சென்னையில் பெரும் ஆங்கிலப் புத்தகக் கடையொன்றில் ஓர் அறிவிப்பைப் பார்த்தேன். அன்று வந்துசேர்ந்த ஆங்கில நூல் ஒன்று 2,000 பிரதிகள் விற்றிருக்கிறது என்று சொன்னது அது. பரபரப்பாக விற்கும் ஒரு தமிழ் நூல் வருடம் 2,000 பிரதிகள்தான் விற்கும். அதில் 1,500 பிரதிகள் நூலகத்துக்கு வாங்கப்படுபவை. தமிழகம் முழுக்க 500 பிரதிகள் வாசகர்களிடம் விற்கப்பட்டால் அது ஒரு சாதனை!
நம் இளைய தலைமுறை ஏராளமாக வாசிக்கிறது. ஆனால், தாய்மொழிகளில் வாசிப்பதில்லை. காரணம், இந்தியாவெங்கும் ஆங்கிலக் கல்வி பரவலாகிவருகிறது. உலகமயச் சூழலில் ஆங்கிலமே வேலை வாய்ப்புக் கல்விக்குரிய மொழி என நிறுவப்பட்டுவிட்டது. அது தெளிவான உண்மையும்கூட. ஆகவே, எதிர்காலத்திலும் ஆங்கிலமே இங்கே கல்வியின் மொழியாக இருக்கும். அதைத் தடுக்கவே முடியாது. வரலாற்றின் போக்கு அது. அதற்கு எதிராகப் பிடிவாதமாக நிலைகொள்வது அடிப்படைவாதம் மட்டுமே.
ஆங்கிலக் கல்வியால் தாய்மொழிக் கல்வி கைவிடப்படுவதைக் கண்டு, இந்திய மாநில அரசுகள் தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்குகின்றன. விளைவாக, குழந்தைகள் இரண்டாவது மொழியாகத் தாய்மொழியை எடுத்து, பள்ளி இறுதிவரை அதைப் படிக்கின்றனர். ஆனால், அது இரண்டாவது மொழியாக இருப்பதாலேயே அதில் அவர்களுக்குக் கவனம் நீடிப்பதில்லை.
பிரெஞ்சு அல்லது சம்ஸ்கிருதத்தை இரண்டாம் மொழியாக எடுத்துப் பயிலும் குழந்தைகள், எப்படி அம்மொழிகளைக் கற்கின்றனவோ அப்படித்தான் இன்று நம் குழந்தைகளும் தாய்மொழியைக் கற்கின்றன. அதாவது, தேர்வுகளில் எளிதாக வெல்வதற்கு மட்டுமே தட்டுத்தடுமாறி வாசிக்கவும் ஓரளவு எழுதவும் கற்கின்றனர். இந்த உண்மையை நாம் மழுப்ப வேண்டியதில்லை.
அவர்கள் சந்திக்கும் சிக்கல் என்ன? இளமையில் இரண்டு மொழிகளின் எழுத்து வடிவங்களைக் கற்றுக்கொள்வதில் இருக்கும் சிரமம்தான் என்று சொல்லலாம். இன்று ஏதேனும் ஒரு துறையில் தகுதியுடையவராக ஆக வேண்டுமென்றால், மிக விரிவான பல்லாண்டு காலக் கல்வி தேவைப்படுகிறது. ஆகவே, கல்விக்கு உதவாமல் வெறுமே மொழியறிவுக்காக மட்டுமே கற்கப்படும் இரண்டாம் மொழியை விட்டுவிடுகிறார்கள்.
மொழிக்கும் எழுத்துருவுக்குமான உறவு என்பது ஒரு மனப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். க என்ற எழுத்தைப் பார்த்ததும் அந்த ஒலி நினைவுக்கு வருவதற்கு நாம் இளமையிலேயே குழந்தைகளைப் பழக்குகிறோம். நமக்கு அது இயல்பான ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், குழந்தைகள் மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றன.
எழுதுவது என்பது இன்னும் சிக்கலானது. சமூகவியல் ஆய்வாளரான மிஷேல் ஃபூக்கோ “எழுத்து என்பது கைகளுக்கு அளிக்கப்படும் கழைக்கூத்தாட்டப் பயிற்சி” என்கிறார். நம் குழந்தைகளுக்கு அதைக் கட்டாயமாக ஆக்கியிருப்பதால் அவர்கள் இளமையில் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் வாழ்க்கையில் அது மிகக் கடினமான ஓர் உழைப்பு. மிருகங்களையும் பறவைகளையும் வித்தைக்காகப் பழக்குவதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு உண்மையில் இல்லை.
இந்நிலையில், இந்தியக் குழந்தை இளமையில் ஒரே சமயம் இரண்டு எழுத்துருக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. இரண்டு மடங்கு உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது. க என்றாலும் ka என்றாலும் ஒரே உச்சரிப்புதான் என அது உணர்ந்து தெளிய நேரமாகிறது. மேலும், எழுத்துகளைக் கற்றுக்கொண்டால் மட்டும் போதாது. இது கல்வி அல்ல, பயிற்சி. தொடர்ந்து நிகழும் பயிற்சியே நம்மிடம் நீடிக்கும். நம் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே எழுதுகின்றன, வாசிக்கின்றன. ஆகவே, இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொண்ட தமிழ் அவர்கள் கைகளுக்கும் கருத்துக்கும் பழக்கமற்றதாக ஆகிவிடுகிறது.
இந்தச் சிக்கலைத் தாண்டுவதற்கான வழிமுறைகளைத்தான் நாம் யோசிக்க வேண்டும். இன்று நானறிந்து தமிழகத்தில் இணையம், ஃபேஸ்புக் போன்றவற்றுக்காகக் கணினியில் தட்டச்சு செய்பவர்கள் அனைவருமே ஆங்கில எழுத்துகளிலேயே தட்டச்சு செய்துகொண்டிருக்கிறார்கள்: அம்மா இங்கே வா வா என்றால், “ammaa ingkee vaa vaa” என்று. ஒரு வாரத்தில் அவர்கள் ஆங்கில எழுத்துகளில் தமிழை எழுதும் பயிற்சியை அடைந்துவிடுகிறார்கள்.
நான் பதின்மூன்றாண்டு காலமாக ஆங்கில எழுத்துகளிலேயே தமிழைத் தட்டச்சுசெய்கிறேன். பேசும் வேகத்தில் எழுத முடியும் என்னால். கண்ணெதிரே தமிழ் தெரிகிறது, என் கைகளில் ஆங்கில எழுத்துருக்கள் ஓடுகின்றன. எந்தச் சிரமமும் இல்லை. ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்ட தமிழை நான் சரளமாக வாசிக்கவும் செய்வேன். ஏன் தமிழை இவ்வாறு ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதக் கூடாது?
பள்ளிகளில் இதைக் கற்பித்தால், குழந்தைகளுக்கு ஒரே ஒரு எழுத்துருவைக் கற்பித்தால் போதும். அவர்கள் தமிழை இன்னும் வேகமாக, இன்னும் சகஜமாக வாசிக்க அது உதவும் அல்லவா? நாம் தமிழைப் பேசிக்கொண்டிருக்கும்வரை தமிழ் நம்முடன் இருக்கும். அதை அனைவரும் சரளமாக வாசிப்பதற்கான வழியை மட்டுமே யோசிக்கிறேன். உடனடியாகக் கேள்விப் படும்போது சற்று அபத்தமான, அதீதமான எண்ணமாக இது தோன்றக்கூடும். ஆனால், எல்லா மாற்றங்களும் முதலில் அப்படித்தான் தோன்றும். அவற்றுக்கு மரபு அளிக்கும் கடுமையான எதிர்ப்பும் முக்கியமானது. அந்த எதிர்ப்பையும் கருத்தில்கொண்டு வெற்றி பெற்று நிகழக்கூடிய மாற்றமே ஆக்க பூர்வமாக இருக்கும். ஆகவே, நாம் இதை விவாதிக்க வேண்டுமென நினைக்கிறேன்.
உடனடியாகச் செய்யக்கூடியதல்ல இது. ஆரம்பப் பள்ளி முதலே ஆங்கில எழுத்துகளில் தமிழைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் அதிகபட்சம் ஒரு வருடத்தில் இதைக் கற்றுக் கொள்ளும். அதற்கேற்ப தொடர்ச்சியாகத் தமிழின் நூல்களை எல்லாம் அந்த எழுத்துருவுக்கு மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இரண்டு எழுத்துருக்களுமே ஒருதலைமுறைக் காலம் புழக்கத்தில் இருக்கலாம். மேலும், இன்றைய தொழில் நுட்பத்தில் எந்த ஓர் எழுத்தையும் ஓர் எழுத்துருவிலிருந்து இன்னொன்றுக்கு எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.
மலாய் போன்ற பல மொழிகள் இன்று ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதப்படு கின்றன. அந்த மக்கள் ஆங்கிலம் கற்பது எளிதாகிறது. மலாய் மொழி வாழவும் செய்கிறது. அதன் எழுத்துருக்களைத் தனியாக எவரும் பயில வேண்டியதில்லை. கொஞ்சம் பேசத் தெரிந்தவர்கள் அதை வாசித்துவிடலாம். ஆங்கில எழுத்துருக்கள் மலாய் மொழியை வளப்படுத்தவே செய்கின்றன. இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் ஆங்கில எழுத்துருக்களில் எழுதப்பட்டால் பெரும்பாலான மொழிகளை மிகச் சில நாட்களிலேயே வாசித்துப் புரிந்துகொள்ள முடியும். தென்னக மொழிகளைப் பிரிப்பது அவற்றின் வேறுபட்ட எழுத்துருக்கள்தான். மற்றபடி அவை 70% ஒன்றே.
எழுத்துருக்கள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல. தமிழ் ஆரம்ப காலத்தில் பிராமி எழுத்துருவில்தான் எழுதப்பட்டன. அந்த எழுத்துகளில் இருந்து வட்டெழுத்து உருவாகிவந்தது. அந்த எழுத்துரு கைவிடப்பட்டு, இன்றைய எழுத்துரு வந்திருக்கிறது. அச்சு வடிவுக்கு வந்த பின் இந்த எழுத்துருவில் ஏராளமான மாறுதல்கள் வந்துள்ளன. பயிற்சி பெற்ற ஒருவரே நூறாண்டுகளுக்கு முந்தைய சுவடிகளை வாசிக்க முடியும். வருங்காலத்துக்காக நம் எழுத்துருக்களை மாற்றிக்கொண்டால் அதில் பிழையில்லை என்றே படுகிறது. அது காதில் தமிழ் கேட்கும் சூழல்கொண்ட, தமிழைப் புரிந்துகொள்ளக்கூடிய எவரும் தமிழில் வாசிக்கும் சூழலை உருவாக்கும். தமிழ் வருங்காலத்திலும் வாசிக்கப்படும். இல்லை யேல், தமிழ் ஒருவகைப் பேச்சு வழக்காக மட்டுமே நீடிக்கும். அதில் இலக்கியமும் அறிவுத் துறைகளும் நிகழாமல் போகும். சம்ஸ்கிருதம்போலப் பாதுகாக்கப்படும் தொல்பொருளாகவோ பல்வேறு பழங்குடி மொழிவழக்குகள்போல நடைமுறை உரை யாடலுக்கான ஒன்றாகவோ மட்டுமே தமிழ் நீடிக்கும்.
- ஜெயமோகன், எழுத்தாளர், தொடர்புக்கு: jeyamohan...@gmail.com
இதெல்லாம் படிக்கும்போதே அநியாயமா தோணலையா...
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
November 4, 2013
[இந்த எதிர்வினைக்கு ஒரு சிறப்பு உள்ளது. இதை ஒருவாரம் முன்பு மூலக்கட்டுரையை எழுதி முடித்ததுமே எழுதிவிட்டேன். ஏனென்றால் என்னென்ன எதிர்வினைகள் வரும் என எனக்கு மிக நன்றாகவே தெரியும். இந்த தரத்துக்கு அப்பால் சென்று எவரேனும் மாற்றுக்கருத்துக்களைத் தெரிவித்திருந்தால் எனக்குத் தெரியப்படுத்தலாம்]
தமிழ் எழுத்துருக்களை ஏன் ஆங்கிலத்திலேயே எழுதக்கூடாது என்று ஒரு யோசனை எழுதியிருந்தேன்.ஏனென்றால் இரண்டு லிபிக்களைக் கற்றுக்கொள்வது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு மிகுந்தசுமையாகவே உள்ளது. அவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதனால் வெறுமே தேர்வுக்காக மட்டும் எழுத்துக்களைத் தெரிந்துகொண்டு உடனே மறந்துவிடுகிறார்கள்.இதுதான் இன்றைய யதார்த்தம். என் எதிர்வினை இந்த யதார்த்ததை எப்படி எதிர்கொள்வது என்பதைப்பற்றி மட்டுமே.
இத்தகைய ஒரு கருத்து உடனடியாக ‘தமிழை அழிக்கச் சதி’ என்ற கூச்சல் மூலமே எதிர்கொள்ளப்படும். வரலாற்றையோ இன்றைய சூழலையோ தொழில்நுட்ப உலகின் எதிர்காலம்நோக்கிய போக்கையோ சற்றும் கவனிக்காமல் ‘உலகிலேயே சிறந்த’ மொழியாகிய தமிழை ‘அன்னியசக்திகள்’ அழிக்கமுயல்கிறார்கள் என்ற ஒரு பாவனையிலேயே நம் மொழிவெறியர்கள் காலம்தள்ளுகிறார்கள்.
அவர்களைப்பொறுத்தவரை மொழிக்காக எதையுமே செய்யவேண்டியதில்லை. மொழி முறையாகக் கற்றுக்கொடுக்கப்படாவிட்டால் பிரச்சினை இல்லை. மொழியில் இலக்கியங்களோ சிந்தனைகளோ வராமல் போனாலும் பிரச்சினை இல்லை.மொழியை ‘எதிரிகளிடமிருந்து’ பாதுகாக்க முடிந்தவரை எல்லா இடத்திலும் கடுமையாக வசைபாடி கொந்தளித்தாலே போதும்.
பெரும்பான்மையினராக உள்ள அவர்களை சீண்டும் என தெரிந்தே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அவர்களை நான் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழிக்கு உண்மையிலேயே பெரும்பங்களிப்பாற்றிய எழுத்தாளன் நான். என் இடத்தையும் பங்களிப்பையும் புரிந்துகொள்ளுமளவுக்கு இவர்களுக்குத் தமிழ்ப்பயிற்சி இல்லை என்பதுமட்டுமே உண்மை.
இரண்டாவதுதரப்பு, தனக்கு ஒவ்வாத அல்லது புரியாத எந்த ஒரு தரப்பைக் கேள்விப்பட்டாலும் உடனடியாகப் பொங்கி கொந்தளித்து கொப்பளிக்கும் கூட்டம். கருத்து என்றாலே அது மிகையுணர்ச்சிக் கருத்தாகத்தான் இருக்கமுடியும் என்றும், விவாதம் என்றாலே வசையாக மட்டுமே இருக்கமுடியும் என்றும் நம்பக்கூடியவர்கள்.
இன்னொரு சாரார் தங்களுக்கு ஒவ்வாத எதையும் நக்கலும் கிண்டலுமாக வெளிப்படுத்துபவர்கள். அந்த நக்கலையும் கிண்டலையும் கவனித்தால் அதற்குள் உள்ளது ஆழமான தாழ்வுணர்ச்சி என்று தெரியும். எந்த தளத்திலும் தன்னை ஆழமாக நிரூபித்துக்கொள்ள முடியாதவர்கள் ‘இருந்தாலும் நான் ஒஸ்தி…’ என்ற பாவனையை மேற்கொண்டு இவற்றை வெளிப்படுத்துவார்கள். சொல்லும்படி ஒரு கட்டுரையை ஒரு குறிப்பை எழுதி அவர்களுக்கே அவர்கள்மேல் நம்பிக்கை வந்துவிட்டால் அவர்கள் தீவிரமாகப் பேச ஆரம்பித்துவிடுவார்கள்.அவர்கள் மீது ஆழமான அனுதாபம் மட்டுமே எனக்குள்ளது.
ஆக இதுவே தமிழகத்தின் பொதுமனநிலை. நேற்று வையாபுரிப்பிள்ளை அந்த மனநிலையாலேயே எதிர்கொள்ளப்பட்டார். ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி என அம்மனநிலையால் கீழ்த்தரமாக வசைபாடப்பட்டவர்களின் பட்டியல்தான் தமிழிலேயே சிறந்த அறிஞர்களின் பட்டியல். எனக்கு வசைபுதிது அல்ல.
எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படுவதற்கான குறைந்தபட்ச வாய்ப்பு சூழலில் இருக்கவேண்டும். ‘ஏன் இப்படி யோசிக்கக் கூடாது?’ என்று கேட்பதற்கான உரிமையும் வாய்ப்பும் மறுக்கப்படக்கூடிய சூழலில் எந்தப் புதுச்சிந்தனையும் எழாது.ஒரு புதிய கருத்து விசித்திரமாக அல்லது தவறாக தெரிகிறது என்ற ஒரே காரணத்துக்காக அதன்மீது எரிச்சலும் கோபமும் கொண்டு அதைச் சொல்பவர் மீது பாயும் ஒரு சூழல் சிந்தனைத்தரம் கொண்டவர்களால் ஆனது அல்ல. வெறும் பழங்குடிக் கும்பலுணர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்தக்கூடியது அது.
ஆச்சரியமென்னவென்றால் இந்த பழங்குடிக் கும்பலுணர்ச்சிக்கு எதிராகத் தமிழில் தொடர்ச்சியாகப் பேசிவந்தவர் ஈ.வெ.ரா அவர்கள். இந்த உணர்ச்சியைச் சீண்டி, கண்டிப்பதற்காகவே அவர்கள் பல கருத்துக்களைச் சொல்லிவந்ததுண்டு. இந்தக் கருத்துக்கு நிகரான ஏராளமான கருத்துக்களை அவர் சொல்லியிருக்கிறார்.
நம் பழங்குடிக்கும்பல்மனநிலை அக்கருத்துக்களைச் சொல்லும் உரிமை அவருக்கு மட்டும் உண்டு, ஏனென்றால் அவர் ‘தந்தை’ என உருவகித்துக்கொண்டு அதேபோன்ற கருத்துக்களுக்கு எதிராக அதேவகை கோபங்களை இன்னும்கொஞ்சம் வளர்த்துக்கொண்டது. கொதித்துக்கொந்தளிப்பவகளைப்பாருங்கள் பெரும்பாலானவர்கள் பெரியாரியர் என தன்னைச் சொல்லிக்கொள்பவர்களாகவே இருப்பார்கள்.
இக்கருத்தை எதிர்கொள்பவர்கள் இதை முழுமையாகப் புறக்கணிக்கலாம், முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று நிராகரிக்கலாம், இக்கருத்தின் மீதான விமர்சனங்களை முன்வைக்கலாம். அப்படிப்பட்ட கடும் எதிர்விமர்சனங்கள் வழியாகவே இத்தகைய கருத்துக்களைப் பரிசீலிக்கவேண்டும், ஆகவே கண்டிப்பாக எதிர்விமர்சனங்கள் வரவேண்டும் என்று நானே அக்கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்.
என்னைப்பொறுத்தவரை இது ஒரு சாத்தியக்கூறு பற்றிய யோசனை மட்டுமே. கண்ணெதிரே தமிழ்க்கல்வி அனேகமாக வழக்கொழிந்துவருவதைக் காண்கிறேன். சமீபத்தில் பல பொறியியல்கல்லூரிகளுக்குச் செல்லும்போது அங்குள்ள மாணவர்கள் தமிழ்ச்செய்தித்தாள்களைக்கூட வாசிப்பதில்லை என்பதை கவனித்திருக்கிறேன். குமுதம் என்ற இதழை ஒரு கல்லூரி வகுப்பறையில் ஒருவர் கூட கேள்விப்பட்டதேயில்லை என்று அறிந்த அதிர்ச்சியை நான் ஏற்கனவே பதிவுசெய்திருக்கிறேன். ஆனால் அவர்களனைவருமே தமிழ்பேசக்கூடியவர்கள்
இதுதான் நம்மைச்சூழ்ந்துள்ள உண்மையான யதார்த்தம். இதை காணாமல் தவிர்ப்பதில் பொருளில்லை. இது ஒரு தேசியப்பொதுப்போக்கு. இந்தியா முழுக்க இதேநிலைதான் உள்ளது. இதற்கு எதிராகச் சட்டம்போடுவதோ பிள்ளைகளுக்கு வலுக்கட்டாயமாக ஆனா ஆவன்னா கற்றுத்தருவதோ பயனற்றது. அதை புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பத்துவருடம்முன்னரே செயல்படுத்திப்பார்த்து தோற்றிருப்பார்கள். அதுவே இன்று தமிழகப் பெருநகர்களில் நடக்கிறது. நாளை தமிழகம் முழுக்க இதுவே நிலைமையாக இருக்கும்
ஐம்பதாண்டுக்காலம் கழித்து ஒருவேளை தமிழ் மிகச்சிறுபான்மையினர் மட்டுமே வாசித்து-எழுதும் ஒரு மொழியாக நீடிக்கும். பேச்சு மொழி என்றுமிருக்கும். அதில் இலக்கியங்களை வாசிக்க ஆளிருக்கமாட்டார்ள். இன்று பல செவ்வியல் மொழிகளுக்கு இருக்கக்கூடியதுபோன்ற ஆர்வம்கொண்ட மிகச்சிறிய வட்டத்தினர் மட்டுமே தமிழை தீவிரமாக வாசிப்பார்கள். இதுதான் நான் உண்மையிலேயே வருமென அஞ்சக்கூடிய சூழல்.
இதற்கு எதிராகச் செய்யக்கூடுவது என்று தோன்றக்கூடிய ஒரு வழி நான் சொல்வது.சாத்தியமான பல வழிகளில் ஒன்று. நாளைய தொழில்நுட்பம் எதைச் சாதிக்குமென எனக்குத் தெரியாது. ஆனால் உலகமெங்கும் பலமொழிகளுக்கு அடிப்படையான பொது எழுத்துரு ஆங்கிலமாக மாற வாய்ப்புண்டு என்றே நினைக்கிறேன். அந்த எழுத்துருவை வேறெந்த எழுத்துருவிலும் மாற்றிவாசிக்க தொழில்நுட்பம் வாய்ப்பளிக்கும். தமிழை பிராமியிலோ வட்டெழுத்திலோகூட வாசிக்கமுடியும். ஆகவே எப்படியும் கற்றுக்கொண்டே ஆகபோகிற ஆங்கில எழுத்துருக்கள் வழியாகவே தமிழை வாசிக்க- எழுதக் கற்றுக்கொள்வது சுலபமான வழியாக இருக்கும்.
ஒருவேளை இது வெறும் ஊகமாக இருக்கலாம். மிகையான அச்சமாக இருக்கலாம். இந்த மாற்று வழி நடைமுறைச் சிக்கல்களைக் கொண்டதாக இருக்கலாம். ஆனால் ஏன் இப்படி யோசிக்கக் கூடாது என்பது மட்டுமே என் கேள்வி. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் அத்திசைநோக்கிச் செல்கிறோம்
வழக்கம்போல தொண்ணூறுசதவீதம்பேருக்கும் நான் என்ன சொல்கிறேன் என்று புரியாது. வரவிருக்கும் உடனடி எதிர்வினை என்பது ‘அப்டீன்னா நீ எதுக்கு தமிழிலே எழுதறே? அப்டியே இங்கிலீஷ் எழுத்துக்களிலே எழுதவேண்டியதுதானே? நீ எழுத ஆரம்பிச்சுப்பாரு…’.
நண்பர்களே, நான் இப்போது ஆங்கில எழுத்துருக்களில் எழுதுவதைப்பற்றிச் சொல்லவில்லை. இப்போதுள்ளவாசகர்கள் ஆங்கில எழுத்துரு வழியாக எளிதாக வாசிப்பார்கள் என்றும் சொல்லவில்லை. ஆங்கில எழுத்துருக்கள் வழியாக தமிழ் இளமையிலேயே பள்ளிகளில் பயிலப்பட்டால் அவர்களுக்கு பின்னாளில் தமிழ் வாசிக்க எளிதாக இருக்குமே என்றுதான் சொல்கிறேன்.
இரண்டாவது எதிர்வினை, எனக்கு வாசகர்கள் இல்லாததனால் நிறைய வாசகர்களை பெறுவதற்காக இதைச் சொல்கிறேன் என்பது. தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக அதிகமாக வாசகர்களைப் பெற்ற மிகச்சில இலக்கியவாதிகளில் ஒருவன் நான் என்பதை அவர்களுக்கு கொஞ்சம் வாசிப்பு இருந்தால் தெரிந்துகொள்ளலாம். வாசிக்காதவர்களிடம் அதைச் சொல்லிப்புரியவைக்க கடினம்.
ஆனால் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட வணிகப்படைப்பாளிகள்கூட தமிழகத்தில் 5 சதவீதம்பேரால் மட்டுமே அறியப்பட்டவர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ்வாசிப்பு இப்போதே மிகமிகச்சிறுபான்மையினரால் மட்டுமே செய்யப்படுகிறது. நான் பேசுவது இதன் எதிர்காலம் பற்றி.
ஆங்கில எழுத்துரு அன்னிய மொழியாலானது என்பது இன்னொரு பேச்சு. நான் மொழியில் அல்லது இலக்கியத்தில் அப்படி அன்னியம் என ஒன்றிருப்பதாக ஏற்கவில்லை. இன்று நாம் தமிழில் எழுதும் எழுத்துக்களே ஐரோப்பிய மொழியை அடிப்படையாகக் கொண்டு பலமுறை சீர்திருத்தப்பட்டவை. நம் உரைநடை இலக்கணமே ஆங்கிலத்தை ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. இதோ இந்த உரைநடையின் அமைப்பே ஆங்கிலத்தைப்போன்றதுதான்
கடைசியாக, இப்படி எழுத்துருவை மாற்றுவது நடைமுறைச் சாத்தியமா என்பது. தெரியவில்லை. ஆனால் எல்லாமே சாத்தியமானதுதான் என்றுதான் தோன்றுகிறது.
*
ஒரு பண்பாட்டுச்சூழல் தன்னுடைய அடிப்படை மனநிலைகளை, நம்பிக்கைகளைப் பற்றி தொடர்ந்து புறவயமாக ஆராய்ந்துகொண்டே இருக்கவேண்டுமென்றே நான் நினைக்கிறேன். ஈவிரக்கமில்லாத சுயஅலசலாக அது அமையவேண்டும். இல்லாவிட்டால் அச்சூழல் தேங்கும்.
வேறு எவரைவிடவும் நான் மரபின் மீது ஆர்வம் கொண்டவன். மரபில் ஆழமான தொடர்ந்த பயிற்சியும் கொண்டவன். அதேசமயம் மரபுகளை எப்போதும் தர்க்கபூர்வமாக உடைத்து ஆராயவும் மறுபரிசீலனை செய்யவும் முயல்பவன். எல்லா மரபையும். எதையும் வெறுமே மூட நம்பிக்கையாக ,உணர்வுபூர்வமான ஏற்பாக மட்டும் வைத்துக்கொள்ளலாகாது என நினைப்பவன்.
இந்த விவாதமும் அதற்காகவே. இதில் ஈடுபடுபவர்களில் மிகமிகச்சிறுபான்மையினர் அதை உணரக்கூடும். இன்னும் சிலர் இவ்விவாதம் முடிந்தபின் ஒட்டுமொத்தமாக யோசிகையில் உணரக்கூடும். அவர்களுக்காகவே இது எழுதப்படுகிறது.
ஜெ
இதெல்லாம் படிக்கும்போதே அநியாயமா தோணலையா...
---
Sent via Epic Browser
இவர் ஏன் இந்த கட்டுரையை , இனி எழுத போகின்றவைகளை ஆங்கில எழுத்து கொண்டு எழுதக்கூடாது...ஒரு ஆரம்பமாக இருக்கும் அல்லவா?
இவர் ஏன் இந்த கட்டுரையை , இனி எழுத போகின்றவைகளை ஆங்கில எழுத்து கொண்டு எழுதக்கூடாது...ஒரு ஆரம்பமாக இருக்கும் அல்லவா?
அட பின்னால் வரும் சந்ததியினருக்கு படிக்க புக் வேணும்ல அதுக்கு இவரு இப்பவே எழுத ஆரம்பிக்கலாம்ல..
--
நம் மொழி சார்ந்த வரலாறும், போராட்டமும், அரசியலும் 'அகண்ட பாரதவாசி'களை எவளவு உறுத்துகிறது என்பதற்கு இந்த நாள் ஒரு உதாரணம்..
அண்ணே,அவர் எழுத்துரு கட்டுரைக்கு எதிர்வினையாக எழுதிய கட்டுரையை நீங்க மெய்ப்பிச்சிக்கிட்டே இருக்கிங்க.
இப்பவும் நீங்க ஜெயமோகனைத்தான் திட்டுறிங்களேத் தவிர, அவரின் கட்டுரையின் சாரம்சத்தைப் பற்றி பேச தயாராக இல்லை. மேலும் மாற்று வழியையும் முன்வைக்கவில்லை.
இந்த நொடிவரை அவர் கட்டுரையின் சாரம்சத்தைப் பற்றியோ, அல்லது எழுத்துரு பிரச்சனைக்கு மாற்றாகவோ யாரும் எதையும் முன்வச்சி பேசல. வழக்கம்போல வசைகள் வசைகள்.
சமீபத்துல நீயா நானா நிகழ்ச்சி ஒன்னைப் பார்த்தேன். அதுல சில பிள்ளைகளுக்கு தமிழ் பேச வருமாம் ஆனா எழுத்தைப் படிக்கத் தெரியாதாம். அவங்க பொருளாதார ரீதியில் தன்னிறைவு அடைஞ்ச குடும்பத்தில் பிறக்கல, பிறமொழி தேவைக்கான அவசியமும் அவங்களுக்கு இல்லை. நகரங்களில் வாழ்பவர்களும் அல்லர்.இதுதான் யதார்த்தமா இருக்கு. ஜெயமோகன் புலம்பெயர்ந்த அல்லது வெளிநாட்டு வாழ் தமிழர்களை உதாரணமா வச்சி பேசினாரு. ஆனா உள்ளூர்லையே அந்த நிலமை மெல்ல மெல்ல தலையெடுக்க ஆரமிச்சிடிச்சி.எழுத்துரு விசயத்தில் ஜெயமோகனுக்கு எதிரா பேசுறவங்க இந்த மாதிரியான மாற்றங்களை எப்படி எதிர்கொள்ளனும் அல்லது ஆரோக்கியமான மாற்றுவழி என்னான்னு பேசலாம். எழுத்துரு மாற்றம்தான் ஒரே தீர்வுன்னு ஜெயமோகன் சொல்லல. வேற மாற்றுவழி இல்லாத பட்சத்தில் இதை கையிலெடுக்கலாம்னு சொன்னாரு.
ஜெயமோகனுக்கு கொடிபிடிக்கிறியான்னு பேசாம, தமிழகத்தில் இந்த மாதிரியான (தமிழ் பேச தெரியும் ஆனா படிக்கத் தெரியாது என சொல்லும் குழந்தைகளுக்கு) மாற்றங்களை எப்படி சரிகட்டலாம்னு யாராவது பேசினா நல்லா இருக்கும்.
நான் சொன்ன உதாரணம் இப்போதைக்கு 2%மாவது இருக்கலாம். வருங்காலங்களில் இந்த அளவு அதிகரிக்கலாம்.
ரமேஷ்,முதல் விஷயம் அது எழுத்துரு அல்ல. எழுத்துரு என்றால் Font. ஜெமோ ஆனால் சொல்ல வருவது ஸ்கிரிப்ட்.
இரண்டாவது விஷயம். குழந்தைகள் மொழியை கற்க சிரம்ப்படுகின்றார்கள் என்பது. சுத்த ஹம்பக். 5 வயதிற்கும் 5 மொழிகளை எளிதாக கற்கலாம். இளம் வயதில் தான் இவர்கள் இன்னும் எளிதாக கற்கலாம். அதற்காக சூழலை அமைத்து தந்தால் போது. புத்தகம், உரையாடல், சினிமா, தொலைக்காட்சி, பாடல்கள் வகையறா.
மூன்றாவது விஷயம்: தமிழ் பேச தெரியும் ஆனால் படிக்க தெரியாது என்பவர்கள் மொத்தம் எத்தனை சதவிகிதம் பேர் இருப்பார்கள் ? அப்படி அவர்கள் வாசித்தே தீர வேண்டுமெனில் இப்போது இருக்கும் தொழில்நுட்பம் கொண்டு மிக எளிதாக டிராண்ஸ்லிட்ரேட் செய்துவிடலாம். அது ரொம்ப எளிமையான செயல்.
ஏன் மாற்ற வேண்டும் என்பதற்கு வலுவான காரணம் இல்லை. மொழி அழிந்துவிடும் என்பது தேவையற்ற பயம்.
On Tuesday, November 5, 2013 11:21:40 AM UTC+5:30, Ramesh wrote:ஜெயமோகனின் எழுத்துரு கட்டுரையைப் பற்றியும் அதன் தேவையைப் பற்றியும் இன்னமும் முழுசா உள்வாங்க முடியல. அல்லது இன்னமும் எனக்கு அது புடிபடல.ஆனா, எழுத்துரு மாற்றத்துக்கான தேவையின் காரணிகளை அவர் முன்வச்சதும், அந்த கட்டுரைக்கு எதிர்வினை எப்படி இருக்கும் என அவர் எழுதியது 100% உண்மையாகிப்போனது.
இந்த நொடிவரை அவர் கட்டுரையின் சாரம்சத்தைப் பற்றியோ, அல்லது எழுத்துரு பிரச்சனைக்கு மாற்றாகவோ யாரும் எதையும் முன்வச்சி பேசல. வழக்கம்போல வசைகள் வசைகள்.
