இளையராஜா மீதான குறைபாடுகள்

177 views
Skip to first unread message

Gokul Kumaran

unread,
Mar 2, 2013, 6:59:56 AM3/2/13
to Panbudan
http://www.twitlonger.com/show/l4lobs

இளையராஜா மீதான குறைபாடுகள், குற்றச்சாட்டுகள் தாக்குதல்கள் என்று இதுவரை நான் கேள்விப்பட்ட சிலவற்றை கடந்த அரைமணி நேரத்தில் நினைவு கூற முடிந்ததை கீழே தொகுத்துள்ளேன். இவை இப்போதைக்கு எழுதும் போக்கில் நினைவுக்கு வந்தவை மட்டுமே.

ஆணவம் மிகுந்தவர்; இவரது ஆணவத்தினாலேயே பல இயக்குனர்கள் இவரை அழைப்பதில்லை. ஒரு இயக்குனரிடம் வாயை கொடுத்து கன்னத்தில் அறை வாங்கினார்; அவரது ஈகோ அடிவாங்கிய அந்த நிகழ்விலிருந்து அவரது சரிவு தொடங்கியது. வைரமுத்து மீது காரணமின்றி தீராத வன்மம் கொண்டிருப்பவர். மாறாக வைரமுத்து இன்னமும் ராஜா மீது அன்பு கொண்டு கவிதை எழுதுபவர். தன் நிகழ்ச்சியின் மேடையில் தன் படம் மட்டுமே இருக வேண்டும் என்று சொன்னார்; தன் நிகழ்ச்சிக்கு முன் வேறு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படக்கூடாது என்று நிபந்தனை விதித்தவர்; அதனால் அல்பமானவர். பணத்தை ஆடம்பரமாக செலவழித்தார்; படாடோபமாக பிறர் பணத்தில் வாழ்ந்தார்; வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பி தரவில்லை; அது மக்களின் பணம். ஜவுளிக்கடைகள் பலவற்றில் கடன் வைத்து திருப்பித் தரவில்லை. இன்னும் எத்தனையோ பேருக்கு பணம் திருப்பி தரவில்லை. தொலைத்த காசை கண்டு பிடித்து கொடுத்தவருக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை. ரசிகர் எழுதிய கடிதத்திற்கு பதில் போடவில்லை. திருவாசகம் சிம்ஃபனியில் ஜெகத் காஸ்பரிடம் நன்றியில்லாமல் நடந்து அவமரியாதை செய்தவர்; திருவாசகம் விற்பனையில் பெரும் நஷ்டம் ஏற்பட காரணமாக இருந்தவர். திருவாசகத்திற்காக அரசு உதவியை பெற்று மறைமுகமாக அரசு பணத்தை திருடினார். ஆன்மீகம் பேசுபவர்; போலி ஆன்மிகம் பேசுபவர்; பிரமண அடிவருடி; அசைவம் உண்ணாதவர்; அசைவ உண்ணும் பழக்கத்தை மதிகாதவர். புகழ்மோகம் கொண்டவர்; அதற்காக பல ஸ்டண்டுகளை நடத்துபவர். பாவலர் வரதராஜன், பாப் மார்லெயை குப்பை என்றார்; கதாரை குப்பை என்றார்; அடுத்து பாப் டைலனை கூட குப்பை என்றார். மலையாள கவிஞர் ஒன்வி குருப்பை பற்றி மோசமாக பேசினார். தன் பாட்டு காப்பியடிக்கப்பட்டதற்கு கோபப்பட்டார். ஆனால் அவரே சில காப்பிகள் அடித்தார். உதாரணமாக 'பா' திரைப்படத்தில் 'கும்சும்..' பாட்டு "இஸ்தான் புல்..' என்ற பாட்டிலிருந்து காப்பியடிக்கப் பட்டது. ஆபா, போனிஎம் இசையை திருடினார். அவர் ஒரு தலித் பார்ப்பனர்; பூணூல் அணியாவிட்டாலும் நரம்பையே பூணுலாக கொண்டவர். முல்லை பெரியார் நிகழ்வின் போது ஜாய் ஆலுக்காஸ் ஆதரவுடன் இசை நிகழ்ச்சி நடத்தினார். மாவீரர் மாதத்தில் வேண்டுமென்றே சிங்கள அரசிடம் கைக்கூலி பெற்று கனடா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்தார்; பெரியாரை சிலைக்கு மாலையிட மறுத்தார். ரமணரை பற்றி பாடினார்; புருஷசுக்தத்திற்கு இசை வடிவம் தந்தார். இவ்வாறு இந்துத்வ ஆதரவாளராக திகழ்ந்தார். யுவனுக்கு ஏதோ ஒரு விலை உயர்ந்த கார் வாங்கி தந்தார். ('யுவனுக்கு இந்த கார் வாங்கி தர்ரான்.. திருவாசகம் இசையமைக்க பணம் இல்லைன்றான்..") தன் பழைய வாழ்க்கையை நினைத்து பார்க்காதவர். தான் ஜாதி பற்றிய உணர்வு இல்லாதவர். தலித்களுக்காக குரல் கொடுக்காதவர். ஒரு கழுகின் உயரத்திற்கு பறந்து கழுகாகவே மாறி விட்டவர். சனாதனத்தை அசைக்காமல் இசைத்தவர். தன் ஜாதியை குறிப்பிட்டதற்காக கே ஏ குணசேகரன் மீது வழக்கு தொடுத்தவர். 