அண்ணியின் அணைப்பில்....

10,988 views
Skip to first unread message

செல்வன்

unread,
Sep 16, 2009, 10:18:29 PM9/16/09
to tamizh...@googlegroups.com, பண்புடன்

அண்ணியின் அணைப்பில்....

-குப்புசாமி செல்லமுத்து

மாலதியை அண்ணன் திருமணம் செய்து கொண்டபோது கல்லூரி இறுதியாண்டில் இருந்தேன். கிட்டத்தட்ட என் வயது தான் அண்ணிக்கு. அவளைக் கொண்டதற்கு அவன் கொண்டதை விட அதிகமாகச் சந்தோசம் கொண்டது நானாகத்தான் இருக்கும்.

வீதியில் நடக்கும்போது அண்ணியைத் திரும்பிப் பார்க்காத கண்களே இருக்காது. அத்தனை அழகி அவள். நளினம், அப்பழுக்கற்ற சிரிப்பு, மூடியும் மூடாததுமான வாளிப்பு, குறும்புப் பார்வை....அடுக்கிக் கொண்டே போகலாம். எங்கள் குடியிருப்புப் பகுதியில் நிகரற்ற பேரழகியாக விளங்கினாள். எனக்கு மட்டும் வீட்டுக்குள்ளேயே ரசிக்கின்ற வாய்ப்பு!

ஒரு 'ஹலோ'விற்காக பல ஆடவர்கள் துல்லியமாகத் திட்டமிட்டு அவள் நடக்கும் பாதைக்கு எதிர்த் திசையில் வருவர். "நம்ம கிட்ட இல்லாதது அவ கிட்ட என்ன இருக்கு?" பெண்டிரையும் வியக்க வைத்தவள். எனக்கு மட்டும் வீட்டுக்குள்ளேயே ரசிக்கின்ற வாய்ப்பு!

எங்கள் வீட்டுக்கு மாலதி வந்த ஒரே மாதத்தில் நட்பானேன். அப்பா, அம்மா, அண்ணன் எல்லோரும் இருக்கும் போது நெருக்கமாகக் காட்டிக் கொள்ள மாட்டாள். அவர்கள் இல்லையென்றால் ஒரே குஷி தான். அண்ணனுக்கு அடிக்கடி வெளியூர்ப் பயணம் வேலை நிமித்தமாக. கொஞ்ச நாளில் அப்பா, அம்மாவும் ஊருக்குப் போனார்கள். பிறகென்ன?

அண்ணியுடன் ஜாலியாக இருக்க வேண்டிக் கல்லூரியைக் கட் அடித்தேன். அவள் சமைக்கும் போது உதவி என்ற பெயரில் குறும்பு செய்தேன். டி.வி. பார்க்கும் போது பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்வாள். கையை விடவே மாட்டாள். உலகையே நான் மறந்த வேளைகள் அவை.

"லவ்வர்ஸ் மாதிரி பீச்சுக்குப் போலாமா?" ஒரு நாள் கேட்டாள். மறுக்க நானென்ன பைத்தியமா? அவளோடு சேர்ந்து ஊர் சுற்ற எனக்கும் ஆசை என்பது அண்ணிக்கு நன்றாகவே தெரியும். என்னை வண்டி ஓட்ட விடாமல், அவளே ஸ்கூட்டியை எடுத்துக் கொள்வாள். இடுப்பைக் கையால் வளைத்துக் கட்டிக் கொண்டால், "யூ நாட்டி... கையை எடு" அவ்வளவு தான். அதற்கு மேல் எதிர்ப்பு இருக்காது. கிள்ளுவதும் கிச்சுக்கிச்சு மூட்டுவதும் அவளுக்குப் பிடித்தே இருந்தன. குறுகுறுப்பில் திளைப்பேன்.

டூர் முடிந்து அண்ணன் வந்தால் 'எப்படா போவான்' என இருக்கும். அப்படி அவன் வரும் போதெல்லாம் அண்ணி என்னை மறந்து விடுவாள். அல்லது மறந்தது போல நடிப்பாள். சல்லாபக்காரி. அவன் போனதும் சகஜ நிலைக்கு உடனே வந்து விடுவாள்.

