Arabian Nights - كتاب ألف ليلة وليلة - அரேபியன் இரவுகள்

64 views
Skip to first unread message

Ramesh Murugan

unread,
Dec 7, 2012, 10:29:11 AM12/7/12
to பண்புடன், நட்புடன்
வில்லன் புண்ணியத்துல ஒரு கதை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பலர் இந்த கதைகளை படிச்சிருக்கலாம். படிக்காதவங்க இதை தவறவிடக்கூடாதேங்குறதுக்காக இங்க சுட்டு போடுறேன்.

நன்றி: http://www.eegarai.net

Arabian Nights - كتاب ألف ليلة وليلة - அரேபியன் இரவுகள்


பழங்காலத்தில் பெர்ஷியா என்ற பெரிய நகரத்தை தலைநகராகக் கொண்டு ஒரு அரேபியப் பேரரசு இருந்தது. அந்த ராஜ்ஜியம் நல்ல செழிப்புள்ளதாக இருந்தது. மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

அந்த நாட்டு அரசருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அரசரின் மரணத்திற்குப் பின் அவரது மூத்த மகன் ஷாகிரியார் அரசரானார். அவரது தம்பி பெர்ஷிய பேரரசின் மற்றொரு பகுதியை ஆண்டு வந்தார். பேரரசர் ஷாகிரியார் பொது மக்களுக்கு நல்ல ஒரு அரசராக விளங்கினார். ஆனால் அவர் மனைவி தீய குணம் கொண்ட பெண்மணி. இது அரசருக்குத் தெரியாமல் இருந்தது. தன் மனைவியின் தீய குணத்தை அறியாத பேரரசர் அவளை மிகவும் நேசித்தார். தன் மனைவிக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். ஆடை ஆபரணங்கள் கொடுத்து மகிழ்வித்தார்.

ஒரு நாள் தன் மனைவியின் கொடிய குணம் அவருக்குத் தெரிய வந்தது. அரசர் அதிர்ந்து போனார். மிகவும் ஆத்திரப்பட்டார். அந்த நாட்டு சட்டப்படி தன் மனைவியை கொலை செய்ய ஆணையிட்டார். மனைவி இறந்த பின்னாலும் அரசரின் கோபம் அடங்கவில்லை. உலகில் உள்ள எல்லாப் பெண்களும் தன் மனைவியைப் போலவே தீய குணம் கொண்டவர்கள் என்று எண்ணினார். அதனால் எல்லாப் பெண்களையும் கொல்லத் திட்டமிட்டார். எனவே நாட்டில் உள்ள இளம் பெண்களைத் திருமணம் செய்து, மறு நாளே கொல்ல எண்ணம் கொண்டார்.

தன்னுடைய மந்திரியிடம் தனது யோசனையைத் தெரிவித்து அதற்குரிய ஆணையைப் பிறப்பித்தார். மகா மந்திரிக்கு, அரசரின் ஆணை தவறு என்று அவசருக்குப் புரிய வைக்க முடியவில்லை. அரசர் அந்த அளவுக்குப் பெண்களின் மேல் ஆத்திரம் கொண்டிருந்தார். அதனால் தினப்படி, அரசர் ஒரு இளம் பெண்ணை மணப்பதும் மறுநாள் புது மணப் பெண்ணைக் கொல்வதுமாக இருந்தார்.

ஒரு நல்ல அரசர் இப்படி கொடும் செயலைச் செய்வது கண்டு மக்கள் வேதனைப் பட்டனர். தங்களுக்கு அரசரால் இழைக்கப்படும் கொடுமைக்கு நீதி கிடைக்காமல் பரிதவித்தனர்.

பெர்ஷியா நாட்டு மந்திரிக்கு இரண்டு புதல்விகள் இருந்தார்கள். மூத்தவள் ஷஹரஜாத். இளையவள் தினார்ஜாத். ஷஹரஜாத் மிகவும் புத்திசாலி. பல நாட்டு வரலாறு, தத்துவங்கள் அறிந்தவள். அவள் தன் தந்தையை அணுகி "தந்தையே, நான் அரசரின் இந்த கொடும் செயலை நிறுத்தப் போகிறேன்" என்றாள்.

அதற்கு மந்திரி "மகளே நீ செய்ய நினைப்பது நல்ல காரியம் தான்!. ஆனால் அதை எப்படிச் செய்யப் போகிறாய்?"என்று கேட்டார்.

"நான் சுல்தானை மணக்கப் போகிறேன்" என்றாள் ஷஹரஜாத்.

மந்திரி அதிர்ச்சியடைந்தார். மகளை எவ்வளவோ தடுத்துப் பார்த்தார். ஷஹரஜாத் தன் முடிவில் திடமாக இருந்ததினால் மனம் நொந்து போய் மன்னரிடம் ஷஹரஜாதின் விருப்பத்தைத் கூறினார். ஆச்சிரியமடைந்த மன்னர், திருமணத்திற்கு சம்மதித்தார்.

இதற்கிடையில் ஷஹரஜாத் தன் தங்கையிடம் "தங்கையே! மன்னரிடம் என்னுடைய கடைசி ஆசையாக நான் உன்னையும் என்னுடன் வைத்துக் கொள்ள வேண்டுவேன். அவர் அதற்கு ஒத்துக் கொண்டால், நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்" என்றாள்.

"அக்கா உனக்கு என்ன உதவி வேண்டும், சொல்! தயங்காமல் செய்கிறேன்" என்று தங்கையும் உறுதி கூறினாள்.

விடிவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக நீ என்னை எழுப்பி, 'அக்கா நீ, உன்னுடைய அற்புதமான கதைகளில் ஒன்றை இறப்பதற்கு முன் சொல்வாயா என்று கேட்க வேண்டும்' என்றாள். தங்கையும் அவ்வாறே செய்வதாக உறுதி அளித்தாள்.

மன்னருக்கும் ஷஹரஜாதிற்கும் திருமணம் நடந்தது. அன்று இரவு ஷஹரஜாத் மன்னரிடம் சென்று "அரசே நான் என் தங்கையை எந்நாளும் பிரிந்ததில்லை. நாளை காலையோ எனக்கு மரணம் அதனால் இன்று இரவு மட்டும் என் தங்கை என்னுடன் தங்க அனுமதிக்க வேண்டும்" என்று கெஞ்சினாள். இரக்கப்பட்ட மன்னரும் அதற்கு இணங்கினார்.

திட்டமிட்டது போலவே பொழுது விடிவதற்கு ஒரு மணி நேரம் இருக்கும் போது தினார்ஜாத் தமக்கையை எழுப்பினாள். "அக்கா தயவு செய்து, நீ எனக்கு உன்னுடைய அற்புதமான கதைகளிலிருந்து ஒரு கதையைச் சொல்!. இன்னும் சில மணி நேரத்தில் நீ இறந்து விடுவாய், உன் குரலைக் கேட்க எனக்கு ஆவலாக உள்ளது!" என்றாள். ஷஹரஜாதும் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.


--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser


Ramesh Murugan

unread,
Dec 7, 2012, 10:31:59 AM12/7/12
to பண்புடன், நட்புடன்
அரேபியப் பாலைவனத்தில் ஒரு வணிகன் வாழ்ந்து வந்தான். தன் வேலையின் பொருட்டு அவன் அடிக்கடி பாலைவனத்தைக் கடக்க வேண்டியிருந்தது. ஒரு முறை தன் தொழில் காரணமாகத் தன் நகரைவிட்டு வெகுதூரம் செல்ல வேண்டியிருந்தது. பாலைவனத்தைக் கடக்கவே நான்கு ஐந்து நாட்கள் தேவைப்பட்டது. அதனால் வழியில் உணவுக்காக நிறையப் பேரிச்சம் பழங்களை எடுத்து மடியில் கட்டிக் கொண்டு பயணம் மேற்கொண்டான்.

வியாபாரத்தை முடித்துக் கொண்டு அவன் திரும்பும் வழியில் அவனுக்குப் பசித்தது. பல நாட்கள் பயணம் செய்த காரணத்தால் மிகவும் சோர்வாகவும் இருந்தது. குதிரை மெல்லப் பாலைவனத்தில் நடக்க, தன் கையிலிருந்த பேரிச்சம் பழங்களை ஒவ்வொன்றாகத் தின்று, கொட்டைகளைத் தூக்கி எறிந்தான்.

அப்படியே பயணப்பட்டு வருகையில் ஒரு பாலைவனச் சோலையைக் கண்டான். அந்தப் பாலைவனச் சோலையில் ஒரு சிறிய நீரோடையும் ஒரு சில மரங்களும் இருந்தன. மிகுந்த சந்தோஷத்துடன் இறங்கி ஓய்வெடுத்தான். குதிரைக்குத் தண்ணீர் கொடுத்தான். தானும் ஒடையில் இறங்கி நீர் அருந்தி, தன் உடலை சுத்தம் செய்து கொண்டான்.

அவ்வாறு செய்து கொண்டிருக்கும் போது அவனை நோக்கி ஒரு மாய பூதம் கோபமாக ஓடி வருவது தெரிந்தது. அந்தப் பாலைவனத்தில் கொடிய மாய பூதங்கள் வசிப்பது அவனுக்குத் தெரியாது. முகம் சிவக்கக் கத்திக் கொண்டு ஓடி வரும் பூதததைப் பார்த்ததும் பயந்து போனான் அந்த வணிகன். அந்த பூதத்தின் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான்.

"ஏய் நான் உன்னைக் கொன்று விடப் போகிறேன்" என்று கோபமாகக் கத்தியபடித் தன் வாளைத் தூக்கியது பூதம்.

"ஐயா, நீங்கள் என்னைக் கொன்றுவிடக் கூடிய வலிமை வாய்ந்தவர்; அதனால் என்னைக் கொல்லுங்கள்; ஆனால் எதற்காக என்னைக் கொல்கிறீர்கள் என்று சொல்லிவிட்டுக் கொல்லுங்கள்" என்று பணிவாகக் கேட்டான் வணிகன்.

"நீ என் மகனைக் கொன்று விட்டாய், அதனால் தான் நான் உன்னைக் கொல்லப் போகிறேன்" என்றது பூதம்.

"உங்கள் மகனை நான் கொன்றேனா? இல்லையே, அது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே" என்று குழப்பத்துடன் கேட்டான் வணிகன்.

"ஏய் நீ பேரிச்சம் பழங்களைத் தின்றுக் கொட்டையைத் தூக்கி எறியவில்லை?" கோபமாக வணிகனைக் கேட்டது பூதம்.

"ஆமாம், ஆமாம்" என்று பயத்துடன் ஒத்துக் கொண்டான் வணிகன்.

"அந்தக் கொட்டை என் குழந்தையின் கண்ணில் விழுந்து அது இறந்து விட்டது. அதனால் தான் நான் உன்னைக் கொல்லப் பொகிறேன்" என்று கர்ஜித்தது பூதம்.

மிரண்டு போனான் வணிகன். அவன் யோசிக்காமல் செய்த செயல் அவனுக்கு எவ்வளவு பெரிய ஆபத்தை உண்டாக்கிவிட்டது. ஆனாலும் தைரியமாக, "ஐயா பூதமே, என்னை மன்னித்துவிடுங்கள், நான் தெரியாமல் தவறு செய்து விட்டேன்." என்று சொன்னான்.

"என் மகனின் உயிருக்கு பதிலாக நான் உன்னைக் கொன்றே தீருவேன்" என்று கோபமாகக் கத்தியது பூதம். வணிகன் அந்த பூதத்தின் கால்களில் விழுந்து கதறினான். பூதம் அவனை மன்னிக்க மறுத்தது.

பூதம் தன்னைக் கண்டிப்பாகக் கொன்றுவிடும் என்று உணர்ந்த வணிகன், "ஐயா நான் இறப்பதற்கு முன் என்னுடைய கடைசி ஆசையையாவது நிறைவேற்றுங்கள்" என்று கெஞ்சினான். "என்ன? சொல்" என்றது பூதம்.

"நான் என் மனைவி மக்களைப் பார்த்துவிட்டு உங்களிடம் திரும்பி வருகிறேன். நான் வீட்டை விட்டுக் கிளம்பி அதிக நாட்களாகிறது. அதனால் அவர்கள் கவலையோடு இருப்பார்கள். எனவே அவர்களிடம் சொல்லிக் கொண்டு உங்களிடமே நான் திரும்பி வருகிறேன்" என்றான் வணிகன்.

"வணிகனை நம்பலாமா வேண்டாமா என்று யோசித்தது பூதம்..." என்று சொல்லிக் கதையை நிறுத்தினாள் ஷஹரஜாத்.

"அக்கா, கதையை ஏன் நிறுத்தி விட்டாய்? மிகவும் சுவாரசியமாக இருக்கிறதே" என்றாள் தங்கை.

"பொழுது புலர்ந்து விட்டது பார்" என்றாள் ஷஹரஜாத். பொழுது விடிந்ததும் தனக்கு மரணம் என்பது அவளுக்குத் தெரியும். அரசர் என்ன சொல்லப் போகிறாரோ என்று சகோதரிகள் இருவரும் பயத்துடன் காத்திருந்தனர்.

சுல்தானும் ஷஹரஜாதின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கும் கதையின் முடிவில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே அவள் கதையை முடித்ததும் நாளை அவளைக் கொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அரச வேலைகளைக் கவனிக்கப் புறப்பட்டார்.

இரண்டாம் நாள் இரவுக்காக ஷஹரஜாத் காத்திருந்தாள்.

2012/12/7 Ramesh Murugan <rames...@gmail.com>

வில்லன் புண்ணியத்துல ஒரு கதை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பலர் இந்த கதைகளை படிச்சிருக்கலாம். படிக்காதவங்க இதை தவறவிடக்கூடாதேங்குறதுக்காக இங்க சுட்டு போடுறேன்.

நன்றி: http://www.eegarai.net
 

Ramesh Murugan

unread,
Dec 7, 2012, 10:59:18 AM12/7/12
to பண்புடன், நட்புடன்
ஷெஹரஜாதின் கதையைக் கேட்கப் பேரரசர் ஷாஹிரார் ஆவலோடு தன்னுடைய அந்தப்புரத்திற்கு வந்தார். புத்திசாலி ஷெஹரஜாத் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். பொழுது புலரும் போது முக்கியமான திருப்பத்தில் கதையை நிறுத்தி விடுவது, பிறகு அரசரின் மனம் மாறும் வரை கற்பனைக் கதையை வளர்த்துக் கொண்டே போவது- இது தான் அவளது திட்டம். இந்த திட்டத்துடன் அவள் கதையைத் தொடர்ந்தாள்.

தன் முன்னால் பயத்துடன் குனிந்திருந்த வணிகனை யோசனையோடு பார்த்தது பூதம்.

"நீ ஊருக்குச் சென்றால் என்னிடம் எப்போது திரும்பி வருவாய்?" என்று கேட்டது.

"நான் ஊர் சென்று திரும்ப ஒரு வருடம் ஆகும். அதனால் இன்னும் பன்னிரெண்டு மாதத்தில் உன்னை கண்டிப்பாய் இதே ஓடை அருகில் சந்திக்கிறேன்," என்று வணிகன் வாக்குக் கொடுத்தான்.

"ம் சரி, ஒரு வருடத்தில் திரும்ப வர வேண்டும் இல்லையென்றால்..", என்று பயமுறுத்தி விட்டு அங்கிருந்து மறைந்தது பூதம்.

வணிகனும் குதிரையிலேறி வீடு திரும்பினான். அவனது மனைவியும் குழந்தைகளும் அவனுக்காக காத்திருந்தனர். ஆனால் தன் குடும்பத்தினரைக் கண்டதும் வணிகன் துக்கம் தாளாமல் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறி அழுதான்.

நான் இன்னும் உங்களுடன் ஒரு வருட காலம் தான் வாழ முடியும் என்று வருத்தப்பட்டவனை அவன் மனைவி தேற்றினாள்.

"உங்களுக்கு ஒரு வருடம் வாழக் கிடைத்ததே நல்ல விஷயம் தான் இந்தக் குறுகிய காலத்தை சரியானபடி செலவிட வேண்டும்," என்றாள்.

மனைவியின் ஆலோசனையைக் கேட்ட வணிகன் அந்த ஒரு வருட காலத்தில் தன்னுடைய கடமைகளை முடித்தான். வாங்கியிருந்த கடன்களை அடைத்தான். தனக்குப் பிறகு மனைவி குழந்தைகளை கவனித்துக் கொள்ள ஆட்களை ஏற்பாடு செய்தான். ஏழைகளுக்கு தான தர்மங்கள் செய்தான். இவ்வாறாக ஒரு வருடம் வேகமாக ஓடி விட்டது.

கனத்த இதயத்துடன் வணிகன் பாலைவனத்திலிருந்த நீரோடைக்குத் திரும்பினான். அங்கே மாய பூதத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தான். அப்போது அங்கே ஒரு சிவந்த பெண் மானை ஓட்டிக் கொண்டு ஒரு முதியவர் வந்தார்.

பாலைவன நீரோடைக்கு அருகில் வணிகன் தனியாக இருப்பதைக் கவனித்த அவர் வணிகனை நெருங்கி, "அப்பா இந்த இடத்தில் பொல்லாத பூதங்கள் இருக்குமே, இங்கே ஏன் தனியாக நிற்கிறாய்?" என்று கேட்டார்.

அதற்கு வணிகன் அழுதபடி தன் கதையை அந்த முதியவரிடம் கூறினான். கதையைக் கேட்ட முதியவர், "அட என்ன ஆச்சிரியமாக இருக்கிறதே, மாய பூதம் உன்னை வந்து கொல்லப் போகிறதா? அந்த மாய பூதத்தை நானும் பார்க்க வேண்டும்," என்று சொல்லி வணிகனுடன் அவரும் பூதத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தார்.

இருவரும் அங்கேயே உட்கார்ந்து பூதத்திற்காக காத்திருந்தனர், கொஞ்ச நேரம் கழித்து இரண்டு கருப்பு நாய்களைக் கூட்டியபடி ஒரு முதியவர் அங்கு வந்தார். நீரோடைக்கு அருகில் உட்கார்ந்திருந்த இருவரையும் பார்த்தவர், "நண்பர்களே நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? இது ஆபத்தான இடமாயிற்றே?" என்று கேட்டார்.

பெண் மானை வைத்துக் கொண்டிருந்த முதியவர் வணிகனின் கதையைச் சொல்லி, தான் மாய பூதத்திற்காக கத்திருப்பதாய் சொன்னார். வந்த இரண்டாவது முதியவரும் இவர்களோடு மாய பூதத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தார். அப்போது அங்கே மூன்றாவது கிழவர் தள்ளாடி வந்தார். வணிகனின் சோகக் கதையைக் கேட்ட அவரும் மற்ற மூவரோடு சேர்ந்து பூதத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தார்.

சீக்கிரமே ஒரு புகை மண்டலத்திலிருந்து மாய பூதம் எழும்பியது. சிவந்த கண்களுடன் வாளைத் தூக்கிக் கொண்டு கோபமாக வெளி வந்த பூதத்தைப் பார்த்த நால்வரும் பயந்து போனார்கள்.

வணிகனை கோபமாகத் தூக்கிய பூதம், "என் மகன் இறந்து போனது போல் நீயும் இறந்து போ," என்று கர்ஜித்தபடி தன் வாளை ஓங்கியது. மற்ற மூவரும் வணிகனுக்காக பயந்து அழுதனர்.

மானை வைத்துக் கொண்டிருந்த முதியவர், "மாய பூதமே நான் ஒரு அற்புதமான கதை சொல்வேன். அது இந்த வணிகனின் கதையை விட ஆச்சரியமூட்டுவதாக இருந்தால் நீ வணிகனைத் தண்டிக்கும் உரிமையில் மூன்றில் ஒரு பாகத்தை எனக்குக் கொடுத்துவிடு," என்று கெஞ்சினார்.

பூதம் அதற்கு சம்மதித்தது. கிழவர் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

2012/12/7 Ramesh Murugan <rames...@gmail.com>
வில்லன் புண்ணியத்துல ஒரு கதை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பலர் இந்த கதைகளை படிச்சிருக்கலாம். படிக்காதவங்க இதை தவறவிடக்கூடாதேங்குறதுக்காக இங்க சுட்டு போடுறேன்.

நன்றி: http://www.eegarai.net
 


Ramesh Murugan

unread,
Dec 7, 2012, 11:02:29 AM12/7/12
to பண்புடன், நட்புடன்
முதல் முதியவர் தன் கதையைச் சொல்லத் தொடங்கினார்.

எனக்கும் என் மனைவிக்கும் பல காலங்களாக குழந்தைகளே இல்லை. அதனால் என்னுடைய விசுவாசமான அடிமைப் பெண் ஒருத்தியின் மகனை என்னுடைய மகனாக தத்து எடுத்துக் கொண்டேன். ஆனால் என் மனைவி அதை விரும்பவில்லை. ஆனாலும் எனக்கு சந்ததி வேண்டும் என்பதற்காக நான் அதை பொருட்படுத்தவில்லை.

ஒரு முறை நான் நீண்டதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டி வந்தது. அப்போது என் மகனையும் அவனுடைய தாயாரையும் என் மனைவியின் பொறுப்பில் விட்டுச் சென்றேன். நான் இல்லாத சமயத்தில் சில சூனிய வித்தைகளைக் கற்றுக் கொண்ட என் மனைவி என் மகனை ஒரு கன்றுக் குட்டியாகவும், அவனுடைய தாயை பசுவாகவும் மாற்றி வேலைக்காரர்களிடம் பராமரிக்கக் கொடுத்துவிட்டாள்.

நான் ஒரு வருடம் கழித்து வீடு திரும்பினேன். அப்போது என் மனைவி என்னிடம் ‘உன்னுடைய அடிமைப் பெண் இறந்து விட்டாள். உனது மகனையோ இரண்டு மாதங்களாகக் காணவில்லை’ என்று சொல்லி அழுதாள். நானும் என் மனைவியை நம்பி விட்டேன். ஆனாலும் மனம் சோர்ந்து போகாமல் என் மகனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். நான் என்ன தேடியும் எனக்கு என் மகன் கிடைக்கவில்லை.

அப்படியே இருக்க ஒரு பண்டிகை வந்தது. பண்டிகையின் போது விருந்து வைத்துக் கொண்டாட ஒரு கொழுத்த மாட்டைக் கொண்டு வரும்படி என் வேலையாளிடம் கூறினேன். அவன் கொண்டு வந்த பசுவோ மிகவும் சோகமாக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது. அந்தப் பசுதான் என்னுடைய அடிமைப் பெண் என்று எனக்குத் தெரியாது. ஆனால் பசு அழுவதைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. வேறு ஒரு மாட்டைக் கொண்டு வரும்படி என் வேலையாளை ஏவினேன்.

அது என் மனைவிக்குப் பிடிக்கவில்லை. அந்த மாட்டைத்தான் நான் கொல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள். எனவே நான் அந்த மாட்டைக் கொல்ல ஆணையிட்டேன். ஆனால் அந்த மாட்டில் இறைச்சியே கொஞ்சம் கூட இல்லை வெறும் எலும்புகள் மட்டுமே இருந்தன. அதனால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்.

“நம் கொட்டகையில் இருக்கும் கொழுத்த கன்றுக் குட்டியைக் கொண்டு வந்து கொல்லுங்கள்” என்று ஆணையிட்டேன். அப்படிக் கொண்டு வரப்பட்ட கன்றுக் குட்டி தான் என் மகன் என எனக்குத் தெரியாது. ஆனால் அந்த கன்றுக் குட்டியின் கண்ணிலும் கண்ணீரைக் கண்டு மனம் கலங்கிவிட்டேன். என் மனைவி எப்படி வற்புறுத்தியும் அந்தக் கன்றுக் குட்டியைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை. அதனால் அதைக் கொல்லாமல் விட்டுவிட்டேன்.

மறுநாள் என் வேலைக்காரன் என்னைத் தேடி வந்து, “ஐயா என் மகள் ஒரு சில மந்திரங்கள் தெரிந்தவள்; நேற்று அந்தக் கன்றுக் குட்டியைப் பார்த்ததும் சிரித்தாள். பின் அழுதாள். நான் அவளிடம் காரணம் கேட்டேன்.

அதற்கு அவள், “அப்பா இந்தக் கன்று நம் எஜமானனுடைய தொலைந்து போன மகன். அது புரிந்து போனதும் சிரித்தேன். ஆனால் கொல்லப்பட்ட பசுவோ நாம் இறந்து போய்விட்டதாய் நினைத்துக் கொண்டிருக்கும் அடிமைப் பெண். அவளுக்காகவே அழுதேன், என்று சொன்னாள்” என்று சொன்னான்.

என் வேலைக்காரன் சொன்ன செய்தியைக் கேட்டு நான் மிகவும் திகைப்படைந்தேன். அவனுடைய மகளிடம் சென்று என் மகனை மாற்றித் தரும்படி கேட்டேன். அதற்கு அவள், என்னுடைய மகனை அவளுக்குத் திருமணம் செய்து தர வேண்டும் என்றும் தவறு செய்த என் மனைவியைத் தண்டிக்கும் உரிமையை அவளுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் இரண்டு நிபந்தனைகள் போட்டாள். நான் அதற்கு சம்மதித்தேன். “ஆனால் என் மனைவியை உயிரோடு மட்டும் விட்டுவிடு” என்று கூறினேன்.

உடனே அந்த வேலைக்காரப் பெண் கன்றுக் குட்டியாய் இருந்த என் மகனை மனித உருவத்திற்கு மாற்றினாள். என் மனைவியை ஒரு பெண் மானாக மாற்றி விட்டாள். நான் என் மகனை அந்த வேலைக்காரப் பெண்ணுக்கே திருமணம் செய்து வைத்தேன். பெண் மானாக மாறிவிட்ட என் மனைவியை நான் தான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லித் தன் கதையை முடித்தார் முதல் முதியவர்.

“அப்படியானால் உன்னுடன் இருக்கும் இந்தப் பெண்மான் உன்னுடைய மனைவியா?” என்று கேட்டது பூதம். ஆமாமென்று தலையசைத்தார் முதியவர்.

“உன் கதை விசித்திரமானதுதான். நான் வாக்குக் கொடுத்தபடி இந்த வணிகனின் தண்டனையில் மூன்றில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கிறேன்” என்றது பூதம்.

இரண்டாவது முதியவர் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

2012/12/7 Ramesh Murugan <rames...@gmail.com>
வில்லன் புண்ணியத்துல ஒரு கதை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பலர் இந்த கதைகளை படிச்சிருக்கலாம். படிக்காதவங்க இதை தவறவிடக்கூடாதேங்குறதுக்காக இங்க சுட்டு போடுறேன்.

நன்றி: http://www.eegarai.net
 



Ramesh Murugan

unread,
Dec 7, 2012, 11:16:33 AM12/7/12
to பண்புடன், நட்புடன்

தன்னை ஆவலாகப் பார்த்துக் கொண்டிருக்கும் முகங்களைக் கூர்ந்து நோக்கிவிட்டு தன் கதையை தொடர்ந்தார் முதியவர்.

“அந்தப் பெண் கந்தல் துணிகளை அணிந்திருந்தாள். அவளுடைய ஆடைகள் மிகவும் அழுக்காய் இருந்தன. என் முன் மண்டியிட்டிருந்த அவள் என் கைகளை முத்தமிட்டு, “ஐயா தயவு செய்து என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்”என்று கெஞ்சினாள்.

அதற்கு நான் “பெண்ணே உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதே. உன்னை நான் எப்படி மணம் செய்து கொள்வது? என்று கேட்டேன். அதற்கு அவள், “ ஐயா தய்வு செய்து என்னிடம் பரிதாபம் கொள்ளுங்கள். நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொண்டால் நான் உங்களுக்கு நல்ல மனைவியாக இருப்பேன். இது சத்தியம்” என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினாள்.

அவளைப் பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது. எனவே அவளைத் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டேன். அவளுக்குப் புதிய ஆடைகளையும் அணிகலன்களையும் வாங்கிக் கொடுத்தேன். அவள் மிகவும் சந்தோஷமாக அனைத்தையும் வாங்கிக் கொண்டாள். எங்கள் சகோதரர்கள் முன்னிலையில் எங்கள் திருமணம் நடந்ததது. பின் எங்கள் மூவருடைய கடல் பயணம் தொடர்ந்தது.

பயணத்தின் போது எனது மனைவியிடம் பல நல்ல குணநலன்களைக் கண்டேன். ஏழையாக இருந்தபோதும் அவள் பல நல்ல குணங்களைக் கொண்டிருந்தாள். பிறரின் நலனில் அக்கறைக் கொண்டவளாய் இருந்தாள்.அவளுடைய வரவால் என் வியாபாரமும் செழித்தது. நான் என்மனைவியை மிகவும் ஆழமாக நேசிக்க ஆரம்பித்தேன். ஆனால் என்னுடைய நல்வாழ்வு என்னுடைய சகோதரர்களுக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய ஆனந்தமான இல்வாழ்க்கையையும் செழிப்பான வியாபாரத்தையும் கண்டு பொறாமை கொண்டார்கள். என் அன்புச் சகோதரர்களே என்னை வெறுப்பது எனக்குத் தெரியாமல் போயிற்று.

ஒரு நாள் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த என்னையும் என் மனைவியையும் அவர்கள் கடலில்த் தூக்கிப் போட்டார்கள். ஆழ்ந்த தூக்கத்திலிருந்த எனக்கு இது தெரியவில்லை. என் மனைவி ஒரு தேவதை என்பதும் எனக்குத் தெரியவில்லை. கடலில் எறியப்பட்ட என்னைக் காப்பாற்றி என்னை ஒரு தீவில்கொண்டு சேர்த்தாள் என் மனைவி.

அதிகாலையில் நான் விழித்தபோது என் மனைவியிடமிருந்து எல்லாவற்றையும் அறிந்து கொண்டேன். என் மனைவிக்கு மனதார நன்றி சொன்னேன். என்னைப் பார்த்துப் புன்னகைத்த அவள், “நான் மாயவித்தைகள் தெரிந்த ஒரு தேவதை. உன்னை அன்று பார்த்தவுடனேயே எனக்கு உன்னைப் பிடித்துவிட்டது. உன்னை சோதிக்க விரும்பினேன். ஏழைப் பெண்ணாக உருவெடுத்து உன்னிடம் வந்தேன். நீ எனக்கு உதவிகள் செய்தாய். அதனாலேயே நான் உன்னைக் காப்பாற்றினேன்” என்றாள்.

அடுத்து அவள் கோபமாக, “உன்னைக் கொல்லத் துணிந்த உன் சகோதரர்களை நான் தண்டிக்கப் போகிறேன். அவர்கள் நன்றி கெட்டவர்கள். அவர்களின் கப்பல் மூழ்கும் படி நான் செய்கிறேன்” என்றாள். நான் பதறிவிட்டேன். என் சகோதரர்களை மன்னிக்கும் படி அவளை வேண்டினேன். அவர்களுக்கு உயிர்ப் பிச்சை கொடுத்து அவர்கள் திருந்தி வாழ வாய்ப்புத் தருமாறு கேட்டேன்.

அவள் கோபம் தணிந்தது. மறு வினாடி நான் என் வீட்டில் இருந்தேன். அங்கே இரண்டு கறுப்பு நாய்கள் நின்று கொண்டிருந்தன.அவை சோகமாக இருந்தன. இதற்கு முன்னால் என்னிடன் நாய்கள் இல்லையே என்று யோசித்தேன்.

தேவதையான என் மனைவி என் முன் தோன்றி “இவை இரண்டும் உன் சகோதரர்கள். அவர்கள் செய்த தவறுக்கு தண்டனையாக பத்து வருட காலம் இவர்கள் நாயாக இருப்பார்கள். அதன் பின் நீ என்னைத் தேடிவா” என்று தான் இருக்குமிடத்தையும் சொல்லி மறைந்தாள்.

இது நடந்து பத்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. எனவே நாய்களை அழைத்துக் கொண்டு என் மனைவியைத் தேடிச் செல்கிறேன்” என்று தன் கதையை முடித்தார் இரண்டாவது முதியவர்.

கதையைக் கேட்டுக் கொண்டிருந்த பூதம் வியாபாரியின் தண்டனையில் இரண்டில் ஒரு பாகத்தைக் குறைத்தது.

2012/12/7 Ramesh Murugan <rames...@gmail.com>
வில்லன் புண்ணியத்துல ஒரு கதை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பலர் இந்த கதைகளை படிச்சிருக்கலாம். படிக்காதவங்க இதை தவறவிடக்கூடாதேங்குறதுக்காக இங்க சுட்டு போடுறேன்.

நன்றி: http://www.eegarai.net
 




ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Dec 7, 2012, 12:20:14 PM12/7/12
to பண்புடன்
இதோட இங்லிஷ் வெர்ஷன் வாங்குனேன். படிக்க முடியல. அவ்ளோ கஸ்டமா இருந்துச்சு இங்லீஷு


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/12/7 Ramesh Murugan <rames...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Ramesh Murugan

unread,
Dec 7, 2012, 12:45:58 PM12/7/12
to பண்புடன், நட்புடன்
“ஓ! மாய பூதமே, என் கதையைக் கேள் “ என்று மூன்றாம் முதியவர் தன் கதையைத் தொடர்ந்தார். அவருடன் ஒரு கழுதை நின்று கொண்டிருந்தது.

“ஐயா மாண்பு மிகு பூதமே, இந்தக் கழுதை என்னுடைய மனைவி. எங்கள் கதையைக் கேள். உனக்கு அது மகிழ்ச்சி அளித்தால் இந்த வணிகனுடைய தண்டனையில் மீதியை எனக்குக் கொடுத்துவிடு” என்று சொல்லித் தன் கதையைத் சொல்ல ஆரம்பித்தார்.

“நானும் இவர்களைப் போல வணிகன் தான். வியாபாரம் பொருட்டு நான் ஒரு வருடம் என் ஊரை விட்டுச் சென்று விட்டேன். நான் சென்றிருந்த வேளையில் என் மனைவி என்னை மறந்து என் அடிமையைத் தன் கணவனாக்கிக் கொண்டிருந்தாள். அது எனக்குத் தெரியாமல் மிகவும் ஆவலாக நான் வீடு திரும்பினேன். என்னைக் கண்டு கோபம் கொண்ட என் மனைவி என் மேல் நீர் தெளித்து என்னைத் தன் மந்திர சக்தியால் நாயாக மாற்றிவிட்டாள். அவளை ஒன்றும் செய்ய முடியாத நான் துக்கத்தோடு அலைந்து திரிந்தேன்.

அப்படி அலைந்து திரிந்த ஒரு நாள் நான் ஒரு கசாப்புக் கடையின் முன் வந்தேன். மிகவும் பசியோடு இருந்த நான் அங்கிருந்த எலும்புகளைத் தின்றேன். என்னைக் கண்டு பரிதாபப்பட்ட அந்தக் கசாப்புக் கடைக்காரன் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். வீட்டில் இருந்த அவருடைய மகள் என்னைக் கண்டதும் தன் முகத்தை மூடிக் கொண்டாள்.

தன் தந்தையைப் பார்த்து அவள், 'அப்பா நம் வீட்டிற்கு நீங்கள் ஒரு அறிமுகமில்லாத ஆணை அழைத்து வந்திருக்கிறீர்களே' என்று கோபப்பட்டாள். ஒன்றும் புரியாத அவள் தந்தையோ, 'ஆணா? இங்கே என்னைத் தவிர எந்த ஒரு ஆணும் இல்லையே' என்றார்.

உடனே அந்தப் பெண் என்னைக் காட்டி, 'நீங்கள் கொண்டு வந்திருக்கும் இந்த நாய் தன் மனைவியினால் நாயாக மாற்றப்பட்ட ஒரு ஆண்' என்று சொல்லி என் மேல் தண்ணீர் தெளித்து என்னை மீண்டும் மனிதனாக மாற்றினாள். மீண்டும் மனிதனான நான் அந்தப் பெண்ணின் கையை நன்றியோடு முத்தமிட்டு என் மனைவியைத் தண்டிக்கும் வழியைக் கேட்டேன்.

அவள் என்னிடம் ஒரு குடுவை நிறைய மந்திர நீரைக் கொடுத்து, 'நீ உன் மனைவியின் மீது அவள் தூங்கும் போது இதைத் தெளிக்க வேண்டும். அப்போது உன் மனைவி என்ன உருவமாக மாற வேண்டும் என்று எண்ணுகிறாயோ அவள் அப்படி மாறி விடுவாள்' என்றாள். நானும் அந்தக் குடுவையை எடுத்துக் கொண்டு திரும்பினேன்.

என் மனைவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, 'நீ கழுதையாக மாறுவாயாக' என்று சொல்லி மந்திர நீரை அவள் மேல் தெளித்தேன். அவளும் கழுதையாக மாறிவிட்டாள்." என்று சொல்லித் தன் கதையை நிறுத்தினார்.

கதையைக் கேட்ட மாய பூதம் முதியவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்த கழுதையை நோக்கி, 'இது உண்மையா?' என்று கேட்டது. அதற்குக் கழுதையும் தன் தலையை ஆட்டியது.

மூன்றாவது முதியவரின் கதையைக் கேட்ட மாய பூதம் வணிகனின் தண்டனையின் கடைசி பாகத்தை அந்த முதியவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றது. வணிகன் மிக மகிழ்ச்சியாக முதியவர்களுக்கு நன்றி கூறித் தன் வீடு நோக்கிப் பயணப்பட்டான். தன் கதையைச் சொல்லி நிறுத்தினாள் ஷஹரஜாத்.

அவளுடைய தங்கை அவளைப் பார்த்து, “அக்கா, நீ என்ன அருமையான கதையைச் சொன்னாய். மிகவும் நன்றாக இருந்தது” என்று சொன்னாள்.

உடனே ஷஹரஜாத், “தங்கையே, எனக்கு இதைவிட சுவையான ஒரு மீனவன் கதை தெரியும். ஆனால் என்ன, இப்போதோ பொழுது புலர்ந்துவிட்டது. நான் மரணம் அடையும் நேரமிது” என்று சொல்லி நிறுத்தினாள்.

கதையைக் கேட்டுக் கொண்டிருந்த பேரரசரும், "ஷஹரஜாத் என்னுடைய அரச வேலைகளை முடித்துக் கொண்டு இரவு வருகிறேன். நீ எனக்கு அந்த மீனவன் கதையை இரவு சொல்" என்று சொல்லித் தன் அரச வேலைகளைக் கவனிக்கச் சென்றார், மூன்றாம் நாள் இரவும் வந்தது.

2012/12/7 Ramesh Murugan <rames...@gmail.com>
வில்லன் புண்ணியத்துல ஒரு கதை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பலர் இந்த கதைகளை படிச்சிருக்கலாம். படிக்காதவங்க இதை தவறவிடக்கூடாதேங்குறதுக்காக இங்க சுட்டு போடுறேன்.

நன்றி: http://www.eegarai.net
 



Ramesh Murugan

unread,
Dec 7, 2012, 12:54:08 PM12/7/12
to panb...@googlegroups.com
தமிழ்ல கிடைக்கலையா?
கதையை சொல்லும் விதம் ரெம்ப முக்கியம்னு நினைக்கிறேன். சமீபத்தில் சமதருமபோதினி, இருள்வெளி, கறுப்பு ஆகிய புத்தகங்களை படிச்சி முடிச்சேன். ஆனா குழுமத்துல பகிர்ந்துக்க முடியல. அந்தளவுக்கு எழுத்தாளர் கோவத்துல புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

கிட்டதட்ட எல்லாரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். ஆனா எதிராளியை கொஞ்சம்கூட நம்பாமை, அவர்களின் கருத்தை காதுகுடுத்து கேட்காமை, கண்டபடி திட்றது போன்ற கோப முடிவுகளால யாரையும் அந்த புத்தகம் சென்றடையலன்னு நினைக்கிறேன்.

மொழிபெயர்ப்பு முக்கியமில்லை. அதை அடுத்தவங்க படிக்க தூண்டும்வகையில் எழுதுறது ரெம்ப முக்கியம்னு நினைக்கிறேன். ஈகரை சிவாவுக்கு இன்னொருக்கா நன்றி.

2012/12/7 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

இதோட இங்லிஷ் வெர்ஷன் வாங்குனேன். படிக்க முடியல. அவ்ளோ கஸ்டமா இருந்துச்சு இங்லீஷு


/

Ramesh Murugan

unread,
Dec 7, 2012, 12:59:35 PM12/7/12
to பண்புடன், நட்புடன்
அந்தப்புரத்தில் தன் கணவரை அணுகிய ஷஹரஜாத், “பேரரசரே, கேளுங்கள். நான் சொல்லப்போகும் இந்தக் கதையில் வரும் மீனவன் மிகவும் ஏழை. அவனுக்கு மனைவியும் மூன்று மகன்களும் இருந்தார்கள். கடலில் மீன் பிடிக்கப் போகும் போது அவனிடம் ஒரு பழக்கம் இருந்தது. கடலுக்குள் ஒரு நாளைக்கு நான்கு முறை தான் வலையை வீசுவான். அதில் கிடைக்கும் மீன்களை விற்றே அவன் வாழ்க்கை நடத்தி வந்தான்.

அப்படி இருக்கையில் ஒரு நாள் அவன் கடலுக்கு சென்று மிக ஆழமான இடத்தில் வலையை வீசிவிட்டுக் காத்திருந்தான். சிறிது நேரம் கழித்து அவன் வலையை நீரிலிருந்து இழுக்கும் போது அது மிகவும் கனமாகவும் இழுக்க முடியாமலும் இருந்தது. தனக்கு ஏதோ நிறைய மீன்கள் கிடைத்ததாக நினைத்த மீனவன் மிகவும் மகிழ்ச்சியுடன் வலையை இழுத்தான். ஆனால் வலையில் மீன்கள் இல்லை. வலைக்குள் ஒரு இறந்த கழுதைதான் இருந்தது.

தன் தலைவிதியை நொந்தபடி மீனவன் மீண்டும் தன் வலையை கடலுக்குள் வீசினான். இரண்டாவது முறை அவனுக்கு உடைந்த மண்பாண்டம் கிடைத்தது. அல்லா ஏன் என்னை இன்று இப்படி சோதிக்கிறார் என்று மனம் வெதும்பிய மீனவன் கடலின் இன்னும் ஆழமான பகுதிக்குச் சென்று தன் வலையை வீசினான். ஆனால் மூன்றாவது முறையும் அவனுக்கு மீன்கள் சிக்கவில்லை.

மிகுந்த வருத்ததுடன் கடைசி முறையாக வலையை வீசிய மீனவன் வலையை அதிக நேரம் கடலுக்குள் இருக்கும் படி வைத்தான். ஆனாலும் கடவுள் அருள் அன்று அவன் பக்கம் இல்லை. அவன் வலையை இழுக்கும் போது முன்பு போல வலை கனமாக இருந்தாலும் அதில் மீன்கள் இல்லை. அதற்குள்ளே ஒரு பெரிய வெண்கல கலசம் இருந்தது. அது இரும்பினால் அழுத்தமாக மூடப்பட்டு அரக்கினால் முத்திரையிடப் பட்டிருந்தது.

எனக்கு இன்று மீன் கிடைக்கக் கூடாது என்று அல்லா நினைத்தால் நான் என்ன செய்ய முடியும் என்று வருந்திய மீனவன் இந்த வெண்கல கலசத்தை விற்றுத்தான் இன்று சாப்பாட்டிற்கு வழி செய்ய வேண்டும் என்று எண்ணியபடி கலசத்தைக் குலுக்கினான். அந்தக் கலசம் மிகக் கனமாக இருந்தது. எனக்கு இன்று மீன் கிடைக்காவிட்டாலும் என் குடும்பத்தின் இன்றைய சாப்பாட்டிற்கு அல்லா வழி செய்துவிட்டார். அந்தக் கலசத்தையும் அதன் உள் இருக்கும் பொருட்களையும் அன்று சந்தையில் விற்றால் தனக்கு நல்ல பணம் கிடைக்கும் என்று எண்ணியபடி கலசத்தின் மூடியைத் திறந்தான். அவன் உள்ளே பார்த்தபோது அந்தக் கலசத்தில் ஒன்றுமே இல்லை.

ஆச்சரியத்துடன் கலசத்தைத் தலைகீழாகக் கவிழ்த்துக் குலுக்கினான்.. அவன் அதைத் திறந்தவுடன் வெண்புகை கிளம்பியது. அந்தப் புகையிலிருந்து கோபமான ஒரு மாய பூதம் வெளிப்பட்டது. அது பார்ப்பதற்கே மிக பயங்கரமாக இருந்தது. மீனவனைப் பார்த்த அந்த பூதம்’நான் உன்னைக் கொல்லப் போகிறேன்’ என்று உறுமிய படி அவனைத் தூக்கியது.

பயந்து போன மீனவன், ’ஐயா பூதமே நான் உங்களை விடுதலை செய்து இருக்கிறேன் நீங்கள் என்னைக் கொல்வேன் என்று சொல்வது நியாயமா’ என்றுக் கேட்டான்.

‘நீ என்னை விடுதலை செய்ததினாலேயே உனக்கு ஒரே ஒரு வரம் அளிக்கிறேன். அதன் பின் நான் உன்னைக் கொல்லத்தான் வேண்டும்’ என்று மீனவனை மிரட்டியது பூதம்.

‘ஆனால் நான் உனக்கு எந்தத் தீமையும் செய்யவில்லையே’ என்றான் மீனவன்.

‘அது அப்படித்தான். என் கதையைக் கேள். அப்புறம் நான் சொல்வது உனக்குப் புரியும்’ என்று சொல்லிய பூதம் தன் கதையைச் சொல்லத் தொடங்கியது.

இங்கு தன் கதையை நிறுத்தினாள். பொழுது புலர்ந்து விட்டது. அவள் கதையை முடிப்பதற்குப் பேரரசர் இன்னும் ஒரு நாள் அவகாசம் கொடுத்தார்.

2012/12/7 Ramesh Murugan <rames...@gmail.com>

வில்லன் புண்ணியத்துல ஒரு கதை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பலர் இந்த கதைகளை படிச்சிருக்கலாம். படிக்காதவங்க இதை தவறவிடக்கூடாதேங்குறதுக்காக இங்க சுட்டு போடுறேன்.

நன்றி: http://www.eegarai.net
 

Ramesh Murugan

unread,
Dec 8, 2012, 1:38:16 PM12/8/12
to பண்புடன், நட்புடன்
ஷஹரஜாதின் கதையில் இருந்த பூதம் தன் கதையை மீனவனிடம் சொல்லத் தொடங்கியது.

“நான் மாய பூதங்களின் ராஜாவிற்கு எதிராக நடந்து கொண்டேன். என்னைத் தண்டிப்பதற்காக, என்னை இந்தக் கலசத்தில் அடைத்து, இரும்பு மூடியால் மூடினான். இந்த இரும்பு மூடி மிக மந்திர சக்தி வாய்ந்ததால், என்னால் வெளியே வர முடியவில்லை. அது மட்டும் போதாதென்று எண்ணிய எங்கள் அரசன், என்னைக் கடலில் வீசி விட்டான்.

கடலில் விழுந்த நான் ஒரு உறுதி பூண்டேன். முதல் நூறு ஆண்டுகளுக்குள்ளாக என்னை விடுவிப்பவனை அவன் இறந்த பின்னும் செல்வம் இருக்கும்படி செல்வந்தனாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் முதல் நூறு வருடம் யாருமே வரவில்லை. இரண்டாவது நூற்றாண்டில் என்னை விடுவிப்பவருக்கு உலகத்தில் உள்ள எல்லாப் பொக்கிஷங்களையும் வாரிக் கொடுப்பேன் என்று உறுதி பூண்டேன். ஆனால் யாரும் வரவில்லை. அதன்பின் என்னை விடுவிப்பவரை ஒரு தேசத்தின் பேரரசராக்குவேன் என்று உறுதி பூண்டேன். ஆனால் யாரும் என்னை விடுவிக்கவில்லை. அதனால் நான் மிகவும் கோபம் கொண்டேன். என்னை விடுவிப்பவரை நான் கொல்வதுதான் சரி என்று எண்ணிக் கொண்டேன். நீ என்னை விடுவித்து விட்டாய். அதனால் உன்னைக் கொல்வது தவிர வேறு வழியில்லை” என்று சொல்லி நிறுத்தியது பூதம்.

மீனவன் யோசித்தான். இந்த பூதத்திடமிருந்து தப்ப வேண்டுமானால் ஏதாவாது தந்திரம் செய்துதான் தப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். எனவே பூதத்தைப் பார்த்து, “ஏ பூதமே! நீ சொல்லும் கதையை, நம்பவே முடியவில்லை. இவ்வளவு பெரிய உருவம் கொண்ட நீ, எப்படி இந்தச் சின்ன கலசத்தில் இத்தனைக் காலம் இருந்திருப்பாய்?’ என்று அப்பாவியாய் சொன்னான்.

கோபமுற்ற பூதம், “என்னையா நம்ப மறுக்கிறாய், முட்டாளே!” என்று சீறியது. மேலும், ‘இதோ பார்!’ என்று சொல்லித் தன் உருவத்தைப் புகை வடிவமாக்கிக் கொண்டு கலசத்திற்குள் நுழைந்தது. வினாடி தாமதியாத மீனவன் மீண்டும் அந்த வெண்கல கலசத்தை இரும்பு மூடி கொண்டு மூடினான். கலசத்திற்குள் இருந்து பூதம் தப்பிக்க முயன்றது. இரும்பு மூடியின் மந்திர சக்தியால் அதனால் கலசத்திலிருந்து வெளியே வர முடியவில்லை.

கலசத்திலிருந்த பூதத்தைப் பார்த்து மீனவன் சொன்னான், “ ஏ பூதமே!, நான் உன்னைக் கடலில் வீசப் போகிறேன். அது மட்டுமல்ல இங்கேயே வீடு கட்டி இருந்து இங்கு வரும் மீனவர்களுக்கு உன்னைப் பற்றி எச்சரித்து அனுப்பி விடுவேன். உன்னால் இனி, உதவி செய்பவர்களுக்கு துரோகம் செய்ய முடியாது” என்றான்.

தான் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்த பூதம், “என்னை விட்டு விடு, நான் உனக்கு கடமைப்பட்டு இருக்கிறேன். நீ எது கேட்டாலும் செய்வேன்” என்று சொல்லியது. உடனே மீனவன், “ஏ பூதமே! நான் உன்னை நம்பினால் என்னுடைய கதையும் கிரேக்க மன்னனுக்கும் அவனுடைய மருத்துவனுக்கும் இடையே நடந்த கதையாய் ஆகி விடும்” என்று சொல்லித் தன் கதையைச் சொல்லத் தொடங்கினான்.

2012/12/7 Ramesh Murugan <rames...@gmail.com>
வில்லன் புண்ணியத்துல ஒரு கதை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பலர் இந்த கதைகளை படிச்சிருக்கலாம். படிக்காதவங்க இதை தவறவிடக்கூடாதேங்குறதுக்காக இங்க சுட்டு போடுறேன்.


நன்றி: http://www.eegarai.net
 


Arabian Nights - كتاب ألف ليلة وليلة - அரேபியன் இரவுகள்

Ramesh Murugan

unread,
Dec 8, 2012, 1:38:57 PM12/8/12
to பண்புடன், நட்புடன்
பெர்ஷிய நாட்டில் யூனான் என்ற கிரேக்க அரசர் இருந்தார். புகழ் பெற்ற அந்த அரசர் அதிகமான செல்வங்களையும். பெரிய படைகளையும் கொண்டிருந்தார். ஆனால் அவர் தொழு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். எந்தவித சிகிச்சைகளாலும் அவரைக் குணப்படுத்த முடியவில்லை. எத்தனையோ மருந்துகளைக் குடித்தாலும் மூலிகைப் பொடிகளை உட்கொண்டாலும் அவரது உடல் நிலையில் எந்த வித மாற்றமில்லை. எத்தனையோ மருந்து களிம்புகளைத் தடவியும் பயன் இல்லை. தனது தொழுநோயால் இந்த அரசர் தினம் அல்லல் பட்டார்.

அரசரது நோயைப் பற்றி கேள்விப்பட்ட எந்த ஒரு மருத்துவராலும் அரசரைக் குணப்படுத்த முடியவில்லை. இந்த வேளையில் அந்த ஊருக்கு ஒரு வயதான மருத்துவர் வந்தார். அவர் மருத்துவத் துறையில் மிகச் சிறந்தவராக இருந்தார். அவர் கிரேக்கம், ரோமம், பெர்ஷிய மொழி, அரேபியம், சிரியன் ஆகிய மொழிகளில் கைதேர்ந்தவராய் இருந்தார். பல நூல்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். பலவகை மருத்துவ சித்தாந்தந்தங்களிலும், செயல் முறைகளிலும் சிறந்து விளங்கினார். பலவித மூலிகைககளின் குணங்களைப் பற்றியும் அறிந்திருந்தார்.

அவர் நகரத்திற்கு வந்த ஓரிரண்டு நாட்களிலேயே அரசருடைய வியாதியைப் பற்றிக் கேள்விப்பட்டார். உடனே அரசவைக்குத் தயாராகிச் சென்றார்.

அரசவைக்குச் சென்ற மருத்துவர் மண்டியிட்டு அரசரை வணங்கினார். பின் அரசரை நோக்கி “அரசே, உங்களுடைய நோயைப் பற்றிய செய்தியை நான் கேள்விப்பட்டேன். அதை எந்த வித மருந்துகளும் இல்லாமல் என்னால் குணப்படுத்த முடியும்” என்றார். இதைக் கேட்ட அரசர் மிகவும் வியப்படைந்தார்.

“ஐயா மருத்துவரே, நீங்கள் சொல்வது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல மருந்துகள் எதுவும் இல்லாமல் என்னைக் குணமாக்கிவிட்டால் உங்களுடைய மூன்று தலை முறைகளுக்குக் குறையாத செலவத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன் ஆனால் நீங்கள் சொவது நிஜமா? உங்களால் உணமையாக என்னைக் குணப்படுத்த முடியுமா?” என்று கேட்டார்.

உடனே மருத்துவர்,"ஐயா நான் சொல்வது படி நீங்கள் செய்தால் எந்த வித மருந்துகளையும் குடிக்கத் தேவையில்லை. உங்கள் உடலிலும் எந்தவித களிம்புகளும் பூசிக் கொள்ள வேண்டாம்," என்று சொன்னார்.

"அப்படியானால் சிகிச்சையை எப்போது ஆரம்பிக்கலாம்," என்று ஆவலாக அரசர் கேட்டார்.

அதற்கு மருத்துவர், “நாளையே சிகிச்சையை ஆரம்பித்துவிடலாம்,” என்று சொல்லி அரசரிடம் விடை பெற்றுச் சென்றார்.

மருத்துவர் அந்த நகரத்திலேயே ஒரு வீடு அமர்த்தி தன்னுடைய சிகிச்சைக்குத் தேவையான வேலையை ஆரம்பித்தார். முதலில் ஒரு உள்ளீடற்ற காலியான கைத்தடியை உருவாக்கினார். அதற்குள் அரசருக்குத் தேவையான மருந்துகளையும் மூலிகைகளையும் உள்ளே வைத்து அழகிய வேலைப்பாடுள்ள கைப்பிடியால் மூடினார். அரசருக்கு ஒரு அழகான கைத்தடி தயாரானது. அதை எடுத்துக் கொண்டு அரசரைக் காணச்சென்றார்.

“அரசே, நீங்கள் இந்தக் கைத்தடியைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்களுடன் போலோ பந்தாட்டத்தை குதிரையில் ஏறி நன்றாக ஆடுங்கள். உங்கள் கைச்சூட்டினால் இந்தக் கைத்தடி சூடாகும். அதன் பின் உங்களுக்கு நன்றாக வியர்க்கத் தொடங்கும். அப்படி உங்கள் உடல் முழுவதும் வியர்வை ஆறாய்ப் பெருகும் வரை விளையாடுங்கள். அதன் பின் நல்ல தைலங்கள் நிறைந்த நீரில் குளித்து இரவு முழுவதும் ஓய்வெடுங்கள். நீங்கள் இப்படிச் செய்தாலே உங்கள் நோய் உங்களை விட்டு ஓடிவிடும்,” என்றுக் கூறினார்.

அந்த கிரேக்க அரசரும் அப்படியே செய்தார். அவர் விளையாடும் போது அவர் கை வழியாக கைத்தடியிலிருந்த மருந்து அரசரின் உடலில் புகுந்தது. மருந்து உடலில் வேலை செய்யச் செய்ய அவருக்கு வியர்த்து ஒழுகியது. அதன் பின் மருத்துவர் சொன்னபடி நீராடி இரவில் நல்ல நித்திரை செய்தார். விழித்துப் பார்க்கும் போது அவரது உடலில் தொழு நோய்க்கான எந்தவித அறிகுறிகளும் இல்லை. அவரும் புத்துணர்ச்சியோடு இருந்தார். மருத்துவரின் சிகிச்சை நல்ல பலனை அளித்து இருந்தது.

மனம் மகிழந்த அரசர் மருத்துவருக்கு மிக விலை உயர்ந்த பரிசுகளைக் கொடுத்து தன்னுடைய இருக்கைக்கு அருகிலேயே அமர்த்திக் கொண்டார். அது மட்டுமல்லாமல் மருத்துவருக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து அவருக்கு தினம் ஆயிரம் பொற்காசுகள் கொடுக்கும் படி ஆணையிட்டார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கிரேக்க அரசவையின் மந்திரி அரசரைத் தனிமையில் சந்தித்தார். மந்திரி அரசரை எச்சரிக்கும் விதத்தில் “அரசே, இந்த மருத்துவர் யார் என்று தெரியாமல் இவர் மேல் இத்தனை நம்பிக்கை வைப்பது தவறு இது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்” என்று கூறினார்.

மந்திரி சொன்னதைக் கேட்ட அரசர், “மந்திரியே, நீர் மருத்துவரின் மீது மிகுந்த பொறாமை கொண்டு இருக்கிறீர் என்று தெரிகிறது. இல்லையென்றால் நீர் இப்படி பேச மாட்டீர். என்னை இந்த மருத்துவர் கொல்ல வேண்டுமென்றால் என் நோயைக் குணப்படுத்தத் தேவையேயில்லையே” என்றவர் தொடர்ந்து, “சிந்துபாத் அரசரின் கதையில் வரும் மந்திரியின் வார்த்தைகள் எனக்கு நன்கு நினைவு இருக்கிறது,” என்று சொல்லிப் புன்னகைத்தார் கிரேக்க அரசர்.

உடனே, “அரசே, அந்த கதையை எனக்குச் சொல்ல வேண்டும்” என்று கிரேக்க மந்திரி தன் அரசரை வேண்டினார். அரசரும் தன் கதையைச் சொல்லத் தொடங்கினார்

கதையை இந்த இடத்தில் நிறுத்தினாள் ஷஹரஜாத். உடனே அவள் தங்கை, “அக்கா, உன் கதை எவ்வளவு சுவாரசியமானதாக இருக்கிறது. கேட்பதற்கே இன்பமாக இருக்கிறது” என்றாள்.

“தங்கையே, இதை விட சுவாரஸியமான கதைகள் இன்னும் என்னிடம் இருக்கின்றன. வாய்ப்புக் கிடைத்தால் நாளை சொல்வேன்” என்றாள் ஷஹரஜாத்.

அவளின் கதைகளைக் கேட்கும் ஆவலில் அவளது தண்டனையைத் தள்ளிப் போட்டார் அரசர்.

2012/12/7 Ramesh Murugan <rames...@gmail.com>
வில்லன் புண்ணியத்துல ஒரு கதை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பலர் இந்த கதைகளை படிச்சிருக்கலாம். படிக்காதவங்க இதை தவறவிடக்கூடாதேங்குறதுக்காக இங்க சுட்டு போடுறேன்.

நன்றி: http://www.eegarai.net
 



Ramesh Murugan

unread,
Dec 8, 2012, 1:39:33 PM12/8/12
to பண்புடன், நட்புடன்
ஷஹரஜாதின் தங்கை, “அக்கா உனக்குத் தூக்கம் வரவில்லையானால் கதையைத் தொடர்கிறாயா?” என்று கேட்டாள். ஷஹரஜாதும் கதையைத் தொடர்ந்தாள்.

