காமேஷின் மடல் படித்த எனக்கு அந்த நாள் நினைவு வந்தது.எங்கள் வீட்டில் வெட்டிய மரத்துண்டுகளாக வண்டியில் வரும் விறகினை பூரா வண்டியுமாக வாங்குவார்கள்.பின் கோடாலி தூக்கிக் கொண்டு, "விறகு வெட்டலீயோ விறகு" என்று கத்திக் கொண்டு வருபவரைக் கூப்பிட்டுவெட்டச் சொல்லுவார்கள். வெட்டிய விறகுத் துண்டுகளை வென்னீர் உள்ளே (அதான் குளியலறை உள்ளே)கொண்டு அடுக்க வேண்டியது எங்கள் வேலை. இரு கைகளையும் நீட்டிப் பிடித்துக் கொண்டு முழங்கை முதல்மணிக்கட்டு வரை அடுக்கியதை வாசலில் இருந்து கொல்லை வரை தூக்கிச் செல்ல வேண்டும். ஒரொரு சமயம்சிலாம்புகள் கைகளில் குத்தும். விறகு வெட்டி வரவில்லை என்றால் நாங்களேவும் உடைக்க வேண்டி வரும்.புதிதாக உடைக்கப் பட்ட மரம் எழுப்பிடும் வாசனையெ தனிதான்.கான்பூரில் நடந்த ஒரு சம்பவம்:எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் விறகு தேவைப் பட்டது. வீட்டுக்குப் புதிதாய் வந்திருந்த ஒரு சிறுவனை விறகுக் கடைக்கு அனுப்பினார்கள், "சாலீஸ் கிலோ லக்டி பேஜ்னா" ன்னு சொல்லி இந்த ரூபாயெக் குடு கடெய்க் காரங்கிட்டெ. அவன் அனுப்புவான்" என்று சொல்லி.கடைக்குச் சென்றவன் சிறிது நேரத்திற்லகெல்லாம்திரும்பி வந்தான், "கடைக்காரன் தரமாட்டேங்கறான், வீட்டுலெ யாராவது பெரியவங்களெ அனுப்புன்னு சொல்றான்" என்றபடி. என் நண்பர் கடைக்குச் சென்றார் என்னவென்று விசாரித்து வர.கடைக்காரன் சொன்னான், "பாபூஜி லட்கா சாலீஸ் கிலோ லட்கி மாங்க்றகாத்தா. மைனே போலா பாபூ தூ தோ இத்னா சோடே ஹோ. சாளீஸ் கிலோ லட்கி லேகே தும் க்யா கரோகெ. கிசி படே ஆத்மீக்கு பேஜோ கற்கே போலா மைனே" என்று சிரித்தார். (லக்டி = கட்டை/விறகு. லட்கி = பெண்)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
விறகு அடுப்பில் நெருப்பு குறையும் போது ஒரு ஊது குழல்( பெயர் மறந்து விட்டது) கருப்பா, உருளையா ,நீளமா இருக்கும் அதை கொண்டு ஊதினால் நெருப்பு பிடிக்கும்...
---
Sent via Epic Browser
தெற்கே இதை ”தீ மூட்டி குழல்’ என்பார்கள். பேச்சு வழக்கில் தீமட்டிகுழல். இப்போ அது பயன்பாட்டில் இல்லைனு நினைக்கிறேன்.
நாங்க ஊதாங்கோல்னு சொல்லுவோம்.
எங்கம்மா
அடுப்பாங்குழல்னு சொல்லுவாங்க
எங்கம்மா
அடுப்பாங்குழல்னு சொல்லுவாங்க
நாங்க ஊதாங்கோல்னு சொல்லுவோம்.
விறகு காசு குடுத்து வாங்கும் பணக்காரர்களா நீங்கள் ? விறகுகளை நாங்கள் மலைக்குச் சென்று வெட்டி எடுத்து வரவேண்டும். இல்லாவிட்டால் கருவேல முள் போன்றவற்றை வெட்டி எடுத்து உலர்த்தி உபயோகிக்க வேண்டும். விறகு புராணம் சற்றே இரத்தம் சொட்டும் புராணம். எழுதத்தான் வேண்டுமா என்ன ?
தெற்கே இதை ”தீ மூட்டி குழல்’ என்பார்கள். பேச்சு வழக்கில் தீமட்டிகுழல். இப்போ அது பயன்பாட்டில் இல்லைனு நினைக்கிறேன். ஆகியவற்றை எரித்தால் அதிக சாம்பல் சேரும்.
கன்னு போட்டா எங்க வீட்டுக்கு முதல் பால் (ஏதோ சொல்லுவாங்க)
> காமேஷ் wrote:கன்னு போட்டா எங்க வீட்டுக்கு முதல் பால் (ஏதோ சொல்லுவாங்க)சீம்பால்.
--
ஹ்ம்ம்... அடுப்பு சமையலைப் பத்தி நெறைய பேசலாம்...வேலையை முடிச்சுட்டு வர்றேன்..
ஆமா ஆமா சீம்பால் !
5 பேர் கொண்ட எங்க குடும்பம்..
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ கறந்ததை சீம்பால்னும், காய்ச்சியபின் கடம்புன்னும் சொல்லுவங்க.
இது நல்ல யோசனையா தான் இருக்கு..அடுப்பை அணைக்காமல் மீண்டும் எப்படி மரத்தூளை நிரப்புவது ?
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஆசாத் ஜீ... நடுவுல பாட்டில வச்சி நாங்க (லேசா தண்ணி தெளிச்சு ) மரத்தூள் அடைப்போம்.. எடுக்க ஈசியா இருக்கும் ..
//நடுவுல பாட்டில வச்சி நாங்க (லேசா தண்ணி தெளிச்சு ) //என்னது அடுப்புக்கு நடுவுல பாட்டிய வச்சா ?பாட்டி பாவமில்லியா ?
ஆசாத் ஜீ... நடுவுல பாட்டில வச்சி நாங்க (லேசா தண்ணி தெளிச்சு ) மரத்தூள் அடைப்போம்.. எடுக்க ஈசியா இருக்கும் ..