இப்போதெல்லாம் குளிக்கும் போது என் அனுமதி இல்லாமலே உள்ளே நுழைந்து முதுகு தேய்க்க வருகிறாள். அவள் முன்னால் உடை மாற்றும் போது சிரித்துக் கொண்டே அங்கீகரிக்கிறாள். என் தேக இளமையை மாலதி ஓரக்கண்ணால் இரசிப்பது தெரிந்தே தான் அப்படிச் செய்கிறேன்.
அண்ணி குளித்து வந்ததும் பிரா, ஜாக்கெட் கொக்கி மாட்டி விட என்னை அழைப்பது இயல்பான ஒர் சங்கதியாகி விட்டது. குளித்த ஈரம் காயாத முதுகுப் பரப்பு....அடடா.. ஸ்லீவ்லெஸ் நைட்டி எப்போவதாவது தான் அணிவாள். மொழு மொழு தோள்களைத் தடவிப் பார்க்க ஆசை அப்போதெல்லாம் தலையெடுக்கும்.

கிளாஸ்மேட் சுந்தர் அவள் கேர்ள்-பிரண்ட் கூட மகாபலிபுரம் போய் எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்த கதையைச் சொன்னபோது, சிரித்துக் கொண்டே கேட்ட அவள் இமைகள் ஆடவில்லை. "நீ அந்த மாதிரிப் போய் என்ஜாய் பண்ற ஐடியா இல்லியா?". ராட்சசி.. மனதில் என்ன வைத்துக் கொண்டிருக்கிறாளோ தெரியவில்லை.

"தனியாப் படுக்கப் பயமா இருக்கு. என் ரூம்ல வந்து கூடப் படுத்துக்கிறியா?" மறுக்க முடியுமா? அன்று தொட்டு ஒவ்வொரு இரவும் ஒரே கட்டிலைப் பகிர்ந்து வருகிறோம். மாலதியில் உடல் கதகதப்பில் அது தரும் ஸ்பரிசங்களில் கட்டுண்டு கிடந்தேன். அண்ணன் வீட்டில் தங்கும் நாட்கள் மட்டும் விதி விலக்கு.

நடந்த கூத்தையெல்லாம் அவனிடம் சொல்வாளோ? "இருக்காது" நினைத்துக் கொண்டேன். இருந்தால் மட்டும் என்ன? அவனுக்கும் தெரியட்டும். கட்டின மனைவியை விட அவனுக்கு வேலை தான் பெரியதா!

இப்படியாக எனக்கும் மாலதி அண்ணிக்குமான உறவு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. அவளின்றி நானில்லை என்ற நிலைக்கு வந்தேன். இந்தச் சமயத்தில் கல்லூரிப் படிப்பு முடித்து ஒரு தனியார் கம்பெனியில் வேலையும் கிடைத்திருந்தது.

எனக்கு வயதாவதாகச் சொல்லி, வீட்டில் துணை தேட ஆரம்பித்து விட்டனர். என் எதிர்ப்புகள் எடுபடவில்லை. என் ஒப்புதல் இன்றி என் வாழ்வு தீர்மானிக்கப்படுகிறது. அண்ணி எதுவுமே பேசவில்லை.

மணமேடை. பக்கத்து வீட்டுத் தொலைக்காட்சியில் ஓடும் மெகா சீரியல் ஓசை போல புரோகிதர் சொல்லும் மந்திரம் தேய்ந்து போய் என் காதில் விழுகிறது. இயலாமை, வெறுப்பு, குழப்பம், ஆற்றாமை, பாதுகாப்பின்மை ஒட்டு மொத்தமாக ஆட்கொண்டன. பொறுத்தது போதும்.....இவ்வளவு தான். இதற்கு மேல் தாங்காது. பிரேக்-ஈவன் பாய்ண்ட் என ஆங்கிலத்தில் சொல்வார்களே, அந்தப் புள்ளியை எட்டி விட்டேன். கூட்டத்தை மறந்தேன், சமூகத்தை மறந்தேன். மனதெல்லாம் நினைவால் அண்ணியே நிறைந்திருந்தாள்.

