பெரியாழ்வாரின் பிறந்தநாள்!

100 views
Skip to first unread message

shylaja

unread,
Jun 22, 2010, 12:52:09 AM6/22/10
to பண்புடன்



-- ஆண்டாள்்மீது பெரியாழ்வார் கொண்ட பாசத்தின்  வேறெந்த தந்தை-மகளுக்கிடையே இப்படி ஒரு பாசப்பிணைப்பு இருக்குமா என்றால் அது சந்தேகமே!

ஆண்டாளைப்பற்றிப்பாடும்போது ’பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!’ என்கிறார்கள். இத்தனைக்கும் அவர் துளசிக்குவியலில்தான் ஆண்டாளைக்கண்டுபிடித்திருக்கிறார். பெற்ற பெருமை இல்லாதவருக்குக்கிடைத்த பேற்றினைப்பாருங்கள்!

’பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலைமுப்பதும் தப்பாமே’ என்கிறாள் ஆண்டாளே தான் வடித்த திருப்பாவைப்பாடலில். அப்பாவும் பெண்ணும் மாறிமாறி அன்பைப்பரிமாறிக்கொள்கிறார்கள்.

தான் சூடிய மாலையை இறைவனுக்குச்சூட்டிட அதனை தந்தையிடம்கொடுத்த துணிச்சல்காரியான பெண் ஆண்டாள்.

அந்த நாளிலேயே பெண் சுதந்திரம் இருந்திருக்கிறதென்பதற்கு ஆண்டாளின்
நாச்சியார் திருமொழி வாசகங்களே போதும். அப்படி ஒரு சுதந்திரத்தை அவளுக்கு அளித்தவர் பெரியாழ்வார் என்றால்மிகை இல்லை.


மகளின் ஆசையைபூர்த்தி செய்து அவளை திருமாலுடன் சேர்த்துவைத்து வீடுவந்தவர் மகளின் பிரிவில் மனம் தவிக்கிறார். செங்கண்மால்தான் கொண்டுபோனான் என மனதைத்தேற்றிக்கொள்ள பிரயத்தனப்படுகிறார்.ஆனாலும் பாசம் மனசை வழுக்கிவழுக்கி நினைவுகளை பின்னோக்கி இழுத்துச்செல்கிறது.மகளோடு கூடிக்கழித்த நாட்களை அசை போடுகிறது.

’நல்லதோர் தாமரைப்பொய்கை
நாண்மலர் மேல்பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு
அழகழிந்தாலொத்ததாலோ
இல்லம் வெறியோடிற்றாலோ
என்மகளை எங்கும் காணேன்
மல்லரையட்டவன் பின்போய்
மதுரைப்புறம் புக்காள்கொலோ’
 
 
கண்ணில் நீர்மல்கப்பாடுகிறார் பெரியாழ்வார்.

கண்பனித்தது என்பார்கள்.
ஆமாம் பெரியாழ்வாருக்கு மகள் மணமாகிசென்றதும் கண்பனித்துத்தான் போனது.
அவரது விழிகளாகிய தாமரைக்கு மகள் எனும் சூரிய ஒளி இல்லாமல்போய்விட்டதாம்.
பனிவந்து தாமரையைச் சூழ்கிறதாம். பனிகண்டமலர் விரியுமோ?

பெண்ணிருந்தவரை இல்லம் தாமரைப்பூத்த பொய்கையாய் அழகாக இருந்ததாம்.இப்போது பனிபெய்வதால் இதழ்கள் உருகிக்கருகிவிட்டதாம்,கொடி மொட்டையாய் நிற்கிறது இதுபோல வீடு அழகழிந்து வெறியோடிவிடுகிறது.

நம் மனதிற்குப்பிரியமானவர்கள் பிரிந்துவிட்டால் இல்லமென்ன நம் உள்ளமே ’வெறிச்’ என்றுபோய்விட்டதாய் சொல்கிறோம் அல்லவா? அதைத்தான் ஆழ்வார் இந்தப்பாடலில் சொல்லி இருக்கிறார்.




பொய்கையின் படம் பெரியாழ்வாரின் சொற்சித்திரத்தில் மனதில் பதிந்துவிடுகிறது.கவிதைக்கென்று தனி வார்த்தைகள் இல்லையென்று காட்டிவிட்டார் பெரியாழ்வார், ஆமாம் உலகத்தில் வழங்கிவரும் சொற்களை வைக்கிற இடத்தில் வைத்தால் அவைகளுக்கு அபூர்வ சக்தி ஏற்பட்டுவிடுகிறது என்பது உண்மைதானே!


Lavanya Sundararajan

unread,
Jun 22, 2010, 12:57:04 AM6/22/10
to panb...@googlegroups.com
பெரியாழ்வார் திருவ‌டிக‌ளே ச‌ர‌ண‌ம். அக்கா பெரியாழ்வார் பாசுர‌ங்க‌ளை ப‌கிருங்க‌ளேன் த‌னியிழையொன்றில் அல்ல‌து இதே இழையில். தின‌மொரு பாசுர‌ம் ப‌டிச்சா கூட‌ ஆயுள் முடியும் முன் நாலாயிர‌ம் திவ்ய‌ப்ர‌ப‌ந்த‌ம் முடியாத‌ ப‌ந்த‌ம்...

shylaja

unread,
Jun 22, 2010, 1:07:46 AM6/22/10
to panb...@googlegroups.com
பெரியாழ்வாரின் பாசுரங்களை  விரைவில் ஆரம்பிக்கலாம் லாவண்யா.!.தமிழை அழகாய்க்  கையாண்டவர் இவர்! கண்ணனின் சிறுவயது  விளையாட்டுத்தனங்களைப்பற்றிக்கூறும்போது விஷமம் என்ற சொல்லைத்தவிர்த்து அதற்கு தூய தமிழ்ச்சொல்லாகிய கழகண்டு என்ற சொல்லினை   பாடல் ஒன்றில் இட்டிருக்கிறார்!
 
 
எண்ணெய்க் குடத்தை உருட்டி
இளம்பிள்ளை கிள்ளி எழுப்பி
கண்ணைப் புரட்டி விழித்துக்
கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவேன்
ஒலிகடல் ஓத நீர் போலே
வண்ணம் அழகிய நம்பீ
மஞ்சனமாட நீ வாராய்
 
 
இதுபோல நிறைய உள்ளன. நேரமிருந்தால்  அளிக்க இயலும் நன்றி லாவண்யா.

2010/6/22 Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com>
பெரியாழ்வார் திருவ‌டிக‌ளே ச‌ர‌ண‌ம். அக்கா பெரியாழ்வார் பாசுர‌ங்க‌ளை ப‌கிருங்க‌ளேன் த‌னியிழையொன்றில் அல்ல‌து இதே இழையில். தின‌மொரு பாசுர‌ம் ப‌டிச்சா கூட‌ ஆயுள் முடியும் முன் நாலாயிர‌ம் திவ்ய‌ப்ர‌ப‌ந்த‌ம் முடியாத‌ ப‌ந்த‌ம்...

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
***      

வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி
மலர்ப்பாதக் கிண்கிணி யார்ப்ப
நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத
நாராயணா இங்கே வாராய்
எண்ணற்கரிய பிரானே திரியை
எரியாமே காதுக்கிடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய
கனக் கடிப்பு மிவையா”...
 

பெரியாழ்வார்...

Lavanya Sundararajan

unread,
Jun 22, 2010, 1:13:58 AM6/22/10
to panb...@googlegroups.com
அக்கா ரொம்ப‌ ந‌ல்லா இருக்கு. த‌ய‌வு செய்து நேர‌ம் ஒதுக்கி இந்த‌ சேவையை எங்க‌ளுக்காக‌ செய்யுங்க‌ள். க‌ழ‌க‌ண்டு அருமையான‌ வார்த்தை. இந்த‌ பாட‌ல் அப்ப‌டியே காட்சியை க‌ண்முன் கொண்டு வ‌ருது. கிரேட்....


Lavanya Sundararajan

unread,
Jun 22, 2010, 1:14:38 AM6/22/10
to panb...@googlegroups.com
யாரிட‌மேனும் இவை கோப்பு வ‌டிவில் இருந்தால் ப‌கிருங்க‌ளேன்.


shylaja

unread,
Jun 22, 2010, 3:12:53 AM6/22/10
to panb...@googlegroups.com


2010/6/22 Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com>

யாரிட‌மேனும் இவை கோப்பு வ‌டிவில் இருந்தால் ப‌கிருங்க‌ளேன்.
 
 
 
<<<<<>>>>>>>..இழையை மொக்கையாக்கி கேட்டுப்பாரு லாவண்யா, ஒருவேளை கிடைக்கலாம்:):)



--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

சென்ஷி

unread,
Jun 22, 2010, 3:14:46 AM6/22/10
to panb...@googlegroups.com
:))

என்கிட்டே இல்லையக்கா. ஆழ்வார், பாசுரம்ன்னா எனக்குத் தெரிஞ்சு இருவர் ஜீவ்ஸும், லாவண்யாவும் மாத்திரம்தான். அவங்ககிட்டே கேட்டுப் பார்க்கிறேன்.

2010/6/22 shylaja <shyl...@gmail.com>

Jeevaa KS

unread,
Jun 22, 2010, 3:24:21 AM6/22/10
to panb...@googlegroups.com
ப்ராஜக்ட் மதுரைல பார்த்த நினைவு. தேடி தரேன்

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/6/22 சென்ஷி <senshe...@gmail.com>

Lavanya Sundararajan

unread,
Jun 22, 2010, 3:27:21 AM6/22/10
to panb...@googlegroups.com
ப்ராஜக்ட் மதுரை இருப்ப‌தை த‌விர‌ வேறு யாரிட‌மானும் விள‌க்க‌தோடு கோப்பிருக்கிற‌தா. திருப்பாவை/நாச்சியார் திருமொழி கோப்பு சில‌ நாட்க‌ளுக்கு முன் கிடைக்க‌ பெற்றேன். அது போல‌ இருக்கின்ற‌தா என்று தெரிய‌வில்லை


சென்ஷி

unread,
Jun 22, 2010, 3:31:34 AM6/22/10
to panb...@googlegroups.com
கேஆர் எஸ்-இடம் இருக்குமென்று நினைக்கிறேன். அவரது தளத்தில் பார்த்த ஞாபகம்..

2010/6/22 Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com>
ப்ராஜக்ட் மதுரை இருப்ப‌தை த‌விர‌ வேறு யாரிட‌மானும் விள‌க்க‌தோடு கோப்பிருக்கிற‌தா. திருப்பாவை/நாச்சியார் திருமொழி கோப்பு சில‌ நாட்க‌ளுக்கு முன் கிடைக்க‌ பெற்றேன். அது போல‌ இருக்கின்ற‌தா என்று தெரிய‌வில்லை

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

சென்ஷி

unread,
Jun 22, 2010, 3:37:37 AM6/22/10
to panb...@googlegroups.com

Lavanya Sundararajan

unread,
Jun 22, 2010, 3:39:43 AM6/22/10
to panb...@googlegroups.com
திருப்பாவை வேண்டாம். என‌க்கு பெரியாழ்வார் ந‌ம்மாழ்வார் பாசுர‌ங்க‌ள் ப‌டிக்க‌னும் என்று ஆசை


சென்ஷி

unread,
Jun 22, 2010, 3:41:24 AM6/22/10
to panb...@googlegroups.com

சென்ஷி

unread,
Jun 22, 2010, 3:45:38 AM6/22/10
to panb...@googlegroups.com
எனக்கு ரொம்பப் பிடிச்ச இடுகை..

*********

Copy Cat KRS! பொறந்த குழந்தை குளிப்பாட்டுவது எப்படி?

என்ன மக்கா, யாராச்சும் பச்சைக் குழந்தையை, பெரியவங்க பக்கத்தில் இல்லாம, மொத மொதலா, தானாத் தூக்கி இருக்கீங்களா? :)
வீராதி வீரனுக்கும் பயம்-ல்ல? பிஞ்சுப் பூவை பார்க்கப் பிடிக்கும்! ஆனா தூக்க?

குழந்தைகள் உலகில் பிறக்கும் போது, தங்களுக்கு-ன்னு ப்ளான் போட்டு எதுவும் கையோடு கொண்டு வருவதில்லை! ஏதோ ஒரு தைரியத்தில், நம்மள பாத்துப்பாங்க-ன்னு வெளீல வருது-ல்ல? :))

* புதுசா வரப் போகும் நோக்கியா லேப் டாப்புக்கு பயனர் குறிப்பு (User Manual) கொடுப்பாய்ங்க!
* புதுசா பொறக்கும் குழந்தைக்கு என்ன Manual கொடுத்து அனுப்புவாரு கடவுள்? :)

நோக்கியாவில் பாட மாட்டேங்குதே-ன்னு எத்தை எத்தையோ அழுத்த,
திடீர்-ன்னு மொத்த ஆபீசுக்கும் கேக்குறாப் போல....
"ஹே...எலந்தப் பயம், எலந்தப் பயம்"-ன்னு எதிர்பாராம நோக்கியா கூவினா எப்படி இருக்கும்? :)

அதே போல் பிச்சிப்பூ=பிஞ்சுப்பூ! அதை இயக்கத் தெரியாமல் இயக்கும் போது,
* திடீர்-ன்னு நம்மள பாத்து,
* பொக்கை வாய் திறந்து,
* ஹா ஹா-ன்னு சிரிக்கும் முதல் சிரிப்பூபூபூ! அன்று முதல், குழந்தையை இயக்கத் தெரிந்து விடும்! :))



சரீ...
பச்சைக் கொழந்தையைக் கூட Spa-வுக்கு கூட்டிப் போயிக் குளிப்பாட்டும் காலம் இது! :))
நம்ம ஊரு இஷ்டைல்-ல, ஃபிரஷ்ஷா குழந்தையைக் குளிப்பாட்டுவது எப்படி? பார்க்கலாமா?

"அட, ஆம்பிளைப் பசங்க இப்படியெல்லாம் பதிவு போட்டாச் செல்லுமா? அதுக்கெல்லாம் நக்கலா, நறுவிசா, பொம்பளைங்க தான் பதிவு போடணும் கேஆரெஸ்! :)"

"அட, இந்தப் பதிவை நான் போடலீங்க!
பெரியாழ்வார் என்னும் பொம்மனாட்டி தான் இந்தப் பதிவு போடறாரு!" :)

"அடப் பாவி! டகால்ட்டி ரவி! அங்க கை வச்சி, இங்க கை வச்சி, இப்ப ஆழ்வார் மேலயே கை வச்சிட்டியா நீயி?" :)

"ஹிஹி! அட, சத்தியமாச் சொல்லுறேன்! பொறந்த குழந்தையைக் குளிப்பாட்டுறது எப்படி?-ன்னு பெரியாழ்வார் தாங்க சொல்லிக் குடுக்கறாரு!" :))"

* பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே-ன்னு, பெண்ணை மட்டுமா "பெற்று, எடுத்தாரு"?
* பெரியாழ்வார் என்றிட்ட பெண் மணியும் வாழியே-என்னும் படிக்கு, ஒரு பெண்ணை விடவும் அக்கறையாச் சொல்லிக் குடுக்கறாரு, குழந்தை வளர்ப்பை!

சேச்சே! என்ன இருந்தாலும் பொண்ணுங்க பாத்துக்குறா மாதிரி வருமா? ஆம்பிளைக்கு எப்படிங்க இதெல்லாம் தெரியும்?


உலக நடைமுறைக்கு ஆண்-பெண் வேறுபாடுகள் உண்டு! உலகத்துக்காக அந்த வேறுபாடுகளை மீற முடியாது! உண்மை தான்!

* ஆனால் உங்கள் ஆன்மா = ஆணா? பெண்ணா?

ஆன்மாவின் உணர்ச்சிகளை ஆண் என்பதா? பெண் என்பதா? ஆணாகட்டும், பெண்ணாகட்டும், அனைவரும் விழைவது = "நிறைவு"!
ஆணுக்கொரு நிறைவு, பெண்ணுக்கொரு நிறைவு என்ற பேதமில்லை! அனைவர்க்கும் "நிறைவு" வேணும்! நீங்காத செல்வம் "நிறைந்து"...!

* எம்பெருமான் குழந்தையாய் முன்னே வந்தால் = ஆன்மா "தாய்" ஆகிறது!
* எம்பெருமான் காதலனாய் முன்னே வந்தால் = ஆன்மா "காதலி" ஆகிறது!

தோடா, போங்கா இருக்கே? ஏம்ப்பா ஒங்க கடவுள் காதலியாய் எல்லாம் வர மாட்டாரா(ளா)? எப்பமே அவரு ஆண் தானா? ........ஹிஹி! வருவான்(ள்)!

*** எம்பெருமான் காதலியாய் முன்னே வந்தால் = ஆன்மா காதலன் ஆகிறது!
கோதை அப்பப்போ இப்படிக் காதலனாக மாறுவாள்!
ஆணைப் போல் அடாவடி செய்வாள்! அவனோ அப்பாவிக் காதலியாக மாறுவான்! :)

அதெல்லாம் இந்தப் பதிவில் சொன்னால், என் தலை உருளும்! "நாயகி பாவம்" கொஞ்சம் டேஞ்சரான டாபிக்! :)
ஆனா ஆழமான டாபிக்! உண்மையான டாபிக்! இது பற்றி இன்னொரு நாள் விரிவாச் சொல்லுறேன்! :)

இன்னிக்கு முக்கியமா கவனிக்க வேண்டியது...பெரியாழ்வார் தாய் ஆனார்(ள்)! இதோ, பச்சைக் குழந்தையைக் குளிப்பாட்டும் டிப்ஸ்! :)


மாதவிப் பந்தலில் முதன் முறையாக, இன்னொரு வலைப்பூவில் இருந்து, காப்பி அடிக்கப்பட்ட வரிகள்....இனி.......

குழந்தைப் பிறந்தவுடனேயே, கருவிற்குள் மடங்கிய நிலையிலேயே இருப்பதால், அதனைக் குளிப்பாட்டும் பொழுது,
* உடலை நன்றாக உருவிவிட்டு,
* கைகளை முன்னும் பின்னும் மடக்கி,
* கால்கள் வளைந்துவிடாது இருப்பதற்காக,
* அதை நன்கு விரைப்பாக நீட்டிப் பிடித்து வெந்நீரை ஊற்றுவர்.

* குழந்தையின் உடலுக்கு உறுதி தரும் வண்ணம்
* குளிப்பாட்டும் பொழுது இயன்ற வகைகளில் கை காலை மடக்கி,
* சில உடற்பயிற்சிகளைச் செய்வர்
* இதனால், குழந்தையின் உடலும் நல்ல வடிவம் பெறும்.

கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பைய வாட்டிப் பசுஞ் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே!


கையும் காலும் நிமிர்த்துக் - குழந்தையின் கை, கால்களை நன்கு உருவி விட்டு, கால்கள் வளைந்து விடாது இருப்பதற்கு, அதனை நிமிர்த்தி விடுவதற்காக,

கடார நீர் - அகன்ற, பெரிய கொப்பரையில் நீரூற்றி

பைய வாட்டிப் - அதை தள புளா ன்னு ல்லாம் கொதிக்க விடாம, நல்ல வெதுவெதுப்பாக சுடவைத்து, மிதமான வெண்ணீராக்கி, பைய - மெதுவாக, மெல்ல; வாட்டி - சூடு செய்து;

பசுஞ் சிறு மஞ்சளால் - பசுமையான பிஞ்சு மஞ்சளை, மைய அரைத்து

ஐய நா வழித்தாளுக்கு, அங்காந்திட - தலைவனின் நாவினை வழிப்பதற்காக, குழந்தையின் வாயைத் திறந்திட்ட போது, (ஐய - தலைவன்; அங்காத்தல் - வாய்திறத்தல்)

வையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே - ஏழு உலகத்தையும் குழந்தை கண்ணனின் வாயினுள் யசோதை கண்டாளே.

காப்பி அடிப் படலம் முடிந்தது! :))



அருமையா விளக்கம் கொடுத்திருக்காங்க-ல்ல? யாரோட வலைப்பூ-ங்க இது?
இவங்க ஆம்பிளைப் பதிவரா? பொம்பளைப் பதிவரா? Keep Guessing! :)

அந்தப் பதிவுக்கு, என்னோட பின்னூட்டம்...
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட =
ஹைய்யோ....அந்தச் சின்னக் கண்ணனின் தேனமுத வழிசல் அடிசனை,
அமிழ்தினை... எனக்கே தர வேணுமாய்
இப்போதைக்கு அப்போதே சொல்லி வைத்தேன் கண்ணா! மணிவண்ணா! என்றன் மனச்சுடரே! :))

என்ன அழகான தமிழ்ச் சொல்லாட்சி பாருங்க!
* பைய வாட்டி = மெல்லிசா....வெது வெதுப்பா....தண்ணி விளாவி
* அங்காந்திட = ங்ங்ங்..ஆந்திட-ன்னு சொல்லும் போதே "ங்ஆஆ"-ன்னு வாய் தொறந்து காட்டுறது தெரியுதுல்ல? அடடா! எழுத்துல ஒரு ஓவியமா?

கண்ணன் வளர்ந்த பின், மண்ணை உண்ணும் போது தான் யசோதைக்கு உலகம் காட்டுவான்-ன்னு சொல்வாங்க!
ஆனால் இங்கு ஆழ்வாருக்கு அது வரை வெயிட் பண்ண பொறுமை இல்லை போல! :) பொறந்த கொழந்தை நாக்கு வழிக்கும் போதே, வாய்க்குள் உலகம் பாத்துடறாரு! நமக்கும் காட்டிடறாரு! :)



And here we go...Baby Bathing For Dummies...Tips by krs baby :))

1. குழந்தையைக் குளிப்பாட்ட, தொப்புள் கொடி காய்ந்து உதிர வேண்டும்-ன்னு பொதுவாச் சொல்லுவாய்ங்க! ஆனா இப்பல்லாம் அதுக்கு முன்னயே குளிப்பாட்டுறாங்க!

2. தண்ணி இளஞ் சூட்டுல இருக்கணும்! கையை விட்டு விளாவுங்க! Mug-ல விளவாதீங்க! உங்க கைக்குச் சூடு தெரியணும்!

3. ரெண்டு/மூனு குடம் தண்ணியை முன்னாடியே எடுத்து பக்கத்துல வச்சிக்குங்க! அப்பாலிக்கா எடுத்துக்கலாம்-ங்கிற போக்கு வேலைக்காவாது!
புதுசா குளிப்பாட்டறவங்களுக்கு, இன்னொரு ஆளு, பக்கத் துணைக்கு இருந்தா, இன்னும் வசதி!

4. சின்ன டப்பில் வைத்தும் குளிப்பாட்டலாம். ஆனா கால்-ல கவிழ்த்து போட்டுக் குளிப்பாட்டுற மாதிரி வராது! ஒன்னும் பயமே இல்லை! ஈசி தான்!

காலை நல்லா நீட்டி, ரெண்டு காலுக்கும் கேப் கொடுக்காம, குழந்தையின் தலையை, கால் இடுக்கில் தங்குறாப் போல வச்சிக்கிடணும்! அம்புட்டு தான்!
(குறிப்பு: ஆனா, அதுக்கப்பறம் எக்காரணம் கொண்டும், அந்தக் கால் Position-ஐ மாத்தக் கூடாது! உங்க காலை விரிக்கப்படாது! குழந்தை மேலயே ஒரு கண்ணு இருக்கணும்)

5. குளியலுக்குப் பயந்து குழந்தை அழுதா பேச்சு குடுங்க! பாடுங்க! அது கண்ணைப் பாத்துச் சிரிங்க! பேச்சு குடுத்துக்கிட்டே குளிப்பாட்டுங்க! அழுகை ஓரளவு நிக்கும்! :)



6. பேபி சோப்பு போடலாம் தான்! ஆனா துளசி கலந்த பச்சைப் பருப்பு மாவு! அதை பால்/வெண்ணையில் கலந்து, தேய்ச்சிக் குளிப்பாட்டினா, இன்னும் ப்ரெஷ்!
பள பள! மொழு மொழு! :) ஆனா மூஞ்சில, கண்ணு கிட்ட ரொம்ப தேய்க்காதீக!

7. மொதல்ல உடம்பில் தண்ணி ஊத்தி, அப்புறமா தலையில் தண்ணி ஊத்தணும்! அப்போ தான் ஏலும்! ஓக்கேவா?
நல்லா வேகம் வேகமா ஊத்தணும்! விட்டு விட்டு ஊத்தினா குளிரும்! கோயில்ல தீர்த்தம் கொடுக்குறாப்பல, பவ்யமா, பம்மி பம்மி எல்லாம் ஊத்தக் கூடாது! நல்லா சரக் சரக்-ன்னு ஊத்தணும்! :)

8. கை-காலை உருவி விடுங்க! கை-கால்களை முன்னும் பின்னும் லேசா மடக்கி, உடற் பயிற்சி மாதிரி உருவி விட்டுக்கிட்டே தண்ணி ஊத்துங்க!

9. அப்படியே குழந்தையைக் காலில் கவுத்துப் போடுங்க! முதுகில் வேகமாத் தண்ணி ஊத்தி, பிட்டத்தில் வேகாமத் தண்ணி ஊத்தி சுத்தப்படுத்திறணும்! கொழந்தய உடனே நிமித்திருங்க! ரொம்ப நேரம் கவுந்தடிக்கக் கூடாது! அவ்ளோ தான் குளியல்!

10. நல்லாத் தெரிஞ்சவங்க, குளிப்பாட்டும் போதே, சுண்டு விரலையோ, காய்ஞ்ச மஞ்சள் துண்டையோ வச்சி, நாக்கை வழிக்கலாம்! பயமா இருந்தா பண்ண வேணாம்! :)



11. பாத்திரம்/Mug-இல் உள்ள கடைசித் தண்ணியை, மூனு சுத்து சுத்தி, குழந்தைக்குத் திருஷ்டி கழிச்சி, காலுக்கு கீழே ஊத்துங்க! திருவந்திக் காப்பு-ன்னு இதுக்குப் பேரு!

12. தரையில் உள்ள மெத்தையிலோ (அ) கட்டிலிலோ கிடத்தி, மென்மையாப் பூ துவாலையால் நல்லாத் துவட்டுங்க - தலை, ஒடம்பு, எல்லாத்தையும்!
கண்ணுல ஊளை இருந்தா லைட்டா எடுத்து விடுங்க! பிறப்பு உறுப்புகளையும் சுத்தமாத் தொடைச்சி விடணும்!

13. அப்பறம் உடம்பு முழுக்க பவுடர் பூசி, முடிஞ்சா கண்ணில் மை பூசி, கன்னத்தில் ஒரு மைப் பொட்டு வைங்க! மாறி மாறி வைக்கணும்! ஒரு முறை வலக்கன்னம்! அடுத்த தபா இடக் கன்னம்! அப்படியே இச்-ன்னு ஒரு உம்மா கொடுங்க! :)
ஒங்க கண்ணே படப் போவுது! விரல்களால் தலையைச் சுத்தி நெட்டி முறிங்க! :)

14. உடனே சட்டை, ஜட்டி, டயாப்பர்-ன்னு மாட்டி விட வேணாம்! கொஞ்சம் ஃப்ரீயா இருக்கட்டுமே!
நீங்களும் கீழ் அழகைப் பாத்து ரசிக்கலாம்-ல்ல? இப்பவே பாத்துக்கிட்டா தான் ஆச்சி! அப்பறமெல்லாம் முடியவே முடியாது! :)))

15. கூடைக்குக் கீழ் சாம்பிராணிப் புகை போட்டு, குழந்தையைக் கூடை இடுக்கில் காட்டிப் புடிச்சா, நாளெல்லாம் வாசம் தான்!
ஆனா இப்பல்லாம் யாராச்சும் சாம்பிராணிப் புகை போடறாங்களா என்ன? சரியான மட சாம்பிராணிங்க! இத போயி மிஸ் பண்ணலாமா?......சொர்க்கம்! :)



சரி, சரி.....என்னாது? கேஆரெஸ் காப்பியடிச்ச அந்தப் பெரியாழ்வார் பாசுர வலைப்பூ எது-ன்னு கேக்கறீயளா? :)

ஹிஹி! பந்தலில் தினுசு தினுசா கேள்வி கேட்டுப் பின்னூட்டம் இடும் தம்பதிகள்!
- முகிலரசி & தமிழரசன் - அவிங்க குட்டிப் பையன் இளமாறன்! இவர்களுடன், முகவை மைந்தன் மற்றும் நம்ம சத்தியா...இவிங்க எல்லாரும் சேர்ந்து,

* ஆழ்வார் அருளிச் செயல்கள் மொத்த நாலாயிரத்துக்கும்,
* கொஞ்சம் கொஞ்சமா விளக்கம் சொல்லத் துவங்கி இருக்காய்ங்க!
* அதில் ஒன்று தான், இந்த "ங்ங்ங்..ஆந்திட, நா வழித்தாள்"!
* அனைவரும் அவசியம், வாசித்துப் பாருங்கள்!

இதோ http://aazhvarmozhi.blogspot.com
நான்காயிரம் அமுதத் திரட்டு!
மதம் சார்ந்ததல்ல... தமிழ் சார்ந்தது...


** பந்தலில், உங்க எல்லாருக்கும், இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்துவதில் - அரிமுகப் படுத்துவதில், அடியேன் சாலவும் மகிழ்கிறேன்!
** மாதவிப் பந்தல் மேல்...பல் கால் குயில் இனங்கள்...கூவின காண்!

சரி சரி, பேசுனது போதும்!
சேயோன் என்னும் மீசை வழிச்ச ஒரு பெரீய்ய்ய புள்ளையாண்டானைக் குளிப்பாட்டணும்!
ஸோ, வர்ட்டா ஸ்டைலில் வர்ட்டா?
டேய் முருகா, வெக்கம் இல்லாதவனே! ஒழுங்கா பாத் டப்புல போயி நில்லுடா! தோ வாரேன்! :)))

சென்ஷி

unread,
Jun 22, 2010, 3:53:58 AM6/22/10
to panb...@googlegroups.com

சென்ஷி

unread,
Jun 22, 2010, 3:58:57 AM6/22/10
to panb...@googlegroups.com

ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி





முதல் பத்து


முதல் திருமொழி - வண்ண மாடங்கள்


(கண்ணன் திருவவதாரச் சிறப்பு)

கலிவிருத்தம்

13 வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக்
கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே.
 1

14 ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே.
2

15 பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில்
காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார்
ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் திரு
வோணத்தா நுலகாளுமென்பார்களே.
3

16 உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார்
நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார்
செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியரே.
4

17 கொண்டதாளுறி கோலக்கொடுமழு
தண்டினர் பறியோலைச்சயனத்தர்
விண்டமுல்லை யரும்பன்னபல்லினர்
அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார்.
5

18
கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர்
பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால்
ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட
வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே.
6

19 வாயுள்வையகம்கண்ட மடநல்லார்
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்
பாயசீருடைப் பண்புடைப்பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே.
7

20 பத்துநாளும்கடந்த இரண்டாநாள்
எத்திசையும் சயமரம்கோடித்து
மத்தமாமலை தாங்கியமைந்தனை
உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே.
8

21 கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும்
எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும்
ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய்.
9

22 செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர்
மன்னுநாரணன் நம்பிபிறந்தமை
மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த இப்
பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே.
 10


இரண்டாம் திருமொழி - சீதக்கடல்


(கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

23 சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே
பவளவாயீர். வந்துகாணீரே.
 1

24 முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
ஒண்ணுதலீர். வந்துகாணீரே.
2

25 பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை
அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை
இணைக்காலில் வெள்ளித்தளைநின்றிலங்கும்
கணைக்கால்இருந்தவாகாணீரே
காரிகையீர். வந்துகாணீரே.
3

26 உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண
இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின்
பழந்தாம்பாலோச்சப் பயத்தால்தவழ்ந்தான்
முழந்தாள்இருந்தவாகாணீரே
முகிழ்முலையீர். வந்துகாணீரே.
4

27 பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
குறங்குவளைவந்துகாணீரே
குவிமுலையீர். வந்துகாணீரே.
5

28 மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்
முத்தமிருந்தவாகாணீரே
முகிழ்நகையீர். வந்துகாணீரே.
6

29 இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை
பருங்கிப்பறித்துக்கொண்டு ஓடுபரமன்தன்
நெருங்குபவளமும் நேர்நாணும்முத்தும்
மருங்கும்இருந்தவாகாணீரே
வாணுதலீர். வந்துகாணீரே.
7

30 வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து
தந்தக்களிறுபோல் தானேவிளையாடும்
நந்தன்மதலைக்கு நன்றுமழகிய
உந்திஇருந்தவாகாணீரே
ஒளியிழையீர். வந்துகாணீரே.
8

31 அதிரும்கடல்நிறவண்ணனை ஆய்ச்சி
மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்த
பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த
உதரம்இருந்தவா காணீரே
ஒளிவளையீர். வந்துகாணீரே.
9

32 பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு
இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை
குருமாமணிப்பூண் குலாவித்திகழும்
திருமார்புஇருந்தவாகாணீரே
சேயிழையீர். வந்துகாணீரே.
10

33 நாள்களோர்நாலைந்து திங்களளவிலே
தாளைநிமிர்த்துச் சகடத்தைச்சாடிப்போய்
வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான்
தோள்கள்இருந்தவாகாணீரே
சுரிகுழலீர். வந்துகாணீரே.
11

34 மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற
செய்த்தலைநீலநிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய
கைத்தலங்கள்வந்துகாணீரே
கனங்குழையீர். வந்துகாணீரே.
12

35 வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு
அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய
கண்டம்இருந்தவாகாணீரே
காரிகையீர். வந்துகாணீரே.
13

36 எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு
அந்தொண்டைவாயமு தாதரித்து ஆய்ச்சியர்
தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும் இச்
செந்தொண்டைவாய்வந்துகாணீரே
சேயிழையீர். வந்துகாணீரே.
14

37 நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால்
நாக்குவழித்து நீராட்டும்இந்நம்பிக்கு
வாக்கும்நயனமும் வாயும்முறுவலும்
மூக்கும்இருந்தவாகாணீரே
மொய்குழலீர். வந்துகாணீரே.
15

38 விண்கொளமரர்கள் வேதனைதீர முன்
மண்கொள்வசுதேவர்தம் மகனாய்வந்து
திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான்
கண்கள்இருந்தவாகாணீரே
கனவளையீர். வந்துகாணீரே.
16

39 பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய
திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற
உருவுகரிய ஒளிமணிவண்ணன்
புருவம்இருந்தவாகாணீரே
பூண்முலையீர். வந்துகாணீரே.
17

40 மண்ணும்மலையும் கடலும்உலகேழும்
உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு
வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை
திண்ணம்இருந்தவாகாணீரே
சேயிழையீர். வந்துகாணீரே.
18

