--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
--
"சண்ட பஜாறு மாமா கொஞ்சம் உசாரு", " வெத்தல போட்ட சோக்குல நான் கப்புன்னு குத்துனேன் மூக்கில வந்தது பாரு ரத்தம் இந்த அமரன் மனசு சுத்தம்", சூரியனில் வரும் "லாலாக்கு டோல் டப்பி மா கண்ணே கனகம்மா உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா" பாடல்களை கதற கதற திரும்ப போட்டு செம குத்து டான்ஸ் போட்டோம்..ஹ்ம்ம்..மலரும் நினைவுகள்.
With Lots OF Love,JP2011/10/22 சென்ஷி . <me.s...@gmail.com>
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்.. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாட்டு. பாட்டுக்கு முன்னே, கார்த்திக் ரேவதிக்கு மத்தியில நடக்கற அந்த ஓட்டப்பந்தய காட்சியமைப்பு அருமையான ஒளிப்பதிவு.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இப்போதோ
எனக்கு ஒரு தலை தானே
இருக்கிறது
என்று எண்ணிப் பரிதவிக்கிறேன்.
0
காதலி கிட்டியவனுக்கு அவளைக் கொஞ்சுவதற்கே நேரம் பத்தாது . காதலி கிட்டாத
வெட்டிகள் தான் கவிதை கழுதைகுட்டி என்று எதையாவது எழுதி நம்மை
வறுத்தெடுப்பார்கள்.
25 வயது வரை காதலைப் பற்றி பெரிய அபிப்ராயம் ஒன்றும் என்னிடமில்லை.
எனினும் காதல் கவிதைகள் என்றால் விரும்பிப் படிப்பேன்.
பெங்களூர் கூதலால் காதல் மேல் கொஞ்சம் பிடிப்பு வந்தது .
வேப்பங்காயைப் போல பெண்ணை
எண்ணியிருந்த என்னை
ஆப்பிள் என்று கருதும் படி
மாற்றிவிட்டாய் கண்ணே
என்று சீர்காழியைப் போல் நானும் எவளையாவது பார்த்துப் பாட வேண்டும் என
ஆசைப்பட்டேன் , ஒருத்தியும் சிக்கவில்லை
ஒரு கட்டத்தில் காதல் திருமணம் தான் செய்து கொள்ளவேண்டும் என
வைராக்கியத்துடன் இருந்தேன். ஊகூம் ..முடி கொட்டியது தான் மிச்சம் !
0
சீர்காழி கோவிந்தராஜன் பக்தி,வீரம் , காதல், காமெடி, தத்துவம், எழுச்சி
என்று பல ரசங்களில் பாடியிருந்தாலும் அவர் பாடியவற்றுள் காதல் ரசம்
பொங்கும் பாடல்களை மட்டுமே மிகவும் விரும்பிக் கேட்பேன்.
அமுதும் தேனும் எதற்கு
நீ அருகினில் இருக்கையிலே எனக்கு - தைபிறந்தால் வழி பிறக்கும்
0
மாம்பழத் தோட்டம், மல்லிகைக் கூட்டம்,
மணக்க வரும் மாலைப் பொழுதோடு
மருவியணைக்கும் மயக்கம் பிறக்கும்
மலர்ந்து வரும் ஆசை விழியோடு
மன்மதன் வந்தான் தேரோடு....இங்கே
காதலர் கண்ணும் நெஞ்சும் படக் படக் பட் பட்
- ஒளிவிளக்கு
0
வட்ட வட்டப் பாறையிலே
வந்து நிக்கும் வேளையிலே
யார் கொடுத்த சேலையடி
ஆலவட்டம் போடுதடி - பழனி
0
அன்பே என் ஆரமுதே வாராய்
தென்றலலை மீதினிலே திங்கள் பிறை தோணியினிலே
தேன்மொழி உனை அழைத்தே செல்வேனே - கோமதியின் காதலன்
0
கூத்தாடும் கொண்டையிலே தொங்குதடி மல்லிகைப்பூ
கேக்காத கேள்வியெல்லாம் கேட்குதடி உன் அழகே
0
பழனி சந்தன வாடை அடிக்குது பூசியது யாரோ
பவள குங்கும நெத்தி மணக்குது சூடியது யாரோ
இங்கு குயில போல பாட்டு வந்தது பாடியது யாரோ
மெல்ல குலுங்கும் சலங்கை ஓசை வந்தது அடியது யாரோ - வாழ்க்கைப் படகு
0
காதல் உண்டாகும் கட்டழகி உன்னாலே
நெஞ்சு ஒண்ணாகும் பக்கத்திலே நின்னாலே
அடே கண்ணு சின்ன பொண்ணு
என்னை கொஞ்சாதே கோழிமுட்டை கண்ணாலே - இரு வல்லவர்கள்
0
வாம்மா வாம்மா சின்னம்மா வயசு வந்த பொன்னம்மா
இந்த நேரம் காட்டுக்குள்ளே எங்கே வந்த செல்லம்மா - தாயில்லா பிள்ளை
0
பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது - கொடுத்து வைத்தவள்
0
எல்லையில்லாத இன்பத்திலே நாம் இணைந்தோம் இந்நாளே
இமையும் விழியும் போலே இணைந்தோம் அன்பினாலே
- சக்கரவர்த்தித் திருமகள்
0
கரும்பாக இனிக்கின்ற பருவம்
இதை கதையாக சொல்லுது
உன் காதல் உருவம்
அழகான மொழி பேசும் விழி இரண்டும் அமுதம்
அதிலே நீ தருகின்றாய் பருகாத அமுதம் -
கொங்கு நாட்டு தங்கம்
0
ஜிகு ஜிகு உடையிலே
ஜில் ஜில் நடையிலே
ஜெகமே தன்னால் மயங்குமே
சிங்கார சிலையே
நீ திரும்பி பார்த்தால் போதும்
எல்லாம் வசமாகுமே - சபாஷ் மீனா
0
காதலென்னும் சோலையிலே ராதே ராதே
நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே - சக்கரவர்த்தித் திருமகள்
0
தட்டு தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும் - சாரதா
0
சிங்கார தேருக்கு சேலை கட்டி
சின்ன சின்ன இடையினில் பூவக்கட்டி
தெரு தெருவா அத நடக்கவிட்டா
இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னாகும்
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னாகும் - இது சத்தியம்
0
சீவி முடிச்சிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு
தேரோட்டம் பாக்கப் போறேன் வாரியா
மச்சான் தேரோட்டம் பாக்கப் போறேன் வாரியா
ஆறு புரம் தங்க மணி
அல்லி வேஷம் போடுறாளாம்
நாடகம் பார்க்கப் போறேன் வாரியா
பொண்ணே நாளைக்கி திரும்பிடலாம் ஜாலியா - பிள்ளைக்கனி அமுது
0
பொங்கும் அழகு பூத்து குலுங்கும்
தங்கதாமரையே
அன்பு வெள்ளம் அள்ளி வழங்கும்
இன்பக் காவிரியே - தங்கம் மனசு தங்கம்
0
உலகமெல்லாம் இருண்டது போல் தோணுது
உன் உருவம் ஒளிவிளக்காய் காணுது -
கலைகள் எல்லாம் உன் வடிவினால்
மெய்க் காதலினால் எனக்கு சொந்தமானது-
நான் கண்ட சொர்க்கம்
0
வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ
அன்புக் கணவனின் முன்னாலே மனைவி
அழகாகச் சிந்தும் புன்சிரிப்பூ - எங்கள் குல தேவி
0
வனமேவும் ராஜகுமாரா
வளர் காதல் இன்பமே தாராய்
மனமோகனா சுகுமாரா
மறவேன் உனை எழில் தீரா - ராஜாதேசிங்கு
0
யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன
சொல்வது - சபாஷ் மாப்பிள்ளை
0
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும் தேன் குடமே செண்பக பூச்சரமே
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் - யானைப்பாகன்
0
நிலவோடு வான்முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் உனைதேடுதே - ராஜராஜன்
0
இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
உமது இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கியிசை பாடுதே - ராஜராஜன்
0
சீர்காழி கோவிந்தராஜன் 19/01/1933 அன்று சிவசிதம்பரம் & அவையாம்பாள்
தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். சீர்காழியின் தந்தை சிவசிதம்பரம்
கலைநாட்டம் மிக்கவர் . சீர்காழி கோவிலொன்றில் இராமயண இசை நாடம் நடத்தி
வந்தார். அதில் குட்டி ராமனாக நடித்து பாடல்களும் பாடினார் கோவிந்தராஜன்,
இளைமையிலேயே தேவி நாடகக் குழுவிலும் , பாய்ஸ் கம்பெனியிலும் இணைந்து தனது
நடிப்புத் திறமையையும் இசைத் திறமையையும் வளர்த்துக் கொண்ட கோவிந்தராஜனை
அவரது சித்தப்பா பி.எஸ்.செட்டியார் சேலம் மார்டன் தியேட்டர்ஸில் துணை
நடிகராகச் சேர்த்துவிட்டார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் அரங்கின் தனி அறை ஒன்றில் தங்கிய படியே சங்கீத
சாதகம் செய்வதை வழக்கமாகக் கொண்டார். கோவிந்தராஜன் பாடுவதைக் கேட்ட
மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் , இசையமைப்பாளர்
ஜி.ராமநாதனும் கோவிந்தராஜனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று
அப்போதே கணித்துச்சொன்னார்கள்.
0
பி.ஏஸ்.செட்டியார் , கோவிந்தராஜனை சென்னைக்கு அழைத்து வந்து தமிழ்
இசைக்கல்லூரியில் சேர்த்துவிட்டார். பதினெட்டு வயதிலேயே(1951) சங்கீத
வித்வான் , இசைமணி ஆகிய பட்டங்களைப் பெற்றார்.
1951 இல் சென்னை வித்வத் சபையில் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.
இதன் பிறகே சினிமா வாய்ப்பு கோவிந்தராஜன் கதவைத் தட்டியது..
0
கல்கி எழுதிய பொய்மான் காடு பொன்வயல் என்ற பெயரில் திரைப்படமாக உருவானது.
துறையூர் ராஜகோபால் சர்மா இசையில் சுத்தானந்த பாரதி வரிகளில் தனது
வெங்கலக் குரலை சிரிப்புத் தான் வருதைய்யா என்ற பாடல் மூலம்
திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார் கோவிந்தராஜன்.
0
ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கு சீர்காழியும் சிவாஜிக்கு டி.எம்.எஸ்ஸும்
பாடி வந்தார்கள்.
கண்ணதாசன் எழுதிய அறுபடை வீடு கொண்ட திருமுருகா என்ற நீளப்பாடலை (ஏழு
நிமிடங்கள்) ஒரே டேக்கில் பாடிவிட்டு அசத்தியிருக்கிறார். இந்த சாதனைக்கு
முருகன் அருள் தான் காரணம் என்றிருக்கிறார்.
பக்திப் பாடல்கள் பல பாடிக் குவித்த கோவிந்தராஜன் தனது 55 வயதில்
மாரடைப்பு ஏற்பட்டு முருகனடி சேர்ந்தார் (24/03/88)
இந்தப் படத்தில் வாலி எழுதிய கிளர்ச்சிப் பாடலொன்று சங்கர் கணேஷ் இசையில்
பாலா & சுசிலா குரல்களில் சுகமாக ஒலிக்கும்.
0
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னையன்றி யாருமில்லை
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னையன்றி யாருமில்லை
உதடும் உதடும்தான் உரச உரசத்தான்
உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறிப்போனதோ
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னையன்றி யாருமில்லை
கண்ணும் கண்ணும் கூட
நெஞ்சும் நெஞ்சும் மோத
ஜீவனோடு ஜீவன் கலந்தாட
சின்னஞ்சிறு மாது கன்னித்தன்மை மீது
காதலென்னும் வண்ணம் நீ கூட்ட
வஞ்சிப் பெண்ணின் கோலம்
இந்த நெஞ்சை மெல்ல கிள்ள
கொஞ்சம் கொஞ்ச வந்தேன்
வேறு குற்றம் என்ன சொல்ல
ஆ .. துடித்தேன் துவண்டேன் மயக்கமும்...ஏனோ
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
உன்னையன்றி யாருமில்லை
உதடும் உதடும்தான் ஆ.. உரச உரசத்தான் .. ஏ
உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறிப்போனதோ
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
உன்னையன்றி யாருமில்லை
சேலை கொண்ட அன்னம்
செவ்வாய் கொண்ட வண்ணம்
போனதென்ன மாயம் அறியேனே
முத்தம் இட்ட வேளை மன்னன் செய்த வேலை
தேக்கி வைத்த தேனை எடுத்தேனே
கட்டித் தங்கம் என்று
தோகை கன்னம் ரெண்டும் மின்ன
கிட்ட கிட்ட வந்து
நீயும் முத்தம் இட்டதென்ன
தரலாம் பெறலாம் தடுப்பவர்...யாரோ
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னையன்றி யாருமில்லை
உதடும் உதடும்தான் உரச உரசத்தான்
உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறிப்போனதோ
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னையன்றி... ஆ ஆ
முதல் சரணத்திற்குப் பின் ஒலிக்கும் சுசிலாவின் ஹம்மிங் அடடா ...
மோகனுக்கு நல்ல ராசி , பாட்ட வச்சே படம் ஓடிடும்..
ரேகா ரேகா - www.youtube.com/watch?v=WET0UyeP584
0
ரேகா ரேகா ரேகா ரேகா
காதல் என்னும் வானவில்லை கண்டேன்
நீ பார்த்த பார்வையில்
ராஜா ராஜா ராஜா ராஜா
வானவில்லின் கோலம் உந்தன் ஜாலம்
நீ தந்த ஆசைகள்
பூப்போல உன் மேனியில் புது வாசம் மயக்கம் தரும்
பூப்போல உன் மேனியில் புது வாசம் மயக்கம் தரும்
பனி போல நீ தொட்டதும் புதிதான வேகம் வரும்
பூப்போல உன் மேனியில் புது வாசம் மயக்கம் தரும்
பொற்கோலங்கள் கண்டு பண்பாடட்டும்
காலங்கள் கனிகின்றதே
ராஜா ராஜா ராஜா ராஜா
வானவில்லின் கோலம் உந்தன் ஜாலம்
நீ தந்த ஆசைகள்
இளங்காலை பொழுதாக வா புதுராகச் சுவையாக வா
குளிர்கால நிலவாக வா கனி ஆடும் கொடியாக வா
உன் ஆசைகள் கண்டு என் தேவைகள் நூறாகி
மலர் மேனி கொதிக்கின்றதே
ரேகா ரேகா ரேகா ரேகா
காதல் என்னும் வானவில்லை கண்டேன்
நீ பார்த்த பார்வையில்
ராஜா ரேகா
ராஜா ரேகா
ராஜா ரேகா
ராஜா ரேகா
0
இதே படத்தில் இடம்பெற்ற
சின்னச் சின்ன மேகம் என்னைத் தொட்டுப் போகும்
நினைவுகள் பூவாகும் பாடலும் இனிமையான பாடலே ........
மன்னிக்கவும் கடந்த மடலில் இட்ட ரேகா ரேகா பாடலை எழுதியவர் பஞ்சு
அருணாச்சலம் என குறிப்பிட மறந்துவிட்டேன்.
பஞ்சு அருணாச்சலம் எழுதுன எல்லாப்பாட்டுமே ஹிட் !
இரண்டில் ஒன்று அப்படின்னு ஒருபடம் ,1988 ல வந்தது.. ராம்கி நதியா
நடிச்சது.. அதுல ஒரு பாட்டு பஞ்சு எழுதுனது தான்..
சங்கீதப் பூ மழையே உன் சந்தேகம் தீரலையே (மனோ & சித்ரா)
www.youtube.com/watch?v=7aYwttOuk5E
0
இந்தப் பாடலில் ராம்கி தனது கற்பனையில் கருவைச் சுமந்து குழந்தையும்
பெற்றுக் கொள்கிறாரே , இதைக் காணும் பொழுது ஆணழகன் படம் ஞாபகத்திற்கு
வருகிறது
ஆணழகன் படத்தில் பிரசாந்த் பெண்ணாக நடித்து அனைவரையும் ஏமாற்றுவார் ,
ஒருகாட்சியில் பிரசாந்த் மாசமாக இருக்கிறாரா என்று சோதிக்க நடிகை
வைஷ்ணவி(செளகார் ஜானகியின் பேத்தி) டாக்டராக வருவார் . தனி அறையில்
பிரசாந்தைச் சோதிக்கையில் உண்மையறிந்து அலறிவிட்டுப் போவார் . நல்ல
நடிகையை இந்தக் காட்சியில் நடிக்க வைத்து கேவலப்படுத்துகிறார்களே என
நொந்து கொண்டேன் . ஒரு வீடு இருவாசல் படத்தில் வைஷ்ணவியின் நடிப்பு
அருமையாக இருக்கும், அந்தப் படத்தின் ஒரு காட்சியில் புதிதாக மணமான
வைஷ்ணவியை மோகிக்க அவரது கணவன் மதிய உணவு வேளையில் அலுவலகத்திலிருந்து
வீட்டிற்கு வருவான் . எரிச்சலுறும் வைஷ்ணவி தன் கணவனை விலங்குகள் கூட
நேரம் காலம் பாத்து தான் வச்சுக்கும் என திட்டி அனுப்பிவிடுவார்.
0
சங்கீத பூ மழையே பாடலில் ஆசிரியராக வருகிறாரே அவர் பெயர் தான் டைப்பிஸ்ட்
கோபு, இவரைப் பற்றி ஏ.பி.ராஜநாயகம் ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.
சித்ராலயா கோபு என்றொருவர் இருக்கிறார். இவர் டைரகர் ஸ்ரீதரின் வகுப்புத்
தோழர் , ஸ்ரீதரின் படங்களுக்கு இவர்தான் காமெடி ட்ராக் எழுதுவார்.
பாட்டு வாத்தியார் என்றொரு படத்தில் மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவும்
யேசுதாசும் பாடிய நீ தானே நாள் தோறும் நான் பாடக் காரணம் பாடலை ரசித்துக்
கொண்டிருக்கிறேன்
www.youtube.com/watch?v=rv3GhId7I8Q
0
இதே போல் இசையை மையமாக வைத்து மரகத வீணை என்றொரு படம் வந்தது. சுரேஷும்
ரேவதியும் நடித்திருப்பார்கள். ஒரு பள்ளிக்கூடத்தைச் சுற்றியே நகரும்
திரைக்கதை.
மனோரமா , கவுண்டமணி , சுரேஷ் , ரேவதி இவர்கள் எல்லோரும் ஒரு பள்ளியில்
ஆசிரியர்கள் வேலை பார்ப்பார்கள்.
இந்தப் படத்தில் செந்தில் விக் வைக்காமல் நடித்திருப்பார். விக் வைத்து
நடித்திருக்கும் கவுண்டமணி செந்திலை அடிக்கடி அம்மிக் கல் மண்டையன் என்று
திட்டுவார்.
கவுண்டமணி மனோரமாவை உஷார் பண்ணுவதற்காக செந்திலைத் தூதுவனாக அனுப்புவார்.
கவுண்டமணி , மனோரமாவிற்குக் கொடுக்கச் செல்லும் அல்வா , ஜாங்கிரி போன்ற
பலகாரங்களை செந்திலே சாப்பிட்டு விடுவார். ஒருகட்டத்தில் உண்மை தெரிய
செந்திலை எட்டி உதைப்பார் கவுண்டமணி
0
பள்ளிச் சுற்றூலாவில் ரேவதி(ஜானகி) பாடும் ஒரு பூவனக் குயில் மாமரத்துல்
கூடு கட்டுனது
ஆரம்ப காட்சிகளில் முட்டிக் கொள்ளும் ரேவதிக்கும் சுரேஷுக்கும் இடையே
காதல் முளைத்ததும் ஒலிக்கும் மரகத வீணை இசைக்கும் நேரம்
ஊர்த் திருவிழாவில் ரேவதி(ஜானகி) பாடும் கண்ணா வா கவிதை சொல்வேன் வா
www.youtube.com/watch?v=1dTr8CysS4I
தண்ணீர் நடுவில் சிறுவயது ரேவதிக்கு சோமராஜுலு சொல்லிக்கொடுக்கும் சாதகப்
பாடல் என அனைத்துப் பாடலும் அருமையாக இருக்கும்.
சங்கராபரணம் படப் புகழுக்குப் பின் தமிழ்ப் படங்களில் இசை சம்பந்தமான
படங்கள் என்றால் சோமராஜுலுவை நடிக்க வைத்திருப்பார்கள்.
