ஜூன் 17: புரட்சியாளர் வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று..

183 views
Skip to first unread message

அச்சு !!!

unread,
Jun 17, 2014, 3:51:04 AM6/17/14
to பண்புடன்
Inline images 1


ஜூன் 17: புரட்சியாளர் வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று..

ஜூன் 17, 1911... ஒட்டுமொத்த பிரிட்டனையும் இந்தியாவை நோக்கித் திரும்பிப் பார்க்கவைத்த நாள்!

அன்றுதான், பிரிட்டிஷ் அதிகாரி ஆஷ் கொலை செய்யப்பட்டார். மணியாச்சி ரயில் நிலையத்தில் நடந்த இந்தக் கொலை, ஒரு தனிமனிதர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர் மனதில் வெகுண்டு எழுந்த தார்மீகக் கோபத்தின் வெளிப்பாடு. ஆஷ் கொலை... ஓர் எச்சரிக்கை மணியைப் போலத்தான் ஒலித்தது. ஆஷை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துபோன வாஞ்சிநாதனின் உயிர்த் தியாகம் மகத்தானது.

படம்: ஏ.ஆர்.சரவணன்.


ஸ் பெ

unread,
Jun 17, 2014, 3:53:19 AM6/17/14
to panbudan

2014-06-17 9:50 GMT+02:00 அச்சு !!! <achusu...@gmail.com>:
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர் மனதில் வெகுண்டு எழுந்த தார்மீகக் கோபத்தின் வெளிப்பாடு




--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

மோரு

unread,
Jun 17, 2014, 3:54:43 AM6/17/14
to பண்புடன்
​ஹாஹாஹா,

வாஞ்சி நாதன் சாதி வெறிலதான் ஆஷ் துரைய கொன்னாருன்னு சொன்னதெல்லாம் பொய்யா அச்சு :-)

இப்படி நிசமாலுமே எத்தனை விடுதலை போராளிகள் இருக்கிறார்களோ ​:-)) வாஞ்சி புரட்சியாளர்னா சேகுவேரா,அம்பேத்து,பெரியாரெல்லாம் அடிப்படைவாதிகள்.

2014-06-17 13:20 GMT+05:30 அச்சு !!! <achusu...@gmail.com>:
அன்றுதான், பிரிட்டிஷ் அதிகாரி ஆஷ் கொலை செய்யப்பட்டார். மணியாச்சி ரயில் நிலையத்தில் நடந்த இந்தக் கொலை, ஒரு தனிமனிதர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர் மனதில் வெகுண்டு எழுந்த தார்மீகக் கோபத்தின் வெளிப்பாடு. ஆஷ் கொலை... ஓர் எச்சரிக்கை மணியைப் போலத்தான் ஒலித்தது. ஆஷை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துபோன வாஞ்சிநாதனின் உயிர்த் தியாகம் மகத்தானது.




--


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

அச்சு !!!

unread,
Jun 17, 2014, 4:00:53 AM6/17/14
to பண்புடன்

அச்சு !!!

unread,
Jun 17, 2014, 4:04:19 AM6/17/14
to பண்புடன்

 சாதி வெறியாளர் யார்?

2012 ஆகஸ்ட் 1: செங்கோட்டை சென்றிருந்தபோது, ஆற்றங்கரைத் தெருவில் எங்கள் இல்லத்தில் இருந்து 4 வீடு தள்ளியிருக்கும் பெரியவர் செங்கோட்டை வி.ஜனார்த்தனன் ஐயா வீட்டுக்கு வழக்கம் போல் சென்று கதவைத் தட்டினேன். காலை நேரம் எழுந்து மெதுவாக வந்து அமர்ந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இவர், பணி ஓய்வு பெற்ற நல்லாசிரியர். அகவை 82 தொட்டவர். செங்கோட்டை தொடர்பான ஊர்க் கதைகளை, சுதந்திரப் போராட்ட நினைவுகளை, திருவிதாங்கூர் சமஸ்தான சங்கதிகளை என் சிறுவயது முதல் எனக்குச் சொன்னவர் இவர். இவரிடம் இருந்து கட்டுரைகளை மலையாள மொழிபெயர்ப்புகள் பலவற்றினை கேட்டுப் பெற்று மஞ்சரி இதழ்களில் பிரசுரம் செய்திருக்கிறேன். வாசகர் விரும்பும் அருமையான எழுத்து நடை இவருக்கு! 

இம்முறை எங்கள் பேச்சு பழைய பள்ளிக்கூடங்கள், அந்நாளைய படிப்பு, கல்லூரி என்று வந்தது. அப்போது வாஞ்சிநாதனின் படிப்பு பற்றியும் பேச்சு வந்தது. நானும்கூட ஒரு முறை வாஞ்சிநாதன் குறித்த கட்டுரையினை எழுதியபோது, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.ஆனர்ஸ் படிப்பில் வாஞ்சிநாதன் படித்ததாக எழுதியிருந்தேன். கிடைத்த தகவல் அப்படி. ஆனால், இதை கடுமையாக மறுத்தார் ஐயா வி.ஜனார்த்தனன். 1900 ஆம் ஆண்டுகளில் செங்கோட்டையில் மலையாளம் சொல்லித் தரும் பள்ளி ஒன்று இருந்தது. அதற்கு மலயான்ஸ்கூல் என்று பெயர். நாங்களும் துவக்க காலத்தில் அப்படித்தான் அழைத்தோம். இன்றும் இந்தப் பள்ளி இருக்கிறது. ஆனால் வாஞ்சிநாதன் பெயரில். காரணம் வாஞ்சியின் வீட்டுக்கு அருகே இருந்த பள்ளி. வாஞ்சி பயின்ற பள்ளி. அதனால் அவன் பெயரே இதற்கு இடப்பட்டுள்ளது. இது அல்ல விஷயம். அன்றைய நாள்களில் பள்ளிக் கல்வி முடிப்பதே பெரும்பாடு. அதையும் மீறி கல்லூரிக்குள் காலெடுப்பதெல்லாம் கனவுதான் பலருக்கு. பொருளாதார ரீதியில் மிகப் பெரும் நிலையில் இருப்போரே கல்லூரியில் காலெடுத்து வைக்க முடியும். ஏழைக் குடும்பத்தில் பிறந்த வாஞ்சியால் திருவனந்தபுரம் கல்லூரியில் நுழைந்திருக்கவே முடியாது. இது தவறான பதிவு. இதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. யார் இப்படிக் கிளப்பியது என்று தெரியவில்லை. வாஞ்சி அந்தக் கல்லூரிப் படிப்பு வயதில் இங்கே புனலூரில் காட்டு இலாகாவில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான்.... இப்படியாகப் பேச்சு போனது. 

வீட்டுக்கு வந்து மாடியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி, வாஞ்சிநாதன் குறித்து இணைய தளங்களில் எழுதப் பட்டிருந்த துர்பிரசாரங்கள் குறித்து யோசித்தேன். வாஞ்சி ஒரு சாதி வெறியாளன் என்று நிறுவுவதற்காக ஒரு கதையைக் கட்டியிருக்கிறார்கள். ஆஷ் துரையை 'ரொம்ப நல்லவன்’ ஆக்க மிகவும் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் வரலாறு பெரும்பாலும் கிறிஸ்துவ ஆதிக்க மேல்நாட்டு மக்களின் பாதிப்பில் எழுதப் பட்டவை. இங்குள்ள வரலாறுகள் பெரும்பாலும் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப, அதற்குத் தகுந்தபடி புனைந்து எழுதப் பட்டவை. பரப்பப் பட்டவை. அதில் ஒன்று, வாஞ்சிநாதன் விஷயத்திலும் நடந்துள்ளது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை நசுக்க, சுதந்திர வேட்கை கொண்ட வீரர்களை மனிதாபிமானமே சிறுதும் இல்லாமல் படாதபாடு படுத்திய ஆஷ் துரையை நல்லவனாகச் சித்திரிக்க, வாஞ்சி பலியாடு ஆக்கப்பட்டான்.
கதை இதுதான்... பிரசவ வலியால் துடித்தபடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை அக்ரஹாரத்தின் வழியே விட மறுத்தானாம் வாஞ்சி. அப்போது ஆஷ் துரை அங்கே வந்து அக்ரஹாரத்தின் வழியே அந்தப் பெண்ணை அழைத்துச் செல்ல வழி செய்தானாம்... இதனால் ஆஷ் துரை மீது வஞ்சம் வைத்த வாஞ்சி, அவனை சுட்டுக் கொன்றானாம்... இப்படியொரு கதையைப் புனைந்தவர்களைக் காட்டிலும், அதைச் சொல்லிக்கொண்டு திரியும் நபர்கள்தானே சாதி வெறி பிடித்தவர்கள்! கட்டிய மனைவி பிரசவ காலத்தில் தவிப்பதையும், மாமனார் வீடு சென்ற அவளைக் காணவும் பொழுதின்றி, தாம் மேற்கொண்ட பாரதமாதா சங்கத்தின் விடுதலைப் போராட்டப் பணிகளில் முழு ஈடுபாடு காட்டிய சிற்றிளைஞன் வாஞ்சிக்கு இப்படியோர் அவப்பெயர் சூட்ட வேண்டுமானால், இவர்களின் உள்ளத்திலும் அறிவிலும் சாதி வெறி எப்படிப் புரையோடிப் போயிருக்க வேண்டும்!?
இந்தக் கதையில் இது எந்த அக்ரஹாரத்தில் நடந்தது என்று குறிப்பில்லை. பிரசவ வேதனையில் அந்தப் பெண் வந்தபோது, சரியாக அதே நேரம் ஆஷ் துரையும் வந்தது எப்படி என்று கூறவில்லை. இவை எல்லாவற்றையும் விட முக்கியமான அம்சம், ஊரின் பூகோள அமைப்பைப் புரிந்துகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் கதைதான்!
செங்கோட்டை அந்தக் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அதற்கும், பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் தொடர்பு இல்லை. 1956ல் மொழி வாரி மாகாணங்கள் அமையப் பெற்ற போதுதான், கன்னியாகுமரி, நாகர்கோவில் சில பகுதிகள், செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழகத்துடன் இணைந்தன. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சமவெளிப் பரப்பாக இருந்தாலும், சமஸ்தானத்துடன் இருந்த பகுதி என்பதால் அங்கே பிரிட்டிஷ் அதிகாரிகள், ராணுவத்தினர் நுழைவதற்கு அனுமதி தேவை. திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் ஒரு உடன்படிக்கை இருந்தது பிரிட்டிஷாருக்கு. தேடப்படும் சுதந்திரப் போர் வீரர்கள் சமஸ்தானத்தில் எங்காவது ஒளிந்திருந்தால் அவர்களைப் பிடித்து பிரிட்டிஷார் வசம் ஒப்படைக்க வேண்டும். இது உடன்படிக்கை. மற்றபடி, திருவிதாங்கூர் ஒரு சுதந்திரமுள்ள, அதே நேரம் அடிமைப்பட்ட நிலை என இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்தது.

இத்தகைய சூழலில், திருநெல்வேலி சப்-கலெக்டர் அந்தஸ்தில் இருந்த அதிகாரி ஆஷ் துரை, தென்காசி வரை மட்டுமே வர இயலும். குற்றாலத்தில் குளிக்க உரிமை இருந்தது. அதைத் தாண்டி அவர்கள் சமஸ்தானப் பக்கம் வரவும் முடியாது. இன்றும் செங்கோட்டை நகருக்கு ஒரு கி.மீ. வெளியே பிரானூர் பார்டர் என்று ஒரு பகுதி உள்ளது. அதுதான் சமஸ்தானத்தின் நுழைவாயில். பார்டரைத் தாண்டி ஆங்கிலேயர்கள் வர இயலாது. அவர்களுக்கு ஆட்சி அதிகாரமும் கிடையாது. அவ்வாறு இருக்க, வாஞ்சிநாதன் இருந்த திருவிதாங்கூர் ஆட்சிக்கு உட்பட்ட செங்கோட்டையில் ஆஷ் துரை கட்டளை இட்டு ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை பிரசவத்துக்காக அக்ரஹாரம் வழியே செல்ல வைத்தார் என்று புனையப்பட்ட கதை எவ்வளவு மோசமான சாதி வெறியில் உமிழப் பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இன்றைய செங்கோட்டை ஊரின் அமைப்பில், அக்ரஹாரங்கள் இருந்த பகுதியில் நீங்கள் நின்று பாருங்கள் புரியும். மொத்தம் ஏழு அக்ரஹாரங்கள் இருந்துள்ளன. சிவன் கோவில் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, பெருமாள் கோவிலை ஒட்டிய இரண்டு மாட வீதிகள், கிருஷ்ணன் கோவில் பின்னுள்ள ஒரு மாடத் தெரு... இப்படி. இந்தப் பகுதிகள் ஊரில் இருந்து ஒதுக்குப் புறமாக தனித்திருக்கும். ஊரின் பிரதான கொல்லம் சாலை அக்ரஹாரங்களைச் சுற்றி வெளியே செல்லும். ஊருக்கு வெளிப்புறமாக தனித்திருக்கும் அக்ரஹாரங்கள் என்பதால், மருத்துவமனைகள் இருக்கும் செங்கோட்டை நகருக்குச் செல்வதற்கு நீங்கள் அக்ரஹாரங்களை அவசியம் கடந்துதான் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லவே இல்லை. அப்படி இருக்கும்போது, எங்கிருந்து அந்த கீழ்ச் சாதிப் பெண் வந்தாள் என்ற விவரம் யாராலும் சொல்லப் படவுமில்லை. அந்தப் பெண்ணை மருத்துவம் பார்க்க அக்ரஹாரம் வழியேதான் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவசிய நிலை இல்லாத போது, எதற்காக அப்படி அழைத்துச் சென்றார்கள் என்ற குறிப்பும் இல்லை.
இப்படி எல்லாம் சிறுமைக் கற்களை எய்து, ஒரு சுதந்திரப் போராட்ட வீரனை மட்டும் இந்த சாதி வெறியர்கள் கொச்சைப் படுத்தவில்லை, இந்திய சுதந்திரப் போராட்டத்தையே கொச்சைப் படுத்துகிறார்கள். காரணம், இந்திய சுதந்திரத்தால், கிறிஸ்துவ மதம் பரப்பும் செயல் தடைப் பட்டதாக எண்ணினார்கள் அவர்கள். சுதந்திரப் போராட்டத்தில் சாதி பார்த்து பாரத மாதா சங்கம் அமைக்கவில்லை. 1911ல் மாண்டு போன வாஞ்சிநாதனும், அவனுடன் கதை முடிந்துபோன பாரத மாதா சங்கமும் இத்தகைய சிறுமதியாளர்கள் வளர்த்துவிட்ட சாதி வெறிச் சங்கமுமில்லை, சாதி வெறி மனிதமும் இல்லை. 

மாவீரன் மாடசாமியின் வரலாற்றைப் படியுங்கள். கல்கி எழுதிய பொங்குமாங்கடல் சிறுகதையைப் படியுங்கள். தினமணியின் முதல் ஆசிரியர் தென்காசி எஸ். சொக்கலிங்கத்தின் வரலாற்றைப் பாருங்கள். எத்தகைய சுயநலமற்ற தியாகத் திருவுள்ளங்கள் இந்த சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களே இத்தகைய புனைகதைகளைக் கேட்டு எழுதுவது வேதனையிலும் வேதனை. செண்பகராமன் பிள்ளை என்ற மாவீரன் ஜெர்மனியின் ஹிட்லரைக் கலங்கடித்தவர். நேதாஜிக்கு இந்திய தேசிய ராணுவம் அமைக்க உந்து சக்தியாக இருந்தவர். ஜெய்ஹிந்த் கோஷம் கொடுத்த புண்ணியவான். அடிமை இந்தியாவில் என் உடல் அடக்கம் செய்யப் படக் கூடாது, என் உடலின் அஸ்தி கூட அங்கே விழக்கூடாது என்று சபதம் இட்ட வீரர். செண்பகராமன் இறந்து வெகு காலம் வரை அவரது மனைவியால் பாதுகாக்கப்பட்டிருந்த அஸ்தி, இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் இந்திய தேசியக் கொடி பறந்த கப்பலில் எடுத்துவரப்பட்டு கரமனை ஆற்றின் கரையில் சுதந்திர இந்தியாவில் தூவப்பட்டது என்பதைக் கேள்விப் படும்போது எவ்வளவு சிலிர்ப்பும் மரியாதையும் நமக்கு வரவேண்டும்?! ஆனால்... சாதி வெறியின் உச்சத்தில் திளைத்திருக்கும் சமுதாயத்தில் செண்பகராமனின் வீரம் ஏன் கொண்டாடப் படாமல் போனது என்பது தெளிவாகத் தெரிகிறதே! 



On 17 June 2014 13:30, அச்சு !!! <achusu...@gmail.com> wrote:

Gokul Kumaran

unread,
Jun 17, 2014, 5:00:30 AM6/17/14
to Panbudan

2014-06-17 12:03 GMT+04:00 அச்சு !!! <achusu...@gmail.com>:
எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களே இத்தகைய புனைகதைகளைக் கேட்டு எழுதுவது வேதனையிலும் வேதனை.

Thanks Achu

Gokul Kumaran

Twitter: @gokuldubai
Sent from Web Gmail

அச்சு !!!

unread,
Jun 17, 2014, 5:01:18 AM6/17/14
to பண்புடன்
மோரு கொஞ்சம் இணையத்த நல்லா கவனி. தமிழ்நாட்டுல இதுவரை பெரிய அளவில் இல்லாத ஆர்.எஸ்.எஸ் இப்ப வேகமா வளர்ந்திட்டு வர்றது நல்லா புரியும். ஆர்.எஸ்.எஸ்க்கு ஆதரவான பதிவுகள் அதிகமா வருது. இதுக்கு முக்கிய காரணம் இம்மாதிரி அவதூறான பதிவுகள் போடுற போலி புரட்சியாளர்கள்தான். ஆர்.எஸ்.எஸ்சில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், ஆர்.எஸ்.எஸ்சில் இல்லாமல் இருப்பவர்களும் ஆர்.எஸ்.எஸ்க்கு ஆதரவாக போடும் பதிவுகளை பார்க்க முடிகிறது. என் நட்பு வட்டத்தில் இருப்பவர்களே அதற்கு உதாரணம். கம்யூனிஸ்ட் குடும்பத்தில் பிறந்து பள்ளியில் படிக்கும்போதே கம்யூனிஸ்ட் சிந்தனைகளோட வந்த என் நண்பன் ஒருவன் இப்பொழுது தீவிர ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளனாக மாறிவிடுவானோ என்ற நிலையில் இருக்கிறான்.

இன்னேரம் நானும் காவி ட்ரொவசர் மாட்டி இருப்பேன் நல்லவேளை 
நான் பேஸ்புக்கில் சேர்வதற்கு முன் பல கூகுள் குழுமங்களில் இருந்து பக்குவபட்டதால் என்னால் அந்த டுபாக்கூர் புரிட்சியாளர்களின் பதிவுகளை நான் பெரிதாக எடுத்துகொள்வதில்லை.
 

ஸ் பெ

unread,
Jun 17, 2014, 5:23:16 AM6/17/14
to panbudan
எனக்கென்னமோ தனி தமிழ்நாடுகு ஆதரவான கூட்டம் தான் அதிகமாகிட்டு வர மாதிரி இருக்கு.. ;-)



--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

ஸ் பெ

unread,
Jun 17, 2014, 5:26:50 AM6/17/14
to panbudan
இத மாதிரி எழுதினா நாங்க காக்கிக்கு ஆதரவா மாறிடுவோம்,அத மாதிரி எழுதினா நாங்க மோடிக்கு ஆதரவாளர் ஆகிடுவோம் அப்பிடின்னு சொல்றதே நம்ம சார்பு நிலையை தான் கட்டுது.. 

அப்பிடி பார்த்தா நானும், இன்னும் பிறரும் சிறுபான்மையினத்தவரின் காவலாளியாக (குறிப்பா குமரியில்) காட்டிக்கொள்ளும் காங்கிரசை கட்டிக் கொண்டு அழணும் ;-)

அச்சு !!!

unread,
Jun 17, 2014, 5:30:08 AM6/17/14
to பண்புடன்
2014-06-17 14:56 GMT+05:30 ஸ் பெ <stalinf...@gmail.com>:
இத மாதிரி எழுதினா நாங்க காக்கிக்கு ஆதரவா மாறிடுவோம்,அத மாதிரி எழுதினா நாங்க மோடிக்கு ஆதரவாளர் ஆகிடுவோம் அப்பிடின்னு சொல்றதே நம்ம சார்பு நிலையை தான் கட்டுது.. 

ரொம்ப கஷ்டபட்டு கண்டுபிடிக்காதீங்க, நான் மேல சொன்னதே அதைத்தான். அதற்கு காரணமும் டுபாக்கூர் புரட்சியாளர்கள்தான் என்றும் தெளிவாவே சொல்லி இருக்கேன்.

ஸ் பெ

unread,
Jun 17, 2014, 5:30:39 AM6/17/14
to panbudan
இந்திய சுதந்திர போராட்டத்தை ஒரு காவி கலவையாக உருவாக்க என்ன பாடுபடுகிறார்கள் பாருங்கள்..

கிறிஸ்தவ மதம் பரப்ப வந்தவர்களுக்கும், இங்கிருந்த ஆங்கிலேயே ஆட்சியாளர்களுக்கும் இருந்த முரண்பாடுகள் கடைசியில் இங்கிலாந்து ராணியின் முன் வெடித்தது வரலாறு.. இணையம் முழுக்க அது குறித்தான தகவல்கள் கொட்டிக்கிடக்கிறது..

ஒரு பதிவு எழுதும்போது, வெந்தது வேகாதது அப்பிடின்னு எதுவும் கிடையாது.. ஆங்கிலேயனா அவன் மதம் பரப்ப வந்தவன் என எழுத வேண்டியது.. அப்போ தானே நாம இங்க அரியணை ஏற முடியும் ;-)\
 

2014-06-17 10:03 GMT+02:00 அச்சு !!! <achusu...@gmail.com>:
டி எல்லாம் சிறுமைக் கற்களை எய்து, ஒரு சுதந்திரப் போராட்ட வீரனை மட்டும் இந்த சாதி வெறியர்கள் கொச்சைப் படுத்தவில்லை, இந்திய சுதந்திரப் போராட்டத்தையே கொச்சைப் படுத்துகிறார்கள். காரணம், இந்திய சுதந்திரத்தால், கிறிஸ்துவ மதம் பரப்பும் செயல் தடைப் பட்டதாக எண்ணினார்கள் அவர்கள்.




அச்சு !!!

unread,
Jun 17, 2014, 5:35:49 AM6/17/14
to பண்புடன்
2014-06-17 15:00 GMT+05:30 ஸ் பெ <stalinf...@gmail.com>:
இந்திய சுதந்திர போராட்டத்தை ஒரு காவி கலவையாக உருவாக்க என்ன பாடுபடுகிறார்கள் பாருங்கள்..

கிறிஸ்தவ மதம் பரப்ப வந்தவர்களுக்கும், இங்கிருந்த ஆங்கிலேயே ஆட்சியாளர்களுக்கும் இருந்த முரண்பாடுகள் கடைசியில் இங்கிலாந்து ராணியின் முன் வெடித்தது வரலாறு.. இணையம் முழுக்க அது குறித்தான தகவல்கள் கொட்டிக்கிடக்கிறது..

ஒரு பதிவு எழுதும்போது, வெந்தது வேகாதது அப்பிடின்னு எதுவும் கிடையாது.. ஆங்கிலேயனா அவன் மதம் பரப்ப வந்தவன் என எழுத வேண்டியது.. அப்போ தானே நாம இங்க அரியணை ஏற முடியும் ;-)\

உங்க கண்ணுக்கு இத மட்டும்தான் தெரியும்னு நான் நினைச்சது சரியாத்தான் இருக்கு. 

ஸ் பெ

unread,
Jun 17, 2014, 5:42:06 AM6/17/14
to panbudan
ஒரு கட்டுரையில் எதை என்னால் தீர்க்கமாக விவாதிக்க முடியும் என்று நம்புகிறேனோ அதை பற்றி எழுதுகிறேன்.. அவ்வளவே..

2014-06-17 11:35 GMT+02:00 அச்சு !!! <achusu...@gmail.com>:
உங்க கண்ணுக்கு இத மட்டும்தான் தெரியும்னு நான் நினைச்சது சரியாத்தான் இருக்கு. 




அச்சு !!!

unread,
Jun 17, 2014, 5:47:51 AM6/17/14
to பண்புடன்
2014-06-17 15:11 GMT+05:30 ஸ் பெ <stalinf...@gmail.com>:
ஒரு கட்டுரையில் எதை என்னால் தீர்க்கமாக விவாதிக்க முடியும் என்று நம்புகிறேனோ அதை பற்றி எழுதுகிறேன்.. அவ்வளவே..

ஓ சாரிங்க ஸ்பெ, வாஞ்சிய பற்றிய விவாதத்தில் இருந்து திசை திருப்ப செய்த முயற்சியோனு நினைச்சிட்டேன். 


மோரு

unread,
Jun 17, 2014, 5:48:10 AM6/17/14
to பண்புடன்
​ஈழம்னு ஒன்னு இல்லன்னா அப்படித்தான் இருந்திருப்பீரு :-)) காங்கிரஸுக்குத்தான் ஆதரவில்லையே தவிற காங்கிரஸ் ஆதரிக்கிற மிஷனரிக்கு ஆதரவு :-))

நான் முன்னாடியே சொல்லிட்டே தனித்தமிழ்நாடுன்னு ஒன்னு கிடையாது. அது தேவர் நாடு வன்னியர் நாடு கவுண்டர் நாடுன்னு மூனு நாடு​

2014-06-17 14:56 GMT+05:30 ஸ் பெ <stalinf...@gmail.com>:
அப்பிடி பார்த்தா நானும், இன்னும் பிறரும் சிறுபான்மையினத்தவரின் காவலாளியாக (குறிப்பா குமரியில்) காட்டிக்கொள்ளும் காங்கிரசை கட்டிக் கொண்டு அழணும் ;-)




--

அன்போடு

மோரு

மோரு

unread,
Jun 17, 2014, 5:52:29 AM6/17/14
to பண்புடன்
அது காக்கி டவுசர் அச்சு :-))


2014-06-17 14:30 GMT+05:30 அச்சு !!! <achusu...@gmail.com>:
இன்னேரம் நானும் காவி ட்ரொவசர் மாட்டி இருப்பேன் நல்லவேளை 




அச்சு !!!

unread,
Jun 17, 2014, 6:05:01 AM6/17/14
to பண்புடன்
2014-06-17 15:22 GMT+05:30 மோரு <mors...@gmail.com>:
அது காக்கி டவுசர் அச்சு :-))

அது என்னவோ இருந்துட்டு போகட்டும். புரிஞ்சா சரி

ஸ் பெ

unread,
Jun 17, 2014, 6:34:49 AM6/17/14
to panbudan
Mor,

நீ விளையாட்டுக்கு சொன்னாலும், இன்று காங்கிரஸ் நிழலில் இயங்கும் எந்த மதவாதிகளுக்கும் என்னுடைய ஆதரவு இல்லை.. அது பால் தினகரன் ஆனாலும் சரி மோகன்சி லாசரஸ் ஆனாலும் சரி..

இவர்களை கடுமையா எதிர்க்கிறேன்..



2014-06-17 11:48 GMT+02:00 மோரு <mors...@gmail.com>:
விற காங்கிரஸ் ஆதரிக்கிற மிஷனரிக்கு ஆதரவு :-))




PRASATH

unread,
Jun 17, 2014, 6:38:10 AM6/17/14
to பண்புடன்
..வாவ்.... ஐ லைக் திஸ் பொலிடிஷியன் வார்ட்...:)))

ஸ் பெ

unread,
Jun 17, 2014, 6:43:30 AM6/17/14
to panbudan
அன்னிக்கு உள்ள மிசனரிசை காங்கிரஸ் ஆதரிச்சிதா என்ன? ;-)

2014-06-17 12:37 GMT+02:00 PRASATH <pras...@gmail.com>:
வாவ்.... ஐ லைக் திஸ் பொலிடிஷியன் வார்ட்...:)))




PRASATH

unread,
Jun 17, 2014, 6:47:01 AM6/17/14
to பண்புடன்
மீ சேயிங் பார் ஃபன்...
 
அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் கிடையாது நிரந்தர எதிரியும் கிடையாது... இன்று ஆதரவு இல்லை, நாளை கொடுக்கலாம் எனும் அர்த்தம் வருகிறது அல்லவா... அதைச் சொன்னேன்...:)))

ஸ் பெ

unread,
Jun 17, 2014, 6:50:16 AM6/17/14
to panbudan
ஓ அப்பிடி ஒரு அர்த்தம் வருதா? நான் இன்று என சொன்னது இன்னைக்கு தன்னை மிசனரியாக காட்டிக்கொள்பவர்களை..


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

PRASATH

unread,
Jun 17, 2014, 6:53:25 AM6/17/14
to பண்புடன்
:)))

Ahamed Zubair A

unread,
Jun 17, 2014, 7:20:52 AM6/17/14
to பண்புடன்
அப்ப இல்லையா?? :))

மோரு

unread,
Jun 17, 2014, 7:24:32 AM6/17/14
to பண்புடன்
நீ டிமுகன்னு சொல்லிக்காமலே டிமுகவுக்கு வக்காளத்து வாங்குறல்ல அப்படித்தான்னு வச்சிக்கோயேன் :-)

2014-06-17 16:50 GMT+05:30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
அப்ப இல்லையா?? :))




அச்சு !!!

unread,
Jun 17, 2014, 7:32:43 AM6/17/14
to பண்புடன்
2014-06-17 16:50 GMT+05:30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
அப்ப இல்லையா?? :))

ஓடிடு. 

தமிழ்ப் பயணி

unread,
Jun 17, 2014, 7:34:12 AM6/17/14
to பண்புடன்
2014-06-17 13:33 GMT+05:30 அச்சு !!! <achusu...@gmail.com>:

 சாதி வெறியாளர் யார்?

இம்முறை எங்கள் பேச்சு பழைய பள்ளிக்கூடங்கள், அந்நாளைய படிப்பு, கல்லூரி என்று வந்தது. அப்போது வாஞ்சிநாதனின் படிப்பு பற்றியும் பேச்சு வந்தது. நானும்கூட ஒரு முறை வாஞ்சிநாதன் குறித்த கட்டுரையினை எழுதியபோது, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.ஆனர்ஸ் படிப்பில் வாஞ்சிநாதன் படித்ததாக எழுதியிருந்தேன். கிடைத்த தகவல் அப்படி. ஆனால், இதை கடுமையாக மறுத்தார் ஐயா வி.ஜனார்த்தனன். 1900 ஆம் ஆண்டுகளில் செங்கோட்டையில் மலையாளம் சொல்லித் தரும் பள்ளி ஒன்று இருந்தது. அதற்கு மலயான்ஸ்கூல் என்று பெயர். நாங்களும் துவக்க காலத்தில் அப்படித்தான் அழைத்தோம். இன்றும் இந்தப் பள்ளி இருக்கிறது. ஆனால் வாஞ்சிநாதன் பெயரில். காரணம் வாஞ்சியின் வீட்டுக்கு அருகே இருந்த பள்ளி. வாஞ்சி பயின்ற பள்ளி. அதனால் அவன் பெயரே இதற்கு இடப்பட்டுள்ளது. இது அல்ல விஷயம். அன்றைய நாள்களில் பள்ளிக் கல்வி முடிப்பதே பெரும்பாடு. அதையும் மீறி கல்லூரிக்குள் காலெடுப்பதெல்லாம் கனவுதான் பலருக்கு. பொருளாதார ரீதியில் மிகப் பெரும் நிலையில் இருப்போரே கல்லூரியில் காலெடுத்து வைக்க முடியும். ஏழைக் குடும்பத்தில் பிறந்த வாஞ்சியால் திருவனந்தபுரம் கல்லூரியில் நுழைந்திருக்கவே முடியாது. இது தவறான பதிவு. இதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. யார் இப்படிக் கிளப்பியது என்று தெரியவில்லை. வாஞ்சி அந்தக் கல்லூரிப் படிப்பு வயதில் இங்கே புனலூரில் காட்டு இலாகாவில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான்.... இப்படியாகப் பேச்சு போனது. 

வாஞ்சிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து....

*****************************************************************************************************************************************************************

வாழ்க்கைச் சுருக்கம்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.வரை படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே முன்னீர் பள்ளம் சீதாராமய்யாரின் மூத்த புதல்வியான பொன்னம்மாளை மணந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், புனலூர் காட்டிலாகாவில் பணியாற்றினார்.

*****************************************************************************************************************************************************************
..... எ​தை நம்புவ​தென்​றே ​தெரிய​லே... :( :(
 
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
‘காமம் மனத்தில் நுழையும்போது அதன் நிழல்தான் மிகப் பெரிதாகத் தெரியும்’
- ​சோமன், விஷ்ணுபுரம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அச்சு !!!

unread,
Jun 17, 2014, 7:34:33 AM6/17/14
to பண்புடன்
ரொம்ப நாளைக்கு முன்னால் படித்த கட்டுரை. இதில் திரவிய நடாராஜ்ன் என்பவர் வாஞ்சியின் ஊர்க்காரர் அவரின் கமென்ட்டை படிக்கவும்



வாஞ்சிநாதனை பற்றி எனக்கு இருக்கும் பிம்பம் சிம்பிள் – வ.உ.சியும், சிவாவும் தூத்துக்குடி வட்டாரத்தில் ஒரு புரட்சிகரமான மன நிலையை உருவாக்கினார்கள். அவர்களை கலெக்டர் வின்ச்சும், சப்-கலெக்டர் ஆஷும் அடக்க முயன்றார்கள். இந்த தலைவர்கள் ஜெயிலுக்கு போனதும், வ.வே.சு. ஐயர், நீலகண்ட பிரமச்சாரி, மாடசாமி ஆகியோரின் பழக்கமும் அவரை கொந்தளிக்க வைத்தது. கோபம் தலைக்கேறி அவர் ஆஷை சுட்டார். தப்பிக்க வழி இல்லாததால் அவரும் தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.

தமிழ் நாட்டில் அனேகமாக எல்லாருக்கும் இந்த பிம்பம்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்று திரு. சரவணன் வாஞ்சி பற்றி எழுதிய ஒரு பதிவை பார்த்தேன். அதில் ஆஷ் குற்றாலத்தில் பிராமணர்கள் மட்டுமே குளிக்கலாம் என்ற நிலையை மாற்றியதாகவும் அலுவலகத்தில் எல்லாரும் ஒரே இடத்தில் உணவு அருந்த வேண்டும் என்றும், ஒரே குடத்து தண்ணீரை அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டதாகவும் அதனால் கோபம் அடைந்த வாஞ்சி ஆஷை சுட்டதாகவும் எழுதப் பட்டிருக்கிறது.

இருக்கலாம். 1886-இல் பிறந்த ஒரு பிராமணருக்கு ஜாதி உணர்வு இல்லாவிட்டால்தான் ஆச்சரியம். வ.உ.சி. கூட சிறையில் தனக்கு ஒரு வேளாளரோ, இல்லை பிராமணரோ சமையல் செய்து தர வேண்டும், தலித் செய்யக்கூடாது என்று கேட்டாராம். (வ.உ.சி. ஒரு தலித்தை தன் வீட்டு மனிதராகவே பாவித்ததாகவும் ம.பொ.சி. சொல்கிறார், எது சரியோ யானறியேன்) நிலைமை இப்படி இருக்கும்போது சம பந்தி போஜனம் என்று ஒரு வெள்ளைக்கார “மிலேச்ச” கலெக்டர் சொன்னால் கோபம் வருவது புரிந்து கொள்ளக் கூடியதே. அன்று இருந்த சமுதாய நிலையில் ஆஷ் அப்படி சொல்லி இருப்பாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

ஆனால் வாஞ்சியின் கடைசி கடிதத்தை பார்த்தால் அவர் ஆஷின் “ஜாதி ஒழிப்பு முயற்சிகளால்” கோபம் அடைந்து அவரை சுட்டதாக தோன்றவில்லை. அந்த கடிதம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிர்ப்பாகவே இருக்கிறது. குறிப்பாக சுதேசி கப்பல் கம்பெனியை பற்றி வேறு சொல்லி இருக்கிறார். விக்கிபீடியாவில் உள்ளபடி அவரது மரண வாக்குமூலம் கீழே.
I dedicate my life as a small contribution to my motherland. I am alone responsible for this.
3000 youths of this brave country have taken an oath before mother Kali to send King George to hell once he sets his foot on our motherland. I will kill Ashe, whose arrival here is to celebrate the crowning of King George in this glorious land which was once ruled by great samrats. This I do to make them understand the fate of those who cherish the thought of enslaving this sacred land. I, as the youngest of them, wish to warn George by killing Ashe who is his sole representative and has destroyed the Swadeshi shipping company and several other freedom fighters by subjecting them to severe torture.
Vande Mataram. Vande Mataram. Vande Mataram

சரவணன் அவர்களும் வாஞ்சியின் மரண வாக்குமூலம் என்று பதித்திருக்கிறார். விக்கிபீடியாவில் உள்ளதற்கும் அவர் சொல்வதற்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. சரவணனின் version-இல் சுதேசி கப்பல் கம்பெனி பற்றி எதுவும் இல்லை. பசு மாமிசம், சனாதன தர்மம் என்று இரண்டு குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் அதிலும் ஜாதியை பற்றியோ ஆஷ் மற்றும் ஆங்கிலேயர்களின் “சீர்திருத்த” ஆவலைப் பற்றியோ எதுவும் இல்லை.

ஆஷ் குற்றால அருவியை எல்லாருக்கும் உரியதாக ஆக்கி இருக்கலாம். அவர் யாராவது ஒரு அருந்ததியர் பெண்ணை பிராமணர் தெரு வழியாக கொண்டு சென்றிருக்கலாம். அது ஆஷ் மேல் உள்ள கோபத்தை அதிகப் படுத்தி இருக்கலாம். ஆனால் வாஞ்சியின் காரணங்கள் வேறு என்றுதான் தோன்றுகிறது. வாஞ்சி சுதந்திரப் போராட்ட வீரர் என்ற பிம்பம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதே நேரத்தில் நாம் icon-களாக நினைப்பவர்கள் மீது ஒரு உண்மையான பரிசீலனை நடத்தப்பட வேண்டும், அவர்களது குற்றம் குறைகள் மறைக்கப்படக் கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் இது மாதிரி முயற்சிகள் வரவேற்கப் பட வேண்டியதே. ஆனால் icon-களை பற்றி உள்ள பிம்பங்களை கலைத்து அவை icon-கள் இல்லை என்று நிறுவ முயற்சி செய்யும்போது ஆதாரங்களையும் வெகு கவனமாக கொடுக்க வேண்டும் – செங்கோட்டையில் பலரிடம் பேசினேன் என்று மொட்டையாக சொன்னால் போதாது. யார் யாரிடம் பேசினார்கள் என்ற விவரங்கள், ஆஷ் என்ன செய்தார் என்பதற்கான ஆதாரங்கள், பாரத மாதா சங்கம் ஆஷின் இந்த சீர்திருத்த ஆவல் பற்றி என்ன எழுதினார்கள் என்ற விவரங்கள் ஆகியவையும் சுட்டப் பட வேண்டும். வாஞ்சிநாதன் இறந்து கிட்டத்தட்ட நூறு வருஷங்கள் ஆகிவிட்டன. அவர் சம காலத்தவர் அல்ல, நம் ஞாபகங்கள், இல்லை முந்திய ஒரு ஜெனரேஷனின் ஞாபகங்கள் போதும் என்று சொல்ல. இந்த பதிவர் சைக்கிள் காப் கூட இல்லாத இடத்தில் லாரியே ஓட்ட முயற்சி செய்வது போல் இருக்கிறது.

ஆனால் இவர் அருந்ததியர் வாழும் வரலாறு என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இதை எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேவியர் கல்லூரி வெளியிட்டது. பேராசிரியர் மார்க் எழுதியது. அந்த புத்தகத்தில் மேல் விவரங்கள் இருக்கிறதோ என்னவோ? இந்த புத்தகத்தை யாராவது பார்த்திருந்தால் படித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்!

Reverse casteism – டோண்டு ராகவன் வாஞ்சியின் மனைவிக்கு கொடுக்கப்பட வேண்டிய பென்ஷன் தி.மு.க. ஆட்சியினால் மறுக்கப்பட்டது என்று எங்கோ சொல்லி இருந்தார். டோண்டு, என் ஞாபகம் சரிதானா? உறுதிபடுத்துகிறார். அவரது ஆதாரம் திராவிட கழகத்தினரின் விடுதலை பத்திரிகைதான். விடுதலை பத்திரிகையே சொல்வதால் இதில் சந்தேகப்பட எதுவும் இல்லை. பிராமண விதவை என்பதற்காக அவரது பென்ஷன் மறுக்கப்பட்டது மிகவும் கீழ்த்தரமான விஷயம். (ஆனால் அவருக்கு ராஜாஜி, காமராஜ் போன்றவர்களின் ஆட்சியிலும் ஏன் பென்ஷன் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.) இதைப் பற்றி முத்துராமலிங்கத் தேவர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பேசியதாகவும், பென்ஷன் வாங்கிக் கொடுக்க அவர் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததாகவும் ராமகுமரன் அவர்கள் ஒரு சுட்டியை காண்பிக்கிறார்.

செங்கோட்டைக்காரரும், வாஞ்சியின் வீட்டுக்கு பக்கத்தில் வாழ்ந்தவருமான திரு. திரவியம் நடராஜன் எழுதிய மறுமொழிகளில் வாஞ்சி ஜாதி வெறியர் என்ற கருத்து அபத்தம் என்று சொல்லி இருக்கிறார். இது வாஞ்சி பற்றி எனக்கு இருக்கும் பிம்பத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது. வாஞ்சியை பற்றி மேலும் எழுதுவதாகவும் சொல்லி இருக்கிறார், காத்திருப்போம்.

ஆஷ் பற்றி, குறிப்பாக குற்றாலம் அருவியை அவர் பொதுவாக்கியது பற்றி யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். 


தமிழ்ப் பயணி

unread,
Jun 17, 2014, 7:41:47 AM6/17/14
to பண்புடன்
பாவம்பா வாஞ்சிநாதன்... தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு ​போவதற்குள் அவருக்கு ஒரு பட்டத்​தை அதிகரிச்சுட்டாங்க... தவிரவும் அரசாங்க பதவியும் ​கொடுத்திட்டாங்க...

என்ன ​கொடு​மை நடக்குதுன்​னே புரிய​லே... :( :(

http://en.wikipedia.org/wiki/Vanchinathan

Vanchinathan

From Wikipedia, the free encyclopedia

Personal life

Vanchinathan was born in 1886 in Shenkottai to Raghupathy Iyer and Rukmani Ammal. His actual name was Shankaran. He did his schooling in Shenkottai and graduated in M.A. from Moolam Thirunal Maharaja College in Thiruvananthapuram. Even while in college, he married Ponnammal and got into a lucrative Government job.

............. த​லை​யே சுத்துகிறது...


Ahamed Zubair A

unread,
Jun 17, 2014, 10:42:18 AM6/17/14
to பண்புடன்
மச்சி,

அம்மா ரெண்டு மா.செ.வைத் தூக்கினப்போ பாராட்டுனேன்... அப்ப நான் அடிமுகவா?? ;))

அச்சு !!!

unread,
Jun 17, 2014, 11:34:35 PM6/17/14
to பண்புடன்
Aravindan Neelakandan added 2 new photos.
10 hrs ·

சில கேவலமான மனங்கள் வீர வாஞ்சி ஆஷை கொன்றதற்கு சாதி ரீதியாக காரணங்கள் கற்பித்து தம்மை தாமே சொறிந்து சுகம் காண்கின்றன. வெள்ளைகாரனே கற்பிக்காத பொய்களை கற்பித்து வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு தாசானுதாசன்களாக இருக்கின்றன. ஆனால் உண்மை என்ன? அரசு அப்ரூவரான ஒருவரின் வாக்குமூலம் என்ன சொல்கிறது? Haran Prasanna


Inline images 2

Inline images 3


செல்வன்

unread,
Jun 20, 2014, 8:38:09 PM6/20/14
to பண்புடன்
வெள்ளைகாரன் இந்தியாவை ஆண்டது சரிதான் என்றால் இப்ப இராக், ஆப்கானிஸ்தானை அவன் ஆள்வதும் சரிதான்.

கர்ப்பிணியை ஆஷ் காப்பாறீனாராம், குற்றாலத்தை திறந்துவிட்டாராம், வாஞ்சி அதனால் கோபித்தாராம்...பாட்டி வடை சுட்ட கதை மாதிரி இதுவும் நல்லா சுவாரசியமா தான் இருக்கு. ஜார்ஜ் புஷ் அடிமைபட்டு கிடந்த குர்துமக்களை மீட்டார். அவருக்கும் ஒரு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துங்க. ரைட்ட்...:-)


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)



வில்லன்

unread,
Jun 21, 2014, 8:35:54 AM6/21/14
to panb...@googlegroups.com
காலச்சுவடில் வந்த வாஞ்சிநாதன் குடும்பத்தினர் ஆஷ் துரை குடும்பத்தினரை
சந்தித்தது தொடர்பான கட்டுரையை ஏன் யாரும் ஷேர் செய்யலை..

அது நியூட்ரலா இருந்ததாக எனக்குப்பட்டது.

On 6/21/14, செல்வன் <hol...@gmail.com> wrote:
> வெள்ளைகாரன் இந்தியாவை ஆண்டது சரிதான் என்றால் இப்ப இராக், ஆப்கானிஸ்தானை அவன்
> ஆள்வதும் சரிதான்.
>
> கர்ப்பிணியை ஆஷ் காப்பாறீனாராம், குற்றாலத்தை திறந்துவிட்டாராம், வாஞ்சி
> அதனால் கோபித்தாராம்...பாட்டி வடை சுட்ட கதை மாதிரி இதுவும் நல்லா சுவாரசியமா
> தான் இருக்கு. ஜார்ஜ் புஷ் அடிமைபட்டு கிடந்த குர்துமக்களை மீட்டார்.
> அவருக்கும் ஒரு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துங்க. ரைட்ட்...:-)
>
>
> 2014-06-17 22:33 GMT-05:00 அச்சு !!! <achusu...@gmail.com>:
>
>> Aravindan Neelakandan <https://www.facebook.com/aravindan.neelakandan>
>> added 2 new photos.
>> 10 hrs
>> <https://www.facebook.com/aravindan.neelakandan/posts/762858913736083> ·
>> <https://www.facebook.com/aravindan.neelakandan/posts/762858913736083?notif_t=notify_me#>
>>
>> சில கேவலமான மனங்கள் வீர வாஞ்சி ஆஷை கொன்றதற்கு சாதி ரீதியாக காரணங்கள்
>> கற்பித்து தம்மை தாமே சொறிந்து சுகம் காண்கின்றன. வெள்ளைகாரனே கற்பிக்காத
>> பொய்களை கற்பித்து வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு தாசானுதாசன்களாக இருக்கின்றன.
>> ஆனால் உண்மை என்ன? அரசு அப்ரூவரான ஒருவரின் வாக்குமூலம் என்ன சொல்கிறது?
>> Haran
>> Prasanna <https://www.facebook.com/haranprasanna>
>>
>>
>> [image: Inline images 2]
>>
>> [image: Inline images 3]
>>
>>
>> --
>> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
>> வாக்கென்றால் சேரும் பழி'
>>
>> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி
>> இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>>
>>
>> இணைய இதழ் : http://www.panbudan.com
>>
>
>
>
> --
> செல்வன்
>
> https://www.facebook.com/groups/tamilhealth/
> <http://www.holyox.blogspot.com> (ஆரோக்கியம் & நல்வாழ்வு)
>
> http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)
>
>
>
> <http://holyox.blogspot.com>
>
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
>


--
பொறுப்புத் துறப்பு: நான் பயன்படுத்தும் பெயர்களும், கருத்துகளும் முழுகக
முழுக்க கற்பனையே, யாரையும் எவனையும் எதையும் குறிப்பிடுபவன அல்ல...

வில்லன்

unread,
Jun 21, 2014, 8:38:35 AM6/21/14
to panb...@googlegroups.com
ரசியாவிடமிருந்து ஆப்கனை காப்பாற்றிய ரீகனுக்கு சர்ச் கட்டப்பட்டிருக்கா?

செல்வன்

unread,
Jun 21, 2014, 1:05:32 PM6/21/14
to பண்புடன்

2014-06-21 7:35 GMT-05:00 வில்லன் <oms...@gmail.com>:
காலச்சுவடில் வந்த வாஞ்சிநாதன் குடும்பத்தினர் ஆஷ் துரை குடும்பத்தினரை
சந்தித்தது தொடர்பான கட்டுரையை ஏன் யாரும் ஷேர் செய்யலை..

அது நியூட்ரலா இருந்ததாக எனக்குப்பட்டது.


வாஞ்சிநாதனுக்கு தனிப்பட்ட முறையில் ஆஷ் மேல் எந்த பகையும் இல்லை. அன்று அவர் ஏகாதிபத்தியத்தின் பணிஆள். அதனால் அவர் கொல்லபட்டார். அவர் குடும்பத்தை வாஞ்சி எதுவும் செய்யவில்லை. அவர்கள் நன்றாக இருக்கதான் வாஞ்சியும் விரும்பி இருப்பார்.

இப்ப பக்கத்து பாகிஸ்தானில் ஷியா, சுன்னி மக்கள் இடையே சண்டை என்பதால் இந்தியா பாக் மேல் படை எடுத்து ஷியா மக்களை மீட்கலாமா? அப்படி செய்தால் மோடிக்கு பாகிஸ்தானில் சிலை வைப்பார்களா? இல்லை நீங்கள் கேட்ட மாதிரி ரேகன் சிலையை ஆப்கானிஸ்தானில் வைத்து பாலாபிஷேகம் செய்து கொண்டிருக்கிறார்களா? :-)



--
செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

Haja Muhiyadeen

unread,
Jun 23, 2014, 12:23:02 AM6/23/14
to பண்புடன்

இந்தியன் சிட்டிசனையே அங்க போய்டுங்க நு சொல்றாங்க. இதில அங்கேர்ந்து இங்கே கொண்டு  வருவாராக்கும்?

அட்லீஸ்ட் உத்தரகண்டாக இருந்தாலும் 15000 பேரை காரில் ஏற்றி காப்பாற்றி வரலாம். 


இப்ப பக்கத்து பாகிஸ்தானில் ஷியா, சுன்னி மக்கள் இடையே சண்டை என்பதால் இந்தியா பாக் மேல் படை எடுத்து ஷியா மக்களை மீட்கலாமா? அப்படி செய்தால் மோடிக்கு பாகிஸ்தானில் சிலை வைப்பார்களா? இல்லை நீங்கள் கேட்ட மாதிரி ரேகன் சிலையை ஆப்கானிஸ்தானில் வைத்து பாலாபிஷேகம் செய்து கொண்டிருக்கிறார்களா? :-)



--
செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)



Reply all
Reply to author
Forward
0 new messages