ஒருவார்த்தை... அதன் அர்த்தம்!

217 views
Skip to first unread message

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Mar 8, 2013, 12:31:04 PM3/8/13
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல், தமிழ் வாசல்
முடிந்த மட்டில் ஏதோ ஒரு தமிழ் வார்த்தையை எடுத்து அதற்குண்டான அர்த்தத்தை எல்லாருடனும் சேர்ந்து  விளங்கிக் கொள்ள முயலும் ஒரு  கூட்டு முயற்சி இது. விருப்பம் உள்ள யாரும் இதில் கலந்துக் கொள்ளலாம்.

****

கிராமங்களில் பொதுவாக பாத்திரத்திற்குப் புழங்கி வந்த ஒரு சொல் "ஏனம்".

இந்த ஏனத்திற்கு வேறென்ன அர்த்தங்கள் இருக்கிறதென்று பார்ப்போமா ?

ஏனம் - கருவி, பாத்திரம், பன்றி, காட்டுப் பன்றி, ஓலைக் குடை , பாவம் ( Sin/Offence )

Iyappan Krishnan

*>*<*
மூடர்களிடம் பேச, மௌனத்தையே  சிறந்த மொழியென தேர்ந்தெடுக்கிறேன்.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

PRASATH

unread,
Mar 8, 2013, 12:41:36 PM3/8/13
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் வாசல்
அட்டடத்து மேல ஏறும் போது காலை சரியா கதவு கொண்டியில ஒரு காலையும் மாடத்து மேல இன்னொரு காலையும் வைச்சு ஏறு...
 
மேல இருக்குற முட்டு மரத்துக்கு மோதாம முல்லுவாசியை எடுத்துப் போடு...
 
அப்படியே அந்த துடைப்பத்தால மேல இருக்குற ஒட்டடையை சுத்தம் பண்ணிட்டு இறங்கு...
இதுல எது புது வார்த்தை... எந்தெந்த வார்த்தைகளுக்கு பல பொருள் இருக்குனு சொல்லுங்க... நானும் தெரிஞ்சுகிடுறேன்...
2013/3/8 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Mar 8, 2013, 12:56:06 PM3/8/13
to தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
அட்டம் - குறுக்கு குறுக்காக இருக்கும் சட்டங்கள் மேல்  தடுப்பு ஏற்படுத்தி உருவாக்கப் பட்ட இடம்.  அட்டம் = அஸ்டம் என்பதை இப்படிச் சொல்வார்கள்.  எட்டு = அட்டம்.  சாதிக்காய்க்கும் அட்டம் என்று ஒரு பெயர் உண்டு.

கொண்டி - கதவின் குடுமி.
//வருவார் கொழுநர் எனத்திறந்தும். வாரார் கொழுநர் எனவடைத்தும் திருகும் குடுமி விடியளவும் தேயும் கபாடம் திறமினோ//
அதாவது கதவுக்கு மூடத் திறக்க ஏதுவாய் பழைய காலக் கதவுகளில் செய்யப் படுவது. ( எப்படி சொல்றது இதை ? ) ஒற்றைக் கீல் அமைப்பு  சரி படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

இது தவிர்த்து வேற  எந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியல?  ( ஆமா முல்லுவாசின்னா என்ன? )

Iyappan Krishnan

*>*<*
மூடர்களிடம் பேச, மௌனத்தையே  சிறந்த மொழியென தேர்ந்தெடுக்கிறேன்.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

2013/3/8 PRASATH <pras...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
PRASATH

unread,
Mar 8, 2013, 3:09:04 PM3/8/13
to தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், பண்புடன், தமிழ்த்தென்றல்
ஆக்சுவலா முள்ளுவாசி அப்படின்னு இருந்திருக்கணும்...

கூகுள் டிரான்ஸ்லேட்டர் சதி...

முள்ளுவாசி, வயல் வேலைக்கு உபயோகப்படும் ஒரு கருவி. சிறு செடிகளைச் சுற்றி இருக்கும் முட்புதர்களை அகற்ற இதுதான் சரி...

முட்களை அகற்றுவதால் இந்த பெயர்...

எனது தந்தை காலத்தில் இருந்து எனக்கு தெரிந்து எனது சந்ததிக்குத் தெரியாமல் போக வாய்ப்பிருக்கும் எங்கள் வீட்டில் இருக்கும் சில ஆயுதங்களின்/பொருட்களின் பெயர்கள்.

சனிக்கி = மண்வெட்டி
கலக்கட்டு = கடலைச் செடி நட பயன்படுத்தப்படும் ஆயுதம்
முள்ளுவாசி = முட்களை அகற்ற பயன்படும் ஆயுதம்
கோடாலி - கோடாரி
பாதாள கொலுசு = கிணற்றில் விழும் பொருட்களை எடுக்க உதவும் ஆயுதம்
கலப்பை 
கார்
நுகத்தடி
பரம்பு
மூக்கனாங்கயிறு
கன்னிப்பூட்டு
மொடங்கினி
கத்தி
கையரிவாள்
அரை மானம்(இரும்பு/ஸ்டீல்)
முழு மானம்
தண்ணி வள்ளம்
அளவு வள்ளம்
சுத்தி
கடப்பாரை
வெத்தலைவெட்டி
கரனை
மட்டக்கோல்

இப்போதைக்கு நினைவுக்கு வந்தது இவ்ளோ தான்...

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

PRASATH

unread,
Mar 8, 2013, 3:31:00 PM3/8/13
to தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் வாசல்
//அட்டடத்து மேல ஏறும் போது காலை சரியா கதவு கொண்டியில ஒரு காலையும் மாடத்து மேல இன்னொரு காலையும் வைச்சு ஏறு...
 
மேல இருக்குற முட்டு மரத்துக்கு மோதாம முல்லுவாசியை எடுத்துப் போடு...
 
அப்படியே அந்த துடைப்பத்தால மேல இருக்குற ஒட்டடையை சுத்தம் பண்ணிட்டு இறங்கு...
இதுல எது புது வார்த்தை... எந்தெந்த வார்த்தைகளுக்கு பல பொருள் இருக்குனு சொல்லுங்க... நானும் தெரிஞ்சுகிடுறேன்..//

அட்டடம் = அட்டம் என்பதன் மருவிய சொல்... ஊர் வழக்கு...

கதவு கொண்டி = கதவு குடுமி/கதவு தாழ்ப்பாள் குடுமியும் தாழ்ப்பாளும் வேற வேறன்னாலும் குடுமி மேல கால் வைக்கவும், தாழ்ப்பாளுல காலை வைக்கவும் கொண்டினு சொல்வாங்க... 

மாடம் = ஹ்ம்ம்... அகல் மாடம், புத்தக மாடம் அப்படின்னு நிறைய இருக்கு... மாடம் என்பது சுவர் கட்டும் போது கால் கல்/ அரை கல்/ நாலு கல் இப்படி பல அளவுல கல்லை வைக்காம சுவரைக் கட்டி இருப்பாங்க. நாலு கல் விட்டு கட்டப்பட்டிருக்கும் மாடம் எல்லாம் சின்ன அலமாரி அப்படின்னு வச்சுக்கிடலாம். எங்க வீட்டுல மாடம் முக்கோண/ சதுரம்/ செவ்வகம் இப்படி மூனு வடிவத்துலயும் இருந்தது... பொதுவா முக்கோண வடிவத்தில் இருக்கும் சிறு மாடங்கள் விளக்கை வைக்க கட்டுனாங்கனு நான் நினைக்குறேன். ஏன்னா எங்க வீட்டுல இந்த சின்ன மாடங்களை சீமெண்ணெய் புட்டி விளக்கு வைக்கவே பயன்படுத்துனோம்.

சீமெண்ணெய் புட்டி = மண்ணெண்ணெய் விளக்கு = புட்டினு ஏன் சொல்றோம்னா இது எல்லாம் நாங்களே தயாரிக்குற விளக்குங்க. விவசாயத்துக்கு மருந்து அடிச்சு காலியான டப்பா, இல்லை கீழ கிடக்குற பிராந்தி பாட்டில், மருந்து பாட்டில் இதை எல்லாம் எடுத்து வந்து அதைச் சுத்தமா கழுவி வெய்யில்ல காய வைச்சு, அதுக்குப் பின்னாலயும் உள்ள ஒட்டி இருக்குற சின்ன சின்ன தண்ணீர் துளியை ஒரு வேஸ்ட் துணியை ஒரு குச்சியில சுத்தி உள்ள விட்டு சுத்தமா துடைச்சு அதுல மண்ணெண்ணெய் ஊத்தி, அந்த டப்பா மூடியில கோணி ஊசியில ஓட்டை போட்டு வேஸ்ட் துணியைத் திரியா திரிச்சு மூடிக்கு வெளியே கொஞ்சம் துணியை விட்டுட்டு மத்ததை பாட்டிலுக்குள்ள இருக்குற மண்ணெண்ணெய்ல நனையப் போட்டு பாட்டிலை மூடிடுவோம்...

கோணி ஊசி = கோணிப்பை தைக்க பயண்படும் பெரிய ஊசி

முட்டு மரம் = தூளத்தை தரையில இருந்து இல்லை அட்டத்துல இருந்து தாங்கிப் பிடிக்கும் பில்லர் போன்ற மரம்.

அட்டத்துல இருந்து ஆரம்பிக்கும் முட்டு மரம் சின்னதா இருக்கும் அதனால வெயிட்டைத் தாங்கணும்ன்றதுக்காக பக்கம் பக்கமா வைச்சி இருப்பாங்க...

தூளம் = ஓட்டையும் ஓட்டைத் தாங்கி இருக்குற மூங்கில்களையும் தாங்கிப் பிடிக்கும் கிடைமட்டமா இருக்கும் மரம். இந்த தூளங்களுக்கு மத்தியில மரப்பலகை போட்டு தான் பெரும்பாலும் அட்டம் செய்வாங்க...

ஒட்டடைன்னா என்னனு தெரியும்னு நினைக்குறேன்...

2013/3/8 PRASATH <pras...@gmail.com>

sk natarajan

unread,
Mar 8, 2013, 7:24:23 PM3/8/13
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் வாசல்
அருமையான முயற்சி
தொடருங்கள் .....ஜீவ்ஸ்
நானும் வருவேன் ....

