Appreciating (Cine) Poetry.

174 views
Skip to first unread message

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 2, 2013, 2:14:05 PM1/2/13
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், தமிழ்த்தென்றல்

இந்த இழையில் வெறுமனே பாடல்களைப் பகிராமல்,  ஒருபாடலை எதற்காகப் பிடிக்கும் என்று விவரமாக பகிர்ந்துக் கொள்ளலாமே ?

கன்ஸு... எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.
Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை / நாயென  எண்ணி நகரு.
-
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

Srimoorthy.S

unread,
Jan 2, 2013, 2:19:00 PM1/2/13
to பண்புடன், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல்

தீயெனத் தீய்ந்திடும் என வருமா இல்ல தீயெனத் தீய்த்திடும்னு வரணுமா?

தீயாய்த் தீய்த்திடும்  தீமனம்  கொண்டாரிடம்
பாய் சொல்லிக் கிளம்பு.

இதுவும் நல்லா இருக்குல்ல

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 2, 2013, 2:34:42 PM1/2/13
to பண்புடன், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல்
7ஜி ரெயின்போ காலணி படத்தில் வரும் நினைத்து நினைத்து பார்த்தால் பாடல்.  இந்தப் பாடல் ஆண்குரலில் ஒலிக்கும் போதெல்லாம் மனசு என்னமோ இழந்தது போல வலிக்கும். கவிஞர் ( நா. முத்துகுமார் ? ) பெண் பாடும் பாடலுக்கும், ஆண் பாடும் பாடலுக்கும் சற்றேறக் குறைய ஒரே மாதிரியான வரிகளைப் போட்டு சிறு சிறு மாற்றங்கள் செய்து வெவ்வேறு அர்த்தங்களாய் வந்து விழும் பாடல்.

எடுத்துப் படிக்கும் முன்பே கடிதம்  எரிந்து போகுமா ?  தனிமையில்  இருக்கும் போது உன் கொலுசின் ஒலியும், உடைந்த வளையல்களின் வண்ணமுமாய் அறைகள் முழுதும் மின்னுமே..  என் கனவு தோன்றும் முன்னமே மறைகிறதே... எத்தனை துர் பாக்கியம் இது ?

எந்த வரியை சிலாகித்துச் சொல்ல ? ஒவ்வொரு வரியிலும் பிரிவின் சோகம் பிழியப் பிழிய வழியும் போது அதை மேலும் கூட்டி உயிரோடு வதம் செய்யும் இசையும் சேர்ந்தால் ? அந்த இரவும் மனதும்  மெல்ல மெல்ல கண்ணீரோடு கரைவதை தடுக்க யாரால் முடியும் ?



இதோ அந்த வரிகள்.

பிரித்து படித்து முடிக்கும் முன்னே 
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே 
உன்னால் தானே நானே வாழ்கிறேன் 
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மெளனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் சேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா...
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்....
****

கேக்க/பார்க்க :


http://www.youtube.com/watch?v=49YBkMHXrbA

PRASATH

unread,
Jan 2, 2013, 2:39:27 PM1/2/13
to தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ் வாசல், தமிழ்த்தென்றல்
போகிற போக்கில் வாழ்க்கையின் தத்துவத்தையும், ஏய்த்துப் பிழைக்கும் மனிதர்களையும், குடும்பக்கட்டுப்பாடின் அவசியத்தையும் பாமரனுக்கும் புரிய வைக்க முடியுமா...

புரிய வைத்திருக்கிறாரே பாடலாசிரியர்...

என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட்டிலிருந்து...

//பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்
கேட்டா விறகுக்காகுமா ஞானத் தங்கமே
தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா//

எத்தனை எளிமையாய் மனித வாழ்வை, வாழ்க்கை தத்துவத்தைச் சொல்லி இருக்கிறார்... அத்தோடு நின்றாரா...

//பொன்னும் பொருளும் மூட்டை கட்டி போட்டு வச்சாரு
இவரு போன வருஷம் மழைய நம்பி விதை விதைச்சாரு
ஏட்டு கணக்கை மாத்தி மாத்தி எழுதி வைச்சாரு - ஈசன்
போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு//

ஆஹா... கள்ள கணக்கை காமிக்குறதைச் சொல்றப்ப கூட எத்தனை நாசூக்கான சொற்கள்...

மேலும் ஒரு படி போய்,

//அறுவடையை விதைக்கும் முன்னே விதைக்கலாகுமா - அட
ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேகமா
பத்துப் புள்ள பொறந்த பின்னும் எட்டு மாசமா - இந்த
பாவி மகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமா... //

பெண்களை குழந்தை பெற்று போடும் இயந்திரமாக நினைக்கும் மனோபாவத்தை எத்தனை அருமையாக எள்ளுகிறார்...

எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்... காட்சியமைப்பும் பார்க்க அலுக்காது...




2013/1/3 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 2, 2013, 2:43:01 PM1/2/13
to தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
hehe. அது செம பாட்டு.  முக்கியமா அந்த டான்ஸு.
****



//பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்
கேட்டா விறகுக்காகுமா ஞானத் தங்கமே
தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா//

இது பட்டினத்தார் அல்லது ஏதோ சித்தர் பாடலின் தழுவல் என்று நினைக்கிறேன்.


//அறுவடையை விதைக்கும் முன்னே விதைக்கலாகுமா - அட
ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேகமா
பத்துப் புள்ள பொறந்த பின்னும் எட்டு மாசமா - இந்த
பாவி மகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமா... //

அந்த இடத்துக்கு நகைச்சுவையாகவும்.. சிந்திக்கவும் வைக்கும் வரிகள்.

நன்றி பிரசாத்.




Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை / நாயென  எண்ணி நகரு.
-
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**



2013/1/3 PRASATH <pras...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 2, 2013, 2:44:20 PM1/2/13
to பண்புடன்
தீய்ந்திடும் தான் ஸ்ரீ. தங்கள் மனதில் தீ வைத்திருப்போர் மனம் எப்போதும் தீய்ந்துக் கொண்டே இருக்கும்.

பாயெனச் சொல்லிக் கிளம்பு -- இப்படி போட்டா  சரியான இலக்கணத்தோட வரும்.


Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை / நாயென  எண்ணி நகரு.
-
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**



2013/1/3 Srimoorthy.S <srimoo...@gmail.com>

Srimoorthy.S

unread,
Jan 2, 2013, 2:47:48 PM1/2/13
to பண்புடன்

அப்ப ஓகே

senshe senshe

unread,
Jan 3, 2013, 12:33:47 AM1/3/13
to panb...@googlegroups.com
ஜீவ்ஸ், முத்துக்குமார் தனது பாடல்களைப் பற்றி எழுதிய புத்தகம் ஒன்று உள்ளது. (பெயர் நினைவில் இல்லை. ஆசிப் அண்ணாச்சியின் கோலியோசில் இருக்கிறது). வாய்ப்பிருப்பின் அதனை வாங்கி படித்துப் பார்க்கவும்.

2013/1/2 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>



எடுத்துப் படிக்கும் முன்பே கடிதம்  எரிந்து போகுமா ?  தனிமையில்  இருக்கும் போது உன் கொலுசின் ஒலியும், உடைந்த வளையல்களின் வண்ணமுமாய் அறைகள் முழுதும் மின்னுமே..  என் கனவு தோன்றும் முன்னமே மறைகிறதே... எத்தனை துர் பாக்கியம் இது ?



--
- senshe

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 3, 2013, 2:23:07 AM1/3/13
to பண்புடன்
நன்றி சென்சி. தேடிப் பாக்கறேன்.


Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
-
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**



2013/1/3 senshe senshe <me.s...@gmail.com>

--

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 3, 2013, 6:12:25 AM1/3/13
to பண்புடன்
அண்ணாச்சி அது என்ன புக்கு சென்ஷி சொல்றது ?


Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
-
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**



2013/1/3 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 3, 2013, 7:03:38 AM1/3/13
to பண்புடன்
அடுத்தப் பாடல் :

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.

பாரதியின் முதல் வரியைத் தொடர்ந்து  வரும் கண்ணதாசனின் வரிகள்

காலச்சுமை தாங்கி, போலே மார்பில் எனைத் தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல் தணியுமடி.

அந்தப் படத்தில் அத்தனை கம்பீரமாகவும், மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் இருக்கும் ஒருவர் இப்படி அழ முடியுமா ? அதுவும் மனைவியின் மடியில் ? ஆம்   காரணம்

விழுதுகள் போல உறவுகள் ஆயிரமாயிரம் வந்தாலும் என்ன ?  அந்த மனைவியல்லவா ஆணிவேர் ? காலா காலத்துக்கும் தாங்கிப் பிடிப்பவள் அவளே அல்லவா ?

" ஆலம் விழுதினைப் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீயிருந்தாய்.. அதில் நான்
வீழ்ந்து விடாதிருந்தேன். "

எத்தனைப் புரிதல்கள் இருக்க வேண்டும். எத்தனை அனுபவங்களைக் கடந்து வந்திருக்க வேண்டும் ?

"பேருக்குப் பிள்ளை என்று பேசும் பேச்சுக்கும் சொந்தம் உண்டு
என் தேவையை யார் அறிவார்.. உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும் "

இந்த தாம்பத்யத்தை என் தாய் தந்தையிடம் கண்டேன்.  என் அம்மா ஒரு நாள் வீட்டில் இல்லை என்றாலும் அப்பாவின் முகம் வாடிவிடும். ஏதோ வேண்டுமென்று " ஆனந்தம் " என்று அழைத்து விட்டு அப்புறம் பதிலில்லை என்ற போதில் தானே பேசிக் கொள்வார்.  அப்புறமாகத்தான் அக்காவிடமோ இல்லை மற்றவர்களிடமோ பேச்சுப் போகும்.

இன்று என் தந்தை இல்லை.  இப்போதெல்லாம்  அம்மாவின் கண்ணீரில் அப்பாவின் நினைவு கலந்து கரைந்தோடும் போது  நினைத்துக் கொள்வேன் அதில் அப்பாவின் உதிரம் கலந்திருக்கும் என்று.

http://www.youtube.com/watch?v=ceLtI7itQz4


உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்ஞில் உதிர‌ம் கொட்டுத‌டி
என் கண்ணின் பாவை அன்றோ கண்ண‌ம்மா
என்னுயிர் நின்னதன்றோ..

உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயமானதடி
பொன்னை மணந்ததினால்
உலகில் புகழும் வளர்ந்ததடி
பேருக்கு பிள்ளை என்று
பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு
என் தேவையை யாரறிவார்
உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும்

கால சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதினை போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன‌
என் வேரென நீ இருந்தாய் ‍‍
அதில் வீழ்ந்து விடாதிருந்தேன்

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்ஞில் உதிர‌ம் கொட்டுத‌டி
என் கண்ணின் பாவை அன்றோ கண்ண‌ம்மா
என்னுயிர் நின்னதன்றோ..
**



ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 4, 2013, 2:37:15 AM1/4/13
to பண்புடன்

இன்றையப் பாடல் :

உனக்கென்ன மேலே நின்றாய்.. ஓ நந்த லாலா..
உனதாணைப் பாடுகின்றேன்.. நான் ரொம்ப நாளா..


1999ம் வருஷம். டாடா எலெக்ஸி கம்பினியில் காண்டிராக்டர் பேஸிஸில் சிஸ்டம் அட்மினிஸ்ட்டராக சேர்ந்திருந்த சமயம்.  அப்போது வேலை செய்த கம்பெனியில் எனக்கு சக வேலையாளாக சேர்ந்தவன் இராஜு பெருமாள்.  கொஞ்ச நாளில் ரொம்ப  நெருக்கமானோம். தமிழ் என்பது முக்கியக் காரணம். அந்த நேரத்தில் அவனுக்கு அவ்வளவாக வேலை தெரியாததால் எனக்கு ஜூனியராகப் போட்டு சொல்லிக் கொடுக்கச்  சொன்னார்கள். அவனையும் டாடா எலெக்ஸியின் இன்னொரு பிரிவிற்கு  அனுப்பினார்கள். அப்போது நான் டெக்னிகல் கல்வியை கொஞ்சம் அதிகம் படுத்திக் கொண்டால் டாடா எலெக்ஸியில் வேலை கிடைக்கும். அங்கிருந்த ஒருவரும் உதவுவதாகச் சொன்னார்.

அவர் தந்த கோப்புகளை  அவன் தடுத்து நிறுத்திவிட்டான். தரக்கூடாது என்றும் அப்படித் தந்தால் எங்களுடைய முதலாளியிடம் சொல்லி எங்களை அவர்கள் கம்பெனிக்கு இழுக்கப் பார்க்கிறார் என்று புகார் அளிப்பதாகவும் சொல்லி விட்டான்.

சில மாதங்கள் கழித்தே இந்த உண்மை எனக்குத் தெரியவந்தது. அதற்கு மறுநாள் வழக்கம் போலவே அவனும் நானும் வண்டியில் வந்து கொண்டிருந்த போது " அது வந்து நான் எதுக்குச் சொன்னேன்னா, உனக்குத் தரக்கூடாதுன்னு இல்ல  "...  " ஸ்டாப் இட் ராஜு. அது பத்தி அதிகம் பேசவேண்டாம் "

வழியில் ஒரு தேநீர் கடையில் அந்த நேரத்தில் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இராஜு பெருமாள், அதற்கப்புறம் நீ எங்கிருக்கிறாய் என்ற விவரங்கள் கூட தராமல் நட்பு விலகிப் போனது. எப்போதெல்லாம் இந்தப் பாடலைக் கேட்கிறேனோ அப்போதெல்லாம் உன் முகம் நினைவில் இல்லை என்றாலும் ஏதோ புகைக்குள்ளிருந்து எட்டிப் பார்ப்பது போல் நீ தெரிவதாக உணர்கிறேன்.

அதற்கப்புறம் நட்பின் பெயரால் வஞ்சிக்கப் படுவது பலரால் தொடர்ந்தது என்றாலுமே, கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்கப் பழகிக் கொண்டேன். வஞ்சித்து விலகும் நட்புகள் கண்டு மனம் வருந்துவதைக் குறைத்துக் கொண்டேன்.  இப்போதெல்லாம் மரத்துப் போயிருக்கிறது.

நண்பனால் வஞ்சிக்கப் பட்ட எவருக்கும் இந்தப் பாடல் ஒரு தேசியகீதமாக இருக்கும்.

" யாராரோ நண்பன் என்று
ஏமாந்த நெஞ்சம் உண்டு "

****
http://www.youtube.com/watch?v=mIRr_JjuB64


படம் - சிம்லா ஸ்பெஷல்
இசை
- விஸ்வநாதன்
பாடல்
- வாலி

தக தின தக ததிந்தோம்....
தக தின தக ததிந்தோம்....
தக தின தக ததிந்தோம்....
ததோம் ததோம் த தகதின தோம்
ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா!
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா

(உனக்கென்ன)

தாய் மடியில் பிறந்தோம்,தமிழ் மடியில் வளர்ந்தோம்!
நடிகரென மலர்ந்தோம்,நாடகத்தில் கலந்தோம்!
ததோம் ததோம் த தகதினதோம் ததோம்த தகதினதோம்

ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை
ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை
சிந்தாத கண்ணீர் இல்லை, சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை

கால் கொண்டு ஆடும் பிள்ளை,நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா? நீ சொல்லு நந்தலாலா!

(உனக்கென்ன)

யாராரோ நண்பன் என்று,ஏமாந்த நெஞ்சம் ஒன்று
யாராரோ நண்பன் என்று,ஏமாந்த நெஞ்சம் ஒன்று

பூவென்று முள்ளைக் கண்டு,புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு,நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போலக் கள்ளும் உண்டு,நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா? பாலா? நீ சொல்லு நந்தலாலா!

(உனக்கென்ன)


தக தின தக ததிந்தோம்....
தக தின தக ததிந்தோம்....
தக தின தக ததிந்தோம்....
ததோம் ததோம் த தகதின தோம்
ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம்


(உனக்கென்ன)



Iyappan Krishnan
*>*<*
பொறுப்புத் துறப்பி : பண்புடன் குழுவில் நான் எழுதும் கருத்துகள் , பெயர் குறித்துச் சொன்னாலொழிய யாரையும் தனிப்பட்ட முறையில்  குறித்து  எழுதப் படுவதல்ல. மாறாக நீங்களே அவ்வாறு கருதினால் அந்தக் கற்பனைக்கு நானும் என் எழுத்தும் பொறுப்பாக முடியாது.
*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
*>*<*

தமிழ்ப் பயணி

unread,
Jan 4, 2013, 2:59:55 AM1/4/13
to பண்புடன்
அரு​மையான பகிர்வு.


2013/1/4 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

சில மாதங்கள் கழித்தே இந்த உண்மை எனக்குத் தெரியவந்தது. அதற்கு மறுநாள் வழக்கம் போலவே அவனும் நானும் வண்டியில் வந்து கொண்டிருந்த போது " அது வந்து நான் எதுக்குச் சொன்னேன்னா, உனக்குத் தரக்கூடாதுன்னு இல்ல  "...  " ஸ்டாப் இட் ராஜு. அது பத்தி அதிகம் பேசவேண்டாம் "

வழியில் ஒரு தேநீர் கடையில் அந்த நேரத்தில் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இராஜு பெருமாள், அதற்கப்புறம் நீ எங்கிருக்கிறாய் என்ற விவரங்கள் கூட தராமல் நட்பு விலகிப் போனது. எப்போதெல்லாம் இந்தப் பாடலைக் கேட்கிறேனோ அப்போதெல்லாம் உன் முகம் நினைவில் இல்லை என்றாலும் ஏதோ புகைக்குள்ளிருந்து எட்டிப் பார்ப்பது போல் நீ தெரிவதாக உணர்கிறேன்.

அதற்கப்புறம் நட்பின் பெயரால் வஞ்சிக்கப் படுவது பலரால் தொடர்ந்தது என்றாலுமே, கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்கப் பழகிக் கொண்டேன். வஞ்சித்து விலகும் நட்புகள் கண்டு மனம் வருந்துவதைக் குறைத்துக் கொண்டேன்.  இப்போதெல்லாம் மரத்துப் போயிருக்கிறது.

நண்பனால் வஞ்சிக்கப் பட்ட எவருக்கும் இந்தப் பாடல் ஒரு தேசியகீதமாக இருக்கும்.

" யாராரோ நண்பன் என்று
ஏமாந்த நெஞ்சம் உண்டு "

Namakkal Shibi

unread,
Jan 4, 2013, 10:55:50 AM1/4/13
to panb...@googlegroups.com
இந்தப் பாடலை அன்னிக்கு நீங்க அனுபவிச்சி பாடினப்பவே நினைச்சேன்! பின்னணில ஏதோ கதை இருக்கும்னு!

4 ஜனவரி, 2013 1:07 pm அன்று, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> எழுதியது:

வில்லன்

unread,
Jan 4, 2013, 11:29:10 AM1/4/13
to panb...@googlegroups.com
http://www.youtube.com/watch?v=V6zHYavgwWc


மறுபடியும் படத்திலே வர்ர எல்லோரும் சொல்லும் பாட்டு....

இந்த பாட்டு ஏன் சமீபத்துல டிவியிலே கேட்டேன்...

மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே,,, என்று பாட்டு லைன் வரும் போது
ரேவதி மது கோப்பையை கைப்பற்றி ஒரே கல்ப்ல அடிப்பார். இதுல எதோ குறியீடு எதேச்சையாகவோ
திட்டமிட்டோ உள்ளதாகவே எனக்கு தோன்றியது...

அதனால இந்த பாட்டு பிடிக்கும்...

//நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்
ரயில் ஸ்நேகமா புயலடித்த மேகமா//

//மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவரும் நெஞ்சிலே
எது கூடுமோ எது விலகி ஓடுமோ

மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே//

வித்யாசாகர்

unread,
Jan 5, 2013, 8:23:54 AM1/5/13
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ் வாசல், தமிழ்த்தென்றல்
நான் அதிகமாக கேட்ட பாடல்களில் ஒன்று ஐயப்பன் இது. இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் ஏனோ எனது இறந்த தங்கை வித்யா நினைவில் நிழலாடிக் கொண்டேயிருப்பாள். மனசு கனத்துப் போகும். என்றாலும் என் தங்கையின் நினைவில் ஆழ்ந்திருக்க இப்பாடலை அடிக்கடி கேட்பதுண்டு..

உண்மையில் மனதின் ஆழம் தொடும் இசை வரிகளென கண்ணீரின் ஈரம் காய்ந்திடாதப் பாடலிது..

வித்யாசாகர்

2013/1/2 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>



--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919840502376
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

meena muthu

unread,
Jan 5, 2013, 9:08:03 AM1/5/13
to பண்புடன்
2013/1/4 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
நண்பனால் வஞ்சிக்கப் பட்ட எவருக்கும் இந்தப் பாடல் ஒரு தேசியகீதமாக இருக்கும்.//
 
ஒவ்வொரு  பாடலுக்குமான சம்பவங்கள்  மனம் கனத்து நெகிழச்செய்கிறது.

//இந்த தாம்பத்யத்தை என் தாய் தந்தையிடம் கண்டேன்.  என் அம்மா ஒரு நாள் வீட்டில் இல்லை என்றாலும் அப்பாவின் முகம் வாடிவிடும். ஏதோ வேண்டுமென்று " ஆனந்தம் " என்று அழைத்து விட்டு அப்புறம் பதிலில்லை என்ற போதில் தானே பேசிக் கொள்வார்.  அப்புறமாகத்தான் அக்காவிடமோ இல்லை மற்றவர்களிடமோ பேச்சுப் போகும். 

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 5, 2013, 1:16:15 PM1/5/13
to பண்புடன்
நன்றி த.ப அண்ணே


Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/1/4 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 5, 2013, 1:16:49 PM1/5/13
to பண்புடன்
மாமே.. அந்த ஆடியோ இப்ப கிடைக்கலீங்கோவ். மறுக்கா பாடிடலாமா?


Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/1/4 Namakkal Shibi <nrs...@gmail.com>

Namakkal Shibi

unread,
Jan 5, 2013, 1:17:44 PM1/5/13
to panb...@googlegroups.com
ம்ம் பாடுங்க! 

5 ஜனவரி, 2013 11:46 pm அன்று, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> எழுதியது:

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 5, 2013, 1:19:32 PM1/5/13
to பண்புடன்
மனச்சோர்வில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு அந்த நேரத்தில் அதில் இருந்து விடுபட  எது கிடைக்கிறது ? முதலாவதாக இசை அடுத்து மது.  எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில்  இதுவும் ஒன்று.  நன்றி வில்லன்.


Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/1/4 வில்லன் <oms...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 5, 2013, 1:20:00 PM1/5/13
to பண்புடன்
நன்றி வித்யாசாகர்.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 5, 2013, 1:20:19 PM1/5/13
to பண்புடன்
நன்றி மீனா மேடம் :)

Namakkal Shibi

unread,
Jan 5, 2013, 1:26:03 PM1/5/13
to panb...@googlegroups.com
இச்சாதாரி பாம்புகள் மனித உருவெடுத்து ஆடிப்பாடுவது அமைக்கப்பட்ட பாடல்! இசையும், பாடிய குரல்களும் அருமை! வரிகளும்! 


ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணாஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா
ஆண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ...ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ண
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணே ... ஏ....ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ....ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ண
பெண்: அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
ஆண்: இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே
பெண்: அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
ஆண்: இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே
பெண்: அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான
ஆண்: இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே
பெண்: என் மன்னனே... ஒரே கண்ணன் ஒன்றே ராதை வாராய் கண்ணா...ஆ...
ஆண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ண
ஆண்: இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன
பெண்: நான் வெறும் கோயில் ஆகாமல் காக்க
ஆண்: உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும
பெண்: அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்கதேர் கொண்டு வா....கண்ணன் வந்து கீதம் சொன்னால், நான் ஆடுவேன்....
ஆண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஓ...ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே
பெண்: அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன
ஆண்: இந்த மழைமேகம் உன்மீது ஆடும
பெண்: அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன
ஆண்: இந்த மழைமேகம் உன்மீது ஆடும்வண்ணப் படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம
பெண்: இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும
ஆண்: புது வெள்ளமே... ஏ...ஒரே சொர்கம் எந்தன் பக்கம், வேறில்லையே...
பெண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா....

பாடல் பாடியவர் : வாணி ஜெயராம் , எஸ்.பி.பாலசுப்ரமணியம்
படம்: நீயா
வருடம் :1979
இசை: சங்கர்-கணேஷ்

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 5, 2013, 1:36:35 PM1/5/13
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், தமிழ்த்தென்றல்
இன்றைய பாடல் :

ஒரு துணை எப்படி இருக்க வேண்டும் ? அது நட்போ, மனைவியோ ..    விழியிரண்டு அழும் நேரம் தான் கூடச் சேர்ந்து அழும். அத்தோடதன் கரங்கள் விழிநீரைத் துடைத்துத் தள்ளும். நம் மகிழ்வில் அது முதன்மையாக முன் நிற்கும்.  நம் வாழ்க்கை வசந்தமாக இருந்தால் அது மரக்கிளையின் பூப்போல மலர்ந்து  நிற்கும். ஆனால் நாம்  துன்பத்தில் இருக்கும் போது நம்மைத் தாங்கும் வேராக அது மாறி நம்மை வீழாமல் தடுக்கும். அப்படியா நட்போ உறவோ பெற்றவர்களை விட உலகில் மிகப் பெரியப் பணக்காரர்கள் யாரேனும் இருக்கிறார்களா ?

ஒரு கதை உண்டு.

ஒருவனுக்கு தான் கடந்து வந்தப் பாதையை திரும்பிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படிப் பார்க்கும் போது அவன் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களில் அவன் காலடித் தடங்களுடன் மேலும் இரண்டு காலடித் தடங்கள் இருந்தன. ஆனால் அவன் மிகவும் சோதனையில் இருந்த போது வெறும் இரண்டு காலடித் தடங்கள் மட்டுமே. அவன் இறைவனைத் துதித்தான். இறைவனும் எதிர் நின்று என்ன மகனே என்று கேட்டார். என் வாழ்க்கைப் பயணத்தில் என்னுடன் வந்தக் காலடித்தடங்கள் எதுவென்று கேட்டான். இறைவன் அது என்னுடையவை. உன்னை விட்டு நான் எப்போது பிரிந்திருக்கிறேன் என்றார்.  அந்த மனிதன் ஆற்றொனாச் சோகத்துடன் சொன்னான். இறைவா நான் எப்போதெல்லாம் உன் தேவையை நோக்கிக் காத்திருந்தேனோ அப்போதெல்லாம் நீ  என் பக்கத்தில் இருக்கவில்லையே, என் சந்தோஷத்தில் மட்டுமே பங்கெடுத்திருக்கிறாய். பார், நான் துன்பத்தில் உழன்ற நேரத்தில் உன் காலடித் தடங்கள் இல்லை என்றான்.

இறைவன் சிரித்துச் சொன்னான், மகனே, நீ துன்பத்தில் இருந்த போதெல்லாம் உன்னை என் தோளில் சுமந்திருந்தேன். ஆகவே நீ அங்கே காண்பது உன் காலடித் தடங்களே அல்ல. அவை என்னுடையவை என்றான்.

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுதில் உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்..


மேலே கூறிய அத்தனையும், இந்த  இரண்டு வரிகளில் அடைத்து சொன்ன அந்தக் கவிஞரை எவ்வளவுப் பாராட்டினால் தகுமென்கிறீர்கள் ? அந்தப் பாட்டைக் கேட்பதே அவருக்கு நாம் தரும் மிகப்பெரிய மரியாதையாக இருக்கும் அல்லவா ?



இதோ உங்களுக்காக அந்தப் பாடல்.

http://www.youtube.com/watch?v=TrN8d5lm1f0


Album:-Ninavellam Nithya
Singers:- S. Janaki, SPB
Music:- Ilayaraja
Lyrics:- Vairamuthtu



ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள் ஆ ஹா
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்

இலைகளில் காதல் கடிதம்
வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும்
இளமை வரையும் ஓர் கவிதை

இலைகளில் காதல் கடிதம்
வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும்
இளமை வரையும் ஓர் கவிதை

மௌனமே சம்மதம் என்று ஹா
தீண்டுதே மன்மத வண்டு ஹா
மௌனமே சம்மதம் என்று 
தீண்டுதே மன்மத வண்டு 
பார்த்தாலே தள்ளாடும் பூஞ்செண்டு

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்

பூவிலே மெத்தைகள் தைப்பேன் ஹா
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் ஹா
பூவிலே மெத்தைகள் தைப்பேன் 
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் 
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஹா

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள் 
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 5, 2013, 1:37:12 PM1/5/13
to பண்புடன்

வாணி ஜெயராமின் குரலுக்காகவே பல முறைக் கேட்கத் தூண்டும் பாடல் இது :) நன்றி மாம்ஸ்

Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/1/5 Namakkal Shibi <nrs...@gmail.com>

Srimoorthy.S

unread,
Jan 5, 2013, 2:30:15 PM1/5/13
to பண்புடன்

நான் பிரம்மிச்ச வரிகள் கொண்ட பாடல்.
வசந்தகால நதியலைகள்.

என்னதான் வரிக்கு வரி மனப்பாடம் பண்ணியிருந்தாலும் ஒரே வாரத்துல மறந்துடுது. பெரிய டங் ட்விஸ்டர்.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 5, 2013, 2:32:22 PM1/5/13
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், தமிழ்த்தென்றல்
நாளைக்கு கொஞ்சம் பிசி. அதனால இன்னைக்கே நாளையப் பாடல் :))
***

எத்தனை வீரம் இருந்துமென்ன ? எத்தனை  துணை இருந்து என்ன ? செய் தருமம் முன்னிற்கிறது. அதை தாண்டி எது ஜெயிக்கும் ?  தாயிழந்தான், பேரிழந்தான், தம்பியிழந்தான் வேறென்ன உயிரும் இழக்க இருக்கிறான். ஆனால் உயிர் பிரிய மறுக்கிறது. தருமம் காக்கிறது அப்படி இருக்கையில்  கர்ணனை யார் கொல்ல முடியும் ? 

அர்ஜ்ஜுனன் தவிக்கிறான், கர்ணன் இறந்தால் ஒழிய அவன் தலமையைத் தவிர்க்க முடிந்தாலொழிய வெற்றியின் அடுத்தப் படியை நோக்கி நகர முடியாது.  அனைத்தும் அறிந்த மாயன் இதையும் சரி செய்தாகவேண்டும்.  தருமத்தை  தெய்வமே வணங்கச் செல்கிறது. தன் பழியறிந்து நாணுகிறது.

தாய்க்கு நீ மகனில்லை, தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா  கர்ணா
உன்பழி கொண்டேனடா நானும் உன் பழி கொண்டேனடா

எதிரி தான், அவன் இறக்க வேண்டியவன் தான். ஆனால் மாயன் தான் மன்னிப்புக்கு  இறைஞ்சி  நிற்கிறான்.

மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா ..
**
இந்தப் பாடலைக் கேட்கும் போது மனம் உடையும். கண்ணீர் மல்கும். இது படப்பாட்டு என்பதை மறந்து அந்தக் கர்ணனாக தன்னை உருவகித்துக் கொள்ளும் மனது.  எதிர் வரும் கண்ணனை எதிர் நோக்கி மனம் காத்திருக்கத் துடிக்கிறது. கண்ணா என் பிறப்பறுத்து என்னை உய்விக்க விரைந்து வருவாய் கண்ணா என்று இறைஞ்சுகிறது.

என் தந்தை நான் பிறப்பதற்கு முன்பு வரைக்கும் நாடகத்தில் கிருஷ்ணனாக வேடமிட்டு  நடிப்பாராம்.   நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட அந்த நாட்களில் மாமிசம் சாப்பிடுவதில்லை, தினமும் தியானம் என்று சற்றேறக் குறைய தவவாழ்வில் இருப்பார் என்று அம்மா சொல்லுவார்கள். என்டி.ஆரை கிருஷ்ணராகப் பார்க்கும் நேரமெல்லாம் என் தந்தை கிருஷ்ணராக எப்படி நடித்திருப்பார் என்று கற்பனைத் தோன்றும்.
***

இந்தப் பாடலின் இடையில் கண்ணன் பேசுவதாக ஒரு வசனம் வரும்

" அய்யகோ, தர்மம் இப்படி வீழ்ந்து கிடக்கிறதே, யாசிக்க வந்த நானும் ஏதும் பெற முடியாத பாவி ஆகிவிட்டேனே" என்று.   என்டி ஆர்க்கு டப்பிங் குரல் கொடுத்த திரு கே.வி.ஸ்ரீனிவாஸ் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், என்டி. ஆரின் வெற்றி இந்த அளவுக்குத் தொடர்ந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

திரு கேவி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் பேட்டி இங்கே
http://www.youtube.com/watch?v=DXM9_h36wF8

*****
ஒவ்வொரு முறையும் கேட்கும் போதும் உள்ளத்தை உடைத்து, கண்களில் நீரை தாரைத் தாரையாக வார்க்கச் செய்யும் இந்தப் பாட்டில் அப்படி எது தான் சிறந்தது ? வரிகளா ? இசையா ? சீர்காழி கோவிந்தராசன் அவர்களின் குரலா ?  எதைத் தனியாக பிரித்துச் சொல்ல? அத்தனையும் கலந்து தானே உயிரை உருக்குகிறது இந்தப் பாடல் ? சூப்பர் சிங்கர் ஜூனியரில் கௌதம் உடைந்து அழுத போது என்னுடன் எத்தனை எத்தனை கண்கள் நீரில் மிதந்தனவோ...

http://www.youtube.com/watch?v=uSjRhiugVFs

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா

(உள்ளத்தில் நல்ல உள்ளம்)


மன்னவர் பணியேற்கும்
கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா


செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழுந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா

(உள்ளத்தில் நல்ல உள்ளம்)


படம்: கர்ணன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 5, 2013, 2:35:22 PM1/5/13
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், தமிழ்த்தென்றல்


2013/1/6 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>


இந்தப் பாடலின் இடையில் கண்ணன் பேசுவதாக ஒரு வசனம் வரும்

" அய்யகோ, தர்மம் இப்படி வீழ்ந்து கிடக்கிறதே, யாசிக்க வந்த நானும் ஏதும் பெற முடியாத பாவி ஆகிவிட்டேனே" என்று.  

மன்னிக்க. இது பாடலின் முடிவில் வரும். 

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 5, 2013, 2:36:22 PM1/5/13
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், தமிழ்த்தென்றல்
http://www.youtube.com/watch?v=HmxV3GJ2ixY&feature=endscreen&NR=1  இதில் என்டிஆர் குரல் கேட்டால் யாரோ புது மனிதனின் குரல் போலத் தொனிக்கிறது :))).


Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


sk natarajan

unread,
Jan 5, 2013, 9:16:48 PM1/5/13
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ் வாசல், தமிழ்த்தென்றல்
நான் ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/1/6 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
நாளைக்கு கொஞ்சம் பிசி. அதனால இன்னைக்கே நாளையப் பாடல் :))

sk natarajan

unread,
Jan 5, 2013, 9:19:26 PM1/5/13
to thamiz...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல்
அருமையான பாடல்
நான் பல முறை ரசித்து பாடும் பாடல் இது 



வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்

பூவிலே மெத்தைகள் தைப்பேன் ஹா
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் ஹா
பூவிலே மெத்தைகள் தைப்பேன் 
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் 
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஹா


என்ன அருமையான வரிகள் இது
உண்மைக் காதலை வெளிக் கொணரும் அற்புத வரிகள் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/1/6 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 9, 2013, 10:59:43 AM1/9/13
to தமிழ் வாசல், பண்புடன், தமிழ் சிறகுகள்
கண்ணதாசனின் வரிகள் வாழ்க்கையின் பல தருணங்களில் உங்களுடன் பயணிக்கும். நீங்கள் தேவை இல்லை, வேண்டாம் என்றாலும் கூட.   ஒரு மங்கிய மாலைப் பொழுது, என் அண்ணன் விபத்தில் இறந்து சில மாதங்கள் ஆன  பின்னாள் ஒரு நாள். எத்தனையோ யோசனைகள்.  கண்ணீர் தடுக்க இயலாமல் வழிந்து கொண்டிருக்கிறது.   இறந்த பின் என் அண்ணன் முகத்தை பக்கத்தில் இருந்தும் நான் பார்க்கவே இல்லை.  காரணம்  கடைசியாக அவரைப் பார்த்த போது அவரது சிரித்த முகம் மட்டுமே நினைவில் இருக்கட்டும் என்று தான்.

கண்களில் நீர்வழிய படுத்துக் கொண்டிருக்கிறேன். நான் அப்போது இருந்தது பெங்களூரில் இன்னொரு அண்ணன் வீட்டில். நான் உள்ளே படுத்திருந்ததால் நான் இருப்பதை கவனிக்கவில்லை யாரும்.  எங்கள் வீட்டில் அப்போது டேப்ரிக்கார்டரில் எப்போதும் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் வழக்கம் உண்டு.  சற்றேறக் குறைய நாள் முழுதும் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  எனக்கு அது இறந்து போன என் அண்ணனால் பழகியது. நள்ளிரவு 2, 3 என்று பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருப்போம். இந்த மனநிலையில் எந்தப் பாடலைக் கேட்டாலும் அவரின் நினைவு வரும் என்று அணைத்து வந்திருந்தேன்.

சோகத்தின் உச்சியில் மனம் நின்று கொண்டு செத்துப் போ என்று சொல்கிறது. அந்த ஒரு சொல் மனதில் எழுந்த அடுத்த நொடி, தலை முழுவதிலும் அது எதிரொலிக்கிறது. எனக்கு நானே மனதில் சொல்லிக் கொள்கிறேன். இல்லை இல்லை  சொல்லிக் கொல்கிறேன். 

உடலில் வலி மிகுந்து, என்னில் இருந்து எதையோ இழந்து கொண்டிருப்பதை உணர்கிறேன். அண்ணன் என் எதிரில் இல்லை. இருந்தால் அவர் எனக்கு ஏதேனும் ஒரு வகையில் நான் உன்னுடன் இருக்கிறேன் என்று உறுதி கூறட்டும், இல்லையே  நீ இறந்து போ என்று மந்திரம் போல் இறந்து போ இறந்து போ என்று எனக்கு நானே கட்டளை இட்டுக் கொண்டிருக்கிறேன்.    அந்த நேரத்தில்  வேலையில் இருந்து திரும்பிய அண்ணன்  டேப் ரிகார்டரில் பாடலை போடுகிறார்.  அது

"நெஞ்சம் மறப்பதில்லை
நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை "
....
....
....
ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்
உயிரால் இணைந்திருப்பேன்
அதை இறப்பினிலும்
மறு பிறப்பினிலும் நான்
என்றும் நினைத்திருப்பேன்
நான் என்றும் நினைத்திருப்பேன்
***

அந்தப் பாடலைக் கேட்டதும் பெரிய கேவலுடன் என் அழுகை வெடித்தது. நல்ல வேளையாக பாடலின் சத்தத்தில் வெளியில் கேட்காமல் போனதால் யாருக்கும்  தெரியாமல் போனது. இதோ உன்னுடன் இருக்கிறேன் என்று காற்றின் வழியாக என் அண்ணன் சொன்னதாகவே  எனக்குப் பட்டது. 

எத்தனை முறை அவருடன் கேட்டிருப்பேன் இந்தப் பாடலை? ஆனால் இன்று தனியாகக் கேட்கிறேன். இதையும் அவர்  என்னுடன் இருந்து இரசித்திருப்பார். இப்போது அழ மனமில்லை. ஆனால் கண்கள் என்பேச்சை கேட்க விரும்பியதில்லை.   கனக்கும் மனதுக்கு சோகமும் ஒரு சுகமென  மனதை வருடிச் செல்கின்றன வரிகள்.

http://www.youtube.com/watch?v=TyPPUBH6otg
http://www.youtube.com/watch?v=_nAOY-ywYWM

பெண்:ஆஆ..............

நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை
(நெஞ்சம் மறப்பதில்லை)

பெண்: நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை
(நெஞ்சம் மறப்பதில்லை)

பெண்: ஒரு மட மாது உருகுகின்றாளே
உனக்கா புரியவில்லை
இது சோதனையா
நெஞ்சின் வேதனையா
உன் துணையேன் கிடைக்கவில்லை
உன் துணையேன் கிடைக்கவில்லை
(நெஞ்சம் மறப்பதில்லை)

ஆண்: ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்
உயிரால் இணைந்திருப்பேன்
அதை இறப்பினிலும்
மறு பிறப்பினிலும்நான்
என்றும் நினைத்திருப்பேன்
நான் என்றும் நினைத்திருப்பேன்

(நெஞ்சம் மறப்பதில்லை)

Imsai Arasi

unread,
Jan 9, 2013, 3:59:23 PM1/9/13
to tamizhs...@googlegroups.com, பண்புடன்
படிக்கும் போதே மனம் கனத்தது..... பிரிவு, வேதனை, நியாபகம்.... எல்லா உணர்வுகளும் உள்ள பாடல் வரிகள் :(

அரசி...


2013/1/9 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

sk natarajan

unread,
Jan 9, 2013, 8:24:49 PM1/9/13
to thamiz...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள்
நெஞ்சம் கனக்கின்றது
அடிபட்ட மனதில் சில நினைவுகளை நினைக்க தூண்டும் பாடல் இது 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/1/9 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

Srimoorthy.S

unread,
Jan 9, 2013, 10:02:36 PM1/9/13
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்

இவ்வளவு சாஃப்ட் மைண்டடா

ஆசாத்

unread,
Jan 10, 2013, 12:10:08 AM1/10/13
to panb...@googlegroups.com
> SHIBI N R wrote:
இச்சாதாரி பாம்புகள் மனித உருவெடுத்து ஆடிப்பாடுவது அமைக்கப்பட்ட பாடல்! 

இந்தியில் இப்பாடல் அன்றைய ஹெவி வெய்ட் ஆண்குரலால பாடப்படவில்லை. ரஃபியோ, கிஷோரோ கிடையாது. தூர்தர்ஷனின் தேசபக்திப்பாடல் புகழ் மகேந்திர கபூர் பாடினார். தேரே சங் ப்யார் மை நஹீ தோட்னா என்று வரும். அன்றைய இந்தித் திரை நடன ஹெவிவெய்ட்டுகள் ஜிதேந்திரா + ரீனா ராய் ஆடினார்கள். 

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 10, 2013, 8:02:36 AM1/10/13
to பண்புடன்
நன்றி அரசி :)  சுசீலாவின் solo கேளுங்க இந்தப் பாட்டை. இன்னும் சூப்பரா இருக்கும்.


Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/1/10 Imsai Arasi <imsaia...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 10, 2013, 8:03:10 AM1/10/13
to தமிழ் வாசல், பண்புடன், தமிழ் சிறகுகள்
நன்றி எஸ்.கே சார் :)


Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/1/10 sk natarajan <sknatar...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 10, 2013, 8:04:41 AM1/10/13
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்
அவ்வ். வீக்னெஸ்லாம் வெளி வந்துடும் போல இருக்கே :)) பச்ச நான் ஒரு டெர்ர்ர்ரர்ர்ர்ர்ர்



Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/1/10 Srimoorthy.S <srimoo...@gmail.com>

இவ்வளவு சாஃப்ட் மைண்டடா

--

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 10, 2013, 8:05:19 AM1/10/13
to பண்புடன்
அண்ணே அந்த பாடலைப் பகிர்ந்து உங்களின் நினைவுகளையும் கலந்து எழுதுங்களேன். ?


Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/1/10 ஆசாத் <banu...@gmail.com>
> SHIBI N R wrote:
இச்சாதாரி பாம்புகள் மனித உருவெடுத்து ஆடிப்பாடுவது அமைக்கப்பட்ட பாடல்! 

இந்தியில் இப்பாடல் அன்றைய ஹெவி வெய்ட் ஆண்குரலால பாடப்படவில்லை. ரஃபியோ, கிஷோரோ கிடையாது. தூர்தர்ஷனின் தேசபக்திப்பாடல் புகழ் மகேந்திர கபூர் பாடினார். தேரே சங் ப்யார் மை நஹீ தோட்னா என்று வரும். அன்றைய இந்தித் திரை நடன ஹெவிவெய்ட்டுகள் ஜிதேந்திரா + ரீனா ராய் ஆடினார்கள். 

--

AbulKalam Azad

unread,
Jan 10, 2013, 8:46:35 AM1/10/13
to பண்புடன்
அண்ணே அந்த பாடலைப் பகிர்ந்து உங்களின் நினைவுகளையும் கலந்து எழுதுங்களேன். ?

ஜீவ்ஸ்,

ரொம்ம்ம்ம்ப கொசுவத்தி ஆகிரும் :-) 

மிட் செவண்ட்டீஸுல்ல என்னோட பள்ளிக்காலங்கள். பத்தாவதோ பதினொண்ணாவதோ படிச்சேன். தட்டுத்தடுமாறி சென்னை வழக்கு உருது பேசக் கத்துக்கிட்ட காலம். அந்த பீரியடுல வந்த இந்திப்பாட்டுங்க மேல ஒரு தனி ஈர்ப்பு இருந்துச்சு. 

ஒன்றும் தெரியாத பெண்ணோன்னு இதயக்கனில ஒரு பாட்டு வருமே, அது இந்தில போலாபாலா செஹ்ரா ஹௌன்னு வரும், அத்த ஒருத்தரப் பாட வெச்சு, நினைத்தாகே இனிக்கும்ல ரஜினி ஒரு கேசட் ப்ளேயரத் தூக்கிக்கினு அலைவாரே அந்த மாதிரி ப்ளேயர்ல ரெகார்டு பண்ணி கேட்டிருக்கோம். கேசட்டெல்லாம் கெடையாது ஜீவ்ஸ், வாங்க முடியாது.

’நாம் கூம் ஜாயேகா செஹரா யே பதல் ஜாயேகா’ன்னு ஹேமமாலினி பாட்டு ஒண்ணு வந்துச்சு இந்த நேரத்துல, என்னா ஒரு ஈர்ப்புன்றீங்க. அதுலயும் இந்தப் படத்துல ஹேமாஜி போட்ருந்த உடை இருக்குல்லீங்களா, அவ்ளோ அழகா இருக்கும். படம் கினாரா.

ஹோக்கே மாயூஸ் தேரே தர்ஸே சவாலீ நா கயான்னு ரஃபி சாஹேபுது ஒரு கவ்வாலி பாருங்க அடடா...சான்ஸே இல்ல. ப்ஹூலோன்கா தாரோன்கா, சல்சலா சல் ஃபக்கீரா சல்சலா சல்..அப்படீ அது ஒரு காலம்.

அமீன் சயானியோட பினாகா கீத்மாலாதான் கதி. இல்லேன்னா இருவத்தஞ்சு காசு கொடுத்து தாஜ், ஃபிர்தௌஸுன்னு மலையாளி காக்கா ஹோட்டல் ஜூக் பாக்ஸுல கேக்கணும். ஒரு டீ, ஒரு பாட்டு அம்பது காசு காலியாகிரும் ஜீவ்ஸ், ஆனாலும் கேப்போமுல்ல. இப்ப இருக்ற தலைமுறை ரொம்பவும் கொடுத்து வெச்சதுன்னுதான் சொல்லணும். 

பேக் டு நாகின் :-)

சங்கர் கணேஷ் இந்தப் பாட்ட ரீக்ரியேட் செஞ்சிருப்பாரு - ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்...அட்டகாசமான பாட்டு. ஜீவ்ஸ், ஸ்ரீபிரியாவ ரீனா ராய்க்கு மேட்சுன்னு சொல்லலாம், டான்ஸ் மூவ்மெண்ட் ஓக்கே, ஆனா, இந்தில ஜிதேந்திராவாட்டமா ஃபில்மி டான்ஸுல கலக்குற ஆளுக்கு தமிழ்ல சந்திரமோகன்னு ஒருத்தரப் போட்டாங்க, ஆண் பாம்போட டான்ஸ் முவ்மெண்ட் கொஞ்சம் ஏத்துக்கறாப்புல இருக்காது. எங்க நண்பர்கள் வட்டத்துல இந்தப் பாட்டும் கொஞ்சம் பிரபலம்.

Jeeva

unread,
Jan 10, 2013, 1:47:38 PM1/10/13
to பண்புடன்

2013/1/10 AbulKalam Azad <banu...@gmail.com>
அருமை அண்ணே :) இப்ப வேணுஜி இல்லையேன்னு ஏக்கமா இருக்கு.

லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

unread,
Jan 11, 2013, 4:52:25 AM1/11/13
to panb...@googlegroups.com
பாரதி படத்தில் வரும் எதிலும் இங்கு இருப்பான் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். மதுபாலகிருஷ்ணனின் குரலில் ஒலிக்கும் பாடல் இது. எழுதியவர் புலமைப்பித்தன்.


எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?

தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?

வரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொறு வரம்  தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தர தகும் நெறி வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் என தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் எனும் அடியார்க்கொரு தொண்டன்
பற்றுத் தளைக்கு நெருப்பவன்
ஒற்றை கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிரைக்குள் நெருப்பை வளர்த்து
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான்அறிவாரோ?

தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை
உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம்தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப் படித்து முடித்த  ஒருத்தன்
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?

தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?


Jeeva

unread,
Jan 11, 2013, 7:53:02 AM1/11/13
to பண்புடன்
அருமையான பாடல் அண்ணி :)

//எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?//

இந்தப் பாடலில் உள்ள வார்த்தைக் கோவைகள், ராஜாவின் இசை என  அப்படியே உள்ளிழுக்கும்.


Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/1/11 லக்ஷ்மி பாலகிருஷ்ணன் <lakshm...@gmail.com>

Srimoorthy.S

unread,
Jan 11, 2013, 7:56:44 AM1/11/13
to panb...@googlegroups.com

கோவையா கோர்வையா

Ahamed Zubair A

unread,
Jan 11, 2013, 7:57:38 AM1/11/13
to panb...@googlegroups.com
இன்னைக்கு கே டிவில “உழைக்கும் கரங்கள்” படம் போட்டாங்க... இன்னும் 3 மணி நேரத்தில ஏர்ப்போர்ட் போகணும்... நிறைய வேலை இருக்கு. ஆனாலும் இந்தப் படத்தை முழுசா பார்த்தேன்.

நாளை உலகை ஆளவேணும் உழைக்கும் கரங்களே...

இந்தப் பாட்டைப் பாடுறப்போ தலைவரே நேர்ல வந்து அட்வைஸ் சொல்றாப்புல இருந்தது.

என்னோட ஜூனியர்ஸை இன்னைக்கு ஆபிஸ் வாங்கப்பான்னு கூப்பிட்டேன். வெள்ளிக்கிழமை விடுமுறை சார். ஓவர் டைம் கிடைக்குமான்னு கேட்டாங்க... தலைவர் பாட்டு தான் இருக்கே...

“கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே”..

சொல்லி கூட்டிட்டு வந்தேன்.

பாஸ் கிட்ட ஓவர் டைம் கேட்டு மெயில் அனுப்பினேன்.. என்ன ஆச்சர்யம்... வாவ்.... பசங்களுக்கு ஓவர் டைம் அப்ரூவ் ஆகிடுச்சு...

தலைவர் பாட்டு பாட்டுதான்...

Jeeva

unread,
Jan 11, 2013, 7:59:46 AM1/11/13
to பண்புடன்
கோவை :)  கோர்வை என்பது தவறான  வகையிலான உச்சரிப்பு.

கோவை, (p. 380) [ kōvai, ] v. noun. The act of stringing, filing, &c., கோத்தல். 2. s. Anything strung or filed, a string, கோத்தமாலை. 3. A flower garland, தொடுத்தபூமாலை. 4. A necklace, அணி வடம். 5. A kind of poem--commonly amorous, ஓர்பிரபந்தம். 6. Series, a train, a row, வரிசை. 7. Subjects or matter pro perly arranged, arrangements, தொடர்ச்சிப் பொருள்; [ex கோ, v.] 8. [com.] The கொவ் வை creeper.


***

கோர்வை என்றொரு வார்த்தை அகராதியில் கிடையாது. நாமாக சேர்த்துக் கொண்டால் தான் உண்டு. இப்போது புழங்குவது போல " முக நூல், கீச்சு, உன்குழல் " அப்படின்னு  பல வருஷம் பேசிட்டிருந்தா அவையும் அகராதியில்  சேர்க்கப் பட்டுவிடும்.

// A search of dictionary entry words for கோர்வை did not locate any occurrences. //




Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/1/11 Srimoorthy.S <srimoo...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Jan 11, 2013, 8:01:40 AM1/11/13
to panb...@googlegroups.com
என்னோட நண்பன் பச்ச தமிழுக்கு ஒரு வார்த்தை தந்திருக்கான்..

“சேட்லீ” - சேட்டை செஞ்சு ப்ரூஸ்லி மாதிரி அடிக்கிற குழந்தைகளுக்கு இந்த பெயர்

(அருஞ்சொற்பொருள் வழங்கியவர் - அகமது சுபைர்)

2013/1/11 Jeeva <jee...@gmail.com>

Srimoorthy.S

unread,
Jan 11, 2013, 8:02:25 AM1/11/13
to panb...@googlegroups.com

கோர்வையையும் தமிழ்ல சேத்திடலாம் கவலைப்படாதீங்க.

Srimoorthy.S

unread,
Jan 11, 2013, 8:11:39 AM1/11/13
to panb...@googlegroups.com

:( இதுக்க்குத்தானே சேட்லீன்னு பேரு வெச்சேன்.
&#0;ஸ்மைலீக்கு எதிர்ப்பதம் அது.

--

Ahamed Zubair A

unread,
Jan 11, 2013, 8:15:02 AM1/11/13
to panb...@googlegroups.com
ஸ்மைலி தமிழ் இல்லை மக்கா...

அதனால சேட்லீ தமிழ்னு ஏத்துக்க முடியாது.

நான் சொன்ன விளக்கத்தின் மூலமா நீ தமிழ் வார்த்தை கொடுத்ததா ஆகிடும்... கொஞ்சம் கன்சிடர் பண்ணு...

2013/1/11 Srimoorthy.S <srimoo...@gmail.com>

Jeeva

unread,
Jan 11, 2013, 8:25:20 AM1/11/13
to பண்புடன்
அது ஒரு அழகிய மழைக்காலம்.  மழைக்காலம் என்றால் கொஞ்சம் கொண்டாட்டம் நிறைய திண்டாட்டம் எங்களுக்கு. வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் மலையில் இருந்து அடித்துக் கொண்டு வரும் வெள்ள நீர் " நண்டு தெறுக்கா ( Scorpion ) என்று சொல்லப் படும் பெரிய தேள் வகை ( 4 - 6 அல்லது 7  அங்குலம் நீளம் வரும் ) , செந்தேள், நல்ல பாம்பு,மலைப்பாம்பு, விரியன்" என பல நட்புகளை அழைத்துக் கொண்டு  வீட்டில் புகுந்து விடும்.

இப்போதும் எங்கள் தற்போதைய கிராமத்து  ஓட்டு வீடில் செந்தேள் கூட்டம் கூட்டமாக புழங்கிக் கொண்டிருக்கிறது. ஓடுகளின் அடியில் அதன் வாசஸ்த்தலம்.  ஓடு வேய என்று  ஏறி கிட்டத் தட்ட 300க்கும் மேற்பட்ட தேள்க்கூட்டத்தை பிளாஸ்ட்டிக் பையில் எரித்திருக்கிறேன்.

கூரையில் கொஞ்சம் ஓட்டை, நிறைய ஓட்டை வைத்துக் கட்டிவிட்டார்கள் என்று எண்ணத் தூண்டும். அப்படியான வீடு.   நான் குழந்தையாக இருந்த பொழுதில் கிழக்குப் பக்கமாக ஓங்கி உயர்ந்த சுவர்  ஒரு முறை  மழையில் ஊறி சர சரவென சரிந்ததாம். நான் படுத்திருந்தப் பக்கத்தில் அண்ணன் ஓடிவந்து என் மீது குனிந்துக் கொண்டாராம் என் மீது சுவர் விழாதிருக்க. அப்புறம் அந்தச் சுவரில் ஓலை அது இது என்று கட்டி தடுக்கப் பட்டாலும் அதைத் தாண்டி  பல வருடங்களுக்கு சாரல் உள் வந்துக் கொண்டு தானிருந்தது. நான் 8ம் வகுப்பு படிக்கும் வரைக்கும் என்று வைத்துக் கொள்ளலாம்.

இறந்து போன என் அண்ணன் கூடவே இருந்த வரைக்கும், போலீஸ் வேலையில் சேர்ந்த பின்னும், இறக்கும் நாள் வரைக்கும் அவரைச் சுற்றி இருந்தவர்கள் கவலையுற்றுக் காணச் சகியாதவர்.   அவர் இறந்த சேதி கேட்டு ஒரு நரிக்குறவர் எங்கிருந்தோ தேடி வீட்டுக்கு வந்தார்.

" அம்மா, டேசன் பக்கம் போனா எங்க கிட்ட அது குடு இது குடுன்னு புடுங்கிட்டு, எங்க கிட்ட மாமூலும் வாங்கிட்டு  அனுப்புவாங்க. உங்க புள்ள தாம்மா அவரு காசு குடுத்து போங்கய்யான்னு அனுப்பி வைப்பார், மவராசன் மூஞ்சிய கூட பாக்கலியே" அப்படின்னு சொன்னதும் அம்மா குலுங்கிக் குலுங்கி அழுததை மறக்க இயலாது.
**
அப்பா வேலைக்குச் சென்றிருந்த  மழைக்காலத்தில் தெருவில் வெள்ளம் ஓட, வீட்டிலும் அம்மாவின் கண்களிலும் குளங்கள் தேங்க ஆரம்பித்தது. இறந்து போன அண்ணன் அப்போது வேலை தேட ஆரம்பித்திருந்த காலம்.  வெளியே போய்விட்டு உள்ளே வருகிறார். வரும்போதே தாத்தாவை (தாத்தா இறந்த போது 99 வயது. எல்லா பல்லும் கெட்டியாக இருந்துச்சு ) வம்பிழுத்துக் கொண்டே வருகிறார். 

"ஏன் தாத்தா எப்பப் பாத்தாலும் ஒரு பாட்டுப் பாடுவியே என்னது அது ? "

கொஞ்சம் வயதின் நடுக்கமான குரலில் தாத்தா தொண்டையை செருமிக் கொண்டு பாடுகிறார் " ஏன் பிறந்தாய் மகனே .. ஏன் பிறந்தாயோ "

"ம்க்கும்.. இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல தாத்தா.. பண்றதெல்லாம் பண்ணிட்டு  உன் புள்ளைங்க மேல பழிய போடற பாத்தியா "

" போடா வாலு "

" இல்ல தாத்தா.. நீ மட்டும் ஒண்ணு,  ரெண்டோட  அப்பவே நிறுத்தி இருந்தா (தாத்தாவிற்கு 4 பிள்ளைகள், 3 மகள்கள் )  நிறுத்தி இருந்தா எங்களுக்கு இந்தப் பிரச்சினையே இல்லைப் பாத்தியா "

தாத்தா சிரித்துக் கொண்டே கோலை ஓங்கி திண்ணையில் தட்டுகிறார். அண்ணன் சிரித்துக் கொண்டே உள்ளே ஓடிவருகிறார். மழை சற்று நின்று வெளிச்சம் ஓட்டைகளின் மூலம் உள்ளே வருகிறது. பார்த்ததும் பாடுகிறார்

அதுவரை உம்மென்று  உட்கார்ந்திருந்த அம்மாவும் குபுக்கென்று சிரிக்க ஆரம்பிக்க  அந்த இடத்தின் சூழல் மாறுகிறது.

அந்தப் பாட்டு..


" யாருக்காக.. இது யாருக்காக..
இந்த மாளிகை, ஓட்டை மாளிகை
ஓடு எல்லாம் உடைந்த மாளிகை

எங்கிருந்து வெளிச்சம் வந்தது இன்று
எங்கிருந்து தண்ணி ஒழுகுது..
அங்கிருந்து ஊற்றுகின்றவன்
தினம் ஆடுகின்ற நாடகம் இது..
"

**

இன்றைக்கும் இந்தப் பாட்டைக் கேட்கும் போது இனம் புரியாத மென்சோகமும் புன்முறுவலும் சேர்ந்து வரும்.  எனக்கு மட்டுமல்ல என் அம்மாவுக்கும் தான்.
**

http://www.youtube.com/watch?v=m4sX_5LL8e8

யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக

மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்கமாக நான் நினைத்து
இன்று நரகமாக மாறிவிட்டது

யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக

கண்கள் தீண்டும் காதல் என்பது
அது கண்ணில் நீரை வரவழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது
நம்மை பித்தனாக்கி அலையவைப்பது

எழுதுங்கள் என் கல்லறையில்
அவள் இரக்கம் இல்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில்
இவன் பைத்தியக்காரன் என்று

யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக

பாடல்: யாருக்காக இது யாருக்காக
பாடகர்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
திரைப்படம்: வசந்த மாளிகை

Srimoorthy.S

unread,
Jan 11, 2013, 8:33:43 AM1/11/13
to panb...@googlegroups.com

சரி வச்சுக்கலாம் வுடுங்க சார். :)

--

Jeeva

unread,
Jan 11, 2013, 8:39:50 AM1/11/13
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், தமிழ்த்தென்றல்

Jeeva

unread,
Jan 14, 2013, 4:21:01 AM1/14/13
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், தமிழ்த்தென்றல்
அப்பல்லாம் பொங்கல் வந்தாலே என்னா சந்தோஷங்கறிங்க.   கரும்பு கத்தை கத்தையா வீட்டுக்கு வரும். ஒரு "கெட"  கரும்பு அம்பது பைசா இல்ல ஒர்ரூவா தான் இருக்கும். இப்ப ஒரு கெட கரும்ப ( அட வேர் முதல் தோகை வரைக்கும் இருக்கும் ஒரு முழு கரும்புங்க) 50 ரூவா குடுத்து வாங்கறோம் பெங்களூர்ல.

பொங்கல் வைக்க புதுப்பானை வாங்கறதுக்கு உடையார் தாத்தா வீட்டுக்குப் போவோம். இப்ப எல்லாம் அவங்க வீடு கட்டறது, அது இதுன்னு பல வேலைகளுக்காகப் போயிட்டதால பானை வாங்க உலகமே சுத்த வேண்டி இருக்கு.

  மாட்டுப் பொங்கலன்னைக்கு எங்க  ஊர்ல தார் ரோடு மேல மணல் கொட்டி அதுல மாடுங்கள ஓட விடுவாங்க. மாடு புடிக்கிறத பாக்க நாங்க யாராவது வீட்டு மாடில ஏறி நின்னுப்போம். செட்டியார் வாத்தியார் வீட்ல தான் மைக் இருக்கும்.  அவரு கமெண்ட்டரி எல்லாம் குடுப்பாரு.  அது வரைக்கும் பாட்டுங்களா ஓடும். அப்ப முதல் பாட்டா

மணப்பார மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி பாட்டு போட்டுட்டு அடுத்து தான் மத்த பாட்டெல்லாம் தொடங்கும். அஞ்சாத சிங்கம் என் காளை, தைப் பொறந்தா வழி பிறக்கும் தங்கமே தங்கம் எல்லாம் வரும்.  ஏர் முனைக்கு நேரிங்கே அப்படின்னு ஒரு பாட்டும் உண்டு. எங்க அப்பா அந்தப் பாட்டு மெட்டுல " அரவக் கொடி துரிய மன்னா அதிபல தீரா " அப்படின்னு பாட்டெல்லாம் எழுதி தெருக்கூத்துல நடிச்சிருக்கார். அவர் வச்சிருந்த கர்ண மோட்சம் போன்ற தெருக்கூத்து கையெழுத்துப் பிரதி எல்லாம் அப்படியே போய்டுச்சு.

டிவில ஜல்லிக் கட்டு காமிச்சாலோ, வீட்டுக்குப் போற வழியில எங்கயாச்சும் கரும்பு பார்த்தாலோ.. மனசு அப்படியே எங்கூருக்கு ஓடிப் போய்டும்.  தைப்பிறந்தா வழிப் பிறக்கும்னு காத்திருக்கும் எல்லா மக்களுக்கும் இந்தப் பாட்டு தேசிய கீதம்னு சொல்லலாம்.

தைப்பிறந்தா வழி பிறக்கும் தங்கமே தங்கம்.
தங்கச்  சம்பா நெல் விளையும்

http://www.youtube.com/watch?v=cuJV0U5b8jk

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.


சரி அப்படியே பொங்கல் / உழவு குறித்த பாடல்களையும் தொகுக்கலாமே :) லிங்க்கோட !

Asif Meeran AJ

unread,
Jan 15, 2013, 12:38:40 AM1/15/13
to panb...@googlegroups.com

காற்று , நீர், நெருப்பு - ஐம்பூதங்களில் இம்மூன்றுக்குமுள்ள சிறப்பு அன்றாட வாழ்க்கையில் இவற்றின் மனிதர்களுக்கு அவை தரும் பெரும்பயன் தான்.

நிலமும், ஆகாயமும் நமக்கு அவசியமேயென்றாலும் மேற்சொன்ன மூன்றும் இல்லாமல் மனித வாழ்வு பெரும் சிக்கல்களுக்குள்ளாவதே இயல்பு.

இம்மூன்றுக்குமிருக்கும் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் மூன்றுமே மனிதனின் கட்டுக்குள் இருக்கும்வரைதான் நண்பர்கள் - கொஞ்சம் கட்டவிழ்ந்தாலும் பெரும் எதிரிகள். காற்று சூறாவளியானாலோ, நீர் வெள்ளமானாலோ, நெருப்பு விரிந்து படர்ந்தாலோ மனித சக்தி அதன் முன் சுக்கு நூறாகச் சிதைந்து விடும். இயற்கையின் சீற்றத்துக்கு முன்னால் மனிதனின் சிறுமை எத்தனையோ முறை வெளிப்பட்டும் மனிதன் தன்னைப் பற்றிய பெருமிதங்களை வெளிப்படுத்தத் தயங்குவதேயில்லை. அது அவனது சிறுமைக்குணங்களில் ஒன்று

அதை விடுங்கள். மேற்சொன்ன முன்று பூதங்களிலும் நெருப்பு புலன்ரீதியாக  மனிதனுக்கு நேரடி பலனளிப்பதில்லை - குளிர்காலங்களில் குளிர்விரட்டும் பணியைத்தவிர.

நீர் - உணவு சமைக்கவும், தாகம் தீர்க்கவும் உடல் தூய்மையைப் பேணவும் அவசியமாகிறது. 'நீரின்றி அமையாது உலகு' என்பதை விடச்சிறப்பாக அதுகுறித்துப் பேச அவசியமில்லை. ஆனால், நீர் மனதிற்கு ஏதேனும் ஆறுதல் தருமா என்றால் விடை இல்லை. குளித்து முடிக்கும்போது உடலுக்குக் கிடைக்கும் புத்துணர்ச்சி உள்ளத்திற்குக் கிடைப்பதில்லை.

ஆனால், காற்று தென்றலாகத் தீண்டும்போது கிடைக்கும் அந்த உயர் இன்பம் உடல் முழுதும் உற்சாகம் தரும். உழைப்பவர் வியர்வைக்குத் தரும் இதம், உறங்கிடும்போது தழுவும் சுகம் என்று காற்று புலன்களுக்குத் தரும் நேரடி இன்பங்களை விட அது மறைமுகமாகவும் புலனுக்கு வேறொரு இன்பத்தைத்தர வல்லது.

இசையெனும் இன்ப அமுதைச் செவிகளுக்குள் நிரப்புவதில் காற்றின் பங்கு அலாதியானது. எங்கோ எழும் ஒலியலைகளெல்லாம் காற்றின் மகிமையால்தான் இசையாய் மலர்கிறது. அந்த இசை காது வழியே மனதிற்குள் நிறையும்போது உடல் எடை இழந்து மனம் இலகுவாகி அதே காற்றிலேயே மிதக்கத் துவங்குகிறது.
ஆகவேதான் ஐம்பெரும்பூதங்களில் காற்றை உடலுக்கும் உள்ளத்துக்குமான இனிய நண்பனாகக் கருத வேண்டியிருக்கிறது. ஆகவே காற்றில் வரும் கீதமே என்றழைக்கும்போது அந்த கீதத்தை விட அதைச் சுமந்து வரும் காற்றின் மீது காதல் வந்துவிடுகிறது

இந்தப் பாடல் இயங்கும் சூழலைச் சொல்லி விடுகிறேன். இன்னமும் காதலியாகிவிடாத ஆனால் மனதால் நெருக்கமாக உணரும் தோழியை அழைத்துக் கொண்டு வீடு வருகிறான் நாயகன். உறவுகளால் திண்ணமாக நெருங்கி வாழும் ஒரு குடும்பத்தைப் பாட்டால் பதிவு செய்தல்தான் பாட்டின் சூழல். 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' என்பது போன்ற உணர்வை வீட்டிற்குள் முதலாவதாக நுழையும் அந்தத் தோழி உணர வேண்டும்.

அவள் மெல்ல வீட்டில் அடியெடுத்து வைக்கிறாள்.
காற்றில் தவழ்ந்து வருகிறது அந்தப் பாடல் மெலிய புன்னகையை அவளுக்குள் ஏற்படுத்திக் கொண்டு. அந்த இசைக் குடும்பத்தின் இளைய பெண் பாடுகிறாள்.

'காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயோ'

அவன் வாய் குழலில் அழகாக....ஆ....
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து '

இங்கே காற்றின் ஒலியலையைப் போலவே பாடலும் வளைந்து குழைந்து ஏறி இறங்கி அலைபோல மிதந்து வரும் அந்த அழகை என்ன சொல்வது?

காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

இங்கே தொடங்குகிறது இசைஞானியின் ராஜாங்கம். உறுத்தாத தந்திக் கருவிகளின் துணையோடு புல்லாங்குழலில் விரிகிறது மனம் தொட்டுச் செல்லும் இசை இன்பம். அந்த ஆனந்த மழையில் நனைய நனைய மனம் தந்தி அடித்துத் துள்ளித் திரிகிறது.

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
வருந்தும் உயிர்க்கு....

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மெலிய குரலில் இதுவரை ஒலிக்கும் இந்தப் பாடலில் சமீப காலமாக என் மனம் நிறைந்த பாடகியாக வலம் வரும் ஷ்ரேயா கோஸ்வாலின் குரல் இணைய,

ஆ.... ஆஆஆஆஆ

என்று உயித்தெழுந்து உயரே செல்ல, மீண்டும் இருவரும் இணைந்து

வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே

என்று கேட்கும்போது செவிப்புலனையும், இசையுணரும் தன்மையையும் தந்த இறைவனுக்கு நன்றி சொல்லத் தலைப்படுகிறது மனது. துளி தருணத்தில் இந்த இனிய அனுபவம் கண்களில் பனியாய் கசியத் தலைப்படும் பொழுதில் பாட்டு மீண்டும் தொடர்கிறது இசையலையாய்.

காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

இப்போது புல்லாங்குழலால் இழுத்துக்கட்டுகிறார் ராஜா.
'துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்' என்று வியந்த வைரமுத்துவின் வரிகளைப் போல இந்தக் காற்றுதான் துளைகளில் நுழைந்து வெளிவரும்போது எத்தனை சாகசங்கள் புரிகிறது என்று வியந்து போகிறது மனம்.

ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்
சாதனா சர்கத்தின் குரலில் ஒலிக்க,

அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
ஹரிஹரனின் மயக்கும் குரலில் தொடர

ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
மீண்டும் சாதனா தொடர

உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம்
ஹரிஹரனே முடிக்கிறார்.

தொடர்ந்து ,

திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
பவதாரினி, ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம் மூவரும் ஒருங்கிணைந்து  பாட

இது போல் இல்லம் எது சொல் தோழி ?
என்று கேள்வியெழுப்பி பவதாரினி, ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம், ஹரிஹரன், இளையராஜா ஆகியோர் இணைய அந்த ஆனந்தக் குடும்பத்தில் ஒருவராக இல்லையே என்ற ஏக்கம் உருவாகும் வண்ணம் இசைத்திருப்பார் இசைஞானி.

இப்படி ஒரு காட்சியமைப்பை மனதில் கொண்டு வந்து அதை இசைஞானிக்கு விளக்கிச் சொல்லி தேர்ந்த இசையை வாங்கி வந்ததற்காக இயக்குனர் ஃபாசிலுக்கு தனியாகப் பாராட்டுதல்களைச் சொல்ல வேண்டும்.

நுணுக்கமான இசை உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலமாக அந்தக் குடும்பத்தின் பொதுத்தன்மையை வெளிப்படுத்துவதில் இயக்குனரும், அவருக்குத் துணைபோன  நடிகர் ந்டிகைகளூம் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

பொதுவாகவே என் போன்ற இசை சூன்யங்களுக்கு ஸ்வர வரிசைகள் பாடும்போது ஏதோ வேற்று கிரகத்துக்கு வந்துவிட்டது போலொரு உணர்வு வருவது வாடிக்கைதான் என்றாலும் இங்கே இசைஞானியின் எளிமைப்படுத்தும் பாங்கு, பாமரனுக்கும் நுணுக்கமான விசயங்களை எளிமையாகச் சேர்க்கும் அவரது இயலபு காரணமாக இந்த ஸ்வரவரிசைகளோடு ஒன்றுதல் இலகுவாக இருக்கிறது.


(ஹரிஹரன், இளையராஜா)
ப ம ரி க ரி க ரி க நி த த நி

(பவதாரினி, ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம்)
ப ம ரி க ரி க ரி க நி த த நி

(பவதாரினி, ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம், ஹரிஹரன், இளையராஜா)
ரி நி ரி க ரி க ம க ம த ம த நி ஸ
நி நி ஸ நி நி ஸ
ஸ ஸ நி நி ஸ நி த நி
நி நி த ஸ நி த ம த
ஸ ஸ நி நி ஸ நி த நி
நி த ஸ நி த ம
த த நி
ம ம க
க க ம
த ஸ நி த ம க ரி

(ஹரிஹரன், இளையராஜா)
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

(பவதாரினி, ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம்)
அவன் வாய் குழலில் அழகாக

(ஹரிஹரன், இளையராஜா)
அமுதம் ததும்பும் இசையாக

(பவதாரினி, ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம்)
மலர்ந்தாய் நடந்தாய் அலைப் போல் மிதந்து

(ஷ்ரேயா கோஷல்)
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

பாடலைக் கேட்டு முடித்ததும் தோன்றும் உணர்வு மீண்டுமொருமுறை இதைக் கேட்க வேண்டுமென்பதுதான். இசை மனதிற்குத் தரும் அற்புதமான உணர்வுகளை இந்தப் பாடலைக் கேட்கும் தருணத்திலெல்லாம் உணர முடிகிறது.

பாடல் வரிகளின் எளிமையில், அலங்காரமற்ற வார்த்தைகளில், காட்சிக்கேற்ற வார்த்தைகளை மெட்டுக்களுக்குத் தருவதில் வாலி மிக வல்லமைமிக்கவர்.
தமிழுக்கு சோறு போடும் பம்மாத்துக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு, 'என் தமிழில் பாதி விற்பனைக்கு;மீதி கற்பனக்கு' என்று வெளிப்படையாகப் பேசத் தெரிந்த கவிஞர். மிகக்கேடான பாடல்களை எழுதுவதிலும் சளைக்காத வாலியை அவரது சில பாடல்களைக் கேட்கும்போது 'ஏன் இந்தக் கேடு?' என்று கேட்கத் தோன்றினாலும் தமிழ்த்திரை இசை உலகில் பாடலாசிரியராக வாலிக்கு என்றும் மரியாதை இருக்கும். இந்தப் பாடல் வரிகளின் எளிமைக்காக மீண்டும் வாலியைப்
பாராட்டாமல் இருக்க முடியாது.

வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே

என்ற பாடல் வரிக்ளைப் போலவே இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இசை மனதை இலகுவாக்க எத்தனை அவ்சியமாகிறதென்று உணர முடிகிறது.

இந்தப் பாடலை இரவு நேரத்தில் தனியே அமர்ந்து கேட்டுப் பாருங்கள்.
ஒலி அளவைக் குறைத்து உங்கள் காதுகளுக்கான இரகசியம் போல, உள்ளமர்ந்து கேளுங்கள். கேட்டுக் கொண்டிருக்கும்போதே இறுக்கம் தளர்ந்து மனம் இலகுவாவதை உணர முடியும். 

இந்தப் பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்திருப்பதாக வல்லுனர்கள் சொன்னார்கள். எனக்குத் தெரிந்து இது ஆனந்த ராகமாகத்தான் அமைந்திருக்கிறது. கேட்க கேட்க உள்ளுக்குள் உயிர் உரசும் ஆனந்தம்.

அந்தக் காற்றுவெளியில் பிரக்ஞையின்றிப் மிதக்க முனையும் ஆனந்தம்.
கட்டுப்பாடற்று வான்வெளியில் சிறகுவிரிக்கும் பறவையின் ஆனந்தம்.
'வருந்தும் உயிர்க்கு மருந்தாகும்' இசையில் தோய்ந்து மயங்கும் ஆனந்தம்.

பாடலைக் கேட்க:
http://www.raaga.com/channels/tamil/movie/T0000684.html

பாடல்: காற்றில் வரும் கீதமே
படம்: ஒரு நாள் ஒரு கனவு
பாடியவர்கள்: பவதாரினி, ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம், ஹரிஹரன், இளையராஜா
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: வாலி

Siddharth Venkatesan

unread,
Jan 15, 2013, 12:43:14 AM1/15/13
to panbudan
அண்ணாச்சி... இப்பவே பாட்ட கேக்கனும் போல இருக்கு... செம ரைட்டிங். :)


2013/1/15 Asif Meeran AJ <asifm...@gmail.com>

shylaja

unread,
Jan 15, 2013, 12:44:00 AM1/15/13
to panb...@googlegroups.com
ஆசிஃப்ஜி.
எழுதியது நீங்கள் தானா?  அருமை அருமை!

2013/1/15 Siddharth Venkatesan <neota...@gmail.com>



--
SHYLAJA
 

Asif Meeran AJ

unread,
Jan 15, 2013, 1:01:46 AM1/15/13
to panb...@googlegroups.com
. செம ரைட்டிங். :)

நன்றி சித்து. தன்யனானேன் :-)
சில பாடல்கள்தான் நம்மை எழுத வைக்கும் சித்து
எதேச்சையாகக் கேடக் நேர்ந்த பாடலில் நான் தொலைந்து போனேன்
இன்றும் மிகுந்த உளைச்சல் ஏறபடும்போதெல்லாம் இந்தப் பாடலைக் கேட்பது
ஒரு வழக்கமாக இருக்கிறது

இது மறுஒலிபரப்பு :-)

Asif Meeran AJ

unread,
Jan 15, 2013, 1:02:20 AM1/15/13
to panb...@googlegroups.com
எழுதியது நீங்கள் தானா?

மண்டபத்துல எவனாவது எழுதிக்கொடுத்திருப்பாங்குற மாதிரியேல்ல இருக்கு கேள்வி :-)
நன்றி 

Jeeva

unread,
Jan 15, 2013, 1:25:35 AM1/15/13
to பண்புடன்
சூப்பர் அண்ணாச்சி. இத இதத்தான் எதிர் பார்த்தேன்.  அந்தப் பாட்டை இப்ப கேட்டுட்டே இருக்கேன். நன்றீஸ் ஹை.

இனியவன்

unread,
Jan 15, 2013, 1:55:32 AM1/15/13
to panb...@googlegroups.com
Semmmmmmmmaiyana writing annachi. Spellbound. Adikkoru tharam
ezuthinaalum asaththalai ezuthi irukkinga.

On 1/15/13, Jeeva <jee...@gmail.com> wrote:
> சூப்பர் அண்ணாச்சி. இத இதத்தான் எதிர் பார்த்தேன். அந்தப் பாட்டை இப்ப
> கேட்டுட்டே இருக்கேன். நன்றீஸ் ஹை.
>

> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "பண்புடன்" group.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>
>
>


--
என்றென்றும் ப்ரியங்களுடன்,
*இனியவன்.*
*[யாதும் ஊரே. யாவரும் கேளிர். ஒன்றே குலம். ஒருவனே தேவன் ]*

மோரு

unread,
Jan 15, 2013, 2:02:32 AM1/15/13
to பண்புடன்
சூப்பர் அண்ணாச்சி,

இந்த பாடலை இளையராஜாவும்,வாலியும் அமர்ந்து உருவேற்றுவது கூட எம்பி3யாக இருக்கிறது இனையத்தில்.

ஒவ்வொரு வரியையும் செதுக்குவார்கள் அதில்.

2013/1/15 Asif Meeran AJ <asifm...@gmail.com>
அந்தக் காற்றுவெளியில் பிரக்ஞையின்றிப் மிதக்க முனையும் ஆனந்தம்.

கட்டுப்பாடற்று வான்வெளியில் சிறகுவிரிக்கும் பறவையின் ஆனந்தம்.
'வருந்தும் உயிர்க்கு மருந்தாகும்' இசையில் தோய்ந்து மயங்கும் ஆனந்தம்.

பாடலைக் கேட்க:
http://www.raaga.com/channels/tamil/movie/T0000684.html




--


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

Ganesh Kumar

unread,
Jan 15, 2013, 2:25:56 AM1/15/13
to panb...@googlegroups.com, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல்

On Thursday, January 3, 2013 1:04:42 AM UTC+5:30, ஐயப்பன் கிருஷ்ணன் wrote:


நா.முத்துக்குமார் தினமணியில் தான் எழுதிய பாடல்கள் குறித்து தொடர் கட்டுரை ஒன்று எழுதி வந்தார்.

>> 7ஜி ரெயின்போ காலணி படத்தில் வரும் நினைத்து நினைத்து பார்த்தால் பாடல். 

இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு தன் காதல்மனைவியைப் பிரிந்த ஒருவர் இது தனக்காக எழுதப்பட்ட பாடலாகத் தான் கருதுவதாக எழுதியிருந்தார்.

ஜீவ்ஸ் இந்த இழை முழுக்க உருக்கமான பதிவுகள்.

நேரம் கிடைக்கும் பொழுது நானும் கலந்து கொள்கிறேன். நன்றி
 

PRASATH

unread,
Jan 15, 2013, 4:08:29 AM1/15/13
to Groups
அண்ணாச்சி...
 
எல்லோரும் தான் நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்களே... அதையே நானும் சொல்லனுமா என்ன...
 
அதனால, சொல்லாத சில விஷயங்களைச் சொல்லுறேன்....
 
குளிர் காயத் தவிர நெருப்பு வேறொன்றுக்கும் உதவறதில்லைன்னு முதலில் சொல்லிட்டு அடுத்து நீரைப் பற்றிச் சொல்லும் பொழுது உணவு சமைக்க நீர் பயன்படுகிறதுன்னு சொல்லி இருக்கீங்க... சரிதான்.... அதே உணவு சமைக்க நெருப்பும் அவசியம்ன்றதை எப்படி மறந்தீங்க....
 
காற்றின் அவசியத்தை பலதுமாகச் சொன்ன நீங்கள் சுவாசமாகவும் இருப்பதைச் சொல்லாமல் விட்டு விட்டீர்கள்....
 
காற்று காற்றாகவே வந்தாலும் இசையாகவே வந்தாலும் நம்மில் சுவாசமாகி விடுகிறது என்பதைச் சொல்லும் உங்கள் பதிவை நானும் ரசித்தேன்....
 
//'காற்றில் வரும் கீதமே

என் கண்ணனை அறிவாயோ'

//
 
இங்க முதல் தடவை மட்டும் அறிவாயோ அப்படின்னும் பிறகு வரும் பொழுது அறிவாயா அப்படின்னும் சொல்லி இருக்கீங்க.... எது சரி....

Jeeva

unread,
Jan 16, 2013, 6:54:45 AM1/16/13
to பண்புடன், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல்
நண்பனுடன் ஏதோ ஒரு விஷயம் பேசிக் கொண்டிருக்கும் போது இந்தப் பேச்சு வந்தது.

" என்னடா டல்லா இருக்கு குரல். "
" ஒண்ணுமில்லண்ணா, தங்கச்சிக்கு டெலிவரி டைம். கைல காசு கொஞ்சம் டைட்டு, அதுவும் இல்லாம.. கொழந்த பொறந்ததும் ஒரு பவுனாவது போடனுங்கறாங்க "
" சம்பாதிக்கிறதெல்லாம் என்னடா பண்ற "
அவனின் சம்பாத்தியம் எவ்வளவு என்று தெரியாது. ஆனால் பெரியதாய் சொல்லிக் கொள்ளும் அளவு இல்லை என்பது என் யூகமாய் இருந்தது.  கொஞ்சம் வாயைக் கிளறியதில் கிடைத்த விஷயங்கள்.

* நண்பர்கள் யாரேனும் உதவி என்று வந்துவிட்டால் தன்னிடம் இருக்கும் காசு அப்படியே தூக்கிக் கொடுத்துவிடுகிறான்.
* ஒரு சிறுவன் படிப்பதற்கும், எக்ஸாம் ஃபீஸ் கட்ட காசு இல்லை என்று குப்பை அள்ளும் வேலைக்கு இரவில் போக, இவன் அவனுக்கு உதவி செய்து படிக்கச் செய்திருக்கிறான்.
* நண்பனின் தந்தைக்கு ஏதோ அவசர மருத்துவத் தேவை என்பதற்காக தன்னிடம் இருந்த காசு கொண்டு போய் கொடுத்து ஆபரேஷனுக்கு உதவி இருக்கிறான்.

மனம் நெகிழ்ந்தது.   ஆனாலும் தன் சுமக்கக் கூடிய  அளவிற்கும் மீதான சுமையை சுமக்கிறான். 

" உனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல, உன் குடும்பம் ? "
" இந்த நேரத்துக்கு இருக்கிறத வச்சு உதவறேண்ணா.. நாளைக்கு? அப்ப பாத்துக்கலாம் விடுங்க... "

என்ன சொல்வது இவனுக்கு ? 

 இந்தப் பாடலில் வரும் கேள்விகளுக்கு விடையாய், அல்லது விடைகாணும் துடிப்பில் இருக்கும் அவனுக்காய்... இந்தப் பாடல் சமர்ப்பிக்கிறேன்.


http://www.tamilvideosongs.eu/idayam_irukkinrathe_thambi.htm

இதயம் இருக்கின்றதே தம்பி

    இசை                    பல்லவி

    இதயம் இருக்கின்றதே தம்பி
    இதயம் இருக்கின்றதே

    இதயம் இருக்கின்றதே தம்பி
    இதயம் இருக்கின்றதே
    வாழும் வழி தேடி வாடிடும் ஏழையர்க்கும்
    இதயம் இருக்கின்றதே தம்பி
    இதயம் இருக்கின்றதே

    இதயம் இருக்கின்றதே தம்பி
    இதயம் இருக்கின்றதே

    இசை                 சரணம் - 1

    தானாட மறந்தாலும் சதை மட்டும் தனியாக
    தாளாமல் துடிக்கின்றதே தம்பி
    தாளாமல் துடிக்கின்றதே
    தாயென்றும் பிள்ளையென்றும் தழுவி கிடந்தவர்க்கும்
    தர்மம் துணை இல்லையே தம்பி
    தர்மம் துணை இல்லையே

    இதயம் இருக்கின்றதே தம்பி
    இதயம் இருக்கின்றதே

    இசை                 சரணம் - 2
   
    ஒரு மரத்து கிளிகள் ஒன்றை விட்டு ஒன்று
    எங்கோ பறக்கின்றதே தம்பி
    எங்கோ பறக்கின்றதே
    கூட பிறந்து விட்ட கொடுமையினால் மேனி
    கனலாய் கொதிகின்றதே தம்பி
    கனலாய் கொதிகின்றதே

    இதயம் இருக்கின்றதே தம்பி
    இதயம் இருக்கின்றதே ( இசை )

Ahamed Zubair A

unread,
Jan 16, 2013, 7:01:57 AM1/16/13
to thamizh...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள்
ஐயப்ஸ்...

செம பாட்டு...

ஒவ்வொரு டைம் தம்பின்னு சிவாஜி சொல்றப்போ அப்படியே உருகிடுவோம்..

பழனி படத்துல இன்னும் 2 பாட்டு எனக்குப் பிடிச்சது இருக்கு... பின்னாடி பேசலாம்..

2013/1/16 Jeeva <jee...@gmail.com>
    தாயென்றும் பிள்ளையென்றும் தழுவி கிடந்தவர்க்கும் 
    தர்மம் துணை இல்லையே தம்பி
    தர்மம் துணை இல்லையே
    

Asif Meeran AJ

unread,
Jan 17, 2013, 1:07:02 AM1/17/13
to panb...@googlegroups.com
திரைப்படங்களில் பாடல்கள் என்பது உலக சினிமாவைப் பொறுத்தவரை கேலிக்குரியதாக இருந்தாலும், இந்தியத் திரைப்படங்களைப் பொறுத்தவரை அதுதான் மூச்சு. கதாபாத்திரங்களுக்காக, கதைச் சூழலுக்காக எழுதப்படும் இந்தப் பாடல்களில் இலக்கியத்தையும் தேட முனைவது தமிழர்களின் மரபாகவே மாறிவிட்டது. தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி வரையிலும் தமிழர்களின் வாழ்க்கை முறை பாடலோடு ஒன்றிப் போயிருப்பது காரணமாக இருக்கலாம்.

அதிலும் திரைப்படங்கள் வந்ததன் பின்னர் பாடல்கள் எளிமைப்படுத்தப்பட்டு சாதாரணர்களையும் மிகச்சுலபமாக அடையும் நிலை ஏற்பட்டதன் பின்னர் பிற பாடல்களின் தாக்கம் தொலைந்து எப்போதும் முணுமுணுக்க ஏதேனும் திரைப்படப்பாடல் நமக்குக் கிடைத்து விடுகிறது.

இப்படி நாம் முணுமுணுக்கும் பாடல் ஆளாளுக்கு மாறுபட்டாலும், அந்தப் பாடல்கள் பிடித்துப் போவதற்கு ஆளுக்கொரு காரணம் நிச்சயம் இருக்கும். சிலருக்குப் பாடல் வரிகள், வேறு சிலருக்குப் பாடகரின் குரல், இன்னும் சிலருக்கு இசை, இன்னும் கூர்மையான அவதானிகளுக்கு இசை தரும் நுணுக்கங்கள். சிலருக்குப் பாடல் படமாக்கப்பட்ட விதம் அல்லது தங்கள் அபிமான நடிகர் நடிகைகள் நடித்தது கூட காரணமாகலாம்.  இவையெல்லாவற்றையும் விட சிலருக்குப் பாடலைக் கேட்ட தருணம் கூட பாடல் பிடிக்கக் காரணமாகி விடக் கூடும்.

ஆக, ஒரு பாடல் பிடிப்பதற்கு இன்னதான் காரணமாக இருக்க வேண்டுமென்ற கட்டாயமேதுமில்லை. எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே' என்று காதலன் காதலியிடம் சொல்வது கூட பிதற்றல்தான். எனக்குப் பிடித்த பாடல் என்
காதலிக்குப் பிடித்தேயாக வேண்டிய கட்டாயமெல்லாம் இல்லை. அவரவர் ரசனை அவரவருக்கு.

சரி..நீட்டி முழக்குவானேன்.

எனக்குப் பிடித்த பாடலாக மாயாவி பாடலையே எடுத்துக் கொள்கிறேன்.
இந்தப் பாடலின் பின்னணியோ, சூழலோ எனக்குத்தெரியாது. ஆனால், பாடல் வரிகள் அதனை சூசகமாக நமக்குச் சொல்லி விடுகிறது. பெரும்பாலும் பாடல்கள் கதையோட்டத்தை விட்டு வெளியே விலகி, 'அப்படிப் போடு போடு போடு' என்று போட்டுத்தள்லி விடும் இன்றைய சூழலில், ஒரு பாடல் அதன் கதையோடு பின்னி வருவதே கூட இயல்புதான்.

எதுவரை வாழ்க்கை போகிறதோ
அதுவரை நாமும் போய்வரலாம்'

என்ற வரிகள் மரணப் படுக்கையில் இருக்கும் பெண்ணிற்கு ஆதரவு சொல்லும் பாடலாக திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் என்று எண்ணுகிறேன்.


இதே போன்றொரு பாடலை வைரமுத்து வானமே எல்லை படத்திற்காக

'துள்ளி எழ வேண்டும்
ஏன் அழ வேண்டும்
இந்த பூமிக்கு நன்றி சொல்லி புறப்பட வேண்டும்' என்று எழுதியிருப்பார்.

'காலா என் காலருகே வாடா!' என்று காலனை வம்புக்கிழுத்த பாரதியின் துணிச்சலுக்கொப்பான வரிகளாக இதனைச் சொல்லலாமா என்று தெரியவில்லை. ஆனாலும், மரணத்தைக் கண்டு மயங்கத் தேவையில்லை என்று உறுதியாகச் சொல்ல முனைந்ததற்காகவாவது அந்த வரிகளுக்கு 'ஓ!' போடலாம்.

புடிச்ச பாட்டைப் பாத்தி எழுதச் சொன்னா ஊர் கதை பேசுதீரேவேன்னு கோபப்படுற மக்களே! சமாதானம். விசயத்துக்கு வந்துகிட்டே இருக்கேன். இலட்சியக் கவிஞர் அறிவுமதி அண்ணனின் பாசறையில் இருந்து வந்த தமிழ்க்கவிஞர்களிடம் இயல்பாகவே தமிழ் மீதான காதல் இருக்கும். பழனி பாரதி, கபிலன், முத்துக்குமார், யுகபாரதி எல்லாம் அந்தரகம்தான்.

அதிலும் பழனிபாரதி 'என்னைத் தாலாட்ட வருவாளா?' என்று கேட்டதற்குப் பின்னர் அவரது பாடல் வரிகளில் ஆரவம் மிகுந்தது. ஆனால் எல்லாப்பாடல்களும் அமைந்து விடுவதில்லை என்கிற நியதிக்கு இணங்க அவரது பாடல் வரிகள் கொஞ்ச காலம் காணாமலேயே போய்விட்டதோ என்று சந்தேகம் வரத்துவங்கிய காலத்தில்தான் இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தது.

கடவுள் தந்த அழகிய வாழ்வு; 
உலகம் முழுதும் அவனது வீடு; 
கண்கள் மூடியே வாழ்த்து பாடு ..

வாழ்க்கையில் அவரவருக்கு ஆயிரம் பிரச்னைகள். சோகங்கள். அதில் எல்லாம் சோர்ந்து போகாமல் இருக்க வேண்டுமானால் இந்த வாழ்வை இரசிக்கும் மனப்பான்மை இருந்தாகவேண்டும். செருப்பு இல்லையே என்ற கவலையை விட்டு விட்டு கால்கள் இருக்கிறதே என்ற மனநிலையை வரவழைத்துக் கொள்ளும் மனநிலைக்கு நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்வதில்தான் வாழ்க்கையை நாம் எவ்வாறு நேரிடுகிறோம் என்ற உண்மை நமக்குப் புலப்படுகிறது.

நம்மையும் மீறிய நம்மை வழிநடத்தும் ஒருசக்தியைத்தான் வாழ்க்கையின் இக்கட்டான சூழல்களில் நாம் தேடுகிறோம். அதை இறை என்றோ கடவுள் என்றோ இயற்கை என்றோ எந்தப் பெயரில் அழைத்தாலும் இந்த வாழ்வென்பதே அவனது அருட்கொடைதான் என்பதை எத்தனை முறை நாம் உணர்கிறோம்? இந்தப் பாடல் வரிகள் இந்த அழகிய வீட்டில் நம்மை வாழ அனுமதித்த இறைவனை வாழ்த்தச் சொல்கிறது.

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு;
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு;
இன்னும் வாழணும் நூறு ஆண்டு ..

பல நேரங்களில் மனது துவண்டு போகும்போது, தோள் சாய்ந்து அழக்கூட ஆளில்லாமல் தனிமைப்பட்டு போவது போல உணர்கிறோம். அம்மாதிரியான தருணங்களில் கண்ணீர் துடைக்க ஒரு கரம் நீளாதா என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும். மனித மனம் சார்புடையது. தனித்தவன் என்று என்னதான் நெஞ்சு நிமிர்த்திக் கொண்டாலும் அடுத்த மனிதன் தரும் ஆறுதலுக்காகத்தான் அது அலைகிறது. அதில்தான் சமாதானம் கொள்கிறது.

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்;
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..
அழகே, பூமியின் வாழ்க்கையை அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்..

அன்பில் வாழ்ந்து..
இந்த வரிகள் ஒன்று போதாதா?
அன்பிலே வாழ்வது என்றால் உலகமே அழகிய வீடாகி விடும்.
போர்களும் கூடப் புன்னகையால் முடிந்து விடும்.

மனித வாழ்வில் தேடுதல் ஒருபோதும் குறைவதில்லை. நடப்பவனுக்கு மிதி வண்டி. அது கிடைத்தால் இயந்திர ஊர்தி. அதுவும் கிடைத்தால் சொகுசு சீருந்து என்று மனித மனம் உலக வாழ்க்கையின் தேவைகளுக்குள் திருப்தி கொள்ளாமல் தேடிக் கொண்டேயிருக்கிறது. தனது தேடலின் தீவிரத்தில் பக்கத்தில் இருப்பவனின் தேவைகளைக் காலடியில் இட்டு நசுக்கவும் அது தயங்குவதில்லை. இந்தத் தேடலின் தீவிரத்திற்கிடையில் ,'எதை நான் இங்கு கொண்டு வந்தோம்' என்ற எண்ணம் எழுமானால், 'அன்பினால் வாழ்வது' இயல்பானதாகி விடும். அன்பினால் வாழ்வது சாத்தியமாகிவிட்டால், உலகம் அவனது அழகிய வீடாகத்தானே இருக்கும்?


வாழ்க்கை நிலையாமையை சுட்டிக் காட்டிக்கொண்டேயிருந்தாலும் மனிதனுக்கு என்னமோ வாழ்க்கை நிலையானது என்ற மாயை இருந்து கொண்டேதான் இருக்கிறது. கண்ணதாசன் அழகாகச் சொல்லியிருப்பார்

மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று'

என்று எளிய வரிகளில் வாழ்க்கையைக் கூறுபோட்டுக் காட்ட அவரால்தான் முடியும்.

இந்த நிலையாமை பற்றிய எண்ணம் வந்து விட்டால் மனிதனுக்குத் தானென்ற எண்ணம் குறைந்து போகும். தன்னோடு சக மனிதர்களூம் குருதியும், சதையுமாய் வாழ்கிறார்கள் என்ற உணர்வு உள்ளூறக் கூடும். அது மனிதத்தை வளர்க்கும் உரமாக அவனுக்குள் உறையவும் கூடும். இந்த நிலையாமையைச் சுட்டி காட்டும் விசயமாகத்தான் மரணம் என்ற நிலையே மனிதர்களுக்கு உணர்த்தப்படுகிறது.
எந்த மனிதனும் தன்னை மரணத்துக்கு தயார்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை.அன்றாட அலுவல்களையே ஒத்திப் போட்டே பழகிவிட்டவர்களுக்கு அது எப்படி முடியும்?

எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ,
அது வரை நாமும் சென்றிடுவோம்..
விடைபெறும் நேரம் வரும்போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்.
பரவசம், இந்த பரவசம், எந்நாளும்
நெஞ்சினில் தீராமல் இங்கே வாழுமே..

விடைபெறும் நேரத்தில் சிரிப்போடு நன்றி சொல்வதெல்லாம் ஞானிகளால்தான்(அட! ரசிகவைச் சொல்லலீங்க) முடியும். சாதாரணர்களால் அது சாத்தியமில்லைதான். இருந்தாலும் அப்படிச் சொல்ல முடிந்தால் எவ்வளவு சுவையாக இருக்கும்? அதீதமான கற்பனைதான் என்றாலும் அப்படியொரு முயற்சி தவறொன்றுமில்லையே?!

நாம் எல்லாம் சுவாசிக்கத் தனித் தனி காற்று கிடையாது..
மேகங்கள், மேகங்கள், இடங்களைப் பார்த்துப் பொழியாது..

கவிஞர் இங்கே புதிதாக ஒன்றையும் சொல்லவில்லைதான். இயற்கை எல்லாருக்கும் பொதுவென்பதைத்தான் சொல்லியிருக்கிறார்.

கோடையில் இன்று இலையுதிரும்;
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்..
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்,
குயில்களின் பாட்டு காற்றில் வரும்.
முடிவதும் பின்பு தொடர்வதும் இந்த
வாழ்க்கை சொன்ன பாடங்கள்தானே கேளடி..

இங்கேயும் புதிதாக யாரும் சொல்லாத ஒன்றைக் கவிஞர் சொல்லவில்லைதான் என்றாலும், பாடல் வரிகள் ஆறுதலைச் சொல்ல முனைகிறது. சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்கிறது. இதற்கு முன்பே பல கவிஞர்களும் பலமுறை சொன்ன விசயங்கள்தான் என்றாலும், இந்தப் பாடலை வித்தியாசப்படுத்திக் காட்டுவதென்னவோ பாடகரின் உணர்வுபூர்வமான குரல். அந்தக் குரலுக்கு வலுசேர்க்கும் ஊதுகுழலின் இசை.

 வார்த்தைகளை முழுங்கிக் கொண்டு பிதுங்கி நிற்காத இசை என்பது அநேகமாக இல்லையென்றாகி விட்ட சூழலில்... மெல்லிய நீரோடையாக ஆரவாரமற்று ஓடி வரும் ஓடையைப் போல பாடலின் சூழல் அறிந்து அந்த மனநிலைக்கு இயைந்து வரும் வகையில் மெருகூட்டி இசைக்கப்பட்டதாலோ என்னவோ இந்தப் பாடல் கேட்கும்போது ஒரு அலாதியான அமைதி தோன்றுகிறது. பாடலின் பின்னணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இசைக் கருவிகளும் இந்தப் பாடலுக்கு தனி அழகைத் தருகிறதென்றுதான் நான் நினைக்கிறேன்.

இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம், அன்பில் வாழும் முயற்சியை ஒரு பயிற்சியாக மேற்கொள்ளவேண்டுமென்ற எண்ணம் மேலோங்குகிறது.

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்: குறைந்தது இந்த முயற்சியையாவது மேற்கொள்ளலாமே? என்ன சொல்றீங்க?

அன்புடன்
ஆசிப் மீரான்




PRASATH

unread,
Jan 17, 2013, 1:08:31 AM1/17/13
to Groups
நல்லதோர் பகிர்வுக்கு நன்றி அண்ணாச்சி....


2013/1/17 Asif Meeran AJ <asifm...@gmail.com>
 

senshe senshe

unread,
Jan 17, 2013, 1:29:33 AM1/17/13
to panb...@googlegroups.com
ரொம்பப் பிடிச்ச பாட்டு அண்ணாச்சி.. மாயாவி படம் இன்னும் பார்க்கலையா? என்கிட்ட இருக்குது. நீங்க வரும்பொழுது தர்றேன்.

Ahamed Zubair A

unread,
Jan 17, 2013, 4:39:25 AM1/17/13
to panb...@googlegroups.com
மனுசன் சவூதில தான் இருக்காப்ல... உடனே வந்திடுவாரு ;))

பை தி வே, அண்ணாச்சி எழுத ஆரம்பிச்ச இழை என்பதால் இந்த இழை ஆரம்பிச்ச ஜீவ்ஸுக்கு ஒரு நன்றி சொல்லிடுறேன்..

:)

2013/1/17 Asif Meeran AJ <asifm...@gmail.com>

விடைபெறும் நேரத்தில் சிரிப்போடு நன்றி சொல்வதெல்லாம் ஞானிகளால்தான்(அட! ரசிகவைச் சொல்லலீங்க) முடியும்.

PRASATH

unread,
Jan 17, 2013, 7:30:56 AM1/17/13
to தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ் வாசல், தமிழ்த்தென்றல்
 எனக்கு பிடித்த பாடல்கள் பற்றி எழுத நினைக்கும் பொழுது எனது மனத்தில் எழுதப்படாத விதியாக அமைவது, அப்பாடல் இடம் பெற்ற படத்தின் அனைத்து பாடல்களும் என்னைக் கவர்ந்திருக்க வேண்டும் என்பதே...
 
திருவிளையாடலைத் தொடர்ந்து ஒரு படத்தின் மொத்த பாடல்களும் என்னைக் கட்டிப் போட்டுக் கேட்க வைத்த பெருமை தில்லானா மோகனாம்பாள் படத்தையேச் சேரும்...
 
சிவாஜியின் நடிப்பு என்பது அதீத உணர்ச்சிக் குவியல் எனப் பலராலும் கருதப்பட்டாலும்
இப்படத்தின் பாடல்கள் அனைத்த்திலும் சிவாஜியின் நடிப்பு பாடல்களுக்கு உயிர் கொடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
 
இப்படத்தில் வரும் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாடலும், நலந்தானா பாடலும் சிவாஜியின் நடிப்பை என்றும் நம்  நிறுத்தும் எனச் சொல்லலாம்.
 
//மறைத்திருந்து பார்க்கும் மர்மமென்ன..
அழகர் மலை அழகா…இந்த சிலை அழகா…என்று
மறைத்திருந்து பார்க்கும் மர்மமென்ன..//
 
இந்த இடத்தில் சிலை அழகா என தனது கைகளால் மேலிருந்து கீழாக தன்னையே சிலையாக பரதத்தில் காட்டும் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களின் நடிப்பை என்றும் மறக்க முடியாது...

நவரசமும்ம் …….

முகத்தில் நவரசமும்..
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்…
செக்கச் சிவந்திருக்கும் இதழில் கனி ரசமும்..கண்டு
இந்த இடத்தில் மனிதனின் ஒன்பது வகையான குணங்களைச் சித்திரப்படுத்தும் அழகு எத்தனை முறை இப்பாடலைப் பார்த்தாலும் சலிப்பைத் தராது...

எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்…
உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்..
பாவை என் பதம் காண நாணமோ….
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா…
தூயனே வேலவா…மாயனே சண்முகா
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தூணுக்கு பின்னால் மறைந்திருந்து பார்ப்பதை தான் கண்டு கொண்டதை எத்தனை அழகாக சொல்லி அதன் பின்னால் தனது விருப்பத்தை/ தன்னைப் போல வேறு எவரும் தனது காதலனை அதிகம் அறிந்து வைத்திருக்க முடியாது என்று சூசகமாகவும் அதே சமயம் தனது மணாளனின் பெயராம் சிக்கல் சண்முக சுந்தரத்தைக் குறிப்பிடும் வகையில் இறுதியில் சண்முகா என வைத்து முடித்திருப்பதும், அதற்கு சிவாஜி நாக்கை கடித்து தரும் உணர்ச்சியும் நம்மையும் அறியாமல் காதலரின் உடலைக் கண்டு சிரிக்க வைக்கும்.  

நாதத்திலே தலைவன் குரல் கேட்டேன்…
அந்த நாதத்திலே என்னை நான் மறந்தேன்…
மோகத்திலே என்னை மூழ்க வைத்து..(2)
ஒரு ஓரத்திலே நின்று கள்வனை போல்…
தூயனே வேலவா…மாயனே சண்முகா ,….எனையாளும் சண்முகா வா….

இந்த இடத்தில் தான் நாதத்தின் குழலில் தன்னைத் தொலைத்து அதனால் காதலில் விழுந்ததைக் குறிப்பிடும் காட்சியும் பத்மினியின் நாட்டியத்தைப் பறை சாற்றும்.
 
மொத்தத்தில் இந்த பாடல் கேட்க மட்டுமல்ல பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும்...
 
யூ டியூபில் பார்க்க : https://www.youtube.com/watch?v=SL3OL9hCDaM 

Jeeva

unread,
Jan 17, 2013, 7:35:13 AM1/17/13
to பண்புடன்
இன்னைக்கு முழுக்க இந்தப் பாடல் தான்  அண்ணாச்சி. நன்றி. :)


Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/1/17 Asif Meeran AJ <asifm...@gmail.com>
திரைப்படங்களில் பாடல்கள் என்பது உலக சினிமாவைப் பொறுத்தவரை கேலிக்குரியதாக இருந்தாலும், இந்தியத் திரைப்படங்களைப் பொறுத்தவரை அதுதான் மூச்சு. கதாபாத்திரங்களுக்காக, கதைச் சூழலுக்காக எழுதப்படும் இந்தப் பாடல்களில் இலக்கியத்தையும் தேட முனைவது தமிழர்களின் மரபாகவே மாறிவிட்டது. தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி வரையிலும் தமிழர்களின் வாழ்க்கை முறை பாடலோடு ஒன்றிப் போயிருப்பது காரணமாக இருக்கலாம்.

PRASATH

unread,
Jan 18, 2013, 1:02:45 AM1/18/13
to தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ் வாசல், தமிழ்த்தென்றல்
சமீபத்தில் வந்த படங்களில் இந்த கானா பாட்டும் இசையும் என்னமோ செய்யுது...
ரிப்பீட்டு போட்டு கேட்க வைக்குது இந்த பாட்டு...
 
கானா பாட்டுல பீலிங்க்சை நேச்சுரலா கொடுக்க முடியும், பாமரனோட பாட்டுக்கும் பவுசி அதிகம்னு ப்ரூப் பண்ண இன்னொரு பாட்டு....
 
இதைக் கேட்கும் பொது ஏனோ தமிழன்(நாஞ்சில்) வேணு ஐயா நினைவு வந்தது... தமிழன்(நாஞ்சில்) வேணு ஐயா, வி மிஸ் யூ எ லாட்...
 
லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன் இன்னும் எழுதலை 
அதை உன்னிடம் கொடுக்க ஆசைப்பட்டேன் கொடுக்க முடியலை
கானா கத்துக்க வந்தேன் நானு உங்க வீட்டுல 
பெட்ரோல் இல்லாத காராட்டம் நின்னேன் ரோட்டுல
லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன் இன்னும் எழுதலை
அதை உன்னிடம் கொடுக்க ஆசைப்பட்டேன் கொடுக்க முடியலை
 
உன் சித்தி டார்ச்சரை நான் தாங்கி 
உன் சித்தப்பன் கிட்ட அடிவாங்கி 
லவ் பண்ணேன் உன்னைத்தான்....
உன் தம்பி வந்தான் எமனாட்டம் 
தினமும் எனக்கு போராட்டம்
கிழிஞ்சு போச்சு என் பெல்பாட்டம்...
துரத்தி துரத்தி காதலிச்சேன் வெறிப்புடிச்ச நாயாட்டம் 
எகிறி குதிச்சு ஓடுறியே வண்டலூரு மானாட்டம்...
நான் அப்பாடக்கரு 
இந்தா வாங்கிக்கோ லெட்டரு...
 
அன்ன நடை போடாதே 
என்னை ஆட்டி படைக்காதே 
என் வைஃபா வந்திடு 
ஆசையை மூடி மறைக்காத 
உங்க அப்பன் பேச்சை மதிக்காதே 
ஐ லவ் யூ சொல்லிடு 
விளம்பரத்தை பார்த்துவிட்டு
விழுந்துடாதே ஆத்துக்குள்ள 
நடனமாடி காட்டிடுவான் 
மாட்டிக்காத சேத்துக்குள்ள
அவன் சைனா மேடும்மா 
இவன் பக்கா ஃபிராடும்மா... 
அவன் சைனா மேடும்மா
இவன் பக்கா ஃபிராடும்மா...   
 

Gokul Kumaran

unread,
Jan 18, 2013, 2:03:59 AM1/18/13
to Panbudan

நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும் என்னும் ஒரிஜினல் பாட்டையும் கேளு. இசை ரொம்ப நல்லா இருக்கும்.

--
Gokul Kumaran

Sent from my Samsung Galaxy S3

--

மோரு

unread,
Jan 18, 2013, 2:05:47 AM1/18/13
to பண்புடன்

2013/1/18 Gokul Kumaran <gokul...@gmail.com>

நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும் என்னும் ஒரிஜினல் பாட்டையும் கேளு. இசை ரொம்ப நல்லா இருக்கும்.

சூப்பர் கோகுல் ஜி :-)

PRASATH

unread,
Jan 18, 2013, 2:07:30 AM1/18/13
to Groups
ம்ம்ம்...
 
கேட்டிருக்கேன் அண்ணே...
 
ஒன ஆப் மை பேவரைட் அதுவும்...


2013/1/18 Gokul Kumaran <gokul...@gmail.com>

Gokul Kumaran

unread,
Jan 18, 2013, 2:40:23 AM1/18/13
to Panbudan

என் மகன் ரொம்ப நல்லாயிருக்கு, சிரிச்சுச் சிரிச்சு வயிறு புண்ணாப்போச்சுன்னு சிபாரிசு பண்ணியதால குடும்பத்தோடு தலைக்கு 80 ரூபாய் டிக்கெட் எடுத்து கொசுக்கடியில் பாத்துட்டு வந்தோம்.

சில காட்சிகளில் மட்டுமே சிரிப்பு வந்தது. 15% காமெடி. 85% மொக்கை.

Ramesh Murugan

unread,
Jan 19, 2013, 4:51:14 AM1/19/13
to panb...@googlegroups.com
பாரதி படத்துல வர்ற நின்னை சரண்டைந்தேன்  எனக்கு எப்பவும் பிடிச்ச பாடல்.
பிடிக்கிறதுக்கு காரணம் இசையா அல்லது பாம்பே ஜெயஸ்ரீயோட குரலான்னு தெரியல. ஆனா பாடல் பிடிச்ச பின்னாடிதான் பாடலோட வரிகளை கவனிக்க ஆரமிச்சேன். இந்த பாடலை நான் பகிராத இடமே இல்லை. கிட்டதட்ட நான் புழங்கும் எல்லா தளத்திலும் பிடிச்ச பாடல்கள் வரிசையில் இந்த பாடல்தான் முதலிடம் வகிக்கும்.

மனைவியோட விளையாடும்போதோ, சரசத்தின்போதோ, சும்மா இருக்கும்போதோ மடியில் படுத்திருந்தால் எந்த சுகத்தையும் உணர்ந்ததில்லை. ஏதாவது பிரச்சனையின்போது அல்லது தலைவலியின்போதோ மனைவியின் மடியில் கிடைக்கும் இளம் சூடான சுகத்தை வார்த்தையால் விளக்கவே முடியாது. அப்பெல்லாம் மிக மென்மையா மனதில் ஒலிக்கும் ஒரே பாடல்னா அது நின்னை சரணடைந்தேன் பாடல்தான்.. தாய்மை கலந்த அந்த மடிக்கும், தலை கோதிவிடும்போது கிடைக்கும் சுகத்தையும் முழுமையா அனுபவிக்கனும்னா இளையராஜாவின் இசையை துணைக்கழைத்தால் சுகம் இரட்டிப்பா கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த பாட்டோட பொருளை இதுவரை நான் உணர்ந்துகொள்ளவில்லை. பாடலின் வரியை சூழ்நிலையுடன் ஒப்பிடவுமில்லை. ஆனாலும் பாடல் பிடிக்கும். பாடல் பலர் மனதுடன் உறவாட காரணம் இளையராஜாவின் இசை. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொருவருக்கு பிடிக்கவும் பிடிக்காமல் போவதற்கும் நிறைய காரணங்கள் இருக்கும். ஆனா இந்த பாடல் பிடிக்க எனக்கு என்ன காரணம்னே தெரியல. ஆனா ரெம்ப பிடிக்கும். நல்ல பாடல்.

படம் : பாரதி
பாடல் : நின்னை சரணடைந்தேன்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: பாரதி
பாடியவர்கள் : பாம்பே ஜெயஸ்ரி

நின்னை சரணடைந்தேன்,
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாத்தென்று..

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொண்டுருவை போக்கென -

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
அன்பு நெறியில் அறன்கள் வளர்த்திட
நல்லவை நாட்டிட, தீயவை ஓட்டிட

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்



--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

Srimoorthy.S

unread,
Jan 21, 2013, 1:49:24 PM1/21/13
to பண்புடன்

நெஜம்மாவே முழுசா படிச்சிட்டியா?

On Jan 17, 2013 11:38 AM, "PRASATH" <pras...@gmail.com> wrote:
நல்லதோர் பகிர்வுக்கு நன்றி அண்ணாச்சி....


2013/1/17 Asif Meeran AJ <asifm...@gmail.com>
 

--

PRASATH

unread,
Jan 21, 2013, 2:32:16 PM1/21/13
to Groups
:)))


2013/1/22 Srimoorthy.S <srimoo...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages