கிட்டிப் புள்ளு விளையாட்டு தமிழகத்தின் பழமையான ஒரு தமிழர் விளையாட்டுகளில் ஒன்றாகும். பொதுவாக ஆண்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டாகும். மட்டைப்பந்து என்பது தமிழரின் கிட்டிப் புள்ளு வியைளாட்டில் இருந்து தோன்றினது என்பார். [1]
சிறுவர்களிடம்தான் அது மிகவும் பிரபலம். பள்ளி செல்லும் காலங்களில் கிள்டிப் புள்ளு விளையாடும்போது எங்கே புள்ளு கண்ணில் படுமோ என்ற பயமும் இருக்கும். இரு பக்கமும் கூராக ஒரு சிறு குழியின்மேல் கிடைமட்டமாக இருக்கும் புள்ளை, நீண்ட ஒரு பக்கம் கூராக உள்ள தடியால்(கிட்டி) குழியிலிருந்து தெண்டி(கிளப்பி) விளையாடுவதே கிட்டிப்புள் விளையாட்டாகும். அதன்பின்னர் புள்ளு வீழ்ந்த இடத்திலிருந்து குழியைநோக்கி புள்ளு வீசப்படும், அப்போது நிலத்தோடு கிட்டியை விசுக்கி புள்ளு குழிக்குள் வீழாமல் பார்க்க வேண்டும் (கிட்டிப்புள்ளு விளையாடும் முறையை நான் மறந்துவிட்டேன், நினைவில் இருந்தததையே எழுதியுள்ளேன்).
மட்டைப்பந்து விளையாட்டிற்கும் கிட்டிப்புள் விளையாட்டிற்கும் உள்ள ஒற்றுமையை மேலே தரப்பட்ட விவரத்திலிருந்து நீங்கள் காணலாம். மட்டைப்பந்தில் கிட்டிக்குப் பதிலாக மட்டையையும், புள்ளிற்குப் பதிலாக பந்தையையும் பாவிக்கிறார்கள். மேலும் மட்டைப்பந்தில் இரண்டு 'wickets' ஊன்றப்பட்டு அவற்றின் மேல் இரண்டு 'bails' வைக்கப்படுகின்றன. கிட்டிப்புள்ளில் இரண்டு பக்கமும் கூராக்கப்பட்டு பாவிக்கப்படும் சிறு குத்தியான புள்ளைத்தான் ஆங்கிலத்தில் 'bail' என்று அழைக்கிறோம். ஒவ்வொரு விக்கற்றிலும்(wicket) மூன்று 'stumps' இருக்கும், அவற்றைக் குத்திகள் என்று இராமகி ஐயா அழைக்கிறார். விக்கற்(wicket) என்பதற்கு கிட்டியைப் பாவிக்கலாம் என இராமகி ஐயா பரிந்துரைத்திருக்கிறார்.
மட்டைப்பந்து தமிழ் மூலம் உடையதாக மட்டும் பார்க்காமல், மட்டைப்பந்தில் பாவிக்கப்படும் ஆங்கில சொற்களுக்கு ஈடான தமிழ் சொற்களைப் பாவிப்பது நன்றாக இருக்கும், மட்டைப்பந்திற்கும் தமிழருக்குமான தொடர்பை வலுப்படுத்தும். இராமகி ஐயா பரிந்துரைத்த சொற்களும் வேறு சிலவும் கீழே தரப்பட்டுள்ளன.
எங்களிடமிருந்து உருவாகிய மட்டைப்பந்தை உருவாக்கியவர்கள் வேறாக இருந்தாலும் அதன் ஊற்று தமிழ்தான். மட்டைப்பந்து எவ்வாறு கிட்டிப்புள்ளிலிருந்து வந்ததோ, அவ்வாறு கிளித்தட்டு, சடுகுடு, சட்டி குட்டி போன்ற விளையாட்டுக்கள் விருத்தியடையச் செய்ய வேண்டும்.
ket - மட்டைப்பந்து, துடுப்பாட்டம் wicket - கிட்டி stump - குத்தி bail - புள்ளு bat - மட்டை batsman - மட்டையாளர் ball - பந்து balling - பந்து வீச்சு bowler - பந்து வீச்சாளர் bounce - குதிப்பு fast bowl - வேகப்பந்து spin bowl - சுழற்பந்து inning - உள்ளாங்கு innings match - உள்ளாங்குகள் போட்டி over - பந்துமாற்றம் one day match - ஒரு நாள் போட்டி pitch - பட்டிகை catch - பிடி, ஏந்து throw - எறி field - களம் fielder - களத்தர் fieldsman - களத்தர்கள் sixture - ஆறு boundry - எல்லை four - நாலு run - ஓட்டம் leg bye - காலோடு hit wicket - கிட்டி வீழ்ப்பு wide ball - அகலப்பந்து out - ? not out - ? run out - ? no ball - ?
ஓணப்பந்து அல்லது பந்தடி விளையாட்டு தமிழகத்தின் பழமையான வீர விளையாட்டுகளில் ஒன்றாகும். பொதுவாக ஆண்கள் மட்டுமே விளையாடும் இவ்விளையாட்டு குமரி மாவட்ட பிரபலமான விளையாட்டாகும். இது முறையே 7 வீரர்களைக்கொண்ட இரு அணிகளுக்கிடையே விளையாடப்படும் விளையாட்டாகும். ஒரு அணி கைகளால்பந்தையடிக்க மறு அணி பந்தை கால்களால் திருப்பி அடித்து விளையாடப்படுவதாகும்.
பொருளடக்கம்[மறை] |
எருமைத் தோலை எடுத்து அதனுள் தேங்காய் நாரை இறுக்கமாக வைத்து நேர்த்தியாக தைத்து ஓணப்பந்து தயாரிக்கப்படுகிறது. இதற்கென்று குமரி மாவட்டத்தில் பந்து தைப்பவர்கள் உள்ளனர். இது துடுப்பாட்டப் ( Cricket ) பந்தை விட சற்று சிறியதாக இருக்கும். ஒரு பந்து சுமார் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஓணப்பந்து மைதானம் 25 x 7 மீட்டர் அளவுள்ள நீள் செவ்வக அமைப்பாகும். இதில் அகல வாக்கில் இரண்டு கோடுகள் இடப்பட்டிருக்கும். அவை முறையே தட்டும் கோடு, பவுள் கோடு ஆகும். மண் தரையை சீர்படுத்தி மணல் போன்றவை நீக்கப்பட்ட கட்டாந்தரையை சாலை உருளையால் சமப்படுத்தி பின் மாட்டுச்சாணத்தால் முழுவதும் மெழுகி மைதானம் தயாரிக்கப்படுகிறது. பின் நான்கு மூலைகளிலும் சுமார் 65 அடி உயரமுள்ள நான்கு கமுகு மரங்கள் எல்லைக்கம்பங்களாக நாட்டப்படுகிறது.
ஓணப்பந்து மைதானத்தின் ஒரு பக்கம் அடித்தாடும் பக்கம், எனவும் மறு பாகம் தடுத்தாடும் பக்கம் எனவும் அழைக்கப்படும். அடித்தாடும் பக்கத்திலுள்ள இரு கம்பங்களின் நடுவில் 65 அடி உயரத்தில் கயிறு மூலம் பட்டுத்துணிகட்டப்பட்டிருக்கும்.
இவ்விளையாட்டில் வெற்றி பெற 7 கட்டங்கள் உள்ளன, அவை:
ஒரு கட்டத்திற்கு 3 பந்து வீதம் மொத்தம் 21 பந்துகள். தடுப்பாட்டத்தை சமாளித்து 21 பந்துகளையும் சரியான முறையில் செலுத்தும் அணி வெற்றி பெறும்.
இவ்விளையாட்டை விளையாட இரண்டு அணிகள் தேவை. ஒரு அணியில் அணித்தலைவர் உட்பட 7 வீரர்கள் இருப்பர். ஒவ்வொரு வீரருக்கும் 1 முதல் 7 வரையுள்ள ஒவ்வொரு எண் வழங்கப்பட்டிருக்கும். இது வீரர்களின் சட்டையில் தொங்கவிடப்பட்டிருக்கும்.
நாணய சுண்டல் முறையில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணியினர் முதலில் கைகளால் பந்தை அடித்தாட அடித்தாடும் பகுதிக்கு களம் இறங்குவர். எதிரணியினர் அவர்கள் அடிக்கின்ற பந்தை கால்களால் தடுத்தாட தடுத்தாடும் பகுதிக்கு களம் இறங்குவர்.
அடித்தாடும் அணியின் முதல் வீரர்(எண் 1) முதலில் பந்தை ஒரு கையில் வைத்துக்கொண்டு அடுத்த கையால் பந்தை ஓங்கி அடித்து எதிரணியை நோக்கி செலுத்த வேண்டும். பந்து எல்கைக்கம்பங்களுக்கு வெளியே செல்லாமலும் பவுள் கோட்டிற்கு வெளியே விழாமலும் செல்ல வேண்டும். எதிரணி வீரர்கள் அதாவது தடுத்தாடுபவர்கள் 7 பேரும் தடுத்தாடும் பக்கத்தின் முன்களத்திலும் பின்களத்திலும் நின்று கொண்டு முதல் வீரர் அடித்த பந்தை திருப்பி கால்களால் செலுத்த வெண்டும்.
எல்லைக்கோட்டிற்கு வெளியே செல்லாமல் நேராக அடித்தாடும் பக்கம் பந்து சென்றால் அடித்தாடுபவர்களும் பந்தை கால்களால் திரும்ப செலுத்துவர். இவ்வாறு மாறி மாறி பந்தை உதைத்து விளையாட வேண்டும். தடுத்தாடுபவர்கள் பந்தை எல்லைக்கொட்டிற்கு வெளியே செலுத்தினாலோ அடித்தாடுபவர்கள் செலுத்திய பந்தை கால்களால் திரும்ப செலுத்த முடியாமல் போனாலோ முதல் வீரர் முதல் பந்தை வெற்றிகரமாய் முடித்து விட்டு இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார். அடித்தாடுபவர்கள் கால்களால் செலுத்திய பந்தை தடுத்தாடுபவர்கள் கைகளால் அந்தரத்தில் பிடித்து விட்டால் முதல் வீரர் ஆட்டமிழப்பார். பிடிக்கும்போது தவற விட்டால் முதல் வீரர் இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார்.
அடித்தாடுபவர்கள் பந்தை எல்லைக்கோட்டிற்கு வெளியே செலுத்தினாலோ தடுத்தாடுபவர்கள் செலுத்திய பந்தை திரும்ப செலுத்த முடியாமல் போனாலோ முதல் வீரர் ஆட்டமிழப்பார். தடுத்தாடுபவர்கள் செலுத்திய பந்தை அந்தரத்தில் பிடித்து விட்டால் முதல் வீரர் இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார். பிடிக்கத்தவறினால் ஆட்டமிழப்பார்.
இவ்வாறு அடித்தாடுபவர்கள் தொடர்ச்சியாக மூன்று பந்துகளையும் சரியான முறையில் செலுத்தினால் அடித்தாடுபவர்கள் ஒற்றை நிலையிலிருந்து இரட்டை என்ற நிலைக்கு முன்னேறுவர். தொடர்ந்து முதல் வீரர் இரட்டை முதல் பந்தை செலுத்துவார். முதல் வீரர் ஒற்றை 1,2,3 இவற்றில் எந்த பந்தில் ஆட்டமிழந்தாலும் இரண்டாவது வீரர் ஒற்றை முதல் பந்திலிருந்துதான் விளையாட வேண்டும்.
ஆனால் முதல் வீரர் 3 பந்துகளையும் வெற்றிகரமாக செலுத்தி இரட்டை என்ற நிலைக்கு முன்னேறிய பின் ஆட்டமிழந்தால் இரண்டாவது வீரர் இரட்டை முதல்பந்திலிருந்து ஆட்டத்தை தொடங்குவார். தொடர்ச்சியாக மூன்று பந்துகளையும் சரியாக வீசினால் மட்டுமே ஒவ்வொரு கட்டமாக முன்னேற முடியும்.
விளையாடும்மோது 7 வீரர்களும் ஆட்டமிழந்தால் அடித்தாடுபவர்கள் எந்த கட்டத்தில் விளையாடுகின்றனறோ அந்த நிலையை தக்க வைத்தவாறு தடுத்தாட பக்கம் மாறுவர் எதிரணியினர் அடித்தாட பக்கம் மாறுவர். இவர்களும் ஆட்டமிழக்கும் போது மீண்டும் தடுத்தாடுபவர்கள் தாங்கள் விட்ட நிலையிலிருந்து அடித்தாடுவர்.
இவ்வாறு ஒற்றை, இரட்டை,முறுக்கி,தாளம்,காவடி,ஓட்டம் என முன்னேற வேண்டும். ஓட்டம் ஆட்டத்தின் முக்கிய கட்டமாகும். ஓட்டத்திற்கு மட்டும் 3 பந்துகளையும் அடித்தாடும் வீரர் நேரடியாக கால்களால் உதைத்து விளையாட வேண்டும். ஆனால் பந்து மற்ற பந்துகளைப்போல் பவுள் கோட்டினுள் விழுந்துதான் செல்ல வேண்டும். ஓட்டம் 3 பந்துகளையும் தாண்டினால் ஆட்டத்தின் இறுதி கட்டமான பட்டம் என்ற நிலைக்கு முன்னேறுவர். பட்டம் மூன்று பந்துகளையும் தாண்டும் அணி முதற்கட்ட ஆட்டத்தில் 1:1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் கட்ட ஆட்டம் தொடங்கும்.
முதற்கட்ட ஆட்டத்தில் தோல்வியுற்ற அணி இரண்டாம் கட்ட ஆட்டத்தில் முதலில் அடித்தாட களம் இறங்கும். இரு அணிகளும் மீண்டும் ஒற்றை நிலையிலிருந்து ஆட்டத்தை தொடங்கும். இந்த ஆட்டத்தில் முதலில் வென்ற அணி மீண்டும் வென்றால் 2:2 என்ற கணக்கில் அந்த அணி வெற்றி பெறும். ஆட்டம் முடிவு பெறும்.முதலில் வென்ற அணி தோல்வியடைந்தால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளி வென்ற நிலையில் மூன்றாம் கட்ட ஆட்டம் தொடங்கும்.
இரண்டாம் கட்ட ஆட்டத்தில் தோல்வியுற்ற அணி மூன்றாம் கட்ட ஆட்டத்தில் முதலில் அடித்தாட களம் இறங்கும். இந்த ஆட்டத்தில் பட்டத்தை தாண்டும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்
ஓணப்பந்து போட்டிகள் நடைபெறும்போது ஓணப்பந்து விளையாட்டில் தேர்ந்த இரு நடுவர்கள் செயல்படுவர். ஒருவர் எல்கைக்கம்ப நடுவராக செயல்படுவார். வேகமாக வரும் பந்துகள் எல்கைக்கம்பத்திற்கு வெளியே சென்றதா உள்ளே சென்றதா என்பதை மட்டும் தீர்மானிப்பார். இன்னொரு நடுவர் மற்ற காரியங்களில் முடிவெடுப்பார். நடுவரின் தீர்ப்பே இறுதியானதாகும்
கிளித்தட்டு அல்லது தாச்சி இலங்கையில் தமிழீழத்தில் பரவலாக விளையாடப்படும்விளையாட்டாகும். இது உடலுக்கு நல்ல பயன் தரும் விளையாட்டாகும்.
மைதானத்தை முதலில் ஒரு போக்கு பெட்டிகளாக பிரித்து, பின்னர் நடுவே ஒரு கோடு போட்டு கொள்ளப்படும். படத்தை பார்க்கவும். எத்தனை ஒரு போக்கு பெட்டிகள் என்பது விளையாட்டு குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்தது. குறைந்தது ஒரு குழுவுக்கு 3 உறுப்பினர்களாவது வேண்டும்.
யார் நாணய சுண்டலில் தோற்கின்றார்களோ அவர்கள் மறிப்பார்கள், மற்ற குழு புகுவார்கள். மறிக்கும் அணியினர் முதலாம் கோட்டையும், கடைசி கோட்டையும் தவிர மற்றக் கோடுகளில் நிற்பார்கள். மிகுதியான மறிக்கும் அணியை சேர்ந்தவர் கிளி என்று அழைக்கப்பட்டு, எந்த கோடுகளாலும் செல்ல வல்லவர். கிளியால் தொடப்பட்டால் புகும் குழு உறுப்பினர் ஆட்டமிழப்பார்.
முதலில் கிளி ஒரு தொங்கலிலும், புகுபவர்கள் ஒரு தொங்கலும் நிற்பார்கள். கிளி கூவிக்கொண்டு முன்னோக்கி வருவார். கிளி கூவியவுடன் புகுபவர்கள் உச்சி, தெண்டி அடுத்த எல்லைக்கு செல்ல முயல வேண்டும். தாண்டும் பொழுது மறிப்பவரால் தொடப்பட்டால் தாண்டுபவர் ஆட்டமிழப்பார். தாண்டும்போது மட்டுமே மறுப்பவர் தட்ட முடியும், சும்மா அருகில் நிற்க்கும் பொழுதோ, உச்சும் பொழுதோ தட்ட முடியாது. ஆனால், கிளி எங்கும் சென்று யாரையும் எப்பொழுதும் தட்டலாம். அதாவது, எட்டியும் தட்டலாம்.
உச்சி, தப்பி எல்லைக்கு சென்றவர்கள் பழம் என்று கருதப்படுவர். வந்து கொண்டிப்பவர்கள் காய்கள். பழமானவர், மீண்டும் புகுந்த எல்லைக்கே சென்றால் தான் அந்த அணியினருக்கு ஒரு புள்ளி கிடைக்கும். ஆனால், மீண்டும் வரும் பொழுது, பழம் காய் உள்ள ஒரு பெட்டிக்கு போகவது அவ்வளவு நல்லதல்ல, காரணம், இருவருக்கும் உச்சுவதற்க்கு குறுகிய இடமே கிடைக்கும். மேலும், கிளி பூட்டு போட்டு தட்ட முயல்வார்.
எந்த அணி கூடிய புள்ளிகளைப் பெறுகின்றதோ அவர்களுக்கே வெற்றி. பலருடன் சேர்ந்து விளையாடும் பொழுது, இந்தவிளையாட்டு மிகவும் வேகமாகவும், விறு விறுப்பாகவும் அமையும்
கபடி அல்லது சடுகுடுஅல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழர்களால் பல காலமாக, பரவலாக விளையாடுப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கை+பிடி = கபடி.[1] இது தெற்கு ஆசியா நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது.
இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர். மொத்த விளையாட்டு நேரம் 40 மணித்துளிகள் (நிமிடங்கள்). இவ்வாட்டம் விளையாட வெறும் நீள்சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு ஒரு நடுவரும் தேவை.
பொருளடக்கம்[மறை] |
ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு நடுக்கோட்டைத் தொட்டுவிட்டு ஒரே மூச்சில் "கபடிக் கபடி" (அல்லது "சடுகுடு") என்று விடாமல் கூறிக் கொண்டே எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்கு சென்று எதிர் அணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டுவிட்டுப் எதிர் அணியினரிடம் பிடிபடாமல் நடுக்கோட்டைத் தாண்டி தம் அணியிடம் திரும்பிவரும் ஒரு வகை விளையாட்டு. தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார். ஆனால் எதிரணியினர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாமல் 'கபடிக் கபடிக்" என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பிவரவேண்டும், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். மூச்சு விடாமல் 'கபடிக் கபடிக்' என்று சொல்வதற்குப்பாடுதல் என்று பெயர். தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுவர் பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழப்பர்.
ஆண்களுக்கான சடுகுடுவும், பெண்களுக்கான சடுகுடுவும் சற்று வேறுபடும்.
நாந்தான் வீரன்டா நல்லமுத்து பேரன்டா |
கீத்து கீத்துடா கீரைத் தண்டுடா |
ஆடுகளம், மேடு பள்ளம் இல்லாத ஒரு சமதளமாக இருக்க வேண்டும். ஆட்கள் கீழே விழுவதும், இழுக்கப்படுவதும் நிகழ்வதால், தரை மண் அல்லது மரத்தூள், மணல்,பஞ்சு மெத்தை பரப்பியதாக இருக்கவேண்டும். கட்டாந்தரையாக (காங்க்கிரீட்டாக) இருப்பது நல்லதல்ல. ஆண்கள் ஆடும் களம் 12.5 மீ x 10 மீ பரப்பு கொண்டதாகும். பெண்கள் ஆடும் களம் 11 மீ x 8 மீ ஆகும். ஆடுகளத்தின் எல்லைகளக் குறிக்கும், கோடுகளும் மற்றும் களத்தைப் பிரிக்கும் கோடுகளும் 2 அங்குல (5 செ.மீ) அளவினதாக இருக்க வேண்டும் (இன்னும் எழுத வேண்டியுள்ளது)
எட்டுக்கோடு சிறுவர்களால் விளையாடப்படுகிறது. விசேடமாகச் சிறுமிகளே பெரும்பாலும் விளையாடுவது வழக்கம். இது பொதுவாக வெளியிலேயே விளையாடப்படுவதாயினும், இட வசதி இருந்தால், உள்ளக விளையாட்டாகவும் விளையாடப்படலாம். இந்த விளையாட்டை விளையாடுபவர்களுடைய எண்ணிக்கைக்கு வரையறை இல்லை. பங்கேற்பவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனிப் போட்டியாளராகவே பங்குபற்றுவது வழக்கம்.
பொருளடக்கம்[மறை] |
இதை விளையாடுவதற்கான களத்தில் 8 கட்டங்கள் அமையக்கூடியவாறு கோடுகள் வரையப்பட்டிருக்கும். (அருகிலுள்ள படத்தைப் பார்க்கவும்) கட்டங்களின் அளவு ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்துக்குக் கெந்திப் பாய்வதற்கு (ஒற்றைக் காலில் பாய்தல்) வசதியாக அமைந்திருக்கும்.
இவ் விளையாட்டுக்கு அண்ணளவாக ஒரு அங்குல விட்டமுள்ள சிறிய, தடிப்புக் குறைந்தமட்பாண்டத் துண்டொன்று பயன்படுகின்றது. இதைச் "சில்லி" என்று அழைப்பார்கள்.
இது பல மட்டங்களாக விளையாடப்படுகிறது.
எட்டுச் சதுரங்கள் கொண்ட இப்பெட்டியில் இடது பக்கம் நான்கு பெட்டிகளும், வலது பக்கம் நான்கு பெட்டிகளும் இருக்கும். விளையாட்டை இடது பக்கம் இருந்தே தொடங்க வேண்டும். இடது பக்கமாகப் போகும் போது ஐந்தாவது பெட்டி அதாவது வலது பக்கத்தின் மேற்பெட்டி வீடு. இங்கு காலாறி ஓய்வெடுக்கலாம்.
சிப்பியை இடது பக்க முதற் பெட்டியில் போட வேண்டும். போடும் போது சிப்பி கண்டிப்பாகப் பெட்டிக்குள் விழ வேண்டும். கோடுகளில் வீழ்ந்து விடக் கூடாது.
ஒற்றைக்காலால் கெந்தி, அந்தச் சிப்பியை மிதிக்க வேண்டும். ஒரு கெந்தலிலேயே மிதித்து விட வேண்டும். மிதித்த சிப்பியை குனிந்து கையால் எடுத்துக் கொண்டு இரண்டாவது, மூன்றாவது, நான்காவது பெட்டிகளுக்குள் கெந்தி ஐந்தாவது பெட்டிக்குள் இரண்டு கால்களையும் வைத்து நின்று விட்டு மீண்டும் ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் கெந்தி வெளியில் போக வேண்டும்.
இதே முறையில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் சிப்பியைப் போட்டு இதே ஒழுங்கில் சென்று மிதித்து, எடுத்துக் கொண்டு வெளியில் போக வேண்டும். ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் சிப்பியைப் போடும் போது இடது பக்க மூலையில் நின்றே போட வேண்டும்.
இப்போது சிப்பியை முதற் போலவே போட்டு, ஒற்றைக்காலால் கெந்தி மிதிக்க வேண்டும். ஒரு கெந்தலிலேயே மிதித்து விட வேண்டும். மிதித்த சிப்பியை குனிந்து கையால் எடுத்து, தூக்கி வைத்திருக்கும் கால் பாதத்தில் விரல்களின் மேல் வைத்துக் கொண்டு கெந்த வேண்டும். கெந்தும் போது சிப்பி கீழே வீழ்ந்து விடக் கூடாது. எட்டாவது பெட்டிக்கு வந்ததும் சிப்பியை பெட்டிக்கு வெளியில் போட்டு விட்டு கெந்தி அதை மிதிக்க வேண்டும்.
சிப்பியை தலையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு பெட்டிகளில் நடக்க வேண்டும். ஒற்றைக்கால் முதற்பெட்டியிலும் மற்றையகால் இரண்டாவது பெட்டியிலும்.. என்று வைத்து நடக்க வேண்டும். முகம் மெதுவாக மேலே தூக்கப் பட்டிருக்க வேண்டும். நடக்கும் போது "சரியோ? சரியோ?" என்று கேட்க வேண்டும். கால் விரல்கள் கோடுகளில் பட்டு விடக் கூடாது. பட்டுவிட்டால் "பிழை" என்பார்கள். 5வது பெட்டியில் இரண்டு கால்களையும் வைத்து நின்று கண்களைத் திறந்து பார்த்து விட்டு மீண்டும் ஆறாவது ஏழாவது பெட்டிகளைக் கடந்து எட்டாவது பெட்டிக்கு வந்ததும் தலையில் உள்ள சிப்பியை கண்களை மூடிய படி நின்று வெளியில் வீழ்த்தி விட்டு கண்களைத் திறக்க வேண்டும். பின் கெந்தி மிதிக்க வேண்டும்.
சரியாகச் சிப்பியில் மிதித்து விட்டால், சிப்பியை கையில் எடுத்து எட்டுக்கோட்டுக்கு புறமுதுகு காட்டி நின்று கொண்டு, சிப்பியை தலைக்கு மேலால் எட்டுக்கோட்டுக்குள் எறிய வேண்டும். சிப்பி கோடுகளிலோ, வெளியிலோ, ஐந்தாவது பெட்டிக்குள்ளோ விழக் கூடாது.
மூன்று சந்தர்ப்பங்கள் உங்களுக்குத் தரப்படும். சிப்பி எந்தப் பெட்டிக்குள் விழுகிறதோ அந்தப் பெட்டி உங்களுக்குச் சொந்தம். அது உங்கள் பழம். நீங்கள் அதற்குள் காலாறிப் போகலாம். மற்றவர்கள் அதைக் கடந்துதான் போகலாம். அவர்கள் அதற்குள் கால் வைக்க முடியாது.
இரண்டு பேருக்கு அடுத்தடுத்த பெட்டிகளில் பழம் வந்து விட்டால் மற்றவர்கள் எப்படியாவது பாய்ந்து இரண்டு பெட்டிகளையும் கடக்க வேண்டும். யார் கூடிய பழங்கள் எடுக்கிறாரோ அவர் வென்றவர் ஆகிறார்.
போர்த்தேங்காய் அடிக்கும் போட்டி தமிழ் ஆண்டுப் பிறப்பு நாளிலும் வேறு சிறப்பு நாட்களிலும் நடக்கும். கடைகளில் இதற்கெனப் புறம்பாகச் சேர்த்து வைத்திருக்கும் உரித்த, வைரமான, தேங்காய்களை வாங்கி வைத்திருந்து, ஒரு கோயில்வாசலில் அல்லது வெளியான இடத்தில் மக்கள் கூடி, அங்கு தேங்காய் அடி நடைபெறும்.
போட்டியாளர் ஒவ்வொருவரும் நான்கு அல்லது ஐந்து போர்த் தேங்காய்களை வைத்திருப்பார். ஒருவர் ஒன்றை நிலத்தில் உருட்டி விடுவார். மற்றொருவர் அதனுடைய லேசாக உடையக்கூடிய பகுதி எவ்விடத்தில் இருக்கிறதென்று சுற்றிவந்து அவதானித்துத் தனது கைத்தேங்காயை அதன்மேல் ஓங்கி அடிப்பார். நிலத்துத் தேங்காய் உடைந்து விட்டால் அவருக்கு வெற்றி; கைத்தேங்காய் உடைந்தால் அடித்தவருக்குத் தோல்வி. தோற்றவர் இன்னுமொரு தேங்காயைப் பாவிப்பார். இப்படியாகத் தேங்காய்கள் உடைந்துபோக கடைசியில் எல்லாருடைய அடிகளுக்கும் தப்பி உடையாமல் நின்று பிடிக்கும் தேங்காயின் சொந்தக்காரர் தான் வெற்றியாளர். அவருக்கு மாலை போட்டுக் கௌரவிப்பார்கள்
பல்லாங்குழி என்பது, பொதுவாக பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு.
முதற் பூப்படைந்த பெண்ணின் தீட்டுக்குரிய காலத்திலும் கருவுற்ற பெண்கள் அமர்ந்து பொழுதுபோக்குவதற்கும் இந்த விளையாட்டை இப்பொழுது ஆடிப் பார்க்கிறார்கள். தமிழர்களின் பண்பாட்டு மரபினில் பெண்ணுக்குரிய சீர்வரிசைப் பொருள்களில் பல்லாங்குழியும் ஒன்றாக இடம் பெறுகிறது. பல்லாங்குழி ஆட்டம் பற்றி தேவநேயப் பாவாணர்'தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்' என்ற தம் நூலில் முதன்முதலாக எழுதினார். பின்னர் பேராசிரியர் தாயம்மாள் அறவாணன் 'பல்லாங்குழி (திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு)' என்ற விரிவான நூலை எழுதியுள்ளார். உலகெங்கிலும் பல்லாங்குழி ஆட்டம் சிற்சில மாறுதல்களுடன் பழங்குடிகளிடம் விளங்கி வருகிறது[1].
பொருளடக்கம்[மறை] |
பல்லாங்குழி என்பது மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு விளையாட்டுச் சாதனம். அதில் இரு வரிசைகளில் ஏழு குழிகள் இருக்கும். பொதுவாக புளியங்கொட்டையை வைத்து பல்லாங்குழி ஆட்டம் (பாண்டி ஆட்டம்) ஆடப்படுகிறது.
பல்லாங்குழி ஆட்டத்தினுடைய வகைகளாக நான்கினைக் குறிப்பிடுகிறார் பாவாணர். பேராசிரியர் தாயம்மாள் அறவாணன் பல்லாங்குழி ஆட்டத்தின் எட்டு வகைகளைக் குறிப்பிட்டு அவற்றின் வேற்றுப் பெயர்கள், குழிகளின் எண்ணிக்கை, ஒரு குழிக்காய்களின் எண்ணிக்கை மற்றும் அவ் வகைகள் ஆடப்படும் பகுதிகள் என விரிவான அட்டவணை தந்துள்ளனர். தமிழ்நாடு முழுதும் கள ஆய்வு செய்து எழுதப்பட்ட நூலாகும் இது[1].
பல்லாங்குழி ஆட்டத்தின் அடிக்கூறுகளை பின்வருமாறு வரையறை செய்து கொள்ள முடியும்:
3 பேர் விளையாடும் மிகவும் விறுவிறுப்பான "ராஜா பாண்டி", ஒருவர் மட்டுமே முடிவே இல்லாமல் விளையாடும் "சீதா பாண்டி" (சீதை அசோக வனத்தில் இருக்கும்போது விளையாடியதாம்), நிறைய காய்கள் வைத்து விளையாடும் "காசி பாண்டி"
தாயக் கட்டை பொதுவாக தாயக் கட்டைகள் மரத்திலோ அல்லது வெண்கலம் போன்ற உலோகத்திலோசெய்யப்பட்டிருக்கும். மேலும் தாயக் கட்டைகள் நான்கு முகங்களைக் கொண்டிருக்கும். சில வகை தாயக் கட்டைகள் ஆறு முகங்களைக் கூடக் கொண்டிருக்கும். சில பகுதிகளில் குறிப்பாக 7×7 தாயக்கட்ட விளையாட்டில் புளியங்கொட்டைகளை உருட்டி விளையாடுவர். நான்கு முத்துக்களை ஒரு பக்கம் வெண்ணிறமாகும்படி பாறையில் தேய்த்து விடுவர். அவற்றில் ஒரு முத்தில் மட்டும் மறுபுறம் அரைகுறையாகத் தேய்க்கப்பட்டிருக்கும். பின்பு இவற்றை ஒரு தேங்காய்ச்சிரட்டையில்போட்டு உருட்டிவிடுவர். ஒன்று அல்லது இரண்டு முத்துக்கள் மட்டும் வெண்புறம்காட்டி விழுந்தால் விளையாடுபவர் அத்தனை இலக்கங்கள் நகர்த்த வேண்டும். மூன்று முத்துக்கள் வெண்புறம் காட்டி நான்காவது கருநிறம்காட்டினால் மூன்று இலக்கங்களும் நான்காவது அரைகுறை வெண்ணிறம் கொண்டிருந்தால் நான்கு இலக்கங்களும் நகர்த்தலாம். எல்லா முத்துக்களும் வெண்ணிறம் காட்டினால் ஆறு இலக்கங்களும் கருநிறம் காட்டினால் எட்டு இலக்கங்களும் கிடைக்கும். மீண்டும் ஒருமுறை உருட்டும் வாய்ப்பும் கிடைக்கும்.
பொருளடக்கம்[மறை] |
தாயம் எனப்படுவது பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவில் பரவலாக ஆடப்படும் ஒரு விளையாட்டாகும். இவ்விளையாட்டை இரண்டு முதல் நான்கு பேர் வரை தரையிலோ மேடை மீது வைத்தோ விளையாடலாம்.
தாய விளையாட்டு மிகப் பழையதான விளையாட்டாதலால் முதலில் யார் கண்டுபிடித்தார்கள் என்னும் விவரம் தெரியாது.
நான்முக தாயக் கட்டையின் மூன்று பக்கங்களில் (1), (2) மற்றும் (3) புள்ளிகள் இருக்கும். ஒரு பக்கத்தில் புள்ளி ஏதும் இருக்காது (0). இரு நான்முக தாயக் கட்டைகளை உருட்டினால் 1, 2, 3, 4, 5, 6, 12 (0,0) ஆகிய எண்கள் விழும். 1, 5, 6, 12 எண்களை சிறப்பாகக் கருதி மறுமுறை தாயக் கட்டையை உருட்டுவது வழக்கம். இவ்வெண்கள் அடுத்தடுத்து மாறி மாறி விழுந்து கொண்டிருந்தால் அதை விருத்தம் என அழைப்பதுண்டு.
அறுமுக தாயக் கட்டையின் எல்லாப் பக்கங்களிலும் புள்ளிகள் 1, 2, 3, 4, 5, 6 என பொறிக்கப்பட்டிருக்கும். இரு அறுமுக தாயக் கட்டைகளை உருட்டினால் 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ஆகிய எண்கள் விழும்
கொக்கான் ஒர் இருந்து விளையாடும் விளையாட்டு. இவ்விளையாட்டைக் கூடுதலாகப் பெண்கள்தான் விளையாடுவார்கள். ஏதாவதொரு விறாந்தை நுனியில் இருந்துதான் இதை விளையாடுவார்கள். சீமெந்து விறாந்தை இவ்விளையாட்டுக்கு உகந்தது. விறாந்தை இல்லாவிட்டால் டோங்கு (மார்பிள்) மேலெழும்பாது.
கொக்கான் வெட்டுவதற்கு ஒரு டோங்கும் (மார்பிள்), இரு சிறிய கற்களும் அல்லது ஒரு டோங்கும், நான்கு சிறிய கற்களும் வேண்டும்.
முதலில் கைகளுக்குள் கற்களை வைத்துக் கொண்டு மார்பிளை மேலெறிந்து விட்டு, அது கீழே விழுந்து மீண்டும் மேலெழுந்து விழுவதற்குள், சுட்டு விரலால் நிலத்தைத் தொட்டு விட்டு மார்பிளை ஏந்த வேண்டும்.
மார்பிளை இரண்டு தரம் தரையில் மோத விட்டாலோ, நிலத்தில் சுட்டு விரல் படா விட்டாலோ, மார்பிளை பிடிக்காமல் விட்டாலோ, பிடிக்கும் போது கைகளுக்குள் உள்ள கற்களில் ஒன்று கீழே விழுந்து விட்டாலோ ஆள் அவுட். எந்தக் கட்டத்திலும் மார்பிள் இருதரம் தரையைத் தொடக் கூடாது.
இரண்டாவதாக,
மார்பிளை மேலெறிந்து விட்டு கற்களைக் கீழே நிலத்தில் போட வேண்டும். மார்பிள் நிலத்தில் வீழ்ந்து மேலெழுந்ததும் இரண்டு கற்களை எடுத்து விட்டு மார்பிளை ஏந்த வேண்டும். இரண்டு கற்களை எடுக்கும் போது மற்றைய இரண்டு கற்களிலும் விரல்கள் பட்டு விடக் கூடாது. மீண்டும் மார்பிளை மேலெறிந்து... மற்றைய இரண்டு கற்களையும் அதே முறையில் எடுக்க வேண்டும்.
மூன்றாவதாக,
இரண்டாவது முறை போலவே நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். ஆனால் எடுக்கும் போது ஒவ்வொரு கல்லாக இரண்டு கற்களை எடுக்க வேண்டும். மீண்டும் அதே போல மற்றைய இரண்டு கற்களையும் எடுக்க வேண்டும். கற்களை எடுக்கும் கையாலேயே மார்பிளையும் ஏந்த வேண்டும். ஏந்தும் போது மார்பிள் கற்களில் பட்டு நிலத்தில் வீழ்ந்து விட்டாலோ கற்களில் ஏதாவது வீழ்ந்து விட்டாலோ ஆள் அவுட்.
நான்காவதாக,
இரண்டாவது மூன்றாவதைப் போலவே நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். ஆனால் கற்களை எடுக்கும் போது நான்கு கற்களையும் ஒன்றாகக் அள்ளி எடுக்க வேண்டும்.(இதன் போது கற்களைச் சிதற விடாமல் ஒன்றாக நிலத்தில் போடுவது நல்லது.)
ஐந்தாவதாக,
கற்களை போடும் போது இடைவெளியுடன் இருக்கத் தக்கதாகப் போட வேண்டும். எடுக்கும் போது நான்கு கற்களையும் ஒவ்வொன்றாக எடுத்து மார்பிளை ஏந்த வேண்டும். இதன் போது கொஞ்சம் விரைவு காட்டா விட்டால் மார்பிளை விட்டு விடுவீர்கள்.
ஆறாவதாக,
நான்காவது முறையைப் போல நான்கு கற்களையும் கீழே போட வேண்டும். கற்களை எடுக்கும் போதும் நான்கு கற்களையும் ஒன்றாகக் அள்ளி எடுக்க வேண்டும். ஆனால் கற்களைப் போடும் போதோ, அள்ளி எடுக்கும் போது மார்பிளை தரையில் மோத விடாது ஏந்தி விட வேண்டும்.
ஏழாவதாக,
ஐந்தாவது முறையைப் போல கற்களை போடும் போது இடைவெளியுடன் இருக்கத் தக்கதாகப் போட வேண்டும். எடுக்கும் போது நான்கு கற்களையும் சொப், சொப் - சொப்,சொப் என்று சொல்லி ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். ஆனால் ஆறாவதைப் போல, கற்களைப் போடும் போதோ, சொப், சொப் - சொப்,சொப் என்று சொல்லி ஒவ்வொன்றாக எடுக்கும் போதோ மார்பிளை தரையில் மோத விடாது ஏந்தி விட வேண்டும்.
எட்டாவது, (பழம்)
கற்களையும் மார்பிளையும் ஒன்றாக மேலெறிந்து புறங்கையில் ஏந்த வேண்டும். ஐந்தையும் ஏந்தி விட்டால் மீண்டும் அந்த ஐந்தையும் ஒன்றாக மேலெறிந்து உள்ளங்கையில் ஏந்த வேண்டும். பிடித்து விட்டால் ஐந்து புள்ளிகள். புறங்கையிலும் ஏந்தி, ஒன்றிரண்டு தரையிலும் வீழ்ந்து விட்டால் புறங்கையில் ஏந்தியதை மீண்டும் மேலெறிந்து அது கீழே வருவதற்கு இடையில் தரையில் வீழ்ந்ததையும் எடுத்துக் கொண்டு மேலெறிந்ததையும் ஏந்தி விட வேண்டும். புறங்கையில் எத்தனை கற்கள் வந்ததோ அத்தனை புள்ளிகள். எறிந்து ஏந்தும் போது ஒன்று தவறி வீழ்ந்தாலும் ஆள் அவுட்.
ஒவ்வொரு முறையும் ஒருவர் அவுட்டானால் அடுத்தவர் தான் அவுட்டான இடத்திலிருந்து தொடர வேண்டும்.
பல்லாங்குழி என்பது, பொதுவாக பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு.
ஆடுபுலி ஆட்டம் இந்தியாவில் பரவலாக விளையாடப்படும் ஒரு மிகப் பழமையான ஆட்டமாகும். இந்த ஆட்டத்தை ஐந்து அகவைக்கு (வயதுக்கு) மேற்பட்ட இருவர் விளையாடலாம். புளியங்கொட்டைகள், கற்கள், குன்றி (குந்து) மணிகள், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்களைக் கொண்டு விளையாடலாம்.
ஆடுபுலி ஆட்டம் மிகப் பழையதான விளையாட்டாதலால் முதலில் யார் கண்டுபிடித்தார்கள் என்னும் விவரம் தெரியவில்லை.
ஆல் பரஞ்சோதி » செவ் ஆக 23, 2005 4:20 am
ஆல் பரஞ்சோதி » சனி மே 28, 2005 8:03 pm