sunthara raamasaamiyin piLLai ketuththaaL viLai paRRiya vivaathangkaL

542 views
Skip to first unread message

லக்ஷ்மி

unread,
Sep 25, 2007, 7:18:55 AM9/25/07
to பண்புடன்
சுந்தர ராமசாமியின் பிள்ளை கெடுத்தாள் விளை பற்றிய விவாதங்கள்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னைப் பற்றிய அறிமுக மடலுக்குப் பிறகு
இன்று வரை வேறெதுவுமே இக்குழுமத்தில் எழுதவில்லை என்பது இப்போதுதான்
உரைக்கிறது. இத்தனை நாள் மௌனத்திற்குமாய் சேர்த்து கொஞ்சம் அதிகமாகவே
எழுதிவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன்.

சுந்தர ராமசாமியைப் பற்றி பேசினாலே கொல்லத் துடிக்கும் கலவரக்காரர்களும்,
அவர் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் சாமியாடத் தொடங்கும் இலக்கிய
பக்தர்களும் நிறைந்த இந்த இணையத்தில் நான் இரண்டிலும் சேராத ஆசாமி. அவரது
சில கதைகள் எனக்குப் புரிந்தவை, பிடித்தவை பட்டியலிலுண்டு. சில எனக்குப்
புரியாத எரிச்சலூட்டும் தலைக்கு மேலே போகும் சமாச்சாரங்கள். எனவே எனக்கு
தனிப்பட்ட விருப்பு, வெறுப்பெதுவும் அவரது படைப்புகள் மீதோ ஆளுமையின்
மீதோ கிடையாது. (வர வர , தமிழிணையத்துல எல்லாத்துக்கும் முன்னாடி ரொம்ப
ஜாக்கிரதையா டிஸ்க்ளெய்மர் போட வேண்டியிருக்குது பாருங்க, கொடுமை. :-) )

சரி, விஷயத்துக்கு வருவோம். பிள்ளை கெடுத்தாள் விளை என்ற இந்தக் கதையை
நான் சிஃபி தளத்தில் படித்தபோது அது இவ்வளவு பெரிய சர்ச்சையை இலக்கிய
உலகில் ஏற்படுத்துமென்று நினைக்கவில்லை. மெல்ல மெல்ல இதைப்பற்றிய வாதப்
பிரதிவாதங்கள் சூடாகி ஒரு சிறுகதையைப் பற்றி மெகா சீரியல் அளவுக்கு
விவாதித்தாயிற்று. எனக்குத் தெரிந்து ஒரு சிறுகதையைப் பற்றி இவ்வளவு
விவாதங்கள நடந்ததாய் நினைவில்லை. ஒரு வேளை குளத்தங்கரை அரசமரத்துக்கும்
பொன்னகரத்துக்கும் இதை விடவும் அதிகமான விமர்சனங்களும், விளக்கங்களும்
இருந்திருக்கலாம். ஆனால் எதுவும் பதிவாகவில்லை. எனவே இங்கே பி.கெ.வியின்
கதை, அதன் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கள், அவற்றிற்கு பல்வேறு
நபர்களிடமிருந்து வந்த விளக்கங்கள் அனைத்தையும் ஒரே இழையில் பதிவு
செய்யலாம் என்று நினைக்கிறேன். இந்த முறை புத்தகக் கண்காட்சியில்
காலச்சுவடு பதிப்பகத்தின் "சுந்தர ராமசாமியின் பிள்ளை கெடுத்தாள் விளை -
கதை X எதிர்வினை" என்ற புத்தகத்தை பார்த்ததும் மிக்க ஆவலோடு அதிலே வாதப்
பிரதிவாதங்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது போலிருக்கிறதென்று
எண்ணி வாங்கினேன். அடாடா, தன்னைப் பற்றிய விமர்சனங்களையும் கூட
தொகுக்குமளவு தமிழிலக்கியத்தில் பரந்த மனப்பான்மையுடையோர் பெருகி
விட்டார்கள் போலும் என்று மகிழ்ச்சி வேறு. படித்த பின் தான் தெரிந்தது,
அதுவும் ஒரு பக்கச் சார்பாகத்தான் தொகுக்கப் பட்டிருக்கிறதென்பது. சரி,
ஒன்றும் தவறில்லை, யாருக்குத்தான் தன் மீதான விமர்சனங்களை சேர்த்து
வைத்து அழகு பார்க்கப் பிடிக்கும், என்று சமாதானமாகிப் போனேன். எனினும்
ஒரு பிரச்சனை எனில் அதன் இரு தரப்பு வாதங்களும் ஒரே இடத்திலிருந்தால்
புதிதாய் அதை பார்ப்போருக்கு நன்றாகப் புரியுமில்லையா? எனவே முடிந்த வரை
இருதரப்பிலிருந்தும் வெளியான கட்டுரைகளை இங்கே தொகுக்க முயற்சிக்கிறேன்.

அப்புறம் ஒரு முக்கிய விஷயம் - இந்த தொகுப்பு பணியில் மிகச்சில
கட்டுரைகளே இணையத்தில் அதுவும் ஒருங்குறியில் கிடைக்கின்றன.
பெரும்பாலானவற்றை புதியதாய் தட்டச்சியே இட வேண்டியிருக்கிறது. கதையே கூட
காலச்சுவடு தளத்தில் இப்போது முழுமையாகக் கிடைக்கவில்லை.
http://tamil.sify.com/kalachuvadu/feb05/fullstory.php?id=13661961
எனவே இவ்வேலையில் நண்பர்கள் உதவ முன்வந்தால் மகிழ்வேன்.

நட்புடன்,
லக்ஷ்மி

லக்ஷ்மி

unread,
Sep 25, 2007, 7:26:24 AM9/25/07
to பண்புடன்
**********************************************
பிள்ளை கெடுத்தாள் விளை - சுந்தர ராமசாமி
**********************************************

“பிள்ளை கெடுத்தாள் விளை” என்னும் ஊரின் பெயர் முதலில் என் காதில்
விசித்திரமாக ஒலித்தது. தங்கக்கண் அந்த ஊரின் பெயரைப் பத்து வருடங்களாக
ஆராய்ச்சி செய்துவருகிறேன் என்பான். மாடக் குழி, மாங்குழி அதற்கு
அடுத்தாற்போல் பிள்ளை கெடுத்தாள் விளையைக் கைநீட்டித் தொட்டுவிடலாம்
என்பான் அவன்.

அவன் ஒரு சுதந்திரத் தியாகி. நாற்பத்திரெண்டு புரட்சியில் சிறை சென்றவன்.
ஐம்பொத்தொன்று கசையடிகள் வாங்கினானாம். முதுகில் பூரான்போல் அற்புதமான
தழும்புகள் இன்றும் இருக்கின்றன. சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிப்
பேச்சு வந்து அவன் தன் ஜிப்பாவை அவிழ்க்காமல் இருந்தான் என்று வரலாறு
கிடையாது. நடுத்தெருவாக இருந்தால் என்ன, சுக்குக் காப்பிக் கடையாக
இருந்தால் என்ன, தியாகம் தியாகம்தானே.

இதெல்லாம் பழைய கதை. இன்று அவன் ஒரு ஆராய்ச்சியாளன். அத்துடன் உள்ளூர்த்
தினசரி 'சூறாவளி'யில் பிரதம நிருபராகவும் பணியாற்றிவருகிறான். முழுசாக
நாற்பது ரூபாய் சம்பளம். தேநீர், சுக்குக் காப்பி, ரசவடை, பஸ்
சார்ஜ÷க்குக் கணக்கெழுதிக் கொடுப்பதில் நாளொன்றுக்கு நிச்சயம் ஒரு ரூபாய்
இசுக்கிவிட முடியும். கொடுத்து வைத்தவன். “இந்த காலேஜ் ஆராய்ச்சியாளனுவ
என்னத்தெ வேணாப் புடுங்கட்டும், செல்லத்தொரை, ஓரு மண்ணும் கெடைக்காது.
ஊர் பேரிலே கையை வை, அள்ளு தங்கப் பாளத்தெ” என்று முழங்குவான் தங்கக்கண்.

நான் ஜிப்பா தைத்துக்கொண்டிருந்தேன். தங்கக் கண்ணுவுக்குத்தான்.
இருபுறமும் பாக்கெட்டு, பக்க வாட்டில் மூன்று தையல் என்று
சொல்லியிருந்தான். திருப்பூர் சுத்தக் கதர். அவனுக்குத் தீபாவளிக்கு
அலுவலக அன்பளிப்பு.

“பத்து வருஷமாட்டா? என் தங்கமில்லா, ஒரு விதம் நியாயமாட்டுப் பொய்
சொல்லு. மேலே இருக்கிறவனும் ஒப்பணுமில்லா” என்று நான் சொன்னேன்.

தங்கக்கண் கடையைவிட்டுத் தெருவில் குதித்து, அவனுடைய சைக்கிள் சாக்குப்
பையிலிருந்து ஒற்றை வரி இருநூறு பேஜ் நோட்டுகளை எடுத்துவந்து என் கட்டிங்
மேஜையில் ஒவ்வொன்றாக விசிறியவாறே, “லேய், செல்லத்தொரெ, படிச்சுப் பாரு,
மூணு முனைவர் வாங்குதுக்கான சரக்கு. நீ எளுதற சொத்தக் கவிதையில்லே”
என்றான்.

தங்கக்கண் சொல்வதைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
ஊர்ப் பெயர்களில்தான் என்னென்ன புதையல்கள். அவன் கூட்டிச்
சொல்கிறவன்தான். கைவசம் கொஞ்சம் பொய்யும் உண்டு. ஆனாலும் அவனுடைய
ஆராய்ச்சியில் வெளிப்பட்ட இந்தப் பெண்ணின் கதை எந்தக் கல் மனசையும்
உருக்கிவிடக் கூடியது. அதில் சந்தேகம் இல்லை.

சென்ற நூற்றாண்டின் ஆரம்ப காலமாக இருக்கலாம். வில்லுக்குறிக்குத் தெற்கே
ஊரே கிடையாது. சாலைகள் என்பது ஒற்றையடிப் பாதைகள். இன்று ரோட்டோரம்
வயல்களை அழித்து அடுக்கு மாடிகள் எழும்புகிற இடமெல்லாம் அன்று வெறும்
காடு. காடுகளுக்குப் பின்னால் மாடக்குழியும், மாங்குழியும்தான்
இருந்தனவாம்.

பக்கத்திலிருந்த தாமரைக்குளத்தை நம்பிப் பிழைக்கிறவர்கள் அங்குக்
குடியேறியிருந்தார்கள்.

அந்தத் தாமரைக்குளத்தைத் தன் பத்து வயதிலேயே பார்த்திருந்தான் தங்கக்கண்.
“குளமா, கடவுளுடைய மாஜிக்” என்பான் அவன். சிறிய குளம்தான். தாமரைகள்
விரிய இடம் தேடி முண்டுவதில் தண்ணீர் தெரியாது. இலைகளின் நளின அசைவுகளை
வைத்தும் அவற்றின் மேல் சறுக்கல் நடனம் புரியும் வைரக்கற்களை
வைத்தும்தான் நீரின் இருப்பைத் தெரிந்துகொள்ள முடியும்.

தங்கக்கண்ணின் முன்னோர்கள் மாடக்குழியில்தான் இருந்தார்கள். அன்று
அவர்களில் பலரும் நாகர்கோவிலைப் பார்க்காமலே இறந்துபோனவர்கள் தானாம்.
நாகர்கோவில் ஆறு மைல். காலை வீசிப்போடும் அவர்கள் நடைக்கு ஒரு மணிநேரம்.
“நெசமாட்டுத்தான் சொல்லுதயா?” என்று நான் கேட்டேன். “லேய், செல்லத்தொரெ,
என்ன எளவிலே உனக்குத் தெரியும், கேளு” என்று அடுக்க ஆரம்பித்தான்
தங்கக்கண்.

அன்று உணவு, மண் சாய்வுகளில் நடும் மரச்சீனி. ஒரு வேளை உணவு, சூரியன்
உச்சிக்கு வந்ததும். பானம் கருப்பட்டிக் காப்பி. உடையா கௌபீனம்.
“பொட்டையா? போடாதே மேல்சீலை.” ஒற்றையடிப் பாதைகளில் புல் முளைத்துவிடாமல்
காலால் மிதித்து அழிக்கும் காலம். பள்ளிக்கூடத்திற்குச் சென்ற ஆணே
கிடையாது. அப்புறமென்ன பெண்.

“திண்ணைப் பள்ளிக்கூடமாவது இருந்ததா?” என்று நான் கேட்டேன். “ஆளூரிலே ஒரு
பாதிரியாரு, அவரைத் தேடி வாறவங்களுக்கு எளுத்துச் சொல்லித்
தந்துக்கிட்டிருந்தாராம்” என்று சொல்லிவிட்டு, “அந்தப் பாதிரியாருக்குப்
பெயர் தெரியுமாலே உனக்கு?” என்று கேட்டான் தங்கக்கண். “என்னண்ணேய்?”
என்றேன் நான். “அப்படிக் கேளுலே, நல்ல பிள்ளையா லச்சணமாட்டு, ஆண்ட்ரூஸ்,
சுத்த ஜெர்மன் ரத்தம்” என்றான்.

அந்தப் பெண்ணின் பெயரைத் திட்டவட்டமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆராய்ச்சி வலையில் சிக்காத மீன்கள்தானே அதிகம். சிலர் அவர்கள்
ஓர்மையிலிருந்து தாயம்மா என்றார்கள். சிலர் பேச்சியம்மா என்றார்கள்.
பெயர் என்னவாக இருந்தால் என்ன? அது பெண் ஜென்மம். வயதுக்கு வரும். ஆணை
நேசிக்கும். அவனுடன் படுத்துறங்கும். குழந்தைகள் பெறும். அவர்களைக் கடைசி
வரையிலும் நேசித்துச் சாகும்.

தாயம்மா தாமரை பறிக்கும் பெண். தகப்பனுக்குப் பின்னால் அதிகாலை
இளங்குளிரில் கைகளைக் கழுத்துக்குள் புதைத்தபடி கறுப்புக் காகிதத்தில்
கத்தரித்த நிழலுருவமாகப் போகும். தகப்பன் தலையில் செம்புப் பாத்திரம்
கவிழ்ந்திருக்கும். அதில்தான் தாயம்மா உட்கார்ந்து தாமரை பறிக்கும்.
வெயிலேறும் முன் நாலு கரையும் சுற்றி, நடுக்குளம் வழியாக வந்து, தாமரைப்
பூக்களினுள்ளே கழுத்து வரையிலும் புதைந்து கிடக்கும் உடலை உருவிக்
கரையேறி வரும்.

காலத்தின் கூத்து. தாமரை பறிக்கும் பெண். அவளுக்கு எழுத்துப் படிக்க
வேண்டுமாம். இப்படியொரு ஆசை எப்படி வந்தது அந்தப் பெண்ணிற்கு?
ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அவளுடைய தலைமுறையில் இன்று வரையிலும் எவரும்
ஒரு எழுத்துப் படித்தவர்கள் இல்லை. ஜெர்மன் சுத்த ரத்தப் பாதிரியாரைப்
பற்றி யார் அவளிடம் வந்து சொல்லி இருக்க முடியும்! “லேய் எங்கேயோ ஒரு
குடிசையிலே தீ புடிக்கு. ஒரு பொறி பறந்து வந்து உன் குடிசையிலே விளுது.
பத்தியெரியுது குடிசை. உண்டா, இல்லையா?” என்றான் தங்கக்கண். “என்னண்ணே,
படிப்பெப் போயி நெருப்புன்னு சொல்லுதே” என்று நான் கேட்டேன்.
“நெருப்புத்தாம்லே. பத்தியெரியற நெருப்பு. களைகளெக்கரிக்கும். கரிச்ச
இடத்திலே பயிர் முளைவிடும்.” முளைவிடும் பயிர்களை ஆட்காட்டி விரலையும்
பாம்பு விரலையும் நெளித்தபடி மேலே கொண்டு போய்க் காட்டினான் தங்கக்கண்.
எனக்கு உடம்பு புல்லரித்தது.

அந்தப் பெண்ணை ஆளூர் பாதிரியார் வீட்டிற்கு எழுத்துப் படிக்கவிடுமா
மாடக்குழி? அநேகமாக அது உண்ணாமல் கிடந்திருக்கும். இறந்து போய்விடும்
என்னும் பயத்திற்கு ஆட்பட்டதும் யோசிக்கத் தொடங்கியிருப்பார்கள்
பெற்றோர்கள் என்பது தங்கக்கண்ணின் அனுமானம். பிடிவாதமே உடம்பாகப் பிறந்த
பெண்கள் அந்தக் காலத்தில் தங்கள் ஆசைகளை இப்படித்தான்
நிறைவேற்றிக்கொண்டார்கள் என்பதற்குத் தன்னிடம் தடையங்கள் பல இருக்கின்றன
என்று மார் தட்டினான் அவன். இருக்கலாம். யானையின் மிதிபடும்போதும்
எறும்பு கடிக்கத்தானே செய்கிறது!

ஜெர்மன் பாதிரியாரைப் பார்த்ததுமே தாயம்மாவுக்கு மூர்ச்சை
போட்டுவிட்டதாம். பாதிரியார் அவளை பெஞ்சில் தூக்கிக் கிடத்தி விசிறினார்.
நினைவு சிறிது தெளிந்ததும் குசினிக்காரர் கொண்டு வந்த இளநீரைப்
பாதிரியார் தேக்கரண்டியில் எடுத்து அவள் வாயில் தந்திருக்கிறார்.
“என்னைப் பார்த்த பயம்தான், குழந்தைக்கு வேறு ஒன்றுமில்லை” என்றாராம்
பாதிரியார்.

பாதிரியார் பல படங்களைக் கொண்டுவந்து காட்டியிருக்கிறார். பெரிய பெரிய
படங்கள். தாயம்மாவுக்குத் தெரியாதா? அவள் பார்த்திருக்கும் பிராணிகள்தானே
அவை. காக்காய், புறா, குருவி, நாய், கள்ளப் பூனை. ஓரு எலி இரண்டு
பற்களைக் காட்டிச் சிரித்தது. அவளுடைய ஒவ்வொரு பதிலுக்கும் பாதிரியார்
கையைப் பலமாகத் தட்டினார். தாயம்மா அதுவரையிலும் அறிந்திராத சில விஷ
ஜந்துக்களையும் பாதிரியார் அவளுக்கு அறிமுகப்படுத்தினார்.

தன் ஊரில் இருப்பவை தவிர வேறு பிராணிகள் இல்லை என்று
நினைத்துக்கொண்டிருந்த தாயம்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு விஷ
ஜந்துக்களைக் கடவுள் எதற்குப் படைத்திருக்க வேண்டும்? தாயம்மாவின் தந்தை
ராசைய்யாவிற்கு ஆண்ட்ரூஸ் பாதிரியாரைப் பிடித்ததோடு அவர்மேல்
நம்பிக்கையும் ஏற்பட்டிருப்பது தெரியவந்தபோது, தாயம்மா, “அந்த அய்யா ஏன்
கையெத் தட்டிக்கிட்டே இருக்காரு?” என்று கேட்டாள். “தெரியலேம்மா, நான்
இப்படிக் கண்டதில்லே” என்றானாம் ராசையா என்று உடனிருந்து பார்த்ததுபோல்
சொன்னான் தங்கக்கண். அவன் கண்டுபிடித்த உண்மைகளைவிட அவனுடைய
கற்பனைகள்தான் என்னைப் பைத்தியமாக அடித்தன.

ஒவ்வொரு நாள் காலையிலும் தாமரைகளோடும் தாயம்மாவுடனும் ஆண்ட்ரூஸ்
பாதிரியார் வீட்டிற்குப் போனான் ராசைய்யா. பாதிரியார் தினமும் அவன்
அனுமதிபெற்றுப் பாதி விரிந்த தாமரையொன்றை எடுத்துத் தன் மேஜையிலிருந்த
பூக்கிண்ணத்தில் வைத்துக்கொள்வாராம். தாயம்மாவுக்கு ஒரே சிரிப்பு. ஏன்
இப்படிக் குழந்தை மாதிரி? தாமரைக் குளத்தைவிட பெரிய பூக்கிண்ணம் உண்டா?

தாயம்மா வயதுக்கு வந்தாள். என்ன வேடிக்கை இது! நாலு எழுத்துப்
படிக்கிறோம் என்பதற்காக அவளால் வயதுக்கு வராமல் இருக்க முடியுமா? ஆனால்
மாங்குளம் ஊர் கூடி எதிர்த்தது. தலையும் முலையுமாக நிற்கிற பிள்ளைக்குப்
படிப்பு ஒரு கேடா? அவள் தலையை வெளியே நீட்டக் கூடாது. அதன் பின் ஏது
ஆளூர், ஆண்ட்ரூஸ் பாதிரியார்.

ஒரு நாள் முற்பகல் நேரம். ஆண்கள் எல்லோரும் வேலைக்குப்
போய்விட்டிருந்தார்கள். ஜெர்மன் பாதிரியார் தாயம்மாவின் வீட்டு
முற்றத்தில் வந்து நிற்கிறார். கடவுளே என்ன இது! ஊர்ப் பெண்கள் அவரைச்
சூழ்ந்துவிட்டார்கள். குவிந்த அவர்கள் கைகள் மார்பை
அழுத்திக்கொண்டிருக்கின்றன. உடலிறுகியதில் விரல்கள் மடங்கிப் புறங்கையை
அழுத்துகின்றன. கண்ணீர் ததும்புகிறது அவர்களுக்கு.

காலை வெயில் பாதிரியார்மீது பாதி விழுந்து மறுபாதியை நிழலுக்குக்
கொடுத்திருக்கிறது. பின்னால் குடிசைகள். பார்க்கும் இடங்களெல்லாம் தென்னை
மரம். தென்னை மரங்களின் அடர்த்தி இறக்கும் இருட்டு. “நெனச்சுப்பாருலே
செல்லதொரை, இதைவிட அற்புத ஓவியம் உண்டா இந்த ஒலகத்திலே” என்று கேட்டான்
தங்கக்கண். என்ன கற்பனை. என்ன வாய் ஜாலம்.

“தாயம்மா மிகவும் கெட்டிக்காரி. தினமும் இங்கு வந்து தென்னை மரத்தடியில்
உட்கார்ந்து பாடம் சொல்லித் தருகிறேன்” என்கிறார் பாதிரியார். பெண்கள்
அழத் தொடங்கிவிட்டார்கள். “அய்யா, நீங்க போட்டிருக்கிற செருப்பாலே எங்க
கன்னத்திலே அடியுங்க அய்யா. இப்பமே புள்ளையைக் கூட்டிக்கிட்டுப் போங்க.
ஆசை தீர மட்டும் சொல்லிக்கொடுங்க” என்று எல்லாப் பெண்களும் சேர்ந்து
கத்தியிருக்கிறார்கள்.

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, பத்து வருடம் படித்தாள் தாயம்மா. ஆங்கிலம்,
கணக்கு, விஞ்ஞானம் என்று மூன்று பாடங்கள் சொல்லித் தந்தார் பாதிரியார்.
படிப்பு முடிந்த அன்று ராசைய்யாவிடம், ஐரோப்பாவில் மிகப் பெரிய பள்ளியில்
இளங்கலை கற்றுத் தேர்ந்த பெண்ணிற்கு நிகராக இருக்கிறாள் தாயம்மா என்று
பாதிரியார் சொன்னார். இது பாராட்டு என்பதைத் தெரிந்துகொள்ள முடியாத
அளவுக்கு ராசைய்யா என்ன அறிவிலியா? படித்தவர்கள் விபரங்கள் தந்துதான்
பேசுவார்கள். நமக்குத் தெரிய வேண்டியது அடிப்படைதானே.

“அய்யா, இதுக்குத் தாய் ஒரு ஆலோசனைக் கேக்கச் சொன்னாங்க உங்ககிட்டே.
கேக்கலாமா அய்யா?” என்று கேட்டான் ராசைய்யா.

“கேளு.” இது பாதிரியார்.

“இனி இந்தப் புள்ளெயெ வச்சுக்கிட்டு நாங்க என்ன செய்ய?”

பாதிரியார் முகம் வருத்தத்தில் வாடியது.

ஒரு நிமிடம்கூட அவர் யோசிக்கவில்லை. “பெரியவங்க எண்ணைக்கும்
பெரியவங்கதாம்லே, செல்லத்தொரை” என்கிறான் தங்கக்கண்.

தாய்க்கும் தந்தைக்கும் சம்மதம் என்றால் அவளை மேல் படிப்புக்கு
ஜெர்மனிக்கு அனுப்புகிறேன் என்றாராம் பாதிரியார்.

“நெனச்சுப் பாருலே, செல்லத்தொரை, நெனச்சுப் பாரு” என்கிறான் தங்கக்கண்.
அவனுடைய கண்கள் கலங்குகின்றன.

ராசைய்யா தன் மனைவியிடம் பாதிரியார் சொன்னதைச் சொன்னார்: “என் பிள்ளையைக்
கடலில முக்கிக்கொல்லுதுக்கு வளி பாக்கேளா, எதுக்கு, என் முன்னாலேயே நாலு
துண்டாட்டு வெட்டிப் போடுங்களேன்” என்று சொல்லியவாறே குரலெடுத்து அழ
ஆரம்பித்தாள் அவள்.

தாயம்மா வீட்டோடு இருந்தாள். அவளுக்கு வாசிக்க ஆசையாக இருக்கும். பாடப்
புத்தகங்களை எத்தனை தடவைதான் திரும்பத் திரும்பப் படிப்பது? பக்கங்கள்
கசங்கி அழுக்கேறிவிட்டன. எழுத வேண்டும் என்று தோன்றும். தாளுக்குப்
பஞ்சம். ஆட்டுப் புழுக்கைப் பென்சில். இருந்தாலும் கொஞ்சம் எழுதுவாள்.
அதிகமும் ஆண்ட்ரூஸ் பாதிரியாருக்குத் தபாலில் சேர்க்காத கடிதங்கள்.
ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று தோன்றும். மனத்திற்குள் பேசிக்கொள்வாள்.
தாய் சுள்ளி பொறுக்கப் போயிருக்கும்போது ஆங்கிலக் கவிதைகளை வாய்விட்டுச்
சொல்வாள். ஆண்ட்ரூஸ் பாதிரியாரின் உச்சரிப்பைப் போலிசெய்து பார்ப்பாள்.
இந்தக் கிராமத்தில் தனக்கு என்னென்ன தெரியும் என்பது தெரிந்த ஒரு
சீவன்கூட இல்லாமல் போய்விட்டதே.

என்றைக்கும் மாடக்குழி மாறாமலே இருக்குமா? சில பிள்ளைகள் படிக்க
ஆளூருக்கே போகத் தொடங்கி விட்டன. தாய்மார்களுக்குத்தான் என்ன துணிச்சல்?
வயது வருவது வரை பெண்களும் படிக்கலாமாம். காலத்தின் கூத்து. வீட்டுப்
பாடம் இலவசமாகக் கற்றுத் தருகிறேன் என்று சொன்ன பிறகும்கூட ஒரு குஞ்சுக்
குளுவான் வரவில்லையே தாயம்மாவிடம். குழந்தைகள் என்ன செய்யும்?
தாய்மார்கள் அவர்களை வற்புறுத்தியபோது, “அக்காகிட்டப் போகுதுக்குப்
பயமாட்டு இருக்குதும்மா” என்றிருக்கிறார்கள் அவர்கள்.

இதைச் சொன்னதும் வாய்விட்டுச் சிரித்தான் தங்கக்கண். "எதுக்கண்ணே
சிரிக்கே?" என்று நான் கேட்டேன். "பிள்ளைகள் சொல்லிச்சாம், அவங்க வேற
தினுசாட்டு இருக்காங்கம்மா, நம்மளைப் போல இல்லைன்னு." மீண்டும்
சிரிக்கிறான் தங்கக்கண்.

தாயம்மாவுக்குக் கல்யாணம் ஆகவில்லை. படிக்காத பெண்களைக் கொத்திக்கொண்டு
போனார்கள் வகுப்புக்கு வகுப்பு முட்டை போட்டுக்கொண்டிருந்த பையன்கள்.
தாயம்மாவைக் கட்ட ஒரு பயல் இல்லை. "முட்டாப் பயக்களுக்குப் படிச்ச
பிள்ளையைக் கட்டுதுக்குப் பயம்லே, செல்லத்துரை" என்று சொல்லிவிட்டுச்
சிரிக்கிறான் தங்கக்கண்.

தைத்த துணிகளை வாங்க வந்தவர்கள் அப்படியே பெஞ்சில் உட்காரத்
துவங்கிவிட்டார்கள். பெஞ்சில் இடமில்லாமல் ஒருவர் கட்டிங் மேஜையில்
சாய்ந்து கொண்டு நிற்கிறார். தங்கக்கண்ணுவின் சொல்ஜாலம் மனித மனங்களை
கட்டிப் போடுகிறது. கலைஞந்தான் அவன்!
அறிவு கெட்டவர்களா, காலத்தை மரத்திலா கட்டிப் போடுவீர்கள்? அது நகர்ந்து
கொண்டுதானிருக்கும். மிக மெதுவாக. அல்லது மிக வேகமாக. நான் சொல்கிறேன்,
ஒரு நிமிடம் அது உறங்கியது இல்லை. மாடக்குழியில் காலம் நடக்கத்
தொடங்கிவிட்டது. நடக்கிற குழந்தைக்கு ஒடுவதற்கு தனியாகக்
கற்றுத்தரவேண்டுமா?

மாடக்குழியிலேயே ஒரு பள்ளிக்கூடம் இருக்கவேண்டுமாம். மாடக்குழி மகான்கள்
சொல்லுகிறார்கள்."நம்ம ஊரிலே பள்ளிக்கூடமில்லைன்னு சொல்லுதக்குக்
குறைச்சலாட்டு இருக்குது." பெரியவர்கள் கூட்டம் போட்டார்கள்.
தாயம்மாவைத் தலைமையாசிரியையாகப் போடலாம். இப்படியும் ஒரு யோசனையா?
போடலாமாவா? போட வேண்டும். அவளுக்கிருக்கும் யோக்கியதை உங்களில் எந்த
நாய்க்கு இருக்கிறது? தாழ்ந்த ஜாதிப்பிள்ளை. தாழ்ந்த ஜாதிப்பிள்ளைதான்.
அதற்காக? அந்தப் பிள்ளையைத் தலைமையாசிரியையாகப் போடவில்லையென்றால் நான்
கமிட்டியிலிருந்து வெளியே போகிறேன் என்கிறார் மோகன் தாஸ். அவர்
சுதந்திரத் தியாகி. மூன்று வருடம் கடுங்காவலில் வாடியவர். அவருக்கு
ரத்தம் கொதிக்கிறது.

"பாருலே, செல்லத்துரை. காலம் அடிக்கற கூத்தை." தங்கக்கண் சிரிக்க,
கேட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லோரும் சிரிக்கிறார்கள்.

வயல் இருப்பவர்களிடம் பணம் இருப்பதில் என்ன ஆச்சரியம். ஒரு கோட்டை நெல்
ஐந்து ரூபாய்க்கு அல்லவா விற்கிறது! பள்ளிக்கூடச் சுவர் நிமிஷத்திற்கு
நிமிஷம் எழும்பி வருகிறது. கூரைக்குப் பனங்கம்பு வந்து இறங்கியாயிற்று.
ஒடு வந்து இறங்கிக் கொண்டிருக்கிறது.

குடிசையில் கரண்டைக்கு மேல் அடிப்பாவாடையும் அம்மாவின் இழுத்து முடியும்
உள்பாடியும்தானே போட்டுக்கொண்டிருந்தாள் தாயம்மா. அதற்கு மேல் அவளுக்கு
ஆடையெதுக்கு? இப்போது அவள் தலைமையாசிரியை. ராசைய்யா நாகர்கோவிலுக்குப்
போய் நல்லபெருமாள் கடையிலிருந்து அவளுக்கு ஜார்ஜெட்டு சீலை
வாங்கிவந்தான். வாங்கும்போது சரிபாதி விலையைத்தான் ஊரில்
சொல்லவேண்டுமென்று நினைத்துக்கொண்டான். தன் மனைவிக்குத் தெரியாமல் சிறிய
பவுடர் டப்பாவையும் தன் மகளிடம் தந்தான். "அம்மா கொன்னுடுவாங்கப்பா." "அவ
கையெ முறிச்சு அடுப்பிலே வைப்பேன், ஊரு ஒலகம் தெரியாத களுதை." அவனுடைய
வம்சத்தில் அவள்தான் முதலில் பவுடர் பூசிக்கொள்ளப்போகிறாள். "மகளே,
செம்மையாட்டுப் போ, தாயோளிகள் தலை தூக்கிப் பாக்கணும்." என்கிறான்
ராசைய்யா.

அவள் தாழ்ந்த ஜாதி. கறுப்பு. ஆனால் அழகுக்கு என்ன குறைவு. தோணி போன்ற
கண்கள். சிறிய பேனாக்கத்தியின் அலகுபோல மூக்கு. அவளுடைய உதடுகள்
மென்மையானவை. முத்தத்திற்கு அவ்வளவு தோதான உதடுகளை அந்த ஆண்டவன் பயல்
அதற்கு முன்னும் படைத்தது இல்லை. பின்னும் படைத்தது இல்லை என்று ஒரு போடு
போடுகிறான் தங்கக்கண். பெஞ்சில் அமர்ந்திருந்த முதியவர் ஆவேசமாக எழுந்து
வந்து தங்கக்கண்ணை மார்போடு அணைத்துக் கொள்கிறார். "நான் சொல்லுதேன், நீ
கலைஞந்தாம்லே" என்கிறார். எனக்கு என்ன செய்ய வேண்டும் என்பது
தெரியவில்லை. துண்டுத் துணிகளை அப்படியே வாரியெடுத்து அவன் தலையில்
தூவுகிறேன்.

தாயம்மா ஆத்மார்த்தமாக வேலை பார்த்தாள். நாலு வகுப்புகள். வகுப்புக்கு
நாலு பிள்ளைகள். காலப்போக்கில் பிள்ளைகள் கூடும். பள்ளியின் பெயர்
பரவும். ஊர்ப்பெரியவர்கள் வீடு வீடாகச் சென்று பிள்ளைகளைப் பள்ளிக்கு
அனுப்பச் சொல்லி சத்தம் போட்டார்கள். போய்ப் போய் எங்கு போகிறோம் என்பது
தெரியாமல் ஆளூர் பெரிய பள்ளிக்கூடம் முன்னால் போய் விழுந்துவிட்டார்கள்.
அது பத்து வகுப்புகள் கொண்ட முரட்டுப் பள்ளிகூடம். "ஏம்லே, வடக்க
வாறீங்க, தெக்க போங்கலே" என்று ஆளூர்ப் பள்ளி ஆசிரியர்கள் இவர்களை
விரட்டினார்கள். ஆறுமுகத்திற்கு கோபம் தலைக்கேறிவிட்டது. "லேய், எனக்க
வயலெ வித்தாவது எங்க பள்ளிக்கூடத்துல பத்தாம் வகுப்பு வரயிலும் கொண்டு
வருவோம்லே. ஒரு குஞ்சுக்குளுவான் உங்க பள்ளிக்கூடத்துக்கு வராது.
தூக்குப் போட்டுக்கிட்டுச் சாவுங்கலே" என்று கத்தினார் அவர். அது வெறும்
ஆவேசமல்ல. சவால்.

அவர் நினைத்தால் நடக்காத காரியமா? ஆளூரிலிருந்து பார்வதிபுரம் வரையிலும்
பரந்து கிடக்கின்றன அவர் வயல்கள். அவற்றை அவர் விற்கத் தொடங்கினார்.
"எங்க ஊருப் பிள்ளைங்களுக்கு நான் கண் தந்துவிட்டுத்தான் சாவேன்"
என்றார். "நான் அனாதைப் பிணமாட்டுச் சாகணும். அந்த ஒண்ணுதான் எனக்குப்
பெருமை" என்று கர்ஜிக்கத் தொடங்கினார்.

மாடக்குழிப் பள்ளிக்கூடம், மாடக்குழி ஹைஸ்கூல் ஆகிவிட்டது. தாயம்மாவுக்கு
முன்னூறு ரூபாய் சம்பளம். "நம்ம மாவட்டத்துல எந்தப் பய ஒரு ஆசிரியைக்கு
முன்னூறு ரூபா அள்ளித் தரான், கேக்கேன்" மாடக்குழி ஜனங்கள் பெருமை
அடித்துக் கொண்டது நியாயம்தான்.

தாயம்மாவின் உடல் லேசாகக் கனக்கத் தொடங்கிற்று. பெண்களுக்குப் பொறாமை!
வண்டல் திரண்டதுபோல் உடம்பு. வீட்டில் மீன் கூடை இறங்காத நாள் கிடையாது.
நாளுக்கொரு சேலை. சுதந்திரம் கிடைத்தபின் வந்த முதல் தேர்தலிலே நிற்கக்
கட்சிக்காரர்கள் அவள் கையைப் பிடித்து இழுக்கிறார்கள். பார்லிமென்டு
தேர்தலாம். பிரச்சாரக் கூட்டத்தில் இங்கிலீஷில் பேசிக்காட்ட வேண்டுமாம்.

மாடக்குழி தாண்டி தெற்கே ராசைய்யா ரகசியமாக நிலம் வாங்கி விட்டான். வீடு
கட்ட யோசனை. பணம் கொஞ்சம் குறை. தலைமையாசிரியை கையெழுத்துப் போட்டால்
பணம் தருகிறோம் என்கிறார்கள் கூட்டுறவுச் சங்கத்தினர். அதன்பின் என்ன
பிரச்சனை? ராசைய்யா புதிய வீட்டுக்கு குடிபோனான். அப்போதெல்லாம் அந்தப்
பகுதியை, "தலைமையாசிரியை விளை" என்றுதான் மாடக்குழியினர் சொல்லிக்
கொண்டிருந்தனர். எவ்வளவு அழகான பெயர்! அந்தப் பெயர் அப்படியே
இருந்திருக்கக் கூடாதா? எல்லோருக்கும் பெருமையாக இருந்திருக்குமே. அதை
விட்டு எல்லோருக்கும் அவமானம் தரும் ஒரு பெயர் ஏன் அவர்கள் வாய்களில்
நுழைந்தது?

காலமே, ஏன் இப்படி புதிய துக்கங்களைக் கொண்டு வருகிறாய்? தாயம்மா
சந்தோஷமாக இருந்தால் உனக்கு என்ன குறைந்து போயிற்று என்கிறான் தங்கக்கண்.
ஏன் அவன் தொனி மாறுகிறது? வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு
பெஞ்சிலிருந்து எழுந்த பெரியவர் மீண்டும் உட்கார்ந்து கொள்கிறார்.
இந்தக் காலத்தில்தான் தாயம்மாவுக்கு மிகப் பெரிய அபவாதம் வந்து சேருகிறது
என்றூ மென்மையான குரலில் சொல்கிறான் தங்கக்கண். "என்ன அபவாதம்லே?" என்று
கேட்கிறார்கள் பெரியவர்கள். அவர்களால் நம்ப முடியவில்லை.

தங்கக்கண் தன் இரு கைகளையும் குவித்துக் கொள்கிறான். "அய்யா, நான் ஒரு
எளிய ஆராச்சியாளன். என் ஆராச்சி என்னைப் படுகுளிக்கு இளுத்துகிட்டுப்
போகுதே, நான் என்ன செய்வேன்" என்று புலம்புகிறான் தங்கக்கண்.

மணிகண்டன் மாடக்குழி ஹைஸ்கூலில் நாலாவது வகுப்பில் படித்துக்
கொண்டிருந்தான். என்ன அழகு! சற்று வசதியான குடும்பம். அரசியல்வாதியான
அவன் தந்தை அவசரமாய் சம்பாதித்துக்கொண்டிருந்தார். அதோடு நல்ல
செல்வாக்கும் இருந்தது.

மணிகண்டன் கணக்கில் ஓட்டை என்று தாயம்மா அவனுக்குப் பள்ளிக்கூடம்
விட்டபின்பு தனியாகப் பாடம் எடுத்து வந்திருக்கிறாள். அப்படி எத்தனையோ
குழந்தைகளைத் தனியாகக் கவனித்துக் கரையேற்றி விட்டிருக்கிறாள் அவள்
என்பது ஊர் அறிந்த செய்திதான்.

அன்று பள்ளிவிட்டுத் திரும்பிய மணிகண்டன் அழுது கொண்டே தன் வீட்டிற்குள்
நுழைந்தானாம். அவன் முகம் வீங்கிக் கிடந்ததாம். தன் தாயிடம் என்ன
சொன்னான் அவன்?

"ஊர்கதே எனக்குத் தெரியுது. என் வாய் அதெச்ச் சொல்லுதுக்குத் தடையம்
கிடைக்கணும்லா? தேடுதேன், தேடுதேன் ஆம்புடலையே" என்றுக் கையை
விரிக்கிறான் தங்கக்கண்.

"நடந்ததைச் சொல்லுலே" என்கிறார்கள் பெரியவர்கள்.

தங்கக்கண் சிறிது நேரம் மௌனமாக இருக்கிறான். அவனது மௌனத்தைத் தாங்கிக்
கொள்ள முடியவில்லை.
சகல வீடுகளிலும் ஒரே நொடியில் விளக்கை அணைத்து விட்டால், ஒரே நொடியில்
அங்கெல்லாம் இருளும் புகுந்து விடாதா? மணிகண்டன் தன் தாயிடம் சொன்ன
விஷயம் மாடக்குழி முழுக்க ஒரே நொடியில் பரவிற்று என்றால் மிகையில்லை.

பள்ளிக்கூட நிர்வாகக் குழுவினர் எங்கு ரகசியமாகக் கூடி விவாதித்தார்கள்
என்று தெரியவில்லை. நடுநிசியில் பள்ளிக்கூடத்திலேயே அவர்கள் கூடிப்
பேசியிருக்கலாம். இல்லை, யாராவது ஒரு பிரமாணியின் வீட்டில் கூட்டம்
போட்டிருக்கலாம். நாகர்கோவில் சென்று ஒரு ஓட்டலில் அறை அமர்த்திக்
கொள்வதுகூட அவர்கள் நினைத்திருந்தால், பெரிய விஷயமில்லை.

எங்கு கூடினால் என்ன? அன்றிரவு அவர்களில் ஒருவர் கூட உறங்கவில்லை.
விடிந்து கோழி கூவும்போது அவர்கள் திட்டம் முழுமை அடைந்திருந்தது. அது
மிகக் கொடூரமான திட்டம்தான். இல்லை என்று சொல்ல முடியாது. தாங்கள்
அரும்பாடுபட்டுக் கட்டி வளர்த்த பள்ளியைக் காப்பாற்ற அத்திட்டத்தை
அமுல்படுத்த வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றிவிட்டது.
காலமே, உன் கூத்து.

மாலை மணி அடித்து, மாணவ மாணவிகள் வெளியேறியபின் பள்ளிகள் அடையும்
வெறுமையின் துக்கத்திற்கு மாடக்குழிப் பள்ளியும் ஆட்பட்டு நின்ற நேரம்
அது. அந்த வெறுமையைக் கண்டு எக்களித்து வருகிறது மாலை மயக்கம்.
பள்ளியையும் எதிரே தென்னந்தோப்பையும் தன் அணைப்புக்குள் கொண்டு
வந்துகொண்டிருக்கிறது அது. கணத்திற்கு கணம் அதன் பிடி இறுகுகிறது.

தன்னுணர்வின்றிப் பணியில் ஆழ்ந்து கிடந்த தாயம்மா தலை தூக்கிப்
பார்த்தபோது ஜன்னலோரங்களில் பதுங்குகிறது இருள். அவள் படபடவென்று
நோட்டுகளை அடுக்கியவாறே எழுந்திருந்தாள்.
அப்போதுதான் ஆசிரியர்களில் சிலரும், ஊர்ப் பிரமாணிகளில் சிலரும் தெற்குத்
தோப்புக்கு வந்து மரத்தின் மறைவுகளில் தங்கள் உடல்களைப் புதைத்துக்
கொண்டார்கள்.
வெளிவாசல், வகுப்பறைகள், தஸ்தாவேஜூ அலமாரி, தட்டுமுட்டுச் சாமான்கள் அறை,
எல்லாவற்றின் சாவிகளும் தாயம்மாவிடம்தானே இருந்தன.

"மாடம், சாவிக்கொத்தை எங்க வச்சிருக்கீங்க மாடம்?" என்று கேட்கிறான்
ப்யூன் பிச்சாண்டி.
இவ்வளவு நேரமாகியும் அவன் போகாமலா இருக்கிறான்? தாயம்மாவின் கை
யந்திரகதியில் சாவிக்கொத்தை அவனிடம் தருகிறது.

தாயம்மா வராண்டா வழி வந்து, படியிறங்கி முற்றத்தில் வந்து பார்க்கிறபோது
என்ன இது, முன் வாசல் பூட்டப்பட்டு இருக்கிறது. அவள் ஒரு நிமிடம்
ஸ்தம்பித்து நின்றாள்.
பின்னால் காலரவம் கேட்டுத் திரும்பி பார்த்த போது, அவள் இறங்கி வந்த
வராண்டாவிலும் படியிலுமாக ஆசிரியர்களும் ஊர்ப்பெரியவர்களும்
நிற்கிறார்கள். எப்படி முளைத்தார்கள் ஒரு நொடியில்? அவர்கள் முகங்கள்
கற்குழவிகள்போல் இறுகிக் கிடக்கிறது.

அப்போது ஊர்ப்பெரியவர் கேட்கிறார்:"மாடம், நேத்து என்ன நடந்தது? சித்தெச்
சொல்வீங்களா?"

தாயம்மா ஏதோ சொல்வதற்காக வாயைத் திறந்தபோது, பெரியவர் பின்னால் மறைத்து
வைத்திருந்த பிரம்பால் அவள் வாயில் அடித்தார். அவள் உதடுகள் கிழிந்து
ரத்தம் வழிந்தது. அதன்பின் ஆளாளுக்குப் பிரம்பால் அவளை சாத்தத்
தொடங்கினார்கள். கடவுளே, ஒவ்வொரு விளாசலுடனும் என்னென்ன வசைகள்!

"ரவுக்கை அவுக்குதுக்கா ஸ்கூலுக்கு வாறே, தேவிடியா"

மார்பில் ஒரு அடி.

"இப்பம் நான் உறிஞ்சட்டுமா உனக்கு?"

மீண்டும் மார்பில் ஒரு அடி.

தாயம்மாள் மதிலேறிக் குதிக்க முயல்கிறாள். அவள் சுவரில் கையை வைக்க அவள்
கைமீது மாறி மாறி அடி விழுகிறது.

தாயம்மா அழவில்லை. கத்தவில்லை. ஒரு சொல் சொல்லவில்லை.

அவள் மண் தரையில் சரிந்தாள்.

"அவ சீலைய உரிஞ்சு போடுலே."

"லேய், வேண்டாம்லே, ரவுக்கெயெக் கிளிச்சுப் போடுதேன். அந்த மட்டோடு
போட்டு."

பெஞ்சில் அமர்ந்திருந்த பெரியவர்கள் எழுந்து நின்றது தெரியாமல்
கத்துகிறார்கள்:

"பாவிகெ கைகளெ முறிக்க ஆளில்லையா?"

"படைச்சவனே, நீ பாத்துக்கிட்டிருந்தையா?"

தங்கக்கண்ணின் குரல் தழுதழுக்கிறது. நான் மிஷினைவிட்டு எழுந்திருந்து
அவன் பக்கத்தில் போய் நின்றுகொண்டேன்.

"எனக்க மார்பு படபடக்கு. சொல்லுலே சொச்சத்தையும்" என்று ஒரு பெரியவர்
முடுக்குகிறார்.

மறுநாள் தாயம்மாவை ஊரில் காணவில்லை. ஒரு நாள், இரண்டு நாள் இல்லை.
ஐம்பத்து மூன்று வருடங்கள். எங்கு போனாள், எப்படி ஜீவித்தாள், ஒரு
காக்காய் குருவிக்குத் தெரியாது.
போன வருஷம் அவள் ஊருக்குத் திரும்பி வந்தாள். அப்போது ஊரின் பெயர்
'பிள்ளை கெடுத்தாள் விளை' என்று உறுதிப் பட்டிருந்தது.

"நீ அவளெப் பாத்தியாலே?"

"பாத்தேன்" என்கிறான் தங்கக்கண். "அவங்களுக்கு வயசு எண்பதுக்கு மேல். தலை
தும்பப் பூ. ஒடம்பு எலும்புக்கூடு. கையிலே ஊன்றுகோல்"

அவளுடைய சொந்தவீட்டை நம்பித்தான் அவள் வந்திருக்கிறாள். அந்த வீடு
எப்போதோ கைமாறி விட்டிருந்தது. "வந்த அண்ணு என்ன சொன்னாங்கன்னு நான் அந்த
வூட்டுக்காரங்ககிட்டக் கேட்டேன். சாகுதுக்குக் கொஞ்சம்போல எடம் தா கண்ணு,
என்று கெஞ்சினார்களாம்."

அந்த வீட்டி ஈசான மூலையில் நாலடிக்கு நாலடி அறையில் அவள் தங்கினாள்.
அறையின் நடுவில் மூலைக்கு மூலை தலைவைத்துக் கால் நீட்டி
படுத்துக்கொள்வாளாம்.

ஊரில் சிறுகச் சிறுக அவள் இருப்புக் கசியத்தொடங்கிற்று. அவளை அறிந்த
வயசாளிகள் ஒன்றிரண்டு பேர் மரணப் படுக்கையில் இருந்தார்கள். இருந்தாலும்
என்ன ஒழுக்கத்தைக் காப்பாற்றும் பொறுப்பு சாகிற மட்டும் இருக்கத்தானே
செய்கிறது.

அவளுடைய தழும்புகளை அவர்கள் புண்ணாக மாற்றிச் சொல்லில் விரித்து
மறுவுருவாக்கம் செய்தார்கள்.

காலமே, உன் கூத்து.

அந்த ஊர்ப் பெரியவர்கள் கூடி ஆலோசனை செய்தார்கள். அவள் பகலில் வெளியே தலை
காட்டக்கூடாது. யாருடனும் உறவு கொள்ளக் கூடாது. குழந்தைகள் அவள் பக்கம்
போகக்கூடாது.

"நீ அவளெப் பாத்து விபரம் கேக்குதுக்கு என்னலே."

"பல தடவெ பாத்தேன் அண்ணே. அவங்க எள்ளுப் போல ஒரு சொல் சொல்லலயே" என்றான்
தங்கக்கண்.
தாயம்மா நடுநிசியில் பின்கதவைத் திறந்து வெளியே வந்து,கிணற்றி தண்ணீர்
இறைத்துக் குளித்துவிட்டு அதன் பின் பொங்கிச் சாப்பிடுவாளாம்.

"என்னத்துக்கலே இந்த வயசிலே அவங்க இப்படித் துன்பப்படணும். நாம ஆளுக்குப்
பத்து ரூபா போட்டு அவங்களே நல்ல மொறையாட்டுக் காப்பாத்தலாம்லே."

பெரியவர் ஒருவர் சொன்ன யோசனையை மற்றவர்கள் எல்லோரும் தலை குலுக்கி
ஆமோதித்தார்கள்.

"இந்தாலே, பத்து ரூபா" என்று ஒரு பெரியவர் கட்டிங் மேஜை மீது தன் நோட்டை
வீசினார்.

"அவங்க போய்ச் சேந்துட்டாங்க. இண்ணைக்குப் பதினாறு" என்றான் தங்கக்கண்.

லக்ஷ்மி

unread,
Sep 25, 2007, 7:28:55 AM9/25/07
to பண்புடன்
******************************************************
புதுவிசை ஆகஸ்ட் 2005 இதழில் வெளியான கட்டுரை
மறைவிலிருந்து வெளித் தோன்றும் மனுவாதிகள்
- சு. வெங்கடேசன்
******************************************************

இப்போது என் நாட்டில் நிகழ்ந்திருக்கும் மாற்றத்திற்கு சிறிய அளவிலாவது
பங்களித்திருக்கிறேன் என்ற பெருமிதம் கொள்ள வாய்ப்பின்றி போனால், ஸ்வீடன்
வழங்கிய அங்கீகாரத்தின் ஒளியில் நான் எப்படி தலைநிமிர்ந்து நிற்க
முடியும்

என்று நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டு பாப்லோ நெரூதா கூறினார். ஒரு
இலக்கியவாதிக்கு பெருமை கொள்ளும் தருணம் விருதுகளோ, பதவிகளோ வந்தடையும்
பொழுதுகளல்ல, மாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக, அதிகாரத்திற்கு
எதிரான செயல்பாட்டிற்காக, அன்பும் கருணையுமிக்க ஒரு சமூக அமைப்பை
உருவாக்க வேண்டும் என்ற கனவுக்காக அவன் சிந்தனையை
செலவழித்திருப்பானேயானால் அதுதான் பெருமிதம் கொள்ளும் தருணம்.

தமிழகத்தில் சில எழுத்தாளர்களுக்கு உயரிய விருதுகள்கூட வந்தடைய
வாய்ப்பிருக்கிறது. ஆனால் பெருமிதம் கொள்ளும் தருணத்தைச் சந்திப்பதற்கான
வாய்ப்புகளே அவர்களுக்கு இருக்காது என்று தோன்றுகிறது.

சமீபத்தில் ஜெயகாந்தன் எழுதியுள்ள ஹரஹர சங்கர நாவலும், சென்னையில்
ஸ்மஸ்கிருத ஸேவா ஸமிதி நடத்திய கூட்டத்தில் அவர் பேசிய பேச்சும்,
அவுட்லுக் இதழில் அசோகமித்திரன் தெரிவித்துள்ள கருத்துக்களும், சுந்தர
ராமசாமி காலச்சுவடு இதழில் எழுதியுள்ள சிறுகதையும், விவாதத்திற்கும்
கடும் கண்டனத்திற்கும் உள்ளாக்கப்பட வேண்டியவைகளாக உள்ளன.

குஜராத் படுகொலைகளைக் கண்டு வாய் திறக்காதவர்கள்; மேலவளவு, தின்னியம்
கீறிப்பட்டி என்று தலித்களின் மீதான தாக்குதலுக்கு எதிராகக் குரல்
கொடுக்காதவர்கள்; ஜெயலலிதா 40க்கும் மேற்பட்டவர்களை பொடாவில் சிறைவைத்து,
ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்தபொழுது சின்னதாக
முனுமுனுக்கக்கூட செய்யாதவர்கள்; சங்கராச்சாரி கைதைத் தொடர்ந்து
காட்டுக்கூச்சல் போட்டுக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும், ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான்
வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும் என்று ஒருவர் சொல்கிறார். இந்த வர்ண
வேறுபாட்டை உருவாக்கிய பிராமணீய கோட்பாட்டைப் புத்தெழுச்சிகொள்ளச் செய்ய
ஒருவர் பிரயத்தனப்படுகிறார். பிராமணீய கோட்பாட்டால் நுகத்தடியில்
நசுக்கப்பட்ட தலித்கள் மற்றும் பெண்களின் உயர்வை ஒருவர்
சிறுமைப்படுத்துகிறார். இவ்வளவும் ஒரு குறிப்பிட்ட காலச் சூழலில் தமிழ்
இலக்கிய உலகிற்குள் நடக்கிறது. இப்படி வெளிப்படையான பிராமணீய முகத்தோடு
தங்களை அடையாளங் காட்டியுள்ளவர்கள்தான் கடந்த காலங்களில்
கம்பீரமானவர்களாகவும், சாதுவானவர்களாகவும், அறிவார்ந்தவர்களாகவும்
தங்களைப்பற்றிய பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த போலி பிம்பங்கள்
தகர்க்கப்பட வேண்டும். இவர்களின் உண்மையான எண்ணமும், எதிர்பார்ப்பும் எதை
நோக்கியது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அந்த அடிப்படையில்தான்
இவர்கள் முன்வைத்துள்ள கருத்துக்கள் இங்கே விவாஆதிக்கப்படுகின்றன.

(இதில் ஜெயகாந்தனையும், அசோகமித்ரனையும் பற்றிய கட்டுரையாசிரியரின்
கருத்துக்களை மடலின் நீளம் கருதி நீக்கியுள்ளேன். முழுக்கட்டுரையும்
இங்கே காண்க - http://thatstamil.oneindia.in/visai/aug05/venkatesan.html)

பிள்ளை கெடுத்தாள் விளை என்ற சிறுகதையைக் காலச்சுவடு (பிப்ரவரி) இதழில்
சுந்தரராமசாமி எழுதியுள்ளார். ஒரு தலித் பெண்ணைச் சிறுமைப்படுத்தி, அதை
மேல்சாதி மனோநிலையுடன் பதிவு செய்துள்ள கதை. காலப்பொறுத்தமற்ற கதை, தகவல்
பிழைகள் மலிந்துள்ள கதை, ஆனாலும் தான் சொல்ல நினைத்ததை வன்மையாக
சொல்லியுள்ள கதை.

வேலைக்கு போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சங்கராச்சாரி
சொன்னதையும், நடக்கிறது நடக்கிறதுக்குத்தான் ஆசப்படனும், பறக்கிறது
பறக்கிறதுக்கத்தான் ஆசைப்படனும் என்று கீறிப்பட்டி பெரியதேவர்
ஆனந்தவிகடன் (நவம்பர்) பேட்டியில் சொன்னதையும், சேர்த்து சிறுகதையாக
எழுதி தமிழுக்குத் தந்துள்ளார் சுந்தரராமசாமி. உண்மையில்
சுந்தரராமசாமியின் பிள்ளை கெடுத்தாள் விளை கதையிலிருக்கும் அரசியல்
புரியவேண்டுமென்றால், அவர் எழுதிய வாசனை என்ற சிறுகதையைப் படித்தால்
மிகவும் உதவியாக இருக்கும். பிள்ளை கெடுத்தாள் விளையில் வருகிற பெண்
தாயம்மாள், அவள் தாழ்ந்த சாதிப் பெண். வாசனை கதையில் வருகிற பெண் லலிதா,
அவள் பிராமண சாதியைச் சேர்ந்த பெண். லலிதாவின் கணவன் சாம்பசிவன், இவன்
ஊனமுற்றவன். தனது மனைவியை புண்ணிய ஸ்தலத்துக்கு அழைத்துச் செல்லும்
பொழுது சாலை ஓரத்தில் கிடக்கும் ஒரு பெருவியாதி பிச்சைக்காரன் லலிதாவைப்
பார்த்து பாப்பாத்தி .... வாடீ ...... ராஜாத்தி என்கிறான். சாம்பசிவன்
பாதிகேட்டும் கேட்காமலும் போய் விடுகிறான். அடுத்த முறை கோயிலுக்கு வரும்
பொழுது அதே பிச்சைக்காரன் லலிதாவைப் பார்த்து பாப்பாத்தி ஒதுங்கிப் போறா
பாரு ...... ஒதுங்கிப்போறாப்லே ஒதுங்கிப்போய் ..... என்று சாம்பசிவன்
காதில் விழ சொல்கிறான். அன்று இரவு லாட்ஜில் தூங்கிக்கொண்டிருந்த பொழுது
மனைவி லலிதாவை மட்டும் தனியாக விட்டுவிட்டு வந்த சாம்பசிவன் தனது பூண்
கட்டிய ஊன்றுகோலால் பிச்சைக்காரன் மீது கொலை வெறித் தாக்குதல்
நடத்துகிறான். அடுத்தநாள் காலை போலீஸ் ஸ்டேசனில் இருந்து லாட்ஜ"க்கு
போன்வர சாம்பசிவன் போகிறான். இது தான் வாசனை கதை.

நாகர்கோயில் பக்கத்தில் மாடக்குழி என்ற குக்கிராமம் அங்கு வாழும்
தாழ்ந்தசாதிப் பெண் தாயம்மா. பக்கத்திலுள்ள ஊரில் வசிக்கும் பாதிரியார்
ஒருவரிடம் கல்விகற்றுக் கொள்கிறாள். ஐரோப்பாவில் மிகப்பெரிய ஒரு
பள்ளியில் இளங்கலை கற்றுத் தேர்ந்த பெண்ணுக்கு நிகராக இருக்கிறாள்
தாயம்மா என்று பாதிரியாரே புகழ்கிறார். ஊர்பெரியவர்கள் மாடக்குழியிலே ஒரு
பள்ளிக் கூடத்தை நிறுவி தலைமை ஆசிரியை க்குகிறார்கள். பலரின்
எதிர்ப்புகளுக்கு இடையிலும் இது நடக்கிறது. மாடக்குழி பள்ளிக்கூடம்
ஹைஸ்கூலாகிறது. இதற்கிடையில் தாயம்மாளின் தகப்பன் ராசைய்யா ரகசியமாய்
நிலம் வாங்கி வீடு கட்டி குடிபோய்விட்டான். தாயம்மாவுக்குப் படிப்புக்கு
ஏற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை. காலம் ஓடுகிறது. ஒருநாள்
பள்ளிக்கூடத்தில் சற்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்து அழகான பையன்
மணிகண்டனைப் பலாத்காரமாக உறவுகொண்டு விடுகிறாள் தாயம்மாள். அடுத்தநாள்
ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து ரவுக்கை அவுக்குதுக்கா ஸ்கூலுக்கு
வாறே தேவிடியா?'' எனச் சொல்லி அடித்து விளாசுகிறார்கள். ஊரைவிட்டு
விரட்டுகிறார்கள். போனவள் 53 வருசத்திற்குப் பின் சொந்தவீட்டை நம்பி
சாவதற்காக ஊருக்குள் ரகசியமாக வருகிறாள். அப்பொழுதும் ஊர் பெரியவர்கள்
கூடி அவள் யாருடனும் உறவுகொள்ளக் கூடாது. குழந்தைகள் அவள் பக்கம் போகக்
கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்கள். சில நாட்களில் அவள் செத்து
போகிறாள் இதுதான் பிள்ளை கெடுத்தாள் விளையின் கதை.

முதல் கதையில் வருகின்ற பெருவியாதி பிச்சைக்காரனும், இரண்டாவது கதையில்
வருகிற வாத்தியாயினி தாயம்மாளும் ஒரே குறியீடுகள் தான். பிச்சைக்காரன்
ஒரு பிராமணத்தியை காமப்பார்வையோடு பார்த்து கேலி செய்துவிட்டான்.
தாயம்மாளோ ஒரு வசதி படைத்த பையனுடன் பலாத்காரமாக உறவு வைத்துவிட்டாள்.
கீழ்சாதிக்காரர்கள் காமக் கொடூரர்கள், அவர்களுக்குத் தண்டனை கொடுத்து,
ஒழுக்கங்களைப் பேணிக்காக்க வேண்டியது புனிதர்களின் பணி. எனவே,
பிச்சைக்காரனை அடித்துக்கொல், தாயம்மாளை சாவு அடி அடித்து ஊரைவிட்டு
துரத்து. இதுதான் சுந்தரராமசாமியின் அறம். ஒருமுனையில் பாப்பாத்தி
லலிதாவையும், மறுமுனையில் அழகிய மணிகண்டனையும் சாட்சியாக வைத்து இழிந்த
சாதிமக்களை அடித்து நொறுக்கி அறத்தை நிலைநிறுத்த அரும்பாடுபடுகிறார்.

ஒரு ஊனமுற்றவனுக்குக் கோபமும், ஆத்திரமும் கொலைசெய்யுமளவு கொப்பளித்து
வருகிறது. ஆனால் தாயம்மாளின் உறவினர்களுக்கு அதில் துளிகூட வரமறுக்கிறது.
அதுதான் சுந்தரராமசாமியின் அரசியல். அதேகதை முப்பது ஆண்டுகளுக்குப்பின்
மாற்றி எழுதப்பட்டிருக்கிறது, அதே நோக்கத்திற்காக.

உண்மையில் பிள்ளை கெடுத்தாள் விளை ஒரு முக்கியமான கதை என்றுதான் நான்
நினைக்கிறேன். ஏனென்றால், ஒரே நேரத்தில் சுந்தரராமசாமியும்,
இரவிக்குமாரையும் சோர்த்து இது அம்பலப்படுத்துகிறது. பெரியார், பாப்லோ
நெருதா போன்ற ஆளுமைகளை விமர்சனம் என்ற எல்லைகளைக் கடந்து பழிதீர்த்துக்
கொள்ளும் இரவிக்குமார், சுந்தரராமசாமியின் கதையின் மீது வைக்கப்படும்
நியாயமான விமர்சனத்தைக் கூட பொறுக்க முடியாமல் குறுக்கே விழுந்து
தடுக்கிறார். இலக்கியத்தைப் பற்றிய அறியாமையால் இந்தப் பிரச்சனையைக்
கிளப்புகிறார்கள் என்கிறார். தலித்களாக்கப்பட்டுள்ள பிராமணர்கள் என்ற
செய்திக் கட்டுரையை அவுட்லுக் இதழில் ஆனந்த் எழுதியுள்ளார் அதில்
தமிழகத்து பிராமணர்கள் தலித்களைப் போல துன்பப்படுத்தப்படுகிறோம் என்று
கண்ணீர் வடித்துள்ளார். அதில்தான் அசோகமித்திரனின் பேட்டியும்
இடம்பெற்றுள்ளது. இதைப்பற்றி வாய் திறக்க நேரமில்லை இரவிக்குமாருக்கு.
காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு விழி பிதுங்கிக் கிடப்பவர்களை இழிவுபடுத்தும்
இத்தகைய வரலாற்று மோசடி வாதத்தை எதிர்கொள்ள இவருக்கு மனமில்லை. மாறாக
தலித்தை இழிவுபடுத்தும் சுந்தரராமசாமி கதையின் மீதான விமர்சனத்தைதான்
இவரால் பொறுக்க முடியவில்லை. தலித்கள் சாதியைச் சொல்லி பிளாக் மெயில்
செய்யக் கூடியவர்கள் என்று தவறான கருத்து உருவாகிவிடுமென பிளாக் மெயில்
செய்கிறார்.

சமீபத்தில் மாயாவதியின் பி.எஸ்.பி கட்சிஉத்தரபிரதேசத்தின் பல இடங்களில்
பிராமணர்கள் மகாசம்மேளனத்தையும், பிராமணர்கள் மாநாட்டையும் நடத்திக்
கொண்டிருக்கிறது. ராஜபுத்திரர்களுக்கு எதிராக பிராமணர்கள் மற்றும் தலித்
இணைப்பு அரசியல் அங்கே நடந்துகொண்டிருக்கிறது. இதே உத்தியைத்தான்
தமிழகத்தின் கருத்தியல் தளத்தில் இரவிக்குமார் ஆனந்த் கூட்டணி உருவாக்க
முயற்சி செய்கிறது. சாதீய படிநிலைக்குக் காரணமான பிராமணீய கோட்பாட்டிற்கு
எதிராகவும், சகலவிதமான பொருளியல் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் மக்களின்
மனசாட்சியைத் தட்டி எழுப்புவதை விட்டுவிட்டு, பிற்படுத்தப்பட்டவனை
மட்டும் பிறவி எதிரியாக்கி குளிர்காய நினைக்கும் சாதீய அரசியலின் சிறந்த
களமாக பிராமணர் மற்றும் தலித் அணி தேவை என்று இவர்கள் களத்தில்
இறங்கியுள்ளனர்.

அதனால்தான் இவர்கள் பெரியாரையும், இடதுசாரிகளையும் கேவலப்படுத்தி
எழுதுகிறார்கள். ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தரராமசாமி போன்றவர்களின்
பழமைவாத கருத்துக்களுக்கு நேரடியாகவும், மெளனத்தின் மூலமும் ஆதரவு
தெரிவிக்கிறார்கள். ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கு எதிரான இந்த
கோழைத்தனமான அரசியலைத் தமிழகத்தின் கருத்தியல் தளத்தில் வீழ்த்துவது
என்பது சமூக அக்கறை சார்ந்த இலக்கியவாதிகளின் முக்கிய கடமையாகும்.

மூத்த எழுத்தாளர்களுக்கே நேரம் சரியில்லை போலும் என்கிறார் ஜெயமோகன்.
உண்மையில், இந்த மூன்று மூத்த எழுத்தாளர்களையும் புரிந்து கொள்ள இதுதான்
சரியான நேரம். படைப்பின் உள் இடுக்குகளுக்குள் ஒளிந்து கொண்டு பேசும்
உத்தியை விட்டுவிட்டு, படைப்பின்மூலமும், பேட்டியின் மூலமும் மூவரும்
உரக்கப் பேசியுள்ளனர். தாங்கள் யார் என்பதைப் பட்டவர்த்தனமாகக்
காட்டியுள்ளனர். முகமுடிகள் கழற்றப்பட்ட இவர்களின் முகம் எவ்வளவு வன்மம்
நிறைந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

மக்களின் மேன்மைக்கும், உயர்வுக்கும் எதிராக தங்களின் எழுத்தைப்
பயன்படுத்துபவர்கள் மூத்த எழுத்தாளர்கள் என்ற அடையாளத்தின் மூலம்
தப்பித்துக் கொள்வதை நாம் அனுமதிக்கக்கூடாது. சமூகத்தின்பால் அக்கறையுடன்
நடந்து கொள்ள வேண்டியவர்கள், ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்ட சமூக
ஒடுக்குமுறைக்கு வக்காலத்து வாங்குவார்களேயானால், ஒழிக்கப்படவேண்டிய
ஒடுக்குமுறைகளின் பகுதியாகவே இவர்களின் எழுத்துக்களும் கணக்கில்
கொள்ளப்பட வேண்டும்.

