பழந்தமிழ் கவிதைகள்

843 views
Skip to first unread message

Siddharth Venkatesan

unread,
Apr 17, 2013, 3:30:37 AM4/17/13
to panbudan
இந்த இழைல தினமும் ஒரு பழந்தமிழ் கவிதை போடலாம்னு எண்ணம். பெரிய விளக்கமெல்லாம் கொடுக்காம, bite sizedஆ பாடல், அதுக்கான நேரடி விளக்கம் மட்டும் தரலாம்னு.... முதல் பாடலா, எனக்கு பிடிச்ச குறுந்தொகை பாடல் ஒன்னு.... 




நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோநம் காதலோரே.

- வெள்ளி வீதியார் [குறுந்தொகை - 129]
பாலை - தோழி கூற்று. 

நிலம் தோண்டி உள்ளே புகுந்திருக்கமாட்டார்
வானம் ஏறி சென்றிருக்கமாட்டார்.
குறுக்கிடும் கடலின் மேல் காலால் நடந்துசென்றிருக்கப்போவதில்லை.
நாடு நாடாக
ஊர் ஊராக
வீடு வீடாக தேடினால்
கிடைக்காமலா போய்விடுவார் உன் காதலர்?

Ramesh Murugan

unread,
Apr 17, 2013, 3:32:10 AM4/17/13
to பண்புடன்
நல்ல இழை. நன்றி அண்ணே.

2013/4/17 Siddharth Venkatesan <neota...@gmail.com>

இந்த இழைல தினமும் ஒரு பழந்தமிழ் கவிதை போடலாம்னு எண்ணம். பெரிய விளக்கமெல்லாம் கொடுக்காம, bite sizedஆ பாடல், அதுக்கான நேரடி விளக்கம் மட்டும் தரலாம்னு.... முதல் பாடலா, எனக்கு பிடிச்ச குறுந்தொகை பாடல் ஒன்னு.... 

/


--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

தமிழ்ப் பயணி

unread,
Apr 17, 2013, 3:32:29 AM4/17/13
to பண்புடன்
மிக நல்ல முயற்சி. ​தொடருங்கள்..


2013/4/17 Siddharth Venkatesan <neota...@gmail.com>

-- 



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

senshe senshe

unread,
Apr 17, 2013, 3:38:17 AM4/17/13
to panb...@googlegroups.com
arumai sidhu


2013/4/17 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
- senshe

Lavanya Sundararajan

unread,
Apr 17, 2013, 3:38:24 AM4/17/13
to பண்புடன்
கண்டிப்பா மிக பயனுள்ள இழை. தொடருங்கள்


2013/4/17 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
மிக நல்ல முயற்சி. ​தொடருங்கள்..

--

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 17, 2013, 3:46:10 AM4/17/13
to பண்புடன்
நன்றி சித்து.

விழியன்

unread,
Apr 17, 2013, 3:54:07 AM4/17/13
to panb...@googlegroups.com
நல்ல இழை சித்து.

ஒரே ஒரு டவுட். கடைசி வரியில் தோழி முடிப்பது 'உளரோநம் காதலோரே' என வந்துள்ளது. உன்னுடைய விளக்கத்தில் கிடைக்காமல் போய்விடுவார் உன் காதலர்?' என வந்திருக்கு. எனக்கென்னமோ அது கிடைக்காமலா போய்விடுவார்கள் நம் காதலர்கள் என்று வரவேண்டும் என தோன்றுகின்றது. வழக்கமாக தலைவனின் தோழி போலவே தலைவருக்கு தோழன் இருப்பார்கள். தலைவன் - தலைவி மேட்சிங், தோழி- தோழி மேட்சிங்.

என் புரிதல் சரியாப்பா?

விழியன்

unread,
Apr 17, 2013, 4:02:00 AM4/17/13
to panb...@googlegroups.com
http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=130

இந்த இடத்தில் இதற்கு நல்ல விளக்கம் இருக்கு.
''கெடுநரு முளரோநங் காத லோரே. '' என்று அங்கே கொடுத்திருக்காங்க சித்து.

Siddharth Venkatesan

unread,
Apr 17, 2013, 4:04:15 AM4/17/13
to panbudan
அட... உமா இது நல்லா இருக்கே :) ஆனா இந்த “நம் காதலர்” அப்படிங்கற பதம் பல சங்க பாடல்கள்ல பயன்படுத்தப்படுது. தலைவிய பத்தி பேசறதால, Royal Weன்னு சொல்லுவாங்க இல்லையா ஆங்கிலத்துல... உயர்தோரை குறிக்கும் போது ஒரு மரியாதை பன்மை பயன்படுத்தப்படுமே அதன்படி இந்த உன் , நம் ஆச்சுன்னு தான் நான் நினைக்கறேன். ஆனா நம்மலோட காதலர்ன்னு தலைவனையும் தோழனையும் சொல்றதா எடுத்தாலும் அழகா தான் இருக்கு :))




2013/4/17 விழியன் <uman...@gmail.com>
--

Umanath Selvan

unread,
Apr 17, 2013, 4:09:52 AM4/17/13
to panb...@googlegroups.com
இந்த ராயல் வீயில் மற்ற உறவுகளுக்கு சரியா வரும் சித்து, காதலருக்கு/கணவருக்கு வருமான்னு தெரியல. நம் அப்பா, நம் அம்மா, நம் குழந்தை, நம் தங்கை எல்லாம் ஓகே, நம் காதலர் கொஞ்சம் இடிக்கிற மாதிரி இருந்தது.

ஆனாலும் இந்த தோழியின் கதகதப்பான வார்த்தைகள் தலைவியை குளுமைபடுத்துவது போல வாசிப்போரையும் குளுமைபடுத்த தவறவில்லை.

விழியன்
http://vizhiyan.wordpress.com


2013/4/17 Siddharth Venkatesan <neota...@gmail.com>

eswar sivakrishnan

unread,
Apr 17, 2013, 4:27:13 AM4/17/13
to பண்புடன்
நல்லத்துவக்கம், 

 


2013/4/17 Umanath Selvan <uman...@gmail.com>



--



"எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்க"
அன்பன்,
ஈஸ்வர்

Siddharth Venkatesan

unread,
Apr 17, 2013, 4:28:25 AM4/17/13
to panbudan
வீட்டுக்கு போய்  சௌரிராஜப்பெருமாள் உரைல எப்படி இருக்குன்னு பாக்கறேன். நீ கொடுத்த தமிழ் இணைய பல்கலைக்கழக உரைலயும் “நம் தலைவர் கிடைப்பார்”ன்னு மழுப்பிட்டாங்க... :) 

//ஆனாலும் இந்த தோழியின் கதகதப்பான வார்த்தைகள் தலைவியை குளுமைபடுத்துவது போல வாசிப்போரையும் குளுமைபடுத்த தவறவில்லை.//

கதகதப்பு => குளுமைப்படுத்தும்... நல்லா இருக்கு ;) 

இந்த காம்பினேஷன் ஒரு குறள நியாபகப்படுத்துது..

 நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும்
தீ யாண்டு பெற்றாள் இவள்.


விலகினால் சுடும், நெருங்கினால் குளிரும் தீயினை எங்கிருந்து பெற்றாள் இவள்? செம நக்கல் இந்தாளுக்கு... :)))


2013/4/17 Umanath Selvan <uman...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 17, 2013, 4:46:24 AM4/17/13
to பண்புடன்

2013/4/17 Siddharth Venkatesan <neota...@gmail.com>

விலகினால் சுடும், நெருங்கினால் குளிரும் தீயினை எங்கிருந்து பெற்றாள் இவள்? செம நக்கல் இந்தாளுக்கு... :)))

:) கவிதை கவித


Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

Lavanya Sundararajan

unread,
Apr 17, 2013, 5:19:36 AM4/17/13
to பண்புடன்

நல்ல வரி
// தண் என்னும்
தீ //

இது  தி.ஜா வும், சொல்லி இருக்காருன்னு நினைக்கிறேன்

ப்ரியன்

unread,
Apr 17, 2013, 5:46:11 AM4/17/13
to panb...@googlegroups.com
நல்ல இழை.நன்றி சித்து.

PRASATH

unread,
Apr 17, 2013, 8:49:06 AM4/17/13
to panb...@googlegroups.com
நானும் படிச்சுட்டு இருக்கேன்...

2013/4/17 Siddharth Venkatesan <neota...@gmail.com>
 

shylaja

unread,
Apr 17, 2013, 9:05:59 AM4/17/13
to பண்புடன்
ஏன் துரை  டல், நோ  ஜிஃப் நத்திங்  ஏன் துர ஏன்? யாரும்  அதட்டினாங்கன்னா சொல்லுங்க  :):) 


2013/4/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
 வாழ்த்துகள் ஐயா .. 
பின் தொடர்கிறேன் 


2013/4/17 PRASATH <pras...@gmail.com>
நானும் படிச்சுட்டு இருக்கேன்...


