இசைஞானி இளையராஜாவின் பரம விசிறி நான். என்னைப் பொறுத்தவரையில் இளையராஜாவின் இசையை "காதல் ஓவியம்" திரைப்படத்திற்கு முன், அப்படம் திரைக்கு வந்தபின் என்று இரண்டு காலகட்டமாகப் பிரித்துப் பார்க்க விரும்புகிறேன். காரணம், "காதல் ஓவியம்" திரைப்படம் நடனம் மற்றும் கர்நாடக இசை இரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. ஒரு விதத்தில் "சங்கராபரணம்," படத்தினால் ஏற்பட்ட பாதிப்போ என்னவோ! "இதயம் பேசுகிறது" பத்திரிகையில் அப்படத்தை விமர்சித்தபோது "சாயம்போன பாரதிராஜாவின் சங்கராபரண சபலம்," என்று ஈவு இரக்கமின்றி விமர்சித்திருந்தார்கள். பாரதிராஜா, இளையராஜா இவர்களை சில வாரப்பத்திரிகைகள் மிகவும் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சித்த காலகட்டம் அது. "குயிலே குயிலே" என்ற பஞ்சு அருணாச்சலத்தின் ஒரு பாட்டைத் தவிர, மீதமுள்ள அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்க, கிராமீய இசையில் துவங்கி, மேற்கத்திய இசையைத் தொட்டுக்கொண்டிருந்த இசைஞானி, கர்நாடக இசையில் தனக்கிருந்த ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியிருந்த படம். ஏற்கனவே "கோவில் புறா" என்ற படத்தில் கே.ஜே.யேசுதாசின் குரலில் இடம்பெற்ற "வேதம் நீ இனிய நாதம் நீ" என்ற பாடல் அவரால் சாஸ்த்ரீய இசை என்று வியந்து, பயந்து விலகி ஓடத் தூண்டிய பிரதேசத்திலும் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்ற துணிவைக் காட்டியிருந்தது. அதே படத்தில் இடம்பெற்ற "அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே!" என்ற பாடலின் வரிகளும், அதனோடு இழைந்து வரும் நாகஸ்வர ஒலியும் இன்னும் மறக்க இயலவில்லை. அனேகமாக, அந்தப் படத்தை "கொஞ்சும் சலங்கை," "தில்லானா மோகனாம்பாள்" படங்களோடு ஒப்பிட்டு விமர்சகர்கள் கொன்று விட்டார்களோ என்று தோன்றுகிறது.
ஒரு விதத்தில் கே.பாலசந்தர்-எம்.எஸ்.விஸ்வநாதன் வெற்றிக்கூட்டணி முறிந்து, விஜயபாஸ்கர், வி.எஸ்.நரசிம்மன் என்று சுற்றி வளைத்து இயக்குனர் சிகரமும் இளையராஜாவோடு "புன்னகை மன்னன்" படத்தோடு இணைந்த அந்த சில வருடங்களில் இசைஞானி மேற்கத்திய இசையின் தாக்கங்களை ஏற்கனவே தமிழ்த்திரைப்படப் பாடல்களில் வெற்றிகரமாகக் கையாண்டிருந்தார். இது "ராஜபார்வை"யில் வரும் வயலின்-மெல்லிசை ஃபியூஷனிலேயே துவங்கியிருந்தது என்று ஞாபகம். "சிவப்பு ரோஜாக்கள்" படத்தின் பின்னணி இசையில் மிரட்டியிருந்ததையும் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, அப்போதைய ஜனரஞ்சகப்பத்திரிகைகள் இதையெல்லாம் நக்கலடித்துக் கொண்டிருந்தனர். பல தேசிய விருதுகளை இளையராஜா வாங்கிக் குவித்துக்கொண்டிருந்தும் கூட! ஆனால், கே.பாலசந்தர்-இளையராஜா கூட்டணி துவங்கியதும் பல பத்திரிகைகள் திடீரென்று எம்.எஸ்.வியைக் கிடப்பில் போட்டு விட்டு, இளையராஜாவை வானளாவப் புகழத் தொடங்கியதும் வேடிக்கையாக இருந்தது.