சமீபத்துல நீயா நானா நிகழ்ச்சி ஒன்னைப் பார்த்தேன். அதுல சில பிள்ளைகளுக்கு தமிழ் பேச வருமாம் ஆனா எழுத்தைப் படிக்கத் தெரியாதாம். அவங்க பொருளாதார ரீதியில் தன்னிறைவு அடைஞ்ச குடும்பத்தில் பிறக்கல, பிறமொழி தேவைக்கான அவசியமும் அவங்களுக்கு இல்லை. நகரங்களில் வாழ்பவர்களும் அல்லர்.
இதுதான் யதார்த்தமா இருக்கு. ஜெயமோகன் புலம்பெயர்ந்த அல்லது வெளிநாட்டு வாழ் தமிழர்களை உதாரணமா வச்சி பேசினாரு. ஆனா உள்ளூர்லையே அந்த நிலமை மெல்ல மெல்ல தலையெடுக்க ஆரமிச்சிடிச்சி.எழுத்துரு விசயத்தில் ஜெயமோகனுக்கு எதிரா பேசுறவங்க இந்த மாதிரியான மாற்றங்களை எப்படி எதிர்கொள்ளனும் அல்லது ஆரோக்கியமான மாற்றுவழி என்னான்னு பேசலாம். எழுத்துரு மாற்றம்தான் ஒரே தீர்வுன்னு ஜெயமோகன் சொல்லல. வேற மாற்றுவழி இல்லாத பட்சத்தில் இதை கையிலெடுக்கலாம்னு சொன்னாரு.
ஜெயமோகனுக்கு கொடிபிடிக்கிறியான்னு பேசாம, தமிழகத்தில் இந்த மாதிரியான (தமிழ் பேச தெரியும் ஆனா படிக்கத் தெரியாது என சொல்லும் குழந்தைகளுக்கு) மாற்றங்களை எப்படி சரிகட்டலாம்னு யாராவது பேசினா நல்லா இருக்கும்.
நான் சொன்ன உதாரணம் இப்போதைக்கு 2%மாவது இருக்கலாம். வருங்காலங்களில் இந்த அளவு அதிகரிக்கலாம்.
--என்றும் அன்புடன்,
ரமேஷ்---
Sent via Epic Browser
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
ஏன்னா, பை பேஸ் ஜெயமோகன் ஒரு மலையாளி.. இந்த இனம், மொழி சார்ந்த உணர்வுகள் எப்பவுமே அவருக்கு ஒரு கசப்பு மருந்து தான்... அதும் காமென்வெல்த்,இசைபிரியா என மக்களின் கவனம் இன்னொரு பக்கத்தில் இருக்கும் போது இப்படியோரு கட்டுரை..
சரி , அந்த 2% மக்களை தமிழ் வரிவடிவத்தை படிக்க வைக்க என்ன வழி என யோசிக்க வேண்டுமா? இல்லை 98% மக்களை அந்த 2% மக்களை மாதிரி மாற்ற வேண்டுமா?!!!
சரி , அந்த 2% மக்களை தமிழ் வரிவடிவத்தை படிக்க வைக்க என்ன வழி என யோசிக்க வேண்டுமா? இல்லை 98% மக்களை அந்த 2% மக்களை மாதிரி மாற்ற வேண்டுமா?!!!
அன்போடு
மோரு
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
ரமேஷ்...ஒரு குதர்க்கவாதத்திற்கு கேட்கிறேன்... நாளைய தலைமுறைக்கு இரண்டு வரி வடிவங்கள் இருப்பது, அதன் மூலம் படிப்பது தான் பிரச்சினை என்றால் தமிழ் வழி கல்வியில், ஆங்கிலத்தை தமிழ் வரிவடிவத்தில் எழுதிப் பழக அறிவுரை கூறலாமா...
ஒரு மொழியின் உடலானது பேச்சாக இருக்குமானால், அதன் உயிர் வரி வடிவம். வரி வடிவம் இல்லாத பல மொழிகள் அழிந்து இருக்கிறது. சிதைந்து போய் இருக்கிறது. பிராமி எழுத்துருவை நாம் எப்படி படிக்க இயலாமல் இருக்கிறோமோ அதே போல ஆங்கில வரிவடிவத்தில் தமிழ் கற்கும் குழந்தைகள் தமிழின் பழம்பெரும் நூல்களையும், கருத்துகளையும் கற்க இயலாமல் போகும்.
இந்த தமிழ் மொழியை ஆங்கில வரி வடிவத்தில் எழுத தேவையான காரணங்கள் என்ன என பட்டியலிட முடியுமா...
ஒவ்வொரு மொழியையும் அதற்கே உண்டான வரிவடிவத்தில் படிப்பதே அம்மொழியை வளர்க்கும் விதமாக அமையுமே ஒழிய ஒற்றை வரிவடிவத்தில் அனைத்து மொழியையும் அடைப்பது என்பது மொழியை சிதைக்க மட்டுமே செய்யும்.உதாரணத்திற்கு சில வரிகள்.naan nalamaa irukken.mein badiyaa hoon.i am good.nenu baga unnaanu.valara savukyamaanu.நான் நலமா இருக்கேன்...மைன் படியா ஹூன்...ஐ அம் குட்.நேனு பாக உன்னானுவளர சவுக்யமானு.மேலே உள்ளதில் ஒவ்வொரு வரியைப் படிக்கும் பொழுதும் உனக்கு உள்ளூர ஏற்படும் உணர்வு எத்தகையதாக இருக்கிறது என்பதைச் சொல். மேலே பேசலாம். எனது கருத்துகள் ஜெயமோகனைக் குறி வைத்தன்று.
கட்டுரையின் சாரம்சத்தை மட்டும் பேச வேண்டுமெனில்,ஆங்கிலத்தையே முதல் பாடமாக படிக்கும், தமிழை பேச மட்டுமே தெரிந்த மாணவர்களுக்கான உத்தியாக இதை முன்வைக்கிறார்! தமிழை இரண்டாம் பாடமாக அல்லது மூன்றாவது பாடமாக படிக்கும் மாணவர்களுக்கு இது பிரச்சினையாக மாறுகிறது என்கிறார்!
இந்த யோசனை, தமிழை வளர்க்கவா அல்லது இன்னும் பல தமிழ் புத்தகங்கள் விற்கக் கூடிய அல்லது வாசிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்றா?
இரண்டாவது காரணம் என்றால் எப்படி என்பதை விளக்கியிருக்கலாம்? என்னைப் பொறுத்த வரை அதனை ஏற்க முடியவில்லை.ஆங்கிலத்தில் படித்து, தமிழ் பேசத் தெரிந்தவர்கள், ஆங்கில எழுத்துக்களிலேயே தமிழை எழுதுவதற்கு சிறு வயதிலிருந்து பயிற்சி தேவையா என்ன?+2 வரை கட்டாயத் தமிழ் படிப்பு...மிக முக்கியமாக, கவுன்சிலிங்கில் ஒரே மார்க் எடுத்திருப்பவர்களுக்கு, தமிழை படித்தவர்கள், தமிழில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள், அரசு பள்ளியில் படித்தவர்கள், அரசு உதவி பள்ளியில் படித்தவர்கள் என்ற அடுத்தடுத்த வடிகட்டும் முறை இது போன்ற யோசனைகளை இன்னும் அழுத்தமாக பேசாமல், மொத்தமாக புறந்தள்ளுவது போன்ற யோசனையை முன்வைக்கும் போது, அதுவும் தமிழின் முண்னனி எழுத்தாளரே வைக்கும் போது......................
\
--
எதை பழக்க வேண்டும்? தமிழ் படிக்க தெரியாமல் பேச மட்டும் தெரிந்தவர்களுக்கு ஆங்கில எழுத்தை கொண்டு தங்கிலீஷ் ல் எழுத கற்று தரவேண்டுமா? அப்படி கற்று தெரிந்துதான் இப்போது பயன்படுத்துகிறார்களா?
எதை பழக்க வேண்டும்? தமிழ் படிக்க தெரியாமல் பேச மட்டும் தெரிந்தவர்களுக்கு ஆங்கில எழுத்தை கொண்டு தங்கிலீஷ் ல் எழுத கற்று தரவேண்டுமா? அப்படி கற்று தெரிந்துதான் இப்போது பயன்படுத்துகிறார்களா?
தவிர, தமிழ் வரிவடிவத்தை படிக்க தெரியாதவர்களை எப்படி படிக்க வைப்பது என யோசிப்பது நல்ல செயலா? இல்லை , அதற்காக தமிழின் வரிவடிவத்தை மொத்தமாக தங்கிலீஷ் க்கு மாற்றுவது நல்ல செயலா?
அப்படி மாற்றி விட்டால் , எதிர்காலத்தில் பழைய புத்தகங்களை எப்படி படிப்பார்கள்?
ஆங்கில வரிவடிவத்தை வரித்துக் கொண்டால் , அப்படியே ஆங்கில கலப்புக்கு எளிதாகி நாளை மொத்தமாக தமிழே இல்லாமல் போகாதா?
யாரோ முகம் தெரியாத ஒருவர் இந்த கருத்தை சொல்வது என்பது வேறு , இலக்கிய சூழலில் நன்கு அறியப்படவர் ஒருவர் இதை முன் வைப்பது என்பது வேறு..எத்தனை அபத்தமான ஒன்றை சொல்கிறோம் யோசித்துதான் சொன்னாரா?
ஸ் பெ அரசியல் காரணங்களை சொல்லி இருந்தார்...அது அவரது கருத்து...ஆனால் , தி ஹிந்து வுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை என்பது உண்மை. அதே சமயம் இப்போது நெகட்டிவ் பப்ளிசிட்டி நன்றாக வேலை செய்கிறது என்பதால் வேண்டுமென்றே கூட இது எழுதப்பட்டிருக்கலாம் என்று யோசிக்கவும் தோன்றுகிறது..
கடைசியாக , வினையூக்கியின் எதிர்வினை கட்டுரை பண்புடனில் இருக்கிறது. அதையும் இதுவரை படிக்கவில்லை என்றால் படித்துவிடு.
2013/11/5 ப்ரியன் <mailt...@gmail.com>எதை பழக்க வேண்டும்? தமிழ் படிக்க தெரியாமல் பேச மட்டும் தெரிந்தவர்களுக்கு ஆங்கில எழுத்தை கொண்டு தங்கிலீஷ் ல் எழுத கற்று தரவேண்டுமா? அப்படி கற்று தெரிந்துதான் இப்போது பயன்படுத்துகிறார்களா?ஜெயமோகன் முன்வைக்கும் தீர்வை “தங்லீஸ்” என்றுதான் நானும் புரிஞ்சிக்கிட்டேன்.அந்த தங்லீஸை முறைப்படுத்த வேண்டும் என்று அவர் சொல்ல வர்றதா அல்லது முறைப்படுத்தினா நல்லா இருக்கும் என நான் நம்புறேன்.
உதாரணத்திற்கு “இந்த” என்று எழுதுவதை "Intha, entha" என்றும் எழுதுவோர் பலர் உண்டு. அதை எது சரியென்று முறைப்படுத்தலாம். முறைப்படுத்தப்பட்ட தங்லீஸை வேண்டும் என்போர் பயன்படுத்தலாம். கட்டாயமுறை அவசியமற்றது.
தவிர, தமிழ் வரிவடிவத்தை படிக்க தெரியாதவர்களை எப்படி படிக்க வைப்பது என யோசிப்பது நல்ல செயலா? இல்லை , அதற்காக தமிழின் வரிவடிவத்தை மொத்தமாக தங்கிலீஷ் க்கு மாற்றுவது நல்ல செயலா?கண்டிப்பாக நல்ல செயல் இல்லை என்பது தற்போதைய கருத்து. அதற்கு மாற்றாக வேறு எதை முன்வைத்தாலும் யாரும் தடுக்கப்போவதில்லை.
அப்படி மாற்றி விட்டால் , எதிர்காலத்தில் பழைய புத்தகங்களை எப்படி படிப்பார்கள்?கண்டிப்பாக முடியாதுதான். ஆனா மொழிபெயர்புக்கு வாய்ப்புள்ளது.
ஆங்கில வரிவடிவத்தை வரித்துக் கொண்டால் , அப்படியே ஆங்கில கலப்புக்கு எளிதாகி நாளை மொத்தமாக தமிழே இல்லாமல் போகாதா?தமிழில் படிப்போர் இருக்கும்வரை அழியாது.
யாரோ முகம் தெரியாத ஒருவர் இந்த கருத்தை சொல்வது என்பது வேறு , இலக்கிய சூழலில் நன்கு அறியப்படவர் ஒருவர் இதை முன் வைப்பது என்பது வேறு..எத்தனை அபத்தமான ஒன்றை சொல்கிறோம் யோசித்துதான் சொன்னாரா?அவர் அவருக்கு தெரிஞ்ச தீர்வை முன்வச்சிருக்கார். இதைவிட சிறந்த தீர்வு வேரொருவர்கிட்ட இருந்தா அதை ஏத்துக்கப்போரார். ஜெயமோகனின் திர்வு சரியில்லை என்றாலும், இது இப்போ பேசப்படவேண்டிய ஒன்றே.
ஸ் பெ அரசியல் காரணங்களை சொல்லி இருந்தார்...அது அவரது கருத்து...ஆனால் , தி ஹிந்து வுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை என்பது உண்மை. அதே சமயம் இப்போது நெகட்டிவ் பப்ளிசிட்டி நன்றாக வேலை செய்கிறது என்பதால் வேண்டுமென்றே கூட இது எழுதப்பட்டிருக்கலாம் என்று யோசிக்கவும் தோன்றுகிறது..இருக்கலாம்.
கடைசியாக , வினையூக்கியின் எதிர்வினை கட்டுரை பண்புடனில் இருக்கிறது. அதையும் இதுவரை படிக்கவில்லை என்றால் படித்துவிடு.எல்லாத்தையும் படிச்சிக்கிட்டுதான் இருக்கேன். ஆனா நான் எதிர்பார்ப்பது மாற்று தீர்வைத்தான். வசவுகளையோ, கிண்டல்களையோ அல்லது யதார்த்ததை மிஞ்சும் கற்பனையையோ அல்ல.
தமிழகத்தில் தமிழ் பேசத் தெரியும், ஆனால் படிக்க எழுதத் தெரியாது இருக்கும் குழந்தைகள் அதிகமாகும் சூழல் உள்ளது. இந்த சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பது என கேட்கிறாய்...
இதை என்னால் ஏற்க முடியவில்லை! பாதி ஆங்கிலம் தெரிந்தவர்களே பயணத்தில் ஆங்கில புத்தகங்களையே கொண்டு செல்கிறார்கள். காரணம் பிரசாத் சொன்ன காரணங்களோடு சேர்த்து ஸ்டைல், ஷோ வும் அடங்கும்! அப்புறம் தங்கிலீஸ் புத்தகக்ங்களை எப்படி தேடுவார்கள்?
தமிழை இரண்டாம் மொழியாக தேர்ந்து எடுத்து படிக்கும் நபர்களுக்கு தமிழ் வளர எந்த அளவு உபயோகமாக இருக்க போகிறார்கள். அவன் தமிழ் படிச்ச என்ன படிக்காவிட்டால் என்ன. தெரிஞ்சுக்கனும்னு ஆசைப்படுறவன் எங்க இருந்தாலும் வந்து கற்றுக்கொண்டு படிக்கப்போறான்,
பொருளதார ரீதியாக தன்னிறைவு பெற ஆங்கில கல்வி அவசியம் இருக்கு இங்கு பணம் பிரதானமா இருக்கு அதனால் ஆங்கிலம் படிக்கிறான், நமக்கு வேலைகளை தரும் அமெரிக்காவும் மற்ற நாடுகளுக்காகவும் அவன் அவன் மொழியை படிக்கிறான் அதாவது முதலாளிக்கு தெரிந்த மொழியை, இங்கு நாம் தான் முதலாளியை உருவாக்குவது இல்லையே.
மொழி வளர பொருளாதாரமும் அவசியம்.அதற்க்கு தீர்வு காண சொல்லுங்கள் இரண்டாம் மொழியாக படித்தவன் கூட தாய் மொழிக்கு மாறுவான்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
அந்த கட்டுரையை மறுபடியும் படிச்சு பார் , தங்லீஷை முறைப்படுத்த வேண்டும் என்றா சொல்கிறார்?! அப்படி சொல்லித் தொலைத்திருந்தால் இந்த அளவுக்கு விவாதமே வந்திருக்காதே?!
பழைய புத்தகங்களை படிக்க முடியாது என்கிற போது தமிழின் பழைய இலக்கியங்கள் அழிந்து போகாதா? அது தமிழின் அழிவில்லையா?தங்லீஷ்க்கு மாறினால் மொழிபெயர்ப்பு அதிகரிக்குமா? எப்படி?
தமிழையே ஆங்கிலத்தில் படிக்கும்போது , தமிழ் எப்படி அழியாமல் போகும்?
