படித்ததில் பிடித்தது

82 views
Skip to first unread message

sadayan sabu

unread,
Jun 13, 2012, 10:23:24 AM6/13/12
to panbudan

 நீதிபதி இஸ்மாயீல் அவர்களுக்கு கர்நாடக இசையின் மீது ஓர் அபார ஈர்ப்பு இருந்ததை அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் நன்கறிவார்கள். ஓய்வு நேரத்தில் சங்கீதம் கேட்பது அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்தது.

இஸ்லாமியரான இஸ்மாயீலுக்கு கர்நாடக சங்கீதத்தின் மீது எப்படி ஏற்பட்டது இந்த இசையார்வம் என்று வியப்போருண்டு. பொதுவாகவே முஸ்லீம்களுக்கும் கர்நாடக இசைக்கும் 'மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரம்' என்ற அபிப்பிராயம் பரவலாகவே நிலவி வருகிறது.

'அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?' என்று வினவத் தோன்றும்.

நாகூருக்கும் கர்நாடக இசைக்கும் உள்ள நெருக்கம் இன்று நேற்று உண்டானதல்ல. இந்த உண்மையை முழுமையாக விளங்கியவர்கள் "ஆம்! அப்துல் காதருக்கும் அமாவசைக்கும் சம்பந்தம் உண்டு" என்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்வார்கள்.

நாகூரில் பிறந்த இஸ்மாயீல் அவர்களின் உள்ளத்தில் சிறுவயது முதலே இசையுணர்வு ஊற்றெடுத்தது என்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது. காரணம் நாகூருக்கும் கர்நாடக இசைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு காலங்காலமாய்த் தொடர்ந்து வருகின்ற ஒன்று.

நீதிபதி அவர்களின் இசையுணர்வை அலசுவதற்குமுன் நாகூருக்கும் கர்நாடக இசைக்கும் இடையே நிலவி வரும் பந்தத்தை ஒருமுறை ஆராய்ந்துப் பார்த்தல் நலம்.

"பதினாறு வயதினிலே" என்ற படத்தில் "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு" என்று தொடங்கும் பாடலில்

"கிட்டப்பாவின் பாட்டை கேட்டு சின்னப்பாவை நேரில் பார்த்தேன்
கொட்ட கொட்ட வருகுதம்மா சங்கீதமா பெருகுதம்மா"

பிரபலமான இவ்வரிகளை முணுமுணுத்திருக்காதவர்கள் யாரும் இருந்திருக்க முடியாது. யார் இந்த கிட்டப்பா?

நாடகத்துறையிலும், இசைத்துறையிலும் முடிசூடா மன்னராக கோலோச்சியவர் எஸ்.ஜி.கிட்டப்பா (1906–1933) என்பது ஊரறிந்த விஷயம். இவருக்கு குருவாக இருந்து இசையை கற்றுத் தந்தவர் நாகூர்க்காரர் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? எஸ்.ஜி.கிட்டப்பா அவர்கள் கே.பி.சுந்தரம்பாளின் கணவர் என்பது மற்றுமொரு சுவையான விஷயம்.

செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த கங்காதர ஐயர் தன் புதல்வர்களாகிய காசி ஐயர், கிட்டப்பா, இருவரையும் நாகூர் தர்கா ஆஸ்தான வித்வானாக விளங்கிய உஸ்தாத் தாவுத் மியான் அவர்களிடம் இசை பயில அனுப்பி வைத்தார் என்ற உண்மை பலருக்கும் தெரிய நியாயமில்லை.


உஸ்தாத் தாவூத் மியான் (இறப்பு: 1940), இந்துஸ்தானி மற்றும் கர்னாடக இசையில் பெரும் புலமை வாய்ந்தவர். இவரது தாத்தா உஸ்தாத் சோட்டு மியானிடமிருந்தும், நன்னு மியானிடமிருந்தும் இசையைக் கற்றுத் தேர்ந்தார். இவரது சகோதரர் உஸ்தாத் கவுசு மியானும் நாகூரில் புகழ்பெற்ற இசைக்கலைஞராக பெயர் பெற்று திகழ்ந்தார். உஸ்தாத் தாவுத் மியானிடம் பயிற்சி பெற்றதனால் கிட்டப்பாவின் பாடல்களில் சிற்சமயம் இந்துஸ்தானி சாயல் காணப்பட்டதாக விமர்சனம் செய்வோருண்டு.

உஸ்தாத் தாவுத் மியானின் இன்னொரு மாணவர் நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர் அவர்கள். கர்னாடக இசையுலகில் ஒரு நிரந்தர இடத்தை தனக்கென தக்க வைத்துக் கொண்டவர்களில் இவரும் ஒருவர். இவரது பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் வாசித்திருக்கிறார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் எஸ்.எம்.ஏ.காதர் அவர்களின் சங்கீத ஞானத்தைப் பற்றி கேள்வியுற்று ஆசி பெற்றுச் சென்றது இன்னொரு சுவையான செய்தி. 'குடத்திலிட்ட விளக்காக' சங்கீத மேதை எஸ்.எம்.ஏ.காதரின் பெருமை ஊருலகத்திற்கு தெரியாமல் போனது ஒரு துரதிருஷ்டமே.

இசைவாணர் எஸ்.எம்.ஏ.காதர் அவர்களால் உருவாக்கப்பட்ட மாணவர்களில் முதன்மையான சீடர் "இசைமணி" எம்.எம்.யூசுப் அவர்கள். இவர் சென்னை அண்ணாமலை மன்றத்தில் ‘இசை மணி’ என்ற பட்டம் தந்து சிறப்பிக்கப் பெற்றார். அச்சமயம் இவருடன் அதே மேடையில் "இசைமணி" பட்டம் பெற்றவர்களில் சீர்காழி கோவிந்தராசனும் ஒருவர்.

இவ்வாறாக 'அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும்' நிறையவே பொருத்தங்கள் நிலவி வந்தன.

ஷெனாய் இசையும், நாதஸ்வர இசையும் ஒருங்கேற கேட்டு வளர்ந்த இஸ்மாயீல் அவர்களின் மனதில் இசையுணர்வு வேரூன்றி இருந்ததற்கு நாகூரின் மண்வாசனையும் ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்.

அதுமட்டுமல்லாது பொதுவாகவே நீதிபதிகளுக்கும் கர்நாடக இசைக்கும் ஓர் இணைபிரியாத பந்தம் தொன்றுதொட்டு தொடர்ந்து வருவது மறுக்க முடியாத இன்னொரு உண்மை. நீதிபதி இஸ்மாயீலும் இதற்கு விதிவிலக்கல்ல.

1962-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.எல்.வெங்கட்ராமய்யர் கர்நாடக இசைப்பாடல் பாட, அன்றைய பப்ளிக் பிராசிக்யூட்டர் வி.பி.ராமன் வயலின் வாசிக்க ஓர் அரிய இசை நிகழ்ச்சி அப்போது நடந்தேறியது. நீதிபதி டி.எல். வெங்கட்ராம ஐயர், இசைப் பேரரசி டி.கே. பட்டம்மாளுக்கும். முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனைகளைக் கற்றுத் தந்த ஆசான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நீதிபதி இஸ்மாயீலுக்கு கர்நாடக இசையின் மீது ஒரு பிடித்தம் ஏற்பட்டதற்கு அவர் வளர்ந்த விதம், அவருடன் உறவாடிய வைணவப் பிராமணர்கள், அவரது தொழில்முறை சகாக்கள் - இவர்களும் ஒரு முக்கியக் காரணம் என்று கூறலாம்.

 முஸ்லீம் பிரமுகர்களில் நீதிபதி இஸ்மாயீல் ஒருவர் மட்டுமே கர்நாடக இசையின் மீதி அலாதியான பிரியம் வைத்திருந்தவர் என்று கூற இயலாது. டாக்டர் அப்துல் கலாமும் ஒரு நல்ல உதாரணம். டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு வீணை வாசிக்கவும் தெரியும்.

2002-ஆம் ஆண்டு, சென்னை மியூசிக் அகாதெமி இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களுக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கியபோது, உடல்நல குறைவால் அவ்விருதை அவர்கள் நேரே சென்று பெற முடியாத நிலையில், வீட்டிற்கு நேராகவே சென்று அவ்விருதை வழங்கியவர் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.

நீதிபதி இஸ்மாயீல் அவர்களைப் போலவே முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தீவிர ரசிகராவார்.

 இசையரசிக்கும், இலக்கியச் செல்வருக்கும் இடையே இருந்த பரஸ்பர உறவை ஒரு சில வார்த்தைகளுக்குள் அடக்கிவிட இயலாது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் தேவதாசி குலத்தில் பிறந்தவர். தனது இனிஷியலாக, தான் பிறந்த ஊரையும், தன் தயார் பெயரையும் "எம்.எஸ்." என்று இணைத்துக் கொண்டவர். சாதாரணமாக தந்தை பெயரையே இனிஷியலாக கொண்டு இயங்கும் சமூகத்தில் எம்.எஸ்.அவர்களின் செயல் புரட்சிகரமாக பேசப்பட்ட அதே சமயத்தில் அவரை சந்தேகக் கண்கொண்டும் உலகம் பார்த்தது.

"எம்.எஸ்." என்பதன் விரிவாக்கம் - Madurai Shanmukavadivu - என்பதாகும். எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் புகழின் உச்சியில் இருந்தபோதும் கூட தன் தந்தையைப் பற்றிய முழுவிவரத்தை ஏனோ பகிரங்கமாக அறிவிக்காமலேயே இருந்தார். வெகுகாலம்வரை வெளியுலகத்துக்குத் தெரியாதவாறு இந்த ரகசியம் பரம ரகசியமாகவே அவரால் பாதுகாக்கப்பட்டு வந்தது. வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்தால் போதாதா? புகழ்பெற்ற பாடகர் மதுரை புஷ்பவனம் ஐயர்தான் அவரது தந்தை என்று பலரும் அனுமானித்து பலரும் பலமாதிரி பேசி வந்தனர்.

நீதிபதி இஸ்மாயீல் அவர்களின் வாயிலாகத்தான் அவரது தந்தை சுப்பிரமணிய ஐயரைப் பற்றிய விவரங்கள் வெளியுலகுக்கு பரவலாகத் தெரிய வந்தது.

சுப்புலட்சுமியின் தந்தைஅதற்கு முன்பு ஒருமுறை, அதாவது 1980-ஆம் ஆண்டு பத்திரிக்கைத் துறையில் பணியாற்றிய தன் உறவுக்காரப் பெண்ணுக்கு அளித்த பேட்டியில்தான் எம்,எஸ்.அவர்கள் முதன்முறையாக தன் தந்தையைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தார். ஆனாலும் அந்த விவரங்கள் பொதுமக்களை பெருமளவு சென்று அடையவில்லை.

1990-ஆம் ஆண்டு, இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி கம்பராமாயணப் பாடல்களை இசைத்தட்டில் பதிவு செய்ய எண்ணினார். அதற்கான ஆயத்தங்களை அவர் மேற்கொண்டபோது அவர் கலந்தாலோசனை செய்தது நீதிபதி இஸ்மாயீல் அவர்களிடம்தான். இசையரசிக்கு இஸ்மாயில் சொன்ன யோசனை இதுதான். கம்பராமாயணப் பாடல்களை முதலில் மனனம் செய்து, அதன் பொருளுணர்ந்து அதன் பின்னர் பாடல் பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொண்டார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களும் ஒரு பவ்யமான சிஷ்யையைப் போன்று அவ்வப்போது கம்பராமாயணத்தைப் பற்றிய சந்தேகங்களையும் அதன் அருஞ்சொற்பொருளையும் அவ்வப்போது ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துக் கொண்டார்.

நீதிபதி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க கம்பராமாயணப் பாடல் பதிவின்போது இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் தன் கைவசம் பாடல் குறிப்பு ஏதுமின்றி மனனமாய் தப்புத் தடங்களின்றி சரளமாய் பதிவினை அரங்கேற்றினார் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

அதே 1990-ஆம் ஆண்டு "கம்பராமாயண பாடல் வெளியீட்டு விழா"வுக்கான ஆயத்தங்கள் தடபுடலாக நடந்தது. அவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த நீதிபதி அவர்கள் இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு ஓர் இன்ப அதிர்ச்சி அளித்தார். யாரும் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி அது.

தாம் நன்கறிந்திருந்த பி.எஸ்.சுப்பிரமணிய ஐயர் பற்றி நீண்ட நேரம் புகழ்ந்து பேசினார் நீதிபதி அவர்கள். பக்திமானாக இருந்த அவர் புகழ் பெற்ற வழக்கறிஞரும் கூட. இந்த பி.எஸ்.சுப்பிரமணிய ஐயர் வேறு யாருமல்ல. இசையரசின் தகப்பனார்தான். இந்த மேடையில் அவர் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தந்தை மீது அளவற்ற அன்பு வைத்திருந்த எம்.எஸ்.அவர்கள் மனம் நெகிழ்ந்துப் போனார். தந்தையுடன் தான் கழித்த இளம்பிராய நினைவுகள் ஒவ்வொன்றும் அவரது நினைவில் பெருக்கெடுத்தன. இசையரசியின் தந்தையார் மறைந்தபோது அவருக்கு வெறும் பத்து வயதுதான் நிரம்பியிருந்தது. தந்தையைப் பற்றிய விவரங்களை இதுநாள்வரை பகிரங்கப்படுத்தாமலிருந்த எம்.எஸ்.அவர்களுக்கு தந்தை மீது அன்பும் பாசமும் இல்லாமலில்லை. நிறையவே இருந்தது.

எம்.எஸ்.அவர்களின் கணவர் கல்கி சதாசிவம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக அறிந்து வைத்திருந்த ஊடகவுலகம், எம்.எஸ். அவர்களின் தந்தையைப் பற்றிய விவரங்களை அன்றுதான் முழுமையாக அறிந்துக் கொண்டது.

தன் தகப்பனாரைப் பற்றிய சில சுவையான செய்திகளை நீதிபதி அவர்கள் மேடையில் பகிர்ந்தபோது இசையரசி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அதைக்காட்டிலும் மேலும் ஓர் இன்ப அதிர்ச்சி அவருக்கு அந்த மேடையில் காத்திருந்தது. சொற்பொழிவின் இறுதியில் அவரது தகப்பனாரின் பெரிய உருவப்படத்தை பரிசாக அளித்து அவரை திக்குமுக்காட வைத்தார் நீதிபதி அவர்கள். "தன் வாழ்க்கையில் தான் பேரானந்தம் அடைந்த நாள் இது" என்று இசையரசி தன் சகாக்களிடம் இதுபற்றி பெருமை கொண்டாராம்.

நீதிபதி பரிசளித்த தன் தந்தையின் உருவப்படத்தை பின்னர் அவர் தன் வீட்டின் வரவேற்பறையில், வீணையுடன் அமர்ந்திருக்கும் தாயார் சண்முக வடிவு புகைப்படத்துக்கு இணையாக அதனை மாட்டி வைத்து போற்றி பாதுகாத்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.அவர்களின் வீட்டுக்கு வருபவர்கள் அந்த புகைப்படத்தைப் பார்த்து தந்தைக்கும் மகளுக்கும் இடையே இருந்த உருவ ஒற்றுமையை சிலாகித்து பேசுகையிலெல்லாம் அவர் ஆனந்தத்தில் திளைத்துப் போவார்.

இந்நிகழ்ச்சிக்குப்பின் நீதிபதி அவர்களின் மீது எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு அதிகமானது என்பதை கூறவும் வேண்டுமோ?

கெளஸல்யா சுப்ரஜா ராமபூர்வா
ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட தரசார்ந்தூல கர்த்தவியம்
தைவ மாவஹ்நிகம்...

என்று தொடங்கும் வெங்கடேச சுப்ரபாதத்தை பாடிப் புகழ் பெற்றவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி என்பது எல்லோரும் தெரிந்து வைத்திருக்கும் செய்தி. இப்பாடலை இயற்றியவர் "பிரதிவாதி பயங்கரம்" என்ற பட்டப் பெயர் கொண்ட அண்ணங்காச்சாரியார் என்பவராவார். எம்.எஸ்,சுப்புலட்சுமியை புகழின் உச்சத்துக்கு கொண்டுச் சென்ற பாடல் இது.

அண்ணங்கராச்சாரியார் பெருமளவு மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த நபர் யாரென்றுச் சொன்னால் அவர் நீதிபதி இஸ்மாயில் அவர்கள்தான். இஸ்லாமியராக இருந்த போதிலும் ஹிந்து மத அன்பர்களின் அன்புக்கும் பாசத்திற்கும் இலக்கணமாகத் திகழ்ந்தார் நீதிபதி அவர்கள். இவருக்குக் கடிதங்கள் எழுதும்போது, "உலகம் போற்றும் உத்தம" என்று தொடங்கித்தான் கடிதம் எழுதுவாராம் அண்ணங்கராச்சாரியார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களுக்கும் நீதிபதி இஸ்மாயில் அவர்களுக்குமிடையே ஏகப்பட்ட ஒற்றுமைகள் உண்டு. இருவருமே மூதறிஞர் ராஜாஜியுடன் நெருங்கிப் பழகியவர்கள்.

காந்தீயக் கொள்கை மற்றும் கம்பராமாயண ஆய்வு இவைகளினால் இஸ்மாயீலுக்கும் ராஜாஜிக்கும் தொடர்பு இருந்தது. நீதிபதி அவர்கள் எழுதிய "மௌலானா அபுல்கலாம் ஆசாத்" வாழ்க்கை வரலாற்று நூலுக்கு முன்னுரை தந்து பெருமைப்படுத்தியவர் மூதறிஞர் இராஜாஜி.

அதேபோன்று 1966-ஆம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி ஐ.நா. சபையில் உலக அமைதியை வலியுறுத்தி மூதறிஞர் ராஜாஜி எழுதிய 'மே தி லார்ட் பர்கிவ் அவர்சின்ஸ்' என்னும் ஆங்கிலப்பாடலையும், " குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா" என்று தொடங்கும் தமிழ்ப்பாடலையும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் ஐ.நா.சபையில் பாடி வரலாற்றுச் சாதனை நிகழ்த்தினார். இப்பாடல்களை எழுதியவரும் மூதறிஞர் ராஜாஜிதான்.

இருவருடைய மரணத்தின்போதும் ஒரு நிகழ்வுப் பொருத்தம் நடந்தது.

2005-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியபோது டிசம்பர் 26 நிகழ்ந்த சுனாமி பேரழிவில் உயிரிழந்த 8,000 பேர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேறியது. அதே மன்றத்தில் மறைந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும், மறைந்த இலக்கியச் செல்வர் இஸ்மாயீல் அவர்களுக்கும் ஒரு சேர இரங்கல் தீர்மானம் நிறைவேறப்பட்டது.

இருவரின் இறப்புக்கும் இடையில் இருந்த இடைவெளி நாட்கள் ஒருமாதத்திற்கும் குறைவான நெருக்கத்தில் இருந்தது.

நீதிபதி இஸ்மாயீல் அவர்களின் இலக்கிய அறிவை இனிவரும் பதிவில் ஆழமாக ஆராய்வோம்.

- அப்துல் கையூம்

தமிழ்ப் பயணி

unread,
Jun 13, 2012, 11:57:11 AM6/13/12
to panb...@googlegroups.com
மிகவும் சு​வையான, ​நெகிழ்ச்சியான கட்டு​ரை.

நன்றிங்க ச​டையன் சாபு அவர்க​ளே.

2012/6/13 sadayan sabu <sadaya...@gmail.com>

 நீதிபதி இஸ்மாயீல் அவர்களுக்கு கர்நாடக இசையின் மீது ஓர் அபார ஈர்ப்பு இருந்ததை அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் நன்கறிவார்கள். ஓய்வு நேரத்தில் சங்கீதம் கேட்பது அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்தது.



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

The Gods Must Be Crazy – 1,2

sadayan sabu

unread,
Jun 13, 2012, 8:41:36 PM6/13/12
to panb...@googlegroups.com

நன்றி சகோதரரே


கம்பராமாயணத்தில் "வாலியை இராமன் கொன்றது முறையா?" என்ற கேள்வி காலங்காலமாய் விவாதத்திற்குரிய பொருளாக பட்டிமன்றத்தில் பவனி வருகிறது. இதனை அடிப்படையாய்க் கொண்டு வாதி பிரதிவாதங்களை முன்வைத்து "மூன்று வினாக்கள்" என்ற நூலில் "வாலியை இராமன் கொன்றது சரிதான்" என தீர்ப்பளித்திருந்தார் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் அவர்கள்.

இந்நூலைப் படித்துவிட்டு பெரியவர் காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி "நீங்கள் ஒரு தலைமை நீதிபதி. நீங்கள் இராமனுக்கே நீதி வழங்கி விட்டீர்கள்" என்று புளகாங்கிதம் அடைந்தார்.


2012/6/13 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

VJagadeesh

unread,
Jun 17, 2012, 1:21:28 PM6/17/12
to nadp...@googlegroups.com, பண்புடன்
17 ஜூன் 2012, 18:57 க்கு ·இல் Vishal Rajaஆல் எழுதப்பட்டது

பிறழ்வு (சிறுகதை)



அருண் மதியம் பார்த்த ரயில் நிலையம் இதுவல்ல.எரிந்துக் கொண்டிருந்த தண்டவாளங்களும் இறுகிப் போய் மூச்சழுத்தி திமிறிய ரயிலும் வண்ணங்களழிந்த முகங்களுமாய் அடிமனதை புரட்டிய ரயில் நிலையம் கூடடையும் பறவைகளின் வானத்தில் கரும்புள்ளியாய் தொலைந்து போய்விட்டிருக்க வேண்டும்.  பகல் பொழுதின் அனல் கோடுகள் உண்டாக்கிய இறுக்கம் முற்றிலுமாக தளர்ந்து போக இதமாக வீசி  வருடியது நள்ளிரவின் மென்காற்று.சப்தங்கள் வடிந்து போன இந்த இடம் அவன் கற்பனையே செய்திராத அளவிற்கு ரம்மியமாக இருந்தது.கழுத்தை திருப்பி கண்களை அங்குமிங்கும் மேயவிட்டவன் தெருவிளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் மங்கலாய் நீண்ட இருளை ஊடுருவி பார்க்க முயற்சித்தான்.ரயில் நிலையத்தினிலிருந்து இறங்கி சாலைக்கு போகும் வழியில் மின்கம்பம் பக்கமாய் ஒரு வண்டிக் குதிரை  வெம்மையாய் மூச்சுவிட்டு நின்றுக்கொண்டிருந்தது. வெள்ளை ரோமங்களின் மேல் பூசியது போலிருந்த பழுப்பு கோடுகள் அதன் உடல்வாகிற்கு கொஞ்சமும் பொருந்தமில்லாமல் அந்நியமாய் துருத்திக் கொண்டிருந்தன.குதிரைக்கு பின்னிருந்த பழைய வண்டியில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான் அதன் வண்டிக்காரன்.குதிரைக்கருகே சாலை விரிவாக்கத்தில் இடிந்துப்போன ஒரு பழைய கட்டிடம் ஒடிந்து பெயர்ந்த செங்கற்களும் வளைந்த கம்பிகளுமாய் பார்க்க பரிதாபமாய் காட்சி தந்துகொண்டிருந்தது.சாய்ந்து கிடந்த சுவரில் கை ஊன்றி சமதளத்தில் நீளமாய் படிப்போலிருந்ததின் மேல் அருண் உட்கார்ந்துக்கொண்டான்.

 

அறைக்கு செல்லக்கூடாது என முடிவெடுத்ததும் அருண் முதலில் கடற்கரைக்குதான் செல்ல நினைத்தான்.அவன் ரயில் நிலையத்திற்கு வந்தபோது மணி மதியம் மூன்று.அப்பொழுது கிளம்பியிருந்தாலும் ஆறு ஆறரைக்கெல்லாம் கடற்கரைக்கு போய் சேர்ந்திருக்கலாம். இன்றைக்கு பௌர்ணமி வேறு.கடல் தேவ உருவாய் அலைகளை எழுப்பிக்கொண்டிருக்கும்.நிலவுக்கு கீழே நீல சமவெளியென நர்த்தனம் புரியும் கடல்தான் எவ்வளவு அழகு.ஆனால் அவனுடைய அனுபவம் வேறு மாதிரியானதாக இருந்தது.முன்னரொரு ஞாயிற்றுக்கிழமை பெசன்ட் நகர் கடற்கரையில் நின்று அவன் முழுநிலவை பார்க்க ஒரு நூற்றாண்டின் துயரம் மொத்தமாய் அவனை சூழ்ந்துக்கொண்டு நெருப்பில் நெளியும் புழுவாய் துடிக்க வைத்தது.ஒரு நூற்றாண்டு துயரத்தை ஒரே தினத்தில் ஒற்றை ஆளாய் சுமக்க நேர்வதன் அவலத்தை அதன் வலியை அநுபவித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.அந்த கடற்காற்றிலும்கூட அவனுக்கு அப்படி வியர்த்துவிட்டது. தோலில் கைப்பையை  மாட்டிக்கொண்டு கால் அழுத்த நடக்கும் குடும்ப தலைவிகள், செல்போனில் கடற்கரையை படமெடுத்துக் கொண்டிருக்கும் குடும்ப தலைவர்கள், வேகமாய் ஓடி தடுக்கி விழும் சிறுபிள்ளைகள், அதிர்ந்து சிரிக்கும் யுவன்கள்,பிதுங்கி வழியும் உடல் கொண்ட சுடிதாரில் பாந்தமாய் பொருந்தும் உடல் கொண்ட குச்சி போன்ற ஒல்லியான உடல் கொண்ட உடல் கொண்ட உடல் கொண்ட யுவதிகள் யுவதிகள் என தான் கண்ட அனைவருமே சந்தோஷமாயிருந்தது அவனை இன்னும் அதிகமாய் எரிச்சல் கொள்ள செய்தது. தனக்கு மறுக்கப்பட்ட ஏதோ ஒன்றால் எல்லோரும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தால் மனதளவில் புழுங்கி தவித்தான்.அதிலும் குறிப்பாக இளம்பெண்களின் ஆனந்தம்தான் அவனை தன்னை மிஞ்சிய சித்திரவதைக்கு ஆளாக்கியது.அந்த சிவப்பு நிற சல்வாருக்கு என்ன அப்படியொரு இளிப்பு?இங்கிருக்கும் அத்தனை பெண்களையும் கடற்கரையிலேயே வைத்து வன்புணர்ச்சி செய்ய வேண்டும்  என்று நினைக்கிற அளவிற்கு அவனது மனம் சடுதியில் வன்மம் கொண்டது. இந்த பெண்கள் எல்லோரும் வலியில் அலற அதன் எதிரொலி கடலிலிருந்து வெளிப்பட்டால் எப்படியிருக்குமென யோசித்து பார்த்தான்.சட்டென்று தான் ஏன் இப்படி வக்கிரம் பிடித்தவனாக மாறினோம் என்ற கேள்வி மனதுள் எழுந்து அவனை கழிவிரக்கம் கொள்ளச் செய்தது. எல்லாவற்றிற்கும் காரணம் இந்த கடல் தான்.கடலும் அதன் ஈரநிலமும் அவனது மனதை சாக்கடையாக்கி நாற்றமெடுக்கச் செய்தன. நடுக்கடலில் நின்று மூத்திரம் பெய்தாலொழிய இப்பொழுதிற்கு தன் ஆத்திரம் தீராது என்று தோன்றியது அவனுக்கு.

 

மதியம் தொடங்கி இரவின் இந்த கணம் வரை அங்கேயும் இங்கேயுமென வெறுமனே அலைந்து கொண்டிருந்ததிலேயே நேரம் தீர்ந்துவிட்டது. காலையில் கல்லூரிக்கு சென்றபோது சாதாரணமாக என்றைக்கும் செல்வதைப் போல்தான் கிளம்பினான்.கொஞ்சம் நஞ்சமென்றில்லாமல் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது உச்சிவெயில்.மதியம் சாப்பாட்டு இடைவெளியின் போது எல்லோரும் கேன்டீனுக்கு போய்விட இவன் மட்டும் தனியாய் வகுப்பிலேயே உட்கார்ந்து கொண்டான். என்னென்னவோ சிந்தனைகளில் உழன்று மனம் பித்து பிடித்தது மாதிரி அரற்றிக்கொண்டிருந்தது. கரும்பலகையில் சுருக்கங்களை உடைய அப்பாவின்  முகமும் எப்பொழுதும் கோபித்துக் கொண்டேயிருக்கும் அம்மாவின் முகமும் பூதாகரமாய் விரிந்து பயமுறுத்தின.கால்களை எழுத்து மேஜையின் இரும்பு கம்பியில் பிணைத்துக் கொண்டு இரு கைகளாலும் இருக்கையை மூர்க்கமாய் குத்தத் தொடங்கியவனின் வலது காது மடல் சிவந்துப் போய் நடுங்கிகொண்டிருந்தது. அப்பொழுதுதான் கிரி வகுப்பிற்குள் நுழைந்தான். தனக்கு அருகில் வந்து தனது தோல்களை அதிர்ச்சியோடு பற்றிய கிரியை தள்ளிவிட்டு அவன் சுதாரிப்பதற்குள் முகத்தில் ஒரு அறை விட்டான் அருண். இப்பொழுதுவரை கிரியை ஏன் அடித்தோம் என்பது அருணுக்கு தெரியாது.இன்னமும் கூட அந்த நிகழ்வு யாரோ மூன்றாவது மனிதருக்கு நடந்தது மாதிரியும் அதை எவனோ தன்னிடம் சொல்ல கேட்டது மாதியும்தான் இருக்கிறது.

 

குதிரை லேசாய் கனைத்தது.யாரோ நகரும் ஓசை கேட்டது.குதிரை வண்டிக்காரன் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். கசங்கிய லுங்கியும் அதற்கு சம்பந்தமேயில்லாத அடர் நீல சட்டையுமாய் காண்பதற்கே விசித்திரமாக இருந்தவன் நிச்சயமாக இந்நேரத்தில் அருணை இந்த இடத்தில் எதிர்பார்த்திருக்க மாட்டான். சொல்லபோனால்,அவன் எந்த வகையிலுமே இன்னொரு மனிதனின் இருப்பை அங்கே எதிர்பார்த்திருக்க மாட்டான்.அது சரி,அருண் மட்டும் இங்கொரு குதிரையையும் பைத்தியக்காரத்தனமாய் ஆடை உடுத்தியிருக்கும் அதன் வண்டிக்காரனையும் எதிர்பார்த்தானா என்ன?எல்லாம் விதி.வண்டிக்காரன் அருண் அருகே வந்தமர்ந்தான்.

 

- இந்நேரத்துல இங்க என்ன நைனா பண்ணுற?

- .....

-பதில் சொல்லாக்காட்டி எப்புடி? வூட்ல எதுனா ப்ராப்ளமா?ஓடியாந்துட்டியா?

 

சாராய வீச்சம் அருணை வெறுப்புற செய்தது.எதையும் கண்டுகொள்ளாத மாதிரி அமைதியாய் தன் பாட்டிற்கு கண்களை மூடிக்கொண்டான்.

 

சட்டென்று ராஜலட்சுமியின் ஞாபகம் வந்தது அவனுக்கு. அவன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தபோது உடன் பயின்றவள் ராஜலட்சுமி.அவள் மீது அவனுக்கு பிரத்யேக கவனம் என்று எதுவும் கிடையாது. சிறுநகரத்தின் வழமையான முகமும் வாளிப்பற்ற உடலும் கொண்டவளின் கண்கள் சின்னதாய் இருக்கும்.அந்த வருடம்தான் அவன் படித்துக்கொண்டிருந்த பள்ளியில் வந்து புதிதாய் சேர்ந்திருந்தாள் அவள்.எப்பொழுதும் சாதாரணமாய் இருப்பவள் திடீரென ஒரு நாள் காலை இடைவெளியின் போது ரிக்கியைப் போட்டு செமத்தியாக அடிக்க துவங்கிவிட்டாள். சைக்கிள் கேரியரோடு புத்தக பையை கெட்டியாய் இணைக்க பயன்படும் எலாஸ்டிக் கயிறால் ரிக்கியின் கழுத்தை சுற்றிவிட்டு இயற்பியல் புத்தகத்தை கொண்டு அவனது தலையிலேயே ரௌத்திரம் தெறிக்க அவள் சாத்தி விளாசியதில் எல்லோரும் மிரண்டே போனோம். யாருக்குமே எதுவுமே புரியவில்லை.சர்க்கஸில் பழக்கப்பட்ட யானை எதிர்பாராவிதமாக மதம் கொண்டு பார்வையாளர்களை தாக்க முற்பட்டால் எப்படியிருக்கும்? உறைந்து போய் நின்ற நாங்கள் இயல்பிற்கு திரும்பு வருவதற்குள் அவளது கோபம் வற்றிபோயிருக்க வேண்டும்.அடித்தடித்து ஒரே மட்டாக ஓய்ந்து போனவள் கண்களில் நீர்த்துளிகள் மின்ன புத்தகத்தை வாசற்பக்கம் வீசியெறிந்தாள்.

 

கிரி கன்னத்தை தடவியபடியே எழுந்திருத்தபோது பாலாஜியும் இன்னும் மூன்று பேரும் வகுப்பிற்குள் வந்துவிட்டிருந்தார்கள்.அருணுக்குள் கோபம் சிகரெட்டில் எரியும் புகைப்போல் கசப்பாய் தகித்துக்கொண்டிருந்தது.நிலைமையை ஊகித்துக்கொண்ட  பாலாஜி உடனடியாக அருணை வயிற்றோடு சேர்த்து பிடித்துக்கொண்டான்.அவன் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்குள் அருண் அவனை எக்கித்தள்ளி வாசற்பக்கத்தில் இருந்த நீளமான கட்டையை கைகளில் பற்றிக்கொண்டு விலங்கிடப்பட்ட மிருகம்போல் உறுமினான்.முகமெங்கும் கருப்பாய் சிரிப்பு படர கட்டையை அவர்கள் பக்கம் வெறித்தனமாக அவன் வீசத் தொடங்கியதில்,நரேனுக்கு தாடையில் விழுந்தது அடி.பொறுத்து பொறுத்து பார்த்தவர்கள் இனியும் மாளாதென்பதை கிரகித்துக்கொண்டதும் காட்டுத்தனமாய் நடந்துக்கொண்டிருந்த அருணை சேர்ந்தாற்போல் ஒன்றாய்  அழுத்தி கட்டையை பலவந்தமாய் பிடுங்கி தூர அடித்தார்கள். திமிறிக்கொண்டிருந்த அருணின் முகத்தில் பளீரென அறைந்தான் முகுந்த். சாம் நெற்றியில் அடித்ததில் மோதிரம் கீறி ரத்தம் சொட்டியது.சூடுபட்ட பூனைப் போல் மெல்ல பதுங்கி ஒடுங்கலானான் அருண்.வெறியெல்லாம் வடிந்து போய் அப்போதைக்கு பயம் மட்டும் மீதமிருக்க அவனது உடல் சுருங்கி குறுகியது.

 

கொஞ்ச நேரம் சம்பந்தமேயில்லாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருந்த வண்டிக்காரன் சட்டென்று வானத்தை வெறித்துப் பார்த்து மௌனமானான். முழுநிலவைச் சுற்றி மேகங்கள் சதுர துளைகளாய் பரவிக்கிடந்தன.சற்றைக்குள் விருட்டென்று எழுந்தவன் வண்டிக்குள் விரிக்கப்பட்டிருந்த போர்வைக்கடியே கையை விட்டு எதையோ எடுத்து அதை தனது சட்டைக்குள்ளாக மறைத்து வைத்துக்கொண்டான்.அவன் முகத்தில் பரவசமோ பயமோவென கண்டறிய முடியாதபடிக்கு சமனற்ற கலவையாக உணர்ச்சியலைகள் எழுந்தோடிக் கொண்டிருந்தன.போன வேகத்திலேயே திரும்பி வந்தவன் மறுபடியும் அருணுக்கருகிலேயே அமர்ந்துகொண்டான்.கயிறுமேல் நடப்பவனைப் போல் செயல்பட்டுக்கொண்டிருந்தான் அவன்.அதீத ஜாக்கிரதையுணர்விலும் பதற்றத்திலும் அவனது முகம் வெளிரிப்போயிருந்தது. சட்டைக்குள் பத்திரமாய் ஒளித்து வைத்திருந்த ‘அதை’ மிகவும் லகுவாய் வெளியே எடுத்தான்.

 

இதையெல்லாம் கண் கொட்டாமல் கவனித்துக்கொண்டிருந்த அருணுக்கு ஆர்வம் தாங்கவில்லை.மெல்ல எழும்பி அவன் கைகளில் என்ன இருக்கிறது என எட்டிப் பார்த்தான்.கண நேரத்தில் அவனுடைய எதிர்பார்ப்பு சப்பென்று ஆகிப்போனது. குறி சொல்பவர்கள் கையில் பிடித்திருப்பார்களே அந்த மாதிரியானதொரு சின்ன கருப்புத் தடி அது.இந்த குறி சொல்பவர்கள்,கிளி ஜோசியம் பார்ப்பவர்கள்,ரேகை கணிப்பவர்கள் மற்றும் இதுபோல் நிறைய இத்யாதி செய்வர்களின் மேல் அருணுக்கு எக்கச்சக்கமான அவநம்பிக்கை உண்டு.ஒரு கட்டத்திற்கு மேல் அளவற்ற நம்பிக்கையின்மையே வெறுப்பாக பரிமணித்துவிட்டது.ஆங்காரமான அசட்டைப் பார்வையில் வண்டிக்காரனை ஒரு முறை முறைத்துவிட்டு வேறுபக்கமாய் திரும்பிக்கொண்டான் அருண்.இருந்தும் அவனுக்குள்ளிருந்த குரங்கு மனம் அவனை சும்மாயிருக்கவிடவில்லை.கண்கள் நிலைக்கொள்ளாது வண்டிக்காரன் பக்கமாய் அடிக்கடி போய் வந்துக் கொண்டிருந்தன.கொஞ்ச நேரத்திற்கு பிறகு அநிச்சையாய் அவன் மேலேயே பதிந்துவிட்ட கண்களை அருணால் விலக்க முடியவில்லை.

 

அக்கரிய உருளைத்தடியை மெல்ல நீவிக்கொடுத்தபடியே மந்திரம் போல் எதையோ உதட்டிற்குள்ளாக வண்டிக்காரன் முனகிக்கொண்டிருந்தான்.அவனது மொத்த உடலும் விறைத்து போயிருந்தது.இறுக்கமாய் மூடியிருந்த மணிக்கட்டில் பச்சை நரம்புகள் பாம்பு போல் வளைந்து புரண்டன.அருணுக்கு ஒரு பக்கம் இவனை நினைக்க லேசாக பயமாகவும் மறுபக்கம் பயங்கர வேடிக்கையாகவும் இருந்தது.சரியான கிறுக்கிடம் வந்து மாட்டிக்கொண்டோம் என்று தனக்குள்ளாக சொல்லிக்கொண்டான். 

 

ரயில் நிலையத்தை கடந்த ரயில், தண்டவாள சரளைக்கற்களுக்கு மேலிருந்த பாலீதின் கவர்களையும் நடிகைகளின் உடல்களை தாங்கிய செய்தித்தாள்களையும் கிழித்தெறிந்துவிட்டு தணலாய் தகித்து மறைந்தது.வெயிலை நினைத்தாலே அருணுக்கு அடிவயிற்றில் மண்வெட்டியால் கொத்தியது போலிருக்கிறது.மொத்த நகரத்தையும் வெயில் தன் பாலைக் கரங்களால் வதைக்க நிலத்தடியிலிருந்து அனல் கக்கும் தீ நாக்குகள் மேலெழும்பி காற்று மரம் வெளியென புலனில் தட்டுப்படும் யாவற்றையும் பொசுக்கி கருக்கி விட்டன.எங்கும் எதிலும் வியாபித்து வெயில் இப்பெரு நகரத்தை தனது வெப்ப மதில்களின் ஆக்கிரமிப்பிற்கு கொண்டு வந்துவிட்டது.மனிதர்கள் எல்லோரும் புழுங்கி தீய்கிறார்கள்.நிழலையையும் நீர்மையையும் தேடியலைந்தவர்களுக்கு கிடைப்பதெல்லாம் கெட்ட வாடையடிக்கும் பிசுபிசுப்பும் கசந்து வடியும் விஷமும் மட்டுமே.

