நகைச்சுவைக் கதைகள்

13,991 views
Skip to first unread message

முகமூடி

unread,
Sep 15, 2011, 2:18:27 AM9/15/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
சுட்டி : http://www.tamilcomedyworld.com/text-comedy/stories-list.php?ccid=CC29

ஒரு மருத்துவ வகுப்பின் முதல் நாள் ஆசிரியர் ஒரு பிணத்தை வைத்து பாடம் நடத்த ஆரம்பித்தார்
"ஒரு மருத்துவனுக்கு மிக முக்கியமானது மூன்று விஷயங்கள் ஒன்று நோயாளியின் உடலை தொடவோ, பார்க்கவோ கூச்சப்படக்கூடாது அடுத்தது எதையும் நன்றாக கவனிக்க வேண்டும்"
என்று சொல்லிவிட்டு தன் விரலை பிணத்தின் வாய்க்குள் விட்டு பின் வெளியே எடுத்து விரலை முத்தமிட்டார்.பிறகு மாணவர்களிடம்,"சரி எல்லோரும் நான் செய்தது போல செய்யுங்கள்" என்றார்.
மாணவர்கள் மிகவும் தயங்கினர் ஆனால் நேரம் ஆக ஆக எல்லோரும் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஒரு கட்டத்தில் எல்லோரும் செய்து முடித்திருக்க ஆசிரியர்,

"எல்லோரும் முடித்தாயிற்றா? நான் பிணத்தின் வாய்க்குள் விட்டது ஆள் காட்டி விரல், முத்தமிட்டது நடு விரல்....இனியாவது நன்றாக கவனியுங்கள்"

--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
--------------------------------------------------------------
இன்பமொழி எனதுமொழி
துன்பங்களை மறக்கடிக்கும்
அன்பகத்தில் விதைந்தமொழி
தென்னகத்தின் திகழ்தமிழே...
 

V Ramesh

unread,
Sep 15, 2011, 5:12:09 AM9/15/11
to tamizhs...@googlegroups.com, நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, tamil2friends
இது ஏதோ ரீமேக்

நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்  

http://engumullavan.webnode.com/



2011/9/15 முகமூடி <mask...@gmail.com>

முகமூடி

unread,
Sep 20, 2011, 1:09:49 AM9/20/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
சுட்டி : http://www.tamilcomedyworld.com/text-comedy/stories-list.php?ccid=CC27

-------------------------
கடவுள் ஒரு நாள் ஏதோ ஆசையில் ஒரு பாருக்குள் நுழைந்தாராம்.ஏகப்பட்ட வகைகள் இருக்கவும் விற்பனையாளர் இவர் கெட் அப் பார்த்து விட்டு "என்ன வேண்டும்?" என்றார்.
"நல்லதா ஏதாவது குடுப்பா" என்று சொல்ல ஒரு ஃபுல் எடுத்து தந்தார்.
ஐந்து நிமிடத்தில் முடித்து விட்டு அடுத்து என்றார்
இன்னொரு புல் தர அதையும் குடித்து விட்டு அடுத்து என்றார்.

இதே போல பத்து முறை குடிக்க பார்டெண்டருக்கே கை வலித்து விட்டது.கடவுள் கொஞ்சமும் சலிக்காமல் அடுத்து என்றார்.பார்டெண்டருக்கு ஆச்சர்யம்,"இவ்ளோ அடிச்சும் கொஞ்சமும் உளரல,குரல் பிசிறாம அடுத்துங்கிறீங்களே,உங்களுக்கு மப்பு ஏறவே இல்லயா?"

கடவுள் பெருமிதமா,"நாந்தாம்ப்பா கடவுள் எனக்கு எப்படி மப்பு ஏறும்"னாரு

உடனே பார்டெண்டர்,"சரி சரி மப்பு ஓவராவே ஏறிடுச்சு போல"
----------------------

மூணு பொண்ணுங்களுக்கு ஒரு மாயக்கண்ணாடி கிடைச்சது.அதோட சக்தி என்னன்னா அது முன்னாடி நின்னு நாம நினைக்கிறத சொல்லணும், அது உண்மையா இருந்தா நமக்கு வரம் கிடைக்கும் பொய்யாயிருந்தா சொல்றவங்கள முழுங்கிடும்.

முதல்ல சீனாப்பொண்ணு நின்னது:”ஐ திங்க்...இந்த உலகத்துலயே அழகான பொண்ணு நாந்தான்” --டிஷ்க்-- முழுங்கிடுச்சு.

அடுத்து ஆப்ரிகா பொண்ணு நின்னது: “ ஐ திங்க் இந்த உலகத்துலயே அறிவாளி நாந்தான்” --டிஷ்க்--

அடுத்தது நம்ம பிளான்ட் நின்னது “ ஐ திங்க்” ---டிஷ்க்---

----------------------------

ஒரு வக்கீல் இறந்து சொர்க்கம் போனாராம்.வாசலிலேயே ஒரு தேவதை தடுத்து நிறுத்தி "நீங்கள் வக்கீலா?" என்றார்.
அவரும் "ஆமாம்"
தேவதை,"இல்லை சொர்க்கத்திற்குள் வக்கீல்களை நாங்கள் அனுமதிப்பதில்லை"
"ஒரு நிமிஷம் நான் நல்லவன் உண்மையிலேயே"
"அப்படியா...சரி எப்படி ஒப்புக்கொள்வது?"
"ஆஹ்... நான் இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு பசியில் இருந்த ஒருவருக்கு பத்து ரூபாய் தந்தேன், நேற்று கூட வீடில்லாத ஒருவருக்கு ஐந்து ரூபாய் தந்தேன்,சாவதற்கு ஒரு நிமிடம் முன்பு கூட ஒரு பிச்சைக்காரனுக்கு இரண்டு ரூபாய் தந்தேன்"
"ஓ சரி ஒரு நிமிடம் இருங்கள் கடவுளிடம் பேசி விட்டு வருகிறேன்"

கொஞ்ச நேரம் கழித்து தேவதை வந்து,"இந்தாருங்கள் உங்கள் 17 ரூபாய் கூட சேர்த்து 3 ரூபாய் ஜஸ்ட் GO TO HELL YOU...
--------------

ஒரு பெங்களூரி, ஒரு மதராஸி ,ஒரு சர்தார்ஜி மூணு பேரும் ஒண்ணா ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில வேல பாத்தாங்களாம்
தினம் மதியம் ஒண்ணா மொட்ட மாடில உக்காந்து சாப்பிடுவாங்களாம்
அன்னைக்கும் அதே மாதிரி ஒண்ணா சாப்பிட முதல்ல பெங்களூரி டிபன் பாக்ஸ்ஐ திறக்க இட்லி இருக்க சலிப்பா சொல்றான் ," நாளைக்கும் இட்லியே இருந்தா நான் இங்கிருந்து குதிச்ச்டுவேன்".
மதராஸி பாக்ஸ்ஐ திறக்க அவனுக்கும் இட்லி
கடுப்பாகி " நாளைக்கு இட்லி இருந்தா நானும் குதிச்சுடுவேன்"னான்
அடுத்தது சர்தார் திறக்க அதுலயும் இட்லி, " அவரும் நாளைக்கு இட்லி இருந்தா நானும் குதிச்சுடுவேன்"ன்னார்

மறு நாள்
பெங்களூரி டிபன் பாக்ஸ் திறந்தா அதே இட்லி
மறு பேச்சு பேசலை எட்டாவது மாடிலேர்ந்து குதிச்சிட்டார்

மதராஸி பயத்தோட திறக்க அங்கயும் இட்லி
அவரும் குதிச்சிட்டார்

சர்தார்ஜி திறக்க மறுபடியும் இட்லி
அவரும் குதிச்சிடறார்

எழவு அன்னைக்கு மூணு பேர் மனைவிகளும் சந்திச்சிக்கிறாங்க
மதராஸி மனைவி ,"அய்யய்யோ இப்டி பண்ணிட்டீங்களே உங்களுக்கு பிடிக்கலைனா செஞ்சிருக்கவே மாட்டேனே"
பெங்களூரி மனைவி ,"ஆமாங்க ஏங்கிட்ட ஒரு வார்த்த சொல்லிருக்க கூடாதா தோசை தந்திருப்பனே"
சர்தார்ஜி மனைவி ,"அய்யய்யோ எனக்கு ஒண்ணுமே புரியலயே அன்னைக்கு நீங்க தானே சமைச்சீங்க"

Thevan

unread,
Sep 20, 2011, 4:23:32 AM9/20/11
to panb...@googlegroups.com
காமெடி கலாட்டா தொடரட்டும்.

> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>


--
அபரிமிதமான அன்பினால் ஒருவன் போராளி ஆகிறான்.
அளவற்ற அச்சத்தினால் ஒருவன் கோழை ஆகிறான்


*Regards,*
*Thevan, *
*Mumbai.
*

ap_the...@yahoo.co.in,
ap_th...@rediffmail.com,
apth...@gmail.com

http://perumalthevan.blogspot.com/

மரவண்டு

unread,
Sep 20, 2011, 5:14:16 AM9/20/11
to பண்புடன்
மாயக் கண்ணாடி , சர்தார்ஜி ஜோக் சூப்பர் :)

மரவண்டு

unread,
Sep 20, 2011, 5:16:14 AM9/20/11
to பண்புடன்

> இது ஏதோ ரீமேக்

:) நானும் ஒரிஜினல் படிச்சிருக்கேன்..


lucky shajahan

unread,
Sep 20, 2011, 10:29:45 AM9/20/11
to panb...@googlegroups.com
ஒரிஜினல் ஹா ஹா ஹா ... :-)

2011/9/20 மரவண்டு <mara...@gmail.com>


> இது ஏதோ ரீமேக்

:) நானும் ஒரிஜினல் படிச்சிருக்கேன்..
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
ஷாஜஹான்.

sk natarajan

unread,
Sep 20, 2011, 1:05:45 PM9/20/11
to thamizh...@googlegroups.com, நட்புடன், பண்புடன், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends

அருமை
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/9/20 முகமூடி <mask...@gmail.com>
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

முகமூடி

unread,
Sep 21, 2011, 12:44:25 AM9/21/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
இன்னொரு சான்ஸ்...
சர்தார்கள் எல்லாம் சேர்ந்து நடத்திய பொது குழு கூட்டம் ஒன்றில், பெருகி வரும் சர்தார்களை முட்டாள்கள் என்று சித்தரிக்கும் போக்கை, கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பெரிய அரங்கு ஒன்றில் சர்தார்களின் (கணித) அறிவு திறமையை நிருபிக்கும் போட்டி நடத்தப்பட்டது.

நிறைய சர்தார்கள் பார்வையாளர்களாக அரங்கிற்க்கு வந்திருந்தனர். சர்தார் அல்லாத நடுவர்கள் (ஒன்னாங்கிலாஸ் கணக்கு வாத்தியார்கள், சர்தாரின் கணித அறிவை சோதிக்க இவர்கள் போதும் என்று நினைத்தார்கள் போலும்) பங்கேற்றனர். முதலில் அங்கு வந்திருந்ததிலேயே கொஞ்சம் புத்திசாலியான சர்தார் ஒருவர் மேடைக்கு வந்து சோதனைக்கு தயார் ஆனார். சர்தாரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன..

நடுவர்: முதல் கேள்வி, 5 5 எவ்வளவு?

சர்தார்: (நிறைய யோசித்துவிட்டு) 20

பார்வையாளர்கள்(சர்தார்): பரவாயில்லை இன்னொரு சான்ஸ் கொடுங்க..(கூட்டமாக கத்தினர்)

நடுவர்: ஓ.கே, 7+3 எவ்வளவு?

சர்தார்: 8

பார்வையாளர்கள்(சர்தார்): இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க..

நடுவர்: கடைசி சான்ஸ், 2+2 எவ்வளவு?

சர்தார்: 4

பார்வையாளர்கள்(சர்தார்ர்): இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க..(?)


ரயிலில் தூங்கிய சர்தார்


ஒரு முறை ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த சர்தாருக்கு தூக்கம் தூக்கமாக வந்தது. தான் இறங்க வேண்டிய இடம் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடும் என்பதால் தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு யோசனை வந்தது, அருகில்

உட்கார்ந்திருந்த ஓருவரிடம், தன்னை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும்படியும், அதற்கு இருபது ரூபாய் தருவதாகவும் சொன்னார். அருகே இருந்த அந்த ஆள் அதற்கு ஒத்துக்கொண்டு, பணத்தையும் வாங்கிக் கொண்டார். சர்தார் நன்கு தூங்க தொடங்கினார். சர்தாரை எழுப்பி விடுவாதாக சொன்ன நன்பருக்கு, ஒரு ஆளை எழுப்பி விடுவதற்க்கு, இருபது ரூபாய் வாங்குவது அவருக்கு கஸ்டமாக இருந்தது. தான் வாங்கிய பணத்துக்கு மேலும் உபயோகமாக வேறு ஏதாவது சர்தாருக்கு செய்ய வேண்டும் என நினைத்தார். தான் ஓரு பார்பர் (முடி திருத்துபவர்) என்பதால், சர்தார் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு ஷேவ் செய்துவிட்டு (தாடியையும் எடுத்து விட்டார்), சர்தார் இறங்கக்கூடிய இடம் வந்ததும் எழுப்பியும் விட்டார். இதை எதையும் அறியாத சர்தார் நேரே வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு, தன்னை கண்ணாடியில் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். தன் மனைவியை அழைத்து சொன்னார், "ரயிலில் அந்த மடையன் என்னை எழுப்பி விடுவதற்க்கு பதிலாக வேறு யாரையே எழுப்பிவிட்டு விட்டான்" என்றார்.


என்னையா முந்துகிறாய்..

ஒரு இந்து, ஒரு சர்தார், ஒரு அமெரிக்கர், விமானத்தில் பயனம் செய்துக் கொண்டிருந்தனர். திடிரென்று விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அது தாருமாறாக பறக்க ஆரம்பித்தது. பாராசூட் இல்லாததால் விமானத்தில் இருந்த மூவரும் உயிரை பனையம் வைத்து அதிலிருந்து கீழே குதிக்க முடிவு செய்தனர்.

முதலில் சர்தார் குதித்து விட்டார். தன்னுடைய டர்பனை பாராசூட் போன்று பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தார். அடுத்து, ஹிந்து குதித்தார். அவர் தன்னுடைய வேட்டியை அவிழ்த்து அதை பாராசூட் போல பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்க ஆரம்பித்தார். கடைசியாக அமெரிக்கர் தன் சட்டையை கழட்டி அதை பாராசூட் போல் பிடித்துக்கொண்டு குதித்தார், ஆனால் அவருடைய சட்டை, மற்றவர்களுடைய டர்பன் அல்லது வேட்டியைப் போல் மெதுவாக இறங்குவதற்கு உதவவில்லை. அதனால் அமெரிக்கர் வேகமாக கீழ் நோக்கி விழ ஆரம்பித்தார். விழும்போது முதலில் ஹிந்துவை தாண்டி கீழே சென்றார். அப்போது ஹிந்து, "உங்களை அந்த பகவான்தான் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். அடுத்து சர்தாரை தாண்டி சென்றார். அதைப் பார்த்த சர்தார், "என்கிட்டயா போட்டி போடுகிறாய், இப்பபார் யார் வேகமா போறான்னு பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு, தான் பிடித்திருந்து டர்பனை விட்டு விட்டார்...


வேலை வாய்ப்பகத்தில்...

அரசு பணிக்காக வேலை வாய்ப்பகத்தில் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துக் கொண்டிருந்தார் ஒரு சர்தார். மிக கவனமாக ஒவ்வொன்றாக படித்து பூர்த்தி செய்துக் கொண்டிருந்தார். SEX என்று குறிப்பிட்டிருந்த இடத்திற்கு என்ன எழுதுவது என்று சிறிது நேரம் யோசித்து விட்டு, 'மாதம் ஒரு முறை' குறிப்பிட்டார்.

இதை கவனித்த அருகில் இருந்த ஒருவர், சர்தாரிடம் சொன்னார், "அதில் ஆணா அல்லது பெண்ணா என்று மட்டுமே குறிப்பிட வேண்டும்" என்று சொன்னார். உடனே சர்தார், 'ஆண்/பெண் NN blem' என்று திருத்தி எழுதினார். அதற்க்கு பிறகு Salaaa EEEecced: என்ற இடத்தில் 'Yee' என்று எழுதினார். விண்ணப்பத்தின் கீழ் பகுதிக்கு வந்தவர், அங்கிருந்த குறிப்புகளை படித்துவிட்டு (IIIIIIcciii), உடனே விண்ணப்பத்தை கிழித்து போட்டு விட்டார். பக்கத்திலிருந்த ஒருவர் "ஏன் என்னாச்சு கிழித்து போட்டுவிட்டீர்கள்?" என்று கேட்டதற்கு சர்தார் சொன்னார், "நான் இப்ப அவசரமா டெல்லி போகனும், ஏன்னா இந்த விண்ணப்பத்தை அங்கதான் பூர்த்தி செய்யனும்னு இதிலே போட்டிருக்கு" என்றார். அருகிலிருந்தவர் குழம்பிப் போனவராய், "எங்கே அப்படி போட்டிருக்கு காண்பிங்க பார்க்கலாம்" என்றதற்க்கு, சர்தார் காண்பித்த இடத்தில் " Fill The Application In Capital" என்று எழுதியிருந்தது..

VJagadeesh

unread,
Sep 21, 2011, 12:42:35 AM9/21/11
to panb...@googlegroups.com, நட்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends

இந்திய தேசியத்தின் ஒரு அங்கமான சர்தார்ஜிகளை மேலும் மேலும் கிண்டல் செய்தால் தமிழ் தேசியத்தில் அங்கமான நாஞ்சில்காரர்கள், கொங்குநாட்டினரை நாங்களும் கிண்டல் செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

நாஞ்சில் வேணு

unread,
Sep 21, 2011, 12:54:51 AM9/21/11
to panb...@googlegroups.com, தென்றல், தமிழ் சிறகுகள்
ஓம் ஸ்ரீ! சுத்த சர்தார்ஜியான குஷ்வந்த் சிங் சர்தார்ஜி ஜோக்ஸ் என்று புத்தகமே எழுதியிருக்கிறார். சர்தார்களிடம் உள்ள ஒரு பாராட்டத்தக்க குணமே அவர்கள் தங்களை தாங்களே நக்கலடிப்பதில் விற்பன்னர்கள் என்பது தான்.

santabanta வகையான நகைச்சுவைத் துணுக்குகளும் பஞ்சாபிகளின் உற்பத்தி தான். :-)

2011/9/21 VJagadeesh <VJaga...@prouindia.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
நாஞ்சில் வேணு

Thevan

unread,
Sep 21, 2011, 12:59:44 AM9/21/11
to panb...@googlegroups.com
நகைச்சுவைகள் சிறப்பு. 
இதை (சர்தார்களை கிண்டல் செய்வதை) ஆரம்பித்து வைத்ததே இந்திய தேசத்தவர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 

2011/9/21 VJagadeesh <VJaga...@prouindia.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
அபரிமிதமான அன்பினால் ஒருவன் போராளி ஆகிறான். 
அளவற்ற அச்சத்தினால் ஒருவன் கோழை ஆகிறான்


Regards,
Thevan, 
Mumbai.

முகிலன் .

unread,
Sep 21, 2011, 12:59:47 AM9/21/11
to panb...@googlegroups.com
http://www.youtube.com/watch?v=JQtxJhjrDbI&NR=1


இந்த வீடியோல 3:30ல இருந்து பாருங்க.

VJagadeesh

unread,
Sep 21, 2011, 12:54:39 AM9/21/11
to panb...@googlegroups.com

இது என்ன?

--
'
மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'

Gokul Kumaran

unread,
Sep 21, 2011, 9:26:02 AM9/21/11
to tamizhs...@googlegroups.com, நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, tamil2friends
நான் ஒரு ஜோக் சொன்னா எல்லாரும் சிரிப்பீங்க.

ஆனா, தயவு செய்து நேரில் கேளுங்க :)


--
Gokul Kumaran

காமேஷ்

unread,
Sep 21, 2011, 11:20:08 PM9/21/11
to பண்புடன்
18+  போடுங்க.
.........



2011/9/21 Gokul Kumaran <gokul...@gmail.com>

காமேஷ்

unread,
Sep 21, 2011, 11:21:28 PM9/21/11
to panb...@googlegroups.com, தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
நீங்கன்னா  யாரு ?
.........



2011/9/21 VJagadeesh <VJaga...@prouindia.com>

VJagadeesh

unread,
Sep 22, 2011, 12:16:20 AM9/22/11
to panb...@googlegroups.com, தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends

so sad. ஒரு ப்ளோல நாங்களும் என வந்துடுச்சி. நாங்களும் இல்லை இந்திய தேசியத்தினர் என வரனும்

முகமூடி

unread,
Sep 22, 2011, 1:35:41 AM9/22/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
ஒரு ஹெச்.ஆர். எக்ஸிக்யூடிவ் பொண்ணு இறந்து எமலோகம் போனாங்களாம்.
அங்க எமதர்மன் "வாழ்த்துக்கள் நீங்க சொர்க்கம் போக தகுதியானவங்க ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாள் சொர்க்கத்திலயும் ஒரு நாள் நரகத்திலயும் தங்கணும் அப்புறம் சொர்க்கமா நரகமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்"னார்.
அவங்க "இல்ல நான் இப்பவே சொர்க்கமே போறேன் எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணனும்?"னாங்க.
அவர் "இது இங்க ரூல்ஸ் நீங்க ஃபாலோ பண்ணித்தான் தீரனும்"ங்க... அவங்களும் முதல்ல நரகம் போயி ஒரு நாள் தங்க முடிவு பண்ணி போனாங்க.
அது நரகம் மாறியே இல்ல அழகான பூங்கா அங்க இவளோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்க நாள் முழுக்க பூமிக்கதை எல்லாம் பேசினாங்க.அப்புறம் சாத்தான் வந்தாரு அவளோட ஃப்ரென்ட்ஸ் அறிமுகப்படுத்தி வைக்க அவரும் நல்லாவே பேசினாரு ஆளு பாக்கவும் ரொம்ப க்யூட். அவளுக்கு நரகத்த விட்டு வரவே மனசில்ல.ஒரு நாள் முடிஞ்சு போக நரகமே இப்படி நல்லா இருக்கே சொர்க்கம் எப்படி இருக்கும்னு போயி பாத்தா யாரும் யாரோடும் பேசவே இல்ல பூ பறிக்கறதும் சாமி கும்பிடறதுமாவே இருந்திருக்காங்க இவளுக்கு பயங்கர போர்.
கடைசியா எமன் " நீங்க எங்க போக முடிவு பண்ணிருக்கிறீங்க "ன்னு கேக்க அவ " நான் நரகத்துக்கே போறேன் சொர்க்கத்த விட அது தான் நல்லா இருக்கு"ன்னா.எமன் " நல்லா யோசிச்சுக்கங்க போனா திரும்பி வரமுடியாது"ங்க அவ பிடிவாதமா இருக்க நரகத்துல விட்டு கதவ சாத்திட்டாங்களாம்.
இப்போ பாத்தா முன்ன இருந்த அழகான பூங்கா மாறி பாலைவனமாகி அவளோட ஃப்ரென்ட்ஸ் எல்லாம் கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு இருந்தாங்களாம்.சாத்தான் கூட மேக்-அப் இல்லாத நடிகை கணக்கா கர்ண கொடூரமா இளிச்சானாம்.அவ ஒண்ணும் புரியாம "என்ன இது நேத்த விட எல்லாமே மாறி இருக்கு"ன்னு கேக்க அதுக்கு சாத்தான் சொன்னானாம் ,
"நேத்து உங்களுக்கு நடந்தது இன்டர்வியூ இன்னைக்கு நீங்க ஒரு எம்ப்ளாயீ"

-------------------

அண்ணாசாமி ஒரு நாள் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்.அப்போது சுடுகாட்டிற்கு
2 சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.அவற்றுடன் நாயுடன் ஒருவர் செல்ல அவர் பின்னால் ஒருவர் பின் ஒருவராக
கிட்டத்தட்ட 500பேர் சென்றுக்கொண்டிருந்தனர்.அதைப் பார்த்த அண்ணாசாமிக்கு ஆச்சர்யம்.டீக்கடைக்காரரிடம்
நான் எவ்வளவோ பிண ஊர்வலங்களைப் பார்த்திருக்கிறேன்..ஆனால் இவ்வளவு ஒழுங்காக ஒருவர் பின் ஒருவராக
சென்று பார்த்ததில்லை..ஆமாம் ..யாருடைய ஊர்வலம் இது? என்றார்.
அவர் நாயுடன் செல்பவரை சுட்டிக்காட்டி 'அவரைக் கேளுங்கள்' என்றார்.
நாயுடன் செல்பவர் சொன்னார்'முதலில் சென்றது என் மனைவி..'
'ஆமாம் ..அவருக்கு என்னவாயிற்று?'
என் நாய் அவளைக்கடித்து விட்டது.இரண்டாவது பிணம் என் மாமியார்..என் மனைவியைக் காப்பாற்ற சென்றவரை
என் நாய் கடித்து விட்டது.
உடனே ஆவலுடன் அண்ணாசாமி'இந்த நாய் எனக்கு வாடகைக்கு கிடைக்குமா?'என்றார்.
வரிசையில் போய் நில்லுங்கள் என்றார்...நாயுடன் சென்றவர்.
அண்ணாசாமி 501வது ஆளாக வரிசையில் நின்றார்

--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
--------------------------------------------------------------
சிங்களம் புட்பகம் சாவக-மாதிய
      தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று
      சால்புறக் கண்டவர் தாய்நாடு...
                                                     -எங்கள் நாடு...
http://kadhalpadi.blogspot.com/
http://othersideofmask.blogspot.com/
http://kadalmazhai.blogspot.com/

காமேஷ்

unread,
Sep 22, 2011, 1:38:17 AM9/22/11
to panb...@googlegroups.com
அப்படியா.. நீங்க திடீர்னு தேவ(ன்)ராகிட்டீங்களோனு நினைச்சேன்.

.........



2011/9/22 VJagadeesh <VJaga...@prouindia.com>

காமேஷ்

unread,
Sep 22, 2011, 1:41:25 AM9/22/11
to பண்புடன்
//அண்ணாசாமி ஒரு நாள் ஒரு டீக்கடையில்//

அண்ணாச்சினு படிச்சிட்டேன்.. 

சர்தார் காமடீஸ் மாதிரி அண்ணாச்சி காமடிய புதுசா கண்டுபிடிச்சிருக்காங்களோனு நெஞ்சு வெடிச்சிடுச்சி ஒரு நிமிசம்.


.........



2011/9/22 முகமூடி <mask...@gmail.com>

VJagadeesh

unread,
Sep 22, 2011, 2:33:20 AM9/22/11
to panb...@googlegroups.com

(இந்த நகைச்சுவை எனும் மொக்கை வெறும் கற்பனையே. இதிலே இருக்கும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் எதையும் குறிப்பிடப்படுவன அல்ல)

 

அண்ணாச்சி சின்னப்புள்ளையா இருக்கோசொல்ல அவங்க வாப்பா அவரை ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்து உட்டாரு.

பையன் நல்லா இங்கிலிசு பேசட்டுமேனு.. ஏன்னா தமிழ் சொல்லித்தரத்தான் அவரே போதுமே...

 

பேசிக்காவே ட்யூப் லைட்டான அண்ணாச்சி மெட்ரிகுலேசன் ஸ்கூலுக்கு போனாலும் ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் பேச கத்துக்கவே இல்லை.

 

காண்டான டீச்சரம்மா நாளைக்கு வரச்சே 4-5 வார்த்தையாச்சும் கத்துக்கிட்டு வராட்டி உன்னை டிஸ்மிஸ் பண்ணிடுவேன்னு மிரட்டிச்சி,

 

வீட்டுக்கு போற வழியிலே இருக்க பூங்காலே உதயன் நந்தினிகிட்ட ஐ லவ் யூ சொல்றதை கேட்கிறான்.

அப்புறம் அருகில் இருக்கும் மைதானத்துல கிரிக்கெட் விளையாடும் நந்தவோட சிக்சரை பார்த்து வாவ் வாட் எ ஷாட் என சொல்லும் உடன்பிறப்பு நரேஷின் வார்த்தையையும் கேட்டுக்கொள்கிறார் அண்ணாச்சி..

 

இப்ப ஒரு ரெஸ்ட்ராண்ட் பக்கமா நடந்து போகையிலே ஒரு அச்சு பிச்சுவென இருக்கும் நபர் ராசாத்தி மாதிரி இருக்கும் பெண்ணிடம் கமான் மை டார்லிங் என சொல்வதையும் கேட்டுக்கொள்கிறார் அண்ணாச்சி...

 

அருகில் இருந்த ஒரு கடையில் மைக்கிலே லேடிஸ் பர்ஸ்ட் ஜெண்ட்ஸ் செகண்ட் எனும் வாக்கியம் திரும்ப திரும்ப சொல்லப்படுவதையும் கேட்டுக்கொள்கிறான்...

 

வீட்டை நெருங்கையிலே அண்டை வீட்டிலிருந்து வெளியேறும் நபர் அவ்வீட்டாட்களிடன் டி.சி(TC - Take Care)  என சொல்லி டாடா காட்டி செல்வதையும் கவனித்துக்கொள்கிறார் அண்ணாச்சி...

 

அடுத்த நாள் பள்ளியில்,

 

ஆசிரியை கேட்கிறார், என்னப்பா 4-5 வார்த்தை ஆங்கிலம் கத்துகினியானு,,

 

அண்ணாச்சி சொல்றாரு ஐ லவ் யூ

 

ஆசிரியை பொளேர்னு ஒன்னு விட

 

அண்ணாச்சி சொல்றாரு வாவ் வாட் எ ஷாட்னு,

 

வாடா எச் எம் ரூமுக்கு போலாம்னு சொன்ன ஆசிரியையிடம்

 

கமான் மை டார்லிங்என்கிறார் அண்ணாச்சி..

 

எச் எம் ரூம்ல எச் எம்மிடம் எல்லாத்தையும் விளக்குகிறார்

ஆசிரியை. காண்டான எச் எம் சொல்றாரு

சட்டையை கழட்டுடா என்கிறார்...

 

லேடிஸ் பர்ஸ்ட் ஜென்ஸ்ட் செகண்ட் என்று அண்ணாச்சி சொன்னதும்

 

எச் எம் அண்ணாச்சிக்கு டிசியை கிழிச்சி கைல கொடுக்கிறார்.

 

அண்ணாச்சி டிசி டிசினு சொல்லி கையாட்டிக்கிட்டு போகிறார்

 

(இந்த மொக்கை ஜோக்குக்கு யாரும் லைக் போடாதீங்கப்பா)

B.SHANMUGAM

unread,
Sep 22, 2011, 2:43:57 AM9/22/11
to panb...@googlegroups.com
வாட் எ கிரியேடிவிட்டி வில்லன் !!!!!!!

(இந்த மொக்கை ஜோக்குக்கு யாரும் லைக் போடாதீங்கப்பா)


--


அச்சு !!!

unread,
Sep 22, 2011, 2:49:06 AM9/22/11
to panb...@googlegroups.com
2011/9/22 VJagadeesh <VJaga...@prouindia.com>

 அருகில் இருந்த ஒரு கடையில் மைக்கிலே லேடிஸ் பர்ஸ்ட் ஜெண்ட்ஸ் செகண்ட் எனும் வாக்கியம் திரும்ப திரும்ப சொல்லப்படுவதையும் கேட்டுக்கொள்கிறான்...


 உன்னோட வஞ்சத்த தீர்த்துட்டியே. க்ரேட்டா நீ...


--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு


காமேஷ்

unread,
Sep 22, 2011, 2:52:07 AM9/22/11
to panb...@googlegroups.com
அண்ணாச்சிய வச்சி காமெடி கதை எழுதுவதை நான் வண்மையா கண்டிக்கிறேன்.

( பிட் சூப்பர் )
.........



2011/9/22 VJagadeesh <VJaga...@prouindia.com>

முகமூடி

unread,
Sep 22, 2011, 3:38:39 AM9/22/11
to panb...@googlegroups.com
2011/9/22 VJagadeesh <VJaga...@prouindia.com>

லேடிஸ் பர்ஸ்ட் ஜென்ஸ்ட் செகண்ட் என்று அண்ணாச்சி சொன்னதும்

 

எச் எம் அண்ணாச்சிக்கு டிசியை கிழிச்சி கைல கொடுக்கிறார்.

 

அண்ணாச்சி டிசி டிசினு சொல்லி கையாட்டிக்கிட்டு போகிறார்



:)))

 

(இந்த மொக்கை ஜோக்குக்கு யாரும் லைக் போடாதீங்கப்பா)


:)))))))))))))))))))))

முகமூடி

unread,
Sep 23, 2011, 12:45:04 AM9/23/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
ஒரு கோடீஸ்வரருக்கு மூன்று மகன்கள். மரண படுக்கையில் இருக்கும் பொழுது மூன்று பேரையும் அழைத்து சொன்னார். எனது சொத்து முப்பது கோடி. நான் உங்களுக்கு சமமாக அளிக்கிறேன். அனால் ஒரு நிபந்தனை. நான் இறந்த பின் புதைக்கும் பொழுது, அதில் பாதியை ஒவ்வருவரும் போட வேண்டும். அப்போது தன் அடுத்த பிறவியிலும் நான் பணக்காரனாக முடியும். அனைவரும் சம்மதித்தனர்

ஒரு நாள் அவர் இறந்து போனார். காரியங்கள் முடிந்த பின்பு மகன்கள் பேசி கொண்டார்கள். 'நீ அப்பா சொன்ன மாதிரி காசு புதைத்தாயா

முதல் மகன் : நான் ஒரு கோடி போட்டேன்.

ரெண்டாவது மகன்: நானே பரவாயில்லை. மூணு கோடி போட்டேன். நீ என்னை விட மோசம்.

மூன்றாவது மகன்: நீங்கள் ரெண்டு பெரும் அப்பாவுக்கு குடுத்த சத்யத்தை மீறி விட்டீர்கள். நான் அப்படியில்லை. அப்பா அஞ்சு கோடி தான் கேட்டார். ஆனாலும் நான் கொடுத்த பத்து கோடிக்கும் ஒரு செக் எழுதி போட்டுட்டேன்.
-------------------------

எத்தனை இட்லி...?
- இது ரமேசுக்காக.. :)
==================
ஒரு முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார்.அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர்.
நண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் சர்தாரிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார். அதற்க்கு சர்தார் சொன்னார்,
'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார். உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயேதான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்..
சர்தார் அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார்.

தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

வீட்டிற்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார். அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார். உடனே சர்தார்
கடுப்பாகி சொன்னார், 'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார்.

காமேஷ்

unread,
Sep 23, 2011, 1:58:57 AM9/23/11
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தென்றல், muththamiz, tamil2friends
1st super
ஏன் ரமேசுக்கு மட்டும் ஸ்பெஷலா ?

(இதுவும் ரமேஷ் ஸ்பெஷல்)
இட்லி எப்படி வயித்தில சாப்பிட முடியும்.. வாயில தானே சாப்பிடுவாங்க ?

.........



2011/9/23 முகமூடி <mask...@gmail.com>

C.M உதயன்

unread,
Sep 23, 2011, 2:08:09 AM9/23/11
to பண்புடன்
அண்ணே நீங்க எப்பவுமே இப்படித்தானா இல்லை இப்படித்தான் எப்பவுமேவா

2011/9/23 காமேஷ் <kame...@gmail.com>
1

இட்லி எப்படி வயித்தில சாப்பிட முடியும்.. வாயில தானே சாப்பிடுவாங்க ?


--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

காமேஷ்

unread,
Sep 23, 2011, 2:12:09 AM9/23/11
to panb...@googlegroups.com

பொறாம தான உனக்கு ?


2011/9/23 C.M உதயன் <udhay...@gmail.com>

Thevan

unread,
Sep 23, 2011, 5:00:41 AM9/23/11
to panb...@googlegroups.com
பாராட்டுக்கள்.

> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>

--
அபரிமிதமான அன்பினால் ஒருவன் போராளி ஆகிறான்.
அளவற்ற அச்சத்தினால் ஒருவன் கோழை ஆகிறான்


*Regards,*
*Thevan, *
*Mumbai.
*

முகமூடி

unread,
Sep 24, 2011, 12:54:00 AM9/24/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
தம்பதிகளின் விருப்பம்

ஒரு தம்பதியினர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு கிணறு இருந்தது. அது விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு. அதனிடம் சென்று கணவன் தன் விருப்பத்தைக் கூறிவிட்டு வந்தான்.

பிறகு மனைவி அந்த கிணற்றுக்கு அருகே சென்றாள். அவளுக்கு உயரம் போதாததால் கொஞ்சம் எட்டிப்பார்த்தால். அவ்வளவுதான் அவள் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள்.

கணவன் பதறியபடி, நிஜமாகவே பலிக்கிறதே என்றான்


வெ‌ற்‌றிகரமான திருமண வா‌ழ்‌க்கை‌யி‌ன் ரக‌சிய‌ம்!

திருமண வா‌ழ்‌க்கையை எ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌யு‌ம் இ‌ல்லாம‌ல் வா‌ழ்‌ந்த
ஜோடிக‌ள் த‌ங்களது 25-வது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடினா‌ர்க‌ள்.

ஊரையே‌க் கூ‌ட்டி ‌விரு‌ந்து வை‌த்து த‌ங்களது ‌திருமணநாளை‌க் கொ‌ண்டாடிய த‌ம்ப‌தி‌யினரை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்த அ‌ந்த ஊ‌ர் செ‌ய்‌தி-
யாள‌ர் ஒருவ‌ர், அவ‌ர்களை‌ப் பே‌ட்டி‌க் க‌ண்டு ப‌த்‌தி‌ரி‌க்கை‌யி‌ல் ‌
பிரசு‌ரி‌க்க ‌விரு‌ம்‌பினா‌ர்.

நேராக அ‌ந்த த‌ம்ப‌திக‌ளிட‌ம் செ‌ன்று, 25-ஆ‌ம் ‌திருமண நாளை‌ ஒ‌ற்றுமையாக‌க் கொ‌ண்டாடுவது எ‌ன்பது பெ‌ரிய ‌விஷய‌ம். இது
உ‌ங்களா‌ல் எ‌ப்படி முடி‌ந்தது. உ‌ங்களது ‌திருமண வா‌ழ்‌‌வி‌ன்
வெ‌ற்‌றி ரக‌சிய‌ம் எ‌ன்ன எ‌ன்று கே‌ட்டா‌ர்.

இ‌ந்த கே‌ள்‌வியை கே‌ட்டது‌ம், அ‌ந்த கணவ‌ரு‌க்கு தனது பழைய
தே‌னிலவு ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் ‌நினைவு‌க்கு வ‌ந்தது.

"நா‌ங்க‌ள் ‌திருமண‌ம் முடி‌ந்தது‌ம் தே‌னிலவு‌க்காக சிம்லா
செ‌‌ன்றோ‌ம். அ‌ங்கு எ‌ங்களது பயண‌ம் ‌சிற‌ப்பாக அமை‌ந்தது.
அ‌ப்பகு‌தியை சு‌ற்‌றி‌ப் பா‌ர்‌க்க நா‌ங்க‌ள் கு‌திரை ஏ‌ற்ற‌ம் செ‌ல்வது
எ‌ன்று ‌தீ‌ர்மா‌னி‌த்தோ‌ம்.

அத‌ற்காக இர‌ண்டு கு‌திரைகளை‌த் தே‌ர்‌ந்தெடு‌த்து, இருவரு‌ம்
ஆளுக்கொரு கு‌‌திரை‌யி‌ல் ஏ‌றி‌க் கொ‌ண்டோ‌ம். எ‌னது கு‌திரை ‌
மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தது. ஆனா‌ல் எ‌ன்
மனை‌வி செ‌ன்ற கு‌திரை ‌மிகவு‌ம் குறு‌ம்பு‌த்தனமானதாக
இரு‌ந்தது. ‌திடீரென ஒரு து‌ள்ள‌லி‌ல் எ‌ன் மனை‌வியை ‌அது
கீழே‌த் த‌ள்‌ளியது. அவ‌ள் ‌‌கீழே இரு‌ந்து எழு‌ந்து சுதா‌ரி‌த்து‌க்
கொ‌ண்டு அ‌ந்த கு‌திரை‌யி‌ன் ‌மீது ‌மீ‌ண்டு‌ம் ஏ‌றி அம‌ர்‌ந்து
கொ‌ண்டு, "இதுதா‌ன் உன‌க்கு முத‌ல் முறை" எ‌ன்று அமை‌தி-
யாக‌க் கூ‌றினா‌ள்..

‌சி‌றிது தூர‌ம் செ‌ன்றது‌ம் அ‌ந்த கு‌திரை ‌மீ‌ண்டு‌ம் அ‌வ்வாறே
செ‌ய்தது. அ‌ப்போது‌ம் எ‌ன் மனை‌வி ‌மிக அமை‌தியாக எழு‌ந்து
கு‌திரை‌யி‌ன் ‌மீது அம‌ர்‌ந்து கொ‌ண்டு "இதுதா‌ன் உன‌க்கு இர‌ண்டா‌ம்
முறை" எ‌ன்று கூ‌றியவாறு பய‌ணி‌க்க‌த் தொட‌ங்‌கினா‌ள்.

மூ‌ன்றா‌ம் முறையு‌ம் கு‌திரை அ‌வ்வாறே செ‌ய்தது‌ம், அவ‌ள்
வேகமாக அவளது கை‌த்து‌ப்பா‌க்‌கியை எடு‌த்து அ‌ந்த கு‌திரையை
சு‌ட்டு‌க் கொ‌ன்று‌வி‌ட்டா‌ள்!!!

இதை‌க் க‌ண்டு அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த நா‌ன் அவளை ‌தி‌ட்டினே‌ன்.
"ஏ‌ன் இ‌ப்படி செ‌ய்தா‌ய்? ‌நீ எ‌ன்ன மு‌ட்டாளா? ஒரு ‌வில‌ங்கை‌க் கொ‌ன்று‌வி‌ட்டாயே? அ‌றி‌வி‌ல்லையா?" எ‌ன்று கே‌ட்டே‌ன்.

அவ‌ள் ‌மிகவு‌ம் அமையாக எ‌ன்னை‌ப் பா‌ர்‌த்து, "இதுதா‌ன்
உ‌ங்களு‌க்கு முத‌ல் முறை" எ‌ன்றா‌ள்.

“பிறகென்ன... இப்பொழுதெல்லாம்  எ‌ங்களது வா‌ழ்‌க்கை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கிறது” எ‌ன்றா‌ர் கணவ‌ர்.

சுட்டி : http://www.eegarai.net/t2178-topic

sk natarajan

unread,
Sep 24, 2011, 10:12:20 AM9/24/11
to thamizh...@googlegroups.com, நட்புடன், பண்புடன், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
ஹா .ஹா .. ஹா
கடைசியில் வந்ததை படிக்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை
தொடருங்கள் முகமூடி

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/9/21 முகமூடி <mask...@gmail.com>
இன்னொரு சான்ஸ்...


வேலை வாய்ப்பகத்தில்...

அரசு பணிக்காக வேலை வாய்ப்பகத்தில் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துக் கொண்டிருந்தார் ஒரு சர்தார். மிக கவனமாக ஒவ்வொன்றாக படித்து பூர்த்தி செய்துக் கொண்டிருந்தார். SEX என்று குறிப்பிட்டிருந்த இடத்திற்கு என்ன எழுதுவது என்று சிறிது நேரம் யோசித்து விட்டு, 'மாதம் ஒரு முறை' குறிப்பிட்டார்.

இதை கவனித்த அருகில் இருந்த ஒருவர், சர்தாரிடம் சொன்னார், "அதில் ஆணா அல்லது பெண்ணா என்று மட்டுமே குறிப்பிட வேண்டும்" என்று சொன்னார். உடனே சர்தார், 'ஆண்/பெண் NN blem' என்று திருத்தி எழுதினார். அதற்க்கு பிறகு Salaaa EEEecced: என்ற இடத்தில் 'Yee' என்று எழுதினார். விண்ணப்பத்தின் கீழ் பகுதிக்கு வந்தவர், அங்கிருந்த குறிப்புகளை படித்துவிட்டு (IIIIIIcciii), உடனே விண்ணப்பத்தை கிழித்து போட்டு விட்டார். பக்கத்திலிருந்த ஒருவர் "ஏன் என்னாச்சு கிழித்து போட்டுவிட்டீர்கள்?" என்று கேட்டதற்கு சர்தார் சொன்னார், "நான் இப்ப அவசரமா டெல்லி போகனும், ஏன்னா இந்த விண்ணப்பத்தை அங்கதான் பூர்த்தி செய்யனும்னு இதிலே போட்டிருக்கு" என்றார். அருகிலிருந்தவர் குழம்பிப் போனவராய், "எங்கே அப்படி போட்டிருக்கு காண்பிங்க பார்க்கலாம்" என்றதற்க்கு, சர்தார் காண்பித்த இடத்தில் " Fill The Application In Capital" என்று எழுதியிருந்தது..



--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
--------------------------------------------------------------
இன்பமொழி எனதுமொழி
துன்பங்களை மறக்கடிக்கும்
அன்பகத்தில் விதைந்தமொழி
தென்னகத்தின் திகழ்தமிழே...
 

முகமூடி

unread,
Sep 26, 2011, 12:54:30 AM9/26/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
கல்லூரி படிக்கும் மாணவன் செமஸ்டரில் பெயில் ஆகிவிட்டான்.அவனுடைய பேராசிரியர் வகுப்பில் அவனை நிக்க வைத்து திட்டி தீர்த்து கொண்டிருந்தார்.

மாணவன்:- (பொறுமையிழந்து...) சார், போதும் நிறுத்துங்க...நான் உங்கள சில கேள்வி கேட்கிறேன், அதுக்கு முதல பதில் சொல்லிட்டு அப்புறம் என்னை திட்டுங்க...பதில் தெரியலைனா உங்க தோல்விய ஒத்துகிட்டு என்னை புத்திசாலின்னு ஒதுக்கணும்..சரியா..

பேராசிரியர்:- என்னையே கேள்வி கேட்கபோறியா...சரி கேளு..

மாணவன்:- 1. சட்டத்துக்கு உட்பட்டது ஆனால் ஏத்துக்கமுடியாதது எது?
2. சட்டத்துக்கு புறம்பானது ஆனால் ஏத்துக்ககூடியது எது?
3. சட்டத்துக்கும் புறம்பானது ஆனால் ஏத்துக்கமுடியாததும் எது?

பேராசிரியர்:- (ரொம்ப நேரம் யோசித்து...) தெரியலைப்பா..நான் என் தோல்விய ஒத்துகிறேன்...இனிமே உன்னை திட்ட மாட்டேன்...நீ தான் உலகமகா புத்திசாலின்னு ஒத்துக்கிறேன்..பதிலை சொல்லு...

 

மாணவன்:- உங்களுக்கு வயசு 60, உங்க மனைவிக்கு வயசு 20 இது ரெண்டுமே சட்டத்துக்கு உட்பட்டது ஆனா ஏத்துக்கமுடியுமா... முடியாது சார்... ஆனா உங்க மனைவிக்கு 19 வயசுல ஒரு கள்ளகாதலன் இருக்கிறான், அது சட்டத்துக்கு புறம்பானது.. ஆனா ஏத்துக்ககூடியது சார்...அதே சமயம் அந்த கள்ளக்காதலனை நீங்களே உலமகா புத்திசாலின்னு சொன்னது சட்டத்துக்கும் புறம்பானது...ஏத்துக்ககூடியதும் இல்லை சார்...

பேராசிரியர்:-????????????!!!!!!!!!!


--------------------------------------------------

டாக்டர்களும் இன்ஜினியர்களும் ஒரு மீட்டிங்குக்கு செல்ல இரயில்வே ஸ்டேஷன் வந்தார்கள்.

கவுண்டருக்கு சென்று டிக்கெட் வாங்கி வந்தபோது டாக்டர்கள் நான்கு பேருக்கும் டிக்கட் வாங்கி இருந்தார்கள். ஆனால் இன்ஜினியர்கள் நான்கு பேருக்கும் சேர்த்து ஒரே ஒரு டிக்கட் மட்டும் வாங்கி இருந்தார்கள்.

டாக்டர்கள் இன்ஜினியர்களிடம், 'ஒரே ஒரு டிக்கட்டுல எப்படி நாலு பேர் ட்ரெயின்ல பயணம் செய்வீங்க.. மாட்டிக்க போறீங்க' என்றார்கள்.

ன்ஜினியர்கள், 'பாத்துகிட்டே இருங்க' என்று சொன்னார்கள்.

டிரெயின் புறப்பட்டதும் டாக்டர்கள் தங்கள் சீட்டில் வந்து உக்காந்தார்கள். இன்ஜினியர்கள் நான்கு பேரும் ஒரே டாயிலட்டுக்குள் புகுந்து கதவை சாத்தி கொண்டார்கள்.

டி.டி.ஆர் வந்து டாயிலட் கதவை தட்டியபோது ஒரே ஒரு கையை மட்டும் வெளியே நீட்டி டிக்கட்டை காண்பித்தார்கள். டி. டி. ஆர் செக் பண்ணி முடித்து சென்றதை பார்த்த டாக்டர்கள் திரும்பி போகும்போது அதே வழி முறையை தாங்களும் கடைபிடிக்கலாம்ன்னு முடிவு செஞ்சாங்க.

அதனால டாக்டர்கள் நாலு பேருக்கும் ஒரே ஒரு டிக்கட் மட்டும் எடுத்தாங்க. ஆனா இந்த முறை இன்ஜினியர்கள் யாருமே ஒரு டிக்கட் கூட எடுக்கலை.

டாக்டருங்க, 'எப்படி நீங்க ட்ரெயின்ல வர போறீங்க' என்று கேட்டார்கள்.

ன்ஜினியர்கள், 'பொறுத்திருந்து பாருங்கள்' என்றார்கள்.

டிரெயின் புறப்பட்டதும் இம்முறை டாக்டர்கள் நாலு பேரும் ஒரே டாயிலட்டுக்குள் நுழைந்து கதவை சாத்தி கொண்டார்கள்.

மூன்று இன்ஜினியர்கள் மற்றொரு டாயிலட்டுக்குள் நுழைந்து தாழிட்டு கொள்ள ஒரே ஒரு இன்ஜினியர் மட்டும் வெளியே வந்து டாக்டர்கள் டாயிலட் கதவை தட்டி, 'டிக்கெட்..டிக்கெட்' என்று கத்தினான்.

--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
--------------------------------------------------------------

முகமூடி

unread,
Sep 27, 2011, 1:05:59 AM9/27/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
மனோதத்துவ டாக்டர் ஒருவரிடம் அறுபது வயதான பெரியவர் தன் மன நிலை சரியாத தான் இருக்கிறதா என்று செக் செய்து கொள்ள சென்றார்.

அவரை பரிசோதித்த டாக்டர் அவரிடம் மனநிலை சரியாக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்..

டாக்டர்:- நான் உங்களோட வலது காதை வெட்டி எடுத்துட்டா என்ன ஆகும்?

பெரியவர்:- சத்தம் கேட்பது கொஞ்சம் சிரமமா இருக்கும்..

டாக்டர்:- வெரி குட்.. (தெளிவா தானே பதில் சொல்றார்)

பெரியவர்:- தேங்க்ஸ் டாக்டர்..

டாக்டர்:- ம்.. இப்போ உங்களோட இடது காதையும் வெட்டி எடுத்துட்டா என்ன ஆகும்?

பெரியவர்:- என்னால பார்க்க முடியாது சார்..

டாக்டர்:- (குழப்பத்துடன்...) என்ன சொல்றீங்க? ரெண்டு காதையும் வெட்டிட்டா பார்க்க முடியாதா?

பெரியவர்:- கண்டிப்பா டாக்டர்.

டாக்டர்:- (மனநிலை சரியில்ல தான் போலிருக்கு..) எப்படி சொல்றீங்க?

பெரியவர்:- என் மூக்கு கண்ணாடி காதுல தானே மாட்டி இருக்கேன், காதை வெட்டிடீங்கனா கண்ணாடி கழண்டு விழுந்துடுமே சார், அப்புறம் எப்படி எனக்கு கண்ணு தெரியும்?
 --------------------

புருஷன் தன பொண்டாட்டி திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா என்பதால் ஆஸ்பித்திரிக்கு கூட்டிட்டு போய் எமெர்ஜென்சி வார்டுல அட்மிட் பண்ணினான்.

ஆபரேஷன் தியேட்டருல ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருந்துச்சி. புருஷன் வெளிய உக்காந்து இருந்தான்.

கொஞ்ச நேரம் கழிச்சி வெளியே வந்த டாக்டர் அட்
டெண்டரை பாத்து, 'ஸ்பேனர் இருந்தா சீக்கிரம் எடுத்துட்டு வா' என்று கத்தினார்.

அட்டெண்டர் கொண்டு போய் கொடுத்துட்டு வந்தான்.

மறுபடியும் டாக்டர் வெளியே வந்து, ' ஸ்க்ருடிரைவர் இருந்தா சீக்கிரம் கொண்டு வா' என்று கத்தியதும் அட்டெண்டர் கொண்டு போய் கொடுத்தான்.

புருஷன், 'எதுக்கு டாக்டர் ஸ்பேனர், ஸ்க்ரு டிரைவர் எல்லாம் கேக்குறார், என்ன பண்றாங்கன்னு புரியலியே' என்று தவித்து போனான்.

கொஞ்ச நேரம் கழித்து டாக்டர் வந்து, 'அந்த பெரிய சுத்திய எடுத்துட்டு வா' என்று கத்தியதும் புருஷன் பயந்து போய் டாக்டரிடம் கேட்டான்.

புருஷன்:- என்ன டாக்டர், ஸ்பேனர், ஸ்க்ருடிரைவர், இப்போ சுத்தி எல்லாம் கேக்றீங்க..உள்ள ஆப்பரேஷன் தானே பண்றீங்க..இல்ல வேற எதாச்சுமா..

டாக்டர்:-
பரேஷன் தான் செய்யணும்..ஆபரேஷனுக்கு தேவையான கத்தி, சிஸ்சர் எல்லாம் வச்சிருக்கிற பெட்டியோட பூட்டு சாவி காணாமல் போய்டுச்சி..அதான் பெட்டிய திறக்க முயற்சி பண்ணோம்.. முடியல.. கடைசியா பூட்டை உடைக்கலாம்னு இருக்கோம்..

sk natarajan

unread,
Sep 27, 2011, 10:33:14 PM9/27/11
to thamizh...@googlegroups.com, நட்புடன், பண்புடன், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
 அருமை
தொடருங்கள் முகமூடி

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/9/26 முகமூடி <mask...@gmail.com>

முகமூடி

unread,
Sep 28, 2011, 2:27:48 AM9/28/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
ஒரு விமானம் விபத்துககுள்ளாயிற்று. ஒரு குரங்கைத் தவிர வேறு
யாருமே உயிர் பிழைக்கவில்லை.. திருவாளர் மெனாங்கு துப்பு துலக்க வசதியாக, அந்தக் குரங்குக்கு தட்டச்சு தெரிந்து இருந்தது..

திருவாளர் மெனாங்குக்கும் குரங்குக்கும் நடந்த உரையாடல் இது..

திருவாளர் மெனாங்கு ; விமானம் கிளம்பும் போது என்ன நடந்தது..? பயணிகள்
என்ன செய்தார்கள்..?

குரங்கு ; சீட் பெல்ட் போட்டார்கள்..

மெனாங்கு ; பணிப் பெண்கள்..?

குரங்கு ; பெல்ட் போட உதவினார்கள்..

மெனாங்கு ; விமானிகள்.. ?

குரங்கு ; விமானத்தை கிளப்பினார்கள்..

மெனாங்கு ; நீ என்ன செய்தாய்..?

குரங்கு ; வேடிக்கை பார்த்தேன்..

மெனாங்கு ; 15 நிமிடம் கழித்து என்ன நடந்தது..?

குரங்கு ; பயணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.. பணிப்பெண்கள் பவுடர்
பூசிக்கொண்டார்கள்.. விமானிகள் விமானத்தைக் கையாண்டூ
கொண்டிருந்தார்கள்..

மெனாங்கு ; நீ என்ன செய்தாய்..?

குரங்கு ; நான் விமானத்தை சுற்றிப் பார்த்து கொண்டிருந்தேன்..!

மெனாங்கு ; விபத்து நடக்கும் போது என்ன நடந்தது..?

குரங்கு ; பயணிகள் தூங்கினார்கள்.. பணிப்பெண்கள் ஓய்வறைக்குப்
போய்விட்டார்கள்.. விமானிகள் பணிப்பெண்களுடன்
பேசிக்கொண்டிருந்தார்கள்..

மெனாங்கு ; நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?

குரங்கு ; நான் விமானத்தை ஓட்டிக் கொண்டு இருந்தேன்..!

காமேஷ்

unread,
Sep 28, 2011, 2:35:00 AM9/28/11
to tamizhs...@googlegroups.com, நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, tamil2friends
எல்லாமே சூப்பர் வாழ்த்துக்கள் முகமூடி சார்.

.........



2011/9/28 முகமூடி <mask...@gmail.com>

முகமூடி

unread,
Sep 29, 2011, 4:04:28 AM9/29/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends

திருமண வாழ்க்கையின் ரகசியம்

ஒருமுறை என்னுடைய நண்பரிடம் கேட்டேன் "உன்னுடைய மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன?"

அவன் சொன்னான், “பொறுப்புகளை பகிர்ந்து, ஒருவரையொருவர்  மதித்து வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் பிரச்சினையே இல்லை. "

"புரியவில்லை” என்றேன்.

"என் வீட்டில்என் மனைவி சிறிய பிரச்சினைகள் மீது முடிவு செய்வாள்பெரிய விஷயங்களில் நான்  முடிவெடுப்பேன்.  நாங்கள் ஒருவருடைய முடிவுகளில் மற்றவர் தலையிட மாட்டோம்.”

மீண்டும் "புரியவில்லை” என்றேன்.

"நாம் என்ன கார் வாங்க வேண்டும், எந்த சோபா, துணி, வீடு, வேலைக்காரி, டிவி, மாத செலவுகள் இது போன்ற சிறிய பிரச்சினைகளை என் மனைவி முடிவு செய்வாள். நான் அதற்கு ஒப்புக்கொள்வேன்."

 "உன்னுடைய பங்கு என்ன?என்றேன்.

“பெரிய முடிவுகளை மட்டுமே நான் எடுப்பேன். சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறவேண்டும் அமெரிக்கா ஈரான்மீது தாக்குதல் நடத்த வேண்டும், அன்னா ஹசாரே உண்ணா விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் இது போன்ற பெரிய முடிவுகளை மட்டுமே நான் எடுப்பேன்.

இதற்கு என் மனைவி எப்பொழுதும் இதற்கு மறுத்துப் பேசுவதே இல்லை....!!!!!!"


சுட்டி : http://ta.indli.com/upcoming/nagaichuvai

Thevan

unread,
Sep 29, 2011, 8:16:00 AM9/29/11
to panb...@googlegroups.com
அருமை

2011/9/29 முகமூடி <mask...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
வெற்றியாளர்களை சுதந்திரச் சிந்தனை வழிநடத்துகிறது.
தோல்வியாளர்களை அடிமைச் சிந்தனை மகிழ்விக்கிறது.


Regards,
Thevan, 
Mumbai.

ramesh vaidya

unread,
Sep 30, 2011, 2:25:23 AM9/30/11
to panb...@googlegroups.com
முகமூடி,
ஒண்ணே ஒண்ணாச்சும் புதுசாப் போடுங்க. நன்றி.


29 செப்டெம்ப்ர், 2011 5:46 pm அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:

raja rajan

unread,
Sep 30, 2011, 3:47:12 AM9/30/11
to nadp...@googlegroups.com, thamizh...@googlegroups.com, பண்புடன், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
சர்தார்ஜி மனைவி ,"அய்யய்யோ எனக்கு ஒண்ணுமே புரியலயே அன்னைக்கு நீங்க தானே சமைச்சீங்க"

:))
வேலைச்சுமையின் ஊடே உங்கள் நகைச்சுவைப்பதிவு பன்னீர் தெளித்தது  போல ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது..தொடருங்கள்    
 

முகமூடி

unread,
Oct 6, 2011, 2:07:16 AM10/6/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
ஒரு வங்கியில் கொள்ளையன் வங்கியை கொள்ளை அடித்துவிட்டு அங்கிருந்து வாடிக்கையாளர் ஒருவனிடம் நான் வங்கியை கொள்ளை அடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான்.

அதற்கு அந்த வாடிக்கையாளர் ஆம் என்றான்.

உடனே கொள்ளையன் அவனை சுட்டுவிட்டான்.



பிறகு ஒரு ஜோடியிடம் வந்து பெண்ணிடம் நான் கொள்ளையடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான்.

அதற்கு அந்த பெண் நான் பார்க்கவில்லை. ஆனால் இவர் பார்த்துவிட்டார் என்றாள்.
------------------------------------

டீவி பார்த்துக்கொண்டிருந்த சர்தார் தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும் துருவித் துளாவுகிறார்.

சர்தாரின் மனைவி : என்ன தேடுறீங்க?

சர்தார் : இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.

சர்தாரின் மனைவி : யாரு? எப்படிச் சொல்றீங்க?

சர்தார் : அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான் பாக்குறேன் அப்படிங்கறத எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.

சர்தாரின் மனைவி : என்ன சொல்றான்?

சர்தார் : நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி.

--------------------
ஒரு பெண் இறந்து சொர்க்கம் போனாள்,வாசலில் நின்றிருந்த போது அங்கே கடவுள் வந்தார், அவள் அவசரமாக "எப்படி உள்ளே வருவது?" என்றாள்.
"நீ ஒரு வார்த்தையை spell பண்ண வேண்டும்" என்று போர்டு காட்டினாளர் அங்கே எழுதியிருந்தது
"love"
அவள் சொன்னதும் வழி விடப்பட்டது.சொர்க்கத்தில் ஒரு வருடம் கழிந்தது.ஒரு நாள் கடவுள் அவளிடம் வந்து இன்றொரு நாள் வருபவர்களை கவனித்துக் கொள் எனக்கு வேலை இருக்கிறது" என்றார்.

அவள் கேட்டில் நின்ற போது அவள் கணவன் வந்தான்,"ஹேய் உன்னை இங்கே எதிர்பார்க்கவே இல்லை"
"சரி பூமியில் எப்படி வாழ்ந்தாய்?"
"நீ காய்ச்சலாக கிடந்த போது பார்த்துக்கொண்டாளே ஒரு அழகான நர்ஸ் அவளை கல்யாணம் செய்து கொண்டேன் லாட்டரியில் பரிசு கிடைத்தது நாம் இருந்த சின்ன வீட்டை விற்று பெரிய அப்பார்ட்மெண்ட் போனோம் அப்புறம் டூர் போனபோது ஆக்சிடெண்ட் ஆகி இறந்து இங்கே வந்தேன் சரி எப்படி உள்ளே வருவது?"
"நீ ஒரு வார்த்தையை spell பண்ண வேண்டும்" என்று போர்டு காட்டினாள் அங்கே எழுதியிருந்தது,

"Czechoslovakia."

முகமூடி

unread,
Oct 7, 2011, 2:11:10 AM10/7/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
மோஷே கத்சவ்வும்,  புஷும் ஒரு பாரில் அருகருகே அமர்ந்து உள்ளனர். அப்போது ஒரு நபர் அந்த பாருக்கு வருகிறார். சிப்பந்தியிடம் அவர்கள் மோஷே கத்சவ் மற்றும் புஷ்சா என்று கேட்கிறார்.
"ஆம்! அவர்கள்தான்!" என்றார் சிப்பந்தி.

உடனே அந்த நபர் அவர்களிடம் சென்று "ஹலோ! இங்கு என்ன செய்கிறீர்கள்?" என்றார்.
புஷ்: "நாங்கள் மூன்றாம் உலகப் போரைப் பற்றி விவாதிக்கிறோம்."

அந்த நபர், "ஒ! உண்மையாகவா? என்ன நடக்கப் போகிறது? " என்று கேட்கிறார்.

மோஷே கத்சவ்: "நல்லது! நாங்கள் 14 மில்லியன் பாலஸ்தீனர்களையும், ஒரு சைக்கிள்
ரிப்பேர் செய்கிறவரையும் கொல்லப் போகிறோம்"

உடனே அந்த நபர் மிகவும் ஆச்சரியத்துடன் "என்னது ஒரு சைக்கிள் ரிப்பேர் செய்பவரா?" என்று கேட்கிறார்.

மோஷே கத்சவ் புஷ் ஐப் பார்த்து, "பார்த்தீர்கள? நான் அப்பவே சொன்னேன், ஒருவரும் 14 மில்லியன் பாலஸ்தீனியர்களைப் பற்றி கவலைப் படமாட்டார்கள்! நாம் திட்டமிட்டபடி இதை செய்து முடித்துவிடுவோம்"

-------------

காரில் போய்க்கொண்டிருந்தவனை அவன் மனைவி செல்போனில் அவசரமாக தொடர்பு கொண்டாள்.

"என்னங்க பாத்து போங்க ஹை வேயில் ஏதோ ஒரு கார் ராங் சைட்ல 300 கிமீ வேகத்தில வருதாம்"

"ஒண்ணா...நூறு காரு போகுது"

----------------------

ஒரு ஊரில் ரெண்டு பசங்க இருந்தாங்களாம், அவங்க பயங்கர குறும்பு.
எப்ப பாத்தாலும் ஏதாவது ப்ரச்னை பண்ணி பக்கத்து வீட்டுக்காரங்க
அவங்கம்மா கிட்ட கம்ப்ளைன் பண்ணிட்டே இருப்பாங்களாம்.அவங்கம்மா எவ்வளவோ முயற்சி பண்ணியும் இவங்களை திருத்த முடியல.
அப்ப தான் அந்த ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்திருந்தார்.அவங்கம்மாவும் சின்னவனை திருத்தலாம்னு கூட்டிட்டு போனாங்களாம்.

அந்த சாமியார பையன் விநோதமா பார்க்க அவர் சிரிச்சிக்கிட்டே கேட்டார்
”கடவுளை பாத்திருக்கியா?”

பையன் புரியாம முழிச்சான்.

திரும்பவும் அவர் ,”கடவுள் எங்கிருக்கார்னு தெரியுமா” ன்னார் லைட்டா முறைச்சிக்கிட்டே.பையன் லேசா கலவரமாயிட்டான்.

அவர் விடாம ”சொல்லு கடவுள் எங்கிருக்கார்?”

பையன் பயத்தில அழ ஆரம்பிக்க அவங்கம்மாவுக்கு ஆச்சர்யம்.

அவர் அப்புறமும் கடவுள் எங்கே சொல்லு கடவுள் எங்கேன்னு கேட்க

பையன் சத்தம் போட்டு அழுதுகிட்டே வேகமா ஓட்றான் வீட்டை பாத்து.

வீட்டுக்குள்ளே அண்ணன் ரூமுக்கு போய் வேகமா கதவ சாத்திட்டு பயத்தோட நிக்க அண்ணன் கேட்டான்
”என்னடா பிரச்னை ஏன் இப்டி ஓடி வர்ர?”

”இல்ல நிலைமை மோசமாய்டிச்சி”

”ஏன் என்னாச்சு?”

”கடவுளை காணோமாம்”

”அதுக்கு?”

”எல்லோரும் நம்மளை சந்தேகப்படறாங்க”

சுட்டி : http://www.tamilcomedyworld.com/text-comedy/stories-list.php?ccid=CC27

akash

unread,
Oct 7, 2011, 2:55:29 PM10/7/11
to tamizhs...@googlegroups.com, தென்றல், nadp...@googlegroups.com, panb...@googlegroups.com
ஹா ஹா ஹா
எல்லாம் நல்லாயிருக்கு.

2011/10/7 முகமூடி <mask...@gmail.com>

உங்கள் அன்புடன் 

ஆகாஷ்...


முகமூடி

unread,
Oct 8, 2011, 1:18:05 AM10/8/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
ஒருத்தன் வழக்கம் போல நைட் தூங்கப்போனான், ‘டிஷ்’னு ஒரு சத்தத்தோட புகை மண்டலம், நல்லா தடியா மீசை வச்ச ஒருத்தர் வந்து,” நான் தான் எம தர்மன் இன்னில இருந்து உனக்கு 10 வருஷத்துக்கு சாவே இல்ல என்ன வேணா பண்ணிக்க போ”ன்னாரு.

இவனும் அத நம்பி டெஸ்ட் பண்ணலாம்னு லாரி முன்னாடி நிக்க ஆக்ஸிடெண்ட் ஆகி செத்து எம லோகம் போய் கோபமா நீதி கேட்டான்,”இப்டி மோசம் பண்ணிட்டியே ஏன் இப்டி செஞ்சே”

“ஸாரிப்பா மாசக்கடைசி டார்கெட் ரீச் பண்ணனும்ல”
---------------------

ஒரு நாள் பேரழிவுல உலகம் அழிஞ்சிடிச்சி.
கடவுள் வந்து மனைவிகளை சொர்க்கத்துக்கு அனுப்பிட்டாரு.

வீட்ல மனைவி சொல் கேக்குற ஆம்பளங்கள ஒரு பக்கமும், தான் அதிகாரம்
பண்றவங்களை ஒரு வரிசைலயும் நிக்க சொன்னார்.
பாத்தா ஒரே ஒருத்தன் தான் நிக்கறான்.

அவருக்கு கடுப்பாய்டிச்சி, “என்னப்பா இது என்னோட சாயல்ல உருவாக்கினா இப்படி எல்லோரும் இருக்கீங்களே, ஒரே ஒருத்தன் தான் சிங்கக்குட்டி மனைவியை அதிகாரம் பண்றான், உன்ன நினைச்சா பெருமையா இருக்கு மகனே”ன்னாரு.

அவன் உடனே சொன்னானாம்,”அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, ஏதோ என் பொண்டாட்டி தான் இங்க நிக்க சொன்னா”.

-----------------

ஒரு முறை தேவதைகள் பூமியை சுத்திப் பாத்துட்டு சொர்க்கத்துக்கு போனதுகளாம்.அங்க இருந்த மத்த தேவதைகள் கிட்ட தான் சுத்தி பாத்த இடங்கள் பத்தி சொல்ல ஆரம்பிச்சது,"பூமியில நான் ஒரு வித்தியாசமான பிரார்த்தனைய பார்த்தேன்"

"என்னது?"

"ஒரு பெரிய மைதானத்தில லட்சக்கணக்கான மக்கள் கூடி இருக்காங்க...நடு மைதானம் வெட்ட வெளி அங்க ஒரு 20 சுமார் பேர் வெள்ளை ட்ரெஸ் போட்டுட்டு கையில கட்டை இன்னும் ஏதேதோ எடுத்துட்டு என்னமோ பேசறாங்க...அவ்ளோ தான் உடனே அந்த அதிசயம் நடக்குது...."

"என்ன அதிசயம்?"

"ச்ச்சோன்னு மழை பெய்ய ஆரம்பிச்சுடுது"

(match delayed due to rain)

sk natarajan

unread,
Oct 9, 2011, 12:40:39 AM10/9/11
to thamizh...@googlegroups.com, நட்புடன், பண்புடன், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
அருமை  அருமை

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



முகமூடி

unread,
Oct 12, 2011, 12:49:08 AM10/12/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
சுட்டி : http://www.tamilcomedyworld.com/text-comedy/stories-list.php?tci=2&ccid=CC28

பீர்பால்..புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்.

ஒருநாள் அக்பரும்,அவரும் உலாவச் சென்றனர்.வழியில்...புகையிலை தோட்டத்தின் நடுவே செல்ல நேர்ந்தது.அங்கே அப்போது நுழைந்த கழுதை ஒன்று..புகையிலை நெடியால் முகத்தை திருப்பிக் கொண்டது.

உடனே..அக்பர்...'பார்த்தாயா..பீர்பால், புகையிலையை கழுதை கூட விரும்பவில்லை' என்றார்.

தமது புகையிலையைப் போடும் பழக்கத்தையே அவ்வாறு கிண்டல் செய்கிறார் என்பதை அறிந்த பிர்பால்.ஆம்..மன்னா..கழுதைகள்தான் புகையிலையை விரும்பாது என்றார்.

------------------

ஒரு அடுக்கு மாடில தீப்பிடிச்சிருச்சாம்.உடனே தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து மாடில இருக்கிறவங்கள குதிக்க சொல்லி கீழ வலையோட நின்னாங்க.

முதல்ல ஒரு ஆப்ரிக்க பொண்ணு குதிச்சது,சரியா பிடிக்காததால கீழ விழுந்துடுச்சு,லேசான அடி.

ரெண்டாவது சீனாப்பொண்ணு இதுவும் குதிச்சது சரியான டைரக் ஷன் இல்லாம வலையை அங்கயும் இங்கயும் ஆட்டி இதுவும் மிஸ்ஸாகி கீழே விழுந்துடுச்சு.

அடுத்தது ப்ளான்ட் பொண்ணு வந்து நின்னது,கீழ தீயணைப்பு வீரர்கள் “குதி, குதி”ன்னாங்க, ஒரு நிமிஷம் யோசிச்சுட்டு சத்தமா சொன்னிச்சு,” நான் உங்கள நம்ப மாட்டேன், வலையை கீழே வச்சுட்டு விலகி நில்லுங்க”

--------------------

ஒரு சர்தார்ஜி பால்கனில வேடிக்கை பார்த்துட்டு இருந்தப்போ ஒருத்தன் ஓடி வந்து
பூட்டாசிங் உன் தம்பி ஆக்ஸிடன்ட்ல பூட்டான்ன்னான்.

தம்பியே செத்துட்டான் இனி எனக்கென்ன?ன்னு பொசுக்குன்னு மாடில இருந்து குதிச்சிட்டார்.

பாதி வழில ஒரு பைப்பை புடிச்சுக்கிட்டு 'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சார்.
மாடில தகவல் சொன்னவன் ஏன்யா அழறன்னு கேட்டான்,

இவரு,எனக்கு தம்பியே இல்லைப்பா, இவ்ளோ முட்டாளா இருக்கேனேன்னு திரும்ப குதிச்சார்.

ஆனா காயத்தோட தப்பிச்சிட்டார், திரும்ப 'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சார்.
இப்ப ஏன்யா அழற?

நான் பூட்டாசிங்கே இல்லைப்பா

--------------------

நம்ம அம்மாஞ்சி வேலைக்கு அப்ளிகேஷன் போட ஃபார்ம் எழுதிட்டிருக்கார்.

பேரு, ஊரு, முகவரி எல்லாமே எழுதிட்டார்.

நடுவில "Salary Expected" அப்டின்னு வந்திருக்கு , ரொம்ப நேரம் யோசிச்சு தயங்கி தயங்கி கடைசியா எழுதினார் "Yes".

-----------------------

சென்ஷி .

unread,
Oct 12, 2011, 12:51:49 AM10/12/11
to panb...@googlegroups.com
//ப்ளான்ட் பொண்ணு//

புரியலையே இது என்ன???

முகமூடி

unread,
Oct 12, 2011, 1:02:43 AM10/12/11
to panb...@googlegroups.com
நம்மூர்ல சர்தார்ஜி போல வெளி நாடுகள்ல (வெண்ணிற கூந்தலுடைய பெண்) ஜோக்ஸ் அதிகமாம். அதைத்தான் அப்படி ப்ளான்ட் பொண்ணுன்னு போட்டிருக்காங்க...

சுட்டி : http://jokekaadu.blogspot.com/2006/02/blog-post_23.html


2011/10/12 சென்ஷி . <me.s...@gmail.com>

//ப்ளான்ட் பொண்ணு//

புரியலையே இது என்ன???

சென்ஷி .

unread,
Oct 12, 2011, 1:06:57 AM10/12/11
to panb...@googlegroups.com
ஓஹ்... சரி சரி :)))

2011/10/12 முகமூடி <mask...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
- senshe

முகமூடி

unread,
Oct 12, 2011, 1:23:53 AM10/12/11
to panb...@googlegroups.com

விக்கியில் கிடச்சது...

http://en.wikipedia.org/wiki/Blonde_stereotype

Blonde stereotype

From Wikipedia, the free encyclopedia

The blonde stereotype, the stereotypical perception of blond-haired women, has two aspects. On one hand, over the history, blonde hair in women has been considered attractive and desirable. On the other hand, a blonde woman is often perceived as making little use of intelligence, as a "woman who relied on her looks rather than on intelligence."[1]

It can be used as a popular culture derogatory stereotype[2] to use hair colour as an indication of intelligence. This stereotype is utilized in blonde jokes.

Blonde hair is also a physical trait often associated with "bimbos," attractive women perceived as unintelligent or uneducated.



2011/10/12 சென்ஷி . <me.s...@gmail.com>
ஓஹ்... சரி சரி :)))

முகமூடி

unread,
Oct 13, 2011, 1:16:43 AM10/13/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
அது ஒரு பன்னாட்டு மருத்துவர்கள் மாநாடு. மருத்துவர்கள் தங்கள் நாட்டு மருத்துவச் சாதனைகளைப்பற்றி கூறிக் கொண்டிருந்தனர். பிரித்தானிய மருத்துவர் தமது நாட்டில் சிறு நீரகம் இல்லாமல் ஒருவரை நடக்கப்பண்ணி வாழவைத்ததைப் பெருமையாகச் சொன்னார். அமெரிக்கர் தமது நாட்டில் நுரையீரல் இல்லாமல் ஒருவரை நடக்கப்பண்ணி வாழவைத்ததைப் பெருமையாகச் சொன்னார்.


சீன மருத்துவர் தமது நாட்டில் இருதயமில்லாதவர்கள் நாட்டை நடத்துவ்தாகக் கூறிப் பெருமைப் பட்டுக்கொண்டார். இந்திய மருத்துவர் தமது நாட்டில் மூளையே இல்லாத 802பேர் ராஜ் சபாவிலும் லோக் சாபாவிலும் ஆயிரக்கணக்கானோர் சட்டசபைகளிலும் இருந்து நாட்டை நடத்துவதாகச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொண்டார்.

சுட்டி : http://veltharma.blogspot.com/2011/10/802.html
------------
அமெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்க பட்டிருந்தார்கள். 

ஜப்பான் அரசியல்வாதிகள் சேதத்தை டேப்  வைத்து அளந்து விட்டு சில பல கணக்குகள் எல்லாம் போட்டு $900 செலவாகும்ன்னு சொன்னாங்க ( $400 மெடீரியல்களுக்கு $400  டீம்க்கு $100 லாபம்).

சீன அரசியல்வாதிகளும் அதேமாதிரி அளந்து பாத்து கணக்கு போட்டு $700 செலவாகும்ன்னு சொன்னாங்க ($300 மெடீரியல்களுக்கு $300 டீம்க்கு $100 லாபம்)

இந்திய அரசியல்வாதிகள் வந்தாங்க ஒன்னும் அளந்தும் பாக்கல கணக்கும் போடல அமெரிக்க அதிகாரிகளை மேலயும் கீழயும் பாத்துட்டு அவங்களுக்குள்ளயே குசு குசு ன்னு பேசிட்டு $2,700 செலவாகும்ன்னு சொன்னங்க.

அமெரிக்க அதிகாரிகள், "அளந்தும் பாக்கல கணக்கும் போடல $2,700 ன்னு சொல்றேங்களே"ன்னு சொன்னாங்க. இந்திய அரசியல்வாதிகள் அவங்க காதுல  "$1000 எங்களுக்கு $1000 உங்களுக்கு வேலைக்கு சீனாவில் இருந்து ஆட்களை எடுத்துக்கலாம்"ன்னு சொன்னாங்க 

டீல் நல்லா இருந்ததால அமெரிக்க அதிகாரிகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு வேலைய கொடுத்துட்டாங்க. இதுக்கு பேரு தான் பிசினஸ் டாக்கிஸ்.

சுட்டி : http://ta.indli.com/search/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20hellip

-------------


காலையில் அவரது நடைபயிற்சியின்போது திடீரென எதிரே வந்த ஒரு பைக் அவர்மீது மோதியது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் இரண்டு நாட்கள் கோமாவில் இருக்கும் நிலை ஏற்பட்டது.  கண்களை திறந்து பார்த்தபோது, அவரது காதலி தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள். 
அவர் “பல்கலைக்கழகத்தில் என் ஆய்வுகள் என போராடிக்கொண்டு இருந்த போது,  நான் மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்தேன்  (கண்களில் கண்ணீர்) அப்போது நீ என்னுடன் இருந்து என் முயற்சியை ஊக்குவித்தாய்"

தொடர்ந்து அவர் "நான் என்னுடைய வேலைக்கான நேர்முகத் தேர்வில் தோல்வியடைந்தபோது,  நீ என்னுடன் இருந்து மற்ற வேலைகளுக்கான விளம்பரங்கள் வெட்டி,  அவைகளுக்கு விண்ணப்பிக்க உதவி செய்தாய்"
தன் காதலியின் கைகளை அழுத்தமாகப் பற்றிக் கொண்டார். பின் "நான் ஒரு சிறிய நிறுவனத்தைத் தொடங்கி இறுதியாக ஒரு பெரிய ஒப்பந்தம் கிடைத்தது. அப்போது நடந்த ஒரு சிறிய தவறால் அது கிடைக்காமல் போனது அப்போதும்கூட நீ எனக்குத் துணையாக இருந்தாய்."

காதலியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. மேலும் அவர் “இறுதியாக எனது நிறுவனம் மூடப்பட்ட பின் எனக்கு ஒரு வேலை கிடைத்தது ஆனால் அங்கு எனது கடின உழைப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நான் இன்னும் அங்கு சேர்ந்த அதே நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன், அதேபோல் நீயும் என்னுடன் இருக்கிறாய்" 

அவள் அவனை கவனிக்கக்கூட சக்தியில்லாமல் கீழே பார்த்துக் கொண்டே கூறினாள், "நீங்கள் கூறுவதும் சரிதான், உண்மையில் நீங்கள் சொல்வது போல நமக்குள் ஏதோ இருக்கிறது" என்று புலம்பினாள்.

இறுதியாக அவர் சொன்னார்,

"
உன்னுடைய துரதிர்ஷ்டம்தான் என்னைத் துரத்துகிறது என நான் நினைக்கிறேன்.!

--------------



சென்ஷி .

unread,
Oct 13, 2011, 1:19:18 AM10/13/11
to panb...@googlegroups.com
//

அமெரிக்க அதிகாரிகள், "அளந்தும் பாக்கல கணக்கும் போடல $2,700 ன்னு சொல்றேங்களே"ன்னு சொன்னாங்க. இந்திய அரசியல்வாதிகள் அவங்க காதுல  "$1000 எங்களுக்கு $1000 உங்களுக்கு வேலைக்கு சீனாவில் இருந்து ஆட்களை எடுத்துக்கலாம்"ன்னு சொன்னாங்க //

ஐ லைக் இட் :)))

தமிழ் பயணி

unread,
Oct 13, 2011, 1:47:22 AM10/13/11
to panb...@googlegroups.com
ரொம்ப இரசிக்க வைத்த நகைச்சுவை..

2011/10/13 சென்ஷி . <me.s...@gmail.com>
//

அமெரிக்க அதிகாரிகள், "அளந்தும் பாக்கல கணக்கும் போடல $2,700 ன்னு சொல்றேங்களே"ன்னு சொன்னாங்க. இந்திய அரசியல்வாதிகள் அவங்க காதுல  "$1000 எங்களுக்கு $1000 உங்களுக்கு வேலைக்கு சீனாவில் இருந்து ஆட்களை எடுத்துக்கலாம்"ன்னு சொன்னாங்க //

ஐ லைக் இட் :)))

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
டெல்லி முற்றுகை


lucky shajahan

unread,
Oct 13, 2011, 4:41:10 AM10/13/11
to tamizhs...@googlegroups.com, பண்புடன்
இரண்டாவதைப் படித்ததும் வைரமுத்து சொன்ன ஒரு துணுக்கு நினைவில்..
 
நம்ம அரசியல்வாதி அமெரிக்கா போனாராம்.. ஒரு அரசியல்வாதி வீட்டில் தங்கியிருக்கிறார் .. மிக உயர்ந்த
ஆடம்பர பங்களா.. எப்படி கட்ட்டுனீர்கள்.. மிக செலவாகி இருக்கும் போலிருக்கிறதே என்று கேட்டாராம்  நம்மாள்.
அமெரிக்கர் அவரை மாடிக்கு கூட்டிப் போய் "அதோ பாருங்கள் அங்கே ஒரு பாலம் தெரிகிறதா?" என்றாராம்.
தெரிகிறது என்றாராம் நம்மாள், அமெரிக்கர் சொன்னாராம் 50% கமிஷன் அடிச்சேன் அதான் இந்த வீடு
 
பிறிதொரு நாள் அமெரிக்கர் இங்கு வந்திருக்கிறார்.. நம் அரசியல்வாதி வீட்டுக்கு அழைத்துப் போயிருக்கிறார்.
வீடா அது பூலோக சொர்க்கம்.. அமெரிக்கர் வாய்பிளந்து கேட்டாராம்.. எப்படி கட்டுனீங்க இந்த வீட்டை.. ரொம்ப
செலவாகி இருக்குமே.. நம்மாள் அமெரிக்கரை மாடிக்கு அழைத்து சென்றார்..
 
அதோ அங்கே ஒரு பாலம் தெரிகிறதா?
 
தெரியலையே..
 
100 %  என்றாராம் நம்மாள்..
 

Gokul Kumaran

unread,
Oct 13, 2011, 9:09:14 AM10/13/11
to tamizhs...@googlegroups.com, நட்புடன், பண்புடன்
இந்த ஜோக்கைப் படிச்சவுடன் நேவியில் நடந்த உண்மையான ஒரு ஜோக் ஞாபகத்துக்கு வருது.

வடக்கன் ஒருத்தனுக்கு ஒருநாள் அவன் ஊரில் அவன் மனைவிகிட்டேயிருந்து, “ஆப்கோ பேட்டா ஹுவா (உங்களுக்கு மகன் பிறந்திருக்கு) -ன்னு தந்தி வந்தது. உடனே அவனும் ரொம்ப சந்தோஷமாகி எல்லாருக்கும் ஸ்வீட் கொடுத்தான்.

ஸ்வீட் வாங்கின அவனுடைய நண்பன் ஒருத்தன் யோசிச்சான், ”இவன் கடைசியா போன வருஷம் பிப்ரவரி மாதம் லீவுக்கு போனான். இப்போ ஒரு வருஷம் முடிஞ்சு ஆகஸ்ட் ஓடுதே, இவனுக்கு எப்படி மகன் பிறக்கும்?”

நேரா, அவனுடைய டிவிஜனல் ஆஃபீசர் கிட்டே போய் தன்னுடைய சந்தேகத்தைச் சொன்னான். டிவிஜனல் ஆஃபீசரும் அவனுடைய சர்வீஸ் டாகுமெண்ட்டை வாங்கி செக் பண்ணி பாத்துட்டு, சொன்னது உண்மைன்னு உறுதி பண்ணிக்கிட்டாரு. அப்புறமா, அந்த வடக்கனை அழைச்சு, பொறுமையா எடுத்து சொல்லி ”ஏதோ பிரச்சினை இருக்கு, நீ லீவுல ஊருக்குப் போ”-ன்னு ஒரு மாசம் லீவ் கொடுத்து அனுப்பி வச்சாரு.

ஊருக்குப் போய் கொஞ்ச நாள் கழிஞ்சு அவன் கிட்டேயிருந்து விளக்கமா லெட்டர் வருது, “எங்க அண்ணனுக்கு ஆம்பளைப் புள்ள பொறந்திருக்கு!!!”

இப்புடியும் இருந்திருக்காங்க.


2011/10/12 முகமூடி <mask...@gmail.com>
ஒரு சர்தார்ஜி பால்கனில வேடிக்கை பார்த்துட்டு இருந்தப்போ ஒருத்தன் ஓடி வந்து
பூட்டாசிங் உன் தம்பி ஆக்ஸிடன்ட்ல பூட்டான்ன்னான்.

தம்பியே செத்துட்டான் இனி எனக்கென்ன?ன்னு பொசுக்குன்னு மாடில இருந்து குதிச்சிட்டார்.

பாதி வழில ஒரு பைப்பை புடிச்சுக்கிட்டு 'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சார்.
மாடில தகவல் சொன்னவன் ஏன்யா அழறன்னு கேட்டான்,

இவரு,எனக்கு தம்பியே இல்லைப்பா, இவ்ளோ முட்டாளா இருக்கேனேன்னு திரும்ப குதிச்சார்.

ஆனா காயத்தோட தப்பிச்சிட்டார், திரும்ப 'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சார்.
இப்ப ஏன்யா அழற?

நான் பூட்டாசிங்கே இல்லைப்பா

--
Gokul Kumaran

Ahamed Zubair A

unread,
Oct 13, 2011, 9:16:56 AM10/13/11
to tamizhs...@googlegroups.com, நட்புடன், பண்புடன்
நேத்து எங்க ஆபிஸ்ல ஒருத்தன் எமர்ஜன்சி லீவு வேணும்னு கேட்டான்.

என்னடா எமர்ஜன்சின்னு எங்க மேனேஜர் ரீசன் எழுதிக் கொடுன்னு சொன்னாரு...

அதுக்கு அவன் “என் பொண்டாட்டிக்கு பிரசவம். குழந்தை மாலை சுத்தி இருக்காம். அதனால ஆபரேசன் பண்ணனும்னு சொன்னாங்க... நான் அவ கூட இருக்கணும்”னு சொன்னான்.

மேனேஜர் லீவு அப்ரூவ் பண்ணி, ஹெச் ஆர் கிட்ட இவனுக்கு ஏதாவது லீவு சேலரி இருந்தா கொடுப்பான்னு சொன்னாரு...

ஹெச் ஆர் லீவு கணக்கு எடுத்து பார்த்தா, போன வருசம் ஃபிப்ரவரி இவன் ஊருக்கு போயிருக்கான்.

அடப்பாவிகளா.... பொய் சொல்ல ஒரு அளவில்லையாடான்னு தலைல அடிச்சுக்கிட்டான் எங்க ஹெச் ஆர் :))))

2011/10/13 Gokul Kumaran <gokul...@gmail.com>

சென்ஷி .

unread,
Oct 13, 2011, 9:22:46 AM10/13/11
to panb...@googlegroups.com
ரெண்டுமே ஏ..ஒன்.. :)

2011/10/13 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

V Ramesh

unread,
Oct 13, 2011, 9:46:12 AM10/13/11
to tamizhs...@googlegroups.com, நட்புடன், பண்புடன்
எனக்கு எதுவும் புரியலை.. யாரும் விளக்க முடியுமா ? போன பிப்ரவரி லீவு  இந்த பிப்ரவரி லீவு என்னது ஒண்ணும் புரியலையே.. மாலை சுத்துறதுன்னா ?


நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்    
 
http://engumullavan.webnode.com/



2011/10/13 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
நேத்து எங்க ஆபிஸ்ல ஒருத்தன் எமர்ஜன்சி லீவு வேணும்னு கேட்டான்.

eswar sivakrishnan

unread,
Oct 14, 2011, 12:39:39 AM10/14/11
to panb...@googlegroups.com
மாலை நாஞ்சுக்கொடியின் நீச்சி குழந்தையின் உடலில் படந்திருக்கும்.....
சரி........
அடுத்து என்ன சந்தேகம் போன வருசம் வீட்டுக்குப்போனவனுக்கு ஒரு வருசம் கழித்து குழந்தை பிறப்பதில் என்கிறீர்களா அப்புறாணி நீங்க.........


 
2011/10/13 V Ramesh <rames...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
http://tamilsitrodai.blogspot.com/
http://www.subadhinam.com
http://www.expressmatrimonial.com

"எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்க"
அன்பன்,
ஈஸ்வர்

Naresh Kumar

unread,
Oct 14, 2011, 12:55:20 AM10/14/11
to panb...@googlegroups.com
ரெண்டு நாளாவே குழம்பி இருக்கீங்க போல?

2011/10/13 V Ramesh <rames...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
நரேஷ்
www.nareshin.wordpress.com

V Ramesh

unread,
Oct 14, 2011, 12:55:35 AM10/14/11
to panb...@googlegroups.com
ம்ஹும் நான் ஒத்துக்க மாட்டேன்.  இதுக்கு மேல பேசினா அடல்ஸ் ஒன்லி ஆகிடும்.. புரியாததாகவே இருக்கட்டும்.


நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்    
 
http://engumullavan.webnode.com/



2011/10/14 eswar sivakrishnan <easw...@gmail.com>

முகமூடி

unread,
Oct 14, 2011, 1:54:25 AM10/14/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
"அன்பு மாணவ மணிகளே, நானொரு நாத்திகன். உங்களில் யாரெல்லாம் நாத்திகர்களோ, உங்கள் கரங்களை உயர்த்துங்கள் பார்க்கலாம்." என்றார் ஒரு நாத்திக வாத்தியார்.

மாணவர்களில் பலருக்கும் 'நாத்திகன்' என்றால் என்னதென்பது நிச்சயமாகத் தெரியாவிட்டாலும், ஆசிரியரை மறுத்துச் சொல்லவோ எதிர்த்துச் சொல்லவோ அவர்களுக்கு துணிவில்லை. எல்லோரும் தங்களை கைகளை உயர்த்தினார்கள் – ஒரேயொரு சிறுமியைத் தவிர.

ஒரு சிறுமி மட்டும் தன் கரத்தை உயர்த்தாது அவரை வியப்பினில் ஆழ்த்தியது. அந்த வியப்பினூடே, "சின்னஞ்சிறு பெண்ணே! – நீ மட்டும் இங்கே ஆத்திகப் பெண்ணோ!." என்றார்.

"ஆம். ஐயா. நான் கடவுளை நம்புகிறேன்." என்றாள் அந்தச் சிறுமி.

காணத ஒன்றுக்குக் கடவுள் என்று பெயரும் இட்டு, அதைக் கடவுள் என்றும் வணங்குவது அவருக்கு என்றுமே விளங்காதது. தனக்குப் புரியாதது, அச்சிறுமிக்கும் புரியாதது என்கிற முடிவில், "அதற்குக் காரணம் என்ன?" என்று வினவினார்.

"என் அப்பாவும், அம்மாவும் ஆத்திகர்கள். அதனால் நானும் அப்படியே இருக்கின்றேன் போல" என்றாள் அந்தச் சிறுமி.

"அப்பாவும், அம்மாவும் தான்" என்றதைக் கேட்டதும் ஆசிரியருக்கு உடனே கோபம் நிறையவே வந்தது.

"என்னது?. இதெப்படி ஒரு நல்ல காரணமாக இருக்க முடியும்? அப்பாவும் அம்மாவும் ஆத்திகர்களானால், நீயும் அப்படித்தான் ஆக வேண்டுமா என்ன? அப்படியானால், உன் அப்பாவும் அம்மாவும் முட்டாள்களாக இருந்தால், நீ எப்படி இருப்பாயோ?" என்றார் கிண்டலாக.

கேள்வி புரியாத சிறுமி "ஐயா, ஒருவேளை என் அப்பாவும் அம்மாவும் முட்டாள்களாக இருந்திருந்தால் – நான் நாத்திகப் பெண்ணாகி இருப்பேனோ என்னவோ" என்றாள்

-------------

மிருகக்காட்சி சாலையில் ஒரு புலி ஒருத்தர சாவடிச்சிடுச்சி.

பக்கத்து கூண்டிலிருந்த குரங்கு "ஏன் அவர அநியாயமா சாவடிச்சே?"

அதுக்கு புலி சொல்லிச்சி: "அந்த லூசு 3 மணி நேரமா என்ன உத்து பார்த்துட்டு சொல்றான்!! இவ்வளவு பெரிய பூனையா?"

--------------

புருஷனுக்கு நெஞ்சு வலின்னு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனாங்க ஒரு அம்மா.டாக்டர் எல்லா டெஸ்ட்டும் பண்ணிட்டு அந்தம்மாவ மட்டும் தனியா கூப்ட்டு, “இதோ பாரம்மா, உன் புருஷன் ரொம்ப ஸ்ட்ரெஸ்னால அவதிப்படுறாரு, நீங்க பாத்து நடந்துக்கலன்னா அவரு சீக்கிரமா இறக்க வாய்ப்பிருக்கு”

“அய்யய்யோ டாக்டர்...சொல்லுங்க நான் என்ன பண்ணனும்?”

“இனிமே தினம் அவர் விரும்பறத சமைச்சு போடணும், அவர் ஆசப்பட்ட மாதிரி நடக்கணும், அவர் வேல பாக்காம பாத்துக்கிட்டா நல்லது, அவருக்கு எந்த வகையிலயும் உங்களால ஸ்ட்ரெஸ் வரக்கூடாது”

அதுக்கப்புறம் போகும்போது கணவன், “டாக்டர் உன்ட்ட தனியா ஏதோ சொன்னாரே என்னது? கண்டிப்பா ஏதோ சீரியஸ் என்ட்ட மறைக்காத”

“அது... நீங்க சாகப்போறீங்களாம்”

Naresh Kumar

unread,
Oct 14, 2011, 2:10:24 AM10/14/11
to panb...@googlegroups.com
//கேள்வி புரியாத சிறுமி "ஐயா, ஒருவேளை என் அப்பாவும் அம்மாவும் முட்டாள்களாக இருந்திருந்தால் – நான் நாத்திகப் பெண்ணாகி இருப்பேனோ என்னவோ" என்றாள்//

காமெடி எங்கே?

V Ramesh

unread,
Oct 14, 2011, 5:56:49 AM10/14/11
to panb...@googlegroups.com
இந்த தடவை உங்களுக்கு புரியலையா

நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்    
 
http://engumullavan.webnode.com/



2011/10/14 Naresh Kumar <meet...@gmail.com>
//கேள்வி புரியாத சிறுமி "ஐயா, ஒருவேளை என் அப்பாவும் அம்மாவும் முட்டாள்களாக இருந்திருந்தால் – நான் நாத்திகப் பெண்ணாகி இருப்பேனோ என்னவோ" என்றாள்//

காமெடி எங்கே?

-

Naresh Kumar

unread,
Oct 14, 2011, 6:00:57 AM10/14/11
to panb...@googlegroups.com
புரியுது... ஆனா ஏனோ காமெடியா இல்லை..

அதே அடுத்தது இருக்கு பாருங்க, அது காமெடி

2011/10/14 V Ramesh <rames...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
நரேஷ்
www.nareshin.wordpress.com

முகமூடி

unread,
Oct 15, 2011, 1:16:32 AM10/15/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
http://idlyvadai.blogspot.com/2006/06/blog-post.html

* மூன்று நண்பர்கள் இறந்து மேல் உலகம் சென்றார்கள். அங்கு நீதி தேவன் முதல் நபரை அழைத்து, "உனக்கு தண்டனையாக தீயில் வெந்து எரிந்த பெண்ணை மணமுடிக்கிறேன்' என்றார்.
இந்த நபர் ஏன் என்று கேட்ட தற்கு, நீ சிறுவயதில் பறவை ஒன்றை கல்லால் அடித்துக் கொன்றாய் அதனால்தான் என்றார். அதே போன்று இரண்டாவது நபருக்கு தண்டனை விதித்து அதே காரணத்தை கூறினார்.
மூன்றாவது நபருக்கு மிகவும் அழகான பெண்ணை பரிசளித்தார். இருவரும் ஏன் என்று கேட்டதற்கு நீதிதேவன் இப்படி பதிலளித்தார், "அந்தப் பெண் சிறுவயதில் ஒரு பறவையை கல்லால் அடித்துக் கொன்றார்' என்றார்.

-------------------

இரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர். அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர். அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர். மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றி ருந் தார். கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடியது என்றார்.

-------------------


மூன்று வயோதிகர்கள் தங்களது நினைவுத்திறனைபரிசோதித்துக் கொள்வதற்காக மருத்துவரிடம் சென்றனர். மருத்துவர் முதல் வயோதி கரிடம் மூன்றும் ஏழும் எவ்வளவு என்றார். அவர் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு 274 என்றார். மருத்துவர் அடுத்ததாக இரண்டாவது முதியவரிடம் அதே கேள்வியை கேட்டார். அவர் நெடுநேரம் யோசித்து விட்டு செவ்வாய்க்கிழமை என்று பதில் அளித்தார். மருத்துவர் மூன்றாவது முதியவரிடம் அதே கேள்வியை கேட்டபோது அவர் உடனே 24 என்று பதில் அளித்தார். மருத்துவர் சபாஷ் எப்படி சொன்னீர்கள் என்று கேட்க, அவர் 274லிருந்து செவ்வாய்க் கிழமையைகழித்துச் சொன் னேன் என்று பதில் சொன்னார்.

முகமூடி

unread,
Oct 20, 2011, 2:45:59 AM10/20/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் என் மனைவிக்கு காது சரியா கேக்கறதில்லை. நீங்க தான் வைத்தியம் பார்க்கணும்

டாக்டர்: எவ்வளவு தூரத்திலிருந்து பேசினா கேக்க மாட்டேங்கறதுன்னு சொல்லுங்க. அதுக்கு தகுந்த மாதிரி வைத்தியம் பார்க்கலாம.

வீடு திரும்பிய அவன் மனைவிக்கு பின்னால் 50 அடி தள்ளி நின்று " டார்லிங் ராத்திரி டின்னருக்கு என்ன சமைக்கற" என்று கேட்டான். மனைவியிடமிரந்து பதில் வராமல் போகவே 40 அடி தள்ளி அதே கேள்வியை கேட்டான். அப்படியும் பதில் வராததால் 30 அடி 20 அடி என்று நகர்ந்து கேட்டபின் மனைவியின் மிக அருகில் நெருங்கி அதே கேள்வியை கேட்டான். மனைவி திரும்பி " இதோட ஐந்தாவது தடவையா சொல்லிட்டேன் ராத்திரிக்கு சிக்கன் சமைச்சுக்கிட்டு இருக்கேன்" என்றாள்.
--------
அண்ணாசாமி
 தன் நண்பனிடம் சொன்னான்
அந்த ஆனந்தி பெண்ணுக்கு காது கேட்காது போலிருக்கிறது.
 
அதற்கு நண்பன்  அது உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டான்.
 
நான் அந்த பெண்ணிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னேன் அதற்கு அவள் செருப்பு காலுக்கு புதுசு என்று கூறி செல்கிறாள் என்றான்
 
------------

அண்ணாசாமி ஏர்டெலுக்கு போன் செய்து என் மொபைல் பில் எவ்வளவு என்று கேட்டார்.
 
அதற்கு கால் செண்டர் பொண்ணு சொன்னாள் நீங்கள் 123 என்ற நம்பருக்கு டயல் செய்தால் உங்கள் கரண்ட் பில் தொகை தெரியும் என்றாள்.
 
அதற்கு அந்த அண்ணாசாமி “நீ சரியான படிச்ச முட்டாளாய் இருக்கிறாய் நான் கேட்டது போன் பில் ஆனால் நீ என் கரண்ட் பில்லுக்கு வழி சொல்லுகிறாய் என்று காட்டு கத்தல் கத்தினார்.
-----------
ஒரு சர்தார்ஜி பெங்களூருக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார்.பெங்களூர் வந்தவுடன்,

சர்தார்: [சத்தமாக...] "Banglore Banglore Banglore Banglore"

கண்டக்டர்: பி சைலண்ட்.....

சர்தார்: "Anglore Anglore Anglore Anglore"

சென்ஷி .

unread,
Oct 20, 2011, 2:50:19 AM10/20/11
to panb...@googlegroups.com
நீ சரியான படிச்ச முட்டாளாய் இருக்கிறாய் நான் கேட்டது போன் பில் ஆனால் நீ என் கரண்ட் பில்லுக்கு வழி சொல்லுகிறாய்


:-))))))))))))))

முகமூடி

unread,
Oct 21, 2011, 1:02:38 AM10/21/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
:))))

இரண்டு நண்பர்கள் பாரில்...


சார்ஸ்: சே!.. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?

முமூ: நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.


சார்ஸ்: ஆஆ.. அப்புறம்?


முமூ: அப்புறம் சொன்னா.. "மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு!"


---------------

சர்தார்ஜி ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து கொண்டார். இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க, அதற்கு சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், "நான் முதலில் திரு. பாண்டா சிங் அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்".

யார் அந்த பாண்டா சிங் என்று அதிகாரி கேட்டார். சர்தார்ஜி சொன்னார், "பாண்டா சிங் என் தம்பி. அவன் இது வரை ஒரு இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை."

-----------------

வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த சார்ஸ் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பன் உதய்யை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான்.

அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?"

"இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்"

"தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?"

"இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."

C.M உதயன்

unread,
Oct 21, 2011, 1:09:27 AM10/21/11
to thamizh...@googlegroups.com, நட்புடன், பண்புடன், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
மாம்ஸ் உங்க அரசியல் எனக்கு நல்ல தெரியும் :)))

2011/10/21 முகமூடி <mask...@gmail.com>

வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த சார்ஸ் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பன் உதய்யை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான்.

அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?"

"இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்"

"தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?"

"இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."


--


--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

முகமூடி

unread,
Oct 21, 2011, 1:13:05 AM10/21/11
to tamizhs...@googlegroups.com, thamizh...@googlegroups.com, நட்புடன், பண்புடன், muththamiz, tamil2friends
மாப்பு.... படிச்சிட்டீங்களா...  :))))

2011/10/21 C.M உதயன் <udhay...@gmail.com>

மாம்ஸ் உங்க அரசியல் எனக்கு நல்ல தெரியும் :)))

அச்சு !!!

unread,
Oct 21, 2011, 2:04:47 AM10/21/11
to thamizh...@googlegroups.com, நட்புடன், பண்புடன், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
2011/10/21 முகமூடி <mask...@gmail.com>
முமூ: அப்புறம் சொன்னா.. "மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு!"

இதுல மு.மூக்கு பதில் சார்ஸ்சும், சார்ஸ்சுக்கு பதில் மு.மூவும் இருந்திருந்தா செம காமடியா இருந்திருக்கும்..
 
"இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."

ஹா ஹா ஹா..


--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு


sk natarajan

unread,
Oct 31, 2011, 10:07:36 PM10/31/11
to thamizh...@googlegroups.com, நட்புடன், பண்புடன், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
எல்லாமே  அருமை

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/10/12 முகமூடி <mask...@gmail.com>
சுட்டி : http://www.tamilcomedyworld.com/text-comedy/stories-list.php?tci=2&ccid=CC28

பீர்பால்..புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்.

ஒருநாள் அக்பரும்,அவரும் உலாவச் சென்றனர்.வழியில்...புகையிலை தோட்டத்தின் நடுவே செல்ல நேர்ந்தது.அங்கே அப்போது நுழைந்த கழுதை ஒன்று..புகையிலை நெடியால் முகத்தை திருப்பிக் கொண்டது.

உடனே..அக்பர்...'பார்த்தாயா..பீர்பால், புகையிலையை கழுதை கூட விரும்பவில்லை' என்றார்.

தமது புகையிலையைப் போடும் பழக்கத்தையே அவ்வாறு கிண்டல் செய்கிறார் என்பதை அறிந்த பிர்பால்.ஆம்..மன்னா..கழுதைகள்தான் புகையிலையை விரும்பாது என்றார்.

------------------

ஒரு அடுக்கு மாடில தீப்பிடிச்சிருச்சாம்.உடனே தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து மாடில இருக்கிறவங்கள குதிக்க சொல்லி கீழ வலையோட நின்னாங்க.

முதல்ல ஒரு ஆப்ரிக்க பொண்ணு குதிச்சது,சரியா பிடிக்காததால கீழ விழுந்துடுச்சு,லேசான அடி.

ரெண்டாவது சீனாப்பொண்ணு இதுவும் குதிச்சது சரியான டைரக் ஷன் இல்லாம வலையை அங்கயும் இங்கயும் ஆட்டி இதுவும் மிஸ்ஸாகி கீழே விழுந்துடுச்சு.

அடுத்தது ப்ளான்ட் பொண்ணு வந்து நின்னது,கீழ தீயணைப்பு வீரர்கள் “குதி, குதி”ன்னாங்க, ஒரு நிமிஷம் யோசிச்சுட்டு சத்தமா சொன்னிச்சு,” நான் உங்கள நம்ப மாட்டேன், வலையை கீழே வச்சுட்டு விலகி நில்லுங்க”

--------------------


ஒரு சர்தார்ஜி பால்கனில வேடிக்கை பார்த்துட்டு இருந்தப்போ ஒருத்தன் ஓடி வந்து
பூட்டாசிங் உன் தம்பி ஆக்ஸிடன்ட்ல பூட்டான்ன்னான்.

தம்பியே செத்துட்டான் இனி எனக்கென்ன?ன்னு பொசுக்குன்னு மாடில இருந்து குதிச்சிட்டார்.

பாதி வழில ஒரு பைப்பை புடிச்சுக்கிட்டு 'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சார்.
மாடில தகவல் சொன்னவன் ஏன்யா அழறன்னு கேட்டான்,

இவரு,எனக்கு தம்பியே இல்லைப்பா, இவ்ளோ முட்டாளா இருக்கேனேன்னு திரும்ப குதிச்சார்.

ஆனா காயத்தோட தப்பிச்சிட்டார், திரும்ப 'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சார்.
இப்ப ஏன்யா அழற?

நான் பூட்டாசிங்கே இல்லைப்பா

--------------------

நம்ம அம்மாஞ்சி வேலைக்கு அப்ளிகேஷன் போட ஃபார்ம் எழுதிட்டிருக்கார்.

பேரு, ஊரு, முகவரி எல்லாமே எழுதிட்டார்.

நடுவில "Salary Expected" அப்டின்னு வந்திருக்கு , ரொம்ப நேரம் யோசிச்சு தயங்கி தயங்கி கடைசியா எழுதினார் "Yes".

-----------------------

--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
--------------------------------------------------------------
சிங்களம் புட்பகம் சாவக-மாதிய
      தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று
      சால்புறக் கண்டவர் தாய்நாடு...
                                                     -எங்கள் நாடு...
http://kadhalpadi.blogspot.com/
http://othersideofmask.blogspot.com/
http://kadalmazhai.blogspot.com/

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

முகமூடி

unread,
Nov 22, 2011, 7:28:18 AM11/22/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
http://idlyvadai.blogspot.com/2006/06/blog-post.html

புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார்.

மாண வர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக, இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன் என்றார்.

மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார். அதற்கு அந்த மாணவன், இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந் தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்.

-----------------------

ஒரு ஊரில் முட்டாள் பணக் காரர் ஒருவர் வசித்து வந்தார். தன் வேலைக்காரனை எப்பொ ழுதும் சந்தேகத்துடன் விசாரித்து வருவது அவரது வழக்கம்.

ஒரு நாள் தன் வேலைக்காரனிடம் 500 ரூபாய் கொடுத்து சமையல் செய் வதற்கு தேவையான எண் ணெய்யை வாங்கி வரச் சொன்னார்.


வேலைக்காரனும் கடைவீதிக் குச் சென்று 500 ரூபாய்க்கு பெருமானமுள்ள எண்ணெய் டின் ஒன்றை வாங்கி வந்தான். வேர்த்து விறுவிறுத்து வீட்டி ற்குள் நுழைந்த அவனை சந்தேகத்துடன் பார்த்த பணக்காரர், ஏன் இப்படி பயந்து நடுங்குகிறாய் என்று கேட்டு, எண்ணெய் டின்னை பார்த்தார்.

எண்ணெய் சிறிது குறைவாக இருந்தது. ஏன் என்று கேட்டார். அதற்கு வேலைக்காரன், டின் அடியில் ஓட்டை இருந்தது அத னால் கீழே வழிந்து விட்டது என்று கூறினான். அதற்கு பணக் காரர், கீழே ஓட்டை என்றால் கீழே தானே குறைந்திருக்க வேண்டும், எப்படி மேலே குறைந்தது என்று கத்தினார்


--------------

ஒரு ஊரில் ஒரு முட்டாள் பணக்காரர் இருந்தார். அவர் பெரிய பங்களா ஒன்று கட்டினார். அவை பார்வையிட தன் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார்.

வந்திருந்தவர்கள் அனைவரும் பங்களாவின் அழகை வெகுவாக பாராட்டினர். பின்பு பங்களாவின் பின்புறம் சென்று பார்த்தனர்.

அங்கு மூன்று நீச்சல் குளங்கள் இருந்தது. அனைவரும் ஆச்சர்யத்துடன் எதற்காக 3 நீச்சல் குளங்கள் என்று கேட்டனர்.

அதற்கு அந்த பணக்காரர் ஒன்று வெந்நீர் குளியல் வேண்டும் என்பவர்களுக்காக, மற்றொன்று குளிர்ந்த நீர் வேண்டும் என்பவர்களுக்காக என்றார்.

அனைவரும் வெந்நீர் சரி, தண்ணீர் சரி. காலியாக இருக்கின்றதே அது எதற்கு என்று கேட்டனர். அது நீச்சல் தெரியாதவர்களுக்காக என்றார்

முகமூடி

unread,
Nov 23, 2011, 4:08:07 AM11/23/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
ஒரு அமெரிக்க இளைஞன்,இங்கிலாந்தில் ஒரு புகை வண்டியில் பயணம் செய்ய ஏறினான்.எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் இருந்ததால் அவனுக்கு உட்கார இருக்கை கிடைக்கவில்லை.ஒரு ஆங்கிலப் பெண்மணி,தன அருகில் ஒரு இருக்கையில் தன நாயை வைத்திருந்தார்.

அமெரிக்க இளைஞன் அந்தப் பெண்மணியிடம் பணிவாக,''நான் இந்த இருக்கையில் அமர்ந்து கொள்ளலாமா?''என்று கேட்டான்.

அந்தப் பெண்மணி காது கேளாதவர் போல இருந்ததால் மீண்டும் கேட்டான். அப்போதும் அந்தப் பெண் அவனை சட்டை செய்யவில்லை. உடனே விறுவிறுவென்று  போய் அந்த நாயைத் தூக்கி ஒரு ஜன்னலைத் திறந்து,வெளியே வீசிவிட்டு அமைதியாக அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.சுற்றிலும் ஒரே அமைதி.

அப்போது எதிர் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு வயதான ஆங்கிலேயர் அவனைப் பார்த்து,
          ''இந்த அமெரிக்கர்களே இப்படித்தான்.எல்லாமே தவறாகத்தான் செய்வார்கள்.சாலையில் நாம் இடது புறம் காரை ஓட்டினால் இவர்கள் வலது புறம் ஓட்டுவார்கள்.முள் கரண்டியை இடது கையில் வைத்து சாப்பிடுவார்கள்.இப்போது கூடப் பாரேன், நீ தவறாக நாய்க்குட்டியை வண்டியிலிருந்து வெளியே எறிந்துவிட்டாய்.'' என்றார்

--------------


''நேற்று இரவு நான் இல்லாதபோது என் வீட்டிற்கு ஒரு திருடன் வந்துவிட்டான்.என் மனைவி அவனை அடித்து நொறுக்கி விட்டாள். அவன் அலறி அடித்து ஓடி விட்டான்.''என்றான் ஒருவன் தன் நண்பனிடம்.

நண்பன் சொன்னான்,''பரவாயில்லை..உன் மனைவி தைரியம் மிக்கவர் போலும்,'' 

அவன் நண்பனின் காதருகே வந்து மெதுவாக சொன்னான்,''அப்படி இல்லை.அவள் பயந்தவள்தான்.ஆனால் இருட்டில் நான்தான் தாமதமாக வந்துள்ளேன் என்று நினைத்து விட்டாள்.''
------------------

இரண்டு கழுதைகள் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தன.ஒரு கழுதை நன்றாகக் கொழுத்துஇருந்தது.மற்றது எலும்பும் தோலுமாக காணப்பட்டது.இளைத்த கழுதையைப் பார்த்து வலுத்த கழுதை கேட்டது,''எப்படி இருந்த நீ இப்படி ஆகிவிட்டாயே?''மெலிந்த  கழுதை சொன்னது,''என் முதலாளி கல் நெஞ்சன்.நாள் முழுவதும் வேலை  வாங்குவான்.ஆனால் ஒழுங்காகத் தீனி போட மாட்டான்.அடி உதை வேறு அவ்வப்போது கிடைக்கும்.''பலமான கழுதை,''பின் ஏன் அங்கேயே இருக்கிறாய்?ஓடி வந்து விட வேண்டியதுதானே?'' என்று கேட்டது.உடனே பதில் வந்தது,''என் முதலாளிக்கு ஒரு அழகான பெண் இருக்கிறாள்.அவளையும் அவன் கண்டபடி அடிப்பான்.''வலுத்த கழுதை கேட்டது,''அந்தப் பெண்ணுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?''அதற்கு அந்த மெலிந்த கழுதை சொன்னது,''ஒவ்வொரு முறை என் முதலாளி தன பெண்ணை அடிக்கும்போது ,'உன்னை இந்தக் கழுதைக்குத்தான்  கட்டி வைக்கப்போகிறேன்'என்பான்.அதனால்தான் நானும் பொறுமையாய் காத்துக் கொண்டிருக்கிறேன் .''

-------------

சுட்டி : http://jeyarajanm.blogspot.com/search/label/%E0%AE%93%E0%AE%B7%E0%AF%8B%20-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88

முகமூடி

unread,
Nov 25, 2011, 12:35:22 AM11/25/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
வெளி நாட்டிற்குப் போன மகன் அன்று திரும்ப வருவதாக இருந்தது.தந்தை தன நெருங்கிய நண்பரை அழைத்து தன மகனுக்குத் தான் ஒதுக்கிய அறையைக் காட்டி தான் அவன் எந்தத் துறைக்கு ஏற்றவன் என்பதைத் தேர்வு செய்யப்போவதாகக் கூறினார்.

மேஜை மீது நான்கு பொருட்கள் இருப்பதை சுட்டிக்காட்டி,''என் பையன் பணத்தை எடுத்துக் கொண்டால் வியாபாரத் துறைக்கு ஏற்றவன்.பைபிளை எடுத்துக் கொண்டால் மத சேவைக்கு ஏற்றவன்.மது புட்டியை எடுத்துக்  கொண்டால் உதவாக்கரையாவான். துப்பாக்கியை எடுத்துக்  கொண்டால் அவன் கொள்ளைக்காரனாவான்.'' என்றார்.

அந்த அறைக்குள் வந்த மகன் என்ன செய்யப் போகிறான் என்பதை ஆவலுடன் இருவரும் மறைவிலிருந்து கவனித்தார்கள்.

பையன் அறைக்குள் நுழைந்து இருக்கும்பொருட்களை நோட்டம் விட்டான்.மதுப் புட்டியைத் திறந்து வாயில் ஊற்றிக் கொண்டான்.பின் பணத்தை எடுத்துப்  பையில் போட்டுக் கொண்டான்.ஒரு கையில்  பைபிளையும் இன்னொரு கையில் துப்பாக்கியையும் எடுத்துக்  கொண்டான்.தந்தை உற்சாகத்தில் கத்தினார்,''என் மகன் மந்திரியாகப் போகிறான்.''
                                                                          ---குஷ்வந்த்சிங்
-------------------

நண்பர்கள் இருவர் நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்துக் கொண்டனர். ஒருவர் தான் நன்றாய் இருப்பதாகக் கூறிவிட்டு அடுத்தவரிடம் அவரைப்பற்றிக் கேட்க அவர் சொன்னார்,''எனக்கு நான்கு பையன்கள்.ஒருவன் டாக்டர்,அடுத்தவன் எஞ்சினியர்,இன்னொருவன் வக்கீல்.

நான்காவது பையன்தான் உருப்படாமல் போய்விட்டான்.எட்டாம் வகுப்பைத் தாண்டவில்லை.அவன் இப்போது பார்பராக இருக்கிறான்.

''நண்பர் கேட்டார்,''அப்படிப்பட்ட பையனை வீட்டை விட்டுத் துரத்த வேண்டியதுதானே.''அவர் பதில் சொன்னார்,''அவனைத் துரத்திவிட்டு நாங்கள் என்ன செய்வது?அவன் ஒருவன் தானே எங்கள் வீட்டில் சம்பாதிப்பது.''
---------

கதவு தட்டப்பட்டது உடனே வீட்டில் இருந்த வாலிபன் கதவைத் திறந்தான்.

வாசலில் நின்று கொண்டிருந்தவரிடம் என்ன வேண்டும் என்று கேட்டான்.''நான் உங்கள் வயலினை சரி செய்ய வந்திருக்கிறேன்.''என்றான் வந்தவன்.

வாலிபன் ஆச்சரியத்துடன்,''நான் ஒன்றும் வரச்சொல்லவில்லையே?''என்று கேட்டான்.வந்தவன் சொன்னான்,''உங்கள் அடுத்த வீட்டுக்காரர் தான் உங்கள் வயலினை சரி செய்யச்சொல்லி போன் செய்தார்.''

சுட்டி : http://jeyarajanm.blogspot.com/search/label/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88

V Ramesh

unread,
Nov 25, 2011, 3:43:11 AM11/25/11
to tamizhs...@googlegroups.com, நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, tamil2friends
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்



2011/11/25 முகமூடி <mask...@gmail.com>

முகமூடி

unread,
Dec 6, 2011, 5:35:51 AM12/6/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
தாறுமாறாக ஒருவன் காரை ஓட்டிவருவதைக் கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் காரை நிறுத்தினார்.

குடித்துவிட்டு காரை அவன் ஓட்டி வந்திருக்கிறான் என்று சந்தேகப்பட்ட அவர் அவை சோதிப்பதற்கான  கருவியின்முன் ஊதச் சொன்னார்.

அவன் சொன்னான்,''அதுமட்டும் என்னால் முடியாது.எனக்குக் கடுமையான ஆஸ்த்மா.பலமாக ஊதினால் எனக்கு மூச்சுத் திணறல் வந்துவிடும்.'' என்று.

அதை ஏற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறுநீர் சோதனைக்கு ஒரு பாட்டிலில் சிறுநீர் சேகரித்துத் தரச் சொன்னார்..

உடனே அவன் பெருங்குரலில்,''இதுவும் என்னால் முடியாது. நான் நீரழிவு  நோய்க்காரன்.நான் திடீரென சிறுநீர் கழித்தால் என் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும்.அதனால் நான் இறக்கக் கூடும்,''

அதையும் ஏற்றுக்கொண்ட அதிகாரி அவன் இரத்தத்தை சோதனை செய்ய முடிவெடுத்தார்.உடனே ஓட்டுனர்,''இதுவும் என்னால் முடியாது.எனக்கு ஒருவிதமான நோய் உள்ளது அதனால் என் உடலிலிருந்து இரத்தம் எடுத்தால் அதற்குப்பின் இரத்தம் நிற்காமல் வந்து கொண்டேயிருக்கும்.''

சற்று மனம் தளராத அதிகாரி  சொன்னார்,''சரி,பரவாயில்லை.எனக்காக இதோ, தரையில் போடப்பட்டிருக்கும் வெள்ளைக் கோட்டில்  சரியாக நடந்து வா.''

இப்போது அவன் கத்தினான்,''கோட்டின்மேல் நேராக நடக்க என்னால் முடியாது.''

“ஏன்” என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.

அவன் சொன்னான்,''ஏனென்றால்,நான் குடித்திருக்கிறேன்.'' என்று.  இன்ஸ்பெக்டர் புன்முறுவலுடன் அவனை கைது செய்தார்.
--------------------

கிராமவாசி ஒருவன்,சிறிது கூட நாகரீகம் இல்லாது அவ்வூர் ஆலயத்தின் முன் அசிங்கம் செய்துவிட்டான்.கோபம் கொண்ட கோவில் அதிகாரி அவனை ஊர்த்தலைவர் முன் கொண்டுபோய் நிறுத்தினார்.

தலைவர் கேட்டார்,''கோவிலை அவமதித்தாயா?''

அவன் சொன்னான்,''அய்யா,நான் வழக்கமாகக் கோவில் வழியாக அடிக்கடி சென்று வருவேன்.அன்று திடீரென அடக்க முடியாது சிறுநீர் வந்ததால் வேறு வழியில்லாது கொவில்முன் இருந்துவிட்டேன்.மற்றபடி கோவிலை அவமதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை.''

தலைவர்,''என்ன இருந்தாலும் நீ செய்தது தவறான காரியம் உனக்கு ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கிறேன்,''என்றார்.அவனும் மறுபேச்சு பேசாது பையிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து தலைவரிடம் கொடுத்தான்.

தலைவர் அதை வாங்கித்தான் பையில் வைத்துக்கொண்டே சொன்னார்,''இப்போது என்னிடம் மீதி கொடுக்க ஐநூறு ரூபாய் இல்லை. அதனால் பரவாயில்லை.நாளைக்கு கோவில் முன்னால் இன்னொரு முறை அசிங்கம் செய்துகொள்.''

-------------------------

கணவனும் மனைவியும் திருவிழாவுக்குப் போயிருந்தார்கள்.கூட்ட நெரிசலில் மனைவி காணாமல் போய்விட்டாள்.

கணவன் காவல் நிலையத்தில் புகார் செய்தான்.செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தான். ஆனால் மனைவி கிடைக்கவில்லை.

அருகில் இருந்த ராமர் கோவிலுக்கு சென்று மனம் உருக வேண்டினான்,

''காணாமல் போன என் மனைவி கிடைக்க அருள் புரியுங்கள்.''       

''இதே சாலை வழியாகப் போனால்,அனுமார் கோவில் வரும்.அங்கு போய்  வேண்டிக்கொள்.என் மனைவி காணாமல் போனபோது தேடிக் கண்டு பிடித்தது  அவர்தான்,'' ராமர் தான் பேசினார்.

V Ramesh

unread,
Dec 6, 2011, 5:41:48 AM12/6/11
to tamizhs...@googlegroups.com, நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, tamil2friends
இது என்ன எனக்கு புரியலையே..

நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2011/12/6 முகமூடி <mask...@gmail.com>

Omprakash

unread,
Dec 6, 2011, 6:24:38 AM12/6/11
to panb...@googlegroups.com

லார்ட் ராமர், அனுமனை சிபாரிசு செய்கிறார் “ என் மனைவியை கண்டுபிடித்தது அனுமன் தான்” என்று
2011/12/6 V Ramesh <rames...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.
கடலினைத் தாவும் குரவும்-வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,
சூத்திர னுக்கொரு நீதி-தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடு மாயின்-அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.

முகமூடி

unread,
Dec 9, 2011, 5:19:38 AM12/9/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
பொது இடத்தில் தன்னை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதற்காக ஒருவன் மீது ஒரு பெண் வழக்கு தொடர்ந்தாள்.

என்ன வார்த்தைகளைப் பயன்படுத்தினான் என்று கூறுமாறு வக்கீல் கேட்டார்.

அந்தப்பெண் சொன்னாள்,''ரொம்ப அசிங்கமான வார்த்தைகள் அவை.கண்ணியமான எவரும்  அதைக் கேட்க விரும்ப மாட்டார்கள்,''

வக்கீல் சொன்னார்,''அப்படியானால் நீதிபதி அருகில் சென்று அவருக்கு மட்டும் கேட்கும்படியாக சொல்லுங்கள்.''
------------------------------

மனைவி: எப்படி இவ்வளவு சீக்கிரம் இன்று வீட்டுக்கு வரமுடிந்தது?''

கணவன்:முதலாளிக்கு என் மேல் ஏகக் கோபம் .எந்த நரகத்துக்காவது தொலைந்து போஎன்று கத்தினார்.

நான் நேராக வீட்டுக்கு வந்துவிட்டேன்.''

------------------------------

கணவனுக்கு ஒரே ஆச்சரியம்! அவன் மனைவி வருகிற பிச்சைக்காரனுக்கு எல்லாம் சுடச்சுட தான் சமைத்த சாப்பாடைப் போட்டுக் கொண்டிருந்தாள்.

''ஒரு வேலையும் செய்யாத அவர்களுக்கு ஏன் இப்படி அக்கறையாய் சோறு போடுகிறாய்?''

மனைவி சொன்னாள்,''சமைத்த சாப்பாட்டில் குறையே சொல்லாமல் சாப்பிடுபவர்களுக்கு போடுவது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது?''

----------------------------

விபத்தில் காயம் பட்டவருக்கு நீதி மன்றத்தில் ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க தீர்ப்பு வந்தது.

பணத்தைப் பெற்றுக் கொண்ட வக்கீல் அடிபட்டவரிடம் இருபதாயிரம் மட்டும் கொடுத்தார்.

அடிபட்டவர் திகைத்துப்போய் அவரைப் பார்க்க,
''என்ன சந்தேகம் உங்களுக்கு?''என்று கேட்டார்.

அடிபட்டவர் கேட்டார்,''விபத்தில் காயம் அடைந்தது நானா,நீங்களா?''

--------------------------------

முகமூடி

unread,
Dec 10, 2011, 12:47:22 AM12/10/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
அமெரிக்கன்: நாங்கதான் நிலவில் முதலில் கால் வைத்தோம்.

இந்தியன்: நீ நிலாலதாண்டா கால வச்ச... நாங்க சூரியன்லயே கால வச்சோம்டா வென்று....

அமெரிக்கன்: பொய் சொல்லாதீங்கடா...சூரியனுக்குப் போனா சாம்பலாயிடுவீங்க..

இந்தியன்: அடிங் ங்கொய்யால... நாங்க போனது நைட்லடா...
நன்னாரிப்பயலுகளா....

-----------

ஒரு கணவனும் மனைவியும் மாலை நேரத்தில்  பால்கனியில் அமர்ந்திருக்க,கணவன் மது  அருந்திக் கொண்டிருந்தான்.

அந்தக் கணவன் மது அருந்தியவாறே சொன்னான்”உன்னை நான் மிக விரும்புகிறேன்;நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது.அப்படி ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துப்பார்க்கவே இயலவில்லை”

மனைவி கேட்டாள்”என்ன மிக ரொமாண்டிக் மூட் போல!நீங்கள் பேசுகிறீர்களா உங்களுக்குள் போன மது பேசுகிறதா?”

கனவன் சொன்னான்”நான்தான் பேசுகிறேன்.மதுவோடு பேசிக் கொண்டிருக்கிறேன்!!”

----------------

அ‌திக குசு‌ம்பு ‌பிடி‌த்த ஒரு‌த்த‌‌ர், செ‌ன்‌ட்ர‌ல் ர‌யி‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் அருகிலிருந்தவரை கேட்டார்.

ஹெளராஹ் எக்‌ஸ்‌பிர‌ஸ் எத்தனை மணிக்கு புறப்படும்?
10.30 மணி.
பெங்களூர் மெயில்?
11.25.
தமிழ்நாடு எக்‌ஸ்‌பிர‌ஸ்?
1.15.
சதாப்தி எக்‌ஸ்‌பிர‌ஸ்?
பக்கத்திலிருந்தவர் எரிச்சலோடு - 3.00 மணிக்கு.

பிருந்தாவன் எக்‌ஸ்‌பிர‌ஸ்?
பொறுமையிழந்த அவ‌ர், நீங்கள் எந்த ஊரு‌க்கு‌ப் போக வேண்டும்?

நா‌ன் எ‌ந்த ஊரு‌க்கு‌ப் போக‌வி‌ல்லை, தண்டவாளத்தைத் தாண்டணும் அதா‌ன் கே‌ட்டே‌ன்.

----------

ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''

ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?''

'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'

''ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''

'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'
---------

''டாக்டர்,என் கனவில் எலிகள் கால் பந்து விளையாடுகின்றன.''

'அப்படியானால் இன்று இரவிலிருந்து நான் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள்.'

''நாளையிலிருந்து ஆரம்பிக்கட்டுமா,டாக்டர்?'

'இன்றைக்கு ஏன் வேண்டாம்?'

''இன்று தான் இறுதி மேட்ச்.''

-----------

sk natarajan

unread,
Dec 10, 2011, 10:17:47 PM12/10/11
to thamizh...@googlegroups.com, நட்புடன், பண்புடன், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
ஹா  ஹா   ஹா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/11/22 முகமூடி <mask...@gmail.com>

முகமூடி

unread,
Dec 13, 2011, 1:10:30 AM12/13/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
ஒரு கணவனுக்கு அவன் மனைவி வளர்த்த பூனையைக்  கண்டாலே ஆகவில்லை.அதை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான்.

ஒரு நாள் அப்பூனையைத்  தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தான். வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தான். அன்றும் பூனை அவனுக்கு முன்னாள் வந்து மாடியில் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.

வெறுப்படைந்த அவன் அடுத்தநாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தான்.

சிறிது நேரம் கழித்து கணவனிடமிருந்து மனைவிக்கு போன்வந்தது.கணவன் கேட்டான்,''உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?''ஆம் என்று மனைவி சொல்ல கணவன் சொன்னான்,''போனை  பூனையிடம் கொடு.எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை.''

---------------------

நாட்டுப்பற்று பற்றி பாடம் நடத்திய ஆசிரியர் மூன்று மாணவர்களை அழைத்து அவர்கள் எவ்வாறு நாட்டுப்பற்று உடையவர்கள் என்பதை விளக்க சொன்னார்.

ஒரு மாணவன் சொன்னான்,''நான் வெளி நாட்டுப் பொருட்கள் எதையும் உபயோகிப்பதில்லை.''

அடுத்தவன் சொன்னான்,''நான் வெளி நாட்டுத் திரைப்படங்கள் எதுவும் பார்ப்பதில்லை.''

மூன்றாவது மாணவன் சொன்னான்,''நான் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து இதுவரை ஆங்கிலத்தில் தேறியதில்லை''

--------------------------


'நேற்று இரவு நான் இல்லாதபோது என் வீட்டிற்கு ஒரு திருடன் வந்துவிட்டான்.என் மனைவி அவனை அடித்து நொறுக்கி விட்டாள். அவன் அலறி அடித்து ஓடி விட்டான்.''என்றான் ஒருவன் தன நண்பனிடம்.

நண்பன் சொன்னான்,''பரவாயில்லை..உன் மனைவி தைரியம் மிக்கவர் போலும்,'' 

அவன் நண்பனின் காதருகே வந்து மெதுவாக சொன்னான்,''அப்படி இல்லை.அவள் பயந்தவள்தான்.ஆனால் இருட்டில் நான்தான் தாமதமாக வந்துள்ளேன் என்று நினைத்து விட்டாள்.''

முகமூடி

unread,
Dec 14, 2011, 12:02:28 AM12/14/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends

தூதன்

''கடவுளின் தூதன் நான்''என்று கூறிக் கொண்டிருந்த ஒருவனை கலீப் ஓமர் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.

அவன் ஓமரிடம் சொன்னான்,''நபிகள் நாயகம் தூதராக வந்து ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன.அதற்குள் நிறைய மாற்றங்கள் வந்து விட்டன.எனவே புதிய செய்திகளுடன் என்னைத் தூதராக  இறைவன்  அனுப்பி இருக்கிறார்.''

ஓமருக்கு கோபம் வந்துவிட்டது.அவர் தன ஆட்களிடம் அவனை உடைகளின்றி ஒரு தூணில் கட்டி வைத்து உதைக்கச் சொல்லிவிட்டு ஒரு வாரம் கழித்து அவனை வந்து பார்ப்பதாகக் கூறிச் சென்றார்.

அதேபோல் அவர் வந்தபோது அவன் உடலெங்கும் ரத்தக் காயங்களுடன் பலமின்றி காணப்பட்டான்.

ஓமர் அவனிடம்,''இப்போது என்ன சொல்கிறாய்?''என்று கேட்டார்.

அவன் சிரித்துக் கொண்டே,''நான் கடவுளிடமிருந்து வரும்போது அவர்,'என்னுடைய தூதர்கள் அனைவரும் இதுவரை துன்புறுத்தப்  பட்டிருக்கிறார்கள் .அதுபோல நீயும் துன்புறுவாய் அதைக் கண்டு அஞ்சிவிடாதே,'என்று கூறினார்.நீங்கள் அதை உறுதி செய்துள்ளீர்கள்.''என்று கூறினான்.

அப்போது பக்கத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த கைதி ஒருவன் கோபத்துடன்,''அவன் சொல்வதை நம்பாதீர்கள்.நபிகளுக்குப் பிறகு நான் எந்த தூதுவரையும் அனுப்பவில்லை.'' என்று கத்தினான்.

------------------------------------------

யார் செய்தால் என்ன?

முல்லாவின் நண்பர் வருத்தத்துடன் அவரிடம் சொன்னார்,

''பத்து ஆண்டுகளுக்கு முன் எனக்குத் திருமணம் ஆனது.அப்போதெல்லாம் வேலை முடித்து நான் வீட்டுக்கு வரும் போதெல்லாம்  என் மனைவி,நான் வீட்டினுள் உபயோகிக்கும் செருப்புக்களை தயாராக எடுத்து வெளியே வைத்துக் காத்துக் கொண்டிருப்பாள்.என் நாயும் வேகமாக வந்து என்னைச் சுற்றி சுற்றி வாலாட்டிக் குரைக்கும்.இப்போது எல்லாம் மாறிவிட்டது.இப்போது என் நாய் செருப்பைக் கொண்டு வந்து தருகிறது.என் மனைவி என்னைப் பார்த்து குரைக்கிறாள்.''

முல்லா சொன்னார்,'அதனால் என்ன?முன்னால் அனுபவித்த வசதிகளை இப்போதும் அனுபவிக்கிறாய் அல்லவா?யார் செய்தால் என்ன?''

முகமூடி

unread,
Dec 14, 2011, 12:39:38 AM12/14/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends

தூதன்

''கடவுளின் தூதன் நான்''என்று கூறிக் கொண்டிருந்த ஒருவனை கலீப் ஓமர் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.

அவன் ஓமரிடம் சொன்னான்,''நபிகள் நாயகம் தூதராக வந்து ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன.அதற்குள் நிறைய மாற்றங்கள் வந்து விட்டன.எனவே புதிய செய்திகளுடன் என்னைத் தூதராக  இறைவன்  அனுப்பி இருக்கிறார்.''

ஓமருக்கு கோபம் வந்துவிட்டது.அவர் தன ஆட்களிடம் அவனை உடைகளின்றி ஒரு தூணில் கட்டி வைத்து உதைக்கச் சொல்லிவிட்டு ஒரு வாரம் கழித்து அவனை வந்து பார்ப்பதாகக் கூறிச் சென்றார்.

அதேபோல் அவர் வந்தபோது அவன் உடலெங்கும் ரத்தக் காயங்களுடன் பலமின்றி காணப்பட்டான்.

ஓமர் அவனிடம்,''இப்போது என்ன சொல்கிறாய்?''என்று கேட்டார்.

அவன் சிரித்துக் கொண்டே,''நான் கடவுளிடமிருந்து வரும்போது அவர்,'என்னுடைய தூதர்கள் அனைவரும் இதுவரை துன்புறுத்தப்  பட்டிருக்கிறார்கள் .அதுபோல நீயும் துன்புறுவாய் அதைக் கண்டு அஞ்சிவிடாதே,'என்று கூறினார்.நீங்கள் அதை உறுதி செய்துள்ளீர்கள்.''என்று கூறினான்.

அப்போது பக்கத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த கைதி ஒருவன் கோபத்துடன்,''அவன் சொல்வதை நம்பாதீர்கள்.நபிகளுக்குப் பிறகு நான் எந்த தூதுவரையும் அனுப்பவில்லை.'' என்று கத்தினான்.

------------------------------

யார் செய்தால் என்ன?

முல்லாவின் நண்பர் வருத்தத்துடன் அவரிடம் சொன்னார்,

''பத்து ஆண்டுகளுக்கு முன் எனக்குத் திருமணம் ஆனது.அப்போதெல்லாம் வேலை முடித்து நான் வீட்டுக்கு வரும் போதெல்லாம்  என் மனைவி,நான் வீட்டினுள் உபயோகிக்கும் செருப்புக்களை தயாராக எடுத்து வெளியே வைத்துக் காத்துக் கொண்டிருப்பாள்.என் நாயும் வேகமாக வந்து என்னைச் சுற்றி சுற்றி வாலாட்டிக் குரைக்கும்.இப்போது எல்லாம் மாறிவிட்டது.இப்போது என் நாய் செருப்பைக் கொண்டு வந்து தருகிறது.என் மனைவி என்னைப் பார்த்து குரைக்கிறாள்.''

முல்லா சொன்னார்,'அதனால் என்ன?முன்னால் அனுபவித்த வசதிகளை இப்போதும் அனுபவிக்கிறாய் அல்லவா?யார் செய்தால் என்ன?''

------------------

முகமூடி

unread,
Dec 15, 2011, 2:22:07 AM12/15/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
ஞானம் பெற விரும்பிய ஒருவன் இறைவனிடம் சென்று ஞானம் பெற வழி  கேட்டான்.

இறைவன் சொன்னார்,''அப்பா,இப்போது வெயில் மிக அதிகமாக இருப்பதால் தாகம் எடுக்கிறது எனக்கு முதலில் நீ கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா,''

அவனும் ஓடிச் சென்று முதலில் தென்பட்ட வீட்டின் கதவைத் தட்டினான்.ஒரு அழகிய இளம்பெண் கதவைத் திறந்தாள்.அவளைப் பார்த்தவுடன் அவனுக்கு அந்தப்பெண் மீது காதல் பிறந்தது.அந்தப் பெண்ணும்  சம்மதிக்கவே அவளைத் திருமணம் செய்து கொண்டு நான்கு பிள்ளைகளையும் பெற்றான்.

ஒரு நாள் கடுமையான மழை பெய்தது.எங்கு பார்த்தாலும் தண்ணீர்.வீடுகள் அடித்து செல்லப்பட்டன.அவனும் தன மனைவியையும் குழந்தைகளையும் கையில் பிடித்துக்கொண்டு சென்றான் அப்படியிருந்தும் அவர்களைத் தண்ணீர் இழுத்துச் சென்று விட்டது.

அடுத்து அவனையும் தண்ணீர் இழுத்தபோது,''கடவுளே,என்னைக் காப்பாற்று,''என்று கத்தினான்.

அப்போது இறைவன் அவனிடம் கேட்டார்,''அப்பா,தாகத்துக்கு தண்ணீர் கேட்டேனே,என்ன ஆயிற்று?''
-------------------

''தினசரி வேலைக்கு தாமதமாக வருகிறாயே?''என்று முதலாளி கோபமாக முல்லாவைக் கேட்டார்.

முல்லா சொன்னார்,''அதற்கு நீங்கள் தான் காரணம்''

முதலாளி ஆச்சரியத்துடன் அவரை நோக்க,

முல்லா பணிவுடன் சொன்னார்,    ''நீங்கள் தான் என்னை நேரம் காலம் பார்க்காது வேலை பார்க்கக் கற்றுக் கொடுத்தீர்கள்?அதனால் இப்பொழுதெல்லாம் நான் கையில் கடிகாரம் கூட கட்டுவது இல்லை.''
---------------------------

புதிதாக வேலைக்கு வந்த முல்லாவிடம் முதலாளி கேட்டார்,''உனக்கு ஏற்கனவே ஐந்து வருட அனுபவம் இருக்கிறதாக நேர்முகத் தேர்வில் சொன்னாயே!ஆனால் நீ ஏற்கனவே வேலை பார்த்ததற்கான அறிகுறியே தெரியவில்லையே?''

அதற்கு முல்லா சொன்னார்,''நீங்கள் தானே விளம்பரத்தில் கற்பனை வளம் மிக்கஒருவர் வேலைக்கு வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்?''

--
நேச நிஜங்களுடன்,

முகமூடி

unread,
Dec 16, 2011, 2:25:11 AM12/16/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends

அவர்கள் சமீபத்தில் திருமணமானவர்கள்.அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது அதில் புதிய திரைப்படம் ஒன்றிற்கு ஊரின் சிறந்த திரை அரங்கில் உயர்ந்த வகுப்புக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன.

மேலும் ,''இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள்,பார்க்கலாம்,''என்றொரு குறிப்பும் இருந்தது.

இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.இருந்தாலும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர்.

வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.வீட்டில் ஒரு கடிதமும் கிடந்தது.அதில்,''இப்போது உங்களுக்கு டிக்கெட் யார் அனுப்பியிருப்பார்கள் என்று கண்டு பிடித்திருப்பீர்களே!''என்று எழுதியிருந்தது.

------------------------

முல்லாவும் அவர் நண்பர்களும் ஒரு சாராயக் கடையை விலைக்கு வாங்கினார்கள்.ஒரு மாதமாக ரிப்பேர்  வேலைகள் நடந்து கொண்டிருந்தன. முன்னால் அந்தக் கடையில் வழக்கமாக சாராயம் குடிப்பவர்கள் கடை என்றைக்கு தயாராகும் என்று சுற்றிச் சுற்றி வந்தார்கள்.

வேலை முடிவது மாதிரியாய்த் தெரியாதலால் ஒரு குடிமகன் முல்லாவிடம் சென்று, என்றைக்குத்தான் கடையைத் திறப்பீர்கள்?என்றைக்கு நாங்கள் இங்கே வந்து குடிப்பது?''

முல்லா அமைதியாகச் சொன்னார்,''நீங்கள் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.இந்தக் கடையை நாங்கள் வாங்கியது  நாங்கள் சாராயம் குடிப்பதற்குத்தான்.மற்றவர்களுக்கு அல்ல.''

--------------------------

நண்பர் கேட்டார்,''முல்லா,நீ தனியாகத்தானே குடிக்கிறாய்?பின் ஏன் தினமும் இரண்டு பாட்டில்களுடன் உன் அறைக்கு செல்கிறாய்?''

முல்லா சொன்னார்,''முதலில் நான் ஒரு பாட்டில்தான் குடிக்கிறேன்.அதைக் குடித்ததும் எனக்குள்ளே இன்னொரு ஆள் இருப்பதுபோலத் தோன்றுகிறது.அந்த இன்னொரு ஆள் வருத்தப்படக் கூடாதே என்று அவருக்காகத்தான் இரண்டாவது பாட்டிலைக் குடிக்கிறேன்.''

--

sk natarajan

unread,
Dec 16, 2011, 9:01:55 PM12/16/11
to tamizhs...@googlegroups.com, நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, tamil2friends
முதலில்  உள்ளது ஒரு திரைப்படத்தில் வந்துள்ளது
நன்று

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/12/16 முகமூடி <mask...@gmail.com>

முகமூடி

unread,
Dec 18, 2011, 11:55:50 PM12/18/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends

இரவல்

பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன்ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார்.

அதற்கு அந்த நண்பர்,''என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,''என்றார்.மார்க் ட்வைன் பேசாமல் திரும்பி விட்டார்.

சில நாட்கள் கழித்து அதே நண்பர் மார்க் ட்வைனிடம்,''உங்கள் தோட்டத்துக் கடப்பாறையை ஒரு நாள் இரவல் கொடுங்கள்,''என்று கேட்டார்.

மார்க் ட்வைன் அமைதியாகச் சொன்னார்,''என் தோட்டத்தில் தோண்டுவதாக இருந்தால் கொடுக்கிறேன்.''

-----------------------

யாரிடம் கேட்பது?

நீண்ட தூரம் புகை வண்டியில் பயணம் செய்து வந்து இறங்கிய கணவனை வரவேற்க வந்திருந்தாள் அவன் மனைவி.

அவனைப் பார்த்ததும் அவள்,''என்ன, இவ்வளவு சோர்வாக இருக்கிறீர்கள்?''என்று கேட்டாள்.

கணவன்,''அதை ஏன் கேட்கிறாய்?நீண்ட தூர பயணம்.மேலும் எனக்குக் கிடைத்த இருக்கை புகை வண்டி செல்லும் திசைக்கு எதிரில் வேறு அமைந்திருந்ததால்,ஒரே தலைவலி.''என்றான்.

அவள் உடனேயே,''அப்படியானால் நீங்கள் யாரிடமாவது கேட்டு இடத்தை மாற்றிக் கொண்டிருக்கலாமே?''என்று கேட்டாள்.

அவனும்,''நானும் அப்படித்தான் நினைத்தேன்.ஆனால் என் முன் இருக்கைகளில் யாருமே இல்லையே!நான் யாரிடம் கேட்பது?''என்றான்.

---------------

உடல் நலமில்லை என்று ஒருவர் ஒரு டாக்டரிடம் சொன்னார்.அவரை நன்கு பரிசோதித்தபின் டாக்டர் மூன்று  நிறங்களில் மாத்திரைகளைக் கொடுத்து சொன்னார்,''காலை உணவுக்குப்பின் சிவப்பு மாத்திரையை சாப்பிட்டுவிட்டு இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.மதிய உணவுக்குப்பின் மஞ்சள் நிற மாத்திரையை சாப்பிட்டு விட்டு இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.இரவு படுக்குமுன் பச்சை நிற மாத்திரையை சாப்பிட்டு விட்டு இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.''

''எனக்கு என்ன வியாதி,டாக்டர்?''என்று நோயாளி கேட்டார்.

டாக்டர் சொன்னார்,''நீ தேவையான அளவுக்கு தண்ணீர் குடிப்பதில்லை.''


--
நேச நிஜங்களுடன்,

Gokul Kumaran

unread,
Dec 19, 2011, 11:21:57 AM12/19/11
to Nadpudan, Panbudan
நல்ல வேளை, அதைக் கேக்கலை :)))))))


On Mon, Dec 19, 2011 at 8:55 AM, முகமூடி <mask...@gmail.com> wrote:

இரவல்

பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன்ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார்.

அதற்கு அந்த நண்பர்,''என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,''என்றார்.மார்க் ட்வைன் பேசாமல் திரும்பி விட்டார்.

சில நாட்கள் கழித்து அதே நண்பர் மார்க் ட்வைனிடம்,''உங்கள் தோட்டத்துக் கடப்பாறையை ஒரு நாள் இரவல் கொடுங்கள்,''என்று கேட்டார்.

மார்க் ட்வைன் அமைதியாகச் சொன்னார்,''என் தோட்டத்தில் தோண்டுவதாக இருந்தால் கொடுக்கிறேன்.''

--
Gokul Kumaran

sk natarajan

unread,
Dec 19, 2011, 9:36:42 PM12/19/11
to thamizh...@googlegroups.com, நட்புடன், பண்புடன், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends
ஹா  ஹா  ஹா
இரண்டாவது மிகவும் அருமை

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/12/19 முகமூடி <mask...@gmail.com>

இரவல்



முகமூடி

unread,
Dec 20, 2011, 4:35:22 AM12/20/11
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends

சோம்பல்

முல்லா நசிருதீன் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் கூட காலையில் விரைவில் எழுந்தது இல்லை.அவனது தந்தை எவ்வளவோ முயற்சி செய்தும் அவனை விரைவில் படுக்கையிலிருந்து எழ வைக்க முடியவில்லை.

ஒருநாள் வழக்கம்போல அவர் அதிகாலை எழுந்து வெளியே சென்றார்.அப்போது ஒரு பறவை தரையில் கிடந்த புழுவைத் தூக்கி சென்றது.பறவை அதிகாலையில் எழுந்ததால்தானே காலை இளம் குளிரில் வெளி வந்த புழுவைப் பிடிக்க முடிந்தது என்று எண்ணினார்.

பின்னர் அவர் சாலையில் ஒரு துணிப்பை கிடப்பதைப் பார்த்து அதை எடுத்து அதில்  பொற்காசுகள் இருப்பதைக் கண்டார்.சிறிது நேரம் காத்திருந்தும் ஒருவரும் தேடி வராததால் அதிகாலையில் எழுந்ததற்குக் கிடைத்த பரிசு என்று எண்ணி வீட்டிற்கு வந்தார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் நசிருதீனிடம் சொல்லி விரைந்து எழ வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தலாம் என்று எண்ணி வீட்டிற்கு வந்தார்.

தந்தை எழுப்பியும் நசிருதீன்  எழவில்லை.அவன் முகத்தில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து ஊற்றினார்.அப்போதும் அவன் அரைத் தூக்கத்தில் எழுந்து உட்கார்ந்தான்.தந்தை தான் கண்ட இரு நிகழ்வுகளையும் சொல்லி மகனின்  பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தார்.

நசிருதீன் சொன்னான்,''என்ன அப்பா,உங்களுக்கு விபரமே தெரியவில்லை.அந்தப்புழு அப்பறவை எழுமுன் எழுந்ததால்தானே அது பறவைக்கு இரையாக நேர்ந்தது. அதேபோல் எவனோ ஒருவன் உங்களுக்குமுன் எழுந்து சென்றதால்தானே தன பொற்காசுகளைத் தொலைத்துவிட்டு இப்போது கவலைப் பட்டுக் கொண்டிருப்பான்?எனவே சீக்கிரம் எழுவது ஆபத்துதான்,''என்று சொல்லிக் கொண்டே மீண்டும் படுக்கையில் படுத்துக் கொண்டான்.தந்தை அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.

------------------------------

ஒருவர் தன நண்பரின் வீட்டிற்குச் சென்றார்.அங்கு ஒரு பன்றி வளர்க்கப்படுவதைக் கண்டார்.உடனே நண்பர் அப்பன்றியின் குணாதிசயங்களைப் பெருமையாகச் சொல்ல ஆரம்பித்தார்,

''ஒரு முறை வீட்டில் ஒரு பகுதியில் தீப்பிடித்து விட்டது உடனே இந்த பன்றி அலாரம் அடித்து எல்லோரும் வந்து பெரும் சேதத்தைத் தவிர்க்க முடிந்தது.இன்னொரு முறை தொட்டியில் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த என் பையனைக் காப்பாற்றியது.ஒரு முறை வந்த திருடனைக் கடித்ததில் அவன் ஓடியே விட்டான்.''

வந்தவர்,''கேட்கவே மிக மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.அது சரி அது ஏன் மூன்று கால்களுடன் இருக்கிறது?''என்று கேட்டார்.

நண்பர் சொன்னார்,''என்னதான் இருந்தாலும் ஒரு பன்றியை முழுதாக ஒரே நாளில் சாப்பிட முடியாதல்லவா?''

----------------------

''ஏன் தம்பி,உன் மனைவிக்கு  அவளுடைய அத்தை அதிகச் சொத்தினை எழுதி வைத்திருப்பதால் தான் நீ அவளை கல்யாணம் செய்து கொண்டாயாமே?''

'இது அபாண்டமான குற்றச்சாட்டு.என் மனைவியுடைய அத்தை என்றில்லை,யார் அவள் பேரில் சொத்து எழுதி வைத்திருந்தாலும் அவளைக் கல்யாணம் செய்திருப்பேன்.'

----------------------------
--
நேச நிஜங்களுடன்,

முகமூடி

unread,
Jan 17, 2012, 5:11:19 AM1/17/12
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends

வக்கீல் வாதம்

ஒரு விவசாயியின் தோட்டத்தில் ஒருவன் அனுமதியில்லாமல் நுழைந்து அவன் வளர்த்து வந்த காடைகளை சுட்டான் என்று வழக்கு போடப்பட்டது.எதிர் தரப்பு வக்கீல் விவசாயியைக்  கேள்வி மேல் கேள்வி கேட்டு அவனைக் குழப்ப முயன்றார்.

வக்கீல் :
கேட்ட கேள்விக்கு மட்டும் உண்டு இல்லை என்று பதில் சொல்... இதற்குமுன் இவன் யாரென்று உனக்குத் தெரியுமா?

விவசாயி
: தெரியாது..

வக்கீல் :
இவன் உன் தோட்டத்தில் அனுமதியின்றி நுழைந்ததை நீ பார்த்தாயா...?

விவசாயி
: இல்லை பார்க்கவில்லை

வக்கீல்
: இவர் யாரென்று தெரியாது... அனுமதியின்றி தோட்டத்தில் நுழைந்தது தெரியாது... உன் காடைகளைச் சுட்டது மட்டும் எப்படித் தெரியும்...?

விவசாயி
: நான் அவர்தான் சுட்டார் என்று கூறவில்லை.அவர் சுட்டிருக்கக் கூடும்  என்று சந்தேகப்படுகிறேன்.

வக்கீல்
: சரி,ஏன் அப்படி அவர்மேல் சந்தேகப்பட்டாய்?

விவசாயி
: நான் அவரை,கையில் துப்பாக்கியோடு இருப்பதைப் பார்த்தேன்.அடுத்து என் நிலத்தில் துப்பாக்கிசப்தம் கேட்டேன்.காடைகள் இறந்து விழுவதைப் பார்த்தேன்.என்னுடைய இறந்த காடைகள் அவர் கையில் இருப்பதைப் பார்த்தேன்.அவ்வளவுதான். ஆனால் வக்கீல் அவர்களே!என் காடைகள்,தானே தற்கொலை செய்து கொண்டன என்று நீங்கள் கூற மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

---------------------

தவறும் தண்டனையும்

ஒரு வேலைக்காரன் முதலாளியைக் கோபத்தில் 'நாயே'என்று திட்டிவிட்டான்.விஷயம் பஞ்சாயத்திற்குப் போனது.வேலைக்காரன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டான்.

பஞ்சாயத்தார்,அவனை,பிள்ளையார் சிலைக்கு முன் நின்று நூறு தோப்புக்கரணம் போடச் சொன்னார்கள்.

அவனும்,'என் முதலாளியை  நாயே,என்று நான் சொன்னது தப்பு,'என்று சொல்லிக் கொண்டே நூறு தோப்புக்கரணம் போட்டான்.

ஒரு தடவை நாயே என்று சொன்னது தவறு.
நூறு தடவை நாயே என்று சொன்னது தண்டனை!
 
--------------------

முல்லாவின் கழுதை

முல்லாவின் கழுதையைக் காணவில்லை.முல்லாவிற்கோ ஒரே வருத்தம்.

நண்பர்கள் கேட்டார்கள்,''என்ன முல்லா,ஒரு கழுதைக்காக  இவ்வளவு கவலைப்படுகிறீர்கள் ? உங்கள்  மனைவி இறந்தபோதுகூட  இவ்வளவு துக்கப்படவில்லையே!''

முல்லா சொன்னார்,''நண்பர்களே,என் மனைவி இறந்தபோது,நீங்களெல்லாம்,கவலைப்படாதே,வேறு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைக்கிறோம் என்று சொன்னீர்கள்.ஆனால் இப்போது உங்களில் ஒருவர் கூட,இந்தக் கழுதை போனால் போகிறது,இன்னொரு கழுதை வாங்கித்தருகிறோம்,என்று கூறவில்லையே?''நபர்கள் முகத்தில் ஈயாடவில்லை.


--
நேச நிஜங்களுடன்,

முகமூடி

unread,
Jan 18, 2012, 4:23:55 AM1/18/12
to நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, தமிழ் சிறகுகள், tamil2friends

தபால் தலை

ஒரு சர்வாதிகாரி தன பிறந்த நாளில் தன் படத்தைக் கொண்ட தபால் தலைகளை ஏராளமாக வெளியிட்டார்.ஆனால் அந்த தபால் தலைகள் அதிகம் விற்பனை ஆகவில்லை. தன செயலரை அழைத்து காரணம் கேட்டார்.

செயலர் சொன்னார்,''அந்த தபால் தலைகள் சரியாக ஒட்டவில்லை.அதனால்தான் சரியான விற்பனை இல்லை,''

சர்வாதிகாரிக்குக்  கோபம் வந்தது.தபால் நிர்வாகியை அழைத்து,''ஒழுங்காகக் கோந்து பூசப்பட்டிருந்தால் ஓட்டுவதில் சிரமம் இருக்காதே?ஏன் அதை நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை?''என்று கேட்டார்.

நிர்வாகி சொன்னார்,''கோந்து சரியாகத்தான் பூசப்பட்டிருக்கிறது. ஆனால் எச்சில் உமிழ்ந்தவர்கள் கோந்து இருந்த பக்கத்தில் உமிழவில்லை.''

-----------------------

மனைவிக்கு பயப்படாதவன்

அக்பர் ஒருநாள் பீர்பாலிடம் மனைவிக்கு பயப்படாத கணவன் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்டார்.பீர்பாலும் தனக்குத் தெரிந்தவரை யாரும் அப்படியில்லை என்றார்.

அக்பர்,''பீர்பால்,இதோ.ஒரு வெள்ளைக்குதிரையும், ஒரு கறுப்புக் குதிரையையும் எடுத்துக் கொள்.யாரேனும் விதிவிலக்கான ஆள் இருந்தால் அவனுக்கு அவன் விரும்பும் ஒரு குதிரையை அரசனின் பரிசு என்று சொல்லிக்கொடு ''என்றார்.

பீர்பாலும் குதிரைகளுடன் பல ஊர்களுக்கு சென்று ஒவ்வொருவரை விசாரித்தும் அதுமாதிரியான ஆள் அகப்படவில்லை. ஒரு குதிரைக்காக யாரும் தங்கள் வாழ்வைப் பாழ்படுத்திக்  கொள்ள விரும்பவில்லை.

இறுதியில் சோர்ந்துபோய் ஒரு மல்யுத்த வீரனைக் கண்டு அவனிடம் இக்கேள்வியைக் கேட்டார். அவன் இவரைக் கை குலுக்கிய விதத்திலிருந்தே அவன் நிச்சயம் மனைவிக்கு பயந்தவன் அல்ல என்று முடிவு செய்து,''எங்கே உன் மனைவி?''என்று கேட்க அவனும் தன மனைவியை நோக்கிக் கையை காட்டினான். அங்கு மிகவும் சிறிய உருவம் கொண்ட மெலிந்த ஒரு பெண் சமைத்துக் கொண்டிருந்தாள்.

பீர்பால் இதை மேற்கொண்டு விசாரிக்க வேண்டியதில்லை என்று கருதி,''இந்த இரண்டு குதிரைகளில் ஒன்றை நீ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.மனைவிக்குப் பயப்படாத உனக்கு இது அரசனின் பரிசு,''என்றார்.

அவன் கறுப்புக் குதிரையை தேர்ந்தெடுத்தான்.அப்போது அவன் மனைவி உரத்த குரலில் கறுப்புக் குதிரை வேண்டாம்,வெள்ளை வேண்டும் ''என்றாள்.அவன் கருப்பே இருக்கட்டும் என்று சொல்ல அவள் மீண்டும் கத்தினாள்,''நீ கறுப்புக் குதிரையை எடுத்தால் நடப்பதே வேறு.உன் வாழ்வை நரகமாக்கிவிடுவேன்,ஜாக்கிரதை,'' வீரனும்,''சரி,சரி,நான் வெள்ளைக் குதிரையையே எடுத்துக்  கொள்கிறேன்.நீ கத்தாமல் இரு,,''என்றான்.

பீர்பால் உடனே ,''உனக்கு எதுவும் கிடையாது.நீ தோற்று விட்டாய்.நீயும் மனைவிக்குப் பயந்தவன்தான்.இங்கு விதிவிலக்கானவர் யாருமே இல்லை.''என்றார்.

-------------------

''பண விசயத்தில் எனக்கு மிகுந்த கவலையாய் இருக்கு டாக்டர்,''

”இது மாதிரித்தான் போன வாரம் ஒருவர் வந்தார்.அவர் ஒரு தையற்காரருக்குப் பணம் கொடுக்க முடியாமல் போய்,அதனால் கவலைப் படுவதாகக் கூறினார்.நான்,அதை நினைவில் வைத்துக்கொண்டிராமல் மறந்து விடச் சொன்னேன்.இப்போது அவருக்கு நன்றாயிருப்பதாகக் கூறினார்.”

''எனக்கு அது தெரியும்,டாக்டர்.''

”எப்படி?”

''நான் தான் அந்த தையற்காரர்.''

காமேஷ்

unread,
Jan 18, 2012, 5:27:36 AM1/18/12
to thamizh...@googlegroups.com, பண்புடன்

.........



2012/1/18 ராஜா <trp...@gmail.com>
2012/1/18 முகமூடி <mask...@gmail.com>

தபால் தலை

நிர்வாகி சொன்னார்,''கோந்து சரியாகத்தான் பூசப்பட்டிருக்கிறது. ஆனால் எச்சில் உமிழ்ந்தவர்கள் கோந்து இருந்த பக்கத்தில் உமிழவில்லை.''


குட் ! இதோட தமிழாக்கம் தானே :-)  

The U.S. Postal Service created a stamp earlier this year with a picture
of President Bush to honor his achievements while in office. However, it
was found that in daily use the stamp was not sticking to envelopes 50%
of the time.

The President established a blue ribbon commission to determine the
reason for such a defect. After a month's testing, the commission made
the following findings:

1. The stamp was found to be in perfect order.
2. There was nothing wrong with the consistency of the applied adhesive.
3. 50% of the people were just spitting on the wrong side.
 


50% மக்கள்    முன்னாள் அதிபர் ’புஸ்’  முகத்தில்  துப்புறாங்கன்னு சொல்ல வறீங்களா ?



Asif Meeran AJ

unread,
Jan 18, 2012, 7:30:53 AM1/18/12
to panb...@googlegroups.com
50% மக்கள்    முன்னாள் அதிபர் ’புஸ்’  முகத்தில்  துப்புறாங்கன்னு சொல்ல வறீங்களா ?

50% ரொம்ப கம்மி காமேஷ்! :-)

sk natarajan

unread,
Jan 18, 2012, 8:16:51 AM1/18/12
to tamizhs...@googlegroups.com, நட்புடன், பண்புடன், தென்றல், muththamiz, tamil2friends
ஹா  ஹா  ஹா
அருமை

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2012/1/17 முகமூடி <mask...@gmail.com>
It is loading more messages.
0 new messages