கா...கா...கா...
கா...கா...கா... எனக் கரையுது காகம்
கலந் துண்ணலாம் வாரீர் என்றே
தன் கூட்டத்தினை அழைக்கின்றதோ
கீ...கீ...கீ... என்றே கத்தும் கிளி
மரத்தி லுண்டு பழங்களும் கொட்டைகளும்
வயலி லுண்டு முற்றிய கதிர்கள்
உண்டு களித்திடலாம் வாரீர் என்கிறதோ
கூ...கூ...கூ... என்றே கூவிடும் அக்கூ
ஆற்று வெள்ளம் அடித்துச் சென்ற தன்
அக்காவை நினைத்து அழுகின்றதோ
கேச்...கேச்...கேச்... என்றே கூவிடும் சிறார்
உயரச் சென்ற கிரிக்கெட் பந்தை
விடாது பிடி என்றே ஊக்குவிக் கின்றார்களோ
கை...கை...கை... என்றே கதறிடும் குழந்தை
கதவிடுக்கில் மாட்டிய கை
வலி தாங்காதே கத்திடுதோ
கோ...கொக்கரக் கோ... கோ...கொக்கரக் கோ...
என்றே கூவிடும் சேவல்
விடியல் தன்னை அறிவிக் கின்றதோ
கௌ...கௌ...கௌ... என்றே கத்தும் சிறுமி
அன்றைய ஆங்கிலப் பரீட்சைக்கே
தயார் செய் கின்றாளோ தன்னையே
ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிக் குரலும்
தனி மொழியும் கொடுத்திட்டாய்
இறைவா என்னே உன் கருணை
20-11-09 நடராஜன் கல்பட்டு
--
You received this message because you are subscribed to the Google Groups "Palsuvai - a Potpourri" group.
To post to this group, send email to pals...@googlegroups.com
To unsubscribe from this group, send email to palsuvai-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/palsuvai?hl=en
Azhagi - She just rules - Should we say more? Visit us at http://azhagi.com.
If at all you can find a better Tamil Transliterator than Azhagi, please show it to us.
கா...கா...கா...
--