திருமணப் பொருத்தம் THURSDAY, 06 AUGUST 2009 13:37 KANAGA

786 views
Skip to first unread message

பிரபு சுந்தரம்

unread,
Aug 24, 2010, 7:22:38 AM8/24/10
to tamil2friends, tamizh...@googlegroups.com, தென்றல், பண்புடன்

திருமணப் பொருத்தம்

THURSDAY, 06 AUGUST 2009 13:37 KANAGA
E-mailPrintPDF

 

"திருமணப் பொருத்தம்" என்பதுகணவன் மனைவியாக இணையும் இருவருக்கும்  நிலையான மன ஒற்றுமைமகிழ்ச்சி,இன்பமான தாம்பத்திய உறவுபிள்ளைப் பேறுசுபீட்சமானஎதிர்காலம் என்பன அமையுமாஎன இருவருடைய ஜாதகங்களின்உள்ள கிரகங்களின் ஆதிக்கத்தைக் (நிலைகளைக்கொண்டுகணித்து அறிதல் என்பதாம்

விவாகப் பொருத்தம் பார்க்கும் பொழுது மணமகன்மணமகள்ஆகிய இருவருடைய ஜாதகங்களிலும்பிறந்த நட்சத்திரங்களைவைத்து 10-பொருத்தங்களும்ஜாதக-கிரக நிலையை கொண்டுகிரக-தோஷங்களும் பார்த்து விவாகம் முடிவு செய்யப்படுகின்றது.

மேலும் வாசிக்க கீழே உள்ள read more என்ற பொத்தானைஅழுத்துங்கள்

இன்பமான குடும்ப வாழ்க்கைக்கு; மனப் பொருத்தம்புரிந்துணர்வுஅன்பு , பெருந்தன்மைபரஸ்பரநம்பிக்கைபிள்ளைப் பேறுமகிழ்ச்சியான சிற்றின்ப வாழ்க்கைஅதிஸ்டம் ஆகியன அடிப்படைத் தேவைகளாகும்.இவற்றுடன் மாரக தோஷம் அற்றவர்களாகவும் அமையப் பெற்றவர்களின் குடும்ப வாழ்க்கை ஆயுட் காலம் வரைமகிழ்ச்சியாக இருக்கும் என்பது அனுபவ உண்மை.

எனவே திருமணத்திற்கு மன(காதல்பொருத்தமும்ஜாதகப் பொருத்தமும் மிக முக்கியமானதாகும்கிரகப் பொருத்தம்இல்லாத மன பொருத்தம் தற்காலிகமானதுகாலப் போக்கில் கிரகநிலை மற்றங்களினால் மனம் மாற்றமடைந்துகுழப்பங்கள் ஏற்படலாம்ஆதலினால்நீடித்த மகிழ்ச்சியான தி்ருமண வாழ்க்கையை  உறுதி செய்வதற்கு "ஜாதப்பொருத்தம்" மிக கட்டாயமாகின்றது.

முக்கியமான பத்துப் பொருத்தங்களாவன:  (நட்சத்திரமூலம் கணிக்கப்பெறுபவை)
1.  
நட்சத்திரப்-பொருத்தம்,  2. கணப்-பொருத்தம்,  3. மகேந்திரப்-பொருத்தம்,  4.  ஸ்திரி தீர்க்க-பொருத்தம்,  5. யோனிப்-பொருத்தம்,  6.  ராசிப்-பொருத்தம்,  7.  ராசி அதிபதிப்-பொருத்தம்,   8.  வஸ்யப்-பொருத்தம்,  9.  ரச்சுப்-பொருத்தம்,  10. வேதைப்-பொருத்தம் என்பனவாம்.

1.   நட்சத்திரப்-பொருத்தம்: (ஆயுள் ஆரோக்கிய விருத்தி
இதனை தினப்பொருத்தம் என்றும் சொல்வார்கள்இந்தப் பொருத்தம் ஆண் பெண் இருபாலாருடைய ஆயுளையும்ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கக் கூடியது.

பெண்ணின் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24, 26 ஆக வரின் உத்தமம்.  இந்தஎண்ணிக்கையுள் இல்லாதிருந்தால் பொருத்தம் இல்லை.

