Naresh Kumar
unread,Feb 18, 2008, 11:23:55 AM2/18/08Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to பண்புடன்
"கண்ணதாசன் காரைக்குடி
பேரைச் சொல்லி ஊத்திக்குடி
குன்னகுடி மச்சானைப் போல் பாடப்போறண்டா
----------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------
போதை என்பது ஒரு பாம்பு விஷம்தான்
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷலிசம்தான்"
சனிக்கிழமை மதியானம் பொழுது போகாம வரிசையா சேனல் மாத்திகிட்டே வரும்
போது, சன் மியுசிக் ல இந்த பாட்டு போட்டான். ஏற்கனவே 'சித்திரம் பேசுதடி'
மூலம் எனது கவனத்தை ஈர்த்த மிஷ்கினோட படம்கிறதுனாலயும், படத்தோட
டிரெய்லர் ஏற்கனவே பார்த்துட்டு ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினதாலயும்
உக்காந்து முழுசா பாட்டை கேட்டேன்.
பாடல் ஆரம்பித்த விதம், நடன அமைப்புகள் எல்லாமே எனக்கு சற்று
வித்தியாசமாக பட, பாட்டு எனக்கு பிடிக்க ஆரம்பிச்சிருச்சோன்னு என்னை நானே
கேட்டுகிட்டேன் (பாட்டோட subjectம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது வேற
விஷயம்)
அதுவும் "போதை என்பது ஒரு பாம்பு விஷம்தான் சேர்ந்து குடிச்சா அது ஒரு
சோஷலிசம்தான்" வரிகளை கேட்டதும் எனக்கு ஒரே புன் சிரிப்பு. பேசாம
இன்னிக்கு ராத்திரிக்கு படத்துக்கு போயிரலாமான்னு ஒரு யோசனை வந்துச்சு.
பாட்டோட கடைசில
"ரோட்டு கடையில மனுஷன் ஜாலிய பாரு
சேட்டு கடையில மனைவி தாலியை பாரு"
வரிகளை கேட்டதும், டேய் நரேசு, நீ கடைசியா டிசம்பர் மாசத்துல "Taare
Zameen Par" படம் பார்த்தது. அதுக்கப்புறம் பீமா, காளை, இந்திரலோகத்தில்
நா அழகப்பன் அப்படீன்னு எத்தனையோ படங்களும், பாடங்களும் வந்தாலும் நீ
ஒன்னும் பாக்கலை! அது மட்டுமில்லாம நம்மளை நம்பி கோடிகணக்கில பணத்தை
போட்டு படம் எடுக்கிறாங்க. ஆணி புடுங்கற வேலை இல்லாதப்ப கூட படத்தை பாக்க
போகலீன்னா தமிழ் சினிமா உலகம் கஷ்டப்படாதான்னு ஒரு சமுதாய அக்கறையும்,
இது நாம தமிழ் சினிமாவிற்கு செய்யற துரோகமில்லையாங்கற கேள்வியும் வர,
அப்பவே முடிவு பண்ணிட்டேன் இன்னிக்கு ராத்திரி இந்த படம் போயே ஆகனும்னு!
ஏற்கனவே டிரெய்லர் போடும் போது நம்ம பாரதியார் பாட்டு "அச்சம் தவிர்,
நையப் புடை, மானம் போற்று" கேட்டு நல்லா இருந்ததும், திருப்பி சாயங்காலம்
இதே சன் மியுசிக்ல
"கத்தாழை கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்னை"
பாட்டு போட, அதுவும் எனக்கு பிடிச்சு போனதும், என்னுடைய முடிவுக்கு
உரமூட்டுபவையாகவே இருந்தன.
சரி தனியா போக வேணாம்னு, என் நண்பனை அஞ்சாதே படத்துக்கு ராத்திரி
போலாமாடா கேட்டா, நானே கேக்கலாம்னு இருந்தேண்டா, படத்துல 'விஜயலஷ்மி' வேற
நடிச்சிருக்காடா, அதனால கண்டிப்பா போலாம்டான்னான்.
என்னாது 'ஜெயலஷ்மி' யான்னு நான் கேக்க, டேய் 'ஜெயலஷ்மி' இல்லைடா,
'விஜயலஷ்மி', அதான் சென்னை-28 ல சிவாவுக்கு ஜோடியா, 'யாரோ யாருக்குள்
இங்கு' பாட்டுல கூட வருவாளேடா அந்த பொண்ணுதான் இதுல ஹீரோயின், அதனால
கண்டிப்பா போலாம்டான்னான்.
ஓ! அந்த நடிகை பேரு 'விஜயலஷ்மி' யா (என் காதுல கடப்பாறையை விட (ஒரு
பேச்சுக்கு சொன்னேன், உடனே கிளம்பிடாதீங்க!)), ஆனாலும் நம் மக்கள்
எந்தெந்த காரணத்துக்காகல்லாம் படம் பாக்க போறாங்கனு நினைச்சுகிட்டேன்.
