தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றி கேள்வி கேட்க, பதில் தர, உரையாட ஒரு களம் உதயமானது இன்று.

15 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Jun 11, 2022, 1:53:53 PM6/11/22
to mint...@googlegroups.com, panbudan, vallamai, tamilmanram, cyber...@gmail.com

நீண்ட நாள் பெருங் கனவு நனவானது இன்று.

தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றி கேள்வி கேட்க, பதில் தர, உரையாட ஒரு களம் உதயமானது இன்று.

எனக்கு எப்போதும் பெரிய கனவுகள் காணவும், அவற்றை நனவாக்கவும் சொல்லித் தந்து உறுதுணை புரிவது சென்னை லினக்ஸ் பயனர் குழு.

இன்றைய குழு சந்திப்பில்

https://forums.tamillinuxcommunity.org/ 11

என்ற உரையாடல் களத்தை வெளியிட்டோம்.

இங்கு தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றிய எதையும் கேட்கலாம். நீங்களும் பதில் சொல்லலாம்.

தமிழ் தட்டச்சு சிக்கல் எனில் ஆங்கிலத்திலும் கேட்கலாம்.

இரு மொழிகள் போதும். தங்கிலீஷ் போன்ற மூன்றாவது மொழிகள் தவிர்க்கவும்.

கடை திறத்தாச்சு. கொள்வதும் கொடுப்பதும் இனி உங்கள் வசம்.

கணியம் குழுவின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதரவை அள்ளித் தருவது போலவே இதற்கும் உங்கள் ஆதரவு நல்குக.

பெருங் கனவு நனவாக உதவிய மோகன் (https://ilugc.in) , தனசேகர் ( kanchilug.WordPress.com 1) , பயிலகம் முத்து ராமலிங்கம் (payilagam.com )ஆகியோருக்கு பல்லாயிரம் நன்றிகள்.

அங்கு கேள்வி கேட்போருக்கும் , பதில் தருவோருக்கும் தமிழ் அறிவுலகத்துக்கு உதவும் பெரு மகிழ்ச்சி என்றும் கிடைக்கட்டும்.

உரையாடல் களத்தில் சந்திப்போம்.--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com

Reply all
Reply to author
Forward
0 new messages