தினம் ஒரு பாடல்

184 views
Skip to first unread message

AKR

unread,
Jul 27, 2009, 12:25:24 PM7/27/09
to pals...@googlegroups.com
தாய், தந்தை, சகோதரன், சகோதரி, காதலன், காதலி, குடும்பம், மனைவி, குழந்தைகள், உற்றார் உறவினர், சுற்றத்தார் என்று உலகில் நாம் அனைவரும் தொடர்ந்து சொந்த பந்தங்களில் கட்டுண்டு அதன் விளைவாகப் பல சோதனைகளையும்,  ஏமாற்றங்களையும் துன்பங்களையும் அனுபவிக்கிறோம்.
 
அவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் நாம் தவிக்கையில் நமக்கு ஆறுதல் கூறித் தேற்றி, நம்பிக்கையூட்டுவதையே தொழிலாகக் கொண்டு செயல்படுபவர்கள் ஜோதிடர்கள், நிமித்தக் காரர்கள், கோடங்கிகள் அல்லது குடுகுடுப்பாண்டிகள், பூம் பூம் மாட்டுக்காரர்கள் முதலானோர்.
 
இவர்களுள் ஏமாற்றுபவர்கள், அதாவது தீய பலன்களைக் கூறிப் பரிகாரமாகச் சடங்குகள் செய்யவென்று பணம் பறிப்பவர்கள் பலர் இருப்பினும், அத்தகைய ஏமாற்றுக்காரர்களைத் தவிர்த்துப் பார்க்கையில், பொதுவில் இத்தகைய பணியைச் செய்பவர்கள் கூறும் ஆறுதல் வார்த்தைகளும், நல்ல காலம் வரும் எனும் நம்பிக்கையூட்டும் செயலும் மிகவும் பாராட்டத்தக்கவை.
 
ஆங்கிலேயர் ஆட்சி நமது நாட்டில் நடைபெற்ற காலத்தில் ஒரு கிராமத்தில் சிறு வயதிலேயே தாயை இழந்த கள்ளங்கபடறியாக் கன்னிப்பெண் கண்ணம்மா தன் தந்தையுடன் வசித்து வருகிறாள். ஜமீன்தாரர் ஆட்சி முறை நிலவிய அக்காலத்தில் அவ்வூர் ஜமீன்தாரரின் ஓரே மகன் ராஜா அவளது அழகிலும் அடக்கத்திலும் கவரப்பட்டு அவளிடம் காதல் கொளகிறான். தான் ஊர் ஜமீன்தாரரின் மகன் என அறிந்தால் அவள் தன் காதலை ஏற்கமாட்டாள் என்பதால் தான் ஜமீன்தாரரின் பண்ணையில் பணி செய்யும் ஒரு பண்ணையாள் எனப் பொய்யுரைத்து அவளது காதலைப் பெறுகிறான்.
 
"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளிலே தெரியும்" எனும் கூற்றுக்கிணங்க இவர்களது காதல் விவகாரம் ஜமீன்தாரரின் காதுக்கு எட்டவே அவர் கடுங்கோபம் கொண்டு அவர்களது காதலுக்குத் தடை விதிக்கிறார். "உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை" எனும் மஹாகவியின் சொற்களுக்கேற்ப ஏமாற்றத்தால் ஊண் உறக்கம் பிடிக்காமல் மனம் பேதலித்த நிலையில் அவள் இருக்கையில் அவளது வீட்டுக்கு அலங்கரிக்கப்பட்ட தனது மாட்டுடன் வரும் ஒரு பூம்பூம் மாட்டுக்காரன் அவளது மனதில் உள்ள எண்ணங்களை அப்படியே படம் பிடித்தவன் போல் அவளுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைப் பாடலாகப் பாடுகிறான்.
 
 
நெஞ்சம் மறப்பதில்லை
கவிஞர் கண்ணதாசன்
எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
டி.எம் சௌந்தரராஜன்
 
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
கள்ளழகர் கோயில் கொண்ட வீட்டுப் பொண்ணே
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
 
பாடுகிற பாட்டக் கொஞ்சம் கேளடி பொண்ணே
பாடுகிற பாட்டக் கொஞ்சம் கேளடி பொண்ணே
பக்குவமா பதிலே இங்கே கூறடி பொண்ணே பொண்ணே
 
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
 
மாடப்புறாப் போலே ஒரு கன்னி வந்தாளாம்
மாப்பிள்ளைய மனசுக்குள்ளே எண்ணி வந்தாளாம்
ஆடி மாச வெள்ளம் போலே ஆடி வந்தாளம் - வந்து
ஆசையெல்லாம் கண்ணுக்குள்ளே மூடி வச்சாளாம்
 
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
கள்ளழகர் கோயில் கொண்ட வீட்டுப் பொண்ணே
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
 
எட்டாத தூரம் என்று ஏங்கி விட்டாளா?
ஏழையென்று வீட்டுக்குள்ளே தங்கி விட்டாளா?
தொட்டது போல் ராத்திரி வேளே கனவு கண்டாளா?
தூக்கத்திலே யாரிடமும் உளறி விட்டாளா?
 
ஏன் பாத்தோம் ஏன் நெனச்சோமுன்னு கவலைப் படுறாங்களா?
எப்போ பாப்போம் கப்புனு சேருவோமுன்னு நெனக்கிறீங்கிளா?
அப்போதைக்கப்போ ஆசையிலேயும் பாசத்திலேயும்
நேசத்திலேயும் விழுந்து துடிக்கிறாங்களா?
 
அம்மா மனசு சும்மா இருன்னு ஜமாஜமான்னு
கல்யாணம் நடக்கும்னு சொல்றியா?
 
கல்யாண மாப்பிள்ள பொண்ணு போகுது பாரு
காதல் தந்த கவலை எல்லாம் தீருது பாரு
பொ்ல்லாத மாமன் மனசு மாறுது பாரு
பூப்போல பெண்ணுக்கு வாழ்வு வருது பாரு
 
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
கள்ளழகர் கோயில் கொண்ட வீட்டுப் பொண்ணே
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Jul 28, 2009, 4:48:19 AM7/28/09
to pals...@googlegroups.com
வளர் சிதை மாற்றம் என்பது இவ்வுலகில் பிறப்பெடுத்து வாழும் ஜீவன்கள் அனைத்திற்கும் இயற்கை வகுத்த நியதி. அதிலிருந்து ஒருவரும் தப்ப இயலாது. பிள்ளைப் பிராயம் முதல் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நம் உடலின் ஒவ்வொரு அங்கமும் வளர்ச்சியடைந்து, நடுத்தர வயது முதல் இறுதிக் காலம் வரை ஒவ்வொருவரது உடல் பாகங்களும் சிறிது சிறிதாகத் தேய்மானம் அடைந்து செயலிழக்கும் தன்மையைப் பெறும் மாற்றத்தையே வளர் சிதை மாற்றம் என்கிறோம். இத்தகைய மாற்றத்தை நாம் சந்திக்கும் ஒவ்வொரு முதியவரிடமும் கண்டும் நாம் மட்டும் என்றும் முதுமையடையாமல் சுகமாய் வாழ வேண்டும் எனும் நப்பாசையும் ஒவ்வொருவரிடமும் உள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
 
தன்னைப் பெற்று சீராட்டி, பாராட்டி, வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள் வயது முதிர்ச்சியால் ஏற்படும் பலவீனங்களால் வருந்தித்
துயருறும் காலத்தில் அவர்களைப் பேணிக் காத்தல் பிள்ளைகளின் தலையாய கடமையாகும். வாழ்வின் சிற்றின்பங்களில் சிக்கிப் பெற்றோரது பொருளை மட்டும் தன் சுகங்களுக்காக அனுபவித்து விட்டுப் பொருள் தீர்ந்த பின்னர் அவர்களை நிராதரவாக விடும் பிள்ளைகள் பிள்ளைகளே அல்ல. வயதான காலத்தில் உடல் நலம் குன்றித் துன்பப் படும் பெற்றோருக்குப் பிள்ளைகளே உற்ற துணை என்பது மனித குலம் வாழ ஆன்றோர் வகுத்த நீதி.
 
அற்ற குளத்தின் அருநீர்ப் பறவை போல்
உற்றுழித்தீர்வர் உறவல்லர் அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு.
 
என்று தமிழ் மூதாட்டி ஔவை இக்கருத்தை வலியுறுத்துகிறார்.
 
"மாதா பிதா குரு தெய்வம்" என்று தெய்வத்திற்கும் மேலாகப் பெற்றோரை நியமித்தனர் சான்றோர். அத்தகைய பெற்றோரைப் பேணிக் காப்போம், நம் நற்செயலைக் கண்டு நம் பிள்ளைகள் நமக்கு வயது முதிர்கையில் அவர்கள் நமக்காகச் செய்யத்தக்க  கடமைகளை நிறைவேற்ற விழைவார்கள் எனும் மன நிறைவுடன் வாழ்வோம்.
 
தன் பிள்ளைகள் தன்னைக் கைவிட்டதாகக் கருதும் தந்தை ராஜா ரகுபதி வேடத்தில் நடித்துள்ள சிவாஜி கணேசன் பாடுவதாக அமைந்த இப்பாடல் பிள்ளைகளால் கைவிடப் பட்ட முதியவர்களுக்கும் மன உறுதி ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
 
 
திரைப்படம்: எங்க ஊர் ராஜா
இயற்றியவர்: கவிஞர் கண்னதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
 
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
 
குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்ல
 
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
 
தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே
 
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
 
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்
 
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jul 28, 2009, 7:53:03 AM7/28/09
to pals...@googlegroups.com
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
 
ஐப்பசியிலெயாவது மழெ வருதா பாப்போம்.
 
நடராஜன் கல்பட்டு
 
 
2009/7/28 AKR <akrcons...@gmail.com>

lion sekar

unread,
Jul 28, 2009, 8:09:17 AM7/28/09
to pals...@googlegroups.com
Dear most affectionate brother
Your contribution to the readers is remarkable.
I don't have words to praise your valuable contributions rendering to us.
How great task you are undertaking for us?
I am praying GOD for your long and happy life.
Yours affectionately
Lion Dr S Sekar
India

2009/7/28 AKR <akrcons...@gmail.com>

lion sekar

unread,
Jul 28, 2009, 8:13:48 AM7/28/09
to pals...@googlegroups.com
Dear most affectionate Sir
Really when I read your messages i shed tears for your great contributions.
In general people dis agree and against cinema, but you are a person who is bringing out the valuable things contributed to this society by the great poets in those days.
Always praying for your happy life.
Yours affectionately
Lion Dr S Sekar
India

2009/7/27 AKR <akrcons...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jul 28, 2009, 9:56:25 AM7/28/09
to pals...@googlegroups.com
மழை இங்கே பெய்துட்டு இருக்கு இப்போ, சாயங்காலத்திலே இருந்து!

2009/7/28 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jul 28, 2009, 10:43:45 AM7/28/09
to pals...@googlegroups.com
இங்கெயும் அஞ்சு சிமிஷம் உரசிட்டுப் போச்சு.  கிணத்துலெ சொட்டு தண்ணி இல்லெ.  போர் வெல்லுலெ காத்து வருது கம்ப்ரெசர்லேந்து.  இருபது நாளுக்கு ஒரு தடவெ 800/- ரூபா கொடுத்த் 12000 லிட்டர் தண்ணி வாங்கிக்கிறோம்!
 