41 முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும்
சிற்றிலிழைத்துத் திரிதருவோர்களை
பற்றிப்பறித்துக்கொண்டு ஓடும்பரமன்தன்
நெற்றிஇருந்தவாகாணீரே
நேரிழையீர். வந்துகாணீரே.
19

42 அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக்கொண்டு
கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப
மழகன்றினங்கள் மறித்துத்திரிவான்
குழல்கள்இருந்தவாகாணீரே
குவிமுலையீர். வந்துகாணீரே.
20

தரவு கொச்சகக்கலிப்பா

43 சுருப்பார்குழலி யசோதைமுன்சொன்ன
திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன்
விருப்பாலுரைத்த இருபதோடொன்றும்
உரைப்பார்போய் வைகுந்தத் தொன்றுவர்தாமே.
 21


மூன்றாம் திருமொழி - மாணிக்கம் கட்டி


(கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்)

கலித்தாழிசை

44 மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே. தாலேலோ
வையமளந்தானே. தாலேலோ.
 1

45 உடையார்கனமணியோடு ஒண் மாதுளம்பூ
இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு
விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான்
உடையாய். அழேல்அழேல்தாலேலோ
உலகமளந்தானே. தாலேலோ.
2

46 என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு
சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு
இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி
தந்துஉவனாய்நின்றான்தாலேலோ
தாமரைக்கண்ணனே. தாலேலோ.
3

47 சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும்
அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும்
அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார்
செங்கண்கருமுகிலே. தாலேலோ
தேவகிசிங்கமே. தாலேலோ.
4

48 எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று
அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு
வழுவில்கொடையான் வயிச்சிரவணன்
தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ
தூமணிவண்ணனே. தாலேலோ.
5

49 ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும்
சாதிப்பவளமும் சந்தச்சரிவளையும்
மாதக்கவென்று வருணன்விடுதந்தான்
சோதிச்சுடர்முடியாய். தாலேலோ
சுந்தரத்தோளனே. தாலேலோ.
6

50 கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும்
வானார்செழுஞ்சோலைக் கற்பகத்தின்வாசிகையும்
தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள்
கோனே. அழேல்அழேல்தாலேலோ
குடந்தைக்கிடந்தானே. தாலேலோ.
7

51 கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளை
உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ
அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள்
நச்சுமுலையுண்டாய். தாலேலோ
நாராயணா. அழேல்தாலேலோ.
8

52 மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும்
செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும்
வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள்
அய்யா. அழேல்அழேல்தாலேலோ
அரங்கத்தணையானே. தாலேலோ.
9

தரவு கொச்சகக் கலிப்பா

53 வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட
அஞ்சனவண்ணனை ஆய்ச்சிதாலாட்டிய
செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல்
எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே.
 10


நான்காம் திருமொழி - தன் முகத்து


(சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்)

கலிநிலைத்துறை

54 தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய்
பொன்முகக்கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான்
என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ.
நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ.
 1

55 என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான்
தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்
அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல்
மஞ்சில்மறையாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா.
2

56 சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும்
எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய்
வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற
கைத்தலம்நோவாமே அம்புலீ. கடிதோடிவா.
3

57 சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து
ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண்
தக்கதறிதியேல் சந்திரா. சலம்செய்யாதே
மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய்.
4

58 அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா
மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான்
குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல்
புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ.
5

59 தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன்
கண்துயில்கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான்
உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில்
விண்தனில்மன்னிய மாமதீ. விரைந்தோடிவா.
6

60 பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள்
ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்
மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல்
மாலைமதியாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா.
7

61 சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய்
சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள்
சிறுமைப்பிழைகொள்ளில் நீயும்உன்தேவைக்குரியைகாண்
நிறைமதீ. நெடுமால் விரைந்துஉன்னைக்கூவுகின்றான்.
8

62 தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்
ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண்
வாழவுறுதியேல் மாமதீ. மகிழ்ந்தோடிவா.
9

63 மைத்தடங்கண்ணி யசோதைதன்மகனுக்கு இவை
ஒத்தனசொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர்
வித்தகன்விட்டுசித்தன் விரித்ததமிழிவை
எத்தனையும்சொல்லவல்லவர்க்கு இடரில்லையே.
 10


ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு


(தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

64 உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா.
ஊழிதோறூழிபலஆலினிலையதன்மேல்
பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே.
பங்கயநீள்நயனத்துஅஞ்சனமேனியனே.
செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதிச்
செல்வுபொலிமகரக்காதுதிகழ்ந்திலக
ஐய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.
 1

65 கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம்
குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய்.
மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி
மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர
காளநன்மேகமவைகல்லொடு கால்பொழியக்
கருதிவரைக்குடையாக்காலிகள்காப்பவனே.
ஆள. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.
2

66 நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே.
நாவியுள்நற்கமலநான்முகனுக்கு ஒருகால்
தம்மனையானவனே. தரணிதலமுழுதும்
தாரகையின்னுலகும்தடவிஅதன்புறமும்
விம்மவளர்ந்தவனே. வேழமும்ஏழ்விடையும்
விரவியவேலைதனுள்வென்றுவருமவனே.
அம்ம. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.
3

67 வானவர்தாம்மகிழவன்சகடமுருள
வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே.
கானகவல்விளவின்காயுதிரக்கருதிக்
கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே.
தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன்
என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும்
ஆனை. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.
4

68 மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார்
வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி ஒருங்கு
ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை
ஊருகரத்தினொடும்உந்தியவெந்திறலோய்.
முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன்
முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய
அத்த. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.
5

69 காயமலர்நிறவா. கருமுகில்போலுருவா.
கானகமாமடுவில்காளியனுச்சியிலே
தூயநடம்பயிலும்சுந்தரஎன்சிறுவா.
துங்கமதக்கரியின்கொம்புபறித்தவனே.
ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை
அந்தரமின்றியழித்தாடியதாளிணையாய்.
ஆய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.
6

70 துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால்
தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய
நப்பினைதன்திறமாநல்விடையேழவிய
நல்லதிறலுடையநாதனும்ஆனவனே.
தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத்
தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என்
அப்ப. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.
7

71 உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி
உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும்
கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக்
கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி
மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள்சூழ்
சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே.
என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே.
8

72 பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும்
பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர
கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடைக்
கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக
நீலநிறத்தழகாரைம்படையின்நடுவே
நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ
ஏலுமறைப்பொருளே. ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே.
9

73 செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில்
சேர்திகழாழிகளும்கிண்கிணியும் அரையில்
தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின்
பூவொடுபொன்மணியும்மோதிரமும்கிறியும்
மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும்
மகரமும்வாளிகளும்சுட்டியும்ஒத்திலக
எங்கள்குடிக்கரசே. ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே.
10

74 அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும்
ஆமையுமானவனே. ஆயர்கள்நாயகனே.
என்அவலம்களைவாய். ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகவாடுகவென்று
அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு
ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ்
இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில்
எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே.
11


ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி


(கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

75 மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல்
ஆணிப்பொன்னால்செய்த ஆய்பொன்னுடைமணி
பேணிப்பவளவாய் முத்திலங்க பண்டு
காணிகொண்டகைகளால்சப்பாணி
கருங்குழல்குட்டனே. சப்பாணி.
1

76 பொன்னரைநாணொடு மாணிக்கக்கிண்கிணி
தன்னரையாடத் தனிச்சுட்டிதாழ்ந்தாட
என்னரைமேல்நின்றிழிந்து உங்களாயர்தம்
மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி
மாயவனே. கொட்டாய்சப்பாணி.
2

77 பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன
என்மணிவண்ணன். இலங்குபொற்றேட்டின்மேல்
நின்மணிவாய்முத்திலங்க நின்னம்மைதன்
அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி
ஆழியங்கையனே. சப்பாணி.
3

78 தூநிலாமுற்றத்தே போந்துவிளையாட
வானிலாஅம்புலீ. சந்திரா. வாவென்று
நீநிலாநின்புகழாநின்ற ஆயர்தம்
கோநிலாவக்கொட்டாய்சப்பாணி
குடந்தைக்கிடந்தானே. சப்பாணி.
4

79 புட்டியில்சேறும் புழுதியும்கொண்டுவந்து
அட்டியமுக்கி அகம்புக்கறியாமே
சட்டித்தயிரும் தடாவினில்வெண்ணெயும்உண்
பட்டிக்கன்றே. கொட்டாய்சப்பாணி
பற்பநாபா. கொட்டாய்சப்பாணி.
5

80 தாரித்துநூற்றுவர் தந்தைசொல்கொள்ளாது
போருத்துவந்து புகுந்தவர்மண்ணாள
பாரித்தமன்னர்படப் பஞ்சவர்க்கு அன்று
தேருய்த்தகைகளால்சப்பாணி
தேவகிசிங்கமே. சப்பானி.
6

81 பரந்திட்டுநின்ற படுகடல் தன்னை
இரந்திட்டகைம்மேல் எறிதிரைமோத
கரந்திட்டுநின்ற கடலைக்கலங்க
சரந்தொட்டகைகளால்சப்பாணி
சார்ங்கவிற்கையனே. சப்பாணி.
7

82 குரக்கினத்தாலே குரைகடல்தன்னை
நெருக்கிஅணைகட்டி நீள்நீரிலங்கை
அரக்கர்அவிய அடுகணையாலே
நெருக்கியகைகளால்சப்பாணி
நேமியங்கையனே. சப்பாணி.
8

83 அளந்திட்டதூணை அவந்தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய்
உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம்
பிளந்திட்டகைகளால்சப்பாணி
பேய்முலையுண்டானே. சப்பாணி.
9

84 அடைந்திட்டுஅமரர்கள் ஆழ்கடல்தன்னை
மிடைந்திட்டு மந்தரம்மத்தாகநாட்டி
வடம்சுற்றிவாசுகி வன்கயிறாக
கடைந்திட்டகைகளால்சப்பாணி
கார்முகில்வண்ணனே. சப்பாணி.
10

தரவு கொச்சகக்கலிப்பா

85 ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினை
நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூர்ப்பட்டன்
வேட்கையால்சொன்ன சப்பாணிஈரைந்தும்
வேட்கையினால்சொல்லுவார் வினைபோமே.
11


ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை


(தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

86 தொடர் சங்கிலிகைசலார்பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்ப
படுமும்மதப்புனல்சோர வாரணம்பையநின்றுஊர்வதுபோல்
உடங்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க
தடந்தாளிணைகொண்டுசாரங்கபாணி தளர்நடைநடவானோ.
1

87 செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறைமுளைபோல
நக்கசெந்துவர்வாய்த்திண்ணைமீதே நளிர்வெண்பல்முளையிலக
அக்குவடமுடுத்துஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன்
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ.
2

88 மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய்
பின்னல்துலங்கும்அரசிலையும் பீதகச்சிற்றாடையொடும்
மின்னில்பொலிந்ததோர்கார்முகில்போலக் கழுத்திணில்காறையொடும்
தன்னில்பொலிந்தஇருடீகேசன் தளர்நடைநடவானோ.
3

89 கன்னற்குடம்திறந்தலொத்தூறிக் கணகணசிரித்துவந்து
முன்வந்துநின்றுமுத்தம்தரும் என்முகில்வண்ணன்திருமார்வன்
தன்னைப்பெற்றேற்குத்தன்வாயமுதம்தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான்
தன்னெற்றுமாற்றலர்தலைகள்மீதே தளர்நடைநடவானோ.
4

90 முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடுவிரைந்தோட
பின்னைத்தொடர்ந்ததோர்கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவதுபோல்
பன்னியுலகம்பரவியோவாப் புகழ்ப்பலதேவனென்னும்
தன்நம்பியோடப்பின்கூடச்செல்வான் தளர்நடைநடவானோ.
5

91 ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம் உள்ளடிபொறித்தமைந்த
இருகாலும்கொண்டுஅங்கங்குஎழுதினாற்போல் இலச்சினைபடநடந்து
பெருகாநின்றஇன்பவெள்ளத்தின்மேல் பின்னையும்பெய்துபெய்து
கருகார்க்கடல்வண்ணன்காமர்தாதை தளர்நடைநடவானோ.
6

92 படர்பங்கயமலர்வாய்நெகிழப் பனிபடுசிறுதுளிபோல்
இடங்கொண்டசெவ்வாயூறியூறி இற்றிற்றுவீழநின்று
கடுஞ்சேக்கழுத்தின்மணிக்குரல்போல் உடைமணிகணகணென
தடந்தாளினைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ.
7

93 பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய
அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர
மக்களுலகினில்பெய்தறியா மணிக்குழவியுருவின்
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ.
8

94 வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர் வேழத்தின்கருங்கன்றுபோல்
தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன் சிறுபுகர்படவியர்த்து
ஒண்போதலர்கமலச்சிறுக்காலுரைத்து ஒன்றும்நோவாமே
தண்போதுகொண்டதவிசின்மீதே தளர்நடைநடவானோ.
9

95 திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் தன்
திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர
பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர்தீர்த்தபலம்
தருநீர் சிறுச்சண்ணம்துள்ளம்சோரத் தளர்நடைநடவானோ.
10

96 ஆயர்குலத்தினில்வந்துதோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை
தாயர்மகிழஒன்னார்தளரத் தளர்நடைநடந்ததனை
வேயர்புகழ்விட்டுசித்தன் சீரால்விரித்தனஉரைக்கவல்லார்
மாயன்மணிவண்ணன்தாள்பணியும் மக்களைப்பெறுவார்களே.
11

எட்டாம் திருமொழி -- பொன்னியல்


(அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)

கலித்தாழிசை

97 பொன்னியல்கிண்கிணி சுட்டிபுறம்கட்டி
தன்னியலோசை சலஞ்சலனென்றிட
மின்னியல்மேகம் விரைந்தெதிர்வந்தாற்போல்
என்னிடைக்கோட்டராஅச்சோவச்சோ
எம்பெருமான். வாராஅச்சோவச்சோ.
1

98 செங்கமலப்பூவில் தேனுண்ணும்வண்டேபோல்
பங்கிகள்வந்து உன்பவளவாய்மொய்ப்ப
சங்குவில்வாள்தண்டு சக்கரமேந்திய
அங்கைகளாலேவந்துஅச்சோவச்சோ
ஆரத்தழுவா வந்துஅச்சோவச்சோ.
2


99
பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நற்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த
அஞ்சனவண்ணனே. அச்சோவச்சோ
ஆயர்பெருமானே. அச்சோவச்சோ.
3

100 நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்ன
தேறிஅவளும் திருவுடம்பில்பூச
ஊறியகூனினை உள்ளேயொடுங்க அன்று
ஏறவுருவினாய். அச்சோவச்சோ
எம்பெருமான். வாராஅச்சோவச்சோ.
4

101 கழல்மன்னர்சூழக் கதிர்போல்விளங்கி
எழலுற்றுமீண்டே இருந்துஉன்னைநோக்கும்
சுழலைப்பெரிதுடைத் துச்சோதனனை
அழலவிழித்தானே. அச்சோவச்சோ
ஆழியங்கையனே. அச்சோவச்சோ.
5

102 போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான்
தேரொக்கவூர்ந்தாய். செழுந்தார்விசயற்காய்
காரொக்கும்மேனிக் கரும்பெருங்கண்ணனே.
ஆரத்தழுவாவந்துஅச்சோவச்சோ
ஆயர்கள்போரேறே. அச்சோவச்சோ.
6

103 மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில்
தக்கதிதன்றென்று தானம்விலக்கிய
சுக்கிரன்கண்ணைத் துரும்பால்கிளறிய
சக்கரக்கையனே. அச்சோவச்சோ
சங்கமிடத்தானே. அச்சோவச்சோ.
7

104 என்னிதுமாயம்? என்னப்பன்அறிந்திலன்
முன்னைவண்ணமேகொண்டு அளவாயென்ன
மன்னுநமுசியை வானில்சுழற்றிய
மின்னுமுடியனே. அச்சோவச்சோ
வேங்கடவாணனே. அச்சோவச்சோ.
8

105 கண்டகடலும் மலையும்உலகேழும்
முண்டத்துக்காற்றா முகில்வண்ணாவோ. அன்று
இண்டைச்சடைமுடி ஈசன்இரக்கொள்ள
மண்டைநிறைத்தானே. அச்சோவச்சோ
மார்வில்மறுவனே. அச்சோவச்சோ.
9

106 துன்னியபேரிருள் சூழ்ந்துஉலகைமூட
மன்னியநான்மறை முற்றும்மறைந்திட
பின்னிவ்வுலகினில் பேரிருள்நீங்க அன்று
அன்னமதானானே. அச்சோவச்சோ
அருமறைதந்தானே. அச்சோவச்சோ.
10

தரவு கொச்சகக்கலிப்பா

107 நச்சுவார்முன்னிற்கும் நாராயணன்தன்னை
அச்சோவருகவென்று ஆய்ச்சியுரைத்தன
மச்சணிமாடப் புதுவைகோன்பட்டன்சொல்
நிச்சலும்பாடுவார் நீள்விசும்பாள்வரே.
11


ஒன்பதாம் திருமொழி - வட்டநடுவே


(தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)

வெண்டளையால்வந்த கலித்தாழிசை

108 வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டுநுனையில் முளைக்கின்றமுத்தேபோல்
சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத்துளிக்க என்
குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான்.
1

109 கிங்கிணிகட்டிக் கிறிகட்டி கையினில்
கங்கணமிட்டுக் கழுத்தில்தொடர்கட்டி
தன்கணத்தாலே சதிராநடந்துவந்து
என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான்
எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்.
2

110 கத்தக்கதித்துக் கிடந்தபெருஞ்செல்வம்
ஒத்துப்பொருந்திக்கொண்டு உண்ணாதுமண்ணாள்வான்
கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
ஆயர்களேறுஎன்புறம்புல்குவான்.
3

111 நாந்தகமேந்திய நம்பிசரணென்று
தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில்
வேந்தர்களுட்க விசயன்மணித்திண்தேர்
ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான்
உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்.
4

112 வெண்கலப்பத்திரம் கட்டிவிளையாடி
கண்பல செய்த கருந்தழைக்காவின்கீழ்
பண்பலபாடிப் பல்லாண்டிசைப்ப பண்டு
மண்பலகொண்டான்புறம்புல்குவான்
வாமனன்என்னைப்புறம்புல்குவான்.
5

113 சத்திரமேந்தித் தனியொருமாணியாய்
உத்தரவேதியில் நின்றஒருவனை
கத்திரியர்காணக் காணிமுற்றும்கொண்ட
பத்திராகாரன்புறம்புல்குவான்
பாரளந்தான்என்புறம்புல்குவான்.
6

114 பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறி
தித்தித்தபாலும் தடாவினில்வெண்ணெயும்
மெத்தத்திருவயிறார விழுங்கிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
ஆழியான்என்னைப்புறம்புல்குவான்.
7

115 மூத்தவைகாண முதுமணற்குன்றேறி
கூத்துஉவந்தாடிக் குழலால்இசைபாடி
வாய்த்தமறையோர் வணங்க இமையவர்
ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான்
எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்.
8

116 கற்பகக்காவு கருதியகாதலிக்கு
இப்பொழுதுஈவதென்று இந்திரன்காவினில்
நிற்பனசெய்து நிலாத்திகழ்முற்றத்துள்
உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான்
உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்.
9

தரவு கொச்சகக்கலிப்பா

117 ஆய்ச்சியன்றாழிப்பிரான் புறம்புல்கிய
வேய்த்தடந்தோளிசொல் விட்டுசித்தன்மகிழ்ந்து
ஈத்ததமிழிவை ஈரைந்தும்வல்லவர்
வாய்த்தநன்மக்களைப்பெற்று மகிழ்வரே.
10

சென்ஷி

unread,
Jun 22, 2010, 4:00:33 AM6/22/10
to panb...@googlegroups.com

Lavanya Sundararajan

unread,
Jun 22, 2010, 4:02:21 AM6/22/10
to panb...@googlegroups.com
சென்ஷி ரொம்ப‌ ந‌ன்றி.


Lavanya Sundararajan

unread,
Jun 22, 2010, 4:05:44 AM6/22/10
to panb...@googlegroups.com
http://aazhvarmozhi.blogspot.com/

சில‌ ப்ர‌ப‌ந்த‌ங்க‌ள் விள‌க்க‌ உரையோடிக்கின்ற‌ன‌


shylaja

unread,
Jun 22, 2010, 4:10:06 AM6/22/10
to panb...@googlegroups.com
சென்ஷி!!!!!! நன்றிமிக...ஆனா ஒவ்வொரு பாசுரத்திற்கும் ஆழ்ந்த பொருள் உண்டு. உதாரணத்திற்கு

பெரியாழ்வார் கண்ணனுக்குத் தலை வாரி விடக் காக்கையை அழைக்கிறார்.

கண்ணனை வந்து குழல் வாராய் அக்காக்காய்
கார்முகில் வண்ணன் குழல் வாராய் அக்காக்காய்.

‘அக்காக்காய்’ என்பது ஆழ்வார் காலத்தில் காக்கையே என்று விளிப்பதற்கு ஏற்பட்ட சொல்.

இன்றும் ‘காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா’ போன்ற பாடல்களில் குழந்தைகளுக்கு காக்கை ஒரு நண்பன். அடுத்து கண்ணனுக்கு கோல் கொண்டு வர ஆணையிடுகிறார். எப்படிப்பட்ட கோல்?

சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க நல்
அங்கம் உடையதோர் கோல் கொண்டுவா
அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வா

இதில்..

அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வா எனபதிஅகவனிப்போ,ம்

அரக்கு வழித்தல் என்பது நல்ல நிறமும் பளபளப்பும் வருவதற்கு ஜாதி லிங்கத்தோடு அரக்கு இடித்து வர்ணம் பூசிய கோல். பழுக்காய்த் தடி என்று சொல்வார்களே அது.

கண்ணனைப் பூச்சூட்ட அழைக்கும்போது ஒவ்வொரு பாசுரத்துக்கும் ஒரு மலராக ஒரு பெரிய பூப்பட்டியலே தருகிறார்

செண்பகப்பூ, மல்லிகைப்பூ, பாதிரிப்பூ, உகந்திவை, செங்கழுநீர், புன்னை, குருக்கத்தி, இருவாட்சி, கருமுகை

இப்படி  நிறைய இருக்கிறது.

2010/6/22 சென்ஷி <senshe...@gmail.com>
மேலும் சில நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்கள்..

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
***      

வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி
மலர்ப்பாதக் கிண்கிணி யார்ப்ப
நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத
நாராயணா இங்கே வாராய்
எண்ணற்கரிய பிரானே திரியை
எரியாமே காதுக்கிடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய
கனக் கடிப்பு மிவையா”...
பெரியாழ்வார்...

shylaja

unread,
Jun 22, 2010, 4:11:54 AM6/22/10
to panb...@googlegroups.com
2010/6/22 சென்ஷி <senshe...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
***      

வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி
மலர்ப்பாதக் கிண்கிணி யார்ப்ப
நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத
நாராயணா இங்கே வாராய்
எண்ணற்கரிய பிரானே திரியை
எரியாமே காதுக்கிடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய
கனக் கடிப்பு மிவையா”...
பெரியாழ்வார்...

Kavitha .

unread,
Jun 22, 2010, 4:13:03 AM6/22/10
to panb...@googlegroups.com
குழந்தையை குளிப்பாட்டுரதுல இவ்ளோ ரிஸ்க்கு இருக்கா?

ரொம்ப பாவம் எங்க அம்மா!

2010/6/22 சென்ஷி <senshe...@gmail.com>
எனக்கு ரொம்பப் பிடிச்ச இடுகை..

--

சென்ஷி

unread,
Jun 22, 2010, 4:14:22 AM6/22/10
to panb...@googlegroups.com
இதுக்காக தனிமடல் கேட்டா எல்லோரும் கொந்தளிச்சிடுவாங்க. இங்கயே கொடுத்திருங்க :)

2010/6/22 shylaja <shyl...@gmail.com>

சென்ஷி

unread,
Jun 22, 2010, 4:16:11 AM6/22/10
to panb...@googlegroups.com
லாவண்யா சொன்னது போல் தினம் ஒரு பாசுரத்துக்கு விளக்கம் சொல்லலாமே அக்கா..

shylaja

unread,
Jun 22, 2010, 4:16:28 AM6/22/10
to panb...@googlegroups.com
2010/6/22 சென்ஷி <senshe...@gmail.com>
இதுக்காக தனிமடல் கேட்டா எல்லோரும் கொந்தளிச்சிடுவாங்க. இங்கயே கொடுத்திருங்க :)<<<>>>>>
 
:):)  இதைக்கேள்வியாய் கேட்காமல்  அளித்துவிட்டதால் எழுதியது சென்ஷியா என்றே சந்தேகமாக இருக்கிறது:)

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

shylaja

unread,
Jun 22, 2010, 4:18:06 AM6/22/10
to panb...@googlegroups.com
2010/6/22 சென்ஷி <senshe...@gmail.com>
லாவண்யா சொன்னது போல் தினம் ஒரு பாசுரத்துக்கு விளக்கம் சொல்லலாமே அக்கா..<<<<>>>>
 
:):) ஆகட்டும் பார்க்கலாம்:)

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

shylaja

unread,
Jun 22, 2010, 4:24:27 AM6/22/10
to panb...@googlegroups.com

கும்மாயத்தோடு வெண்ணெய் விழுங்கி
குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய் மாய மருதான அசுரரைப்
பொன்றுவித்து இன்று நீ வந்தாய்
இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை
என் மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்து கொண்டேன்
உனக்கு
அஞ்சுவன் அம்மம் தரவே

கும்மாயம் என்றால் குழையச் சமைத்த பருப்பு. பருப்பும் வெண்ணையும் விழுங்கி தயிரைக் குடத்திலிருந்து சாய்த்துப் பருகி வெளியே போய் அசுரனை அலட்சியமாகக் கொன்றுவிட்டு வருகிறாய். இந்த மாயம் செய்யக்கூடிய பிள்ளை நீ உன்னை என் மகன் என்கிறார்கள். எனக்கென்னவோ உனக்குச் சோறூட்டவே பயமாக இருக்கிறது.
 
இதுல அம்மம்  என்பது இப்போது மம்மம் ஆகி மம்மு என்றாகிவிட்டது!என் மகளுக்கு ஐந்துவயதில் மம்மு சாப்பிடவாம்மா என அழைத்து  ஏன்மா உனக்கு சரியா தமிழ் பேசவே வராதா என்று அவளிடம் வாங்கிக்கட்டிக்கொண்டேன்:):) பெரியாழ்வார் பாசுரத்திலேயே  சோறுக்கு அம்மம் என்றிருப்பது அப்போது தெரியாது:)

2010/6/22 shylaja <shyl...@gmail.com>

Kavitha .

unread,
Jun 22, 2010, 4:30:47 AM6/22/10
to panb...@googlegroups.com
அழகான பாடலும் அமுதம் போன்ற உங்க விளக்கம் அருமை அக்கா

2010/6/22 shylaja <shyl...@gmail.com>

Lavanya Sundararajan

unread,
Jun 22, 2010, 4:41:35 AM6/22/10
to panb...@googlegroups.com
உங்க‌ ம‌க‌ளுக்கு ஐந்து வ‌ய‌திலேயே உங்க‌ளை விட‌ அறிவ‌திக‌மா அக்கா? :) அம்ம‌ம் என்ப‌து குழ‌ந்தைக்கு சோறு ஊட்டும் போதும் சொல்ல‌ப்ப‌டும் ஆ அம் என்ப‌தையும் குறிக்குமோ? வாயை திற‌ பின்ன‌ சாப்பாடு வைத்த‌தும் அம் என்று வாயை மூடி உண் என்ப‌தாவும் என‌க்கு ப‌டுது.


Anusha

unread,
Jun 22, 2010, 10:36:43 AM6/22/10
to பண்புடன்

ரொம்ப அருமையா இருக்கு அக்கா,,தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

On Jun 22, 8:52 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> -- ஆண்டாள்்மீது பெரியாழ்வார் கொண்ட பாசத்தின்  வேறெந்த தந்தை-மகளுக்கிடையே
> இப்படி ஒரு பாசப்பிணைப்பு இருக்குமா என்றால் அது சந்தேகமே!
>
> ஆண்டாளைப்பற்றிப்பாடும்போது ’பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!’
> என்கிறார்கள். இத்தனைக்கும் அவர் துளசிக்குவியலில்தான்
> ஆண்டாளைக்கண்டுபிடித்திருக்கிறார். பெற்ற பெருமை இல்லாதவருக்குக்கிடைத்த
> பேற்றினைப்பாருங்கள்!
>
> ’பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலைமுப்பதும் தப்பாமே’ என்கிறாள்
> ஆண்டாளே தான் வடித்த திருப்பாவைப்பாடலில். அப்பாவும் பெண்ணும் மாறிமாறி
> அன்பைப்பரிமாறிக்கொள்கிறார்கள்.
>
> தான் சூடிய மாலையை இறைவனுக்குச்சூட்டிட அதனை தந்தையிடம்கொடுத்த
> துணிச்சல்காரியான பெண் ஆண்டாள்.
>
> அந்த நாளிலேயே பெண் சுதந்திரம் இருந்திருக்கிறதென்பதற்கு ஆண்டாளின்
> நாச்சியார் திருமொழி வாசகங்களே போதும். அப்படி ஒரு சுதந்திரத்தை அவளுக்கு
> அளித்தவர் பெரியாழ்வார் என்றால்மிகை இல்லை.
>
> மகளின் ஆசையைபூர்த்தி செய்து அவளை திருமாலுடன் சேர்த்துவைத்து வீடுவந்தவர்
> மகளின் பிரிவில் மனம் தவிக்கிறார். செங்கண்மால்தான் கொண்டுபோனான் என
> மனதைத்தேற்றிக்கொள்ள பிரயத்தனப்படுகிறார்.ஆனாலும் பாசம் மனசை வழுக்கிவழுக்கி
> நினைவுகளை பின்னோக்கி இழுத்துச்செல்கிறது.மகளோடு கூடிக்கழித்த நாட்களை அசை
> போடுகிறது.
>
> ’நல்லதோர் தாமரைப்பொய்கை
> நாண்மலர் மேல்பனி சோர
> அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு
> அழகழிந்தாலொத்ததாலோ
> இல்லம் வெறியோடிற்றாலோ
> என்மகளை எங்கும் காணேன்
> மல்லரையட்டவன் பின்போய்
> மதுரைப்புறம் புக்காள்கொலோ’
>
> கண்ணில் நீர்மல்கப்பாடுகிறார் பெரியாழ்வார்.
>
> கண்பனித்தது என்பார்கள்.
> ஆமாம் பெரியாழ்வாருக்கு மகள் மணமாகிசென்றதும் கண்பனித்துத்தான் போனது.
> அவரது விழிகளாகிய தாமரைக்கு மகள் எனும் சூரிய ஒளி இல்லாமல்போய்விட்டதாம்.
> பனிவந்து தாமரையைச் சூழ்கிறதாம். பனிகண்டமலர் விரியுமோ?
>
> பெண்ணிருந்தவரை இல்லம் தாமரைப்பூத்த பொய்கையாய் அழகாக இருந்ததாம்.இப்போது
> பனிபெய்வதால் இதழ்கள் உருகிக்கருகிவிட்டதாம்,கொடி மொட்டையாய் நிற்கிறது இதுபோல
> வீடு அழகழிந்து வெறியோடிவிடுகிறது.
>
> நம் மனதிற்குப்பிரியமானவர்கள் பிரிந்துவிட்டால் இல்லமென்ன நம் உள்ளமே ’வெறிச்’
> என்றுபோய்விட்டதாய் சொல்கிறோம் அல்லவா? அதைத்தான் ஆழ்வார் இந்தப்பாடலில் சொல்லி
> இருக்கிறார்.
>
> பொய்கையின் படம் பெரியாழ்வாரின் சொற்சித்திரத்தில் மனதில்
> பதிந்துவிடுகிறது.கவிதைக்கென்று தனி வார்த்தைகள் இல்லையென்று காட்டிவிட்டார்
> பெரியாழ்வார், ஆமாம் உலகத்தில் வழங்கிவரும் சொற்களை வைக்கிற இடத்தில் வைத்தால்
> அவைகளுக்கு அபூர்வ சக்தி ஏற்பட்டுவிடுகிறது என்பது உண்மைதானே!

Jeevaa KS

unread,
Jun 23, 2010, 7:12:42 AM6/23/10
to panb...@googlegroups.com
அத்தனையும் படித் தேன் :) ரசித்தேன் :) இன்னமும் படிக்க காத்திருக்கிறோம்


*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/6/22 shylaja <shyl...@gmail.com>

பிரசாத் வேணுகோபால்

unread,
Jul 13, 2010, 2:34:57 AM7/13/10
to panb...@googlegroups.com
அக்கா, இந்த மடலைத் தொடர்ந்தால் நன்றாய் இருக்குமே...

2010/6/22 shylaja <shyl...@gmail.com>

கும்மாயத்தோடு வெண்ணெய் விழுங்கி
குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய் மாய மருதான அசுரரைப்
பொன்றுவித்து இன்று நீ வந்தாய்
இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை
என் மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்து கொண்டேன்
உனக்கு
அஞ்சுவன் அம்மம் தரவே

கும்மாயம் என்றால் குழையச் சமைத்த பருப்பு. பருப்பும் வெண்ணையும் விழுங்கி தயிரைக் குடத்திலிருந்து சாய்த்துப் பருகி வெளியே போய் அசுரனை அலட்சியமாகக் கொன்றுவிட்டு வருகிறாய். இந்த மாயம் செய்யக்கூடிய பிள்ளை நீ உன்னை என் மகன் என்கிறார்கள். எனக்கென்னவோ உனக்குச் சோறூட்டவே பயமாக இருக்கிறது.
 
இதுல அம்மம்  என்பது இப்போது மம்மம் ஆகி மம்மு என்றாகிவிட்டது!என் மகளுக்கு ஐந்துவயதில் மம்மு சாப்பிடவாம்மா என அழைத்து  ஏன்மா உனக்கு சரியா தமிழ் பேசவே வராதா என்று அவளிடம் வாங்கிக்கட்டிக்கொண்டேன்:):) பெரியாழ்வார் பாசுரத்திலேயே  சோறுக்கு அம்மம் என்றிருப்பது அப்போது தெரியாது:)


--
எண்ணம் போல் வாழ்வு…

பிரசாத் வேணுகோபால்,

www.prasath-kirukkalgal.blogspot.com.
Reply all
Reply to author
Forward
0 new messages