லக்ஷ்மி

unread,
Sep 25, 2007, 7:31:39 AM9/25/07
to பண்புடன்
**********************************
பதிவுகள் மே 2005; இதழ் 65.!
படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல...
- ஆதவன் தீட்சண்யா -
**********************************

படைப்பில் பிரச்சாரம் முதன்மையுறுமாயின் கலைநோக்கம் சிதைந்துவிடும்.
நாலெழுத்து படித்து பொதுவெளியில் புழங்க வரும் தலித்பெண்ணை இகழவேண்டும்
என்ற சுந்தரராமசாமியின் பிரச்சாரத்தினால் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’- ஒரு
கதையாக உருவாகாமல் மூளிப்பட்டுள்ளது. அது வரலாற்றையும் சொல்லவில்லை,
புனைவாகவும் இல்லை. கதையின் சாரமான செய்தியிலும் புதுமையொன்றுமில்லை.
வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கக்கேடானவர்கள் என்று ஏற்கனவே
சங்கராச்சாரி அருளியதன் மறுவுருவாக்கமே. தாயம்மாளின் கதையைச் சொல்பவன்
தங்கக்கண். தங்கக்கண் கதையைச் சொல்கிறான் செல்லதுரை. தங்கக்கண்ணின்
முன்னோர் வாழ்ந்த மாடக்குழியும் தாயம்மாளின் மாங்குளமும் ( மாங்குழி
என்கிறார் முதலில்) தான் கதை நடக்கும் ஊர்கள். கதை 20 ம் நூற்றாண்டின்
ஆரம்பத்தில் தொடங்குகிறது. அன்று தங்கக்கண்ணின் முன்னோர்களான ஆண்களின்
உடை கௌபீனம். ‘பொட்டையா, போடாதே மேல்சீலை’. மேல்சீலை உடுத்த அனுமதியற்ற
சாதிகளின் படிநிலையில் மேலே நாடார்களும் கீழே தலித்களும் இருந்தனர். எனவே
மேல்சீலை உடுத்த அனுமதியற்ற தாழ்ந்த சாதிப்பெண் என்று தாயம்மாளை
அறிமுகப்படுத்தும் தங்கக்கண் நாடார் என்றும் தாயம்மாள் தலித் என்றும்
தெளிவாகிறது.

19ம் நூற்றாண்டின் பின்பகுதியிலேயே நாடார் பெண்களும் (26.07.1859 ),
தாழ்த்தப்பட்ட பெண்களும் (01.07.1865) தோள்சீலை அணிந்து கொள்ளும் உரிமையை
அடைந்துவிட்டனர். ஆனால் 20 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாதிரியார்
வரும்போது தாயம்மாளின் உறவுப்பெண்கள் மார்பை மறைத்துக்கொள்ள
அவஸ்தையுறுகிறார்கள் என்கிறது கதை. அய்யா வைகுண்டரும் அய்யங்காளியும்
வரலாற்றைத் திருத்தும் சுந்தரராமசாமியை மன்னிப்பார்களாக.

தாழ்ந்த சாதியென்று தெரிந்தும் தாயம்மாளின் கல்வியறிவை மதித்து தங்கள்
ஊரின் பள்ளிக்கு அவளை தலைமையாசிரியையாக நியமித்து அப்போதே முன்னூறு
ரூபாய் ஊதியம் வழங்குகின்றனராம் மாடக்குழி மகான்கள். சுதந்திரத்திற்கு
பின் வந்த முதல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறும் இங்கிலிசில்
பேசி பிரச்சாரம் செய்யுமாறும் கட்சிகள் அவளை மொய்க்கின்றனவாம். (இன்றுவரை
பாப்பாப்பட்டியிலும் கீரிப்பட்டியிலும் வேட்புமனு கூட தாக்கல்
செய்யமுடியவில்லை.) இந்தளவுக்கு அவளைக் கொண்டாடி ஊரார் தரும் மரியாதையை
காப்பாற்றிக் கொள்ளவில்லை தாயம்மாள். அடித்தள மக்களின் மேலெழும்பும்
முயற்சிகளை ‘நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்’ என்று
இளக்காரம் பேசி மறுக்கும் திக்கசாதியின் மனோபாவம் தான் கதையின்
அடியோட்டம்.

அவளளவு படித்த ஆம்பளையே இல்லை அவளது சாதியில். கல்யாணமில்லை. அதற்காக
காமத்தை அடக்கிக் கொள்ளமுடியுமா? தன்னிடம் டியூசன் படிக்கும்
நாலாங்கிளாஸ் பையனை சூறையாடுகிறாளாம். மரணப்படுக்கையிலிருக்கும் போதும்
ஒழுக்கத்தைக் காப்பாற்றும் பொறுப்பிலுள்ளவர்கள் வாழும் ஊர், இந்த
ஒழுக்கக்கேட்டை தாங்கிக்கொள்ளுமா? பிரம்பாலடித்து உதட்டைக் கிழிக்கிறது.
ளாளுக்கு அடித்து துவைக்கின்றனர். பெருகி வழியும் அவளது ரத்தம் தொட்டு
அவள்மீது கதை எழுதுகிறார் சுந்தரராமசாமி. ஹா அற்புதம் என்கின்றனர் அவரது
வாசிப்படிமைகள்.

முதல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமளவுக்கு வயதேறிய தாயம்மாள்
அதன்பின் ஊரை விட்டோடி ஐம்பத்துமூன்று வருடங்கள் கழித்து ஊர்திரும்பிச்
சாகிறாள். காலக்கணக்கின் துல்லியம் கிட்டத்தட்ட 2005 என்று சமகாலத்தை
எட்டுகிறது. ஆனால், தாயம்மாள் செத்து 16 நாள் கடந்த பின் அவளது கதையைச்
சொல்லும் சூறாவளி தினசரியின் பிரதம நிருபர் தங்கக்கண்ணுக்கு தற்போதைய
மாதச்சம்பளம் நாற்பதுரூபாயாம். கள்ளக்கணக்கெழுதி நாளொன்றுக்கு ஒருரூபாயை
இசுக்கிவிடப் பார்க்கும் அவன் 1942 இயக்கத்தில் பங்கேற்ற
சுதந்திரப்போராட்டத் தியாகி என்கிறார் கதாசூடாமணி சுந்தரராமசாமி. தான்
எழுதுவதில் குற்றம்காண யாரிருக்கிறார்கள் என்று காலம் இடம் வரலாற்றுத்
தரவுகளை குளறுபடியாக பொறுப்பின்றி கையாள்வது மமதையின் உச்சம்.

- 2 -
பலான விசயத்தில் ஆள் கொஞ்சம் வீக் தெரியுமோ என்ற தகவலை, உண்மையா என்று
சோதிக்காமலே ஒரு குற்றச்சாட்டாக பதிவுசெய்துகொள்வது பொதுஉளவியல். ஜீவா,
பெரியார், பாப்லோ நெருடாவை இழிவுபடுத்த காலச்சுவடு கையாண்ட
அருவருக்கத்தக்க இந்த அணுகுமுறையைத்தான் தாயம்மா மீதும்
பிரயோகித்துள்ளார் சுந்தரராமசாமி. திருமணம்- ஆண்துணை- உடலின்பம் என்று
சராசரியாக வாழப் பணியாத பெண்களை மிரட்டி வசக்கி தொழுவத்தில் கட்டும்
கலாச்சார காவலாளியாகவும் கூட ஆலத்தி பிடிக்கிறார். பிற மதத்தாரால்தான்
நம்நாட்டுப் பெண்களின் கலாச்சாரம் பாழ்பட்டது என்று இந்துத்வவாதிகள்
சொல்வதையே - பாதிரியார் பேச்சைக் கேட்டு படிக்கப்போய்த்தான் அவளுக்கு
இவ்வளவு கேடுகளும் வந்துசேர்ந்தது என்று சுந்தரராமசாமியும் சொல்வதாய்
கருதவும் இக்கதை இடமளிக்கிறது.

தம்மை உயர்வானவர்களாய் நிறுவிட மற்றாரை இழித்துரைக்கும் மலினமான
தந்திரத்தை சுந்தரராமசாமியோ காலச்சுவடோ திடுமென்று இக்கதையில் மட்டுமே
கையாளவில்லை. பிம்பங்களை கட்டுடைப்பதாகவும் காத்திரமான விமர்சனத்தை
எதிர்கொள்ளும் பக்குவத்தை தமிழ்ச்சமூகம் வளர்த்துக் கொள்ளவேண்டும்
என்றும் வியாக்கியானம் கூறி திராவிட , பொதுவுடமை இயக்கங்களையும்
ளுமைகளையும் இழிவுபடுத்துவது தொடர்கிறது. தம்மையன்றி வேறெவருக்கும்
இலக்கியம் வரலாறு பண்பாடு எதுவும் தெரியாது என்று காலச்சுவடு குழுவால்
ரவுண்டுகட்டி மட்டந்தட்டப்பட்ட படைப்பாளிகள் அனேகர். எதைவேண்டுமாயினும்
எழுதுவதே கருத்துச்சுதந்திரமாம். ஆனால் இவர்களைப்பற்றி ஒருவார்த்தை
சொன்னாலும் மானநஷ்ட வழக்கு தான். விபரங்களுக்கு வெங்கட் சாமிநாதனை
அணுகவும். படைப்பின் வன்முறை என்று ஒப்பாரிவைத்து ஊர்உலகமெல்லாம்
கையெழுத்தியக்கம் நடத்துவார்கள்.

செருப்பு போட்டிருப்பவனுக்குத் தான் அது எங்கே கடிக்கிறது என்று
தெரியும். தங்கக்கண் நாடாருக்குள் பதுங்கிக்கொண்டு சுந்தரராமசாமி எங்கே
கடிக்கிறார் என்பது சுரணையுள்ளவர்களுக்கு தெரிகிறது. (மரத்துப்
போனவர்களைப் பற்றி பேசாதீர்கள், ப்ளீஸ்). அத்துமீறலை படைப்புச்
சுதந்திரமெனக்கூறி தப்பித்துக்கொள்ள யாருக்கும் உரிமையில்லை.
இப்படியெல்லாம் அபாண்டமாய் எழுதுவது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ்
தண்டனைக்குரிய குற்றமென்று உடனிருக்கும் உற்ற நண்பர்கள்
சுந்தரராமசாமிக்கு அறிவுறுத்தி பகிரங்கமாக மன்னிப்பு கோரச் செய்யலாம்.
கதையை வெளியிட்ட காலச்சுவடுக்கும் வேறு கதிமார்க்கமில்லை.

visaia...@yahoo.co.in

லக்ஷ்மி

unread,
Sep 25, 2007, 7:40:15 AM9/25/07
to பண்புடன்
********************************************
Su.Raa is misunderstood by dalit brothers!
R.P.Rajanayahem
Pathivugal May 2005
********************************************

This is very unfortunate that our dalit brothers have misunderstood a
noble writer. when you read suraa's whole work you can find the noble
heart of su.raa. he is a writer of great caliber and as a human being
also he is a rare gentle man of the first order. please dont think i
am glorifying him. he is the most eligible writer to get any award.
Reading between the lines leads to many confrontations. that is what
happened in this remarkable short story "pillai keduthal vilai". this
story is against the attitude of feudalistic atrocity and
sympathetically defends thayammal. when you read with a pre-
conditioned fixation you always land in pensiveness and abstraction.
actually when i read this touching story, i couldn't even sleep and
thayammal's pitiable situation was unforgettable. it recollected in me
su.raa's another master piece ' kolongal' . in fact thangakann and
sellathurai are identical to some extent to " puliyamarathin kathai "
thomodhara aasan and laundry joseph.

I personally feel this misunderstanding of our dalit brothers should
never affect su.raa's creative ecstasy.it is miserable for his life
time achievement he has to face these slanderous remarks.

I would like to point out that kalachuvadu has never done any harm at
all to periyar, jeeva and neruda . when any body is having
organisational delusions, dogma is unavoidable. you can publish this e
mail as a rejoinder to aadhavan theetchanya's article.

I would like to quote the mighty lines of mathew arnold. " literature
will take over the function of the religion in the future "

rpraja...@yahoo.co.in

லக்ஷ்மி

unread,
Sep 25, 2007, 8:10:49 AM9/25/07
to பண்புடன்
**************************************************************************

பதிவுகள் மே 2005
சு.ரா.வின் 'பிள்ளை கெடுத்தாள் விளை' பற்றி.....
- ரவிக்குமார் -
********************************************************

சுந்தர ராமசாமியின் சிறுகதை தலித்துகளைப் பற்றி எழுதப்பட்டதல்ல. அது
எவரையும் இழிவு படுத்தவுமில்லை. தமிழில் வெளிவந்துள்ள நல்ல சிறுகதைகளில்
ஒன்றாக அதைக் குறிப்பிடலாம். அந்தச் சிறுகதையில் டெய்லர் செல்லத்துரை,
ஊர் பெயர்களை ஆராய்ச்சி செய்யும் நிருபர் தங்கக்கண் என இரண்டு கதை
சொல்லிகள் வருகின்றனர். தங்கக்கண் கொஞ்சம் 'கூட்டிச் சொல்கிறவன்' அவனிடம்
'கைவசம் கொஞ்சம் பொய்களும் உண்டு'. 'பொட்டையா? போடாதே மேல் சீலை' என்று
ஒடுக்கப்பட்டிருந்த குடும்பம் ஒன்றிலிருந்து வருபவள் தாயம்மா.ஒரு ஜெர்மன்
பாதிரியாரின் உதவியால் 'ஐரோப்பாவில் மிகப்பெரிய பள்ளியில் இளங்கலை
கற்றுத் தேர்ந்த பெண்ணிற்கு நிகராகக்' கல்வி பெறுகிறாள். மனசுக்குள்
ஆங்கிலம் பேசி; யாருமில்லாத நேரங்களில் ஆங்கிலக் கவிதைகளை வாய்விட்டுச்
சொல்லிப்பார்த்து, தனது திறமையைப் புரிந்துகொள்ள அந்த ஊரில்
ஒருவருமில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த தாயம்மா 'காலத்தின் கூத்தால்'
ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியை ஆக்கப்படுகிறாள். 1950களில் அவளுக்கு
முன்னூறு ரூபாய் சம்பளம். தினமும் மீன் சாப்பிட்டு, நாளுக்கொரு சேலை
உடுத்தி,பார்க்கிற பெண்களும் பொறாமை கொள்கிற அளவுக்கு அழகோடு இருக்கும்
தாயம்மாவை தேர்தலில் நிற்கச் சொல்லிஅரசியல்வாதிகள் வற்புறுத்துகிறார்கள்.
இப்படி பேரும் புகழுமாக இருக்கும் அவளை ஒரு நாள் அந்த ஊர்
முக்கியஸ்தர்கள் ரகஸியமாகக் கூடி சதி செய்து பழி சுமத்தி அடித்து


விரட்டுகிறார்கள்.

ஐம்பத்துமூன்று வருடங்கள் தாயம்மாள் போன இடம் தெரியவில்லை. எண்பது வயதைத்
தண்டிவிட்ட நிலையில் மீண்டும் அவள் அந்த ஊருக்கு வருகிறாள். அப்போதும்
அவள் பகலில் வெளியே தலை காட்டக் கூடாது என அந்த ஊர் கட்டுப்பாடு
போடுகிறது. "நாம் ஆளுக்கு பத்து ரூபாய் போட்டு "அவளை நல்ல முறையில்
காப்பாற்றலாம் என தங்கக்கண்ணிடம் கதைகேட்டுக்கொண்டிருந்தவர்கள் முன்வரும்
வேளையில் தாயம்மா இறந்துவிட்டாள் என்று சொல்லி கதையை முடிக்கிறான்
தங்கக்கண்.

'கல்மனசையும் உருகச் செய்யும்' இந்தக்கதை ஊர் பெயர்களை ஆராய்ச்சி
செய்யும் தங்கக்கண்ணால்தான் சொல்லப்படுகிறது. அது அவன் சொன்ன
கட்டுக்கதையாகவும் இருக்கலாம். ஏனென்றால் அவன் கைவசம் கொஞ்சம் பொய்களும்
உண்டு என முன்பே ஒரு குறிப்பு தரப்பட்டுள்ளது. தாயம்மாமீது
சுமத்தப்பட்டது வீண்பழிதான் என்பதைப் புரிந்துகொள்ள சுந்தரராமசாமி
கதையில் பல தடயங்களை விட்டுச் செல்கிறார். தாயம்மாவின் அழகு மட்டுமின்றி
அவளது செல்வச் செழிப்பும் அவள்மீது
பொறாமை உண்டாகக் காரணமாகியிருக்கலாம். அவளுக்கு அபவாதம் வந்துசேரக்
காரணமாக இருந்த மாணவன் மணிகண்டன் வசதியான ஒரு ஊழல் அரசியல்வாதியின் மகன்.
கணக்கில் ஓட்டையான அவனுக்கு சிரத்தை எடுத்துக்கொண்டு தனியே பாடம்
சொல்லித் தருகிறாள் தாயம்மா. மணிகண்டன் வீட்டுக்கு வரும்போது அவன் முகம்
வீங்கி இருந்ததாக ஒரு குறிப்பு உள்ளது. அவனை கன்னத்தில் அடித்து தாயம்மா
பாடம் சொல்லித் தந்ததால் அப்படி முகம் வீங்கிப் போயிருக்கலாம்.அதனால்
கோபம் கொண்ட அந்தப் பையனின் தாய் ஊரெல்லாம் தாயம்மாமீது
கோபப்படுகிறமாதிரி ஒரு பொய்க் கதையைக் கிளப்பி விட்டிருக்கலாம். இப்படி
பார்ப்பதற்கான தடயங்களே அந்தக் கதையில் உள்ளன. தாயம்மாவின் ஒழுக்கம்பற்றி
சந்தேகம் கொள்கிறமாதிரி கதைக்குள் ஒரு குறிப்புமே இல்லை. ஊர்ப்
பிரமாணிகளும், சக ஆசிரியர்களும் பதுங்கியிருந்து அவளை அடித்துத்
துன்புறுத்தும் காட்சியின் வர்ணனை மட்டுமின்றி மிகவும் துயரார்ந்த
முறையில் சொல்லப்பட்டுள்ள அவளது மரணமும் அவள்மீது சுமத்தப்பட்டது
வீண்பழிதான் என்பதற்கு சாட்சியங்களாக உள்ளன.

மொழி என்பது ஒரு குறியீட்டு அமைப்பு(sign system) என்று மொழியிலாளர்கள்
சொல்லியுள்ளனர். ஒரு பிரதியை வாசிப்பதற்கு அதற்குள் இருக்கும்
குறியீடுகளை வாசிக்கவேண்டும். 'விளை' என முடியும் ஊரின் பெயரும்,
தாயம்மா, தங்கக்கண் என்பனபோன்ற நபர்களின் பெயர்களும் சுட்டுகின்ற பண்பாடு
எதுவெனெத் தெரிந்துகொள்ள நாகர்கோயில் பகுதியின் பண்பாட்டு வரலாறு
நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். இக்கதையில் உள்ள குறியீடுகளை
வாசிக்கும்போது இக்கதைக்கும் இப்போது தலித்துகள் என
அறியப்படுபவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப்
புரிந்துகொள்ளலாம்.தாயம்மாவை

'தாழ்ந்தஜாதிப் பிள்ளை' என்று கதையில்வரும் பாத்திரமொன்று
குறிப்பிடுவதைக்கொண்டு அவள் இன்றைய தலித் சாதிகளில் ஒன்றைச் சேர்ந்தவள்
என முடிவுக்கு வருவது கதையை வாசிக்கத் தெரியாத அறியாமையே ஆகும்.

திருவாங்கூர் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த தோள்சீலைப்
போராட்டத்தின் வரலாற்றின் பின்னணியிலும்; அப்படிப் போராடிய
சமூகத்தவருக்குக் கல்வி கொடுக்க முயன்ற மிஷனரிமார்கள் பட்ட கஷ்டங்களின்
பின்னணியிலும் வைத்து இந்தக் கதையை வாசிக்கவேண்டும்.அப்போதுதான் இது அந்த
மக்களுக்கு தரவாக சொல்லப்பட்டிருப்பது புரியும்.

மாடக்குழியை ஓரிடத்தில் மாங்குளம் எனத் தவறாகக் குறித்திருப்பது, உள்ளூர்
தினசரியின் தலைமை நிருபருக்கு இப்போது 40 ரூபாய் சம்பளம் எனச் சொல்வது
போன்ற சிறு பிழைகள் இருந்த போதிலும் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக
வைப்பதற்கு தகுதிபெற்றது இந்தக்கதை. இது தலித்துகளுக்கு
எதிரானதென்றும்,இதை எழுதியவர் மன்னிப்பு கேட்காவிட்டால் வன்கொடுமைத்
தடுப்பு சட்டத்தில் வழக்குபோடுவோம் என்றும் சொல்லுவது, "தலித்துகளுக்கு
இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் அறிவு கிடையாது,அவர்கள் சாதியைச் சொல்லி
'பிளாக் மெயில்' செய்யக்கூடியவர்கள்" என்பதுபோன்ற தவறான கருத்துகள்
வலுப்படவே வழிவகுக்கும். அது நிச்ச்சயமாக தலித்துகளுக்கு
உதவக்கூடியதல்ல.

adhe...@rediffmail.com

லக்ஷ்மி

unread,
Sep 25, 2007, 8:14:35 AM9/25/07
to பண்புடன்
***************************************************
எளிய ஆராய்ச்சியாளன் சொன்ன எளிய கதை
- யமுனா ராஜேந்திரன் -
*************************************************

1.
ஆதவன் தீட்சண்யாவின் குறிப்புக்கள் குறித்த ராஜநாயஹத்தின் எதிர்வினை
நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் உணர்ச்சிவசமான நம்பிக்கையின்
அடிப்படையிலும். இருக்கிறது. ஒரு படைப்பாளி கண்ணியமானவராகவும் நேரில்
பழகுவதற்கு இனியவராக இருப்பதும் அவரது படைப்பு சார்ந்த
மதிப்பீடுகளுக்குத் தடையாக இருக்க முடியாது. படைப்பாளி வரலாற்றுப்
பிரக்ஞை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

வளர்ந்தவர்கள் குழந்தைகளை பாலியல் வேட்கைக்கு உட்படுத்துவது என்பது
சர்வதேசியச் சட்டங்களின் அடிப்படையில் கொடுங்குற்றமாகக் கருதப்படுகிறது.
அமெரிக்க வாழ்க்கை முறை குறித்த பாரிய அனுபவம் கொண்ட சு.ரா. இதனை வெகு
நன்கு அறியமுடியும். உன்னத சங்கீதம் என 13 வயதுப் பெண்குழந்தையோடு
பாலுறவு கொள்ளும் 50 வயது மத்தியதர வயது ஆணை மனிதாயப்படுத்தி எற்கனவே
சாருநிவேதிதா எழுதியிருக்கிறார். சு.ரா இதே அதிர்ச்சி மதிப்போடு
எதிர்முனையில் விவகாரத்திற்குரிய பிள்ளை கெடுத்தாள் விளையை
எழுதியிருக்கிறார். பிள்ளை கெடுத்தாள் விளை என ஊருக்குப் பெயரிட்டதன்
வழி இந்தப் புனைவுக்கு ஒரு வரலாற்று மதிப்பையும் அவர் ஏற்றியிருக்கிறார்.
ஆனால் பாலியல் வல்லுறவும் சுரண்டலும் இந்திய வரலாறு முழுக்க எவருக்கு
எதிராக, எவரது வாழ்வில் அன்றாட நிகழ்வாக இருக்கிறது? இந்தக் கேள்வி
சார்ந்த உணர்வைத்தான்; வரலாற்றுப் பிரக்ஞை என்கிறோம்.

கதையின் விபரீத சஞ்சாரம் குறித்த தலித் எழுத்தாளர்களின் கோபம் மிக
நியாயமானது. சு.ராவின் இந்தக் கதையை அசோகமித்திரனின் யூதர்கள் தொடர்பான
ஆதங்கத்துடன் சேர்த்து வாசிப்பது தவிர்க்கவியலாதது. அசோகமித்திரன் தமது
சமூகம் சாரந்தவர்களை யூதர்களுடன் ஒப்பிடுவது வெறுமனே யதேச்சையானது அல்ல.
இந்துத்துவச் சார்பு ஆங்கில இணைய தளங்கள் அனைத்திலும் மேற்கொள்ளப்படும்
ஒப்பீடு அதுதான். அரவிந்தன் நீலகண்டன் போன்ற அறிவித்துக்கொண்ட
ஆர்.எஸ்.எஸ்.காரரின்; கட்டுரைகளில் தமது சமூகத்தை யூதர்களோடு ஒப்பிட்ட
பாங்கை¨யும் பாலஸ்தீனர்களை பயங்கரவாதிகள் என அவர் சொல்வதையும் வெகு
சாதாரணமாக நாம் காணலாம். அசோகமித்திரன் ஒரு தேர்ந்த இலக்கியவாதி என்பதால்
தன் மொழியில் அவர் பேசுகிறார். வு¢த்தியாசம் வேறில்லை. இச்சூழலில்
சு.ராவின் விமர்சனமற்ற அபிமானிகள் புரிந்துகொள்வது மாதிரியே பிற
மனிதர்களும் இக்கதையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை.
இத்தருணத்தில் இப்படியான கதையை எழுதுவதற்கு சு.ராவை உந்திய பொறிக்கும்
அல்லது இத்தருணத்தில் தமது சமூகத்தின்; புனிதம் மற்றும் வீழ்ச்சி
குறித்து ஆதங்கப்பட வேண்டிய நிலைமை அசோகமித்திரனுக்கு வந்ததற்கும்
வெறுமனே கலைப் பிரக்ஞைதான் காரணம் என அனைவரும் நம்ப வேண்டிய
அவசியமேயில்லை.

2.

தத்துவம், அழகியல், அமைப்பியல் சார்ந்து குறிப்பிட்ட கதை
பார்க்கப்படுகிறது. சமகால விவாதங்கள் நடைமுறைகள் சார்ந்து கதை
பார்க்கப்படாமல் தவிர்க்கப்படுகிறது. ஆதவன் தீட்சண்யா தெளிவாகவும் தன்
விவாதத்தின் மையமாகவும் முன்வைத்துக் குறிப்பிட்டிருக்கும் கதைநிகழ்வின்
காலக்குழப்பமும் குளறுபடியும் குறித்துக் கதையின் ஆதரவாளர்கள் எந்தவிதமான
விளக்கங்களையும் முன்வைக்க முடியவில்லை. அமைப்பியல் சார்ந்து கதையின்
இயக்கத்தை விவரிக்கும் ரவிக்குமார் இலக்கிய அழகியல் தெரியாதவர்களாக
நீங்கள் புரிந்துகொள்ளப்படுவீர்கள் என தலித்துக்களையும் விளிம்பு
நிலையாளர்களையும் அச்சுறுத்துகிறார்.

தாயம்மாவின் மரணம், முதல் தேர்தல் என கதை நிகழும் காலம், கிராமத்தின்
பெயர் மாற்றம் என கடந்த காலத் தன்மையைக் கதைக்கு சு.ரா வழங்கினாலும்,
ஆதவன் தீட்சண்யா குறிப்பிடுகிற காலக்குழப்பத்தை சு.ரா. கடந்து
போகமுடியவில்லை. கதையின் அழகியல் தொடர்பானது மட்டுமல்ல இக்கேள்வி,
கதையின் வரலாற்றுப் பிரக்ஞையின் மீதான கேள்வியாகுமிது. கதையின் காலம்
2005 ஆம் வருட வாக்கிலான நிகழ்காலம்தான். நிகழ்காலத்தின் சிக்கலான
உரையாடல் ஒன்றை மையமாகக் கொண்டுதான் கதை விவாதிக்கப்படுகிறது. அந்தச்
சிக்கலான பிரச்சினை குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை -child abuse-
தொடர்பானது.

கதையில் தாயம்மா பாலியல் பலாத்காரம் புரிந்ததாகச் சொல்லபடுவதனை
ஸ்தாபிக்கும் எந்தத் தடயமும் கதையின் மொழியில் இல்லை என்பதனை ஆதரவாளர்கள்
சுட்டிக்காட்;டுகிறார்கள். அதன் மீதான நிச்சயமின்மையையே கதை
கொண்டிருக்கிறது எனவும் அவர்கள் நிச்சயமாகச் சொல்கிறார்கள். கதைசொல்லி
தாயம்மாவின் மீது உருவாக்கும் அனுதாபமும், தங்கக்கண் சொன்ன கதையின்
இறுதியில் தாயம்மாவின் மீது கேட்பவர்கள் செலுத்தும் அனுதாபத்தையும்
முன்வைத்து இப்படியான முடிவுக்கு வருவதாகவும் அவர்களது விவாத நிலைபாடு


இருக்கிறது.

கதை கேட்பவர்களின் அனுதாபத்தை ஊர்கூடி தாயம்மாவின் மீது செலுத்தும்
வன்முறைக்கு எதிரான அனுதாபமாகப் புரிந்து கொள்வதா அல்லது மிகக் கடினமான
அனுபவங்களின் பின் வாழ்க்கையில் முன்னேறிய அந்தப் பெண்ணின் பாலியல்
வேட்கையின் ததும்பல் எனப் புரிந்து கொண்ட அனுதாபம் என விளங்கிக் கொள்வதா
அல்லது குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை குறித்து கதை கேட்பவர்களுக்கு
அசிரத்தையான மனப்பான்மையே இருக்கிறது என விளங்கிக் கொள்வதா?

அனைத்துக்கும் முன்னதாக சமகாலத்தின் மிகக் கேவலமானதும் வக்கிரமானதுமாகக்
கருதப்படும் ஒரு குற்றச் செயல் - child abuse- புரிந்ததின் மீதான
சம்சயத்தின் -suspicion or obscurity- அடிப்படையில் இப்படியான கதையை எழுத
வேண்டிய தனது கருத்தேர்வுக்கான உந்துதலை சுந்தரராமசாமிக்கு வழங்கிய அகப்
பொறி அல்லது சமூக நெருக்கடிதான் என்ன?

தத்துவவாதியானாலும் அரசியல் நடவடிக்கையாளன் ஆனாலும் இலக்கியவாதியானாலும்
கடந்த காலத்தை நிகழ்கால நெருக்கடிகளின்ன் அடிப்படையில்தான் வாசிக்கத்
தொடங்குகிறான். தலித் அரசியலாளர்களின் மீதும், தலித்துக்கள் மனிதர்கள்
எனும் அளவிலும் ஒரு விதமான சமூகவியல் அணுகல் தலித் அல்லாதவர்கள்
மத்தியில் இருக்கிறது. சு.ரா.வும் சமூகஜீவியாக இதற்கு விதிவிலக்கு அல்ல.
தலித்துகளுக்கு அதிகாரமும் வசதியும் சொத்தும் சேரும் போது ( தாயம்மாவின்
தகப்பன் ரகசியமாக நிலம் வாங்குகிறார் எனக் குறிப்பிடுகிறது கதை) பிற
சமூகப் புகுதியினரைப் போலவே அவர்கள் குற்றச்செயல்களிலும் அதிகாரம்
செலுத்துவதிலும் ஈடுபடுவார்கள் எனக் கருதுவதுதான் அந்த நிலைபாடு. இந்த
நிலைபாட்டிலிருந்து கதையை வாசிக்கிற போது கதையின் பல குழப்பங்கள்
நமக்குத் தெளிவுபடுகின்றன.

கதையில் மூன்று இணையான - three parellel texts- பிரதிகள் ஊடறுத்துச்
செல்கின்றன. (அ) ஒரு கீழ்சாதிப் பெண்ணாக தாயம்மாவின் நோவுகளும் பாடுகளும்
சமூக நிலை எய்துதலும் அவள் மீதான வன்முறையும் முதலானது எனக் கொள்ளலாம்.
(ஆ) தாயம்மாவைச் சுற்றிய அரசியல் மாற்றங்கள், அது சார்ந்த மனிதர்களின்
எதிர்விணைகள் இரண்டாவது எனக் கொள்ளலாம். (இ) மூன்றாவதானதும்
பிரதானமானதுமான பிரதி தாயம்மாவின் பாலியல் வேட்கை மற்றும் அவளது உடலின்
ததும்பல்கள் தொடர்பானது. கதையின் பிரச்சினைக்குரிய பகுதியும் இதுதான்.
இது குறித்து கொஞ்சம் பொய்யும் கலந்து சொல்லும் தங்கக்கண்ணின் வழியிலும்,
தங்கக் கண்ணின் பொய்யை வடிகட்டிய நிலையில் திட்டவட்டமான வாரத்தைகளில்
நமக்கு விளக்கும் நேரடிக் கதைசொல்லியான டெய்லர் செல்லத் துரையின்
வார்த்தைகளிலும் நம்மை வந்து அடையும் சித்திரம், பேசப்படும் பாலியல்
குற்றம் குறித்து அவ்வளவு கூடார்த்தமாகவும், நிச்சயப்படுத்திக் கொள்ள
முடியாததாகவுமா இருக்கிறது?

அப்படி இல்லை என்பதை கதையின் பாலுறவு வேட்கை தொடர்பான திட்டமான இணைப்
பிரதி நமக்குச்; சொல்கிறது. வண்டல் திரண்டது போல் உடம்பு கொண்ட(பக்கம்:
14) தாயம்மாவுக்கு கல்யாணம் ஆகவில்லை (பக்கம்:13). மணிகண்டன்
மாடக்குழியில் ஹைஸ்கூலில் நாலாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.
என்ன அழகு! (பக்கம்:15) மணிகண்டன் தன் தாயாடம் சொன்ன விசயம் மாடக் குழி
முழுக்க ஒரே நொடியில் பரவிற்று என்ற அதில்; மிகையில்லை (பக்கம்15)
தாங்கள் அரும்பாடுபட்டுக் கட்டி வளர்த்த பள்ளியைக் காப்பாற்ற அந்தத்
திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று அவுர்களுக்குத்; தோன்றிவிட்டது.
(பக்கம்:15).தாயம்மா அழவில்லை. கத்தவில்லை.ஒரு சொல் சொல்லவில்லை (பக்கம்:
16) குழந்தைகள் அவள் பக்கம் போகக் கூடாது (பக்கம்: 16).

ரவிக்குமார் சொல்கிற மொழி என்பது குறியீடு - language as sign - என்பதனை
மேலே குறிப்பிட்ட இணைப்பிரதியுடன் வைத்துப் பார்க்க நமக்குக் கிடைக்கிற
சித்திரம் வேறு. மணிகண்டன் தன் தாயிடம் என்ன சொன்னான் என்பது தெரியவில்லை
என ஒரு இடத்தில் விவரிக்கிற தங்கக்கண்தான் பிறிதொரு இடத்தில் மணிகண்டன்
தன் தாயிடம் சொன்ன விசயம்தான் மாடக்குழி முழுக்கப் பரவியது என்கிறான்.
மாடக்குழி முழுக்கப் பரவிய விடயம் தாயம்மாவின் பாலியல் பலாத்காரம்தான்
என்பதை கதை தெளிவாகச் சொல்கிறது. அதன் அடிப்படையில்தான் பள்ளிக் கூட
நிர்வாகிகளின் நடவடிக்கை அமைகிறது என்பதனையும் தங்கக்கண் தெளிவாகச்
சொல்கிறான். புள்ளிக் கூட நிர்வாகிகள் தாயம்மாவுக்கு எதிரான வில்லன்களாக
இருந்தார்கள் என்பதற்கான தடயங்கள் எதுவும் கதையின் பிற இடங்களில் எங்கும்
இல்லை.

காலமே, உன் கூத்து என்ற வாக்கியம் கதையில் திருப்பங்கள் நேரும்
போதெல்லாம் திரும்பத் திரும்ப வருகிறது. இதற்கு என்னதான் அர்த்தம்?
வலிகளும் வாதைகளும் பெற்று வளர்ந்த ஒரு பெண், தனது ஒடுக்கப்பட்ட பாலுறவு
ஆசைகளின் பொருட்டு தனது சொந்த உடல்சார்ந்த வேட்கைக்காக இப்படிச்
செய்துவிட்டாளே, இது தவறா எனக் கேட்கிறதா இச்சொற்றொடர்கள்? அல்லது தமது
ஊரின் பள்ளித் தலைமயாசியையாக அப்பெண்ணை ஆக்கி, ஊரின் பெருமித்தை
அப்பெண்ணைக் கொண்டு நிலைநாட்டி அவளைக் கொணடாடிய ஊரே, இந்தக்
குற்றத்திற்காக அவளுக்குத் தண்டனை தர வேண்டிய நிலைமை வந்துற்றதே என
அங்கலாய்க்கும் சொற்றொடர்களா இவை?

கதை முழுக்கவும் தாயம்மாவின் மீது காட்டப்படும் பச்சாதாபம், அவரது கல்வி
கற்றல் தொடர்பான துயர் தோய்ந்த வாழ்க்கைப் பயணத்தினத்தினை உணர்வதாலும்;
அவள் மீதான காட்டுமிராண்டித் தனமான வன்முறையின்; மீதான கோபத்தினாலும்,
விசாரணையின்றி அவள் தண்டிக்கப்பட்டதினாலும்; நேரும் தாராளவாதத்தின்
பச்சாதாபம் தானேயொழிய, அவள் பாலியல் பலாத்காரம் பரிந்தாளா இல்லையா என
அறிந்து கொண்ட நிலையில் நேரும் பரிவுணர்வு அல்ல. மேலாக இவ்வாறு பாலுறவு
கொண்டவர்களையும் பரிவுணர்வடன் பார்க்க வேண்டும் என்று பேசுகிற
எழுத்தாளர்களும் உண்டு.

சுரா தாயம்மாவுக்கு வயது எண்பதுக்கு மேல் என்று சொன்னாலும், கதை
நிகழ்காலத்திலிருந்துதான் தொடங்குகிறது. தங்கக்கண்ணுக்கு சு.ரா.வினால்
வழங்கப்படும் புராதனம் இட்டுக்கட்டப்பட்டது. கதையின் பிரச்சினையாக
இருக்கும் குழந்தைகளின் மீதான பாலுறவு வன்முறை அதி முக்கியமான
பிரச்சினையாக ஆகியிருக்கிற காலமும் இதுதான். இந்தப் பிரச்சினையின்
குரூரம் எத்தகையது என்பதனை அமெரிக்காவில் வாழும் சுரா மிக நன்கு அறிவார்.
இத்தகையதொரு சூழ்நிலையில் பிரச்சினை திட்டவட்டமான மொழியில் எழுதப்படாமல்
கூடார்த்தமான மொழியில் எழுதப்பட்டதில் கலாச்சார அரசியல் இல்லை என்று
நம்புவதற்கான இடம் இல்லை.

அய்யா, நான் ஒரு எளிய ஆராய்சியாளன். என் ஆராய்ச்சி என்னைப் படுகுழிக்கு
இழுத்துக்கிட்டுப் போகுதே, நான் என்ன செய்வேன் என்று கதையின் ஒரு
இடத்தில் புலம்புகிறான் தங்கக்கண். இந்த ஆராய்ச்சிக்கு இப்போ என்ன தேவை
வந்தது என்றுதான் தங்கக்கண்ணைக் கேட்கத் தோன்றுகிறது.

3.

குறிப்பிட்ட எழுத்தாளர்களின் மீதான அபிமானம் என்பது தமிழகத்தில்
நிகழ்ந்து வரும் குழு சார்ந்த இலக்கிய அரசியலைப் பாரக்கவியலாது
செய்துவிடக்கூடாது. நாச்சார் மடம் கதை விவகாரம் பிரச்சினைக்குரியதாகப்
பார்க்கப்பட முடியுமானானல், ஏன் ஜீவா, நெருதா போன்றவர்கள் குறித்த
காலச்சுவடு: சு.ரா : ரவிக்குமார் விவாதங்கள் பிரச்சினைக்குரியதாக
ஆகமுடியாது? ரவிக்குமாரின் பெரும்பாலுமான கட்டுரைகள் ( குறிப்பாக தெரிதா,
நெருதா குறித்த அவரது கட்டுரைகள்) மிக மேம்போக்கான நுனிப்புல் மேய்ந்த
கட்டுரைகள். காயத்ரி ஸ்பீவக்கின் முறையியலோடு தெரிதாவின் எழத்துக்களை
ஒப்பிடுவதே அபத்தம். ரவிக்குமார் செய்கிறார். காயத்ரி ஸ்பீவக் மிக நீண்ட
காலத்திற்கு முன்பாகவே தெரிதாவைக் கடந்து சென்று விட்டவர். அவர் ஒரு
நடவடிக்கையாளர் எனும் நிலைபாட்டிலிருந்தே பன்முக மார்க்ஸ் குறித்த
தெரிதாவின் கருத்துக்களைப் பார்க்கிறார். மேலாக கட்டுடைப்பு வழிபாடு
ஆக்கப்பட்டிருப்பதை நிராகரிப்பவர் ஸ்பீவக்.

இன்றைய தலித் பிரக்ஞையுடன் நெருதாவின் இலங்கை பாலுறுவு நிகழ்வை
மீளப்பார்ப்பது படு அபத்தம். நெருதா குறித்த ரவிக்குமார் நா.சுகுமாரன்
போன்ற தமிழக எழுத்தாளர்களின் அவதூறுகளுக்கு எதிர்வினையாக மிக விரிவான
கட்டுரையொன்றை நெருதா குறித்த சர்வதேசிய விவாதங்களின் பின்புலத்தில்
(பாப்லோ நெருதாவின் துரோகம் : உயிர்மை : பிப்ரவரி; 2005) நான்
எழுதியிருக்கிறேன். நெருதா குறித்த இவர்கள் இருவரதும் கருத்துக்கள்
சுயம்புவாக உதித்தவை அல்ல. ரவிக்குமார் பேசிய விடயங்களை காலச்சுவடுக்
கட்டுரைதான் தான் கண்டுபிடித்தது என்றும் இல்லை. இந்தக் கொச்சை வாந்திகளை
சர்வதேச வெளியில் தொகை தொகையாக அமெரிக்க விமர்சகர்கள் எழுதி
வருகிறார்கள். ரவிக்குமார் செய்ததெல்லாம் அதனைத் தமிழுக்கு இறக்குமதி
செய்ததுதான்.

மேலாக ரவிக்குமாருக்கு பல சித்தாந்த முகங்கள் உண்டு. ஹிமாச்சல் எனும்
இதழில் அவர் விடுதலைப் புலிகளின் அமைப்பில் சாதியம் பற்றி ( மொழியாக்க
உபயம் அழகரசன்) ஆங்கிலக் கட்டுரை எழுதுவார். விடுதலைப் புலிகளின்
நேரடியான தமிழக ஆதரவாளரான திருமாவளவனுக்கு அரசியல் ஆலோசகராகவும்
ரவிக்குமார் இருப்பார். தமிழகத்தில் மார்க்சியம் கடந்த நிலை தனது அரசியல்
என்று பேசுவார். அவுட்லுக் ஆனந்த்தோடு சேர்ந்து பின்நவீனத்துவத்திற்கு
எதிரான மார்க்சிஸ்ட்டான மீரா நந்தாவின் புத்தகங்களும் போடுவார். முன்னாள்
ஆர்.எஸ்.எஸ்.காரருடன் அருகிருந்து கொண்டு பெரியாரிய எதிர்ப்பு அரசியலும்
பேசுவார். ரவிக்குமாரின் தலித்தியம், பின்-சோவியத் விமர்சன வகை careerism
தவிர வேறில்லை.

yamu...@yahoo.com

லக்ஷ்மி

unread,
Sep 25, 2007, 8:15:58 AM9/25/07
to பண்புடன்
*******************************************************************
'பிள்ளை கெடுத்தாள் விளை' எதிர்வினைகளுக்கான மறுபார்வை!
- புதியமாதவி, மும்பை -
*******************************************************************

அண்ணன் ரவிக்குமார் அவர்களின் 'பிள்ளை கொடுத்தாள் விளை'சிறுகதை குறித்த
பதிவுகளை வாசித்துவிட்டு என் போன்றவர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டோம்.
அரசியல் ரீதியான பல கருத்துகளில் அவருடன் மாறுபடுபவர்கள் கூட அவருடைய
தலித்திய எழுத்துகளில், ஆய்வுகளில் வெளிப்படும் தலித்திய
சிந்தனைகளுக்குச் செவிசாய்ப்பவர்கள்தான். ஆனால் தனக்கு அபிமானமான
எழுத்தாளர் சு.ரா.வின் மேல் கொண்டிருக்கும் அளவுக்கதிகமான ஈடுபாடு
காரணமாகவோ என்னவோ அவர் எழுதியிருக்கும் சில கருத்துகள் தலித்திய
சிந்தனைகளைப் பரப்பிவரும் அவருடைய தளத்திலேயே தலித்தியத்தின் அர்த்தங்களை
அர்த்தமிழக்கச் செய்ததுவிட்டதை எண்ணி வருத்தப்படுவதைத் தவிர வேறு
வழியில்லை.

அவருடைய கூற்றில்.. "மொழி என்பது ஒரு குறியீட்டு அமைப்பு(sign system)


என்று மொழியிலாளர்கள் சொல்லியுள்ளனர். ஒரு பிரதியை வாசிப்பதற்கு அதற்குள்

இருக்கும் குறியீடுகளை வாசிக்கவேண்டும். 'விளை' என முடியும் ஊரின்
பெயரும், தாயம்மா, தங்கக்கண் என்பனபோன்ற நபர்களின் பெயர்களும்
சுட்டுகின்ற பண்பாடு எதுவெனெத் தெரிந்துகொள்ள நாகர்கோயில் பகுதியின்
பண்பாட்டு வரலாறு நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். இக்கதையில் உள்ள


குறியீடுகளை வாசிக்கும்போது இக்கதைக்கும் இப்போது தலித்துகள் என

அறியப்படுபவர்களுக்கும் எந்தத்
தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.தாயம்மாவை 'தாழ்ந்தஜாதிப்
பிள்ளை' என்று கதையில்வரும் பாத்திரமொன்று குறிப்பிடுவதைக்கொண்டு அவள்
இன்றைய தலித் சாதிகளில் ஒன்றைச் சேர்ந்தவள் என முடிவுக்கு வருவது கதையை


வாசிக்கத் தெரியாத அறியாமையே ஆகும்.

திருவாங்கூர் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த தோள்சீலைப்
போராட்டத்தின் வரலாற்றின் பின்னணியிலும்; அப்படிப் போராடிய
சமூகத்தவருக்குக் கல்வி கொடுக்க முயன்ற மிஷனரிமார்கள் பட்ட கஷ்டங்களின்
பின்னணியிலும் வைத்து இந்தக் கதையை வாசிக்கவேண்டும்.அப்போதுதான் இது அந்த
மக்களுக்கு தரவாக சொல்லப்பட்டிருப்பது புரியும். "

இதில் அண்ணன் ரவிக்குமார் அவர்கள் என்ன சொல்லவருகிறார்? இந்தக் கதையில்
சொல்லப்படும் தாழ்ந்த ஜாதிதிப்பிள்ளை தலித் இல்லை என்ற முடிவுக்கு
வருகிறார். தோள்சீலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பின்னணியில்
இக்கதையை வாசிக்க வேண்டும் என்கிறார். சரி..அவருக்குத் தெரியாதது இல்லை.
அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் -அவருடைய
புரிதல்களுடனேயே வாசித்தாலும்..இன்றைக்கு தலித்திய அட்டவணைச் சாதிகளின்
பட்டியலில் வராத ஒரு பெண்ணின் கதையாகவே இருப்பதால் அதைப் பற்றி
தலித்துகள் கண்டு கொள்ள வேண்டியதில்லை என்கிறாரா?

பிள்ளைகள் சொல்லிச்சாம் “அவுங்க வேற தினுசாட்டும் இருக்காங்கம்மா.நம்பளப்
போல இல்லேன்னு”

“தாழ்ந்த ஜாதிப்பிள்ள தாழ்ந்த ஜா¡திப்பிள்ள தான்”

அவள் தாழ்ந்த ஜாதி, கருப்பு , ஆனா அழகுக்கு என்ன குறைவு?'

இவை எல்லாம் தலித்திய பெண்ணை குறிக்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம்.
பிறப்பின் காரணமாக நிலைநிறுத்தப்பட்ட ஜாதிப்பிரிவின் கீழ் எந்தச் சமூகம்
ஒடுக்கப்பட்டாலும் சரி.. அதை எதிர்ப்பதுதானே தலித்தியம்? சாதியின்
பெயரால் நிலைநிறுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளில் முதல் படிநிலையில்
உள்ளவர்கள் இரண்டாவது நிலையில் இருப்பவர்களை ஒடுக்கி மூன்றாவது
படிநிலையில் இருப்பவர்களுடன் நேசம் கரம் கொள்வதால் மட்டுமே முதல்
படிநிலையில் இருப்பவர்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகளை விட்டொழித்தவர்கள் என்றொ
மூன்றாவது படிநிலையில் இருப்பவர்களைச் சமமாக ஏற்றுக்கொண்டவர்கள் என்றொ
நினைக்கமுடியுமா? தலித்தியத்தின் நோக்கமும் பயணமும் சாதிகளற்ற சமுதாயம்
காண்பது சாதியின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை அகற்றி
சமத்துவம் படைப்பதுதான் என்ற புரிதலும் உங்கள் சொற்களில் உடைபட்டு
தலித்தியமே அல்லவா காயப்பட்டிருக்கிறது! அதுவும் உங்களால்..!!

'தலித் பிரச்சனையை முன்னெடுப்பது இந்து மத மீட்புவாத பாசிசத்துக்கு
எதிராக சனநாயகப் போராட்டத்தின் வடிவமாக உள்ளது' என்று எழுதியிருந்த
நீங்கள் இன்று அதே பாசிசக் குரலின் பின்னணியுடன் படைக்கப்பட்டிருக்கும்
கதைக்கு
இந்த மாதிரியான விளக்கம் கொடுக்க வேண்டியதன் பின்னணி என்னவோ?

இந்தக் கதை தலித்தினப் பெண்ணின் கதையல்ல என்ற உங்கள் கருத்துடன்
உடன்படும் எழுத்தாளர். சகோதரி பாமா அவர்களும்கூட இந்தக் கதையைப் பற்றிச்
சொல்லும்போது.." இதுவொரு கேணத்தனமான கதை. இப்ப இருக்கிற சூழ்நிலைல இந்தக்
கதையை ஏன் சுந்தர ராமசாமி எழுதினாருன்னே தெரியலே. திட்டமிட்டு வேணுமின்னே
இந்தக் கதய எழுதவேண்டும் என்று எழுதியிருக்கிறதாதான் எனக்குத்
தோணுது..மொராலிட்டியே இல்லாம இது எழுதப்பட்டிருக்கு.. அவருடைய மோசமான
வக்கிரத்தையே காட்டுது.." என்கிறார்.

தாயம்மாவை தலைமையாசிரியராக நியமிக்கவில்லை என்றால் தான் கமிட்டி
பதவியிலிருந்து விலகிவிடுவதாக படைக்கப்பட்டிருக்கும் பாத்திரம்
சுதந்திரத்தியாகி "மோகந்தாஸ்". தாழ்த்தப்பட்டவர்கள் பதவியில் அமர
மோகந்தாஸ்தான் காரணம் என்று எழுதவதில் மிகவும் சாதாரண வாசகனுக்கு கூட
அவர் என்ன சொல்லவருகிறார் என்பது அப்பட்டமாகத் தெரியவருகிறது. மோகந்தாஸ்,
சுதந்திரப்போராட்ட தியாகி என்பதெல்லாம் இன்றைக்கு அரசியல் தளத்தில்
(இரட்டை வாக்குரிமைக்கான குரல் மீட்டெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
காலக்கட்டத்தில்) ஒலிக்கும் ஒடுக்கப்பட்டுவர்களுக்கு எதிராக சு.ரா.
படைக்கும்-- வேண்டுமென்றே சரியான பெயர்க் காரணத்துடன்..
புரியாதவர்களுக்கும் புரியவேண்டும் என்றே படைத்திருக்கும் குறீயிடல்லாமல்
வேறேன்ன?

தாயம்மா, தங்கக்கண் என்ற பெயர்கள் எல்லாம் நீங்கள் சொல்லும் அதே
நாகர்கோவில் மண்ணில் நம் முப்பாட்டன் காலத்திலிருந்தே தலித்துகளுக்கும்
பெயர்களாக இருந்தன என்பதை நானறிவேன்.

"தலித்துகளுக்கு இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் அறிவுகிடையாது.. என்பது
போன்ற தவறான கருத்துகள் வலுப்படவே வழிவகுக்கும்.அது நிச்சயமாக
தலித்துகளுக்கு உதவக்கூடியதல்ல.." என்று கரிசனத்துடன்
எழுதியிருக்கிறீர்கள். தலித்துகளுக்கு இப்போது உங்களைப் புரிந்து
கொள்ளும் அறிவில்லை.!.இதுபோன்ற உங்கள் கருத்துகள் தலித்துகளுக்கும்
தலித்திய சிந்தனைகளுக்கும் உதவக்கூடியதுதானா?..தலித்திய சிந்தனைகள்
குறித்த தவறானப் புரிதல்கள் வலுப்படவே தலித்திய சிந்தனையாளரான உங்களின்
இக்கருத்து வழிவகுக்கும்.

puthiya...@hotmail.com

லக்ஷ்மி

unread,
Sep 25, 2007, 8:18:18 AM9/25/07
to பண்புடன்
*******************************************************************
Controversy Surrounds Suraa and Ashokamithiran!
A rejoinder to Yamuna Rajendran and Aadhavan Theetchanya!.

R.P.Rajanayahem
********************************************************************

I have no doubt that su.raa’s intentions are genuine and he is not
retaliating dalits at all. As per me it is jayakanthan who lets down
dalits and their basic rights in defending jeyandrar and sankara matt.
On the contrary, when jeyandrar was arrested, su.raa immediately
announced his stand against sankara matt in a straight, clear-cut
manner. Jk openly declares his strong support to hindutva and writes
an absurd novel hara hara sankara. But as a non-brahmin he is not
facing any severe attack on him. Of course yamuna rajendran took an x-
ray of jeyakanthan and he pointed out in pathivukal that his meeting
with su.raa was an amicablbe experience rather than jeyakanthan.
Yamuna rajendran was correct in pointing out charu nivedita’s unnatha
sangeetham, In which a fifty year old person seduces a 13 year old
girl. This is definitely a sexual Perversion and a rape according to
the social values, ethics and law. But charu wrote it clearly. And his
intention also is to let the reader understand this. But it is the
height of irony, as usual charu also is throwing a stone on su.raa. in
kumudham theeranathi May issue comfortably forgetting his short story
unnatha sangeetham. He may also write a lengthy rejoinder to yamuna
rajendran that he is unable to understand unnatha sangeetham.

Asokamitran’s perception should be dealt with a philanthropic view.
Like su.raa he also has no intension to insult dalit brothers. But he
blames the dravida movements. In Tamil Nadu the raise of dravida
parties caused a heavy damage to the brahmins community. Their main
capital in their politics was anti-brahminism. Periyar did a great
change in the culture undoubtedly. But we have seen his disciples are
hypocrites and they have spoiled the state and the political
environment totally. With their propaganda, dravida movements have
done severe harm to Brahmins. Late Aadhavan had written a touching
story ‘Annai Vadivamada’ on this. Even Indira Parthasarathy has
attacked dravida movements and in his novel ‘'suthanthra boomi'’ he
criticized periyar as Don Quixote. Don Quixote is both sublime and
foolish as we know.dravida leaders have superimposed the Brahmins as
the race against tamil culture. Now tamil dalits have understood that
all dravida paries are against them and they have found krishnaswamy
and thirumavalavan as their leaders. Great political change has come.
Actually all the back ward communities are doing harms to dalits. Only
the jathi hindus (b.cs and m.b.cs) are the real archenemies to dalits.
Dalits know this fully. For years, jathi hindus have behaved
atrociously against dalits. I request yamuna rajendran should take
this factor for his consideration. As a great writer Asokamitran has
every right to speak the grievances of his community and compare
Brahmins to jews. Certainly Jews and Brahmins have historical
identity. I accuse dravida movements are identical to Hitlar's
fascists. Fallen among the dravidians are not literarions.

rpraja...@yahoo.co.in

லக்ஷ்மி

unread,
Sep 25, 2007, 8:27:04 AM9/25/07
to பண்புடன்
***********************************************************
இலக்கியமும் உள் நோக்கமும் : சுந்தர ராமசாமியின் கதை
-நாகூர் ரூமி-
*********************************************************

இந்த மாத காலச்சுவடு இதழில் (பிப்ரவரி 2005) சுந்தர ராமசாமி பிள்ளை
கெடுத்தாள் விளை என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அதைப் படித்த
பிறகு எனக்கு சில கேள்விகள் எழுந்தன. இலக்கியத்தை இலக்கியமாக மட்டும்தான்
பார்க்க வேண்டுமா? படைப்புக்கும் படைப்பாளிக்கும் உள்ள உறவுகள்
முக்கியமில்லையா? ஒரு படைப்பு அநாகரீகமான உள் நோக்கம் கொண்டதாக இருந்தால்
அதை எங்கே வைப்பது? ஒரு படைப்பின் இலக்கியத் தரம் அதன் உள்ளார்ந்த
ஒழுக்கத்தைவிட முக்கியமானதா? இப்படி எத்தனையோ கேள்விகள்.

தங்கக்கண் என்று ஒருத்தன். அவன் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. ஊர்
பெயர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகிறான். 'பிள்ளை கெடுத்தாள் விளை'
என்ற ஊரைப்பற்றி நிறைய தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கிறான்.
ஊர்ப்பெரியவர்களிடம் தான் சேகரித்து வைத்திருக்கும் அந்த ஊரைப்பற்றிய
சுவாரஸ்யமான கதையைச் சொல்லிக் காட்டுகிறான்.

அதன்படி, இந்த கதையில் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண் --
அதாவது தலித் பெண் -- படிப்பறிவு பெறுகிறாள். ஊருக்கு வந்த ஒரு ஜெர்மன்
பாதிரியார் அவளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க முன்வருகிறார். முதலில்
எதிர்ப்பு தெரிவிக்கும் அவள் சமுதாயம் பின்னர் ஒத்துக்கொள்கிறது.
ஆனால் அவள் பெரியவளானதும் படிப்பு கொஞ்ச காலம் தடைப்படுகிறது. ஆனால்
பாதிரியாரே அவள் இருக்கும் இடத்துக்கு வந்து சொல்லித்தர
ஒப்புக்கொள்கிறார். அனுமதி கொடுக்கப்பட்டு தாயம்மா என்ற அந்தப் பெண்
ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களை பத்து ஆண்டுகள் அவரிடம்
கற்றுத் தேர்கிறாள்.

அவளது படிப்பு காரணமாக அவளுக்கு திருமணம் ஆவது தடைப்படுகிறது. முதிர்
கன்னியான அவள் அந்த ஊர் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியையாகவும்
ஆக்கப்படுகிறாள். அப்படியே போகிறது காலம்.
ஆனால் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்திருந்த மணிகண்டன் என்ற "அவசரமாக
சம்பாதித்துக் கொண்டிருந்த" அரசியல் வாதியின் மகனை பாலியல்
பலாத்காரத்துக்கு அவள் உட்படுத்தியதாக அவன் புகார் கொடுக்கிறான்.
ஊர்ப்பெரியவர்கள், நிர்வாகம் எல்லாம் சேர்ந்து அவளை கம்பால் வாயிலும்
மார்பிலும் அடித்துத் துன்புறுத்த, அவள் ஊரைவிட்டே ஓடிவிடுகிறாள்.

எண்பது வயது கிழவியாக 53 ஆண்டுகள் கழித்துத் திரும்பி வருகிறாள் தாயம்மா.
அப்போதுகூட உயிரோடு இருக்கும் சிலர் அவளை வார்த்தைகளாலும், சில
கட்டுப்பாடுகளாலும் துன்புறுத்துகின்றனர். கடைசியில் அவள்
இறந்துபோகிறாள்.

இந்த விஷயத்தை ரொம்ப வருத்தமுடன் தங்கக்கண் ஊர்ப்பெரியவர்களிடம் சொல்லிக்
காட்டுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. சின்னப் பையனை அவள் கெடுத்ததால் அந்த
ஊருக்கே 'களியக் காவிளை' என்பதுபோல 'பிள்ளை கெடுத்தாள் விளை' என்று பெயர்
வருகிறது!

கதை சொல்லிச் செல்லும் விதம் ரொம்ப இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும்
அமைக்கப்பட்டு உள்ளது. சுந்தர ராமசாமி தன் திறமைகளையெல்லாம்
காட்டியிருக்கிறார் என்று சொல்வதைவிட அவருடை எழுத்து அனுபவத்தில்
நுட்பமான நகைச்சுவை, வட்டார வழக்கு மொழி எல்லாம் இயல்பாக ஆற்றோட்டம்போல
வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு உதாரணம். தங்கக்கண் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியல்லவா? அந்த
போராட்டத்தில் பல தழும்புகளையும் பெற்றவன் அவன். அவை எப்படி இருந்தன?
"முதுகில் பூரான்போல் அற்புதமான தழும்புகள் இன்றும் இருக்கின்றன"
என்கிறார் சு.ரா. அந்த 'அற்புதமான' என்ற சொல்லில் அவருடைய முத்திரை
இருக்கிறது. ஒரு தழும்பு, ஒரு அவமானம், பட்ட அடி எப்படி அற்புதமாக இருக்க
முடியும்?!
ஒட்டு மொத்த கதையையும் வைத்துப் பார்க்கும்போது, லேசான புன்னகையை
ஏற்படுத்தும் இந்த வர்ணனையை இந்த கதையின் போக்கை பிரதிநிதித்துவப்
படுத்தும் ஒரு குரூர கற்பனையாகவே பார்க்கலாம். தாயம்மாவை
ஊர்ப்'பெரியவர்கள்' அடித்துத் துன்புறுத்தும்போது பேசும் வார்த்தைகளிலும்
இந்த கற்பனை இருப்பதைப் பார்க்கலாம் :

"ரவிக்கை அவுக்குறதுக்கா ஸ்கூலுக்கு வர்ற தேவுடியா?"

மார்பில் ஒரு அடி.

"இப்பம் நான் உறிஞ்சட்டுமா உனக்கு?"

கல்வியறிவு பெற்ற ஒரு தலித் பெண் ஒரு உயர் ஜாதிக்காரச் சிறுவனை --
வசதியாக அச்சிறுவன் எந்த ஜாதியென்று சொல்லப்படவில்லை -- பாலியல்
பலாத்காரம் செய்வதாக சொல்வதுதான் கதையின் மையம். அப்படி தாயம்மா நடந்து
கொண்டதற்கு, பாலுமகேந்திராவின் திரைப்படங்களில் வருவதுபோல, அவள்
திருமணமாகாத முதிர்கன்னி என்று ஒரு கதா நியாயமும் தரப்பட்டுள்ளது.

எந்த ஜாதிப் பெண்ணாக இருந்தாலும் பாலுணர்வு இயற்கையானதே. அதுவும் ஒரு
முதிர்கன்னி அப்படி நடந்துகொண்டிருப்பதற்கான சாத்தியக் கூறுகள்
இருக்கத்தான் செய்கின்றன. இந்த இலக்கிய நியாயத்தை வைத்துக்கொண்டு,
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஏன் இன்றுவரை, தலித்துகள்மீது இழைக்கப்பட்டு
வரும் கொடுமைகளை, வன்முறையை எல்லாம் தலைகீழாக காட்டியிருப்பதுதான்
கதையின் பிரச்சனை அல்லது உள் நோக்கம்.

ஏன், ஒரு தலித் பெண் இப்படி நடந்துகொண்டிருக்க வாய்ப்பே இல்லையா என்ற
கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. காரணம், உணர்ச்சி வேகத்தில் யாரும்
அப்படி நடந்து கொள்ள முடியும்தான்.
ஆனாலும் இந்திய வரலாற்றின் ஒரு முக்கியமான, மறைக்கப்படாத, அதி
வெளிச்சமான, அனைவருக்கும் நன்கு பரிச்சயமான ஒரு பகுதிக்கு இழைக்கப்பட்ட
ஒரு துரோகமாக இந்த கதை வந்துள்ளது. கடந்தகால வரலாறும் நிகழ்கால
நடப்புகளும் கதைக்கு எதிராகத்தான் சாட்சி பகர்கின்றன.

இது வெறும் சுவாரஸ்யாமாக எழுதப்பட்ட ஒரு கற்பனைக் கதை என்று ஒதுக்கிவிட
முடியாது. ஒரு கற்றுக்குட்டி இதை எழுதியிருந்தால் அப்படி ஒதுக்கலாம்.
ஆனால் தமிழ் இலக்கியத்தில் பழம்தின்று கொட்டை போட்ட, சர்வதேசப் புகழ்
பெற்ற ஒரு எழுத்தாளரிடமிருந்து இது வந்துள்ளது என்பது மிக முக்கியமானது.
யாருக்கும் சொரிந்து கொடுக்க வேண்டிய அவசியம் சு.ரா.வுக்கு இல்லை என்றே
நினைக்கிறேன். பின் ஏன் இப்படி ஒரு கதை?

ஒரு உயர்ஜாதி இலக்கியக் குசும்பாகவே இந்த கதை எனக்குப் படுகிறது.
இப்படிச் சொல்வதற்காக நான் வருத்தப்படுகிறேன். சுந்தர ராமசாமியிடமிருந்து
இப்படி ஒரு கதையை நான் எதிர்பார்க்கவே இல்லை

நந்தா

unread,
Sep 25, 2007, 8:32:16 AM9/25/07
to பண்புடன்
லக்ஷ்மி ஏன் இந்த கொலை வெறி???

நான் இன்னும் படிக்கவே ஆரம்பிக்கலை. இப்பவே கண்ணைக் கட்டுது.

உங்கள் முயற்சிகளிற்குப் பாராட்டுக்கள். மெதுவா படிச்சுட்டு வந்து ஆட்டைல
கலந்துக்கறேன்.

லக்ஷ்மி

unread,
Sep 25, 2007, 8:48:37 AM9/25/07
to பண்புடன்
வேற ஒண்ணுமில்லை நந்தா, அண்ணாச்சி ஒரு நாள் ஏன் நீங்க பண்புடன்ல எழுதறதே
இல்லைன்னு என்னை... என்னை.. என்னைப் பாத்து கேட்டுட்டாரு. இப்போ தன்னோட
மூக்குக்கு நேரா ஆள்காட்டி விரலை நீட்டி "இனிமே அப்படி கேப்பியா?
கேப்பியா? கேப்பியா?" ந்னு கேட்டுகிட்டிருப்பாரு இல்ல? அதுக்காகத்தான்
இந்த கொலை வெறி. அத்தோட இன்னிக்கு நான் போட்டிருக்கற மெயிலில் பாதி Copy
+ Paste சமாச்சாரம். அதுனாலதான் வேகமா வருது. இனிமேற்கொண்டு எல்லாம் டைப்
அடிச்சாக வேண்டிய கட்டுரைகள். அதுனால என்னோட ஸ்டைலில்(அதாவது ஆமை
வேகத்தில்)தான் மின்னஞ்சல்கள் வரும். கவலை வேண்டாம். :-)

அன்புடன்,
லக்ஷ்மி

Asif Meeran AJ

unread,
Sep 25, 2007, 10:43:38 AM9/25/07
to panb...@googlegroups.com
வாங்க லக்ஷ்மி
நல்லா இருக்கியளா?
புயல் வேகம்தான் போல.
இதைத்தான் வச்சா குடுமி சிரைச்சா மொட்டைன்னு எங்க ஊர் பக்கத்துல சொல்வாங்க.
 
ரொம்ப நன்றி. எல்லா விவாதங்களளயும் தொகுக்க முனைந்ததற்கு. எல்லாத்தையும் வாசிக்கணும் அதுக்கப்புறம்தான் சுராவை மொத்தறதா இல்லைன்னா ஒரு கதையைப் பெருசுபடுத்துனவங்களை மொத்துறதான்னு யோசிக்கணும்
 
எப்படியோ நல்லா இருந்த குழுமத்துல குண்டைத் தூக்கிப் போட்டு கும்மியடிக்க முயற்சி பண்ணியிருக்கீங்க. இங்க சுராவின் சீடர்கள்னு சொல்லிக்குற அளவுக்கு யாருமில்லாததால (சித்தார்த், அய்யன்ஸ் எல்லாம் ரொம்ப மிதவாதிங்க :-) சுராவுக்கு அநேகமா நானும் டின் கட்டினாலும் கட்டுவேன் :-))
 
வேற ஒண்ணுமில்லை நந்தா, அண்ணாச்சி ஒரு நாள் ஏன் நீங்க பண்புடன்ல எழுதறதே இல்லைன்னு என்னை... என்னை.. என்னைப் பாத்து கேட்டுட்டாரு.
 
உங்களைப் பார்த்து மட்டுமா கேட்டேன். ஊருல ஒரு பய நடமாட முடியலை இப்பல்லாம். யாரைப் பார்த்தாலும் பண்புடன்ல சேர்ந்துட்டீங்களா? சேர்ந்துட்டீங்கன்னா எழுத் ஆரம்பிக்க வேன்ப்டியதுதானேன்னு ரெண்டு கேள்வி கேட்டதுக்கப்புறம்தான் நல்லா இருக்கீங்களான்னே கேக்குறேன்னு ஊருக்குள்ள ஒரே புரளி.
 
 
அடிச்சாக வேண்டிய கட்டுரைகள். அதுனால என்னோட ஸ்டைலில்(அதாவது ஆமைவேகத்தில்)தான் மின்னஞ்சல்கள் வரும். கவலை வேண்டாம். :-)
 
ஆமை வேகத்துலயாவது எழுதுனா சரிதான்

லக்ஷ்மி

unread,
Sep 26, 2007, 10:18:41 AM9/26/07
to பண்புடன்
வணக்கம் அண்ணாச்சி.

//சுராவை மொத்தறதா இல்லைன்னா ஒரு கதையைப் பெருசுபடுத்துனவங்களை
மொத்துறதான்னு யோசிக்கணும் // எனக்குத் தெரிஞ்சு இந்தப் பிரச்சனையை
குற்றம் சாட்டியவர்கள் மட்டுமல்ல, காலச்சுவடு பக்கத்திலிருந்தும்
திட்டமிட்டே ஊதி பெரிதாக்கியது போல்தான் தெரிகிறது.

//எப்படியோ நல்லா இருந்த குழுமத்துல குண்டைத் தூக்கிப் போட்டு
கும்மியடிக்க முயற்சி பண்ணியிருக்கீங்க// ஓ... நல்லா இருந்துச்சா? குஷ்பு
பத்தின இழைல இடி மின்னலோடு கூடிய பலத்த மழைன்னு இல்ல
கேள்விப்பட்டேன்? :-)

நந்தா, அண்ணாச்சி - ஏதோ பெரிய மனசு பண்ணி ரெண்டு ஜீவனாவது இந்த இழைய
திறந்து பாத்திருக்கீங்களே, ரொம்ப நன்றிங்க.

நந்தா

unread,
Sep 26, 2007, 11:21:56 AM9/26/07
to பண்புடன்
லக்ஷ்மி இப்போதான் கொஞ்சம் கொஞ்சம் படிச்சிக்கிடிருக்கேன்.

இதுல சொல்லப்படுகிற வாசனை கதையையும் இதற்கு முன்பு நேரடியாகப்
படித்ததில்லை. ஆனால் அந்த கருத்தாக்கத்தை படித்திருக்கிறேன். அது ஏற்கனவே
பிரச்சினையைக் கிளப்பியதும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் காலச்சுவடு விளம்பரத்துக்காகவே இதை ஊதி பெரிது படுத்தியது போலத்


தோன்றுகிறது.

இன்னும் முழுதாகப் படித்து விட்டு வருகிறேன்.

Siddharth Venkatesan

unread,
Sep 26, 2007, 11:46:14 AM9/26/07
to panb...@googlegroups.com
ஜெஃப்ரி ஆர்ச்சர்ன்னு ஒரு ஆங்கில எழுத்தாளர். என்னமோ செஞ்சாருன்னு
ஜெயில்ல போட்டாங்க. வெளிய வந்தாரா... வந்து Prison Diariesன்னு 3
புத்தகங்கள எழுதி வெளியிட்டு காசு பாத்துட்டாரு. Prison diary புத்தகத்த
பாக்கும் போதெல்லாம் பிள்ளை கெடுத்தான் விளை - விவாதங்கள் புத்தகம் தான்
ஞாபகத்துக்கு வருது. :)

Asif Meeran AJ

unread,
Sep 26, 2007, 12:09:18 PM9/26/07
to panb...@googlegroups.com
காலச்சுவடு - வேண்டாம் நிறைய பேசுவதற்கில்லை :-)
திட்டமிட்டு நடத்தப்படும் இலக்கிய சேவா சங்கம் அது.
காசு பார்ப்பதற்கும், தங்களுக்கு வேண்டியவர்களை முன்னிறுத்துவதற்கும் காலச்சுவடு எப்போதுமே தயங்கியதில்லை.
 
விவாதங்களை பெரிதாக்கி அதில் ஏதோ இருகிறது என்று லட்சுமி மாதிரி ஆட்களை நம்ப வைத்து :-) வியாபாரம் செய்கிறது காலச்சுவடு

 
ஜெஃப்ரி ஆர்ச்சர்தான் எனக்குப் புடிச்ச இங்கிலிபீசு எழுத்தாளர். அவருக்குத் தனி இழை ஒண்ணு போடலாமா? அவரோட shall we tell the president ,kane and abel இதெல்லாம் படிச்சு அப்படியே அரண்டு போன கால்மெல்லாம் இருந்த்து. ஐயய, இது சுராவோட இழைங்குறதால ஆர்ச்சரை வேற இழைல்ல கும்மிடலாம் :-)

 

லக்ஷ்மி

unread,
Sep 27, 2007, 12:16:21 PM9/27/07
to பண்புடன்
************************************************************
சு.ரா வின் பிள்ளை கெடுத்தாள் விளை பற்றி சாரு நிவேதிதா
குமுதம் தீராநதியில் எழுதிய கட்டுரை.
*************************************************************

பொதுவாக, இலக்கியம் என்பது சமூக ஒடுக்க முறைகளுக்கு எதிரானது; மனித
விடுதலை குறித்த மதிப்பீடுகளை முன் வைப்பது. எழுத்தாளன் என்பவன் சாதி,
மதம், இனம் போன்ற அடையாளங்களைத் தாண்டியவனாக _ ஒரு Icnoclast ஆக _ இருக்க
வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சமகாலத் தமிழிலக்கியவாதிகள்
பெரும்பாலும் இனவாதிகளாக இருக்கின்றனர். தங்கள் சுயசாதி
அபிமானத்திலிருந்துகூட இன்னும் விடுபடவில்லை. இதற்கொரு சமீபத்திய
உதாரணம், சுந்தர ராமசாமி எழுதி 'காலச்சுவடு' இதழில் வெளிவந்துள்ள 'பிள்ளை
கெடுத்தாள் விளை' என்ற சிறுகதை. மற்றொரு உதாரணம் 'Outlook' இதழில்
வெளிவந்துள்ள அசோகமித்ரனின் பேட்டி.

முதலில் சுந்தர ராமசாமியின் சிறுகதை... நாகர்கோவிலிலிருந்து ஆறுமைல்
தூரத்திலுள்ள ஒரு குக்கிராமம் _ மாடக்குழி. அங்கு வாழும் தலித்
குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் தாயம்மா. அவள் மாடக்குழிக்கு
அருகிலிருந்த ஆளூர் என்ற ஊரில் வசிக்கும் பாதிரியார் ஒருவரிடம் கல்வி
கற்றுக் கொள்கிறாள். 'ஐரோப்பாவில் மிகப் பெரிய பள்ளியில் இளங்கலை கற்றுத்
தேர்ந்த பெண்ணிற்கு நிகராக இருக்கிறாள் தாயம்மா' என்று பாதிரியாரே
சொல்லும் அளவிற்கு கல்வியில் தேர்ச்சி பெறுகிறாள். காலப் போக்கில் ஊர்ப்
பெரியவர்களெல்லாம் சேர்ந்து மாடக் குழியிலேயே ஒரு பள்ளியை நிறுவி
தாயம்மாவை தலைமையாசிரியை ஆக்குகிறார்கள். “தாழ்ந்த ஜாதிப் பெண்ணையா
தலைமைப் பொறுப்பில் போடுவது?” என்று சிலர் எதிர்ப்பு தெரிவிக்கும் போது,
“அவளுக்கிருக்கும் யோக்கியதை உங்களில் எந்த நாய்க்கு இருக்கிறது? தாழ்ந்த
ஜாதிப் பிள்ளைதான். அதற்காக? அந்தப் பிள்ளையைத் தலைமையாசிரியையாகப்
போடவில்லை என்றால் நான் கமிட்டியிலிருந்து வெளியே போகிறேன்” என்கிறார்
மோகன்தாஸ் என்ற ஊர்ப் பெரியவர். அவர் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி.
மூன்று ஆண்டுகள் கடும் காவலில் இருந்தவர்.

மாடக்குழி பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்புவரைதான் இருந்தது. அதற்கு
மேல் படிக்க வேண்டுமென்றால் பிள்ளைகள் ஆளூர்ப் பள்ளிக்குத்தான் போக
வேண்டும். அங்கேயோ மாடக்குழி பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள மறுத்து விரட்டி
விடுகிறார்கள். அப்போது ஆறுமுகம் என்ற மாடக்குழி பெரியவர்
கொந்தளிக்கிறார். தன் வயலை விற்றாவது பத்தாம் வகுப்¬பு வரையில் கொண்டு
வருவதாகச் சவால் விடுகிறார். அவருக்கு ஆளூரிலிருந்து பார்வதிபுரம்
வரையிலும் பரந்து கிடக்கின்றன வயல்கள். அவற்றை விற்கத் தொடங்குகிறார்.
“எங்க ஊருப் பிள்ளைங்களுக்கு நான் கண் தந்து விட்டுத்தான் சாவேன். நான்
அனாதைப் பிணமாட்டுச் சாகணும். அந்த ஒண்ணுதான் எனக்குப் பெருமை” என்று
கர்ஜிக்கிறார்.

இதை படிக்கும் உங்களுக்குப் புல்லரிக்கிறதா? ஆம். இந்தியாவில்
நிலவுடைமையாளர்களெல்லாம் அந்தக் காலத்தில் அப்படித்தான் தியாகசீலர்களாக
இருந்தார்கள். தங்கள் நிலத்தையெல்லாம் விற்று தாழ்த்தப்பட்டவர்களுக்காகக்
கல்விச் சாலைகள் அமைத்தார்கள். தாங்கள் அனாதைப் பிணமாகச் சாவதே
தங்களுக்குப் பெருமையென்று நினைத்தார்கள். அதனால்தான் இந்தியாவில்
படிப்பறிவு 100% ஆக இருக்கிறது. தலித்துகளெல்லாம் சுய நிறைவு
அடைந்தவர்களாக மிக கண்ணியமாக வாழ்ந்து வருகிறார்கள்!

சரி, கதையை மேலே வாசிப்போம்.... மாடக்குழி பள்ளிக்கூடம், மாடக்குழி
ஹைஸ்கூலாகிறது. இதற்கிடையில் தாயம்மாவின் தகப்பன் ராசைய்யா ரகசியமாக
நிலம் வாங்கி விடுகிறான். இதில் 'ரகசியமாக' என்ற வார்த்தையைக்
கவனிக்கவும். மேலும் விவரிக்கிறார் சு.ரா: “மாடக்குழி தாண்டித் தெற்கே
ராசைய்யா ரகசியமாக நிலம் வாங்கிவிட்டான். வீடு கட்ட யோசனை. பணம் கொஞ்சம்
குறை. தலைமையாசிரியை கையெழுத்துப் போட்டால் பணம் தருகிறோம் என்கிறார்கள்
கூட்டுறவுச் சங்கத்தினர். அதன்பின் என்ன பிரச்னை? ராசைய்யா புதிய
வீட்டுக்குக் குடி போனான்.”

இப்படியே நகரும் கதை, இறுதிக் கட்டத்தை அடைகிறது. மாடக்குழி ஹைஸ்கூலில்
மணிகண்டன் என்ற பையன் படித்து வருகிறான். அவனோடு பலாத்காரமாக 'உறவு'
கொண்டு விடுகிறாள் தாயம்மா! மறுநாள் அவளை ஊர்ப் பெரியவர்கள் பிரம்பால்
அடித்து விளாசுகிறார்கள். “ரவிக்கை அவுக்குதுக்கா ஸ்கூலுக்கு வாறே,
தேவிடியா?”

இந்தக் கதைக்கு சுந்தர ராமசாமி வேறு எந்தவித விளக்கமும் கொடுத்துத்
தப்பிக்க முடியாது. காரணம்: கதையை தட்டையான மொழியில், மிக வெளிப்படையாக
எழுதியிருக்கிறார் அவர். சுதந்திர போராட்ட தியாகி மோகன்தாஸின்
உணர்வுபூர்வமான பேச்சைக் கவனியுங்கள். தியாகத்தில் இவரையும் மிஞ்சும்
ஆறுமுகம்., தன் நிலத்தையெல்லாம் விற்று ஊரிலுள்ள தாழ்த்தப்பட்ட
பிள்ளைகளுக்கு கல்விக்கண் கொடுப்பவர். அனாதைப் பிணமாக சாவதே தனக்குப்
பெருமையென்று கூறி அதைச் செயல்படுத்தியும் காட்டுபவர். ஆனால் தலித்துகள்?
“நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்...” என்று உயர்சாதி
வெறியர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள். அந்தப் பழமொழியை அடியற்றியே சுந்தர
ராமசாமி இந்தக் கதையை எழுதியிருக்கிறார். மகாத்மாக்கள் வாழ்ந்து
கொண்டிருக்கும் ஒரு ஊரில் திருட்டுத்தனமாக நிலம் வாங்கி வீடு கட்டுபவன்,
ராசைய்யா. அவன் மகள் தாயம்மாவோ நான்காம் வகுப்பு படிக்கும் பிள்ளையைக்
கெடுப்பவள். இந்தக் கதையின் முக்கியமான பகுதியே மணிகண்டனைப் பற்றிய
சுந்தர ராமசாமியின் வர்ணனையான இரண்டே வார்த்தைகள்தான். “மணிகண்டன்
மாடக்குழி ஹைஸ்கூலில் நாலாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். என்ன
அழகு! சற்று வசதியான குடும்பம்”.

இதில், “என்ன அழகு” என்ற வார்த்தைகள்தான் இக்கதையின் உயர் சாதித்
தடித்தனத்துக்கு உதாரணம். மேலும், தாயம்மாவின் _கீழ்ச் சாதிப் பெண்ணின் _
காமக் கொடூரச் செயலுக்கு ஏகப்பட்ட build-up களைக் கட்டிச் செல்கிறார்
சு.ரா. அதில் ஒன்று: தாயம்மா பற்றி விவரணம். “தாயம்மாவின் உடல் லேசாகக்
கனக்கத் தொடங்கிற்று. பெண்களுக்குப் பொறாமை! வண்டல் திரண்டதுபோல் உடம்பு.
வீட்டில் மீன் கூடை இறங்காத நாள் கிடையாது. நாளுக்கொரு சேலை.”

“டேய், உங்களையெல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கணும்டா.”

“சிறுக்கிகளா... தெனந்தெனம் இப்படி மீனும் கறியுமா தின்னா தெனம் ஒரு
ஆம்பளை கேக்காது ஒடம்பு?” _உயர் சாதி வெறியர்களின் இப்படிப்பட்ட
பேச்சுக்களை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். பூண்டு, வெங்காயம், கிராம்பு,
புலால் வகைகளை ஒதுக்கச் சொல்கிறது பிராமணீயம். காரணம், காம இச்சை கூடி
விடும். கூடிவிட்டால் இப்படித்தான், நாலாம் வகுப்பு மாணவனை கெடுக்கச்
சொல்லும்!

ஆக, சுந்தர ராமசாமி என்ன சொல்ல வருகிறார்? தலித்துகளை சமூகப் பொது
வெளியில் விட்டால் இப்படித்தான் நடக்கும். நாலாம் வகுப்பு படிக்கும்
பிள்ளையைக் கூட வன்கலவி செய்து கெடுத்து விடுவார்கள். ('தலைமையாசிரியை
விளை' என்ற ஊரின் பெயரே 'பிள்ளை கெடுத்தாள் விளை' என்று மாறிவிட்டதாம்!)

தலித்துகள் மனிதர்கள் இல்லை. அவர்கள் தீண்டுவதற்குக் கூடத்
தகுதியற்றவர்கள். அவர்கள் வாயிலிருந்து எச்சில் ஒழுகும். அதனால் அவர்கள்
வாய்க்குக் கீழே குவளை கட்டிக் கொள்ள வேண்டும். அவர்கள் நடந்தால் தீட்டு,
அவர்கள் நடக்குமிடத்தைச் சுத்தம் செய்ய அவர்கள் இடுப்பில்
விளக்குமாற்றைக் கட்டிக் கொள்ள வேண்டும். இப்படியாக நூற்றாண்டு
நூற்றாண்டுகளாக பிராமணர்கள் தலித்துகளை சமூக வெளியிலிருந்து ஒதுக்கி
வைத்திருந்தார்கள். இத்தகைய இனவெறியையே சுந்தர ராமசாமி தனது கதையில்
வெளிப்படுத்தியிருக்கிறார். உலகிலேயே கருத்துச் சுதந்திரத்தை அதிக அளவில்
மதிக்கும் நாடு ஃப்ரான்ஸ். அந்த நாட்டில் கூட இப்படிப்பட்ட இனவெறியர்களை
(racist) சிறையில் அடைத்து விடுவார்கள்.

சுந்தர ராமசாமி ஒன்றும் திடீரென்று இப்படி ஒருகதையை எழுதிவிடவில்லை.
'ஜே.ஜே. சில குறிப்புகள்' நாவலிலேயே இத்தகைய உயர்சாதி வெறி உண்டு. இது
பற்றி அந்த நாவல் வெளி வந்த போதே_சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு_நான்
எழுதியிருக்கிறேன். அவரது 'புளிய மரத்தின் கதை' நாவலிலுள்ள சாதீயம்,
மதத்துவேஷம் குறித்தும் அ. மார்க்ஸ், ராஜன்குறை போன்றோர் பலமுறை
எழுதிவிட்டனர். சு.ரா மீது ஒன்றும் எனக்குத் தனிப்பட்ட கோபதாபங்கள்
கிடையாது. அவர் எழுத்தை நான் 25 ஆண்டுகளாக விமர்சித்து வருகிறேன்.
அவ்வளவு விமர்சனத்துக்குமான நியாயம், ஒருவருக்கு, 'பிள்ளை கெடுத்தாள்
விளை'யைப் படித்தால் விளங்கும்

லக்ஷ்மி

unread,
Sep 28, 2007, 5:51:34 AM9/28/07
to பண்புடன்
********************************************************
பெண்ணின் தலை மேல் தொங்கும் கத்தி
-அம்பை
*********************************************************

சில கதைகள் தற்கால நிகழ்வுகளைக் குறித்தவை அல்ல என்றாலும் அந்த
நிகழ்வுகளின் அடிப்படையில் உள்ள பொல்லாங்கு, வஞ்சகம், இகழ்ச்சி,
ஒடுக்குமுறை இவற்றின் எதிரொலிகள் இன்னும் நம்மிடையே இருப்பதால், நம்மைச்
சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் அவை மீண்டும் மீண்டும் உயிர் பெறுவதால்
இத்தகைய கதைகள் தற்கால அவலத்தையும் ஒரு வகையில் தொடுகின்றன. சுந்தர
ராமசாமியின் 'பிள்ளை கெடுத்தாள் விளை' கதை தற்சமயம் நான் அறிந்த,
அனுபவித்த சில நிகழ்வுகளின் வெகு அருகே, அவற்றைத் தொட்டபடி நிற்கிறது.

மேற்கு வங்காளத்தில் உள்தள்ளி இருந்த ஒர் இலாகாவில் ஒரு சிறுமி படிப்பில்
மளமளவென்று முன்னேறினாள். ஒன்பதாம் வகுப்பை எட்டிவிட்டாள். என் தோழி
ஒருத்திதான் அவள் படிப்பிற்கு உதவி வந்தாள். அவள் வெளிநாட்டவள். இந்த
முறை அவள் இங்கு வந்தபோது அவள் இனத்தைச் சேர்ந்தவர்கள் செய்யாத ஒரு
காரியத்தைச் செய்யத் துணிந்த அச்சிறுமிக்கு புத்தி புகட்டியாகிவிட்டது
என்ற செய்தி என் தோழியை எட்டியது. சிறுமி படிப்பதற்கு அவள் தாய், தந்தை
இருவரும் எந்தத் தடையும் போடாமல் இருந்தனர். அவள் மிடுக்குடன் நடப்பதும்
புத்தக்ப் பையுடன் பள்ளி செல்வதும் கொல்கத்தாவிற்குச் சென்று
கல்லூரிக்குப் போவது பற்றிக் கனவு காண்பதும் அவள் இனத்தைச்
சேர்ந்தவர்களுக்கு இனக் கட்டுப்பாடுகளை மீறிய செயலாகப் பட்டது. அவள்
கொட்டத்தை அடக்க வேண்டுமென்று எழுந்தனர் இனத்தவர். அவள் தன் இனத்தில்
உள்ள ஆண்களைவிட அதிகமாகப் படித்தால் அவளை யாரும் திருமணம் புரிந்துகொள்ள
மாட்டார்கள் என்பது போன்ற பயமுறுத்தல்கள், எச்சரிக்கைகள் இவற்றை எல்லாம்
மீறி அவள் தொடர்ந்து பள்ளிக்குச் சென்றாள். அவள் கல்வி பயில்வது அவர்கள்
இனத்து ஆண்களை அவமதிக்கும் செயல் என்று கருதப்பட்டு, அவள் மேலும் கல்வி
பயிலச் சென்றால் அவள் முகத்தில் அமிலம் வீசப்படும் என்றும் அவளை
உடனடியாகத் திருமணத்திற்கு ஒப்ப வைக்க வேண்டுமென்றும் அவள் தந்தைக்கு
உத்தரவிடப்பட்டது.

மகள் முகத்தில் அமிலத்தை வீசுவேன் என்று கூறியவர்களுக்கு எதிராக போலீஸ்
நடவடிக்கை எடுக்கலாம் என்று ஏனோ அந்தத் தந்தைக்குத் தோன்றவில்லை. எங்கோ
வெளியே அழைத்துப் போவதாய்க் கூறி, மகளை படிப்பறிவில்லாத ஒரு
குடிகாரனுக்குக் கட்டிவைத்தார். அவளை அடித்துப் புடைத்து அனுபவித்ததுடன்
அவன் கடமை முடிந்தது. ஒரே வாரத்தில் பெண் தன் வீட்டிற்குத் திரும்பினாள்.
இப்போது ஏதோ கைவேலை செய்யும் பணியில் இருக்கிறாள். அவள்
இனத்தவர்களுக்குத் திருப்தி, அவள் படிப்பை நிறுத்த முடிந்ததே என்று. அவளை
அடக்கிவிட்டோம் என்று. இனி அவள் அந்த இனத்துக்கு உபயோகமுள்ளவளாக
மாறிவிடுவாள் என்று. இது ஒரு நிகழ்வு.

இன்னொன்று, என் வீட்டிலேயே வளரும் கிந்து பற்றியது. கிந்து, நேபாளத்தின்
மலைக்கிராமத்தைச் சேர்ந்தவள். அவள் தந்தை எங்கள் கட்டிடத்தின்
மேற்பார்வையாளர். முதலில் வாட்ச்மேனாகா வந்து பின்பு கொஞ்சம் கொஞ்சமாக
உயர்ந்தவர். படிப்பு அதிகம் கிடையாது. ஒரு முறை தன் கிராமத்துக்குப்
போனவர் திரும்பும்போது தன் மனைவியுடனும் ஒன்றரை வயது பெண் குழந்தையோடும்
வந்தார். பெண் குழந்தை பிறந்துவிட்டது என்று மனைவியைப் பலரும்
வருத்தியதால் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார். மேற்பார்வையாளர் என்று
பேர்தான் பெத்த பேரே ஒழிய குடியிருப்பு வசதி ஏதும் இல்லை. கடற்கரைப்
பகுதியில் உள்ள குடிசைப் பகுதியிலோ வர்சோவா கிராமத்திலோ வீடு எடுத்துத்
தங்கிக்கொள்ளலாம். தோட்டத்தில் வாட்ச்மேன்கள் ஓய்வெடுக்க ஒரு அறை உண்டு.
அதில் தன் மனைவியையும் குழந்தையையும் தங்கவைத்தார். கட்டிடத்தில் உள்ள
யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. காரணம், குழந்தை படு சூட்டிகை. கொள்ளை
அழகு. அவள் பெரியவளானால் வீட்டில் வேலை செய்வாள் என்று பலர்
எதிர்பார்த்திருக்கலாம். அவள் தாயையும் வீட்டு வேலைக்குப் பலர்
அழைத்தனர். ஆனால் அவள் மெல்ல மெல்ல தன் கணவனின் வேலையில் உதவ
ஆரம்பித்தாள்.

இரண்டொருமுறை மாடியில் உள்ள என் வீட்டுக்கு வந்த கிந்து, புத்தகங்களைத்
தொட்டு தடவி மகிழ ஆரம்பித்தாள். அவளுக்கு மூன்று வயதான போது நர்சரி
வகுப்பில் அவளைச் சேர்க்க அவள் தந்தையிடம் சொன்னபோது அவர் அதிகம் ஆர்வம்
காட்டவில்லை. அப்போதுதான் புரிந்தது, அவர் மனைவியைக் கூட்டி வந்த காரணம்
உடனடியாக ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுக் கொள்ளத்தான் என்று. அவரிடம்
வெகுவாக வாதாடி அவளைப் பள்ளியில் சேர்த்தபின் கிந்து ஆச்சரியம் தரும்
வகையில் முன்னேறினாள். ஆனால் நிதமும் அப்பாவிடம் அடி வாங்குவாள்.
கன்னத்தில் அல்லது முதுகில் வரிவரியாய் விரல் அடையாளம் தெரியும். அவள்
அப்பாவிடம் கேட்டால் அவள் தன்னை மதிப்பதில்லை என்று சொல்லத் தொடங்கினார்.
அவள் மேல் தனக்கு அதிகாரம் இல்லாமல் போய்விடுமென்று பயப்பட்டார். சில
நாள்களுக்குப் பிறகு மூக்கில் புல்லாக்குப் போடவேண்டுமென்றார்.
இல்லாவிட்டால் எங்கள் கிராமத்தவர்கள் அவள் கையால் தண்ணீர்கூடச் சாப்பிட
மாட்டார்கள் என்று கூறினார். கிந்து மறுத்ததற்கும் திட்டு கிடைத்தது.
பிறகு இவர்கள் வேண்டிக்கொண்டபடி ஒர் ஆண் மகவு பிறந்ததும் அவனைக் கொண்டாடி
மகிழ்ந்தார்கள்.

அவனுக்கு மூன்று வயதானதும் எல்லோருமாக நேபாளம் போய்வரத்
தீர்மானித்தார்கள். கிந்துவுக்கு அப்போது ஏழு வயது. நேபாளத்தில் அரசியல்
குழப்பங்கள். மேலும் அவர்கள் கிராமத்தில் பெண்களுக்குச் சிறு வயதிலேயே
திருமணம் செய்து விடுவார்கள். கிந்து போகப் பயப்பட்டாள்.இந்த முறை அவள்
தாயைக் கொண்டு தந்தையிடம் பேச வைத்தோம். "இவ்வளவு படித்தால் இவள்
எங்களுக்கு எந்த வகையிலும் உபயோகப்படமாட்டாள். இவளால் இனி ஒரு
பிரயோசனமும் இல்லை" என்று கூறினார் அவள் தந்தை. கிராமத்திலிருந்து
திரும்பியதும் "உன் புகைப்படத்தை எல்லோரிடமும் காட்டினேன். இதுதானா
நம்மை விட்டு விலகிய பெண் என்று காறித் துப்பினார்கள்" என்றார்.
மற்றவர்கள் தன் மேல் துப்புவார்கள் என்பது கிந்துவை வெகுவாக பாதித்தது.
அவள் தந்தையின் விமர்சனங்கள் இப்போதும் தொடர்கின்றன. "எங்கள்
கிராமத்திலிருந்து அவளை யாரும் மணக்க மாட்டார்கள்", "அவள் வேறு
சாதியில்தான் மணம் புரிந்துகொள்வாள்; அதை நாங்கள் ஏற்கமாட்டோம்", "அவள்
கைமீறிப் போய்விடுவாள்" - இப்படிப் பல புலம்பல்கள். கல்வி என்பது அவள்
நடத்தையைப் பாதிக்கும். ஒழுக்கம் மீற வைக்கும் என்பது அவர் சொல்லாமல்
சொல்லும் விஷயம்.

ஒரு பெண்ணின் கல்வியும் நடத்தையும் எப்போதும் பிணைக்கப்பட்டே
இருக்கின்றன. ஆரம்பக் காலத்தில் கல்வி கற்ற பெண் கள்ளக் காதலனுக்குக்
கடிதம் எழுதுவாள் என்று வாதிட்டோர் உண்டு. நடத்தையைப் பற்றிக் களங்கம்
கற்பிப்பது ஒரு பெண்ணின் எந்த வயதிலும் நேரலாம். நாற்பத்தைந்து வயதில்
ஒரு கிராமத்தில் ஆசிரியையாக இருக்கும் என் தோழி ஒருத்தி பன்னிரெண்டு
பதிமூன்று வயது மாணவன் வீட்டுக்கு வந்தால்கூட வராண்டாவில் நிற்க
வைத்துதான் பேசுவேன் என்பார். ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து ஒரு பெண்
உயர்ந்து வந்தால் அந்த இனத்து ஆண்களே அவள் நடத்தை குறித்துப் பேசுவதும்
உயர்சாதியினர் அவள் நடத்தை குறித்து விமர்சிப்பதும் இன்றும் நடக்கும்
ஒன்று. சு.ராவின் கதையின் காலம் இதற்கும் முன்னது. நடத்தை கெட்டவள் என்ற
சொல் வெகு எளிதாக உபயோகப்பட்ட காலம். ஒருத்தியை வீழ்த்த அந்த ஒரு சொல்
போதும். தன் இனத்தின் கட்டுப்பாடுகளைக் கல்வி மூலம் மீறிய ஒருத்தி இதர
விஷயங்களிலும் எல்லை மீறுவாள் என்ற எண்ணம் அவளை வாழ்நாள் முழுவதும்
துரத்தியபடி இருக்கும். அந்த ஓர் ஆயுதம் போதும் அவளைத் தாக்க. அவளைக்
குன்ற வைக்க. அவளை ஒடுக்க.

சு.ராவின் கதையில் வரும் படித்த பெண்ணிடம் யாரும் என்னதான் நடந்தது என்று
விளக்கம் கேட்கவில்லை. அந்த விடலைப் பையன் அவளிடம் தவறான முறையில்
நடந்துகொண்டு அவள் அவனைக் கண்டித்திருக்கலாம். அதைத் தாங்க முடியாமல்
அவன் அவதூறு கூறியிருக்கலாம். அவன் ஏதோ ஒரு வகையில் மனம்
சோர்ந்திருக்கையில் அவள் அணைத்து ஆறுதல் கூறியிருக்கலாம். அவள்
படித்தவள். தொடுகை என்பது இயல்பான விஷயம் என்பதைத் தெரிந்து கொண்டவள்.
ஒரு வேளை யாராலும் தொடப்படாத பையன் மிரண்டு போய் அதைத் தவறாகப் புரிந்து
கொண்டிருக்கலாம். எல்லாவித சாத்தியக்கூறுகளுமிருந்தும் எல்லோருக்கும்
எளிதாக இருப்பது அவள் நடத்தையைக் குற்றம் கூறுவதுதான். அவள் தன் இனத்தின்
சட்டதிட்டங்களை உடைத்தவள். அவர்கள் தந்த தண்டனை அவள் தலையின் மேல்
என்றும் தொங்கிய கத்தி.

ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி முன்னுக்கு வர நினைத்தால்
அவள் கதி இதுதான் என்று கொக்கரிக்கும் கதையாக இது எனக்குப் படவில்லை.
மாறாக அவளுக்கு நேர்ந்த அவலம் இன்றும் தொடர்வது எனக்குக் கண்கூடாகத்
தெரிகிறது. நடத்தையில் களங்கம் கற்பித்தல் என்பது ஒரு பசித்த, நாக்கைத்
தொங்கப் போட்டுக்கொண்டு அலையும் ஒநாய் போல் ஒரு பெண்ணைப் பின் தொடரும்
ஒன்று. இந்த ஒநாய்க்குச் சாதிபேதம் கிடையாது. ஆனால் சாதியின் பெயரால்
ஒடுக்குபவர்கள் இந்த ஒநாயை நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள். ஆண் என்ற
பெயரில், இனம் என்ற பெயரில், ஆதிக்கம் என்ற பெயரில், அதிகாரம் என்ற
பெயரில், வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு இந்த ஒநாய் உற்ற நண்பன். இந்த
ஒநாயால் வீழ்த்தப்பட்டவள்தான் கதையில் வரும் ஆசிரியை.

ஆனால் தாயம்மா பலிகடா இல்லை. கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்ட இவள்
சிறகு முளைத்துப் பறந்திருக்கலாம். கல்வியில் நல்ல பெயரெடுத்திருக்கலாம்.
"சாகுதுக்குக் கொஞ்சம் போல் இடம் தா கண்ணு" என்று கேட்டவள் அந்த மண்ணில்
தனக்கு இன்றும் உள்ள உரிமையை எண்ணி வந்திருக்கலாம். யாரிடமும் ஒரு
சொல்கூட பேசாமல் அவர்களை அவர்களின் சொற்களின் உலையில் எரிய விடுகிறாள்
அவள். ஊரின் பெயரை மாற்றியதுதான் அவர்களால் முடிந்தது. அவள் வாயினின்றும்
ஒரு சொல்லைக் கூட பெயர்க்க முடியவில்லை அவர்களால். தன்னை வாழவிடாத
மண்ணைத் தன் சாவின் மூலம் இறுகப் பற்றிக்கொள்கிறாள். அவளுடன் இருப்பது
கண்டனம் என்ற அந்தக் கிழட்டு ஒநாய்தான். அந்த மண் தரக்கூடியது அவதூறுதான்
என்றால் அதையும் ஏற்கிறேன் என்று அவதூறுகளைப் பூசிக்கொண்டலையும் விவேகி
அவள்.
இப்படித்தான் என்னால் தாயம்மாவைப் பார்க்க முடிகிறது. ஏனென்றால் தடைகளை
முறிக்கப் போய் இந்த வகையில் தாக்கப்பட்ட பல பெண்களின் சரித்திரம்
தாயம்மாவின் கதையுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எதையெல்லாம்
எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை அவர்களுக்கு விளக்க, அதைத் தாண்டி
வரவேண்டும் என்று கூற ஒரு சிறு படி இந்தக் கதை. இதன் சோகத்தில் ஒரு
தாக்கம் உள்ளது. அணை கட்டப்பட்ட ஒரு கோபம் உள்ளது. தாயம்மா செய்யாமல்
விடுத்ததை இன்றைய பெண் செய்யலாம் என்ற ஒரு பறக்கும் உணர்வு ஏற்படுகிறது.
மேற்கு வங்கத்தில் உள்ள அந்தக் கல்வி ஆசை கொண்ட பெண்ணை பறக்கவிடவேண்டும்
என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. புல்லாக்கு அணியாத விண்வெளி வீராங்கனையாகக்
கிந்துவை உருவாக்குவதற்கு உறுதி பிறக்கிறது. யாரும் ஏதும் செய்யும் முன்
தாயம்மா இறந்து விட்டாள். ஆனால் மற்றவர்களை அவர்கள் ஆதர்சங்களுடன்
நடமாடவிடக் காலம் கடந்துவிடவில்லை.

Asif Meeran AJ

unread,
Sep 28, 2007, 6:25:07 AM9/28/07
to panb...@googlegroups.com
லக்ஷ்மி
 
நெஜம்மாகவே மிகுந்த சிரமத்துடன் நீங்கள் இந்த் ஐழையை நகர்த்திச் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. குஷ்பூ அலையில் சுராவைக் கண்டு கொள்ள யாருமில்லை.
 
சுராவை நான் நாலு வார்த்தை திட்டினாலாவது சித்தார்த், அய்ய்னார் மாதிரி ஆட்கள் வந்து சேர்வார்களா என்று பார்க்கலாம் :-)


பெண்ணின் தலை மேல் தொங்கும் கத்தி
-அம்பை
*********************************************************
 
இந்த அம்பையைப் பற்றியும் கொஞ்ம் எழுதணூமே?
ஆனா, அமபையை இன்னொரு இழையில் தனியா துவைச்சு காயப் போடலாம் :-))

அன்பு குயில்

unread,
Sep 28, 2007, 6:43:58 AM9/28/07
to panb...@googlegroups.com
சுந்தர ராமசாமி எழுதியதில் ஆக கேடான  ஒரு கதை இது



=============================
வலைப்பூ: www.thiagu1973.blogspot.com
குழுமம் : ttp://groups.google.com/group/Anbu2006
http://groups.google.com/group/pothuvudaimai

லக்ஷ்மி

unread,
Sep 28, 2007, 7:26:30 AM9/28/07
to பண்புடன்
ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றிகள் பல ஆசிப்.

// இந்த அம்பையைப் பற்றியும் கொஞ்சம் எழுதணுமே? // கூடிய விரைவில் நானே
அந்த புண்ணிய கைங்கர்யத்தை ஆரம்பிக்கிறேன். ஏன்னா அவங்களை அரைலூசுன்னு
நாக்கு மேல பல்லைப் போட்டு (இல்லை பல்லு மேல நாக்கா? எப்பவுமே எனக்கு
கொஞ்சம் குழப்பமுண்டு இதுல) சொன்னவங்களையும் அப்படியே கும்மித் துவைக்க
விரைவில் ஏற்பாடு செய்கிறேன். :-)

தியாகு, வந்து எட்டிப் பார்த்ததுக்கு நன்றி. உங்க கருத்தை அப்படியே
விரிவா எழுதினா நல்லா இருக்குமே.

அன்புடன்,
லக்ஷ்மி.

நந்தா

unread,
Sep 28, 2007, 8:48:59 AM9/28/07
to பண்புடன்
லக்ஷ்மி கதையையும், இதுவரை சொல்லப்பட்ட கதையைப் பற்றிய பல்வேறு பட்ட
கருத்துக்களையும் படித்து விட்டேன்.

உண்மையைச் சொல்வதென்றால் கதை பல்வேறு சமயங்களில் பல்வேறு உணர்வுகளை
ஏற்படுத்துகிறது.

வங்கள மொழியில் எழுதப்பட்ட தூண் என்ற ஒரு புகழ் பெற்ற சிறுகதை
ஞாபகத்திற்கு வருகிறது.

ஒரு கைவண்டி ரிக்சா தொழிலாளிக்கும், அதில் பயணம் செய்த பயணிக்கும்
கடைசியில் எவ்வளவு கூலி என்பதில் பிரச்சினை வருகிறது. வாக்குவாதம் முற்றி
கைகலப்பு வரை வந்து கடைசியில் ஒருவர் இன்னொருவரை ஆத்திரத்தில் கொன்றும்
விடுகிறார்.பைசா கூலிக்காக ஒருவர் இறந்து போகிறார். ஒருவர் ஜெயிலுக்குப்
போகிறார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர் தன் பக்கத்தில்
இருப்பவரிடம் சொல்கிறார்.
"நல்ல வேளை ரெண்டு பேருமே ஒரே மதத்துக் காரனுங்களா போயிட்டானுங்க.
இல்லைனா இந்நேரம் பத்து ஊரு பத்திக்கிட்டு எரிஞ்சி இருந்திருக்கும்"

இங்கு எந்த பிரச்சினையுமே முழுக்க முழுக்க அதன் பின்புலத்துடனேயே அணுகப்
படுகிறது. அதிலும் சாதீயக் கூறுகளினடிப்படையிலான பிரச்சினைகள்
இப்படியாகவே இருக்கின்றது.

கதையை எழுதி முடித்தவுடன் கதாசிரியன் இறந்து போய் விடுகின்றான்
என்பதெல்லாம் நம் இலக்கிய உலகிற்கு ஒத்து வரும் என்று என்னால் ஒத்துக்
கொள்ள முடிய வில்லை. இந்த கதையை தலித் இலக்கியவாதிகளில் யாரேனும் ஒருவர்
எழுதி இருந்தால், இது ஒரு வேளை காலம் காலமாக ஆதிக்க சாதியினர், தலித்
மக்களிற்கு இழைத்து வரும் கொடுமைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லும்
கதையாகச் சித்தரிக்கப் பட்டிருக்கலாம்.

(இந்த கதையை தலித் இலக்கிய வாதி எழுதி இருந்தால் இப்படி எழுதி இருக்க
மாட்டார். வேறு மாதிரி எழுதி இருப்பார் என்று யாரேனும் சொல்லலாம்.)

ஒரு வேளை சுந்தர ராமசாமி எழுதியதாலேயே இந்த கதை அளவுக்கு மீறிய
முக்கியத்துவம் பெற்று விமர்சிக்கப் படுகிறதோ என்று ஆரம்பத்தில்
தோன்றியது. ஆனால் இதில் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பலதும்


இருக்கின்றன.

நுண்ணரசியல் என்று ஒன்று எழுத்துலகில் இன்று நேற்றல்ல பல காலங்களாகவே
நடந்து வருகிறது.ஆதிக்க மனோபாவம், அதீத கர்வம், நல்ல எழுத்துத் திறமை,
போராளிக்குணம், இன்னும் ஓரிரு வார்த்தையில் அடைக்க முடியாத பல்வேறு
குணாதிசயங்கள் பலவகைப்பட்ட விகிதங்களில் கலக்கப் பட்ட பல்வேறு
எழுத்தாளர்கள் இலக்கிய உலகில் சரியாகவும், தவறாகவும் ஏற்படுத்திய
மாற்றங்கள் இப்போது நம் முன்னே பல்லிளித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்தியாவின் சுதந்திர வரலாறு சரியான முறையில் மக்களைப் போய்ச் சேர
முடியாமல் போனவற்றிலிருந்து, சாதீய வர்க்க வேறுபாடுகளை பலதரப் பட்ட
மக்கள் இன்றும் எந்த வித அறுவறுப்பும் இல்லாமல் கடைபிடித்துக்
கொண்டிருப்பது போன்ற பல பிரச்சினைகளின் ஒரு முக்கிய காரணமாக இலக்கிய
உலகில் நடைபெறும் இந்த நுண்ணரசியல் நம்மீது ஏற்படுத்தி இருக்கும்
கருத்துத் திணிவு காரணமாக இருக்கிறது என்று சொல்லலாம்.

தமிழ் நாட்டின் எல்லைகளுக்காக தீரமுடன் போராடிய ம.பொ.சி தனது வரலாறு
சம்பந்தப் பட்ட புத்தகங்களில் சொல்லி இருந்தார். "காந்தியடிகளிற்கு
முற்பட்ட பல்வேறு வகையான தீவிரவாதப் போராட்டங்களும், உயிரிழப்புகளும்,
வன்முறை சார்ந்த ஆங்கிலேய எதிர்ப்புகளும் எந்த வகையிலும் இந்திய
சுதந்திரப் போராட்டத்திற்கு உதவியாயிருக்க வில்லை என்பதால், அந்த காலகட்ட
வரலாறைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ளப் பெரிதாக ஒன்றும் இல்லை என்பதால்
நாம் அதை விட்டு விடலாம்."

இழையின் தலைப்போடு நான் மேலே கூறி இருப்பது சற்று சம்பந்தமில்லாதது போல்
தோன்றும். ஆனால் நான் இங்கு இதைக் கூற வந்தது, கருத்தியல் திணிவுகளும்,
நுண்ணரசியல் விளையாட்டுகளும் இலக்கிய உலகில் சர்வ சாதாரணமாய் காலம்
காலமாய் எப்படி நடந்து வந்துக் கொண்டிருக்கின்ற்ன என்பதுதான்.

ஆகையால் சு.ராவின் இந்த கதையையும் அப்படி ஏதேனும் நுண்ணரசியல் இருக்கிறதா
என்ற கண்ணோட்டத்தில் பார்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதே
கதையை எழுத்துலகிற்கு புதிதாய் வந்த பின்புலம் அறியப்படாத ஒருவர் எழுதி
இருந்தால், இதனை அணுக வேண்டிய முறை வேறாய் இருந்திருக்கும்.(கலாம்)

இப்போதைக்கு சு.ராவின் "வாசனை கதையையும், பி.கெ.விளையையும்" வைத்துப்
பார்க்கும் போது அதனுள்ளே மறைந்து கிடக்கும் சாதீயக் கூறுகள் சற்று
விகாரமாகத் தெரிகின்றன என்றே சொல்லத் தோன்றுகிறது. ஆனால் சு.ரா போன்ற ஓரு
ஆளுமையாளனை வெறுமனே இரண்டு சிறுகதைகளை வைத்து முடிவு செவது சரியா என்ற
கேள்வி உடனே வருகிறது.

ஏனெனில் கருத்தியல் திணிவாகவோ, மறைமுகமாக நம் அடி மனதில் பிராமணீயத்தின்
மீது புனித பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவோ இந்த கதைகளில்
செய்திருக்கிறார் என்பது போன்ற விமர்சன்ங்கள் அந்த கதையின் விமர்சனம்
என்ற பரிமாணத்தையும் தாண்டி, எழுத்தாளனின் மீது வைக்கப்படும்
விமர்சனமாகவும் உருப்பெற்றிருக்கிறது.

(இது வரை கதையினுள்ளேயே போகாமல், இதைப் பற்றிய எனது புரிதல்கள்,
கேள்விகள் மற்றும் இக்கதையின் பல்வேறு பரிமாணங்கள் குறித்தான எனது
பார்வையை பதிவு செய்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் கதையைப் பற்றிய எனது
பார்வையைச் சொல்கிறேன்.

இது வரை சொன்னதே ஒண்ணும் புரியலை. இன்னும் வேற சொல்லப் போறீங்களா???
என்று கேட்கிறீங்களா!!!)

நந்தா

unread,
Sep 28, 2007, 9:23:06 AM9/28/07
to பண்புடன்
// இந்த அம்பையைப் பற்றியும் கொஞ்சம் எழுதணுமே? // கூடிய விரைவில் நானே
அந்த புண்ணிய கைங்கர்யத்தை ஆரம்பிக்கிறேன். ஏன்னா அவங்களை அரைலூசுன்னு
நாக்கு மேல பல்லைப் போட்டு (இல்லை பல்லு மேல நாக்கா? எப்பவுமே எனக்கு
கொஞ்சம் குழப்பமுண்டு இதுல) சொன்னவங்களையும் அப்படியே கும்மித் துவைக்க
விரைவில் ஏற்பாடு செய்கிறேன். :-) //

அய்யாஆஆ!!! எனக்குப் புரிஞ்சிடுச்சே யாருன்னு. சீக்கிரம் அம்பையைப்
பற்றியும் ஆரம்பியுங்க. ஆரம்பியுங்க.

அன்பு குயில்

unread,
Sep 28, 2007, 9:47:09 AM9/28/07
to panb...@googlegroups.com
இனி புதுசா நான் வேற இந்த ஆள பத்தி சொல்லனுமா
 
அதா எல்லாம் சொல்லிட்டாங்களே
 
"ரொம்ப நல்லவர்னு"
 


 

அருட்பெருங்கோ

unread,
Oct 3, 2007, 10:46:13 AM10/3/07
to panb...@googlegroups.com

இரண்டு,மூன்று நாட்களாக நேரம் ஒதுக்கி கொஞ்சம் கொஞ்சமாக, முழுவதுமாய்ப் படித்து முடித்து விட்டேன் இந்தக் கதையையும், தொடர்புள்ள கட்டுரைகளையும்.

எழுத்தாளரை விட்டுவிட்டு கதையைப் பற்றி மட்டும் சொல்ல வேண்டுமென்றால் கதையில் 'இவர்கள் இப்படித்தான்' என்கிற தட்டையான கருத்துதான் தெரிகிறது. அந்தக் காலத்தில் அதிகம் படித்ததால் திருமணமாகாத முதிர்கன்னியின் பாலியல் விருப்பங்களைக் குறித்து கதை பேசுவதாக இருந்தால் சாதிய பின்புலங்களை அது மறைமுகமாகவேனும் தொட்டிருக்கத் தேவையில்லை. அதுவும் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவனை வன்புணர்வதாக காட்டியிருப்பது கதாபாத்திரத்தின் வக்கிரமாக தெரியவில்லை எழுத்தாளரின் வக்கிரமாகத்தான் தெரிகிறது.

 

சுந்தரராமசாமியின் 'ஒரு புளியமரத்தின் கதை'யை எடுத்துப் படிக்க ஆரம்பித்து நான்கு பக்கம் கூட தாண்ட முடியாமல் தூக்கிப் போட்டு விட்டேன். (அதற்கு காரணம் என்னோட எலக்கிய அறிவு பத்தாததாகக் கூட இருக்கலாம்) சுந்தரராமசாமியின் வேறு கதைகள் எதனையும் வாசித்ததில்லை. அதனால், எழுத்தாளரோடு இணைத்து வைத்து இந்தக் கதையை ஆராய்வதற்கு எனக்குத் தகுதி இல்லை :-)

Reply all
Reply to author
Forward
0 new messages