http://www.jeyamohan.in/?p=16356
அன்பின் ஜெ,
பத்மநாம சுவாமி கோயில் புதையலைப் பற்றி இந்நேரம் உங்களுக்குப் பத்துக் கடிதங்களேனும் வந்திருக்க வேண்டுமே. தளத்தில் அதனைப் பற்றி இதுவரை ஒன்றும் எழுதப்படவில்லை என்பதால் இக்கடிதத்தை எழுதுகிறேன்.
அந்தச் செய்தியைப் பார்த்த உடனேயே எனக்குத் தோன்றியது ஒன்றுதான். அடடா.. இதனை வைத்து ஜெ ஒரு புனைவெழுதினால் கலக்கி விடுவாரே என்பதேயது.
அந்தப் புதையலைப் பற்றி இதற்கு முன்பு எங்கேனும் வாசித்திருக்கிறீர்களா? அப்படி ஏதேனும் இருந்தால் பகிரவும்.
நேரத்திற்கு நன்றி,
வாசகன்,
மதன்

[பத்மநாபசாமி கோயில் முகப்பு]
வணக்கம் சார்,
இன்று நாளிதழ்களில் திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாப சுவாமி கோயிலின் பாதாள அறைகளில் பல்லாயிரம் கோடி (சுமார் 50 ஆயிரம் கோடி) மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், தங்க விக்கிரகங்கள், வைர, வைடூரிய ஆபரணங்கள், நவரத்தினக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் படித்தேன். இந்தக் கோயில் திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்குச் சொந்தமான அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது என்றும் அறிந்தேன். நீங்கள் பலமுறை இக்கோயிலைப் பற்றியும் திருவாங்கூர் அரண்மனை பற்றியும் எழுதியுள்ளீர்கள். பத்மநாப சுவாமி கோயிலைப் பற்றியோ, திருவாங்கூர் மன்னர் பரம்பரை பற்றியோ தங்கள் கட்டுரைகளைத் தவிர வரலாற்றுப் புத்தகங்களில் படித்ததாக ஞாபகம் இல்லை.
என்னுடைய ஐயம் என்னவென்றால் இவ்வளவு கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் எப்படி மன்னர் பரம்பரைக்கு சாத்தியமாச்சு. இது உபரியா இல்ல கப்பமா. அதைவிட திருவாங்கூர் மன்னர் பரம்பரை அவ்வளவு பெரிய பேரரசா?
உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன். செய்தியை நாளிதழில் படித்த மறுகணம் கணினியை எழுப்பி உங்களுக்கு இக்கடிதம் எழுதுகிறேன் .
நன்றி,
இளஞ்செழியன்.

[பொன்னாலான அனந்தபத்மநாபசாமி திருமேனி]
ஜெ,
திருவனந்தபுரம் அனந்தபத்மனாப சுவாமி கோயிலில் தற்போது நடைபெறும் ஆபரணத் தணிக்கை விபரங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். 50,000 கோடி மதிப்பான நகைகள் இதுவரை மதிப்பிடப்பட்டுள்ளன; இன்னும் இது போல ஒரு மடங்கு இருக்கலாம் என்று உத்தேசிக்கப்படுகிறதாம். 2000க்கும் மேல்பட்ட “சரபொளி“ மாலைகள், அதில் 18 அடி நீளமும், 3 முதல் 5 கிலோவரை எடை வரும் மலைகள் 4. நெல் மணியை ஒத்த வடிவத்தில் ஒரு முழு சாக்கு தங்க மணிகள் ; ரத்தினங்கள் மேலும் சாக்கு கணக்கில் – பெல்ஜியம் வைரங்கங்களை ஒத்தவை போல இருக்கின்றனவாம். தங்கக் கிரீடங்கள், காப்புகள், இதர அணிகலன்கள் என்று ஒரு தங்கப்பிரவாகம். நாட்டிலேயே சொத்து மதிப்பு மிக்க கோயில் எனப் பெயர்பெறும் வாய்பு இருக்கிறதாம். சமீபத்தில் வாயடைக்க வைத்த நிகழ்வு இது.
இத்தனை திரண்ட சொத்து திருவிதாங்கூர் மன்னர்களால் எப்படி சாத்தியமானது என்று மனம் குடைந்துகொண்டிருந்தது. கைவசம் இருந்த நாகம் அய்யாவின் திருவிதாங்கூர் ஸ்டேட் மேனுவல் நோக்கிப்பாய்ந்தேன். மார்த்தாண்ட வர்மா நவீன திருவிதாங்கூரை அமைப்பது வரை எட்டுவீட்டில் பிள்ளைமார் கோயிலைப் பரிபாலித்து வந்தனர், பிறகு வந்த மன்னர்கள் சிறு கொடைகளைக் கோயிலுக்கு அளித்தனர் என்பதைத்தவிர பெரிய தகவல்கள் கண்ணில் படிவில்லை.
திருவட்டார் கோயில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோயில் என கன்யாகுமரி ஜில்லாவின் பிற கோயில்களும் பெரும் செல்வங்களைக் கொண்டிருக்கின்றன. திருவிதாங்கூர் வரலாற்றில் இத்தனை செல்வம் சேர்க்க வல்ல பெருவணிகங்கள், பெரும் போர்கள் எதுவும் வருகிறதா..? பெரிய அளவில் நம் மன்னர்கள் கப்பம் பெற்றிருந்தார்களா..? இவர்கள் ஆங்கிலேயருக்குக் கொடுத்து நொடிந்து போன வரலாறே நான் சிறு வயதில் கேட்டு வளர்ந்தது. இதைப்பற்றிக் கொஞ்சம் பேச முடியுமா… ?
Regards,
கெ.பி.வினோத்
[தர்மராஜா கார்த்திகை திருநாள் ராமவர்மா]
*
***

அன்புள்ள நண்பர்களுக்கு
திருவனந்தபுரம் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து வருகிறேன். உண்மையில் இந்தப் பெரும் செல்வம் அங்கிருக்கும் என எவருக்கும் தெரியவில்லை. ஆகவே ஒட்டுமொத்தமாக ஓர் அதிர்ச்சியலை. இப்படிப் பெரும் செல்வம் இருக்கிறது என ஒருமாதம் முன்பு சொல்பவனைப் பாரம்பரியமேன்மை பேசும் இந்துத்துவவாதி என வசைய வந்திருப்பார்கள்.

[உத்ராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, இன்றைய மன்னர்]
இந்த நிகழ்வுகளின் பின்புலம் இது. மறைந்த மன்னர் சித்திரைத் திருநாள் பாலராமவர்மா அவர்கள்,திருவனந்தபுரம் பத்மநாபசாமிகோயிலில் கருவறைக்கு முன்னால் உள்ள ஒற்றைக்கல் மண்டபம் என்ற முகமண்டபத்தைப் பொன்வேயவேண்டும் என்ற கனவைக்கொண்டிருந்தார். அதற்கான நிதியை அவரால் உருவாக்க முடியவில்லை. அவரது ஆசையை நிறைவேற்ற இப்போதைய மன்னர் உத்ராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா மகாராஜா முயன்றார். அப்போது அவருக்கு ஓர் ஆலோசனை சொல்லப்பட்டது. ஆலயத்தில் கருவறை அருகே நிரந்தரமாகப் பூட்டியே இருக்கும் ஆறு ரகசிய அறைகளில் சிலவற்றில் அனந்தபத்மனாபனுக்குச் சொந்தமான பொன் இருப்பதாகவும் அவற்றை எடுத்து உருக்கிப் பயன்படுத்தலாமென்றும்.
மார்த்தாண்டவர்மா அதற்காக 2007ல் முயன்றார். அப்போது அது செய்தியாக வெளியே தெரியவே அப்படி செய்ய மன்னருக்கு உரிமையில்லை என்று வழக்கறிஞர் டி.பி.சுரேந்திரன் தலைமையில் நீதிமன்றத்தை அணுகினார்கள். அனந்தபத்மநாபசாமிகோயிலின் பரம்பரை அறங்காவலர் மன்னர்தான். ஆனால் கோயில் அவருக்குச் சொந்தமானதல்ல. இந்திய அரசின் சொத்து அது. ஆகவே டெல்லி உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
![]()
[சித்திரைத் திருநாள் பாலராமவர்மா, சென்றமன்னர்]
2011ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஆலயத்தை அரசுடைமையாக்கவும், பொதுமக்கள், அரசு, நீதிமன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அந்த ரகசிய அறைகளைத் திறந்து பார்க்கவும் ஆணையிட்டது. அவ்வாறு திறந்தபோதுதான் உலக வரலாற்றின் மிகப்பெரிய நிதிக்குவைகளில் ஒன்று கிடைத்திருக்கிறது– இன்னும் ஓர் அறை திறக்கவேண்டியிருக்கிறது. புதியதாக ஓர் இரும்பறை தென்பட்டிருக்கிறது. ஒருவேளை உலகின் மிக அதிகமான நிதி சேகரிப்புள்ள ஆலயமாக திருவனந்தபுரம் ஆகக்கூடும்.
கவனிக்கவேண்டிய விஷயங்கள் இவை. பாலராமவர்மா மன்னருக்கும் சரி, இப்போதைய மன்னருக்கும் சரி இந்த பெரும்நிதிக்குவை பற்றி தெரியவில்லை. நகைகள் இருக்கலாமென ஓர் ஊகமிருந்திருக்கிறது, அவ்வளவே. மன்னர்குடும்பத்தில் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கண்டிப்பாகத் தெரிந்திருக்காது. எல்லாருக்குமே அதிர்ச்சிதான். [அய்யய்யோ கைவிட்டுப் போயிற்றே எனப் பலர் இரவுத்தூக்கத்தைத் தொலைக்கக்கூடும்.]
அப்படியானால் இவை எப்போது வைத்துப் பூட்டப்பட்டன? மதிலகம் ஆவணங்கள் எனப்படும் அரச ஆணைக்குறிப்புகளின்படி 1789 ல் திப்புசுல்தான் திருவிதாங்கூர் மேல் படையெடுத்து வந்தபோது அவரிடமிருந்து ஆலயச் சொத்துக்களையும் திருவிதாங்கூர் அரசாங்க கஜானாவையும் காப்பாற்றிக்கொள்ளும்பொருட்டு இவை கட்டப்பட்டன.
அப்போது மன்னராக இருந்தவர் தர்மராஜா என்றழைக்கப்பட்ட கார்த்திகைத்திருநாள் ராமவர்மா. அவரது அமைச்சராக இருந்தவர் நவீன திருவிதாங்கூரின் சிற்பிகளில் ஒருவரான ராஜா கேசவதாஸ். இவர் பேரில் இன்றும் கேசவதாஸ புரம், கேசவன் புத்தந்துறை போல பல ஊர்கள் குமரிமாவட்டத்தில் உள்ளன. இவரது திட்டமே இந்தப் பாதுகாப்பறைகள். 1789ல் நெடுங்கோட்டை போரில் ராஜா கேசவதாஸ் தலைமையில் திருவிதாங்கூர் படைகள் திப்புசுல்தானை வென்றன. சுல்தானுக்குக் காயம்பட்டது. ஆகவே திருவிதாங்கூருக்குள் அவரது படையெடுப்பு நிகழவில்லை.
இவ்வறைகளின் ரகசியத்தை தர்மராஜாவுக்கு பின்னால் வந்த பாலராமவர்மாவோ பிறரோ அறிந்திருக்கக்கூடுமா என்பதெல்லாம் மிகச்சிக்கலான கேள்விகள். ஏனென்றால் தர்மராஜா மகாராஜா தன் ஆட்சியின் இறுதிக்காலகட்டத்தில் தன் வாரிசான அவிட்டம் திருநாள் பாலராமவர்மாவை இளவரசுப்பட்டத்தில் இருந்து நீக்கினார். காரணம் இளவரசரின் ஊதாரித்தனமும் பெண்பித்தும். மூலம் திருநாள் கவிஞர், அறிஞர். ஆனால் இளவரசர் பால ராமவர்மா ஜெயந்தன் நம்பூதிரி,தச்சி மாத்து தரகன் என்ற சிரியன் கிறித்தவ வணிகர், தலக்குளத்து சங்கர நாராயண செட்டி என்ற தமிழர் அடங்கிய ஒரு தரகு கும்பலின் பிடியில் இருந்தார்.
தர்மராஜா கார்திகை திருநாள் ராமவர்மா மறைந்தபோது 16 வயது மட்டுமே ஆன அவிட்டம் திருநாள் பாலராமவர்மா அரண்மனைச்சதிகள் மூலம் ஆட்சிக்கு வந்தார். அவர் ராஜா கேசவதாசனை துரோகிப்பட்டம் சுமத்தி சிறையில் அடைத்து விஷமிட்டுக் கொன்றார். மூவர்குழுவால் அரசு சொத்துக்கள் பிரம்மாண்டமான அளவில் கொள்ளையடிக்கப்பட்டன.
[கௌரி பார்வதிபாய் மகாராணி]
தர்மராஜா காலகட்டத்தில் திப்புசுல்தானை பயந்து பிரிட்டிஷாருடன் திருவிதாங்கூர் ஓர் ஒப்பந்தம்போட்டுக்கொண்டது. அந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி அவிட்டம் திருநாள் ராமவர்மா காலகட்டத்தில் பிரிட்டிஷார் திருவிதாங்கூரை தங்களுக்கு கப்பம்கட்டும் அரசாக ஆக்கி ஒட்டச்சுரண்ட ஆரம்பித்தார்கள். கர்னல் வெல்லெஸ்லி தலைமையில் ஒரு நிரந்த பிரிட்டிஷ் ராணுவம் திருவிதாங்கூரில் நிலைகொண்டு ஓர் இணையான அரசாங்கத்தை நடத்தியது. மூவர்குழு கிட்டத்தட்ட நாட்டை பிரிட்டிஷாரின் காலடியில் வைத்தனர். பிரிட்டிஷார் வரிவசூலை ஏற்றிக்கொண்டே செல்ல ஒரு கட்டத்தில் திருவிதாங்கூரே போண்டியாகியது. அந்நிலையில்தான் மக்கள் வேலுத்தம்பி தளவாயின் தலைமையில் கொந்தளித்து எழுந்தார்கள். மூவர்குழு அழிக்கப்பட்டது.
ஆனால் மீண்டும் பிரிட்டிஷாரின் வரிவசூல் கொள்ளை உச்சத்தை அடைய அரசரின் சொத்துக்களை விற்று வரிகளைக் கட்டவேண்டிய நிலை வந்தது. மீண்டும் வேலுத்தம்பி தளவாய் கலகம் செய்தார். அவரது சுதேசிப்பிரகடனம் குண்டற என்ற இடத்தில் வெளியிடப்பட்டமையால் குண்டற விளம்பரம் என்றபேரில் புகழ்பெற்றுள்ளது. வேலுத்தம்பி தளவா கேரளத்தின் ஒரு சரித்திர நாயகன். அவரது கலகத்தை அடக்கி அவரை பிரிட்டிஷார் கொன்றார்கள். திருவிதாங்கூரின் ராணுவபலம் முழுமையாக அழிக்கப்பட்டது.
அதன்பின் சுதந்திரம் கிடைக்கும் வரை பிரிட்டிஷார் திருவிதாங்கூரை முழுமையாகச் சுரண்டி வந்தார்கள். பல சந்தர்ப்பங்களில் நிதி இல்லாமல் திருவிதாங்கூர் திவால்நிலைக்குச் சென்றிருக்கிறது. பிரிட்டிஷ் நிதிவசூல் கெடுபிடிகளை, மிரட்டல்களை, கிட்டத்தட்ட வழிப்பறிக்கொள்ளைக்குச் சமானமான பிடுங்கல்களை நாம் ஆவணங்களில் காணலாம். மன்னர்கள் கெஞ்சுகிறார்கள். மேலும் மேலும் கெடுநீட்டிக்கிறார்கள். முக்கால்வாசி பணம் கொடுத்து ஆசுவாசம் கொள்கிறார்கள். மிகையான வரிவிதிப்பால் அஞ்சுதெங்கு, ஆலப்புழா ஆகிய துறைமுகங்கள் படிப்படியாக அழிவதை மன்னர்கள் முறையிட்டு மன்றாடிச் சொல்கிறார்கள். ஆனால் பிரிட்டிஷார் திருவிதாங்கூரை அடிமாட்டுக்கு அனுப்பும் முன் கடைசியாகக் கறக்கும் பசுவாக நினைத்தனர்.
மூலம் திருநாள் மகாராஜா 1897ல் பேச்சிப்பாறை அணையைக் கட்ட முயன்றபோது நிதி இல்லாமல் அரசுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான சிறிய குளங்களை தமிழகத்தைச் சேர்ந்த தனியார் விவசாயிகளுக்கு வயலாக விற்று நிதி திரட்டினார். அரசர் நிலக்கிழார்களுக்கு எழுதிய கடிதங்கள் இன்றுகிடைக்கின்றன [பார்க்க அ.கா.பெருமாள் தொகுத்த முதலியார் ஆவணங்கள்] அதில் மன்னர் பணம் கேட்டு நிலக்கிழார்களிடம் கெஞ்சுகிறார். ‘நீங்கள் பணம் தந்தால்தான் அரண்மனையில் அன்றாடச் செலவு நடக்கும்’ என்று மன்றாடுகிறார். அரண்மனைக்கு வெண்ணை பால் கொடுத்த வகைக்கான கணக்குகள் பலகாலம் கடனில் இருப்பதை நாம் அந்த ஆவணங்களில் காணலாம். அரண்மனையின் சாதாரண விருந்துகளுக்காகக்கூட கடன் வாங்கப்பட்டிருக்கிறது.
இக்காலகட்டங்களில் இந்த நிதி இருப்பது தெரிந்திருந்தால் அது எஞ்சியிருக்காது. சதிகாரர்களோ பிரிட்டிஷாரோ தர்மம் பார்ப்பவர்கள் அல்ல. ஆக, ராஜா கேசவதாசனுக்கும் தர்மராஜாவுக்கும் மட்டும் தெரிந்த ஒரு ரகசியம் இது. திவான் சிறையில் இருந்து இறந்தபோது இந்த ரகசியத்தைத் தன்னுடன் கொண்டு சென்றார். எதிர்கால சந்ததிகளுக்காக அந்தச் செல்வத்தை அவர் பாதுகாத்து விட்டுச்சென்றார் என்றே சொல்லலாம். அதுவே இப்போது திரும்ப வந்திருக்கிறது.
[ராஜா கேசவதாஸ் திவான்]
இன்னொரு தகவல். 165 வருடம் முன்னர் அரசி கௌரி பார்வதிபாய் [சுவாதி திருநாள் மகாராஜாவின் அம்மா] காலகட்டத்தில்தான் கடைசியாக இது நிரந்தரமாக பூட்டப்பட்டது, அதற்கு முன்னர் அவ்வப்போது ரகசியமாக திறந்து பார்க்கப்பட்டிருக்கலாம் என்பதே உண்மை. மருமக்கள் வழி கொண்ட திருவிதாங்கூர் அரசகுலத்தில் தர்மராஜாவுக்குப்பின் அவரது மருமகள்களுக்கு மட்டும் தெரிந்திருந்த ரகசியத்தை அவர்கள் அதன் பின் வந்த ஆண்களிடம் சொல்லாமலே விட்டிருக்கலாம், அவை பிரிட்டிஷார் கைகளுக்குச் செல்லக்கூடாது என்பதற்காக.
திருவிதாங்கூர் மட்டுமல்ல இந்தியாவின் எல்லா அரசுகளும் வளமான அரசுகளாகவே இருந்திருக்கின்றன என்பதே வரலாற்று உண்மை. அதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். பருவமழையை நம்பி இருக்கும் இந்தியாவில் அரசுகளும் மக்களும்கூட சேமிப்பை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார்கள். தங்கம் அந்த சேமிப்புக்கான நாணயமாக இருந்தது. ஆலயங்கள் சேமிப்பு மையங்கள். அவை மாபெரும் பஞ்சம்தாங்கும் அமைப்புகள். அந்த ஒட்டுமொத்த அமைப்பே 1750களுக்கு பின் பிரிட்டிஷாரால் இருநூறாண்டுக்காலம் கொள்ளையிடப்பட்டது. அதன் விளைவே இந்தியாவை சூறையாடிய மாபெரும் பஞ்சங்கள்.
இந்தியாவை பிரிட்டிஷார் எந்த அளவுக்கு சூறையாடிக் காலியாக்கினார்கள் என்ற வரலாற்று உண்மை இன்னமும் பேசப்படாத ஒன்றாகவே உள்ளது. ஐரோப்பியச் சார்புள்ள வரலாற்றாசிரியர்களே நமக்குள்ளனர். அவர்களே இங்கே நிறுவனங்களை ஆள்கின்றனர். அவர்கள் எப்போதுமே பிரிட்டிஷாருக்கு நற்சான்றிதழ் அளித்தே வரலாற்றை எழுதுகிறார்கள். இந்தியாவுக்கு நவீன வளர்ச்சித் திட்டங்கள் மூலம் நிதிவளர்ச்சியை பிரிட்டிஷார் கொண்டுவந்தார்கள் என்று சொல்லும் அடிமை வரலாற்றாய்வாளர்களும் இருக்கிறார்கள்.
என்ன வருத்தம் என்றால் பிரிட்டிஷ் குடிமகனாக இருந்தவரும் அடிப்படையில் ஐரோப்பியமையநோக்கு கொண்டவருமான கார்ல் மார்க்ஸ் கூட பிரிட்டிஷார் வருவதற்கு முந்தைய இந்தியா அரைபப்ழங்குடி நிலையில் எந்தவிதமான செல்வச்செழிப்பும் இல்லாத நிலையில் இருந்தது என்ற சித்திரத்தையே கொடுக்கிறார். நாகரீகம் என்பதெல்லாம் சில நகரங்களில் மட்டுமே இந்தியாவில் இருந்தன என்பது அவரது எண்ணம். அதற்கு பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகளும் , பாதிரிமார்களும் எழுதிய மோசடியான பதிவுகளே அவருக்கு ஆதாரம். அவரது சீடர்களும் இதுகாறும் இந்த கருத்தையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் மார்க்ஸ் அவர்களின் மெஸையா- அவர் சொன்னால் அதில் பிழை இருக்காது என்பதே அவர்களின் அறிவியல்.
உண்மையில் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவின் உபரியை முழுக்க உறிஞ்சிக்கொண்டு சென்று இந்நாட்டு மக்களில் கால்வாசிபேரை அகதிகளாக பிஜித்தீவு முதல் கிழக்கிந்தியதீவுகள் வரை பூமியெங்கும் சிதறடித்தது என்பதே உண்மை.
திருவிதாங்கூர் மதுரை நாயக்கர் ஆட்சிக்கு கப்பம் கட்டிய சிற்றரசாகவே இருந்தது. அப்படியென்றால் மதுரையில் தஞ்சையில் இருந்த செல்வம் எப்படிப்பட்டதாக இருக்கும்! அவை எங்கே சென்றன! இருநூறாண்டுகளில் நாம் பிரிட்டிஷாருக்கு பறிகொடுத்த செல்வம் எவ்வளவு பெரிதாக இருக்கும்!
அந்தச்செல்வம் எப்படி வந்தது? திருவிதாங்கூர் எக்காலத்திலும் பிற நாடுகள் மேல் படை எடுத்ததில்லை. மார்த்தாண்ட வர்மா காலகட்டத்தில் அது கொல்லம் வரை உள்ள பகுதிகளை மீட்டுக்கொண்டது. காயக்குளம், கொச்சி அரசுகளை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தது. ஆனால் படையெடுப்பு கொள்ளை ஏதும் நிகழ்ந்ததில்லை. ஆக இது முழுக்க முழுக்க திருவிதாங்கூருக்குள் இருந்த பணம் தான்.
அன்றைய அமைப்பில் வரிவசூல் ஆறில் ஒருபங்குமுதல் நான்கில் ஒரு பங்குவரை இருந்திருக்கிறது. திருவிதாங்கூர் மிக மிக வளம் மிக்க பூமி. இங்கே இன்று வாழ்பவர்களில் கிட்டத்தட்ட கால்வாசிப்பேர் பல்வேறு காலங்களிலாக இங்கே வந்தவர்கள். பிரிட்டிஷ் ஆட்சிவந்து தாதுவருஷ பஞ்சம் வந்தபோது தொடர்ந்து நூறாண்டுக்காலம் தமிழ்நாட்டில் இருந்து குடியேற்றம் நிகழ்ந்ததைக் காணலாம். அவ்வாறு வந்தவர்களில் கலைஞர்களும் கைவினைஞர்களும் அதிகம்.
திருவிதாங்கூரின் வனப்பகுதிகள் எழுநூறுகளுக்கு பின்னர் பெரும் செல்வம் ஈட்டித்தர ஆரம்பித்தன. மலைவளங்களுக்கு சர்வதேச சந்தையில் பெரும் மதிப்பு இருந்தது . திருவிதாங்கூருக்குக் கொல்லம், அஞ்சுதெங்கு, ஆலப்புழா, குளச்சல் என முக்கியமான துறைமுகங்கள் இருந்திருக்கின்றன. சங்க காலம் முதலே தமிழ்நாட்டில் பணமாகவும் பொன்னாகவும் மாறியது – மாற்ற முடிந்தது, வனவளம் மட்டுமே. சர். சி பி ராமசாமி அய்யர் திருவிதாங்கூரை இந்தியாவுடன் சேர்க்கக்கூடாதென்று வாதாடிய காரணமே இது வளமான நிலம், இங்கிருந்து பணம் வரிவடிவில் மத்திய அரசுக்கு போகத்தான் செய்யும் , திரும்ப வருவது குறைவு என்பதனால்தான்.
இதேபோல கிட்டத்தட்ட 600 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருக்கும் ரகசியக் கல் அறை ஒன்று கொடுங்கல்லூர் பகவதி [கண்ணகி] ஆலயத்தில் உள்ளது. பிற ஆலயங்களிலும் இருக்கலாம். குறிப்பாக கொச்சி மன்னர்களுக்குரிய ஆலயங்களில்.
கடைசியாக, பத்மநாபசாமி கோயில் இன்னொரு அபாயகரமான சுட்டியை அளிக்கிறது. நம்முடைய ஆலயங்கள் இன்றாவது பாதுகாப்பாக இருக்கின்றனவா? இரு உதாரணங்கள். ஒன்று பத்மநாபசாமி கோயிலுக்கு நிகரான, அதைவிட பழைமையான திருவட்டார் ஆதிகேசவ சாமிகோயில் தமிழகத்தில் உள்ளது. அதுதான் உண்மையில் திருவிதாங்கூர் மன்னர்களின் குலதெய்வம். அந்தக்கோயிலும் மூன்று நிலவறைகள் இருந்தன. சுதந்திரம் பெற்றபின் தமிழக ஆலயநிர்வாகத்திற்குள் வந்ததுமே அவை திறக்கப்பட்டு சூறையாடப்பட்டன. தொடர்ச்சியாக இருபதாண்டுகளுக்கும் மேலாக நடந்த அந்தக்கொள்ளை அதில் சம்பந்தப்பட்ட ஒரு நம்பூதிரி மனசாட்சிக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டபோது 1991ல் வெளிவந்தது. பெரிய பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்டது. அதன் பின் இன்றுவரை வழக்கு நாகர்கோயில் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ளது, இருபதாண்டுக்காலமாக!.
அன்று அந்த நிதியில் வைரக்கிரீடம் , வைரக்கவசம் , பொன் ஆபரணங்கள் இருந்தன என அந்த நம்பூதிரியே கடிதத்தில் சொல்லியிருந்தார். அவற்றின் மதிப்பு பத்துகோடிக்கு மேல் என்று மக்கள் சொன்னபோது அதை மிகைப்படுத்தல் என ‘சிந்தனையாளர்’கள் மறுத்தார்கள். [நான் அப்போது எழுதிய ஒரு கட்டுரைக்கு அப்படி ஓர் எதிர்வினை வந்ததை நினைவுகூர்கிறேன்.] அந்த செல்வங்களின் மதிப்பு என்னவாக இருந்தது, எங்கே போயிற்று என யாருக்கு தெரியும்? அந்த வழக்கையே நேர்மையாக அமைக்கவில்லை. அதன் குற்றவாளிகள் கிட்டத்தட்ட அனைவருமே வயதாகி இறந்துவிட்டனர். அவர்களின் வாரிசுகள் மாபெரும் கோடீஸ்வரர்களாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழ்கிறார்கள். அந்த வழக்குகளை ‘பைசல்’ செய்ய அன்றைய அறநிலை அமைச்சர் பெரும் பங்கு வகித்ததாக ஊரில் சொல்லப்படுகிறது.
திருச்செந்தூரில் இதேபோல பாண்டியர்காலம் முதலே உள்ள செல்வங்கள் நிலவறையில் இருந்தன. அறங்காவலர்களும் கோயிலதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்து அவற்றைக் கொள்ளையடித்தார்கள் என்ற குற்றச்சாட்டும் விசாரணையும் முப்பதாண்டுக்காலம் முன்பு எழுந்து அப்படியே கரைந்து சென்றது. 1980ல் சுப்ரமணியபிள்ளை என்ற அதிகாரி கொலைசெய்யப்பட்டார். அதைபால் கமிஷன் என்ற அமைப்பு விசாரித்தது. என்ன நடந்தது மேற்கொண்டு?
சுப்ரமணியபிள்ளையின் உறவினர் ஒருவரைப் பத்து வருடம் முன்பு ஒரு ரயில்பயணத்தில் சந்தித்தேன். அங்கே திருட்டுப்போன நகைகள் உண்டியல்நகைகள் அல்ல, மன்னர்கால நகைகள், அவற்றின் மதிப்பு ‘நினைக்கமுடியாத அளவுக்கு பெரிசு’ என்றார். அங்கிருந்த கோயில்பட்டக்காரர்களும் அதிகாரிகளும் எல்லாருமே அதில் பங்குபெற்றார்கள் என்றார். சுப்ரமணியபிள்ளையின் உறவினர்கள் எல்லாருமே கடுமையாக மிரட்டப்பட்டு அமைதியானார்கள் என்றார்.
சிதம்பரம், அழகர்கோயில், மதுரை , திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் இதேபோல ரகசிய அறைகள் உண்டு என்ற பேச்சைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இனி இந்தக்கோயில்களை முழுக்க நம் அரசியல்வாதிகள் தோண்டி மல்லாத்திவிடுவார்கள். அங்கே என்ன இருந்தது என நாம் அறியப்போவதே இல்லை. அதைத்தடுக்கவும் கண்காணிக்கவும் நம்மிடையே எந்த மக்கள் அமைப்பும் இல்லை.
ஜெ
திப்பு சுல்தான்
‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.
1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால், அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.
1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.
மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 – 92) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.
எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.
பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.
மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அது வரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.
“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.
திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், ‘பிளாசிப் போரில்’ பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக’ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.
இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.
அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.
திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.
ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.
துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.
பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில்தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.
பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, ‘குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.
பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு ‘மைசூர் அரசின் சார்பாக’ உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.
ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், ‘பென்சன் ராஜாக்கள்’ என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.
தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.
காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால், அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.
“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.
“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.
1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.
“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்’‘ என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர்.சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.
திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.
பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.
இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.
அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.
அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை’ உருவாக்கியது.
அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.
“எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதிய திப்பு, தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.
கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின், தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.
திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.
“ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்” என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:
“சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”
1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன:
“இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்…”, “தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.”
- இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்
மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.
தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.
“நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.”
வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. “விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?
திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். ‘சதக்’ என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.
காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.
ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால்? “உயிர் பிழைத்தல்’ என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் “ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்” என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.
இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.”"மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.
திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:
“நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.”
“மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா”
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.
| வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம்! (பகுதி-1) | ![]() |
![]() |
| வரலாறு - இந்திய வரலாறு |
| வியாழன், 14 ஆகஸ்டு 2008 19:02 |
நாகரீகம் வளர்வதற்கு முந்தைய கற்காலத்தில், மனிதன் கால்நடைகளைப் போன்று வாழ்ந்தான் என்பதை வரலாற்றுப் பாடங்களில் படித்துள்ளோம். அத்தகைய காலகட்டங்களில் அச்சமூகத்திற்குத் தலைமையேற்ற ஏதோ ஒரு நல்ல பண்பாட்டுப் பழக்கவழக்கங்களைக் கொண்ட மன்னன் மேற்கண்டக் கட்டளையை இட்டுள்ளான் என நினைத்தால்.... அது தவறு! |
| செவ்வாய், 26 ஆகஸ்டு 2008 14:47 |
அங்கு காணப்பட்ட ஒரு விளம்பரம் இவ்வாறு கூறுகின்றது: "நம்முடைய நாட்டில் சொந்தம் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ, உயர் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ வழங்கி வராத வழிகெட்டப் பெண்கள் உண்டு எனில் அவர்களை உடனடியாக கொன்று விட வேண்டும்" (கேரள வரலாற்றின் இருண்ட பக்கங்கள், இளம்குளம் குஞ்ஞன் பிள்ளை - பக்கம் 147). நம்பூதிரிமார்கள் கீழ்ஜாதி பெண்களைக் கற்பழித்தால் கூட தண்டிக்கப்படுபவர்கள் அந்தக் கீழ்ஜாதி பெண்களாகத் தான் இருப்பர். "நம்பூதிரிகள் கீழ்ஜாதி பெண்டிர் மீது வன்கொடுமை செலுத்தினால் அந்த நபரின் கண்களைக் குத்த வேண்டும்(கண்கள் சிறிது காலத்திற்குக் கட்டப்பட வேண்டும் என்பது தான் சாதாரணமாக நடைமுறைபடுத்தப்பட்டிருந்தது). அந்தக் கீழ்ஜாதி பெண்ணையும் அவள் குடும்பத்தையும் கொன்றொழிக்கவோ அல்லது முஸ்லிம்களுக்கு விற்றுவிடவோ செய்ய வேண்டும். அப்பெண்ணின் அழகு நம்பூதிரியைப் பாதிப்படைய வைத்ததே அவளும் அவள் குடும்பத்தினரும் செய்த தவறு"(கேரளம், ஃப்ரான்ஸிஸ் புக்கானன் - பக்கம் 75). கீழ்ஜாதி பெண்டிர் மீது உயர்சாதியினரால் நிகழ்த்தப்பட்ட உச்சக்கட்ட அடக்குமுறையாகும் இது. நம்பூதிரிகளின் திருமணமுறை இதனைவிட விசித்திரமானதாகும். நம்பூதிரிகளில் மூத்த சகோதரன் மட்டுமே சொந்தம் ஜாதியில் திருமணம் செய்ய வேன்டும். மற்றவர்கள் நாயர் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். மூத்த சகோதரனுக்கு மட்டுமே திருமணம் செய்வது அனுமதிக்கப்பட்டது என சங்கரஸ்மிருதியும் கட்டளையிடுகின்றது. "ஏக ஏவ க்ருஹம் கச்சேத் - ஜ்யேஷ்ட புத்ரோன சேரெ: இவ்வாறு மூத்த மகனுக்கு மட்டும் திருமணத்தை விதியாக்கி விட்டு மற்றவர்களின் விஷயத்தில் சங்கரஸ்மிருதி மௌனம் கடைபிடிக்கின்றது" (கேரள பிராமண வாழ்க்கையில், ஸ்மிருதி... - டாக்டர். பி.வி. ராமன்குட்டி). இவ்வாறான நடைமுறைக்கு ஒவ்வாத விதிகளைக் கடுமையாகப் பேணியதால் நம்பூதிரிகளின் சமுதாயத்தில் உள்ள பெண்களும் பலவகைகளில் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக நம்பூதிரி சமுதாயத்தில் விளைந்த மோசமான விளைவுகளை வரலாற்றாசிரியர்கள் பலர் ஆவணப்படுத்தியுள்ளனர். |
| செவ்வாய், 18 நவம்பர் 2008 06:22 |
இதற்கும் மேலாக சிறு வயதுள்ள கன்னிப் பெண்களை வயதான நம்பூதிரிகள் திருமணம் புரிவதும் சர்வசாதாரணமாக நடைமுறையில் இருந்தது. அதன் மூலம் சிறுவயது விதவைகள் சமூகத்தில் அதிகரிக்க ஆரம்பித்தனர். (வாட்டர் எனும் திரைபடத்தில் தீபா மேத்தா இதனை மையமாக வைத்து, உயர்சாதிப் பிராமணச் சமூகத்தில் முன்பு நடந்த இத்தகைய அநியாயங்களால் விதவைகளாக்கப்பட்ட பால பருவப் பெண் குழந்தைகளின் மோசமான நிலையைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியதாலேயே சங்கபரிவார அமைப்புகள் அப்படத்தைத் திரையிட விடாமல் அட்டூழியம் புரிந்தன). பல நம்பூதிரிப் பெண்களுக்கும் திருமணம் புரியும் அதிர்ஷ்டம் கிடைத்திருக்கவில்லை. பல வேளைகளிலும் பெண்கள் கன்னிகளாகவே மரணமடைய வேண்்டிய துர்பாக்கிய நிலை இருந்தது.
"1912இன் கணக்குப்படி 1000 நம்பூதிரிமார்களில் 516 பேர் திருமணம் புரிந்தவரும் 457 பேர் திருமணம் செய்யாதவரும் ஆவர். பெண்களில் 1000 க்கு 393 பேர் திருமணம் புரிந்தவர்களும் 387 பேர் திருமணம் புரியாதவர்களும் 230 பேர் விதவைகளுமாவர்" (கேரள நம்பூதிரிப் பெண்களின் கடந்த கால வரலாறும் நிகழ்கால நிலைமையும் - டாக்டர். கெ.பி. ஸ்ரீதேவி).
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நம்பூதிரிகளுக்கிடையில் நடைமுறையிலிருந்த வரதட்சணை பழக்கவழக்கம் பெண்களுக்கு உருவாக்கிய பிரச்சனைகள் ஏராளம்.
"இரண்டு, மூன்று திருமணங்கள் புரிய நம்பூதிரிகளுக்கு, அச்சமூகத்துப் பெண்களுக்கான வரதட்சணைக் கொடுமை ஒரு முக்கியத் தூண்டுகோலாக இருந்தது முதல் விஷயமாகும். இரண்டாவது இதனை விடக் கொடுமையானது: நம்பூதிரிகளில் அனைவரும் செல்வந்தர்கள் இல்லை. பொருளாதார - சமூக தலைமைகளைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த ஒரு பகுதி மட்டுமே தனவந்தர்களாக இருந்தனர். வறுமையில் வாடியவர்களும் அச்சமூகத்தில் நிறைந்திருந்தனர். வரதட்சணை கொடுக்கப் பணம் இல்லாமல் இருக்கும் பொழுது, உதவ ஆளில்லாத தந்தைகள் வயதிற்கு வந்தப் பெண்களைக் கர்நாடகா, சிர்சியி, சித்தாப்பூர் அல்லது கோயம்புத்தூர் போன்ற ஏதாவது இடத்திற்குக் கொண்டு சென்று ஏதாவது ஒரு பிராமணனுக்குத் திருமணம் செய்து கொடுப்பர்".("கேரள நம்பூதிரிப் பெண்களின் கடந்தகால வரலாறும் நடப்புக் காலமும்" - டாக்டர். கெ.பி.ஸ்ரீதேவி)
நம்பூதிரிகளிடையே நடைமுறையிலிருந்து இத்தகையத் திருமண நிகழ்வுகளில் பெண்கள் வஞ்சிக்கப்படுவது இயல்பாகிப் போயிருந்தது. வி.டி. பட்டத்திரிபாடின் "பதில் கிடைக்காத கேள்வி" என்ற சிறுகதை, இதுபோன்று வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கொடுமையான அனுபவங்களைக் கூறுகிறது. இந்தியாவில் பல பாகங்களிலும் சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததன் ஓர் அங்கமாகக் கேரளத்திலும் நம்பூதிரிகளிடையே பெண்களுக்கு இழைக்கப்பட்டக் கொடுமைகளுக்குக் குறைவில்லை. பிராமணர்கள் பெண்களைப் போகப்பொருட்களாக மட்டுமே நினைத்துச் செயல் பட்டதன் விளைவே இது. சமீபத்தில் தீபாமேத்தா தயாரித்து வெளியான "வாட்டர்" என்ற திரைப்படமும் பெண் சமூகத்திற்கு எதிராக பிராமண சமூகம் கையாண்டிருந்த கொடூரமான பழக்கவழக்கங்களையும் அநியாயங்களையும் காட்சிக்குக் காட்சி வெளிப்படுத்துவதாக அமைந்தது. இதனாலேயே சங் பரிவாரத்தின் கடுமையான எதிர்ப்புக்கும் அத்திரைப்படம் இலக்கானது.
இதுபோன்ற அனைத்துத் சுரண்டலுக்கும் இலக்காகி, வீடுகளின் உள்தளங்களில் ஒதுங்கி மறைந்து வாழவேண்டிய நிலைக்கு உள்ளாக்கப் பட்ட பெண்கள், கடுமையான உடற்பசியால் வாடி, பலவேளைகளிலும் வழிகெட்டுப் போக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருந்தனர். அவ்வாறு சோரம் போவது நம்பூதிரி ஆண்களுடனாக இருந்தாலும்கூட, அவர்கள் ஜாதிவிலக்கிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். அவ்விதம் ஜாதிவிலக்கிற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு, கோழிக்கோடு சேட்டுகளிடம் தஞ்சமடைவது அல்லது தெரு விபச்சாரிகளாவது ஆகிய இரண்டு மட்டுமே வாழ்க்கைக்கான வழிகளாக இருந்தன.
ஒரு பக்கம் நம்பூதிரிப் பெண்கள், நம்பூதிரிகளிடையே இருந்த மோசமான ஆச்சாரங்களால் கடுமையான உடல்-மன கொடுமைகளுக்கு இரையாகிக் கொண்டிருந்தபோது, மறுபக்கம் நாயர் பெண்களுக்கான மணவாழ்க்கை என்பது கட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்கும் 'புதுமைப் பெண்'களாக அவர்களை மாற்றிப் போட்டிருந்தது.
நாயர் பெண்கள் வயதிற்கு வருவதற்கு முன் ஒன்பது-பத்து வயதிருக்கும் பொழுது "கெட்டு கல்யாணம்" என்ற ஒரு திருமணச் சடங்கு நடைபெறும். சில வேளைகளில் ஒரு ஆணே பல பெண்களுக்குத் தாலி கட்டுவார். அவ்வாறு தாலிகட்டும் ஆணுக்கு, தாலி கட்டிய பெண்ணுடன் தொடர்பு கொள்வதற்கு அனுமதி கிடையாது. 'கட்டிய கணவனை'த் தவிர்த்து உயர்ஜாதியிலோ அல்லது அதே ஜாதியிலோ உள்ள வேறு எந்த ஆணுடனும் அப்பெண் இணைந்து கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை உடைய நாயர் பெண்கள், அதனை மோசமான பழக்கமாகக் கருதவில்லை. மாறாக, அதிகமான பிராமணர்களுடைய, வழிபோக்கர்களுடைய உறவை நாயர் பெண்கள் மிகப்பெரும் கொடுப்பினையாக - பெருமையாகக் கருதியிருந்தனர். அத்தகைய தொடர்புகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்திருந்தது அப்பெண்களைப் பெற்ற தாய்மார்கள்தாம் என்பது அதிர்ச்சியின் உச்சகட்டம்!
"கெட்டு கல்யாணம்" என்ற சடங்கு முடிந்த உடனேயே தனது மகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளப் பலருக்கும் பெண்ணைப் பெற்ற தாயே அழைப்பு விடுவாள். அதில் நம்பூதிரிகளுக்கு முதல் நிலை முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. வீட்டிற்கு வெளியே வாள் வைக்கப்பட்டிருப்பது காணப்பட்டால், உள்ளே வேறு நபர் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, பிற கணவர்களும் காதலர்களும் திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்பது சட்டமாக இருந்தது. நாயர் பெண்களுக்குப் பல கணவர்மார்கள் இருப்பதைச் சமூகம் அங்கீகரித்திருந்தது. அது அவர்களது மதச் சட்டமாகக் கருதப் பட்டதால் அதனைக் குறித்து கேள்வி கேட்பது தடை செய்யப்பட்டிருந்தது. 1800-1801இல் மலபாரில் பிரயாணம் செய்து அங்குள்ள நிலைமைகளைச் சேகரித்த வரலாற்றாசிரியர் புக்கானல் இவ்விஷயங்களைத் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதனைக் குறித்து ஸைனுத்தீன் மக்தூமின் விளக்கத்தை இங்குச் சுட்டுவது பொருத்தமாக இருக்கும்:
"ஒவ்வொரு பெண்ணிற்கும் தொடர்பு வைத்துக் கொள்ள இரண்டோ நான்கோ கணவர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளாமல் மிகுந்த இணக்கத்துடன் வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் ஒன்றுக்கும் மேற்பட்ட தன் தனது மனைவிகளிடத்தில் நேரத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் ரீதியில், நாயர் மனைவியானவள் தனது சௌகரியத்திற்கு ஏற்ப கணவர்களை மற்றி மாற்றி உபயோகப்படுத்துகின்றாள்".
"மேற்கண்ட இந்தத் தொடர்பில் மனைவி கர்ப்பம் தரித்தால் குழந்தையின் தகப்பன் யார் என்பதை மனைவி நிச்சயிப்பாள். தகப்பனாக சுட்டிக் காட்டப்பட்டவன் குழந்தைக்குத் தேவையானவைகளைச் செய்துக் கொடுத்துப் பாதுகாப்பான்; கல்வியளிப்பான். ஆனால், அவனது சொத்துகளுக்கு இதுபோன்ற குழந்தைகள் வாரிசுகள் ஆக மாட்டார்" (மலபார் மேனுவல் - வில்லியம் லோகன், பக்கம் 139). |
| வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் - 4 | ![]() |
![]() |
| திங்கள், 06 ஏப்ரல் 2009 17:39 |
"விசித்திரமான இச்சடங்குகளின் பலனாக ஒரு நாயருக்குக்கூட அவரின் சொந்தத் தந்தை யார் என்பது தெரியாமல் இருந்தது. எல்லோரும் அவரவரின் சகோதரி மகன்களை வாரிசுகளாகக் கருதி வந்தனர்" - கேரளம், பிரான்சிஸ் புக்கன்னான், பக்கம் 69-70. குடும்பக் கட்டமைப்பினைச் சின்னாபின்னமாக்கும் மற்றொரு கேவலமான பழக்கமும் நாயர் சமூகத்தில் நடைமுறையில் இருந்தது. அது, உடன்பிறந்த இரு சகோதரர்கள் (அண்ணன், தம்பி) ஒரே பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ளும் சடங்காகும். வரலாற்றாசிரியர் இளம்குளம் குஞ்சன்பிள்ளை இச்சடங்கைக் குறித்துக் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்: "அண்ணன் திருமணம் முடிப்பான். அவனின் தம்பிகள், அதாவது அவனின் உடன்பிறந்த சகோதரர்கள் அண்ணனின் மனைவியோடு சேர்ந்து குடும்பம் நடத்துவர். தம்பிகள் வேறு திருமணம் செய்து கொண்டாலும் அண்ணன் மனைவியுடன் குடும்பம் நடத்துவது தொடர்ந்து நடக்கலாம். தாயின் சகோதரி (பெரியம்மா/சித்தி) மகன்களான ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும் இவ்வுரிமை உண்டு. ஆனால், தந்தையின் சகோதரருடைய (பெரியப்பா/சித்தப்பா) மகன்களுக்கு இந்த உரிமை இல்லை. அவ்வாறான தந்தையின் சகோதரரின் மகன்கள், தன் (பெரியப்பா/சித்தப்பா மகன்களான) சகோதரனின் மனைவியுடன் குடும்பம் நடத்துவது, பாதி விபச்சாரத்திற்கு ஒப்பாகக் கருதப்பட்டிருந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இரு சகோதரர்களுக்கு ஒரு மனைவி என்பது தண்டனைக்குரியக் குற்றமாக சட்டமாகி விட்டாலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட, தன் மகளைத் திருமணம் முடித்துக் கொடுக்கும்போது, 'அண்ணன்-தம்பிகள் இணைந்து நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?' என தாய்-தந்தயர் ஆவலுடன் எதிர்பார்த்தனர்" - கேரள வரலாற்றில் இருண்ட ஏடுகள், பக்கம் 154. ஆக மொத்தத்தில் நாயர் பெண்களுக்குச் சொந்த ஜாதியிலோ உயர்ந்த ஜாதியிலோ உள்ள எந்த ஓர் ஆணுடனும் எத்தருணத்திலும் தொடர்பு வைத்துக் கொள்ள அனுமதி இருந்தது. அவர்களுக்கு இருந்த ஒரே தடை, தாழ்ந்த ஜாதியிலுள்ள ஆண்களுடன் மட்டும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதாக இருந்தது. அவ்வாறு தாழ்ந்த ஜாதியிலுள்ள ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பது வெளியானால் அந்தப் பெண்களை ஜாதியை விட்டு விலக்கி, அவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. இத்தகையக் கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில்கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது. சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாகத் திப்புக் கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார். திப்புவின் வெட்க உணர்வையும் பெண்களை அவர் நடத்திய விதத்தையும் அவரது பழக்க வழக்கத்தையும் குறித்து பி.கே. பாலகிருஷ்ணன் வியந்து போற்றுகிறார்: "மகாராஷ்டிரா போர் வேளையில் அவர்களின் கூடாரத்தில் தாக்குதல் நடத்தியவர்களில் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட அரச குமாரிகளைத் திப்புவின் முன்னிலையில் கொண்டு வந்த வேளையில், அந்த அபூர்வ அழகிகளின் அழகில் மயங்கி விடாமல் அந்த அழகிகளுக்கு ஆபரணங்களும் உயர்ந்த உடைகளும் பரிசுகளாக வழங்கி, போரை நிறுத்துவதற்கு அவர்களின் கணவர்களை வேண்டிக் கொள்ள வேன்டும் என்ற கோரிக்கையுடன் அவர்களைப் பாதுகாப்பாக திரும்ப அனுப்பிய குணம் வியப்பில் ஆழ்த்துகிறது! - திப்பு சுல்தான், பி.கே. பாலகிருஷ்ணன், பக்கம் 120. இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது. "உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளைவிடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்" மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்! |
| வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் - 5 | ![]() |
![]() |
| புதன், 24 பிப்ரவரி 2010 15:03 |
உயர்ஜாதித் தீண்டாமை மற்றும் அடக்குமுறைக்கு எதிரானத் திப்புவின் சமூக சீர்த்திருத்த முயற்சிகள் அனைத்தும் இந்து மதத்துக்கு எதிரான செயல்பாடுகளாகத் திரிக்கப்பட்டதோடு, திப்பு ஒரு இந்து மதவிரோதி என்று பிரச்சாரமும் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவைத் தங்களின் காலனி நாடாக வென்றெடுப்பதற்குப் பெரும் சவாலாக விளங்கிய திப்புவை அழிக்க வேண்டிய கட்டாயம் ஆங்கிலேயர்களுக்கு. அதே நேரத்தில், உள்நாட்டு மக்களிடையே உயர்ஜாதி மடாதிபதிகளால் திப்புவுக்கு எதிராகப் பரப்பப்பட்ட இந்தப் பொய் செய்தி, ஆங்கிலேயருக்கு எதிரான திப்புவின் போராட்டத்தில் ஒரு பெரும் பகுதி மக்கள் ஆங்கிலேயர்களுக்குத் துணை செல்லும் நிலையை ஏற்படுத்தியது இந்திய வரலாற்றின் இருண்டபகுதி என்றே வர்ணிக்கலாம். அதனால், திப்புவின் சமூக சீர்திருத்த முயற்சிகளெல்லாம் மதமாற்றத்திற்கான திட்டங்களாக சாதாரண மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் நிலையும் அதன் மூலம் இந்தியாவை அடக்கியாள வந்தேறிய ஆங்கிலேயர்களுடன் இணைந்து திப்புவை ஒழித்துக் கட்டும் சதிவேலைகளை உயர்ஜாதி ஜமீந்தார்கள் செய்வதற்கு இலகுவாகவும் அமைந்தது. மக்களுக்குப் பயன்விளைவிக்கும் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதைக் கூறுவது இஸ்லாமாக இருப்பின், அதனை "மதமாற்ற" காரணம் கூறி சமூகத்திற்குப் பயன் விளைவிப்பதிலிருந்து தடுத்து விடுவதை எக்காலத்தும் உயர்ஜாதியர்கள் கடைப்பிடித்தே வந்துள்ளனர். வட்டியின் அடிப்படையிலான பொருளாதாரத் திட்டங்களால் உலகமே சீரழிந்து நிற்கும் இவ்வேளையில்கூட, வட்டியில்லாத வங்கி முறையை அமல்படுத்த முன்வந்த கேரள அரசின் முயற்சியை உயர்ஜாதியைச் சேர்ந்த சுப்ரமணியசுவாமி மதத்தின் காரணம் கூறி உச்சநீதிமன்றத்தில்தடையேற்படுத்திய அண்மை நிகழ்வு, இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. கேரள பெண்சமூகத்தில் திப்பு சுல்தான் நடைமுறைப் படுத்திய மற்றொரு சீர்திருத்தம்தான், பெண்களின் மேலாடை விஷயத்தில் தலையிட்டதாகும். இந்து சமுதாயத்தில் உயர்ஜாதி நம்பூதிரிப் பெண்களைத் தவிர வேறு எவருக்கும் இடுப்புக்கு மேல் ஆடை அணிவது கூடாத செயலாக இருந்தது. அவ்வாறு நம்பூதிரிப் பெண்களைத் தவிர மற்ற பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடைஅணிவது, மிகப்பெரிய மதவிரோதச் செயலாக நாயர் பெண்களும் இன்னபிற தாழ்த்தப் பட்ட பெண்களும் கருதி வந்தனர். அதனைக் குறித்து எழுத்தாளர் அனந்த கிருஷ்ணன் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்: "நாயர் சமுதாயத்தில் (கீழ்ஜாதியினரில்) ஆணும் பெண்ணும் உடம்பின் மேல்பாகத்தை மறைப்பது தங்களின் எஜமானர்களுக்கும் பிரபுக்களுக்கும் செய்யும் மிகப் பெரிய எதிர்ப்பாக கருதப்பட்டிருந்தது". அப்போதைய சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வேதங்களையும் உபயோகித்து கீழ்ஜாதிமக்களை அந்த அளவுக்குத் தவறான சிந்தனையில் உயர்ஜாதியினர் ஊறவைத்திருந்தனர். இடுப்புக்கு மேல் உடம்பை மறைக்காத பெண்களின் நடைமுறை, சாதாரண வாழ்க்கையை மிக அலோங்கலப்படுத்தும் என்றும் மக்களின் முன்னேற்றத்துக்கு அது பெரிய தடையாக இருக்கும் என்றும் திப்பு புரிந்து கொண்டார். அதன் காரணமாக, இத்தகைய ஜாதி சம்பிரதாயத்தை விட்டொழிக்க வேண்டும் என்றும் எல்லாப் பெண்களும் கட்டாயமாக தங்களின் மார்புகளை மறைக்க வேண்டும் என்றும் திப்பு சுல்தான் கண்டிப்பாக உத்தரவிட்டார். ஆனால், தன்னுடைய சீர்திருத்த முயற்சிகள் அனைத்தும் மக்களின் சமூக அந்தஸ்தை உயர்த்துவதற்கும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குமான முயற்சிகள்தாம் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்து, தமது சீர்திருத்த முயற்சிகளை மக்கள் ஏற்றுக் கொள்மாறு செய்வது திப்புவுக்கு மிகக்கடினமானதாக இருந்தது. தங்களின் கருத்துத் தெரிந்த காலம் முதல் தாங்கள் கடைபிடித்து வந்த ஆச்சார முறைகளை மீறுவதற்குக் கீழ்ஜாதி மக்கள் ஒருபோதும் தயாராகவில்லை. திப்புவின் சீர்திருத்தக் கட்டளைகள் அனைத்தும் அவர்களுக்கு மதமாற்ற முயற்சிகளாகவே உயர்ஜாதியினரால் திரித்துக் காட்டப் பட்டன. குறிப்பாக, இடுப்புக்கு மேல் உடம்பு முழுவதையும் மறைக்கும் விதத்திலான மேலாடை அணிவது, முஸ்லிம் பெண்கள் ஆடைக்கு ஒப்பானதாக இருந்ததால், அவ்வாறு மேலாடை அணிவதையே மதமாற்றத்திற்கு ஒப்பானதாக அவர்கள் கருதினர். அக்காலத்தில் மட்டுமன்றி தற்போதைய வரலாற்று ஆசிரியர்களிலும் பெரும்பாலோர், திப்பு இந்து மதச் சம்பிரதாயங்களில் மாற்றம் ஏற்படுத்த முயன்றதாக குற்றம் சுமத்துவதுண்டு. ஆனால், வரலாற்றை நடுநிலையாக உற்று நோக்கினால், இக்குற்றச்சாட்டு அநியாயமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் அனைத்தும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அனைவரையும் சமமானவர்களாக ஆக்கி, அவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதற்குமான முயற்சியாகவே இருந்தன. அதற்கு, கி.பி. 1785இல் மலபார் கவர்னருக்குத் திப்பு எழுதிய கடிதம் ஆதாரமாகத் திகழ்கிறது. திப்புவின் சீர்த்திருத்தக் கட்டளைகள் மதமாற்ற முயற்சிகளாகவும் இந்து மதத்தை அழிப்பதற்கான முயற்சிகளாகவும் திரிக்கப்பட்டதை அறிந்த திப்பு தன் நிலைபாட்டை மலபார் கவர்னருக்குக் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்: "மலபாரில் சில பெண்கள் தங்களின் மார்புகளை மறைக்காமல் திரிவதைப் பார்த்தபோது எனக்கு வருத்தம் ஏற்பட்டது. அக்காட்சி வெறுப்பையும் நாகரீக, பண்பாட்டு சிந்தனைகளுக்கு எதிரான தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. சன்மார்க்க சிந்தனைக்கு நிச்சயமாக அது எதிரானதுதான். இப்பெண்கள் ஒரு தனிப்பட்ட பரம்பரையில் உள்ளவர்கள் எனவும் அவர்களின் சம்பிரதாயப்படி, அவர்கள் தங்கள் மார்புகளை மறைப்பது கூடாத காரியம் எனவும் நீங்கள் எனக்கு விளக்கமளித்தீர்கள். நான் அதனைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். நீண்டகால சம்பிரதாயம் காரணமாகவா, அல்லது ஏழ்மையின் காரணமாகவா அவர்கள் தங்கள் மார்புகளை மறைக்காமல் இருக்கின்றனர்? ஏழ்மையின் காரணமாகவே அவர்கள் தங்களின் மார்புகளை மறைக்காமல் இருக்கின்றனர் எனில், அவர்களுடைய பெண்கள் தங்களின் கவுரவத்திற்குக் களங்கம் ஏற்படாவண்ணம் கண்ணியமாக உடையணிவதற்குரிய உதவிகளை நீங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கு மாற்றமாக நீண்டகால பழக்கமுடைய, கைவிடக் கூடாத சம்பிரதாயம் என்பது காரணம் எனில், அவர்களுடைய தலைவர்களிடையே நெருக்குதல் கொடுத்து இந்த (அரை நிர்வாணச்) சம்பிரதாயத்தை இல்லாமலாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அவர்களின் மதத் தத்துவங்களுக்கு எவ்வகையிலும் கேடுவிளைவிக்கா விதத்தில், சமாதானமான முறையிலான உபதேசத்தின் மூலமாக மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்" (கேரள முஸ்லிம்களின் போராட்ட வரலாறு - பேராசிரியர்: கெ.எம்.பகாவுத்தீன், பக்கம் 118,119.) |
அட்டகாசம். பகிர்வுக்கு நன்றி நந்தா.
ஸ்டார் போட்டுட்டேன்.
அன்போடு
மோர்சுப்ரா
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
புரிந்து கொள்வதற்காக இதைக் கேட்கிறேன். உங்களது கருத்துக்களில் நம்பூதிரிகளின் செயல்பாடுகளும், அப்போதிருந்த பெண்களின் மீதான புணர்வு ஆதிக்கமும் குறித்து உங்களது கருத்து என்ன? அதாவது வெறுமனே தாய் வழி சமூகம், தந்தை வழிச் சமூகம் என்பதைத் தாண்டி பெண்களின் உடல் மீதான ஆண்களின் ஆதிக்க நிலைப்பாட்டிற்கு எதிராக திப்பு இந்து மற்றும் இஸ்லாமிய சமூகங்களில் செய்தது என்ன? அது குறித்தான உங்களது பார்வை என்ன?
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

இதன் சாரத்தை இரண்டு மூன்று வரிகளில் விளக்கவும்
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of ???????
Sent: Tuesday, July 12, 2011 11:44 AM
To: panb...@googlegroups.com
Subject: Re: [பண்புடன்] Re:
திருவிதாங்கூர்
சமஸ்தானம்,
ஜெயமோகன், திப்பு சுல்தான்
http://en.wikipedia.org/wiki/Captivity_of_Mangalorean_Catholics_at_Seringapatam
http://en.wikipedia.org/wiki/Captivity_of_Nairs_at_Seringapatam
http://en.wikipedia.org/wiki/Captivity_of_Coorgis_at_Seringapatam
--
செல்வன்
"வாழும்
பூமியை வளமாக்க அதை நாம் நேசிப்பது அவசியமாகிறது" - செல்வன்
--
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
//திலே ஆதாரங்களை தந்தால் மட்டும் இது இந்துவெறியர்கள் எழுதியது என்று சொல்லாமல் அதை ஆராயவா போகிறீர்கள்????//
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
ஆதாரம் கொடுத்தா ஒத்துக்கமாட்டிங்கனு கம்ம்னு போனவரை உசுப்பி இத்தனை ஆதாரத்தை கொண்டு வரவச்ச நரேஷ்தான் இதற்கு பதில் சொல்லனும்.
From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Raja sankar
Sent: Tuesday, July 12, 2011 12:50 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [பண்புடன்] Re: திருவிதாங்கூர் சமஸ்தானம், ஜெயமோகன், திப்பு சுல்தான்
//இதற்கு மேலும் ஏதும் ஆதாரம் கீதாரம் வேண்டுமா?
ராஜசங்கர்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
ராஜசங்கர்,ஆங்கிலேயருக்கு எழுதிய கடித்தத்தின் மூலம் திப்புவை மத வெறியன் என்று ஆதாரங்களை நீங்கள் சுட்டியிருக்கும் அதே வேளையில், அதே ஆங்கிலேயருக்கு அவர் எழுதிய கடிதங்களை வைத்தே அவர் அப்படிப்பட்டவர் அல்ல என்பதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன.விரைவில் அவற்றைப் பகிர்கிறேன்.
--
வில்லன்,
இதனை முன்னமே செய்திருக்கலாம்.. எல்லரும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. விவாதத்தின் அடிப்படையே லாஜிக்கோடு பேசுவதும், ஆதாரங்களோடு பேசுவதுதான். எப்படின்னாலும் இதை ஒத்துக் கொல்லபோவதில்லை என்று புறம்தள்ளினால், யாரும் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம்.
இதுவரையான பல்வேறு விவாதங்களில் ஏறகனவே ஆதாரங்களோடு பேசியவற்றிற்காக யாரும் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதென்பது மிக மிக அரிதே. அதற்காக இழைகளோ, விவாதங்களோ நின்றுவிடுகிறதா என்ன? நல்ல ஒரு விவாதத்தில், ஒட்டுமொத்த இழையைப் படிக்கும் போது கிடைக்கும் தகவல்கள் ஏராளம். அதற்காகவே நான் பேசினேன். ராஜசங்கரின் நிலைப்பாடுகள் பலவற்றில், சில விவாத முறைகளில் நான் பெரிதும் முரண்படுகிறேன், அதே சமயம் அவர் பகிர்ந்து கொள்ளும் தகவல்களில் நான் பல விஷயங்களை தெரிந்து கொள்கிறேன் என்பது உண்மை....
என்னதாங்க பிரச்சினை உங்களுக்கு? நான் இன்னும் என்ன ஆதாரத்தை தருவேன்னே தெரியலை. அதுக்குள்ள வரிஞ்சுக் கட்டீட்டீங்க.
அந்த ஆதாரங்களை நானும் பார்த்திருக்கிறேன். அதை எடுத்துப்போட்டு
திப்புவின் பல்முக பரிணாமத்தில் இதுவும் ஒன்று. திப்பு மதமாற்றம் செய்தார் என்ற ஒற்றைப்பரிமாணத்தை வைத்து அவரை எடை போடக்கூடாது என்று நீங்கள் தரப்போகும் பின் நவீனத்துவ விளக்கம் இப்போது எனக்கு தெரிகிறது.
அன்போடு
மோர்சுப்ரா
ஆக திப்பு, காந்தி, சாவார்க்கர் உள்ளிட்ட எந்த ஒரு சரித்திர நபர் மீதும் எனது புரிதல் இப்படி மட்டும்தான் இருக்கும். அவன் எந்த மதத்தவனாயினும். ஒருவனின் மதத்தைப் பொறுத்து அவனை சரித்திர நாயகனாக்கும் வேலையையோ அல்லது அவனை வசைபாடுதலோ செய்ய நான் இந்துத்துவாவாதியும் இல்லை, போலி செக்கூலர் வாதியும் இல்லை
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இதனுடைய மூலம்(source) எங்கிருந்து எடுக்கப்பட்டது.. ஏதாவது புத்தகங்கள்?
மடலை அனுப்பி விட்டு படித்துப் பார்க்கையில் கடைசி சில வரிகளில் ஒலிக்கும் நான் என்ற தொனி என்னையே எரிச்சல் கொள்ள செய்கிறது.:(. கொஞ்சம் திருந்த வேண்டும் போல.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
ஐதர்அலி சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதிய மடல். மடல் எண். 42 : (1760 - 1761)
நீங்கள் பாலாஜி பண்டா அவர்களிடம் கொடுத்தனுப்பிய மடல் கிடைத்தது; மகிழ்ச்சி.
நீங்கள் பூனா செல்லும் பயணத்திற்காக ஒரு யானை, அய்ந்து குதிரைகள், ஒரு பல்லக்கு அய்ந்து ஒட்டகங்கள். அனுப்பி உள்ளேன். சிருங்கேரி, சாரதா தேவிக்காக ஒரு பட்டுப்புடவையும், உங்களுக்கு இரண்டு சால்வைகளும், இரண்டு வேட்டிகளும் அனுப்பி உள்ளேன். உங்கள் பயணச் செலவிற்காகப் பத்தாயிரத்து அய்ந்நூறு ரூபாய்களும் பாலாஜிபண்டா, வெங்கடேச ராமையா ஆகியோரிடம் கொடுத்தனுப்பி உள்ளேன். பெற்றுக்கொண்டு தகவல் தெரிவிக்கவும் உங்கள் பயணம் வெற்றியாக அமைய வாழ்த்துகிறேன்.
இதுபோன்று மேலும் 3 மடல்களை மடல் எண். 43, 44, 45 ஐதர்அலி பொருள் கொடை கொடுத்தது தொடர்பாகச் சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கு எழுதியுள்ளார்.
திப்புசுல்தான் தன்னுடைய அமைச்சரவைகளில் முதன்மையாக உபயதுல்லா என்ற இசுலாமியருக்கும், கோவிந்த பண்டிட் என்ற பார்ப்பனருக்கும் சிறப்பு இடம் கொடுத்திருந்தார் - குரான் மற்றும் இந்து சாஸ்திர விதிகளைக் கூறுவதற்காக.
1791இல் திப்புசுல்தானை பேரில் மராட்டியர்கள் ஒரு பக்கமும், ஆங்கிலேயர்கள் ஒரு பக்கமும். ஐதராபாத் நிசாம் ஒரு பக்கமுமாக மும்முனைத் தாக்குதல் நடத்தினர். அந்த நேரத்தில் இரகுநாதன் பட்டவர்த்தன் என்பவர் தலைமையில் மராட்டியர்கள் சிருங்கேரி மடத்தைத் தாக்கி அதில் இருந்த சுமார் அறுபது இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள பொருள்களைக் கொள்ளை அடித்துச் சென்றனர். இது குறித்து சிருங்கேரி சங்கராச்சாரிக்குத் திப்பு மடல் எழுதினார்.
மடல் எண். 47 இல், மராட்டியர்கள் செய்த அக்கிரமத்தை என்னால் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருக்க முடியவில்லை. மடத்திலிருந்த சில பார்ப்பனர்களையும் அவர்கள் கொன்றுள்ளனர். நீங்களும் மடத்தை விட்டு நான்கு சீடர்களுடன் வெளியேறிவிட்டீர்கள். சூரியன், சந்திரன் இருக்கும் வரை இந்த மடம் நிலைத்திருக்க நான் வழி வகைகளைச் செய்கிறேன் என்று கூறிச் சிதைந்து போன சிருங்கேரி சாரதா மடத்தைச் சீரமைக்க 200 ராகாட்டிஸ் (அப்போதைய ரூபாய்) பொருளும், 200 ரூபாய் பணமும் கொடுத்து அனுப்பிவிட்டு மேற்கொண்டு, தேவையெனில் நகர பரிபாவனத்தில் கொடுக்கும்படி உத்தரவிடுகிறேன் என்று எழுதியுள்ளார்.
மடல் எண் 48 இல்,
சிருங்கேரி சங்கராச்சாரிக்கு, உங்களுக்காக ஒரு பல்லக்கு அனுப்பி உள்ளேன். நகர ஆட்சியிடம் உங்களுக்கு வேண்டப்படும் பொருள்களைக் கொடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்று எழுதியுள்ளார்.
மடல் எண் 49 இல், நரசிம்மையா மூலம் நீங்கள் அனுப்பிய மடல் பார்த்தேன். உங்களுக்கு மேலும் ஒரு யானையும், ஒரு பல்லக்கும் 200 (ராகாடிஸ்) பணமும் கொடுத்தனுப்பி உள்ளேன். சாரதாம்பாளுக்காக விலை உயர்ந்த பட்டுப் புடவையை அனுப்பி உள்ளேன். நாட்டின் எதிரிகளை அழிக்க ஜபம் செய்ய வேண்டுகிறேன்.
மடல் எண் 50 இல், ஸ்ரீ சச்சினாந்த சுவாமிஜி உங்கள் மடல் கண்டேன், உங்களுக்குத் தேவைப்படும் அளவுக்கு நெல் கொடுக்கும்படி, உத்தரவிட்டுள்ளேன். 400 ராகாடிஸ் (பணம்)மும், ஒரு பல்லக்கும் அனுப்பி உள்ளேன். நாராயணன் மூலம் ஒரு யானையையும் அனுப்பி உள்ளேன் பெற்றுக்கொண்டு சம்புரோசன பூசையை தொடக்குங்கள். கூடவே ரூ.500/- கருவூல அலுவலர் கொள்ளா மூலம் கொடுத்துள்ளேன். பெற்றுக் கொள்ளவும்.
மடல் எண் 51 இல், நாட்டின் எதிரிகளை அழிக்க விரைவில் சாத்திரசண்டி ஜபம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். 1000 பார்ப்பனர்கள் 40 நாட்கள் தொடர்ந்து ஜபம் செய்யட்டும். அதற்கான முழுச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் வேண்டுகோள் வைத்தார். சங்கராச்சாரிக்குச் சொல்ல வேண்டுமா? அதற்கு ஒப்புக்கொண்டு அவ்வாறே ஏற்பாடு செய்தார். சாத்திர சண்டி ஜபம் நடைபெற்றது. எதிரிகள் அழியவில்லை. ஆனால், பார்ப்பனர்களுக்குப் பணத்தை வாரி இறைத்து ஜபம் செய்வித்த திப்புசுல்தான் போரில் மரணம் அடைந்தார்.
திப்புதல்தான் ஆட்சியில் பார்ப்பன ஆதிக்கம் நிறைந்திருந்தது. 45,000 முதல் 50,000 பேர் வரை பார்ப்பனர்கள் அரசு பணிகளில் இருந்தனர். அவர்களில் இரண்டுபேர் குற்றம் செய்துவிட்டனர். அந்தக்குற்றம் செய்த இரண்டு பார்ப்பனர்களையும் விடுதலை செய்யும்படி சங்கராச்சாரி திப்பு சுல்தானுக்கு மடல் அனுப்பினார். அதனை ஏற்றுக் கொண்டு குற்றவாளிப் பார்ப்பனர்களை விடுவித்தார்.
திப்புவின் மடல் எண். 58 இல் சங்கராச்சாரிக்கு எழுதுகிறார்.
என்னுடைய ஆட்சியின் நிருவாகத்தில் 45,000 முதல் 50,000 பேர் பார்ப்பனர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஏதாவது தவறு செய்தால் அவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உண்டு. ஆனால், அந்த அதிகாரத்தை இன்று முதல் உங்களுக்கே அளிக்கிறேன். (சங்கராச்சாரிக்கு) நீங்கள் உங்கள் சாத்திரங்களில் கூறியுள்ளபடி அவர்களின் குற்றங்களுக்கு (மதுகுடித்தல், திருடுதல் போன்றவை), தண்டனை அளிக்க உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறேன் என்று எழுதி உள்ளார்
--
இந்த ராஜபக்சேவை கொஞ்சம் விட்டிருங்களேன். நமக்கு இந்தியாவிலேயே உதாரணம் நிறைய இருக்கே. உங்களுக்காக ஒன்னு. சாய்பாபா என்கிற திருடன் ஏழைகளுக்காக மருத்துவ உதவி செய்ததும் அந்த திருடன் புனிதாத்மா ஆனது போல...
இப்படி எதாவது ஒன்னு புடிச்சிக்கோங்க. ராஜபக்சேவை விட்டிருங்க...
From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Raja sankar
Sent: Wednesday, July 13, 2011 10:09 AM
To: panb...@googlegroups.com
Subject: Re: [பண்புடன்] Re: திருவிதாங்கூர் சமஸ்தானம், ஜெயமோகன், திப்பு சுல்தான்

ராகுல சாங்கிருதியான் ஒரு சரித்திராசியராக பணியாற்றியவர்???
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Raja
sankar
Sent: Wednesday, July 13, 2011 10:41 AM
To: panb...@googlegroups.com
Subject: Re: [பண்புடன்] Re:
திருவிதாங்கூர்
சமஸ்தானம்,
ஜெயமோகன், திப்பு சுல்தான்
வால்காவில் இருந்து கங்கை வரை எப்படி ஆரிய படையெடுப்பு ஆதாரமோ
அப்படி.
அந்த நாவலை கட்டாயம் படியுங்கள் ராஜாசங்கர். திப்புவை அதில் அவர் புகழ்ந்திருந்தாலும் திப்புவின் குறைகளையும் மறைக்காமல் எழுதியிருக்கிறார்.நந்தா குறைகளை இங்கே எழுதவில்லை.அவ்ளோதான்:-)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
குடகு மணமுறை சரியானதுதான் என்று ராஜசங்கர் கூறினால் அதை சற்று தெளிவுடன் எடுத்துரைக்கவும். ஏனெனில் இந்த விஷயத்தில் என்னுடைய புரிதல் கொஞ்சம் குறைவே
கட்டாய மத மாற்றம் செய்தவன் எப்படி நல்ல சகிப்புத்தன்மையுள்ள அரசனாய் இருப்பான் என்ற கேள்வியை பெரிதாய் முன்வைத்து நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். மற்ற மதங்களுக்கு இத்தனை செய்தவன் எப்படி மோசமான அரசனாய் இருப்பான்? என்று எங்களுக்கும் முடிவுறாத ஒரு புள்ளியில் பேசத் தெரியும்தான். ஆனால் அந்த கேள்விகளுக்கெல்லாம் உங்களுக்கு பதில் தெரிய வேண்டுமோ இல்லையோ, எங்களுக்கு பதில் தேவை.
மலபார் பகுதியில் பெண்கள் மேலாடையின்றி இருந்த பழக்கத்தை மாற்றி உயிர் உயர் மானங்காக்க மேலாடை அணியும் பழக்கத்தை உருவாக்கி குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்து கொள்ளும் பழக்கத்தைத் தடுத்தார். சட்டம் இயற்றி சீர்திருத்தம் செய்தார். திப்புசுல்தான் மைசூரில் நரபலியையும் கோவில்களின் தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் போட்டார் மதுவிலக்கை முழுமையாக அமலாக்கினார் மத ஒற்றுமையும் மதுவிலக்கும் திப்புசுல்தானின் இருகண்களாக இருந்தன
சீர்திருத்தம்
மலபார் பகுதியில் பெண்கள் மேலாடையின்றி இருந்த பழக்கத்தை மாற்றி உயிர் உயர் மானங்காக்க மேலாடை அணியும் பழக்கத்தை உருவாக்கி குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்து கொள்ளும் பழக்கத்தைத் தடுத்தார். சட்டம் இயற்றி சீர்திருத்தம் செய்தார். திப்புசுல்தான் மைசூரில் நரபலியையும் கோவில்களின் தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் போட்டார் மதுவிலக்கை முழுமையாக அமலாக்கினார் மத ஒற்றுமையும் மதுவிலக்கும் திப்புசுல்தானின் இருகண்களாக இருந்தன
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
ராஜபக்சே இந்து கோயில்களுக்கு விஜயம் செய்து தமிழர்கள் நன்றாக இருக்கவேண்டும் என வழிபடுகிறார். மோடி முஸ்ஸீம் தலைவர்களுடன் ஒரே மேடையில் தோன்றி அவர்கள் இந்தியர்களாக வாழவேண்டும் என சொல்கிறார். இந்த அளவுகோலின் படி இவர்கள் இருவரும் தவறே செய்யாத நல்லவர்கள். :-)))
அது தவறு என எனக்கு படவில்லை.
ராஜசங்கர்
அன்போடு
மோர்சுப்ரா
ராஜபக்சே இந்து கோயில்களுக்கு விஜயம் செய்து தமிழர்கள் நன்றாக இருக்கவேண்டும் என வழிபடுகிறார். மோடி முஸ்ஸீம் தலைவர்களுடன் ஒரே மேடையில் தோன்றி அவர்கள் இந்தியர்களாக வாழவேண்டும் என சொல்கிறார். இந்த அளவுகோலின் படி இவர்கள் இருவரும் தவறே செய்யாத நல்லவர்கள். :-)))
யப்பா.. உதாரணத்துக்காகவாவவ்து இந்த் ரெண்டு பேரும் அயோக்கிய சிகாமணிகள்ன்னு சம்மதிச்சிட்டாருப்பா ராஜசங்கர்
அன்போடு
மோர்சுப்ரா
யப்பா.. உதாரணத்துக்காகவாவவ்து இந்த் ரெண்டு பேரும் அயோக்கிய சிகாமணிகள்ன்னு சம்மதிச்சிட்டாருப்பா ராஜசங்கர்அண்ணாச்சி நீங்க தப்பா புரிஞ்ச்சிகிட்டீங்க ......ஆபத்து என்னன்னா அவர் மறைமுகமா இவர்கள் செய்ததும் சரிதான் என முன்னெடுக்கிறார் ...
குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்து கொள்ளும் பழக்கத்தைத் தடுத்தார். சட்டம் இயற்றி சீர்திருத்தம் செய்தார்.
அவர் அப்படித்தான் முன்னெடுப்பார் என்பது தெரியாமலா?:-)
ஒரே ஆணை பல பெண்கள் மணந்து கொண்டால் சரி,
ஒரே பெண்ணை பல ஆண்கள் மணந்து கொண்டால் தவறா????
எந்த ஊர் நியாயம் இது????
ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்று சட்டம் கொண்டு வந்திருந்தால் பாராட்டப்படவேண்டியது. திப்பு செய்தது ஒரு மூடநம்பிக்கைக்கு பதில் இன்னொரு மூடநம்பிக்கை.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
திப்புவிற்கு நாலு பெண்டாட்டிகள் இருந்து விக்கியிலேயே இருக்கிறது.
அந்தாள் சீர்திருத்தம் பண்ணினான் என்றால் சரி அது உங்கள் நம்பிக்கை என்று மட்டுமே சொல்லமுடியும்.
ராஜசங்கர்
அன்போடு
கக்காநிதியைப்பத்தி பேசலை! நீ நகரு!
--
யாராவது இழை இதுவரைனு ஒரு சம்மரி கொடுங்களேன்.
ஜெமோ திப்புவின் படையெடுப்பால் சொத்துகள் பறிபோகாமலிருக்க பாதுகாப்பதற்காக பத்மநாபஸ்வாமி கோவில் சொத்துகள் ரகசிய அறைகளில் பூட்டப்பட்டிருக்கும் என்றார்.
இதை வச்சிதானே இந்த இழையே ஆரம்பமானது! ?????
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Raja
sankar
Sent: Wednesday, July 13, 2011 3:41 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [பண்புடன்] Re:
திருவிதாங்கூர்
சமஸ்தானம்,
ஜெயமோகன், திப்பு சுல்தான்
அந்த கேள்வியை தான் முதலில் இருந்து கேட்கிறேன். பதில் தான்
யாரும் சொல்லமாட்டேன்கிறாங்க.
இந்து மன்னவர்கள் நல்லவர்கள்னுலாம் சொன்ன மாதிரி தெரியலையே!
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Raja
sankar
Sent: Wednesday, July 13, 2011 4:15 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [பண்புடன்] Re:
திருவிதாங்கூர்
சமஸ்தானம்,
ஜெயமோகன், திப்பு சுல்தான்
ஜெமோ இந்து மன்னர்கள் நல்லவர்கள் எனவும் முஸ்ஸீமான திப்பு
கொள்ளையடிக்க வந்தான் எனவும் சொல்லிவிட்டார். சாமி வந்து ஆட இக்காரணம் போதாது?????
:-)))))))
ராஜசங்கர்
தட்ஸ் ஒய் ஐ வாண்ட் சம்மரி!
திப்பு படையெடுத்ததால் நகைகளை காப்பாற்ற ரகசிய அறை கட்டப்பட்டது. இதன்படி திப்பு படையெடுப்பு நகைகளுக்காக.
நாயர் பெண்கள் திருமணமுறை அசிங்கமான ஒன்று என்று அவர்களை நாகரீகமாக்க படையெடுத்தான் என்பது இரண்டாவது.
இந்துகளை கொன்றதாக ஒரு லிங்க்கு!
இந்துக்களுக்காக பல செய்தான் என்று ஒரு லிங்க்கு!
இரண்டு பேருமே இரண்டையுமே முழுசா மறுக்கவில்லை இதுவரை. (ஆம்/இல்லை)
அதாவது நல்லது/கெட்டது செஞ்ச மன்னன் கெட்டது/நல்லது செஞ்சிருக்க வாய்ப்பில்லை என்ற நிலைபாட்ட்டுடன் உள்ளீர்களா.
இல்லை இப்படியும் இருந்தார் இப்படியும் இருந்தார் என்கிறீர்களா இருவரும்.
திப்புவிடம் குறைகள் இருந்தது என்று நந்தாவும் சொல்றார். அது என்ன மதமாற்றத்திற்காக நடத்திய படுகொலைகளா அல்லது வேறெதுவுமா!
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Raja
sankar
Sent: Wednesday, July 13, 2011 4:15 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [பண்புடன்] Re:
திருவிதாங்கூர்
சமஸ்தானம்,
ஜெயமோகன், திப்பு சுல்தான்
ஜெமோ இந்து மன்னர்கள் நல்லவர்கள் எனவும் முஸ்ஸீமான திப்பு
கொள்ளையடிக்க வந்தான் எனவும் சொல்லிவிட்டார். சாமி வந்து ஆட இக்காரணம் போதாது?????
:-)))))))
ராஜசங்கர்