Re: தமிழ் அறிஞர்கள்

636 views
Skip to first unread message

தியாகு

unread,
Dec 14, 2010, 8:30:38 AM12/14/10
to முத்தமிழ், பண்புடன்
கைலாசபதி அவர்கள்
-------------------------------------
க.கைலாசபதி (ஏப்ரல் 5, 1933 - டிசம்பர் 6, 1982) - ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

கைலாசபதி மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்தவர். தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். தந்தை தில்லைநாயகி நாகமுத்து. தொடக்க கல்வி கோலாலம்பூரில் பயின்ற கைலாசபதி இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டத்தில் (1946-47) இலங்கை வந்தார்.

தொழில்

பட்டம் பெற்றபின் கொழும்பில் புகழ் பெற்ற "லேக் ஹவுஸ்" பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். இந் நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான தினகரனிலேயே இவர் பணிபுரிந்தார். இவரது திறமை இவருக்கு அப் பத்திரிகையின் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது.

பின்னர் அங்கிருந்து விலகிய அவர் கல்வித்துறையில் புகுந்தார். கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெறுவதற்காக பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, "Tamil Heroic Poetry" என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வேளை இலங்கை பல்கலைக் கழகத்தின் வித்தியலங்கார வளாகத்தில் தமிழ் மற்றும் இந்து சமயப் பீடத்துக்குத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அதன் முதல் தலைவராக ஜூலை 19 1974ல் நியமனம் பெற்றார். ஜூலை 31, 1977 வரை இப்பதவியில் இருந்து திறம்படப் பணியாற்றினார்.

இலக்கியப் பணி

ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறைக்கு இவர் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக் கருதப்படுகின்றது. இடதுசாரிச் சிந்தனைப் போக்குக் கொண்ட இவர், அக்காலத்தில் ஈழத்து இலக்கிய உலகில் பெரும் தாக்கம் கொண்டிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

இவரது ஆக்கங்கள்

இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் கலாநிதிப் பட்டத்துக்காகச் செய்த ஆய்வும் நூலாக வெளியிடப்பட்டது. இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறையை மட்டுமன்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது. 1982ல், "ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு மற்றும் இன உணர்வுகள்" என்னும் தலைப்பில் இவராற்றிய, புனிதவதி திருச்செல்வம் நினைவுப் பேருரை, ஈழத்தமிழர்களுக்கான ஒரு முக்கிய பங்களிப்பாகும். "அடியும் முடியும்", "பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்", "தமிழ் நாவல் இலக்கியம்", "இலக்கியச் சிந்தனைகள்" என்பனவும் அவரியற்றிய நூல்களிற் சில.

மிக இளம் வயதிலேயே மாணவர்கள், அறிஞர்கள் மத்தியில் மட்டுமன்றிப் பொதுமக்கள் மத்தியிலும் புகழ் பெற்ற இவர், 49வது வயதில் 1982 டிசம்பர் மாதம் ஆறாம் திகதி காலமானார்.

இவரது நூல்கள்

* அடியும் முடியும்
* பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்
* தமிழ் நாவல் இலக்கியம்
* இலக்கியச் சிந்தனைகள்

பேராசிரியர் க.கைலாசபதி(05.04.1933-06.12.1982) - பற்றி முனைவர் மு. இளங்கோவன்

முனைவர் க.கைலாசபதி

இலங்கை என்றதும் தமிழ் இலக்கிய உலகம் இரண்டு பேராசிரியர்களை இணைத்து நினைவு கூர்வது உண்டு.முதலாமவர் க.கைலாசபதி.மற்றவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள். சைவ சமய அடியவர்களிடம் அடங்கியிருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி ஆவார்.இவர்தம் நூல்கள் தமிழகத்திற்கு அறிமுகமானதும் தமிழ் ஆய்வாளர்கள் இவரின் ஆய்வினை உற்று நோக்கத் தொடங்கினர்.இவர் பார்த்த பார்வையில் இலக்கியங்களைப் பார்க்கத் தொடங்கினர் என்றால் பொருத்தமாக இருக்கும்.

இவர் தமிழகத்திற்கு வந்து அறிமுகம் ஆவதற்கு முன்பே இவரின் ஆய்வுத் தாக்கத்துக்கு ஆளான அறிஞர்கள் அதிகம்.சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும்,சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் கண்டுகாட்டிய ஆய்வு உண்மைகள் தமிழ் அறிஞர்களைச் சிந்திக்க வைத்தது. மேல்நாட்டினருக்குச் சங்க இலக்கியங்களை உரிய வகையில் அறிமுகம் செய்துவைத்தவர் இவர் எனில் சாலப் பொருத்தமாக அமையும்.இலக்கியத் துறையில் ஈடுபட்டு,இதழியல் துறையில் பணிபுரிந்து, கல்வி உலகில் பேசப்படும் அறிஞரான இவர்தம் தமிழ் வாழ்வை இங்கு எண்ணிப்பார்ப்போம்.

இலங்கையின் தமிழ் அடையாளமாகக் கருதப்படும் கைலாசபதி அவர்களின் தந்தையார் இளையதம்பி கனகசபாபதி அவர்கள் மலேசியாவில் அலுவலராகப் பணிபுரிந்தவர்.எனவே க.கைலாசபதி அவர்கள் மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 இல் பிறந்தவர்.இவரின் அன்னையார் பெயர் தில்லைநாயகி நாகமுத்து ஆகும்.கைலாசபதிக்குத் தொடக்க கல்வி கோலாலம்பூரில் அமைந்தது.பதின்மூன்று அகவை வரை மலேசியாவில் இருந்தார்.இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலகட்டத்தில்(1946-47) இலங்கை வந்தார்.

கைலாசபதி அவர்கள் உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும்,கொழும்பு இராயல் கல்லூரியிலும் தொடர்ந்தார்.பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை(ஆனர்சு) படிப்பில் சேர்ந்து சிறப்பிடம் பெற்றுத் தேர்ந்தார்(1957).இவ்வகுப்பில் தமிழும் மேலைத் தேய வரலாறும் என்பதைப் பாடமாக எடுத்துப் படித்தார்.இப்படிப்பு இவருக்கு மேற்குலக அறிமுகத்திற்கும் வரலாற்றுப் பார்வைக்கும் வழிவகுத்தது.இவர்தம் ஆசிரியர் பெருமக்களுள் கணபதிபிள்ளை,வித்தியானந்தன் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

பல்கைலக்கழகக் கல்வி கற்ற பிறகு இலங்கையின் புகழ்பெற்ற ஏடான தினகரனில் உதவி ஆசிரியராக1957 முதல் 1961 வரை பணியாற்றினார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார் (1961-62).1963-1966 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் இணைந்தார்.1964 இல் சூடான் நாட்டில் வாழ்ந்த சர்வமங்களம் அவர்களைத் திருமணம் செய்துகொண்டார்.1964-66 ஆம் ஆண்டுகளில் சர்வமங்களம் அவர்கள் தம் கணவருடன் பர்மிங்காம் படிப்புக்கு உதவியாக அங்கு இருந்தார்.க.கைலாசபதி அவர்களின் ஆய்வுப்பணி 1966 ஆகத்து மாதம் நிறைவுற்ற உடன் இலங்கைப் பல்கலைக்கழகப் பணியில் மீண்டும் இணைந்தார்.



முனைவர் க.கைலாசபதி

பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் இங்கிலாந்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சார்ச்சு தாம்சன் அவர்களின் மேற்பார்வையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.தமிழில் வீரநிலைப்பாடல்கள்(Tamil Heroic Poetry) என்னும் தலைப்பில் ஆய்வு செய்தவர்.இவருக்குக் கிடைத்த நெறியாளர் உலக அளவில் அறிவாற்றலால் மதிக்கப்படுபவர். இவர் தம் நெறிப்படுத்தலில் உருவான ஆய்வேடு க.கைலாசபதிக்கு முனைவர் பட்டம்பெற்றுத் தந்ததுடன் மேல்நாட்டாருக்குத் தமிழிலக்கியச் சிறப்பை உணர்த்தியது எனலாம்.அதன் பிறகே மேல்நாட்டார் தமிழ் இலக்கிய ஆய்வுகளில் அதிக கவனம் செலுத்தியுள்ளதைஅறியமுடிகிறது.

ஆய்வுக்காலத்தில் பேராசிரியர் சார்ச் தாம்சன் மணிக்கணக்கில் கிரேக்க,தமிழ் நாகரிகம் பற்றி ஆர்வத்துடன் உரையாடுவது உண்டு.சார்ச் தாம்சன் அவர்களின் மனைவி காத்லின் அவர்களும் அவர்களின் மகளார் லிசு,மெக்(இவரும் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்) ஆகியவர்களும் குடும்ப நண்பர்களாகப் பழகியதைச் சர்வமங்களம் கைலாசபதி அவர்கள் குறிப்பிடுவார்.

பேராசிரியர் கைலாசபதியின் ஆசிரியர் சார்ச்சு தாம்சன் அவர்கள் மிகச்சிறந்த மார்க்சிய சிந்தனையாளர்.செஞ்சீனத்துத் தந்தை மாவோ அவர்களின் கருத்துகளில் ஈடுபாடு கொண்டவர்.மார்க்சிய,இலெனிய அறிஞர்களுடன் இணைந்து சீன ஆய்வுக்குழு அமைத்து, சித்தாந்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்.அவரிடம் பயின்றதால் க.கைலாசபதி அவர்கள் இக்கொள்கைத் தாக்கங்களைப் பெற்றார் என இராம.சுந்தரம் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.


அந்நாளில் இலங்கை முழுவதும் இருந்த அரச கல்வி நிறுவனங்கள் யாவும் இலங்கைப் பல்கைலக்கழகம் என்ற ஒரே பெயரில் அழைக்கப்பெற்றது.பல பகுதிகளில் இருந்த கல்வி நிறுவனங்கள் அப் பல்கலைக்கழகத்தின் சார்பு வளாகங்களாகக் கருதப்பட்டன.தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் ஒரு பல்கலைக்கழகம் தேவை என்ற நிலை எழுந்தபொழுது திருகோணமலையில் பல்கலைக்கழகம் தொடங்கவும் யாழ்ப்பாணத்தில் தொடங்கவும் என இரு கருத்துகள் அரசியல்வாணரிடையே அந்நாளில் இருந்தது.

திருகோணமலையில் தொடங்கப் படாமல் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட பல்கலைக் கழகமும் தொடக்கத்தில் இலங்கைப் பல்கலைக்கழகம் என்றும் அது யாழ்ப்பாண வளாகம் என்றும் பெயர் பெற்றிருந்தது.1974 இல் யாழ்ப்பாண வளாகத்தில் தலைவராக இருந்த கைலாசபதி அவர்கள் அதன் துணைவேந்தராக 1974 முதல் 1977 வரை பணிபுரிந்துள்ளார்.

இப்பதவிக்கு அவர் ஆசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களும் விண்ணப்பித்திருந்தார். பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் மூத்த பேராசிரியர் என்ற அடிப்படையில் அவர்க்கு முதலில் துணைவேந்தர் பணி கிடைக்காமல் அவரைவிட இளையவரான கைலாசபதிக்குக் கிடைத்ததில் கருத்து வேறுபாடுகள் இன்றுவரை இலங்கையில் உண்டு.ஆயினும் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கிய க.கைலாசபதி அப்பதவிக்குத் தகுதியானவர் என அறிஞருலகம் குறிப்பிடுவது உண்டு.பின்னாளில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களும் யாழ்ப்பாணப் பல்கல்லகழகத்தின் துணைவேந்தராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

தென் அமெரிக்கா,ஆத்திரேலியா தவிர்ந்த உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்றுவந்த பெருமைக்கு உரியவர்.1958 இல் இதழாளராக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வந்தவர்.அப்பயண அனுபவத்தை நான்கு நாடுகளில் நாற்பத்தி நான்கு நாட்கள் என்னும் நூலாக எழுதியவர்.இவர்தம் நூல்கள்,பணிகள்,வாழ்வியல் முழுமைப்படுத்தி வெளிவருவது காலத்தின் தேவையாகும்.

1955 இல் கல்கத்தாவில் நடந்த இந்திய எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள முதன்முதல் இந்தியா வந்தவர். அதன் பிறகு பலமுறை இந்தியா வந்துள்ளார்.செனைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பொற்கோ அவர்கள் பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் கைலாசபதி அவர்கள் தமிழ்த்துறையில் தமிழாய்வுகள் என்னும் பொருளில் ஆற்றிய உரை அனைவராலும் விரும்பப்பட்டது.க.கைலாசபதியின் நீண்ட நாள் நண்பர்களாகத் தமிழகத்தில் விளங்குபவர்கள் சிதம்பர ரகுநாதன்.குலோத்துங்கன்(வா.செ.கு),கு.அழகி
ரிசாமி,செயகாந்தன்.

இலங்கையில் பணியாற்றியதுடன் அமையாமல் அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக் கழகத்தில்(1977), வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகவும்(1978-82) பணிபுரிந்து அறிவார்ந்த மாணவர்களை உருவாக்கியவர்.இவர் மாணவர்களுள் மௌனகுரு,சித்திரலேகா,அம்மன்கிளி முருகதாசு,மனோன்மணி சண்முகதாசு,நுஃமான் உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

பல்கலைக்கழகப் பணிபுரிந்ததுடன் இலங்கை அரசின் கல்வி சார்ந்த குழுக்களிலும் இடம் பெற்றுத் திறம்படப் பணிபுரிந்துள்ளார்.யுனெசுகோவிற்கான தேசிய ஆணைக்குழுவிலும்
(1970),இலங்கைப் பாடநூல் ஆலோசனைக் குழுவிலும் இலங்கை வானொலித் தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழுக்களிலும் பணிபுரிந்தவர்.இலங்கைப் பல்கலைக்கழகத்தின் நாட்டியக்குழு, இலக்கியக்குழு ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியவர்.பேராசிரியர் கணபதிப்பிள்ளை தயாரித்த நாடகங்களிலும் கைலாசபதி நடித்துள்ளார்.தமிழகப் பல்கலைக்கழகங்கள் அனுப்பும் முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பிடும் பணியிலும் ஈடுபாட்டுடன் உழைத்தவர்.

க.கைலாசபதி அவர்களுக்குத் தொடக்கத்தில் திராவிட இயக்கம் பற்றிய சரியான புரிதல் இல்லை.காலப்போக்கில் இவ்வியக்கத்தின் பணிகளை உணர்ந்து தம் கருத்துகளைச் செம்மைப் படுத்திக்கொண்டார்.


க.கைலாசபதி அவர்கள் இலக்கியத்துறையின் அனைத்துப் பாடுபொருளைப் பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.இவருக்கு இலக்கியம்,கர்நாடக இசை,பரத நாட்டியம்,நாடகத்துறைகளில் மிகுந்த ஈடுபாடு உண்டு.தமிழகத்தில் மார்கழி மாதங்களில் நடைபெறும் இசைவிழாக்களுக்கு இவர் வந்து கண்டுகளிப்பது உண்டு.பழைய திரைப்படப் பாடல்களை விரும்பிக் கேட்பவர். தியாகராச பாகவதர்.சுப்புலட்சுமி,சிதம்பரம் செயராமன்,பி.யு.கிட்டப்பா,சீவானந்தம் பாடல்களை நாடாப் பதிவுக்கருவியில் விரும்பிக் கேட்பது உண்டு.

இலங்கையில் வெளிவந்த தினகரனில் பணிபுரிந்த கைலாசபதி அவர்கள் ஜனமகன், உதயன், அம்பலத்தான்,அம்பலத்தாடி,அபேதன் உள்ளிட்ட புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். பல சிற்றிதழ்கள் இலங்கையில் வெளிவர உதவியுள்ளார்.பல்வேறு இதழ்களில் வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் கட்டுரை எழுதியவர்.எனவே இவருக்கு எனத் தனித்த நடை உண்டு. இதழ்களில் எழுதி நல்ல பயிற்சி பெற்றிருந்ததால் தொடர்ந்து எழுத்துத்துறையில் ஈடுபட முடிந்தது.

அரசியல் இயக்கங்களில் ஈடுபாடு உடையவராக விளங்கினார்.இந்துக்கல்லூரி மாணவராக இருந்த காலத்திலேயே இவர் மார்க்சிய இலெனினிய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு விளங்கினார்.சீன அரசின் அழைப்பில் இவர் தம் மனைவி சர்வமங்களம் குழந்தைகள் சுமங்களா,பவித்ரா ஆகியோருடன் 1979 இல் சீனா சென்றுவந்தார்.தம் சீனப் பயணப் பட்டறிவுகளைத் தம் மனைவியுடன் இணைந்து எழுதிய "மக்கள் சீனம் -காட்சியும் கருத்தும்" என்ற நூல்வழி வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டபொழுது அதன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார்.பல தரமான படைப்புகள் இச்சங்கத்தின் வழியாக வெளிவந்தன.தமிழ் இலக்கிய ஆய்வுகளிலும் சமூக ஆய்வுகளிலும் தம்மை இணைத்துக்கொண்டு பணிபுரிந்த க.கைலாசபதி அவர்கள் இரத்தப் புற்றுநோய் ஏற்பட்டு தம் 49 ஆம் அகவையில் 06.12.1982 இல் இயற்கை எய்தினார்.சற்றொப்ப முப்பதாண்டுக் காலம் தமிழ் இலக்கிய உலகில் ஈடுபட்டிருந்த க.கைலாசபதி அவர்கள் தரமான ஆய்வுகள் வெளிவரவும்,முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் ஆய்வுத்துறையில் மதிக்கப்படவும் காரணகர்த்தாவாக விளங்கியுள்ளார். இன்னும் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால் தமிழ் ஆய்வுலகத்திற்குப் பல அரிய ஆய்வு உண்மைகள் கிடைத்திருக்கும்.

Tamil Heroic Poetry நூலும், பண்டைதமிழர் வாழ்வும் வழிபாடும்,அடியும் முடியும்,தமிழ் நாவல் இலக்கியம், ஒப்பியல் இலக்கியம் உள்ளிட்ட நூல்களும் க.கைலாசபதியின் பெருமையை என்றும் பேசிக்கொண்டிருக்கும்.

பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் நூல்கள்

01,பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்,1966
02.தமிழ் நாவல் இலக்கியம்,1968
03.Tamil Heroic Poetry,Oxford,1968
04.ஒப்பியல் இலக்கியம்,1969
05.அடியும் முடியும்,1970
06.ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற்காட்சி(கமாலுதினுடன்)1971
07.இலக்கியமும் திறனாய்வும்,1976
08.கவிதை நயம்(இ.முருகையனுடன்),1976
09.சமூகவியலும் இலக்கியமும்,1979
10.மக்கள் சீனம்-காட்சியும் கருத்தும்(சர்வமங்களத்துடன் இணைந்து),1979
11.The Tamil Purist Movement - A Re-Evalution,Social Scientist,Vol:7:10,Trivandrum
12.நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்,1980
13.திறனாய்வுப் பிரச்சினைகள்,1980
14.பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்,1980(இ.ப)
15.இலக்கியச் சிந்தனைகள்,1983
16.பாரதி ஆய்வுகள்,1984
17.The Relation of Tamil and Western Literatures
18.ஈழத்து இலக்கிய முன்னோடிகள்,1986
19.On Art and Literature,1986
20.இரு மகாகவிகள்,1987(ஆ.ப)
21.On Bharathi,1987
22.சர்வதேச அரசியல் நிகழ்வுகள்(1979-1982)
23.Tamil (mimeo)(co-author A,Shanmugadas)

நனி நன்றி :

தமிழ் ஓசை (களஞ்சியம்)நாளேடு,அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 15, 04.01.2009
முனைவர் பொற்கோ
முனைவர் இராம.சுந்தரம்,"கலாநிதி கைலாசபதி",சாகித்திய அகாதெமி வெளியீடு
முனைவர் நா.கணேசன்(அமெரிக்கா)
திரு.அ.முத்துலிங்கம்
திருநிறை சர்வமங்களம் கைலாசபதி
திரு.கணேசலிங்கம்,சென்னை

உயர் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரியிலும் தொடர்ந்தார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (பேராதனை வளாகம்) இளங்கலை (சிறப்பு) பட்டத்தை 1957 பெற்றார். இவ்வகுப்பில் தமிழும் மேலைத் தேய வரலாறும் என்பதைப் பாடமாக எடுத்துப் படித்தார். அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன் ஆகியோருடைய வழிகாட்டல் இவருக்குக் கிடைத்தது.


2010/12/14 தியாகு <seewty...@gmail.com>
செல்லரித்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு புதுவாழ்வு கொடுத்த தண்டமிழ்த் தாமோதரனார் -- சி. வை. தாமோதரம்பிள்ளை (செப்டம்பர் 12, 1832 - ஜனவரி 1, 1901, சிறுப்பிட்டி, யாழ்ப்பாணம்) பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர். தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர். தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி.

