குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்!

2,405 views
Skip to first unread message

காமேஷ்

unread,
May 8, 2012, 5:20:17 AM5/8/12
to பண்புடன், முத்தமிழ்
http://marumagal.blogspot.in/2011/10/blog-post_23.html

மீள் பதிவு.

குடும்ப வன்முறையிலிருந்து மீள வழி கூறும் வழக்கறிஞர் அஜிதா:

"குடும்பம் வேண்டும்; வன்முறை வேண்டாம்' என்று சொல்லும் பெண்களுக்காக, இது ஒரு சிவில் சட்டமாக போடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தில் ஒருவர் மீது புகார் கொடுத்தால், அவர்களைக் கைது செய்வதோ, சிறையில் அடைப்பதோ இல்லை. மாறாக, பாதுகாப்பு அதிகாரி என்ற ஒருவரை, ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிப்பர். இவர்களிடம் நேரடியாக புகார் தரலாம்.புகார் தரும் போது, பாதிக்கப்பட்ட பெண் என்றில்லை, அவர் சார்பாக, வீட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் தரலாம்.ஆனால், இந்தச் சட்டத்தில், தன் குடும்பத்தில் உள்ள ஆணுக்கு எதிராக மட்டும் தான் புகார் தர முடியும். வேறு யார் மீதும் புகார் தர முடியாது. 

ஒரு வீட்டில் வன்முறைக்கு யார் காரணமோ, அந்த ஆணுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, அதன் பின் அவரை யாராவது தூண்டினால், சம்பந்தப்பட்ட பெண் மீதும் புகார் தரலாம். புகாரைப் பெற்றுக் கொண்டவுடன், சம்பந்தப்பட்டவருக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பி, பேசச் சொல்வார்கள். அதனடிப்படையில், கோர்ட் சில உத்தரவுகளை வழங்கும். அதன்படி, வீட்டிற்கு வரக் கூடாது, பேசக் கூடாது. இப்படி எந்தவித பாதுகாப்பு உத்தரவை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். 

எதற்குமே கட்டுப்படாமல் இருப்பவர்களுக்கு எதிராகத் தான் இந்தச் சட்டம். புகார் மீதான ஆரம்பக் கட்ட நடவடிக்கையின் போதே, சிலர் "பிரச்னை செய்ய மாட்டேன்' என்று சொல்லி வீட்டிற்கு வருவர். வந்த பின், பழையபடி பிரச்னையை ஆரம்பிக்கலாம் என்பதால், அவர்களிடம் எழுதி வாங்கிக் கொள்வர். இதன் விளைவாக ஒன்று, சரியாவார்கள் அல்லது வேறு நல்ல தீர்வுக்கு வழி கிடைக்கும்!
======

இனி இந்த சட்டத்தில் மேலே குறிப்பிட்டுள்ள விளக்கத்தினைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்....

  • ஆனால், இந்தச் சட்டத்தில், தன் குடும்பத்தில் உள்ள ஆணுக்கு எதிராக மட்டும் தான் புகார் தர முடியும். வேறு யார் மீதும் புகார் தர முடியாது.
இந்த சட்டத்தைப் பயன்படுத்தி வீட்டில் இருக்கும் ஆண் மீது மட்டும்தான் புகார் தரமுடியும். ஏனென்றால் ஆண்கள்தான் எப்போதும் கொடுமை செய்யும் கொடுமைக்காரன்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதனால் கணவன், தந்தை, சகோதரன், கணவனின் சகோதரன், திருமணம் செய்யாமல் கூடி வாழும் துணைவன், நாத்தனார்களின் கணவன்கள் என எந்த ஆண் மீது வேண்டுமானாலும் இந்த சட்டத்தின் மூலம் புகார் கூறலாம்.

குறிப்பாக மகளின் காதலுக்குத் தடைபோடும் அப்பா மீதும் இந்த சட்டத்தை மகள் ஏவிவிடலாம். எல்லாம் குடும்ப வன்முறைதானே...அதற்கும் இந்த சட்டத்தில் வழி இருக்கிறது! இதைப் பற்றி மற்றொரு பதிவில் விரிவாக எழுதியிருக்கிறேன். இங்கே சென்று படித்துப் பாருங்கள்: காதலுக்கு தடை போடும் பெற்றோருக்கு பாடம் கற்பிக்க வந்துவிட்டது சட்டம்! 

  • கோர்ட் சில உத்தரவுகளை வழங்கும். அதன்படி, வீட்டிற்கு வரக் கூடாது, பேசக் கூடாது. இப்படி எந்தவித பாதுகாப்பு உத்தரவை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
கணவனைப் பிடிக்க வில்லை. அவன் முகத்திலேயே விழிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் மருமகள்கள் அதை குடும்ப வன்முறை தடுப்பு அலுவலரிடம் கூறி கணவனை அவன் சொந்த வீட்டிற்குள்ளேயே காலடி எடுத்து வைக்க முடியாமல் தடையுத்தரவு வாங்கி விடலாம். மீறி வந்தால் சிறைக்குத் தான் செல்ல வேண்டும்.

அவன் வீட்டிற்கு வரவில்லையென்றால் செலவிற்கு பணத்திற்கு என்ன செய்வது என்று மருமகள்கள் கவலையோடு யோசிப்பது புரிகிறது. அதைப் பற்றி கவலையே படவேண்டாம். இந்த குடும்ப வன்முறை சட்டத்தின் மூலம் கணவனை அவன் வீட்டிற்குள்ளேயே நுழைய விடாமல் தடுக்கலாம் ஆனால் மாதந்தோறும் குடும்ப பராமரிப்பிற்கு மட்டும் சரியாக பணத்தை அனுப்பவேண்டும் என்றும் நீதிமன்றத்தின் மூலம் ஆணை பிறப்பிக்கலாம். எப்படிஇருக்கிறது இந்த புதிய சட்டம்!!!!!!

  • இதன் விளைவாக ஒன்று, சரியாவார்கள் அல்லது வேறு நல்ல தீர்வுக்கு வழி கிடைக்கும்!
முன்பிருந்தது போல் IPC498A வை மட்டும் பயன்படுத்தினால் ஜாமின் வாங்கிக்கொண்டு கணவன்கள் ஓடிவிடுவார்கள். இது பழைய நடைமுறை. அதனால்தான் இப்போது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் மருமகள்களின் கரங்களை வலுப்படுத்த வந்திருக்கிறது. இந்த குடும்ப வன்முறை சட்டத்தைப் பயன்படுத்தினால் கணவனை அவனது சொந்த வீட்டைவிட்டே விரட்டலாம், அவனது வருமானத்தில் கணிசமான ஒரு தொகையை மாதா மாதம் பெற்றுக் கொள்ளலாம். இன்னும் சொல்லப் போனால் அவன் குடும்ப சொத்தில் பங்குகூட வாங்கிக் கொள்ளலாம். 

இதன் விளைவாக அவன் என்ன செய்வதென்றே வழி தெரியாமல் மருமகள் சொல்லும் பேச்சிற்கு அடங்கி நடக்கலாம் என்ற முடிவிற்கு வந்துவிடுவான். அல்லது வேறு நல்ல தீர்வாக மருமகள் கேட்கும் ஒரு பெருந்தொகையை கொடுத்துவிட்டு ஆளை விட்டால் போதும் என்று தலை தெறிக்க ஓடிவிடுவான். 


இந்த இரண்டிற்கும் அவன் கட்டுப்படவில்லையென்றால் இருக்கவே இருக்கிறது IPC498A. இந்த IPC498A சட்டம் இப்போது தனித்து செயல்படாமல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்திற்குள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. தேவையானதை மருமகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதனால் மேலே குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்து பலன்களையும் மருமகள் அனுபவிக்கலாம் அதே சமயம் IPC498A சட்டத்தையும் பயன்படுத்தி கணவனை கைது செய்து நீதிமன்றத்திலும் அலைய விடலாம். இந்த வசதி எப்படி இருக்கிறது....பிரமாதம்.

இப்படிப் பலவகையான வசதிகள் இருக்கின்றன இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில். அதனால் மருமகள்கள் இந்த புதிய சட்டத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு பக்குவமாகப் பயன்படுத்தி பலன் அடையாலாம். இப்படிப் பலர் இப்போது பயனடைந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

வாழ்த்துக்கள்!

முக்கியமான பின்குறிப்பு: இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை பெண்கள் தாராளமாக ஆண்களுக்கெதிராக பயன்படுத்தலாம். ஆனால் குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண் குடும்ப வன்முறை செய்வதாகக் கூறி பெண்ணின் மீது ஒரு ஆணால் இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி புகார் கொடுக்க முடியாது. ஏனென்றால் இந்தியாவில் ஆண் மட்டுமே குடும்ப வன்முறை செய்பவன் என்பது உலகறிந்த உண்மை. மருமகள்களுக்கு எந்த வன்முறையும் செய்யத் தெரியாது! இதுவும் மருமகள்களுக்கு நல்லதுதானே!!

 

காமேஷ்

unread,
May 8, 2012, 5:24:05 AM5/8/12
to பண்புடன், முத்தமிழ்

வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1

மருமகள்களே,

முந்தைய பதிவில் கணவரையும் அவரது குடும்பத்தையும் கட்டுப்படுத்தி வைத்திருப்பது எப்படி என்பதற்கு ஒரு உதாரண செய்தியுடன் விளக்கியிருந்தேன். இந்தப் பதிவில் வரதட்சணை தடுப்புச்சட்டத்தைப் பற்றி ஒரு விளக்கம் தருகிறேன். குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். வழக்கம் போல் இந்த சட்டத்தையும் வெளிநாடு மற்றும் உள்நாடு, இந்தியக் குடிமகள் அல்லது வேறுநாட்டு குடிமகள் யார் வேண்டுமானாலும் தாராளமாகப் பயன்படுத்தலாம். எல்லாம் இலவசம். ஒரே ஒரு கண்டிஷன் என்னவென்றால் மருமகளாக இருக்க வேண்டும். அவ்வளவு தான்.

மருமகள்களை மட்டும் காப்பாற்றுவதற்காகவே வரதட்சணை தடுப்புச்சட்டம் 1961ம் ஆண்டில் இயற்றப்பட்டது. இதில் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. அவற்றில் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் பிரிவுகள் 3 & 4.

பிரிவு 4

இதன்படி நீங்கள் உங்கள் கணவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ அல்லது அவரது நண்பர்களோ உங்களை வரதட்சணை கேட்டதாக சும்மா ஒரு பொய் சொன்னால் கூட போதும். உடனே அவர்களை கூண்டோடு தூக்கி உள்ளே போட்டுவிடுவார்கள்.

அந்தக் காலத்தில் 1960களில் மருமகள்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் வரதட்சணை கேட்டதாக மருமகள் சொன்னால் அது உண்மையில்லை என்று கணவரும் அவரது குடும்பத்தாரும் தான் நிருபிக்கவேண்டும், மருமகள் எந்தவித ஆதாரமும் காட்டத்தேவையில்லை என்று மூதாதையர்கள் சட்டத்தை எழுதிவிட்டார்கள். அதனால் 
அந்தக் குற்றச்சாட்டைப் பொய் என நிருபிக்கவேண்டியது கணவரும் அவரது குடும்பத்தாரும் தான்.

ஆனால் இந்தக் காலத்தில் எல்லா மருமகள்களும் அப்படி கிடையாது.
எத்தனை பொய் சொல்கிறார்கள். ஒரு நாளைக்கு எத்தனை பொய் சொல்லவேண்டியிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பொய் என்பது வாழ்க்கையில் தவிர்க்கமுடியாததாக மாறிவிட்டது. இருந்தாலும் 1960களில் எழுதப்பட்ட சட்டம் மட்டும் இன்னும் இந்தக்காலத்து மருமகள்களும் பொய் சொல்லமாட்டார்கள் என நம்பிக்கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில் இருந்தது போல இன்றும் மருமகள்கள் இருப்பார்கள் என்று சட்டம் நினைப்பது சட்டத்தின் தவறு. மருமகள்களின் தவறல்ல. சட்டமும், சமூகமும் அப்படி நம்பிக்கொண்டிருக்கும் வரை மருமகள்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

அதனால் 
நீங்கள் பொய் சொன்னால் கூட உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இது வரை பொய் சொன்ன மருமகள்களை எந்த நீதிமன்றமும் தண்டித்ததில்லை. ஏனென்றால் வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் பொய் சொல்லும் மருமகளை தண்டிக்க எந்த சட்டப் பிரிவும் இல்லை. அப்படி பொய் சொல்லும் மருமகளை தண்டிக்க ஒரு புதிய சட்டப் பிரிவை சேர்க்க இதுவரை யாருக்கும் தைரியமும் இல்லை. அது தான் இந்திய சட்டத்தின் சிறப்பம்சம்.

அதனால் தயங்காமல் இந்த சட்டப்பிரிவை வரதட்சணை அல்லாத வேறு விதமான பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வதற்குக் கூட தயங்காமல் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு கணவர் அவரின் தயாரிடம் பேசுவது உங்களுக்குப் பிடிக்கவில்லை அதை தடுக்கவேண்டும் என்றால் கூட மாமியார் அல்லது கணவர் அல்லது இருவருமே வரதட்சணை கேட்பதாகச் சொல்லாம். இதுவரை பல மருமகள்கள் வெற்றிகரமாக இதைப் பயன்படுத்தி தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். கடைசியில் நீதிமன்றத்தில் அது பொய் என்று கணவர் நிருபித்தாலும் நீதிமன்றம் மருமகளை தண்டிக்காது. அது தான் இந்திய நாட்டு சட்ட நடைமுறை.

பிரிவு 3

இந்தப் பிரிவின்படி வரதட்சணை கொடுப்பதோ அல்லது வாங்குவதோ குற்றம். ஆனால் இதுவரை பல மருமகள்கள் திருமணத்திற்கு முன்பே கணவரின் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு அதை தட்டாமல் நானும் எனது குடும்பத்தாரும் கொடுத்தோம் என தைரியமாக புகாரில் எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் வரதட்சணை கொடுத்ததாக நீங்கள் ஒரு பொய் புகார் கொடுத்தாலும் புகாரை பதிவு செய்யும் போலிஸ் வரதட்சணை வாங்கியதாக குற்றம் சாட்டி கணவரையும் அவரது குடும்பத்தை மட்டுமே கைது செய்வார்கள்.

நீங்களே உங்கள் கைப்பட வரதட்சணை கொடுத்ததாக ஒப்புக்கொண்டு புகார் எழுதித்தந்திருந்தாலும் வரதட்சணை கொடுத்த குற்றத்திற்காக உங்களையோ உங்களது பெற்றோரையோ ஏன் என்று கூட கேட்கமாட்டார்கள். அதற்குப் பதிலாக உங்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.

அதன் பிறகு நீதிமன்றத்திற்கு வழக்குப் போனாலும் நீதிமன்றமும் கணவரையும் அவரது குடும்பத்தாரையும் மட்டுமே வரதட்சணை ஏன் வாங்கினாய் என்று கேட்டு நோண்டிக்கொண்டிருக்கும். வரதட்சணை கொடுப்பதும் குற்றம் தான், நீங்கள் ஏன் கொடுத்தீர்கள் என்று உங்களையோ உங்களது பெற்றோரையோ ஒரு கேள்விக் கூட கேட்காது. இதுவரை இப்படித்தான் போலிஸும் நீதிமன்றங்களும் வரதட்சணை வழக்குகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதனால் நீங்கள் ஒரு துளி கூட பயப்படவேண்டியதில்லை.

மேலும் இந்தப் பிரிவு 3 ல் ஒரு சாதகமான வசதி இருக்கிறது. அது என்னவென்றால் திருமணத்தின் போது நீங்கள் பல லட்சங்கள், பொருட்கள், மற்றும் நகைகளை வரதட்சணையாக கொடுத்ததாக புகாரில் எழுதித்தந்து அவைகளை திருப்பித் தரவேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்கலாம். சமையலில் எவ்வளவு உப்பு காரம் வேண்டுமோ அவ்வளவு சேர்ப்பது போல உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எழுதலாம்.

வரதட்சணை கொடுப்பதே குற்றம் அப்படியேயிருந்தாலும் உங்களுக்கு எப்படி அவ்வளவு பணம் கிடைத்தது என்று போலிஸோ, நீதிமன்றமோ கொஞ்சம் கூட யோசிக்கமாட்டார்கள். ஏனென்றால் சட்டப்புத்தகத்தில் இப்படியெல்லாம் யோசிக்கவேண்டும் என்று எந்தப் பாடமும் இல்லை. அதனால் அவர்கள் இப்படியெல்லாம் யோசித்துவிடுவார்களோ என்று நீங்கள் கனவு கூட காணவேண்டாம். நீங்கள் பட்டியலிடும் பொருட்களை வாங்கும் அளவிற்கு உங்களுக்கு வசதியிருந்திருக்குமா அல்லது அந்த பொருட்களோ, நகைகளோ, பல லட்சங்களோ எப்படி வந்தது என்று ஒரு கேள்வி கூட கேட்கமாட்டார்கள். அதற்குப் பதிலாக நீங்கள் பட்டியலில் எழுதியிருக்கும் கொடுக்காத பொருட்களை கூட கணவர் திருப்பித் தரவேண்டும் என்று கணவரின் சட்டைக் காலரைப் பிடித்துக்கொள்வார்கள்.

உங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கலாம் நான் நன்கு படித்திருக்கிறேன், நல்ல உயர் பதவியில் இருக்கிறேன், வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன் எனக்கு எப்படி வரதட்சணை கொடுப்பதும் குற்றம் தான் என்று தெரியாமல் இருக்குமா என்று யாராவது கேட்கமாட்டார்களா என்ற எண்ணம் உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கலாம். அதைப்பற்றி சுத்தமாக ஒரு துளி கூட கவலைப்படாதீர்கள். எனக்குத் தெரிந்தவரை வரதட்சணை தடுப்புச்சட்டத்தின் 3- வது பிரிவு படி வரதட்சணை கொடுத்த குற்றத்திற்காக நன்கு படித்த உயர் பதவியிலுள்ள மருமகளையோ அல்லது அவரது பெற்றோர்களையோ இதுவரை போலிஸோ, நீதிமன்றமோ கைது செய்து சிறைக்கு அனுப்பியதாக செய்தித்தாளில் கூட செய்தி வந்ததுகிடையாது.

நீங்கள் புகார் பதிவு செய்த உடனே செய்தித்தாள் முதல் நீதித்துறை வரை கணவரை மட்டுமே குற்றவாளியாக பார்ப்பார்கள். வரதட்சணை கொடுத்த குற்றவாளியான மருமகளையோ அல்லது அவரது குடும்பத்தாரையோ யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். இது மருமகள்களுக்கு மிகவும் சாதகமான ஒரு நல்ல விஷயம் தானே!

உங்களுக்கு அப்படியும் என் வார்த்தையில் ஒரு சந்தேகம் இருந்தால் கீழுள்ள செய்தியில் பாருங்கள் வங்கியில் துணை மேலாளராக இருந்த ஒரு மருமகள் அதுவும் ஒரு போலிஸ் அதிகாரிக்கு வரதட்சணை கொடுத்ததாக புகார் செய்து போலிஸும் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள். ஆனால் வரதட்சணை தடுப்புச் சட்டப் பிரிவு 3 & 4 கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பது அந்தக் கணவர் மீது மட்டும் தான். வங்கி மேலாளராக இருந்த அந்த மருமகள் மீது ஒரு வழக்கும் இல்லை பாருங்கள். அவருக்கு என்ன வரதட்சணை கொடுப்பது தவறு என்று தெரியாமலாயிருக்கும் ? அதனால் நீங்கள் பயப்படத் தேவையில்லை. இன்றே எடுங்கள் பேனாவையும் ஒரு பேப்பரையும் உங்களுக்குத் தேவையானபடி எழுதுங்கள். உங்களது குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ளுங்கள். சட்டங்கள் உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கின்றன.

கீழுள்ள செய்தியில் பல சட்டப்பிரிவுகள் சொல்லப்பட்டிருக்கிது. அவற்றை ஒவ்வொன்றாக எப்படி பயன்படுத்துவது என்று பிறகு விவரிக்கிறேன். எல்லாவற்றிலும் 498A என்ற பிரிவு தான் ராணி, மருமகள்களின் தோழி. அதன் அருமை பெருமைகளை விவரிக்க ஒரு தனி இணையதளமே தேவைப்படும். அதைப் பற்றி பிறகு எழுதுகிறேன். இப்போதைக்கு கீழுள்ள செய்தியில் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3& 4 எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்று மட்டும் கவனமாகப் பாருங்கள்.

வாழ்த்துக்கள்!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Woman alleges IPS man duped her into marriage on false pretensions


The Pioneer Chennai
 - December 30, 2009

A Commandant in the 13th Battalion of Indian Reserve Police, Jammu, SR Samuel, IPS, has been charged with duping a Chennai woman into a marriage through misrepresentation. He has also been charged with ill-treatment, dowry harassment, cruelty and criminal intimidation.

In her complaint to the Chennai Police Commissioner, T Sharmila complained (under Section 417 of IPC) that Samuel and his parents had cheated her and her family by claiming that he was a devout Hindu. He entered into a sham marriage — “dishonestly and fraudulently went through the marriage ceremony fully knowing that it was not a lawful marriage”. “The first counter petitioner, knowing fully well that the marriage is not lawful, caused me to cohabit with him leading me to believe that he was lawfully married to me,” Sharmila added in her complaint on September 7, 2009.

She has further charged the IPS officer and his mother Kamala Raju with ill-treatment, cruelty and dowry harassment. She accused them of mentally torturing her, treating her like a maid and constantly threatening to cause harm to her family (Section 498A and Sections 3 & 4 of the Dowry Prohibition Act and Section 406 of IPC). She charged Samuel with criminal intimidation by threatening to ruin her family reputation, to falsely implicate them in criminal cases, including that of NDPS and even to kill her.

Talking to The Pioneer, Sharmila’s counsel Sudha Ramalingam said that an FIR has been finally registered.

“Only after we filed a petition in the Madras High Court (seeking direction to register an FIR), did the 
police file the FIR. But it was done only under Section 498A of the IPC and Sections 3 & 4 of the Dowry Prohibition Act,” she said, pointing out that the main case of misrepresentation was being ignored in the FIR registered on November 10, 2009.

“My husband is now trying to divert the real issue by claiming that I was immoral and that the child I was carrying was not his. He claims that he had not consummate the marriage. Immediately after I filed my police complaint on September 7, he has filed a divorce application in a family court and got media coverage. But I have the proof from the police doctor in Leh that the conception occurred on February 16 or 17. My marriage was on February 2. My husband is now trying for his third marriage. He now claims he is a Christian, but while filing his nullity of marriage he claimed he was a Hindu. He has constantly threatened me by saying that he has good contacts with MK Azhagiri, Prime Minister Manmohan Singh, Kiran Bedi and senior politicians. I really do not know if it is true. But I lived in fear, when I lived with him. Within two months of marriage, he asked me to get out. I made three attempts at reconciliation. But it did not work. I was always told that I am not fit to be an IPS officer’s wife,” Sharmila told The Pioneer. Ramalingam said that on the police records Samuel is an OBC Christian. She also went through a miscarriage after all the trauma.

According to Sharmila’s complaint, it was an arranged marriage whereby she and her parents were made to believe that Samuel had embraced Hinduism and was a vegetarian. Though Sharmila and her parents were opposed to the marriage because of religion, age and status, they were convinced about the marriage by a relative of Sharmila, Samuel’s friend and parents.

Both families hail from Paramakudi in Ramanathapuram district. While Samuel belongs to Yadava Christian community, Sharmila is from Yadava Hindu community. Sharmila was working in Karur Vaysya Bank as Officer-1 (Asst Manager). She was forced to resign with the promise that she would be allowed to pursue her Civil Service exam. She was told that his first marriage failed because it was a love marriage, an act of immaturity. Sharmila left her job to be with her husband in Jammu & Kashmir.

The proposal came in June 2008 and marriage took place on February 2, 2009. The marriage was a “self-respect marriage” adopted following Dravidian movement. The marriage was solemnised in the presence of the State Minister Suba Thangavelan.

Apart from the misrepresentation about his religion, Samuel (37) even forced her to eat non-vegetarian food on the marriage night itself. Though a handsome photograph of Samuel was shown to her, she realised on marriage night that Samuel wore a wig to cover his baldness.

In Leh, she had to go through mental and physical torture by the husband. She was not allowed to meet her relatives. She was told that he was forced to marry her because of his parents and that he had not re-converted to Hinduism. Samuel has demanded nullity of marriage under mutual consent.

“Samuel was sadistic in his dealings with me. He would often wake me up in the middle of the night, push me out of the bed and make me sleep on the floor without even a blanket saying that I should not get accustomed to comforts of being the wife of an IPS officer and remember that my status was that of a maid servant in his house. Not being used to the harsh, cold weather of Jammu & Kashmir, I would shiver in cold and suffer without adequate sleep. My husband would cruelly laugh at my pain and derive sadistic pleasure from my physical suffering. My health suffered greatly, yet I was not given any medical attention,” Sharmila alleged in her police complaint.



   


8 COMMENTS:

Anonymous said...

மருமகளே....
எங்க ஊர் பக்கம் ஒரு சொலவாடை உண்டு, "அடி மட்டய பாத்து மே மட்ட பழிச்சதாம்....".

நீ இப்படியே எப்பவும் மருமகளாகவே இருக்க மாட்ட, உனக்கும் பிள்ளைகள் வளரும் அவங்களுக்கும் கல்யாணம் ஆகும். உனக்கும் மருமகள் வருவா(உனக்கு ஆண் பிள்ளை இருந்தால்). நீ இன்னைக்கு விதைக்கிற விணை மரமாகி, காயாகி, பழமாகி உனக்கு வரும் மருமகள் கையில் வரும். நீ நல்ல நோக்கத்தில் இதை செய்த்தால் நல்ல பழமாக வரும், இல்லாவிட்டால் நீ என்ன நோக்கத்தில் செய்கிறியோ அதே வடிவில் வரும். இது சாபமோ வசவோ இல்லை. இதுதான் இயற்கையின் நியதி. உனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால், அந்த கடவுள் படைத்த காலம் நிச்சயம் பதில் சொல்லும். நீ ஆத்திகவாதியாக இருந்தால் 'ஒவ்வொறு வினைக்கும் எதிர் வினை உண்டு(லாஜிக்/சயன்ஸ்)'.

யார் கண்டது அந்த நேரத்தில் நீ 'மாமியார்' என்ற் ப்ளாக் ஆரம்பித்து, மருமகள் குடும்பத்தை எப்படி உள்ளே தள்ளுவது என்று எழுதினாலும் எழுதலாம். காலம்தான் பதில் சொல்லனும்.

Wednesday, December 30, 2009 11:50:00 AM PST
Anonymous said...

தூ....இதெல்லாம் ஒரு பொழப்பு....

Wednesday, December 30, 2009 1:24:00 PM PST
மருமகள் said...

இங்கு "த்தூ" என்று துப்புவது ஆண்களா அல்லது பெண்களா என்று தெரியவில்லை.

உங்களது துப்பும் எனர்ஜியை வேறுவிதமாகப் பயன்படுத்தி ஆண்களாக இருந்தால் தயவு செய்து இந்த இணைய தளத்தை உங்கள் மனைவிக்கு அறிமுகப்படுத்துங்கள். பெண்களாக இருந்தால் உங்களது தோழிகளுக்கும் இந்த பதிவுதளத்தைப் பற்றி சொல்லுங்கள். அனைவரும் பயனடையட்டும். திருமணமாகாத ஆண்கள் கண்டிப்பாக இந்த இணையதளத்தை உங்களது பெண் தோழிகளுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!

Wednesday, December 30, 2009 9:07:00 PM PST
மருமகள் said...

//மருமகளே....
எங்க ஊர் பக்கம் ஒரு சொலவாடை உண்டு, "அடி மட்டய பாத்து மே மட்ட பழிச்சதாம்....".

நீ இப்படியே எப்பவும் மருமகளாகவே இருக்க மாட்ட, உனக்கும் பிள்ளைகள் வளரும் அவங்களுக்கும் கல்யாணம் ஆகும். உனக்கும் மருமகள் வருவா(உனக்கு ஆண் பிள்ளை இருந்தால்). நீ இன்னைக்கு விதைக்கிற விணை மரமாகி, காயாகி, பழமாகி உனக்கு வரும் மருமகள் கையில் வரும்.//

மருமகளை மிரட்டும்
நபருக்கும் நன்றி. 

"இது பனங்காட்டு நரி மட்டைகளின் சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது" என்று மற்றொரு சொல்வழக்கும் உங்கள் ஊரில் சொல்வார்களே. கேள்விப்பட்டதுண்டா?

Monday, January 18, 2010 8:32:00 PM PST
Anonymous said...

Nice post and this fill someone in on helped me alot in my college assignement. Thanks you as your information.

Friday, August 13, 2010 11:32:00 AM PDT
மருமகள் said...

//Anonymous said...

Nice post and this fill someone in on helped me alot in my college assignement. Thanks you as your information.//

மிக்க மகிழ்ச்சி. உங்கள் கல்லூரி கட்டுரைப் பாடப் பயிற்சிக்கு உபயோகமாக இந்தப்பதிவுகள் இருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். மேலும் உங்களுக்கு இதுபோன்ற மருமகள் தொடர்பான சட்டங்கள் பற்றி தகவல் வேண்டுமென்றால் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். 

நீங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பைப் பற்றி தெரியப்படுத்தினால் அனைத்து மருமகள்களும் சந்தோஷப்படுவார்கள். 



வாழ்த்துக்கள்!

Friday, August 13, 2010 8:05:00 PM PDT
Anonymous said...

This web site was very helpfull to me. I wanted to punish my husband for a long time. He is not at all coming under my controle. He is a nice man but he is not ready to kick his parents out of our house. I feel his parents are a great nuisance to me. Your blog was very usefull to me and I learnt a lot from this site. I gave an ultimatum to my husband to either kick their parents out of our house or else I will file a complaint under dowry harrassement. My parents were very supportive to my plan. Let me see what he is deciding. I whant to know how to use Domestic violence law to give pressure on him. Madam I want to know if I apply Domestic violence law, will the court throw away his parents out of our house?. Thanks again for all your information.

Monday, November 29, 2010 2:02:00 PM PST
மருமகள் said...

"Anonymous said...

This web site was very helpfull to me. I wanted to punish my husband for a long time. He is not at all coming under my controle. He is a nice man but he is not ready to kick his parents out of our house. I feel his parents are a great nuisance to me. Your blog was very usefull to me and I learnt a lot from this site. I gave an ultimatum to my husband to either kick their parents out of our house or else I will file a complaint under dowry harrassement. My parents were very supportive to my plan. Let me see what he is deciding. I whant to know how to use Domestic violence law to give pressure on him. Madam I want to know if I apply Domestic violence law, will the court throw away his parents out of our house?. Thanks again for all your information."

விழிப்புணர்ச்சியூட்டும் இந்தப் பதிவுகள் மருமகளின் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது என்பதை அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களது விருப்பப்படியே குடும்பவன்முறை தடுப்புச் சட்டங்களைப் பற்றி இனிவரும் பதிவுகளில் விளக்குகிறேன்.

Srimoorthy.S

unread,
May 8, 2012, 7:08:47 AM5/8/12
to panb...@googlegroups.com

ஆதலினால் கூடி வாழ்வீர்.:)

Srimoorthy.S

unread,
May 8, 2012, 7:56:25 AM5/8/12
to panb...@googlegroups.com

சைட்டு முழுசா படிச்சிட்டேன்.
என் குடும்பத்திலும் இதே போன்று ஒரு நிகழ்வு. அரங்கேறிய போது குடும்பத்தின் மொத்த நிம்மதியும் தொலைந்தது. கம்ப்ளெயிண்ட் கொடுத்த மருமகளுக்கும் சேர்த்துதான்.
உண்மையில், புகுந்த வீடு பயந்தாங்கொள்ளி வீடாக இருந்தால் மட்டுமே மருமகள் நினைத்தது நிறைவேறும். புகுந்த வீட்டினர் தைரியமானவராகவும், மருமகள் சட்டத்தை முந்திரிக்கொட்டையாக பயன்படுத்துபவளாக இருந்தால் ரெண்டு வீடும் வாழ முடியாது.
எதிர்பார்த்தவனுடன் வாழ்க்கையை மருமகளால் ஜீவனாம்சம் இல்லாமல் வாழ முடியாது, பாதிக்கப்பட்ட கணவனால் இன்னொரு கல்யாணமும் பண்ண முடியாது.

Raja sankar

unread,
May 8, 2012, 8:04:28 AM5/8/12
to panb...@googlegroups.com
ஏன் வாழமுடியாது? அதுக்குத்தான் லஞ்சம், வேண்டியவர்களை கவனித்தல் என ஏகப்பட்ட ஆப்ஷன் இந்தியாவில் இருக்கே :-)))

மேற்கொண்டு கணவன் இன்னோர் கல்யாணம் பண்ணினாத்தானே பிரச்சினை? :-)) வேறு ஏற்பாடு செய்து கொண்டால். :-))

இரண்டு பேரும் வாழ்க்கையை தொலைப்பது எல்லாம் அந்தக்காலம். :-)))

ராஜசங்கர்
(Rajasankar)

2012/5/8 Srimoorthy.S <srimoo...@gmail.com>

Srimoorthy.S

unread,
May 8, 2012, 8:16:52 AM5/8/12
to panb...@googlegroups.com

ரொம்ப கேர்புல்லா பேசுறதா நெனச்சிகிட்டு நெறய ஸ்மைலீ போடுறதா நெனப்பா?:)))

இந்த உலகில் கேள்விப்பட்டிரா வகையான ஆண்களும், பெண்களும் இன்னும் உளர்.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Asif Meeran AJ

unread,
May 8, 2012, 10:26:38 AM5/8/12
to panb...@googlegroups.com
இரண்டு பேரும் வாழ்க்கையை தொலைப்பது எல்லாம் அந்தக்காலம். :-)))

இம்மாதிர்யான கலாச்சார சீர்கேட்டை பண்புடனுக்கு அறிமுகப்படுத்தும் ராஜாசங்கரை ஏன் மட்டுறுத்துனர்கள் கண்டிக்கவில்லை? :-) 
Reply all
Reply to author
Forward
0 new messages