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

sk natarajan

unread,
Mar 8, 2013, 7:28:46 PM3/8/13
to thamiz...@googlegroups.com, தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
கார் , கரனை ,மொடங்கனி , கன்னி பூட்டு ------ இதற்கு  அர்த்தம் தேவை 
தண்ணி வள்ளம்,அளவு வள்ளம் ---- வள்ளம் என்றாலே தண்ணீர் தானே  -- இதற்கும் அர்த்தம் தேவை 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2013/3/9 PRASATH <pras...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Mar 8, 2013, 9:42:49 PM3/8/13
to tamizhs...@googlegroups.com, தமிழ் வாசல், பண்புடன், தமிழ்த்தென்றல்

8 மார்ச், 2013 3:09 PM அன்று, PRASATH <pras...@gmail.com> எழுதியது:

ஆக்சுவலா முள்ளுவாசி அப்படின்னு இருந்திருக்கணும்...

கூகுள் டிரான்ஸ்லேட்டர் சதி...

முள்ளுவாசி, வயல் வேலைக்கு உபயோகப்படும் ஒரு கருவி. சிறு செடிகளைச் சுற்றி இருக்கும் முட்புதர்களை அகற்ற இதுதான் சரி...

கொத்து என்றும் சொல்லுவார்கள். களை எடுக்க தோதானது.
குறடு
இடுக்கி
 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Mar 8, 2013, 10:12:36 PM3/8/13
to தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
வாங்க வாங்க. நீங்க இல்லாமலா?

Iyappan Krishnan

*>*<*
மூடர்களிடம் பேச, மௌனத்தையே  சிறந்த மொழியென தேர்ந்தெடுக்கிறேன்.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

2013/3/9 sk natarajan <sknatar...@gmail.com>

sadayan sabu

unread,
Mar 8, 2013, 11:42:05 PM3/8/13
to panb...@googlegroups.com
2013/3/8 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
கிராமங்களில் பொதுவாக பாத்திரத்திற்குப் புழங்கி வந்த ஒரு சொல் "ஏனம்".

புழங்கி வந்த சொல் அல்ல புழக்கத்தில் இருக்கும் சொல்
இன்றும் எங்கள் பகுதியில் ஏனம் என்ற சொல் பாத்திரத்திற்கு பாவிக்கப்படுகிறது.

இன்னொரு சொல் தெரியுமா ?

ஆணம் - கோழியாணம், முட்டையாணம்.
குழம்பிற்கு ஆணம் எனும் சொல் புழக்கத்தில் உள்ளது

தமிழ்ப் பயணி

unread,
Mar 8, 2013, 11:44:26 PM3/8/13
to பண்புடன்
2013/3/9 sadayan sabu <sadaya...@gmail.com>

புழங்கி வந்த சொல் அல்ல புழக்கத்தில் இருக்கும் சொல்
இன்றும் எங்கள் பகுதியில் ஏனம் என்ற சொல் பாத்திரத்திற்கு பாவிக்கப்படுகிறது.
இன்னொரு சொல் தெரியுமா ?
ஆணம் - கோழியாணம், முட்டையாணம்.
குழம்பிற்கு ஆணம் எனும் சொல் புழக்கத்தில் உள்ளது

சாபு ஜி,

​பெண்கள் அணியும் ஒட்டியாணம் என்ப​தை என்னவாக ​கொள்வது?

--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"மனிதர்களின் குறைபட்ட புரிதல்களை உள்ளபடியே எடுத்துக் கொண்டு அவற்றை மகத்தான மதங்களின் உண்மையான போதனைகளாக நினைக்க வேண்டாம். abcxyz உலகம் இப்போது சகோதரத்துவத்துடன் வாழ்கிறது என்று நீங்கள் என்னிடம் சொல்வீர்களா என்ன? அதன் போர்களையும் வெறுப்புகளையும் ஏழ்மையையும் அதன் குற்றங்களையும் நினைத்துப் பாருங்கள்."
- மகாத்மா காந்தி - காந்தி எனும் மனிதர்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

sadayan sabu

unread,
Mar 9, 2013, 5:16:12 AM3/9/13
to panb...@googlegroups.com

2013/3/9 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

சாபு ஜி,

​பெண்கள் அணியும் ஒட்டியாணம் என்ப​தை என்னவாக ​கொள்வது?

வெஞ்சனம் எனும் சொல்லின் திரிபாக ஆணம் வந்திருக்கலாம்
ஒட்டியாணம் என்பது ஆணம் சமைத்த கையோடு  கணவனுடன் ஒட்டி உறவாடிய தால் ஒட்டியாணம் என வந்திருக்கலாம்:-)))

--

Asif Meeran AJ

unread,
Mar 9, 2013, 7:45:38 AM3/9/13
to panb...@googlegroups.com
ஒட்டியாணம் என்பது ஆணம் சமைத்த கையோடு  கணவனுடன் ஒட்டி உறவாடிய தால் ஒட்டியாணம் என வந்திருக்கலாம்:-)))

நீரெல்லாம் ஒரு பெரிய மனுசன் :-)
உம்மாலதான் நான் கெட்டுக் குட்டிச்சுவராப் போனேன்னு இந்த உலகம் இனியாவது நம்பித் தொலைக்கட்டும்

Ramesh Vaidya

unread,
Mar 9, 2013, 7:48:28 AM3/9/13
to panb...@googlegroups.com
அண்ணாச்சி, ஃபிடில் சூப்பர்ப்!