வாழ்க்கைக் குறிப்பு

தாமோதரனார் வைரவநாதபிள்ளை, பெருந்தேவி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். இளம் வயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்தார். தனது பன்னிரண்டாவது வயதில் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்று விளங்கிய வட்டுக்கோட்டை செமினறியில் சேர்ந்து, அறிவியல் துறையிலும் பயிற்சி பெற்றார். அதன் பின்னர் 1852 இல் அயலூரான கோப்பாயில் போதனாசக்தி வித்தியாசாலையில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்தார்.

பதிப்புத்துறை முன்னோடி

1853 ஆம் ஆண்டு நீதிநெறி விளக்கம் என்னும் ஒழுக்க நெறி சார்ந்த தமிழ் நூலொன்றைப் பதிப்பித்ததன் மூலம் நூல் வெளியீட்டுத் துறையில் அவருக்கிருந்த ஆர்வம் வெளிப்பட்டதுமல்லாமல், 'தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி' எனும் பெருமையையும் பெற்றார்.

பத்திரிகாசிரியர்

இவர், யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை (தற்போதைய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) அதிபராக இருந்த பீட்டர் பேர்சிவல் பாதிரியார் தமிழ் நாட்டில் நடத்திவந்த தினவர்த்தமானி பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 1853 ஆம் ஆண்டு சென்னை வந்தார். அத்துடன் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் கடமையாற்றினார்.

பட்டப்படிப்பு

1858 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட முதலாவது கலைமாணி (பி.ஏ.) பட்டத்துக்கான தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினார். பின்பு தமிழகம் கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரித் தலைமை ஆசிரியரானார். அதன்பின் அரசாங்க வரவுசெலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளரானார். அத்துடன் விசாரணைக் கர்த்தர் பதவியும் கிடைத்தது.

ராவ்பகதூர் விருது

தொடர்ந்து சட்டம் பயின்ற அவர், 1871 இல் 'பி.எல்.' தேர்விலும் வெற்றி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி, 1884 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்ற தாமோதரம்பிள்ளைக்கு 1895 ஆம் ஆண்டில் அரசினர் 'ராவ் பகதூர்' பட்டமளித்துப் பாராட்டினர்.

தொல்காப்பியப் பொருளதிகாரம் பதிப்பித்தல்

பாண்டிய மன்னன் கைகளுக்கே அகப்படாததாக அன்று இழக்கப்பட்டதாய் கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருளதிகாரம் அர்ப்பணிப்புடனான அவரது கடும் உழைப்பினால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, அச்சிட்டு தமிழ் நாட்டின் பட்டினங்கள் தோறும் அந்நூலை அவர் பவனி வரச் செய்த போது, அதனை மெச்சி வியந்து பாராட்டாதோர் எவரும் இருந்ததில்லை. அவரது அப்பணி ஒன்றுக்காகவே அவர் பிறந்த ஈழத்துக்கு திராவிடம் அன்று நன்றி கூறிப் பாராட்டும் நல்கியிருந்தது.

மறைவு

தமது அறுபத்தி ஒன்பதாம் வயதில், 1-1-1901 இல் சென்னையில் புரசைவாக்கம் பகுதியில் தாமோதரம்பிள்ளை மறைந்தார்

பதிப்பித்த நூல்கள்

தாமோதரனார் பண்டைக்கால இலக்கியங்கள் பலவற்றைப் பதிப்பித்தார். அவற்றில் சில:

* நீதிநெறி விளக்கம் (1953)
* தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரை (1868)
* வீரசோழியம்
* திருத்தணிகைப் புராணம்
* இறையனார் அகப்பொருள்
* தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை
* கலித்தொகை
* இலக்கண விளக்கம்
* சூளாமணி
* தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை

இயற்றிய நூல்கள்

* கட்டளைக் கலித்துறை
* சைவ மகத்துவம்
* வசன சூளாமணி
* நட்சத்திர மாலை
* ஆறாம் வாசகப் புத்தகம்
* ஏழாம் வாசகப் புத்தகம்
* ஆதியாகம கீர்த்தனம்
* விவிலிய விரோதம்
* காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம்)

செல்லரித்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு புதுவாழ்வு கொடுத்த தண்டமிழ்த் தாமோதரனார் -- மா.க.ஈழவேந்தன்

செல்லரித்து சீரழிய இருந்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் பலர். அவர்களுள் மூவர் எம் நினைவில் நிற்கின்றனர். இதனைத் தமிழ்த் தென்றல் திரு.வி.க.தனது "வாழ்கைக் குறிப்புக்கள்" என்ற நூலில் தனக்கே உரிய தனிநடையில் இம்மூவரின் பெருமையை முறையே சாற்றிச் செல்கின்றார். இதோ அவர் செப்பியவை. "பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்கு கால் கொண்டவர் ஆறுமுகநாவலர். சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை, கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சுவாமிநாத ஐயர்" இவ்விதம் திரு.வி.க.வைவிட வேறு யார் தமிழ் அறிஞர் ஆற்றிய பணியினை அழகுற ஆணித்தரமாக எடுத்துரைக்க முடியும்.

தமிழக அறிஞர்கள் மறைந்தபோது ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் எடுத்தியம்பிய இரங்கல் உரைகள் நிறைய உள்ளன, ஆனால், ஈழத்து அறிஞர்கள் மறைந்தபோது அதே துடிப்புடன் தம் துயரைத் தெரிவித்த தமிழக அறிஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எனினும் புறநடையாக - விதிவிலக்காக நம் தாமோதரனார் மறைந்தபோது அவரின் அளவிடற்கரிய பெருமையை புகழ் படைத்த பரிதிமாற் கலைஞர் தமது உள்ளத்தில் எழுந்த துயர் உணர்வினை காலத்தாற் சாகாது ஞாலத்தில் நிலைத்து நிற்கின்ற முறையில் உள்ளம் உருகும் பாடலாக பின்வரும் முறையில் துயர் பெருக்கெடுக்கப் பாடியுள்ளார்.

"காமோதி வண்டுதேன் கடிமலர் கூட்டுதல்போல்

நாமோது செந்தமிழில் நன்னூல் பதிப்பித்த

தாமோ தரம்பிள்ளைச் சால்பெடுத்துச் சாற்றவெவர்

தாமோ தரமுடை யார்"

வேறு சொற்களில் விளம்பின், தாமோதரனாரின் தரம் உணர்ந்தவர்கள் தான் அவரின் பெருமையை எடுத்துரைக்க முடியும் என்பது இப்பாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஈழத்தின் ஓர் அங்கமாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் தலைநகராம் நல்லூரில் 05.12.1822 இல் ஆறுமுகநாவலர் பிறக்க 10 ஆண்டுகள் கழித்து சிறுப்பிட்டி என்னும் சிற்றூரில் 12.09.1832 இல் வைரவநாதன் பெருந்தேவி ஆகியோருக்கு தாமோதரனார் மகனாகப் பிறந்தார். தமிழ் இன எண்ணிக்கையில் ஏற்றத்தில் அக்கறை கொண்டிருந்த இவரின் தந்தையார் எட்டுக் குழுந்தைகளைப் பெற்றார். அவர்களுள் மூத்தவர் நம் தாமோதரனார். தந்தை ஆசிரியராக இருந்ததனால் தந்தையின் அறிவு இவரின் வளர்ச்சிக்குத் துணை நின்றது. அத்தோடு இவரின் மேல்நிலைக் கல்வி மேம்பட சுன்னாகத்து முத்துக்குமார நாவலர் தூண்டுகோலாக விளங்கினார். தமிழ்க் கல்வியில் ஊன்றிக் கவனம் செலுத்திய இவர் 1844 - 1852 வரையான காலப்பகுதியில் தெல்லிப்பழை மிஷன் பாடசாலை, வட்டுக்கோட்டை கல்வி நிலையம் ஆகியவற்றில் பயின்றதோடு, யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கிலத்தில் ஆழமான அறிவைப் பெற்றார்.

தனது இருபதாம் அகவையில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக விளங்கிய இவர் 1856 இல் `பெர்சிவல்' பாதிரியார் சென்னையில் நடத்திய "தினவர்த்தமானி" இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரின் சென்னை வாழ்வு 1856 இல் தொடங்க 1857 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் தமது ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். இம்மாநிலக் கல்லூரியில் தான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதஐயரும் சில காலம் ஆசிரியப் பணி புரிந்ததை இங்கு நினைவு கொள்வோமாக. இக்கல்லூரியின் முன்றிலில் உ.வே.சாமிநாதஐயரின் சிலை அவரின் பெருமை பேசும் முறையில் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. இச்சென்னை மாநிலக் கல்லூரியில் இலங்கை அரசியலில் அரை நூற்றாண்டு அரசோச்சிய சேர் பொன்.இராமநாதன் இங்கு பயின்றவர் என்பது இங்கு பெருமையுடன் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அமைதி காண மிக நெருக்கடியான காலகட்டத்தில் பெரும் பணி ஆற்றிய ஜி.பார்த்தசாரதி அவர்களும் இங்கேயே பயின்றார். இவருடன் பயின்றவர் இலங்கையின் கல்வித்துறை இயக்குனராக விளங்கிய திருமதி இரத்தினா நவரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமதி இரத்தினா நவரத்தினம் பல நூல்களை எழுதியதோடு "திருவாசகத்துக்கு" அழகிய ஆங்கில உரை வழங்கியதோடு யோகர்சுவாமிகளின் புகழையும் ஏற்றமிகு ஆங்கில நடையில் ஒரு நூல் வரைந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் சிக்கலை ஒட்டி பார்த்தசாரதியை நான் அடிக்கடி சந்தித்த போது திருமதி இரத்தினா நவரத்தினத்தின் நலன் பற்றி விசாரிக்க அவர் தவறியதில்லை. இவ்வினிய செய்தியை திருமதி இரத்தினா நவரத்தினத்துக்கு நான் சொல்லியபோது நன்றி மறவா நண்பர் எம் பார்த்தசாரதி என்று கூறி உவகையுற்றார்.

எம் பணியையும் உணர்ந்திருந்த நம் இரத்தினா நவரத்தினம் `ஙுணித ச்ணூஞு ச் –ச்ண ணிஞூ ஐஞீஞுச்ண் ச்ணஞீ ஐஞீஞுச்டூண்" (உங்களிடம் எண்ணங்கள் உண்டு. அந்த எண்ணங்களில் ஏற்றமும் உண்டு) என்று எம்மை ஏற்றிப் போற்றியதையும் இங்கு நினைவு கூர்ந்து உவகையுறுகிறேன்.

தமிழகத்தில் தாமோதரனாரின் பல்துறை பணி

12.09.1832 இல் தமிழீழத்தில் தோன்றிய தாமோதரனார் தமிழகம் சென்று மாநிலக் கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தின், முதல் இளங்கலை (ஆ.அ.) பட்டதாரியானார். தாமோதரனாருடைய நிழற்படம் சென்னை பல்கலைக்கழகத்து நூலகத்தில் தனிச்சிறப்புடன் பேணிக் காக்கப்படுகிறது. அவரது நினைவுக் கூட்டங்களின்போது இவ்வோவியத்திற்கு மலர்மாலை சூட்டி சிறப்புச் செய்யப்படுகிறது. சென்னை மாநிலக் கல்லூரியில் இருந்து கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரிக்கு மாற்றம் பெற்றுச் சென்ற இவர் தனது 39 ஆவது அகவையில் 1871 இல் இளங்கலைச் சட்டம் (ஆ.ஃ.) பட்டம் பெற்றார். அரை நூற்றாண்டை இவர் எய்கையில் 1882 இல் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்பு 1884 இல், சட்டத்துறையில் இவர் பெற்றிருந்த சிறப்புக் காரணமாக புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவராக பணியாற்றும்படி இவருக்கு அழைப்புக் கிடைத்தது. 1890 இல் இப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு 1895 இல் `ராவ் பகதூர்' பட்டம் வழங்கப்பட்டது. தமிழீழத்தில் தோன்றிய இவர் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் உள்ள புரசைவாக்கம் என்ற பகுதியில் தனது அறுபத்தொன்பதாவது அகவையின் தொடக்கத்தில் 1901 ஆண்டு ஜனவரி முதலாம் நாள் இறையருளில் இரண்டறக் கலந்தார்.

நம் சி.வை.தாமோதரனார் ஆற்றிய பணிகள் பல. ஆனால், அவருக்கு அழியாப் புகழைத் தந்து நிற்பது அவர் பதிப்பித்த நூல்களாகும். "தமிழீழம் தந்த தாமோதரனார்" என்ற தலைப்பில் சென்னை கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கும் முனைவர் (டாக்டர்) கு.அரசேந்திரன் தாமோதரனார் தான் வரைந்துள்ள நூலில் பதிப்பித்த நூல்களை பின்வரும் முறையில் ஆண்டடிப்படையில் தந்திருப்பது எமக்கு அகமகிழ்வினைத் தருவதோடு, அவரின் ஆய்வுள்ளத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

1. நீதிநெறி விளக்கம் 1854

2. தொல் சேனாவரையம் 1868

3. வீரசோழியம்

பெருந்தேவனார்

உரையுடன் 1881

4. இறையனார் களவியல் 1883

5. தணிகைப் புராணம் 1883

6. தொல் பொருள்

நச்சினாக்கினியம் 1885

7. கலித்தொகை 1887

8. இலக்கண விளக்கம் 1889

9. சூளாமணி 1889

10. தொல் எழுத்து 1891

11. தொல் - சொல் (நச்) 1892

மேற்குறித்தவற்றை வெளியிட்ட தாமோதரனார் 1898 இல் அகநானூற்றை வெளியிட எடுத்த முயற்சியும் அவர் வரலாற்றிலிருந்து அறியத்தக்கதாக இருக்கிறது. சொற்பிறப்பு ஆய்வாளர் முனைவர் கு.அரசேந்திரன் கூற்றுப்படி "பதினொரு நூல்களில் மகாலிங்க ஐயர் பதிப்புத் தவிர பிற அனைத்தும் அவரால் மட்டுமே முதன்முதலாக அச்சேற்றப்பட்டன என்பதை நாம் நினைக்க வேண்டும்" என்று வலியுறுத்திச் செல்லும் கூற்று தாமோதரனாரின் தலைசிறந்த பதிப்புப் பணிக்குச் சான்று பகர்கிறது.

"தமிழீழம் தந்த தாமோதரனார்" பற்றி முனைவர் கு.அரசேந்திரன் வரைந்துள்ள நூல் குறள் போல் குறுகிய வடிவம் கொண்டிருப்பினும் இதுவரை தாமோதரனார் பற்றி ஏனைய அறிஞர்கள் குறிப்பிடாத பல அரிய குறிப்புகளை இதனில் தந்துள்ளதனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிஞர் முனைவர் க.ப.அறவாணன் "திருக்குறளில்" கரைகண்ட பேராசிரியர் இளங்குமரன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக மேலாளர் முத்துக் குமாரசாமி உட்பட பல அறிஞர்கள் இந்நூலை உகந்து போற்றியுள்ளதனால்

"தமிழைக் கொண்டு உண்மையை

வாழ வைக்கும் அறம்

உண்மையைக் கொண்டு தமிழை

வாழவைக்கும் திறம்....

இவர்தான் அரசேந்திரன்"

என்று ஆய்வாளர் அரசேந்திரனை உச்சி மீது வைத்து உவந்து போற்றும் நம் கவிஞர் காசி. ஆனந்தன் மேலும் ஒரு படி சென்று,

"சூழ்ச்சியாளர் பொய்யும் புரட்டும்

களைந்து - வளைவுற்ற தமிழும்

தமிழ் மண்ணும் நிமிர்த்தும்

உயிர்ப்புள்ள ஆய்வும் எழுத்தும்

இவர்"

என்ற வரிகள் ஊடாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட நம் தாமோதரனாரின் பல வியத்தகு பணிகளை மக்கள் முன் அரசேந்திரன் நிறுத்தியுள்ளார் என்பதை நம் கவிஞர் நிலை நாட்டியுள்ளார்.

தன் பணி பற்றித் தாமோதரனார்

தன் வாழ் நாள் முழுவதையுமே பதிப்புத் துறைக்கு அர்ப்பணித்த நம் தாமோதரானார், தாம் ஏன் இப்பதிப்புத்துறையில் மூழ்கித் திளைத்தார் என்பதையும் பின்வரும் சொற்களில் எடுத்துக் காட்டுகிறார். இச் சொற்கள் அவர் உள்ளம் உருகி வெளியிட்ட சொற்களாகக் காட்சியளிக்கின்றன. இதோ அவர் மொழிந்தவை.

"நல்ல தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும் கையெழுத்துப் பிரதிகளுக்கு வந்த கதியையும் அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்க மாட்டாமை ஒன்றே என்னை இத் தொழிலில் வலிப்பது"

"பல பெரும் வித்துவான்கள் இந் நூலை (தொல்காப்பியத்தை) அச்சிட விரும்பியதும் முயன்றதும் இரண்டொரு பிரதிகள் தேடிப் பார்வையிட்டதும் தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான இதனை அச்சிடின் தம் பெயர்க்குக் குறைவு நேரிடுமென்று தம் முயற்சியைக் கைவிட்டதும் அடியேன் பூரணமாக அறிவேன். ஆதலால் பண்டிதர், கவிராஜ பண்டிதர், மகாவித்துவான், புலவர் என்றின்ன பெரும்பட்ட சுமையைத் தலைமேலேற்றிக் கொள்ளாது இன்னும் பலகாலந் தமிழ் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என் போலியரே இதில் கையிடுவது பேரவசியமாயிற்று"

கற்றோர் ஏற்றும் கலித்தொகை

தாமோதரனார் பதிப்பித்த பல நூல்களில் அவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது அவரின் "கற்றோர் ஏற்றுங் கலித்தொகை"ப் பதிப்பேயாகும். அவரின் 59 ஆவது அகவையில் 1887 இல் இந்நூல் பதிக்கப்பட்டது. தனது அகவை 22 இல் 1854 இல் நீதிநெறி விளக்கத்தை தனது முதல் நூலாக வெளியிட்டவரும் இவரே, கலித்தொகைச் சுவடியை தான் பதிப்பிக்க முனைந்த போது தனக்கு ஏற்பட்ட தொல்லைகளை பின்வருமாறு அவர் நெஞ்சம் நெகிழ உரைக்கிறார். கலித்தொகைப் பிரதிகள் தேடயான் பெற்ற கட்டம் வாயினாற் கூறும் அளவைத்தன்று. முதன்முதல் யான் பார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது மூல பாடப்பிரதி, அது தலையுங் கடையுமின்றிய குறைப் பிரதி, மேலும் பெரும்பாலும் எழுத்துகள் சிதைந்து ஒரு பாட்டின் சேருறுப்பாவது முற்றும் வாசிக்க முடியாமற் கிடந்ததாற் படிப்பதற்கே வெறுப்புண்டாய் நீக்கிவிட்டேன். "பின்னர்த் தொல்காப்பியப் பரிசோதனைக்காக தேடிய போது ஷ்ரீலஷ்ரீ ஆறு முகநாவலரின் பிரதி அகப்பட்டது. அது கொண்டு கலித்தொகை அருமை உணர்ந்து அது எப்படியும் உலகிற்குப் பயன்பட வேண்டும் என்னும் அவாவுற்று பல ஆதீனங்களுக்கு விண்ணப்பம் செய்த போது தனக்குத் திருவாவடுதுறை ஆதீனம் துணை நின்றது" என்று கூறி ஆறுதலடைகிறார்.

இவை அனைத்தையும் நினைவில் வைத்துத் தான் தாமோதரனாரை மதிப்பிடுகின்றபோது முனைவர் அரசேந்திரன் தாமோதரனாருடைய பெருமையை ஆய்வுள்ளத்தோடு இவ்விதம் மொழிகிறார். "சமயப்பற்று மிகுந்தவரே நம் தாமோதரன். என்றாலும் தமிழின், தமிழரின் தனிப் பெரும் மாண்புகளைச் சமஸ்கிருதம் விரவாத தனித் தமிழ் நூல்களாகப் பழந்தமிழ் நூல்களே இருந்தபடியால் அவற்றை மீட்டலே தமிழுக்கும் தமிழருக்கும் செய்யும் அடிப்படைப் பணிகளின் முதன்மை என்று கருதியிருக்கின்றார். முனைவரின் இக்கூற்றை வரவேற்று நாமும் வழிமொழி கூறும் நிலையிலிருக்கிறோம்.