 

அருகிலா தொலைவிலா என்று கணிக்க இயலாத ஒரு அலைவரிசையில் ரோந்து போகும் போலீஸ் வண்டியின் சைரன் சத்தம் அருணின் காதுகளை வந்தெட்டியது. சட்டென்று உடலெங்கும் பீதி பரவ ஒரு கணம் பயத்தில் அவன் உறைந்தே போய்விட்டான்.இவ்வளவு நேரம் எப்படி போலிஸ் பற்றிய நினைப்பே இல்லாமல் இங்கே உட்கார்ந்திருந்தோம் என்பதை யோசித்து பார்த்ததில் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி மட்டுமே கடைசியில் மிஞ்சியது.பக்கத்தில் வண்டிக்காரன் இன்னமும் மூடிய கண்கள் மூடியபடியேதான் கிடந்தான்.இவனுக்கோ உள்ளே அல்லில்லை.போலீஸ் சும்மா சந்தேகத்தின் பெயரில் பிடித்து போனால்கூட அவ்வளவுதான் கதை முடிந்தது. உடனிருப்பவன் வேறு பார்ப்பதற்கு கஞ்சா விற்கும் பேர்வழி மாதிரி இருக்கிறான். போலீஸ் முடிவே கட்டிவிடும் இவன் நிச்சயமாக பச்சை பொறுக்கிதான் என்று. அப்புறம் இரவெல்லாம் அடித்து துவைத்துவிடுவார்கள்.சமயங்களில் காவல் நிலையங்களில் ஒரு பால் வன்கலவியெல்லாம்கூட நடக்குமென அவன் கேள்வி பட்டிருக்கிறான்.அடங்கவே அடங்காத வெறி கொண்டவர்கள் போலீஸ்காரர்கள். அவர்கள் எப்படி ஒருவனை வதைப்பார்களென நாம் யோசிக்கவே முடியாது.அவர்களை யார் என்ன கேள்வி கேட்பது?இப்படியாக அவனது மனம் என்னவென்னவோ அபத்தங்களை பற்றியெல்லாம் சிந்தித்து கவலையில் பதறியது. நடுங்கும் கை விரல்களின் நகத்தை கொஞ்சம் தோலோடு சேர்த்தே கடித்து துப்பினான்.   

 

காலங்களிலேயே படுமோசமானது வெயிற்காலம் என்பதில் அவனுக்கு மாற்றுக் கருத்தே கிடையாது.வெண்பனி உலர் நினைவுகளையும் பெருமழை ததும்பும் காதலையும் கொண்டு வருகிறதெனில் வெயிலோ வாதைகளையும் ரணங்களையும் கொண்டுவருகிறது.தாரொழுகும் தீப்பிழம்பாய் சாலையில் ஊரும் வெயிலில் வயோதிகர்கள் மரணத்தை அதன் வலி மிகுந்த நிர்வாணத்தோடு அவ்வளவு பக்கத்தில் பார்த்தார்கள்.அவனிருந்த லட்சுமிபுரத்து தெருக்களில் தொடர்ந்து சங்கொலிகளும் தப்பட்டை சத்தங்களும் கேட்ட வண்ணமிருந்தன. போன வாரம் பண்டரிநாதன்.அதற்கு முந்தைய வாரம் ரமேஷண்ணின் பாட்டி. நேற்று செல்வியக்காவின் சின்ன தாத்தாவென ஊரே சவப்பெட்டிகளை சுமந்துச் சென்று புதைத்துக் கொண்டிருக்கிறது. சுடுகாட்டைவிடவும் சூன்யம் பிடித்தவை எழவு வீடுகள். வயசாளிகள் செத்த வீடுகளில் ஓலமுமில்லை கண்ணீருமில்லை. விழிகளும் தொண்டையும் இறுகி நீர்க்கட்டிப்போல் ஆகிவிட எல்லோரும் வெற்று சுவரையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மரணத்தின் ரகசிய குறியீடுகளை சாத்தான் அச்சுவரில் வரைந்து வைத்திருக்கிறான். எல்லோருக்குள்ளும் பயம் காட்டு முள் செடியைப் போல் வேரிட்டுப் படர்கிறது.

 

வெயிலை அவன் எவ்வளவு வெறுத்தான் என்பதை வார்த்தைகளில் சொல்லவே முடியாது.செத்துப் போன கிழவன் கிழவிகளை வெயிலே குருதி சொட்ட கொலை செய்தது என அவன் நம்பினான்.மரணத்திற்கும் பிறழ்வுக்குமிடையே பெரிய தூரமெல்லாம் கிடையாது.இரண்டிற்கும் நடுவே இருப்பது ஒரு மெல்லிய ஜிகினாத் தாள்தான்.கிரியை அருன் அறைய வெயிலும்கூட ஒரு காரணமாக இருக்கலாம். ராஜலட்சுமி ரிக்கியை அடித்ததும் ஒரு நெடுங்கோடையில் தான்.அப்படியென்றால் அனைத்து பிறழ்வுகளையும் வெயிலே உற்பத்தி செய்கிறது. கருனையை அதன் கடைசி துளிவரை உறிஞ்சி குடித்துவிட்டு எவ்வளவு இரக்கமற்றதாக உலவிக்கொண்டிருக்கிறது வெயில்?

 

திடீரென்று பக்கத்து சந்திலிருந்து வொள்ளென்று குரைத்தபடியே ஒரு வெள்ளை நாய் ஓடி வந்து இவர்களுக்கு முன்நின்றது.ஒலியற்று கிடந்த இருளின் திரையை கிழித்துக்கொண்டு அது தாவி வரவும் இவனுக்கு போலீசார் கழுத்தை திருப்பி முதுகில் மிதித்தது மாதிரியாகிவிட்டது.சைரன் சத்தத்திற்கு பயந்துதான் நாயும் ஓடி வந்திருக்க வேண்டும் என்று புரிந்துக்கொண்டு ஆசுவாசமடைந்தான்.அதுவரை சலனமே காட்டாமல் எவன் விட்ட வழியோ என்று மௌனச் சாமியார்போல் அமர்ந்திருந்த வண்டிக்காரன் நாய் வந்து குரைக்கவும் கிழே இருந்த கற்களில் பெரிதாய் ஒன்றை பொறுக்கி அதன் தலையை குறிவைத்து ஓங்கி எறிந்தான். குறி சிறிதும் பிசகவில்லை. நாயின் மண்டையை பதம் பார்த்துவிட்டது அந்த கல்.வீறலிட்டலறியபடி ஓடி மறைந்த நாய் அதற்கு பிறகு சத்தமே கொடுக்கவில்லை.

 

-என்ன கண்ணு…இன்னமும் இங்கதான் இருக்கியா..?

 

இந்தமுறை அவனது குரலில் முன்பில்லாத தெளிவும் தீவிரமும் சேர்ந்து ஒலிப்பதாக தோன்றியது அருணுக்கு.

 

-இல்லங்க….ரூமுக்கு போகனும். கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன்.

 

-யப்பா பாருய்யா…அப்போ பேசாம கம்முனு இருந்த…இப்போ என்னடான்னா பேசுற. சரி முகமெல்லாந் வாடிபோய் கெடக்குதே எதுனா ப்ராப்ளமான்னு கேட்டா ஒன்னியும் சொல்ல மாட்டேங்குற…

 

-அதெல்லாம் ஒன்னுமில்லங்க.சும்மாதான் இங்க வந்தேன்.

 

-தோடா…அர்த்த ராத்திரில ரயில்வே டேஷனாண்ட வந்து உட்காந்துக்கினு சும்மா வந்தேன்னு கதை சொல்றியே செல்லம்.

 

லுங்கி மடிப்பிற்குள்ளிருந்து பாதி பிரிந்த நிலையிலிருந்த மாணிக்சந்தை எடுத்து வாயில் கொட்டிக்கொண்டு தொடர்ந்தான்.

 

-நீ என்னமோ கன்பீஸன்ல இருக்கேன்னு மட்டும் புரியுது. ங்கொம்மா…சும்மா நடந்துக்கினும் ஓடிக்கினும் இருந்தாலே இப்படிதான்…ஜனங்களோடு சேர்ந்து கயிதையாய் ஆயிடுவோம்.அப்படியே வானத்துல பறந்தோம்னு வச்சிக்கியேன்..ஒரு தொல்லையும் கிடையாது…நம்ம குமாரை(குதிரையை தட்டிக்கொடுத்து) தரேன். ஒரு ரௌண்டு பறக்கிறியா?

 

பாவமாய் நின்ற குதிரையை ஓரக் கண்ணில் பார்த்து தனக்குள் தானே நொந்துகொண்டான் அருண். ஒரு பஞ்சு மூட்டையை தூக்கிக்கொண்டு இரண்டடி எடுத்து வைத்தால்கூட சொத்தென்று விழுந்து தெத்துவிடும்போல் இருந்தது அந்த குதிரை.இந்த லட்சணத்தில் அது வானத்தில் பறக்குமாம்.போதையில் மூளையேயில்லாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொண்டிருக்கிறான் லூசுக்கூ….

 

-என்னப்பா லூசுக்கூதியாட்டம் உளறான்னு நெனைக்கிறியா….சத்தியமா சொல்றேன்.. இந்த குதிரை சும்மா ஏராப்ளேனாட்டம் பறக்கும்.அதோ அந்த முக்குல ஒரு பயுப்பு இருக்குல்ல அதுக்கு பின்னாடி இருக்க வூட்ல ஒரு தெவடியா முண்டை இருக்கா.அவளை பின்னக்க வச்சிக்கினு குமார் மேல ஏறி ராட்டின சுத்தறாப்புல ஒலகத்தையே ரவுண்டடிச்சிருக்கேன்.

 

இதை சொல்லும்போது தீவீரம் மிகுந்த ஒரு மத நம்பிக்கையாளனின் குரலை ஒத்திருந்தது அவனது குரல்.உடன் பரவசத்தின் உச்சியில் மனம் உடைந்தழ காத்திருப்பவனை போல் இரத்த சிவப்பேறிய கண்களுடனிருந்தான்.அருணுக்குள் சின்னதாயொரு சந்தேகம் தோன்றியது.ஒரு வேளை இந்த குதிரை உண்மையிலேயே பறக்குமா? அப்படி பறக்குமென்றால் நமக்கே சிறகு கிடைத்த மாதிரிதானே. சனியன் போல் பிடித்துக்கொண்டு உயிரை எடுக்கும் பயங்கள் யாவற்றிலிருந்தும் விடுதலை பெற்று எங்கேயாவது மனிதர்களே இல்லாத இடத்திற்கு பறந்துபோய் விடலாம்.அதற்கு பிறகு நமக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.உயர உயர பறந்து நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையே ஒரு துகள் மண்ணாய் உறைந்துவிட்டால்கூட நன்றாகத்தான் இருக்கும்.

 

அருண் வண்டிக்காரனை ஒருமுறை கரிசனத்தோடு திரும்பி பார்த்தான்.அவனுக்கு சட்டென்று நிதர்சனம் பொளீரென்று உரைத்தது.இவன் ஒரு குடிகாரன்.அதுவும் குடித்துவிட்டு நடுத்தெருவில் கிடக்கும் மோசமான அருவெறுக்கத்தக்க ஒரு குடிகாரன். முழுசாய் மப்பேறிப் போய் எதையாவது இவன் உளறி கொட்டினால் அதை அப்படியே நம்பிவிடுவதா?குதிரை பறக்கும் என்று வேறு யாரிடமாவது இவன் சொல்லியிருந்தால் கதையே வேறுமாதிரி இருந்திருக்கும்.ஒன்று இவன் முகத்திற்கு நேராகவே காறித் துப்பியிருப்பார்கள்.இல்லையென்றால் வயிறு வலிக்கும்வரை சிரித்துவிட்டு பிறகு தங்கள் வேலையை பார்க்க கிளம்பியிருப்பார்கள்.ஆனால் நாமோ  இவ்வளவுதூரம் முட்டாள்தனமாய் சிந்தித்து வேண்டாத கனவுகளை வளர்த்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்து அருண் வருத்தம் கொண்டான். 

 

எல்லோரையும் போல் மிகவும் இயல்பாகத்தான் இருக்கிறோமென்றாலும் அடிக்கடி ஏன் இப்படி கட்டிலடங்காத ஆத்திரத்திற்குள்ளாக அமிழ்ந்துப்போய் பழி தீர்க்கும் சர்ப்பம் போல் ஆகிவிடுகிறோம் என்று யோசித்தாள் ராஜலட்சுமி.ரிக்கி எப்பொழுதுமே அமைதியாக இருக்கக்கூடியவன்.யாரைக் கேட்டாலும் வகுப்பிலேயே அவன்தான் நல்ல பையன் என்று சொல்வார்கள்.ஒருவேளை அவன் அவ்வளவு நல்லவனாக இருந்ததுதான் தன் கோபத்திற்கு காரணமோ? தெரியவில்லை.

 

அன்றைக்கு சாயுங்காலம் தனக்கு விருப்பமான இரண்டு தோழிளோடு குறுஞ்செய்திகளின் வழியே அவள் உரையாடிக்கொண்டிருந்தாள்.ஒருத்தி ஹேமா மற்றொருத்தி ருக்கு.ஹேமாவிடம் தன் துயரங்களை அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிட்டால் கொஞ்சம் ஆறுதலாயிருக்கும் என்று அவளுக்கு தோன்றியது. ஹேமாவால்தான் தன் கண்ணீரை புரிந்துகொள்ள முடியும் என்பதில் அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.அதே நேரம் ருக்குவிடம் தான் இயல்பாகவே இருக்கிறோம் என்பதை ஆழமாக நிறுவ வேன்டும்.எனவே அதிக பிரய்த்தனம் எடுத்து அவளிடம் ரொம்பவும் மகிழ்ச்சியாய் இருப்பது மாதிரி காட்டிக்கொண்டாள். இயல்பிற்கும் முகச்சாயத்திற்குமிடையே சிக்கிக்கொண்டு தத்தளிக்கும் கோமாளியினுடையதைப் போலிருந்தது அவளது செயல்பாடு.

 

ஒரு குறுஞ்செய்தியில் தனது வலிமிகு துயரக்கதையை அழுகை பொங்க ஹேமாவிற்கு தட்டச்சு செய்து விட்டு நிமிர்ந்தால் அதற்குள்ளாக ருக்குவின் காதல் சாகசத்தை ஏந்திய குறுஞ்செய்தி இவள் படிப்பதற்காய் சத்தமெழுப்பி அலைபேசியில் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.கன்னத்தை துடைத்துவிட்டு அவளுக்கு வாழ்த்துக்கள் எழுத ஆரம்பிப்பாள். துக்கத்திற்கும் சந்தோஷத்திற்கும் நடுவே ஊடாடும்போது தனது முகம் எப்படியிருக்கும்? நிலைக் கண்ணாடியில் கொடுவிஷம் பாரித்த நீலநிற நாகக்கன்னியை பார்த்தவள் சத்தம்போட்டு சிரித்தாள்.