சங்கீதப் பூ மழையே உன் சந்தேகம் தீரலையே (மனோ & சித்ரா)
www.youtube.com/watch?v=7aYwttOuk5E
0
இந்தப் பாடலில் ராம்கி தனது கற்பனையில் கருவைச் சுமந்து குழந்தையும்
பெற்றுக் கொள்கிறாரே , இதைக் காணும் பொழுது ஆணழகன் படம் ஞாபகத்திற்கு
வருகிறது
ஆணழகன் படத்தில் பிரசாந்த் பெண்ணாக நடித்து அனைவரையும் ஏமாற்றுவார் ,
ஒருகாட்சியில் பிரசாந்த் மாசமாக இருக்கிறாரா என்று சோதிக்க நடிகை
வைஷ்ணவி(செளகார் ஜானகியின் பேத்தி) டாக்டராக வருவார் . தனி அறையில்
பிரசாந்தைச் சோதிக்கையில் உண்மையறிந்து அலறிவிட்டுப் போவார் . நல்ல
நடிகையை இந்தக் காட்சியில் நடிக்க வைத்து கேவலப்படுத்துகிறார்களே என
நொந்து கொண்டேன் . ஒரு வீடு இருவாசல் படத்தில் வைஷ்ணவியின் நடிப்பு
அருமையாக இருக்கும், அந்தப் படத்தின் ஒரு காட்சியில் புதிதாக மணமான
வைஷ்ணவியை மோகிக்க அவரது கணவன் மதிய உணவு வேளையில் அலுவலகத்திலிருந்து
வீட்டிற்கு வருவான் . எரிச்சலுறும் வைஷ்ணவி தன் கணவனை விலங்குகள் கூட
நேரம் காலம் பாத்து தான் வச்சுக்கும் என திட்டி அனுப்பிவிடுவார்.
0
சங்கீத பூ மழையே பாடலில் ஆசிரியராக வருகிறாரே அவர் பெயர் தான் டைப்பிஸ்ட்
கோபு, இவரைப் பற்றி ஏ.பி.ராஜநாயகம் ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.
சித்ராலயா கோபு என்றொருவர் இருக்கிறார். இவர் டைரகர் ஸ்ரீதரின் வகுப்புத்
தோழர் , ஸ்ரீதரின் படங்களுக்கு இவர்தான் காமெடி ட்ராக் எழுதுவார்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
On Oct 24, 10:09 am, ஆசாத் <banua...@gmail.com> wrote:
> கன்ஸ்,
>
> சீர்காழியை நக்கீரராக நடித்து இந்தப் பாடலைப் பாடும்படி ஏ.பி.நாகராஜன்
தகவலுக்கு நன்றி அண்ணாத்த..
உங்கள் முகத்தில் சீர்காழியின் சாயல் கொஞ்சம் இருப்ப்பதைக்
கவனித்திருக்கிறேன் :)
ஹ்ம் யுடூப்புல கூட நம்ம மக்கள் ஏத்தி வச்சிருக்காங்க
தகவலுக்கு நன்றி அண்ணாத்த..
On Oct 24, 10:09 am, ஆசாத் <banua...@gmail.com> wrote:
> கன்ஸ்,
>
> சீர்காழியை நக்கீரராக நடித்து இந்தப் பாடலைப் பாடும்படி ஏ.பி.நாகராஜன்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
மன்னிக்கவும். ..இந்த பாடலை எழுதியவர் அறிவுமதி.. இந்த வரிகளை மெனக்கெட்டு ஒருமுறை வாசித்து பாருங்கள்.. அற்புதமான கவியனுபவம்..இலை மறை காயாக..
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேகை போல
பெண்ணோட காதல் கைக்குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாலே
என் மூச்சு காத்த வாங்கி போனாளே
பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால்
அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முல்லுடா
அத கடந்து போன ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திரை
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை
ஓட்ட போட்ட முங்கில் அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்னை பத்தி பாடும்
வந்து போனதாரு ஒரு நந்தவன தேரு
நம்பி நொந்து போனேன் பாரு அவ பூவு இல்ல நாரு
என்னை திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல நெருடாதே
மனம் தாங்காதே தாங்காதே
வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்னை கண்ணைக்கட்டி கூட்டி போங்கடா
படம் : ஏழாம் அறிவு
குரல் : SPB
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
மன்னிக்கவும். ..இந்த பாடலை எழுதியவர் அறிவுமதி.. இந்த வரிகளை மெனக்கெட்டு ஒருமுறை வாசித்து பாருங்கள்.. அற்புதமான கவியனுபவம்..இலை மறை காயாக..
விழியும் விழியும் நெருங்கும் பொழுது வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது வசதியாக வசதியாக வளைந்து கொடுஉறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு
இந்தப் படத்தில் நடித்த குமாரி ருக்மணி நடிகை லட்சுமியின் தாயார் ஆவார்.
ஸ்ரீவள்ளி திரைப்படத்தில் டி.ஆர் மகாலிங்கம் குமாரி ருக்மணியைப்
பார்த்துப் பேசும் காதல் வசனம் ..
0
"இனி பொறுக்கமுடியாது "
"என்றால்"
"காந்தர்வ விவாகம் தான்"
" நிஜமாகவா ? "
"கட்டாய காந்தர்வ விவாகம் தான்"
"நில் என்னைத் தொட்டால் , உன் உயிர் உன் உடலில் நிற்காது .."
"உன்னைத் தொடாவிட்டாலும் உன் உயிர் உன் உடலில் நிற்காது ,அப்படித்
தொடாமாலே போகும் உயிர் உன்னைத் தொட்டே போகட்டும்"
0
பன்னீர் புஷ்பங்கள் படத்தில் காதலர்கள் தொடாமல் கொடாமல் நடித்ததற்காக
அந்தப் படத்தின் இயக்குநர்கள் பாரதி வாசுவை மக்கள் வெகுவாகப்
பாராட்டினர்.
பூந்தளிர் ஆட பாடல்
www.youtube.com/watch?v=aAOU70veO5w
0
சந்தான பாரதியும் பி.வாசுவும் ஆரம்பகாலத்தில் இணைந்து பாரதி வாசு என்ற
பெயரில் சிலபடங்களை இயக்கினார்கள் என முன்பே எழுதியிருக்கிறேன்.
பாரதிவாசு இயக்கிய 3 படங்கள்
1) பன்னீர் புஷ்பங்கள் 2) மதுமலர் 3 ) நீதியின் நிழல்
உன்னைத் தொடாவிட்டாலும் *எ*ன் உயிர் *எ*ன் உடலில் நிற்காது
கண்ணை திறந்த கருனை கார்மேகமேஎன்கண்ணை திறந்த கருனை கார்மேகமேமனமே உருகஉன்னையே அனுதினம் தினம் வலம் வரகண்ணை திறந்த கருனை கார்மேகமேகலைமகள் என் நாவில் துணை வந்ததும்அலையாய் ஒளிவீசி அருள் செய்ததும்கலைமகள் என் நாவில் துணை வந்ததும்அலையாய் ஒளிவீசி அருள் செய்ததும்ஐந்திறன் சிறக்க அருள் வளம் நிலைக்கப ப க ரி க ச ரிப க ரி ச நி த பம ம மப ப பத ச நி த பம க ரிகண்ணை திறந்த கருனை கார்மேகமேஎன்கண்ணை திறந்த கருனை கார்மேகமே
அன்போடு
மோர்சுப்ரா
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
எங்க தலைவர் பாட்டு....
இதில் பல்லவி தாளம் பிடிக்கும் அதனால் பாட்டும்....
Song: kattaana kattazhagu - பாடல்: கட்டான கட்டழகு கண்ணா
Movie: Kudumba thalaivan - திரைப்படம்: குடும்பத் தலைவன்
Singers: P. Suseela, T.M. Soundararajan - பாடியவர்: பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: இயற்றியவர்: கண்ணதாசன்
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1962கட்டான கட்டழகு கண்ணா உன்னக்
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
கட்டான கட்டழகு கண்ணா உன்னக்
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா ஒன்னப்
பாக்காத கண்ணும் ஒரு கண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா ஒன்னப்
பாக்காத கண்ணும் ஒரு கண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனாநடை போடு நடை போடு
நடை போடு நடை போடு மனமென்ற தேரில்
நடமாடும் மயில் போலவே
நடை போடு நடை போடு மனமென்ற தேரில்
நடமாடும் மயில் போலவே உன்
இடையோடு இடையோடு கொடிபோல உள்ளம்
விளையாட வந்த நிலவேகட்டான கட்டழகு கண்ணா
விளையாடு நீ விளையாடு
விளையாடு விளையாடு விடிக்கின்ற வரையில்
அழகோடு வந்த துணையே
விளையாடு விளையாடு விடிக்கின்ற வரையில்
அழகோடு வந்த துணையே பொன்
வளையோடு வளையோடு இசைபாடும் கையில்
வளைந்தாட வந்த கலையேபட்டாடை கட்டி வந்த மைனா
பாலென்ற பருவமே பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே வா நீ வா
பாலென்ற பருவமே பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே வா சிறு
நூலென்ற இடையிலே கால் பின்னும் நடையிலே
நோய் தந்த பெண்மையே வா காதல்
நோய் தந்த பெண்மையே வாமதயானை வடிவமே நடமாடும் வீரமே
மலர் போன்ற உள்ளமே வா வாவா
மதயானை வடிவமே நடமாடும் வீரமே
மலர் போன்ற உள்ளமே வா நாம்
அறியாத பூமியில் தெரியாத பாதையில்
இரு பேரும் போகலாம் வா நாம்
இரு பேரும் போகலாம் வாஆஹாஹா ஓஹோஹோ ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆஹாஹா ஓஹோஹோ ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
அன்போடு
மோர்சுப்ரா
’அரவான்’ படப் பாடல்கள் *குறைத்து* அரைமணி நேர
கார்த்தி என்றே விளித்திருக்கிறீர்கள்... கார்த்தி என்பவர் சூர்யாவின் தம்பி
திரைப்படம்:மன்னாதி மன்னன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இயற்றியவர்:கண்ணதாசன்
பாடகர்கள்:டி.எம்.சௌந்தராஜன், பி.சுசீலா
கனியக் கனிய மழலை பேசும் கண்மணி -
உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா -
எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா
சித்திரத் தோகை செவ்விதழ்க் கோவை சேதி சொல்லாதோ -
இந்தப்பத்தரை மாற்றுப் பாவை மேனி பங்கயமாகாதோ
இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே -
புதுப்பண்பாடும் தமிழமுதம் கலந்து கொஞ்சவே
(கனிந்த)
காலம் எனும் கடலினிலே கன்னி உங்கள் அருகினிலே
கனிந்தே வருவேன் இனி தென்றல் என்னும் தேரினிலே
அருகினில் நீ இருந்தால் ஆசையும் குறைவதுண்டோ -
அமுதேஎன் வாழ்வினில் வளரும் இன்பமே
(கனிய)
அற்புத ஓவியம் கண்கள் கற்றது எப்படியோ -
உயர்செந்தமிழ் ஓவியர் நெஞ்சில் கொஞ்சிடும் கற்பனையோ
மாந்தளிர் போலும்எழில்மேனிமின்னுவதெப்படியோ..
உம்..............உம்...............
நல்லமுதே என் வாழ்வினில் வளரும் இன்பமே
நீலவானும் நிலவும் போல கூடுவோம் -
நல்இன்பம் என்னும் படகிலேறி ஆடுவோம்
ஆ....ஆ....ஆ...ஆ.
உங்களுக்கு டெடிகேட் பன்னலாமேன்னு
இயற்றியவர்:கண்ணதாசன்
இந்தப்பத்தரை மாற்றுப் பாவை மேனி *பங்கயமாகாதோ*
அப்புறம் இந்த டூயட் படத்துல ’சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்’ இருக்குல்ல அத்த பிரபு சொல்லும்போது வைரமுத்து ச்பாட்ல இருந்திருக்காரு, பிரபு கொஞ்சம் தடவியிருக்காரு, அப்ப வைரமுத்து சிரிச்சிக்கினே சொன்னாராம், ‘ம்ம்ம்...நடிகர் திலகம் மகனா’.பாடலாசிரியருங்கள்ள இந்த கண்ட்ரோல் வாலிக்கு அடுத்து வைரமுத்து ஃபீல்டுல வெச்சிருக்காரு . வெச்சிருந்தாரு.நா.மு.வுது எதுனாச்சும் இப்படி கண்ட்ரோல் பண்ண செய்தி இருக்கா?
(வைரமுத்து சார் - உதித் நாராயண் எபிசோட் ஃபுல்லா தெரிஞ்சவங்க ஆரும் இருக்காங்களா?)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பிரியமான பொண்ணை ரசிக்கலாம் என்ற வைரமுத்து வரியைபெரியம்மா பொண்ணை ரசிக்கலாம் என்று பாடினாராம் . வைமுத்து ஆன் ஸ்பாட்டில் இருந்ததால் ' எப்பா உறவு முறையில பிரசனைய ஏற்படுத்திராதப்பா " என்று திருத்தினாராம் .
அன்போடு
மோர்சுப்ரா
என் மகள் முதன் முதலாக முணுமுணுத்தது ஆடுகளம் படத்தில் இடம்பெற்ற ஆத்தி ஆத்தி என்னாச்சோ பாடலைத்தான் , ஆடுகளம் படப் பாடல்கள் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக முன்னாள் ஓட்ட நாயகி பி.டி.உஷாவே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
என் மகளின் விருப்பப் பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவை வெடி படத்திலிருந்து இப்படி மழையடித்தால் எப்படிக் குடை பிடிப்பேன் பாடலும், வாகை சூட வா படத்திலிருந்து சர சர சாரக் காத்து பாடலும்....
தேன்கிண்ணம் தளத்தில் சாரக்காத்து பாடலின் வரிகளை நிறைய தவறுகளுடன் போட்டிருக்கிறார்கள் .