மீனவன் சொல்ல பூதம் கதை கேட்டுக் கொண்டிருந்தது. கிரேக்க மன்னன் தன் மந்திரியிடம், “மந்திரியே, நான் உங்கள் சொல் கேட்டு இந்த மருத்துவரைக் கொன்றால் சிந்துபாத் அரசர் தனது செல்லப் பறவையான வல்லூறைக் கொன்ற பின் வருந்தியது போல வருந்த வேண்டியிருக்கும்” என்றார்.
அதற்கு அந்த மந்திரி, “அரசே, எனக்கு விவரமாகச் சொல்லுங்கள்” என்றார்.

“உலகம் ஆளும் சிந்துபாத் அரசர் தன்னுடைய செல்லப் பிராணியாக ஒரு வல்லூறை பிரியமாக வளர்த்து வந்தார். அந்தப் பறவை எப்போதும் அவர் கையிலேயே இருக்கும். அவர் எங்கு சென்றாலும் அந்தப் பறவை அவருடனே இருக்கும்.அதன் கழுத்தில் ஒரு சின்னக் குவளை கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். அதில் தான் அரசர் வல்லூறுக்கு நீர் கொடுப்பார்.

ஒரு நாள் அரசர் தன் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றார். காட்டிற்குச் சென்று வலை விரித்துக் காத்திருந்தார். அப்போது அவர்கள் முன்னிலையில் ஒரு மான் துள்ளிக் கொண்டு வந்தது. அதைப் பார்த்த அரசர், “வீரர்களே, எவன் ஒருவன் இந்த மானைத் தன் தலையைத் தாண்டி குதிக்க அனுமதிக்கிறானோ அவனுக்கு மரணம்” என்று அறிவித்தார். துள்ளி வந்த மான் அரசரின் முன் மண்டியிட்டு அவரை வணங்குவது போல தலை தாழ்த்தியது. அதைக் கண்டு குதிரை மேல் அமர்ந்திருந்த சிந்துபாத் அரசரும் தனது வில்லைத் தாழ்த்தி அந்த மானுக்கு பதில் வணக்கம் செய்தார். மறுவினாடி அந்த மான் அரசரின் தலையைத் தாண்டிக் குதித்துச் சென்றது.

திரும்பித் தன் பரிவாரங்களைப் பார்த்த அரசர் அவர்கள் தன்னைக் காட்டி ஏதோ பேசிக் கொள்வதைக் கண்டார். தன்னுடைய ஆணையைப் பற்றித்தான் பேசிக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்த அரசர், உடனே அந்த மானைத் துரத்தி வேகமாகத் தன் குதிரையைச் செலுத்தினார்.

காட்டினுள் வெகுதூரம் சென்றுவிட்டார். அவருடனேயே அவருடையச் செல்லப் பறவையும் சென்றது. அது அரசருக்கும் மானுக்கும் முன்னால் பறந்து போய் மானின் கண்களைக் குருடாக்கியது. அரசர் தன் அம்பினால் அந்த மானை வீழ்த்தினார்.

அரசரும் குதிரையும் வேட்டையாடிய களைப்பாலும் தாகத்தாலும் மிகவும் தவித்தனர். எங்கு தேடியும் குடிப்பதற்கு நீர் கிடைக்கவில்லை. அப்போது ஒரு மரத்திலிருந்து வெண்ணெய் உருகி வழிவது போல நீர் விழுந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த அரசர், வல்லூறின் கழுத்திலிருந்த குவளையை எடுத்து மரத்திலிருந்து வழியும் நீரைப் பிடித்து தன் செல்லப் பிராணிக்குக் குடிக்கக் கொடுத்தார். ஆனால் நீரை அருந்தாமல் வல்லூறு அதைத் தட்டிவிட்டது. அரசர் அந்த நீரைப் பிடித்துத் தன் குதிரைக்குத் தந்த போதும் வல்லூறு மீண்டும் ஒரு முறை அந்தக் குவளையைத் தட்டி விட்டது. அரசர் தானும் அந்த நீரைக் குடிக்க முயன்றார். வல்லூறு அதையும் தட்டி விட்டது.

கோபம் கொண்ட அரசர் தன் வாளால் அந்தப் பறவையின் சிறகுகளை வெட்டினார். “ஏய் பறவையே, உனக்கு நீர் அருந்த விருப்பமில்லையேல் என்னையும் குதிரையையும் ஏன் தடுக்க வேண்டும்?” என்று கோபப்பட்டார். காயப்பட்டு விழுந்த பறவை தன் தலை அசைவுகளால் மரத்தின் மேலே பார்க்கும்படி அரசரைத் தூண்டியது. அப்படியே தன் தலையை நிமிர்த்திப் பார்த்த அரசர் மரத்தின் மேல் இருந்து விழுந்தது நீர் இல்லை என்பதைப் புரிந்துக் கொண்டார். மரத்தின் மேல் கூட்டமாக இருந்த கட்டுவிரியன் பாம்புகளின் வாயிலிருந்து வழியும் விஷத்தையே தான் நீராகக் கருதிவிட்டதை எண்ணி வருந்தினார். தன்னுடைய கவசங்களினாலேயே தான் விஷம் தன் உடலில் நேரடியாக படவில்லை என்பதையும் உணர்ந்து கொண்டார். தன்னையும் குதிரையையும் காப்பாற்ற வல்லூறு செய்த செயல்களைப் புரிந்து கொள்ளவில்லையே என்று வருத்தப்பட்டார்.யோசனை இல்லாமல் தன் செல்லப் பிராணியைக் காயப்படுத்திவிட்டதை எண்ணி வேதனைப் பட்டார்.

காயப்பட்ட பறவையையும் அடித்து வீழ்த்திய மானையும் எடுத்துக் கொண்டு தன் பாசறைக்கு மன்னர் வந்தார். அவரது மடியிலேயே அவரது செல்லப் பிராணி வல்லூறு இறந்து போனது.

“இது தான் பேரரசர் சிந்துபாதிற்கு நடந்தது. நான் இனியும் நீ சொல்வது போல் செய்தேனானால் எனக்கும் கிளியைக் கொன்ற மனிதனுக்கும் எந்த வேறுபாடும் இருக்காது” என்று மந்திரியிடம் சொன்ன கிரேக்க மன்னன் தன் கதையைத் தொடர்ந்தான்.

2012/12/7 Ramesh Murugan <rames...@gmail.com>
வில்லன் புண்ணியத்துல ஒரு கதை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பலர் இந்த கதைகளை படிச்சிருக்கலாம். படிக்காதவங்க இதை தவறவிடக்கூடாதேங்குறதுக்காக இங்க சுட்டு போடுறேன்.

நன்றி: http://www.eegarai.net
 


காமேஷ்

unread,
Dec 10, 2012, 1:43:57 AM12/10/12
to panb...@googlegroups.com, நட்புடன்
ரமேஷ் முருகன் (அ) ரம் ,

சில கதைகள் சூப்பர்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிக்கிறேன்..
தொடர்ந்து போடவும் ..

--

.........................




2012/12/9 Ramesh Murugan <rames...@gmail.com>

ஜெஹபர் அலி

unread,
Dec 10, 2012, 3:14:35 AM12/10/12
to panb...@googlegroups.com, நட்புடன்
கதையையெல்லாம் ரொம்ப ஆரவத்தோடு படிக்கிறேன்..அதான் எதுவும் பதில் சொல்லலை..ஏன்னா நான் பதில் சொல்லனும்னு வந்தா அங்கே மொக்கையும் சேர்ந்துவருது..நீ தொடர்ந்து பதிவு செய்...

2012/12/10 காமேஷ் <kame...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

என்றும் அன்புடன்

அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)

Ramesh Murugan

unread,
Dec 10, 2012, 7:51:58 AM12/10/12
to nadp...@googlegroups.com, panb...@googlegroups.com
பாலாஜி அண்ணன், ஜெஹஃபர் அண்ணன், காமேஷ் ஜீக்கு நன்றி.

மஞ்சூர் ராசா

unread,
Dec 10, 2012, 7:57:13 AM12/10/12
to panb...@googlegroups.com
கதைகள் அனைத்தும் அருமை.  எடுத்த இடத்தையும் சுட்டவும்.

Ramesh Murugan

unread,
Dec 10, 2012, 7:59:06 AM12/10/12
to panb...@googlegroups.com
ஒவ்வொரு பின்னூட்டத்திலும் தவறாமல் அவரோட இணைய முகவரியை போட்டுக்கிட்டே வர்றேன்.

2012/12/10 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

கதைகள் அனைத்தும் அருமை.  எடுத்த இடத்தையும் சுட்டவும்

மஞ்சூர் ராசா

unread,
Dec 10, 2012, 8:00:37 AM12/10/12
to panb...@googlegroups.com
சரியாக கவனிக்கவில்லை.  நன்றி ரமேஷ் முருகன்.

Ramesh Murugan

unread,
Dec 11, 2012, 1:05:44 PM12/11/12
to பண்புடன், நட்புடன்

“அந்த வணிகன் ஒரு ஊரில் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான்“ என்று அரசர் யூனான் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். தன் வாணிபத்தின் காரணமாக அவன் ஊர் ஊராகச் செல்ல வேண்டியிருந்தது. அவனுக்குத் தன் மனைவியை விட்டுச் செல்ல மனம் இல்லை. அதனால் பல விதமான பறவைகள் விற்கும் சந்தைக்குச் சென்று ஒருக் கிளியை வாங்கி வந்தான்.அந்தக் கிளி பேசுவதில் சிறந்து விளங்கியதோடு, தன் முன்னால் நடக்கும் விஷயங்களையும் சரியான முறையில் சொல்லியது. கிளியைக் கூண்டில் வைத்துத் தன் மனைவியிடம் கொடுத்தான் வணிகன்.

அடுத்த நாள் அவன் வியாபரத்திற்காக வேறு ஊர் செல்ல வேண்டியதிருந்தது. தன் வேலை முடிந்ததும் கிளியிடம் வந்து தான் இல்லாத நேரத்தில் என்ன நடந்தது என்று கேட்டான்.

உடனே கிளி அதன் எஜமானி நடந்து கொண்ட விதத்தைக் கூறியது.அவள் கெட்ட நோக்கத்தோடு செய்த செயல்கள் அனைத்தையும் அந்தக் கிளி சொல்லியது. விஷயங்களைக் கேள்விப்பட்ட வணிகன் தன் மனைவி மேல் கோபப்பட்டான். தன் வீட்டு அடிமைகளே தன் நடத்தை பற்றி எஜமானனிடம் சொல்வதாக மனைவி எண்ணினாள். ஆனால் விஷயங்களைச் சொல்வதுக் கிளி என்று தெரிந்ததும் கிளியைக் கொல்லத் திட்டமிட்டாள்.

வணிகன் ஊரிலில்லாத வேளையில் தன் அடிமைகளிடம் தன் திட்டத்தைச் சொல்லி கட்டளைகள் இட்டாள். அன்று இரவில் கிளியின் கூண்டுக்கடியில் ஒருத்தி கல் அரவையில் மாவைத் திரித்தாள். இன்னொருத்தி கூண்டின் மேலிருந்து நீரை மெல்ல ஊற்றிக் கொண்டே இருந்தாள். இன்னும் ஒரு அடிமை கிளியின் கண்களுக்கு முன்னால் கண்ணாடியை விளக்கு ஒளியைப் பிரதிபலிக்கச் செய்து அப்படியும் இப்படியுமாக ஆட்டினாள். பாதி இரவு வரை இந்த வேலை மிகச் செவ்வனே நடந்தது.

மறுநாள் வணிகன் இரவில் நடந்தது பற்றிக் கிளியைக் கேள்விக் கேட்கையில் கிளி, “எஜமானே இரவு முழுவதும் இடி மின்னலுடன் மழைபெய்து கொண்டே இருந்தது. நான் வேறு எதையும் கவனிக்கவில்லை“ என்றது. அன்று இரவு மழை எதுவும் பெய்யவில்லை என்று அறிந்திருந்த வணிகன் கிளி உளறுகிறது என்று எண்ணினான்.

கிளி உளறுவதைக் கேட்டுத் தன் மனைவி மேல் கோபம் கொண்டோமே என்று வருத்தப்பட்ட வணிகன் ஆத்திரத்தில் அந்தக் கிளியை தரையில் வீசிக் கொன்றான். ஆனால் ஒரு சில நாட்களில் தன் மனைவி கிளியைக் கொல்ல செய்த சதியைத் தெரிந்து கொண்டான். கிளி உண்மையையே பேசியிருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டான். தேவையில்லாமல் ஒரு உயிரைக் கொன்று விட்டோமே என்று மிகவும் வேதனைப் பட்டான்.

தன் கதையைக் கூறிய கிரேக்க மன்னன் மந்திரியிடம் தான் அவர் அறிவுரைப் படி நடக்கப் போவதில்லை என்று கூறினான். அதற்கு மந்திரி, “அரசரின் உயிரைக் காப்பதற்காக இதனைச் செய்வதில் தவறில்லை . இந்த மருத்துவர் நல்லவர் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. என் கணிப்புத் தவறானால் தவறு செய்த மந்திரி சரியான முறையில் தண்டிக்கப் பட்டதைப் போல என்னையும் தண்டியுங்கள்“ என்று சொல்லித் தன் கதையைக் கூற ஆரம்பித்தார்.

2012/12/7 Ramesh Murugan <rames...@gmail.com>

வில்லன் புண்ணியத்துல ஒரு கதை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பலர் இந்த கதைகளை படிச்சிருக்கலாம். படிக்காதவங்க இதை தவறவிடக்கூடாதேங்குறதுக்காக இங்க சுட்டு போடுறேன்.

நன்றி: http://www.eegarai.net
 

Ramesh Murugan

unread,
Dec 11, 2012, 1:06:35 PM12/11/12
to பண்புடன், நட்புடன்
தூர தேசத்தில் ஒரு இளவரசன் இருந்தான். அவனுக்கு வேட்டையாடுதல் என்றால் மிகப் பிரியம். அவன் வேட்டைக்குக் கிளம்பிப் போகும்போதெல்லாம் மன்னன் தன் மந்திரியை மகனுக்குத் துணையாய் அனுப்பி வைப்பார்.

ஒரு நாள் அப்படித்தான் வேட்டைக்குச் சென்ற போது மந்திரி தன் பின்னாலேயே வருகிறார் என்று எண்ணி இளவரசன் அதி வேகமாத் தன் குதிரையைச் செலுத்தினான். வெகு தூரம் போன பின்னால்தான் மந்திரியும் அவருடன் வந்த வேட்டைக் குழுவும் தன்னோடு வரவில்லை என்பது இளவரசனுக்குத் தெரிந்தது.

தான் வந்த வழியை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதும் தெரிந்தது. மெல்ல, தான் திரும்பி வந்த வழியே செல்லலானான். தனியாக அவன் திரும்பிச் செல்லும் வழியில் ஒரு அழகிய பெண் அழுது கொண்டு உட்கார்ந்திருந்ததைப் பார்த்தான். அவளுக்கு உதவ விரும்பி அந்தப் பெண்ணை அணுகினான்.

“பெண்ணே நீ யார்?" என்று அவளைக் கேட்டான்.

"ஐயா, தங்களைப் பார்த்தால் ஒரு நாட்டின் இளவரசர் போலத் தெரிகிறது. நானும் இந்திய நாட்டு இளவரசி தான். நான் எங்கள் வர்த்தகக் கூட்டத்தோடு வந்த போது என்னுடைய குதிரையிலிருந்து மயங்கி விழுந்து விட்டேன் என்று நினைக்கிறேன். என் குதிரையும் ஓடிவிட்டது. நான் இப்போது வழி தெரியாமல் தவிக்கிறேன்" என்றாள்.

அந்தப் பெண் மேல் இரக்கம் கொண்ட இளவரசன் அவளைத் தன் குதிரை மேல் ஏற்றி உட்கார வைத்து வழி நடத்தி வந்தான். சிறிது தொலைவு சென்றதும் ஒரு இடிந்த மண்டபத்தைக் கண்டார்கள். அதைக் கண்ட இளவரசி, “இளவரசே, நான் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும்” என்று சொல்லி அந்த மண்டபத்திற்குள் நுழைந்தாள். இளவரசனும் இளவரசி வெகு நேரம் தூங்கி விடப் போகிறாளே என்று நினைத்து அவளைத் தொடர்ந்தான். உள்ளே சென்றதும் தான் தெரிந்தது, அவள் பெண் அல்ல, மானுடர்களைத் தின்னும் ஒரு அரக்கி என்று.

மண்டபத்திற்குள் நுழைந்த அந்த அரக்கி, “குழந்தைகளே, உங்களுக்கு உணவாக ஒரு பருத்த மனிதனைக் கொண்டு வந்திருக்கிறேன் பாருங்கள்” என்று கூவினாள். அவளுடைய குழந்தைகளும், "அம்மா சீக்கிரம் அந்த மனிதனை எங்களுக்குத் தின்னத் தாருங்கள், எங்களுக்குப் பசிக்கிறது" என்று கத்தினர். இதை எல்லாம் கண்ட இளவரசன் பயந்து போனான். உடனே வெளியே ஓடி வந்து விட்டான். இந்த அரக்கியிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. பயத்தில் அவன் உடல் வெலவெலத்து நடுங்கியது.

நடுங்கிய படி நின்றிருக்கும் இளவரசனைப் பார்த்த பெண் வடிவில் இருந்த அரக்கி, “இளவரசே, ஏன் பயத்தில் நடுங்குகிறீர்கள்?" என்று கேட்டாள். "ஒ, நா.. நான் என் எதிரிக்காக பயப்படுகி§றேன்" என்றான் இளவரசன்.

"இளவரசரான தாங்கள் எதற்குப் பயப்பட வேண்டும்? உங்களுடைய பணப் பையை எதிரிகளிடம் காட்டினாலே எதிரி அதை எடுத்துக் கொண்டு ஓடி விடப் போகிறான்" என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

"ஐயோ! நான் இளவரசனாக இருந்தால் என்ன? என் எதிரி என்னை விட மிக பலசாலி அவனுக்கு எனது பணம் தேவையில்லை. என் உயிர் ஒன்றுதான் அவனது குறிக்கோள்" என்று சொல்லி நடுங்கினான்.

உடனே அந்த இளவரசி, "அப்படியானால் உங்கள் எதிரியை வெல்ல ஒரே வழி தான் இருக்கிறது உங்கள் எதிரியைத் திரும்பிப் போக வைக்கும் படி எல்லாம் வல்ல இறைவனை வேண்டுங்கள்" என்றாள். இளவரசனும் அதை ஒத்துக் கொண்டு, "அல்லாவே, எதிரி என்னிடம் இரக்கப்பட்டு என்னைத் தாக்காமல் திரும்பிப் போகும் படி செய்" என்று உரக்க வேண்டினான். இளவரசனின் பிராத்தனையைப் புரிந்து கொண்ட அரக்கி அவன் மேல் இரக்கம் கொண்டு அவனை விட்டு விட்டாள். அவனுக்கு ஊர் திரும்பும் வழியையும் காட்டிக் கொடுத்தாள்.

"உயிர் தப்பி ஊர் போய் சேர்ந்த இளவரசன் தன் தந்தையிடம் நடந்த விஷயங்களைக் கூறினான். மந்திரி மேல் கோபம் கொண்ட அரசன் அவரைக் கொல்ல ஆணையிட்டான்" என்று கிரேக்க மன்னனிடம் தன் கதையை முடித்தார்

கிரேக்க மந்திரி. மந்திரி சொன்னதை யோசித்தார் கிரேக்க மன்னர், "மந்திரி நீங்கள் சொல்வது நியாயம் தான், இந்த மருத்துவர் என்னைக் கொல்லத் திட்டம் தீட்டினாலும் தீட்டலாம், எனவே அவரை என்ன செய்வது என்று சொல்லுங்கள்" என்று மந்திரியைக் கேட்டார். "மருத்துவரைக் கொல்வது தான் சரி" என்றார் மந்திரி. மந்திரி சொல்வதை ஆமோதித்த அரசர் மருத்துவரை அழைத்து வரச் செய்தார்.

2012/12/7 Ramesh Murugan <rames...@gmail.com>
வில்லன் புண்ணியத்துல ஒரு கதை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பலர் இந்த கதைகளை படிச்சிருக்கலாம். படிக்காதவங்க இதை தவறவிடக்கூடாதேங்குறதுக்காக இங்க சுட்டு போடுறேன்.

நன்றி: http://www.eegarai.net
 


Ramesh Murugan

unread,
Dec 11, 2012, 1:07:31 PM12/11/12
to பண்புடன், நட்புடன்
கிரேக்க அரசன் யூனான் தன் மந்திரியின் யோசனையைக் கேட்டு மனம் மாறினான். தன்னை குணப்படுத்திய மருத்துவரைக் கொல்வதே சரி என்று பட்டது மன்னனுக்கு. தான் கையால் பிடிக்கும் ஒரு கைத்தடியால் தன்னை குணப்படுத்திய ஒருவன் முகர்ந்து பார்க்க ஒரு பொருளைக் கொடுத்து எளிதாகத் தன்னைக் கொல்ல முடியும் என்று நம்பினான். எனவே மந்திரியின் ஆலோசனைப் படி மருத்துவரை அரசவைக்கு வரவழைத்தான்.

அரசரின் எண்ணம் தெரியாத மருத்துவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அரசரைக் காண ஆவலுடன் வந்தார். அரசரைக் கண்டதும் அவரைப் புகழந்து கவிதைகள் பாடினார்.

மருத்துவரைப் பார்த்து அரசன் கேட்டான், "மருத்துவரே, நான் உங்களை அரசவைக்கு அழைத்த காரணம் தெரியுமா?"

"அரசே, நீங்கள் சொன்னால் அதை நான் தெரிந்து கொள்கிறேன்" என்று பணிவாகச் சொன்னார் மருத்துவர்.

"மருத்துவரே, நான் உங்கள் உயிரைக் குடித்து ஒரேடியாக உங்களை அழிக்கவே உங்களை இங்கு அழைத்தேன்" என்று ஆணவமாகச் சொன்னான் அரசன்.

அரசர் சொல்வதைக் கேட்டு மருத்துவர் மலைத்துப் போனார். மிகுந்த ஆச்சரியத்தோடும் திகைப்போடும் அவர் அரசரைப் பார்த்து, "அரசே, நீங்கள் எனக்கு இத்தகைய கொடிய தண்டனை கொடுப்பதற்கு நான் என்ன தவறு செய்தேன்?" என்று கேட்டார்.

அதற்கு அரசன் மருத்துவரை நோக்கி, "மருத்துவரே, நீங்கள் என்னைக் கொல்வதற்காகவே அனுப்பப் பட்ட ஒரு ஒற்றன் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. நான் உங்களைக் கொல்ல வேண்டும், அல்லது உங்களால் கொல்லப் பட வேண்டும். நான் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் நீங்கள் உயிரிழக்க வேண்டும். அதனாலேயே உங்களுக்கு இந்தத் தண்டனை வழங்குகிறேன்." என்று கூறினான்.

அதிகாரத் தோரணையோடு பேசிய அரசனை மருத்துவர் கெஞ்சினார், "அரசே, நீங்கள் என்னிடம் கருணை காட்டினால் அல்லா உங்களுக்குக் கருணை காட்டுவார். நான் உங்களுக்கு நன்மையே செய்திருக்கிறேன். என்னைக் கொல்லாதீர்கள்."

அரசன் மருத்துவரின் கெஞ்சலுக்கு செவிசாய்க்கவில்லை. மருத்துவருக்கு அளிக்கப் பட்ட மரண தண்டனை நியாயமானதே என்று கருதினான். அரசவையில் பல சபையோர் அரசனுக்கு புத்திமதி கூறினார்கள். மருத்துவர் எந்தவிதத் தவறும் செய்யவில்லை என்று அரசனுக்கு உணர்த்த முயன்றார்கள். எதுவும் பலனளிக்கவில்லை. அரசன் மருத்துவரின் உயிரை மாய்ப்பதிலேயே குறியாக இருந்தான்.

அரசனின் மனம் தன்னை தண்டிப்பதில் திடமாக இருப்பதைக் கண்ட மருத்துவர், "அரசே, நீங்கள் என்னை தண்டிக்க வேண்டும் என்று உறுதியாய் இருக்கிறீர்கள். அப்படி என்னைத் தண்டிப்பதானால் அதை நாளை செய்யுங்கள். இன்று என்னுடைய கடமைகளைச் செய்து முடிக்க ஒரு நாள் கொடுங்கள். என்னை எங்கு புதைக்க வேண்டும் என் மருத்துவப் புத்தகங்களை என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய நேரம் கொடுங்கள். என் கடமைகளை முடிக்க எனக்கு இரக்கம் காட்டுங்கள். அது மட்டுமல்ல என்னுடைய நூல்களிலேயே மிக அரியதிலும் அரியதான ஒரு நூல் என்னிடம் இருக்கிறது அதை உங்களுக்கு அன்பளிப்பாக அளிக்க நான் விரும்புகிறேன்." என்றார்.

"அப்படி என்ன அந்தப் புத்தகத்தில் அதிசயம் இருக்கிறது?" என்று வினவினான் அரசன்.

"அரசே, அந்தப் புத்தகத்தில் பல அதிசயங்கள் உள்ளன. அதில் ஒன்று நீங்கள் நாளை என் தலையை வெட்டியவுடன் அந்தப் புத்தகத்தில் ஆறாம் பக்கத்தில் உங்கள் இடப் பக்கத்தில் இருக்கும் மூன்று வரிகளைப் படித்து வெட்டுப்பட்ட என் தலையிடம் அது பற்றிக் கேள்வி கேட்டால் என் தலை உங்களுக்கு பதில் சொல்லும்" என்றார் மருத்துவர்.

"நிஜமாகவே உன்னுடைய வெட்டுப்பட்ட தலை பேசுமா?" என்று ஆச்சரியப்பட்ட அரசர், அந்த அதிசயத்தைத் தன் கண்ணால் பார்க்கப் பாதுகாவலருடன் மருத்துவரை அனுப்பி வைத்தார். மருத்துவரும் தன் கடமைகளையும் அலுவல்களையும் முடித்துக் கொண்டு அரசவைக்கு மறுநாள் வந்தார். அவர் கையில் ஒரு பெரிய பழைய புத்தகம் இருந்தது. ஒரு சிறிய குடுவையில் ஒருவித மருந்துப் பொடியும் கொண்டு வந்திருந்தார். அரசர் முன்னால் வந்து வணங்கிய அவர், அரசர் முன்னால் உட்கார்ந்தார். ஒரு தாம்பாளத்தைக் கொண்டு வரும் படி சொன்னார்.

கொண்டு வந்து கொடுக்கப்பட்ட தாம்பாளாத்தில் தான் கொண்டு வந்திருந்த பொடியைப் போட்டுப் பரப்பி அரசரிடம் புத்தகத்தைக் கொடுத்தார். அரசே, என் தலை வெட்டப்படும் வரை இந்தப் புத்தகத்தைத் திறக்க வேண்டாம். என் தலை வெட்டப் பட்டவுடன் அதை இந்தத் தாம்பாளத்தில் உள்ள பொடியில் அழுத்தி வையுங்கள். இரத்தப் போக்கு நின்றதும் இந்தப் புத்தகத்தைத் திறக்கலாம் என்றார்.

அதன் பின் அரசன் கை அசைக்க மருத்துவரின் தலை வெட்டப்பட்டது. அவர் சொன்னபடியே அவரது தலை தாம்பாளத்தில் வைக்கப்பட்டது. வெட்டப்பட்ட தலையிலிருந்து இரத்தம் வருவது நின்றதும் மருத்துவர் தன் கண்களைத் திறந்து, "அரசே இப்போது புத்தகத்தைத் திறங்கள்" என்றார்.

அரசனும் புத்தகத்தைத் திறந்தான். பக்கங்கள் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக் கொண்டிருந்ததால் தன் எச்சிலை விரல்களால் தொட்டுப் பக்கங்களைப் புரட்டினான் ஆறாவது பக்கத்திற்கு வந்த மன்னர், "மருத்துவரே, இந்தப் பக்கத்தில் ஒன்றுமே எழுதியிருக்கவில்லையே" என்றான். "இன்னும் மூன்று பக்கங்கள் திருப்புங்கள் மன்னா" என்றது வெட்டப்பட்ட மருத்துவரின் தலை.

புத்தகங்களின் பக்க ஓரங்களில் கொடிய விஷம் தடவப்பட்டிருந்ததால் அது இதற்குள்ளாக அரசரின் விரல் மூலம் அவர் உடலில் பரவியது, "கொடிய அரசர்களுக்கு இது தான் கொடிய தண்டனை. நல்லவர்களுக்குத் தீமை விளைவிக்க எண்ணினால் தீமையே விளையும்" என்று மருத்துவரின் தலை சொல்லச் சொல்ல மன்னன் விஷத்தின் வீரியம் தாங்காமல் உருண்டு விழுந்து மாண்டான். அடுத்த வினாடியே மருத்துவரின் உயிரும் போனது என்று பூதத்திற்குத் தன் கதையை முடித்தான் மீனவன்.

"ஏ பூதமே, இந்த மருத்துவருக்கு இரக்கம் காட்டியிருந்தால் இந்த மன்னன் உயிர் வாழ்ந்திருக்கலாம். ஆனால் மருத்துவர் இரக்கம் காட்டியதால் இருவர் உயிரும் பறி போனது" என்றான் மீனவன்.

பொழுது புலரும் வேளை வந்ததால் தன் கதையை நிறுத்தினாள் ஷஹரஜாத். அவள் இன்னொரு கதை சொல்ல அனுமதிப்பாரா மன்னர்?

2012/12/7 Ramesh Murugan <rames...@gmail.com>

வில்லன் புண்ணியத்துல ஒரு கதை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பலர் இந்த கதைகளை படிச்சிருக்கலாம். படிக்காதவங்க இதை தவறவிடக்கூடாதேங்குறதுக்காக இங்க சுட்டு போடுறேன்.

நன்றி: http://www.eegarai.net
 

senshe senshe

unread,
Dec 11, 2012, 11:39:02 PM12/11/12
to panb...@googlegroups.com
சமீபமாய் பண்புடன் குழுமத்தில் நட்சத்திரக் குறியிட்டு, தொடர்ந்து வாசிக்கும் ஒரே இழை.. தொடருங்கள் ரமேஷ் முருகன்.

2012/12/11 Ramesh Murugan <rames...@gmail.com>

Ramesh Murugan

unread,
Dec 12, 2012, 1:25:36 PM12/12/12
to பண்புடன், நட்புடன்
ஆறாவது நாள் இரவும் வந்தது.

தினார்ஜாத் தன் தமக்கையை நோக்கி, "அக்கா, கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும் மீனவன் கதை என்ன ஆயிற்று?" என்று கேட்டாள். மன்னரின் அனுமதியுடன் ஷஹரஜாத் தன் கதையைத் தொடர்ந்தாள்.

ஜாடிக்குள் இருந்த பூதத்தை நோக்கி மீனவன் சொன்னான், "ஏய் பூதமே, நீ என்னை உயிர் வாழ விட்டிருந்தால் இப்போது நீயும் சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருக்கலாம், ஆனால் இப்போது நீயோ முன்போல ஒரு சிறைக் கைதி. நானோ என்றும் போல ஏழை" என்றான்.

அதைக் கேட்ட பூதம், "மீனவனே உன் சொல் சரிதான். நீ என்னை விடுவித்துவிடு, நான் உன்னைப் பெரிய செல்வந்தனாக்குகிறேன்" என்றது. மீனவன் பூதத்தை நம்பவில்லை. ஆனால் பூதம் மீண்டும் மீண்டும் மீனவனைக் கெஞ்சியது. அவனுக்கு அளவில்லாப் பொருள் தருவதாக வாக்களித்தது. மீனவனுக்கும் பணத்தின் தேவை இருந்ததால் பூதத்தை விடுவித்தான்.

பூதம் வெளிவந்தபின்னும் பூதத்தின் மேலிருந்த பயம் மீனவனுக்குப் போகவில்லை. தயக்கத்துடனும் பயத்துடனும் பூதத்தைப் பார்த்தான்.

"என்னுடன் வா" என்ற பூதம் நடக்கத் தொடங்கியது. பயத்துடன் பூதத்தைச் சில அடிகள் தள்ளியே பின் தொடர்ந்தான் மீனவன். பூதம் தன்னைத் தாக்கினால் தப்பியோட வசதியாக இருக்கும் என்று எண்ணினானோ என்னவோ!

இருவரும் கடற்கரையைத் தாண்டி வெகுதூரம் நடந்தார்கள். நகரத்தையும் தாண்டி ஒரு அடர்ந்த காட்டுக்குள் வந்தார்கள். அங்கே ஒரு தெளிவான ஏரியைக் கண்டார்கள்.

அந்த ஏரியின் அதிசயம் என்னவென்றால் அங்கே வெள்ளை, சிகப்பு, நீலம், மஞ்சள் நிறங்களில் மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. அந்த ஏரியின் மையத்திற்குச் சென்ற பூதம் மீனவனையும் உள்ளே அழைத்தது.
தயக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் மீனவன் ஏரியில் இறங்கினான். பூதத்தின் கட்டளைப் படி வலையை வீசினான்.

அவன் வலையில் ஒவ்வொரு நிறத்திலும் ஒவ்வொரு மீன் என நான்கு மீன்கள் சிக்கின.மீனவனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

"மீனவனே, இந்த மீன்களை சுல்தானிடம் கொண்டு கொடு. அவர் இந்த அதிசய மீன்களுக்காக உனக்கு நல்ல பரிசுகளைத் தருவார். நீ தினமும் இங்கு வந்து மீன் பிடிக்கலாம். ஆனால் ஒரு நாளுக்கு ஒரு முறைதான் இந்த ஏரியில் நீ வலை வீசலாம்." என்றது பூதம்.

பூதத்தின் நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டான் மீனவன். மீனவனிடம் விடை பெற்ற பூதம் காலால் பூமியை உதைக்க, பூமி பிளந்து பூதம் பாதாளலோகத்திற்குச் செல்ல வழி ஏற்பட்டது. பூதம் நிபந்தனையை மீண்டும் ஒரு முறை சொல்லி விட்டுத் தன் வழி சென்றது.

தான் பிடித்த அதிசய மீன்களை எடுத்துக் கொண்டு சுல்தானின் அரண்மனைக்குச் சென்றான் மீனவன். அதிசய மீன்களைப் பார்த்த சுல்தான் வியந்து போனார். அவர் இது வரை இது போன்ற மீன்களைப் பார்த்தது இல்லை. சுல்தானிடம் மூன்று நாட்களுக்கு முன்னால் ஒரு புதிய அடிமைப் பெண் வந்திருந்தாள். அவளின் சமையல் திறமையைப் பரிசோதிக்க எண்ணிய சுல்தான் மந்திரியை அழைத்து மீன்களை அந்தப் பெண்ணிடம் கொடுத்துச் சமைக்கும் படி சொன்னார்.

மீன்களைக் கொண்டு வந்த மீனவனுக்குப் பரிசாக ரத்தினங்களைக் கொடுத்து அனுப்பினார். பரிசுகளைப் பெற்ற மீன்வன் ஆனந்தத்தோடு தன் இல்லம் திரும்பினான்.

மந்திரி சுல்தானின் ஆணைப்படி மீன்களை அடிமைப் பெண்ணிடம் தந்து சமைக்கச் சொன்னார். மீன்களை வாங்கிய அடிமைப் பெண் அவைகளைக் கழுவி சமைப்பதற்காகத் தயார் செய்து எண்ணெயில் போட்டுப் பொரிக்கலானாள். மீன்கள் ஒரு புறம் வெந்தவுடன் அவற்றைத் திருப்பிப் போடும் போது சமையலறையிலிருந்த சுவர் திறந்தது. அதிலிருந்து ஒரு அழகிய நங்கை வெளிப்பட்டாள். அழகான அலங்காரத்துடன் இருந்த அவளைக் கண்ட அடிமைப் பெண் மயங்கி விழுந்தாள்.

மீன்களை அணுகிய அந்த நங்கை தன் கையிலிருந்த மந்திரக் கோலை நீட்டி, "மீன்களே, உங்கள் வாக்கைக் காப்பாற்றுவீர்களா?" என்று மூன்று முறை கேட்டாள். மூன்றாம் முறை அவள் கேட்கும் போது வாணலியிலிருந்த மீன்கள் துள்ளிக் குதித்து, "ஆமாம், ஆமாம்" என்று குரல் கொடுத்தன.

"அப்படியானால் நீங்கள் என்னிடம் திரும்பி வாருங்கள் என்று சொல்லி அங்கிருந்து தான் வந்த வழியே மறைந்தாள் அந்த நங்கை. மயக்கம் தெளிந்து எழுந்த அடிமைப் பெண் மீன்கள் கரிக்கட்டையாய்க் கருகி இருப்பதைக் கண்டவுடன் மீண்டும் மயங்கி விழுந்தாள்.

சுல்தானுக்கு மீன் தயாராகிவிட்டதா என்று பார்க்க வந்த மந்திரி நடந்ததைக் கேள்விப் பட்டு மீனவனை அணுகினார். மீனவன் அந்த மாய ஏரிக்குச் சென்று நான்கு மீன்களை மீண்டும் பிடித்து வந்து மந்திரியிடம் கொடுத்தான்.

மீண்டும் ஒரு முறை அந்த அழகிய நங்கை வந்து மீன்களிடம் பேசினாள் என்று சொல்லித் தன் கதையை நிறுத்தினாள் ஷஹரஜாத்.

2012/12/7 Ramesh Murugan <rames...@gmail.com>

வில்லன் புண்ணியத்துல ஒரு கதை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பலர் இந்த கதைகளை படிச்சிருக்கலாம். படிக்காதவங்க இதை தவறவிடக்கூடாதேங்குறதுக்காக இங்க சுட்டு போடுறேன்.

நன்றி: http://www.eegarai.net
 


Arabian Nights - كتاب ألف ليلة وليلة - அரேபியன் இரவுகள்

Ramesh Murugan

unread,
Dec 12, 2012, 1:26:44 PM12/12/12
to பண்புடன், நட்புடன்
அழகிய நங்கை ஒருத்தி வந்து அரசருக்காய் சமைக்கப்பட்ட மீன்களை தினமும் கரிக் கட்டையைப் போல கருகச் செய்து மறைந்து போனாள். இதைத் தன் கண்ணால் கண்ட மந்திரி தான் பார்த்த அதிசயத்தை சுல்தானிடம் போய் சொன்னார்.

வண்ண மீன்களை உண்ண விரும்பிய அரசர் இந்த விநோதத்தைக் கேட்டு வியப்படைந்தார். அதில் ஏதோ மாயம் இருப்பதாக அவருக்குப் பட்டது. என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் அரசரைத் தூண்டியது.

அரசருக்கு மீண்டும் வண்ண மீன்கள் கொண்டு வரும்படி மீனவனுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த மீனவன் கொண்டு வந்த மீன்களை முன் போலவே அடிமைப் பெண் சமைக்க ஆரம்பித்தாள். அரசரும் மந்திரியும் ஒரு திரைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

மீன்கள் பாதி வெந்து கொண்டிருக்கையில் எப்போதும் போலவே ஒரு அழகிய நங்கை மதிலைப் பிளந்து வந்து மீன்களிடம் பேசினாள். அவளுக்குப் பதில் சொன்ன மீன்கள் உடனே கரிக்கட்டையாகிக் கீழே விழுந்தன. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசர் தன் மந்திரியை நோக்கி, “மகா மந்திரி இந்த மீன்களைச் சுற்றி ஏதோ மாயம் இருக்கிறது. அது என்னவென்று அறிய வேண்டும். உடனே அந்த மீனவனை வரவழையுங்கள்” என்று ஆணையிட்டார்.

சுல்தானின் ஆணைப்படி வந்த மீனவனிடம் அவனுக்கு வண்ண மீன்கள் கிடைக்கும் விவரத்தைக் கேட்டார். மீனவனும் தான் கடலில் மீன் பிடிக்கப் போனதையும், மாய பூதம் வந்து அவனுக்கு ஒரு ஏரியைக் காட்டியதையும் சொன்னான். “ஏரி எங்கே இருக்கிறது சொல் அங்கே சென்று நான் இந்த மாய மீன்களைக் காணவேண்டும்" என்றார் சுல்தான்.

மீனவன் வழிகாட்ட சுல்தான் தன் படை பரிவாரங்களுடன் மாய ஏரிக்கு வந்து முகாமிட்டார். தன்னுடன் வந்திருந்தவர்களை நோக்கி நீங்கள் இந்த ஏரிய¨ இதற்கு முன்பு பார்த்ததுண்டா என்று கேட்டார். அங்கிருந்த அனைவரும், “அரசே, இப்படி ஒரு ஏரி இருப்பதை நாங்கள் இதுவரை அறியோம்" என்றனர். இவ்வளவு அழகான சூழ்நிலையில் இருந்த ஒரு தெளிவான ஒரு நீர்நிலையைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை என்றால் அதிசயமாகப் பட்டது சுல்தானுக்கு. அதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் அவருக்கு அதிகமாயிற்று.அதனால் அன்று இரவு மந்திரியை அழைத்தார்.

“மந்திரி இந்த ஏரியில் ஏதோ மர்மம் இருக்கிறது. அதை நான் கண்டுபிடிக்க வேண்டும். அதனால் எனக்கு காய்ச்சல் வந்துவிட்டதாக் கூறுங்கள். யாரையும் இந்தக் கூடாரத்தின் உள்ளே அனுமதிக்காதீர்கள்” என்று சொல்லித் தன் பாசறையை விட்டுக் கிளம்பினார்.

இரவில் அனைவரும் உறங்கிய பிறகுஅரச உடையைக் களைந்து விட்டு தன் வாளை மட்டும் துணையாகக் கொண்டு மலைமீது ஏறினார் சுல்தான். இரண்டு நாட்கள் கழித்து தூரத்தில் ஒரு கரும் புள்ளி தெரிந்தது. அதன் அருகில் சென்றவுடன் தான் அது ஒரு அரண்மனை என்று தெரிந்தது.

கருங்கல்லாலும் இரும்பாலும் கட்டப்பட்டிருந்த அந்த அரண்மனையின் ஒரு சிறு கதவு மட்டும் திறந்திருந்தது. மாய மீன்களின் மர்மம் இந்த அரண்மனைக்குள் நுழைந்தால் தெரிந்து விடும் என்று நினைத்த அரசர் ஆவலுடன் அந்த அரண்மனை வாயிலுக்கு வந்தார்.

“ஐயா, நான் ஒரு வழிப்போக்கன், நான் உள்ளே நுழைய அனுமதி கொடுங்கள்" என்று மிகச் சத்தமாகப் பேசினார். மூன்று முறை இவ்வாறு கூவி அழைத்தும் பதில் இல்லாமல் போகவே அரண்மனைக்குள் நுழைந்தார்.

அரண்மனை பட்டாலும் இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தங்கத்தால் செய்த நான்கு சிங்கங்களின் வாயிலிருந்து தெளிந்த நீர் ஊற்று அரண்மனைக்கு அழகூட்டியது. ஆனால் மனித நடமாட்டமே இல்லாமலிருப்பது ஒரு பெரிய விந்தையாய் இருந்தது சுல்தானுக்கு. அப்படியே சென்று ஒரு படியில் உட்கார்ந்தார். ஒரு சோகமான கீதம் அவர் காதில் விழுந்தது.

மாயமீனின் அதிசயத்தைக் காணவந்த தான் இன்னும் ஏதேதோ அதிசயங்களைப் பார்க்கப் போவது உறுதி என்று எண்ணிய சுல்தான் கீதம் வந்த திசையை நோக்கி நடந்தார்.

அரண்மனையின் ஒரு அறையில் தரையில் உட்கார்ந்து ஒரு இளவரசன் பாடிக் கொண்டிருந்தான். அவன் முகம் சோகமாய் இருந்தது. சுல்தான் அவனை அணுகினார்.

சுல்தானைப் பார்த்த அந்த இளவரசன், “ஐயா நான் உங்களைக் கண்டும் எழுந்து வணங்காததற்கு மன்னிக்கவும் ஏனென்றால் என் கால்கள் கல்லால் ஆனவை” என்று சொல்லி தன் உடைகளை விலக்கிக் காட்டினான்.

பாதி உடல் கல்லும் மீதி உடல் மனிதனுமாய் இருந்த இளவரசனைக் கண்ட சுல்தான் அதிசயப் பட்டார். “இளைஞனே நான் மாய மீன்களைப் பற்றி ஆராய வந்தேன். ஆனால் உன் தோற்றம் அதை விட மர்மமாக இருக்கிறதே உன் கதையைச் சொல்வாயா?" என்று கேட்டார்.

2012/12/7 Ramesh Murugan <rames...@gmail.com>

வில்லன் புண்ணியத்துல ஒரு கதை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பலர் இந்த கதைகளை படிச்சிருக்கலாம். படிக்காதவங்க இதை தவறவிடக்கூடாதேங்குறதுக்காக இங்க சுட்டு போடுறேன்.

நன்றி: http://www.eegarai.net
 


Arabian Nights - كتاب ألف ليلة وليلة - அரேபியன் இரவுகள்

வில்லன்

unread,
Dec 12, 2012, 1:32:24 PM12/12/12
to panb...@googlegroups.com, நட்புடன்
யோவ் எல்லாத்தையும் சேர்த்து பிடிஎப்பா எனக்கு மெயில் பண்ணு...

நன்றி ரமேஷ் முருகன்னு சொல்லி ஆபிஸ் ஆர்டிகல்ஸ் போல்டர்ல சேர்த்திடறேன்

Ramesh Murugan

unread,
Dec 12, 2012, 1:46:08 PM12/12/12
to panb...@googlegroups.com, நட்புடன்
சொல்ப வெயிட் மாடிரி...

கதையோட மீதி தொகுப்பையும் பகிர்ந்துக்கச் சொல்லி ஈகரை சிவாவுக்கு மெயில் அனுப்பிருக்கேன். அவரு பதில் போட்டா, மொத்தமா பி.டி.எஃபா அனுப்புறேன்.

எனக்கு உங்களோட நன்றியெல்லாம் வேணாம். சி.டி தொகுப்பு கேட்டேனே, அதை கலெக்ட் பண்ணி வச்சா போதும். ஏப்ரல்ல வந்து வாங்கிக்கிறேன்.

2012/12/12 வில்லன் <vom...@gmail.com>

யோவ் எல்லாத்தையும் சேர்த்து பிடிஎப்பா எனக்கு மெயில் பண்ணு...

நன்றி ரமேஷ் முருகன்னு சொல்லி ஆபிஸ் ஆர்டிகல்ஸ் போல்டர்ல சேர்த்திடறேன்

Ramesh Murugan

unread,
Dec 17, 2012, 2:23:53 PM12/17/12
to பண்புடன், நட்புடன்
பாதிக் கல்லாகவும் மீதி மனிதனாகவும் அமர்ந்திருந்த இளவரசன் சுல்தானை நோக்கிப் பேசினான், "மதிப்பிற்குரிய சுல்தானே, என் தந்தை பெயர் முகமது. கருப்புத் தீவுகள் என்று அழைக்கபடும் இந்த நாட்டுக்கு அரசர். அந்தத் தீவுகள் தான் இன்று இந்த நான்கு மலைகளாய் மாறி இருக்கின்றன. நான் அவருக்குப் பின் இந்த நாட்டிற்கு அரசனானேன். எனது சொந்தத்திலேயே ஒரு அழகான பெண்ணை என் மனைவியாகக் கொண்டேன். நான் அவளை மிகவும் நேசித்தேன். எங்கள் மண வாழ்வு ஐந்து ஆண்டுகள் அமைதியாய்ப் போய்க் கொண்டிருந்தது.

ஓரு நாள் மதியம் என் மனைவி இல்லாத வேளையில் நான் என் மஞ்சத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் தூங்கிவிட்டதாக எண்ணி எனது பணிப் பெண்கள் இருவர் பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது.

`நம் அரசரை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அவர் நம் அரசியின் மேல் மிகுந்த பிரியம் கொண்டிருக்கிறார். நமது அரசி ஒரு சூனியக்காரி என்று தெரிந்தால் எவ்வளவு மனம் வேதனைப் படுவார்' என்று சொன்னாள். எனக்கு விசிறிக் கொண்டிருந்த ஒரு பணிப்பெண், `அதாவது பரவாயில்லை.இந்த சூனியக்காரி இரவில் குடிக்கக் கொடுக்கும் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அவரை மயங்கச் செய்து விட்டு தன் உண்மைக் கணவனான எத்தியோப்பிய அடிமையிடம் சென்று வருவது தெரிந்தால் இன்னும் எவ்வளவு மனம் வருந்துவார்.' என்று அடுத்த பணிப்பெண் சொல்ல நான் திடுக்கிட்டேன். அவர்கள் சொல்வது உண்மையா என்று தெரிந்து கொள்ள ஆசைப் பட்டேன்.

எனவே இரவு என் மனைவி நான் அருந்த பானம் கொடுத்த போது அதைக் குடிப்பது போல நடித்து என் மார்பிலேயே கொட்டிக் கொண்டேன். நான் தூங்கியதாக எண்ணிக் கொண்டு சென்ற என் மனைவியைப் பின் தொடர்ந்தேன். பணிப்பெண்கள் சொன்ன படியே அவள் என் அடிமை ஒருவனின் மனைவியாய் இருந்தாள்.

இதைக் கண்டு கோபம் கொண்ட நான் என் வாளால் அந்த அடிமையி‎ன் தலையை வெட்டினேன். ஆனால் தலை அவன் உடலிலேயே ஒட்டிக் கொண்டிருந்தது. என்னைக் கண்ட என் மனைவி என் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினாள். தன் கணவனுக்காக துக்கம் கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று கதறினாள். அவள் மேல் இரக்கம் கொண்ட நான் அதற்கு அனுமதித்தேன். அவளும் தன் கணவனுக்கு ஒரு கல்லறை கட்டி அதைச் சுற்றி ஒரு மாளிகை கட்டி அதில் வாழ்ந்து வந்தாள். தனது மந்திர சக்தியால் அந்த அடிமையின் உயிரை நிறுத்தி வைத்திருந்தாள். ஆனால் அவனால் படுத்தபடி பேச மட்டுமே முடிந்தது. இது எனக்குத் தெரியாது. இரண்டு ஆண்டுகள் முடிந்த பின் என் மனைவியை நான் மீண்டும் அணுகினேன். அவள் கணவன் உயிரோடு இருப்பது எனக்கு அப்போது தான் தெரிந்தது.

என் மனைவி என்னைக் கண்டதும் அழுது கெஞ்சினாள். தன் கணவன் உயிர் பிரியும் வரை அவனோடு இருக்க அனுமதி கேட்டாள். அவள் மேல் இரக்கப்பட்டு நானும் அனுமதி அளித்தேன். மூன்றாம் ஆண்டும் வந்து போனது. நான் என் மனைவியை அணுகினேன். அவள் அந்த அடிமையுடன் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு என் மனம் கொதித்தது. என் வாளை உருவிக் கொண்டு கோபமாக அவளை வெட்ட வேகமாகப் போனேன். என்னைப் பார்த்து சிரித்த அந்த சூனியக்காரி தன் கைகளை வீசினாள். நான் அந்த இடத்திலேயே என் இடுப்புக்குக் கீழே கல்லாக அப்படியே விழுந்தேன். அவள் மீண்டும் சில மந்திரங்களை உச்சரித்தாள். என் நாடு முழுவதும் ஏரியாகி விட்டது. என் நாட்டில் வாழ்ந்த மக்கள் நான்கு வண்ண மீன்களாக மாறி விட்டார்கள். குற்றுயிராய்க் கிடந்த தன் கணவனைத் தூக்கிக் கொண்டு அவள் இங்கிருந்து சென்றுவிட்டாள்." என்று சொல்லித் கதையை நிறுத்தினாள் ஷெஹரஜாத்.

பொழுது புலர்ந்தது. அவள் கதையை முடிக்க இரவு வரை காத்திருக்க வேண்டும்


2012/12/7 Ramesh Murugan <rames...@gmail.com>
வில்லன் புண்ணியத்துல ஒரு கதை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பலர் இந்த கதைகளை படிச்சிருக்கலாம். படிக்காதவங்க இதை தவறவிடக்கூடாதேங்குறதுக்காக இங்க சுட்டு போடுறேன்.

நன்றி: http://www.eegarai.net
 




Ramesh Murugan

unread,
Dec 17, 2012, 2:25:51 PM12/17/12
to பண்புடன், நட்புடன்
சூரியன் மறையவும் ஷெகரஜாதின் கதையைக் கேட்க மன்னர் ஷாகிரியார் அந்தப்புரம் நாடி ஆவலாய் வந்தார். பாதி கல்லும் மீதி மனிதனுமாய் இருந்த பாவப்பட்ட இளவரசனின் விதி பற்றி அறிந்து கொள்ள இரவுக்காக அதிக நேரம் காத்திருந்தார்.

"கல்லாய்ப் போன இளவரசன் தன் கதையை அழுது புலம்பிய படி சொல்ல சுல்தான் இரக்கத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார்" என்று ஷெகரஜாத் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

தன் சூனியக்கார மனைவி தன்னையும் தன் நாட்டு மக்களையும் தனது சுயநலத்திற்காக மந்திரத்தால் மாற்றிவிட்டதைச் சொல்லிப் புலம்பிய இளவரசனின் துன்பத்தைத் துடைக்க எண்ணி சுல்தான் அவனை நோக்கி, “இளவரசனே, உன் மனைவி எங்கே இருக்கிறாள்? அவளின் அடிமை எங்கே இருக்கிறான்?” என்று கேட்டார். அதற்கு அந்த இளவரசன் “என் மனைவி பொழுது விடியும் வேளையில் தினமும் வந்து என்னை ஆயிரம் கசையடிகள் கொடுத்துத் துன்புறுத்துகிறாள். அதன் பின் அவளுடைய அடிமை இருக்கும் இடத்திற்குச் சென்று அவனுக்கு உணவு ஊட்டுவாள். பின் அந்த அறையின் வாசலிலேயே உட்கார்ந்து அழுவாள்” என்று கூறினான்.

இளவரசனுக்கு இரவு முழுவதும் ஆறுதல் சொன்ன சுல்தான், பொழுது விடியும் முன் குற்றுயிரும் குலையுயிருமாய் இருக்கும் அடிமையைத் தேடிச் சென்றார். அரண்மனையின் ஒருபகுதியில் அடிமை படுத்திருப்பதைக் கண்ட அவர் தன் வாளால் அவனை ஒரே வெட்டாக வெட்டிக் கொன்றார். அடிமையின் உடைகளைத் தான் அணிந்து கொண்டு பிணத்தை அரண்மனைக் கிணற்றில் தூக்கிப் போட்டார். அதன் பின் அடிமை படுத்திருந்த இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டு ஆடாமல் அசையாமல் சூனியக்காரிக்காகக் காத்திருந்தார். தனது வாளையும் உடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்.

சிறிது நேரத்தில் அந்தச் சூனியக்காரி வந்து இளவரசனைக் கோபத்தோடு அடிக்கும் சத்தமும், இளவரசன் வேதனையால் அழும் சத்தமும் கேட்டது. தன் மூச்சை அடக்கிப் பிணம் போல காத்திருந்தார் சுல்தான்.

வழக்கம் போல தனது அடிமைக் கணவனுக்கு உணவு கொண்டு வந்த சூனியக்காரி சுல்தான் அருகில் வந்ததும், "என் கணவனே நீ எப்போது என்னிடம் முன்பு போல் அன்பாய் இருப்பாய்?" என்று துயரத்தோடு கேட்டாள். அதற்கு சுல்தான் "அன்பே என்னைக் கொஞ்சம் தூக்கி விடு. நாள் முழுவதும் இப்படியே படுத்து இருப்பதால்தான் நான் இன்னும் குணமாகாமலிருக்கிறேன்" என்று முனகினார்.

என்றும் இல்லாமல் இன்று வாய் பேசிய தன் கணவனை நினைத்து மகிழ்ந்த சூனியக்காரி, குதூகலத்துடன் அவர் குடிக்க நீரைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு சுல்தானை அணுகினாள் என்று சொல்லி ஷெகரஜாத் தன் கதையை நிறுத்தினாள்.

"மன்னர் மன்னா இரவு முடிந்து பொழுது புலர்ந்து விட்டது. கதையை நிறுத்த நான் கடமைப்பட்டிருக்கிறேன்" என்றாள்

Ramesh Murugan

unread,
Dec 17, 2012, 2:27:07 PM12/17/12
to பண்புடன், நட்புடன்
"தன்னை நோக்கி ஆவலாய் வரும் சூனியக்காரிக்காக தயாராய்க் காத்திருந்தார் சுல்தான்" என்று சொல்லித் தன் கதையைத் தொடர்ந்தாள் ஷெகரஜாத்.

ஆசையாய் சுல்தானை அணுகினாள் சூனியக்காரி.

அவள் எதிர்பார்க்கும் முன் தன் வாளை அவளுடைய இதயத்தில் பாய்ச்சினார் சுல்தான். அதன்பின் அவளை இரண்டு துண்டுகளாக வெட்டிப் போட்டார்.

சூனியக்காரி இறந்தவுடனேயே இளவரசன் மாய சக்தியிலிருந்து விடுபட்டு புத்துணர்வு பெற்று எழுந்தான். அவனுடைய நாடும் நாட்டு மக்களும் பழைய நிலைக்குத் திரும்பினர்.

சுல்தானை மகிழ்வுடன் கட்டிக் கொண்ட இளவரசன், "என்னையும் என் நாட்டையும் காப்பாறிய சுல்தான் அவர்களே, நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?" என்று கேட்டான்

அதற்கு சுல்தான், "இளவரசே எனது நாடு இங்கிருந்து இரண்டு நாள் பயணத்தில் உள்ளது" என்றார்

அதைக் கேட்ட இளவரசர், "முன்பு மாய சக்தி சூழ்ந்திருந்ததினால் உங்களுக்கு அவ்வாறு தெரிந்தது. ஆனால் உண்மையில் உங்கள் தேசம் இங்கிருந்து ஏறக்குறைய ஒரு ஆண்டு பயணிக்க வேண்டிய தூரத்தில் இருக்கிறது" என்றான்

"எனக்கு உதவி செய்த உங்களை விட்டு என்னால் பிரிந்திருக்கவே முடியாது" என்றும் கூறினான். சுல்தான் இளவரசனுடன் சில நாட்கள் தங்க ஒப்புக் கொண்டார்.

அவர் இளவரசனைத் தன்னுடைய மகனாகவும் வரித்துக் கொண்டார். ஆனால் அவர் மனம் தன்னுடைய தேசத்திற்குச் செல்ல விழைந்தது. எனவே தன்னுடன் இளவரசனையும் கூட்டிக் கொண்டு ஒரு ஆண்டு காலம் பயணம் செய்து தன் தேசத்தை அடைந்தார்.

அவரைக் காணாமல் கலங்கிக் கொண்டிருந்த மந்திரி பிரதானிகளும் மிக மகிழ்ச்சி அடைந்தனர்.

தன் பிரதான மந்திரியை அழைத்த சுல்தான் தான் இளவரசரைக் காப்பாற்றிய கதையைக் கூறி தன்னுடைய மகனாக இளவரசரை அறிவித்து விட்டார்.

பின் வண்ண மீன்களைப் பிடித்துத் தந்த மீனவனை அழைத்து வரச் சொன்னார்.

சுல்தானைக் காண வந்த மீனவன் வண்ண மீன்களின் உண்மைக் கதையைக் கேட்டு அதிசயித்தான். மீனவனுக்குப் பல பரிசுகள் அளித்த சுல்தான், மீனவனுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருப்பதைக் அறிந்து கொண்டார். மீனவனுடைய மகனுக்கு அரசாங்க கருவூலத்தை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொடுத்தார். மீனவனின் ஒரு மகளைத் தான் மணம் முடித்துக் கொண்டு இன்னொரு மகளைத் தன் மகனான இளவரசனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

சாபத்திலிருந்து விடுபட்ட இளவரசனும் தன்னுடைய தந்தையின் உதவியோடு படை பலத்தை அதிகரித்துக் கொண்டு தன் நாடு வந்து சேர்ந்தான்.

தன் நாட்டை அமைதியாகவும் ஆனந்தமாகவும் ஆண்டு வந்தான் என்று கதையை முடித்த ஷெகரஜாத்

"அரசே நான் அடுத்து சொல்ல வரும் கதையைக் கேளுங்கள். அது இந்தக் கதையை விட மிக சுவாரசியமாக இருக்கும்" என்றபடி தன் அடுத்த கதையை ஆரம்பித்தாள்.
Reply all
Reply to author
Forward
0 new messages