9 மார்ச், 2013 6:15 PM அன்று, Asif Meeran AJ <asifm...@gmail.com> எழுதியது:

ஒட்டியாணம் என்பது ஆணம் சமைத்த கையோடு  கணவனுடன் ஒட்டி உறவாடிய தால் ஒட்டியாணம் என வந்திருக்கலாம்:-)))

நீரெல்லாம் ஒரு பெரிய மனுசன் :-)
உம்மாலதான் நான் கெட்டுக் குட்டிச்சுவராப் போனேன்னு இந்த உலகம் இனியாவது நம்பித் தொலைக்கட்டும்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
Ahamed Zubair A

unread,
Mar 9, 2013, 7:48:35 AM3/9/13
to பண்புடன்
அண்ணாச்சி,

க்கும்... ;)

2013/3/9 Asif Meeran AJ <asifm...@gmail.com>

gokuldubai

unread,
Mar 9, 2013, 8:22:52 AM3/9/13
to Panbudan

ஃபிடில் -னா என்ன ரமேஷ் வைத்யா?

gokuldubai

unread,
Mar 9, 2013, 8:27:40 AM3/9/13
to Panbudan

சரி.

A fiddle is any bowed string musical instrument, most often the violin.[1] It is also a colloquial term for the instrument used by players in all genres, including classical music. Fiddle playing, or fiddling, refers to various styles of music.

PRASATH

unread,
Mar 9, 2013, 8:27:40 AM3/9/13
to Groups
வயலின் = பிடில்

2013/3/9 gokuldubai <gokul...@gmail.com>

gokuldubai

unread,
Mar 9, 2013, 8:31:10 AM3/9/13
to Panbudan

பிடில் தமிழ்ச்சொல்னு நினைச்சுக்கிட்டிருந்தேன் இத்தனை நாளா, அதனால அவர் ஃ போட்டவுடனே குழம்பி அகராதி பார்த்தேன் :)

Ramesh Vaidya

unread,
Mar 9, 2013, 8:31:16 AM3/9/13
to panb...@googlegroups.com
கோகுலண்ணா,
பிரசாத் சொன்னதுதான். (நானே தப்பாப் போட்டுட்டோமோன்னு பயந்துட்டேன்.)

9 மார்ச், 2013 6:57 PM அன்று, PRASATH <pras...@gmail.com> எழுதியது:
வயலின் = பிடில்

2013/3/9 gokuldubai <gokul...@gmail.com>

ஃபிடில் -னா என்ன ரமேஷ் வைத்யா?

Asif Meeran AJ

unread,
Mar 9, 2013, 8:32:49 AM3/9/13
to panb...@googlegroups.com
கோகுலண்ணா,
பிரசாத் சொன்னதுதான். (நானே தப்பாப் போட்டுட்டோமோன்னு பயந்துட்டேன்.)

கோகுல் உமக்கும் அண்ணனா? வெளங்கிடும்

me.senshe

unread,
Mar 10, 2013, 12:02:56 AM3/10/13
to panb...@googlegroups.com
//
ஆணம் - கோழியாணம், முட்டையாணம். //

க்காங். வுட்டா சாபத்தா ராமாயணம் ரேஞ்சுல இதுல காவியம் வளர்ப்பார் போல. அது ஆனம் தான். ஆணம் இல்லை :)

கோழி ஆனம், முட்டை ஆனம் மாத்திரம்தான். இதை எல்லாம் சேர்த்து எழுதாதீங்க சாபத்தா!

2013/3/9 sadayan sabu <sadaya...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Mar 10, 2013, 12:04:27 AM3/10/13
to பண்புடன்
ஏணம் என்பது கிண்ணம்.

ஆனம் என்பது குழம்பு...

2013/3/9 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
சாபத்தா,

ஆணம் = குழம்பு, (க்ரேவி ), பாத்திரம் இரண்டுக்கும் பாவிக்கப் படும்.  பெரும்பாலும் குழம்புக்கே கிராமத்தில் சொல்லுவார்கள். 

PRASATH

unread,
Mar 10, 2013, 8:07:22 AM3/10/13
to தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
கார் - இது ஏர் ஓட்டப் பயன்படும் ஐயா... ஏரின் முனையிலே இருக்கும் கூர்மையான பகுதி.

கரனை - மேஸ்திரிகள் பூச்சு வேலைக்கு பயன்படுத்தும் கரண்டி தான்...

மொடங்கனி - என்பது சிறிய கத்தி...அரிவாள் போல இருக்கும்... ஆனா அரிவாளில் இருக்கும் கருக்குகள் இருக்காது. 

கன்னிபூட்டு - இது மாட்டின் மூக்கனாங்கயிறையும் கழுத்திக்கயிறையும் இணைத்து கட்ட பயன்படுவது...

வள்ளம் - படி தெரியுமில்லை ஐயா.. ஒரு படி அரை படி... அது மாதிரி இது கொஞ்சம் பெருசு...

தண்ணி வள்ளம் - மூன்று படி அளவு கொள்ளளவு கொண்டது. இதுக்கு ஏன் தண்ணி வள்ளம்னு பேரு வந்துச்சு... விவசாயக் கூலிகளாக தண்ணீர் பாய்ச்ச வரும் கூலிகளுக்கு கூலி அளப்பது இந்த மூன்று படி வள்ளத்தில் தான் அப்ப எல்லாம்... அதனால...