யதார்த்ததை மிஞ்சும் கற்பனையை செய்தது ஜெமோ வா? இல்லை அந்த கருத்தை எதிர்ப்பவர்களா?
இதற்க்கு இது தான் தீர்வு என்று நாம் ஒரு கட்டுரையில் முடித்து விட முடியாது.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
தமிழ் அழிஞ்சி போயிடும் என்று சொல்பவர்கள் யதார்த்தத்தை மிஞ்சும் கற்பனைவாதிகள். அது ஜெ.மோக்கும் பொருந்தும்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
எல்லோருக்கும் ஒரு கவலைன்னா , உதயனுக்கு இப்படி கவலை...
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இப்ப ரமேஷ் வந்து என்ன சொல்லுவான்னு நான் சொல்லட்டுமா...
சிரிச்சு அவனை டென்ஷனாக்க வேணாம் அண்ணே... அப்புறம் ரமேஷ் எனக்கு படம் எதுவும் டிராப் பாக்ஸ்ல அனுப்பாம போனா நான் என்ன செய்யுவேன்...:)))
Sunnyன்னு ஒரு வண்டி வந்தப்பா எப்படி அதை தமிழ்படுத்தி வாசிச்சோம்னு நியாபகம் இருக்க.டென்சன்னா இருக்கு நானும் கட்டுரை எழுதிடுவேனேனு.
அன்போடு
மோரு
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
Sunnyன்னு ஒரு வண்டி வந்தப்பா எப்படி அதை தமிழ்படுத்தி வாசிச்சோம்னு நியாபகம் இருக்க.
அப்படி கஷ்ட்டப்பட்டு தமிழ்படுத்த வேண்டியதில்லை.இங்க நாங்க பேசும்போது சுன்னி முஸ்லீம்ங்கிற வார்த்தையைத்தான் பயன்படுத்துறேன்.
நல்லவேளை நான் இதை ட்ரான்ஸ்லேட் செய்ய மாட்டேன்னு அண்ணன் நினைச்சுட்டாரு ;))
எனக்கு கூட, பாட்ஷா ரஜினி ஃபைட்டுக்கப்புறம் மெய்சிலிர்க்க வைக்கிறது சமயங்கள்ல ரமேஷோட எழுத்துக்கள்தான்!
எனக்கு கூட, பாட்ஷா ரஜினி ஃபைட்டுக்கப்புறம் மெய்சிலிர்க்க வைக்கிறது சமயங்கள்ல ரமேஷோட எழுத்துக்கள்தான்!
ஆத்தாடி,இவருதான் ஜெயமோகன் கட்டுரையை சரியா புரிஞ்சிருக்காரு. மிக்க நன்றி.2013/11/5 Naresh Kumar <meet...@gmail.com>
கட்டுரையின் சாரம்சத்தை மட்டும் பேச வேண்டுமெனில்,ஆங்கிலத்தையே முதல் பாடமாக படிக்கும், தமிழை பேச மட்டுமே தெரிந்த மாணவர்களுக்கான உத்தியாக இதை முன்வைக்கிறார்! தமிழை இரண்டாம் பாடமாக அல்லது மூன்றாவது பாடமாக படிக்கும் மாணவர்களுக்கு இது பிரச்சினையாக மாறுகிறது என்கிறார்!100% இதைத்தான் அவரு சொன்னாரு.
தற்சமயம் நானிருக்கும் மனநிலையில் இதற்கு மேல் எழுத விரும்பவில்லை. மிகக் கடுமையான வார்த்தைகளையும், மன உணர்வையும் வெளிப்படுத்த விரும்பவில்லை.
பிரச்சினையின் அடிநாதம் தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறையும் நிலை, கல்வி நிலையங்களில் அதனை சரியாகக் கையாளாதது இப்படி சிலவைதான்!தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியவை என்பது பற்றி எங்கேயுமே கட்டுரைகளோ, செய்ல்பாடுகளோ நடக்கவில்லையா என்ன?
--
இன்று காலை வா. மணிகண்டன் தங்கிலீஷில் இரண்டு வரிகள் எழுதியிருந்தார். பொதுவாகவே தங்கிலீஷ் படிக்க நேரும்போது எனக்கு பயங்கர கடுப்பாகி விடும். சிலருடைய செல்பேசிகளில் தமிழ் வசதி இருப்பதில்லை என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவேன். ஆனால், எப்போதும் இப்படிச் செய்யாத மணிகண்டன் இன்று இப்படி எழுதுகிறாரே என்று வியந்துபோய், இந்த விஷப்பரீட்சையில் இறங்காதீங்க என்று நான் கமென்ட் எழுதினேன். அப்போதுதான் அவர் தகவல் தெரிவித்தார், ஹிந்து தமிழ் இதழில் ஜெயமோகன் எழுதிய கட்டுரையின் எதிர்வினை அது என்று.
ஓஹோ... இன்றைய அஜெண்டாவை அவர்தான் முடிவுசெய்திருக்கிறார் போலும் என்று நினைத்துக்கொண்டேன்.
சற்று நேரத்திற்குமுன் பார்த்தால், இந்தக் கட்டுரைக்கு என்ன எதிர்வினைகள் வரும் என்று தெரிந்தே தான் எழுதியதாக ஜெயமோகன் ஒரு பதிவும் எழுதியிருக்கிறார். அதாவது, பத்திரிகையில் எழுதியது விவாதத்துக்கு உரிய விஷயமே அல்ல. அதைப்பற்றி மிகவும் சிந்தித்தே எழுதியிருக்கிறார், அவருடைய கருத்து முடிந்த முடிபு, இனி எந்த மாற்றமும் தேவையில்லை என்பதே அந்தப் பதிவின் நோக்கமாக இருக்க முடியும்.
அவர் அப்படிச் சொல்லி விட்டார் என்பதற்காக விவாதிக்காமல் இருந்துவிட முடியுமா..
அவருடைய கருத்தின் சாரம் என்ன...
வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது. எதிர்காலத்தில் தமிழ் வாசிக்கும் பழக்கம் அற்றுப் போகாமல் இருக்க ஆங்கிலத்தில் தமிழை எழுதலாம் என்பதுதான்.
இது ஏதும் புதிய கருத்தல்ல, புதிய விஷயமும் அல்ல. நாடு விடுதலை அடைந்தபோது, தேசிய மொழியாக எதை ஏற்பது என்ற கேள்வி வந்த காலத்தில், இந்தி தெரியாதவர்கள் ஆங்கில எழுத்து வடிவில் இந்தி எழுதலாம் என்ற வாதம்கூட வந்தது. இந்துஸ்தானிதான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்றார் காந்தி. இப்போதும்கூடவடக்கே இந்தியிலும் இதுபோல அவ்வப்போது யாராவது கிளப்பி விடுவது உண்டு. சரி, அதை விடுத்து, விவரங்களைப் பார்ப்போம்.
இப்போதும்கூட இந்தியாவில் பல மொழிகள் ஆங்கில எழுத்து வடிவங்களைப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, காசி, கரோ, மிசோ போன்றவை. வேறு சில மொழிகளுக்கு இரண்டு விதமான எழுத்துகளும்கூடப் பயன்படுகின்றன. கொங்கணியை இந்தியிலும் - அதாவது தேவநாகரியிலும் எழுதுவதுண்டு, கன்னடத்திலும் எழுதுவது உண்டு. மணிப்புரியை வங்காளி வரிவடிவிலும் ஆங்கில வரிவடிவிலும் எழுதுவது உண்டு. பஞ்சாபில் சிலர் உருதுவை ஆங்கிலத்தில் எழுதுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். பீகாரில் உருதுப் பத்திரிகைகள், இந்தி எழுத்துகளால் வெளிவருவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதையெல்லாம் அவர் ஏன் குறிப்பிடாமல் விட்டு விட்டார் என்பது புரியவில்லை. இருக்கட்டும்.
மேலே குறிப்பிட்ட காசி, மிசோ போன்ற மொழிகள் ஆங்கில எழுத்து வடிவத்தைப் பயன்படுத்துவதற்குக் காரணங்கள் வேறு. ஆங்கிலேய மிஷினரிகளின் தாக்கமும் அதில் இருந்தது. அது பேசப்படுவதும்கூட மிகக் குறைவான மக்களால்தான். அவ்வளவு ஏன், சிந்தி மொழி பெர்சியன் (அதாவது, அரபி), தேவநாகரி, ஆங்கிலம் ஆகிய மூன்று எழுத்து வடிவங்களிலும் எழுதப்படுகிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டு பழமையான சிந்தி மொழி இன்று குறிப்பிட்ட எந்தப் பகுதியிலும் பேசப்படுவதில்லை. அதனால் சிந்தி ஆங்கில வரிவடிவத்தைப் பெரிதும் பயன்படுத்துகிறது. அப்படியிருந்தும்கூட, சிந்திக்கு யுனிகோட் எழுத்துகள் உருவாக்கி விட்டார்கள்.
ஆக, எந்தெந்த மொழிகள் ஆங்கில வரிவடிவத்தைப் பயன்படுத்துகின்றன என்று பார்த்தால், உலகின் ஏராளமான மொழிகள் வரும். ஆனால் அவை பெரும்பாலும் குறைந்த மக்கள் பேசுகிற மொழிகளாக இருக்கும். அல்லது வரலாற்றில் புதிய மொழிகளாக இருக்கும்.
இந்தியாவின் பெரும்பாலான பழங்குடி மொழிகள் ஆங்கில வரிவடிவத்தைப் பயன்படுத்துகின்றன. காரணம், அவர்கள் மொழி பேச்சு மொழியாக மட்டுமே இருந்தது. எழுத்து மொழியாக வளரவில்லை. பிற்காலத்தில் நாகரிகத் திணிப்பின் அல்லது ஏற்பின் காரணமாக, அவர்களுக்கு புதிய வரிவடிவத்தை உருவாக்க முடியாதபோது, ஆங்கில வரிவடிவத்தை வரித்துக்கொள்வது எளிதாகி விட்டது. ஆனால், அவர்களால் முடியும் என்றால், நிச்சயமாக சொந்த வரிவடிவத்தை உருவாக்குவார்கள்.
மிகக் குறைவான மக்கள் பேசும் மொழியினர்கூட தமக்கென புதிய எழுத்துவடிவை உருவாக்க வேண்டும் என்று முயற்சி செய்து புதிய எழுத்து வடிவங்களை உருவாக்கிக்கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, சந்தாலி மொழிக்கான ஒல் சிக்கி. தமிழர்களில் பலர் இப்படியொரு பெயரையே கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அப்படியொரு வரிவடிவம் இருக்கிறது. தேவைப்பட்டால் மாதிரியைக் காட்டுகிறேன். அல்லது கூகுளில் தேடியறியலாம்.
இப்படி, குறைவான மக்களால் பேசப்படும் சந்தாலி மொழிக்கே சொந்த எழுத்துருக்கள் உருவாகிக் கொண்டிருக்கும் காலத்தில், பல்லாயிரம் ஆண்டுகாலப் பழமை கொண்ட மொழிக்கு எதிர்காலத்தில் ஆபத்து வந்துவிடும் என்றும், ஆங்கில வரிவடிவைப் பயன்படுத்தலாம் என்றும் கூறுவது என்னவகையான மனநிலை என்று சத்தியமாகப் புரியவில்லை.
சரி, அப்படியே தமிழை ஆங்கிலத்தில் எழுதி விட்டாலும் வாசிக்க முடியுமா... தமிழ் எழுத்துகளின் ஒலிகளுக்கு நிகரான ஒலி ஆங்கிலத்தில் இல்லை. ஏன், இந்திய மொழியில் ஒன்றான இந்தியிலும்கூட இல்லை. விளம்பரங்களிலோ, திரைப்படப் பெயர்களிலோ ஒரிரு சொற்கள் ஆங்கிலத்தில் படித்துவிடுவது என்பது வேறு. அது அந்தந்தப் பொருள் சார்ந்த விஷயம். எல்லா தமிழ்ச் சொற்களையூம் ஆங்கில ஒலிமயமாக்கி எழுதுதல் சாத்தியமில்லை. ஒருவேளை இதற்கும் அவர் ஒரு தீர்வு சொல்லக்கூடும். ஆங்கிலத்தில் டயகிரிடிகல் Diacritical எழுத்துகள் இருக்குமே, அதைப் பயன்படுத்துங்கள் என்று சொல்வாரோ என்னவோ...
டயகிரிடிகல் என்பது ஒலிக்குறி வடிவம். ஆங்கிலத்தில் இல்லாத எழுத்துகளை குறிக்கப் பயன்படுகிறது. உதாரணமாக கஃபே என்பதற்கு cafe என்று எழுதுகிறோம். ஆனால் உண்மையில் அது café. ஆங்கில எழுத்துகளுக்கு மேலாகவோ கீழாகவோ சில குறிகளை இட்டு தமிழின் ன், ள், ழ் போன்ற எழுத்துகளுக்குப் பயன்படுத்துவார்கள். இவற்றை வாசிப்பது மொழியியல் வல்லுநர்களுக்கே திணறல்தான். இதைக் கற்றுக்கொள்வதைவிட ஒரு மொழியையே கற்றுக்கொள்ளலாம். இந்தப் பத்தியில் உள்ள வாதம் நிச்சயமாக விதண்டாவாதம்தான் என்று எனக்கே தெரியும். இருந்தாலும் இப்படிஎழுதியதன் காரணம், எதிர்வினை எப்படி வரும் என்று தெரிந்தவர் இதையும் ஊகித்தாரா என்று தெரிந்து கொள்வதுதான்.
சரி, இந்து இதழில் ஜெயமோகன் முன்வைத்த கருத்தின் சாரங்களைப் பார்ப்போம்.
1. //நம் இளைய தலைமுறை ஏராளமாக வாசிக்கிறது. ஆனால், தாய்மொழிகளில் வாசிப்பதில்லை. //
அபத்தமான கருத்து. இளைய தலைமுறை வாசிக்கவில்லை என்பதே உண்மை. இளையதலைமுறையினர் நிறையபடிக்கிறார்கள் என்பது உண்மை - ஆனால் அது பாடப்புத்தகப் படிப்பு. நூல் வாசிப்பு அல்ல. இதற்குக் காரணங்கள் பல - செல்பேசிகளின் ஊடுருவலும், அதில் இசைகேட்கும் வசதிகளும், அண்மைக்காலத்தின் செல்பேசிகளில் பரவலாகி வி்ட்ட சமூக ஊடக வசதிகளும் சேர்ந்து வாசிப்பை அருகச் செய்திருக்கின்றன என்பதே உண்மை. ஓர் இலக்கியவாதியாக இருந்துகொண்டு எப்படி இப்படியொரு கருத்தைமுன்வைக்கிறார் என்று தெரியவி்ல்லை. நூல்கள் அதிகம் விற்பனையாகின்றன என்பதை வைத்து வாசிப்புப் பழக்கம் அதிகரித்திருக்கிறது என்று கருதக்கூடாது. சொல்லப்போனால், மிகச்சிலர் மிக அதிக நூல்களை வாங்குகிறார்கள். மிகப் பலர் மிகச்சில நூல்களையே வாங்குகிறார்கள். இது குறித்து உலகப்புத்தகத் திருவிழா குறித்த என் வலைபதிவில் பார்க்கலாம்.
2. //இளமையில் இரண்டு மொழிகளின் எழுத்து வடிவங்களைக் கற்றுக்கொள்வதில் இருக்கும் சிரமம்தான் என்றுசொல்லலாம்.//
பல்வேறு துறைகள் குறித்து ஆழமாக எழுதுகிறவராகக் கூறிக்கொள்பவர் எப்படி இப்படியொரு அபத்தமான கருத்தை முன்வைக்கிறார் என்று வியப்பாக இருக்கிறது. குழந்தைகள் இரண்டு மொழிகளை அல்ல, நான்கு மொழிகளைக்கூட எளிதில் கற்கமுடியும் என்று ஆய்வுகள் பலவும் காட்டியிருக்கின்றன. கூகுளில் தேடினால் நிறையவே கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால், இரண்டு மொழி பேசும் பெற்றோர் உள்ள குடும்பத்தின் குழந்தைகளுக்கு பலமொழித் திறன் எளிதாக வரும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. அவ்வளவு ஏன், இரண்டு மொழிகளைக் கற்றுக்கொண்டவர்களுக்கு அல்ஜெமிர் நோய் தாமதமாகவே வரும் என்றும்கூட ஆய்வுகள் காட்டுகின்றன. (மாதிரிக்கு, பதிவின் படத்தைப் பார்க்கவும்.)
3. மேற்கண்ட “சிரமம்” பற்றிய கருத்தைத் தொடர்ந்து வரும் பத்திகள் அனைத்தும் அதையொட்டிய கருத்தையே முன்வைத்துள்ளன என்பதால் ஒதுக்கி விட்டுகடைசிப் பத்திக்குச் செல்லலாம்.
4. // எழுத்துருக்கள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல. தமிழ்ஆரம்ப காலத்தில் பிராமி எழுத்துருவில்தான் எழுதப்பட்டன.அந்த எழுத்துகளில் இருந்து வட்டெழுத்து உருவாகிவந்தது. அந்தஎழுத்துரு கைவிடப்பட்டு, இன்றைய எழுத்துரு வந்திருக்கிறது. .... வருங்காலத்துக்காக நம் எழுத்துருக்களை மாற்றிக்கொண்டால் அதில் பிழையில்லை என்றேபடுகிறது. //
அபத்தத்தின் உச்சம்தான் இது. இங்கே அவர் சொன்ன மாற்றங்கள் யாவும் இயல்பாக மொழிக்கு ஏற்பட்டமாற்றங்கள். மொழியின் தகவமைப்பு அது. மண்ணில் எழுதிய காலம், கல்லில் எழுதிய காலம், காகிதத்தில் எழுதிய காலம் என காலத்துக்கேற்ப வரிவடிவம் மாறியது. அதனையும், முற்றிலும் புதியவரிவடிவத்தை தனதாக்கிக் கொள்வதையும் ஒப்பிட்டுப் பேசுவதை என்னவென்று சொல்ல... இன்று காகித உலகிலும் கணினி உலகிலும் ஆங்கிலத்துக்கு என்ன வசதிகள் உண்டோ அத்தனையும் தமிழுக்கும் உண்டு.
கடைசியாக,
காலப்போக்கில் தமிழ் வாசிப்பு அருகிவிடும் என்பதற்காக இந்தக் கருத்தை முன்வைக்கிறார் என்றால், சில கேள்விகள் தவிர்க்க முடியாதவை.
தமிழ் நாட்டின் மக்கள் தொகை என்ன, அதில் எத்தனை சதவிகிதம் பேர் தமிழில் எழுதப் படிக்கக் கற்றவர்கள் /கல்லாதவர்கள், தமிழகத்துக்கு வெளியே இந்தியாவிலும் உலகெங்கும் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை என்ன, அவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் தமிழ் கற்கமுடியாத சூழலில் இருக்கிறார்கள், அவ்வாறு கற்க முடியாத நிலைக்கு காரணம் என்ன, இதே நிலை தொடருமானால் இன்னும் எத்தனை காலத்துக்குப் பிறகு தமிழ் அருகிவிடும் ஆபத்து இருக்கிறது ....
இது போன்ற அறிவியல்ரீதியான கேள்விகளை எழுப்பி, அதில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்தக் கருத்து வந்திருந்தால், நிச்சயம் அது விவாதத்துக்கு உரியதுதான். ஆனால் இவர் வைத்திருப்பதோ, ஏதோ அரைத்தூக்கத்தில் இருக்கும்போது மனதுக்குள் எழுந்த கேள்வியை கருத்தாக முன்வைத்ததுபோல இருக்கிறதே அன்றி எந்த அடிப்படையும் இல்லாததாய் இருக்கிறது. வெறும் சர்ச்சையைக் கிளப்பும் நோக்கத்தில் அமைந்த கட்டுரை என்றுதான் இதைக்கூற முடியும்.
வாசிப்புப் பழக்கம்குறைந்து வருகிறது என்பது தமிழுக்கு மட்டுமல்ல. எல்லாமொழிகளுக்கும் இது பிரச்சினைதான். அது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும்தான். ஆனால் மொழியின் எழுத்துருவை மாற்றுவதால் அப்படியொரு மாற்றம்வந்து விடும்என்றால்....
கவிஞர் மகுடேசுவரன் எழுதிய பதிவின்கடைசிப் பத்திதான் நினைவுக்கு வருகிறது. இதோ...
//புகழ்பெற்ற விஞ்ஞானி ஒருவரைப்பற்றி வாய்மொழிக் கதையுண்டு. எத்தனையோ நல்ல கருவிகளை உருவாக்கிய அவர்தம் இறுதிக்காலத்தில் ஓர் ஆராய்ச்சியைச் செய்தாராம். கொல்லைக்குச் சென்றுமலங்கழித்தபின் கழுவுவதற்குக் குளத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. அதற்குஎளிதான ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியில் இறங்கினாராம். மலங்கழிக்கும்போது முதலில்வரும் சிறுநீரை அடக்கி வைக்கவேண்டும். கழிப்பு முடிந்தபின்தான் சிறுநீரைக் கழிக்க வேண்டும். அவ்வாறு கழியும்சிறுநீரிலேயே கழுவிக்கொள்ள வேண்டும். இதுதான்அந்த விஞ்ஞானியின் தீர்வு.//

லத்தின் வரிவடிவில் தமிழை எழுதலாம் என்று ஜெயமோகன் சொன்னார். நிச்சயம் அது எனக்கு ஏற்புடையதல்ல. தமிழ் என்னும் மொழியின் அழிவாகவே இது அமையும் என்றுதான் இப்போதும் நினைக்கிறேன். ஆனால் இந்தக் கருத்தைச் சொல்ல, ஒரு விவாதத்தை உருவாக்க யாருக்கும் உரிமையுள்ளது. சொன்னது ஜெயமோகன் என்பதற்காகவே இந்த விவாதம் எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்று பார்க்கும்போது எரிச்சலே மிஞ்சுகிறது. மனநோயாளி, மலையாளி, தமிழை அழிக்கப் பார்க்கிறார், அவரது புத்தகத்தை இப்படி வெளியிடவேண்டியதுதானே, அவரது வலைத்தளத்தை இப்படி நடத்தவேண்டியதுதானே, சம்ஸ்கிருதத்தை இப்படிச் சொல்வாரா, மலையாளத்தைச் சொல்வாரா, தன் கவன ஈர்ப்புக்காகச் செய்கிறார் என்பது போன்ற சில்லுண்டித்தனமான எதிர்வினைகளே முன்வைக்கப்பட்டன.
நான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயமோகனிடம் ஒருமுறை, கருணாநிதி இலக்கியவாதியல்ல என்று சொல்லிவிட்டீர்களே என்று கேட்டேன். நான் எதைச் சொன்னாலும் அது குறித்து நூறு பக்கங்களாவது என்னால் எழுதமுடியும் என்றால்தான் சொல்வேன் என்றார். இன்றுவரை அவர் அப்படியேதான் இருக்கிறார். வெறும் கவன ஈர்ப்புக்காக எதையும் சொல்லிவிட்டு அவர் ஓடி ஒளிவதில்லை. அவர் நம்பும் கருத்துகளையே அவர் சொல்கிறார். அது கவன ஈர்ப்பாகவும் அமைந்துவிடுவது அவரது சிறப்பு. இதைக் கருத்தால் எதிர்கொள்ள வழியில்லாதவர்களே அவரை வேறு வழிகளில் ஏசத் தொடங்குகிறார்கள்.
சிலர் ஒரு படி மேலே போய் இது ஜெயமோகனின் கருத்து அல்ல, அவர் காப்பி அடிக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் இந்த விவாதத்தை ஒழுங்காக அவர்கள் எதிர்கொள்ளவில்லை. ஜெயமோகனின் காப்பி என்பதோடு அவர்களும் நின்றுகொண்டார்கள். இதையெல்லாம் எதிர்பார்த்தேதான் ஜெயமோகன் முன்பே எதிர்வினையை எழுதி வைத்ததாகச் சொல்லி ஒரு பதிலை அவரது தளத்தில் வெளியிட்டார். வழக்கம்போல அந்தப் பதிலில் அவரது விவாதத்துக்கு மேம்போக்காகப் பதில் சொன்னவர்களை இடது கையால் நிராகரித்திருந்தார்.
இன்று தி தமிழ் ஹிந்துவில் வரும் செய்தியைப் பார்த்தபோது ஜெயமோகனின் இடதுகை நிராகரிப்பு சரிதான் என்று நினைக்க வைக்கிறது.
தமிழறிஞ்சர்கள் ஒன்றுகூடி கண்டுபிடித்தது, ஜெயமோகன் மலையாளி, நாயர், தமிழின் உடலை அழித்து மொழியை அழிக்கப் பார்க்கிறார் என்பதுதான். யாராவது எதாவது பதிலடி கட்டுரைகளைத் தந்திருக்கிறார்களா என்றால் அப்படி எதுவும் வெளியாகவில்லை.
இந்த தமிழறிஞ்சர்கள் நாயர் என்ற சாதிக் கண்டுபிடிப்பை வெளிப்படுத்த எந்தத் தகுதியாவது இருக்கிறதா என்று அவர்களை அவர்களே கேட்டுக்கொள்வது நல்லது. ஜெயமோகனை நாயராகத்தான் பார்ப்பார்கள் என்றால், அந்த ’நாயர்’ அளவுக்கு எந்த நாயகராவது (நாகரிகத்தொடை கருதி இப்படி எழுதவேண்டியிருக்கிறது) தமிழுக்குப் பங்களிப்பு அளித்திருப்பார்களா என்ன? ஜெயமோகனின் தமிழ்ப் பங்களிப்பு வார்த்தைகளில் அடங்காதது. இதே வேகத்தில் ஜெயமோகன் எழுதிக்கொண்டிருந்தால், காந்திக்கும் அம்பேத்கருக்கும் அடுத்து எழுதிக் குவித்தவர் ஜெயமோகனாகவே இருப்பார் என்று நினைக்கிறேன். எனவே அவர் தமிழ் பற்றிப் பேசவும் விவாதத்தை முன்னெடுக்கவும் சகல தகுதியும் உள்ளவர். நாயர் உள்ளிட்ட சாதிகளை இவர்கள் புறக்கணிக்கத் தொடங்கினால், அவர்கள் அதை நீதிக்கட்சியின் வரலாற்றில் இருந்து தொடங்கட்டும். பிறமொழி வெறுப்பில் இருந்து தொடங்கினால் அதை ஈவெராவில் தொடங்கட்டும்.
சில ஃபேஸ்புக் டிவிட்டர் இடுகைகள் இன்னும் கேவலமானதாக இருந்தன. இதே கருத்தை ஜெயமோகன் மலையாளத்துக்கோ கன்னடத்துக்கோ சொல்லியிருந்தால் அவரை முட்டி போட வைத்திருப்பார்கள் என்ற கருத்தெல்லாம் சொல்லப்பட்டன. ஒரு கருத்தைச் சொன்னதற்காக முட்டி வைக்கப்படவேண்டும் என்பது பாசிஸம். இதை யார் எந்த வடிவில் எந்த சாதி மதப் போர்வையில் செய்தாலும் அதைக் கண்டிக்கவே செய்யவேண்டும். மலையாளிகளும் கன்னடர்களும் அப்படி நடந்துகொண்டால் அவர்களது கண்மூடித்தனமான வெறியைத்தான் நாம் கண்டிக்கவேண்டுமே அன்றி, அப்படித் தமிழர்கள் நடந்துகொள்வதில்லை என்பது தமிழர்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது என்று அவர்களைக் கொண்டாடவேண்டுமே அன்றி, தமிழர்கள் இப்படி நடந்துகொள்ளவில்லையே என்று நொந்துகொள்ளக்கூடாது. பக்குவம் என்பது நாம் தொடர்ந்து முதிர்ச்சி அடைவதில்தான் உள்ளது, அன்றி வன்முறையாக ஒரு கருத்தை முடக்குவதில் அல்ல.
அ.மார்க்ஸ் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு படி மேலே போய் இது ஆர் எஸ் எஸ் சார்பு என்று சொல்லியுள்ளார். ஏனென்றால், இந்திய மொழிகள் அனைத்துக்குமான வரிவடிவம் தேவநாகரியாக இருக்கவேண்டும் என்பது ஆர் எஸ் எஸ் கொள்கையாம். வட இந்திய வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் மதமாற்றம் நிகழ்ந்தபோது, கிறித்துவ அமைப்புகள் மிகவும் உக்கிரமாக அங்கிருந்த வட்டார மொழிகளின் வரிவடிவத்தை அழித்து, அவற்றை லத்தின் வரிவடிவில் எழுத வற்புறுத்தினார்களாம். இதை ஒரு நண்பர் சொன்னார். இதை வைத்துக்கொண்டு பார்த்தால், ஜெயமோகன் செய்தது அப்பட்டமான ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு விவாதம்! ஆனால் மார்க்ஸோ இதை ஆர் எஸ் எஸ் ஆதரவு என்கிறார்! விநோதம்தான். மதமாற்றக் கும்பல்கள் செய்த வரிவடிவ அழிப்பைப் பற்றி அ.மார்க்ஸ் எதுவும் பேசப்போவதில்லை என்பது நமக்குத் தெரிந்ததுதான்.
மதமாற்ற இங்கே வந்து தமிழறிஞராகக் கொண்டாடப்படும் வீரமாமுனிவரையெல்லாம் விட்டுவிட்டு, உண்மையில் தமிழுக்குப் பெரிய பங்களிப்பை அளித்துக்கொண்டிருக்கும் ஜெயமோகனை மதவாதி என்பதுதான் இவர்கள் ஞானத்தின் உச்சம்.
இன்றைய தி தமிழ் ஹிந்துவில் தமிழறிஞ்சர்கள் கூட்டமைப்பு கொடுத்த அறிக்கையில் ஒரு விஷயம், பிராமி என்பது தமிழின் மூலமல்ல, அது வேறு; தமிழ்பிராமி வேறாம். முதல் குரங்குக்குத் தொத்தாமல் இருக்க இவர்களால் முடியாது.
தமிழறிஞ்சர்களின் எதிர்வினை இங்கே.
ஜெயமோகனின் கட்டுரை இங்கே.
ஜெயமோகனின் எதிர்வினை இங்கே.
அ.மார்க்ஸின் ஃபேஸ்புக் இடுகை இங்கே.
November 8, 2013
தமிழ் எழுத்துரு பற்றிய விவாதங்களில் பெரும்பாலும் எல்லாக் குரல்களும் ஒலித்துவிட்டன என்று நினைக்கிறேன். இனி இந்த விவாதத்தை நான் ஏன் எழுப்பினேன், இதன் சாராம்சம் என்ன என்று எதை நினைக்கிறேன் என்பதை சொல்லிவிடுகிறேன்.
[ஏற்கனவே அக்கட்டுரை வெளியான அன்று பிரசுரிக்கப்பட்ட எதிர்வினைக்குறிப்பிலேயே இதைக் கோடிகாட்டியிருந்தேன். என்னை வாசிப்பவர்களுக்கு இவ்விவாதத்தை நான் ஏன் முன்வைக்கிறேன் என்பது தெளிவாகவே தெரிந்திருக்கும். தமிழை உடனே ஆங்கில எழுத்துக்களில் எழுத ஆரம்பிக்கவேண்டும் என்று சொல்லுமளவுக்கோ, உலகமொழிகள் எல்லாம் தனித்தன்மையை உதறிவிடவேண்டும் என்று ஒற்றைப்படையாக வாதிடுமளவுக்கோ நான் அடிமுட்டாளல்ல என்றாவது என் எழுத்துக்களை வாசிப்பவர்கள் ஊகிக்க முடியும்]

பகுத்தறிவும் கருத்துச் சுதந்திரமும்…
சிலமாதங்களுக்கு முன்பு லடாக் பயணத்தில் rationality என்ற சொல்லுக்கான இந்தியமொழிச் சொற்கள் என்னென்ன என்று பேசிக்கொண்டோம். நானறிந்து தமிழல்லாத எந்த மொழியிலும் அதற்கான மிகச்சரியான சொல் கிடையாது! ‘பகுத்தறிவு’ என்பது மிகமிகச் சரியான சொல்லாக்கம்.
பதினெட்டாம் நூற்றாண்டில்தான் அச்சொல்லுக்கான இன்றைய வரையறை ஐரோப்பியமொழிகளில் உருவாகி வந்தது. ‘புறவயமான காரணகாரிய தர்க்கத்தை மட்டும் எல்லா சிந்தனைகளுக்கும் அடிப்படையாகப் பயன்படுத்துவது’ என்று அதை வரையறை செய்யலாம்.
அன்றைய ஐரோப்பா மத நிறுவனங்களின் பிடியில் இருந்தது. அவை காரணகாரியத் தர்க்கத்தை பெரும்பாவமாக முன்வைத்தன. உணர்ச்சிகரமான கண்மூடித்தனமான முழுமையான நம்பிக்கையே ஆன்மீகம் என விளக்கின. ஆகவே பகுத்தறிவு வாதம் அங்கே பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. கிட்டத்தட்ட ஒருநூற்றாண்டு தேவைப்பட்டது, பகுத்தறிவு அங்கே பொதுமக்கள் மனத்தில் நிலைநாட்டப்படுவதற்கு.
பகுத்தறிவு என்பதை ஒற்றைச் சொல்லில் விளக்குகிறோம். ஆனால் அது ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள பல கருதுகோள்களில் ஒன்று. தனிமனிதன்- சுதந்திரசிந்தனை- ஜனநாயகம் போன்ற பல அடிப்படைகளுடன் பிரிக்கமுடியாதபடி கலந்தது அது.,
கண்மூடித்தனமான, உணர்ச்சிகரமான நம்பிக்கைகள் மக்கள் தங்களை பெருந்திரளாக உணரும்போது உருவாகக்கூடியவை.. அந்தப்பெருந்திரள் உணர்ச்சிகள் பற்பல நூற்றாண்டுகளாக இருந்து வரக்கூடிய பழங்குடி அடையாளங்கள் சார்ந்தவை. அந்த அடையாளங்களை நிலப்பிரபுத்துவகாலகட்ட அதிகார அமைப்புகள் மேலும் வலுவாக நிறுவியிருக்கும்.
பழங்குடிமனமும் சரி, நிலப்பிரபுத்துவ மனமும் சரி, தன்னை ஒரு பெருந்திரளின் சிறிய துளியாக மட்டுமே உணர்கின்றன. அந்த திரள் அடையாளத்தை உதறி மனிதன் தன்னை தனிமனிதனாக உணர ஆரம்பித்ததே நவீன காலகட்டத்தின் பிறப்புக்கு அடிகோலியது. ‘நான், என் சிந்தனை, என் தரப்பு’ என ஒருவன் சொல்ல ஆரம்பிக்கையில் அவன் தன்னைச்சூழ்ந்துள்ள பெருந்திரளின் உணர்ச்சிகளில் இருந்து வெளியே சென்றுவிடுகிறான். மனிதகுல வரலாற்றில் அது ஒரு பெரிய தொடக்கம்.
அவ்வாறு தனித்துச் சிந்திக்க ஆரம்பிக்கும் மனிதனை அவனுடைய சூழலில் உள்ள பெருந்திரள்மனப்பான்மை ஒடுக்குகிறது. அவனுடைய தனிச்சிந்தனையை அது அத்துமீறல் என்று முத்திரையிட்டு தண்டிக்கிறது. அவன் சூழலின் ஒட்டுமொத்த சிந்தனையை மீறி சுயமாக சிந்திப்பதற்காக போராடுகிறான். அதைத்தான் நாம் சிந்தனைச்சுதந்திரம் என்கிறோம். நெடிய போராட்டம் வழியாக அதை அடைந்தது ஐரோப்பா.
தனிமனிதன் உருவான பின்னரே ஜனநாயகம் பிறந்தது. ஆட்சியதிகாரத்தில் ஒவ்வொருவரும் பங்குகொள்வதையே நாம் ஜனநாயகம் என்கிறோம். மக்கள் கூட்டங்கள் தலைமைகளின் கீழ் திரண்டு பேரம்பேசி அதிகாரத்தை பங்கிட்டுக்கொள்வதற்குப்பெயரல்ல ஜனநாயகம். அது எல்லா காலத்திலும் இருந்ததுதான். மக்கள் ஒவ்வொரு தருணத்திலும் தனிமனிதர்களாகவே செயல்பட்டு அதிகாரத்தில் பங்கேற்கும்போதே ஜனநாயகம் பிறக்கிறது.
அந்த ஜனநாயகத்தின் அடித்தளமாக இருப்பது பகுத்தறிவு. ஒரு மனிதன் தன்னுடைய சொந்த அறிதல்கள் மற்றும் அனுபவங்களைக்கொண்டு புறவயமாகச் சிந்தித்து நிதானமாக சரிதவறுகள் பற்றிய முடிவுகளை எடுப்பதையே பகுத்தறிவு என்கிறோம்,
ஆகவே பகுத்தறிவின் நேர் எதிர்தரப்பு என்பது ‘நம்பிக்கை’தான். காரணகாரியமற்ற நம்பிக்கை, உணர்ச்சிகரமான ஈடுபாடு இரண்டும் பெருந்திரள் மனநிலையால் உருவாக்கி அளிக்கப்படுபவை. அவற்றை எதிர்த்து உதறி முன்னால்செல்லக்கூடிய தனிமனிதனின் தர்க்கபூர்வ சிந்தனையே பகுத்தறிவு என்பது.
இந்தியாவில் நவீன ஜனநாயகப் பண்புகளை முன்வைத்த முன்னோடிச் சிந்தனையாளர்கள் அனைவருமே ’தனிமனிதன் – சுதந்திர சிந்தனை– ஜனநாயகம் – பகுத்தறிவு’ என்னும் அடிப்படைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருப்பதைக் காணலாம். மதச்சீர்திருத்தவாதியும் ஆன்மீக ஞானியுமான நாராயணகுருவும்கூட அதையே சொல்கிறர்
ஆனால் நான் பார்த்தவரையில் நேரடியாகவே பகுத்தறிவு என்ற அடிப்படையை தீவிரமாக முன்வைத்தவர் ஈவேரா அவர்கள். தன் வாழ்நாளெல்லாம் திரும்பத்திரும்ப அதை அவர் சொல்லியிருக்கிறார். இந்த விவாதத்துக்குப்பின் அவரது எழுத்துக்களை மீண்டும் வாசித்துப்பார்த்தபோது அத்தனை உரைகளையும் அவர் தனிமனித சிந்தனையை நோக்கியே முன்வைத்திருப்பதை கவனித்தேன். திரும்பத்திரும்ப ‘நான் சொல்கிறேன் என்று நம்பாதே. நீயே சுயபுத்தியைக்கொண்டு யோசித்துப்பார்’ என்றுதான் அவர் சொல்கிறார்.
பகுத்தறிவு என்ற சொல் இங்கே அவரால் நிலைநாட்டப்பட்டது. பின்னர் அது ஓர் அரசியலியக்கமாக மாறியது. இன்றும் தமிழகத்தில் மிக அதிகமாக புழங்கும் சொற்களில் ஒன்று அது.
ஆனால் நாம் பகுத்தறிவுள்ள சமூகம்தானா? இங்கே பகுத்தறிவு இருக்கிறது என்றால் பிற மூன்றும் இருக்கும். தனிமனிதஉணர்வு இங்கே ஓங்கியிருக்கும். சிந்தனைச் சுதந்திரம் இருக்கும். உண்மையான ஜனநாயகம் இருக்கும்.
இந்தியாவில் எங்கும் அவை இல்லை என்பதே என் மனப்பதிவு. கல்விஅறிவுள்ள மாநிலங்களும் கல்வியறிவற்ற மாநிலங்களும் எல்லாம் இதில் சரிசமம்தான்.
காரணம் இந்தியாவில் தனிமனிதசிந்தனை- பகுத்தறிவு- ஜனநாயகம் ஆகியவற்றுக்கான பெரும் அறிவியக்கம் என ஏதும் நிகழவில்லை. ஐரோப்பாவில் நிகழ்ந்த அறிவியக்கத்தின் உதிரி எதிர்வினைகள் நிகழ்ந்து ஆங்காங்கே தேங்கி மறைந்தன, அவ்வளவுதான். ஆகவே நம் மக்களின் சிந்தனையில் எந்த அடிப்படை மாற்றமும் நிகழவில்லை.
சுதந்திரப்போராட்ட காலத்தில்தான் நாம் நவீனயுகத்துக்குள் காலடி எடுத்துவைக்கிறோம். ஆரம்பத்தில் தேசிய இயக்கம் தனிமனித சிந்தனையையும் ஜனநாயகத்தையும் முன்வைப்பதாகவே இருந்தது. ஆனால் மிக விரைவிலேயே அது பெருந்திரள்மனப்பான்மையைக் கொண்டு இன்னும் வலுவான அமைப்பாக ஆகமுடியும் என்பதைக் கண்டுகொண்டது. ‘மகாத்மா காந்திகீ ஜே’ என எப்போது காங்கிரஸ் கோஷமிட ஆரம்பித்ததோ அப்போதே அங்கே நவீன ஜனநாயகப்பண்புகள் அழிந்தன. திரள்மனப்பான்மை மேலோங்கியது.
சுதந்திரத்துக்குப்பின் நம் அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்களை தனிமனிதர்களாகச் சிந்திக்கவைப்பதற்கு பதிலாக திரளாகக் கோஷமிட வைப்பதே அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான எளியவழி என்று கண்டுகொண்டன. மூன்று தலைமுறைகள் அந்த மனநிலையிலேயே பிறந்து வளர்ந்தன. ஆம், பதினெட்டாம்நூற்றாண்டு ஐரோப்பாவில் நிகழ்ந்த சிந்தனைமாற்றம் இன்னும் இங்கே நிகழவில்லை.
இங்கே நுகர்வுத்தளத்தில் மட்டுமே நாம் முதலாளித்துவ சமூகத்தில் வாழ்கிறோம். மற்ற மனநிலைகள் எல்லாமே நிலப்பிரபுத்துவம் சார்ந்தவை. நம்முடைய குடும்பம், நாம் வேலைபார்க்கும் அலுவலகச்சூழல், நம்முடைய மதநம்பிக்கை, நாம் கொண்டிருக்கும் அரசியல் எல்லாமே நிலப்பிரபுத்துவக்காலத்தையவை. எந்தவிதமான காரண காரிய தர்க்கத்துக்கும் அங்கே இடமில்லை. வெறும் நம்பிக்கை, உணர்ச்சிகரமான பற்று ஆகியவற்றால்தான் நாம் செயல்படுகிறோம். இது நான் எப்போதுமே சொல்லிவரக்கூடிய கருத்து.
பகுத்தறிவும் தமிழகமும்…
அப்படியென்றால் ஈவேராவின் பகுத்தறிவுப்பிரச்சாரம் இங்கே என்னவாயிற்று? நாராயணகுருவும் காந்தியும் என்னவானார்களோ அதேதான் அவருக்கும் நிகழ்ந்தது. காந்தி மகாத்மாவாக ஆனார். நாராயணகுருவுக்கு கோயில்கள் கட்டப்பட்டன.
ஈவேரா ‘தந்தை’ ‘பெரியார்’ என்று இரண்டு பட்டங்களால் அடையாளம் காணப்பட்டார். நாம் பல்லாயிரம் வருடங்களாக மூதாதை வழிபாடும் மூத்தார் வழிபாடும் கொண்டிருக்கும் சமூகம். ஒருவரை தந்தை என்றும் பெரியவர் என்றும் சொல்லி தெய்வத்தின் இடத்துக்குக் கொண்டுசென்றுவிட்டால் அதன்பின் அவர் எதைச் சொன்னாலும் பொருட்படுத்தவேண்டியதில்லை. ‘அவரெல்லாம் பெரியவர், நாம சின்னவங்க…நம்மால அதெல்லாம் முடியுமா?’ என்று சொல்லி நகர்ந்துவிடலாம்.
வாழ்நாளெல்லாம் ஈவேரா அவர்கள் சொல்லிவந்த பகுத்தறிவு பற்றிய அறிவுறுத்தல்கள் அப்படித்தான் ‘தெய்வத்தின்குரல்’ ஆக மாறி மறைந்தன. ஈவேரா இந்திய சமூகத்தின் பெருந்திரள் மனநிலையைத்தான் மிகப்பெரிய பலவீனமாகக் கண்டார். ஆகவே எல்லா நம்பிக்கைகளையும் அவர் அடித்து நொறுக்க முயன்றார். எவையெல்லாம் புனிதமானவை, கேள்விக்கு அப்பாற்பட்டவை என்று கருதப்படுகின்றனவோ அவற்றை எல்லாம் விமர்சித்து கிண்டல்செய்து நிராகரிக்கிறார். மதம், இனம், மொழி, சாதி, கடவுள், ஆசாரங்கள் , பண்பாடு, பழம்பெருமைகள் எல்லாவற்றையும்.
தமிழ்ச்சமூகம் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டிருந்தால் கறாரான சுயவிமர்சனம் நோக்கிச் சென்றிருக்கும். தன்னுடைய நம்பிக்கைகளையும் உணர்ச்சிகளையும் எல்லாம் கிழித்து பரிசோதனைமேசைமேல் போட்டு ஆராய்ந்திருக்கும். அது சிறிய அளவில்கூட இங்கே நிகழவில்லை. நேர்மாறாக அவர்சொன்னவை எல்லாம் அவரது மகத்துவத்தின் இயல்புகளாக மட்டுமே கருதினர் நம் மக்கள்.
இந்தியாவில் இன்னும் பகுத்தறிவு- தனிமனிதசிந்தனை –ஜனநாயகத்துக்கான இயக்கம் தொடங்கப்படவேயில்லை என்று நான் சொன்னபோது மிகக்கடுமையாக எதிர்த்தனர் நண்பர்கள். மதம் அரசியல் தளங்களில் இங்கே பகுத்தறிவு சார்ந்த விமர்சனங்களுக்கு இடமிருக்கிறது என்றார்கள். குறிப்பாக ஈரோடுகிருஷ்ணன் இந்நிலைபாட்டை தீவிரமாக முன்வைத்தார்
தமிழகத்தில் பகுத்தறிவுவாதம் என்ற பேரில் நிகழ்வது மேல்மட்டத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திவந்த சில நம்பிக்கைகளை விமர்சிப்பது மட்டும்தான். அரசியல்தளத்தில் அந்த மேல்மட்ட ஆதிக்கம் இங்குள்ள பெரும்பான்மையினரால் இன்று தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஆகவே அதை விமர்சிப்பது எளிது. அதாவது தன் எதிரியின் நம்பிக்கைகளை விமர்சிப்பதைத்தான் இங்கே பகுத்தறிவு என்கிறார்கள். உண்மையான பகுத்தறிவு என்பது தன் சொந்த நம்பிக்கைகள் விமர்சிக்கப்படும்போது அதை ஒரு சமூகம் அனுமதிக்கிறதா என்பதில்தான் உள்ளது என்று நான் வாதிட்டேன்
இன்று தமிழகத்தில் எந்த ஒரு அரசியல்தலைவரைப்பற்றியும் விமர்சனபூர்வமாக ஒரு நூலை எழுதிவிடமுடியாது. பகுத்தறிவுபேசிய ஈவேரா அவர்களைப்பற்றிக்கூட. அந்த விமர்சனத்துக்கு பதில் வராது, உணர்ச்சிக்கொந்தளிப்பான எதிர்வினைகளும், மிரட்டலும் மட்டுமே வரும். சாதியத்தலைவர்களைப்பற்றி பேசவே முடியாது, சாதியவாதிகள் தங்கள் சாதிக்கென உருவாக்கும் பொய்வரலாறுகளைப்பற்றி ஓர் வரலாற்றாசிரியன் கருத்து தெரிவிக்கமுடியாது. கற்பு பற்றி தன் சொந்தக்கருத்தை ஒரு நடிகை சொன்னபோது தமிழகம் எப்படி எதிர்வினையாற்றியது என நாம் கண்டோம். என்னுடைய அனுபவங்களெல்லாமே கசப்பானவை. ஓர் எளிய வரலாற்றுக்குறிப்பைச் சொன்னதற்காக நான் தெருத்தெருவாக வசைபாடப்பட்டேன்.
எழுத்துரு விவாதம் ஏன்?
லடாக் பயணத்தில் அந்தவிவாதத்தின் முடிவில்தான் நான் சொன்னதைச் சோதித்துத்தான் பார்த்துவிடுவோம் என்ற எண்ணம் வந்தது. தமிழக அரசியலின் ‘புனிதபசுவாக’ போற்றப்படுவது மொழி. மொழிக்காக எவரும் எதுவும் செய்வதில்லை என்றாலும் மொழியை சென்ற ஐம்பதாண்டுக்காலமாக எந்த மதக்கொள்கையைவிடவும் தீவிரமான உணர்ச்சிகர நம்பிக்கையாக ஆக்கியிருக்கிறார்கள். கடவுளை வழிபடுவது பிற்போக்கு மொழியை வழிபடுவது முற்போக்கு என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.பகுத்தறிவை முன்வைத்த ஈவேரா அவர்களின் வழிவழ்ந்தவர்கள் உருவாக்கிய தீவிரநம்பிக்கை அது,
அது பற்றிய ஒரு கருத்தை முன்வைத்து எதிர்வினைகளை பார்ப்போம் என முடிவுசெய்தேன். இங்கே முற்போக்கினர் என்று சொல்லிக்கொள்பவர்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள், எத்தனைபேர் பகுத்தறிவுடன் பேசுகிறார்கள் என்று கணக்கிடுவோம் என்பதே நோக்கம். அவர்களின் உணர்ச்சிகர நம்பிக்கையைச் சீண்டக்கூடிய கருத்தாக இருக்கவேண்டும்.
அதேசமயம் அந்தக்கருத்து ஈவேரா அவர்கள் கூறியவற்றைப்போல ஒற்றைப்படையான ஒரு மறுப்போ நிராகரிப்போ ஆக இருக்கக்கூடாது. இருபக்கமும் பேச இடமிருக்கவேண்டும். பகுத்தறிவுநோக்கில் ஆராயும் ஒருவர் அந்தக்கருத்தின் வரலாற்றையும் அதன் எதிர்காலச் சாத்தியங்களையும் ஆராய வாய்ப்பிருக்கவேண்டும். ஆகவேதான் ஆங்கில எழுத்துரு விவகாரத்தை எடுத்துக்கொண்டேன்.
இந்தக்கருத்து புதியது அல்ல. ஏற்கனவே தொடர்ச்சியாக பல்வேறு அறிஞர்களால் அறிவுத்தளத்தில் முன்வைக்கப்படுவதுதான். உலகத்தமிழ்மாநாடுகளில் இது ஆய்வுக்கட்டுரைகளாக சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நிகழ்ந்துள்ளது. பலதளங்களில் இது சோதிக்கப்பட்டுள்ளது. இன்று உலகளாவிய பொதுமொழிக்கான தேடல் தொழில்நுட்பத்துறையில் நிகழ்ந்து வருகிறது.
உண்மையில் இன்று மொழிக்கல்வி மிகச்சிக்கலான ஓர் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிகளைக்கொண்டு அதைப்புரிந்துகொள்ளமுடியாது. அக்கட்டுரையில் நான் அதைப்பற்றிச் சொல்லியிருக்கும் விஷயங்கள் முழுக்கமுழுக்க உண்மை. தமிழில் மட்டுமல்ல , எழுத்தும் வாசிப்பும் பேரியக்கங்களாக இருந்த வங்காளம், உருது,மலையாளத்திலும்கூட அந்த நிலைதான். இளையதலைமுறை அம்மொழிகளில் வாசிப்பதில்லை. இந்தியமொழிகள் எல்லாமே சிறுபான்மையினரின் இலக்கியத்துக்கும், அன்றாடப்பேச்சுக்கும் மட்டுமே உரியவையாக ஆகிவருகின்றன, அவற்றில் அறிவியக்கம் நிகழாமலாகிவருகிறது.
அதற்கான தீர்வாக ஏற்கனவே அறிஞர்களால் பேசப்பட்டுவரும் பலவிஷயங்களில் ஒன்றை சுட்டிக்காட்டி அக்கட்டுரையை எழுதினேன். கட்டுரையில் அதுதான் ஒரே வழி என்று சொல்லவில்லை. அதைப்பற்றி யோசித்தாலென்ன, விவாதிக்கலாமே என்று மட்டுமே சொல்லியிருக்கிறேன்.சர்வதேசப்பொது எழுத்துருவில் தமிழ் என்ற விஷயம் வரும்காலத்தில் விவாதித்தேயாகவேண்டிய விஷயம். எவரும் அதற்கு எதிராக கண்களை மூடிக்கொள்ளமுடியாது. அந்த விவாதம் தொடங்கவேண்டுமென்றே நான் ஆசைப்பட்டேன். அது நிகழ்ந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.
உண்மையில் இந்த விவாதத்தின் மையம் இப்படி ஒரு கருத்தை முன்வைக்கும்போது அது எப்படி எதிர்கொள்ளப்படுகிறது என்று பார்ப்பதுதான். எதிர்வினையாக வெளிவருவது வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பு.இந்த அளவுக்கு தமிழ்ப்பற்று உண்மையில் இங்கே இருந்தால் ஏன் இங்கே நூலகங்கள் ஈயடிக்கின்றன? ஏன் நூல்கள் தேங்கிக்கிடக்கின்றன? நம் மாணவர்களில் சொந்தமாக தமிழில் ஒரு பத்தி எழுதத்தெரிந்தவர்கள் ஒருசதவீதம்கூட இருக்கமாட்டார்கள் என்ற உண்மை ஏன் எவருக்குமே ஒரு பொருட்டாகத்தெரிவதில்லை?
இங்கே சொல்லப்படும் எதிர்வினைகளைப்பாருங்கள். மொழியின் எழுத்துருவை மாற்றக்கூடாது, மாற்றினால் தமிழ் அழியும், ஏனென்றால் அது முன்னோர் வகுத்தது, அதில்தான் திருவள்ளுவர் எழுதினார் [திருவள்ளுவர் பிராமி எழுத்துருவில் எழுதியிருப்பார்] மொழி என்பது தாய்போல– இதெல்லாம்தான் சொல்லப்பட்டன. இதைத்தான் எல்லா மதநம்பிக்கையாளர்களும் சொல்கிறார்கள்.
இதில் எங்கே இருக்கிறது பகுத்தறிவு?இந்த கொந்தளிப்பு, வசை நிறைந்த எதிர்வினைகளுக்கும் மதம் சார்ந்தும் சாதி சார்ந்தும் வரும் எதிர்வினைகளுக்கும் என்ன வேறுபாடு? எல்லாமே வெறும் உணர்ச்சிகள் மட்டும்தானே? ஒரு கோயில்சடங்கை மாற்றியமைக்கையில் கொந்தளிக்கும் பக்தனும், சாதியாசாரம் மீறப்படுகையில் அரிவாள் தூக்கும் கிராமவாசியும் இதே மனநிலையில்தானே இருக்கிறார்கள்? இதற்கு எதிராகத்தானே ஈவேரா பகுத்தறிவை முன்வைத்தார்?
எழுத்துரு விவாதத்தின் சரியான தரப்புகள்..
என் கருத்துக்கு பகுத்தறிவு சார்ந்த எதிர்வினை இரண்டு தரப்பில் இருந்து மட்டுமே வரும் என்று நான் வாதிட்டேன். ஒன்று, உண்மையான மார்க்ஸிஸ்டுகளின் சிறிய அறிவுத்தளம். இன்னொன்று சிற்றிதழ்கள் சார்ந்த அதைவிடச்சிறிய அறிவுத்தளம். மொத்த எதிர்வினையில் பத்துசதவீதத்துக்குள் அவர்கள் அடங்குவார்கள். மற்றவர்கள் பெருந்திரள் எதிர்வினைகளை மட்டுமே செய்வார்கள் என்றேன்.
நான் எண்ணியதே நடந்தது. எதிர்வினைகளில் சிலரே தர்க்கபூர்வமாக எழுதினர். இந்தியமொழிகளுக்கு ஆங்கில எழுத்துருவைப் பயன்படுத்துவதைப்பற்றிய பேச்சு 1920 கள் முதலே இருந்துவருவதைச் சிலர் சுட்டிக்காட்டியிருந்தனர். அனைத்துமொழிகளுக்கும் தேவநாகரி எழுத்துருவைப் பயன்படுத்துவது பற்றியும் இங்கே பேசப்பட்டுள்ளது. அதற்கு எதிராகவும் ஆங்கில எழுத்துருவை பயன்படுத்துவதைப்பற்றி பேசியிருக்கிறார்கள்.
வ.செ.குழந்தைசாமி உள்ளிட்ட பலமுன்னோடி அறிஞர்கள் இந்த ஆலோசனையை குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டி எழுதியிருந்தனர் சிலர். ராணுவத்தில் இந்தியை ஆங்கில எழுத்துருவில் எழுதும் முயற்சி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. அது இன்னும் ஓரளவு புழக்கத்தில் உள்ளது என்று சுட்டிக்காட்டி இம்முயற்சி தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்றனர்.
இதைத்தவிர இந்தியமொழிகளுக்காக ஒரு பொது எழுத்துருவை உருவாக்கும் முயற்சிகள் நிகழ்ந்தன சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர்களால் உருவாக்கப்பட்ட பாரதி என்ற பொது எழுத்துரு இன்னும் சோதனைத்தளத்தில் உள்ளது என்று செந்தில்குமார் தேவன் ஐஐடியில் இருந்து எழுதினார்
மொழியியலாளர் நா.கணேசன் . ‘ஜெயமோகன் ஓர் இன்றியமையாத விவாதத்துக்கு வழிகோலியிருக்கிறார்’ என்று சொல்லி ‘ஏற்கெனவே, தமிழ் உள்ளிட்ட எல்லா இந்திய மொழிகளையும் ரோமன் எழுத்துமுறையில் எழுதும் ISO 15919 முறை இருக்கிறது. மாநிலங்களுக்கிடையில் தகவல் பரிமாற்றத்துக்கு ரோமன் எழுத்துமுறையைக் கையாளலாம். ISO 15919 வினோத் ராஜனின் அக்ஷரமுகம் பயன்படுத்தி ஆண்டிராய்ட், ஐபோன் போன்றவற்றுக்கு அளிக்கவேண்டும். அப்போது தமிழ் லிபி வலைப்பக்கங்களை, மின்மடல்களை, குறுஞ்செய்திகளை ரோமன் லிபியில் படிக்கலாம். கணிமுனைவர்கள் இந்த Apps செய்து அளிப்பது மிக எளிது. ஆசிய மொழிகள் அனைத்துக்குமே Digraphia என்னும் பொதுமுறை வந்த்துவிட்டது’ என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தியாவின் எல்லா மொழிகளும் தொடர்ந்து எழுத்துருக்களை மாற்றிக்கொண்டேதான் உள்ளன. மலையாள எழுத்துக்கள் அச்சுக்காக முப்பதுகளில் மாற்றப்பட்டன. கணிப்பொறிக்காக தொண்ணூறுகளில் மாற்றப்பட்டன. அம்மாற்றங்கள் மிக எளிதாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஏன் தமிழகத்திலேயே உலகளாவிய அரபு எண்கள் நூறாண்டுகளுக்கு முன்புதான் அறிமுகம்செய்யப்பட்டன. தமிழ் எண்கள் இன்று பொதுப்புழக்கத்தில் இல்லை. இன்னும்கூட தங்கள் சொந்த மொழு எண்களை மராட்டியத்திலும் குஜராத்திலும் கிராமப்புறங்களில் அவர்கள் பயன்படுத்துவதைக் காணலாம். உலகிலிருந்து துண்டிக்கப்பட்டவர்களாக அவர்கள் வாழ்வதுபோலத் தோன்றும். எழுத்துரு மாற்றம் மொழியை ஒருபோதும் மாற்றுவதில்லை. மொழியின் உள்ளடக்கமே மொழி.
இவ்வாறு மொழியின் எழுத்துருவம் மாறும்போது மொழிக்குரிய தனித்த உச்சரிப்புமுறை அழியக்கூடும். மொழியின் இலக்கியங்களில் பெரும்பகுதி அன்னியமாகக்கூடும். மேலும் அப்படி ஒரு உலகப்பொதுமை வரலாற்றில் நிகழ இடமளிக்கக்கூடாது. அது வல்லாதிக்கமாகவே இருக்கும்— இது சிலருடைய கருத்தாக இருந்தது.
— இவ்வாறு சாதகபாதகங்களைக் கணக்கில் கொண்டு பேசப்படும் ஒரு விரிவான விவாதத்தையே பகுத்தறிவுசார்ந்தது என்று சொல்லமுடியும். அவ்வகை எதிர்வினைகள் மிகமிகக்குறைவாகவே வந்தன. பெரும்பாலும் என்னுடைய வாசகர்வட்டத்துக்குள் அவை நிகழ்தது எனக்கு பெருமிதமளிக்கிறது
எழுத்துரு பற்றி என் கருத்து என்ன?
சரி, நான் என்ன நினைக்கிறேன்? என் கருத்துக்களை நான் முன்வைக்கும் முறையை அறிந்தவர்கள் ஒருபோதும் ஒற்றைப்படையாக நான் ஒன்றைச் சொல்வதில்லை என்பதை கவனித்திருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் நேர்நிலை –எதிர்மறை கருத்துக்களை தொகுத்துச்சொல்லி அதன் சாரமாக என் தரப்பைச் சொல்வதே வழக்கம்.
ஆங்கில [ரோமன்] எழுத்துருக்களில் ஆசிய மொழிகளை எழுதுவதில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. மக்கள் ஒரே எழுத்துருவைக் கற்றால்போதுமானது என்பது ஒன்று. ரோமன் எழுத்துரு இன்னும் அரைநூற்றாண்டில் உலகளாவிய எழுத்துருவாக இருக்கக்கூடும் என்ற வரலாற்றுச்சாத்தியத்தைப்பார்க்கையில் அது முக்கியமான ஒரு விஷயம். தமிழ்மக்கள் உலகளாவிய பொதுப்போக்கில் இணைவதுடன் தமிழையும் தக்கவைத்துக்கொள்ள அது உதவும்.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதைநோக்கித்தான் உலகம்செல்கிறதோ, அடுத்த நூறாண்டுகளில் அதுவே யதார்த்தமாக இருக்குமோ என்ற எண்ணம் என்னிடம் உள்ளது. இன்று தகவல்தொடர்பு என்பதே உலகளாவிய உரையாடல் என்றாகிவருகிறது. நமக்குள்பேசிக்கொள்ளும் மொழி நம்முடைய அந்தரங்க வீட்டுமொழியாக மட்டுமே சுருங்கும்போது சர்வதேச மொழி அல்லது மொழிகள் நம் தொழிலிலும் கல்வியிலும் ஆதிக்கம்செலுத்துவதைத் தவிர்க்கவே முடியாதென்று தோன்றுகிறது.
ஆகவே பல தளங்களில் பொது எழுத்துருவுக்கான முயற்சிகள் இன்று நிகழ்கின்றன. அந்த இடத்தை ஆங்கிலத்தின் எழுத்துருவே அடைந்தும் வருகிறது. இன்று உண்மையிலேயே வணிகத்தளத்தில் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதுவது நடந்துவருகிறது.
அப்படி மாற்றம் நிகழும்போது நான் எழுதுவது உட்பட இன்று பல உலகமொழிகளில் இருக்கும் இலக்கியங்கள் முழுக்க வெறும் வரலாற்றுச்சேகரிப்பாக மாறி ஆராய்ச்சிப்பொருளாக மட்டும் எஞ்சக்கூடும் என்றும் மிகச்சில பக்கங்களே உலகளாவிய அறிவியக்கம் நிகழும் மொழிகளுக்குச் சென்று அடுத்தடுத்த தலைமுறையினரின் கவனத்தில் நீடிக்கும் என்றும் அஞ்சுகிறேன்.
காரணம், சென்ற ஐம்பதாண்டுகளில் உலகின்போக்கை கவனித்தால் சீராக உலகப்பொதுமை ஒன்று உருவாகிக்கொண்டிருப்பதையே காண்கிறோம். தனித்தன்மைகள் அடையாளம் காணப்பட்டு தொகுக்கப்பட்டு ஆராய்ச்சித்தகவல்களாக மட்டும் சேமிக்கப்படுகின்றன ,அவ்வளவுதான்.
இச்சூழலில் எல்லா தனித்தன்மைகளும் வாழவேண்டும் என்றும், இல்லையேல் அறிவியக்கம் நீடிக்கும் – இலக்கியம் அழியும் என்றும்தான் ஐயப்படுகிறேன். இதன் எதிர்மறை விளைவுகளை கணக்கில் கொண்டு பார்க்கிறேன். வேகமாக தனித்தன்மைகள் கைவிடப்படுகின்றன. அவற்றை ‘பாதுகாக்கும்’ முயற்சிகள்தான் நிகழ்கின்றனவே ஒழிய ‘வாழ்வாக நீடிக்கச் செய்வது’ பற்றிய விவாதங்களே இல்லை
இது அதீதக் கற்பனையாக இருக்கலாம். ஆனால் சென்ற அரை நூற்றாண்டுக்குள் உலகமெங்கும் நாட்டார்கலைகள் அழிந்துவிட்டன என்பதை நாம் கவனிக்கவேண்டும். நம் தந்தையின் வாழ்க்கையில் பிரிக்கமுடியாத அம்சமாக இருந்த நாட்டார்கலைகளில் பெரும்பகுதி இன்று இல்லை. அவை ‘ஆவண’ப்படுத்தப்படுகின்றன. சடங்குகளாக மட்டும் நடத்தப்படுகின்றன. இன்றைய கலைகள் எவையும் வட்டாரத்தன்மை கொண்டவை அல்ல. அவை உலகளாவியவை மட்டுமே.
எழுத்தாளனாக இந்தக் கவலையை தொடர்ந்து நூற்றுக்கணக்கான முறை முன்வைத்திருக்கிறேன். பண்பாட்டின் நுண்ணிய வேற்றுமைகள் அழிந்தால் கலையிலக்கியம் பெரிய சரிவைச் சந்திக்கும். பொதுமைக்கு எதிராக தனித்தன்மை அதேயளவுக்கு வலிமையுடன் முன்வைக்கப்படவேண்டும்.
இவ்வாறு இரு தரப்பையும் பார்க்கையில் தமிழ் எழுத்துரு மட்டுமல்ல எல்லா எழுத்துருக்களும் நீடிக்கவேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். அதற்கான வழி என்பது மொழியையோ எழுத்துருவையோ கட்டாயப்படுத்துவது அல்ல. உணர்ச்சிகரமான வெற்றுக் கோஷங்களும் அல்ல. எந்த நவீனத்தொழில்நுட்பம் இந்தச் சிக்கலை உருவாக்குகிறதோ அதையே இதற்கு எதிராக துணைகொள்வதுதான். இதை இந்த தளத்திலேயே முன்னரும் எழுதியிருக்கிறேன். இதைப்பற்றிய பொதுவிவாதம் வேண்டும் என்றே விரும்புகிறேன்.
ஆங்கில எழுத்துருவில், அல்லது இனிவரப்போகும் பொதுஎழுத்துருவில் தமிழ் எழுதப்படுவது எப்படியும் நிகழ்ந்தே தீரும்.அதன் விளைவுகளை நாம் யோசிக்கவேண்டும். அதில் தமிழ் எழுதப்பட்டு பெருவாரியாக வாசிக்கப்படுமென்றால் தமிழ் நடைமுறைத்தளத்தில் வாழவே செய்யும்.கூடவே மொழியின் பல தனித்தன்மைகள் அழியும். ஆகவே அந்த எழுத்துரு ஒரு தனித்த போக்காக நிகழும்போது இன்றைய எழுத்துருவும் நீடிப்பதற்கு என்னசெய்யலாம் என்பதைப்பற்றி பேசியே ஆகவேண்டும். இதுவே இன்று என் எண்ணம்
இவ்விவாதம் இன்று உருவாகிவரும் சூழலை கவனிப்பதற்கும் அதை வெல்வதற்கான வழிகளை ஆராயவும் உதவினால் நல்லது. அதற்குத்தேவை சமநிலையான, பகுத்தறிவுசார்ந்த அணுகுமுறை.
சீண்டுவது பற்றி…
இத்தகைய விவாதங்களைப்பற்றி பொதுவாகவே ஒரு புகார் சொல்லப்படுகிறது. இதிலுள்ள சீண்டும் அம்சம், கவன ஈர்ப்பு அம்சம் பற்றி. இதைப்பற்றி நான் மீண்டும் மீண்டும் பதில்சொல்லியிருக்கிறேன். இப்போது மீண்டும்.
உலக இலக்கிய வரலற்றில் தன் சமகாலச் சிந்தனைச் சூழலை சீண்டாத, விவாதத்துக்கு இழுக்காத முக்கியமான படைப்பாளிகள் அனேகமாக எவரும் கிடையாது. இலக்கியப்படைப்பாளிகள் அதனூடாக எப்போதுமே சர்ச்சைக்கு காரணமாகிறார்கள். தல்ஸ்தோய் முதல் லோஸா வரை, புதுமைப்பித்தன் முதல் ஜெயகாந்தன் வரை இதுதான் வரலாறு. இதில் சிறைசென்றவர்கள் உண்டு- டி.எச்.லாரன்ஸ் போல. நாட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் உண்டு- லூகி பிரண்டல்லோ போல.
சமகாலத்தின் சிந்தனை வரட்சியை, அறவீழ்ச்சியை, போலி ஒழுக்கத்தை சுட்டிக்காட்டுவது எப்போதுமே எழுத்தாளனின் கடமை. உண்மையில் அது பற்றிய கவலைகளும் ஒவ்வாமைகளுமே அவனை எழுதச்செய்கின்றன. அவ்வாறன்றி சமகாலத்தின் பொதுமக்களின் உணர்ச்சிகளுடனும் சிந்தனைகளுடனும் தானும் இணைந்திருக்கக்கூடிய எழுத்தாளன் எதையும் உருப்படியாக எழுத முடியாது.
ஆகவேதான் சமூக- பண்பாட்டு விமர்சனம் இல்லாமல் நவீனஇலக்கியம் இருக்கமுடியாது என்று சொல்லப்படுகிறது. அந்த விமர்சனம் சமகாலச்சமூகத்தை தொந்தரவு செய்யும். அமைதியிழக்கச் செய்யும். பிரச்சினைகளுக்கு உள்ளாக்கும். அதற்கான எதிர்வினையை சமூகம் அளிக்கும். வசைபாடும், நகையாடும். ஆனால் அதனூடாகவே எழுத்தாளன் சமூகத்திடம் பேசுகிறான். ஆகவே என்னைப்பொறுத்தவரை இது என் பணி. இதை நான் செய்யாமலிருக்கமுடியாது.
எழுத்தாளர்கள் சர்ச்சையை உருவாக்கக் கூடாது, சமகாலத்தை விமர்சிக்கக்கூடாது, கருத்துக்களை முன்வைக்கக்கூடாது என்று சொல்லக்கூடியவர்கள் இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாத ஒருவகை பாமரர்கள். அவர்களின் எண்ணிக்கைக்கு இங்கே குறைவே இல்லை. அவர்கள் மனதில் எழுத்தாளனுக்கு இடமே இல்லை. அவன் அவர்கள் நோக்கில் ஒருவகை கேளிக்கையாளன் மட்டுமே. ஆகவே தங்கள் சிந்தனைத்தேக்கத்தைச் சுட்டிக்காட்டுகையில் திகைப்பும் எரிச்சலும் கொள்கிறார்கள்.
சென்ற இருதினங்களில் எனக்கு ஓர் எழுத்தாளன் எப்படி இருக்கவேண்டும் என்ற உபதேசங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் வந்தன. இக்கட்டுரைகளுக்கான பின்னூட்டங்களைப்பார்த்தால் அதிலுள்ள எரிச்சலும் வசையும் பொதுவாகவே எழுத்தாளர் என்ற ஆளுமைக்கே எதிரானவை என்பதை எவரும் காணமுடியும். எழுத்தாளர்கள் சமூகத்தின் நல்லெண்ணத்தை ஈட்டவேண்டியவர்கள் என்ற தோரணையே நம்மவர்களிடம் எப்போதும் உள்ளது.
இன்னொரு குரல் இது விளம்பரத்துக்காகச் செய்யப்படுவது என்பது. இதைச்சொல்பவர்களை கூர்ந்து கவனியுங்கள், இவர்களுக்கும் இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாது. இலக்கியம் ஒருவகையான ‘ஷோ பிஸினஸ்’ என்றுதான் அறிந்து வைத்திருக்கிறார்கள். விளம்பரம் என்பது அங்கே இருந்து இவர்கள் பெற்றுக்கொண்டிருக்கும் வார்த்தை. இவர்கள் உள்ளூர ஏங்குவது, இவர்கள் செயல்படுவது அந்த விளம்பரத்துக்காக மட்டுமே.
தமிழக இலக்கியச் சூழலில் அத்தகைய ‘விளம்பரத்தின்’ பலன் என ஏதுமில்லை. அதனால் பணம் என ஏதும் கிடைக்கப்போவதில்லை. புகழுக்குப்பதில் வசைகளும் எக்காளங்களும் மிரட்டல்களுமே கிடைக்கும். அது இவர்களுக்கும் நன்றாகவே தெரியும், ஆகவேதான் இவர்கள் ஒருபோதும் இந்த வழியைத் தேர்வுசெய்வதில்லை. சமகாலச் சமூகத்தின் பொதுமனநிலைகளுக்கு எதிராக நின்று பேசுவதற்கு அதற்கான திடசிந்தனையும் ஆன்மவல்லமையும் தேவை.
அப்படி ஓர் ஆளுமையை தனக்கென உருவாக்கிக் கொண்டவர்களை மட்டுமே அச்சமூகம் கவனிக்கும். அவன் கருத்து மட்டுமே விவாதங்களை எழுப்பும் உண்மையில் இந்த எதிர்வினைகள் எல்லாமே அதைச் சொல்பவனின் மீதுள்ள உள்ளார்ந்த மதிப்பின் மறுபக்கங்கள்தான். அவன் குரல் கவனிக்கப்படுகிறதென்றே அதற்குப்பொருள். இந்தக் கவனத்தை வெறும் விளம்பரம் என்பவர்கள் கவனத்தைக் கவர்வதற்கான என்னென்ன அந்தர்பல்டிகளெல்லாம் அடிக்கிறார்கள் என்று கவனியுங்கள், அதை இச்சமூகம் எப்படி சாதாரணமாகக் கடந்து செல்கிறதென்பதை அறிவீர்கள்.
எனக்கு ஏதாவது இச்சமூகத்திடம் சொல்வதற்கிருப்பது வரை, நான் இச்சமூகத்தை கவனிக்கச்செய்து நான் சொல்வதை முன்வைத்தபடியேதான் இருப்பேன். அது விவாதங்களை உருவாக்கியபடியேதான் இருக்கும். எந்த எதிர்வினையும் இல்லாமல்போவதே எழுத்தாளனின் தோல்வி.
இது விளம்பரத்துக்கான உத்தி என்றால் தல்ஸ்தோய் சமகால ஒழுக்கச்சூழலை கடுமையாக விமர்சித்ததும் இருட்டின் வெற்றி போன்ற நாடகத்தை எழுதியதும் அதன் எதிர்வினைகளும் எல்லாமே வெறும் விளம்பரங்களே. டி.எச்.லாரன்ஸின் கட்டுரைகளும் விவாதங்களும் வெறும் பரபரப்புதேடல்களே.உல்க இலக்கியத்தின் அத்தனை முன்னோடிகளும் விளம்பரத்துக்கான ‘ஸ்டண்ட்’ அடித்தவர்களே.
நான் முன்னோடிகளாகக் கொள்ளும் அத்தனை சிந்தனையாளர்களும் இதைசெய்தவர்களே. செய்துகொண்டிருப்பவர்களே.இப்போதுகூட பால் சகரியா கேரளச் சமூகத்தில் உருவாக்கும் நேரடியான பாதிப்பை என்னால் உருவாக்கமுடியவில்லை என்றே உணர்கிறேன்.
இலக்கியவரலாற்றை அறியாத, இலக்கியவாதியின் பணியை உணரமுடியாத பாமரர்களின் பிதற்றலை நான் கணக்கில் கொள்ளவில்லை. இலக்கியத்திற்குள் நுழையவிருக்கும் வாசகர்கள், எழுதப்போகும் படைப்பாளிகளுக்காகவே இதை எழுதுகிறேன்.நீங்கள் காண்பது இணையமெங்கும் அச்சு ஊடகமெங்கும் விரவிக்கிடக்கும் வசைகளை. ஆனால் என்றும் எப்போதும் நல்ல இலக்கியவாதி அவ்வாறான எதிர்வினைகள் வழியாகவேதான் செயல்பட்டான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எழுத்தாளர் என்றால் அந்த வசைகளுக்காக முயலுங்கள்.
நாமிருக்கும் இடம்…
எதிர்வினைகள் நான் எதிர்பார்த்தவகையிலேயே இருந்தன என்றேன். நான் இந்தியாவில் தனிமனிதசிந்தனை- பகுத்தறிவு- ஜனநாயகம் உருவாகவே இல்லை என்று சொல்லிவருவதற்கான அழுத்தமான ஆதாரங்கள் இந்த எதிர்வினைகள். இனி எவருமே அப்படி இல்லை என என்னிடம் விவாதிக்கமுடியாது
ஆனால் இது எனக்கு அச்சத்தையும் ஆழமான வருத்ததையுமே அளிக்கிறது. மத்தியகாலகட்டத்தில் மதவாதிகளை எதிர்கொண்ட பகுத்தறிவாளனின் தனிமையை உணரமுடிகிறது என்னால்.
நாம் இன்னும் பதினெட்டாம்நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த சிந்தனைமாற்றங்களைக்கூட அடையாத சமூகமாகவே உள்ளோம். இன்னும் கருத்துக்களை புறவயமாக யோசிக்க, தர்க்கபூர்வமாக விவாதிக்க, நிதானமாக எல்லா தரப்புக்களையும் பரிசீலிக்க நாம் பழகவில்லை. இன்னும் சிந்தனையில் தனிமனிதனுக்குள்ள உரிமையை நாம் புரிந்துகொள்ளவில்லை. எந்த ஒரு கருத்தும் தயக்கமில்லாமல் முன்வைக்கப்படும் சூழலை உருவாக்காமல் சிந்தனையை வளர்க்க முடியாது என்று நாம் கற்கவில்லை. ஆம், நாம் பகுத்தறிவை நோக்கிய முதல் காலடியைக்கூட எடுத்து வைக்கவில்லை.
அதை நமக்கு நாமே பொட்டிலறைந்தாற்போல தெளிவுபடுத்தவே அக்கட்டுரை எழுதப்பட்டது.இப்போது அது தெளிவாகிவிட்டது. நாம் இங்கிருந்துதான் மேலே சிந்திக்க ஆரம்பிக்கவேண்டும்.
முந்தைய கட்டுரைகள்
அரசியல் – விவாதங்கள்
ஏன் விவதிக்கிறேன்/
பெரியாரைப் பற்றி ஜெயமோகன் இன்று
“ஆனால் நான் பார்த்தவரையில் நேரடியாகவே பகுத்தறிவு என்ற அடிப்படையை தீவிரமாக முன்வைத்தவர் ஈவேரா அவர்கள். தன் வாழ்நாளெல்லாம் திரும்பத்திரும்ப அதை அவர் சொல்லியிருக்கிறார். இந்த விவாதத்துக்குப்பின் அவரது எழுத்துக்களை மீண்டும் வாசித்துப்பார்த்தபோது அத்தனை உரைகளையும் அவர் தனிமனித சிந்தனையை நோக்கியே முன்வைத்திருப்பதை கவனித்தேன்.”
பெரியாரைப் பற்றி ஜெயமோகன் அன்று
”ஈ.வே.ரா உருவாக்கிய அறிவார்ந்த விவாதத் தளம் மிக மேலோட்டமானது. அவசர முடிவுகளின் அடிப்படையில் அதி மூர்க்கமான செயல் பாடுகளில் இறங்கும் போக்கு கொண்டது. அறிவியக்கத்தின் அடிப்படை விதிகளைப் பாமரத்தனமாக நிராகரிக்கும் இயல்பு கொண்டது என்பதே என் விமரிசனம். அதனால்தான் அவரது இயக்கம் ஒரு அறிவியக்கமாக ஆகாமல் போயிற்று.”
இதைக் கோடிகாட்டியிருந்தேன். என்னை வாசிப்பவர்களுக்கு இவ்விவாதத்தை நான் ஏன் முன்வைக்கிறேன் என்பது தெளிவாகவே தெரிந்திருக்கும். தமிழை உடனே ஆங்கில எழுத்துக்களில் எழுத ஆரம்பிக்கவேண்டும் என்று சொல்லுமளவுக்கோ, உலகமொழிகள் எல்லாம் தனித்தன்மையை உதறிவிடவேண்டும் என்று ஒற்றைப்படையாக வாதிடுமளவுக்கோ நான் அடிமுட்டாளல்ல என்றாவது என் எழுத்துக்களை வாசிப்பவர்கள் ஊகிக்க முடியும்]
'உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோவையும் மக்கள் முட்டாள் என்று தான் சொன்னார்கள்.. அது போல தான் இதுவும்' என்று ஜெமோவுக்கு சளைக்காமல் ஈடுகொடுத்து ஆடிய அவரது தலைமை சீடர்களை நினைத்தால் தான் சிரிப்பாக வருகிறது..:)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
தமிழ்தேசியம் பத்தி 40-50 வருஷமா பேசிட்டு இருக்காங்களா... டவுட்டு...
அப்படியில்லடா தம்பி
ஆனால்.. ஜெமொ பலமாகச் சறுக்கிய பதிவுகளில் இடுவும் ஒன்று.
:)))
அந்தளவுக்குப் போகாவிட்ட்டாலும் ஜெமொ எழுதியது மிகப்பெரும் அபத்தம்
அதை ஒப்புக் கொள்ள வழியில்லாமல் அவர்தான் சொதப்பிட்டிருக்காருன்னா நீயும் அதையே செய்யும்போது..ஹிஹி நல்லா இருடே!
எனக்குத் தெரிந்து ஞாநி, நேசமித்ரன் முதற்கொண்டு பகிரப்பட்ட கட்டுரைகள் எல்லாமே மறு மொழியாகத்தான் எனக்கு பட்டன! ஜெயமோகனின் மேல் தனி மனித வசைபாடல் மட்டும் உமக்கு கண்ணுக்கு தெரிந்திருக்கிறது.
அப்படியில்லை அண்ணாச்சி.திராவிடம், தமிழ், செக்யூலிரிசம், தமிழ்தேசியம், இன்னபிற போன்றவற்றில் கடந்த 40-50 வருசமா நமக்கு ஒரு அரசியல் கற்பிதம் இருக்கு. அதை மறுத்து பேசினாலோ எதிர்த்து கேள்வி கேட்டாலோ அதன் புனிதம் கெட்டுப்போயிடும்னும், அதை எதிர்த்து கேள்வி கேட்டாலே அவர் புறக்கணிக்கப்பட வேண்டியவர்னும் இங்க ஒரு நடைமுறை இருக்கு. பலருக்கு அதில் உடன்பாடில்லைனாலும், எதிர்த்து பேச நாட்டமில்லை. நான் வெட்டியா இருக்குறதால எதிர்த்து பேசிக்கிட்டு இருக்கேன். அம்புட்டுதான்.
யூ மீன் டு சே அவரும் வெட்டியா இருக்கார்?
ஆனா அவரும் ஜெ.மோ குறிப்பிட்ட காரணிகளையும், மாற்று தீர்வையும் முன் வச்சி பேசினதான் நினைவில்லை. மாறாக ஜெயமோகன் அவதானிப்பு தவறென்னும், பிதற்றுகிறார் என்றும், கவன ஈர்ப்புக்கு முயற்சிக்கிறார் என்றும் சொன்னதாய் நினைவு.
ஜெமோவே, அது மாற்று தீர்வு இல்லை சும்மா உசுப்பு ஏத்திறதுக்கு தான் சொன்னேன்னு சொல்லியாச்சு தம்பி..