தமிழ் அறிஞர்களை மதிப்பீடு செய்து அவர்களுக்கு உரிய இடம் வழங்குவதில் தமிழ் ஆய்வாளர் வையாபுரிப்பிள்ளைக்கு தனிச் சிறப்புண்டு. அவர் தனது "தமிழ்ச்சுடர் மணிகள்" என்ற நூலில் தாமோதரனார் பற்றி வழங்கியுள்ள மதிப்பீடு அவர் நடுநிலை நின்றே தாமோதரனாரை மதிப்பீடு செய்துள்ளார் என்பதற்கு சான்று கூறுகிறது. "ஷ்ரீ ஆறுமுக நாவலர் சைவ சமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவதோடு அமைந்து விட்டார்கள். வித்துவான் தாண்டவராசெல்லரித்து சீரழிய இருந்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் பலர். அவர்களுள் மூவர் எம் நினைவில் நிற்கின்றனர். இதனைத் தமிழ்த் தென்றல் திரு.வி.க.தனது "வாழ்கைக் குறிப்புக்கள்" என்ற நூலில் தனக்கே உரிய தனிநடையில் இம்மூவரின் பெருமையை முறையே சாற்றிச் செல்கின்றார். இதோ அவர் செப்பியவை. "பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்கு கால் கொண்டவர் ஆறுமுகநாவலர். சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை, கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சுவாமிநாத ஐயர்" இவ்விதம் திரு.வி.க.வைவிட வேறு யார் தமிழ் அறிஞர் ஆற்றிய பணியினை அழகுற ஆணித்தரமாக எடுத்துரைக்க முடியும்.

தமிழக அறிஞர்கள் மறைந்தபோது ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் எடுத்தியம்பிய இரங்கல் உரைகள் நிறைய உள்ளன, ஆனால், ஈழத்து அறிஞர்கள் மறைந்தபோது அதே துடிப்புடன் தம் துயரைத் தெரிவித்த தமிழக அறிஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எனினும் புறநடையாக - விதிவிலக்காக நம் தாமோதரனார் மறைந்தபோது அவரின் அளவிடற்கரிய பெருமையை புகழ் படைத்த பரிதிமாற் கலைஞர் தமது உள்ளத்தில் எழுந்த துயர் உணர்வினை காலத்தாற் சாகாது ஞாலத்தில் நிலைத்து நிற்கின்ற முறையில் உள்ளம் உருகும் பாடலாக பின்வரும் முறையில் துயர் பெருக்கெடுக்கப் பாடியுள்ளார்.

"காமோதி வண்டுதேன் கடிமலர் கூட்டுதல்போல்

நாமோது செந்தமிழில் நன்னூல் பதிப்பித்த

தாமோ தரம்பிள்ளைச் சால்பெடுத்துச் சாற்றவெவர்

தாமோ தரமுடை யார்"

வேறு சொற்களில் விளம்பின், தாமோதரனாரின் தரம் உணர்ந்தவர்கள் தான் அவரின் பெருமையை எடுத்துரைக்க முடியும் என்பது இப்பாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஈழத்தின் ஓர் அங்கமாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் தலைநகராம் நல்லூரில் 05.12.1822 இல் ஆறுமுகநாவலர் பிறக்க 10 ஆண்டுகள் கழித்து சிறுப்பிட்டி என்னும் சிற்றூரில் 12.09.1832 இல் வைரவநாதன் பெருந்தேவி ஆகியோருக்கு தாமோதரனார் மகனாகப் பிறந்தார். தமிழ் இன எண்ணிக்கையில் ஏற்றத்தில் அக்கறை கொண்டிருந்த இவரின் தந்தையார் எட்டுக் குழுந்தைகளைப் பெற்றார். அவர்களுள் மூத்தவர் நம் தாமோதரனார். தந்தை ஆசிரியராக இருந்ததனால் தந்தையின் அறிவு இவரின் வளர்ச்சிக்குத் துணை நின்றது. அத்தோடு இவரின் மேல்நிலைக் கல்வி மேம்பட சுன்னாகத்து முத்துக்குமார நாவலர் தூண்டுகோலாக விளங்கினார். தமிழ்க் கல்வியில் ஊன்றிக் கவனம் செலுத்திய இவர் 1844 - 1852 வரையான காலப்பகுதியில் தெல்லிப்பழை மிஷன் பாடசாலை, வட்டுக்கோட்டை கல்வி நிலையம் ஆகியவற்றில் பயின்றதோடு, யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கிலத்தில் ஆழமான அறிவைப் பெற்றார்.

தனது இருபதாம் அகவையில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக விளங்கிய இவர் 1856 இல் `பெர்சிவல்' பாதிரியார் சென்னையில் நடத்திய "தினவர்த்தமானி" இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரின் சென்னை வாழ்வு 1856 இல் தொடங்க 1857 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் தமது ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். இம்மாநிலக் கல்லூரியில் தான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதஐயரும் சில காலம் ஆசிரியப் பணி புரிந்ததை இங்கு நினைவு கொள்வோமாக. இக்கல்லூரியின் முன்றிலில் உ.வே.சாமிநாதஐயரின் சிலை அவரின் பெருமை பேசும் முறையில் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. இச்சென்னை மாநிலக் கல்லூரியில் இலங்கை அரசியலில் அரை நூற்றாண்டு அரசோச்சிய சேர் பொன்.இராமநாதன் இங்கு பயின்றவர் என்பது இங்கு பெருமையுடன் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அமைதி காண மிக நெருக்கடியான காலகட்டத்தில் பெரும் பணி ஆற்றிய ஜி.பார்த்தசாரதி அவர்களும் இங்கேயே பயின்றார். இவருடன் பயின்றவர் இலங்கையின் கல்வித்துறை இயக்குனராக விளங்கிய திருமதி இரத்தினா நவரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமதி இரத்தினா நவரத்தினம் பல நூல்களை எழுதியதோடு "திருவாசகத்துக்கு" அழகிய ஆங்கில உரை வழங்கியதோடு யோகர்சுவாமிகளின் புகழையும் ஏற்றமிகு ஆங்கில நடையில் ஒரு நூல் வரைந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் சிக்கலை ஒட்டி பார்த்தசாரதியை நான் அடிக்கடி சந்தித்த போது திருமதி இரத்தினா நவரத்தினத்தின் நலன் பற்றி விசாரிக்க அவர் தவறியதில்லை. இவ்வினிய செய்தியை திருமதி இரத்தினா நவரத்தினத்துக்கு நான் சொல்லியபோது நன்றி மறவா நண்பர் எம் பார்த்தசாரதி என்று கூறி உவகையுற்றார்.

எம் பணியையும் உணர்ந்திருந்த நம் இரத்தினா நவரத்தினம் `ஙுணித ச்ணூஞு ச் –ச்ண ணிஞூ ஐஞீஞுச்ண் ச்ணஞீ ஐஞீஞுச்டூண்" (உங்களிடம் எண்ணங்கள் உண்டு. அந்த எண்ணங்களில் ஏற்றமும் உண்டு) என்று எம்மை ஏற்றிப் போற்றியதையும் இங்கு நினைவு கூர்ந்து உவகையுறுகிறேன்.

தமிழகத்தில் தாமோதரனாரின் பல்துறை பணி

12.09.1832 இல் தமிழீழத்தில் தோன்றிய தாமோதரனார் தமிழகம் சென்று மாநிலக் கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தின், முதல் இளங்கலை (ஆ.அ.) பட்டதாரியானார். தாமோதரனாருடைய நிழற்படம் சென்னை பல்கலைக்கழகத்து நூலகத்தில் தனிச்சிறப்புடன் பேணிக் காக்கப்படுகிறது. அவரது நினைவுக் கூட்டங்களின்போது இவ்வோவியத்திற்கு மலர்மாலை சூட்டி சிறப்புச் செய்யப்படுகிறது. சென்னை மாநிலக் கல்லூரியில் இருந்து கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரிக்கு மாற்றம் பெற்றுச் சென்ற இவர் தனது 39 ஆவது அகவையில் 1871 இல் இளங்கலைச் சட்டம் (ஆ.ஃ.) பட்டம் பெற்றார். அரை நூற்றாண்டை இவர் எய்கையில் 1882 இல் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்பு 1884 இல், சட்டத்துறையில் இவர் பெற்றிருந்த சிறப்புக் காரணமாக புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவராக பணியாற்றும்படி இவருக்கு அழைப்புக் கிடைத்தது. 1890 இல் இப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு 1895 இல் `ராவ் பகதூர்' பட்டம் வழங்கப்பட்டது. தமிழீழத்தில் தோன்றிய இவர் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் உள்ள புரசைவாக்கம் என்ற பகுதியில் தனது அறுபத்தொன்பதாவது அகவையின் தொடக்கத்தில் 1901 ஆண்டு ஜனவரி முதலாம் நாள் இறையருளில் இரண்டறக் கலந்தார்.

நம் சி.வை.தாமோதரனார் ஆற்றிய பணிகள் பல. ஆனால், அவருக்கு அழியாப் புகழைத் தந்து நிற்பது அவர் பதிப்பித்த நூல்களாகும். "தமிழீழம் தந்த தாமோதரனார்" என்ற தலைப்பில் சென்னை கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கும் முனைவர் (டாக்டர்) கு.அரசேந்திரன் தாமோதரனார் தான் வரைந்துள்ள நூலில் பதிப்பித்த நூல்களை பின்வரும் முறையில் ஆண்டடிப்படையில் தந்திருப்பது எமக்கு அகமகிழ்வினைத் தருவதோடு, அவரின் ஆய்வுள்ளத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

1. நீதிநெறி விளக்கம் 1854

2. தொல் சேனாவரையம் 1868

3. வீரசோழியம்

பெருந்தேவனார்

உரையுடன் 1881

4. இறையனார் களவியல் 1883

5. தணிகைப் புராணம் 1883

6. தொல் பொருள்

நச்சினாக்கினியம் 1885

7. கலித்தொகை 1887

8. இலக்கண விளக்கம் 1889

9. சூளாமணி 1889

10. தொல் எழுத்து 1891

11. தொல் - சொல் (நச்) 1892

மேற்குறித்தவற்றை வெளியிட்ட தாமோதரனார் 1898 இல் அகநானூற்றை வெளியிட எடுத்த முயற்சியும் அவர் வரலாற்றிலிருந்து அறியத்தக்கதாக இருக்கிறது. சொற்பிறப்பு ஆய்வாளர் முனைவர் கு.அரசேந்திரன் கூற்றுப்படி "பதினொரு நூல்களில் மகாலிங்க ஐயர் பதிப்புத் தவிர பிற அனைத்தும் அவரால் மட்டுமே முதன்முதலாக அச்சேற்றப்பட்டன என்பதை நாம் நினைக்க வேண்டும்" என்று வலியுறுத்திச் செல்லும் கூற்று தாமோதரனாரின் தலைசிறந்த பதிப்புப் பணிக்குச் சான்று பகர்கிறது.

"தமிழீழம் தந்த தாமோதரனார்" பற்றி முனைவர் கு.அரசேந்திரன் வரைந்துள்ள நூல் குறள் போல் குறுகிய வடிவம் கொண்டிருப்பினும் இதுவரை தாமோதரனார் பற்றி ஏனைய அறிஞர்கள் குறிப்பிடாத பல அரிய குறிப்புகளை இதனில் தந்துள்ளதனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிஞர் முனைவர் க.ப.அறவாணன் "திருக்குறளில்" கரைகண்ட பேராசிரியர் இளங்குமரன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக மேலாளர் முத்துக் குமாரசாமி உட்பட பல அறிஞர்கள் இந்நூலை உகந்து போற்றியுள்ளதனால்

"தமிழைக் கொண்டு உண்மையை

வாழ வைக்கும் அறம்

உண்மையைக் கொண்டு தமிழை

வாழவைக்கும் திறம்....

இவர்தான் அரசேந்திரன்"

என்று ஆய்வாளர் அரசேந்திரனை உச்சி மீது வைத்து உவந்து போற்றும் நம் கவிஞர் காசி. ஆனந்தன் மேலும் ஒரு படி சென்று,

"சூழ்ச்சியாளர் பொய்யும் புரட்டும்

களைந்து - வளைவுற்ற தமிழும்

தமிழ் மண்ணும் நிமிர்த்தும்

உயிர்ப்புள்ள ஆய்வும் எழுத்தும்

இவர்"

என்ற வரிகள் ஊடாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட நம் தாமோதரனாரின் பல வியத்தகு பணிகளை மக்கள் முன் அரசேந்திரன் நிறுத்தியுள்ளார் என்பதை நம் கவிஞர் நிலை நாட்டியுள்ளார்.

தன் பணி பற்றித் தாமோதரனார்

தன் வாழ் நாள் முழுவதையுமே பதிப்புத் துறைக்கு அர்ப்பணித்த நம் தாமோதரானார், தாம் ஏன் இப்பதிப்புத்துறையில் மூழ்கித் திளைத்தார் என்பதையும் பின்வரும் சொற்களில் எடுத்துக் காட்டுகிறார். இச் சொற்கள் அவர் உள்ளம் உருகி வெளியிட்ட சொற்களாகக் காட்சியளிக்கின்றன. இதோ அவர் மொழிந்தவை.

"நல்ல தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும் கையெழுத்துப் பிரதிகளுக்கு வந்த கதியையும் அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்க மாட்டாமை ஒன்றே என்னை இத் தொழிலில் வலிப்பது"

"பல பெரும் வித்துவான்கள் இந் நூலை (தொல்காப்பியத்தை) அச்சிட விரும்பியதும் முயன்றதும் இரண்டொரு பிரதிகள் தேடிப் பார்வையிட்டதும் தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான இதனை அச்சிடின் தம் பெயர்க்குக் குறைவு நேரிடுமென்று தம் முயற்சியைக் கைவிட்டதும் அடியேன் பூரணமாக அறிவேன். ஆதலால் பண்டிதர், கவிராஜ பண்டிதர், மகாவித்துவான், புலவர் என்றின்ன பெரும்பட்ட சுமையைத் தலைமேலேற்றிக் கொள்ளாது இன்னும் பலகாலந் தமிழ் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என் போலியரே இதில் கையிடுவது பேரவசியமாயிற்று"

கற்றோர் ஏற்றும் கலித்தொகை

தாமோதரனார் பதிப்பித்த பல நூல்களில் அவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது அவரின் "கற்றோர் ஏற்றுங் கலித்தொகை"ப் பதிப்பேயாகும். அவரின் 59 ஆவது அகவையில் 1887 இல் இந்நூல் பதிக்கப்பட்டது. தனது அகவை 22 இல் 1854 இல் நீதிநெறி விளக்கத்தை தனது முதல் நூலாக வெளியிட்டவரும் இவரே, கலித்தொகைச் சுவடியை தான் பதிப்பிக்க முனைந்த போது தனக்கு ஏற்பட்ட தொல்லைகளை பின்வருமாறு அவர் நெஞ்சம் நெகிழ உரைக்கிறார். கலித்தொகைப் பிரதிகள் தேடயான் பெற்ற கட்டம் வாயினாற் கூறும் அளவைத்தன்று. முதன்முதல் யான் பார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது மூல பாடப்பிரதி, அது தலையுங் கடையுமின்றிய குறைப் பிரதி, மேலும் பெரும்பாலும் எழுத்துகள் சிதைந்து ஒரு பாட்டின் சேருறுப்பாவது முற்றும் வாசிக்க முடியாமற் கிடந்ததாற் படிப்பதற்கே வெறுப்புண்டாய் நீக்கிவிட்டேன். "பின்னர்த் தொல்காப்பியப் பரிசோதனைக்காக தேடிய போது ஷ்ரீலஷ்ரீ ஆறு முகநாவலரின் பிரதி அகப்பட்டது. அது கொண்டு கலித்தொகை அருமை உணர்ந்து அது எப்படியும் உலகிற்குப் பயன்பட வேண்டும் என்னும் அவாவுற்று பல ஆதீனங்களுக்கு விண்ணப்பம் செய்த போது தனக்குத் திருவாவடுதுறை ஆதீனம் துணை நின்றது" என்று கூறி ஆறுதலடைகிறார்.

இவை அனைத்தையும் நினைவில் வைத்துத் தான் தாமோதரனாரை மதிப்பிடுகின்றபோது முனைவர் அரசேந்திரன் தாமோதரனாருடைய பெருமையை ஆய்வுள்ளத்தோடு இவ்விதம் மொழிகிறார். "சமயப்பற்று மிகுந்தவரே நம் தாமோதரன். என்றாலும் தமிழின், தமிழரின் தனிப் பெரும் மாண்புகளைச் சமஸ்கிருதம் விரவாத தனித் தமிழ் நூல்களாகப் பழந்தமிழ் நூல்களே இருந்தபடியால் அவற்றை மீட்டலே தமிழுக்கும் தமிழருக்கும் செய்யும் அடிப்படைப் பணிகளின் முதன்மை என்று கருதியிருக்கின்றார். முனைவரின் இக்கூற்றை வரவேற்று நாமும் வழிமொழி கூறும் நிலையிலிருக்கிறோம்.

தமிழ் அறிஞர்களை மதிப்பீடு செய்து அவர்களுக்கு உரிய இடம் வழங்குவதில் தமிழ் ஆய்வாளர் வையாபுரிப்பிள்ளைக்கு தனிச் சிறப்புண்டு. அவர் தனது "தமிழ்ச்சுடர் மணிகள்" என்ற நூலில் தாமோதரனார் பற்றி வழங்கியுள்ள மதிப்பீடு அவர் நடுநிலை நின்றே தாமோதரனாரை மதிப்பீடு செய்துள்ளார் என்பதற்கு சான்று கூறுகிறது. "ஷ்ரீ ஆறுமுக நாவலர் சைவ சமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவதோடு அமைந்து விட்டார்கள். வித்துவான் தாண்டவராயன் முதலியார், திவாகரம் முதலிய நூல்களையும் பள்ளி மாணவர்களுக்கு வேண்டும் வசன நூல்களையும் அச்சேற்றுவதில் ஒடுங்கி விட்டார்கள். மழவை மகாலிங்க ஐயர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித்து வேறு சில நூல்களையும் வெளியிட்டு அத்துடன் நின்று விட்டார்கள். களத்தூர் வேதசிறி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு அவ்வளவில் திருப்தியுற்றார்கள். திருத்தணிகை விசாகப் பெருமானையர் முதலியோர் குறளுக்குக் தெளிபொருள், பிரபுலிங்கலீலை, சூடாமணி, நிகண்டு முதலியவற்றைப் பிரசுரித்து அவ்வளவில் தங்கள் முயற்சியைச் சுருக்கிக் கொண்டார்கள். திருவேங்கட முதலியார், இராசகோபாலப்பிள்ளை முதலானவர்கள் இராமாயணம் வெளியிடுவதிலும் நாலடி முதலிய பதிப்பித்தலிலும் ஈடுபட்டு நின்றனர். ஷ்ரீ உ.வே. சாமிநாத ஐயர் அப்போது தான் சீவகசிந்தாமணி பதிப்பு முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆகவே நமது பிள்ளை அவர்கள் தன்னந்தனியராய்ப் பண்டைத் தமிழ் செல்வப் புதையலைத் தமிழ் மக்களுக்கு அகழ்ந்தெடுத்து உதவும் பெரும் முயற்சியை மேற்கொண்டார். இவ்விதம் தாமோதரனார் தகைமை பற்றி கூறிய பேராசிரியர் வையாபுரி அவர்கள் மேலும் ஒரு படி சென்று "தாமோதரர் தமிழ் ஆர்வம் அவர் உள்ளத்திலே மங்கள ஒளியாய் திகழ்ந்து ஒரு காலைக் கொருகால் வளர்ந்து முடிவில் பேரொளிப

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

தியாகு

unread,
Dec 14, 2010, 8:31:50 AM12/14/10
to முத்தமிழ், பண்புடன்
இந்த தகவல்கள் பெறும் இடம் தமிழ் அறிஞர்கள் Face book

தியாகு

unread,
Dec 14, 2010, 8:32:56 AM12/14/10
to முத்தமிழ், பண்புடன், அன்பு, pothuv...@googlegroups.com, tamizhblo...@googlegroups.com
மறைமலை அடிகள் (சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர் தனிச் செம்மொழியாம் தமிழை வடமொழிக் கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடக்கி தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். சாதிசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.

பிறப்பு

மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். இவர் 1876 சூலை 15 ஆம் நாள் மாலை 6.35க்குப் திருக்கழுக்குன்றத்திலே பிறந்தார். இவர் தந்தையார் சொக்கநாதர், தாயார் சின்னம்மையார். தந்தையார் நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராய் பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும் , அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார். பின்னர் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக்கொண்டார். அவருக்குப் பின் 4 ஆண் சகோதரர்களும் (திருஞான சம்பந்தம், மாணிக்க வாசகம், திருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி ஆகியோர்) 2 பெண் சகோதரர்களும் (நீலாம்பிகை, திரிபுரசுந்தரி ஆகியோர்) பிறந்தனர்.

