---
Sent via Epic Browser
இதுவரையில் நான் வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னதில்லை. காரணம் வாழ்த்து சொன்னால், வாராவாரம் இந்த சமூகத்தின் மோசமான நிலைமைகளைப் பற்றி எழுதிவிட்டு, இதில் வாழும் எங்களுக்கு என்ன வாழ்த்து வேண்டிக் கிடக்கிறது என்று சிலர் கோபித்துக் கொள்வார்களோ என்ற தயக்கம்தான். இதையெல்லாம் மீறி வாழ உங்களுக்கும் எனக்கும் மன வலிமை வேண்டும் என்று ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வோம்.
இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் சமயத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முடிந்து போயிருக்கும். டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் டாஸ்மாக் விற்பனை எவ்வளவு, திருப்பதி கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை எவ்வளவு, சாலை விபத்துகள் எத்தனை என்ற புள்ளிவிவரங்கள் வெளிவந்திருக்கலாம்.
டிசம்பர் 30 அன்று திடீரென்று வந்த உத்வேகத்தில் ஃபேஸ்புக் சமூக வலைத் தளத்தின் மூலம் ஒரு புரட்சி செய்ய முடியுமா என்று பார்த்தேன்.எகிப்திலே செய்தார்கள். டெல்லியிலே செய்தார்கள். என்றெல்லாம் படிக்கிறோமே. சென்னையில் செய்தால் நடக்காதா என்ன என்று பார்க்கத் தோன்றியது.
“புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி தமிழகத்தில் உடனடியாக பாலியல் குற்றங்கள், சாலை விபத்துகளைக் கணிசமாகக் குறைக்க உதவும் விதத்தில் டிசம்பர் 31, ஜனவரி 1,2 ஆகிய மூன்று தினங்களும் டாஸ்மாக் கடைகளை மூடும்படி முதலமைச்சரைக் கோருகிறேன். தாங்களும் கோர விரும்புவோர் கீழ்வரும் மின்னஞ்சலுக்கு கோரிக்கையை அனுப்பலாம். cmc...@tn.gov.in” என்று ஓர் வேண்டுகோளை பேஸ்புக் நேயர்களுக்கு எழுதினேன். நான் எதிர்பார்த்தமாதிரியெல்லாம் உடனே ஆயிரக்கணக்கானோர் அனுப்பிவிடவில்லை. என்னையும் சேர்த்து ஏழெட்டு பேர் அனுப்பியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அனுப்பினோர் அனுப்பாதோர் என்று பலர் பதில் கமெண்ட் போட்டார்கள்.
அதில் கிடைத்த முக்கியமான செய்தி — இந்த சி.எம் செல் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை என்பதுதான். சி.எம்.செல்லுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதை யாரும் பார்க்கப் போவதில்லை என்றே பொதுமக்கள் நம்புகிறார்கள். யாராவது ஒரு அதிகாரி பார்த்தாலும் அதற்கப்புறம் அவரும் எதுவும் செய்யப் போவதில்லை என்றே பொதுமக்கள் நம்புகிறார்கள்.
“ஆற்காடு சாலையில் இருக்கும் மெகா குப்பைத் தொட்டியை அகற்ற சொல்லி இதுவரை ஐயாயிரம் பேர் சிஎம் செல்லுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டோம். சாலை நடுவே அமர்ந்து போராட்டம் கூட நடத்தி விட்டோம். ஒரு சாதாரண குப்பைக்கிடங்கு….பல ஆயிரம் கோடி பணம் வர்ற கடைகளையா மூட போறாங்க?” என்று கேட்கிறார் ஒருவர். ஐந்தாயிரம் பேர் மின்னஞ்சல் அனுப்பியும் சி எம் செல் கவனிக்கவில்லை என்பது அதிர்ச்சியாக் இருக்கிறது.
“விபத்தாக சித்தரிக்கப் பட்ட ஒரு கொலை என்று அவரது குடும்பத்தாரால் இன்றும் நம்ப படும் விஷயம் சி.எம்.செல்லுக்கு தான் முதலில் அனுப்பப்பட்டது அதிகாரிகளால் அது கமிஷனர் அலுவுலகத்துக்கு அனுப்பி பல நாட்கள் கடந்தும் ஒரு துரும்பும் அசையவில்லை.அந்த கேஸ் மூடப்பட்டது. ஒரு வருடம் முன்னால் அவர் மீண்டும் கமிஷனர் அலுவுலகத்திற்கு சென்று கேட்டபோது , அது முடிந்து போன விஷயம் என புகாரையே எடுக்க வில்லை. நான் கமிஷனரிடம் நேரில் அழைத்து சென்று புகாரை பதிவு செய்தேன் ஒரு வருடம் தாண்டியும் இன்னமும் விசாரணை நிலைமையிலேயே உள்ளது.” என்கிறார் ஒரு சக பத்திரிகையாளர்.
சிஎம்செல் செய்யும் அதிகபட்ச வேலை அங்கு வரும் மனுவை உரிய துறைக்கு அனுப்புவதுதான் போலிருக்கிறது. அதையும் எப்போதாவது ரேண்டம் அடிப்படையில் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.சூளைமேடு மாநகராட்சி பள்ளியில் புகைப்படக் கல்வி தி.மு.க ஆட்சியில் நிறுத்தப் பட்டதை மறுபடியும் தொடங்கும்ம்படி கோரி ஒரு வருடம் முன்பு நான் சிஎம்செல்லுக்கு அனுப்பிய மனுவை மாநகராட்சிக்கு அனுப்பிவிட்டார்கள். ஆம். நிறுத்திவிட்டோம் என்று ஒரு பதிலை மாநகராட்சி எனக்கு அனுப்பியது. அதுதான் எனக்கே தெரியுமே !
சென்னை மேயர் சைதை துரைசாமியின் பேஸ்புக் தளம் பற்றி ஆஹா ஓஹோ என்றார்கள். இப்பொது பார்த்தால் அந்த தளத்தில் எதுவும் உருப்படியாக் நடப்பதாகவே தெரியவில்லை. ஒரு கிறித்துவ பிரசாரகர் தன் செய்திகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார். மாந்கராட்சி, மின்வாரியம் குடிநீர் வாரியம் எல்லாம் இணையம் மூலம் நம்மிடம் வசூல் செய்யும் தளங்களை சிறப்பாக நடத்துகின்றன. ஆனால் புகார் தெரிவிப்பதற்கானவை.எதுவும் ஒழுங்காக இயங்குவதில்லை.
சரி நேரில் போய் முதலமைச்சர் அலுவலகத்திலேயே மனு கொடுத்தால் கவனிப்பார்கள் என்று நம்பினால் அதுவும் மூட நம்பிக்கைதான். சாகித்ய அகாதமி விருது பெற்ற நான்கு தமிழ் எழுத்தாளர்கள் உள்ளிட்ட ஒரு குழு அணு உலை பிரச்சினை தொடர்பாக முதல்வரை சந்திக்க விரும்புவதாகவும் நேரம் ஒதுக்கும்படியும் கோரி பிப்ரவரி 2012ல் நானே நேரில் சென்று முதல்வரின் செயலாளரிடம் கடிதம் கொடுத்தேன். ‘ ரொம்ப வேலை பளு. நேரம் ஒதுக்குவதற்கில்லை ” என்று கூட இன்று வரை அதற்கு பதில் கிடையாது. சமூகப் பிரச்சினையைப் பற்றி தன்னிடம் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் வந்து பத்து நிமிடம் பேச நேரம் ஒதுக்க முடியாதவர், தனக்கு டெல்லி கூட்டத்தில் போதிய நேரம் ஒதுக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறார் ! என்ன கொடுமை இது !
சிஎம்செல் வேஸ்ட். சிஎம் ஆபீசில் மனு கொடுத்ததும் வேஸ்ட். நேரில் தெருவில் இறங்கிப் போராடினால்தான் ஒருவேளை கவனிப்பார்களா என்றால்…. ? இதோ இன்னொருவர் பேஸ்புக்கில் பகிர்ந்த அனுபவம்: “சில நாட்களுக்கு முன்பு மோகன் ப்ரூவரீஸ் என்ற மதுபான உற்பத்தி ஆலையில் மிக மோசமான தீ விபத்து ஏற்பட்டது. இருபதுக்கும் மேற்பட்ட தீ அணைக்கும் வண்டிகள் வந்து தீயை அணைத்தன. இந்த ஆலை ஆற்காடு சாலையில்தான் இருக்கின்றது. ஊருக்குள் ஒரு மதுபான உற்பத்தி ஆலையே இருக்கின்றது. இதை அகற்ற சொல்லி பலமுறை மனுக்கள் கொடுத்து விட்டோம். சம்பவம் நடந்த அன்று இரவு பெண்கள் குழந்தைகள் எல்லாரும் வீதியில்தான் உறங்கினார்கள். ஆலையின் சிலிண்டர் இருக்கும் இடம் வெடித்து இருந்தால் வளசரவாக்கம்,போரூர்,மேற்கு கே.கே நகர் வரை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும். மறுநாள் விடிந்ததும் முதல் வேலையாக ஆற்காடு சாலையில் அமர்ந்து பேருந்து மறியல் செய்தோம். எங்களை போலீஸ் வைத்து அடித்தார்கள். குழந்தைகள்,பெண்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றார்கள். ஆனால் இன்னமும் ஒரு மதுபான ஆலை சென்னையின் மையப்பகுதிக்குள் இயங்கி வருகின்றது.”
தெருவில் இறங்கிப் போராடினால் போலீசை வைத்து அடி உதை மிரட்டல்…. சுதந்திர இந்தியாவின் 65 வருட வரலாற்றிலேயே இருந்திராத மாபெரும் அகிம்சைப் போராட்டத்தை நடத்தும் இடிந்தகரை மக்களை சொந்த ஊரிலேயே சிறை வைத்திருக்கிறது தமிழக அரசு. கூடங்குளத்துக்கு இந்தியாவின் எந்தப் ப்குதியிலிருந்து யார் போனாலும் தடுத்துத்திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது. தவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கூடங்குளம் செல்ல யாரிடமேனும் முன் அனுமதி பெற வேண்டுமா என்று மனு போட வேண்டிய நிலைமை. சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டதும் யாரிடமும் முன் அனுமதி பெறத்தேவையில்லை என்றுபதில் தருகிறது போலீஸ். ஆனால் வருடம் முழுவதும் அமைதியாகப் போராட்டம் நடக்கும் இடத்தில் வருடம் முழுவதும் 144 தடை உத்தரவைப் போட்டு வருகிறது அரசு. அதை மீறித்தான் உலகப் புகழ் பெற்ற மனித உரிமைப் போராளி டாக்டர் விநாயக் சென் முதல் யாரானாலும் இடிந்தகரைக்குச் செல்ல முடியும். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த நாள் முதல் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே போராடி வருகிறார்கள். இதுவரை அவரோ அவருடைய எந்த ஒரு அமைச்சரோ அந்த அமைதியான மக்களை சந்திக்கக்கூட முன்வரும் துணிச்சல் இல்லாமல் இருக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்த புதிதில் வாரவாரம் பத்திரிகையாளரை சந்திப்பேன் என்று சொல்லி, சொன்ன வாக்குறுதியை சில வாரங்களிலேயே மீறிவிட்ட முதலமைச்சரை இப்போது யார் சந்திக்க முடியும் யாரெல்லாம் சந்திக்க முடியாது என்றே தெரியவில்லை. நான் விரும்பினால் அமெரிக்க அதிபர் ஒபாமாவை எளிதில் சந்தித்துவிடலாம் போலிருக்கிறது. ஊழல் அராஜகம், குடும்ப சுயநலம், என்று எத்தனையோ கோளாறுகள் நிரம்பிய ஆட்சியை அளித்தவரென்றாலும் கலைஞர் கருணாநிதியை எந்தப் பிரஜை விரும்பினாலும் சந்திக்க முடியும் என்ற நிலை எப்போதும் இருந்திருக்கிறது. சந்திக்க முடியாவிட்டாலும் கூட ஒருவர் தன் குறையை அவர் தீர்க்கிறாரோ இல்லையோ, அவருக்குத் தெரியப்படுத்தவாவது முடியும் என்ற நிலை இருந்திருக்கிறது. இப்போது முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவின் காதுக்கும் கண்ணுக்கும் ஒரு விஷயத்தை எடுத்துச் செல்ல என்ன வழி என்று அரசு ஊழியர்கள் மத்தியிலேயே தெரியாத நிலை. மின்வெட்டு முதல், சென்னைக் குப்பை நகரமாக இருப்பது வரை, திருப்பூர் சாயப்பட்டறை சிக்கல் முதல், வருடக்கணக்கில் நூலகங்களுக்கு புத்தகமே வாங்காதது வரை எதுவானாலும் முதலமைச்சர் கவனத்துக்கு பிரச்சினையை எடுத்துச் செல்வது எப்படி என்று ஒவ்வொரு துறையினரும் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
தன் குடிமக்களுடன் எந்த தகவல் தொடர்பும் இல்லாமல் இருக்கும் ஒருவர் எப்படி ஆட்சி நடத்த முடியும் ? என்ன நிர்வாகம் செய்ய முடியும் ? அமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை முதல்வரை அணுகி சங்கடமான செய்திகளைப் பேசத் தயங்கும் சூழலில் தன் மக்களின் நிலை பற்றி நிர்வாகத்தின் குறைகள் பற்றி யார் அவருக்கு தகவல் சொல்வார்கள் ? உளவுத் துறை மட்டும்தானா? இப்படிப்பட்ட முதலமைச்சர் நமக்கு எதற்கு என்பதுதான் என் கேள்வி. முதுகில் கொட்டும் குளவியை அடிப்பதற்காக கொள்ளிக்கட்டையை எடுத்து சொறிந்துகொண்டது போன்ற நிலையில் இருக்கிறோம்.
இப்படி தன்னைத்தானே ஒரு இரும்புக் கோட்டைக்குள் வைத்துப் பூட்டிக் கொண்டு வாழ்வது அவருக்கு சிக்கல் இல்லாமல் இருக்கலாம். அதற்கான நியாயமான காரணங்கள் கூட அவருக்கு இருக்கலாம். அவற்றையாவது நமக்கு சொல்லவேண்டும். தனி நபராக இருந்தால் அவர் தனிமைச் சிறையில் தன்னைத்தானே பூட்டிக் கொள்வதைப் பற்றி நமக்கு ஒரு பொருட்டுமில்லை. ஒரு முதலமைச்சர் இப்படி இருப்பது ஜனநாயகத்துக்குப் பொருத்தம் இல்லாதது. தெருப் போராட்டம் முதல் மின்னஞ்சல் வரை எதுவும் அவர் கவனத்துக்குச் செல்ல முடியாது என்றால், எப்படி ஆட்சி நடக்கிறது, யார் நடத்துகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் தேவை.
கடந்த ஆண்டில் பல முறை முதல்வருக்கு பகிரங்கக் கடிதங்களையும் பல தமிழகப் பிரச்சினைகளைப் பற்றியும் இந்தப் பகுதியில் எழுதியிருக்கிறேன். அவையெல்லாம் முதல்வர் கண்ணுக்குப் போயிற்றா என்று தெரியாது. இந்தப் புத்தாண்டில் முதுகெலும்புள்ள எந்த அரசு அதிகாரியாவது இந்தக் கட்டுரையை முதலமைச்சருக்குக் காட்டி பதில் பெற்றுத் தந்தால் அதையே நமக்கான புத்தாண்டுப் பரிசாகக் கருதுவேன்.
கல்கி 5.1.2013
http://railradar.trainenquiry.com/
http://trainenquiry.com/TrainStatus.aspx
ஹ ஹ.. நல்ல காலம் எங்க ஏரியாவிலே ரிலீஸ் ஆகவே இல்லை..
ஆனா உ.த கட்டுரையை வாசிச்ச பின்னாடி அந்த படத்தை பார்த்தா ஒரு மார்க்கமாத்தான் இருக்குது.
படம் முழுவதும் இரட்டை அர்த்த வசனங்கள்,
அப்ப படம் கண்டிப்பா ஓடிடும்.
இந்த பட்டியலில் இருக்கும் 'மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி' - ஆசிரியர் சரவணன் தங்கதுரை எங்க அலுவலகத்தில் தான் இருக்கின்றார்.
இந்த பட்டியலில் இருக்கும் 'மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி' - ஆசிரியர் சரவணன் தங்கதுரை எங்க அலுவலகத்தில் தான் இருக்கின்றார்.
இதுமட்டும் இல்லை ரமேஷ் பாடகி ரேனு (பப்பரப்பா - வேட்டை), பாடகர் பாலாஜி தேவநாதன் (மலையாள படங்களில்), கேப்டன் டிவி தொகுப்பாளர் ஒருவர், சில குறும்பட இயக்குனர்கள், குறும்பட நடிகர்கள், இப்படி இன்னும் கொஞ்ச பேரும் இருக்காங்க. எப்படின்னு தெரியலப்பா.
http://en.wikipedia.org/wiki/Bloom_Energy_Server
ப்ளூம்பாக்ஸ் (BLOOM BOX ) எப்போ இந்தியாவுக்கு வரும்
by Thenammai Lakshmananப்ளூம்பாக்ஸ் எப்போ இந்தியாவுக்கு வரும்
**********************************************
ரமேஷ்,இது பற்றிய விவாதம் முன்னரே வந்த போது திரு.ராஜசங்கர் மற்றும் திரு.செல்வன் இருவராலும் இது தவறானது, வெற்றிகரமானதல்ல என்பதா விவாதிக்க பட்டுள்ளதா எனக்கு நினைவு. பழைய இழைகளை தேடினால் மேலதிக விவரங்கள் கிடைக்க கூடும். யார் என்ன சொல்லியுள்ளார்கள் என்பதில் ஒரு வேளை என் நினைவு தவறானதாகவும் இருக்க கூடும். ஆனால் முன்னரே இது பற்றிய விவாதம் வந்துள்ளது நினைவில் இருக்கு.
Mr.Kalayanasundaram worked as a Librarian for 30 years. Every month in his 30 year experience(service), he donated his entire salary to help the needy. He worked as a server in a hotel to meet his needs. He donated even his pension amount of about TEN(10) Lakh rupees to the needy.
He is the first person in the world to spend the entire earnings for a social cause. In recognition to his service, (UNO)United Nations Organization adjudged him as one of the Outstanding Peo ple of the 20th Century.. An American organization honored him with the ‘Man of the Millennium’ award. He received a sum of Rs 30 cores as part of this award which he distributed entirely for the needy as usual.
Moved by his passion to help others, Super Star Rajinikanth adopted him as his father. He still stays as a bachelor and dedicated his entire life for serving the society.
We
all Indians should be PROUD. UNO has honored him but we Indians don’t even know
that such a personality exist amongst us.
At least have the courtesy to pass
this on and on till the whole world comes to know about him and his passion… so
plz share it
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இது மெய்யோ பொய்யோ தெரியதுங்க ஆனால், பெரும்பாலான தமிழர்கள் டைஸ்மாக் வழியாக தம் சம்பாத்தியத்தை அரசுக்கு கொடுத்து உதவுகிறது மட்டும் உண்மைங்க.....
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
எனக்கு தேசிய விருது பெற்ற நடிகர் சலிம் குமார் சொன்னது நினைவுக்கு வருது
‘எல்லா நடிகர்களும் தங்கல் சம்பாத்தியத்துல் 5 சதவீதம் அல்லது 10 சதவீதம்தானமா கொடுப்பாங்க. ஆனா, நான் ஒருத்தன் தான் கிடைக்குற மொத்த சம்பளத்தையும்அப்படியே ஏழைகளுக்குக் கொடுத்துவேன்”
எனக்கு தேசிய விருது பெற்ற நடிகர் சலிம் குமார் சொன்னது நினைவுக்கு வருது
![]() |
(http://www.ingoodbooks.com) |
![]() |
(http://wikimedia.org) |
ஜெருசலேம். அதில் கிழக்கு ஜெருசலேம். அதில் பழைய ஜெருசலேம் நகரம். ஒரு சதுர கிலோ மீட்டருக்கும் சற்றுக் குறைவான பரப்பு. உலகப் பாரம்பரிய சின்னம். இஸ்ரேல் சொந்தம் கொண்டாடினாலும் நாடற்ற நிலம். இங்குதான் கிறித்தவ இஸ்லாமிய யூத ஆர்மேனியர்களுக்கு என தனித் தனியே புராதனக் குடியிருப்புகளும், முப்பெரும் மதங்களும் சொந்தமெனும் கோயில் மலையும் (Temple Mount) உள்ளன. கோயில் மலை என்பது ஈசாக்கைக் கடவுள் ஆணைப்படி ஆபிரகாம் பலி கொடுக்கப் போன இடம் மற்றும் சாலமோன் தேவாலயம் இருந்த இடம் என்பது யூத நம்பிக்கை. இன்று மேற்குச் சுவர் (Western Wall) மட்டும் எஞ்சி நிற்கிறது. முகம்மது நபி சொர்க்கம் சென்று மீண்டும் திரும்பிய இடமாக இஸ்லாமியர்களால் நம்பப்படும் Dome of Rock மற்றும் அதன் அருகில் உள்ள அல் அக்சா மசூதியும் கோவில் மலையில் உள்ளன. இயேசு கிறித்து கொல்லப்பட்ட இடம் (Holy Sepulchre) கிறித்தவக் குடியிருப்புப் பகுதியில் உள்ளது.
பழைய ஜெருசலேமைச் சுற்றி மதில். அதற்கு 8 வாயில்கள். அதில் கிழக்கே இருக்கும் தங்க வாயில் (Golden Gate) 400 வருடங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டு இருக்கிறது. கிழக்கே இருக்கும் இன்னொன்று வாயிலில் இரு சிங்கச் சிற்பங்கள் இருப்பதால் அதற்குச் சிங்க வாயில் (Lion's Gate) என்று பெயர். அச்சிங்கச் சிற்பங்கள் எப்படி வந்தன என்பதற்குப் பல கதைகள் உள்ளன.
1) 1516ல் ஜெருசலேமைக் கைப்பற்றிய ஒட்டாமன் பேரரசன் முதலாம் செலிமின் கனவில் சிங்கங்கள் அவனைத் தின்ன வருகின்றன. மேடாய் இருக்கும் ஜெருசலேமை மட்டப்படுத்த நினைத்ததற்குத் தண்டனை என சொல்கின்றன. அப்படி செய்ய மாட்டேன், சுற்றி சுவர் கட்டுகிறேன் என்று சொன்னபின் விட்டுவிடுகின்றன.
2) முதலாம் செலிமுக்குப் பின் ஆண்ட சுலைமான் தான் ஒட்டாமன் வெற்றியைக் கொண்டாட சிங்கச் சிற்பங்களை வைத்தான்.
3) சுலைமானின் கனவில் சிங்கங்கள் அவனைத் தின்ன வருகின்றன. கனவு விளக்கம் சொல்பவர்களிடம் கேட்கிறான். 'தூங்கப் போகும் முன் என்ன சிந்தனையில் இருந்தீர்கள்?'. 'வரி கட்டாதவர்களை எப்படி தண்டிப்பது என்ற யோசனை'. 'புனித பூமியின் குடிமக்களைத் தண்டிக்க நினைத்ததற்காக ஆண்டவனின் தண்டனை இத்துர்க்கனவு'.
இரண்டு சிங்கச் சிற்பங்களுக்கு இத்தனை கதைகளா? அதுமட்டுமல்ல, இன்றுதான் அதன் பெயர் சிங்கவாயில். ஒரு காலத்தில் அதன் பெயர் புனித ஸ்டீவன் வாயில். இதே போல் ஜெருசலேமின் ஒவ்வொரு வீதிக்கும் குறைந்தது 3 பெயர்கள். ஜெருசலேமிற்கே வரலாற்றில் 70 பெயர்கள்! ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கதை. சரி, சிங்கவாயில் கதைகளில் எதுதான் உண்மை? ஜெருசலேமை வென்றவர்கள் தங்கள் தேசங்களில் இருந்து கொண்டு வந்த பொருட்களில் ஜெருசலேமைக் கட்டியதை விட, ஏற்கனவே இருந்தவற்றை இடம் மாற்றி வைத்ததைத் தான் பலமுறை செய்திருக்கிறார்கள். அப்படித்தான் இவ்விரு சிற்பங்களை நகரின் வடமேற்கில் இருந்து எடுத்து வந்து செலிம் கட்டிய மதிலில் ஒரு வாயிலில் வைத்து சிங்கவாயில் எனப் பெயர்வரச் செய்தான் சுலைமான். அவ்விரு சிற்பங்களும் ஒட்டாமனுக்கு முன் ஆட்சி செய்த எகிப்திய மம்லூக் சுல்தான்களில் ஒருவனான பைபார்ஸ் தன் குருவிடம் இருந்து 300 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்டவை. எப்படி இருக்கிறது உண்மை? உண்மையின் கடைசித் துளியையும் சேர்த்து சீரணித்துக் கொள்ளுங்கள். அவ்விரு சிற்பங்களும் சிங்கங்கள் அல்ல, சிறுத்தைகள்!
ஜெருசலேம் பற்றி இணையத்திலும் புத்தகங்களிலும் மதமும் அரசியலும் சாராத கற்பனைகளற்ற உண்மையைத் தேடுவது அவ்வளவு சுலபம் அல்ல என்பதற்குச் சிங்க வாயில் ஓர் உதாரணம். 1800 முதல் 1875 வரை ஆங்கிலத்தில் மட்டும் ஜெருசலேம் பற்றி 5000 புத்தகங்கள் வெளிவந்து இருக்கின்றன. பெரும்பாலும் இன அல்லது மதச்சார்பு உடையவை. அல்லது உலக அழிவைப் பற்றி பயம் காட்டுபவை. என் நேரத்தை வீணாக்காமல் நடுநிலையுடன் உள்ளதை உள்ளபடி புரியும்படி, பெரும் ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் இன்றைய பிரச்சனைகளை விதையில் இருந்து விளக்கும் ஒரு புத்தகம் தேடினேன். இப்போது ஜெருசலேமுடன் புத்தகத்திற்குள் போகலாம்.
![]() |
(http://www.dancutlermedicalart.com) 20/07/1951. அல் அக்சா மசூதிக்குள் ஜோர்டன் மன்னர் முதலாம் அப்துல்லாவைக் கொன்றவனின் உடல் |
![]() |
(http://briannibbe.files.wordpress.com) Dome of the Rockக்கும் 1,50,000 கல்லறைகளுக்கும் இடையில் தங்க வாயில் |
சென்னை மாநகராட்சி சார்பில் 15 மலிவு விலை உணவகங்களை கடந்த 19-ம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். மக்கள் மத்தியில் ‘அம்மா மெஸ்’ என அறியப்பட்டுள்ள இந்த மலிவு விலை உணவகங்கள் பெரும் ஆதரவை பெற்றுள்ளன. காலையிலேயே கியூ வரிசை தொடங்கி விடுகிறது.
முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மேலும் 24 இடங்களில் அம்மா மெஸ் கிளைகள் தொடங்கப்படவுள்ளன.
திருவொற்றியூர் மண்டலம் மணலி எக்ஸ்பிரஸ் சாலை,
மணலி மண்டலம் பெருமாள் கோயில் தெரு.
மாதவரம் மண்டலம் நேரு நகர் சென்னை மாநகராட்சி மிடில் பள்ளி,
தண்டையார்பேட்டை மண்டலம் புதிய வினோபா நகர் சமுதாய நலக்கூடம்,
புதிய வண்ணாரப்பேட்டை மல்டி பர்பசல் ஹால்,
ராயபுரம் மண்டலம் அண்ணா பிள்ளை தெரு,
எழும்பூர் ரயில் நிலைய நுழைவாயில்,
திருவிக நகர் மண்டலம் செம்பியம் பேப்பர்ஸ்மில்ஸ் சாலை,
ஓட்டேரி வள்ளுவன் தெரு,
அம்பத்தூர் மண்டலம் மேனாம்பேடு மாரியம்மன் கோயில் தெரு,
அண்ணாநகர் மண்டலம் சேத்துப்பட்டு மங்களபுரம் 7வது தெரு,
எம்.எம்.டி.ஏ காலனி எம்.ஜி.ஆர் 3வது தெரு,
தேனாம்பேட்டை மண்டலம் ராயப்பேட்டை முத்தையா தெரு,
கோடம்பாக்கம் மண்டலம் கோயம்பேடு அய்யப்பன் நகர் பிரதான சாலை,
கோடம்பாக்கம் காமராஜ் காலனி பிரதான சாலை,
வளசரவாக்கம் மண்டலம் நெற்குன்றம் மாதா கோயில் தெரு,
ஆலந்தூர் மண்டலம் ஆலந்தூர் ராஜா தெரு முதல் சந்து,
ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணபுரம் பிரதான சாலை,
அடையாறு மண்டலம் அடையாறு திருவேங்கடம் தெரு,
பெசன்ட்நகர் 1வது அவின்யூ (மீன் மார்க்கெட் அருகில்),
பெருங்குடி மண்டலம் எம்.ஜி.ஆர். நகர் வேளச்சேரி தரமணி சாலை,
பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலை,
பள்ளிக்கரணை வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலை,
சோழிங்கநல்லூர் மண்டலம் காரப்பாக்கம் காளியம்மன் கோயில் தெரு
ஆகிய 24 இடங்களில் மலிவு விலை சிற்றுண்டி உணவகம் இன்று திறக்கப்படவுள்ளது.
லயோலா
கல்லூரி மாணவர்களின் ‘தன்னெழுச்சியான’ போராட்டத்தைத் தொடர்ந்து
தமிழகமெங்கும் புரட்சி அலை பொங்கி எழ ஆரம்பித்திருக்கிறது. ஏற்கெனவே
கொந்தளித்துக் கொண்டிருந்த இணையவெளியைத் தொடர்ந்து இப்போது ஊடக வெளியும்
கொதிக்கத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ், திமுகவை தேர்தலில் தோற்கடிக்க
இந்த ‘எழுச்சி’ உதவும் என்பதால், அதிமுக புன்முறுவலுடன் இந்த போராட்டங்களை
மறைமுகமாக ஊக்குவித்துவருகிறது. ஆனால், ஜெயலலிதாவின் கையை மீறி இந்தப்
போராட்டம் போக அனைத்து வாய்ப்புகளும் உண்டு. இந்தப் போராட்டத்தின் சில
கோரிக்கைகள்: இலங்கை அரசை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும்.
வெறும் போர்க்குற்றம் அல்ல; இனப்படுகொலை செய்த அரசு என அதற்கு தண்டனை
வாங்கித் தரவேண்டும். இந்தியா இலங்கையுடன் அனைத்து பொருளாதார உறவுகளையும்
துண்டித்துக் கொள்ளவேண்டும். இந்தியாவுக்கும் இந்தப் பேரழிவில் முழு பங்கு
உண்டு. தமிழகத்துக்கு என்று தனியாக வெளியுறவுத்துறை அமைக்கப்படவேண்டும்.
இதையெல்லாம் செய்யவில்லையெனில் நாங்கள் வரி கட்டமாட்டோம்.
இந்தத் ‘தன்னெழுச்சியான’ கோரிக்கைகள் மாணவர்களுடையதுதான் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வரவேண்டும் என்பதற்காக சில மாணவத்தனமான கோரிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன. மற்றபடி இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கம், இலங்கை செய்தது இனப்படுகொலை. இந்தியாவும் அதற்கு முழு உடந்தை. இந்த இரண்டு விஷயங்களைத் தமிழக மக்கள் மத்தியில் பரப்பவேண்டும் என்பதுமட்டுமே.
மிகவும் உணர்வுபூர்வமான இந்தப் பிரச்னையில் தமிழகத்தில் இப்போது ஒருவித பாசிச மாற்று அமைப்பு கட்டமைக்கப்பட்டுவருகிறது. இலங்கைப் பிரச்னையில் தனி ஈழத்துக்குக் குறைவாக யார் பேசினாலும் அவர்கள் தமிழினத் துரோகியே என்ற நிலையை மெள்ள உருவாக்கிவருகிறார்கள். இலங்கை அரசு மிக மோசமான குற்றங்களை இழைத்திருப்பது உண்மையே. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கும் ஒருவர் வேறு சில விஷயங்களையும் கட்டாயம் பேசியாக வேண்டும்.
இலங்கை ஈழப் பிரச்னை என்பது நீண்ட நெடும் வரலாறைக் கொண்டது. பல்வேறு ஊடுபாவுகள் கொண்டது. ஈடுபட்ட அனைத்து தரப்புகளின் கைகளிலும் ரத்தக் கறை உண்டு. ஆனால், அவை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒற்றை குற்றவாளி (சிங்கள-இந்திய கூட்டணி) மட்டும் கட்டம் கட்டப்படுவதற்கான சர்வதேச அரசியல் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. விடுதலைப் புலிகள் செயல்பட்டுவந்த காலகட்டத்தில் அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று சொல்லி இலங்கைக்கு ஆதரவு அளித்துவந்த அமெரிக்க அரசு இன்று யோக்கியன் போல் நீதிபீடத்தில் ஏறி அமர்ந்து இலங்கையைக் குற்றம்சாட்டுகிறது. அதோடு நின்றுவிடாமல் இந்திய அரசையும் சேர்த்தே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் தந்திரத்தையும் சர்வதேச அரசியல் சக்திகள் செய்ய ஆரம்பித்திருக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் மிக மோசமாக இந்தச் சதி வலையில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இது தொடர்பான முழுச் சித்திரமும் கிடைக்கவேண்டுமென்றால், சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கவேண்டும். பாகிஸ்தானின் அங்கமாக இருந்த கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேஷாகப் பிரித்து மிகப் பெரிய சாதனையைச் செய்திருந்தார் இந்திராகாந்தி. இந்திய ராணுவத்தினரை தெய்வமாகத் தொழும் பங்களாதேஷிகள் இன்றும் உண்டு (அந்தப் போரில் அப்படி ஒரு ரட்சகனாக இருந்த இந்திய ராணுவம் இன்று என்ன நிலையை அடைந்திருக்கிறது… இதற்கு யார் காரணம் என்ற கேள்விகள் மிகவும் முக்கியமானவை).
கிழக்கு பாகிஸ்தானைத் தனி நாடாகப் பிரித்துவிட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் பஞ்சாபை இந்தியாவில் இருந்து பிரிக்கவேண்டும் என்ற பெயரில் தீவிரவாத சக்திகள் தூண்டிவிடப்பட்டன. அதை அடக்க இந்திரா எடுத்த முயற்சிகள் அவருடைய உயிருக்கு உலை வைத்தன. அதோடு பஞ்சாப் பிரச்னையும் மெள்ள முடிவுக்குவந்தது (மிஷன் ஆல்ரெடி அக்கம்ப்ளிஸ்ட்). ஏற்கெனவே, மூத்த இளவரசர் சஞ்சய் காந்தி ‘விமான விபத்தில்’ கொல்லப்பட்டிருந்தார். அடுத்ததாக, ஆட்சிக்கு வந்த இளைய இளவரசர் ராஜீவ் காந்தி தன் அன்னையின் வழியில் இலங்கை விஷயத்தில் ராஜ தந்திரத்துடன் செயல்பட்டு சர்வதேச அளவில் புகழ் பெற வழிநடத்தப்பட்டார்.
கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தானில் இருந்து இந்திய நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டிருந்ததால் தனிநாடாக உருவாக்குவது எளிதான செயலாக இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும்; அவர்களுக்கு மாநில சுய ஆட்சி பெற்றுத் தரவேண்டும் என்பதுதான் நியாயமான நோக்கம். எனவே, ராஜீவ்காந்தி அந்த உடன்பாட்டுக்கு ஆத்மார்த்தமாக முயன்றார். இலங்கையின் வேண்டுகோளின் பேரில் அமைதிப்படை என இந்திய ராணுவத்தை அங்கு அனுப்பினார். தனி ஈழம் என்பது மிகவும் நியாயமற்ற கோரிக்கை என்பதுதான் இந்தியாவின் கொள்கை. இந்தியா மட்டுமல்ல உலகின் பெரும்பாலான நாடுகளின் தீர்மானமும் அதுவே.
ஆனால், இலங்கை இந்த இடத்தில் தன் நரித்தனத்தை காட்டியது. இந்தியாவை இந்த போரில் சிக்க வைக்க வேண்டும் என்ற சர்வதேச தந்திரத்தின் அங்கமாக அது இந்திய அமைதிப் படையை தன் நாட்டுக்குள் முதலில் அனுமதித்தது. ஆனால், அடுத்தகட்டமாக தன்னுடைய இறையாண்மைக்கு இழுக்காகிவிட்டது என்ற போர்வையில் இந்திய ராணுவத்தைத் துரத்தி அடிக்கத் தீர்மானித்தது. தாற்காலிக உடன்பாடாக விடுதலைப் புலிகளுடன் நட்புறவு கொண்டு, இந்திய ராணுவம் செய்தவற்றை விட மிக அதிகமான குற்றச்சாட்டுகளை அதன் மீது சுமத்தி அதை அங்கிருந்து அகற்றினார்கள். அடுத்த தேர்தலில் ராஜீவ் வென்றுவிடுவார் என்ற நிலை ஏற்பட்டபோது, மீண்டும் இந்திய அமைதிப் படையை அனுப்பிவிடுவாரோ என்ற பயத்தில், விடுதலைப் புலிகள் ராஜீவையும் அப்பாவிக் காவலர்களையும் இந்திய மண்ணில் கொன்றார்கள். அதுவரை விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் ஆதரவாக இருந்த தமிழக மாநிலக் கட்சிகளும் மக்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிர்நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மூன்று ‘எதிர்பாராத’ மரணங்களைத் தொடர்ந்து அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி நின்ற சோனியாவின் மீது ‘விதிவசமாக’ ஆட்சிப் பொறுப்பு திணிக்கப்பட்டது. (முன்னாள்) இந்தியப் பிரதமரைக் கொன்றதற்காகவும் தமிழகத்தில் பிரிவினை சக்திகள் பலம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவும் விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுக்கு விமான, கடல் சார்ந்த படைகளின் உதவியைத் தந்தது. முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளை ஒழிக்கத் தந்த இந்த உதவியானது இலங்கையில் நடந்த இன்ன பிற வன்முறைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு இன்று இந்தியாவும் போர் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறது. நாளை இந்தியா மீதும்கூட இனப்படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம். ஏற்கெனவே ஆரிய திராவிட கதைகள் வேறு இங்கு வலுவாக வேருன்றித்தான் இருக்கின்றன.
இந்தியா நிச்சயமாக இலங்கைக்கு எதிரான கடுமையான நிலைப்பாடை எடுக்கவே செய்யாது. அது முடியவும் செய்யாது. இலங்கை அரசு உள்நாட்டில் கலகம் விளைவித்தவர்களை அடக்கியிருக்கிறது… அங்கு சீனா காலூன்ற இடம் கொடுத்துவிடக்கூடாது… தமிழக பிரிவினை சக்திகள் வளர இடம் கொடுக்கக்கூடாது என்பது போன்ற வெளிப்படையான காரணங்களில் ஆரம்பித்து, ராஜிவ் கொல்லப்பட்டபோது அருகில் எந்த காங்கிரஸ் தலைவரும் இல்லாமல் போனது எப்படி? சம்பவ இடத்தில் கிடைத்த முக்கிய வீடியோ எப்படி மாயமாக மறைந்தது என்ற விடைதெரியாத கேள்விகள் வரை பல காரணங்கள் இருக்கின்றன. எனவே, இந்தியா கடைசிவரை இலங்கைக்கு சாதகமாகவே நடந்துகொள்ளும். சர்வதேச அரங்கிலும் தமிழ் மக்கள் மனங்களிலும் இந்தியா மீதான மதிப்பு மேலும் குறையவே செய்யும்.
இப்படியான சூழலில் லயோலா கல்லூரி மாணவர்கள் ‘தன்னெழுச்சியாக’ போராட்டத்தை மூன்று மிக அபாயகரமான நோக்கங்களைக் கொண்டு ஆரம்பித்திருக்கிறார்கள். முதலாவதாக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க தவறானது. கிழக்குப் பகுதி தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் என பெரும்பான்மையான தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களே. விடுதலைப் புலிகளுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதியில் மட்டும்தான் இலங்கை ராணுவம் தன் தாக்குதலை நிகழ்த்தியிருந்தது. கொழும்புவிலும் பிற இலங்கையின் பகுதிகளிலும் ஈழத்தைவிட மிக அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வசித்து வந்திருக்கிறார்கள். இப்போதும் வசித்து வரத்தான் செய்கிறார்கள். இனப்படுகொலை என்றால் அவர்களும் சேர்த்தே கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால், இலங்கை அரசு அவர்களை ஒன்றும் செய்யவில்லை.
இரண்டாவதாக, இந்தப் போரில் விடுதலைப் புலிகள் செய்த அட்டூழியங்கள் குறித்து சிறு குறிப்பு கூடக் கிடையாது. பொய்யைவிட அரை உண்மைகள் மிக ஆபத்தானவை. இலங்கை – ஈழப் பிரச்னையில் இலங்கை அரசு எந்த அளவுக்கு வன்முறையில் ஈடுபட்டதோ அதற்கு சற்றும் குறையாத அட்டூழியங்களை விடுதலைப் புலிகள் இயக்கமும் செய்து வந்திருக்கிறது.
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் யார் ஆண்டது… அதற்கு முன் யார் ஆண்டது என்பதெல்லாம் ஒருவகையில் நிரூபிக்க முடியாத உண்மைகள். நவீன அரசு எப்போது எந்த ஒப்பந்தத்தின் பேரில் உருவாகிறதோ அதன் அடிப்படையில்தான் சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கவேண்டும். சேர சோழ பாண்டியர்களின் போர்களால் நிறைந்ததுதான் தமிழக சரித்திரமும். நாளையே மதுரையை எங்களுக்குப் பிரித்துக்கொடு என்று பாண்டியர்கள் போராடினால் தமிழ் இறையாண்மை அரசு அவர்களை ஒடுக்கத்தான் செய்யும். தங்களுடைய நலன்கள் போதிய அளவுக்கு கவனிக்கப்படவில்லை என்று கருதும் பிரிவினர் தங்கள் எதிர்ப்பை ஆதி முதல் அந்தம் ஜனநாயக முறையில் வெளிப்படுத்தி உரிமைகளை வென்றெடுக்கத்தான் முயற்சி செய்யவேண்டும்.
கேவலம் ஒரு கருத்துக் கணிப்பில் தனக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற விஷயத்தை வெளியிட்ட அற்ப காரணத்துக்காக மூன்று தமிழ் அப்பாவிகளை உயிருடன் கொளுத்திய சம்பவத்தையும் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு பேருந்தை எரித்து தமிழ் மாணவிகளைக் கொன்றவர்களையும் இந்த இடத்தில் நினைத்துப் பார்ப்பது நல்லது. இவ்வளவு ஏன், சாதிப் பிரச்னைகளில் கொல்லப்படுபவர்கள் எல்லாருமே அப்பாவித் தமிழர்கள்தானே. சாராயக் கடை திறந்து மெள்ள மெள்ளக் கொல்லப்படுவதும் தமிழர்கள்தானே. சிறு எதிர்ப்புகூட தெரிவிக்காத நிலையிலேயே இந்தப் படுகொலைகள் என்றால் நாட்டைப் பிரித்துக் கொடு என்றால் நம் தமிழ் அரசு நம் தமிழ் மக்களை எப்படி நடத்தும் என்பதை யோசித்துப் பார்த்துவிட்டு அடுத்த வார்த்தைகளைப் பேசுவது நல்லது. அகதிகளாக இங்கு வந்து ஆண்டுக்கணக்காக துன்பத்தில் தவிப்பவர்களுக்கு இந்த தமிழினத்தலைவர்களும் காவலர்களும் இனமான எழுச்சி நாயகர்களும் செய்து கிழித்தது என்ன என்பதையும் யோசித்துப் பார்க்கவேண்டும்.
இத்தனைக்கும் தமிழகத்தில் கூட தாய் மொழிக் கல்வி இருந்திராத நிலையில் ஈழத்தில் முழுக்க முழுக்க தமிழிலேயே மருத்துவக் கல்லூரி வரை படித்து முடிக்க முடிந்திருந்தது. நீதிக் கட்சி தொடங்கியபோது சொற்ப எண்ணிக்கையிலான பிராமணர்கள் அரசுப் பணிகளில் பெருமளவு இடத்தைப் பிடித்திருந்ததுபோல் இலங்கையில் சிறுபான்மையாக இருந்த தமிழர்கள் (சுமார் 15%) அரசுப் பணிகளில் 40-50% இடங்களில் இருந்தார்கள். இலங்கை அமைச்சகத்திலும் தமிழர்கள் கணிசமாக இடம்பெற்றிருந்தனர். இவையெல்லாம் 1983-ல் பேரழிவு ஆரம்பிப்பதற்கு முந்தைய நிலை. அப்படியாக தனி நாடு கோருவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில்தான் விடுதலைபுலிகள் போராட்டத்தை அதுவும் மிக மூர்க்கமான வன்முறைப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.
இஸ்லாமியர்களைப் போட்டது போட்டபடி துரத்தியடித்ததில் இருந்து அவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்று கண்டந்துண்டமாக வெட்டியும் வெடி குண்டு வைத்தும் கண்மூடித்தனமாகக் கொன்றழித்திருக்கிறார்கள். பாலசந்திரனை விட மிகச் சிறிய குழந்தைகளையெல்லாம் கூட மசூதியில் தொழுது கொண்டிருந்தபோது நேருக்கு நேர் நின்று சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். இதைவிட தமிழ் இனத்துக்குள்ளேயே பிற போராட்டக் குழுவினரை சரமாரியாகக் கொன்று குவித்திருக்கிறார்கள். ஆயுதக் கடத்தலில் ஆரம்பித்து அனைத்துவகையான திரைமறைவு வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இவை குறித்து ஒரு வார்த்தைகூட இன்றைய போராட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.
மூன்றாவதாக, இந்தியாவை இந்தப் போரில் பிரதான குற்றவாளியாக இணைக்கும் பணியை வேகத்துடன் முன்னெடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே, வை.கோ. பழ நெடுமாறன், சீமான், மே 17 இயக்கம் போன்றவர்களுக்கு இடப்பட்ட பணியும் இதுவே. ‘தன்னெழுச்சியாகப்’ போராட முன் வந்திருக்கும் லயோலா கல்லூரி மாணவர்களும் இதையே முன்வைத்திருக்கிறார்கள். அப்படியாக இலங்கையைச் சீரழித்தது போதாதென்று இந்தியாவையும் அழிக்கும் நோக்கில்தான் இது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மிகையான, பாதி உண்மைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ரத்த சரித்திரத்தின் இந்த இரண்டாம் பாகம் சரியாக இனங்காணப்பட வேண்டும். ஒரு பெரும் கொடுங்கனவின் தொடக்க நிமிடங்கள் இவை. நாளைய பெரும் வன்முறைக்குத் தோதாக இது போன்ற நடவடிக்கைகளால் நிலம் தயார்படுத்தப்பட்டுவருகிறது. சில நோய்களை வரும் முன்பே தடுத்துவிடவேண்டும். வந்த பிறகு மீட்சிக்கான வழியே கிடையாது.
இலங்கைக் கடற்படையால் தமிழக/இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக பேசப்படுபவற்றைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்த்தாலே அரை உண்மை எவ்வளவு அபாயகரமானது என்பது புரிந்துவிடும். தமிழகப் பகுதிகளில் மீன்வளம் குறைந்து வருவது, தமிழக மீனவர்கள் வலிமையான மோட்டர் படகுகளைப் பயன்படுத்துவது, இலங்கை மீனவர்களுக்கு அவர்களுடன் போட்டிபோட முடியாத நிலை, தமிழ மீனவர் குழுக்களுக்குள் நடக்கும் சண்டைகள் கூட இலங்கை அரசின் மீது பழிபோடப்படுதல், அரசியல் உள்நோக்கத்துடன் மிகைப்படுத்திக் கூறப்படும் நிகழ்வுகள், கைது போன்ற இலங்கைக் கடற்படையின் முதல் கட்டத் தொடர் எச்சரிக்கைகள், மாற்று மீன் பிடித் தடங்களை உருவாக்குதல், கடல் பாசிகள் வளர்த்தல் என எதுவுமே பேசப்படாமல் வெறுமனே இலங்கை அரசு தமிழக/இந்திய மீனவர்களைக் கொல்கிறது என்ற ஒற்றைக் குற்றச்சாட்டு பிரச்னையை மேலும் பெரிதாக்க மட்டுமே செய்யும்.
பஞ்சாபில் ஆரம்பிக்கப்பட்ட காலிஸ்தான் பிரச்னை இந்திய அரசால் ஓரளவுக்கு ”நல்ல முறை’யில் தீர்க்கப்பட்டிருக்கிறது. என்றாலும் காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் என எல்லையோரப்பகுதிகளில் தீராத வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன. இப்போது ஈழத்தையும் உள்ளடக்கிய தனித் தமிழ் நாடு என்ற சாகசப் போர் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக, இந்திய அரசும் அதன் அதிகாரவர்க்கமும் இந்தப் பிரச்னையைக் கையாளும் திறமை கொண்டவர்களாகத் தெரியவில்லை. தங்கள் தரப்புக்கான எண்ணெயை ஊற்றி பிரச்னையைக் கொழுந்துவிட்டெரியவே செய்வார்கள். அல்லது அந்த திசையில் உளவுத்துறையால் வழிநடத்தப்படுவார்கள். மக்களாட்சியில் மக்கள்தான் மன்னர்கள்… அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள்தான் அடுத்தகட்ட மன்னர்கள் என்பதுதான் பொதுவான நம்பிக்கை. ஆனால், உண்மையில் தேசங்கள் இவர்களால் ஆளப்படுவதில்லை. சர்வதேச வஞ்சக உளவாளிகளால் அது ஆளப்படுகிறது. பிரிவினைவாதிகளுக்கு உணவிடும் அவர்கள்தான் இறையாண்மையைக் கட்டிக் காக்கவேண்டும் என்ற பேரில் அரசையும் ஆட்டுவித்துவருகிறார்கள். சதுரங்கத்தின் இரண்டு பக்கமும் அவர்களே அமர்ந்து ஆடும் இந்த ஆட்டத்தில் உருட்டப்படும் காய்கள்தான் நாமும் நம் தலைவர்களும்.
பாரத மாதாவின் முகமூடிக்குப் பின்னால் இன்றிருப்பது சூனியக்காரி. நாம் சூனியக்காரி மீது எறியும் அம்புகள் எல்லாம் கேடயமாகப் பிடிக்கப்பட்டிருக்கும் பாரத மாதாவின் தேகத்தைத்தான் குத்திக் கிழிக்கின்றன. மீட்பு தேடி ஓடும் நம்மை, புதிய அவதாரமெடுத்து அரவணைக்கக் காத்திருப்பதோ தெய்வ வடிவில் இருக்கும் சாத்தான். சூனியக்காரிக்கும் சாத்தானுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் நம் பாரத தேசத்தின் எதிர்காலம் அச்சமூட்டுவதாகவும் வேதனை நிறைந்ததாகவும் இருக்கிறது.
இந்த கட்டுரை பலருக்கு பிடிக்காது. இருந்தாலும் கருத்தில் கொள்ள வேண்டியது.
ஹி ஹி ஹி... போங்கையா போங்க.. :))
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
B.R. மகாதேவன்Tweet
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 28
இந்து மதத்தையும் இந்தியாவையும் விமர்சிப்பவர்கள் முதலும் கடைசியுமாகச் சொல்வது என்னவென்றால், அதன் சாதி சார்ந்த சமூகக் கட்டமைப்புதான் அனைத்து வீழ்ச்சிக்கும் காரணம் என்பதே. இந்த சாதி அமைப்புக்கு இந்து மதத்தின் முழு அங்கீகாரம் இருக்கிறது எனவே, சாதி அழிய வேண்டுமானால், இந்து மதம் அழிய வேண்டும் என்பதுதான் இவர்களுடைய இலக்கு. இந்து மதத்தின் பழங்கால நூல்களில் சாதி என்ற வார்த்தையே இல்லை என்பதும் அவை சொல்வதெல்லாம் வர்ண அடிப்படையிலான சமூகக் கட்டுமானம்தான் என்பதும் சொல்லிக் காட்டப்பட்டால், அந்த வர்ணமும் சேர்ந்தே அழிய வேண்டும் என்று முழக்கமிடுவார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் கல்வி தரப்படவேண்டும்; அதன் மூலம் அவர் பெறும் திறமைக்கு ஏற்ப சமூகத்தில் அவருடைய வேலையும் இடமும் தீர்மானிக்கப்படவேண்டும் என இன்றைய நவீன சமூகம் எதைச் சொல்கிறதோ அதையேதான் வர்ணாஸ்ரம தர்மமும் முன்வைக்கிறது என்றாலும் வர்ணாஸ்ரமத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதன் மூலம் சாதி எதிர்ப்புப் போராளிகளின் இலக்கு சமூக நல்லிணக்கமோ மேம்பாடோ அல்ல என்பதையே உறுதிப்படுத்திவருகிறார்கள்.
வர்ணத்துக்கும் சாதிக்கும் இடையிலான வித்தியாசத்தை ஒருவர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கீதையில் கிருஷ்ணர் சொன்னதுபோல், நால் வகை வருணங்களை நானே சிருஷ்டித்தேன், குணங்கள், கர்மங்களின் அடிப்படையில். இதுதான் வர்ணாஸ்ரமத்தின் ஆதாரம். இதில் முதல் வாக்கியத்தை மட்டுமே வைத்துக் கொண்டுதான் அனைத்து திரிபு வேலைகளும் நடந்துவருகின்றன. ‘கருணாநிதி ஒரு முட்டாள் என்று சொல்வது தவறு’ என்று ஒரு வாக்கியம் எழுதப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் முதல் மூன்று வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு பேரியக்கம் ஆரம்பிக்கப்பட்டால் எப்படிப் பிழையாக இருக்குமோ அது போன்றதுதான் கீதையில் கிருஷ்ணர் சொன்ன வாக்கியத்தில் முதல் பாதியை மட்டும் எடுத்துக்கொண்டு மேலும் கீழும் குதிப்பதும்.
வர்ணாஸ்ரமத்தில் ஒவ்வொரு மனிதருடைய குணமே அவருடைய வேலையையும் சமூக அந்தஸ்தையும் தீர்மானிப்பதாக இருந்தது. சாதி பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாக அதை மாற்றியது. வர்ணம் சாதியாக மாறியது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
வர்ணாஸ்ரம தர்மத்தில் முதலில் ஒவ்வொரு மனிதருடைய வர்ணமும் சப்தரிஷிகள், மனு என்ற குழுவினரால் தீர்மானிக்கப்பட்டன. அதாவது, சமூகத்துக்கு எத்தனை சத்ரியர்கள் தேவை, எத்தனை வைசியர்கள் தேவை, எத்தனை பிராமணர்கள் தேவை எத்தனை சூத்திரர்கள் தேவை என்றவற்றின் அடிப்படையில் சமூகத்தில் இருக்கும் நபர்களைப் பிரித்து வகைப்படுத்தினார்கள். ஒவ்வொருவரும் தமக்கு என்ன வர்ணம் தரப்பட்டதோ அதற்குரிய பணியைச் செய்து வந்தார்கள். இன்று ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடப்பதுபோல் அன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இந்தத் தேர்தல் நடந்தது. யார்யாரெல்லாம் தங்கள் வர்ணத்தின் பணியைச் சிறப்பாகச் செய்தார்களோ அவர்கள் தொடர்ந்து அதே வர்ணத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். திறமையாகச் செயல்படாதவர்கள் ஒரு வர்ணத்தில் இருந்து இன்னொன்றுக்கு மாற்றப்பட்டனர். ஒரு வர்ணத்தில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டவர்களும்கூட வேறு வர்ணத்துக்கு விருப்பத்தின் பேரில் மாற்றப்பட்டனர். சூத்திரராக இருந்த ஒருவர் பிராமணராகவோ வைசியராகவோ சத்ரியராகவோ ஆக முடிந்தது. பிராமணர்களில் இருந்து சிலர் சூத்திரர்களாக ஆக்கவும் பட்டிருக்கிறார்கள். இப்படி வர்ணங்களை மாற்றிக் கொண்டதற்கு ஏராள உதாரணங்கள் பழங்கால நூல்களில் காணப்படுகின்றன. வர்ணாஸ்ரம தர்மத்தின் ஆரம்பநிலை என்பது இதுதான். இப்படிப் பல ஆண்டுகள் நடைமுறையில் இருந்திருக்கிறது.
இந்த அனுபவங்களில் இருந்து வேறு சில படிப்பினைகளைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். நான்கு வருடம் ஒரு வர்ணத்தில் இருந்தவர் வேறொன்றுக்கு மாற்றப்பட்டதால் அவருடைய சமூகப் பங்களிப்பு முழுமையாகக் கிடைக்காமல் போய்விட்டிருக்கிறது. தனிநபர் என்ற வகையில் அவருக்கும் அது எந்த நலனையும் செய்திருக்கவில்லை. விவசாயத்துறையில் நான்கு வருடம் இருந்த ஒருவர் புரோகிதத்துறைக்கு மாற்றப்பட்டபோது அவரால் புரோகிதத்துறையிலும் சிறந்து விளங்க முடியாமல் போனது. விவசாயத்துறையிலும் சிறந்து விளங்க முடியாமல் போனது. இதனால், ஒவ்வொருவருடைய வர்ணத்தையும் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மாற்றுவதை மறுபரிசீலனை செய்தார்கள்.
இது இன்றைய சூழலில் நமக்கும் நன்கு புரிந்துகொள்ள முடிந்த ஒரு விஷயம்தான். பத்திரிகைத் துறையில் நான்கு வருடம் பணி புரிந்த ஒருவரை அதற்கு அடுத்த நான்கு வருடத்துக்கு வங்கித் துறைக்கு மாற்றினால் அவரால் இரண்டையும் சிறப்பாகச் செய்ய முடியாமல் போக வாய்ப்பு உண்டு அல்லவா. கிணற்றுக்குக் குழி வெட்டுவதானால், ஒரே இடத்தில் தொடர்ந்து வெட்டினால்தானே நீர் கிடைக்கும். ஓரிடத்தில் நான்கு அடி இன்னொரு இடத்தில் நான்கு அடி என்று வெட்டினால் நீர் எப்படிக் கிடைக்கும்? ஒரு துறையில் நான்கு வருடங்கள் பணி புரிவதால் கிடைக்கும் திறமையும் அனுபவ அறிவும் கவனத்தில் கொள்ளவேண்டியவைதானே. புதிய துறைக்கு மாற்றினால் அதைக் கற்றுக் கொள்ள சில மாதங்கள் ஆகும். அதுவரை பல தவறுகள் நடக்கும். தட்டுத்தடுமாறி விஷயங்களைக் கற்றுத்தேர்ந்து வரும் நிலையில் வேறொரு துறைக்கு மாற்றுவது மீண்டும் குழப்பத்தையே தானே கொண்டுவரும். எனவேதான், நான்கு வருடத்துக்கு ஒரு வர்ணம் என்ற முறையை மாற்றி ஒரு ஆயுள் முழுமைக்கும் ஒரு வர்ணம் என்று கொண்டுவந்தார்கள். இன்று 60 வயது வரை ஒரே துறையில் வேலை என்று சொல்கிறோமே அதுபோல். இந்த முறை நல்ல பலனைத் தந்தது. ஒவ்வொருவருடைய அனுபவ அறிவும் முழுவதும் சமூகத்துக்குப் பயன்பட்டது. தனி நபரின் நலனுக்கும் அது பெரிதும் உபயோகமாக இருந்தது. அப்படியாக ஒரு வர்ணம் (வேலை) என்பது ஒரு ஆயுள் முழுமைக்குமாக ஒருவருக்கு வந்தது.
ஆனால், இந்தக் காலகட்டத்திலும் தந்தை என்ன வர்ணமோ அதுதான் அவருடைய வாரிசுகளுக்கும் என்று தீர்மானமாகியிருக்கவில்லை. ஒருவர் ஆயுள் முழுவதும் புரோகிதராக இருந்திருக்கலாம். அவருடைய மகன் புரோகிதத்துறைக்கான திறமையோ ஆர்வமோ இல்லாதவராக இருந்தால் அவர் சூத்திரராகவோ வைசியராகவோ ஆக இடம் இருந்தது. ஒரு சூத்திரரின் மகன் சத்திரியராகவோ பிராமணராகவே ஆக முடிந்தது. இந்த அமைப்பு பல ஆண்டுகள் நீடித்தது. ஆனால், இந்த அமைப்பில் இன்னொரு குறை இருந்தது. ஒவ்வொருவருடைய வர்ணம் என்பது சப்த ரிஷிக்கள் என்ற குழுவினரால் தீர்மானிக்கப்படுவதாக இருந்தது. அதாவது, சூத்திர வர்ணத்துக்கான மனோபாவம் கொண்ட ஒருவரை பிராமணராகத் தவறாக தீர்மானித்துவிட்டால் அவருடைய வாழ்க்கை முழுவதும் சமூகத்துக்கு முழு வலிமையுடன் பங்களிக்க முடியாமல் போடுவிடும். தனிநபர் என்ற அளவிலும் அவருக்கு அந்தத் தீர்மானம் பெரும் தீங்கையே விளைவித்திருக்கும். இதைக் களைவதற்காக இன்னொரு வழிமுறையை அந்த சமூகத்தினர் கண்டடைந்தனர். அதுதான் வர்ணாஸ்ரமத்தின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு. கல்வியின் அடிப்படையில் வேலைகள் (வர்ணம்) தீர்மானமாக வேண்டும் என்ற இன்றைய அதி நவீன சமூகங்கள் முன்வைக்கும் அதே வழிமுறையைத்தான் அன்று நம் முன்னோர்கள் அதில் அமல்படுத்தினார்கள்.
அதாவது, ஒவ்வொரு மனிதரும் குருகுலத்தில் சேர்க்கப்பட்டு 12 வருடங்களுக்கு நான்கு வர்ணங்களிலும் முறையான பயிற்சி பெறவேண்டும். 12 வருட முடிவில் எந்த வர்ணத்தின் குணாம்சங்கள் ஒருவரிடம் மிகுதியாக இருக்கிறதோ அவர் அந்த வர்ணத்தினராக வேண்டும். இப்படியான தேர்வு அனைவருக்கும் உகந்ததாகவும் சமூக மேம்பாட்டுக்கு கூடுதல் பலனளிப்பதாகவும் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக இது மிகவும் நியாயமானதாக இருந்தது. இதுவே வர்ணாஸ்ரமத்தின் உண்மையான வடிவம்.
காலப்போக்கில் இந்த அமைப்பு வேறு வடிவை அடைய ஆரம்பித்தது. இந்த இடத்தில்தான் இன்னொரு முக்கியமான அம்சம் செயல்பட ஆரம்பிக்கிறது. அதுதான் வர்ணத்தை சாதியாக மாற்றியது.
ஒவ்வொரு மனிதருடைய ஆளுமையையும் மூன்று விஷயங்கள் பாதிக்கும். முதலாவதாக, ஒருவருடைய மரபணுக்கள். நிறத்தில் ஆரம்பித்து உடல் உயரம், வலு, பருமன் என அனைத்தும் இந்த மரபணுவால்தான் தீர்மானமாகும்.
இரண்டாவதாக, ஒரு மனிதருடைய சிந்தனை, நடத்தை ஆகியவற்றை அவர் எந்தச் சூழலில் வாழ்கிறாரோ அது பெருமளவுக்குத் தீர்மானிக்கும். பாலியல்/பாலுறவு தொடர்பான சொற்களை இயல்பாகப் பேசும் சமூகச் சூழலில் வளரும் குழந்தை அந்த வார்த்தைகளைச் சரளமாகக் கற்றுக்கொண்டு பேச ஆரம்பிக்கும். ஸ்லோகங்களைக் கேட்டபடி வளரும் குழந்தை இயல்பாகவே சுலோகங்களைச் சொல்லியபடி வளரும். மொழியைக் கற்றுக் கொள்வதுபோல் பல விஷயங்களைக் குழந்தைகள் தாம் வாழும் சூழலில் இருந்து கற்றுக் கொள்வார்கள்.
மூன்றாவதாக, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயல்பாக இருக்கும் உள்ளார்ந்த அம்சங்கள். இது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கும். மாபெரும் கலைஞர்கள் உருவாவதெல்லாம் இந்தத் தனிப்பட்ட உள்ளார்ந்த திறமையின் விளைவாகத்தான். இதை திட்டமிட்டு ஒருவரால் உருவாக்கவும் முடியாது. தடுக்கவும் முடியாது. இப்படியாக ஒரு மனிதருடைய ஆளுமையைத் தீர்மானிப்பதில் பிறப்பு, வளர்ப்பு, உள்ளார்ந்த திறமை என மூன்று விஷயங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.
இதில் முதல் இரண்டு அம்சங்களை மீறி வேறொரு வாழ்க்கைப் பார்வையையோ திறமையையோ ஒருவர் பெறுவது முற்றிலும் தற்செயலான நிகழ்வு. அது ஒருவகையில் விதி விலக்குதான். சமூகத்தை முன்னகர்த்திச் செல்வது இத்தகைய விதிவிலக்குகள்தான் என்பது உண்மையே. என்றாலும் சமூகங்கள் அமைக்கப்படுவது விதிகளின்படித்தான். விதிவிலக்குகளின் படி அல்ல. மக்களில் பெரும்பாலானவர்கள் பிறப்பு, வளர்ப்பு என்ற இரண்டின் செல்வாக்குக்குத் தம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்தவர்களாகவே இருப்பார்கள். அதாவது, தனது பெற்றோர் எப்படியான வாழ்க்கையை வாழ்ந்தார்களோ அதையே விரும்பி, திறமையாகச் செய்பவர்களாக இருப்பார்கள். வர்ணம் காலப்போக்கில் சாதியாக அதாவது பிறப்பின் அடிப்படையில் வேலைகளையும் அதன் மூலம் சமூக அந்தஸ்தையும் தீர்மானிக்கும் அமைப்பாக மாறியதற்கு மனிதர்களின் இந்த இரண்டு அம்சங்களே காரணம். அவரையை நட்டால் அவரைதான் முளைக்கும். துவரை முளைக்காது என்பது மிகவும் எளிய, எல்லாராலும் ஏற்றுக்கொள்ள முடிந்த ஒரு விஷயம்தான். அதன் அடிப்படையில் பிராமணரின் மகன் பிராமணரானதையும் சூத்திரரின் மகன் சூத்திரரானதையும் நம் கடந்த கால சமூகம் மிகவும் இயல்பாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.
ஆனால் அம்பேகர், வர்ணம் சாதியாக மாறியதை சதித் திட்டத்தின் அங்கமாகச் சொல்கிறார். அதாவது பிராமண, சத்ரிய, வைசிய வர்ணங்கள் உயர்வானவை. அந்த வர்ணங்களில் இருந்தவர்களுக்குக் கூடுதல் சலுகைகள் இருந்தன. நிறைய வசதி வாய்ப்புகள் இருந்தன. அதிகாரம் அவர்கள் கையில் இருந்தது. அவர்கள் அதை விட்டுக்கொடுக்க, குறிப்பாக, சூத்திரர்களுடன் பரிமாறிக் கொள்ள விரும்பவில்லை. எனவே, வர்ணாஸ்ரமத்தில் ஒவ்வொருவருடைய குணத்துக்கு ஏற்ப வர்ணம் தீர்மானமாவதை அவர்கள் மாற்றி அமைத்தனர். குரு குலப் பயிற்சிக்குப் பிறகு ஒருவருடைய வர்ணம் தீர்மானமாகும் முறையை மாற்றி ஒவ்வொரு குழந்தையின் அப்பாவே தன் வர்ணத்தைக் குழந்தைக்கு கை மாற்றித் தருவதாக ஆக்கினார்கள். இதன்படி பிராமணரின் மகன் குருவிடம் கல்வி கற்று அதன் பிறகு பிராமணராக ஆவதற்குப் பதிலாக பிராமணருக்குப் பிறந்ததன் மூலமே பிராமணராக ஆகிவிட்டார். இதுதான் சூத்திரரை சூத்திரராகவே இருக்கும்படிச் செய்துவிட்டது என்று அவர் சொல்கிறார்.
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குப் பிறப்பதன் மூலமே மகனும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக மதிக்கப்பட்டுவிடமுடியுமா என்ற வாதத்தின் மூலம் பிறப்பின் அடிப்படையில் சமூக அந்தஸ்து தீர்மானமாவதைக் கேள்விக்குட்படுத்துவார்கள். இவர்கள் ஒரு விஷயத்தை இங்கு கவனத்தில் கொள்ளத் தவறிவிடுகிறார்கள். பிறப்பின் மூலம் கிடைத்த முன்னுரிமை என்பது ஒரு பள்ளியில் எளிதில் அனுமதி கிடைப்பதற்குச் சமமானது மட்டுமே. அந்தப் பள்ளியில் கடினமாக உழைத்து, ஒழுங்காகப் படித்து முடித்து யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அவர்களுக்கே முதலிடம் தரப்பட்டது. ஒரு மன்னரின் குழந்தை உரிய காலத்தில் வில் வித்தை, ஈட்டி எறிதல், தேரோட்டுதல் போன்றவற்றில் ஆரம்பித்து ராஜாங்க விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதுவரை அனைத்தையும் முறையாகக் கற்றுக்கொண்டே அரசர் பதவிக்கு வந்து சேர்கிறார். ஒரு பிராமணரின் குழந்தை உரிய காலத்தில் உபநயனம் செய்விக்கப்பட்டு, வேத வேதாந்தங்களைக் கற்றுத் தேர்ந்து, மது மாமிசத்தில் இருந்து விலகி நின்று, பாலியல் ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழ்ந்ததன் மூலமே சமூக அந்தஸ்தை வென்றெடுக்கிறார். தன் தந்தை பிராமணராக இருந்ததன் மூலம் அவருக்குக் கிடைப்பது ஒரு எளிய முன்னுரிமை மட்டுமே. எஞ்சிய சாதனைகளை அவர் சுயமாகச் செய்துதான் அந்த மரியாதைப் பெறுகிறார். இது எப்படி என்றால், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் கடினமாக உழைத்து தானும் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெறுவதைப் போன்றது. இதை யாரும் தவறு என்று சொல்ல முடியாது.
சாதியப் போராளிகளுக்குப் புரியும்படிச் சொல்வதானால், பெரியாரின் சீடரும் அண்ணாவின் தம்பியும் பகுத்தறிவுப் பகலவனும் தமிழினத் தலைவரும் தலித் சம்பந்தியும் கூடவே கம்யூனிஸ்டுமான திருக்குவளை மு. கருணாநிதி, முரசொலி மாறனின் மகன் என்ற ஒரே காரணத்தின் மூலம் பதவிக்கு பின்வாசல் வழி வந்தவரால் நடத்தப்படும் தொலைக்காட்சியில் திமுக ரவுடிக்கூட்டத் தலைவன் என்று அடையாளப்படுத்தப்பட்ட மதுரையின் கட்டை பஞ்சாயத்து மன்னரான மு.க. அழகிரிக்கு அமைச்சர் பதவி வாங்கிக்கொடுத்தது போல் அல்ல இது. பாளையங்கோட்டைச் சிறையில் பாம்புகளுக்கும் பல்லிகளுக்கும் இடையே தந்தை வாடியதுபோல் மிசா காலகட்டத்தில் சிறையில் வாடி, கட்சித் தொண்டனாக இருந்து இளைஞர் அணித் தலைவராகி, எம்.எல்.ஏவாகி., மேயராகி, துணை முதல்வராகி இன்று அடுத்த முதல்வராக ஆவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் போலவேதான் அன்றைய பெரும்பாலான மன்னர்களும் வைசியர்களும் பிராமணர்களும் உரிய படிநிலைகளைக் கடந்தே அந்தந்த வர்ணத்தின் தொழிலைச் செய்பவர்களாக ஆகியிருக்கிறார்கள். யாரும் வெறும் பிறப்பை மட்டுமே வைத்து உச்சாணிக் கொம்பில் ஏறி அமர்ந்துவிடவில்லை.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் வர்ணத்தின் அடிப்படையிலான அமைப்பில் பாதிக்கப்பட்டவர்களாக எந்த சூத்திரர் பிரிவை அம்பேத்கர் சொல்கிறாரோ சாதிக் கட்டமைப்பில் அதே சூத்திரர்களை (பிற்பட்ட சாதியினர்) சாதி இந்துவாக கட்டம்கட்டித் தாக்கவும் செய்கிறார். அப்படியானால், அவர்கள் யார்.. நல்லவர்களா… கெட்டவர்களா..? பாதிக்கப்பட்டவர்களா… பாதிப்பை ஏற்படுத்தியவர்களா?
அம்பேதகர் தலித்துகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளாகப் பட்டியலிடுபவற்றில் இரண்டு முக்கியமான விஷயங்களைக் கணக்கில் கொள்ளவேண்டும். முதலாவதாக, அவர் பட்டியலிடுபவை, ஒரு அரசு மருத்துவமனைக்குச் சென்ற ஒருவர் அங்கு சிகிச்சை பெறும் அனைவருடைய நோய்களையும் ஒரே ஒரு நபருக்கு நேர்ந்ததாகச் சொல்வதைப் போன்றது. தலித் என்ற வகைக்குள் நில உடமையாளரான தலித், குத்தகைதாரரான தலித், விவசாயக் கூலியான தலித், சிகை அலங்காரம் செய்யும் தலித், ஆடு மாடு மேய்க்கும் தலித், வெட்டியானாக இருக்கும் தலித், மலம் அள்ளும் தலித், துணி வெளுக்கும் தலித் என எத்தனையோ பிரிவுகள் உண்டு. ஒவ்வொருவருடைய வாழ்க்கை முறையும் அனுபவங்களும் ஒவ்வொருவிதமானவை. அதிலும்கூட மன்னர்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் தலித்தின் வாழ்க்கை வேறானது. நிலப்பிரபுக்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் நபர்களின் வாழ்க்கை வேறுவிதமானது. பிராமணர்களுக்கும் சூத்திரர்களுக்கும் சிகை அலங்காரம் செய்பவர்களின் வாழ்க்கை வேறானது. இவர்கள் அனைவருமே கூட சிகை அலங்காரத் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் வரமாட்டார்கள். இங்கு வர்க்கமும் சேர்ந்து செயல்படும்.
இந்த தலித் என்ற ஒற்றைச் சிமிழுக்குள் அடைக்கப்படும் ஒவ்வொருவருமே தமக்கான தெய்வ வழிபாட்டுமுறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் என அனைத்திலும் வித்தியாசமானவர்கள். மேல்சாதியினருடனான இவர்கள் அனைவருடைய பரிமாற்றமும் வேறுபட்டவை. மன்னருக்கு சேவகம் செய்த தலித் பிரிவினர்களுக்கு நிலங்கள் தானமாகத் தரப்பட்டு அவர்கள் நில உடமையாளராகவே இருந்திருக்கிறார்கள். பல இடங்களில் குத்தகைதாரராக தலித்கள் இருந்திருக்கிறார்கள். அது அரை உடமையாளருக்கு சமமான நிலை. விளைச்சலில் கணிசமான பங்கை குத்தகைதாரர் எடுத்துக்கொள்ள வழி உண்டு. ஊடு பயிராக நடப்படுபவையும் நன் செய் நீங்கலாக நடப்படும் பயிர்களும் முழுவதும் அவர்களுக்கே கிடைக்கும். வறட்சியால் விளைச்சல் பாதிக்கப்பட்டால் நஷ்டத்தை நில உடமையாளரும் சேர்ந்தேதான் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்த தலித்கள் பிற தலித்களை விடப் பல மடங்கு மேலானவர்கள். அம்பேகர் கண்ணில் இப்படியான ஒருவர்கூட பட்டிருக்கவில்லை.
கழுத்தில் கலயத்தைக் கட்டிக் கொள்ளவேண்டும்; இடுப்பில் விளக்கமாறைக் கட்டிக் கொள்ளவேண்டும் என்ற விஷயங்கள் எல்லாம் தலித்களில் ஐந்து சதவிகித மக்களுக்குக் கூட விதிக்கப்பட்டிருக்காத ஒரு வழிமுறை. துணி வெளுப்பவர்கள் இரவு நேரத்தில் உணவை யாசகம் கேட்டுச் செல்வார்கள். பிற பல தலித்கள் அப்படிச் செய்யமாட்டார்கள். மலம் அள்ளுதல் ஒரே ஒரு பிரிவு தலித்கள் மட்டுமே செய்யும் பணி. பிற தலித்கள் யாரும் அதைச் செய்யமாட்டார்கள். இந்தச் செயல்களுக்கான காரணங்களையும் இதில் இருந்து தப்ப என்னென்ன வழிகள் இருந்தன என்பதையும் பற்றியெல்லாம் எதுவுமே அம்பேத்கர் சொன்னது கிடையாது. மேலும் தலித்களுக்கு இருந்த சாதகமான விஷயங்களையெல்லாம் புறக்கணித்துவிட்டு அனைத்து இழிநிலைகளையும் ஒரே ஒரு தலித் என்ற பிரிவுக்கு இழைக்கப்பட்டதாகச் சொல்லும்போது மிகப் பெரிய அநீதி நடந்ததுபோல் தென்படும். இதை அடிப்படையாக வைத்துத்தான் இந்து மதத்தின் மீது சாதி இந்துக்கள் மீதும் கட்டுக்கடங்காத வெறுப்பையும் கோபத்தையும் அம்பேத்கர் கட்டமைத்துக்கொள்கிறார். இது அடிப்படையிலேயே தவறு.
இரண்டாவதாக, அவர் ஒடுக்குமுறைகளாகப் பட்டியலிடுபவை எல்லாமே ஒருவகையில் ஒடுக்குமுறையே அல்ல. அவையெல்லாம் நாங்கள் உங்களுக்கு சமம்தான் என்ற சவாலை அதிரடியாக முன்வைத்ததால் நடந்தவையே. ஒரு சமூகத்தில் வாழும் மக்கள் அனைவரும் சமம் என்பது உண்மைதான். சம வாய்ப்பும் சம வசதிகளும் அனைவருக்கும் தரப்படவேண்டும் என்பதும் நியாயமான எதிர்பார்ப்புதான். ஆனால், பழைய வாழ்க்கை முறையில் அந்த சமத்துவம் குறித்த கருத்துகள் இரு தரப்பிலுமே இருந்திருக்கவில்லை. வர்ணாஸ்ரம காலகட்டத்தை விட்டுவிட்டுப் பார்த்தால் சம வாய்ப்பு என்பது புதிய சிந்தனையே. ஆனால், பல நூறு ஆண்டுகளாக சிலரை மேலானவர்களாக மதித்து வாழ்ந்துவிட்டு திடீரென்று ஒருநாள் நாங்கள் உங்களுக்குச் சமமே என்று கோஷங்கள் இடுவது நடைமுறையைப் புரிந்துகொள்ளாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கையே. எளிய மக்களைப் பகடைக்காயாகவைத்து நடத்தப்படும் இதுபோன்ற அரசியல் கலகங்கள் ஆக்கபூர்வமான நோக்கத்தைக் கொண்டவை அல்ல. எதிர் தரப்பில் இருக்கும் மேல் சாதியினரை எதிரிகளாகவே ஆக்கும் குயுக்தி அரசியல்தான் இது.
வர்ணாஸ்ரம/சாதிய கட்டமைப்பைப் பற்றி விமர்சிக்கும்போது அம்பேத்கர் வெகு சாமர்த்தியமாக, கடினமான இழிவான வேலைகளை தலித்கள் செய்ய நேர்ந்தது குறித்து பெரிதாக எதுவும் சொல்லாமல் இருப்பதை ஒருவர் பார்க்க முடியும். ஏனென்றால், என்னதான் ஒரு சமூகத்தின் அறிவு வர்க்கத்துக்குத்தான் அனைத்து மக்களின் நலனுக்காக சிந்திக்கும் பொறுப்பு உண்டு என்று சொன்னாலும் கடினமான கேவலமான வேலையைச் செய்து வந்தவர்களுக்கும் அதை மேம்படுத்தும் பொறுப்பு இருக்கிறது என்ற உண்மை அவருக்குத் தெரியும். எனவேதான் அது பற்றி அதிகம் அவர் பேசுவது இல்லை. சாதி அடுக்கில் தலித்கள் மேலேற முற்பட்டபோது சாதி இந்துக்கள் எப்படியெல்லாம் அவர்களை ஒடுக்கினார்கள் என்பதையே அவர் தன் வாதங்களுக்கு அடிப்படையாக வைத்துக்கொள்கிறார். தேர்ந்த வக்கீல் அல்லவா..? உண்மையைவிட வாதத் திறமைதானே வெல்லும் என்பது அவருக்குத் தெரியுமே.
இதனால்தான் தலித்களுக்குள்ளும் சாதி வெறி இருக்கிறதே என்ற உண்மையைச் சொல்பவர்களை விஷமிகள் என்று அம்பேத்கர் சொல்கிறார். தன் தரப்பு மக்களிடம் இருக்கும் குறைகளையும் அவர் கணக்கில் எடுத்துக்கொண்டிருந்தால் சக மனிதர்களை சமத்துவத்தோடும் சகோதரத்துவத்தோடும் நடத்தும் பண்பு மனித குலத்துக்கு இயல்பாகக் கைகூடும் ஒன்றாகவோ நீடித்து நிற்கும் ஒன்றாகவோ இல்லை. விழிப்பு உணர்வு பெற்ற ஒரு சிலர்தான் இதை மக்கள் மத்தியில் விதைத்து நிதானமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற உண்மைகளைப் புரிந்துகொண்டிருப்பார். இந்து சமூகத்தை அதன் மூலம் ஒரு மறுமலர்ச்சிக்கு அவர் கொண்டு சென்றிருக்க முடியும். காந்தி அதைத்தான் செய்தார். ஆனால், அம்பேத்காருக்கோ இந்து தன் குறைகளைத் திருத்திக்கொண்டு அடுத்தகட்டத்துக்கு நகரவேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்ற பிரிட்டிஷாரின் உத்தரவை தன்னுடைய கண்டுபிடிப்பாகவும் உரிமைப்போராட்டத்தின் முதல் முழக்கமாகவும் வைத்துக்கொண்டு சுய சிந்தனையாளர்போல் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்தக் காரணத்தினால்தான் வர்ணாஸ்ரமத்தையும் அவர் அழிய வேண்டும் என்று கூறுகிறார். அவருக்கு வர்ணம் என்பது சாதியைவிடப் பல மடங்கு உயர்ந்தது என்பது தெரியும். அதை அவரே விரிவாகக் குறிப்பிடவும் செய்திருக்கிறார். நவீன உலகம் முன்வைக்கும் சமூக அமைப்பு என்பது வர்ணாஸ்ரம தர்மமே என்பதும் அவருக்குத் தெரியும். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள அவருக்கு மனமில்லை. அதாவது, பிரிட்டிஷாருக்கு அது உவப்பானதாக இருந்திருக்கவில்லை என்பதால் அவருக்கும் அது ஏற்புடையதாக இருந்திருக்கவில்லை. தொட்டியில் வாழும் தங்க மீனுக்குக் கடலின் அருமை எப்படித் தெரியும்?
0
வர்ணத்துக்குத் திரும்புவோம் ன்னு எழுதிய அதே 'சிந்தனையாளர்' தான் அரை உண்மைகளின் அபாயம் ன்னு எழுதியவர் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை...
அன்போடு
மோரு
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
வர்ணத்துக்குத் திரும்புவோம் ன்னு எழுதிய அதே 'சிந்தனையாளர்' தான் அரை உண்மைகளின் அபாயம் ன்னு எழுதியவர் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை...--
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
எனக்கு பி ஆர் மகாதேவனின் திரைப்பட விமர்சனங்கல் ரொம்பப் பிடிக்கும். அதிலும் நான் எடுத்திருந்தால்ன்னு அவர் சொல்லுற கதை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்..
வர்ணத்துக்குத் திரும்புவோம் - இந்த படம் எப்ப ரிலீஸ் ஆகப்போகுது??
வணக்கம் ஜெ.மோ,
நான்(24) IAS தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவன் . கடந்தே இரு
வருடங்களாகத் தங்களது இணையத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பவன். வாழ்வின்
பொருள் அறிய ஆன்மீகத் தேடலில் அங்கும் இங்கும் அலைந்து பின் மீண்டும் என்
IAS தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருக்கிறேன். நம் சமூகம் தொடர்ந்து
செல்ல சில நாயகர்கள் ( காந்தி , போஸ் , விவேகானந்தர் , பிரபாகரன் , அன்னை
தெரசா ,கலாம் , பில் கேட்ஸ்… போன்றோர்) அனைத்துத் துறைகளிலும் வேண்டும்
என்பது என் கருத்து . அவர்களது உண்மைகளை ஆராயும் போது சிலரது சில நல்ல
பிம்பங்கள் உடையத்தான் செய்கின்றன . ஆனால் அவை அனைத்தையும் பொது வெளியில்
வைத்துத்தான் ஆக வேண்டுமா. இவ்வாறு அனைவரது பிம்பங்களும் உடைக்கப்படுமானால்
பின் சராசரி மனிதர்களுக்கும், இளம் தலை முறைகளுக்கும் ஒரு ‘முன் மாதிரியாக
‘ யாரைத்தான் முன்னிறுத்த முடியும் .
இது உங்கள் “வரலாற்றின் வண்டலில்…” கட்டுரை படித்ததினால் எழுந்த கேள்வி. சில விடயங்களை, அவை உண்மையாய் இருப்பினும் அதைப் பொது வெளியில் உலக நன்மை கருதி மறைப்பது நல்லது(ஜனநாயகத்தை மீறாமல்) என்பது என் எண்ணம். என்னுள் உடைக்கப்பட்டது ‘போசி’னுடைய பிம்பம் அல்ல இந்திய தேசிய ராணுவத்தினுடையது . இச்சமூகத்தை நேசிப்பவராகவும், ஆழ்ந்த அனுபவமும் மிக்க உங்களது கருத்துக்காகக் காத்துக்கொண்டிருக்றேன் .
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெ.மோ,
-பெ .ர .சந்தோஷ் கிருஷ்ணன் .
அன்புள்ள சந்தோஷ்,
நீங்கள் சொல்வதற்கு இந்தியாவில் ஒரு மரபு உள்ளது. சென்றகாலத்தில் உள்ள நல்லவற்றை மட்டும் நினைவில் நிறுத்திக்கொள்வது, வாழ்ந்த மனிதர்களைக் கடவுள்களாக ஆக்கிக்கொண்டு அவர்களின் குறைகளைத் தாண்டிச்செல்வது. அதை நம் பெற்றோர் நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். இயல்பாகவே அது சரி என நாம் நினைக்கிறோம்.
இன்னொரு மரபு உள்ளது. அதை ஐரோப்பாவில் உருவானது எனலாம். அது சென்றகாலங்களை, மறைந்த ஆளுமைகளை எல்லாப் பக்கங்களையும் கணக்கில்கொண்டு கறாராக மதிப்பிட்டு ஆராய்வது. உண்மையை மட்டுமே நினைவில் நிறுத்திக்கொள்வது.
நம்முடைய மதிப்பீட்டை நாம் நிலப்பிரபுத்துவ காலத்துக்குரியது எனலாம். ஐரோப்பிய மதிப்பீட்டை நவீன காலகட்டத்திற்குரியது எனலாம். மூதாதை வழிபாடும் வீரவழிபாடும் வேரூன்றிய காலகட்டத்திற்குரியது நம்முடைய வழி. நவீன ஜனநாயகமும் அறிவியலும் வளர்ந்த காலகட்டத்திற்குரியது ஐரோப்பாவின் வழி. நான் ஐரோப்பாவின் வழியே இன்று பொருத்தமானது என நினைக்கிறேன்.
நம்முடைய மரபான பார்வை இன்று நடைமுறைச் சாத்தியம்கூட அல்ல என்பதைக் காணலாம். காரணம் நம்மைச்சுற்றி ஜனநாயகம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இங்கே எல்லா கருத்துக்களும் தாராளமாக முன்வைக்கப்படுகின்றன.
ஜனநாயகம் என்பது கருத்துக்களின் அதிகாரம். ஆகவே ஒவ்வொரு கருத்தும் இன்னொன்றை மறுக்கிறது. உடைக்க முயல்கிறது. அந்நிலையில் ஒரு கருத்தின் உருவமாக உள்ள மனிதரை விமர்சிப்பது தவிர்க்கமுடியாததாகிறது. அதிலிருந்து எவரையும் பாதுகாக்க முடிவதில்லை.
பிம்பங்களை உடைக்கவேண்டாம் என்று சொல்பவர்களைக் கவனியுங்கள். அவர்கள் தங்களுக்குச் சாதகமான பிம்பங்கள் உடைபடும்போது மட்டுமே அதைச் சொல்வார்கள். ஆனால் தங்களுக்கு எதிரான பிம்பங்களை உடைக்கும்போது அதை உண்மைக்கான தேடல் என்றுதான் அவர்களும் சொல்வார்கள்
ஓர் உதாரணம் சொல்கிறேன். 1992 வாக்கில் நான் தினமணியில் ஒருகட்டுரை எழுதினேன். அதில் அரசியல் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவர்களின் சிந்தனையைப் புரிந்துகொள்வதில் எந்த அளவுக்குப் பங்காற்றுகிறது என எழுதியிருந்தேன். அதில் கார்ல்மார்க்ஸுக்கும் அவரால் பாலுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கைவிடப்பட்ட பணிப்பெண்ணான ஹெலென் டெமுத்துக்குமான உறவைப்பற்றிச் சொல்லியிருந்தேன்.
அந்தக் கட்டுரை இங்குள்ள இடதுசாரிகளைக் கொந்தளிக்கச் செய்தது. ஏனென்றால் இங்கே அதுவரை கார்ல் மார்க்ஸ் பற்றி முன்வைக்கப்பட்ட சித்திரமே வேறு. மார்க்ஸுக்கும் ஜென்னிக்குமான தெய்வீகக்காதலைப்பற்றிய காவியங்கள் மட்டுமே இங்கே பாடப்பட்டிருந்தன. ஹெலென் டெமுத்தின் பெயரை எவரும் உச்சரித்ததே இல்லை.என்னுடைய கட்டுரையை அவதூறு என எவராலும் மறுக்கமுடியாது, ஏனென்றால் அந்தத் தகவல்கள் உலகளாவ ஒப்புக்கொள்ளப்பட்டவை.
இடதுசாரிகள் இருவகையில் எதிர்வினையாற்றினர். மார்க்ஸின் சிந்தனைகளை மட்டுமே பார்க்கவேண்டும், அவரது படுக்கையறைக்குள் தலையைவிடுவது அநாகரீகம் என்று ஒருசாரார் சொன்னார்கள். மார்க்ஸ் செய்தது ஐரோப்பிய சூழலில் இயல்பான ஒன்றே என ஒருசிலர் எழுதினார்கள்.
நான் அவற்றுக்கு இவ்வாறு பதில் சொன்னேன். மார்க்ஸின் சிந்தனைகளை அவரது செயல்களில் இருந்து பிரித்துப்பார்க்க முடியுமா? பாட்டாளிகளின் சிந்தனையாளர் ஒரு பாட்டாளியைப் பாலியல்ரீதியாக்ச் சுரண்டியது அச்சிந்தனைகளைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான தகவல் இல்லையா என்ன?
ஒருவேளை அப்படிப்பிரித்துப்பார்க்க மார்க்ஸியர் தயாராக இருந்தாலும் பிறரும் அப்படிச்செய்யவேண்டுமென சொல்ல அவர்களுக்கு ஏது உரிமை? மேலும் மார்க்ஸின் செய்கை ஐரோப்பியச்சூழலில் சாதாரணமான ஒன்று என்றால் அதை ஏன் இங்குள்ள மார்க்ஸியர் ஒளித்துவைத்தார்கள்?
அதைவிட நான் கேட்ட முக்கியமான கேள்வி ஒன்றுண்டு. இந்த நியாயங்கள் மார்க்ஸியர்களின் எதிரிகளுக்கும் பொருந்துமா? காந்தியை அரைநூற்றாண்டாக மார்க்ஸியர் தனிப்பட்ட முறையில் மட்டுமே விமர்சித்துவருகிறார்கள். அவரது பாலியல்சோதனைகளை மேடைகள் தோறும் திரித்தும் வளைத்தும் பேசியிருக்கிறார்கள். அவருக்கும் அவரது பிள்ளைகளுக்குமான உறவைப்பற்றி வெறும் பொய்களை எழுதி பேசிப்பரப்பியிருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் அது தனிப்பட்ட தாக்குதல் அல்லவா என்று கேட்கப்பட்டபோது காந்தி மீதான நம்பிக்கையை உடைக்க அது தேவைதான் என இவர்கள்தான் வாதிட்டார்கள். அதாவது உண்மையான பிம்பங்களைக்கூட அவர்கள் உடைப்பார்கள். அவர்களின் போலிப்பிம்பங்களை எவராவது தொட்டால்கூடக் கொதிப்பார்கள்
திராவிட அரசியல்வாதிகள் இதில் இன்னும் ஒரு படிமேல். அவர்கள் மேடைகள் தோறும் காந்தியையும் நேருவையும் தனிப்பட்டமுறையில் விமர்சித்ததற்கு அளவே இல்லை. ஆனால் அவர்களின் புனிதபிம்பங்களான ஈவேரா அண்ணாத்துரை பற்றி உண்மையான தகவல்களை, அவர்களின் நெருக்கமான தோழர்களான பாரதிதாசன், கண்ணதாசன் போன்றோர் எழுதியவற்றைச் சொல்லிப்பாருங்கள், கொந்தளிப்பார்கள்.
ஈவேரா வைக்கம்போராட்டத்தில் மிகச்சிறிய ஒரு பங்கையே வகித்தார் என்பது அப்பட்டமான வரலாறு. முழுக்கமுழுக்க தகவல்ரீதியானது. அவர்தான் அதை தொடங்கி நடத்தினார் என்ற பொய்யை எழுபது வருடங்களாகச் சொல்லி நிலைநாட்டிவிட்டனர்.அந்த உண்மையை சொன்னமைக்காக என்னை வசைபாடி ஐம்பது கட்டுரைகளாவது எழுதப்பட்டிருக்கின்றன.
எப்போதுமே இதை நீங்கள் கவனிக்கலாம். காந்தியை எந்த எல்லைவரைக்கும் சென்று வசைபாடுபவர்கள்தான் பகத்சிங்கையோ சேகுவேராவையோ சுபாஷ் சந்திர போஸையோ பற்றிய உண்மைத்தகவல்களைச் சொன்னால் பிம்பங்களை உடைப்பதன் அபாயம் பற்றிப் பேச ஆரம்பிப்பார்கள்.
ஆக பிம்ப உடைப்பு இங்கே நிகழ்கிறது. அப்படியென்றால் எல்லா பிம்பங்களையும் உடைத்துப்பார்ப்போம். எது சாரமுள்ளதோ அது நீடிக்கட்டும். அதுதானே முறை?
உங்கள் வினாவுக்கு நேர்நிலைப் பதில் என்றால் இப்படிச் சொல்வேன். வரலாறு என்பது வெறுமே தெரிந்து வைத்திருக்கும் தகவல் மட்டுமல்ல. அது இன்றைய நடைமுறைக்கான பாடங்கள் கொண்டது. ஆகவே அது உண்மைகளின் அடிப்படையில் அமைந்திருக்கவேண்டும். பொய்களின் அடிப்படையில் அமைந்திருந்தால் பொய்யான பாடங்களை அளிக்கும். அந்தப் பாடங்கள் வழியாகச்செல்லும்போது அழிவே எஞ்சும்
சுபாஷ் சந்திரபோஸின் வரலாற்றையே எடுத்துக்கொள்வோம். சுபாஷ் பிரம்மாண்டமான ஒரு ராணுவத்தை அமைத்து பிரிட்டிஷ் ராணுவத்திடம் போரிட்டு இந்தியாவை மீட்க முயன்றார், கிட்டத்தட்ட வெற்றிபெற்றார் என்ற பொய்க்கதை திரும்பத்திரும்பச் சொல்லப்படும்போது அது வன்முறையின் வழியை நியாயப்படுத்துவதாக ஆகிறது. வன்முறை மூலம் எளிதில் சுதந்திரம் பெற்றிருக்கலாம், காந்திதான் அகிம்சைப்போராட்டம் மூலம் அதைத் தாமதப்படுத்தினார் என விளக்கப்படுகிறது.
இந்த பிம்பம் இன்றைய அரசியலில் வன்முறையின் பாதையை வலியுறுத்துபவர்களால் திரும்பத்திரும்ப முன்வைக்கப்படுகிறது. இந்தப் போலிவரலாறு அளிக்கும் பாடம் வன்முறைமூலம் அரசியல் மாற்றமும் சமூக மாற்றமும் உருவாகும் என்று கற்பிக்கிறது. அதன் விளைவாக இளைஞர்கள் வன்முறையை நம்பி ஏற்கும் வாய்ப்புகள் உள்ளன. வன்முறை அரசியலின் எல்லா அழிவுகளுக்கும் பாதை திறக்கிறது.
உண்மையில் சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் அன்றைய சூழலில் தேவையான வெறும் பொம்மையாகத்தான் இருந்தார். அவர் திரட்டிய ராணுவம் என்பது சரணடைந்த பிரிட்டிஷ் படைவீரர்களால் ஆனது. அவ்வீரர்கள் போர்க்கைதிகளாக இருப்பதைவிட ராணுவசேவை அதிக வசதிகளை அளிக்கும் என்பதற்காகவே அதில் சேர்ந்தார்கள்.
சுபாஷின் படை பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தை எதிர்கொண்ட இரண்டே இரண்டு போர்முனைகளில் அவர்கள் சரணடையவே முயன்றார்கள். அதன்பின் ஜப்பான் அப்படையை எடுபிடிப்படையாக மட்டுமே பயன்படுத்திக்கொண்டது. இந்தியாவை வென்றபின் இங்கே அவர்களுக்கு ஒரு பொம்மை ஆட்சியாளர் தேவைப்படுமென்பதனால்தான் ஜப்பானியர் சுபாஷை முன்னிறுத்தினர்
சுபாஷ் ஜப்பானியரால் அவமதிக்கப்பட்டார். கண்ணெதிரே ஏழை இந்தியர்கள் சயாம் மரணப்பாதையில் லட்சக்கணக்கில் கொல்லப்படுவதை எதிர்த்து ஒரு சொல் பேச அவரால் முடியவில்லை. அவரது சகாவான மோகன்தாஸ் அந்தமான் சிறையில் ஜப்பானியரால் வதைக்கப்படும்போது அஅவர் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதெல்லாம் உண்மையான வரலாறு
இந்த உண்மையான வரலாறு அளிக்கும் பாடங்கள் என்ன? வன்முறையின்பாதை என்பது தற்காலிகமானது. அது ஏற்கனவே வலிமையுடன் இருப்பவர்களுக்கானது. வலிமை இல்லாதவர்களின் வன்முறைவழி என்பது கடைசியில் வலிமையுடைய எதிரிக்கு எதிரியாகிய இன்னொரு வலிமையுடையவனின் அடிமையாகச்சென்று சேர்வதில்தான் முடியும்.
இந்தியா போன்ற ஒரு தேசம் ஏராளமான உள்முரண்பாடுகள் கொண்டது. வன்முறைப்பாதை முன்னெடுக்கப்பட்டால் அந்த முரண்பாடுகள் சகோதரச்சண்டைகளாகவே மாறும். அதுவும் சுபாஷின் வரலாறு அளிக்கும் பாடம்.
ஒருவேளை சுபாஷ் வென்றிருந்தால் நமக்கு ஜப்பானின் பொம்மையரசு ஒன்றுதான் கிடைத்திருக்கும் . அது அன்றைய பிரிட்டிஷ் அரசைவிட பலமடங்கு கொடூரமானதாக இருந்திருக்கும். ஜப்பானியர் சயாம் மரண ரயிலில் தமிழர்களைக் கொன்றழித்ததே சிறந்த ஆதாரம்.சுபாஷ் தன் உணர்ச்சிகரமான முட்டாள்தனத்தால் இந்தியாவை ஒரு மாபெரும் அபாயத்தின் விளிம்புக்குக் கொண்டுசென்றார். அது இன்னொரு பாடம்.
இந்த உண்மையான வரலாறு அளிக்கும் சரியான பாடங்கள்தான் நாம் இன்றைய சூழலை எதிர்கொள்ள உதவும். என்ன காரணத்தால் காந்தி அகிம்சையையும் ஜனநாயகப் போராட்டத்தையும் முன்வைத்தார் என்று புரிந்துகொள்ளமுடியும்.
சுபாஷின் பொய்யான பிம்பம் ஏன் உடைக்கப்படவேண்டும்? நேரடியான உதாரணமே உள்ளது. சுபாஷ் என்ற பொய்யான பிம்பத்தில் இருந்து ஊக்கம் கொண்டு அவரை முன்னுதாரணமாக எண்ணித்தான் இலங்கையில் ஆயுதப்போராட்டம் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்டது. அது உருவாக்கிய எல்லா அழிவுகளுக்கும் காரணமாக சுபாஷின் போலிப்பிம்பத்தைச் சொல்லலாம்
இத்தகைய பொய்பிம்பங்கள் கண்ணிவெடிகளைப்போல நம் சிந்தனைக்குள் புதைந்துகிடக்கின்றன. ஆரம்பத்திலேயே அவற்றைக் கண்டெடுத்துக் களையவேண்டியது அவசியம்
ஜெபோட்டுட்டியா தம்பி.. நேத்து வாசிச்சு கடுப்பாகிட்டேன்..இரு தண்ணி குடிச்சிட்டு வந்து பதில் அடிக்கிறேன்..
நானும் காலைலயே படிச்சிட்டேன்... குழுமத்துல வேற யாரும் பகிர்ந்துல்லகையேன்னுட்டு, நானே கோதாவுல குதிச்சிட்டேன் :))2013/3/20 ஸ் பெ <stalinf...@gmail.com>
போட்டுட்டியா தம்பி.. நேத்து வாசிச்சு கடுப்பாகிட்டேன்..இரு தண்ணி குடிச்சிட்டு வந்து பதில் அடிக்கிறேன்..
சுபாஷின் பொய்யான பிம்பம் ஏன் உடைக்கப்படவேண்டும்? நேரடியான உதாரணமே உள்ளது. சுபாஷ் என்ற பொய்யான பிம்பத்தில் இருந்து ஊக்கம் கொண்டு அவரை முன்னுதாரணமாக எண்ணித்தான் இலங்கையில் ஆயுதப்போராட்டம் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்டது. அது உருவாக்கிய எல்லா அழிவுகளுக்கும் காரணமாக சுபாஷின் போலிப்பிம்பத்தைச் சொல்லலாம்
இத்தகைய பொய்பிம்பங்கள் கண்ணிவெடிகளைப்போல நம் சிந்தனைக்குள் புதைந்துகிடக்கின்றன. ஆரம்பத்திலேயே அவற்றைக் கண்டெடுத்துக் களையவேண்டியது அவசியம்////
Reply cover..காந்தியின் வரலாற்றையும் நாம் சீர்துக்கி பார்க்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.குழந்தை பருவம் துவங்கி கல்லூரி செல்லும் வரை காந்தியைப் பற்றி இச்சமூகம் கற்றுத் தரும் பாடம் அவர் ஒரு மாகாத்மா என்பதே..அவரும் ஒரு சராசரியான ஒரு அரசியல்வாதி தான் என யாருமே நமக்கு சொல்வதில்லை. இந்தியா என்ற பிரமாண்ட நிலப்பரப்பு ஒரு கற்பித்த தேசமாக உருமாறிய வரலாற்றை தாங்கிப் பிடிக்க காந்தி என்ற முகமூடி பலருக்கும் தேவைப்படுகிறது.. காந்தி எப்போதில் இருந்து தேசப்பிதா ஆனார் என்று ஒரு சிறுமி கேள்விக்கேட்டு இவர்கள் முகமூடியை சமீபத்தில் கிழித்தெறிந்தாள்...
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
ஸ் பெ,
இதுக்கும் மேலே சிலவற்றை எதிர்பார்த்தேன். ரொம்ப பழைய, கீறல் விழுந்த கிராமபோனில் பாட்டு கேட்பது போல உள்ளது.
தமிழ்ப்பயணி ஜி காந்திய பத்தி பேசுனாலே நீங்க உணர்ச்சிவசப்படுவதாக தெரிகிறது. நீண்டநாள் அவதானிப்பு இது.2013/3/20 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>ஸ் பெ,இதுக்கும் மேலே சிலவற்றை எதிர்பார்த்தேன். ரொம்ப பழைய, கீறல் விழுந்த கிராமபோனில் பாட்டு கேட்பது போல உள்ளது.
தமிழ்ப்பயணி ஜி காந்திய பத்தி பேசுனாலே நீங்க உணர்ச்சிவசப்படுவதாக தெரிகிறது. நீண்டநாள் அவதானிப்பு இது.
2013/3/20 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>ஸ் பெ,இதுக்கும் மேலே சிலவற்றை எதிர்பார்த்தேன். ரொம்ப பழைய, கீறல் விழுந்த கிராமபோனில் பாட்டு கேட்பது போல உள்ளது.
--
அன்போடு
மோரு
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
நான் அவற்றுக்கு இவ்வாறு பதில் சொன்னேன். மார்க்ஸின் சிந்தனைகளை அவரது செயல்களில் இருந்து பிரித்துப்பார்க்க முடியுமா? பாட்டாளிகளின் சிந்தனையாளர் ஒரு பாட்டாளியைப் பாலியல்ரீதியாக்ச் சுரண்டியது அச்சிந்தனைகளைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான தகவல் இல்லையா என்ன?//
ஏம்பா, பொஞ்சாதி ஆஸ்ரமத்தில் இருக்கும் போதே மற்ற பெண்களுடன் உனக்கு என்ன சோதனை வேண்டிக்கிடக்கு என்று நாம் கேட்கலாமா கூடாதா?
இன்று இந்தியா உருவாக்கி உள்ள பிம்பம் பெரும்பாலும் கற்பனவாததினால் உருவானது..
இன்னொன்றையும் சொல்லிகொள்கிறேன்..இவர் சுட்ட உளுந்து,பருப்பு வடைகள் அனைத்தும் இவர் படித்த சட்ட நிபுணத்துவத்தால் வந்தது.. சட்டத்தின் வழி உரிமையை பெற, பேச முடிந்தது.. அவ்வளவே..பிரிட்டிஷாரின் வருகைக்கும் முன் இதே டயலாக்கை மன்னர்களிடம் விட்டு இருந்தால் 'ராஜ துரோகி' என்று சொல்லி தூக்கி முதலையிடம் போட்டிருப்பார்கள்....:--)
ரமு ...
செல்வன் ஜி இதைப்பற்றி 'லிபரலிசம் ஒரு ஜோக்' நு 10வரிகளில் மிக சி�றப்பாக எழுதி இருக்காரு...
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
ரமு ...
செல்வன் ஜி இதைப்பற்றி 'லிபரலிசம் ஒரு ஜோக்' நு 10வரிகளில் மிக சி�றப்பாக எழுதி இருக்காரு...
ஓய் ஆசிப்
இதை எழுதியது யாரெனத் தெரிகிறதா ? நம் அமீரக தமிழிணைய நண்பர்களின் மூத்த உறுப்பினர் பரமு
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
ஒரு தேசிய இனத்தின் கோரிக்கையும் ஜாதியும் ஒன்றல்ல
--என்றும் அன்புடன்,
ரமேஷ்---
Sent via Epic Browser
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com