ஜன்ம நட்சத்திரம் முதல்:
10
வது நட்சத்திரம் கர்ம நட்சத்திரம்
7-
வது நட்சத்திரம் வதம்
19-
வது நட்சத்திரம் அனு ஜென்மம்
22-
வது நட்சத்திரத்தின் 4ம் பதம் வைநாசியம்
27-
வது நட்சத்திரம் மருத்யு நட்சத்திரம்
27-
வது நட்சத்திரம் வேறு ராசியகில் நீக்கவும்ஒரே ராசியாகில் உத்தமம்

ரோகினிதிருவாதிரைமகம்விசாகம்திருவோணம்ஹஸ்தம்உத்திரட்டதிரேவதி ஆகிய 8 நட்சத்திரங்கள் ஏகநட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் உத்தமம்
பூரம்உத்திரம்சித்திரைபுனர்பூசம்பூசம்அஸ்வினிகார்த்திகைபூராடம்உத்திராடம்மிருகசீர்ஷம்அனுஷம் ஆகிய 11நட்சத்திரங்களும் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் மத்திமம்.                   

ஒரே ராசியாக இருந்தால் புருஷ நட்சத்திர பாதம் முந்தி இருந்தால் உத்தமம்.
மற்றைய நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் இல்லைவிலக்கப் படவேண்டும்.

ஸ்திரீ நட்சத்திரத்தில் இருந்து 7வது நட்சத்திரமாக புருஷ நட்சத்திரம் வரின்வதம் என்றும்புருஷ நட்சத்திரத்தில்இருந்து 22வது நட்சத்திரமாக ஸ்திரீ நட்சத்திரம் வரின்,  வைநாசிகம் என்றும் சொல்லப்படும்இந்த வதம்வைநாசிகம்ஆகிய இரண்டும் ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால்திருவாதிரைக்கு - உத்திரமும்பூரத்திற்கு - அனுஷமும்பூசத்திற்கு - சித்திரையும்புனர்பூசத்திற்கு -ஹஸ்தமும்பூரட்டாதிக்கு - ரோகினியும் வதம்வைநாசிகமானால் சுபம்-கெடுதல் இல்லை.
உத்தராடத்திற்கு - ரேவதியும்மூலத்திற்கு -பூரட்டாதியும்பரணிக்கு - பூசமுமானால் வதம்-வைநாசிக தோஷம் இல்லை.

ஏக-ராசியில் பெண் நட்சத்திரம் முந்தியது விரும்பத்தக்கதல்லஏக-ராசியிலும் பரணிஅவிட்டம்பூசம் இவை புருஷநட்சத்திரங்களாக வந்து பெண் நட்சத்திரத்திற்கு முந்தியதானாலும் விலக்கப்பட வேண்டியவை.

சதையம்அசுவினிஹஸ்தம்ஸ்வாதிகிருத்திகை,பூராடம்ரோகினிமகம் இந்த 8ம் ஏக ராசிகளாகளில் ஸ்திரீமுன்வந்தால் செய்யலாம்.

2.  கணப்பொருத்தம்:  (மங்களம்)
இப்பொருத்தம் சரியாக இருந்தால் தம்பதிகள் சுப பலன்களை அடைந்து சுகமாக வாழ்வார்கள்தம்பதியின் வாழ்க்கையில்நிலையான மகிழ்ச்சி ஏற்படுத்துவது இப்பொருத்தமே யாகும்.

இதைகுணப்பொருத்தம் என்றும் அழைப்பார்கள்பரந்த மனப்பான்மைஉயர்ந்த லட்சியங்கள்நன்னடத்தைநல்லகுணங்கள் கொண்டவர்களை தேவகணம் என்றும்சாதாரணமான குணமும்புத்தியும்லட்சியங்களும்நோக்கங்களும்உடையவர்களை மனுஷகணம் என்றும்முரட்டு குணமும்மட்டமான எண்ணங்களும் கொண்டவ்ர்களை ராக்ஷ்தகணம்என்றும் மூன்று கணங்களாக பிரிக்கப்ப்ட்டுள்ளது.  

ஸ்திரீபுருஷருக்கு ஒரே கணமாக இருந்தால் பொருத்தம் உண்டுஸ்திரீ மனுஷ கணமும் புருஷர் தேவ கணமுமாய்இருந்தால் பொருந்தும்.

ஸ்திரீ தேவ கணமும் புருஷர் மனுஷ கணமுமாய் இருந்தால் பொருந்தும்ராக்ஷஸ கணத்திற்கு மனுஷகணமும்தேவகணமும் பொருந்தாது.
(
நட்சத்திரங்களும் அவற்றிற்கான கண விபரங்களையும் பஞ்சாங்கதில் பார்க்கவும்)

3.  மகேந்திரப் பொருத்தம்:  (சம்பத்து விருத்தி)
இப்பொருத்தம் இருந்தால் புத்திரவிருத்தி உண்டாகும்மக்கட் செல்வங்களை உண்டாக்கிஅவர்கள் மேன்மையாகவாழ்கின்ற யோகத்தை உண்டாக்குவதேஇந்த மகேந்திரப் பொருத்தமாகும்.
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக வரின் பொருந்தும்சம்பத்துகொடுக்கும்.

4.  ஸ்திரீ தீர்க்கம்:   (சகல சம்பத் விருத்தி)
இதன் மூலம் திருமகள் கடாட்சமும்சுபீட்சமும் நீடிக்கும்ஸ்திரீதீர்க்கப் பொருத்தமிருந்தால் சகலவிதமானசம்பத்துகளும் விருத்தியாகும்.

பெண்ணின் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணினால் 13 நட்சத்திரங்களுக்குக் கீழாக ஆண் நட்சத்திரம்இருந்தால் பொருந்தாது. 13க்கு மேல் இருந்தால் உத்தமம். 9-க்கு மேல் 13 வரை மத்திமம். 9 வரை (7க்கு மேல் இருந்தால்பொருந்தும் என்று அபிப்பிராயம் தெரிவிப்பாரும் உளர்.)

5.  யோனிப் பொருத்தம்:  (தம்பதிகளின் அன்யோன்ய நட்பு - மகிழ்ச்சியான சிற்றின்ப உறவு)
இதுஆண் பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக் கொன்று பொருத்தமாகவும்உடல் உறவுகொள்வதற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு ஆதாரமாகும்.

இருவருக்கும் ஒரு யோனியாயினும்பகையில்லாத யோனிகளைல் ஆண் யோனி ஆணுக்கும் பெண் யோனிபெண்ணுக்கும்மாயினும்இருவருக்கும் பெண் யோனியாயினும் உத்தமம்இருவருக்கும் பகையில்லாத ஆண்யோனியாயின் மத்திமம்ஆணுக்கு பெண் யோனியும் பெண்ணூக்கு ஆண் யோனியுமாயினும் ஒன்றிற் கொன்றுபகையோனி யாயினும் பொருந்தாது.

ஒன்றிற்கொன்று பகை யோனிகள்:
குதிரை - எருமை;  யானை - சிங்கம்;  குரங்கு - ஆடு;  பாம்பு - கீரி;  மான்  - நாய்;  எலி - பூனை;  மாடு - புலிபெருச்சாளி -பூனை.

6.  ராசிப் பொருத்தம்: (வம்ச விருத்தி)
இந்த இராசிப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும்.

பெண்ணும் புருஷனும் ஒரு ராசியாயினும்பெண் ராசிக்கு புருஷன் ராசி 6-க்கு  மேற்படினும் உத்தமம்.
பெண் ராசிக்கு புருஷன் ராசி  2-ஆயின் மிருத்து;  3-ஆயின் துக்கம்;  4-ஆயின் தரித்திரம்;  5-ஆயின் வைதவ்வியம்;   6-ஆயின் புத்திர நாசம்இடபம் முதலான இரட்டை ராசிகளில் பிறந்த பெண்ணுக்கு 6-ம் ராசி புருஷ ராசியாக வரினும்மத்திமமான பொருத்தத்தை கொடுக்கும்.

பெண்ணும் புருஷனும் ஒரே ராசியாகும் போது பெண் நட்சத்திரத்திற்கு புருஷ நட்சத்திரம் பிந்தியதாகிற் பொருந்தாது.  (இராசி என்பது சந்திர லக்கினத்தை குறிக்கும்)

7.  ராசி அதிபதிப்-பொருத்தம்:   (சந்ததி விருத்தி
இராசியாதிபதிப் பொருத்தம் இருந்தால் தான் குடும்பம் சுபீட்சமாக வாழமுடியும்இப் பொருத்தம்  இருந்தால்தம்பதிகளிடயே ந்ல்ல ஒற்றுமையும் சந்தோஷமான வாழ்க்கையும் அமையுமபொருத்தம் மத்திமமாயின் அவ்வப்போதுசிறிய  கருத்து வேறுபாடுகள் வந்து போகும்புத்திரர்கள் யோகமாக வாழ்வார்கள்.

இருவர் இராசிகளும் ஒருவராயினும்ஒருவருக்கொருவர் மித்துருக்களாயினும் உத்தமம்மித்துருக்கள் அல்லாதவைசத்துருக்கள் - பொருந்தாது.

சூரியன்  -       குரு
சந்திரன்  -      புதன்,  குரு,    
செவ்வாய்  -  புதன்,  சுக்கிரன்    
புதன்  -          சந்திரன்,  செவ்வாய்,  குரு,  சுக்கிரன்,  சனி;   
குரு  -            சூரியன்,  சந்திரன்புதன்சுக்கிரன்சனி;   
சுக்கிரன்  -    செவ்வாய்,  புதன்,   குரு,   சனி;   
சனி  -           புதன்,   குரு,   சுக்கிரன்.

8.  வஸ்யப்-பொருத்தம்:   (அன்யோன்ய வசியம் - இணைபிரியா அன்பு)  
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக விரும்பிஅன்பின் பிணைப்பிலும் அணைப்பிலும் இனைந்துஇரண்டறக் கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்த வசியப் பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.பெண்ராசிக்கு புருஷ ராசி வசியமானால் உத்தமம்புருஷ ராசிக்கு பெண் ராசி வசியமானால் மத்திமம்.  வசியமில்லாததுபொருந்தாதுஇதுவும் ஒரு முக்கியமான பொருத்தம்.

பெண் ராசி         ஆண் ராசி 
மேஷம்            சிங்கம்விருச்சிகம்
ரிஷபம்             கடகம்துலாம்
மிதுனம்            கன்னி
கடகம்              விருட்சிகம்தனுசு
சிம்மம்             மகரம்
கன்னி              ரிஷபம்மீனம்
துலாம்             மகரம்
விருச்சிகம்     கடகம்,  கன்னி
தனுசு               மீனம்
மகரம்              கும்பம்
கும்பம்             மீனம்
மீனம்               மகரம்    

9.  
ரச்சுப்  பொருத்தம்:  (தீர்க்க சுமங்கையாய் இருப்பது)  ரச்சுப் பொருத்தம் மிக முக்கியமானது.

கணவனாக நிச்சயம் செய்பவரின் ஆயுள் நிலையை உறுதிப் படுத்துவதற்கு இந்தப் பொருத்தம் பார்ப்பது மிகவும்அவசியமானதாகும்ஏனென்றால்பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்தப் பொருத்தத்தை ஆராய்து பார்த்துத்தான்நிச்சயிக்க வேண்டியுள்ளது.

சிரோரச்சு (சிர்ச்சு):      மிருகசீரிடம்,  சித்திரைஅவிட்டம்
கண்டரச்சு (கழுத்து):   ரோகினி,  திருவாதிரை,  அஸ்தம்,  சுவாதி,  திருவோணம்சதயம்
நாபிரச்சு (உதரம்):       கிருதிகைபுனர்பூசம்உத்திரம்விசாகம்உத்திராடம்பூரட்டாதி
ஊருரச்சு (துடை)         பரணிபூசம்பூரம்அனுஷம்பூராடம்உத்திரட்டாதி
பாதரச்சு (பாதம்):        அஷ்வினிஆயிலியம்,  மகம்,  கேட்டைமூலம்ரேவதி

ஸ்த்ரீபுருஷ நட்சத்திரங்கள் ஒரே ரச்சுவாக இல்லாமல் இருப்பது உத்தமம்

ஒரே இரச்சுவானால்பொருந்தாது.

சிரோரச்சு:      புருஷன் மரணம்           
கண்டரச்சு:     பெண் மரணம்
நாபிரச்சு:        புத்திர தோஷம்
ஊருரச்சு:        பண நஷ்டம்
பாதரச்சு:         பிரயாணத்தில் தீமை

10. 
வேதைப்-பொருத்தம் (இடையூறு அற்ற இன்ப வாழ்க்கை)
தம்பதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களையும் துக்கங்களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை விலகச்செய்துஅவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதைப் பொருத்தமாகும்.

வேதை என்றால் ஒன்றிற்கொன்று தாக்குதல் என்று பொருள்எனவே வேதையில் இருக்கும் நட்சத்திரங்கள் பொருந்தாதுமாறி இருப்பின் பொருத்தம் உண்டு.  ஸ்திரி புருஷருடைய நட்சத்திரங்கள் கீழே குறித்தவாறு ஒன்றிற்கொன்றுவேதையாய் இருப்பின் பொருந்தாது.

அஸ்வினி      -    கேட்டை
பரணி              -    அனுஷம்
கார்த்திகை     -    விசாகம்
ரோகினி          -    சுவாதி
திருவாதிரை   -    திருவோணம்
புனர்பூசம்        -    உத்திராடம்
பூசம்                -    பூராடம்
ஆயிலியம்      -    மூலம்
மகம்                -    ரேவதி 
பூரம்                 -    உத்தராட்டாதி
உத்திரம்          -    பூரட்டாதி
அஸ்தம்          -    சதயம்
மிருகசீரிடம்,  சித்திரை,  அவிட்டம் ஒன்றிற்கொன்று வேதை

இந்த 10-பொருத்தங்களையும்ஜாதகங்களின் கிரக நிலைகளையும் கவனத்தில் கொண்டு விவாஹ பொருத்தம்தீர்மானிக்கப்படல் வேண்டும்.

"செவ்வாய் தோஷம்" பற்றிய விபரம் "ஜோதிடம்பகுதியில் தனியாக பதியப்பட்டுள்ளது.
 
 
திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண்களுக்கு       

       
    ஆண் நட்சத்திரத்திற்கு   பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்      


1.    அஸ்வனி:    பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்      

2.    பரணி:    ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி       

3.    கார்த்திகை 1 ம் பாதம்:   சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2      

4.    கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்:    அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4      

5.    ரோகிணி:    மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி      

6.    மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்:   புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி      

7.    மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்:    திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி      

8.    திருவாதிரை:    பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4      

9.    புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்:    பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி      

10.    புனர்பூசம் 4 ம் பாதம்:    பூசம், அனுஷம், பரணி, ரோகிணி      

11.    பூசம்:    உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4      

12.    ஆயில்யம்:    அஸ்தம், அனுஷம், பூசம்      

13.    மகம்:    சித்திரை, அவிட்டம் 3, 4      

14.    பூரம்:    உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்      

15.    உத்திரம் 1 ம் பாதம்:    பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்      

16.    உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்:    பூராடம், திருவோணம், ரேவதி      

17.    அஸ்தம்:    உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4      

18.    சித்திரை 1, 2 ம் பாதங்கள்:   விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்      

19.    சித்திரை 3, 4 ம் பாதங்கள்:    விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்      

20.    சுவாதி:    அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்      

21.    விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:    சதயம், ஆயில்யம்      

22.    விசாகம் 4 ம் பாதம்:    சதயம்      

23.    அனுஷம்:    உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்      

24.    கேட்டை:    திருவோணம், அனுஷம்      

25.    மூலம்:    அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4      

26.    பூராடம்:    உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்      

27.    உத்திராடம் 1 ம் பாதம்:    பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்      

28.    உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்:    பரணி, மிருகசீரிஷம் 1, 2      

29.    திருவோணம்:    உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்      

30.    அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்:    புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்      

31.    அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்:    சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4      

32.    சதயம்:    கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4      

33.    பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்:    உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்      

34.    பூரட்டாதி 4 ம் பாதம்:    உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்      

35.    உத்திரட்டாதி:    ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4      

36.    ரேவதி:    பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி     
 


திருமண நட்சத்திர பொருத்தம் - பெண்களுக்கு    

   
   பெண் நட்சத்திரத்திற்கு    பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் 