சின்ன வயசுலெ சொல்லுவோம்,
 
"மழெ மழெ ஓடிவா 
ஜோர் மழெ ஓடிவா
கொட்டப் பாக்கு சீவித் தறேன்
கோவில் மண்ணு அள்ளித் தறேன்
ஜோர் மழெ ஓடிவா" ந்னு.
 
இப்பவும் சொல்லிப் பார்க்கிறேன் அதை.  ஆனால் பழைதான் வரக்காணோம்.
 
ந,க,
2009/7/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jul 28, 2009, 10:45:13 AM7/28/09
to pals...@googlegroups.com
மழையும் பிழையா பழையாயிடிச்சு.
 
ந.க.

Geetha Sambasivam

unread,
Jul 28, 2009, 9:21:23 PM7/28/09
to pals...@googlegroups.com
குழந்தைகளுக்கான பாடல் கூட இப்படித் தான் இருக்கணும், எங்கே, நம்ம ஊரிலே ரெயின் ரெயின் கோ அவேனு இல்லை சொல்லித் தராங்க! இங்கே நல்ல மழைனே சொல்லலாம்.

AKR

unread,
Jul 29, 2009, 12:41:33 PM7/29/09
to pals...@googlegroups.com
வன விலங்குகளிலேயே மிக அழகானது மான். அது துள்ளி ஓடுவதும் விளையாடுவதும் காணக் கண்கொள்ளாக் காட்சி. இதானால் தானோ என்னவோ இராமாயண காவியத்தில் ராமனை சீதையிடமிருந்து பிரிக்கச் சூழ்ச்சி செய்த மாரீசன் ஒரு மானிம் உருவம் கொண்டு சீதையின் கண்ணில் படும்படியாக அங்குமிங்கும் ஓடியாடி அவளைக் கவர்ந்து, தன்னைப் பிடித்துத் தர ராமனை வற்புறுத்தும்படித் தூண்டினான்.
 
அழகில் மட்டுமன்றி காதல் இன்பத்தை அனுபவிப்பதிலும் மான் பிற விலங்குகளைக் காட்டிலும் மேம்பட்டு விளங்குகிறது. 
மஹாபாரத காவியத்தில் பாண்டு மஹாராஜா காட்டில் வேட்டையாடுகையில் ஒரு ஆண் மானும் ஒரு பெண் மானும் உறவு கொள்ளும் நிலையில் சற்றும் சிந்தியாமல் ஆண் மானின் மேல் அம்பெய்துவிட்டான். உண்மையில் அந்த மான்கள் ஒரு ரிஷியும் அவரது பத்தினியுமாவர். உலகிலேயே காதலின்பத்தை அதிகம் பெறும் ஜீவன் எது எனத் தனது பத்தினி கேட்டதற்கு முனிவர் மான் என்று பதில் கூறவும், அவ்வாறாயின் மானின் வடிவம் கொண்டு இருவரும் புணர வேண்டும் என்று அவள் ஆசைப்படவே, முனிவர் தன் தவ வலிமையால் இருவரும் மான் உருவம் அடையச் செய்ய,  அந்நிலையில் இருவரும் உறவு கொண்டிருந்தனர்.
 
இந்த நிலையில் பாண்டுவின் அம்புக்கிரையாகிய முனிவர் மரணிக்கும் தருவாயில் பாண்டுவை நோக்கி, "நீசனே, மிருகங்கள் காதல் உறவு கொள்ளும் நிலையில் நீ சிறிதும் இரக்கமின்றி அவற்றின் மேல் அம்பு எய்தாய். நீ உன் மனைவியுடன் இணைந்தால் அக்கணமே மரணமடைவாய்" என்று சபித்து விட்டார். இதனால் மனம் வாடிய மன்னன் ஆட்சியைத் தனது அண்ணன் திருதராஷ்டிரனிடம் ஒப்படைத்து மனைவியருடன் வனவாசம் மேற்கொண்டான். இடையில் ஒரு நாள் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாமல் இளைய மனைவி மாத்ரியுடன் உறவு கொண்டதால் முனிவரின் சாபப்படி மரணமடைந்தான்.
 
அது சரி, கவிஞர்கள் பெண்களை மான்களுக்கு ஒப்பிடுவது எதனாலோ? அவர்களது அழகு கண்டோ, அல்லது அவர்கள் தரும் சுகம் கருதியோ? மான் என்றால் புலிகளுக்கு வேட்டையல்லவோ? அவ்வாறாகில் ஆண்கள் புலிகளோ?
 
எந்த மானை எந்தப் புலி வேட்டையாடினாலும் இந்த மானை நீ வேட்டையாடத் தேவையில்லை, ஏனெனில் இது உன்தன்
சொந்த மான்.
 
 
திரைப்படம்: கரகாட்டக் காரன்
இயற்றியவர்: கங்கை அமரன்
இசை: இளையராஜா
பாடியோர்: இளையராஜா, சித்ரா
 
இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்த மான்
 
வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
நூலிடை தேயும் நோயிலே
 நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே ஆ..ஆ..ஆ.
அன்னமே என்தன் சொர்ணமே உன்தன்
எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மதுக் கிண்ணமே அதில்
பொன்மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே
 
இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே என்னுயிரே
 
பொன்மணி மேகலை ஆடுதே
உன்விழி தான் இடம் தேடுதே
பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
எண்ணத்தான் ஆ.. ஆ..
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
உடன் மின்னத்தான் மேகலை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான் என்னை
சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
மோகந்தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்
 
இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் என்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னவனே
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

akr

unread,
Jul 30, 2009, 2:31:16 AM7/30/09
to பல்சுவை - நவரசங்களின் அறுசுவை சங்கமம்
It makes me very happy to note than the songs that I post bring some
cheer in you all.
என் கடன் பணி செய்து கிடப்பதே.

On Jul 28, 5:13 pm, lion sekar <lion.se...@gmail.com> wrote:
> Dear most affectionate Sir
> Really when I read your messages i shed tears for your great contributions.
> In general people dis agree and against cinema, but you are a person who is
> bringing out the valuable things contributed to this society by the great
> poets in those days.
> Always praying for your happy life.
> Yours affectionately
> Lion Dr S Sekar
> India
>

> 2009/7/27 AKR <akrconsulta...@gmail.com>

> >http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/nenjam-marap...

akr

unread,
Jul 30, 2009, 4:38:14 AM7/30/09
to பல்சுவை - நவரசங்களின் அறுசுவை சங்கமம்
மழை பொழிந்து கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும்

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/kudumba-thalaivan/mazhai-pozhinthu-konde.php

On Jul 28, 7:43 pm, Natrajan Kalpattu Narasimhan <knn1...@gmail.com>
wrote:


> இங்கெயும் அஞ்சு சிமிஷம் உரசிட்டுப் போச்சு.  கிணத்துலெ சொட்டு தண்ணி இல்லெ.
> போர் வெல்லுலெ காத்து வருது கம்ப்ரெசர்லேந்து.  இருபது நாளுக்கு ஒரு தடவெ 800/-
> ரூபா கொடுத்த் 12000 லிட்டர் தண்ணி வாங்கிக்கிறோம்!
>
> சின்ன வயசுலெ சொல்லுவோம்,
>
> "மழெ மழெ ஓடிவா
> ஜோர் மழெ ஓடிவா
> கொட்டப் பாக்கு சீவித் தறேன்
> கோவில் மண்ணு அள்ளித் தறேன்
> ஜோர் மழெ ஓடிவா" ந்னு.
>
> இப்பவும் சொல்லிப் பார்க்கிறேன் அதை.  ஆனால் பழைதான் வரக்காணோம்.
>
> ந,க,

> 2009/7/28 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>


>
>
>
> > மழை இங்கே பெய்துட்டு இருக்கு இப்போ, சாயங்காலத்திலே இருந்து!
>

> > 2009/7/28 Natrajan Kalpattu Narasimhan <knn1...@gmail.com>


>
> >  ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
>
> >> ஐப்பசியிலெயாவது மழெ வருதா பாப்போம்.
>
> >> நடராஜன் கல்பட்டு
>

> >> 2009/7/28 AKR <akrconsulta...@gmail.com>

> >>>http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/enga-oor-raj...

> ...
>
> read more »

AKR

unread,
Jul 30, 2009, 11:47:03 AM7/30/09
to pals...@googlegroups.com
உலகில் வாழும் மிருகங்களுக்கும் பிற உயிரினங்களும் இயற்கையாகவே சில குணங்கள் அமைகின்றன. புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்கு இயல்பாகவே சினத்துடன் சீறும் குணமுள்ளது. யானை அனைத்து விலங்குகளிலும் அதிக பலம் கொண்டதாக விளங்கினாலும் அது பெரும்பாலும் அமைதியாகவே இருக்கிறது. புதிய நபர்களையோ வேறு நாய்களையோ கண்டால் குரைக்கும் குணம் எல்லா நாய்களுக்கும் உண்டு. கூடி வாழும் இயல்பு காக்கைகளிடம் அமைந்துள்ளது.  இவ்வாறாக அனைத்து உயிரினங்களுக்கும் பிரத்தியேகமான குணங்களைப் படைத்த இறைவன் மனிதர்களுக்கு மட்டும் மாறுபட்ட குணங்களைக் கொடுத்தது ஏனோ?
 
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம்
 
என்றாள் ஔவைப் பிராட்டி. இங்கே குலம் என்பது ஒருவர் பிறந்து வளரும் சூழ்நிலையைக் குறிப்பதாகும். எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, சாதியையோ சேர்ந்தவர் என்று எடுத்துக் கொள்வது தவறு. ஒருவன் இளம் வயது முதலே கல்வியிலும் தர்ம நெறிகளிலும் சிறந்து விளங்கும் நல்லோரின் சேர்க்கையைப் பெற்று வளர்வானாகில் அவன் நல்ல குணங்களையே பெறுதலும், தீய குணங்களும் தீய பழக்க வழக்கங்களும் நிறைந்தவருடன் பழகும் சூழ்நிலையில் வளர்கையில் தீய குணங்களைப் பெறுதலும் இயல்பு.
 
இயல்பாகவே அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, பொய் நீக்கி உண்மையே உரைத்து வாழும் உத்தமர்கள் என்றும் தீய வழியில் செல்வதில்லை, எத்தகைய துன்பங்கள் நேரிட்டாலும் தீய குணங்களைப் பெறுவதுமில்லை.
 
இயல்பாகவே காமம், குரோதம், கோபம், லோபம், மதம், மாத்சர்யம், ஐயம், அச்சம் முதலிய தீய குணங்களை வளர்த்துக்கொண்ட மனிதர்கள் பொதுவாகத் தம் வாழ்நாளில் என்றும் திருந்துவதில்லை. அவர்களது தீய குணத்தாலும், தீய செயல்களாலும் விளைந்த தீமைகள் அவர்கள் இறந்து அவர்களது உடல்களைக் கட்டையில் வைத்து எரிக்கையிலும் மறைவதில்லை.
 
 

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
 
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்
 
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது

அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
 
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்

ஓஹோஹோஹோஹொஹொஹோ
 
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
 
வரவறியாமல் செலவழிச்சாலும் நெலைக்காது
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது
காலமில்லாமல் வெத வெதைச்சாலும் முளைக்காது
காத்துல வெளக்க ஏத்தி வச்சாலும் எரியாது
 
திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்

திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்

ஓஹோஹோஹோஹொஹொஹோ
 
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Jul 31, 2009, 8:34:37 AM7/31/09
to pals...@googlegroups.com
ஆகாரம் அரை, நித்திரை கால், மைதுனம் வீசம், பயம் பூஜ்யம் என்று ஆரோக்ய வாழ்வுக்கான சூத்திரத்தை வடலூர் ராமலிங்க வள்ளலார் வகுத்துத் தந்துள்ளார். இதன்படி அரை வயிற்றுக்கே ஆகாரம் இட வேண்டும், அரை வயிறு அளவை எவ்வாறு கண்பதெனில் உணவுண்கையில் பசியடங்கிய நிலையில் இன்னும் கொஞ்சம் உண்ணலாம் எனும் எண்ணம் இருக்கையிலேயே உணவருந்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
 
நித்திரை கால் என்றால் ஒரு நாளில் 6 மணி நேரமே உறங்கலாம் என்பதாகும், மைதுனம் வீசம் என்பது 16 நாட்களில் ஒரு முறையே உடல் சுகம் பெறலாம், பயம் அறவே கூடாது.
 
அதிக நேரம் உறங்குபவர் உற்சாகக் குறைவுடனேயே காணப்படுவர். அதிலும் குறிப்பாகப் பணி செய்யும் நேரத்தில் உறங்கும் பழக்கமுள்ளவர் ஒரு சோம்பேரியாகவே திகழ்வதுண்டு. ஒருவர் இன்னொருவரிடம் சொன்னாராம், " 4 நாட்களாக சரியாகத் தூங்கவில்லை' என. மற்றவர் ஏன் எனக்கேட்க இவர், "4 நாட்களாக அலுவலகம் விடுமுறை" என்றாராம்.
 
இத்தூக்கம் உடல் ரீதியானது. இதைத் தவிர மனரீதியாகவும் அறிவு ரீதியாகவும் பலர் உறங்குவதாலேயே உலகில் அவர் மட்டுமின்றி அவரை நம்பியிருப்பவர்களும் ஏனையோரும் அவதிப்படுகின்ற கொடுமை அன்றாடம் நிகழும் ஒன்றாகும்.
 
நாட்டில் நீதித்துறை, காவல் துறை, அரசாங்கம் மற்றும் இராணுவ அதிகாரிகள் இத்தகைய உறக்க நிலையில் இருப்பதாலேயே நாட்டில் கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி முதலான குற்றங்கள் மலிகின்றன, குற்றவாளிகள் தைரியமாகத் தங்கள் முறைகேடான தொழில்களை சட்டத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத் தொடர்ந்து செய்கின்றனர். நம் நாட்டிற்குள் அயல் நாட்டுத் தீவிரவாதிகள் நுழைந்து அழிவுச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
 
இத்தகைய தீமைகள் நீங்கி அனைவரும் நல்வாழ்வு வாழ வேண்டுமெனில் அனைவரும் பணி நேரத்தில் விழித்திருப்பது மட்டுமின்றி விழிப்புடன் செயல்படவும் வேண்டும்.
 
 
திரைப்படம்: நாடோடி மன்னன்
ஆண்டு: 1958
பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்
எஸ்.எம். சுப்பையா நாயுடு

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
திரைக்கதை வசனம்: கவிஞர் கண்ணதாசன்
 
தம்பீ,
தூங்காதே தம்பி தூங்காதே தூங்காதே தம்பி தூங்காதே - நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
 
நீ தாங்கிய உடையும் ஆயுதமும் - பல
சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
நீ தாங்கிய உடையும் ஆயுதமும் - பல
சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு இடங்கொடுக்கும்
 
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
 
நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்
நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் - சிலர்
அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்
அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆஆஆ
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் உன் போல்
குறட்டை விடடோரெல்லாம் கோட்டை விட்டார்
 
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
 
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான் - உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் - கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் - இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் - பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
 
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே தம்பி தூங்காதே

 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Aug 1, 2009, 1:30:09 PM8/1/09
to pals...@googlegroups.com
நாம் ஒவ்வொருவரும் குழந்தைப் பருவத்தில் வாழ்வை மிகவும் அனுபவித்து அளவிலா மகிழ்ச்சியுடன் வாழ்ந்துள்ளோம். இதற்கு விதிவிலக்காகக் குழந்தைப் பருவத்தில் மிகவும் துயருற்று வருந்துபவர்களும் உலகில் உளர். இதனாலேயே மூதாட்டி ஔவை "கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினுங் கொடிது இளமையில் வறுமை" என்றாள். ஒரு குழந்தையை தெய்வத்துக்கு நிகராகக் கருதிப் பேணுவது உலகிலுள்ளோர் அனைவரது வழக்கம், இதற்குக் காரணம் குழந்தைப் பருவத்தில் யாருக்கும் கள்ளம், கபடு, சூது, வாது, போட்டி, பொறாமை முதலான தீய குணங்கள் இருப்பதில்லை.
 
"நீங்கள் குழந்தைகளைப் போலானாலன்றி மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடைய மாட்டீர்கள்" என்று இயேசுநாதர் கூறியுள்ளார். இதன் பொருள் குழந்தைகளின் உள்ளத்தைப் போன்று நிஷ்களங்கமாக உங்களது இதயத்தை வைத்துக் கொள்ளுங்கள். தீய குணங்களைக் கொள்ளாதீர்கள், அப்பொழுது தான் நீங்கள் உண்மையான மகிழ்ச்சியை அடைவீர்கள் என்பதாகும்.
 
வயதில் மிகவும் முதிர்ந்த பெரியோர்களாயினும், இளம் வாலிபர்களாயினும், நடுத்தர வயதினராயினும் அவர்கள் யாவரும் மிகவும் விரும்பிப் பழகுவது குழந்தைகளிடமே. தினமும் சிறிது நேரம் நமது அன்றாடப் பணிகளின் தொல்லையிலிருந்து விலகி, குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ந்தால் நம் துன்பங்களெல்லாம் மறந்து நம்முள் ஒரு புத்துணர்ச்சி உண்டாகி, நாம் உற்சாகமாக வாழ வேண்டுமெனும் ஆவல் பெருக்கெடுத்து, துன்பங்களுக்கிடையிலும் மகிழ்ச்சியுடன் இருக்க நாம் கற்றுக் கொள்ளலாம்.
 
 
படம்: வாழ்க்கைப் படகு
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
ஆண்டு: 1964
 
சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?
சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் என்தன் கண்ணா
சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?
சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?
 
பால் மணக்கும் பருவத்திலே உன்னைப் போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே சிட்டுப்போல் படுத்திருந்தேன்
அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா
உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா
 
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் என்தன் கண்ணா
சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?
 
ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா
ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி தேவன் தந்த தெய்வ மொழி
 
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் என்தன் கண்ணா
சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?
 
பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா
பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா
நன்றி கெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா
நன்றி கெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு துன்பமடா
 
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் என்தன் கண்ணா
சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?

 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Aug 2, 2009, 3:22:32 AM8/2/09
to pals...@googlegroups.com
"கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வர் இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல்."
 
பொருளாதரத்தில் நலிவுற்றவனை உற்றார் உறவினர் யாரும் மதிக்க மாட்டார்கள், அவனை ஒரு சுமையாகவே கருதுவது உலக இயல்பு. பெற்ற மகனைத் தனக்குப்பின் பேணிக்காக்கத் தக்கதொரு உற்ற துணைவியைத் தேடித்தரும் கடமையுள்ள தாயே வரும் மருமகள் தன் மகனிடமும் தன்னிடமும் பிற குடும்ப உறுப்பினரிடமும் அன்புடன் பழகும் பாங்குள்ளவளா? கடமையைச் செய்யும் பொறுப்பு மிக்கவளா? என்று ஆராய்ந்தறிவதைக் காட்டிலும் அவள் எவ்வளவு நகைகள் அணிந்து வருகிறாள்? எத்தனை பணம் சீதனமாகக் கொண்டு வருகிறாள்? என்றறிவதிலேயே அதிக அக்கரை காட்டுவதும் உலக இயல்பு.
 
ஒருவன் வாழ்க்கைத் துன்பங்களால் துயருற்று வருந்துகையில் அவன் எத்தகைய இழிநிலையை அடைந்தாலும், அது பொருளாதாரப் பிரச்சினையாயினும், உடல் ஊனம், நோய் முதலான பிரச்சினையாயினும் அதிலிருந்து அவனை மீட்க முன்வந்து தன்னலம் கருதாது அவனைக் கைதூக்கிக் கரையேற்றி உண்மையான அன்பு செலுத்தும் உன்னத உறவு இவ்வுலகில் நட்பு ஒன்றேயாகும். இத்தகைய நட்பு பெரும்பலும் மலர்வது ஒன்றாக வாழ்ந்து ஒன்றாகக் கல்வி கற்று வாழ்வில் உயர வழி தேடும் மாணவப் பருவத்திலேயே ஆகும்.
 
கல்லூரியில் சில பல ஆண்டுகள் ஒன்றாகக் கல்வி பயின்ற நண்பர்கள் தம் கல்வி பயிலும் காலம் முடிந்து ஒருவரையொருவர் பிரிய வேண்டிய சூழ்நிலை அனைவர் மனதிலும் வினோதமான உணர்வுகளை விதைப்பதாகும். இதுநாள் வரை நம்முடன் மனமொப்பி, ஆடிப் பாடி ஒன்றுகூடி மகிழ்ந்து, கல்வியில் ஒருவருக்கொருவர் உதவியிருந்த நண்பர்களைப் பிரிகிறோம் எனும் உணர்வு நண்பர்கள் ஒவ்வொருவரது மனதிலும் நீங்காததொரு ஏக்கத்தை உண்டாக்க வல்லது.
 
அவ்வாறு கல்வியில் தேர்ச்சிபெற்று வாழ்க்கைப் போராட்டத்தில் குதிக்க வேண்டிப் பிரியும் நண்பர்களில் பலர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றாய்க் கூடி மகிழும் வாய்ப்புக் கிட்டினால் அதனை விட ஒருவர்க்கு சொர்க்கம் வேறில்லை.
 
இவ்வாறே 1976ஆம் ஆண்டு கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பட்டப் படிப்பை முடித்துப் பிரிந்து சென்ற எனது கல்லூரித் தோழர்களில் பெரும்பாலோர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாங்கள் கல்வி பயின்ற கல்லூரி வளாகத்திலேயே மீண்டும் அவரவர் மனைவி மக்களுடன் ஒன்று கூடி, இரண்டு நாட்கள் கலந்து பழகி மகிழ்ந்தோம். அந்த அனுபவத்தின் சுவையை மீண்டும் மீண்டும் அனுபவிக்க வேண்டும் எனும் தீராத ஆவலால் அதன் பின்னர் இரண்டாண்டுகளுக்கோர் முறை அதேபோல் குடும்பத்தினருடன் ஏதேனும் ஓரிடத்தில் ஒன்று கலந்து மகிழும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு 2003ஆம் ஆண்டு பெங்களூரிலும், 2005ஆம் ஆண்டு சென்னையிலும் 2007ஆம் ஆண்டு திருச்சியிலும் கொண்டாடிய நாங்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சேலம் அருகிலுள்ள ஏற்காட்டில் ஒன்று கூடுவதென முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.
 
இன்று நண்பர்கள் தினம் (Friendship Day) என்று சொல்கிறார்கள். நண்பர்களை ஆண்டுக்கு ஒரு நாள் நினைத்தால் போதுமா? நண்பர்களின் நினைவு அமுதமன்றோ? அதனை நாள்தோறும் சுவைக்கும் ஆசையால் எனது கல்லூரித் தோழர்களுக்கென http://www.cit76.com/  என ஓர் இணையதளத்தை பிரத்யேகமாக  உருவாக்கி நடத்தி வருகிறேன்.
 
இந்த நன்னாளில் உலகெங்குமுள்ள மாந்தர்களிடையேயும் நாடுகளுக்கிடையேயும், பல்வேறு மதத்தினரிடையேயும், ஆண்கள் பெண்கள் அனைவரிடையேயும் நட்புணர்வு மலர்ந்து ஒருவருக்கொருவர் உதவும் பண்பு பெருகி, நட்பின் வாயிலாக
 
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
 
 
படம்: ரத்தத் திலகம்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
 
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
 
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே நாமே
வாழ்ந்து வந்தோமே
 
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
 
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ - என்றும்
மயங்கி நிற்போமோ
 
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம் நாம்
பறந்து செல்கின்றோம்
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Aug 3, 2009, 6:39:55 AM8/3/09
to pals...@googlegroups.com
உயிர்களுக்கிடையில் திகழும் பாசப் பிணைப்பினாலேயே உலகம் செயல்படுகிறது. ஒரு தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பாசத்துக்கு வேறெவர் பாசமும் ஈடாகாது என்பது அனைவரும் அறிவோம். இதில் விதிவிலக்கும் உண்டு என்பதை மறுக்க முடியாதாயினும் இயற்கை நியதிப்படி தாயின் பாச உணர்வே அனைத்திலும் உயர்ந்ததென்பதை ஒப்புக்கொள்கிறோம். இத்தகு தாய்ப்பாசம் மனிதர்களிடம் மட்டுமின்றி அனைத்து உயிர்களிடமும் ஓரே தரத்தில் உயர்ந்து விளங்குவதையும் காண்கிறோம். உதாரணமாக ஒரு கோழி சாதாரணமாக உயரப் பறப்பதில்லை. ஆனால் அதே கோழி பருந்தொன்று தன் குஞ்சினைக் கவ்விச் செல்லக் கண்டு வானுயரப் பறந்து பருந்தினை விரட்டித் தன் குஞ்சினைக் காத்த காட்சியை நான் கண்டிருக்கிறேன்.
 
ஒரு பெண் தான் பெற்ற செல்வங்கள் அனைத்திலும் உயர்ந்ததாக உள்ளுணர்வாலும் பகுத்தறிவாலும் ஒன்றுபட்ட நோக்குடன் கருதுவது தான் ஈன்ற மகவையே ஆகும். தனக்கு எத்தகைய துன்பம் நேரிடினும் அதனால் தன் குழந்தைக்கு ஊறு விளையாது பார்த்துக் கொள்வது ஒரு தாயின் இயல்பு. பத்து மாதம் வயிற்றில் சுமந்து தன் ரத்தத்தையே பாலாக்கி ஊட்டி வளர்த்து, தன் உயிரையே பணயம் வைத்து, உலகில் வேறு யாராலும் தாங்க இயலாத பிரசவ வேதனையை அனுபவித்துப் பெறும் பிள்ளை அல்லவா? அதனை விடவும் உயர்ந்த செல்வம் உலகில் வேறுண்டோ?
 
"ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன்" எனும் ஆங்கிலக் கவிஞர் தான் எழுதிய "ஹோம் தே ப்ராட் ஹர் வாரியர் டெட்"  எனும் கவிதையில் கூறுவதாவது: ஒரு பெண்ணின் கணவன் போரில உயிர்துறக்கவே அவனது உடலை அவனது வீட்டுக்குக் கொண்டு வருகின்றனர். அவனது மரணத்தினால் ஏற்பட்ட துக்கத்தால் அப்பெண் ஸ்தம்பித்துப் பேச்சற்றவளாகி நிலைகுலைந்து ஒரு மூலையில் உட்கார்ந்து விடுகிறாள். அவள் அழவில்லை, வாயைத் திறந்து பேசவுமில்லை. துக்கம் விசாரிக்க வந்திருந்த அண்டை வீட்டார்கள் பலர் அவளை அழ வைக்க முயற்சிக்கின்றனர், ஏனெனில் அவள் தனது துக்கத்தை வெளியே அழுது கொட்டாவிடில் அவள் இறந்து விடும் அபாயம் உள்ளது. அவர்கள் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை, அவள் அழவில்லை. இந்நிலையில் அவர்களுள் இருந்த ஒரு மூதாட்டி வேறோரிடத்தில் இருந்த அப்பெண்ணின் சிறு குழந்தையை எடுத்து வந்து அவளது மடியில் கிடத்த, "ஓ மை சைல்ட், ஐ லிவ் ஃபார் தீ" என்று கூறிக் கதறியழுகிறாள்.
 
தான் வழ்வதே தன் குழந்தைக்காக எனும் மன நிலை கொண்டவள் தாய் எனும் உண்மையைக் கவிஞர் தெளிவாக்குகிறார்.
 
 
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
இயற்றியவர்: சுரதா

இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
ஆண்டு: 1958
 
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
 
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
 
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
 
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
சிரிச்சா  முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
 
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
 
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
_________________________
http://www.mazhalaigal.com/

seethaalakshmi subramanian

unread,
Aug 3, 2009, 11:13:32 AM8/3/09
to pals...@googlegroups.com
ஒரு காலத்தில் மேடையில் நான் அடிக்கடி பாடிய பாட்டு. அப்படியே ராஜேஸ்வரி
குரலை வரவழைத்துக் கொண்டு பாடி இருக்கின்றேன்
மலரும்  நினைவுகள்
நன்றி ஏகேஆர்

2009/8/3 AKR <akrcons...@gmail.com>

AKR

unread,
Aug 4, 2009, 4:31:16 AM8/4/09
to pals...@googlegroups.com
நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது என்பதனாலேயே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களுக்குப் பல அறிஞர்கள் எழுதிய நீதிகளையும் அத்தகைய உத்தமர்கள் வாழ்க்கை வரலாறுகளையும் போதிக்கின்றனர் ஆசிரியப் பெருமக்கள். கல்வி கற்றுத் தேர்ந்த பின்னர் அக்கல்வித் தகுதியைக் கொண்டு பொருளீட்டுவது ஒன்றையே நோக்காகக் கொண்டு தாம் கற்ற நீதிகளையும் பிற நன்னெறி புகட்டும் செய்திகளையும் காற்றில் பறக்கவிட்டு வாழ்வோர் வாழ்க்கை முழுமையடையாது. ஒருவர் உலகில் அனைவராலும் மதிக்கப்பட வேண்டுமெனில் அவர் நற்பண்புகளின் உறைவிடமாக விளங்குதல் அவசியம்.
 
நற்பண்புகளில் முக்கியமானது பிறரது நம்பிக்கையில் குறுக்கிடாமை. ஒருவர் தமக்குப் பிடித்த மதத்தைத் தழுவுதலும், தமக்குப் பிடித்த கடவுளரை வணங்குதலும், கடவுள் நம்பிக்கை இல்லாதிருப்பதும், சோதிடத்தில் நம்பிக்கை வைப்பதும், சோதிடம் மூடநம்பிக்கை எனக் கொள்வதும் அவரது தனி உரிமை. இதில் பிறர் குறுக்கிடுவது அநாகரீகமாகக் கருதப்படும்.
 
தாம் நம்புவதையே பிறரு்ம் நம்ப வேண்டும் என யாரும் யாரையும் கட்டாயப்படுத்துதல் ஜனநாயக மரபன்று. நம்மில் மூத்தோரிடம் பணிவாக நடந்து கொள்தலும், பிறர் மனம் புண்படும் படி ஏதும் கூறாதிருத்தலும், அனைவரிடமும் இன்சொல் பேசிப் பழகுதலும் குறிப்பிடத்தக்க அவசியமான நற்பண்புகளாகும்.
 
 
திரைப்படம்: குமாரராஜா
ஆண்டு: 1957
இசை: டி.ஆர். பாப்பா
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
பாடியவர்: பி.லீலா
 
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே - நீ
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
 
நாட்டின் நெறி தவறி நடந்து விடாதே - நம்
நாட்டின் நெறி தவறி நடந்து விடாதே
நல்லவர்கள் தூற்றும் படி வளர்ந்து விடாதே - நீ
 
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
 
மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது - நீ
மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக்கூடாது
மாற்றார் கைப் பொருளை நம்பி வாழக் கூடாது - தன்
மானமில்லாக் கோழையோடு சேரக் கூடாது  - நீ
 
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
 
துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும்
சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் - நீ
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும்
அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்
அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும் - நீ
 
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
 
வெற்றி மேல் வெற்றி வர விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேணும்
வெற்றி மேல் வெற்றி வர விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேணும்
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் ஆ
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வளர்ந்திட வேணும் - நீ
 
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே - நீ
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

seethaalakshmi subramanian

unread,
Aug 4, 2009, 12:59:45 PM8/4/09
to pals...@googlegroups.com
ஏகேஆர்
ராஜேஸ்வரி பாடிய மண்ணுக்கு மரம் பாரமா பாட்டைத் தேடிப்பொடவும்
அதே போல் சிவகங்கைச் சீமையில் வரலட்சுமி பாடிய சிங்காரக் கண்ணே பாட்டும் வேண்டும். நான் மேடையில் பாடிய பாடல்கள்

2009/8/4 AKR <akrcons...@gmail.com>

AKR

unread,
Aug 5, 2009, 2:35:58 PM8/5/09
to pals...@googlegroups.com
காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன்
காரியம் யாவினுங் கை கொடுத்து
மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி
 
என்று தன் மனதுக்கிசைந்த மணாளனுடன் வாழ்வது ஒரு பெண்ணின் உரிமை என வலியுறுத்துகிறார் பாரதியார். ந்மது நாட்டில் பெண்ணுரிமைக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கின்றனர் என்பது இன்றளவும் ஒரு கேள்விக்குறியாகவே விளங்குகிறது. இல்வாழ்க்கை என்பது கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் உள்ளத்தால் விரும்பி வாழ்வதேயாகும். பொதுவாக நமது நாட்டில் ஒரு பெண்ணைப் பெற்றவர்கள் அவளது திருமணத்தை நடத்தி வைக்கையில் மணமகன் அவள் மனதுக்குப் பிடித்தவனா என்பதை உறுதி செய்யத் தவறுவதால் திருமணங்கள் தோல்வியடைந்து அப்பெண்ணின் வாழ்வு பாழாகிறது.
 
தாலி கட்டிய கணவன் தனக்கு விருப்பமில்லாத நிலையில் திருமணத்தை நடத்தித் தன்னை அடைந்தவன் எனவும் தனக்கு உண்மையுள்ளவனாக நடப்பவனில்லை எனவும் எண்ணும் ஒரு பெண் எவ்வாறு அவனுடன் இணைந்து மனமொப்பி வாழ முடியுமா? அத்தகைய மனநிலையில் அவள் இருக்கையில் அவளைப் பாடச்சொன்னால் அவளால் பாட முடியுமா?
 
 
படம்: இருவர் உள்ளம்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1963
 
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
 
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா?
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா?
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா?
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா?
விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா?
விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா?
வீட்டுக் குயிலைக் கூட்டில் வைத்தால் பாட்டுப்பாடுமா பாட்டுப்பாடுமா?
 
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
 
மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே சில
மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே சில
மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே அடிமை செய்தானே
 
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
 
உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது?
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது?
பழுதுபட்ட கொவிலியே தெய்வமேது?
பனி படர்ந்த பாதையிலே பயணமேது?
 
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/
Reply all
Reply to author
Forward
0 new messages