'ஆசை நூறுவகை..' பாட்டை தான் அனுமதித்ததை விட அதிகமாக பயன்படுத்தியதற்காக ராம் கோபால் வர்மா மீது வழக்கு போட்டவர். விஞ்ஞானம் என்றால் என்னவென்று அறிவில்லாதவர். அதை முடம் மூடம் என்பவர். எஸ்பிபி மீது பொறாமை கொண்டவர். அவரை ஒழித்துக் கட்ட முயற்சித்தவர். பிள்ளை பாசத்தால் 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தில் யுவனை பாடவைத்தவர். பாரதிராஜாவை பற்றி மோசமாக பேசியவர். ரஹ்மானை மதிக்காதவர். ரஹ்மானின் சாதனைகளை அங்கீகரிக்காதவர். ரஹ்மானுக்கு பத்மபூஷன் கிடைத்த போது பாராட்டாமல்' 'I can only feel for myslelf' என்றவர். தன் சிம்பனியை வெளியிடவில்லை; சிம்ஃபனி எழுதினாரா என்பதே சந்தேகம்; எழுதியதற்கான ஆதாரம் இல்லை. சிம்ஃபனி எழுதியதாக பொய் சொல்லி ஃப்ராடு வேலை செய்தவர். அவரது திருவாசகம் உண்மையில் ஆரட்டோரியா இல்லை. ஹிந்தி இசையமைப்பாளர்கள் பற்றி தவறான செய்தியை மேடையில் சொன்னவர். மலேசியா வாசுதேவனை அவரது கடைசி காலத்தில் போய் பார்க்காதவர்; மலேசிய வாசுதேவனுக்கு உதவாதவர். தம்பி கங்கை அமரனுடன் கோபம் கொண்டு பேசாதவர். அவரையும் அவர் குடும்பத்தையும் ஒதுக்கி வைத்திருப்பவர். கங்கை அமரனுக்கு தர வேண்டிய காம்பையர் வேலையை பார்திபனுக்கும், பிரகாஷ்ராஜுக்கும் தன் நிகழ்ச்சிகளில் கொடுத்தவர். தன்னிடம் வேலை பார்க்கும் இசை கலைஞர்களுக்கு ஒழுங்காக சம்பளம் தராதவர்; தன்னிடம் வேலை பார்ப்பவர்கள் பற்றி அவர்களின் முதுகுக்கு பின்னால் கேவலமாக பேசுபவர். கேஸட்டுகளில் சிடிக்களில் வாத்தியங்களை இசைத்தவர்களின் பெயர்களை (ரஹ்மான் செய்வதுபோல்) குறிப்பிடாதவர். பாட்டுக்கு மெட்டு என்று இல்லாமல் தன் இசைக்கு பாட்டு போடும் வழக்கத்தை கொண்டு வந்தவர். திருவாசகத்திலேயே முதலில் மெட்டை தேர்ந்தெடுத்து விட்டு, பின்பு அதற்கு ஏற்ப பாடல்களை கண்டுபிடித்தவர். பல பாடல்களை பவதாரிணியை பாடவைத்து கெடுத்தவர். மேலும் பல பாடல்களை சுருதி இல்லாமல் தான் பாடி கெடுத்தார். மாண்டு ராகம் ஒரு கர்நாடக ராகம் என்று தவறான தகவலை தந்தவர்; அவருக்கு கர்நாடக இசை ஒழுங்காக தெரியாது. இன்றய திரை இசை தரம்குறைந்தது என்றார்; ஆனால் யுவன் சங்கர் ராஜா இசை பற்றி குறை சொல்லவில்லை. திரையிசையில் ஆன்மா இல்லை என்றார். அவரது பல பாடல்களுக்கு உண்மையில் இசையமைத்ததே ரஹ்மான்தான். 'How to name it' 25வது ஆண்டு விழாவிற்கு நரசிம்மனை அழைக்கவில்லை; அதன் ஒரிஜினல் கேஸட்டில் நரசிம்மன் பெயரை போடவில்லை. அற்பமான மனிதர்; மனிததன்மை இல்லாதவர். மூகாம்பிகை கோவிலுக்கு காசு கொடுத்தார்; ஆனால் திருவாசகத்திற்கு காசு இல்லை என்றார். எம் எஸ் விஸ்வநாதன் இசை குறிப்புகள் எழுதி இசையமைப்பதில்லை என்று குறை சொன்னார். நவபார்ப்பனர்; தன்னை பார்பனர்களை விடவும் உயந்தவராக கருதிக்கொள்பவர். கவிதையைவிட இசையே சிறந்தது என்று நினப்பவர். அதை நிறுவ படாதபாடுபடுபவர். "தாமரை மலரில் மனதினை வைத்து.." என்ற கண்ணதாசனின் வரிகளில் அர்த்தமில்லை என்று சொன்னார். கவிதை என்பதே குப்பை என்று நிறுவ படாதபாடு பட்டார். அதனால் மனப்பிறழ்வு கொண்டவர்…. இன்னமும் ஏகபலது உண்டு. இப்போதைக்கு இவ்வளவுதான் நினைவுக்கு வந்தது.



இதற்கெல்லாம் விரிவான பதில் சொல்வதும், விமர்சன பூர்வமாக அணுகுவதும் சாத்தியம். ஆனால் அதுவல்ல விவேகமான அணுகுமுறை. நாம் கேட்க வேண்டியது, உலகின் எந்த மூலையிலாவது, எந்த சமுகத்திலாவது ஈடு இணையற்ற தங்களின் மேதையை பற்றி இப்படி பேசி கேட்க முடியுமா? அப்படி இளையராஜாவை விட தமிழகம் தந்த மேதை என்று வேறு யாராவது இருக்கிறார்களா? இந்திய அளவில் யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு மேதையை, அதுவும் எந்த வாய்ப்பும் வசதியும் அற்ற, இளையராஜா என்று ஒருவர் பிறந்திருக்காவிட்டால் ஏனையோர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லாத ஒரு கிராமத்தில், ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, தமிழகம் முழுக்க அலைந்து, கடின உழைப்பில் முன்னேறி, பட்டினி கிடந்து, வாய்ப்புக்காக காத்திருந்து, வாய்ப்பு வந்த பின் பிரபஞ்ச கூத்தாடிய (இதை எழுதும் போது கண்ணீர் வருகிறது) ஒருவனை வெறும் வம்புகளாலும், வசைகளாலும் எதிர்கொள்ளும் சமூகம் உருப்பட ஏதேனும் துளி சாத்தியம் உள்ளதா? உள்வாங்க முடியாத விஷயத்தை, அளவிட முடியாததை, ஒரு சட்டகத்தில் புரிந்து கொள்ள முடியாததை பற்றி இவ்வளவு தன்னம்பிக்கையுடன் சின்னதனமாக விமர்சனங்களால் அணுகும் ஒரு சமூகம், தன்னை பற்றி மற்றவர்களின் முன்முடிவுகள் குறித்து கழிவிரக்கம் கொள்வதில் ஏதேனும் நியாயம் உள்ளதா?


எழுதியவர் பெயர்: Rosavasanth

இவரது வலைத்தள முகவரி: http://rozavasanth.blogspot.ae/

--
Gokul Kumaran

Twitter: @gokuldubai
Sent from Web Gmail

மோரு

unread,
Mar 2, 2013, 7:14:36 AM3/2/13
to பண்புடன்
​இளையராஜாவை ஆதங்கத்தோடு விமர்சிப்பவர்களும் உண்டு வன்மத்தோடு விமர்சிப்பவர்களும் உண்டு. இது இரண்டாம் வகை.

வைரமுத்து இளையராஜா மீது அன்பு காட்டுறாராம் இளையராஜா  , வைரமுத்து மீது வன்மம் காட்டுகிறாராம் :-)))))




2013/3/2 Gokul Kumaran <gokul...@gmail.com>

இளையராஜா மீதான குறைபாடுகள், குற்றச்சாட்டுகள் தாக்குதல்கள் என்று இதுவரை நான் கேள்விப்பட்ட சிலவற்றை கடந்த அரைமணி நேரத்தில் நினைவு கூற முடிந்ததை கீழே தொகுத்துள்ளேன். இவை இப்போதைக்கு எழுதும் போக்கில் நினைவுக்கு வந்தவை மட்டுமே.




--


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

Ahamed Zubair A

unread,
Mar 2, 2013, 8:33:50 AM3/2/13
to panb...@googlegroups.com
இளையராஜாவைப் பத்தி பேசும்போது, அவர் இசையை மட்டும் அன்னப்பறவையா எடுத்துக்கங்க மக்கா...

மத்ததெல்லாம் நமக்கெதுக்கு...


//உலகின் எந்த மூலையிலாவது, எந்த சமுகத்திலாவது ஈடு இணையற்ற தங்களின் மேதையை பற்றி இப்படி பேசி கேட்க முடியுமா? அப்படி இளையராஜாவை விட தமிழகம் தந்த மேதை என்று வேறு யாராவது இருக்கிறார்களா? இந்திய அளவில் யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு மேதையை, அதுவும் எந்த வாய்ப்பும் வசதியும் அற்ற, இளையராஜா என்று ஒருவர் பிறந்திருக்காவிட்டால் ஏனையோர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லாத ஒரு கிராமத்தில், ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, தமிழகம் முழுக்க அலைந்து, கடின உழைப்பில் முன்னேறி, பட்டினி கிடந்து, வாய்ப்புக்காக காத்திருந்து, வாய்ப்பு வந்த பின் பிரபஞ்ச கூத்தாடிய (இதை எழுதும் போது கண்ணீர் வருகிறது) ஒருவனை வெறும் வம்புகளாலும், வசைகளாலும் எதிர்கொள்ளும் சமூகம் உருப்பட ஏதேனும் துளி சாத்தியம் உள்ளதா? உள்வாங்க முடியாத விஷயத்தை, அளவிட முடியாததை, ஒரு சட்டகத்தில் புரிந்து கொள்ள முடியாததை பற்றி இவ்வளவு தன்னம்பிக்கையுடன் சின்னதனமாக விமர்சனங்களால் அணுகும் ஒரு சமூகம், தன்னை பற்றி மற்றவர்களின் முன்முடிவுகள் குறித்து கழிவிரக்கம் கொள்வதில் ஏதேனும் நியாயம் உள்ளதா? //

Imsai Arasi

unread,
Mar 2, 2013, 10:26:20 AM3/2/13
to panb...@googlegroups.com
என்னடா இப்படி இருக்கே இந்த கட்டுரை என்று நினைத்துகொண்டு படிக்கையில், கடைசி பாராவில் அழகா முடித்து இருக்கிறார்!


அன்று நடந்த நிகழ்ச்சியில், ஒரு பாட்டு ஆரம்பத்தில், புல்லாங்குழலை எடுக்கையில், அருண்மொழி அவர்கள் அதை  கிழே தவறவிட, திரும்ப எடுத்து மறுமடியும் முதலில் இருந்து ஆரம்பித்தார் அந்த பாடலை. அதே போல் வேறு ஒரு பாட்டுக்கு ஷெனாய் வாசிக்கும் பொது, சரியாக வரவில்லை என்பதால் மறுமடியும் முதலில் இருந்து ஆரம்பித்தார். He is a perfectionist!

சில பாட்டுக்கு மெட்டு போட்டதை பற்றி சொல்கையில், he is a genius!!

அவரை நாம் கொண்டாடவேண்டும்....!!

அரசி...



2013/3/2 Gokul Kumaran <gokul...@gmail.com>

Asif Meeran AJ

unread,
Mar 2, 2013, 11:46:41 AM3/2/13
to panb...@googlegroups.com
ோகுல்ஜி

ான் உங்கக்கா??
ோசா வந்த் பாராட்டாரட்டுன்னாராட்டி ொலைச்சிருக்காரு.
ப் போய் இம்சை லிஸ்டுன்னு போட்டிருக்கிரே? :-(


Asif Meeran AJ

unread,
Mar 2, 2013, 11:47:34 AM3/2/13
to panb...@googlegroups.com
​இளையராஜாவை ஆதங்கத்தோடு விமர்சிப்பவர்களும் உண்டு வன்மத்தோடு விமர்சிப்பவர்களும் உண்டு. இது இரண்டாம் வகை.

பக்கி

ஒழுங்கா வாசிச்சு தொலைலே!
ரோசா வசந்து பாராட்டில்லா தொலைச்சிருக்காரு??

Asif Meeran AJ

unread,
Mar 2, 2013, 11:50:35 AM3/2/13
to panb...@googlegroups.com
இளையராஜாவைப் பத்தி பேசும்போது, அவர் இசையை மட்டும் அன்னப்பறவையா எடுத்துக்கங்க மக்கா...
மத்ததெல்லாம் நமக்கெதுக்கு...

எலே நட்ட நடு செண்டரு

அப்படித்தான் எடுத்துக்கணும்
காசு கொடுத்து கச்சேரி கேட்க வர்றவன் கிட்ட கைதட்டாதே விசில் அடிக்காதேன்னு
சொல்றதுக்கு இவரு யாரு?

ஜானகி குரல் சுமார்ன்னாலும் திறமையால ஒப்பேத்திட்டாங்களாம்
பவதாரிணியோட குரல் மாதிரி உலகத்துல வித்தியாசமான குரலே இல்லையாம்
இதெல்லாம் என்னங்கறேன்?

நிறைகுடம்ன்னா தழும்பக்கூடாது. இவர் உன்னை விட மோசமால்ல அலப்பரை பண்ராரு :-)

Asif Meeran AJ

unread,
Mar 2, 2013, 11:54:58 AM3/2/13
to panb...@googlegroups.com
இன்றைக்கு சில ிரையக்கைச் சந்தித்ேன்
இளையாஜாவின் ிமிர்த்த்ைப் பற்றி கை கையாகச் சொன்னர்கள்
இயக்குனர்கையே பிவு நக்கும் நேரத்ிலுமிக்காட்டாராம் :-(

அவரை நாம் கொண்டாடவேண்டும்....!!

ஆன்மீகம் என்று அரைவேக்காட்டுத்தனமாக உளறிக்கொண்டு ஆண்வத்தோடு
நடந்து கொள்வதென்பது இசைக்கு ராசாவிடம் இருக்கிறதென்பதுதான் அவர்மீதான்
குறைபாடு.
 

மோரு

unread,
Mar 2, 2013, 12:26:51 PM3/2/13
to பண்புடன்
சாரி :-)


2013/3/2 Asif Meeran AJ <asifm...@gmail.com>

பக்கி

ஒழுங்கா வாசிச்சு தொலைலே!

Imsai Arasi

unread,
Mar 2, 2013, 12:36:26 PM3/2/13
to panb...@googlegroups.com
அந்த கதையை கொஞ்சம் அவுத்து விடுங்க அண்ணாச்சி...
ஞானம் பெறுகிறேன்... :)

அரசி...

2013/3/2 Asif Meeran AJ <asifm...@gmail.com>
இன்றைக்கு சில ிரையக்கைச் சந்தித்ேன்

Ahamed Zubair A

unread,
Mar 2, 2013, 2:03:37 PM3/2/13
to panb...@googlegroups.com
என்னை நிறைகுடம்னு சொல்றீங்களா அண்ணாச்சி :))

2013/3/2 Asif Meeran AJ <asifm...@gmail.com>

Asif Meeran AJ

unread,
Mar 3, 2013, 5:25:07 AM3/3/13
to panb...@googlegroups.com
என்னை நிறைகுடம்னு சொல்றீங்களா அண்ணாச்சி :))

உருவத்தால நீ அப்படித்தாம்ல பக்கி :-)

Ahamed Zubair A

unread,
Mar 3, 2013, 5:25:44 AM3/3/13
to panb...@googlegroups.com
:-))))))))))))

2013/3/3 Asif Meeran AJ <asifm...@gmail.com>

shahrukh Iste

unread,
Mar 3, 2013, 5:31:36 AM3/3/13
to panb...@googlegroups.com
If you need any autism ribbon items check out www.fundraisingforacause.com. They have some great autism items at very low prices. Great for fundraising. I even found a coupon code: FUND123.


2013/3/3 shahrukh Iste <shahruk...@gmail.com>
If you need any autism ribbon items check out www.fundraisingforacause.com. They have some great autism items at very low prices. Great for fundraising. I even found a coupon code: FUND123.


2013/3/3 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 


shahrukh Iste

unread,
Mar 3, 2013, 5:31:30 AM3/3/13
to panb...@googlegroups.com
If you need any autism ribbon items check out www.fundraisingforacause.com. They have some great autism items at very low prices. Great for fundraising. I even found a coupon code: FUND123.
2013/3/3 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
:-))))))))))))

--

Ahamed Zubair A

unread,
Mar 3, 2013, 5:32:31 AM3/3/13
to panb...@googlegroups.com
:-))))))))))))))))))

தமிழ்ப் பயணி

unread,
Mar 3, 2013, 5:35:33 AM3/3/13
to பண்புடன்
அரு​மை.... சின்ன த​லை​மை பண்பாளருக்கு நிர்வாகத்தில் ​கோட்​டை விட்டதாக வரலாற்றில் கரும்புள்ளி... :) :)

2013/3/3 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
:-))))))))))))))))))

2013/3/3 shahrukh Iste <shahruk...@gmail.com>
If you need any autism ribbon items check out www.fundraisingforacause.com. They have some great autism items at very low prices. Great for fundraising. I even found a coupon code: FUND123.

2013/3/3 shahrukh Iste <shahruk...@gmail.com>
If you need any autism ribbon items check out www.fundraisingforacause.com. They have some great autism items at very low prices. Great for fundraising. I even found a coupon code: FUND123.


--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"மனிதர்களின் குறைபட்ட புரிதல்களை உள்ளபடியே எடுத்துக் கொண்டு அவற்றை மகத்தான மதங்களின் உண்மையான போதனைகளாக நினைக்க வேண்டாம். abcxyz உலகம் இப்போது சகோதரத்துவத்துடன் வாழ்கிறது என்று நீங்கள் என்னிடம் சொல்வீர்களா என்ன? அதன் போர்களையும் வெறுப்புகளையும் ஏழ்மையையும் அதன் குற்றங்களையும் நினைத்துப் பாருங்கள்."
- மகாத்மா காந்தி - காந்தி எனும் மனிதர்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மோரு

unread,
Mar 3, 2013, 6:51:48 AM3/3/13
to பண்புடன்
​பண்புடன் வரலாற்றில் ஆகச்சிறந்த கல்வெட்டில் பதிக்கப்படவேண்டிய வாக்கியம் இது :-)​

2013/3/3 Asif Meeran AJ <asifm...@gmail.com>
உருவத்தால நீ அப்படித்தாம்ல பக்கி :-)




--


அன்போடு

மோரு

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Mar 4, 2013, 1:26:09 PM3/4/13
to panb...@googlegroups.com
அந்த புல் பாடுகிறது.
கல் பாடுகிறது.
குருவி பாடுகிறது.
இலையின் ஊசிமுனையில்
வைரத்துளிகள் உருண்டு
பண் கூட்டுகிறது.
செம்மண் தூசியிலும்
செம்மங்குடிகளின்
சில்லிப்புகள் தான்.

இது மட்டுமே 
இசை ஞானியின்
அடையாளம்.

மற்ற 
அவரது
இருமல் பொருமல்
தும்மல் விம்மல்
பம்மல் கும்மல்களுக்குள்
எந்த சுவடுகளும் கிடையாது
அவர் ஒரு ஞானி என்பதற்கு.

================================================ருத்ரா

Raju pandian

unread,
Mar 4, 2013, 2:06:57 PM3/4/13
to panb...@googlegroups.com
இளையராஜா பற்றிய விமர்சனங்கள் = சூரியனை பார்த்து நாய் குரைத்த கதை!


2013/3/4 ருத்ரா (இ.பரமசிவன்) <eps...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்
http://npandian.blogspot.com/

PRASATH

unread,
Mar 4, 2013, 3:26:45 PM3/4/13
to Groups
புகழ்ந்து வரும் விமர்சனங்களைச் சொல்றீங்களா... :))))


2013/3/5 Raju pandian <nambika...@gmail.com>

Raju pandian

unread,
Mar 4, 2013, 3:58:04 PM3/4/13
to panb...@googlegroups.com
விமர்சித்தல் என்றாலே குறைசொல்லும் போக்கே அதிகம், புகழ்தலை விமர்சித்தல் என்று அர்த்தம் சொன்னதாக தெரியவில்லை! :):):):):):):):):):):):):):):):):):)



2013/3/5 PRASATH <pras...@gmail.com>
புகழ்ந்து வரும் விமர்சனங்களைச் சொல்றீங்களா... :))))



2013/3/5 Raju pandian <nambika...@gmail.com>
இளையராஜா பற்றிய விமர்சனங்கள் = சூரியனை பார்த்து நாய் குரைத்த கதை!

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

PRASATH

unread,
Mar 4, 2013, 4:23:53 PM3/4/13
to Groups
இப்போ திரை விமர்சனம்னு சொல்றாங்க... அதுல என்ன குறை சொல்வது மட்டுமா இருக்கு...

விமர்சனம் என்பது ஒன்றைப் பற்றிய கருத்தைப் பதிப்பது மட்டுமே... அது எப்படிப்பட்ட விமர்சனம் என்பது எழுதுபவரின் புரிதலைப் பொறுத்தது...


2013/3/5 Raju pandian <nambika...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Mar 5, 2013, 1:55:05 AM3/5/13
to panb...@googlegroups.com
பிரசாத்து,

அண்ணனைத் தூண்டிவிடாதே...

கவிதை எழுதிடுவாரு ;)

2013/3/5 PRASATH <pras...@gmail.com>

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Mar 5, 2013, 12:33:32 PM3/5/13
to panb...@googlegroups.com
கல்லைக்கண்டால் 
நாயைக்காணோம்.
நாயைக்கண்டால்
கல்லைக்காணோம்
என்பது போல
சூரியனைப்பார்த்தால்
நாயைக்காணோம்
நாயைப்பார்த்தால்
சூரியனைக்காணோம்.

================================ருத்ரா

ப்ரியன்

unread,
Mar 28, 2013, 5:48:00 AM3/28/13
to panb...@googlegroups.com
என்னைப் பயன்படுத்தாததால் நஷ்டம் ரஜினி, கமலுக்குத்தான்!- இளையராஜா

சென்னை: வள்ளி, விருமாண்டி படங்களுக்குப் பிறகு ரஜினியும் கமலும் தங்கள் படங்களில் என்னைப் பயன்படுத்தாதது குறித்து நான் கவலைப்படவில்லை. அதனால் நஷ்டம் அவர்களுக்கே, என்று அதிரடியாகக் கூறியுள்ளார் இளையராஜா.

ரஜினி, கமல் நடித்த அதிகபட்ச படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. இவர்கள் இணைந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் காலத்தை வென்றவை. இன்றும் புதிதாகவே இருப்பவை.

ஆனால் ரஜினி கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்த வள்ளிக்குப் பிறகு, இருவரும் இணையவில்லை. இத்தனைக்கும் வள்ளியின் மிகப் பெரிய பலமாக நின்றது இளையராஜாவின் இசை.

அதேபோல, கமல் இயக்கி நடித்த விருமாண்டிக்குப் பிறகு கமல் படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. விருமாண்டியின் பெரிய பலமும் ராஜாவின் இசைதான்.

இதுபற்றி வார இதழ் ஒன்றில் வாசகர் கேள்விக்கு, இளையராஜா இப்படி பதிலளித்துள்ளார்.

"விருமாண்டி"க்கு பின் அவரும், "வள்ளி"க்குப் பின் இவரும் உங்களோடு சேரவில்லையே? அதுபற்றி எண்ணியதுண்டா ?

என்னை வைத்துதான் இசையமைக்க வேண்டும் என எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் கிடையாது. ஏன் அப்படி யாரிடமும் ஒப்பந்தம் போட்டது இல்லை. அவர்கள் இந்தப் படத்திற்கு "இளையராஜா"வின் இசை சரியாக இருக்காது என்று கணித்திருக்கலாம். ஆனால் அது தவறு என்று அவர்களுக்குத் தெரியாது.

காரணம், நான் எந்தப் படத்திற்கு எந்த இடத்திற்கு எந்த மாதிரி இசையமைப்பேன் என்று என்னாலேயே கணிக்க முடியாது. பிறகு எப்படி மற்றவர்களால் அதை கணிக்க முடியும்?

எனக்கு இந்த இசைதான் தெரியும் என்று யாரும் லேசில் எடை போட வேண்டாம்.

ஏனென்றால் எந்தக் காலத்துக்குள்ளும் என் இசை அடங்காது. என்னை வேண்டாம் என்பது அவர்கள் இஷ்டம். அதனால் நஷ்டம் அவர்களுக்கே. ஆனால் காலாகாலத்திற்கும் நின்றிருக்கும், நிலைத்திருக்கும் என் இசை.

நெத்தியடி பதில்!

Arun Kumar

unread,
Mar 28, 2013, 5:50:13 AM3/28/13
to பண்புடன்
இப்பிடி பேசி பேசியேதான் பேர  கெடுத்துகுராறு சுவாமிகள்


--
K.Arunkumar
Co-Ordinator - Branding
HCS - Department
Apollo Speciality Hospitals.

ஆசாத்

unread,
Mar 28, 2013, 6:38:33 AM3/28/13
to panb...@googlegroups.com

எழுதியவர் பெயர்: Rosavasanth

கடந்த செவ்வாயன்று ரோசாவசந்தைச் சந்தித்தேன். இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதற்கும் மேலாக ஏதேனும் வார்த்தை இருந்தால், அதைத்தான் சொல்லவேண்டும். 

அந்தச் சந்திப்பிற்கு பாடகர் ஹரீஷ் ராகவேந்திராவும் இருந்தார். 

'நிற்பதுவே நடப்பதுவே' பாடலை ஹரீஷ் பாடியது இளையராஜாவின் இசையில், சந்திப்பில் பாராட்டிற்குக் கேட்கவேண்டுமா :-)

விழியன்

unread,
Mar 28, 2013, 6:45:17 AM3/28/13
to panb...@googlegroups.com
Parisalkaaran Krishna Kumar
டேவிட் - David Exim என் நண்பர். ட்விட்டரால் விளைந்த நட்பு. பலதொழில் வித்தகர். சிலபல இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர். 2011-ல் எஸ்.பி.பி. அவர்களை வைத்து கோவையில் பெரியதொரு இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிடுகிறார். எல்லாம் ரெடி. பட்ஜெட் கிட்டத்தட்ட 20 லட்சம். சின்னச் சின்ன ஸ்பான்சர்ஸ் எல்லாம் பிடித்துவிட்டார். பெரிய ஒரு ஸ்பான்சர் தேவை. அவரும், அவரது மேனேஜரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வேளையில், சென்னையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி. என்றென்றும் ராஜா. பல வருடங்களுக்குப் பிறகு இளையராஜா தன் ஒரிஜினல் ஆர்க்கஸ்ட்ரைசேஷன் ட்ரூப்போடு மேடை நிகழ்ச்சி நடத்துகிறார். லைவாக காணும் வாய்ப்பு. நண்பர் டேவிட், இளையராஜா ரசிகர். டிக்கெட் புக் செய்கிறார். காலையில் கேப்டன் டிவி அலுவலத்தில் ஒருவரோடு சந்திப்பு முடிந்து வெளியே வரும்போது, மணி 2. அலைபேசி ஒலிக்கிறது.

கோவையிலிருந்து அவரது மேனேஜர். மெய்ன் ஸ்பான்சரைப் பிடித்துவிட்டதாகவும், உடனே கோவை வரும்படியும் சொல்கிறார். இளையராஜாவின் நிகழ்ச்சி இருப்பதால், இவர் ஸ்பான்சரிடம் பேசி, காலை வரை காத்திருக்கக் கேட்டுக்கொள்கிறார்..

என்றென்றும் ராஜா நிகழ்ச்சி இரவு 12 மணிக்கு முடிகிறது. பஸ் பிடிக்க ஓடுகிறார். இல்லை. அங்கிருந்து விமானநிலையம் சென்று, விமானத்தில் கோவை வந்து இறங்குகிறார்.

வந்தால், அந்த ஸ்பான்சர் இல்லை. சென்றுவிட்டார். எவ்வளவு முயன்றும் அவரைச் சந்திக்க முடியவில்லை. அந்தக் குறிப்பிட்ட இசை நிகழ்ச்சிக்கான நாளும் நெருங்கிறது. அறிவித்தபடி, 20 லட்சம் செலவு செய்து நடத்தி முடித்தார். ப்ரோக்ராம் க்ராண்ட் சக்ஸஸ். 

சின்னச் சின்ன ஸ்பான்ஸர்ஸ், டிக்கெட்ஸ் மூலம் 9 லட்சம் சேர, 11 லட்சம் நஷ்டம். ஏழுலட்சம் வரை தருவதாகச் சொன்ன, அந்த மெய்ன் ஸ்பான்ஸரைப் பிடித்திருந்தால், நஷ்டத்தை ஓரளவு சரிசெய்திருக்கலாம்.

-- -- -- -- 

நேற்று டேவிட்டைச் சந்தித்தேன். திருப்பூர் வந்திருந்தார். Karki Bava -வின் அறையில் அரட்டைக் கச்சேரி. பேசிக்கொண்டே Youtubeல் என்றென்றும் ராஜா நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட பாடல்களை பார்த்தோம் / கேட்டோம். ஒவ்வொரு பாடலாகக் கேட்டுக் கொண்டிருந்தோம். 'பூவே செம்பூவே' பாடலின் இறுதியில் வரும் அருண்மொழியின் புல்லாங்குழலிசைக் கேட்கும்போது, இருவரும் ஒருசேர 'ச்சான்ஸே இல்லய்யா' என்றோம். 

"இந்த நிகழ்ச்சியை நேர்ல பார்த்திருக்கணும் பரிசல் நீங்க. புல்லரிச்சுடுச்சு" என்றார் டேவிட்.

அந்தப் புல்லரிப்புக்கு அவர் கொடுத்த விலையை நினைத்துப் பார்த்தேன்.

ஏழு லட்சம்!

Arun Kumar

unread,
Mar 28, 2013, 7:12:58 AM3/28/13
to பண்புடன்
குடுக்கலாம் !!


2013/3/28 விழியன் <uman...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

AbulKalam Azad

unread,
Mar 28, 2013, 7:32:04 AM3/28/13
to பண்புடன்
விழியன் <uman...@gmail.com>

அய்யா,

91வாக்கில் ஒருவர் இப்படி துபாயில் எம்.எஸ்.வி. கச்சேரியை ஏற்பாடு செய்துவிட்டு ஸ்பான்ஸர் கிடைக்காமல் நஷ்டப்பட்ட கதையைக் கேள்விப்பட்டிருக்கிறேன். 

மஞ்சூர் ராசா

unread,
Mar 28, 2013, 8:08:09 AM3/28/13
to panb...@googlegroups.com
குவைத்தில் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துவிட்டு  நிகழ்ச்சிக்கு முதல் நாள்  முழுபணமும் கொடுக்க முடியாததால் நிகழ்ச்சியும் ரத்தாகி ஏற்பாடு செய்தவர் துண்டை காணோம், துணியை காணோம்னு ஊருக்கே போய்விட்டதும் (பெரிய ஒரு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார்).  இதில் கொஞ்சம் கொஞ்சம் பணம் போட்ட என்னை போன்றவர்களுக்கும் நஸ்டம்

Arun Kumar

unread,
Mar 28, 2013, 8:19:51 AM3/28/13
to பண்புடன்
எதனால் இப்படி நேருகிறது ? ஸ்பான்சர்களால் ஏற்பட்ட குளறுபடியா ?


2013/3/28 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

குவைத்தில் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துவிட்டு  நிகழ்ச்சிக்கு முதல் நாள்  முழுபணமும் கொடுக்க முடியாததால் நிகழ்ச்சியும் ரத்தாகி ஏற்பாடு செய்தவர் துண்டை காணோம், துணியை காணோம்னு ஊருக்கே போய்விட்டதும் (பெரிய ஒரு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார்).  இதில் கொஞ்சம் கொஞ்சம் பணம் போட்ட என்னை போன்றவர்களுக்கும் நஸ்டம்

மஞ்சூர் ராசா

unread,
Mar 28, 2013, 8:22:34 AM3/28/13
to panb...@googlegroups.com
இங்கு ஸ்பான்ஸர்களால் ஏற்பட்டதல்ல.   இடை தரகரினால் ஏற்பட்டது.  

மஞ்சூர் ராசா

unread,
Mar 28, 2013, 8:23:14 AM3/28/13
to panb...@googlegroups.com
இதில் ரஹ்மானுக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸை அவர் திருப்பி கொடுத்துவிட்டார்.

Arun Kumar

unread,
Mar 28, 2013, 8:24:33 AM3/28/13
to பண்புடன்
எனக்கும் இந்த அனுபவம் உண்டு ! ஸ்பான்சர்கள் செய்த குளறுபடியால் எங்களுடைய கை காசை போட்டு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறோம் !


2013/3/28 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>
இங்கு ஸ்பான்ஸர்களால் ஏற்பட்டதல்ல.   இடை தரகரினால் ஏற்பட்டது.  


Arun Kumar

unread,
Mar 28, 2013, 8:26:06 AM3/28/13
to பண்புடன்
தலைவர் தங்கமான ஆளுங்க ! 

(இதற்கு நேர்  மாறாக பல எடுத்துக்காட்டுகள் வரும் என்று நம்புவோமாக )


2013/3/28 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>
இதில் ரஹ்மானுக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸை அவர் திருப்பி கொடுத்துவிட்டார்.


மஞ்சூர் ராசா

unread,
Mar 28, 2013, 8:26:34 AM3/28/13
to panb...@googlegroups.com
ரஹ்மான் நிகழ்ச்சி பெரிய நிகழ்ச்சி என்பதால் கை காசை போட்டும் நடத்த முடியாத நிலையில் போட்ட காசெல்லாம் நஸ்டமடைந்து அவர் ஊருக்கே போய்விட்டார்.
Reply all
Reply to author
Forward
0 new messages