சாரக் காத்து பாடலை விட எனக்கு போறானே போறானே காத்தோட தூத்தலைப் போல பாடல்தான் மிகவும் பிடித்திருக்கிறது
அன்போடு
மோர்சுப்ரா
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
இந்த பாட்டு வரிகள் கிடைக்கவேயில்லை...ஆங்கிலத்தில் இருந்து நானே தட்டச்சினேன்.அந்த அளவுக்கு பிடிக்கும்இந்த பாடலில் வரும் தபேலா ஸ்கொரை கவனியுங்களேன் இதமா இருக்கும்.
மாதுளங் கனியே நல்ல மலர்வன குயியேமரகத மணியே என் மயில் இளம் மயிலேமாறன் கனை போடும் விழியே
வைரமுத்து மொதமொதல்ல பாட்டு எழுதுனப்ப வேள்வி அது இதுன்னெல்லாம் போட்டு எழுதுனப்ப ரொம்ப இலக்கியமா இருக்கேன்னு யாரோ கேட்டிருக்காங்க. அப்ப அவரு சொன்னாராம், ’உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்’னு கண்ணதாசன் கூடத்தான் எழுதியிருக்காரு, ‘ஆயிழை’ன்னா என்னான்னு கேட்டாராம்.
| குறள் 1124 வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து |
| விளக்கம் ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடுகூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன் |
ஆயிழை =ஆய் + இழை – ஆராய்ந்து செய்த ஆபரணம்.
கும்பக்கரை தங்கையா படப்பாடல் இது. இந்த படத்துல பாட்டு எல்லாமே ஹிட்தான்.
ஆ..ஆ ..ஆஆஅ...ஆ..ஆ ..ஆஆஅ.......
பூத்து பூத்து குலுங்குதடி பூவூ
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோ...ஓ...
புது மச்சான் வந்தான் ம்ச்சான் வந்தான் ஹோ...ஓ....
பூத்து பூத்து குலுங்குதடி பூவூ
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
வைக்காத செந்தூரம் தான் வஞ்சி வந்த உன்னோடு நான்
இப்போது நீ தந்தால் என்ன முத்தாரம் தான்
வண்டாடும் கண்ணோரம் தான் வஞ்சி இளம் பெண்ணோடு நான்
வந்தேனம்மா கொண்டாடத்தான் இந்நேரம் தான்
மொட்டானதே இளம் மேனி மேனி
தொட்டாடவே வரும் மாமன் நீ
மேளம் ஒரு இடி இடிக்குது
வானம் புது குடை பிடிக்குது
வா வா மானே......
பூத்து பூத்து குலுங்குதய்யா பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோ...ஓ...
புது மச்சான் வந்தான் ம்ச்சான் வந்தான் ஹோ......
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
ஆ..ஆ ..ஆஆஅ...ஆ..ஆ ..ஆஆஅ.....
பட்டோடு பொன்னாடைதான் பார்த்த மனம் உன்னோடு தான்
கட்டாமலே எட்டாமலே தள்ளாடடுதே
தோளோடு தோளோகத்தான் மேலோடு மேலோகத் தான்
துள்ளாமலே நில்லாமலே வந்தான் மச்சான்
செம்மேனிய செந்தாழம் பூவா....
அது உன்மேனியா பொன் மேனியா
பார்த்தா உடல் சிலு சிலுக்குது
பார்வை பட கிளுகிளுக்குது
வா வா மாமா....
பூத்து பூத்து குலுங்குதடி பூவூ
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோ...
புது மச்சான் வந்தான் ம்ச்சான் வந்தான் ஹோ....ய்
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு......
அன்போடு
மோர்சுப்ரா
எம்மா எம்மா காதல் பொன்னம்மா...
நீ என்னை விட்டு போனதென்னம்மா...
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா...
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா...
அடி, ஆணோட காதல்… கைரேகை போல...
பெண்ணோட காதல்… கைக்குட்ட போல...
கனவுக்குள்ளே அவளை வச்சேனே...
என் கண்ண ரெண்டைத் திருடி போனாளே...
புல்லாங்குழலைக் கையில் தந்தாளே...
என் மூச்சுக் காத்தை வாங்கிப் போனாளே...
பொம்பளய நம்பி
கெட்டுப் போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும்
இப்ப கடைசியில் நின்னேன்…
முத்தெடுக்கப் போனால்
உன் மூச்சடங்கும் தன்னால்…
காதல் முத்தெடுத்தப் பின்னால்
மனம் பித்தமாகும் பெண்ணால்…
அவ கைய விட்டுத்தான் போயாச்சு
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீன்பேச்சு
மனம் உன்னாலே புண்ணாப் போச்சு…
காதல் பாதை கல்லு முள்ளுடா
அதைக் கடந்து போன ஆளே இல்லைடா…
காதல் ஒரு போதை மாத்திரை
அதைப் போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை…
எம்மா எம்மா காதல் பொன்னம்மா...
நீ என்னை விட்டு போனதென்னம்மா...
நெஞ்சுக்குள்ளே காயமாச்சும்மா...
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா...
ஓட்டை போட்ட மூங்கில்
அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்டை போட்ட பின்னும்
மனம் உன்னைப் பத்தி பாடும்…
வந்து போனதாரு
ஒரு நந்தவனத்தேரு
நம்பி நொந்து போனேன் பாரு
அவ பூவு இல்ல நாரு…
என்னை, திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்பைப் போல் நெருடாதே
மனம் தாங்காதே… தாங்காதே…
வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா…
காதல் இல்லா ஊரு எங்கடா…
என்னை கண்ண கட்டி கூட்டி போங்கடா…
எம்மா எம்மா காதல் பொன்னம்மா...
நீ என்னை விட்டு போனதென்னம்மா...
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா...
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா...
அடி, ஆணோட காதல்… கைரேகை போல...
பெண்ணோட காதல்… கைக்குட்டை போல...
கனவுக்குள்ளே அவளை வச்சேனே...
என் கண்ண ரெண்டைத் திருடி போனாளே...
புல்லாங்குழலைக் கையில் தந்தாளே...
என் மூச்சுக் காத்தை வாங்கிப் போனாளே...
படம்: ஏழாம் அறிவு
ஓட்டை போட்ட மூங்கில்
அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்டை போட்ட பின்னும்
மனம் உன்னைப் பத்தி பாடும்…//
ஓட்டை போட்ட மூங்கில் பாட்டு பாடுது. ஓகே. நெஞ்சில் ஓட்டை போட்ட பின்னும் இதுல பின்னும் என்ற வார்த்தையால சொல்ல வர்ரது என்ன? எனி ஒன் ஹெல்ப் மீ இன் திஸ் ரிகார்ட்... ஆசாத்ஜி, மரவண்டு ஜி போஸ்ட்...
//
ஓட்டை போட்ட மூங்கில்
அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்டை போட்ட பின்னும்
மனம் உன்னைப் பத்தி பாடும்…//
ஓட்டை போட்ட மூங்கில் பாட்டு பாடுது. ஓகே. நெஞ்சில் ஓட்டை போட்ட பின்னும் இதுல பின்னும் என்ற வார்த்தையால சொல்ல வர்ரது என்ன? எனி ஒன் ஹெல்ப் மீ இன் திஸ் ரிகார்ட்... ஆசாத்ஜி, மரவண்டு ஜி போஸ்ட்...
--
பிரசாத் வேணுகோபால்எண்ணம் போல் வாழ்வு
எம்மா எம்மா காதல் பொன்னம்மா...
நீ என்னை விட்டு போனதென்னம்மா...
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா...
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பாடல் நல்ல பாடல் தான்... இசை மீண்டும் மீண்டும் கேட்க வைக்க கூடியது தான்... இருந்தாலும் இதன் வரிகள் ஒரு இடத்தில என்ன சொல்லுதுனு புரியலை...
ஓட்டை போட்ட மூங்கில்
அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்டை போட்ட பின்னும்
மனம் உன்னைப் பத்தி பாடும்
ஓட்டை போட்ட மூங்கில் பாட்டு பாடுது. ஓகே. நெஞ்சில் ஓட்டை போட்ட பின்னும் இதுல பின்னும் என்ற வார்த்தையால சொல்ல வர்ரது என்ன? எனி ஒன் ஹெல்ப் மீ இன் திஸ் ரிகார்ட்... ஆசாத்ஜி, மரவண்டு ஜி போஸ்ட்...
>ஓட்டை போட்டால் புல்லாங்குழலாகி இசையெழுப்பும் தன்மை மூங்கிலுக்கு உண்டு, ஆனால், இதயம் காயப்பட்டுவிட்டால் பாடாது, இருப்பினும் கதாநாயகனின் இதயம் காயப்பட்ட பின்னும் பாடுகிறது. இதில் பாட்டு என்பதைக் குறியீடாகக்கொள்ளவேண்டும், நாயகன் சொல்ல வருவது தன் இருப்பை.
இதுள என்னையா இருக்கு. நெஞ்சில ஓட்டை போட்ட பின்பு மரித்து போயிடனும் அப்படியல்லாமல் புல்லாங்குழல் போட பாடுது. ஓட்டை போட்டது நீயென்று இருந்தும். அது உன்னை நினைத்தே அப்பொழுதும் பாடுது.
ஐயா, நான் கேட்க வந்தது, ஓட்டை போட்ட பின்னும் மனம் உன்னைப் பத்தி பாடும்ன்றது...
ஓட்டை போட்ட பின்னாலயும் மனசு அவளைப் பத்தி பாடுதுனு பிரசென்ட் டென்ஸ்ல சொல்லி இருந்தா பிரச்சினையே இல்லை... ஆனால், பாடும்னு பியூச்செர் டென்ஸ்ல போட்டது தான் மனசுல உறுத்திட்டே இருக்கு இந்த வரிகள்...
2011/11/22 ஆசாத் <banu...@gmail.com>>ஓட்டை போட்டால் புல்லாங்குழலாகி இசையெழுப்பும் தன்மை மூங்கிலுக்கு உண்டு, ஆனால், இதயம் காயப்பட்டுவிட்டால் பாடாது, இருப்பினும் கதாநாயகனின் இதயம் காயப்பட்ட பின்னும் பாடுகிறது. இதில் பாட்டு என்பதைக் குறியீடாகக்கொள்ளவேண்டும், நாயகன் சொல்ல வருவது தன் இருப்பை.
--பிரசாத் வேணுகோபால்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ பாடும்னு பியூச்செர் டென்ஸ்ல போட்டது தான் மனசுல உறுத்திட்டே இருக்கு இந்த வரிகள்...
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
அன்போடு
மோர்சுப்ரா
மேல இருக்ற வாக்கியம் நாம எல்லாம் சாதாரணமா பேசறதுதான. அதுல கடந்த காலத்த நாம எத்ரிகாலமா சொல்றதில்லையா. கிட்டத்தட்ட அதைப்போலத்தான்.ப்ளீஸ் கன்சிடர் வழுவமைதி அட் திஸ் பாய்ண்ட்.
புல்லாங்குழல் ஓட்டைபோட்டா பாடும்.
2011/11/22 மோர் சுப்ரா <mors...@gmail.com>புல்லாங்குழல் ஓட்டைபோட்டா பாடும்.புல்லாங்குழல் எப்படிலே பாடும்???யாராவது எடுத்து ஊதுனாத்தான் பாடும்...
#எதுக்கோ எதையோ பேசுவோர் சங்கம்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
2011/11/22 மோர் சுப்ரா <mors...@gmail.com>
புல்லாங்குழல் ஓட்டைபோட்டா பாடும்.புல்லாங்குழல் எப்படிலே பாடும்???
அன்போடு
மோர்சுப்ரா
மரியாதையா திருச்சிக்கு டிக்கெட் புக் பண்ணிடு....சென்னைக்கு பண்ணிடாத
இன்னும் காவல் கோட்டம் மட்டும் பாக்கி ;))
கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா.. ஆஹா..
கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி..
உன் மடியில் சீராட்டு.. என் மனச தாலாட்டு..
அந்த அலைமேல் பாய் போட்டு.. அழகே நீராட்டு..
கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா.. ஆஹா..
பாலும் சோறும் உங்காம பச்சை தண்ணி செல்லாம
இத்து இத்து போனேனே..
எச்சி முத்தம் எல்லாம நெஞ்ஜாங்கனி தாங்காம
ரெண்டு கண்ணும் தூங்காம கட்டில் சுகம் காணாம
காமன் செய்யும் நாட்டாமை..
பஞ்சில்லாம தீயில்லாம பத்தவச்ச கள்ளி
புத்திக்குள்ள கத்திவீசி போவதென்ன தள்ளி
பச்ச வாழ தோப்புக்குள்ள பந்திவெக்க வாடிப்புள்ள
பால் பழங்கள் கூடைக்குள்ள பத்தியமும் தேவையில்ல..
கொலைகாரி..
நாஞ்சில் நாட்டுக் கடலெல்லாம் உன்ன கண்டு வலைவீசும்
சங்கு முத்து எல்லாமே தங்க கால விலைபேசும்
ஓர கர எல்லாமே ஒட்டிக்கொள்ளும் மீன்வாசம்
உன்ன மட்டும் தொட்டாலே மாசம் எல்லாம் பூவாசம்
பாதி கொலை செஞ்சுப்புட்டு தப்பி செல்லும் மூடா
முத்தம் இட்டு மொத்தத்தையும் கொன்னுப்புட்டு போடா
ஆசை வெச்சிப் பொம்பளைக்கு அஞ்சுநாலா தூக்கமில்லை
மீச வெச்ச ஆம்பளைக்கு மெத்த வாங்க நேரமில்லை..
கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி..
கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா.. ஆஹா..
உன் மடியில் சீராட்டு.. என் மனச தாலாட்டு..
அந்த அலைமேல் பாய் போட்டு.. என் அழக நீராட்டு..
Hello ajoks.. I am jinging Song..
Soup Song.. Flop Song..
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri? Dee..
Ruling party motheru motheru
Motheru colouru white’tu
White'tu heart worst’tu worst’tu
worst’tu CM waste’u
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Mother’u changing aalu aalu
what is her goal’lu?
I was like a shark’ku shark’ku
Now’wu Future Dark'ku..
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Mama, sarakku Eduthuko..
Apdiye Kaila murukku Eduthuko..
Papapa Papapapa Papapa Pa Pa..
Šeriya Vaasi..
Šuper Mama Ready.. Ready 1 2 3 4..
What A Change Over Mama
Nøw Tune Change'ju..
Paalu price'su.. Only Ènglish'sa..
Milk price’su.. Goes’u high
people spill’u Tear'ru
thatha went’u Motheru come’mu
Life'fu Reverse'su Gear'ru
Bus’su Bus’su Oh ! my Bus’su
ur ticket cost’tu sucks’su
Book’ku book’ku reading book’ku
you dont have luck’ku
All price’su hike’u hike’u
People dont like’u
My shoes’vu nike’u nike’u
My hairu stylu spike’u
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
இணைத்திருக்கும் புகைப்படத்தில் இடமிருப்பவர் ஜெயலட்சுமி (அக்கா),
வலமிருப்பவர் ராஜலட்சுமி
0
பெண்:- மரகத தோரணம் வாசலில் அசைந்திட மன்னவன் வரவு கண்டாள்
அவன் மயங்கிய பாவையில் வழங்கிய போதையில் தன்னையும் மறந்து நின்றாள்
ஆண்:- நாட்டியம் ஆடிடும் விழிகளில் இவள் ஒரு ஆயிரம் கனவு கண்டாள்
அந்த ஆயிரம் கனவினில் தோன்றிய ஆசையில் வாழ்ந்திடும் நினைவு கொண்டாள்
பெண்:- காவிய நாயகன் பொன் உடல் பார்த்த பின் கண்களும் திரும்பவில்லை
இந்த கங்கையில் ஆடிட சங்கமம் தேடிய நெஞ்சமும் உறங்கவில்லை
ஆண்:- கன்னியின் குங்குமம் காதலன் மார்பினில் கலந்திட வேண்டும் என்றாள்
அவள் கண்களும் குங்குமம் ஆனதன் காரணம் கேட்டதும் நாணி நின்றாள்
(மரகத தோரணம்)
ஆண்:- ஆடைகள் சரிந்ததும் கார் குழல் கலைவதும் பார்த்திட நேரமில்லை
ஒரு அங்குலம் அங்குலமாய் இதழ் பதிந்தது ஆசையும் தீரவில்லை
பெண்:- தாவிய கைகளும் தழுவிய உடல்களும் ஒரு கணம் பிரியவில்லை
இங்கு தந்தது எத்தனை கொண்டது எத்தனை அதற்கொரு கணக்கும் இல்லை
(மரகத தோரணம்)
0
தரிசனம் , டைகர் தாத்தாச்சாரி , கற்பூரம், தேரோட்டம், பிள்ளையார்,
மகிழம்பூ ஆகிய படங்களுக்கு சூலமங்கலம் சகோதரிகள்
இசையமைத்திருக்கிறார்கள்.
சூலமங்கலம் சகோதரிகளின் இசைத் திறமையைக் கண்ட எம்.ஜி.ஆர், சூலமங்கலம்
சகோதரிகள் இசையில் ஒரு படம் நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டிருக்கிறார்.
அந்தப் படத்திற்கு உங்களுக்காக நான் என்ற பெயரும் வைக்கப்பட்டு மூன்று
பாடல்களும் பதிவாகி விட்டது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் அரசியலில் குதித்து
விட்டதால் அந்தப் படத்தில் அவரால் நடிக்கமுடியவில்லை.
வாத்தியாரின் காதல் பாடல்கள் எப்போதும் ஸ்பெஷல்தான். தலைமைப் பண்பை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் நடிப்பு காதல் காட்சிகளிலும் வெளிப்படும். கம்பீரமாக நடப்பார். மரத்தைச் சுற்றி ஓடியாடினாலும் அதையும் தலைவனுக்குரிய கம்பீரத்துடன், புன்னகையுடன் செய்வார்!
அடிமைப் பெண் (1969) படத்தில் கேவி மகாதேவன் இசையில் புலமைப் பித்தனின் வரிகளில் பாலுவும் சுசீலாவும் பாடியிருக்கும் இந்தப் பாடலைக் கேட்டிராதவர்கள் இருக்க முடியாது. தர்மாவதி (தாமாவதி) ராகத்தில் அமைந்த பாடல்.
உற்சாகமும், காதலும், இளமையும் துள்ளித் தெறிக்கும் பாடல் இது. புலமைப் பித்தனின் வரிகள் அபாரமானவை! பரபரப்பான ஆரம்ப இசையுடன் இளமை ததும்பும் பாலுவின் குரலும், சுசீலாவின் சீரான துல்லிய உச்சரிப்புடனான மென்மையான குரலும் நம்மைச் சொக்க வைக்கின்றன. நான்கு சரணங்கள். ஆனாலும் இசையை அடக்கமாக வைத்து இருவரையும் பாடவைத்து நேரம் போவதைத் தெரியாமல் அற்புதமாகச் செய்திருக்கிறார் கேவியெம்.
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோடு சுவை சேர புதுப் பாடல் ஒன்று பாடப் பாட
(ஆயிரம்)
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
என் உயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ
(ஆயிரம்)
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக
(ஆயிரம்)
அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்
அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ
இன்பம் இதுவோ
இன்னும் எதுவோ
தந்தாலும் ஆகாதோ
(ஆயிரம்)
பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
அந்த நிலையில்
தந்த சுகத்தை
நான் உணரக் காட்டாயோ
(ஆயிரம்)
நன்றி : http://myspb.blogspot.com/2006/05/blog-post.html
வாத்தியாரின் காதல் பாடல்கள் எப்போதும் ஸ்பெஷல்தான். தலைமைப் பண்பை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் நடிப்பு காதல் காட்சிகளிலும் வெளிப்படும். கம்பீரமாக நடப்பார். மரத்தைச் சுற்றி ஓடியாடினாலும் அதையும் தலைவனுக்குரிய கம்பீரத்துடன், புன்னகையுடன் செய்வார்!
:)
அதையும் தலைவனுக்குரிய கம்பீரத்துடன், புன்னகையுடன் செய்வார்!
:)
இதுதானா அந்த தலைவனுக்குரிய 'டச்.."?!
துரை அய்யா கலக்கல்... :-)))))
:)
இதுதானா அந்த தலைவனுக்குரிய 'டச்.."?!
அன்போடு
மோர்சுப்ரா
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
அன்போடு
மோர்சுப்ரா
நானும் பாராட்டித்தான் சொன்னேன் மோர் ஜி.. :-))))
அது :))With Lots OF Love,JP
2011/11/29 மோர் சுப்ரா <mors...@gmail.com>நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிடினும்.இத்தனை அழகாய் ரொமான்ஸ் செய்யும் தலைவன் எவனும் இல்லை இங்கே...
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
அன்போடு
மோர்சுப்ரா