மறைமலைஅடிகள், நாகையில் வெஸ்லியன் மிசன் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவம் வரை படித்தார். அவருடைய தந்தையாரின் மறைவு காரணமாக அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால் தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். சைவ சித்தாந்த சண்டமாருதம் என்று புகழ் பெற்றிருந்த சோமசுந்தர நாயக்கரிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.

சென்னைக்கு வந்த பின்னர் கிறித்தவக் கல்லூரியில் வீ.கோ.சூரியநாராயண சாத்திரியாருடன் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியபின், பல்லாவரத்தில் இராமலிங்கரின் கொள்கைப்படி 1905 இல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார். திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டார். மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்.


இவர் காலத்தில் பல புகழ் பெற்ற தமிழறிஞர்கள் வாழ்ந்தனர். மனோண்மணீயம் இயற்றிய சுந்தரனார், பெரும்புலவர் கதிரைவேலர், திரு. வி. கலியாணசுந்தரனார், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், தணிகைமணி வ.சு.செங்கல்வராயர், ரசிகமணி டி. கே. சிதம்பரநாதர், பேராசிரியர் ச. வையபுரியார், கோவை இராமலிங்கம், சுப்பிரமணிய பாரதியார், மீனாட்சி சுந்தரனார், பொத்தக வணிகரும் மனோண்மணீயம் ஆசிரியர் சுந்தரனாரின் ஆசிரியரும் ஆன நாராயணசாமி, சைவசித்தாந்த சண்டமாருதம் என்று புகழப்பட்ட சோமசுந்தர நாயகர், என்று பலர் வாழ்ந்த காலம்.

தனித்தமிழ் ஆர்வம்

* அருட்பா-மருட்பா போர்
* சமயத்தொண்டுகள்
* இந்தி எதிர்ப்பு

ஆக்கிய நூல்கள்

* பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921)
* மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933)
* மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
* யோக நித்திரை: அறிதுயில் (1922)
* தொலைவில் உணர்தல் (1935)
* மரனத்தின்பின் மனிதர் நிலை (1911)
* சாகுந்தல நாடகம் (சமசுகிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
* சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
* ஞானசாகரம் மாதிகை (1902)
* Oriental Mustic Myna Bimonthly (1908-1909)
* Ocean of wisdom, Bimonthly(1935)
* Ancient and Modern Tamil Poets (1937)
* முற்கால பிற்காலத் தமிழ் புலவோர் (1936)
* முல்லைப்பாட்டு- ஆராய்ச்சியுரை (1903)
* பட்டினப்பாலை (1906)
* முதற்குறள் வாத நிராகரணம் (1898)
* திருக்குறள் ஆராய்ச்சி (1951)
* முனிமொழிப்ப்ரகாசிகை (பாடகள்) (1899)
* மறைமலையடிகள் பாமணிக் கோவை (பாடல்கள்) (1977)
* அம்பிகாபதி அமராவதி (நாடகம்) (1954)
* கோகிலாம்பாள் கடிதங்கள் (புதினம்) (1921)
* குமுதவல்லி: நாகநாட்டரி (புதினம்) (1911)
* மறைமலை அடிகள் கடிதங்கள் (1957)
* அறிவுரைக் கொத்து (1921)
* அறிவுரைக் கோவை (1971)
* உரைமணிக் கோவை (1972)
* கருத்தோவியம் (1976)
* சிந்தனைக் கட்டுரைகள் (1908)
* சிறுவற்கான செந்தமிழ் (1934)
* இளைஞர்க்கான இன்றமிழ் (1957)
* திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை (1900)
* மாணிக்க வாசகர் மாட்சி (1935)
* மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் (இரு தொகுதி) (1930)
* மாணிக்க வாசகர் வரலாறு (1952)
* சோமசுந்தரக் காஞ்சியாக்கம் (1901)
* சோமசுந்தர நாயகர் வரலாறு (1957)
* கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா (1968)
* திருவாசக விரிவுரை (1940)
* சித்தாந்த ஞான போதம், சதமணிக்கோவை குறிப்புரை (1898)
* துகளறு போதம், உரை (1898)
* வேதாந்த மத விசாரம் (1899)
* வேத சிவாகமப் பிராமண்யம் (1900)
* Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge (1940)
* சைவ சித்தாந்த ஞானபோதம் (1906)
* சிவஞான போத ஆராய்ச்சி (1958)
* Can Hindi be a lingua Franca of India? (1969)
* இந்தி பொது மொழியா ? (1937)
* சாதி வேற்றுமையும் போலி சைவரும் (1913)
* Tamilian and Aryan form of Marriage (1936)
* தமிழ் நாட்டவரும் மேல்நாட்டாவரும் (1936)
* பழந்தமிழ்க் கொளகையே சைவ சமயம் (1958)
* வேளாளர் நாகரிகம் (1923)
* தமிழர் மதம் (1941)
* பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் (1906)

ஆகிய 54 நூல்களை எழுதியுள்ளார்.

இணையத்தில் அடிகளாரின் நூல்கள்
http://www.tamilnation.org/literature/pattuppaatu/mp053.htm

உசாத்துணை

புலவர் இரா இளங்குமரன், தமிழ் மலை - மறைமலை அடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-8, 2ம் பதிப்பு 1992 (முதல் பதிப்பு 1990). பக். 1 - 112.

தியாகு

unread,
Dec 14, 2010, 8:33:44 AM12/14/10
to முத்தமிழ், பண்புடன், அன்பு, pothuv...@googlegroups.com, tamizhblo...@googlegroups.com
ராபர்ட் கால்டுவெல் ஐயர் (1814-1891) என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் அவர்கள் திராவிட மொழி நூலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதே.

http://en.wikipedia.org/wiki/Robert_Caldwell

இளமைக் காலம்

இவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது லண்டன் மிஷனரி சொசைட்டி என்னும் கிறிஸ்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838 ஜனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். பின்னர் இவர் நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission) எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.[1]

மொழியியல் ஆய்வுகள்

1841ல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார். திராவிட மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்ல எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே."[2]

வரலாற்று ஆய்வுகள்

திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் அதன் வரலாறு பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார். மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் பெறுபேறாக "தின்னவேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely) என்னும் நூலை எழுதினார். இது 1881 ஆம் ஆண்டில் மதராஸ் அரசினால் வெளியிடப்பட்டது. இது பற்றிக் குறிப்பிட்ட ராபர்ட் எரிக் ஃபிரிக்கென்பர்க் (Robert Eric Frykenberg) என்பார், தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் ஆகிய மூலங்களிலிருந்தான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் தனி நூல்களுள் முழுமைத் தன்மையில் முதன்மையானது என்றார்.[3]

கால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள்

நற்கருணை தியான மாலை (1853)
தாமரைத் தடாகம் (1871)
ஞான ஸ்நானம் (கட்டுரை)
நற்கருணை (கட்டுரை)

கால்டுவெல் இயற்றிய ஆங்கில நூல்கள்

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856)
திருநெல்வேலியின் அரசியல் பொது வரலாறு (A Political and General History of Tinnevely, 1881)


குறிப்புக்கள்

↑ குமாரதாஸ்
↑ Thomas Trautmann, 'Inventing the History of South India', in David Ali (ed.), Invoking the Past: The Uses of History in South Asia, New Delhi: Oxford University Press, 2002, p. 41. Also cited in Kumaradoss, Robert Caldwell, p. 147.
↑ Robert Eric Frykenberg, Robert Caldwell, cited in Kumaradoss, Robert Caldwell, p. 156, note 58.

செந்தழல் ரவி கால்டுவெல் அவர்கள் பற்றிய வலைப்பதிவில்...

இராபர்ட் கால்டுவெல் (1814-1891)

உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் தமிழக வரலாற்றில் - தமிழ் வரலாற்றில் மிகப்பெரும் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூல் எனில் அது இராபர்ட் கால்டுவெலின் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எனும் நூலாகும். அந்த நூலையும் அதன் ஆசிரியரான கால்டுவெல்லையும் மதிப்பதற்குக் காரணம் தமிழர்களின் உள்ளத்திலும், உலக அளவில் தமிழ்பற்றி ஆராய்ந்த அறிஞர்களின் உள்ளத்திலும் புதிய வெளிச்சத்தை அந்நூல் பாய்ச்சியமையே ஆகும்.

வடமொழியைத் "தேவ பாஷை' எனவும் தமிழை "நீச்சபாஷை' எனவும் தாழ்த்தி, தமிழ் இலக்கியங்கள் யாவும் வடமொழி வழிவந்தவை என நேராகவும் உரைகளின் வழியாகவும் வடமொழிச் சார்பாளர்கள் பதிவு செய்தனர். இக்காலகட்டத்தில் தமிழர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி மொழித்துறையிலும், அரசியல் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நூல் கால்டுவெலின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ( 1856, 1875 ) எனும் நூல் ஆகும்.தமிழ்மொழி மிகச்சிறந்த செவ்வியல்மொழி எனவும் தமிழ்ச்சொற்கள் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீனில் இடம்பெற்றுள்ளன எனவும் தமிழ்மொழியிலிருந்து பிறந்தவையே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழிகள் எனவும் இவையாவும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை எனவும் திராவிட மொழிகளைத் திருந்திய மொழிகள் திருந்தாத மொழிகள் என இருவகைப்படுத்தியும் தம் ஆய்வு முடிவுகளைக் கால்டுவெல் வெளிப்படுத்தியவர். தமிழ் வடமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் உடையது என அழுத்தம் திருத்தமாகச் சான்று காட்டி நிறுவியவர். இதுநாள் வரை தமிழ்ப்பகைவரால் தமிழ் மீது பூசி மெழுகியிருந்த அழுக்குகளைத் துடைத்துப் பளிச்செனத் தமிழின் பெருமையை ஒளி பெறச்செய்ததால் கால்டுவெல் பெருமகனாரைத் தமிழ்உலகம் என்றும் போற்றக் கடமைப்பட்டுள்ளது.

கால்டுவெல்லின் வருகை கிறித்தவ மதப்பரப்புப் பணியை அடிப்படையாகக் கொண்டது. எனினும் கால்டுவெல் தமிழகத்தில் ஏறத்தாழ 53 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி, வரலாறு, சமூக முன்னேற்றம், சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டதால் அவரின் வரலாறு அனைவராலும் அறியத்தகுந்த வரலாறாக அமைந்துள்ளது.கால்டுவெல் அவர்கள் அயர்லாந்து நாட்டில் உள்ள "கிளாடி' எனும் ஆற்றின்கரையில் அமைந்த சிற்றூரில் பிறந்தவர்(1814). இளமையில் அறிவார்வம் கொண்ட தம் மகனை அழைத்துக் கொண்டு பெற்றோர் தம் தாய்நாடான ஸ்காட்லாந்துக்குச் சென்று "கிளாஸ்கோ' நகரில் வாழ்ந்தனர். 16 ஆண்டுக்குள் ஆங்கில மொழியில் அமைந்த பல இலக்கியங்களைக் கால்டுவெல் கற்றுத் தேர்ந்தார். தம் மகனைக் கவின்கலைக் கல்லூரியில் பெற்றோர் சேர்த்தனர். ஓவியக்கலையைக் கால்டுவெல் கற்றுத்தேர்ந்தாலும் அதனை வாழ்க்கைத் தொழிலாக்கிக் கொள்ளவில்லை.

கால்டுவெல் தம் இருபதாம் அகவையில் இறைப்பணி செய்வதற்காக இலண்டன் நகரில் அமைந்த சமயத்தொண்டர் சங்கத்தில் சேர்ந்தார். அச்சங்கத்தின் சார்பாகக் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து ஐரோப்பிய மொழிகளில் அமைந்த நூல்களையும் சமய நூல்களையும் கற்றார்.இதன் பயனாக இரண்டு ஆண்டுகளில் இளங்கலைப்பட்டம் பெற்றார். அவ்வாறு படிக்கும்போது கிரேக்கமொழியைப் பயிற்றுவித்த பேராசிரியர் டேனியல் ஸ்டான்போர்ட் அச்செம்மொழியின் பெருமையை மாணவர்களுக்கு நிறைவடையும்படிப் பயிற்றுவித்தார். கால்டுவெல் பெருமகனாருக்கு மொழியியலில் ஆர்வம் உண்டாக்கியது அப்பேராசிரியரின் வகுப்புரைகளே ஆகும்.

இலண்டன் சமயப்பரப்புக் கழகத்தின் சார்பாகச் சமயப் பணிக்கு என 1838ல் "அன்னமேரி' என்னும் கப்பலில் ஏறி இந்தியாவுக்குப் பயணம் செய்தார். கடலில் பயணம் செய்தபோது இவர் ஏறிவந்த கப்பல் மீது பிரெஞ்சு கப்பல் ஒன்று மோதிச் சிதைந்தது. பலர் மடிந்தனர். சிலர் உயிர் பிழைத்தனர். பழுதுற்ற கலத்தைப் "பிளிமத்' என்னும் துறைமுகத்தில் செப்பனிட்டனர். தென்னாப்பிரிக்கா வழியாகக் கப்பல் வரவேண்டியிருந்ததால் நான்கு மாதம் பயணம் செய்து சென்னைக்கு வந்தார். அவ்வாறு வரும்போது சி.பி. பிரெளன் என்னும் குடிமைப்பணி அதிகாரியுடன் நட்புகொண்டார். அவர் முன்பே ஆந்திராவில் பணி புரிந்ததால் தெலுங்கு, வடமொழி அறிந்து இருந்தார். அவர் வழியாகக் கால்டுவெல் அம்மொழிகளைக் கற்றார்.
கடலில் பயணம் செய்தபோது கால்டுவெல்லுக்கு முன்பு இருந்த இருமல் நோய் நீங்கியது. கால்டுவெல் சென்னைக்கு வந்ததும் "துருவர்'எனும் தமிழ்கற்ற அறிஞரைக் கண்டு மகிழ்ந்தார். வின்சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலானவர்கள் பின்னாளில் நண்பர்களாயினர்.சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல் ஏறத்தாழ நானூறு கல்தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்து செல்லத் தீர்மானித்தார். நடந்து செல்லும்போது மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலானவற்றை அறியலாம் என நினைத்தார். சிதம்பரத்தில் இருந்த நடராசர் கோயிலைக் கண்டு மகிழ்ந்தார். மயிலாடுதுறை வழியாகச் சென்று தரங்கம்பாடியில் சில நாள் தங்கினார். டேனிஷ் மி ன் செய்யும் பணிகளை அறிந்தார். பின்பு குடந்தை வழியாகத் தஞ்சாவூர் சென்றார். பெரியகோயிலையும் மாராட்டிய மன்னர் அரண்மனையையும் கண்டு மகிழ்ந்தார்.அங்கு வாழ்ந்த வேதநாயகரைக் கண்டு உரையாடினார். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அழகையும் திருவரங்கச் சிறப்பையும் கண்டு மகிழ்ந்தார். பின்பு நீலமலை சென்றார். அங்கு ஸ்பென்சர் எனும் தந்தையாரைக் கண்டு அவரின் விருந்தினராக ஒரு மாதம் தங்கி இளைப்பாறினார்.

நீலமலையிலிருந்து இறங்கி, கோவை வழியாக மதுரை வந்தார். வரும் வழியில் மக்கள் அவரைப் பலவாறு இழித்தும், பழித்தும் பேசினர். ஒருநாள் நடந்து செல்லும்போது மழைவரத் தொடங்கியது. இரவுப் பொழுதில் தங்கிச்செல்ல நினைத்தார். சத்திரம், சாவடி உண்டா என வினவிய போது அரசின் சத்திரம் உள்ளது எனவும் அது ஆங்கிலேயர்க்கு இல்லை எனவும் கூறினர். மழையில் நனைந்து துன்பப்பட்ட கால்டுவெல்லைக் கண்டு மாட்டுத் தொழுவத்தில் தங்கும்படி சொன்னார்கள். சத்திரத்தில் இடம் கிடைக்காததாலும் மாட்டுத் தொழுவத்தில் தங்க மனம் விருபாததாலும் ஒரு வீட்டின் திண்ணையில் தங்கி இரவுப் பொழுதைக் கழித்தார்.
மதுரை வந்தடைந்த பின்பு திருமங்கலத்தில் சமயத்தொண்டு புரிந்த திரேசியர் அவர்களைக் கண்டு உரையாடினார். பின்பு நெல்லை வழியே பாளையங்கோட்டை சென்றடைந்தார் (நவம்பர் 1841). பின்பு நாசரேத்தில் (நவம்பர் 28) தங்கி இறைவழிபாடு நிகழ்த்தி ஒரு விரிவுரையும் செய்தார்.பின்பு முதலூரில் ஞாயிற்றுக்கிழமை விரிவுரையயான்று நிகழ்த்தினார். அருகில் இருந்த இடையன்குடியைப் பாதை தெரியாமல் நெடுந்தூரம் சுற்றி அடைந்தார். அந்த ஊரே அவர் பணிபுரியும் இடமாகவும், கடைசிக் காலத்தில் நிலைகொள்ளும் இடமாகவும் அமைந்தது.இடையன்குடி என்பது பெரும்பாலும் பனைமரங்கள் நிறைந்த பகுதியாகும். கூரைவீடுகளே மிகுதி. கள்ளியும் முள்ளியும் நிறைந்த பகுதி. அங்குக் கால்டுவெல் குடியிருப்புகளையும் கோயிலையும் உருவாக்கினார். எழுதவும் படிக்கவும் மக்களுக்குக் கற்றுத் தந்தார். அப்பகுதியில் வாழ்ந்த நாடார் இன மக்களைக் கல்வியறிவுப் பெற்றவராக மாற்றினார்.1847ல் அங்கு ஆலயப்பணியைத் தொடங்கி 32 ஆண்டுகளுக்குப் பிறகு 1880-இல் அப்பணி நிறைவுற்றது. சென்னை மாநில ஆளுநராக இருந்த நேப்பியார் அவர்கள் கால்டுவெல்லின் திருப்பணிகளைக் காண விரும்பி இடையன்குடியில் ஒருவாரம் தங்கினார். 500 உருபா அன்பளிப்பாக வழங்கியதையும் அறியமுடிகிறது.

இடையன்குடியில் மூன்று மாதம் இளவேனில் காலமாகவும் 9 மாதம் கடும் வெப்பம் நிறைந்த காலமாகவும் விளங்கும். இடையன்குடியில் வாழ்ந்தபோது வெப்பம் தாளாமல் கால்டுவெல் துன்பப்பட்டுள்ளார். அக்காலங்களில் தமிழ் இலக்கியங்களின் பக்கம் கால்டுவெல்லின் கவனம் திரும்பியது. திருக்குறள், சீவகசிந்தாமணி, நன்னூல் முதலிய நூல்களைக் கற்றார். உடல் வெப்பம் தணிக்க அருகே உள்ள கடற்கரையில் உவரி என்னும் காயல்பகுதிக்குச் சென்றார். உவரித்துறை பழம்பெருமை வாய்ந்ததை உணர்ந்தார். அங்கிருந்த இளஞ்சுனையில் வெயிற்காலத்தில் தங்கி வாழ்ந்தார். கோடைக் காலங்களில் திருக்குற்றாலம், அசம்புமலை, கொடைக்கானல் மலைகளில் தங்கியிருந்துள்ளார்.

கால்டுவெல் "தமிழில் கிறித்தவ வழிபாட்டு நூல்' உருவாக்கும் குழுக்களில் இடம்பெற்று அப்பணியைச் சிறப்புடன் செய்துள்ளார்.மேலும் கிறித்தவ மறைநூலை மொழிபெயர்க்கும் பன்னிருவர் குழுவில் இடம்பெற்றுத் திறம்படப் பணியாற்றியுள்ளார். கால்டுவெல் தமிழகத்தின் திருநெல்வேலி பற்றி, அயல்நாட்டவரின் குறிப்புகளைக் கொண்டு வரலாற்று நூல் எழுதியுள்ளார். பழைய ஈபுரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின் தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும்,அரிசி என்பது கிரேக்க மொழியில் அருசா என வழங்குவதையும் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.கொற்கைத் துறைமுகம் பற்றிய ஆய்வுகளையும் கால்டுவெல் செய்துள்ளார். கொற்கையின் அருகே இருந்த அக்கசாலை (பொற்காசு செய்யும் இடம்) என்ற ஊரின் சிறப்பு அறிந்து மகிழ்ந்தார். மேலும் கொற்கையின் அகழாய்வுப் பணியைத் தம் சொந்த முயற்சியில் செய்துள்ளார். ஆறடிக்குகீழ் மணற்பாறையும், அதன் பிறகு கடற்கரைக் குறுமணலும் கடல்சங்கும் சிப்பிகளும் மூழ்கிக் கிடந்ததை உலகிற்கு வெளிப்படுத்தினார்.இன்றுள்ள கொற்கைக்கு அப்பால் 5 கல்லில் கடல் உள்வாங்கி உள்ளது என்று குறிப்பிட்டார். பழங்காயல் என்னும் ஊரையும் ஆய்வு செய்தார். இவ்வூரும் பண்டைய கடற்கரைத் துறைமுகமாக இருந்திருக்க வேண்டும் என உணர்ந்தார்.

மேலும் மகாவம்சம் முதலான நூல்களின் துணைகொண்டு ஈழத்தமிழக உறவுகளையும் கால்டுவெல் எழுதியுள்ளார்.பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழிகள் பற்றிய பலகட்டுரைகளை மேல்நாட்டு அறிஞர்கள் எழுதினர். அவ்வகையில் பழந்தமிழ்ச்சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும் பழைய தெலுங்குச் சொற்களோடும் கால்டுவெல் ஒப்புநோக்கிய போது அடிச்சொற்கள் ஒத்திருப்பதைக் கண்டார். ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடுமையாக உழைத்துத் தென்னிந்திய மொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை ஒப்பிட்டுத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலைத் தந்தார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் 6 மொழிகள் திருந்திய மொழிகள் எனவும் 6 மொழிகள் திருந்தாத மொழிகள் எனவும் குறிப்பிட்டார். மேலும் வடசொற்களை அகற்றினாலும் தமிழ்மொழி வளம் குன்றாது தழைத்து இனிது வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கால்டுவெல்லின் பணிகளைக் கண்ட கிளாஸ்கோ பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. கால்டுவெல்லின் ஆய்வுகளில் மொழி ஆய்வு அனைவராலும் போற்றப்படுகிறது. அவர்தம் காலத்தில் தொல்காப்பியம் முதலான நூல்கள் பதிப்பிக்கப் படாததால் கால ஆய்வுகள் குறித்த இவர் செய்திகளில் பிழையுள்ளதை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இராபர்ட் கால்டுவெல்லின் மொழி ஆராய்ச்சிப் பணிகளை மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தம் நூல்களில் வாய்ப்பு அமையும் இடங்களில்எல்லாம் நன்றியுடன் போற்றி மதித்துள்ளார்.""திராவிடம் வடமொழிச் சாற்பற்றதென்றும், உலக முதன்மொழிக்கு மிக நெருங்கியதென்றும், வடசொல்லென மயங்கும் பலசொற்கள் தென்சொற்களேயயன்றும், வடமொழியில் பல தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளனவென்றும், முதன்முதல் எடுத்துக்காட்டி, மொழிநூற் சான்றுகளால் நிறுவியவர் கால்டுவெல் கண்காணியரே... இவர் தமிழ்மொழியைச் சிறப்பாய் ஆராய்ந்தது போன்றே மலையாள மொழியைச் சிறப்பாயாராய்ந்தவர் டாக்டர் குண்டட் ஆவர். இவ்விருவர்க்கும் திராவிடவுலகம், விதப்பாய்த் தமிழுலகம் பட்டுள்ள கடன் மாரிக்குப்பட்டுள்ளதேயயனினும் பொருந்தும் ""(ஒப்பியன் மொழிநூல், ப.84), எனவும் "....தமிழ் என்பதன் திரிபே திராவிடம் என்பது புலனாம். ஆயினும் கால்டுவெலார் இவ்வெளிய முறையில் உண்மையைக் காணாமல், இயற்கைக்கு மாறாகத் தலைகீழாய்நோக்கி, திராவிடம் என்னுஞ் சொல்லே தமிழென்று திரிந்ததாக முடிவு செய்துவிட்டார்.'' (தமிழ்வரலாறு, ப.33) எனவும் "கால்டுவெல் ஐயர் கடைப்பிடித்த கொடிவழி மொழிநூலையே கையாளல் வேண்டும்' (த.இ.வ. ப. 48) எனவும் பாவாணர் குறிப்பிடுவார்.

கால்டுவெல் அவர்கள் 18 மொழிகளைக் கற்றவர். பல்வேறு வரலாற்று நூல்களையும் இலக்கியங்களையும் கற்றவர். சமய அறிவு நிரம்பப்பெற்றவர். எனவே தம் அறிவு முழுமையும் பயன்படுத்தி மொழி நூலையும் வரலாற்று நூலையும் சமய நூலையும் உருவாக்கித் தமிழர் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர். இவர் இயற்றிய திருநெல்வேலி சரித்திரம் என்னும் நூல் அக்காலத்தில் இருந்த போர்ச்சுகீசிய, டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் நிலைகொண்டு வாழ்வதற்குச் செய்த முயற்சிகளையயல்லாம் மிகச்சரியாகப் பதிவு செய்துள்ளது.அக்காலத்தில் இருந்த படைத்தளபதிகள், சமயத் தொண்டர்கள் எழுதிய மடல்கள், நூல்கள், குறிப்புகள், வாய்மொழிச் செய்திகள், அகழாய்வுச் செய்திகள் இவற்றைத் துணைக்கொண்டு வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

கால்டுவெல் தம் 29ஆம் அகவையில் நாகர்கோவிலில் வாழ்ந்த மால்ட் என்பவரின் மகளான எலிசா (21 அகவை) என்னும் மங்கையை மணந்தார். எலிசா ஆங்கிலமும் தமிழும் நன்கறிந்தவர்.இடையன்குடியில் பெண்கள் கல்விபெற எலிசா பணிபுரிந்தவர். பிணியுற்றவர்களுக்கு மருத்துவம் பார்த்தார்.எலிசா வழியாகக் கால்டுவெல் பேச்சுத் தமிழைக் கற்றார். கால்டுவெல்லுக்கு மூன்று மக்கள் எனவும் நான்கு மக்கள் எனவும் கருத்து வேறுபாடு உண்டு. அம்மக்களுள் ஆடிங்கிதன் (புddஷ்ஐஆமிலிஐ) என்பவர் மருத்துவராகப் பணிபுரிந்தவர். முதல் மகள் திருச்சியில் "வியத்தர்' என்பவரை மணந்தாள். இளைய மகள் "லூயிசா' ஆங்கிலப்படை வீரனை மணந்தாள். எனினும் (28-10-1872இல்) மறைந்தாள்.கால்டுவெல் வாழ்க்கை எளிமையானது.பெரும்பாலும் நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஊர்களில் கிடைக்கும் காய்கனிகளை உண்டு வாழ்ந்தார். வெயில் கொடுமைக்கு அஞ்சி கூரைவீடுகளில் தங்கியிருப்பார். அமர்ந்து படிப்பார். காலை மாலை உலாவுவார். மூட்டைப்பூச்சிகளுக்கு அஞ்சி இரவில் பனைநாற்கட்டிலில் வீட்டு முற்றத்தில் உறங்குவார். பெரும்பான்மையான நாள்களில் சுற்று வட்டாரத்தில் சமயப்பணி புரிந்துவிட்டு ஏழாம்நாள் இடையன்குடி வருவார். தாம் பணி செய்த பகுதிகளில் 1877ஆம் ஆண்டு ஏற்பட்ட தாதுவருடப் பஞ்சத்தில் வாடிய மக்களுக்குப் பேருதவி செய்தார்.கால்டுவெல் தமிழகத்தில் தங்கியிருந்தபோது மூன்றுமுறை தம் நாடு சென்று வந்துள்ளார். ( 1. 1854-57, 2. 1873-75, 3. 1883-84).

கால்டுவெல் திருநெல்வேலி ஆயராக கி.பி. 1877-இல் திருநிலைப்படுத்தப் பட்டார். 1891 சனவரியில் 31-ஆம் ஆண்டு தம் பணியிலிருந்து ஓய்வுபெற்றுக் கொடைக்கானல் சென்று தங்கியிருந்தார். அக்காலங்களில் கொடைக்கானல் செல்ல சரியான பாதை வசதியில்லை. அம்மை நாயக்கனூரில் இருந்து கடும் பாறை வழியாகச் சென்றார். ஒருநாள் குளிரால் நடுக்கம் கொண்டார். ஏழாம்நாள் நோய் வலுவுற்று 1891 ஆகத்து மாதம் 28-ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர்தம் உடல் இடையன்குடிக்குக் கொண்டுவரப்பட்டு அவர் எடுப்பித்த கோயிலில் அடக்கம் செய்யப்பட்டது.

கால்டுவெல் பெருமகனார் தம்மைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ""நான் அயர்லாந்து தேசத்தில் பிறந்தேன்; ஸ்காட்லாந்து நாட்டில் வளர்ந்தேன். ஆங்கில நூல்களில் ஆழ்ந்தேன். எனினும் என்வாழ்நாளில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியப்பெருநாடும்,அந்நாட்டு மக்களுமே என் கருத்தை முழுவதுமாகக் கவர்ந்துகொண்டதால் நான் இந்தியர்களுள் ஒருவனாயினேன். இந்தியர்களுள் ஒருவராக இருந்தாலும் தமிழர்களின் புதிய வரலாற்றுக்கு மூலநூல் தந்ததால் தமிழ் பற்றிப் பேசும்பொழுதெல்லாம் கால்டுவெல் பெயரை நம் உதடுகள் ஒலிக்கும்.

உதவிய நூல்கள் :
1. இரா.பி. சேதுப்பிள்ளை, கால்டுவெல் ஐயர் சரிதம்
2. கா. மீனாட்சிசுந்தரம், ஐரோப்பியர் தமிழ்ப்பணி
3. வாழ்வியற் களஞ்சியம், தமிழ்ப்பல்கலைக்கழகம்
4. கால்டுவெல் நூல்கள்
5. பாவாணர் நூல்கள்

தியாகு

unread,
Dec 14, 2010, 8:34:58 AM12/14/10
to முத்தமிழ், பண்புடன், அன்பு, pothuv...@googlegroups.com, tamizhblo...@googlegroups.com
தமிழில் வீரமாமுனிவர் என்றழைக்கப் படுகின்ற பெசுகிப் பாதிரியார், (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1746) தற்போது இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். (இத்தாலிய இயற்பெயர் - Costanzo Giuseppe Beschi,ஆங்கிலம் - Father Constantine Joesph Beschi) இவர் இயேசு சபையைச் சேர்ந்த, ஒரு பாதிரியார் ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு சேசுசபைப் பாதிரியாரானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்க்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார்.

http://en.wikipedia.org/wiki/Constanzo_Beschi

பெயர்மாற்றம்

மதம் பரப்பும் முயற்சிக்காகத் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தனது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.

அவரது தமிழக வாழ்க்கை முறை

1822 இல், முதன் முதலாக இவருடைய சரித்திரத்தைத் தமிழில் எழுதி வெளியிட்ட வித்துவான் முத்துசாமி பிள்ளை, இவருடைய நடையுடை பாவனைகளை, அந்நூலில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார். " இந்தத் தேசத்தில் வந்தநாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும் பொழுது, கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக் கொண்டு, தலைக்குச் சூரியகாந்திப பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடுமிட்டுக் காலிற் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார். இவர் வெளியிற் சாரி போகும் போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும், வெள்ளைப்பாகையும் , இளங்காவி யுத்தரிய முக்காடும், கையினிற் காவி யுருமாலையும், காதில் முத்துக் கடுக்கனும், கெம்பொட்டுக் கடுக்கனும், விரலிற்றம்பாக்கு மோதிரமும், கையிற் றண்டுக் கோலும், காலிற் சோடுடனும் வந்து, பல்லக்கு மெத்தையின் மேலிட்டிருக்கும் புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து, உபய வெண்சாமரை வீசவும், இரண்டு மயிற்றோகைக்கொத் திரட்டவும், தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவுஞ் சாரிபோவார். இவரிறங்கும் இடங்களிலும் புலிதோலாசனத்தின் மேலுட்காருவார்."

அவரின் தமிழ் படைப்புகள்

இவர் எழுத்து, அகரமுதலி, மொழிபெயர்ப்பு, உரைநடை, இலக்கணம், காவியம், பிரபந்தம் என்று பலதுறைகளிலும் முத்திரைப் பதித்தவர்.

* சதுரகராதியை,நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.

* தொன்னூல் விளக்கம்என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.

* கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும். கிறித்தவம் தமிழ் மொழிக்குச் செய்த சிறந்த சேவைகளில் ஒன்றாக அமைந்தது இந்த நூல் என்றால் மிகையாகாது.

* திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.

* பரமார்த்த குருவின் கதை என்பது, தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.

* திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.

* காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். இவருடைய வருணணைத் திறனுக்குக் கீழ்க்காணும் பாடல் சாட்சியாகிறது.

பயனினால் மறைநூல் ஒக்கும் பகலினை மணியால் ஒக்கும்

வியனினால் உலகம் ஒக்கும் வேலியால் கன்னி ஒக்கும்

முயலினால் அலையை ஒக்கும் முனினி ஒன்னாக் கொக்கும்

நகரினை ஒக்கும் வீடே


திருக்குறளில் அறத்தையும் பொருளையும் லத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை கிய நூல்களைப் படைத்தவர். இதில் பரமார்த்த குரு கதையானது தமிழில் முதல் முதலாக வந்த ஹாஸ்ய இலக்கியம் என்பதைச் சொல்லத்தானாக வேண்டும்.

திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள். காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் னது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். இவருடைய வருணணைத் திறனுக்குக் கீழ்க்காணும் பாடல் சாட்சியாகிறது.

பயனினால் மறைநூல் ஒக்கும் பகலினை மணியால் ஒக்கும் வியனினால் உலகம் ஒக்கும் வேலியால் கன்னி ஒக்கும் முயலினால் அலையை ஒக்கும் முனினி ஒன்னாக் கொக்கும் நகரினை ஒக்கும் வீடே

இந்தப் பாடல் ஜெருசலேம் நகரை வர்ணிக்கிறது. காப்பியத் தலைவர் வருணணை வளவனாரை வர்ணிக்கும் இந்தப் பாடலின் பாங்கில் வெளிப்படுகிறது.

அன்பு வைத்த உயிர்நிலை அ•திலார்க் கென்பு தோலுடல் போர்த்ததென றன்புடை இன்பு தோய்த்த நிலையெனத் தானிவன் துன்பு காய்ந்த உயிர்த்துணை யினான் ஒலிக்குறிப்புகளைத் தம் பாடலில் எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.

வளனார் தேவத்தாயார் திருமணம் குறித்தது இந்தப் பாடல்.

முடுகு முரசொலி முடுகு முழவொலி முடுகு முருகொலி முடிவிலாக் கடுகு பறையொலி கடுகு கலமொலி கடுகு கடலொலிக னிவெழாத் தொடுகு குழலொளி கொடுகு குரலொலி தொடுகு துதியொலி தொடுதலாற் படுகு முகிலொலி படுகு கடலொலி படுத லிலமண மாயதே.

தியாகு

unread,
Dec 14, 2010, 8:35:57 AM12/14/10
to முத்தமிழ், பண்புடன், அன்பு, pothuv...@googlegroups.com, tamizhblo...@googlegroups.com
தமிழ்த்தேசியப் பாவலர் பெருஞ்சித்திரனார் (10.03.1933 - 11.06.1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பாவலர்களுள் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். பன்முக ஆளுமையைக் கொண்ட பெருஞ்சித்திரனாரின் வாழ்க்கையையும் அவர்தம் பாட்டுத்துறைப் பங்களிப்பையும் இங்குத் தொகுத்து நோக்குவோம்.

பெருஞ்சித்திரனாரின் வாழ்க்கை

பிறப்பு

பாவலரேறு எனவும், பெருஞ்சித்திரனார் எனவும் தமிழ் உணர்வாளர்களால் போற்றி மதிக்கப்படும் பெருஞ்சித்திரனார் 10-03-1933இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆவர். இவர்களுக்குச் சொந்த ஊர் சேலம் மாவட்டம், சமுத்திரம் என்பதாகும். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து துரை-மாணிக்கம் எனத் தொடக்க காலத்தில் அழைக்கப்பெற்றவர்.

கல்வி

பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி சேலத்திலும் ஆத்தூரிலும் அமைந்தது. இவருக்கு உயர்நிலைப்பள்ளியில் சேலம் நடேசனாரும், தமிழ் மறவர் பொன்னம்பலனாரும் ஆசிரியர்களாக விளங்கித் தமிழறிவும் தமிழ்உணர்வும் புகட்டினர்.

பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் காலத்தில் தமிழ் ஈடுபாட்டுடன் கற்றவர். "குழந்தை' என்னும் பெயரில் கையெயழுத்து ஏடு தொடங்கி மாணவர் பருவத்தில் நடத்தியவர். பின்பு அருணமணி என்னும் புனைபெயரில் "மலர்க்காடு' என்னும் கையெழுத்து ஏட்டினை நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றிய பெருமைக்குரியவர்.

பெருஞ்சித்திரனார் 1950இல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின்னர்ச் சேலம் நகராட்சிக் கல்லூரியில் பயின்றார். பாவாணர் அங்குப் பணிபுரிந்தபொழுது அவர்தம் மாணவராக விளங்கித் தமிழறிவு பெற்றார். இளமையில் பெருஞ்சித்திரனாருக்கு உலக ஊழியனார், காமாட்சி குமாரசாமி முதலானவர்களும் ஆசிரியர் பெருமக்களாக விளங்கினர்.

கல்லூரியில் பெருஞ்சித்திரனார் பயிலும் காலத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். எனவே தாம் இயற்றிய மல்லிகை, பூக்காரி என்னும் இரு பாவியங்களையும் எடுத்துக்கொண்டு பாவேந்தரைச் சந்திக்க புதுச்சேரி சென்றார். ஆனால் பாவேந்தர் அந்நூல்களைப் பார்க்க அக்காலத்தில் மறுத்துவிட்டதையும் பின்னர் ஒரு நூலைக் கொய்யாக்கனி எனும் பெயரில் அவரே அவர் தம் அச்சகத்தில் அச்சிட்டுத் தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவதுண்டு.

பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பயிலும் போது கமலம் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அப் பெண்ணே தாமரை அம்மையாராக இன்று மதிக்கப்படும் அம்மையார் அவர்கள்.

தென்மொழி இதழும் எழுத்துப் பணியும்

பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். ஐந்து ஆண்டுகள் புதுவையில் வாழ்க்கை அமைந்தது. அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1959 இல் பெருஞ்சித்திரனாருக்குப் பணிமாற்றல் கிடைத்துக் கடலூருக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகரமுதலித் துறையில் பணியேற்றார். பாவாணர் விருப்பப்படி தென்மொழி என்னும் பெயரில் இதழை 1959இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்துப் பெருஞ்சித்திரன் என்னும் புனைபெயரில் எழுதினார்.

தென்மொழியின் தொடக்க ஏட்டில் சிறப்பாசிரியர் பாவாணர் எனவும் பொறுப்பாசிரியர் பெருஞ்சித்திரன் எனவும் பெயர்கள் தாங்கி இதழ் வெளியானது. தென்மொழியின் 16 இதழ்கள் வெளிவந்த சூழலில் பொருள் முட்டுப்பாட்டால் இதழ் இடையில் நின்றது. பின்பு கருத்துச் செறிவுடனும் புதுப்பொலிவுடனும் மீண்டும் வந்து கல்லூரி மாணவர்கள் தமிழாசிரியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது.

தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டு ஆற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித் திரனார் அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில்தம் உரையாலும் பாட்டாலும் பெரும் பங்காற்றினார். இந்தி எதிர்ப்புப் போரில் இவர்தம் தென்மொழி இதழிற்குப் பெரும் பங்குண்டு. தம் இயக்கப்பணிகளுக்கு அரசுப்பணி தடையாக இருப்பதாலும் முழுநேரம்மொழிப் பணியாற்றவும் நினைத்து அரசுப்பணியை உதறினார். இவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாற்றப்பெற்றது. இவருக்கு இதனால் சிறைத் தண்டனை கிடைத்தது.வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ்ப்வி பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார்.

பெருஞ்சித்திரனார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் பாட்டுகளையும் கட்டுரைகளையும் வரைந்தார். தம்மை ஒத்த பாவலர்களின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்.

பாவாணரின் உலகத்தமிழ்க்கழகம் தோற்றம் பெற்றபொழுது அதில் இணைந்து பணிபுரிந்தவர். அதுபோல் பாவாணர் அகரமுதலி தொகுப்பதற்கு பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கி உதவியவர்.

தென்மொழிப் பணியை முழுநேரப் பணியாக அமைத்துக்கொண்ட பிறகு 1972இல் திருச்சியில் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு ஒன்றை நடத்தினார். 1973இல் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு மதுரையில் நடத்த முயற்சி செய்தபோது சிறை செய்யப்பட்டார். இக்காலக்கட்டங்களில் தமிழ் உணர்வுடன் பாடல் வரைந்த உயர்செயல் நினைத்துப் பாவாணர் அவர்கள் "பாவலரேறு' என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.