என்னையுமறியாமல் எழுந்தோடி மேடைக்குப் பக்கத்தில் நிற்கும் மாலதியைக் கட்டிக் கொள்கிறேன். ஒரே அழுகாச்சி.. நான் அழ, அண்ணி அழ....
"என்னடா... ஒன்னும் இல்ல. நாங்க எல்லாம் இதே ஊர்ல தான இருக்கோம்! நெனச்சா எப்ப வேணாலும் ஒரு மணி நேரத்துல வந்து பாத்துக்கலாம்." இன்னும் ஏதேதோ சொல்லி என்னைச் சமாதானப் படுத்தி மணவறையில் மறுபடியும் அமரச் செய்கிறாள் அண்ணி.

அப்பா, அம்மா, அண்ணன், (சற்று நேரத்தில்) மாமனார், மாமியார் அனைவர் கண்களிலும் ஈரம் துளிர்த்திருந்தது.


"மாங்கல்யம் தந்து நானே" ஐயர் சொல்லக் கழுத்தை நீட்டினேன்.

--
செல்வன்

www.holyox.tk

“To get rich is glorious"

Naresh Kumar

unread,
Sep 16, 2009, 10:30:17 PM9/16/09
to panb...@googlegroups.com
விவகாரமா ஆரம்பிக்கறவே முடிவு இப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன்....

நடை நல்லாயிருக்கு!!!!!

ஒரு கதை சாதா கதையா, வில்லங்கமான கதையாங்கிறது கடைசி புள்ளியில கூட மாறுது பாத்தீங்களா???

தப்பா நினைச்சதுக்கு நம்ம மனசு காரணமா இல்லை கதை காரணம்னு சொல்றதா???

எப்புடியோ இன்னிக்கு ஆட்டத்தை அருமையா ஆரம்பிச்சிருக்கீங்க செல்வன் :))))))))))))))

செல்லமுத்து குப்புசாமிக்கு வாழ்த்துக்கள்.....

--
நரேஷ்
www.nareshin.wordpress.com

Naresh Kumar

unread,
Sep 16, 2009, 10:32:06 PM9/16/09
to panb...@googlegroups.com, tamizh...@googlegroups.com

செல்வன்

unread,
Sep 16, 2009, 10:45:47 PM9/16/09
to panb...@googlegroups.com, tamizh...@googlegroups.com
நன்றி நரேஷ்

புகழனைத்தும் செல்லமுத்து குப்புசாமிக்கே:-)

ச.பிரேம்குமார்

unread,
Sep 17, 2009, 12:26:18 AM9/17/09
to panb...@googlegroups.com
செல்வா அண்ணா, இப்போ இந்த மீள்பதிவு ரொம்ப அவசியம் ;-)

ஆசாத்

unread,
Sep 17, 2009, 12:43:00 AM9/17/09
to பண்புடன்
> <holy...@gmail.com> wrote:
>  அண்ணியின் அணைப்பில்

செல்வன்ஜி,

பாத்தீங்களா, அந்தக்கால குமுதம் ஒருபக்கக் கதை பாணிலேர்ந்து கொஞ்சமும்
விலகாத கதையெல்லாம்கூட பதிவுன்னு வரும்போது மக்களெல்லாம் விரும்பிப்
படிக்றாங்க. அதுதான் வலைப்பதிவுகளோட வெற்றி.

சென்ஷி

unread,
Sep 17, 2009, 3:27:30 AM9/17/09
to panb...@googlegroups.com
:-)

நான் இதை ரெண்டு வருசம் முன்னாடியே படிச்சுருக்கேன். நல்ல விறுவிறுப்பான கதை. மீண்டும் பகிரத்தந்தமைக்கு நன்றி செல்வன்

2009/9/16 ஆசாத் <banu...@gmail.com>



--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

செல்வன்

unread,
Sep 17, 2009, 8:10:32 AM9/17/09
to panb...@googlegroups.com
ஆசாத்ஜி,பிரேம்,சென்ஷி

நன்றி.கடைசிவரில ட்விஸ்டோட வரும் கதைகள் ரொம்ப பழசு.அதில் லைட்டா செக்சை கலந்து கொடுத்தது குமுதம் பாணி.வாசகர்கள் அதை நல்லா மனசுல உள்வாங்கியிருக்காங்க.நல்ல உத்திதான்.

நான் இதேமாதிரி தங்கையின் கற்பா,மனைவியின் கற்பா ஒரு பட்டிமண்டபம்னு முந்தி ஒரு கதை எழுதினேன்

2009/9/16 ஆசாத் <banu...@gmail.com>

துரை.ந.உ

unread,
Sep 17, 2009, 9:17:12 AM9/17/09
to tamizh...@googlegroups.com, panb...@googlegroups.com
வாழ்த்துக்கள்

--

என்றும் அன்புடன்
--  துரை
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்    : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்    : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்     : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

சென்ஷி

unread,
Sep 17, 2009, 11:22:00 AM9/17/09
to panb...@googlegroups.com
//
நான் இதேமாதிரி தங்கையின் கற்பா,மனைவியின் கற்பா ஒரு பட்டிமண்டபம்னு முந்தி ஒரு கதை எழுதினேன்//

:-))

அந்தக் கதையை நானும் படிச்சுருக்கேன். அதைப்படிச்சுட்டு நண்பர்கள்ட்ட உங்க கதையைப்பத்தி விவாதிச்சு சிலாகிச்சது உண்டு. (கோபிநாத்)

மேலும் குறிப்பிடத்தகுந்த உங்களோட சில கதைகள் எனக்கு ரொம்ப பிடிச்சதுல பெண் பார்க்கப்போன இடத்தில் அம்மா சிகரெட் பிடிக்கும் கதை.

உங்க பாதிப்பை வச்சு சர்வேசன் நச்சுன்னு ஒரு போட்டின்னு தலைப்பு சிறுகதைப்போட்டி எழுதுனப்ப நான் எழுதுன கதை இது..

”என்ன சொல்லப் போகிறாய்!”

2009/9/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

செல்வன்

unread,
Sep 18, 2009, 1:36:17 AM9/18/09
to panb...@googlegroups.com
சென்ஷி,

நன்றி.உங்கள் நியூட்டன் கதையை படித்திருக்கிறேன்.கடைசி வார்த்தையில் திருப்பத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள்.சிலகாலம் சிறுகதை எழுதுவதை நிறுத்தியிருந்தேன்.இனி எழுத முயல்கிறேன்.நன்றி

2009/9/17 சென்ஷி <senshe...@gmail.com>

காமேஷ்

unread,
Sep 18, 2009, 1:53:04 AM9/18/09
to tamizh...@googlegroups.com, பண்புடன்


//"மாங்கல்யம் தந்து நானே" ஐயர் சொல்லக் கழுத்தை நீட்டினேன். //

இது வரி மட்டும் இல்லை.. பக்கா மஞ்சள் பத்திரிக்கை கதை தான்.



~காமேஷ்~



2009/9/17 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Sep 18, 2009, 1:58:28 AM9/18/09
to panb...@googlegroups.com, tamizh...@googlegroups.com
காமேஷ்,

நேரம் கிடைச்சா பொராட் மற்றும் புருனோ படங்களை பாருங்கள்:)

காமேஷ்

unread,
Sep 18, 2009, 2:07:23 AM9/18/09
to panb...@googlegroups.com, tamizh...@googlegroups.com
கண்டிப்பா பாக்குறேன்



~காமேஷ்~



2009/9/18 செல்வன் <hol...@gmail.com>

Asif Meeran AJ

unread,
Sep 22, 2009, 3:54:07 AM9/22/09
to panb...@googlegroups.com
உங்க பாதிப்பை வச்சு சர்வேசன் நச்சுன்னு ஒரு போட்டின்னு தலைப்பு சிறுகதைப்போட்டி எழுதுனப்ப நான் எழுதுன கதை இது..

”என்ன சொல்லப் போகிறாய்!”

நீ என்ன சொல்ல வந்தேன்னு தெரியுது :-)
நீ எழுதுன கதையை நாங்கபடிக்கணும் அதானே? ரைட்டு

சென்ஷி

unread,
Sep 22, 2009, 4:08:49 AM9/22/09
to panb...@googlegroups.com
ஹிஹி.. அண்ணாச்சி கரீக்டா புரிஞ்சுக்கிட்டாரு. ரொம்ப யோசிச்சு செல்வன் ரேஞ்சுல எழுதனும்னு ரொம்ப டிரை செஞ்சு உல்டாவா போன கதை இது :)

2009/9/22 Asif Meeran AJ <asifm...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages