானது. சக்தியைச் சேகரித்து எழுந்து நிற்க முற்பட்டேன். தடுமாறிய ஒரு கையால் ஜன்னல் கம்பியைப் பிடித்தேன்; கண் கூசியதால் , அதன் வழியே எட்டிப் பார்த்த சூரியனை மறு கையால் மறைத்தேன். பத்துக்கு பனிரெண்டு அடி இருக்கும் அறையில் எத்தனை முறை அளப்பது? மதியமும் சாப்பிடவில்லை. இரண்டு நாளாய் பசி மரத்துப்போயிருந்தது. இப்படியே இருந்தால் எழுதக் கூட முடியாது. வந்து விழும் வார்த்தைகளில் அலுப்பும் அசூயையும் தெரித்தது. ஒருகணம் எல்லாமே தெளிவாய் தெரிவது போல் இருந்தாலும், உடல் நடுக்கம் மூலம் குளிர் ஜுரம் அந்த கணத்தின் உண்மையை அறைந்து விடுகிறது.

இரவு வருவதற்குள் சாப்பிட்டாக வேண்டும்.மற்றொரு இரவை எவ்வளவு பிரயாசனப்பட்டாலும் தாண்ட முடியாது. ஜே.ஜியிடம் கேட்கலாம். இன்னும் தன் அறைக்கு வந்திருக்க மாட்டான். அதுவரை அயர்ச்சியைப் போக்க ஏதாவது படிக்கலாமென – கையில் கிடைத்த புத்தகத்தை பிரிக்க, அதிலிருந்து சில காகிதங்கள் என் மடியில் விழுந்தன. கசங்கிய அந்த பக்கங்களில் -

1. பின்னொரு காலத்தில்…

…என்னுடைய பத்தொன்பதாவது வயதில் பிரயாணம் செய்ய ஆசைப்பட்டேன். என் அப்பாவின் , The Book of Travels, என்ற புத்தகத்திலிருந்த சில பயணங்களுடன் தொடங்கலாமென்றிருந்தேன். பெயரற்ற யாத்ரீகனாக பல இடங்களுக்குச் செல்வது என் கனவுகளில் ஒன்றாக இருந்தது. என் அப்பாவின் கனவும் அதுவே. இரு கனவுகளையும் சாத்தியப்படுத்த சரியான நேரத்திற்காக காத்திருந்தேன். வெளி உலகத்தை அளக்க பிரெஞ்சு மட்டும் தெரிந்தால் போதாது. முதல் வேலையாக, ஆங்கிலமும், ஸ்பானிஸ் மொழியும் கற்கத் தொடங்கினேன். தாய் மொழி மட்டும் தெரிந்து என்ன செய்ய்முடியும்? ஆங்கிலம் தெரிந்தவன் லெளகித்திலும், வேற்று மொழி தெரிந்தவன் கனவுலோகத்திலும் மட்டுமே அலைய முடியும்.

என் ஊரிலிருந்த ஒரு ஆங்கில பயிற்சி நிறுவன அதிபரைச் சந்தித்தேன். ஆறு மாத பயிற்சியில் சேர்ந்து படிக்க நேரம் இல்லாததைப் பற்றி அவரிடம் விவரித்து, சீக்கிரமாக ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள வழி கேட்டேன். அவரிடம் இது போன்ற கேள்விகளை யாருமே கேட்டதில்லை போலும்; என்னைப் போன்ற அறிவிலிக்கு எதுவுமே சொல்லித்தர இயலாது என துரத்திவிட்டார். இந்த சம்பவத்தின் அயற்சியைப் போக்க எங்கள் ஊரிலே இருந்த மிகக் கீழ்த்தரமான கபேவுக்குச் சென்று இருப்பதிலேயே ஸ்ட்ராங்கான காபியை தருவித்தேன். மஞ்சள் நிற மாலையில், கபேயின் வெளியேயிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். ஆள் அரவமற்ற சந்து. தூரத்தில் வந்த ஒரு கிழவரின் காலடி சத்தம் மட்டும் கேட்டது. மெல்ல காலை தேய்த்து நடந்து வந்து எனக்கு அடுத்த நாற்காலியில் உட்கார்ந்து,மடித்து வைத்திருந்த புத்தகத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார். ஆங்கில புத்தகம் எனத் தெரிந்தது. அவருடன் பேச்சை ஆரம்பித்தேன்.

சம்பிரதாய அறிமுகத்தில் தொடங்கினாலும், அவர் சொன்ன விஷயங்களால் முழுவதும் என்னை ஆட்கொண்டார். கிழவர் செல்லாத பயணங்களில்லை. அவருடைய ஆங்கில புத்தகத்தின் மேலிருந்த நாட்டத்தைத் தெரிவிக்க, அதன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பை பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். அவர் கொடுத்த புத்தகத்தில் புதிதாய் இருபது பக்கங்கள் இருந்தன. வேறு பதிப்பாக இருக்கலாம். நான் அதைப் படிக்கும் ஆர்வத்தில் புரட்ட, அவர் தன் பயணக் கதைகளை சொல்லத் தொடங்கினார்.

அவர் சொன்ன கதைகளில் ஜப்பான் நாட்டு கிராமத்துக் கதைகள் என்னைக் அதிகம் கவர்ந்தது. சாமுராய் கதைகளை மட்டுமே கேட்டுப் பழகிய எனக்கு அவர் கூறிய கதைகள் முற்றிலும் வித்தியாசமாயிருந்தன.அவை சாதாரண மத்திய வர்க்கக் கதைகள்; ஆனால், மாய முடிச்சுகளைக் கொண்டிருந்தன. ஜப்பான் பயணத்தை சலிப்புடன் அவர் கூறினார். சாகசம் நிறைந்த பயணத்தை எதிர்ப்பார்த்திருந்த எனக்கோ ஏமாற்றமடைந்தாலும், என்னுடைய பயணம் அப்படி இருக்காதென்பதில் உறுதியாயிருந்தேன்.

அவர் புத்தகத்தில் கூடுதலாய் இருந்த இருபது பக்கங்களைப் படிக்கத் தொடங்கினேன்.

2 இருபத்து மூன்றாம் நூற்றாண்டு உலகம் – யாத்ரிகனின் குறிப்புகள்.

அது செர்கே என்ற பிரஞ்சுக்காரனின் பிரயாணக் குறிப்புகள்.எந்த வருடத்தின் பயணம் என்ற செய்தி தெரிந்துகொள்ள அந்த இருபது பக்கங்களையும் வேகவேகமாகத் தேடினேன்.ஏமாற்றமே மிஞ்சியது.ஒரு கால வரையறைக்குள் வராத அனுபவங்களின் தொகுப்பு.எந்த பக்கத்தில் உண்மையான குறிப்புகள் உள்ளன எனத் தேடிப் படிக்கத் தொடங்கும்போது,மெல்ல அந்த அனுபவங்கள் ஒரு முடிவிலியான கனவில் சென்று முடிந்துவிடும். அவை செர்கேவுக்கு நடந்தவை என திட்டவட்டமாக கூற முடியவில்லை;அதே சமயம் அது கனவுபோலில்லாமல், அந்தக் குறிப்புகள், வழித் தடங்களுடன் துள்ளியமான வரைபடத்தைப் போலிருந்தது.

காலங்களுக்குள் பயணம் செய்வதுபோல், எண்ணிலடங்கா குறிப்புகள் அந்த பக்கங்களில் இருந்தன. இருபது பக்கம் முடிந்தது என மறுபடியும் முதல் பக்கத்திலிருந்து தொடங்கினால் வேறொரு பயணம் போல் அந்தக் குறிப்புகள் ஆழியின் ஆழத்தில் சென்றுகொண்டேயிருந்தது.

அதில் என்னை மிகவும் கவர்ந்தது இந்திய பயணம். அதைப் பற்றிய குறிப்புகளை உன்னிப்பாக படிக்கத் தொடங்கினேன்.இந்தியாவுக்கு செல்ல வேண்டுமென்ற கனவு என் மாமாவிடமிருந்து ஒட்டிக்கொண்ட ஒன்று. யாத்ரிகனாக ஐரோப்பாவில் சுற்றிய அவர் – நார்வே ஃபியாட்ஸ் பகுதியில் இருக்கும் திமிங்கில பார்வைமையத்தில் இருந்த ஒரு வருடம் முதல்,மராகேஷ் பகுதியில் இருந்த மகரந்த பூக்களின் மணம் வரைக் கூறி ஊர் சுற்றுதல் பற்றிய கனவை என்னுள் விதைத்து விட்டார். அவர் இலக்கில்லாமல் அலைந்த நாட்கள் அவை. மாமாவின் சொற்களின் ஜாலத்தில் அந்தந்த நாட்டின் வாசனைக்காகக்கூட ஏங்கத் தொடங்கினேன். இந்தியாவில் நேபால் பகுதியில் இருக்கும் ஒரு ஏரியில் படகு சவாரி பற்றி கூறியபோது அவர் கண்களில் தெரிந்தது ஆர்வமா, குறுகுறுப்பா எனத் தெரியவில்லை.அது, முதல் முறை காம விளையாட்டை கேள்விப்படும் சிறுவனின் தத்ரூப உணர்வலங்காரம் போலிருந்தது.

இந்திய குறிப்புகள்- 213ஆம் பக்கதிலிருந்து தொடங்கியது. மாரீஸ் என்பவரால் சிறு திருத்தங்கள் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் ஆங்காங்கே தென்பட்டன. முதல் பத்தியில் – ஹம்பி என்ற இடத்திலிருக்கும் இசைக் கோவில் – அடிக்கோடிடப்பட்ட இந்த வரிகளுக்குப் பக்கத்தில் `செலிம் ஹாசனுடன் இன்று கீசா (Giza) பகுதியிலிருக்கும் ஸ்பின்க்ஸ் என்ற சிங்கத்தின் அடியிலிருக்கும்போது – ஆஹா, ஹம்பி சென்றால் மண் சிலைகளின் நேர்த்திகளை காணலாமே என பைத்தியக்காரத்தனமாக எண்ணுகிறேன். அதனாலேயே இந்தக் குறிப்பை இங்கு எழுதுகிறேன்` என குறிப்பு உள்ளது. மாரீஸ் எழுதியவையாக இருக்கக்கூடும்.இருந்தாலும் உலக வரலாற்றில் இரு பெரிய மண் வடிவங்களை ஒரே வரியில் நம் கண்முன்னே நிறுத்தி ஒப்பிடு செய்யப்பட்ட முதலும் கடைசியுமான வரி இது என்றே எனக்குத் தோன்றியது.

அடுக்கடுக்காய் ஆச்சர்யமான தகவல்கள் வந்து கொண்டேயிருந்தன. இந்தக் குறிப்புகள், தேடலே தேடலின் இலக்காகக் கொண்டவனின் பிதற்றலாகச் சென்றது.செர்கே எழுதியதைவிட பக்கங்களின் ஓரங்களில் எழுதப்பட்டிருந்த மாரீஸின் குறிப்பே என்னை இதனுள் இழுத்தது. இந்தியாவின் பாரம்பரிய இசை நாகரிகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், 216ஆம் பக்கத்தில் படித்த இந்த குறிப்பினால் ஆச்சர்யத்தின் விளிம்புக்கே சென்று வந்தேன்.

’..இப்படிப்பட்ட நாகரிகத்தில் முளைத்த தென் மற்றும் வட இந்திய இசை வடிவத்தை புரிந்து கொள்ள நாம் இந்த நில அமைப்புகளைப் பிரிக்கும் விந்திய மலை கொடுக்கும் ஆச்சர்யங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.இந்தியர்கள் மொழிகளில் பல மீமொழி ரகசியங்களை உறைத்து வைத்திருக்கிறார்கள். அதனால், இசையிலும் அப்படிப்பட்ட ரசசிய குறியீடுகள் இருப்பதில் ஆச்சர்யமில்லை.விந்திய என்ற வார்த்தை – விந்து எனும் உயிர்பரிவர்தனைக்காக உருவான வார்த்தையில் தொடங்குகிறது. உயிர்கள், முதன் முதலாக மலை சார்ந்த இடங்களில் தோன்றியிருக்கக்கூடிய சாத்தியங்களை இது உருவாக்குகிறது. மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் இதைப் போல் பல ரகசியங்கள் இந்திய மொழிகளில் உள்ளதாய் கண்டுபிடித்துள்ளனர்.அதே போல் தென் மாநிலங்களில் பல நூற்றாண்டுகளாய் இசையைப் பேச்சு வழக்குகளிலிருந்து மாற்றாமல் வைத்திருக்கிறார்கள். தற்போது ,எட்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இந்திய இசை உலக அரங்குகளில் உச்சாணியாக விளங்குகிறது…’

எனக்கு இந்திய இசையில் இருந்த தேக்க நிலை தெரியும். அவை இருபத்தோறாம் நூற்றாண்டில் நடந்தவை. சரித்திரத்தில் படித்திருந்தாலும், கலைகளின் சிகரமாக இந்தியா மாறியது இருபத்து மூன்றாம் நூற்றாண்டிலேயே. ஆப்ரிக்க நாட்டின் அமேசான் காடுகளுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த Z எனும் நகரம் வெளியே தன் ரகசிய இடத்திலிருந்து வெளியே வந்ததும் இந்த காலகட்டத்தில் தான். உலகில் சில உன்னத மாற்றங்களை இந்த Z நகரம் கொண்டுவருமென அமேசான் பழங்குடியினர் நம்பி வந்தாலும், அது உண்மையில் நடந்து இந்தியாவிற்கு பொற்காலத்தை மீட்டுத் தந்தது.

Z நகரத்தை அடைந்த வில்லியம்ஸ் சகோதரர்கள் பழங்குடியினரின் உதவியில்லாமல் ஒன்றுமே சாதித்திருக்க முடியாது.ஆப்ரிக்கா நாட்டின் அடர்ந்த காடுகளிலிருக்கும் பழங்குடியினரின் பழம்பாடல்படி Z நகரம் கண்டெடுக்கப்படும் என்றும், அதனால் உலகில் சில மாறுதல்கள் உண்டாகும் குறியீட்டு விளக்கத்தை வில்லியம்ஸ் சகோதரர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு பழங்குடியினர் தங்கள் வாய்வழிப் பாடல்கள் பலவற்றைத் தந்து வில்லியம்ஸ் சகோதரர்களுக்குக் கொடுத்துள்ளனர்.இதே பாடலை ஆராய்ந்த பிரின்ஸ்டெனின் மற்றொரு குழுவோ, Z நகரம் கண்டுபிடிக்கப்பட்டால், அதன் தாய் சமூகங்களிலும், அதனுடன் ஒட்டியிருந்த பல சமூகங்களுக்கும் மாறுதல் ஏற்படும் என்றே பழம்பாடல் குறிப்பதாய் தெரிவிக்கின்றனர்.

லெமூரியாவும் Z நகரமும் ஒன்றாய் இருந்ததென அவற்றில் வாழும் ஒரேவிதமான பல மண் புழுக்களைக் கொண்டு நிரூபித்துள்ளனர்.இவை, தன் பள்ளி நாட்களில் படித்திருப்பதாய் மாமா கூறத் தெரிந்து கொண்டவை.

எது எப்படியோ,கலைகளுக்குப் இந்தியா எனும் பழம்பெயர் இந்த இருபத்து மூன்றாம் நூற்றாண்டில் உண்மையாகிவிட்டது. அடுத்த ஐந்து பக்கங்களில் மாரீஸ் தன் குழுவோடு இந்தியாவில் செலவு செய்த நாட்களின் குறிப்பு மட்டுமே இருந்தது:

`..இந்த மாற்றங்கள் திடீரென Z நகர உதயத்தினால் நிகழவில்லை. கலை, ஒரு நாகரீக அமைப்பின் உணர்வுப் பிரவாகம். கலையின் கோட்டை பழைய மேதாவிகளாலேயே கட்டப்பட்டது.பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மூர்த்திகளான தாகூர்,அரவிந்தர்,ரவி சங்கர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, அலி அக்பர் கார்,ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்களின் இசை மேதாவிலாசத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் இந்த மறுபிரவாகத்திற்கு ஒரு காரணம். வரலாற்றின் தேக்கத்தை உடைத்தெரிய இவர்களிடம் பல ஆயுதங்கள் இருந்தன. பழமைவாதத்தை தூளாக்கக் கட்டப்பட்ட பீரங்கிகள். கண்ணாடிக்குள் பாங்காக வைக்கப்பட்டிருந்த அதிகாரம், சாதிப்பற்று,மொழிப்பற்று எனும் தடைகளை உடைத்தெரிய காட்டாறுகளை அதனுள் திருப்பி விட்டவர்கள்..கலையின் தீர்மானிக்கப்பட்ட ரஸங்களை உடைத்தெரிந்து அவற்றின் தேக்க நிலையின் அழிவுகளை திறந்த மனத்துடன் வரவேற்றனர்..`

இப்படிப்பட்ட சமூகத்தில் ஒரு முறையேனும் வாழ்ந்து பார்க்க வேண்டுமென்பதால் என் பிரயாணத்தைத் தொடங்கிவிட்டேன்.எனக்கு இந்தியா பற்றி ஏற்கனவே தெரிந்த பல்வேறு செய்திகளுடன், மாரீஸ்,செர்கேவின் குறிப்புகள் மிகவும் தேர்ச்சியான திட்டத்தைக் கொடுத்துள்ளது.என் கண் முன்னே தெரிந்த பாதை தொடங்கி முடியும் இடம் இந்தியாதான். புத்தகத்தை கையில் வைத்தபடியே கனவில் சொகுசாகப் புகுந்து கொண்டேன். என் தந்தையின் கனவுகளை உண்மையாகக் காண்பதில் என் தேடல் முடிவுக்கு வராது. ஆனாலும், கனவுகளில் வாழ்ந்து பார்த்து, நினைவில் தீர்மானிக்கும் தேடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. நினைவுகள் எல்லாம் நாம் வாழ்ந்து கடந்தவை மட்டுமல்ல, நம் கனவுகளும் தான். அந்த கனவுகளில் இருக்கும் சொகுசு அலாதியானது.என் கனவுடன் பக்கங்களைத் திருப்புவதுமாக கடைசி இரண்டு பக்கங்களுக்கு வந்துவிட்டேன். அங்கேயும் மாரீஸ் விடுவதாக இல்லை.

‘..தலைநகரம் மட்டுமல்ல,சிற்றூர்களிலும் (அப்படி கூறிவிட முடியுமா என்ன?) இருக்கும் தேர்ந்த கலை வடிவங்கள்,மக்களின் ரசனைத் தரத்தை தெளிவுபடுத்துகிறது. அங்கே,
நம் நாட்டைப்போல பழைய கலை வடிவம் புறக்கணிக்கப்ப்டுவதில்லை.புது கட்டமைப்பிற்குள் அதை நுழைப்பதற்கு தனி அமைப்புகள் உள்ளன. ச.மு.வெற்றி அவர்களின் ’கலைக்கான அமைப்பும், அதன் கூறு அமைப்புகளும்’ போன்ற அறிவார்ந்த ஆராய்ச்சிகள், அதை மேற்கொள்ளும் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கு மட்டுமல்லாது, மக்கள் மத்தியில் தினமும் விவாதிக்கப்படுகின்றது.மொழிக்கான அமைப்பு, கலை பரிவர்தனைக்கான சங்கம் போன்ற தோற்றங்களினால், பல்வேறு மொழிகளைக்கொண்ட பகுதிகளும் இயல்பாக இணைக்கப்பட்டுள்ளது. தென் பிராந்திய ஃபிரெஞ்சு மொழி, வடகிழக்கு மொழியுடன் நம் நாட்டில் ஒத்துப்போவதில்லையே? இந்தியாவில் இப்படிப்பட்ட சிக்கல்களை இந்த அமைப்புகள் எளிதில் களைந்துவிடுகின்றன..1760களில் மைசூர் என்ற தென் இந்திய நகரத்தில் உலா வந்த ஜார்ஜ் தளபதி, இப்படிப்பட்ட மேன்மையான அதே சமயம் எல்லாவித செல்வத்திலும் கொழித்த நாட்டை எங்குமே பார்த்ததில்லை எனக்கூறியிருந்தாராம். அப்படிப்பட்ட பொற்காலமாகவே இந்தியா இப்போது மீண்டும் உருவாகியுள்ளது…`

இந்த குறிப்புகளுடன் என் பயணத்தை துவங்கப்போகிறேன். என் கனவுகளே என்னை வழிநடத்தும் யாத்ரிகனின் பிம்பங்கள். இதோ,The Lost City என்றழைக்கப்படும் Z நகரம் போன்றதொரு மாயையான இந்தியாவைத் தேடிப் பயணிக்கின்றேன்…

0. இப்போது

கண்விழித்தபோது ஜே.ஜி என்னருகே நிற்பது தெரிந்தது. அவன் உலுக்கும்போது, என் கைகளிலிருந்து நழுவிய பக்கங்கள் காற்றில் மறைந்தன.

சென்ஷி

unread,
May 31, 2010, 3:52:04 AM5/31/10
to panb...@googlegroups.com

அந்நிய துக்கம்

சத்யராஜ்குமார்

ஈச்சனாரி ரயில்வே கேட் சாத்தியிருந்தால். பஸ்ஸில் வருபவர்கள் சலிப்புத் தட்டுவார்கள். அழகுவின் முகத்தில் சந்தோஷம் வந்து குதிக்கும். கிழிந்த அரை டவுசரை அரைஞாண் கயிற்றால் இறுக்கிக் கொண்டு, வட்டமான தட்டைக் கூடையைத் தோளில் தூக்கிக் கொள்ளுவான். கேட் சாத்தியதால் தங்கி விட்ட பஸ்ஸில் ஒரு வீரனைப் போலப் பாய்வான்.

” கல்லே..கல்லே.. வேர்க்கல்லே. ”

” உச்சி வெய்யிலுக்கு எப்படி வேர்த்து வடியுது. வேர்க்கல்லேங்கறியே தம்பி! ” – சில பேர் ஜோக் மட்டும் அடிப்பார்கள். வேர்க்கடலை வாங்கமாட்டார்கள். பாலிதீன் பைகளில் அடைத்த சின்ன சின்ன வேர்க்கடலைப் பாக்கெட்டுகள். சின்தடிக் சர்ட் ஜேபியில் நூறு ரூபாய் நோட்டுகள் கண்ணாடி போலத் தெரிகின்றன. ஐம்பது பைசாவுக்கு என்னமாய் யோசிக்கிறார்கள்.

அந்த லெவல் க்ராசிங்கிற்கு அப்பாலிருக்கும் சேரிதான் அழகுவின் சாக்கடைகளும், சகதிகளும் நிரம்பிய அன்னை பூமி. அவன் பெயருக்கும் உருவத்துக்கும் மயிரிழை சம்பந்தமுமில்லை. நாலாங்கிளாஸ் வரை பள்ளிக்கூட வாசனை. ஸ்கூலில் தமிழ் வாத்தியார் மட்டும்தான் அவனை அழுத்தந்திருத்தமாய் உச்சரிப்பார். மற்றவர்கள் எல்லாருமே, “அளகு…அளகு…” சமயத்தில், “அலகு”.

போன வாரம் அவன் அப்பா வாயில் நுரை தள்ளி செத்துப் போனார். அழகுக்கு அதில் சொற்பமும் துக்கமில்லை. அவர் என்ன வேலை பார்த்தார் என்று இன்றைய தேதி வரை அவனுக்குத் தெரியாது. அவனைப் பொறுத்தவரை அநேக நேரங்களில் கள்ளச் சாராய போதையுடன் வாய் குழறுபவர். பல சமயம் மொக்கைக் காயங்களுடனும், சில சமயம் ரத்தக் காயங்களுடனும் வீடு திரும்புபவர். நள்ளிரவில் அம்மாவின் கூந்தலைக் கொத்தாகப் பற்றி உலுக்குபவர். அவளை அடித்து, உதைத்து, வயிற்றில் மிதித்து துவம்சம் செய்பவர். பின்னிரவுகளில் அவர் அம்மாவிடம் கொஞ்சலாகவும், கெஞ்சலாகவும் பேசுகிற மாதிரி குரல் கேட்கும். கனவு என்று நினைத்து தூக்கத்தில் கரைந்து போவான் அழகு.

அம்மா கறுப்பாயிருந்தாலும் அவனுடைய மிகச் சின்ன வயதுகளில் விக்கிரகம் மாதிரி அழகாய் இருந்ததாய் ஞாபகம். இப்போது நோஞ்சான் விக்கிரகம். இருமல் சத்தம் அப்பாவிடமிருந்து தொற்றிய குடும்ப கீதம். அடிவயிற்றை எக்கிக் கொண்டு கிளம்பும் அதே பாணி இருமல் குளிர் காற்றடித்தால் அழகுக்கும் வரும்.

அம்மாதான் பாதி கிளாஸ் நடக்கையில் ஒரு நாள் பள்ளிக்கூடத்திலிருந்து கூட்டிப்போனாள். “இனிமே இஸ்கூல் வேணாம் அளகு..”

ஏன் எதற்கு என்று கேட்கவில்லை அவனுக்கு விடுதலை சந்தோஷம். அண்ணாச்சி கடையில் கொண்டு போய் விட்டாள்.

” அண்ணாச்சி… (இருமல்) எனக்கும் இப்பல்லாம் ஆவறதில்லை. இவங்கப்பன் வெவகாரந்தான் ஒங்களுக்குத் தெரியுமே. ஒரு செல்லாக்காசு சம்பாதிச்சுப்போடத் துப்பில்லாத ஆளு. இனிமே அளகு கொண்டாந்தாத்தான் அடுப்புல பொங்கிப்போட முடியும். ”

அண்ணாச்சி இரண்டு நாள் அவனைக் கடையில் வைத்திருந்தார். அன்பாக, பொறுமையாக, தெளிவாக, நிதானமாக… கடைசியில் பொறுமை இழந்து ஒரு குட்டுக்குட்டி சொல்லிக் கொடுத்தும் அழகுக்குப் பொட்டலம் கட்டும் கலை சுலபத்தில் கை வரவில்லை.

” சும்மா வெச்சு காசு தரமுடியுமா? கூட்டிட்டுப் போயிரம்மா. இங்க இவனுக்கு வேலையில்லை.”

” அண்ணாச்சி… அண்ணாச்சி ” அழுது அரற்றினாள் அம்மா. என்ன இது இழவாகப்போயிற்று என்று யோசித்த அண்ணாச்சிக்கு நிர்ப்பந்தத்தில் அந்த யோசனை பிறந்தது. தட்டைக்கூடையை எடுத்து அழகுவின் கையில் கொடுத்தார். பாட்டிலின் தகரமூடியை சுழற்றிக் கழற்றி கடலைப் பாக்கெட்டுகளைத் தட்டைக் கூடையில் கொட்டிப் பரப்பினார்.

” ரயில்வே கேட்டுக்குப் போ. ஒரு பாக்கெட் வித்தீன்னா உனக்குப் பத்துக்காசு.”

கட்டிப்போட்ட மாதிரி கடைக்குள் கிடப்பதை விட அழகுக்கு இது பிடித்தது.

தட்டைக்கூடையைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு ஈச்சனாரி ரயில்வே கேட்டுக்கு ஓடினான். கோவை-கொச்சின் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சரக்கு ரயில்கள் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கொரு தரமாவது அந்த வழியாகச்செல்லும். முணுக்கென்றால் கேட்டை சாத்திவிடுவார்கள். கேட் சாத்தினால் அந்தப்பக்கமும், இந்தப்பக்கமும் சில லாரிகள், பத்துப் பதினைந்து பஸ்களாவது தேங்கிப்போகும்.

” கல்லே…கல்லே …வேர்க்கல்லே… ”

அழகுவின் சத்தம் கேட்டால் சில குழந்தைகள் அடம் பண்ணி வாங்கும். பெரும்பாலான வெள்ளுடுப்பு ஆசாமிகள் இவனைப் பார்ப்பதே பாவம் என்கிற மாதிரி விறைப்பாய் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். பஸ்ஸில் வரும் கிராமத்து ஜனங்கள் தான் கல்மிஷமில்லாமல் பேசி அவனிடம் கடலைப் பாக்கெட்டுகள் வாங்குவார்கள்.

சில சிடுமூஞ்சிக் கண்டக்டர்கள் அவன் படிக்கட்டில் காலை வைத்தாலே நாயை விரட்டுகிற மாதிரி விரட்டித்தள்ளுவார்கள். வேறு சில கண்டக்டர்கள் தயவான்கள் போல் அவனை பஸ்சுக்குள் அனுமதித்து விட்டு, இறங்கிப் போகையில் ஒரு வேர்க்கடலைப் பாக்கெட்டை முழுசாய் லவட்டிக்கொள்வார்கள். ஐந்து பாக்கெட்டுகள் விற்றால் அழகுக்குக் கிடைக்கக் கூடிய ஐம்பது பைசா அநியாயமாய்ப் பறிபோகும்.

” அண்ணே… அண்ணே… ” என்று கண்டக்டரிடம் கெஞ்சுவான். குழைவான்.

” பஸ்சுக்குள்ளே எவ்வளவு பாக்கெட் விக்கறே…? ஒண்ணு தந்தா கொறஞ்சா போய்டுவே? அப்றம் நாளைலேர்ந்து இந்த கேட்ல ஒரு பஸ்ல காலை வைக்க முடியாது ஜாக்ரதை. அங்க பாரு எஸ்ஸார்ட்டி வந்து நிக்குது. ஓடு.”

அந்த நிமிஷம்தான் காத்திருப்பு வரிசையில் கோத்துக்கொண்ட அந்த பஸ்சுக்கு ஓடுவான். தினமும் அடித்துப்பிடித்து எழுபத்தைந்திலிருந்து நூறு பாக்கெட்டுகள் வரை விற்று விடுவான்.

அதற்கப்புறம் பாத்திரம் தேய்க்கவும் துணி துவைக்கவும் வீடுகளுக்குப் போவதை அம்மா நிறுத்திவிட்டாள். அந்த எலும்பை உருக்கும் இருமலால் நிறுத்தப்பட்டு விட்டாள் என்றுதான் சொல்லவேண்டும். அவளால் உடம்புக்கு முடியவில்லை என்பது ஒருபுறம். எச்சில் தெறிக்க அவள் இருமுவதை மற்றவர்கள் அசூசையாய்ப் பார்த்தார்கள் என்பது இன்னோர்புறம்.

அழகுவின் வியாபார நிம்மதி ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை. அன்றைக்கு கேட் சாத்தி பஸ் ஒன்று வந்து நின்றதும் -

” கல்லே…கல்லே …வேர்க்கல்லே… ”

பஸ்சுக்கு அந்தப்பக்கம் அசரீரி மாதிரி புதிய குரல். அழகு திடுக்கிட்டு பஸ்ஸை சுற்றிக்கொண்டு அந்தப்பக்கம் போய்ப் பார்த்தான். அவனை மாதிரியே இன்னொரு பொடியன், அவனிடம் ஐம்பது காசு கொடுத்து ஜன்னல் வழியாக ஒருவர் வேர்க்கடலைப் பாக்கெட்டை வாங்கிக் கொண்டிருந்தார்.

அழகுக்குள் ஆத்திரப்புயல். தன்னுடைய காசை இன்னொருவன் தட்டிப் பறிக்கிற உணர்வு. அவன் தோளைத் தொட்டுத் திருப்பினான்.

” யார்ரா நீ ? ”

” ராக்கப்பன். ”

” இங்க எதுக்கு கடலை விக்கறே ? ”

” வித்தா உனக்கென்ன? ”

” நாந்தான் மொதமொதல்லே இங்கே வந்தது. ஒரு மாசமா விக்கறேன் தெரியுமா ? ”

” செட்டியார் கேட்டாண்ட போய் என்னைக் கடலை விக்கச்சொன்னார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். கல்லே… கல்லே… வேர்க்கல்லே… ”

” டேய்… மரியாதையா வேற எங்கயாச்சும் போய்டு. ”

” போவலைன்னா? ”

” கை வெச்சா கன்னம் பிஞ்சுரும். ”

” இந்த மிரட்டலெல்லாம் இளிச்சவாயன் எவன்கிட்டயாச்சும் வெச்சுக்க. என்கிட்ட வாணாம். கல்லே… கல்லே… வேர்க்கல்லே… ”

” தம்பி, இங்க ஒரு பாக்கெட் குடு. ”

ராக்கப்பன் வே. க. பாக்கெட்டை எடுத்துக் கொடுக்க, அழகு உட்சபட்ச கோபத்தைத் தொட்டான். அந்தப் பாக்கெட்டைத் தட்டி விட்டான். ராக்கப்பன் அழகுவின் கூடையைத் தள்ளினான். பாக்கெட்டுகள் சிதறின. அழகு அவன் சட்டைக் காலரைப் பற்றி உலுப்பி, அவன் இவன் கன்னத்தில் அறைந்து, காலை இடறி, இருவரும் தரையில் புரண்டு, புழுதியில் குளித்து…

ரயில் இரைச்சலுடன் கடந்து, கேட் திறந்தது. பஸ்கள் ஒவ்வொன்றாய்க் கரைந்தன. ஒரு பாக்கெட் கூட விற்கவில்லை.

அதற்கப்புறம் ஒரு ஒப்பந்தம் பண்ணிக் கொண்டார்கள். கேட்டுக்கு இந்தப் பக்கம் அழகு விற்பது. அந்தப் பக்கம் ராக்கப்பன். நிலைமை சரியானது. விரோதம் கலைந்து ஸ்நேகம் தழைத்தது. ராக்கப்பனை ராக்கு என்று செல்லமாய்க் கூப்பிட்டான் அழகு. கேட் திறந்திருக்கும் சமயங்களில் மர நிழலில் உட்கார்ந்து இருவரும் ரஜினி படம் பற்றி அரட்டை அடிப்பார்கள்.

அம்மாவின் உடம்பு சற்று மோசமாயிற்று. இருமல் சூரணம் வாங்க ஒன்றோ, இரண்டோ பணம் பத்தலை என்றால் சில சமயம் ராக்கு இரக்கப்பட்டுக் கைமாற்றுத் தருவான்.

இந்தக் கூட்டணி விற்பனைக்கும் விரைவில் இடிவிழுந்தது. புற்றீசல் மாதிரி மேலும் சில வேர்ர்க்கடலை விற்கும் பையன்கள் அங்கே தோன்றினார்கள். அங்கு கேட் சாத்தும் போது வியாபாரம் ஆவது புரிந்து சுந்தராபுரத்துக் கடைக்காரர்கள் எல்லாரும் ஆளுக்கொரு அன்றாடங்காய்ச்சிப் பையனை அனுப்பி வைத்தார்கள்.

இந்த ஜனங்களுக்கு ஒரு பழக்கம். செடி சத்தையை அகற்றி, முள் புதர்களை விலக்கிப் போடும் வரை வேடிக்கை பார்ப்பார்கள். பாதை கிடைத்து விட்டால் மந்தை மந்தையாய்ப் புகுந்து பாதை போட்டவனையே மிதித்துக் கொண்டு முன்னால் போவார்கள்.

அதற்கப்புறம் கேட்டுக்கு இங்குமங்கும் பஸ்கள் வந்து நின்றால் -

” கல்லே…கல்லே… வேர்க்கல்லே… ”

” கல்லே…கல்லே… வேர்க்கல்லே… ”

” கல்லே…கல்லே… வேர்க்கல்லே… ”

ஏகப்பட்ட குரல்கள்.

ஒரு பாக்கெட் விற்பது கூட ஜாக்பாட் விழும் மாதிரி, லாட்டரி அதிர்ஷ்டம் மாதிரி ஆகிப் போனது. அதற்கும் எத்தனை சர்க்கஸ்கள், மாரத்தான்கள்.

அண்ணாச்சி பாக்கெட்டுக்குப் பதினைந்து பைசா என்று கமிஷனை உயர்த்திய பின்னும் அழகு திணறினான். ஒரு நாளைக்கெல்லாம் நாற்பது பாக்கெட் விற்றால் அது பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.! ஒரு பஸ் வந்து நின்றால் எல்லோரும் பறந்தடித்துக் கொண்டு ஓடினார்கள். கடலை வாங்கும் ஆசாமிக்கு எந்த மூஞ்சி பிடிக்கிறதோ அவனுக்கு ஒரு பாக்கெட் விற்கும். ஐம்பது பைசாவுக்கு என்னமாய் அடிதடி!

அஞ்சுக்கும் பத்துக்கும் போராட்ட நாட்கள் நகர்ந்தன.

அன்றைக்கு அழகு ரொம்ப படபடப்பாயிருந்தான். எந்த வண்டி வந்தாலும் பேய்த்தனமாக ஓடிப்போய், “கல்லே…கல்லே…” என்று வெறி பிடித்த மாதிரி கத்தினான். அவன் சத்தத்தையும், வேகத்தையும் பார்க்க ராக்குவுக்கே பயமாய் இருந்தது.

“அளகு, ஏன் ஒரு மாதிரி இருக்கே? வெறி பிடிச்சமாதிரி அலையறே ? ”

” இன்னிக்கு ஒண்ணல்ல ரெண்டல்ல… நூத்தம்பது பாக்கெட்டை நா வித்தாகணும் ராக்கு! ”

” விளையாடறியா? அம்பது வித்தா அதிசயம். தட்டைக் கூடையைத் தூக்கிக்கிட்டு பத்துப் பேராச்சும் சுத்தறோம். வாங்கறவனை விட விக்கறவன் அதிகமா இருப்பான் போலிருக்கு. யாரைக் குத்தஞ் சொல்றது! எல்லாரும் வயத்துப் பசிக்காகப் பறக்கறாங்க. ”

அழகுவின் கண்ணில் கண்ணீர் சுரந்து மின்னியது.

” நா இன்னிக்கு வயத்துப் பசிக்காக விக்கலை ராக்கு. அம்மா இருமல் முத்திப் போய் தர்மாஸ்பத்திரில கிடக்கறாங்க. மருந்து வாங்கணும். ஊசி மருந்து இருவத்தஞ்சு ரூபா. ஆஸ்பத்திரில ஸ்டாக்கு இல்லியாம். அதைப்போட்டாத்தான் அம்மா பிழைக்கும்.”

கேட் சாத்தினார்கள்.

ஒரு பஸ் கேட் அருகே வந்து ஓய பாய்ந்தான் அழகு. ” தம்பி, சாயந்திரத்துக்குள்ள ஊசி மருந்து வாங்கிட்டு வா. ”

” கல்லே…கல்லே… வேர்க்கல்லே… ”

அந்த பஸ்சில் அவ்வளவாய்க் கூட்டமில்லை. வேகமாய் ஒரு ரவுண்ட் அடித்தான். ” அம்மா அழாதம்மா. அண்ணாச்சி கிட்ட ஒரு கூடை நிறைய பாக்கெட் போடச் சொல்லியிருக்கேன். அத்தனையும் வித்துப்புட்டு சாயந்திரம் மருந்தோட வரேன். ” மன்னார்சாமி குறுக்கே வந்து இரண்டு போணியைக்கெடுத்தான்.

ரயில்வே கேட்டுக்கு அந்தப்பக்கம் ஜனமூட்டையை அடைத்துக் கொண்டு இன்னொரு பஸ் விர்ரென வந்து நின்றது.. இன்று ஒரு பஸ்சை விடக்கூடாது.

பஸ்சுக்கு நாலு பாக்கெட். ” சிஸ்டர், ஏழாம் நம்பர் பெட் சனியன் எப்ப இருமலை நிறுத்தும் ? ” சில பையன்கள் அந்த பஸ்சை நோக்கி ஓடினார்கள். முந்து அழகு. விற்பனைக்கு முந்து அழகு. ஊசி மருந்து !

அழகு சுதாரித்து ரயில்கேட்டின் சுழலும் விக்கட் நுழைவில் புகுந்தான்.

மனசு ஆஸ்பத்ரியிலும், உடல் பஸ்சை நோக்கியும் நிலைத்தன. வேறு சிந்தனை இன்றி அந்த பஸ்சையே குறி வைத்து தண்டவாளத்துக்குக் குறுக்கே படுவேகமாய் ஓடினான்.

தட் !

ஒரு துரதிர்ஷ்ட விநாடி அழகுவின் காலை தண்டவாளத்தில் இடறிவிட்டது.

” அம்மா…ஆ…”

தண்டவாளத்தின் நடுவே கடலைப்பாக்கெட்டுகள் சிதற குப்புற விழுந்தான் அழகு.

ரயில் வருவதைக் கூட கவனிக்காமல் குறுக்கே பாய்கிறானே இந்த அழகு ! விரைந்து வரும் ரயிலைப் பார்த்து ராக்குவின் கண்கள் பயத்தில் விரிந்தன.

” அளகு… அளகு… ” – கத்தினான் ராக்கு.

என்ஜின் டிரைவர் விழுந்து கிடக்கும் அழகுவைப் பார்த்து விட்டார். பிரேக்கைப் பிரயோகித்தார். உடனே நிற்குமா அந்த ராட்சத வாகனம். எழ முயலும் அழகுவை ஆவேசமாய் சக்கரங்கள் விழுங்கின. சிவப்புத் தெறிக்க அவனை அரைத்து, அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துக் கொண்டு போய் நின்றது நீளமான அந்த எக்ஸ்பிரஸ் ரயில்.

ரத்தத் துகள்களாய்க் கிடக்கும் அழகுவைச் சுற்றி, நிமிஷத்தில் கும்பல் கூடியது. ராக்கு சதைத்துணுக்குகளைப் பார்த்து தலை தலையாய் அடித்துக் கொண்டு அழுதான்.

ஏறக்குறைய அதே விநாடி -

ரயிலின் கடைசி கம்பார்ட்மென்ட்களில் குரல்கள்.

” கல்லே…கல்லே… வேர்க்கல்லே. ”

” என்னாச்சு தம்பி? ஏன் ரயில் நின்னுருச்சு? ”

” ஆக்ஸிடெண்ட்டு. ஒரு பையன் ரயில்ல அடிபட்டு செத்துட்டான். கல்லே…கல்லே… வேர்க்கல்லே. “

சென்ஷி

unread,
May 31, 2010, 3:56:13 AM5/31/10
to panb...@googlegroups.com

அகல்யை

புதுமைப்பித்தன்

வேதகாலம்

சிந்து நதி தீரத்திலே…

இப்பொழுதுபோல் அல்ல. செழித்த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் என்ற ஹோதாவில் விளங்கும் – அதில் அரசன் இருப்பான் – அதனால் அது தலைநகர்.

இவ்வளவும் தாண்டி ஜன சஞ்சாரமே இல்லாத பாகம். சிந்து நதி ஹிமயத்தின் மடியைவிட்டுச் சமவெளிக்கு வர ஆரம்பிக்கும் இடம். மரமும் கொடியும் மனிதனின் வெற்றியைக் காணாதவை. சிந்துவின் கன்னிப் பருவம் – நதி களங்கமற்ற உள்ளத்தைப்போல் பாறைகளைத் தழுவிச் சுழித்துச் சிரித்துச் சென்றது.

அங்கே கௌதமருடைய வாசஸ்தலம் சற்று காட்டின் உள்ளே தள்ளி. சிந்துவின் கரைக்கும் குடிசைக்கும் கூப்பிடு தூரம்.

குடிசைக்குப் பக்கத்தில் சிறிது தள்ளி வடக்குப் புறமாகச் செழித்த புல்வெளி. தூரத்திலே ஹிமவானின் பனிச் சிகரம், இவர்களுக்கு எப்பொழுதும் தீங்கு வராமல் கவனிப்பதுபோல் இருந்தது.

கௌதமர் அந்தணர், அதாவது வித்தைக்கும் கலைக்கும் தமது வாழ்க்கையை அர்ப்பணம் செய்துவிட்டவர். அது ஒரு காலம். வாலிபர்களுக்கு – சிறுவர்களுக்கு – வித்தையைப் போதிப்பதில் ஒரு பிரேமை. அதெல்லாம் பழைய கதை.

அப்பொழுது, இந்த அகண்ட உலகத்தில் உள்ள சராசரங்களின் அழகு, அதன் காரணம், அதன் மூலம் இவையெல்லாவற்றையும் அறிய ஓர் ஆர்வம். அதனால்தான் இந்தத் தனியிடத்தில் வந்து நிம்மதியாகத் தமது ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளத் தனித்திருக்கிறார். சமூகத்தைவிட்டு விலகித் தமது பத்தினியுடன் இங்கு வசித்து வருகிறார்.

அவருக்கு வயது முப்பது. கறுத்து அடர்ந்த தாடி, அகன்று பிரகாசமான ஒளிவிடும் கண்கள், மெல்லிய உதடு, பரந்து விரிந்து திரண்ட மார்பு, ஒடுங்கிய வயிறு, எல்லாவற்றிலும் இயற்கையின் கனிவு பொங்கியது. மிருக அழகன்று – ஆளை மயக்காது, வசீகரிக்கும். அந்தக் கண்களில், அந்த உதடுகளில் ஒரு தெய்வீக ஒளி – தேஜஸ் – உள்ளத்தின் சாந்தியை எடுத்துக் காட்டிற்று.

அவர் மனைவி – அவள் தான் அகல்யை. அவர் ஆணுக்கு இலட்சியம் என்றால், இவள் பெண் குலத்திற்கு வெற்றி. மருண்ட பார்வை, அவரைக் காணுந்தோறும் காதல் பொங்கும் கண்கள். அவரைத் தனது உள்ளத்தில் மட்டும் வைத்துவிடவில்லை. அவளது ஒவ்வொரு செயலும் அவரது இன்பத்திற்காகவே. அதிலே அவளுக்கு ஓர் இன்பம்.

கௌதமரும் இவளைக் காதலிக்கிறார். ஆனால் அவர் காதல் காட்டாறு போன்றதன்று – சாந்தியிலே பிறந்தது. அவர் மனம் இடியச் செய்ய ஒரு லேசான வழி, அவள் மேல் ஒரு துரும்பை எடுத்து வீசினாலும் போதும். அவருடைய காதலின் உயர்வை அவள் அறிந்திருந்தாள். அவள் கற்புள்ளவளாக இருந்ததில் ஆச்சரியமில்லை. அவர் அவளுடைய இலட்சியம். அதனால், அவள் கற்புடன் இருந்ததில் என்ன அதிசயம்.

ஒரு நாள் சாயங்காலம். சூரியன் இன்னும் அஸ்தமிக்கவில்லை. தூரத்திலிருக்கும் பனி மலைகள் செந்தழலாகக் கனிந்தன. அகல்யை குடிசைக்குள்ளிருந்து குடத்தை இடுப்பில் ஏந்தியவண்ணம் வெளிமுற்றத்திற்கு வருகிறாள். அந்த வெளிமுற்றத்தில் கௌதமர் ஒரு கிரந்தத்தை வாசித்துக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் வந்து நிற்கிறாள்.

கௌதமருக்குச் சற்று நேரம் அவள் இருப்பது தெரியாது. கிரந்தத்தில் இருந்த லயிப்பு அப்படி. பிறகு வந்திருக்கிறது தெரிந்தது. அன்பு கனிந்த பார்வையுடன் சிரித்துக்கொண்டு, “என்ன அகல்யா, நேரமாகிவிட்டதா? குளிக்கவா? நான் கொஞ்சங் கழித்து வருகிறேன். கிரந்தத்தில் கொஞ்சந்தான் பாக்கியிருக்கிறது!” என்றார்.

குடத்தைக் கீழே வைத்துவிட்டு அவர் தலையை மார்புடன் சேர்த்தணைக்கிறாள். நெற்றியில் அவள் அதரங்கள் படிந்து அப்படியே சற்று நேரம் இருக்கின்றன.

“நான் வருகிறேன்!” என்று குடத்தை எடுத்துக் கொண்டு நதிக்குச் செல்லுகிறாள். அவள் மனத்தில் ஓர் ஏமாற்றம் – இத்தனை நேரம் எதிர்பார்த்திருந்தது நடக்காததினால் – கணவருடன் சிரித்தும் குதூகலமாக விளையாடிக் கொண்டும் நதிக்குச் செல்ல முடியாமையினால். அவர்மீது கோபமும் இல்லை.

அவள் வெகு வேகமாக நதியை அடைகிறாள். உடைகளைத் துவைப்பது, குடத்தைத் தேய்ப்பது – எல்லாம் வெகு துரிதமாக நடக்கின்றன.

உடைகளையெல்லாம் களைந்து பாறையின் மீது வைத்துவிட்டு நீரில் குதிக்கிறாள். அந்தக் குளிர்ந்த நீரில் நீந்தி விளையாடுவதில் என்ன இன்பமோ! ஆழமான சிந்துவில் முக்குளிப்பதும், மறுபடியும் பாறையில் ஏறிக் குதித்து நீந்துவதுமாக அதிலேயே லயித்துப் போய் விட்டாள்.

அப்பொழுது எங்கிருந்தோ இந்திரன் எதிர்க் கரையில் வந்தான். அகல்யையின் கட்டழகு அவனைக் கல்லாகச் சமைத்தது; வைத்த கண் மாறாமல் பார்க்கும்படி செய்தது. அவளை எப்படியேனும் அடைய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு, அவளை நெருங்க ஒரு பாறையில் இறங்கினான்.

இந்தச் சப்தம் அகல்யையின் காதில் விழுகிறது.

திரும்பிப் பார்க்கிறாள். ஓர் ஆடவன்! நேர்மையற்ற மிருக உணர்ச்சி பொருந்திய முகம்! அழகுதான்! நெருங்குவதின் அர்த்தம் அவளுக்குப் பட்டது. அப்படியே வெறித்து ஒரு கோபப் பார்வை பார்க்கிறாள்.

இந்திரன் நடுநடுங்கி அப்படியே நின்றுவிட்டான். இப்படி எதிர்பார்க்கவில்லை அவன்.

அகல்யா ஒரு பாறையின் பக்கத்தில் மறைந்து உடைகளைச் சீக்கிரம் அணிந்துகொண்டு, குடத்தில் தண்ணீருடன் வெகு வேகமாகக் கரையேறிச் சென்றுவிடுகிறாள்.

இந்திரன் மனத்தில் அவளை அடையவேண்டும், அடையவேண்டும் என்ற ஒரே எண்ணந்தான். அவள் யார், தான் செய்யப் புகுந்தது என்ன என்று எண்ண மனத்தில் இடமில்லை.

பைத்தியம் பிடித்தவள் போல் ஒரே வெறித்த பார்வையுடன் சென்று கொண்டிருக்கும் அவள் எதிரே கௌதமர் வருகிறார். குடம் கையிலிருந்து நழுவுகிறது. ஒரே ஓட்டமாக ஓடி அவர் மார்பில் விழுந்து கோவென்று கதறுகிறாள்.

கௌதமர் அவளையணைத்தவண்ணம், “என்ன? என்ன?” என்றார்.

தேம்பிக்கொண்டே நடந்ததைத் தெரிவிக்கிறாள். அவளைத் தேற்றிக் குடிசைக்குக் கொண்டுவிட வேண்டியிருந்தது. அவளது உயர்ந்த காதல், அதன் முடிவாக, அதன் சிகரமாக இருக்கும் அவள் கற்பு, அவருக்கு ஒரு புதிய உண்மையைத் தெரிவிக்கிறது; அதுதான் மற்ற ஆண்களிடம் மனத்திலே ஏற்படும் அருவருப்பு.

இந்திரன் ஒரே தடவையில் தனது எண்ணம் ஈடேறச் சமயம் எதிர்ப்பார்த்திருந்தான்.

இதெல்லாம் அகல்யைக்குத் தெரியாது. ஏதோ ஒரு பெருங்குற்றத்தை, மனத்திற்கு ஒவ்வாத குற்றத்தைச் செய்ததுபோல் அவள் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

கௌதமருடைய அன்பும் காதலும் அவளைத் தேற்றின. அன்று அவர்கள் தூங்க நெடுநேரம் சென்றது.

“உனக்காக எல்லாரும் குருடராக இருக்க முடியுமா?” என்றார் கௌதமர்.

“ஆனால் ஆந்தையாகவா விழிக்க வேண்டும்?” என்றாள் அகல்யை.

இந்திரன், தனது பைசாச உணர்ச்சியைப் பூர்த்தி செய்துகொள்ள எப்பொழுது சமயம் கிடைக்கும் என்று சுற்றி வருகிறான்.

விடியற்காலம் என்று கௌதமரை நினைக்கும்படி செய்து அவரை அப்புறப்படுத்தி விட்டால் ஆசை பூர்த்தியாகும்.

நடு நிசி, சந்திரனற்ற வானம், வெள்ளி மட்டும் கொஞ்சம் பிரகாசமாக, விடியற்காலம் என்று நினைக்கும்படி மங்கிய வெளிச்சத்தைத் தருகிறது. இந்திரன் கோழி மாதிரிக் கூவுகிறான்.

குடிசையினுள் அகல்யாவைத் தழுவியும் தழுவாமலும் உறங்குகிறார் கௌதமர். அவருக்கு எப்பொழுதும் பிசாசுத் தூக்கம் கிடையாது. கோழியின் குரல் கேட்டதும் காலைக் கடனைக் கழிக்க எழுந்து சிந்துக் கரைக்குச் செல்லுகிறார்.

அன்று நெடுநேரமாகத் தூங்காததினால் அகல்யைக்கு அயர்ந்த தூக்கம்.

பாதிக் கனவு, பாதித் தூக்கம். கணவனுடன் கொஞ்சித் தழுவி அவருடனேயே இருப்பதுபோல் கனவு. இந்திரன் பூனை போல மெதுவாக உள்ளே வருகிறான். ஆடைகள் சற்று நெகிழ்ந்து உறங்கும் அபலையைப் பார்க்கிறான்.

ஒரு மிருகத்தின் வேட்கை அன்று பூர்த்தியாயிற்று.

பாதிக் கனவு – உலகத்திலிருந்த அகல்யை விழிக்கவில்லை. கணவர் என்று நினைத்துத் தழுவுகிறாள். ஓரளவு இயற்கையின் வெற்றி.

கணவரை முத்தமிடக் கண்களை விழிக்கிறாள்.

ஐயோ, அந்தச் சண்டாளன்! எல்லாம் சுழலுகிறது. ஒன்றும் அர்த்தமாகவில்லை. சொந்த வீட்டிற்குள் இவன் எப்படி…?

பக்கத்திலிருந்த தடியால் அவன் மண்டையில் அடித்து உதறித் தள்ளிவிட்டு, ஒரு புறம் கிடந்து புரண்டு துடிக்கிறாள்.

இந்திரனுக்குச் சுய அறிவு வருகிறது. தன் பைத்தியக்காரத்தனம், தன் மிருகத்தனமான கொடுமை!…அவன் உள்ளமே வெடித்துவிடும் போல் இருக்கிறது!

நதிக்குச் சென்ற கௌதமர் இன்னும் விடியாததைக் கண்டு, ஏதோ சூது நடந்திருக்கிறதென்று விரைந்து வருகிறார்.

உள்ளே சரேலென்று நுழைந்ததும், அகல்யை கிடக்கும் கோலத்தில், காரியம் மிஞ்சிவிட்டது என்று அறிந்தார். உடனே தம் மனைவியை வாரி எடுக்கிறார். தீயில் பட்ட புழுப்போல் அவள் உடல் துடித்துப் பதறுகிறது.

குற்றத்தின் பாரமே உருவாக இந்திரன் நிற்கிறான். “அப்பா இந்திரா! உலகத்துப் பெண்களைச் சற்று சகோதரிகளாக நினைக்கக் கூடாதா?”

“கண்ணே அகல்யா, அந்தச் சமயத்தில் உனது உடலுமா உணர்ச்சியற்ற கல்லாய்ச் சமைந்துவிட்டது?” என்று அவள் தலையைத் தடவிக் கொடுக்கிறார்.

அவர் மனத்தில் ஒரு சாந்தி.

ஒரு புதிய உண்மை:

‘உணர்ச்சி தேவனையும் மிருகமாக்கிவிடுகிறது. மனத் தூய்மையில்தான் கற்பு. சந்தர்ப்பத்தால் உடல் களங்கமானால் அபலை என்ன செய்ய முடியும்?’

மௌனம்.

“இந்திரா! போய் வா!” என்றார் கௌதமர். அப்பொழுதும் அவர் மனத்தின் சாந்தி தெளிவாகத் தெரிந்தது.

அகல்யை?

அவள் உள்ளத்தில் நிகழ்ந்த ஊழியின் இறுதிக் கூத்து கணவனின் சாந்திக்குப் பகைப்புலமாக நின்றது.

சென்ஷி

unread,
May 31, 2010, 3:59:26 AM5/31/10
to panb...@googlegroups.com

மனிதன் 2.0

ரா.கிரிதரன்

இதைத் தனியாக பல வருடங்களுக்கு முன்னர் எழுதினேன். நேரில் பார்த்த சம்பவம். என் கண் முன்னாலேயே நடந்தது. ஊசி குத்திய தழும்பு போல் பலவருடத்திற்குப் பிறகும் மறையவில்லை. ஆனால், இதைச் சொல்லும் போது எனக்கு புதிதாக இருந்தால் என் நினைவுகளுக்குத் தோல்விதான். படித்துப் பார்க்கலாமென தோன்றியது.சில வேலைகளை என்னால் தனியாகச் செய்ய முடியும். துணைக்கு யாராவது இருந்தால் அனுசரணையாக இருக்கும்.

என்ன போச்சு? நீங்களும் என்னுடன் படிக்க வாருங்கள். அம்பாள் சந்நிதி நந்திதேவர் நடுவில் நிற்பது போல பல கற்பனைகள் குறுக்கே வரும். அதையெல்லாம் தாண்டினால் மட்டுமே என் கதையின் உண்மை புரியும். கற்பனையில் எல்லாவிதமான மண்டபங்களும் வரும். நீளமான சங்கிலி மண்டபம்;அதனுள் இருக்கும் துர்கை, முருகன், ஐயப்பன் சிலைகள், தூண்கள், இருட்டுகள்.

ooOoo

god & adamஒரு புதன் கிழமை ,உழைப்பவர்கள் சளைக்காமல் வேலை செய்துகொண்டிருக்கும் மதிய நேரம். அப்போது, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் அமைதியான நூலகத்தில் என்னென்ன நடக்கும்?

என்னுடன் நீங்களும் சேர்ந்து நுழைகிறீர்கள். நூலகத்தில் வேலைப் பார்பவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் பொழுதைக் கழிக்க வரும் பிரகஸ்பதிகள் தான்.உங்களுக்கு எதிரில் சோற்று மடம் போல் வரிசையாக கணிணி தலைகள் வெறித்துக்கொண்டிருக்கின்றன. நம் பக்கம் முதுகைக் காட்டியபடி பல வடிவங்களில் மக்கள் கணிணியில் மேய்ந்துகொண்டிருக்கிறார்கள்.அதை நோக்கிச் செல்லும் உங்கள் கைகளை பிடித்து இழுக்கிறேன். `நண்பா தேவையில்லை, எல்லா இடங்களையும் பார்த்து விட்டு வருவோம்`

இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவீங்களா என்ன? கையை உதறி வேறிடம் பார்க்க எவ்வளவு நேரமாகும்? அதனால், உங்கள் ஆர்வம் குறையாமலிருக்க, வேகவேகமாக முதல் மாடிக்குள் ஒரு சின்ன கொடி மரத்தைக் கடந்து உள்ளே நுழைகிறோம். சுவாமி சந்நிதி மாதிரி உயரமான விதானம். நீங்கள் தலை கீழே விழும்வரை வளைந்துப் பார்க்கிறீர்கள் – `ஏய், என்ன பண்ணற? அங்க பாரு`. நான் காட்டிய இடத்தில் கருவறைப் போல இருட்டான இரு அறைகள் இருந்தன.

அர்த்த மண்டபமா என நீங்கள் கேட்பதற்கு முன் இழுத்துக்கொண்டு உள்ளே விரைகிறேன். விட்டத்தை இடிக்குமாறு ஓங்கி நிற்கும் புத்தர் சிலை. யப்பா என நீங்கள் வியப்பதற்கு முன், நான் `எவ்வளவு பூந்தொட்டிகள், எல்லா நிறத்திலும் பூக்கள், அந்த வானவில்லுக்கு நடுவே ஒருவன் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கிறானே.யாரவன்?`  எனக் கேட்க.`பெரிய அரசன். வில்லையும்,கடத்தையும் துறந்து சில கண்ணீர் துளிகளால் மண்ணுக்கு உரம் சேர்க்கிறான்` என உங்கள் கையை இருக்கமாகப் பிடித்திருக்கும் கிழவர் கூறுகிறார். காட்சிகள் இப்படி மாறியதை நாம் உணர்வதற்குள் மூவரையும் மத யானைப் போல் இழுத்துக்கொண்டு அந்த சந்நிதிக்குள் நுழைகிறார். அவர் யாரென்றோ,அங்கிருந்த பூக்கள் எங்கே எனக் கேட்கக்கூட நேரமில்லாமல் வேகவேகமாகத் பல படிகெட்டுகளைத் தாண்டிச் செல்கிறோம்.

கீழ் தளத்தில் கணிணியின் முன் உட்கார்ந்திருந்தவர் இந்த முதியவர் என ஞாபகம் வந்தது. உங்களிடம் சொல்லவில்லை.

உங்களுக்கும் கேட்க நேரமில்லை. கணம் தோறும் மாறிக்கொண்டிருக்கும் காட்சிகளுக்குள் காலடி வைக்கிறோம். இது எங்கே முடியுமெனத் தெரியவில்லை. நீங்கள் திடீரென நின்று – பழைய ஷெர்லாக் ஹோம்ஸ் போல நீளமான உடையணிந்த இருவருக்கு வழிவிடுகிறீர்கள். அவர்கள் கைகளிளும் பல நிறப் பூக்கள் தோரணமாய் இருக்கிறது. தூரத்தில் நிற்கும் குதிரையில் இருந்த ஒரு சவப் பெட்டியின் மேல் அதை வைத்தபடி, பழைய கால கனவான்கள் போல் குதிரையை ஓட்டிச் செல்கிறார்கள்.

நாமிருவரும் இந்த காட்சியை பற்றி பேச வாயெடுக்கும்போது நம் சந்நிதியின் இசைத் தூண்களில் சத்தம் கேட்கிறது. `திருநாவுக்கரசர்..` என மெள்ள முணுமுணுக்கிறீர்கள்.

ஒன்று கொலாம் அவர்சிந்தை உயர்வரை

ஒன்று கொலாம் உயரும்மதி சூடுவர்

ஒன்று கொலாம் இடுவெண்டலை கையது

ஒன்று கொலாம் அவர் ஊர்வதுதானே

நம் முன் பல சடலங்கள் சடசடவென திருநாவுக்கரவுப் போல் எழுந்தன.`என் இறந்த மகன் கிடைத்தான்` எனக் சந்தோஷக் கூக்குரல் சந்நிதியின் தூண்களில் அறைந்தது.

உங்களுக்கு மயக்கம் வருவது போலிருக்க, என் கைகளை வலிக்கும்படி அழுத்தமாகப் பிடித்தீர்கள். `இன்னும் பார்க்க வேண்டியது நிறைய. சீக்கிரம்..சீக்கிரம்` என கிழவர் அவசரப்படுத்த வலியைப் பொருட்படுத்தாது ஓடுகிறோம்.

ஓடும் வழியிலெல்லாம் விதவிதமான மனிதர்கள். நகரங்களும் மண்ணுக்குள் புதைந்து, பல நிலங்கள் சேர்ந்து மாறியபடியே இருக்கும் காட்சி , சாலைப் போக்குவரத்துப்போல் குழப்பமாக இருக்கின்றது. நாமிருவரும் பீதியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறோம்.கிழவருடன் அவர் கூட்டாளிகள் இருவர் சேர்ந்து கொள்கின்றனர்.

வழியெங்கும் புன்னை மரங்கள். ஐவரும் எந்த மரத்தின் மீதும் இடிக்காதபடி ஓடுகிறோம். எங்கு போகிறோமென நீங்கள் கேட்க, மற்ற மூவரும் வெவ்வேறு இடங்களைச் சொல்கிறார்கள். அழுவது போல் விகாரமாய் உங்கள் முகம் மாறுகிறது. `ஏன் இப்படி`என நான் கேட்க, என் முகத்தைப் பார்த்து பயப்படுவதாக நீங்கள் சொல்கிறீர்கள்.

“ஃப்ரான்க்ஸ் என்பவர்களால் உருவாக்கப்பட்டது பிரான்ஸ். ஸ்விஸிலிருந்து, ஸ்பெயின் நாட்டில் தென்கோடிவரை சார்ல்ஸ் மாகானின் ஆணைக்கு கட்டுப்பட்டது. சின்னப் பகுதிகளாகப் பிரிக்க முடியும், ஆனால் ஒவ்வொரு நிலமும் தனித்து தழைக்கக்கூடிய வளமிருக்கவேண்டும்”- பலர் கூட்டமாய் நின்று, நடுவில் நிற்கும் ஒருவனை பயபக்தியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த இடமே இருட்டாக இருந்தாலும், அனைவரின் முகத்திலும் திட்டு திட்டாய் அசைந்து ஆடியபடி இருந்த தீச்சட்டியின் வெளிச்சம் போதுமானதாக இருந்தது.

நடுவில் நிற்பவன் முகத்தில் ஜ்வாலை. அவனருகே இருந்த குள்ளமான விலங்குபோல் ஒன்று எட்டி நம்மைப் பார்த்தது. நாம் வேகத்தை அதிகப்படுத்தினோம்.வழியில், குனிந்து வயல்களில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த யாரும் நம் சத்தத்தைக் கேட்டு திரும்பவில்லை. வேலையில் மும்முரமாக இருந்தனர். அவசரகதியில் ஒரு திருப்பத்தில் பெரிய கதவை அடைந்தோம்.

முடிவில்லாத வானத்தின் உச்சி வரை அந்த கதவு வளர்ந்து கொண்டிருந்தது. அதன் முகம் முழுதும் செடிகள். முழுவதும் பச்சையால் செய்ததுபோன்ற கதவு. பலமாக அடித்த காற்றில் கதவிலிருந்த இலைகள் தங்களில் வயதானவர்களைக் கீழே தள்ளிக்கொண்டிருந்தன.

உங்கள் முகத்தில் அவை விழுகின்றன. பதறியபடி அவற்றை துடைத்துப் போடுகிறீர்கள். ஏதேனும் அரிப்பு வந்துவிடுமோ என வேகவேகமாய் மூக்கு, தாடை, கண்கள் என தேய்த்துக்கொள்கிறீர்கள்.

கதவைத் தாண்டு நுழைந்தால், விடியலைப் போல் மேகங்களில் சூரியன் பிரகாசிக்கத் தொடங்கியிருந்தான். உங்கள் முகத்தை அப்போதுதான் தெளிவாகப் பார்க்கிறேன். முழுவதும் களைப்பு.பீதி. அழகாக பொழுது புலர்வது போல் பறவைகளின் சத்தங்களும், பலர் ஒன்றாக எழுவதைப் போன்ற காட்சிகளும் தென்படுகின்றன. நம் சங்கிலியில் மேலும் பலர் கூடியிருக்கின்றனர்.

உங்களால் நம் சங்கிலியின் கடைசியில் இருப்பவரைப் பார்க்க முடியவில்லை. `இருபது பேர் இருக்கலாம்` என நான் கூறியதைப் பொருட்படுத்தாது, `என்ன அர்த்தம்` என கண்களால் நீங்கள் கேட்பது புரிகிறது. பதில் தெரியவில்லை.

நீரோட்டத்தில் மிதக்கும் இலையிடம் அது சேருமிடத்தை விசாரிக்க முடியுமா? தண்ணீரில் நனைந்து, எதிர்ப்படும் மரக்கிளைகளில் மாட்டியபடி சென்றுகொண்டேயிருக்க வேண்டியதுதான் அதன் வேலை. கீழுள்ள பாசியில் சிக்கினால் மட்டுமே சற்று நேரம் வேடிக்கைப் பார்க்க முடியும்.

நாம் ஓடியபடி ஒரு சிறு தோட்டத்தை அடைகிறோம். புல்வெளியெங்கும் பைத்தியங்கள் உட்கார்ந்திருக்கின்றனர்.எல்லோரின் கால்களும் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளன.பல நிற மனிதர்கள். அவர்களில் சிலரை மட்டும் இழுத்து எரிந்துகொண்டிருக்கும் கிணற்றில் தள்ளுகிறார்கள். அப்படி பிடிக்கப்பட்ட சிலர் தங்கள் ஆடைகள் கிழிய ஓடுகிறார்கள். தங்கள் சங்கிலியைப் பிரிக்க முயல்கிறார்கள்.ரத்தம் கசிகிறது. நம்மை நோக்கியும் சிலர் வருகின்றனர். ஆனால் நம்மிடமிருந்து சிறிது தூரத்தில் நின்று தங்களைக் காப்பாற்றுமாறு சைகை காட்டுகிறார்கள்.

நாம் ஓடிக்கொண்டேயிருக்கிறோம். வரலாற்றை கடக்கும் வேகம்.

திரும்பவும் மலர்கள் நிறைந்த அறைக்குள் நுழைகிறோம். ஏனோ, அங்கிருந்த புத்தர் சிலை விகாரமாக மாறிவருகிறது. உடம்பின் பல இடங்களில் காயம், சீழ், ரத்தம் என ஏதேதோ வழிந்து கொண்டிருக்கின்றன. கீழே மண்டியிட்ட மன்னன் கதறுகின்றான். சரியாக நமக்குப் புரியவில்லை. ஆனால் தன் பாவத்துக்காக மட்டும் அவர் மண்டியிடவில்லை என நமக்குத் தெரிகிறது.அதற்கு இவ்வளவு பீடிகை தேவையில்லை.

அவனோ, அழிக்கப்படும் ஒவ்வொரு மனிதனுக்காகவும் மண்றாடிக்கொண்டிருக்கிறான்.

உங்களால் அதைப் பார்க்க முடியவில்லை. தலையை வேறு பக்கம் திருப்பி அழுதுகொண்டிருக்கிறீர்கள். நம் வரிசையை நான் எட்டிப் பார்க்கிறேன். உண்மையில், நம்மைத் தவிர நடப்பவைபற்றி யாருமே கவலைப்படவில்லை.

உங்கள் உடம்பு நடுங்கிக்கொண்டிருக்கிறது. கண்களில் ஈரத்திற்குப் பஞ்சமில்லை.

`நிலத்தில் வீழும் ரத்தங்களுக்கு நாங்கள் மட்டும் காரணமா? புதைக்கப்பட்ட இடத்திலிருக்கும் வேர்களிடம் கேட்டுப்பாருங்கள், துண்டான கணவனின் தலையைப் பெறும் ஒவ்வொரு வீரனின் மனைவியையும் கேட்டுப்பாருங்கள். சாவு பசியுடன் அலையும் பூதம் என அந்த மனைவி கூறுவாள். மகாராஜாவே, சாவுக்கு காரணங்கள் முக்கியமல்ல.அதற்கு வேண்டியது வெற்றிடம். இந்த உலகை அப்படி மாற்றவே இங்கே யுத்தங்கள் நடக்கின்றன. யுத்தங்களுக்குப் பிறகு யார் ஜீவித்திருப்பார்கள்? அதைப் பற்றி கவலை எதற்கு?`

புத்தரின் முக வடிவிலிருந்து மாறிக்கொண்டிருந்த அந்த சிலை கர்ஜனையுடன் பேசிக்கொண்டேயிருந்தது. நம்மால் கேட்க முடியவில்லை.

`இங்கிருந்து போய்விடலாம். ம்ம்..சீக்கிரம்` என அந்த கிழவரைப் பார்த்து நான் கத்துகிறேன். என் கையை பிடித்தபடி நீங்கள் மண்டியிட்டு கிடக்கிறீர்கள். உங்கள் முதுகு துண்டாக்கப்பட்ட கோழியைப் போல துடித்துகொண்டிருக்கிறது. மிகக் கொடுமையான துயரத்தின் விளிம்பில் போராடிக்கொண்டிருக்கிறீர்கள்.

`என்ன இன்னும் எவ்வளவு நேரம் இங்கே நிற்கப்போகிறோம்..` கத்திக்கொண்டே நம் சங்கிலியைப் பார்க்கின்றேன்.

அங்கு யாருமேயில்லை. காற்றில் என் விரல்கள் கிழவரின் கைகளை தேடித் துழாவுகின்றன.

வீறிட்டலறியபடி நீங்கள் எழுந்து ஓடப் பார்க்கிறீர்கள்.உங்களின் வெறி அதிகரித்தபடியிருக்கிறது. ஆனாலும், என் கையை விடாமல் திமிறிக்கொண்டிருக்கிறீர்கள்.

நான் மெதுவாக தூரிகை போல் நின்றிருந்த விட்டத்தைப் பார்க்கிறேன். மைக்கேல் ஆஞ்ஞெல்லோவின் ஓவியமான `க்ரியேஷன் ஆஃப் மேன்` படம் தொங்கிக்கொண்டிருக்கிறது. சட்டென சிஸ்டைன் தேவாலயத்திற்கு வந்தது போல் உணர்கிறேன்.

அப்போது, அந்த ஓவியத்தில், கடவுளின் விரல் ஆதாமின் விரலைத் தொடாமல் விலகியது.

சென்ஷி

unread,
May 31, 2010, 4:01:22 AM5/31/10
to panb...@googlegroups.com

நதிக்கரையில்

ஜெயமோகன்

ரியும் வெளியில் புகைந்தபடி வெளிறிக் கிடந்தது கங்கை. கரையோரத்துச் சதுப்புகளில் மண்டியிருந்த கோரைகள் காற்றுப்படாமல் அசைவற்று நிற்க நீரின் சிற்றலைகள் கரை மண்ணை வருடும் ஒலிகளில் நதி தனக்குத்தானே மெல்லப்பேசிக்கொண்டிருந்தது. கரையோர மர நிழல்களில் பெரிய அண்டாக்களில் சூதர்கள் சமையல் செய்துகொண்டிருப்பதைச் சற்றுத் தள்ளிப் பாறை மீது அமர்ந்தவனாக பீமன் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

“மகாபலரே உப்புப் பாருங்கள்” என்று ஒருவன் வந்து மர அகப்பையில் சித்ரான்னத்தை நீட்டினான்.

பீமன் நாசியை விடைத்து அந்த ஆவியை முகர்ந்தான்.”சரிதான் நீர்வள்ளிக்கிழங்கு சற்றுத் துவர்ப்பு கண்டிருக்கிறது.”

“என்ன செய்வது.”

“ஓரிரு துண்டுப் பழங்கள் போடு. அடேய் மச்சா, விறகை இழுத்துப் போடு அன்னம் புகைந்து விடப்போகிறது.”

சூதன் ஒருவன் தாழைப்பாயை விரித்துப் பழங்களைக் கழுவ ஆரம்பித்தான்.

பீமன் பெருமூச்சுடன் மீண்டும் நதியைப் பார்த்தான். இனம் புரியாத தவிப்புடன் மனம் தாவித் தாவிச் சென்றது. கோபத்துடன் கைகளை உரசிக் கொண்டு எழுந்தான். அடுப்புப் புகைக்கு அப்பால் பர்ணசாலைகள் நடுங்கின. அங்கிருந்து தருமனின் நெளியும் பிம்பம் வந்தது. பீமன் கோபத்தை திசை மாற்றுபவன் போல மண்ணை உதைத்தான்.

“மந்தா, எதுவரை ஆயிற்று சமையல்?”

“எட்டுவகை சித்ரான்னம். முடிந்து விட்டது. ருசி பார்க்கிறீர்களா?”

“எனக்குப் பசியில்லை” என்றபடி தருமன் பாறை மீது அமர்ந்தான். மருத மரத்தில் சாய்ந்து கைகட்டியபடி பீமன் தழலை உற்றுப்பார்த்தான்.

“மந்தா பெரிய தந்தையார் உடல்நிலை கவலையூட்டுவதாக இருக்கிறது” என்றான் தருமன்.”எனக்கு ஒரு கணம் கூட நிம்மதியில்லை.”

“சூதன் என்ன சொன்னான்?”

“என்ன சொல்வான். தூக்கமில்லாததுதான் காரணம் என்கிறான். எப்படித் தூங்க முடியும்? புத்திர சோகத்தின் தழல்மீது அல்லவா அவர் படுத்திருக்கிறார்.”

“எல்லோருக்கும்தான் துக்கம்” என்றான் பீமன்.”அவர் சற்று மிகைப்படுத்துகிறார். நமது குற்ற உணர்வைத் தொடர்ந்து தூண்டிவிடுவதில்தான் அவருடைய அதிகாரம் இருக்கிறது இப்போது.”

“அநீதியாகப் பேசாதே மந்தா. பர்ணசாலைகளில் இரவும் பகலும் துக்கம் மூடிக்கிடப்பதை நீ பார்க்கவில்லையா? குந்தியோ திரெளபதியோ காந்தாரியோ அனைத்து மாதர் முகங்களும் ஒன்று போல இருக்கின்றன.”

பீமன் கோபம் எழுவதை உணர்ந்தான். அடக்க முயன்று முடியாமல் பெருமூச்சுடன்”நாம் ஏன் இங்கு இருக்க வேண்டும்?” என்றான்.”நமது நாடும் மக்களும் அங்கே காத்திருக்கிறார்கள். வனப்பிரஸ்தம் வந்தவர்கள் அதை அனுபவிக்கட்டுமே. அடேய் மூடா பழங்களை வெந்நீரில் போட்டு தோல் களைந்தாயா? தோலை உன் தந்தையா தின்பான்? அண்ணா, இதையெல்லாமே மூடத்தனம் என்று படுகிறது எனக்கு.”

“நம்மை விட யுயுத்சுவும் தெளமியரும் நன்கு ஆட்சி செய்திருக்கிறார்கள்.”

“அப்படியென்றால் நாட்டை அவர்களுக்குத் தந்து விடலாமே.”

தருமன் பெருமூச்சு விட்டான்.”மந்தா நீ உணவிலும் பார்த்தன் பெண்களிலும் தம்பியர் சோதிடத்திலும் அஸ்வ சாஸ்திரத்திலும் நான் தர்ம நூல்களிலும் தேடுவது என்ன?”

“நான் எதையும் தேடவில்லை.”

“நாம் நம்மைத் தேடுகிறோம். களங்கமில்லாத மனமும் சுதந்திரமான எண்ணங்களும் கொண்ட பழைய பாண்டவர்களை.”

“எனக்கு அலங்காரச் சொற்கள் புரிவதில்லை. அதனால் என்னை எவரும் மன்னனாக எண்ணவில்லை.”

“மந்தா உண்மையைச் சொல். காட்டில் பதினான்கு வருடம் கையில் கிடைத்ததைத் தின்று நீ வாழ்ந்தபோது இருந்த பசியும் ருசியும் இப்போது உள்ளதா?”

பீமன் முகம் சிவந்தது. சட்டென்று எழுந்து”மூடா: தீயை இழு என்றேனே; கேட்டாயா? கருகல் வாடை வருகிறது பார்” என்று சீறியபடி கை ஓங்கி ஒரு அடி எடுத்து வைத்தான்.

சூதன் நடுங்கி அமர்ந்து விட்டான்.”அப்போதே இழுத்துவிட்டேன் பிரபு அப்போதே இழுத்துவிட்டேன் பிரபு…”

பீமன் கைகளை உரசிக் கொண்டான். மத யானையின் தசைகள் போல அவன் தோள்கள் இறுகி விரிந்தன. கூண்டு மிருகம் போலச் சுற்றி வந்தான்.

“மந்தா உன்னைச் சீண்டும் நோக்கம் எனக்கில்லை. சத்யூபரின் சீடர் வந்து தகவல் சொன்னார். பிதாமகர் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர் வருகிறாராம்.”

“எதற்கு?”

“நம்மைப் பார்க்க. வேறு எதற்கு?”

“எஞ்சியவர்களை கணக்கிடவா? வேறு வேலை இல்லை கிழவருக்கு.”

“பித்ரு நிந்தை பாபம் மந்தா.”

பீமன்”இது சுயநிந்தை” என்று உருமினான்.

தருமன் எழுந்தான்.”நான் நீராடச் செல்கிறேன். உடல் எரிகிறது. வருகிறாயா?”

“வருகிறேன்.” தண்ணீர் குளிர்விக்கும் என்று பட்டது பீமனுக்கு. இருவரும் நடந்தனர். பீமன் போகும் வழியில் இருந்த மருத மரத்தை ஓங்கி அடித்தான். அது அதிர்ந்து மலர்களும் சருகுகளும் கொட்டின.

“நாம் இங்கு வந்தது ஒரு வகையில் நல்லது. அங்கு அஸ்தினாபுரியில் அதிகாரமும் போகமும் நம்மைச் சூழ்ந்துள்ளன. நம் ஆன்மாவை அவை மூடிவிடக்கூடும். இங்குத் துயரம் அணிகளின்றி உடைகளின்றி நம்முள் நிற்கிறது. நமது வெற்றியின் விலை என்னவென்று ஒவ்வொரு கணமும் கூறுகிறது.”

“அண்ணா நாம் வேறு எதையாவது பேசுவோமே?”

“எதைப்பற்றிப் பேசினாலும் இந்த இடத்தில் மனம் வேறு எதைப்பற்றியும் எண்ணுவதில்லை மந்தா. பேசாதபோது துக்கம் உள்ளிருந்து மார்பை அடைக்கிறது.”

கங்கை சிதையென எரிந்து கொண்டிருந்தது. நீர் மீது சரிந்து வளர்ந்த பெரிய சாலமரத்தின் வேர்களில் தருமன் அமர்ந்தான். பீமன் நீரில் இறங்கியதும் மக்கிய மரக்கட்டை போல நீரில் அசைவன்றி மிதந்து கிடந்த முதலையொன்று உயிர் பெற்று முன்னகர்ந்தது. அதன் வாலையும் வாயையும் பற்றி பீமன் சுழற்றி எடுத்தான். இம்சையின் எழுச்சியில் உடல் அதிர்ந்தது. அதைச் சுழட்டி வேர் மீது ஓங்கி அறைந்து வளைத்து ஒடித்தான். அவனது பருத்த கரங்களில் முதலை துடித்து நெளிந்து அடங்கியது. அதன் அசைவுகளில் லயத்தில் அவன் மனமும் அடங்கியது. அதை நீரில் வீசினான். நீர் ஒளியுடன் விரிந்து வாய்பெற்று முதலையை விழுங்கியது. அந்திரீயத்தைக் கழட்டி கரைமீது போட்டுவிட்டு நீரில் தாவியிறங்கி மூழ்கினான்.

“இன்னும் ஒரேயொரு நீர்ப்பலி மந்தா. இன்று மாலை அதுவும் முடிந்து விடும். நாளை மதியம் கிளம்பி விடலாம்.”

“நான் அப்படியே தெற்குத் திசை நோக்கிப் பயணம் செய்துவிட்டு வரலாம் என்றிருக்கிறேன்.”

“அர்ச்சுனன் நாகலோகம் போகப்போவதாகச் சொன்னான். நகுலன் காந்தாரத்துப் புரவி விழா ஒன்றுக்குப் போகிறான்.” தருமன் கசப்புடன் சிரித்தான். “நான் தான் எங்கும் போக முடியாது. பாரத வர்ஷத்தின் சக்கரவர்த்தியாயிற்றே.”

பீமன் நீரில் மூழ்கினான். மீன்களின் பளபளப்பில் நீருக்குள் ஆயிரம் விழிகள் உருக்கொண்டன. பார்வைகள் அவனை மொய்க்க ஒரு கணத்தில் மூச்சு மார்பை இறுக்கியது. உதைத்து மேலே வந்தான். கரை நோக்கி வந்தான். நதி அச்சமூட்டியது.

“எதற்கு வருகிறார் வியாசர்?” என்றான் தருமன் உடைகளை மெல்லக்களைந்து விட்டு நீரில் இறங்கியபடி.

“ஏதாவது தர்மவிசாரம் இருக்கும், உங்களுக்கும் பொழுது போகும். முதியவருக்கு சித்ரான்னம் பிடிக்குமா இல்லை குரங்கு உணவுதானா?”

“மந்தா உன் கசப்பு அதர்மத்தை நோக்கிப் போகிறது.”

“எனக்கும் சேர்த்து நீங்கள்தான் தர்மவிசாரம் செய்கிறீர்களே.”

தருமன் பிறகு பேசவில்லை. நீராடி முடித்ததும் “வருகிறாயா” என்றான்.

“எதற்கு?” என்றான் பீமன். “பெண்களின் கண்ணீர் முகங்களைப் பார்க்கவா? அதைவிட இங்கேயே ஏதாவது முதலை முகங்களைப் பார்க்கலாம். நான் உணவை அனுப்புகிறேன்.”

தருமன் குனிந்த தலையுடன் ஒற்றையடிப்பாதையில் செல்வதைப் பார்க்க ஒரு கணம் பரிதாபமும் மறுகணம் துவேஷமும் எழுந்தது.

சித்ரான்னங்கள் உலையிலிருந்து இறங்கிவிட்டிருந்தன. பீமன் தன் வயிற்றுக்குள் இச்சை ஓலமிட்டு எழுவதை உணர்ந்தான். சற்று நேரத்தில் அவன் உடலே அவ்விச்சையாக மாறியது. அவன் உடலின் மறுபகுதியே அந்த அன்னம் என்பது போல. அந்த அன்னத்துடன் தன் அன்னமய உடல் இணையும்போதே அது பூரணமடைய முடியும் என்பது போல். நியதியின் பெரும் தருணம் ஒன்றிற்கு முந்தைய தவிப்பு போல.

பர்ணசாலைகளின் நடுவே செம்மண்ணாலான பெரிய முற்றம் இருந்தது. அதில் பழுத்த இலைகள் பரப்பப்பட்டிருந்தன. நடுவில் வியாசர் அமர்ந்திருந்தார். நீண்ட வெண்ணிறத்தாடி காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தது. கண்கள் அரைவாசி மூடியிருந்தன. எதிரே பாஞ்சாலி அமர்ந்து மெல்லிய குரலில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். சதயூபர் மடிமீது பெரியதொரு சுவடிக்கட்டை விரித்து வைத்து கண்களை இடுக்கியபடிக் கூர்ந்து படித்துக்கொண்டிருந்தார். முற்றத்தில் பரவலாக அனைவரும் அமர்ந்திருப்பது போலிருந்தது. தருமன் கவனமின்றி இலையொன்றை கிழித்தபடி அமர்ந்திருந்தான். திருதராஷ்டிர மன்னர் பார்வையிழந்தவர்களுக்கேயுரிய முறையில் மோவாயை விசித்திரமாகத் திருப்பி ஒலிகளைக் கூர்ந்து கேட்டபடி அமர்ந்திருந்தார். சற்றுத்தள்ளி மடியில் காண்டிபத்துடன் அர்ச்சுனன். பெண்கள் கூட்டத்தின் நடுவே இறுக்கமான முகத்துடன் குந்தி. பதுமைபோல காந்தாரி. வெளிறி மெலிந்த உத்தரை. முற்றதிற்கு வெளியே கூட்டம் கூட்டமாக அந்தப்புரத்தின் பிற பெண்கள்.

பீமனின் வருகை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அது அவன் உடலசைவுகளில் சங்கடத்தைக் கலந்தது. அவன் வியாசரை “வணங்குகிறேன் பிதாமகரே” என்று தெண்டனிட்டான். “முழு ஆயுளுடன் இரு. புகழுடன் இரு. நிறை வாழ்வு உனக்கு அமையட்டும்” என்று வாழ்த்தினார். சதயூபரை வணங்கிவிட்டுப் பின்வரிசையில் போய் அமர்ந்து கொண்டான்.

பாஞ்சாலி கண்ணீரைத் துடைத்துவிட்டு சிவந்த விழிகளுடன் விலகித் தலைகுனிந்து அமர்ந்தாள். அவள் தோள்கள் விம்மல் கொண்டு அசைந்தன.

தருமன் திரும்பிப்பார்த்து “தம்பி, தாத்தா பெருங்காவியம் ஒன்று எழுதியிருக்கிறார்.”

“ஓகோ” என்றான் பீமன்.

“குருஷேத்ர மகாயுத்தத்தை மையமாகக் கொண்டு குருவம்சத்தின் வரலாற்றையும் விருஷ்ணிகுலத்தின் வரலாற்றையும் விரிவாகச் சொல்கிற காவியம் இது” என்றான் தருமன்.

சங்கடமான அமைதி நிலவியது. காட்டுக்குள் காற்று ஒன்று ஊடுருவும் ஒலி கேட்டது.

“தந்தையே” என்று கரடி தட்டிய குரலில் அழைத்தபடி முன்னால் சரிந்தான் திருதராஷ்டிரன். “எனக்குப் புரியவில்லை தந்தையே. என் மூடத்தனத்தை தாங்கள் மன்னிக்க வேண்டும். நான் கல்லாதவன். அகமும் இருண்டவன். இந்தப் பேரழிவின் கதையைத் தாங்கள் ஏன் எழுதவேண்டும்? உங்கள் உதிரத்தில் பிறந்த குழந்தைகள் காமக்குரோதமோகங்களினால் சண்டையிட்டு அழிந்ததை எழுதுவதில் உங்களுக்கு என்ன பெருமை?”

அத்தனைபேர் மனதிலும் எழுந்த வினா அது என்பதை முகங்களில் தெரிந்த தீவிரம் மூலம் பீமன் அறிந்தான்.

வியாசர் பெருமூச்சு விட்டார். “இந்தக் கேள்வியைத்தான் நான் என்னிடம் கடந்த பத்துவருஷங்களாக மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். என் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. எங்கும் நிலைத்திருக்க முடியவில்லை. பாரத வர்ஷமெங்கும் அலைந்தேன். எங்கும் மக்கள் இந்தப் போரைப் பற்றியே பேசுவதைக் கண்டேன். சூதர்கள் பாடல் முழுக்க இப்போர் பரவி வளர்வதை அறிந்தேன். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தப் போர் மானுட குலத்தின் ஞாபகத்தில் என்றென்றும் இருக்கத்தான் போகிறது. ஏன்? இந்தப் போர் ஒவ்வொரு மானுடர் மனத்திலும் நிகழும் போர் அல்லவா?” வியாசர் பெருமூச்சுடன் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

பிறகு தொடர்ந்தார். “வட தண்டகாருண்யத்தில் நான் ஆதிகவி வான்மீகியைச் சந்தித்து பாதம் பணிந்தேன். ஒரு மண்டலம் அவருடன் இருந்தேன். முதிர்ந்து பழுத்து உதிரும் தருவாயில் இருந்தார் அவர். என் இம்சைகளைக் கூறாமலேயே அறிந்து கொண்டார் போலும். ஒரு சைத்ர பெளர்ணமி நாளில் முன்னிரவில் என்னைப் பின் தொடரும்படி ஆணையிட்டு நடந்தார். நிலவின் ஒளியில் தியானத்தில் விரிந்த ரிஷிமனம் போல வழிந்த கங்கையின் கரையை அடைந்தோம். பாறையொன்றில் அமர்ந்து என்னை அமரச்சொன்னார். ஒரு பெரும் தராசு பற்றிக் கூறினார். நீதியும் அநீதியும் கருணையும் கொடூரமும் அழகும் கோரமும் ஆக்கமும் அழிவும் என அதற்கு இரு தட்டுகள். தராசுமுள் எப்போதும் சஞ்சலம் கொண்டது. கங்கையை சுட்டிக்காட்டியபடி ஆதிகவி கூறினார். ‘மகாகாவியம் என்பது கங்கை போல. கங்கோத்ரியில் சிறு குடம் போன்ற ஊற்றிலிருந்து அது உற்பத்தியாகிறது. பல நூறு நதிகளும் ஓடைகளும் கலந்து பெரும் பிரவாகமாக மாறிக் கடலில் கலக்கிறது. முள் சமநிலை குலையும் ஒரு சலனத்தில் பிறக்கும் நதி அது. கடலைச் சேர்கையில்மீண்டும் முள் சமநிலை கொள்கிறது.’ என் மனம் ஒளிமயமாயிற்று. எழுந்து அவர் பாதங்களை வருடினேன். ‘உன் சொற்கள் ஒரு நாளும் அழியாமலிருக்கட்டும்’ என்று என்னை வாழ்த்தினார். தன் எழுத்தாணியை எனக்குத் தந்தார். கண்ணீருடன் அதைப் பெற்றுக்கொண்டேன். மறுநாள் அங்கிருந்து கிளம்பி உத்தரவனத்தை அடைந்து பர்ணசாலையொன்று எழுப்பினேன். இந்த பெருங்காவியத்தை இயற்ற ஆரம்பித்தேன். ஆறு வருடங்களில் இதை எழுதி முடித்தேன். என் வாழ்வின் நோக்கமே இது என்று தெளிவு அடைந்தேன். இது தர்மாதர்மப் போரின் முடிவில்லாத கதை.”

வியாசர் சதயூபரைப் பார்த்தார். அவர் சுவடிகளைத் திரும்பக் கட்டுவதில் ஈடுபட்டிருந்தார். பறவைக்குரல்கள் உரக்க ஒலித்தன என்று தோன்றியது.

வியாசர் தனக்குள் உலவத்தொடங்கி விட்டிருந்தார் போலும். குரல் மங்கியது. “நான் கங்கோத்ரியின் முதல் ஊற்று. பெயரில்லாத பல்லாயிரம் சூதர்கள் மழையின் துளிகள். இந்தக்காவியம் தன் பாதையை தானே கண்டடைந்தபடி முன்னகர்கிறது. அதை ஒரு சமயம் வியப்புடனும் மறுசமயம் எக்களிப்புடனும் மறுசமயம் செயலற்ற வெறுமையுடனும் நான் பார்த்து நின்றேன். கங்கை மீது காற்று பரவும் போது தோன்றும் ஒரு மகத்தான கரம் சுவடிமீது எழுதிச்செல்வதாக. புரியாத மொழியாலான எழுத்துக்களின் அலைவரிசைகள். மறுகணம் தோன்றும் காவியம் கங்கைபோல என்றும் மாறாத அர்த்தத்துடன் ஆழத்துடன் அப்படியே ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் மீது காலத்தின் விரல்கள் புதுப்புதுக் கற்பனைகளைக் கணம்தோறும் எழுதிக் கொண்டிருக்கின்றன. ஆம் நீர்மேல் எழுத்து” வியாசர் சகஜமடைந்தார்.” ஆனால் நீர் அறியும் தன் மீது எழுதப்பட்ட அனைத்தையும் நீரின் பெருவெளி அறியும் சொற்களின் பெருவெளியை. கடல்… ஆம், என்ன விபரீதமான மனப்பயணம். பலசமயம் சொற்கள் தொலைந்து போகின்றன. சொற்களில்லாத கணத்தை நான் அஞ்சுகிறேன். நான் கவிஞன்…”

வியாசன் மீண்டும் தன் மெளனத்திற்குத் திரும்பினான். எங்கும் அவனது மன உத்வேகம் பரவியதுபோல அம்மெளனமும் பரவியது.

தருமன் அந்த மெளனத்தால் பாதிக்கப்படாதவன் போலத் தோன்றினான். “பிதாமகரே தங்கள் காவியத்தில் தர்ம அதர்மப் பாகுபாட்டுக்கு என்ன ஆதாரத்தைக் கொண்டுள்ளீர்கள்?” என்றான்.

வியாசர் சற்று எரிச்சல் அடைந்தவர்போல “மானுட அனுபவத்தைத்தான்” என்றார்.

“என்ன தர்மமும் அதர்மமும்” என்று திடாரென்று திருதராஷ்டிரர் சீறினார். “வெல்பவன் தர்மவான். தோற்பவன் அதர்மி. இதுதான் உலகநீதி. இதுமட்டும்தான். வேண்டாம். பசப்பாதீர்கள் தந்தையே. தாங்கள் இந்தக்காவியத்தை ஏன் எழுதினீர்கள் என்று அறியாத மூடனல்ல நான்.”

“ஏன்?” என்றார் சதயூபர் கோபத்துடன்.

“வேறு எதற்கு? உங்கள் பேரர்கள் மீது வந்த பெரும்பழியைத் துடைக்க. நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் தந்தையே இது பாண்டவர் புகழ்பாடும் பரணி அல்லவா? அவர்கள் செயல்களையெல்லாம் தர்மத்தை நிலைநாட்டும் முயற்சிகளாகத்தானே நீங்கள் சித்தரித்துள்ளீர்கள்? வெற்றியின் பொருட்டு அவர்கள் செய்த அதர்மங்களைப் போர்தந்திரங்களாக சித்தரித்திருக்கிறீர்கள்தானே?”

“குழந்தை.”

“போதும். தருக்கங்களைக் கேட்டு என் காது புளித்துவிட்டது. தர்மங்களும் நியாயங்கலும். என் குழந்தை தொடை உடைபட்டு ரத்தம் வடிய தரைமீது கிடந்தான். அவன் தலைமீது எட்டி உதைத்து… மணிமுடி சூடிய அவன் தலைமீது…”

பீமன் ஒரு கணம் குளிர்ந்துவிட்டான். தருமனின் கண்கள் அவனை சந்தித்து மீண்டன. அவற்றில் குற்றம் சாட்டும் பாவனை. பீமன் மனம் பொங்கியது.

“ஆம் தந்தையே. நான் தான் உமது மகனைக் கொன்றவன். அவன் தலையை உதைத்தவன். உம்மால் முடியுமெனில் என் காலை ஒடியும்.”

திருதராஷ்டிரன் தன் இரு கரங்களாலும் ஓங்கி அடித்தான். பேரொலி அனைவரையும் அதிர வைத்தது. கரிய பேருடலில் மாமிசப்பந்துகள் நெளிந்தன. வன்மம் கொண்ட வனமிருகம் ஒன்று உடலின் இருளுக்கு அப்பாலிருந்து உறுமியது.

பீமனை அந்தச் சவால் எழுச்சி கொள்ள வைத்தது. அவன் குகைச்சிம்மம் எழுந்து பிடரி சிலுப்பியது. “என் குலமகள் ஒற்றையாடையுடன் சபை நடுவே நின்றாள். அந்தப்பாவத்திற்கு பலியாக இன்னும் ஏழு ஜென்மங்களுக்கு அந்த அதமன் தலையைத் தரையில் உதைத்து உருட்டுவேன். என் தலையைக் கிரீடம் அணிசெய்ய வேண்டியதில்லை. காலமுள்ளளவும் அந்தப் பழியே என் அணியாகுக!” பீமன் கைகளை ஓங்கி அறைந்தான். “ஆம், குருவம்சத்தை அழித்தவன் நான்! குலந்தகனாகிய பீமன் நான்!” அவனுள் எக்களிப்பு பொங்கியது. துச்சாதனனின் பச்சைக் குருதி மணம் நாசியில், நாவில், ஆத்மாவின் மென்சரடில் பரவியது. தீமையில் பேரின்பத்தை வைத்த தேவன் எவன்? அவன் மைந்தன் நான்!

“உட்கார் குழந்தை” என்றார் வியாசர். “உன் மனம் எனக்குப் புரிகிறது.”

“உங்களுக்கு எவர் மனமும் புரிவது இல்லை. ரணகளத்துப் பிணங்களில் உங்கள் காவியத்துக்கு கதாபாத்திரங்கள் தேடுகிறீர்கள்” என்றான் அர்ச்சுனன். “தருமமாவது ஒன்றாவது. இங்கு நடந்தது ஒரு தற்கொலை. அகந்தையாலும் பொறாமையாலும் ஒரு வம்சம் தன்னைத்தானே கொன்று கொண்டது. பிணத்துக்கு அணி செய்ய முயலவேண்டாம் பிதாமகரே.”

“குழந்தை, நீ சூதர்களின் பாடல்களைக் கேட்பதுண்டா?”

“அவர்களுக்கென்ன, ஒரு நாணயம் கிடைத்தால் சிகண்டியையே ஆண்மையின் சிகரமாக ஆக்கிவிடுவார்கள்.”

“வெற்றியை வழிபடுபவர்கள் சாமானியர்கள். வென்றவர்கள் செய்ததெல்லாம் தர்மம் என்பார்கள். தோற்றவர்கள் செய்ததெல்லாம் அதர்மம் என்பார்கள். வெற்றியை வழிபடுவது அகந்தையை வழிபடுவதுதான். அனைத்துப் பாவங்களுக்கும் முதற்காரணம் அகந்தை.”

திருதராஷ்டிரர் அலுப்புடன் “உபதேசங்களுக்கு எப்போதும் பஞ்சமில்லை” என்றான்.

வியாசர் அதைக் கேளாதவர்போல “எனது காவியம் வெற்றியைப் பாடுகிறது. அதற்குப்பின்னால் உள்ள தோல்விகளையும் சரிவுகளையும் சொல்கிறது. தோல்விக்குப் பின்னால் உள்ள மகத்துவங்களைப் பாடுகிறது. அன்புக்குள் வாழும் வெறுப்பையும் குரோதத்தின் ஊற்றுமுனையாகிய அன்பை, ஆக்கமும் அழிவும் கூடிமுயங்கும் வாழ்வை என் காவியம் பாடுகிறது. மானுட வாழ்வு எனும் ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாத பிரவாகத்தைப்பற்றியே நான் எழுதியுள்ளேன். அந்தப் பிரவாகத்தை மகாதர்மமே வழிநடத்துகிறது. அம்மகாதர்மத்தின் பிரதிபலிப்பு ஓவ்வொரு துளியிலும் தெரியக்கூடும். என் காவியம் காட்டுவது அதையே.”

“இனி என்னபயன் அதனால்?” என்றான் அர்ச்சுனன். “விதவைகளுக்கும் அனாதைப் பெற்றோர்களுக்கும் உங்கள் தர்மம் என்ன வழிகாட்டப்போகிறது?”

“முடிந்தது குருஷேத்ரப் போர். தர்மாதர்மப் போர் ஒருபோதும் முடிவுறுவதில்லை. நாம் கற்றதை நம் சந்ததியினருக்குப் பயன்படும்படி நாம் அளிக்க வேண்டாமா?”

அர்ச்சுனன் சிரித்தான். “பிதாமகரே இந்த வயதிலும் தாங்கள் நம்பிக்கையுடன் இருப்பது வியப்புத் தருகிறது. நான் அறிந்த பாடம் ஒன்றேயொன்றுதான். மனிதவாழ்வு என்பது ஒரு பெரும் சரிவு. இழந்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கை. அடையும் ஒவ்வொன்றிற்கும் நாம் ஆயிரம் மடங்கு விலை தருகிறோம். நாம் தரும் ஒவ்வொன்றுக்கும் இளமையில் ஆயிரம் பங்கு எடை. நாமோ இளமையைத் தந்து அனுபவங்களைப் பெற்றுக்கொள்கிறோம். இளமை… வயது அணையத் தொடங்குகையில் தொலைதூரத்தில் கனவுவெளியென அது ஒளிபெற்று விரிந்து கிடக்கிறது. ஏக்கம் மிகுந்த கண்ணீருடன் இந்தக் கரையில் நின்றபடி நாம் புண்களையும் உதவாத நாணயங்களையும் எண்ணிக்கொண்டிருக்கிறோம்…” காண்டிவத்தை எடுத்துத் தோளில் மாட்டியபடி அவன் எழுந்தான். “ஆனால் இதை ஒரு வாலிபனுக்கு எந்த முதியவரும் எக்காலத்திலும் சொல்லிப் புரியவைத்துவிட முடியாது. இந்த கங்கையைவிடப் பெரிய காவியம் எழுதினாலும்.” வணங்கியபடி அவன் கிளம்பினான்.”நான் வருகிறேன் பிதாமகரே.”

“தாத்தா காவியத்தை படித்துக்காட்டப் போகிறார் பார்த்தா” என்றான் தருமன்.

“கண்ணனின் சிறு காவியமே என் தலைமீது இரும்புக்கிரீடம் போன்று கனக்கிறது” என்றான் அர்ச்சுனன். “சொற்களுள் விஷம் உள்ளது என்று என்னைவிடத் தெளிவாக அறிந்தவர் யார்?” அர்ச்சுனன் நடந்து மறைந்தான்.

மெல்லப் பீமனும் எழுந்தான்.

“மந்தா நீ எங்கே போகிறாய்?”

“எனக்குப் பொதுவாகவே மானுட மொழி தெளிவாகப் புரிவதில்லை அண்ணா. இங்கு நானிருந்து என்ன பயன்? நதிக்கரைக்குப்போனால் சமையலாவது நடக்கும்.”

“தந்தையே” என்று குந்தி தணிந்த, உறுதியான குரலில் கூறினாள். “தாங்கள் காவியத்தைப் படியுங்கள். என் குழந்தைகள் வழியாக தர்மம் ஆடிய விளையாட்டு என்னவென்று கூறுங்கள்…”

பீமன் கனமாக நடந்தான். திரும்பிப் பார்க்கும்போது குனிந்து அமர்ந்திருக்கும் பாஞ்சாலியின் கண்ணீர் மூக்கில் உருண்டுச் சொட்டுவதைக் கண்டான். அவளுடைய கன்றிப் போன முகம் அவன் வயிற்றைப் பிசைந்தது. மறுகணம் திசையற்றச் சினம் எங்கும் பரவியது. முகங்கள் முகங்களாக பிரக்ஞை பரவி விரிந்தது. துரியோதனன், கர்ணன், கடோத்கஜன், கர்ணன் முகங்கள். முகங்களில் ததும்பும் அலைவெளி. அவற்றிலிருந்து விடுதலை இல்லை. எந்தக் காவிய வரியும் அவ்விடுதலையைத் தரப்போவதில்லை.

கங்கையின் கரையில் கூட்டம் கூட்டமாக நீர்ப்பலி நடந்துகொண்டிருந்தது. பீமன் கனத்த உடல் தரையில் அதிர்ந்து பதிய நடந்தான். பறவைகள் கூடணையும் ஒலி எல்லாத்திசைகளிலும் உரக்கக்கேட்டது. கங்கைக்கு அப்பால் பச்சை நிற வரம்பாகத் தெரிந்த மறுகரையின் மீது சூரியன் செந்நிறவட்டம் இறங்கிக் கொண்டிருந்தது. மேகங்களின் கங்கு அணையத் தொடங்கிவிட்டிருந்தது. நீரில் மந்திரங்கள் மிதந்தன. அலையலையாகச் சாந்தியடையாத ஆத்மாக்கள் தவித்தன. மலர்கள் அலைபாய்ந்து… அலைபாய்ந்து… அலைபாய்ந்து.. இத்தனை அனாதைக் குழந்தைகளா? கைவிடப்பட்ட பெற்றோரின் இந்த வெற்றுப்பார்வை இவ்வருடங்களில் காணும் திசையெங்கும் நிரம்பியிருக்கிறது. பதினாறு வருடங்கள் கழிந்துவிட்டன. இன்று எவரும் கதறி அழுவதில்லை. கண்ணீர்கூடக் குறைவுதான். பிரமையில் உறைந்த மரத்த துக்கம். நீரற்ற குளங்களின் வெறுமை மண்டிய விழிகள். நினைவுகளின் அறுபட்ட சரடுகள் துடிக்கும் சொற்கள். அத்தனைபெர் கூடியிருந்தும் நதிக்கரை மெளனமாக இருந்தது. மெல்லிய ரீங்காரமாக எழுந்த மந்திர உச்சரிப்பு கங்கையின் அந்தரங்கப் பேச்சொலியுடன் கலந்தது.

“மந்தா என்ன தாண்டிச் செல்கிறாய்?”

பீமன் பெருமூச்சுடன் நின்றான். படித்துறையில் திருதராஷ்டிரன் தருமன் வியாசன் செளனகர் என்று கூட்டம். தருமன் உற்சாகமாக இருப்பதாகப் பட்டது. வைதீகச் சடங்குகளின்போது அவனுக்கு வரும் இயல்பான உற்சாகம். நான் மிருகமில்லை. கோழையான எளிய மானுடன். இல்லையேல் இக்கணம் உதிரவெறியுடன் உன்னைக் கிழித்து…

“மந்தா சீக்கிரம் நீராடு” என்றான் தருமன்.”உனக்காகவே காத்திருக்கிறோம். இன்று இறுதிநாள். நீர்ப்பலி. இதுகூட நினைவில்லையா என்ன?”

பீமன் நதியிலிறங்கி நீராடினான். வெற்று உடல்மீது நீர்த்துளிகள் வழிய உடையை இறுக்கியபடி எழுந்துவந்தான். செளனகர், “பாண்டவர் அனைவரும் வந்தாயிற்றா?” என்றார்.

“ஆம் ஆச்சாரியரே மந்தனுக்கு ஒருமுறை விளக்கிவிடுங்கள்.”

ஸெளனகர் “சரி” என்றார். பிறகு பீமனிடம் “இன்றோடு போர் முடிந்து பதினாறு வருடங்கள் முடிகின்றன. இறந்து போனவர்களுக்காக மூவகை சிரார்த்தங்களைச் செய்யவேண்டுமென்பது விதி. ஏகோத்திஷ்டம், பார்வணம், சபிண்டனம். வருடம் தோறும் செய்யவேண்டிய பித்ருகடன் ஏகோத்திஷ்டம். ஃபுவர்லோகத்தில் ஆத்மா பிரவேசிக்கும் பொருட்டு வாரிசுகள் செய்யவேண்டியது பார்வணம். அம்மூதாதையரின் ஆத்மாக்களை காலப்பெருவெளியுடன் மீதியின்றி கலக்கும் பொருட்டு ஆற்ற வேண்டியது சபிண்டனம். இங்கு சபிண்டன சிரார்த்தம் இன்றோடு முடியப்போகிறது. எள்ளும் நீரும் மலரும் இறைத்து பூரண மந்திர உச்சாடனத்துடன் இதை முடித்தபிறகு பாண்டவர்கள் எவரும் எந்த வடிவத்திலும் எஞ்சுவதில்லை. பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுவார்கள். நதி கடலுடன் கலப்பதுபோல. பிறகு பித்ருக்களினாலான மகாகாலத்திற்குச் செய்யும் பொதுவான சிரார்த்தமே போதுமானது. விதிப்படி அவர்களைப் பிரித்து எண்ணுவதும்கூடப் பெரும் பாபமாகும்.”

ஸெளனகர் தர்ப்பையை எடுத்தார். மந்திர உச்சாடனத்துடன் மலரை அள்ளினார். சற்றுத்தள்ளி பிண்டம் வைக்கக் குவிக்கப்பட்ட ஆறிய சாதம் இருந்தது. சடங்குகள் தொடங்கின.

பிதாமகரே என்று பாஞ்சாலியின் குரல் வீறிட்டது. அனைவரும் திடுக்கிட்டனர். அவிழ்ந்த முடியும் கலைந்த உடையுமாக அவள் ஓடிவந்து நதிமேட்டில் நின்றாள்.”பிதாமகரே வேண்டாம். பூர்ணப்பிண்டம் வேண்டாம்.”

“ஏனம்மா” என்றார் வியாசர்.

“என் குழந்தைகள்! அவர்களை நான் பார்க்கவேண்டும். நான் இறந்தபிறகாவது அவர்களைப் பார்க்கவேண்டும்.” கதறியபடி அவள் தரையில் சரிந்தாள். மார்பில் வெறியுடன் ஓங்கி அறைந்துகொண்டு கதறியழுதாள். “என் குழந்தைகளை இந்தப் பாழும் மார்பில் மீண்டும் ஒரு முறையாவது அணைத்துக் கொள்ள வேண்டும். என் செல்வங்களின் பொன்னுடல் தீயில் எரிந்தது. என் தேவர்களே, உங்களுக்கு வலித்ததா என்று கேட்க வேண்டும். அவர்கள் எனக்காகக் காத்திருக்கட்டும் பிதாமகரே.”

“என்ன மூடத்தனம் இது திரெளபதி.”

“ஆம் நான் மூடப்பெண்தான். வெறும் மூடம். வெறும் ஜடம்.” திரெளபதி வெறியுடன் தலையை அறைந்தபடி ஊளையிட்டு அழ ஆரம்பித்தாள். என்ன மூர்க்கத்தனம்! பீமனின் வயிறு நடுங்கியது. அச்சத்தில் உடல் செயலற்றுவிட்டது.

விரிந்த தலையுடன் பெண்கள் நாலாபக்கமிருந்தும் ஓடிவந்தனர். அவர்கள் அலறினார்கள். “வேண்டாம் பிதாமகரே. பூர்ணப்பிண்டம் வேண்டாம்.”

வியாசர் படியேறி நெடிய உடலை நிமிர்த்து நின்றார். “என்ன சொல்கிறீர்கள் என்று தெரிந்துதான் சொல்கிறீர்களா?”

“ஒரு முதிய பெண் ஓடிவந்து வியாசரின் காலில் விழுந்தாள். காதுகளும் மார்புகளும் நீண்டு தொங்கின. வெண்ணிறத் தலைமயிர் விரிந்து சுருக்கம் பரவிய வெற்று முதுகில் ஈரமாக ஒட்டியிருந்தது.

“மகாஞானியே. ஒன்பது பிள்ளைகளையும் பதினேழு பேரர்களையும் பறிகொடுத்த பெரும்பாவி நான். பதினாறு வருடமாகிறது நான் தூங்கி. என் குழந்தைகள் வந்துவிடுவார்கள் என்று நம்பினேன். ஏதோ ஒரு அற்புதம் நடக்கும் என்று எண்ணியிருந்தேன். உத்தமரே என் வாழ்க்கையை வீணடித்துவிடாதீர்கள். என்னை கைவிட்டுவிடாதீர்கள்.”

“எங்கள் குழந்தைகளை நாங்கள் பார்க்கவேண்டும் உத்தமரே” என்று குரல்கள் வீரிட்டன. அழுகைகளும் புலம்பல்களும் நான்கு திசைகளிலிருந்தும் வந்து பெருகின. துக்கம் அலையலையாகக் காற்றை நிரப்புவதுபோல. வானம் இருண்டுவிட்டிருந்தது. கங்கையின் மறுவிளிம்பில் மெல்லிய வெளிச்சம் மீதமிருந்தது. அது நீர்ப்பரப்பில் நெளிந்து தளதளத்தது.

“நான் என்ன செய்யமுடியும்? நான் வெறும் கவிஞன் தாயே” என்றார் வியாசர் தளர்ந்த குரலில்.

“பிதாமகரே நீர் அறிவீர். எங்கள் குழந்தைகள் எங்கே?” ஒரு பெண் கூவினாள்.

“அவர்கள் வீர சுவர்க்கத்தில் இருக்கிறார்கள். வீரர்களுக்குரிய போகங்களுடன், வீரர்களுக்குரிய மகத்துவங்களுடன்.”

“நீங்கள் எப்படிக் கண்டார்கள்?”

“நான் கவிஞன். சொற்களைப் பருவடிவு விட்டு தியானவடிவம் கொள்ளவைக்கும் வரம் பெற்றவன். தியான வடிவாக அனைத்துலகங்களையும் தொட்டுவிரியும் என் பிரக்ஞை. என்னை நம்புங்கள்.”

“பிதாமகரே” என்று ஒரு கிழவி ஆங்காரமாக வீறிட்டாள். “எங்கள் குழந்தைகளை எங்களுக்குக் காட்டுங்கள். நீங்கள் கூறுவது உண்மையென்றால் காட்டுங்கள்! தர்மத்தின் மீது ஆணை!”

“காட்டுங்கள்! காட்டுங்கள்!” என்று ஓலமிட்டது அந்த நதிக்கரை.

“ஒரு கணம் பிதாமகரே கனிவு காட்டுங்கள் ஒரு கணம்.” ஒரு பெண் கதறியழுதாள்.

நிலா மேற்கே நெளிந்து வந்தது. கங்கையின் நீர்ப்பரப்பு மீது அது பிரதிபலித்தது. கரையிலிருந்து ஒளியாலான நடைபாதை ஒன்று நிலவை நோக்கி நீண்டது. வியாசர் நிலவை நோக்கியபடி ஒளிவிடும் கண்களுடன் நின்றார். குரல்கள் மன்றாடின. கூவி அழுதன. ஒளிபெற்ற வான் கீழ் துயரத்தின் அதிதேவன் என காவியகர்த்தன் நின்றான்.

கங்கையில் ஒரு மீன் துள்ளி விழுந்தது. அலைகள் ஒளிவளையங்களாகப் பரவின. வியாசர் கரங்களைத் தூக்கினார். “சரி காட்டுகிறேன். அவர்களைப் பார்ப்பது உங்களுக்கு மன அமைதி தருமா? தங்கள் புகழுலகில் அவர்கள் ஒளியுடன் இருப்பதைக் கண்டால் உங்கள் தீ அணையுமா?”

“ஒரு கணம் என் குழந்தையைப் பார்த்தால் போதும் பிதாமகரே வேறு எதுவும் வேண்டாம்.” மார்பில் ஓங்கி அறைந்தபடி ஒரு பெண் கதறினாள்.

வியாசர் கங்கையை நோக்கி திரும்பினார். அழுத்தமான குரலில் அவர் கூறிய மந்திரம் பீமனுக்குக் கேட்டது. “கங்கையே நீ என் மூதாதை. என் சித்தம் உன் பிரவாகம். என் தவம் மெய்யானது எனில் நீ என் காவியமாகி விரிக. ஓம் அவ்வாறே ஆகுக.”

பீமனின் மனம் படபடத்தது. கங்கையைப் பார்த்தான். கங்கைமீது நிலவின் ஒளி விரிவடையத் தொடங்கியது. மெல்ல ஒளி அதிகரித்தபடியெ வந்தது. ஒளிபெற்ற படிகவெளியாக அது ஆயிற்று. நீரின் பொன்னிற ஆழம் தெரிந்தது. அங்கு வெகு தூரத்தில் நிலா ஒன்று சுடர்ந்தது. பளிங்கு மாளிகைகள் நிரம்பிய பெரும் நகரம் ஒன்று கனவு போலத் தெரிந்தது. அது அஸ்தினாபுரம் என்பதை பீமன் வியப்புடன் அறிந்தான். தெருக்களில் பொற்பல்லக்குகள் நகர்ந்தன. புரவிகள் வெண்ணிற மேகங்கள் போல ஓடின. அங்கிருந்து பொன்னொளி சுடரும் பாதை ஒன்று கிளம்பி மேலே வந்தது. அதன் வழியாக மெதுவாக நடந்து ஒருவன் வந்தான். ஒளிசிதறும் வைரமுடியும் மணிக்குண்டங்களும் பொற்கலசமும் அணிந்திருந்தான். கையில் பொற்கதாயுதம். அது துரியோதனன் என்பதை பீமன் மார்பை அடைத்த வியப்புடன் அறிந்தான். துரியோதனனின் முகம் பொலிவு நிரம்பியதாக இருந்தது. கண்களில் இன்பம் சுடர அவன் நீர்மீது எழுந்து நின்றான். திருதராஷ்டிரர் உரத்தகுரலில் “மகனே துரியோதனா” என்று வீரிட்டார். மதயானையின் பிளிறல் போலிருந்தது அது. அவருக்கு எப்படித் தெரிகிறது அந்தக் காட்சி? இதெல்லாம் மனப்பிரமைதானா? கவசகுண்டலங்கள் செஞ்சூரியக்கதிர்கள் என ஒளிவிட கர்ணன் வந்து நின்றான். துச்சாதனன் புன்னகை தவழும் இனிய முகத்துடன் எழுந்தான். சகுனியும் பீஷ்மரும் வந்தனர். சாரிசாரியாக வந்தபடியே இருந்தனர். தன் கண்கள் அந்தக் கூட்டத்தில் ஓர் உருவத்தை பதைபதைப்புடன் தேடுவதை பீமன் உணர்ந்தான். சட்டென்று புலன்கள் குளிர்ந்தன. கையில் பாசாயுதத்துடன் உயர்ந்த கரிய உடலை மெல்ல ஆட்டியவனாக யானைக்குட்டி போல கடோத்கஜன் நடந்து வந்தான். அப்படியே பாய்ந்து அவனைக் கட்டிக்கொள்ளவேண்டும் போலிருந்தது. அவனுடைய கரும்பாறை போன்ற தோள்களை இறுகத்தழுவி அவன் மயிரடர்ந்த சிரத்தை மார்போடு இறுக்கி… அப்போதுதான் தன் மார்பில் தெறிக்கும் இந்த வெற்றிடம் உடையும். என் வனமூர்க்கம் முளைத்தெழுந்தவன் இவன். பீமனைவிட பீமனான என் மகன். கடோத்கஜன். கடோத்கஜன். இமைத்தால் கூட அந்தக் காட்சி நழுவிவிடும் என்று பயந்தவன் போல அவனையே பார்த்தான். அவனுடையில் ஓர் உறுப்பைப் பார்க்கும்போது பிற உறுப்புகளைப் பார்ப்பதை இழந்துவிடுவோம் என்று பட்டதால் பதற்றமடைந்து பரபரத்தது மனம். பார்வை மீள மீளத் தவித்து அவன் உடலை வருட வருட குடிக்கத் தொலையாத பெரும்தாகம் என எரியும் தவிப்பு. அத்தவிப்பு அவன் பெயர் மந்திரமாக உள்ளூர இடைவிடாது ஓடியது. அவன் உடலின் தொடுகைக்கு தன் உடல் பரபரத்தது. தொடுகையில் அல்லவா என் மகனை என் ஆத்மா அறிய முடியும். இதோ எல்லாம் முடிந்துவிடும். இந்தப் பிரமை கடோத்கஜன் என் மகன்… திடாரென்று பாஞ்சாலி “மகனே” என்று கூவியபடி நீரை நோக்கி ஓடினாள். பீமன் அனிச்சையாக அவள் புஜங்களைத் தாவிப் பற்றிக்கொண்டான். எங்கும் வீரிட்ட அலறல்கள் வெடித்துப் பரவின. பெண்களும் முதியவர்களும் கூட்டம் கூட்டமாக நீரை நோக்கி ஓடினர்.

“நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்று வியாசர் கூவினார்.

கூட்டம் கூட்டமாக பெண்கள் நீரில் விழுந்தனர். கங்கை நீர் ஆயிரம் வாய் பிளந்து அவர்களை விழுங்கியது.

“அர்ச்சுனா நிறுத்து அவர்களை. அர்ச்சுனா” என்றார் வியாசர். உடல் பரிதவிக்க முன்னும் பின்னும் ஓடியபடிக் கதறினார். கையில் காண்டிவத்துடன் கண்ணீர் வழிய அர்ச்சுனன் நின்றான்.

“அர்ச்சுனா…”

“அவர்கள் போகட்டும் பிதாமகரே அவர்களுக்கு இனிமேலாவது நிம்மதி கிடைக்கட்டும்.”

“இது என்ன அபத்தம்! நில்லுங்கள் நில்லுங்கள் போகாதீர்கள்.” வியாசர் பித்தர் போலக் கூவினார். பாஞ்சாலி திமிறினாள். வெறி கொண்ட குதிரை போல பாய முயன்றாள். பீமன் கை ஒரு நொடி தளர்ந்தது. பிடியை உதறிவிட்டுக் கங்கையை நோக்கி ஓடி கடோத்கஜனை அடைய மனம் தாவியது. மறுகணம் காட்சி அணைந்தது.

“என் குழந்தைகளே! என் செல்வங்களே!” என்று கதறியபடி திரெளபதி தளர்ந்து விழுந்தாள்.

“அர்ச்சுனா என்ன காரியம் செய்தாய்? அவர்கள் உன் குடிமக்கள். அவர்களைக் காப்பது உன் கடமை.”

“இல்லை பிதாமகரே அவர்கள் எமனின் குடிமக்கள். தங்கள் மைந்தர்களுடனும் கணவர்களுடனும் அவர்கள் சென்று சேரட்டும். பிதாமகரே அபிமன்யுவையும் அரவானையும் பார்த்தபோது ஒரு கணம் என் கால்கள் தவித்தன. ஏன் நான் ஓடவில்லை. உயிராசையா? ஆம். எளிய பாமரமக்களுக்கு இருக்கும் உணர்ச்சிகள் கூட இல்லாதவன் நான். அற்பன். உயிரை நேசிக்கும் கோழை.”

“பார்த்தா. உனக்குத் தெரியாது” என்றபடி வியாசர் படிக்கட்டில் தளர்ந்து அமர்ந்தார். தலையைக் கைகளால் அறைந்தார். “நான் மூடன். நான் மூடன். பெரும் பிழை செய்துவிட்டேன்.” வியாசர் மெல்லிய விசும்பல்களுடன் அழ ஆரம்பித்தார். இரையுண்ட பாம்பு போல கங்கை அமைதியாக விரிந்து கிடந்தது.

“தந்தையே” என்றார் திருதராஷ்டிரர். “அவர்கள் அங்குத் தங்கள் குழந்தைகளுடன் வாழ்வதை விட மேலானதா இங்கு நடமாடும் பிணங்களாக வாழ்வது? என்னை யாராவது பிடித்து அங்கு இட்டுச் சென்றிருக்கலாகாதா?”

குந்தி மண்ணில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அவள் எண்ணுவது கர்ணனை என்ற எண்ணம் கசப்பாக பீமன் மனதில் எழுந்து நிரம்பியது.

“எப்படிச் சொல்வேன் குழந்தைகளே, நீங்கள் பார்த்தது என் காவியத்தின் ஓர் உருவெளித்தோற்றம். கங்கை என் காவியமாக ஆயிற்று. காவியம் ஒரு பிரதிபலிப்பு மட்டுமே.”

அர்ச்சுனன் அச்சத்துடன் “அப்படியானால் இவர்கள்?” என்றான்.

வியாசர் மெல்ல அடங்கினார். கண்களில் கண்ணீர் முத்துக்கள் ஒளிவிட்டன. பெருமூச்சுடன் கங்கையையே பார்த்தார். “காவியத்தில் நாம் பார்ப்பது வானைப் பிரதிபலிக்கும் மேற்பரப்புகளை மட்டுமே. ஆழத்தில் இருண்ட பிரம்மாண்டங்கள் விரிந்து கிடக்கின்றன. அங்கு சதகோடி மானுடர் உறைகின்றனர். அவர்களுடைய கூறப்படாத துக்கங்கள் பகிரப்படாத கனவுகள். அங்கு எந்த ஒளியும் சென்று சேர்வதில்லை. காலத்தின் விரல்நுனி அங்குத் துயில்பவர்களை ஒரு போதும் தீண்டப் போவதில்லை. காவிய ஆழம் ஓர் உவமையின் மின்மினிகூட வழிதவறிச் செல்லமுடியாத பேரிருள்…”

பீமன் மனம் நடுங்கி உறைந்தது. கங்கையைப் பார்க்கமுடியவில்லை. கரியவாள் போல அது கிடந்தது. அதன் ஆழ்த்தில் நிழல் நிழலாக கரைந்திறங்குவது என்ன? பீமன் தன்னுள் தேங்கிய வெறுமையை எல்லாம் பெருமூச்சாக மாற்றி வெளித்தள்ள முயன்றான். மார்பு காலியாகவேயில்லை. திரும்பிக் காட்டை நோக்கி நடந்தான். இருளில் திமிறிப் புணர்ந்த மரங்கள் காற்றில் உருமும் காடு. அங்கு நிழல்கள் ததும்பின. பெயரற்ற அடையாளமற்ற தவிப்பு மட்டுமேயான நிழல்கள்.

சென்ஷி

unread,
May 31, 2010, 4:02:26 AM5/31/10
to panb...@googlegroups.com

பேச்சியம்மை

நாஞ்சில்நாடன்

மூன்று நாட்களாக விடாத அடைமழை. வானம் வெளிவாங்காமல் மூடாக்குடன் இருந்தது. நடுப்பகலில் இரவு ஏழு மணி ஆனது போல இருள் மயக்கம். வீடுகள், கோயில்கள், மண்டபங்கள் யாவும் கழுவிவிட்டது போல் ஈரத் துலக்கம். மழைத் தண்ணீர் புழுதி அரித்து ஓடி, தெரு மணல் மினுங்கக்கிடந்தது. தெருவில் பள்ளம் நோக்கி ஓடும் தண்ணீர் இரண்டு கை அள்ளிக் குடிக்கலாம் போலத் தெளிந்து ஓடியது. பெருமழையின் காரணமாக இரண்டு நாட்கள் உள்ளூர்ப் பள்ளி விடுமுறை. பகலில் வழக்கமாக காய்கறி, கீரை, கோலப்பொடி மாவு விற்கும் கூவியர் நடமாட்டம் இல்லை.

பகலிலேயே ஆள் நடமாட்டம் இல்லாதபோது ஒன்பது மணி தாண்டிய இரவில் யார் நடமாடுவர்? கழுதைகள்கூட மரத்து அடிவாரங்களில் ஒதுங்கி, நின்றவாக்கில் தூங்கின. மாட்டுத் தொழுவங்களில் எருமை மாடுகளின் வாலடி. மழை நின்று பெய்தது. மழைக்கும் அதன் அடர்வு பொறுத்துப் பெயர்கள் உண்டு. தூற்றல், தூறல், தூவானம், சரமழை, அடைமழை, பெருமழை. சிறு தூறலை, நெசவாளர் நூறாம் நம்பர் மழை என்பார்கள். நூலின் சன்ன ரகம் போல என்ற பொருளில், சீராக ஓசையுடன் பெய்துகொண்டே இருந்தது. மழைக்கு மணம் மாத்திரமல்ல, ஒலியும் உண்டு.

மழை கிழக்கில் இருந்து அடித்தது சாய்வாக. நல்லவேளையாகக் காற்று அலைக்கழிக்கவில்லை. சுவரோரம் எத்தனை ஒட்டிப் படுத்தாலும் லேசாகக் கச்சான் தெறித்தது. விரித்திருந்த கோணிச் சாக்கில் காலடியில் ஈரம் நயத்திருந்தது. எப்போதும் கீழே விரிக்க இரண்டு கோணிச் சாக்குகள். தலைக்கு மாற்றுடை திணிக்கப்பட்ட துணிப்பை. போர்த்திக் கொள்ள பன்னப் பழசான முரட்டு சமுக்காளம். தலைமாட்டில் சாப்பாட்டுத் தட்டு, டம்ளர், தண்ணீர்ச் செம்பு.

கிழக்குப் பார்த்த வாசல்கொண்ட சைவ மடத்தின் வடக்குப் படிப்புரை அது. இருவசமும் சாய்வாகத் திண்டுகள். அப்பர் மடம் என்பார்கள் கிராமத்து மக்கள். மானிப்பாரின்றிக்கிடந்த மடம். உள் முற்றத்தில் எருக்கு, மஞ்சணத்தி, ஊமத்தை காடடைய வளர்ந்துகிடந்தன. திருவிழாக் காலங்களில் மடத்தைத் திறந்து, மராமத்துப் பார்த்து, சுத்தம் செய்து, அப்பர் சிலைக்கு சூடம், சாம்பிராணி காட்டுவார்கள். வெற்றிலை, பாக்கு, மூன்று பாளையங்கோட்டன் பழம்வைத்துக் கும்பிட்டுப் போவார்கள்.

மற்ற நாட்களில் வவ்வால், பெருச்சாளி வாழும். பூனை குட்டி போட்டுப் பெருகும். பாம்பினங்கள் உண்டு. மடத்தின் பின்புறத் தோப்புக்கு வேலியும் காவலும் கிடையாது. வாசல் பக்கம் ஆடுகள் வெயிலுக்கு ஒதுங்கிப் புழுக்கை போடும். நாய்கள் படுப்பதுண்டு. சுற்றுச் சுவரோரம் நின்ற வேப்ப மரம் ஏறி உள்ளே குதித்துச் சிறுவர் ஒளிந்து விளையாடுவது உண்டு. திருநாவுக்கரசரே ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கியவர்தான்.

பேச்சியம்மை ஒருமுறை சொன்னாள், ”வெளி வாசல் சாவி கொடுத்தா, அடித்து வாரி, குப்பை செத்தை மாற்றி, செடி கொடிகள் வெட்டித் துப்புரவாக்கித் தினமும் வாசல் தெளித்துக் கோலம் போட்டுவைக்கிறேன்” என. பெரிய தம்புரான் உத்தரவு வேண்டும் எனச் சொல்லிவிட்டனர் என்றாலும், வாசல் கூட்டித் தெளிக்க பேச்சியம்மை மறப்பதுஇல்லை.

வாசல் தெளிக்க, கோலம் போட, சாயரட்சைக்கு மாடக்குழியில் விளக்கேற்றிவைக்க, வெள்ளி… செவ்வாய்களில் பசுஞ்சாணம் இட்டு மெழுக, அவளுக்கும் வீடு ஒன்று இருந்தது முன்பு. பெருமாள் கோயில் தெருவில் வீடும், நடுப்பத்தில் 18 மரக்கால் விதைப்பாடும், வீட்டின் பின்புறம் கிடந்த காலி மனையில் நான்கு தென்னம்பிள்ளைகளும்.

மதுசூதனன் என்று திருத்தமாகவும் மசூனன் என வழக்கிலும் விளிபட்ட மகனுக்கு மூன்று வயது இருக்கையில், பேச்சியம்மையின் கணவன் காணாமல் போனான். ஓடிப் போனானா, எவரும் கடத்திப் போயினரா, உளனா, இலனா என எவரும் கண்டு சொன்னதும் இல்லை, கூட்டிக் கொண்டுவிடவும் இல்லை. உடல் கிட்டாதவரை மரணம் யாண்டு ஊர்ஜிதமாகும்? இன்றும் பேச்சியம்மைக்கு மஞ்சள் கயிற்றில் ஊசலாடும் தாலியும், நெற்றியில் மஞ்சள், குங்குமமும் மவுசாக இருந்தன.

ஒற்றைத் தனி மனுஷி. காரும் பாசனமும் பயிரிட்டு வெள்ளப் பெருக்கும் வறட்சியும் எதிர்கொண்டு, நோயும், எலி வெட்டும், களையும், காற்றடியும் தாங்கி, 18 மரக்கால் விதைப்பாட்டில் நடுக்கடலில் துடுப்பின்றி, பாய்மரமும் இன்றிப் படகோட்டிப் போனாள்.

உள்ளூரில் சின்னப் பள்ளிக்கூடம், செலவு இல்லை. பக்கத்து ஊரில் பெரிய பள்ளிக்கூடம், இழுக் கக்கூடிய பாரம். மதுசூதனன் நன்கு படிக்கிற பையன். தகப்பன் இல்லாவிட்டால் என்ன?, பருவகாலம் தரும் வருமானம் சோற்றுப்பாட்டுக்குத்தான் போதும் என்றால் என்ன?, அரசு ஆணைகளின் அனுகூலங்கள் அற்றவன் என்றால் என்ன?, பேச்சியம்மை மனதிடம் உற்றவள். சலிப்புற்ற நாட்களில் புலம்புவாள்… ‘சீமான் வீட்ல பொறந்திருக்க வேண்டிய பய, என் வயித்துல பொறந்து சீரழியான்.’

கணவன் கானகத்தே காரிருளில் கைவிட்டுப் போனாலும், வைராக்கியம் என்பதோர் எஃகு ஆயுதம். எனில் இருமுனையும் கூர்கொண்டது. பேச்சியம்மை நாள், கிழமை எதுவும் கொண்டாடுவதில்லை. அசைவம் உண்டு பழகியவள் எனினும் ‘அப்பிடி என்ன நாக்குக்கு நறுவிசு வேண்டிக்கெடக்கு?’ எனத் துறந்தவள். துறந்தது மாத்திரம் அல்ல, சின்னப் பயலுக்கு என இரக்கப்பட்டு அண்டை அசல், மதனி சம்பந்தி எதைக் கொண்டுவந்தாலும் மூர்க்கமாக மறுப்பவள். சொந்தக்காரர்கள் சொல்வார்கள், ”பூணூல் போட்டு, பெருமாள் திருமண்ணும் தரித்தால் மதுசூதனன் பாப்பாரப் பிள்ளை போலிருப்பான்” என்று.

கூடப் பிறப்புக்களுக்கும் சொந்தக்காரர்களுக்கும் சம்மதம் இல்லை, மதுசூதனன் மதிப்பெண்களில் முன்னுரிமை பெற்றுப் பொறியியல் படிக்கப் போனது.

வெளியூர்க் கல்வி, விடுதித் தங்கல், கல்லூரிக் கட்டணம், உபகரணங்கள், உடை என முதல் வருடச் செலவுக்கு இரண்டு கொத்துச் சங்கிலி, உள்கழுத்து அட்டியல், தாலிக் கொடி போயின. இரண்டாம் ஆண்டில் கையில்கிடந்த காப்புகள், காதில் கம்மல்கள், ஆசையாய்ச் செல்ல மகனுக்கு செய்து போட்டு அழகு பார்த்த கழுத்துச் செயின், பொன்னரைஞாண், சாப்பிடும் வெள்ளித் தட்டு, பன்னீர்ச் செம்பு, சந்தனக் கும்பா, கொலுசு, தண்டை, சிவப்புக்கல் கடுக்கன், யானை முடிக் காப்பு போயின. மூன்றாம் ஆண்டு வயல் ஒத்தி, நான்காம் ஆண்டு விலை ஆதாரம்.

இன்று விற்றால், நாளை வாங்க மாட்டானா? பொன்னும், முத்தும், பவளமும், மணியுமாய் அடித்து உருட்டிப் போட மாட்டானா? தினமும் கொடுப்பைக் கீரையும், அகத்திக் கீரையும், முருங்கைக் கீரையும், பப்பாளிக் காயும், வாழைத்தண்டும் சாசுவதமா? 100-ம் நம்பர் நூல் புடவை இடுப்பில் நிற்காதா? மருமகளும் பேரக் குட்டிகளும் வீடு நிறைய விளையாட மாட்டார்களா? குலுக்கையில் நெல்லும், பானைகளில் உளுந்தும், பயறும், கருப்பட்டியும் நிறைந்து வழியாதா?

பம்பாய் கம்பெனி ஒன்றில் பணி ஏற்றான் மதுசூதனன். மழை பொழிந்து, நுங்கும் நுரையுமாகச் செங்காவிக் கொப்பளித்துக் குமிழியிட்டுப் பாய்ந்த ஆற்று வெள்ளம் மழை வெறித்ததும் தெளிந்து வருவதைப் போல, பேச்சியம்மை தெளிந்தாள். வீடு சற்று வெளிச்சமானது. ஆதரவான தோழிகளிடம் வாங்கிய வட்டிக் கடன்கள் தூர்ந்தன.

பேச்சியம்மைக்குச் சில கனவுகள் இருந்தன. ஓடிப் போன கணவன் திரும்பி வந்து புதுக் குடித்தனம் நடத்துவான் என்பது அவற்றில் ஒன்றல்ல. முக லட்சணமுள்ள, நாலைந்து பெற்றுப் போடுகிற இடுப்புத் திறனுள்ள மருமகள் வாய்க்க வேண்டும். பேர் துலங்க, பெருமாள் கோயிலுக்குக் கணிசமாகக் காரியமாய் ஏதும் திருப்பணி செய்ய வேண்டும்.

மேலும், ஓர் ஆண்டில் மதுசூதனன் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து கலிஃபோர்னியா போனான். பேச்சியம்மை பெருமையாகக் கலிபோனி என்றாள். வெளிநாடு புறப்படும்போது கடைசியாக அவனைப் பார்த்தது.

முதல் ஆறு ஆண்டுகள் விடுப்பு இல்லை, வேலை நெருக்கடி எனக் கடிதங்கள் வந்தன. காத்திருந்து காய்ப்பேறிப்போன மனம். மாதாமாதம் பெரிய தெருவில் இருந்த வங்கிக்குப் பணம் வந்தது. தொடர்ந்து ஒரு கடிதமும். ஏர்-மெயில் வாங்கி 10-வது படிக்கும் பாண்டுரங்கனின் ஒழிந்த நேரம் யாசித்து, பதில் எழுதிப் போடுவாள். மறு மாதக் கடிதத்துக்கான காத்திருப்பன்றி வேறு தொழில் இல்லை. மகன் அனுப்பும் பணம்… வெள்ளம்.

தீவிரமாகப் பெண் தேடலானாள் பேச்சியம்மை. எதுவானாலும் மதுசூதனன் நாட்டுக்கு வர வேண்டும். பெண் பார்த்துச் சம்மதிக்க வேண்டும். நாள் குறிக்க வேண்டும். கல்யாணம் நடத்த வேண்டும். தென்னை மரங்களில் பழுத்த மட்டைகள் கழன்றன, குருத்து ஓலைகள் விரிந்தன. பேசிவைத்த பெண் பிள்ளை களுக்குத் திருமணம் ஆகிக் குழந்தைகள் பிறந்தன. பணம் வந்தது. கடிதம் வந்தது. மாதம் தவறாமல், தேதி தவறாது என்று என்று என ஓங்கிற்று பித்தம் முற்றிய தாய் மனது.

‘நீ எழுது மக்கா பாண்டு… பிள்ளையார் சுழி போட்டுக்கோ. என் அன்புச் செல்லத்துக்கு. அம்மா சொகமாட்டு இருக்கேன். நீ சொகமாட்டு இருக்கியா? அனுப்புன பணம், காயிதம் எல்லாம் தவறாம வருது. பணத்தை வெச்சுக்கிட்டு நான் என்ன செய்யட்டும்? இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள லீவு எடுத்துக்கிட்டு நீ வரணும். உம் மொகத்தைப் பாத்து இன்னா அன்னான்னு 10 வருஷம் ஓடிப்போச்சு. மொகமே மறந்திரும் போலிருக்கு. அம்மையை இனி நீ உசிரோடு பாக்கணும்னா, உடனே வந்து ஒரு கலியாணத்தை முடிச்சுக்கிட்டுப் போ… உடம்பைப் பாத்துக்கோ.’

10-வது படிக்கும்போது எழுத ஆரம்பித்த பாண்டுரங்கனுக்கே கல்யாணம் ஆகிக் குழந்தை கள் உள்ளன. தழுதழுத்த தாய்ப் புலம்பல் அவனைச் சங்கடப்படுத்தியது. களை இழந்த முகமும், கன்னத்து ஒடுங்கலும், குரலின் தளர்ச்சியுமாக, மேலும் கழிந்தன சில மாதங்கள்.

ஒரு நாள் காலை பத்தரை மணிவாக்கில் மேலத் தெரு சங்கரமூர்த்தி வீடு வரைக்கும் போனாள் பேச்சியம்மை. அவன் மதுசூதனன் வகுப்புத் தோழன், நெருங்கிய சேக்காளி.

”வாருங்க சித்தி! என்னத்துக்கு இந்த வெயில்லே! கூப்பிட்டு அனுப்பி இருந்தா நானே வருவன்லா?”

”ஆமா, நீ ரெண்டாக்கினே! ஆறு மாசமா நானும் சொல்லிவிடுறேன், நீயும் வந்துக்கிட்டே இருக்க. ஒரு காரியம் சொல்லத்தான் வந்தேன். உன் கூட்டாளிக்கு ஒரு காயிதம் போட்டிரு… இனி எனக்குப் பணம் அனுப்பாண்டாம். அவனையும் இங்க வராண்டாம்னு சொல்லிப் போடு!” சொல்லும்போது பேச்சியம்மையின் குரல் கம்மி, உடைந்து, கரகரத்து, கண்கள் சிந்தி…

”பொறுங்க சித்தி… நான் கண்டிசனா எழுதுறேன்…’

”ஆமாமா… ரெண்டு பேரும் கூட்டுக் களவாணிய… மாப்பிளை போனான், 28 வருசம் ஆச்சு. இருக்கானா, செத்தானாத் தெரியாது. மகன் போனான், இப்பம் 10 வருசமாச்சு. இப்பம் பிள்ளை எனக்கு இருந்தும் செத்தவன்தான்.”- கண்டாங்கியில் கண்களைத் துடைத்து மூக்கையும் சிந்தி நடந்த பேச்சியம்மை நேராக வங்கிக்குப் போனாள். பார்த்துப் பழகிய முகம். மேலாளர் அவளைக் காக்கவைப்பதில்லை.

”வாங்கம்மா! பணம் எடுக்கணுமா?”

”இல்ல தம்பி! எனக்கொரு காரியம் செய்து தரணும்!”

”என்ன? ஏதாம் லோன் வேணுமா?”

”அது ஒண்ணுதான் கொறச்ச எனக்கு… மாசாமாசம் என் மகன் அனுப்பப்பட்ட பணம் இனி எனக்கு வேண்டாம். இனிமேல் வந்தா, அதைத் திருப்பி அனுப்பணும்.”

”எதுக்கும்மா? உங்களுக்குச் செலவு இல்லேன்னா, அதுபாட்லே ஒரு ஓரமாகக் கெடக்கட்டும். எஃடிக்கு மாத்திவிட்டிர்றேன்… வட்டியாவது வரும்.”

”வட்டியை வாங்கி நான் என்ன செய்யட்டு? எங்கின ஒப்புப் போடணும்னு சொல்லு. எனக்கு அந்தப் பணம் வேண்டாம்.”

”யோசிச்சுச் செய்யலாம்… சொந்தக்காரங்க யாரையாம் கூட்டீட்டு வாங்க. அவாளை யும் கலந்துக்கிடுவோம்.”

”எனக்கு ஒருத்தன்ட்டயும் கேக்காண்டாம். எனக்கு அவன் பணம் வேண்டாம். உங்களால முடியாதுன்னா சொல்லீடுங்க.”

”என்ன செய்வீங்கம்மா? மேலே போய் புகார் கொடுப்பீங்களா?”

”அதெல்லாம் போ மாட்டேன். நாளைக்கு நீ பேங்கு தொறக்க வரச்சிலே, எம் பொணம் வாசல்லே கெடக்கும். செத்துப்போனவ கணக்கிலே பணம் வரவுவைக்க முடியாதுல்லா?”

கிளை மேலாளர் சற்று ஆடிப்போய்விட்டார். எவ்வளவு பெரிய சட்ட நுணுக்கச் சிக்கல்கள்? கிளை விடுமுறைவிட வேண்டியது வருமோ? முன்னுதாரணங்கள் உண்டா? உதவியாளரைக் கூப்பிட்டு, விண்ணப்பம் அடிக்கச் சொல்லி, பேச்சியம்மை கையப்பம் வாங்கி… ”இனி உங்க கணக்குக்கு வரப்பட்ட பணம் ரிடர்ன் ஆயிரும்மா… நிம்மதியாப் போங்க.”

தொடர்ந்து கடிதங்கள் வந்தன சில காலம். படித்தும் பாராமல் கிழித்துப்போட்டாள். பாண்டுரங்கனுக்கும் வேலை இல்லாமல் ஆகியது. சங்கரமூர்த்தி வலிய வந்து செய்ய முயன்ற உதவிகளை பேச்சியம்மை காட்டமாக மறுத்தாள். காலம் ஒவ்வொன்றாக விற்றுத் தின்றது.

எவர் எது கொடுத்தாலும் வாங்குவதில்லை. எவர் வீட்டுச் சேவகத்துக்கும் போவதில்லை. நல்லது கெட்டது இல்லை. முடிகிறபோது கோயிலைப் பெருக்குவாள். நந்தவனத்துக்குத் தண்ணீர் சுமப்பாள். மந்திரம் போல் அவள் உதடுகள் சில சமயம் முணுமுணுக்கும் ‘தந்தை போயினன், தாதன் போயினன், தனயனும் போயினன்’. பூப்பறித்துக் கொடுப்பாள். மடப்பள்ளிப் பாத்திரங்கள் தேய்த்துக் கொடுப்பாள். எண்ணெய்ப் பிசுக்கேறிய பிராகாரச் சிலைகளைத் துடைப்பாள். விளக்குகளுக்குத் திரி திரித்துப் போடுவாள். எண்ணெய் ஊற்றுவாள்.

ஆண்டாள், வட பத்ர சாயிக்கு சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆம் எனில், பேச்சியம்மை மதுசூதனப் பெருமாளுக்குப் பெருக்கியும் கூட்டியும் விளக்கியும் துடைத்தும் கொடுத்த கிழக் கொடி.

பெருமாள் கோயில் பட்டத்திரி ஒரு நாள் கேட்டார். ”எல்லாம் வித்துத் தீந்த பிறகு என்ன செய்வே பேச்சியம்மா?”

”மத்தியானம் நைவேத்தியம் ஆனதும் நீரு ஒரு கை ததியோன்னமோ, புளியோதரையோ தாரேருல்லா, அது போதும். இந்த உசிரை வெச்சுக்கிட்டு யாருக்கு என்ன பிரயோசனம்?”

வீட்டின் மேல் கடன் வாங்கி, தின்று முடிந்தது. முன் சொன்ன ஆஸ்திகளுடன் பேச்சியம்மை அப்பர் மடத்துப் படிப்புரைக்குக் குடி பெயர்ந்தாள். யாரும் எதுவும் கேட்கத் துணியவில்லை.

அதிகாலையில் துவைத்துக் குளித்துக் கோயிலுக்குப் போனால், உச்சைக்காலம் கழிந்து நடையடைக்கும் வரை அவளுக்கு வேலைகள் இருந்தன. நான்கு மணிக்கு நடை திறந்தால், இரவு எட்டு மணி வரைக்கும். வேலை இல்லாப் பொழுதுகளில் சக்கரத்தாழ்வான் சந்நிதித் தூணோரம் சாய்ந்திருப்பாள். ஊர்க் கதை பேசுவது இல்லை, கேட்பதும் இல்லை காண். காப்பி, தேநீர் குடிப்பதில்லை. கிணற்றுத் தண்ணீருக்குப் பஞ்சமும் இல்லை. இரண்டு வேளைகள் பெருமாள் படி அளந்தார்.

பட்டர் ஒரு நாள் யாரிடமோ சொல்லியவாறிருந்தார்… ”இத்தனைக்கும் அந்தப் பய வந்து எட்டிப்பாக்கல. புருசன் ஓடிப் போயி, பச்சப்புள்ளைய வெச்சுக்கிட்டு என்ன பாடுபட்டிருப்பா? 21 வயசுப் பொம்மனாட்டிய ஊரு சின்னப் பாடாபடுத்தி இருக்கும்? எல்லாம் பெருமாள் பாத்துக்கிட்டிருக்கார்.”

ஆம். பெருமாள் பார்த்துக்கொண்டு இருந்தார், ஸ்தூலமாயும் சூட்சுமமாயும்.

”நாளை செத்துப்போனா, பேச்சியம்மைக்கு யார் கொள்ளி போடுவா?”

கேட்டுக்கொண்டே வந்த பேச்சியம்மை சொன்னாள்… ”பெருமாள் போடுவார்… அவர் சார்பா நீரு போடும்.”

கச்சான் சற்று வலுத்து அடித்தது. அடைமழையுடன் காற்று கலகலத்துப் பேசியது.
நனைந்துவிடாமல், சுவரும் திண்டும் கூடும் இடத்தில் குறுகி உட்கார்ந்து, வலுக்கும் மழையை ஊடுருவிப் பார்த்தவாறு இருந்தாள் பேச்சியம்மை!

சென்ஷி

unread,
May 31, 2010, 4:03:42 AM5/31/10
to panb...@googlegroups.com

கிணறு: குமாரசெல்வா

குமாரசெல்வா

“ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தன் கழுதையின் மேல் சேணங்கட்டி தன் வேலைக்காரர்களில் இரண்டு பேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப் போனான்.

ஈசாக்கு, ஆபிரகாம் – சாராள் தம்பதியரின் ஏகபுத்திரன். தனது முதிர் வயதில், அதாவது நூறாவது வயதில் ஆண்டவரிடம் கேட்டுப்பெற்ற பிள்ளை. கொடுத்த ஆண்டவரே இப்போது குழந்தையைக் கேட்கிறார்.

வாசித்துப் பாருங்கள், ஆதியாகமம் இருபத்தி இரண்டாம் அதிகாரம் இரண்டாம் வசனம்: ‘அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.’

ஆபிரகாம் மறுப்பாக ஒரு வார்த்தையையோ முகக்குறிப்பையோ காட்டவில்லை. ஆண்டவர் உரைத்தபடியே மோரியா தேசத்திற்குச் செல்கிறான். அவர்கள் மோரியா மலையில் ஏறுகிறார்கள். ஏறிக்கொண்டே இருக்கிறார்கள். மூன்று நாட்கள் கடுமையான அந்தப் பாதையின் வழியே கடந்துசென்று தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும் ஆபிரகாம் தூரத்திலே அந்த இடத்தைக் காண்கிறான்.

‘அப்போது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள். நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய்த் தொழுது கொண்டு உங்களிடத்துக்குத் திரும்பிவருவோம் என்றான்.

ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான். இருவரும் கூடிப்போனார்கள்.’

அப்போது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி, ‘என் தகப்பனே’ என்றான். அதற்கு அவன், ‘என் மகனே’ என்றான். ‘நெருப்பும், கட்டையும் இருக்கிறது. ஆனால் பலிக்குரிய ஆட்டுக்குட்டி எங்கே?’ என்று கேட்டான்.

இந்தக் கேள்வி எந்தத் தகப்பனாய் இருந்தாலும் அவன் இதயத்தை ஈட்டியால் குத்தியதுபோல வலித்திருக்கும். ஆனால் ஆபிரகாம் கூறுகிறான் பாருங்கள், ‘என் மகனே! தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார்.’

தகப்பனும் மகனுமாகத் தேவன் சொல்லியிருந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கே ஆபிரகாம் ஒரு பலி பீடத்தை உண்டாக்கிக் கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி பலிபீடத்தின் அடுக்கிய கட்டைகள் மேல் கிடத்தினான்.

ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். அப்போது. . .”

அதற்குமேல் நேசமணியால் தாங்க முடியவில்லை. கையைத் தடவி ரேடியோவின் குரல் வளையைக் கண்டுபிடித்துத் திருகி நிறுத்தினார். படுத்தநிலையில் கன்னங்களிலிருந்து காதுகள் வழியே தலையணையை நனைத்துக்கொண்டு பாய்ந்த கண்ணீரை அடக்க முடியாமல் விம்மி அழுதார். ரொம்ப நேரங் கழித்தே தன்னிலைக்குத் திரும்பி அடங்கினார்.

அவர் அப்படித்தான். வயது எண்பத்தைந்து ஆனாலும் காலையில் ஐந்து மணிக்கே முழித்துவிடுவார். எழுந்து விளக்கைப்போட வலுவில்லாமல் படுக்கையில் இருளைத் துழாவி ரேடியோவைக் கண்டு பிடித்துத் திருகுவார். வயோதிகம் அவரை முடக்கிப்போட்டிருக்கும் இந்த நாட்களில் ஒரே ஆறுதல் அந்த ரேடியோதான். கண்கள் பார்க்க முடியாமல் பழுதடைந்துபோனாலும் காதுகள் சற்றுக் கேட்கும் நிலையில் இருப்பதால் பொழுது கழிகிறது. அதில் வரும் நிகழ்ச்சிகளோடு ஒன்றித்து அவரும் பேசுவார். கட்டில் ஜன்னலோரம் கிடப்பதால் ரோட் டில் வாற போறவர்கள் அவரை நன்கு காணுவார்கள். தனக்குத்தானே புலம்புகிறார் என்றுதான் கருதுவார்கள். ஆனால் அவர் தனிமை பெரும்பாலும் அந்த ரேடியோவால் தான் விரட்டப்படுகிறது என்பதை யாரும் அறிந்திருக்கமாட்டார்கள்.

கிறிஸ்தவச் செய்தியாளர் ஜோயல் ஜெபசிங்கின் பிரசங்கம் என்றால் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். சில நாட்களாக அவர் பழைய ஏற்பாட்டின் செய்திகளைத் தனது பாடுபொருளாகக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு நாளும் அவர் பிரசங்கம் கேட்டு இன்று போல அழுதது இல்லை. ஆபிரகாமின் கதை அவர் விஷயத்தில் தலைகீழாக நடந்துவிட்டது.

அவரது ஏகபுத்திரன் நேசராஜ் தான் பென்ஷன் பற்றின சமயத்தில் இதைப் போலத்தான் தன்னைப் பலியிடுவதற்காக ஒரு மலையில் நடத்திக்கொண்டுபோனான். ஆபிரகாமுக்கு மோரியா மலை என்றால் தனக்கு வாள்வச்சான் பாறை.

கண்ணீர், துடைக்க ஆளில்லாமல் உலர்ந்து போயிற்று. ஒரு நாளில் பத்துத் தடவையாவது அவர் நினைக்காமல் இருக்காத அந்தக் காட்சி இப்போதும் நெஞ்சில் படர்ந்தது. தன்னை மலைக்குக் கொண்டு போகும் ஒரு மாத காலத்திற்கும் முன்பே தன்னிடம் அவன் அந்தத் திட்டத்தையும் அதனால் விளையும் பலனையும் எடுத்துக்கூறிக்கொண்டே இருந்தது இப்போது நினைவுக்கு வந்தது.

“அப்பா, இது ஆர்.எஸ்.எஸ். ஏரியா. நம்மள இஞ்ச வாழவிடமாட்டானுவ. வித்துத் தள்ளீட்டு வேற எங்கயாவது போகலாம்.”

நேசராஜ் தில்லி இந்திரா காந்தி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் நாடறிந்த மருத்துவ விஞ்ஞானி. அவரை அறியாத வி.வி.ஐ.பி.க்கள் தில்லியில் கிடையாது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் விருதுபெற்றவர். ஒருவேளை மகன் தில்லியில் தன்னுடன் வந்து தங்குமாறு அழைக்கிறானோ என்று நினைத்துக் கொண்டார் நேசமணி. அது மகனின் வாயிலிருந்து வெளிப்படும் என்று நம்பினார்.

கதவுக்குப் பின்னால் இதுவரைக்கும் பதுங்கி நின்ற மருமகள் நடந்துகொண்டிருக்கும் நாடகத்தில் தனக்கான பகுதி வந்ததும் ஒன்றும் தெரியாத பாவனையைக் காட்டியவாறு திடீரெனத் தோன்றினாள்.

அவளது வருகையைக் கண்ட நேசமணி கபடம் அறியாத புன்னகையை வெளிப்படுத்தியவாறு அன்புடன் பார்த்தார்.

“டவுன் எனக்கு ஒத்து வருமா?”

“இருபத்திநாலு மணிநேரமும் நம்மாட்டியும் கையுமாத் திரிகிற ஒங்களுக்கு டவுனெல்லாம் ஒத்து வராது. அது நம்ம ஊரைவிடச் சீரழிஞ்சுப்போச்சி. ஒரே குண்டு வெடிப்பும் கொள்ளையும்தான். டில்லியில கெடந்து நான் படுகிறபாடு எனக்குத்தானே தெரியுது.”

மகனின் முகத்தைக் கூர்ந்து பார்த்தவர் அவன் பேசுவதன் பொருள் புரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கும்போது மருமகள் இரக்கம் பொங்கப் பேசினாள்.

“மாமாவப் பற்றி நீங்க யாருமே கவலப்படண்டாம். அவரக் கவனிக்க எனக்க அப்பாவும் அண்ணனும் இருக்கினும்.”

தொடர்ந்து அவர்கள் பேசிய வார்த்தைகளில் உட்பொதிந்த திட்டம் ஒன்று இருப்பதையோ, அதை நிறைவேற்றத் துடிக்கும் அவர்களின் ஆவலையோ அறியாதவராகப் படுத்திருந்தார். மகனும் மருமகளும் ரொம்பவும் படித்தவர்கள் என்பதால் அவர்கள் என்ன செய்தாலும் அது நன்மைக்குரியதாகத்தான் இருக்கும் என்றும் நினைத்துக்கொண்டார்.

மகன் பெயரில் அவர் உயில் எழுதிவைத்திருக்கும் சொத்துகளை விலைக் கிரயம் செய்வதற்குரிய உரிமையை அவனுக்கு வழங்க வேண்டும் என்றும் மாமனார் வாள் வச்சான் பாறையில் வரதட்சிணையாகக் கொடுத்த ரப்பர் எஸ்டேட்டில் ஒரு வீடு கட்டித் தந்து தகப்பனாரைக் குடியேற்றுவது என்றும் அங்கே அவர் தனது இறுதிக் காலத்தைக் கழிப்பது என்றும் அவர்கள் கூறியதை அவர் அப்படியே ஏற்றுக்கொண்டார்.

ஏற்கனவே இதுபோல விற்ற சொத்துகளின் பணத்தை அவன் என்ன செய்தான் என்பதையோ தற்போது இந்த நிலத்தை விற்றுக் கிடைக்கும் பணத்தை என்ன செய்யப் போகிறான் என்ற கேள்வியையோ எழுப்பாததுடன் அது பற்றிய சின்ன உணர்வுகூட அவரிடம் இல்லாதிருந்தது. பென்ஷனின்போது கிட்டிய ஐம்பதினாயிரம் ரூபாய் பணத்தை எஸ்டேட்டில் அவர் தங்குவதற்கான வீடுகட்டத் தருமாறு கேட்டபோது மனமுவந்து கொடுக்க வும் செய்தார்.

ஆறு மாதங்களுக்கு முன்புதான் வீட்டோடு சேர்ந்து கிடந்த நிலத்தில் நாற்பது சென்ட் பூமியைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு அடிமாட்டு விலையில் நேசராஜ் விற்றான். அப்போது கையெழுத்துக் கேட்டபோது எந்த மறுப்பும் சொல்லாமல் அவர் போட்டுக்கொடுத்தார். இப்போதும் நேசராஜ் அவர்களையே நம்பி இருந்தான். இவர்கள் விளையில் ஓலை முடைந்துகொண்டு கிடந்த பெண்மணி கொத்தனுக்குக் கையாளாக வேலைபார்த்த கணவனை வெளிநாடு அனுப்பி இவர்கள் நிலத்தை விலை கொடுத்து வாங்கும் நிலையை அடைந்துவிட்டார்கள். நேற்றுதான் அந்தக் குடும்பத்தைத் தனது மாமனார் வீட்டுக்கு அழைத்து பிரியாணி விருந்து கொடுத்துத் தனது தந்தையாரை அப்புறப்படுத்திய பிறகு மொத்த நிலத்தையும் அவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்குப் பேரம்பேசி அட்வான்சாக ஒரு லட்சம் ரூபாயும் வாங்கி வைத்துக்கொண்டான்.

நேசமணி இதொன்றும் அறியாமல் தனக்காக மகன் கட்டிய வீட்டையும் தான் இனிமேல் நிரந்தரமாகத் தங்கப்போகும் இடத்தையும் பார்க்க அன்று புறப்பட்டார். கூட மகனும் உண்டு. எந்த வழித்தடமும் இல்லாமல் பாறையும், கல்லாம் பொற்றையுமாகக் கிடந்த அந்தப் பகுதியில் நடந்து செல்வது வயதான அவருக்கு மிகவும் பிரயாசமாக இருந்தது. மகன் ஒரு கையைப் பிடித்துக் கவனமாக அவரை மலையின் மேல் ஏற்றினாலும் பல இடங்களில் பொடி சறுக்கி விழுந்தார். அவரது கால்கள் இரண்டும் தள்ளம்பாடின. பத்தடி தூரத்திற்கு ஒரு தடவை அவர் பக்கத்திலுள்ள பாறைகளில் அமர்ந்து இரைப்பார். நெஞ்சைப் பிடுங்கி எடுப்பதுபோல வலி எடுக்கும். தாகத்திற்குத் தண்ணீர்கூட அந்தப் பகுதியில் இல்லாததில் துவண்டு போனார். நேசராஜ் வேறு அவரை அதிகநேரம் உட்காரவிடாமல் துரத்திக்கொண்டிருந்தது வேதனையைத் தந்தது.

காலையில் நாலுமணிக்கு எழும்பிப் புறப்பட்டது மதியம் ஒரு மணிக்குப் போலச் சம்பவ இடத்திற்கு அவர்களைக் கொண்டு சேர்த்தது. வீடு என்று மகன் கட்டித்தந்த இடத்தைப் பார்த்தார். பச்சை மண்கட்டையால் கட்டப்பட்டு ஒரு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் மட்டும் போடப்பட்டிருந்த அது வீடு என்ற தகுதியைப் பெற்றுத் திகழ மறுத்தது.

“வீடு எப்படி? நல்ல ஜோரா இருக்கு. காற்றோட்டமான இடம். அப்பாக்கி குளுகுளுண்ணு இருக்கும்.”

“கறண்டு இல்லியா?”

“பண்டு அப்பா கறண்டு வௌக்கிலயா படிச்சது? ரேஷன்ல இங்க அஞ்சி லிட்டர் மண்ணெண்ணெய் கெடைக்குது. மாமாட்ட சொல்லுகேன், மண்ணெண்ணெய் விளக்கு வாங்கித் தருவாரு.”

“தண்ணி வசதி எப்பிடியோ?”

“ஒரு பர்லாங் தூரம் நடந்தா ஒரு கொளம் வரும். அதில ஊறு தோண்டிதான் எல்லாரும் இங்க தண்ணி எடுக்கினும்.”

“திடீர்ணு ஒரு சாமானம் தேவைப்பட்டா எப்பிடி வாங்குவது? கடை ஒண்ணும் கிடையாதே? ஒரு நோய்நொடி வந்தா ஆஸ்பத்திரிக்குத் தூக்கீட்டுப் போகப் பாதை வசதிகூட இல்லாத்த இடமா இல்லியா இருக்கு.”

“அப்பா அப்பிடி கொஞ்சதூரம் நடந்து தண்ணியெடுத்துட்டு வந்து நாலஞ்சி தடவை ஏறி இறங்கினாபாரும், ஒடம்பு நல்ல ஆரோக்கியமா இருக்கும். ஒரு சோக்கேடு வராதே. சிற்றியில பாக்கணும், எல்லாருக்கும் சின்ன வயசிலே சுகர்! எப்பிடி வந்து? நடக்கிற பழக்கமே இல்ல. ஒங்களுக்கு அப்படி எல்லாம் வராம இருக்கணும்ணுதான் இப்பிடி நல்ல ஒரு எடத்த ஏற்பாடு செய்தது.”

“ராத்திரி வனவிலங்குகளுக்க உபத்திரவம் உண்டு போல இருக்கே?”

“இங்க பாருங்க அப்பா, மனுஷனத் தவிர வேற எந்த விலங்கும் யாரையும் ஒண்ணும் செய்யாது.”

“வாஸ்தவம்தான்.”

“பத்திரம் எல்லாம் ரெடியாத் தான் இருக்கு. அப்பா ஒரு கையெழுத்து மட்டும் போடணும்.”

“அம்மாவுக்க கல்லறை அங்க இல்லியா இருக்கு?”

“அது ஒண்ணும் பிரச்சினை இல்ல. தோண்டி எடுத்து திரும்ப இங்க கொண்டு வந்து அடக்கம் செய்யலாம். நீங்க இறந்தபிறகுகூட அடக்கலாம்.”

“சரி! போகலாமா?”

ஏறியதைவிட இறங்கிச் செல்வது சற்று சிரமத்தைக் குறைப்பதாக இருந்தாலும் நேசமணிக்கு முன்பைவிடப் பயங்கரமாக இருந்தது. இதயம் வலித்து மனசு கனத்ததே காரணம். கீழே விழுந்து விடுவதுபோல ரெண்டு மூன்று தடவை முகங்குப்புறச் சரிந்தார். பல்லைக் கடித்துக்கொண்டு சமாளித்தார். செத்துப்போன அவர் மனைவியின் நினைவு படர்ந்ததும் முகம்சிவந்து அழுகை வந்தது. ‘ஆண்டவரே! பெத்த மகனுக்க முன்னால என்ன அழவச்சி மானங்கெடுக்கப்பிடாது’ என்று மனசில் வேண்டிக்கொண்டார் அவர்.

வயசான காலத்தில் சொகுசான ஒரு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டவரல்ல அவர். புழங்குவதற்குச் சற்று சிரமங்கள் இருந்தாலும் சமாளித்துக் கொள்ளக்கூடியவர்தான். சின்ன வயதில் அவர் வாழ்ந்த வாழ்க்கை இன்று போல அல்ல, எந்த சௌகரியமும் இல்லாததாகத்தான் இருந்தது. ஆனாலும் உள்ளதைக் கொண்டு சந்தோசமாகவே வாழ்ந்தார்கள். அந்த ஊரில் பனை வைத்து ஏறிய ஒரே குடும்பம் அவர் தந்தையினுடையது. பலர் வந்து பசியாறிச் செல்வதைப் பார்த்து வளர்ந்தவர் அவர். தான் பெண்ணெடுத்த குடும்பமும் அதைப் போலத்தான். தன் மனைவியின் தகப்பனார் பஞ்ச காலத்தில் பல இடங்களில் கஞ்சித் தொட்டிகளைத் திறந்தவர். யாருமே இன்னொருவரைத் தனது குடும்பத்தில் வஞ்சித்தது கிடையாது. ஆனால் இன்று தன் மகன் இப்படி ஒரு இருள் வனாந்தரத்தில் தன்னைக்கொண்டுபோய்க் கட்டிப்போடுவதற்குத் தன் மனைவி உயிரோடிருந்தால் விட்டிருப்பாளா என்று நினைத்ததுதான் தாமதம், குலுங்கிக் குலுங்கி அழுதார். மகன் திரும்பிக்கூடப் பார்க்காமல் முன்னே நடந்து சென்றுகொண்டிருக்கிறான். ஒரு ரப்பர் மரத்தின் மூட்டில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஒன்றுக் கிருப்பதைப் போலக் குனிந்திருந்து ஆசை தீருமட்டும் அழுதார். முகத்தைத் துடைத்துக்கொண்டு எழுந்தபோது மகன் தூரத்தில் ஒரு ஆயினி மூட்டில் தனக்காகக் காத்துக்கொண்டு நிற்பது தெரிந்தது.

தன் மனைவி உயிரோடிருந்த காலத்தில் மகனும், இரண்டு பெண் மக்களும் தன்னிடம் மிகுந்த நேசத்துடன் வாழ்ந்துவந்தார்கள். இடையில் இதயநோயால் மனைவியை மருத்துவமனைகளில் வைத்துக் காத்த நேரங்களில் ஒவ்வொரு மக்களும் வெளியூர்களில் அவரவர் படிப்பைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். எந்தத் தடங்கலும் இன்றிச் சமயத்துக்குப் பணம் அனுப்பிவைப்பார். இந்தச் சமயத்தில்தான் பெந்தெகோஸ்து பாஸ்டர் ஒருவன் செம்புலிங்கத்தின் மகளை நேச ராஜிற்குச் சம்பந்தம் கொண்டு வந்தான். கையில் செலவுக்குப் பணமில்லாத சூழ்நிலையில் யார் எவரென விசாரிக்கும் சந்தர்ப்பம் இல்லாமற்போக ஒரு மாதத்தில் திருமணமும் நடந்தது. அடுத்த சில நாட்களில் மனைவியும் இறந்து போனாள். அவளைக் குளிப்பாட்டிப் பெட்டியில் வைத்த பின்னால் நாசுவத்தி அவர் கையில் கொண்டு வந்து கொடுத்தது ஒரு பித்தளைத் தாலி. தாயாரின் தங்க நகைகளை விற்றுப் படித்து முன்னுக்குவந்த மகன்தான் இன்று பணத்திற்காக அவளது கல்லறையைத் தோண்டி எடுத்து வேறொரு இடத்தில் அடக்கம் செய்யத் துடிக்கிறான். நேச மணிக்குத் தலைசுற்றி மயக்கம் வந்தது.

நேற்று சாயங்காலம் மூத்தமகள் வீட்டுக்கு வந்தாள். சரியாக விசாரிக்காமல் ஒரு குடிகாரன் கையில் அவளைப் பிடித்துக்கொடுத்ததால் கொஞ்சகாலம் அவனோடு கிடந்து மாரடித்து ஓய்ந்தவளாய்த் தற்போது இராமநாதபுர மாவட்டத்தில் தண்ணீர் இல்லாத ஒரு பிரதேசத்தில் தனது ஒரு மகள், ஒரு பையனுடன் ஆரம்பப் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிகிறாள். எப்போதாவது லீவுக்கு வரும்போது தகப்பனாரை வந்து பார்த்துவிட்டுப் போவாள்.

“அப்பா! சொந்த எடத்தையும் விட்டுட்டு எங்கயாக்கும் போவப் போறிய? இப்பிடித்தான் காப்பிக்காடு வஸ்துவ விற்றான். அனந்த மங்கலம் வஸ்துவ விற்றான். அரச குளம் ஏலாயில விற்றான். வெள்ளையம்பலம் வஸ்து இப்ப சென்றுக்கு மூணு லட்சம் போகும். பாவிப்பய ரெண்டாயிரம் ரூவாவச்சி கையளிச்சித் தள்ளினான். ஆட்டக்கடிச்சி, மாட்டக்கடிச்சி இப்ப ஒங்களுக்கு கெடக்க இடம் இல்லாம ஆக்கப் போறான். அப்பா என்ன செய்துற்று இருக்கீரு?”

“செலவுக்குப் பணம் இல்லன்னு சொன்னான்.”

“தெருவில துண்டவிரிச்சிட்டு எரக்கச் சொல்லுங்க. எங்களக் கெட்டிக் குடுத்தா இவன் கெட்டுப் போனான்? என்ன ஒரு குடி காரனுக்குப் பிடிச்சிக்குடுத்தான். தங்கச்சிய ஒரு வேலை இல்லாதவன் கையில கொடுத்தான். அவிய ரெண்டு பேரும் வெளிநாட்டுக்குப் போனதினால தப்பிச்சினும்ணு நெனச்சிக்கிடும். மாமனாருக்குப் பேச்சக்கேட்டு ஆடுகான். கடைசிக் காலத்தில நீங்க கட்ட நீட்டப்போற வஸ்துவ இல்லியா விக்கப் போறான். பணம் இல்லேன்னா மாமனாரு கொடுத்த நெலங்கள விக்கச் சொல்லுங்க. திரும்பத்திரும்ப இஞ்ச வந்து ஏன் கைய வைக்கினும்?”

“மகளே, அடுத்தவியளப் பற்றி நாம் ஒண்ணும் பேசண்டாம். அது நல்லா இல்ல பாரு.”

“ஏன் பேசண்டாம்? சம்பந்தப்பட்டா பேசித்தான் ஆவணும். பேசாம ஒண்ணும் தீராது. அப்பாக்க நெலத்த ஒற்றி வச்சி அண்ணன் பெண்டாட்டி தங்கச்சிக்க என்கேஜ் மென்ட்றுக்கு ஒரு லச்சம் கொண்டு பொய்க் குடுத்தாக்கில நீரு பேசி இருந்தா இப்பிடி ஒரு நெலம ஏற்படுமா? அரகுளம் ஏலாய விற்று மாப்பிளையும், பெண்டாட்டியும் வெளிநாட்டுக்கு டூர் போச்சினுமே, ஒரு வார்த்த பேசினியளா? நீங்க பாடுபட்டுச் சேத்த சொத்துக்கள எல்லாம் நிமிஷத்தில விற்று அவா கைநெறைய வளையங்களா வாரி அணியிறா. அவளுக்க தங்கச்சியோ, தம்பிமாரோ கேட்டா சும்மா கழற்றிக் கொடுக்கிறா. இன்னா பாரும், எனக்கக் கழுத்தில கெடக்கியத. . .”

அவள் இழுத்துக்காட்டியதில் அறுந்து கையோடு வந்த கில்ட் செயின் தரையில் விழுந்தது. அப்பாவியாக வளர்ந்த பெண் வாழ்க்கைச் சூழலில் எந்த அளவுக்கு ஆவேசக்காரியாக மாறிவிட்டாள் என்ற திகைப்பு மாறாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார்.

அவள் பேசியதிலுள்ள நியாயமும், அர்த்தமும் இப்போதுதான் அவருக்குப் புரிந்தது போல இருக்கிறது. அதிலும் திரும்பிச் செல்லும்போது கடைசியாக அவள் தனக்குத் தந்த எச்சரிக்கையைத் திரும்ப ஒருமுறை நினைத்துப் பார்த்தார்.

“அப்பா, கடைசியா நான் ஒண்ணு சொல்லியேன். நல்லாக் கேட்டுக்கிடணும். ஒங்க எடத்தில இருந்தா யாரக்கண்டும் பயப்படாம இருக்கலாம். சொக்காரளும், அருவக்காரளும் உண்டு. இத விற்றுட்டு அடுத்தவியளுக்க ஒண்டுடியில போறீருண்ணு வச்சிருங்க, ஒருபய மதிச்சமாட்டான். பெறவு குடிச்ச வெள்ளம்கூடக் கெடச்சாது பாத்திடுங்க. இப்ப வீட்டுக்க மின்ன கெணறாவது கெடக்குது.”

“சரியாத்தான் சொன்ன” என்று சத்தமாக அவர் பேசியதைக் கேட்டு மகன் திரும்பிப் பார்த்தான்.

“என்ன அப்பா சொன்னீங்க?”

“ஒண்ணுமில்ல.”

மகள் எவ்வளவு தீர்க்கதரிசனமாகச் சொன்னாள், ‘குடிக்கத் தண்ணி கெடைக்காது’ என்று. அது எவ்வளவு சீக்கிரத்தில் உண்மையாக மாறிவிட்டது. ஒருவேளை அவள் அம்மாதான் மகளின் வடிவில் இருந்து பேசினாளோ?

“அப்பா, எல்லாருக்கும் ஒங்க பென்ஷன் பைசா மேலதான் கண்ணு. ஒங்கமேல இல்ல. செம்புலிங்கம் அவன் எடத்துக்குக் கொண்டு போனான்னா ஒங்க காசில் வெளையாடலாம்ணுதான் திட்டம் போடறான். ஒருக்காலும் சம்மதிக்காதீங்க.”

பஸ் குலுங்கி நின்றபோதுதான் அவர் தன்னுணர்வு பெற்றார். அதற்குள் தொடுவெட்டி வந்துவிட்டது. ஆட்களின் கூட்டத்தில் தட்டுப்படாமல் மெதுவாக எவ்வளவு பவ்வியமாய் மகன் இறங்குகிறான். ஆனால் மனசுக்குள் எத்தனை அதிகம் மாய்மாலங்களை வைத்துக்கொண்டு பிறரை வஞ்சிக்கத் துடிக்கிறான். சொந்த அப்பனும் இப்போது பிறன்தானே. இந்தக் குணம் யார்வழி அவனுக்குள் வந்து புகுந்திருக்க வேண்டும்? டவுன் வாழ்க்கை இவ்வளவு பெரிய சதிச்செயல்களை ஒருவன் மனசில் சுலபமாக ஏற்றிவிடுமா?

நேசராஜ் தகப்பனின் அருகில் வந்தான். அவர் பஸ் படிக்கட்டில் இறங்குவதற்கு உதவிசெய்தான். காலை முதல் சாயங்காலம்வரை எவ்வளவு தூரம் கரடுமுரடான இடங்களில் தன்னை நடத்திக்கொண்டு வந்தான். இப்போது உதவிக்கு வருகிறான். பாவிப்பயலே! என் மனசு படுகிற பாட்டை உன்னால் அறிய முடியவில்லை. கால்கள் வீங்கி இருப்பதையுமா உன் கண்கள் காண மறுக்கின்றன?

பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்த பிறகுதான் சற்று ஆசுவாசம் வந்தது. ஊருக்குச் செல்லும் பேருந்து வந்து நின்ற பிறகும் அசதியால் அவர் எழாமலிருந்தார். நேரம் இருட்டிவிட்டது. பேருந்துகளில் பெருங்கூட்டம். இனிமேல் ஒருமணி நேரம் நின்று பயணம் செய்வதென்பது முடியாத காரியம். சற்று கூட்டம் குறையட்டும் என்று காத்திருந்தார்.

“நான் கேட்ட காரியம் பற்றி அப்பா பதில் எதுவும் சொல்லாமப் போறியளே?”

“நீ இப்ப நம்ம வீட்டுக்குத்தானே வாற?”

“இல்ல அப்பா. இண்ணு மாமா வீட்டில நிக்கப் போறதா ஏற்கனவே சொல்லிட்டேன். நாளை காலை பதினொரு மணிக்கு டில்லிப் போற ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயிலப் பிடிக்கணும்.”

“அப்ப செரி!”

“பத்திரம் எல்லாம் ரெடியா இருக்கு. டில்லிக்குப் புறப்படும் முன்பு அப்பா ஒரு கையெழுத்துப் போட்டாப் போதும்.”

“அது பற்றி உனக்கு நான் கடிதம் எழுதுகிறேனே.”

மறுநாள் காலையில் சிறுபிராயத்திலிருந்தே தன்னுடன் பயின்ற கண்ணங்கரை நாயர் வீட்டுக்குச் சென்றார். வாதநோயால் படுத்திருந்த அவருக்கருகில் உட்கார்ந்து வாஞ்சையோடு அவர் கால்களைத் தடவினார். நாயரின் மருமகள் கொடுத்த ஏலக்காய் டீயை ரசித்துக் குடித்தார். சிறிது நேரம் களிப்பும் சிரிப்புமாகப் பழைய காலத்துச் சம்பவங்களையெல்லாம் நினைவுகூர்ந்தவர்கள், அதன்பிறகு சீரியசான பேச்சுகளில் மூழ்கினார்கள்.

நாயர் எப்படித்தான் வழக்கறிஞர் தொழிலைச் செய்தாரோ, தெரியாது. கள்ளம் கபடம் என்பதைச் சிறிதுகூட அறியாதவர். அதுவே தொழிலாக இருந்த உலகத்தில் அவரும் இயங்கினார் என்பதுதான் அபூர்வமான விஷயம். அவரது வீட்டுக் காம்பவுண்ட் சுவரோரமாக நின்றுகொண்டிருந்த தென்னைமரத்தில் ஒருநாள் சிறுவன் ஒருவன் ஏறித் தேங்காய் திருடிக்கொண்டிருந்தான். அப்போதுதான் வெளியே எங்கோ சென்றிருந்த அவர் வீட்டுக்கு வந்தார். அவரைக் கண்டதும் சிறுவன் தேள் கொட்டியது போலத் திடுக்கிட்டான். அவனைக் கண்ட நாயர் வாசற் கதவைத் திறக்க வந்ததையும் மறந்து வெளியே இறங்கி ரோட்டில் இன்னொரு திசையை நோக்கி ஓடினார். என்னவென்று விசாரித்தவர்களிடம், தனது வீட்டுத் தென்னை மரத்தில் சிறுவன் ஒருவன் ஏறியதையும், ஒருவேளை தன்னைக் கண்ட பரபரப்பில் வேகமாக இறங்கினால் கீழே விழுந்து அவனுக்கு அடிபட்டுவிடுமோ என்று அஞ்சி, தான் திரும்ப நடப்பதாகவும் கூறினார்.

வீட்டுக்கு வெளியே வாசல்வரை இறங்கி அவருடன் வழியனுப்ப வந்த நாயர், “நேசமணி, என்ன காரியமானாலும் பயப்படாத. தைரியமாக இரு. எதையும் ஒருகை பாத்துடலாம்” என்று ஊக்கம் தந்தார். அந்தத் தெம்பில் மகனுக்கு ஒரு கடிதத்தை எழுதினார் நேசமணி.

“எனக்கு நீ மட்டும் மகனல்ல, வேற இரண்டு பெண்கள்கூட உண்டு என்பதை ஞாபகத்தில் வச்சிக்க.”

கடிதத்தின் சாராம்சம் இவ்வளவு தான். ஆனால் அது வெளிப்படுத்திய அவரது மனநிலையையோ, செயல்பாடுகளின் நகல் வடிவையோ மகனும் மகளும் உட்பட அவனது மாமனாரின் குடும்பத்தினர் அறியும் பக்குவத்தில் இல்லை. அவர்களிடம் கேலியும் தமாசுமாகவே அவர் கருதப்பட்டார்.

கடிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு நேசராஜின் மனைவி அவனைக் கேலி பொங்கப் பார்ப்பாள்.

“ஓகோ, அப்ப உங்க தகப்பனாருடன் நீங்க மூணு ஆம்பிள்ளைய, அப்படித்தானே?”

“ரெண்டு ஆம்பிள்ளையளக்கூட இருத்திக் கடைசி காலத்த இனிமே அவரே பாக்கட்டும். நமக்கும் எளுப்பம்.”

கிழவர் ஒன்பது மாதகாலம் தனிமையில் யாருடைய துணையும் இல்லாமல் வாழ்ந்தார். காலையில் ஒரு பாத்திரத்தில் உளுந்தும், அரிசியும் போட்டு அடுப்பில்வைத்துத் தீமூட்டுவார். காலையும் அதுதான், மாலையும் அதுதான், இரவுக்கும் அதுதான். தணுத்துச் சளித்துப்போன கஞ்சியை அமிர்தமாகப் பருகுவார். துணைக்கு அருகில் பிலிப்ஸ் ரேடியோ. அது நிறைய மனிதர்களை அவருக்கு அறி முகம் செய்துவைத்தது. அவர்களில் சிலரை மிகவும் பிடித்தது. சந்திர புஷ்பம் பிரபு, உமா கனகராஜ் போன்றவர்களைத் தனது பிள்ளைகளாகவே நினைத்துக்கொண்டார். அவர்களுடன் உரையாடும் மனிதர்களின் கருத்துகளையும் சுகதுக்கங்களையும் அறிந்துகொள்வதுடன் தானும் சிலநேரங்களில் அவர்களுடன் பேசிக்கொள்வார். மூத்த மகள் லீவில் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தாள். அந்த மூன்று நாட்களும் அவரது நாவுக்கும் வயிற்றுக்கும் செழுமை தான். ஆட்டுரலைக் கழுவித் தோசைக்குப் போட்டாள். தகப்பனுக்குப் பாயாசம் வைத்துக் கொடுத்தாள். அவரது துணிமணிகளையும் உறங்கும் பெட்ஷீட்டையும் நனைத்து உலர்த்தித் தேய்த்துக்கொடுத்தாள். அறைக்குள்ளாக நீர் ஒழுகிச்செல்லும் அங்கணத்தில் கொண்டிருத்தித் தகப்பனின் முகத்தில் சோப்பு தேய்த்தாள். ரேசரைக் கையில் எடுத்த போதுதான் அவருக்கு விஷயம் புரிந்தது. ‘வேண்டாம், தாடி இருக்கட்டு’ என்று தடுத்துப் பார்த்தார். பேரன் அதைக் கையில் வாங்கிச் சவரம் செய்துகொடுத்தான்.

“இப்ப பாருங்க, சுந்தரக்குட்டனா அப்பா மாறி இருக்கு. சும்மா இதென்ன சாமியார் வேஷம்?”

கண்ணாடியில் பார்த்தபோது அவரது முகம் அவருக்குத் தெரியவில்லை. மகளின் முகம்தான் தெரிந்தது. வெளி பறந்த வீடும் விருத்தியாகி எண்ணெய்ப் பசைகளும் புகைக்கரிகளும் மாறிய கோலத்தில் ஒளி பிறந்தது.

மகளின் பையன் தாத்தாவோடு மிகவும் ஒன்றிப்போனான். அவரது படுக்கையில் ஏறி அவன் மோண்டு ஊத்தியதை அவர் மிகவும் ரசித்தார். யாரும் அறியாமல் ஒளித்தொளித்து இடையிடையே போய் தாத்தாவை நுள்ளினான். அப்போதெல்லாம் அவர் வாய்விட்டுச் சிரித்துக்கொண்டார். ஒருதடவை தாயார் கண்டுவிட்டாள். அடிக்கப் போனவளைத் தடுத்து நிறுத்தி, ‘குழந்தையும், தெய்வமும் ஒன்று’ என்று கூறி ஆசிரியைக்கே பாடம் நடத்தினார். ஒருநாள் மகன் தாயாரிடம், ‘தாத்தா ஏன் ரேடியோவப் பாத்து சும்மா பேசிக்கிட்டே இருக்காரு?’ என்று கேட்டான். ‘தாத்தாவுக்குப் பேச யாரும் கிடையாததால் அப்படிப் பழக்கப்பட்டுவிட்டாரு’ என்றாள். ‘யாரும் கிடையாதா?’ என்று பையன் கையை மறித்து மறித்துக் காட்டினான். ‘நான் தாத்தாகூட நிக்கட்டுமா?’ என்று மகன் கேட்டான். ‘நீ தாத்தாவக் கடிச்சுப் போடுவ’ என்று தாயார் கூறினாள். ‘இல்லம்மா. தாத்தாவ நான் கடிச்சவே மாட்டேன். எனக்க முதுகில ஏற்றிக்கிட்டுப் பறந்து போவேன்’ என்றான். கிழவரின் கண்கள் நீரால் தளும்பின.

அன்றிரவு பைபிளை எடுத்து மகளிடம் கொடுத்துப் பல இடங்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டார். சில இடங்களைத் திரும்பத் திரும்பப் படிக்கக் கூறினார். அவரது கண்கள் மூடியே இருந்தன. பையன் இடையிடையே, ‘தாத்தா உறங்குகிறார்’ என்று கூறினான். அப்போதெல்லாம் அவனைப் பார்த்து மெல்லிய புன்னகையை அவர் தவழவிடுவார். கடைசியில் பாட்டுப் புத்தகத்தை எடுத்துச் சில பாடல்களைப் பாடச் சொன்னார்.

என் நேசர் ஏசுவின் மேல் சாய்ந்தே

துன்ப வனாந்திரத்தில் நடந்திட

இன்பநல் வாழ்வடைந்தேன். . .

கடைசி இரண்டு வரிகளை மேலும் ஒரு தடவை அழுத்தமாகப் பாடும்போது அவர் உள்ளம் உருகியது. பாடுகிறவளின் குரலும் இரக்கத்தைத் தூண்டுவதாக இருந்தது. கண்களை மெதுவாகத் திறந்தவர் மகளை ஒருமுறை பார்த்தார். அவள் புன்னகைத்தவாறு பாடலை நிறுத்தாமல் அவரைப் பார்த்துக்கொண்டே தொடர்ந்தாள்.

நேசர்கொடி என்மேல் பறக்க

நேசம் மரணம்போல் வலிதே.

வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால்

உள்ளங்கள் அணைந்திடாதே.

திடீரென்று அவர் முகம் வேறொரு தோற்றம் கொண்டது. அவள் பாடுவதை நிறுத்தினாள். அருகே சென்று ‘அப்பா!’ என்று அழைத்தாள். மறுகி ஒரு பார்வை மட்டும் அவளைப் பார்த்தார்.

“மகளே! ஒனக்கு மட்டும்தான் என்ன எப்பவாவது ஒருக்கா வந்து பாக்கணும்ணு தோணுதுபோல இருக்கு. எனக்கு யாரும் இல்ல. நீ வரும்போது நான் படுத்துக் கெடந்தா, எனக்க சரீரத்த ஒண்ணு அனுக்கிப் பாக்கணும் மக்கா. . .”

அதற்கு மேல் அவரால் தாள முடியவில்லை. கதறி அழுதார். அவர் அழுகையைக் கட்டுப்படுத்த அவராலேயே இயலவில்லை. மகன் முன்புவைத்து அழுவதைக் கேவலமாக நினைத்தவர், எல்லாவிதமான கூச்சநாச்சங்களையும் கடந்து சென்றுகொண்டிருந்தார். அவர் அழுகை ஏனோ மகளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தவில்லை. தந்தையார் தன்னை அடித்ததாக ஒரு ஞாபகம் அவளுக்கு ஏற்பட்டதே இல்லை. எல்லாவற்றிற்குமாகச் சேர்த்து வட்டியும் முதலுமாகத் தந்துகொண்டிருக்கிறார் என்பதுபோல நினைத்தாள்.

தகப்பனாரிடம் விடைபெற்றுத் திரும்பும்போதும் மகள் முகத்தை இறுக்கமாகவே வைத்துக்கொண்டாள். பையன் மட்டும் ‘தாத்தாக்க கூடவே இருக்கியேன்’ என்று அழுது அடம்பிடித்தான். பேருந்தில் செல்லும்போது உறக்கத்திலும் ‘தாத்தா’ என்றுதான் அழுதான்.

சரியாக ஒருவாரம் கழித்து மகளிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. அதில் எதற்கும் அவர் கவலைப்படத் தேவை இல்லை என்றும், வயோதிகக் காலத்தில் தன்னுடன் யாரும் இல்லை என்கிற நினைப்பை முதலில் விட்டுவிடுமாறும் கேட்டுக்கொண்டாள். அடுத்த பத்தியில் அவருக்காக அவள் செய்ய விரும்பும் சில ஏற்பாடுகள் குறித்துத் தெரிவித்திருந்தாள். அது அவருக்கு ஏற்புடையதுதானா என்பதையும் கூறுமாறு எழுதினாள்.

அதன்படி, தனது இடமாற்றல் சிரமத்திற்குரியது என்பதால் தனது கணவனை முதலில் குமரி மாவட்டத்திற்கு இடம் மாற்றிக்கொண்டு வந்து அவருடன் தங்கவைப்பது. பிறகு தானே எளிதில் இடமாறுதல் பெற்று வந்துவிடுவது. அதன்பிறகு பக்கத்தில் கொஞ்சம் போல நிலம் வாங்கி செட்டில் ஆவது என்றும் அவள் போட்ட திட்டத்தை வாசித்தவர், மகளின் திறமையை மெச்சி உடனே பதில் கடிதமும் போட்டார். அதில், தனது உதவிக்கு மூத்த மகளைக்கூட அனுப்பினால் அவளது படிப்பிற்குரிய செலவைத் தான் ஏற்பதாக எழுதியிருந்தார். இரண்டு நாள் இடைவெளியில் வந்தது திரும்பவும் மகளின் கடிதம்.

இந்தக் காலத்தில் வயதுவந்த பெண்ணைத் தகப்பன் என்றாலும் தாய் இல்லாத நேரத்தில் கூடத் தங்கவைக்கக் கூடாது என்றும் அங்கிருந்து வந்தது முதல் பையன் எப்போதும் தாத்தாவின் நினைவிலேயே இருப்பதால் அவனை அனுப்பிவைக்க விருப்பப்படுவ தாகவும் எழுதப்பட்டிருந்தது. பேரன் வருகிறான் என்பதை அறிந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தாலும் கணவன்களைப் பெண்கள் இவ்வளவு மட்டமாக எடைபோடக் கூடாது என்றும் நினைத்துக்கொண்டார்.

மருமகன் ஜான்பாபு குறித்து அவர் செவிவழிச் செய்திகளாக நிறையவே கேள்விப்பட்டிருக்கிறார். நேரில் பார்க்க ஒரு நோஞ்சான் கணக்கில் பாவம் போலவே இருந்தான். ஊரில் பலர் அவனைக் குறிப்பிடும்போது ‘சீக்கிறி’ எனப் பெயரிட்டு அழைத்தார்கள். அது கேட்டு ஒருபுறம் அவருக்கு வருத்தம் இருந்தாலும், மனசில் சிரிப்பு எழாமலும் இல்லை. தன்னைப் பொறுத்தமட்டில் மிகவும் மரியாதையாகத்தான் நடந்து கொள்கிறான் என்பதை நினைத்துப் பார்த்தவர், அதற்கு மேல் என்ன வேண்டும் என்றும் யோசித்தார்.