தமிழகம் முழுவதும் தென்மொழி இதழ் வழியாகவும் பொது மேடைகள் வழியாகவும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனாரின் வினைப்பாடு உலகம் முழுவதும் பரவியது. எனவே மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் அழைப்பினை ஏற்று 1974இல் சிங்கை மலையகச் செந்தமிழ்ச் செலவை மேற்கொண்டார். இச்சுற்றுச்செலவிற்குப் பின் கடலூரில் இருந்து தென்மொழி அலுவலகம் சென்னைக்கு மாறியது.

திரு. செ. பன்னீர்ச்செல்வம் அவர்கள் தென்மொழி வளர்ச்சியிலும் பெருஞ்சித்திரனாரின் குடும்ப வளர்ச்சியிலும் பெரும் துணையாக நின்றார். அதுபோல் பெருஞ்சித்திரனாரின் இதழ் வெளியீட்டுப் பணிகளில் தொடக்க காலங்களில் ம.இலெனின் தங்கப்பா, மு. தமிழ்க்குடிமகன் (சாத்தையா),விவி பாளை எழிலேந்தி முதலான அறிஞர் பெருமக்கள் துணையாக இருந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தென்மொழி ஏட்டின் வளர்ச்சியில் பெருந்துணையாக இருந்தனர்.

இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன.

பெருஞ்சித்திரனார் தம் இதழ்களில் எழுதியதோடு அமையாமல் பகுத்தறிவு, தென்றல், முல்லை, வானம்பாடி தமிழ்நாடு, செந்தமிழ்ச் செல்வி, விடுதலை, உரிமை முழக்கம், தேனமுதம், சனநாயகம், குயில் முதலிய இதழ்களில் எழுதியவர்.

பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும். இந்நூலின் மூன்று தொகுதிகளுள்ளும் 1. தமிழ், 2. இந்தி எதிர்ப்பும் இன எழுச்சியும், 3. நாட்டுரிமை, 4. பொதுமை உணர்வு, 5. இளைய தலைமுறை, 6. காதல், 7. இயற்கை, 8. இறைமை, 9. பொது என்ற அமைப்பில் பாடல்கள் அமைந்துள்ளன. தமிழ்மொழியின் சிறப்பினையும் தமிழுக்கும் தமக்கும் உள்ள தொடர்பினையும் பெருஞ்சித்திரனார் சீரிய யாப்பமைப்பில் பாடியுள்ளார்.

"என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில் எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும் புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும் பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்) பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!

என்று தமிழ்மொழியின் வளர்ச்சியைவிட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் பெருஞ்சித்திரனார்.

1981இல் பாவாணர் இயற்கை எய்திய நிகழ்வு பெருஞ்சித்திரனாருக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. மொழிப்பற்றும் இனஉணர்வும் ஊட்டி வளர்த்த தம் ஆசிரிய பெருமகனாரின் மறைவு குறித்துப் பெருஞ்சித்திரனார் எழுதிய கட்டுரை கண்ணீர் வரச் செய்யும் தரத்ததாகும்.

பெருஞ்சித்திரனார் 1981இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி தமிழகம் முழுவதும் இயக்கம் கட்டி எழுப்பினார். அதன் அடுத்த முயற்சியாக 1982இல் தமிழ் நிலம் என்னும் ஏட்டைத் தொடங்கி நடத்தினார்.

1983-84ஆம் ஆண்டில் மேற்கு உலக நாடுகளில் இவர்தம் சுற்றுச் செலவு அமைந்தது. 1985இல் மலேசிய நாட்டிற்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்தார்.

1988இல் செயலும் செயல்திறனும் என்னும் நூல் வெளிவந்தது. மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாகத் தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 11.06.1995இல் இயற்கை எய்தினார்.

இவர்தம் நினைவைப் போற்றும் வண்ணம் சென்னை மேடவாக்கத்தில் "பாவலரேறு தமிழ்க்களம்' என்னும் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி, தமிழக வரலாற்றில் அளப்பரும் பணிகளைச் செய்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வாழ்வும், படைப்புகளும், இதழ்களும் விரிவாக ஆராயப்பட வேண்டுவனவாகும்.

இளைஞர்களின் செயற்திறனை வளர்க்கும் வண்ணம் தனது படிப்பறிவையும் பட்டறிவையும் சான்றாய் வைத்து சிறந்த பல கட்டுரைகளையும் நூற்களையும் ஆக்கியவர்.

பெருஞ்சித்திரனாரின் அரசியல்

பெருஞ்சித்திரனார் தன் மொழிவழி முன்னோடி இயக்கமான தனித்தமிழ் இயக்கத்தவர்களிடமிருந்து தீவிரமாக வேறுபடும், முரண்படும் புள்ளி அவரின் அரசியலாகும். தமிழ்நாடு இந்திய அரச கட்டமைப்பிலிருந்து விடுபட்டு தனித்தமிழ்நாடு என்பதாக தனித்தேசமாக உருவாகவேண்டும் என்பது பெருஞ்சித்திரனாரின் அரசியல் நிலைப்பாடாகும். அவர் தனது தென்மொழி இதழின் முதல் இதழிலிருந்து இதனை வலியுறுத்திவந்தார்.

பெருஞ்சித்திரனாரின் நூல்கள்

* எண்சுவை எண்பது
* பாவியக் கொத்து (இரண்டு தொகுதி)
* ஐயை
* கொய்யாக் கனி
* கற்பனை ஊற்றுக் கட்டுரைகள்
* பள்ளிப் பறவைகள்
* மகபுகுவஞ்சி
* கனிச்சாறு (மூன்று தொகுதிகள்)
* நூறாசிரியம்
* தன்னுணர்வு
* இளமை உணர்வுகள்
* பாவேந்தர் பாரதிதாசன்
* இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்
* வாழ்வியல் முப்பது
* ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
* உலகியல் நூறு
* அறுபருவத் திருக்கூத்து
* சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்
* இனம் ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு?
* செயலும் செயல்திறனும்
* தமிழீழம்
* ஓ! ஓ! தமிழர்களே
* தனித் தமிழ் வளர்ச்சி வரலாறு
* நெருப்பாற்றில் எதிர் நீச்சல்
* இளமை விடியல்
* இட்ட சாவம் முட்டியது
* நமக்குள் நாம்....


தமிழ்த்தேசியப் பாவலர் பெருஞ்சித்திரனார் பற்றி முனைவர் இளங்கோவன்

இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பாவலர்களுள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். பன்முக ஆளுமையைக் கொண்ட பெருஞ்சித்திரனாரின் வாழ்க்கையையும் அவர்தம் பாட்டுத்துறைப் பங்களிப்பையும் இங்குத் தொகுத்து நோக்குவோம்.

பெருஞ்சித்திரனாரின் பெருமைமிகு வாழ்க்கை

பாவலரேறு எனவும், பெருஞ்சித்திரனார் எனவும் தமிழ் உணர்வாளர்களால் போற்றி மதிக்கப்படும் பெருஞ்சித்திரனார் 10-03-1933இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆவர். இவர்களுக்குச் சொந்த ஊர் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்பதாகும். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து துரை-மாணிக்கம் எனத் தொடக்க காலத்தில் அழைக்கப்பெற்றவர்.

பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி சேலத்திலும் ஆத்தூரிலும் அமைந்தது. இவருக்கு உயர்நிலைப்பள்ளியில் சேலம் நடேசனாரும், தமிழ் மறவர் பொன்னம்பலனாரும் ஆசிரியர்களாக விளங்கித் தமிழறிவும் தமிழ்உணர்வும் புகட்டினர்.

பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் காலத்தில் தமிழ் ஈடுபாட்டுடன் கற்றவர். "குழந்தை' என்னுவிவிம் பெயரில் கையயழுத்து ஏடு தொடங்கி மாணவர் பருவத்தில் நடத்தியவர். பின்பு அருணமணி என்னும் புனைபெயரில் "மலர்க்காடு' என்னும் கையயழுத்து ஏட்டினை நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றிய பெருமைக்குரியவர்.

பெருஞ்சித்திரனார் 1950இல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின்னர்ச் சேலம் நகராட்சிக் கல்லூரியில் பயின்றார். பாவாணர் அங்குப் பணிபுரிந்தபொழுது அவர்தம் மாணவராக விளங்கித் தமிழறிவு பெற்றார். இளமையில் பெருஞ்சித்திரனாருக்கு உலக ஊழியனார், காமாட்சி குமாரசாமி முதலானவர்களும் ஆசிரியர் பெருமக்களாக விளங்கினர்.

கல்லூரியில் பெருஞ்சித்திரனார் பயிலும் காலத்தில் பாவேந்தர் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். எனவே தாம் இயற்றிய மல்லிகை, பூக்காரி என்னும் இரு பாவியங்களையும் எடுத்துக்கொண்டு பாவேந்தரைச் சந்திக்க புதுச்சேரி சென்றார். ஆனால் பாவேந்தர் அந்நூல்களைப் பார்க்க அக்காலத்தில் மறுத்துவிட்டதையும் பின்னர் ஒரு நூலைக் கொய்யாக்கனி எனும் பெயரில் அவரே அவர் தம் அச்சகத்தில் அச்சிட்டுத் தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவதுண்டு.

பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பயிலும் போது கமலம் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அப் பெண்ணே தாமரை அம்மையாராக இன்று மதிக்கப்படும் அம்மையார் அவர்கள்.

பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். ஐந்து ஆண்டுகள் புதுவையில் வாழ்க்கை அமைந்தது. அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1959இல் பெருஞ்சித்திரனாருக்குப் பணிமாற்றல் கிடைத்துக் கடலூருக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகர முதலித் துறையில் பணியேற்றார். பாவாணர் விருப்பப்படி தென்மொழி என்னும் பெயரில் இதழை 1959இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்துப் பெருஞ்சித்திரன் என்னும் புனைபெயரில் எழுதினார்.

தென்மொழியின் தொடக்க ஏட்டில் சிறப்பாசிரியர் பாவாணர் எனவும் பொறுப்பாசிரியர் பெருஞ்சித்திரன் எனவும் பெயர்கள் தாங்கி இதழ் வெளியானது. தென்மொழியின் 16 இதழ்கள் வெளிவந்த சூழலில் பொருள் முட்டுப்பாட்டால் இதழ் இடையில் நின்றது. பின்பு கருத்துச் செறிவுடனும் புதுப்பொலிவுடனும் மீண்டும் வந்து கல்லூரி மாணவர்கள் தமிழாசிரியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது.

தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டு ஆற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித் திரனார் அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில்தம்உரையாலும்பாட்டாலும் பெரும் பங்காற்றினார். இந்தி எதிர்ப்புப் போரில் இவர்தம் தென்மொழி இதழிற்குப் பெரும் பங்குண்டு. தம் இயக்கப்பணிகளுக்கு அரசுப்பணி தடையாக இருப்பதாலும் முழுநேரம்மொழிப் பணியாற்றவும் நினைத்து அரசுப்பணியை உதறினார். இவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாற்றப்பெற்றது. இவருக்கு இதனால் சிறைத் தண்டனை கிடைத்தது.வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ்ப்வி பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார்.

பெருஞ்சித்திரனார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் பாட்டுகளையும் கட்டுரைகளையும் வரைந்தார். தம்மை ஒத்த பாவலர்களின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்.

பாவாணரின் உலகத்தமிழ்க்கழகம் தோற்றம் பெற்றபொழுது அதில் இணைந்து பணிபுரிந்தவர். அதுபோல் பாவாணர் அகரமுதலி தொகுப்பதற்கு பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கி உதவியவர்.

தென்மொழிப் பணியை முழுநேரப் பணியாக அமைத்துக்கொண்ட பிறகு 1972இல் திருச்சியில் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு ஒன்றை நடத்தினார். 1973இல் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு மதுரையில் நடத்த முயற்சி செய்தபோது சிறை செய்யப்பட்டார். இக்காலக்கட்டங்களில் தமிழ் உணர்வுடன் பாடல் வரைந்த உயர்செயல் நினைத்துப் பாவாணர் அவர்கள் "பாவலரேறு' என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.

தமிழகம் முழுவதும் தென்மொழி இதழ் வழியாகவும் பொது மேடைகள் வழியாகவும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனாரின் வினைப்பாடு உலகம் முழுவதும் பரவியது. எனவே மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் அழைப்பினை ஏற்று 1974இல் சிங்கை மலையகச் செந்தமிழ்ச் செலவை மேற்கொண்டார். இச்சுற்றுச்செலவிற்குப் பின் கடலூரில் இருந்து தென்மொழி அலுவலகம் சென்னைக்கு மாறியது.

திரு. செ. பன்னீர்ச்செல்வம் அவர்கள் தென்மொழி வளர்ச்சியிலும் பெருஞ்சித்திரனாரின் குடும்ப வளர்ச்சியிலும் பெரும் துணையாக நின்றார். அதுபோல் பெருஞ்சித்திரனாரின் இதழ் வெளியீட்டுப் பணிகளில் தொடக்க காலங்களில் ம.இலெனின் தங்கப்பா, மு. தமிழ்க்குடிமகன் (சாத்தையா),விவி பாளை எழிலேந்தி முதலான அறிஞர் பெருமக்கள் துணையாக இருந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தென்மொழி ஏட்டின் வளர்ச்சியில் பெருந்துணையாக இருந்தனர்.

இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன.

பெருஞ்சித்திரனார் தம் இதழ்களில் எழுதியதோடு அமையாமல் பகுத்தறிவு, தென்றல், முல்லை, வானம்பாடி தமிழ்நாடு, செந்தமிழ்ச் செல்வி, விடுதலை, உரிமை முழக்கம், தேனமுதம், சனநாயகம், குயில் முதலிய இதழ்களில் எழுதியவர்.

பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும். இந்நூலின் மூன்று தொகுதிகளுள்ளும் 1. தமிழ், 2. இந்தி எதிர்ப்பும் இன எழுச்சியும், 3. நாட்டுரிமை, 4. பொதுமை உணர்வு, 5. இளைய தலைமுறை, 6. காதல், 7. இயற்கை, 8. இறைமை, 9. பொது என்ற அமைப்பில் பாடல்கள் அமைந்துள்ளன. தமிழ்மொழியின் சிறப்பினையும் தமிழுக்கும் தமக்கும் உள்ள தொடர்பினையும் பெருஞ்சித்திரனார் சீரிய யாப்பமைப்பில் பாடியுள்ளார்.

"என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!''

என்று தமிழ்மொழியின் வளர்ச்சியைவிட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் பெருஞ்சித்திரனார்.

1981இல் பாவாணர் இயற்கை எய்திய நிகழ்வு பெருஞ்சித்திரனாருக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. மொழிப்பற்றும் இனஉணர்வும் ஊட்டி வளர்த்த தம் ஆசிரிய பெருமகனாரின் மறைவு குறித்துப் பெருஞ்சித்திரனார் எழுதிய கட்டுரை கண்ணீர் வரச் செய்யும் தரத்ததாகும்.

பெருஞ்சித்திரனார் 1981இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி தமிழகம் முழுவதும் இயக்கம் கட்டி எழுப்பினார். அதன் அடுத்த முயற்சியாக 1982இல் தமிழ் நிலம் என்னும் ஏட்டைத் தொடங்கி நடத்தினார்.

1983-84ஆம் ஆண்டில் மேற்கு உலக நாடுகளில் இவர்தம் சுற்றுச் செலவு அமைந்தது. 1985இல் மலேசிய நாட்டிற்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்தார்.

1988இல் செயலும் செயல்திறனும் என்னும் நூல் வெளிவந்தது. மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாகத் தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 11.06.1995இல் இயற்கை எய்தினார்.

இவர்தம் நினைவைப் போற்றும் வண்ணம் சென்னை மேடவாக்கத்தில் "பாவலரேறு தமிழ்க்களம்' என்னும் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி, தமிழக வரலாற்றில் அளப்பரும் பணிகளைச் செய்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வாழ்வும், படைப்புகளும், இதழ்களும் விரிவாக ஆராயப்பட வேண்டுவனவாகும்

தியாகு

unread,
Dec 14, 2010, 8:37:17 AM12/14/10
to முத்தமிழ், பண்புடன், அன்பு, pothuv...@googlegroups.com, tamizhblo...@googlegroups.com
தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar http://www.devaneyam.org/) (பெப்ரவரி 7, 1902- ஜனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப் பட்டார்.

வாழ்க்கை வரலாறு
பிறப்பு

தேவநேயர் அவர்கள் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞான முத்தனார் என்னும் கணக்காயருக்கும், அவர் இரண்டாம் மனைவியாகிய பரிபூரணம் என்னும் கணக்காய்ச்சியருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் பிறந்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோவிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவநேயரின் தந்தையார் ஞானமுத்து தோக்கசு (Stokes) அவர்களை கிறிஸ்தவ மத குருவானவர் ஒருவர் எடுத்து வளர்த்து வந்துள்ளார். ஞானமுத்து தோக்கசுவின் பெற்றோர் முத்துசாமி, திருவாட்டி. வள்ளியம்மாள் இருவரும் தோக்கசு அவர்களின் மாளிகையில் காவலர்களாக பணியாற்றி வந்துள்ளனர். அவர்களை கிறித்துவர்களாக்கி தம் பெயரையும் சூட்டி உள்ளார்.

இறுதி நாட்கள்

மதுரையில் ஒரு கூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றிய பின்னர் அவருக்கு மார்புவலி ஏற்பட்டது. 1981 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் இரவு 12:30க்கு தேவநேயர் உயிர்நீத்தார்.

வாழ்க்கைவரைவு

தேவநேயரின் வாழ்க்கை வரலாற்றை பாவாணர் என்னும் தலைப்பில் இரா. இளங்குமரன் நூல்வடிவில் எழுதியுள்ளார். இந்நூல் 2000ல் வெளிவந்தது. தேவநேயப் பாவாணரின் மகன் தே. மணி தம் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றை பாவாணர் நினைவலைகள் என்னும் தலைப்பில் 2006ல் ஒரு நூலாக எழுதியுள்ளார்.

தேவநேயர் ஆக்கிய நூல்கள்

1. இசைத்தமிழ் கலம்பகம் (1966) 303 இசைப்பாக்களைக் கொண்ட நூல்
2. இயற்றமிழ் இலக்கணம் (1940) 148 பக்கங்கள்
3. உயர்தரக் கட்டுரை இலக்கணம் (1950) 284 பக்கங்கள்
4. உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பாகம் (1951) 251 பக்கங்கள்
5. ஒப்பியன்மொழி நூல் (1940) 378 பக்கங்கள்
6. கட்டாய இந்திக் கல்வி கண்டனம் (1937) இசைப்பாடல்கள் 35 கொண்டது. பக்கங்கள் 33
7. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (1968) 89 பக்கங்கள்
8. கட்டுரை கசடறை என்னும் வியாச விளக்கம் (1937) 84 பக்கங்கள்
9. கட்டுரை வரைவியல் என்னும் இடைத்தரக் கட்டுரை இலக்கணம் (1939, 1952) 160 பக்கங்கள்
10. கிறித்தவக் கீர்த்தனம் (1981?) 25 இயற்பாக்கள், 50 இசைப்பாக்கள் கொண்டது
11. சிறுவர் பாடல் திரட்டு (1925) கதை, விளையாட்டு கைவேலை பற்றிய 29 பாடல்கள் கொண்டது
12. சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து (1943) 104 பக்கங்கள்
13. சென்னை பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடு (1961) 46 பக்கங்கள்
14. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் (1949) 120 பக்கங்கள்
15. தமிழ் இலக்கிய வரலாறு (1979) 326 பக்கங்கள்
16. தமிழ் நாட்டு விளையாட்டுக்கள் (1954) 144 பக்கங்கள்
17. தமிழ் வரலாறு (1967) 319 பக்கங்கள்
18. தமிழர் திருமணம் (1956) 96 பக்கங்கள்
19. தமிழர் மதம் (1972) 200 பக்கங்கள்
20. தமிழர் வரலாறு (1972) 382 பக்கங்கள்
21. தமிழின் தலைமை நாட்டும் தனிச்சொற்கள் (1977) செந்தமிழ்ச் செல்வியில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு (தனி நூல் அல்ல)
22. திராவிடத்தாய் (1944, 1956) 112 பக்கங்கள். முன்னுரை, மலையாளம், கன்னடம், துளு, முடிவு ஆகிய 6 பாகமுடையது.
23. திருக்குறள் தமிழ் மரபுரை (1969) 812 பக்கங்கள் கொண்டது.
24. தொல்காப்பியக் குறிப்புரை (1944) (நிறைவு பெறாத நூல்)
25. பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் (1966) 240 பக்கங்கள்
26. பழந்தமிழராட்சி (1952) 170 பக்கங்கள.
27. மண்ணில்விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை (1978) 250 பக்கங்கள்
28. முதல்தாய்மொழி அல்லது தமிழாக்கவிளக்கம் (1953) 344 பக்கங்கள். குறிப்பொலிக் காண்டம், சுட்டெலிக் காண்டம் என இரு பகுதிகள் கொண்டது
29. வடமொழி வரலாறு (1967) 350 பக்கங்கள் கொண்டது.
30. வண்ணணை மொழி நூலின் வழுவியல் (1968) 122 பக்கங்கள்.
31. வேற்சொற் கட்டுரைகள் (1973) 298 பக்கங்கள்.
32. The Primary Classical Language of the World (1966) 312 பக்கங்கள்
33. The Lemurian Language and its Ramifications (1984) 400 பக்கங்கள் (வெளியீடு தெரியவில்லை)
34. இசையரங்கு இன்னிசைக் கோவை (1969) இசைப்பாடல்கள் 34 உள. 31 பக்கங்கள்.
35. என் அண்ணாமலை நகர் வாழ்க்கை (1988) பதிப்பாசிரியர் பேரா. கு.பூங்காவனம். பக்கங்கள்??
36. கட்டுரை எழுதுவது எப்படி? 36 பக்கங்கள்
37. கடிதம் எழுதுவது எப்படி? (1984) 36 பக்கங்கள்
38. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி - முதன் மண்டலம்- முதற்பகுதி (1985) 574 பக்கங்கள்.
39. பாவாணர் பாடல்கள், பாவாணர் பல்வேறு காலங்களில் இயற்றிய 320க்கும் மேலான பாடல்களை தொகுப்பசிரியர் இரா. இளங்குமரன் தொகுத்து.
40. பாவாணர் மடல்கள், பாவாணரின் கடிதங்கள் சுமார் 600ஐத் தொகுத்து 1988ல் வெளியானது. தொகுப்பு. இரா. இளங்குமரன்.


உசாத்துணை

* இரா. இளங்குமரன், தேவநேயப் பாவாணர் (பாவாணர் வரலாறு), சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 522, டி.டி.கே சாலை, சென்னை-18, பதிப்பாண்டு 2000, மொத்தம் 324 பக்கங்கள்
* தே. மணி, பாவாணர் நினைவலைகள் பாவாணர் அறக்கட்டளை வெளியீடு (43 ஆ, கதவுஎண் 4, முனுசாமி தெரு, விருகம்பாக்கம், சென்னை 600 092), பக்கம் 344.
http://devaneyam.org/

தியாகு

unread,
Dec 14, 2010, 8:38:21 AM12/14/10
to முத்தமிழ், பண்புடன், அன்பு, pothuv...@googlegroups.com, tamizhblo...@googlegroups.com
ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 - டிசம்பர் 5, 1879, நல்லூர்) தமிழ் உரைநடையின் முன்னோடி, தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தோற்றம்

ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் (சித்திரபானு வருடம் மார்கழி 5) புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும். தகப்பனார் கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞர்கள். அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள். நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள். சகோதரிகளுள் ஒருவர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை அவர்களின் தாயார்.

கல்வி

ஐந்தாவது வயதில் வித்தியாரம்பம் செய்யப்பெற்ற நாவலர், நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களையும் தமிழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வி கற்க அனுப்பப்பட்டார். பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார்.

யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் (இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். அவரது இருபதாவது வயதில் அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்ற நாவலர், அப்பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் பாதிரியார் கிறிஸ்தவ வேதாகமத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியருடன் சென்னப்பட்டணம் சென்று அச்சிடுவித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.

பணிகள்

சமயப் பணி

சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவசமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் பணிபுரியத் தொடங்கினார் நாவலர். சைவ சமயம் வளரும் பொருட்டு பிரசங்கம் செய்வதெனத் தீர்மானித்தார். இவரது முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847 ஆம் நாள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பிரசங்கம் செய்தார். இப்பிரசங்கங்களின் விளைவாகப் பெரும் சமய விழிப்புணர்வு ஏற்பட்டது.

வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்தார். சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிடத் தீர்மானித்து செப்டம்பர் 1848 இல் தமது மத்திய கல்லூரி 3 பவுண் மாதச் சம்பள ஆசிரியப் பணியைத் துறந்தார்.

அச்சுப் பணி

சைவப்பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1949 ஆடி மாதம் சென்னைக்கு சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார்.

தமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.

தமிழகப் பணி

இவரது பணி இலங்கையில் மட்டுமன்றி தமிழ் நாட்டிலும் பரவியிருந்தது. சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1959 வைகாசி மாதம் வெளியிட்டார். பெரியதொரு அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கி, சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டார். சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும் திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களில் தங்கி சைவப்பிரசங்கங்கள் செய்தபின் 1862 பங்குனியில் யாழ்ப்பாணம் திரும்பினார்.

1863 மார்கழியில் மீண்டும் தமிழகம் சென்றார். அங்கு இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார். அங்கிருந்து மதுரை சென்று மீனாட்சியம்மை சந்நிதானத்திலே பிரசங்கித்து மீனாட்சிக்கு அணிவிக்கப்பெற்ற பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார்.

குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தை மெச்சி நாவலரை பல்லக்கில் ஏற்றித் தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வர சகல விருதுகள், மங்கல வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள். அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்பள்ளிருக்குவேளூர், சீர்காழி ஆகிய தலங்களை வணங்கிச் சிதம்பரம் சேர்ந்தார். அங்கு 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை ஸ்தாபித்தார்.

1866 மார்கழி மாதம் சென்னை திரும்பி சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார்.

போலியருட்பா மறுப்பு

கருங்குழி இராமலிங்கம்பிள்ளை (வள்ளலார்) தாம் பாடிய பாடல்களைத் திருமுறைகளுடன் ஒப்பிட்டு, சில ஆலய உற்சவங்களிலே திருமுறைகளுக்குப் பதிலாகத் தமது பாடல்களைப் பாடுவதைக் கண்ட நாவலர், போலியருட்பா மறுப்பு எனும் நூலை எழுதி வெளியிட்டார். 1869 ஆனியில் சிதம்பரம் சென்றார். அப்போது சைவாகம விடயமாகவும் சிவதீட்சை விடயமாகவும் நாவலர் தெரிவித்த சில கருத்துக்களால் மனம் பேதித்திருந்த சில தீட்சிதர்கள், வள்ளலாரைக் கொண்டு சிதம்பராலயத்தில் 1869 ஆனி உத்தரத்தன்று ஒரு கூட்டம் கூட்டினார்கள். அங்கு நாவலரைப் பலவாறாகத் தூஷித்து விட்டு, நாவலர் தம்மை அடித்ததாக மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். இவ்வழக்கில் வழக்காளிகளுக்கே அபராதம் விதிக்கப்பட்டது.

சிதம்பர வழக்கின் பின் நாவலர் தருமபுரி, திருவிடைமருதூர், திருவேட்டக்குடி, காரைக்கால், கோடிக்கரை ஆகிய தலங்களைத் தரிசித்த பின்னர் 1870 பங்குனியில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.

சைவப் பாடசாலை நிறுவல்

1870இல் நாவலர் கோப்பாயில் ஒரு வித்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் நடத்தினார். 1871 இல் வண்ணார்பண்ணையில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை வண்ணர்பண்ணையில் 1872 தை மாதத்தில் நிறுவி நடத்தினார். நிதி வசதி இன்மையால் இப்பாடசாலை நான்கு ஆண்டுகளே நடைபெற்றது.

1872 ஐப்பசி மாதத்தில் தாம் அதுவரை பெற்ற அனுபவத்தால் அறிந்த உண்மைகளைத் திரட்டி எழுதி அதற்கு யாழ்ப்பாணச் சமய நிலை எனப் பெயர் தந்து வெளிப்படுத்தினார். 1875க்கும் 1878க்கும் இடைப்பட்ட காலத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடற் புராணம், நன்னூற் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமஸ்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார்.

சாதிப்பிரசாரம்

சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் இக்கால நோக்கின்படி பிற்போக்குவாதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார். "தாழ்ந்த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது" போன்ற தீண்டாமைக் கருத்துக்களைத் தனது 'முதலாம் சைவ_வினாவிடை' எனும் நூலில் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், மூடத்தனமான சாதிக் கட்டுப்பாடுகள் இருந்த அந்தக் காலத்தில், சாதியிலும் சமயமே அதிகம். சமயத்திலும் சாதியதிகமென்று கொள்வது சுருதி, யுத்தி அனுபவம் மூன்றிற்கும் முழுமையும் விரோதம் என்ற கருத்தையும் கூறியிருக்கிறார் நாவலர்.


இறுதி நாட்கள்

நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசைத் தினமான ஆடிச்சுவாதி அன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இடம்பெற்றது. 1879ஆம் ஆண்டு (பிரமாதி வருடம்) கார்த்திகை மாதம் 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாவலரது உடல் நலம் குன்றியது. அடுத்த மூன்று தினங்களும் குளிக்க முடியாதிருந்ததால் நாவலரது நித்திய சிவபூசை வேதாரணியத்துச் சைவாசாரியர் ஒருவரால் செய்யப்பட்டது. 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை (05-12-1879) இரவு தேவாரம் முதலிய அருட்பாக்களை ஓதும்படிக் கட்டளையிட்டு அவைகள் ஓதப்படும்போது சிதம்பரம், காசி, மதுரை, திருச்செந்தூர், முதலிய புண்ணியத்தலங்களின் விபூதி அணிந்து, உருத்திராட்சம் பூண்டு, கங்காதீர்த்தம் உட்கொண்டு, கைகளைச் சிரசின்மேற் குவித்து, இரவு ஒன்பது மணியளவில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

* குருபூசைத் தினம்: கார்த்திகை மகம்

ஆறுமுக நாவலரின் நூல்கள்

* இலக்கணச் சுருக்கம்
* சைவ வினாவிடை முதற்புத்தகம்
* பால பாடம் - முதற் புத்தகம்

ஆறுமுக நாவலர் பற்றிய நூல்கள்

* நாவலர் - நூலகம் திட்டம்

தியாகு

unread,
Dec 14, 2010, 8:49:38 AM12/14/10
to முத்தமிழ், பண்புடன், அன்பு, pothuv...@googlegroups.com, tamizhblo...@googlegroups.com
ஆர். முத்தையா தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழிநுட்பங்களையும் உருவாக்கியவராவார். இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார். http://www.facebook.com/pages/tami-Tamil/141482842472#/photo.php?pid=3119415&id=141482842472

பிறப்பும் வாழ்க்கையும்

முத்தையா யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் பெப்ரவரி 24 1886 இல் பிறந்தார். இவருடைய தந்தையார் ராமலிங்கம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் சீடர்களில் ஒருவராக இருந்தவர். ராமலிங்கம் அவர்களுக்கு ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் பிறந்தார்கள். இறுதி ஆண் பிள்ளைதான் முத்தையா. இவர் ஏழு வயதாக இருக்கும் பொழுது, இவருடைய தந்தையார் இறந்து விட்டார். பின்பு தாயின் பராமரப்பிலேயே வளர்ந்து கலாசாலையில் பயின்று வந்தார். சில ஆண்டுகளில் தாயும் நோய் வாய்ப்பட்டு இறந்தார். பின்னர் இவர் 1907-இல் மலாயா நாட்டுக்குப் புறப்பட்டார்.

சிங்கப்பூரை அடைந்ததும் தொடர்ந்து போர்னியாவுக்குப் போக எண்ணிய பொழுது, டானியல் போதகர் என்பவர், தாம் அங்கேயே இவருக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்ல அப்படியே இவரை ரெயில்வே இலாகாவில் வேலைக்கு அமர்த்தினார். சில நாட்களில் அந்த வேலையை விட்டு ஐல்ஸ்பெரி அண்ட் கார்லாண்ட் என்ற பிரபலமான வர்த்தக நிறுவனத்தில் வேலையேற்றார். இரண்டாண்டுகளுக்குப் பின், அதன் பிரதம எழுதுவினைஞராக உயர்ந்து, 1930 வரையில் பணி புரிந்தார். இந்தக் காலத்தில் இவர் உயர்தரக் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து ஆகியவைகளைக் கற்றார். 1913-இல் நடைபெற்ற ஸ்லோன் டுப்ளோயன் சுருக்கெழுத்துப் போட்டியில் சர்வதேச வெள்ளிப் பதக்கம் இவருக்குக் கிட்டியது. அதோடு ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், கைத்தொழில் நூல்கள், சமய நூல்கள் ஆகியவற்றையும் கற்றார்.

தட்டச்சுப்பொறி உருவாக்கம்

இவர் கடமையாற்றிய நிறுவனந்த்தில் இருந்த ஒழுங்கும் நிர்வாகத் திறமையும் இவரைக் கவர்ந்தன. அவர்களைப் போல் தமிழனும் ஏன் இருக்க முடியாது என்று சிந்தித்தார். தமிழில் ஒரு தட்டச்சு இல்லாக் குறையையும் உணர்ந்தார். ஆகவே, அன்று தொடங்கி இந்த முயற்சியில் ஈடுபட்டார்.

தொழிநுட்பம்

முத்தையா அவர்கள் தாம் கண்டு பிடித்த தட்டச்சை "ஸ்டாண்டர்ட்" பெரிய தட்டச்சு என்று குறிப்பிட்டார். அது சிறப்பான பல அம்சங்களை உடையது. தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அசைக்க முடியாது. எனவே, பல எழுத்துக்களுக்குப் பொதுவான உள்ள சில குறியீடுகளைத் தனித்தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக் கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும். அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்ய வேண்டும். பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டு பிடித்தார். அதாவது "வி" என்ற எழுத்திலுள்ள விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சி யுள்ள "வ" வை அடித்த பின் தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே அச்சாகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள்.

முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பில் க’, த’ போன்ற எழுத்துக்களுக்கு ஒரு விசிறியும், ண’, ன’ போன்ற எழுத்துக்களுக்கு வேறு ஒரு விசிறியும் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.

உற்பத்தி

முதலாவது உலக யுத்தம் முடிந்த பின்பு, தாம் கண்டு பிடித்த விசைப் பலகையை ஜெர்மனியிலுள்ள சைடல் அன்ட் நளமான் என்ற வியாபார நிறுவனத்திடம் இவர் ஒப்புவித்து அச்சுக்களை உருவாக்கினார். பெரும் எண்ணிக்கையில் அதை இறக்குமதி செய்து விற்றும் வந்தார். இதோடு இவருடைய முயற்சி முற்றுப் பெறவில்லை. தாம் அமைத்த விசைப் பலகையில் சில குறைகள் இருக்கக் கண்டார். அவைகளை நீக்க, "பிஜோ", "ஐடியல்" ஆகிய "போர்ட்டபிள்" தட்டச்சுக்களை உருவாக்கினார். இவைகளைப் பின்பற்றியே "ஆர் ஸ்", "எரிகோ", "யுரேனியா", "ஹால்டா" போன்ற தட்டச்சுகள் வெளியாயின.

சமூக சேவைகள்

முத்தையா அவர்கள் சிறந்த சமூக சேவையாளராகவும் விளங்கினார். காலஞ் சென்ற தெய்வசிகாமணி ஆசாரியருடன் சேர்ந்து குடிசைக் கைத்தொழிலின் அபிவிருத்திக்கு உழைத்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றி ஆங்கிலத்தில் நூல் ஒன்று எழுதியுள்ளார். ஆனால் அந்நூல் அச்சாவதற்கு முன்னரே அவர் காலமாகிவிட்டார்.

தமிழ் தட்டச்சின் தந்தை ஆர் முத்தையா! Written by கா. மாணிக்க வாசகர்

ஆங்கிலேயர் அரசியல் நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கும் ஆங்கில மொழிகளும் உலக மொழியானதற்கும் ஆங்கிலத் தட்டச்சு (டைப்ரைட்டர்) ஒரு முக்கியமான காரணம். 1875-ம் ஆண்டில் "ரெம’ங்டன்" தட்டச்சு விற்பனைக்கு வந்தபொழுது வர்த்தக ஸ்தாபனங்களே பெரும்பாலும் அவைகளை வாங்கி உபயோகித்தன. பின்பு அரசினரும் பிற ஸ்தாபனத்தாரும் தனி மனிதர்களும் தட்டச்சை விரும்பி வாங்கினார்கள். ஆங்கிலத்தில் இருபத்தாறு எழுத்துக்களே இருக்கின்றன. தமிழில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216, ஆய்த எழுத்து 1 ஆக மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. இவை தவிர எண்களும் குறியீடுகளும் வடமொழி மூலம் வந்த சில முக்கியமான எழுத்துக்களும் இருக்கின்றன. ஆகவே ஆங்கிலத்தைவிட ஏறக்குறைய பத்து மடங்கு அதிகமான எழுத்துக்களை உடைய தமிழ் மொழியை ஒரு இயந்திரத்தில் அமைப்பது சுலபமான விஷயம் அல்ல. ஆங்கில மோகம் வானளாவி நின்ற அந்த நாளில் இதைச் செய்ய நினைத்தவர் சிலர் இருந்தாலும் செய்து முடிக்கும் உடையோர் இல்லை.

பெரு எண்ணிக்கையில் செய்விக்க பண முதலீடு செய்யும் துணிவு வேண்டுமே. பண முதலீடு செய்தாலும் விற்பனை ஆகுமா? இந்தப் பிரச்னைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாது துணிச்சலுடன் செயலில் இறங்கினார் ஒரு தமிழர்.

ஈழ நாட்டில் வாழும் தமிழர்களின் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணம் அப்போது சிறந்த அறிஞர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் உலகுக்கு அளித்துக் கொண்டே இருந்திருக்கிறது. இந்தத் திருநாட்டின் ஒப்பற்ற ஒருவர்தான் தமிழ் தட்டச்சின் தந்தையான ஆர் முத்தையா அவர்கள்.

முத்தையா யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிற்குளியில் 24-2-1886-ல் பிறந்தார். இவருடைய தந்தையாரான ராமலிங்கம் பண்பாடு மிக்கவர், கல்வியாளர், பக்திமான். இவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சீடர்களில் ஒருவராக இருந்தார். ராமலிங்கம் அவர்களுக்கு ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் பிறந்தார்கள். இறுதி ஆண் பிள்ளைதான் முத்தையா. இவர் ஏழு வயதாக இருக்கும் பொழுது, இவருடைய தந்தையார் இறந்து விட்டார். பின்பு தாயின் பராமரப்பிலேயே வளர்ந்து கலாசாலையில் பயின்று வந்தார். சில வருஷங்களில் தாயும் நோய்வாய்ப்பட்டு இறந்தாள். இவர் 1907-இல் மலாயா நாட்டுக்குப் புறப்பட்டார்.
சிங்கப்பூரை அடைந்ததும் தொடர்ந்து போர்னியாவுக்குப் போக எண்ணிய பொழுது, டானியல் போதகர் என்பவர், தாம் அங்கேயே இவருக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி அப்படியே இவரை ரெயில்வே இலாகாவில் வேலைக்கு அமர்த்தினார். சில நாட்களில் அந்த வேலையை விட்டு ஐல்ஸ்பெரி அண்ட கார்லாண்ட என்ற பிரபலமான வர்த்தக ஸ்தாபனத்தில் வேலையேற்றார். இரண்டாண்டுகளுக்குப் பின், அதன் பிரதம குமாஸ்தாவாக உயர்ந்து, 1930ஆம் ஆண்டு வரையில் பணி புரிந்தார். இந்தக் காலத்தில் இவர் உயர்தரக் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து ஆகியவைகளைக் கற்றார். 1913-இல் நடைபெற்ற ஸ்லோன் டுப்ளோயன் சுருக்கெழுத்துப் போட்டியில் சர்வதேச வெள்ளிப் பதக்கம் இவருக்குக் கிட்டியது. அதோடு ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், கைத்தொழில் நூல்கள், சமய நூல்கள் ஆகியவற்றையும் கற்றார். இவ்வளவு திறமை வாய்ந்தவராய் இருந்தும் அரசாங்க உத்தியோகத்தை இவர் நாடியதே இல்லை. சுயமுயற்சியில் அதிக நம்பிக்கை உடையவர். அஞ்சா நெஞ்சம் படைத்தவர். தமக்குச் சரியென்று பட்டதைத் துணிவுடன் இவர் எடுத்துச் சொல்வார்.

இவர் கடமையாற்றிய ஸ்தாபனத்தில் இருந்த ஒழுங்கும், நிர்வாகத் திறமையும் இவரைக் கவர்ந்தன. அவர்களைப் போல் தமிழனும் ஏன் இருக்க முடியாது என்று சிந்தித்தார். தமிழில் ஒரு தட்டச்சு இல்லாக் குறையையும் உணர்ந்தார். ஆகவே, அன்று தொடங்கி இந்த முயற்சியில் ஈடுபட்டார். தனிமையாக ஓர் அறையில் 247 எழுத்தின் வடிவங்களை ஒரு புறமும் தட்டச்சின் 46 விசைகளை மறு பக்கமும் வைத்து எழுத்துக்களை எப்படி விசைகளில் அமைப்பது என்று சிந்தித்தார். கிடைத்த நேரங்களை யெல்லாம் இந்த ஆராய்ச்சிக்கே செலவிட்டார். தம் தமிழ் நண்ர்பர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய அபிப்பிராயங்களையும் சேகரித்தார். எவ்வளவு முயற்சி செய்தும் எழுத்துக்களை 72-க்கு மேல் குறைக்க முடியவில்லை. அதுவரையில் கிடைத்த வெற்றியைக் கொண்டு தட்டச்சை நிறைவேற்றும் பணியை மேற் கொண்டார்.

முத்தையா அவர்கள் தாம் கண்டு பிடித்த தட்டச்சை "ஸ்டாண்டர்ட்" பெரிய தட்டச்சு என்று குறிப்பிட்டார். அது சிறப்பான பல அம்சங்களை உடையது. தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அசைக்க முடியாது. எனவே, பல எழுத்துக்களுக்குப் பொதுவான உள்ள சில குறியீடுகளைத் தனித் தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக் கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும். அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்ய வேண்டும். பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டு பிடித்தார். அதாவது "ந“ என்ற எழுத்திலுள்ள விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சியுள்ள "ந"வை அடித்த பின் தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே அச்சாகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள்.

ஆங்கிலத் தட்டச்சைப் போலல்லாது தமிழ்த் தட்டச்சுக்களின் விசைப்பலகை அமைப்பு வேறு விதமாக இருக்கிறது. ஒரு இயந்திரத்தில் பழகியவர் அதே முறையில் வேறொரு இயந்திரத்தில் அச்சடிக்க முடியாது. ஆகவே, இதை ஒருமைப்படுத்த எண்ணிய சென்னை அரசினர் 1955-ஆம் ஆண்டில் ஒரு குழுவை நிறுவினார்கள். அதன் சிபார்சுப்படியும் பிறருடைய ஆலோசனையின் பேரிலும் இப்பொழுது விசைப் பலகையமைப்பில் ஒருமைப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆயினும், முத்தையா அவர்களின் கண்டு பிடிப்பிலிருந்து அதிக மாற்றம் புதிய முறையில் இல்லை. புதிய அமைப்பில் இல்லாத சில சிறப்பான அம்சங்களும் இவருடைய தட்டச்சில் உண்டு. இவை புதிய அமைப்பில் சேரவில்லை. இப்பொழுது க’, த’ ஆகிய எழுத்துக்களின் விசிறிகள் அந்த எழுத்துக்களின் மேற்கோட்டின் நுனியில் இருக்கின்றன. இது தமிழ் எழுத்தைப் பிழையாக்குவதாகும். முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பில் க’, த’ போன்ற எழுத்துக்களுக்கு ஒரு விசிறியும், ண’, ன’ போன்ற
எழுத்துக்களுக்கு வேறு ஒரு விசிறியும் அமைத்திருப்பது குறிப்பிடத் தக்க சிறப்பாகும்.

இப்பொழுதிருக்கும் சில தட்டச்சுகள் இரண்டு கை விரல்களுக்கும் சமமாக வேலை கொடுக்கவில்லை. இந்தக் குறையைத் தம் தட்டச்சில் இவர் நீக்கியிருக்கிறார். தமிழ் எழுத்துக்களில் ய, ள, க, ப, ர, ம, ட, ந, ச, வ, ல, ன, டி ஆகிய எழுத்துக்கள் அடிக்கடி உபயோகமாகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டார்கள். ஆகவே, அரசினருடைய விசைப்பலகையில் கீழ் திட்டத்தில் இவை அமைந்திருக்கின்றன. முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பும் இதையொட்டியே இருக்கிறதென்றால் இவர் எவ்வளவு ஆராய்ச்சியின் பின் இதை உருவாக்கியிருக்க வேண்டுமென்று நாம் ஊகிக்கலாம்.

முதலாவது உலக யுத்தம் முடிந்த பின்பு, தாம் கண்டு பிடித்த விசைப் பலகையை ஜெர்மனியிலுள்ள சைடல் அன்ட் நளமான் என்ற வியாபர ஸ்தாபனத்திடம் இவர் ஒப்புவித்து அச்சுக்களை உருவாக்கினார். பெரும் எண்ணிக்கையில் அதை இறக்குமதி செய்து விற்றும் வந்தார். இதோடு இவருடைய முயற்சி முற்றுப் பெறவில்லை. தாம் அமைத்த விசைப் பலகையில் சில குறைகள் இருக்கக் கண்டார். அவைகளை நீக்க’, "பிஜோ", "ஐடியல்" ஆகிய "போர்ட்டபிள்" தட்டச்சுக்களை உருவாக்கினார். இவைகளைப் பின்பற்றியே "ஆர் ஸ’", "எரிகோ", "யுரேனியா", "ஹால்டா" போன்ற தட்டச்சுகள் வெளியாயின.

முத்தையா அவர்கள் சிறந்த சமூக சேவையாளராகவும் விளங்கினார். காலஞ் சென்ற தெய்வசிகாம ஆசாரியருடன் சேர்ந்து குடிசைக் கைத்தொழிலின் அபிவிருத்திக்கு அரும்பாடு பட்டார். இலங்கையில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றி ஆங்கிலத்தில் நூல் ஒன்று எழுதி அதை அச்சேற்றுவதற்கு முன்பே காலமாகி விட்டார்.

நன்றி: சரஸ்வதி இதழ், 1959

துரை.ந.உ

unread,
Dec 14, 2010, 9:00:23 AM12/14/10
to tamizhblo...@googlegroups.com, முத்தமிழ், பண்புடன், அன்பு, pothuv...@googlegroups.com
தியாகு அய்யாவுக்கு .....

என்ன சொல்ல ?

பாதம் பணிந்த வணக்கங்கள் ..

தொடருங்கள் ...காத்திருக்கிறோம் 

2010/12/14 தியாகு <seewty...@gmail.com>
ஆர். முத்தையா தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழிநுட்பங்களையும் உருவாக்கியவராவார். இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார். http://www.facebook.com/pages/tami-Tamil/141482842472#/photo.php?pid=3119415&id=141482842472



--
என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com

குழுமம்   : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

Mohanarangan V Srirangam

unread,
Dec 14, 2010, 9:03:38 AM12/14/10
to mutht...@googlegroups.com, பண்புடன்
மிக அருமையான கட்டுரைகள். 
படிக்கக் கொடுத்தமைக்கு நன்றிகள் பல 
திரு தியாகு!.

2010/12/14 தியாகு <seewty...@gmail.com>
ராபர்ட் கால்டுவெல் ஐயர் (1814-1891) என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் அவர்கள் திராவிட மொழி நூலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதே.

தியாகு

unread,
Dec 14, 2010, 9:07:53 AM12/14/10
to mutht...@googlegroups.com, பண்புடன்
நன்றி அய்யா ,

இவர்களை பற்றிய கட்டுரைகளை எடுத்து போட்டதே பெரும் பேறுதான்


2010/12/14 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

--
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.

தியாகு

unread,
Dec 14, 2010, 9:17:43 AM12/14/10
to mutht...@googlegroups.com, tamizhblo...@googlegroups.com, பண்புடன், அன்பு, pothuv...@googlegroups.com
தனிநாயகம் அடிகள் (Rev.Father Xavier Thaninayagam Adigalar
D.D.(Rome), M.A.., M.Litt (Annamalai)
Ph.D. (London) (ஆகஸ்டு 2, 1913 - செப்டம்பர் 1, 1980), கரம்பன், யாழ்ப்பாணம்) உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்க அடிகோலியவர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கரம்பனில் பிறந்த தனிநாயகம் அடிகளின் இயற்பெயர் நாகநாதன். புகழ்பெற்ற இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் கிறிஸ்தவ சமயத்தை தழுவியபோது ஏற்றுக்கொண்ட பெயர் சேவியர் ஸ்தனிஸ்லாஸ் என்பதாகும்.


ஆரம்பக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் இடைநிலைக்கல்வியை 1920 முதல் 1922 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி்யிலும், கொழும்பில் சென்ட் பேர்னாட் செமினறியில் தத்துவவியலில் கலைமாணிப் பட்டத்தையும் (1934), தமிழ் நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் M.Litt பட்டத்தையும் பின்னர் லண்டனில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார்.

ஆசிரியப் பணி

தமிழ் நாட்டில் நெல்லை மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் புனித தெரசால் உயர்நிலைப்பள்ளியில் துணைத்தலைமையாசிரியராகப் பணியாற்றினார், இங்கு இருந்தபோது பண்டித குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் தமிழ் பயின்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

1961 இல் மலேசியா சென்று மலாயா பல்கலைக்கழகத்தில் 1969 வரை இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கிருந்து ஓய்வு பெற்றபின் ஓராண்டு காலம் பாரிசில் பிரான்சுக் கல்லூரியிலும், ஓராண்டு காலம் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

தமிழ்ப் பணி

கத்தோலிக்க துறவியாக தனது பணியை ஆரம்பித்த தனிநாயகம் அடிகள் தமிழை முறைப்படி கற்றுத் தேர்ந்து ஒரு தமிழ் வளர்க்கும், பரப்பும் தூதராகத் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. Tamil Culture (தமிழ்க் கல்ச்சர்) என்ற ஆங்கில காலாண்டிதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். அதன் மூலம் அகில உலகத்திலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்று சேர்க்க முற்பட்டு பெரும் வெற்றியும் கண்டார். 1961 இல் சென்னையில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (Academy of Tamil Culture) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களும் எழுதி வெளியிட்டார். தமிழ்த் தூது என்ற நூல் அடங்கலாக மொத்தம் 137 நூல்களை எழுதினார்.

தமிழாராய்ச்சி நிறுவன தோற்றுநர்

மலேசியாவில் பணி புரியும் காலத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவராக இருந்து செயற்பட்டார். அதன் முதல் மாநாட்டினை 1966, ஏப்ரல் 16 - 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார். பின்னர் சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மறைவு

அடிகளார் இறப்பதற்கு நான்கு மாதத்திற்கு முன்னர் ஏப்ரல் 1980 இல் தந்தை தந்தை செல்வா நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்தினார். அதே ஆண்டு மே மாதம் வேலணையில் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் எழுதிய தமிழ்மறை விருந்து நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அதன்பின், பெரிதும் உடல் நலிவுற்றதனிநாயகம் அடிகளார், 1980 செப்டம்பர் 1 மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார்.

தனிநாயகம் அடிகள் பற்றி காரையூர் நா பொன்னையா


தனிநாயகம் அடிகளாரின் பெயரைக் கேட்கின்றபோதெல்லாம் எமக்கு நினைவில் வருவது தமிழ்க்கலாசாரம் என்னும் முத்திங்கள் ஏடும் 1968ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடுமே என்பதில் ஐயமில்லை. தமிழ்க் கலாசாரம் என்னும் தீன் சுவையை அந்நிய மொழியாகிய ஆங்கில மொழிமூலம் தமிழர்களது கலை இலக்கியம் பண்பாடு என்ப்னவ்ற்றை உலகிற்கு பறைசாற்றி வந்துள்ளார் என்பதை தமிழர்களாகிய நாமறிவோம்.

"தமிழ்க் கலாசாரம்" என்னும் முத்திங்கள் ஏடு தமிழர்களுடைய கலை, இலக்கியம், பண்பாடு என்பவற்றை பறைசாற்றி வ்ந்துள்ளது. இந்த ஏடு ஆற்றிவந்த அரும் பெரும் பணி மிகவும் மகத்தானது. இவ்வேடு உலகை வலம் வரச் செய்த பெருமை பிதா தனிநாய்கம் அடிகளாரையே சாரும். கத்தொலிக்க துறவியாக தனது பணியை ஆரம்பித்த தனிநாயகம் அடிகள் காலப்போக்கில் தமிழ் மீது தீராக் காதல் கொண்டு அதனை முறைப்படி கற்றுத் தேர்ந்து ஒரு தமிழ் வளர்க்கும் பரப்பும் தூதராகவும் தமிழ்க் கலாசாரம் ஏட்டின் ஆசிரியராகவும் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்க தொன்றாகும்.

தமிழ் மொழி இந்துக்களுக்கு மட்டும் உரியதன்று. அது சமணர், பௌத்தர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தவர்களுக்கும் உரிய தனித்துவமான மொழி என்று உலகம் முழுவதும் இதன் சிறப்பை தனிநாயகம் அவர்கள் எடுத்துரைத்தார்கள். இதனால் சமய சமரசம் நிலவியது. உலக ஒப்புரவு காணப்பட்டது. இயேசுநாதரின் பொறையும், புத்தரின் அகிம்சையும் நபிகள் நாயகத்தின் சகோதரத்துவமும் சைவரின் அன்பும், வைஷ்ணவரின் சரணாகதிக் கோட்பாடும் தனிநாயகம் அடிகளாரிடம் மலிந்து காணப்பட்டன என்றால் மிகையொன்றும் இல்லை.

தமிழாரய்ச்சி ஆங்கிலேயர் காலத்திற்குப் பின் விருத்தியடைந்ததென்பது தப்பான கருத்தென்பதும் 1500 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்கள் அதற்குச் சான்று பகர்கின்றன என்பதும் அடிகளாரின் துணிந்த கருத்தாகும். இந்நூலை எழுதிய அடிகளார் அவர்கள் இவ்வுலக வாழ்வை நீப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன் அவர் நிகழ்த்திய இரு விரிவுரைகளே இந்நூலாகும் என்பதையும் தமிழிலக்கியத்திற்கு அவர் கொடுத்த இறுதிச் சொத்தாகும் என்பதையும் இந்நூலைப் படிப்போர் அவதானிக்கக் கூடியதாகவிருக்கும். ஆதிகாலம், இடைக்காலம், நவீன் காலம் என்ற முக்காலங்களிலும் தமிநாராய்ச்சி எவ்வாறு தொழிற்பட்டிருகின்றதென்பதை அடிகளார் மிக விரிவாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார். "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று அடிகளார் குறிப்பிடும் புறனானூறு அடிகளும் இங்கும் இடம் பெறுகின்றன. மிகத் தொன்மையான தமிழ் நாகரீகம் சிந்து வெளியில் ஆரம்பமாகி இந்தியாவிலும் இலங்கையிலும் பரவியிருந்தது என்ற அர்ரய்ச்சிக் கருத்தை முன் வைத்தும் ஆதரித்தும் அதற்கான எடுத்துக்காட்டுக்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

1966-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டின் பிரதம அதிதியாக வண தனிநாயகம் அடிகளார் கலந்து கொண்டமை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு பெருமையைத் தோற்றுவித்தது. அவ்வரங்கில் அடிகளார் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் செயற்பட்டு மாநாட்டின் முன்னோடியாகவும் திகழ்ந்தமையைப் பல வட்டாரங்களிலிருந்து கிடைத்த புகழாரங்கள் சான்று பகரும்.

தனிநாயகம் அடிகளார் ஓர் அறிவாளி, ஆன்மீகவாதி. அத்துடன் ஒரு செயல் வீரன். உலகில் உள்ள தமிழர்களை, தமிழறிஞர்களை ஒன்று இணைத்த மாவீரன்! பக்திச்சுவையும் மனிதாபிமானமும், பரந்தநோக்கும், தமிழிலுள்ள ஏனைய சிறப்புகள் என்றும் குறிப்பாக தேவார, திருவாசகங்களிலும் ஆழ்வார்களின் திருப்பாடல்களிலும் பொதிந்தும் மலிந்தும் கிடக்கும் பக்தியுணர்வை நாம் வேறெங்கும் காணமுடியாத பண்டம் என்று கூறுவார். பிதா தமிழ் இனத்தின் விடிவெள்ளி. அவர் ஓர் என்றும் அழியா ஓர் நினைவுச் சிலை எனலாம். தமிழர்களின் மனதில் பதிந்துள்ள அழியாச் சின்னம் என்றே கூறலாம்.

Rev.Father Xavier S.Thani Nayagam, was born in Kayts, Tamil Eelam on 2 August 1913. His primary education was at St.Anthony's College Kayts (1920-1922) and his secondary education was at St.Patrick's College, Jaffna (1923-1930). His undergraduate education was at St.Bernard's Seminary, Colombo (1931 - 1934) where he obtained a B.A. in Philosophy. He obtained his post graduate degrees (M.A. and M.Litt) at Annamalai University in Tamil Nadu.

He served at the University of Malaya as Professor of Indian Studies (1961 - 1969) and was Founder and Chief Editor of Tamil Culture (1951-1959). He died in Jaffna, Eelam on 1 September 1980.

Rev.Father Xavier S.Thani Nayagam was one of the founder members of the International Association for Tamil Research whose first conference was held in Kuala Lumpur in 1966. Later IATR conferences were held in Chennai in Tamil Nadu and in Jaffna in Eelam. Father Thaninayagam delivered the Chelvanayagam Memorial Lectures in April 1980 four months before he passed way on 1 September 1990. Mr. K. Nesiah who was Chairman of the Thanthai Chelva Trust wrote in 1980:

"It was Father Thaninayagam who reminded his people of their great cultural heritage and the noble ethical ideals permeating it. So to speak, he built in them their cultural identity and political personality. And, more this deeply read scholar strode the continents carrying aloft the flag of the Tamil language and culture and drawing many savants into its service. And so came into being, sixteen years ago, the International Association of Tamil Research, linking the world's foremost Tamil scholars who were able to meet successively in Kuala Lumpur, Madras, Paris and Jaffna..."

Father Thaninayagam researched at Annamalai University. His academic qualifications included D.D. (Rome), M.A. M.Litt (Annamalai) and Ph.D. (London).

Professor C J Eliezer on Rev.Father Thaninayagam -


The city of Madurai in South India has an ancient history. From the days BC it has been a centre of Tamil learning. It was the venue for what scholars call the "Third Sangam". If one visits Madurai today, one can see the statues of certain modern scholars of Tamil. One such statue is that of Jaffna's foremost Tamil scholar Father Xavier S. Thani Nayagam. The existence of that statue indicates the esteem, honour and acclaim accorded to him by scholars of Tamil from all over the world.

Fr. Thani Nayagam's natural flair for lamguages developed during his years of training as a monk in Rome. He could read and speak fluently about a dozen languages, including French, German, Italian, Spanish and Portuguese; at Annamalai University he specialised in Tamil; at London, he obtained a PhD in Education.

With this broad background of training and influence he was able to bring a modern outlook to problems of research into Tamil language, literature and culture. He used modern techniques of linguistic research in an area of study where the long tradition had been the uncritical acceptance of points of view of distinguished predecessors. He inaugurated the International Journal called "Tamil Culture", where scholars from different parts of the world reported their research findings.

As worldwide interest in Tamil studies grew he raised with some of the leading scholars the possibility of an International Association of Tamil Research (IATR). The idea received warm support and the association was inaugurated. Professor Filliozat of Paris was President, and the Vice-Presidents were Professors Burrow of Oxford, Emeneau of USA, Kuiper of Hague, Meenakshisundaram of Madurai and M.Varatharajan of Madras, all giants in the field of Tamil studies. Fr. Thani Nayagam accepted the position of Secretary General. The first in the series of Conferences was held in 1966 in Kuala Lampur. The university and the Government of Malaysia gave great support, Tamil being one of the four official languages of Malaysia. Fr. Thani Nayagam did the hard work of organising the conference, he was assisted by many persond including Prof S Arasaratnam, Mrs Loga Sivasubramaniam, My wife and my-self - mentioning those who are in Australia today. The conference was opened by the Prime Minister Tunku Abdul Rahman, and proved an enormous success, with well known scholars from about twenty five countries participating.

I first came to know the Father about forty years ago in the University of Ceylon which he joined as a lecturer in education. Later on he became the Professor in Indian Studies in the University Malaya in Kuala Lampur where I was Professor of Mathematics. Those years brought us together a good deal and we became good friends. It was further cemented by rounds of golf at the Royal Selangor Golf Club and the numerous dinners we hosted to meet the world scholars.

I end this short tribute with his most telling quote:

"If Latin is the Language of Law and of Medicine
French the Language of the Diplomacy
German the Language of Science
And English the Language of Commerce
Then Tamil is the Language of Bhakti
The devotion to the sacred and the holy."


2010/12/14 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages