சம்பந்தமே இல்லாமல் குறிப்பிட்ட ஒரு சித்திரம் அடிக்கடி கனவுகளில் வருவது எல்லோருக்கும் நடக்கும் இல்லையா?
கொஞ்ச காலம் முன்பு நண்பர் லோகுவுக்கு இது பெரிய பிரச்னையாக இருந்தது. ''ஏன்... எதுக்குன்னே தெரியல முருகா... ஒரு கை பொட்டேர்னு சுடுது. காந்தி ரத்தம் தெறிக்க 'லோகூஊஊஊ’னு கத்திக்கிட்டே துள்ளி விழறாரு... எம் பொண்டாட்டி புள்ளைங்கள்லாம் கத்திக்கிட்டே ஓடி வருதுங்க... பின்னாடி துப்பாக்கியோட பெரிய கூட்டமே தொரத்திக்கிட்டு வருது... தடார்னு முழிச்சு எந்திரிச்சுருவேன். இப்பிடி ஒரு கனவு அடிக்கடி வருதுப்பா. கழுத... நாம கம்யூனிஸ்ட்டு... ஒரு ஜீவாவோ ஏ.கே.ஜி-யோ வந்தாலும் பரவாயில்ல. இந்த காந்தி எதுக்கு வர்றாப்ல?'' எனப் புலம்புவார். அதன் பிறகு, ஒரு நாள் லேட்டாக வந்தவர், வாஷருக்கு எண்ணெய் போட்டபடியே சொன்னார், ''காந்தி கனவுக்குக்
காரணம் கண்டுபுடிச்சுட்டேன் தம்பி... இப்ப புதுசாப் போன வூட்ல மேல் தளத்துல குடியிருந்தவரு ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. காந்தி மதுரைக்கு வந்தப்ப, முன்னாடி போய் நின்னு துண்டுப் பிரசுரம் போட்ட ஆளுகள்ல ஒருத்தராம். காலைல தல டிக்கெட் வாங்கிருச்சு. இனிமே, காந்தி வர மாட்டாருனு நெனைக்கிறேன்.'' நண்பர் முருகேஷ§க்கு எப்போது பார்த்தாலும் டிஸ்கவரி சேனல் மாதிரி விதவிதமான பாம்புகள் கனவுகளில் வந்து அதிரவைத்துக்கொண்டே இருக்கின்றன. ''பாம்புக் கனவுக்குப் பலன் என்னப்பா?'' என அவர் பார்க்கிறவர்களிடம் எல்லாம் கேட்பார். சித்தார்த்தனுக்கு, ஆங்கிலப் படங்கள் மாதிரி பின்னணியில் கட்ட டங்கள் சீட்டுக் கட்டுக்களாகச் சரிய, இவன் தப்பித்து ஓடிக்கொண்டே இருக்கிற ஒரு சேஸிங். பவானிக்கு, ஏதோ ஓர் உருவம் பெரிய கோட்டைச் சுவரில் இருந்து அவளைத் தூக்கி முதலைகள் வாய் பிளந்து நிற்கும் அகழியில் போடுவது மாதிரியான விஷ§வல். பாஸ்கருக்கு அவன் உடல் கிடத்தப்பட்டு இருக்க, தெரிந்தவர்கள் அழுதுகொண்டு இருக்கிற சித்திரம். ஜெகத்துக்குப் பனிமலைப் பயணம். விஜிக்கு குதிரை ரேஸ். பகவதிக்கு மூச்சடைக்கும் ஆழ் கடல் நீச்சல். இப்படி சமீபமாக என் கனவுகளில், அடிக்கடி ஒரு விசித்திரமான காட்சி வருகிறது. இலை தழைகளை உடுத்திக்கொண்டு (ஆதாம் - ஏவாள்தான்) இருவர் ஒரு ஏ.டி.எம். மெஷினில் பணம் எடுக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு கும்பலே அவர்களை நெருக்கி இழுத்து வெளியே தள்ளுகிறார் கள். அதோடு அந்த விஷ§வல் அறுந்து விடுகிறது. சம்பந்தமே இல்லாமல், தொடர்பறுந்த கண்ணியாக இப்படி ஒரு காட்சி அடிக்கடி வந்துபோகிறது!

கனவுகளை ஆழ்மனப் பாதிப்புகளின் படிமங்கள் என்கிறார் ஃப்ராய்ட். 'மௌனத்தின் ஆழ்கடலில் படிந்துகிடக்கும் நிராசையின் பாசி’ என்கிறார் மௌனி. எனில், எனக்கு அடிக்கடி வரும் இந்த ஏ.டி.எம். மெஷின் கனவின் அர்த்தம் என்ன? பணமும் பொருளும் அற்ற ஆதி வாழ்வின் வனக் குகையில் தொலைந்துவிடத் துடிக்கிறதா இந்த மனம்? பணத்தின் தேவைகளால் உயிரனைய சில உறவுகளை இழந்துவிடுவேனோ எனத் தவிக்கும் ஓர் ஏழை மனதின், பதற்றத்தின் படிமமா அது? பணத்தை முன்வைத்து நடக்கும் சூதாட்ட மாக வாழ்க்கையை மாற்றிக்கொண்ட நல்ல நண்பர்கள் தந்த அழுத்தமா?மருத்து வமனையில் இருந்த கர்ப்பிணித் தங்கைக் குப் பழங்கள் வாங்கிப் போகவும் யோசிக் கும் நிதி நிலையில் இருந்த ஓர் அண்ணனின் நினைவில் எரியும் காயமா? மருத்துவ மனைகளிலும் விசேஷங்களிலும் பணத் தின் திசை தேடி அலைந்துகொண்டே இருக்கும் நடுத்தரவர்க்கத்து உப்புச் சமுத்திரத்தின் ஒரு துளியா அது? கடன் கேட்கும் கணங்களின் மிகு துயர் கூச்சங் களை அடிக்கடி அனுபவிக்கும் ஆத்மாக் களின் குரலா? எதுவெனினும் இந்தக் கனவுக்கான எல்லா சாத்தியங்களும் தொடங்கும் வார்த்தை... பணம்!
என் அண்ணன்களின் வாழ்க்கை ஒரு காசு, ரெண்டு காசில் தொடங்கியது. என் தலைமுறையின் பொருளியல் வாழ்வு தொடங்கியது ஐந்து பைசா, பத்து பைசா வில். வீட்டில் இருந்து 50 பைசா எடுத்து வருவது எவ்வளவு பெரிய சாதனையாக இருந்தது? தினமும் ஜாமெட்ரி பாக்ஸில் பதுக்கி ரெண்டு ரூபாய் எடுத்து வரும் சாதிக்தான் அப்போது எங்கள் வகுப்பின் வி.ஐ.பி. வாத்தியார் வெளியில் போகும் ரீஸஸ் பீரியடில், வகுப்பறையின் நடுவே வந்து நின்று ஜாமெட்ரி பாக்ஸை ஸ்டைலாகத் திறந்தபடி, '' 'விஜயகாந்த்து வாழ்க’ சொல்றவங்கள்லாம் இந்தப் பக்கம் வா... கலைவாணி வூட்டுக்கு ஜவ்வு மிட்டாய் வாங்கப்போறேன்... டுர்ர்ர்ர்ர்'' என்பான். உடனடியாகப் பாதி கிளாஸ், ''விஜயகாந்த் வாழ்க...'' எனக் கத்திக்கொண்டே அவன் பின்னால் ஓடும். அவன் அப்போது விஜயகாந்த் வெறியன். ரெண்டு ரூபாயைக் காட்டிக் காட்டியே பாதி வகுப்பை விஜயகாந்த்ரசிகர் களாக மாற்றி வைத்திருந்தான். இப்போது சாதிக் சவுதியில் ஒரு ஷேக் வீட்டில் கார் ஓட்டுகிறான். சில மாதங்களுக்கு முன்பு ஊருக்குப் போனபோது சாதிக் வந்திருந் தான். காலையில் இருந்தே குடிப்பவனாக மாறி இருந்தான். அதனாலேயே அவன் வீட்டில் எப்போதும் பிரச்னையாகக்கிடந் தது. வீட்டுக்குத் தெரியாமல் காலையி லேயே போய் எங்காவது குடித்துவிட்டு வந்து கரைச்சல் பண்ண ஆரம்பிப்பான். ஒரு நாள் மிக அதிகமாகக் குடித்துவிட்டு, சந்திக் கரையில் கிடந்தவனை எல்லோரும் போய்த் தூக்கி வந்தோம். நல்ல போதையில் அவன் திமிறிக்கொண்டு எழுந்து நின்று, ''டேய்... விடுங்கடா. நான் சம்பாதிக்கிறேன்... காசனுப்புறேன். இதுங்க யாருக்கும் என்னைக் கேக்க அதிகாரம் கெடையாது... கல்யாணம் ஆயி நாலு நாள்ல பிளைட்டு ஏத்தி வுட்டவுனுவோதான இவுனுவோ... இங்க பாரு... இங்க பாரு...'' என்றபடி கைலியைத் தூக்கி சாதிக் காண்பித்தபோது அதிர்ந்து போனேன். அவன் தொடையில் ரெண்டு உள்ளங்கை சைஸுக்கு முற்றாக ஆறாத தழும்பு இன்னும் ரணமாகக்கிடந்தது. ''ரோத்தாடி தெரியுமா... ரோத்தாடி. ஆறு மாசம் தூங்க முடியாது. சும்மானு நெனைச் சியா இந்த சாதிக்க...'' எனக் கத்திக்கொண்டே அவன் தள்ளாடி நடந்த காட்சியை மறக் கவே மாட்டேன்.
எனது இன்னொரு பால்ய நண்பன் சாகுல், வீட்டோடு மாப்பிள்ளையாகக் கொழும்பில் இருந்து 200 கி.மீ. தள்ளி இருக்கிற ஒரு சிங்களக் கிராமத்தின்சைக்கிள் கடை ஒன்றில் பஞ்சர் ஒட்டுகிறான். இன்னொருவன் குரோம்பேட்டை லெதர் கம்பெனியில் மூச்சடைக்க மூச்சடைக்க கெமிக்கல் அடிக்கிறான். ஆசை ஆசையாக மேரியைக் காதலித்து, பணம் இல்லாததால் தோற்றுப்போன சேகர், நைஜீரியாவில் மெக்கானிக் ஆகி மோட்டார் பிரிக்கிறான். நான் பர்ஸில் ஒரு டெபிட் கார்டும்கிரெடிட் கார்டும் வைத்துக்கொண்டு, ''என்னது... டீ ஆறு ரூபாயா? எப்போலேர்ந்துங்க?'' என அண்ணா சாலையில் ஒரு டீக்கடை முன்பு அதிர்ச்சியாகி நிற்கிறேன். 50 காசே போதுமானதாக இருந்த காலம், ஆறு ரூபாய் தேநீரில் நுரைக்கிறது மீள முடியாத நினைவுகளாக.
ஒரு நண்பர், வட்டிக்கு வளைத்து வளைத்துப் பணம் வாங்கிக்கொண்டு, 12 சிம் கார்டுகளுடன் கிட்டத்தட்ட அபோதா பாத் வீட்டில் பதுங்கியிருந்த பின்லேடன் மாதிரி வாழ்கிறார். ''என்னோட வாழ்நாள் சாதனை என்ன தெரியுமா? நான் இன்னும் தற்கொலை பண்ணிக்காம இருக்கறது தான்...'' என அவர் ஒரு முறை சொன்ன போது, நிம்மதி இல்லாத அவருடைய அன்றாடங்களின் வலி முகத்தில் அறைந்தது!
காலக் கொடுமையில், ஆறேழு வருடங் களுக்கு முன்பு நானும் தவணையில் ஒரு கணினி வாங்கினேன். 30 மாதங்கள் கட்ட வேண்டிய தவணையில் பாதியைக் கட்டா மல் அப்படியே மறந்துவிட்டேன். (அதெப் படி மறக்கும்... பணக் கஷ்டம்தான் பாஸ்.) இந்த மாதிரியான குற்றங்கள் கிரிமினலா... சிவிலா? என்றுகூட அறியாத பாலகன் நான். சில பல மாதங்கள் கழித்து திடுதிப் என்று ஹை கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி ஒரு கடிதம் வரவே வெலவெலத்து, இந்த விவகாரங்களில் தளபதியான நண்பர் ஒருவரிடம் ஆலோ சித்தேன். அவர் ஆறு சிம் பார்ட்டி. ஆகவே, ஐடியாக்களைப் பொழிந்தார்.
''அவங்க வரச் சொன்ன அன்னிக்குப் போயிரு... இருக்கறதுலயே டஞ்சனா ஒரு சட்டை-பேன்ட்டை மாட்டிக்கிட்டுப் போ. அவங்க என்ன சொன்னாலும் 'அய்யா... நான் ரொம்ப ஏழைங்க. சாப்பாட்டுக்கே கஷ்டங்க. என்னால அவ்வளவு கட்ட முடியாதுங்க’னு கதறு. கஷ்டப்பட்ற மாதிரியே நடி.''
''நடிக்கிறது என்ன பாஸ்... அப்பிடித்தானே இருக்கு பொழப்பு. நீங்க மேல சொல்லுங்க...''
''அப்பிடி இப்பிடிப் பாதி அமௌன்ட் டுக்கு வருவாங்க. ஒரு டைம் வாங்கிட்டு வந்து கட்டிரு. நீ கொஞ்சம் டீசன்ட்டுங் கிறதால இப்பிடிச் சொல்றேன். நம்மள மாதிரி ஆட்டத்துக்கு ரெடின்னா சொல்லு... சிம்மை உருவி வீசிட்டு, வீட்டை மாத்திட் டுப் போயிட்டே இருக்கலாம்.''
''இல்ல... நான் அவங்களையே டீல் பண்ணிக்கிறேன்...''
குறிப்பிட்ட நாளில் கோர்ட்டுக்குப் போனேன். நாலைந்து நீதிபதிகள் உட் கார்ந்து இருக்க, அந்த ஹால் முழுக்கக் கூட்டம் கும்மியது. டோக்கன் போட்டு வரிசைப்படி பார்ப்பதற்குள் மூச்சு முட்டி யது. அங்கே இருந்த கூட்டத்தைப்பார்க்கும் போது... நமது தேசத்தின் கடன், ஸ்பெக்ட் ரம் ஊழல் தொகை, கலைஞர் - சசிகலா குடும்பங்களின் சொத்து மதிப்பு, அஜீத் - விஜய் - சூர்யா சம்பளங்கள், பெப்ஸி - கோக் வியாபாரம், மல்லையா மகன் முகம் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. ஆனாலும், நான் எளியன் இல்லையா?
''அய்யா... நான் ரொம்ப ஏழைங்க... இவ்வளவு பணம் கட்ட முடியாதுங்க'' என ஒரு நீதிபதியின் கையைப் பிடிக்கத் தவ்வினேன்.
அவர் சிறு சலனமும் இல்லாமல், ''எஸ்.பி. லோன் கேஸா? முதல்ல கைல இருக்கிற பணத்தைக் கட்டிட்டு, அப்பிடி ஓரமா உக்காரு'' என்றார்.
''அய்யா... முப்பத்தஞ்சு ரூபா இருக்குங் கய்யா...'' என நான் அப்பாவியாகபாக்கெட் டைத் தடவ, அவர் பயங்கர டென்ஷன் ஆனார். ''நீ அப்பிடி உக்காரு... பேங்க்காரங்க பேசுவாங்க... உன் மூஞ்சே சரியில்லையே...'' என உட்காரவைத்தார்.
உண்மையைச் சொல்லப்போனால், அங்கே அன்று இருந்த முகங்களில் நான் கொஞ்சம் அபவ் ஆவரேஜ். அந்த அளவுக்குப் புலம்பல்களாலும் கதறல்களாலும் நிறைந்து கிடந்தது ஹால். அப்போது என் பக்கத்தில் தனது மனைவியுடன் கைலியில்சல்பேட்டா மணக்க உட்கார்ந்து இருந்த ஒருவர், ''கோடிக் கணக்குல கொள்ளை அடிக்கிறவன்லாம் கொட்டடிச்சுட்டு சுத்துறான்... மாட்னாலும் ஜெயில்ல ஏ.சி. போட்டுக்கறான். நமக்குஎன்னடி... இப்பப் பாரு... நீ பாட்டுக்குப் பின்னாடியே வா...'' என எழுந்தார்.
திடுதிப்பென மனைவியை இழுத்துக் கொண்டு எதிரே இருந்த நீதிபதியின் முன்னால் தடாலென விழுந்தார். ''அய்யா... நீங்க இப்ப மனசுவைக்கலைன்னா, நாங்க ரெண்டு பேரும் வெளிய போய் வெஷம் வாங்கிக் குடிச்சுட்டு, இங்கயே ஓடி வந்து வுழுந்து செத்துருவோம்யா...'' எனக் கைலி கதற, அந்த நீதிபதி அலட்சியமாகப் பக்கத் தில் இருந்த வங்கி அதிகாரியிடம் திரும்பி அடித்ததுதான் செம பஞ்ச்... ''கேட்டீங்கள்ல... நீங்கதானே கடன் குடுத்தீங்க. அப்பிடியே அந்த விஷத்தையும் வாங்கிக் குடுத்துருங்க... பாவம், ரொம்பக் கஷ்டப்பட்றாங்க...'' எப்படியோ உருட்டிப் புரட்டி அந்த லோனை அடைத்தேன்!
சாதாரணமாகவே வங்கிகளில் இருந்தும் கால் சென்டர்களில் இருந்தும் ''சார்... உங்க மன்த்லி சேலரி சொல்ல முடியுமா?'' என்கிற பெண் குரல்கள் எரிச்சலூட்டும். மேற்சொன்ன சம்பவத்துக்குப் பிறகு தீவிர வாதம் ஏறியிருந்தது. அப்படி ஒரு கணத்தில், பேசிய பெண் குரலிடம் கண்டபடி திட்டி விட்டேன். சட்டென்று எதிர் முனை அழுதபோது சுருக் என்றது. ''அய்யோ ஸாரிம்மா... ஸாரிம்மா...'' எனத் தேற்றிய பிறகு கேட்டேன், ''ஏம்மா... இப்பிடி நிறை யப் பேர் ஏதேதோ பேசுவாங்களே... உங்க ளுக்குக் கஷ்டமா இருக்காதா?''அதற்கு அந்தப் பெண் சொன்னாள், ''என்ன பண்றது சார். அவங்கவங்க மூடுக்கு ஏதேதோ பேசுவாங்க. ரொம்பக் கஷ்டமா இருக்கும். அப்புறம் எங்களுக்கு சேலரி யார் சார் கொடுப்பாங்க... இந்த லைன்ல பெர்சனல் பேசக் கூடாது சார்'' எனத் தேம்பியபடி வைத்துவிட்டாள். அதன் பிறகு, இப்படிப் பேசுகிற யாரிடமும் நான் எரிச்சலைக் காட்டுவது இல்லை!
எங்கள் ஊர்ப் பக்கம் உள்ள பேராவூரணி யில் மொய் விருந்து பிரபலம். எதாவது ஒரு வீட்டில் பணக் கஷ்டம் என்றால், பத்திரிகை அடித்து சொந்த பந்தங்களுக்கு எல்லாம் கொடுத்து வீட்டில் மொய் விருந்து நடத்துவார்கள். விருந்துக்கு வரும் உறவுகள் சாப்பிட்டுவிட்டு வைத்துப்போகிற மொய்யில் அந்த வீட்டின் தேவைகள் தீர்ந்துவிடும். மைக் கட்டி, போஸ்டர் அடித்து, கிடா வெட்டி இது பெரிய களேபரத் திருவிழாவாகவே நடக்கும். சில வீடுகளில் லட்சக்கணக்கில் மொய் நடந்த ரெகார்ட் பிரேக் எல்லாம் உண்டு. தான் வைத்ததைவிடக் குறைவாக வைத்து உறவு களுக்குள் பெரிய வெட்டுக் குத்தெல்லாம் நடக்கும். பொதுவாக, இந்த மொய் விவகாரங்களால் நமது கிராமங்களில் உடைந்துபோன உறவுகள் எத்தனையோ உண்டு. ''காளி... அசிங்கப்படுத்திட்டா னுவோ. இங்க குடுறி...'' என பொண்டாட்டி போட்டிருந்த மூக்குத்தியைப் பிடுங்கி வாசல் கூரையில் எறிந்துவிட்டுப்போன மாமாக்களை நான் பார்த்திருக்கிறேன்.
நண்பர் ஒருவர் காதலித்துக் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர். காதல் திருமணம் என்பதால் ஊருக்குப் போகா மல் சென்னையிலேயே நடந்தது கல்யா ணம். நண்பர் சொன்னார், ''எங்க அம்மா
வுக்குப் பெரிய வருத்தம்... ஊர்க்காரங்க மொய் எல்லாம் போச்சேங்கறதுதான். ஏன்னா... எங்க சொத்துல பாதியை இது வரைக்கும் சொந்த பந்தங்களுக்கு மொய் யாவே வெச்சுருப்போம். பையன் கல்யா ணத்துலதான் அதை நேர் செய்யணும்னு நெனைச்சவங்களுக்கு, அது மொத்தமும் போச்சேங்கறதுதான் பெரிய வருத்தம்!''
அடையாறு மருத்துவமனை ஒன்றில் கேன்சருக்காகச் சேர்க்கப்பட்ட நண்பனின் அப்பா இறந்துவிட்டார். ஒன்றரை லட்சம் கட்டினால்தான் உடலைத் தருவோம் என்றார்கள் மருத்துவமனையில். உடலை வாங்குவதற்காக இரண்டு நாட்கள் ஏகப் பட்ட பஞ்சாயத்துக்கள் செய்து, ஒரு வழி யாக ஒரு லட்சம் திரட்டிக் கட்டி, போய் எரித்துவிட்டு வந்தோம். திரும்பும்போது, ''நல்ல வேளைங்க... இந்தக் காசு கெடைக் கலைன்னா, எங்கப்பாரு புள்ள இருந்தும் அநாதையாப் போயிருப்பாரு...'' என நண்பன் சொன்னபோதுதான் எனக்குத் தோன்றியது... வாழும்போது, எதை வேண்டுமானாலும் பணம் தீர்மானிக் கட்டும், நமது பிரியங்களை மட்டும் ஒருபோதும் அது தீர்மானித்துவிடக் கூடாது!
(போட்டு வாங்குவோம்...)
''தூத்த போடுற மாரி இருக்கு... வெள்ளக்கன்னப் புடிச்சு உள்ள கட்றயாய்யா!''- அப்பாவின் குரல் கேட்ட மாதிரி இருந்தது. நள்ளி ரவில் தடக்கென்று எழுந்துகொண்டேன். ஜன்னலைத் திறந்தால், திடுதிப்பென்று மழை பின்னுகிறது. பொசுக்கென்று ஈர வாசம். வெளியே வெள்ளைக் கன்று வந்து நிற்குமோ எனப் பிரம்மை தட்டுகிறது. கதவைத் திறந்துகொண்டு கீழே வருகி றேன். மாடிப் படிகளின் கீழே உடல் கிடுகிடுத்தபடி காபி கலர் நாய் வந்து நிற்கிறது. காது மடல் எல்லாம் கழுத்தோடு ஒட்டிக்கொண்டு, அடிவயிற்றில் தண்ணீர் சொட்ட நிற்கிறது. இரண்டு காதுகளையும் பொடப்பொடப்பொடவெனத் தட்டி முதல் மழையில் தலை சிலிர்க்கும் வெள்ளைக் கன்று மாதிரிதான் இருக்கிறது. செங்காமட்டை கலரில் குஞ்சைக் கவ்விக்கொண்டு ஈரமாய் பத்தாயத்தில் வந்து ஒண்டிய எலி, றெக்கை யைச் சிலுப்பிக்கொண்டு வேப்பங்கிளையில் வந்து உட்கார்ந்த காகம், 'சொட்டேர் சொட்டேர்’ என மழைத் துளி பட்டுத் தெறிக்கும் திண்ணைத் திண்டில் உடல் குறுக்கி நிற்கும் பூனை, எங்கிருந்தோ தபதபவென வந்து திண்ணையை நிறைத்துக்கொண்டு வாசமாய்த் தோல் சிலிர்க்கும் ஆடுகள், சாய்ந்துகிடக்கும் மாட்டு வண்டிக்குக் கீழே வரிசையாக ஒண்டி மழை குடிக்கும் தவிட்டுக் குருவிகள், 'பட்பட்பட்’டென அகல்மாடத்தைச் சுற்றத் தொடங்கும் ஈசல்கள் என ஏராளமான உயிர் களை ஞாபகத்தில் கொண்டு வந்து கொட்டுகிறது மழையில் நனைந்து வந்த இந்த நாய்.

இத்தனை நாட்களில் நீல் மெட்டல் தொட்டியின் பக்கத் தில், அண்ணாச்சிக் கடை வாசலில், மீன் மார்க்கெட் ஏரியாவில் என எங்குஎங்கோ இந்த நாயைப் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒரு மழை இரவில் மாடிப் படிகளின் கீழ் வந்து ஒண்டி நிற்கும் இந்தத் தருணம்தான் இது கவனம் பெற்றுவிட்டது.
நேற்று இரவு சின்ன மழைக்கு எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் தியேட்டர் பிளாட் ஃபார்மில் படுதா கட்டிக்கொண்டு இருந்த தாத்தா இப்போது எங்கே போய் படுப்பார்? உதயம் தியேட்டர் பக்கம் பிளாட்ஃபார்மில் கிடக்கும் குடும்பங்கள் எல்லாம் பக்கத்துக் கல்யாண மண்டப வாசலில் போய்க் கெஞ்சிக்கொண்டு இருக்கும். மெரினா பீச்சில் படுத்துக்கிடந்தவர்கள் ஐ.ஜி. ஆபீஸ் வாசலில் வந்து நிற்பார்கள். கோயம்பேடு மார்க்கெட்டில் சுப்ரகீத் ஹோட்டல் வாசலில் தூங்காமல்கொள்ளாமல் பீடி வலித்துக்கொண்டு இருப்பான் தக்காளிக் கடை செல்வராஜ். அதிகாலையில் போனால், சைதாப்பேட்டை கூவக் கரையில் 'பில்லா 2’ ஃப்ளெக்ஸ் பேனரைக் கொண்டுவந்து குடிசை மேல் போட்டுக்கொண்டு இருப்பான் ஒருவன்.
போன வருஷம் இப்படி ஒரு மழை இரவில் ஜி.ஹெச். வாசலில்கிடந்த ஆஸ்பத்திரி வேனுக்குள் இரண்டு குழந்தை களுடன் ஒரு தம்பதி படுத்திருந்தது. 'இடுப்பு வரைக்கும் தண்ணி மச்சான்... லேப்டாப்பு, புக்ஸெல்லாம் போச்சு. நீ செகண்ட் ஃப்ளோர்... தப்பிச்ச’ என்றபடி பெட்டி படுக்கையோடு செந்தில் வந்து நின்றது, கும்மிருட்டில் நெஞ்சு வரைக் கும் தண்ணீரில் நீந்தி அருள் எழிலனோடு பெனின்சுலா பாருக்குப் போனது, 'அய்யனார் குண்டுலதான் தண்ணி ஏறிருக்கு. ஆகாசளி குண்டுக்கு இன்னும் நாலு நாளைக்கு மழைஅடிக்கணும்’ என்ற அம்மாவின் போன் குரல், 'த்தா... இன்னும் ஒரு மாசத்துக்கு சோத்தக் கெடுத்துரும் இந்த மழ... அள்ளி வையி அள்ளி வையி!’ என்ற சாலையோர வியாபாரியின் குரல் அத்தனையும் ஆண்டனி எடிட்டிங் மாதிரி சடசடவென ஞாபகத்தில் மான்டேஜ்
ஷாட்ஸ் ஆகிக்கொண்டே இருக்கின்றன. ஒரு சின்ன மழை எத்தனை நினைவுகளைக் கிளர்த்திவிடுகிறது?
மழையை விடுங்கள்... மழையால் வாசலில் வந்து நிற்கும் உயிர்கள்தான் இந்த உலகத்தை எவ்வளவு ஈரமாக்கிவிடுகின்றன? இமையில் பட்டுத் தெறிக்கும் ஒரு துளியைப் போல, ஜன்னலில் நடனமாடும் குல்மொஹரைப் போல, ஹால் எல்லாம் தீற்றிக்கொள்ளும் சேற்றைப் போல, பேருந்தில் எங்கே நின்றாலும் கொஞ்ச நேரத்தில் தலையில் சொட்டும் ஈரம்போல, குடையில் பள்ளம் பறித்து முட்டியை நனைக்கும் நீரைப் போல... மழை எத்தனை சூடான நினைவுகளைத் தந்துவிடுகிறது.
இந்த ஞாபகங்கள்தான் மழையின் பெரிய அவஸ்தை. ஒரு மழைக் காலையில், கையில் செருப்புகளை ஏந்திக்கொண்டு, இன்னொரு கையில் முட்டி வரை புடைவையைத் தூக்கிக்கொண்டு வாசலில் வந்து நின்ற கீர்த்தனா இந்த மழையில் எங்கிருக்கிறாள்?
''குளிச்சுட்டு துணி ஒலத்திட்டுத்தான் போவேன். என்னா மொறைக்கிற..? திட்றதுன்னா மழையைத் திட்டிக்கோ!'' என அவள் சொன்ன நாளில் சாயங்காலம் வரை விடாமல் மழையடித்தது. பேய் மழை. மொபைலை பாலிதீன் கவரில் சுருட்டிக்கொண்டு சாப்பாடு வாங்க ஹோட்டலுக்குப் போனால், போன் வரும். ''அப்டியே சூடா டீ வாங்கியாடா... ஸ்ட்ராங்கா... ஷ§கர் அதிகமா!'' வீடெல்லாம் ஈர வாசனை. 'ஓ வசந்த ராஜா... தேன் சுமந்த ரோஜா...’ இப்போது பார்த்து இளையராஜா ஹிட்ஸ் போடுகிறவன் எவ்வளவு அற்புதன்? 'ஐய... ரிமோட்டைக் குடு... உனக்கு எப்போ பார்த்தாலும் இளையராஜாதானா?’ அவள் மாற்றிய சேனலில் ஏதோ ஒரு இங்கிலீஷ் பாட்டு ஓடத் தொடங்க, ''போடி போங்கு!'' என உள்ளே போய்ப் புத்தகம் படிக்கத் தொடங்குகிறேன். ''இப்போ எதுக்குப் புத்தகம்..? நான் இருக்கும்போது!''
அந்த மழை இப்போதும் பெய்துகொண்டே இருக்கிறது. மழை சிறுத்த இரவில் அண்ணா நகர் ஆர்ச் பக்கம் அவளை விட்டுவிட்டுத் திரும்பியபோது ஆட்டோவில் சுழன்றடித்து நனைத்த ஈரக் காற்று இந்தக் கணமும் சிலிர்க்கிறது.
மழை எப்போதும் காதலையும் பிரிவை யும் அள்ளி வந்துவிடுகிறது. இந்த மழையை அவள் பார்ப்பாளா... ரசிப்பாளா... நினைப் பாளா..? என மனசு சலசலக்கிறது. இந்தத் தெருவில் மழை பெய்து அடுத்த தெருவில் மழை பெய்யாத மாதிரி ஆகிவிடுகிறது சில நேரம். கண் எதிரே வானத்தில் நூல் பிடித்த மாதிரி மழை நெருங்கிவருவதைப் பார்க்க எப்படி இருக்கும்? தார் சாலையில் சொட சொடவென நமக்கு முன்னும் பின்னும் கொட்டிச் சூழும் மழை மாதிரி பிரியங்கள் சூழ்கின்றன. மனிதர்கள் எங்கெங்கோ போய்விட்டாலும் மழை மறுபடி மறுபடி அவர்களை அழைத்துக்கொண்டு வந்து விடுகிறது...
'பாபூ...
இந்த மழையில் நனைந்துகொண்டே
உன்னிடம் மட்டும்
சொல்வதற்கென்று
ரத்தம் வழியும் ஞாபகங்களைச்
சேர்த்துவைத்திருக்கிறேன் பாபூ!’
என்ற பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதை அடித்து நனைக்கிறது. மழைக் காலத்தின் உணவைக் கோடையில் சுமந்து திரியும் எறும்பைப் போல, கோடையிலும் இந்த மழையையும் நினைவுகளையும் சுமந்து திரிகிறோம் நண்பர்களே. எங்கிருந்தாலும் இந்த மழை உன்னிடமும் வரும். நீ தீண்டாவிட்டாலும் உனது கூரையில் வழிந்து வாசல் மண்ணில் 'குபுக் குபுக்’ என விழுந்து குமிழிடும் மழை, எனது உதிரத்தைப் போல!
நண்பர் ஒருவருக்குக் கல்யாண வரவேற்பு நடந்த நாளில் நல்ல மழை. தி.நகரில் ஒரு ஹோட்டலில் ரிசப்ஷன். விடாமல் பேய் மழை அடிக்கிறது. நான் போனபோது மொத்தமே மூன்று நான்கு பேர்தான் இருந்தார்கள். மணமக்கள் எதுவும் செய்வ தற்கு இல்லாமல் நின்றார்கள். அத்தனை பேருக்குச் சாப்பாடு செய்துகிடந்தது. நேரம் ஆகியும் மழை அடித்துக்கொண்டே இருக்க, நான் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினேன். எனக்கு நண்பனையும் அவன் மனைவியை யும் பார்க்கப் பாவமாக இருந்தது. மறுநாள் அவனிடம் போனில் பேசும்போது, ''அப்புறம் யாராவது வந்தாங்களா..?'' என்று கேட்டேன். ''இல்லடா... இன்னும் ரெண்டு பேர் வந்தாங்க... அவ்வளவுதான்!'' என்றான். ''டேய்... வருத்தப்படாத... விடு!'' என்றதற்கு அவன் சொன்னான், ''டேய்... எதுக்கு வருத்தம்..? யாரும் வரலைன்னா என்ன... எங்க கல்யாணத்துக்கு மழையே வந்துருச்சே! அதைவிட யாரு பெரிய கெஸ்ட்டு?''
விமலா அத்தை கல்யாணத்துக்கும் இப்படித்தான் மழை வந்தது. தஞ்சாவூர் ரயில்வே கல்யாண மண்டபத்தில் கல்யாணம் ஆரம்பிக்கிற நேரத்தில் 'சொட சொட’வெனக் கொட்ட ஆரம்பித்துவிட்டது மழை. ''கம்னாட்டி... வெறும் வாய்ல அரிசி திங்காத... அரிசி திங்காதனு சொன்னா கேட்டாத்தான. அதான் அடிச்சு வெளுக்குது!'' என ஆத்தா அலுத்துக்கொண்டது. எனக்கென்னவோ அத்தை கல்யாண நாளில் மழை வந்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அது பெரிய கொடுப்பினை இல்லையா? கல்யாணத்தைப் பற்றி எப்போது நினைத்தாலும் அப்படி ஒரு மழை வருவது எல்லோருக்கும் கிடைக்குமா என்ன? அத்தைக்கும் அப்படிச் சந்தோஷமாகத்தான் இருந்தது. முகம்கொள்ளாத சிரிப்போடு மாமாவை இடித்தபடி போட்டோவுக்கு எல்லாம் நின்றுகொண்டு இருந்தது. அடிக்கிற மழையில் வேனில் ஏறி நசநசவென நெருக்கிக்கொண்டு வீட்டுக்குப் போகும்போதும் அப்படி ஒரு சிரிப்பு. அது வரை பார்த்த மழைதான். ஆனால், அப்படி ஒரு நாளில் அது முற்றிலும் வேறு மழை இல்லையா! இப்போதும் அத்தையை நினைத் தால் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய வீட்டில், முற்றத்தை அடைத்துக் கொட்டும் மழைக்கு பாத்திரங்கள் வைத்துவிட்டு, நீர் தெறிக்கும் இடத்தில் அமர்ந்து இருக்கும் முகம்தான் நினைவில் இருக்கிறது.
குமார் செத்துப்போனது ஒரு மழை நாளில்தான். மழையோடு மழையாக சுடுகாட்டுக்குப் போய் பந்தல் போட்டு எரித்துவிட்டு வந்தோம். முதல் வாரம்தான் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு வாழை இலைக் கட்டு கொண்டுவந்தான். வாழை இலையெல்லாம் வழிந்துகொண்டு இருந்த மழை நீரை விரலால் சுண்டிக்கொண்டே, ''மழ நிக்கிற மாரி தெரியல ஆயி... சூடா காபி குடு. ஒரு கிளாஸ் அடிச்சுட்டு மழையோட போயிர்றேன். மேட்டு குண்டுல மடத் தொறந்துடலைன்னா நாத்தெல்லாம் அழுவிப்போயிரும்!'' என மச்சான் பேசிக்கொண்டு இருந்தது மழையில் ஊடுருவும் வாகன வெளிச்சம்போல் மனசுக்குள் இருக்கிறது.
அன்றைக்கு ஐ.ஏ.எஸ். அகாடமி நண்பர் சங்கருடன் பேசிக்கொண்டு இருந்தபோது சொன்னார், ''மழைன்னா எனக்கு எங்க அப்பா நெனப்பு வந்துரும் பாஸ். அப்பா செத்த அன்னிக்கு செம மழ... கொண்டுபோய் சிதைக்கு வெச்சா எரியவேயில்ல. நெருப்பு வைக்க வைக்க கை காலெல்லாம் நீட்டிட்டு வருது. மட்டேர் மட்டேர்னு கம்பால அடிச்சு அழுது அழுது எரிச்சோம். இங்க பாருங்க... இப்பக்கூட அழுக வந்துருச்சு'' எனக் கண்கள் கலங்கியபோது மழை இன்னும் பெரிதானது.
சித்தார்த்தனைத் தேள் கடித்தபோது லட்சுமாங்குடி ஆஸ்பத்திரியில் கழிந்த மழை தொடங்கி, அரக்கோணத்தில் நடு வழியில் நின்றுவிட்ட ரயில் மழை வரை எத்தனை எத்தனை மழை? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மழை. ஒரு முறை கார்த்திகை சுடலை அன்றைக்கு மழை வந்தபோது, ''ஊருக்கு நல்லதில்லடா... என்னவோ குத்தம் செஞ்சிட்டீங்க'' எனக் கருப்பு பெரியப்பா மேல் சாமி வந்து எல்லோரையும் மாறி மாறி அறைந்தார். பால்யத்தில் வெடி எல்லாம் காயவைத்துத் தயாராகும்போது எல்லாம் தீபாவளி அன்றைக்கு அடித்துக் கொட்டும் மழை. சகதியில் தேங்கி வானவில் காட்டும் மழை. பெருமழை முடிந்த தெருவில் பேப்பர் கப்பல் விட்ட சிறுபிள்ளை மழை. காலையில் எழுந்து பார்க்கும்போது, கொல்லைஎல்லாம் நீரோடி, ''நைட்டு மழையா பேஞ்சது?'' எனப் பரவசப்படுத்தும் மழை. கண்ணாடியில் வழியும் மழை பார்த்து சூடாய் தேநீர் அருந்தியபடி இசை
கேட்கும் கொடுப்பினை எல்லோருக்குமா இருக்கிறது..? பேன்ட்டை மடித்துக் கொண்டு, குடையை விரித்தபடி ''இன்னிக்கு ஆபீஸ் போகலைன்னா லாஸ் ஆஃப் பே!'' என்றபடி தபதபவென மழையில் ஓடும் கால்கள் எத்தனை?
அன்பை, அவஸ்தையை, பிரியத்தை, பிரிவை, நினைவை அள்ளி அள்ளி இறைத்தபடி பெய்கிறது மழை. கோடம்பாக்கத்தில் தங்கியிருக்கும் நண்பனுக்கு இலங்கை மெனிக்ஃபார்ம் அகதிகள் முகாமில் இருக்கும் அவனது அம்மாவிடம் இருந்து வந்திருக்கும் ஒரு கடிதம் இப்படித் தொடங்கியிருந்தது, 'அன்புள்ள ஜான், இங்கே மழை தொடங்கிவிட்டது. பாத்ரூம்கூடப் போக முடியவில்லை. தூங்கக்கூட முடியாமல் அவஸ்தைப்படுகிறேன். காய்ச்சலாக வேறு இருக்கிறது. நீ எப்போது என்னை அழைத்துச் செல்வாய்?’
உதிரமாய், கண்ணீராய் மழை மாறிவிடும் தருணமும் இருக்கிறது. நிலம் அற்றோ ருக்கான பிரார்த்தனைகளை... மன்றாடல் களை இந்த மழையிடம் வைத்துவிட்டுத் தூங்கப்போகிறேன். காலையில் வந்து பார்த்தபோது, மாடிப் படிகளின் கீழே ஓர் உயிர் படுத்துவிட்டுப் போன தடம் இருந்தது ஈரமாய்!
- போட்டு வாங்குவோம்...
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
''ஒரு வெளம்பரம்...''
கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் சொல்கிற இந்த டயலாக் வெறும் காமெடி அல்ல என்பதைப் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். சமீபத்தில் அருணகிரி அவர்களைப் பார்த்ததும் அப்படியான சந்தர்ப்பம்தான். கும்பகோணத்தின் குறுகலான தெரு ஒன்றில் பழைய ஓட்டுக்கட்டு வீட்டின் திண்ணையில் அவரைச் சந்தித்தேன். வீடு முழுக்க உடைந்த மரப்பெட்டிகள் குவிந்திருந்தன. கொல்லைக்கட்டில் பழைய சோடா மெஷின்கள் இரண்டு சிதிலமாகி நின்றன. சாவதற்கு முந்தைய நாள் கொல்லைக்கட்டு கயித்துக் கட்டிலில் ஜம்பு தாத்தா படுத்திருந்தது ஒருகணம் நினைவில் 'க்ளிக்’கடித்தது. 15 வருடங்களுக்கு முன்பு இதே வீட்டுக்கு வந்தபோது எப்படி இருந்தது..? கூடம் முழுக்கப் பன்னீரும் ரோஜாவுமாக ஒரு வாசனை... தடதடதடவென மெஷின்கள் ஓடிக்கொண்டேயிருக்க... குறுக்கும் மறுக்குமாக ஆட்கள் ஓடிக்கொண்டே இருந்த சித்திரம்... ஜரிகை வேட்டியில் வாய் நிறைய வெத்தலையும் ஜவ்வாது வாசமுமாக நடுக்கூடத்தில் நின்று சைகையில் மிரட்டிக்கொண்டு இருக்கும் அருணகிரி அய்யாவின் ஆகிருதி... எதுவும் இன்று இல்லை.

இந்திய சுதேசி சிறுதொழிலின் ஒட்டுமொத்த இன்றைய சித்திரம்போல் இருந்தது அந்த வீடு. அருணகிரி அய்யாவின் சோடா, கலர், பன்னீர் சோடா என்றால், சுத்துப்பட்டில் அவ்வளவு பிரபலம்... ஒருகாலத்தில்! தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம் வரைக்கும் வியாபாரம் அள்ளும். கோயில் கோபுரம் போட்டு பக்கத்தில் ஒரு ரோஜாப் பூ வரைந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பன்னீர் சோடா கிடைக்காத கடை இருக்காது. வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே திண்ணைத் தூணில் சாய்ந்தபடி, ''நீ இந்த சோடாவ எங்கயும் குடிக்க முடியாது... காவேரித் தண்ணிக்குன்னு ஒரு டேஸ்ட்டு இருக்கு... கோரையாத்து தண்ணின்னா இன்னும் விசேஷம்... அதானே நம்ம பெசல்...'' என்பார் அருணகிரி அய்யா. இப்போது அந்த கம்பெனியே இல்லை. அழுக்கு வேட்டியும் துண்டுமாக அய்யாவைப் பார்க்கவே மனசுக்கு ஒருமாதிரி இருந்தது.
''கம்பெனிய வுடு... இன்னுங் கொஞ்ச காலத்துல காவேரியே இல்லாமப் போயிருமோனுல்ல பயமாருக்கு... வர்றப்போ பாத்தியா... கம்னாட்டிப் பசங்க மணலா அள்ளி எப்பிடி கட்டாந்தரையாக் கெடக்குன்னு... ம்ம்ம்ம்'' - பெருமூச்சு விட்டபடி சிரித்த அருணகிரி அய்யாவிடம், ''கம்பெனி என்னாச்சுங்க..?'' என்றேன். அவர் முகம் ஏதேதோ உணர்ச்சிகளுக்குப் போனது. ''எல்லாம் போயிருச்சு தம்பி...'' என்றவர் கொல்லைப் பக்கமாக அழைத்துப் போனார். சிதிலமான மெஷின்களுக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டு ஏதேதோ பேசினார். கடைசியாகச் சொன்னார், ''தம்பி இது விளம்பர உலகம்... டெண்டுல்கர், டோனி, விஜய், சூர்யானு எல்லாப் பயலுகளும் தெனம் தெனம் வந்து 'பெப்சி குடி’, 'கோக்கு குடி’னு ஆடுறான்... பாட்றான்... உருண்டு பொரள்றான்... இந்தப் பய மக்க அதைக் கேக்குமா... இந்த அழுக்கு வேட்டி அருணகிரி சொல்றதக் கேக்குமா? நாம என்ன செஞ்சோம்? இந்தா பாபநாசம் பக்கம் மோட்டார் செட்டு சொவத்துல எழுதி வெச்சதுதான் ஜாஸ்தி... கொமரிமுத்துவக் கொண்டாந்து வெளம்பரம் சொல்றதுக்குகூடத் திராணி கெடையாது... பெருமொதலாளி இல்லையேப்பா. எல்லாப் பயலும் இங்கிலீஸ் கம்பெனி ஐட்டத்துக்குப் போயிட்டான்... நம்ம யாவாரம் அப்பிடியே படுத்துருச்சு. ரெண்டு புள்ளைகளும் குடும் பத்தோட சூரத்துக்குத் துணி யாவாரம் பண்ணப் போயிட்டானுவோ. நா இப்பிடியே இந்த வூட்ல ஒண்டிக்கிட்டேன். தூங்குனா காதுக்குள்ள லொடலொடலொடனு சோடா மெஷின் ஓட்ற சத்தமா கேக்குது... எவ்வளவு நாளைக்குனு பாக்குறேன்.''
அங்கிருந்து திரும்பும்போதுதான் தோன்றி யது. அவர் சொன்னது எவ்வளவு உண்மை? நம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு விளம்பரங்களால் நிறைந்துகிடக்கிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எத்தனை எத்தனை விளம்பர முகங்களும் குரல்களும் நம்மை ஆக்ரமித்துக்கொள்கின்றன? காபி, டீயில் இருந்து கட்டில் மெத்தை வரைக்கும் எதை வாங்குவது, எப்படி வாழ்வது என எல்லாவற்றையும் விளம்பரங்கள்தான் தீர்மானிக்கின்றன. இந்த தேசமே விளம்பரங்களில் மயங்கி, ஸ்பான்சர்களில்தான் இயங்குகிறது.
காலையில் கண்ணைக் கசக்கும்போதே கார்த்தியும் காஜல் அகர்வாலும் ஒரு காபியைச் சிபாரிசு செய்கிறார்கள். மட்ட மத்தியானம் டி.வி-யைப் போட்டால் 'மேனேஜர்’ கிருஷ்ணமூர்த்தி, டெல்லி கணேஷ், 'ஹோம் ஸ்வீட் ஹோம்’ திவ்யதர்ஷினியெல்லாம் செங்கல்பட்டு தாண்டி நின்றுகொண்டு ப்ளாட் வாங்கச் சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள். சாயங்காலமாகப் புதுப் படம் போடுகிற சாக்கில், 10 நிமிஷத் துக்கு ஒரு தடவை மூன்று விஜய் மொபை லில் பேசி, சரத்குமார் வேட்டி கட்டி நடந்து, தனுஷ§ம் விமலும் ஹேர் ஆயில் தடவி, அஞ்சலியும் தமன்னாவும் குத்து டான்ஸ் ஆடி... 'ஏன்டா வூட்ல இருக்கீங்க..? ஷாப்பிங் போங்கடா’ என வேப்பிலை அடிக்கிறார்கள். நடுநடுவே 'புரட்சிப் போராட்டம்’ என பிரபு நகைக் கடைக்குப் பண்ணுகிற விளம்பரத்தில் சே குவேரா, பகத்சிங்குக்கு எல்லாம் டவுசர் கிழிகிறது. ஊரே தூங்குகிற மிட்நைட்டில் பார்த்தால், தாடை வீங்கிய சஃபாரி பார்ட்டி ஒருவர் வீரிய லேகியத்துக்கு விளம்பரித்துக்கொண்டு இருக்கிறார். இன்னொரு சேனலில் ஒரு கொழுத்த டாக்டரும் கருத்த காம்பியரும் 'இதாங்க அமுக்ரா லேகியம்...’ எனக் கடுப்படிக்கிறார்கள். பின்னிரவுக்குப் பின்னும் ஒரு வெள்ளைக்காரிக்கு சிந்தாதிரிப்பேட்டை பெண்ணை டப்பிங் பேசவிட்டு, வீட்டுப் பொருட்களை விற்றுக்கொண்டு இருக்கிறார்கள். தொப்பையைக் குறைக்க டிப்ஸ் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். உச்சகட்டமாக சிட்டி முழுக்க 'சினேகா-பிரசன்னா பிரிவுக்கு என்ன காரணம்..?’ என போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்கள்.
இருக்கிற பிரச்னையில் இது வேறா என எனக்கு போஸ்டரைப் பார்த்ததுமே வேர்த்தது. சொல்லிவைத்தது மாதிரி, ''என்ன பாஸு... சினேகா - பிரசன்னா பிரிஞ்சுட்டாங்களா? மேட்டரு நெஜமா பொய்யா? என்ன பிரச்னையாம்? நீ சினிமாக்காரன்தான? தெரியும்ல...'' என அடுத்தடுத்து போன்கள். ''இதெல்லாம் எதுக்குரா எங்கிட்ட கேக்குறீங்க..? சினிமாக்காரன்னா... சினேகா-பிரசன்னா வூட்ல செக்யூரிட்டியாவா இருக்கேன்? நானே பல பிரச்னைகள்ல சுத்திட்டு இருக்கேன்... நூத்தி எட்டுல போன் பண்ணிக் கேளுங்கடா...'' எனக் கடுப்பானேன். என் அண்ணிதான் சாப்பாடு போடும்போது சொன்னார், ''தம்பி... அது ஆடி மாசம் வருதுல்ல... அதுக்குத்தான் விளம்பரத்துக்கு அப்பிடிப் போட்ருக்காங்க!'' எனக்கு, 'இதெல்லாம் யாரு, எங்க உக்காந்துய்யா யோசிக்கிறது..?’ என ஆச்சர்யமாக இருந்தது. அதன் பிறகு மொத்த மீடியாவும் சினேகா-பிரசன்னாவைச் சுற்றி வளைத்து இந்த விளம்பரத்தைப் பற்றிக் கேள்விகள் கேட்க, அவர்களும் ஏகப்பட்ட விளக்கங்கள் கொடுக்க... அது செம ஹிட். எனக்கு எதற்கு இவ்வளவு விளக்கங்கள் எனத் தோன்றியது. இதற்கான பதிலையெல்லாம் அன்றே ஒரே வரியில் சொல்லிவிட்டானே தானைத் தலைவன் செந்தில்... 'ஒரு வெளம்பரம்!’
20 வருடங்களுக்கு முன்பு வரை, அம்பாஸிடர் காரில் மைக் கட்டிக்கொண்டு வருவதுதான் எங்கள் ஊரின் அதிகபட்ச விளம்பர யுத்தி. அப்படி எம்.ஏ. தமிழ் படித்த அண்ணன் சரவணனை மகாராஜா சில்க்ஸுக்கு பிராண்ட் அம்பாஸிடராகப் போட்டார்கள். 'மகாராஜா சில்க்ஸ்... தென்றலின் முதல் வரி, வசந்தத்தின் முகவரி... மகாராஜா சில்க்ஸ்’ எனக் கரகரவெனக் கவிதை எழுதி, மைக்கில் கூவியபடி அண்ணன் அண்ட் கோ வரும். நாள் முழுக்க கவிதையாகப் பொழிந்துவிட்டு, ராத்திரி 150 ரூபாய் பணமும் சாந்தி கடை பரோட்டாவுமாக முடியும் அந்த செஷன். 'ஜெமினி சர்க்கஸ்... குட்டி யானையின் சாகஸம் காணத் தவறாதீர்கள்... திலகர் திடலில் மாலை ஆறு மணி முதல் குடும்பத்தோடு கண்டு களிக்க... ஜெமினி சர்க்கஸ்...’ என அடுத்த ரவுசு ஆரம்பிக்கும்.
'' 'உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வந்தப்பலாம் ஆட்டோல மைக் கட்டிக்கிட்டு உங்க மாமன்தான் சுத்துனான். ஊருக்கு ஊர் நோட்டீஸ் போட்டே வெள்ளி விழா பாத்தாங்கள்ல... 'ஆட்டுக்கார அலமேலு’ வந்தப்ப ஊர் ஊரா அந்த ஆட்டைக் கொண்டுவந்தாங்க... கும்போணம் விஜயால கொண்டுவந்து நிப்பாட்னப்ப அப்பிடி ஒரு கூட்டம்... 'கூலிக்காரன்’ வந்தப்ப விஜயகாந்து வண்டி இழுக்குற மாரி தங்க கலர்ல செல செஞ்சி தேட்டருக்கு தேட்டர் வெச்சாங்க... 'ஆடிவெள்ளி’க்கு எங்க பாத்தாலும் அம்மன் செலையா வெச்சாங்க... இப்பல்லாம் அந்த ஹீரோ, ஹீரோயினே தியேட்டர் தியேட்டரா வந்தாக்கூட பாக்க ஜனம் வர மாட்டேங்குதே... அதான் டி.வி-ல எப்போ பாத்தாலும் வெளம்பரமா பாத்துக்கிட்டு கெடக்குல்ல...'' என்றார் ரவி சித்தப்பா.
உண்மைதான்! இப்போதெல்லாம் விளம்பரங்கள் 'சீ’ பட்டுவிட்டன. ஊரில் குழந்தை பிறந்த நாள், பூப்பு நீராட்டு விழா தொடங்கி எழவு வரைக்கும் எல்லாவற்றுக்கும் ஃப்ளெக்ஸ் பப்ளிசிட்டி பின்னிப் பிரிக்கிறது. லோக்கல் கேபிளைத் திறந்தால் 'புலி உறுமுது... புலி உறுமுது’ பாடல் பின்னணியில் ஒருவர் நடந்து வர, 'அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்கிறார்கள். 'மாசமா... ஆறு மாசமா...’ பாடலில் இருவர் கை கோத்து நிற்க... கல்யாண வாழ்த்து சொல்கிறார் கள். இன்னொரு பக்கம் நெட்டில், மொபைலில் ஷூட் பண்ணி தெரு முக்கில் எடிட் செய்யப்பட்ட ஏகப்பட்ட வீடியோக்களை ஏற்றி கேப் விடாமல் ரகளை பண்ணுகிறார் கள். ஆளாளுக்கு விளம்பரத்தில் இறங்கி விட்டதால் பலருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனாலேயே கிசுகிசு கிளப்பிவிடுவது, லிப் கிஸ் அடிப் பது, அரை நிர்வாண போஸ் கொடுப்பது என சினிமா விளம்பரங்களின் எல்லை எகிறிக்கொண்டே இருக்கிறது.
சென்னை வந்த புதிதில் வேலை இல்லாததால், ஓவியரான செல்வம் சித்தப்பாவைப் பார்க்க தினமும் போய்விடுவேன். சித்தப்பா ஒரு விளம்பர பேனர் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது ஹோர்டிங்குக்குஎல்லாம் தடை இல்லை. கையால் விளம்பர போர்டுகள் எழுதும் வேலைகளுக்குக் கிட்டத்தட்ட இறுதிக் காலகட்டம்போல் இருந்தது அப்போது. மவுன்ட் ரோட்டில் மிகப் பெரிய ஹோர்டிங் ஏற்றி, சாரம்கட்டி நள்ளிரவில் நாலைந்து பேர் தொங்கிக்கொண்டு வரைந்துகொண்டு இருப்பார்கள். எனக்கு அந்தக் காட்சியைப் பார்க்கும் கணம் பக்கென்று இருக்கும். உடல் முழுக்க பெயின்டோடு அதிகாலை யில் கீழே இறங்கி கையைத் துடைத்துக்கொண்டு இருப்பவர்களை அவ்வளவு ஆச்சர்யமாகப் பார்த்திருக்கிறேன். அப்புறமாக அந்த வழியாக வரும்போது பளபளவென அந்தப் பலகை நிற்பதையும் ஏராளமான விழிகள் அதைப் பரவசமாகப் பார்த்துப் போவதையும் காணும்போது ஒவ்வொரு விளம்பரத்துக்குப் பின்னும் இருக்கும் பெயர்தெரியா உயிர்களை நினைத்துக்கொள்வேன். அப்புறம் எல்லாம் கம்ப்யூட்டர் மயமாகிவிட்டன. 'சிப்பி டெய்லர்’ போர்டில் மைக்கேல் ஜாக்சனை அவ்வளவு நளினமாக வரைந்து வைத்தவரும், 'மணி சலூன்’ போர்டில் ரகுவரனைத் தேர்ந்தெடுத்து வரைந்து வைத்தவரும், 'நளினி சில்க்ஸ்’க்கு மாதவி முகத்தை உதட்டுச் சுழிப்போடு அப்படி ஒரு காவியமாக வரைந்து வைத்தவரும் 'விடியல் இசையக’த்துக்கு ராஜாவையும் ரஹ்மானையும் கறுப்பு வெள்ளை ஆர்மோனி யக் கட்டைகளாலேயே வரைந்தவரும் இப்போது எங்கிருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்?
நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு 'பவர் ஸ்டார்’ இருக்கிறார். அவரவரின் எல்லைக்கு உட்பட்டு ஏதேனும் ஒரு விளம்பரம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது. அடிக்கிற கலரில் பூப்போட்ட சட்டை போட்டுக்கொண்டு போவதில் இருந்து கன்னத்தை மறைத்து திடீரென 'விருமாண்டி’ மீசைக்கு ட்ரை பண்ணுவது வரை ஏதேனும் கவன ஈர்ப்பு தேவைப்படுகிறது. நடுரோட்டில் நாய் குரைக்கிற மாதிரி பைக் ஹாரன் வைத்துக்கொண்டு பறக்கவைக்கிறது. ஒவ்வொரு நகத்துக்கும் ஒவ்வொரு கலரில் நக பாலீஷ் போட்டு, லோ-ஹிப்பில் பெல்லி ஸ்டட் போட வைக்கிறது. உப்பு பெறாத விஷயத்தை எல்லாம் மணிக்கணக்கில் பேசவைக்கிறது. புதிதாக லாஞ்ச் ஆகியிருக்கிற மாமரத்து மாரியம்மனைப் பிரபலமாக்க, மரமெல்லாம் பால் வடிவதாகக் கிளப்பிவிட வைக்கிறது. கடவுள் வரைக்குமே ஒரு 'பவர் ஸ்டார்’ டச் தேவைப்படுகிறது.
''திறமையெல்லாம் விடுப்பா... அவன் மார்க் கெட்ல புலிக்கரடி... அரை மணி நேரம் பேசினான்னா அவனையே வித்துருவான். விளம்பரம் பண்ணிக்குறவன்தான் தடதடனு முட்டித் தூக்கிட்டுப் போயிட்டே இருக்கான்...'' எனப் புலம்பும் எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள்? இங்கே மரம் நடுவதைச் சொல்வதற்குக்கூட விளம்பரங்கள் வேண்டி இருக்கிறது இல்லையா?
ஒரு முறை திருவண்ணாமலை போயிருந்தபோது, மலை உச்சியில் குடிசை போட்டு வசிக்கிற நாராயண சாமியைப் பார்க்க நண்பர் அழைத்துப் போனார். ஏழெட்டு கிலோ மீட்டர்போல மூச்சிரைக்க ஏறி அவர் குடிசையை நெருங்கும்போது எங்களை நோக்கி 'சரேல் சரேல்ல்ல்’ எனக் கற்கள் பறந்து வந்தன. தெறித்து ஓடி பதுங்கிக்கொண்டோம். ''சாமி கோவமா இருக்கு... இருங்க...'' என்றார் நண்பர். கொஞ்ச நேரம் கழித்து படுத்த வாக்கில் நகர்ந்துபோனோம். எங்களைக் கண்டதும் பயங்கரக் கோபமாகி, ''டேய்... உங்களையெல்லாம் பாக்க வேணாம்னுதானே இங்க வந்து உக்காந்திருக்கேன்... எதுக்கு வர்ற... போ... போயிரு...'' என சாமி கத்தினார். மறுபடி அவர் கற்களை வீச, கொண்டுபோயிருந்த ஆப்பிளை உருட்டிவிட்டு ஓடிவந்தோம். ''சாமி அப்பிடித்தான்... யாரையும் பாக்கவே விரும்ப மாட்டாரு... அவர்ட்ட திட்டு வாங்குனதே பெரிய விஷயம்...'' என்றார் நண்பர். விளம்பர வெளிச்சமே வேண்டாம் என ஓடி ஒளிகிறவர்களுக்கும் விளம்பரம் கொடுத்துக்கொண்டே இருக்கிறது இந்த உலகம்.
சிதம்பரம் பக்கம் காரில் போய்க்கொண்டு இருந்தபோது, ''இங்க ஒரு பாட்டி இட்லி சுட்டு விக்கும்... செம ஃபேமஸு... வா போவோம்...'' என ஒரு நண்பர் அழைத்துப்போனார். போனால் தெரு ஓரமாக ஒரு பாட்டி இட்லி சுட்டு விற்க, எக்கச்சக்க கூட்டம் கும்மிக்கொண்டு இருந்தது. ''இந்த ரூட்ல போறவங்க வர்றவங்க எல்லாரும் இங்க வந்துருவாங்க. எப்பிடியோ இந்த ருசி பரவி, சென்னை வரைக்கும் பாட்டி ஃபேமஸ் ஆகிருச்சு...'' என்றார் நண்பர். இப்படித்தான் ஒரு முட்டுச் சந்தில் டாக்டர் அருண்பிரசாத் நடத்தும் சின்ன க்ளினிக்கில் அவ்வளவு கூட்டம் எப்போதும் காத்திருக்கும். ஒருமுறை பஸ் ஸ்டாண்ட் ஸ்க்ரீன்களில் போடுவதற்கு ஒரு விளம்பரம் எடுக்கலாமா என அவரிடம் கேட்டதற்குச் சொன்னார், ''அதெல்லாம் வேணாங்க... நம்ம வேலை நல்லாயிருந்தா எல்லாரும் வருவாங்க... இங்க இருக்கறவங்கள்லாம் விளம்பரம் பார்த்துட்டா வந்தாங்க. நம்ம வொர்க்தாங்க நமக்கு விளம்பரம்!''
அன்றைக்கு கோட்டூர்புரத்தில் இருந்து ஆட்டோவில் வந்துகொண்டு இருந்தபோது வழியில் மெட்ரோ ரயில் வேலைகளுக்காகப் போட்டு இருக்கும் இரும்புப் பலகையெல்லாம் போஸ்டர்கள். அதில் இருந்த வாசகங்களைப் பார்த்ததும் ஃப்ரீஸாகிவிட்டேன். 'கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே... ஒரு லட்சம் கோடி ஊழல் சதியை உடைத்துவிட்டு வெளி வந்த அண்ணனே...’ என அடிக்கப்பட்ட போஸ்டரில் கோட் சூட்டில் அந்த அரசியல் புள்ளி 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ சூர்யா மாதிரி நிற்கிறார்.
உடனடியாக செந்திலின் கீச்சுக் குரல் கேட்டது... 'ஒரு வெளம்பரம்..!’
- போட்டு வாங்குவோம்...
டி.ஆர். ரசிகர்களும் ராமராஜன் ரசிகர்களும் இப்போது என்ன செய்கிறார்கள்? அவர்களின் மனஓட்டம் எப்படி இருக்கும்?
திடுதிப்பென்று இப்படி ஒரு கேள்வி என் மண்டைக்குள் உதித்துக் குதித்தது. உச்சகட்ட மனக் குழப்பத்தில் இருக்கும்போது இப்படிப்பட்ட விநோத ரசமஞ்சரிகள் மண்டைக்குள் நிகழும்.
பிரணாப்ஜி இப்போ என்ன பண்ணிட்டிருப்பாப்ல? குஷ்புவோட ஃப்யூச்சர் பிளான்தான் என்ன? அஜித் அ.தி.மு.க-வை டைம் பார்த்து கைப்பத்திருவாருனு ஒரு பேச்சிருக்கே... அப்பிடியும் நடந்துருமோ? ஆஸ்கர் வாங்கின செகண்ட்ல ரஹ்மான் என்ன ஃபீல் பண்ணியிருப்பாரு? நூறாவது செஞ்சுரிக்கான அந்த பாலை அடிச்சப்போ சச்சின் என்ன நினைச்சுருப்பாரு? சாகப் போற செகண்ட்ல சிலுக்கு மனசுல என்ன இருந்திருக்கும்? ஒபாமா ஆளுங்க வந்துட்டாங்கனு தெரிஞ்சதும் பின்லேடன் என்ன செஞ்சுருப்பாரு? மைக்கேல் ஜாக்சனோட முகம் கடைசியா எப்படி இருந்திருக்கும்? சுனாமி அலை எவ்வளவு உயரம் இருக்கும்? செண்பகா அருவிக்கு மேல ராஜநாகம் இருக்குனு சொன்னானே கலீல்... அது எப்படி இருக்கும்? பெங்குவின்லாம் என்ன சாப்பிடும்? இப்படி எழும் அனாமத்துக் கேள்விகளின் வரிசையில்தான் மேற்சொன்ன டி.ஆர். கேள்வியும் எழுந்தது. ஆனாலும், இந்தக் கேள்வி ஓர் அற்புதமான எபிசோடுக்கான தொடக்கமாகவே பட்டது.

அன்றைக்கு இரவே பஷீரிடம் தனபாலின் நம்பரை வாங்கி போன் அடித்தேன். ''டேய்... எத்தனை வருஷம் ஆச்சுரா... காமராஜர் ஹால் பக்கம்தான் என் டிராவல்ஸ் ஆபீஸ். வாடா...'' என்றார் தனபால் உற்சாகமாக. அவரைப் பார்ப்பதற்கு முன், ஒரு ஃப்ளாஷ்பேக் போட்ரலாம்...
அப்போது தனபால் தீவிரமான டி.ஆர். ரசிகர். அவரது அடையாளமே அதுதான். ''வாடா என் மச்சி, வாழக்கா பஜ்ஜி, ஓ ஒடம்பப் பிச்சி...'' எனக் கையைச் சொழட்டிச் சொழட்டிப் பேசுவார். ''பூ வாங்கி வந்த நேரம்... என் பொன்னுரதம்...'' என உச்சகட்ட ஃபீலிங்கில் பாடுவார். சாதாரணமாகவே தலையைக் கோதிக்கொண்டு, ''ஏன்டா பேசல... எதுக்குடா பேசல...'' என வானத்தைப் பார்ப்பார். டிகிரி காலம் முடித்துவிட்டு சிலபல அரியர்களோடு வெட்டியாகச் சுற்றித் திரிந்தவர் ஒருநாள் அப்பாவோடு சண்டை போட்டுக் கொண்டு, கையில் பெட்டியோடு இளைஞர் மன்றம் நடந்த தாஸின் நெல்லுக் கடையிலேயே வந்து தங்கிவிட்டார். எதற்கெடுத்தாலும் ரைமிங்கில் பேசிக்கொண்டு டி.ஆர். மாதிரியேதான் திரிவார். ''என் தலைவன்டா...'' என்பார் எப்போதும் ஆவேசமாக. சின்ன விஷயத்துக்கெல்லாம் பொசுக்கென்று கண்ணீர்விட்டு அழுதுவிடுவார். டீ குடிக்கப் போகும்போது விட்டு விட்டுப் போனதற்கு எல்லாம் ''இனிமே பேசாதரா... அவ்வளவுதான் உறவு இல்ல...'' என உச்சகட்ட உணர்ச்சிகளைப் பெருக்குவார். ஊரில் இருக்கும் தங்கச்சியை நினைத்து டைரியில் பக்கம் பக்கமாகக் கவிதை எழுதுவார். எப்போது தனபாலை நினைத்தாலும் ''நானும் உந்தன் உறவை...'' எனக் கையில் ரத்தத்தோடு கண்ணாடிக் கதவை முட்டுகிற டி.ஆரின் விஷ§வல்தான் நினைவுக்கு வரும். அதன் பிறகு திருப்பூர், பெங்களூரு, சென்னை என தனபாலின் வாழ்க்கை எங்கெங்கோ போய்விட்டது. இப்போது அவர் சென்னையில் இருக்கிறார் என்பதே எனக்கு பஷீர் சொல்லித்தான் தெரியும். இத்தனை வருடங்கள் கழித்து அவரைப் பார்க்கப் போனேன். டிராவல்ஸ் ஆபீஸில் உட்கார்ந்திருந்தார். கொஞ்சம் நரையடித்து, ஆளே மாறிப்போய் இருந்தார். லஞ்ச்சுக்கு வெங்கட் நாராயணா ரோட்டுக்குப் பக்கத்தில் இருந்த அவரது ஃப்ளாட்டுக்கு அழைத்துப் போனார். வீட்டில் அவரது ரூமில் நுழைந்ததும் பரவசமாக இருந்தது. ரூமை அடைத்து பெரிய டி.வி.டி. லைப்ரரி. அத்தனையும் உலகப் படங்கள். '' 'டு லிவ்’ பார்த்துட்டியா? செம பொலிட்டிக்கல் படம். டொரன்டினோ கலெக்ஷன்ஸ் மொத்தமா என்கிட்ட இருக்கு. டைம் கிடைக்கும்போது இங்கயே வந்து பாரு. 'மெலினா’வெல்லாம் பார்த்துருப்பல்ல... ம்... 'சில்வர் சால்ட்’ பார்த்துட்டியா? கண்டிப்பா பாக்க வேண்டிய படம்பா... என்னா ஸ்டோரி டெல்லிங்குற...'' எனத் தடதடவென தனபால் பேசப் பேச... எனக்கு படா ஆச்சர்யம். டி.ஆரின் ரசிகக் குஞ்சு தனபாலா இவர் எனத் தோன்றியது. அதைப் பற்றிப் பேசியபோது, ''அது மட்டும் இல்ல... நிறைய மாறிட்டேம்பா. வாழ்க்கை, டிராவல், ரசனை எல்லாமே மாறிப்போச்சு. இப்போ எல்லாமே தீவிரமா தேவைப்படுது. மெச்சூர்டா தேவைப்படுது... 'வே ஹோம்’ படத்துல வர்ற கெழவியோட முகம் மாதிரி மனசு சலனம் இல்லாம ஆக ட்ரை பண்ணிட்டே இருக்கு...'' என்றார் சிரித்தபடி. தனபால் இப்படியெல்லாம் பேசுவாரா என எனக்குச் சந்தோஷமாக இருந்தது. வரும்போது வாசலுக்கு வந்ததும் ஓடிப்போய் 'ஐ அம்’ பட டி.வி.டி-யைக் கொண்டுவந்து ''இத வெச்சுக்க...'' எனக் கொடுத்தார்.
மாற்றம் என்பது எவ்வளவு அற்புதமான சொல் என்பதை வரும்போது யோசித்துக்கொண்டே வந்தேன். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு காலத்திலும் எவ்வளவு மாற்றங்கள் வந்துவிடுகின்றன? சின்ன வயதில் ரஜினி பிடிக்கும் என்று சொன்ன பெரும்பாலான நண்பர்களுக்கு இப்போது கமல்தான் பிடிக்கிறது. அப்போது கமல் பிடிக்கும் என்ற பல பேர் இப்போது ரஜினி பிரியர். இரண்டு பேரையும் பிடிக்கும் என்கிற இடத்துக்குப் பல பேர் வந்துவிட்டார்கள். தீவிர ரசிகர்கள் என்ற இனமே இப்போது இல்லை என்பதுதான் ஆறுதலான மாற்றம். ரஜினி கணேஷ், பாட்ஷா சுரேஷ் என அடைமொழி
போட்டுக் கொண்டு முக்கோண ஹேர் ஸ்டைல் பண்ணிக்கொண்டவர்கள் பலர் இப்போது மாறிவிட்டார்கள். என்னோடு டி.ஒய்.எஃப்.ஐ-யில் பணியாற்றி தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்த நண்பன் இப்போது காங்கிரஸ் கவுன்சிலர். ''பெட்ரோல் செலவுக்கும் செல் பில்லுக்குமே மாசம் முப்பதாயிரம் வந்துருது மாப்ள...'' என்கிறான் கழுத்து செயினை இழுத்துவிட்டபடி. ''ரஹ்மான் வந்தப்போ என்னால ஜீரணிச்சுக்கவே முடியலைங்க... ராஜா மேல அவ்வளவு பைத்தியம். ராஜாவை விட்டா வேற யாரு வர முடியும்னு ஒரே நெனப்புதாங்க... ரஹ்மான்லாம் ஆளே இல்லனு கொந்தளிச்சிட்டே இருந்தேன்... அது முட்டாள்தனம்னு அப்பறம் புரிஞ்சு ருச்சுங்க... ஹி இஸ் ஆல்சோ எ லெஜன்ட்... ஜீனியஸ்ங்க... மாற்றத்தை மனசு உடனே எடுத்துக்க மாட்டேங்குது பாருங்க...'' என ஹவுஸிங்போர்டு பார்க்கில் உட்கார்ந்து அம்பேத்கர் சொன்னபோது ஒரு பருவம் கடந்துவிட்டிருந்தது. ''டோனியைப் பார்த்தப்போ எனக்கும் இப்பிடித்தான் எரிச்சலா இருந்தது... சச்சின் மாரி வர முடியுமானு... வேர்ல்டு கப் ஃபைனல்ல ஷார்ப்பாப் பார்த்துக்கிட்டு ஒரு சிக்ஸரைப் போட்டான் பாருங்க... அங்கயே மாறிட்டேன்...'' என்றார் கூடவே வினோத். காதலிக்கு நிச்சயம் எனத் தெரிந்ததும் ஆஃப் அடித்துவிட்டுப் போய் ''உன்னை போட்டுத்தள்ளிட்டு நானும் போய் சேர்ந்துர்றேன்டி...'' என ரகளை பண்ணி, விஷம் குடித்துத் தப்பிய கணேசன், இப்போது மூன்று பெண் பிள்ளைகளுக்கு அப்பா. ''அதை நினைச்சா இப்பவும் சிரிப்பா வருது. நம்ம சீரியல்ல செம காமெடி எபிசோடுங்க அது...'' எனக் குலுங்கிச் சிரிக்கிறார் இன்று. காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கொண்ட பாலு சித்தப்பா தனது மகள் காதலித்து வந்து நின்றபோது ஒப்புக்கொள்ளவில்லை. ''இப்போ ஏன் இப்படி மாறிட்டீங்க..?'' எனப் போராடி வீட்டைவிட்டு ஓடிப்போய்தான் கல்யாணம் செய்துகொண்டார்கள் அவர் கள். நாலைந்து வருடங்களுக் குப் பிறகு இப்போது சமா தானமாகி ஒன்றாகிவிட்டார்கள். எப்போது, எந்தக் கணம் இந்த மன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதுதான் எனக்கு வியப்பு.
மனித மனம்தான் உலகின் மிகப் பெரிய வேதியியல் கூடம். ''அவன் ரொம்ப மாறிட்டாம்பா...'' என்கிற டயலாக்கைக் கேட்கும்போது எல்லாம் எனக்கு செம காமெடியாக இருக்கும். 'மாற்றம் ஒன்றைத் தவிர மாறாதது எதுவும் இல்லை... சம்போ சிவ சம்போ!’ அன்பு துரோகமாக மாறுவதும், காதல் வலியாக மாறுவதும், மகிழ்ச்சி துயரமாக மாறு வதும், நம்மால் கண்டறிய முடியாத கணங்களின் மேல் நடந்துகொண்டே இருக்கின்றன. நாம் வாழ்வது, அந்தக் கணங்களும் மாறும் என்ற நம்பிக்கையின் கணங்களில்தான்!
ஒவ்வொரு காலத்துக்குமான சமூக மதிப்பீடுகளும் எனக்கு வியப்புதான். ''அய்யோ! மாப்ள குடிப்பாரா£ம்ல...'' என்கிற குரல் இப்போது ''ஏங்க குடிக்காதவன் இப்போ யாருங்க..? குடிக்கலைன்னாதான் ஆச்சர்யம்'' என மாறிவிட்டது. ''தப்பான ஆளுங்க... லஞ்சம்லாம் வாங்குவாராம்...'' என்ற குரல் ''மேல் வரும்படி இல்லையா... என்னங்க பொழைக்கத் தெரியாத ஆளா இருக்காரு...'' என மாறிவிட்டது. தர்மம் என்ற சொல் பாதிக்கு மேல் வன்மம் என்ற சொல்லாக மாறிவிட்டது. தவறுகள் அவமானத்துக்குரியன அல்ல என்கிற அளவுக்குச் சமூகம் வசதியாக மாறிவிட்டது. வீட்டில் இருக்கிற எவர்சில்வர் செம்பும் ஈசி சேரும் 25 வருடங்களாக அப்படியே இருக்கின்றன. ஆனால், ரெண்டு வருஷத்தில் மூன்று மொபைல் மாற்றிவிட்டோம். இதுதான் இந்தச் சமூகத்தின் மாற்றம்!
எங்கள் தெருவில் இருந்த சரவணன் லாட்டரி பைத்தியம். சம்பாதிக்கிற காசுக்குப் பாதிக்கு மேல் லாட்டரிக்கே விட்டுவிடுவார். ஒருமுறை கும்பகோணத்தில் சுரண்டல் லாட்டரி கிழித்திருக்கிறார். காசு விழ விழ... மறுபடி மறுபடி கிழித்துக்கொண்டே இருந்திருக்கிறார். 1,000 ரூபாய்க்கு மேல் கிழித்துவிட, ''காச வெச்சுட்டுக் கிழி...'' எனக் கடைக்காரர் தடுக்க, பயங்கர ரகளை. அடிதடி போலீஸ் கேஸாகி ஒரு மாசத்துக்கு திருச்சி ஜெயிலில் கிடந்தார். ஜெயிலில் இருந்து திரும்பி வரும்போதே தஞ்சாவூரில் 1,000 ரூபாய்க்கு லாட்டரி சுரண்டி மறுபடி தகராறு இழுத்த சரித்திர நாயகன் சரவணன். திடுதிப்பென்று ஒருநாள் லட்டரிக்குத் தடை வந்த பிறகு பாதிப் பைத்தியமாகித் திரிந்தார் பார்ட்டி. பதுக்கல் லாட்டரிக்கெல்லாம் போய் சிக்கி, கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு இப்போது ஆளே மாறிவிட்டார். ''சூதாட்டத்தைவிட மோசமான விஷயம் இல்லைங்க... நல்லவேளை இந்த அளவுல தப்பிச்சுட்டேங்க...'' என்பவர் இப்போது ஈ.பி. ஆபீஸில் பியூனாக உழைக்கிறார்.
நாளைக்கே தமிழ்நாட்டில் தீவிர மதுவிலக்கு வந்துவிட்டால் என்னாகும்? ப்ளாக்கில் சரக்கு தேடுவது, கள்ளச் சாராயம் என அலைபாய்ந்து ஒருகட்டத்தில் 'குடிமகன்கள்’ மொத்தமாகத் திருந்தி, தெளிவான மாற்றம் வந்துவிடும் இல்லையா?
கே.பி.எஸ். தாத்தாவுக்கு அவரது சைக்கிள் தான் எல்லாம். தினம் தினம் காலையில் எழுந்ததும் சைக்கிளை எண்ணெய் போட்டுத் துடைத்துவிட்டுத்தான் அடுத்த வேலை. ஹாண்ட்பாரில் குஞ்சம் கட்டி, மட்கார்டில் ஸ்டிக்கர் ஒட்டி அந்த சைக்கிளை அலங் கரிப்பதுதான் அவருக்குப் பாதி வேலை. ஒரு மகாராஜா குதிரையில் வருகிற மாதிரி தான் அந்த சைக்கிளை அவர் ஃபீல் பண்ணுவார். யாராவது அவர் சைக்கிளில் கைவைத்தாலே டென்ஷனாவார். ஒருமுறை தெரியா மல் சாவியைத் திருடி சைக்கிளை எடுத்துப்போனதற்காக மாசக்கணக்கில் நண்பனோடு பேசாமல் இருந்திருக்கிறார். அந்த சைக்கிளில்தான் அவரது காதல், நட்பு, கல்வி, வேலை எனப் பல நினைவுகள் சுழன்றுகொண்டு இருந்தன. தாத்தா வின் நண்பர்கள் எல்லாம் மோட்டார் பைக், கார் என அடுத்தடுத்த மாற்றங்களுக்குப் போய் விட... இவர் மட்டும் சாகிற வரை அந்த சைக்கிளில்தான் போய்வந்தார். பணம் காசு வந்தபோதுகூட, ''இவனை விட முடியாதப்பா...'' என அந்த சைக்கிளையே கட்டிக்கொண்டார். தாத்தா செத்துப்போய் அவரைத் தூக்கிப் போனபோது அந்த ஹீரோ சைக்கிள் திண்ணையில் தனியே கிடந்தது, மட்கார்டில் உதிர்ந்த பெயர் எழுத்துகளோடு. பின்னொரு நாள் கொல்லையில் உடைந்துகிடந்த அந்த சைக்கிளைப் பார்த்தேன். ஆயிரமாயிரம் ஹாரன் ஒலிகளுக்கு நடுவே இப்போது அதன் சித்திரம் தோன்றுகிறது!
'ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகப் பூக்கும் பூக்களைத் தருவது வேரின் பழமைதான்’ என ஜப்பானியப் பழமொழி இருக்கிறது. மாற்றம் என்பது ஒரு சுழற்சி. எல்லாப் புதிய மாற்றங்களும் ஏதோ ஓர் பழமையின் விதையில் இருந்தே கிளைக்கும்.
'ஃபாதர் அண்ட் சன்’ என்ற படத்தில் ஒரு வசனம் எனக்கு எப்போதும் நினைவிருக்கும். ஒரு மகனுக்கும் அப்பாவுக்குமான உணர்வுகளைப் பேசும் படம் அது. மகனுக்கும் அப்பாவுக்கும் எதாவது சண்டை வந்துகொண்டே இருக்கும். வயதான அந்த அப்பா எப்போதும் இருமிக்கொண்டு அறையின் மூலையில் முனகிக் கிடப்பார். மகனின் குடும்பம் அவரைக் கண்டுகொள்வதே இல்லை. அவரது மூன்று வயது பேரன் மட்டும் தாத்தாவை நேசிப்பவனாக இருப்பான். ஒரு நாள் மகன் அவரைக் கொண்டுபோய் வலுக்கட்டாயமாக முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வருவான். அப்போது அவனிடம் அவனது மூன்று வயது மகன், ''ஏம்ப்பா தாத்தாவக் கொண்டுபோய் வெளில விட்டீங்க..?'' என்பான். அதற்கு இவன், ''பழசையெல்லாம் மாத்தினாத்தாம்பா நம்ம லைஃப் மாறும்... தாத்தா பழசாயிட்டாரு...'' எனப் பதில் சொல்வான். உடனே, பக்கத்தில் மாட்டப்பட்டிருக்கும் ஜீசஸ் படத்தைக் காட்டி அந்த குட்டிப் பையன் கேட்கும் ஒரு கேள்விக்குத் திகைத்து நிற்பான் அந்த அப்பன்,
''இந்த ஜீசஸ்கூட ரொம்பப் பழைய ஆள்தானே... இவரை ஏம்ப்பா இன்னும் இங்க வெச்சுருக்க?''
- போட்டு வாங்குவோம்..
--'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
தோழர் புரட்சிகர இலக்கியங்களை தொடர்ந்து வாசிக்கவும் முடிந்தால் ருஸ்யா மொழி பெயர்ப்பு நாவல்களை படிக்கவும் கோருகிறேன் ஆனந்த விகடன்
படிப்பது ரெண்டாவதா வச்சிகலாமே
அன்போடு
மோர்சுப்ரா
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
தோழர் புரட்சிகர இலக்கியங்களை தொடர்ந்து வாசிக்கவும் முடிந்தால் ருஸ்யா மொழி பெயர்ப்பு நாவல்களை படிக்கவும் கோருகிறேன் ஆனந்த விகடன்
படிப்பது ரெண்டாவதா வச்சிகலாமே
ஸ்பெ உணர்ந்து கொண்டு வழக்கமான தன் வேலையை வழக்கம் போல் தொடர்ந்தார்.
ஸ்பெ உணர்ந்து கொண்டு வழக்கமான தன் வேலையை வழக்கம் போல் தொடர்ந்தார்.
அவ்வ்வ்வ்
மொத்தமாக முதலாளித்துவம் ஒழியும் போதுதான் போட்டா போட்டி நொருங்கும் போது மட்டுமே வாழ்க்கையை அதன் எதார்த்த நோக்கில் மனிதன் வாழ ஆரம்பிப்பான்
//சித்திரம்போல் இருந்தது அந்த வீடு. அருணகிரி அய்யாவின் சோடா,
சமீபத்தில் எனது உறவினர் ஒருவருக்குப் பணி மாற்றம் வாங்குவதற்காக அலைந்தேன்.
சென்னையைச் சேர்ந்தவர், விழுப்புரம் பக்கத்தில் அரசு ஆசிரியையாக இருக் கிறார். தினமும் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகப் பயணம் பண்ண வேண்டியிருக் கிறது. அவருக்கு சமீபத்தில் கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சை வேறு நடந்திருப்பதால், சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் வாங்குவது உடனடித் தேவையாகிவிட்டது. அரசுத் துறைகளில் ஒரு காரியம் சாதிப்பது என்பது அவ்வளவு பெரிய 'ஜிந்தாக்கா’!
முறைப்படி டிரான்ஸ்ஃபருக்கு 23-ம் தேதி காஞ்சிபுரத்தில் கவுன்சிலிங் என்பார் கள். அங்கு உள்ள அரசுப் பள்ளியில் கவுன்சிலிங் நடக்கும். போனால் ஒரு ஈ காக்கா இருக்காது. ஒரு வடக்குப்பட்டி ராமசாமி பல் குத்திக்கொண்டே டீடெய்ல் கேட்பார். கடைசியாக, ''என் சகலபாடிக்குக்கூட போன வாரம்தான் நீடாமங்கலத் துலேருந்து திருச்சிக்கு டிரான்ஸ்ஃபர் வாங்குனோம். இதெல்லாம் ச்சும்மா ஃபார்மாலிட்டி... ஒண்ணும் நடக்காது. பாருங்க... ஒரு கேண்டிடேட்டும் வரல... என் சகலபாடிக்கு மூணு குடுத்துச்சு. டிபார்ட்மென்ட்ல ஆள் இருக்கு... வேணும்னா சொல்லவா...'' என்பார் கூலாக.
''மூணுன்னா..?''
''மூணு லச்சங்க...''
''பாப்பு படிப்புச் செலவு வேற
இருக்கு... இப்போ போய் மூணு லச்சம்னா எங்க போறது?''
''சரி விடுங்க... கொஞ்சம் சென்டிமென்ட்டா அட்டாக் பண்ணிப் பாப்போம்.''

அதன்படியே மனதை உருக்கும் கடிதம் ஒன்றை சி.எம். செல்லுக்கு எழுதினோம். (கற்பனை கலப்பெல்லாம் இல்லை... உண்மைதான்!) மூன்று பெண் பிள்ளை களை வைத்துக்கொண்டு சிரமப்படுவது, அறுவைச் சிகிச்சை செய்தது, ஒரு பெண்ணாக இந்த சமூகத்தை எதிர்கொள்வது என எழுதப்பட்ட கடிதத் துக்கு, 'கடிதத்தைப் பெற்றுக்கொண்டோம்’ என்பதற்கான ரெசிப்ட் வந்தது. ஆனால், நடவடிக்கை எதுவும் இல்லை. மேற்கொண்டு யாரை அணுகுவது, பேசுவது என்றும் தெரியவில்லை.
திடுதிப்பென்று ஒரு நாள் உறவினர் எனக்கு போன் பண்ணி, ''தினமும் காலைல 11 மணிக்கு போயஸ் கார்டன்ல சி.எம். பப்ளிக்கை மீட் பண்றாங்களாமே... அங்க உனக்கு யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களா? நேர்ல மீட் பண்ணி லெட்டர் குடுத்தா, எதாவது நடக்கும்ல'' என்றார்.
''இல்லத்த... அவங்க தனியாலாம் யாரையும் மீட் பண்ண மாட்டாங்க... சி.எம். செல்லுக்கு மனு குடுக்கறதுதான்... பெருங்கூட்டம் நிக்கும்... நாமளும் போய்க் குடுத்துட்டு வர வேண்டியதுதான்...'' என்றேன்.
''இல்லல்ல... நீ விசாரியேன். தனியாப் பார்த்துட்டாங்கன்னா நடந்துரும்ல...'' என்றார் அப்பாவியாக.
''நீங்க என்னத்த... முக்குக் கட ஆவின் வேலுவப் பார்க்கறது மாதிரி சொல்றீங்க. சரி... நான் ட்ரை பண்றேன்...'' என்றேன் அப்போதைக்கு. இந்த நாட்டின் குடிமகள் ஒருத்தி, முதலமைச்சரைப் பார்த்துப் பேசுவது என்பது அவ்வளவு சுளுவான காரியமா..? 11 மணிவாக்கில் போயஸ் கார்டன் பக்கம் போய்ப் பார்த்தால், கேட் பக்கமே போக முடியவில்லை. அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் டீடெய்ல் கேட்டுவிட்டு, ''லூஸா தம்பி நீங்க... இதெல்லாம் நடக்கற காரியமே இல்ல. டிரான்ஸ்ஃபர் தானே... எங்க மச்சினன் ஒய்ஃபுக்கு போன வருஷம் இங்க வேளச்சேரிக்கு வாங்குனோம்... ரெண்டார்ரூவா... நமக்குத் தெரிஞ்ச வக்கீல் ஒருத்தர் இருக்காரு. செகரட்ரியேட்ல நல்ல பழக்கம்...'' என்றார் கடைசி பஃப் கிங்ஸ் இழுத்தபடி.
எனக்கு சி.எம்மை எப்படிப் பார்ப்பது என்ற யோசனை தறிகெட்டு ஓடியது. சசிகலாவின் சொந்தக்கார குரூப்பில் ஒருவர் நுங்கம்பாக்கத்தில் ஹோட்டல் நடத்துகிறார். அவரைப் பிடிக்கலாமென்றால், ''நீ வேற... அந்த ஏரியாவுக்கே இப்ப போக முடியாது... போட்ருவாய்ங்க...'' எனத் தடுத்தாட்கொண்டார் ஒரு நண்பர். ''சோ சாரை மீட் பண்ண முடியுமா..?'' என இன்னொரு நண்பர் என்னிடம் கேட்டார். ''இல்லை நண்பா... அவங்க ஸ்கூல்ல எம் பொண்ணுக்கு சீட் கேட்டுப் போனதுக்கே என் டவுசர் கிழிஞ்சுருச்சு. அமைச்சரை வேணும்னா பார்ப்பமா..?'' என ஒரு ரூட் போட்டார் இன்னொரு நண்பர்.
ஓர் அதிகாலையில் அமைச்சரின் பி.ஏ-வை ரெண்டு கோட்டிங் பவுடரோடு சந்தித்தேன். 'கரகாட்டக்காரன்’ சண்முகசுந்தரத்தை அரசியல்வாதி கேரக்டர்களில் ஏன் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். சண்முகசுந்தரம் மாதிரியே அந்த பி.ஏ-வும் சீரியஸாகப் பேசுகிறாரா... நக்கலாகப் பேசுகிறாரா என்பதைக் கடைசி வரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து அந்த பி.ஏ-வுக்கு போன் பண்ணும்போது சொன்னார், ''தம்பி... ரெண்டு ரூவால முடிச்சுரலாம்... போன வாரம்தான் மூணு பேருக்கு முடிச்சுவுட்டுச்சு... ஒண்ணு அபிராமிபுரம், இன்னொண்ணு நெற்குன்றம்...''
ஒரு வாரம் கழித்து அந்த அத்தை போன் பண்ணி, ''முருகா... நம்ம வசந்தி டீச்சர் டிரான்ஸ்ஃபர் வாங்கிருச்சு. ரெண்டு ரூவாயாம்... நம்பிக்கையான ஆளுன்னு சொல்லுச்சு. அம்பதாயிரம் ரூவா குடுத்துட்டேன்... ஒண்ணாம் தேதிக்குள்ள வாங்கித் தந்துர்றேன்னு சொல்லிருக்காங்க... இதுக்கு மேல போராட முடியாதுப்பா. உடம்பு தாங்கணும்ல...'' என்றது. என்ன சொல்வது என்று தெரியாமல் போனை வைத்தேன்.
அதிகாரம் என்ற ஒன்று நம்மை எப்படி எல்லாம் துரத்தி அடிக்கிறது..? நாம் ஒவ்வொருவரும் இந்த அதிகாரத்துக்கு முன்பாக, ஒன்றும் செய்ய இயலாதவர்களாக வாழ்க்கை முழுக்க நமக்கே தெரியாமல் போராடித் தவிக்கிறோம்.
அதிகாரத்துக்கு ஆசைப்படுகிறவர்களுக்கும் அதிகாரத்தால் நசுக்கப்படுகிறவர்களுக்குமான போராட்டம் எப்போதும் நடக்கிறது. அன்றைக்கு ஒரு ஹோட்டலில் கண்ணாடிக் கதவுக்குப் பின்னால் ஒரு நேபாளி சப்ளையர் சிறுவனை சூப்பர்வைசர் ஒருவர் போட்டு அடித்துக்கொண்டு இருந்தார். ஏதோ கண்ணாடிப் பொருளை உடைத்துவிட்டானாம். அந்த சூப்பர்வைசரைத் திட்டி, அந்தச் சிறுவனை இழுத்தேன். ''சார்... உங்களுக்கெல்லாம் தெரியாது... இவனுங்களைஎல்லாம் இப்பிடித்தான் சார் ட்ரீட் பண்ண ணும்...'' என்றார் அந்த சூப்பர்வைசர். அந்தச் சிறுவன் நாலாயிரம் ரூபாய் சொற்ப சம்பளத் துக்கு எங்கோ தூர மண்ணில் இருந்து மொழி தெரியாத இங்கே வந்து பாத்திரம் கழுவுகிறான். அவனது முகத்தைப் பார்க்கும்போது, கனடாவில் ஒரு ரெஸ்டாரென்ட்டில் பாத்திரம் கழுவும் வேலை பார்க்கும் என் ஈழ நண்பர் ஒருவரின் நினைவு வந்தது. 'வன்னியிலே பெரிய விவசாயக் குடும்பம் எங்களோடது... எல்லாத்தையும் இழந்துட்டு இங்கே பிளேட்டு கழுவிட்டு இருக்கேன். யார் யார்ட்டேயோ அடி வாங்கிருக்கேன்... காயம்பட்ருக்கேன்....
எவ்வளவோ இழந்துட்டேன்... உயிர் வாழ்றது மட்டும்தான் இப்போ என்னோட சாதனை... அதிகாரமும் அதிகார வெறியும் எங்களை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கப்பா...’ என அவர் சொன்னது வலியாக நெஞ்சில் நிலைத்திருக்கிறது. இந்த நேபாளிச் சிறுவனுக்கு அதையும் சொல்லத் தெரியவில்லை... அவ்வளவுதான்.
உலகம் முழுவதும் எத்தனை எத்தனை பேர் இப்படி யாரோ ஒருவரின், ஒரு நிறுவனத்தின், ஒரு தேசத்தின் அதிகார வேட்கைக்குத் துன்பப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
''ஏய்... எல்லாத்தையும் அள்ளிப் போடு...'' - திடுதிப்பென்று வந்து நிற்கும் போலீஸ்காரரைப் பார்த்து மிரண்டு, ரோட்டில் போட்ட இட்லிக் கடையை அப்படியே அள்ளிவைக்கிறார்கள் ஒரு தம்பதி. ''இன்னிக்கு யாவாரம் அம்புட்டு தேன்... எல்லாம் நாசமாப்போச்சு...'' என ஒரு டீக்கடைக்காரர் சுருட்டிக்கொண்டு போகிறார். ''என்னை ஏன்யா புடிச்சுட்டு வந்தீங்க...'' என்ற ஒப்பாரியோடு காவல் நிலையங்களில் ஆயிரம் ஆயிரம் பேர் அனுதினம் உட்கார்ந்திருக் கிறார்கள். ''என் நெலத்தைப் புடுங்கிட்டாங் கய்யா...'' எனக் கதறிக்கொண்டு காத்திருக்கிறார்கள். கட்டப் பஞ்சா யத்து, அதிகார துஷ்பிர யோகம் என எளிய மக்களின் மீது திணிக்கப்படும் கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. ஒரு நடிகைக்காக அடித்துக்கொள்கிற இரண்டு நடிகர்களை எந்த போலீஸும் எதுவும் செய்ய முடியாது இந்த தேசத்தில். ஆனால், சென்ட்ரல் ஸ்டேஷன் வாசலில் பொரிகடலை விற்கிற கிழவனைக் கொண்டுபோய் ராத்திரியெல்லாம் ஸ்டேஷனில் உட்காரவைத்துத் துன்புறுத்தும். நேற்று வரை ஒன்ரையணாவுக்குப் பெறாதவர்கள், கவுன்சிலர் ஆனதில், எம்.எல்.ஏ. ஆனதில்... கார், அடியாட்கள், செல் வாக்கு எனப் பறக்கிறார்கள்.கோயில் களில், ஆஸ்பத்திரிகளில், பள்ளி களில் சாமான்யர்கள் அத்தனை பேரும் காத்திருக்க, அதிகாரம் படைத்தவர்கள் முதல் ஆளாக உள்ளே போய்வருகிறார்கள். அதிகாரம் படைத்தவர்களின் தூரத்துச் சொந்தக்காரர்களுக்குக்கூடப் பயப்பட வேண்டியிருக்கிறது. இந்த நாடு எப்போதும் அதிகாரம் உள்ளவர்களுக்கு ஒன்றாகவும் இல்லாதவர்களுக்கு வேறாகவுமே இருக்கிறது.
'ரிங் மாஸ்டர்’ என்றொரு ரஷ்யன் சிறுகதை. அந்த ஊருக்குப் புதிதாக ஒரு சர்க்கஸ் வந்திருக்கும். சிங்கத்தை ஒரு சாட்டை நுனியில் அடக்கி வைத்திருக்கிற அந்த ரிங் மாஸ்டரைப் பார்த்து வியந்துபோவான் ஒரு சிறுவன். அவருக்கு பரம விசிறியாகி அவர் செல்லும் இடம் எல்லாம் தொடர்ந்து செல்வான். சிங்கத்தை விரல் நுனியில் அதிகாரம் செய்கிற ரிங் மாஸ்டர் சம்பளத்துக்காக சர்க்கஸ் ஓனரிடம் கை கட்டி நிற்பார். வீட்டில் சதா திட்டும் மனைவியின் முன்னால் கூனிக் குறுகி நிற்பார். ரேஷன் கடை, ராணுவ முகாம், மகனின் பள்ளிக்கூடம் என நாளெல்லாம் மிகவும் பணிவாக, பயந்த ஆளாக சுற்றிக்கொண்டு இருப்பார். 'சிங்கத்தை அதிகாரம் பண்ணும் அவர், மற்றவர்களிடம் எல்லாம் அப்படி இருப்பது ஏன்?’ என்ற கேள்வியோடு முடியும் அந்தச் சிறுகதை. அந்த ரிங் மாஸ்டரைப் போலத்தான் இருக்கிறது நம் ஒவ்வொருவருக்கு மான வாழ்க்கை!
அதிகாரம் என்பது சமூகத்தின் சகல மட்டங்களிலும் நம்மைப் படுத்தி எடுக்கிறது. பூர்ஷ்வா என்ற சொல்லுக்கு உரியவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். ''எங்க மேனேஜர் டாமினேஷன் தாங்க முடியலை... வேணும்னே அவர் பவரை என் மேல திணிக்கிறாரு...'' என எத்தனை பேர் புலம்புகிறார்கள். ''நான் புக் ரீடிங் பண்றது என் ஹஸ்பெண்டுக்குச் சுத்தமாப் பிடிக்காது... அவருக்குத் தெரியாமதாங்க படிக்கிறேன்...'' என போன வாரம் ஒருவர் போன் பண்ணினார். ''எம் பொண்டாட்டிக்கு அவ சொல்றதுதான் நடக்கணும்... அவங்க வீட்டுக்குத்தான் நான் பண்ணணும்... அவளை மீறி எதாவது நடந்தா, எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போவா...'' என நாக்கு குழற நள்ளிரவில் புலம்புகிறார் நண்பர். ''எங்கப்பாதாங்க எனக்கு முதல் எதிரி... அவர் சொன்ன மாதிரிதான் டிரெஸ் பண்ணணும்... முடி வெட்டணும்... அவர் சொன்ன கோர்ஸைத்தான் படிக்கணும்... ஹிட்லர் மாதிரி நடந்துக்கிறாருங்க... இப்போ கல்யாணத்துலயும் வந்து நிக்கிறாரு... நேத்து பெரிய சண்டை வந்துருச்சுங்க...'' என டென்ஷ னாகும் மகன்கள் எத்தனை பேர். ஓர் உறவை, அன்பை, நட்பைச் சிதைக்கும் முதல் விஷயம் அதிகாரம்தான் இல்லையா?
இரண்டாம் உலகப் போரின்போது வியட்நாமில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் நிர்வாணமாக ஓடிவரும் ஒரு சிறுமியின் முகத்தில் இருக்கும் உணர்வுகளை எழுதிவிட முடியுமா? இலங்கையில் ஈழப் பகுதியில் வெற்றிச் சின்னம் என சிங்கள அரசு அமைத்திருக்கும் துப்பாக்கி ஏந்தியிருக்கும் ராணுவ வீரனின் சிலையைப் பார்க்கும்போது எவ்வளவு கோபம் வருகிறது..? ஆயிரம் ராணுவ வீரர்கள் இறந்ததற்கு அஞ்சலி செலுத்தக் கூடும் அமெரிக்க மக்களிடம், உருத்தெரியாமல் அழிந்து, சிதைந்துபோன ஆயிரமாயிரம் மூன்றாம் உலக நாடுகளின் உயிர்கள் என்ன கேட்கும்..? வில், அம்பு வைத்துக்கொண்டு பெரும் ஆயுதங்கள் தாங்கிய துணை ராணுவப் படையிடம் எதற்காகப் போரிடுகிறார்கள் வனவாசிகள்?
திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் நடந்துகொண்டு இருந்தபோது சாலையில் இன்னும் அழியாத ரத்தக் கறை கிடந்தது. விசாரித்தபோது, ''இங்க ஒருத்தரைப் போட்டாங்க... அவர் மனித உரிமை ஆர்வலர். ரியல் எஸ்டேட், கவர்மென்ட் ஆபீஸர்ஸ் அது இதுன்னு எதையாச்சும் நோண்டிக்கிட்டே இருப்பாரு. அவரு வூட்ல நெறைய பூனைங்க வளர்த்தாரு... அதுங்களுக்கு பால் வாங்கறதுக் காக காலையில வந்தவரை யாரோ போட்டுட் டாங்க...'' என்றார் நண்பர்.
அன்றைக்கு இரவு பௌர்ணமி கிரிவலம். எங்கெங்கும் ஜனத்திரள். பாதை ஓரத்தில் பார்வையற்ற முதியவர் சின்ன இசைக் குழு வோடு உட்கார்ந்து பழைய பாடல்களாகப் பாடிக்கொண்டு இருந்தார். கிரிவலம் சுற்றி விட்டு அண்ணாமலையார் கோயிலில் போய் நின்றபோது தூரத்தில் அந்த முதியவர் பாடிக் கொண்டு இருந்த வரிகள் கேட்டன,
''நானும்கூட ராஜாதானே நாட்டு மக்களிலே
அட, நாணமென்ன வெட்கமென்ன
காசு கேட்பதிலே...''
- போட்டு வாங்குவோம்...
இதுக்கு தான் ஆ.அ பாலிசியை பின்பற்றணூம் என்பது
அங்கே டிரான்ஸ்பர் எனும் விஷயமே இல்லை. சொந்த ஊரில் பணியில் சேர்லாம், ஓய்வுகாலம் வரை அங்கேயே பணிபுரிந்து ஓய்வு பெறலாம்.
காவல்துறை ஷெரிப்புகள் (இன்ஸ்பெக்டருக்கு சமம்) ஊர் மக்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கபடுகின்றனர். அவர்களை ஒபாமா நினைத்தாலும் பதவியை விட்டு அகற்ற முடியாது, டிரான்ஸ்பர் செய்ய முடியாது. பதவியை துஷ்பிரயோகம் செய்தால் அல்லது ஊரில் குற்றம் அதிகரித்தால் ஷெரிப் பதவியை விட்டு ஓட்டு போட்டு அகற்ரபடுவார். 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் என்பதால் "ஒருதரம் ஓட்டு போட்டால் ஐந்து வருடத்துக்கு என்னை அசைக்க முடியாது" என்பது மாதிரி கான்செப்ட் இல்லை.
--
செல்வன்
'கோயிலில் ஆடுகளை தான் வெட்டுவார்கள், சிங்கங்களை அல்ல' என்ற அண்ணலின் புகழ்பெற்ற வார்த்தைகள் ஞாபகத்திற்கு வருகிறது..
நாம ரெண்டு பேரும் சேந்து ஒரு புரட்சி பண்ணலாமா.
புரட்சின்னு சொன்னதும் நினைவு வருது.
ஏழெட்டு வயசு இருக்கும் அப்போ எங்க கிராமத்தில் தொத்து நோய்கள் அதிகம் பரவுதுன்னு பேச்சு ஓடிட்டு இருந்தது. அப்பல்லாம் தொத்து நோய்ன்னா, ஆய்லதான் இருக்கும், அதை தொட்டா நோய் வந்துடும்னு நெனச்சிட்டு இருந்தோம். ஈ ஆய்ல உக்காந்துட்டு நம்ம மேலயும் உக்காரும்போது ஆய்ல இருக்குற நோய் நமக்கு தொத்திக்குதுன்னு எங்க ஏரியா சிறுவர் சங்கத்தில் முடிவு பண்ணோம். அந்த கூட்டத்திலதான் ஒரு புரட்சி உருவானது.
"ஈ ஒழிப்பு புரட்சிப்படை"ன்னு எங்களுக்கு நாங்களே பேரு வெச்சிகிட்டு ஜடைக்கு போடுற டிஸ்கோ ரப்பரை இழுத்து ஒவ்வொரு ஈயை நோக்கி விட்டு கை நெறய செத்த ஈயோட சங்கத்தில் பெருமையா காட்டுவோம். செத்த ஈ என்னிக்கையை விட நேக்கா அடிக்கத் தெரியாம விரல்ல வாங்குன அடிகளோட எண்ணிக்கைதான் அதிகம்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஏனப்பா நீ எந்த புரட்சியாலர்களை பார்த்து விட்டாய்?
2012/8/9 ஸ் பெ <stalinf...@gmail.com>
ஏனப்பா நீ எந்த புரட்சியாலர்களை பார்த்து விட்டாய்?
இல்லை, தங்களை தாங்களே புரட்சியாளர்கள்னு சொல்லிட்டிருக்கிற பல பேரை பார்த்திருக்கின்றேன்.
தங்களைத் தாங்களே புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் புரட்சியாளர்கள் இல்லை என்பதற்குத்தான் இவ்வளவு கஷ்டப்படுறேன்... நான் சொல்லவரது புரியுதா அச்சு :))
2012/8/9 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>
தங்களைத் தாங்களே புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் புரட்சியாளர்கள் இல்லை என்பதற்குத்தான் இவ்வளவு கஷ்டப்படுறேன்... நான் சொல்லவரது புரியுதா அச்சு :))
நீ ஏன் இவ்ளோ தம்முகட்டுற, ஷோல்டர இறக்கு... அதான் போன மடல்லையே சொல்லியாச்சில்ல அப்புறம் எதுக்கு இம்மாம் பெரிய மடல். என்னையும் ஜீப்ல ஏத்த ட்ரை பண்ணாதீங்க மக்கா...
வேணாம் .... நாங்கல்லாம் இதுக்கு சரிப்பட்டு வர மாட்டோம்
--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ 2012/8/9 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>
தங்களைத் தாங்களே புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் புரட்சியாளர்கள் இல்லை என்பதற்குத்தான் இவ்வளவு கஷ்டப்படுறேன்... நான் சொல்லவரது புரியுதா அச்சு :))
நீ ஏன் இவ்ளோ தம்முகட்டுற, ஷோல்டர இறக்கு... அதான் போன மடல்லையே சொல்லியாச்சில்ல அப்புறம் எதுக்கு இம்மாம் பெரிய மடல். என்னையும் ஜீப்ல ஏத்த ட்ரை பண்ணாதீங்க மக்கா...
ஆடி மாதம் தெருவோரத் தெய்வங் களின் காலம்.
பெரியார் பாதையில் சிலுசிலுவெனத் தூறலில் நனைந்தபடி நடந்தால், வேம்புலியம்மன் கோயில் பக்கமாக 'ச்ச்செல்லாத்தா... ச்ச்செல்ல மாரியாத்தா’ என மாலதி லக்ஷ்மனின் வெண்கலக் குரலில் வீதி அதிரும். ஏகாந்தம் எகிறும். சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் சீரியல் லைட் அம்மன், மனசுக்குள் மாடர்ன் ஆர்ட் வரையும். நைட்டி மேல் துண்டு போட்டு அபார்ட்மென்ட் வாசல்களில் ஆன்ட்டிகள் உட்கார்ந்திருப் பார்கள். பூப்போட்ட சுடிதார்கள், மூக்குத்தி மூக்குகள், மல்லிப்பூ - சாமந்திப்பூ காம்பினேஷன் என ஏரியாவில் அதுவரை பார்க்காத ஃபிகர்கள் எல்லாம் கோயில் திண்டில் பேப்பர் பிளேட்டில் பொங்கலும் புளியோதரையுமாக நிற்கும். அஞ்சாறு தனுஷ்கள் மேடைக்கு சைடில் நின்று மிக்ஸிங் போட்டுக்கொண்டே 'தல பாட்டு... தல பாட்டு’ எனக் கத்துவார்கள். 'மதுரைக்குப் போகாதடி’ எனக் குட்டைப் பாவாடையில் குத்தி எடுக்கும் சோனுவை சைடு ஸ்டாண்ட் பைக்குகளில் இருந்து மொபைலில் வீடியோ எடுத்துக்கொண்டு இருப்பார்கள் சில சிம்புகள். தர்மகர்த்தா, கவுன்சிலர், ஏரியா வணிகர் சங்கப் பிரமுகர் என முக்கியப் புள்ளிகள் எல்லாம் பவுடரும் பழ வாசமுமாக மேடைக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு, எம்.ஜி.ஆர்., சிவாஜி பாட்டு கேட்டு சீட்டு எழுதுவார்கள். இரண்டு போலீஸ்காரர்கள் ஓரமாக ஒதுங்கி சாயங்காலம் மிச்சமான சுண்டலை மென்றுகொண்டே பொண்டாட்டிக்கு போன் போடுவார்கள். நடுவே விடாமல் வந்து ஒரு கார்க்காரன் ஹாரன் அடிக்க, ஒரு குரூப் போய் அவன் அத்துமீறலை முறிப்பார்கள். திடுதிப்பென்று வரும் மூத்திரச் சந்துப் பிரச்னைகளுக்குப் பாதிக் கூட்டம் எழுந்து ஓடும். அந்த நேரம் பார்த்துதான் ஒரு எஸ்.பி.பி. எழுந்து பயங் கர சாந்தமாக, 'ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் மாயக் கண்ணன் தூங்குகிறான்’ என ஆரம்பிப்பார். மொத்தக் கூட்டமும் சோனு ஃபீவரில் இருக்கும்போது ஒரு ஒல்லி பெல்ட் டி.எம்.எஸ். எழுந்து, 'மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’ எனத் திருகல் பண்ணுவார். லோக்கலில் மொபைல் கடை நடத்தும் பெரியம்மா, மட்டன் ஸ்டால் சித்தப்பா, தேங்காய் மண்டி அண்ணாச்சி என ஸ்பான்சர்களின் போட்டோக்களுடன் பிரமாண்ட ஃப்ளெக்ஸ்கள் எங்கெங்கும் இருக்கும். அந்த இரவு முடியும் அதிகாலையில், குவிந்துகிடக்கும் பேப்பர் கப்புகளுக்கு நடுவே தனித்து நிற்பாள் அந்த அம்மன் எப்போதும்போல.

எனக்கு சென்னையை ஆடி மாதத்தில் அதிகமாகப் பிடிக்கும். இந்த ஊரில் தெரு வுக்குத் தெரு இத்தனை சாமிகள் இருக்கிறார்கள் என்பதே அப்போதுதான் தெரியும். அங்காள பரமேஸ்வரி, கங்கையம்மன், எல்லை மாரியம்மன், வேடியம்மன், கருமாரி, நாகாத்தம்மன், ஹவுஸிங் போர்டு மாரி, மீன் தொற மாரி, வண்ணாந் தொற மாரி, சந்தக்கட மாரி... எல்லாமே தெருவோரத் தெய்வங்கள். யதார்த்தப் பட நாயகிகள். தினம் தினம் கடந்துபோகும் நாலு பேர் கன்னத்தில் போட்டுப் போவதைத் தவிர, வேறென்ன கிடைக்கும் இந்த வீதியோரச் சாமிகளுக்கு? திருப்பதி ஏழுமலையானைப் பார்க்கப் பல மணி நேரம் காத்திருந்து எட்டி நின்று லட்டு வாங்க வேண்டும். சபரிமலை ஐயப்பனை அஞ்சாறு நொடிகள் நிதானித்துப் பார்ப்பதே அதிசயம். பழநி முருகனை ஏறிப்போய்ப் பார்க்க எல்லோருக்குமா வாய்க்கிறது? நமது அனுதினங்களின் ஆசீர்வாதங்கள் இந்தத் தெருவோர தெய்வங்கள்தானே? டிராஃபிக்கில் நிற்கும் பஸ் ஜன்னல்களில் திமிறிக்கொண்டு எவ்வளவு பேர் இவர்களைக் கும்பிடுகிறார்கள்? க்ராஸ் பண்ணும் போது 'உச்ச்... உச்ச்’ எனத் தன்னிச்சையாகப் போட்டுக் கொண்டு போகிறார்கள். பெருநகரத்தில் வாக்கப்பட்டு வந்த ஊர்நாட்டு அக்காக்கள் சாயங்காலமாகப் பூக் கட்டிக்கொண்டு போய்ப் பேசிவிட்டு வருவதே அபூர்வம், இந்தச் சிறு தெய்வங்களுக்கு.
சென்ட்ரல் ஸ்டேஷன் பாலத்துக்கு முன்னால் ஒரு பாடிகாட் முனீஸ்வரன் உட்கார்ந்திருக்கிறார். எப்போதும் தள்ளி நிற்கும் இளநீர்க் கடைக்காரரைப் பார்த்தபடி. புது பைக்கோ, காரோ வாங்கி வந்து எலுமிச்சம் பழம் நசுக்கி கியர் போடும்போது முனீஸ்வரனின் சிரிப்பு கேட்கும். அண்ணா ஆர்ச் பக்கம் அவ்வளவு நெரிசலில் ஒரு குரூப் அலகு குத்திக்கொண்டு நிற்பதை முந்தா நாள்தான் பார்த்தேன். பரபரப்பான தி.நகரின் தெரு ஒன்றில் வேப்ப மரத்துக்கு மஞ்சள் பாவாடை கட்டி, சின்னதாகச் சூலம் நட்டு விளக்கெரியும். யார், எப்போது வந்து இதைச் செய்தார்கள் என்றே தெரியாமல் ஓர் எளிய சாமி அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் எல்லோருக்கும்.
ஊரில் இருந்து கொரடாச்சேரிக்குப் போகும் வழியில் ராக்கப்பெருமாள் கோயிலில் பஸ்ஸில் இருந்தே காசு போட்டுப் போவார்கள். செங்கல்பட்டு தாண்டினால் வழி எல்லாம் சீரியல் லைட்டுகளில் மின்னுகின்றன சிறு தெய்வங்கள். பயணத்தில், ஊர்களின் வெளியே உசந்து நிற்கும் பெயர் தெரியாத பெருவீரக் காவல் தெய்வங்களின் உருவங்கள் நினைவுகளில் அப்பிக்கொள்கின்றன. அகல் வெளிச்சமும் சர்க்கரைப் பொங்கலும் அனுதினமும் வாய்க்காத ஆயிரமாயிரம் ஏழைச் சாமிகளின் தேசம்ஐயா இது.
அதனால்தான் ஆடி மாதத்தை எனக்குப் பிடிக்கும். இது எளிய தெய்வங்களின் கொண்டாட்டம். இன்றைக்குக்கூட காலையிலேயே, 'மஞ்சள் குங்குமக்காரியை மறப்பேனா... அவள் மகிமையைப் பாடாமல் நான் இறப்பேனா?’ என அலறி, எம்.எஸ்.வி-தான் என்னை எழுப்பிவிட்டார். டொனேஷன் கேட்டு வந்த ஒரு குரூப்புக்கு 100 ரூபாய் கொடுத்தேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு வாளி நிறையக் கூழ் கொண்டுவந்து வாசலில் வைத்துவிட்டுப் போய்விட்டார்கள். காசு வசூல் பண்ணி தெருவுக்குத் தெரு அண்டா வைத்து கூழ் காய்ச்சுகிறார்கள். கல்யாண சாம்பார் மாதிரி, ரம்ஜான் கஞ்சிக்கும் ஆடி மாசக் கூழுக்கும் தனித்தனியாக ஒரு வாசம் இருக்கிறது. தேங்காய்ப் பத்தை மிதக்க, உதடு கொதிக்க ஊதி ஊதிக் குடித்தபோது... அபிவிருத்தீஸ்வரம், சிம்மக்கல், கருமத்தம்பட்டி, வடபழனி எல்லாக் கூழுக்கும் ஒரே வாசம்தான். வேலை இல்லாத காலங்களில் நானெல்லாம் அன்னதானத்திலேயே சலைன் ஏற்றிய கோஷ்டி. அப்போது ஆடி மாதம் வந்தாலே எங்கள் மொபைலில் டயல்டு கால், ரிஸீவ்டு கால் முழுக்க 'மிமிக்ரி செந்தில்’ நம்பர்தான் கிடக்கும். 'கர்ணன்’ டிஜிட்டல் வெர்ஷன் மாதிரி நண்பர் 'மிமிக்ரி செந்தில்’ சீஸன் ஹிட் அடிக்கிற கலைஞன். ''சி.எஸ்.ஐ. சர்ச்ல ஒரு கல்யாணம்... ட்வென்ட்டி மினிட்ஸ்ல வந்தின்னா ட்வென்டிட்வென்டி பிரியாணி விருந்து’ எனப் பசி இரவில் போன் அடிப்பார். இன்னொரு பஞ்சப் பொழுதில் வந்து, 'பைக்ல ஏறு, பாம்குரோவ்ல சேட்டுக் கல்யாணம்... சைட் டிஷ்ஷா சைட்டும் அடிக்கலாம்’ என ஜில்லடிப்பார். ஆடி மாதம் வந்தால் போத்தீஸ், சரவணா ஸ்டோர்ஸ் மாடல்கள் மாதிரி பார்ட்டியும் செம பிஸியாகிவிடுவார். ''முப்பது நாளும் கச்சேரி புக் பண்றோம்... 365 நாளும் குக் பண்றோம்... இதான் குறைந்தபட்ச செயல்திட்டம்!’ என இறங்கி வியாசர்பாடியில் இருந்து போரூர் வரை ஜெயலலிதாவில் இருந்து ஜெயம் ரவி வரை அத்தனை குரல்களிலும் பேசுவார். மதியமே கிளம்பிவிடுவோம். தெரிஞ்சவன் எவனாவது பார்த்துவிடுவானோ என்கிற திகிலைத் தவிர, கோயில்களில் தக்காளி சாதம், புளி சாதம் என அன்னதானம் வாங்கிக்கொண்டு ரோட்டோரம் நின்று சாப்பிடுவது ஒரு சுகம். ராத்திரி செந்திலோடு கச்சேரிக்குப் போனால், நமக்கும் சேர்த்து சோடா, கலர், டீ, டிபன் என அத்தனைக்கும் மீட்டர் போடுவார். சமயங் களில் ஸ்டேஜுக்குப் பின்னால் ரஜினி யோடு உட்கார்ந்து பரோட்டா சாப்பிட்டு, சிலுக்கு, நமீதா வோடு கடலை போடுகிற வாய்ப்பெல்லாம் கிடைக்கும்.
திருவிழாவை நடத்துகிற லோக்கல் புள்ளிகளிடம், 'இவரு கவுஞரு’ என நம்மை அறிமுகப்படுத்திவிடுவார் நண்பர். பாசம் பீறிட்டு, 'கவுஞரைக் கவனிங்கப்பா கவுஞரைக் கவனிங்கப்பா...’ என நமக்குப் பிரசாதங்கள் வந்துகொண்டே இருக்கும். மொத்த ஏரியாவும் திரண்டு காசு வசூல் பண்ணி, கூட்டம் போட்டு, தங்கள் தெய்வங்களை அவ்வளவு கொண்டாடுகிற மனிதர்கள் அவர்கள்.
ஒருமுறை வட சென்னையில் ஒரு கோயில் கச்சேரிக்குப் போய்இருந்தோம். கச்சேரியைப் பாதியிலேயே வந்து நிறுத்தினார் ஏரியா தலைவர். 'காவு படையல் போட்டு கண்டினியூ பண்ணுபா... இன்னா?’ என அவர் சொன்னதும் ஜனம் மொத்தமும் கோயில் வாசலுக்குப் போனது. ஏழெட்டு ஆடுகளை நிறுத்தி, பூசாரியும் இன்னும் சிலரும் கழுத்தைக் கடித்து ரத்தத்தைக் குடிக்க... மொத்த ஜனமும் கைஎடுத்துக் கும்பிட்டது. சென்னைக்குள் அப்படி ஒரு திருவிழாக் காட்சியை நான் எதிர்பார்க்கவே இல்லை.
இன்னொரு ஆடி மாச இரவில் லீ மெரிடியன் ஹோட்டலுக்குப் பின்னால் ஒரு ஏரியாவுக்கு அழைத் துப்போனார் நண்பர் ஒருவர். 'இதுவரைக்கும் இப்பிடி ஒரு திருவிழாவை நீ பார்த்துருக்க மாட்ட..?’ என பில்டப் கொடுத்துக்கொண்டு போனார். அது ஒரு சுடுகாட்டு ஏரியா. கிறுகிறுவென முன்னூறு பேர் கூடி விட்டார்கள். சின்ன சமாதியில் பூக்களெல்லாம் போட்டு ஒரு சித்தர் சிலை. ஒருவர் பறையடித்தபடி கானா பாடலைப் பாட ஆரம்பிக்க, தடதடவென எல்லோரும் உட்கார்ந்து கஞ்சா பற்றவைத்து ரவுண்ட் ஸில் விட ஆரம்பித்தார்கள். 'இதுக்குப் பேரே கஞ்சா திருவிழா’ என்றார் நண்பர். மாறி மாறி கஞ்சாவைப் போட்டு, பாட்டுப் பாடி, கைத்தட்டிச் சிரித்து, 'சொய்ய் ய்ங்... சொய்ய்ய்ங்... சொய்ய்ய்ங்...’ எனக் சுழட்டி அடிக்க, அது அஞ்சாறு பாலா படம். கொஞ்ச நேரத்தில் அண்டா நிறைய பிரியாணி கொண்டுவந்து வைத்து பரிமாறத் தொடங்கிவிட்டார்கள். 'என்னடா இது..? இது எந்த ஊரு? இதெல்லாம் எங்க நடக்குது?’ என அதிர்ந்து அதிகாலையில் அங்கி ருந்து ஓடிவந்தோம்.
சைதாப்பேட்டை ரயிலடியை ஒட்டி இருக்கிற ஏரியாவில் ஆடித் திருவிழா. போன வருஷம் நண்பரோடு போயிருந்தேன். தெரு முக்கில் தம்மாத்தூண்டு கோயில். புதுப் புடைவை சுற்றி கருமாரியம்மன் தேஜஸாக உட்கார்ந்திருந்தாள். கூழ் வார்த்தல், அபிஷேகம், அன்னதானம் எல்லாம் முடிந்தது. ராத்திரி ஏரியா ஜனம் மொத்தமும் கோயில் வாசலில் கூடியது. சாமிக்கு பூசாரி பூஜைகள் பண்ணிக்கொண்டு இருக்கும்போதே அங்கு இருக்கும் நண்பரின் அம்மாவுக்குச் சாமி வர ஆரம்பித்தது. 'ஏய்ய்ய்... ஏய்ய்ய்...’ எனக் கத்த ஆரம்பித்தவர், சட்டென்று நாக்கைத் துருத்திக்கொண்டு நெளிந்து வளைந்து ஆட ஆரம்பித்தார். மொத்தப் பேரும் பக்தியாகக் கையெடுத்துக் கும்பிட்டபடி முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். அப்படியே உச்சத்துக்குப் போய், கூட்டத்தில் புகுந்து நாலைந்து பேருக்குப் 'பொளேர்
பொளேர்’ என அறைவிட்டார் அந்தம்மா. கூட்டத்தில் நின்ற நண்பனின் அப்பாவுக்கும் சில அடிகள் விழுந்தன. அடித்து முடித்து விபூதியை அள்ளி வீசியபடி சில குறிகள் சொல்லிவிட்டு மயங்கிச் சரிந்தார். அது நடந்து பல நாட்கள் கழித்து அந்த நண்பனின் வீட்டுக்குப் போனேன். வாசலிலேயே அவன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை நடந்துகொண்டு இருந்தது. அவர் குடித்துவிட்டு தள்ளாடிக்கொண்டு இருந்தார். ஒரே கூச்சல். கொஞ்ச நேரம் ஏதேதோ பேசிவிட்டு அவர் போய் விட, 'அப்டியே போயிரு... வராத’ என்றபடி அந்தம்மா வாசலில் வந்து உட்கார்ந்துகொண்டது. வரும்போது அந்த நண்பன் சொன்னான், 'எங்கப்பு செம டார்ச்சரு... எப்போ பாத்தாலும் அம்மாட்ட ராவடி பண்ணலைன்னா தூக்கம் வராது அந்தாளுக்கு, இப்போ பரவால்ல முன்னாடிஎல்லாம் அட்ச்சிக்கினே இருப்பாரு... பேஜாராத் திட்டிக்கினே இருப்பாரு. ஒரு திருநால இதுக்கு படீர்னு சாமி வந்துருச்சு... அப்டியே அவரப் புட்ச்சுக் கண்டம் பண்ணிருச்சு. அதுலேர்ந்து திருநால அதுக்கு சாமி வந்துச்சுன்னா ஊரே பயந்துக்கும். இந்தாளும் அடிக்கிறதெல்லாம் இல்ல பாத்துக்கினில்ல!’
வாசலில் உட்கார்ந்திருந்த அந்தம்மாவைப் பார்த்தேன். அவள்தான் தெருவோரத் தெய்வம்.
- போட்டு வாங்குவோம்...
வரவர புரட்சிக்காரர்களின் தொல்லை தாங்க முடியவில்லை.
'வெரைட்டி ரைஸ்’ மாதிரி இதிலும் பல வகைகள் உண்டு. டாஸ்மாக் புரட்சிக்காரர்கள், ஆன்லைன் புரட் சிக்காரர்கள், ஆன் தி வே புரட்சிக்காரர்கள், அகஸ்மாத்து புரட்சிக்காரர்கள், புதிய புரட்சிக்காரர்கள், பழைய புரட்சிக்காரர்கள், ஏ ஒன், ஏ டூ, ஏ த்ரீ!
இதில் 'டாஸ்மாக்’ புரட்சிக்காரர்கள் தீவிரவாதிகள். ஆயுதப் போராட்டமோ, அஹிம்சை நீரோட்டமோ, அதன் எக்ஸ்ட்ரீமுக்குப் போய்... விடிவதற்குள் புரட்சியை வென்றெடுக்கத் துடிக்கும் தீவிரவாதிகள். இவர்களிடம் இருக்கிற அணு ஆயுதம்... செல்போன்! அந்தி சாயும்போதே போன் பண்ணி, ''டெசோ... என்னடா டெசோ... கோபாலபுரத்துல குண்டு வைப்போம் வழ்ழியா... வழ்ழியா...'' என வம்படிப்பார்கள். ''ஈழம்கிற வார்த்தைக்குத் தட போட்டா... ழும்மா வுட்ருவமா... நாளைக்கு டெல்லி போற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ல ஆயிரம் பேழு கெழம்புழம்டா... லீவு போடு... லீவு போடு...'' எனப் பம்ப்படிப்பார்கள். ''பில்லா ட்டூ பார்த்தல்ல... எவ்வளவு செலவு..? கோட்டுக்கு ஆவுற செலவ மட்டும் குடு... நாப்பது லச்சம்... மெக்பல்பஃப்... டேய் எக் பஃப் இல்லடா... மெக்பல்பஃப்... ஒரு வேனும் டிஜிட்டல் கேமராவும் குடு... உலக சினிமா கொண்டாந்து ஓம் மூஞ்சில வீசுழேன்...'' எனச் சொம்படிப்பார்கள். இவர்களோடு பார்களுக்குப் போய்விட்டால், எதற்கும் தயாராக இருக்க வேண்டும். வீச்சு பரோட்டா வோடு வந்து படுப்பதற்கும் ரத்த வீச்சத்தோடு வந்து படுப்பதற்கும் சம அளவு வாய்ப்புகள் உண்டு. குடும்பம் குட்டி, வேலை எனத் தொடங்குகிற பேச்சு மூன்றாவது ரவுண்டில் ''ஆண்ட்ரியா லிப் கிஸ் அடிச்சா என்ன தப்பு? ஒனக்கு ஏன் எரியுது?'' என ஆரம்பிக்கும். ''அருந்ததி ராய் ஒரு போலிப் புரட்சிவாதி... அதப் புரிஞ்சுக்கோ...'' எனத் திகுதிகுக்கும். திடீரென வெறியேறி ஒருவர் கோக் பாட்டிலை எடுத்து சம்பந்தமே இல்லாமல் நாலாவது டேபிளுக்கு எறிய, அப்புறம் 'கலாசலா... கலசலா... கல்லாசா...’தான். மறுநாள் காலையில் பார்த்தால், இவர்கள் அவ்வளவு பேரும் புரட்சியின் சிறு சுவடும் இல்லாமல் தட்கல் டிக்கெட்டுக்கு நிற்கிற குடும்பஸ்தர்கள் மாதிரியே கடந்துபோவார்கள்.

போன ஆயுத பூஜை அன்றைக்கு இப்படிச் சில புரட்சிவாதிகள் ஒன்றுகூடி பாருக்குப் போனோம். அன்றைக்கு சீஃப் கெஸ்ட்டாக வந்திருந்தவர்கள் எந்நேரமும் அரசால் தேடப்படக்கூடியவர்களின் லிஸ்ட்டுக்கு போகக்கூடிய அதிபயங்கரவாதிகள். எப்படியும் கருத்துக் கலவரம் வெடிக்கும் என்பதை யூகித்து, அதைத் தடுக்கும் பொருட்டு நானும் இன்னொரு மிதவாத நண்பரும் பாதுகாப்பு நடவடிக்கை பிளான் பண்ணினோம். இரண்டாவது ரவுண்டில் நமீதாவைப் பற்றிப் பேச ஆரம்பித்து, தொடர்ந்து ஹீரோயின்களைப் பற்றியே பேசி அவர்களைத் திசை திருப்புவது என்பதே திட்டம். அதன்படியே இரண்டாவது ரவுண்டில் நமீதாவைப் பற்றி பேச ஆரம்பித்தால், அடுத்த நிமிஷமே ஒரு நண்பர், ''நமீதா... சிதைக்கப்பட்ட திராவிடக் கலாசாரத் தின் குறியீடு...'' எனக் கொளுத்திப் போட்டார். அப்புறம் அப்படியே எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் எனக் கொழுந்து விட்டெறிய... பீர் பாட்டில் உடைந்தது. ஒரு வழியாக அவர்களை அசமடக்கி வெளியே வந்தோம். நள்ளிரவு 12 மணி இருக்கும். ரோட்டுக் கடையில் தோசைகள் சொல்லிவிட்டு நின்றால், குரூப்பில் ஒரு நண்பரைக் காணவில்லை. எங்கே எனத் தேடினால், தெருமுக்கில் ஒரு கலவரத்துக்கான சத்தங்கள். ஓடிப் போய்ப் பார்த்தால் நாலைந்து பேர் நண்பரை ரவுண்டு கட்டி நின்றார்கள். பதறித் தடுத்து விசாரித்தால், அங்கே ஆட்டோ ஸ்டாண்டை ஒட்டி ஒரு பிள்ளையார் சிலை வைத்து, குட்டியாக ஒரு கோயில் கட்டி வைத்திருக்கிறார்கள். தெருவை அடைத்துக் கோலம் இருந்தது. நண்பர் சாவகாசமாகப் போய் கோலத்தின் நடுவே நின்று உச்சா போக ட்ரை பண்ணியிருக்கிறார். கிட்டத்தட்ட மதக் கலவரத்துக்கான அடிக்கல் நாட்டு விழா. ஆட்டோக்காரர்கள் ஓடிவந்து ரவுண்டு கட்டிவிட்டார்கள். சமாதானப்படுத்தி ஒருவழியாக நண்பரை மீட்டோம். ''ஏய்யா அப்பிடிப் பண்ண?'' எனக் கேட்டதற்கு, நண்பர் தன் கண்ணாம் முழியை உருட்டி, ''இந்தச் சமூகத் துக்கு எதிரான என் பதிவுகள்ல இதுவும் ஒண்ணு...'' என்றார். தெறித்து ஓடிவந்தோம்.
ஆன்லைன் புரட்சிக்காரர்கள்தான் இப்போதைக்கு 'ரூட்டு தல!’ இன்றைய தேதிக்கு ஃபேஸ்புக்கில் ஐ.டி. வைத்திருப்பவர் ஆக்ட்டிவிஸ்ட், ஃபேக் ஐ.டி. வைத்திருப்பவர் டெரரிஸ்ட் என்பதுதான் ஸ்டேட்டஸ். டீ பிரேக்கில் 'பெரியார் தலித்தியத்துக்கு எதிரானவர்...’ என யாரோ ஒரு ஸ்டேட்டஸ் போட்டுவிட்டுப் போய்விட, ஆபீஸ் அவர்ஸ் முடிகிற வரைக்கும் கமென்ட்டுகள் குவிகின்றன. ''செங்கொடிக்கு நினைவேந்தல்... வீர வணக்கம்... வீர வணக்கம்...'' என கீ-இன் பண்ணிவிட்டுப் பல பேர் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறார்கள். 'அட்ட கத்தி’ விமர்சனத்தில் இருந்து மன்மோகன் சிங் வரை எல்லாவற்றையும் வறுத்தெடுக்கிறார்கள். 'புரட்சி... புரட்சி...’ எனக் கிளம்பி வருகிறவர்கள் வகை தொகை இல்லாமல் அத்தனை டவுசர்களையும் கிழிக்கிறார்கள். இன்றைக்கு 50 லைக்ஸ் வாங்கியே தீருவது எனக் கங்கணம் கட்டிக்கொண்டு, புரட்சி ஸ்டேட்டஸ்களை வீசுகிறார்கள். கெட்ட வார்த்தைகளால் சண்டையிடுகிறார்கள். வார்த்தைகளுக்கு நடுவே புகுந்து நுணுக்கமான அரசியலைக் கண்டுபிடித்து உலுக்கி எடுக்கிறார்கள். நைன் டு சிக்ஸ் அத்தனை பேருமே ருத்ரன் மாதிரி சைக்காலஜிஸ்ட்டாகவோ, சுப்ரமணிய சுவாமி மாதிரி ஜித்தர்களாகவோ, பவர் ஸ்டார் மாதிரி பப்ளிசிட்டி கோவிந்துகளாகவோ, ராம்ஜெத்மலானி மாதிரி கிரிமினல் லாயர்களாகவோ இருந்தால் என்னதான் செய்வது?
வலைதளம் உருவாக்கி இருக்கும் கட்டற்ற சுதந்திரம் உண்மையிலேயே ஓர் அற்புதம். பல பேருக்குள் ஒளிந்திருக்கும் படைப்பாளிகளை வெளியே கொண்டுவந்திருக்கிறது இந்தச் சுதந்திரம். அதிகாரத்துக்குப் பயப்படாமல் தனது அடையாளத்தை மறைக்காமல் துணிச்சலான அரசியல் கருத்துகளை முன்வைப்பதுதான் பலரது இருப்பை அர்த்தப்படுத்துகிறது. உலகத் தமிழர்களிடையே ஒரு விஷயத்தை முன்னெடுக்கவும் அன்பையும் நட்பையும் பகிரவும் இது ஆரோக்கியமான களம். ஆனால், இந்தக் கட்டற்ற சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும் ஸ்டேட்டஸ் போடுவதே போதும் என்கிற இன்ஸ்டன்ட் புரட்சியாளர்களும் எந்த மதிப்பீடுகளும் இல்லாமல் யாரையும் எதையும் அசிங்கப்படுத்துவதும் எல்லை மீறிய வார்த்தைகளைப் போட்டுத்தாக்குவதும்... நல்ல விஷயம் இல்லையே நண்பர்களே!
தஞ்சாவூரில் மக்கள் கலை இலக்கியக் கழகத்து நண்பர்களோடும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்து நண்பர்களோடும் அவர்களது பாடல்களோடும் எனக்கு நல்ல நட்பு உண்டு. கிராமம் கிராமமாகப் போய் பறையடித்தபடி அவர்கள் பாடுவதும் பேசுவதும் அவ்வளவு அதிர்வை உண்டாக்கும். 'போராட்டம் இல்லைஎன்றால் வாழ்க்கையா... இதை ஏற்காதவர் யாரும் மனிதரா...’ என்ற ஒரு பாடலில் வருகிற, 'தாய் மடியினில் சேய் அழுவது பாலருந்திட அல்லவா, மான் கொம்புகள் கூர்வாளென இருப்பதை நான் சொல்லவா...’ என்கிற வரிகள் இப்போதும் சிலிர்ப்பைத் தருகின்றன. ஒருமுறை இப்படிக் கலைக் குழுவினரோடு சேர்ந்து ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தபோதுதான் அரியலூரில் தாயன்பனைச் சந்தித்தேன். 'தாயு’ என நண்பர்களால் அழைக்கப்படுபவர். அரியலூர் பக்கம். அவருக்கு இடது கால் பாதி கிடையாது. கட்டைக்கால் வைத்து விந்தி விந்திதான் நடப்பார். ''முப்பது வருஷத்துக்கு முன்னாடி... துப்பாக்கியால போலீஸ் சுட்டுப்புட்டான்... தப்பிச்சு ஓடினப்போ காலக் காட்டி மூணு குண்டவுட்டான்... ஆஸ்பத்திரில வெச்சு கால அறுத்த கையோட செறைக்குப் போயிட்டம்ல...'' எனச் சிரித்தபோதே அவரை எனக்குப் பிடித்துவிட்டது. அப்படியும் இப்படியுமாகத் தன் வாழ்வில் 15 வருடங்களைச் சிறையிலேயே கழித்தவர். ''17 வயசுல குண்டு தயாரிச்சேன்னு புடிச்சுட்டுப்போனதுதான் மொதல்ல... அப்புறம் ஏதேதோ கேஸுங்க... கல்யாணம்கூடப் பண்ணிக்கலை... ஜெயில்லயே போயிருச்சு பாதி வாழ்க்கை... எதையும் எதுத்துக் கேக்காம போராடாம நம்மளால இருக்க முடியாது... என்ன பண்றது..? இதுவரைக்கும் நம்மள வெளிக்காட்டிக்கணும்னு நெனச்சதில்ல... அதுல நமக்கு விருப்பமும் இல்ல...'' என்றவர் தனது வீட்டுக்கு அழைத்துப்போனார். அது வீடு அல்ல... அறை. ஒரு சின்ன அறை முழுக்கப் புத்தகங்களைத் தவிர எதுவும் இல்லை. அவரது கிராமத்தில் மந்தையில் கச்சேரி நடந்தது. 'தேன் மணக்குது பால் மணக்குது குடம் குடமாய்ப் பேச்சிலே, ஊர் மனதினில் கூன் விழுந்திடும் காட்சியடா நாட்டிலே...’ எனப் பாடல் ஒலிக்க அதிர்ந்த பறைகளுக்கு தாயு தோழர் அந்தக் கட்டைக் காலோடு ஆவேசமாக ஆடியது இப்போ தும் நினைவில் இருக்கிறது. அன்றைக்கு இரவு சொன்னார், ''தோழர்... சே குவேராவும் பிரபாகரனும்தான் போராளிகளா..? நல்லதை நினைக்கிறது மட்டும் இல்லாம, அதைச் செஞ்சுகாட்றவன் எல்லாமே போராளிங்கதான். இங்க தாசில்தார் ஆபீஸ்ல எல்லார் பிரச்னைகளுக்காகவும் மனு எழுதித் தர்றான் பாரு, அவனும் போராளிதான். ஜி.ஹெச்ல புள்ள பொறக்குற வார்டக் கழுவிவுட்டுட்டுக் கெடக்கு பாரு ஒரு அம்மா... அதுவும் போராளிதான்... மனுஷன் பேண்ட்டு மனுஷனே அள்றான் பாரு... அந்த மனுஷனும் போராளிதான்... சாதி மறுப்புக் கல்யாணம் பண்றவனும், கட்டுசெட்டாப் பொம்பளைப் புள்ளைகளுக் குச் சொத்து பிரிச்சுத் தர்றவனும், பசின்னதும் சாப்பாடு போடுறவனும், எதிர்பார்ப்பு இல்லாம அள்ளி அணைச்சுக்குறவனும், எவன் மேலயும் அதிகாரம் செலுத்தாதவனும், மத்தவனுக்கும் சேர்த்து உழைக்கறவனும், எல்லாரும் போராளிங்கதான்... சொல்றது சரிதான?''
வெகு நாட்களுக்குப் பிறகு போனபோது பார்த்தால்... தாயு இல்லை. ''தோழர் இறந்துட் டார்ல... அது எட்டு மாசம் இருக்கும்...'' என்றார் கள் நண்பர்கள். ''உடம்புக்கு முடியல... ஆஸ்பத்திரி போனா கிட்னி ஃபெயிலியர்னுட்டாங்க...'' என்றார்கள்.
அவரது அறையை நண்பர்கள் பயன்படுத்திக்கொண்டு இருந்தார்கள். அவரது புத்தகங்களைப் புரட்டியபோது ஒரு டைரி இருந்தது. தாயுமானவன் எழுதிய டைரி. அதன் முதல் பக்கத்தில் அவர் இப்படி எழுதியிருந்தார், 'ஒவ்வொருவர் வாழ்க்கையும் அரசியல்தான்... நாம் ஒவ்வொருவரும்அரசியல் வாதிதான்... ஒவ்வொரு நாளும் போராட்டம் தான்... ஒவ்வொருவரும் போராளிதான்... போராட்டம் இல்லையென்றால் வாழ்க்கையா... இதை அறியாதவர் யாரும் மனிதரா..?’
- இந்த வாசகங்களை என்னால் மறக்கவே முடியாது. இவை தாயு தோழரின் டைரியில் இருந்தவை என்கிற ஒரே காரணம்தான். உண்மைதானே... இரவு போகும்போது தெரு நாய்க்கும் சேர்த்து சாப்பாடு வாங்கிப் போகிறவன் எவ்வளவு அற்புதன்!
யாரோ காசில்லாத முகம் தெரியாதவருக்கும் சேர்த்து பஸ்ஸில் டிக்கெட் எடுக்கிறவர், யார் யாருக்கோவான கோபங்களைச் சுமந்துகொண்டு உச்சி வெயிலில் கோஷமிட்டுக்கொண்டு இருப்பவர், ஒரு கி.மீ. துரத்திப் போய், 'சைடு ஸ்டாண்டை எடுத்துவிடுங்க சார்’ எனச் சொல்லிவிட்டுப் போகிறவர், விபத்தில் கிடந்தவரைத் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு நள்ளிரவு வரை அலைந்து திரிகிறவர், ஒவ்வொருவரின் உணர்வுகளையும் மதிக்கிறவர், தன் இடத்தில் பிறரை வைத்துப் பார்க்கிறவர்... அத்தனை பேருக்கும் ஆயிரமாயிரம் லைக்ஸ் பாஸ்!
-போட்டு வாங்குவோம்...
ஒரு நண்பன்... நான்கு வருடங்களுக்குப் பிறகு அவனைப் பார்த்தேன். நேற்று அவனுக்கும் எனக்கும் நடந்த சீன் இது.
''டேய்... நான்தான் பேசறேண்டா...''
''ஹேய் மச்சான்... இப்ப யோகா க்ளாஸ்ல இருக்கேன்... கூப்பிடுறேன்...''
அதிகாலையில் போன் அடித்தவனுக்கு, என் பதில் ஷாக் அடித்தது. ''என்னது, யோகா க்ளாஸா... நீயா..?'' என அடுத்த தெரு வரைக்கும் அலறினான். ''வில் கால் யூ பேக்டா...'' என கட் செய்தேன் (இந்த இங்கிலீஸுக்கு இன்னும் டர்ர்ர்ராகி இருப்பான்). கொஞ்ச நேரம் கழித்துக் கூப்பிட்டால், ''காலைல 6 மணிக்கு யோகா க்ளாஸா? என்னடா சொல்றே?'' என மறுபடி பதறினான். நண்பர்கள் 'நல்லவர்கள்’ ஆவதை நண்பர்களால் ஜீரணித்துக்கொள்ள முடிவதே இல்லை.
ஃபாஸ்ட் கட்டில் அவனது மண்டைக்குள் திருவல்லிக்கேணி மேன்ஷன், கம்ஃபர்ட் பார், பீஃப் கறி, பாண்டி பஜார் நெய் பரோட்டா, நைட் ரவுண்ட்ஸ், மொட்டை மாடி நடனங்கள்... எல்லாம் சடசடத்து மறைந்திருக்கும்.
''இன்னைக்குத்தான் சென்னை வந்தேண்டா... ஈவினிங் எங்க பாக்கலாம்?''

''நீ எங்க இருக்க?''
''மயிலாப்பூர்ல...''
''இன்னைக்கு வியாழக்கெழம... மயிலாப்பூர் சாய்பாபா கோயில் வந்துரு...'' என்றேன் வேண்டும் என்றே. ''எது சாய்பாபா கோயிலா..? அதான் லேண்ட் மார்க்கா..? பக்கத்துல என்ன பார் இருக்கு..?''
''மொதல்ல அங்க வாடா...'' எனில், எனக்கும் அவனுக்குமான பூர்வஜென்ம பந்தம் அப்படி. கூடுவதே குடிப்பதற்காகத்தான் என்பதே எங்களின் ஒரு வரி ஃப்ளாஷ்பேக். ''நண்பா... ஒரு பேபா...'' என்பான் அடிக்கடி ஒரு சிகரெட்டை உருவிக்கொண்டு. 'பேபா’ என்றால் பேருக்குப் பாதி... ஒன் பை டூ!
அவன் என் மேன்ஷன் தோழன். நான்கு வருடங்கள் கூடிக் கும்மியடித்தோம். சரக்கு, சிகரெட், காதல்கள் பகிர்ந்துகொண்ட நட்பு. அதன் பிறகு வேலைக்கு நைஜீரியா பக்கம் போனவனை நான்கு வருடங்களுக்குப் பின் இன்றுதான் பார்க்கிறேன்.
சாயங்காலம் சாய்பாபா கோயிலில் பார்த்ததும், ''டேய்! ஆளே மாறிட்ட... வெய்ட் லாஸாகி... ப்ரைட்டாகிட்டடா...'' என்றான் ஆச்சர்யமாக. அவன் எக்கச்சக்கமாக வெயிட் போட்டு இருந்தான். கண்களில் ஒரு நிரந்தரப் போதை சுழித்திருந்தது. ஓரமாக தள்ளிக்கொண்டு வந்து, ஒரு ஃபாரின் சிகரெட்டை உருவி, ''நண்பா... பேபா...'' என்றான். ''ஸாரி மச்சான்... சிகரெட் பிடிக்கறதில்ல...''
''காமெடியா..? இந்தா அட்றா...''
''இல்ல மச்சான்... சீரியஸாத்தான்... ஃபோர் இயர்ஸ் ஆச்சு...''
சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்தால், ''பக்கத்துலயா தூரமாடா... ஆட்டோ பிடிச்சுருவோமா..?'' என்றான் ஆர்வம் மினுங்க. ''பக்கத்துலதாண்டா...'' என்றபடி சுகநிவாஸுக்கு அழைத்து வந்து, ''ரெண்டு காபி...'' என்றேன்.
''இப்ப எதுக்குரா காபி... டைம் ஆகிருச்சு... பாருக்கே போயிரலாம்...''
''பாரா..? நான் தண்ணியடிக்கிறது இல்லடா... ஒரு காபி சாப்பிட்டு பக்கத்துல ராமகிருஷ்ணா மிஷன் இருக்கு... அங்க போவோம்... நல்ல வைப்ரேஷன் இருக்கும்!''
''வேணாம்... வேணாம்... நா அடிக்கிறேன்... சும்மா கம்பெனிக்கு வந்து உக்காரு...'' என்றான் கொலை வெறியாகி. பாரில் கடைசி வரை நான் சாலட்டையும் ஜூஸையும் ருசிக்க, அவன் மப்பில் என் உள்ளங்கையை ஏந்தி எக்கச்சக்கமாகக் கிஸ் அடிக்க ஆரம்பித்தான். ''மச்சான்... எப்டிடா..? எப்பிட்றா விட்ட..? நானும் ட்ரை பண்ணி ட்ரை பண்ணிப் பாக்குறேன்... முடிய மாட்டேங்குதே... ம்...'' என்றவன் ஏழாவது ரவுண்டில், ''த்தா... ஆஸ்காரு... ஆஸ்காரு வாங்கிட்டு நீ வரும்போது நான் ஒரு ட்ரீட் குடுப்பேன்... அன்னைக்கு ஒரு நாள் மட்டும் நீ குடிக்கணும்!'' என்றவன், சட்டென்று அழ ஆரம்பித்தான். ''குடிக்கலைன்னா தூக்கம் வர மாட்டேங்குது... நெனப்பு அரிக்குது... அத்தனையும் ஞாபகத்துக்கு வருது... மண்டை கொய்ய்ங்குது... என்னாடா பண்றது..?''

நள்ளிரவுக்கு மேல் அவனை ஆட்டோ பிடித்து அனுப்பிவிட்டுத் திரும்பினேன். அப்போதுதான் தோன்றியது... இப்படி எத்தனை எத்தனை இரவுகளை வெற்றுக் கூச்சல்களோடும் நம்பிக்கைகளோடும் தொலைத்திருக்கிறோம்? உடலை யும் மனதையும் வதைத்திருக்கிறோம்? எவ்வளவு இதயங்களை இம்சித்து இருக்கிறோம்? விடியல் களை இழந்து இருக்கிறோம்? அவற்றில் இருந்து மீண்டுவிட்ட இந்த இரவுக்குள் அந்த நண்பனும் வர வேண்டும் என நினைத்துக்கொள்கிறேன்.
''கெட்ட பழக்கங்கள் நல்ல பாம்பைப் போல... பட்டெனத் தூக்கி வீசிவிடு'' என்கிறார் பரமஹம்சர். நானும் அப்படித்தான் ஏதோ ஒரு நாளில் புகையையும் மதுவையும் தூக்கி வீசினேன். அந்த நண்பன் சொன்னதைப் போல அப்போது எனக்கு முன்பு வந்து நின்ற பெரும் சவால்... இந்த வெற்றிடம்தான்! நேரமே போகாமல், மனதைத் தவிக்கவைக்கும் வெற்றிடம். அடுத்து என்ன செய்வது எனப் புரியாத தவிப்பும் குழப்பமும். ஏக்கம், பிரிவு, கவலை, கண்றாவி என நமது அத்தனை உணர்ச்சிகளையும் லாகிரி வஸ்துக்களிடம் அடகுவைத்துவிட்டோம் என்பதே அப்போதுதான் புரிந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கும் அடுத்து நாம் செய்வதற்கும் எத்தனை எத்தனை அற்புதங்கள் இருக்கின்றன? எழுத்து, வாசிப்பு, இசை, சினிமா, நல்ல உரையாடல்கள், பயணங்கள், வேலை, உணவு, யோகா, உடற்பயிற்சி என எவ்வளவோ விஷயங்கள்... அத்தனையும் போதைதான் என்பதை இப்போது உணர்கிறேன்!
''நாம பண்ண சீனுக்கு தியேட்டர்ல ஆடியன்ஸ் கை தட்னாங்கன்னா... அப்ப ஜிவ்வ்வுனு இருக்கும் பாருங்க... அதான் உண்மையிலேயே போதை...'' என்பார் லிங்குசாமி சார். ''உதவி பண்றதே ஒரு போதைதாங்க... யாருக்காவது எதாவது பண்ணிட்டா கிறுகிறுனு சந்தோஷமா இருக்கும். யாராவது வாழ்த்திட்டா பொசுபொசுனு பூத்துக்கும். அதை உணர்ந்துட்டா நாலு பேருக்கு எதாவது பண்ணிக்கிட்டே கெடப்போம்ங்க!'' எனத் தோழர் அருளானந்தம் ஒருமுறை சொன்னபோது, அடடா... இதெல்லாம்தானே போதை என உணர்ந்தேன். ''த்தா... வலியை மறக்கக் குடிக்கிறியா... உங்கம்மாவுக்கும் எங்கம்மாவுக்கும் இல்லாத வலியாடா...'' என எப்போதோ சரோ சிம்பிளாகச் சொல்லிவிட்டுப் போனது, இப்போதும் எக்கோ அடிக்கிறது. எங்கோ, யாருக்கோ நாம் உருவாக்கும் கண்ணீரும் புன்னகையும்கூடப் போதைதான்.
சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டு 48 நாட்களும் அதிகாலையில் எழுந்து, குளித்து, சாமி கும்பிட்டு ஒரு வாழ்க்கை வாழ்வோமே... அது அத்தனை போதையானது. இருமுடி கட்டிக்கொண்டு பரதேசியாகக் கிளம்பும் பயணம்... ஆன்மிகம் தவிர்த்தும் ஓர் அற்புதம். இந்த மனசையும் மனிதர்களையும் இருமுடியாகக் கட்டிக்கொண்டு ஆயுசுக்கும் பரதேசியாக வாழ்வதே ஆகச் சிறந்த போதைதான்! ''சுரண்டல் அரசே சுரண்டல் அரசே... அந்நிய சந்தையில் மக்களை விற்காதே...'' எனத் தகிக்கும் தார் சாலையில் கோஷம் போட்டுத் திரும்பும்போது வரும் ஒரு சின்ன நிறைவும், போதைதான்.
ரயில் பயணத்தில் எதிரே இருப்பவரின் பையில் சட்டென்று கிடைத்துவிடும் அசோகமித்திரன் புத்தகம் எல்லா வெற்றிடங்களையும் நிரப்பிவிடும். அதுவும் இல்லை என்றால், ஜன்னல் மரங்கள். ஆரஞ்சு வானம். நிலையத்தில் கடக்கும் மனித முகங்கள். பாடல்கள் கரையும் குரல்கள். இந்த எழுத்தும் கலையும் மனிதர்களும் எனக்குள் நிறைந்துகொண்டே இருக்கிறார்கள்... என் எல்லா வெற்றிடங்களையும் முழுமையாக்கிக்கொண்டே!
மதுவும் புகையும் தரும் போதை... கொண்டாட்டமும் விளையாட்டுமாகக் கடந்துபோகிறது... சட்டென்று ஒரு நிறுத்தத்தில் நிகழும் மரணம்தான் எவ்வளவு கொடூரமானது? நெசப்பாக்கத்தின் ஒண்டுக்குடித்தன வீட்டின் பாத்ரூமில் இறந்துகிடந்த தமிழ்மணி அண்ணனை இரண்டு நாட்களுக்குப் பிறகு கண்டெடுத்த கணம் எத்தனை பயங்கரமானது? 'கிருஷ்ணா எக்ஸ்பயர்டு’ என ஒரு குறுந்தகவல் என் மொபைலில் ஒளிர்ந்த நொடி எத்தனை கோரமானது? தஞ்சாவூர் பெரியாஸ்பத்திரியில் மூச்சற்ற அப்பாவின் முகம் பார்த்து, 'தங்கமே...’ என அம்மா அழ ஆரம்பித்த கணம் எவ்வளவு கனமானது? கண் முன்னே வாழ வேண்டிய உயிர்களை வாரிக்கொண்டுபோன காலம்... உயிர்களின் உன்னதத்தை உணர்த்திக்கொண்டே இருக்கிறது!
கெட்ட பழக்கங்களை விடுவதே ஒரு போதை தான். ''அவரு இப்போ தண்ணி எல்லாம் அடிக்கறது இல்ல...'' ''ஆமாமா... மொகத்தைப் பாத்தாலே தெரியுதே... இப்பத்தான் தெளிவா இருக்கு...'' என யாராவது பேசும்போது மனசு உற்சாகமாகும். ''நான் அப்போலாம் அப்பேர்ப்பட்ட பொம்பளப் பொறுக்கிங்க... 'எம் பொண்டாட்டிய விட்டுர்றா’னு ஒரு ஆளு நடுரோட்ல என் கால்ல விழுந்தான். எனக்கு எல்லாம் மன்னிப்பே கெடையாது... எங்கம்மா அவ்ளோ அழுதுருக்கு, என்னை நெனைச்சு. பாலகுமாரன் சார் எழுத்தைப் படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் எல்லாத்தையும் விட்டு வெளில வந்தேங்க... ஒருத்தி கூப்பிட்டானு அப்பிடி ஒருநாள் போனேன். தெரு முக்கு திரும்பினப்போ மனசு வரட்டுனு புடிச்சு நிறுத்துச்சு. சைக்கிளைத் திருப்பிக்கிட்டு ரெண்டு கிலோ மீட்டர் தூரம் மூச்சிரைக்க வந்து நின்னு பாத்தேன்... அப்பிடியே காலரைத் தூக்கிவிட்டு உள்ள ஒரு பெருமை பொங்கிட்டு வந்துச்சு... நீ கரெக்ட்ரானு ஒரு பெரும... இன்னைக்கு வரைக்கும் ஒய்ஃப் மட்டுந்தான்... உண்மையா இருக்கேங்க!'' என்றார் ஒரு நண்பர் டீக்கடையில் வைத்து.
கெட்ட பழக்கங்கள் என்றால் லாகிரி வஸ்துக்கள்தானா? சொல்லப்போனால், கொண்டாட்டங்களைத் தாண்டி குடும்பங்களையும் மனசையும் கெடுக்கும்போதுதான் அவை அப்படி ஆகின்றன. சுரண்டலும், திருட்டும், பொய்யும், வன்மமும், வஞ்சமும் எவ்வளவு பெரிய கெட்ட பழக்கங்கள்? காலையில் எழுந்ததும் பவர் ஸ்டார் கைதும் 'மன்மோகன் சிங் அறிக்கையும்தான் கண்ணில் படுகின்றன. கீழ் ஃப்ளாட் சண்டையும் எஃப்.எம். கடிகளும் காதில் கேட்கின்றன. யார் யாரிடமோ எப்படியும் சில, பல பொய்கள் சொல்லத்தான் வேண்டி இருக்கிறது. காந்தி சொன்ன குரங்குகளாக வாழ்கிற வாழ்க்கை எல்லோருக்குமா வாய்க்கிறது?
வழி எங்கும் கெட்டதுகளை நம் ஐம்புலன்களிலும் ஏற்றிக்கொண்டே இருக்கிறது இந்தச் சமூகம். கூட்டம் பிதுங்கும் பேருந்தில் ஒரு திருநங்கையை நாலைந்து பையன்கள் ஆபாசமாகக் கேலி செய்து கொண்டு இருக்கிறார்கள். ''போன் நம்பர் கேள்ரா மாமு...'' என அசிங்கமாகச் சைகை செய்கிறார்கள். அங்கே எதுவும் பேசாமல் நிற்பதும் கெட்ட பழக்கம்தான். கந்து வட்டிக்குக் காசு வாங்கியவனை அபார்ட்மென்ட் வாசலில் விட்டு நாலைந்து பேர் வெளுத்துக் கொண்டு இருக்க, போலீஸுக்குகூட போன் பண்ணாமல் டி.வி. சவுண்டைக் கூட்டுவதும் கெட்ட பழக்கம்தான். மிக நுணுக்கமாக நுழைந்து சாதி பார்ப்பதும், ஆள் அம்பு பார்த்து அன்பு வைப்பதும், எளியவர்களிடம் அரசியல் செய்வதும், அடுத்தவன் உழைப்பில் தனக்கான நாற்காலியைத் தயாரித்துக்கொள்வதும், விருப்பமில்லா இதயத்தை எடுத்துக்கொள்வதும், சிரிக்கச் சிரிக்க வதந்தியும் சீரியஸுமாகப் பொரணி சொல்வதும்... எல்லாம் எவ்வளவு பெரிய கெட்ட பழக்கங்கள்? புகை, குடி மாதிரி மனதின் எல்லா அழுக்குகளையும் தூக்கி தூர வீசி விடுகிற ஒரு தருணம் ஆயுசுக்குள் வந்து விடுமா?
எதற்காக இந்தப் போதைப் பழக்கங்கள்? எல்லாவற்றையும் மறக்க என்கிறது எல்லாக் குரலும். எல்லாவற்றையும் மறந்துவிட முடியுமா? எதையுமே மறக்க முடி யாது... கடக்கத்தான் முடியும் என்பதை உணர்ந்துகொள்ளவே இத்தனைக் காலம் ஆயிற்று. நினைத்துக்கொள்வதும் ஒதுக்கிக் கொள்வதுமே நிதர்சனம் எனப் புரிகிற போது எந்தப் போதையும் தேவையில்லை. கெடையில் ஆடு திருடி, வீட்டிலேயே சாரா யம் காய்ச்சி, ஆத்தாவைத் துன்பித்து, கூத்தியாள் வைத்து வாழ்நாளெல்லாம் கொண்டாட்டமாக வாழ்ந்தார் ஜம்பு தாத்தா. ஒரு சின்ன வயல் பூச்சி கடித்து, குஷ்டம் வந்து, கடைசியில் யாரும் தீண்டா மல் தனியே குடிசை போட்டுக்கிடந்தார். சாப்பாடு கொடுக்கப் போகும்போது, ''மறக்க முடியலைய்யா... ஒண்ணுத்தையும் மறக்க முடியலைய்யா...'' என அரசு தாத்தாவிடம் அவர் புலம்பிக்கிடந்ததை மறக்க முடியுமா?
அன்றைக்குப் பேசிக்கொண்டு இருக்கும்போது நண்பர் சுரேஷ் சந்திரா சொன்னார், ''சின்ன வயசுல எங்க அப்பாவோட போகும்போது ஊட்டி ரயில்வே ஸ்டேஷன்ல தினமும் பார்ப்பேன்... ஸ்டேஷன் கட்டைல உக்காந்து ஒருத்தர் படிச்சுட்டே இருப்பார். மொத்த மொத்தமா புத்தகம்... இலக்கியப் புத்தகங்களா படிச்சுட்டு இருப்பார். இல்லைன்னா அங்கே வர்ற பயணிகளுக்கு பொட்டி தூக்கறது, தண்ணி பாட்டில் கொடுக்கறது, குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுக்கறதுனு எதாவது பண்ணிட்டே இருப்பார். அவர்ட்ட பேசிரணும்னு எனக்கு ஆசையா இருக்கும். பல வருஷம் கழிச்சு, ஊருக்குப் போனப்போ அதே ஸ்டேஷன்ல அவரைப் பார்த்தேன். இப்ப வும் அவர் அப்படியே உக்காந்து ஒரு புத்தகத்தைப் படிச்சுட்டு இருந்தார். நான் ஃபர்ஸ்ட் டைம் அவர்ட்ட போய் பேசி னேன்... எதோ ஒண்ணு கேட்டேன். அவர் சட்டுனு 'ப்ப்ர்ர்ர்... ப்ப்யான்... ப்ப்பா...’னு சைகைலயே பேச ஆரம்பிச்சுட்டார். அப்ப தான் அவருக்குப் பேச முடியாதுங்கிறது தெரியும். சட்டுனு மனசு கனத்துப் போச்சு!''
அந்த ரயில் நிலைய ஆசாமி எனக்குள் சித்திரமாகிவிட்டார். அவரைப் போலத் தான் இருக்க வேண்டும். வெளிப்படுத்திக் கொள்வது அல்ல... செயல்கள்தான் நல்ல பழக்கம் இல்லையா?
- போட்டு வாங்குவோம்...
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ "வட்டி வரலியே தம்பி...''
நேற்று டீக்கடையில் கந்துவட்டிக்காரரைப் பார்த்த பிறகுதான் மாசம் பிறந்ததே தெரிந்தது. எப்போதோ வாங்கிய அவசரக் கடனுக்கு இன்னமும் வட்டி கட்டித் தீர்ந்தபாடில்லை. ''அசலக் கொண்டுவந்து இந்தாளு மூஞ்சில எறியணும்ரா...'' என ஒவ்வொரு முறையும் கடுப்பாகும். ஆனாலும், குட்டி போட்ட வட்டிதான் குரைத்துக் குரைத்துத் துரத்தும் ஒவ்வொரு மாசமும். இப்போது நெருக்கி முடித்துவிட்டேன்.
இந்த வாழ்க்கையே அந்த கந்துவட்டிக்காரர் மாதிரிதான் வாசலில் வந்து வந்து நிற்கிறது ஒவ்வொரு நாளும். வருத்தமும் பிரியமுமாக வாங்கிய அசலுக்கெல்லாம் வட்டி கட்டித் தீர்த்துவிட முடியுமா என்ன..? ''முன்ன மூணும் பயகளாவே போயிருச்சு... நாலாவதா நீயும் பயதான்னு தெரிஞ்சதும் கலைக்கறதுக்கு மருந்து சாப்பிட்டேன். லேட்டாகிப் போச்சா... மருந்து வேல செய்யாம நீ வந்து பொறந்துட்ட... சவலப் புள்ள... ஒரு வாரம் பொழைப்பியா இருப்பியானு புரியாம பொட்டிக்குள்ள வெச்சு ஒரு நர்சம்மாதான் காத்துச்சு...'' எனக் கலங்கும் அம்மா. ஏதோ ஒரு பிள்ளையை இன்குபேட்டரில் பாதுகாத்து உயிர் மீட்ட அந்த செவிலித் தாய் இப்போது எங்கிருப்பாள்? கோடி உயிர்களைக் காத்தெடுத்த எத்தனையோ முகம் தெரியா தாய்கள் எங்கெங்கோ இருக்கிறார்கள். தொப்புள் கொடியின் ஈரத்தைச் சாகும் வரைக்கும் கண்களில் வைத்துக்கொண்ட தாய்கள்.
காந்தியின் முதல் மகன் ஹரி லால்... காந்திக்கு நேரெதிர் பழக்கவழக்கங்களுடன் வாழ்ந்தவர். காந்தியின் தீவிர விமர்சகர். குடிகாரர். ஒருமுறை காந்தி, கஸ்தூரிபா அம்மையாருடன் ரயிலில் வந்துகொண்டிருக்கிறார். ரயில்வே நிலையத்தில் ஆயிரமாயிரம் ஜனங்கள் முண்டியடித்து 'வாழ்க’ கோஷம் போடுகிறார்கள். மகாத்மாவை ஒரு முறை பார்ப்பதற்கு முண்டியடிக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் குடித்துவிட்டு நிற்கிறார் ஹரி லால். கூட்டத்தில் திமிறி ரயிலில் நுழைகிறார். அவரைப் பார்த்ததும், ''என்ன மகனே இது..?'' எனக் கலங்குகிறார் கஸ்தூரிபா. காந்தி மெலிதாகப் புன்னகைத்தபடி, ''காட் ப்ளெஸ் யூ சன்...'' என்கிறார். அப்பாவை உற்றுப் பார்க்கிற ஹரி லால், ''இதெல்லாம் எங்கம்மா உனக்குப் போட்ட பிச்சை...'' எனக் கத்திவிட்டு இறங்கிப் போய்விடுகிறார். இந்தக் காட்சியைப் படித்தபோது எனக்கு விலுக்கென்றது. உண்மையில் நமது புகழ், புனிதம், ஜீவிதம் எல்லாமே அம்மாக்கள் போடுகிற பிச்சைதானே?

''யப்பா... எனக்கு ஒண்ணும் வேணாம். ஒங்கம்மாவுக்கு மாசம் ஒரு ஆயிரம் அனுப்பு. தேவைக்கு இல்ல... மவன் நல்லாருக்கான்னு அதுக்கு ஒரு சந்தோஷம் வரும்ல... அதுக்கு...'' என்ற அப்பா வெட்டாத்தங்கரையில் எரிந்து உதிர்ந்தபோது பெருங் கடங்காரனாக நின்றிருந்தேன். செல்லப் பிராணியைப் போலத் தலை தடவும் அந்தக் காய்த்த கைகளுக்கான வட்டியைக் கட்டிவிட முடியுமா என்ன?
இயேசு அவதரிக்கிற கிறிஸ்துமஸ் இரவில், ஓவல் மிட்டாய்கள் இறுக்கிய கைகளைக் கட்டிக்கொண்டு ''ஆல்வேஸ் ஐம் வித் யூ...'' என்ற ரோஸி சிஸ்டருக்கான நன்றியைக் காட்டிவிட முடியுமா காலத்துக்கும்? எப்போதோ தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒன்றரை மணிக்கு காற்றில் ஊசி நூல் கோத்தபடி ஊமைச் செய்திகள் வாசித்த ஒரு பெண்ணின் முகத்தை இப்போதும் மறக்கவே முடியவில்லை... ஏனென்றும் தெரியவில்லை. பெரியகோவில் வாசலில் விழியோரம் நீர் கசிந்தபடி தும்பிக்கையைத் தூக்கித் தூக்கி இறக்கியபடி நின்ற ஒரு யானை, ராமநாதபுரம் வீட்டெதிரே ஒரு விடியலில் ஈக்கள் மொய்க்கச் செத்துக்கிடந்த மயில், அபிவிருத்தீஸ்வரம் வீடெங்கும் நிறைந்துகிடந்த கோழிக் குஞ்சுகள், பத்தாயத்தில் துளிர்த்துக்கிடந்த பூனைக்குட்டிகள், செங்காமட்டைக் கலரில் இதயம் மாதிரி உயிர் துடித்த எலிக் குஞ்சுகள், ஒட்டக்குடி தாத்தா வீட்டில் பொத்தென்று மண்ணில் விழுந்து கொள்ளைநோயில் செத்த பழுப்பு கலர் குதிரை, ராஜாங்கம் வீட்டெதிரே பார வண்டிக் குக் கீழே கண்டெடுத்த நாய்க்குட்டி... என் பால்யத்தில் ஓடவிட்ட ஈர நதியில் குளித்துக் கரையேற முடிய வில்லை இப்போதும்.
நவம்பர் 27-ஐத் துவக்கிவைத்த சங்கருக்கு... திலீபனுக்கு... இசைப்பிரியாவுக்கு.... என் இனத்துக்காக மனிதத்துக்காக என் கண்ணெதிரே எரிந்து வாழும் நண்பன் முத்துக்குமாருக்கு... தங்கை செங்கொடிக்கு என்ன செய்யப்போகிறேன் நான்..? அகதி என்ற சொல்லோடு, நியாயமற்ற பிரிவையும் கண்ணீரையும் ரத்தத்தையும் சுமந்து திரியும் கால்களுக்கு சிறு நிழலை விரித்துவிட முடியுமா என்னால்?
கேசவனின் மாமாவைச் சேர்க்கப் போயிருந்தபோது பைத்தியக்கார ஆஸ்பத்திரி வராந்தாவில் கையெல்லாம் கிழித்துவிட்ட காயங்களோடு நின்றபடி, ''அந்தாளு வெவரமான மனுஷன்... பைத்தியமாகிட்டாரு. என்னாலதான் ஆக முடியல... இன்னிக்கு ஆயிரலாம், நாளைக்கு ஆயிரலாம்னு பாக்கறேன்... நடக்க மாட்டுதே... பொம்பளைகளுக்குத்தான் எல்லாமே ஞாபகத்துல இருந்து தொலைக்குது...'' என்ற பெண்மணி என் தூக்கத்தை எத்தனை நாள் கெடுத்தாள் தெரியுமா? பைத்தியமாகிவிடுவோமோ எனப் பயந்துகிடந்த என்றோ ஒரு நாளில், என்னை ஆற்றுப்படுத்திய ஒரு பாலியல் தொழிலாளிக்கானதும் தீர்க்கவே முடியாத கடன்தான். ''கொரடாச்சேரில போட்டோ ஸ்டுடியோ ஆரம்பிக்கப்போறேன்... கடைக்கு ஒரு நல்ல பேரா சொல்லேன்...'' என்ற ரவியண்ணனை மறுநாள் பார்த்தபோது நிறைய பெயர்களைச் சொன்னோம். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ''ராத்திரி நா ஒண்ணு நெனைச்சேன்... 'விடியல் புகைப்பட நிலையம்’ எப்படி இருக்கும்..?'' எனச் சிரித்தார் ரவி அண்ணன். அவ்வளவுதான் சொன்னார். விளக்கமெல்லாம் இல்லை. அந்த வார்த்தைகள் எனக்கு ஏற்படுத்திய மலர்ச்சியைச் சொல்லவே முடியாது. ஒவ்வொரு முறையும் அண்ணன்கள்தான் என்னைத் தங்கள் வார்த்தைகளால், செயல்களால், நம்பிக்கைகளால் தொட்டுத் தூக்கியிருக்கிறார்கள்.
''உணர்வதிலும் உணர்த்துவதிலும்தாண்டா இருக்கு வாழ்க்கை...'' என்ற கண்ணன் சாரின் வார்த்தைகள்தான் 'வட்டியும் முதலுமாக’ என்னை எப்போதும் தொடர்கிறது.
முந்தா நாள் ஒரு சின்னப் பெண் என்னைப் பார்க்க வந்தாள். நாலைந்து டைரிகளை என்னிடம் தந்து, ''அண்ணா... ஒரு உதவி... இந்த டைரிலாம் நான் ஒருத்தர லவ் பண்ணிட்டு இருக்கும்போது எழுதினது. இப்போ அது இல்லை. எனக்கு ஜூன்ல கல்யாணம் பேசியாச்சு. இந்த டைரியை எல்லாம் வீட்ல வெச்சுக்க முடியல. போற வீட்டுக்கும் கொண்டுபோக முடியாது. எங்கயாவது தூக்கிப் போடவும் மனசு இல்ல... உங்கள்ட்ட இருக்கட்டும்னுதான் குடுக்குறேன். என்னவோ இது உங்கள்ட்ட இருக்கணும்னு தோணுது... ப்ளீஸ்ணா...'' என்றபடி என் டேபிளில் வைத்துவிட்டுப் போய்விட்டாள். எடுத்துப் புரட்டிப் பார்த்தால் மொக்கையான ஃபீலிங்ஸ்தான். ஆனாலும், அது அவளுக்குக் காவியம்தான் இல்லையா? எடுத்துப் போகவும் முடியாமல் எரிக்கவும் மனசில்லாமல் இப்படி எத்தனையோ டைரிகள் இருக்கின்றன ஒவ்வொருவர் மனங்களிலும். திருப்பித் தந்து தீர்க்க முடியாத வட்டியும் முதலும் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றன.
தினம் தினம் நாம் சந்திக்கும் ஒவ்வோர் உயிரும் நம்மைக் கொடையாளியாகவும் கடனாளியாகவும் ஆக்கிக்கொண்டே இருக்கின்றன. அந்தப் பெண் என் டேபிளில் வைத்துவிட்டுப் போன டைரிகள் மாதிரிதான் இந்த 'வட்டியும் முதலும்’ தொடரும்!
எங்கோ ஒரு கிராமத்து நூலகத்தில் விகடனை அதிசயம்போல் வாசித்த சிறுவன் நான். ஒரு நாள் அதே விகடனில் நிருபராக வேலை பார்க்கும் வாய்ப்பு வந்தது. சமூகத்தின் எல்லா அடுக்குகளுக்குள்ளும் போய் வருகிற வாய்ப்பு அது. சாலையோரம் தின்று உறங்கும் குடும்பத்தில் இருந்து அசெம்ப்ளி அமைச்சர் ரூம் வரை, குலசேகரபட்டினம் திருவிழாவில் இருந்து ஃபிலிம் ஃபெஸ்டிவல் வரை நிறைய இடங்கள்... முகங்கள்... பயணங்கள் என எனக்கு உலகின் புதிய ஜன்னல் களைத் திறந்துவிட்டது அந்த வாய்ப்புதான். 15 வயதில் வீட்டை விட்டு வந்துவிட்ட எனக்கு, இப்போது வரை ஒரு நாடோடி வாழ்க்கைதான். பொருளுக்கும் பிழைப்புக்கும் ஊரைவிட்டுப் புலம் பெயரும் யாவரும் நாடோடிகள்தான்... அகதி கள்தான். ஆனாலும், எனக்கு இந்த நாடோடி வாழ்க்கைதான் விருப்பமாக இருந்தது.
விவரம் தெரிந்த பிறகான நாளிலிருந்து தொடர்ந்து அதிகாரத்துக்கும் பணத்துக்கும் எதிரான மனநிலையிலேயே வாழ்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என நான் வளர்ந்த இடங்களெல்லாம் எனக்கு எளியவர் களின் அன்பையும் பசியையும்விட எதுவும் பெரிதில்லை என்பதைத்தான் சொல்லித் தந்தது.
''பசித்த கண்களை ஒரு நொடியில் அறிந்துகொள்கிறவன்தான் உண்மையான படைப்பாளி...'' என்ற சாரு மஜூம்தாரின் வார்த்தைகளை நோக்கித்தான் நான் படைக்க ஆரம்பித்தேன். எப்போதும் எந்த நாற்காலியையும் நோக்கி ஒரு படைப்பாளன் நடக்க முடியாது என்பதையும் மனதார உணர்ந்திருந்தேன். ஒவ்வொரு மனித மனமும் ஒரு மகா சமுத்திரம் என்பதை உணரும் தருணம் ஒவ்வொருவரும் படைப்பாளிதான். 'ஒரு கணம் கண் மூடினால் ஒரு கோடி மின்னல் மின்ன வேண்டும்’ என்ற பாரதியாக ஒரு கணம் மாறிவிடத் தவிக்கும் யாரும் கவிஞன்தான். சக மனிதர்களின் கண்ணீரையும் வியர்வையையும் உணர்ந்து எங்கோ எப்படியோ வெளிப்படுத்தும் அத்தனை பேரும் கிரியேட்டர்கள்தான்.
அன்றைக்கு அயோத்தியா மண்டபத்தில் உட்கார்ந்து விழிகளற்ற மூதாட்டி ஒருத்தி பிசிறு தட்டிய குரலில், 'எங்கும் நிறைந்திருக்கும் பரப் பிரம்மம்’ எனப் பாடிக்கொண்டிருந்தாள். அவளைவிடவும் பெரிய படைப்பாளி வேறு யார்? சாக்கடைக் குழிக்குள் இருந்து வெளியே வந்து உட்கார்ந்தபடி, ''அமுத மழையில் எந்தன் கவிதை நனைகிறது நிலவே கொஞ்சம் குடை பிடி...'' என ரசித்துப் பாடும் ஒருவனிடம் ராகமாவது சுதியாவது... அவன் அப்படி உட்கார்ந்து பாடியதே போதுமே!
நானும் அப்படித்தான் 'வட்டியும் முதலும்’ எழுத வந்தேன். சக மனிதர்களைக் கொஞ்சம் ஆழ்ந்து பார்ப்பதைத் தவிர, எனக்கு என்ன தெரியும்? ஏகப்பட்ட ஊதாரித்தனங்களோடு, பொறுப்பின்மையோடு, புத்தகங்கள் வாசிப்பதும், சினிமா பார்ப்பதும், அரசியல் பேசுவதையும் தவிர, உருப்படியாக எதையும் செய்யாதவன். அன்பைப் புறந்தள்ளியவன். சிலருக்குத் துரோகித்தவன். முறைப்படுத்தப்படாதவன். அறத்துக்காகவும் அன்புக்காகவும் உண்மையாகக் குரலெழுப்பாதவன். கடவுள், மனிதன், அரசியல் என எல்லாவற்றிலும் குழப்பம் கொண்டிருந்தவன். நம்பிய இலக்குகளை அடைய வழி தெரியாமல், கூச்சமும் தயக்கமுமாக அலைந்து திரிந்தவன். உறவுகளைப் பேணத் தெரியாதவன். இவ்வளவு சுமைகளோடும் இருந்தவன் தான் நான். இப்போது எந்தச் சுமையும் இல்லை. ஒவ்வொரு லக்கேஜாகக் கழற்றிவிட்டுவிட்டேன். பொறுப்பு உணர்ச்சி என்பது மானுடத்துக்கானது என்பதை உணரும்போது வரும் சந்தோஷத்தை அனுபவித்து விட்டேன். அன்பைக் கொண்டாடக் கற்றுக்கொண்டேன்... அதோடு பிரிவைப் புன்னகையாக்கவும்!
அறத்துக்காகவும் எளியவர்களின் அரசியலுக்காகவும் முடிந்த வரை செயல்படுவதில் உறுதியாக இருக்கிறேன். இலக்கை அடைவதில் புதிய நம்பிக்கைகளையும் பிடிவாதத்தையும் அடைந்திருக்கிறேன். எழுத்து, சினிமா, அரசியல் என எல்லாவற்றுக்குமான பயணங்களில் உங்களை அடைவதே என் நிரந்தர சந்தோஷம் என்பதை அறிந்துகொண்டேன். தெளிந்த ஊற்றைப் போல இப்போது இருக்கிறது மனம். ஒரு படைப்பு வாசிக்கிறவர்களை மட்டுமல்ல... அதைப் படைத்தவனையும் மாற்றிவிடும் என்பது நான் கண்டடைந்த உண்மை. 'வட்டியும் முதலும்’ மூலம் நீங்கள் என்னையே எனக்குக் கற்றுத்தந்துவிட்டீர்கள். திருப்பித் தந்துவிட்டீர்கள். 'உன்னில் இருந்தே தொடங்குகிறது உலகம்’ இல்லையா..? அப்படித்தான் என்னிலிருந்து இறங்கி, இந்த உலகத்தை அடைந்திருக்கிறேன் நான். எனக்கான உலகத்தை நீங்களும் உங்க ளுக்கான உலகத்தை நானும், ஏதோ ஓர் புள்ளியில் வந்தடைந்துவிடுவோம். அந்த தெருவோரக் கோயிலில் நீங்கள் வைத்த பிரார்த்தனையில் நானும், நான் வைத்த பிரார்த்தனையில் நீங்களும் இருக்கிறீர்கள். தேநீர்க் கடையில் வழியும் பாடலுக்கு என் கீர்த்தனாவை நானும், உங்கள் கீர்த்தனாவை நீங்களும் நினைத்துக்கொள்கிறோம். போராட் டங்களில் கோஷமிட்டபடி நான் நிற்கிறேன்... நீங்கள் கடந்து போகிறீர்கள். நீங்கள் நிற்கும்போது, நான் கடந்து போகிறேன். நாம் சேர்ந்து போராடுவோம் என்ற நம்பிக்கை இருவருக்குமானது!
இந்தத் தொடர் எனக்கு ஏராளமான நட்பையும் பிரியங்களையும் அள்ளித் தந்திருக்கிறது. எல்லாத் திசைகளில் இருந்தும் கடல் கடந்தும் எத்தனை எத்தனை முகங்கள்... குரல்கள்... சிநேகங்கள். ஒவ்வொரு வாரமும் தங்களை ஏதோ ஒரு விதத்தில் இந்தத் தொடர் மீட்டெடுத்ததாக யார் யாரோ சொல்லும்போதுதான், நான் அர்த்தப்பட்டேன். எவ்வளவோ கொண்டாட்டங்களும், பொழுதுபோக்குகளும், வேலைகளும் இறைந்துகிடக்கும்போது... இந்த எளிய எழுத்து உங்களைப் பாதித்தது சந்தோஷம். சக மனிதர்களுக்கான கவனிப்பை, ஈரத்தை, போராட்டத்தை உங்களுக்குள் இந்த எழுத்து கொஞ்சம் விதைத்திருந்தால், அது போதும்.
இந்த வாரத்துடன் 'வட்டியும் முதலும்’ தற்காலிகமாக நிறைவுறுகிறது. விடைபெறுதல் என்றெல்லாம் ஒன்றில்லை. பள்ளிக்கூடத்தின் கடைசி நாளில், இங்க் தெளித்த வெள்ளைச் சட்டையுடன், கோவக்கா படர்ந்த வேலிப்படலோரம் நின்ற கணேசன் விடைபெற்றுவிட்டானா என்ன? கல்யாணமாகிப் புகுந்த வீட்டுக்குக் கிளம்பும்போது, உள்ளே ஓடி வந்து கல்லூரி குரூப் போட்டோவை எடுத்துக்கொண்டு கார் ஏறிய தங்கச்சி விடைபெற்றுவிட்டாளா என்ன..? மரணத்துக்குப் பிறகும் சுடர்ந்துகொண்டிருந்த சே வின் விழிகள் மூடிவிட்டனவா என்ன? எத்தனை மைல்கள் கடந்து வந்துவிட்ட பிறகும், எத்தனை காலம் முடிந்துவிட்ட பிறகும், சில சொற்கள், தொடுதல்கள், நினைவுகளில் இருந்து விடைபெற முடியுமா என்ன? நாம் அனுதினமும் சந்திப்போம். எல்லோருக்குமான பிரார்த்தனைகளில்... எண்ணங்களில்... செயல்களில்!
இப்போது எனது முதல் திரைப்படத்துக்கான வேலைகளில் இருக்கிறேன். ஒரு வருடத்துக்கு முன்பு இயக்குநர் ஷங்கர் சாரிடம் ஒரு கதை சொன்னேன். ''இல்ல ராஜுமுருகன்... 'வட்டியும் முதலும்’ மாதிரி ஒரு கதையைத்தான் உங்ககிட்ட எக்ஸ்பெக்ட் பண்றேன். காமெடியும் எமோஷனலுமா ஒரு லைஃப் இருக்கு அதுல. அப்படித்தான் உங்க ஃபர்ஸ்ட் படம் இருக்கணும்'' என்றார். ஒரு மாதம் கழித்து இன்னொரு கதை சொன்னேன். அது ஏழு வருடங்களாக எனக்குள் இருந்த விஷயம். ''சூப்பர்... இதான் உங்க படம்...'' என்றார். அப்படித்தான் அந்தக் கதை உருவானது. விஜய் டி.வி. மகேந்திரன் சார் அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைத்துப்போனார். படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. அதற்கான படப்பிடிப்பு வேலைகளில்தான் இப்போது இருக்கிறேன். அதுவும் நமக்கான உலகத்தை மீட்டெடுக்கும் படமாக இருக்கும் என நம்புகிறேன். படத்தின் பெயர்... 'குக்கூ.’
- நிறைந்தது
"வட்டி வரலியே தம்பி...''
அன்போடு
மோரு
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
|
Posted: 17 Mar 2014 07:01 PM PDT
ராஜூ முருகன் விகடனில் எழுதிய தொடரை “வட்டியும் முதலும்”
என்ற பெயரில் புத்தமாக வெளியிட்டு இருக்கிறார்கள் (முதற் பதிப்பு 2012).
நான் வழக்கம் போல தாமதமாகப் படித்தேன். இவர் எழுதி இயக்கிய “குக்கூ”
திரைப்படம் வெளியாகும் முன்பு இந்தப் புத்தகத்தின் விமர்சனம் எழுதி விட
வேண்டும் என்று நினைத்து இருந்தேன், எழுதி விட்டேன் நான் விகடனில் இதைப் படித்ததில்லை, தற்போது புத்தகமாகத்தான் படிக்கிறேன். நண்பன் பாபு இதை எனக்கு படிக்கக் கொடுத்த போது புத்தகத் தலைப்பை பார்த்து நான் நினைத்த பொருளடக்கம் வேறு. அதே போல அட்டையையும் தலைப்பையும் புத்தகத்தின் அளவையும் பார்த்து கம்யூனிசப் புத்தகம் என்று நினைத்து விட்டேன். இந்தப் புத்தகம் 25% படித்தவுடனே எனக்கு திகிலாகி விட்டது. ஒரு மனுசன் இத்தனை சம்பவங்களை அதுவும் நபர்களின் பெயருடன் நினைவில் வைத்துக்கொள்ள முடியுமா?! என்று. சமீப வருடங்களில் என்னுடைய நினைவுத் திறன் குறைந்து வருவதாக ஒரு உணர்வு. அதிகம் தொடர்பில் இல்லாதவர்களின் பெயர்கள் நினைவில் இருப்பதில்லை. ஏனென்றால் தற்போது எதாக இருந்தாலும் மொபைல், இணையம் என்று தேடுவதால் என்று நினைக்கிறேன். இவர் கூறியதில் சில புனைவாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் இவ்வளவை நினைவு வைத்துக் கூறுவது ஆச்சர்யம் அளிக்கிறது. இதைப் படிக்கும் போது படிப்பவர்களுக்கு தங்களின் சிறு வயது நினைவுகள் திரும்ப வந்தால் ஆச்சரியமில்லை. ஏனென்றால் இதில் கூறப்படாத சம்பவங்களே இல்லை எனும் அளவிற்கு அத்தனை கொட்டிக் கிடக்கிறது. வாழ்க்கையில் ரொம்ப சிரமப்பட்டு வந்து இருப்பதால், இவரின் அனுபவங்களுக்கு குறைச்சல் இல்லை. மொத்தப் புத்தகமும் ஒரு நடுத்தர நபரின் எண்ணங்களை பிரதிபலிப்பதால், சில நேரங்களில் விக்ரமன் படம் பார்ப்பது போல இருக்கிறது. “லாலா லாலா” மட்டும் தான் இல்லை. சோகம், சிரமம், அடுத்தவர்கள் கஷ்டம் போன்ற விசயங்களை படிப்பதில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு இந்தப் புத்தகம் சலிப்படைய வைக்கலாம் ஆனால், இது போன்றவர்கள் வெகு சில எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் இதில் கூறியுள்ளவற்றை தாண்டி வராமல் இருக்க வாய்ப்புகள் குறைவு. என்னுடைய ஏராளமான சிறு வயது சம்பவங்கள் இதைப் படிக்கும் போது நினைவில் வந்து சென்றது. ராஜூ முருகன் முன்பு கம்யூனிசத்தில் ஆர்வம் கொண்டு இருந்ததால் இதில் அவ்வப்போது கம்யூனிச எண்ணங்களும் வருகின்றன. ஏழைகள் இவ்வளவு சிரமப் படுகிறார்கள் பணக்காரர்கள் இப்படி இருக்கிறார்களே என்ற ஆதங்கம் / கழிவிரக்கம் அவ்வப்போது வெளிப்படுகிறது. ராஜூ முருகன் ஏகப்பட்ட சம்பவங்களை பெயருடன் குறிப்பிட்டு இருக்கிறார். இதைப் படிக்கும் சம்பந்தப்பட்டவர்கள் கோபித்துக் கொள்ளமாட்டார்களா அல்லது தர்மசங்கடமாக உணரமாட்டார்களா?! உறவினர்கள், நண்பர்கள், உடன் பணி புரிந்தவர்கள் என்று அனைவரைப் பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார். எழுத அவருக்கும், படிக்கும் நமக்கும் சுவாரசியமாக இருக்கலாம் ஆனால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதே போல இருக்குமா!! சம்பந்தப்பட்டவர் வேறு மனநிலையில் கூறி இருக்கலாம் ஆனால், நாம் புரிந்து கொண்டது வேறு மாதிரி இருந்து இருக்கலாம். Bloggers தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனை / சம்பந்தப்பட்ட பிரச்சனை / நண்பர்களிடம் பேசியது / பார்த்த விசயங்கள் என்று ஏதாக இருந்தாலும் அதை ஒரு பதிவாக எழுதுவது வழக்கம். இதில் சிலர் தனிப்பட்ட முறையில் நாம் பேசியதைக் கூட பொதுவில் பெயருடன் எழுதி நம்மை தர்மசங்கடப்படுத்தி விடுவார்கள். நண்பர்கள் தனிப்பட்ட முறையில் பேசும் அனைத்தையும் எழுத்தாகக் கொண்டு வர முடியாது, அது அவருடைய ப்ரைவசியை பாதிக்கும் என்றால். எனக்கு இந்த அனுபவம் உள்ளது. ப்ரைவசி வேண்டும் என்று நினைப்பவன் நான். என்னுடைய தளத்தை தொடர்ந்து படிப்பவராக இருந்தால், இதை நீங்கள் கவனித்து இருக்கலாம். எழுத வந்த புதிதில் “கிரி இது போல கூறினார்” என்று நான் தனிப்பட்ட முறையில் பகிர்ந்ததை கூறி விட்டார்கள். மிகவும் தர்மசங்கடம் ஆகி விட்டது. இதை நான் எதிர்பார்க்கவில்லை ஏனென்றால், நான் அது பேச்சு வாக்கில் கூறியது. இது போல ஒன்றிண்டு சம்பவங்கள் எனக்கு நடந்து இருக்கிறது. அனைவரும் இது போல நடந்துகொள்வதில்லை என்றாலும் எதற்கு தேவையில்லாத பிரச்சனை என்று பேசுவதைக் குறைத்து விட்டேன். இதன் காரணமாக எனக்கு Bloggers ல் நண்பர்கள் ரொம்பக் குறைவு. கூறப்படும் விஷயம் சம்பந்தப்பட்டவர் ரசிக்கும்படி இருந்தால் பிரச்சனையே இல்லை ஆனால், அது போல இல்லாமல் “என்னங்க! உங்களைப் பற்றி அவர் “அப்படி” எழுதி இருந்தாரே!” என்று யாராவது கேட்கும்படி நேர்ந்தால், அது தான் தர்மசங்கடம். நான் எழுதும் போது சர்ச்சையான விசயங்களில் பெயர் குறிப்பிட மாட்டேன் அதோடு சில விசயங்கள் சம்பந்தப்பட்டவர் அனுமதி பெற்ற பிறகே எழுதுவேன். எனக்கு இந்தப் புத்தகம் படித்த போது இதெல்லாம் மனதில் வந்து சென்றது. இப்படி இருந்தும் ஒரு சம்பவத்தை “அண்ணா! இதை உங்க Blog ல் எழுதி விடாதீங்க! அப்படியே எழுதுவதாக இருந்தாலும் என் பெயர் குறிப்பிடாமல் எழுதுங்க!” என்று ஒருவர் கூறினார். இதைப் படிக்கும் என் நண்பர்களுக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு இதை ஒரு வாய்ப்பாக நினைத்துக் கூறி விடுகிறேன். நான் உங்கள் அனுமதி இல்லாமல் சம்பவங்களை பெயர் குறிப்பிட்டு எழுத மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். ஏற்கனவே இதைத் தான் பின்பற்றி வருகிறேன் இருந்தாலும், இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று உணருகிறேன். ராஜூ முருகன் எழுத்தில் சென்டிமென்ட்
மட்டுமே டெம்ப்ளேட் ஆக உள்ளது மற்றபடி சரளமாக எழுதி இருக்கிறார். எந்த
இடத்திலும் சலிப்புத் தட்டாமல் விறுவிறுப்பாகச் செல்கிறது. ஒவ்வொன்றுக்கும்
ஏதாவது ஒரு உதாரணம் கூறி ரசிக்க வைக்கிறார். இவர் இது போல கூறுவதை வைத்தே
ட்விட்டரில் #TwitLikeRajuMurugan என்ற Hash Tag இருப்பதாக தம்பி மகேஷ்
கூறக் கேட்டேன் ஈழப் பிரச்சனை, கூடங்குளம் பிரச்சனை போன்றவற்றில் தீவிரமாக இருக்கிறார். எந்த அளவிற்கு என்றால் புத்தகத்தின் அட்டைப் படத்திலேயே ஈழப் பிரச்சனைக்காக தீக்குளித்த “முத்துக்குமார், செங்கொடி” ஓவியங்கள் தான் உள்ளது. ஈழம் சம்பந்தமாக பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார். Image Credit - vayalaan.blogspot.com நிழல் படங்கள் என்றதும் நினைவிற்கு வருகிறது, புத்தகம் முழுவதும் ஏகப்பட்ட ஓவியங்களை ஹாசிப் கான் வரைந்து கொடுத்து இருக்கிறார். ராஜு முருகன் எழுதி இருக்கும் சம்பவத்திற்கு ஏற்ப ஓவியங்கள் இருப்பது ரொம்ப நன்றாக உள்ளது. ஏகப்பட்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இது புத்தகத்திற்கு கூடுதல் அழகைத் தருகிறது. இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் ராஜு முருகன் படத்தோடு ஹாசிப் கான் படமும் போடப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கும் போதே இதில் ஓவியங்களின் பங்கையும் முக்கியத்துவத்தையும் அறியலாம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஏதாவது ஒரு தலைப்பில் எழுதுகிறார், அதில் நான்கு அல்லது ஐந்து சம்பவங்களை குறிப்பிடுகிறார் ஆனால், அது எதுவுமே உறுத்தலாக திணித்தலாக இல்லாமல் இருப்பது தான் இவரது வெற்றி என்று நினைக்கிறேன். நான் நிறையைப் பேர் எழுத்தை கவனித்து இருக்கிறேன். அவர்கள் ஆரம்பிக்கும் போதே தெரிந்து விடும் வேறு எதையோ கூற இதை ஆரம்பிக்கிறார்கள் என்பது. கடைசியில் அவர்கள் கூறியதில் பாதி வேறாகவும் மீதி வேறாகவும் இருக்கும். இது அப்படி இல்லாமல் சொல்ல வந்ததை அப்படியே தெளிந்த நீரோடை போல கூறிக்கொண்டு வருகிறார். நாம் அதில் இருந்து விலகவே முடியாது. உண்மையைக் கூறினால், இவர் எழுத்தில் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். சுவாரசியமான வார்த்தைகளை எப்படி பயன்படுத்துவது? உதாரணங்களை எப்படி நுழைப்பது? என்பது போன்றவற்றை இதில் தெரிந்து கொண்டேன். நான் எழுதும் போது பயன்படுத்த உதவியாக இருக்கும். கொஞ்ச நாள் முன்னாடி கார்த்தி “அண்ணா! சுவாரசியமாக எப்படி எழுதுவது?” என்று கேட்டு இருந்தார். “கார்த்தி! இந்தப் புத்தகம் படித்தால் அதை தெரிந்து கொள்ளலாம்”. Blog எழுதும் அனைவருக்கும் Blog படிக்கும் அனைவருக்கும் இந்தப் புத்தகத்தை நான் பரிந்துரைக்கிறேன். ராஜுமுருகன் திரைத்துறையில்
முயற்சித்துக்கொண்டு இருந்ததால் அது குறித்த சம்பவங்கள் / கனவுகள் பற்றி
நிறையக் கூறி இருக்கிறார். சுவாரசியமாகவும் / பாவமாகவும் கலவையான
உணர்வுகளைத் தருகிறது. திரைத்துறையில் இருப்பவர்கள் “கட் பண்ணா” என்ற
வார்த்தையை அதிகம் கூறுவார்கள் என்று அது குறித்து ஒரு அத்தியாயம்
கூறுகிறார். இங்க “கட் பண்ணா” என்று ஒவ்வொரு சம்பவத்தையும் கூறி அடுத்த
விசயத்திற்குப் போவது பட்டாசாக இருக்கிறது இதில் நான் குறிப்பிட்டுக் கூற ஏகப்பட்ட விசயங்கள் இருக்கிறது ஆனால், எத்தனையைக் குறிப்பிடுவது?! நான் குறிப்பிட ஆரம்பித்தால் இந்தப் புத்தகத்தில் பாதிக்கு மேல் குறிப்பிட வேண்டும். மிகைப் படுத்திக் கூறவில்லை. எத்தனை அனுபவங்கள் / வார்த்தைகள் / சம்பவங்கள் / வரிகள்!! இவ்வளவு சம்பவங்களை ஒரே புத்தகத்தில் நான் இது வரை படித்ததே இல்லை (நான் படித்த புத்தகங்கள் குறைவு). இவர் முன்பு விகடனில் பணி புரிந்து
இருக்கிறார். அப்போது பணியில் இருந்த போது நடந்த சம்பவங்களும் இவர் எழுத்து
நடையும் நம் முகத்தில் புன்னகையை வரவழைக்கத் தவறாது. பத்திரிகைத் துறையில்
இருப்பவர்களின் எழுத்தைப் படித்தாலே மிக சுவாரசியமாக இருக்கும். அதற்கு
இவரும் விதிவிலக்கல்ல. உண்மையில் இவர் எழுத்தைப் பார்த்து கொஞ்சம்!!
பொறாமையாகக் கூட இருந்தது அட்டைப் படத்தையும் தலைப்பையும் இந்தப் புத்தகத்தின் மையக் கருத்திற்கு தகுந்த மாதிரி வடிவமைத்து இருக்க வேண்டும். இவர் ஏற்கனவே இவற்றை விகடனில் எழுதி பிரபலம் ஆனதால் பிரச்சனையில்லை. இல்லை என்றால் இது எந்த வகையான புத்தகம் என்பது தெரியாமல், நான் முதன் முதலில் இந்தப் புத்தகத்தை பார்த்த போது அடைந்ததைப் போல, புதிதாகப் பார்ப்பவர்கள் குழப்பம் அடைவார்கள். புறக்கணிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இந்தப் புத்தகத்தை விகடன் பிரசுரம்
வெளியிட்டுள்ளது. 215 ரூபாய் மதிப்புள்ள இந்தப் புத்தகம் 504 பக்கங்களைக்
கொண்டுள்ளது. எந்த இடமும் வீணாக்கப்படாமல் கொடுத்த பணத்திற்கு [நான் ஓசி,
அப்புறமா விலைக்கு வாங்கி விடுகிறேன் இவ்வளவு எழுத்துத் திறமையையும் அனுபவங்களையும் கொண்ட ராஜு முருகன் எழுதி இயக்கிய “குக்கூ” திரைப்படம் விரைவில் வெளிவரப்போகிறது. எழுத்தில் அசத்திய இவர் திரைத்துறையிலும் சிறப்பாக செய்து இருப்பார் என்று நம்புகிறேன், அதோடு எழுத்தில் இவர் கூறிய சம்பவங்களும் திரைப்படத்தில் இவர் கூறப்போகும் / காட்சியமைக்கும் சம்பவங்களும் எப்படி இருக்கும் என்ற ஆவலைத் தூண்டி இருக்கிறது. எழுத்துத் துறையைப் போலவே திரைத் துறையிலும் பிரகாசிக்க என் அன்பான வாழ்த்துக்கள். |