அளவு வள்ளம் - ஐந்து படி அளவு கொள்ளளவு கொண்டது. அளவு வள்ளத்தில் தான் வியாபாரம் செய்வார்கள். வியாபரிகளுக்கு அளப்பது இந்த அளவு வள்ளத்தில்...

வல்லம் - இது தங்கத்தை அளக்கும் அளவு முறையில் ஒன்னு.

2013/3/9 sk natarajan <sknatar...@gmail.com>

PRASATH

unread,
Mar 10, 2013, 10:08:37 AM3/10/13
to தமிழ் வாசல், Groups, தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல்

2013/3/10 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

பிரசாத்,

கார் -  கருமை, கார்க்காலம், நீர், கருங்குரங்கு,  வெள்ளாடு  என பல அர்த்தம் வருகிறது.  அரிசியின் ஒருவகையும் கூட கார் என்று வரும். ஆனால் இது எப்படி  ஏர் முனைக்கு வந்தது என்று தெரியவில்லை

அண்ணே,

ஏர் முனைக்கு கார்னு பேர் இல்லை... கார் என்பது ஏரின் முனையில் பூட்டப்படும் ஒரு கூரிய அமைப்பு கொண்ட பொருள்... போட்டொ எடுத்து அனுப்புறேன்...

கரனை என்றொரு வார்த்தை தவறு.   கரணை என்று சொல்ல வேண்டும். எங்கப்பா எல்லாம் கொல்ட்று என்பார்கள். ( கொல்லறு  என்பதின் மருவு வார்த்தை ).  வீடு கட்டும் போது மேஸ்த்திரி உபயோகிக்கும் கரண்டி போன்ற ஆனால் தட்டையான வடிவம் கொண்ட கருவி.

சரி, கரணை... கொல்ட்று அப்படின்னும் சொல்லுவாய்ங்க... 
வெள்ளம் என்றால் தான் தண்ணீர். வள்ளம் என்றால்  அரை மரக்கால் கொண்ட கொள்ளவு.  எட்டு படிகள் கொண்டது ஒரு மரக்கால்.  மேலும்  அதிக விவரங்களுக்கு
http://mpmathivanan.blogspot.in/2013/02/blog-post_27.html. மிக விரிவாக பண்டைய  அளவைகள் குறித்த பதிவு. ( வள்ளம் பற்றி அதில் இல்லை)

நானும் வள்ளம்  அப்படின்னு தானே சொல்லி இருக்கேன்...ஐந்து படிகள் அளவு கொண்ட அளவு வள்ளமும், மூன்று படிகள் அளவு கொண்ட தண்ணி வள்ளமும் வீட்டில இருக்கு... ரெண்டுலையும் நெல்லை அளந்திருக்கேன் நான்...

மேலும் நீங்க கொடுத்த சுட்டியைப் பார்த்தேன்... முதல்ல லாபம்னு தான் சொல்லி அளப்போம். இது நெல்லுக்கு மட்டுமில்லை... தேங்காய் அளக்கும் போது முதல் இரண்டு காயை லாபம்னு சொல்லி தான் அளப்போம். அப்புறம் அளந்து முடிச்சுட்டு வள்ளத்தை வெறும் வள்ளமா வைக்க மாட்டோம், நாலு நெல் போட்டு தான் வைப்போம். அளக்கும் போதும் முதல்ல ஒரு கைப்பிடி நெல்லை சாக்குல போட்டு அப்புறம் தான் லாபம்னு ஆரம்பிப்போம்...

சுவாரசியமாக மரக்கலம் ( மரக்கால் ) & வள்ளம் இரண்டும் தோணிக்கும் பொருந்துகிறது.

கன்னி பூட்டு. முதன் முறையாக கேள்விப் படுகிறேன்.

மூக்கனாங்கயிறுலர்ந்து ஒரு இரண்டு இரும்பு வளையம் சேர்ந்தாப்புல இருக்கும்.

இதைப் பூட்டுவதற்கு பூட்டு கயிறு வாங்கணும்.  

வேந்தன் அரசு

unread,
Mar 10, 2013, 10:36:43 AM3/10/13
to tamizhs...@googlegroups.com, panb...@googlegroups.com, thamiz...@googlegroups.com, தமிழ்த்தென்றல்

10 மார்ச், 2013 9:15 AM அன்று, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> எழுதியது:
//கார் , கரனை ,மொடங்கனி , கன்னி பூட்டு ------ இதற்கு  அர்த்தம் தேவை 
தண்ணி வள்ளம்,அளவு வள்ளம் ---- வள்ளம் என்றாலே தண்ணீர் தானே  -- இதற்கும் அர்த்தம் தேவை //

பிரசாத்,

கார் -  கருமை, கார்க்காலம், நீர், கருங்குரங்கு,  வெள்ளாடு  என பல அர்த்தம் வருகிறது.  அரிசியின் ஒருவகையும் கூட கார் என்று வரும். ஆனால் இது எப்படி  ஏர் முனைக்கு வந்தது என்று தெரியவில்லை

கரனை என்றொரு வார்த்தை தவறு.   கரணை என்று சொல்ல வேண்டும்.

ரகரம் வரும் இடங்களில் ணகரம் தான் வரும் / அவை பிறக்கும் இடம் ஒன்று. அடுத்த னகரம் பிற மொழிகளில் இல்லை.
அதே போல் உருல் வராது உருள்தான். 
வருன் தவறு வருண்.
உருல், வருன், அருன், என என பலுக்க நாவுக்கு சுழல நேரம் இல்லை

கருனன், கர்னன் இல்லை கருணன் அல்லது கர்ணன்
வரன் என்று சொல்லுவதே இயலாது. வரண் என்றுதா சொல்லவரும்.

டகரத்தின் முன் ணகரம் :வண்டி, பண்டு
தகரத்தின் முன் நகரம்:. பந்து வந்து

றகரத்தின் முன் அனகரம் : பன்றி, சென்று ) சென்ரு பன்ரி தவறானவை)

center என்பதை சென் டர் என எழுதுவது தவறு செண்டர் அல்லது செண்ட்டர்.

தமிழ் எழுத்துகளின் பிறப்பிடம் அறிந்துகொண்டால் குழப்பங்கள் குறையும்

வேந்தன் அரசு

unread,
Mar 10, 2013, 10:39:11 AM3/10/13
to tamizhs...@googlegroups.com, panb...@googlegroups.com, thamiz...@googlegroups.com, தமிழ்த்தென்றல்
10 மார்ச், 2013 9:15 AM அன்று, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> எழுதியது:
//கார் , கரனை ,மொடங்கனி , கன்னி பூட்டு ------ இதற்கு  அர்த்தம் தேவை 
தண்ணி வள்ளம்,அளவு வள்ளம் ---- வள்ளம் என்றாலே தண்ணீர் தானே  -- இதற்கும் அர்த்தம் தேவை //

பிரசாத்,

கார் -  கருமை, கார்க்காலம், நீர், கருங்குரங்கு,  வெள்ளாடு  என பல அர்த்தம் வருகிறது.  அரிசியின் ஒருவகையும் கூட கார் என்று வரும். ஆனால் இது எப்படி  ஏர் முனைக்கு வந்தது என்று தெரியவில்லை

கரனை என்றொரு வார்த்தை தவறு.   கரணை என்று சொல்ல வேண்டும். எங்கப்பா எல்லாம் கொல்ட்று என்பார்கள். ( கொல்லறு  என்பதின் மருவு வார்த்தை ).  வீடு கட்டும் போது மேஸ்த்திரி உபயோகிக்கும் கரண்டி போன்ற ஆனால் தட்டையான வடிவம் கொண்ட கருவி.

வெள்ளம் என்றால் தான் தண்ணீர். வள்ளம் என்றால்  அரை மரக்கால் கொண்ட கொள்ளவு.  எட்டு படிகள் கொண்டது ஒரு மரக்கால்.  மேலும்  அதிக விவரங்களுக்கு
http://mpmathivanan.blogspot.in/2013/02/blog-post_27.html. மிக விரிவாக பண்டைய  அளவைகள் குறித்த பதிவு. ( வள்ளம் பற்றி அதில் இல்லை)

சுவாரசியமாக மரக்கலம் ( மரக்கால் ) & வள்ளம் இரண்டும் தோணிக்கும் பொருந்துகிறது.

கன்னி பூட்டு. முதன் முறையாக கேள்விப் படுகிறேன்

வர்ஜின் பெல்ட். ஹஹ்ஹா
எருதுக்கும் அதே கட்டுப்பாடுதான்

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Mar 11, 2013, 5:58:59 AM3/11/13
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், தமிழ்த்தென்றல்
G+ ல் மாணிக்க வாசகருடைய நீத்தல் விண்ணப்பம்  குறித்துப் பேசும் போது  கிடைத்த ஒரு வார்த்தை

தோளாச்சுரை.

அகிலா ஸ்வாமி12:32 PM
Reply
துளையிடப்படாத சுரை. அதுக்குள்ள எதுவும் நுழையாது. இதுவும் மாணிக்கவாசகரோட சொல்லாடல்தான்.

மனம் நெகிழாமல் நான் துளைக்கப் படாத ஒரு சுரைக்காயைப் போன்று இருந்தால், இதனால் நீ வாழ்ந்து விட்டாயோ? உடம்பிலே முன்னரே புகுந்த உன்னையறிந்து, இளகிப் பூரிக்கும் மனத்தை, நீ அருள் புரியும் காலமானது கொடுமையை யுடைய எனக்கு, கூடுவது எப்பொழுதோ?

http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=8&Song_idField=8132

பத்தாவது பாடல்
____

C.M உதயன்

unread,
Mar 12, 2013, 6:24:13 AM3/12/13
to பண்புடன், தென்றல்

"நோய் நொடி" இதில் நொடிக்கு என்ன அர்த்தம்.

--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Mar 12, 2013, 6:47:14 AM3/12/13
to பண்புடன், தென்றல்
நொடி =  நோயினால் மெலிந்து குன்றிப் போகுதலைக் குறிப்பது.

Iyappan Krishnan

*>*<*
மூடர்களிடம் பேச, மௌனத்தையே  சிறந்த மொழியென தேர்ந்தெடுக்கிறேன்.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

2013/3/12 C.M உதயன் <udhay...@gmail.com>
--

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Mar 12, 2013, 6:50:08 AM3/12/13
to பண்புடன்
to be more precise -

நொடி = நையல், s. Chronic or other emaciating disease, மெலிவு, See நசல்,

Prakash Sugumaran

unread,
Mar 12, 2013, 8:11:16 AM3/12/13
to panb...@googlegroups.com

நொடி - நொடித்து போதல் ;

நோய் வந்து சுருண்டு அடுத்தவருக்கு பாரமாக இருக்காமல், பொருளாதார ரீதியாக நொடித்து சுய தேவைகளுக்காக அடுத்தவர் கையை எதிர்பாராமல் நல்லபடியாக இறப்பதையும் குறிப்பதே " நோய் நொடி இல்லாமல் போய் சேர்ந்து விடவேண்டும்" எனும் சொலவடை.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Mar 12, 2013, 8:34:32 AM3/12/13
to பண்புடன்
நொடின்னா - க்ரானிக் டிஸீஸ்நு ஒரு அர்த்தம் இருக்குங்க.

Iyappan Krishnan

*>*<*
மூடர்களிடம் பேச, மௌனத்தையே  சிறந்த மொழியென தேர்ந்தெடுக்கிறேன்.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

2013/3/12 Prakash Sugumaran <praka...@gmail.com>

eswar sivakrishnan

unread,
Mar 12, 2013, 9:06:49 AM3/12/13
to panb...@googlegroups.com
நல்ல இழை முடிந்த மட்டும் படித்து பார்க்கவாவதும் செய்கிறேன். 

அட்டாலினு சொல்லுவாங்க, பரண் என்றும் கூறுவதுண்டு.
 மேல்மாடத்தை அட்டாளிகை, அட்டாலம், என்ற குறிப்பதுண்டு.

------------------
ஒட்டியாணம் அருமையான கேள்வி;-)))))))))0

2013/3/12 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

--

"எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்க"
அன்பன்,
ஈஸ்வர்

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Mar 12, 2013, 9:13:29 AM3/12/13
to பண்புடன்
அட்டம் -> அட்டாலை = வயல்களிலும் கோட்டையிலும் அமைக்கப்படும் காவல் பரண்,வீட்டுப் பரண்.
அட்டம் + அணை = அட்டமணை.

அட்டமணை -> அட்டவணை = பொருட்குறிப்புகளை அல்லது செய்திகளை ஒன்றன்மேல் ஒன்றாக எழுதிவைக்கும் பட்டியல், குறிப்பேடு.

கன்னடம் : அட்டவணெ.
துளுவம் : அட்டணெ. மராத்தி : அடவண.

PRASATH

unread,
Mar 12, 2013, 9:16:47 AM3/12/13
to panb...@googlegroups.com
நான் சென்னை வாசி... பெங்களூர்வாசி இப்படின்னு எல்லாம் சொல்றாங்களே...
 
சென்னையை எதுக்கு இவங்க வாசிக்குறாங்க...
 
வாசி - படித்தல்; இசைக்கருவிகளை வாசித்தல்...
 
இது ரெண்டும் போக வசிக்கிறேன் என்பதை இடப்பெயரோடு சேர்த்து சொல்லும் பொழுது வரும் ஒட்டு... இப்படி மூணு பொருள் தர்றதா நான் நினைக்குறேன்...
 
இனி கரெக்ஷன் அப்ரிசியேட்டட்...

sadayan sabu

unread,
Mar 12, 2013, 10:25:01 AM3/12/13
to panb...@googlegroups.com

2013/3/12 C.M உதயன் <udhay...@gmail.com>

"நோய் நொடி" இதில் நொடிக்கு என்ன அர்த்தம்.

நோய் நொடி என்பது போல சில சொல்லாடல் சேர்ந்தே வருகிறது யாராவது கோனார் நோட்ஸ் போடுங்களேன்

வயல் வரப்பு or  வாய்க்கால் வரப்பு
நெலம் நீச்சு
தோப்பு தொறவு
நகை நட்டு
வூடு வாசல்
மாடு கன்று

PRASATH

unread,
Mar 12, 2013, 11:01:50 AM3/12/13
to panb...@googlegroups.com
சாபு ஜி...
 
என்னோட மனசுக்கு பட்டதைச் சொல்லுறேன்...
 
நோய் நொடி... நோயின் முற்றிய தன்மை ஒருவனை நொடித்துப் போகச் செய்கிறது...
 
வயல் வரப்பு... வயலின் எல்லை அதன் வரப்பின் மூலம் அறியலாம்...
 
நெலம் நீச்சு... நிலத்தின் தன்மையை அதன் ஈரப்பதம் அதாவது அங்கு இருக்கும் நீரின் அளவைப் பொறுத்து அறியலாம்...
 
தோப்புகளின் எல்லை அதன் திறவு அதாவது நுழைவாயிலை வைத்து அறியலாம்... மாந்தோப்பு தென்னந்தோப்புகளுக்கு வேலியிட்டு ஒரு புறம் மட்டுமே திறவு வைத்திருப்பார்கள் களவு போவதைத் தடுக்க...
 
நகை நட்டு... நகைகள் பலவும் மாட்டுவதற்கு திருகுகளைக் கொண்டிருப்பதால் இப்படி சொல்லலாம்...
 
வீட்டின் எல்லை வாசல்...
 
பெண் தாய்மையாகும் போது முழுமையாகிறாள் என்பது போல மாடு கன்று ஈனும் பொது முழுமையடைகிறது...

2013/3/12 sadayan sabu <sadaya...@gmail.com>

Namakkal Shibi

unread,
Mar 12, 2013, 11:04:55 AM3/12/13
to panb...@googlegroups.com
மூக்கு முழி

12 மார்ச், 2013 7:55 PM அன்று, sadayan sabu <sadaya...@gmail.com> எழுதியது:

--

sadayan sabu

unread,
Mar 12, 2013, 11:06:20 AM3/12/13
to panb...@googlegroups.com
சபாஷ் ஜி

2013/3/12 PRASATH <pras...@gmail.com>
--

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Mar 12, 2013, 11:09:57 AM3/12/13
to பண்புடன்
நீச்சு = ஆழம்/நீரின் ஆழம்/பள்ளம் இப்படிச் சொல்லலாம். இங்க எது உங்களுக்கு சூட் ஆகுதோ எடுத்துக்கோங்க

Iyappan Krishnan

*>*<*
மூடர்களிடம் பேச, மௌனத்தையே  சிறந்த மொழியென தேர்ந்தெடுக்கிறேன்.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

2013/3/12 PRASATH <pras...@gmail.com>
--

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Mar 12, 2013, 11:13:28 AM3/12/13
to பண்புடன்

2013/3/12 PRASATH <pras...@gmail.com>

நோய் நொடி... நோயின் முற்றிய தன்மை ஒருவனை நொடித்துப் போகச் செய்கிறது...

நொடின்னா என்னன்னு கேட்டா நொடித்துப் போகுறதுன்னு சொல்றாம்பாரு... இவன் நல்ல்லா வருவான்.

நொடி = என்றால் உடை என்றும் ஒரு அர்த்தம் உண்டு. நொடித்தல்னா உடைஞ்சு போறது. ஆனா இங்க அதுவா அர்த்தம்னு யோசிக்கனும். நோய் + நொடி இரண்டுமே தொடர்புடையது.  நோய் வந்து போயி வந்து போயிட்டு இருந்தா உடல் ஸ்த்திரமா இருக்காது. குலைஞ்சு மெலிஞ்சு போகும் இல்லையா அதைத்தான் நொடிங்கறாங்க.

PRASATH

unread,
Mar 12, 2013, 11:19:11 AM3/12/13
to panb...@googlegroups.com
அர்த்தமுள்ள இந்துமதம் ல இப்படி ஒரு மேட்டர் வரும்... ஹ்ம்ம்...:)))
(நொடியைப் பத்தி இல்லை...)
2013/3/12 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Mar 12, 2013, 11:36:16 AM3/12/13
to பண்புடன்
சரி தான் பிரசாத்.

வாசம் = இருப்பிடம். பெங்களூரில் வாசம்  செய்பவன் பெங்களூர் வாசி.

Iyappan Krishnan

*>*<*
மூடர்களிடம் பேச, மௌனத்தையே  சிறந்த மொழியென தேர்ந்தெடுக்கிறேன்.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

2013/3/12 PRASATH <pras...@gmail.com>

--

eswar sivakrishnan

unread,
Mar 12, 2013, 12:24:34 PM3/12/13
to panb...@googlegroups.com
கோடைவாசஸ்தலம், வாசம் வடமொழி, வதிதல்  வதிவிடம், வதிதல் - தங்குதல், வதி - தங்குதல், வதி, வாசியாகிவிட்டது.
நகை, நட்டு. நகை சங்கிலி, மாலை, மோதிரம், வளையல் இன்ன பிறவும், நட்டு, காதணி, வேசரி, போன்றவை, எங்கேயோ படித்த நினைவிலிருந்து.......

தொடர்பிருந்தாலும் இல்லா விட்டாலும் பொருள் இருந்தாதலும் இல்லா விட்டாலும் இந்த எலக்கணம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், எகனைமொகனையா, வக்கனையா, இன்னும் தெளிவா சொல்லப்போனா ரைமிங்கா பேசியே பேச்சைக்கேட்டே சீரழிந்து போனவன் தமிழன்.....

2013/3/12 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
சரி தான் பிரசாத்.

C.M உதயன்

unread,
Mar 20, 2013, 6:49:42 AM3/20/13
to panb...@googlegroups.com
சட்டென்று, சட்டுன்னு
இந்த வார்த்தைகள் நாம் அதிகம் புழங்கி கொண்டு இருக்கிறோம்.

இதை Sudden, suddenly என்னும் வார்த்தையை தமிழ்படுத்தியது போல் உள்ளது, இதை கொஞ்சம் விளக்குங்க மக்களே.

Tthamizth Tthenee

unread,
Mar 20, 2013, 7:06:59 AM3/20/13
to panb...@googlegroups.com
 
"திக்கொன்று நோக்கி திசையொன்று
நோக்கியே  மொக்கொன்று அவிழ்ந்தது
மொட்டொன்று மலர்ந்தது சட்டென்று
வெடித்து சடுதியில் பூத்தது"

அன்புடன்
தமிழ்த்தேனீ

2013/3/20 C.M உதயன் <udhay...@gmail.com>
--
Reply all
Reply to author
Forward
0 new messages