      
1.    அஸ்வனி:    பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்        
2.    பரணி:    புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி       
3.    கார்த்திகை 1 ம் பாதம்:    சதயம்       
4.    கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்:    சதயம்       
5.    ரோகிணி:    மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி       
6.    மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்:    உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம்,

       அஸ்வனி, ரோகிணி       
7.    மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்:    திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4,

       சதயம், பரணி       
8.    திருவாதிரை:    பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4       
9.    புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்:    அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4       
10.    புனர்பூசம் 4 ம் பாதம்:    பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்       
11.    பூசம்:    ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்       
12.    ஆயில்யம்:    சித்திரை, அவிட்டம் 1, 2       
13.    மகம்:    சதயம்       
14.    பூரம்:    உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி       
15.    உத்திரம் 1 ம் பாதம்:    சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்       
16.    உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்:    அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்       
17.    அஸ்தம்:    பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4       
18.    சித்திரை 1, 2 ம் பாதங்கள்:    கார்த்திகை 2, 3, 4, மகம்       
19.    சித்திரை 3, 4 ம் பாதங்கள்:    கார்த்திகை 1, மகம்       
20.    சுவாதி:    பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம்       
21.    விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:    அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4       
22.    விசாகம் 4 ம் பாதம்:    அவிட்டம், சதயம், சித்திரை       
23.    அனுஷம்:    கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி       
24.    கேட்டை:    கார்த்திகை 2, 3, 4       
25.    மூலம்:    உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்       
26.    பூராடம்:    பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி       
27.    உத்திராடம் 1 ம் பாதம்:    உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி       
28.    உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்:    உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்       
29.    திருவோணம்:    அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை,

         கேட்டை, பூராடம்       
30.    அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்:    கார்த்திகை 1, மூலம்       
31.    அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்:    கார்த்திகை, சதயம், மகம், மூலம்       
32.    சதயம்:    சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4       
33.    பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்:    மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்       
34.    பூரட்டாதி 4 ம் பாதம்:    உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்       
35.    உத்திரட்டாதி:    ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி       
36.    ரேவதி:    மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி     
  


--
@@@
பிரபு
உலகத்தில் நன்மை தீமை என்பது ஒன்றும் இல்லை ! எல்லாம் சூழ்நிலை தான் காரணம் !-இன்று உனக்கு நன்மை , இதனால் ஒருவனக்கு தீமை ! ஒருவனுக்கு தீமை இதனால் உனக்கு நன்மை ! இது தான் உலகம்

Gokul Kumaran

unread,
Aug 24, 2010, 1:30:45 PM8/24/10
to panb...@googlegroups.com, tamil2friends, tamizh...@googlegroups.com, தென்றல்
இதெல்லாம் விடுங்க.

உங்க வலது கையில் ஆயுள் ரேகையும், அதுக்குப் பக்கத்தில் இருக்கிற நடு ரேகையும்,  ஆள்காட்டி விரலுக்கும் பெருவிரலுக்கும் நடுவில் இருக்கும் இடத்தில் ஒன்று சேர்ந்தால் உங்க மனைவியோடு சேர்ந்து சண்டை சச்சரவில்லாம வாழ்வீங்க. சேரலையோ, தினம் தினம் தகராறு தான் :-)

இப்போ நீங்க என்ன கேக்கப் போறீங்கன்னு தெரியுது. எனக்கு சேருதா இல்லையான்னு தானே, அதைச் சொல்ல மாட்டேனே :-)


--
கோகுல்குமரன்

"நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும் - நாட்டுக்கு
படிப்பினை தந்தாகணும்”


பிரசாத் வேணுகோபால்

unread,
Aug 25, 2010, 12:54:34 AM8/25/10
to thamizh...@googlegroups.com, panb...@googlegroups.com, tamil2friends
அண்ணே, ஆயுள் ரேகையை எப்படின்னே கண்டு பிடிக்கிறது... டவுட்டு.

2010/8/24 Gokul Kumaran <gokul...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages