///////மனநலம் பாதித்தவனின் பேச்சுகளை எப்படி பொருட்படுத்த
தேவையில்லையோ அப்படிதான் ஜெயமோகனின் பேச்சும் எழுத்தும்,//////////////////////எழுத்தாளனுக்கு இது இயல்பான ஒன்றாகவே எனக்கு தோன்றுகிறது
"இதன் நகைச்சுவைப்பகுதியில் அப்படி இழிவுபடுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்று. என் சாதி ,மதம் ,தெய்வங்கள், என் குடும்பம், சிற்றிதழ்கள், மதிப்பிற்குரிய இலக்கிய மூதாதையர் , என் வணக்கத்திற்குரிய ?? இலக்கிய ஆசிரியர்கள் ஆகிய அனைத்தையுமே வேடிக்கையாக அணுகும் பகுதி இது. இன்றைய இலக்கியத்தில் இத்தகைய பகடி மிக முக்கியமான ஒரு அம்சம் "
மூவாயிரம் பக்கங்கள் இப்போது நான்காயிரமாய் மாறிவிட்டதா ?
எத்தனை காடுகளை அழிக்க வேண்டியிருக்குமோ பாவம் :)))))))))))
நான் எப்போதுமே இத்தகைய விமரிசனங்களையும் விவாதங்களையும் சற்றும்பொருட்படுத்தியதில்லை. பொருட்படுத்தியிருந்தால் இத்தனை எழுதியிருக்க முடியாது. ஒரு காலத்தில் வாசித்திருந்தேன், பதினைந்துவருடம் முன்பு. இவற்றில் பெரும்பகுதி நல்லெண்ணம் அற்ற மனக்கசப்புகள். அவர்களில் கணிசமானவர்கள் ஓர் எழுத்தாளனாக என்னை அறிந்திருக்கவே மாட்டார்கள் என்று கண்டேன். அன்றுமுதல் நான் இவற்றை வாசிப்பதேயில்லை. நான் பொருட்படுத்தலாமென என் நம்பிக்கைக்குரிய வாசகர்கள் சொன்னால் மட்டுமே அவற்றை வாசிக்கிறேன்- அவை மிகமிக அபூர்வம். நான் மட்டுமல்ல பொதுவாகவே தீவிரமாக எழுதும் எழுத்தாளர்கள் அனைவருமே செய்வது இதுதான்.இல்லையேல் எந்த வேலையும் செய்ய முடியாது.
இங்கே எனக்கு வாசிக்க நூல்கள் வந்து குவிகின்றன. அவற்றை நேரம் உருவாக்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன். தினம் ஒரு நூல். அவற்றைப்பற்றி எழுதுகிறேன். என் இணைய தளத்திலேயே காணலாம். ஆதிமூலம் பற்றிய அஞ்சலிநூல் மூன்றுதினம் முன் வெளியிடப்பட்டது. திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் நூல் வெளிவந்து சிலதினங்களே ஆகின்றன. வாசகர்களின் தொடர்ந்த உரையாடல் எப்போதும் உள்ளது. பொதுவான வாசகர்முன் வைக்கலாமென்று படுவதை பிரசுரிக்கிறோம்.
என் கவனத்தை இந்தச் சில்லறை விவாதங்கள் சிறு அளவுக்குமேல் எடுத்துக்கொள்ள நான் அனுமதிப்பதில்லை. என் உலகம் வெளியே உள்ளதைவிட பெரியது,ஆழமானது. இந்த விவாதங்களை எழுதுபவர்கள் யார்? அவர்களுக்கு என்ன முகம் உள்ளது? என்ன எழுதியிருக்கிறார்கள்? என்ன படித்திருக்கிறார்கள்?தங்க¨ளையே வெட்கி கூசிச்சுருங்கும் சிற்றுயிர்கள்.
யார் ஏற்றாலும் இல்லையாயினும் நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை. என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும்.
யார் ஏற்றாலும் இல்லையாயினும் நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை. என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும்.
வணக்கம் ஜெயமோகன்,
உங்களின் கருத்துக்களில் உள்ள பகடி என்ற பதத்தில் ஆனந்த விகடன் உங்கள் கட்டுறையை கவிழ்ப்பாக்கம் என்கிற பின் நவீனத்துவ பாணியில் உபயோகித்திருக்கிறார்கள் என்பதாக தாங்கள் எண்ணிக்கொள்ள வேண்டியதுதானே, எதற்காய் கோபம் கொண்டு மறுப்பு கடிதம் அனுப்பி இருக்கிறீர்கள்.
பெரியார் பற்றிய தங்களின் பிதற்றலில் உள்ள பிழையை தாங்கள் இதுவரை உணராதது துரதிஷ்டமானது மற்றபடி ஆர் எஸ் எஸ் கும்பலின் இடைச்செருகல் சண்டைகள் ரசிக்கும்படியாயில்லை.
விகடன் செய்தது பிழை எனில் தங்களின் பகடி ?
சரியா தெளிவுப்படுத்தவும்
நன்றி
கென்
இது நான் திரு ஜெயமோகனுக்கு அனுப்பிய மடல் இதற்கு பதில் ஏதும் அளிக்காமல் வெறுமனே அவர் அனுப்பியுள்ள மடல் உங்களின் பார்வைக்கு
jeyamohan_ B to me
Feb 23 (2 days ago)
உங்கள் கடுப்பை தெரிந்துகொண்டேன். நன்றி
ஆகவே படைப்பாளிகளின் பிதற்றல்களை புறம்தள்ளிட எத்தனை பேருக்கு தெரியும் என்பதுதான் என் கேள்வியே தவிர ஜெயமோகனுக்கும் எனக்கும் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் விவகாரம் இல்லை என்பதை சிலருக்கு தெரியப்படுத்துகிறேன்.
--
- -
உங்கள் கடுப்பை தெரிந்துகொண்டேன். நன்றி
அண்ணாச்சி கேள்வி கேட்பது தப்பா அண்ணாச்சி?
அப்படியிம் இருக்கலாம் அண்ணாச்சி
அப்புறம்
என்னுடைய முழுமையான பெயர் நீதிபதி பாண்டித்துரை
படைப்புக்காக பாண்டித்துரை
பள்ளிச் சான்றிதழில் நீதிபாண்டி