மூத்த மகளுக்குத் திருமணமான புதிதில் எல்லோருமாகச் சேர்ந்து சர்ச்சுக்குப் போய்விட்டுத் திரும்பும் போது ஒருநாள் ரோட்டோரத்தில் ஒருவன் படங்களைப் போட்டு விற்றுக்கொண்டிருந்தான். அதிகமும் தேசத் தலைவர்களும் சினிமா நடிகர்களுமாக இருந்த அந்தத் திருக்கூட்டத்தில் ஜான்பாபு ஒரு படத்தைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு, ‘யார் மாமா இந்தத் தொப்பிக்காரன்?’ என்று கேட்டான். மருமகன் தமாஷ் பண்ணுவதாக முதலில் நினைத்தவர், அவன் கேட்ட விதத்தையும் முகபாவனைகளையும் வைத்துக்கொண்டு, ‘உண்மையிலேயே இவரை உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டார். ‘தெரியாததினால்தானே உங்களிடம் கேட்கிறேன்’ என்றான். ‘இவர்தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்’ என்று கூறினார். ஜான்பாபு வரலாற்றுப் பாடம் நடத்தும் பள்ளி ஆசிரியர் என்பதைத் தெரியாத எவருக்கும் இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை. நேதாஜி சுபாஷ் சந்திரபோசைத் தெரியாத ஒருவன் வரலாற்று ஆசிரியனாக இருக்க முடியாதா என்று கேட்டாலும் தற்காலத்தில் வியப்பதற்கு எதுவும் இல்லைதான். அவரை அறியாவிட்டால் ஜனங்களுக்கு என்னதான் குறைஞ்சு போச்சு?

நேசமணி தன்னுடன் படித்த கனகராஜை நினைத்துக்கொண்டார். படிப்புக்கும் அவனுக்கும் எட்டாம் பொருத்தம். வாத்தியார் அவனைப் போட்டு அடிக்கிற அடியில் மொத்தப் பள்ளிக்கூடமே கூடிவிடும். ஒருநாள் ஆங்கிலப் பாடம் நடத்தும் தேவசகாயம் ஹெட்மாஸ்டர் அவனிடம், ‘ஆங்கில மொழியில் எத்தனை எழுத்துகள் உண்டு?’ என்று கேட்டார். அவன் உரத்த குரலில் ‘நாப்பத்திநாலு’ என்றான். ‘வேற கூடுதலா எதாவது உண்டா?’ என்று கேட்டார் ஆசிரியர். அவன் மனசுக்குள் வைத்துக் கூட்டிப் பார்த்துவிட்டு, ‘இல்லை’ என்று கூறினான். மொத்த வகுப்பும் சிரிப்பில் அலை மோதியது. ‘நாற்பத்து நாலு எழுத்தையும் எழுதுவியா?’ என்று கேட்டவாறு அவனை வகுப்புக்கு முன்னால் அழைத்து சாக்பீசைக் கையில் தந்தார். அவன் சொன்னது போலவே நாற்பத்து நான்கு எழுத்தையும் ஒன்றுகூடக் குறைக்காமல் எழுதிக் காட்டினான். ஆங்கிலத்திலுள்ள பெரிய எழுத்துகளையும் சின்ன எழுத்துகளையும் கலந்து எழுதியிருந்தான். அந்த அளவுக்கு அறிவாளியான அவன் பள்ளியொன்றில் உடற்கல்வி ஆசிரியராகப் பணி புரிந்து, கூட வேலைபார்த்த வேதியியல் ஆசிரியையை மணம் முடித்து இன்று இரண்டு பென்ஷன் வாங்கிக்கொண்டிருக்கிறான். ஆங்கில மொழியறிவு பெற்ற தன்னால் ஒரு எல்.டி.சி. கிளார்க்காக மட்டுமே முடிந்தது. வெறும் படிப்பிலும் திறமையிலும் மட்டுமா ஒளிந்து கிடக்கிறது வாழ்க்கை?

ஜான்பாபுவின் திருமண ஆலோசனையை நேசராஜின் மாமனார் செம்புலிங்கமே கொண்டுவந்தார். ‘பையனை எல்லோரும் ஒரு தடவை போய்ப் பார்த்துவிட்டு வருவது நல்லதில்லையா?’ எனக் கேட்டதற்குத் தந்தையிடம், ‘மாமா பாத்தாருண்ணா பாத்தது போலத் தான் இருக்கும்’ என்று கூறினான் நேசராஜ். ஜான்பாபுவுக்குத் தனக்கொரு மச்சினன் உண்டு என்பது தெரியுமே தவிர, நேரில் பார்த்தது கிடையாது. கல்யாண மண்டபத்தில் எதிர்மாலையும், சந்தனமும் போட வந்தபோதுதான் அவனை முதன் முதலாகக் கண்டது.

மண்டபம் முழுக்கக் குடிகாரப் பயல்களின் கூட்டமாக இருந்தது. சாப்பிடும் இடத்தில் யாரோ ஒருவரின் இலையில் இருந்த பொரித்த கோழி இறைச்சித் துண்டை மாப்பிளைக் கூட்டத்தான் ஒருவன் எடுத்துத் தின்றுவிட்டு எலும்பை அவர் மேல் எறிந்ததற்காக ஒரு கூட்ட அடி அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது. மலர் சொரி பாடலுக்குப் பிள்ளைகள் தயாராக முன்னே வந்து நின்றார்கள். எழும்பி நடப்பதற்குச் சீவனற்ற ஒருவன் பெரிய குப்பி கிளாசில் எதையோ கொண்டுவந்து எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்கக் கொடுத்துவிட்டு, ‘அண்ணன் சர்பத்து கேட்டாரு’ என்று சத்தமாய்ச் சொன்னான். ஜான்பாபுவும் அதை வாங்கி மடக்கென்று குடித்தான். பக்கத்திலிருந்த மணப்பெண்ணுக்கு அது சர்பத் அல்ல என்று மணத்தது.

கல்யாணப் பெண்ணுக்குச் சாப்பாடு இறங்கவில்லை என்று தோழிகள் கிண்டலடித்தனர். ஆனால் அவளோ சுரத்தில்லாமல் இருந்தாள். பெயருக்குக் கையை இலையில் இட்டு விரவினாள். கை கழுவப் போகும் இடத்தில் செம்பு லிங்கம் நின்றுகொண்டிருந்தார். அவள் இரத்தம் முழுக்கத் தலைக்கேறியதுபோலக் கோபம் மூண்டது.

“இந்தத் தெண்டிப்பயல நீருதானா ஓய் எனக்குச் சம்பந்தம் பாத்தீரு?”

“என்ன பேச்சிது மரியாத இல்லாம? கொஞ்சம் பதுக்கப் பேசு பிள்ள. ஆளுவ பாக்கினும்.”

“ஆளுவ நொட்டிச்சினும். தள்ள இல்லாத பெண்ண எங்கெயும் கொண்டு தள்ளீட்டு மருமகனுக்க வகையள எல்லாம் அபகரிச்சப் பாக்குதீரா? வௌங்க மாட்டீரு ஓய் நீரு.”

அவள் திருமணச் சேலையில் கண்ணீரை வழித்துத் துடைத்தாள்.

“சக்கைய சூந்து பாக்கியதுபோல இந்த விஷயத்தில முடியுமா பிள்ள?”

“ஒம்ம மொவளுக்கு சூந்து பாக்காமத்தான் மாப்பிள பாத்தீரோ?”

இவளிடம் பேசி ஜெயிக்க முடியாது. இவள் தங்கச்சிகாரியப் போல அல்ல, அக்காளாக்கும். அக்கா மூதேவிதானே. இனி தங்கச்சி ஸ்ரீதேவியையும் இதுபோல எங்கெயாவது கொண்டு தள்ளீட்டா நம்ம பிளான் சக்சஸ் என்று மனதில் நினைத்தவாறு மெல்ல நழுவிப் போனார் செம்புலிங்கம்.

ஜான்பாபுவுக்குத் தனது மாமனாருடன் தங்க மனசு இல்லை. சென்னைக்கு ஒதுக்குப்புறமான ஆந்திரா பார்டரில் யாருடைய கண்காணிப்புமற்ற ஒரு பிரதேசத்தில் தனது ராஜாங்கத்தை அமைத்துப் பரிவாரங்களுடன் பாக்கெட் சாராயத்தில் சதா மிதந்துகொண்டிருந்த அவன் அந்த வாழ்க்கையை இழப்பதற்குச் சம்மதிக்கவில்லை. ஊருக்கு மாற்றலாகி வந்தால் பணிக்குச் செல்ல வேண்டும். தற்போது தேதி போடாமல் ஒரு லீவு லெட்டர் கொடுத்துவிட்டு ஊர்சுற்றிக்கொண்டு தைரியமாகத் திரியலாம். அதிகாரிகள் வந்தால் தேதி போட்டுவைக்க அங்கு ஆட்கள் உண்டு. இங்கே சில தென்னந் தோப்புகளும் மரிச்சினிக் குழிகளும் தான் உண்டு.

கணவனின் மனநிலையைப் புரிந்துகொண்ட மகள் தனது தந்தைக்காக அவனை வழிக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினாள். குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு நேரே மாமியார் வீட்டுக்குச் சென்றாள். சென்னையில் ஒரே குடியும் கூத்தும் என்பதை எடுத்துரைத்தாள். தன் தந்தையாருடன் ஊருக்கு வந்து அவன் தங்கவில்லை என்றால் நாளை காலை பத்து மணிக்கு இரண்டு பிள்ளைகளின் தலையில் மண்ணெண்ணெய் விட்டுத் தீக்குளிக்கப் போவதாகச் சொன்னாள். என்ன நடந்ததோ ஏது நடந்ததோ, உண்மையான லீவை எடுத்துக்கொண்டு மறுநாள் காலை பத்துமணிக்கு முன்பாகவே ஊர் வந்து சேர்ந்தான். அவனைக் குளிக்கவைத்துக் காலை உணவைச் சாப்பிட அளித்தாள். கூட்டாளிகள் எவரையும் அவனுடன் திரிய அனுமதிக்காதவள், வீட்டிலும் ஏற்ற மறுத்தாள். இரண்டு மூன்று தடவை அவனைத் தேடி வந்தவர்கள் அதன்பிறகு வரவே இல்லை.

காலையில் பறவைகளின் ஒலியோடு கலந்து வந்த சில புதிய குரல்களையும் சேர்த்துக் கேட்ட ஜான்பாபு புரண்டு படுத்தான். அவன் கனவில் திராட்சைக் கொடிகளுக்கு நடுவே அம்மணமாகத் தேவதைகள் உலாவினர். இருட்டு சுத்தமாக நீங்கும் முன்பே குடங்களை நரக்கும் ஓசை எரிச்சல்படுத்தக் கனவு கலைந்தது. ஓடிவந்து கிணற்றங் கரையைப் பார்த்தான். அவனால் நம்பவே முடியவில்லை. ஒரு அடி உடுப்பும் போட்டுக்கொண்டு ஊரில் மூக்கு பாய்ச்சிக்கொண்டு திரிந்த பெண்களெல்லாம் சடங்காகித் தாவணியும் போட்டுக்கொண்டு கூட்டமாய் நின்று நீரெடுத்தார்கள். அவர்களின் கும்மாளமும் குலவையாட்டமும் அவனுக்குள் முறுக்கத்தை ஏற்படுத்தியது. அவன் தங்களைப் பார்ப்பது கண்டதும் பெண்கள் கூட்டம் சற்று அமைதியானது போலக் காணப்பட்டது. தனக்கானது அந்த அமைதி என்று நினைத்தபோது அவன் இன்னும் ஆனந்தம் கொண்டு ஒரு பாட்டை முணுமுணுத்தான். வீட்டுக்கு வந்து கட்டிலில் படுத்தபோது அதே பாட்டைக் கிணற்றங்கரையில் யாரோ முணுமுணுப்பது கேட்டது. ‘கள்ளக் குட்டியளே. . .’ என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்டான்.

ஜான்பாபுவுக்கு இப்போது இந்த ஊரிலும் கொஞ்ச நாள் தனது ராஜாங்கத்தை நடத்தலாம் என்ற ஆசை வந்தது. காலை ஆகாரம் சாப்பிடும்போது மனைவியிடம் தன் மாமனாரின் வயோதிகம் தன்னை மிகவும் பாதித்ததாகவும், அவருடன் கூட இருந்து கவனிப்பது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்றும் தெரிவித்தான். தங்கள் குடும்ப வாழ்க்கையில் இவ்வாறு தன் கணவன் தன்னிடம் பேசுவதை முதன்முதலாகக் கேட்டபோது அவளால் நம்பவே முடியவில்லை. நேற்று இரவு முழுவதும் உறங்காமல் தன் தகப்பனுக்காக அவள் மிகவும் உருக்கத்தோடு ஜெபம் செய்தாள். ஒரு ராத்திரிக்குள் தன் கணவனிடம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஏசுகிறிஸ்துவுக்கு அவள் ஸ்தோத்திரம் சொன்னாள்.

அடுத்தநாள் மகளுக்குப் பள்ளிக் கூடம் செல்ல வேண்டும். கணவனது வேலைமாற்றல் உத்தரவைப் பெற்றுத்தரும்படி மானாமதுரையில் ஒருவரைச் சந்தித்துவிட்டு ஏர்வாடி திரும்ப நினைத்தாள். அன்று இரவு கணவனை இருத்தி நீண்டநேரம் உபதேசம் செய்தாள். கண்பார்வை தெரியாத தகப்பனுக்கு அருகில் அகலாமல் இருந்து செய்ய வேண்டிய காரியங்களை எடுத்துரைத்தாள். பையனைத் தினந்தோறும் பக்கத்துப் பள்ளியில் கொண்டுபோய் விட்டுக் கூட்டிக் கொண்டுவரும் காரியத்தை முடங்காமல் செய்யக் கேட்டுக்கொண்டாள்.

மருமகனின் அருகாமை நேச மணிக்குச் சற்று இணக்கமாகத்தான் இருந்தது. பால் வந்ததும் காப்பி போடுவான். எரிப்பு தூக்கலாக ஒரு சாம்பார் காய்ச்சி வைப்பான். முட்டை பொரிப்பான். ஆனால் சோறு பொங்கத் தெரியாது. ஒன்றிரண்டு நாட்கள் அரிசியைக் கழுவிப் பானையில் போடக் கற்றுக்கொடுத்தார். பிறகு அதை அப்படியே தாத்தாவிடமிருந்து கற்றுப் பொடியன் செய்தான். பானையைச் சரித்துவைப்பது மட்டும் மருமகனின் வேலையாக இருந்தது.

ஜான்பாபு மீன் பொரிப்பது சுவாரசியமாக இருந்தது. சீனிச் சட்டியில் ஒரு லிட்டர் எண்ணெயையும் அப்படியே கவிழ்ப்பான். மீன் துண்டங்களை அதன்மீது மிதக்கவிடுவான். தூரத்தில் இருந்து பார்ப்பதற்குச் சிதறால் கயத்தில் சதுரமீன்கள் நீந்தி விளையாடிய கதையை நினைவுபடுத்தும். பொரித்தெடுத்த பிறகு மீதி இருக்கும் எண்ணெயை மாமனார் கவனிக்கிறாரா என்று பார்த்துக்கொள்வான். அவர் கவனித்தாலும் பரவாயில்லை. கண்களுக்குத்தான் பார்வை கிடையாதே. சீனிச்சட்டியைத் தூக்கிக் கொண்டு அடிமேல் அடிவைத்து நகர்ந்தபடி சென்று அப்படியே உரக்குண்டில் ஊற்றிவிட்டு நல்ல பிள்ளையாக வீட்டுக்குள் ஏறுவான். நேசமணி எதுவுமே பேசமாட்டார். தனக்கு எதுவும் தெரியாதது மாதிரி தூரப் பார்த்துக்கொண்டிருப்பார்.

அவன் இப்போது தனது பழைய கூட்டுக்கட்டைக் குறைத்திருப்பது அவருக்கு நிம்மதியைத் தந்தது. அதிகமும் வீட்டிலேதான் தங்குகிறான். தேடிவரும் ஒரு சிலரையும் எதாவது சொல்லி விரட்டி விடுகிறான். சற்றுப் பொறுப்புணர்வும் வந்திருக்கிறது. வேலைக்காரர்களை அழைத்து வந்து கிணற்றை இறைத்துத் தூர்வாரினான். இலைதழைகள் விழாமலிருக்க வலை போட்டான். அவன் விஷயத்தில் இவையெல்லாம் நல்ல மாற்றங்களாகத்தான் தெரிகின்றன. இருந்தாலும் அடிக்கடி வீட்டுக்குள்ளே காணாமல் போவதும், கிணற்றங்கரைக்குக் கிழக்கே துணி துவைக்கும் கல்லில் எப்போதும் உட்கார்ந்திருப்பதும் எதற்கென்று அவருக்குப் புரியவில்லை. ஒருவேளை பீடி இழுக்கத் தோன்றும்போது போய் உட்காருவானா இருக்கலாம். அந்தமாதிரிப்பட்ட விஷயங்களில் எதுவும் தான் தலையிடக் கூடாதென்று கருதினார் நேசமணி.

ஒருநாள் மதியம்போல வெளியில் போய்விட்டு வந்தான் ஜான்பாபு. அவனுடன் கூட இரண்டு புதிய மனிதர்களும் வந்தார்கள். பக்கத்து ஊரில் ஏழு சென்ட் பூமி விற்கப் போட்டிருப்பதாகவும், அதில் ஏழெட்டுக் காய்பலன் உள்ள தென்னை மரங்கள் நிற்பதாகவும், தாங்கள் இடமாற்றம் பெற்றுவந்த பிறகு வீடு போட ஏற்றது என்றும் தெரிவித்தான். வாங்க நினைத்தால் வாங்கிப் போடுங்கள் என்று மட்டும் சொன்னார் அப்போதைக்கு.

அன்று இரவு ஜான்பாபு ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது அவனை மாமனார் வந்து தட்டி எழுப்பினார். அவர்கள் வீடு வைக்க இடம் தேடி எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை என்றும், மகனுக்கு எழுதிவைத்திருந்த உயிலைத் தான் கேன்சல் செய்த விஷயத்தையும் தெரிவித்தார். தன்னை மகன் வாள்வச்சாம் பாறைக்கு அழைத்துச் சென்ற கதையையும் அதற்குப் பின் நடந்த சம்பவங்களையும் விவரித்தார்.

கண்ணங்கரை நாயரின் வீட்டு முற்றத்தில் நேசமணி உட்கார்ந்திருக்கிறார். அவர்கள் இருவரும் பேசுவதை உன்னிப்பாக வாசற்கதவில் சாய்ந்து நின்று கவனித்துக்கொண்டிருக்கிறாள் நாயரின் மனைவி.

“ரெண்டு பெண்குட்டிகளைக் கெட்டிக்குடுத்த இடத்திலயும் பெரிய வசதி இல்லேண்ணு சொல்லுதீரு. எனக்கொரு யோசனை இருக்கு. முடிஞ்சா செய்து பாருமே.”

“சொல்லுங்க.”

“பிளாட்ட கி, ஙி, சி என்று மூணு பாகமா பிரிக்கணும். வீடும், வீட்டடியும் கி – பிரிவு. அது மூத்தவனுக்கு. ஙி – பிரிவு மூத்த மகளுக்கு. சி – பிரிவு கடக்குட்டிக்கு. சரிசமமாச் சேத்து இப்பிடிப் பங்குவச்சி உயிலெழுதி வையும். பழைய உயில் ஆட்டோமெட்டிக்கா கேன்சல் ஆயிடும். எல்லாம் ஒமக்க காலத்துக்குப் பெறகுதான், கேட்டீரா?”

“அப்பிடி செய்தாப் போதும்.”

ஜான்பாபுவுக்குத் தூக்கம் எங்கோ பறந்து போனது. எப்படியாவது கி -பகுதியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் அரும்பியது. அதில்தானே கிணறு இருக்கிறது.

“கிணறும் கல்லறைத்தோட்டமும் மூன்று பார்ட்டிக்கும் பொது. நீங்களும் இதுபோல வீடு போட்டு எனக்க மூணு மக்களும் ஒற்றுமையா இதில தங்கணும்ணு உள்ளதுதான் எனக்க ஒரே ஆசை. நீங்க வீடு போட்டு கறண்டு எடுக்கம்ப இஷ்டதானம் எழுதித் தந்துருவேன்.”

“எல்லாம் சரிதான் மாமா, கிணறு பொதுவில இருக்க முடியாது. நாள ஒரு காலத்தில இன்னொரு பிளாட்டிலோடி குழல் இழுக்க முடியுமா? அதுனால கிணறு யாராவது ஒருத்தருக்குத்தான் சொந்தமாக முடியும்.”

அதிகாலையிலேயே சொத்து பாகம் வைத்த விஷயத்தைத் தொலைபேசி வழியாக மனைவிக்குத் தெரிவித்துவிட்டான் ஜான்பாபு. அவளை லீவு போட்டுக்கொண்டு உடனே புறப்பட்டு வருமாறு அழைத்தான்.

மகள் வந்தாள். தந்தையைப் பார்த்ததும் அவள் தாயின் ஞாபகம் வந்தது. குலுங்கிக் குலுங்கி அழுதாள். இப்போது தனது கன்னத்தில் மகள் அறைவதாகக் கருதினார் நேசமணி. என்றோ இதையெல்லாம் தன் பெண்மக்களுக்கு அவர் செய்திருக்க வேண்டும். மகன் பேச்சைக் கேட்டது தவறு.

“அப்பா, விஷயத்தை அண்ணனுக்கு உடனே தெரியப்படுத்தணும்.”

“வேண்டாம். எனக்க காலம் கழிஞ்ச பெறவு அவன் தன்னால அறியட்டு.”

“ஒங்க காலத்துக்குப் பிறகு எங்களுக்குள்ள யுத்தம் நடக்கவா? யானையக் கொடுத்தவன் தொறட்டியக் கொடுக்காத கதைபோல ஆயிடப்பிடாது. ஒடனே அளந்து கல்லு போடணும்.”

“ஓ. . . அதச் செய்யணும்.”

அன்று சாயங்காலம் எல்லோருமாக ஆட்டோவில் ஏறிப் புதுக்கடை வந்தனர். யாருமில்லாத இடத்தில் அமைந்திருந்த காசு போடும் தொலைபேசியிலிருந்து மகனுக்கு போன் செய்தார். விஷயத்தைச் சுருக்கமாகத் தெரிவித்துவிட்டுத் தனது கடைசி ஆசையையும் தெரிவித்தார்.

“எனக்க மூணுமக்களும் ஒற்றுமையா இருக்கணும்.”

“இதெல்லாம் அந்த தொடு வெட்டிகாரனுக்க ஏற்பாடுதானே?”

“ஏன், எனக்குப் புத்தி கெட்டுப் போச்சா?”

“அவன் குடும்பம் மந்திரவாதிக் குடும்பமாக்கும். ஏதோ செய்வின செய்து ஒங்க மனச மாற்றிப் போட்டான்.”

“அது தங்கச்சிக்குச் சம்பந்தம் பாக்கும்ப ஒனக்குத் தெரியாமப் போச்சா? எனக்குப் புத்திக் கோளாறோ, மன மாற்றமோ எதுவுமே இல்ல. மாசாமாசம் ஒண்ணாந்தேதி பேங்கிலபெய்க் கையெழுத்துப் போட்டு பென்ஷன் வாங்கத்தான் செய்யேன்.”

“இனி பெண்மக்கதான் ஒமக்குக் கொள்ளிவைக்கும்.”

“டேய், யோபு சொன்னதப்போல சொல்லுகேன். நான் நிர்வாணியா வந்தேன், நிர்வாணியாப் போகிறேன். ஆனா உயிர் இருக்கம்ப செத்து வாழுற வாழ்க்கையுமில்ல, அடுத்த வியளக் கொன்னு பெழைக்கும் வாழ்க்கையும் எனக்கில்லடா பொன்னுமோனே. . .”

கிழவரின் முகம் சூரியனைப் போல ஒளிர்ந்தது. வலது கையைத் தூக்கி நெஞ்சில் ஒருமுறை தட்டினார். உலகின் சிகரத்தில் நிற்பது போல அவருக்குத் தோன்றியது.

“சனிக்கிழம அளந்து கல்லு போடப் போறேன். உடனே புறப்பட்டு வா!”

“நான் எதுக்கு வரணும்? எல்லாம் எனக்கிட்டக் கேட்டுதான் செய்யுதீரோ? நமக்கு கோர்ட்டில இனி சந்திக்கலாம்.”

“டேய் ராஜி, நான் பழைய ஒன்பதாங்கிளாஸ் மலையாளம். அது ஒனக்க டாக்டர் பட்டத்தவிடப் பெரிசு பாத்துக்க. நுப்பத்திரெண்டு வருஷம் சர்க்கார் உத்தியோகம் பாத்து இருபத்தாறு வருஷம் பென்ஷன் வாங்கி ஜீவிக்கியேன். நீ எந்தச் சட்டத்தில கோர்ட்டுக்குப் போவேண்ணு நான் பாக்கத்தான் போறேன். கருணாநிதி கொண்டுவந்த சட்டம் தெரியுமாடா ஒனக்கு? பாராளுமன்றம் பாசாக்கின சட்டம் தெரியுமாடா ஒனக்கு? அப்பன் வாய் தெறக்காம இருந்தது மகன் பாசத்திலயாக்கும். ஒரு வழிப்போக்கனுட்டப் பேசியதுபோல எனக்கிட்ட நீ பேசப்பிடாது, கேட்டியா?”

எதிர்முனையில் போன் துவண்டது.

தொடர்ந்து அளவுக்காரனைக் கொண்டுவந்து அளந்து கல்போடும் சம்பவமும் நடந்தது. மூத்த மகளின் மாமனாரும் இளைய மகளின் கணவர் குடும்பத்தினரும் சிரித்த முகத்துடன் வந்து நின்றார்கள். அளக்கும்போது கிணறு இரண்டு கண்டக்காரர்களின் எல்லைக் கோட்டுக்கு நடுக்காக வந்தது. அதை முழுக்க அப்படியே மகன் பாகத்தோடு சேர்க்கும்படியாக இளைய மகளின் கணவர் குடும்பத்தினர் கூறினார்கள். அதில் வரும் இழப்பைத் தாங்களும் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்த பிறகும் ஜான்பாபு விடவில்லை. கிணறு முழுவதுமாகத் தங்கள் பகுதிக்கு வரும்படியாக அளந்து அதற்கு ஈடான நிலத்தை வடக்குப்பாகத்தில் தங்கள் பகுதியிலிருந்து எடுத்துக் கொள்ளும்படியாகவும் கேட்டுப் பெற்றுக்கொண்டான்.

காலம் ஒரு சுமட்டுக்காரனின் அடிவைப்பைப் போல மெதுவாய் நகர்ந்தது. இந்த இடைக்காலத்தில் தான் எவ்வளவு காரியங்கள் நடந்து கழிந்தன. யோசனையில் அடங்கக் கூடியவைதானா அவை? உறக்கத்தில் கலைந்த கனவுகளைப் போல அல்லவா இருக்கிறது.

ஜான்பாபுவுக்கு மாற்றல் உத்தரவு வந்துவிட்டது. பைங்குளம் பக்கம் ஒரு பள்ளியில் உத்தியோகம். இங்கேயும் அவன் வேலைக்குப் போவதை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். பள்ளிக்கூடம் நடைபெறும் சமயங்களில் எல்லாம் பாலம்மையின் மாம்பட்டைக் கடையில் அவன் பாடம் நடத்திக்கொண்டிருப்பதைத்தான் பலரும் கண்டார்கள்.

ஒருநாள் இரவு அறைக்குள் உணவைக் கொண்டுசென்றான். எதிரே வராந்தாவில் தூரத்தில் நாற்காலியில் நேசமணி அமர்ந்திருந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தனர். கட்டிலின் மறுபுறம் குனிந்த ஜான்பாபு பாட்டிலைத் திறந்து கிளாசில் விடுவது எந்த ஒளிவுமறைவுமின்றித் தெளிவாகத் தெரிந்தது. அவன் பாட்டிலைக் கட்டிலுக்குக் கீழேவைத்தான். தூரத்துப் பார்வையில் வெட்ட வெளிச்சமாக இருந்தது அதன் இருப்பு. அவர் பேச்சு திடீரென மாறியது.

“படிச்சவன்கூட மோசமாகத்தான் இருக்கான்.”

“நூறு சதவீதம் கரெக்ட் மாமா.”

“நாட்டில குடிக்காதவனே இல்ல போலிருக்கு”

“இதுக்கு ஒரே வழிதான் இருக்கு. எம்.ஜி.ஆர். சொன்னதுபோலக் குடிக்கிறவன நாடுகடத்தியே தீரணும்.”

அதற்குமேல் அவர் ஒன்றும் பேசவில்லை. பெட்ஷீட்டை இழுத்து மூடிக்கொண்டு உறங்கினார்.

மறுநாள் கிணற்றங்கரையில் அமர்ந்து ஜான்பாபு துணி துவைத்துக்கொண்டிருந்தான். பையன் ஒரு வாளியிலிருந்து நீரை மொண்டு தலையில் விட்டுக் குளித்துக்கொண்டிருந்தான்.

“அப்பா, நான் குளிக்கிறதப் பாருங்க.”

பையன் திரும்பத் திரும்பத் தகப்பனிடம் கூறினான்.

ஆனால் அவன் கேட்கும் மனநிலையில் இல்லை.

“அப்பா, இங்க என்ன பாருங்க அப்பா.”

அவன் இந்த உலகத்தில் இல்லாதது போல இருந்தான். பையன் போடும் சத்தத்தைப் பார்த்து நேசமணி எட்டிப்பார்த்தார். கிணற்று விளிம்பில் ஒரு சேலையை நனைத்து வைத்ததுபோல எதுவோ தெரிந்தது.

“அப்பா நான் குளிக்கியதப் பாக்காம சும்மா சும்மா அந்தப் பெண்ண ஏன் பாக்கிறிய? இஞ்ச என்ன திரும்பிப் பாருங்க அப்பா.”

வேறொரு கோணத்தில் பார்த்தபோதுதான் கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த ஒருத்தி தூண்மறைவில் ஒளிந்து நிற்பது தெரிந்தது.

அன்று முழுவதும் எங்கும் போகாமல் குட்டி போட்ட பூனையைப் போல வீட்டைச் சுற்றிச் சுற்றியே நின்றான். நாலு மணிக்குபோல சாயங்காலம் அந்தப் பெண் மறுபடியும் வந்தாள். ஜான்பாபு வீட்டுக்குள் அவளைச் சைகையால் அழைத்தான். அவள் உள்ளே வராமல் ஜன்னலுக்கருகில் வெளியே வந்து நின்றாள்.

“சக்க விக்கவா போட்டிருக்கு?”

“ஒனக்கு வேணுமா?”

“வேண்டாம்.”

“பின்ன கேட்ட?”

“சும்மா.”

“வெட்டினது இருக்கு. தரட்டா?”

“ஒம்ம பெண்டாட்டிக்குக் கொண்டுபெய்க் குடும்.”

“பெண்டாட்டிக்குக் குடுக்க முடியாமதானே இஞ்ச வந்து கெடக்கியேன்.”

“எனக்கு ஒருமாரி வருது.”

“உள்ள வாறியா?”

“வரேல.”

“இன்னா ஒரு சொள தின்னு பாத்துட்டுச் சொல்லு இனிச்சிட்டிருக்காண்ணு?”

அவள் வாயில் பிய்த்து வைத்தான்.

“தாத்தா காணுவாரு, நான் போறேன்.”

“கெழவன் பொட்டக்கண்ணன். கண்ணு தெரியாது.”

“ஐயோ பாவம்.”

அவள் திரும்பியதும் ஜன்னல் வழி கையிட்டுக் கொண்டையைப் பிடித்து இழுத்தான்.

“விடுடா கள்ளா. . .”

“இஞ்ச பாரு.”

அவன் நூறு ரூபாய்த்தாளை எடுத்து நீட்டினான்.

“ஒனக்குத்தான். சிலேடு வேண்டிக்க.”

“வோ! எனக்கு சிலேடும், ஜெம்பரும் இவருதான் வேண்டித் தரணும்.”

அவன் கையிலிருந்த ரூபாய் நோட்டைப் பறித்துக்கொண்டு அவள் ஓடியே போனாள்.

கிழவர் பெருமூச்சுவிட்டார். பென்ஷன் வாங்கிவைத்த பணத்தில் ஐந்நூறு ரூபாய் குறைந்திருந்ததின் காரணம் விளங்கியது. கொஞ்ச நாட்களாக வாங்கி வைக்கும் மசாலை சாமான்கள், அரிசியின் அளவு அதிகமாவதும் காணாமற் போவதும் ஏனென்பதை யூகிக்க முடிந்தது.

அடுத்தநாள் மதியம் உறங்கிக் கிடக்கையில் கொலுசுச் சத்தம் கேட்டு விழித்தார். நேற்று வந்த அதே பெண்தான். படிகளின் வழியே இருவரும் மாடிக்குச் சென்றார்கள். எப்படி இருந்த வீடு இது? தற்போது இங்கே என்ன நடக்கிறது?

அதோ கீழே இறங்கி வருகிறார்கள். கிழவர் கண்களை இறுகமூடி உறங்குவதுபோலக் கிடந்தார். இருவரும் உயரத்தில் நின்று பேசினார்கள்.

“ஒங்கள எனக்க அண்ணனப் போலயாக்கும் நெனச்சிருந்தேன். என்னப் போட்டு என்னெல்லாம் செய்ய வச்சிய. எனக்குச் சங்கடமா இருக்கு.”

“வங்கட மீனு வேண்டித் தின்னு. சங்கடம் தீரும். சவுட்டுக்கொள்ளாமப் போவியா? கெழவனுக்குக் கண்ணுதான் தெரியாதே தவிர பாம்புச் செவியாக்கும்.”

சில நாட்களாக இரவு வீட்டில் தங்குவது இல்லை. வடக்குப்புறக் கதவு திறந்து கிடந்ததை வைத்துக் கண்டுபிடித்தார். அன்று அவன் இல்லாத சமயமாகப் பார்த்து வீட்டுக்கு வந்த விக்கன் வேதமுத்துவின் மகன் நடராஜன் குறிப்பாகச் சில காரியங்களை உணர்த்தினான்.

“மருமகன இங்க விட்டிருக்காதிய. முள்ளுவிளை பார்ட்டி ஓலையும் கழிக்கலும் கொண்டு பெரை கெட்ட வரணும்ணு இருக்குனும்.”

“எங்க பூமியில எதுக்குப் பெரைகட்ட வருனும்?”

“அத மருமகனிட்டக் கேளுங்க.”

அடுத்தநாள் சோறு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது கேட்டார்.

“ராத்திரி நீங்க எங்க போறிய?”

“வெள்ளையடிச்சப் போறேன்.”

“கண்ணு தெரியுமா?”

“லைட் போட்டா தெரியும்.”

“பள்ளிக்கூடத்தில இருந்து சம்பளம் வருது. பின்னயும் எதுக்கு இப்பிடி வேலைக்குப் போறிய?”

“சும்மா ஒரு சோசியல் ஒர்க் மாமா. காலனி வீடுகள்ல வெள்ளையடிச்சிக் கொடுக்கிறோம்.”

அன்று எங்கோ போய்விட்டு இரவு பிந்திவந்து உறங்கச் சென்றான். சிறிது நேரங்கழித்து, ‘ஐயோ. . . எனக்க உயிரு போவுதே!’ என்று அலவற விளித்தான். ஆட்டோகாரனுக்கு போன் செய்து வரவழைத்து இருவருமாகத் தூக்கிப்போட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள். அவரது சட்டையை இறுகப்பற்றிப் பிடித்துக்கொண்டான். ஆட்டோவுக்கு வெளியே அவன் தலை விழும்போது அந்த முதிய தேகமும் அவனோடு சேர்ந்து விழுந்தது. ஒரு பாடுபட்டு டாக்டரிடம் கொண்டு சேர்த்தார்.

விஷயம் இதுதான். பாலம்மையிடமிருந்து வாங்கிய மாம்பட்டைக் கஷாயத்தைப் போதைக்காகக் கள்ளில் கலந்து குடித்ததால் ஏற்பட்ட வயிற்று வேதனை. ஆஸ்பத்திரி பில்லை மாமனார் முடித்துவிட்டு ஆட்டோகாரன் கையில் காசு கொடுத்து ஜான் பாபுவை அவனது தகப்பனாரிடம் கொண்டு விடும்படியாகக் கூறினார். மனசு வெறுத்துப்போய்த் தனக்கு இனிமேல் யாருமே வேண்டாம் என்ற மனநிலையில் அவ்வாறு செய்தார். பகல் முழுதும் அவன் இல்லை. இரவு பதினொரு மணிக்குத் திரும்பவும் தள்ளாடியபடியே வந்து நின்று கதவைத் தட்டினான். அவர் திறக்காததால் அன்றிரவு முழுவதும் வெளித்திண்ணையில் கிடந்து உறங்கினான்.

அவன், இனி விரட்டி அடித்தாலும் போகமாட்டான் என்பதுணர்ந்த கிழவர் அவன் இல்லாத நேரமாகப் பார்த்துக் கதவையும் பூட்டிச் சாவியையும் கையில் எடுத்துக்கொண்டு தன்னுடன் வேலைபார்த்த ஜோதிராஜ் என்ற நண்பரின் வீட்டில் சென்று பத்து நாட்கள் தங்கினார். அவன் தனது தகப்பனார் வீட்டுக்குச் சென்றிருப்பான் என்று திரும்பி வந்தபோது நாலைந்து கூட்டுக்காரர்களுடன் சேர்ந்து தனது விளையில் நின்ற பலாமரம் ஒன்றை அளந்துகொண்டு நின்றான். கிழவர் மனதில் திகில் வந்து சூழ்ந்தது.

சனிக்கிழமை காலையில் மகள் வந்தாள். மிகுந்த கோபத்துடன் காணப்பட்டவர் அவளது முகத்தைப் பார்த்ததும் சாந்தமடைந்தார். எதையும் வெளிப்படுத்தாத மன நிலையில் உணர்ச்சிக் கலவைகளின் கொந்தளிப்பில் எல்லாவற்றையும் தனக்குள்ளாக அடக்கிக்கொண்டார்.

“அப்பா என்ன ஒருமாதிரி இருக்கிய?”

“ஒண்ணும் இல்ல.”

“அப்பா இப்ப கொஞ்சம் வெளுத்திருக்குது. வேளாவேளைக்கு ஆகாரம் கிட்டுது இல்லியா.”

“நீ எனக்கு ஒரு உபகாரம் செய்யணும். போவம்ப ஒனக்க மாப்பிள்ளையும் கூடக் கொண்டு போ. எனக்க காரியத்த நான் பாத்திடுதேன்.”

எவ்வளவுதான் அடக்கிவைக்க நினைத்தாலும் வயசான காலத்தில் அவரையும் மீறி வெளிப்பட்ட வார்த்தைகளின் பொருள் புரியாத மகளுக்குள் கோபாவேசம் மூண்டது.

“கொஞ்சம் பச்ச பிடிச்சி இல்லா. ஒமக்கு இனிமே நாங்க ஒண்ணும் வேண்டாம்ணு காணும்.”

“ஐயோ மகளே, என்ன வார்த்த பேசின? நீங்க ஒண்ணும் வேண்டாம்ணா அப்பா அம்மையையும் பறிகொடுத்துட்டு இத்தற காலம் உயிரோட ஜீவிச்சிட்டு இருக்கியேன். நீங்க இல்லேண்ணா நான் யாருக்காக உயிர் வாழணும்?”

“போட்டு, ஏதோ வெப்றாளத்தில பேசிப்புட்டேன். அப்பாகிட்ட நாங்க எப்பளும் உண்டு.”

“அது போதும் மக்கா!”

அறைக்குத் திரும்பியபோது கதவிடுக்கில் ஜான்பாபு நின்று எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தான். தகப்பனின் வேதனைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கத் தெரியாதவளாய் இருந்த மகளிடம் எதாவது பேசப்போய் அவர்களின் குடும்ப வாழ்க்கை அதனால் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற தயக்கத்தில் இருந்த நேசமணி, அதற்குப் பிறகு எதுவுமே பேசவில்லை.

சென்ஷி

unread,
May 31, 2010, 4:07:09 AM5/31/10
to panb...@googlegroups.com
பூதக்கண்ணாடி 
 - ஜே.பி. சாணக்யா

ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்


பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் ஊரில் நடந்து முடிந்திருந்த அந்தச் சம்பவங்களைப் பற்றி முழுமையாகச் சொல்ல முடியாது என்றாலும் அவற்றைப் பற்றிய குறைந்தபட்ச விவரிப்புகள்கூட அவற்றின் தீவிரத்தை உங்களுக்கு உணர்த்திவிடும் என்பதாலும் நானும் அச்சம்பவங்களின் சாட்சிகளில் ஒருவனாய் இருப்பதாலும் இவற்றை உங்களுக்குத் துணிந்து சொல்கிறேன். நமக்கு அருகிலுள்ள மனிதர்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வுகளை இவை எனக்குத் தந்திருப்பினும், அவற்றிலிருந்து மெய்ஞ்ஞானிகள் தவிர்த்து, ஒருவருக்கும் பயனற்றதாகவே அவை முடிந்துவிடும். எங்களுக்கும் வத்சலாவுக்கும் நேர்ந்ததைப் போல.

இளவழகனுக்கு நான்காவது வயது நடந்துகொண்டிருந்த ஒரு நாளில் அவன் அம்மா மனப்பிறழ்வுற்ற வேசியாகப் பாண்டிச்சேரிப் பேருந்து நிலையத்தில் அவனைக் கையில் பிடித்துக்கொண்டு பொது இட மென்ற எண்ணமற்று மாராப்பை விலக்கிப் பேருந்து நிலையத்திலிருந்தவர்கள் சிலரைப் பகிரங்கமாக விபச்சாரத்திற்கு அழைத்துக்கொண்டிருந்தாள். அப்போது இளவழகன், பொத்தான் மாற்றிப் போடப்பட்ட அழுக்கடைந்த, மேல் சட்டையுடன் அழுதுகொண்டே கையில் ஒரு கொய்யாப்பழத்தைப் பிடித்தவாறு அவளை வீட்டுக்குக் கூப்பிட்டுக்கொண்டிருந்தான். பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் தகாத இடத்தில் சிறுநீர் கழிக்கும் நாயை விரட்டுவதுபோல் அவளை விரட்டினார்கள். குடி மலிந்த அந்நகரத்தில் அவள் வெட்கப்பட்டுப் போவதுபோல் சாடைகாட்டினாளே ஒழிய வளைய வளைய வரும் வீட்டுப் பூனையைப் போல் அங்கேதான் சுற்றிக்கொண்டிருந்தாள்.

அன்று மதியம் அங்கிருந்த காவலர்களிடம் அவள் ஒப்படைக்கப்பட்ட பிறகு இளவழகனின் அம்மாவின் தங்கை வத்சலாவும் அவள் கணவன் தங்கப்பனும் வந்து அவர்களை எங்கள் ஊருக்கு அழைத்து வந்தார்கள். இடைப்பட்ட அந்தப் பகல் நேரத்தில் காவல் நிலையத்தில் இளவழகனின் தாய் அழைத்தபோதும் அழையாத நேரத்திலும் காவலர்கள் பிஸ்கட்டும் டீயும் வாங்கிக்கொடுத்து அவளைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இளவழகன் அறியாமை கலந்த பயத்துடன் அழுது வடிந்து அழுக்கேறிய கன்னங்களுடன் அந்தக் காவல் நிலையத்தில் கொய்யாப்பழத்தையும் பிஸ்கட்டுகளையும் பிடித்துக்கொண்டு மர பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். இதை எனக்கு வத்சலா எங்கள் வீட்டில் அந்தக் காலை நேரத்தில் மனம் புழுங்கிச் சொன்னாள்.

எங்கள் கிராமமான பூதங்குடி, சிதம்பரத்திற்கு மேற்கே இருபது கிலோமீட்டர் தொலைவில் வீராணம் ஏரியில் சென்னைக்கு நீரேற்றும் முகப்பின் முன்னும் புகழ்பெற்ற நாச்சியார் சன்னதியின் பின்னும், கூச்ச சுபாவம் கொண்ட மனிதனைப் போல் எல்லாப் பிரதான சாலைகளிலிருந்தும் சற்று உள்ளடங்கி இருந்தது. வத்சலா வயல் வேலைகளுக்குப் போகாத நாட்களில் அதிகாலையில் வந்து பாட்டிக்கு உதவியாகச் சில வேலைகளைச் செய்துவிட்டுச் சென்றுகொண்டிருந்தாள். வத்சலாவுக்கு மாநிறத்திற்கும் கீழான நிறம். வடிவானதும் திடகாத்திரமானதுமான நடுத்தர உடல்வாகு. தங்கப்பனுக்கு ரத்த சோகை நோய்க்கூறின் வெளுப்பில், கன்னங்கள் உப்பி, கண்கள் சிறுத்து, பற்களெல்லாம் மஞ்சள் படிந்த பலவீனத் தோற்றத்தை வெளிப்படுத்தும் தட்டையான உருவம். வீங்கிய நரம்புகளுடன் அவனது கைகள் மெலிந்திருந்தன. தங்கப்பன் அருகிலுள்ள அழுக்கடைந்த டவுனில், சினிமா தியேட்டரின் எதிரே உள்ள, எப்போதும் மெல்லிய இருட்டுப் பரவி நிற்கும், சிறிய ஹோட்டலில் சர்வராகப் பணிபுரிந்துகொண்டிருந்தான். அந்த டவுன் என்பது ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்லும் வழியில் இருபக்கமும் விரிந்திருந்த கடைத் தெருவாகும். சில டிராக்டர் லேத் ஒர்க்ஸ் கடைகள், சிமிண்டு ஒர்க்ஸ் கடைகள், வீட்டு விறகுகள் உட்படத் தைல மரங்கள் நிரம்பிக் கிடக்கும் டிம்பர் டிப்போக்கள், ஒரு தர்மாஸ் பத்திரி, ஒரு மேல்நிலைப் பள்ளிக்கூடம், ஒரு சில மளிகைக் கடைகள், பரோட்டாக் கடைகள், அவற்றோடு சிறியதும் பெரியதுமான குட்டிக் கடைகளால் நிரம்பியிருந்தது அந்தத் தெரு. பெரும்பாலும் சந்தை நாளான புதன்கிழமைகளில் மட்டுமே கூட்ட நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கும் அக்கடைத்தெரு, மற்ற நாட்களில் விரைந்துசெல்லும் தொலை தூரப் பேருந்துகள் மற்றும் லோடு லாரிகளின் உறுமல்களிலும் விதவிதமான ஹாரன் சப்தங்களிலும் ஒரே மாதிரியான செயலற்ற தோற்றத்தை வெளிப்படுத்தியவாறு புழுதியில் களைப்புற்றுக் கிடந்தது. தங்கப்பன் பணிபுரிந்த கடை சினிமா விடும் நேரமும் தொடங்கும் நேரமும் சற்றுக் களைகட்டும். இரண்டாவது ஆட்டம் சினிமா முடிந்த பிறகு சாப்பிட வரும் ஒரு சிலருக்காகத் திறந்திருக்கும் ஒரே கடை இதுதான் என்பதால் வேலை முடிந்து வீடு திரும்ப அவனுக்கு சில்வண்டுகள் பாடித் தொலைக்கும் நள்ளிரவு ஆகிவிடும். சில சமயம், அமைதியைச் சிதறடித்துச் சாலைகள் நடுங்குவதான பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தும் காலியான டிராக்டர்களில் வீடு வந்து சேர்வான். பெரும்பாலும் வீட்டிலிருந்து கடைக்கு நடந்தோ டிராக்டர்களில் தொற்றிக்கொண்டோ செல்வதை நான் எனது வழக்கமான வாழ்க்கையினூடாகவே பார்த்திருக்கிறேன்.

இளவழகனுக்கு ‘பூதக்கண்ணாடி’ எனும் பெயர் எங்கள் ஊருக்கு வந்த பின்பே ஏற்பட்டது. இவ்வூருக்கு வந்த நான்கு நாட்களில் இளவழகனின் தாய் அவனை அங்கேயே விட்டு விட்டு ஓடிவிட்டிருந்தாள். மாலை நேரத்தில் கண்கள் சரியாகத் தெரியவில்லை என்று அவன் சொன்னதால் தங்கப்பன் அவனைத் தர்மாஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றான். அவனைப் பரிசோதித்துவிட்டு இது மாலைக் கண் நோயில்லை என்று கூறி அருகிலுள்ள பெரிய டவுன் ஆஸ்பத்திரிக்குப் போகச் சொல்லி சிபாரிசுக் கடிதம் கொடுத்தனுப்பினார்கள். பெரிய டவுன் ஆஸ்பத்திரிக்குச் சென்றுவந்தபோது இருவரும் சூரிய ஒளி எதிரொளித்து அலையக் கண்ணாடி போட்டுக்கொண்டு வந்தார்கள். அவர்களின் முகங்கள் ஒரே நாளில் பழைய தன்மையிலிருந்து விலகிவிட்டிருந்தன. கண்ணாடி நழுவி விழுந்துவிடும் என்ற எண்ணத்தில் இளவழகன் எல்லோரையும் சற்று முகத்தைத் தூக்கியே பார்த்துக்கொண்டிருந்தான். சிறுமிகள் அவனைத் ‘தாத்தா’ எனக் கூப்பிட்டுப் பரிகாசம் செய்தார்கள். அவன் வயயொத்தவர்கள் அந்தக் கண்ணாடியை வாங்கிப் போட்டுப் பார்த்தபோது அதிர்ச்சியூட்டும்படி எறும்புகள்கூடச் சுண்டு விரல் அளவுக்குப் பெரிதாக நகர்ந்து கொண்டிருந்தன. பிறகு அவர்கள் அவனை மிக இயல்பாக ‘பூதக் கண்ணாடி’ என்று கூப்பிட்டார்கள்.

சுற்றிலும் மண் சுவர் எழுப்பப் பட்டுக் கரும்புச் சருகுகளாலான கூரையுடன் இருந்த அவர்களின் வீடு வயல்கள் தொடங்கும் மேற்குப் பார்த்த திசையில் மக்கள் புழக்கமில்லாத மீன் குத்தகைக்கான குளக்கரையில் இருந்தது. அதன் அருகில் மாவிலிங்க மரமொன்று வீட்டுக்குத் துணையைப் போல் உயர்ந்து பரந்து வானம் பார்த்துக்கொண்டிருந்தது. மனிதர்கள் உண்ண முடியாத பழத்தைத் தரும் அம்மரம் பழுக்கும் பருவத்தில் பறவைகளின் கூட்டு இரைச்சல்களால் நிரம்பியிருக்கும். வத்சலா குளிப்பதற்கு ஊருக்குள் உள்ள குளத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால் சில சிமிண்டுக் கற்களைப் பொறுக்கி வந்து தோட்டத்தை ஒட்டிப் படித்துறை உருவாக்கிக் கொண்டு அங்கேயே துணிதுவைத்துக் குளித்துக்கொண்டாள்.

இளவழகன் எங்கிருந்தாலும் கருப் பையில் உறங்கும் குழந்தைபோல அமைதியாக முழங்கைகளால் கால்களைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான். வேடிக்கை பார்ப்பதன் பொது அம்சங்களைத் தாண்டி வேடிக்கைப் பொருட்களின் முக்கியத்துவங்களை மீறி அவன் வேடிக்கை பார்ப்பதில் அத்தனை ஈடுபாடு கொண்டவனாக இருந்தான். தங்கப்பன் அவனை விஜயதசமி அன்று பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தான். அவன் மதிய சாப்பாடு முடியும் முன்னரே ஓடி வந்துவிட்டான். தங்கப்பன் மதிய சோற்றுக்காகப் பள்ளிக்கூடம் போகும் பிள்ளைகளைப்போல் அவனைப் போகச் சொன்னான். தனக்கு மதிய சோறு வேண்டாமென்று இளவழகன் கூறிவிட்டான். வேறு வழியின்றித் தங்கப்பன் அவனைத் தன்னுடைய ஓட்டலுக்கே அழைத்துச் சென்றான். அங்குச் சில்லறை வேலைகளுக்கு அவன் பயன்பட்டுக்கொண்டிருந்தான். சினிமா தியேட்டருக்கு எதிரே உள்ள ஓட்டல் என்பதால் இளவழகன் அடிக்கடி திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றுவிடுவான். அங்கும் அவனுக்கு வேடிக்கை பார்ப்பது பிடித்தமானதாக இருந்தது. ஒருவேளை அங்கு அனைவரும் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருப்பது என்பது அவனை வேற்றுமையில்லாத ஆளாக உணர வைத்திருக்கும். திரைப்படத்தில் என்ன பிடித்தது என்று கேட்டால் எதுவும் பேசாது நிற்பான். கேள்வி கேட்டவர்களே ‘போ’ என்று சொல்லும்வரை நின்றுகொண்டிருப்பான். அவன் தங்கப்பனிடமும் ஊர்ச் சிறுவர்கள் சிலரிடமும்தான் எப்போதாவது சிரித்துப் பேசுவதைப் பார்க்க முடியும். அதுவும் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் அளவில்தான்.

அதிகாலையில் அவர்கள் இருவரும் ஓட்டலை நோக்கி, எதுவும் பேசிக் கொள்ளாமல், சோகமான இசைத் துணுக்கொன்று மீண்டும் மீண்டும் அலுப்புடன் ஒலிப்பது போல ஒரே சீரான நடையில் தேசிய நெடுஞ் சாலையின் ஓரத்தில் நிதானமாக நடந்து சென்றுகொண்டிருப்பார்கள். ஊருக்குள்ளே திருவிழா சமயங்களில் அவர்கள் பொதுக்காரியத்தில் ஈடுபடும் நடவடிக்கைகள் கூட நிழலைப்போல மௌனமாகவே இருந்தன. இருவரும் தனிமையிலும் ஒத்த மனம் பெற்றவர்களைப் போல் அமைதியாக அமர்ந்து எதையாவது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

திருமணமாகி ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் வத்சலாவுக்குக் குழந்தை பிறக்குமென்ற எதிர்பார்ப்பு இன்னும் பூர்த்தியாகவில்லை. தங்கப்பனின் ஆரோக்கியம் ஊரறிந்த கதை என்பதால் எல்லோரும் அவனையே குற்றம் சொன்னார்கள். அவனது ஆரோக்கியக் குறைவிற்கும் அவளுடனான அவனது தாம்பத்திய உறவுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று தெரிந்த வத்சலாவும் அதையே சொல்வதாக ஒரு குற்றச்சாட்டாகத் தங்கப்பன் என்னிடம் சொன்னான். தங்கப்பனைத் தனக்குப் பொருத்தமில்லாதவனென்று நினைக்கும் வத்சலாவுக்கு எப்போதும் அவனைப் பிடித்ததில்லை. பெற்றோர்களற்ற அவளுடைய வாழ்க்கையில் குடும்ப உறவினர்கள் ஏற்பாடு செய்த திருமணம் அது. வாழத் தொடங்கிவிட்ட பிறகு தனக்கு விதிக்கப்பட்டது என்று அவனை சகித்துக்கொண்டாள். இது தங்கப்பனுக்கும் தெரிந்ததுதான். பகலில் அவனுடன் ஏதாவது தெருவில் பேசுவதாயிருந்தால் சத்தமாக அவன் எதற்கும் லாயக்கற்றவன். தான் மட்டுமே அவனைச் சகித்துக்கொண்டிருக்க முடியும்’ எனும்படி பகிரங்கமாக அனைவரின் முன்னிலையிலும் தொண்டை நரம்புகள் வெளியே தெரியக் கத்திப் பேசுவாள். அவன், காரியவாதி சிந்தனை வசப்பட்டுத் தலைசாய்த்து நடப்பது போலக் கிளம்பிச் சென்றுவிடுவான். ஏனென்றால் அவன் யாருக்கும் தெரியாதபடி அவளை விரும்பிக்கொண்டிருந்தான். வார்த்தைகளைச் சமயத்திற்கு உபயோகப்படுத்தத் தெரியாதவன் அப்படித்தான் ஒரு பெண்ணைக் காதலித்திருக்க முடியும்.

இளவழகன் அவனுக்கு அமைந்த உள்ளார்ந்த தனிமையுடன் வயலில் வளரும் ஒற்றைப் பனைமரக் கன்றைப் போல வளர்ந்துகொண்டிருந்தான். வத்சலா அவனுக்குத் தான் செய்யவிருக்கும் ஒரு கடமை திருமணம் தான் என்று கருதி அவனைப் பற்றிப் பாட்டியிடம் பேசும் சமயங்களிலெல்லாம் தன்னுடைய நிறை வேறாத கனவுக்கு மாற்று செய்வது போல உரிமையுடன் வெளிக்காட்டும் தாய்மையுடன் பேசுவாள்.

அந்த வருடக் கோடைக் காலத்தின் ஒரு மாலை நேரத்தில் காகங்கள் பறந்தமர்ந்துகொண்டிருந்த மாவிலிங்க மரத்தின் கீழ், எங்கள் வயலில் இருந்து பார்த்தால் தெரியும் தூரத்திலும் பேசினால் கேட்காத தூரத்திலுமாக மூவரும் அவர்களின் வீட்டைச் செப்பனிட்டுக்கொண்டிருந்தார்கள். இளவழகன் மூங்கில்களில் ஏறி ஒட்டடைகளை அடித்தான். மறுநாள் ஒரு நாட்டுக் கொத்தனாரை வைத்துக்கொண்டு கூரைக்குப் புதிய கரும்புச் சருகுகளை வேய்ந்தார்கள். ஊறவைத்த தென்னம்பாளைகளை மர ஊசியில் கயிறாகக் கோர்த்துக் கொடுக்கவும் கூரையின் வெளியே வரும் மர ஊசியை வாங்கி உள்ளே மாற்றிக் கொடுக்கவும் இளவழகன் உதவினான். நாங்கள் வேலை முடிந்து வீடு திரும்பும் சாயங்காலத்தில் தரைக்கு சிமிண்டுப் பால் ஊற்றி மெழுகிக்கொண்டிருந்தாள் வத்சலா.

அனைவரும் ஒரே வரிசையில் படுத்துறங்கும்படி அவர்களுடைய வீடு இருந்தது. அடுப்படியிலிருந்து வரிசையாக வத்சலாவும் தங்கப்பனும் இளவழகனும் படுத்துக்கொள்வார்கள். அந்நாட்களின் தொடர்ச்சியில் ஒரு நாள் இரவில் சிறுநீர் கழிக்க எழுந்தபோது இளவழகன் அவள் காலடியில் குத்துக்காலிட்டு அமர்ந்து அவளை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்ததாக வத்சலா எங்களிடம் சொன்னாள். அவளுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் அது திடுக்கிட வைக்கும் நடத்தையாகத்தான் இருந்தது. அவள் எழுவதைப் பார்த்ததும் அவன் அதிவேகத்தில் நகரும் பாம்பைப் போல் நழுவித் தன் படுக்கையில் படுத்துக்கொண்டான். அவள் தனது துணி விலகியிருந்ததா என யோசித்துச் சரிசெய்துகொண்டாள். எழுந்து தோட்டத்திற்குச் சென்று சிறுநீர் கழித்தவள் குழப்பத்துடன் வந்து படுத்துக்கொண்டாள். இது நிச்சயம் அவனுடைய பெண் விருப்பம் சம்பந்தப்பட்டது; பிள்ளைகள் வளர்வதே தெரியவில்லை; இன்னும் கொஞ்சம் வளர்ந்தவனாக இருந்தால் ஏதாவது திருமண ஏற்பாடு செய்யலாம்; இது சாதாரணமானதுதான் என்று நினைத்துச் சமாதானம் அடைந்தாள். ஆனால் அவளுக்கு வழக்கமான தூக்கம் அன்றிலிருந்து போய்விட்டது.

மறுநாள் அந்தக் காலை நேரத்தில் நேற்றைய இரவின் யதார்த்தமற்ற தன்மையை இருவரும் புரிந்து கொண்டாலும்கூடப் புரிந்துகொள்ள முடியாத காரணமற்ற சங்கடங்களை உருவாக்கும் சூழலே அந்நேரத்தை நிர்வகித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். இருவரில் யாராவது ஒருவருக்குத் தொடரும் தலை வலியாலோ பீதியூட்டக்கூடிய கனவுகளை எழுந்த உடன் மறந்துவிட்டதாலோ அப்படி இருக்கலாம். அது ஒரு மறைமுகமான யதார்த்தம். அவள் பாத்திரங்களைக் கழுவும் போது அவன் முகத்தைப் பார்த்தாள். கண்டுபிடிக்கவியலாத தூரத்தில் புதைந்திருந்த அவன் முகம் கண்ணாடியில் எதிரொலித்த சூரிய ஒளியின் ஆக்ரோஷமான கதிர் வீச்சால் மூடப்பட்டிருந்தது. அவள் அவனது பருவத்தை நினைத்து தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள். அவளே பேச்சுக் கொடுத்தாள். ஒளியின் கீழிருக்கும் இருட்டில் அவன் உதடுகள் அசைய அவன் வழக்கம்போலப் பேசினான். சமாதானத்தை, நியாயத்துக்கு மாறாக அவளே செயல்படுத்தியும் கூட.

அடுத்தடுத்த நாட்களில் அவள் வயல் வேலைகளுக்குச் சென்றாள். இளவழகனும் தங்கப்பனுடன் ஓட்டலுக்குச் சென்றவன் புதன் கிழமைதான் வந்தான். தங்கப்பன் வராத சந்தை நாளான அந்த இரவு படுக்கையை விரித்தபோதுதான் வத்சலாவுக்கு அந்நிகழ்வை மறந்துவிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. அவன் தனது அக்காளின் மகன் என்பதும் தன் வீட்டில் வளரும் பிள்ளை என்பதும் மேலும் அவளுடைய தாய்மை உணர்வும் சேர்ந்து தான் அந்நிகழ்வைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள உதவியிருந்தன. அவள் ஆழ்ந்த கனவொன்றிலிருந்து விடுபட்டுப் புரண்டு எழுந்தபோது தான் அவன் மறுபடியும் தன் கால்களின் அருகே குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். இந்தமுறை அவள் அதிகம் விதிர்த்துப் போனாள். இது விபரீதம்; தவிர்க்க முடியாதது என்று உடனே உணர்ந்த அவள் அருவருப்பான உணர்ச்சியால் தீண்டப்பட்டாள். அவன் பழையபடி சென்றுபடுத்துக்கொண்டான். அதிர்ச்சியில் அவள் எழுந்து செல்லாமல் அவனை என்ன செய்வது என்ற குழப்பத்தில் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு எழுந்து வெளியே சென்றாள். நட்சத்திரங்கள் அற்ற வானத்தைப் பார்த்த நினைவுடன் வீட்டுக்குள் வந்து விளக்கைக் கொளுத்தினாள். மங்கிய வெளிச்சத்தில் அவன் கவிழ்ந்து படுத்திருந்தது தெரிந்தது. அவள் அவனைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டாள் - இருமுறை. அவனுக்குள் மறைந்துகொண்டிருக்கும் ரகசியத்தின் வாசனையைக்கூட யாரும் அறிந்துகொள்வதை அவன் விரும்பியிருக்க முடியாது. அவன் நடித்துக்கொண்டிருப்பதாக நினைத்த அவள், அவனுக்குக் கேட்கும் என்பதால் அவனைப் பார்த்துச் சொன்னாள்:

“இனிமே இதுபோலச் செஞ் சீன்னா நான் அதுகிட்ட சொல்லி விடுவேன். உனக்கு கல்யாணத்துக்கு இன்னும் வயசிருக்கு. எங்கிட்டே இப்பிடியெல்லாம் நடந்துக்கக் கூடாது.”

அவன் எந்த அசைவுமில்லாமல் படுத்திருந்தான். அவன் எழப்போவதில்லை என்று தெரிந்தும் அவனிடம் ஏதாவது அசைவுகள் தெரிகிறதா என்று சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தாள். அடக்கப்பட்ட கோபத்துடன் விளக்கை ஊதி அணைத்தாள்.

இது அவனைப் பற்றிய முன்கூட்டிய முதல் எச்சரிக்கைச் செய்தி என்பதை, அவளால் மட்டுமல்ல எங்களாலும் அறிவுபூர்வமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் எங்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய விபரீதக் கற்பனைகள் எதுவும் இருந்திருக்கவில்லை. அது யதார்த்தமல்ல. அல்லது அதியதார்த்தமானது. நோயை அறிந்துகொள்ளும் முன்பே மருந்துகள் தயாரிப்பதும் மடத்தனமானது.

முன்பு நிகழ்ந்தபோது ஒதுக்கித் தள்ளியதுபோல் செய்ய முடியாமல் உள்ளுக்குள் சிறிய வெறுப்பு நுழைவதை அவள் தடுக்க முயன்று கொண்டிருந்தாள். ஆண்பிள்ளை அவனைச் சிறு வயதிலேயே தகாத இடங்களுக்குக் கூட்டிச்சென்று கெடுத்துவிட்டாள் என்று தன் அக்காமீது அவளுக்கு எரிச்சல் வந்தது. அவனோடு சகஜமாக இருக்கும் சமயத்தில் இது குறித்து அவனுக்கு விளக்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அதற்குப் பிறகு அவன் வீட்டில் இருக்கும்போதெல்லாம் அவளுடைய இயல்புநிலை சீர் குலைந்துகொண்டிருந்தது. அவள் உறங்கும்போதும் புரண்டு படுக்கும் ஒவ்வொரு சமயத்திலும் விழித்திருக்கும் பகல் நேரத்திலும் அவன் அருகில் இருக்கிறானா என்று தனது ஆடைகளை மேலும் கவனத்துடன் சரிபார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. இதற்காக அவள் மிகவும் வருத்தப்பட்டாள்.

புரிந்துகொள்ள முடியாத அந்தச் செயலுக்காக வத்சலாவும், தனக்கு மட்டுமே தெரிந்த பாஷையுடன் பழகும் அவனும், அது அரங்கேறும் சமயத்திற்காக இருளில் ஒரே அறைக்குள் நடமாடும் எதிரிகளைப் போல் நள்ளிரவுவரை தூங்குவது போல் அன்றிரவு காத்திருந்தார்கள். அவள் எதிர்பார்த்ததைப் போலவே அவன் எழுந்துவந்து அவள் கால்மாட்டில் குத்துக்காலிட்டு அமர்ந்தான். அவள் ஊசிக் கீறலைப் போல் இருளில் கண் திறந்து பார்த்தாள். அது வினோதம் நிரம்பிய நடவடிக்கை. அவளைப் பார்த்து அவன் தலையில் அடித்துக் கொண்டதாகச் சொன்னாள். அவன் தன் அக்காவைப் போலவே பைத்தியமாகிக்கொண்டு வருவதாக நினைத்து அவன் இனி எக்கேடாவதுகெட்டு ஒழிந்துபோகட்டுமென அழுகையைக் கட்டுப்படுத்தி ஒருக்களித்துப் படுத்தாள். மீண்டும் அவன் அப்படியே சிலைபோல அமர்ந்திருந்தான். அவள் புரளும்போது நழுவிப் படுக்கைக்குச் செல்வதும் மீண்டும் அப்படியே வந்து அமர்ந்திருப்பதுமாக இருந்தான். இதை அவள் தங்கப்பனிடம் சொல்லலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருந்தாள். இதனால் அவன் விரட்டப்பட்டு அவள் போக்கிடம் பற்றிய கவலையாக முடிந்துவிட்டால் என்ன செய்வது என்றெண்ணிப் பயந்துகொண்டிருந்தாள். ஆனால் அது புரிந்துகொள்ள முடியாத எங்களுடைய குறைபாடாகவே கடைசிவரை இருந்து தொலைத்தது. மறுநாள் ஊர் தூங்கும் அந்த இரவில் அபூர்வமான அந்தக் கணத்தில் ஒட்டுமொத்தமாக - தெளிவில்லாமல் - வத்சலா கண்ணீர் எழும்பப் படிக்கட்டில் அமர்ந்தபடி சொன்னாள்: அவனுடைய எந்தச் செய்கையையும் பொதுவான ஒரு மனிதனின் விஷயத்தோடு சம்மந்தப்படுத்திப் பார்க்கவோ சந்தோஷம்கொள்ளவோ திருப்திகொள்ளவோ முடியாதபடி சற்று விசித்திரமாக இருக்கிறது. எறும்புகள் ஊர்ந்து செல்வதை மணிக்கணக்காக உற்றுப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றான்; கேட்டால் இதுதான் என் கனவில் அடிக்கடி வருகிறது என்கிறான்.

முன்புபோல் அவன் இயல்பாக இல்லாததால் வீட்டுக்குள் பனிமூட்டம் உருவாகிவிட்டிருந்தது. அவள் அதை எதிர்கொள்ள முடியாமல் சுவர்களில் மோதிக்கொண்டிருந்தாள். தங்கப்பன் இருக்கும் சமயங்களில் அது வெளிச்சத்தைக் கொண்டிருந்தது. சாப்பாட்டைத் தட்டில் போட்டுவிட்டு வெளியில் சென்று அமர்ந்துகொண்டாள். குளிக்கும் சமயங்களை அவனில்லாத நேரமாகத் தேர்ந்தெடுத்தாள். வெளி வேலைகளில் ஈடுபட்டு வெயிலில் களைப்புற்று வீடு திரும்பும் அவளுக்குக் காற்றுக்காகவோ அலுப்பிற்காகவோ சற்றுத் தளர்ச்சியுடன் தூங்க முடியாதிருந்தது. துணி மாற்றிக்கொள்வதற்குக் கதவை அடைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. எந்த ஒன்று அவன் நினைப்பைத் தவறான திசைக்கு அழைத்ததோ! ஆனால் தான் மறந்தும் தன் அறியாமையின் இயல்பினால்கூட அவனுடைய திசை தெரியாத கற்பனைக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் வத்சலா கவனமாக இருந்தாள்.

அது புரட்டாசி மாதத்தின் நள்ளிரவு. ஊருக்குள் ஒரு வீடு தீப்பற்றிக்கொண்டது. அப்போது பல ஆவேசமான பதற்றக் குரல்களைக் கேட்டு வத்சலாவும் எழுந்து ஓடிவந்தாள். மற்ற பெண்களைப் போல் அல்லாது எங்களுடன் தீயை அணைத்ததில் அவளும் தன்னை மறந்து ஒரு ஆண் பிள்ளையைப் போலப் பங்குகொண்டாள். நெருப்பை அணைத்து முடித்துச் சற்று ஆசுவாசமாகவும் அதன் முழு அழிவையும் நினைத்து எழும்பிய பதற்றம் தீராமலும் தெரு மக்கள் தூக்கம் கலைந்த முகங்களுடன் ஆங்காங்கே கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பாட்டிதான் அப்போது வத்சலாவின் முதுகைக் கவனிக்க நேர்ந்ததாகச் சொன்னாள். முதுகுப் பக்கம் அவளது ரவிக்கை கத்தரிக்கோலால் துண்டிக்கப்பட்டதுபோல் இரண்டாகத் தொங்கிக்கொண்டிருந்தது. எல்லோரும் சட்டென அவளின் பின்பக்கம் வந்தும் அவளைத் திரும்பச் சொல்லியும் அவளது வெற்று முதுகைப் பார்த்துச் சிரித்தபடி கேட்டார்கள், இதுகூடத் தெரியாமல் ஒரு பெண்பிள்ளை இருப்பாளா என்று. நெருப்பை அணைக்கையில் எதிலாவது மாட்டிக் கிழிந்திருக்கும் எனப் பொதுவான காரணம் சொன்னார்கள். சட்டெனப் புடவையை எடுத்து வெகுளியாகச் சிரித்தவாறே முதுகை மூடிக்கொண்ட அவளுக்குத் தான் வலுவாகத் தாக்கப்பட்டிருப்பதை நினைத்து உள்ளுக்குள்ளே நடுக்கம் படர்ந்தது. அவனை நன்றாக அடித்து உதைக்க வேண்டுமென நினைத்தாள். அதற்கு மேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லை.

வீட்டுக்குள் நுழைந்து சிம்னி விளக்கைக் கொளுத்தி அவனை எழுப்பினாள். அவன் தூங்கித்தான் போயிருந்திருக்க வேண்டும் என்று முகத்தைப் பார்த்தவுடன் நினைத்தாள். அவன் ஒன்றும் புரியாதவன் போல் கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டு அவளைப் பார்த்தான்.

“என் ஜாக்கெட்ட பிளேடு வச்சி கிழிச்சியா?” என்றாள். அவன் சட்டென அதிர்ச்சி காட்டி மிக இயல்பாய் இல்லையென்று தலையாட்டினான்.

“பொய் புளுவாத. உன்னைத் தவிர வேற யாரு இருக்கா இங்க?”

அவன் முகத்தைத் தூக்கி அவளைப் புதிதாகப் பார்ப்பவனைப் போல் ஒரு பொம்மையாக அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

“நான் உனக்கு அம்மாடா! எங்கிட்ட அப்படியெல்லாம் நடந் துக்கக் கூடாது. அதுக்குத் தெரிஞ்சா உன்ன ஊட்ட உட்டுத் தொரத்திடும். நீ நடுத் தெருவுலதான் நிக்கணும்.”

அவன் எதுவும் பேசாது அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“வச்சிருக்கிறதே நாலு ஜாக்கெட்டு. இதில ஒண்ண கிழிச்சிட்ட. உன் புத்தி ஏன் இப்படிப் போவுது?”

அவள் பேசப் பேச அவளையே பார்த்துக்கொண்டிருந்த அவனிடமிருந்து எந்தப் பதிலையும் இனி வாங்க முடியாது என்று அவளுக்குத் தெரிந்தது. “இதே நாம் பெத்த புள்ளையாருந்தா இப்பிடிச் செய்யுமா?” என்றவுடன் சட்டென அவளுக்கு அழுகை வந்தது.

அவன் மெதுவாக எழுந்தான். அவளுக்கு அவனை எதிர்கொள்ள முடிகிற அளவுக்கு உடலில் பலமும் மனதில் தைரியமும் இருக்கறதென்று உடனே நினைத்தாள். அப்படியானவன் அல்ல. சிறுபிள்ளைத்தனம். முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

அவன் கதவுப் படலைத் திறந்து வெளியேறினான். அவளது தாய்மை உணர்வால் அவனது நடை அவளுக்குப் பரிதாபத்தைத் தோற்றுவித்தது. அவன் குளக்கரைப் பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான் அவன். மதகுக் கட்டையில் சென்று அமரும்வரை எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். பின்பு ஜாக்கெட்டை மாற்றிக்கொண்டு கிழிந்ததைக் கரித்துணிக்காக அடுப்பின் மேல் எரவாணத்தில் செருகினாள். அவனை வெளியில் படுக்க வைப்பதற்கான எந்தக் காரணத்தையும் தங்கப்பனிடம் சொல்ல முடியாது. பிறகு வெகு நேரம் தூக்கம் வராமல் குழப்பத்துடன் விழித்துக்கொண்டிருந்துவிட்டு எழுந்து வாசலுக்கு வந்து அவனைப் பார்த்தாள். இருளில் கரிய உருவமாய் மதகுக் கட்டையிலேயே சுருண்டு படுத்திருந்தான்.

மறுநாள் காலையில் வத்சலா, வாழ்க்கை தரும் எதிர்பாராதவைகளில் நேரும் விசனங்களால் இயல்புக்கு மாறான முதிர்ச்சியுடன் தோன்றினாள். ரத்த பந்தத்தால் எழும் இயலாமையும் குழந்தை இல்லாவிடினும் இளகிய இதயம் கொண்ட அவளது இயல்பான பெண்மைக்குள் சுரக்கும் தாய்மையும் அவளை அழுத்திக்கொண்டிருந்தன. வேலைக்குக் கிளம்பிய நேரத்தில் அவன் மதகுக் கட்டையில்தான் படுத்திருப்பான் என்று நினைத்து ஏமாந்தாள். வழி நெடுகத் தென்பட்ட அவன் வயதொத்த பிள்ளைகளிடம் அவனுக்குச் சாப்பிடுவதற்கு வீட்டில் பழையதை வைத்திருந்ததைச் சொல்லி, அவனைக் கண்டால் போய் சாப்பிடச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டு சென்றாள்.

பூதக்கண்ணாடி அன்று பகல் முழுதும் சூரியனை நேருக்கு நேர் பார்க்க முடியாத அனல் வீசும் வெய்யலில் முடப்பேறிய வெளிர்மஞ்சள் சருகுகள் மூடிய கதிரறுக்கப்பட்ட சோளவயல் காடுகளில் சுற்றிக் கொண்டிருந்தான். அவனைக் கண்டவர்கள் “மொட்டை வெயிலில் என்ன செய்கிறாய்?” என்றார்கள். அவன் நிதானமான நடையுடன் ஆட்களற்றுத் திறந்துகிடந்த டீசல் வாசனை வீசும் இஞ்சினுக்குச் சென்று கரடுதட்டிப்போன களிமண் தரையில் படுத்திருந்தான். நாங்கள் பாசனத்திற்காக இஞ்சின் கொட்டகைக்குச் சென்றபோது அவன் ஒரு பழைய துணி மூட்டையைப் போல் கிடந்தான். அவன் கால்களில் திடமான சோளச் சருகுகளின் கூர்மை குறுக்கும் நெடுக்குமான ரத்தக் கோடுகளைக் கிழித்திருந்தன. சில வாரங்களுக்குப் பிறகு, எங்கள் வீட்டு வாசலில் வந்து அமர்ந்து, மாட்டுக்கு லாடம் அடித்துக்கொண்டிருந்ததை அவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோதும் கவனித்தேன். அவன் கால்களில் கிழித்திருந்த சோலைகள் காய்ந்து வறண்ட கோடுகளாக மாறிவிட்டிருந்தன.

உச்சி வெயிலில் வேலை கலைந்து வீடு திரும்பிய வத்சலா முதலில் தன் அலுப்பைப் போக்கிக்கொள்ளக் கூட உட்காராமல் வைத்தது வைத்தபடி இருந்த சோற்றுப் பானையை ஆர்வமிழந்து திறந்து பார்த்தாள். பழையது அப்படியே நீரில் ஊறிக் கொண்டிருந்தது. அவள் பெருமூச்சினூடாக அவனை நினைத்தபடி வியர்வையைத் துடைத்துக் காற்று வாக்கில் அமர்ந்தாள். அவன் வீட்டுக்கு வராதது குறித்து அவளுக்குள் பலவித யோசனைகள் உருவாயின. வயலில் அவள் வேலை செய்து கொண்டிருந்தபோதும் உடனிருக்கும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத அவளது வீட்டு நிகழ்வுகள் குறித்து மௌனித்திருந்தாள். அவன் அவளை விட்டுச் சென்றுவிடுவான் என்று யோசித்தபோது அவளுக்கு மனத் தாங்கலாக இருந்தது. எந்தத் தொழிலும் தெரியாத அவனை எல்லோரும் நிராகரித்துக் கேலிசெய்வதான கற்பனையில் அவளுக்குக் கண்ணீர் திரண்டுவந்தது.

வெய்யில் தணியும் முன்மாலை நேரத்தில் சோகம் விரவிய முகத்துடன் மண்குடத்தைத் தூக்கிக் கொண்டு தண்ணீர் மொள்ளச் சென்றபோது மிகச் சாதாரணமாக ஊர்ப் பையன்களிடம் விசாரித்தாள். உள்ளூர அவன் எங்கேயும் தன்னை விட்டுச் சென்றுவிடமாட்டான் என்று அவள் நம்பினாலும் அவனை நேரில் பார்க்கும் ஆர்வம் மிகுந்தது. ஊர் பரிகசிக்கும் லத்தைக் கண்ணாடியும் ஒல்லியான கைகால்களும் அவளுக்குப் பிடிக்கவே செய்தன. அவனிடம் ஏதாவது பேசி எப்படியாவது ஒரு வார்த்தையைப் பிடுங்கி விடும் ஆர்வம் துளிர்த்தது. ‘அறியாப் பிள்ளை. அவனை என்ன செய்வது?’ என்று நினைத்துக்கொண்டாள். பகலில் அவனைக் கண்டவர்கள் விவரம் சொன்னதை வைத்துச் சாயங்காலமாய் அவள் அவனைத் தேடிக்கொண்டு வயல்வெளிக்குச் சென்றாள். சூரியன் சரியும் திசையில் ஆடுகளை வீட்டுக்கு ஓட்டிவரும் பிள்ளைகளை விசாரித்தாள். அவர்கள் அவன் மெயின் ரோடு பக்கமாய்ச் சென்றதாகச் சொன்னார்கள். அவள் அவனைச் சரியாக யூகித்தாள். சற்று ஆறுதலோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

அவள் யூகித்தபடியே நிழல்கள் தோன்றாத இருளில் தங்கப்பனுடன் அவன் வீட்டுக்கு வந்தான். தங்கப்பன் அவளை மங்கிய மஞ்சள் வெளிச்சப் புகை பரப்பும் சிம்னிவிளக்கு வெளிச்சத்தில் ஏறிட்டுப் பார்த்தான். வத்சலா தலைக் கேசம் கலைந்து ஒளியிழந்த ஒரு பழைய சித்திரத்தைப் போல வீட்டின் இருட்டினூடே தெரிந்தாள். அது ஒரு கேள்வி போலும் அவனே அதற்கு விடை கொடுத்தது போலும் பார்வையைத் தாழ்த்தி உள்ளே சென்றான். அவனுக்கும் பின்னே பூதக்கண்ணாடி தன்னை மறைத்துக்கொண்டு தங்கப்பனின் வால்போல் சென்றான். வீட்டுக்குள் அவர்களின் நிழல்கள் கோரச் சித்திரங்களாக அசைந்தன. அவரவர் தேவைகளை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அவள் குழப்பமாகத் தடுமாறினாள். சுமுகமான வார்த்தைகளை எதிர்பார்த்துப் பாத்திரங்களில் முகம் கொடுத்து வேலை செய்தாள். எதிர்த்தரப்பின் மூச்சடைக்கும் மௌனம் அவள் முதுகுக்குப் பின்னே கத்திபோலப் பாய்ந்துகொண்டிருந்தது. அவள் சோர்ந்துபோனாள். தைரியமற்றவளாய் எதுவும் பேசாமல் இருவருக்கும் சோறு பரிமாறினாள். அவர்கள் விடிந்து கிளம்பியபோதும் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவள் வாசல் பக்கம் வந்து அமர்ந்து கொண்டாள். உபயோகமற்ற வார்த்தைகளாக இருப்பினும்கூட அவள் பரிதாபமான முகத்துடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘எனக்கு ஒரு பிள்ளைப்பூச்சி இல்லையே ஆண்டவா’ என்று முணுமுணுத்து ஏங்கினாள். யாருடனாவது தன்னை முழுதாய் ஒப்புவித்துவிட்டு நிம்மதியாக இருக்க வேண்டும்போலிருந்தது. திரண்ட கண்ணீரை அடக்கிக்கொண்டாள்.

அன்று இரவும் அதன் பின்பு வந்த இரவுகளும் பதற்றம் விரவியதும் தன்னை மறந்து தூங்கியதும் துர்க் கனவுகளின் அதிர்ச்சியில் கண் விழித்துச் சூழலைக் கவனித்துக்கொள்வதுமான இரவுகளாக அவளுக்கு இருந்தன. பூதக்கண்ணாடி கருப்பையில் சுருண்டுகிடப்பது போலவே எப்போதும் தூங்கிக்கொண்டிருந்தான். அதில் மறைந்திருக்கும் அதிகாரம் அவளை நிம்மதியிழக்கச் செய்தது. வீட்டுக்குள் நிரம்பிக்கொண்டிருந்த அவனது அதிர்வலைகளில் அவள் மயக்கம்போட்டு விழாத குறையாய்த் தன்னை நிர்வகித்துக் கொண்டிருந்தாள். ஒரே நாளைப் போல எந்த மாறுதலுமின்றிக் கிழமைகளின் பெயர்கள் மாறிக்கொண்டிருந்தபோதும் அவள் சிந்தித்தவரை அது எப்போதும் நடைபெற முடியாதது. ஆனால் அவள் தன் எண்ணம் பொய் என்றும் நினைத்தாள். பூதக்கண்ணாடிக்கும் தங்கப்பனுக்கும் இருக்கும் நெருக்கம் அவளால் விளங்கிக்கொள்ள முடியாதது. இத்தனை வயதுக்குப் பிறகும் அவனைச் சில சமயம் தங்கப்பன் குளிப்பாட்டிவிடுவான். எதுவுமே பேசிக்கொள்ளாமல் இருவரும் மணிக்கணக்காகத் தனியாக உட்கார்ந்திருப்பதையும் நினைத்துப் பார்த்தாள். பழைய சாதாரணக் காட்சியாக இருப்பினும் புதிய அர்த்தத்தைத் தருவதுபோலவும் ஆனால் புரிந்துகொள்ள முடியாததுமான அதை நினைத்து வியந்துகொண்டிருந்தாள்.

நெல் அறுவடைக் காலம் ஆரம்பித்தபோது தூக்கு வாளியில் கஞ்சியை எடுத்துக்கொண்டு சும்மாடு துணியாக ஈரிழைத் துண்டை மேலில் போட்டுக்கொண்டு கதிர் அரிவாளுடன் ஈர வைக்கோல் மணம் வீசும் வயல்வெளி வழியே நிலையற்றதும் மகிழ்ச்சியற்றதுமான நினைவுகளில் அவளும் அறுவடைக்குப் போனாள். காட்சியும் கருத்தும் ஒன்றிணைய முடியாதபடி அவள் பார்வையும் நடையும் விசனத்தில் தோய்ந்திருந்தன. எங்கள் வயலைத் தாண்டிப் பக்கத்து வயலில் இறங்கியபோது பாட்டி அவளை நலம் விசாரித்தாள்.

ராஜமாணிக்கம் தன் களிமண் நிற உடலில், சமச்சீரான வெண் பழுப்பு நிறத்துத் தலைமுடி மற்றும் அணில் வால் மீசையுடன், பூனைக் கண்களுடன் கம்மங்கூழிலும் கேழ்வரகிலும் வளர்ந்த வளப்பமான தொப்பையுடன் மேல் சட்டையற்றுக் கயிற்றுக் கட்டிலில் வெயிலில் குடைபிடித்து அமர்ந்திருந்தார். இடுப்பொடிய நிலம் பார்த்துக் கதிரறுத்தவள் வேலை முடிந்து அவரிடம் இளவழகனை அவர் வீட்டு மாட்டுப் பண்ணையில் ஏதாவது வேலைக்குச் சேர்த்துக்கொள்ள முடியுமா என்று கேட்டாள். “உலகம் தெரியாத அவன் ஒரு ஆளாய் வரவேண்டும்” என்று சொன்னாள். மீசையை உருவியபடி தலையாட்டிக் கேட்டுக்கொண்டவர், “ஆகட்டும் பார்க்கலாம்” என்றார். சூரியன் சாயும்வரை வயலில் உதிரிக் கதிர்களைப் பொறுக்கி வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல் அரிகிடையில் போட்டாள். பின்பு அவள் தனித்த நடையில் காலிப் பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு வெறுமையும் குழப்பங்களும் சூழ்ந்த வீட்டை நோக்கிப் புறப்பட்டாள்.

அந்தப் புதன்கிழமை பண்ணையிலிருந்து ஒரு கிழவன் வந்து இளவழகனைக் கூட்டிச் சென்றதாக வத்சலா சொன்னாள். தங்கப்பனும் அதை விருப்பமில்லாமல் ஏற்றுக்கொண்டான். அவனுக்கு மீசைக்காரரைப் பிடிப்பதில்லை என்றும் வத்சலாதான் சொன்னாள். இருப்பினும் அவனுக்குச் சரியான இடம் அதுதான் என்று நாங்களும்கூட நினைத்தோம். மனக்குழப்பங்கள் கொண்டு ஒழுங்கற்ற காரியங்களை செய்யும் அவன் அங்கே சென்றால் வேலைமீது கவனம் குவியும் என்று நாங்களும் எதிர்பார்த்ததில் தவறொன்றும் இல்லை.

வத்சலாவின் வீட்டை ஒட்டி நீளும் வயல்கள் ராஜமாணிக்கத்தினுடையவைதான். அவர் அந்தப் பக்கத்தில் அறுவடை தொடங்கும்போது எப்போதும்போல அங்கேயே ஒரு தற்காலிக வைக்கோல் கூரைப்பந்தலை உருவாக்கிக்கொண்டார். அவருக்குப் படுக்கையும் சாப்பாடும் அங்குதான் நடந்தன. அந்தப் பக்கத்து அறுவடை தொடங்கும்போது சென்ற தங்கப்பன் அறுவடை முடிந்த ஆறாவது நாளே வீட்டுக்கு வந்ததாக வத்சலா சொன்னாள். “அந்த மடக்குக் கட்டில் ஏன் வீட்டினுள் கிடக்கிறது. அதை மரியாதையாக அவர் வீட்டு ஆட்களைவிட்டு எடுத்துச் செல்லச் சொல்” என்று சத்தமிட்டுவிட்டுப் போனதாகவும் சொன்னாள். அந்தக் கட்டிலின் வருகை அவனை இம்சைக்குள்ளாக்கிக்கொண்டிருந்தது.

தங்கப்பன் அந்த ஞாயிற்றுக் கிழமை இளவழகனைத் தேடிக்கொண்டு சென்றான். தோட்டத்தில் நின்று அவனைப் பார்த்துப் பேசி விட்டு வாங்கிச் சென்றிருந்த பகோடா பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு அறிவுரை கூறிவிட்டு வந்தான். அடுத்த வாரமும் கட்டில் எடுக்கப்படாமல் வீட்டினுள் கிடந்தது குறித்துக் கேட்டான் தங்கப்பன். வத்சலா பயந்துகொண்டே ஆனால் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு சாதாரணமாகச் சொல்வதுபோல் சொல்லிவிட்டாள்.

“நான் சும்மா கேட்டேன். இந்தக் கட்டில நான் எடுத்துக்கவான்னு. அவரும் சரின்னுட்டார். நாம தரையிலதான படுத்துக்குறோம். குளத்தங்கரை பக்கமா இருக்குறதால பாம்பு பூச்சி ஏதாவது வரும். நாம மேலே படுத்துக்கலாம்” என்றாள். அவன் அவளை முறைத்துவிட்டுக் கிளம்பி வேலைக்குச் சென்றுவிட்டான்.

அவள் கட்டிலின் மேல் ஆசைப்படுவது இயற்கையானது. ஆனால் அவனுடைய ரோஷமும் இயல்பானதுதான். ஆனால் அவன் அதை அத்தனை தீவிரமாக எதிர்க்கும் போது மனைவியானவள் அதை அனுப்பிவிடுவதுதான் முறை என்று பாட்டி என்னிடம் அன்றிரவு சாப்பிடும்போது விவாதித்தாள். தங்கப்பன் அவளிடம் மறைமுகமாகச் சொல்லியிருப்பான் என்றேன். அப்படித்தான் இருக்கும் என்றாள் பாட்டி.

ஏமாற்றங்களைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக, சுயப் பழிவாங்தலுக்குப் பயன்படுத்தப்படும் செயல்கள்மீது எப்போதும் எல்லோருக்கும் ஒரு ரகசிய பிரேமை இருக்கவே செய்கிறது என்பதை அவனுக்கு யாரும் புரியவைக்க முடியாது. ஏமாற்றுபவர்களைப் போல ஏமாறுபவர்களின் பிடிவாதமும் அதற்கு இணையானதுதான். எனினும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவன் நினைப்பதற்கு உண்டான செயல்களையும் அவள் செயல்படுத்திக் காட்ட வேண்டுமென்று எதிர் பார்த்துக்கொண்டிருந்தான்.

தங்கப்பன் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அந்தக் கட்டிலை ராஜ மாணிக்கம் வீட்டுப் பண்ணையில் எடுத்துச் சென்று போட்டு வருவதற்கு இளவழகனைத் துணைக்கு அழைத்து வரப் போனான். உச்சி வெயிலில் அவர்கள் இருவரும் வீட்டுக்கு வந்தபோது அனைவரது உள்ளுணர்வுகளும் அவரவருக்கு விசுவாசமாக எச்சரித்துக்கொண்டிருந்தன. வீட்டுக்குள் இருந்த வத்சலாவுக்குத் தன்னை யாரோ உற்றுப் பார்ப்பதாக எழும் எண்ணம் ரகசியமாக அவளது காதில் சொல்லப்பட்ட வார்த்தைகளைப் போல் உண்மையானதாகவும் அழுத்தமானதாகவும் பதிந்தது. அவளால் எதையும் உதறிவிட முடியவில்லை. அவள் துணுக்குற்றாள். கண்மணி அளவுள்ள கீற்றுப் பொத்தல்கள் வழியே பாயும் ஒளி, பூனையை ஒத்த இடம் வலமான நடையசைவுகளால், தடைபட்டுத் தடைபட்டு வீட்டினுள்ளே பாய்ந்ததைக் கண்டபோது முழுதாய்ப் பயந்து மிரண்டாள். அச்சமயத்திற்குச் சற்றுப் பிந்திய நேரத்தில் பாட்டியிடம் வத்சலா தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகச் சொல்லி அழுதுகொண்டிருந்தாள். எண்ணை காணாத செம்பட்டையான தலைமுடியுடன், எண்ணைப் பசை படிந்த அவள் முகம் இருண்டும் பயத்தில் வெளுத்தும் சுயப் பழிவாங்கலில் முழுதாய்த் தோற்றுப்போயிருந்தது.

மீண்டும் உச்சி வெயிலில் அழகும் தங்கப்பனும் ஹோட்டலை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோது உரம் வாங்க நண்பர்களுடன் வண்டியை எடுத்துச் சென்ற நாங்கள் அவர்களைக் கடக்கவிருந்தோம். எங்கள் பகுதியிலிருந்து யாரும் செல்லாத அப்பாதையில் - அது ஒரு பாதையே அல்ல - குறுக்காக வளைந்து சென்றுகொண்டிருந்தார்கள். ஆற்றைக் கடந்தாலொழிய, முட்கள் நிறைந்த அந்த வழியற்ற வழி, ஆற்றைத் தவிர வேறெங்கும் அழைத்துச் செல்லாது. பாட்டி, அவனைக் கண்டால் வீட்டுக்கு வரச் சொன்னதாகக் கூறியதைத் தங்கப்பனிடம் சொன்னேன். அவன் தலையாட்டினான். ஆனால் அவர்கள் திரும்பிப் பிரதான சாலைக்கு வந்து, ஓட்டலை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.

வத்சலாவின் பேச்சை வைத்து எங்களால் அதை உணர முடிந்தது. மீட்க முடியாத தொலைவுக்குச் சென்றுவிட்ட வாழ்க்கையின் கசப்பை அவர்கள் சுவைத்திருந்தார்கள். அவர்கள் வழக்கம்போலவே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பூதக்கண்ணாடி சாலையில் கிடந்த காய்ந்த மரவள்ளிக் குச்சி ஒன்றை எடுத்துத் தரையில் தட்டிக்கொண்டே போனான்.

வத்சலாவுக்கு இருவரும் வராத மற்ற இரவுகள் பற்றிக் கவலை இருந்ததில்லை. எத்தனை விதமான கற்பனைகளில் தன்னுடைய விடுதலை குறித்துச் சிந்தித்தும் அவளால் சுலபமான ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எங்காவது சென்றுவிடலாம் எனத் தோன்றியது. ஆனால் எதிர்கொள் வதைத் தவிர்த்து அவளுக்குச் செய்ய முடிந்தது எதுவுமில்லை.

அவள் மறுநாள் வேலைகளை முடித்த மதியத்தில் தோட்டத்துப் பக்கக் குளக்கரையில் குளிப்பதற்கு இறங்கினாள். வீட்டை ஒட்டிய குளமாக இருப்பதால் அவள் எப்போதும் மக்கட்டி மாராப்போடும் சோப்பு டப்பாவோடும் மஞ்சளோடும் இறங்கிவிடுவாள். சாலையை அந்நேரத்தில் உபயோகிப்பவர்கள் யாராயிருப்பினும் தூரத்தில் ஒருத்தி மக்கட்டி மாராப்புடன் குளிப்பதைப் பார்க்க முடியும். அன்றும் அதை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. அது ஒரு நிதானமான குளியலாக இருந்தது. நீரில் ஊறிக் கிடப்பது அவள் மனதுக்கு உணக்கையாக இருந்தது. ஆனால் புழுக்கமான நினைவுகளை அவளால் களைந்துவிட முடியவில்லை. குளித்து முடித்துக் கரையேறி வாசல் படலைத் திறந்து வீட்டினுள்ளே வந்தபோது அவள் சற்றும் எதிர் பாராத செயலில் பேச்சு மூச்சற்று நின்றாள். அவளுக்கு உடலெங்கும் உதறல் எடுத்தது. அவளுடைய அனைத்துத் துணிகளும் ஒன்று விடாமல் எலி குதறியதைப் போல சுக்கல் சுக்கலாகக் குதறப்பட்டு, அதனுடன் குழம்பு சாமான்களான மிளகாய்த்தூள், புளி, தானியங்கள், சில்லரைக் காசுகள் கிழிக்கப்பட்ட ரூபாய்த் தாள்கள் அனைத்தும் சேர்த்துக் கலந்து முட்டாடி வைக்கப்பட்டிருந்தன. அலுமினியப் பாத்திரங்கள் நசுக்கப்பட்டும் மண் சட்டிகளும் பானைகளும் உடைத்துத் தூளாக்கப்பட்டும் கிடந்தன. வீட்டை ஒட்டிக் குளித்துக்கொண்டிருந்தபோதே சத்தமில்லாமல் யாரோ இத்தனை காரியங்களைச் செய்திருப்பதைக் கட்டுப்படுத்தப்பட்ட நடுக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு ஈரம் சொட்டிக்கொண்டிருந்த பாவாடையோடு வேகவேகமாக வெளியே வந்தாள். மக்கட்டி மாராப்போடு தெருவில் செல்ல முடியாததால் அங்கிருந்தபடி ஊரைப் பார்த்தாள். காத்திருக்கவோ துணைக்கு ஆள் கூப்பிட்டுச் சொல்லவோ இயலாதவளாய் கையறுந்த நிலையில் அவள் குரல் நெருக்கப்பட்டு வார்த்தைகளை இழந்து அரைநிர்வாணத்துடன் அங்கேயே நின்றுகொண்டிருந்தாள்.

ஊரிலுள்ளவர்கள் அவளை வந்து பார்ப்பதற்கு முன்பு அவள் உடுத்திக் கொள்வதற்கு அவள் சினேகிதி ஒரு வாயில் புடவையும் ரவிக்கையும் கொடுத்திருந்தாள். அவளுக்குள் குளிர் நடுக்கம் உருவாகிக்கொண்டிருந்தது. வேடிக்கை பார்த்தவர்கள் சிலர் அவளுக்கு ஆறுதல் கூறினார்கள். ஆறுதலைக் கூறுவதைவிடவும் சம்பவத்தின் பின்னிருக்கும் ரகசிய மனிதனைப் பற்றியே அவர்கள் ஆழ்ந்து பேசிக்கொண்டிருந்ததை அவள் விரும்பவில்லை. எளிமையான கற்பனைகளுக்குள் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்த அவளுக்கு இது உண்மையிலேயே அதிகப்படியான அதிர்ச்சிதான். அவள் திடமாக இருக்க முயன்றாள். அவளைப் பொறுத்தவரை அவள் நேரிடையாகவே பயமுறுத்தப்பட்டிருந்தாள். கழுவேற்றப்படக் காத்திருக்கும் பொழுதுபோல் அவளுக்குக் கிலிபிடித்திருந்திருந்திருக்கும். கேட்பவர்களிடம் அவள் பதில் சொல்லி மாளாது தலைவிரி கோலமாய் மரத்தடியிலேயே பிரமை பிடித்து உட்கார்ந்திருந்தாள். உள்ளூரத் துரத்தப்படுவதாக உணர்ந்த அவள், தப்பித்தலுக்காகவே அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். வேறு யாரைவிடவும் சரியாக யூகிக்கப்பட்ட அந்த முடிவு அவளைப் பொருத்தவரை மிகச் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். சாயங்காலம் சினேகிதியிடம் சில்லரை வாங்கிக்கொண்டு ஊர் விசாரிப்புகளுக்கு ஒன்றும் சொல்லாமல் சொந்த ஊரான வயலூருக்குச் சென்றாள்.

அதுதான் நாங்கள் வத்சலாவைக் கடைசியாகப் பார்த்தது. பறவைகள் வீடு திரும்பும் அந்தச் சாயங்கால வேளையில் அள்ளிக் கொண்டையிட்ட கூந்தலுடன் புறங்கையால் அழுகையைத் துடைத்தபடியே ரோட்டில் நடந்து போனாள். நாங்கள் வழிமறித்துச் சொன்ன சமாதானங்களை ஏற்க அவள் ஒன்றும் சிறுமியல்ல.

ரகசியமாக ஆடப்பட்டுக்கொண்டிருந்த ஆட்டத்தில், அவரவர்களின் பாத்திரங்களை உணரும் அரூபமான கணத்தை எட்டியிருந்த அவர்கள், அப்போது அவற்றைத் தங்களின் இயல்புகளாகக் கருதி மன ஊக்கம் பெற்றிருந்திருக்க வேண்டும் - தங்கப்பனும் பூதக்கண்ணாடியும் மிகத் தெளிவாக அந்த முடிவை எடுக்காமல் விட்டிருந்தாலும்கூட. ஏனெனில் அவர்கள் வழியற்ற ஊருக்குப் போவதைப் போல ஆற்றுப் பாதைக்குள் நுழைந்த நிகழ்வும் வத்சலா கிளம்பிச்சென்றதும் குறிப்பிட்ட ஒன்றை நோக்கி அது தன் அடியெடுத்து வைத்திருந்ததன் அடையாளமாகவே இதைச் சொல்கிறேன்.

இளவழகனுக்கும் தங்கப்பனுக்கும் செய்தி எட்டுவதற்கு மறுநாள் ஆகி விட்டிருந்தது. அவர்கள் வீட்டிற்கு வந்தபோது ஊரில் வேலையற்று இருந்தவர்களும் அவர்களின் எதிர் நடவடிக்கைகள் என்னவாக இருக்குமென்று எதிர்பார்த்தவர்களும் வந்து வேடிக்கை பார்த்தார்கள். அப்போது சூழலை இம்சிப்பதுபோலக் காண்டாமிருக வண்டின் எந்திர கதியில் இயங்கும் றெக்கைகளின் சப்தம், பேய் வண்டு அடித்தொண்டையில் ரீங்கரித்துப் பாடிக் காதைக் குடையும் சப்தத்தைப் போலும், துர்வருகையைக் குறிப்பிடுவதுபோலத் தூரத்தில் நாய்கள் கூட்டாக ஓலமிடுதலும் கலவையாகக் கேட்டுக்கொண்டிருந்தது. பூதக்கண்ணாடி வாசலில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தான். தங்கப்பன் எல்லோரையும் விரட்டாத குறையாகக் கலைந்து போகச் சொன்னான். வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து பார்த்தான். சிலர் அவர்களைப் போய் வத்சலாவைக் கூட்டிக்கொண்டுவரச் சொன்னார்கள். “அவள்தானே போனாள்; அவளே வரட்டும்” என்றான் தங்கப்பன். சிலர் “அதுவும் சரிதான். அவனிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்” என்றார்கள்.

மானுடர்களின் பூர்வீகத் தனிமை தங்கப்பனுக்கும் பூதக்கண்ணாடிக்கும் அந்நொடியிலிருந்து தொடங்கி விட்டிருந்தது. வத்சலா சென்ற பிறகு அவ்வீட்டிற்கான நேரடித் தொடர்பை நாங்கள் முழுமுற்றாக இழந்துவிடவில்லை என்றாலும் அதிகபட்சத் தொடர்பை இழந்துவிட்டிருந்தோம். அவர்களுக்கான நாடகம் அடுத்த மூன்று நான்கு நாட்களிலேயே முடிந்துவிட்டிருக்கும். வழியற்றதைப் போல் அவர்களின் அலுப்பூட்டும் அதே தினசரிக்குள் நுழைந்து விட்டிருந்தார்கள்.

ஊருக்குள் விவசாயத்தின் அடுத்த போகத்திற்கான உழவுப்பாடுகள் நடக்கத் தொடங்கின. மழை இல்லாமலேயே நிலவும் குளிர்ச்சி மிகுந்த பருவம். வெவ்வேறு திசைகளைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லா மோட்டார்களும் தண்ணீரை முழுமையான வீச்சில் பாய்ச்சிக் கொண்டிருந்தன. நீர் நிரம்பிய வயல்களில், தீனிகளுக்காகத் தூரத்திலிருந்து தினம் தினம் பறந்துவந்த கொக்குகளைக் குறவர்கள் நாட்டுத் துப்பாக்கிகளால் சுட்டு ஊருக்குள் விலை பேசி விற்றுச் சென்றார்கள். அவ்வப்போது பெய்து நின்ற மழைக்குப் பின்பு வெறிக்கும் வெயிலில் ஆடுகளும் மாடுகளும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் வாகனங்களுக்கு வழிவிட்டுப் படுத்தும் நின்றும் வெயிலில் காய்ந்தபடி அசை போட்டுக்கொண்டிருந்தன. நடவு முடியும்வரை எங்கள் வாழ்க்கை அள்ளித் தெளித்த கோலத்தின் மிச்சங்கள்தான். இருப்பினும் நடவு முடிந்த பின்பு கிடைக்கும் பகல் நேர ஓய்வு வயல்களில் களை மண்டும்வரை நீளும். வத்சலாவின் நினைவுகள் எங்களைப் பல சமயங்களில் அவளைப் பற்றிப் பேசவைத்திருக்கின்றன. சாதாரண நாட்களிலேயே ஊரின் கண்களில் தென்படாதவர்கள் தங்கப்பனும் பூதக்கண்ணாடியும். விதைப்புக் காலத்தில் விவசாயத்திற்கான மெது ஓட்டம் தொடங்கிவிடும்போது அவர்களை நினைத்துப் பார்க்கவே எங்களுக்குத் தோன்றியிருக்கவில்லை.

அன்று தங்கப்பனையும் பூதக் கண்ணாடியையும் நாங்கள் வயலில் பார்த்தோம். சில பெண்கள் தங்கப்பனைப் போய் வத்சலாவைக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்கள். அவனது அசட்டையான பதில்களுக்குப் பெண்களும் ஏகத்திற்கு வத்சலாவுக்குச் சலுகையாகப் பேசி அவனை வம்புக்கிழுத்தார்கள். ஒரு வகையில் எங்களையும் கடக்க வேண்டிய நெருக்கடி அவனுக்கிருந்தது. அவன் வயலூருக்குக் கிளம்பிப் போவதாகச் சொல்லிப் போனான். அது எங்களின் பொருட்டே இருக்க முடியும்.

வேலைக்குப் போகாத கைக் குழந்தைக்காரிகளும் வயதானவர்களும் பள்ளிக்கூடத்திற்குப் போகாத பிள்ளைகளும் ஊதாரிகளும் நிறை மாதப் பெண்களும் மிச்சமிருந்த அந்தப் பிற்பகலில், ஊருக்குள் வத்சலா இல்லாமல் அவர்கள் பிரவேசித்தார்கள். திண்ணையில் படுத்திருந்த சிலர் அவனை வலிந்து கேட்டார்கள். அவள் வர முடியாது என்று கூறிவிட்டதாகத் தங்கப்பன் சொன்னான். அதன் பிறகு அந்த வீட்டில் அவர்கள் இருவரின் இருப்பு என்பதே எல்லோருக்கும் இயல்பாகிப்போனது.

மூன்று மாதங்களுக்குப் பிறகு வத்சலாவின் அத்தை, ஊரின் வேலையற்ற நாளில் பக்கத்து ஊருக்கு ஒரு விசேஷத்திற்கு வந்தவள், ஒருமுறை பிள்ளையைச் சென்று பார்த்து வரலாமென்று எங்களூருக்கு வந்தபோது தான் ஒரே விடுகதைக்குப் பல்வேறு விடைகள் எனும் ரகசியத்தின் வாலை நாங்கள் பிடிக்க ஆரம்பித்தோம்.

ஊர் முனையிலேயே அவளுக்குத் தங்கப்பனின் வீட்டைப் பற்றிய செய்திகளே கேள்விகளாய் உரு மாறிக்கொண்டன. வத்சலா கிளம்பி வந்த மறுநாளே தங்கப்பனுடன் அவளை அனுப்பிவிட்டதாக வத்சலாவின் அத்தை சொன்னாள். மூன்று மாதங்களாக வத்சலா ஊரில் இல்லை என்றோம் நாங்கள். அழுத்தமான குழப்பத்துடன் பூட்டிக்கிடந்த வீட்டையும் நாட்களையும் விசாரித்துவிட்டு அவள் நேரே தங்கப்பன் வேலை செய்யும் கடைக்குக் கிளம்பிச் சென்றாள். தங்கப்பன், “அவள் வழியிலேயே என்னிடம் சண்டை போட்டுப் பிரிந்து உங்களூருக்கே வந்துவிட்டாள்” என்றான். அதிர்ச்சியடைந்து கடைத்தெருவிலேயே அழத் தொடங்கியவள் தனது உறவினர்களுடன் அன்று மாலையே எங்கள் ஊர்ப் பகுதியின் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தாள்.

மறுநாள் ஊருக்குள் உயிர்த் தன்மையற்ற முகங்களைக் கொண்ட கொழுத்த காவலர்கள் இருவருடன் வாடகைக் காரில் வந்த வத்சலாவின் உறவினர்களுடனும் குழம்பிய நிலையில் ஒழுங்கற்ற பட்டாளத்தைப் போல் பின்தொடர்ந்த ஊர்க்காரர்களுடனும் வீட்டைத் திறந்து பார்த்தார்கள். சுத்தமாகக் கூட்டப்பட்டு மூன்று மாதத்துத் தூசுபடிந்து கிடந்தது வீடு. அத்தரு ணத்திலிருந்து நாங்கள் அவர்களைப் பற்றிய உண்மையை ஒட்டிய அனுமானங்களைக் கற்பனை செய்யத் தொடங்கினோம். ஊரில் அகப்பட்டோரிடமெல்லாம் விசாரணை நடந்தது. எல்லோரும் பார்த்திருக்க ‘பட்டா பாபு’ கடையில் மதிய சாப்பாடும் முன்மதியத்தில் சூடான டீயும் பகோடாவும் சாப்பிட்டு, பொழுதுசாயப் போனார்கள்.

அன்று இரவு தங்கப்பனையும் பூதக்கண்ணாடியையும் விசாரணைக்குக் கொண்டு சென்ற போலீஸ்காரர்கள் காலையில்தான் திருப்பியனுப்பினார்கள். இறுதியாய் இரண்டு வாரம் கழித்து, கற்பனை வறண்ட, வேலைகளைத் தட்டிக் கழிக்கும், அவர்களின் முடிவைச் சொன்னார்கள்: “அவள் எங்காவது பிழைப்பதற்குப் போயிருக்கலாம்.” மிக மோசமாக அடி வாங்கித் திரும்பி வந்திருந்தான் தங்கப்பன். அவமானத்தில் சுருங்கிப்போயிருந்த அவன், தலையைச் சாய்த்தபடி வேடிக்கை பார்ப்பவர்களைப் பொருட்படுத்தாது தெருவோரமாய் நடந்து சென்றான். பூதக்கண்ணாடியின் உருவத்தைப் பார்த்து மிரட்டி மட்டும் அனுப்பிவிட்டதாகச் சொன்னார்கள். அடிவாங்கியபோதும் தங்கப்பன் “அவளுக்கு என்னோடு வாழ விருப்பமில்லை. அவள் வழியிலேயே ஊருக்குத் திரும்பிப் போய்விட்டாள்” என்று கதறி அழுது சொன்னான். அவன் வாங்கிய அடிக்குச் செத்துப்போயிருக்க வேண்டும் என்றும் சொன்னார் வத்சலாவின் உறவினர் ஒருவர். இதனால் எங்களுக்கு மேலும் நம்பகமான யூகங்களைச் சித்தரிக்கும் போக்குகள் உருவாயின.

தங்கப்பனின் உடல் கன்றிப் போயிருந்தது. பூதக்கண்ணாடியின் பராமரிப்பில் அவன் அனத்திக் கொண்டு வீட்டிலே கிடந்தான். மீண்டும் போலீஸ் விசாரணை என்ற பெயரில் வத்சலாவின் உறவினர் தரப்பு இரண்டாவதுமுறை பணம் கொடுத்தபோதும் காவலர்கள் அடியாட்களைப் போல மூர்க்கமாக அடித்து அனுப்பினார்கள். குழப்பமான சாதக பாதகமான முடிவுகளை நோக்கி நாங்கள் கிசுகிசுக்கத் தொடங்கியிருந்ததில் நியாயத்தின் சாய்மானம் தெரியாமல் ஊர் இந்த முறை வத்சலாவுக்குச் சலுகை செய்வதை நிறுத்திக்கொண்டது.

அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கடலூர் மாவட்டத் தினசரியில், ஒரு துண்டுப் பகுதியில், “காணவில்லை” என்ற கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில் எங்கள் பகுதி காவல் நிலையத்தின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் வத்சலா இடம்பெற்றிருந்தாள். சலூன் கடையில் அன்று இது பகல் முழுக்கப் பார்த்துத் தீர்க்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் தேவைப்படுமென்று யாரோ சொன்னதன் பெயரில் துண்டாகக் கத்தரிக்கப்பட்டுச் சினிமா நடிகைகளுக்கு நடுவில் தற்காலிக நிரந்தரத்துடனும் ஒட்டப்பட்டது.

ஊர்ப் பெண்கள் களையெடுப்பிலும் இளம் பெண்களும் வளர்ந்த சிறுமிகளும் புளியங்கொட்டையில் பாண்டி ஆட்டமும், ஆண்கள் வயலில் அண்டைக் கழிப்பது, மரம் வெட்டுவது, மரத்தடிகளில் சீட்டாடுவது போன்றவைகளிலும் பெருவாரியாக ஈடுபட்டிருந்தபோது தங்கப்பன் சகஜமாக நடமாடத் தொடங்கியிருந்தான். பூதக்கண்ணாடி தினமும் அவனை சைக்கிளில் ‘டபுள்ஸ்’ ஏற்றிக்கொண்டு போனான். வழக்கத்திற்கு மாறாக எதுவும் எங்களை ஆக்கிரமிக்காத அப்பருவத்து இயல்பு வாழ்க்கை அதுதான். வத்சலா ஊர்க்காரர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு அனுமானங்களுக்கு ஏற்ப, விதவிதமான பிம்பங்களில் வலம்வந்துகொண்டிருந்தாள். ஆனால் அது முக்கியமற்ற கதையாக மாறிவிட்டிருந்தது.

எல்லாப் பருவங்களும் எங்களைக் கடந்து போனபோது நாங்கள் அவைகளுக்கு உண்டான பரிபக்குவத்தோடு ஓடிக்கொண்டிருந்தோம். ஊருக்குள் எங்கள் தெருவுக்கான நீர்த்தேக்கத் தொட்டியை ஒன்று கூடிக் கையெழுத்திட்டும் கைநாட்டிட்டும் வரவழைத்தோம். மயானத்திற்கான பொதுச் செம்மண் சாலை வந்தது. மழைக்காலம் தொடங்கிவிட்ட நாட்களின் தொடர்ச்சியில் நள்ளிரவில் குறவர் இனக் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி தச்சுப்பட்டறைகளும் கொல்லன் பட்டறைகளும் கொண்ட எங்கள் ஊரின் அரசமரத்தடி முகப்பில் நின்று தன்னைப் பார்த்துக் குரைத்த நாய்களின் தொல்லைகளைக் கடுமையாக எதிர்கொண்டபடி அதை உரக்கக் கத்திச் சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் சொல்வதைப் புரிந்துகொள்வதற்கு மழையும் இரவும் நாய்களும் இடைஞ்சல்களாக இருந்தன என்று தர்மாசாரி சொன்னார். பிறகு, நாங்கள் தூக்கம் கலைந்து மழையில் நனைந்தபடியும் கிடைத்ததைப் போர்த்திக்கொண்டும் தேசிய நெடுஞ்சாலையில் மெது ஓட்டத்திலும் நடையிலுமாக ஓடிக் கொண்டிருந்தோம். இளகிய இதயம் கொண்ட சில பெண்கள் அங்கேயே அழுகையைத் தொடங்கிவிட்டிருந்தார்கள்.

ஹோட்டலிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில், அந்தத் தேசிய நெடுஞ்சாலையில் விளக்குகள் எரியாத அந்த வளைவுப் பாலத்தின் ஓரம், சாபம் பெற்றவனைப்போலவும் கேட்பாரற்ற ஒரு நாயைப் போலவும் தங்கப்பன் லாரியில் அடிபட்டு இறந்துகிடந்தான். அவன் உடலை அள்ளிச் சாக்குப்பையில் மூட்டை கட்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் குடைபிடித்தபடியும் சிலர் நனைந்த படியும் டார்ச் லைட்டிலும் ஜீப்பின் பின் சீட்டில் எரியும் பெட்ரோமாக்ஸ் விளக்கிலும் ஜீப்பின் ஹெட்லைட் வெளிச்சத்திலும் கடந்து செல்லும் வாகனங்களுக்குக் காவலர்கள் வழிகாட்டிக்கொண்டிருந்தார்கள். அவன் தங்கப்பன்தான் என்று அடையாளம் காணப்படுவதற்காகவே அவனது தலையும் கழுத்துமாய் அரைபட்டு விழுந்த மீதி உடல் நடுச் சாலையில் கவிழ்ந்துகிடந்தது. பூதக்கண்ணாடி அடிபட்ட ஜோடிப் பறவையைப் போல் கதறிக்கொண்டிருந்தான். அழுதபடியே அவனைப் பிடித்துக்கொண்டு சிலர் தேற்றினார்கள். மழையும் இருளும் சூழ்ந்திருந்த அச்சமயத்தில், எங்களைக் கட்டுப்படுத்த மிகவும் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரர்களின் அதட்டல்களை மீறித் தங்கப்பனின் ரத்தம் மழைநீரில் கரைந்தோடிக் கொண்டிருந்தது. மறுநாள் மழையின் நசநசப்பிலும் தானாகவே கடை பிடிக்கப்பட்டிருந்த ஊரறிந்த மௌனத்திலும் ஒரு கோணிப்பையில் தர்மாஸ்பத்திரியிலிருந்து வந்த தங்கப்பனின் உடலை ஊர் கூடிப் புதைத்தது. மனம் பேதலிக்கும் தனிமையுடன் பூதக்கண்ணாடியின் மீதமுள்ள வாழ்க்கை தொடங்கியது.

ஆரம்ப நாட்களில், எப்போதும் பூட்டிக்கிடந்த வீட்டில் எப்போதாவது அவன் இருந்தான். திடகாத்திரமான மனநிலை இருந்தது அவனுக்கு. ஹோட்டலில் உறுதிப்பூர்வமாக வேலைக்குச் சேர்ந்துகொண்டான். மூன்று வேளையும் கடையிலேயே சாப்பிட்டான். அதி காலையில் ஊருக்குள் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே நெடுஞ்சாலைக்கு வந்து, இருபுறமும் நோட்டம் விட்டுக் கண்ணாடியைச் சரிசெய்து போட்டபடி சைக்கிளில் ஏறிச் செல்லும் அவனை, சாணி தெளித்து வாசல் கூட்டும் பெண்களும், டீ கடைக்கும் அதிகாலைப் பேருந்தைப் பிடிப்பதற்குச் செல்பவர்களும் நிச்சயமாகப் பார்க்க முடியும். தூக்கமற்றவர்களும் கண் விழித்திருப்பவர்களும் அவன் இரவில் வீடு திரும்புவதைப் பார்க்க முடியும்.

அவன் உருட்டிச் செல்லும் சைக்கிளின் ஓசை, பாதி உறக்கத்தில் இருப்பவர்களின் கனவில் நுழையும் சாமர்த்தியம் பெற்றது. அது அவனைப் பற்றிய ஒரு மென்சப்தம். வெளிச்சத்தில் தெரியும் மெல்லிய இழையைப் போல. அல்லது இரவின் தனிமையில் பாடும் ஒற்றைச் சில்வண்டைப் போல. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் எந்த மாற்றங்களும் இல்லாமல் அவனுடைய வாழ்க்கை அப்படித்தான் கழிந்தது ஒரு நாயினுடையதைப் போல.

அதன் பிறகு சூழலே இளகியது போல உரையாடலுக்கானதோ எதற்கோ ஒரு துணை அவனுக்குத் தேவைப்பட்டிருக்க வேண்டும். திரையரங்கத்திற்குச் செல்லும் ஊர் வாலிபர்கள் ஓட்டலுக்கு வரும் பொழுதில் வலிந்து அவனுடன் உறவு ஏற்படுத்திக்கொண்டதை அவனால் தொடர முடிந்தது. பிறகு சில நாட்கள் அபூர்வமாக அவனை ஒத்த வாலிபர்கள் அவனுடன் மதகுக் கட்டையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அவன் எங்கள் பிராந்தியத்தின் புகழ்பெற்ற டிடர்ஜென்ட் சோப்பின் விளம்பரம் பதித்த பனியனைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அந்த வருடப் பொங்கல் விளையாட்டில் ஊர் வாலிபர்களின் வற்புறுத்தலின் பேரில் பானை உடைத்தலில் கலந்துகொண்டு எல்லோரையும் சிரிக்கவைத்துத் தோல்வியடைந்தான்.

1994ஆம் வருடத் தொடக்கத்தில் பஞ்சாயத்துத் தலைவரே அந்தப் புதிய வருடத்திற்கான மீன் குத்தகை ஏலத்தை எடுத்திருந்ததார். லாபத்தின் கூட்டல் பெருக்கல்களில் மயங்கிக் குளக்கரையில் நிகழ்ந்துவந்த ஆக்கிரமிப்பிலிருந்து சட்டப்பூர்வமாக அதை மீட்டு அகலப்படுத்த வேண்டி ஊர்ப் பஞ்சாயத்து முடிவுசெய்தது.

பூதக்கண்ணாடியின் வீடும் அகற்றப்பட வேண்டிய புறம்போக்கில் இருந்தது. அதைத் தனித்துவிட முடியாது. இந்தச் செய்தி எட்டியதும் அவன் அன்று பகலிலேயே ஊர் முக்கியஸ்தர்களிடம் பரிதாபமான முகத்தோடு வெயிலில் நின்றபடி கெஞ்சிக்கொண்டிருந்தான். பூதக்கண்ணாடிக்காக ஆதரவு தெரிவித்து அவன் வீட்டை விட்டுவிடச் சொல்லிப் பேசியவர்களும் பள்ளிக்கூடத்தை ஒட்டி வரும் புறம்போக்கில் அவனை வீடு கட்டிக்கொள்ளச் சொன்னதும் பஞ்சாயத்திற்குக் கட்டுப்பட்டார்கள். ஆனால் அன்று முழுதும் வேலைக்குப் போகாமல் பரிதவித்து அங்குமிங்குமாய்க் குழப்பமான முகத்துடன் திரிந்துகொண்டிருந்தான்.

குளக்கரையை அகலப்படுத்த வேண்டிய வேலைக்கான முதல்நாள் ‘பொக்லைன்’ வைத்து மண் மேட்டைச் சரிக்கத் தொடங்கிய போது ஊரில் வேலையற்றவர்களின் கும்பல் முகத்தில் அறையும் காலைப் பகலின் வெயிலில் அவனும் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். மதியத்திற்கு மேல் அவன் வீட்டைப் பிரிப்பதற்காக அவனுக்குக் கடைக்கு ஆள் அனுப்பினார்கள். அவன் இன்னும் வரவில்லை என்றார்கள். வேறு வழியில்லாமல் அவனுடைய அந்தக் கூரை வீடு கூலியாட்களால் பிரிக்கப்பட்டு மறுபக்கத்தில் அடுக்கப்பட்டது.

தங்கப்பன் வீட்டின் பகுதிகளைப் பொக்லைன் மண்ணைச் சரித்து அள்ளத் தொடங்கியபோது பூதக் கண்ணாடியின் சைக்கிள், திட்ட வரைவுகள் இல்லாத இலக்கற்ற பயணத்தில் களைப்புடன் சென்று கொண்டிருந்திருக்கும். திரும்பிச் செல்ல முடியாத ஊரின் நினைவுகளில் அவன் மூழ்கிக்கொண்டிருப்பதை, தடுக்க முடியாமல் தடுத்தபடி அவன் தனக்குள் உரையாடிக்கொண்டிருந்த காலத்தின் ஒரு காலத்தில், எப்போதும்போல அவன் சைக்கிள், அவனுடைய துணையைப் போல ஒரு ஆறுதலுடன் இருந்திருக்கலாம். எதிர்காலத்தைப் பற்றிய பதற்றத்தாலும் தன் பெயருக்குப் பின்னே இனி எழுப்பப்படவிருக்கும் அழிக்க முடியாத துரோகம் மிகுந்த திகிலை நினைத்தும் ஹாண்டில்பாரைப் பிடித்த கரங்களுக்குள் பிசுபிசுத்த வியர்வையை உணர்ந்தபடி அவன் ஒரு துளிக்கும் தாண்டிய கண்ணீரையும் விட்டிருக்கலாம். அல்லது அவன் தங்கப்பனின் இழப்பிற்குப் பிறகும் இருந்த மனத்திடத்தால் கனவுகளில் தோன்றும் சிவப்புக் கட்டை எறும்புகளை நினைத்தவாறு சாவதானமாகவும் சைக்கிளை மிதித்தபடி குறிப்பிட்ட ஏதோ ஒன்றைத் தேடியும் சென்றுகொண்டிருந்திருக்கலாம். தோண்டி எடுக்கப்படும் மண், மனதைப் போல, நினைவில் வரும் காலத்தைப் போலப் பின்னோக்கிப் புரண்டுகொண்டிருந்தது. ஒரு சிதிலமடைந்திருந்த உடலின் கால் பகுதியைப் பொக்லைன் புரட்டத் தொடங்கியபோது, மலையேற்றத்தில் காதுகளை அடைத்த தன்மையுடன் வெளியிடப்படாத எங்களின் கூட்டு அலறல்களால் அத்தருணம் நிரப்பப்பட்டிருந்தது. வேடிக்கையின் திசையில் சட்டென எழுந்த காற்று மண்ணை வாரித் தூற்றியது. மாவிலிங்க மரம் இலைகளை அலட்சியத்துடன் உதிர்த்துக் கொட்டத் தொடங்கியது. டிம்பர் டிப்போக்களில் கூரான இரும்புப் பற்கள், ஈவிரக்கமற்றுக் கத்திக்கொண்டு அறுத்து முடித்து விடுவதுபோல அது தொடங்கப்பட்டும் முடிக்கப்பட்டும் இருந்த வாழ்க்கையின் சகல காலங்களுக்கான அத்தனை தருணங்களையும் வீசியடித்தது. பதற்றக் குரல்களுடன் உறுதிசெய்யப்பட்ட செய்தியை நாங்கள் திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தோம்; கட்டுப்படுத்த முடியாமல் எழும்பிய ஊர் பெண்களின் அழுகை, வேறு வழியின்றி முட்டிக் கொண்டிருந்த அணையை உடைத்தது.

போக்குவரத்து ஸ்தம்பித்து வேடிக்கைப் பொருளைப் போல பார்க்கப்பட்ட அவ்வுடலை போலீஸ் வரும்வரை எல்லோரும் குளக்கரை மேட்டில் பார்த்துக்கொண்டிருந்தோம். அது வத்சலாதான் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் தேவைப்படவில்லை. வாழ்க்கைக்கான நம்பிக்கையுடன் திரும்பி வந்த அவள் சினேகிதியின் இரவல் ரவிக்கை புடவையுடன் புதைக்கப்பட்டிருந்தாள். துரோகத்தின் கொடிய நிழலும் ஊக்கம் பெற்ற மனப் பிறழ்வின் நடத்தைகளின் முன்னும் அவள் வலுவாகப் போராடியிருப்பாள் என்பதே அவள் வாழ்க்கைக்கான கடைசிப் போராட்டமாக இருந்திருக்கும்.




VJagadeesh

unread,
Jun 1, 2010, 8:53:49 AM6/1/10
to panb...@googlegroups.com

இது சுந்தர ராமசாமியா இல்லை வேறு யாரோவா?

சென்ஷி

unread,
Jun 1, 2010, 9:52:11 AM6/1/10
to panb...@googlegroups.com
SUNTHARA RAMASAMY

2010/6/1 VJagadeesh <VJaga...@prouindia.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

சென்ஷி

unread,
Jun 13, 2010, 10:53:34 AM6/13/10
to panb...@googlegroups.com

கோப்பம்மாள் - கோணங்கி

  அஞ்சாம் வகுப்பு கோப்பம்மாளுக்கு பச்சைக்கலர் பாவாடைதான் இருக்கிறது. பாவாடை தான் பச்சை என்றால் பெயரைக் கூட பச்சையென்று கூப்பிட்டார்கள். 'பள்ளிக்கூடம் வரும் போது தம்பிய தூக்கிட்டு வராதே...' என்று அஞ்சாப்பு வாத்தியார் சொன்னார். பிள்ளை தூக்கப் போட்டுருவாக சார். எங்கைய்யா பள்ளிக்கூடத்துக்கு வுடரது சார் என்றாள்.

கோப்பாம்மாவுக்கு பள்ளியை விட்டு வெளியேறினால் அனேக வேலைகள் இருந்தன. ஊர்க்கஞ்சி எடுக்க போகணும். அதற்கெல்லாம் எப்பொழுதோ பழகிவிட்டாள். வீடுவீடாய் போய் விழுந்த உருப்படிகளை எடுத்து பொதியில் சேர்த்தாள். konangi

வீட்டில் கழுதைகள் நிற்காது. ஒவ்வொரு கழுதையும் ஒவ்வொரு திக்கில் நிற்கும். அவற்றை வீடு சேர்க்க வேண்டும். குட்டிக் கழுதை தரியில் நிற்காது. குட்டிக் கழுதை அவளைக் கண்டு ஓடும். மேட்டு நிலத்தில் நின்று பார்க்கும். கிட்டவராது. கன்னுக்குட்டி என்று பெயர் வைத்திருந்தாள், குட்டி கழுதைக்கு. உன் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டது, ஓடையில் நிக்காதே... என்று செல்லம் கொஞ்சினாள். கோப்பம்மாள் கன்னுக்குட்டியிடம் போய் நின்றாள். சின்ன மூஞ்சில் அழகு வடிந்தது. திடீரென்று ஒடியது. அவளும் விரட்டினாள். வண்ணாக்குடியில் உள்ள கழுதை மேல் எல்லாம் அதிசயங்கள் இருந்தன. குட்டிக் கழுதை துள்ளியது.

வண்ணாப்புள்ளை பள்ளிக்கூடம் போவது வண்ணாத்திக்குப் பெருமை. பள்ளிக்கூடம் போனால் தம்பி அழுவான். குரங்குகுட்டி மாதிரி சவளைப்பிள்ளை அது. அண்டி தள்ளி வீசும். அவன்கிட்டத்தில் யாரும் ஒட்டவில்லை. தம்பி ஆயிருந்து விடுவான், பள்ளிக்கூடத்தில். முகம் சுழித்து வகுப்பறையே ஒடியது.

வண்ணாத்தியை அடிப்பதை என்று நிறுத்துகிறோமோ அன்றே உலகம் பாழ் என்ற பிரம்புக் கொள்கை வைத்திருந்தார், அஞ்சாப்பு வாத்தியார். வகுப்பறையைக் கழுவிவிட்டு சுத்தம் செய்யும்படி கட்டளையிட்டார். கோப்பம்மாள் அழுது கொண்டே சுத்தம் செய்தாள். எல்லாப் பிள்ளைகள் மூஞ்சிலும் சுழிப்பு இருந்தது. அவளுக்கு அவமானமாய் போய்விட்டது.

கோப்பம்மாளைக் கண்டு முகம் சுழிக்காதவர் ஒருசிலர் இல்லாமலில்லை. வண்ணாத்திப்பூச்சி என்பான் மாரியப்பன். மாரியப்பனின் மண்டை முன்னும் பின்னும் சப்பளிந்து இருந்தது. பிளசர் மண்டை என்றார்கள் அவனை. கிள்ளி வைப்பான் பிள்ளைகளை. பிளசர் மண்டையில் வாத்தியாரின் குட்டுகள் விழும்.

அவன் பள்ளிக்கூடம் வரும் போது ஊதா சட்டை போட்டு வந்தான். ஊதா பிளசர் என்றார்கள் அவனை. ஒருவர் மாற்றி ஒருவர் பட்டங்கள் கொடுத்தது பற்றிப் பெரியவர்கள் கவனிப்பதில்லை.

மாரியப்பன் வீட்டுக்கு அழுக்கு எடுக்கப் போனாள் கோப்பம்மாள். ஊதாச் சட்டைகள் 3 இருந்தன மாரியப்பனுக்கு. என்றோ செத்துப் போன அய்யாவின் சட்டைகளே அவை. மாரியப்பன் அய்யா விறகு வெட்டி. ஊதாசட்டையும் பெல்ட்டும் போட்டிருந்தார். அய்யா இருக்கும் போதே அவன் வீட்டில் 3 சட்டைகள் இருந்தன. டவுசர் மட்டும் போட்டிருந்தான் மாரியப்பன். அவனுக்கு ஊதா சட்டைகளை விட்டுவிட்டு அய்யா மண்ணுக்குள் போய்விட்டார்.

மாரியப்பனின் பஞ்சர் ஒட்டிய டவுசர்கள் நிறமிழந்துவிட்டன. பையில் வெல்லக்கட்டி போட்டு வைப்பதால் எலிகள் கொரித்தன. மாரியப்பன் வீட்டில் வட்டு திருடி வெல்லக்கட்டி தான் வாங்குவான். அடே மாரியப்பா வெல்லக்கட்டி திங்காதேடா. பல் சொத்தையாகிவிடும் என்றாள் அம்மா. இன்னிமே திங்க மாட்டம்மா என்றான் சமத்து.

டெயிலர் பொன்னுசாமி மாமா அவன் டவுசருக்கும் சட்டைக்கும் கலர்கலர் பீஸ்களில் தபால் பெட்டிகளை இணைத்தார். ஓசியில் அவனுக்கு மணிப்பர்ஸ் செய்து கொடுத்தார். பள்ளிக் கூடத்திலேயே மாரியப்பனிடம் தான் குட்டி மணிப்பர்ஸ் இருந்தது. அமுக்கு பட்டன் வைத்த மணிப்பர்சு. மணிப்பர்சுக்குள் ரூவா தாள்கள் வைத்திருந்தான்.
நோட்டுப் புத்தகத்தில் நடு நடுவில் ரூவா படம் போட்டான். அதை பிளேடால் வெட்டி ரூவா சேர்த்தான். எல்லா பிள்ளைகளும் பார்க்கும் சமயத்தில், போஸ்ட் பாக்ஸை திறந்து குட்டி மணிப்பர்ஸை எடுத்தான். தலைகள் தொங்கின. டேய்டேய்... எனக்குடா, எனக்குடா என்று பிள்ளைகள் கைநீட்டி சூழ்ந்தன.

ஒவ்வொருவருக்கும் ரூவா தாள் கொடுத்துப் பெருமை பட்டான். அப்போது மாரியப்பன் கண்கள் சாகஸம் புரிந்தன. பெரிய சீமான் மாதிரி பென்சிலை வைத்து சீரேட் குடித்தான். வண்ணாத்திப்பூச்சி இந்தப்பக்கம் வரமாட்டாள். தம்பியோடு பலகையில் ஒதுங்கி நின்றாள். மாரியப்பன் யாருக்கும் தெரியாமல் அவளுக்கு மட்டும் ரூவா நோட்டு கொடுத்தான். அவளும் சுற்றி நோட்டம் பார்த்துவிட்டு வாங்கிக் கொண்டாள்.

அஞ்சாப்பு வாத்தியார் பிரம்பு, புஸ்தகத்துடன் வேட்டியைப் பிடித்தபடி உள்ளே நுழைந்தார். வகுப்பறையில் நடப்பதைப் பார்த்த மாத்திரம் தெரிந்து விடும் அவருக்கு. பள்ளிக்கூடத்தில் மிஷின் வைத்திருந்தார். அந்த மிஷின் டிராயருக்குள் வைத்திருந்தார். யார் யார் என்ன சேட்டை செய்தார்களோ அதையெல்லாம் பதிந்து விடும். வாத்தியார் வரவும் சொல்லிக் கொடுத்துவிடும்.

வந்ததும், வாரத்தில் முதல் நாள் சீருடை அணியாதவர்களைப் பள்ளியை விட்டு விரட்டினார். சார்... சார்.. மாரியப்பன் டவுசர் போடலை சார்... என்றான் கெசவால் ராமசாமி. வாத்தியார் மாரியப்பனை பிரம்புடன் அணைத்துக் கேட்டார். சார்... சார்... டவுசர் போட்டிருக்கேன் சார் என்றான். வேதக்கோயில் பாதிரியார் மாதிரி கால்களை மூடிய ஊதா சட்டையைப் பிடித்துக் கொண்டான். யாரும் சட்டையை தூக்கிவிடுவார்கள் என்று பயந்து நடுங்கினான்.

உடனே பிரம்பு சட்டம் அமலானது. மாரியப்பனை வகுப்பறையை விட்டு விரட்டினார். மேலும் சீருடை இல்லாத கோப்பம்மாவுடன் பிரம்பு பேசியது. மாரியப்பனும் வண்ணாத்திபூச்சியும் வகுப்பறையிலிருந்து வெளியேறினார்கள். பள்ளிக்கூடத்துக்கு வெளியில் வெயில். பூட்டிக்கிடந்த வீடுகளைக் கடந்து போனார்கள். தெருமுனையில் வகுப்பறைச் சத்தம் கேட்டது. அவர்கள் மனபோக்கின் சுதந்திரத்தைப் போல் வெயிலும் மாறியது. கோப்பம்மாள் இடுப்பில் தம்பி இருந்தான். தெருக்கடைசியில் விளையாட்டுப் பள்ளிக்கூடம் இருந்தது. நிழல் விளையாட்டு. அங்கு தான் ஒன்னாப்பு கோபால் வாத்தியார் இருந்தார்.

அஞ்சாப்பு பிள்ளைகளுக்கு நிழல் விளையாட்டு கிடைக்காது. அஞ்சாப்பு வாத்தியார் ஆங்கிலம், தமிழ்ப்பாடம், கணக்கு அறிவியல் என்ற தான் பாடங்கள் நடத்துவார். அஞ்சாப்பு வாத்தியார் விளையாட்டின் எதிரி. அவரோடு பெற்றோர்களும் குதியாளம் போடுவதை எதிர்த்து வந்தார்கள்.

எல்லோரும் கோபால் வாத்தியாரிடம் நிழல் விளையாட்டு கற்றுக் கொண்டவர்கள் தான். கோப்பம்மாளும் விளையாடினாள். தம்பியை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டால் விளையாட்டில் சேர்க்க மாட்டார்கள். ஆகவே வாத்தியாருக்கு அருகில் நின்றாள். குட்டித்தம்பி அக்காளின் அசட்டுச் சடையைப் பிடித்து விளையாடுகிறான். அக்கா முகத்தில் பிஞ்சுக்கைகளை அலைத்துச் சிரித்தான்.

விளையாட்டில் சேர்ந்து கொண்ட பிள்ளைகள் குட்டித்தம்பிக்கும் கோப்பம்மாளுக்கும் காய் விட்டார்கள். மாரியப்பன் ஒன்னாப்பு பிள்ளைகளோடு விளையாடினான். வேம்பு எப்போது பூத்தது, பூத்ததை உதிர்த்தது, பிஞ்சும் பூவுமானது எப்போது என்றெல்லாம் கோவாலு வாத்தியார் பார்த்துக் கொண்டிருந்தார்.

நெ.மேட்டுப்பட்டி பிள்ளைகள் எப்பொழுதெல்லாம் வேம்புடன் விளையாடினார்கள். கோவாலு வாத்தியார் சின்னப் பிள்ளையாக இருந்த போது அவருக்கு நிழல் விளையாட்டு சொல்லி கொடுத்தவர்களைப் பற்றியெல்லாம் தாத்தாவுக்கு முந்திய காலத்து வேம்பு மறக்கவே இல்லை.

நெ.மேட்டுபட்டியில் ரொம்ப வயசான வேம்பாகையால் தான் தோன்றிய காலத்தையும் நிழல் விளையாட்டுகள் தோன்றிய காலத்தையும் ஒரு வேளை மறந்து போயிருக்கலாம்.

கோப்பம்மாளை யாரும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாத போது வேம்பு அவளை பார்த்தது. அவள் பச்சைப் பாவாடையிலிருந்து தொங்கும் நாடாவை எடுத்து கடித்துக் கொண்டிருந்தாள்.

கோபால் வாத்தியாரின் பார்வை மரக்கிளைகளின் ஆராய்ச்சியிலிருந்து கீழிறங்கி விளையாட்டீனூடே பிள்ளைகளை நோட்டம் பார்த்தது. திரும்பவும் விட்ட கிளை தாவி ஏறியது கோபால் வாத்தியாரின் கவனம்.

ஒடிசலான கோபால் வாத்தியார் பிள்ளைகளுக்கு நிழல் விளையாட்டின் மீது வரும் ஆர்வத்தை தூண்டி வருகிறார் ஒவ்வொரு காலமும்.

நெ.மேட்டுபட்டி தெற்குத் தெருவில் தேய்ந்து கிடந்த நீண்டகாலப் புழுதிக்கூட இந்த வழியே போன காற்றால் அடித்துச் செல்லப்படும். தெருவே கரடு தட்டுப் போன வண்டிப் பாதையாய்க் கிடக்கும். இந்த வழியில் இப்போது வண்டிகள் செல்வதில்லை. ஆள் நடமாட்டமில்லாது போய்விட்டது. இதே வரிசையான வீடுகளில் வண்ணாக்குடிகளும் மாறிவிட்டன. ரேழிக்கதவின் உள்ளே பறந்து கிடக்கும் வீடு. உள்ளே கோப்பம்மாள் குமர் இருந்து கொண்டிருந்தாள்.

தன் பள்ளிக்காலம் ஓடியபின் தெருவழியே நடப்பது கூட இல்லை. வண்டிப் பாதை வழியாக ஓரமாய் நடந்து போய்க் காட்டில் மேயும் கழுதைகளைப் பத்தியபடி முள்ளு விறகுடன் திரும்பி வந்தாள். மாரியப்பன் வேணாத வெயிலோடு பண்ணை ஆடுகளுக்குப் பின்னால் காடே கிடையாகக் கிடந்து காய்ந்த வாடக்கரடுகளை ஆடுகள் தின்னும் சத்தத்தைக் கேட்டபடி தொரட்டியை நிலையாக ஊன்றியபடி கல்தூணாகி நிற்பான். ஆடு யார் பொலியில் தின்னாலும் மேஞ்சாலும் கண்ணுக்கு தெரியாமல் புலம்பிக் கொண்டிருப்பான்.

பனையேறி சேருமுக நாடாரிடம் குடித்த கள்ளு முட்டி உச்சிவெயிலில் தலைக்கேறும். ரத்தச் சிவப்பாக கண்ணு முழி பிதுங்கி நிற்கும். கண்ணில் ரத்தம் சொட்ட காத்துவாக்கில் மேற்காமல் திரும்பி நின்றபடி காட்டு கூப்பாடும் பாட்டுமாய் காடே தாங்காது. கட்டாந்தரை மாதிரி செம்பட்டையும் வங்கு வங்காய் பயல் உடம்பெல்லாம் சொரி உப்பரிஞ்சு போய் கிடப்பான் ஓடக் காட்டில்.

ஊதாச்சட்டை வெயிலில் அசைவதை பார்த்து சுற்றி சுற்றி முள்ளு சேகரிப்பாள் கோப்பம்மாள். அன்று ராத்திரி கோப்பம்மாள் சோறெடுக்க வந்தாள். எல்லோர் வீட்டிலும் வாங்கி கொண்டு மாரியப்பன் வீட்டிற்கு வந்தாள். மாரியப்பன் இருட்டில் நின்றுக் கொண்டு கோப்பம்மாள் என்றான். அவனிடம் வந்தாள். கோப்பம்மாளின் சோத்துப்பானைக்குள் கையைவிட்டு ஒரு கை அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். நல்லா இருக்கு என்றான்.

கோப்பம்மா உனக்கு... என்று இன்னொரு கவளம் அள்ளி அவளிடம் நீட்டினான். மறுக்காமல் வாங்கிச் சாப்பிடாமல் பானையில் சேர்த்துக் கொண்டாள்.

அந்த இரவோடு அவள் சோறெடுக்க வரவில்லை. அவள் ஆத்தா தான் அழுக்கெடுக்க வந்தாள். கோப்பம்மாள் இப்பொழுதெல்லாம் வெளியில் வருவது கூட இல்லை. தண்ணிக் கிணத்தில் நின்ற போது கரை வழியாக ஆடுகளோடு புழுதிக் கிளப்பிப் போய்கொண்டிருந்தான் மாரியப்பன். அவள் இருந்த பக்கம் திரும்பி பாராமல் உர்... ரென்று முகத்தை வைத்துக் கொண்டு நடந்தான். அவள் அருகில் சப்தநாடி எல்லாம் அடங்கி நடந்து கொண்டிருந்ததே தெரியாமல் காட்டுக்குப் போனான்.

அவள் இருந்த பக்கம் எட்டி பார்க்காத நாளில் கோப்பம்மாளை பெண் கேட்டு வந்துவிட்டார்கள். தெற்கே வெகு தொலைவான விருந்தாளிகள். ராத்திரியோடு பெண்ணழைத்து போக இருந்தது.

கிணத்தங்கரை பக்கம் குடத்துடன் போய் காத்திருந்தாள். காட்டிலிருந்து வரவே இல்லை அவன்.

வீட்டுக்கு வந்த போது வாசலில் கிடந்த அழுக்குப் பொதியில் அது துருத்திக் கொண்டு வெளியே தெரிந்தது.

இற்று உருக்குலைந்து போன ஊதாசட்டை தான். அதை யாருக்கும் தெரியாமல் உருவி எடுத்துக் கொண்டு போனாள்.

கந்தல் கந்தலாய் சிதிலமடைந்து போன ஊதாச் சட்டையில் எல்லா இடமும் பொத்தலும் ஒட்டுமாய் இருந்தது.

நெஞ்சுத் தூரத்தில் வெக்கை திரண்டு தீக்கங்கு போல் பழுத்து எரிந்தது.

உப்பரித்து வீசும் ஊதாச் சட்டையை மார்போடு புதைத்துக் கொண்டு கேவிக் கேவி அழுதாள். முகத்தில் ஒற்றிக் கொண்டாள். ஆறுதல் அடைய மறுத்த தீக்கணு எரிந்து கொண்டிருந்தது. கோப்பம்மாள் ஊதாச் சட்டையை ஊருக்குக் கொண்டு போக வேண்டிய மஞ்சள் பையில் தன் சேலையுடன் எடுத்து வைத்தாள்.

பின் வாசல் சுருக்கிருட்டில் இருட்டுப் பூச்சிகள் சத்தத்துடன் இருளைப் பெருக்கியடி இரைந்து கொண்டிருந்தன.

****

வில்லன் .

unread,
Jun 13, 2010, 12:17:20 PM6/13/10
to panb...@googlegroups.com
வாட் எ டெக்னாலஜி. செல்போன்லயே படிச்சாச்சி.

--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

"ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

Gokul Kumaran

unread,
Aug 13, 2010, 11:27:49 AM8/13/10
to panb...@googlegroups.com
ரெண்டு மூனு நாளுக்கு முன்னாடி தான் “ஊமைச் செந்நாய்” கதையைப் படிக்க முடிந்தது.

வாவ்! என்ன அருமையான கதை.

நன்றி சென்ஷி!

--
கோகுல்குமரன்

"நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும் - நாட்டுக்கு
படிப்பினை தந்தாகணும்”


Gokul Kumaran

unread,
Aug 16, 2010, 8:22:19 AM8/16/10
to panb...@googlegroups.com
2010/5/31 சென்ஷி <senshe...@gmail.com>



அபூர்வ சகோதரிகள்

பா. ராகவன்


கதைகளை அலுவலக ஐடிக்கு ஃபார்வர்டு பண்ணிவிட்டு அங்கே ஹாய்யாக உட்கார்ந்து படிப்பதில் உள்ள சுகமே அலாதி.

இன்று இந்தக் கதையைப் படித்தேன். செம காமெடி.

நன்றி சென்ஷி.

சென்ஷி

unread,
Oct 1, 2010, 1:56:57 PM10/1/10
to panb...@googlegroups.com
தரமணியில் கரப்பான்பூச்சிகள்        - எஸ்.ராமகிருஷ்ணன்


சிறுகதை


என்னை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் என் பெயரை மறந்து போயிருப்பீர்கள். அல்லது கேட்டிருக்கவே மாட்டீர்கள். காரணம் நான் பெயரோடு பெரும்பாலும் அறிமுகமாகிக் கொள்வதேயில்லை. என் அடையாளமாக இருப்பது கரப்பான்பூச்சிமருந்து விற்பவன்.அதுவும் ஜெர்மனியின் புகழ்பெற்ற பூச்சிக் கொல்லி நிறுவனமான வில்ஹெம் ஒபேரின் விற்பனைப் பிரதிநிதி என்ற அடையாள அட்டையிருக்கிறது. ஆகவே அது உங்களுக்குப் போதுமானது. எனக்கே கூட என்னுடைய பெயர் தற்போது கொஞ்சம் அசௌகரியமாகவே இருக்கிறது.


பெயரைப் பொறுத்தவரை அது என்னோடு ஒட்டிக் கொள்ளவேயில்லை. வேலை மாறும்போது அதுவும் மாறிக் கொண்டேயிருக்கிறது. சிறுவயதிலே எனக்கு அந்தச் சந்தேகம் உண்டு. அடுத்தவர்களுக்காக ஏன் நான் ஒரு பெயரை வைத்துக் கொண்டிருக்கிறேன். என் பெயரால் எனக்கு என்ன நன்மை. அதுதேவையற்ற ஆறாவது விரல் ஒன்றை போல ஏன் கூடவே ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று. உலகில் பெயரில்லாமல் எவ்வளவோ பொருட்கள் இருக்கின்றன. நம் கண்ணிலும் படுகின்றன. அதை நாம் ஒரு போதும் பெரிதாகக் கருதியதேயில்லை. அப்படி நானும் இருந்துவிட்டுப் போவதில் என்ன தவறிருக்ககூடும்.

என்றாலும் என்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்குப் பெயர் வேண்டியிருக்கிறது. ஏதாவது ஒரு பெயர் போதும். அது ஒற்றை எழுத்தாகக் கூட இருந்தாலும் அங்கீகரித்துவிடுகிறார்கள்.அதனால் ஒபேர் நிறுவனம் எனக்கு உருவாக்கிய கரப்பான்பூச்சி மருந்து விற்பவன்என்ற பெயரே போதுமானதாகயிருக்கிறது. அதை நான் ஆங்கிலத்தில் சொல்லும் போது தமிழை விடக் கூடுதலான ஒரு நெருக்கத்தை நீங்கள் அடைகிறீர்கள். கரப்பான்பூச்சிகளைக் கூட காக்ரோஷ் என்று தான் பெரும்பான்மை வீடுகளில் சொல்கிறார்கள். கரப்பான்பூச்சி அளவில் கூட தமிழ் ஒட்டிருப்பது மாநகரவாசிகளுக்குப் பிடிப்பதில்லை போலும்.


என்னைப் பற்றி அறிந்து கொள்வதில் உங்களுக்கு விருப்பம் எதுவும் இருக்கப்போவதில்லை. ஆனால் எனக்கு இரண்டு மணி நேரம் பணியிடை ஒய்வு இருக்கிறது. ஆகவே அதைப் போக்கி கொள்வதற்காகவே உங்களிடம் இதைச் சொல்கிறேன்.


ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நான் பயிற்சிப் பணியாளராக இருந்த போது நெசப்பாக்கம் பகுதியின் முன் உள்ள பெட்ரோல் பங்க் முன்னால் தினமும் காலையில் சந்தித்துக் கொள்வோம். எங்களுக்கு தலைவராக இருந்தவர் மணிநாராயணன். அவர் கரப்பான்பூச்சிமருந்து விற்பதில் தமிழகத்திலே மூன்றாவது ஆளாக சாதனை படைத்தவர்.

நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு இருநூறு ஸ்பிரே விற்க வேண்டும் என்பதை அவர் இலக்காக வைத்திருந்தார். ஆகவே காலை ஏழு மணிக்கு குழு குழுவாகப் பிரித்து பணியிடத்திற்கு அனுப்பிவிடுவார். அவரிடம் கரப்பான்பூச்சிகள் காலை ஏழு மணிக்கு எழுந்து கொள்ளுமா அல்லது உறக்கத்தில் இருக்குமா என்ற சந்தேகத்தை நான் ஒரு போதும் கேட்க முடிந்ததேயில்லை.


அவர் தனது கறுப்பு சூட்கேஸில் மாநகரின் வரைபடத்தைநான்காக மடித்து வைத்திருக்கிறார். அந்த வரைபடத்தில் நகரின் ஒவ்வொரு பகுதியும் ஒரு வண்ணத்தில் தனித்துப் பிரிக்கபட்டிருக்கும். எந்தப் பகுதியில் கரப்பான்பூச்சிகள் அதிகமிருக்கும். அங்கே எத்தனை பேர் போக வேண்டும் என்று வட்டமிட்டிருப்பார்.


ஒரு நகரை கரப்பான்பூச்சிகளின் எண்ணிக்கையைக் கொண்டு தனித்தனியாக பிரித்திருப்பது எவ்வளவு பெரிய விந்தை. அதை மணி நாராயணன் உணர்ந்திருப்பாரா?


அவர் கறாரான முகத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு பேசுவார். அது கூட வயதான ஒரு கரப்பான்பூச்சி பேசுவது போலதானிருக்கும். அவர் இளைஞராக இருந்த காலத்தில் சென்னையில் அதிக கரப்பான்பூச்சிகள் இருந்திருக்க கூடும். அதில் பெரும்பகுதியை ஒழித்து ஒரு இனத்தின் அடிவேரைப் பாதியாக அழிந்த பெருமை அவருக்கு உண்டு.


அன்றுநெசப்பாக்கம் பகுதிக்குள் நாங்கள் ஆறு பேர் பிரித்து அனுப்பபட்டோம். புதிதாக வளர்ந்து வரும் பகுதி என்பதால் அதுஇன்னமும் ஒரு கிராமத்தின் சாயலை கொண்டிருந்தது. பால்மாடுகள், சாலையில் நின்று குளிப்பவர்கள், சிறிய ஒட்டுவீடுகள், முருங்கைமரங்கள், வறட்டி தட்டி விற்பவர்கள், மரப்பெஞ்சு போட்ட தேநீர்கடைகள், நகரப் பேருந்துகள் உள்ளே வராத சாலைகள், முட்டுச்சந்துகள், என்று கலவையாகஇருந்தது. நான் அதன் தென்பகுதியில் உள்ள பனிரெண்டுவீதிகளை மதியத்திற்குள் முடித்துவர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள்.


எந்த வீட்டின் கதவை முதலில் தட்டுவது என்று புரியாமல் நடந்து கொண்டேயிருந்தேன். எங்கள் பணியில் முதல் சத்ரு நாய்கள். அது தெருநாயாகவோ, வளர்ப்பு நாயாகவோ எதுவாக இருந்தாலும் அதற்கு எங்களைப் பிடிப்பதேயில்லை. எங்களைக் கண்டு வாய் ஒயாமல் குறைக்கின்றன. கடிக்கப் பாய்கின்றன. இதே நாய்கள் பெண் விற்பனையாளரைக் கண்டு மட்டும் குலைப்பதில்லை. வாலாட்டுகின்றன. அது என்ன பேதம் என்று தான் புரியவேயில்லை. நாய்கள் மனிதர்களுடன் பழகி அவர்கள் சுபாவத்தையேக் கொண்டிருக்கின்றன. ஒரு நாய் கூட நாய் போல நடந்து கொள்வதில்லை என்பது தான் நிஜம்.


இதனால் நான் நாய்களை வெறுக்க ஆரம்பித்தேன். சீனாவில் மாநகரங்களில் நாய்கள் வளர்க்கவோ. வீதியில் அலையவோ அனுமதிக்கபடுவதேயில்லை என்று ஒருநாள் காலைபேப்பரில் வாசித்தேன். அது தான் என் வாழ்நாளின் கனவும் கூட. ஆனால் நகரவாசிகள் நாய்களை நேசிக்கிறார்கள். எவரோ தெருநாய்களுக்கு கூட உணவளித்து அதன் வம்சவிருத்தியை அக்கறையோடு கவனித்து கொள்கிறார்கள். இந்த விசயத்தில் எனக்கு மக்களை புரிந்து கொள்ள முடியவேயில்லை.


விற்பனையாளராக நான் பணியில் சேர்ந்த போது ஒருவார காலம் ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து எங்களுக்குச் சிறப்பு பயிற்சி கொடுக்கபட்டது. அதில் எத்தனை விதமான வண்டுகள், பூச்சிகள், எறும்புகள் வீட்டிற்குள் புகுந்துவிடுகின்றன என்று புகைப்படத்துடன் பெரிய கேட்லாக் ஒன்றை எங்களுக்கு தந்தார்கள்.


என்னால் நம்பவே முடியவில்லை. நானூற்று பதினாறு விதமான பூச்சிகள் நம்மோடு சேர்ந்து வாழ்கின்றன. கரப்பான்பூச்சிகளில் தான் எத்தனை விதம். நிறத்தில் வடிவத்தில் ஒன்றோடு ஒன்று மாறுபட்டவை. கண்ணில் பார்க்கும் போது நாம் அதை இவ்வளவு துல்லியமாக வேறுபடுத்தி அறிய முடியவில்லை. அத்தோடு கரப்பான்பூச்சிகளுக்கு தனியான பெயர்கள் இல்லை என்பதால் அதை நாம் பொதுவான ஒன்றாகவே கருதுகிறோம்.


அந்தப் பூச்சிகளின் புகைப்படங்களைப் பார்த்த போது நாமும் சிறு பூச்சிகள் போல தான் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது. அந்தப் புகைப்படத்தை உண்மையில் நான் நேசித்தேன். ஒவ்வொரு கரப்பான்பூச்சியையும் நேரில் பார்த்து அறிமுகம் செய்துகொண்டுவிட வேண்டும் என்பது போல ஆசைப்பட்டேன். ஆனால் அவர்கள் அதை எப்படிக் கொல்வது. எங்கே அவை ஒளிந்து கொண்டிருக்கும். எவ்வளவு நேரத்தில் ஒரு கரப்பான்பூச்சி செத்துப் போகும் என்பதிலே கவனமாக இருந்தார்கள்.


உண்மையில் கரப்பான்பூச்சிகளைக் கண்டு ஏன் மக்கள் பயப்படுகிறார்கள். அது கடித்தால் விஷமா என்று சக ஊழியரைக் கேட்டேன். அவர் அது ஒரு பொய். பல காலமாக இந்தப் பொய்யை நாம் வளர்த்துக் கொண்டே வந்துவிட்டோம். அந்தப் பொய்யில் தான் நமது சம்பாத்தியம் அடங்கியிருக்கிறது என்று சிரித்தபடியே சொன்னார்.


என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு சமூகம் ஏன் கரப்பான்பூச்சிகளை வெறுக்கிறது. கண்ணில் பட்டாலே அருவருப்புக் கொண்டுவிடுகிறது. என்ன பகையிது. ஏன் இவ்வளவு வெறுப்பும் அசூயையும் என்றுஐந்து நாளும் யோசித்தேன். அப்படியும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.


எங்களது பயிற்சி வகுப்பை நடத்த கல்கத்தாவில் இருந்து வந்திருந்த மோகித்சென் வங்காள உச்சரிப்பிலான ஆங்கிலத்தில் நீங்கள் ஒவ்வொரு வீட்டின் கதவைத் தட்டியதும் சொல்ல வேண்டிய முதல் பொய் எது தெரியுமா என்று கேட்டார். நாங்கள் அமைதியாக இருந்தோம்.

அந்தப் பொய் அற்புதமானது. அது எந்த வீட்டையும் திறக்ககூடிய சாவியைப் போன்றது என்று கைகளை உயர்த்தி ஆர்ப்பாட்டமாகச் சொன்னார். அவரது பொய்யைக் கேட்க ஆவலாக இருந்தோம்.


உங்களது முதல் பொய் இது தான். உங்கள் அருகாமையில் விஷமான கரப்பான்பூச்சிகள் பெருகிவருவதாக அறியப்படுகிறது. அவை கடித்தால் விபரீதமாகிவிடும். அதிலிருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ள நீங்கள் ஏன் எங்கள் தயாரிப்பைப் பரிசோதித்து பார்க்க கூடாது என்பதே.


இந்தப் பொய்யை நீங்கள் உணர்ச்சிவசப்படமால், கண்களில் மிகுந்த அன்பும் வாஞ்சையோடும் சொல்லிச் சொல்லி பழகவேண்டும். காரணம் புதிய மனிதர்களை எதிர்கொள்ளும் போது அவர்கள் கண்களைத் தான் மக்கள் கவனிக்கிறார்கள். என்றார்

அதைக் கேட்ட போது எனக்கு எரிச்சலாக வந்தது. எந்த மனிதனும் அடுத்தவனின் உதடை ஏன் கவனிப்பதில்லை. கண்கள் ஒரு போதும் பொய் சொல்வதில்லை. உதடுகள் தான் பொய் சொல்கின்றன. ஆனால் அதை மக்கள் ஏன் இவ்வளவு அலட்சியமாக விட்டுவிடுகிறார்கள். எனக்கு என்னவோ அடுத்தவரின் பொய்கள் மீது நாம் உள்ளுற ஆசை கொண்டிருக்கிறோமோ என்று தான் தோன்றுகிறது.


அன்று எங்கள் பயிற்சி வகுப்பில் நாங்கள் நாற்பத்தி ரெண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்து கண்களில் அன்பு ஒழுக உங்கள் வீட்டின் அருகாமையில் விஷமுள்ள கரப்பான்பூச்சிகள் பெருகிவிட்டன .எங்கள் தெளிப்பானை உபயோகித்து அவற்றைக் கொல்லுங்கள் என்று நேசத்துடன் சொல்லிப் பழகினோம்.


மிக அபத்தமான நாடகம்ஒன்றில் பாத்திரமாகிவிட்டதைப் போல இருந்தது. ஆச்சரியமான உண்மை என்னவென்றால் நான் பதினைந்து நிமிசங்களிலே அந்த வேஷத்திற்கு கச்சிதமாக பொருந்தி போய்விட்டது. நான் அதைச் சொல்லும் போது அந்த வீட்டில் கரப்பான்பூச்சிகள் ஒடுவது என் கண்ணில் நிஜமாக தெரிவது போல இருக்கிறது என்று மோகித் சென் பாராட்டினார்.


பொய்கள் எளிதாகப் பழகிவிடுகின்றன. உண்மையைச் சொல்வதற்கு தான் நிறைய நடிக்க வேண்டியிருக்கிது.அந்தப் பயிற்சிகாலத்தில் மக்களைப் பயமுறுத்த வேண்டியதே நாங்கள் திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய வேலை என்று அறிவுறுத்தபட்டது.


அது எளிதான ஒன்றில்லை. மக்கள் எப்போது எதைக் கண்டு பயப்படுவார்கள் என்பது மாபெரும் புதிர். ஆனால் கரப்பான்பூச்சிகளைச் சொல்லி பெண்களை எளிதாக பயமுறுத்திவிடலாம். ஆகவே ஆண்கள் வீட்டில் இல்லாத நேரங்களில் தான் நாங்கள் கதவைத் தட்ட வேண்டியிருந்தது.


பெண்கள் கரப்பான்பூச்சி குறித்து விதவிதமான கற்பனையை கொண்டிருக்கிறார்கள் என்பதை என் பணி அனுபவத்தில் முழுமையாக உணர்ந்திருக்கிறேன். வேறு எந்தப் பூச்சியை விடவும் கரப்பான் அந்த அளவில் துரதிருஷ்டசாலி . அதைப் பெண்கள் வெறுக்கிறார்கள். அழித்து ஒழிக்க பணம் செலவழிக்கிறார்கள். பெண்களால் வெறுக்கபடுவது அழிந்து போவது இயற்கை தானே.


நான் பெண்களிடம் கரப்பான்பூச்சி பற்றி விதவிதமாக பொய் சொல்லப் பழகியிருந்தேன். குறிப்பாக அவர்கள் குளியல் அறையில் வந்து ஒளிந்து கொள்ளும் கரப்பான்பூச்சிகள் ஒருவிதமான பச்சை நிறத் திரவத்தை உமிழ்கின்றன என்றும் அது உடலில் பட்டால் உடனே தோலில் புள்ளிபுள்ளியாக உருவாக துவங்கிவிடும் என்றும் மிரட்டினேன். அதை அவர்கள் அலட்சியப்படுத்தினால் ஒரு மாத காலத்தில்உடலெங்கும் நோய் பரவி அகோரமாகிவிடுவார்கள் என்றும் சொல்வேன்.


இந்தப் பொய் ஒரு பிரம்மாஸ்திரம் போன்றது. அதிலிருந்து எந்தப் பெண்ணும் தப்பவே முடியாது. ஒரு பெண் இந்தப் பொய்யைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதாள். அப்படி அவள் உண்மையில் கரப்பான்பூச்சிகளால் கடிபட்டிருக்கிறாள் என்றும் அந்த சந்தேகத்தை நான் உறுதி செய்துவிட்டதாகச் சொல்லி உடனடியாக எனதுதெளிப்பானை வாங்கி கொண்டதுடன் இதற்கு என்னவிதமான சிகிட்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அக்கறையோடு கேட்டாள்.


இதற்காக நான் கூடுதலாக கொஞ்சம் அழகுக்கலை குறிப்புகளை வாசிக்க வேண்டிய அவசியமிருந்தது. அதற்கு நான் பெரிய சிரமம் ஒன்றும் எடுக்கவில்லை. பழைய பேப்பர் கடைகளில் உள்ள ஐந்தாறு வருச பழைய பெமினா, ஈவ்ஸ் வீக்லி போன்ற இதழ்களைப் புரட்டி அதில் வெளியான அழகுகுறிப்புகளை மனதில் நிறுத்தி வைத்துக் கொள்வேன்.


உண்மையில் ஒரு கரப்பான்பூச்சி கொல்லி விற்பவன் எவ்வளவு நுட்பமாக பணியாற்ற வேண்டியிருக்கிறது என்பதை நீங்களே நினைத்து பாருங்கள். அந்தப் பெண் நான் சொன்ன அழகுகுறிப்பை நிச்சயம் பயன்படுத்தத் துவங்கியிருப்பாள்.எல்லா அழகு குறிப்புகளும் பயத்திலிருந்து உருவானவை தானே.


கரப்பான்பூச்சி பற்றிய பொய்களை மக்கள் சந்தேகம் கொள்வதேயில்லை. பூச்சிகள் கொல்லப்படும் போது மக்கள் நிம்மதி அடைகிறார்கள். கரப்பான்பூச்சிகள் எவ்வளவு காலம் உயிர்வாழ கூடியவை. அதில் ஆண் பெண் என்று வேறுபாடு இருக்கிறாதா? வயதாகி செத்த கரப்பான்பூச்சி என்று ஒன்றாவது உலகத்தில் இருக்குமா என்று எவரும் என்னிடம் கேட்டதேயில்லை


நான் இந்தப் பணியில் ஆரம்ப நாட்களில் வீட்டின் காலிங்பெல்லை அடிக்க கூச்சப்பட்டிருக்கிறேன். காலிங்பெல் மீது கை வைத்தவுடனே எனது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்துவிடும். வீட்டிலிருந்து எந்த வயதில் யார் வெளியே வருவார்கள் என்று மனதில் ஒரு கற்பனை உருவம் தோன்ற ஆரம்பிக்கும். பெரும்பாலும் என் கற்பனை பொய்யாகிவிடும். அரிதாக ஒன்றிரண்டு முறை நான் நினைத்தது போலவே மெலிந்த உடலும் நெளிகூந்தலும் தூக்கம் படிந்த முகத்தோடுபெண்கள் வந்திருக்கிறார்கள்.


நான் பயிற்றுவிக்கபட்ட கிளி போல சொல்வதை அவர்கள் காதுகள் கேட்டுக் கொள்வதில்லை. சலிப்புடன் வேண்டாம் என்றோ, ஏன் காலிங்பெல்லை அடித்தேன் என்று கோபபட்டோ கதவை மூடிவிடுவார்கள். மூடிய கதவிற்கு வெளியில் சில நிமிசங்கள் நின்று கொண்டிருப்பேன். அப்போது மனதில் சில விபரீதமான எண்ணங்கள் தோன்ற துவங்கும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, என்று கரும்புகை சுழல்வதை போல தீவினைகள் என் மனதில் புகைய ஆரம்பிக்கும். பிறகு அது தானே அடங்கி ஒடுங்கியதும் இறங்கிப் போய்விடுவேன். பூச்சிமருந்து விற்பவன் வேறு என்ன செய்ய முடியும்.


விற்பனைப் பிரதிநிதி என்பவன் பொதுவெளியில் அலையும் ஒரு நடிகன். நாடகக் கதாபாத்திரம் ஒன்று தான் எப்போது மேடையில் நுழைவோம் என்று திரையின் பின்னால் நின்றபடியே காத்துக் கொண்டிருப்பது போன்ற மனநிலை தான் தினமும் எனக்கு நேர்கிறது.

ஒவ்வொரு நாளும் பூச்சிமருந்துகளுடன் தெருவில் நடந்து போகத் துவங்கியதும் எந்த வீட்டின் கதவை முதலில் தட்டுவது என்று குழப்பமாக இருக்கும். எனது சக ஊழியர்கள் ஒவ்வொருவரும் இதற்கான தனியான வழிமுறை ஒன்றை வைத்திருந்தார்கள்.


மூத்த விற்பனையாளரான சங்கரன் எப்போதுமே வலதுபக்கம் உள்ள வீட்டைத் தான் முதலில் தட்டுவார். எல். கோவிந்துவிற்கு ஒன்பது ராசியான எண் என்பதால் எட்டுவீடுகளை தவிர்த்துவிட்டு ஒன்பதாவது வீட்டில் யாரும் இல்லாமல் போயிருந்தால் கூட அதைத் தான் முதலில் தட்டுவார். நான் இப்படி எந்த பழக்கத்தையும் உருவாக்கி கொள்ளவில்லை. மாறாக நான் நடக்க துவங்குவேன். சில நேரம் வீதியின் கடைசி வரை கூட நடந்து கொண்டேயிருப்பேன். மனதில் நடிக்கத் துவங்கு என்ற குரல் கேட்க ஆரம்பிக்கும். அது உச்சத்திற்கு எட்டியதும் சட்டென ஏதாவது ஒரு வீட்டு கதவை தட்டிவிடுவேன்.


பகல்நேரங்களில் திறக்கபடும் வீடுகளை கவனிக்கிறேன். எல்லா வீடுகளும் அலங்கோலமாகவே இருக்கின்றன. ஒழுங்கின்மை, கவனமின்மை பீடித்திருக்கிறது. தேவையற்ற பொருட்கள் குவிந்துகிடக்கின்றன. பயத்தோடு தான் கதவைத் திறக்கிறார்கள்.சில வீடுகளில் கதவை திறப்பதேயில்லை. ஆனால் குரல் மட்டும் வெளியே கேட்கிறது. அப்படித் திறக்கப்படாத கதவுகளை பொய் சொல்லி திறக்க வைப்பதே எங்களது சாமர்த்தியம்.


ஆகவே கதவின் முன்னே நின்றபடியே நான் சுகாதாரத் துறையில் இருந்து வந்திருப்பதாக பொய் சொல்லுவேன். உடனே கதவு திறந்துவிடும். மக்கள் அரசாங்கத்திற்கு பயப்படுகிறார்கள். எவ்வளவு மேன்மையான குணமது. அவர்களிடம் சுகாதாரத் துறை இந்தப் பகுதியில் கரப்பான்பூச்சிகள் பெருகிவிட்டதாக அடையாளம் கண்டுள்ளது என்று கறாரான குரலில் சொல்வேன். அவர்கள்கலக்கத்துடன் அது தன்னுடைய தவறில்லை என்பதுபோலவே கேட்டுக் கொள்வார்கள். என்னிடம் உள்ள குறிப்பு நோட்டில் அந்த வீட்டோர் பற்றிய விபரங்களை கேட்டறிந்து மறுநாள் எனது சகாக்களில் ஒருவனைஅங்கே அனுப்பி தெளிப்பானை விற்பது வழக்கம்.


மக்கள் தங்களை விட சிறிய உயிரினங்கள் எல்லாவற்றையும் வெறுக்கிறார்கள். கொன்றுவிட துடிக்கிறார்கள். அதில் குழந்தைகள் கூட விதிவிலக்கில்லை. எந்தக் குழந்தையும் ஒரு எறும்பைக் கூட நேசிக்கவில்லை. எறும்பை தலைவேறு உடல்வேறாக பிய்த்து கொல்வதில் எவ்வளவு ஆனந்தம் கொள்கின்றன. இவ்வளவு ஏன், அழகிகளாக நாம் கொண்டாடும் பெண்கள் வன்மத்துடன் பூச்சிகளை கட்டையால் அடித்துக் கொல்வதை நீங்கள் அருகில் இருந்து பார்க்க வேண்டும். எவ்வளவு ஆவேசம். எவ்வளவு ஆத்திரம்.

ஆண்கள் பூச்சிகளுடன் வாழ்வதில் அதிக பேதம் காட்டுவதில்லை. எப்போதாவது அதைக் கண்டு சலித்து கொள்கிறார்கள். சில வேளைகளில் அதைக் கட்டுபடுத்த முடியாத தனது ஆண்மையை நினைத்து கோபம் கொள்கிறார்கள். ஒன்றிரண்டு மெல்லிதயம் படைத்த ஆண்கள் மட்டுமே பூச்சிகொல்லிகளை உபயோகிக்கிறார்கள். இது பொது உண்மையில்லை எனது கண்டுபிடிப்பு.


கரப்பான்பூச்சி மருந்து விற்பவர்கள் இப்படி நிறைய கண்டுபிடிப்புகளைக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.கரப்பான்பூச்சியைக் கொன்ற பிறகு பெரும்பான்மை மக்கள் அதன் மீசையைப் பிடித்து மட்டுமே தூக்கி வெளியே எறிகிறார்கள். காரணம் மீசையின் மீதுள்ள தாங்கமுடியாத வெறுப்பு. மனிதர்கள் எவராவது இப்படி மீசையைப்பிடித்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார்களா?


பெரும்பான்மை வீட்டுப் பெண்களின் கவலை எல்லாம் எனது தெளிப்பானை எவ்வளவு மலிவாக வாங்கிவிட முடியும் என்பதே.நாங்களே அந்தத் தந்திரத்தை நுகர்வோருக்கு அளித்திருந்தோம். எங்கள் பூச்சி மருந்து தெளிப்பானின் விலை பனிரெண்டு ரூபாய் முப்பது காசுகள். அதை நாங்கள் இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். வீடு தேடி வரும் சலுகை என்று அதை ஐம்பது ரூபாய் குறைத்து இருநூற்றுக்கு விற்பனை செய்கிறோம். அதை அடித்துபேசி விலை குறைக்கும் பெண்களிடம் உங்களுக்காக மட்டும் நூற்று ஐம்பது என்று விற்பனை செய்வோம். அப்படி வாங்கிய பெண் அளவில்லாத சந்தோஷம் கொள்வதை என்னால் காண முடிந்திருக்கிறது. ஒரு கரப்பான்பூச்சி மருந்தை விலை குறைத்து வாங்கிவிட்டது எளிய செயலா என்ன?


ஒரேயொரு முறை ஒரு பெண் என்னிடம் எனது தெளிப்பானால் எவ்வளவு கரப்பான்பூச்சிகளை கொல்ல முடியும் என்று கேட்டாள். எங்கள் பயிற்சிகாலத்தில் இந்தக்கேள்வியை நான் கேட்டிருந்தால் நிச்சயம் கைதட்டு கிடைத்திருக்கும். மொகித்சென்அதற்கான விடையை உடனே சொல்லியிருப்பார். ஆனால் அன்று அந்தபெண் கேட்டதற்கு என்னிடம் பதில் இல்லை. உடனடியாகப் பொய் சொல்லவும் முடியவில்லை.


நான் சமயோசிதமாக உங்கள் வீட்டில் உள்ள அத்தனை கரப்பான்பூச்சிகளையும் கொல்ல முடியும் என்று மட்டுமே சொன்னேன். உடனே அந்த பெண் எறும்புகளை இதனால் கொல்ல முடியுமா என்று கேட்டாள். எறும்புகள்ஈக்கள், பொறிவண்டுகள், விளக்குபூச்சிகள் என அத்தனையும் கொல்ல முடியும் என்று சொன்னேன். அவள் பல்லியைக் கொல்ல முடியுமா என்று மறுபடியும் கேட்டாள். பல்லியைக் கொல்வது பாவம் என்று மட்டுமே சொன்னேன். அவளும் அதை உணர்ந்து கொண்டவளை போல தலையாட்டிவிட்டு பணத்தை எண்ணித் தந்தாள். அந்த பணத்தில் ஒரு கிழிந்து போன ஐம்பது ரூபாய் இருந்தது. அதை என்னிடம் தந்திரமாக தள்ளிவிட்ட திருப்தி அவளுக்கு இருந்திருக்கும். ஒருவேளை அதற்காகவே இந்த தெளிப்பானை அவள் வாங்கியிருக்கவும் கூடும்.


மனிதர்கள் மிகவும் விசித்திரமானவர்கள் என்பதே என் அனுபவம். அவர்கள் அடுத்தவரை ஏமாற்றுவதில் அலாதியான ஆனந்தம் அடைகிறார்கள். அதை வளர்த்து கொள்ள விரும்புகிறார்கள். அடுத்த தலைமுறைக்கு கற்று தருகிறார்கள். ஏமாற்றியதை பற்றி பெருமை பேசுகிறார்கள்.


ஒரு நாள் ஸ்ரீனிவாசா திரையரங்கு அருகாமையில் உள்ள வீட்டின் கதவை தட்டினேன். மதியமிருக்க கூடும். பெரும்பான்மையினர்மதியத்தில் உறங்கிவிடுகிறார்கள். மனிதர்கள் உறங்கும் போது உலகம் அமைதி அடைகிறது என்று காலண்டர் தாளில் ஒரு வாசகம் படித்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


அதனால் நாங்கள் மதியம் இரண்டு முதல் நான்கு வரை வேலை செய்வதில்லை. எங்காவது ஆசுவாசப்படுத்திக் கொள்வோம். அன்று நான்கு மணிக்கு சற்று முன்பாக அந்த வீட்டின் கதவை தட்டியிருந்தேன். வயதான ஒருவர் கதவைத் திறந்தார். அவரிடம் நான் பூச்சிமருந்து விற்பனையாளன் என்று சொன்னதும் அவர் உள்ளே வரச்சொன்னார். அந்த வீடு அழுக்கடைந்து போயிருந்தது. சுவெரங்கும் மழைநீர் இறங்கிய கறை. மூடிக்கிடந்த ஜன்னல். அதில் ஒரே போல நாலைந்து உபயோகமற்ற பல்துலக்கிகள். அறையெங்கும் பழைய நாளிதழ்கள். வார மாத இதழ்கள், புத்தகங்கள். குப்பை போல குவிந்து கிடந்தன. அவர் அதற்கு ஊடாகவே ஒரு சாய்வு நாற்காலியை போட்டிருந்தார். அருகாமையில் துருப்பிடித்து போன ஒரு கட்டில் அதன் மீது முழுவதும் வெவ்வேறு விதமான புத்தகங்கள், அடியிலும் கட்டுகட்டாக பழைய நாளிதழ்கள். கயிற்றுகொடியில் பழுப்பேறிய வேஷ்டி பனியன்கள் காய்ந்து கொண்டிருந்தன.நிச்சயம் அவரிடம் எளிதாக ஒரு தெளிப்பானை என்னால் விற்றுவிட முடியும் என்று தோன்றியது.


நான் தூசியால் ஏற்பட்ட அசௌகரியத்தை பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருந்தேன். அவர் ஒரு நாளிதழ் கட்டைக் காட்டி அதில் ஏறி என்னை உட்காரச் சொன்னார். நான் அதில் உள்ள தூசியை கையால் தட்டியபோது நாசியில் காரமேறித் தும்மல் வந்தது. எனது தெளிப்பானை வெளியே எடுத்து விளக்கம் சொல்ல ஆரம்பித்தேன்.


அவர் அதைப் பிறகு பார்த்து கொள்ளலாம். தான் நிச்சயம் ஒன்றை வாங்கி கொள்கிறேன் என்றபடியே எனக்கு திருமணமாகிவிட்டதா என்று கேட்டார். இல்லை என்று சொன்னேன். குடிக்கிற பழக்கமிருக்கிறதா என்று கேட்டார். இல்லை என்று அவசரமாக மறுத்தேன். அவர் தலையாட்டிக் கொண்டு கேலியான தொனியில் இதுவரை எவ்வளவு கரப்பான்பூச்சிகளை கொல்ல உதவியிருக்கிறாய் என்று ஆங்கிலத்தில் கேட்டார். அது என்னை குத்திபார்ப்பது போல இருந்தது.


அது உபயோகமில்லாதவை அழிக்கபட வேண்டியவை தானே என்று கறாராக சொன்னேன். அவர் தலையாட்டிக் கொண்டார். பிறகு என் அருகில் இருந்த ஒரு பேப்பர்கட்டை காட்டி அதை பிரிக்கும்படியாக சொன்னார். நான் குனிந்து எடுத்து அதை பிரித்தபோது 1978 வருசம் நவம்பர் 7ம் தேதி பேப்பரை எடுக்கும்படியாக சொன்னார். எதற்காக இவற்றை எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறார் என்று புரியவில்லை.


பளுப்பேறி எழுத்து மங்கிப் போயிருந்த ஒரு பேப்பரை எடுத்து நீட்டினேன். அதன் ஆறாம்பக்கத்தை உரக்க படி என்று சொன்னார். பிரித்து பார்த்த போது அதில் ஒரு கரப்பான்பூச்சி படமிருந்தது. சப்தமாக படித்தேன். மடகாஸ்கரில் காணப்பட்ட ராட்சச கரப்பான்பூச்சியது. அது ஐந்து அங்குல நீளமுடையது. முப்பது கிராம் எடை கொண்டது அதை கரப்பான்பூச்சிகளின் டைனோசர் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அவர் அதை கவனமாக கேட்டு கொண்டிருந்துவிட்டு இது போல ஒன்றை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்டார். இல்லை என்றேன்.


இது நம் ஊரில் இருந்து அழிக்கபட்ட இனம். நான் பார்த்திருக்கிறேன். நான் இதை பற்றி மறுப்பு எழுதி அனுப்பினேன். அது பத்திரிக்கையில் வரவேயில்லை என்று சொன்னார். நான் அமைதியாக இருந்தேன். அவர் விஞ்ஞானம், வானவியல், ஜோசியம், ஜன்ஸ்டீன் குவான்டம் தியரி, ரிச்சர்ட் டாவ்கின்ஸ் என்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். எனக்கு நிறைய வேலையிருக்கிறது என்று எழுந்து கொள்ள முயன்றேன்.


அவர் தனது பர்சில் இருந்து இருநூறு பணத்தை எடுத்துத் தந்து தெளிப்பான் எனக்கு வேண்டாம். நீயே உபயோகபடுத்தி கொள். உனக்கு நேரமிருந்தால் என்னோடு வந்து பேசிக் கொண்டிரு. ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு தெளிப்பானை வாங்கி கொள்கிறேன். காரணம் நானே ஒரு கரப்பான்பூச்சி போல தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு இப்போது வயது எழுபத்தியாறு. பனிரெண்டு வருசமாக இந்த அறையை விட்டு வெளியே போவதே கிடையாது. பிள்ளைகள் அமெரிக்க போய்விட்டார்கள். யாரும் என்னைத் தேடி வருவது கிடையாது.


நான் முப்பது வருசம் அறிவியல் ஆய்வுதுறையில் வேலை செய்திருக்கிறேன். பதவி, சம்பாத்தியம், உறவு, பெயர் புகழ் எல்லாம் பொய். மயக்கம். எதுவும் நமக்கு கை கொடுக்கபோவதில்லை. முதுமை ஒரு நீண்ட பகலை போலிருக்கிறது.


பழைய நாளிதழ்களை திரும்ப திரும்ப படிப்பதில் எனக்கு ஆனந்தமாக இருக்கிறது. இந்த செய்திகள் யாவும் நடந்து முடிந்துவிட்டவை தானே. ஆனால்அவற்றை பற்றி கற்பனை செய்து கொள்ளும்போது ஏனோ மிக சந்தோஷமாக இருக்கிறது. உனக்கு நேரமிருந்தால் என் வீட்டு கதவை நீ எப்போதும் தட்டலாம், ஒரு வேளை நீ வரும்போது நான் செத்துகிடந்தால் இந்த புத்தகத்தின் உள்ளே கொஞ்சம் பணமிருக்கிறது. எடுத்து செலவுசெய்து எரித்துவிடு. என்று சொன்னார்.


நான் உண்மையில் பயந்து போய்விட்டேன். அவர் தந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை.அவரைச் சந்தித்த பிறகு நான் சென்ற வீடுகளில் எதிலும் ஒரு தெளிப்பானை கூட விற்பனை செய்ய முடியவில்லை. மனதில் அவரது குரல் என்னை வதைக்க துவங்கியது. அவர் என்னை மிகவும் பாதித்திருந்தார். இதற்காக அன்றிரவு நானும் செல்வரத்தினமும் குடிப்பதற்காக சென்றோம்.


ஒயின்ஷாப்பின் மதுக்கூடங்களில் அதிக கரப்பான்பூச்சிகள் வளர்க்கபடுகின்றன. அவற்றை குடிகாரர்கள் நேசிக்கிறார்கள். போதையில் பேச ஆள்கிடைக்காத போது கரப்பான்பூச்சிகளோடு பேசுகிறார்கள். சேர்த்து குடிக்கிறார்கள். நான் போதையேறி செல்வரத்தினத்திடம் நமது மேலாளராக உள்ள மணிநாராயணைக் கொல்ல வேண்டும். அவன் ஒரு பெருச்சாளி போல நம் உழைப்பை தின்று ஊதிக் கொண்டு வருகிறான் என்று கத்தினேன். அவன் கட்டுபடுத்த முடியாமல் அழுதான். விற்பனை பிரதிகள் அழுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதை நானும் அறிவேன். ஆகவேஅவனோடு சேர்ந்து அழுவதற்கு முற்பட்டேன். என்னால் அப்படி பொது இடத்தில் அழ முடியவில்லை. செல்வரத்தினம் அழுவதை கண்ட ஒரு குடிகாரன் அவன் மீது அன்பாகி தனது மதுவை பகிர்ந்து கொண்டான்.


அப்போது எனது இருக்கையின் அருகில் உள்ள செங்கல் சுவரில் ஒரு கரப்பான்பூச்சி நின்றபடியே என்னை பார்த்து கொண்டிருந்தது. அது என்னோடு பேச விரும்புகிறதோ எனும்படியாக அதன் பார்வையிருந்தது. நான் என்ன பேசுவது என்று புரியாமல் அதை தவிர்க்க துவங்கினேன். என்றாவது இப்படியொரு இக்கட்டு உருவாக கூடும் என்று எனக்கு தெரியும். ஆனால் அதை இந்த நிலையில் என்னால் எதிர்கொள்ளமுடியவில்லை. ஆகவே நான் கோபத்துடன் கரப்பான்பூச்சிகளை விரட்டியடிங்கள் என்று கத்தினேன்.


அங்கிருந்த பணியாளர்கள் எவரும் அதைக் கேட்டுக் கொள்ளவேயில்லை. அந்த பூச்சி திமிரோடு என்னை பார்த்து கொண்டிருந்தது. எனக்கு குற்றவுணர்ச்சியானது.நான் உடனே அந்த இடத்திலிருந்து வெளியேறி தனியே நடக்க ஆரம்பித்தேன்.


குற்றவுணர்ச்சி என்பது ஒரு மோசமான வியாதி. அதை ஒரு போதும் வளர விடவே கூடாது. இல்லாவிட்டால் அது நம்மை வாழவிடாமல்செய்துவிடும். நீண்டநேரம் கடற்கரை சாலையில் சுற்றியலைந்துவிட்டு அறைக்கு திரும்பினேன். உறக்கம் கூடவேயில்லை. சுழல்விசிறியை பார்த்தபடியே படுத்துகிடந்தேன். நான் படித்திருக்கிறேன் என்பது தான் பொது இடங்களில் அழமுடியாமல் என்னை தடுக்கிறது என்பதே அன்றிரவே கண்டுபிடித்தேன்.


அந்த வயதானவரை திரும்பச் சந்தித்துவிடக்கூடாது என்பதற்காகவே அதன்பிறகு நான் தரமணி பகுதிக்கு வேலையை மாற்றம் செய்து கொண்டுவிட்டேன். அது வசதியானவர்கள், மென்பொருள்துறை சார்ந்த அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகள் உள்ள பகுதி. ஆகவே எளிதாக விற்பனையில் சாதனை படைத்து பதவிஉயர்வு பெற்றுவிடலாம். தரமணியில் பூச்சிமருந்துவிற்பதற்கு பெரிய போட்டியே இருந்தது.


நான் காய்களை நகர்த்தி அந்த இடத்தை பிடித்து கொண்டுவிட்டேன். மற்ற பகுதிகளோடு ஒப்பிடுகையில் தரமணியில் பொருட்கள் விற்பது எளிதாகவே இருந்தது. தரமணியில்கரப்பான்பூச்சிகள் கூட ஆங்கிலம் பேசுகின்றன. அவை மற்ற பகுதியில் காணப்படுவது போல பயந்து ஒடுவதில்லை. மெதுவாகவே செல்கின்றன. அங்கே எளிய இதயம் கொண்டவர்கள் அதிகமிருக்கிறார்கள். ஆகவே நான் ஒரு நாளில் ஐநூறு தெளிப்பான்கள் வரை கூட விற்க முடிந்தது. அத்துடன் தெளிப்பான்கள் அறிமுகத்திற்கு என்று தொலைபேசியில் நேரம் குறித்துவிட்டு விற்க போகலாம். கரப்பான்பூச்சி பற்றி பேசுவதை ரசித்து கேட்கிறார்கள்.


அப்படியொரு நாள் சீவியூ டவர்ஸ் உள்ளே ஒரு வீட்டிற்கு தெளிப்பான் அறிமுகம் செய்ய போய்விட்டு திரும்ப வெளியே வந்த போது குடியிருப்பின் காவலாளி என்னைப் பிடித்து கொண்டுவிட்டான். பதிவுபுத்தகத்தில் நான் கையெழுத்து இடவில்லை என்பதைக் காரணம் காட்டி என்னைத் திருடன் என்று அவன் சந்தேகபட துவங்கினான்.


நான் அடையாள அட்டைகள், தெளிப்பான்களை காட்டிய போதும் நம்பிக்கை கொள்ளவேயில்லை. என்னைப் பிடித்து போலீஸில் ஒப்ப்படைப்பதன் வழியே தனது வேலையில் முன்னேற்றம் காண அவன் விரும்புகிறான் என்று புரிந்தது. நான் அதற்கு என்னை ஒப்பு கொடுத்தேன். நன்ழ்ஸ்ண்ஸ்ஹப் ர்ச் ற்ட்ங் ச்ண்ற்ற்ங்ள்ற். எவ்வளவு அழகான வாசகம்.


அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று என்னை ஒப்படைத்தான். நான் ஏதாவது திருட முற்பட்டேனா என்று காவலர்கள் அவனிடம் விசாரித்தார்கள். அவன் நீண்ட விளக்கம் தந்து கொண்டிருந்தான். மாலை வரை என்னை காவல்நிலையத்தில் உட்கார வைத்திருந்தார்கள். காவல்நிலையத்திற்குத் தேவைப்படுகிறது என்று இரண்டு தெளிப்பான்களை இலவசமாக வாங்கி கொண்டு என்னை இரவில் வெளியே அனுப்பிவைத்தார்கள். அன்று இந்த வேலையை விட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் உண்டானது.


யாரிடமாவது ஆலோசனை கேட்கலாம் என்று நினைத்தேன். மணிநாரயணன் நினைவு வந்தது. அவரிடமே கேட்டால் என்னவென்று இரவோடு அவர் வீட்டிற்கு போய் நின்றேன். அவர்வீட்டின் வரவேற்பரையில் உட்கார வைத்து குடிப்பதற்கு பில்டர் காபி தந்தார். சுவரில் மிகப்பெரிய தொலைக்காட்சியிருந்தது. அதி நவீனமான சோபா, அலங்காரமான சுவர் ஒவியங்கள். மீன்தொட்டிகள். கரப்பான்பூச்சிகள் அவரை சுகபோகமாக வாழவைத்து கொண்டிருக்கின்றன.


மணிநாராயணன் என் பிரச்சனைகளைக் கேட்டு சிரித்தபடியே நீ ஏன் குற்றவுணர்ச்சி கொள்கிறாய். நீயா கரப்பான்பூச்சிகளை கொல்கிறாய். அது ஜெர்மன் நிறுவனத்தின் வேலை. நாம் வெறும் அம்புகள். கர்த்தா அவனே என்று பகவத்கீதை போன்ற நீண்ட உரையை வழங்கினார். நான் அவரிடம் உங்களைப் போல நான் ஆக வேண்டும் அதற்கு என்ன செய்வது என்று நேரடியாக கேட்டேன்.


அவர் சிரித்தபடியே மனிதர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய பயம் எப்போதும் அதிகம். அதன் ஒரு அடையாளம் தான் கரப்பான்பூச்சி. அது ஒருவேளை நம்மை கடித்துவிட்டால் என்னசெய்வது என்ற பயமிருக்கிற வரை நாம் சந்தோஷமாக இருக்கலாம். ஆகவே எந்த வீட்டின் கதவை தட்டும்போதும் உன்னை ஒரு தேவதூதனைப் போல நினைத்துக் கொள். அவர்களை மீட்பதற்காகவே நீ வந்திருப்பதாக நம்பு. இரண்டு மாசத்தில் நீ மேலே போய்விடுவாய் என்றார்.


எவ்வளவு ஆறுதலான வார்த்தைகள். மறுநாளே இதை நடைமுறைபடுத்த துவங்கினேன். என் பேச்சில் கண்களில் புதிய நம்பிக்கை பீறிட்டது. என் சொற்களை நகரவாசிகள் நம்பினார்கள். ஒரு ஆள் ஒரே நேரம் மூன்று தெளிப்பான்களை வாங்கினான். அந்த அளவு நான் பேசி மயக்க தெரிந்து கொண்டுவிட்டேன். ஆங்கிலம் ஒரு வசதியான மொழி. அதில் தான் எவ்வளவு லாவகம், எவ்வளவு சூட்சுமம்.


மணிநாராயணன் சொன்னது உண்மை. நான் இலக்கை மீறி விற்றுச் சாதனை செய்திருந்தேன். அலுவலகமே விடுமுறை தந்து ஒய்விற்காக ஒரு வார காலம் கோவாவிற்கு அனுப்பி வைத்தது. கூடுதல் சம்பளம். வாகன வசதிகள். அத்தோடு இப்போது எனக்குக் கிழேஆறு பேர் வேலை பார்க்கிறார்கள். நான் மணிநாராயணன் இடத்தை ஒரு வருசத்தில் அடைந்துவிடுவேன். இயற்கை மனிதர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். அது நிஜம்.


உங்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் கரப்பான்பூச்சிகள் இருக்ககூடும். அவற்றை அலட்சியமாக பார்க்காதீர்கள். அவை ஒழிக்கபட வேண்டியவை. என்னை அறிந்து கொண்ட உங்களுக்காக நாற்பது சதவீத சிறப்புசலுகை விலையில் தெளிப்பான்களை தருகிறேன். விருப்பம் இருந்தால் நீங்கள் என்னை எப்போதும் அழைக்கலாம். வீடு தேடி வந்து இலவசமாக விளக்கம் தர தயாராக இருக்கிறேன்.

**

சென்ஷி

unread,
Oct 2, 2010, 3:12:56 AM10/2/10
to panb...@googlegroups.com

ஈரம்

சுப்ரபாரதிமணியன்

============================

கதவை அடைப்பதற்கான நேரம் வந்து விட்ட்டது. இந்த நேரம் இப்போதெல்லாம் முன்னதாகவே வந்து விடுகிறது. மாலை ஆறு மணிக்கு என்று முன்பிருந்தது. சமீபமாய் குறைந்து இன்னும் முன்னதாகவே என்றாகிவிட்டது. கதவை அடைப்பதைத்தவிர வேறு வழியில்லை என்பதை சிவக்கண்னனும் உணரந்திருந்தான்.

செல்வி கதவையடைப்பதற்கு முன் பனியன் கம்பெனியின் வேலை முடிந்து போதும் வேலை என்று புறந்தள்ளி விட்டு வருபவள்தான். ஆனாலும் ஏழெட்டு மணியாகி விடுகிறது. நன்கு இருட்டின பின்பு வந்து கதவைத் தட்டும் பேர்வழியாக மாறி விட்டாள். அவன் கதவைத்திறக்கிற ஒவ்வொரு நாளும் கத்துவது இப்படித்தான் இருக்கும். : " முந்தியே வந்து தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்ற உசிரெ வாங்கறே"

அணையிலிருந்து வரும் பூச்சிகளிலிருந்து தப்பிப்பதற்காகக் கதவை அடைக்க வேண்டியிருக்கும். அணையைச் சுற்றியிருக்கிற எல்லா வீடுகளிலும் இப்படித்தான். முன்பெல்லாம் கொசுவை அடிப்பது போலத்தான் நினைத்து உடம்பில் ரத்தக்கறைகளைக் கொண்டிருந்தான். கொசுக்கள் ரொம்பவும்தான் கொழுத்துத் திரிகின்றன என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவை கொசுக்களல்ல என்று தெரிந்தற்கே பல மாதங்களாகி விட்டன. அவை ஏதோவகைப் பூச்சிகள் , ரசாயனப்பூச்சிகள்ள்.

அணையில் தேங்கி நிற்கும் ரசாயனக் கழிவுகளைத் தின்று பெருத்து விட்டன. ரசாயனக்கழிவுகளின் மினுங்கும் வர்ணங்களில் எவையும் வீழ்ந்து விடும். இந்தப்பூச்சிகளும் விழுந்து எழுகிற போது ராட்சதையாக மாறி விடும். இல்லாவிட்டால் எப்படி இவ்வளவு žக்கிரம் கொழுக்கும். விவசாயத்திற்கென்று கட்டப்பட்ட அணை. சாயக்கழிவுகள் ஆற்றில் கலந்தோடி வந்து நிற்கிற இடமாகி விட்டது.

. அணை நிரம்பி விட்டது . வெடிக்கவிருக்கும் வெடிகுண்டைப்போல தகதகத்து நிற்கிறது. மதகுக் கதவுகள் இற்றுப் போய் விட்டன. அணைக்கதவுகளித் திறந்து விட வேண்டும். இல்லாவிட்டால் நீர் மெல்ல மெல்ல வழிய ஆரம்பிக்கும். அணை நிரம்பிய பின்பு திறந்து விடாமல் இருக்க முடியாது. சமீபமாய் பெருத்த மழை பெய்து விட்டது. திறந்து விட வேண்டாம் என்று கரையின் ஓரத்தில் இருக்கும் விவசாயிகள் கதறுகிறார்கள். சாயக்கழிவு தண்­ர்ரோடு கலந்து இருபது மைல்களுக்குப் பரவ எல்லாம் சாயமாகி விடுகின்றன என்று தூரத்து ஊர்காரர்களெல்லாம் அலறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிவக்கண்ணனுக்கு எல்லாம் மூழ்கிப்போய் விட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். சாயங்களை அடித்துக் கொண்டு போவதற்கு பதிலாக மனிதர்களை கும்பல்கும்பலாக அடித்துக் கொண்டு போகட்டும் என்றிருக்கும்.

கதவை அடைத்து விட்டால் இருக்கும் அசௌகரியங்களில் ஒன்று தண்­ர் லாரிகளின் பிரத்யேக ஓசையும் தட தடப்பும் சரியாகக் கேட்க முடியாமல் போவதுதான். அ€ணைக்கட்டும், சுற்றியுல்ள நிலமும் சாயம் பூத்து விட்டன.குடிப்பதற்கு லாயக்கற்று போய்விட்ட போது நாற்பது கி மீ க்கு அப்பாலிருந்து தடதடத்து தண்­ர் லாரிகள் வந்து போகின்றன. குடிக்கிற தண்­ரை ஏற்றி வரும் தண்­ர் லாரிகள். கதவை அடைத்து விட்டால் கதவுகளுக்குப் பின்னாலும் ரசாயனப்பூச்சிகளின் ரீங்காரம் கேட்டு விடுவதால் தண்­ர் லாரிகளின் ஹாரன் சப்தங்கள் சில சமயங்களில் கேட்காமல் போய் விடுவதுண்டு. யாராவது கதவைத் தட்டி சொல்லி விட்டுப் போங்களேன் என்று சிவக்கண்னன அலறியிருக்கிறான். ரசாயனப்பூச்சிகளின் ரீங்காரத்துக்குள் எல்லா கதறல்களும் அடக்கம் என்பது போலாகிவிட்டது.

ரசாயனப்பூச்சிகளை விரட்டுவதற்காக ஆளுக்கொரு உபாயம் வைத்திருக்கிறார்கள். சிவக்கண்ணனுக்கு எல்லாமே வினேதமாகத்தான் தெரிந்தன. கைகளை அப்படியும் இப்படியும் ஆட்டி பயமுண்டாக்கி துரத்திவிடலாம் என்றுதான் முன்னம் நினைத்திருந்தான். ஆனால் தேனடையை மேய்க்கும் தேனீக்கள் மாதிரி கொசகொசவென்று உடம்பை மொய்ப்பது சாதரணமாகிவிட்டது. சிவக்கண்ணனுக்குத் தெரிந்த ஒரே வித்தை வேப்பிலை புகை போடுவதுதான். முன்பெல்லாம் கொழுந்தை விட்டு விட்டு முற்றின இலைகளய்க் கொண்டு வந்து போட்டு புகையெழுப்புவான். கமறலுடன் அறைகள் முழுக்கப் பரவும். இப்போதெல்லாம் எவ்வளவு அடர்த்தியாய் புகை கிளம்பினாலும் கமறல் வருவதில்லை. முத்துசாமி செய்யும் வித்தையும் செலவும் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. டுயூப்பிலிருந்து பற்பசை மாதிரி எதையோ பிதுக்கிக் -காள்வான். உள்ளங்கையில் வைத்து நசுக்கிக் கொண்டு முகர்ந்து பார்ப்பான். சரசரவென்று கைகள் மற்றும் கால்களில் பரவலாகத் தேய்த்துக் கொள்வான்.

" பறக்கிற டைனோசர் இருக்கா'

" இருந்திருக்கும் .இல்லீனன்ன நாலெட்டு வச்சு ஒரு தெருவையேன் அடச்சிக்குற டைனசரை சினிமாவிலெ காமிப்பாங்களா "'. அவன் டுயூப் பிதுக்கலுக்கென்று செலவு செய்யும் தொகை செல்வியின் ஒரு வாரச் சம்பளத்திற்கு ஏக தேசம் வந்திருந்தது. லாரித்தண்­ரை நம்பாமல் மினரல் வாட்டர் கேனை ஊருக்குள் கொண்டு வந்தவன் முத்துசாமி என்ற பெயரும் பெருமையும் ஊருக்குண்டு. சிறுவாணித்தண்­ரின் சுவையை விட மினரல் கேன் தண்­ரின் சுவை அவனை திணறடித்தது என்பது சமீப சாதனை. இன்னொரு சாதனைச் செய்தி சமீபமாய் பதிந்தது என்னவென்றால் ஆயுத பூஜையின் போது செல்வி அவள் வேலை செய்யும் பனியன் கம்பனியிலிருந்து வழக்கமாய் கொண்டு வரும் பத்து படி பொட்டலத்துடன் ஒரு

டி சட்டையையும் கொண்டு வந்தது. கிடைத்த டி சட்டையைப் போடப்போகிற கற்பனை அவனைச் சுத்தமான அணை நீருக்குள் நீச்சடிக்க இறக்கி விட்ட மாதிரி இருந்தது. டி சர்டின் நீலமும் பச்சையும் சிவப்பும் கலந்த வர்ணக் கல€வை அவனுக்குப் பிடித்திருந்தது. " நம்ம ஊரு அணையில உங்களை முக்கி எடுத்த மாதிரி இருக்கீங்களோ" ரசாயனப் பூச்சியென்று அவனை அவள் சொல்லாதது ஆறுதலாகத்தான் இருந்தது.

தண்ணிர் லாரி நேற்றுதான் வந்திருந்தது.இன்றைக்கு வராது என்பது மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. கதவைச் சாத்திவிட்டுப் புகை போடலாம்.. ஆரம்ப நிலையிலானக் கமறலைத் தவிர்த்து விட்டால் மூச்சு முட்டுவது கூடத் தெரியாது. கமறல் இல்போதெல்லாம் அபூர்வமாகத்தான் வருகிறது.

வேப்பிலைகளை மூலையில் சேர்த்திருந்தான். நேற்று நல்லூர் போனபோது வேப்பிலைலளைப் பறித்து பிளாஸ்டிக் பை ஒன்றில் நிரப்புவதற்கென்று ரொம்பதூரம்தான் போக வேண்டியிருந்தது. பக்கத்து கிராமங்களில் இருக்கும் மரங்களெல்லாம் மொட்டையாகி விட்டன. நல்லூர்ப்பக்கம் போகிற போது வெளுத்ததாய் சில தென்படும் விளக்கெண்ணெயைக் கண்களில் ஊற்றிக் கொண்டு பார்க்க வேண்டியிருக்கும். வேப்பங்குச்சிகளையும் கொஞ்சம் ஒடித்துப் போட்டுக் கொள்வான். பற்கள் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டன. கிருஸ்ணமூர்ர்த்தி பிரஸ் போட வேண்டாம். கைகளில் விளக்கவும். பற்பசை வேண்டாம் .ஆயுர்வேதப் பல்பொடி போதும். வேப்பங்குச்சி குறைந்தது நான்கு நாட்களுக்காகும். ஒரு முனையை ஒரு நாள் என்று ஆரம்பித்து நான்கு நாளில் பிடி அளவிற்கு வரும் வரையில் உபயோகப்படுத்துவதில் தன்னைத் தேர்ச்சியுள்ளவனாக்கிக் கொண்டான்.

புகை போடும் மண் சட்டிகள் அடிக்கடி உடைந்து போகின்றன.. சூடான நிலையில் அவற்றை கையில் தொடுவதும் , நகர்துவதும் சிரமமாக இருந்தது. பழைய ஒடுக்கு விழுந்த அலுமினியச் சட்டியை சமீபமாய்ப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தான். செத்த எலியைத் தூக்குவது மாதிரி அலுமினியச் சட்டியைப் பயன்படுத்துவது அவனுக்குச் சுலபமாக இருந்தது..

வேப்பிலை பழுப்பு நிறத்துடன் துவண்டு போய் விட்டது. பிளாஸ்டிக் பையிலிருந்து கொட்டும் போது காய்ந்த இலைகளுக்கான சரசரப்பு வந்து விட்டது. காகிதங்களைப் போட்டு தீ மூட்டினான். சோம்பலுடன் எரிய ஆரம்பித்தது. ஒரு சொட்டு விளக்கெண்ணை அல்லது பெற்றோல் இருந்தால் சுலபமாகப் பற்றிக் கொள்ளும். குனிந்து ஊத சாம்பல் துணுக்குகள் முகத்தில் தெறித்தன.

மெல்ல புகை பரவ ஆரம்பித்ததும் முன் பக்க அறையின் இடது மூலையில் வைத்தான். உள் அறைக்குள் மெல்ல புகை பரவும் . தூக்கம் வரவில்லையென்றாலும் கண்களை மூடிக்கொண்டு கிடக்கல்லாம். ரசாயனப் பூச்சிகள் எங்காவது மூலைகளில் ஒதுங்கிக் கொள்ளட்டும். அவனே அவனைப் பாராட்டிக்கொள்வதைப் போல் வலது கையின் மேற்பகுதியைக் கொசுவை அதட்டுவது போலத் த்ட்டிக் கொண்டான். மெல்ல புகை ஆரம்பித்தது. லேசான கமறல் வந்தது ஆச்சர்யமாக இருந்தது. புகையினுள் மூழ்க ஆரம்பித்தான். இடது கையில் வந்து தைரியமாக உட்கார்ந்தது ஒரு ரசாயனப் பூச்சி. புகையை விழுங்கி அது சிவக்கண்ணனின் பாதி உடம்பிற்கு வந்தது. வாயைத் திறந்த போது புகை வெளிவந்தது. கண்களைச் சிமிட்டிக் கொண்டு அது வாயைத் திறந்தது.

* பத்திரிக்கையாளர் சந்திப்பிற்காக சிவக்கண்ணனை உட்கார வைத்திருந்தார்கள். பத்திரிக்கையாளார் சங்கத்தின் பெயர் அவன் தலைக்குப் பின்புறம் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

முன்னால் போடப்பட்டிருந்த நாற்காலிகள் அடைபட்டிருந்தன. ஏகதேசம் நாற்காலிகளில் அடைபட்டிருந்தவர்களின் கைகளில் இருந்த கேமிராக்கள் ஒரே சமயத்தில் ஒளிர்ந்து நின்றன. வந்து சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் வெவ்வேறு நேரங்களில் வந்த காரணத்தால் அவர்கள் கேட்டது ஒரே மாதிரியான கேள்விகள் சிவக்கண்ணனுக்கு அலுப்பைத் தந்திருந்தது.

சிவக்கண்ணனுக்கு கால்களில் ஒரு வலி ஆரம்பித்திருந்தது. வலது காலை எடுத்து இடது காலின் மேல் போட்டுக் கொண்டான். ஒருவகை ஆசுவாசமாய் பெருமூச்சு வந்தது.. பெரும்பான்மையோர் கேட்ட கேள்வி; :"ரசாயனப் பூச்சியை இந்த வெற்றிப் படத்தில் நடிக்க வைப்பதற்காக நீங்கள் எப்படி அதன் மொழியை புரிந்து கொண்டு கட்டளையிட ஆரம்பிதீர்கள் "

ரரசாயனப் பூச்சியைப் பார்த்தான், தனது இடுப்பு உயரத்திற்கு இருந்தது. முப்பது நாற்பது கிலோ எடையாவது இருக்கும். சற்று சிரமப்பட்டுதான் இடுப்பில் அதை வைத்து இடுக்கிக் கொண்டு ஸ்டுடியோவிற்கும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கும் சென்றிருந்தான். அதன் கண்களில் ஒளிர்ந்த ஒளியில் இருட்டான பகுதி வெளிச்சமாகி இருந்தது. ஏதாவது சிரமம் வருகிற போது ராட்சத பூச்சியின் நகங்களச் சுலபமாக தற்காப்பிற்கென்று பயன்படுத்திக் கொள்ளலம். அவ்வளவு சௌகரியமான நீளத்தில் இருந்தது.

" படத்தில் ராட்சத மனிதர்களியெல்லாம் செத்த எலிகளத் தூக்கிப் போடுவது போல போடுகிறாயே ரசாயனப் பூச்சியே, உனது அன்பு முகத்தை தடவலாமா." பெண் நிருபர் ஒருத்தி கேட்டாள். அவளின் கண்களில் ஒரு வகை பயம் இருந்தது. கேள்விகளைக் கேட்டு விட்டு நாற்காலியிலேயே உட்கார்ந்திருந்தாள். " என்ன எதிர்பார்க்கிறிர்கள். எனது ராட்சத பூச்சி உங்களை நெருங்கி முத்தமிட வேண்டுமா அல்லது பலத்காரம் செய்ய வேண்டுமா " சிவக்கண்ணன் ஆங்கிலத்தில் கேட்டபடி முறுவலித்தான். பெண் நிருபரும் சிரித்தாள். லேசான லிப்ஸ்டிக் அவளின் உதட்டை வžகரமாக்கியிருந்த்து. அவள் போட்டிருந்த காலர் சட்டையில் பறந்து கொண்டிருந்தது ஒர் பட்சி. ரசாயனப் பூச்சி காலர் சாட்டையில் இருந்த பட்சியஈப் பார்த்துக் கொண்டிருந்தது. உடம்பை அசைத்துக் கொண்டிருந்தாலும் பட்சி சற்றே பறப்பது போலக் க'ட்சியளித்தது.

" நீ துவம்சம் செய்ய யார் யாரோ இருக்கிறார்கள். தீயது தோற்கும்." என்ற தர்மத்தை நீயும் வெற்றி பெற்றுச் சொல்லிக்கொண்டிருக்கிறாய் இப்படத்தில். ஆனால் நீ ரசாயனப் பூச்சியாக இல்லாமல், கிருஸ்ணப்பருந்தைப் போலவோ, ராட்சதப் புறாவைப் போலவோ இருந்திருந்தால் உனக்கு கோவில் கட்டலாம். "கிழ நிருபரின் தாடி ஏக தேசம் வெளுத்திருந்தது மீசைக்கு மட்டும் டை அடித்து அழுத்தமான கறுப்பாக்கியிருந்தார். அவர் போட்டிருந்த முரட்டுக் கதர் சட்டையின் அழுக்குச் சட்டைக்குப் புது நிறத்தைக் கொண்டு வந்திருந்தது.

" சினிமாவில் நடிக்கிற எல்லோருக்கும் கோவில் கட்டி விடுவீர்கள் போலிருக்கிறது. கதாநாயகர்கள், நாயகிகள் மூலஸ்தானத்தில் இருக்கும் போது இது போன்ற பட்சிகளும் ராட்சதபறவைகளும் மூல ஸ்தானத்தைப் பிடிக்க முடியாதே " சொல்லி வைத்த மாதிரி எல்லா காமிராக்களும் மிளிர்ந்து மறைந்தன. வீடியோ காமிராக்களின் பிரேமிற்குள் ரசாயனப்பூச்சியின் ஒளிரும் கண்களை அடைத்தார்கள். எல்லோரும் வேலை இருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் போல அவசர கதியில் எழுந்தார்கள்..

" ராட்சத மனிதர்களையெல்லாம் அலாக்காகத் தூக்கிப் போடும் இப்பூச்சி ரசாயன அணைக்கட்டை வாரியெடுத்து எங்காவது கொண்டு போய் விடலாம் ". பூச்சியை நெருங்கியவர் சிவக்கண்ணனைப் பார்த்தபடி சொன்னார். திகைப்பில் பூச்ச்சியின் கண்கள் மிளிர்ந்தன.

" தற்கொலை செய்து கொண்ட நடிகையின் அம்மா பேட்டி அடுத்த ஒரு மணி நேரத்தில் இருக்கிறது. நட்சத்திர ஓட்டலில் நடிகையின் தற்கொலை பற்றின கிசுகிசுக்களுக்கு முறையான பதில் கிடைக்கலாம். நடிகையின் குடிப்பழக்கமும், மூன்றாவது காதலன் அவளைத் திருமணம் செய்து கொள்ள தாமதப்படுத்தியது பற்றி நிறைய ஹேஸ்யங்கள் கிடைக்கும். " கலைந்து போவதில் žரான வேகம் இருந்த்து. பெண் நிருபர் ரசாயனப் பூச்சியின் அருகில் வந்தாள். அவளின் காலர் சட்டையில் இருந்த பட்சி மெல்லப் பறந்து கொண்டிருந்தது. ராசாயனப்பூச்சியின் சொரசொராக் கன்னத்தைத் தடவினாள். பூச்சிகிறங்கிப்போனது போல கண்களை மூடியிருந்தது. கண்களைத்திறக்காதபடி இறுக்கியிருந்த்து. வெடுக்கென்று வலது பக்க இறக்கையொன்றை பிய்த்தெடுத்தாள். பூச்சி ஒருவகை வலியை மூடிமறைப்பதற்காக இன்னும் கண்களை மூடியிருந்தது. கண்களைத் திறக்காதபடி இறுக்கியிருந்தது. வெடுக்கென்று வலது பக்க இறக்கையொன்றை பிய்த்தெடுத்தாள். பூச்சி ஒருவகை வலியை மூடி மறைப்பதற்காக இன்னும் கண்களை மூடியபடியே இருந்தது. " சினிமாவில் நடித்த ராட்சச பூச்சி ஆயிற்றே.. ஞாபகமாக இருக்கட்டுமே " . இன்னொரு நிருபர் சற்றே முதிர்ந்த இறக்கையினைப் பிய்த்தெடுத்தார். ஒருவகை வரிசை அமைந்து விட்டது. வருகிற ஒவ்வொருவரும் ராட்சதப்பூச்சியின்யைத் தொட்டு அவர்களின் கைவிரல்களின் வலிமைக்கேற்ப அதன் உடம்பிலிருந்து எதையாவது பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். " பெர்லின் போயிருந்த போது கிழக்கு செர்மனிக்கும், மேற்கு செர்மனிக்கும் இடையிலான பெர்லின் சுவரின் இழந்த இடிந்த துண்டை எடிடுத்து வந்து வீட்டில் வைத்திருக்கிறேன். இதுவும் இருக்கட்டுமே" ராட்சதப்பூச்சி அதன் இறகுகளை மெல்ல இழந்து முழு நிவாணமாகிக் கொண்டிருந்தது. அதன் கண்களில் ஒளி வலுவிழந்திருந்தது. ஒரு வாகை சோம்பல் தன்மையுடன் கண்களைத் திறந்து மூடியது. கண் புருவத்திற்கு மேலிருந்த மயிர்களும் உதிர்ந்திருந்தன. சமையலுக்கென்று சுத்தம் செய்யப்பட்ட கோழி போல் பூச்சியின் உடம்பு நிர்வாணமாகிச் சிறுத்தது. ஓங்கித் தட்டினால் கொசுவைப் போலச் சிறுத்துவிடும் என்றபடி வலது கையினை முழுபலத்தையும் பிரயோகித்து கீழிறக்கினான்.

வேப்பிலை புகை முழுசாகக் குறைந்து போயிருந்தது. கண்களைத்திறக்காதபடி எரிச்சல் அப்பியிருந்ந்தது. வலது கையை உயர்த்தித் தாழ்த்தியபோது சற்றே ஈரம் தென்பட்டது. கொசு ஒன்றின் ரத்தக் கசிவு பிசுபிசுப்பாக ஒட்டியிருந்தது.

சென்ஷி

unread,
Oct 2, 2010, 3:54:12 AM10/2/10
to panb...@googlegroups.com
அரசனின் பள்ளிக்கூடம் (2010-09-16) - அ. முத்துலிங்கம்
     

எத்தனை முறை சொன்னாலும் என் மகனைத் திருத்த முடியாது. அவனுக்கு எட்டு வயது, மகளுக்கு நாலு. அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். இவன் எசமானன், அவள் வேலைக்காரி. இவன் மேசையிலிருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். வேலைக்காரி வீடு கூட்டினாள். பின்னர் சமையல் அறையை சுத்தமாக்கினாள். இவன் வயிறார சாப்பிட்டுவிட்டு கதிரையை பின்னாலே தள்ளிவிட்டு எழுந்து சென்றான்.  அவள் கோப்பையை கழுவினாள்.

அடுத்த விளையாட்டு. இவன் பள்ளிக்கூட ஆசிரியன். அவள் அடியும் திட்டும் வாங்கும் மாணவி. இவன் ரயிலை ஓட்டும் எஞ்சின் டிரைவர், அவள் கரி அள்ளிப்போடும் ஊழியன். இவன் கம்பனி மனேஜர். அவள் கைகட்டி நிற்கும் சேவகி.  நானும் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டேன். அவள் ஒரு முறை ராணியாக இருக்கலாம். நீ காவல்காரனாக வேடம் போட்டு விளையாடலாம். அவன் சரி அப்பா என்பான், ஆனால் நடைமுறைக்கு வராது.

மகளிடம் சொல்வேன் நீ சம உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது என்று. அவள் அது என்னவென்று கேட்பாள். அவளுக்கு பயம். அண்ணன் தன்னை விளையாட்டில் சேர்க்காமல் விட்டுவிடுவானோ என்று. அவனோடு விளையாடுவதற்காக அவள் என்னவும் செய்யத் தயாராக இருந்தாள்.

அவர்கள் இருவரையும் உட்காரவைத்து மகாபாரதம் கதை சொன்னேன். அவன் சிரிக்கும் இடங்களில் அவளும் சிரித்தாள். அவன் பாதியில் எழும்பி நின்று அம்பு விட்டால், அவளும் விட்டாள். அருச்சுனனுடைய வில்லின் பெயர் காண்டீபம் என்றேன். அங்கேதான் பிரச்சினை முளைத்தது. மகன் சிரிக்கத் தொடங்கினான். மகளும் சிரித்தாள். ‘நாங்கள் வளர்க்கும் மாடு, நாய், பூனைக்கு பெயர் வைப்போம். யாராவது வில்லுக்கு பெயர் வைப்பார்களா?’
‘அந்தக் காலத்து அரசர்கள் வைத்தார்கள்.’
‘காண்டீபம் என்று கூப்பிட்டவுடன் வில் ஓடிவருமா?’ என்றான். விழுந்து விழுந்து சிரித்தான். அவனிலும்கூட மகள் சிரித்தாள். மகாபாரதம் கதை நிறுத்திவைக்கப்பட்டது.

அடுத்தநாள் திங்கட்கிழமை காலை. மகன் அறையில் சத்தம் வந்துகொண்டிருந்தது. எட்டிப் பார்த்தேன். கால்களை அகட்டி வைத்து இரண்டு இடுப்பிலும் கை வைத்துக்கொண்டு மகன் நின்றான். மகளின் உடம்பு குளிரில் நடுங்குவதுபோல ஆடிக்கொண்டிருந்தது.
‘பாசுபதம் எங்கே?’ என்றான் மகன். மகள் பென்சிலை எடுத்துவந்து நீட்டினாள்.
’சுதர்சனம்?’
அழிரப்பரை எடுத்துக்கொடுத்தாள்.
‘பாஞ்சசன்யம்?’
மகள் ஒருகணம் திகைத்து நின்று பின்னர் எல்லா திசைகளிலும் ஓடினாள். நினைவு வந்துவிட்டது. அவனுடைய கொப்பியை எடுத்து சுருட்டி வாயில் வைத்து ஊ என்று ஊதிக் கொடுத்தாள்.
‘காண்டீபம், காண்டீபம் எங்கே?’ என்று கத்தினான் மகன். அவன் கோபமாக நின்றான். இலை துடிப்பதுபோல மகளின் கைகள் நடுங்கின.  ரூலர் தடியை எடுத்து குனிந்தபடி நீட்டினாள்.

மன்னர் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டுவிட்டார்.
 

சென்ஷி

unread,
Oct 2, 2010, 4:34:04 AM10/2/10
to panb...@googlegroups.com

எதுக்குச் சொல்றேன்னா…
சார்வாகன்

அவன் பேசிக்கொண்டே போனான்: ” என்ன செய்கிறது சொல்லுங்கள். நாம் என்ன, கேட்டுக்கொண்டா பிறந்தோம். இல்லை, நம்முடைய அப்பா அம்மாவை நாமே தேடிக்கொண்டோமோ. யாரோ ரெண்டு பேர் என்னமாவோ முடிச்சுப் போட்டுக்கொண்டாங்க, நாம வந்து விழுந்தோம். பாலும் சக்கரையும் கலந்து வெக்கறப்போ ஈ வந்து விழுந்த மாதிரி. இது பொருத்தமில்லையோ? அப்போ சிரங்கிலே புழுவந்து தோணின மாதிரின்னு வெச்சுக்குங்களேன். எதுக்குச் சொல்றேன்னா , நாம வந்ததுக்கு நாம பொறுப்பாளியில்லே. ஆனாலும் வந்துட்டோம். வந்த பிறகு போகிறதுக்குள்ளே இருக்க வேண்டிய பொறுப்பு மாத்திரம் நம்மதாயிட்டுது. ஏன், நமக்குக்கூட சில சமயம் தோணுறதில்லையா, எல்லாத்தையும் ஒழிச்சிட்டு ஒரேயடியாப் போயிட்டா என்னன்னு? ஆனா எவ்வளவு பேர் அப்படித் துணிஞ்சு செய்யறோம். இயற்கையோட விதி நாம் இருக்கிறதுக்காகத்தான் வழி செய்துகொள்ளச் செய்யுதே தவிர இறக்கிறதுக்கு வகை செய்யறதில்லை. ஆனாலும் அதிசயம் பாருங்க, நாம் இருக்கிற ஒவ்வொரு நாளும் சாவை நோக்கியே ஒரு படி. எதுக்குச் சொல்றேன்னா, வாழ்வு என்கிறது பொறுப்பத்த வழியிலே ஆரம்பிச்சு, ஒரு நாள் நிச்சயமாப் பொக்குன்னு போகிற போக்கத்த வியாபாரம். இதிலே எதுக்கய்யா நாம அனாவசியமா நம்மைக் கஷ்டப்பட்டு வறுத்துஎடுக்கனும். என்ன வேதாந்தம் பேசறேன்னு பாக்கறீங்களா, வேதாந்தமும் இல்லை வெண்டைக்காயுமில்லை. அப்பட்டமான உண்மையைத்தான் சொல்றேன். உண்மைக்கும் பொய்க்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க. உண்மை மாதிரி இருக்கும், ஆனால் அது உண்மையில்லை, அதுதானே பொய்? வேதாந்தமும் அந்தமாதிரி பொய். நீங்களே சொல்லுங்க நம்ம வாழ்விலே எது நிஜம்? நேத்து நடந்ததெல்லாம் போயிட்டுது. செத்துப்போனது. நாளைக்கு வரப்போகிறது வந்த பின்னாலேதான் நிச்சயம். அதுவரைக்கிம் அதுவும் நிஜமில்லைதான். நாளைக்கு குத்தப்போகிற முள் இன்னிக்கு வலிக்குதா? இல்லை, முந்தாநாள் தின்ன பாகற்காய் இன்னிக்குக் கசக்குதா? சும்மா பிணத்திலே ஊறுகிற புழு மாதிரி முந்தாநாள் நடந்ததிலேயே மனசை நெளிச்சுக்கிண்டிருந்தா எப்பிடி சுகம் வரும். நாளன்னிக்கி வரப்போகிற ஜிலேபியை நெனைச்சு நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டிருந்தால் இன்னிக்கு வயறு நெறைஞ்சுடுமா?

தொடை மாமிசத்தைக் கடித்து இழுப்பதற்காகச் சில வினாடிகள் பேச்சை நிறுத்தின அவன் மீண்டும் தொடர்ந்தான். “எதுக்குச் சொல்றேன்னா, இப்போ, இந்த நிமிஷம், இந்த க்ஷணம்தான் நெஜம். அதுதான் உண்மை. அதுதான் எனக்குத் தெரியும். அதால்தான் என்னை உறைக்க முடியும். அதைத்தான் என்னால் உணர முடியும். மீதியெல்லாம் செத்ததோ, இல்லை இன்னம் பிறக்காத வெறும் கனவோதானே. ஆனாலும் பாருங்க, விஷயம் சுளுவாயில்லை. ஆழ்ந்து பார்த்தா இந்த நிமிஷம், க்ஷணம்கூட கொஞ்சம் வலுவில்லாததுதான். நிமிஷமோ வினாடியோ நின்னாத்தானே, அதுதான் ஓடிக்கொண்டேயிருக்கே, இதுதான் இந்த வினாடின்னு நான் எதைச் சொல்லுறது? சொல்லுகிறப்பவே ஓடிப் போச்சே, வேறே வினாடி வந்துட்டுதே. இந்த வயத்தெரிச்சலுக்கு என்ன செய்கிறது. அப்போ நிஜம்னு ஒண்ணும் கிடையாதா? எல்லாம் பொய்யின்னா அதிலேயும் ஒரு சங்கடம் இருக்கு.”

பேச்சை நிறுத்தி, எலும்பைக் கடித்து, உள்ளே இருந்த மஜ்ஜையை சத்தத்தோடு உறிஞ்சிக்கொண்டே பேச்சை விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தான்:

“எதுக்குச் சொல்றேன்னா, ‘நான்’ என்று சொல்லிக்கொள்கிற ஒண்ணாவது நிஜமா இருக்கணும். இல்லாதபோனா நானே, என் பேச்சும் எண்ணமும் உள்பட பொய்யாய்ப்போகிறேன். அதேமாதிரி இந்த வினாடி, இருக்கிறவரையில், நிஜமாக இருக்கணும், அது நிகழ்காலமாயிருக்கிறதனாலேயே. ஆனா, ‘நான்’ என்கிறதே கடந்த கால அனுபவமும் எதிர்காலக் கனவுகளும் பிண்டமான ஒண்ணுதானே. எல்லாம் பொய்யால் ஆன ‘நான்’ மட்டும் எப்படி நிஜமாயிருக்க முடியும்? இப்படியெல்லாம் சந்தேகத்திலே கடைக்காலெடுத்து, காலத்தையும் கனவையும் செங்கல்லாக்கி எழுப்பின கட்டிடம் நம்ம வாழ்க்கை. இதுலே நகாசு வேலை – நல்லது கெட்டது, புண்ணியம் பாவம், ஒன்னது என்னது, ஒசந்தது தாழ்ந்தது, நாகரிகம் அநாகரிகம், கவுரம் அகவுரம், வேண்டியது வேண்டாதது, பிடிச்சது பிடிக்காதது – எத்தனை போங்கள், இதெல்லாம் யாரை யார் ஏய்க்கிறதுக்குன்னு எனக்கே வெளங்கலை. எதுக்குச் சொல்றேன்னா, என்னைப் பொறுத்த மட்டிலே இதுலேயெல்லாம் அர்த்தமிருக்கிறதாகப் படவில்லை எனக்கு. நாம நல்லதென்னு நெனைச்சா நல்லது, இல்லையின்னா கெட்டது. நியூகினீக்காரன் நல்லதுன்னா தலையை வெட்டலையா, வெள்ளைக்காரன் நல்லதுன்னா வேண்டாதவங்களைச் சுட்டுப் பொசுக்கலையா, துரோணன்கூட ஏகலைவன் கட்டை விரலைக் கடிச்சுக்கலையா, எல்லாம் மனசுலேதான் இருக்குங்குறேன். எதுக்குச் சொல்றேன்னா, இதோ பாருங்க.. நீங்களும் நானும் இப்போ ரசிச்சுக்கிட்டு சாப்பிடுறோம், கறி எவ்வளவு ருசியாயும் மெதுவாயும் இருக்கு, இந்தக் கறி நடமாடிக்கிட்டிருந்ததைப் பற்றி யோசிக்கிறாமா. ரொம்பப் பேருக்கு யோசிக்கவே பிடிக்கிறதில்லை. ஏன் அப்பிடித் தெரியுமா? நடமாடறப்போ அங்கே இருந்த உண்மை வேறே. அது அப்போ சாப்பிடுற வஸ்துவில்லை. இப்போ அந்த உண்மை இறந்தகாலமாய்ப்போச்சு. இது வேறே உண்மை. சாப்பிடுற உண்மை. இதுதான் இப்போ உண்மை. இதைச் செத்துப்போன பழைய உண்மையோடே எப்படிச் சேர்த்துப்பாக்குறது? எதுக்குச் சொல்றேன்னா, நமக்கு புத்தி இருக்கு. விருப்பு வெறுப்பில்லாமல் கொஞ்சம் யோசனை பண்ணலாம். பண்ணனும். வார்த்தைகளைக் கண்டு மலைச்சுப்போகக் கூடாது. வார்த்தைகளோடே சண்டை போடக்கூடாது, வார்த்தைதான் வாயிலேயிருந்து வந்தா காத்தாப்போச்சே! இதைப் பாருங்க, இந்தக் கறி இன்னைக் காலலயிலேகூட ஓடியாடிக்கிட்டிருந்தது. அப்போ அதுக்குத் தெரியாது, இப்போ நம்ம வயித்துக்குள்ளே போகப்போகிறோம்னு. கொஞ்சிற்று. பாட்டுப் பாடிற்று. ஒரு க்ஷணம் அது இருந்தது. ஒரு வெட்டு. மறு க்ஷணம் அது இல்லை. நமக்குச் சாப்பாடு. இதுதான் உலகம். இது என்ன மிருகம்னு கேட்கிறீங்களா, இதைப் பாருங்கள்.”

அவன் தன் ஜோல்னாப் பையிலிருந்து ஒரு சிறு குழந்தையின் தலையொன்றை எடுத்து வெற்றிப் புன்னகையோடு காண்பித்தான். நான் எச்சில் கையோடு அங்கேயிருந்து ஓடிவிட்டேன்.

(END)

Gokul Kumaran

unread,
Oct 2, 2010, 4:44:12 AM10/2/10
to panb...@googlegroups.com
2010/10/2 சென்ஷி <senshe...@gmail.com>

  ஒரு க்ஷணம் அது இருந்தது. ஒரு வெட்டு. மறு க்ஷணம் அது இல்லை. நமக்குச் சாப்பாடு. இதுதான் உலகம். இது என்ன மிருகம்னு கேட்கிறீங்களா, இதைப் பாருங்கள்.”

அவன் தன் ஜோல்னாப் பையிலிருந்து ஒரு சிறு குழந்தையின் தலையொன்றை எடுத்து வெற்றிப் புன்னகையோடு காண்பித்தான். நான் எச்சில் கையோடு அங்கேயிருந்து ஓடிவிட்டேன்.


என்ன கதை இது?

புரட்டாசி சனிக்கிழமையும் அதுவுமா?

--
கோகுல்குமரன்

பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொதுநலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்தினிலுமே இருப்பது தான் தெய்வம்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்
                                                               - வாலி

சென்ஷி

unread,
Oct 2, 2010, 5:02:52 AM10/2/10
to panb...@googlegroups.com
@ கோகுல் - :)))

கிடைக்கறச்ச சேமிச்சிக்கணும்..

துரை.ந.உ

unread,
Oct 2, 2010, 5:05:25 AM10/2/10
to panb...@googlegroups.com
2010/10/2 சென்ஷி <senshe...@gmail.com>
@ கோகுல் - :)))


கிடைக்கறச்ச சேமிச்சிக்கணும்..

ஜோலனா பைல :))
சர்தானே ஆசிரியரே .........

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்   : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

சென்ஷி

unread,
Oct 2, 2010, 12:34:24 PM10/2/10
to panb...@googlegroups.com

வேங்கைச்சவாரி 

 உச்சே ஒரு சின்ன ஆப்ரிக்க தேசத்துக் குடிமகன். கொஞ்சநாளைக்கு அவன் என் சகா.  மும்பையில் ஒரு பத்துநாள் பயிற்சிமுகாமுக்காக எட்டு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு பிரதிநிதிகளில் நாங்களும் உண்டு. அந்த முகாமுக்குத் தேர்வுசெய்யப்படுவதென்பது மிகப்பெரிய விஷயம். பெரிய பொறுப்புகளுக்கும் முக்கியமான புதிய பதவிகளுக்கும் போவதற்கான வழிகளில் ஒன்று அது. அந்த பயிற்சிமூலம் வேறு நாடுகளின் பண்பாடுகளையும் வியாபாரமுறைகளையும் கற்றுக்கொள்ள வாய்ப்புகிடைக்கிறது என்றார்கள்

 

எங்கள் நிறுவனத்தின் கடலைநோக்கி இருந்த பெரிய பயிற்சிமையக் கட்டிடத்தில்தான் முகாம். நாங்கள் ஏற்கனவே அங்கே ஏழுநாட்களைச் செலவழித்து விட்டிருந்தோம். வெளியே ததும்பிக்கொண்டிருந்த கடலையும், எரிக்கும் வெயிலையும், அதில் காய்ந்த சுற்றுலாப்பயணிகளையும் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் உள்ளேயே இருந்தோம். கனத்த பெரிய கண்ணாடிச்சன்னல் வெளியே இருந்து எந்த ஒலியையும் உள்ளே விடவில்லை. வெளிக்காட்சிகள் எல்லாம் ஒருபெரிய மௌனப்படம்போல அதில் ஓடிக்கொண்டிருந்தன. நுரை சிதற எழுந்து வந்த ஒளிமிக்க கடலலைகள் மணற்கரையை மாறி மாறிக் கழுவிக்கொண்டிருக்க சுழன்றடித்தகாற்றில் உடைகள் கொடிகள் போல எழுந்து படபடத்தன. கார்களின் வரிசைகள் கடலோரச்சாலையில் நெருக்கி ஊர்ந்தன. உந்துவண்டிகளில் பொருட்களை குவித்துக்கொண்ட நூற்றுக்கணக்கான சிறிய கடைகள் ஒன்றுடன் ஒன்று முட்டி நின்றன. கடல்மணலில் ஓடுவதற்கும் நடப்பதற்கும் சும்மா பார்ப்பதற்கும் வாங்குவதற்கும் மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். ஓசையில்லாமல் நிகழ்ந்துகொண்டிருந்தது புறவுலகம்

 

உச்சேயின் அறை என்னுடைய அறைக்குப் பக்கத்தில்தான். அவன் என்னை நெருங்குவதற்கான காரணங்களில் அதுவும் ஒன்று. களைப்படைய வைத்த பகல்கள். தினம் எட்டுமணிநேரம் நாங்கள் எந்த கம்பெனி  எப்படி கொள்கைகளை வகுத்துகொண்டது, எப்படிச் செயல்பட்டது என்றெல்லாம் பேசப்பட்டதை உட்கார்ந்து கவனித்தோம். அதன் பின்னர் கட்டாயமாக கூட்டு விவாதம் உண்டு. மதிய உணவு முடிந்ததும் நாங்கள் கூடி அமர்ந்து அரட்டையடிப்போம்.

 

சிலசமயம் கடலோரமாக நடை போவோம். உச்சே எங்களுடைய உல்லாசங்களுக்கு மையமாக இருந்தான். அவன் மிகச்சிறப்பாகப் பாடுவான். தனது ஒலிக்கருவியில் இசையைப் போட்டுவிட்டு அதற்கேற்ப நடனமாடுவான்.  இசையையும் நடனத்தையும் அவன் பிறவியிலேயே பெற்றிருப்பதுபோல தோன்றியது. அவனது கருமையான உறுதியான உடம்பு நல்ல ஆரோக்கியத்தால் ஒளிவிட்டது. இசை காதில் விழுந்தால் உடனே அது முன்னும்பின்னும் மெல்ல அசைந்தாட ஆரம்பித்துவிடும்.  அவன் தன் சுருண்ட முடியை இழுத்து நீட்டி அது எத்தனை நீளம் என்று எனக்குக் காட்டினான். அவனுக்கு சூனியமும் தெரியும். கூரிய கத்தியை தன் உள்ளங்கையில் குத்தி மறுபக்கம் வழியாக இழுத்து எடுத்துக்காட்டினான். 

 

எட்டாம் நாள் மதியச்சாப்பாட்டுக்கும்பின்னர் கடைசி மூன்றுநாள் என்ன திட்டம் என்று எங்களுக்குச் சொன்னார்கள். அதுவரை நாங்கள் எவ்வளவு கற்றிருக்கிறோம் அவற்றை எப்படி நடைமுறைப்படுத்துகிறோம் என்று அறிவதற்காக ஒரு விளையாட்டு உருவாக்கப்பட்டிருந்தது

 

அது ஒரு நிர்வாகவியல் விளையாட்டு. எங்கள் திறமைகளை பரிசோதிப்பதற்காக ஒரு செயற்கையான வியாபாரச் சந்தர்ப்பத்தை உருவாக்கியிருந்தார்கள். மூன்றுபேர் அடங்கிய நான்கு குழுக்களாக நாங்கள் பிரிக்கப்பட்டோம். ஒரு குழு ஒரு கம்பெனி என்று கற்பனைசெய்யப்பட்டது. நான்கு கம்பெனிகளுக்கும் ஒரே அளவிலான தொழிற்சாலைகளும் ஊழியர்களும் வைப்புநிதியும் கடன்களும் உண்டு. இந்த கம்பெனிகளை நாங்கள் மூன்று வருடம் நடத்தவேண்டும்

 

விளையாட்டு காலை எட்டுமணிக்கு ஆரம்பமாகியது. ஒரு மணிநேரம் ஒரு மாதத்துக்கு சமம். உற்பத்திக் கணக்கெடுப்பு  விற்பனை கடன்களை அடைப்பது எல்லாமே ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை செய்யப்படவேண்டும். இந்த கம்பெனிகள் தங்கள் வருமானம், செலவு, லாபம், நஷ்டம் எல்லாவற்றையும் ஒவ்வொரு வருட முடிவிலும் அறிக்கையிடவேண்டும். மூன்றாம் வருட முடிவில் கம்பெனிகள் தங்கள் வணிக முறைகள் அடைந்த சிக்கல்கள், கண்டுபிடித்த உத்திகள், என்னென்ன லாபங்கள் வந்தன, என்னென்ன நஷ்டங்கள் நிகழ்ந்தன எல்லாவற்றையும் பொதுவாக முன்வைக்கவேண்டும்

 

ஓர் அறுபது பக்கம் கொண்ட நூலில் விளையாட்டின் விதிகள் எங்களுக்கு வாசிப்பதற்காக அளிக்கப்பட்டன. நாங்கள் என்ன உற்பத்தி செய்யவேண்டும், புதிய தொழிற்சாலைகளை  உருவாக்குவதற்கான விதிகளும் நடைமுறைகளும் என்ன,  என்னென்ன பொருட்களை என்னென்ன நாடுகளுக்கு நாங்கள் விற்கலாம், எந்த தொழில்நுட்பம் கைவசம் இருக்கிறது, அந்தத் தொழில்நுட்பத்தை வளார்த்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர எத்தனை கால அவகாசம் இருக்கிறது, அதற்கு எத்தனை ஊழியர்கள் தேவை, அவர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கவேண்டும் எல்லா தகவல்களும் அதில் உண்டு. நாங்கள் இந்த வணிகத்தைச் செய்யும் நாடுகளில் எவையெல்லாம் ஜனநாயகநாடுகள், எவையெல்லாம் ராணுவ ஆட்சிகொண்ட நாடுகள், அங்கேயுள்ளவர்களின் மதம் என்ன, அங்குள்ள தொழிற்சங்கச் சூழல் என்ன எல்லாமே விரிவாக கொடுக்கப்பட்டிருந்தது.

 

கீழ்நாட்டு நிர்வாகிகளுக்கு உலகளாவிய தளத்தில் வணிகம் செய்ய இந்தப் பயிற்சியும் விளையாட்டும் மிகவும் உதவிகரமானவை என்று கருதப்பட்டது. முந்தையநாள்தான் அதை வடிவமைத்த பீட்டர் இங்கிலாந்தில் இருந்து வந்திருந்தார். அவரது இந்த ஆட்டம் ஆடப்படும்போதெல்லாம் அவருக்குக் கொடுக்கப்படும் காப்புரிமை மற்றும் ஊதியத்தை நினைத்து நாங்கள் காதில் புகைவிட்டோம். பீட்டர் இந்த ஆட்டத்தில் எல்லா வேடங்களும் முறையாக போடப்படுகின்றனவா, வங்கிகளும் அரசுகளும் உத்தேசித்தது போலச் செயல்படுகின்றனவா என்றெல்லாம் நுட்பமாகக் கண்காணித்தார். இந்த ஆட்டம் எப்படி எங்கள் ஆற்றல்களை நாங்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தவும் குறைபாடுகளைச் சரிசெய்துகொள்ளவும் உதவும் என்று அவர் பெருமிதத்துடன் விவரித்தார். உண்மையான சந்தர்ப்பங்களில் நாங்கள் செயல்பட்டு எங்கள் திறமைகளை சோதித்துக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை இது வழங்குகிறது என்றார். எல்லா தகவல்களும் ஏராளமான இடங்களில் இருந்து பலமுறை சரிபார்க்கப்பட்டு நுட்பமாக சேகரிக்கப்பட்டவை என்றார். ஒவ்வொரு ‘மாத’ இறுதியிலும் அவரே எங்கள்செயல்பாடுகளை மதிப்பிடுவாராம். நாங்கள் ‘உண்மைவெளியில்’ எங்கள் வணிகத்திறனை மதிப்பிட்டுக்கொள்வதற்குத் தயாரானோம்.

 

அந்த விளையாட்டு எங்கள் மூளையை நிறைத்துத் தளும்பியது. அறுபதுபக்க நூலை ஆயுதமாக எடுத்துக்கொண்டு அறைகளுக்குத் திரும்பினோம். உச்சே, ஜெ·ப், நான் மூவரும் ஒரே அணி. டச்சு வம்சத்தவனாகிய ஜெ·ப் இங்கிலாந்தில் பிறந்தவன். கணக்கெழுத்தாளனாக ஆரம்பித்து சிறுவயதிலேயே சரசரவென மேலே வந்தவன். உச்சே எங்கள் கூட இருந்தது சந்தோஷமாக இருந்தது. வழக்கமான சிரிப்புக்கும் ஆட்டத்துக்கும் ஒன்றும் நேரமில்லை. பரபரப்பாக எங்கள் போட்டிக்கு தயாரெடுப்பதற்காக வாசிக்க ஆரம்பித்தோம். தனித்தனியாக வாசித்தபின் கூடி அமர்ந்து எங்கள் கம்பெனியின் நிலைமையைப்பற்றி துல்லியமாக விவாதித்துக்கொண்டோம். விதிகளைப்பற்றி சர்ச்சை செய்தோம். ஆட்டம் ஆரம்பித்தாகிவிட்டது, நாங்கள் அதில் மூழ்கிவிட்டோம். தூங்கப்போவதற்கு இரவு ஒருமணிதாண்டிவிட்டது

 

காலையில் நாங்கள் ஏதோ பரீட்சை எழுதப்போவதுபோல நூற்றுக்கணக்கான தகவல்களை எங்கள் மூளைக்குள் குவித்துக்கொள்ள ஆரம்பித்தோம். ஆட்டத்தை ஒரு பெரிய கூடத்தில் ஏற்பாடுசெய்திருந்தார்கள். நான்குமூலைகளிலும் நான்கு மேஜைகள். அவற்றில் பெரிய உலகவரைபடங்கள் விரிந்து கிடந்தன. அவற்றில் நாடுகளின் பெயர்கள். ஆங்காங்கே நாங்கள் வணிகம் செய்யப்போகும் நாடுகளைக் குறிக்கும் அடையாளங்கள் நின்றன. உச்சே அவனது நாட்டை அதில் பார்த்ததும் பரவசமானான். அதை எங்களுக்கு சிரித்துக்கொண்டே சுட்டிக்காட்டினான். தகவல்களை கிரகித்துக்கொண்டு சந்தேகங்களைக் கேட்டுக்கொள்ள அரைமணிநேரம் கொடுத்தார்கள்.

 

நாங்கள் உற்பத்திச்செலவு, விற்பனை மற்றும் போக்குவரத்துச்செலவு ஆகியவற்றை கணித்து விற்பனைவிலையைக் கணக்கிட்டோம்.  அக்கவுண்டன்டாக இருந்த ஜெ·ப் அதிவேகத்தில் எண்களை கூட்டி கழித்து என்ன விலை வைத்தால் என்ன லாபம் இறுதியில் நிற்கும் என்று சொன்னான். அந்த லாபத்தை எங்கே முதலீடுசெய்வது என்று விவாதித்தோம். சொந்த முதலீட்டைப்போடுவதா இல்லை வங்கிக்கடன்களை வாங்குவதா எது நல்லது, என்ன சிக்கல்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டோம். எல்லாமே எளிமையாக இருந்தன. நாங்கள் கொழுத்த லாபத்தை எதிர்பார்த்தோம்.

 

ஆட்டம் ஆரம்பித்தது. நாங்கள் எங்கள் உற்பத்திப்பொருட்களை மாத இறுதியில் விற்க வேண்டும். எங்களுக்கு எந்தப்பொருள் எங்கே தேவையில் இருக்கிறது என்ற பட்டியல் கொடுக்கப்பட்டது. நாங்கள் ஒவ்வொரு நாட்டிலும் வைத்திருக்கும் விலையைக் குறிப்பிட்டு விற்கவேண்டிய பொருட்களின் விபரங்களை அளிக்கவேண்டும். பீட்டருக்குத்தான் மற்ற கம்பெனிகள் வைத்திருக்கும் விலை தெரியும். குறைவான விலை சொன்னவர்களுக்கு வாங்கும் உத்தரவு சென்றுசேரும். அவர்கள் நிராகரித்தால்தான் அடுத்த குறைவான விலை சொன்ன கம்பெனிக்கு வாய்ப்பு. பீட்டர் டெண்டர் சீட்டுகளை பரிசீலித்து உற்பத்திப்பொருட்களையும் சந்தையையும் கணித்து யாருடைய டெண்டர் ஏற்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவிப்பார்.

 

எங்கள் விலைகள் மிக அதிகமாக இருந்தமையால் ஆரம்ப மாதத்தில் ஒரு டெண்டர் கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை. இரண்டாவது மாதத்தில் விலையை கடுமையாகக் குறைத்தபோது எங்கள் பொருட்களில் நாலில் ஒருபங்கு மட்டும்தான் விற்றது. இந்த மாதிரியே போனால் கூலிக்கும் மூலப்பொருட்கள் வாங்குவதற்கும் எங்களிடம் மூலதனம் மிச்சமிருககது என்று ஜெ·ப் எச்சரித்தான்.  எதுவுமே நாங்கள் திட்டமிட்டபடி நகரவில்லை. எல்லா கணிப்புகளும் தவறாக ஆயின. ஆரம்பத்தில் மிக எளிமையாக இருந்த விஷயங்கள் இப்போது ஆயிரம் சிக்கலான முடிச்சுகளுடன் தெரிந்தன.

 

ஒவ்வொரு குழுவுக்கும் ஓர் உத்தி இருந்தது. டெண்டர் அறிவித்ததும் வெல்லும் அணி ஆரவாரம்செய்து கொண்டாடியது. கடுமையான ஒரு போட்டி உருவாகி வந்துகொண்டிருந்ததைக் கண்டோம். இரண்டாம்மாத முடிவில் எங்கள் நிலைமையில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தது. மேலும் விலையைக் குறைக்கவும் எங்கள் கணக்குகளை மறு அமைப்புசெய்து கொஞ்சம் லாபம் ஈட்டவும் முயன்றோம்.

 

எங்கள் தொழிற்சாலைகளைப் பற்றிய எல்லா தகவல்களும் விரல்நுனிக்கு எட்டும்படி இருந்தன. எல்லாமே வரைபட அடையாளங்கள்தான். ஊழியர்களின் எண்ணிக்கை, கூலிக்கணக்குகள், உற்பத்தித்திறன், உண்மையான உற்பத்தி எல்லாமே…ஆனால் நாங்கள் இக்கட்டில் இருந்தோம். புதிய ஏதேனும் ஒரு வணிக உத்தியை அறிமுகம்செய்தாகவேண்டும். அல்லது முற்றிலும் புதிய ஒரு தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்தாகவேண்டும். ஆரம்பகட்ட முதலீட்டை பொருட்படுத்தாமல் எப்படியாவது உற்பத்திச் செலவை குறைத்தாகவேண்டும் என்று முடிவுகட்டினோம். பொதுவாக எங்கள் ஆலைகள் தங்கள் திறனுக்கு ஏற்ப உற்பத்தி செய்யவில்லை. இரு தொழிற்சாலைகளில் மேலும் உற்பத்திசெய்ய வாய்ப்பிருந்தது. நாங்கள் விதிகளைப் புரட்டிப்பார்த்து அதை என்ன செய்ய முடியும் என்று பார்த்தோம். 

 

அங்கே உள்ள தொழிலாளர்பிரச்சினைகளைப் பற்றி ஆராய்ந்தோம். நாங்கள் இரு கோரிக்கைகளை பரிச்சீலித்து ஆதரித்தால் உற்பத்தி பத்து சதவீதம் மேலே செல்ல வாய்ப்பிருந்தது. ஒரு இயந்திரம் மிகவும் பழுதாகிவிட்டிருந்தது. வருடத்தில் நாலைந்து தொழிலாளர்கள் செத்துக்கொண்டிருந்தார்கள். முதல் கோரிக்கை அந்த இயந்திரத்தை மாற்றவேண்டும் என்பது. இதற்கு ஒருலட்சம் டாலர் செலவு ஆகக்கூடும். இன்னொன்று பத்து சதவீதம் ஊதியத்தைக் கூட்டவேண்டும்

 

ஜெ·ப்  மீண்டும் கூட்டி கழித்து வகுத்து பார்த்தான். அதன் பின்னர் அந்த திட்டத்தை நிராகரித்தான், அது லாபமாக அமையாது. அவ்வாறு பணத்தைச் செலவுசெய்து உற்பத்திதிறனை அதிகரித்தால்கூட லாபம் தெரிய நான்குவருடங்களாகும்.  நாங்கள் இந்த ஆட்டத்தை ஆடுவதே மூன்று வருடங்களுக்குத்தான். ஆகவே அது தேவையில்லாத செலவு என்றான் அவன். அதற்குப் பதிலாக புதிய தொழிற்சாலைகளை புதிய தொழில்நுட்பத்துடன் ஆரம்பிக்கலாம் என்றான் ஜெ·ப்.

 

உச்சேயும் நானும் வேறுமாதிரி நினைப்பதாகச் சொன்னோம். நல்ல நிர்வாகம் மூலம் தொழிற்சாலையின் சிக்கல்களைத் தீர்க்க முடியும் என்றோம். ஜெ·ப் அவனாது கணக்குகளை மீண்டும் விரிவாக போட்டு எங்களுக்கு விளக்கி எங்கள் தீர்மானம் தவறு என்று காட்டினான். ”சரி  அதை விடு” என்றான் உச்சே   

 

புதிய தொழிற்சாலைக்கு போதுமான பணம் இல்லை. வங்கிக்கடன் எடுக்கலாம் என்றான் ஜெ·ப். ஆனால் ஒரு ஆலையை மூடுவதாக இருந்தால் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு குறிப்பிட்ட உபகாரத்தொகை அளிப்பதாக ஒப்பந்தமிருந்தது விதிகளில். ஆனால் நாங்கள் ஆலை இருந்த நிலத்தை விற்க முடியும். எல்லாவற்றையும் பார்த்தபின்னர் ஒரு ஆலையை மூடிவிடுவதே நல்லது என்று முடிவுக்கு வந்தோம். ”அவசரம் வேண்டாம், யோசிப்போம்’; என்றேன். நாங்கள் என்ன சொன்னாலும் ஜெ·பின் கூர்மையான கச்சிதமான ரூபாய் பைசா கணக்குகள் முன் நிற்கவில்லை. அவனுடைய கணக்குபுத்தியின் கத்தி எல்லாவற்றையும் இரக்கமில்லாமல் வெட்டித்தள்ளியது. எங்களுடைய எந்த ஒரு ஆலோசனைக்கும் அவனிடம் முற்றிலும் எண்களாலும் தகவல்களாலும் துணைசேர்க்கப்பட்ட ஒரு பதில் இருந்தது. சோம்பல் முறித்தபடி ஜெ·ப் ஒரு வாய் டீ சாப்பிட எழுந்தபோது உச்சே சொன்னான் ”பயங்கரமான ஆள். பாத்துக்கோண்டே இரு, ஒருநாள் அவன் ஒரு கம்பெனிக்கே தலைவனாக வந்துவிடுவான்”

 

அந்த தருணத்தில் பீட்டர் சந்தை நிலவரம் தயாராக இருப்பதாக அறிவித்தார், அதன் மதிப்பு 5000 ரூபாய். பத்துபக்கமுள்ள அதில் எல்லா சந்தைகளின் தகவல்களும் அவற்றின் அன்றாட எழுச்சி வீழ்ச்சிகளும் , எந்தப்பொருளுக்கான தேவை எந்தெந்த நாடுகளில் இருக்கிறது என்ற தகவல்களும், அவற்றை விற்க என்னென்ன விதிகள் உள்ளன என்பதும் சொல்லப்பட்டிருந்தது. நாங்களும் ஒன்று வாங்கினோம். ஜெ·ப் வந்து அமர்ந்து அதை முழுமையாக வாசித்தான். கணக்குபோடுவதில் மூழ்கினான். எதையோ புதிதாகக் கண்டுபிடித்தவன்போல உற்சாகத்துடன் ”நாம் ஆப்ரிக்காவில் நம் வியாபாரத்தை பரப்பினால் லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது” என்று  அறிவித்தான். ”ஆனால் உடனே அல்ல. ஒரு இரண்டுமாதம் காத்திருக்க வேண்டும்”

 

ஆறுமாதம் வியாபாரத்தை முடித்துவிட்டு மதிய உணவுக்காக எழுந்தபோது அந்த சூழலே முற்றிலும் வேறுபட்ட மனநிலையை பெற்றிருந்ததை கவனித்தேன். நட்புணர்ச்சியே இல்லை. அடுத்த அணி எப்படி அத்தனை டெண்டர்களை வென்றார்கள் என்று பொறாமைப்பட்டபடி, அவர்களின் உத்திகள் என்னவாக இருக்க முடியும் என்று சிந்தித்தபடி, தாக்குதல்களை திட்டமிட்டபடி, எல்லாவற்றையும் போட்டு குழப்பிக்கொண்டு செயற்கையான புன்னகைகளை ஒருவரோடொருவர் காட்டியபடி , கள்ளக்குரல்களில் பேசிக்கொண்டபடி, ரகசியங்களை கண்களுக்குள் தேக்கியபடி, லாபநஷ்டக்கணக்குகளையே எண்ணிக்கொண்டபடி சென்றோம். ஒரு போர்க்கள மனநிலை அது. மதிய உணவில் எவரும் உற்சாகமாக சிரிக்கவில்லை, ஒருவரோடொருவர் விளையாட்டாக பேசிக்கொள்ளவில்லை. குழுக்கள் தங்களுக்குள்ளேயே தான் பேசிக்கொண்டன

 

உச்சே மனசஞ்சலம் கொண்டவனாக கண்ணாடிச்சன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தேன்.  ”என்ன உச்சே, லாபத்தைக் கூட்டுவது பற்றிய யோசனையா?” என்றேன்

 

”நாம் ஆப்ரிக்காவில் ஆலைகளை திறக்கக்கூடாது…நாம் ஆப்ரிக்கச் சந்தைக்குப் போகவே வேண்டாம்…” என்றான் உச்சே

 

”ஏன்?” என்றேன். ஜெ·பின் திட்டத்தில் ஏதோ பிழை கண்டுபிடித்துவிட்டான் என்றுதான் முதலில் எனக்குப் பட்டது.

 

”அது அங்குள்ள மக்களை அழித்துவிடும்” என்றான் உச்சே

 

நான் அதிர்ந்துவிட்டேன். அவனது நாட்டை வரைபடத்தில் பார்த்து உணர்ச்சிவசப்பட்டுவிட்டான் என்று நான் அவனை சமாதானப்படுத்தினேன்.

 

”நீ எப்படி அதைச் சொல்கிறாய்? ஜெ·பை விட நீ எங்களை இன்னும் கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டாமா? உங்கள் நாட்டில் உள்ள சாதிகள் மதங்கள் கடவுள்கள் எல்லாம் எங்களிடமிருந்து அதிக வேறுபட்டவை அல்ல. நம்முடைய ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு வாழ்க்கையை வாழ்கிறது”

 

நான் அவன் என்ன சொல்லவருகிறான் என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. நாங்கள் சேர்ந்து சாப்பிட அமர்ந்தபோது நான் சொன்னேன் ”நீஎன்ன வாதிடுகிறாய் என்றே எனக்குப் புரியவில்லை”

 

”நான் வாதிடவில்லை. தகவல்களைச் சொல்கிறேன்”என்றான் உச்சே. கொஞ்சநேரம் ஆழமான அமைதிக்குச் சென்றான். பின்பு பெருமூச்சுடன் அவனுடைய நாட்டைப்பற்றியும் அவனைப்பற்றியும் சொன்னான்

 

”நாங்களெல்லாம் இப்போதும் அடிமைகள்தான். எங்களுக்கு முன்பு ஜனநாயகம் இருந்தது. என்னுடைய தூரத்துச் சொந்தக்காரர் ஒருவர்தான் அதிபராக இருந்தார். இப்போதைய ஆட்சியாளர் அவரைக் கொன்றுவிட்டு ராணுவ ஆட்சியைக் கொண்டுவந்துவிட்டார். போலித் தேர்தல்களை நடத்தி உலகை ஏமாற்றி பதினைந்துவருடங்களாக அதிகாரத்தில் இருக்கிறார். அதிபர் என்ற சொல்லை அவரைப்பறிச் சொல்வதற்குத்தவிர வேறு எதற்கும் நாங்கள் பயன்படுத்தக்கூடாதென தடை விதிக்கப்பட்டிருக்கிரது. எங்கள் நாட்டில் எங்கள் நிறுவனத்திற்கு தலைவர்தான் உண்டு உன்னுடைய கம்பெனிக்கு இருப்பது போல அதிபர் கிடையாது…”

 

உச்சே தொடர்ந்தான் ”ஒருகாலத்தில் எங்கள் நாடு ஏராளமான கொக்கோவை உற்பத்திசெய்தது. முந்தைய அரசு அவற்றை பாதுகாத்து ஏற்றுமதிசெய்ய பெரிய பண்டகசாலைகளைக் கட்டியது. மக்கள் அந்த பண்டகசாலைகளை முந்தைய ஆட்சியின் சாதனைகளாக பார்க்கிறார்கள் என்று தெரிந்ததும்  இன்றைய ஆட்சியாளர் அவற்றை தரைமட்டமாக்கிவிட்டார். நாங்கள் அரசை எதிர்க்கக்கூடாது என்று  அவர் எங்கள் மக்களை வறுமைக்குத் தள்ளிவிட்டிருக்கிறார். எங்கள் மக்களை கட்டுப்பாடில்லாமல் வாங்கிக் குவிக்கும்படி அவர் பழக்குகிறார். சில பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தச் சதியில் பங்கிருக்கிறது. எங்கள்நாட்டில் எதுவுமே உற்பத்தியாகாமல் பார்த்துக்கொள்கிறார் அதிபர். நான் இதோ போட்டிருக்கும் சட்டைகூட வேறு யாரோ எனக்குத் தந்ததுதான்.”

 

”எங்கள் நாட்டில் பல்லாயிரம் வருடங்களாக இருந்துவரும்  எல்லா உள்ளூர் தொழில்களும் வளரும் தொழில்நுட்பம் இலலமல் அரசு ஆதர்வு இலலமல் அழிந்துகொண்டிருக்கின்றன” என்றான் உச்சே ”எங்கள் மண்ணில் கொஞ்சம் பெட்ரோலியமும் இயற்கை எரிவாயுவும் கிடைப்பதனால்தான் நாங்கள் இன்னமும் செத்து அழியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எல்லாமே அங்கே அரசின் கைகளில்தான். உணவு வினியோகம் கூட அரசுக்குத்தான் சொந்தம். பெரிய நிறுவனங்களின் பொருட்களைத்தான் மக்களுக்குக் கொடுப்பார்கள். படிப்படியாக எங்கள் ருசிகள் மணங்கள் ரசனைகள் எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன. உள்ளூரில் உற்பத்தியாகும் எதுவுமே எங்கள் புதியதலைமுறைக்குப் பிடிக்காமலாகிறது…”

 

உச்சே சொன்னான் ”நாங்கள் வீடுகளில் சாப்பிடுவது எங்குமே ஒரே உணவுதான். யாருக்குமே வேறு ருசிகள் தேவையில்லை. ஒட்டுமொத்தமான உற்பத்தியும் ஒரேமாதிரியான வினியோகமும் போதும் என்றே நினைக்கிறார்கள். இனி எங்கள் மக்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கப்பட்டால்கூட அவர்கள் உள்ளூர் பொருட்களை வாங்குவார்களா என்பது சந்தேகமே. நாங்கள் பெரிய கம்பெனிகளுக்காக வேலைசெய்து அந்தகூலியில் அவர்கள் உற்பத்தி செய்வதை வாங்கிக்கொண்டிருக்கிறோம். எங்கள் நாடே இப்போது வெறும் மலிவான உடலுழைப்பாளார்களாக மாறிவிட்டிருக்கிறோம். என் குடும்பத்தையே எடுத்துக்கொள். இரண்டு மாமாக்கள் வேலையிழந்து சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள். ஆலைகளை மூடி கையில் இருபதாயிரம் பணத்தை கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அவர்களில் ஒருவருக்கு கையில் விரல்கள் இயந்திரத்தில் வெட்டுபட்டுவிட்டன. ஒன்றுமே செய்ய முடியாது…”

 

நான் உச்சேயின் பேச்சால் குழம்பிப்போய்விட்டேன். அவன் இந்தக்கோணத்தில் யோசித்துக்கொண்டிருகிறான் என நான் கற்பனையே செய்யவில்லை. என் மனதில் எத்தனையோ சித்திரங்கள் வந்து சென்றன அவர்களுடைய இருண்ட வீடுகள், காலியான உணவுத்தட்டுகள், வேலையிழந்த மாமாகளின் வெற்றுப்பார்வைகள், அவர்கள் பாடும்போது நடுங்கும் குரல்கள், நடுவே இடைவெளிவிட்ட பெரிய பல்வரிசைகளினாலான எளிமையான புன்னகைகள், தூக்கமில்லாத கண்கள், கனவுகள், நம்பிக்கைகள்….. அவர்களின் வாழ்க்கையே மாறிவிட்டிருக்கும். அவர்கள் உரிமையுடன் தங்கள் மனைவியரை தழுவ முடியாது. ஜெ·ப் பார்த்துக்கொண்டிருந்த வெறும் கோடுகளினாலான வரைபடத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக உச்சே அதில் வாழ்க்கையைப் பார்த்தான். நூற்றுக்கணக்கான சரடுகளை அவன் அதிலிருந்து அவன் வெளியே எடுத்துக்கொண்டிருந்தான்

 

நான் உச்சேயின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஜெ·ப் வந்தான் ”வாருங்கள், நேரமாகிவிட்டது” என்றான். நாங்கள் எழுந்து அவன் பின்னால்சென்றோம்.

 

ஆட்டம் மீண்டும் ஆரம்பித்தது. எல்லாரையும்  முள்முனையில் நிறுத்தியது அது. ”உச்சேக்கு மண்டை குழம்பிவிட்டது” என்று ஜெ·ப் என் காதில் முணுமுணுத்தான். உச்சே அவனிடமும் அபப்டியே சொல்லியிருந்தான். நாங்கள் உச்சேயிடம் விவாதிக்கவேண்டாமென்று தீர்மானித்தோம்.. தற்காலிகமாக ஆப்ரிக்காவுக்கு வியாபாரத்தை விரிவாக்கம்செய்யவேண்டாமென முடிவுசெய்தோம். ஒவ்வொரு ஆட்டக்காரரும் ஆட்டத்திலேயே மூழ்கியிருந்தார்கள், அவர்களின் மொத்த அறிவே சவாலுக்கழைக்கப்பட்டதுபோல.

 

ஆட்டம் செல்லச்செல்ல எங்களுக்கு ஆட்டவிதிகளெல்லாம் மனப்பாடமாகத் தெரிய ஆரம்பித்தது. அவற்றை எங்கள் வாழ்நாளெல்லாம் நாங்கள் தெரிந்துகொண்டிருந்தோம் என்பதுபோல. அந்த ஆட்டவிதிகளே எங்கள் வாழ்க்கையை தீர்மானிப்பதுபோல.

 

எங்கள் குழுவின் கணிப்புகள் இருமுறை தவறின. எங்கள் நிறுவனத்தின் பங்குகள் தேங்கிக் குவிந்தன.  நாங்கள் எங்கள் வருடாந்தர லாபநஷ்டங்களை  அறிவித்தபோது நாங்கள்தான் கடைசியாக இருந்தோம். ஆனால் நாங்கள் நஷ்டத்திலும் ஓடிக்கொண்டிருக்கவில்லை. ஆனால் ஜெ·ப் கவலையுடன் இருந்தான். வெற்றி தவிர எதிலுமே சமரசமாகாத வகையான ஆள்.

 

இரவுணவுக்கு அமர்ந்தபோது ஜெ·ப் சொன்னான் ”நாம் மறுபடி சந்திக்கும்போது தெளிவாக யோசிக்கவேண்டும். இன்று செய்ததுபோல ச்செய்தோமென்றால் இதே கடைசி இடத்தில்தான் எப்போதும் இருக்கவேண்டும்”

 

”சீக்கிரமே படுக்கைக்குப் போய் நன்றாக தூங்குங்கள்” என்று சொல்லிவிட்டு சென்றான் ஜெ·ப்

 

ஆனால் உச்சேயும் நானும் அமர்ந்து மேலும் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். என் நாட்டைப்பற்றி நானும் அவன் நாட்டைபப்ற்றி அவனும் எத்தனையோ விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம்

 

எங்கள் ஊரில் உள்ள சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், திருமணச்சடங்குகள், என்னுடைய நடுத்தரக்குடும்பத்து பெற்றோரின் கனவுகள்,  ஒரு சாதாரண ஊழியரான என் அப்பா நான் இப்போது வகிக்கும் பதவியைக்குறித்து கொண்டிருக்கும் பெருமிதம் எல்லாவற்றையும் நான் சொன்னேன். காந்தியைப் பற்றி சொன்னேன். 1947ல் நாங்கள் பெற்ற சுதந்திரத்தைப் பற்றியும், இன்றைய அரசியல் சூதாட்டங்களைப்பற்றியும், தூங்கப்போகும்போது என்னை படுத்தும் இனம்புரியாத மனச்சஞ்சலங்களைப் பற்றியும் சொன்னேன். என்னுடைய இளமைப்பருவத்தைப்பற்றியும் என் மனைவியைப்பற்றியும் விளக்கினேன். எங்களூரில் சிலருக்கு ஆவிபீடிப்பதைப்பற்றி நாடகத்தனமாக விளக்கினேன். சேப்பிலையில் தேங்காய் சேர்த்த அரிசிமாவை பூசி பொரித்து எடுக்கும் பட்ரோடு அப்பத்தைப்பற்றி நாவூறச் சித்தரித்தேன்.

 

அதிகமாகப்பேசிவிட்டேனா என்ற வெட்கத்துடன் என் அறைக்குச் சென்றேன். ஆனால் காலைவரை சரியாக தூக்கமே வரவில்லை. ஜெ·ப் என் அறைக்கு வந்து அவன் வகுத்திருக்கும் புதிய வணிகதந்திரங்களைப்பற்றிச் சொன்னான். என்னை உச்சேயின் சொற்கள்தான் படுத்திக்கொண்டிருந்தன. அந்த விளையாட்டு ஒரு கெட்ட ஆவி போல மனதை ஆக்ரமித்துவிட்டிருந்தது. நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து ஒரு எண்ணம் என்னை எழுப்பியது. எழுந்தபின்னரும் அந்த எண்ணம் நீடித்தது. நான் கொஞ்சம் தண்ணீர்குடித்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டேன். அந்த ஆட்டம் எங்களுக்குள் உள்ள ஏதோ ஒரு உள்ளுணர்வை தூண்டி எழுப்பிவிட்டிருந்தது. எங்கள் அனைவருக்குள்ளும் இருந்த ஒரு விசித்திரமான இச்சையை, வெறியை…

 

அதன் பிடியைக் கண்டு என் மனம் சோர்ந்தது. அது எங்களைச் இறுக்கமான சிறிய குழுக்களாக கட்டி பிறரிடமிருந்து பிரித்தது. எதையுமே ரசிக்கமுடியாதபடிச் செய்தது. நான் பாதி வாசித்து விட்டிருந்த நூலை தொடவே என்னால் முடியவில்லை. பாட்டோ நடனமோ அரட்டையோ  ஏதுமில்லை. கடலோர நடைகூட இல்லை. இது மட்டும்தான்

 

அந்த தருணம் வந்தது. காலையுணவுக்குப் பின்னர் ஜெ·ப் ஆப்ரிக்காவுக்குச் செல்வதைப்பற்றிப்பேச ஆரம்பித்தான். அதை ஏற்கவே முடியாது என்று உச்சே சொல்லிவிட்டான். உச்சே ரொம்பதான் மிஞ்சிப்போகிறான் என்று எங்களுக்குத் தோன்றியது. ஆப்ரிக்காவுக்கு வியாபாரத்தை விரிவாக்கம்செய்யாமல் வேறு வழியே இல்லை. இதுவரை எங்கள் ஆட்டத்தில் எந்த அணிக்கும் அந்த எண்ணம் வரவில்லை. நாங்கள் அங்கே முதலில் சென்றால் எங்களுக்கு நல்ல வாய்ப்பிருந்தது, பிந்தும்தோறும் ஆபத்து. நான் எங்களுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையை வைத்து நிலைமையை உச்சேவுக்கு விளக்க முயன்றேன்

 

”அதனால்தான் நான் வேண்டாமென்று சொன்னேன்” என்றான் உச்சே.

 

”’ இதோபார், சும்மா உணர்ச்சிமூடனாக இருக்காதே. உன்னுடைய நாட்டில் என்ன இருக்கிறது அல்லது என்ன இல்லை என்பதைப்பற்றி எதுவுமே நமக்குத்தெரியாது. நமக்குத்தெரிந்ததெல்லாம் இந்த அறுபது பக்கங்களில் இருப்பது மட்டும்தான். இந்த  ஆட்டத்தில் நாம் என்ன செய்தாலும் அது உன் நாட்டை பாதிக்கப்போவதில்லை. உச்சே, இது வெறும் விளையாட்டு” ஜெ·ப் சொன்னான்

 

உச்சே ஒத்துக்கொள்ளவில்லை. ”கண்டிப்பாக இது வெறும் விளையாட்டுதான். இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அப்படித்தான். நீங்கள் வரைபடத்தில் இடங்களைப் பார்த்து அடையாளப்படுத்தி சரடுகளை இழுத்து விளையாடுகிறீர்கள். உங்களால் மனிதர்களைக் கொன்று விளையாட முடியுமா? சாவது உங்கள் குடும்ப உறுப்பினர்களாக இருந்தால் நீங்கள் இதேபோல சரடுகளை இழுத்து பொம்மைகளை ஆட்டி இத்தனைபேரைக் கொன்றேன் என்று சொல்லி விளையாட முடியுமா?”

 

உச்சேயின் சொற்கள் கொஞ்சம் அதிகமாகவே கூர்மையாக இருந்தன. ஜெ·ப் அவனை அமைதிப்படுத்த முயன்றான்.ஆனால் உச்சே சொன்னான் ”நமக்கு இப்போது எந்த நஷ்டமும் இல்லை. இதற்குமேல் நமக்கு எதற்கு லாபம்? இப்போது இருப்பதிலேயே நாம் ஏன் திருப்தியாக இருக்கக்கூடாது?”

 

”அதாவது, நஷ்டம் இருந்திருந்தால் நீ ஒப்புக்கொண்டிருப்பாய் அல்லவா?”என்று திருப்பிக்கேட்டான் ஜெ·ப். ”பணத்தை வைத்திருப்பதில் சந்தோஷம் இல்லை, பணம்பண்ணுவதில்தான் சந்தோஷமே…” ..

 

உச்சே பிடிவாதமாக வாதிட்டுக்கொண்டே இருந்தான். அவன் ரொம்பவும் மிகையாக நடந்துகொள்வதாகவே எங்களுக்குத் தோன்றியது. ஆனால் அவனுடைய அனுமதி இல்லாமல் நாங்கள் எதுவும் செய்யமுடியாது. விதிகளின்படி நாங்கள் கூட்டு முடிவுதான் எடுக்கவேண்டும். ஒருவரின் ஒப்புதல் இல்லையென்றாலும் பீட்டர் நிர்வகித்த அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளையும் திட்டங்களையும் நிராகரித்துவிடும். வேறு வழியே இல்லை, உச்சேயை சமாதானப்படுத்தி ஒத்துக்கொள்ளச் செய்தாகவேண்டும்.

 

”இங்கேயே இரு”என்று சொன்னபின் ஜெ·ப் உச்சேயை வெளியே கூட்டிக்கொண்டுசென்றான். பதினைந்து நிமிடங்களுக்குப் பின்னர் இருவரும் திரும்பி வந்தார்கள் ”உச்சே ஒத்துக்கொண்டுவிட்டான்”என்றான் ஜெ·ப். அவன் என்ன சொன்னான், மிரட்டினானா கெஞ்சினானா ஒன்றும் தெரியவில்லை. நான் உச்சேயின் முகத்தைப் பார்த்தபோது சங்கடமாக உணர்ந்தேன். ஒருவேளை நான் நேற்று அத்தனை தூரம் அவனிடம் பேசியது நானும் அவனைமாதிரித்தான் என்றும் ,அவனை நான் புரிந்துகொள்கிறேன் என்றும் காட்டிக்கொள்ளத்தானா என்று எண்ணிக்கொண்டேன். எந்த வயதில் நான் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு அவற்றையெல்லாம் விளையாட்டாக மாற்ற ஆரம்பித்தேன் என்று யோசித்தேன்

 

உச்சேயை எப்படி ஜெ·ப் சம்மதிக்க வைத்தான் என்று எத்தனை யோசித்தும் எனக்குப் புரியவில்லை. என்ன அதிகாரத்தை அவன் பயன்படுத்தினான், எந்த தந்தியில் தொட்டான்?  அதன்பின் உச்சே ஜெ·ப் சொன்ன எல்லாவற்றுக்கும் ஒரேமாதிரியாக உணர்ச்சியில்லாமல்  ”சரி சரி’ ‘ என்றான். மூன்றாம் நாள் இறுதியில் நாங்கள் இரண்டாம் இடத்துக்கு எழுந்து விட்டோம்

 

தமிழாக்கம்: ஆங்கிலம் வழி ஜெயமோகன்

 

மூலம் 1992ல் எழுதபப்ட்டது. ஆங்கில மொழியாக்கம் எஸ்.ஆர்.ராமகிருஷ்ணா.

 

 

விவேக் ஷன்பேக்

 விவேக் ஷன்பேக்

கன்னடத்தின் மிக முக்கியமான சிறுகதையாசிரியர்,நாடக ஆசிரியர். தேஷ்காலா என்ற சிற்றிதழை நடத்துகிறார். 1992 ஆம் ஆண்டுக்கான கதா விருதையும்,  1997 ஆம் ஆண்டுக்கான சம்ஸ்க்ருதிசம்மான் விருதையும் பெற்றவர். யு.ஆர்.அனந்தமூர்த்தியின் மருமகன்.

சென்ஷி

unread,
Oct 4, 2010, 2:02:11 AM10/4/10
to panb...@googlegroups.com
னந்த மார்க்க
மலையாள மூலம்- உண்ணி ஆர். தமிழில் - கே.வி.சைலஜா

“நீங்க எல்லாம் சேந்து என்ன யோசிச்சுட்டிருக்கீங்க?” ஆசிரியர்களின் ஓய்வறைக்குள் வந்த புருஷோத்தமன் கேட்டார்.

“என்ன சார். நாங்கள் பெண்கள் ஒண்ணா உக்காந்து பேசக்கூடாதா?”

வேதியியல் துறை பேராசிரியை ராதாமணி சிரித்தபடி கேட்டார்.

“பெண்களா? கிழவிங்கன்னு சொல்லுங்க... ம்... ம்... இந்த மேடத்தை வேணும்னா பொண்ணுன்னு கூப்பிடுங்க."

பரிகாச சிரிப்புடன் ஆங்கிலத்துறையில் புதிதாய்ச் சேர்ந்திருந்த ஆஷா தாமஸைப் பார்த்தபடி சொன்னபோது அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் எல்லோரையும் பார்த்தாள். அறையின் மூலையில் இருக்கும் வாஷ் பேசினில் காறி உமிழ்ந்தபடி புருஷோத்தமன் இறங்கிப் போனார். போகும்போது கையிலிருந்த புத்தகத்தை மேஜை மீது தூக்கி எறிந்ததில். சாக்பீஸின் தூள் ஒருமுறை வெளியே வந்து பார்த்துவிட்டு மீண்டும் உள்ளடங்கிப் போனது.

“இந்த ஆளுக்கு ரொம்ப எள வயசுன்னு நெனப்பு. வழுக்கையும், தொந்தியும் வச்சிட்டு, சொட்டையில யானை வால் மாதிரியிருக்கிற நாலு முடியையும் டை அடிச்சிட்டு திரியறான்.”

ராதாமணி முணுமுணுத்தாள்.

“அன்னிக்கி அப்படித்தான் ரூம் கூட்டற சாமளாகிட்டயிருந்து நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டான்.”

இயற்பியல் துறையின் ஆலிஸ் உம்மன் புருஷோத்தமனின் புத்தகங்களை மேசையிலிருந்து தட்டி விட்டபடி சொன்னாள்.

“என்ன ஆச்சு அன்னிக்கு?”

மேசையில் ஒரு கையைத் தாங்கிச் சாய்ந்து படுத்தபடி மலையாளத் துறையின் சுபைதா பேகம் கேட்டாள்.

“அதென்னவா இருந்தா நமக்கென்ன? போச்சொல்லு அவனை. நாம நம்ம விஷயத்தைப் பேசலாம்.”

-அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த தேவகி சொன்னாள்.

“நாம லேடீஸ் மட்டும் போறோம். காலைல போனால் சாயந்தரம் இருட்டறதுக்குள்ள வந்திடலாம்.”

-ராதாமணி சொல்லிவிட்டு எல்லோரையும் பார்க்க, அவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள்.

“ஒருநாள் மட்டும்னா நான் வரலை.” டூர் போக மிகவும் ஆசைப்பட்ட தேவகி முகத்திலடித்தது போல சொன்னாள்.

“அப்புறம்...?”

“ஒரு ராத்திரி எங்கயாவது தங்கி, நிம்மதியா எல்லாம் மறந்து போயிட்டு வரலேன்னா அப்புறம் என்ன சந்தோஷம் இருக்கும்? சனிக்கிழமை காலைல போயிட்டு ஞாயிற்றுக் கிழமை சாயந்தரம் வந்தா என்ன?”

எல்லோரும் முகத்தோடு முகம் பார்த்தார்கள்.

“இல்ல. அப்ப வீட்டை யார் பாத்துப்பாங்க?”

-எலிசபத் கோசி தயங்கித் தயங்கிக் கேட்டாள்.

“மேடம், ஒரு நாள்ல வீடு என்னவாயிரும்? அப்படியே ஏதாவது ஆச்சுன்னா ஆகட்டும்."

-தேவகிக்குக் கோபமாக வந்தது.

“தேவகி நான் அப்படி சொல்லல.......”

- எலிசபெத் கோசி ஏதோ சொல்ல வாயெடுத்தபோது தேவகி மறுத்துச் சொன்னாள்.

“நான் வேணா கோசி சாரைக் கூப்பிட்டு உன்ன அனுப்பச் சொல்லட்டுமா?”

“அய்யோ. வேணாம் வேணாம்” என்றபடி எலிசபெத் கன்னத்தில் கை வைத்து அமைதி ஆனாள்.

“தோ. பெல் அடிச்சிட்டாங்க. நாளைக்கு மத்தியானம் தீர்மானமா சொல்லிருங்க. ஒரு நாள்னா நான் வரலை.”

தேவகி வகுப்புக்கு போகும்முன் தீர்மானமாகச் சொன்னபடி ஸ்டாஃப் ரூம் படியிறங்கினாள்.

மறுநாள் உணவு இடைவேளையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த புருஷோத்தமன் தேவகியிடம் மெதுவாகக் கேட்டார்.

“மத்திய வயசுக்காரர்களின் வினோதப்பயணம் என்னாச்சு?”

தேவகி சிரித்தபடி புருஷோத்தமனைப் பக்கத்தில் அழைத்துக் காதில் ஏதோ சொன்னாள். அவர் முகம் சிவந்தபடி வெளியே அவசரமாக இறங்கி நடந்தார்.

“மேடம், அவங்க அப்பாவை அம்மாவை எல்லாம் இழுத்திட்டீங்களா? இப்படி செவந்து போய் போறார்.”

திரைச்சீலை வைத்து பாதி பிரித்திருந்த துறைத் தலைவரின் அறையிலிருந்து குரல் வந்தது.

“சேச்சே. நான் புருஷோத்த மனுக்கு ஒரு ஸ்லோகம் சொல்லிக் கொடுத்தேன் அவ்வளவுதான் சார்."

- தேவகி சிரித்தபடி சத்தமாய் சொன்னாள். மற்ற துறையிலிருந்தும் பேராசிரியைகள் வந்து சேர்ந்தபோது துறைத்தலைவர் ‘நான் இனி இங்க உக்காரல்ல’ என்று சிரித்தபடி எழுந்து போனார்.

“என்ன தீர்மானம் பண்ணீங்க?” சாப்பிட்டுக் கைகழுவிய தேவகி கேட்டாள்.

“இருபது பேரில் அஞ்சு பேர் தடம் மாறிட்டாங்க.” - எலிசபெத் கோசி நிராசையோடு சொன்னார்.

“அதுக்கென்னா, பதினஞ்சு பேர் இருக்காங்க இல்ல. நீ லிஸ்ட் போடு.”

பதினைந்து பேருடைய பேர் எழுதி முடித்த ராதாமணி சொன்னார்.

“என்ன ஆனாலும் நாப்பத்தஞ்சு வயசுக்கு மேல இருக்கறவங்க தான் எல்லாரும். என்ன ஆச்சுன்னு தெரியல. இள வயசுக்காரிகள அனுப்ப புருஷன்களுக்குப் பயமா இருக்கோ என்னவோ?”

“இருக்கலாம். வயசான நம்மளை யாருக்கும் வேணாம்.” எலிசபெத் சிரித்தபடி சொன்னாள்.

“நாம தேக்கடிக்குத்தானே போறோம்?” உஷாதேவி கேட்டாள்.

“ஆமாம். இது ஒரு டிரையல் தான். சக்ஸஸ் ஆச்சுன்னா அடுத்த முறை ஊட்டிக்குப் போலாம்.”

“ஊட்டிக்கும் போலாமா?” எப்போதும் குரலில் காட்டும் அதிர்வோடு உஷாதேவி கேட்டாள்.

“உஷா அத விடு.”

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“அடுத்த வருஷத்துக்கான விஷயத்தை இப்ப பேச வேணாம். நான் இந்த வருஷம் ரிட்டயர்டு ஆயிப் போறேன். அப்புறம் ஊட்டியும் கொடைக்கானலும் நான் எங்க போப்போறேன். இப்ப போறதைப் பத்திப் பேசுங்க.”

எலிசபெத் கோசி வேதனையோடு சொன்னாள்.

“அடுத்த வருஷம் நாம போறதானா எலிசபெத் மேடத்தையும் கூட்டிட்டுப் போகணும்.”

“நம்ம வண்டியோட முன்னால காலேஜ் பேரைத் துணியில் எழுதிக்கட்ட வேண்டாமா?”

உஷாதேவிக்கு சந்தேகம் தொடர்ந்தது.

“அதெல்லாம் வேணாம் உஷா. நாம பேராசிரியர்கள்னு தெரிஞ்சா மத்தவங்க நம்மள மரியாதையா பாக்க ஆரம்பிச்சிடுவாங்க. ஒருமுறை கத்தணும்னு நெனச்சா கூட முடியாது” - தேவகி.

“எதுக்கு நாம கத்தணும் மேடம்?”

“சும்மா சொன்னேன் உஷா.” தேவகி டீச்சர் விளையாட்டாய் அவளுடைய தோளில் இடித்தாள்.

“நான் மோனிச்சன்கிட்ட குட்டிக்கானம் பங்களாவைப் பெருக்கி சுத்தம் செய்து வைக்கச் சொல்றேன்” - எலிசபெத் கோசி சொன்னாள்.

“அழகான பெண்கள் வராங்கன்னு அவங்கிட்ட சொல்லு. வேட்டைக் கறியும், கள்ளும் ரெடி பண்ணித் தரச் சொல்லு.”

தேவகி சொன்னதை யாராவது கவனித்தார்களா என்று சுற்றிலும் பார்த்த எலிசபெத் குரலடக்கி மெதுவாகச் சொன்னாள்.

“தேவகி கொஞ்சம் சும்மாயிரு.”

“கானாய கத்தோலிக்க பெண்ணுக்கா கள்ளைப் பத்திப் பேசினா மானக்கேடா இருக்கு.”

தேவகி எலிசபெத்தைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தார். சனிக்கிழமை காலையில் கல்லூரியிலிருந்து பஸ் புறப்பட்டபோது ஆலிஸ் உம்மன் பிரார்த்தனையை ஆரம்பித்தாள். உஷாதேவியின் சுடிதார் நன்றாக இருக்கிறது என்று ராதாமணி சொல்வது பிரார்த்தித்துக் கொண்டிருந்த எல்லோருக்கும் கேட்டது. ஜெபம் முடிந்தவுடன் அவர்களின் ஒட்டு மொத்த பார்வையும் உஷாதேவியின் மேல் படிந்தது.

“நல்லாயிருக்கு உஷா. சுடிதார் மட்டுமில்ல. நீயும்தான்” சிலுவையிட்ட பிறகு ஆலிஸ் உம்மன் சொன்னார்.

“உஷா. இந்த டிரஸ்ல பத்து வயசு கொறஞ்ச மாதிரி இருக்கு.”

ஆலிஸ் சொல்லி முடித்தவுடன் பஸ்ஸின் பின்னாலிருந்து ஒரு சத்தம். டிரைவர் அதிர்ந்து திரும்பினார். உடல் திருப்பி, தலை சாய்த்து ஜீன்ஸும் சட்டையுமாய் தேவகி மேடம் அழகு காட்டினார்.

“கடவுளே, இது எப்ப நடந்திச்சு?”

ராதாமணி மேடம் ஆச்சரியப்பட்டாள்.

புடவை கட்டிட்டு தானே பஸ்ஸில் ஏறினாங்க. தேவகி நின்ற இடத்திலிருந்து வட்டமடித்தாள்.

“ஆஹா. சின்ன பொண்ணாயிட்டீங்க. யாராவது பாத்தா காதலிக்க ஆரம்பிச்சிடுவாங்க.”

ஸ்ரீதேவி சொன்னதைக் கேட்டு டிரைவர் திரும்பிப் பார்த்தார்.

“டிரைவர் சார், முன்னால வண்டிகளும் பள்ள மேடுகளும் இருக்கும். பாத்து ஓட்டுங்க.”

தேவகி பிரத்யேக குரலில் சொன்னதைக் கேட்டு கிளீனர் திரும்பிப் பார்க்கும் ஆசையை உடனே கை விட்டார். உஷாதேவி ஆலிஸ் உம்மனின் காதில் ஏதோ சொல்ல, அவர்கள் ரகசியமாய் தலையாட்டிச் சிரித்துக் கொண்டனர்.

பொன்குன்றம் தேவசகாயம் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு இறங்கும்போது தேவகி எலிசபெத்திடம் கேட்டாள்.

“இது ராமச்சந்திரனின் சொந்தக்காரரோட ஹோட்டலா?”

“எந்த ராமச்சந்திரன்?”

“நக்சலைட்டு......”

“அய்யோ கடவுளே, நக்சலைட்டுன்னு சொல்றப்பதான் கட்லெட் ஞாபகமே வருது. நான் நிறைய கட்லெட் செஞ்சு எடுத்திட்டு வந்திருக்கேன். பேக்கிலேயே இருக்கு.” ஆலிஸ் உம்மன் சொன்னாள்.

“சிகப்பு நிறத்தைப் பற்றிப் பேசினால் உங்களுக்கு ரொம்ப அல்பமா இருக்கும். நீங்கள்லாம் விமோசனப் போராட்டவாதிகள்தானே.”

“விமோசனப் போராட்டம் இல்லைன்னா தெரிஞ்சிருக்கும், கேரளம் மொத்தமும் உங்கள் கட்சி பரவி அது ஒரு மேற்கு வங்கமாக மாறி இருக்கும்.”

“மேற்கு வங்கம்ங்கறது கெட்ட வார்த்தை சொல்றது மாதிரியிருக்கே.”

ஆலிஸ் சொல்வதைக் கேட்ட உஷா ரகசியமாய் சுபைதாவிடம் கேட்டாள். வண்டி மீண்டும் புறப்பட்டது. உஷாதேவி கையிலிருந்த பாட்டுப் புத்தகத்தைக் காண்பித்து பாட விருப்பமுள்ளவர்கள் பாடலாம் என்றாள்.

யாரோடும் அதிகமாய்ப் பேசாமல் மெல்லிய குரலில் பாடம் நடத்தும் மாலதியின் கை பாட்டுப் புத்தகத்தின் நேராக நீண்டபோது மற்றவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். மாணவர்களின் இரைச்சலினூடாக மனித எலும்புக் கூடுகளை வைத்துப் பாடம் நடத்தும் மாலதியின் வார்த்தைகள் நத்தையைப் போல நகர்ந்து போவதுதான் வழக்கம். அப்படியான அமைதியான மேடம் பாட்டுப் புத்தகத்தை வாங்கிப் பார்த்து விட்டு அப்படியே திருப்பிக் கொடுக்கவும் செய்தாள்.

“என்ன மேடம், புக்க வாங்கின உடனே பாடுவீங்கன்னு நெனச்சோம்.”

தேவகி பஸ்ஸின் முன்னாலிருந்து நடந்து வந்தபடி கேட்டாள். பின்னால் போய்விட்ட தேவகியின் சட்டைக்காலரை உமாதேவி இழுத்து விட்டாள்.

“உஷா அது கெடக்கட்டும். யாராவது பாத்தா பாக்கட்டும். மாலதி, நீங்க பாடுங்க.”

“அதில் எல்லாம் புதுப் பாட்டுகளாயிருக்கு. எனக்குப் பழைய பாட்டுதான் தெரியும்.”

“அப்பன்னா அதையாவது பாடு.”

அப்போது வண்டி ஒரு பெரிய குழியில் விழுந்து எழுந்து ஓடியது. பின்னாலிருந்து சுபைதாவின் அய்யோ என்ற அலறல் கேட்டது.

“அய்யோ, என்ன ஆச்சு?”

“ஒண்ணும் ஆகல. அஞ்சு புள்ள பெத்திட்டும் ஆகாததா இப்ப ஆகப் போது. அவளைப் பாடச் சொல்லு.”
மாலதி மயக்கும் மெல்லிய குரலில் பாடினாள்.

“இன்றெனக்கு பொட்டு வைக்க
சந்தியைக் கரைத்த செந்தூரம்....
இன்றெனக்கு மை எழுத
விண்ணிலே நட்சத்திர மைக்கூடு.”

பாடி முடித்தவுடன் மாலதியை இரண்டு மூன்று பேர் கட்டிப் பிடித்து முத்தமிட்டார்கள். டிரைவருக்கும், கிளீனருக்கும் திரும்பிப் பார்க்க ஆசை வந்தபோதும் அடக்கிக் கொண்டார்கள். வண்டி கிழக்கன்குன்றுக்கு ஏற முயன்ற போது காற்று எட்டிப் பார்த்தது. ரப்பரின் மணம் காற்றில் கலந்து வந்தது.

“குருவாயூர் கேசவன் குடையம் படி மேனகா தியேட்டர்லதான் பாத்தேன்.” சுபைதா உரக்கச் சொன்னாள்.

“சோமனை நான் திருவல்லாவில் அவரோட வீட்டு முற்றத்தில் லுங்கி மடித்துக் கட்டியபடி உட்கார்ந்திருப்பதைப் பாத்திருக்கிறேன். உப்பன் குருவி மாதிரி சிவப்புக் கண்கள் அவருக்கு.”

“ஜெயபாரதியின் தொப்புளைப் பார்த்ததில்லையா? அதில் ஒரு கிலோ அரிசி போட்டுக் குத்தலாம்.”

-தேவகி தன் சட்டையின் பட்டனை அவிழ்த்தபடி சொன்னாள்.

“அப்பறம் அவ கையில வேற பெரிசா வட்டமா பச்சை குத்தியிருப்பா.”

“மெதுவா, டிரைவரும் கிளீனரும் இருக்காங்க.” தேவகியின் கையை அழுத்திப் பிடித்தபடி எலிசபெத் சொன்னாள்.

“கேட்டா கேக்கட்டும். யாருக்கும் இல்லாததையா நான் சொல்றேன். சரி வேணாம். இனிமே ககனம், மாரிடம்னு சொல்லலாமா?”

“குண்டின்னும் மேலதுன்னும் சொல்றதில இருக்கற சுகம் அதிலில்லை மேடம்.” -உஷாதேவி.

“ஏய், இந்த உஷாதேவி பாரேன். என்ன பேச்சு பேசறா பாரேன்.”

உஷாதேவி சொன்னது சரியாகக் காதில் விழாதவர்கள் அவள் என்ன பேசினாள் என்று தெரிந்து கொள்ள ரகசியத்தை சுவாசிக்கும் ஆர்வத்தோடு இருக்கைகளிலிருந்து உயர்ந்தார்கள். ஒவ்வொரு காதுகளுக்கும் அது பரவியது. கடைசியாகப் பின் சீட்டிலிருந்து சுபைதா தீர்ப்பு கூறினாள்.

“உஷா சொன்னதுதான் சரி. கு...வும், மே....வும் போதும்.”

மாலையில் அவர்கள் குட்டிக்கானம் போய் சேர்ந்தார்கள். அங்கே எலிசபெத்தின் தம்பியுடைய பங்களாவில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிரைவரும், கிளீனரும் ஹோட்டலில் தங்கிக் கொண்டார்கள்.

டிசம்பர் மாதமானதால் பனி மூட்டமாக இருந்தது. பங்களாவைப் பாதுகாக்கும் தமிழன் இரவுச் சாப்பாட்டினைத் தயார் செய்துவிட்டுப் போயிருந்தான். பனியினூடாக ஒரு வரை மற்றொருவர் அன்யோன்யமாய் பார்த்துக் கொண்டார்கள். பார்வை எப்போதெப்போதோ பார்க்க மறந்தது போலிருந்தது.

"எல்லோரும் தங்க தனித் தனியா ரூம்ஸ் இருக்கு. இல்லன்னா மாடியில் போய் பெரிய ஹாலில் ஒண்ணாவும் படுத்துக்கலாம்.” -எலிசபெத்.

“மேடம். இன்னக்கி யாரு படுக்கப் போறது?”

“நாம முழிச்சிட்டிருக்கப்போறம் இல்லியா?”

நைட்டி மாற்றிக் கொண்டு வந்த படி சுபைதா சொன்னாள்.

“தூங்காமல் முழிச்சிருக்கணும்னா ஏதாவது வேணாமா?”

“அதுக்குத் தேவையானதை நான் கொண்டு வந்திருக்கேன்.”

தேவகியின் கேள்விக்குப் பதில் சொன்னபடி எலிசபெத் பேகிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்தார்.

“கடவுளே!” வழக்கம்போல உஷா தேவி அதிர்ந்தாள்.

“பயப்படாதே. நெல் போட்டு வடித்ததுதான். மோனிச்சன் இப்ப வரும்போது தந்தார். இன்னக்கி ராத்திரி இவன் கதையை முடிச்சிடலாம்” - எலிசபெத் சாதாரணமாய் சொன்னாள்.

பங்களாவின் சரளைக்கற்கள் பதித்த முற்றத்தில் எல்லோரும் வட்டமாய் உட்கார்ந்தார்கள். டம்ளரும், கறியும், தோசையும் எடுத்து வைத்தார்கள்.

“எல்லா விளக்கையும் அணைச்சிடலாமா?”

“அதெதுக்கு?” ஸ்ரீதேவி சந்தேகத்தைக் கேட்டாள்.

“இவரு உள்ள போயிட்டா வேற வெளிச்சம் ஏதும் வேணாம் ஸ்ரீதேவி.” தேவகி ஒவ்வொரு டம்ளரையும் நிறைத்தபடி சொன்னாள்.

“எனக்கு வேண்டாம்.” கணிதப் பேராசிரியை லட்சுமிதேவி மறுத்தாள்.

“ரொம்ப அலட்டிக்கவேணாம். ஒரு பெக்காவது அடி.” லட்சுமி தேவி மீண்டும் மீண்டும் மறுத்தாள்.

ஒவ்வொரு டம்ளரின் அளவையும் சரிபார்த்த எலிசபெத் கோசி, “இதில் ஃப்ஸ்ட் டைம் குடிக்கறவங்க மட்டும் கை தூக்குங்க” என்றாள்.

தேவகி தவிர மீதி எல்லோரும் கை தூக்கினார்கள்.

“ஃப்ஸ்ட் டைம் அப்ப எல்லாரும். கடவுள்ட்ட வேண்டிட்டு அப்படியே அடிச்சிருங்க.”

தேவகி பொத்தாம் பொதுவாய் சொன்னாள். எல்லோரும் டம்ளரை எடுத்தார்கள். சியர்ஸ் சொன்னார்கள். அந்த சப்தம் சிறிது நேரம் அப்படியே வெட்ட வெளியில் தங்கி பின் மெதுவாக குன்றிறங்கிப் போனது.

எலிசபெத்தும் தேவகியும் ஒரே மூச்சில் குடித்தார்கள். சிலர் முகம் வெறுப்பைக் காண்பித்தது. சிலர் நாக்கில் தொட்டு ருசி பார்த்தார்கள். சிலர் கஷ்டப்பட்டு விழுங்கித் தொலைத்தார்கள்.

“எப்படி இருக்கு?” எலிசபெத் கேட்டாள்.

“அமிலம் குடிச்சது போல இருக்கு” லட்சுமி தேவி சொன்னாள். மெது மெதுவாக ஒவ்வொரு டம்ளரும் காலியானது. மாலதி ‘பௌர்ணமி சந்திரன்’ என்ற பாட்டைப் பாடினாள்.

தேவகியும், ஸ்ரீதேவியும் நசீரும் ஷீலாவுமாக மாறினார்கள். இடையில் நசீர் ஷீலாவைக் கட்டிப் பிடித்தார். முத்தமிட்டார். ஷீலா தன் நெஞ்சினைத் தாழ்த்தியும், உயர்த்தியும் காண்பித்தாள். எல்லோரும் சிரித்தார்கள்.

“என்ன ஆனாலும் ஷீலாவோட உடல்வாகு இப்ப இருக்கற எந்த நடிகைக்கும் இல்ல” - சுபைதா ஷீலாவை ரசித்தாள்.

“சரிதான். கள்ளிசெல்லம் படத்தில் அவ வர்றதைப் பாக்க நமக்கே ஆசையா இருக்கும்”. ஆலிஸ் உம்மன் கண்களில் மோகம் தெரிந்தது.

“யார் சொல்றாங்க பார் அதை. நம்ம ஆலிஸ் மேடம்....”

“ஏன் நான் சொல்லக்கூடாதா? நான் மலடின்னாலும் எனக்குள்ள இதெல்லாமும் இருக்கு.”

“இதெல்லாம் வெளியில் வர இப்படியான மருந்தெல்லாம் உள்ள போக வேண்டியிருக்கு இல்ல?”

“இல்லயா பின்ன...?”

“கொஞ்சம் ஊத்து எலிசபெத்.”

“நான் ஊத்தறேன். எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல. நாளைக்கு வீட்டுக்குப் போம்போது அப்பா வாசனை புடிச்சா பிரச்சனையாயிடும்.”

எலிசபெத்தின் முன்னால் டம்ளரை நீட்டியபடி ஆலிஸ், “அவருக்கு என்னுடைய வாசனை தெரிஞ்சு ரொம்ப நாளாயிடிச்சு மேடம்.”

ஒரு நிமிடம் விரும்பத்தகாத மௌனம் எல்லோரையும் சூழ்ந்தது.

“நீங்கள் யாரும் யாரையும் பார்க்க வேண்டாம். நான் மலடின்னு தெரிஞ்ச பிறகு அவருக்கு நான் எதுக்கு?”

ஆலிஸ் உம்மன் வேதனையோடு சிரித்தாள்.

“மேடம், இப்படி அவங்க வெறுக்கறதுக்கு குழந்தைகள் இருக்கணுமா வேண்டாமா என்பது முக்கியமில்ல. நாப்பத்தியஞ்சு வயசில மாதவிலக்கு நின்னவுடனே அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘நீ வெறும் சக்கை தானே.’ ” சுபைதா தன் வார்த்தைகள் இடறிப் போகாமலிருக்க முயன்று தோற்றாள். ஆனாலும் சுபைதாவின் குறும்புள்ள கண்கள் நிறைந்து வழிவதை எல்லோராலும் பார்க்க முடிந்தது.

“சுபைதா அவங்க அப்படி சொல்லலன்னாதான் ஆச்சர்யம். நாப்கினோட காசு மீதின்னு எம்புருஷன் சொன்னார்.” உஷாதேவியின் குரல் கம்மியது.

“உஷா இந்தக் காசுக்கு இவங்க பறக்கறது எப்பதான் தீருமோ?”

- முற்றத்தில் நடந்து கொண்டிருந்த தேவகி மேடம் கேட்டார்.

“அது செத்தாலும் தீராது. என்னோட சொத்து விவரங்கள் எல்லாம் அவருக்குத் தெரியும்னு நெனப்பு. தெரியும். மற்றதெல்லாம் தெரியும். ஆனா இது மட்டும் தெரியாது.” உஷாதேவி சுடிதாரின் பேண்ட்டைக் கீழே இறக்கிக் காண்பித்தாள். பத்து பவுனில் தங்க அரை ஞாண் அவள் இடுப்பில் மின்னியது.

“உஷா, இது அவருக்குத் தெரியாதா?”

“மேடம், ரெண்டு குழந்தைகளுக்காக மட்டும்தான் அவர் என்னைத் தொட்டிருக்கிறார்......”
உஷா முகம் பொத்தி உட்கார்ந்து வெடித்தழுதாள்.

“உஷா, இந்த சுடிதார் எங்க வாங்கின?” தேவகி பேச்சை மாற்றினாள்.

“மேடம், எனக்கு அதில் சங்கடமெல்லாம் இல்ல.” சங்கிலிப் புழு கூடுகட்டுவது போன்ற பிளவுகளுடன் இருக்கும் தன் காலைக் காண்பித்து, “என் மொத்த வேதனைகளும் சங்கடங்களும் இதில் தெரியும் பாருங்க” என்றாள். ஒரு நிமிடம் எல்லோரும் அவரவர்களின் கால் வெடிப்புகளில் வெடித்துப் பிளந்திருக்கும் நீர் கோர்த்த தடங்களை அனிச்சையாய் பார்த்தனர்.

“போதும், போதும், வேதனைகள் போதும்.” சுபைதா குதித்தெழுந்து ஒரு நர்த்தகியைப் போல சொன்னாள்.

“என் பெரியம்மாவிற்கு எழுபது வயதிலும் ஒரு ரகசியமான காதலன் இருந்தான். ஆனா அதுக்கெல்லாம் ஒரு யோகம் வேணும் இல்ல.”

அவ்வளவு நேரம் பேசாமலிருந்தலலிதா மேடம் சொன்னாள்.

“முதல் பிரசவத்தோட என்னோட கர்ப்பப்பையை எடுத்திட்டாங்க. அதுக்குப் பிறகு இத்தனை வருஷமாச்சு......”

“மேடம், இதுக்கும் கர்ப்பப்பைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?” சுபைதா அப்பாவியாய்க் கேட்டாள்.

“என்னமோப்பா.... அவருக்கு என்னைத் தொடறதே பிடிக்கல. ஏதோ குறைபட்ட பெண்ணைப் பாக்கறது போலத்தான் என்னைப் பாப்பார். நானொரு முறை......”

லலிதாவால் அந்த வாக்கியத்தை முழுமையாக்க முடியவில்லை. அழுகையின் இழைகள் வாக்கியங்களைக் கட்டி இறுக்கியது. அவளைத் தன்னோடு சேர்த்தணைத்தபடி லட்சுமிதேவி சொன்னாள்.

“எனக்கு முதல் பெண் பிறந்த பிறகு இன்னும் ஒரு குழந்தை கூட வேணும்னு எவ்வளவு ஆசைப்பட்டேன் தெரியுமா? அதை அவர்ட்ட சொன்னதுக்கு, எனக்கு முட்டியெல்லாம் வீங்கி நீர் கோத்திருக்குன்னார். அப்ப அந்த வார்த்தைகளோட அர்த்தம் கூட எனக்குத் தெரியல. மெனோஃபாஸ் ஆன பிறகு படிக்க கீதையும் ராமாயணமும் வாங்கித் தந்திட்டு சத்தமா ஒரு சிரிப்பு சிரிச்சார் பாருங்க. கால காலமாய்ப் புரியாமல் இருந்த பல வார்த்தைகளோட அர்த்தம் எனக்குப் புரிஞ்சிடுச்சு.”

டம்ளர்களில் சில அப்படியே இருந்தன. எல்லோரும் தன்னுள் பயணிக்கத் தொடங்கியிருந்தார்கள்.

“மத்திய வயதில் நாம ஒண்ணுமே இல்லையான்னு நினைச்சு தற்கொலையா செஞ்சுக்க முடியும்” -ராதாமணி தேவகியைப் பார்த்துக் கேட்டாள்.

“அதெப்படி முடியும் ராதாமணி. நதி ஒழுகுவதை நிறுத்துவது போல மெனோஃபாஸ் முடிந்தவுடன் நம் உடல் யாருக்கும் வேண்டாமென தீர்மானமாகிறதோ தெரியவில்லை.”

பனி ஒவ்வொரு முகத்தையும் மறைத்தது. “இன்று முதல் நமக்கு ஏதாவது தேவைப்பட்டால்......?” இருட்டோடு சேர்ந்து ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த மாலதியின் குரலினுடைய கனம் அங்கேயிருந்த எல்லோரையும் அதிர வைத்தது. ஒவ்வொரு முகத்தையும் மறைத்திருந்த பனி மெல்ல விலகியது. முதல் முதலாய் பார்ப்பவர்களைப் போல அதீத ஆழத்தில் அவர்கள் அன்யோன்யமாய் பார்த்தனர்.
சுபைதா சத்தமாகக் கத்தினாள். அப்போது விமான வடிவத்தில் தன் யாத்திரையைத் தொடங்கவிருந்த நட்சத்திரம் அவளை மேலேயிருந்து பார்த்தது. மாலதி மிக மென்மையான குரலில் பாட்டுப் பாட ஆரம்பித்தாள்.

* விமோசனப் போராட்டவாதிகள்: கேரளத்தில் இ.எம்.எஸ். தலைமையிலான கட்சியை வெளியேற்ற மற்ற எல்லா கட்சிகளும், நிலப்பிரபுக்களும், கிறிஸ்துவ அமைப்புகளும் சேர்ந்து நடத்திய போராட்டம்.

*

சென்ஷி

unread,
Oct 17, 2010, 1:53:02 AM10/17/10
to panb...@googlegroups.com

கொல்ட்டி - வெட்டிப்பயல் பாலாஜி

"தெலுங்கு படத்துலயெல்லாம் ஏன் இவ்வளவு கேவலமா ட்ரெஸ் போடறாங்க??? மஞ்ச சட்டை, பச்சை பேண்ட்... உங்க ஆளுங்களுக்கு ட்ரெஸ்ஸிங் சென்சே கிடையாதா???"

நான் சொல்லி முடிச்சதும் சுமாவுக்கு பயங்கர கோபம் வந்திடுச்சி.

ஆமாம் என்ன இருந்தாலும் அத்தனை பேர் முன்னாடி நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது. அதுவும் எல்லோரும் அவ டீமெட்ஸ்.

சாயந்திரம் 7 மணிக்கு எக்ஸ்டென்ஷனுக்கு கால் வந்தது.

"ரமேஷ் ஹியர்"

"சுமா பேசறேன்"

"ஹிம் சொல்லு"

"சாப்பிட போகலாம்"

"சாப்பிட போகலாமா??? மணி என்ன ஆகுது... இன்னும் புட் கோர்ட்ல சாப்படே ரெடி ஆகியிருக்காது. இன்னும் எப்படியும் அரை மணி நேரமாகும்"

"நான் என் சீட்டில இருந்தா இந்த குங்குமப் பொட்டு வேலை ஏதாவது கொடுக்கும். நீ வா. நம்ம சும்மா வாக்கிங் போயிட்டு அப்பறமா சாப்பிட போகலாம் "

"சரி... நீ என் பில்டிங் கிட்ட வந்து மிஸ்ஸுடு கால் கொடு நான் வரன்"

வழக்கம் போல் என்ன பேசினோம்னே தெரியாம பேசினோம்... 8 மணிக்கு அவள் மட்டும் சாப்பிட்டாள், அவளை மல்லேஸ்வரம் பஸ்ஸில் ஏற்றிவிட்டு, நான் கோரமங்களா பஸ் பிடித்து வீட்டிற்கு சென்றேன்.

"டேய் ரமேஷ், அந்த அம்மா சப்பாத்தி செஞ்சிருக்காங்க!!! உனக்கு ஹாட் பாக்ஸ்ல இருக்கு"

"ஏன்டா, சப்பாத்திக்கு தொட்டுக்க குருமாவையே காணோம்???"

"கரு வாயந்தான் கடைசியா சாப்பிட்டான்... அவந்தான் தீர்த்திருப்பான்"

"ஏன்டா சொல்லிருந்தா நான் ஆபிஸ்லயே சாப்பிட்டிருப்பேன்... சரி விடு நான் ஜாம் தொட்டு சாப்பிட்டுக்கறேன்"

சப்பாத்தி சாப்பிட ஆரம்பிக்கும் பொது... மிஸ்டு கால் வந்தது.
சுமா வீட்டிக்கு போய் சேர்ந்துட்டா. சரினு ஜெர்கின் போட்டுட்டு போனை எடுத்துட்டு மொட்டை மாடிக்கு போனேன். கீழே வரும்போது மணி 12:15.

ரூம்ல எல்லோரும் மும்மரமாக ஒருவரை ஒருவர் ஓட்டிக் கொண்டிருந்தனர்.
சப்பாத்தி ஆறிப் போய் அப்பளமாக இருந்தது. ஒருவழியாக சாப்பிட்டு முடித்து கூட்டத்தோடு சேர்ந்து அனைவரையும் ஓட்டிவிட்டு 1 மணிக்கு படுக்கைக்கு சென்றேன்.

தூக்கம் வரவில்லை. என்ன இருந்தாலும் இன்னைக்கு அவளை அத்தனை பேருக்கு முன்னால ஓட்டியிருக்க கூடாது. அதைப் பற்றி அவள் போன்ல கூட ஒரு வார்த்தை பேசல. குற்ற உணர்ச்சியாக இருந்தது.

சுமாவை முதன்முதலாக ட்ரெயினிங்கில் பார்த்தது. அவளை எப்போதும் ஆந்திரா கோஷ்டியுடன் தான் பார்க்க முடியும். ஒன்னு, ரெண்டு முறை பேசியிருப்போம். அவ்வளவுதான்.

பிறகு ட்ரெயினிங் முடித்து, ஒவ்வொருவரையும் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பிராஜக்டில் போட்டார்கள்.

நானும், சுமாவும் ஒரே பிராஜக்ட்டில் சேர்ந்தோம். அவளுக்கு தமிழ் தெரியாது, எனக்கு தெலுகு புரியாது. எப்பவுமே இங்கிலிஸில் தான் பேசிக் கொள்வோம். ரெண்டு பேரும் ஒரே மாட்யுல். அடிக்கடி டெட்லைன் மீட் பண்ணுவதற்காக நைட் வேலை செய்ய வேண்டியது வரும்.

பொண்ணுங்க நைட் cabla தனியா போறது எனக்கு எப்பவுமே பிடிக்காது. பல சமயங்களில் அவளை 9:15 பஸ்ஸில் வீட்டிற்கு போக சொல்லிவிட்டு, அவளுடைய மாட்யூலையும் நானே பார்த்துக் கொள்வேன். அந்த மாதிரி சமயங்களில் சில சமயம் எதுவும் புரியாம அவளுக்கு போன் செய்து பேசிக்கிட்டே வேலை செய்வேன். அவளும் எனக்கு போர் அடிக்குமே என்று 2-3 மணி வரைக்கும் கூட பேசிக்கிட்டே இருப்பா... நான் தூங்குனு சொன்னாலும் இல்லை எனக்கு தூக்கம் வரலைனு சொல்லிடுவா.
(நைட் பொதுவாக ஆன் - சைட்டில் Code Review செய்வார்கள். ஏதாவது தவறு இருந்தால் நாம் அதை சரி பண்ண அவர்களுக்கு உதவ வேண்டும்... அதனால் எங்களுக்கு பொதுவாக அதிக வேலை இருக்காது. ஆனால் நாங்கள் அங்கு இருக்க வேண்டும்)

இப்படியே ரெண்டு பேரும் நல்ல பிரெண்ட்ஸ் ஆகிவிட்டோம். அவள் தங்கி இருந்த PGயில் நிறைய தமிழ் நாட்டுக்கார பெண்கள் இருப்பதாக சொல்வாள்.

எனக்கு யாரையாவது இண்ட்ரடியுஸ் பண்ணிவிடுனு சொன்னா, எப்பவுமே முறைப்பாள். திடிர்னு ஒரு நாள் புட் கோர்டில் அவள் ரூம் மெட் ராதிகாவை அறிமுகப்படுத்தினாள். ராதிகா அன்று எங்களுடன் தான் சாப்பிட்டாள்.

"ரமேஷ், உனக்கு ஒன்னு தெரியுமா??? சுமா இப்பல்லாம் விழுந்து விழுந்து தமிழ் கத்துக்கிறா!!! "

எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. எப்பவுமே தெலுகுதான் தமிழவிட பெருசுனு என்கிட்ட சண்டை போட்ற சுமாவா தமிழ் கத்துக்கிறா??? ஆனால் இதை என்கிட்ட சொல்லவே இல்லையேனு ஒரு வருத்தம். ஜாவால எல்லாம் டவுட் கேக்கறா, எனக்கு நல்லா தெரிஞ்ச தமிழை யார்கிட்டயோ கத்துக்கிறாளே!!!

ஆனால் இதை ராதிகா சொன்னவுடன், சுமா அவளை முறைத்துவிட்டு "அதெல்லாம் ஒன்னும் இல்லை... அவள் சும்மா விளையாட்டுக்கு சொல்றா"னு வேக வேகமாக சொன்னாள்.

ராதிகாவைப் பார்த்ததும் நல்லதாப் போச்சினு தோனுச்சி.

3 மாசம் கழித்து என்னுடைய பிறந்த நாள்... சனி கிழமையன்று வந்தது...

வெள்ளிக்கிழமை நைட் 9 மணிக்கு போன் செய்தாள். என்னடா இவ்வளவு சீக்கிரமா பண்ணிட்டாளேனு பார்த்தால், 12 மணி வரை பேசிக்கிட்டே இருந்தாள். (எங்கே 12 மணிக்கு சரியாகப் போன் செய்தால் பிஸியாக இருக்குமோனு சந்தேகத்தால் 9 மணிக்கே போன் செய்துவிட்டாள்).

சரியாக பனிரெண்டு மணிக்கு,

"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

"சுமா நீயா பேசறது", ரமேஷால் அவன் காதை நம்ப முடியவில்லை.

"இல்லை உங்க அம்மா"

மறுபடியும் அதிர்ச்சி.

"ரமேஷ், இனிமே நான் உன்கிட்ட தமிழ்ல தான் பேசுவேன். ஓகேவா???"

ரமேஷ்க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. தெளிவா தமிழ்ல பேசறா. எப்படி இவ்வளவு சீக்கிரத்துல கத்துக்கிட்டா.

"அப்பறம் நாளைக்கு உன் பிளான் என்ன???"

"எதுவும் பெருசா இல்லை"

"நம்ம படத்துக்கு போவோமா???"

"என்ன படம்"

"அதை நாளைக்கு PVR போய் முடிவு பண்ணிக்கலாம்"

"சரி... காலைல எனக்கு ஒரு பதினோரு மணிக்கா போன் பண்ணு"

"ஏன்???"

"நான் எழுந்திரிக்க வேணாமா?"

"அடப்பாவி!!! பதினோரு மணிக்கு எழுந்திரிக்க உனக்கு போன் பண்ணனுமா???"

"கேள்வியெல்லாம் கேக்காத எனக்கு புடிக்காது. சொன்னா கேக்கனும் புரியுதா???"

"சரிங்க சார்... நான் பண்றேன்"

போனை வைக்கும் போது மணி 2.

ரூம்ல யாருக்கும் என் பிறந்த நாள் தெரியாது. என்ன செய்ய எங்க ரூம்ல தங்கியிருக்கிற யாரும் நிரந்தரம் கிடையாது. அதனால் யாருக்கும் பெரிய பற்றுதல் இல்லை.

காலையில் 6 மணிக்கு வீட்டில் இருந்து போன்...

"Happy Birthday to u"

"thx மா"

"பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

"thxப்பா"

"கண்ணு நானும், அப்பாவும் எழுந்து குளிச்சிட்டு கோவிலுக்கு கெளம்பிட்டு இருக்கோம். சரி நீ எழுந்திரிச்சிருக்க மாட்டேனுதான் இவ்வளவு நேரம் கழிச்சி பண்றோம். சரி நீயும் குளிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வா"

"சரிம்மா... நான் இன்னும் எழுந்திரிக்கவே இல்லை.. நைட் ஆபிஸ்ல வேலை அதிகம்... 2 மணி ஆகிடுச்சி"

"சரி கண்ணு... நீ தூங்கு... கோவிலுக்கு போகும் போது மறக்காமல் ஸ்வீட் வாங்கிட்டு போய்... கோவில்ல வயசானவங்க இருந்தா கொடு... அவுங்க மனசால வாழ்த்தனா நீ நல்லா இருப்ப... சரியா???"

"சரிம்மா... நான் உங்களுக்கு போன் பண்றேன்"

செல் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பதினொரு மணிக்கு செல்போன் சிணுங்கியது.

Suma Calling....

"ஹாய்...
சொல்லு"

"என்னா...இன்னும் எழுந்திரிக்கலையா???"

"இல்ல... இப்பத்தான் ஏழுந்திரிக்கிறன்"

"அடப்பாவி!!! எத்தனை மணிக்கு சாப்பிட வர???"

"என்ன சாப்பிடவா??? படத்துக்குத் தான சொன்ன???"

"இங்க PGல மதியம் சாப்பாடு கேவலமா இருக்கும். கிருஷ்ணா கபேல மதியம் உன்கூட சாப்பிடலாம்னு பார்த்தேன்"

"சரி வரேன்"

மதியம் 12 மணிக்கு கிருஷ்ணா கபே வந்து சேர்ந்தாள். எனக்கு பிடிச்ச நேவி ப்ளூவில் சுடிதார் போட்டிருந்தாள்.

"என்ன... பர்த்-டேக்கு புது துணியெல்லாம் போடலையா???"

"வீட்ல அம்மா எடுத்து கொடுத்தாங்க... நாந்தான் அதை எடுத்துட்டு வரலை. புது துணியிலெல்லாம் எனக்கு இப்ப இன்ட்ரெஸ்ட் இல்லை. அதுதான் எனக்கு பதில் நீ போட்ருக்கியே அப்பறமென்ன"

"ஏ!!! இது புதுசு இல்ல... நான் காலேஜ்ல போட்டிருந்தது. பெங்களூர் வந்து இப்பதான் பர்ஸ்ட் டைம் போடறேன்."

"சரி வா... சாப்பிட போகலாம்"

நல்ல சாப்பாடு.

பிறகு இருவரும் PVR சென்றோம்.

"என்ன படம் பார்க்கலாம்"

"உனக்கு ரஜினிதான பிடிக்கும், சந்திரமுகி போகலாம்"

"ஏன் தெலுகு படமெல்லாம் கேவலமாக இருக்கனும்னு இப்படி சொல்றியா???"

அவள் கண் கலங்கிவிட்டது.

"ஏ... சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்... சந்திரமுகியே போகலாம் வா"

ரெண்டு பேரும் சந்திரமுகி சென்று பார்த்தோம்.

ஒருவழியாக சந்திரமுகி பத்தாவது முறைப் பார்த்தேன். ஆனால் முதல் முறை பார்த்த மாதிரி இருந்தது.

பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன், Forumல் கொஞ்ச நேரம் சுற்றினோம்.
லேண்ட் மார்க் சென்றோம். அங்கே எனக்கு கல்கியின் "பொன்னியின் செல்வன்", "சிவகாமியின் சபதம்", "பார்த்திபன் கனவு" மூன்றும் சேர்ந்த ஒரு பேக்கை வாங்கி பிறந்த நாள் பரிசாக வழங்கினாள்.

எனக்கு கல்கி பிடிக்கும்னு அவளுக்கு எப்படி தெரியும். அதுவும் நான் சொல்லாமலே அவளே எப்படி அந்த தொகுப்பை சரியாக எடுத்தாள்.

"சுமா, தமிழ் படிக்க கத்துக்கிட்டியா???"

"ஏ!!! அதெல்லாம் இல்லை... பேச கத்துக்கிட்டதே ரொம்ப கஷ்டம். எனக்கு சொல்லி கொடுக்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க... நீ தான் எனக்கு படிக்க சொல்லி தரனும்"

"அப்பறம் எப்படி புக்கை கரெக்ட்டா எடுத்த???"

"நான் நேத்தே என் பிரெண்டோட வந்து பாத்து வெச்சிக்கிட்டேன். அதுதான்"

சிரித்தாள். என்னுமோ தெரியல.. திடிர்னு எனக்கு அவள் தேவதை மாதிரி தெரிந்தாள்.

அப்படியே சுத்திட்டு டின்னரை Forum Transitல் உள்ள சேலம் கிட்சனில் சாப்பிட்டோம்.

அவளை மல்லேஸ்வரத்திற்கு என்னுடைய டூ-வீலரில் அழைத்து சென்று விட்டு வந்தேன்.

இந்த பிறந்த நாளை என் வாழ்வில் மறக்கவே முடியாது.

பிறகு ஒரு மாதத்தில் இருவரையும் வெவ்வேறு பிராஜக்ட்டிற்கு மாற்றினார்கள்.

அப்படியும் காலை பிரேக் பாஸ்ட், மதியம் லன்ச், சாயந்திரம் ஸ்னாக்ஸ், இரவு டின்னர் எல்லாம் ஒன்றாகவே சாப்பிட்டோம்.

பிறகு அவள் வீட்டிற்கு சென்ற பின் போன் செய்து 12 மணி வரை பேசுவோம்.

ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம்...

அப்படியிருக்கும் நிலையில் அவளை நான் இன்று அப்படி ஓட்டியிருக்க தேவையில்லை. ஒரு வழியாக தூங்கிவிட்டேன்.

தீபாவளிக்கு 3 நாள் லீவு போட்டால் 10 நாள் லீவு கிடைக்கும் போலிருந்தது. ரெண்டு பேரும் 3 நாள் லீவ் போட்டு அவரவர் ஊருக்கு போகலாம் என்று தீர்மானித்திருந்தோம்.

திடிர்னு பத்து நாள் பிரிய போறோம்னு தெரிந்தவுடன், ஏதோ மனசை அழுத்துவதை போல் இருந்தது...

11 மணிக்கு அவளுக்கு டிரெயின்.

மணி 6.

சுமாவின் extensionக்கு போன் செய்தேன்.

"ஏ!!! என்ன சொல்லு...
அந்த குங்குமம் வேற இன்னைக்குனு பாத்து வேலை நிறைய கொடுத்திருக்கு"

"இல்லை... உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசனும்"

"என்ன... சொல்லு
நான் வேற இன்னைக்கு 7:15 பஸ்ஸாவது பிடிக்கனும்"

"சரி... ரயில்-வே ஸ்டஷனுக்கு எத்தனை மணிக்கு வரணும்"

"ஏ!!! அதெல்லாம் தேவையில்லை... நானே போயிக்குவன்"

"நான் உன்கிட்ட வரட்டுமா, வேணாமானு கேக்கல... எத்தனை மணிக்கு நீ ரெயில்-வே ஸ்டெஷன்ல இருப்பனு கேட்டேன்"

"நான் வீட்டில இருந்து புறப்படும் போது உனக்கு போன் பண்றனே... ஓகே வா???"

"சரி"

சுமா அடிக்கடி சொல்லுவா இந்த குங்குமம் வைக்கிற ஆம்பிளைகளையே நம்பக் கூடாதுனு. இன்னைக்கு அவனால எனக்கு பிரச்சனை.

சரி ரயில்வே ஸ்டெஷன்ல பார்த்து பேசிக்கலாம்.

வேலை செய்யவே முடியவில்லை. வீட்டிற்கு சென்றுவிட்டேன்.

8 மணிக்கு போன் அடித்தது. எந்த நம்பர்னே தெரியல... இந்த நேரத்துக்கு எவண்டா பண்றது.

"இது ரமேஷா???"

"ஆமாம்... நீங்க யார் பேசறது"

"நாங்க இங்க வாட்டர் டேங்க் பக்கத்துல இருந்து பேசறோம்... இங்க குமார்னு யாரோ ஒருத்தருக்கு ஆக்ஸிடெண்ட் ஆகியிருக்கு. அவர் உங்க பிரண்டுங்களா???"

"ஆமாம்... அவர் எப்படி இருக்காரு??? எதுவும் பெருசா பிரச்சனையில்லையே"

"இல்லைங்க... தலைல ஹெல்மெட் போட்டீருந்ததால எதுவும் பெருசா இல்லை... இருந்தாலும் கை கால்ல எல்லாம் நல்லா அடிப்பட்டிருக்கு.. இங்க பக்கத்துலதான் St.John's hospitalல சேத்துருக்காங்க... நீங்க யாராவது வந்திங்கனா நல்லா இருக்கும்"

"இதோ உடனே வரேன்"

ஹாஸ்பிட்டல்... எனக்கு பிடிக்காத முதல் இடம். சின்ன வயசுல எனக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போயிடும். அதனால் மருந்து சாப்பிட்டு சாப்பிட்டு மருந்து வாடையே பிடிக்காமல் போய்விட்டது.

குமார் எமெர்ஜென்ஸி வார்டில் இருந்தான். போனில் சொன்னது போல் லேசான அடியில்லை. கொஞ்சம் அதிகமாகவே அடிப்பட்டிருந்தது.

"நீங்க அவர் பிரண்டா???"

"ஆமாம்"

"அவருக்கு அவசரமா இரத்தம் தேவைப்படுது... நீங்க ரத்தம் கொடுக்க முடியுமா???"

"கண்டிப்பா...நான் ஏற்கனவே 2 தடவை கொடுத்திருக்கேன்"

"உங்க பிளட் குருப் என்ன???"

"B +ve"

"கடைசியா எப்ப பிளட் கொடுத்தீங்க???"

"காலேஜ் படிக்கும் போது. 2 வருஷமிருக்கும்"

"சரி வாங்க"

உள்ளே ஹைட், வெயிட் எல்லாம் செக் பண்ணாங்க... அப்பறம் இரத்தம் எடுக்குமிடத்திற்கு அழைத்து சென்றார்கள்.

என் செல் சிணுங்கியது...

Suma Calling....

"செல் போனெல்லாம் ஆப் பண்ணிடுங்க"

சரிங்க... செல் போனை ஆப் செய்தேன்.

பிறகு வெளியே வருவதற்குள் அரை மணி நேரம் ஆகிவிட்டது.

மணி பத்து...

நண்பர்கள் எல்லாம் வெளியே நின்று கொண்டிருந்தனர்.

"டேய்... பெரிய பிரச்சனை எதுவும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டாங்க!!! இன்னும் 10-15 நாள்ல சரியாயிடுமாம்" கருவாயன் சொன்னான்.

"பணம் ஒரு 10,000 வேணுமாம். நான் போயி எடுத்துட்டு வரேன். ரமேஷ் நீ கொஞ்சம் உன் வண்டி சாவியை தர முடியுமா??? "

"இந்தா பத்திரம்... அப்படியே பெட்ரோல் போட்டுக்கோ"

அப்போழுதுதான் நியாபகம் வந்தது. செல் போனை இன்னும் ஆன் செய்யவில்லை. சரி... எப்படியும் இது செல் போன்ல பேசர விஷயமில்லை.

10 நாள் தானே...

குமாரின் பெற்றோர் வந்தவுடன் ஊருக்கு சென்றேன்...

தீபாவளி ... மனதிற்கு வலியைத்தான் தந்தது... அவள்ட முன்னாடியே பேசியிருக்காலாம்.

சே!!! அவளை ஒழுங்கா, ரொமிங்கோட வாங்குனு சொன்னேன். இப்ப பாரு போன் பேசனும்னு நினைச்சாக் கூட முடியல.

"ஏன் கண்ணு ஒரு மாதிரியா இருக்க???"

"இல்லம்மா... குமார்க்கு அடிப்பட்டுடுச்சி அதனாலத்தான்"

"நீ ஒன்னும் கவலைப்படாதே!!! எல்லாம் சரியாயிடும்"

பத்து நாள் பத்து யுகங்களாக கடந்தது.

திங்கள் கிழமை காலையில் 8 மணிக்கெல்லாம் என் சீட்டில் இருந்தேன்.

சுமாவின் காலுக்காக எதிர்பார்த்து...
அவளுக்கு போன் செய்தாலும் "The number u r trying is currently not reachable"ஏ வந்தது.

செவ்வாய் கிழமை காலை 5:30 மணிக்கு கால் வந்தது...

Suma calling...

"ஏ!!! என்ன இவ்வளவு சீக்கிரம் கூப்பிடற"

"ரமேஷ்! நீ இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் ஆபிஸுக்கு வர முடியுமா???"

"ஏன் என்னாச்சி???"

"நீ நேர்ல வா!!! நான் சொல்றேன்"

"சரி...நான் 7:15க்கு சீட்ல இருப்பேன்"

"வேணாம் 8 மணிக்கு வா!!! போதும்"

"சரி"

அதுக்கு அப்பறம் தூக்கமே வரலை.

8 மணிக்கு அவளோட பில்டிங் லாபில வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

நேராக பஸ்ஸில் இருந்து வந்தவள். என்னைப் பார்த்தவுடன், லேசாக கண் கலங்கினாள்.

"இரு!!! நான் போய் என் சீட்ல என் ஹாண்ட் பேகை வெச்சிட்டு வந்துடரேன்... அப்பறம் சாப்பிட போகலாம்"

"சரி"

2 நிமிடத்திற்குள் வந்தாள்...

"வா!!! போகலாம்"

"என்ன விஷயம் சொல்லு..."

"எங்க வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க!!!"

ஒரு நிமிடம் பூமி சுற்றவது நின்றுவிட்டது போல் ஆகிவிட்டது...

"என்ன சொல்ற???"

"ஆமாம் ரமேஷ்!!! எங்க அப்பாவோட பிரண்ட் பையனாம்... USல இருக்கிறானாம்"

"அதுக்கு நீ என்ன சொன்ன???"

"நான் என்ன சொல்லனும்னு நீ எதிர்ப்பார்க்கிற???"

என்னிடம் பதில் இல்லை...

"ஒரு வாரம் உட்கார்ந்து அழுதேன்... உன்னை ரீச் பண்ணவும் முடியலை. உன் மனசுல என்ன இருக்குனும் எனக்கு தெரியல... நான் என்ன பண்ண முடியும்னு நினைக்கிற ரமேஷ்"

இதற்கும் பதில் இல்லை...

"உன்னைப் பற்றி என் அம்மாட்ட சொன்னேன்... எங்கம்மா என் கால்ல விழுந்து அழுதாங்க!!! என்னால மறுக்க முடியல"

இதை சொல்லவா என்னை 8 மணிக்கு வர சொன்ன???

"ரமேஷ்... நீ எதுவும் சொல்ல வேண்டாம். என்னை பொருத்தவரை நீ எதுவுமே சொல்லமலே இருந்த மாதிரி இருக்கட்டும்..நாம இனிமே பார்க்க வேண்டாம்... நான் இன்னைக்கு பேப்பர் போட போறேன்... நீ நல்லா இருக்கனும் ரமேஷ்"

அழுதுகிட்டே வேகமா திரும்ப போயிட்டா...

அவள் பிறந்த நாளுக்கு மூன்று நாட்களே இருந்தது. நான் உனக்காக தெலுகு பெசவும், எழுதவும் கத்துக்கிட்டேனே... அது எல்லாமே உனக்கு தெரியாமலே போயிடுச்சே???

உனக்கு நான் தெலுகுல என் கையால எழுதி வெச்ச அந்த கார்ட் என்னைக்கும் என் பெட்டியிலே இருக்கும்...

எப்படியோ ஒரு வருடம் ஓடிவிட்டது... நான் இன்னும் உயிரோடத்தான் இருக்கன்றது எனக்கே ஆச்சரியமாக இருந்தது

"டேய் மச்சான் ... குமாருக்கு பிரோமோஷன் வந்திருக்கு... அதனால இன்னைக்கு அவனோட ட்ரீட்... வா PVR போவோம்"

எல்லோரும் PVR சென்றோம்...

முதலில் என் கண்ணில் பட்டது... பிரின்ஸ் மகேஷ் பாபு in "போக்கிரி".

அங்கே கருவாயன் சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது "அங்க பாருடா நம்ம கொல்டிய... நேரா தெலுகு பட போஸ்டரை பார்க்க போயிட்டான்"

சென்ஷி

unread,
Oct 17, 2010, 1:56:06 AM10/17/10
to panb...@googlegroups.com

தீயினால் சுட்ட புண்!!! - வெட்டிப்பயல் பாலாஜி

"டேய் கிருஷ்ணா! மணி 5:30 ஆச்சு... எழுந்திரி!" வழக்கம் போல் அம்மாவின் குரல்

"ஏம்மா! இப்படி உயிர வாங்கற!!! 7 மணிக்கு தான முகூர்த்தம்... பொறுமையா போயிக்கலாம்"

"ஏன்டா நேத்து நைட்டே நீ படுக்கறதுக்கு முன்னாடி சொன்னேன் இல்ல. காலைல சீக்கிரம் போகனும்னு"

"நம்ம கரெக்ட் டைமுக்கு போகலன்னா அங்க என்ன மாப்பிள தாலி கட்டறதையா நிறுத்த போறாரு"

"இப்படியெல்லாம் அதிக பிரசங்கித்தனமா பேசாத. உங்க அக்கா மாமனாரோட தம்பி பொண்ணு கல்யாணம். ஏற்கனவே அவ மாமனார் வேற உங்க அப்பா வராததுக்கே கோச்சுக்குவாரானு பயமா இருக்கு. நம்ம லேட்டா போனா அவ்வளவுதான்"

"அந்த ஆள எங்கயாவது போ சொல்லு. அப்பா என்ன ஓடி விளையாடவா போயிருக்காரு. வேலை விஷயமாத்தானே போயிருக்காரு. இவர் தப்பா நெனச்சா நாம ஒண்ணும் பண்ண முடியாது"

"இந்த பேச்சு பேசறதுக்கு நீ எழுந்திரிச்சு குளிச்சி, கெளம்பியிருக்கலாம்"

"சரி. நான் குளிச்சிட்டு வரேன்... காபி போட்டு வைங்க"

"அதெல்லாம் கல்யாண மண்டபத்துல போய் குடிச்சுக்கலாம்... நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா"

கல்யாண மண்டபத்திற்குள் போய் சேரும் போது மணி சரியாக 6:45.

"ஏம்மா... கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா?" அக்காவின் குரலில் வழக்கம் போல் அதிகாரம் தெரிந்தது.

"எல்லாம் இவன் பண்ண வேல... இவன எழுப்பறதுக்குள்ள என் உயிரே போகுது"

"ஏன்டா ஒரு நாள் கூட உன்னால சீக்கிரம் எழுந்திரிக்க முடியாதா?"

"ஏன் இப்படி டென்ஷன் ஆகற??? நாங்க தான் முகூர்த்த நேரத்துக்கு முன்னாடி வந்துட்டோம் இல்ல"

"ஆமாம். எங்க உங்க வீட்ல இருந்து யாரையும் காணோம்னு இப்பதான் எங்க மாமியார் கேட்டாங்க"

"ஏன் ஆரத்தி எடுத்து வரவேற்கவா???"

"உனக்கு திமிருதான். அவுங்க முன்னாடி இப்படியெல்லாம் பேசி வைக்காத. அப்பறம் எனக்குத்தான் பிரச்சனை"

"சரி சரி நான் எதுவும் பேசல. அதுவும் இல்லாம நான் முகூர்த்தம் முடிஞ்சவுடனே கிளம்பறேன். எனக்கு கம்பெனில நிறைய வேலை இருக்கு"

"சரி முகூர்த்தம் முடிஞ்சவுடனே ஏழரைக்கு எல்லாம் பந்தி போட்டுடுவாங்க... சாப்பிட்டு போயிடு" அம்மாவின் குரல்

"என்னது பந்தியா??? ஏம்மா உயிர வாங்கற. காலங்காத்தால இவனுங்க கேசரி, இட்லி, வடை, பூரி, பொங்கல்னு தூக்கம் வர ஐட்டமா போட்டு உசுர வாங்குவாங்க. நான் கம்பெனில போய் ஏதாவது சாப்பிட்டுக்கறேன்"

"ஏன்டா ஐநூறு ரூபா மொய் வெக்கறோம். ரெண்டு பேர் கூட சாப்பிடலனா எப்படி?"

"ஏன். தெருல இருக்கறவங்க எல்லாத்தயும் கூப்பிட்டு வர வேண்டியதுதான? போம்மா நீ மொய் வெக்கறதால எல்லாம் என்னால சாப்பிட முடியாது"

எங்க அக்காவோட மாமியார் அவளை பார்த்து ஏதோ ஜாடை செய்து கூப்பிட அவள் இடத்தை காலி செய்தாள். அப்போது எங்களை பார்த்து நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து கொண்டிருந்தார்.

"நீங்க சாந்தி அம்மாதானே" எங்க அம்மாவை பார்த்து கேட்டார் அவர்.
ஏன் எல்லாம் இப்படி இருக்காங்க? கிருஷ்ணா அம்மானு சொன்னா குறைஞ்சிடுவாங்களா? வீட்ல இருக்குற பொண்ணு பேற சொல்லிதான் எல்லாம் சொல்லுவாங்க. அவளுக்கு தான் கல்யாணமாகி மாமியார் விட்டுக்கு போயிட்டா இல்ல. இனியாவது கிருஷ்ணா அம்மானு சொன்னா என்ன?
இந்த மாதிரி யார் சொன்னாலும் எனக்கு அவர்கள் மேல் வெறுப்புத்தான் வரும். இவர் மேலும் வெறுப்பு வர தவறவில்லை.

"ஆமாம். நீங்க அருண் அம்மாதான?"
எங்க அம்மா நல்லவங்களா இருக்காங்க. பரவாயில்லை!!!

"ஆமாம். பாத்து எவ்வளவு நாள் ஆச்சு. அருண் நாலு வயிசு இருக்கும் போது கொயம்பத்தூர்ல இருந்து கெளம்பனது"

"ஆமாம். பதினஞ்சு பதினாறு வருஷம் ஆகிடுச்சு. அதான் பாத்தவுடனே கொஞ்சம் சந்தேகமா இருந்துச்சு"

"ஆமாம் சாந்தி, கிருஷ்ணா எல்லாம் எப்படி இருக்காங்க. என்ன பண்றாங்க?"

"சாந்திக்கு கல்யாணமாயிடுச்சு. 1 பையன் இருக்கான் 2 வயசு ஆகுது. இதுதான் கிருஷ்ணா. இஞ்சினியரிங் படிச்சுட்டு இங்க ப்ரிக்கால்ல வேலை செய்யறான்"

"ஓ! இவ்வளவு பெரிய பையானா வளந்துட்டான்"

ஆமாம் பதினஞ்சு வருஷமா வளராம அப்பு கமல் மாதிரியா இருப்பாங்க? லேசாக சிரித்து வைத்தேன்.

"சின்ன வயசுல எப்பவும் நீ அவுங்க வீட்லதான் இருப்ப" அம்மா ஒத்து ஊதினார்கள்.

"இப்ப உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்காது. அருண்ட கிள்ளு வாங்கிட்டு அழுதுட்டே உங்க வீட்டுக்கு ஓடிடுவ"

ஓ! இது வேற நடந்துருக்கா... அவனுக்கு இருக்கு.


"ஆமாம் அதுக்குத்தான் இவன் சூடு வெச்சிட்டானே!" அம்மா என்னை பார்த்து முறைத்து கொண்டே சொன்னார்கள்.
ஓ!!! பரவாயில்ல... அப்பவே நம்ம வெயிட்டு காமிச்சிட்டோம். மனதிற்குள் ஒரு சந்தோஷம்.

"ஆமாம் அருண் இப்ப என்ன பண்றா?"

"அருண் இங்க தான் காலேஜ்ல படிக்கறா"

"ஓ!!! காலேஜ் படிக்கிறாளா??? எந்த காலேஜ்"

"இங்கதான் அவினாஸிலிங்கம்ல ஹோம் சயின்ஸ் படிக்கிறா. இங்கதான நின்னுட்டு இருந்தா. எங்க காணோம்???
அங்க நின்னுட்டு இருக்கா. இருங்க கூப்பிட்டு வரேன்"

ஓ!!! அருண் பையன் இல்லயா? மனசன கொழப்பறதுலயே இருங்க...
மம்மி வீட்டுக்கு வா உனக்கு இருக்கு

அந்த ஆண்ட்டி சென்று 2 நிமிடத்திற்குள் வந்தார்கள். இந்த முறை அவருடன் ஒரு அழகான தேவதை இருந்தாள். பிங் சுடிதாரில் அழகாக இருந்தாள்.
பொதுவா சொந்தகாரர்கள் இருக்கும் இடத்தில் நான் நல்ல பிள்ளை. ஆனா இந்த முறை அம்மா பக்கத்துல இருந்ததையும் மறந்துவிட்டேன்.

2 நிமிடத்திற்குள் அறிமுகப்படலம் முடிந்து திரும்பிவிட்டாள். நானோ கனவுலகிலே சஞ்சரித்து இருந்தேன். அக்கா வந்து பேசியவுடன் தான் நினைவு திரும்பியது.

ஒருவழியாக சாப்பாடு பந்தியிலிருந்தும் தப்பித்து வெளியே வந்தேன்.

"ஏன் தம்பூல பையை வாங்காம வந்துட்ட? தேங்கா போட்ருக்காங்க"
அம்மா அக்கறையாக வழியனுப்ப வந்தாங்கனு பாத்தேன்... இல்ல மொய்கணக்க எப்படியாவது சரி பண்ணனும் வந்துருக்காங்க

"அம்மா அசிங்கமா தாம்பூலம் எல்லாம் என்னால வாங்க முடியாது. நீ பொறுமையா வரும் போது வாங்கிட்டு வா"

"சரி. நீ என்ன சொன்னாலும் கேக்கவே மாட்ட"

வெளியே வந்து திரும்பும் போது மண்டபத்திற்கு வெளியில் அவள் நின்று கொண்டிருந்தாள்.

"என்னங்க இங்க நின்னூட்டு இருக்கீங்க?" கூச்சப்படாமல் பேசினேன். அவளை தவிர வேறு யார் நின்றிருந்தாலும் பேசியிருக்க மாட்டேன் என்றே தோன்றியது.

"இல்ல காலேஜ்க்கு நேரமாச்சு. ஆட்டோ கிடைக்குமானு பாத்துட்டு இருக்கேன்"

"நானும் அந்த வழியாத்தான் போறேன். வேணும்னா வாங்க ட்ராப் பண்ணிடறேன்"

"இல்லைங்க உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்"

"அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க... நான் அந்த வழியாத்தான் போறேன்"

"சரி எனக்கும் நேரமாச்சு. நீங்க அந்த டர்னிங்ல நிக்கறீங்களா? நான் வந்து ஏறிக்கிறேன். இங்க யாராவது பாத்தா தப்பா நினைப்பாங்க"

"யாருங்க தப்பா நினைக்கப் போறா. நீங்க வாங்க"

"இல்லைங்க வேணாம்" தயங்கினாள்.

"சரி நான் டர்னிங்ல வெயிட் பண்றேன்"
எல்லாமே இப்படித்தான் ஊர ஏமாத்தறாங்களா?

சரியாக மூன்று நிமிடத்திற்குள் வந்து வண்டியில் என் பின்னால் அமர்ந்தாள்.
இன்னைக்கு நல்ல நாள்தான்.

"ஆமாம்... உங்க பேர் கிருஷ்ணாதான?"

"ஆமாம்" இது தெரியாமத்தான் என் பின்னாடி வந்து உட்கார்ந்தாளா? கலிகாலம்.
"உங்க பேர் அருணாங்க?"

"அருண் இல்லைங்க... அருணா. வீட்ல பையன் யாரும் இல்லாததால என்ன அருண்னு கூப்பிட்டு சந்தோஷப்பட்டுக்கறாங்க. சரி நீங்க சாப்பிட்டீங்களா?"

"இல்லை. நீங்க?"

"நானும் சாப்பிடல. முதல் பந்தில உக்காந்தா அசிங்கமா இருக்குமேனு சாப்பிடாமலே வந்துட்டேன். எங்க காலேஜ் முன்னாடி ஒரு அண்ணபூர்ணா இருக்கு அங்க வேணும்னா ரெண்டு பேரும் சாப்பிடலாமா?"

"சாப்பிடலாமே" இன்னைக்கு உண்மையாலுமே அதிர்ஷ்ட நாள்தான்.

இருவரும் ஆளுக்கு ஒரு ரோஸ்ட் ஆர்டர் செய்தோம்.

"உங்களத்தான் நான் நினைவு தெரிஞ்ச நாளா தேடிக்கிட்டு இருக்கேன்"

என்னடா இப்படி சொல்றா? இவ எதுக்கு என்ன தேடனும். ஒரு வேளை "தித்திக்குதே"வா இருக்குமா? ச்ச இத கூட ஞாபகம் வெச்சிக்காம இருந்துட்டேனே. என்னை நானே நொந்து கொண்டேன்.

"என்னையா? ஏன்?"

"இங்க பாருங்க"
அவள் கையை நீட்டினால், அதில் நீட்டமாக ஒரு தழும்பு தெரிந்தது.

"என்னங்க எதோ தழும்பு மாதிரி இருக்கு"

"நல்லா கேளுங்க! நீங்க வெச்சது தான். நான் ஏதோ தெரியாம கிள்ளிட்டன்னு அடுப்புல இருந்து கொள்ளிக்கட்டை எடுத்து என் கைல வெச்சிட்டீங்களாம். எங்க அம்மா சொன்னாங்க"

இது கேக்கத்தான் என் கூட வண்டீல வந்தாளா? அக்கறையா சாப்பிட போகலாம்னு சொன்னது கூட இதுக்குத்தானா? நான் தான் அவசரப்பட்டுட்டனா?

"என்னங்க நான் என்ன தெரிஞ்சா பண்ணேன். ஏதோ தெரியாம கோபத்துல பண்ணது. எனக்கு சத்தியமா ஞாபகம் கூட இல்ல. அப்ப எனக்கு வயசு என்னா ஒரு ஆறு இல்லனா ஏழு இருக்குமாங்க? அப்ப பண்ண தப்புக்கு இப்ப வந்து கேட்டீங்கனா நான் என்ன பண்ண முடியும்? வேணும்னா சொல்லுங்க ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கலாம்"
அதிகமா பேசின மாதிரி தோன்றியது.

"ஆமாம். இதுக்கு போய் ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணுவாங்களா? தெரியாம ஏதாவது சின்னதா பண்ணியிருந்தா பரவாயில்ல. தண்ணி காயறதுக்கு அடுப்பாங்கறைல வெச்சிருந்த விறகு கட்டய எடுத்துட்டு வந்து வெச்சிருக்கீங்க" கோபமாக பேசினாள். ஆனால் சமாதானமாகிவிடுவாள் என்று தோன்றியது.

"சரி அந்த சம்பவம்(?) உங்களுக்கு ஞாபகம் இருக்கா?"

"இல்ல. எங்க அம்மாதான் சொன்னாங்க"

"பாருங்க உங்களுக்கும் ஞாபகமில்ல. எனக்கும் ஞாபகமில்ல. அப்பறம் எதுக்கு நீங்க இவ்வளவு டென்ஷம் ஆகறிங்க?"

"ஆமாம். உங்களுக்கு என்ன? சின்ன வயசுல எல்லாம் என்ன கரிகால சோழன் மாதிரி இவ கரிக்கை சோழினு ஓட்டுவாங்க. அப்ப இருந்தே உங்க மேல எனக்கு கோபம்"

"கரிக்கை சோழி ரொம்ப நல்லா இருக்கே!"

"என்னது?" முறைத்தாள். ஆனால் செல்லமாக முறைப்பது போல்தான் எனக்கு தோன்றியது.

"இப்ப என்ன பண்ண சொல்றீங்க? வேணும்னா நீங்களும் என் கைய சுட்டுக்கோங்க. தெரிஞ்சே யாராவது இந்த மாதிரி பண்ணுவாங்களா? அதுவும் அழகான பொண்ணு கைய சுடறதுக்கு யாருக்காவது மனசு வருமா?" ஓரளவு வழியாமல் சொன்னேன்.

"ரொம்ப ஐஸ் வெக்காதீங்க. நான் உங்களுக்கு சூடு எல்லாம் வெக்க போறதில்ல. இந்த பில்ல பே பண்ணிட்டு, என்ன காலேஜ்ல இறக்கி விட்டுடுங்க"
சிரித்துக் கொண்டே சொன்னாள்.

"நான் தெரியாம பண்ணிருந்தாலும், ஐ ரியலி ஃபீல் சாரி. மன்னிச்சுடுங்க"

"பரவாயில்ல. உங்க மேல ரொம்ப கோவமா இருந்தேன். இப்ப எல்லாமே போயிடுச்சு"

ஒரு வழியாக அவளை காலேஜில் இறக்கிவிட்டு, வேலைக்கு சென்றேன். நாள் முழுதும் அவள் நியாபகமாகவே இருந்தது. வீட்டிற்கு வந்து சேரும் போது மணி 7 ஆகியிருந்தது.

"இவ எதுக்கு நம்ம வீட்டுக்கு வந்தா? அவ மாமியார் வீட்ல இருந்து துரத்திவிட்டுட்டாங்களா?"

"டேய்! என்ன யாரும் தொரத்தல.. உன்னத்தான் நம்ம வீட்ல இருந்து துரத்திடுவாங்கனு நினைக்கிறேன்" அக்கா சிரித்து கொண்டே சொன்னாள்.

"என்ன யாரும் துரத்த முடியாது. அம்மா சூடா ஒரு கப் காபி கொடேன்"

"ஒரு அஞ்சு நிமிஷம் இரு. கொண்டு வரேன்"

"ஆமாம். அக்கா இன்னைக்கு காலைல ஒரு ஆண்ட்டி நம்ம அம்மாட்ட பேசிக்கிட்டு இருந்தாங்களே, அவுங்கள உனக்கு ஞாபகம் இருக்கா?"

"இருக்கே! நம்ம அருண் அம்மா. ஏன் உனக்கு ஞாபகமில்லையா?"

"இல்ல. அவுங்க நமக்கு என்ன வேணும்?"

"நம்ம பக்கத்து வீட்ல இருந்தாங்க. இப்ப சொந்தக்காரவங்க ஆகிட்டாங்க!" நக்கலாக சிரித்து கொண்டே சொன்னாள். மனசுல பெரிய புத்திசாலினு நினைப்பு.

"கொஞ்சம் தெளிவா சொல்லு" கோபமாக கேட்டேன்

"எங்க மாமனாரோட தங்கச்சி விட்டுக்காரோரோட தம்பியோட சகல விட்டுக்காரரோட தங்கச்சியோட பொண்ணுட பையனைத்தான் அவுங்க கல்யாணம் பண்ணியிருக்காங்க" மறுபடியும் அதே நக்கல் சிரிப்பு.

"அவுங்க நமக்கு என்ன வேணும்" கோபத்தை அடக்கி கொண்டு கேட்டேன்

"அவங்க வீட்டுக்காரர் உனக்கு அண்ணன் முறை ஆகறாரு"

"என்னது? அண்ணனா? அவர் வயசு என்ன? என் வயசு என்ன? இப்ப உண்மைய சொல்லல உன் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் போது தலைல ப்ளேடு பொட்டுடுவன். ஆமாம்"

"ஏன்டீ அவனோட விளையாடற? அண்ணனும் இல்ல தம்பியுமில்ல. கொஞ்சம் தூரத்து சொந்தம்தான். அந்த பொண்ணு அருண பாத்தவுடனே எனக்கு புடிச்சு போச்சுடா. சரின்னு அவ அம்மாட்ட பேசி பாத்தேன் அவளும் சரி ஜாதகம் அனுப்பறேன் ஒத்து வந்துச்சுனா முடிச்சிக்கலாம்னு சொன்னா. உனக்கு புடிச்சியிருக்கா?"

அம்மா நீயே என் தெய்வம். உனக்கு கண்டிப்பாக கோவில் கட்டணும்.

"ஆமாம். அந்த பொண்ண இவன் "பே"னு பாத்தததான் கல்யாண மண்டபத்துல எல்லாரும் பாத்தாங்களே" அக்கா நக்கலாக சிரித்து கொண்டே சொன்னாள்.
இதுக்குத்தான் அப்ப இருந்து இப்படி நக்கலா சிரிச்சிக்கிட்டே இருந்தாளா?

"என்ன கேக்காம எப்படி நீங்க ஜாதகம் பத்தியெல்லாம் பேசலாம்" கொஞ்சம் பில்ட்-அப் கொடுத்தேன்.

"சரி. அவனுக்கு பிடிக்கலயாம். வேணாம்னு சொல்லிடுங்கம்மா" அக்கா ரொம்ப அக்கறையாக பேசினாள்.

"அதில்லமா... ஜாதகம் எல்லாம் மூட நம்பிக்கை. அது பாக்க வேணாம்னு சொன்னேன்" நான் வழிந்து கொண்டே சொன்னதை பார்த்து அம்மாவும், அக்காவும் சிரித்தனர்.

சென்ஷி

unread,
Oct 17, 2010, 2:00:23 AM10/17/10
to panb...@googlegroups.com

குளோப் - ஜி. முருகன்


என்னுடைய பெயர் ஆறுமுகம். வெறும் ஆறுமுகம் என்றோ, மிஸ்டர் ஆறுமுகம் என்றோ, திருவாளர் ஆறுமுகம் என்றோ எப்படிவேண்டுமானாலும் அழைக்கலாம். இது ஒன்றும் அவ்வளவு முக்கியமான விஷயமில்லை. மனிதர்களாகிய உங்களுக்கோ நிறைய வேலைகள். விசேஷமாக கிடைத்த அறிவைப் பயன்படுத்தி நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. வெற்றிகளைக் குவிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு மத்தியில் என் பேச்சை வேறு கவனிக்கிறீர்களே இதுவே என் பாக்கியம்.

இந்தக் கதை சமீபத்தில் இறந்து போன நாராயணன் சார் பற்றியும், ஸ்டீபன் என்கிற மோசக்காரப் பூனையையும் பற்றியது. ஸ்டீபனை இவ்வளவு கடுமையான வார்த்தைகளால் சாடியதால் அதை என்னுடைய எதிரியோ என்றுகூட நீங்கள் நினைக்கலாம். ஒரு பூனை எனக்கு எப்படி எதிரியாக இருக்க முடியும்? எதிரி என்றால் சமபலம் வேண்டும். ஒரு எலியால் என்றைக்கும் ஒரு பூனையை வேட்டையாடி விழுங்க முடியாது இல்லையா? அதன் குணசேஷ்டையை வைத்துத்தான் அப்படிச் சொன்னேன். பக்கத்து வீட்டில் வசிக்கும் கிறிஸ்துவர்கள்தான் அதற்கு இந்தப் பெயரைச் சூட்டியிருந்தார்கள். அது அவர்களுடைய செல்லப்பிராணி. பூனைகளுக்கு உணவிடுவதுபோல எலிகளுக்கும் நீங்கள் ஏன் உணவு வழங்கக்கூடாது? இந்தச் சங்கிலியில்தான் ஏதோ சிக்கல் விழுந்து விட்டது; அதர்மம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு கணமும் எத்தனையோ உயிர்கள் ஜெனிப்பதும், மரணமடைவதும் நிகழ்ந்துகொண்டே இருந்தாலும் மனிதர்களைப் பொறுத்துதான் இது பிரச்சனைக்குரியதாக மாறிவிடுகிறது. நாராயணன் சாரின் மரணம் குறித்துக்கூட பலவித அபிப்பிராயங்கள் சொல்லப்படுகிறது. தற்செயலாக நடந்த விபத்து என்றும், தற்கொலைதான் என்பது போலவும். பைத்தியம் முற்றி தற்கொலை செய்துகொண்டாராம்! அவரை அருகிலிருந்து கவனித்து வந்த எனக்கும் கூட இது பிடிபடவில்லை. சில பொழுது அது ஒரு கொலையோ என்றும் ஐயம் எழுகிறது.

நாராயணன் சார் ஒரு கவிஞர். ஓவியங்களிலும் அவருக்கு ஈடுபாடுண்டு. இயற்கையின் ஆன்மாவுக்கு மிக நெருக்கத் திலிருக்கும் வண்ணங்களையும், இசையையும் விட்டுவிட்டு இப்படி மனிதர்களை சுமந்துத்திரியும் வார்த்தைகளைக் கட்டிக்கொண்டு மாராடிக்க வேண்டியிருக்கிறதே என்று வருத்தப்படுவார். அலுவலகம் போய் வந்த பின்பு ஓய்வு நேரங்களில் அவர் நிறைய புத்தகங்கள் வாசிப்பார். நண்பர்களுடன் இலக்கியம் குறித்து பேசிக்கொண்டிருப்பார். சில பொழுது விஸ்கி துணையிருக்கும். தூரமாக இருந்து கவனித்துக்கொண்டிருப்பேனே ஒழிய இவர்கள் பேசுவது என்னவென்றே எனக்குப் புரிவதில்லை. ஸ்டீபனோ இதிலெல்லாம் பட்டுக்கொள்ளாமல் இதைவிட வேறு ஏதோ பெரிய காரியம் இருப்பது போல போய்விடும்.

நாராயணன் சாருடையது பழைய வீடு. அவருடைய அப்பா ஓய்வு பெற்ற வரலாற்றாசிரியர் என்பதற்கும் இந்த பழமைக்கும் யாதொரு சம்மந்தமுமில்லை. மாடியிலிருந்த இரண்டு அறைகளில் ஒன்றை சார் படிப்பறையாக பயன்படுத்தி வந்தார். அவருடைய பள்ளியறையும் அதுதான். முதன் முதலாக நாராயணன் சாரை இந்த அறையில் பார்த்தபோது பேராபத்து ஒன்றில் சிக்கிக் கொண்டிருந்தேன். ஸ்டீபன் என்னைத் துரத்திக்கொண்டுவர அவருடைய அறைக்குள் ஓடி புத்தகங்களுக்குப்பின்னால் ஒளிந்துகொண்டேன். அப்போது அறைக்குள் நாராயணன் சார் நாற்காலியில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தார். என்னை துரத்திக்கொண்டுவந்த ஸ்டீபனோ அவரைப் பொருட்படுத்தாமல் அலமாரியின்மேல் ஏறி என்னைத் தேடியதில் புத்தகங்கள் சரிந்து விழுந்தன. திடுக்கிட்டு திரும்பியவர் அங்கே ஸ்டீபனைக் கண்டார். புத்தகம் விழுந்த சப்தத்தில் அதுவும் மிரண்டுதான் போயிருந்தது.

அவர் கேட்டார், “ஏன் புத்தகங்களை தள்ளுகிறாய், என்ன வேண்டும்?’’, அலமாரியிலிருந்து ஸ்டீபன் கீழே குதித்து, சற்று தயங்கியபடி மேஜைக்கு அருகில் போய் நின்று அவரைப் பார்த்தது. திரும்பவும் அவர் கேட்டார், “உனக்கு என்ன வேண்டும்?’’, “ரொம்ப பசிக்கிறது, ஒரு எலி வேண்டும்’’ என்றது. இங்கே இருக்கிறதா?’’, “ஆமாம் இந்த புத்தகங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறது’’, “அதை விட்டுவிடு உனக்கு வேறு உணவு தருகிறேன்’’ என்ற நாராயணன் சார் மேஜைமேல் அவருக்காக கொண்டுவந்து வைத்திருந்த ஆர்லிக்ஸ் கலந்த பாலை எடுத்து கீழே ஊற்றினார். ஸ்டீபன் அதை நக்கிக் குடித்துக்கொண்டிருந்தது.

நான் அச்சம் தெளிந்தவனாக கீழே இறங்கி வந்து, மேஜையின் மேல் ஏறி நின்று சாரைப் பார்த்தேன். முன் கால்கள் இரண்டையும் தூக்கி நன்றி’’ என்றேன். பாலைக் குடித்து முடித்த ஸ்டீபன் மேஜைக்கு ஏறிவந்து என்ன தைரியம்!என்பதுபோல் என்னை முறைத்துப் பார்த்தது. பயந்துபோன நான் நடுங்கியபடி அவருடைய கைக்கருகில் போய் ஒடுங்கிக் கொண்டேன். நீ பயப்படாதே, அது உன்னை ஒன்றும் செய்யாது’’ என்றார். எப்போதுமா?’’, “ஆமாம் இனி எப்போதுமே உன்னைத் தொந்தரவு செய்யாது, நாம் மூவரும் நண்பர்களாகிவிட்டோமில்லையா?’’

ஸ்டீபனுக்கோ ஏமாற்றம். அது எப்படி முடியும்?’’ என்றது வருத்தம் தொணிக்க.

ஏன்?’’ என்றார் அவர்.

உணவுக்கு நான் எங்கே போவேன்? எலிகளை வேட்டையாடுவதை விட்டால் வேறு என்ன தொழில் தெரியும் எனக்கு?’’

இந்த எலியை மட்டும் விட்டுவிட்டு, வேறு எலிகளை வேட்டையாடிக்கொள். உன் பெயரென்ன?’’ என்று கேட்டார் அதனிடம்.

ஸ்டீபன்’’ என்றது.

நல்லது’’ என்னைப் பார்த்து, “உன்னுடைய பெயர்?’’ என்றார்.

எங்களுக்குத்தான் யாருமே பெயர் வைப்பதில்லையே?’’ என்றேன் வருத்தத்துடன்.

சரி உனக்கு நான் பெயர் வைக்கிறேன்’’ என்று யோசித்தவர், “ஆறுமுகம்’’ என்றார்.

எளிமையாக இருக்கிறது, இது போதும் எனக்கு’’ என்றேன் நான்.

நீ ஏன் இன்னும் வருத்தத்துடன் இருக்கிறாய்’’ என்று கேட்டார் ஸ்டீபனைப்பார்த்து.

நீங்கள் கேட்டுக்கொண்டதுபோல நான் இந்த எலியை சாப்பிடப் போவதில்லை; ஆனால் துரத்தவேண்டும்; அது அகப்படும் கணம்வரை விரட்டவேண்டும்’’

சரி, உன் இஷ்டம். ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் அதன் மரணத்திற்கு நீ காரணமாகக்கூடாது சரியா?’’

சம்மதிக்கிறேன்’’ என்றது ஸ்டீபன்.

இப்படியாக நாங்கள் நண்பர்களானோம்.

நாராயணன் சார் ஒருநாள் பூனையைப் பற்றி முன்பு அவர் எழுதியிருந்த கவிதை ஒன்றை எங்களுக்கு வாசித்துக் காண்பித்தார்.

ஒரு பறவையைப்போல

லேசாக இருக்கிறது பூனை

பந்து தக்கையாகவும்

காற்றைபோல நழுவிச்செல்லுவதாகவும்

இருக்குமெனில்

லாவகமாக உருட்டி விளையாடுகிறது

கைகளில் வைத்து சுழற்றுகிறது

சுவர்மேல்

வேகமாக நடந்துவந்து

தாவி குதித்து

எளிதாக கலந்து விடுகிறது

என் சுவாசத்தில்

அனாதரவாக விடப்பட்ட

பந்தைநோக்கி

மீண்டும் நழுவிச்செல்கிறது

ஸ்டீபன் உற்சாகமாகி அற்புதம்’’ என்றது.

நான் சாரிடம் கேட்டேன்.

பூனைகள் எந்த கடவுளுக்காவது வாகனமாக இருந்திருக்கிறதா? புராண இதிகாசங்களில் இடம் பெற்றிருக்கிறதா?’’

சற்று யோசித்துவிட்டு,

எனக்குத் தெரிந்தவரை இல்லை’’ என்றார்.

ஸ்டீபனின் முகத்தில் சோகரேகை தோன்றியது.

உங்களுக்கு கடவுளோடு சம்மந்தமில்லை பிசாசுகளோடுதான்’’ என்றேன் நான்.

ஒரு எலி கிண்டல் செய்யும் அளவுக்கு நாம் ஏன் தாழ்ந்து போனோம் என்று நினைத்ததோ என்னவோ, ஸ்டீபன் வருத்தத்துடன் படுத்துக்கொண்டது.

அதை குஷிபடுத்தும் நோக்கில் நாராயணன் சார் சொன்னார்,

உனக்கு பந்து ஒன்று வாங்கித் தருகிறேன். கவிதையில் உள்ளது போல நீ விளையாடலாம், காற்றாகி விடலாம்’’

ஸ்டீபன் தெம்புடன் எழுந்து கொண்டது. அதன் கண்களில் பிரகாசம்.

இப்படித்தான் அந்த விபரீதம் தொடங்கியது. அவர் பந்து வாங்கித் தருவதாக சொன்னார் என்பது நிஜம் என்றாலும் அலுவலகத்திலிருந்து திரும்பி வரும்போதெல்லாம் வெறுங்கை யோடுதான் திரும்பி வந்தார். ஸ்டீபன் ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்த அவர் மறந்தபடியே இருந்தார். அவருடைய யோசனைகளெல்லாம் வேறொன்றில் குவிந்திருந்தது. தன்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணின்மேல் அவர் காதல் வயப்பட்டிருந்தார். பிறகென்ன பக்கம் பக்கமாக காதல் கவிதைகள் குவிந்தன. இந்த இரண்டு தனித்தனி அற்புதங்களும் ஒரே நேரத்தில் அவர் பிரக்ஞையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கையில் பந்து பற்றி அவருக்கு எங்கே நினைவிருக்கப்போகிறது.

ஏமாற்றத்துடன் வலம் வந்த ஸ்டீபனோ இதை ஈடு செய்ய வேறொரு மார்க்கத்தை கண்டுபிடித்தது. நாராயணன் சார் அலுவலகம் போன பின்பு அவருடைய அறைக்குச் சென்று மேஜையின்மேல் வைக்கப்பட்டிருந்த உலக உருண்டையை உருட்டிப்பார்த்தது. இரண்டு பக்கமும் மாறிமாறி சுழற்றி மகிழ்ந்தது. இந்த விளையாட்டு தினமும் நடந்திருக்கவேண்டும். ஒரு நாள் எதேச்சையாக இதை நான் பார்க்க நேர்ந்தபோது அதனிடம் எச்சரித்தேன். நாராயணன் சாரின் அனுமதியில்லாமல் இதை நீ தொடக்கூடாது என்று. அதற்கு கோபம் வந்துவிட்டது.

பந்து வாங்கித்தருவதாகச் சொல்லிவிட்டு எத்தனை நாட்களாக என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்’’

அவருக்கு மறந்து விடுகிறது’’

மறக்கவில்லை, இவர்கள் பேசும் இலக்கியம் போல வெத்து வேட்டு…’’

நான் அதிர்ந்து போனேன். ஸ்டீபன் நீ எல்லை மீறிப் பேசுகிறாய். இன்றைக்கு சார் வரட்டும் சொல்கிறேன்…’’

ஸ்டீபன் என்னைப் முறைத்துப் பார்த்து.

சொல்லிவிடுவாயா?’’ என்றது.

சொல்வேன் எனக்கென்ன பயம்?’’

அந்த ஒப்பந்தத்தால் குளிர்விட்டுப் போய்விட்டது உனக்கு. நீ இருக்கும் வரைதானே இந்த ஒப்பந்தமெல்லாம்’’ என்று சொல்லி முடிக்கும் முன்பே அதன் நோக்கம் என்னவென்று புரிந்ததால் அவ்விடத்தைவிட்டு அகன்று வெளியே ஓடினேன். ஸ்டீபன் எனக்குப் பின்னாலேயே துரத்திக்கொண்டு வந்தது. மாடியிலிருந்து படிவழியாக கீழே இறங்கி, வரவேற்பறையின் ஓரத்தில் சுவரை ஒட்டி ஓடி, பின்பக்கமிருந்த குளியலறைக்குள் புகுந்தேன். அதுவும் பின்னாலேயே வந்துவிட்டதால் தண்ணீர் வெளியேறும் துளை வழியாக தப்பிவிட நினைத்து உள்ளே புகுந்தேன். துரிதமாக ஓடிவந்த ஸ்டீபன் தன் கால்களால் வாலை மிதித்துக்கொண்டது. வாலின் பாதிக்கு மேல் அதன் காலடியில். சிரமத்துடன் இழுத்துப்பார்த்தும் ஒன்றும் பலிக்கவில்லை. ஸ்டீபனின் கால் நகம் ஒன்று வாலின் மேல் அழுத்திக்கொண்டிருந்தது.

தப்பிக்கவும் முடியாமல் அகப்படவும் முடியாமல் என்ன நிலைமை இது? எதுவும் சொல்லாமல் சிறிது நேரம் அப்படியே வலைக்குள்ளேயே படுத்துக் கிடந்தேன். ஸ்டீபனும் அசைந்தபாடில்லை. அசமந்தமான வேளையில் சட்டென்று உருவிக்கொண்டு ஓடிவிடலாமென்று முயன்ற கணத்தில்தான் இன்னும் அது அழுத்தமாக நின்றது. நகம் பட்டதில் வலிவேறு.

ஸ்டீபன் என்னை விட்டுவிடு’’ என்றேன் அதனிடம்.

உன்னை விடப்போவதில்லை’’ என்றது ஆத்திரத்துடன்.

என் வால் மட்டும்தானே உன்னிடம் இருக்கிறது, அதை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறாய்?’’

இப்போது கடித்துத் துப்பப்போகிறேன்’’ என்றது இரக்கமற்று.

கிலிபிடித்துக் கொண்டது எனக்கு. இதை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதைத்தவிர வேறு வழியில்லை.

சரி நான் இப்போது என்ன செய்யவேண்டுமென்கிறாய்?’’

அந்த உருண்டை விஷயத்தையோ, வெத்துவேட்டு என்று சொன்னதையோ நீ நாராயணன் சாரிடம் சொல்லக்கூடாது’’

சரி நான் சொல்லவில்லை’’

அப்படி சொன்னாயானால் அடுத்த நிமிஷமே எனக்கு இரையாகிவிடுவாய், சம்மதம்தானே’’

சம்மதம்தான்’’

இப்படித்தான் அன்று நான் அந்த பேராபத்திலிருந்து தப்பித்தது. இல்லையென்றால் இப்போது வாலில்லாமல் திரிந்திருப்பேன்.

ஸ்டீபன் அத்துடன் நின்று விடவில்லை. உருண்டையை வெறுமனே சுழற்றிவிடும் விளையாட்டு சலித்துப் போனதால் அதை சுவாரஸ்யப்படுத்த வேறு ஒரு உத்தியைக் கையாண்டது. உலக உருண்டையில் ஒரு இடத்தைக் குறிவைத்துக் கொண்டு சுழற்றிவிடும். சுற்றும் போதே கூர்ந்து கவனித்து கையால் தடுத்து நிறுத்த, அது குறிவைத்த இடம் வந்திருந்தால் வெற்றி பெருமிதத்தில் நகத்தால் அந்த இடத்தில் ஒரு அடையாளமிடும்.

அறைக்குள் எங்கேயாவது ஒளிந்திருந்து இந்த விபரீத விளையாட்டை நான் கவனித்துக் கொண்டிருப்பேன்.

இந்த சமயத்தில்தான் அவருடைய காதல் விவகாரம் மோசமான ஒரு நிலைமைக்கு வந்திருந்தது. ஒவ்வொரு நாளும் எங்கேயாவது அழைத்துப் போகச் சொல்லி நச்சரிக்கிறாளாம். பெரிய ஓட்டல்களுக்கோ, சினிமாக்களுக்கோ தன்னுடன் வரவேண்டு மென்கிறாளாம். தாடியை எடுத்துவிட்டு தினமும் முகச் சவரம் செய்துகொள்ள வேண்டுமாம். நன்றாக ஆடை உடுத்திக்கொள்ளவேண்டுமாம். இதெல்லாம் அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியதே தவிர சந்தோஷமான விஷயங்களாக இல்லை. இருந்தும் சொன்னார், “இதெல்லாம் சரியில்லைதான். ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு அவளிடம் இருக்கிறது’’ என்று.

அவள் ஒரு பெண் அதுதான்’’ என்றான் அருடைய நண்பன் ஒருநாள்.

தவிர்க்கவே முடியாத ஒரு சம்பவம் போல அதுவும் நிகழ்ந்தேவிட்டது. நாராயணன் சார் ஒரு நாள் அந்த குளோப்பை கவனித்துவிட்டார். பெரும் அதிர்ச்சி அவருக்கு.

இவ்வளவு கீறல்கள் எப்படி வந்தது இதில்?’’ என்றார்.

எனக்குத் தெரியவில்லை’’ என்றேன்.

ஸ்டீபனைக் கேட்டால் தெரியுமா?’’

கேட்டுப்பாருங்கள்’’ என்று சொல்லி நழுவிவிட்டேன்.

அடுத்த நாள் ஸ்டீபனிடம் அவர் விசாரித்தார். அதுவும் தனக்குத் தெரியாது என்று சொல்லிவிட மேலும் அவர் குழப்பத்தில் ஆழ்ந்து போனார். ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் கீறல்களினால் அவர் கலவரமடைந்தார் என்பதை கவனித்தேன்.

ஒரு நாள் மிகவும் சோர்ந்து போய் வீடு திரும்பினார். அவரை கழட்டிவிட்டுவிட்டு சோக்கு காண்பிக்கும் ஒரு தடியனுடன் அவள் ஒட்டிக்கொண்டுவிட்டாளாம். முன்பே அவர் எதிர்பார்த்ததுதான் என்றாலும் மனம் உடைந்து காணப்பட்டார். நாடக பாணியில் சொல்வதென்றால் அவருடைய மனம் மட்டுமல்ல மேஜைமேலிருந்த குளோபும் கீழே விழுந்து உடைந்து போயிருந்தது.

ஸ்டீபனே! ஏ நம்பிக்கை துரோகியே! அந்த குளோபை உடைத்தே போட்டுவிட்டாயாஎன்று மனதிற்குள் திட்டினேன்.

நாராயணன் சாருக்கு கடுமையான ஜுரம் கண்டது. வீட்டிலேயே படுத்துக்கிடந்தார். தூங்கினால் மோசமான கனவுகள் வந்து தொந்தரவு செய்கின்றன என்றார் நண்பர்களிடம்.

உடல் மட்டுமல்ல கனவு கூட தகிக்கிறது… எல்லாமே உருகுவது மாதிரி இருக்கிறது…. புத்தகங்கள், அலமாரி, மேஜை, உடைந்து போன குளோப்… இதில் அவளுடைய தொந்தரவு வேறு… என் படுக்கை அருகில் வந்து கைகளை பற்றிக்கொண்டு என் வயிற்றில் முத்தமிடுகிறாள்… அவளுடைய பெருத்த முலைகளை என் மார்பில் படரவிட்டு அழுத்தி அணைக்கிறாள். மூச்சு முட்டுகிறது… காதில் கிசுகிசுக்கிறாள் சாகமாட்டாய்என்று…’’

தூங்கவே அச்சமாக இருக்கிறது’’ என்றார். மருத்துவமனைக்கு சென்று வந்ததில் ஜுரம் நின்றுவிட்டது. ஆனால் அவருடைய மனம்தான் பிதற்றிக்கொண்டிருந்தது.

அவர் கேட்டார்.

சிறு நீர்த்துளி இருக்கிறதே அது ஏன் உருண்டு நிற்கிறது? பரப்பு இழுவிசை… நம் கண்கள்? நிலா? சூரியன்? பூமி?… பூமி ஏன் உருண்டையாக இருக்கவேண்டும்? பந்தைப் போல தரையிலா அது உருண்டு செல்லப்போகிறது?’’

கண்கள் மூடி ஜுரத்தில் பிதற்றுவது போல சொன்னார்,

நான் நினைக்கிறேன் பிரபஞ்சமே முழுமையற்ற ஒரு உருண்டை… இயற்கையிலுள்ள மற்ற எல்லாமே அதன் சாயலில்… இல்லை… ஒன்றைத் தவிர அது ஒன்றுதான் வேறு விதமாக இருக்கிறது… மனிதனின் அறிவு… அவனுடைய விஞ்ஞானம்… கணிதம்… ‘’

அவருடைய முகம் கடுமையாகிவிட்டது.

முக்கோணங்கள், சதுரங்கள், உருளைகள் இயற்கையிலுள்ள பொருட்களின் சாரமாக இருக்கிறதென்கிறான் செசான்… முட்டாள்… கேண்டன்ஸ்கியின் சில ஓவியங்களைகூட கொளுத்தி விடலாம்… எப்படியோ பாஸ்க்கல் தப்பிவட்டான்… ஜோசியர்களோ ஸ்ரீ சக்கரங்களை வரைகிறார்கள்… பூமியின் தேகமெங்கும் சூன்யக்காரர்களின் நகக்கீறல்கள்… ‘’

ஆவேசத்துடன் எழுந்து உட்கார்ந்து கொண்டார்.

அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. நான் பயத்துடன் விலகிப் போய் நின்று அவரைப் பார்த்தேன். இதற்குள் அவருடைய அம்மா வந்து அவரை திரும்பவும் படுக்கையில் கிடத்தி ஆறுதல் படுத்தினாள்.

அவருடைய உடல் தேறி வந்தது. வழக்கம்போல அலுவலகம் சென்று வந்தார்; புத்தகங்கள் வாசித்தார்; மொட்டை மாடியில் வானத்தைப் பார்த்தபடி மல்லாந்தவாக்கில் படுத்திருப்பார். மற்றவர்களுடன் குறைவாகவே பேசினார் என்றாலும் அவருடைய எண்ணங்கள் முழுவதும் வேறு எங்கோ நிலை பெயர்ந்திருந்ததை புரிந்து கொள்ளமுடிந்தது.

வழக்கம்போல நண்பர்கள் வந்தார்கள். மதுக்குப்பிகளுடன் உரையாடல் தொடங்கியது. அவருடைய பேச்சில் பிரபஞ்ச இசை, பேரன்பு, பேரறிவு என்றெல்லாம் புதியவார்த்தைகள் வந்து விழுந்ததில் அவருடைய நண்பர்களோ வியப்புடன் பார்த்தார்கள். விஞ்ஞான மனோபாவத்திற்கெதிரான அவருடைய பேச்சு அவர்களை நிலைகுலையச் செய்தது என்றே சொல்லவேண்டும்.

மனிதனுக்குள்ள அறிவையும், விஞ்ஞானத்தையும் எடுத்துவிட்டு அந்த இடத்தில் கடவுளைத் தவிர வேறு எதை நீ முன் வைக்கமுடியும்?’’ என்று அவர்கள் சினந்தார்கள்.

இந்த பகை பல நாட்கள் அவர்களுடைய உரையாடலில் தொடர்ந்து வந்தது.

ஒரு நாள் அவர்களுடைய போதை அதிகமாகி அந்த பகையும் விஸ்வரூபமெடுத்து நின்றது.

ஆமாம்’’ என்று அவர் கத்தினார். இந்த நாகரீக சீமான்களும், சீமாட்டிகளும், இந்தக் கடவுள்களும் இல்லாத ஒரு உலகத்தில் வாழ ஆசைப்படுகிறேன் அதுதான் என் கனவு, கவிதை எல்லாம்’’

ஒருவன் சிரித்தான். சிகரெட் புகையை ஊதியபடியே அவன் சொன்னான், “அப்படியானால் இந்த உலகத்தை காலி செய்துவிட்டு இன்றே வெளியேறிவிடு… உன்னுடன் உன் கட்சிக்காரர்கள் யாராவது இருந்தால் அவர்களையும் கூட்டிச் சென்றுவிடு, ஜனநெரிசல் வேறு அதிகமாகிவிட்டது…’’

இந்த காரமான உரையாடல் கண்டு இன்னொருவன் சங்கடத்தில் சிரித்தான்.

நாராயணன் சாரும் இதை ஆமோதிப்பதுபோல,

ஆமாம், வெளியேறிவிடவேண்டும்என்று முணு முணுத்தார்.

எல்லாமே நிஜத்தில் நடந்துகொண்டிருக்க நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் நம்பினேன், இதெல்லாம் வெறும் பேச்சுதான், போதை அதிகமாகிவிட்டால் வீராப்பும் கூடித்தெரிகிறதென்று.

அவர்கள் சென்ற பிறகு நானும் விடைபெற்றுக்கொண்டேன்.

மறுநாள் பொழுது புலர்வதற்கு முன்பே ஏதோ ஒரு உணர்வால் உந்தப்பட்டு வேகமாக அவருடைய அறைக்கு சென்ற நான், அந்த விபரீதத்தைக் கண்டேன். மின் விசிறியில் தலை சிதறடிக்கப்பட்டு அவர் இறந்து கிடந்தார். அவருக்குப் பக்கத்தில் விழுந்திருந்த ஸ்டூலின் மேலும், சுவர்களிலும், தரையிலும், புத்தகங்கள் மேலும் ரத்தம் தெறித்து உறைந்திருந்தது.

சென்ஷி

unread,
Oct 17, 2010, 2:10:19 AM10/17/10
to panb...@googlegroups.com

ஒரு கட்டுக்கதை - அம்பை


பன்றி என்னுடன் சம்பாஷிக்க வந்தபோது மாலை ஆறரை மணி இருக்கும். ஒரு பதினைந்து இருபது குட்டிகளாவது இருக்கும் தொளதொளத்துத் தொங்கிய அதன் வயிற்றில். சாக்கடையில் புரண்டுவிட்டு வந்திருந்தது. மேல்உடம்பு கன்னங்கரேல் என்று சாக்கடைத் தண்ணீரில் பளபளத்தது. கீழே, வயிறு சதையின் நிறத்தில் கட்டிகட்டியாய்த் தொங்கியது.

''இதோ பார். எனக்குப் பேச வேண்டும்'' என்றது.

''என்னை எப்படித் தேர்ந்தெடுத்தாய்?'' என்றேன்.

''உன் புத்திசாலித்தனமான, தீட்சண்யமான கண்களைக் கண்டு உன்னைத் தேர்ந்தெடுத்தேன் என்றெல்லாம் சொல்வேன் என்று எதிர்பார்க்காதே. பார்க்கப்போனால் அப்படி ஒரு ஒளியும் எனக்குத் தெரியவில்லை. பார், நான் ஒரு பன்றி. எனக்குப் பேச வாய்ப்புக் கொடு. பொழுது போகாமல் திண்டாடும் பன்றி நான்'' என்றது.

அப்படி புகழ்ச்சியில் மயங்கும் நபர் இல்லை நான். இருந்தாலும் இது கொஞ்சம் அத்து மீறிய ஆணவமாய்ப் பட்டது.

''இதோ பார், எனக்கு நேரம் இல்லை'' என்று சூடாகச் சொல்வதற்குள் குட்டிகள் தொங்கும் பகுதியைப் பக்கவாட்டில் தழையவிட்டு அமர்ந்துவிட்டது பன்றி.

''சரி பேசு'' என்றேன்.

''பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்'' என்றது, பெருத்த தலையைக் கீழே சாய்த்தபடி.

''என் காதில் விழவில்லை''

''மெளனமாய்ப் பேசுகிறேன்'' என்றது.

ஆணவப் பன்றிகளுக்கு அடுத்தபடி என்னால் பொறுக்க முடியாதது வேதாந்தப் பன்றிகள். அசுவாரஸ்யமாய்த் தலையைத் திருப்பிக் கொண்டடேன் எதிர்ப்பக்கம்.

''சும்மா தமாஷ். ஜனங்கள் மிருகங்களின் வாயிலிருந்து ஞானம் சொட்டும் சொற்கள் வரும் என்று நினைக்கிறார்கள். நீதிக் கதைகளில் ஓட விடுகிறார்கள். 'சீ, சீ இந்தப் பழம் புளிக்கும்' போன்ற நீதியை உதிர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குப்பையில் அளைந்து, சோர்ந்து, சலித்துப்போன பன்றி நான். ஞான சம்பந்தமான விஷயங்களில் எனக்கு ஈடுபாடில்லை'' என்றது.

''எதைப் பற்றித்தான் பேச விரும்புகிறாய்?''

''உங்கள் கட்டடத்தின் வாயிற்கதவு பற்றி.''

மாடியும் கீழுமாய் ஆறு வீடுகள் கொண்ட கட்டடம் அது. அடுத்தாற்போல், முள்வேலியால் இரு பக்கமும் அடைக்கப்பட்ட வெற்று மனை. வெற்று மனை என்று சொன்னது பேச்சுக்காத்தான்.குடிசை ஜனங்களின் கட்டணம் இல்லாத கழிப்பிடம் அது. பன்றிகளின் வாசஸ்தலம். மத்தியான வேளைகளில் ஜன்னல் அருகே ட்ரியோ ட்ரியோ என்று கூச்சம் கேட்கும். பன்றிகள் ஓடும். சில சமயம் தெரு ஆரம்பத்திலுள்ள சந்தில் நுழையும் போது க்ஹே க்ஹே என்று ஆரம்பத்திலுள்ள ச்நதில் நுழையும்போது க்ஹே க்ஹே என்று மூச்சு சீறும் கதறல் கேட்கும். நின்றால், ''போயிட்டேயிருங்க. பன்னி அடிக்கிறாங்க'' என்று தள்ளி விடுவார்கள்.

''எதுக்கு, எதுக்குப்பா அடிக்கிறாங்க?''

''எதுக்கு அடிப்பாங்க? சாப்பிடத்தான். நவந்துகிட்டே இருங்க.''

கட்டடத்தின் வாயிற்கதவில் ஒருநாள் நுழையும் சதுர அளவு இடம் இருந்தது. பலமுறை, துரத்தப்பட்ட பன்றிகள் அதில் நுழைந்து ஓடும். அதை மூடிவிடும் யோசனை இருந்தது.

''அந்த நுழைவாயில் எனக்குப் பிடிக்கிறது. அதில் நான் ஆனந்தமாய் நுழைய முடிகிறது. நாலு பக்கமும் முள்வேலி இருக்க, நுழைவதற்கான வாகான இடம். பரபரவென்ற நான் ஓடும்போது சுவர்க்கக் கதவு மாதிரி எனக்குத் திறந்து வழிவிடுகிறது. அதைப்பற்றிப் பேச எனக்குப் பிடிக்கிறது. ஒரு பன்றிக்குத் தேவை, நுழையக் கூடிய கதவுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.''

வோட்ஹவுஸின் புத்தகங்களின் செல்லப் பன்றி நினைவுக்கு வந்தது. பிரபுவின் கொழுத்த ரோஜா வண்ணப் பன்றி. போட்டிகளில் பரிசு பெறும் பன்றி.

அதைப்பற்றிச் சொன்னேன்.

அமெரிக்கப் பன்றிப் பண்ணைகளில் கொழுக்கவைக்கப்பட்டு, வலியில்லாமல் இறக்கும் பன்றிகள்பற்றிச் சொன்னேன். வலியில்லாமல் இறப்பது ஒரு பெரிய சலுகைதான் என்ற. நிறம்பற்றி அவ்வளவு சுவாரஸ்யம் காட்டவில்லை. சாகப்போகிற பன்றி கறுப்பானால் என்ன, ரோஜா வண்ணமானால் என்ன என்றது. மற்றவர்கள் சாப்பிடுவதற்காக இறப்பதுப்பற்றி ஒரு ஆட்சேபனையும் காட்டவில்லை. அதுபற்றிக் கேட்டபோது ஆட்சேபணை காட்டக்கூடிய அதிகாரம் உள்ள நிலையில் தான் இல்லை என்று பேச மறுத்துவிட்டது. சிறிது நேரம் மெளனத்தில் கழிந்தது.

''சாவைப்பற்றி என்ன நினைக்கிறாய்?'' என்றேன்.

''அது ஒரு பெரிய கழி'' என்றது. ''நீளமாய், உருண்டையாய் இருப்பது. இரும்பாலோ, மரத்தாலோ ஆனது. இரும்பானால் ஆசனத்திலிருந்து வாய்வரை செருகப்படும் சாவு. மரமானால் அடிச்சாவு.

''எப்படி அலட்டிக்கொள்ளாமல் சொல்கிறாய்?''

''அலட்டிக்கொண்டு ஒன்றம் ஆகப்போவதில்லை. செருகுச் சாவு, அடிச்சாவு, இயந்திரச்சாவு என்று பிரித்துத் தேர்ந்தெடுக்கும் சலுகை வேண்டும் என்று போராடலாம். பன்றிகளிடம் ஒற்றுமை இல்லை.''

''இயற்கையான சாவு பற்றிச் சொல்லமாட்டேன் என்கிறாயே?''

''சாவதில் என்ன இயற்கை இருக்கிறது? வலுக்கட்டாயம்தான்.''

''இல்லையில்லை. மரத்திலிருந்து இலை உதிர்வது மாதிரி மெல்ல இயற்கையோடு கலப்பது...''

''எனக்கு ஒரு உபகாரம் செய்''

''என்ன?''

''தயவுசெய்து இதில் கவிதையைக் கொண்டுவராதே'' என் வாழ்க்கை ஏற்கனவே கெட்டுக்கிடக்கிறது. கவிதையை வேறு என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.''

''நான் சொன்னதில் என்ன கவிதைத்தனம் இருக்கிறது?''

''நீ சாவிலிருந்து ரத்தத்தைப் பிரிக்கிறாய். ரத்தம் சிந்தாத, அழகான இலையுதிர்ச் சாவு பற்றிச் சொல்கிறாய். ஆனால் ரத்தம் சேர்ந்தது சாவு. வெளியில் கொட்டினாலும் உள்ளே உறைந்து போனாலும் ரத்தமில்லாமல் சாவு இல்லை. நீ சாவை அழகாக்கப் பார்க்கிறாய்.''

குற்றச்சாட்டு.

சாவைப்பற்றி முதலில் எண்ணியது பன்னிரண்டு வயதில். கால்கள் அந்தரத்தில் மிதக்க, ஒரு பந்தை எம்பிப் பிடித்துக் கொண்டிருந்தபோது, தலையை மேலே வீசிப் பந்தைப் பார்த்த கணத்தில், வலியுடன் கூடிய மின்னலாய் அந்த எண்ணம் தாக்கியது. நாம் சாகிறோம். உள்ளே ஓடிவந்து முட்டியில் முகம் கவித்துப் பயந்தேன். கை, கால், முகம், உடம்பு எல்லாம் அந்நியமாகப்பட்டது. மாட்டிவிட்ட ஒன்றாய்த் தோன்றியது. இதனுள்ளே நான், நான், நான் என்று புகுந்து பார்த்தேன். பீதி கவ்வியது. செவிக் குழியிலா, கண்ணினுள்ளா, பல்லிடுக்கிலா, அக்குள் பள்ளத்திலா எதில் நான் இருக்கிறேன் என்று தேடினேன். பயத்தில் வியர்த்துப்போனேன்.

அதன்பின் சில சலுகைகளை நானே எனக்குத் தந்துகொண்டேன். சில வகைகளில் நான் சாக விரும்பவில்லை. விபத்தில் சாக விரும்பவில்லை. உடல் சிதைய, திடீர்த் தாக்குதலில் சாவு, விபத்துச் சாவு. எனக்கு வேண்டாம். வலியுடன் துடித்துச் சாவு - அதுவும் வேண்டாம். இரண்டாம் உலகப்போர்பற்றிப் படித்தபின் யூதர்களைப் போல் விஷப் புகைக்கூண்டுகளில் சாக நான் விரும்பவில்லை. அணு ஆயுதத்தால் ஆன ஹிரோஷிமாச் சாவும் வேண்டாம். வியட்நாமிற்குப்பின் நபாம் போன்ற இரசாயனக் குண்டுகளால் ஆன சாவையும் ஒதுக்கினேன். ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்கக் கண்டங்களைக் கண்டுகொண்டபின், பஞ்சசாவு, வெள்ளச் சாவு, பூகம்பச் சாவு, சிறையில் சாவு, தூக்குக் கயிற்றுச் சாவு, துப்பாக்கிச் சாவு என்று ஒவ்வொன்றாய் விலக்கிக்கொண்டே வந்தேன். எஞ்சியது அழகுச் சாவு. வெளியுடன் கலக்கும் கவிதைச் சாவு. வலியில்லை. ரணமில்ல. குருதியில்லை.

பன்றியின் கோபம் எனக்குப் புரிந்தது.

சில நாட்களுக்குப் பின் ஒரு விடிகாலைப் பொழுது க்ஹரே... என்று அலறல் கேட்டது. நாலு பேர் கழியுடன் பன்றியைத் துரத்தினார்கள். அது விரைந்து வாயிற்கதவை நோக்கி ஓடியது. அதன் உடம்பு இன்னமும் பெருத்துவிட்டதை அது மறந்துவிட்டது. அந்தச் சதுர இடைவெளியில் சிக்கிக்கொண்டது. நான் ஓடிவரும் முன் ரத்தம் பீறிட்டு, பொம்மைகள் மாதிரிப் பன்றிக் குட்டிகள் வெளியில் விழுந்தன.அருகில் போனதும் பன்றி என்னை அடையாளம் கண்டுகொண்டது. சிவப்பேறிய கண்களைத் திறந்து சொல்லியது.

''தயவுசெய்து சாவைப்பற்றிய ஏதாவது அரிய உண்மையைச் சொல்லிவிட்டுப் போவேன் என்று எதிர்பார்க்காதே. ஒன்றுதான் என்னால் சொல்ல முடியும். நாம் சாகிறோம்.''

நீண்ட கழிகள் நெருங்கி வந்தன.

நன்றி : வீட்டின் மூலையில் ஒரு சமையலறை

jse ramesh

unread,
Oct 17, 2010, 2:11:47 PM10/17/10
to panb...@googlegroups.com
இன்றைக்கு வந்த முதல் 3 கதைகளும் சூப்பர்...இளசுகளுக்கு ஏற்ற கதைகள் :)

சென்ஷி

unread,
Oct 17, 2010, 11:37:33 PM10/17/10
to panb...@googlegroups.com
@ ரமேஷ் - :))))

2010/10/17 jse ramesh <rames...@gmail.com>

Kandavel Rajan

unread,
Oct 23, 2010, 10:00:59 AM10/23/10
to panb...@googlegroups.com
சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் 
- தி. ஜானகிராமன் 

நன்றி விமலாதித்த மாமல்லன் Buzz.....

'மணியார்டரா ' எனக்கா ' ' 

'ஆமா ஸ்வாமி ' உங்களுக்கேதான் ' ' 

'உத்ராபதி, உனக்கு வயசு நாப்பதாயிருக்கும், சாளேசரம் போட்டுக்கற வயசு ' நல்லா பாத்துச் சொல்லு. நான் வாணா கண்ணாடி தரட்டுமா ? ' என்று துருப்பிடித்த வினோலியா ரோஸ் சோப் பெட்டியைத் திறந்து, வெற்றிலைக்கும் வெட்டுப் பாக்குக்கும் மேல் படுத்துக் கொண்டிருந்த மூக்குக் கண்ணாடியைத் தொட்டார் முத்து. 

'கண்ணாடியும் வாணாம், சீப்பும் வாணாம். உங்களுக்குத்தான் வந்திருக்கு. நீங்களே அந்தக் கண்ணாடியை மாட்டிக்கிட்டுப் பாருங்க...எம். சாம்பமூர்த்தி யாரு ? ' 

'அக்கணாக்குட்டியா ? நம்ம புள்ளையா ? இப்ப மெட்ராஸிலேயா இருக்கு அது ? ' 

முத்து அவசர அவசரமாக மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டி, இடது காதில் நூலைச் சுற்றிக் கொண்டார். 

'ஆமா, வேலைக்குப் போயிட்டானே அக்கணாக்குட்டி ஒரு மாசத்துக்கு முன்னால, உனக்குத் தெரியாது ? ' 

'தெரியாதே. எங்க வேலையோ ? ' என்று மணியார்டர் பாரத்தில் இரண்டு இடத்தில் இண்ட்டு போட்டுக் கொடுத்தார் உத்ராபதி. கையெழுத்தானதும் அடிக் கடிதத்தைக் கிழித்து முப்பதொன்பது ரூபாய்க்கு நோட்டும் ஒரு ரூபாய்க்கு சில்லறையுமாகப் பையிலிருந்து எடுத்து நீட்டினார். 

'சில்லறையும் மாத்திப்ட்டு நாற்பது ரூபாயைக் கொடுப்பானேன் ? அரை ருபாயைக் குறைச்சுண்டு கொடுக்கப் படாதோ ? ' என்று அரை ரூபாயை நீட்டினார் முத்து. 

'நாலணாப் போதும் சாமி. உங்ககிட்ட அதுக்கு மேலே வாங்கறது பாவம் ' என்று பாதியைத் திரும்பிக் கொடுத்து விட்டார் உத்ராபதி. 

'முதல் சம்பளம் வாங்கி அனுப்பிச்சிருக்கான் அக்கணாக்குட்டி. எட்டணாவாத்தான் இருக்கட்டுமேன்னு நினைச்சேன் ' என்று நாலணாவைத் திரும்பி வாங்கிக் கொண்டார் முத்து. 

'பிறத்தியார் பணம் அனுப்பிச்சா, ரண்டுகையாலும் வீசி வீசி தருமம் பண்ணுவாங்க சாமி ' என்று சொல்லிக் கொண்டே குறட்டில் இறங்கி வந்தாள் அவர் மனைவி. 

'ஏழைக்குதாம்மா தெரியும் ஏழை கஷ்டம். நீங்க சொல்றீங்களே, மாசம் நானூறு ரூபா அனுப்பறாரு ரட்டைத் தெரு மகாலிங்கய்யரு மகன், மிலிட்டரியிலே கர்னலா இருக்குறாராமே. மகாலிங்கய்யரு அப்படியே வாங்கிட்டு குந்தினாப்பல உள்ளே போயிடுவாரு. ஒரு பத்துகாசு டாத்தண்ணிக்கு ? மூச்சுப் பிரியப்படாது... முகத்தைப் பார்த்தாத்தானே ?... அக்கணாக்குட்டி என்ன வேலையாயிருக்கு ? ' 

'என்ன வேலையோ ? நம்ம எம். கே. ஆர். கிட்ட போய் புலம்பினேன் ஒரு நாளைக்கு, நம்ம பையனுக்கு ஒரு வழி பண்ணப்படாதா செட்டியார்வாள் ' இப்படி உதவாக்கரையாத் திரியறானேன்னு நின்னேன். ஒரு மாசம் கழிச்சு சொல்லியனுப்பிச்சார். போனேன். உம்ம பையனை அனுப்புரீராய்யா மெட்ராஸஉக்கு ? ஒரு பெரியமனுஷன் வீட்டிலே கூடமாட ஒத்தாசையா இருக்கணுமாம். ஒரு பையன் இருந்தாத் தேவலைன்னு சொல்றாங்க. பெரிய இடம், புள்ளீங்க பள்ளிக்கூடத்துக்குப் போகும். கொண்டு விடணும், கடை கண்ணிக்குப் போகணும். இப்படி சில்லரை வேலையா இருக்கும் போலிருக்கு. நல்லா கவனிச்சிப்பாங்க. வீட்டோடு சாப்பாடு போட்டு வைச்சிப்பாங்கன்னார் எம். கே. ஆர். 

'அனுப்புறீமான்னு கேக்கணுமா ? நான்தான் கஞ்சிவரதப்பான்னு தவிச்சுண்டு கிடக்கேன். இன்னிக்கே அனுப்பிக்கறேன்னேன். நாலு நாக்கழிச்சு அவர் காரியஸ்தர் மெட்ராஸ் போனார். அக்கணாக்குட்டியை அழச்சிண்டு போயிட்டார். சரியா ஒண்ணரை மாசம் ஆச்சு. பணம் வந்திருக்கு. ' 

'என்னமோ சாமி கண்ணைத் திறந்தாரு. நீங்க முன்னாலே, இந்த மூக்கு கண்ணாடிக்கு அந்த நூலை எடுத்திட்டு ஒரு காது வாங்கிப் போடுங்க. அப்புறம் ஒரு உறையிலே போட்டு வச்சுக்குங்க. இப்படியே சீவல் மேலேயும் பாங்கு மேலேயும் வச்சிட்டிருந்தா பழங்கோலி மாதிரி கீறல் விளாம என்ன பண்ணுமாம் ' ' என்று சொல்லிக்கொண்டே உத்திராபதி நகர்ந்தார். 

சம்சாரம் முத்துவைப் பார்த்தாள். 

'இப்படிக் கொடுத்திட்டு நேரே உள்ள வரட்டும். பற மோளம் மாதிரி ஊரெல்லாம் போய் தம்பட்டம் கொட்டிண்டு நிக்கவேண்டாம் ' என்று பல்லோடு பல்லாகச் சொல்லி வெற்றிலைப் பெட்டி மேலிருந்த நோட்டுகளை பெட்டிக்குள் போட்டு மூடி, பெட்டியையும் எடுத்துக் கொண்டு உள்ளே போனாள். 

வெற்றிலைப் பெட்டி கையை விட்டுப் போனதும் கூடவே விரைந்தார் முத்து. அவர் உள்ளே வந்ததும் கதவைத் தாழிட்டாள் சம்சாரம். 

முத்து தோளிலிருந்த மூன்று முழம் ஈரிழையை இடுப்பில் கட்டி, அவள் கையிலிருந்த பெட்டியை வாங்கித் திறந்து நோட்டுகளை எடுத்து, பறையிலிருந்த பரமேச்வரனின் படத்தின் அடியில் வைத்து, நெடுங்கிடையாக விழுந்து மூன்று தடவை நமஸ்காரம் செய்தார். 

'ஏன் நிக்கறே ' நீயும் பண்ணேன் ' ' 

'எல்லாம் பண்றேன் ' என்றுதான் அவள் வழக்கமாகச் சொல்லிவிட்டு நின்றிருப்பாள். ஆனால் மனசு பாகாகிக் கிடந்ததால் அவரே சம்பாதித்து விட்டாற்போல, பதில் பேசாமல் கீழே குனிந்து மூன்று முறை வணங்கி எழுந்தாள். அவளுக்கு, அந்தக் காலத்து முத்துவின் ஞாபகம் வந்தது. ஏழு வருடங்களுக்கு முன்னால் முத்து இப்படிக் கிழம் சென்று போகவில்லை. மயிர் கருகருவென்றிருக்கும், அள்ளிக்கட்ட வேண்டிய கூந்தலாக இருக்கும். மூக்கிலிருந்து இரண்டு கோடுகள் இந்த மாதிரி விழவில்லை. மார்பும் இரு பிளவாக அடித்தென்னை மட்டை மாதிரி வைரமாக இருக்கும். இப்படிச் சரியவில்லை. தோள்பட்டை இப்படிச் சூம்பவும் இல்லை. ஆடு சதை, துடைச் சதை எல்லாம் இப்படி கழளவுமில்லை. அப்போது வெற்றிலைப் பெட்டி பித்தளைப் பெட்டி. இப்பொழுது குப்பைத் தொட்டிபோல ஒரு வயதானத் தகரப் பெட்டி. அப்பொழுது வெள்ளிச் சுண்ணாம்புக் கரண்டான். இப்பொழுது பிரம்மோத்சவத்தில் தெருவோரக் கடைப்பரப்பில் வாங்கின தகரக் குழாய். அதுவும் துரு. கழுத்துக் குழியை தங்க ருத்ராட்சக் கொட்டை மறைத்ததுபோய், இப்பொழுது குழிதான் தெரிகிறது. மேனிபோய், தெம்பு போய் கங்காளி மாதிரி நிற்கறதைப் பார்த்துதான் 'ரண்டாம் தாரமாம்மா ' ' என்று போன வருஷம் அமர்த்தின புதுத் தயிர்க்காரி கேட்டாள் போலிருக்கிறது. இப்படியா விசுக்கென்று இந்த பிராமணன் கிழண்டு போகும் ' மருந்துக்குக்கூட மயிரில் கறுப்பில்லாமல், கூந்தல் கொட்டைப் பாக்காகி....பல் விழவில்லை, ஆனால் கோணவும் பழுப்பேறவும் ஆரம்பித்து விட்டது. 

ஆனால் இது ஒன்றும் அவள் கண்ணை இந்தக் கணம் உறுத்தவில்லை. 'என்ன இருந்தாலும் இதுக்கு இருக்கிற சாமர்த்தியம் சாமர்த்தியம்தான் ' என்று உவந்தாள். 

அவளுக்குச் சற்று சிரிப்பாகக்கூட இருந்தது. நம் பிள்ளையைப் பார்த்து நாற்பது ரூபாய் சம்பளம் போட்டு சாப்பாடும் போடத் தோன்றிற்றே ஒருவனுக்கு ' இந்த உலகத்தில் எத்தனை அசடுகள் இருக்கமுடியும் ' 

இல்லை....அண்ணாக்குட்டி நிஜமாகவே சமர்த்துதானோ ' நமக்கு ஒரு பிள்ளை. செல்லப்பிள்ளை. அசட்டுத்தனமேதான் கண்ணில்பட்டது. வெளியே போனதும் மறைந்திருந்த சமர்த்து வெளி வந்துவிட்டதோ என்னவோ. 

....இல்லை....பணத்தையே தின்று, பணத்தையே உடுத்தி, பணத்திலேயே படுத்துப் புரளுகிற கொழுப்பு ஜன்மங்களால் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் சாப்பாடு போட்டு, துணிமணி வாங்கிக் கொடுத்து நாற்பது ரூபாய் கொடுக்கவாவது '...கொழுப்போ டம்பமோ, மனது நல்ல மனது. இந்தப் பாச்சைக்கு, பேச்சைக்காலும் பேச்சைக்கையும் கொன்னல் பேச்சுமாக இது கிடக்கிற லட்சணத்துக்கு இப்படி ஆதரிக்க வேண்டும் என்று தோன்றிற்றே. 

'தட்சிணாமூர்த்தே, வைதீச்வரா, லோகமாதா ' நீங்கள்ளாம்தான் காப்பாத்தணும் ' என்று பயந்துபோய் நின்றாள் அவள். 

'சரி, காவேரியிலே போய் ஸானம் பண்ணிட்டு வந்துடறேன்...சில்லறை ஏதாவது கொடேன். கீரைத்தண்டு பாற்காய்னு ஏதாவது வாய்ண்டுவரேன் ' என்று முடுக்கினார் முத்து. 'இன்னிக்கு கூடவா வத்தக் குழம்பும் சுட்ட அப்பளமும் ? ', என்று சொல்லாமல் பிணங்குகிற முறுக்கு அது. நாலணாவை எடுத்துக் கொடுத்தாள். கன்னத்தில் அவளை செல்லமாக நிமிண்டிவிட்டு அவர் வெளியே போகிறார். பணம் வந்தால் இந்த நிமிண்டல், குழையல் எல்லாம் இரண்டு பேருக்கும் சகஜம். 

அவர் குளிக்கப் போனது நடந்து போகிற மாதிரி இல்லை. குதி போடுகிறது போலிருந்தது. அவனை --- அதை, ரூபாய் அனுப்பும்படி யாரும் சொல்லவில்லை. அது அது வேலை என்று போனால் போதும் என்றிருந்தது. அது போய் நாற்பது ரூபாய் அனுப்பவாவது ' 'நீ உருப்படமாட்டே, நீ உருப்படவே மாட்டே ' என்று அவனைச் சபித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது, வயிற்றில் பிறந்த பிள்ளையை இப்படியா சபிப்பார்கள் ' நம்ம புத்தி இவ்வளவு கட்டையாக ஏன் போயிற்று ? இப்பொழுது பணத்தை அனுப்பி நம்ம புத்தியில் கரியை பூசிவிட்டதே ' இந்தப் பிள்ளை ' அக்கணாக்குட்டி, இனி மேல் உன்னை அதட்டக் கூடமாட்டேண்டா என்று தன்னைத் திட்டிக்கொண்டு நடந்தார் முத்து ஒரு பிள்ளை ' 

பிள்ளைகளெல்லாம் தாயையும் தகப்பனையும் கொள்ளாமல் பாட்டனையும் பாட்டியையும் கொள்ளுமாமே, --அதுபோல் அக்கணாக்குட்டியைப் பற்றிய வரையில் மெய்தான். அவன் முத்துவின் மாமாவைக் கொண்டு விட்டான். முத்துவைக் கொண்டிருந்தால் அண்டா, தவலைகளை அலட்சியமாக உருட்டுகிற வலுவு வந்திருக்கும். ஆயிரம் பேருக்கானாலும் ஒரு கல் உப்போ, புளியோ ஏறாமல் குறையாமல் சமைத்துப் போடுகிற நளபாகம் கை வந்திருக்கும். முத்துவின் சம்சாரத்தைக் கொண்டிருந்தால் பார்க்கவாவது லட்சணமாக வளர்ந்திருக்கலாம். 

மீனாட்சி லட்சணம் தான். சமையற்கார முத்து பெண்டாட்டி என்று யார் சொல்ல முடியும் ? நூத்தம்பது வேலி பண்ணைவீட்டு எஜமானி எண்ணெய் ஸ்நானத்துக்காக நகைநட்டுகளைக் கழற்றி வைத்தாற் போலிருக்கும் .....ஸ்நானம் செய்துவிட்டுத் திரும்பி உள்ளே நுழைந்த கையோடு ஈர வேட்டியோடேயே அவளை அப்படியே அம்மென்று திணறத் திணறக் கட்டிக் கொள்ள வேண்டும். ம்க்கும்...ம்க்கும் இதுவேறயாக்கும் என்று சொன்னாலும் சொல்லுவாள். கட்டிண்டு தொலை என்று சொல்வது போல மரம் மாதிரி நின்றாலும் நிற்பாள். அவளுக்குப் பிறந்த பிள்ளை அந்த மாதிரி மூக்கும் முழியுமா இருக்கக் கூடாதோ ? மூக்கில் வற்றாத ஜலதோஷம். ஹ் ஹ் என்று நிமிஷத்துக்கு ஒரு உறிஞ்சல். முட்டிக்கால், முட்டிக் கை. குதிகால் கீழே படாமல் இரண்டு குதியிலும் முள்குத்தினாற் போன்ற விந்து நடை, வாயைச் சற்று திறந்தாலே ஓட்டுக் கூரை மாதிரி பல் வரிசை --- வரிசை இல்லை கோணல் --- ஓடு மாற்றி நாலு வருடமானாற் போல. அந்த பல்லுக்கு ஏற்ற சொல், எச்சிலில் குளித்துக் குளித்து வரும் ஒவ்வொரு பேச்சும். எப்ப வந்தேல் மாமா சேக்யமா ? நாலானன் சேக்யமார்க்கானா, (நாலானன் என்றால் நாராயணன்) செலுப்பு பிஞ்சு போச்சுப்பா இன்னிக்கி காவேரி ரண்டால் ஆலம்.... வயசு பதினைந்து முடிந்தும் இதே பேச்சுதான். படிப்பு வரவில்லை. எலிமெண்டரிக்கு மேல் ஏறவில்லை. ஐந்து வருஷம் வீட்டோடு கிடந்ததும் போன வருஷம் ஒரு மளிகைக் கடையில் இழுத்துவிட்டார். அங்கே ஒரு நாள் எண்ணெயைக் கொட்டி ரகளை. வேலை போய்விட்டது. சைக்கிள் பழுது பார்க்கிற கடையில் கொண்டுவிட்டார். நாலு நாளைக்குப் போய்விட்டு வந்து ஜஉரமாகப் படுத்துக் கொண்டு விட்டது. நான் மாட்டேன்; சைக்கிலுக்குப் பம்பு அடிக்கச் சொல்றான். கண்டு கண்டா மார் வலிக்குது. நான் மாட்டேன் போ என்று திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டது. முத்து அலையாத இடமில்லை. பையனை அழைத்துக் கொண்டு வர்ச் சொல்லுவார்கள். போவார், பையனைப் பார்த்ததும் சொல்லியனுப்புகிறேன் என்று அனுப்பி விடுவார்கள். விறகு கடையில்கூட வேலைக்கு வைத்துப் பார்த்தாயிற்று. ஒரு கட்டையைத் தூக்க நூறு முக்கல். தினமும் நகத்திலும் விரல் இடுக்கிலும் சிலாம்பு. வீட்டுக்கு வந்து போகமாட்டேன் என்று அடம். நீ உருப்படவே மாட்டே என்று அப்பா அம்மா பாட்டு ' ஒன்றையும் காதில் போட்டுக் கொள்ளவே மாட்டான் அவன். பேசாமல் போய் திண்ணையில் உட்கார்ந்து வாசலில் போகிற வெள்ளாட்டையும் குட்டியையும் முக்கை உறிஞ்சி உறிஞ்சிப் பார்த்துக் கொண்டிருப்பான். இல்லாவிட்டால் வீட்டுக்கார வாத்தியார் பெண்ணோடு 'நேத்திக்கி ரிசவாகனம் பாக்கலியே நீ தூங்கிப் போயிட்டியே ' என்று திருநாள் சேதிகளைப் பேசிக் கொண்டிருப்பான். 

ஸ்வாமி நினைத்தால் என்ன செய்யமாட்டார் ' ஊமைக்கும் அசடுகளுக்கும் அவர் தானே கண். என்னப்பா ' வைத்தீச்சுவரா ' இந்த மட்டுமாவது பாதை காட்டினியே ' 

முதல் தடவை பணம் வந்து ஆச்சரியத்தில் கழிந்தது. இரண்டாம் தடவைகூட அந்த ஆச்சரியம் குறையவில்லை. மூன்றாம் தடவை இரண்டு மூன்று நாள் தாமதமாயிற்று. வேதனையாயிருந்தது. பயமாக இருந்தது. ஐந்தாவது தடவை ஒரு வாரம் தாமதம். கோபம் வந்தது. கோபத்தை சமாளித்துக்கொண்டு என்ன கஷ்டமோ இடைஞ்சலோ என்று சமாதானம் செய்து கொண்டு சாந்தமான சமயத்தில் பணம் வந்து குதித்துவிட்டது. 'இது சம்பாதிச்சு நான் சாப்பிடணுங்கறது இல்லை ஸ்வாமி. என்னமோ முன்ன மாதிரி கண் சரியாகத் தெரியலை. கை நடுங்கறது. என்னமோ குழப்பம். மொளகாப் புளியெல்லாம் முன்ன மாதிரி திட்டமா விழமாட்டேங்கிறது. இல்லாட்டா என்ன விட்டுட்டு ஆனந்தம் பயலைக் கூப்பிடுவாளோ ஏலாவூர் பண்ணையிலே ' எத்தனை கலியாணத்துக்கு அங்கே டின்னரும் டிபனுமா பண்ணிப்போட்டிருக்கேன் ? இந்தப் பய இப்படி பிள்ளையா பிறந்து இப்படி நிக்கறதேங்கிற கவலையிலே எனக்கு கையி, தீர்மானம், தைரியம் எல்லாம் ஆடிப்போச்சு ஸ்வாமி. இப்ப அது நிமிர்ந்துட்டுது. என் குழப்பம் நிமிரலே, என்ன பண்றது ' இல்லாட்டா இது சம்பாரிச்சா நான் சாப்பிடணும் தலையெழுத்து ' என்று மணியார்டர் வாங்கும்போது வந்து, விசாரிக்கிற பார்வையாகப் பார்த்த வீட்டுக்கார வாத்தியாரிடம் உருகினார் முத்து. 

அந்தச் சமயத்தில்தான் வண்டிக்காரத் தெருவிலிருந்து வக்கீல் குமாஸ்தாவின் காரியஸ்தன் வைத்தியநாதய்யன் வந்து செய்தி சொல்லிவிட்டுப் போனான். மத்தியானம் முடிந்தால் வீட்டுப்பக்கம் வந்துவிட்டுப் போகச் சொன்னாராம் அண்ணாவையர். 

வக்கீலுக்குக் குமாஸ்தா. அந்த குமாஸ்தாவுக்கு ஒரு காரியஸ்தனா ? இது உலகத்தில் இல்லாத ஆச்சரியம் இல்லையோ ? ஆனால் நடக்கிறதே. அண்ணாவையனுக்கு காரியஸ்தன் ஒருவன் இல்லை, இரண்டு மூன்று பேர் உண்டு. இந்தா என்றால் ஏன் எங்கேயென்று ஓடக் காத்திருக்கிற எடுபிடி ஆட்கள் மூன்று பேர் --அண்ணாவையன் முத்துவுக்குக்கீழ் சமையலாக இருந்தவன்தான். திடாரென்று ஒரு நாளைக்கு வக்கீல் ஜகதுவுக்கு குமாஸ்தாவாக ஆனான். மூன்று வருஷத்தில் ஜகதுவையே உட்கார்த்தி வைத்துவிட்டான். தானே வக்கீல் மாதிரி தொழில் நடத்தத் தொடங்கிவிட்டான். முதலிமார் கேஸ்கள், செட்டி நாட்டுக் கேஸஉகள் --பாகப் பிரிவினைகள் வியாஜ்யங்கள் என்று பிரளயமாடுகிறான். கோர்ட்டு ஏறாமலே எத்தனை மத்தியஸ்தங்கள் ' பல மத்தியஸ்தங்கள் வாசல் திண்ணையில் நீட்டின கால்களை முடக்காமலே நடக்கும். மலையாளத்து இரட்டைத் தாழம் பாயில் திண்டுமீது சாய்ந்து....ஏ அப்பா ' என்ன கார்வார் ' என்ன மோக்ளா ' 

முத்து கீரைத்தண்டு சாம்பார் சாதத்தைச் சாப்பிட்டு வினோலியா டப்பாவுடன் வண்டிக்காரத் தெருவுக்குப் போனார். போகாமல் எப்படி இருக்க முடியும் ' விறகு கடையிலும் சைக்கிள் கடையிலும் அக்கணாக் குட்டியை வேலைக்கு வைத்தது அண்ணாவையன் தானே. இது வேலையை விட்டால் அவன் என்ன செய்வான் ? 

வழக்கம் போல நீட்டின காலை மடக்காமலே 'வா முத்து, உட்காரு ' என்று அண்ணாவையன் திண்ணையில் தாழம் பாயில் சாய்ந்தவாறே அழைத்தான். 

'வைத்தா வந்து சொன்னான், அய்யர்வாள் கூப்பிட்டார்னு ' 

'ஆமா. முத்து ' என்று எழுந்து புகையிலையை உமிழ்ந்துவிட்டு வந்து, 'ராத்திரி மெட்ராஸ் போறேன். இந்த தடவை யாராவது கூட இருந்தா தேவலை போலிருக்கு. ஒரு வாரமா ஜஉரம். முந்தாநாத்தான் ஜலம் விட்டுண்டேன். நாளைக்கு அர்ஜண்டா கேஸஉ ஹைக்கோர்ட்டிலே. பத்தியச் சாப்பாடு. ஹோட்டல்ல தங்கப்போறதில்லெ. தம்முடு கலியாண மண்டபத்திலே தங்கப் போறேன். நீகூட வந்து ஒரு ரசம் சாதமோ தொகையலோ பண்ணிப் போட்டா தேவலைன்னு தோணறது. அதான் கூப்பிட்டனுப்பிச்சேன் ' 

'அதுக்கென்ன செஞ்சுபிடறது. ' 

'நீ தீர்க்காயுசா இருக்கணும், நாலாநாள் திரும்பி விடலாம். நீ போறதுக்கு ரெடி பண்ணிக்கோ. நாளை நாளன்னிக்கி ஒண்ணும் அச்சாரம் வாங்கலியே ' 

'இப்ப என்ன ஆடி மாசத்திலே அச்சாரம் ? ' 

'ரொம்ப நல்லது போ. அப்ப ரண்டு நாள் கூடத் தங்கினாலும் பாதமில்லேன்னு சொல்லு. ' 

'ஒரு மாசமாத்தான் இருக்கட்டுமே. நீங்க கூப்பிடறச்சே நான் வெட்டி முறிக்கப் போறேனோன்னேன். என்ன பேச்சு இது ? ' 

'சரி, இந்தா--இதோ இருவது ரூவா இருக்கு. மீனாட்சி கிட்ட கொடு. செலவுக்கு வேணுமே அவளுக்கு... ' ராத்திரி ஏழு மணிக்கு வந்துடு. இங்கேயே சாப்பிட்டுப் புறப்படலாம். 

'சாப்பிடறேன். இது என்னத்துக்கு ? ' என்று உபசாரமாக பணத்தை மறுத்தார் முத்து. 

'எது என்னத்துக்கு ? --கொடுத்தா பேசாம வாங்கிவச்சுக்கோயேன். நீதான் மகாப் பிரபுன்னு தெரியுமே எனக்கு. ' 

'சரி ' என்று புன்சிரிப்புடன் இரண்டு நோட்டையும் வினோலியாப் பெட்டிக்குள் வைத்து மூடி 'நானே போகணும் போகணும்னு நெனச்சிண்டிருந்தேன். நீங்க கூப்பிட்டுது பால்லெ பழம் விழுந்தாப்பல ஆயிட்டுது ' என்றார் முத்து. 

'என்ன ? ' 

'நம்ம அண்ணாக்குட்டி அங்கதானே இருக்கான்... போறபோது அவனையும் ஒரு நடை பார்த்துட்டு வந்துடலாமே ' 

'ஒஹோஹொ. ரண்டு மாசம் முன்னாலேயே சொன்னியே-- யாராத்திலெயோ இருக்கான்னு. எனக்கு மறந்தே போயிடுத்து பாரேன். பலசரக்குக் கடைக்காரனுக்கு பைத்தியம் புடிச்சாப்பல ஆயிடுத்து என் புத்தி... பேஷ்-- ' 

பட்டணத்துக்கு வந்த நாலாம் நாள்தான் முத்துவுக்கு ஒழிந்தது. அண்ணாவையருக்கு சமைத்துப்போட்டு விட்டு அவரோடும் சுற்ற வேண்டியிருந்தது. மூன்று நாளுக்குப் பிறகுதான் அண்ணாவையருக்குத் தைரியம் வந்தது. தனியாக நடமாடலாம் என்று. அன்று சனிக்கிழமை. வேங்கடாசலபதி பெயரைச் சொல்லி ஒரு சர்க்கரைப் பொங்கல் பண்ணச் சொன்னார் அண்ணாவையர். அவருக்குச் சாப்பாடு போடுவதற்கு முன்னமே சொல்லி விட்டார் அவர். 'முத்து, நான் சாப்பிட்டுக் கோர்ட்டுக்குப் போறேன். நீ அக்கணாக் குட்டியைப் பார்த்துட்டு சாயங்காலத்துக்குள்ள வந்துரு. ராத்திரி வண்டிக்கே கிளம்பும்படியா இருக்கும். முடிஞ்சா அந்தப் பயலையும் அழச்சிண்டு வா. நானும் பார்க்கறேன் ' என்ரு அவர் சொன்னதும் அவிழ்த்துவிட்ட கழுதை மாதிரி ஓட வேண்டும் போலிருந்தது முத்துவுக்கு. நெஞ்சுக்குள் குதியாகக் குதித்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அவருக்குச் சாதத்தைப் போட்டார். டாக்சி பிடித்துக் கொண்டு அவரை ஏற்றி வழியனுப்பி விட்டு, ஒரு எவர்சில்வர் டப்பாவில் சர்க்கரைப் பொங்கலைப் போட்டுக்கொண்டு மாம்பலம் பஸ்ஸில் ஏறினார். 

வீடு கண்டு பிடிப்பது சிரமமாக இல்லை. வீடா அது பங்களா. பங்களாகூட இல்லை. சின்ன அரண்மனை. ஒரு மாஞ்சோலைக்கு நடுவில் இருந்தது. கேட்டைக் கடந்து நுழைந்ததும் நடுவில் ஒரு நாகலிங்க மரம். இப்பாலும் அப்பாலும் இரண்டிரண்டு மாமரங்கள். ஒரே நிழலாக இருந்தது. தள்ளிப்போனால் கார் நிற்கும் முகப்பு. காரும் இருந்தது. நாகலிங்க மரத்துக்குப் பக்கத்தில் சிமண்டு சோபா இரண்டு திண்ணைபோல கட்டியிருந்தன, அங்கே நான்கு பையன்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். 

'அம்பி ' ' என்று இரண்டு தடவை கூப்பிட்டார் முத்து. அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை. மாமரத்தில் ஒரு குயில் கத்திற்று. கீழே நாகணவாய் இரண்டு மஞ்சள் மூக்கும் குழைந்த கூவலுமாக ஆடி ஆடி நடந்து கொண்டிருந்தன. 

'நான் டபிள்ஸ் எத்தனையோ தடவை போயிருக்கேண்டா இதே சைக்கிள்ளே என்ன செஞ்சிடுவாங்க ? எங்க தாத்தா ஹைகோர்ட் ஜட்ஜஉ கான்ஸ்டபிள் என்னைப் பிடிச்சிடுவானா ? ' 

'ம்க்ம்...நீ யார் க்ராண்ட்ஸன்னாயிருந்தா போலீஸ்காரனுக்கு என்னடா ? அவன் டூட்டி செய்யத்தான் செய்வான். ' 

'பெட்டு ? --நான் டபுள்ஸ் போறேன், மணியோட..... பிடிக்கிறானா பார்ப்பமா ? அஞ்சு ரூபா பெட்டு ' இந்தா ' என்று சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்து வைத்தான் அந்தப் பையன். 

பன்னிரண்டு வயதுக் குழந்தையின் பையிலிருந்து 'பெட்டு 'க் கட்ட ஐந்து ரூபாய் பணம் வருவதைப் பார்த்து முத்து பயந்து போய்விட்டார். இந்தப் பையன்களைத்தான் அக்கணாக்குட்டி பள்ளிக்கூடத்திற்குக் கொண்டு விடுகிறானா ' அவருக்குப் பயமாகவும் இருந்தது. பெருமையாகவும் இருந்தது. 

'அம்பி ' ' என்று மறுபடியும் கூப்பிட்டார். பதிலில்லை. அன்று சனிக்கிழமை, பள்ளிக்கூடம் இல்லை போலிருக்கிறது. 

மறுபடியும் கூப்பிட்டார். 

'யாரு ? ' 

'சாம்பமூர்த்தின்னு ஒரு பையன் கும்மாணத்திலிருந்து வந்திருக்கானே அவன் இஞ்சதானே இருக்கான். ' 

'தெரியாது ' 

'இதுதானே குப்புசாமி அய்யர் பங்களா ' ' 

'யார்றா குப்புசாமி அய்யர் ? ' 

'போடா ' நம்ம மோகன் தாத்தா தாண்டா. அவர் வீடுதான் ' 

'நீங்க இந்த வீடு இல்லையா ? ' 

'இல்லை. நாங்க எங்க ப்ரண்டு மோகனைப் பார்க்க வந்திருக்கோம். மோகன் உள்ளே சாப்பிடப் போயிருக்கான். ' 

முத்து மெதுவாக நகர்ந்து வீட்டின் முகப்புக்குப் போனார். அங்கு யாருமில்லை. உள்ளே ஹாலுக்குப் போனார். பாதி இருட்டு. அங்கே பெரிய மைசூர் மகாராஜா ராணியோடு நிற்கிறபடம், கொம்பு, மான்தலைகள், யாரோ தலைப்பாகை நீளக்கோட்டு கால்சட்டை போட்ட மனிதரின் படம் எல்லாம் மாட்டியிருந்தன. அங்கும் யாருமில்லை. அதையும் தாண்டினார். ஒரு கிழவன் அந்தண்டை நடையில் ஒரு ஸ்டூல்மீது உட்கார்ந்திருந்தான். 

'யாரு ? ' 

'ஏம்பா சாம்பமூர்த்தின்னு ஒரு பையன் இங்க இருக்கானே தெரியுமோ ? ' 

'பையன்னா ? எந்தப் பையன் ? ' 

'இங்கே வேலைக்கிருக்கான்பா ஒரு பையன் --- கும்மாணத்திலிருந்து வந்திருக்கான். ' 

'அப்படிச் சொன்னால் தெரியும் ? சாம்புவைத்தானே கேக்கறீங்க ---பெரிய அய்யரோட இருக்கே அந்தப் பையன்தானே ? ' 

'அது என்னமோ, இங்க வேலையா யிருக்கான் அந்தப் பையன் ? ' 

'கும்பகோணத்துப் பையன்தானே ? ' 

'ஆமாம். ' 

'அப்ப இப்படி இறங்கி அதோ அங்கே போங்க --- காட்டேஜஉக்கு, அங்கதான் இருப்பான் பையன், இப்பதான் அய்யரோட வெளியே போய் வந்தான். ' 

'இங்கே ? ' என்று நடை முடிவில் இருந்த வாசற் படியைக் காட்டினார் முத்து. 

'இங்க சின்ன ஐயா ரண்டுபேரும் இருக்குறாங்க... பெரியய்யா இருக்கிற இடம் அதுதான். அங்கதான் அந்தப் பையன் இருக்கான்... நீங்க யாரு ? ' 

'நான் அந்தப் பையனோட தோப்பனார். ' 

'அப்படியா ' சரி சரி, போங்க. ' 

முத்து நடையிலிருந்து இறங்கி தோட்டத்தோடு போனார். ஏ அப்பா எத்தனை பெரிய வீடு ' எத்தனை மரங்கள் ஒரு ஆளைக் காணவில்லை. வாசலை இப்படி ஹோவென்று போட்டுவிட்டு உள்ளே எங்கேயோ இருக்கிறார்களாம். ஒரு ஈ காக்கையைக் காணோம் ' முந்நெற்றி மயிரைப் பிடித்தாலும் தெரியாது போலிருக்கிறது. 

ஒரே நிசப்தமாக இருந்தது. தோட்டப் பாதையில் நடந்து அங்கே காட்டேஜின்படி ஏறினார் முத்து. 

தாழ்வாரத்தில் வந்து 'சார் ' என்றார். 

'யாரு ? ' 

'நான்தான் ' என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார். 

அங்கே ஒரு பெரிய மேஜை, அதன்மேல் தடிதடியாகக் கணக்குப் புத்தகங்கள். அதன் பின்னால் நாற்காலியில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்தில் கறுப்பாக மூக்குக் கண்ணாடி, மேஜையில் ஒரு நீலக்கடுதாசி. அதன் மேல் வரைபடம். அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு பையன் பக்கத்தில் நின்று அவருடைய தலையை, கிராப்புத் தலையை வரக்கு வரக்கு என்று சொரிந்து கொண்டிருக்கிறான். 

கறுப்பு கண்ணாடியின் உடலும் லேசாகக் கறுப்புத்தான். முத்து உள்ளே நுழைந்ததும் அவர் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றாமலே நிமிர்ந்து பார்க்கிறார். 

'யப்பா ' என்று ஒரு குரல். 

அக்கணாக்குட்டியின் குரல்தான், மேஜை மீதிருந்த மங்கிய விளக்கின் கறுப்பு மறைவுக்குப் பின்னால் அக்கணாக்குட்டியின் முகம் தெரிந்தது. 

'எப்பப்பா வந்தே ? ' என்று ஹ் என்று உறிஞ்சிக் கொண்டே சிரிக்கிறான் அவன். 

'யார்றா சாம்பு ? ' 

'எங்கப்பா மாமா ' என்று அவர் தலையைச் சொறிந்து கொண்டே அக்கணாக்குட்டி 'எப்பப்பா வந்தே ? ' என்று சிரித்தான். 

'நமஸ்காரம் ' என்றார் முத்து. 

'நமஸ்காரம். சாம்பு அப்பாவா -- வாங்கோ ' ' 

'வந்தேன் ' 

'உட்காருங்கோ ' 

ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார் முத்து. வெய்யிலிருந்து உள்ளே வந்ததும் கண்ணை மறைத்த இருள் மெதுவாக விலகிற்று. கண் நன்றாகத் தெரியத் தொடங்கிற்று. 

'செளக்கியமா ? ' என்றார் கறுப்புக் கண்ணாடி. 

'செளக்யம் ' 

முகத்தை நன்றாகப் பார்த்தார் முத்து. உதடு அறுந்தது மாதிரி அதைத்துத் தொங்கிற்று. கன்ன எலும்பில் இரண்டு அதைப்பு. காது வளையமெல்லாம் அதைப்பு. மேஜை மீது படிந்திருந்த கைகளை பார்த்தார். கைகள் படியவில்லை. கட்டைவிரல் மற்ற விரல்களெல்லாம் மடங்கியிருந்தன. நீட்ட முடியாத விரல்கள் என்று பார்த்தாலே தெரிந்தது. 

'எப்பப்பா வந்தே...ஹ் ? ' என்று பல் வரிசையைக் காட்டிக் கொண்டே கேட்டான். அக்கணாக்குட்டி. அவருடைய தலையைச் சொறிவதை மட்டும் நிறுத்தவில்லை. 

'இப்ப தாண்டா வரேன் ' 

'இப்ப ஏதுப்பா வண்டி....ஹ் ? ' 

'வண்டி முன்னூறு நிமிஷம் லேட்டு. தெரிஞ்சவா வீட்டிலே வந்து இறங்கினேன். சாப்பிட்டேன், உடனே புறப்பட்டு வரேன் ' என்று தன்னறியாமல் பொய் சொன்னார் முத்து. 

அப்பொழுது கறுப்புக் கண்ணாடிப் பெரியவர் கன்னத்தை சொரிந்து கொண்டார். எல்லாரும் விரல் நுனியால் நகத்தால் சொறிந்துகொள்வார்கள். அவர் மடக்கின விரலின் பின்பக்கத்தால் சொறிந்து கொண்டார். முத்துவுக்கு பகீர் என்றது. இரண்டு மூன்று விரலில் நகமே இல்லை. 

முத்துவுக்கு உட்கார முடியவில்லை. மேலெல்லாம் அரிப்பது போலிருந்தது. அந்த அறையில் காலைப்பாவவிட்டாலே உள்ளங்கால் அரிக்கும்போலிருந்தது. முள்மேல் உட்கார்வது போல குறுகிக்கொண்டார். 

பெரியவர் என்னென்னமோ வெல்லாம் கேட்டார். தப்பும் தவறுமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார் முத்து. காதில் ஒன்றையும் சரியாக வாங்கிக் கொள்ளவில்லை. அவருக்கு உள்ளே பூஞ்சதை நரம்பெல்லாம் அழுவதுபோல் ஒரு கசிவு. 

'போரும்டா சாம்பு ' என்றார் பெரியவர். 

அக்கணாக்குட்டி சொறிவதை நிறுத்தினான். 

'பையன் ரொம்ப சமர்த்தாயிருக்கான். அவன் இருக்கிறது எனக்கு ஆயிரம் பேர்கூட நிற்கிறாப்போல இருக்கு ' என்றார் பெரியவர். சொல்லிவிட்டு 'சித்தே இருங்கோ, இதோ வந்துடறேன் ---சாம்பு இப்படி வாயேன் ' என்றார். 

அக்கணாக்குட்டி அருகில் வந்து நின்றான். பெரியவர் எழுந்து அவன் தோளில் கையைப் போட்டுக்கொண்டார். அக்கணா நடந்தான். அவரும் விந்தி விந்தி துணி பூட்ஸ் காலால் நடந்தார். அவரை ஹாலின் ஒரு கோடியில் உள்ள கதவைத் திறந்து உள்ளே விட்டு வெளியே காத்து நின்றான். 

'உங்க மாதிரி யார் இருப்பா ? விளக்கேத்தி வச்சேளே என் குடும்பத்துக்கு. நிஜமாகச் சொல்றேன். அக்கணாக்குட்டி அனுப்பிக்கிறானே மாசாமாசம் அதிலே தான் வயிறு ரொம்பறது. யார் செய்வா இந்த மாதிரி இந்தக் காலத்திலே ? அவனையும் ஒரு ஆளாக்கி....அவன் ஒரு கால் காசைக் கண்ணாலே காணப்போறானோன்னு ஒடிஞ்சு போய்விட்டேன். ஸ்வாமிதான் உங்க ரூபத்திலே வந்து அவன் கண்ணைத் திறந்துவிட்டார்.... ' அக்கணாக்குட்டியைப் பார்க்கபோகும் போது அவனுடைய எஜமானரைப் பார்த்தால் இப்படி என்னென்னவெல்லாமோ சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வந்திருந்தார் முத்து. 

இப்போது வாயைத் திறக்கவில்லை. முடியவில்லை அந்த நினைவெல்லாம் தோன்றிய சுவடே இல்லை. மனதில் ஒரு பீதி. ஒரு குமைச்சல். குமட்டல். ஒரு கோபம். 'பாவி ' நீ நன்னாயிருப்பியா ? ' என்று அடிவயிற்றிலிருந்து கதற வேண்டும் போலிருந்தது. அக்கணாக்குட்டி ஹால் ஓரத்தில் பெரியவர் வருவதற்காகக் காத்து நின்றவன் அப்பாவைப் பார்த்துப் புன்சிரிப்பு சிரித்தான். ஹ் என்று உறிஞ்சினான். 

முத்துவுக்கு நெஞ்சில் கட்டி புறப்பட்டாற்போல் வலித்தது. இவனையும் தாண்டி கதவைப் பார்த்தது அவர் கண். வெளியே நெளியப் போகும் நல்ல பாம்பைப் பார்ப்பது போல் ஒரு கிலி வேறு சூழ்ந்துகொண்டது. 

'இந்தண்ட வாடா ' என்று வாயால் தலையை அசைத்தார் - அவசரமாக, சுளிப்பாக. 

அவன் புரிந்து கொள்ளவில்லை. புன்சிரிப்புடனேயே சாத்தியிருந்த கதவைக் கையால் காண்பித்து சைகை காட்டினான். 

பெரியவர் காவி பூட்ஸஉம் காலுமாக வந்தார். சுவரில் பதிந்த ஒரு பளபள கம்பியிலிருந்த ஒரு துண்டை எடுத்து அவரிடம் நீட்டினான் அக்கணா. அவர் கையைத் துடைத்துக் கொண்டதும், தோளைக் கொடுத்தான். பிடித்துக் கொண்டு வாத்து நடை நடந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். 

முத்து ஆரம்பித்தார். 'சம்சாரத்துக்கு ஊரிலே உடம்பு ரொம்ப மோசமாயிருக்கு. பதினஞ்சு நாளா படுத்த படுக்கையாயிருக்கா. பிள்ளையைப் பார்க்கணும் பார்க்கணும்னு புலம்பறா, ஜஉரம் இறங்கவே இல்லை.... ' 

'அடடா....நீங்க ஒரு வார்த்தை எழுதப்படாதோ ? ' 

என்னமோ சாதாரண ஜஉரம்னு நெனச்சிண்டிருந்தேன். அது என்னடான்னா இறங்கற வழியாயில்லெ. அப்புறம் அவ தங்கைக்கு லெட்டர் போட்டு வரவழச்சேன், கிராமத்திலேர்ந்து. இவளானா புலம்பறா. உங்ககிட்ட விஷயத்தைச் சொல்லி பயலை அழச்சிண்டு போகலாம்னு வந்திருக்கேன் ' என்று அடுக்கிக் கொண்டே போனார் முத்து. 

பெரியவர் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். கறுப்புத்தான் கண்ணை மறைத்திருக்கிறதே என்ன தெரியும் ? அந்த முகத்தில்தான் என்ன தெரியும் ? தடிப்புத்தான் தெரிந்தது. 

முத்துவுக்கு மட்டும் தான் சொன்னதை அவர் நம்பவில்லையோ என்று வயிற்றில் கனத்தது. 

பெரியவர் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார். 

'ஊர்லெ சிநேகிதர் ஒருத்தர் காரிலே வந்திருக்கார். சேர்ந்து போயிடுவமேன்னார். ரயில்காரனுக்கு கொடுக்கறதையாவது மிச்சம் பண்ணலாம்னு நினைச்சேன். ' 

பெரியவர் வாய்தடிப்பு ஒரு புன்னகையாக மலர்ந்தது. சிரித்தால் அழகாகத்தான் இருக்கிறது. யார் சிரித்தால் என்ன என்று தோன்றிற்று முத்துவுக்கு. 

'பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும் ' என்றார் முத்து. 

'பாதகமில்லை ' என்று ஒரு புத்தானை அழுத்தினார் பெரியவர். 

'சாம்பு, அப்பா கூப்பிடறாரேடா போறியா ? ' என்று கேட்டார். 

'அம்மா ரொம்ப ஜஉரமாக கிடக்காடா. உன்னைப் பார்க்கணும்னு பேத்திண்டேயிருக்கா-- ராவில்லே பகலில்லே ' என்றார் முத்து. 

'சரிடா சாம்பு. வேட்டி சட்டையெல்லாம் எடுத்து வச்சுக்கோ ' என்றார் பெரியவர். 'பையன் ரொம்ப ஒத்தாசையாயிருந்தான் ஸ்வாமி. சுருக்கக் கொண்டு விட்டு விடுங்கோ. ' 

'ம் ' உடம்பு சரியாயிருந்தா, அங்கே என்ன வேலை ? ' என்றார் முத்து. 

அக்கணா பின்னாலிருந்த இன்னொரு அறைக்குப் போனான். 

வாசலிலிருந்து ஒரு தட்டில் டிபன் காபி எல்லாம் பரிசாகரன் கொண்டு வந்தான். அதற்குத்தான் புத்தானை அழுத்தினார் போலிருக்கிறது பெரியவர். 

'சாபிடுங்கோ. ' 

'நான் இப்பத்தானே சாப்பிட்டேன். ' 

'இங்கே வந்து வெறும் வயத்தோட போகலாமா ? ' 

முத்துவுக்குச் சொல்ல மெல்ல முடியவில்லை. 'பாலாம்பிகேச வைத்யேச ' என்று மனத்துக்குள் சுலோகம் சொல்லிக் கொண்டே காபியை மட்டும் எடுத்து கண்ணை மூடி மளமளவென்று விழுங்கினார். பரிசாரகன் பாத்திரங்களை எடுத்துப் போனான். 

அக்கணாக்குட்டி பையும் கையுமாக வந்தான். வெளிச்சத்தில் நன்றாகப் பார்க்கும்போது அவன் எவ்வளவு மாறிவிட்டிருக்கிறான் என்று தெரிந்தது. தலையை வழவழவென்று சீவி விட்டிருந்தான், வெள்ளை வெளெரென்ற சட்டை, வெள்ளை வேட்டி, முகத்தில் ஊட்டத்தின் பொலிவு, சட்டைக்கு வெளியே தெரிந்த முன்னங்கைகூட பளபளவென்று நிறம் ஏறியிருந்தது.

'என்னை ரொம்ப மன்னிச்சிக்கணும் ' என்று எழுந்து கும்பிட்டார் முத்து. 

'எதுக்காக ? ரொம்ப நன்னாருக்கே. ' 

'நமஸ்காரம் பண்ணிட்டு போய்ட்டு வரேன்னு சொல்லிக்கோடா ' என்றார் முத்து. 

அக்கணா விழுந்து வணங்கி எழுந்து 'போய்ட்ரேன் மாமா ' என்றான். 

'போய்ட்டுவா. போய் லெட்டர் போடு, அம்மாவுக்கு உடம்பு எப்படியிருக்குன்னு. எப்ப வரேன்னும் எழுதணும். ' 

'சரி மாமா. ' 

இருவரும் வெளியே நடந்தார்கள். 

இவ்வளவு சீக்கிரம் காரியம் நடக்கும் என்று நினைக்கவில்லை, சிங்கத்தின் குகையிலிருந்து வருவது போல, திரும்பிப் பார்க்காமல் வேகமாக வெளியே வந்து தோட்டத்தை தாண்டி தெருவுக்கு வந்து சாலைக்கு வந்தார் முத்து. 'மெதுவாப் போப்பா ' என்று கூடவே விரலால் நடந்து சிறு ஓட்டமாக ஓடிவந்தான். 

சாலைக்கு வந்து பஸ் ஏறினதும்தான் வாயைத் திறந்தார் முத்து. 

'ஏண்டா மக்கு ' இந்த மாதிரி உடம்பு அந்த மாமாவுக்குன்னு நீ சொல்லவே இல்லியே ' என்றார்.

'என்ன உடம்பு ? ' 

'உனக்குத் தெரியலியா ? ரொம்ப கரிசனமா தலையைச் சொறிஞ்சு விட்டியே, புத்திதான் இல்லை, கண்ணுகூடவா அவிஞ்சு போச்சு ? ' 

'அது ஒட்டிக்காதாம்பா ? ' 

'ஒட்டிக்காதா ' யார் சொன்னா ? ' 

'அவாத்து மாமி, மாமா, மோகன் எல்லோரும் சொல்வாலே. ' 

'பின்னே அந்த மோகன், மாமி, மாமா எல்லோரும் வந்து அவர் தலையைச் சொறியப்படாதோ ? ' 

'அவாலுக்கெல்லாம் வேலையில்லியாக்கும் ? மோகன் பல்லிக்கூடம் போறான். மாமா என்ஜீனியர், மாமி பூ நூல்லே பை பனியன்லாம் போடறா. அவாலுக்கு டயம் ஏது ? அவா சொறியப்படாதோங்கிறீயே. ' 

'உன்னை ஏமாத்தியிருக்காடா எல்லாரும், அசட்டுப் பொணமே ' 

'ஒண்ணும் இல்லே. இத பாரு பேப்பர்லேயே போட்டிருக்கு ' என்று பையின் பிடியை அகட்டி உள்ளேயிருந்து நாலு சினிமாப் பாட்டு புத்தகங்களை எடுத்தான் அக்கணா. ஒரு புத்தகத்தைப் பிரித்து அதிலிருந்துஒரு தினசரிதாள் பக்கம் ஒன்றை எடுத்தான். அதிலெ ஒரு வெள்ளைக்காரப் பெண் யாரோ ஒரு ஆணின் கையைப் பிடித்துத் தடவிக் கொண்டு நிற்கிறாள். கருப்புக் கண்ணாடிகாரருக்கு இருந்த மாதிரியே கை, மூக்கு எல்லாம்.... 'இது யாரு தெரியுமா ? வெல்லைக்கார தேசத்திலே ரானி. போன மாசம் மெட்ராசுக்கு வந்தா -ராஜாவோட. இந்த ஊருக்கு வந்து சினிமா, டிராமால்லாம் பார்க்கலியாம், காரை எடுத்துண்டு ஒரு கிராமத்துக்குப் போனாலாம். மாமா மாதிரி அங்கே முப்பது நாப்பதுபேர் இருக்கலாம். மருந்து சாப்பிடறாலாம். அவால்லாரையும் பார்த்து, கையெல்லாம் தடவிக் கொடுத்தா வெல்லைக்கார ரானி, போட்டோ போட்டிருக்கா பாரு தடவிக் கொடுக்கறாப்பல, ஒட்டிக்கும்னா ரானி தடவிக்கொடுப்பாலா, பேத்தியம் மாதிரி பேசறியே ? ' 

'பேத்யம் மாதிரியா ? நானா பைத்தியம் ? ' என்று படத்தைப் பார்க்க ஆரம்பித்தார் முத்து. 

'படத்தை மட்டும் பாக்கறியே. கீலே எலுதியிருக்கு பாரு. ' என்று விரலை அந்த வரிகள் மீது ஒட்டிக் காண்பித்தான் அக்கணா. 

'பாலாம்பிகேச வைத்யேச ' என்று சுலோகம் சொல்லிக் கொண்டே வினோலியா பெட்டியைத் திறந்து கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு படிக்க ஆரம்பித்தார் முத்து.


--
நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகுவேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும். -பாலகுமாரன்


நட்புடன்,
கந்தவேல் ராஜன் ச.

சென்ஷி

unread,
Oct 25, 2010, 8:34:50 AM10/25/10
to panb...@googlegroups.com
அமெரிக்கக்காரி (2009-06-16) - அ. முத்துலிங்கம்
 

ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணை தேடிப்போய்விட்டான். இது அவளுடைய மூன்றாவது காதலன். இந்தக் காதலர்களை எப்படி இழுத்து தன்னிடம் வைத்திருப்பது என்று அவளுக்கு தெரியவில்லை. அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை. அல்லது இருந்தும் அவள் கொடுக்கத் தவறிவிட்டாள் என்பது தெரிந்தது.

 பார்ப்பதற்கு அவள் அழகாகவே இருந்தாள். விசேஷமான அலங்காரங்களோ, முக ஒப்பனைகளோ அவள் செய்வதில்லை. செய்வதற்கு நேரமும் இருக்காது. மற்ற மாணவிகளைப் போலத்தான் அவளும் உடுத்துகிறாள்; நடக்கிறாள். ஆனால் அவர்களைப்போல பேசுகிறாள் என்று சொல்லமுடியாது. இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்க பல்கலைக் கழக உதவிப் பணம் பெற்று நேராகப் படிக்க வந்தவள். ஆகவே, அவளுடைய உச்சரிப்பில் மூக்கால் உண்டாக்கும் ஒலிகள் குறைவாகவே இருக்கும். அமெரிக்க மாணவர்களுக்கு புரியாத பல புதிய வார்த்தைகளும் இருந்தன. அவள்  sweet என்பாள் அவர்கள் candy என்பார்கள்; அவள் lift  என்பாள் அவர்கள் elevator என்பார்கள்; அவள் torch என்பாள் அவர்கள் flashlight என்பார்கள். அதுவெல்லாம் ஆரம்பத்திலேதான், ஆனால் வெகுவிரைவிலேயே அவள் தன்னை திருத்திக் கொண்டாள். அவளுடைய நுட்பமான அறிவை அவள் வேதியியல், கணிதம், இயற்பியல் போன்ற பாடங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதில்லை.

 கறுப்பு எறும்புகள் நிரையாக வருவதுபோல பையன்கள் அவளை நோக்கி வந்தார்கள். அவளுடைய கரிய கூந்தலும், கறுத்து சுழலும் விழிகளும் அவர்களை இழுத்தன. ஆனால் வந்த வேகத்திலேயே அவர்கள் திரும்பினார்கள், அல்லது அவளை விட்டுவிட்டு வேறு பெண்களிடம் ஓடினார்கள். முதலில் வந்தவன் கேட்ட முதல் கேள்வியை நினைத்து அவள் இன்றைக்கும் ஆச்சரியப்படுவாள். 'யாரோ தேசியகீதம் இசைப்பதுபோல நீ எதற்காக எப்போதும் தலைகுனிந்து நிற்கிறாய்?' அவள் எப்படி பதில் சொல்வாள்? 17 வருடங்கள் அவள் அப்படித்தான் நிலத்தைப் பார்த்தபடி பள்ளிக்கூடத்துக்கு போனாள், வந்தாள். அதை திடீரென்று அவளால் மாற்ற முடியவில்லை. ஆனால் கேள்வி கேட்டவனை அவளுக்கு பிடித்துக்கொண்டது. அவளுடைய வகுப்பில் அவனும் சில பாடங்களை எடுத்தான். நடக்கும்போது அவனுக்கு அவளுடன் ஒட்டிக்கொண்டு நடந்துதான் பழக்கம்.

 அன்று நடந்த கூடைப்பந்து போட்டியை பார்க்க அவளை அழைத்தான். அவளுக்கு அந்த விளையாட்டைப் பற்றிய ஞானம் இல்லை, கூடைக்குள் பந்தைப் போடவேண்டும் என்பது மட்டுமே தெரியும். தொடை தெரியும் கட்டையான பாவாடைகளும்,  நீளமான சிவப்பு காலுறைகளும் அணிந்த பெண்கள் உற்சாகமாக துள்ளி குதித்து ஆரவாரித்தார்கள்;  சிலவேளைகளில் பந்தை கூடையில் போடாதபோதும்கூட கைதட்டினார்கள். இவளும் தட்டினாள். திரும்பும் வழியில் அவன் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தான். ஒரு துளி அவள் உதட்டிலே சிந்தியபோது அதை ஒரு விரலால் துடைத்துவிட்டான். மூன்றாவது நாள் அவளுடன் சேர்ந்து படிக்கவேண்டும் என்று அழைத்தான். அவனுடைய அறிவுக்கூர்மை அவளை திகைப்படைய வைத்தது. அவளைப்போல அவன் ஒன்றுமே மனப்பாடம் செய்யவில்லை. தர்க்கமுறையில் சிந்தித்து மிகச் சிக்கலான வேதியியல் சாமாந்திரங்களை உடனுக்குடன் எழுதினான். மூன்றாவது நாள் அவன் அறை நண்பன் இல்லையென்றும் அவளை அந்த இரவு தன் அறையில் வந்து தங்கும்படியும் கேட்டான். அவள் மறுத்த பிறகு அவனைக் காணவில்லை.

 இரண்டாவதாக அவளைத் தேடி வந்தவன் துணிச்சல்காரன்; குறும்புகள் கூடியவன். அவளுக்கு பென்ஸீன் அணு அமைப்பு தெரியும், அவனுக்கு தெரியாது. அப்படித்தான் அவர்கள் நட்பு உண்டானது. ஒருநாள் அவள் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று உண்டாகி அவள் முன்னால் நின்றான். அவனுடைய நிழல் அவள்மேல் பட்டு அவள் நிமிர்ந்து பார்த்தபோது அவள் உட்கார்ந்திருந்த சுழல் கதிரையை சுழலவிட்டான். அது மூன்றுதரம் சுற்றிவிட்டு அவன் முன்னால் வந்து நின்றது. 'பார், எனக்கு பிரைஸ் விழுந்திருக்கிறது. நீ என்னுடன் கோப்பி குடிக்க வரவேண்டும்' என்றான். அவளுக்கு சிரிப்பு வந்தது, சம்மதித்தாள். கோப்பி குடிக்கும்போது 'நீ உங்கள் நாட்டு இளவரசியா?' என்றான். 'இல்லை. அங்கேயிருந்து துரத்தப்பட்டவள். இனிமேல்தான் நான் ஒரு நாட்டை தேடவேண்டும்' என்றாள். 'நீ அரசகுமாரி மாதிரி அழகாக இருக்கிறாய்' என்று சொன்னான் அந்த அவசரக்காரன். அன்றிரவே அவள் அறையில் தங்கமுடியுமா என்று கேட்டான். அதற்கு பிறகு அவனும் மறைந்துபோனான்.

 இவர்கள் அவளிடம் எதையோ தேடினார்கள். அவள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இன்னும் இலங்கைக்காரியாகவே இருந்தாள். அவள் அமெரிக்காவுக்கு வரமுன்னரே அவளுடைய கிராமத்தில் அவர்கள் அவளை 'அமெரிக்கக்காரி' என்று அழைத்தது இங்கே யாருக்கும் தெரியாது. அவளுடைய பெயரே அவளுக்கு மறந்துவிட்டது. வீட்டிலும், பள்ளிக்கூடத்திலும், வீதியிலும் அவளை 'அமெரிக்கக்காரி' என்றே அழைத்தார்கள். அவளுடைய இரு அண்ணன்மார்களிலும் பார்க்க அவள் புத்திசாலி என்று அம்மா சொல்வாள். அவளுக்கு நாலு வயது நடக்கும்போதே ஆங்கிலம் வாசிக்கக் கற்றுக்கொண்டாள். அவளுடைய அண்ணன்மார் கொண்டுவரும் அமெரிக்க கொமிக் புத்தகங்கள் அனைத்தையும் படித்துவிட்டு அந்தக் கதைகளை தன் வகுப்பு தோழிகளுக்கு சொல்வாள். ஆர்க்கி, சுப்பர்மான் பாத்திரங்களாக மாறி தான் அமெரிக்காவில் வாழ்வதாகவே அவள் கற்பனை செய்வாள்.

 சின்ன வயதிலேயே தாயாரிடம் கேட்பாள், 'நான் அமெரிக்கக்காரியா?' தாய் சொல்வார், 'இல்லை, நீ இலங்கைக்காரி.' 'அப்ப நான் எப்படி அமெரிக்கக்காரியாக முடியும்?' 'அது முடியாது.' 'நான் அமெரிக்காவுக்கு போனால் ஆகமுடியுமா?' 'இல்லை, அப்பவும் நீ இலங்கைக்காரிதான்.' 'நான் ஒரு அமெரிக்கனை மணமுடித்தால் என்னவாகும்?' 'நீ அமெரிக்கனை மணமுடித்த இலங்கைக்காரியாவாய். நீ என்ன செய்தாலும் அமெரிக்கக்காரியாக முடியாது.' அப்போது அவளுக்கு வயது பத்து. அவளுக்கு பெரிய ஏமாற்றமாகப் போய்விடும்.

 மூன்றாவதாக அவளைக் காதலித்தவன் கொஞ்சம் வசதி படைத்தவன். அவள் அப்போது இரண்டாவது வருட மாணவி. ஒரு வகுப்பு முடிந்து வெளியே வந்தபோது அவன் வந்து தானாகவே தன்னை அறிமுகம் செய்துகொண்டான். உடனேயே பல பெண்களின் கண்கள் அவளை பொறாமையோடு பார்த்தன. அவன் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னான். அவனுடைய பெற்றோர்  போர்ட்லண்டில் வசித்தனர். அவனிடம் கார் இருந்தபடியால் ஒவ்வொரு வார முடிவிலும் அவர்களிடம் அவன் போய்வருவான்.

 அவன் காரில் இருந்து இறங்குவது விசித்திரமாக இருக்கும். காரை நிறுத்திவிட்டு இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் தரையில் ஊன்றி எழுந்து நடந்துவருவான். நேற்று வகுப்பில் என்ன பாடம் நடந்தது, இன்று என்ன நடக்கிறது, நாளை என்ன நடக்கும் என்ற கவலையே அவனிடம் கிடையாது. பல்கலைக்கழகம் ஒரு விளையாட்டு மைதானம் என்பது அவன் எண்ணம். அவள் பின்னாலேயே அவன் திரிந்தான். ஒருநாள் அவளை கண்ணை மூடச்சொன்னான். அவன் ஏதாவது பரிசுப் பொருள் தரும்போது அப்படித்தான் செய்வான். அவள் மூடினாள். வாயை திற என்றான். ஏதோ சொக்லட்டோ இனிப்போ தரப்போகிறான் என்று நினைத்து வாயை திறந்தாள். அவளுடைய அம்மா மருந்து தரும்போதும் அப்படித்தான் திறப்பாள். அவன் குனிந்து அப்படியே திறந்த வாயில் முத்தம் கொடுத்துவிட்டான். அவளுக்கு அது பிடிக்கவில்லை. 'இது என்ன பெரிய விசயம். நான் உன் கையிலே முத்தம் கொடுத்திருக்கிறேன். உன் நெற்றியிலே முத்தம் தந்திருக்கிறேன். நெற்றியில் இருந்து இரண்டு அங்குலம் கீழே உன் வாய் இருக்கிறது. இது இரண்டு அங்குலத் தவறுதான்' என்றான்.

 நன்றிகூறல் நாள் விருந்துக்கு தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தான். கடந்த வருடம் அவள் தன் சிநேகிதி வீட்டுக்கு போயிருந்தாள். நன்றிகூறல் நாளன்று விடுதியில் ஒருவருமே இருக்கமாட்டார்கள் என்பதால் அவள் சம்மதித்து, இரண்டு மணிநேரம் அவனுடன் காரில் பிரயாணம் செய்தாள். இதுதான் அமெரிக்காவில் அவளுடைய ஆக நீண்ட கார் பயணம்.

 அவனுடைய பெற்றோர்கள் கண்ணியமானவர்கள். தகப்பன் நடுவயதாகத் தோன்றினாலும் தாயார் வயதுகூடித் தெரிந்தாள். மீன் வெட்டும் பலகைபோல அவள் முகத்தில் தாறுமாறாகக் கோடுகள். மகனின் சிநேகிதி இலங்கைக்காரி என்பதை எப்படியோ தெரிந்து வைத்துக்கொண்டு சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியான இலங்கை செய்தி துணுக்குளை அவளுக்காக வெட்டி வைத்து அவளிடம் தந்தது அவள் மனதை தொட்டது. விருந்து மேசையிலே இலங்கைப் போரை பற்றியே பேச்சு நடந்தது. இந்திய ராணுவம் இலங்கையை ஆக்கிரமித்து இரண்டு வருடங்கள் அப்போது ஓடியிருந்தன. அவள் தன்னுடைய அம்மா மூன்று இடங்கள் மாறிவிட்டதால் அடிக்கடி கடிதம் எழுதும் விலாசத்தை தான் மாற்றவேண்டியிருக்கிறது என்று கூறினாள். தன்னுடைய அண்ணன்மார் இருவரும் ஒருவருடம் முன்பாக போரில் இறந்துபோனதை அவள் சொல்லவில்லை.

 இரவானதும் சோபாவை இழுத்து கட்டிலாக்கி அதில் அவளை படுக்கச் சொல்லிவிட்டு அவன் மேலே போனான். அவள் அயர்ந்து தூங்கினாள். நடுச்சாமம் போல ஒரு மிருதுவான கை அவள் வாயை மெல்ல மூடியது. பார்த்தால் இவன் நிற்கிறான். அவளுக்கு பயம் பிடித்தது. உடல் வெடவெடவென்று நடுங்கி இரவு உள்ளாடை வேர்வையில் நனைந்துவிட்டது. அவனை துரத்திவிட்டாலும் மீதி இரவு அவள் தூங்கவில்லை. மறுநாள் அவனுடன் காரில் பிரயாணம் செய்தபோது இரண்டு மணி நேரத்தில் அவள் அவனுடன் இரண்டு வசனம் மட்டுமே பேசினாள்.

 அவளுடைய பல்கலைக்கழக வாழ்வில் பெரும் மாற்றம் மூன்றாவது வருட முடிவில்தான் நிகழ்ந்தது. பல்கலாச்சார கலை நிகழ்வில் அவள் கலந்து கொள்ளாமல் இரண்டு வருடங்கள் கடத்திவிட்டாள். இம்முறை தப்ப முடியவில்லை. இலங்கையிலிருந்து வந்து படிக்கும் மாணவி அவள் ஒருத்திதான். 'பாரம்பரிய நடனம்' என்று தன் பெயரைக் கொடுத்தாள். அவளிடம் ஒரு சேலை இல்லை, நல்ல நடன ஆடைகூடக் கிடையாது. ஒரு பஞ்சாபிப் பெண்ணின் உடையை கடன் வாங்கி இயன்றளவு ஒப்பனை செய்து தயாரானாள். அவள் பள்ளிக்கூடத்தில் ஆடிய 'என்ன தவம் செய்தனை' பாடலுக்கு அபிநயம் பிடிப்பது என்று தீர்மானித்தாள். பாடலை முதலில் பாடி நாடாவில் பதிவு செய்து வைத்துக்கொண்டாள். மேடையிலே நின்றதும் திரை இரண்டு பாதியாக பிளந்து நகர்ந்தது. மெல்லிய நடுக்கம் பிடித்தாலும் துணிச்சலுடன் பாடலை விளக்கி இரண்டு வரிகள் பேசிவிட்டு ஆடினாள். மாணவர்கள் எதிர்பாராத விதத்தில் கைதட்டி வரவேற்றார்கள்.

 அவளுடைய நாட்டியத்துக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் ஒரு வியட்நாமிய மாணவன் கம்பி வாத்தியத்தை இசைத்தபடி பாடினான். இவள் ஒப்பனையை கலைத்துவிட்டு வெளியே வந்தபோது அந்த வியட்நாமிய மாணவன் இவளுடைய நடனத்தை வெகுவாகப் பாராட்டினான். இவளும் பேச்சுக்கு அவனுடைய வாத்தியம் அபூர்வமானதாக இருந்தது என்றாள். அவன்  16 கம்பிகள் கொண்ட அந்த பெண்கள் வாத்தியத்தை தன்னுடைய இறந்துபோன வியட்நாமிய அம்மாவிடம் கற்றுக்கொண்டதாகக் கூறினான். எப்போதாவது அவள் ஞாபகமாக தான் அதை வாசிப்பதாகச் சொன்னான். ஆயிரம் கண்ணாடிகள் வைத்து இழைத்த நீண்ட உடை தரித்து, தலையிலே வட்டமான தொப்பி அணிந்த அவனை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. பேசும்போது அவளுடைய ஆயிரம் பிம்பங்கள் அவனில் தெரிந்தன. இறுதி ஆண்டில் ஆங்கில இலக்கியம் படிக்கும் அவனுடைய பெயர் லான்ஹங் என்றான்.

 அடுத்தநாள் காலை லான்ஹங் 27,000 மாணவர்கள் படிக்கும் அந்த பல்கலைக் கழகத்தில் அவளை எப்படியோ தேடிக் கண்டுபிடித்துவிட்டான். 'உங்கள் பெயரை நீங்கள் நேற்று சொல்லவே இல்லை?' என்றான். அவள் மதி என்றாள். அவளுடைய குடும்பப் பெயர் என்னவென்று கேட்டான். இந்த மூன்று வருடங்களில் ஒருவர்கூட அவளிடம் குடும்பப் பெயர் கேட்டதில்லை. அவளுக்கு சிரிப்பு வந்தது. 'என்னுடைய குடும்பப் பெயர் மிகவும் நீண்டது. அதை நீ மனனம் செய்வதற்கு அரை நாள் எடுக்கும்' என்றாள். 'அப்படியா, மதி என்றால் உங்கள் மொழியில் என்ன பொருள்?' அவள் 'புத்தி' 'சந்திரன்' என இரண்டு பொருள் இருப்பதாகச் சொன்னாள். 'வியட்நாமியருக்கு சந்திரன் பவித்திரமானது. அவர்கள் விழாக்களில் சந்திரனுக்கு முக்கிய பங்கு உண்டு' என்றவன் தொடர்ந்து 'நேற்று உங்கள் நடனம் மிக அழகாக இருந்தது. வியட்நாமிய நடன அசைவுகளுடன் ஒத்துப்போனது' என்றான். 'அப்படியா? நன்றி' என்றாள். 'தவழ்வதுபோல அபிநயம் பிடித்தீர்களே, அது என்ன?' இவன் பேசும் சந்தர்ப்பத்தை நீட்டுவதற்காக கேட்கிறானா அல்லது உண்மையான கேள்வியா என்பதில் அவளுக்கு சந்தேகம் இருந்தது.

 'கண்ணனை உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாயே' என்ற வரிகளை விளக்கிக் கூறினாள். அவன் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவன். இவள் அர்த்தம் சொன்னதும் அப்படியா என்று கேட்டுவிட்டு 'அந்த தாய் உண்மையில் அமெரிக்காவில் பிறக்காததால் அதிர்ஷ்டம் செய்தவள்தான். மூன்று வயது பாலகனை உரலில் கட்டி வைத்தால் அந்த தாயை சிசுவதை சட்டத்தின் கீழ் அமெரிக்காவில் கைதுசெய்து சிறையில் அடைத்து விடுவார்கள்' என்று சொல்லிவிட்டு பெரிய பற்களைக் காட்டி சிரித்தான். அவளும் நிறுத்தாமல் சிரித்தாள். அவள் கண்களை அவன் அதிசயமாக முதன்முறை பார்ப்பதுபோல பார்த்தான். அவள் வாய் சிரிக்க ஆரம்பிக்க முன்னரே அவள் கண் இமைகள் சிரித்ததை அன்று முழுவதும் அவனால் மறக்க முடியாமல் இருந்தது. 

 இப்படி அவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டார்கள். மூன்றாவது, நாலாவது சந்திப்புக்கு பின்னரும் அவன் அவளுடைய அறையில் வந்து இரவு தங்கவேண்டும் என்று கேட்காதது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளுக்கு அது பிடித்துக்கொண்டது. அவனுடன் இருக்கும்போது அவள் இயல்பாக உணர்ந்தது ஏனென்று தெரியவில்லை. அவனுடன் சேர்ந்து வெளியே நடக்கும்போதோ, உட்காரும்போதோ, பேசும்போதோ முயற்சி எடுக்கத் தேவையில்லை. அவனை மகிழ்ச்சிப் படுத்த அவள் வேறு எதுவித முயற்சியும் செய்யத் தேவையில்லை. ஏனோ அவள் இருதயம் அவன் அண்மையில் வித்தியாசமாகத் துடித்தது.

 ஒவ்வொரு மாதமும் அவள் தாயாருக்கு கடிதம் எழுதுவாள். தாயார் இருக்கும் இடத்தில் டெலிபோன் வசதி கிடையாது என்றபடியால் அவள்  இரண்டு மூன்று மாதத்திற்கு ஒரு தடவை வெளிக்கிட்டு பட்டணத்துக்கு போய் அங்கிருந்து அழைத்து மூன்று நிமிடம் மகளுடன் பேசுவாள். சரியாக மாலை ஆறு மணிக்கு அந்த அழைப்பு வரும். தாயார் எழுதும் நீல நிற வான்கடிதங்களும் தவறாமல் வந்தன. ஒரு கடிதத்திலாவது அவள் தன் கஷ்டங்களை சொன்னதில்லை. அந்த மாதம் ராணுவம் கொக்கட்டி சோலையில் நிறையப் பேரைக் கொன்று குவித்திருந்தது. அவள் அதுபற்றி மூச்சுவிடவில்லை. மாதக்கடைசியில் தன் பதில் கடிதத்தை எழுதி மதி இப்படி முடித்திருந்தாள். 'அம்மா நான் உன் மகளாய்ப் பிறந்து உனக்கு ஒன்றுமே செய்யவில்லை. உனக்கு பிடித்த ஒன்றைக்கூட வாங்கித் தரவில்லை. நேற்று குளிருக்கு ஒரு சப்பாத்து வாங்கினேன். அதன் விலை நாப்பது டொலர். அந்தக் காசை உனக்கு அனுப்பினால் அது உனக்கு மூன்று மாத குடும்பச் செலவுக்கு போதுமானதாக இருக்கும். நான் அங்கேதான் அமெரிக்கக்காரி, இங்கே வெறும் இலங்கைக்காரிதான். எனக்கு விநோதமான பெயர் கொண்ட நண்பன் ஒருவன் கிடைத்திருக்கிறான். லான்ஹங். டெலிபோன் புத்தகத்தில் அவன் பெயர் ஒன்றேயொன்றுதான் உண்டு. மிக நல்லவன். நான் உன்னை திரும்பவும் பார்க்கவேண்டும். அதற்கிடையில் செத்துப்போகாதே.'

 லான்ஹங் அடிக்கடி சொல்லும் வார்த்தை 'என்னை ஆச்சரியப் படுத்து.' இரவு நேரத்தில் இருவரும் உணவருந்த சேர்ந்து போவார்கள். இவள் என்ன ஓடர் கொடுக்கலாம்  என்று கேட்பாள். அவன் 'என்னை ஆச்சரியப்படுத்து' என்பான். சினிமாவுக்கு போவார்கள். 'என்ன படம் பார்க்கலாம்?' என்பாள் இவள். அவன் 'என்னை ஆச்சரியப்படுத்து' என்பான்.

 ஒருமுறை லான்ஹங் அவளைத் தேடி வந்தபோது அவள் பார்க்காததுபோல கம்புயூட்டரில் தட்டச்சு செய்துகொண்டிருந்தாள். அவன் அவள் தட்டச்சு செய்வதையே வெகு நேரம் உற்றுப் பார்த்தான். அவளுடைய விரல்கள் மெலிந்த சிறிய விரல்கள். அவை வேகவேகமாக விசைப்பலகையில் விளையாடுவதை பார்த்தான். அவளுடைய விரல் ஒரு விசையை தொடும்போது அந்த விசையில் மீதி இடம் நிறைய இருப்பதாகச் சொன்னான். அப்படிச் சொல்லியபடி ஒரு விரலை எடுத்து கையில் வைத்து தடவினான். இவளுக்கு என்ன தோன்றியதோ எழுந்து நின்று பற்கள் நிறைந்த அவன் வாயில் முத்தமிட்டாள்.

 மழை பெய்து ஓய்ந்த மாலை நேரம் ஒரு பேர்ச் மரத்து நிழலில் அமர்ந்து அவள் தாயாரை நினைத்துக்கொண்டாள். தாயார் காலையில் பள்ளிக்கூடத்துக்கு படிப்பிக்கச் செல்லும்போது சேலையை வரிந்து உடுத்தி, கொண்டைபோட்டு, அதற்குமேல் மயிர் வலை மாட்டி, குடையை எடுத்துக்கொண்டு போகும் காட்சி மனதில் வந்தது. இப்போது அங்கேயும் மழை பெய்திருக்குமா என்று எண்ணிக் கொண்டிருந்த சமயம் லான்ஹங் ஈரமான மண்ணில் சப்பாத்து உறிஞ்சி சப்தமெழுப்ப நடந்துவந்தான். குட்டையில் தேங்கிய தண்ணீரை கண்டதும் ஒரு பழங்காலத்து போர்வீரன் போல துள்ளிப்பாய்ந்து  அவள் முன் வந்து குதித்தான். 'இந்தச் சின்னக் குட்டைக்கு இவ்வளவு பெரிய பாய்ச்சலா?' என்றாள் மதி. அவள், உடலை ஒட்டிப்பிடிக்கும் கண்ணாடித்தன்மையான ஆடையில் வசீகரமாக காட்சியளித்தாள். அவன் அவளை குனிந்து ஸ்பரிசித்துவிட்டு 'இன்றைக்கு உன் சருமம் இறகு போன்ற உன் ஆடையிலும் பார்க்க மிருதுவாக இருக்கிறது' என்றான். 'அது இருக்கட்டும். என்னால் இன்று உன்னை ஆச்சரியப்படுத்த முடியாது. ஒரு மாற்றத்துக்கு நீ என்னை ஆச்சரியப்படுத்து' என்றாள். 

 'இன்று ஆங்கில இலக்கியத்தில் என்ன படித்தேன் தெரியுமா?'
 'எனக்கு தெரியாது, நீ சொல்' என்றாள் அவள். 'ரஸ்ய எழுத்தாளர் ரோல்ஸ்ரோயுக்கு பதின்மூன்று பிள்ளைகள். அது உனக்கு தெரியுமா?'
 'இல்லை. இப்பொழுதுதான் தெரியும். மேலே சொல்.'
 'பதின்மூன்றாவது பிள்ளை ஒரு பையன். அந்தச் சிறுவன் இறந்தபோது ரோல்ஸ்ரோய் என்ன செய்தார் தெரியுமா? சைக்கிள் விடப் பழகிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு வயது அறுபது.'
 'இதை ஏன் எனக்கு சொல்கிறாய்?'
 'நீ ஆச்சரியப்படுத்து என்று சொன்னாயே, அதுதான்.'
அவள் மெதுவாக முறுவலிக்க ஆயத்தமானாள்.
 'பார், பார் உன் இமைகள் சிரிக்கத் தொடங்குகின்றன.'

 அவள் முனைவர் படிப்பை தொடங்கியபோது அவன் பட்டப் படிப்பை முடித்துவிட்டு ஆசிரிய வேலையை ஏற்றுக்கொண்டான். அவன் ஓர் அறை கொண்ட சின்ன வீட்டை வாடகைக்கு பிடித்தபோது அதிலே இருவரும் சேர்ந்து வாழ்வதென்று தீர்மானித்தார்கள். அவள் தன்னிடம் இருந்த கட்டிலையும் மேசையையும் மற்றும் உடமைகளையும் எடுத்துக்கொண்டு அவனுடைய வீட்டுக்கு மாறினாள். அவளுடைய கட்டிலை அவனுடைய கட்டிலுக்கு பக்கத்தில் போட்டபோது அது உயரம் குறைவாக இருந்தது.  'ஆணின் இடம் எப்பவும் உயர்ந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்' என்றான் அவன். முதலில் பதிவுத் திருமணம் செய்து, அதற்குப் பிறகு அவளுடைய அம்மா அனுப்பிய தாலியை சங்கிலியில் கோத்து அவளுடைய கழுத்தில் அவன் கட்டினான். 'வியட்நாமிய சடங்கு இல்லையா?' என்றாள் அவள். முழுச்சந்திரன் வெளிப்பட்ட ஓர் இரவில் சந்திரனில் தோன்றிய கிழவனை சாட்சியாக வைத்துக்கொண்டு அவன் இஞ்சியை உப்பிலே தோய்த்து கடித்து சாப்பிட்டான். மீதியை அவள் கடித்து சாப்பிட்டாள். அத்துடன் அவர்களுடைய திருமண வாழ்க்கை சந்திரக் கிழவனின் ஆசியுடன் சிறப்பாகத் தொடங்கியது.

 மணமுடித்த நாளிலிருந்து அவள் தலையணை பாவிப்பதில்லை, சற்று உயரத்தில் படுத்திருக்கும் அவனுடைய ஒரு புஜத்தில் தலையை வைத்து படுக்க பழகிக்கொண்டாள். லான்ஹங் ஆசிரியத் தொழிலுடன் வீட்டு வேலைகளையும் கவனித்தான். அவன் ஓர் அருமையான கணவன். ஆனால் வீட்டைச் சுத்தமாக வைக்கத்தான் அவனால் எப்படி முயன்றும் முடியவில்லை. இப்படியும் ஒரு பெண் படிப்பாளா என்று ஆச்சரியப்படுவான். அவளுடைய ஆராய்ச்சி நூல்களும், நோட்டுப் புத்தகங்களும், குறிப்பெழுதும் காகிதங்களும் படுக்கையில் கிடக்கும், சமையலறையில் கிடக்கும், பாத்ரூமில் கிடக்கும், படிப்பு மேசையில் கிடக்கும். எப்படித்தான் இவளால் படிக்கமுடிகிறதென்று ஓயாமல் வியப்பான். இரண்டு மணி நேரமாக வீட்டை துப்புரவு செய்து, சாமான்களை ஒழுங்குபடுத்தி அவன் நிமிர்ந்த இரண்டு நிமிடத்திற்கிடையில் அவள் வீட்டை மறுபடியும் நிறைத்துவிடுவாள்.

 முனைவர் படிப்புக்கு அவள் நீண்ட நேரம் பரிசோதனைக்கூடத்தில் கழிக்கவேண்டியிருந்தது. சிலநாட்களில் இருபது மணிநேரம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தாள். ஆனாலும் தாயாருக்கு மாதம் தவறாமல் கடிதம் எழுதுவாள். 'அம்மா உனக்கு ஒரு விசயம் தெரியுமா? நான் உன் வயிற்றில் கருவாக உதித்தபோது என் வயிற்றில் ஏற்கனவே கருக்கள் இருந்தன. அப்படி எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அது உனக்குள்ளே இருந்து வந்ததுதான்.'

 ஒரு சனிக்கிழமை மதியம் பரிசோதனைக்கூடத்துக்கு அவள் போகவில்லை. அவள் ஆராய்ச்சியை முடித்து ஆய்வுக்கட்டுரையை பூர்த்திசெய்யும் தறுவாயில் இருந்தாள். படுக்கையறைக்கு வந்த லான்ஹங் அப்படியே அசைவற்று நின்றான். படுக்கையில் நாலு பக்கமும் நூல்கள் இறைந்து கிடந்தன. காலை உணவு எச்சில் பிளேட் அகற்றப்படவில்லை. பாதி குடித்த கோப்பி குவளையை மடியில் வைத்துக்கொண்டு  அவள் குறிப்பேட்டில் குனிந்து எழுதிக்கொண்டிருந்தாள். லான்ஹங் புத்தகங்களை தள்ளி படுக்கையில் இடம் உண்டாக்கி அதிலே அமர்ந்து அவள் கைகளைப் பிடித்தான். 'இந்த உலகத்தில் ஆகச்சிறந்த மாணவி நீதான். அதில் சந்தேகமில்லை. எங்களுக்கு மணமாகி நாலு வருடங்களாகியும் பிள்ளை இல்லை. அதையும் நீ யோசிக்கவேண்டும். நாங்கள் ஒரு மருத்துவரை பார்க்கலாம்' என்றான். அவள் அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தாள். இதற்குமுன் அவள் பார்த்திராத அவனுடைய இரண்டு கன்ன எலும்புகளும் இப்பொழுது துல்லியமாகத் தள்ளிக்கொண்டு தெரிந்தன.

 மருத்துவர் இருவரையும் நீண்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். அவர் கண்டடைந்த முடிவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. 'என்னை ஆச்சரியப்படுத்து, என்னை ஆச்சரியப்படுத்து' என்று அடிக்கடி கூறும் அவள் கணவன் உச்சமான ஆச்சரியத்தை பரிசோதனை முடிவுகள் வெளியான அன்று அடைந்தான். மருத்துவர் பரிசோதனை முடிவுகளை எடுத்துவர உள்ளேபோனார். அவருடைய சப்பாத்து ஓசை குறையக் குறைய இவர்களுடைய இருதயம் அடிக்கும் ஒலி கூடிக்கொண்டுபோனது. குழந்தை உண்டாக வேண்டுமென்றால் ஓர் ஆணுக்கு மில்லிலிட்டர் ஒன்றுக்கு இரண்டு கோடி உயிரணுக்கள் உற்பத்தியாக்கும் தகுதி இருக்கவேண்டும். அவனுக்கு அதில் பாதிகூட இல்லை. அவளுக்கு அவன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லை என்று மருத்துவர் கூறிவிட்டார்.

 அவ்வளவு நாளும் ஒரு குழந்தை இருந்தால் நல்லாயிருக்கும் என்று நினைத்திருந்த இருவருக்கும் எப்படியும் ஒரு  குழந்தையை பெற்றெடுக்கவேண்டும் என்ற வெறி உண்டானது. மதியின் தயாருடைய கடிதங்கள் 'நீ கர்ப்பமாகிவிட்டாயா' என்று கேட்டு வரத் தொடங்கியிருந்தன. வழக்கம்போல அவனுக்கு வலது பக்கத்தில்  படுத்திருந்த அவளிடம், 'ஏ, இலங்கைக்காரி, நீ ஏன் என்னை மணமுடித்தாய்?' என்றான். 'பணக்காரி, பணக்காரனை முடிப்பாள். ஏழை ஏழையை முடிப்பாள். படித்தவள் படித்தவனை முடிப்பாள். ஒன்றுமில்லாதவள் ஒன்றுமில்லாதவனை முடிப்பாள்.' அவள் வாய் சிரித்தாலும் முகத்தில் துக்கம் தாளமுடியாமல் இருந்தது. 'இங்கே என்னைப் பார். அஞ்சல் நிலையத்து சங்கிலியில் பேனாவை கட்டிவைப்பதுபோல நான் உன்னை கட்டி வைக்கவில்லை. நான் வேண்டுமானால் விலகிக்கொள்கிறேன். நீ யாரையாவது மணமுடித்து பிள்ளை பெற்றுக்கொள்' என்றான். அவள் ஒன்றுமே பேசாமல் அவனுடைய கட்டிலில் துள்ளி ஏறி அவனுடைய புஜத்தை இழுத்துவைத்து அதன்மேல் இன்னும்கூட தலையை அழுத்தி படுத்துக்கொண்டாள்.

 அன்று காலையிலிருந்து தொலைக்காட்சியின் எந்த சானலைத் திருப்பினாலும் அதில் கிளிண்டன் - மோனிகா விவகாரமே விவாதிக்கப்பட்டது. ரேடியோவிலும் அதையே சொன்னார்கள். பத்திரிகைகளும் பக்கம் பக்கமாகப் புலம்பின. ஒன்றிலுமே அவளுக்கு மனது லயிக்கவில்லை. மாலையானதும் அவள் தன்னறையில் உட்கார்ந்து யன்னல் வழியாக ரோட்டைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆய்வுக்கட்டுரையை மூன்றுநாள் முன்னர் சமர்ப்பித்துவிட்டதால், கொடிக்கயிற்றில் மறந்துபோய் விட்ட கடைசி உடுப்புபோல அவள் மனம் ஆடிக்கொண்டிருந்தது. ஒரு பொலீஸ் கார்  சைரன் சத்தம்போட வேகமாக கடந்து சென்றது. ஒரு நாளில் அவ்வளவு நேரத்தையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை.  திடீரென்று ரோட்டிலே காலடி ஓசைகள் கேட்கத்தொடங்கின. பாஸ்கட்போல் போட்டி முடிந்து  மாணவர்களும், மாணவிகளும் கூட்டம் கூட்டமாக நகர்ந்தனர். ஒரு பெண்ணை ஒருவன் தோளின்மேல் தூக்கிவைத்து நடந்தான். எல்லோருமே மகிழ்ச்சியாக காணப்பட்டார்கள். அதிலே யார் தோற்றவர், யார் வென்றவர் என்பதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளே சமையலறையில் லான்ஹங் பாத்திரங்கள் சத்தம் எழுப்ப  அவளுக்காக வியட்நாமிய சூப் தயாரித்துக்கொண்டிருந்தான். அதன் மணம் சமையலறையைக் கடந்து, இருக்கும் அறையைக் கடந்து அவளிடம் வந்தது. நீண்ட ஆடையின் நுனியில் சூப் கோப்பையை வைத்து தூக்கிக்கொண்டு லான்ஹங் வந்தபோது அவள் நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிவிட்டாள்.

 அடுத்த நாள் காலை இருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவர்கள் வீடு வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த அத்தனை பணத்தையும் கொடுத்து IVF கருத் தரிக்கும் முறையை பரிசோதிப்பது என தீர்மானித்தார்கள். அவனுடைய பள்ளிக்கூடத்தில் படிப்பித்த ஓர் ஆப்பிரிக்க ஆசிரியர் தன்னுடைய உயிரணுக்களை தானம் செய்ய முன்வந்தார். மருத்துவர்கள் பல பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். நிறைய சட்டதிட்டங்கள் இருந்ததால் மூவரும் பலவிதமான பாரங்களில் கையொப்பமிட வேண்டியிருந்தது. ஆறு மாதகாலமாக அவளை தயார் செய்தார்கள். 28 ஹோர்மோன் ஊசிகள் நாளுக்கு ஒன்று என்ற முறையில் செலுத்தி, அவளுடைய மாத விலக்கு முடிந்த மூன்றாம் நாள் பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கிய கருவை அவள் உள்ளே செலுத்தினார்கள். பத்து நாள் கழித்து மருத்துவ மனையில் போய் சோதித்துப் பார்த்தபோது அவள் கர்ப்பமாகியிருப்பது உறுதியானது. அன்றே தாயாருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டாள். 'நான் கர்ப்பமாயிருக்கிறேன். உனக்கு ஒரு பேரனோ பேத்தியோ பிறந்த செய்தி விரைவில் வரும். காத்திரு.'


 அவளுக்கு பல சந்தேகங்கள் இருந்தன. மருத்துவ  பரிசோதனைகள் நடத்திய பெண்ணிடம் தன் பிரச்சினைகளை சொன்னாள். ஒருநாள் கேட்டாள், 'ஓர் இலங்கைப் பெண்ணுக்கும், வியட்நாமிய ஆணுக்குமிடையில்  ஆப்பிரிக்க கொடையில் கிடைத்த உயிரணுக்களால் உண்டாகிய சிசு என்னவாக பிறக்கும்?' அதற்கு அந்தப் பெண் ஒரு வினாடிகூட தாமதிக்காமல் 'அமெரிக்கனாக இருக்கும்' என்றாள்.  சரியாக 280 நாட்களில் அவளுக்கு அழகான குழந்தை பிறந்தது. சுகமான மகப்பேறு. அவள் தன்னுடன் கொண்டுவந்திருந்த கைப்பையில் தயாராக வைத்திருந்த பேப்பரையும் பேனாவையும் எடுத்து தாயாருக்கு ஒரு கடிதம் எழுதினாள். 'எனக்கு ஒரு அமெரிக்க பிள்ளை பிறந்திருக்கு.' ஒரேயொரு வசனம்தான். அந்தக் கடிதத்தை உடனேயே அனுப்பிவிடும்படி  கணவனிடம் கொடுத்தாள். வடகிழக்கு மூலையில் தபால்தலை ஒட்டிய அந்தக் கடிதம், வீதி பெயரில்லாத, வீட்டு நம்பர் இல்லாத அவளுடைய தாயாரிடம் எப்படியோ போய்ச் சேரும். அவள் தாயார் அந்தக் கடிதத்தை அமெரிக்க தபால்தலை தெரியக்கூடியதாக மற்றவர்கள் காணத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அன்று முழுக்க கிராமத்தில் அலைவாள்.

 இருபது நாள் கழித்து மாலை சரியாக ஆறு மணிக்கு அவள் தாயாரிடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது.  அது அவள் எதிர்பார்த்ததுதான். அந்த டெலிபோன் செய்வதற்காக அவளுடைய அம்மா அதிகாலை ஐந்து மணிக்கு எழும்பியிருப்பாள். ஆறுமணிக்கு முதல் பஸ்சை பிடித்து  பட்டணத்துக்கு போய் டெலிபோன் நிலையத்துக்கு முன் காத்திருந்து, கதவு திறந்தபோது முதல் ஆளாக உள்ளே நுழைந்திருப்பாள். அங்கே அப்போது காலை ஏழு மணியாக இருக்கும்.

 இருபது நாள் வயதான குழந்தை அவள் மடியிலே கிடந்தது. அம்மாவின் குரல் கேட்டது. 'மகளே, என்ன குழந்தை, நீ அதை எழுதவில்லையே?'
 'பொம்பிளைப் பிள்ளை, அம்மா, பொம்பிளைப் பிள்ளை.'
 'அம்மா, அவள் அழுகிறாள், சத்தம் கேட்குதா?' குழந்தையை தூக்கி டெலிபோனுக்கு கிட்டப் பிடித்தாள்.  'மகளே, குழந்தைக்கு  என்ன பேர் வைத்தாய்?' அவளுக்கு அம்மாவின் குரல் கேட்கவில்லை, அவளுடைய சுவாசப்பை சத்தம்தான் கேட்டது.
 'அம்மா, அவள் முழுக்க முழுக்க அமெரிக்கக்காரி. நீ அவளை பார்க்கவேணும். அதற்கிடையில் செத்துப்போகாதே.'
 இருவரும் ஒரே சமயத்தில் பேசினார்கள். அவர்கள் குரல்கள் அட்லாண்டிக் சமுத்திரத்தின் மேல் முட்டி மோதிக்கொண்டன. அவள் மடியிலே கிடந்த குழந்தையின் முகம் அவள் அம்மாவுடையதைப் போலவே இருந்தது. சின்னத் தலையில் முடி சுருண்டு சுருண்டு கிடந்தது. பெரிதாக வளர்ந்ததும் அவள் அம்மாவைப்போல கொண்டையை சுருட்டி வலைபோட்டு மூடுவாள். தன் நண்பிகளுடன் கட்டை பாவாடை அணிந்து கூடைப்பந்து விளையாட்டு பார்க்கப் போவாள். சரியான தருணத்தில் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிப்பாள்.
'என் அறையில் வந்து தூங்கு' என்று ஆண் நண்பர்கள் யாராவது அழைத்தால் ஏதாவது சாட்டுச் சொல்லி தப்பியோட முயலமாட்டாள். பல்கலைக்கழக கலாச்சார ஒன்று கூடலில் 'என்ன தவம் செய்தனை' பாடலுக்கு அபிநயம் பிடிப்பாள் அல்லது பதினாறு கம்பி இசைவாத்தியத்தை மீட்டுவாள். ஒவ்வொரு நன்றிகூறல் நாளிலும் புதுப்புது ஆண் நண்பர்களைக் கூட்டி வந்து பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைப்பாள். அவர்களின் உயிரணு எண்ணிக்கை மில்லி லிட்டருக்கு இரண்டு கோடி குறையாமல்  இருக்கவேண்டுமென்பதை முன்கூட்டியே பார்த்துக்கொள்வாள்.

முற்றும்

சென்ஷி

unread,
Oct 27, 2010, 2:37:42 AM10/27/10
to panb...@googlegroups.com
இடலாக்குடி ராசா - நாஞ்சில் நாடன்

‘இடலாக்குடி ராசா’ என்றால் எல்லோருக்கும் ஒரு இளக்காரம். வெள்ளாட்டு மறியைப் பார்த்தாற்போல. வாயால் ‘புர்ர்ர்..’ என்று ஒலியெழுப்பி மருட்டும் விளையாட்டு. முன்னங்கால் கறண்டையில் முறுக்கிய துணிப்பிரியால் கட்டு. உராய்ந்து உராய்ந்து முட்டிகளின் சதைந்த செம்புண் பின்காலில் ஒவ்வொரு முறை இடம் பெயர்கையிலும் முன்னங்கால்களைத் தூக்கித் தூக்கித் தத்தித் தாண்டும் பெட்டைக் கழுதையைக் கண்ட பரிதாபம்.

ராசாவின் தோற்றம் வாட்டசாட்டமாக, தாள் தொடு தடக்கையொடு ராஜா போல்தான் இருக்கும். ஐந்தே முக்காலடி உயரம். காலில் செருப்பு இல்லாமல் கருமருதுப் பலகை போல் விரிந்த மார்பும் முதுகும். ‘இன்று போல் இருத்தி’ என்று எந்தச் சீதை வாழ்த்தினாளோ? என்றைக்குப் பார்த்தாலும் நாற்பது சொல்லும் உடல். ஆனால் கண்கள்? வெண்டிலேஷனுக்குப் போடும் நிறமில்லாத ஒளி ஊடுருவாத கண்ணாடி போல் ஒரு மங்கல். அல்லது வெளிறல். கண்களையே பேசும் மனம். பேச்சில் ஒரு வெடுக்கு.

பெயரில் இடலாக்குடி இருந்தாலும் அங்குதான் தங்குகிறானா? வீடுகளுண்டா? பெண்டு பிள்ளைகள் உற்றார் உறவு உண்டா? யாரும் கண்டுபிடிக்க முனைந்ததில்லை.

எப்போதாவது திடீரென அவன் பிரசன்னமாவான். அரையில் கிழிசல் இல்லாத பட்டைக் கரை ஒற்றை வேட்டி.  தோளில் சுட்டிப்போட்ட ஈரிழை துவர்த்து. இடது கையில் நரைத்துப்போன காசிக்கயிறு. குளித்து கோயிலுக்குப் போன அடையாளமாக காதில் பொன்னரளி அல்லது செவ்வரளி. அல்லது திருநீற்றுப் பட்டை அல்லது மஞ்சள் காப்புக் கீற்று. எப்போது பார்த்தாலும் களைந்து போன ஒரு சாமானை எடுக்கப் போவதுபோல் “விறீர்” என்று ஒரு நடை.

முற்பகல் பதினோரு மணிக்கு, பிற்பகல் மூன்று மணிக்கு, இரவு எட்டுமணிக்கு என்று அட்டவணைப்படியும் இல்லாமல் கிழமையில் இரண்டு மூன்று முறை அந்த ஊருக்கு வருவான். மனதில் தோன்றிய - அப்படி ஏதாவது தோன்றுமோ என்னவோ - யாரு வீட்டுத் தெருப்படிப் புரையிலாவது ஏறி வட்டச்சம்மணம் போட்டு உட்காருவான். துண்டால் முகத்தை ஒரு முறை துடைத்துக் கொள்வான். ஒரு வளையத்தின் நெளிவு இல்லாமல், நேர்க்கோட்டுக் கோணங்களில் வெடுக்வெடுக்கென்று காக்கையைப்போல் தலையைத் திருப்பிச் சுற்றும் முற்றும் பார்ப்பான்.

யார் கவனத்திலாவது பட்டால் சரி. படாவிட்டால் “எக்கா... ஏ எக்கா... ராசா வந்திருக்கேன்” என்று இரண்டு விளி. அல்லது “பெரீம்மா. பெரீம்மோவ்... என்னா அனக்கத்தைக் காணேம். ஏ பெரீம்மா...” என்றொரு கூப்பாடு. இன்னாருக்கு இன்ன முறைதான் என்று ஒரு வரைமுறை கிடையாது. எல்லோரும் தன்னைவிட வயதில் பெரியவர்கள் என்ற அனுமான முறைகள். ஆனால் எந்த வீட்டிலும் ஆண்களைக் கூப்பிடுவது இல்லை.

சத்தம் கேட்டு வீட்டினுள்ளிருந்து ‘அக்காவோ’ ‘பெரியம்மா’வோ எட்டிப் பார்ப்பார்கள். “என்னா ராசா? இந்த வேனா வெயில்லே எங்கயாக்கும் போய்ட்டு வாறே?”

“யாரு? ராசாவையே கேக்கே? காலம்பற நாவக்காடு... நம்ம அத்தானுக்க எளைய குட்டியைக் கெட்டிக் குடுத்திருக்கில்லா.. ஆவுடையம்மை. எட்டிப்பார்த்து ரெம்ப நாளாச்சு... பிள்ளை என்ன நெனைச்சுக்கிடும்? நம்மளைத் தேடாதா? ஒரு நடை.... இன்னா இரி காப்பி குடிச்சுக்கிட்டுப் போலாம்ணா.... ராசாக்கு கொறைச்சலுல்லா... கொண்டாங் கொடுத்தான் வீட்லயா காப்பிக்குடி... கொள்ளாமே! அவ அடுக்களைக்குப் போனா. வண்டியை விட்டுட்டேன். அக்காளைப் பாத்து நாளாச்சுல்லா....”

“ஆகாங்...”

“என்ன ஆகாங்... பேசிக்கிட்டே நிக்கே? விடிஞ்சாப்பிலே இருந்து ஒண்ணும் குடிக்காம அலைஞ்சு வந்திருக்கேன்.... பசிக்காதா!”

”அட காலறுவான்.... இன்னா இரி... எல்லாம் ஒன் அதியாரந்தான்....”

மஞ்சளாகப் பழுத்த ஒரு வாழையிலைத் துண்டு. அதன் சுருளை நீக்கி ராசா விரித்துப் பிடிக்க, அந்த ’அக்கா’ கற்சட்டியில் பிழிந்து கொண்டு வந்திருந்த பழைய சோற்றைக் கையால் அள்ளியள்ளி வைப்பாள். ஒரு முழு வேலைக்காரன் திருப்தியாகச் சாப்பிடும் அளவுக்கு. அதன்மேல் கொடியடுப்பில், மண்பானையில், எப்போதும் அனந்து நுரைத்துக் கொண்டிருக்கும் பழங்கறியில் இரண்டு மூன்று சிரட்டை அகப்பை. ‘பழஞ்சித் தண்ணி’யும் கொண்டு வைப்பாள்.

எதையோ நினைத்துக்கொண்டு “எக்கா.... ஏ எக்கா....?’

“என்னா? ஏன் போட்டு தொண்டையைத் தீட்டுகே?”

“ரெண்டு உப்புப் பரல் தரப்பிடாதா? வீட்டிலே எளவு உப்புக்கும் பஞ்சமா?”

“கரி முடிஞ்சு போவான்.... மறந்து போச்சுப்பா... மொளகா வேணுமா?”

“கொண்டா.”

விரல்களை விரித்து, முழு உருண்டையாக உருட்டி ராசா பழையது சாப்பிடுவதைப் பார்த்தால் இரண்டு கவளம் நமக்கும் தரமாட்டானா என்று இருக்கும். ‘நறுக்நறுக்’கென்று பச்சை மிளகாயைக் கடிக்கையில் நாவூறும். வள்ளிசாக ஒரு பருக்கை மீதமில்லாமல் சாப்பிட்டு முடிப்பான்.

“என்னா போருமா?”

“போரும்.. ராசாவுக்கு வயறு நெறஞ்சாச்சு...” தண்ணீர் விட்டுக் கையைக் கழுவுவான். சாப்பிட்ட இடத்தைத் துடைப்பான்.  “அப்பம் ராசா வரட்டா?”

“என்னா அதுக்குள்ளே பொறப்பிட்டாச்சா?”

“அப்பம் ராசா வண்டியை விட்டிரட்டா. எக்கா, ராசா வண்டியை விட்டிருக்கேன்.... பிள்ளைகளையெல்லாம் பாத்துக்கோ என்னா? வண்டியை விட்டிருகேன்....” விறீர் என்று நடை தொடரும். எங்கே வந்தான்? எங்கே போகிறான்? யாருக்குத் தெரியும்?

அந்த ஊரில் தெருப்படிப்புரை உள்ள எல்லா வீடுகளிலும் இந்த அதிகாரம்தான். அந்த வீட்டில் பழையது இல்லாவிட்டால் அடுத்த வீட்டுக்காரியோ எதிர்த்த வீட்டுக்காரியோ அவன் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு கொண்டுவந்து அமுது படைப்பாள்.

பெரும்பாலும் ராசா சாப்பிடவரும் நேரங்களில் ஆண்கள் வீட்டில் இருப்பதில்லை. இருந்தாலும் அவன் அதிகாரங்களைக் கண்டுகொள்வதில்லை. ஒரு அலட்சியம் அல்லது இளப்பம். குறுஞ்சிரிப்போடு விட்டு விடுவார்கள். சிலருக்கும் மட்டும் அவனுடன் விளையாடத் தோன்றும். “என்ன ராசா! அதியாரம் தூள் பறக்கு? இஞ்ச என்னா அறுத்தடிச்சுக் கொண்டு போட்டிருக்கையா?”

“யாரு சித்தப்பாவா? ராசாக்கு பசிக்கில்லா?”

“பசிச்சா...? அது கொள்ளாண்டே...!”

”அப்பம் ராசாக்கு சாப்பாடு இல்லையா? ராசா வண்டியை விட்டிரட்டா... வண்டியை விட்டிருகேன்....” வேறு நிறங்கள் ஏதும் இல்லாத அந்தக் குரலில் ஒலிக்கும் ஒரு ஏமாற்றம் குடலைச் சுண்டி இழுக்கும். தொண்டையில் ஏதோ அடைக்கும்.

“அட இருப்பா.... சொணையிலே கூடுனவன்தான், ஏவுள்ளா.. ராசாவுக்கு என்னமாங் குடு....”

“ஆமா உங்களுக்கு அவன்கிட்ட என்ன பரியாசம். சவம் இப்படி ஒரு பொறவி.. கடவுளு படைச்சு விட்டுட்டான்...” சொல்லும்போதே அந்த ‘சித்தி’க்குக் கண்ணீர் முட்டும்.

ராசாவின் வரத்தும் போக்கும் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நிகழும். தொடர்ந்தாற்போல் சில வாரம் கண் மறைவாகப் போய் விடுவான். “ராசாவை எங்க கொஞ்ச நாளாக் காணவே இல்லை” என்று சில தாய் வயிறுகள் முனகும். நாள் கிழமைகளில் அவன் நினைவு வரும். “மூதி வரச்சிலே எல்லாம் புளிச்ச பழையது குடிச்சிட்டு போகு... ஒரு விசேச நாளுண்ணு வரப்பிடாது? சவன் எங்கின சுத்தீட்டுத் திரியோ?” என்று அங்கலாய்க்கும். இதெல்லாம் அவனுக்கு எட்டுமோ எட்டாதோ? இரண்டு மூன்று நாட்களில் திடீரென காட்சி கிடைக்கும்.

ராசா ஒரு கிறுக்கன் அல்ல. எந்த வயதில் அவன் மன வளர்ச்சி நின்று போனதோ தெரியாது. யாருக்கும் எந்த விதத்திலும் இம்சை செய்ததாகத் தகவல் கிடையாது. எதையும் யாரையும் கவனிக்காத ஒரு நிமிர்ந்த நடை. எதுவும் குறுக்கிட முடியாத வேகம். குறுக்கிட்டாலும் அவன் பொருட்படுத்துவதில்லை. சில சமயங்களில் அவன் சாப்பிடும்போது சிறு குழந்தைகள் தள்ளிநின்று வேடிக்கை பார்க்கும். ஒன்றை மற்றது அவன் முன்னால் தள்ளிவிடும். மற்றது “கே” என்று கத்தும். அவன் நடக்கையில் பின்னாலிருந்து “ஏ இடலாக்குடி ராசா” என்று கூச்சலிட்டுப் பின் தொடரும். யாராவது வயதானவர்கள் அதட்டினால்தான் உண்டு. ராசாவின் கண்கள் இதனைக் காணவே செய்யும். ஆனால் உதடுகள் பிரிவதில்லை.

*****

வடக்குத் தெரு, மூலைவீட்டு வன்னியப்பெருமாள் வீட்டில் அன்று திருமணம். மூத்த மகளுக்கு. மாப்பிள்ளை செண்பகராமன்புதூர். திருமணம் முடிந்து பந்தி நடந்துகொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமையாதலின் அவ்வூர் இளம் பிராயப் பிள்ளைகள் அனைவரும் நின்று விளம்பிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பகல் பன்னிரண்டு மணி சாய்ந்தது. காலை எட்டரை மணி முகூர்த்தம். முகூர்த்தம் முடிந்ததும் இலை போட்டாயிற்று. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள், கல்யாணத்துக்கு வந்திருந்த பெண் வீட்டு வெளியூர்க்காரர்கள், உள்ளூர் ஆண்கள், பெண்கள், அடியந்தரக்காரர்கள் அனைவரும் சாப்பிட்டாயிற்று. கடைசியாக விளம்பிக் கொடுத்துவிட்டு நின்ற பையன்களுக்கான தனிப்பந்தி. ஏற்கனவே சாப்பிட்டு விட்டிருந்த ஐந்து பையன்கள் மட்டும் விளம்புவதற்காக நின்றனர்.

எப்போதுமே இந்தப் பந்தி ஏகக் கூச்சலும் கும்மாளியுமாக இருக்கும். உடல் வருத்தம் பாராமல் முன்தின இரவுதொட்டு வேலை செய்தவர்கள், சீமான் வீட்டுச் சீராளன் முதல் கூரை வீட்டுக் குமரன் வரை. படித்துக் கொண்டிருக்கும் அல்லது படிப்பை நிறுத்திய பையன்கள். வேறுபாடுகளற்றுப் புரண்டு மறியும் வயது. எனவே இந்தப் பந்தியில் என்ன நடந்தாலும் கல்யாண அடியந்திரக்காரர்கள் கண்டு முகம் சுளிப்பதில்லை. மாறாக ஒரு மன நிறைவுடன் பார்த்துச் சிரித்துவிட்டுப் போவார்கள்.

இடலாக்குடி ராசா எங்கோ போய்விட்டு ‘விறீர்’ என்று சப்பாத்துக்கலுங்கைத் தாண்டி வடக்குத் தெரு மூலையில் ஏறினான். இனிமேல் யாராவது சாப்பிட பாக்கி இருக்கிறார்களா என்று பார்க்க பந்தலைவிட்டு தெருவுக்கு வந்த பெண்ணின் தம்பி பார்வையில் பட்டான்.

கையோடு கொண்டுபோய், ஆக்குப் புரையில் நிறுத்தினான். கை கழுவி சாப்பிட உட்காரப்போகும் இளைஞர் கூட்டம் ராசாவை உற்சாகமாக வரவேற்றது.

பந்திப்பாய் விரித்து, எதிர் எதிராக இரண்டு வரிசையில் உட்கார்ந்தனர். தென் வடலான அந்தப் பந்தலில், கிழக்கு வரிசையில், தென்னை ஓலை நிரை ஒட்டிய வரிசையின் நடுவில் இடலாக்குடி ராசா. அவன் முகத்தில் பரவசக் கொந்தளம்.

நீள நீளமான தலைவாழை இலைகள். ஏந்திய கைகளில் எவர் சில்வர் மூக்கனில் இருந்து தண்ணீர். தண்ணீர் தெளித்து, இலையைத் துடைத்து - விளம்ப நின்ற பையன்களின் முகத்தில் குறும்பின் தெறிப்பு. உப்புப் பரல் வந்தது. துவட்டல் வந்தது. தயிர்க் கிச்சடி வந்தது. அவியல் வந்தது. எரிசேரி வந்தது. வந்தவன் எல்லாம் ராசாவின் இலையை மட்டும் விட்டுவிட்டு விளம்பிச் சென்றான். பரப்பிரம்மாக ராசா இடமும் வலமும் பார்த்தான்.

நடப்பதைக் கவனித்த யாவரின் முகத்திலும் பிதுங்கி நின்ற சிரிப்பு எப்போது வெடிக்குமோ என்ற தெறிப்பு. கறி வகைகள் வைத்து முடித்து பப்படம் போட்டு, ஏத்தங்காய் உப்பேரி வைத்து...

காது வைத்த செம்பு நிலவாயில் சாதம் எடுத்து, பித்தளைக் கோருவையால் பறித்து, இலையிலையாக வைத்துக்கொண்டு  போனான் ஒருவன். தன் இலை தாண்டிப் போனதும் இடலாக்குடி ராசா விளித்தான். “எண்ணேன்... ஏ எண்ணேன்... ராசாக்குப் போடாமப் போறியே...”

சிரிப்பை அடக்கிக்கொண்டு பருப்பு ஊற்றுபவன் வந்தான்.

“எண்ணேன்... ராசாக்கு வயிறு பசிக்கில்லா...”

பருப்புக்கு பின்னால் நெய் வந்தது.

ராசாவின் முகத்தில் ஒரு பதைப்பு அடர்ந்தது. “எண்ணேன்... எனக்கில்லையா? அப்பம் நான் வண்டியை விட்டிரட்டா....”

இதற்காகவே காத்துக் கொண்டிருந்ததைப் போல - ‘சோ’வென்று ஒரு சிரிப்பு. ஒரே சமயத்தில் பொட்டித் தெறித்த அலைகள். பந்தலின் கூரையைக் கிளப்பும் எக்காள ஓசை.

ராசாவின் கண்களில்....

அவன் இலைக்கு ஒருவன் சாதநிலவாயை எடுத்து வரு முன்னால்-

“அப்பம் நான் வண்டியை விட்டிருகேன்...” சொற்கள் நனைந்து வந்தன.

திடீரென்று சிரிப்பு நின்றது..

‘விறீர்’ என்று எழுந்து நடந்தான் ராசா.

யாருக்குமே சாப்பிடப் பிடிக்கவில்லை.

(தீபம், ஏப்ரல் - 1978)

சென்ஷி

unread,
Oct 28, 2010, 1:43:25 AM10/28/10
to panb...@googlegroups.com
நன்றி - சந்துரு..

மைதானத்து மரங்கள்
- கந்தர்வன்

இவன் வீட்டை விட்டுத் திரும்பி நடந்தால் நூறடி தூரத்திலிருக்கிறது அந்த மைதானம். ஊரின் ஒரு கோடிக்கு ஒதுங்கி விட்ட இவன் வீட்டுக்கு ஒரே மரியாதை, அது அந்த மைதானத்திலிருக்கிறது என்பதுதான். புதியவர்கள் யாரும் இவனிடத்தில் வீட்டு முகவரி கேட்கும்போது இவன் இந்த மைதானத்தை அடையாளங் காட்டித்தான் சொல்லிக் கொள்வான். உலகத்தின் பெரிய பெரிய வாழ்க்கையிலிருந்தும் பெரிய பெரிய சம்பவங்களிலிருந்தும் இவன் ஒதுங்கி, ஒடுங்கியிருப்பது போல இந்த வீடும் நிசப்தத்தைத் திண்ணையில் விரித்துக்கொண்டு ஒடுங்கி ஒதுங்கிப் போயிருந்தது. அந்தப் பெரிய மைதானத்துக்கருகில் உள்ள வீடு என்பதால் மைதானத்தின் கம்பீரம் லேசாய் வீட்டில் படிந்து இவன் குரலில் சில சமயங்களில் வெளிப்படும்.

அம்மா கூடப்போய் பெண்கள் துறையில் குளிக்க வெட்கப்பட்டு அவளோடு சண்டை போட்டு இவன் தன்னோடு சேர்த்துக் குஞ்சு குளுவான்களோடு ஊருணிக்கு குளிக்கப் புறப்பட்ட காலத்திலிருந்து இந்த மைதானத்தோடு இவனுக்கு ரகசிய சம்பந்தம் உண்டு. அப்பா அம்மா கைகளை உதறிவிட்டு இவன் தானே நடக்கத் துவங்கி, கைகளை வீசி நடந்து வந்ததே அருகிலிருந்த இந்த மைதானத்திற்குத்தான். அப்போதிலிருந்து இந்த மைதானந்தான் இவனுக்கு ஆதரவு.

மதுரை செல்லும் சாலையின் ஓரத்தில் இந்த மைதானம் பரந்து கிடந்தது. மைதானத்தின் சிறப்பு அதன் பரப்பளவினால் வந்ததல்ல. அதன் இவ்வளவு மகிமைக்கும் காரணம் அதன் கிழக்கு மேற்கு ஓரங்களில் ஆஜானுபாகுவாய்க் கிளைகள் விரித்து நிற்கும் அந்தப் பெரிய பெரிய மரங்கள்தான். அவைகளைச் சாதாரணமாய் மரங்கள் என்றழைப்பதே சிறுமைப்படுத்தியதாகிவிடும். நெடுநெடுவென்று வளர்ந்து வீடுகள்போல் தூர்கட்டி மைதானத்து ஓரங்களைக் கருகருவென்று இருள் போர்த்திக்கொண்டு பூவும் பிஞ்சும் காயும் பழங்களுமாய் நிற்கும் அந்தப் புளிய மரங்களை ‘விருட்சங்கள்’ என்றுதான் யதார்த்தமாக சொல்லவேண்டும்.

ஊர் நடுவேயுள்ள உயர்நிலைப் பள்ளியின் சொந்த விளையாட்டு மைதானம் இது. அந்தப் பள்ளியின் முற்றத்திலேயே ஒரு சிறிய மைதானமும் உண்டு. இடைஇடையே வரும் விளையாட்டுப் பீரியட்களில் மட்டுமே அந்தச் சிறிய மைதானத்தில் விளையாட்டு நடக்கும். ஒரு வகுப்பிற்கு மதிய இடவேளைக்கு முந்திய கடைசி பீரியட், விளையாட்டு பீரியடாக இருந்தாலோ அல்லது மாலையில் கடைசி பீரியடாக இருந்தாலோ பையன்கள் வரிசையாய் நடந்துவந்து இந்தப் பெரிய மைதானத்தில்தான் விளையாடவேண்டும். விளையாடி முடித்து உடற்பயிற்சிக் கல்வி ஆசிரியர் கழுத்தில் தொங்கும் பிகிலை ஊதி வீடுகளுக்கு விரட்டும்போது எல்லா மாணவர்களும் ஊருக்குள் இருக்கும் தங்கள் வீடுகளுக்கு அலுப்புடன் நடப்பார்கள். மதிய இடைவேளையாயிருந்தால் அவசரமாய் ஓடுவார்கள். இவனுக்கு அப்போதெல்லாம் ரொம்பப் பெருமையாயிருக்கும். இவன் வீடு இதோ நாலு பாகத்தில் இருக்கிறது.

இவன் மட்டும் ஆற அமர ஒவ்வொரு மரமாய் ஓடி ஒடித் தொட்டுவிட்டு மைதானம் காலியானதும் ஒண்டியாய் நின்று இங்குள்ள எல்லாமே இவன் கவனிப்பில், மேற்பார்வையில் நடப்பதுபோல் காலி மைதானத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வீட்டிற்குப் போவான்.

வெயில் தணிந்ததும் அப்போது புழக்கத்திலிருக்கும் கிட்டியோ பம்பரமோ கோலியோ எடுத்துக்கொண்டு மறுபடியும் மைதானத்திற்கு வருவான். ஆங்காங்கிருந்து ஒரு ஜமா சேர்ந்துவிடும். குழுக்களாகப் பிரிந்து விளையாட்டுத் துவங்கும். விளையாட்டின் போது எவ்வளவு கத்தினாலும் சத்தம் மைதானத்தை விட்டு வெளியே போகாது. மைதானமே சப்தங்களே விழுங்கிவிடும். இரண்டுபேர் மூன்று பேராக இளவட்டங்களும் வயசாளிகளும் வந்து மர நிழல்களில் உட்கார்ந்து ஊர்க்கதைகளைப் பேசுவார்கள். தனி ஆட்களாய் கண்ணிலுள்ள சோகத்தையெல்லாம் மைதானத்தில் பாய்ச்சிக்கொண்டு குத்துப்பார்வைகளோடு சிலர் உட்கார்ந்திருப்பார்கள்.

சாலையைத் தாண்டிப் பச்சைக் காடாய்க் கிடக்கும் வயல் ஓரங்களில் மாடு மேய்க்க வரும் சிறிசுகள் முறைபோட்டுக்கொண்டு, சிலர் மாடுகளைப் பார்த்துக்கொண்டு மைதான மரப் பாதங்களில் வீடமைத்து ஆடுபுலி, தாயம் எல்லாம் ஆடுவார்கள். கந்தலும் பரட்டையுமாய் அவர்கள் ஒரு ஒதுங்கிப்போன மரத்தடியை எப்போதைக்குமாய் எடுத்துக்கொண்டார்கள். எவ்வளவோ காலம் ஆயிற்று அவர்கள் அந்த மரத்தடியை எடுத்துக்கொண்டு. காடு மாறிப் பொழப்பு மாறி எவ்வளவோ பேர் போய்விட்டார்கள். எண்ணிக்கையில் குறைவுபடாமல் புதிது புதிதாகவும் வருகிறார்கள். கந்தலும் பரட்டையும் மாறவில்லை. அவர்கள் பிடித்துக் கொண்டிருந்த மரத்தையும் மாற்றிக்கொள்ளவில்லை. விடிகாலைப் பொழுதில் கூட்டிப் பெருக்கி பளிச்சென்றிருக்கும் வீட்டு முற்றம்போல் எல்லாக் காலத்திலும் அந்த மரத்தடி மட்டும் சுத்தமாயிருக்கும். அடுத்தடுத்த மரத்தடிகளில் வெள்ளையுஞ் சுள்ளையுமாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களிடம் அஞ்சிக்கொண்டே விளையாடும் அந்த மாடு மேய்ப்பிகள் சப்தக் குறைவோடுதான் சம்பாஷித்துக் கொள்வார்கள்.

கொஞ்சகாலம் முன்பு வரை இளவட்டங்கள் கூட்டமாக வந்து கேந்திரமான மரத்தடிகளில் உட்காருவார்கள். கண்டகண்ட பெண்களைப் பற்றியெல்லாம் அவர்கள் கதையளந்து கொண்டிருப்பார்கள். அவர்களெல்லாம் கல்யாணம் முடிந்து மனைவிகளுக்குக் கட்டுப்பட்டு வீடுகளில் முடங்கியிருப்பார்கள் போலும்! அந்த முகங்களில் ஒன்றிரண்டைத் தவிர அநேகம் பேரை இப்போதெல்லாம் இந்த மரத்தடிகளில் காண முடிவதில்லை. இப்போது வரும் இளவட்டங்கள் வந்து உட்கார்ந்தவுடன் அமர்க்களமாய்ப் பேசத்துவங்கினாலும் நேரம் ஆக ஆக சோகங்களையே பரிமாறிக் கொள்கிறார்கள். தூரத்துப் பட்டணங்களும், கை நிறையச் சம்பளம் வரும் உத்தியோகங்களும் நாதஸ்வரம் முழங்கக் கல்யாண ஊர்வலங்களும் அவர்களின் ஏக்கம் போலும். அவர்கள் ஒவ்வொரு நாளும் விட்டுச் செல்லும் பெரு மூச்சுகள் மரத்தடிகளைத் தாண்டி மைதானமெங்கும் விரிந்து செல்லும்.

இவன் சிறுபிள்ளையாயிருந்தபோது மைதானத்து மரத்தடிகளில் அதிகமாய் உட்கார்ந்ததே இல்லை. இவனைக் கவர்ச்சித்ததெல்லாம் சூரியனை நேராகப் பார்த்துக் கிடந்த அந்த மைதான வெளிதான். மரத்தடி என்பது உட்காருபவர்களுக்குண்டானது. இவனால் அந்த வயதில் வாலைச் சுருட்டிக்கொண்டு ஐந்து நிமிடங்கள் கூடத் தொடர்ந்து ஒரு இடத்தில் உட்கார முடியாது. மைதான வெளியிலென்றால் ஆடிக்கொண்டேயிருக்கலாம். ஓடிக்கொண்டேயிருக்கலாம்.
ஒவ்வொரு சமயம் விளையாட்டு உச்சத்திலிருக்கையில் மரத்தடியிலிருந்து ‘அப்படிப் போடுரா சபாசு’ என்ற உற்சாகக் குரல்கள் சிறுவர்களை எட்டும். அந்த நாட்களில் அவர்களின் அடுத்தடுத்த ஏவல் குரல்களுக்காகவும் உற்சாக ஒலிகளுக்காகவும் ஆட்டம் தூள்படும். இறங்கு வெயில், மஞ்சள் வெயில், லேசிருட்டு என்ற பொழுது மாற்றங்கள் ஆட்ட மும்முரத்தில் புத்திக்கு உறைக்காது. இருட்டுக் கனமாகி கனமாகி அடித்த கிட்டிப்பிள்ளையைத் தேடமுடியாமற் போனாலும் உருண்ட கோலிகளைக் குனிந்து குனிந்து கண்களை இடுக்கி இடுக்கிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியாமற் போனாலும் ஆட்டத்தை மாற்றி வேறு விளையாட்டில் முனைவார்கள். கடைசியாய் ஓடி வருவது தெரியாமல் முட்டி மோதி எதிரே வருபவனை பெயர் மாற்றிக் கூப்பிட்டு எல்லோரும் அதற்காக ஓவென்று சிரித்து அந்தச் சிரிப்புகளிலும் அயர்ச்சி வந்து அப்புறந்தான் அந்த மைதான வெளியில் ஆட்டபாட்டங்கள் முடியும்.

****
இவன் எட்டாம் வகுப்பு படிக்கையில்தான் முதன் முறையாக மைதான வெளியிலிருந்து ஒதுங்கி மரத்தடியில் உட்கார்ந்தான். அன்று அவன் காலையில் பள்ளிக்கூடம் போய் இறைவணக்கம் முடிந்து வரிசையில் வந்து வகுப்பில் உட்கார்ந்தான். ஆங்கிலம்தான் முதல் பீரியட். ஆங்கில ஆசிரியர்தான் வகுப்பாசிரியர். வெள்ளை பேண்ட்டும் வெள்ளை சட்டையும் வெள்ளை மனசுமாய் மிகுந்த கவர்ச்சியோடிருப்பார். வகுப்பிற்குள் நுழையும்போதே ஒரு காகிதத்தைக் கொண்டு வந்தார். அவர் முகத்தில் கவலை நிறைந்திருந்தது. நாற்காலியில் உட்காரு முன்பே அதைப் பார்த்துப் படிக்க ஆரம்பித்தார். “ இன்னும் ஸ்கூல் பீஸ் கட்டாதவர்கள் வகுப்பை விட்டு வெளியேற வேண்டும். பீஸ் கட்டி ரசீது வாங்கிக்கொண்டுதான் உள்ளே வரவேண்டும். இந்த வகுப்பில் இன்னும் பீஸ் கட்டாதவர்கள் ராகவன், முத்து...” அடுத்தடுத்த பெயர்கள் அவன் காதில் விழவில்லை. ‘முத்து... முத்து... முத்து...’ என்றுதான் எல்லாமே இவன் காதில் விழுந்தன.

அம்மாதான் வீட்டிலிருப்பாள். அப்பா வேலைக்குப் போயிருப்பார். ஆதீன ஆபிஸ் நாற்காலியைத் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். பத்து நாளாய்ப் பன்னிப் பன்னிச் சொல்லியும் ‘இந்தா தாரேன், அந்தா தாரேன்’ என்று சொல்லிக்கொண்டே தினமும் ஓடிவிடுகிறார். அம்மாவோடு சண்டை போட்டுப் புண்ணியமில்லை. அஞ்சறைப் பெட்டியைத் தடவிப் பார்த்துவிட்டு மஞ்சள் சீரகம் இல்லையென்றாலும், சீசாவைப் பார்த்துவிட்டு எண்ணெய் இல்லையென்றாலும், தம்பி தங்கைகள் நேரங்கெட்ட நேரத்தில் ‘பசிக்கிறது’ என்றாலும் “என்னைக் கொண்டுக்கிட்டு சீக்கிரம் போயிரு ஈஸ்வரா” என்றுதான் குரலெடுப்பாள். அவளிடம் இப்போதுபோய் பீஸ் கட்டப் பணம் கேட்டால் அவள் மறுபடி ஒருமுறை “என்னைக் கொண்டுக்கிட்டு சீக்கிரம் போயிரு ஈஸ்வரா” என்று குரலெடுப்பதைத் தவிர பீஸ் கட்டச்சொல்லிக் கொடுக்க அவளிடம் எதுவும் இருக்காது. அலுவலகத்திற்குப்போய் அப்பாவைக் கேட்கலாமென்றால் எரிந்து விழுவதைத் தவிர அவரும் உடனடியாக எதையும் ஏற்பாடு செய்துவிட மாட்டார்.

அவன் அன்றுதான் மைதான வெளியை மறந்துவிட்டு மரத்தடியில் உட்கார்ந்து மைதானத்தை வெறித்து நோக்கினான். ஆங்காங்கு சில மரத்தடிகளில் அந்த வெயில் நேரத்தில் ஒன்றிரண்டுபேர் உட்கார்ந்திருந்தார்கள். வேளை கெட்ட வேளைகளில் இப்படி வந்து உட்காருபவர்கள் உளைச்சல் தாளாமல்தான் வருகிறார்கள் என்பது அவனுக்கு அருவலாய்ப்பட்டது. வகுப்பில்பட்ட அவமானம் இவன் உடலை நடுக்கியது. இவனால் செய்யக்கூடியது அப்போதைக்கு வேறெதுவுமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. வகுப்பை விட்டு வெளியே வருகையில் மாணவர்கள் இரக்கத்தோடு பார்த்த பார்வைகள் இன்னும் இவன் உடல் முழுதும் ஈக்களாய், எறும்புகளாய் மொய்த்துக் கிடந்தன. உக்கிப்போய் உட்கார்ந்திருந்தான்.

சாலைகளும் மைதான வெளியும் ஊர் முழுவதும் வெயிலின் உக்கிரத்தில் கொப்பளித்துக் கொண்டிருக்கையில் உடல் நடுங்கி இவன் உட்கார்ந்த இந்த மரத்தடி மட்டும் இளங்காற்றுச் சிலுசிலுப்பும் இதமான நிழலுமாய் குளுகுளுவென்றிருந்தது. நெடுநேரம் அப்படியே சிலையாயிருந்தான். இந்தச் சிலுசிலுப்பும் குளுமையும் இவனின் மனப்பாரத்தை லேசு லேசாய் கரைத்துவிட்டன. இவன் மரத்தடியிலிருந்து எழுந்தபோது குழப்பமும் நடுக்கமும் குறைந்திருந்தன.

இதன்பின் மைதான வெளியில் இவன் குறைவாகவே விளையாடினான். ஒவ்வொன்றாய் இவனைத் தாக்கிய ஒவ்வொரு அடிக்கும் மரத்தடியே இவனுக்கு மருத்துவமனையானது. படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் சில வருஷங்கள் எல்லாப் பொழுதுகளிலும் இவன் இந்த மரத்தடிகலிலேயே ரணங்களோடு கிடந்து எழுந்தான். இவன் தகப்பனார் காலமானதும் பண்டார சந்நிதிகளின் காலில் விழுந்து ஆதினத்திலேயே ஆகக் குறைந்த சம்பளத்தில் நாற்காலி தேய்க்கும் வேலையை வாங்கினான்.

கல்யாணமாகிப் பிள்ளைகள் வந்து கூடவே தம்பி தங்கைகள் என்று இவன் சுமை அதிகரித்து ஒரு பழைய செல்லரித்துப்போன கப்பலாய் மாறிப்போனான். மனைவி, பிள்ளைகள், தம்பி, தங்கைகள் எல்லோருடைய தேவைகளுக்காகவும் நடக்கும் போராட்டங்கள் இவனை எதிரியாக்கியே நடந்தன. அப்போதும் இவன் அந்தச் சிலுசிலுவென்றும் குளுகுளுவென்றுமிருந்த மரத்தடிகளிலேயே மருந்து வாங்கித் தேய்த்துவிட்டான்.

இந்தத் தேவைகளுக்காகவும் வேறு எதற்காகவுமோ ஊரில் எப்போதும் ஊர்வலங்கள் கூட்டங்களெல்லாம் நடக்கின்றன. அடிதடி ரகளையெல்லாம் நடக்கின்றன. இவனுக்கு அதிலெல்லாம் நாட்டமில்லை. சின்னசின்ன இலைகள் கூடி இவனுக்காகவே அமைத்தது போன்ற அந்த மரப்பந்தலின் கீழ் இவன் தன் அவலங்களையும் துக்கங்களையும் மறைத்துக் கொண்டான். அக்கம் பக்கத்தில் சொல்வார்கள், “ முத்துக்கு இந்த மைதானத்திலே பாதியாவது பள்ளிக்கூடக்காரக குடுத்திரணும். அனுபவ பாத்தியதைனு வந்தா பள்ளிக்கூடப் புள்ளைகளை விட இவந்தான் ரொம்ப இதை அனுபவிச்சுட்டான்.”

இவன் மனைவி மட்டும் உக்கிரமான சண்டைகளுக்குப் பின் ஒவ்வொரு சமயம் இப்படிச்சொல்வாள், “ஆச்சு, எல்லாஞ் சொல்லி நானும் நாக்கைப் புடுங்கிக்கிட்டு சாகுறாப்பலே கேட்டுப்பிட்டேன். என்னடா இப்படி ஒரு பொம்பளை கேட்டுப்புட்டாளேனு ரோசம் வந்து நாலு பேருகிட்டப்போயிப் பாத்தடிச்சு செய்வோம்னு நல்ல ஆம்பிளையினா தோணனும். இங்க அதெல்லாம் தோணாது. சண்டை ஆச்சுன்னா சாமியார் மாதிரி மரத்தடிக்கு ஓடிற்றது. இருட்டினதும் சம்சாரின்னு ஞாபகம் வந்து இந்தக் கூட்டுக்குள்ள வந்து மொடங்கிக்கிறது. இப்படி வெவஸ்தை கெட்டுப் போயித் திரியுறதுக்குப் பதிலா அந்த மரத்துங்கள்ள ஒண்ணுல தூக்குப்போட்டுத் தொங்கலாம்”. இப்படிக் கேட்டவுடன் இவனுக்குக் கை பரபரவென்று வரும். முகமும் கண்களும் நடுங்கிச் சிவந்து அவளை இழுத்து நாலு சாத்து சாத்திவிட்டு மரத்தடிக்குப் போய் வருவான்.

அன்று இவன் அலுவலகத்திலிருந்து சீக்கிரமாகவே வந்துவிட்டான். கடைசிப் பையன் அழுதுகொண்டிருந்தான். அவனைச் சமாதானப்படுத்திக் கையில் பிடித்துக் கொண்டு பொழுது இருட்டும் வேளையில் அவன் மைதானத்திற்குள் நுழைந்தபோது கண்ட நிகழ்ச்சியில் அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டான். மைதானமெங்கும் நின்ற பதினைந்து இருபது மரங்களில் ஏழெட்டு வெட்டப்பட்டு சாலைவரை புரண்டு கிடந்தன. கர்ப்ப ஸ்தீரிகள் சாய்ந்து மல்லாக்க விழுந்து கிடப்பதுபோல் அவை கிடந்து இவனைப் பரிதவிக்க வைத்தன. கோடாரிகளோடும் ரம்பங்களோடும் ஏராளமான ஆட்கள் விழுந்துகிடந்த மரங்களைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். லாரிகளில் செங்கற்கள் வந்து மைதானத்தின் பல இடங்களில் இறக்கிக்கொண்டிருந்தனர்.

இவனைப் போலவே அங்கே தினமும் வரும் பலரும் கவலை படிந்த கண்களோடு இவனுக்கு முன்னமேயே அங்கு வந்து நின்று மேலும் கவலையாகி நிற்பதைப் பார்த்தான். மாடு மேய்க்கும் சிறுசுகள் கந்தல்களோடும் பரட்டையோடும் கன்னங்களில் கையை வைத்து வேதனையோடு வேடிக்கை பார்த்தன. மெதுவாய்ப் போய் ஒருவரிடம் இவன் கேட்டான். “என்ன ஆச்சு? ஏன் இப்படித் திடீர்னு எல்லாத்தையும் வெட்டுறாக?” கொப்பும் கொலையுமாய்க் கிடந்த அந்தப் பச்சைப் பூதங்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி அவர் சொன்னார் “கனா மூனா இந்த இடத்தைப் பள்ளிக்கூடத்துக்காரக கிட்டேயிருந்து வாங்கிப்பிட்டாக. இதுக்குப் பதிலா பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துலெ உள்ள அவரு காலி இடத்தைக் கொடுத்திட்டாராம். இதிலே சினிமாக் கொட்டகை கட்டப்போறாக. கதவு நெலைக்கெல்லாம் இந்த மரங்கதான்.”

மைதானம் அலங்கோலமாகிவிட்டது. வெட்டுப்பட்ட மரங்களிலிருந்து வந்த பச்சைக் கவிச்சியும் மரவாசனையும் காற்று முழுதும் வியாபித்துக்கிடந்தது. இன்னும் வெட்டப்படாத மரங்களைச் சுற்றித் தூரைத் தோண்டுவதும் வெட்டுப்பட்ட மரங்களை ரம்பங்களால் அறுப்பதுவும் மும்முரமாய் நடந்துகொண்டிருந்தன. இரண்டு மூன்று பெட்ரோமாக்ஸ் விளக்குகள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. பகிரங்கமாய் அங்குக் கொலைகள் நடந்து கொண்டிருப்பதாகவே இவனுக்குப்பட்டது. பாதம் முதல் தலை வரை உலுக்கியது. இவன் கவலைகளை இனி யார் வாங்குவார்கள்? மரங்கள் மழையை வருவிக்கும் என்று இவனுக்குத் தெரியும். இந்த மரக்கொலைகள் இவன் கண்களிலும் அப்படியே மழையை வரவைத்துவிட்டன. எல்லா அடிகளையும் வாங்கிகொண்டு இவன் உன்மத்தன்போல் இந்த மரத்தடிகளில் உட்கார்ந்திருந்தானே தவிர ஒரு நாளும் கண்ணீர் விட்டு அழுததில்லை. அன்றைக்கு முதன்முறையாகப் பொருமிப் பொருமி அழுதான். கைப்பிடியில் சிக்கி நின்ற குழந்தை ஒன்றும்புரியாமல் தகப்பனின் கேவலைக் கண்டு அதுவும் ஓவென்று மைதானமெங்கும் கேட்கும்படி அழுதது.

இருட்டி வெகு நேரங்கழித்து வீட்டிற்கு வந்தான். உள்ளே நுழைந்ததும் மனைவி சொன்னாள், “இனி மேலாச்சும் ஊருலெ ஒவ்வொருத்தரும், நம்மளைப்போல எப்படிக் கஷ்டப்படுறாகன்னு நடந்து திரிஞ்சு பாருங்க”.
மறுநாள் பொழுது சாய்ந்த வேளையில் இவன் மைதான ஓரச்சாலை வழியாக ஊருக்குள் தன்னையொத்த ஜனங்களைத் தேடிப்பார்க்க முதன் முறையாய்க் கையை வீசி நடந்துகொண்டிருந்தான். மைதானத்தை ஒட்டிய ஓரங்களில் கண்டும் முண்டுமாய்த் துண்டுபட்ட மரங்கள் உயிரற்றுக்கிடந்தன. இவன் உயிரோடு அவைகளைத் தாண்டி தாண்டி நடந்தான்.

Ahamed Zubair A

unread,
Oct 31, 2010, 1:44:21 PM10/31/10
to panb...@googlegroups.com
எங்கேர்ந்து தான் கதைக்கு கரு பிடிக்கிறாங்களோன்னு நினைச்சா கருவையே கதையாக்கி இருக்காங்க... :-)

நன்றி சென்ஷி...

2010/10/25 சென்ஷி <senshe...@gmail.com>
அமெரிக்கக்காரி (2009-06-16) - அ. முத்துலிங்கம்
 

அவர்களின் உயிரணு எண்ணிக்கை மில்லி லிட்டருக்கு இரண்டு கோடி குறையாமல்  இருக்கவேண்டுமென்பதை முன்கூட்டியே பார்த்துக்கொள்வாள்.


Ahamed Zubair A

unread,
Oct 31, 2010, 1:55:01 PM10/31/10
to panb...@googlegroups.com
சென்ஷி,

உண்மையிலேயே ப்ரமாதம் மச்சி...

நன்றி உன் ரசனைக்கு...

2010/10/27 சென்ஷி <senshe...@gmail.com>

சென்ஷி

unread,
Dec 9, 2010, 7:53:51 AM12/9/10
to panb...@googlegroups.com
சூர்ப்பனகை

மலையாளம் மூலம் கே.ஆர். மீரா
தமிழில் கே.வி. ஷைலஜா

கோழிக்கோட்டில் ஐஸ்க்ரீம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் உச்சகட்டத்தில் இருந்தபோது தான் பி.பி.அனகாவிற்கு கல்லூரி விரிவுரையாளராக வேலை கிடைத்தது.
முதல் நாள் வகுப்பில் நுழைந்தவுடனேயே கரும் பலகையில் எழுதியிருந்ததைப் பார்த்தாள்.

“சூர்ப்பனகையை வரவேற்கிறோம் “

பி.பி அனகா திரும்பி நின்று கரும்பலகையை துடைக்கத்துவங்கினவுடன் காகித அம்புகள் மேலே வந்து விழுந்தன. தன் முதல் வகுப்பினை ஆரம்பிக்க நினைத்ததருணத்தில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த மாணவன் மெதுவாக எழுந்தான்.

“மிஸ் ஒரு சந்தேகம் “
“கேளுங்க....”
“மிஸ் நீங்க பெண்ணியவாதி தானே?”அப்படின்னா “பேன் தி ப்ரா இயக்கத்தைக் குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன?”

கோபத்தோடு அனகா அவனை வகுப்பிலிருந்து வெளியேறச் சொன்னாள்.
சற்று நிதானித்து அவனை வகுப்பிற்குள் அனுமதிக்க நினைத்த நேரத்தில் அந்த நிகழ்வு போராட்டமாக உருமாறியிருந்தது. அவள் சமாதானமாய் போக மறுத்த போது போராட்டம் மேலும் வலுத்தது.

பெண்ணியவாதிகளின் தலைவியானதால் இயக்கத்தின் துணையும் கட்சியின் பின்புலமும் அனகாவிற்கு இருந்தது. கயிறு திருகுதல் போல போராட்டம் இறுகியது. கல்லூரி கால வரையற்று மூடப்பட்டது. பெரிய பெரிய மார்புகள் வைத்து வரைந்த படங்களுக்கும் சுவரெழுத்துகளுக்குமிடையில் பதறாமல் நடந்த நாட்களில் உடன் பணிபுரியும் பேராசிரியர்களும் அனகாவை üசூர்ப்பனகைý என்றே கூப்பிடத் தொடங்கியிருந்தார்கள். இதனாலெல்லாம் அனகா மனம் தளர்ந்து போகவில்லை. மூக்கும், முலைகளும் அறுக்கப்பட்ட சூர்ப்பனகையின் மீது அவளுக்கு எப்போதுமே மரியாதையிருந்தது. சரித்திரத்தில் ஆரம்ப குறியீடாக சூர்பனகை இருந்தாளென்றாலும் அதுதானே யதார்த்த பெண் விடுதலை?

அகலம் குறைந்த சிறிய கட்டிலில் பச்சைநிற இரவு உடையணிந்து படுத்திருந்த அனகா பக்கத்திலிருந்த பத்து வயது மகள் சீதாவிடம் கேட்டாள்.

“சூர்ப்பனகையின் கதை தெரியுமா உனக்கு? “
“தெரியாது”
சீதாவின் முகம் கனத்திருந்தது.
சீதா அறைக்குள் வரும் பொழுது, அம்மு ஜோஸப் தரியனுடன் பேசிக் கொண்டிருந்தாள் அனகா. எப்போதும் போலான உரையாடல்தான் அது. தாராளமயமாக்கலின் பலனான உலகமயமாக்கலின் விளைவில் நிகழ்ந்த வியாபாரமயமாக்கல், பாலியல் சுதந்திரமின்மை, பெண் விடுதலை, பெண் தன்விருப்பதை அடையும் சுதந்திரம் என்று போய்க் கொண்டே இருந்த பேச்சு சீதா வந்த போது அறுபட்டது.

அம்முவின் பாப் செய்யப்பட்ட முடியும், நிறம் மங்கிய தொள தொளப்பான சுடிதாரும் சீதாவுக்கு எப்போதுமே பிடிக்காது. அவளுடைய வெறுப்பினை பல விதங்களில் வெளிப்படுத்தினாள். இதையெல்லாம் கவனித்து சகிக்க முடியாமல் போனபோது அம்மு எழுந்து வெளியே போனாள். அதைப்பார்த்த அனகாவிற்கு கோபம் வந்தாலும் வெளிக் காண்பிக்கவில்லை. அம்மாவின் நடவடிக்கைகளை எப்போதும் விமர்சிக்கும் பெண் அம்மு என்ற பிம்பத்தை வைத்திருக்கும் சீதாவின் மனதில் இன்னும் ஏன் கோபத்தை ஏற்ற வேண்டும்? அதனால் தான் ஒரு கதை சொல்லலாமே என்று நினைத்தாள். உடனே ராமாயணம் தான் நியாபகத்திற்கு வந்தது. அதிலும் குறிப்பாக குறைபடுத்தப் பட்ட பெண்ணாய் சூர்ப்பனகை அவள் மனவெளிகளில் அலையத் தொடங்கினாள். கல்லூரியின் முதல்நாளும் கூடவே சேர்ந்து கொண்டது.

“சூர்ப்பனகை யாரு? “
சீதா அவளுடைய கான்வெண்ட் மலையாளத்தில் கேட்டாள். மிகவும் சுருக்கமாக அந்தக் கதையை சொல்லலாமா என்று அனகா யோசித்தாள். ஆனால் சூர்ப்பனகை யார்? பதிவிரதை சீதாவோடான காதலின் காரணமாக ராமனால் நிராகரிக்கப்பட்ட ராட்சஸி. அனகாவுக்கு கதை சொல்ல முடியாமல் வார்த்தைகள் தன்னை சுருக்கிக் கொண்டன.

உயரமான கட்டிலுக்குப் பக்கத்தில் நீலநிற ஃபிளாஸ்டிக் சேரை இழுத்து போட்டுக் கொண்டு எந்தவித உற்சாகமும் இல்லாமல் உட்கார்ந்திருக்கும் சீதாவைப் பார்த்தபோது கதை சொல்லும் சுவாரசியம் முற்றிலும் வற்றிப்போய் மகளை கவனிக்க ஆரம்பித்தாள்.
சீதா உயரமாக வளர்ந்திருந்தாள். சிவப்பு நிற டாப்ஸின் திறந்திருந்த வட்டமான கழுத்தினூடாக அவள் மகளின் மார்பினை பார்க்க நேரிட்டது. அவை சராசரியைவிட அதிகமாக வளர்ந்திருப்பதாய் அனகாவிற்குத் தோன்றியது. இருபத்தியெட்டா? முப்பதா? பத்து வயது பெண்ணுக்கு சாதாரணமாக மார்பளவு எதுவரை இருக்கலாம்?

எதுவரை இருக்கலாம் என்றெல்லாம் தெரியவில்லையானாலும் சீதாவுக்கான வளர்ச்சி சற்று அதிகம்தான். கடைசியாக பார்த்தபோது அவள் இவ்வளவு புஷ்டியாக இல்லை. உயரமாகவும் இல்லை. நான்கு மாதத்திற்கு முன்பு பாலியல் தொழிலாளிகள் சம்மேளனத்திற்கு போய்விட்டு வரும்பொழுது தான் அனகா சீதாவின் ஹாஸ்டலில் இறங்கினாள்.

அனகாவை பார்த்தவுடன் ஹாஸ்டல் வார்டன் வழக்கம் போல சீதாவைக் குறை சொல்ல ஆரம்பித்தாள். சீதா பைக்குள் எப்போதும் லேக்டோஜன் பால்பவுடர்டின்னை மறைத்து வைத்திருக்கிறாளென்றும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாரி வாரித் தின்கிறாளென்றும், அதனால் நடைபாதை முழுக்க எறும்புகள் வந்து பிரச்சனையாகிறதென்றும் மற்ற பிள்ளைகள் குறை சொல்கிறார்கள் என்றும் கூறினாள்.

சொந்த மகளை மற்றவர்கள் விமர்சித்தால் பெண்ணியவாதியானாலும் கோபம் வரும் தானே! அந்த கோபத்துடனே அனகா ஹாஸ்டலின் கருங்கல் தூண்களுள்ள நடைபாதையை கடந்து மகளைப் பார்க்கப் போன போது “களிக்குடுக்கையில்”கன்றுக்கு பசுவிடம் செல்லும் வழியை தேடிக் கொண்டிருந்தாள் சீதா

“வெக்கமாயில்ல உனக்கு? “
மற்ற பிள்ளைகளுக்கு கேட்கமால் குரலடக்கியபடி கேட்டாள் அனகா.
“நான் அனுப்பின புத்தங்கள் எல்லாம் எங்கே? தொலச்சிட்டியா? “
ரியோ டி ஜனிரோ கருத்தரங்கில் பங்கேற்க சென்றபோது பதினைந்து புத்தகங்களை அவளுக்கு வாங்கி அனுப்பினாள் அனகா. எல்லாமே கிளாஸிக்ஸ். ஆலிவர் ட்விஸ்ட், டேவிட் கோபர் ஃபீல்டு, ஹகில்பரிஃபின், டாம் சாயர் - கலர் படங்களோடிருக்கும் குழந்தைகளுக்கான பதிப்பு. அந்த பார்சலை சீதா பிரிக்கவேயில்லை என்பதை பார்த்ததும் கோபமாக வந்தது.

அவளுடைய அழகு சாதனப் பெட்டியைப் பார்த்தபோது கோபம் மேலும் அதிகரித்தது. மின்னும் ஸ்டிக்கர் பொட்டுகள், கண்ணாடி வளையல்கள், பல நிறங்களில் கல்லும், முத்தும் ஒட்டப்பட்ட இமிடேசன் நகைகள். அன்று இரவே அனகா, ராம் மோகனை தொலைபேசியில் அழைத்தாள். பேச்சு ஆரம்பத்திலேயே உஷ்ணமானது.

“அவள் பெண்ணியவாதியான பி.பி. அனகாவின் மகள் மட்டுமல்ல. என்னுடைய மகளும் தான்”
“ஆனால் எல்லோரும் அவளை அனகாவின் மகளாகத்தான் பார்க்கிறார்கள். எனக்கான சமூக மரியாதையைப் பற்றி நீங்கள் யோசித்திருக்க வேண்டும்”
“அனகா, அவளுக்கு பத்து வயசுதானே ஆகுது? அந்த வயசுக்குரிய பொருட்களோடு விருப்பம் இருப்பது நியாயம் தானே? “
“எனக்குத் தெரியும். என் மேல உள்ள கோபத்தைத் தீர்க்க நீங்க அவளை ஸ்டீரியோ டைப் பெண்ணாய் வளர்க்கப்பாக்கிறீங்க “
“தயவு செய்து அவளையும் ஒரு மனநோயாளியாக்காதே அனகா”
உஷ்ண உரையாடல் அதோடு தற்காலிகமாக அணைந்தது.
திருமணம்... அது தவறான முடிவாக இருந்தது.
அம்மு அன்றே சொன்னாள்.

“அனு ரொம்ப யோசிச்சு முடிவெடுக்க வேண்டிய விசயம் இது. உனக்கு பெரிய எதிர்காலம் இருக்கு. கேரள பெண்களின் வாழ்வோடு உனக்கொரு தவிர்க்க முடியாத பொறுப்பு இருக்கு “
எதைப் பற்றியும் அறிவு பூர்வமாய் யோசிக்கமுடியாத அன்றைய மன நிலையில் அனகா அதையும் ராம்மோகனோடு பகிர்ந்து கொண்டாள். அம்மு உன்னை சந்தோசப்படுத்த புகழ்ந்து பேசியிருக்கிறாள் என்று ராம்மோகன் சொன்னான். பெண்களுக்கு அதிலும் குறிப்பாக பெண்ணியம் பேசும் பெண்களுக்கு தன்னை புகழ்ந்து பேசுவது மிகவும் பிடிக்குமென்றும், இந்த அம்முவே தினமும் அவளோட புருசனைக் கட்டிப் பிடித்துக் கொண்டுதானே தூங்குகிறாள் அவளுக்கு அதன் தேவையிருக்கிறது தானே என்ற ராம்மோகனின் கிண்டல் தொனியில் அனகா விழுந்திருந்தாள்.

இனிப்பூட்டப்பட்ட வார்த்தைகள் கட்டுப்பெட்டியான பெண்களுக்கே பொருந்தும். சில நேரங்களில் வீழ்ச்சிகளை அறிந்து கொண்டே செய்யும் சாகசம்தான் பெண்ணியம்.
“ராம், நாம் ஏன் ஒன்றாய் சேர்ந்து வாழக்கூடாது”
“அப்ப கல்யாணம்? “
“அது வேணுமா? ஜஸ்ட் லிவிங் டு கெதர் “
“ரேட் என்னன்னும் சொல்லிடேன் “
“புரியல ராம் “
“எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இப்படியான பெண்களுக்கு விடியும் போது அவங்க கேக்கற பணம் கொடுக்க வேண்டியதிருக்கும் “
“அது அவர்கள் வாழ்வதற்கான வழி “
“ஆமாம். அதனால் அதற்கு கொஞ்சம் கூட மரியாதை இருக்கு “

இரண்டு வெவ்வேறு துருவங்கள். இரண்டு வெவ்வேறு உலகங்கள். இரண்டு வெவ்வேறு நூற்றாண்டுகள். தமக்குள் ஒத்து வராது என்று அனகா மிகச் சீக்கிரமே புரிந்து கொண்டாள்.
ஒரு ஆண் எப்படி இப்படி கட்டுப்பெட்டியாக வாழ முடிகிறது? குறுகலாக மட்டுமே யோசிக்க முடிகிறது? அடிப்படைவாதியாகவே தன் வாழ்நாளை நீட்டிக்க முடிகிறது?
ஆனால் தன்னையே புகழ்ந்துபேசும் பேச்சு, எதிரில் இருப்பவர்களை ஆசைப்பட வைக்கும் என்பது போல அனகா, ராமிடம் அடங்கிப் போனாள்.

இருந்தபோதிலும் வேட்டைக்காரனும், பறவையும் ஒரே வலையில் மாட்டிக் கொள்வதுதான் திருமணம் என்பதை சீக்கிரமே அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
“ராம் நீங்க என்னோட ப்ரஸ்ட்டைத் தொடக்கூடாது, அது எனக்குப் பிடிக்கல”
“அனு, நான் வெளிப்படையா உங்கிட்ட கேக்கட்டா, உன்னை யாராவது குழந்தையாயிருக்கும் போது துன்புறுத்தியிருக்காங்களா? “
“ராம் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதே வம்ச விருத்திக்காகத்தான். செக்ஸ் ஒரு சந்தோசம் என்று மட்டும் வைத்துக் கொண்டால், பெண்ணின் உடலை ஒரு உபயோகப் பொருளாக மட்டுமே உங்களால் பார்க்க முடியும் “
“சுருக்கமாக சொல்லப் போனா நீயொரு மனநோயாளிதான் “

இப்படியான அறிவு தளத்திலான வாக்குவாதங்கள் அடிக்கடி இருவருக்கும் பிடிக்காமலேயே நடந்தேறியது. அப்படியும் சீதா பிறக்கும் வரை ஒன்றாகவே வாழ்ந்தார்கள். அறுவை சிகிச்சை மூலம் சீதா பிறந்த பதினோராம் நாளன்று அனகா தொடுபுழாவில் ஒரு வழக்கு காரணமாக போலீஸ் ஸ்டேசன் தர்ணாவுக்கு போக வேண்டியிருந்தது. ரத்தத் தளிராயிருக்கும் தன் மகளுக்கு புட்டிப்பால் கொடுத்து விட்டு தர்ணாவுக்கு போனபோது தான் ராம் மோகன் மிகவும் மூர்க்கனாகி போனான்.

தனக்கான சமூக பொறுப்பினை அனகா நியாயப்படுத்தினாள். தன் குழந்தைக்கு பால் கொடுப்பதை விட பெரிய சமூக பொறுப்பு பெண்களுக்கு இல்லையென்று ராம்மோகன் வாதாடினான்.

ராம்மோகனுக்கு முலைகளில்லை. அதனால் பால் கொடுக்கும் முலைகளின் வேதனையை அவன் அறிந்தவனில்லை. நரம்புகளை உள்ளடக்கிய சிறிய சதைகளின் சக்தி, தோலினால் மூடப்பட்ட மாமிசம், கேவல், மூச்சு வாங்குதல், வலி, ரணம்... அதனிடையில் தர்ணாக்கள், செமினார்கள், கண்டன ஆர்பாட்டங்கள்...

நெருக்கம் கிடைக்கும்போது ஒரு ஆணின் ஆவேசத்தோடு அம்மாவின் மார்பில் தன்னைப் புதைத்துக் கொண்டாலும் கூட, குழந்தை சீதா சீக்கிரமாக லேக்டோஜனுக்குப் பழகியிருந்தாள். அதுவே அவளுக்கொரு பலவீனமான பழக்கமாகவும் மாறியிருந்தது. லேக்டோஜனை வாரித் தின்று வளர்ந்ததாலோ என்னவோ சீதா இப்படி வளர்ந்திருக்கிறாள் என அனகா சந்தேகித்தாள். உடல் நுகர் பொருளாகக் கூடாது என்பது சரிதான், ஆனாலும் உயரமான மெலிந்த உடல்களுக்குத்தான் இப்போது பெண்ணியவாதிகளுக்குள்ளும் மதிப்பும் மரியாதையும்.

நர்ஸ் பக்கத்தில் வந்தபோது சீதாவின் கையை எடுத்து விட்டுவிட்டு அனகா நர்ஸிடம் சென்றாள்.
“வீட்டுக்காரர் வந்திருக்காரா?”பல்ஸ் பார்க்கும் போது நர்ஸ் கேட்டாள்.
“இல்ல.”
“பின்ன யார் உங்க உதவிக்கு இருக்காங்க?”
“என்னோட நண்பர்கள்”
“ ஓ......”

நர்ஸ் பரிதாபத்துடன் அனகாவைப்பார்த்தாள். அவளுக்கு லேசாக சிரிப்பு வந்தது. அனகா பெருமையுடன் சீதாவைப் பார்த்தாள். சீதா சங்கடந்துடன் தலையை குனிந்து கொண்டாள்
அனகாவுக்கு சர்ஜரி முடிவானபோது சீதா ராம்மோகனின் வீட்டிலிருந்தாள். அவள் “ராம்மோகனை தொலைபேசியில் கூப்பிட்டாள்.

சீதாவைக் கொஞ்சம் அனுப்புங்க. எனக்கு திங்கட்கிழமை காலைல ஆப்பரேசன்.”
“உனக்கென்ன ப்ரச்சனை?”
“ப்ரஸ்ட் கேன்சர்... டாக்டர்கள் என்னோட மார்புகளை அறுத்தெறியப்போகிறார்கள்”
“கடவுளே”
ராம்மோகன் அதிர்ந்தது போல தோன்றியது.

அனகாவிற்கு சிரிக்கவேண்டும் போல தோன்றியது. இந்த அறுவைச்சிகிச்சை மூலம் நான் சரியான பொருள்படவும் சூர்பனகையாகிறேன். சுதந்திரமானவளாகிறேன் - உன்னுடைய வெறிக்கும் பார்வையிலிருந்து, கொஞ்சலிலிருந்து, வலிகளிலிருந்து நான் விமோசனமடைகிறேன்.
“நான் வரணுமா?”
ராம் மோகன், குரலில் இடரலுடன் கேட்டான்.
“வேண்டாம்”
டாக்டரும் இதையேத்தான் கேட்டார். “கணவர் வரவில்லையா?”
“இல்லை”.
“சம்மத பத்திரத்தில் யார் கையெழுத்திடுவார்கள்?”
“நான்”
அனகா தீர்மானமாய் சொன்னாள்.

என் உடல். நெஞ்சில் பால் சுரக்கும் நரம்புகளும் அடிவயிற்றில் கர்ப்பப்பையும் உள்ள என் உடல். இவைகளை அறுத்தெறிய வேண்டுமா? வேண்டாமா? என்று தீர்மானிக்க இது இரண்டுமில்லாத, இதன் வலி அறியாத ஒருத்தனின் சம்மதம் எனக்கெதற்கு டாக்டர்?
ரத்தக்கொதிப்பும், நாடியும் பரிசோதிக்கப்பட்டது. எல்லாம் சரியாக இருப்பதை உணர்ந்த நர்ஸ் வெளியே போவதற்கு முன் சொன்னாள்.

“பன்னிரண்டுமணிக்கு உள்ளே அனுப்பிடுவாங்க. மகளிடம் ஏதாவது பேசணும்னா பேசிடுங்க.”
அனகா சீதாவைப் பார்த்தாள். என்ன பேச...?
“சீதா”
அனகா ஒரு பெண்ணியவாதியின் திடமான குரலில் மகளை அழைத்தாள்.
“எனக்கு ஆப்பரேசன் நடக்கப் போகிறது. உனக்கு ஏதாவது நான் செய்ய வேண்டியிருந்தால் சொல்”
சீதா முதலில் பதறிப்போனாள். அனகா தொடர்ந்தாள்.

“என்ன வேணுன்னாலும் கேள். என்னால எதையும் செய்து தர முடியும். சர்ஜரி முடிந்து திரும்பி வராமல் போனால் உனக்கு வேண்டியதை செய்து தரவில்லையே என்ற வேதனை என் ஆத்மாவை சங்கடப்படுத்தாமலிருக்கட்டும்... ஏதாவது கேள் மகளே. அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்”

சீதா உடனே பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவள் முகம் குழப்பத்தில் இறுகியது.
டாக்டர்கள் எப்படி இதை அறுத்தெடுப்பாங்க?
சர்ஜரி முடிந்தபின் மார்பு பார்க்க எப்படியிருக்கும்?
இனியொரு பாப்பா பிறந்தால் அம்மா எப்படி பால் கொடுக்க முடியும்?

இப்படியான கேள்விகள் சீதாவை துன்புறுத்தின. அனகாவிற்கு தன் பொறுமையை தானே இழந்து கொண்டிருப்பதை உணரமுடிந்தது.
“உனக்கு வேண்டியதை மட்டும் கேட்டுத் தொல” என்று கத்திவிட்டாள்.
சூழல் இறுகியபோது சீதாவின் முகம் சிவந்தது. தன் டீ சர்ட்டின் முன் பக்கத்தை சங்கடத்துடன் திருகிக் கொண்டே அனகா தன் மகள் எதை கேட்கக் கூடாதென்று பயந்தாளோ அதையே சீதா கேட்டாள்.

“அம்மாவின் முலைப்பால்”

பி.பி. அனகா அதிர்ந்தாள். லிங்காதிபத்யம், விமோசனம், விரும்பியதை அடைதல்- ஒரு மனோ பலத்திற்காக அனகா இதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டாள். பிறகு அவள் ஒரு போராளியின் பிடிவாதத்தோடு தன்மீது போர்த்தப்பட்டிருக்கும் பச்சைநிற உடையின் கழுத்தில் இருக்கும் கயிறுகளை இழுத்து அவிழ்த்தாள்.
“வா..... குடி.”

“நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கும்பொழுது பி.பி. அனகா என்ற உன் அம்மா சக்திமிக்க ஒரு பெண்ணாக இருந்தாள் என்று நீ தெரிந்து கொள்ள வேண்டி, என் மகளுமான உனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக... வா...”
புற்று நோயால் சிவந்து, கறுத்த, சின்ன சின்ன கட்டிகள் முளைத்திருந்த அம்மாவின் முலைகளை சீதா ஒரு முறைதான் நேரெடுத்தாள்.

ஏற்க மறுத்த சூர்ப்பனகையின் மகள் எந்த உணர்வுமற்ற தொனியில் சொன்னாள்.
“எனக்கு லேக்டோஜனே போதும்...”

சென்ஷி

unread,
Dec 9, 2010, 7:55:40 AM12/9/10
to panb...@googlegroups.com

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை

பவா செல்லதுரை


நடுநிசியைத் தாண்டிய மூன்றாம்ஜாமத்தில், அசைவற்றுப் புதருக்குள் பதுங்கியிருந்து, திடீரெனப் பிரவேசிக்கும் ஒரு துஷ்டவிலங்கைப் போல, ஊமையன் எங்கிருந்தோ அத் தெருவுக்குள் நுழைந்தான். அசைவற்றுக்கிடந்த அத்தெருவின் உறக்கம் அவன் எதிர்ப்பார்த்ததுதான். இத்தெரு வீடுகள் ஒவ்வொன்றும் எப்போதோ அவனுக்குள் பதிவாகியிருந்தன. தெரு மனிதர்களின் முகம், வயது, நிறம், குழந்தைகள் குறித்த விபரங்களைப் பத்து பதினைந்து வருடங்களின் தொடர்ச்சி அவனுக்குள் ஏற்றியிருந்தது.

எங்கிருந்து ஆரம்பிக்க?

யோசனை அறுபட ஆறேழு நாய்களின் திடீர் குரைப்பொலி காரணமானது. நிதானித்து, குரைத்த நாய்களைச் சமீபித்து பார்வையால் துளைத்தான். பழக்கப்பட்ட மனித வாசனையால் கட்டுண்டு நாய்கள் குரலடங்கி அகன்றன. உறுதிப்படுத் தலுக்காகத் திரும்பிப் பார்த்து அவன் நின்ற முதல் வீடு நிறைமாத கர்ப்பிணியான மேரிவில்லியம்ஸின் முல்லைப் பந்தல் விரிந்த ஓட்டுவீட்டு வாசல்.

ஒரு விநோத ஒலியெழுப்பி அவன் பேசினான். அச்சமெழுப்பும், ம் ... ம் ... ம் ... என்ற ஒலி, ஒரு அபஸ்வரம் மாதிரி அந்த அமைதியைக் குலைத்து ஒலித்தது.

திகிலுற்றெழுந்த மேரி அவ்வொலியின் முழு அர்த்தத்தை உள்வாங்கினாள். குறட்டைவிட்டுத் தூங்கும் தன் கணவனை நெருங்கிப் படுத்தாள். அவனுக்குள் பதுங்கி, அவன் உஷ்ணத்தை உணர்ந்து தன் மீது படரும் இந்த நச்சுப் பாம்பை உதறிவிட எத்தனித்துத் தோற்றாள். முழிப்புத்தட்டி, எழுந்து படுக்கையில் குப்புற உட்கார்ந்து கொண்டாள். எழுந்து விளக்கைப் போடவும் அச்சம் அனுமதி மறுத்தது.

ம் ... ம்ம் ... ம்ம் ... ஒலியுடன் ஊமையன் விளையாடிக் கொண்டிருந்தான்.

வார்த்தைகளற்ற தன் ஒலி உள்ளே ஒருத்தியின் உடம்பை நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் என்பதை அறிந்தவனாகவோ ... அல்லது அறியாதவனாகவோ...

ஒலியினுள் புதைந்திருந்த வார்த்தைகள் மேரி வில்லியம்ஸ÷க்கு ஒரு ரகசியத்தைப் போல நுட்பமாகப் பதிந்தது.

’இந்தக் குழந்தையும் உனக்குத் தங்காது’

பட்டாம்பூச்சிகள் பறந்து திரிந்த அவள் கனவின் மீது ஊமையன், எரியும் கொள்ளிக்கட்டையை வீசியிருக்கிறான். தீ எங்கிருந்து வேண்டுமென்றாலும் பற்றலாம்.

இருட்டுக்குப் பழக்கப்பட்ட கண்களினூடே, ஆட்டுக் குட்டியை மார்பில் அணைத்து நிற்கும் இயேசுவின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்தாள். கொஞ்சம் தெரிந்தும் தெரியாமலும், இயேசுவும் ஆட்டுக்குட்டியும் போக்குக் காட்டினார்கள்.

தெரு நுனியிலிருந்து ஊமையனின் ஒலி சப்தம் இன்னமும் கேட்டுக்கொண்டிருந்தது. அச்சத்தத்தைக் கேட்க திராணியற்று உட்கார்ந்த வாக்கில் தன் இரண்டு முட்டி கால்களுக்கிடையே முகம் புதைத்துக்கொண்டாள். அந்த அடர்த்தி அவள் அழுகையைக் கட்டுப்படுத்தப் போதுமானதாயில்லை.

பெத்தலகேமில் பிறந்தவரை
போற்றித் துதி மனமே - நீ
பெத்தலகேமில் பிறந்தவரை
போற்றித் துதி மனமே ...

என்ற கீர்த்தனைப் பாடல் ட்ரம்ஸ் சத்தத்தில் மெருகேறி, அந்த இரவின் தனிமையையும், குளிரையும் துரத்தி அடித்தது. மார்கழியில் பதினைந்து நாட்களுக்குத் தொடரும் இப்பஜனைப் பாடல்கள் சபைத்தெருவை கிருஸ்மஸ் கொண்டாட்டங்களுக்குத் தயார்ப்படுத்தும். பெருகும் ட்ரம்ஸ் சத்தம் குழந்தைகளை பஜனைக் குழுவை நோக்கி இழுக்கும் தூண்டில்கள். மப்ளர் சுற்றிப் பனியில் நனைந்து, விடியலைப் பார்த்து, யார் வீட்டிலாவது குடித்த கறுப்பு காப்பி சுவையுடன் திரும்பும் குழந்தைகளுக்கு அன்றிரவு வரை இக்கொண்டாட்டங்கள் மனதைவிட்டகலாது. யார் தலையிலாவது சுமக்கப்படும் பெட்ரோமாக்ஸ் விளக்கொளி இச்சூழலை அப்படியே காப்பாற்றிக்கொள்ளும்.

அப்பாடலை நோக்கி அவள் மனம் நகர முயன்று தோற்றது. கடவுள், கணவன், ஊமையன், பாடல், புகைப்பட ஆட்டுக்குட்டி எதுவுமே பிடிக்காமல் போனது.

கை நிறைய சில்லறைக் காசுகளோடு பஜனைக் குழுவினரை வரவேற்கும் அவள் இயல்பு படுக்கையைவிட்டகலாமல் கிடந்தது. திறக்கப்படாத கதவின் முன் நின்று,

’தேவநாம சங்கீர்த்தன பஜனை

தேவா ... தேவா ...
நித்யபிதா ஒருவருக்கே
நமோஸ்தே ... நமோஸ்தே ...’

என்று குரலெழுப்பி அடுத்த வீட்டை நோக்கி நடந்தார்கள்.

குழுவின் சப்தத்தால் தூக்கம் கலைந்து புரண்டு படுத்த வில்லியம்ஸ், தன் மனைவி இப்படி குப்புற உட்கார்ந்திருந்ததை இயல்பெனக் கருதினாலும், அவளைத் தொட்டு முகத்தைத் திருப்பினான். அந்தச் சிவந்த முகத்தில் நீண்டநேர அழுகையின் படிதல்களைப் பார்த்து அதிர்வுற்றான்.

நீண்டநேர கெஞ்சல், அதட்டல், ஆறுதலுக்குப் பிறகு அவள் ஊமையனின் குறி சொல்லலைச் சொல்லி வெடித்தழுதாள். உள்ளுக்குள் அவனுக்கும் ஒரு பயமிருந்தும் அவளுக்குத் தெரியக்கூடாதெனக் கருதி, தைரியமானவனைப் போல

’அவனே நாக்கறுக்கப்பட்ட ஊமையன். பேச முடியாது. அவன் ஏதோ பிச்சை வாங்க உளறனதைப் போயி பெரிசுபண்ணி இப்படி அழறியே, நீ படிச்சு உத்யோகம் பாக்குற பொம்பளைதானே” என மெதுவானக் குரலில் அதட்டினான்.

”இல்லீங்க, கர்ப்பிணிங்க வீட்டு முன்னாடி அபஸ்வர குரலெழுப்பி அவன் சொன்ன அத்தனையும் பலிச்சிருக்கு, நகோமி டீச்சர் துவங்கி டெய்சி சித்தி வரை” என்று விட்டு விட்டுப் பேசினாள். ...

எங்கேயோ கேள்விப்பட்டதை ஒரு செய்தியாக உள்வாங்கியிருந்தவனுக்குத் தன் வீட்டிலேயே அது நிகழப்போகிறது என்பதை ஒரு செய்தியாக உணரமுடியவில்லை. துக்கத்தின் அடர்த்தி அவனையும் நெட்டித்தள்ளியது. எதுவுமற்றவனாக நடித்து தன் மனைவியைத் தேற்றி தைரியம் சொல்லித் தன் வார்த்தைகளின் உதாசீனத்தால் அவள் காயப்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான். தன் நெருக்கமான ஸ்பரிசம் அவளைத் தேற்றுமென நம்பி, தனக்குள் புதைத்துக் கொண்டான். குளிரோடு துவங்கிய அன்றைய காலை அவர்களுக்கு முடிவின்றியே நீண்டது.

யாருமற்ற தனிமை பயத்தை வாயோடு கவ்விக்கொண்டு அவள் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தது. மீண்டும் தெருவில் கேட்ட ஊமையனின் குரல் நடுக்கமேற்படுத்தியது. கதவைத் திறந்து தெருவை வெறித்தாள். இரவு சொன்ன செய்திக்காக சேகரிக்கப்படும் பகல்நேர பிச்சையில் ஊமையன் மும்முரமாயிருந்தான். கதவுகளினூடான இடைவெளியில் நின்று, எதிர்வீட்டில் நிற்கும் அவனை முழுவதுமாக ஊடுருவினாள் மேரி.

நெடுநெடுவென வளர்ந்த தோற்றம். நல்ல சிவப்பு நிறம். தோல் சுருக்கங்களுக்கிடையே அவன் வயது முதிர்ந்து ஒளிந்திருந்தது. கலர் கலரான அழுக்கு உடைகளை உடம்பு முழுக்கச் சுற்றியிருந்தான். தோளில் மாட்டியிருந்த இரண்டு மூன்று பைகளில் ஒன்று நிரம்பியிருந்தது. கறுப்பு மையால் நெற்றியில் பொட்டிட்டு, பின்னணியில் ஆரஞ்சு கலர் சாந்து பூசியிருந்தான். யாரையும் கிட்ட நெருங்கவிடாத தோற்றம். கண்கள் உள் புதைந்திருந்தது.

சடேரென இவள் வீட்டுப்பக்கம் திரும்பி நின்று என்னமோ நிதானித்து, பின் நிராகரித்து அடுத்த வீட்டிற்கு நகர்ந்தான். கெட்ட செய்தி சொன்ன வீட்டில் தட்சணை என்ன வேண்டியிருக்கு? என்ற தர்மம் அவனுக்குள்ளும் நிரம்பியிருந்திருக்கலாம்.

இச்செய்கையில் மேலும் கலங்கினாள். நேற்றிரவு நடந்தது ஒரு துர்க்கனவு மாதிரியென நினைத்துத் துடைக்க முடியாமல் தன் சரீரத்தில் படிந்திருப்பதை உணர்ந்தாள். கதவை உட்பக்கம் தாழிட்டு படுக்கையறைத் திரைச் சீலையையும் இழுத்துவிட்டு அறையை இருட்டாக்கினாள். கட்டியிருந்த புடவையைத் தளர்த்தி கீழ்வயிற்றில் கைவைத்து குழந்தையின் அசைவை உணர்ந்து அதன் உயிர்ப்பை உறுதிப்படுத்தினாள். வயிற்றுச் சுருக்கங்கள் இழந்த இரு குழந்தைகளின் ஞாபகத்தை வடுக்களாக்கி வைத்திருந்தன.

தெரு கிருஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுத்திருந்தது. பெருகி வழியும் இசை சப்தம், அவ்வப்போது ஆலயத்திலிருந்து கேட்கும் எக்காள பாடல்கள், வீடுகள் பூசிக்கொள்ளும் புது வர்ணங்கள், வீடுகளில் தொங்கின கலர் கலரான நட்சத்திரங்கள், அமைக்கப்பட்ட குடில்கள், வந்து குவியும் வாழ்த்து அட்டைகள் எனச் சூழல் குதூகலமாகிக் கொண்டேயிருந்தது. எதிலும் ஆர்வமற்று ஒரு பிணம் மாதிரி கிடந்தாள் மேரி.

வில்லியம்ஸின் ஆறுதல்கள் பாறைகளில் விதைத்த விதை மாதிரி விரயமாகிக் கொண்டிருந்தன. அன்றிரவு கன்னிமரியாள் ஒரு கழுதையின் மீதேறி யோசேப்புடன் வரும் காட்சி அவள் கனவில் விரிந்தது. கன்னி மரியாளின் வயிற்றில் அசையும் ஒரு குழந்தையின் கருவை மேரி தேடினாள்.

ஏரோதின் பளபளக்கும் வாள் நுனியில் ஒட்டியிருந்த குழந்தைகளின் ரத்தத்துளி ஒன்று தன் முகத்தில் தெறிப்பதை உணர்ந்து திடுக்கிட்டு அலறினாள். நாடெங்கும் சிதறிக்கிடந்த குழந்தைகளின் தலையில்லாத முண்டங்கள் மீண்டும் மீண்டும் அவளுக்குமுன் நினைவுக்கு வந்துகொண்டிருந்தன.

தன் குழந்தையும் இப்படித்தான் அனாதையாகத் தெருவில் கிடக்குமா? அல்லது உத்தான தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுமா என்ற துக்கத்தின் வலி பொறுக்க முடியாமல் துடித்து துடித்து அடங்கினாள். அவளைத் தேற்ற வார்த்தைகளற்ற வில்லியம்ஸ் உள்மனப் புகைச்சலில் குமைந்து கொண்டிருந்தான்.

ஏரோது மன்னனின் போர்வீரர்களின் பூட்ஸ் ஒலிச் சத்தம் மிக சமீபத்திருந்தது. அக்கூட்டத்து வீரர்களின் முகங்களைத் தேடி அலைந்தாள். ஊமையன் போர்வீரர்களுக்கான உடையில், கொலைவெறி மின்னும் கண்களோடு போய்க்கொண்டிருந்தான். அவன் இடுப்புறையில் வாள் வெளியே துருத்திக் கொண்டிருந்தது தெரிந்தது. திடுக்கிட்டு எழுந்து ஜன்னலைத் திறந்து தெருவைப் பார்த்தாள். ஒரு கறுப்புப்பூனை மட்டும் எதிர்வீட்டு மதிற்சுவரில் உட்கார்ந்திருந்தது. தீயைப் போல ஒளிர்ந்த அதன் சிவப்புக் கண்களில் மரணம் ஒளிந்திருப்பதைப் பார்த்து பயந்து தன் அடிவயிற்றை மீண்டும் தடவிப் பார்த்துக் கொண்டாள். பஜனை சப்தமும், மனித நடமாட்டமுமற்ற தெரு இருண்டிருந்தது. தூரத்தில் இருட்டை விலக்கி ஒளிர்ந்து கொண்டிருந்த ஒரு நட்சத்திரம் தெரிந்தது. வான சாஸ்திரிகளுக்கு வழிகாட்டும் நட்சத்திரம் அதுதானென்று நம்பி கைகூப்பி வணங்கினாள். தன் வீட்டுப் பக்கம் அந்த நட்சத்திரம் திரும்பினால், தன் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்று நம்பினாள். நட்சத்திரம் எதிர்திசையில் மேகங்களுக்கிடையே நகர்ந்து கொஞ்ச நேரத்தில் மறைந்தது, மேரிக்கு இன்னும் பயத்தைத் தந்தது.

”என் குழந்தையைக் காப்பாற்றவும் ஒரு ரட்சகர் வேண்டும்”

என முட்டியிட்டு இறைந்து மன்றாடினாள். நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்குமான இடைவெளியைத் தன் மனதால் தொட்ட வண்ணம் அந்த இரவைக் கடந்தாள்.

கிருஸ்மஸ் வெகு சமீபத்திலிருந்தது.

இன்றைய இரவின் நகர்தலில் அதை அடையமுடியும். பகலுக்கான அவசியமின்றி தெரு இருட்டை மின்விளக்குகள் உறிஞ்சி வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன. மார்கழிக் குளிர் பண்டிகைக்கால உற்சாகத்தைக் கொட்டிக்கொண்டிருந்தது. சீரியல் விளக்கொளியும், பெண்களின் ராமுழிப்பும், குழந்தைகளின் புதுத்துணி குதூகலமும், அடுத்தநாள் விடியல் ஒரு குழந்தையின் பிறப்பு உலகம் முழுக்க சந்தோஷத்தை அள்ளி கொட்டப்போகிறதை முன்னறிவிப்பு செய்துகொண்டிருந்தன.

மேரி மாட்டுக்கொட்டகையின் வைக்கோல் படுக்கையில் ரணமான வலியில் முனகிக் கொண்டிருந்தாள். பக்கத்திலமர்ந்து ஜோசப் அவள் தலைமுடியைக் கோதிக்கொண்டிருந்தான். வில்லியம்ஸ்சின் மடியில் மேரி சலனமற்றுப் படுத்திருந்தாள். மொழியற்ற ஒரு சத்தம் அவளை முடக்கிப் போட்டிருந்தது. அன்று இரவு ஆராதனை அவர்களின்றி இயேசுவின் பிறப்புக்காக நடந்தேறியது.

பட்டாசுகள் வெடிக்க மீண்டும் ட்ரம்ஸ் ஒலி முழங்க, கிருஸ்மஸ் தாத்தா வேடம் போட்ட ஒருவர் கையில் சாக்லெட் நிரப்பப்பட்ட பெரிய பக்கெட்டில் கைவிட்டு அள்ளி அள்ளி ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். கொத்துகொத்தான சந்தோஷத்தில் தெரு நிரம்பிக் கொண்டிருந்தது.

ட்ரம்ஸ் சத்தம் உச்சத்திற்கு போய்க்கொண்டிருந்தது.

”சர்வத்தையும் படைத்தாண்ட
சர்வ வல்லவர் - இங்கே
பங்கமுற்ற பசுந்தொட்டியில்
படுத்திருக்கின்றார்.”

ஆராதனை முடிந்த பகல்நேர பஜனைக் குழுவினரின் நடை, கிட்டத்தட்ட ஓட்டமாக மாறியிருந்தது. ஒவ்வொருவரின் முகத்திலும் பண்டிகையின் மகிழ்ச்சியும், அவசரமும் இருந்தது.

அழுது வீங்கின முகத்தோடு மேரி வாசற்கதவைப் பிடித்துக் கொண்டு தனியாக நின்றிருந்தாள். யாருமற்றுப்போன வெளி அவளைச் சுற்றிப் படிந்திருந்தது. சத்தத்தின் வலி பொறுக்காமல் எங்காவது வனாந்தரத்தை நோக்கி ஓடிப்போய் விடமுடியுமா? என்ற தவிப்பிருந்தது.

வீட்டிற்குள் திரும்ப நினைத்த அவள் கையைப் பிடித்து விரித்து, கிருஸ்மஸ் தாத்தா நிறைய சாக்லெட்டுகளைத் திணித்தார்.

”எதுக்கு இவ்ளோ?”

”நேற்றிரவு நம் கன்னிமரியாளுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது.”

”எந்தச் சேதாரமுமின்றியா?”

எதிர்பாராத இக்கேள்வியால் கிருஸ்மஸ் தாத்தாவின் கைகள் லேசாக நடுங்கின. சமாளித்து,

”தாயும் சேயும் பூரண நலம்”

மேரி ஒரு கன்றுக்குட்டி மாதிரி துள்ளிக் குதித்து வீட்டிற்குள் ஓடி ஒரு ட்ரே நிறைய கேக்குகளையும், பலகாரங்களையும் அடுக்கிக் கொண்டிருந்தாள் பஜனைக் குழுவினருக்குக் கொடுக்க.
Reply all
Reply to author
Forward
0 new messages