Fwd: ஆயிஷா ஆவேசம் நானே 40 கிலோ... 100 கிலோ வெடிகுண்டை தூக்க முடியுமா?

7 views
Skip to first unread message

Babu ji

unread,
Jul 29, 2010, 2:02:50 AM7/29/10
to


---------- முன் அனுப்பப்பட்டத் தகவல் ----------
Subject: ஆயிஷா ஆவேசம் நானே 40 கிலோ... 100 கிலோ வெடிகுண்டை தூக்க முடியுமா?ஆயிஷா ஆவேசம்
நானே 40 கிலோ... 100 கிலோ வெடிகுண்டை தூக்க முடியுமா?

இனம் சார்ந்த வன்முறை, வெடிகுண்டு வைத்தல் ஆகியவை எங்கு நடந்தாலும் அதை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஆனால், அதில் சம்பந்தப்படாத அப்பாவிகள்? அப்படித்தான் பலர், சிறைக் கொட்டடியின் இருட்டில் வாழ்க்கையைத் தொலைத்து ஒளியைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி 'பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் வாக்குமூலம்' என்ற நிகழ்ச் சியை 'கீற்று' என்ற இணையதளம் சென்னையில் கடந்த 24-ம் தேதி ஏற்பாடு செய்தது.

அறிமுகத்தில் கீற்று ஆசிரியர் குழுவைச் சேர்ந்த மினர்வா, ''வழக்கமாக அண்ணாசாலை பாவாணர் அரங்கில் கூட்டம் நடத்த ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்தில் அனுமதி பெறுவோம். இந்த முறை கமிஷனர் ஆபீஸ்தான்

போகவேண்டும் என்று கூறிவிட்டார்கள். மூன்று பேரின் பரிந்துரைக்குப் பிறகு, காலையில் இருந்து மாலைவரை உட்காரவைத்துதான் அனுமதி தந்தார்கள். இந்த நாட்டில் சாதாரணக் கூட்டம் நடத்துவதற்கே இப்படி கஷ்டப்பட வேண்டி இருக்கிறது!'' என்று வேதனைப்பட்டார்.

இந்தக் கூட்டத்தின் வாக்குமூலங்கள் நம்மைப் பதற வைத்தன. பாதிக்கப்பட்ட சிலர் தங்களது கதைகளைச் சொன்னபோது, 'இப்படியெல்லாமா நடக்கும்?' என்ற ஆச்சர்யம் ஏற்பட்டது!

கோவை ஆரூண்பாஷா: ''2006 தேர்தலில் பி.ஜே.பி-க்கு எதிராகப் பிரசாரம் செய்தபோது, மத துவேஷத்தைத் தூண்டியதாக என்னைக் கைதுசெய்தனர். பிறகு விடுவித்துவிட்டார்கள். அதன் பிறகு ஒரு நாள்... அதுவும் என் குழந்தையின் பிறந்தநாள் அன்று வீடே கோலாகலமாக இருந்த நிலையில், திடீரென வீட்டுக்கு வந்த போலீஸார் சோதனை என்ற பெயரில் பொருள் களை எல்லாம் தாறுமாறாகக் கலைத்துப் போட்டனர். இரவு 12 மணிக்கு என்னிடம் எதுவும் பேசாமல் கூட்டிச் சென்று கணுவாய் என்ற இடத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் விட்டனர். நான் வெடிகுண்டு தந்ததாக இன்னொருவரைக் காட்டினர். அதை ஒப்புக்கொள்ளுமாறு போலீஸ் வற்புறுத்தினர். என் முன் நிறுத்தப்பட்ட அவரோ, 'அடி தாங்கமுடியலை. குண்டு தந்ததா ஒப்புக்கங்க'ன்னு என்னிடம் கதறினார். பிறகு நீதிமன்றத்தில் நிறுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தார்கள். போலீஸ் விசாரணைக்கு எடுத்து, என் வீட்டில் நான் எழுதிய கட்டுரைகளுடன் கமிஷனர் அலுவலக மேப்பையும் வைத்திருந்ததாக ஒப்புக்கொள்ளச் சொன்னார்கள். நாள் முழுவதும் நான் மறுக்கவே, 'நீ வைக்கவில்லை என்றால் உன் மனைவி இதை வைத் திருந்தாளா... அவளையும் உள்ளே தூக்கிவைக்கவா?' என்று மிரட்டினார்கள். அப்புறம் வழக்காகி, ஒரு வழியாக விடுதலை ஆனேன்.

வெளியில் வந்த தும், வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் கூடி, 'எப்படி இவனை வீட்டைவிட்டு அனுப் புவது?' என்று என் முன்னாலேயே ஆலோசனை நடத்தினர். பிரிண்டிங் தொழிலில் பிஸியாக இருந்த எனக்கு, சிறைக்குச் சென்றுவந்ததும் யாரும் சின்ன ஆர்டர்கூட கொடுக்கவில்லை. கடைசியில், ஒரு டீக்கடையில் டம்ளர் கழுவும் வேலை கிடைத்தது. அதில் இருந்தபடியே நண்பர்களின் துணையுடன் இப்போது தான் மீண்டு வருகிறேன்...''

ரஹீம்: ''1993-ம் ஆண்டு சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டேன். 60 நாள்கள் சி.பி.ஐ. கஸ்டடி. 18 நாள்கள் இரவு, பகல் தெரியவில்லை. அந்த சித்ரவதைகளை விவரிக்க வார்த் தைகள் இல்லை. விசாரிக்க வரும் அதிகாரிகள் குளித்து, பவுடர் போட்டிருந்தால் வீட்டில் இருந்து வந்திருக்கிறார்கள், அது காலை நேரம்... சோர்ந்த முகத்துடன் இருந்தால் அவர்கள் வீட்டுக்குப் போகும் நேரம்... என்று தெரியும். எங்களுடன் சேர்ந்து வேலூர் சிறையில் தமிழ்நாடு விடுதலைப்படை, விடுதலைப் புலிகள் உள்பட 170 தடா கைதிகள் இருந்தார்கள். திடீரென ஒரு நாள் ஒன்பது விடுதலைப் புலிகள் தப்பிவிட்டதாகக் கூறி, ஹெல்மட் அணிந்தபடி பேட்ச் அடையாளத்தை எடுத்துவிட்டு திபுதிபுவெனப் புகுந்த போலீஸ்காரர்கள், கண்டபடி எங்களைக் கடுமையாகத் தாக்கினார்கள். அதோடு, 1997-ல் ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலும் சேர்த்துவிட்டார்கள். தொடர்ந்து 100 நாட்கள் உடையின்றி உள்ளே வைத்து தாக்கப்பட்டோம். எங்களின் மனநிலை எப்படி இருக்கும்?''

ஆயிஷா: ''சங்கீதா என்கிற ஆயிஷா சித்திக்கா ஆகிய நான் கல்லூரியில் படித்துப்

பட்டம் பெற்றிருக்கிறேன். அதை யாரும் சொல் வதில்லை. 'கோவை மனித வெடிகுண்டு ஆயிஷா' என்றே பத்திரிகைகள் பட்டம் சூட்டிவிட்டன. 1997-ம் ஆண்டில் 19 வயதில் இஸ்லாமை ஏற்றுக்கொண்ட நான் காதல் திருமணம் செய்தேன். சென்னையில் உள்ள கணவரின் உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்தோம். அங்கு போலீஸ் வந்தது. அப்போது நாங்கள் வெளியில் போயிருந்தோம். உடனே நான் மனித வெடிகுண்டு ஆக்கப்பட்டேன்! கோவையையே பார்த்திருக்காத நான், அத்வானியின் கூட்டத்தில் குண்டுவைக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டேன். என்னைப் பிடித்துக்கொடுத்தால் நாலு லட்சம் ரூபாய் பரிசு அறிவித்தார்கள். 100 கிலோ வெடிமருந்தைக் கட்டிக்கொண்டு சென்றதாக செய்தி பரப்பினார்கள். என் எடையே 40 கிலோதான். நான் எப்படி 100 கிலோவைத் தூக்கமுடியும்? எங்களின் மனதில் ஏற்பட்ட பாதிப்புக்கு உங்களால் மருந்து அளிக்க முடியுமா? காதல் திருமணம் செய்யும் பிள்ளைகளை சில ஆண்டுகளில் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், என் மீதான கொடிய குற்றச்சாட்டால் என் பிறந்தவீட்டார் என்னைப் புறக்கணித்தார்கள். என் வாழ்க்கை தொலைந்துபோனது. வேறு வேறு சிறையில் இருந்த நானும் என் கணவனும் வெளியில் வந்ததும் எங்கள் பிள்ளை எங்களிடம் வரவில்லை. இந்த வலி யாருக்குப் புரியும்?''

ஜக்கரியா உசேன்: ''2002, ரமலான் மாதம் நவம்பர் 27-ம் தேதி இரவு இரண்டு மணிக்கு என்னை போலீஸார் கூட்டிச் சென்று, ஆந்திராவில் நடந்த குண்டுவெடிப்பைப்பற்றி இரண்டு நாள் இடைவிடாமல் கேட்டார்கள். கடைசியில் எனக்கு அதில் தொடர்பில்லை என்றதும், கைதை நியாயப்படுத்த என்னை லஸ்கர்-இ-தொய்பாவின் சவுத் ஏரியா தலைவன் ஆக்கிவிட்டார்கள்.''

மொத்தத்தில், இது சில தனிமனிதர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் மட்டுமல்ல; சமூகத்தின் முகத்தில் விழுந்த தழும்புகளாகவே நெளிகின்றன!

- இரா.தமிழ்க்கனல்
படங்கள்: வீ.நாகமணி
  
   
 
Article Tags: :--
BABUJI
Reply all
Reply to author
Forward
0 new messages