|
சிறப்புத் தொடர்
இத்தேர்வின் மூன்று படிநிலைகளில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதைவிட, மாணவர்கள் ஒவ்வொரு படிநிலையிலும் வடிகட்டப்படுகிறார்கள். பணியிடங்களின் எண்ணிக்கையை விட பத்திலிருந்து 12 மடங்கு எண்ணிக்கையிலானவர்கள் முதன்மைத் தேர்வுக்குத் செல்வார்கள். அதிலிருந்து இரு மடங்கு தேர்வர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் தேர்வர்களிம் எண்ணிக்கை மாறுபடுமே ஒழிய இந்த விகிதத்தில் பெருமளவு மாற்றம் இருக்காது. |
|
ஒவ்வொரு பாடத்திலும், பிரிவிலும் முதல் 15% இடங்களைப் பெறும் தேர்வர்கள் மட்டுமே விரிவுரையாளர் பணிக்குத் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்படுவார்கள். |
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
க்ரூப் II (A)... அறிவியல் பாடத்தில் அசத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ள மாணவர்களுக்கு ஏற்றது.
ப்யூர் சயின்ஸ் என்று அழைக்கப்படும் இந்த க்ரூப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்கள் உள்ளன. இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார், தஞ்சாவூர் - மெலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், வெ.ராஜமோகன்.
''பத்தாம் வகுப்பில் அறிவியலில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்கள் பரிசீலிக்க வேண்டிய க்ரூப் இது. அத்துடன், கணிதத்தில் ஆர்வம் குறைந்தும், அறிவியலில் ஈடுபாடு மிகுந்தும் காணப்படும் மாணவர்களுக்கு ஏற்றது.
இந்தக் க்ரூப்பைத் தேர்ந்தெடுத்து, ப்ளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்கள் நிச்சயம் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஒருவேளை, மருத்துவப் படிப்பு கிடைக்கவில்லை எனில், கால்நடை மருத்துவம், பிசியோதெரபி மற்றும் பார்மஸி படிப்புகளில் வாய்ப்புக் கிடைக்கும். குறிப்பாக, பெண்கள் நர்ஸிங் படித்து, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைப் பெற, இந்த க்ரூப் உதவும். இவை மட்டுமின்றி, ஆராய்ச்சிப் படிப்புகள், அறிவியல் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகள் நிறைய இருப்பதால், அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்கள் தாராளமாக இந்த க்ரூப்பை டிக் செய்யலாம்'' என்கிறார் ஆசிரியர் வெ.ராஜமோகன்.

|
''நாங்கள் காரைக்கால் பகுதியிலிருந்து சமீபத்தில்தான் நாகப்பட்டினம் குடிபெயர்ந்து இருக்கிறோம். எம்.எஸ்சி., பி.எட் வரையிலான என்னுடைய பள்ளி, கல்லூரிப் படிப்புகளை புதுவை அரசின் கீழ் முடித்திருக்கிறேன். தற்போது தமிழக அரசின் ஆசிரியர் பணிக்கான டி.இ.டி தேர்வு எழுத முடியுமா? டி.இ.டி தேர்வெழுத என்ன மாதிரியான தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும்?'' - கோ.நந்தினி, நாகப்பட்டினம்
தாள்-I... 1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. டி.டி.எட் (D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான தாள் இது. |
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
மிகவும் பயன் தரும் தகவல்
நன்றி ஸ்பெ
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ இது... கல்லூரி நேரம்! பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள், அடுத்த கட்டமாக என்ன மாதிரியான கல்லூரிப் படிப்பு வாய்ப்புகள் நமக்குக் காத்திருக்கின்றன என்கிற தேடலில் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வழிகாட்டுவதோடு... பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான குரூப் தேர்வு வழிகாட்டல்களையும் இங்கே தருகிறார், சென்னையைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் மற்றும் சமூக ஆர்வலர், நெடுஞ்செழியன்.
''பொதுவாக பெற்றோர், உறவினர், ஆசிரியர், நண்பர்கள் என்று தன்னைச் சுற்றி இருப்பவர்கள் சொல்வதையே... எதிர்கால கல்லூரிப் படிப்பை தேர்ந்தெடுப்பதற்கான வேதவாக்காக மாணவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், இவர்களின் ஆலோசனைகளுடன், ஒரு மாணவனின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் இன்றுள்ள பலவகையான படிப்புகளைப் பற்றிய அவன் தெளிவு ஆகியவற்றின் அடிப்படையில்தான் தனக்கான படிப்பை அவன் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் இந்திய அளவில் உயர்கல்வியில் பலவகையான மாற்றங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. மத்திய அரசாங்கம் எந்தெந்த துறைகளில் மனிதவளம் குறைவாக இருக்கிறது என கண்காணித்து, அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு கவனம் கொடுத்து வருகிறது. உதாரணமாக, சோஷியல் சயின்ஸ், ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிட்டாலிட்டி, மேனேஜ்மென்ட், ஃபுட் புராஸஸிங் போன்ற அதிக கவனம் கிடைக்காத, எண்ணற்ற துறைகளில், போட்டியில்லாத... செழிப்பான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்ற துறை சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
பள்ளித் தேர்வை முடித்ததோடு, கல்லூரியில் அட்மிஷனுக்காக காத்திருக்காமல், அகில இந்திய அளவில் பல கல்லூரிகளுக்கும் நடைபெறும் நுழைவுத்தேர்வுகளை எழுதுவது அவசியம். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுக்குப் பிறகு, கல்லூரி சேர்க்கைக்காக, அகில இந்திய அளவில் கிட்டத்தட்ட 60 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகள், ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு துறை என நாட்டில் உள்ள தலைசிறந்த அரசுக் கல்லூரிகளுக்கான தேர்வுகள் இவை. உதாரணமாக, JEE, AIEEE, BITSAT போன்ற அகில இந்திய அளவில் பொறியியல் கல்லூரி சேர்க்கைக்காக நடைபெறும் நுழைவுத்தேர்வுகளை எழுதலாம். எல்லா தேர்வுகளிலும் இல்லை என்றாலும், அதற்காக எடுத்துக் கொண்ட முயற்சியும் பயிற்சியும் ஏதாவது ஒரு தேர்விலாவது நல்ல மதிப்பெண்களை கொண்டுவந்து சேர்க்கும். அதன் அடிப்படையில் அட்மிஷன் பெறலாம்.
அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு என்றவுடன், அது சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ சிலபஸில் படித்த மாணவர்களுக்குதான் சுலபமாக இருக்கும் என, மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தயங்கத் தேவையில்லை. தேர்வுக்குத் தேவையான விஷயங்களை மட்டும் கேள்வி - பதில் வடிவத்தில் படிக்கும் பழக்கத்தை மறந்து, பாடங்களை முழுக்கவும் படிக்கப் பழகினாலே... நுழைவுத்தேர்வு சுலபமாகிவிடும்.
அகில இந்திய அளவிலான கல்லூரிகளில் சேர்வதற்கு... நுழைவுத்தேர்வுடன், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 60% மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 850 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற ஒரு மாணவி, அகில இந்திய பிரீ மெடிக்கல் தேர்வில், நுழைவுத்தேர்வு வாயிலாக 150-வது ரேங்கில் வெற்றிபெற்று, இன்று சென்னை, அரசு மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு எழுதியதால்தான், அவருக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. எனவே, கல் எடுக்காததால்தான் மாங்காய் கிடைக்காமல் போகிறது என்பதை உணர வேண்டும்'' என்று சொன்ன நெடுஞ்செழியன்,
''14 அரசு சட்டக் கல்லூரிகள் மத்திய அரசு நிர்வாகத்தில் இயங்குகின்றன. இங்கு படிப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்புகள் ஏராளம். டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் சட்டம், அதேநேரத்தில் 'ஐசிஎஸ்ஐ'யில் கம்பெனி செக்ரெட்டரிஷிப் இரண்டையும் ஒன்றாக முடித்து வெளியில் வரும்போது, நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு எடுத்துக் கொள்வார்கள்.
மும்பையில் உள்ள 'டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்’-ல் படிப்பவர்களுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் சமூகநலத் துறையில் காத்திருக்கின்றன வேலைவாய்ப்புகள். பி.காம், பி.பி.ஏ போன்ற படிப்புகளுக்கும் எதிர்காலம் விரிந்திருக்கிறது. ஈரோட்டைச் சேர்ந்த 30 வயதுக்குட்பட்ட ஒரு மாணவர், சி.ஏ மற்றும் கம்பெனி செக்ரெட்டரிஷிப் ஆகியவற்றை முடித்து சென்னையில் மாதம் 3 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார் என்பதிலிருந்தே... அதன் எதிர்காலத்தை நீங்கள் உணரலாம்'' என்று, ஆதாரப்பூர்வமாக சொன்னார்!
|
arumaiyaana பகிர்வுகள் ... நன்றி ஸ்பெ
ப்ளஸ் 1ல் எந்த க்ரூப் எடுக்கலாம்?: Group III&IV- நீங்களும் பிரேமா ஆகலாம்! |
|
Posted Date : 11:05 (13/05/2013)Last updated : 11:05 (13/05/2013)
வெற்றி நிச்சியம்!
|
ப்ளஸ் 1ல் எந்த க்ரூப் எடுக்கலாம்? - தொழில் கல்வி பயில விரும்புவோருக்கு..! |
|
Posted Date : 11:05 (15/05/2013)Last updated : 11:05 (15/05/2013)
|
|
Posted Date : 15:05 (17/05/2013)Last updated : 15:05 (17/05/2013)
|
சிறந்த கல்லூரி: எப்படி தேர்வு செய்வது? |
|
Posted Date : 14:05 (20/05/2013)Last updated : 14:05 (20/05/2013)
எனவே, எல்லாவகையிலும் சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது ஒரு மாணவனின் கடமை. அதனை அக்கறையோடு செய்துதரவேண்டியது பெற்றோர்களின் பொறுப்பு. சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி? எதன் அடிப்படையில் அந்தக் கல்லூரி நிறுவனம் சிறந்தது என்பதைத் தீர்மானிப்பது? என்கிற கேள்விகளுடன் கல்வி மற்றும் சமூக ஆர்வலர் தா.நெடுஞ்செழியனிடம் பேசினோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர். |
சிறந்த கல்லூரி: எப்படி தேர்வு செய்வது?
Posted Date : 14:05 (20/05/2013)Last updated : 14:05 (20/05/2013)
எம்.பி.ஏ.வோ அல்லது எம்.பி.பி.எஸ். படிப்போ, அதை எந்த கல்லூரியில் படிக்கிறோம் என்பது முக்கியம்.
''அடுத்த வருடம் கல்லூரிப் படிப்பை முடிக்கவிருக்கும் நான், ஐ.ஏ.எஸ். தேர்வெழுத விரும்புகிறேன். சிவில் சர்வீஸ் தேர்வு நிலைகள் மற்றும் விண்ணப்பித்தலுக்கான அடிப்படைத் தகுதி குறித்து அறிந்துகொள்ள விரும்புகிறேன். மேலும் அதிக செலவின்றி இந்த தேர்வுகளுக்கு தயாராக வழியுண்டா? கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன்பே இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இயலுமா என்றும் விளக்கம் ப்ளீஸ்..!''
- எல்.சங்கீதா, நாகப்பட்டினம்
எம்.செந்தில்குமார், சென்டர் டைரக்டர்,‘T.I.M.E’ ஐ.ஏ.எஸ். கோச்சிங் சென்டர், அண்ணாநகர், சென்னை:
''ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட மத்திய குடிமைப் பணிகளுக்கான (சிவில் சர்வீஸ்) தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி (UPSC) நடத்துகிறது. முதல்நிலை,
முதன்மை, நேர்முகம் (Preliminary, Main, Interview) என மூன்று நிலைகளில் இதற்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்த மூன்றில் எந்த நிலையில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், தேர்வுகளை முதலில் இருந்துதான் தொடங்கியாக வேண்டும்.
ஜெனரல் ஸ்டடீஸ் (General Studies), ஜெனரல் அப்டிட்யூட் டெஸ்ட் (General Aptitude Test) என முதல்நிலைத் தேர்வில் மொத்தம் இரண்டு தாள்கள். முதல் தாளில் தலா 2 மதிப்பெண்கள் என மொத்தம் 100 வினாக்கள் இருக்கும். இரண்டாவது தாளில் தலா 2.5 மதிப்பெண்கள் என மொத்தம் 80 வினாக்கள் உண்டு. அதாவது, முதல்நிலைத் தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 400. இதில் தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண் உண்டு. மூன்று தவறான விடைகளுக்கு ஒரு நெகட்டிவ் மதிப்பெண் என்ற அளவில் அமைந்திருக்கும்.
சிவில் சர்வீஸ் நடப்பு காலிப்பணிஇடங்களை ஒட்டி முதல்நிலைத் தேர்வில்இருந்து அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வுக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தேர்வாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த எண்ணிக்கை பொதுவாக காலிப்பணியிடத்தைப் போல சுமார் 13 மடங்காக இருக்கும். முதன்மைத் தேர்வில் மொத்தம் 9 தாள்கள். முதலிரண்டு தாள்களான ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிக்கான தாள்கள் தகுதி மதிப்பெண்ணுக்குரியது. தலா 250 மதிப்பெண்கள் உடைய இந்த இரண்டு தாள்களில் பெறும் மதிப்பெண்கள், கட் ஆஃப் மதிப்பெண் என்கிற வகையில் சேராது. ஏனைய 7 தாள்களில் முதலில் வருவது Essay Writing; அடுத்ததாக General Studies என்பதில் 4 தாள்களும், Optional Subjects என்பதில் 2 தாள்களுமாய் இருக்கும். தாள் ஒவ்வொன்றும் தலா 250 மதிப்பெண்களுக்கானது. ஆக, இந்த 7 தாள்களுக்கான மொத்த மதிப்பெண்கள் 1750.
காலிப் பணியிடத்தில் 2.3 மடங்காக... தேர்வாளர்கள் முதன்மைத் தேர்விலிருந்து நேர்முகத் தேர்வை எட்டுவார்கள். இதுவரை பாட ரீதியாக சோதிக்கப்பட்ட தேர்வாளர்களின் சிந்தனை, முடிவெடுக்கும் ஆற்றல், அவர்கள் இந்திய குடிமைப்பணிக்கு பொருந்திப்போகும் திறன் உள்ளிட்டவை, பல வல்லுநர்களால் நேரிடையாகவே மதிப்பிடப்படும். நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண்கள் 275. இத்துடன் முதன்மைத் தேர்வின் 1750 மதிப்பெண்களையும் சேர்க்கக் கிடைக்கும் 2025 என்ற மொத்த மதிப்பெண்ணிலிருந்து கட் ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்படும். இதன் அடிப்படையில் முதல் ஆயிரம் பேர்களில் இருந்து, குடிமைப் பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்படும். பாடங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு மத்திய தேர்வாணையத்தின் தளத்தை - www.upsc.gov.in நாடலாம்.
தேர்வாளர்களுக்கான அடிப்படை தகுதியாக குறைந்தது 21 வயது அடைந்திருக்க வேண்டும்; அதிகபட்சமாக 30 வயது முடிந்திருக்கக் கூடாது. சமூகப்பிரிவை ஒட்டி அதிகபட்சமாக எத்தனை முறை இந்த தேர்வுகளுக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் ஒரு வரையறை இருக்கிறது. OC பிரிவினர் 30 வயதுக்குள் 4 முறை தேர்வெழுதலாம். OBC பிரிவினருக்கு வயதில் கூடுதலாக 3 ஆண்டுகள் அல்லது தேர்வு எழுதும் எண்ணிக்கையில் 7 என சலுகை நீட்டிப்பு உண்டு. SC/ST பிரிவினருக்கு தேர்வு எழுதுவதற்கான எண்ணிக்கையில் வரம்பில்லை. ஆனால், வயது வரம்பு 35. தேர்வு எழுதும் எண்ணிக்கை, அதிகபட்ச வயது இரண்டில் முதலாவதாக எட்டுவதை கணக்கில் சேர்த்துக் கொள்வார்கள்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். வயது தகுதியோடு, பட்டப்படிப்பு இறுதியாண்டு படிப்பவர்கள்கூட விண்ணப்பிக்கலாம். அதேசமயம், முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது பட்டப்படிப்பு தேறியதற்கான சான்று இணைத்தாக வேண்டும்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏராளமான இலவச பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. மனித நேய மன்றம் டிரஸ்ட் நடத்தும் பயிற்சி மையத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு உண்டு. தமிழக அரசின் சார்பிலும் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. அடையாறில் அண்ணா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நிறுவனம் இதற்காக நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதி உள்ளவர்களுக்கு இலவச பயிற்சியை வழங்குகிறது. முகவரி: 163/1, பி.எஸ் குமாரசாமிராஜா சாலை, ஆர்.ஏ.புரம் (க்ரீன்வேஸ் சாலை), சென்னை-28. தொ.பே: 044 - 24621475, 24621909. இணையதளம்:www.civilservicecoaching.com
மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் பல்கலைக்கழக மானியக்குழுவான யு.ஜி.சி-யின் நிதி உதவியின் கீழ் பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் இலவசப் பயிற்சியை வழங்குகின்றன. சில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தனியார் உதவியுடன் இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அந்தந்த மதம் மற்றும் சமூகப்பிரிவு சார்ந்தும் பல்வேறு சேவை அமைப்புகள் ஆங்காங்கே இலவச பயிற்சிகளை வழங்குகின்றன. ஆன்லைனில் ஏராளமான இலவச பயிற்சிகள் கிடைக்கின்றன. உதாரணத்துக்கு... http://mrunal.org/
ஐ.ஏ.எஸ். கனவில் கல்லூரி மாணவப்பருவத்தில் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அடிப்படையிலான பள்ளிப் புத்தகங்களில் பயிற்சி, தி ஹிந்து போன்ற ஆங்கில தினசரிகளை சுலபமாகவும் விரைவாகவும் வாசித்துக் குறிப்பெடுக்கும் பயிற்சி, பொது அறிவு தலைப்பிலான புத்தகங்களில் தேர்ச்சி போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். இந்தப் பயிற்சிகள், பிற்பாடு நீங்கள் முழுநேரமாக குடிமைப்பணி தேர்வுக்குத் தயாராகும்போது மிகவும் கைகொடுக்கும்.''
ஐஏஎஸ் தேர்வுக்கு இலவசப் பயிற்சி
ஜி.மீனாட்சி
அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு, அண்ணா மேலாண்மை நிறுவனத்தின்கீழ் செயல்படும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஐஏஎஸ் தேர்வை எதிர்கொள்வது குறித்தும் ‘புதிய தலைமுறை கல்வி’ இதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி:
அண்ணா மேலாண்மை நிறுவனத்தின்கீழ் உள்ள அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் நடத்தும் இலவசப் பயிற்சியில் சேர என்ன தகுதி வேண்டும்? மாணவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் ஆர்வலர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவும், இருப்பிடமும், பயிற்சியும் இங்கு இலவசம்.
ஆதிதிராவிட பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் போன்றவர்களுக்காக தனித்தனியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. தமிழக அரசு அவற்றை ஒருங்கிணைத்து ஒரே மையமாக பிப்ரவரி 2000 முதல் நடத்தி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் நுழைவுத் தேர்வின் மூலம் முதல்நிலைத் தேர்வுக்கு (Preliminary Examination) 300 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிறகு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி (Main Examination) அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் மெயின் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்குமே மாதிரி ஆளுமைத்தேர்வு (Mock-Interview) நடத்தப்படுகிறது. அவர்கள் புதுதில்லியில் நடைபெறும் ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்வதற்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட சலுகைக் கட்டணத்தில் தமிழ்நாடு இல்லத்தில் தங்க அனுமதி வழங்கப்படுகிறது.
இங்கு பயிலும் மாணவர்களுக்கு உணவுக் கட்டணம் 800 ரூபாயாக இருந்தது. இப்போது அரசு அதை 2,000 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. பிரதானத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 3,000 ரூபாய் ஊக்கத் தொகையும், ஆளுமைத் தேர்வுக்கு தில்லி சென்று வர 200 ரூபாய் வழிச் செலவுக்கும் அளிக்கப்படுகிறது.
இந்த மையத்தில் சேர ஒரு நுழைவுத் தேர்வை நாங்கள் நடத்துகிறோம். பட்டப்படிப்பு முடித்த யாரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் பெறுகிற மதிப்பெண்களின் அடிப்படையில் இப்பயிற்சியில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். வெளியிலிருந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அரசாங்க அடையாள அட்டை அளிக்கப்பட்டு வகுப்புகளுக்கு வரவும், நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. இங்கிருக்கும் நூலகம் போட்டித் தேர்வுகள் எழுத அனைத்து வசதிகளும் கொண்ட அருமையான நிலையமாகும். இங்கு 21,000 புத்தகங்கள் உள்ளன. கணினிக்கென்றே தனி அறையும் உள்ளது. இங்குள்ள கருத்தரங்குக் கூடம் குளிர்சாதன வசதி கொண்ட அருமையான அரங்கமாகும்.
இந்த நிறுவனத்திலேயே இரண்டு பேராசிரியர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் சிறந்த பேராசிரியர்களும், வல்லுநர்களும் அழைப்புப் பேராசிரியர்களாக தருவிக்கப்படுகிறார்கள். இந்த நிறுவனத்தில் பயின்று வெற்றி பெற்ற அலுவலர்களும் அவ்வப்போது தன்னம்பிக்கையூட்டும் உரைகளை வழங்கி இந்த மாணவர்களை உற்சாகப்படுத்துகின்றார்கள். தில்லி போன்ற நகரங்களில் பயிற்சி மையம் நடத்தும் நிபுணர்களையும் வரவழைக்கிறோம். இங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணிபுரிகிறவர்களையும் அவ்வப்போது பாடங்களை நடத்தவும், மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தவும் பயன்படுத்திக் கொள்கிறோம். மாணவர்களே விருப்பப்படும் நிபுணர்களையும் வரவழைக்கிறோம். சில நேரங்களில் தனியார் நிறுவனங்களில் படிக்கிற மாணவர்களும் இங்கு வந்து வகுப்புகளை கவனிக்க தடையேதும் நாங்கள் விதிப்பதில்லை. தமிழகத்திலிருந்து நிறைய பேர் இப்பணிகளுக்குச் சென்று, நம் பெருமையை ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதே எங்கள் அவா.
இந்தப் பயிற்சி மையத்தில் எத்தனை பேர் பயிற்சி பெறுகிறார்கள்? எத்தனை பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்?
தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 300 பேர் ஒவ்வொரு வருடமும் பயிற்சி பெறுகிறார்கள். 2000 முதல் 2012-ஆம் ஆண்டு வரை 432 தமிழக மாணவர்கள் பல்வேறு குடிமைப்பணி பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். நம்முடைய பயிற்சி மையத்திலிருந்து 2010-ஆம் ஆண்டில் 48 பேரும், 2011-ஆம் ஆண்டில் 47 பேரும், 2012-ஆம் ஆண்டில் 49 பேரும் அகில இந்திய அளவில் உயர்ந்த இடங்களைப் பிடித்து தேர்வு பெற்றிருக்கிறார்கள். இதைப் போன்ற ஒரு மையத்தை தங்கள் மாநிலத்திலும் அமைக்க வேண்டும் என்று பல நிறுவனங்கள் வந்து பார்த்தவண்ணம் இருக்கின்றன. ஆந்திரப்பிரதேசத்தில் இருந்தும் இதைப் பார்ப்பதற்காக வருகை புரிய உள்ளார்கள்.
முதன்மைத் தேர்வுக்குப் பிறகு நடக்கும் நேர்முகத் தேர்வுக்குத் தயாராவோருக்காக மாதிரி நேர்முகத் தேர்வை (Mock Interview) நடத்துகிறீர்களா?
ஆளுமைத் தேர்வுக்கு பயிற்சி அவசியம். எனவே மத்திய தேர்வாணயம் நடத்துவது போலவே நாங்கள் நான்கு ஐந்து முக்கியமான அலுவலர்கள், தனியார் துறையைச் சார்ந்த நிர்வாகிகள், பேராசிரியர்கள், மனநல வல்லுநர்கள் போன்றவர்களைக் கொண்டு அச்சு அசலாக மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்துகிறோம். இதனால் மாணவர்கள் பயமும், பதற்றமும் இன்றி தில்லியில் நடக்கும் ஆளுமைத் தேர்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடு குறித்து விரிவாக விவாதிக்கவும் செய்கிறோம். இவையெல்லாம் அவர்களை மெருகேற்றுகின்றன.
வருங்காலத் திட்டங்கள் எவை?
அண்ணா மேலாண்மை நிறுவனம் நான்கு பிரிவுகளைக் கொண்டது. இங்கு அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு துணை மாவட்ட ஆட்சியர், மாவட்டப் பதிவாளர், வணிக வரி அலுவலர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், உதவி வனப் பாதுகாவலர் போன்ற அ தொகுதி அலுவலர்களுக்கு ஐந்து வார அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. வேளாண்மை அலுவலர், கால்நடை உதவி மருத்துவர் போன்ற ஆ பிரிவு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பவானி சாகரில் அரசு பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இங்கு இளநிலை உதவியாளர், உதவியாளர் போன்ற அலுவலர்களுக்கு இரண்டு மாத அடிப்படைப் பயிற்சியும், துணை வட்டாட்சியர்களுக்கு 28 நாட்கள் இடைநிலைப் பயிற்சியும் வழங்கப்படுகின்றன.
இந்திய வனப்பணி, முதல் பிரிவு போட்டித் தேர்வு போன்றவற்றிற்கும் அறிமுகப் பயிற்சியை நடத்தலாம் என்று பரிசீலித்து வருகிறோம். அது தவிர அண்ணா மேலாண்மை நிறுவனத்தில் அலுவலர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை குழு விவாதமாகவும், கலந்துரையாடலாகவும், ரோல் ப்ளேவாகவும் நடத்தி பயிற்சியை வாழ்க்கையோடும், பணியோடும் தொடர்புபடுத்தும் விதமாக மாற்ற இருக்கிறோம். இப்போது தமிழக அரசு 36.23 கோடி ரூபாய் ஒதுக்கி, பவானி சாகரில் மிகச் சிறந்த பயிற்சிக் கூடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
இங்கு பயிற்சியாளர்களுக்கு நல்ல நூலகம், கணினி அறை, விளையாட்டுக் கூடங்கள், கருத்தரங்கக் கூடங்கள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. இன்னும் நான்கு ஐந்து மாதங்களில் இந்தப் பயிற்சி மையம் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் பயிற்சி தரப்படாமல் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இங்கும் அழைப்புப் பயிற்சி அளிப்பவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் உயர்த்தப்பட்டிருக்கிறது. எனவே ஒட்டு மொத்தமாக பயிற்சியின் தரத்தை எல்லா வகைகளிலும் பயனுள்ளதாக மாற்றி வருகிறோம். பயிற்சியாளர்களும் இந்த மாற்றங்களை நேசித்து முழுமையாக அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் போட்டிகள், படைப்பாக்கத் திறனை வெளிப்படுத்தும் சஞ்சிகைகள் போன்றவற்றை ஏற்படுத்தி பயிற்சியை அயர்ச்சியில்லாத அனுபவமாக மாற்றியிருக்கிறோம்.
சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களிடம் தாங்கள் காணும் பொதுவான குறைபாடுகள் என்ன?
நமது மாநில மாணவர்கள் தகவல் தொடர்புத் திறனை இன்னும் கொஞ்சம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராவது எப்படி?
சிவில் சர்வீஸஸ் தேர்வு என்பது ஏறத்தாழ 25 பணிகளுக்கு நடத்தப்படுகிற போட்டித் தேர்வு. இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, அயல் நாட்டுப் பணி, வருமான வரி பணி, கஸ்டம்ஸ் பணி, ஆடிட் பணி, போன்ற பல பணிகள் அதில் அடங்கும். இந்தத் தேர்வு மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது. பிரிலிமினிரி தேர்வு, மெயின் தேர்வு, பர்சனாலிடி தேர்வு என மூன்று கட்டங்களில் நடத்தப்படும். இத்தேர்வை ஆண்டுதோறும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதுகிறார்கள். இந்தத் தேர்வு எழுத குறைந்தபட்ச படிப்பு பட்டப் படிப்பு. அதை தொலைத்தொடர்பின் மூலம் பெறுவதில் ஆட்சேபணை இல்லை. பட்டயப் படிப்பை முடித்தவர்கள், இதை எழுத முடியாது.
இத்தேர்வை எழுத குறைந்தபட்ச வயது 21. பொதுப் பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பு 30. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33. தாழ்த்தப்பட்டவர்களுக்கு 35. பொதுப்பிரிவினர் நான்கு முறையும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 7 முறையும், தாழ்த்தப்பட்டவர் வயது வரம்பு முடியும் வரையும் எழுதலாம்.
இந்தத் தேர்வை எழுதுவதற்கு பொது அறிவிலும், நுண்ணறிவிலும் அதிகத் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம். தற்சமயம் பிரிலிமினரி தேர்வில் ஒருவருடைய ஆராயும் திறனை அறிய சிவில் சர்வீஸ் ‘ஆப்டிடியூட் டெஸ்ட்‘ நடத்தப்படுகிறது. அதற்கு மொத்த மதிப்பெண்கள் 200. இரண்டாவது தாள் பொது அறிவு. அதற்கும் 200 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவை மல்டிபிள் சாய்ஸ் வினாக்கள். இதில் சுமார் 10,000 பேர் மெயின் தேர்வு எழுத தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் அடங்கும்.
மெயின் தேர்வைப் பொருத்தவரை, பொது அறிவுத் தாள்கள் நான்கு இருக்கின்றன. அவற்றிற்கு 250 வீதம் 1000 மதிப்பெண்கள் உண்டு. அடுத்ததாக கட்டுரைத்தாள் ஒன்று உண்டு. அதற்கு 250 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆறாவதாக ஒரே ஒரு விருப்பப் பாடத்தில் இரண்டு தாள்கள் தலா 250 மதிப்பெண்கள் வீதம் 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகின்றன. இவை அன்றி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் ஒரு தாள் தகுதி பெறுவதற்காக நடத்தப்படுகிறது. தமிழைப் படிக்காதவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியில் தேர்வை எழுதலாம். இந்தத் தாள்களில் பெறும் மதிப்பெண்கள் ரேங்கை நிர்ணயிக்க எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
முதன்மைத் தேர்வில் முதல் 2 ஆயிரம் இடங்களை பெறுபவர்கள் ஆளுமைத் தேர்விற்கு அழைக்கப்படுகிறார்கள். ஆளுமைத் தேர்விற்கு மொத்தம் 250 மதிப்பெண்கள்.
ஆளுமைத் தேர்விலும், பிராதனத் தேர்விலும் பெறும் மதிப்பெண்களைக் கூட்டி இறங்கு வரிசையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. முதல் 600 இடங்களைப் பெறுபவர்கள் ஏதேனும் ஒரு பணியை கண்டிப்பாக பெற்றுவிடலாம்.
சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராக வேண்டும் என எண்ணுபவர்கள் பள்ளிக் காலம் தொட்டே செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும். பொது அறிவுப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். தகவல் தொடர்பு நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதாரம், கணிதம், அறிவியல், அரசியல், நாட்டு நடப்பு, அரசியல் அமைப்புச் சட்டம், புவியியல் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கல்லூரியில் இந்தத் தேர்வு எழுதுவதற்குத் தோதாக இளங்கலைப் படிப்பையோ, இளம் அறிவியல் படிப்பையோ தேர்ந்தெடுக்க வேண்டும். பாடப் புத்தகங்களோடு நிறுத்திவிடாமல், நிறைய மேற்கோள் புத்தகங்களை வாசிக்க வேண்டும். முடிந்தால் நிறைகலைப் படிப்பை தில்லி போன்ற இடங்களில் தொடரலாம். தேர்விற்குத் தயாரவது என்று முடிவு செய்த பிறகு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது படிக்க வேண்டும். விடா முயற்சியும் , அர்ப்பணிப்பும், அகலாத கவனமும், மாறாத ஆர்வமும் சேர்ந்தால் வெகு எளிதில் இதில் வெற்றி பெற்றுவிடலாம்.
ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற கனவில் வலம் வரும் இளைஞர்களிடம் இருக்கவேண்டிய அடிப்படைக் குணங்களாக நீங்கள் கருதுவது என்ன?
உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை, தூய்மை, கனிவு, கருணை, மக்களோடு பணியாற்றும் ஆர்வம், பணத்திற்கு ஆசைப்படாத எளிமை, எப்போதும் மற்றவர்கள் சந்திக்கும் அளவு இயல்பான வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்ட மாணவர்கள் காத்திரமான அலுவலர்களாகப் பரிமளிப்பார்கள்.