சித்திரை முதல் நாள்... தொல்காப்பியர் திருநாள்!- Dinamani, 21st February 2021

11 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 22, 2021, 6:08:04 PM2/22/21
to vallamai, housto...@googlegroups.com, panbudan, tiruva...@googlegroups.com
http://nganesan.blogspot.com/2021/02/chithirai-1st-tolkappiyar-tirunaal.html

சித்திரை முதல் நாள்... தொல்காப்பியர் திருநாள்!- Dinamani, 21st February 2021

உலகத் தாய்மொழி நாள் ஆகிய பிப்ரவரி 21, 2021 அன்று அமெரிக்கக் கூட்டுத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தலைவர், செயலர் தமிழ்நாடு அரசாங்கத்துக்கு விடுத்துள்ள வேண்டுகோளின் பேரில், பேரா. செ. வை. சண்முகம் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), முனைவர் நா. கணேசன் (ஹூஸ்டன், அமெரிக்கா) எழுதி அனுப்பிய கட்டுரையைத் தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ளது. ஃபெட்னா பேரவைக் கடிதமும், நாங்கள் அனுப்பிய கட்டுரையும் வாசிக்கலாம். திருவள்ளுவர் திருநாள் எனத் தைத் திங்கள் பிறப்பு (பொங்கல்) அமைந்துவிட்டது. அதற்கு இணையாக, தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல்நாள் (தமிழ் வருடப் பிறப்பு) அமைதற்கான வேண்டுகோள்.
அமெரிக்கக் கூட்டுத் தமிழ்ச் சங்கப் பேரவை வேண்டுகோள்:



 




























உலகத் தாய்மொழி நாள் வெளியீடு - தினமணியில்.
சித்திரை முதல் நாள்... தொல்காப்பியர் திருநாள்!- Dinamani

By நா. கணேசன், Published on : 21st February 2021 09:45 PM
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2021/feb/21/சித்திரை-முதல்-நாள்-தொல்காப்பியர்-திருநாள்-3567698.html
 

நாங்கள் இருவரும் தினமணிக்கு அனுப்பிய கட்டுரை வடிவம்:

தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல் நாளைத் தருக

செ. வை. சண்முகம், நா. கணேசன்

தொல்காப்பியம் தமிழின் முதல் நூல், முதல் இலக்கணம். தமிழர்களின் அறிவியல் செய்திகளுக்கும், வாழ்வியல் விழுமியங்களுக்கும் வரையறை தரும் கலங்கரை விளக்கு. 2011 செப்டம்பர் 2-ம் தேதி, தினமணியில் எழுதிய கட்டுரையில் பேரா. தமிழண்ணல், மதுரைப் பல்கலையில் இருந்து ’சித்திரை மாதம் தமிழ் வருடப் பிறப்பாக தமிழர்களிடையே விளங்குகிறது. அதனைத் தொல்காப்பியர் திருநாள்’ என அறிவிக்கலாம் என எழுதியிருந்தார். திருவள்ளுவர் திருநாள், தொடராண்டு என தைப் பொங்கல் அமைந்துவிட்டதையும், அதற்கு இணையாகத் தொல்காப்பியர் திருநாள் வேண்டும் என்பது தமிழறிஞர்களின் வேண்டுகோள். ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க சுதந்திர தினத்தில் 6000 தமிழர்கள் ஒன்று கூடி அமெரிக்காவின் பெருநகரத்தில் தமிழுக்கு விழா எடுக்கின்றனர். அப்போது, “தமிழின் உயிர் தொல்காப்பியம், தமிழரின் உயிர் திருக்குறள்” என்ற பெருவாசகம் முழங்குகிறது. 33 ஆண்டுகளாய், ஐம்பத்தைந்து அமெரிக்க நகரங்களின் தமிழ்ச் சங்கங்கள் கூட்டுப் பேரவை (fetna.org) இயங்குகிறது. பேரவைத் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி, செயலர் சித்திரை முதல் நாளைத் தொல்காப்பியர் திருநாள் என தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்துக் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தைப்பூசம், தமிழ்நாடு நாள் என்று புதிய விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழின், தமிழரின் அடிப்படை நூலைத் தந்த தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல் நாள் (தமிழ்ப் புத்தாண்டு தினம்) வரும்போது, மாணவர்கள் இளைஞர்கள் எல்லோரும் தொல்காப்பியம், தமிழ்வழிக் கல்வி, நம் மரபுகள் இவற்றை வாழையடி வாழையாக வளர்ப்பதன் தேவையை நினைக்க ஒரு வாய்ப்பாக அமையும். திருவள்ளுவர் திருநாள் என பொங்கல் நாள் அமைந்துவிட்டது. அது தமிழ் இலக்கியத்தை உலகத்தார் எல்லோருக்கும் நினைவூட்டும் நாள். திருவள்ளுவர் போன்றோர் இலக்கியம் படைக்க தொல்காப்பியரின் இலக்கணம் அடிப்படை. தொல்காப்பியம் தான் தமிழின் முதல் நூல் என்று தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.  திருவள்ளுவருக்குச் சில நூற்றாண்டுகள் முன் வாழ்ந்தவர் தொல்காப்பியர்.

தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்

பொருள் இலக்கணம் என்பது ஆங்கிலத்தில் Poetics எனப்படும். மேலை நாடுகளுக்கு எல்லாம் பொருள் இலக்கண நூலை எழுதியவர் கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் ஆவார். இந்தியாவிலே முதலில் வாழ்க்கையை அகம், புறம் எனப் பிரித்து அதன் திணை, துறைகளும், ஆண்டின் ஆறு பருவங்களும், சூழலியல் உயிரிகளைப் பற்றிய மரபியலும் கொண்ட பொருள் இலக்கணம் எழுதியவர் தொல்காப்பியர் தான். எனவே, தொல்காப்பியர் ‘கிழக்கு திசையின் அரிஸ்டாட்டில்’ என்று போற்றப்படுகிறார். திராவிட மொழிகளை ஆராயவும், வடசொற்கள் அளவுக்கு மீறித் தமிழில் புகாமல் இருக்கவும், வேர்ச்சொல் ஆய்வுகளுக்கும், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் படைக்கவும், சிந்து சமவெளி தமிழ் ஆய்வுகளுக்கும் தொல்காப்பியர் தந்த இலக்கணம் மூல ஊற்றாக விளங்குகிறது. தமிழரின் பெருமைகளில் முக்கியமானது தொல்காப்பியம்.

உலகளாவிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம், குழந்தையர் தினம். அமைதி தினம் என்று குறிப்பிட்ட திங்கள், குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவைகளுக்கு மேலாக அதை ஒட்டி ஒவ்வொரு நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு. அந்த நாட்டின் மிகச் சிறந்த அரசியல் தலைவர் நாள் ஆகியவைப் போற்றும் அடிப்படையில் பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன. தொல்காப்பியம் மொழியியல், இலக்கியவியல் கருத்துகளோடு இயற்பியல் (‘ நிலம், தீ, நீர் வளியொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ( மரபியல் 91); உயிரியல் ( ‘ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே என்று ஆறு வகை அறிவையும் பட்டியலிட்டதோடு ( மரபியல் 27), அவைகளை உடைய உயிரினங்களையும் விளக்கியுள்ளது ( மரபியல் 28-33) ; தாவிரவியல் (ஓரறிவு உடைய தாவரங்களில் புல், மரம் வேறுபாடு, மரபியல்,87) ; உடலியல் ( உந்தி முதலாக முந்துவளி தோன்றி . என்று எழுத்து பிறப்பை விளக்குவது, பிறப்பியல் 1) ; சமூகவியல் ( உயர்ந்தோன், இழிந்தோன், ஒப்போன் என்று மொழி பயன்பாட்டு அடிப்படையில் விளக்கியதோடு (எச்சவியல். 48) அந்தணர், அரசர், வணிகர் , வேளாளர் என்று தொழில் அடிப்படையில் விளக்கியது ( மரபியல் 71- 86) என்பவைகளோடு நூலியல் ( செய்யுளியல் 164 - 170) மரபியல் 99-102, 106-109) உரையியல் ( செய்யுளியல் 78, மரபியல் 102-105) கருத்துகள் காணப்படுவதால் தொல்காப்பியம் தமிழின் முதல் அறிவியல் களஞ்சியம் ஆகும்.

தமிழ் மாதப் பெயர்கள் ஐ என்றும், இ என்றும் முடியும் என சித்திரை, வைகாசி போன்ற 12 மாதப் பெயர்களின் இலக்கணத்தைத் தந்தவரும் தொல்காப்பியரே ஆவார். உயிர் மயங்கியலில்  (46) இகர ஈற்றுச் சொற்களின் புணர்ச்சி மாற்றத்தைக் கூறும்போது  ’திங்கள்முன்னே  இக்கே சாரியை’  என்பதால் வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மாசி, மார்கழி,பங்குனி என்பதும்,  சூத்திரம் (84) ஐகார ஈற்றுப் புணர்ச்சியை விளக்கும் பகுதி என்பதால் சித்திரை, கார்த்திகை, தை ஆகிய மூன்றும் அடங்கும். இதே போல,  27 நட்சத்திரப்  பெயர்களின்  கடைசி எழுத்துகளுக்கும் தொல்காப்பியம் நூற்பாக்கள் வழங்குகின்றன. தமிழர்கள் வாழ்வில் சித்திரை 1-ம் நாள் (சகாப்தம்) வருடப் பிறப்பாக பல நூற்றாண்டுகளாக விளங்குகிறது. மேட இராசியில் சித்திரை தொடங்குதலைச் சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் முதன்முறையாகக் காண்கிறோம். வளர்முகமாக இந்நாள் அமைந்துள்ளது. சித்திரை முதல் பங்குனி ஈறாக எல்லா மாதங்களுக்கும் இலக்கணம் அளித்தவர் தொல்காப்பியரே. எனவே, எந்த நாளையும் விடப் பொருத்தமாகத் தமிழ் வருஷப் பிறப்பு நாள் ஆகிய சித்திரை ஒன்று அமையும். அதனை, அரசாணை வெளியிட்டு, தமிழ் வருடப் பிறப்பு (சித்திரை 1) அன்று ’தொல்காப்பியர் திருநாள்’ என அரசு ஆண்டுதோறும் கொண்டாடும் என அறிவித்திட வேண்டுகிறோம். தமிழ்நாட்டிலும், உலகெங்கிலும் வாழும் பல கோடித் தமிழரும் தமிழ் வளர்ச்சிக்கு நல்ல செயல் எனப் பாராட்டுவர். தமிழ் கற்கும் குழந்தைகளுக்கும் தொல்காப்பியர் பற்றி நினைவூட்டத் தொல்காப்பியர்  திருநாள் என்றும் நின்று உதவும்.

செ. வை. சண்முகம்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

நா. கணேசன்                                                                                               

ஏரோஸ்பேஸ் விஞ்ஞானி , ஹூஸ்டன், அமெரிக்கா      

Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Feb 28, 2021, 5:39:30 AM2/28/21
to vallamai, housto...@googlegroups.com, panbudan, tiruva...@googlegroups.com
தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை முதல்நாளை அமெரிக்கக் கூட்டுத் தமிழ்ச் சங்கப் பேரவை (55 பெருநகரங்களில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள்) விழா எடுப்பதும், அம்முயற்சியை முன்னெடுக்கும் என் பணிகளையும், பெட்னா (http://fetna.org ) தலைவர் கால்டுவெல் வேள்நம்பி மற்றும் ஆட்சிக்குழுவை வாழ்த்தி, சாகித்திய அகாதமிக் கவிஞர், ஈரோடு தமிழன்பன் நீண்ட, அழகிய கவிதை இயற்றியுள்ளார். வரும் தமிழ் ஆண்டுப் பிறப்பு தொல்காப்பியர் திருநாள் என, தைப் பிறப்பு (தை முதல்நாள், பொங்கல்) திருவள்ளுவர் திருநாள் என்றானது போல, பேரவை முயற்சியால் தமிழக அரசாங்கத்தைக் கேட்டுள்ளது. நம் இளைஞர்களுக்கு தமிழகத்திலும், வெளியே உலகம் எங்கும் தொல்காப்பியரைக் கொண்டாட, நினைவூட்டித் தொல்காப்பியம், திருக்குறள், தமிழ், மொழியியல், இலக்கியம், இந்திய வரலாறு, வருங்காலங்களில் தமிழ், திராவிட மொழிகளின் இருப்பு, வளர்ச்சி எனப் பல்வேறு செயல்களுக்குத் திருவள்ளுவர் திருநாள் (தை 1) + தொல்காப்பியர் திருநாள் (சித்திரை 1, “ஆடு தலை ஆக” எனு சங்க இலக்கியம் கூறும் ஆண்டுப் பிறப்பு) மிக உதவும். அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை கடிதம், முதன்முதலில் பேரா. தமிழண்ணல் தினமணியில் 2011-ம் ஆண்டில் தொல்காப்பியர் திருநாள் கொண்டாடவேண்டும் என்றும், அது சித்திரை முதல்நாளாக அமையலாம் என்றும் எழுதியிருந்தார்கள். 2021-ல், உலகத் தாய்மொழி நாளில், தினமணியில் தொல்காப்பியர் திருநாள் எனச் சித்திரை 1-ம் நாள் கொண்டாட வேண்டும் என அச்சான கட்டுரை வாசித்திருப்பீர்கள்,
http://nganesan.blogspot.com/2021/02/chithirai-1st-tolkappiyar-tirunaal.html

நா. கணேசன்
http://nganesan.blogspot.com

N. Ganesan

unread,
Mar 6, 2021, 12:25:10 PM3/6/21
to vallamai, housto...@googlegroups.com, panbudan, tiruva...@googlegroups.com

தொல்காப்பியர் திருநாள் பதிகம்

(கட்டளைக் கலித்துறை)

 

இப்படி வாழ்கென இன்தமிழ்ப் பாட்டில் இசைத்தவரை

அப்படிச் சொல்ல அகம்புற மென்றே அறைந்தவரை

முப்பால் புகட்டும் முதல்வனைக் காட்டிலும் மூத்தவரை

எப்பால் புகினும் இவர்க்கிணை இல்லென ஏத்துவமே!  1

 

பாருயிர் தம்மைப் பகுத்து வகுத்ததைப் பட்டியலில்

ஆருயிர் ஆய்ந்தே அறிவோ டிணைத்த அறிவியலார்

ஊரும் உலகும் உவந்திடத் தந்த உயிரியலார்

பாருள மாந்தர் பணிந்து வியந்திடும் பாங்கினரே!  2 

 

மூலமாம் நூலிது மூலையில் சோர்தல் முறையிலவே

ஞாலம் முழுவதும் ஞாயிறு போல நலம்தரவே

காலம் கனியும் கணேசன் அருளால் கணப்பொழுதில்

பாலம் அமைக்கும் பணியில் இணைவோம் பரிவுடனே! 3  

 

இணையெனப் பாரில் எவரும் இலாத இலக்கணியை

அணையா விளக்கென யாவரும் போற்றிட ஆக்கிடுவோம்

இணையும் கரங்கள் எதனையும் வென்றிடும் என்றறிவோம்

கணைபோல் விரைந்து கடமைகள் செய்வோம் களிப்புறவே! 4

 

அலகிலாச் சீர்கொள் அருந்தமிழ் காத்திடும் ஆர்வமுடன்

உலகெலாம் வாழும் உணர்வுடைச் சான்றோர் உயிர்ப்புடனே

பலவகை யானும் பணிகளைச் செய்திடும் பாங்குடனே

இலக்கை அடையும் இலக்கினைக் கொண்டே இயங்குவரே! 5

 

மொழியியல் என்னும் மொழிநெறி பற்றி மொழிந்தவரை

விழியெனப் போற்றி விளங்கிடச் செய்ய விரும்புவதால்

அழியாப் புகழை அவருக் கணியாய் அளிப்பதற்கு

வழியென ஒன்றை வகுக்கும் தமிழினம் வாழியவே!   6 

 

காட்டா றெனப்படும் காலம் சமைத்த கடுஞ்சுழலில்

மாட்டா திருந்த மணிநூல் உலகினில் மற்றிலையே

கேட்டா லெவரும் கிளர்ந்தெழு வார்கள் கெழுதகையீர்

நாட்டா ரிடையே நவின்றிட வாரீர் நலம்பெறவே!  7

 

தொல்காப் பியர்திரு நாளென ஒன்றினித் தோன்றிடவே

ஒல்காப் புகழ்மிகு ஒண்டமிழ்ச் சீர்மிக ஓங்கிடவே

ஒல்லும் வகையில் உறுதுணை யாகி உதவிடவே

வெல்லும் வகையில் வெறிகொண் டெழுக வினைசெயவே!  8

 

பத்தரை மாற்றுப் பசும்பொன் எனத்தகும் பாவலரின்

முத்திரை யாக முழங்கும் திருநாள் முகிழ்த்திடவே

இத்தரை மீதினில் என்றும் அவர்பேர் இருந்திடவே

சித்திரை ஒன்று சிறப்பாய் அமைந்திடச் செய்குவமே!  9

 

செல்வழி நன்று சிறகை விரிப்போம் சிலிர்ப்புடனே

வெல்வ துறுதி விளைந்திடும் வெற்றி விரைவினிலே!

தொல்காப் பியரவர் தொன்மை அறிந்த அரசினரும்

நல்குவர் ஆணை நனிவிரை வாக நடைபெறுமே!  10

 

        -கவிஞர் இனியன், கரூர்.

         துச்சில்: அமெரிக்கா

 




On Sunday, February 28, 2021 at 1:20:20 PM UTC-6 N. Ganesan wrote:
On Sun, Feb 28, 2021 at 6:14 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
முயற்சி மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் 
சக 


திருத்தொண்டர் திருவந்தாதி, திருத்தொண்டர் புராணம் (பெ.பு.) போன்ற வழிநூல்களுக்கு அடிப்படை சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத்தொகை. சுந்தரர் வழியில் காரைக்குடியில் கம்பன் கழகம் நிறுவிய சா. கணேசன் ‘தமிழ்த்தொண்டத்தொகை’ இயற்றினார். தமிழ்த்தாய்க்குக் கோவில் அமைத்து வடிவம் தந்தவரும் இவரே. தமிழ்த்தாய் வாழ்த்து 50+ ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசாங்கத்தின் கடவுள் வாழ்த்தாக அமைந்துவிட்டது: http://nganesan.blogspot.com/2020/06/thamizthaay-50-years-state-anthem.html  திருவள்ளுவர் தொடர் ஆண்டு, கலி அப்தம், சக அப்தம் போன்றவற்றை விட்டு அரசாணைகளில் திருவள்ளுவர் திருநாள் தை 1 (பொங்கல்) அன்று தொடங்குகிறது. திருவள்ளுவர் திருநாளுக்கு இணையாக, தொல்காப்பியர் திருநாள் என சித்திரை 1 (தமிழ் ஆண்டுப் பிறப்பு) அமையக் கவிஞர்கள் வாழ்த்தியுள்ளனர். அவர்களுக்கு நன்றி பல.

காரைக்குடி கம்பன் கழகம் நடத்திய இணைய வழியான உரையரங்கில் கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்கள் இயற்றிய தமிழ்த்தொண்டத் தொகையிலிருந்து ‘காசில் இலக்கணந்தரு தொல்காப்பியனுக்கு அடியேன்’ உரை வழங்குபவர். பேராசிரியர், முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை, இயக்குநர், தமிழ்ப்பண்பாட்டு மையம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. https://youtu.be/o_z0SDWpedE

கேட்டு மகிழ்க!
டாக்டர் நா. கணேசன்
http://nganesan.blogspot.com/2021/02/chithirai-1st-tolkappiyar-tirunaal.html


உலகத் தாய்மொழி நாள் வெளியீடு - தினமணியில்.
சித்திரை முதல் நாள்... தொல்காப்பியர் திருநாள்!- Dinamani
தொல்காப்பியம் பற்றி வாசிக்க நூற்றுக்கணக்கான நூல்கள் அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளன. பலவற்றை,
http://tamildigitallibrary.in போன்ற தளங்களில் இருந்து தரவிறக்கிப் படிக்கலாம்.
இந்திய இலக்கியச் சிற்பிகள்:

    தொல்காப்பியர்
    ஆசிரியர்: தமிழண்ணல்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0726.html

    கவியரங்கம் போல, கவிமழை பொழியட்டும். நனிநன்றி.
    நா. கணேசன்

 
நனிநன்றி.
 dinamani_comment.jpg
தினமணி, வாசகர் கருத்து, 28-2-2021

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/fz5rfsgRVQY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/98bd698c-4b40-4d73-a196-a98b6b55e29an%40googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 6, 2021, 5:41:18 PM3/6/21
to vallamai, housto...@googlegroups.com, panbudan, tiruva...@googlegroups.com
அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா நாடுகளின் 57 பெருநகரங்களின் தமிழ்ச் சங்கங்களின் கூட்டுப் பேரவை தழிழ் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளது. இருக்கிற 12 மாதப்பெயர்கள், 60 வருடப் பெயர்களை மாற்றுவதில்லை ஃபெட்னா.

  தமிழ்த்தாய் வாழ்த்து 50+ ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசாங்கத்தின் கடவுள் வாழ்த்தாக அமைந்துவிட்டது: http://nganesan.blogspot.com/2020/06/thamizthaay-50-years-state-anthem.html  திருவள்ளுவர் தொடர் ஆண்டு, கலி அப்தம், சக அப்தம் போன்றவற்றை விட்டு அரசாணைகளில் திருவள்ளுவர் திருநாள் தை 1 (பொங்கல்) அன்று தொடங்குகிறது. திருவள்ளுவர் திருநாளுக்கு இணையாக, தொல்காப்பியர் திருநாள் என சித்திரை 1 (தமிழ் ஆண்டுப் பிறப்பு) அமைய  முன்னெடுப்பைச்
செய்கிறது ஃபெட்னா பேரவை. முழு விவரங்களுக்கும் பேரவை தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் காணலாம்.

நா. கணேசன்


Reply all
Reply to author
Forward
0 new messages