2013/4/17 Siddharth Venkatesan <neota...@gmail.com>
 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
ஷைலஜா
 //தண்டலை மயில்கள் ஆட
தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏங்க
குவளைகண் விழித்து நோக்க
தெண்திரை எழினி காட்ட
தேம்பிழி மகரயாழின்
வண்டுகள் இனிது பாட
மருதம்வீற் றிருக்கும் மாதோ

//
கவிச்சக்கரவர்த்தி

PRASATH

unread,
Apr 17, 2013, 9:10:38 AM4/17/13
to panb...@googlegroups.com


2013/4/17 shylaja <shyl...@gmail.com>
ஏன் துரை  டல், நோ  ஜிஃப் நத்திங்  ஏன் துர ஏன்? யாரும்  அதட்டினாங்கன்னா சொல்லுங்க  :):) 

அவங்க கூட நானும் சேர்ந்துக்குறேன்... நானும் எப்ப ரவுடி ஆகுறது... :)))
 
- ஷைலஜா

Umanath Selvan

unread,
Apr 17, 2013, 9:08:34 AM4/17/13
to panb...@googlegroups.com
:)

விழியன்
http://vizhiyan.wordpress.com


2013/4/17 PRASATH <pras...@gmail.com>

துரை.ந.உ

unread,
Apr 17, 2013, 8:56:48 AM4/17/13
to பண்புடன்
 வாழ்த்துகள் ஐயா .. 
பின் தொடர்கிறேன் 


2013/4/17 PRASATH <pras...@gmail.com>
நானும் படிச்சுட்டு இருக்கேன்...


2013/4/17 Siddharth Venkatesan <neota...@gmail.com>
 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

Siddharth Venkatesan

unread,
Apr 18, 2013, 1:21:18 AM4/18/13
to panbudan
நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக்
கடிய கூறும் வேந்தே; தந்தையும்
நெடிய வல்லது பணிந்துமொழி யலனே;
இஃதிவர் படிவ மாயின், வையெயிற்
றரிமதர் மழைக்க ணம்மா வரிவை
மரம்படு சிறுதீப் போல
அணங்காயினள் தான் பிறந்த வூர்க்கே.

- மதுரை மதனிளநாகனார் (புறநானூறு : 349).

வேலி நுனி கொண்டு நெற்றிவியர்வை துடைத்தபடி
கடிய சொற்களை கூறும் தலைவன்;
தந்தையும் கடிந்தே பேசுகிறாரே தவிர பணிந்து பேசவில்லை.
இதுவே இவர்களது நிலைபாடெனில், 
கூரிய பற்களும் குளிர்ந்த கண்களும் பொன் நிறமுமுடைய இந்தப் பெண்
மரத்தில் விழும் சிறு தீ போல, 
அணங்காகிவிட்டாள் தான் பிறந்த ஊர்க்கே...


பெண் கேட்டு வந்த அரசனுக்கும் பெண் தர மறுக்கும் தந்தைக்கும் இடையே இருக்கும் பிரச்சனையின் உச்சக்கட்டத்தை இக்கவிதை காட்சிப்படுத்துகிறது. அடுத்து போர் தான்... இந்த ஒரு பெண்ணை முன்னிட்டு நிகழவிருக்கும் போர்... நம் பழங்குடி வேரின் ஒரு நுனியை காட்டிச்செல்லும் பாடல் இது... 

Lavanya Sundararajan

unread,
Apr 18, 2013, 1:30:22 AM4/18/13
to பண்புடன்
//அணங்காகிவிட்டாள்//

அணங்கேன்றால் பெண் என்று தானே அர்த்தம் இங்கே வெளிப்படும் பொருள் என்ன?


2013/4/18 Siddharth Venkatesan <neota...@gmail.com>

--

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
Apr 18, 2013, 1:33:03 AM4/18/13
to panb...@googlegroups.com

நெருங்கினாள்...

Siddharth Venkatesan

unread,
Apr 18, 2013, 1:38:04 AM4/18/13
to panbudan
லாவண்யா... அணங்கு என்ற சொல் அழகு, தெய்வம், நோய், அச்சம், வெறியாட்டம் என பல பொருள் உடையது. இங்கே நோய் எனும் பொருளில் வரலாம் என்று நினைக்கிறேன். மரம் படு சிறுதீ முழு மரத்தையும் வனத்தையுமே எரித்துவிடுவது போல, ஒருவரை தாக்கும் நோய் ஊர் முழுக்க பரவிவடக்கூடும் இல்லையா? 


2013/4/18 கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம் <pon...@gmail.com>

விழியன்

unread,
Apr 18, 2013, 1:46:37 AM4/18/13
to panb...@googlegroups.com
சித்து,

வேலி நுனி என்பதை காட்டிலும் கைவேலின் நுனி என்பதே சரியாக இருக்கும்னு நினைக்கிறேன். தன் வியர்வையை விரலால் துடைக்காமல் வேலினை கொண்டு துடைத்தபடி கூறுகிறான். 

//அணங்காயினள் தான் பிறந்த வூர்க்கே//
மரத்தினால் உருவான தீ மரத்தையும் வனத்தையும் அழிப்பதை போல, இவள் பிறந்த ஊர் இவளால் அழியட்டும் என்ற பொருள் சரியாக வருமா?

(கூடுதல் தகவ்ல) இந்த பாடலில் வரும் ஊர் சிக்கல் நாடு. இன்றும் திருவாரூர் அருகே இருக்கு. பெண்ணின் தந்தை பெருஞ்சிக்கல்கிழான்.  

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 18, 2013, 1:52:36 AM4/18/13
to பண்புடன்
அணங்கு என்றால் வருத்தம் என்ற பொருளும் உண்டு.  அஞ்ச வைத்தல் என்றும் கொள்ளலாம்.

/

அணங்கு, (p. 15) [ aṇngku, ] கிறேன், அணங்கினேன், வேன், அணங்க, v. a. To kill, கொல்ல. 2. To desire, விரும்ப. 3. To fear, அஞ்ச. 4. v. n. To suffer, be in distress, வருந்த. (p.)//



அணங்கு, (p. 15) [ aṇngku, ] s. An inferior deity, a divinity not supreme, தெய்வம். 2. A fe male deity, goddess, a female inhabitant of Svarga, தெய்வப்பெண். 3. Women in general, பெண்கள். 4. Beauty, அழகு. 5. Desire, ஆசை. 6. Pain, affliction, suffer ing, வருத்தம். 7. Disease, நோய். 8. Killing, கொலை. 9. Fear, அச்சம். 1. A species of devil-dancing to obtain the aid of a deity to remove sickness, தேவர்க்காடுங்கூத்து. 11. Dance to Skanda, வேலனாடல். (திவா.) (p.)

......////




Siddharth Venkatesan

unread,
Apr 18, 2013, 1:52:46 AM4/18/13
to panbudan
உமா... அது வேல் நுனி... வேலி நுனின்னு தப்பா அடிச்சிட்டேன். 


2013/4/18 விழியன் <uman...@gmail.com>
--

Ramesh Murugan

unread,
Apr 18, 2013, 1:52:51 AM4/18/13
to பண்புடன்
நல்ல இழை. நன்றி அண்ணே.

--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

Siddharth Venkatesan

unread,
Apr 18, 2013, 1:55:49 AM4/18/13
to panbudan
ஜீவ்ஸ்...

//அணங்கு என்றால் வருத்தம் என்ற பொருளும் உண்டு.  அஞ்ச வைத்தல் என்றும் கொள்ளலாம். //

யார் அணங்குற்றனை கடலேன்னு ஒரு வரி குறுந்தொகைல இருக்கு. எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்ச குறுந்தொகை வரிகள்ல ஒன்னு அது... அந்த வரிய யாருக்காக இந்த வெறியாட்டம்னும் படிக்கலாம்... யாருக்காக இவ்வளவு வருத்தப்படற கடலேன்னும்.... 




2013/4/18 Ramesh Murugan <rames...@gmail.com>
--

விழியன்

unread,
Apr 18, 2013, 1:57:36 AM4/18/13
to panb...@googlegroups.com
கொஞ்ச ஆழமா கவனிச்சா இந்த பாடல் அப்படியே ஒரு வீடியோ காட்சியை மனதிற்குள் ஓட்டும். ஒரு அழகான பெண் வளர்கின்றாள். அவளின் அழகினை கேட்டு ஒரு வேந்தன் பெண் கேட்டு வருகின்றான். பெண்ணின் தந்தை இவர் மாப்பிள்ளையாக சரிவரமாட்டார் என மறுக்கிறார். வேந்தன் பொங்கி எழுகின்றா. அப்பவும் அப்பா மறுக்கிறார். கையில் இருக்கும் வேலினை கொண்டு தன் வியர்வையை துடைத்து, போருக்கு வா என அழைக்கிறார்.

சிம்ப்ளி சூப்பர்ப்.!

Lavanya Sundararajan

unread,
Apr 18, 2013, 2:22:03 AM4/18/13
to பண்புடன்
யார் அணங்குற்றனை கடலே

செம வரி அது. இது பத்தி ஏற்கனவே ஒரு முறை பேசி இருக்கோம்.


shylaja

unread,
Apr 18, 2013, 2:25:16 AM4/18/13
to பண்புடன்
ரசித்துக்கொண்டிருக்கிறேன்


2013/4/18 Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com>
யார் அணங்குற்றனை கடலே

செம வரி அது. இது பத்தி ஏற்கனவே ஒரு முறை பேசி இருக்கோம்.


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 18, 2013, 2:39:45 AM4/18/13
to பண்புடன்

2013/4/18 Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com>

யார் அணங்குற்றனை கடலே

சத்தியமாச் சொல்றேன், இதெல்லாம் படிக்கும் போது கவிதை எழுதனும்னு நினைச்சாலே மனசு கூசுது.  கம்பன், வள்ளுவர், பாரதி, பழந்தமிழ் பாடல்கள்... ம்ம்ம்ம்.. வாழ்நாள் போதுமா ?

விழியன்

unread,
Apr 18, 2013, 2:49:53 AM4/18/13
to panb...@googlegroups.com
நம்மகிட்ட இருக்க தமிழை வாசித்து முடிக்கவே இந்த ஜென்மம் போதாதண்ணே. வள்ளுவரே போதும்ற போது கம்பர் வந்து நிற்கிறார். கம்பர் போதும்றபோது பாரதி நிற்கிறார். பாரதி போதுன்ற போது கண்ணதாசன் வரார். இடையிடையே புறநானூறு பாடல்கள் கம்மிங். ஒவ்வொன்னும் வாழ்நாள் அனுபவம்.

shylaja

unread,
Apr 18, 2013, 2:55:42 AM4/18/13
to பண்புடன்
கரெக்ட் விழி...
திருவாசகம்  பிரபந்தம் நாலடியார்  சேக்கிழாரின் பெரியபுராணம்  என  தமிழ்க்கடலில் எவ்வளவு முத்துக்கள்!


2013/4/18 விழியன் <uman...@gmail.com>
நம்மகிட்ட இருக்க தமிழை வாசித்து முடிக்கவே இந்த ஜென்மம் போதாதண்ணே. வள்ளுவரே போதும்ற போது கம்பர் வந்து நிற்கிறார். கம்பர் போதும்றபோது பாரதி நிற்கிறார். பாரதி போதுன்ற போது கண்ணதாசன் வரார். இடையிடையே புறநானூறு பாடல்கள் கம்மிங். ஒவ்வொன்னும் வாழ்நாள் அனுபவம்.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

Asif Meeran AJ

unread,
Apr 18, 2013, 4:00:42 AM4/18/13
to பண்புடன்
​அணங்கு என்ற சொல் அழகு, தெய்வம், நோய், அச்சம், வெறியாட்டம் என பல பொருள் உடையது.

பெண்களை ஏன் அணங்கு என்கிறார்கள் என்று புரிகிறது
சித்து ஒரு ஹிடன் ஆணாதிக்கவாதி என்பது இப்போதாவது மக்களுக்குப் புரிந்தால் சரி :-)​

Siddharth Venkatesan

unread,
Apr 18, 2013, 4:20:09 AM4/18/13
to panbudan
:)))))))))))))))

//சித்து ஒரு ஹிடன் ஆணாதிக்கவாதி// ஹிடென் எல்லாம் இல்ல அண்ணாச்சி....i'm a recovering chauvinist. :) 

Asif Meeran AJ

unread,
Apr 18, 2013, 4:32:38 AM4/18/13
to பண்புடன்
நல்ல இழையை மொக்கையாக்க விரும்பாததால் வாய்ப்புக்கு நன்றி கூறி
அமர்கிறேன் வணக்கம்.

யார் அணங்குற்றனை கடலே// இந்த ஒரு வரியை வச்சுக்கிட்டு சில்ம்பாட்டம் ஆடி
‘அடடா! என்னா மாதிரி தமிழ்ப்புலமைய்யா இந்தாளுக்கு’ன்னு அவனவன் அலர்ற மாதிரி
ஒரு எலக்கியக் கூட்டத்துல பேசிட்டு சோடா குடிச்சுட வேண்டியதுதான்..



//சித்து ஒரு ஹிடன் ஆணாதிக்கவாதி// ஹிடென் எல்லாம் இல்ல அண்ணாச்சி....i'm a recovering chauvinist. :)

விஜயாயுஸ்மான் பவ!

Ramesh Vaidya

unread,
Apr 18, 2013, 4:38:18 AM4/18/13
to panb...@googlegroups.com
இதுக்கு முன்ன மொக்கை இழையைத்தான் மொக்கை ஆக்கி இருக்கீங்களா?


18 ஏப்ரல், 2013 2:02 PM அன்று, Asif Meeran AJ <asifm...@gmail.com> எழுதியது:

eswar sivakrishnan

unread,
Apr 18, 2013, 4:41:25 AM4/18/13
to பண்புடன்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ - குறளில்
அணங்கு என்று வருத்தும் தெய்வமகளைக் குறிக்கிறர்.
இங்கு தலைவி தன் காதலால் ஊரைக்கொழுத்தும் தீயாகி விட்டாள் என்றும் பொருள் கொள்ளலாம், கேட்பவன் மன்னன், மறுத்தால் என்ன நடக்கும், பெண்ணால் அழிந்த அரசுகள் எத்தனையெத்த னை சிற்றூர் எம்மாத்திரம் அவனோ வியர்வையையே வேலால் துடைப்பவன் வேறு.......


2013/4/18 Asif Meeran AJ <asifm...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--



"எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்க"
அன்பன்,
ஈஸ்வர்

துரை.ந.உ

unread,
Apr 18, 2013, 9:18:05 AM4/18/13
to பண்புடன்



2013/4/17 shylaja <shyl...@gmail.com>

ஏன் துரை  டல், நோ  ஜிஃப் நத்திங்  ஏன் துர ஏன்? யாரும்  அதட்டினாங்கன்னா சொல்லுங்க  :):) 

அக்கா என்னுடன் இருக்கும்வரையில் ... எதிரியை எல்லாம்
பக்காவாய் பக்காவுக்குள் அடைத்துவிடுவேன் 

# அன்புத் தம்பி 

## ஆனாலும் மெரட்டித்தான் வச்சிருக்காங்க :((

துரை.ந.உ

unread,
Apr 18, 2013, 9:34:15 AM4/18/13
to பண்புடன்

2013/4/17 shylaja <shyl...@gmail.com>
ஏன் துரை  டல்,

ரொம்ப ரொம்பவே அலைச்சல் அக்கா ​​:(
-- 

விழியன்

unread,
Apr 19, 2013, 12:46:37 AM4/19/13
to panb...@googlegroups.com

சித்து எங்கே இன்றைய பழந்தமிழ்பாடல்?

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 19, 2013, 12:50:30 AM4/19/13
to பண்புடன்
பிரியன்,

ஒரு உதவி. இந்த இழையை வளர வளர பண்புடன் இதழில் வலையேற்றிட  இயலுமா ?


Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/4/19 விழியன் <uman...@gmail.com>

சித்து எங்கே இன்றைய பழந்தமிழ்பாடல்?

--

Asif Meeran AJ

unread,
Apr 19, 2013, 2:47:40 AM4/19/13
to பண்புடன்

இந்த இழை வேண்டாம்
இழைய்ல் வரும் பாடல் மற்றும் விளக்கம் மட்டுமே போதும்

--
துபாய் ஜிடெக்ஸில்  கடனட்டை மூலமாக ஆறு மாத தவணையில் வாங்கிய கேலக்ஸி நோட் 2 அண்டிராயர் தமிழன் செல்பேசியிலிருந்து ...

மோரு

unread,
Apr 19, 2013, 3:51:12 AM4/19/13
to பண்புடன்
நானும் படிச்சிகிட்டு இருக்கேன். சின்ன பிழைகூட மொத்தமா பொருள் மாற்றிவிடும் போல.

வேலி நுனி என்றதும்....வேலி முள்ளால் ஆனது அதன் நுனின்னா எப்படி வேலியில் ஓடும் கொடியின் நுனியா என்றெல்லாம் கற்பனை ஓடுச்சு :-)

வேலின் நுனி என எடுத்து சொன்ன விழியன் அண்ணாவுக்கு பாராட்டுக்கள். சித்து அண்ணாவுக்கும் இந்த இழையை ஆரம்பித்து தொடர்வதற்கு வாழ்த்துக்கள்.

Siddharth Venkatesan

unread,
Apr 19, 2013, 3:07:41 PM4/19/13
to panbudan
இன்று வெள்ளி. எனக்கு விடுமுறை. இப்போது தான் கணினி பக்கமே வந்தேன். இன்றைய கோட்டா பாடலுடன் இதூ சற்று நேரத்தில் வருகிறேன். :)


2013/4/19 மோரு <mors...@gmail.com>
நானும் படிச்சிகிட்டு இருக்கேன். சின்ன பிழைகூட மொத்தமா பொருள் மாற்றிவிடும் போல.

வேலி நுனி என்றதும்....வேலி முள்ளால் ஆனது அதன் நுனின்னா எப்படி வேலியில் ஓடும் கொடியின் நுனியா என்றெல்லாம் கற்பனை ஓடுச்சு :-)

வேலின் நுனி என எடுத்து சொன்ன விழியன் அண்ணாவுக்கு பாராட்டுக்கள். சித்து அண்ணாவுக்கும் இந்த இழையை ஆரம்பித்து தொடர்வதற்கு வாழ்த்துக்கள்.

--

Siddharth Venkatesan

unread,
Apr 19, 2013, 3:28:11 PM4/19/13
to panbudan
இடிக்குங் கேளிர் நுங்குறை யாக  
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல 
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்    
கையில் ஊமன் கண்ணிற் காக்கும் 
வெண்ணெ யுணங்கல் போலப் 
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே. 

- வெள்ளிவீதியார் (குறுந்தொகை - 58)
[தலைவன் கூற்று ]

இடித்துரைக்கும் நண்பர்களே - எனது இந்த காதல் நோயை 
உங்களால் நிறுத்த முடிந்தால் நல்லது; 
சூரியன் சுட்டெரிக்கும் பாறையின் மேல் வைக்கப்பட்ட 
வெண்ணை உருகி வடிவதை
கையில்லாத ஊமை கண்களினால் தடுக்க முயல்வதைப்போல 
எனது இந்த நோய் பரவிக்கொண்டே இருக்கிறது.
தாங்க இயலவில்லை...


2013/4/19 Siddharth Venkatesan <neota...@gmail.com>

Umanath Selvan

unread,
Apr 19, 2013, 8:14:50 PM4/19/13
to panb...@googlegroups.com
சித்து, தலைவிக்கு தோழி இருப்பதை போலவே தலைவருக்கும் தோழன் இருப்பான் கூடவே என சொன்னேன் அல்லவா. இப்பாடலில் முதல் வரியிலேயே வந்தது பார் :)

இதில் தலைவனின் தவிப்பிற்கு சொல்லும் உதராணம் தான் அழகு. காமநோயினால் அவதிப்படுகின்றான், அதனை எப்படி சொல்கிறான். கடும் வெயில் அடித்து சூடாக பாறை இருக்கின்றது, அதன் மீது வெண்ணை வடிகின்றது. இவன் ஊமை மற்றும் கண்பார்வை அற்றவன். கண் இருந்தால் வெண்ணையை பத்திரப்படுத்த ஏதேனும் செய்யலாம், வாய் இருந்தால் கத்தி ஊரை கூட்டி உதவி கேட்கலாம். என்ன மாதிரியான எதுவும் செய்யமுடியாத நிலை அது. இந்த நிலையில் இருக்கேன் ஹெல்ப் ப்ளீஸ் என தன் காதலினால் ஏற்பட்டுள்ள வலியினை தோழனிடத்தில் கேட்கிறான்.

இதில் மற்றொரு சிறப்பு வெள்ளிவீதியார் ஒரு பெண்புலவர். ஒரு பெண், தலைவனுடைய வலியை இப்பாடலில் சொல்லி இருக்காங்க. மொத்தம் 13 பாடல்கள் வரை குறுந்தொகையில் எழுதி இருக்காங்க என்பது கூடுதல் தகவல்.

விழியன்
http://vizhiyan.wordpress.com


2013/4/20 Siddharth Venkatesan <neota...@gmail.com>

Siddharth Venkatesan

unread,
Apr 19, 2013, 8:20:54 PM4/19/13
to panbudan
உமா.. ரெண்டு விஷயம். முதலாவது, கண் இருக்கு... கை இல்ல. அதான் அவனோட ஆற்றாமைய இன்னும் அதிகப்படுத்துது... ரெண்டாவது... இந்த நேரத்துல இங்க என்ன செய்யற? போய் தூங்கு போ. :)))


2013/4/20 Umanath Selvan <uman...@gmail.com>

PRASATH

unread,
Apr 19, 2013, 8:23:47 PM4/19/13
to Groups
//கையில் ஊமன் கண்ணிற் காக்கும் //

இந்த ஒரு வரி சொல்லும் அர்த்தம்  இருக்கே... ஹ்ம்ம்... உதயா உனக்குத்தான்...:)))


2013/4/20 Siddharth Venkatesan <neota...@gmail.com>

PRASATH

unread,
Apr 19, 2013, 8:25:58 PM4/19/13
to Groups
காமநோய்னு சொல்றதை விட காதலினால் வரும் பித்துக்கு பசலை என்பதே சரியான பதமாக இருக்கும்...


2013/4/20 Umanath Selvan <uman...@gmail.com>

Umanath Selvan

unread,
Apr 19, 2013, 8:30:50 PM4/19/13
to panb...@googlegroups.com
ஓ. கண்ணினால் காக்க முயல்கின்றானா. அப்ப அது இன்னும் ரொம்ப கொடுமையானதா இருக்குமே.

2. நான் எழுந்து 2 மணி நேரம் ஆகுது கண்ணா.

Umanath Selvan

unread,
Apr 19, 2013, 8:40:25 PM4/19/13
to panb...@googlegroups.com
சித்து, ஒரு புலவர் சாட்டில் வந்து. இந்த பாடல் ஒரு பெண்ணின் கூற்றாக ஏன் இருக்க கூடாதுன்னு கேக்கறார். நீயே பதில் சொல்லேன்.

eswar sivakrishnan

unread,
Apr 19, 2013, 11:12:04 PM4/19/13
to பண்புடன்
யாரைப்பார்த்து விளித்துக்கு கூறப்படுகிறது பாஹ்களைப்பைர்த்து எனவே தலைவி கூற்றாக இருக்க முடியாது அடுத்து பசலை பெண்களுக்கு காதலால் வரும் உடல் மாற்றம், ஆண்களுக்கு மனம்சார்ந்த நோய், வள்ளுவரும் நோய் என்றே கூறிஇருப்பார்.

அருமையான பாடல் நம்ம முன்னோர்கள் வாழ்க்கையை அனுபவிச்சிக்காங்கப்பா.......




2013/4/20 Umanath Selvan <uman...@gmail.com>
சித்து, ஒரு புலவர் சாட்டில் வந்து. இந்த பாடல் ஒரு பெண்ணின் கூற்றாக ஏன் இருக்க கூடாதுன்னு கேக்கறார். நீயே பதில் சொல்லேன்.

விழியன்
http://vizhiyan.wordpress.com

 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--

Ramesh Murugan

unread,
Apr 20, 2013, 1:49:16 AM4/20/13
to பண்புடன்
சித்தார்த் அண்ணே,
இந்த பாடல்களையும் விளக்கத்தையும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துக்கலாமா உங்கள் பெயருடன்?

--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

Siddharth Venkatesan

unread,
Apr 20, 2013, 2:53:04 AM4/20/13
to panbudan
உமா... கவிதையின் முதல் வரி, இடிக்குங்கேளிர் நும் குறையாக... இதில் நேரடியாக பால் குறிப்பிடப்படவில்லை. நிச்சயமாக இதை ஒரு பெண்ணின் கூற்றாகவும் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது. 

ரமேஷ்... பகிர்ந்துக்கலாம்ங்க... வெள்ளிவீதியாருக்கே ஆட்சேபனை இருக்காது, எனக்கு ஏன்? :)))


2013/4/20 Ramesh Murugan <rames...@gmail.com>
--

Ramesh Murugan

unread,
Apr 20, 2013, 4:32:26 AM4/20/13
to பண்புடன்
நன்றி அண்ணே.

2013/4/20 Siddharth Venkatesan <neota...@gmail.com>

ரமேஷ்... பகிர்ந்துக்கலாம்ங்க... வெள்ளிவீதியாருக்கே ஆட்சேபனை இருக்காது, எனக்கு ஏன்? :)))

//

Siddharth Venkatesan

unread,
Apr 20, 2013, 6:20:57 AM4/20/13
to panbudan
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற் 
குளவி மொய்த்த வழுகற் சின்னீர் 
வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர் 
வருகதில் லம்ம தானே 
அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே. 

- சிறைகுடி ஆந்தையார் (குறுந்தொகை : 56)

[பொருள்தேடி செல்லும் கணவனிடம், நானும் வருகிறேன் என்று சொன்ன மனைவிக்கு கணவன் சொன்னது]

வேட்டை செந்நாய்கள் தோண்டிய குழியில்
குப்பை மண்டி நாற்றமடித்தபடி தேங்கி நிற்கும் சிறிய நீரை
வளையலிட்ட கையில் நீ எடுத்து பருகுத்தயாரெனில் 
என்னோடு வா அன்பே...
ஐயோ பாவம் என் நெஞ்சத்தில் அமர்ந்தவள்....

Siddharth Venkatesan

unread,
Apr 20, 2013, 6:26:11 AM4/20/13
to panbudan
//வளையலிட்ட கையில் நீ எடுத்து பருகுத்தயாரெனில் //

வளையலிட்ட கையில் நீ எடுத்து பருகத் தயாரெனில் *

PRASATH

unread,
Apr 20, 2013, 7:00:50 AM4/20/13
to Groups
ஐயா,

உங்களின் விளக்கத்தை மேலும் தெளிவுபடுத்த முடியுமா...


2013/4/20 eswar sivakrishnan <easw...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Apr 20, 2013, 7:24:35 AM4/20/13
to பண்புடன்
சித்து,

இதெல்லாம் படிக்கும்போது 12ம் வகுப்புல நான் பண்ண லொள்ளு ஞாபகம் வருது...

தமிழர்கள் மூன்று இடங்களுக்குப் போகும்போது தன் மனைவியை அழைத்துப் போவதில்லை என்பார்கள்.

1. போர்
2. பொருள் தேட
3. தாசி வீடு போகும்போது

கோவலன் கண்ணகியோடு ஏன் பொருள்தேடப் போனான் என்று கேட்டதற்காக பாதுகாப்பாக வெளியில் அனுப்பப்பட்டேன் :)))

அவருக்கு பதில் தெரியாம இருக்கலாம்... உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லிக்கொடுங்க ;)))


2013/4/20 Siddharth Venkatesan <neota...@gmail.com>
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற் 

eswar sivakrishnan

unread,
Apr 20, 2013, 11:28:53 AM4/20/13
to பண்புடன்
கோவலன் பொருள்தேட செல்லவில்லை, அப்படி பொருல் தேடச்சொல்லும் நோக்கத்தில் செல்லவன் ஆகில் தன் புகாரிலேயே சிலம்பை நல்ல விலைக்கு விற்று விட்டும் தன் மாமனார் வீட்டில் கண்ணகியை விட்டு விட்டோ  அல்லது தன் இல்லத்திலேயோ விட்டு விட்டோ சென்றிருக்கலாம். அவன் தன் செயலுக்காக கூசி தன் நாட்டை விட்டு நகரைவிட்டு ஊரை விட்டு புதுவாழ்வு துவங்க சென்றான்.எனவே கண்ணகியையும் உடன் அழைத்துப்போகிறான், கண்ணகியின் பிறந்த வீடு, கோவலனின் பிறந்த வீட்டு செல்வாக்கை சொல்லி மாளாதாம்.....

------------------
முந்தைய பாட்டு தலைவன் கூற்றுத்தான் பாங்கற் கூட்டத்துக்கண் வந்தது என்கிறார் பேராசிரியர், நச்சினார்கினியரும் பாங்கற்கு தலைவன் கூறியதாகவே குறிப்பிடுகிறார்.



2013/4/20 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

PRASATH

unread,
Apr 20, 2013, 1:41:03 PM4/20/13
to Groups
ஐயா,

மறுபடியும் மறுபடியும் தலைவன் கூற்று எனச் சொல்வதால் என்ன ஆகி விடப் போகிறது... 

நான் அப்பாடலை எவ்விதம் தலைவன் கூற்றாகக் கருதுகிறீர்கள் என கேட்கிறேன்... அதற்கு விளக்கம் தாருங்களேன்...


2013/4/20 eswar sivakrishnan <easw...@gmail.com>
------------------

Siddharth Venkatesan

unread,
Apr 21, 2013, 12:45:44 AM4/21/13
to panbudan
சுபைர்...

எனக்கு பழந்தமிழ் இலக்கியம் பற்றி தெரிந்தது மிகக் குறைவே. பள்ளி படிக்கும் போது தமிழ் ஆர்வம் இல்லை. சில மனப்பாட செய்யுள்களை தவிர என்ன படித்தேன் என்று கூட இப்பொழுது நினைவில்லை. நவீன கவிதைகளை வாசிக்க ஆரம்பித்த பிறகு தான் பழந்தமிழ் கவிதைகள் பக்கம் சென்றேன் (கவிஞர் பாம்பாட்டி சித்தன் வழியாக ஆண்டாளுக்கும் ஜெயமோகன் வழியாக குறுந்தொகைக்கும்). ஆனால் அதையும் வழமையான திணை, துறை மாதிரியான வாசிப்புக்கு உள்ளாக்காமல் நவீன கவிதைகளை படிப்பது போன்றே தான் படிக்க முயற்சிக்கறேன். நமது நவீன கவிதைகளின் மௌனமும் மொழிப்பிரக்ஞையும் நம் மரபில் இருந்தே நமக்கு வந்திருக்க வேண்டும். 

என்ன சொல்ல வர்ரேன்னா, தலைவன் வீட்டுக்காரம்மாவ கூட்டிட்டு வேலை தேட போவாறா போன்ற மீ தகவல்கள் எனக்கு அவுட் ஆஃப் சிலபஸ். :)))


Ahamed Zubair A

unread,
Apr 21, 2013, 2:06:25 AM4/21/13
to பண்புடன்
அது சரி...

எனக்கெல்லாம் இலக்கியம் தெரியாதுன்னு அப்பவே எங்க தமிழாசிரியர் தலையைத் தட்டி அனுப்பிட்டாரு.

இந்த கேவிஆர் பய இல்லைன்னா குஷ்பூ என்பதை தேமான்னு படிச்சு குழம்பிட்டு இருந்திருப்பேன் :))))


2013/4/21 Siddharth Venkatesan <neota...@gmail.com>

eswar sivakrishnan

unread,
Apr 21, 2013, 2:38:00 AM4/21/13
to பண்புடன்
தலைவன் கூற்று நிகழும் இடம், தலைவி கூற்று நிகழும் இடம், தலைவன் பங்கற்கு கூறும் இடம் எனப்பல நுணக்கமான இலக்கணங்கள் உண்டு, பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் இந்தப்பாடலை தலைமகன் கூற்றாகவே எடுத்துக்காட்டி உள்ளனர். திணை,துறை,இவைகளில் நாம் நம் விருப்பப்டி பொருள் கொள்வது நல்ல இருக்காது பெண்பாற்புலவர் பாடி இருந்தாலும் தலைமகன் கூற்றாகவே கொள்ளவேண்டும். 
ஏன் எனில் பெரும் உரையாசிரியர்கள் ிப்பாடலை எங்கே எடுத்துக்காட்டி இருக்கிறார்கள் எனப்பார்க்கலாம்..
தொல் செய்யுள் இயல் 186 உரையில் இப்பாடலை பாங்கற் கூட்டத்துக்கண் வந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக பேராசிரியரும், தொல் செய்யுள்இயல் 196 நூற்பாவிற்கு பார்ப்பன் கேட்போனாகத் தலைமகனுக்குக்கூற்று நிகழ்ந்தது எனப் பேராசிரியரும் , நச்சினார்க்கினியரும் உரைப்பர். அடுத்து பங்கன் கழறியவற்றை மறுத்துத் தன் நெஞ்சில் நிகழும் வருத்தங்களை அவற்குக்கூறுதற்கண் தலைவனுக்கு கூற்று நிகழ்ந்தது என்றும் களவியல் உரையில் குறிப்பிடுவார் நச்சினார்க்கினியர்- தொல் களவு 11.





2013/4/21 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

Siddharth Venkatesan

unread,
Apr 21, 2013, 4:45:48 AM4/21/13
to panbudan
நாள் 5 : 



இது என் பாவை பாவை; இது என்
அலமரு நோக்கின் நலம்வரு சுடர்நுதல்
பைங்கிளி எடுத்த பைங்கிளி என்றிவை
காண்தொறும் காண்தொறும் கலங்க
நீங்கின ளோஎன் பூங்க ணோளே.

- ஓதலாந்தையார் [ஐங்குறுநூறு : 375]

மகள் வீட்டை விட்டு ஓடிவிட்டாள். தேடிச்சென்றவர்கள் அவளை காணவில்லை என்று திரும்பிய போது தாய் புலம்புவதே இப்பாடல் என்கிறார் உ.வே.சா தனது உரையில்... 

எனது பாவையின் பாவை (பொம்மை) இது; 
துறுதுறு கண்களும் அழகு நெற்றியும் உடைய
எனது பைங்கிளி வளர்த்த பைங்கிளி இது;
என்று காணும்போதெல்லாம் என்னை கலங்கச்செய்து
நீங்கினாளோ என் மகளே...

சங்க இலக்கியத்தில் நிறைய விஷயங்கள் - தருணங்கள், உவமைகள், சொற்றொடர்கள் - பிரபந்தத்தில் பயன்படுத்தப்படுவதை காணலாம். திருமுறைகளிலும் இருக்கலாம், ஆனால் எனக்கு அதில் பரிச்சயம் இல்லை. மேற்குறிப்பிட்ட ஐங்குறுநூற்றுப் கவிதையின் இரு விஷயங்கள் - மகளை எண்ணி தாய் புலம்புதல், கண்ணில் படும் பொருட்களில் எல்லாம் “அவரை” காணுதல் - இடம்பெரும் ஒரு பிரபந்த பாடல் உண்டு. நம்மாழ்வார் பாடியது. கண்ணனை நினைத்து உருகும் தன் மகளின் நிலை கண்டு புலம்பும் தாய். 

கோமள வான் கன்றைப் புல்கி 
      கோவிந்தன் மேய்த்தன என்னும் 
போம் இள நாகத்தின் பின் போய் 
      அவன் கிடக்கை ஈது என்னும் 
ஆம் அளவு ஒன்றும் அறியேன் 
      அருவினையாட்டியேன் பெற்ற 
கோமள வல்லியை மாயோன் 
      மால் செய்து செய்கின்ற கூத்தே


இளம் கன்றை தழுவி
இது கண்ணன் மேய்த்தது என்கிறாள்;
ஊர்ந்துசெல்லும் இள நாகத்தின் பின் சென்று
இது அவனது படுக்கை என்கிறாள்;
முற்பிறவி பாவம் சூழ்ந்த எனக்கு
மகளாய் பிறந்தவளை கண்ணன் 
மயக்கி செய்யும் கூத்து
எங்கு சென்று முடியும் என்று தெரியவில்லை.... 


PRASATH

unread,
Apr 21, 2013, 8:58:39 AM4/21/13
to Groups
:)))

நோ மோர் ஆர்க்யூமென்ட்ஸ்...


2013/4/21 eswar sivakrishnan <easw...@gmail.com>

PRASATH

unread,
Apr 21, 2013, 9:01:53 AM4/21/13
to Groups
சித்து ஜி...

பழங்கவிதைகளுக்கு கீழாக விளக்கமாக வருவது நவீன கவிதை வடிவமா... தாங்கள் எழுதியதா... அன்றேல் யார் எழுதியது...

தகவலுக்காக மட்டும்...


2013/4/21 Siddharth Venkatesan <neota...@gmail.com>
நாள் 5 : 



Siddharth Venkatesan

unread,
Apr 21, 2013, 9:16:48 AM4/21/13
to panbudan
அது பழந்தமிழ் கவிதையின் எளிய வடிவம்... நான் எழுதியது தான்...


2013/4/21 PRASATH <pras...@gmail.com>

PRASATH

unread,
Apr 21, 2013, 9:23:43 AM4/21/13
to Groups
வேண்டுகோள்...

பழந்தமிழ் கவிதையும் அதன் எளிய வடிவமும் தவிர்த்து,

பழந்தமிழ் கவிதை பற்றிய தெளிவுரையை அதன் சூழலோடு பொருத்தி ஒரு தெளிவான கட்டுரை வடிவில் தரலாமே... ஜஸ்ட் லைக் தட் கவிதையைப் பற்றி சொல்லி விட்டு செல்வதற்கும் அதை அனுபவித்து, அதிலேயே லயித்து அதனை அடுத்தவருக்குச் சொல்லும் பொழுது இன்னும் செம்மையாகும் இந்த இழை... தொடர்ந்து செய்ய பின்னாளில் இதனை நீங்கள் புத்தகமாகவும் வெளியிடலாம்... 


2013/4/21 Siddharth Venkatesan <neota...@gmail.com>
அது பழந்தமிழ் கவிதையின் எளிய வடிவம்... நான் எழுதியது தான்...



Siddharth Venkatesan

unread,
Apr 21, 2013, 9:29:19 AM4/21/13
to panbudan
பிரசாத், ஈஸ்வரன் ஐயா உடனான உங்களது விவாதம் குறித்து... 

திணை, துறைகளை கணக்கில் கொண்டே ஆகவேண்டும் என்பது மரபான வாசிப்பு. அது முக்கியம். ஏனெனில் இங்கு ஆண்டாண்டு காலமாக இக்கவிதைகள் அப்படி வாசிக்கப்பட்டு அதெற்கென்று ஒரு அழகியல் தோன்றியுள்ளது. திணை, துறை போன்ற கருவிகள் வேறு கவிதை மரபுகளில் உள்ளதா என்று தெரியவில்லை. கவிஞனின் பணியை ஒருவகையில் இது எளிமையாக்குகிறது. யாருடைய கூற்று, என்ன திணை என்பன போன்றவை கவிதைக்கு வெளியே இருப்பதால் அவற்றை கவிதைக்குள் நிறுவ வேண்டிய தேவை கவிஞனுக்கு இல்லை. இதில் இரண்டு நன்மைகள் : 1. இன்னும் சுதந்திரமாக செயல்படலாம், 2. காலத்துடன் கவிதையை கட்டிப்போடும் பெயர்ச்சொற்களை தவிர்க்கலாம். 

ஆனால், இந்த மரபான வாசிப்பின் மீது மரியாதை வைத்தபடியே, அதை மீறிச்சென்றும் வாசிக்கலாம் என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் நவீன கவிதை மௌன வாசிப்பை முன்னிருத்துகிறது. ஆச்சரியப்படும் விதமாக சங்க கவிதைகளிலும் இதை நம்மால் காண முடிகிறது. கம்பராமாயண பாடலை மேடையில் சொல்லக்கூடியதை போல குறுந்தொகை கவிதையை பாடிக்காட்ட முடியாது. இதன் கவித்துவம் நிகழ்வது மொழித்தளத்தில் அல்ல... அதற்கும் கீழே ஒரு மௌனமான தளத்தில் நிகழ்கிறது. அதை நெருங்குவதற்கு நமக்கு திணையும் துறையும் தடையாக இருக்குமெனில் அதை தள்ளிவிட்டு நேராக கவிதையை அணுகளாம். :)


2013/4/21 Siddharth Venkatesan <neota...@gmail.com>

Siddharth Venkatesan

unread,
Apr 21, 2013, 9:33:41 AM4/21/13
to panbudan
//பழந்தமிழ் கவிதை பற்றிய தெளிவுரையை அதன் சூழலோடு பொருத்தி ஒரு தெளிவான கட்டுரை வடிவில் தரலாமே... ஜஸ்ட் லைக் தட் கவிதையைப் பற்றி சொல்லி விட்டு செல்வதற்கும் அதை அனுபவித்து, அதிலேயே லயித்து அதனை அடுத்தவருக்குச் சொல்லும் பொழுது இன்னும் செம்மையாகும் இந்த இழை... தொடர்ந்து செய்ய பின்னாளில் இதனை நீங்கள் புத்தகமாகவும் வெளியிடலாம்... //

முன்றில் (http://mundril.blogspot.com) அப்படிங்கற தளத்த நானும் மனைவியும் நடத்திட்டு வரோம்ங்க. சங்க இலக்கிய பாடல்கள் குறித்த எங்களது கட்டுரைகளுக்கான தளம் அது. ரொம்ப நாள் எதுவும் எழுதல... கேப் விழுந்துருச்சு. திரும்பவும் அங்க எழுத கொஞ்சம் மனச தயார் செய்ய தான் இந்த தொடர ஆரம்பிச்சேன். கொஞ்ச நாளைக்கு பாடலும் விளக்கமும் மட்டும் போகட்டும். சீக்கிரமே ஒரு கட்டுரையோட வரேன். :)

- சித்தார்த்



2013/4/21 Siddharth Venkatesan <neota...@gmail.com>

PRASATH

unread,
Apr 21, 2013, 9:34:24 AM4/21/13
to Groups
நன்றி சித்து ஜி...

(இப்ப நான் திணை மற்றும் துறைகளைப் பற்றி வேற தேடிப் படிக்கணும்... ஹ்ம்ம்...)


2013/4/21 Siddharth Venkatesan <neota...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 21, 2013, 9:35:24 AM4/21/13
to பண்புடன்

2013/4/21 PRASATH <pras...@gmail.com>

(இப்ப நான் திணை மற்றும் துறைகளைப் பற்றி வேற தேடிப் படிக்கணும்... ஹ்ம்ம்...)

இதுக்குப் பேரு தான் சோம்பேரி சுப்புன்னு சொல்றது. அது கூடவா கஸ்டம் ?


Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

PRASATH

unread,
Apr 21, 2013, 9:36:35 AM4/21/13
to Groups
நன்றி சித்து ஜி... தொடருங்கள்... எனது மறுமொழி ஏதும் வரவில்லை என்றாலும் நான் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறேன் என்பதை இப்பொழுதே தெரிவித்துக் கொள்கிறேன்...

வலைத்தளத்தையும் பார்க்கிறேன்...

2013/4/21 Siddharth Venkatesan <neota...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 21, 2013, 9:50:21 AM4/21/13
to பண்புடன்

2013/4/21 PRASATH <pras...@gmail.com>

நன்றி சித்து ஜி... தொடருங்கள்... எனது மறுமொழி ஏதும் வரவில்லை என்றாலும் நான் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறேன் என்பதை இப்பொழுதே தெரிவித்துக் கொள்கிறேன்...

நானும்

துரை.ந.உ

unread,
Apr 21, 2013, 10:48:40 AM4/21/13
to பண்புடன்



2013/4/21 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>


2013/4/21 PRASATH <pras...@gmail.com>
நன்றி சித்து ஜி... தொடருங்கள்... எனது மறுமொழி ஏதும் வரவில்லை என்றாலும் நான் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறேன் என்பதை இப்பொழுதே தெரிவித்துக் கொள்கிறேன்...

நானும்

 நானும் 
(எனக்கு எல்லாம் புதிது இங்கே)​​

வாழ்த்துகள் ஐயா ..தொடருங்கள் 



Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in

eswar sivakrishnan

unread,
Apr 21, 2013, 11:05:21 AM4/21/13
to பண்புடன்
மரபை மனதில் கொண்டு வாசிக்கலாம் ஆனால் அதை மீற வேண்டிய அவசியம் 

இல்லை என நினைக்கிறேன், மீறினால் நல்ல இருக்காதுங்க....

குறுந்தொகைப்பாடல்களில் இருக்கும் இறைச்சியை (உள்ளுறைஉவமைகளை) உணர 

அதை மரபு வழியில் கற்றால் தான் முடியும், குறுந்தொகை தமிழர்களின் காதல் 

வாழ்வு நிகழ்ந்த காலத்திற்கு கொண்டு செல்லும் டைம்மிசினாகவே நான் 

பார்க்கிறேன்....

சங்க இலக்கியத்தில் முதலில் எனக்கு மிகவும் பிடித்துப்போனது குறுந்தொகையே,
இவ்விடயத்தில் நான் கொஞ்சம் பழைமைவாதி  திணைத்துறை, கூற்று வேறு எந்த 

மொழியிலும் இல்லை ,பொருளிலக்கணம் தம் தமிழ் மொழியின் சொத்து அதை 

தெரிந்து கொள்ளாவிட்டாலும் அதைப்புறம் தள்ளக்கூடாது. அதை ஒற்றி பாடல்களை 

பார்க்கும் போதுதான் முன்னோர்களின் வாழ்வும் இயற்கை ஒட்டிய மன 

மாறுதல்களும் அவர்கலின் நுண்ணிய உளவியல் ரீதியாக உணர்வுகளை அனுகிய 

விதமும் புரியும். புதுக்கவிதைகள் இலக்கணம் மீறியது என்று கூட கூறமுடியாது, 

பொரும்பாலோர் ிலக்கமம் தெரியாமல் எழுதுவதால் அப்படி எண்ணத்தோன்றுகிறது 

அதிலும் ஒரு ஒலி இருக்கிறது தொடைகளை வலிந்தாவது கொண்டுவந்து 

விடுகிறார்கள் என்ன அசையும் தளையும் தான் தட்டுகிறது மற்றபடி படித்ததும் 

புரிகிறது தில பல படிமங்கள் இசங்கள் என்று போகிறன அவ்வளவே.
சங்க இலக்கியங்களை அதன் மரபில் கற்பதே அதை அழிவிலிருந்து காக்கும்.

-----------------------
திணைத்துறைகளை மெனக்கெட்டு படிக்க வேண்டாங்க  அந்தப்பாடல் என்ன 

திணை,துறை யாருடைய கூற்றுன்னு போட்டிருப்பதை படித்து குறித்துக் கொண்டால் 

போதுங்க,


2013/4/21 துரை.ந.உ <vce.pr...@gmail.com>



--

Siddharth Venkatesan

unread,
Apr 22, 2013, 3:23:20 AM4/22/13
to panbudan
ஈஸ்வரன் ஐயா,

குறுந்தொகைக்குள் நுழைந்த புதிதில் இந்த கவிதைகளை நான் உள்வாங்க திணை துறைகள் எனக்கு தேவையில்லை என்பது போன்ற நிலைபாடே என்னில் இருந்தது. அப்பொழுது நான் எழுதிய கட்டுரைகளிலும் அது பிரதிபலித்தது. ஆனால் இன்று அப்படி ஒரு நிலைபாட்டை எடுக்க தயங்குவேன். இவை நம் கவிமரபுக்கே உரிய கருவிகள் என்று நினைக்கிறேன். அவற்றின் வழியிலேயே சென்றால் கவிதையை உள்வாங்கிக்கொள்வதற்கு பிரமாதமான கருவிகள். 


//மரபை மனதில் கொண்டு வாசிக்கலாம் ஆனால் அதை மீற வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன், மீறினால் நல்ல இருக்காதுங்க....//

ஆனால், இவற்றை அடையொற்றி மட்டுமே பழந்தமிழ் கவிதைகளை வாசிக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதை ஒட்டி நான் எழுதிய கட்டுரை ஒன்றின் சுட்டியை தருகிறேன். நேரம் கிடைத்தால் வாசித்து உங்களின் கருத்தை கூறவும். 


சித்தார்த். 


2013/4/21 eswar sivakrishnan <easw...@gmail.com>

Asif Meeran AJ

unread,
Apr 22, 2013, 5:37:46 AM4/22/13
to பண்புடன்
அவருக்கு வெளக்கம் கொடுக்குறதெல்லாம் இருக்கட்டும்
இன்னைக்கு திங்கட்கிழமைதானே? ஏன் இன்னும் டீ வந்து சேரலை??
பிச்சு பிச்சு


eswar sivakrishnan

unread,
Apr 22, 2013, 5:52:56 AM4/22/13
to பண்புடன்
ஐயா தாங்கள் சுட்டி உள்ள இந்தப்பாடலையே எடுத்துக்கொண்டாலும் மரபு ஒட்டிப்பார்க்கும் போது விரியும் காட்சிக்கும் தனித்துப்பார்ப்பதற்கும் வேறுபாடு தெரியுமே,
காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.

இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது.

தன் மகள் காதலனுடன் உடன்போக்காக போய்விட்டால் அவளைத்தேடி செல்கிறாள், மங்குல் வந்து விட்டது காதற்பிணைப்புடன் செல்பவர்களிடையே தன் மகளைக்காணவில்லை மேலும் பார்த்துப்பார்த்து கண்களும் தம் ஒளியை இழந்து விட்டன, அப்போது அவளுக்கு தம் மகளைப்போல காதல் கொண்டு செல்பவர்கள் அகண்ட வாநின் மீன்களின் எண்ணிக்கைக்கு ஒப்பாக இருக்கி்ன்றனர் என்ற உண்மையும் புரிகிறது.
 பகலெல்லோம் தேடி நடந்து கால்கள் அவளுக்கு தடுமாறுகின்றன, அது என் மகளாக இருக்குமோ இவள் என் பெண்ணாக இருக்குமோ என்று உற்று நோக்கியே கண்களும் ஒளியை இழந்துவிட்டருக்கிறது, கடைசியில் என்மகள் மட்டுமல்ல இப்படி உடன்போக்காக போகுவோர் இந்த வானத்து மீன்களின் எண்ணிக்கையை விட பலரே என்கிறாள். 
யார் கூறுகிறார்கள் என்ற நிலையை மனதில் வைக்காமல் பார்த்தால் முழுப்பொருளும் விரியாதே ஐயா.
சில பாடல்கள் விதிவிலக்காக இருக்கலாம்,  ஆனால் களம் இதுதான்  இவர்தான் கூறுகிறார், எந்த நிலையில் யார் சொல்கிறார் எனத்தெரிந்து அறிந்து கற்றால் சுவை மிகும் என்பதே என்கருத்து.


2013/4/22 Siddharth Venkatesan <neota...@gmail.com>

துரை.ந.உ

unread,
Apr 22, 2013, 5:55:55 AM4/22/13
to பண்புடன்
Inline image 1கொஞ்சம் வெயிட்டு ப்ளீஸ் 


2013/4/22 Asif Meeran AJ <asifm...@gmail.com>
அவருக்கு வெளக்கம் கொடுக்குறதெல்லாம் இருக்கட்டும்
இன்னைக்கு திங்கட்கிழமைதானே? ஏன் இன்னும் டீ வந்து சேரலை??
பிச்சு பிச்சு


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 
temp-100-94304498.gif

Ravi Kannan

unread,
Apr 22, 2013, 6:08:13 AM4/22/13
to panb...@googlegroups.com
காலம், இடம்,ஆசிரியர் எல்லாவற்றையும் மறந்துவிட்டு content மட்டும் வாசிப்பதுதான் சரியான முறையாக இருக்கமுடியும். மரபான வாசிப்பில் முன் முடிவுகள் பெரிய பிரச்சினையாக இருக்க கூடும். உதாரணத்திற்கு பண்புடன் கவிஞர்கள் தங்கள் கவிதையின் கீழே வேறொரு பிரபல கவிஞரின் பெயரைப் போட்டுக் கொண்டால் இங்கு கலாய்ப்போரின் எண்ணிக்கை குறையும்தானே :-)))


2013/4/22 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
temp-100-94304498.gif

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 22, 2013, 6:10:33 AM4/22/13
to பண்புடன்

2013/4/22 Ravi Kannan <kannan...@gmail.com>

உதாரணத்திற்கு பண்புடன் கவிஞர்கள் தங்கள் கவிதையின் கீழே வேறொரு பிரபல கவிஞரின் பெயரைப் போட்டுக் கொண்டால் இங்கு கலாய்ப்போரின் எண்ணிக்கை குறையும்தானே :-)))

கொஞ்சம் டிரை பண்ணித்தான் பாக்கறது ? ;)

Lavanya Sundararajan

unread,
Apr 22, 2013, 6:16:30 AM4/22/13
to பண்புடன்
தயவுசெய்து இந்த இழைக்கு பொருந்தா தனி கருத்துக்களை தவிர்க்கும் படி தாழ்மையான வேண்டுகோள்.

புரிதலுக்கு நன்றி.

Siddharth Venkatesan

unread,
Apr 22, 2013, 6:26:11 AM4/22/13
to panbudan
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறுவரை
சென்றுநின் றோர்க்கும் தோன்று மன்ற
களிறுமென் றிட்ட கவளம் போல
நறவுப்பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்
வார்அசும்பு ஒழுகும் முன்றிற்
தேர்வீசு இருக்கை நெடியோன் குன்றே.
-கபிலர் [புறநானூறு : 114]

அருகில் நிற்பவர்களுக்கும் தெரியும்; சிறிது தூரம்
விலகி நிற்பவர்களுக்கும் தெரியும்; 
யானை மென்று துப்பிய கவளம் போல
கள் பிழிந்த பிறகு வீசப்பட்ட சக்கையிலிருந்து
சாறு ஒழுகி சேறாகிக்கிடக்கும் முற்றத்தில் நின்று
தேர்களை தானமாக வழங்கிகொண்டிருக்கும் பாரியின் குன்று.


இந்த பாடலின் முதல் இரு வரிகளான “ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்” எனக்கு மிகவும் பிடித்த வரிகள். அருகில் நிற்பவர்கள் கண்களால் பார்க்கக்கூடிய குன்று, விலகி சென்றவர்களுக்கு அதன் புகழ் பரவியதன் மூலமால கேள்வியால் (அதன் புகழை பிறர் சொல்ல கேட்பதனால்) காண முடிகிறது. இவ்விரு வரிகள் பாரியின் குன்றிற்கு மட்டுமல்ல... பல்வேறு விஷயங்களுக்கும் பொறுந்தக்கூடியன.... 

eswar sivakrishnan

unread,
Apr 22, 2013, 6:30:03 AM4/22/13
to பண்புடன்
ஆகா அருமை அருமை,..



2013/4/22 Siddharth Venkatesan <neota...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 22, 2013, 6:32:21 AM4/22/13
to பண்புடன்

2013/4/22 Siddharth Venkatesan <neota...@gmail.com>

நறவுப்பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்

//
நறவுப்பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்//

இந்த கோதுங்கற வார்த்தை இன்றும் கிராமங்களில் புழக்கத்தில் இருக்கிறது.  நல்ல பகிர்வு சித்து.

eswar sivakrishnan

unread,
Apr 22, 2013, 6:34:22 AM4/22/13
to பண்புடன்
ஒரு கல்லூரி கவியரங்கில் கவியரசு தன் கவிதையை ஒருமாணவருடன் மாற்றிக் கொண்டாராம்,
அந்த மாணவர் கவிதை வாசிக்கும் போதும் பிறகும் அரங்கில் அவ்வளவு அமைதி, கவிஞர் வாசிக்கும் போது கைத்தட்டல்கள் கவிஞர் கடைசியில் தான் அந்த மாணவனுடன் தன் கவிதையை மாற்றிக்கொண்டதைக் கூறினாராம் நம்ப ஆளுங்க சரக்கிற்கு! மதிப்புக்கொடுப்பதை விட.........


2013/4/22 eswar sivakrishnan <easw...@gmail.com>

Lavanya Sundararajan

unread,
Apr 22, 2013, 6:43:57 AM4/22/13
to பண்புடன்
//ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறுவரை
சென்றுநின் றோர்க்கும் தோன்றும்//

எனக்கென்னவோ அருகில் நிற்கும் போது கண்ணளவிற்கு (சிறு வரையாக) தென்படும் குன்று, சற்று விலகி பார்த்தால் முழுமையான குன்றென காணலாம் என்று விளங்கிக்க தோணுது. இதுக்கு அப்படியே எதிர்மறையா கே.பி ஒரு படத்தில் சொல்லி இருப்பாரு, பிரச்சனை ஒரு கல் போல கண்ணுக்கு அருகில் வைத்து பார்த்தால் ரொம்ப பெருசா தோணும், தூக்கி தூர போட்ட சின்னதா தெரியும் என்று.

எதையும் அருகில் பார்க்கும் போது அதன் பிரம்மாண்டத்தை முழுமையா உணர முடியாது. நீங்க சொன்னது போல இந்த வரி பல்வேறு விஷயங்களை பொறுத்தி பார்க்க வைக்கிது.

Siddharth Venkatesan

unread,
Apr 22, 2013, 6:47:45 AM4/22/13
to panbudan
லாவண்யா... அந்த ”சிறுவரை” மலையை குறிக்கவில்லை, சிறிது தூரம் கடந்த பிறகு... என்பதை குறிக்கிறது (வரை எனில் எல்லை) . இந்த ஈண்டும் சென்றும் தோன்றுவது எது என்பது பாடலின் கடைசி சொல்லாக கொடுக்கப்பட்டுள்ளது (குன்று). 

//எனக்கென்னவோ அருகில் நிற்கும் போது கண்ணளவிற்கு (சிறு வரையாக) தென்படும் குன்று, சற்று விலகி பார்த்தால் முழுமையான குன்றென காணலாம் என்று விளங்கிக்க தோணுது. இதுக்கு அப்படியே எதிர்மறையா கே.பி ஒரு படத்தில் சொல்லி இருப்பாரு, பிரச்சனை ஒரு கல் போல கண்ணுக்கு அருகில் வைத்து பார்த்தால் ரொம்ப பெருசா தோணும், தூக்கி தூர போட்ட சின்னதா தெரியும் என்று.// 

:) ம்ம்ம்ம். 


2013/4/22 Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com>

--

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 22, 2013, 6:47:51 AM4/22/13
to பண்புடன்
முன்குறிப்பு : இது மாதிரி ஏதும் நான் உளறலாம இங்க ? அனுமதி உண்டா ?


கம்பராமாயணம், யுத்த காண்டத்துல

'கூயினன் நும் முன்' என்று அவர் கூறலும்,
போயினன், நகர் பொம்மென்று இரைத்து எழ;
வாயில் வல்லை நுழைந்து, மதி தொடும்
கோயில் எய்தினன், குன்று அன கொள்கையான்
  
அதாவது கும்ப கர்ணன் எழுந்துட்டப் பின்னாடி, உங்கண்ணன் உன்னைக் கூப்டறாங்கப்பான்னு சொல்றதுக்கு முன்னமேயே,  இவன் உடனடியா கிளம்பிப் போயிட்டானாம்.  அவன் போகும் போது அந்த நகரத்து மக்கள் "பொம்" என்று இரைச்சல் வரும்படி மகிழ்ந்தார்களாம்.  நிலவையே தொடக்கூடிய அளவு உயரமான அரண்மனையை அடைந்தான்.
   
இந்த பொம்மென்று .. இத எங்கயோ கேட்ருக்கோமேன்னு யோசிச்சேன். பொம்மென ஓசை எப்படி இருக்கும்னா.. ஒரே மாதிரி ஓசை நிறைய கிளம்பினா பொம்மென்ற ஓசை வருமாம்.

பொம்மெனல், (p. 821) [ pommeṉl, ] v. noun. Sounding imi tatively, அனுகரணஓசை. (சது.)



நாவலங்கனியென்றெண்ணி
    நங்கை தன் கையில் கொண்டாள்
மேவிய வண்டு கையைக்
   கமலமென்றுன்ன நங்கை
ஆவலோடதனைப்பார்க்க
    அவள்முகம் மதியென்றெண்ணி
புவினிக் குவியுமென்றே
     பொம்மெனப் பறந்ததம்மா!

**
ஒரு வண்டு கீழ விழுந்திருக்கு, அதை ஒரு பெண் நாவல் மரத்தோட  பழம்னு எடுத்து கைல வைக்கிறா. வண்டு அந்தக் கையை தாமைரைன்னு நினைச்சுட்டு இருக்கிறப்ப, அந்தப் பெண் ஆவலோடு குனிந்து வண்டை நோக்குகிறாள். உடனே வண்டு அந்த முகத்தைப் பார்த்து ஆஹா இதென்ன நிலவு வந்துட்டதே, இனிமே இங்க இருந்தா இந்த தாமரை குவிஞ்சு அதுல சிறைப்பட்டுப்போம்னு,  தன் சிறகுகளை வேகமாக அசைத்து எழும்பிப் பறந்ததை பொம்மென்று பறந்ததா புலவர் சொல்லிருக்கார். 




Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/4/22 Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com>

--

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 22, 2013, 6:54:01 AM4/22/13
to பண்புடன்

2013/4/22 Siddharth Venkatesan <neota...@gmail.com>

லாவண்யா... அந்த ”சிறுவரை” மலையை குறிக்கவில்லை, சிறிது தூரம் கடந்த பிறகு... என்பதை குறிக்கிறது (வரை எனில் எல்லை) . இந்த ஈண்டும் சென்றும் தோன்றுவது எது என்பது பாடலின் கடைசி சொல்லாக கொடுக்கப்பட்டுள்ளது (குன்று). 

சிறுவரை, s. A small thing, a particle, a trifle, அற்பம். 2. (நாலடி.) A small division of time, a moment, காலநுட்பம். 3. Any of the six divisions of a day, சிறுபொழுது.
ஆனால் உரை எழுதுனவங்க சிறுவரையை மலைன்னு சொல்லிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

Lavanya Sundararajan

unread,
Apr 22, 2013, 6:55:09 AM4/22/13
to பண்புடன்
நான் சிறு வரை என்பதை மலையில் சிறு பகுதின்னு புரிஞ்சிகிட்டேன்.


2013/4/22 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
--

eswar sivakrishnan

unread,
Apr 22, 2013, 7:12:55 AM4/22/13
to பண்புடன்
கும்பகர்ணன் உருவில் மட்டும் அல்ல கொள்கையிலும் குன்று அன்னன்,
அடடா கம்பநாடானில்லையா....


2013/4/22 Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com>

Siddharth Venkatesan

unread,
Apr 22, 2013, 10:43:06 PM4/22/13
to panbudan
ஜீவ்ஸ்,

செம பாட்டு. இப்பவும் பயன்பாட்டுல இருக்கிற பழந்தமிழ் சொற்கள தேடிப்பிடிக்கறது சுவாரஸ்யமான வேலை. :)

குறுந்தொகைல 'உகிர் நுதி புரட்டும் ஓசை போல'ன்னு ஒரு வரி வரும். உகிர்னா நகம். தமிழ்ல அந்த சொல் வழக்கொழிஞ்சு போச்சு. ஆனா கன்னடத்துல உகிருன்னு தான் சொல்றாங்கன்னு தெரிஞ்ச அன்னைக்கு ஏதோ டைனோசர் எலும்பு கண்டுபிடிச்சவன் மாதிரி உணர்ந்தேன். ;)

Asif Meeran AJ

unread,
Apr 23, 2013, 1:37:13 AM4/23/13
to பண்புடன்
கன்னடத்துல உகிருன்னு தான் சொல்றாங்கன்னு தெரிஞ்ச அன்னைக்கு ஏதோ டைனோசர் எலும்பு கண்டுபிடிச்சவன் மாதிரி உணர்ந்தேன். ;)

டைனோசர் உகிர் கண்டு புடிச்சவன் மாதிர்ன்னு எழுதியிருந்தா நல்லா இருந்திருக்காது? :-)

இனிமேல் நானும் என் உகிர்க்கண்ணில் குருதி வழிந்ததுன்னு எழுதுறேன்

Siddharth Venkatesan

unread,
Apr 23, 2013, 1:41:23 AM4/23/13
to panbudan
//இனிமேல் நானும் என் உகிர்க்கண்ணில் குருதி வழிந்ததுன்னு எழுதுறேன்// 

:)))) அம்பை கதைகள்ல இந்த மாதிரி சொற்கள அனாயாசமா பயன்படுத்துவாங்க அண்ணாச்சி. நுதல் தடவிச்சென்றாள்ம்பாங்க... நுதல்ன்னா நெத்தின்னு தெரியலன்னா தாண்டி போக வேண்டியது தான். :)


2013/4/23 Asif Meeran AJ <asifm...@gmail.com>
கன்னடத்துல உகிருன்னு தான் சொல்றாங்கன்னு தெரிஞ்ச அன்னைக்கு ஏதோ டைனோசர் எலும்பு கண்டுபிடிச்சவன் மாதிரி உணர்ந்தேன். ;)

டைனோசர் உகிர் கண்டு புடிச்சவன் மாதிர்ன்னு எழுதியிருந்தா நல்லா இருந்திருக்காது? :-)

இனிமேல் நானும் என் உகிர்க்கண்ணில் குருதி வழிந்ததுன்னு எழுதுறேன்

--
It is loading more messages.
0 new messages