 

இப்பொழுது மிகவும் தெளிவாக பக்கத்திலேயே கேட்டது சைரன் சத்தம். தலையை திருப்பி பார்த்தால் தெருமுனையில் சிவப்பாய் ஒளிக்கீற்றுகள் படர அவனிருந்த திசை நோக்கி மெதுவாய் நகர்ந்து வந்துக் கொண்டிருது போலீஸ் ரோந்து வண்டி. ஒரு கணத்திற்கும் குறைவான நேரத்தில் மனம் இதுவரை சுழன்று கொண்டிருந்த எண்ணங்களிலிருந்து முற்றிலுமாய் விடுபட்டு நிகழ்காலத்திற்கு திரும்பியது. வண்டிக்காரனுக்கு அண்டையாய் பார்வையை உருட்டினான்.அவனோ கால்களுக்கடியே முகத்தை பொருத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தான்.இவனுக்கு சட்டென்று ஒன்றுமே புரியவில்லை. காரணமேயில்லாமல் மனதில் இரக்கம் சுரந்து அவனது உடலை எடையிழக்க வைத்தது. சைரனின் அலறல் நெருங்கி வருவதை உணந்துக்கொண்ட மறுநொடியிலிருந்து அதிவேகமாய் செயல்பட துவங்கினான் அருண். வண்டிக்காரனுக்கருகே கீழே கிடந்த அந்த கருப்பு தடியை இடக்கையிலெடுத்து கால்சராயின் பைக்குள் சொருகிக்கொண்டான்.எந்த நினைப்புமில்லாது வெறுமையாயிருந்த அவன் உள்மன அடுக்குகளில் ராஜலட்சுமியின் பிம்பம் பெருகி நிரம்பியது.எந்த நம்பிக்கையால் உந்தப்பட்டு இயங்குகிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் சேணத்தில் கால் வைத்து குதிரையின் மேல் தாவியேறி அமர்ந்துக்கொண்டான்.எப்பொழுது அதன் மேல் ஏறினோம்?எப்படி ஏறினோம் என்பதெல்லாம் அவனுக்கு சுத்தமாய் கவனத்திலில்லை.கண்களை இறுக மூடிக்கொண்டு கடிவாளத்தை முடுக்கி விட்டான்.வியர்வை நீரில் தளும்பியது அவனது முகம்.குதிரை ஒரு கணம் நகர்வது போலவும் மறுகணம் நகராதது போலவும் பிரம்மை தட்டியதில் சுத்தமாய் குழம்பிப் போய் கண்கள் சொருக மயங்கி சரிந்தான் அருண்.போலீஸ் வண்டியின் டையர் தரையில் தேய்ந்து கிறீச்சிட சைரன் சத்தம் அதிர்ந்தடங்கியது.

 

துரோணா

Imsai Arasi

unread,
Feb 28, 2013, 1:35:28 PM2/28/13
to nadp...@googlegroups.com, பண்புடன்
ஆங்கிலத்திற்கு மனிக்கவும்....  but this is v.inspiring!

************


screen-shot-2013-02-25-at-11-01-21-pm.png (1172×781)

Following Ang Lee’s second Best Directing win at the Academy Awards last night, this beautiful essay resurfaced. Here is my translation of Ang Lee’s words, written in 2006 (post-Oscar win). Please credit the translation to Irene Shih (and to this blog), thank you!

In 1978, as I applied to study film at the University of Illinois, my father vehemently objected. He quoted me a statistic: ‘Every year, 50,000 performers compete for 200 available roles on Broadway.’ Against his advice, I boarded a flight to the U.S. This strained our relationship. In the two decades following, we exchanged less than a hundred phrases in conversation.

Some years later, when I graduated film school, I came to comprehend my father’s concern. It was nearly unheard of for a Chinese newcomer to make it in the American film industry. Beginning in 1983, I struggled through six years of agonizing, hopeless uncertainty. Much of the time, I was helping film crews with their equipment or working as editor’s assistant, among other miscellaneous duties. My most painful experience involved shopping a screenplay at more than thirty different production companies, and being met with harsh rejection each time.

That year, I turned 30. There’s an old Chinese saying: ‘At 30, one stands firm.’ Yet, I couldn’t even support myself. What could I do? Keep waiting, or give up my movie-making dream? My wife gave me invaluable support.

My wife was my college classmate. She was a biology major, and after graduation, went to work for a small pharmaceutical research lab. Her income was terribly modest. At the time, we already had our elder son, Haan, to raise. To appease my own feelings of guilt, I took on all housework – cooking, cleaning, taking care of our son – in addition to reading, reviewing films and writing scripts. Every evening after preparing dinner, I would sit on the front steps with Haan, telling him stories as we waited for his mother – the heroic huntress – to come home with our sustenance (income).

This kind of life felt rather undignified for a man. At one point, my in-laws gave their daughter (my wife) a sum of money, intended as start-up capital for me to open a Chinese restaurant – hoping that a business would help support my family. But my wife refused the money. When I found out about this exchange, I stayed up several nights and finally decided: This dream of mine is not meant to be. I must face reality.

Afterward (and with a heavy heart), I enrolled in a computer course at a nearby community college. At a time when employment trumped all other considerations, it seemed that only a knowledge of computers could quickly make me employable. For the days that followed, I descended into malaise. My wife, noticing my unusual demeanor, discovered a schedule of classes tucked in my bag. She made no comment that night.

The next morning, right before she got in her car to head off to work, my wife turned back and – standing there on our front steps – said, ‘Ang, don’t forget your dream.’

And that dream of mine – drowned by demands of reality – came back to life. As my wife drove off, I took the class schedule out of my bag and slowly, deliberately tore it to pieces. And tossed it in the trash.

Sometime after, I obtained funding for my screenplay, and began to shoot my own films. And after that, a few of my films started to win international awards. Recalling earlier times, my wife confessed, ‘I’ve always believed that you only need one gift. Your gift is making films. There are so many people studying computers already, they don’t need an Ang Lee to do that. If you want that golden statue, you have to commit to the dream.’

And today, I’ve finally won that golden statue. I think my own perseverance and my wife’s immeasurable sacrifice have finally met their reward. And I am now more assured than ever before: I must continue making films.


You see, I have this never-ending dream.

ஸ் பெ

unread,
Mar 4, 2013, 2:10:22 PM3/4/13
to panb...@googlegroups.com

டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன
மனுஷ்ய புத்திரன் 

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஊழல் தொடர்பான விவகாரங்கள் வெளியே வரும் காட்சி உண்மையில் ஜுராசிக் பார்க் படத்தில் டினோசர்கள் பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு வெளியே வரும் காட்சியை நினைவூட்டுகிறது. யார் அந்த டினோசர்- களை உருவாக்கி வளர்த்தார்களோ அவர்களையே வேட்டையாடும் காட்சியை அரசியல் களத்தில் நாள்தோறும் கண்டுவருகிறோம். விதவிதமான சைஸ்களில் ஊழல்கள் தங்கள் கோரப் பற்களைத் திறந்துகாட்டுகின்றன. பிரமாண்டமான ஊழல்களிலிருந்து குட்டி ஊழல்கள்வரை பெரும் களேபரமே நடந்துகொண்டிருக்கிறது. யாரும் தப்பித்து ஓடமுடியாதபடி ஒவ்வொரு கதவையும் உடைத்துக்கொண்டு அவை உள்ளே வருகின்றன.

நேற்றுவரை காங்கிரசிற்கு எதிரான ஊழல் எதிர்ப்புப் போரில் எல்லோரையும் பகடைக்காய்களாக்கி நகர்த்திக்கொண்டிருந்த பா.ஜ.க.வின் தலைவர் நிதின் கட்கரியின்மீதும் ஊழல் குற்றச்சாட்டின் துர்நிழல் விழுந்திருக்கிறது. ஊழல் எதிர்ப்பின் புதிய சூத்ரதாரியான அர்விந்த் கெஜ்ரிவாலின்மீதும் பெரும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன.

அன்னா ஹசாரே சென்ற ஆண்டு மத்தியில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கியபோது அவர்களுக்கு என்ன அரசியல் திட்டம் இருந்தது என்பது இன்றுவரை மர்மமான ஒன்று. ஆனால் இந்த இயக்கம் அவர்களின் உத்தேசங்களைத் தாண்டி பல்வேறு உருமாற்றங்களை அடைந்துகொண்டிருக்கிறது. ஊழல் என்பது ஒரு பெரிய அணைக்கட்டுபோல. நீண்டகாலமாக அந்த அணைக்கட்டின் சுவர் பெரும் அழுத்தத்தால் திணறிக்கொண்டிருந்தது. அன்னா ஹஸாரேவும் அர்விந்த் கெஜ்ரிவாலும் அதன் ஒரு செங்-கல்லை எப்படியோ உருவிவிட்டார்கள். ஆனால் நீரின் அழுத்தத்தில் அந்த ஓட்டை ஒவ்வொரு நாளும் பெரிதாகிக்கொண்டே வருகிறது. அந்த வெள்ளத்தில் அர்விந்த் கெஜ்ரிவாலும் அன்னா ஹஸாரேயுமேகூட இப்போது நிற்பார்களா என்று சந்தேகமாக இருக்கிறது.

ஊழல்கள் பற்றிய இந்த சர்ச்சைகளில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சிகள், ஊழலுக்கு எதிரான இந்திய இயக்கம், ஊடகங்கள் என நான்கு தரப்புகள் இருக்கின்றன. இந்த நான்கு தரப்புகளுக்கும் நான்கு விதமான நோக்கங்கள் இருக்கின்றன. அவை பரஸ்பரம் சண்டையிட்டுக் கொண்டபோதும் பல சமயங்களில் ஒன்றுக்கொன்று அனுசரணையான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருக்கின்றன. இது ஒரு ஆபத்தான, அவநம்பிக்கைக்குரிய சூழல். எல்லோருமே சந்தேகத்திற்குரியவர்கள் என்பது அரசியல்ரீதியாகப் பெரும் சீர்குலைவை உண்டாக்கக்கூடியது.

2ஜிக்குப் பிறகு ஊழல் பூதங்கள் ஒவ்வொன்றாக வெளியே வரத் தொடங்கின. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆதர்ஷ் குடியிருப்பு என்று தொடர்ந்த ஊழல் கதைகள் நிலக்கரி சுரங்க ஊழலில் உச்சத்திற்குச் சென்றது. நிலக்கரி சுரங்க விவகாரத்தில் காங்கிரசை எதிர்க்கும் மாநிலங்களில் ஆளும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அந்த ஊழலில் எவ்வாறு பங்கெடுத்தன என்பது வெளியே வந்தபோது ஊழல் ரயில் வேறொரு பாதையில் திரும்ப ஆரம்பித்தது.

காங்கிரசைப் பொறுத்தவரை இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற இடத்திற்கு வந்துவிட்டது. ஒரு தேர்தல் தோல்விக்கு அது தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதனால்தான் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மன்மோகன் சிங் அரசு பொருளாதார சீர்திருத்தங்களை அவசர அவசரமாக அறிவித்துக்கொண்டிருக்கிறது. நீண்ட கால நோக்கில் இந்தச் சீர்திருத்தங்கள் தனது அரசியல் அதிகார நலன்களுக்கு உதவும் என்று காங்கிரஸ் கருதுகிறது. மேலும் வரும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே நிலவும் குழப்பத்தால் தான் ஒரு சிறுபான்மை அரசாக அதிகாரத்திற்கு வரலாம் என காங்கிரஸ் எண்ணக்கூடும். பா.ஜ.க. அதிகாரத்திற்கு வராது என்று அத்வானியே கூறும் அளவு பா.ஜ.க.வின் நிலை உள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகள் ஒரு வேளை ஒரு கூட்டணி ஆட்சி அமைத்தால்கூட நீண்ட நாளைக்கு அது தாங்காது என்று காங்கிரஸ் நம்பிக்கையோடு காத்திருக்கிறது. இன்றைய அரசியல் குழப்பங்கள் காங்கிரசிற்கு சாதகமான ஒரு சூழலை மறுபடி உருவாக்கினால் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால் சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா, டி.எல்.எஃப். ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் சேர்ந்து ஈடுபட்ட சொத்துக் குவிப்பு ஊழல் குற்றச்சாட்டை மற்ற குற்றச்சாட்டுகள்போல காங்கிரசால் அவ்வளவு எளிதாகப் புறந்தள்ள முடியவில்லை. ராபர்ட் வத்ரா அரசியலில் சம்பந்தமில்லாத தனிநபர் என்று சொல்லிக்கொண்டே ப.சிதம்பரத்திலிருந்து ஒவ்வொருவராக வந்து வத்ராவுக்கு ஆதரவாக விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஏனென்றால் நேரு குடும்பத்தின்மீது நேரடியாக வந்து விழும் ஊழல் குற்றச்சாட்டுகள் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஃபோபர்ஸ் விவகாரத்தில் அவர்கள் ஏற்கனவே அனுபவித்திருக்கிறார்கள். உச்சக்கட்டமாக டி.எல்.எஃப்-&வத்ரா நிலபேரம் பற்றி விசாரிக்க உத்தரவிட்ட ஹரியானா மாநிலப் பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அசோக் கெம்கா மாற்றப்பட்டார். அசோக் கெம்கா ஊடகங்களில் தோன்றி தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கூறி அழுதபிறகு இந்த விவகாரத்தில் காங்கிரஸ்காரர்கள் ராபர்ட் வத்ராவைக் காப்பாற்றவும் ராபர்ட் வத்ராவிடமிருந்து காங்கிரஸைக் காப்பாற்ற வும் எல்லா தகிடுதத்தங்களையும் செய்துகொண்டிருக்கின்றனர். சில சமயங்களில் நிலைகுலைந்து போகின்றனர். மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது மனைவியுடன் சேர்ந்து நடத்தும் அறக்கட்டளையில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய விவகாரத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து 71 இலட்சம் ரூபாய் வரை கையாடல் செய்ததாக ‘ஆஜ்தக்’ சேனல் தன் புலனாய்வு நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் சல்மான் குர்ஷித் பெரும் ஆவேசத்துடன் எதிர்வினையாற்றினார். மேலும் இந்த விவகாரத்தை வைத்து டெல்லியில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்திய அர்விந்த் கெஜ்ரிவால் தனது போராட்டத்தை சல்மான் குர்ஷித்தின் தொகுதியான ஃபருக்காபாத்திற்கே கொண்டு சென்றார். அதுகுறித்து தனது ஆதரவாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித் “அவர் ஃபருக்காபாத்திற்கு வரட்டும். ஆனால் திரும்பிப் போகமுடியாது. நான் பேனாவில்மைக்குப் பதில் ரத்தத்தை ஊற்றி எழுதும் காலம் வந்துவிட்டது’’ என்று தன் ஆதரவாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியதை தொலைக்காட்சிகளில் பார்த்த மக்கள் தாங்கள் எத்தகைய ஆட்சியாளர்கள் கீழ் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொண்டார்கள். இன்னொரு மத்திய அமைச்சரான பெனி பிரசாத் வர்மா “எங்களுக்கு 71 இலட்சம் எல்லாம் ஒரு பணமா? சல்மான் குர்ஷித் இவ்வளவு சிறிய தொகைக்கு எல்லாம் ஊழல் செய்திருக்க மாட்டார்’’ என்று சொன்னபோது எத்தகைய அமைப்பின்கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் மக்கள் புரிந்துகொண்டார்கள்.