ஆனால், இந்திய, மேற்கத்திய இசைகுறித்து எதுவுமே தெரிந்திராத என் போன்றவர்களுக்கு, இளையராஜாவின் இசையில் இருந்த வெவ்வேறு பரிமாணங்கள் வியப்பை ஏற்படுத்தியது மட்டும் உண்மை. கர்நாடக சங்கீதம் பற்றி ஓரளவு தெரிந்திருந்த சிலரிடம் ராகங்கள் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுவேன். குறிப்பாக, இளையராஜாவின் பாடல்கள் பற்றி!
"ஆசைக்கிளியே அரைக்கிலோ புளியே அழுகின தக்காளியே"
"தம்பிக்கு எந்த ஊரு?" படத்தில் மலேசியா வாசுதேவன் பாடுகிற இந்தப் பாடல் என்ன ராகம்?
ஆரபி ராகம்!
"பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி" ஆரபி ராகத்தில் அமைக்கப்பட்ட ஒரு சோகப்பாடலுக்கு உதாரணம்!
"ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!" என்ற "முதலாளி" படத்தில் டி.எம்.எஸ்ஸின் பாடலும் ஆரபி தான்!
இந்த மூன்று பாடல்களையும் திரும்பத் திரும்பக் கேட்டாலும் இதற்குள்ள ஒற்றுமையைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கே எனது இசையறிவு இருக்கிறது. ஆயினும் இவையனைத்தும் ஒரே ராகத்தின் அடிப்படையில் இருக்கின்றன என்கிற ஆச்சரியத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை! அந்த ஆச்சரியம் தந்த தூண்டுதல் காரணமாகவே, இன்னும் இது போல ராகங்கள் குறித்து விசாரித்து எழுதலாமே என்ற நப்பாசையை ஏற்படுத்தியிருக்கிறது. தொடருவேன்!
தமிழன் வேணு
"ஆசைக்கிளியே அரைக்கிலோ புளியே அழுகின தக்காளியே"
"தம்பிக்கு எந்த ஊரு?" படத்தில் மலேசியா வாசுதேவன் பாடுகிற இந்தப் பாடல் என்ன ராகம்?
ஆரபி ராகம்!
"பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி" ஆரபி ராகத்தில் அமைக்கப்பட்ட ஒரு சோகப்பாடலுக்கு உதாரணம்!
"ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!" என்ற "முதலாளி" படத்தில் டி.எம்.எஸ்ஸின் பாடலும் ஆரபி தான்!
இந்த மூன்று பாடல்களையும் திரும்பத் திரும்பக் கேட்டாலும் இதற்குள்ள ஒற்றுமையைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கே எனது இசையறிவு இருக்கிறது.
ஆயினும் இவையனைத்தும் ஒரே ராகத்தின் அடிப்படையில் இருக்கின்றன என்கிற ஆச்சரியத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை! அந்த ஆச்சரியம் தந்த தூண்டுதல் காரணமாகவே, இன்னும் இது போல ராகங்கள் குறித்து விசாரித்து எழுதலாமே என்ற நப்பாசையை ஏற்படுத்தியிருக்கிறது. தொடருவேன்!
அடுத்து இசைஞானியின் இன்னும் சில பாடல்களைப் பார்க்கலாம்.
இளையராஜாவின் இசையில் டி.எம்.எஸ். மிகக்குறைவான பாடல்களே பாடியிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே! ரஜினிக்காக "நண்டூறுது நரியூறுது," என்ற பாடலை "பைரவி"யிலும், "அம்மா நீ சுமந்த பிள்ளை," என்று "அன்னை ஓர் ஆலயம்," படத்திலும் பாட வைத்தவர், பிற பாடல்களை சிவாஜிக்கு மாத்திரமே பாட வைத்திருப்பதைக் கவனித்தால், ஒரு வேளை சில வற்புறுத்தல்களின் காரணமாகவே பாட வைத்திருப்பாரோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.
"சிந்து நதிக்கரையோரம் அந்தி நேரம்." சிவாஜி-வாணிஸ்ரீ ஜோடி கடைசியாக இணைந்த "நல்லதோர் குடும்பம்" படத்தில் டி.எம்.எஸ்-பீ.சுசீலா பாடிய பாடலுக்கு எம்.எஸ்.வி தான் இசையமைத்திருக்கக் கூடும் என்று என் நண்பர்கள் மத்தியில் ஒரு குழப்பம் ஏற்பட்டதுண்டு. டி.எம்.எஸ் வழக்கத்துக்கு மாறாக மிகவும் கீழ்ஸ்தாயியில் பாடிய மிகக்குறைவான பாடல்களில் ஒன்று அது!
பிரபு-சில்க் ஸ்மிதா நடித்த "சூரக்கோட்டை சிங்கக்குட்டி" படத்தில் வருகிற, ஜேசுதாஸ்-சுசீலா பாடுகிற "காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ!" என்ற பாடல், அப்படத்தில் பம்மல் சம்பந்த முதலியாரின் "மனோகரா"வைப் பாடாய்ப்படுத்தியிருந்த இராம.நாராயணனின் பாவமன்னிப்புக் கோரிக்கை என்று கூடச் சொல்லலாம். இந்தப் படத்தைப் பாராதவர்கள் இந்தப் பாடலை வானொலியிலோ அல்லது ஒலித்தகட்டிலோ கேட்கிறபோது உண்மையில் மெய்மறந்து போவார்கள் என்று எண்ணுகிறேன்.
மேற்கூறிய இரண்டு பாடல்களும் அபேரி என்ற ராகத்தின் அடிப்படியில் அமைக்கப்பட்ட பாடல்கள். இளையராஜாவுக்கு அபேரி ராகத்தின் மீது சற்று ஈடுபாடு அதிகம் போலத் தோன்றுகிறது. இந்த ராகத்தில் அவர் இன்னும் பல பிரபலமான பாடல்களை இசையமைத்திருக்கிறார். உதாரணமாக....
"குருவாயூரப்பா குருவாயூரப்பா." எஸ்.பி.பி-சித்ரா (புதுப்புது அர்த்தங்கள்)
"குயிலே கவிக்குயிலே!" எஸ்.ஜானகி (கவிக்குயில்)
"மேகம் கருக்குது மழை வரப்பாக்குது," ஜேசுதாஸ்-ஜானகி (ஆனந்த ராகம்)
"பூவே பூச்சூடவா" ஜேசுதாஸ்/சித்ரா (பூவே பூச்சூடவா)
"
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி," ஜேசுதாஸ்-ஷைலஜா (மீண்டும் கோகிலா)..(இன்னும் நிறைய இருக்க வேண்டும்! யாராவது நினைவூட்டினால் பட்டியலைத் திருத்திக்கொள்ள விருப்பம்)
"சின்னஞ்சிறு வயதில்..." பாடல் ஒரு கர்னாடக சங்கீதப் பாடலைக் கேட்பது போலவே, மிருதங்கம் மற்றும் வீணையின் ஆளுமை நிரம்பியிருக்கும் என்பதை நாமறிவோம். இதே போல மேற்கத்திய சாயல் இன்றி பல ராகங்களில் இளையராஜா பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். உதாரணமாக...
"இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே!" ஜெயச்சந்திரன்-வாணி ஜெயராம் (வைதேகி காத்திருந்தாள்)
"காலை நேரப்பூங்குயில்.." எஸ்.பி.பி-ஜானகி (அம்மன் கோயில் கிழக்காலே)
இவ்விரண்டு பாடல்களும் அபோகி என்ற ராகத்தின் அடிப்படையில் இசையமைக்கப்பட்டுள்ளன.
அடுத்து அனேகமாக "அம்ரிதவர்ஷிணி" என்ற, மழை பெய்விக்கக் கூடிய ராகத்தில் இளையராஜா இசையமைத்த பாடல்களைப் பற்றி எழுதலாம் என்று உத்தேசம். பார்க்கலாம்!
(தொடருவேன்)
தமிழன் வேணு
அன்பு வேணு மிக அருமையான் ராகம் அம்ருதவர்ஷிணி ,
அமர்க்களமாக இருக்கு ராகத்தின் தகவல்கள் சிவரஞ்சனி எப்போது
இடம் பெறும் ?
:)
வழக்கம்போல எனக்கு பல புதிய தகவல்கள்1... ராகங்களின் வரலாற்றைப்பற்றிய குறிப்புகளையும் இணைக்கலாமே அய்யா!
மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் கமலஹாசன்-ஊர்வசி நடித்து வெளிவந்த (வந்த வேகத்திலேயே சுருண்ட) "அந்த ஒரு நிமிடம்" படத்தில் வரும் "தேவை இந்தப் பாவை," என்ற பாடலும் ஆனந்த பைரவி ராகமே!
அன்பு வேணு சினிமா பாடலுடன் கர்நாடக இசையில் ப்லர் இயற்றிய பாடல்களும்
இத்துடன் தந்தால் பலருக்கு இதைப்பற்றி மேலும் தெரிய வாய்ப்பு இருக்குமே
!
தியாகராஜஸ்வாமிகள் பாடல் "மரிவேரேகதி " என்று ஆரம்பித்து பலர்
இயற்றிய எல்லோருக்கும் தெரிந்த பாடல்களை இடலாமே
தமிழில் திரு பாபநாசம்சிவன் அவர்களின் பாடலகள் பல உள்ளன ,
I am attaching songs of Utthukkadu Venkata Subhaiyar!!!
அன்பு வேணு {அ ..ஆ வில் அசாவேரி ஆரபி
ஆந்தோளிகா ஆஹிரி ஆபோகி அடாணா என்று முக்கிய ராகங்கள் இருக்கின்றன
ஆரபியில் மாமரத்துச்சோலையில் மச்சான வரும் வேளையிலே என்ற பாடல்
மிகவும் அழகான ஆரபி ராகத்தில் இருக்கிறது தொடருங்கள் நன்றி
வேணு மிகவும் ரசித்து படித்துக்கொண்டிருக்கிறேன். சுவையான விவரணை.
நன்றி. தொடரவும்.
பின்குறிப்பு: கவரிமான் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக ஸ்ரீதேவி முதன்முதலில் நடித்ததை மக்கள் ஏற்றுக்கொள்ளாததும் அது தோல்வியை தழுவியதற்கு ஒரு காரணம் என கேள்விப்பிட்டேன் உண்மையா?
(இழைக்கு சம்பந்தமில்லாத கேள்விக்கேட்பதில் உன்னை மிஞ்ச ஆளே இல்லை என ஆசிப் உறுமுவது கேட்கிறது)
சரி பரவாயில்லை சந்தடி சாக்கில் அழகான அமலாவை பற்றியும் ஒரு இழை ஆரம்பிய்யும்.
--
*******
At first, one loves, when one is loved!
* Next, one loves spontaneously, but wants to be loved in return!
* Then, one loves, even if one is not loved, but one still wants one's love to be accepted!
* And finally, one loves purely and simply, without any other need or enjoy than that of loving!
-- The Mother-Sri Aurobindo
**********************
மிக்க நன்றி, வெறும் கேள்வி ஞானத்தை வைத்து, என் அம்மாவிடமும் இன்னும் சில நண்பர்களிடமும் கேட்டு கேட்டு எழுதுகிறேன். இதில் ஏதேனும் குளறுபடி செய்ய வாய்ப்பிருக்கிறது. :-)
சுட்டிக்காட்டினால் கர்நாடக சங்கீதம் குறித்த எனது அறிவு இன்னும் கொஞ்சம் தேறும் என்பதால், தவறாமல் சுட்டிக்காட்டுங்கள். >
நன்றி..நானும் இந்தக்கடலில் மிசச்சிறிய துளியைப்பருகியவள் ஒழுங்கா அந்த பாட்டுவாத்தியார்கிட்ட பாட்டு கத்துட்டு இருந்தா இன்னொரு நித்யஸ்ரீயா மின்சாரக்கண்ணாவை பாடி இருக்கலாம்! அந்தவயசில் சீரியஸ்னஸ் இல்லை வாத்தியாரைக்கிண்டல் செய்து அவர் என் அப்பாவிடம் உங்கபொண்ணுக்கு ஜன்மத்துக்கும் நான் பாட்டுகத்துத்தரமாட்டென் என்று ஓடிவிட்டார்!
நன்றி..நானும் இந்தக்கடலில் மிசச்சிறிய துளியைப்பருகியவள் ஒழுங்கா அந்த பாட்டுவாத்தியார்கிட்ட பாட்டு கத்துட்டு இருந்தா இன்னொரு நித்யஸ்ரீயா மின்சாரக்கண்ணாவை பாடி இருக்கலாம்! அந்தவயசில் சீரியஸ்னஸ் இல்லை வாத்தியாரைக்கிண்டல் செய்து அவர் என் அப்பாவிடம் உங்கபொண்ணுக்கு ஜன்மத்துக்கும் நான் பாட்டுகத்துத்தரமாட்டென் என்று ஓடிவிட்டார்!
சரி தான்! நீங்களும் என்னைப் போலத் தானா? >>
நானும் ஜரளி, ஜண்டை வரிசை முடித்து கீர்த்தனை வருகிற நேரம் பார்த்து இடம் பெயர வேண்டி வந்து விட்டது. அதன் பிறகு செவிக்குணவு மட்டும் தான் கொடுப்பினை! >>>>
என்னுடையது கொஞ்சம் வித்தியாசம். சரளி, ஜண்டை , கீதம் முடிந்து வர்ணம் வந்த போது தாங்க முடியாமல் வாத்தியார் இடம் பெயர்ந்துட்டார்.9/9/15
வேணு <venugopal...@gmail.com>
நன்றி..நானும் இந்தக்கடலில் மிசச்சிறிய துளியைப்பருகியவள் ஒழுங்கா அந்த பாட்டுவாத்தியார்கிட்ட பாட்டு கத்துட்டு இருந்தா இன்னொரு நித்யஸ்ரீயா மின்சாரக்கண்ணாவை பாடி இருக்கலாம்! அந்தவயசில் சீரியஸ்னஸ் இல்லை வாத்தியாரைக்கிண்டல் செய்து அவர் என் அப்பாவிடம் உங்கபொண்ணுக்கு ஜன்மத்துக்கும் நான் பாட்டுகத்துத்தரமாட்டென் என்று ஓடிவிட்டார்!
சரி தான்! நீங்களும் என்னைப் போலத் தானா?
நானும் ஜரளி, ஜண்டை வரிசை முடித்து கீர்த்தனை வருகிற நேரம் பார்த்து இடம் பெயர வேண்டி வந்து விட்டது. அதன் பிறகு செவிக்குணவு மட்டும் தான் கொடுப்பினை!
தமிழன் வேணு
அதில் சந்த்ரபிம்ப முக மலராலே என்ற இடத்தில் நிரவல் மதுரைமணிஅவர்களும்
எம் எஸ் அம்மா அவர்களும் செய்ய சபை அப்படியே மயங்கி அமர்ந்திருக்கும்
On 15/09/2009, தமிழன் வேணு <venugopal...@gmail.com> wrote:
அது 'ரா ரா வேணு கோபாஆலா'!
என்னுடையது கொஞ்சம் வித்தியாசம். சரளி, ஜண்டை , கீதம் முடிந்து வர்ணம் வந்த போது தாங்க முடியாமல் வாத்தியார் இடம் பெயர்ந்துட்டார்.
என்னுடையது கொஞ்சம் வித்தியாசம். சரளி, ஜண்டை , கீதம் முடிந்து வர்ணம் வந்த போது தாங்க முடியாமல் வாத்தியார் இடம் பெயர்ந்துட்டார்.
ஆஹா! இந்த இழை மூலமாக சங்கீத உலகம் எத்தனை ஜாம்பவான்களை இழந்திருக்கிறது என்ற உண்மை வெளிப்படுகிறதே! (என்னையும் சேர்த்துத் தான்...!)
தமிழன் வேணு
அதாவது சங்கீத பூஜையில் கரடி போல என்று சொல்லி விட்டீர்கள் :)))))))
சே!
இப்படியெல்லாம் குழுமத்துல பேசிக்குவாங்கன்னு தெரிஞ்சிருந்தா ஒழுங்கா
பேஞ்சோ மாஸ்டர் அபூபக்கர் கிட்டக்க கொஞ்சமாவது சங்கீதவாசம்
புடிச்சிருப்பேன். எவ்ளோ நாள் அவரோட இருந்தேன், பாட்டெழுதுறதோட நம்ம வேல
முடிஞ்சிருச்சுன்னு இந்த ராகம் மேட்டர்ல கவனமே செலுத்தாம வுட்டுட்டேன்.
அபூபக்கர் - 'மேளத்தை மெல்லத் தட்டு மாமா' பாடலின் பின்னணி இசையில்
முக்கியமான பங்கேற்றவர்.
இம்மையே ராமா என்று இரண்டு எழுத்தினால்//
கம்பர்
சக்கரவாகம் என்பது ஒரு தேவலோக பறவை.. அதன் கண்கள் மிக மிக அழகாக இருக்கும்.. (பாடலுக்கு உரிய)ஸ்ரீவித்யாவின் கண்களுக்கு இதை விட என்ன சிறந்த உவமை இருக்க முடியும்?
ஆனால் இது வரை நானறிந்த சங்கீத வித்வான்கள் அதை சக்ரவாகம் என்றுதான் சொல்கிறார்கள். எது சரியோ?
அதிசய ராகம் பாடல் மஹதி இராகம் வேணுஜி! அந்த பாடலுக்காக மிக அதிசயமான இராகம் ஒன்றை சொல்லுமாறு கேட்க பாலமுரளி கிருஷ்ணா மஹதி இராகத்தை சொன்னதாக படித்திருக்கிறேன்.
அதிசய ராகம் பாடல் மஹதி இராகம் வேணுஜி! அந்த பாடலுக்காக மிக அதிசயமான இராகம் ஒன்றை சொல்லுமாறு கேட்க பாலமுரளி கிருஷ்ணா மஹதி இராகத்தை சொன்னதாக படித்திருக்கிறேன்.
ஏன்யா எதோ பாட்டு தெரியலைன்னு கேட்ட, எங்காளு பதில் சொன்னாரு ;) அதுக்கு
இந்த துள்ளு துள்ளலாமா ? புதுபாட்டுக்காரய்ங்க உங்களுக்கே மனசுல இந்த
பாட்டு நிக்கலைன்னா ... எம்புட்டு மோசமா இருக்குன்னு யோசிச்சுக்கோ!!
*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
வந்தவை யாவுமே கந்தனின் வார்த்தைகள்
அந்தமிலா செம்மொழியை ஆள்கின்ற - எந்தையவன்
தந்ததன்றி மற்றில்லை கண்டாய் மனமேநீ
கந்தனின் பாதம் பணி
2009/11/10 வில்லன் <oms...@gmail.com>:
சிறந்த இழை
2009/11/10 Jeevaa KS <jee...@gmail.com>:
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
From: Narayanan (@ 195.224.238.98) on: Mon Apr 10 06:11:44 EDT 2000
Nado:
Balamurali has "created" many other ragas and another example is "Mahathi" (he named his daughter after this raga). The scale is
Aro: s g p n S Ava: S n p g s Mela - 29
The popular film song "Adhisaya Ragam" is based on this raga.
சக்கரவாகமோ மழையை அருந்துமா
அது ஏன் ராத்திரியில பிரிஞ்சு சோக கீதம் பாடணும். ராத்திரியிலயும் சேர்ந்தே இருக்க வேண்டியதுதானே.. என்ன பிரச்சினை அதுக்கு?!
அப்போ ‘சக்கரவாகமோ மழை அருந்துமாம்’ என்பது வைரமுத்து செய்த வரலாற்று பிழையா?
நடுவருக்கு அரை நாள் விடுப்பு கொடுங்கையா! இந்த ஆடிட்டருங்க பண்ணுற அலம்பல் தாங்க முடியலியே! :-(((
தமிழன் வேணு
அச்சச்சோ.. நடுவரா நீங்க இருக்கறது வேற இழையில.. இங்கன நீங்க பாட்டு வாத்தியார்.. ஓக்கேவா!
என்னைப் பொறுத்தவரைக்கும் ராகம் தெரிஞ்சவங்கல்லாம் குடுத்து
வெச்சவங்கய்யா!
நானு 'மலர்கள் நனைந்தன பனியாலே' கேக்றதுக்கு, அது மோகனம்தான்னு தெரிஞ்சு
கேக்றதுகும் வித்தியாசம் இருக்குங்க.
நமக்கு இந்த ராகமெல்லாம் படிக்கணும்னு ஆசைதாங்க, ஆனா பாருங்க தாழ்வு
மனப்பான்மை, எனக்கு இதெல்லாம் ஓடாதுன்ற முன்முடிவு.
என்னைப் பொறுத்தவரைக்கும் ராகம் தெரிஞ்சவங்கல்லாம் குடுத்து
வெச்சவங்கய்யா!
நானு 'மலர்கள் நனைந்தன பனியாலே' கேக்றதுக்கு, அது மோகனம்தான்னு தெரிஞ்சு
கேக்றதுகும் வித்தியாசம் இருக்குங்க.
//சந்திரகௌன்ஸ்! //
இன்று தான் இந்த ராகத்தின் பெயரை கேள்விப்படுகிறேன்.
இந்த இழை இத்தோடு நிறைவு பெறுகிறது. இதுவரை பாராட்டியவர்களுக்கு நன்றி.
தமிழன் வேணு
இந்த இழை இத்தோடு நிறைவு பெறுகிறது. இதுவரை பாராட்டியவர்களுக்கு நன்றி.
வேணுவின் இசைப்பயணம் சிறிய இடைவெளிக்குப் பின் தொடருமா? இணையத்தில்
'சிமுலேஷன்' இப்படியான கட்டுரைகள் எழுதினார், பிறகு ஒரு நூலும்
வெளியிட்டார். சிமுலேஷனைத் தொடர்ந்து வேணுவும் நூலாக்கங்களில்
ஈடுபடுவாரா? சமயம் கிடைக்குமா? கொஞ்சம் சினிமா, கொஞ்சம் நுணுக்கம்,
கொஞ்சம் பொதுஜனப் பார்வை என நோக்கம் வைத்து எழுதினால் அறிமுகநிலை
வேண்டுவோர்க்கு எளிதாகப் புரியும்படி நூலைப் படைக்கலாம்.
என்னாதிது??யாரைக் கேட்டு நிறுத்தினீங்க?? நாங்கெல்லாம் என்ன செய்யுறது??க, ச, த முடிஞ்சா எல்லாம் முடிஞ்சு போச்சா??இன்னும் வேணும்...
வேணுவின் இசைப்பயணம் சிறிய இடைவெளிக்குப் பின் தொடருமா?
இணையத்தில்
என்னுடைய இசைப்பயணம் இனிமே மெட்டுக்கு பாட்டு எழுதுவதோடு முடிந்து விடலாம் ஆசாத்.
வேணு ஐயா...நம்ம படம் கூட பாதியில நிக்குது...புலி உறுமுது பாட்டு மெட்டுல அண்ணாச்சிக்கு க்ளைமேக்ஸ் பாட்டு வைக்கணும்..எழுதித்தாங்களேன்... ப்ளீஸ்...!
அதேதான் ஸ்வாமி இங்கயும். இப்பல்லாம் வெவ்வேற நெனப்புங்க. மொதல்ல
காசுக்கு உழைச்சோம், இப்ப ரெக்கக்னிஷன் கேக்குது. இத்தவுட்டு அங்க
போலாமா, அத்தவுட்டு இங்க போலாமா, போகணும்னா என்னா செய்யணும், எல்லாம்
மெட்டீரியலிஸ்ட்டிக்கா ஆகிருச்சு, அப்புறம் ரீடிங் இண்டரெஸ்ட்டும்
இலக்கியம் கதை இதுலேர்ந்து சீரியஸ் சமூக, அரசியல் சமாசாரங்களுக்குப்
போயிருச்சு. மொத்தத்துல வயசாகிருச்சு.