அப்புறம் ஒரு கூட்டமா கிளம்பும் போது, தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை
செய்யும் என் நண்பன், மச்சான் இதுல பிரசன்னாதாண்டா வில்லன், நரேன் ஹீரோ,
ரெண்டு பேரும் நல்லா நடிச்சிருக்காங்கடா, நான் ரெண்டு, மூனு சீன்,
டீவியில போட்டப்ப பார்த்தேண்டா சொன்னான்னா. டேய் தகவல் தொழில்
நுட்பத்துறையில் வேலை செய்யற பேருக்கு ஏத்த மாதிரி, இன்னிக்குதாண்டா
உருப்படியா ஒரு தகவல் கொடுத்திருகிறன்னு அவனையும் அரவணைச்சுகிட்டு
டிக்கட் வாங்கி சீட்ல உக்காரும் போது பெயர் முடியும் தருவாயிலிருந்தது.
டைட்டில் சாங்கே நம்ம பாரதியாரோட அச்சம் தவிர் பாட்டு, அச்சச்சோ கொஞ்சம்
முன்னாடியே வந்திருக்கலாமேன்னு நினைச்சுக்கிட்டே படம் பார்க்க
ஆரம்பிச்சோம் (டேய்! இனிமேதான் நீ படத்தைப் பத்தி சொல்லப் போறீயா!!
ஆனாலும் ரெண்டரை மணி நேரம் படத்துக்கு மூன்றரை மணி நேர பதிவு போடறவன்
நீதாண்டான்னு நீங்க சொல்றது என்க்கு புரியுது).
படத்தின் கதை - சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கு முழு மும்முரமாக தயார்
படுத்திக் கொண்டு வரும் கிருபா மற்றும் அவரது குடும்பம் (உண்மையான பெயர்
தெரியவில்லை, அதனால் அவரது பாத்திரப் பெயர் கொண்டே அவரை அழைப்போம்),
ஜாலியா தண்ணி அடித்துக் கொண்டு, ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நரேன்
மற்றும் அவரது குடும்பம், பெண்களை கடத்தி, பலாத்காரம் செய்து பணம்
பறிக்கும் கும்பல், அவர்களை பிடிக்க பொன்வண்ணன் தலைமையில் சிறப்பு காவல்
படை என இவர்களை சுற்றி நகர்கிறது கதை.
படத்தின் பெரிய பலம் பாத்திரப் படைப்புகள் (Characterization) தான்.
ஹீரோ, ஹீரோயின், வில்லன் போன்றோர்களின் பாத்திரப் படைப்புகள் பொதுவாக
எல்லா படங்களிலும் நன்றாக இருக்கும் அல்லது அதற்கு சிரத்தை
எடுத்திருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் சின்ன சின்ன கதா
பாத்திரங்களின் பாத்திரப் படைப்புகளுக்கு கூட இயக்குனர் ரொம்பவும்
மெனக்கெட்டிருக்கிறார்.
நடு ரோட்டில் வெட்டு பட்டிருக்கும் ஒருவனை காப்பாற்ற முயலும் நரேனுக்கு
யாரும் உதவ முன் வராத போது, தானே முன் வந்து உதவி செய்து விட்டு, அவன்
இற்ந்த பின் , ரோட்டில் அவன் இருந்த இடத்தில் பூக்களை தூவி விட்டு
செல்லும் பூக்காரப் பாட்டியின் மூலம் இன்றைய சமூகத்தின் மனிதாபிமான
உணர்வை கேள்விக்க்றியாக்குகிறார் இயக்குனர்.
நரேன் மற்றும் கிருபாவின் நண்பனாக ஒரு கை இல்லாமல் வரும் குருவி என்ற
கதாபாத்திரம்,
நரேன் வெட்டியாக ஊர் சுற்றும் போது திட்டுவதும், திருவிழாவின் போது
அடிதடி செய்ததற்காக அத்தனை பேர் மத்தியில் மகனையே செருப்பால் அடிப்பதும்,
பின் நரேன் சப் இன்ஸ்பெக்டர் ஆன பின் அவன் ஆசையாக சாப்பிடும் போது
அலைபேசி வந்ததால் அவசரமாக கிளம்ப வேண்டிய சமயத்தில் அமைதியாகவும்,
பெருமையாகவும் போலீஸ் உடையை எடுத்து தரும் அப்பாவாக பாஸ்கரின்
கதாபாத்திரம்,
வில்லன் கும்பலில், வெறும் மொட்டைத் தலையுடன் முகமே காட்டாமல் வரும்
கதாபாத்திரம்,
வெறித்த மனதுடன், அழுது சோர்வடைந்த கண்களுடன் தம்மை கடத்தி பலாத்காரம்
செய்தவர்களைப் பற்றி தகவல் சொல்ல தைரியமாக போலீஸிடம் வரும் ஒரு பெண்,
இப்படி சின்ன சின்ன விஷயங்களில் இயக்குனரின் மெனக்கெடல் நன்கு புரிகிறது.
மேலும் பெண்களை கடத்தி, பலாத்காரம் செய்து பணம் பறிக்கும் கும்பலைப்
பற்றிய கதை என்றாலும், பலாத்கார காட்சியே இல்லாமல் வெறும் காட்சிகளின்
மூலமும், வசனங்களின் மூலமும் அதன் கொடூரத்தையும், சம்பந்தப் பட்டவர்களின்
வேதனையையும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.
நரேனின் நண்பனாக வரும் புது முகம் கிருபா, போலீஸ் வேலைக்கு தயாராகும்
போது இருந்த கிருபாவும் சரி, அவ்வளவு கஷ்டப்பட்டும் வேலை கிடைக்காத
நிலையில், வெறும் மாமாவின் influence மூலம் தேர்வானதால் நரேனின் மேலும்,
சமூகத்திம் மேலும் கோபம் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக கெட்டு போகும்
கிருபாவும் சரி மிக அருமையான நடிப்பை வெளிப்படித்தியுள்ளார்.
பிரசன்னா, உங்களுக்குள் இவ்ளோ வில்லத்தனமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு
அருமையான நடிப்பு. ஆர்ப்பாட்டமில்லை, அலட்டல் பேச்சுக்களில்லை ஆனால்
அமைதியான மற்றும் ஆச்சரியப்படுத்தும் பாத்திரப் படைப்பு
பிரசன்னாவிடமிருந்து.
பொறுப்பில்லாமல் இருந்த நரேன், சப் இன்ஸ்பெக்டர் ஆனபின் ரத்தத்தை கண்டு
பயப்படும் ஆரம்ப காட்சிகளிலும், trainee
level ல் இருப்பதால் காவல் நிலையத்தில் உள்ள மூத்த அதிகாரிகளால்
அலட்சியமாக நடத்தப்படுத்தும் காட்சிகளிலும், வில்லன் கும்பலை பிடிக்க
பொண்வண்ணன் டீமுடன் இணைந்து ஆக்ரோஷப் படும் காட்சிகளிலும் நல்ல நடிப்பை
வெளிப்படித்தியுள்ளார்.
நடிப்பும், பாத்திரப்படைப்பும் மட்டுமல்ல, வசனமும் மிக கூர்மை. 'காசு
வேணும்னு பொண்ணை கடத்தறேன், அவ வெளிய சொல்லிட கூடாதுன்னு ரேப்
பண்ணிடறேன்னு' பிரசன்னா சாதரணமாக சொல்லும் போது, இது மாதிரி
நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பெண்களை குறை கூறுவதையும், இப்படி
பாதிக்கப்பட்ட பெண்களை மணம் புரிய தயங்கும் ஆண்கள் மற்றும்
குடும்பங்களையும் கொண்ட சமூகத்தின் அவல நிலையும், உண்மையும் முகத்தில்
அறைவதாக உள்ளது.
பொன்வண்ணன் குழு மற்றும் நரேனின் மூலம் காவல் துறையின் மனிதாபிமானத்தை
காண்பிப்பதும், இறுதியில் இரு சிறுமிகள் தப்பிக்கும் முறையும்,
தண்ணியடித்துக் கொண்டு வில்லன் கும்பல் "கத்தாழை கண்ணால குத்தாத நீ
என்னை, இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்னை" பாட்டுக்கு ஆடும் போது
இடுப்பை காட்டாமல் பெண்களை ஆடவிட்டிருப்பதும் (அனேகமா இதுதான் முதல்
படம்னு நினைக்கிறேன்) பாராட்டுக்குரியது.
இப்படி பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், முதல் பாதி முடியும் போதே படம்
ஆரம்பித்து ரொம்ப நேரம் ஆனது போன்ற பிரமையை ஏற்படுத்தும் திரைக்கதை
வேகமும், இறுதியில் வில்லன் கும்பலை பிடித்த பின் பிரசன்னாவிடம்
ஒத்தைக்கு ஒத்தை சண்டை போடுவதும் (நீங்களுமா மிஷ்கின்?), சலிப்படைய
வைக்கும் சில காட்சிகளும், மருத்துவ மனையில் தனித்தனியாக வந்து சண்டை
போட்டு விட்டு அமைதியாக வில்லன் கும்பல் position ல போய் நிக்கறதும்
போன்ற காட்சிகள் அனைவருக்கும் பிடிக்குமா என்று தெரிய வில்லை.
படம் முடிஞ்சு வெளிய வரும் போது, எத்தனை பேரு இருந்தாலும் பூக்காரப்
பாட்டியும், குருவி பாத்திரமும் நம் கண் முன்னாடியே இருக்கு இல்லடான்னு
கேட்ட பாவத்துக்கு, என்ன இருந்தாலும் விஜயலஷ்மியை வெச்சு ஒரு டூயட் கூட
இல்லைடான்னு (அவனவன் கவலை அவனுக்கு) சொன்னானே என் நண்பன் அவன்லாம்
திருந்துவான்னு நினைக்கிறீங்க?
நட்புடன்
நரேஷ் குமார்