பா.ஜ.க., அன்னா ஹசாரேயின் இயக்கத்தைப் பின்னாலிருந்து முடுக்குகிறது என்ற சந்தேகம் பரவலாக ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. அவரும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் ஊழல்கள் குறித்துப் பேசத் தயங்கி வந்திருக்கிறார். சில இடைத்தேர்தல்களில் காங்கிரசிற்கு எதிராக பா.ஜ.க.வுக்கு உதவத்தக்க வகையில் அன்னா ஹஸாரே பிரச்சாரமும் செய்தார். ஆனால் அன்னா ஹஸாரேயின் தனிப்பட்ட அரசியல் நோக்கங்கள் பற்றி பா.ஜ.க. அரசு ஆரம்பத்திலிருந்தே சந்தேகங்களைக் கொண்டிருந்தது. ஊழல் எதிர்ப்பு அலையை அன்னா ஹஸாரேயிடமிருந்து கைப்பற்றி தனக்குச் சாதகமாக முழுமையாகப் பயன்படுத்தத்தக்க வகையில் ஒரு ஆளைத் தயார் செய்யும் பொருட்டு பாபா ராம்தேவைக் களத்தில் இறக்கிவிட்டார்கள். இது அன்னா ஹஸாரே குழுவினருக்குக் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. அன்னா குழுவினருக்குள் பிளவுகள் வந்து அர்விந்த் கெஜ்ரிவால் அந்த இயக்கத்தைக் கைப்பற்றிக்கொண்ட பிறகு பா.ஜ.க.வையும் தாக்கத் தொடங்கினார். மஹாராஷ்ராவில் பாசனத்துறை ஊழலில் பா.ஜ.க. தலைவர் நிதின் கட்கரியின் பங்கு பற்றிய ஆவணங்களை அர்விந்த் கெஜ்ரிவால் வெளியிட்டபோது பா.ஜ.க.வின் ஊழல் எதிர்ப்பு ரதம் மிகப்பெரிய புதைசேற்றில் சிக்கி நின்றது. மஹாராஷ்டிரா அரசு புதிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான அணைக்கட்டுகள் கட்டுவதற்காக விவசாயிகளிடம் பெருமளவு நிலத்தைக் கையகப்படுத்தியது. அணைக்கட்டுகள் கட்டியது போக மீதி நிலங்களை விவசாயிகளிடமே திரும்பக் கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால் மக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 100 ஏக்கர் நிலம் நிதின் கட்கரிக்கு கொடுக்கப்பட்டது. நிதின் கட்கரி மஹாராஷ்டிராவில் மின்உற்பத்தி நிலையங்கள், கரும்பு ஆலைகள் என 15 பெரும் நிறுவனங்களை நடத்தி வருகிறார். அணைக்கட்டுகள் மூலம் தேக்கப்பட்ட தண்ணீர் விவசாயிகளுக்குத் தரப்படவில்லை. நிதின் கட்கரியும் அவரைப் போன்ற வேறு பண முதலைகளும் நடத்தும் மின்உற்பத்தி நிறுவனங்களுக்கும் பிற நிறுவனங்களுக்குமே வழங்கப்பட்டது. நிதின் கட்கரிக்கு இந்த நிலத்தை தாரை வார்த்தது யார் தெரியுமா? காங்கிரஸ்&தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு. மக்கள் முன் ஒருவரை ஒருவர் சட்டையைப் பிடித்து அடித்துக்கொள்வது போன்ற ஒரு நாடகம். ஆனால் மறைமுகமாக ஒருவருக்கொருவர் வர்த்தகரீதியான அனுசரணைகள், உதவிகள். இந்த அரசியல் மோசடி மூலம் மக்கள்முன் காலங்காலமாக நடந்துவந்த பெரும் நாடகம் அம்பலத்திற்கு வந்தது. எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என நேற்று காங்கிரஸ் பாடிய அதே பல்லவியை இப்போது பா.ஜ.க.வும் பாடிக்கொண்டிருக்கிறது.

கெஜ்ரிவால் சில அதிரடி ஊழல் குற்றச்சாட்டுகள் மூலம் தேசிய ஊடகங்களில் கடந்த சில வாரங்களாகப் புகழின் வெளிச்சத்தில் நின்றுகொண்டிருக்கிறார். ஆனால் அந்த வெளிச்சத்தின்மீதும் கொஞ்சம் இருட்டைக் கொண்டுவந்து சேர்த்தார் ஒருவர். நிதின் கட்கரி தொடர்பான ஊழல்களை வெளிப்படுத்திய அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் அஞ்சலி தமானியாவின் நம்பகத்தன்மையும் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது. முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஒய்.பி.சிங் மகாராஷ்டிரா ஊழலில் சரத்பாவாரின் பங்கு தொடர்பான முக்கியமான ஆவணங்களைத் தான் அர்விந்த் கெஜ்ரிவாலிடம் அளித்ததாகவும் ஆனால் அவர் அதையெல்லாம் வெளியிடாமல் மறைத்துவிட்டு நிதின் கட்கரி மீதான குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைப்பதாகக் கூறியுள்ளார். லவாசா பகுதியில் அப்போதைய பாசனத் துறை அமைச்சர் அஜித் பவாரால் 348 ஏக்கர் நிலம் மாதம் வெறும் 23 ஆயிரம் வாடகைக்கு 30 ஆண்டுகளுக்கு லேக் சிட்டி கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு மலை நகர உருவாக்கத்திற்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் சரத்பவாரின் மகள் சுப்ரியாவும் அவரது கணவர் சதானந்தும் 20.81 சதவிகிதப் பங்குகளை வைத்திருந்தனர். இப்போது எம்.பி.யாக இருக்கும் சுப்ரியா 2009 தேர்தல் சமயத்தில் அளித்த சொத்து விபரத்தில் தன்னுடைய சொத்தின் மதிப்பு 15 கோடி என்று தெரிவித்திருந்தார். ஆனால் அந்தப் பங்குகளை விற்றபோது அதன் மதிப்பு 250 கோடி. பா.ஜ.க. எப்படி இந்த ஊழலைக் கண்டுகொள்ளவில்லையோ அதே போல அர்விந்த் கெஜ்ரிவாலும் கண்டுகொள்ளவில்லை. அஞ்சலி தமானியாவின் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டபோது- தான் அவர் விவசாயிகளுக்கான போராட்டத்தில் குதித்தார். அந்த சமயத்தில் அவர் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ‘எனது நிலத்தை விட்டுவிடுங்கள். அதற்குப் பதில் அந்த நிலத்திற்குப் பின்னால் இருக்கும் ஆதிவாசிகளின் நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

நிறைவாக, இதையெல்லாம் வைத்துப் பெரும் திருவிழாவையே நடத்திக்கொண்டிருக்கும் ஊடகங்களின் விஷயத்திற்கு வருவோம். கடந்த பத்தாண்டுகளில் ஊடகங்கள் படிப்படியாக அரசாங்கத்தோடும் கார்ப்பரேட்டுகளோடும் பல்வேறு இணக்கமான உறவுகளை மேற் கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் ஒரு ஊழலைக் கண்டுபிடித்து வெளிப்படுத்திய காலமெல்லாம் மலையேறிவிட்டது. யாராவது அவற்றை வெளிப்படுத்தினால் அவற்றைப் பயன்படுத்துவார்கள். பிறகு அதை மறக்கடிக்க இன்னொரு பிரச்சினையை முன்னிலைப்படுத்துவார்கள். அந்த வகையில் ஊடகங்கள் தங்கள் தார்மீக நியதிகளை இழந்து வெகுகாலம் ஆகிவிட்டது. இன்று அவர்களும் நாடகத்தின் ஒரு கதாபாத்திரம்.

இந்தியா மிகப்பெரிய அரசியல் குழப்பங்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.


--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ஹாஜா மொஹைதீன்

unread,
Apr 5, 2013, 6:14:26 AM4/5/13
to நட்புடன், panb...@googlegroups.com

​ 

கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள்.

from Cable சங்கர் by Cable சங்கர்
 பெட்ரோல், மளிகை, போன்ற பொருட்களைப் போல கண்ணுக்கே தெரியாமல் இன்னொரு விஷயமும் விலை ஏறிக் கொண்டே போகிறது. அது மருந்துகளின் விலை. ஒரு மருந்துக்கான விலையை எப்படி நிர்ணையிக்கிறார்கள்? எவ்வளவு முறை விலையேற்றலாம் என்ற சட்டங்கள் எல்லாம் இருக்கிறதா இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் அடிக்கும் கொள்ளை நிச்சயமாய் மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டியது அவசியமாகிக் கொண்டிருக்கிறது.

உதாரணமாய் எனக்கு நினைவு தெரிந்து ஷுகருக்காக காலையில் ஒர் மாத்திரை இரவு ஒரு மாத்திரை என்று சாப்பிட்டு வருகிறேன். மூன்று வருடங்களுக்கு முன் பத்து மாத்திரைகள் கொண்ட ஸ்ட்ரிபின் அதிகபட்ச விலை 35 ரூபாய். ஆனால் ஆறு மாதங்களுக்கு ஒர் முறை கொஞ்சம் கொஞ்சமாய் விலையேற்றி இன்று பதினைந்து மாத்திரைகள் அடங்கிய ஸ்ட்ரிபின் விலை 108 ரூபாய். கணக்கிட்டு பாருங்கள் மூன்று வருடங்களில் இதன் விலை எப்படி ஏறியிருக்கிறது என்று. இதில் பத்து மாத்திரை இருந்த ஸ்ட்ரிப்பை பதினைந்தாக மாற்றியதால் பத்து மாத்திரையாக கேட்டால் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் மெடிக்கல் ஷாப்காரர்கள். வாங்கினால் பதினைந்தாகத்தான் வாங்க வேண்டும் என்று சட்டம் பேசுகிறார்கள். ஏன் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டால் லூசுல கொடுத்தா மிஞ்சிப் போவுது. அதான். என்கிறார்கள். அது மட்டுமில்லாமல் எப்படி நீங்க தெனம் சாப்பிட்டுத்தானே ஆகணும் வாங்கி வச்சிக்கங்க.என்று சொல்கிறார்.

 இதாவது பரவாயில்லை சுகர் மாத்திரை தினமும் சாப்பிடுவது. வேறு உடல் உபாதைகளுக்காக டாக்டர் பிரிஸ்கிரைப் செய்யும் மருந்துகள் அவரின் க்ளினிக்கின் பக்கத்திலிருக்கும் மெடிக்கல் ஷாப்பைத் தவிர வேறெங்கும் கிடைக்காது. அதற்கு டாக்டர், மெடிக்கல்ஷாப், மருந்து கம்பெனியின் உள்குத்து ஒன்று இருக்கிறது. அதை விடுங்கள் அப்படி டாக்டர் எழுதிக் கொடுக்கும்  நான்கு வேலை மருந்துக்கு முழு ஸ்ட்ரிப்பையே வாங்கச் சொல்லும் மெடிக்கல் ஷாப்புகள் அதிகமாகிக்  கொண்டேயிருக்கிறது. உனக்கு தேவையோ இல்லையோ நான்கு வேலைக்கு பிறகு வேறு மருந்துகள் தேவையில்லாத போது நாம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எப்படி சரி என்றாகும்.

சமீபத்தில் நண்பரின் மனைவியின் உடல் நிலை சரியில்லாததால் அதற்கு ஒர் ஆண்டிபயாட்டிக் மருந்தை எழுதியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட பத்து ஊசிகளுக்கு மேல் போட்டாக வேண்டிய கட்டாயம். அந்த மருந்தின் அதிக பட்ச விலை 2200. நண்பருக்கு தெரிந்தவர்  ஸ்டாகிஸ்டாக இருப்பதால் அவரிடம் இந்த மருந்தை வாங்க விலை கேட்டிருக்கிறார். ஸ்டாகிஸ்டின் விலை வெறும்520தானாம். ஸ்டாகிஸ்டுகளிடமிருந்து, டிஸ்ட்ரிப்யூட்டர், அங்கிருந்து ரீடெயில் மெடிக்கல் ஷாப்புக்கு வரும் போது இதன் விலை 2200. என்ன அநியாயம் பாருங்கள். இதை விடக் கொடுமை என்னவென்றால் அந்த மருத்துவமனையில் ஸ்டாகிஸ்டமிருந்து நான் மருந்து வாங்கி வருகிறேன் உபயோகியுங்கள் என்றால் முடியாது அவர்களது மருத்துக்கடையில் 2200 கொடுத்து வாங்கினால் தான் போடுவோம் என்கிறார்களாம். என்ன ஒரு பச்சை அயோக்கியத்தனம். 

மருந்து கம்பெனிகளுக்கு வியாதிக்கான மருந்துகளை தயாரிப்பதை விட அதன் மூலம் மருந்து விற்று கிடைக்ககூடிய லாபம்தான் முதலில் இருக்கிறது. அந்த வகையில் புற்றுநோய்க்கான மருந்துக்கு பேட்டண்ட் கொடுப்பதை தடை செய்த சுப்ரீம் கோர்ட்டுக்கு வாழ்த்துகள். இதனால் இந்தியாவில் வெளிநாட்டு மருந்து கம்பெனிகள் R&Dயில் முதலீடு செய்ய மாட்டார்கள் என்று பயமுறுத்துகிறார்கள் மருந்து கம்பெனி முதலாளிகள். இவர்களின் அச்சுறுத்தலுக்கெல்லாம் பயப்படாமல் மந்திய அரசு மருந்துக் கம்பெனிகளையும், அதற்கான விலையை நிர்ணையிக்கும் முறையையும் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுத்தே ஆக வேண்டும்.
  கேபிள் சங்கர்



என்றென்றும் அன்புடன் 
அபு ஜைனப் (ஹாஜா மொஹைதீன்) 

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422

ஹாஜா மொஹைதீன்

unread,
Apr 5, 2013, 6:23:37 AM4/5/13
to நட்புடன், panb...@googlegroups.com

ஒரு திகிலான இண்டர்வியூ


பெரிய அறை. 

‘குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும்’ என்ற உவமையைக் கேட்டு கேட்டு உங்களுக்கு சலித்து போயிருக்கலாம். ஆனால் அப்படியான நிசப்தம்தான் அந்த அறை முழுவதும் நிரம்பியிருக்கிறது. அறையின் அடுத்த மூலையில் இரண்டு பெண்கள் மட்டும் அமர்ந்திருக்கிறார்கள்.  “Yes” என்கிறார்கள். மந்திரித்துவிட்டதைப் போல நாங்கள் இரண்டு பேரும் அவர்களை நோக்கி மெதுவாக நடக்கிறோம். நாங்கள் என்றால் நானும் மகியும். என்னை சற்று தூரமாக அமரச் சொல்லிவிட்டு மகியை அவர்களுக்கு முன்பாக அமரச் சொல்கிறார்கள். அவனது கண்களில் குழந்தமையை மீறிய மிரட்சி தெரிகிறது. 

புன்முறுவலுக்கு பிறகு கேள்விகளை ஆரம்பிக்கிறார்கள். 

ஒரு இண்டர்வியூ ஆரம்பமாகிறது.

                                                                         ***

மகி- இந்தப் பெயருக்கான காரணத்தை முன்பே சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். எனது பெயரின் முதல் எழுத்தான ‘ம’வையும் மனைவி பெயரின் முதலெழுத்தான் ‘கி’யையும் இணைத்து வைத்த பெயர்- மகி நந்தன். மூன்றரை வயதாகிறது. எல்லா குழந்தைகளையும் போலவே அவனுக்கும் சில திறமைகள் இருக்கிறது. எல்லா குழந்தைகளையும் போலவே அவனிடமும் ஏகப்பட்ட குறும்புகள் இருக்கிறது. 

இத்தனை நாட்களாக ஒரு ‘ப்ளே குரூப்’ பள்ளிக்குச் சென்று வந்தான். அந்தப் பள்ளியில் யூ.கே.ஜி வரையிலும்தான் இருக்கிறது. அதற்கு பிறகு ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு வேறொரு பள்ளிக்குதான் அனுப்ப வேண்டியிருக்கும்.

வேறொரு நல்ல பள்ளியில் நேரடியாக ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டுமானால் ஒரு லட்சம் வரைக்கும் நன்கொடை தர வேண்டும் என்று பயமுறுத்தினார்கள். அதற்கு பதிலாக எல்.கே.ஜியிலேயே சேர்த்துவிட்டால் குறைவான நன்கொடையில் தப்பித்துவிடலாம் என்றார்கள். அதுவும் நல்ல ஐடியாவாக இருந்தது. இதன் பிறகுதான் எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்ற குழப்பம் வந்தது. அடுத்த பத்து பதினைந்து நாட்களுக்கு பொழுது சாய்ந்து பொழுது எழுந்தால் பிரம்மஹத்தி தோஷம் போல இதுதான் என்னை விட்டு அகலாத நினைப்பாக இருக்கும்.

ஆசை யாரை விடும்? சரளா பிர்லா அகடமியில் ஆரம்பித்து கர்நாடக அரசின் கவர்மெண்ட் பள்ளிகள் வரை ஒவ்வொரு பள்ளியாக ஏறி இறங்கினேன். சரளா பிர்லாவில் வருடம் ஐந்தரை லட்சம் வரைக்கும் ஃபீஸ் வரும் என்றார்கள். “இந்த ஸ்கூலில் வாஸ்து சரியில்லை” என்று ஒரே ஓட்டம்தான். வேறொரு பள்ளியில் ஒரு லட்சம் நன்கொடை கேட்டார்கள். “அந்தப் பள்ளியில் வாசற்படி சரியில்லை” என்று தப்பித்துவிட்டேன். சுற்றுவட்டாரத்தில் கால் படாத பள்ளிகளே இல்லை என்ற நிலைமைக்கு பிறகு வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கும் ஒரு பள்ளியில் சேர்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தோம். மாட்டுச் சந்தையில் கைகளின் மீது துணியைப் போட்டு பேரம் பேசுவது போல பேசி எனக்கும் அவர்களுக்கும் ஒத்து வரக் கூடிய ஒரு நன்கொடைக்கு சம்மதம் சொல்லி டோக்கன் அட்வான்ஸாக ரூ.10001 ஐ கொடுத்து அட்மிஷனும் போட்டு வைத்துவிட்டேன். இது நடந்து கிட்டத்தட்ட ஐந்தாறு மாதங்கள் இருக்கும்.

அதன் பிறகு இரண்டு இன்ஸ்டால்மெண்டில் கொஞ்சம் ஃபீஸூம் கட்டியாகிவிட்டது. இதெல்லாம் முடிந்து இத்தனை நாட்களுக்கு பிறகாக ‘உங்கள் மகனுக்கு பள்ளியில் இண்டர்வியூ இருக்கிறது வாருங்கள்’ என்று எஸ்.எம்.எஸ் அனுப்பினால் வயிற்றில் புளி கரையுமா? கரையாதா?

கரைந்த புளியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நானும் மகியும் பள்ளிக்குள் போன போது பார்த்ததுதான் முதல் பத்தி.
                               
                                                                              ****

What is your name?

I Makinandhan

What is your father's name?

My appa Manikandan

How old are you?

----------

How old are you?

“உன் வயசு என்னன்னு கேட்கிறாங்க தங்கம்” என்று நான் மொழிபெயர்க்க, அந்த அம்மையார்களில் ஒருவர் என் முழியை பெயர்ப்பது போல முறைத்தார்

மூணு.
                                                                         ****

பையன் ஆங்கிலத்தில் சிரமப்படுகிறான் என்றார்கள்.  

“நாங்கள் வீட்டில் தமிழில்தான் பேசுவோம்” என்றேன். 

“மாற்றிக் கொள்ளுங்கள்” என்றார். 

வேறு வழி? “ஸ்யூர் மேடம்”

இதுவரை மூன்று கேள்விகள்தான் கேட்டிருக்கிறார்கள். மூன்றுக்குமே அரைகுறையாகத்தான் பதில் சொல்லியிருக்கிறான். அட்மிஷன் இல்லையென்று சொல்லிவிடுவார்களோ என்று பயமாக இருந்தது. அட்மிஷன் இல்லையென்று முன்பே சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஏதாவதொரு பள்ளியில் இடம் பிடித்துவிடலாம். கடைசி வரைக்கும் எதுவுமே சொல்லாமல் மார்ச் மாதத்தில் அட்மிஷன் இல்லை என்று சொல்லிவிட்டால் எங்கு போய் இடம் பிடிப்பது என்பதை யோசிக்கவே திகிலாக இருந்தது. ஒருவேளை டொனேஷன் தொகையை அதிகரிப்பதற்காக ஏதோ தகிடுதத்தம் செய்கிறார்களோ என்றெல்லாம் கற்பனைக் குதிரை தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தது.

குதிரையை இழுத்து பிடித்து அறைக்குள் கொண்டு வந்து “இதெல்லாம் எதற்காக கேட்கிறீர்கள்” என்றேன். 

“சும்மா ஒரு ஃபார்மாலிட்டி. ஸ்டூடண்ட்ஸ் எப்படின்னு தெரிஞ்சுக்கிறது” என்றார். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.

அதை வகுப்பு ஆரம்பித்த முதல் நாளில் தெரிந்து கொள்ளலாமே என்று தொண்டைக்குழிக்குள் குதித்த வார்த்தைகளை கஷ்டப்பட்டு விழுங்கிக் கொள்ள வேண்டியதாக இருந்தது.
                                       
                                                                *****

“மகிக்கு வேறு என்ன தெரியும்?” என்றார். “வேறு ஏதாச்சுமாவது தெரியுமா?” என்ற தொனியில் அதை புரிந்து கொண்டேன். 

“தலைநகரங்களைக் கேளுங்கள்”

“Capital of Karnataka"

Bangalore

"Capital of Bihar"

Patna

"Capital of United Kingdom"

London

எனக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. டீச்சர்களுக்கும்தான். “வெரிகுட்” என்றார்கள்.

நீங்கள் கிளம்பலாம் என்றார்கள்

அப்பாடா என்றிருந்தது. 

ஆனால் மகி எப்பவும் போலத்தான் இருந்தான்.
                      
                                                              *****

வெளியே வந்த போது மழை கொட்டிக் கொண்டிருந்தது. வெகு நாட்களுக்கு பிறகு மழையை பார்த்தேன். தேன் இல்லை தோம்- பார்த்தோம். பெங்களூர்வாசிகள் மழையைப் பார்த்து ஒரு வருடமே இருக்கும். இந்த ஊர் அநியாயத்திற்கு காய்ந்து விட்டது. பக்கத்தில் இருக்கும் பெரிய ஏரிகள் கூட வெடித்து பிளந்து கிடக்கின்றன. மகிக்கு நினைவு தெரிந்து முதன் முதலாக மழையைப் பார்க்கிறான். படு உற்சாகமாகிவிட்டான். 

“அப்பா ஒரு குளி குளிச்சுட்டு போய்டலாமா?”

“மழையில் குளிச்சா சளி பிடிச்சுக்குண்டா”

“அஞ்சு நிமிஷம் மட்டும்”

“ஓகே. ஆனா அம்மாகிட்ட சொல்லிடாத”

“நீங்க சொல்லிடாதீங்க” - சொன்னபடியே குதிக்க ஆரம்பித்துவிட்டான். 

இரண்டு பேரும் நனைந்து கொண்டிருக்கிறோம். இந்த பருவத்தின் முதல் மழை இது. இருவருக்குமே சளி பிடிக்கக் கூடும். நாளைக்கு என்ன வேண்டுமானாலும் ஆகட்டும். இந்த நொடி சந்தோஷமாக இருக்கிறது. அது போதும்.

என்றென்றும் அன்புடன் 
அபு ஜைனப் (ஹாஜா மொஹைதீன்)

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422


2013/4/5 ஹாஜா மொஹைதீன் <princ...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

தமிழ்ப் பயணி

unread,
Apr 30, 2013, 9:55:37 AM4/30/13
to பண்புடன், tamil...@googlegroups.com
காலச்சுவடு இ​ணைய தளத்திலிருந்து மீள்பதிவு.

இலக்கியச் சிந்தனையும் கேழ்வரகுக் களியும்


சுகுமாரன்

பாம்பின் நிறத்தில் ஒன்று. கருஞ்சாந்து நிறத்தில் ஒன்று. இரண்டு குட்டிகள் எங்கள் வீட்டில் வளர்கின்றன. குடியிருப்பின் ஏதோ வீட்டுப் பின்கட்டில் சுகப் பிரசவம் முடிந்து குட்டிகள் கண் விழித்ததும் தாய்ப்பூனை ஒவ்வொரு குட்டியையும் ஒவ்வொரு மூலையில் கடாசிவிட்டுப் போயிருந்தது. பக்கத்துக் காலி மனையில் திக்குத் தெரியாமல் கத்தித் திரிந்துகொண்டிருந்த பாம்பு வருணியை வீட்டுக்கு எடுத்து வந்தேன். மறுநாள் அடுத்த வீட்டுக் கொல்லை வாழை மரநிழலில் நிராதரவாக முனகிக்கொண்டிருந்த கருஞ்சாந்தனை எடுத்து வந்தேன். இரண்டும் ஒன்றையொன்று பார்த்தன. உடன் பிறந்த பாசத்துடன் ‘நாளை நமதே’ என்று பாடியபடி பரஸ்பரம் கவ்விக்கொண்டன. நான்கைந்து மாதங்களில் இரண்டும் வளர்ந்து ஆளாகியிருக்கின்றன. என் மேலும் மனைவி மேலும் இருக்கும் அபார நம்பிக்கை காரணமாக இருக்கலாம். பெற்றுப் போட்ட தாய்ப் பூனை எட்டிக்கூடப் பார்க்க வரவில்லை. குட்டிகளும் அதைப் பற்றி ஏங்கவில்லை.

குட்டிகள் வீட்டை விட்டு வெளியே போய்வர ஆரம்பித்தன. கொஞ்சம் ஆரோக்கியமாக வளர்ந்து உடல் பூரித்துத் திரிந்தன. அவற்றைவிடப் பெரிய குண்டுப் பூனைகள் இரவில் இவற்றை விரட்டத் தொடங்கின. இவை பயந்து ஒடுங்கின. விழித்திருக்கும் நாட்களில் கையில் கம்பெடுத்து குண்டு வில்லன்களை விரட்ட முடிந்தது. கதவுகளைச் சாத்திவிட்டுப் படுக்கைக்குப் போகத் தயாராக இருந்தபோது ஒரு குண்டு வில்லன் விரட்டியதில் கருஞ்சாந்தன் அலறிக் கூப்பாடு போட்டது. அவசர அவசரமாகக் கதவைத் திறந்து வில்லனை விரட்டினேன். பிறகுதான் தெரிந்தது பயந்துபோன கதாநாயகனும் வீட்டின் சுற்றுப் புறத்தில் இல்லை. டார்ச்சை எடுத்துக்கொண்டு காலி மனைப் புதர்களிலும் பக்கத்து, எதிர் வீடுகளிலும் தேடிப் பார்த்தும் தென்படவில்லை. காலையில் வந்துவிடும் என்று சமாதானம் ஆனோம். இல்லை. காலையிலும் பார்க்க முடியவில்லை. மறுநாளும் அடுத்த நாளும் காணவில்லை. பெரிய பூனையே கடித்துக் கொன்றிருக்கலாம்; ஏதாவது வாகனத்தில் அடிபட்டுச் செத்திருக்கலாம்; எலி விஷத்தைத் தின்று உயிர் விட்டிருக்கலாம் அல்லது நாலு கால்போன போக்கில் எங்காவது போயிருக்கலாம். என்று எல்லா சாத்தியங்களையும் யோசித்து அமைதியானோம். இருந்தும் எங்கள் இருவருக்கும் பேசிக்கொள்ளவும் பேசாமலிருக்கவும் பூனைப் பிரிவாற்றாமையே அந்த மூன்று நாட்களுக்கும் விஷயமாக இருந்தது.

மூன்றாம் நாள் விடிந்தும் விடியாத காலை. சமையல் கட்டில் வேலை செய்துகொண்டிருந்த மனைவி ஓடி வந்து தட்டி எழுப்பினாள். காணாமற்போன பூனை சமையலறை ஜன்னலுக்கு வெளியே நின்று எட்டிப் பார்த்துப் பரிதாபமாக ‘மியா’விக் கொண்டிப்பதைக் கண்களில் நீர் மல்கச் சொன்னாள். தூக்கம் முறிந்ததில் வந்த எரிச்சல் பறந்தது. ஓடிப் போய்க் கதவைத் திறந்ததும் கருஞ் சாந்தன் காலடியில் ஓடி வந்தது. அதன் பாத்திரத்தில் பாலை ஊற்றியதும் ஒரு முறை அண்ணாந்து பார்த்து பாலை நக்க ஆரம்பித்தது. குனிந்து “மூணு நாள் எங்கே தொலைஞ்சே?” என்று கேட்டுக்கொண்டே அதன் முதுகை வருடியதும் பாலைக் குடிப்பதை நிறுத்திவிட்டு முகத்தை என் பாதத்தில் உரசியது. நீர் தளும்பிய கண்களை மனைவி பார்த்துவிடாமலிருக்க முகத்தைத் திருப்பிக்கொண்டேன். பாம்பு வருணி உடன் பிறப்பையும் எங்களையும் கேலியாகப் பார்த்துக்கொண்டிருந்தது.

பேஸ் புக்கில் (முகப் புத்தகம், முக நூல், வதனப் புத்தகம், வதன ஏடு - இதில் எது சரி என்றும் சிறப்புப் பெயர்களை மொழிபெயர்ப்பது சரியா என்றும் செம்மை வினைஞர் நண்பர் நஞ்சுண்டனிடம் கேட்க வேண்டும்) வாசித்த துணுக்கு இது.

வீட்டில் பூனைத் தொந்தரவு அதிகரித்ததும் வீட்டு உரிமையாளர் அதை வெளியே கொண்டு போய் விட்டுவிட முடிவு செய்தார். பூனையை ஒரு சாக்குப் பையில் போட்டுத் தெரு முனையில் விட்டார். சாக்கை உதறிக்கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வாசலில் நின்றிருந்த பூனை மியாவ் என்று வரவேற்றது. கறுவிக்கொண்டார். மறு நாள் மறுபடியும் பூனையைச் சாக்கில் போட்டு குடியிருப்புக்கு வெளியில் நெடுஞ்சாலையில்விட்டார். சாலைக்கும் குடியிருப்புக்கும் தூரம் அதிகம். எனவே பூனை திரும்ப வராது என்று நிம்மதியாக வீடு திரும்பினார். அது அவருக்கு முன்னால் வீடு வந்து சேர்ந்திருந்தது. மூன்றாம் நாள் கடும் நடவடிக்கையாகப் பூனையைச் சாக்குப் பையில் போட்டு ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு சந்து பொந்து இண்டு இடுக்கெல்லாம் சுற்றி நகருக்கு வெளியே வெகு தூரத்தில் கொண்டு போய் விரட்டிவிட்டார். படவாப் பூனை இனி எப்படி வரும் என்று பார்க்கலாம் என்று ஆசுவாசப்பட்டார். நகரத்தை விட்டு வெகு தூரம் வந்திருப்பது தெரிந்ததும் கலவரமாகிவிட்டது. பதற்றத்துடன் மனைவியைக் கைப்பேசியில் அழைத்தார். “வீட்லதானே இருக்கே?” “ஆமா, என்ன வேணும்?” “இல்லே, அந்தப் பூனை அங்கே இருக்கான்னு பாரு.” “இதோ இங்கேதான் இருக்கு? ஏன் என்ன வேணும்?” “ஒண்ணுமில்லே. போனை அது கிட்டக் குடு. எனக்கு வீட்டுக்கு வர்ற வழி மறந்திடுச்சு. அது கிட்டதான் கேக்கணும்”.

சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் (அப்போது பங்களூரு ஆகவில்லை) நகரத்தின் ஆகப் பெரிய நட்சத்திர ஓட்டலுக்கு உணவருந்தப் போயிருந்தேன்; போயிருந்தோம். தென்னிந்தியாவின் முதல் நிலைத் தொலைக்காட்சிக் குழுமத்தில் பணியாற்றும் உயர் பதவியாளர்கள் துக்கடா உணவகங்களில் நுழைவதை நிறுவனம் விரும்பாது. எனவே நட்சத்திரப் பட்சணம். உணவுப் பட்டியலை வைத்துக்கொண்டு பணியாளரைக் கலந்தாலோசித்தோம். பட்டியலில் இருந்த ஓர் உணவு வகையின் படத்தைக் காட்டினோம் “இது ராகி முத்தே சார், பிரத்தியேகமான கர்நாடக உணவு. பிரதமர் தேவே கௌடாவுக்குப் பிடித்தமான அயிட்டம். கொண்டு வரவா?” என்றார். நாட்டின் பிரதமர் விரும்பி உண்ணும் பதார்த்தம் பிரஜைகளுக்கும் கிடைக்கும் வாய்ப்பை இழக்க விரும்பாமல் சரி என்றோம். வெகு நேரம் காத்திருக்க வைத்த பின்பு மேஜைமேல் பரிமாறப்பட்ட உணவைப் பார்த்துக் கிட்டத்தட்ட அலறிவிட்டேன். “இது எங்க ஊரு ராகிக் களியில்ல?” நட்சத்திர ஓட்டல் கனவான்கள் எல்லாரும் ஒரு விநாடி அதிர்ச்சியடைந்து என்னைப் பார்த்தார்கள். சக ஊழியர்களில் ஒருவர் என் காலைப் பலமாக மிதித்தார். “சார், அதேதான் இது. ஆனால் இதுக்கு இங்கே ஸ்டார் வேல்யூ. வாயை மூடிக்கிட்டுச் சாப்பிடுங்க” என்று உபதேசம் செய்தார்.

நாற்பத்து மூன்று ஆண்டுகளாக இலக்கியச் சிந்தனை அமைப்பு செயல்பட்டு வருகிறது. மாதா மாதம் கதைகளைத் தேர்ந்தெடுக்கிறது. அதைத் தொகுப்பாகக் கொண்டு வருகிறது. சிறந்த கதைக்குப் பரிசு வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் நாவல்களிலிருந்து சிறந்த நாவலைத் தேர்ந்தெடுத்து அதற்கு விருதுகொடுக்கிறது. முக்கியமான இலக்கிய ஆளுமை ஒருவர் பற்றி ஒரு நூலை எழுதச் செய்து வெளியிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிறமொழிப் படைப்பாளி ஒருவரை அழைத்துச் சிறப்புச் சொற்பொழிவை நிகழ்த்தச் செய்கிறது. அண்மைக் காலமாகத் தமிழுக்குப் பெரும் பங்காற்றிய சான்றோருக்குப் பணமுடிப்பும் கொடுக்கிறது.

இலக்கியச் சிந்தனை விருதுகளும் பரிசுகளும் பண மதிப்பில் கனமானவை அல்ல; ஆனால் பொருட்படுத்தத் தகுந்தவை என்று இலக்கியச் சூழலில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இலக்கியச் சிந்தனை விருது பெற்ற படைப்பு/ படைப்பாளர் என்று புத்தகங்களில் பார்க்கும் விவரம் இதற்குச் சான்று. அதற்குக் காரணம் இதுவரை பரிசும் விருதுகளும் பெற்றவர்களில் தமிழின் முக்கியமான படைப்பாளிகள் இருந்ததுதான்.

இந்த ஆண்டு வெளியான நாவல்களில் விருதுக்குரிய சிறந்த நாவலாக இலக்கியச் சிந்தனை அமைப்புத் தேர்ந்தெடுத்திருப்பது ‘மூன்றாம் உலகப் போர்’ என்ற தொடர்கதையை. இதுவரை இலக்கியச் சிந்தனை பரிசுக்குரியதாக அறிவித்த எந்தப் படைப்பைப் பற்றியும் மூச்சுக் காட்டாத வார இதழ், தான் வெளியிட்ட தொடர் என்பதால் இலக்கியப் புளகாங்கிதம் அடைந்து அதை எழுதியவருடன் நேர்காணல் நடத்தி வெளியிடுகிறது. ‘மூன்றாம் உலகப் போ’ரைத் தோற்கடிக்கக் கூடியவையாக அதே ஆண்டில் வெளியான ஆகச் சிறந்த நாவல்களாகக் குறைந்தது ஐந்து நாவல்களையாவது எடுத்துக்காட்ட முடியும். ஆனால் அந்தப் படைப்பாளிகள் சாதாரண பெருமாள்முருகன்களாகவோ யுவன் சந்திரசேகரன்களாகவோ லட்சுமி சரவணகுமார்களாகவோ குமாரசெல்வாக்களாகவோ சிவகாமிகளாகவோ இருந்து தொலைத்தால் இலக்கியச் சிந்தனை என்னதான் செய்ய முடியும்?

மேலேயுள்ள இலக்கியக் குறிப்புக்கும் அதற்கும் மேலேயுள்ள சாப்பாட்டுக் குறிப்புக்கும் எந்த விதமான நேரடித் தொடர்பும் கிடையாது. நீங்களாகக் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டால் அதற்குப் பத்தியாளர் பொறுப்பல்ல.

பொதுச் சமூகத்தில் பெண்கள் மீதான மதிப்பையும் அவர்களுக்கான அங்கீகாரத்தையும் அவர்கள்பால் அன்பையும் வலியுறுத்துவதுதான் ‘மார்ச் 8 - மகளிர் தினத்தின் நோக்கம் என்று ஐக்கிய நாடுகள் அவையின் குறிப்புச் சொல்கிறது. பெண்கள் தங்கள் உரிமைகளை வலியுறுத்தவும் சமூக, பொருளாதார, அரசியல் சாதனைகளை முன்னிருத்தவுமே இந்த நாள் என்று கட்டற்ற கலைக் களஞ்சியமான விக்கிபீடியா விளக்கமளிக்கிறது. திருவனந்தபுரத்தில் நான் பார்த்த மகளிர் தின அறிவிப்பு கவனத்தைக் கவர்ந்தது. அரிவாளை ஏந்தியப் பெண்ணின் படத்துக்குக் கீழே வாசகங்கள் எழுதிய பலகையில் இருந்தது அந்த அறிவிப்பு. ‘மகளிர் தினச் சிறப்புச் சலுகை. முக ஒப்பனை, நகச் செதுக்கல், சிகை திருத்தல், புருவம் திரித்தல் எல்லா சேவைகளுக்கும் இன்று மட்டும் கட்டணம் ரூ. 888.’ அறிவிப்பில் பழைய தொகையான ரூ. 1200 பெருக்கல் குறியால் வெட்டப்பட்டிருந்தது.

--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"மனிதர்களின் குறைபட்ட புரிதல்களை உள்ளபடியே எடுத்துக் கொண்டு அவற்றை மகத்தான மதங்களின் உண்மையான போதனைகளாக நினைக்க வேண்டாம். abcxyz உலகம் இப்போது சகோதரத்துவத்துடன் வாழ்கிறது என்று நீங்கள் என்னிடம் சொல்வீர்களா என்ன? அதன் போர்களையும் வெறுப்புகளையும் ஏழ்மையையும் அதன் குற்றங்களையும் நினைத்துப் பாருங்கள்."
- மகாத்மா காந்தி - காந்தி எனும் மனிதர்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Reply all
Reply to author
Forward
0 new messages